Dinamani - முக்கியச் செய்திகள் - http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2857809 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் சுப்ரமண்யபுரம் ஸ்டைலில் காதலித்த பெண்ணையே பகடைக்காயாக்கி படுகொலை செய்யப்பட்ட இளைஞர்! கார்த்திகா வாசுதேவன் DIN Monday, February 5, 2018 11:26 AM +0530  

டெல்லி, கியாலா பகுதியின் ரகுபீர் நகர் குடியிருப்பு வாளாகத்தைச் சேர்ந்த அங்கித் சக்ஸேனாவுக்கும், இஸ்லாமிய பெண்ணான சஹானாவுக்கும் இடையே ஐந்தாறு வருடங்களாகவே காதல். ஆரம்பகாலத்தில் இருவரும் அருகருகே இருந்த வீடுகளில் வசித்திருந்தனர், பின்னர் சஹானா குடும்பம் அதே குடியிருப்பில் வேறு ஒரு வீட்டுக்கு குடி பெயர்ந்த போதும் அவர்களது காதல் மட்டும் மாறாமல் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.  அங்கித்தைப் பொறுத்தவரை அவர் ரகுபீர் நகர் குடியிருப்புவாசிகளின் செல்லப்பிள்ளை. அவரைப் பிடிக்காதவர்களோ, வெறுப்பவர்களோ அங்கு யாருமில்லை. 23 வயது இளம் ஃபோட்டோகிராஃபரான அங்கித், தனது நீளமான சிகையலங்காரம்,  பிறருடன் எளிதில் கலகலப்பாகப் பேசிச் சிரித்துக் கொண்டாடும் குணம் போன்றவற்றால் ஏரியாவாசிகளால் ‘மோக்லி’ எனச் செல்லப்பெயரிட்டு அழைக்கப்பட்டவர் அங்கித். 

அப்படி ஏரியாவே கொண்டாடிய இளைஞனைத்தான் கடந்த வியாழன் அன்று இரவில் அடித்துக் காயப்படுத்தி கழுத்தறுத்து கொன்று போட்டிருக்கிறார்கள். இவ்வளவும் நடந்தது வேறெங்கோ கண்காணாத தொலைவில் அல்ல, அங்கித்தின் குடியிருப்பு வளாகத்தினுள்ளெயே தான். படுகொலையைச் செய்தது வேறு யாரும் அல்ல, யாரை அங்கித் தனது உயிராக நேசித்தாரோ அந்தப் பெண்ணின் இளைய சகோதரனால் தான் இந்த வன்கொலை நிகழ்த்தப் பட்டிருப்பதாகச் செய்தி.

வெள்ளியன்று மாலை அப்பகுதியின் பாஜக தலைவர் மனோஜ் திவாரி அங்கித்தின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரிடம் இளைஞரின் கொலையுண்டதைப் பற்றி விசாரித்து அங்கித் மரணத்துக்கான தனது இரங்கலைப் பதிவு செய்தார். அன்று மாலையே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அங்கே வருகை தர இருந்ததால் ஏரியாவில் எங்கும் பதற்றம் நிரம்பியிருந்தது. ஏனெனில் கொலையுண்டது  ஒரு இந்து இளைஞர். கொலையைச் செய்தது ஒரு முகமதிய இளைஞன் என்பதால் அந்தப் பகுதியில் மதக்கலவரத்தைத் தூண்டும்விதமான சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்து விடக் கூடாதே! என்பதில் காவல்துறை மிகுந்த கவனம் செலுத்தியது. கொலையுண்ட இளைஞர் தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் அவ்வப்போது தனக்குத் தோணும் போதெல்லாம் பாஜகவின் துணை அமைப்புகளில் ஒன்றான பஜ்ரங்தளத்தில் ஈடுபாட்டுடன் இணைந்து பணியாற்றக் கூடியவர் என்பதால் அவருடைய மரணம் இஸ்லாமியர்களுக்கு எதிரான மதக்கலவரமாகி விடக் கூடது என காவல்துறையினர் எண்ணினர்.

அங்கித், சஹானா காதல் விவகாரம் கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகத் தொடர்ந்த போதும் இருவரது குடும்பத்தினருக்கும் தெரிய வந்தது 8 மாதங்களுக்கு முன்பு தான். விஷயமறிந்ததும் அங்கித் தரப்பில் காதலுக்கு பெரிதாக எதிர்ப்புகள் எழவில்லை. ஆனால், சஹானா குடும்பத்தார் இந்தக் காதலை முற்றிலுமாக எதிர்த்திருக்கிறார்கள். சஹானாவைப் பற்றி வெளிவந்த தகவல்களைப் பொருத்தவரை, அவர் மிகவும் அமைதியான பெண், அனாவசியமாக யாருடனும் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளாத சுபாவம் கொண்ட பெண். தனது வீட்டிலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த டியூசன் சென் ட்டருக்குச் செல்லும் போது மட்டுமே வீட்டை விட்டு வெளியில் வரக்கூடிய பெண்ணாக சஹானா இருந்திருக்கிறார். அப்படி டியூசன் சென் ட்டருக்கு செல்லும் போது சஹானாவை அவரது இளைய சகோதரர் தான் தனது இருசக்கரவாகனத்தில் இறக்கி விடுவது வழக்கமாம். அந்த சந்தர்ப்பத்தில் சஹானாவின் சகோதரர் அவ்விடத்தை விட்டு அகன்றதும், டியூசன் தொடங்குவதற்கு சற்று முன்பே அங்கு வந்து சஹானாவுக்காகக் காத்திருக்கும் அங்கித்துடன் சஹானா சில நிமிடங்கள் பேசுவது வழக்கம். இப்படித் தொடர்ந்த சந்திப்புகள் சஹானா வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து கொண்டு தான் இருந்திருக்கின்றன. சமீபத்தில் சஹானாவுக்குத் தனது வருமானத்தில் புதிதாக அலைபேசி ஒன்றையும் அங்கித் பரிசளித்திருக்கிறார். அந்த அலைபேசி தான் தற்போது அங்கித் உயிருக்கு எமனாகி இருக்கிறது.

அங்கித்தைப் பொருத்தவரை அவரது ஏரியாவாசிகளுக்கு அவர் ஒரு செல்லப்பிள்ளையாகத் தான் வலம் வந்திருக்கிறார். 23 வயது இளைஞர், கலகலப்பானவர், புகைப்படக்காரர், தலைமுடியை சற்று நீளமாக வளர்த்துக் கொண்டு துறுதுறுப்பாக காலனியில் திரிந்தகாரணத்தால் அவருக்கு ‘மோக்லி’ என்ற பட்டப்பெயரும் உண்டாம். சம்பவ தினத்தன்று சஹானா, அங்கித்தை தனது வீட்டுக்கு அருகிலுள்ள ஓரிடத்தில் வந்து காத்திருக்கச் சொல்லி இருக்கிறார். அப்படிச் செய்யச் சொல்லி அவரை அவரது குடும்பத்தார் வற்புறுத்தி இருக்கிறார்கள். பின்பு சஹானாவை அடித்து, மிரட்டி அறைக்குள் வைத்துப் பூட்டி விட்டு, சஹானாவுக்காகக் காத்திருந்த அங்கித்தை பின்னாலிருந்து தாக்கி தடுமாறி விழச்செய்து கழுத்தறுத்துக் கொன்றிருக்கிறார்கள். கொலை நடந்த இடம் அங்கித்தின் வீட்டுக்கு மிக அருகில் இருந்த பகுதி தான். தமிழில் சசிக்குமார் இயக்கத்தில் சுப்ரமண்யபுரம் என்றொரு திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட அதே ஸ்டைலில் காதலிக்கும் பெண்ணை விட்டே காதலனை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரச்செய்து, அவனைக் கழுத்தறுத்துக் கொன்ற கொடூரம் புது டெல்லி, ரகுபீர் நகர் வளாகத்தையே தற்போது அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.


 

]]>
அங்கித் படுகொலை வழக்கு, ஆணவக்கொலை, ankith murder case, honour killing http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/5/w600X390/ankith_murder.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/feb/05/ankit--cold-blodded-murder-at-indias-capital-2857809.html
2853441 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனையின் போது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவை எவை? RKV DIN Tuesday, January 30, 2018 11:49 AM +0530  

எம் ஆர் ஐ ஸ்கேன் என்றால் மேக்னடிக் ரெஸொனன்ஸ் இமேஜிங் (தமிழில்... காந்த ஒத்திசைவு படமெடுத்தல்) என்று பொருள். இந்த பரிசோதனைக்கு உட்பட்டால் காந்த விசை மூலமாக நமது உடல் உள்ளுறுப்புகளில் நோய்ப்பாதிப்பு இருக்குமிடத்தை முப்பரிமாண ஸ்கேன் படமாகப் பெற முடியும். 1970 ல் கண்டறியப்பட்ட இந்த மெஷின் மக்களின் பயன்பாட்டுக்கு வர மேலும் 7 ஆண்டுகளாகி 1977 முதல் மருத்துவத்துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஸ்கேன் மூலமாக உடலின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் பரிசோதனைக்குட்படுத்தி படங்களாக எடுக்க முடியும்.

 • மூளை மற்றும் தண்டுவடம்
 • எலும்பு மற்றும் தசை இணைப்புகள்
 • மார்பகங்கள்
 • இதயம் மற்றும் இதயத் தமனிகள்
 • கல்லீரல், கருப்பை, புராஸ்டேட் சுரப்பு உள்ளிட்ட உடல் உள்ளுறுப்புகள்

போன்ற உடற்பாகங்களில் ஏதேனும் நோய்க்குறிகள் இருந்தால் அவற்றை எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனையில் மிக எளிதாக முறையாகக் கண்டறிய முடியும்.

எம் ஆர் ஸ்கேன் உற்பத்தி செய்யக்கூடிய அதிக விசை கொண்ட உயர் காந்தப்புலங்களின் வலிமை...

எம் ஆர் ஐ ஸ்கேன் மெஷினின் காந்தவிசை தோராயமாக 10 டன் இது புவியின் காந்த விசையோடு ஒப்பிடுகையில் 30,000 மடங்கு மிகு சக்தி கொண்டது. அதுமட்டுமல்ல ஒரு குளிர்சாதனப் பெட்டியில் பொருத்தப்பட்டுள்ள காந்த விசையோடு ஒப்பிடுகையில் 200 மடங்கு வலிமையானது.

எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை விலக்கப்பட்டவர்கள்...

 • இதன் மிகு காந்த விசை காரணமாக பேஸ் மேக்கர்கள் பொருத்தப்பட்ட நோயாளிகள், 
 • நரம்பியல் நோய் பாதிப்பு உள்ளவர்களிடையே வலி குறைப்பிற்காகநெர்வ் ஸ்டிமுலேட்டர் எனும் எலக்ட்ரிகல் இம்பிளாண்ட் கருவி பொருத்தப்பட்ட நோயாளிகள்
 • இதயத்துடிப்பை சீராக வைப்பதற்காக கார்டியோ வெர்ட்டர், டி ஃபைப்ரிலேட்டர் உள்ளிட்ட கருவிகள் பொருத்தப்பட்ட நோயாளிகள் உள்ளிட்டவர்களுக்கு எம் ஆர் ஐ ஸ்கேன் பரிந்துரைக்கப்படுவதில்லை.

அது மட்டுமல்ல, ஸ்கேன் மெஷினின் உயர் காந்த விசை காரணமாக;

ரிஸ்ட் வாட்சுகள், அலைபேசிகள், தங்கம், வெள்ளியாலான உலோக ஆபரணங்கள், ஹியரிங் எய்டு உள்ளிட்ட உலோகக் கருவிகள், உலோகத்தாலான அனைத்துக் கருவிகளுக்கும் எம் ஆர் ஐ ஸ்கேன் அறைக்குள் கண்டிப்பாக அனுமதி இல்லை.
 

]]>
MRI SCAN RULES, ஏஎம் ஆர் ஐ ஸ்கேன் விதிகள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/29/w600X390/mri.jpeg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/jan/29/rules-for-mri-scan-2853441.html
2853440 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் 32 வயது இளைஞரின் உயிரை உறிஞ்சிக் குடித்த எம் ஆர் ஐ ஸ்கேன் மெஷின்! RKV DIN Monday, January 29, 2018 11:48 AM +0530  

ராஜேஷ் மாரு, 32 வயது இளைஞர். கடந்த சனிக்கிழமையன்று தனது மூத்த சகோதரியின் மாமியாருக்கு எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை பரிந்துரைக்கப்பட்டிருந்ததால், உடல்நலமற்ற அவரைப் பார்த்து நலம் விசாரித்து விட்டு மருத்துவமனையில் தனது சகோதரிக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்வதற்காக தனது மைத்துனருடன் மும்பையின் இருக்கும் BYL நாயர் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். 

பலியான ராஜேஷ் மாரு
பலியான இளைஞர் ராஜேஷ் மாரு...

அங்கே, அதே மருத்துவமனையிலேயே முன்னதாக சிகிச்சை பெற்று வந்த ராஜேஷின் சகோதரியின் மாமியாரான லக்‌ஷ்மி சோலங்கிக்கு செயற்கை சுவாசம் அளிக்க ஆக்ஸிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டிருந்ததால் ஸ்கேன் அறைக்குள் செல்வதற்கு முன்பு அங்கிருந்த டியூட்டி டாக்டர் இடம் ஆக்ஜிஜன் சிலிண்டரை ஸ்கேன் அறைக்குள் எடுத்துச் செல்லலாமா? என்று ஆலோசனை கேட்டிருக்கிறார்கள். ஏனெனில் எம் ஆர் ஐ ஸ்கேன் அறைக்குள் உலோகப் பொருட்களுக்கு அனுமதி இல்லை என்பதால்; ஆனால், அப்போது ஸ்கேன் அறைக்கான வார்ட்பாய், ஸ்கேன் அறைக்குள் பரிசோதனை மெஷின் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதால், அச்சம் கொள்ளத் தேவையில்லை எனக்கூறி ஆக்ஸிஜன் சிலிண்டரை உள்ளே கொண்டு செல்ல அனுமதி அளித்திருக்கிறார். 

