Dinamani - தற்போதைய செய்திகள் - http://www.dinamani.com/latest-news/sub-latest-news/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2788492 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பட்டாசு இல்லாமல் எப்படி தீபாவளியை கொண்டாடுவது? டிவிட்டரில் சீறுகிறார் சேத்தன் பகத் உமா பார்வதி DIN Wednesday, October 11, 2017 04:05 PM +0530 தில்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் குறித்து பிரபல எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளரான சேத்தன் பகத், தனது டிவிட்டரில் எதிர்வினை ஆற்றியுள்ளார்.

தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிப்பதால் மாசு அதிகமாக ஏற்படுவதாக வழக்கு தொடரப்பட்டது. தில்லியில் காற்று மாசு ஏற்படுவதைத் தடுப்பதற்காக தில்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கு கடந்த நவம்பரில் தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

'தீபாவளி அன்று பட்டாசு வெடித்து கொண்டாடுவது என்பது காலம் காலமாக நம்முடைய பழக்கமாக இருந்து வருகிறது, எனவே பட்டாசு விற்பனையாளர்களின் விற்பனையை தடை செய்வது தேவையற்றது’ என்கிறார் பகத்

புது தில்லியைத் தவிர இந்தியாவின் பெரும்பகுதிகளில் தீபாவளி வழக்கம் போலக் கொண்டாடுப்படுவதை நினைத்து சந்தோஷப்படுவதாகக் கூறினார்.

நவம்பர் 1-ம் தேதி வரை புது தில்லி மற்றும் சுற்றுவட்டாரங்களில் பட்டாசு விற்கத் தடை இருப்பதால் மக்கள் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளை வெடிக்க முடியாமல் போகும். இது குறித்து நீதிமன்றம் கூறுயது, 'குறைந்தபட்சம் இந்த ஒரு வருடமாவது வெடிச் சத்தமில்லாத தீபாவளி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளது.

இது குறித்து தனது ஆதங்கத்தையும் மறுப்பையும் பகத் தொடர் டிவீட்டுகள் மூலம் வெளிப்படுத்தி வருகிறார். 'பட்டாசு வெடிக்காத தீபாவளி குழந்தைகளுக்கு எப்படி பிடிக்கும்? ’ என்பதில் தொடங்கி சரவெடி போல வெடித்துச் சிதறுகின்றன அவருடைய எமோஷனல் டிவீட்டுகள்.

தூய்மையான காற்றுக்கான மாற்று வழிகளையும் சேத்தன் யோசிக்கச் சொல்கிறார். அதில் ஒன்று, 'ஒரு வாரம் உங்கள் வீட்டில் மின்சாரம் உபயோகிக்காமல் இருப்பதும், ஒரு வாரம் காரைப் பயன்படுத்தாமல் இருந்தாலே போதும்' என்று டிப்ஸ் தருகிறார்.

மேலும் அவர் கூறுகையில், 'தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கக் கூடாது என்று வலியுறுத்துபவர்கள், கிறுஸ்துமஸ் பண்டிகையில் கிறுஸ்துமஸ் மரத்தை வெட்டச் சொல்வார்களா? மட்டன் பிரியாணி இல்லாமல் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடச் சொல்லுவார்களா?’ என்று கிண்டலாகக் கேட்டுள்ளார். நம்முடைய பாரம்பரியமான விஷயங்களை மதிக்க வேண்டும். தடை செய்வது சுலபம் தான், ஆனால் மாற்று வழிகளை கண்டறிவதே முக்கியம்’ என்றார் பகத்.

இன்னொரு டிவிட்டர் பதிவில், ‘நான் பட்டாசு தடைப் பற்றி ஒன்றே ஒன்று கேட்கலாமா? இந்து பண்டிகைகளுக்கு மட்டும் ஏன் இதைச் செய்ய வேண்டும்?  எல்லா பண்டிகைகளையும் சீர்திருத்த இதே ஆர்வத்தை காட்டுவார்களா?’ என்று பகத் இன்னொரு கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இதற்குப் பதிலாக சில தனிப்பட்ட தாக்குதல்கள் காரசாரமாக அவருக்கு எழுதப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து தன் பாணியில் எதிர்வினை புரிந்து கொண்டிருந்தார் பகத். 

கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் வானவேடிக்கை உள்ளிட்ட அனைத்து பட்டாசுகளையும் விற்பதற்கு உரிமங்களையும் நிறுத்தி வைத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், தற்காலிகமாக பட்டாசு விற்பதற்கு நீதிமன்றம் அனுமதித்தது. ஆனால் தற்போது மீண்டும் பட்டாசு விற்பனைக்கான தடையை நீக்குவது என்பது நவம்பர் 1-ம் தேதிக்குப் பிறகுதான் சாத்தியமாகும். காரணம் இந்தக் காலகட்டத்திலாவது தில்லியின் சுற்றுச்சூழல் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்குமா எனத் தெரிந்து கொள்ள முடியும்..

]]>
Twitter, Diwali, தீபாவளி, பட்டாசு, Crackers, Chetan Bhagat, சேத்தன் பகத் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/11/w600X390/chetan_bagat.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/oct/11/why-just-crackers-ban-muharram-bloodshed-too-chetan-bhagat-triggers-debate-2788492.html
2786676 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பழனி கோவில் யானை கஸ்தூரி குளிக்க புதிய நீச்சல் குளம்! DIN DIN Sunday, October 8, 2017 05:40 PM +0530 பழனி முருகன் கோவில் யானையின் பெயர் கஸ்துாரி. இந்த யானை குளிப்பதற்கு தற்போது பல லட்சம் ரூபாய் செலவில் புதிய நீச்சல் குளமொன்று அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது கஸ்தூரிக்கு 48 வயதாகிறது. எட்டு வயது முதல் பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தில் வளர்க்கப்பட்டு வருகிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட கோவிலின் முக்கிய விழாக்களில் பங்கேற்று வரும் கஸ்தூரியை பக்தர்களால் நேசிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் கஸ்தூரி குளிப்பதற்காக கோவில் வளாகத்திலேயே ஒரு 'ஷவர் பாத்' போன்ற அமைப்பு உள்ளது. தற்போது இந்த யானை குளிப்பதற்காக காரமடை தோட்டத்தில், இயற்கையான சூழ்நிலையில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. யானை நன்றாக முங்கி குளிக்க வசதியாக இந்தப் புதிய நீச்சல் குளம் இருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

இந்த நீச்சல்குளப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. விரைவில் கஸ்தூரியின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

]]>
Kasthuri, Elephant, Palani temple, பழனி மலை, கஸ்தூரி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/8/w600X390/kasthuri.gif http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/oct/08/elephant-kasthuri-new-swimming-pool-2786676.html
2782599 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் ஐ.எஸ். தலைவனின் உத்தரவு என்ன? DIN DIN Sunday, October 1, 2017 04:51 PM +0530 ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு மேற்காசிய நாடான ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் இயங்கி வருகிறது. அந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை, ஈராக் ராணுவமும், குர்த் இன மக்கள் படையும் மீட்டு வருகின்றன. ஈராக்கின் முக்கிய பகுதியான, மொசூல் நகரம், சமீபத்தில் மீட்கப்பட்டது. அப்போது நடந்த சண்டையில் அல் பாக்தாதி கொல்லப்பட்டான் என்ற செய்திகள் வெளி வந்தன. ஆனால் அவன் சிரியாவில் ரக்கா பகுதியில் பதுங்கி இருப்பதாக கூறப்பட்டது.  அதற்குப் பின், அல் பாக்தாதி ஒருமுறை மட்டுமே வெளியில் வந்துள்ளான்.

இந்நிலையில், இஸ்லாத்துக்கு எதிராக செயல்படும், 'மீடியா' மையங்கள் உட்பட, எதிரிகள் அனைவரையும் எரித்து கொல்லுங்கள், என, பயங்கரவாதிகளுக்கு அல் பாக்தாதி உத்தரவிட்டு உள்ளான். ஐ.எஸ்., சமூக வலைதளங்களில், அல் பாக்தாதியின் பேச்சு பதிவான, 'ஆடியோ சிடி' ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டது: ஐ.எஸ்., அமைப்பைச் சேர்ந்தவர்களான நீங்கள் தான், இஸ்லாத்தின் பாதுகாவலர்கள்; இஸ்லாத்தை காப்பாற்றும் வீரர்கள்; தோல்வியை கண்டு துவள வேண்டாம், தாக்குதலை தீவிரப்படுத்துங்கள். இஸ்லாத்துக்கு எதிராக செயல்படும் அனைத்தையும எரித்து கொல்லுங்கள். இஸ்லாமிய மைந்தர்கள், அல்லாவுக்காக, தங்கள் உயிரையும், உடலையும் தொடர்ந்து தியாகம் செய்வார்கள்’ என்று கூறினான்.

]]>
Baghdadi, ISIS, ஐ.எஸ்.பயங்கரவாத, அல் பாக்தாதி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/1/w600X390/Islamic-State-leader-Abu-Bakr-al-Baghdadi.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/oct/01/isis-releases-new-recording-of-leader-abu-bakr-al-baghdadi-2782599.html
2782572 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் எஸ்பிஐ புது விதிகள் இன்று முதல் அமல்! DIN DIN Sunday, October 1, 2017 03:35 PM +0530  

வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்கில் பராமரிக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச இருப்புத் தொகையை எஸ்பிஐ குறைத்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிச் சேவையில் முதன்மையாகத் திகழ்கிறது பாரத ஸ்டேட் வங்கி. இதில் தற்போது வங்கிக் கணக்கு தொடர்பான சில மாற்றங்களை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் விரிவடைந்த ஒரு வங்கியாகத் திகழ்ந்த பாரத ஸ்டேட் வங்கி, வாடிக்கையாளரின் குறைந்தபட்ச கணக்கு இருப்புத் தொகையாக ரூ.500 இருந்தது. இதனை சமீபத்தில் ரூ.5000-ஆக உயர்த்தி உத்தரவிட்டது. அதன்படி நகர்புறக் கிளைகளில் கணக்கு வைத்திருந்தால் ரூ.5000, துணை நகரங்களில் ரூ.3000 மற்றும் ரூ.2000, கிராமப்புறங்களில் ரூ.1000 குறைந்தபட்ச இருப்புத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டது.

இதனால் இந்த வங்கிச் சேவையின் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். சிறுசேமிப்பு காரணமாக வங்கிக் கணக்கு வைத்திருந்தவர்களுக்கு இது பெரிய சிக்கலை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் இந்த வங்கியின் இதர சேவைகளுக்கும் சர்வீஸ் தொகை வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கின் குறைந்தபட்ச இருப்புத் தொகையை குறைத்து தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

தற்போது புதிய அறிவிப்பின்படி நகர்புறம் மற்றும் துணை நகரம் ஆகியவை இணைக்கப்பட்டன. அதன்படி இவ்விறு பிரிவுகளில் வங்கிக் கணக்கு உள்ள வாடிக்கையாளரின் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.3000-ஆக மாற்றப்பட்டது. ஆனால், குறைந்தபட்ச வைப்புத்தொகை இல்லாத கணக்குகளுக்கு அபராதத் தொகை மாற்றி அறிவிக்கப்பட்டது. அதன்படி நகர்புற, துணை நகர கணக்குளுக்கு ரூ.30-ல் இருந்து ரூ.50-ஆகவும், கிராமப்புறங்களில் ரூ.20-ல் இருந்து ரூ.40-ஆகவும் உயர்த்தப்பட்டது. இந்த அபராத்தொகையுடன் ஜிஎஸ்டி இணைத்து வசூலிக்கப்படும்.

பிரதமரின் ஜன்தன் திட்டத்தில் திறக்கப்பட்ட தனிநபர் வங்கிக் கணக்கு, ஓய்வூதியர்கள் வங்கிக் கணக்கு, 18 வயதுக்குட்பட்டோர் வங்கிக் கணக்கு ஆகியவற்றுக்கு குறைந்தபட்ச இருப்புத்தொகையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.

]]>
SBI, எஸ்பிஐ, State Bank Of India, வைப்புத்தொகை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/1/w600X390/sbi.JPG http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/oct/01/for-sbi-account-holders-these-rules-charges-change-from-today-2782572.html
2782547 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் சென்னையில் தொடரும் மழை DIN DIN Sunday, October 1, 2017 10:45 AM +0530 இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் இடியுடன் கூட கனமழை பெய்து வருகிறது. இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

விடுமுறை தினங்களுடன் மழையையும் சேர்த்து மக்கள் கொண்டாடும்படி அமைந்திருந்தது இந்த மழையின் துவக்கம். ஆனால் நள்ளிரவிலிருந்து அதிகாலை வரை இடியுடன் கூடிய மழை பெய்துவந்ததால் மக்கள் கடந்த வருட நினைவுகளில் சற்று அச்சத்துடன் தான் மழையை எதிர்கொள்கின்றனர்.

அண்ணாசாலை, வண்டலூர், பெருங்களத்தூர், பம்மல், தாம்பரம், வேளச்சேரி, கிண்டி, மூலக்கடை, ஈக்காட்டுதாங்கல், போரூர், மடிப்பாக்கம், மதுரவாயல், ஆதம்பாக்கம், நுங்கம்பாக்கம், சிட்லபாக்கம், ஈஞ்சம்பாக்கம், கத்திப்பாரா, வடபழனி, அம்பத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சாரலுடன் மிதமான மழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

]]>
மழை, Rain, சென்னையில் மழை, chennai rain http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/1/w600X390/SATISHRAIN13.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/oct/01/october-downpour-to-reduce-rainfall-deficit-in-chennai-2782547.html
2781120 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் தமிழக மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவிக்கக் கோரிக்கை நாகப்பட்டினம் DIN Thursday, September 28, 2017 08:42 AM +0530 இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேசிய மீனவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்திய தேசிய மீனவர் சங்கத் தலைவர் ஆர்.எம்.பி. ராஜேந்திரநாட்டார், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பிய கோரிக்கை மனுவின் விவரம்:
இலங்கைக் கடற்படையின் அத்துமீறல் காரணமாக, உயிரையும், உடைமைகளையும், தொழிலையும் இழந்து தமிழக மீனவர்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடிப்பில் ஈடுபட்டால் ரூ. 20 கோடி அபராதம் விதிக்கப்படும், சிறை தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்திருப்பது தமிழக மீனவர்களின் வேதனையை மேலும் அதிகரிக்கச் செய்வதாக உள்ளது. மேலும், சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை விடுவித்து இலங்கை அரசு அறிவிப்பு வெளியிட்டும், படகுகளை மீட்டுக் கொண்டுவர தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என வெளியாகும் தகவல்கள், அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.

இதுகுறித்து தமிழக அரசும், புதுச்சேரி அரசும் விரைவான நடவடிக்கைகள் மேற்கொண்டு,  இலங்கை அரசு சிறைபிடித்துள்ள தமிழக மீனவர்களின் 148 விசைப் படகுகளையும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 75-க்கும் அதிகமான மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

படகுகளை மீட்டுக் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டால், தொடர்புடைய படகுகளின் உரிமையாளர்களுக்கு முழு மானியத்தில் புதிய விசைப்படகுகளை வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/29/w600X390/boat.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/sep/28/தமிழக-மீனவர்களையும்-மீன்பிடி-படகுகளையும்-விடுவிக்கக்-கோரிக்கை-2781120.html
2779486 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பெங்களூர் தொழிலதிபரிடம் 2 கோடி ரூபாய் கேட்டு தொலைபேசி மிரட்டல்! DIN DIN Monday, September 25, 2017 01:05 PM +0530 பெங்களூர் நந்தினி லேஅவுட்டைச் சேர்ந்தவர் 50 வயதான தொழிலதிபர் ஆர். சத்யபிரகாஷ். அவருக்குத் தொடர்ந்து இரண்டு நாட்களாக வெளிநாட்டு தொலைபேசி எண்ணிலிருந்து இரண்டு கோடி ரூபாய் பணம் கேட்டு கொலை மிரட்டல் வந்துள்ளது.

பெங்களூரில் அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை முப்பது ஆண்டுகளாக நடத்தி வருபவர் ஆர்.சத்யபிரகாஷ். இவர் சதாஷிவ நகர் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அன்று மேற்சொன்ன புகாரை அளித்துள்ளார். தொலைபேசி மூலம் இரண்டு கோடி பணம் கேட்டதுடன் கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டது என்று புகார் செய்துள்ளார் சத்யபிரகாஷ்.