இவர்களுக்கு 7.30 மணியளவில் ஸ்கேன் நேரம் ஒதுக்கப்பட்டிருந்ததால், மருத்துவர் அவர்களை உடனடியாக  ஸ்கேன் அறைக்குள் சென்று காத்திருக்குமாறும், தான் 10 நிமிடங்களில் பரிசோதனை அறைக்குள் வந்து விடுவதாகவும் கூறி விட்டு அவரது மற்ற வேலைகளைத் தொடர்ந்திருக்கிறார். மருத்துவர் ஆலோசனையின் பேரில், வார்ட் பாய் கூறியவாறு லக்‌ஷ்மி சோலங்கிக்குத் தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டருடன் தனது மைத்துனருக்குப் பதிலாக ராஜேஷ் மாரு ஸ்கேன் அறைக்குள் நுழைந்திருக்கிறார். நோயாளியின் மகனும், ராஜேஷின் மைத்துனருமான ஹரிஷ் சோலங்கி தனது விரலில் இருந்த மோதிரத்தை கழற்ற இயலாததால் அவருக்குத் தன் தாயாருக்கு உதவியாக ஸ்கேன் அறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் ஹரிஷுக்குப் பதிலாக ராஜேஷ் ஆகிஸிஜன் சிலிண்டருன் உள்ளே நுழைய வேண்டியதாயிற்று என்கிறார்கள் அவர்களுடன் இருந்த உறவினர்கள். 

ராஜேஷ் ஸ்கேன் அறைக்குள் நுழைந்த மாத்திரத்தில் உடனடியாக எம் ஆர் ஐ ஸ்கேனின் மின் காந்தப் புலங்களால் அதி விரைவுடன் இழுக்கப்பட்டு கையிலிருந்த ஆக்ஜிஜன் சிலிண்டருடன் ஸ்கேன் மெஷினுக்குள் மாட்டிக் கொண்டார். அதிக விசையுடன் உறுஞ்சப்பட்ட வேகத்தில் அவரது கை சிலிண்டருக்கு அடியில் சிக்கிக் கொள்ள சிலிண்டர் லீக் ஆகத் தொடங்கி மொத்த ஆகிஸிஜனும் ராஜேஷின் சுவாசக்குழாயினுள் வலுக்கட்டாயமாக நிரம்பத் தொடங்கி கண்ணிமைக்கும் நேரத்தில் ராஜேஷ் மிக ஆபத்தான நிலையைச் சென்றடைந்தார். அங்கு அப்போது, வார்ட்பாய் அறிவித்திருந்தபடி ஸ்கேன் அறையில் மெஷின் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கவில்லை என்பது துரதிருஷ்டமான விஷயம். விபரீதத்தை உணர்ந்த மருத்துவமனைப் பணியாளர்கள் உடனடியாக ராஜேஷை மீட்க விரைந்தாலும் அவரை உயிருடன் மீட்க இயலவில்லை. ஸ்கேன் மெஷினில் இருந்து ராஜேஷை விடுவித்து அருகில் இருக்கும் ஜெ ஜெ மருத்துவமனைக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்க எடுத்துச் சென்ற போதும், சுவாசப் பையில் நிரம்பியிருந்த அதிகப்படியான ஆக்ஸிஜன் சப்ளை காரணமாக உடல் வீக்கமடைந்து ஊதிப்போய் அங்கு சென்ற 10 நிமிடங்களுக்குள்ளாக ராஜேஷ் தனது கடைசி மூச்சை நிறுத்திக் கொண்டார் என்றிருக்கிறார் அங்கிருந்த பெயர் வெளியிட விரும்பாத மருத்துவர் ஒருவர்.

எம் ஆர் ஐ ஸ்கேன் மெஷினால் உறிஞ்சப்பட்டு இளைஞர் ஒருவர் பரிதாபமாக மரணமடைய டியூட்டி டாக்டரின் அலட்சியமும், வார்ட் பாயின் கவனக்குறைவுமே காரணம் எனக்கருதி தற்போது அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதில் பரிதாபகரமான விஷயம் என்னவென்றால், ராஜேஷ் மாருவின் அம்மா காலாவின் தேற்ற முடியாத அழுகை. மகனது துர் மரணத்தைக் கேள்விப் பட்டதில் இருந்து அவருக்கும் உடல்நிலை மோசமாகி விட மருத்துவமனை சிகிச்சையிலிருப்பதாக தகவல். அது மட்டுமல்ல, அவர்களது குடும்பத்தைப் பொறுத்தவரை ராஜேஷுக்கு மூன்று சகோதரர்களும், மூன்று மூத்த சகோதரிகளும் இருப்பதாகக் கேள்வி. அவர்களுள் தனது இளைய மகனே தனது கஷ்டங்களைப் புரிந்து கொண்டு குடும்பத்தின் மீதி மிகுந்த பற்று கொண்டு தன் மீது மிகுந்த பாசத்துடன் இருக்கக் கூடியவர். அவர் ஒருவரை நம்பியே நானும் எனது மனைவியும் வாழ்ந்து வந்தோம். இனி எங்கள் மகனுக்கு நாங்கள் எங்கே போவோம்’ அவனுக்கு திருமணத்திற்காகப் பெண் பார்க்கலாம் என்று கூறும் போதெல்லாம், வேண்டாம், இந்தச் சிறிய வீட்டில் வைத்து திருமணம் செய்து கொள்ள முடியாது. கொஞ்சம் பெரிதாக வீடு கட்டிக் கொண்டு பிறகு திருமணத்தைப் பற்றி யோசிக்கலாம் என்று தட்டிக் கழித்துக் கொண்டே இருந்தவன் சமீபகாலமாகத் தான் 32 வயதாகி விட்டதே என்று திருமணத்திற்கு வரன் பார்க்க ஒப்புக் கொண்டிருந்தான். அதற்குள் இப்படியாகி விட்டதே! நான் என்ன செய்வேன் என்று கதறி அழும் அவரது தாயாரைத் தேற்றுவார் யாருமில்லை.’

எம் ஆர் ஐ ஸ்கேன் என்பது அதிக விசை கொண்ட மின்காந்தப் புலங்களால் உடலை ஊடுருவி உடலுக்குள் இருக்கும் நோய்க்குறைபாடுகளைக் கண்டறியும் முறை. இந்த ஸ்கேன் பரிசோதனையில் ஈடுபடுத்தப்படுவதற்கு முன்பு மருத்துவர், பரிசோதனக்குள்ளாகும் நோயாளி மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்கு தகுந்த முன்னெச்சரிக்க நடவடிக்கைகள் மற்றும் ஸ்கேன் அறைக்குள் நுழைவதற்கான கட்டுப்பாட்டு விதிகள் உள்ளிட்டவற்றைப் பற்றி அறிவுறுத்த வேண்டும் என்கின்றன மருத்துவ விதிகள். ஆனால் ராஜேஷின்  வழக்கிலோ அவரது மருத்துவர் எந்த விதமான எச்சரிக்கைகளையும் அவர்களுக்கு அளித்ததாகத் தெரியவில்லை என்கின்றன வழக்கு குறித்த விவரங்கள்.
 

]]>
எம் ஆர் ஐ ஸ்கேன் விபத்து, மும்பை இளைஞர் மரணம், ராஜேஷ் மாரு, MRI SCAN ACCIDANTAL DEATH, RAJESH MARU, MUMBAI http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/29/w600X390/MRI-machine.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/jan/29/man-dies-after-being-sucked-into-mri-scan-machine-at-mumbai-hospital-2-arressted-2853440.html
2841783 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்களின் இன்றைய நிலை?! RKV DIN Tuesday, January 9, 2018 11:07 AM +0530  

கடந்த 2016 ஆம் ஆண்டு, இந்தியப் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு செய்தியை இரவு 8 மணியளவில் தொலைக்காட்சியில் தோன்றி மக்கள் அனைவரையும் அதிரச் செய்யும் விதத்தில் பரபரப்புச் செய்தியாக அறிவித்தார். அந்த நிமிடம் முதல் சில மாதங்களுக்குள்ளாக பொதுமக்கள் அதுவரை பயன்படுத்தி வந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மதிப்பு நீக்கம் செய்யப்பட்டு வெறும் காகிதங்கள் என்றாகின. தற்போது பழைய ரூபாய் நோட்டுக்களுக்குப் பதிலாகப் புது 2000 மற்றும் 500, 200, 50 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.

அதெல்லாம் சரி, ஆனால் கடந்த பல ஆண்டுகளாக நம்மோடு ஒட்டி உறவாடிய பின் திடீரென ஒரே நாளில் நம்மிடமிருந்து பணமதிப்பிழப்பு என்ற பெயரில் பறிக்கப்பட்டனவே அந்த 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களின் கதி என்ன ஆயிற்றோ? என்ற கவலை எல்லோருக்கும் இருக்குமில்லையா?

அந்த ரூபாய் நோட்டுக்கள் தற்போது தமிழக சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனவாம். அங்கிருக்கும் கைதிகளில் திறன் வாய்ந்த சிலருக்கு அது ஒரு புது விதமான வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறது. ஆம், மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்கள் சிறு, சிறு துகள்களாக மாற்றப்பட்டு மிகுந்த அழுத்தம் கொடுத்து கைகளால் அரைக்கப்பட்டு அரசாங்க அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் கோப்புகளாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனவாம். இந்தக் கோப்புகள் முற்றிலும் சிறைக்கைதிகளால் மேனுவலாகத் தயாரிக்கப்படுகிறது.

இதற்கென தனி இயந்திரங்கள் பயன்படுத்தப்படவில்லை. இந்த வேலையில் ஈடுபடுத்தப்படும் கைதிகளுக்கு நாளொன்றுக்கு 160 முதல் 200 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. தினமும் 25 முதல் 30 சிறைக்கைதிகள் இந்த வேலையில் ஈடுபடுத்தப்பட்டு ஒருநாளில் சுமார் 1000 கோப்புகள் வரை தயாரிக்கப்படுகின்றன என பிடிஐ செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

Image courtesy: thenewsminute.com

]]>
demonitized 500, 1000 rs notes, பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500. 1000 ரூபாஇ நோட்டுக்கள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/9/w600X390/demonitized_notes.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/jan/09/demonitised-notes-send-to-tn-jail-and-made-to-files-2841783.html
2838761 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் கின்னஸ் சாதனை படைத்த தெலுங்குப் பாடகர் ‘கஜல் ஸ்ரீனிவாஸ்’ பாலியல் வன்முறை வழக்கில் கைது! RKV DIN Thursday, January 4, 2018 01:37 PM +0530  

கேசிராஜு ஸ்ரீனிவாஸ் எனும் பாடகர் கஜல் ஸ்ரீனிவாஸ் தெலுங்கில் பிரபலமான பாடகர் மட்டுமல்ல, ஆலயவாணி வெப் ரேடியோ கம்பெனியின் புரோகிராம் ஹெட்டாகவும் இருப்பவர் அவரே! இருநாட்களுக்கு முன் 29 வயதுப் பெண் ஒருவர், பாடகர் கஜல் ஸ்ரீனிவாஸ் நெடுநாட்களாக தன்னிடம் பாலியல் ரீதியாக முறைகேடாக நடந்து வருவதாகக் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் புஞ்சகுட்டா காவல்துறையினரால் அன்றே கைது செய்யப்பட்ட பாடகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பாடகர் கஜல் ஸ்ரீனிவாஸ் 2008 ஆம் ஆண்டு, மகாத்மா காந்தி நினைவைப் போற்றும் விதமாக தனது ஒரே இசைக்கச்சேரியில் சுமார் 76 வித்யாசமான மொழிகளில் பாடல்களைப் பாடி பதிவு செய்து கின்னஸ் சாதனைப் பெருமையைப் பெற்றவர். 

தற்போது அவர்மீதான இந்த பாலியல் வழக்கை ஒட்டி, பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவரை தங்களது பிராண்ட் அம்பாஸிடராகப் பயன்படுத்த விரும்பவில்லை என ‘உலகளாவிய இந்து பாரம்பரிய அறக்கட்டளை மற்றும் கோயில்கள் பாதுகாப்பு அமைப்பு’ அறிவித்துள்ளது.

2006 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட இந்த அமைப்பின் பிரதான நோக்கமே இந்துக் கோயில்களைப் பாதுகாத்துப் பராமரிப்பது தான். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பர்யமிக்க கோயில்களை மீட்டு அவற்றின் உயர்ந்த ஒழுக்கநெறிகளையும், நெறிக்கோட்பாடுகளையும் நிலைநிறுத்துவதும், பாதுகாப்பதுமே இவ்வமைப்பின் நோக்கமாக இருந்தது. அதன் காரணமாகத்தான் தங்களது ‘ஆலயவாணி’ நெப் ரேடியோவுக்கு கேசிராஜு அலைஸ் கஜல் ஸ்ரீனிவாஸை புரோகிராம் ஹெட் ஆக நியமித்திருந்தனர். ஆனால், அவர் தனது அதிகாரத்தையும், பதவியையும் துஷ்பிரயோகம் செய்து, நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ரேடியோ ஜாக்கி ஒருவருக்கு நெடுநாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் என்பது அதிர்ச்சிகரமான விஷயம். அதைத் தங்களால் ஒருபோதும் சகித்துக் கொள்ளவே முடியாது. எனவே எவ்வித முன்னறிவிப்பும் இன்று அவரை எங்கள் அமைப்பிலிருந்து விலக்குகிறோம் என இந்து பாரம்பர்ய அமைப்பு அறிவித்துள்ளது.