அந்த மிரட்டல் தொலைபேசி அழைப்பு அவருக்கு முதலில் செப்டம்பர் 19-ம் தேதி, பகல் 3.15 மணிக்கு வந்துள்ளது. +44 என்று தொடங்கும் நம்பரிலிருந்து அந்த அழைப்பு வந்திருப்பதைப் பார்த்து, இது சர்வதேச எண் என்றும் லண்டனிலிருந்து அந்த அழைப்பு வந்திருக்கலாம் என்றும் நினைத்தார் சத்யபிரகாஷ். முதலில் அதை யாரோ தன்னை எரிச்சல்படுத்த இப்படி செய்கிறார்கள் என்று அலட்சியப்படுத்திவிட்டாராம். ஆனால் மறுபடியும் இரவு 7.05 அவர் கோவிலில் இருக்கும் போது அதே நம்பரிலிருந்து அழைப்பு வரவே பதற்றமடைந்துள்ளார்.

மறுமுனையில் இந்தியில் அவரை ஆபாச வார்த்தைகளில் திட்டி, இரண்டு கோடியை மறுநாளுக்குள் ஏற்பாடு செய்து தருமாறு அதட்டியுள்ளான். சத்யபிரகாஷ் மிகவும் குழப்படைந்துள்ளார். மேலும் அந்த மிரட்டல் நபர் தன்னுடைய ஆட்கள் அவரை தொடர்ந்து வருவதாகவும், போலீஸில் இது பற்றி புகார் செய்தாலோ, பணம் தராமல் ஏமாற்ற நினைத்தாலோ அவனது ஆட்கள் கொலை செய்யத் தயங்கமாட்டார்கள் என்றும் கூறியுள்ளான்.

சத்யபிரகாஷ் அவனிடம் தாம் கோவிலில் இருப்பதாகவும், பிறகு பேசுகிறேன் என்று கூறி அந்த அழைப்பைத் துண்டித்துள்ளார். மறுபடியும் நள்ளிரவு 12.47 மணிக்கு அதே அழைப்பு வரவே, சத்யபிரகாஷ் அதனை எடுக்கவில்லை. இந்த முறை +60 என்று தொடங்கும் மலேஷிய நம்பரிலிருந்து அந்த அழைப்பு வந்திருந்தது. அதற்கு அடுத்த நாள், செப்டம்பர் 20-ம் தேதி காலை 11.50 அவருடைய நண்பரின் அலுவலகத்தில் ஒரு மீட்டிங்கில் இருக்கும் போது அதே அழைப்பு மீண்டும் வந்துள்ளது. இம்முறையும் சத்யபிரகாஷ் எடுக்கவில்லை. அவருடைய நண்பர் எடுத்து பேசினார். அந்த மர்ம நபர் இந்தியில் வசை மொழியில் திட்டியுள்ளான். நண்பருக்கு இந்தி சரிவர தெரியாததால் அவர் ஆங்கிலத்தில் பதில் கூற, எதிரில் பேசியவன் தொடர்ந்து இந்தியில் திட்டியுள்ளான். இந்த விபரங்களை சத்யபிரகாஷ் தன்னுடைய புகாரில் விபரமாக கொடுத்துள்ளார்.

பெங்களூர் சதாஷிவ நகர் காவலர்கள் விரைவில் இந்தப் பிரச்னையை தீர்த்து வைப்பதாக சத்யபிரகாஷிடம் கூறியுள்ளனர். மேலும் அந்த நபர் பெங்களூரிலிருந்தே இண்டர்நெட் மூலம் சர்வதேச நம்பரில் பேசுவது போலப் பேசியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். 

]]>
Police, bengaluru, போலீஸ், ransom call , மிரட்டல் அழைப்பு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/25/w600X390/masked-robber-on-phone.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/sep/25/bengaluru-businessman-recently-received-ransom-call-demanding-2-crore-2779486.html
2769600 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் ஓணம் சீசனில் கேரளாவில் மதுபான விற்பனை ரூ.440.6 கோடியை எட்டியது! IANS IANS Friday, September 8, 2017 12:35 PM +0530  

கேரளாவில் ஓணத்திருவிழா கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை பத்து நாட்களுக்கு கேரளாவில் இப்பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இந்த சீசனில், ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் மது விற்பனை அமோகமாக நடைபெறும். மதுப் பிரியர்கள் தங்களுக்குப் பிடித்த மது பானங்களை அருந்தியும் நண்பர்களுக்கும் விருந்தளித்தும் மகிழ்வார்கள். இதனால் கடந்த பத்து நாட்களாக மதுபானம் விற்பனை ரூ.440.6 கோடியை எட்டியது. இதற்கு முந்தைய வருடத்தில் இது ரூ.411.14 கோடியாக இருந்தது என்கிறது புள்ளி விபரம்.

ஆகஸ்ட் 25-ம் தேதி ஆரம்பித்த இந்த விற்பனைக் கணக்கு கடந்த ஞாயிறுடன், அதாவது செப்டம்பர் 3-ம் தேதியில் முடிவடைந்தது. அதிலும் ஞாயிற்றுக் கிழமை ஒரே நாளில் ரூ.71.17 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. இதற்கு முந்தைய வருடத்தில் ரூ. 59.51 கோடிக்கு விற்பனையாகியிருந்தது. தவிர திருச்சூர் மாவட்டத்தில் இரன்ஜலகுடாவில் ரூ. 29.46 கோடி மதுபான விற்பனை பதிவாகியுள்ளது.

விற்பனையில் ரம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மொத்த விற்பனையில் 50 சதவிகிதம் ரம் விற்பனையாகியுள்ளது. இரண்டாம் இடத்தில் பிராந்தியும், மூன்றாம் இடத்தில் பீர் இருப்பதாக தகவல்கள் வெளியானது.

கேரள மதுபான விற்பனை கழகம் தான் இம்மாநிலத்தில் மொத்த மதுபான விற்பனையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மது விற்பனையில் கேரளா முதல் இடத்தை பிடித்துள்ளதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 

]]>
Kerala, Onam, Liquor sales, ஓணம், மது, சாராயம், ரம், பீர் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/8/w600X390/_97697502_hi041448309.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/sep/08/liquor-worth-rs-4406-cr-sold-in-kerala-during-onam-season-2769600.html
2766327 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் மாணவி அனிதா உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி DIN DIN Saturday, September 2, 2017 10:58 PM +0530 மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்காததால் தற்கொலை செய்துகொண்ட  அரியலூர் மாவட்டம் குழுமூரில் மாணவி அனிதாவின் உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் திமுக சார்பில் மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்றார்.
ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய பின் மாணவி அனிதாவில் உடல் அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/Stalin.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/sep/02/மாணவி-அனிதா-உடலுக்கு-முக-ஸ்டாலி-நேரில்-அஞ்சலி-2766327.html
2765626 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் சென்னையில் எங்கெல்லாம் மழை? ENS ENS Friday, September 1, 2017 11:19 AM +0530  

தற்போது (1.09.2017) அம்பத்தூர், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை என சென்னையின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்குப் பருவமழை வலுவடைந்ததன் எதிரொலியாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பொழிய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தைப் போல செப்டம்பரிலும் பரவலாக மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தச் செய்தி சென்னை மக்களைப் பொருத்த வரையில் நல்ல செய்தி.  கடந்த 150 ஆண்டு காலத்தில் ஆகஸ்ட் மாதத்தில் தான் அதிக மழை பொழிந்துள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் மற்றும் வெப்ப சலனம் காரணமாகவும் தமிழகத்தில் குமரி, திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் போன்ற பல இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழை வலுவடைந்துள்ளதால் மேலும் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மிதமான மழையும் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

]]>
Weather in Chennai,Chennai Weather,Weather Report,சென்னை வானிலை,வானிலை ஆய்வு மையம் ,மழை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/1/w600X390/umarain.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/sep/01/சென்னையில்-எங்கெல்லாம்-மழை-2765626.html
2764368 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தினால் சிறை தண்டனை! சக்திவேல் DIN Wednesday, August 30, 2017 12:04 PM +0530  

Say No To Plastic என்ற பிரச்சாரம் உலகெங்கும் நடந்துவரும் நிலையில் பிளாஸ்டிக் பைகளுக்கு சில நாடுகள் தடை விதிக்கத் தொடங்கியுள்ளது. இயற்கையையும், சுற்றுச்சூழலையும் பாதிப்பதால் உலகையே அச்சுறுத்தும் பிரச்னையாக இது உள்ளது. நெகிழி எனப்படும் இந்த பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பயன்பாட்டால் சுற்றுப்புறச் சூழல் மாசு, கடல் வளம், நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு, மண் வளம், விலங்கினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. கடலில் கலப்பதால், கடல் வாழ் உயிரனங்கள் பாதிக்கப்படுகின்றன. திமிங்கலம், மீன், ஆமை, பறவை போன்றவை பிளாஸ்டிக் பைகளை உட்கொள்வதால் அதிகளவில் உயிரிழந்து வருகின்றன. இந்நிலை தொடர்ந்தால் இன்னும் 50 வருடங்களில் கடல் வாழ் உயிரினங்கள் அழிந்துவிடும் என ஆய்வுகள் எச்சரித்துள்ளது. இது போன்ற பிரச்னைகளால் கடலுணவு இல்லாமல் போனால் மனதனின் உணவுச் சங்கிலி பாதிக்கப்படும். உலக நாடுகள் இது குறித்த விழிப்புணர்வு பெறவில்லை என்றால் வரும் காலங்களில் மனித இனம் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும்.

சமீபத்தில் கென்யாவில் பிளாஸ்டி பை விற்பனைக்குத் தடை விதிப்புச் சட்டம் அமலுக்கு வந்ததுள்ளது. பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தினால் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் அளவுக்கு கடுமையான சட்டத்தைக் கென்யா அமல்படுத்தியுள்ளது. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகள் மக்க பல ஆண்டுகளாகும். மழை நீர் மண்ணில் புக முடியாமல் போவதோடு, நிலத்தடி நீர் ஊற்றுக் கண்களை மறைத்து, தாவரங்கள் வளராமல் தடுப்பதற்கும், மழை இன்மைக்கும் காரணமாகிறது. எனவே அவற்றின் பயன்பாட்டை எதிர்த்து பத்து ஆண்டு போராட்டத்துக்குப் பின் கென்யாவில் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடுமையான தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

இதுபோன்ற சட்டங்கள் உலகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டால் பிளாஸ்டிக் இல்லாத தூய்மையான சூழலை மீண்டும் உருவாக்க முடியும். இந்தியாவில் பல மாநிலங்களில் பிளாஸ்டிக்கு தடை உத்தரவு மட்டும் போட்டுவிட்டு அதை அமல்படுத்தாமல் உள்ளனர்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 15 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாகி பூமிப் பந்தை அசுத்தமாக்கி வருகின்றன. கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி, அவை கடலுக்குள் செல்லும் போது மீன் உட்பட கடல்வாழ் உயினங்கள் அதை விழுங்கி இறக்கிறது. கடல் நீரும் மாசடைகிறது. சுற்றுச் சூழல் பாதிப்பு, நோய்கள் அதிகரிப்பு என பிளாஸ்டிக்கால் பல பிரச்னைகள் இருந்தும் அது குறித்த விழிப்புணர்வு நம் நாட்டில் இன்னும் போதிய அளவுக்கு ஏற்படவில்லை என்பது உண்மை.

சில உணவகங்களில் மெல்லிய பாலிதீன் தாள்களில் உணவு வழங்கப்படுகிறது. இதில் சாப்பிடுவோர் ஒவ்வாமை, வயிற்றுப் போக்கால் அவதிப்படுகின்றனர். சூடான உணவுப் பொருள்களை பிளாஸ்டிக், பாலிதீன் பைகளில் எடுத்துச் செல்லும்போது, சூடு மற்றும் எண்ணெய் காரணமாக பிளாஸ்டிக்கில் உள்ள ஆபத்தான வேதிப் பொருள்கள் உணவு பொருள்களுடன் கலந்து அவை புற்றுநோய், இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் தைராய்டு நோய் ஏற்படவும் காரணமாகிறது என்று கட்டுரைகளில் படித்திருந்தும் படித்ததை மறந்துவிட்டு பிளாஸ்டிக்கைத் தொடர்ந்து பயன்படுத்துவோர்தான் நம்மில் அதிகம்.

பள்ளிகளில் பிளாஸ்டி மற்றும் பாலிதீன் ஏற்படுத்தும் தீமைகளைக் கற்றுத் தர வேண்டும். அரசும் மக்களிடையே இன்னும் தீவிரமாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்கவும், தூய்மையான இந்தியாவை உருவாக்கவும், பிளாஸ்டிக் பொருள்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். அதற்கான கடுமையான சட்டங்களை கென்யாவைப் போல் இந்தியாவும் பின்பற்ற வேண்டும்.
 

]]>
plastic, no to plastic, rules against usage of plastic, பிளாஸ்டிக் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/30/w600X390/drowning-in-plastic.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/aug/30/say-no-to-plastic-2764368.html
2763772 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் அறிவுக்கூர்மை போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் முதலிடம்! PTI PTI Tuesday, August 29, 2017 06:17 PM +0530 ‘மென்ஸா’ எனும் அறிவுக் கூர்மை சோதனைப் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் துருவ் கார்க் முதலிடம் பெற்றுள்ளார். 

பொது அறிவுத் திறனை மதிப்பிடும் உலகின் மிகப் பழமையான ‘மென்ஸா’ நிறுவனம் நடத்திய அறிவுக்கூர்மை  போட்டியில் 13 வயது நிரம்பிய இந்திய வம்சாவளி மாணவன் துருவ் கார்க் பங்கு பெற்றார். ஐக்யூ தொடர்பாக தனக்கு அளிக்கப்பட்ட மிகக் கடினமான 150 கேள்விகளுக்கும் வெகு சுலபமாக பதில் அளித்து 162 புள்ளிகளைப் பெற்றார். உலக அறிவியல் மேதைகளான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கை விட இரண்டு மதிப்பெண்கள் அதிகம் பெற்றுள்ளார் துருவ்.

இதே பிரிவின் கல்சர் ஃபேர் ஸ்கேல் (Culture Fair scale) எனும் இரண்டாம் போட்டியிலும் அவர் பங்கு பெற்று அதிலும் அதிக மதிப்பெண்களான 152 ஐ.க்யூ புள்ளிகளைப் பெற்றுள்ளார். இதன்மூலம், உலகில் இந்த இரண்டு போட்டிகளிலும் ஒரே நேரத்தில் பங்குபெறும் ஒரு சதவிகித மக்களில் ஒருவராகத் திகழ்கிறார் துருவ். அதிலும் இரண்டு போட்டிகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றது சிறப்பானது. லண்டனில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைத் சேர்ந்த திவ்யா என்பவரின் மகனான துருவுக்கு கணக்கு மற்றும் வேதியல் விருப்பத்துக்குரிய பாடங்கள். கிரிக்கெட் மற்றும் டேபிள் டென்னிஸ் விளையாட்டுகளிலும் ஆர்வம் உடைய துருவ் மென்ஸா வெற்றி குறித்து கூறுகையில், சம்மர் லீவ் என்பதால் இந்தப் போட்டியில் கலந்து கொண்டதாகவும், இந்தளவுக்கு மதிப்பெண்களை எடுப்பேன் என்று எதிர்ப்பார்க்கவில்லை என்றார்.

]]>
Mensa, Druv Garg, துருவ், அறிவுத் திறன் போட்டி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/29/w600X390/druv.jpeg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/aug/29/13-year-old-indian-origin-boy-druv-garg-in-uk-scores-162-in-mensa-iq-test-2763772.html
2763757 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் தனி ஒருவன்! ஷியாம் லாலின் மகத்தான சாதனை! உமா பார்வதி DIN Tuesday, August 29, 2017 04:11 PM +0530  

திரைப்படங்களில் தனி ஒருவனாக கொடியவர்களை வீழ்த்தி வெற்றி கொடி நாட்டிய கதாநாயகர்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் திரை மறைவில் நிஜத்திலும் சில ஹீரோக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுடைய சுயநலமற்ற உழைப்பினால் தான் இச்சமூகம் எனும் சங்கிலி அறுபடாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. அப்படியொரு மனிதர் தான் சத்திஸ்கரைச் சேர்ந்த ஷியாம் லால்.