கஜல் ஸ்ரீனிவாஸ் மீது கடந்தாண்டு டிசம்பர் 29 ஆம் தேதி புகாரளித்துள்ள இளம்பெண் அதற்கு சாட்சியாக அவர் முறைகேடாக நடந்து கொண்டதற்கான வீடியோ ஆதாரப் பதிவுகளையும் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளார். அதனடிப்படையில் கஜல் ஸ்ரீனிவாசை டிசம்பர் 2 ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது அவரை ஜனவரி 12 வரை காவல்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பாடகருக்கு எதிராகச் சமர்பிக்கப்பட்டுள்ள வீடியோவில், கஜல் ஸ்ரீனிவாஸுக்கு பெண்ணொருவர் மசாஜ் செய்வதைப் போன்ற காட்சிகள் பதிவாகி இருக்கின்றன. புகாரளித்தவரை மட்டுமல்ல, மேலும் பல பெண் அலுவலர்களையும் கஜல் ஸ்ரீனிவாஸ் இதே விதமாக பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தி மறுப்பவர்களின் ஊதியத்தை நிறுத்தி வைத்தல், அறிவிப்பின்றி வேலையை விட்டு நிறுத்துதல் போன்ற மிரட்டல் வேலைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இத்தனை ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுகளுக்குப் பின்னரும் கஜல் தன்னைப் பற்றி கூறுவதென்னவோ, ‘தான் தன்னிடம் பணிபுரிந்து அனைத்துப் பெண் அலுவலர்களையும் தனது மகளைப் போலவே தான் மரியாதையுடன் நடத்தியதாகக் கூறியுள்ளார்’.

தற்போது காவல்துறை கஸ்டடியில் இருக்கும் கஜல் ஸ்ரீனிவாஸுக்கு வயது 51.

]]>
Guinness World Record singer, Ghazal Srinivas, tollywood, telugu singer, கஜல் ஸ்ரீனிவாஸ் கைது, பாலியல் துஷ்பிரயோக வழக்கு, கின்னஸ் சாதனை கஜல் ஸ்ரீனிவாஸ் கைது, sexual harrassment case http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/4/w600X390/0000_ghazal-srinivas.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/jan/04/ghazal-srinivas-arrested-on-sexual-harassment-charges-2838761.html
2838126 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் இசை கேட்கையில் அனிச்சையாக கண்கள் கசிந்தால் நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது தில்ருபா! கார்த்திகா வாசுதேவன் DIN Wednesday, January 3, 2018 04:25 PM +0530  

சிதாரையும், சாரங்கியையும் இணைத்தால் கிடைக்கக் கூடிய அருமையான ஃபியூஷன் இசைக்கருவியே தில்ருபா, மேலும் நுணுக்கமாகச் சொல்வதென்றால் எஸ்ராஜ் மற்றும் மயூரி வீணை உள்ளிட்ட அபூர்வமான இசைக்கருவிகளுடன் நெருங்கிய தொடர்புடையது தில்ருபா இசை. அவற்றிலிருந்து பிறக்கும் இசையும் தில்ருபாவில் இருந்து பெறும் இசையைப் போலவே தான் இருக்கும். ஆனால் , தில்ருபாவில் இருந்து பிரவகிக்கும் இசையில் கிடைக்கக் கூடிய அதி நுட்பமான சோக உணர்வு ஒன்று மட்டுமே பிற இசைக்கருவிகளில் இருந்து தில்ருபாவை வித்யாசப்படுத்திக் காட்டக்கூடியது எனலாம். அதனால் எஸ்ராஜ் மற்றும் மயூரி வீணை இசைக்கத் தெரிந்த கலைஞர்கள் தில்ருபாவையும் எளிதாகக் கையாளலாம். 

தில்ருபாவின் கழுத்துப் பகுதியில் 18 நரம்புக் கம்பிகள் தொகுக்கப் பட்டிருக்கும். கிட்டத்தட்ட சிதாரைப் போலவே தான் இதையும் இசைக்க வேண்டும்!

தில்ருபா வடமேற்கு இந்தியப் பகுதிகளில் மிகப் பிரபலமான இசைக்கருவியாக விளங்குகிறது. குறிப்பாக பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தில்ருபா இசை அதிகமும் பயன்பாட்டில் இருக்கிறது/

தமிழகத்தில் தில்ருபா இசைக்கக் கூடிய ஒரே ஒரு பெண் கலைஞர் என்றால் அவர் சரோஜா மட்டும் தான். இவர் பிரபல சாரங்கி இசைக்கலைஞரான மனோன்மணியின் தாயார். தமிழில் பல திரைப்படங்களுக்கு இவரது தில்ருபா இசையை ராஜா முதல் ரஹ்மான் வரை அனைத்து இசையமைப்பாளர்களும் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று கேள்வி!
அவர் தில்ருபா இசைக்கும் வீடியோ காட்சி இதோ...

 • லேசா லேசா திரைப்படத்தின் ‘ஏதோ ஒன்று, ஏதோ ஒன்று உன்னைக் கேட்பேன், அது இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்’ பாடலின் துவக்கத்தில் ஒலிக்கும் வாத்தியங்களின் கூட்டிசையில் தில்ரூபாவைத் துல்லியமாக அடையாளம் காணலாம்.
 • உள்ளம் கேட்குமே திரைப்படத்தின் ‘ஓ மனமே பாடலில் பூஜா, ஆர்யா காதல் தோல்வி மற்றும் நண்பர்களுக்கிடையிலான பிரிவைப் பூடகமாக உணர வைக்கும் முயற்சியில் பூஜாவின் அப்பா இறக்கும் காட்சியில் ஸ்பெஷலாக தில்ருபா ஒலிக்கும். 
 • தில்ருபாவை குதூகலமான மனநிலையை உருவகிக்கும் பாடல்களிலும் பயன்படுத்தலாம் என்பதற்கான உதாரணம் அந்நியன் திரைப்படத்தில் வரும் ‘அண்டக்காக்கா கொண்டைக்காரி’ பாடல்.
 • இப்படி ஹாரிஸ் ஜெயராஜ் தனது பல ஹிட் பாடல்களில் தில்ருபாவை மிக அருமையாகப் பயன்படுத்தி இருப்பார்.

தில்ருபா இசையை தமிழ்த்திரைப்பட பாடல்களில் கேட்டு ரசிக்க விரும்புபவர்கள் மேற்கண்ட பாடல்களை மொத்தமாக கீழே உள்ள யூ டியூப் இணைப்பில் கேட்டு மகிழலாம்.

 

]]>
தில்ருபா, நரம்பிசைக் கருவி, சரோஜா, dilruba, string instrument, saroja, lifestyle art, லைஃப்ஸ்டைல் கலை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/3/w600X390/0000_dilruba_saroja.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/jan/03/dilruba-instrumental-music-2838126.html
2838120 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் உங்களுக்குத் தான் பதவி ஆசை இல்லையே, நல்லகண்ணு அய்யாவை முதலமைச்சர் ஆக்குவீர்களா? திருமுருகன் காந்தியின் காட்டமான கேள்வி! RKV DIN Wednesday, January 3, 2018 01:17 PM +0530  

ரஜினியின் அரசியல் பிரவேஷம் குறித்து மே 17 இயக்கத் தலைவரான திருமுருகன் காந்தியிடம் சில கேள்விகளை முன் வைத்தது பிரபல சமூக இணையதள ஊடகம் ஒன்று. நீளமான அந்த நேர்காணலில் ரஜினியிடம் அவர் சீற்றத்துடன் முன் வைத்த முதல் கேள்வியே இன்றைய இளையதலைமுறையினரைச் சிந்திக்க வைப்பதாக இருப்பதால் அந்தக் கேள்வியை இங்கே வாசகர்கள் முன் வைக்கிறோம்.

ரஜினியிடம் திருமுருகன் காந்தியின் காட்டமான கேள்வி...

‘பாஜகவின் ‘பி’ டீம் தான் ரஜினிகாந்த். அதன் ஸ்லீப்பர் செல் தான் கமலஹாஸன். அதில் எந்த இடத்திலும் சந்தேகமே தேவையே இல்லை. ஆன்மீக அரசியலென்றால் என்ன செய்ய வேண்டும்? எல்லோருமே கருப்பு வேஷ்டியும், காவி வேஷ்டியும் அணிந்து கொண்டு சுற்ற வேண்டும் என்கிறாரா? அல்லது எல்லோரும் விபூதி அணிந்து கொண்டு, நாமம் போட்டுக் கொண்டு போக வேண்டும் என்கிறாரா? அல்லது பசுமாட்டின் சிறுநீரை (கோமியம்) குடித்துக் கொண்டு சுற்ற வேண்டும் என்கிறாரா? அது என்னங்க ஆன்மீக அரசியல்?

போராட்டங்கள் நடத்துவது எங்கள் வேலையில்லை. அதைக்குறித்த கருத்துகளை மக்களிடம் சொல்ல அறிக்கைகள் வெளியிடுவது எங்கள் வேலை இல்லை. அதையெல்லாம் வேறு யாராவது செய்து கொள்வார்கள். நாங்கள், எங்கள் படத்தை மட்டும் எடுத்து 300, 400 கோடிக்குச் சம்பாதித்துக் கொண்டு நாங்கள் போவோம். எவ்வளவு திமிரான பேச்சு இது? போராட்டம் நடத்துபவர்கள் எல்லாம் என்ன மட்டமான ஆட்களா? வேலையில்லாமல் உட்கார்ந்து போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்களா?

நீங்கள் உட்கார்ந்து கொண்டு ஒரு திரைப்படத்தில் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்த போது போராட்டக்காரர்கள் விவசாயிகள் பிரச்னைகளுக்காக அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை என்கிற காரணத்துக்காக தெருவில் நின்று போராடிச் சண்டையிட்டு சிறைக்குச் சென்றார்கள். மீனவர்கள் வந்தார்களா? பிழைத்தார்களா?, செத்தார்களா? என்று தெரியாமல் அவர்களது குடும்பங்கள் எல்லாம் சாலையில் நின்று போராடினார்கள். அது நடந்த போதெல்லாம் உட்கார்ந்து சினிமாவில் சம்பாதிக்கக் கணக்குப் போட்டுக் கொண்டிருந்த நீங்கள் வந்து இப்போது போராடுவது வேறு ஒருவருடைய வேலை என்று சொல்வீர்கள் என்றால் நீங்கள் யார்?

உங்களுக்குப் பதவி ஆசை இல்லையில்லை, அப்படியானால் நல்லகண்ணு அய்யாவை முதலமைச்சர் ஆக்குங்கள். அவர் வெள்ளைக்காரனை எதிர்த்தும் போராடினார், கொள்ளைக்காரனை எதிர்த்தும் போராடினார். எளிமையான மனிதர். பிறரைப் போல ஊழல் செய்தவர் இல்லை. பிளாக் டிக்கெட் விற்றுச் சம்பாதித்தவர் கிடையாது. மக்களை உணர்வுப் பூர்வமாகச் சுரண்டியவர் கிடையாது. மக்களுடன் போராட்டத்தில் நிற்கக் கூடிய ஒரு மனிதர். சரி உங்களுக்குத்தான் பதவி ஆசை இல்லை அல்லவா? நல்லகண்ணு அய்யாவை முதலமைச்சர் ஆக்குங்கள்.’

Question portion courtesy: Redpix.com.
 

]]>
திருமுருகன் காந்தி, நல்லகண்ணு, ரஜினிகாந்த், கேள்வி, thirumurukan gandhi, nallakannu, Rajinikanth http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/3/w600X390/0000thirumurugan_gandhi.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/jan/03/rajiniif-you-dont-have-the-desire-to-crown-than-can-you-make-senior-leader-nallakannu-as-cm-2838120.html
2838106 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் 'செய்திகளுக்கு வண்ணம் பூச வேண்டாம்' ஊடகங்கள் மீதான அதிருப்தி குறித்து வெங்கய்ய நாயுடு முன்வைத்த வேண்டுகோளின் மீதான விமர்சனம்! RKV DIN Wednesday, January 3, 2018 11:45 AM +0530  

சமீபத்தில் நமது துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு அவர்கள்,  ‘ஊடகங்கள் செய்திகளின் மீது வண்ணம் பூச வேண்டாம்’ விவசாயிகள் பிரச்னை குறித்து மக்களிடம் உரிய வகையில் எடுத்துச் சென்று அதன் முக்கியத்துவத்தை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டியது ஊடகங்களின் கடமை.  என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை அடிப்படையாக வைத்து நடத்தப் பட்ட ஒரு விவாத நிகழ்ச்சியில் மூத்த பத்திரியகையாளர், அரசியல் விமர்சகர், அரசியல் கட்சியொன்றின் பிரதிநிதி எனப் விவரமறிந்த சிலர் முன் வைத்த விமர்சனங்களைப்  பற்றி தினமணி வாசகர்களின் கருத்து என்ன? என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு அந்த விவாத நிகழ்ச்சியில் பேசப்பட்ட விஷயங்கள் கீழே பகிரப்பட்டுள்ளது.

ஜெனிஃபர் வில்சன் (ஊடக நெறியாளர்)

செய்திகளை முந்தித் தரும் போட்டி அனைத்து ஊடகங்களுக்கும் இருக்கிறதா இல்லையா? அரசாங்கம் எதை மறைக்க நினைக்கிறதோ அதை வெளியில் கொண்டு வருவது தான் ஊடகங்களின் பணி அப்படி இருக்கையில் ஒரு நாட்டின் துணை குடியரசுத் தலைவராக இருப்பவரே, ஊடகங்கள் அரசின் நலத்திட்டங்களை மட்டுமே வெளிச்சமிட்டுக் காட்டினால் போதும், பிற விஷயங்களில் எல்லாம் தலையிடாதீர்கள் என மிரட்டுவது போல ஒரு கருத்தை முன் வைப்பது சரியா?  