சத்தீஸ்கர் மாவட்டத்தின் கோரியா மாவட்டத்திலுள்ள சாஜா பகத் எனும் கிராமத்தில் பல வருடங்களாக குடிதண்ணீர் பிரச்னை நிலவி வந்தது. கிராமத்தினர் குடிக்க தண்ணீர் இல்லாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். ஆடு மாடுகளும் தண்ணீர் கிடைக்காமல் அவஸ்தைக்குள்ளாகின. இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண அரசாங்கமோ, அந்த கிராமத்து மக்களோ முன் வரவில்லை. தன்னுடைய கிராம மக்களும், கால்நடைகளும் குடிக்க நீர் இல்லாமல் தவிப்பதை பார்க்க முடியாத 15 வயது நிரம்பிய ஷ்யாம் லால் என்னும் இளைஞர் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடிவு செய்தார். இதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்து தன்னுடைய மண்வெட்டியால் குளம் வெட்டத் தொடங்கினார்.

கிராமத்தினர் அவரது செயலைப் பார்த்து கேலி செய்தனர். ஆனால் பழங்குடி இனத்தைச் சார்ந்த அந்த இளைஞன் சற்றும் மனம் தளரவில்லை. கிராம மக்களின் கேலிகளையும் கிண்டல்களையும் பொருட்படுத்தாமல் விடா முயற்சியோடு 27 ஆண்டுகள் போராடி 15 அடி ஆழம் கொண்ட குளத்தை ஒரு ஏக்கர் பரப்பளவில் ஒற்றை ஆளாக நின்று உருவாக்கிவிட்டார் ஷ்யாம் லால். அவருடைய  அசுர உழைப்பின் பலனைத் தான் இன்று அந்த கிராம மக்கள் அனுபவித்து வருகிறார்கள். 

தற்போது 42 வயதாகும் ஷியாம் கூறுகையில் 'அரசாங்கமோ கிராம மக்களோ, இந்தக் குளத்தை வெட்டும் போது எனக்கு உதவி செய்யவில்லை. ஆனாலும் இதை கிராம மக்களின் நலனுக்காகவும் கால்நடைகளின் நலனுக்காவும் தான் செய்தேன்’ என்றார். செயற்கரிய இந்தச் செயலை செய்து முடித்த பெருமை அவர் முகத்தில் தெரிந்தது. பிஹாரின் மலை மனிதர் மாஞ்சியைப் போலவே ஷியாம் லால் தனி நபராக ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 15 அடி ஆழத்தில் அக்குள்ளத்தை வெட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான ராம்சரண் பர்கார் என்பவர் கூறுகையில், 'ரொம்ப வருஷமாக ஷியாம் லாலின் உழைப்பைப் பார்த்து வருகிறேன். இந்த குளத்து தண்ணீரைத் தான் இப்போது நாங்கள் அனைவரும் பயன்படுத்துகிறோம். ஷியாம் லாலுக்கு என்றென்றும் நன்றி கடன்பட்டிருக்கிறோம்’ என்று நெகிழ்ச்சியாகக் கூறினார்.

ஷியாம் லாலின் செயலைப் பாராட்டிய அத்தொகுதி எம்.எல்.ஏ தனிநபராக குளம் வெட்டி கிராம மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்ட ஷயாம் லாலுக்குப் பத்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். கோரியா பகுதியின் கலெக்டர் ஷியாமைப் பாராட்டி அவருக்கு உதவி புரிவதாகக் கூறியுள்ளார்.

ஷியாம் லாலின் இச்செயல் தனி நபராகப் போராடி மலையைக் குடைந்து சாலை அமைத்த தஸ்ரத் மாஞ்சியின் செயலை ஒத்ததாக உள்ளது என்றனர். அவரைப் போன்றே தனி நபராகப் போராடி தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ள இன்றைய காலகட்டத்தில் ஆழமான குளம் வெட்டிய ஷியாம் லாலை அப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர். அவரை கேலி பேசிய அதே கிராமத்தினர் தற்போது ஷியாம் லாலை ஒரு ஹீரோவாகவும் தங்களுடைய ரட்சகராகவும் பார்க்கின்றனர்.

]]>
Chhattisgarh, Saja Pahad village, Dashrath Manjhi, Shyam Lal, ஷியாம் லால், தண்ணீர் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/29/w600X390/_dcd193a4-8ba9-11e7-b1bc-83ce932a2009.jpeg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/aug/29/real-hero-shyam-lal-dug-a-pond-for-27-years-all-by-himself-in-chhattisgarh-2763757.html
2763747 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் ஆகஸ்ட் 31-ம் தேதி பி.எஸ்.எல்.வி., சி.39 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்! DIN DIN Tuesday, August 29, 2017 03:20 PM +0530  

ஆகஸ்ட் 31-ம் தேதி விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-39 (PSLV C39) ராக்கெட்டுக்கான கவுண்டவுன் நாளை (ஆகஸ்ட் 30, 2017) தொடங்குகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடல் சார்ந்த ஆராய்ச்சிக்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1-ஹெச் (IRNSS-1H) செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் முடிவு செய்திருந்தது. அதன் படி ஏற்கனவே திட்டமிட்டபடி 7 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது. இவற்றில், முதலில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோளின் ஆயுள் காலம் நிறைவடைய இருப்பதால், புதிதாக ஐ.ஆர்.என்.எஸ்.1 எச் என்ற செயற்கைக்கோளினை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் தயார் நிலையில் உள்ள இந்த ராக்கெட்டின் பாகங்கள் பொருத்தப்பட்டுவிட்டன. தற்போது எரிபொருள் நிரப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 31-ம் தேதி மாலை விண்ணில் ஏவப்பட உள்ள இந்த ராக்கெட்டுக்கான 29 மணிநேர கவுண்டவுன் நாளை நண்பகல் 1.59 மணிக்கு துவங்கும். மாலை 6.59 மணிக்கு இந்தக் கவுண்டவுன் முடிவடைந்தவுடன் ராக்கெட் விண்ணில் பாயும். 

இஸ்ரோ பல சாதனைகளை படைத்து வருகிறது. உலக நாடுகளுக்கு சவால் விடும் அளவில் பல்வேறு புதிய ராக்கெட் தொழில்நுட்பங்களில் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. ஐ.ஆர்.என்.எஸ்.1 எச் செயற்கைக்கோளால் இயற்கை சீற்றம், கடல் கொந்தளப்பு, போன்ற கடல்சார்ந்த விஷயங்களைக் கண்காணிக்க முடியும் என்றனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.
 

]]>
satellite, இஸ்ரோ, ராக்கெட், ISRO, PSLV C39, IRNSS-1H, செயற்கைக் கோள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/29/w600X390/pslv.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/aug/29/isro-announces-launch-of-pslv-c39-with-irnss-1h-on-aug-31-2763747.html
2761051 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் சென்னையின் மாபெரும் மருத்துவ கண்காட்சி - ஆரோக்கியம் ஹெல்த் & ஃபிட்நெஸ் எக்ஸ்போ DIN DIN Thursday, August 24, 2017 01:51 PM +0530 தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை (Apollo Personalised Health Chek)  இணைந்து நடத்தும் ‘ஆரோக்கியம் ஹெல்த் & ஃபிட்நெஸ் எக்ஸ்போ’ மருத்துவக் கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஆகஸ்ட் 26 & 27 ஆகிய இரண்டு நாட்கள் காலை 10.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறும். 

இலவச மருத்துவப் பரிசோதனைகள், முன்னணி மருத்துவர்களின் மருத்துவ ஆலோசனைகள், கண் பரிசோதனை, VLCC வழங்கும் Body Composition Analysis, விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனை, அங்குபஞ்சர்  -அக்குபிரஷர் சிகிச்சை மற்றும் ஆட்டிசம் குறித்த ஆலோசனைகள் இக்கண்காட்சியில் வழங்கப்படும். தவிர பல்வேறு அரங்குகளில் சித்த மருத்துவ மூலப்பொருள் கண்காட்சி, பாரம்பரிய நெல் மற்றும் காய்கறி விதைகள் கண்காட்சி, Terrace Gardening குறித்த ஆலோசனைகள் போன்றவையும் நடைபெற உள்ளன. இந்த மருத்துவ கண்காட்சி வெற்றிகரமாக நான்காவது முறை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

BMD பரிசோதனை (Bone Mineral Density), மார்பக-கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை, லேசர் முறையில் முடி அகற்றுதல், முடி மற்றும் தோல் பரிசோதனை, வர்ம சிகிச்சை மற்றும் நாடி பார்த்தல், பூட் கேம்ப் சேலஞ்ச் (Boot Camp Challenge) 5 Members per team, இளமை காக்கும் யோகா – செய்முறை விளக்கம், பேலியோ டயட் கவுன்சிலிங், ஜும்பா நடனம் (Zumba Dance) போன்ற நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  

இக்கண்காட்சியில் ஆரோக்கியம் & நல்வாழ்வு வழங்கும் 'சென்னை பேலியோ சந்திப்பு' நடைபெற உள்ளது. பேலியோ டயட் குறித்த அனைத்து சந்தேகங்களையும் மருத்துவர்களிடம் கேட்டு தெளிவு பெறலாம். 

அனைவருக்கும் அனுமதி இலவசம். மேலும் விபரங்களுக்கு – 9282438120 / 9789667626 / 9282441749

]]>
Medical Expo, Nandambakkam Trade Centre, Free Check up, Paleo, இலவச மருத்துவ பரிசோதனை , அரோக்கியம் ஹெல்த், பேலியோ http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/24/w600X390/Arogyam_Health_Expo_Chennai.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/aug/24/medical-expo-organised-by-the-new-indian-express-and-apollo-at-nandambakkam-trade-centre-2761051.html
2761064 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் நாளை முதல் புதிய 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்படும்! ரிசர்வ் வங்கி அறிவிப்பு! ANI ANI Thursday, August 24, 2017 01:35 PM +0530  

புதிய வடிவத்தில் 50 ரூபாய் நோட்டுகள் நாடு முழுவதும் புழக்கத்துக்கு விடப்பட்டுள்ள நிலையில் ரிசர்வ் வங்கி நாளை முதல் புதிய 200 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்துக்கு விடப்படும் என்று அறிவித்துள்ளது. 

சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு கண்டெய்னர்களில் ரூபாய் நோட்டுகள் வந்தன. அடுத்தடுத்து பண கட்டுகள் வரவிருப்பதாகவும் அடுத்த வாரம் தமிழகம் முழுவதும் புழக்கத்துக்கு வந்துவிடும் என்றும் ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

]]>
ரிசர்வ் வங்கி,புதிய 200 ரூபாய்,இந்தியா,Reserve Bank,Rs.200 Note,India http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/24/w600X390/200_rupees.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/aug/24/reserve-bank-of-india-to-issue-notes-in-denomination-of-rs200-tomorrow-2761064.html
2760463 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் 'இன்றைய சென்னை அன்றைய மெட்ராஸ்' கவிதைப் போட்டி DIN DIN Wednesday, August 23, 2017 01:24 PM +0530  

சென்னையிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகம் (The U.S. Consulate General in Chennai) பிரகிருதி பவுண்டேஷனுடன் இணைந்து, 'இன்றைய சென்னை அன்றைய மெட்ராஸ்’ எனும் தலைப்பில் கவிதைப் போட்டியொன்றை நேற்று (ஆகஸ்ட் 22, 2017), நடத்தியது. 
 
சென்னை, லயோலா கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 60-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்று ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் கவிதை வாசித்தனர். இப்போட்டியின் நடுவர்களாக ஈஷ்வர் கிருஷ்ணன், வசந்த், சல்மா, கவிதா முரளிதரன் மற்றும் அமெரிக்க துணைத் தூதரகத்தின் கலாசார அதிகாரி எரிக் லண்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விபரம்:

வயது 16 - 21 (ஆங்கிலம்) :
முதல் பரிசு : மதுமிதா. பி (நுங்கம்பாக்கம் M.O.P. வைஷ்ணவ் கல்லூரி)
இரண்டாம் பரிசு : யக்னா (நுங்கம்பாக்கம் M.O.P. வைஷ்ணவ் கல்லூரி)

வயது 16 - 21 (தமிழ்) :
முதல் பரிசு : சிவப்பிரகாசம் (திறந்தவெளி வகை)
இரண்டாம் பரிசு : அருண்கோகுல்.பி (லயோலா கல்லூரி) / டி. பானுப்ரியா (எத்திராஜ் கல்லூரி)

வயது 22 - 26 (ஆங்கிலம்) :
முதல் பரிசு : ஆதித்யா மோகன் (திறந்தவெளி வகை)
இரண்டாம் பரிசு : ஹரிணிவாசினி. ஜி (SDNB வைஷ்ணவ் கல்லூரி)

வயது 22 - 26 (தமிழ் ) :
முதல் பரிசு : ராஜேஷ் பச்சையப்பா (திறந்தவெளி வகை)
இரண்டாம் பரிசு : M.S. பிரீத்தி (எத்திராஜ் கல்லூரி)

]]>
The U.S. Consulate General in Chennai, Poetry Slam event, அமெரிக்க துணை தூதரகம், கவிதைப் போட்டி, லயோலா கல்லூரி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/23/w600X390/35914539034_b54d9f8433_z.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/aug/23/details-on-poetry-slam-event-from-the-us-consulate-2760463.html
2748703 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் சென்னை மெரினா சாலை சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டது DIN DIN Thursday, August 3, 2017 05:53 AM +0530  

சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையிலுள்ள சிவாஜி கணேசன் சிலை இன்று அதிகாலை அகற்றப்பட்டது.

மெரினா கடற்கரை காமராஜர் சாலையிலுள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி சிலையை அகற்ற தமிழக அரசு முடிவு செய்தது.

ஆனால் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சிலையை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.
அகற்றப்படும் சிலை அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. ஆனால் அகற்றப்படும் சிலையை மணிமண்டபத்தில் வைக்கவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

சிவாஜி கணேசன் சிலையை தற்போதைய இடத்தில் இருந்து அகற்றி அதே சாலையிலேயே கடற்கரை ஓரத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட சிலை மணி மண்டபத்தில் வைக்கப்படும் என தெரிகிறது.


 

 

]]>
சென்னை,மெரினா கடற்கரை,சிவாஜி கணேசன் சிலை,Chennai,Marina Beach,Sivaji Ganesan Statue http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2013/11/26/12/w600X390/sivaji2.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/aug/03/சென்னை-மெரின-சாலை-சிவாஜி-கணேசன்-சிலை-அகற்றப்பட்டது-2748703.html
2744542 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பீகாரில் பாஜக ஐக்கிய ஜனதா தள கூட்டணி: நிதிஷ் குமார் இன்று பதவியேற்பு DIN DIN Thursday, July 27, 2017 12:40 AM +0530 பிகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தள கூட்டணியின் முதல்வர் நிதிஷ் குமார்  தனது பதவியை புதன்கிழமை இரவு திடீரென ராஜினாமா செய்தார்.
லாலு பிராசத் யாதவ் கடந்த 2006-ம் ஆண்டு ரயில்வே ஹோட்டல்களை வாடகைக்கு விட்டதில் ஊழல் செய்துள்ளதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மகனும், பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து துணை முதல்வர் பதவியை தேஜஸ்வி யாதவ் ராஜினாமா செய்ய வேண்டும் என நிதிஷ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் இதனை லாலு தரப்பு மறுத்து வந்தது.
இந்நிலையில், பிகார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் திடீரென புதன்கிழமை இரவு அம்மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.


இந்நிலையில் பிகாரில் 53 இடங்களை கொண்டுள்ள பா.ஜ.க நிதிஷ்குமாருக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதால் இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

 

]]>
நிதிஷ் குமார், பாஜக,பீகார்,Nitish Kumar,Bjp,Bihar http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2015/11/8/0/w600X390/nithish.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/jul/27/பீகாரில்-பாஜக-ஐக்கிய-ஜனதா-தள-கூட்டணி-நிதிஷ்-குமார்-இன்று-பதவியேற்பு-2744542.html
2743791 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் சுயம்வரம் திரைப்பட இயக்குநர் சிராஜ் மரணம் DIN DIN Tuesday, July 25, 2017 08:46 AM +0530 சென்னை: தமிழ் திரையுலகின் கின்னஸ் சாதனை படைத்த சுயம்வரம் திரைப்பட இயக்குநர் சிராஜ் மாரடைப்பால் மரணமடைந்தார்.

கடந்த சில நாட்களாக நோயால் அவதிப்பட்டு வந்த சிராஜ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது.

தகவல் அறிந்து திரைத்துறையினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சிராஜ் உடல் அடக்கம் நாளை மாலை சென்னையில் நடைபெற உள்ளது. நடிகர் ராமராஜன் நடித்த என்ன பெத்த ராசா, சுயம்வரம் உள்ளிட்ட பல படங்களை சிராஜ் இயக்கியுள்ளார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/siraj.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/jul/25/சுயம்வரம்-திரைப்பட-இயக்குநர்-சிராஜ்-மரணம்-2743791.html
2739863 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் நடிகர் கமல்ஹாசனின் கவிதை ட்விட் DIN DIN Wednesday, July 19, 2017 06:28 AM +0530 சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன், தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பதாக தெரிவித்தார்.

இவரது இந்த கருத்துக்கு தமிழக அமைச்சர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

கமல்ஹாசனுக்கு  சிலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு ட்விட்டரில் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் கூறப்பட்டுள்ளது.

என்று பதிவிட்டுள்ளார்.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/6/w600X390/Kamal-Haasan1.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/jul/19/நடிகர்-கமல்ஹாசனின்-கவிதை-ட்விட்-2739863.html
2739633 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் அமெரிக்க நூலகத்தில் தமிழக மருத்துவரின் நூல்! DIN DIN Tuesday, July 18, 2017 02:42 PM +0530 சென்னையிலுள்ள முக்கிய விஐபி-களின் மருத்துவ ஆலோசகரும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் செனட் உறுப்பினருமான டாக்டர் எஸ். அமுதகுமார், சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார்.

அப்போது டெக்சாஸ் மாகாணத்திலுள்ள பியர்லேண்ட் நகர மேயர் டாம் ரெய்ட்டைச் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது, தான் எழுதிய 6 மருத்துவ புத்தகங்களையும் மேயரின் பெயரிலுள்ள 'டாம் ரெய்ட் நூலகத்துக்கு வழங்கி, அவரிடம் வாழ்த்து பெற்றார்.

அந்தப் புத்தகங்களை வாங்கி பார்த்த டாம், அந்த புத்தகங்களின் உள்ளடக்க விவரங்களை அறிந்து, அவற்றை எழுதிய டாக்டர் அமுதகுமாரை பாராட்டியதோடு, இனிவரும் நாட்களில் தமிழ், இந்தி, குஜராத்தி உள்ளிட்ட இந்திய மொழி புத்தகங்கள் தமது பெயரில் உள்ள நூலகத்தில் வைக்கப்படும் என்ற உறுதியையும் அளித்தார்.

இதனால் தமிழ் உள்ளிட்ட மேற்கூறிய மொழிகளின் புத்தகங்கள் அமெரிக்க நூலகம் ஒன்றில் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பியர்லேண்ட் நகர மேயரின் பதவிக் காலம் இரண்டாண்டுகள். இந்நிலையில் 92 வயதாகும் டாம், தொடர்ந்து 46 ஆண்டு காலமாக பியர்லேண்ட் நகர மேயராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/18/w600X390/amutha_kumar_book_release.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/jul/18/அமெரிக்க-நூலகத்தில்-தமிழக-மருத்துவரின்-நூல்-2739633.html
2737345 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் ஆம்புலன்ஸ் சேவை ஏன் இவர்களுக்கு மறுக்கப்பட்டது? DIN DIN Friday, July 14, 2017 04:52 PM +0530  

புவனேஸ்வர் : பலாசூரில் நடந்த சம்பவம் இது. அமரர் ஊர்தியில், இறந்தவர் சடலத்தை கொண்டு செல்கையில் ஓட்டுனர் நோயாளியின் உதவிக்கு வந்தவரிடம் பணம் கேட்டுள்ளார். அவர் தரவில்லை என்ற காரணத்தால் சடலத்தை தெருவில் கிடத்துவிட்டார். இது குறித்து உடல்நலம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பிரதாப் ஜெனா வியாழக்கிழமை அன்று கலெக்டர் ப்ரோமத் குமார் தாஸிடம் இதனை விசாரித்து அதற்குரிய ஆவணங்களை விரைவில் சமர்ப்பிக்குமாறு ஆணையிட்டுள்ளார்.

சிந்தமணிபாத எனும் கிராமத்தைச் சேர்ந்த ஏழை முதியவர் ரஹ்மான் கான். உடல்நலக் குறைவால் புதன்கிழமை பாதிக்கப்பட்டார். பக்கத்து வீட்டாரான துனி பெஹ்ரா எனும் பெண்மணி அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி ரஹ்மான் கான் வியாழனன்று அதிகாலையில் இயற்கை எய்தினார்.

உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், சடலத்தை கிராமத்துக்கு எடுத்துச் செல்ல ஒரு தனியார் அமரர் ஊர்தியொன்றின் உதவியை நாடியுள்ளார் துனி பெஹ்ரா. சடலத்தை ஏற்றிக் கொண்ட ஓட்டுனர் பெஹ்ராவிடம் பணம் கேட்டுள்ளார். துனி பெஹ்ரா தன்னிடம் பணம் இல்லை சடலத்தை கிராமத்துக்கு எடுத்துச் செல்ல உதவுமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ஓட்டுனர் மனிதாபிமானம் துளியும் இன்றி சடலத்தை தெருவில் அப்படியே போட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அதன் பின் கிராமத்தினர் இவ்விஷயத்தை கேள்விப்பட்டு சடலத்தை அருகிலுள்ள மயானத்தில் புதைத்தனர்.

இதே போன்று இன்னொரு மனித நேயமற்ற சம்பவம், சினாபலி எனும் இடத்திலும் நடந்துள்ளது. 102 அமரர் ஊர்தி ஓட்டுனர் கர்ப்பிணி பெண் ஒருவரின் கணவரிடம் 500 ரூபாய் லஞ்சப் பணம் கேட்டுள்ளார். இன்னொரு சம்பவத்தில் வார்ட்டில் லஞ்சம் கேட்டு அதைத் தர மறுத்ததால் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு வராந்தாவில் பிரசவம் நடந்தது. லஞ்சம் என்பது எப்படி அடிமட்டத்திலிருந்து புரையோடி உள்ளது என்பதற்கு மேற்சொன்ன மூன்று சம்பவங்களும் சிறு சான்று. அரசாங்கம் இவர்கள் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்குமாறு ஆணை பிறப்பித்துள்ளது.

ட்ராலியில் மனைவியைத் தள்ளிச் சென்ற நபர்

தினக்கூலி செய்து பிழைத்து வரும் ஒருவர் தனது மனைவியை மஹாகாலாபடாவில் உள்ள கம்யூனிட்டி ஹெல்த் செண்டரில் அனுமதிக்க 108 எண்ணில் ஆம்புலன்ஸை அழைத்துள்ளார். ஆனால் வாகனம் வராததால் ட்ராலியில் மனைவியை வைத்து அவசரமாக தானே அழைத்துச் சென்றுள்ளார். இச்சம்பாம் அப்பகுதியில் கடும் எதிர்ப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கியாரபங்கா கிராமத்தைச் சேர்ந்த அகல்யா தாஸ் கடந்த சில நாட்களாகவே கடுமையான காய்ச்சலில் அவதியுற்று வந்தார். அவரின் நிலமை மோசமடையவே, அகல்யாவின் கணவர் குருசரானா கிராமத்தினரின் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைத்து வாகனத்தை உடனடியாக அனுப்புமாறு கேட்டுள்ளார். ஆனால் காத்திருந்தது தான் மிச்சம் ஆம்புலன்ஸ் வரவேயில்லை. வேறு வழியின்றி ஒரு ட்ராலியில் தன் மனைவியை ஏற்றி அங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவமனை அதிகாரிகளிடம் விசாரித்த போது தங்களுக்கு குருசராணாவிடமிருந்து எவ்வித அழைப்பும் வரவில்லை என்று மறுத்துவிட்டனர்.

மனிதாபிமானம் அருகிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் இதுபோன்ற சம்பவங்களை தினம்தோறும் படித்துக் கொண்டும் கேள்விப்பட்டுக் கொண்டும் தான் இருக்கிறோம். புவனேஸ்வரில் மட்டுமல்ல தமிழகத்தில் கூட இதே போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன தீர்வு? சாமானியர்கள் வாழத் தகுதியில்லாத நிலம் ஆகிப் போனதா இந்தப் புனிதமான நாடு?

]]>
Ambulance, 108, Ambulance driver, அமரர் ஊர்தி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/14/w600X390/Ambulance_1.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/jul/14/ambulance-driver-drops-body-on-road-2737345.html
2736112 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் யோகா அல்லது விளையாட்டுகளில் பங்கேற்றால் மட்டுமே இனி பொறியியல் பட்டம் பெற முடியும்! உமா DIN Wednesday, July 12, 2017 11:16 AM +0530 நாடு முழுவதும் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள், யோகா, விளையாட்டு அல்லது சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தான் பட்டம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயல்பாடுகளுக்கு மதிப்பெண் கிடையாது. இருப்பினும், வருகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது

பொறியியல் கல்லூரிகளில் முன்பு, என்.எஸ்.எஸ் எனப்படும் நேஷனல் சோஷியல் சர்வீஸ், என்.சி.சி. எனப்படும் நேஷனல் கேடட் கார்ப்ஸ் மற்றும் உன்னத் பாரத் அபியான் (கிராமங்களுக்கு நேரில் சென்று மக்களுடன் மக்களாக பழகும் வாய்ப்பை ஏற்படுத்த உன்னத் பாரத் அபியான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது) போன்ற செயல்பாடுகள் அமலில் இருந்தன. ஆனால், பட்டம் பெறுவதற்கு இவை கட்டாயம் என்ற நிலை இல்லை. தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் (All India Council for Technical Education (AICTE) கட்டுப்பாட்டின் கீழ் 10 ஆயிரம் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 18 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இனி இவர்கள் கட்டாயமாக யோகா, விளையாட்டு அல்லது சமூக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். 

இவற்றில் ஏதாவது ஒன்றில், 25 சதவிகித வருகை பதிவு இருக்க வேண்டும். இந்தச் செயல்பாடுகளுக்கு மதிப்பெண் எதுவும் கிடையாது. ஆனால், வருகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக படிப்புடன் யோகா, விளையாட்டு அல்லது சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டால்தான் பட்டம் பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இந்த நடவடிக்கை உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 'படிப்பைத் தவிர, மாணவர்கள் தங்கள் சொந்த நலனுக்காகவும், சமுதாய நலத்திற்கும் சேர்த்து, இத்தகைய நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் வேண்டும், என்றார் AICTE சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர். யோகா அல்லது விளையாட்டு ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொண்டால் அவர்களின் உடல் அரோக்கியம் மேம்படும் என்றார் மற்றொரு அதிகாரி.

பொறியியல் கல்லூரி மாணவர் கிருஷ்ண பிரபு கூறுகையில், 'இது வரவேற்கத்தக்க மாற்றம்தான். எங்களை கட்டாயப்படுத்தவில்லை என்றால் இதில் எல்லாம்  ஈடுபடமாட்டோம். இப்போது வேறு வழி இல்லை, எனவே பின்பற்றுவோம்’ என்று கூறினார். 

இத்திட்டத்தைப் பற்றி அதிகாரி ஒருவரு கூறுகையில், 'இதற்கு முன் அரசு அறிவித்திருந்த கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துவதன் குறிக்கோளான அரசின் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் மாணவர்கள் கிராமங்களைப் பார்வையிட வேண்டும். அதன்படி கிராமப்புற மக்களுடைய வாழ்க்கை முறைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான். ஆனால் அத்திட்டம் கட்டாயம் இல்லை என்பதால் யாரும் பின்பற்றியதாகத் தெரியவில்லை. யோகா மற்றும் விளையாட்டை கட்டாயப்படுத்தியதன் மூலம் மாணவர்கள் தங்களின் சமூக அக்கறையை விஸ்தரித்துக் கொள்ள முடியும். இதன் மூலம் தானும் பயனடைந்து தான் சார்ந்த சமூகத்தையும் முன்னேற்றும் வாய்ப்புக்கள் அமையும்’ என்றார்.

யோகா மற்றும் விளையாட்டு போன்ற செயல்பாடுகளை பொறியியல் பட்டப் படிப்பின் பாடத்திட்டத்தில் கூடுதலாக சேர்ப்பதை ஆல் இந்தியா போர்ட்ஸ் ஆஃப் ஸ்டடீஸ் பரிசீலித்து வருவதாக மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. 

யூனிவர்சிட்டி க்ராண்ட்ஸ் கமிஷன் (யூ.ஜி.சி) அனைத்து பல்கலைக்கழகங்களையும், கல்லூரிகளையும் சர்வதேச யோகா தினத்தை சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டது. மாணவர்களும், ஆசிரியர்களும் இதில் உற்சாகத்துடன் பங்கேற்று அதன் சாட்சியாக உரிய ஆவணங்களையும் சமர்ப்பிக்கச் சொன்னது.

அரசாங்கம் கிராமப்புறங்களின் வளர்ச்சிக்காக உன்னத் பாரத் அபியான் (UBA) மூலம் பல திட்டங்களை முன் வைத்துள்ளது. கல்வி நிறுவனங்கள் கிராமங்களின் வளர்ச்சிக்குத் தகுந்த பங்களிப்பைச் செய்யத் தொடங்கினால், ஒட்டுமொத்த சமூகமும் வளர்ச்சிக்கான பாதையில் முன்னேற வாய்ப்புக்கள் உருவாகும் என்பதை மாணவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். NSS அமைபின் மூலம் இளைஞர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் சமூகத்துக்கு தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்யலாம். எத்தகைய சமூகப் பிரச்னைகளாக இருந்தாலும் அதற்கு அவர்கள் குரல் கொடுக்கலாம். உதாரணமாக தில்லி பல்கலைக்கழகம், 1969 - ல் இத்திட்டத்தை செயலாக்கத் தொடங்கியது.

]]>
Yoga, யோகா, Engineering colleges, பொறியியல் கல்லூரி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/12/w600X390/college_girls_doing_yoga.JPG http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/jul/12/no-yoga-sports-no-degree-in-engineering-technical-colleges-2736112.html
2733916 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் தொடரும் டார்ஜிலிங் பிரச்னை! இளைஞர்கள் உணவுக்காக கடைகளை உடைத்தனர்!  DIN DIN Saturday, July 8, 2017 01:42 PM +0530 பதினைந்து வயதிலிருந்து ஐம்பது வரையிலான சாமானியர்களான அவர்கள்  அணிந்திருந்த உடை கண்ணியமாகவே இருந்தது. ஆனால், முகத்தை ஒரு துணியால் மூடி மறைத்திருந்தனர். கைகளில் ஆயுதம் போல் குடைகளை வைத்திருந்தனர். இரவு 10 மணியிலிருந்து 12 மணிக்குள் டார்ஜிலிங் தெருக்களில் இவர்களைப் பார்க்க முடியும். அவர்கள் செய்த செயல் என்ன?  

திருடர்களைப் போல் இவர்கள் தெருக்களில் அலைந்து திரிந்து பூட்டியிருக்கும் கடைகளிலிருந்தும் தாளிடப்பட்டிருக்கும் வீடுகளின் கதவைத் தட்டியும் இறைஞ்சுவது எதனை? உணவு என்றால் அதிர்ச்சியாக உள்ளதா? சமீபத்தில் கோர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையை முன்வைத்து டார்ஜிலிங் மலைப் பகுதியில் நடைபெறும் போராட்டமும் அதனைத் தொடர்ந்து காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டத்தின் பின் விளைவுதான் இது

மேற்கு வங்கத்தின் எல்லைப் பகுதியான டார்ஜிலிங்கில் கோர்க்கர் இன மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். தங்களுக்கு கோர்க்காலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் அமைத்து தர வேண்டும் என்று அம்மக்களின் நீண்டகால கோரிக்கை. அதனை வலியுறுத்தி போராடி வருகிறார்கள்.

'மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் முதல் வகுப்பிலிருந்து அனைவரும் வங்க மொழியைப் படிக்க வேண்டும்’ என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த மே மாதம் அறிவித்திருந்தார். கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) அமைப்பினரிடையே கடும் எதிர்ப்பினைக் கிளப்பியது. நேபாளம் மற்றும் ஆங்கிலத்தை மட்டுமே கோர்க்காலாந்துப் பகுதிகளில் கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை வெடித்தது. மேலும் டார்ஜிலிங்கில் மேற்கு வங்க மாநில அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வெடித்தன. இந்நிலையில் ஜூன் மாதம் தொடங்கி தற்போது வரை மீண்டும் கோர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி, டார்ஜிலிங் மலைப்பகுதியில் போராட்டம் விஸ்வரூபமெடுத்துள்ளது. ஜெஜேஎம் கட்சியினர் தங்கள் கிளர்ச்சியைத் தீவிரப்படுத்தினர்.