ராமசுப்ரமண்யன் (அரசியல் விமர்சகர்) 

ஆங்கில ஊடகங்கள் சமீபகாலங்களாக இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செய்தி வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மும்பை தாக்குதல் விவகாரத்தின் போது பர்கா தத் போர் முனையில் அரசாங்கம் அனுமதிக்கக் கூடாத, ராணுவம் அனுமதிக்க மறுக்கும் எல்லை வரை சென்று செய்தி சேகரித்து ராணுவ ரகசியங்களை எல்லாம் ஊடக வெளிச்சமிட்டுக் காட்டியதால் தான், அவர் அந்த இடத்தை விட்டு அகன்ற அடுத்த சில நிமிடங்களிலேயே பாகிஸ்தான் ராணுவம் சொல்லி அடிப்பதைப் போல நான்கைந்து இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்தது. பர்கா தத் மாதிரியான செய்தியாளர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய வண்ணம் அப்படிச் செய்தது முற்றிலும் தவறு. ஊடகங்களின் மீதான அதிருப்திக்கு அதுவும் ஒரு காரணம்.

அது மட்டுமல்ல, கெளரி லங்கேஷ் கொலை விவகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஆரம்பத்தில்... கொலை நடந்த சமீபத்தில் கொலைக்கான காரணகர்த்தர்கள் ஆளும் பாஜக அரசின் கிளைக்கட்சியான ஆர்எஸ்எஸ் வெறியர்கள் தான் என அனைத்து ஊடகங்களும் குற்றம் சுமத்தின. ஆனால், தற்போது கொலைக்கான காரணம் சொந்தப் பகையாக இருக்குமோ என்ற ரீதியில் சென்று கொண்டிருக்கிறது. கெளரி லங்கேஷின் தந்தை தொடங்கிய பத்திரிகையை யார் உரிமை கொண்டாடுவது என்பது தொடர்பாக மூண்ட பகையின் காரணமாக நிகழ்ந்த கொலையாக இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன, அதனடிப்படையில் விசாரணை சென்று கொண்டிருக்கிறது. ஆனால், இந்த விஷயத்தைப் பொருத்தவரை ஊடகங்கள் என்ன செய்தன? கெளரி லங்கேஷ் கொலையுண்ட உடனேயே அதற்கான காரணம் பாஜகவைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது என்பதாக அல்லவா நிறுவப் பார்த்தன! அப்படியான சூழலில் ஊடகங்களின் மீதான நம்பகத்தன்மை குறையாமல் என்ன செய்யும்?

ஆசிய மாநாட்டின் முக்கியத்துவம் குறித்துப் பேசுவதற்கு ஆளில்லை. மத்திய பாஜக செய்யும் நல்ல விஷயங்களை எல்லாம் ஊடகங்கள் முன் வைப்பதில்லை என்று வெங்கய்ய நாயுடு கூறுகிறார். அதைச் செய்ய வேண்டியதும் ஊடகங்களின் கடமை தான்.

அய்ய நாதன் (மூத்த பத்திரிகையாளர்) 

மும்பை தாக்குதலின் போது லைவ் டெலிகாஸ்ட் செய்தது தவறு என சுட்டிக்காட்டுபவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விடுகிறார்கள், உலகில் எங்கு போர் நடந்தாலும், போரில் முதலில் சாவது உண்மை தான். அதை வெளியே கொண்டு வரத்தான் ஊடகத்தினரை போர் முனையில் அனுமதிக்கின்றனர். போர் முனையின் அப்பட்டமான உண்மைகளை ஊடகம் வெளியில் கொண்டு வந்ததற்கான மிகச்சிறந்த உதாரணம் இலங்கை உள்நாட்டுப்போர் குறித்த செய்திகளைப் பதிவு செய்து வெளியிட்டதன் பின்னரே மக்களுக்கு அப்போரில் பின்பற்றப்பட்ட மனிதத் தன்மையற்ற கொடூரச் செயல்கள் பற்றி முழுதாகத் தெரியவந்தது. வியட்நாம் போரை முடிவுக்கு கொண்டு வந்தது அப்போர் குறித்து ஊடகங்களில் வெளிவந்த ஒற்றப் புகைப்படம் தான்.
அதேபோல இலங்கைப் போரின் கொடூரம் முடிவுக்கு வந்ததும் ஊடகங்களால் தான். மக்களின் உரிமைகள் போரைக் காரணம் காட்டி எவ்விதம் நசுக்கப் படுகின்றன என்பதை உலகுக்குச் சொல்ல வேண்டிய கடமை ஊடகங்களுக்கு உண்டு. மக்களின் உரிமையைப் பாதுகாப்பது தான் ஊடகங்களின் தர்மம்.
 
சரீப் (தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி)  

ஊடகங்கள் உண்மையைச் சொல்வதா? அல்லது அரசுக்கு ஆதரவான செய்தியைச் சொல்வதா? வெங்கய்ய நாயுடுவின் ஊடகங்கள் மீதான ஆதங்கம் அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதாகத் தான் இருக்கிறது. அரசின் பிரச்சார பீரங்கியாகத் தான் அனைத்து ஊடகங்களும் இயங்க வேண்டும் என அவர் விரும்புகிறார். சாமானியர்களின் மனதில் நல்லாட்சி நடத்தும் அரசின் மீது கூட சில குற்றம் குறைகள் இருக்கத்தான் செய்யும். அரசு தனக்கு அதைச் செய்யவில்லை, இதைச் செய்யவில்லை என்ற குறைபாடு அப்போது அரசின் குறைபாடுகளை எடுத்துக் காட்டும் வேலையை ஊடகங்கள் தான் செய்ய வேண்டும். போர்முனையில் ஊடகப் பணியாற்ற பர்கா தத்துக்கு அனுமதி அளித்தது யார்? இந்த அரசின் அதிகாரிகள் தானே? செய்திகளை முந்தித் தர வேண்டும் எனும் நிர்பந்தம் ஊடகங்களுக்கு இருக்கிறது. பரபரப்பான முக்கியச் செய்திகள் அனைத்தும் அரசு சார்பில் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே தனியார் செய்தி ஊடகங்கள் வெளியிட்டு விடுகின்றன. இன்றைய அரசு தங்களுக்கு எதிரான செய்திகளை ஊடகங்கள் வெளியிடக் கூடாது என எதிர்பார்க்கிறது. ஆனால், இம்மாதிரியான வேண்டுகோளை ஒரு சட்டமன்ற உறுப்பினரோ, ஒரு எம்.பி யோ முன் வைத்தால் அது வேறு விதமாக நோக்கப்படும் ஆனால் இப்படி ஒரு வேண்டுகோளை துணை ஜனாதிபதியே முன்வைக்கும் போது அதில் ஊடகங்கள் அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடக் கூடாது எனும் மிரட்டல் தொனி தான் அதிகம் தெரிகிறது.

விவசாயிகள் பிரச்னை குறித்து அரசுக்கு மிக நன்றாகத் தெரியும். ஆனால் அதை ஊடகங்கள் தான் எடுத்துப் பேச வேண்டும்... மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று வெங்கய்ய நாயுடு பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. இதன் அர்த்தம் விவசாயிகள் விஷயத்தில் அரசு கண்களில் கருப்புத்துணி கட்டிக் கொண்டிருக்கிறது என்று தான் தோன்றுகிறது.

இப்போது வாசகர்கள் நேரம், ஊடகங்களில் மக்கள் வெறுக்கும் அம்சம் என்ன? ஒரு செய்தியை ஊடகங்கள் எப்படிச் வெளியிடக்கூடாது? எப்படி வெளியிட வேண்டும்? என்பது குறித்தான மக்களின் எதிர்பார்ப்பு என்ன? என்பது குறித்தான உங்களது மேலான கருத்துக்களை முன் வையுங்கள்.

]]>
venkaiah naidu, vice presidant of india's latest statement, வெங்கய்ய நாயுடுவின் வேண்டுகோள் மீதான விமர்சனம், வெங்கய்ய நாயுடு, ஊடகங்கள் மீதான நம்பகத் தன்மை, ஊடக அதிருப்தி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/3/w600X390/0000000venkaiah.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2018/jan/03/dont-apply-colour-to-news-venkaiah-naidu-2838106.html
2833935 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் 2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்! RKV DIN Wednesday, December 27, 2017 11:35 AM +0530  

லண்டனை மையமாகக் கொண்ட 'பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம்' ஒன்று சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றில் இந்தியா கூடிய விரைவில் 2018 ஆம் ஆண்டு இறுதிக்குள் உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும் என உறுதியான சான்றுகளுடன் தகவல் வெளியிட்டுள்ளது.

தற்போது உலகின் மிகப்பெரிய  5 பொருளாதார மையங்கள் எனக்கருதப்படும் வல்லரசு நாடுகளின் பட்டியலில் இருந்து ஐக்கிய நாடுகள் மற்றும் பிரான்ஸைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஐந்தாம் இடத்தை 2018 ஆம் ஆண்டுக்குள் இந்தியா அடையும்.

அதுமட்டுமல்ல இந்த வளர்ச்சியானது 2032 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகின் மிகப்பெரிய பொருளாதார மையங்களில் மூன்றாம் இடத்துக்கு நகர்த்திச் செல்லவும் வாய்ப்பிருப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதற்கு பிரதான காரணமாக அந்த ஆய்வறிக்கை முன் வைப்பது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையைத் தான்.

2016 ஆம் ஆண்டு நவம்பரில் மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. தற்போதைய நிலையில் உலகின் பெரிய பொருளாதார மையங்களில் 7 ஆம் இடம் வகிக்கும் இந்தியா மூடிய விரைவில் 5 ஆம் இடத்துக்கு வர பெரிதும் வாய்ப்புள்ளதாக லண்டனைச் சேர்ந்த அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டக்ளஸ் மெக்வில்லியம் தெரிவித்துள்ளார். மேலும் மலிவான எரிசக்தி மற்றும் டிஜிட்டல் புரட்சி இரண்டும் தான் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை எட்ட உதவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

]]>
India to become fifth largest economy in the world, 2018, இந்தியா உலகின் 5 வது பெரிய பொருளாதார மையம், http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/27/w600X390/india_5th_at_2018.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/dec/27/india-to-become-fifth-largest-economy-in-2018-2833935.html
2822731 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் ஆபத்தில் இருக்கும் பெண்களைக் காக்க 1000 கிமீ க்கு மேல் சைக்கிளில் சுற்றி வந்த ஆந்திர பெண் போலீஸ் கான்ஸ்டபிள்கள்! RKV DIN Friday, December 8, 2017 04:22 PM +0530  


நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வெகு அதிக அளவில் பெருகி வருகின்றன. ஊடகங்களில் பதிவு செய்யப்படுவது வெகு குறைவானவையே, அதையே நாம் அதிகம் என நினைத்துக் கொள்கிறோம். ஆனால், நிஜத்தில் பெண்கள் இன்னும் அதிக துயரத்தில் இருக்கிறார்கள். நாட்டின் பல இடங்களில் பெண்களுக்கு எதிரான அநீதிகளைத் தட்டிக் கேட்கும் முனைப்பு கூட இல்லாமலிருக்கிறது. பெண்கள் பழைய காலங்களைப் போல தங்களுக்கு நேரும் குற்றங்களை வெளியில் சொல்லத் தயங்கவேண்டியது இல்லை. பெண்கள் தங்களது துன்பங்களை வெளிப்படையாக முன்வந்து தெரிவித்தால் தான் எங்களைப் போன்ற போலீஸ்காரர்களால் அவர்களுக்கு தகுந்த நியாயத்தைப் பெற்றுத் தர முடியும். மாறாக, தாங்கள் அனுபவிக்கும் கொடுமைகளை பெண்கள் வெளியில் சொல்லத் தயங்கினால் குற்றவாளிகள் தப்பிக்கும் நியாயமற்ற நிலை தான் நீடிக்கும். பெண்கள் ஆண் போலீஸ்காரர்களிடம் சில விஷயங்களைச் சொல்லத் தயங்கலாம் என்பதால் பெண் போலீஸ்காரர்களான நிர்மலா, திருமலா, நாகரத்னா, பார்கவி என நாங்கள் நால்வரும் கிட்டத்தட்ட 1,250 கிமீ தூரத்தை சைக்கிள் மூலமாகச் சுற்று வந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகளை புகாராகப் பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினோம். 45 நாட்களானது எங்கள் பயணம் முடிவதற்கு. எங்கள் பயணத்திற்கிடையில் சுமார் 100 இடங்களிலாவது பயணத்தை நிறுத்தி அங்கிருந்த பாதிக்கப்பட்ட பெண்களை அணுகிப் பேசி இருப்போம் என்றனர்.

ஆந்திர மகளிர் போலீஸின் இந்தப் பிரிவுக்கு ஷி போலீஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் நாள் தங்களது பயணத்தைத் துவக்கிய இவர்கள் சித்தூர் மாவட்டத்தின் 57 தாலுகாக்களை கவர் செய்து கடந்த புதனன்று பயணத்தை முடித்துள்ளார்கள். பயணத்தின் போது காடுகள், மலைகள், வறண்ட தரிசு நிலங்கள் என எல்லாவற்றையுமே தைரியமாக எதிர்கொள்ளும் மனநிலையுடனே இவர்கள் பயணித்திருக்கிறார்கள்.

ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவுவதில் ஆண், பெண் வேறுபாடு அவசியமில்லை என்றாலும், பெண்கள் தங்களது பிரச்னைகளைப் பற்றி மனம் திறக்க ஆண் போலீஸ்காரர்களைக் காட்டிலும் பெண் போலீஸ்காரர்களே பொருத்தமானவர்கள் என்று கருதியது பாராட்டத்தக்கது!

]]>
she police, distressed women, andhra magila police, ஷி போலீஸ், ஆபத்தில் இருக்கும் பெண்கள், அந்திர பெண் போலீஸ் கான்ஸ்டபிள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/8/w600X390/00000_ap_police.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/dec/08/she-police-2822731.html
2822687 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் தாயை வணங்க மாட்டீர்கள் எனில் வேறு யாரை வணங்கப் போகிறீர்கள்? அப்ஸல் குருவையா? வெங்கய்ய நாயுடு கேள்வி! RKV DIN Friday, December 8, 2017 12:23 PM +0530  

வந்தே மாதரம் என்றால் ‘தாய் மண்ணே வணக்கம்’ என்று பொருள். தேசியம் என்றால் என்னவென்று கேட்டவர்களுக்கு வெங்கய்ய நாயுடு பதிலடி.

விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவரான அசோக் சிங்காலின் புத்தக வெளியீட்டு விழா நிகழ்வொன்றில் பேசிய போது மேற்கண்ட விளக்கத்தைக் கூறினார் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு.

வெங்கய்ய நாயுடுவின் உரையைக் காண...

 

இந்தியாவில் பலருக்கும் வந்தேமாதரம் என்று சொல்வதில் என்ன சிக்கலோ தெரியவில்லை. கேட்டால் தேசியம் என்ற பெயரில் இந்துத்வாவைத் திணிப்பதாகக் குற்றம் சுமத்துகிறார்கள்.

உண்மையில் வந்தே மாதரம் என்பதில் இந்துத்வாத்தனம் எங்கிருக்கிறது. வந்தே மாதரம் என்றால் தாய் மண்ணை வணங்குகிறோம் என்று தான் பொருள்./ இந்தியாவில் பிறந்து விட்டு தாய் மண்ணை வணங்குவது தானே தேசபக்தியாக இருக்க முடியும். இங்கே இந்துத்வா எங்கிருந்து வந்தது? நீங்கள் உங்கள் தாயை வணங்க மாட்டீர்கள் என்றால், வேறு யாரை வணங்கப் போகிறீர்கள்? அப்ஸல் குருவையா?

யாராவது பாரத் மாதாகி ஜே என்று சொன்னால், அவர்கள் பாரதமாதா என்ற தேவதையை வணங்குவதாக மட்டுமே அர்த்தமில்லை. பாரதமாத என்பவர் யார்? அந்த உருவில் இருப்பது  இந்தியாவின் 125 கோடி மக்கள் அல்லவா? பாரத் மாதகி ஜே என்றால், ஜாதி, மத, இன வேறுபாடு அற்ற ஒட்டுமொத்த இந்தியர்களையும் அந்தப் பெயரால் வணங்குகிறோம் என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டும். நாம் அனைவரும் இந்தியர்கள்!

1995 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி இந்துத்வா என்றால் அது மதத்தைக் குறிக்கவில்லை. அது ஒரு வாழ்க்கை முறை. அதை மதத்தின் பெயரால் குறுக்க வேண்டியதில்லை. இந்துயிஸம் என்பது குறுகிய கருத்து அல்ல, அது இந்தியாவின் பரந்த கலாச்சாரக் கருத்தாக்கம்.

இந்துயிஸம் இந்தியாவின் பரந்து பட்ட கலாச்சாரம் மற்றும் மரபு சார்ந்த வாழ்க்கைமுறையாகப் பல்லாயிரக்கணக்கான தலைமுறையைச் சேர்ந்தவர்களால் பின்பற்றப்பட்டு வரப்பட்ட அற்புதமான விஷயம். இங்கே வழிபாட்டு முறைகள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கை முறை அனைவருக்கும் ஒன்றே!

மேலும் அவர் இந்துயிஸம் பற்றி விளக்கம் அளிக்கையில், இந்தியாவின் மீதும், இந்துக்களின் மீதும் ஒவ்வொருமுறையும் டாம், டிக், மற்றும் ஹாரி என அந்நியர்கள் படையெடுத்து வந்திருக்கலாம், நம்மை ஆட்சி செய்திருக்கலாம், இந்தியாவைக் கொள்ளையடித்திருக்கலாம். ஆனால், இந்தியர்கள் எந்த நாட்டின் மீதும் படை கொண்டு சென்று தாக்குதல் நிகழ்த்தியதில்லை. ஏனெனில் இந்திய கலாச்சாரம் அப்படிப்பட்டது. என்றார் வெங்கய்யா.

நமது கலாச்சாரம் நமக்கு வசுதேவ குடும்பம் எனும் கொள்கையின் படி உலகையே ஒரு குடும்பமாகக் கருதும் சிறந்த வாழ்க்கை முறையைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அசோக் சிங்கால் பற்றிச் சொல்ல வேண்டுமெனில், அவர் ஒரு சிறந்த இந்துத்வா தலைவர்களில் ஒருவர். தனது வாழ்வின் கடந்த 75 வருடங்களை இளம் தலைமுறையின் எதிர்கால நலன்களுக்காக அர்ப்பணித்தவர்களில் மிக முக்கியமானவர் அவர்.

அடிப்படையில் பொறியியல் மற்றும் விஞ்ஞான மாணவராக இருந்த போதிலும் தனது வாழ்வை கங்கைக் கரைகளில் செலவளித்து மதம், சமுதாயம் மற்றும் கலாச்சாரப் பிரதிநிதியாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் அவர்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது இஸ்லாமியர்கள் அதிகப்படியாக ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்க வேண்டும் என்று விரும்பியவர்களில் ஒருவர் அசோக் சிங்கால். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனி ஒரு மனிதராக தன்னை இந்துத்வாவுக்காக அர்பணித்துக் கொண்டு தீவிரப் பிரச்சாரகராக செயலாற்றி வருகிறார். என்றும் குறிப்பிட்டார்.

]]>
வெங்கய்ய நாயுடு , vande mataram, venkaiah naidu question, nationalism, தேசியம், வந்தே மாதரம், இந்துத்வா, hinduthva http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/8/w600X390/00000_venkaiya.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/dec/08/தாயை-வணங்க-மாட்டீர்கள்-எனில்-வேறு-யாரை-வணங்கப்-போகிறீர்கள்-அப்ஸல்-குருவையா-வெங்கய்ய-நாயுடு-கேள்வி-2822687.html
2822007 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் டிசம்பர் 7 கொடி நாள்... தெரியும்; நமது இந்திய தேசியக் கொடி உருவான சுவாரஸ்யமான வரலாறு தெரியுமா? கார்த்திகா வாசுதேவன் DIN Thursday, December 7, 2017 01:09 PM +0530  

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7 ஆம் தேதியை இந்தியக் கொடிநாளாக அனுசரித்து நம் நாட்டின் முப்படைகளிலும் பங்கேற்று சிறப்பாகப் பணியாற்றும் ராணுவ வீரர்களைக் கெளரவித்து வருகிறது இந்திய அரசு. கொடிநாள் கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கமே அன்றைய தினம், இந்திய தேசியக் கொடிகளை நாடு முழுவதும், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஆசிரியப்பெருமக்கள், இளைஞர்கள், என அனைவர் மூலமாகவும் நாடு முழுதும் விற்பனை செய்து அதில் கிடைக்கும் தொகையை இந்திய ராணுவ வீரர்களின் நலனுக்காக பயன்படுத்துகிறது நமது அரசு. பாகிஸ்தான், சீனா, பங்களா தேஷ், உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான எல்லைப்பிரச்னைகளின் போது மூண்ட போர்களில் தமது இன்னுயிர் நீத்த பல்லாயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு உதவும் பொருட்டும், போரில் உடலுறுப்புகளை இழந்து மாற்றுத்திறனாளிகளாகி விட்ட முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினரின் பொருளாதாரத் தேவைகளில் உதவும் பொருட்டும், இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கொடிநாள் அன்று நன்கொடை திரட்டி ராணுவ வீரர்களுக்கு அளித்து நாட்டின் பாதுகாப்பில் அவர்களது பங்களிப்பைக் கெளரவிக்கிறது.

இந்திய எல்லைப்புறங்களில் பாலைவனங்களிலும், பனி பெய்யும் இமயத்திலும், கடல்புறத்திலுமாக இரவு பகல் பாராது அயராது உழைத்து நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் இந்தச் சிறு மரியாதை நலிவடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துப் பொருளாதாரத் தேவைகளை தீர்க்கச் செய்யும் பேருதவியாகக் கருதப்படுகிறது.

ஆகவே இன்று பொதுமக்கள் ஏதேனும் ஒருவகையில் கொடிநாள் நிதி செலுத்தி ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்ய மறவாதீர்!

எல்லையில் அவர்கள் உறங்காமல் கண்ணும் கருத்துமாக விழித்திருந்து அயராது உழைப்பதால் மட்டுமே இங்கே இந்தியாவுக்கு உள்ளே நம்மால் நிம்மதியான வாழ்வை வாழ முடிகிறது. அண்டை நாடுகளைப் பாருங்கள். இலங்கையிலும், சிரியாவிலும், இஸ்ரேலிலும், ஈரான், ஈராக்கிலும் போர் நடந்ததால் அகதிகளாக்கப்பட்ட லட்சோபலட்சம் மக்களைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம் நாம்? போர் என்பது ஒரு நாட்டைப் பாதுகாப்பதற்கான முயற்சியாக இருக்க வேண்டுமே தவிர, தன் நாட்டு மக்களை அகதிகளாக்கும் முயற்சியாக என்றுமே இருக்கக் கூடாது. அந்த வகையில் முப்படைகளிலும் அங்கம் வகிக்கும் நமது இந்திய ஜவான்களே ஒட்டுமொத்த இந்தியர்களின் பாதுகாப்புக்கு முழு உத்தரவாதம். எனவே அவர்களைக் கொண்டாடக் கிடைத்த இத்தகைய வாய்ப்புகளை நாம் தவற விட்டு விட வேண்டாம்!

அதோடு கொடிநாளான இன்று, இந்திய தேசியக்கொடியைப் பற்றியும் சில சுவாரஸ்யமான விஷயங்களைத் தெரிந்து கொள்வோம்.

இந்திய தேசியக் கொடியின் வரலாறு...

இன்று நாம் அரச விழாக்கள் தவறாது கொடி வணக்கம் செய்கிறோமே அசோகச் சக்கரத்துடன் கூடிய இந்திய மூவர்ணக் கொடி அதை வடிவமைத்தவர் பிங்கலி வெங்கையா.

இந்தியா வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த போது இந்துஸ்தானத்தை 56 தேச ராஜாக்கள் ஆண்டு கொண்டிருந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தனிச்சிறப்புடன் பிரத்யேகக் கொடிகள் இருந்தன. அந்தக் கொடிகள் அனைத்தும் அவரவர் விருப்பங்களுக்கு ஏற்ப ஏதோ ஒரு அடையாளத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டவையாக இருந்தன. ஆனால், கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கும் மேலாக நம்மை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலக் கிழக்கிந்திய ஆதிக்கத்தை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட வேண்டுமானால், இந்தியர்களான நாம் இப்படி ஆளுக்கு ஒரு படை, பரிவாரத்துடன் தனிக்கொடி வைத்துக் கொண்டு சிதறுண்டு கிடந்தால் கதைக்கு ஆகாது என்று கருதிய நமது சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் கலந்தாலோசித்து சுதேசக் கொடி ஒன்றை உருவாக்கத் தலைப்பட்டனர். அதில் மட்டும் உடனே ஒன்று பட்டு விடக்கூடியவர்களா நாம்?! அப்போதும் கூட;

விவேகானந்தரின் சிஷ்யையான சகோதரி நிவேதிதா இந்தியாவுக்கென ஒரு கொடியை வடிவமைத்தார். அதற்கு ‘நிவேதிதா கொடி’ என்று பெயர்;

1904ஆம் ஆண்டு, நிவேதிதா அவர்கள் முதன்முதலாக, ஒரு கொடியை உருவாக்கினார். சிவப்பு வண்ணத்தில, சதுர வடிவில், மஞ்சள் நிற உள்வடிவத்தை கொண்டு, பேரிடியை உணர்த்துமாறு, ஒரு 'வஜ்ர' வடிவத்தையும், வெள்ளை தாமரையையும் நடுவில் கொண்டது. அதில் வங்காள மொழியில், ‘வந்தே மாதரம்’ என்ற வார்த்தைகளும் இடம்பெற்றிருக்கும். அந்தக் கொடியில் சிவப்பு நிறம் சுதந்திரப் போராட்டத்தை குறிக்கும் வகையிலும், மஞ்சள் நிறம் வெற்றியை குறிக்கும் வகையிலும், வெள்ளை நிறம் தூய்மையை குறிக்கும் வகையிலும் அமைந்திருந்தன.

முதல் இந்திய மூவர்ணக் கொடிக்கு கல்கத்தா கொடி என்று பெயர்...

முதல் மூவர்ணக் கொடி, 1906 ஆம் ஆண்டு ஆகஸ்டு 7 ஆம் நாளில், கல்கத்தாவின் பார்ஸி பகன் சதுக்கத்தில், வங்காளப் பிரிவினை எதிர்ப்பு போராட்டத்தின் போது, சிந்திர பிரசாத் போஸ் என்பவரால் கொடியேற்றப்பட்டது. அக்கொடி பிற்காலத்தில், ‘கல்கத்தாக் கொடி’ என வழங்கப் பட்டது. கொடியில், நீள் வடிவில், ஆரஞ்சு, மஞ்சள், பச்சை என மூன்று பாகங்கள் இருந்தன. முதல் பாகத்தில், எட்டு, பாதி விரிந்த தாமரை பூக்களும், அடி பாகத்தில், சூரிய வடிவமும், சந்திர வடிவமும் அமைந்தன. நடுவில், தேவநாகிரி எழுத்துருவில், ‘வந்தே மாதரம்’ என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

பிக்காஜி காமா அம்மையார் வடிவமைத்த இந்தியக் கொடி...