கடைகள், உணவகங்கள், மருந்தகங்கள் மற்றும் வணிக வளாகங்கள், ஆகியவை பெரும்பாலான நாட்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்கு கோதுமை, அரிசி, எண்ணெய், காய்கறி, மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில கடைகளில் விற்பனை நிறுத்தப்பட்டு பூட்டப்பட்டு இருந்தது. உணவுப் பொருட்கள் கிடைக்காத நிலையில் இளைஞர்கள் சிலர் களத்தில் இறங்கி தங்களுக்கு வேண்டிய பொருட்களை அடாவடியாக எடுத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

இரவில் ஒரு காலி சாக்குப் பையை எடுத்துக் கொண்டு செளக் பஜார் பகுதிக்குச் செல்லும் இவர்கள், கையில் கிடைத்த உணவுப் பொருட்கள், பருப்பு வகைகள், குளிர் பானங்கள் போன்றவற்றை கடைகளை உடைத்து திருடி விடுகின்றனர். 150 நபர்கள் அடங்கிய மக்கள் குழுவொன்று ரோந்துக்கு வந்திருந்த சீனியர் போலீஸ் துறை அதிகாரி ஒருவரை சூழ்ந்து, தங்களுக்கு உணவுப் பொருட்களை ஏற்பாடு செய்து தரும்படி கலாட்டா செய்தனர். அந்த அதிகாரி அவர்களிடம், சமீபத்தில் உணவுத் திருட்டில் ஈடுபட்ட ஏழு இளைஞர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை தன் வீட்டிலிருந்து அளித்ததாகக் கூறினார்.

ஆனால் அடுத்த இரண்டு நாளிலேயே மீண்டும் கையும் களவுமாக பிடிபட்டனர். தன்னால் தினமும் அவர்களுக்கு உணவுப்பொருட்களை அளிக்க முடியாத நிலையை எடுத்துக் கூறி அவர்களுடைய பெயர்கள் மற்றும் முகவரியைக் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் இவர் தங்களை சிறை பிடிக்கத்தான் இந்த தகவல்களைக் கேட்கிறார் என்று நினைத்து சென்றுவிட்டனர். உணவுப் பொருட்கள் விற்பனையாளர்களிடம் போராட்டக்காரர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் யாரும் கடையைத் திறப்பதில்லை. மக்கள் கடும் அவஸ்தைக்குள்ளாகி இருக்கிறார்கள். மக்கள் உதவ முன் வராவிட்டால் காவல்துறை என்னதான் செய்வது? நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறோம்’ என்றார்.

கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் மற்றும் எம்எல்ஏ அமர் ராய் கூறுகையில், 'நாங்கள் ரேஷன், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்குக் கிடைக்குமாறு ஏற்பாடுகளை கூடிய விரைவில் செய்கிறோம்' என்று உறுதியளித்துள்ளார்.

]]>
Darjeeling, Gorkha Janamukti Morcha, GJM, கோர்க்காலாந்து , ஜெஜேஎம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/8/w600X390/1497519237-darjeeling.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/jul/08/darjeeling-residents-loot-shops-for-food-2733916.html
2733892 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் டிவிட்டரில் இணைந்தார் மலாலா!  DIN DIN Saturday, July 8, 2017 11:08 AM +0530 பெண் கல்விக்காக தொடர்ந்து போராடி வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசிஃப் ரசாய் நேற்று (7.7.2017) பள்ளிப் படிப்பை நிறைவு செய்துள்ளார். புதிதாக டிவிட்டர் கணக்கு தொடங்கிய அவர், முதல் பதிவாக 'இன்று எனது பள்ளிப் பருவத்தின் கடைசி நாள். டிவிட்டரில் எனது முதல் நாள். பள்ளி வாழ்க்கை முடிந்துவிட்டது வருத்தம்தான் என்றாலும், எதிர்காலத்தை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன். லட்சக்கணக்காக பெண்கள், பள்ளிப் படிப்பைக் கூட முடிக்க முடியாத சூழலில் இருக்கின்றனர். அடுத்த வாரம் முதல் மத்திய கிழக்கு ஆப்ரிக்கா மற்றும் லத்தின் அமெரிக்காவுக்கு பயணம் செய்து அங்குள்ள பெண்களைச் சந்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார். 

மலாலாவின் முதல் டிவீட்டுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.. டிவிட்டர் கணக்கு தொடங்கி சில மணி நேரத்திலேயே மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் அவரைப் பின் தொடர்கின்றனர். கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடியு வாழ்த்து தெரிவித்துள்ளார். பில் கேட்ஸ் உட்பட உலகின் பல பிரமுகர்களும் மலாலாவை வாழ்த்திப் பதிவிட்டுள்ளனர்.  டிவிட்டரிலிருந்தும் அவருக்கு வரவேற்பு பதிவு அனுப்பப்பட்டது.  

மலாலா 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தாலிபான் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார். பெண் குழந்தைகள் கல்வி குறித்து குரல் எழுப்பியதற்காக தொடர்ந்து தாலிபான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளானார். தைரியமான பெண் என்பதைக் குறிக்கும் ‘ஸிதாரே-எ-ஸுஜாத்’ எனும் உயரிய பொதுமக்கள் விருதை பாகிஸ்தான் அரசு இந்த தைரியசாலிப் பெண்ணுக்கு அளித்து கெளரவப்படுத்தியது. பெண் கல்விக்காக போராடத் தொடங்கிய மலாலாவை உலகமே பாராட்டியது. இத்துடன் கணக்கில் அடங்காத கொலை மிரட்டல்களும் மலாலாவுக்குக் கிடைத்தன. அவரது செயல்பாடுகளை பாராட்டி, அமைதிக்கான நோபல் பரிசு மலாலாவுக்கு 2014 -ல் வழங்கப்பட்டது. தற்போது, மலாலாவுக்கு, 20 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
Twitter, டிவிட்டர், Malala, மலாலா http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/8/w600X390/malala-yousafzai-2.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/jul/08/malalas-hi-on-twitter-draws-over-350k-followers-in-under-14-hours-2733892.html
2733350 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் அரியலூர்ப் புத்தகத் திருவிழா 2017! DIN DIN Friday, July 7, 2017 01:59 PM +0530 தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் அரியலூர்ப் புத்தகத் திருவிழா 2017!

நிகழும் திருவள்ளுவராண்டு 2048 ஆனித் திங்கள் 30 ஆம் நாள் (14-07-2017) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலில் 3-ஆவது அரியலூர்ப் புத்தகத் திருவிழாவின் தொடக்க விழா நடைபெற உள்ளது. 

மாண்புமிகு தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் தலைமை விருந்தினராகப் பங்கேற்று விழாவினை தொடங்கிவைத்துப் பேருரையாற்றுவார். 

மாண்புமிகு தமிழ்நாடு அரசுத் தலைமைக் கொறடா திரு தாமரை எஸ்.ராஜேந்திரன் அவர்கள் தலைமையுரையாற்றுவார். 

அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் (பொ) திரு சே.தனசேகரன் அவர்கள் தொடக்கவுரையாற்றுவார். அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முனைவர் அபிநவ் குமார் இ.கா.ப. அவர்கள் தலைமை விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்குவார். 

தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பின் தலைவர் திரு சீனி பாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலை ஏற்பார்.

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து

குத்துவிளக்கு ஏற்றுதல்

நினைவுப்  பரிசு வழங்குதல்

தொடக்கவுரை

தலைமையுரை

வாழ்த்துரை

விழாப் பேருரை

நன்றியுரை

நாட்டுப்பண்

]]>
ARIYALUR, Book fare, அரியலூர், புத்தகக் கண்காட்சி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/7/w600X390/books.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/jul/07/ariyalur-book-faire-2017-2733350.html
2729560 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது DIN DIN Saturday, July 1, 2017 12:25 AM +0530 ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை நள்ளிரவு 12 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அமல்படுத்தினார்.

முன்னதாக ஜிஎஸ்டி அறிமுக சிறப்பு கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நள்ளிரவு 11.30 மணி அளவில் தொடங்கியது.

விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய அமைச்சர்கள், மாநில நிதி அமைச்சர்கள், தமிழக நிதி அமைச்சர் ஜெயகுமார் பங்கேற்றுள்ளனர்.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ஜிஎஸ்டி அறிமுக விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி ஒரே தேசம் ,ஒரே வரி என்ற மக்களின் கனவு இன்று நனவாகிறது. இதனால் மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு வெளிப்படையான வரிவிதிப்பு முறையாக இருக்கும் .ஜிஎஸ்டி எளிமையானது, வெளிப்படை தன்மையுடையது ஜிஎஸ்டி யால் ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு முடிவு கட்டப்படும் எனவும் இந்த வரிவிதிப்பு முறை இந்தியாவுக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமையும் என மோடி தெரிவித்தார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/11/23/w600X390/GST.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/jun/30/ஜிஎஸ்டி-அறிமுக-சிறப்பு-கூட்டம்-நாடாளுமன்றத்த--தொடங்கியது-2729560.html
2729559 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு DIN DIN Friday, June 30, 2017 10:56 PM +0530 கடந்த ஏப்ரல் 29 மற்றும் 30 ம் தேதி நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

முடிவுகளை www.trp.tn.nic.in  என்ற இணைய முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

 தேர்வு முடிவுகளுடன் இறுதி விடைக்குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/jun/30/ஆசிரியர்-தகுதித்-தேர்வு-முடிவுகள்-இணையத்தில்-வெளியீடு-2729559.html
2727933 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் அரியலூர் புத்தகத் திருவிழா! DIN DIN Tuesday, June 27, 2017 12:59 PM +0530 மூன்றாம் ஆண்டு அரியலூர்ப் புத்தகத் திருவிழா  ஜூலை 14 முதல் ஜூலை 23 வரை  (பத்து நாட்கள்), அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலில் நடைபெறும்.

மாணவக் கல்வி மேம்பாட்டினை கருத்திற்கொண்டு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடையேயும் புத்தக வாசிப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் அரியலூர் மாவட்ட ஆட்சியரகம், தென்னிந்தியப் புத்தக வெளியீட்டாளர் விற்பனையாளர் சங்கம் ஆகியோரின் உறுதுணையுடன் அரியலூர் மாவட்டத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பின் சார்பில் பேரளவிலான புத்தகத் திருவிழா ஒன்றினை பத்து நாட்களுக்கு 2017 சூலை 14 முதல் 23 வரை அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலில் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. நூற்றிற்கும் மேற்பட்ட புத்தகக் கடைகள், அறிவிற்கு விருந்தளிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் விழாவில் இடம் பெறுகின்றன. பல்வேறு அரசியல் தலைவர்கள், தொழில்துறை வல்லுநர்கள், அறிஞர் பெருமக்கள், கலைஞர்கள் வருகை தந்து சிறப்பிக்க உள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறையின் மாண்புமிகு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் புத்தகத் திருவிழாவினைத் தொடங்கி வைக்க இசைந்துள்ளார். தமிழ்நாடு அரசின் மாண்புமிகு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்குகிறார்.

விழா சீரும் சிறப்புமாக நடைபெறப் பொதுமக்கள், கல்வி நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு அமைப்புகள், வணிகக் குழுமங்கள், வங்கிகள், மருத்துவர்கள், செய்தி ஊடகத் துறையினர், நூலகத் துறையினர் எனப் பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பினை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம். பெரும் பொருட் செலவினை உட்கொண்ட இவ்விழாவிற்குப் பெரும் அளவிலான நன்கொடையை நல்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

நன்றி

அன்புடன்

விழாக் குழுவினர்

]]>
Ariyalur Book fare, அரியலூர்ப் புத்தகத் திருவிழா, Book fare http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/27/w600X390/BOOK-FARE.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/jun/27/அரியலூர்-புத்தகத்-திருவிழா-2727933.html
2723705 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் எம்.எல்.ஏக்கள்  குதிரை பேர விவகாரம்: நடவடிக்கை எடுக்க வித்யாசாகரராவ் உத்தரவு DIN DIN Monday, June 19, 2017 10:20 PM +0530 தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எம்.எல்.ஏக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் தமிழக ஆளுநர் வித்யாசாகரராவ்விடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்திருந்தனர்.
அதற்கு ஆதாரமாக தனியார் தொலைக்காட்சியில் வெளியான வீடியோ சிடி  ஒன்றையும் ஆளுநரிடம் அளித்திருந்தனர்.
ஆளுநரை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் ஆளுநரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு செயலருக்கு ஆளுநர் வித்யாசாகரராவ் உத்தரவிட்டுள்ளார்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/10/1/w600X390/vidyasagar-rao.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/jun/19/எம்எல்ஏக்கள்--குதிரை-பேர-விவகாரம்-நடவடிக்கை-எடுக்க-வித்யாசாகரராவ்-உத்தரவு-2723705.html
2723060 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் சாம்பியன்ஸ்டிராபி: கோப்பையை வென்றது பாகிஸ்தான் அணி DIN DIN Sunday, June 18, 2017 10:11 PM +0530 லண்டனில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் 180  ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி முதன்முறையாக கோப்பையை வென்றுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி ஆட்டத்தின் துவக்கம் முதல் நிதானமாக ஆடிய பாகிஸ்தான் அணி  வீரர்கள் 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தனர்.
இரண்டாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி வீரர்கள் ஆரம்பம் முதலே ரன் குவிக்க தவறினர்.
இந்திய அணி வீரர்களான தவான் 21 ரன்களும், கோலி 5 ரன்களும், தோனி 4 ரன்களும், ஜாதவ் 9 ரன்களும் , ஜடேஜா 15 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இந்திய அணியில் அதிக பட்சமாக  ஹார்த்திக் பாண்டியா 70 ரன்களும், யுவராஜ் சிங் 22 ரன்களும் எடுத்தனர்.
இதனால் இந்தியஅணி  30.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து  158 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியை சந்தித்தது.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/18/w600X390/ind-pak.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/jun/18/சாம்பியன்ஸ்டிராபி-கோப்பையை-வென்றது-பாகிஸ்தான்-அணி-2723060.html
2722480 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் ஆளுநர் வித்யாசாகர் ராவை நாளை சந்திக்கிறார் அதிமுக எம்.பி தம்பிதுரை DIN DIN Saturday, June 17, 2017 11:03 PM +0530 தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை நாளை காலை 11 மணி அளவில் மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்.பி யுமான தம்பிதுரை சந்திக்க இருக்கிறார்.
இன்று மாலை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் வித்யாசகர் ராவை சந்தித்து எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடந்தது தொடர்பாக புகார் தெரிவித்தார். மேலும் குதிரை பேரத்தில்தான் தமிழகத்தில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக எம்எல்ஏவே இதனை தெளிவாக பேட்டியாகக் கொடுத்துள்ளார். எனவே இது குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என்று நேரமில்லா நேரத்தில் எழுப்பினோம். ஆனால் அதற்கும் சபாநாயகர் அனுமதிக்கவில்லை. குதிரை பேர விவகாரம் குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஆளுநரிடம் தெரிவித்தார்.
ஆளுநரும், இது குறித்து சட்ட ரீதியாக கலந்து பேசி முடிவெடுப்பதாக உறுதி அளித்தார் என்று கூறினார்.
இந்நிலையில் நாளை காலை 11 மணி அளவில் ஆளுநர் வித்யாசாகர் ராவை அதிமுக எம்.பி தம்பிதுரை நாளை சந்திக்க இருக்கிறார்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/12/w600X390/thambidurai.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/jun/17/ஆளுநர்-வித்யாசகர்-ராவை-நாளை-சந்திக்கிறார்-அதிமுக-எம்பி-தம்பிதுரை-2722480.html
2722481 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பெட்ரோல் விலை ரூ.34 காசும், டீசல் விலை ரூ.20 காசுகளும் விலை குறைப்பு: நாளை காலை முதல் அமல் DIN DIN Saturday, June 17, 2017 11:01 PM +0530 பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.34 காசும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.20 காசுகளும் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நாளை காலை 6 மணி முதல் அமல்படுத்தப்படும்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வந்தன இந்த முறையை மாற்றி விலையை தினந்தோறும் நிர்ணயம் செய்ய திட்டமிடப்பட்டது.  அதன்படி நாடுமுழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயம் செய்யும் முடிவை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த இரு தினங்களுக்கு முன் அமல்படுத்தின.
இந்த விலை மாற்றம் தினந்தோறும் காலை 6 மணி முதல் அமல்படுத்தப்படும்.
 நாளை காலை முதல் சென்னையில் பெட்ரோல் விலை ரூ.34 காசும், டீசல் விலை ரூ.20 காசுகளும் விலை குறைக்கப்பட்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.42 க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.03 க்கும் விற்பனை செய்யப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
தினந்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முடிவை அமல் படுத்தப்பட்ட இரு தினங்களும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக குறைக்கப்பட்டது.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/9/w600X390/petrolbunk.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/jun/17/பெட்ரோல்-விலை-ரூ34-காசும்-டீசல்-விலரூ20-காசுகளும்-விலை-குறைப்பு-நாளை-காலை-முதல்-அமல்-2722481.html
2722463 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் கவிஞர் மு.முருகேஷூக்கு சிறந்த ஹைக்கூ கவிதை நூலுக்கான இலக்கிய விருது DIN DIN Saturday, June 17, 2017 03:52 PM +0530 வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷூக்கு சென்னையில் செயல்படும் கவிமுகில் அறக்கட்டளையின் சார்பில் சிறந்த ஹைக்கூ கவிதை நூலுக்கான இலக்கிய விருது நேற்று சென்னை மயிலாப்பூரிலுள்ள கவிக்கோ அரங்கில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கு தமிழின் மூத்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் தலைமையேற்றார். பச்சையப்பன் கல்லூரி முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் இராம.குருநாதன் அனைவரையும் வரவேற்றார். 

கடந்த 2016-ஆம் ஆண்டில் தமிழில் வெளியான நாவல், கட்டுரை, மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை நூல்களில் சிறந்த நூல்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றுக்கு பாராட்டுச் சான்றிதழும் தலா ரூ.5000/- பணமுடிப்பும் வழங்கப்பட்டன.

வந்தவாசி அரசுக்கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டச் செயலாளர் கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘தலைகீழாகப் பார்க்கிறது வானம்’ ஹைக்கூ கவிதை நூல் சென்ற ஆண்டில் வெளியான சிறந்த நூலாக தேர்வு செய்யப்பட்டு, அந்நூலை எழுதிய  கவிஞர் மு.முருகேஷூக்கு ’கவிஞர் விழிகள் தி.நடராசன்’ பெயரிலான இலக்கிய விருதினையும் பாராட்டுச் சான்றிதழையும் ரூ.5000/- பண முடிப்பையும்  தமிழக அரசின்  வேளாண் துறை முன்னாள் இயக்குநர் டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப., வழங்கிச் சிறப்பித்தார்.

கவிஞர் மு.முருகேஷ் இதுவரை 35-க்கும் மேற்பட்ட கவிதை, கட்டுரை, சிறுவர் இலக்கிய, விமர்சன நூல்களை எழுதி உள்ளார். இவரது படைப்புகள் மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இவரது படைப்புகளை இதுவரை 5 கல்லூரி மாணவர்கள் இள முனைவர் பட்ட ஆய்வும், 2 மாணவர்கள்  முனைவர் பட்ட ஆய்வும் செய்துள்ளனர். இவரது கவிதைகள் மதுரை காமராஜர் பல்கலைக் கழக பாடத்திட்டத்திலும், விருதுநகர் வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரிப் பாடத்திட்டத்திலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  இவரது தொடர் ஹைக்கூ செயல்பாடுகளுக்காக குவைத் நாட்டில் இயங்கும் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் ‘குறுங்கவிச் செல்வர்’ எனும் விருதினை சென்ற ஆண்டு வழங்கிச் சிறப்பித்துள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு இலக்கிய அமைப்புகளின் பரிசுகளையும் பாராட்டுதழ்களையும் தனது படைப்புகளுக்காக பெற்றுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ், பொதுவுடைமை இயக்க மூத்தத் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் ம.திருமலை, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர் கவிமுகில் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படக்குறிப்பு : கவிமுகில் அறக்கட்டளையின் சார்பில் சென்னையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், சிறந்த ஹைக்கூ கவிதை நூலுக்கான இலக்கிய விருதினை கவிஞர் மு.முருகேஷூக்கு  தமிழக அரசின்  வேளாண் துறை முன்னாள் இயக்குநர் டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப., வழங்கும்போது எடுத்த படம். அருகில், (இடமிருந்து) கவிஞர் கவிமுகில், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்,  சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ், கவிஞர் ஈரோடு தமிழன்பன் உள்ளிட்டோர் உள்ளனர்.

]]>
Haiku, Award for Mu.Murugesh, மு.முருகேஷ், தலைகீழாகப் பார்க்கிறது வானம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/17/w600X390/IMG_20170616_210913_HDR.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/jun/17/mumurugesh-gets-award-for-haiku-poems-2722463.html
2712702 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார் DIN DIN Friday, June 2, 2017 06:22 AM +0530 கவிக்கோ அப்துல் ரகுமான் (80) மூச்சு திணறல் காரணமாக சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் இன்று(ஜூன்2)அதிகாலை காலமானார்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிக்கோ அப்துல் ரகுமான் மதுரையில் 1937 ம் ஆண்டு பிறந்தார்.

தமிழ், ஆங்கிலம், உருது, இந்தி என பல மொழிகளில் புலமை பெற்றிருந்தார். இவரின் ’ஆலாபனை’ கவிதை தொகுப்புக்காக 1999 ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றார் மேலும் தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது ,ராணா இலக்கிய விருது, கம்பர்விருது , பொதிகை விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/2/w600X390/abthulrahuman.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/jun/02/அப்துல்-ரகுமான்-காலமானார்-2712702.html
2711920 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு DIN DIN Wednesday, May 31, 2017 10:31 PM +0530 பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.23 காசுகளும், டீசல் லிட்டருக்கு 89 காசுகளும் விலை உயர்த்தப்படுள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/12/20/w600X390/petrol1.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/may/31/பெட்ரோல்-டீசல்-விலை-உயர்வு-2711920.html
2702631 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் சென்னை விமான நிலையத்தில் 1.100 கிலோ தங்கம் பறிமுதல் சென்னை DIN Monday, May 15, 2017 10:38 AM +0530 தோகாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1.100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அகமது பாஷா என்பரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 35 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 
 

]]>
http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/may/15/சென்னை-விமான-நிலையத்தில்-1100-கிலோ-தங்கம்-பறிமுதல்-2702631.html
2702632 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் வடசென்னை அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு திருவள்ளூர் DIN Monday, May 15, 2017 10:37 AM +0530 திருவள்ளூர் மாவட்டம், வடசென்னை அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், வடசென்னை அனல்மின் நிலையத்தின் முதலாவது நிலையில் முதல் பிரிவில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வடசென்னை அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது இதனை சரிசெய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், நிலைமை சரியானவுடன் மீண்டும் மின் உற்பத்தி தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/may/15/வடசென்னை-அனல்மின்-நிலையத்தில்-210-மெகாவாட்-மின்உற்பத்தி-பாதிப்பு-2702632.html
2699731 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் நுகர்வோர் தீர்ப்பாய காலியிடங்களை நிரப்ப வேண்டும்: ஜி.கே.வாசன் DIN DIN Wednesday, May 10, 2017 09:15 PM +0530 சென்னை, மே 10: நுகர்வோர் தீர்ப்பாயங்களில் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

நம் நாட்டில் தேசிய, மாநில, மாவட்ட குறை தீர்ப்பாயங்களில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு எதிரான 75 சதவீத வழக்குகள் நிலுவையில் உள்ளன. அடுத்தபடியாக, ரியல் எஸ்டேட் துறை சம்பந்தமாக சுமார் 16 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் வங்கித்துறை, மின்சாரத் துறை ஆகியவற்றுக்கு எதிரான வழக்குகளும் முழுமையாகத் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன. 

 தீர்ப்பாயங்களில் தற்போது 300-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளதால் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நுகர்வோர் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கவும், முடித்து வைப்பதற்கும் உறுப்பினர்கள் போதிய அளவில் தீர்ப்பாயத்தில் பணியில் இருக்க வேண்டியது அவசியம். 

 எனவே, தீர்ப்பாயங்களில் உள்ள காலிப்பணியிடங்களை குறிப்பாக முக்கியப் பணியிடங்களை முழுமையாக, உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

]]>
http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/may/10/நுகர்வோர்-தீர்ப்பாய-காலியிடங்களை-நிரப்ப-வேண்டும்-ஜிகேவாசன்-2699731.html
2699057 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் சென்னையில் சாரல் மழையால் சாலை விபத்து DIN DIN Tuesday, May 9, 2017 11:19 PM +0530  சென்னையில் இரவு பெய்த சாரல் மழையால் சில இடங்களில் சாலையில் எண்ணெய் போன்ற படலம் உருவானதால் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் பலர் கீழே விழுந்ததில் விபத்து ஏற்பட்டது.

கோடம்பாக்கம் முதல் வடபழனி முதல் சாலையில் இது போன்ற எண்ணெய் போன்ற படலம் உருவானது.

போக்குவரத்து காவல் துறையினர் எண்ணெய் படலத்தின் மீது மண்னை கொட்டி சாலையை சரிசெய்து வருகின்றனர்.

மேலும் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கவனமாக செல்லவும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

]]>
http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/may/09/சென்னையில்-சார-மழையால்-சாலை-விபத்து-2699057.html
2690883 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள்  இரட்டை இலை சின்னத்துக்கு  லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிடிவி.தினகரன் கைது DIN DIN Wednesday, April 26, 2017 12:21 AM +0530 இரட்டை இலை சின்னத்துக்கு  லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில்  டி.டி.வி.தினகரனை தில்லி போலீஸார் இரவு கைது செய்தனர்.

கடந்த வாரம் தில்லியில் அதிமுக அம்மா அணிக்கு இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் தில்லி போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அதிமுக அம்மா அணிக்கு இரட்டை இலை சின்னம் பெற தினகரன் தன்னிடம் பணம் கொடுத்ததாக வாக்கு மூலம் அளித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த தில்லி போலீஸார் தினரனிடம் நேரில் ஆஜராகும் படி சம்மன் அளித்தனர்.

சம்மனை பெற்ற தினகரன் கடந்த நான்கு நாட்களாக  37 மணி நேரம் தில்லி போலீஸார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். மேலும் தினகரனின் உதவியாளர் மற்றும் நண்பர் மல்லிகார்ஜுனனிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

தினகரனின் பதில் திருப்தி அளிக்காத நிலையில் தில்லி போலீஸார் தினகரனை கைது செய்துள்ளனர்.

]]>
டிடிவி தினகரன் ,தில்லி போலீஸார்,தில்லி ,TTV Dhinakaran,Delhi Police,Delhi http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/4/w600X390/TTV.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/apr/26/இரட்டை-இலை-சின்னத்துக்கு--லஞ்சம்-கொடுக்க-முயன்ற-வழக்கு-டிடிவிதினகரன்-கைது-2690883.html
2686046 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் சென்னையில் தமிழக அமைச்சர்கள் திடீர் ஆலோசனை DIN DIN Monday, April 17, 2017 11:22 PM +0530 சென்னை கிரீன் வேஸ் சாலையிலுள்ள  அமைச்சர் தங்கமணி வீட்டில்  தமிழக அமைச்சர்கள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

அமைச்சர் தங்கமணி வீட்டில் ஒரு மணி நேரத்திற்கும்மேலாக  நடைபெறும் ஆலோசனையில் ஜெயகுமார். ஓ.எஸ். மணியன் உட்பட 20 கும் மேற்பட்ட அமைச்சர்களும், எம்.பி களும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும்  பங்கேற்றுள்ளனர்.

முதலமைச்சர் - தம்பிதுரை சந்திப்பையடுத்து அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

ஐ.என்.எஸ் போர்க் கப்பலை பார்வையிடுவதற்காக நாளை அனைத்து அதிமுக எம்.எல்.ஏ.களும்  சென்னைக்கு வர முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்த நிலையில் தற்போது அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்திப்பதாக தகவல்.

]]>
http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/apr/17/சென்னையில்-தமிழக-அமைச்சர்கள்-திடீர்-ஆலோசனை-2686046.html
2683332 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் ராடன் நிறுவனத்தில் ரூ.4.97 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது: வருமான வரித்துறை DIN DIN Wednesday, April 12, 2017 10:53 PM +0530 ராடன் நிறுவனத்தில் வருமான வரித்துறையினரின் சோதனை மேற்கொண்டதில்  பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
 அங்கு கைப்பற்றப்பட்ட ஆவனங்கள் குறித்து விளக்கம் அளிக்க சரத்குமார், ராதிகா சரத்குமாருக்கு இருவரும் சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில்  அதிகாரிகளின் முன்னிலையில் ஆஜராகினர். அவர்களிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டதில் ராடன் நிறுவனத்தில் ரூ 4.97 கோடி அளவுக்கு வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக சரத்குமார், ராதிகா சரத்குமார் இருவரும் ஒப்புதல் அளித்துள்ளதாக வருமான வரித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன .

]]>
http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/apr/12/ராடன்-நிறுவனத்தில்-ரூ497-கோடி-வரி-ஏய்ப்பு-நடந்துள்ளது-வருமான-வரித்துறை-2683332.html
2680677 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் நடிகர் கமல்ஹாசன் வீட்டில் திடீர் தீ விபத்து DIN DIN Saturday, April 8, 2017 06:16 AM +0530 சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டில் நள்ளிரவு  திடீர் தீ விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்து குறித்து கமல்ஹாசன்  தனது டுவிட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளது:

இந்த தீ விபத்தால் யாருக்கும்  எந்த பாதிப்பும் இல்லை தான் பத்திரமாக இருப்பதாகவும்,  உதவிய பணியாளர்களுக்கு நன்றி என  தெரிவித்துள்ளார். தீ விபத்து குறித்து  காரணம் தெரியவில்லை.

]]>
http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/apr/08/நடிகர்-கமல்ஹாசன்-வீட்டில்-திடீர்-தீ-விபத்து-2680677.html
2679911 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் ஐ.பி.எல் போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் புனே அணி  வெற்றி DIN DIN Friday, April 7, 2017 12:45 AM +0530 புனேவில் நடைபெறும் இன்றைய போட்டியில் ‘டாஸ்’ வென்ற புனே கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து மும்பை அணிக்கு பார்த்திவ் பட்டேல் மற்றும் ஜோஸ் பட்லர் துவக்கம் தந்தனர்.
தொடக்கம் முதலே அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். 19 ரன்கள் எடுத்தபோது பார்த்திவ் பட்டேல் இம்ரான் தாகீர் பந்துவீச்சில் போல்ட் முறையில் அவுட் ஆனார்.      20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  ஆட்டத்தை தொடங்கிய புனே அணிக்கு அகர்வால் 6 ரன்களும், ரகானே சிறப்பாக விளையாடி 34 பந்துகளில் 60 ரன்களை குவித்தார்.
பின் களமிறங்கிய ஸ்மித் 54 பந்துகளில் 84 ரன்களையும் தோனி 12 ரன்களியும்  எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் 187 ரன்கள் எடுத்து புனே அணி சிறப்பான வெற்றி பெற்றது.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/7/w600X390/smith.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/apr/07/ஐபிஎல்-போட்டி-7-விக்கெட்-வித்தியாசத்தில்-புனே-அணி--வெற்றி-2679911.html
2676281 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.77 , டீசல் லிட்டருக்கு ரூ.2.91 குறைப்பு DIN DIN Friday, March 31, 2017 10:52 PM +0530  

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.77 , டீசல் லிட்டருக்கு ரூ.2.91  குறைக்கப்படுகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு  முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம் இருமுறை நிர்ணயிக்கின்றன. அதன்படி இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வையடுத்து பெட்ரோல், டீசல் விலை விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/1/w600X390/petrol.jpeg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/mar/31/பெட்ரோல்-லிட்டருக்கு-ரூ377-ம்-டீசல்-லிட்டருக்கு-ரூ291-ல்-குறைப்ப-2676281.html
2674956 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் விவசாயக் கடன் – தற்கொலை – தீர்வு குறித்து இந்தியத் தலைமை நீதிபதிக்கு ஒரு பகிரங்கக் கடிதம்! திருச்செல்வம் DIN Wednesday, March 29, 2017 11:20 AM +0530  

தமிழகத்தில் விவசாயத்துக்குத் தரப்படும் பயிர்கடன், வறட்சி மற்றும் பல்வேறு காரணங்களால் போதுமான விளைச்சல் இல்லாததால் பயிர்கடனைக் கட்ட முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் செயல்கள் அதிகரித்து வருகின்றன.