பின்னர், 22 ஆகஸ்ட் 1907ஆம் நாளில், பைக்கஜி காமா அம்மையார், ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் என்ற நகரில், மற்றுமொரு மூவர்ணக் கொடியை ஏற்றினார். அந்த கொடி, பச்சை நிறம் மேற்பகுதியிலும், இளஞ்சிவப்பு நடுவிலும், சிவப்பு நிறம் அடிப்பகுதியிலுமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. கொடியின் பச்சை நிறம் இஸ்லாமியத்தை குறிப்பதாகவும், இளஞ்சிவப்பு நிறம் இந்துத்துவத்தையும், பெளத்தத்தையும் குறிப்பதாக அமைந்திருந்தன. பச்சை நிறப்பாகத்தில், ஆங்கிலேயரின் கீழ் இருந்த எட்டு மாகாணங்களை குறிக்கும் வகையில், வரிசையாக எட்டு தாமரைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. நடுபாகத்தில், தேவநாகிரி எழுத்துருவில், வந்தே மாதரம் என்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தது. அடிப்பாகத்தின் கொடிக் கம்பத்திற்கு அருகில் உள்ள மூலையில், ஒரு பிறைநிலாவையும், இன்னொரு மூலையில் சூரியனையும் கொண்டிருந்தது அம்மூவர்ணக் கொடி. இக்கொடியை, பிக்காஜி காமா அம்மையாருடன் சேர்ந்து, வீர் சாவர்கர், சியாம்ஜி கிருஷ்ண வர்மா ஆகியோர் வடிவமைத்தனர். முதலாம் உலகப் போர் தொடங்கிய பின்னர், அது போராட்ட கலகர்களின், பெர்லின் குழுமத்தைச் சார்ந்தவர்களுக்கான கொடி எனப் பொருள்படும்படி , பெர்லின் குழுமக் கொடி என்று குறிப்பிடப்பட்டது. முதல் உலகப் போரின் போது, இக்கொடி, இந்தியாவின் சின்னமாக, நிலை கொண்டது.

பால கங்காதர திலகர் மற்றும் அன்னி பெசண்ட் அம்மையார் வடிவமைத்த இந்திய தேசியக் கொடி...

பால கங்காதர திலகர் மற்றும் அன்னி பெசண்ட் அம்மையார் சேர்ந்து தொடங்கிய சுயாட்சிப் போராட்டத்தில் ஐந்து சிவப்பு நிற நீள்வடிவங்களும், நான்கு பச்சை நிற நேர் கோல் நீள்வடிவங்களும் கொண்ட மற்றுமொரு கொடி பயன்பாட்டுக்கு வந்தது. மேல் இடது மூலையில், ஆங்கிலேய பேரரசிடம் இருந்து சுயாட்சி பெறுவதை குறிக்கும் வகையில், யூனியன் ஜாக் வடிவம் அமைந்தது. வெள்ளை நிறத்தில் பிறைநிலா வடிவமும், நட்சத்திர வடிவமும், மேல் வலது பாகத்தில் அமைந்தன. மேலும் ஏழு வெள்ளை நட்சத்திரங்கள், இந்துக்கள் புனிதமாக கருதும் சப்தரிஷி நட்சத்திர குழு அமைப்பு வடிவில் உருவாக்கப்பட்டது. இக்கொடி, அநேகமாக யூனியன் ஜாக் சின்னத்தை கொண்ட காரணத்தினால் பெரும்பான்மை மக்களின் ஆதரவை இது பெறவில்லை.

பிங்கலி வெங்கையா வடிவமைத்த இந்திய தேசியக் கொடி...

1916 ஆம் ஆண்டில், அன்றைய ஒருங்கிணைந்த ஆந்திராவின் மசூலிப் பட்டிணத்தைச் சேர்ந்த பிங்கலி வெங்கய்யா என்பவர், இந்தியர்கள் எல்லோருக்கும் பொதுவானதொரு கொடியை வடிவமைக்க முயன்றார். அவரது தளராத முயற்சிகளை கண்ட உமர் சொபானியும் எஸ்.பி.பொம்மஜியும், இந்திய தேசியக் கொடி நெறி அமைப்பை தொடங்கினர். வெங்கய்யா, மகாத்மா காந்தியிடம் கொடிக்கான சம்மதத்தைக் கோரிய போது, மகாத்மா, இந்தியாவின் எழுச்சியையும் அடிமைத்தளையிலிருந்து கிடைக்கவிருக்கும் விடுதலையையும் குறிக்கும் வகையில் சக்கரத்தை சேர்க்குமாறு வலியுறுத்தினார். அதனை தொடர்ந்து, பிங்கலி வெங்கய்யா அவர்கள், சக்கரத்தை ஆதாரமாகக் கொண்டு சிவப்பு, பச்சை ஆகிய இரு வர்ணங்களை கொண்ட ஒரு கொடியை உருவாக்கினார்.

அக்கொடி, இந்திய மதங்கள் அனைத்தையும் நிலையுறுத்தவில்லை என மகாத்மா காந்தி கருதவே, புதிய கொடி ஒன்று வடிவமைக்கப் பட்டது. அக்கொடியில் வெள்ளை நிறம் மேலேயும், பச்சை நிறம் நடுவிலும், சிவப்பு நிறம் கீழேயும், வெவ்வேறு மதங்களைச் சமமாக குறிக்குமாறு அமைந்தன. அதில் சக்கரமோ எல்லா வர்ணங்களிலும் இடம் பெற்றன. இந்த கொடி, ஆங்கிலேயப் பேரரசிடம் இருந்து விடுதலைக்காக போராடிய அயர்லாந்தின் கொடிக்குச் சமமாக உள்நோக்கத்தை கொண்டவாறு அனுசரிக்கப்பட்டது. முதன்முதலாக அகமதாபாத்தில் நடந்த காங்கிரசு கட்சி கூட்டத்தில் ஏற்றப்பட்ட இக்கொடி, இந்திய சுதந்திர போராட்டத்தின் மையமாக பெரிதும் பயன்படுத்தப்பட்டது.

காங்கிரஸ் குழு வலியுறுத்திய காவிக்கொடி...

ஆனால் இந்தக் கொடியும் இறுதி வடிவமாக நிலைபெறவில்லை, ஏனெனில் இந்தியாவில் இருந்த ஒவ்வொரு மதத்தினரும் தத்தமது மத நம்பிக்கையைக் குறிக்கும் வகையில் அக்கோடியில் சில மாற்றங்களைச் செய்தாக வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதனால் சலித்துப் போன காங்கிரஸ் குழு 1932 ஆம் ஆண்டு மத அடையாளங்களைக் குறிக்கும் வகையில் வெவ்வேறு நிறங்கள் தேவையற்றவை என்று முடிவு செய்து ஒரே காவி நிறம் மட்டும் போதுமென முடிவு செய்து அக்காவி நிறத்தின் மையத்தில் கை ராட்டை இடம் பெறுமாறு ஒரு கொடியை வடிவமைக்கக் கோரியது. ஆனால் இந்திய தேசிய காங்கிரஸ் அதை ஏற்கவில்லை.

சுபாஸ் சந்திர போஸ் வடிவமைத்த இந்தியக் கொடி...

இரண்டாம் உலகப்போரின் போது இந்திய தேசியப் படையை வழி நடத்திய சுபாஷ் சந்திர போஸ் தமக்கென பிரத்யேகமாக புலி உருவமும் ‘ஆஸாத் ஹிந்த்’ என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டதுமான ஒரு கொடியைப் பயன்படுத்தி வந்தார்.

காங்கிரஸ் குழு அங்கீகரித்த இந்தியக் கொடி...

ஒருவழியாகப் பல்வேறு குழப்பங்கள் மற்றும் குளறுபடிகளின் பின் பிங்கலி வெங்கய்யா வடிவமைத்த சிவப்பு, பச்சை, வெள்ளை நிறமும் மத்தியில் அசோகச் சக்கரமும் கொண்ட மூவர்ணக் கொடியே இறுதியானது என காங்கிரஸ் குழு முடிவுக்கு வந்தது. இவற்றின் நிறங்களுக்கு மத அடையாளங்களுக்குப் பதிலாக குண நலன்கள் சிறப்பியல்புகளாக கற்பிதம் செய்யப்பட்டன. அதன்படி காவி நிறம் தியாகத்தையும், அறத்தையும், வெள்ளை நிறம் சமாதானத்தையும், பச்சை நிறம் வளமையையும் குறிப்பதாகவும் நடுவில் உள்ள அசோகச் சக்கரம் தர்மத்தை நிலைநிறுத்துவதாகவும் முடிவு செய்யப்பட்டது. இப்படி ஆரம்பத்தில் காங்கிரஸ் குழு ஒப்புக்கொண்ட கொடியே பின்னர் நாடு முழுமைக்குமான ஒரே கொடியாக இந்திய விடுதலையின் பின் சரோஜினி நாயுடு, அம்பேத்கர், ராஜாஜி, ராஜேந்திர பிரசாத், அபுல் கலாம் ஆஸாத், கே. எம் பனிக்கர், கே. எம். முன்ஷி ஆகியோர் அடங்கிய குழுவால் விவாதிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டது.

இன்றைய நமது மூவர்ணக் கொடி முதன்முறையாக 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் நாள் இந்தியா விடுதலை அடைந்தா நாளன்று ஏற்றப்பட்டு பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கியது.

இப்படிப் பல தடைகளைத் தாண்டி இறுதி வடிவம் பெற்ற தேசியக் கொடியை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் எவ்விதம் மதித்து நடக்க வேண்டியது மரபு எனப் பின்னாட்களில் அதற்கென பிரத்யேகமாக சில சட்டதிட்டங்களும் வரைவு செய்யப்பட்டன. அதை மீறுவது இந்தியாவில் தேசத்துரோகமாகக் கருதப்படுகிறது.

இந்திய தேசியக் கொடி நெய்வதற்கான மரபு...

இந்திய தேசியக் கொடியை எல்லாத்துணிகளிலும் நெய்து விட முடியாது. சுத்தமான நாட்டுப்பருத்தி இழையில் மட்டுமே தேசியக் கொடி நெய்யப்பட வேண்டும் என்பது மரபு. இந்தியாவில் மூன்று இழைகளில் நெசவு செய்யப்படவேண்டிய தேசியக் கொடிகளை நெய்ய தற்போது வெறும் 13 நெசவாளர்களே உள்ளனராம். பிற சாதாரண நெசவுகள் அனைத்தும் இரண்டு இழைகளில் நெய்யப்படுகையில் தேசியக் கொடியை மட்டும் மூவிழைகளில் நெசவு செய்ய வேண்டும் என்பதே அதற்கான சிறப்பு!

இந்திய தேசியக்கொடி இறுதி வடிவத்தை அடைந்த பின்னர் கை ராட்டைச் சின்னம் அதில் இடம்பெறாமல் போனதற்காக காந்திஜி மிகுந்த மன வருத்தம் அடைந்தாராம். இது குறித்து அவர் தனது ‘ஹரிஜன பந்து’ இதழில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தேசியக் கொடியைப் பற்றி இத்தனை விவரங்களை அறிந்து கொண்டு கொடியேற்றுகையில் பாடும் பாடலை மறந்து விட்டால் எப்படி? இதோ மகா கவி பாரதியார் பாடிய கொடிப்பாடலுடன் கட்டுரையை முடித்துக் கொள்ளலாம்.

தாயின் மணிக்கொடி பாரீர்! கொடிப்பாடல்...

பல்லவி

தாயின் மணிக்கொடி பாரீர் -அதைத் 
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் 

1.ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன் 
உச்சியின் மேல் வந்தே மாதர மென்றே 
பாங்கி னேழுதித் திகழும் -செய்ய 
பட்டொளி வீசிப் பறந்தது பாரிர்!

2.பட்டுத் துகிலென லாமோ?-அதிற் 
பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று 
மட்டு மிகுந்தடித்தாலும் -அதை 
மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம்(தாயின்)

3.இந்திரன் வச்சிர மோர்பால்-அதில் 
எங்கள் துருக்க ரிளம்பிறை யோர்பால் (தாயின்)
மந்திர நடுவுறத் தோன்றும் -அதன் 
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?(தாயின்)

4.கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர் -எங்கும் 
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம் 
நம்பற் குரியரவ் வீரர்-தங்கள் 
நால்லுயி ரீந்துங் கொடியினைக் காப்பார்.(தாயின்

5.அணியணி யாயவர் நிற்கும்-இந்த 
ஆரியக் காட்சியோ ரானந்த மன்றோ? 
பணிகள் பொருந்திய மார்பும் -வீறற் 
பைந்திரு வோங்கும் வடிவமுங் காணீர்!(தாயின்) 

6.செந்தழ்நாட்டுப் பொருநர் -கொடுந் 
தீக்கண் மறவர்கள் , சேரன்றன் வீரர் 
சிந்தை துணிந்த தெலுங்கர் -தாயின் 
சேவடிக் கேபணி செய்துடு துளுவர் .(தாயின்)

7.கன்னட ரொட்டியரோடு -போரிற் 
காலனு மஞ்சக் கலக்கு மராட்டர் 
பொன்னகர்த் தேவர்க் கொளப்ப- நிற்கும் 
பொற்புடை யாரிந்து ஸ்தானது மல்லர். (தாயின்)

8..பூதல முற்றிடும் வரையும் -அறப் 
போர்விறல் யாவும் மரப்புறும் வரையும் 
மாதர்கள் கற்புள்ள வரையும் -பாரில் 
மறைவரும் கீர்த்திகொள் ராஜபுத்ர வீரர் (தாயின்)

9.பஞ்ச நததுப் பிறந்தோர் -முன்னைப் 
பார்த்தன் முதற்பலர் வாழ்ந்த நன் னாட்டார் 
துஞ்சும்பொழுதினுந் தாயின் -பதத் 
தொண்டு நினைத்திடும் வங்கத்தி னோரும் (தாயின்)

10.சேர்ந்ததைக் காப்பது காணீர் - அவர் 
சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
தேர்ந்தவர் போற்றும் பரத -நிலத் 
தேவி துவஜம் சிறப்புற வாழ்க (தாயின்)
 

]]>
december 7 indian flag day , கொடிநாள், தேசியக் கொடி வரலாறு, history of indian national flag, interesting facts about indian national flag http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/7/w600X390/home_page_flag.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/dec/07/the-interesting-facts-about-the-history-of-indian-flag-day-2822007.html
2821402 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் ஜெயலலிதா நினைவுநாளில் சசிகலா என்ன செய்து கொண்டிருந்தார்? DIN DIN Wednesday, December 6, 2017 04:49 PM +0530  

ஜெயலலிதா நினைவுநாளான நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் தலைமையில் அனைத்து அமைச்சர்களும் கருப்புச் சட்டை அணிந்து மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு பேரணி சென்றனர். அங்கே அவர்களது ‘அம்மா’ விற்கு அஞ்சலி செலுத்தியபின் அம்மா வழியில், புரட்சித் தலைவர் எம்ஜிஆரை முன்மாதிரியாகக் கொண்டு தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சியை நடத்திக் கொண்டு செல்வதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இவையெல்லாம் அனைத்து தமிழ் ஊடகங்களிலும் காணொலிக்காட்சிகளாக விவரிக்கப்பட்டு செய்தியாகின.