இது குறித்து தமிழகத்தைச் சேர்ந்த கணிப்பொறி வல்லுநர்கள் குழு, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை விவசாயத்தில் ஈடுபடுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறது. அக்குழு, பயிர்க்கடன் – விவசாயிகள் தற்கொலை – தீர்வு என்ற வகையில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை தினமணி டாட் காம் மூலம் வெளியிட்டுள்ளனர். அதன் விவரம் –

**

மாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி அவர்களுக்கு,

வணக்கம்.

பொருள்: பயிர்க்கடன் வழங்குவதை நிறுத்துதல் - விவசாயிகளுக்கான முழு பயிர்காப்பீடு, அதிகபட்ச உற்பத்திக்கான தகவல்கள், தரமான இடுபொருள்கள், குறைத்தபட்ச லாபம் உள்ளிட்ட ஒட்டுமொத்த தீர்வு ஏற்படுத்தப்படும் வரை பயிர்க்கடன் கொடுப்பதை நிறுத்திவைத்தல் - விவசாயிகளை கடன் ஆபத்திலிருந்து காப்பாற்றுதல் - தொடர்பாக.

தமிழகத்தை சேர்ந்த கணிப்பொறி வல்லுனர்கள் குழு 15 வருட முயற்சியின் மூலம் தகவல் தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியினை, பயன்பாட்டினை விவசாயிகள் முழு அளவில் பயன்படுத்தி தரம், உற்பத்தி, நிகர லாபம் அதிகமாக்குதல் மற்றும் விவசாயம் செய்வதில் உள்ள கடின தன்மையை இலகுவாக்கும், ஒரு புது இணையத் தளம் சார்ந்த கிராம அளவில் செயல்படும் திட்டத்தை உருவாக்கி, மாதிரி அளவில் வெற்றிகரமாக செயல்படுத்தி, சிறப்பான மதிப்பீடுகளை பெற்றிருக்கிறோம். திட்டமிடுதலில் தொடங்கி விதை முதல் விற்பனை வரையிலான சேவைகளை, கிராம அளவில் செயல்படும் விவசாய மேலாண்மை மையத்தில் குறு, சிறு விவசாயிகளும் பெற்று பலன்பெற முடியும். இந்தத் தீர்வை பெரிய அளவில் அரசாங்கத்துடன் சேர்ந்து விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.

துரதிர்ஷ்டவசமாக விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் பெரும் ஆபத்து என்னவெனில், பருவமழை இந்த ஆண்டும் மோசமானதாக இருக்கும் என்கிற கணிப்பினால் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கும் என்கிற செய்தி பரவி வருவதுதான்.

வீடு கட்ட, தொழில் தொடங்க, படிப்புக்கு என கடன் வழங்கும்போது கடுமையான விதிமுறைகளை பின்பற்றும் வங்கிகள், அதிக சவால்கள் நிறைந்த விவசாய தொழிலுக்குக் கடன் கொடுக்கும்போது மட்டும் அதிகப்பட்ச விளைச்சலுக்கு தேவைப்படும் தகவல், தரமான இடுபொருள்கள், விளைபொருள்களுக்கான நல்ல விலை, விவசாயிகளுக்குக் கிடைப்பதற்கான தீர்வு இல்லாத நிலையில், கேட்பவர்களுக்கு எல்லாம் அஜாக்கிரதையாக வழங்குகிறது. இந்த அணுகுமுறை விவசாயிகள் கடனாளி ஆவதற்கு வழிவகுத்துவிடுகிறது.

விவசாயத் துறையில் நாங்கள் பெற்றிருக்கும் அனுபவத்தின் அடிப்படையிலும், நாடு நலனில் உள்ள அக்கறையின் அடிப்படையிலும், அரசாங்கத்திடம் நாங்கள் வைக்கும் விண்ணப்பம் என்னவென்றால், விவசாயிகளுக்கான முழு பயிர்காப்பீடு, அதிகபட்ச உற்பத்திக்கான தகவல்கள், தரமான இடுபொருள்கள், குறைத்தபட்ச லாபம் உள்ளிட்ட ஒட்டுமொத்த தீர்வு ஏற்படுத்தப்படும் வரை பயிர்க்கடன் கொடுப்பதை நிறுத்தி வையுங்கள். இல்லையென்றால் விவசாயிகள் பிரச்னைகள், போராட்டங்கள் தொடர்கதையாகி நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவை உண்டாக்கிவிடும்.

நாட்டின் மிக முக்கியமான இந்தப் பிரச்னையில் மாண்புமிகு இந்தியாவின் தலைமை நீதிபதி அவர்கள் தலையிட்டு விவசாயிகளை கடன் ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்கு ஆவண செய்ய வேண்டும்படி பிராத்திக்கிறோம்.

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

Rm. திருச்செல்வம்

(Originator & Project Director, Mission IT-rural)

Email: thiru@it-rural.com; thirurm@gmail.com

Mobile: 98403 74266

]]>
http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/mar/29/விவசாயக்-கடன்-ndash-தற்கொலை-ndash-தீர்வு-குறித்து-இந்தியத்-தலைமை-நீதிபதிக்கு-ஒரு-பகிரங்கக்-கடிதம-2674956.html
2672060 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் காட்பாடி அருகே கோடிக்கணக்கில் தங்க நகை பறிமுதல்: 5 பேருக்கு வலைவீச்சு DIN DIN Friday, March 24, 2017 10:36 PM +0530 காட்பாடி அருகே போஸீஸார் நடத்திய சோதனையில் பல கோடி மதிப்பிலான தங்க நகை, பணம் வெள்ளிக்கிழமை இரவு சிக்கியது.
காட்பாடி அருகே கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக காரில் வந்த 5 பேர் போலீஸாரைக் கண்டதும் காரில் இருந்து இறங்கி தப்பியோடினர். இதனைப் பார்த்த போலீஸார் காரை சோதனையிட்டதில் ஏராளமான தங்க நகை, பணம் பைகளில் மறைத்து வைத்திருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
சம்பவ இடத்திற்கு வேலூர் காவல் துறை துணைத் தலைவர் (டி.ஐ.ஜி) தமிழ்சந்திரன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொ.பகலவன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
கார் ஓட்டுநரான காகிதப்பட்டறையைச் சேர்ந்த சாமிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே காரை வாடகைக்கு எடுத்து திருப்பதி செல்ல வேண்டுமெனக் கூறி 5 பேர் பயணித்ததாக தெரிவித்தார்.
காரில் இருந்து பிடிபட்ட பல கோடி மதிப்பிலான தங்க நகை, பணம் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் நகைக் கடையில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டதா என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

 

]]>
http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/mar/24/காட்பாடி-அருகே-கோடிக்கணக்கில்-தங்க-நகை-பறிமுதல்-5-பேருக்கு-வலைவீச்சு-2672060.html
2665884 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் புதுவையில் பிரதான எதிர்க்கட்சி இயங்குகிறதா: திமுக சிவா கேள்வி? DIN DIN Tuesday, March 14, 2017 01:27 PM +0530 புதுச்சேரி: புதுவையில் பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் இயங்குகிறதா? என தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பியுள்ளார்.

நெல்லித்தோப்பு தொகுதி திமுக சார்பில், மு.க. ஸ்டாலின்  பிறந்த நாள் பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் விநியோகம் குயவர்பாளையம் லெனின் வீதியில் நேற்று திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் மாநில அமைப்பாளர் சிவா கலந்துகொண்டு பேசியதாவது:
ஆட்சி அமைந்தவுடன் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த எங்கள் கூட்டணி அரசு முனைப்புடன் செயல்பட தொடங்கினாலும் மத்திய பாஜக அரசு மாற்றாந்தாய் மனதுடன் செயல்படுகிறது.
புதுச்சேரி அரசின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் ஜனநாயகத்திற்கு எதிர்மறையான ஆளுநர் ஒருவரை நியமித்துள்ளது. அந்த ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஆதரவாக இல்லாமல் தன்னிச்சையாக செயல்படுகிறார்.
ஆளுநரின் சர்வாதிகார செயலால் புதுச்சேரி மக்களுக்கு இன்று அரிசி போட முடியவில்லை. முதியோர்களுக்கு சரியான நேரத்தில் பென்ஷன் வழங்க முடியவில்லை. மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய முடியவில்லை.
வறட்சி நிவாரணம் பெற்றுத்தர முடியாத நிலை. தேவையான இடத்தில் தகுயான ஆட்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆளுநரின் இந்த தன்னிச்சையான போக்கிற்கு அரசு அதிகாரிகள் பக்கபலமாக இருக்கிறார்கள்.
புதிய அரசு அமைந்து 8 மாத காலத்திற்கும் மேல் ஆகியும் அதிகாரிகளை ஆட்சியாளர்கள் மாற்ற முடியவில்லை. அதற்கு ஆளுநர் தடையாக இருக்கிறார். அரசு இயங்குகிறதா என்ற எண்ணம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. அதற்கு நாம் இடம் கொடுக்க கூடாது.
திட்டங்களை நிறைவேற்ற தடையாக யார் இருந்தாலும், ஏன் ஆளுநரே இருந்தாலும் அவரை எதிர்க்கவோ, போராடவோ தயங்கமாட்டோம்.
ஆளுநரின் செயல்பாடுகளை அனைத்து கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. ஆனால் பிரதான எதிகட்சியாக இருக்கும் என்.ஆர் காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவருமான ரங்கசாமி மௌனமாக உள்ளார்,
புதுச்சேரியில் பிரதான எதிகட்சி ஒன்று இருக்கிறதா என்று தெரியாத நிலை உள்ளது என்றார் சிவா.

]]>
http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/mar/14/புதுவையில்-பிரதான-எதிர்க்கட்சி-இயங்குகிறதா-திமுக-சிவா-கேள்வி-2665884.html
2665888 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் புதுச்சேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் பெரும் தீ விபத்து DIN DIN Tuesday, March 14, 2017 12:48 PM +0530 புதுச்சேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
புதுச்சேரி லபோர்த்தனே வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. சற்று நேரத்தில் அந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது.
இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் தீயணைப்புத் துறை வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். வாஷிங் மிஷினிலிருந்து மின்கசிவுதான் காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

]]>
http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/mar/14/புதுச்சேரியில்-அடுக்குமாடி-குடியிருப்பில்-பெரும்-தீ-விபத்து-2665888.html
2665886 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் நிலக்கரி ஏற்றிச்சென்ற சரக்குரயிலில் தீ DIN DIN Tuesday, March 14, 2017 12:45 PM +0530 அரக்கோணம்: நிலக்கரி ஏற்றிச்சென்ற சரக்குரயிலில் தீப்பிடிக்க துவங்கியதை அடுத்து அரக்கோணம் ரயில்நிலையத்தில் ரயிலை நிறுத்தி தீயனைப்பு படையினர் தீயை அனைத்தனர்.
சென்னை அத்திபட்டு துறைமுகத்தில் இருந்து மேட்டூர் அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு சரக்குரயில் இன்று செவ்வாய்கிழமை காலை சென்றுக் கொண்டிருந்தபோது திருவாலங்காடு ரயில்நிலையம் அருகே வரும்போது 59 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலின் 15,16,17,18 ஆகிய நாண்கு பெட்டிகளில் நிலக்கரி தீப்பிடித்து எரிவதை கண்ட ரயிலின் காப்பாளர் மேத்யு மற்றும் ரயில் ஓட்டுநர் சுரேஷ் இருவரும் இது குறித்து ரயில்வே கட்டுபாட்டு அறைக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து அந்த ரயில் அரக்கோணம் ரயில்நிலையத்தில் பணிமனை பகுதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து அரக்கோணம் தீயனைப்பு நிலையத்தில் இருந்து வந்த தீயனைப்பு அலுவலர் சேகர் தலைமையிலான தீயனைப்பு வீரர்கள் தீயை அனைத்தனர். இதை தொடர்ந்து சுமார் இரண்டு மணி நேர தாமதத்திற்கு பிறகு சரக்கு ரயில் புறப்பட்டு சென்றது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/14/w600X390/14akmrly.jpg அரக்கோணம் வழியே நிலக்கரி ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலில் தீப்பிடித்ததை அடுத்து தீயனைப்பு வீரர்கள் தீயை அனைத்தனர். http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/mar/14/நிலக்கரி-ஏற்றிச்சென்ற-சரக்குரயிலில்-தீ-2665886.html
2647786 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் திருவண்ணாமலை எம்.பி வனரோஜா பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு DIN DIN Saturday, February 11, 2017 10:01 PM +0530 முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு திருவண்ணாமலை  அதிமுக எம்.பியான வனரோஜா நேரில் சென்று ஆதரவு அளித்தார். கிரீன்வேஸ் சாலையிலுள்ள முதல்வர் இல்லத்துக்கு வந்து பன்னீர்செல்வத்தை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார் பின்  அங்கிருந்த செய்தியாளர்களிடம்  பேசிய வனரோஜா தொகுதி மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.
முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு இதுவரை மைத்ரேயன், அசோக்குமார், சத்யபாமா, உட்பட 5 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/11/w600X390/vanaroja.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/feb/11/திருவண்ணாமலை-எம்பி-வனரோஜா-பன்னீர்-செல்வத்துக்கு-ஆதரவு-2647786.html
2634429 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் ஷீனா போரா கொலை வழக்கு: பீட்டர் முகர்ஜியை விவாகரத்து செய்கிறார் இந்திராணி DIN DIN Wednesday, January 18, 2017 01:18 PM +0530
மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில் அவரது தாயார் இந்திராணி முகர்ஜி, இந்திராணியின் கணவர் பீட்டர் முகர்ஜி, முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா ஆகியோர் மீது மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

சிபிஐ நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போது,  பீட்டர் முகர்ஜியை விவாகரத்து செய்வதற்காக குடும்ப நல நீதிமன்றத்தை நாட தாம் விரும்புவதாக சிபிஐ நீதிமன்றத்தில் இந்திராணி முகர்ஜி தெரிவித்தார். மேலும், தனது சொத்துகளை சமூக நல அறக்கட்டளைக்கு எழுதிவைக்கும் வகையில் உயிலை மாற்றி எழுத விரும்புவதாகவும் அதற்கு அனுமதி வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அப்போது நீதிபதி கூறுகையில், விவாகரத்து மனு தாக்கல் செய்வதற்கோ, உயிலை மாற்றி எழுதுவதற்கோ சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை என்று குறிப்பிட்டார்.

மும்பையைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி. அவரது முதல் கணவர் சித்தார்த்த தாஸ் மூலம் பிறந்த மகள் ஷீனா போரா. அவர் கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். அவரது உடல் மகாராஷ்டிர மாநிலம், ராய்கட் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் எரிக்கப்பட்டது.

இந்தக் கொலை வழக்கை முதலில் மகாராஷ்டிர காவல்துறை விசாரித்து வந்தது. பின்னர் இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஷீனா போராவைக் கொன்றதாக அவரது தாயார் இந்திராணி முகர்ஜி கடந்த 2015-இல் கைது செய்யப்பட்டார்.

மேலும், இந்தக் கொலையில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கணவர் பீட்டர் முகர்ஜி, இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் ஓட்டுநர் ஷியாம்வர் ராய் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஷியாம்வர் ராய் அப்ரூவராக மாறி குற்றத்தை ஒப்புக் கொண்டார். இந்தக் கொலை எவ்வாறு நிகழ்த்தப்பட்டது என்பதை அவர் சிபிஐ-யிடம் விரிவாக எடுத்துக் கூறினார். அதாவது, இந்திராணியின் மகளான ஷீனா போராவுக்கு, தன் தாயின் மூன்றாவது கணவரான பீட்டர் முகர்ஜிக்கு முதல் மனைவி மூலம் பிறந்த மகனான ராகுலுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தால் கோபமடைந்த இந்திராணி தன் சொந்த மகளையே கொலை செய்யத் திட்டமிட்டார்.