ஆனால், அதே நேரம் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக ஜெயலலிதாவுடனே இருந்து அவர் முதல்வராக இருந்த போதும் நிழல் ஆட்சி நடத்தியவராகக் கருதப்பட்ட சசிகலா என்ன செய்து கொண்டிருந்தார் என்பதையும் மக்கள் அறிந்து கொள்ளத்தானே வேண்டும். சசிகலா தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருப்பது அனைவரும் அறிந்ததே. கடந்த அக்டோபர் மாதம் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சென்னை குளோபல் மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறிய சமயம், கணவரை உடனிருந்து கவனித்துக் கொள்ள சசிகலாவுக்கு பரோல் வழங்கப்பட்டது. அதே போல, தற்போது ஜெயலலிதா நினைவுநாளன்றும் மெரினாவில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி துக்கம் அனுஷ்டிக்க தனக்கு பரோல் கிடைக்குமா என சசிகலா தனது வழக்கறிஞர் வட்டாரத்தில் விசாரித்ததாகவும். ரத்த சம்மந்தம் உடையவர்களுக்கு மட்டுமே அப்படி அனுமதி வழங்க சட்டத்தில் வாய்ப்பு இருப்பதால், இவரது பரோல் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறப்பட்டதால் அந்த முயற்சியைத் தவிர்த்து விட்டு, பெங்களூர் அதிமுக நிர்வாகியான புகழேந்தி மூலமாக ஜெயலலிதாவின் புகைப்படம் ஒன்று நேற்று சசிகலா இருக்கும் சிறை வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா புகைப்படத்தில் கண்ணாடி இருக்கக் கூடாது என்ற உத்தரவின்படி லேமினேட் செய்யப்பட்ட புகைப்படம் சிறைக்குள் சசிகலா இரங்கல் தெரிவிக்க வேண்டி அனுமதிக்கப்பட்டது. ஜெயலலிதா நினைவுநாளான நேற்றைய தினம் அதிகாலையில் விழித்தெழுந்த சசிகலா, உடனே தயாராகி ஜெயலலிதா புகைப்படத்துக்கு மாலை சூட்டி அஞ்சலி செலுத்தி விட்டு, புகைப்படத்தின் முன்பாகவே அமர்ந்து சுமார் 1 மணி நேரம் தியானத்தில் ஆழ்ந்து விட்டாராம். தியானம் முடிந்ததும் ஜெயலலிதா படத்தைப் பார்த்து கதறி அழுத சசிகலா, ‘அக்கா இறந்து ஒரு வருடம் முடிந்து விட்டதா? என்னால் நம்பவே முடியவில்லை, அவர் இப்போதும் என்னுடனேயே இருப்பது போலத்தான் உணர்கிறேன்’ என்றாராம்.

அதுமட்டுமல்ல, இளவரசி மகன் விவேக்கை அழைத்து, சென்னையில் ஏதாவது ஒரு ஆதரவற்றோர் இல்லத்துக்குச் சென்று அவர்களது அன்றைய சாப்பாட்டுச் செலவை ஏற்றுக் கொண்டு உணவிடச் சொல்லி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி விவேக்கும், அவர் மனைவி கீர்த்தனாவும் நேற்று சென்னை தாம்பரம் அருகே உள்ள ஆதரவற்றோர் இல்லம் ஒன்றுக்குச் சென்று மதியம் மற்றும் இரவு உணவுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அங்கே ஜெயலலிதா நினைவாக உணவிட்டுத் திரும்பினர்.

]]>
jayalalitha, சசிகலா , sasikala, parapana agrahara, பரப்பன அக்ரஹாரா, ஜெயலலிதா நினைவுநாள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/6/w600X390/0000sasi_pays_homage_to_j.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/dec/06/what-sasikala-was-doing-on-jayalalithaa-death-anniversary-day-2821402.html
2808449 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஹர்திக் படேல்! இம்முறை ஹோட்டல் அறையில் தாகசாந்தி செய்யும் வீடியோ வெளியீடு! RKV DIN Wednesday, November 15, 2017 04:27 PM +0530  

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நீடித்துக் கொண்டிருக்கையில் அரசியல் தலைவர்களிடையே சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. இட ஒதுக்கீட்டுப் பிரச்னையை மையமாக வைத்து குஜராத் அரசியலில் முக்கியத்துவம் பெற்ற தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் ஹர்திக் படேலைப் பற்றிய சர்ச்சையான வீடியோக்கள் தொடர்ந்து எதிர்கட்சிகளால் வெளியிடப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் ஹர்திக் படேல் ஹோட்டல் அறையொன்றில் ஒரு பெண்ணுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் முறைகேடாக நடந்து கொள்ளும் வகையிலான பாலியல் வீடியோ ஒன்று எதிர்கட்சியினரால் வெளியிடப்பட்டது. அந்த வீடியோவுக்கான எதிர்வினையாக ‘ தேர்தலில் தோல்வி கண்டு விடுவோமோ என்ற பயத்தில் பாஜக ஆபாசமான, கீழ்த்தரமான பிரச்சாரத்தில் இறங்கி விட்டது. இது பாஜகவுக்குப் புதிதில்லை. பாஜக தலைவர்கள் தாங்கள் வெறுக்கும் மாற்றுக் கட்சித் தலைவர்களை இப்படித்தான் கேவலப்படுத்துவார்கள் என்று ஹர்திக் படேல் தனது பிரச்சாரக் கூட்டங்களில் காட்டமாகப் பேசியிருந்தார்.

பாலியல் வீடியோ தொடர்பான சர்ச்சைகள் ஓய்வதற்குள் இன்று ஹர்திக் படேல் ஹோட்டல் அறையொன்றில் தன் நண்பர்களுடன் மது அருந்தும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அப்போது அவர்களுடன் பெண் ஒருவரும் அமர்ந்து கொண்டு அவர்களுடன் இணைந்து மது அருந்திக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. தலைவர்கள் தாக சாந்தி செய்வது புதிதில்லை... ஆனால் புரட்சித் தலைவர்கள் செய்தால் அது அதிசயம் தான்!

வீடியோ...

 

மக்களிடையே தங்களது புரட்சிகரமான போராட்டக் கொள்கைகள் வாயிலாக செல்வாக்கைப் பெற்றவர்கள் தனிப்பட்ட முறையில் இவ்விதம் சராசரி நபர்களைப் போல நடந்து கொள்ளும் முறை கண்டனத்துக்குரியது என எதிர்கட்சிகள் இந்த வீடியோவையும் வெளியிட்டு தேர்தல் களத்தில் அனலைக் கிளப்பி வருகின்றன.
 

]]>
BJP, பாஜக , harthik patel, drinking video, ஹர்திக் படேல், மது அருந்தும் வீடியோ, குஜராத் தேர்தல் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/15/w600X390/hardik_patel.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/nov/15/harthik-patel-drinking-with-friends-video-leaked-2808449.html
2807758 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் தொட்டுப் பேசுதல் தமிழர் நாகரீகமல்ல! உஷார்... அறியாக் குழந்தைகளை பலாத்காரத்துக்கு உட்படுத்துவோர் 50/100 பேர் நெருங்கிய உறவினர்களே! கார்த்திகா வாசுதேவன் DIN Tuesday, November 14, 2017 02:38 PM +0530  

அறியாக்குழந்தைகளை அம்மாவாக்கும் அசிங்கமான ஜென்மங்களை எல்லாம் துள்ளத் துடிக்க கழுவேற்றினால் ஒழிய சிறார் வன்முறை ஒழியாது! 

- என்றெல்லாம் நாம் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றவாளிகளைக் கடுமையாக நிந்திக்கலாம்.  அவர்களை நிந்திப்பதில் தவறே இல்லை, ஆனால் அதற்கெல்லாம் முன்பு நாம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்றுண்டு; நம் வீட்டுக் குழந்தைகளின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை நாம் முழுமையாகச் செய்திருக்கிறோமோ? என்பது தான் அது! ஒவ்வொரு பெற்றோரும் இந்தக் கேள்வியை தங்களுக்குள் பலமுறை கேட்டுப்பாருங்கள். கிடைக்கும் விடை உங்களுக்கே திருப்தியாக இருந்தால் சரி. இல்லையேல், இந்த விஷயத்தில் நீங்கள் கண்டிப்பாகக் கவனம் செலுத்தியே ஆக வேண்டியவர்களாவீர்கள்.

எக்காரணத்தை முன்னிட்டும் குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் மட்டும் ‘கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம்’ என்பதாக ஆகி விடக்கூடாது.

தொட்டுப் பேசுதல் என்பது தமிழர் நாகரீகம் அல்ல!