அதன்படி தன் கணவர் பீட்டர் முகர்ஜி, முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா, கார் ஓட்டுநர் ஷியாம்வர் ராய் ஆகியோருடன் இணைந்து கொலை செய்தார். பின்னர் ஷீனாவின் உடலை காரில் எடுத்துச் சென்று ராய்கட் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் எரித்துவிட்டனர். இந்த விவரங்கள் அனைத்தையும் கார் ஓட்டுநர் ஷியாம்வர் ராய் சிபிஐ அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், மும்பை சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஹெச்.எஸ்.மகாஜன் முன்னிலையில் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி, சஞ்சீவ் கன்னா, ஷியாம்வர் ராய் ஆகியோர் மீது செவ்வாய்க்கிழமை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அப்போது அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். அவர்களிடம் என்னென்ன சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது விளக்கப்பட்டது. அப்போது, தாங்கள் குற்றமிழைக்கவில்லை என்றும் விசாரணையை எதிர்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்திராணி உள்ளிட்டோர் மீது குற்றவியல் சதி, கொலை, குற்றம் தொடர்பாக தவறான தகவலைக் கொடுத்தது, ஆதாரங்களை அழித்தது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது தவிர, ஷீனா போராவுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அவரது சகோதரர் மைக்கேல் போராவைக் கொலை செய்ய முயற்சி மேற்கொண்டதாக இந்திராணி மற்றும் சஞ்சீவ் கன்னா மீது கொலை முயற்சிக்கான சட்டப் பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து, இவ்வழக்கில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 1-ஆம் தேதி முதல் விசாரணை தொடங்கும் என்று நீதிபதி அறிவித்தார்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/18/w600X390/sheena.JPG http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/jan/18/ஷீனா-போரா-கொலை-வழக்கு-பீட்டர்-முகர்ஜியை-விவாகரத்து-செய்கிறார்-இந்திராணி-2634429.html
2631644 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் ஆசான் கல்லூரியில் தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டம் DIN DIN Thursday, January 12, 2017 11:19 PM +0530 சுவாமி விவேகானந்தரின் 154-ஆவது பிறந்த தினத்தையொட்டி,  சென்னையில் உள்ள ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்வேறு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை (ஜன.12) நடைபெற்றன.
விவேகானந்தரின் பிறந்த நாள் விழாவை ஆசான் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் முன்னெடுத்து சிறப்பாக நடத்தினர்.
விழாவை முன்னிட்டு ஏற்கெனவே நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியவற்றில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
பரிசு, சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் எஸ்.ராமநாதன் தலைமை வகித்தார்.
நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரியும், தமிழ் துறைத் தலைவருமான பொன்.ரமேஷ் குமார், நிகழ்ச்சிக்கு நன்றி உரை வழங்கினார்.
விவேகானந்தர் பிறந்த தினம் தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/12/w600X390/college.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/jan/12/ஆசான்-கல்லூரியில்-தேசிய-இளைஞர்-தினக்-கொண்டாட்டம்-2631644.html
2625976 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் இலங்கை அரசைக் கவிழ்க்க முடியுமா: ராஜபட்சவுக்கு ரணில் சவால்  DIN DIN Monday, January 2, 2017 07:37 PM +0530 இலங்கை அரசை முடிந்தால் கவிழ்த்துப் பார்க்கட்டும் என்று  ராஜபட்சவுக்கு அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சவால் விடுத்துள்ளார்.

தாம் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஒரு வார காலத்தில் ராஜபட்ச அதை செய்து முடிக்கிறாரா? என்பதை பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா தலைமையிலான அரசுக்கு எதிரான போராட்டங்களை அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபட்ச முன்னெடுத்து வருகிறார். இலங்கை விடுதலைக் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அரசியல் பிரவேசம் செய்ய இத்தகைய நடவடிக்கைகளில் ராஜபட்ச ஈடுபட்டு வருகிறார்.

குறிப்பாக, இலங்கை - சீனா இடையே மேற்கொள்ளப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டல ஒப்பந்தத்தின் சில அம்சங்களுக்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்துக்காக அம்பணத்தோட்டம் பகுதி மக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக ராஜபட்ச போராட்டம் நடத்தி வருகிறார்.

இதுதொடர்பாக அண்மையில் கருத்து தெரிவித்த அவர், மைத்ரிபால சிறீசேனா தலைமையிலான அரசை நிகழாண்டுக்குள் கவிழ்க்கப் போவதாகக் கூறினார். இந்நிலையில், கொழும்பில் திங்கள்கிழமை (ஜன. 2) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இதுகுறித்து கூறியதாவது:

அம்பணத்தோட்டம் பகுதியில் பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான வரைவுத் திட்ட ஒப்பந்தத்தில் இலங்கையும், சீனாவும் கையொப்பமிட்டுள்ளன. அதுமட்டுமன்றி, இரு நாடுகளுக்கும் இடையேயான வரி விதிப்புச் சலுகை தொடர்பான ஒப்பந்தத்துக்கு தற்போது இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அதுவும் கையெழுத்தாகும்.

மீண்டும் அரசியலுக்கு வருவதற்காக ராஜபட்ச பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். அடுத்த வாரம் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு 7 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். அந்த அவகாசத்தை ராஜபட்சவுக்கு வழங்குகிறேன். அதற்குள் முடிந்தால் அவர் ஆட்சியைக் கலைத்துப் பார்க்கட்டும் என்றார் அவர்.

]]>
http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/jan/02/இலங்கை-அரசைக்-கவிழ்க்க-முடியுமா-ராஜபட்சவுக்கு-ரணில்-சவால்-2625976.html
2569700 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் கர்நாடக சட்டப் பேரவை சிறப்பு கூட்டம்: உச்சநீதிமன்றத்திற்கு எதிராக ஆவேசமாக பேச வேண்டாம் என சபாநாயகர் அறிவுறுத்தல் DIN DIN Friday, September 23, 2016 02:48 PM +0530 காவிரியிலிருந்து கூடுதல் நீரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 20-ம் தேதி தீர்ப்பளித்தது.

இதனை ஏற்க மறுத்துள்ள கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்ற கர்நாடக சட்டப்பேரவையின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தை இன்று கூட்டியுள்ளது.

பேரவை சிறப்புக் கூட்டம் தொடங்கியதும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உறுப்பினர்கள் யாரும் ஆவேசமாக கடுமையான வார்த்தைகளில் பேச கூடாது என சபாநாயகர் கே.பி.கோலிவாட் அறிவுறுத்தினார். 

]]>
http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2016/sep/23/கர்நாடக-சட்டப்-பேரவை-சிறப்பு-கூட்டம்-உச்சநீதிமன்றத்திற்கு-எதிராக-ஆவேசமாக-பேச-வேண்டாம்-என-சபாநாயகர்-2569700.html
2569664 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் ஜெயலலிதா விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்: சு. திருநாவுக்கரசர் DIN DIN Friday, September 23, 2016 12:44 PM +0530 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் சு. திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு முதல்வர் ஜெயலலிதா, சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு 11 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் உடனே சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா தற்போது பூரண குணமடைந்துள்ளதாகவும், இருப்பினும் அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் சு. திருநாவுக்கரசர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அப்போலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். பூரண உடல் நலத்துடன் நலம்பெற்று வாழ எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/23/w600X390/Thirunavukkarasar_1.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2016/sep/23/ஜெயலலிதா-விரைவில்-நலம்-பெற-இறைவனை-பிரார்த்திக்கிறேன்-சு-திருநாவுக்கரசர்-2569664.html
2569632 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அரசு நிகழ்ச்சிகள் ரத்து DIN DIN Friday, September 23, 2016 10:44 AM +0530 சென்னை

தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் நலமாக இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சென்னை அரசு மருத்துவக்கல்லூரியில் அவர் பங்கேற்க இருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2016/sep/23/முதல்வர்-ஜெயலலிதா-மருத்துவமனையில்-அனுமதிக்கப்பட்டுள்ளதால்-அரசு-நிகழ்ச்சிகள்-ரத்து-2569632.html
2569624 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி அதிமுகவினர் சிறப்பு வழிபாடு DIN DIN Friday, September 23, 2016 10:35 AM +0530 சென்னை: 

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் நலமாக இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். குறிப்பாக திருவண்ணாமலை அண்ணாமலையார், தேனி, ஆண்டிபட்டி கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டு வருகின்றன. 

]]>
http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2016/sep/23/முதல்வர்-ஜெயலலிதா-விரைவில்-குணமடைய-வேண்டி-அதிமுகவினர்-சிறப்பு-வழிபாடு-2569624.html
2569255 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் முதல்வர் ஜெயலலிதா நலம் DIN DIN Friday, September 23, 2016 02:44 AM +0530 காய்ச்சல், நீர்ச்சத்து இழப்பு ஆகியவை காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை (செப்.22) இரவு அனுமதிக்கப்பட்டார். அவர் உடல் நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/23/w600X390/jaya1.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2016/sep/23/முதல்வர்-ஜெயலலிதா-நலம்-2569255.html
2569225 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி DIN DIN Friday, September 23, 2016 01:55 AM +0530 முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று(செப். 22) இரவு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு காரணமாக  இரவு 11 மணி அளவில் சென்னையில் கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/23/w600X390/jaya.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2016/sep/23/முதல்வர்-ஜெயலலிதா-மருத்துவமனையில்-அனுமதி-2569225.html
2568541 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்  DIN DIN Wednesday, September 21, 2016 09:58 PM +0530 பெங்களூரு

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காவிரி நீர் தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று முதல் வருகிற 27ம் தேதி வரை 7 நாட்களுக்கு காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது குறித்து ஆலோசனை நடத்த இன்று காலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாலை கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வீரப்பமொய்லி, மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதல்வர் குமாரசாமி, அமைச்சர்கள் பரமேஷ்வர், எம்.பி.பாட்டீல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கூடாது என கருத்து தெரிவித்துள்ளனர்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/21/w600X390/karnataka.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2016/sep/21/தமிழகத்திற்கு-தண்ணீர்-திறந்துவிட-முடியாது-என-கர்நாடக-அமைச்சரவை-கூட்டத்தில்-தீர்மானம்-2568541.html
2567319 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் கர்நாடக அரசிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது: கர்நாடக உள்துறை அமைச்சர் DIN DIN Monday, September 19, 2016 08:12 PM +0530 தில்லியில் இன்று நடைபெற்ற காவிரி மேற்பார்வைக்குழு கூட்டத்தின் முடிவில், தமிழகத்திற்கு மேலும் 10 நாட்களுக்கு நீர் திறக்கும்படி உத்தரவிடப்பட்டது.

இதற்கு, கர்நாடகா அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலும், நீர் தர ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இன்று மாலை கர்நாடக அமைச்சரவை அவசர கூட்டம் பெங்களூருவில் நடந்தது.

இதையடுத்து, கர்நாடக உள்துறை அமைச்சர் கூறுகையில் "கர்நாடக அரசிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு நாளை மேல்முறையீடு செய்யும். மாநில பாதுகாப்பு தொடர்பாக போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/19/w600X390/parameshwara.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2016/sep/19/கர்நாடக-அரசிற்கு-அநீதி-இழைக்கப்பட்டுள்ளது-கர்நாடக-உள்துறை-அமைச்சர்-2567319.html
2565731 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் முழு அடைப்பு போராட்டம்: தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் பேர் கைது  DIN DIN Friday, September 16, 2016 08:51 PM +0530 கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாட்டில் இன்று  முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. 

இப்போராட்டத்துக்கு விவசாய, வணிகர் சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்தன.

ஒவ்வொரு கட்சியிலும் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் அனைத்து பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார்  கைது செய்தனர்.

இப்போராட்டம் இன்று மாலை 6 மணியளவில் நிறைவடைந்த நிலையில், தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்ட 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் 7100 பேர் கைது செய்யப்பட்டதாகவும், முழு அடைப்பு அமைதியாக நடந்து முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2016/sep/16/முழு-அடைப்பு-போராட்டம்-தமிழகம்-முழுவதும்-30-ஆயிரம்-பேர்-கைது-2565731.html
2560462 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று கர்நாடக அரசு காவிரியில் உடனே தண்ணீர் திறந்துவிட வேண்டும்: ஜி.கே.வாசன்  சென்னை DIN Tuesday, September 6, 2016 01:21 PM +0530 உச்ச நீதிமன்ற தீர்ப்பை கவனத்தில் கொண்டு கர்நாடக அரசு காவிரியில் உடனே தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.

கர்நாடக அரசின் வீண்பிடிவாதப் போக்கால் காவிரி நீரை நம்பியிருக்கின்ற சுமார் 5 இலட்சம் தமிழக விவசாயக் குடும்பங்களின் விவசாயம் மூன்று போகத்திலிருந்து, இரண்டு போகமாக மாறி, ஒரு போக விளைச்சலுக்கும் காத்திருக்கின்ற சூழலே நிலவுகிறது.

காவிரி நீரை நம்பியிருந்த விவசாயிகளுக்கு எமாற்றமே மிஞ்சியதால் கடந்த 7 வருடங்களாக குறுவை சாகுபடி நடைபெறாமல் போன நிலையில் இனி சம்பா சாகுபடியும் நடைபெறுமா என்பது கேள்விக்குரியதாக உள்ளது. மேலும் காவிரி நீரை குடிநீருக்காக நம்பியிருக்கின்ற பல இலட்சக்கணக்கான பொது மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

தற்போது காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக தமிழக அரசின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் மனிதாபிமான அடிப்படையிலாவது கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறது. நேற்றைய தினம் 05.09.2016 திங்கள் கிழமை காவிரி நீர் பிரச்னை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது கர்நாடக அரசு வரும் 10 நாட்களுக்கு நாள் தோறும் 15 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

எனவே கர்நாடக அரசு அம்மாநிலப் பிரச்னைகளையும், அரசியல் உள்நோக்கத்தையும் உட்படுத்தாமல், உச்ச நீதிமன்ற தீர்ப்பை கவனத்தில் கொண்டு இனிமேலும் காலம் தாழ்த்தாமல், தமிழகத்துக்கு கால அட்டவணைப்படி மாதம் தோறும் காவிரியிலிருந்து உரிய தண்ணீர் திறந்துவிட வேண்டும். இதனை மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/6/w600X390/vasan.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2016/sep/06/உச்ச-நீதிமன்ற-தீர்ப்பை-ஏற்று-கர்நாடக-அரசு-காவிரியில்-உடனே-தண்ணீர்-திறந்துவிட-வேண்டும்-ஜிகேவாசன்-2560462.html
2560039 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் சென்னையில் 1.5 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்! IANS IANS Monday, September 5, 2016 07:17 PM +0530 சென்னையில் குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 டன் செம்மரக்கட்டைகள்  இன்று பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை ஏழுகிணறு பகுதியில் உள்ள கொண்டித்தோப்பில் தனியார் குடோன் ஒன்றில் செம்மரக்கட்டைகள்   பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை அடுத்து  அந்த குடோனில் அதிரடியாக சோதனை நடத்திய போலீசார், அங்கு பதுக்கப்பட்டிருந்த 1.5 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் சந்தை மதிப்பு பல கோடி ரூபாய்கள் ஆகும்.

இது தொடர்பாக தண்டயார்பேட்டையை சேர்ந்த ஆசைத்தம்பி என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
chennai , red sanders, illegal, godown, police raid, arrest http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/5/w600X390/re_sanders.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2016/sep/05/சென்னையில்-15-டன்-செம்மரக்கட்டைகள்-பறிமுதல்-2560039.html
2560036 தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள் காபூல் இரட்டைக் குண்டு வெடிப்பு: ஆறு பேர் பலி! IANS IANS Monday, September 5, 2016 07:04 PM +0530 ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாதுகாப்புத்துறை அலுவலகம் அருகே இன்று மதியம் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் ஆறு பேர் பலியானார்கள்.

ஆப்கான் தலைநகர் காபூலில் மையப்பகுதியில் அமைந்துள்ளது அதிபர் மளிகை. அதை ஒட்டியே அரசின் பல்வேறு துறை அலுவலகங்கள்  அமைந்துள்ளன. அந்த பகுதியில் உள்ள பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் இன்று மதியம் 3.30 மணி அளவில், பணி  முடிந்து ஊழியர்கள் திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில், வாயில் அருகே குண்டு ஒன்று வெடித்தது. 

சிறிய அளவிலான இந்த குண்டு வெடிப்பில் என்ன நடந்தது என்று பார்க்க அங்கே மற்றவர்கள் கூடிய வேளையில் மற்றொரு சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த குண்டு வெடிப்பில் ஆறு பேர் மரணம் அடைந்ததாக ஆப்கான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காயம் அடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ்களில் அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

 

]]>
Afghansitan, Kabul, Defence minsitry, Twin blast, ISIS http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/5/w600X390/afghan_balst.jpg http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2016/sep/05/காபூல்-இரட்டைக்-குண்டு-வெடிப்பு-ஆறு-பேர்-பலி-2560036.html