 • அதனால், குழந்தைகளுக்கான முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ‘குட் டச், பேட் டச்’ குறித்து அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். எது நல்ல தொடுகை?, எது கெட்ட தொடுகை? என்பதை குழந்தைகள் உணர்ந்து கொண்டால் அவர்களால் தங்களை முறைகேடாக அணுகும் கருப்பு ஆடுகளை எளிதில் அடையாளம் காண முடியும்.
 • பெற்றோர் இல்லாது தனித்திருக்க வேண்டிய சூழல் நேர்ந்தால் அத்தகைய சூழலில் உறவினரே ஆயினும் தவறான நோக்கத்துடன் தன்னை எவரேனும் அணுகினால் அதை உணர்ந்து கொண்டு எதிர்த்துக் குரலெழுப்பி தன்னை தற்காத்துக் கொள்ளும் பக்குவம் குழந்தைகளுக்கு வர வேண்டும். அதற்கான பயிற்சிகளைச் சிறுகச் சிறுக குழந்தைகள் உள்ளத்தில் புகுத்த வேண்டியது பெற்றோரின் சாமர்த்தியத்தைப் பொறுத்தது.
 • சில சம்பவங்களில், பாலியல் வல்லுறவுக்கு உட்படும் குழந்தைகள் சிலருக்கு, தங்களுக்கு நேர்ந்த அவலங்களே புரிவதில்லை. அத்தகைய சூழலில் தான் பாலியல் கல்வியின் அவசியத்தைப் பற்றி நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். இன்றும் கூட குழந்தை எப்படிப் பிறக்கிறது? என்பதை அறிவியல்பூர்வமாக விளக்குவதில் கூட நமக்கு எண்ணற்ற தர்ம சங்கடங்கள் உள்ளன. இன்றும் கூட ‘அம்மா வயிற்றில் பாப்பாவை வைப்பது கடவுள் தான்’ என்று நம்பும் ஆரம்பப் பள்ளி சிறுவர், சிறுமியர் இருக்கிறார்கள். எனவே பாலியல் கல்வி எத்தனை அவசியம் என்பதை மறுபரிசீலனை செய்தாக வேண்டிய சூழலில் இருக்கிறோம் நாம்.
 • பாலியல் வன்முறை என்றால் என்ன? என்பதைப் பற்றி குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது சற்றுச் சிரமமான காரியமே, ஆனால், அப்படியென்றால் என்னவென்றே தெரியாமல் நம் குழந்தைகள் ஆபத்தில் சிக்கிக் கொண்டு அதை நாம் தாமதமாக அறிந்து கொள்ள நேர்ந்தால் அதனால் ஏற்படும் மோசமான விளைவுகளைப் பற்றி நினைக்கையில் முன்னது சுலபமானது. பெண் குழந்தைகள் மட்டுமல்ல, ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் வன்முறை என்றால் என்ன? அதன் மோசமான விளைவுகள் என்ன? என்பதைப் பற்றி மேலோட்டமாகவேனும் அறிவுறுத்த வேண்டிய கடமை பெற்றோர்களுக்கு உண்டு.
 • பாலியல் உறவு தொடர்பாக டீன் ஏஜ் குழந்தைகளுக்கு பள்ளியில் பிற சிறுமிகளோ அல்லது உயர் வகுப்புச் சிறுமிகளின் மூலமாக பேச்சுவாக்கில் ஏதேனும் சிற்சில விஷயங்கள் தெரிய வந்து அதைக் குறித்த சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள குழந்தை பெற்றோரை நாடினால் அது நிச்சயம் ஆரோக்யமான விஷயம் என்று நம்புங்கள். ஆண் குழந்தைகள் எனில் தந்தையும், பெண் குழந்தைகள் எனில் தாயும் தம் குழந்தைகளின் சந்தேகங்களை அவர்களுக்குப் புரியும் விதத்தில் நாசூக்காகவும், தெளிவாகவும் எடுத்துக் கூறி விளங்க வைப்பதே சிறந்தது.பாதுகாப்பானது. பெற்றோருக்கு அவ்விஷ்யங்களைக் குழந்தைகளுடன் விவாதிப்பதில் அசூயை இருப்பின் குழந்தைகள், தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளப் பிறரை நாடி அது பிற்பாடு தேவையற்றை விபரீதங்களில் முடியலாம். இது நிச்சயம் குழந்தைகளின் பாதுகாப்புக்கு உகந்தது அல்ல!
 •  
 • ஒரு வேளை திருவிழா கூட்டங்களிலோ, அல்லது மக்கள் நெருக்கம் மிகுந்த சுற்றுலாத்தலங்கள் ஏதோவொன்றிலோ குழந்தைகள் பெற்றோரை விட்டுத் தனியாகக் காணாமல் போக நேரிடும் பட்சத்தில், அப்போது குழந்தை பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி விளையாட்டுப் போல அறிமுகம் செய்து வையுங்கள், இந்தக் காலத்தில் நல்லவர்கள், கெட்டவர்கள் என எவரையும் அறுதியிட்டு முத்திரை குத்த முடியாது. சூழலும் தவறுகள் நடக்க முக்கியமான வாய்ப்பாக அமைந்து விடுகின்றன. இம்மாதிரியான சமயங்களில் குழந்தைகள் தங்களை எப்படித் தற்காத்துக் கொள்வது என்பதைப் பற்றி கூட்டாகப் பல குழந்தைகளை அழைத்து உட்கார வைத்து இதையும் விளையாட்டுப் போலக் கற்றுத்தர முயலலாம்.
 • குழந்தைகள் எளியவர்கள், உடல் வலிமையில் பெரியவர்களைக் அவர்களுக்கு வலு குறைவு, எனவே அடக்குமுறையைப் பிரயோகித்தால் பெரும்பாலான குழந்தைகள் பயந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையை பாலியல் குற்றவாளிகளுக்கு நாம் தந்து விடக்கூடாது. பயந்த குழந்தைகளே அதிகமும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகின்றன என்பது பல்வேறு ஆய்வுக் கட்டுரை முடிவுகளின் பின் அனைவருக்கும் தெரிய வந்த உண்மை. எனவே எக்காரணம் கொண்டும் இக்காலக் குழந்தைகளை பயந்தவர்களாக வளர்த்து விடாதீர்கள். பயமும், பணிவும் அவசியமற்றவை. அறிவும், தெளிவும், துணிவுமே முக்கியமான வலு! பயத்தைக் காட்டிலும் பகுத்தறிவை ஊட்டி வளர்க்கலாம் குழந்தைகளை. பகுத்தறியத் தெரிந்த குழந்தைக்கு வளரும் போக்கில் எவ்விடத்தில், எவ்விதமாக நடந்து கொள்ள வேண்டும்?, யாரிடம், எப்படிப் பழக வேண்டும்? என்ற ஞானமும் தானே தெரிய வரும்.
 • எத்தனை நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் சரி, குழந்தையிடத்தில் அனாவசியமாக உரிமை எடுத்துக் கொண்டு அடிக்கடி தொட்டுப் பேசுதல், கன்னத்தைக் கிள்ளுதல், தொடையில் கிள்ளுதல், பிருஷ்டத்தில் அடித்தல், குழந்தையிடம் தன் நெருக்கத்தைக் காட்டும் வண்ணம் தோளில் கை போட்டு கை வளையத்துக்குள் வைத்துக் கொண்டு பேசுதல் போன்ற அநாகரீகமான செயல்பாடுகளை அரங்கேற்றுகிறார்கள் எனில் உறவினர்கள் தானே... அதிலும் வயதானவர்கள் என அதைக் கண்டும் காணாமலும் சென்று பெற்றோர் அவர்களின் செயலை ஊக்குவிப்பது போல நடந்து கொள்ளத் தேவை இல்லை. குழந்தைகள் பெற்றோர்களிடம் கூடப் பகிரத் தயங்கி அசெளகரியமாக உணரக்கூடிய இம்மாதிரியான செயல்களை எப்போதும் அனுமதிக்காதீர்கள். 
 • மேலே சொன்னதைப் போலவே, உறவினர்களுக்குள் சின்னஞ்சிறுமிகளையும், சிறுவர்களையும் கைக்காட்டி ‘இவள் தான் என் பெண்டாட்டி, இவன் தான் உன் புருஷன்’ என்பது மாதிரியான வேடிக்கைப் பேச்சுகளையும் கூடத்தவிர்த்து விடுவது நல்லது. 
 • அன்பு, பாசம், பரிவு என்பது வேறு! பிறத்தியார் கண்களை உறுத்தும் வண்ணம் உறவினர்களே ஆனாலும் மேலே விழுந்து பழகுவது என்பது வேறு. ஒருவரிடத்தில் இருக்கும் அபிமானத்தையும், அன்பையும் இப்படித்தான் மேற்கத்திய ஸ்டைலில் காட்டியாக வேண்டும் என்பதில்லை. தந்தையானாலும், சகோதரனே ஆனாலும் மேலே விழுந்து புரண்டு பாசத்தைக் காட்ட வேண்டும் என்பது தமிழர் கலாச்சாரமில்லை. எனவே சொந்த தந்தையானாலும், சகோதர, சகோதரர்கள் ஆனாலும் ஒரு எல்லைக்குள் நின்று அன்பைப் பரிமாறிக் கொள்ளும் வித்தையை, நாகரீகத்தையும் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டியது பெற்றோரது கடமையே!

இறுதியாக ஒரு விஷயம்...

குழந்தைகள் சொந்த உறவினர்களால் தவறாக நடத்தப்படுகிறார்கள், முறைகேடான உறவுகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் எனில்; அத்தகைய குழந்தைகளுக்கு குடும்பத்தில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்று தான் அர்த்தம்.

குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதைக் காட்டிலும் மிக முக்கியமானது அவர்களை எந்த விதமான ஆபத்துகளும் அண்டாமல் பாதுகாப்பது.

அந்தக் கடமை யாருடையது? பெற்றோர்களுடையது தானே! பெற்றோர் இல்லாத பட்சத்தில் அந்தக் கடமை நெருங்கிய உறவினர்களுடையதாகிறது. நெருங்கிய உறவினர்களே கயவர்களாயிருக்கும் பட்சத்தில் அத்தைகைய குழந்தைகளின் நிலை என்ன? உபாயம் சொல்கிறோம் என சிலர் அரசுக்காப்பகங்களில் சேர்க்கச் சொல்லலாம். அங்கேயும் முறைகேடுகள், பாலியல் வன்முறைகள் நடக்காமலா இருக்கின்றன. மொத்தத்தில் இந்த உலகில் பெற்றோரின் அரவணைப்பு இல்லாத குழந்தைகளுக்கு முற்றிலுமாகப் பாதுகாப்பே இல்லை என்பது தான் உண்மை. சட்டங்கள் மனிதனைத் திருத்தவல்லவை அல்ல.

தனிமனித ஒழுக்கமே மனிதனை நல்வழிப்படுத்தக்கூடும்.

]]>
பெற்றோர், குழந்தைகள், சிறார் வன்முறைக்கெதிரான பாதுகாப்பு டிப்ஸ்கள், பாலியல் துஷ்பிரயோகம், குழந்தைகள் பாதுகாப்பு வழிமுறைகள், child abuse preventive methods, children those who are abused by close relatives http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/14/w600X390/child_safety.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/nov/14/its-for-children-those-who-were-abused--by-their-close-relatives-preventive-methods-2807758.html
2807748 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் தினமணி ‘குரூப் ஃபோட்டோ’ போட்டி - வாசகர்களுக்கான சிறு அறிவிப்பு & மீள் நினைவுறுத்தல்! கார்த்திகா வாசுதேவன் DIN Tuesday, November 14, 2017 12:19 PM +0530  

தினமணி ‘குரூப் ஃபோட்டோ’ போட்டிக்காக வாசகர்களிடமிருந்து வந்து குவியும் ஃபோட்டோக்களைக் காணும் போது சந்தோசமாக இருக்கிறது. இறுதித் தேதியாக 20.11.17 ஆம் நாளை அறிவித்திருந்தோம். அதற்குள் இன்னும் அதிக அளவில் குரூப் ஃபோட்டோக்கள் வரலாம். இருப்பினும் சில ஃபோட்டோக்களில் தகவல்கள் எதையும் குறிப்பிடாமல் வெறுமே ஃபோட்டோக்களை மட்டும் சில வாசகர்கள் அனுப்பி இருக்கிறீர்கள். குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட இந்தப் போட்டியின் முகாந்திரமே, பழைய நட்புகளை பள்ளியில் எடுக்கப்பட்ட குரூப் ஃபோட்டோக்கள் வாயிலாக நினைவூட்டுவது மட்டுமல்ல, அப்போது நடந்த மறக்க முடியாத அழகான சம்பவங்களை மீட்டெடுக்கும் முயற்சியாகவும் இந்தப் போட்டி அமையட்டும் என்பதாகத் தான். 

வாழ்க்கை ஒரே வாழ்க்கை!

அதில் குழந்தைப் பருவமும் ஒரே ஒரு முறை தான் வரும்!

அத்தகைய குழந்தைப் பருவத்தைக் கடந்து வந்தவர்களுக்கு வாழ்வில் என்றென்றைக்குமாய் நீங்கா நினைவுகளுடன் குதூகலமாய் நினைத்துப் பார்த்து ஏங்கத்தக்க ஏராளமான தருணங்கள் இருந்திருக்கலாம். அவற்றை அப்போது பகிர்ந்து கொள்ள வாய்ப்பில்லாதாவர்கள் இப்போதேனும் தினமணி ‘குரூப் ஃபோட்டோ போட்டி’ வாயிலாகத் தங்களது ஆதங்கத்தைத் தீர்த்துக் கொள்ளலாம் என்பதே இந்தப் போட்டியின் நோக்கம். ஃபோட்டோ அனுப்பும் வாசகர்கள் எவராயினும், வெறுமே ஃபோட்டோ மட்டுமே அனுப்பாமல் ஃபோட்டோவில் இருப்பவர்களைப் பற்றிய சிறு அறிமுகம், மற்றும் அந்த ஃபோட்டோ எடுத்துக் கொண்ட தருணத்தில் தங்களுக்குள் உணர்ந்த சுவாரஸ்யங்கள் இரண்டையுமே குறிப்பிட மறக்கக் கூடாது. 

குரூப் ஃபோட்டோ குறித்த அழகான அறிமுகம், அழகுத் தமிழில் ஃபோட்டோ குறித்த சுவாரஸ்யமான ஞாபகப் பகிர்வு இரண்டும் அமைந்த ஃபோட்டோக்களுக்கே வெற்றி வாய்ப்பு!

அதனால் ஃபோட்டோக்கள் அனுப்பும் வாசகர்கள் அதை கவனத்தில் கொண்டு ஃபோட்டோக்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அது மட்டுமல்ல, தினமணி போட்டி என்பதால் முடிந்தவரை தமிழில் எழுதுங்கள். ஆங்கிலக் குறிப்புகளோ, கடிதங்களோ வேண்டாம்.

இதுவரை வந்த குரூப் ஃபோட்டோக்களில் 45 வருடங்களுக்குப் பிறகு தனது பால்ய பள்ளி நண்பரைச் சந்தித்து பள்ளி குரூப் ஃபோட்டோவைப் பெற்று அதை எங்களுக்கு அனுப்பியிருந்தார் ஒரு வாசகர்; சில வாசகர்கள் இதற்காக பல நாட்கள் பேச்சுத் தொடர்பே இன்றி விடுபட்டிருந்த பல நண்பர்களைத் தேடி அடையாளம் கண்டு ஃபோட்டோக்கள் குறித்து சுவையான தகவல்களைப் பேசிச் சிலாகித்ததாக எழுதியிருந்தார்கள். அனைவருக்கும் தினமணியின் மனமார்ந்த நன்றிகள்! போட்டிக்கான நாள் நெருங்குகிறது. மேற்கொண்டு குரூப் ஃபோட்டோ போட்டியில் பங்குபெறும் வாசகர்கள் மேற்கண்ட அறிவுறுத்தலை நினைவில் கொண்டு மறவாமல் உங்களது ‘குரூப் ஃபோட்டோ’க்களை முழுமையான தகவல்கள் மற்றும் சுவராஸ்யமான சம்பவங்களைத் தமிழில் எழுதி அனுப்புங்கள்.

தினமணி குரூப் ஃபோட்டோ போட்டி- 2017
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: dinamani.readers@gmail.com
வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 20.11.2017

நன்றி!  smiley 

Image courtesy: MOHAMED YAKOOB, APPAR HIGH SCHOOL, KARUPPAAYURANI, MADURAI

]]>
Dinamani 'Group photo' competition reminder!, தினமணி குரூப் ஃபோட்டோ போட்டி, அறிவிப்பு, நினைவூட்டல் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/14/w600X390/group_photo_compo.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/nov/14/dinamani-group-photo-competition-reminder-2807748.html
2807746 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் பாலியல் சிடி வெளியிட்டு கேவலமான அரசியலில் இறங்கியுள்ளது பாஜக: ஹர்திக் பட்டேல் காட்டம்! RKV DIN Tuesday, November 14, 2017 11:30 AM +0530 எவரையேனும் ஒழித்துக் கட்ட நினைத்தால் பாலியல் அவதூறுக் குற்றச்சாட்டு எழுப்புவது பாஜக தலைவர்களுக்குப் புதிதில்லை: ஹர்திக் பட்டேல்!

குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் அனல் கிளப்பி வரும் நிலையில் பட்டேல் இனத்தலைவர் ஹர்திக் பட்டேலின் மீது பாலியல் அவதூறு குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பி அவருக்கெதிராகப் செக்ஸ் சிடி ஒன்றை வெளியிட்டுள்ளது பாஜக தரப்பு. இந்த சிடி நேற்று தொலைக்காட்சிகளிலும் கூட வெளியானது. அதில், ஹர்திக், ஹோட்டல் அறை ஒன்றில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பேசிக் கொண்டிருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் ஹர்திக், தேர்தல் களத்தில் தோல்வி பயம் கண்டுவிட்ட பாஜக, தனது பயத்தைக் குறைக்க இப்படியெல்லாம் கீழ்த்தரமான தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. இதற்கு மாஸ்டர் மைண்ட் பாஜக தேசியத் தலைவரான அமித்ஷா தான். குஜராத்தில் பாஜகவின் அசிங்கமான தோல்வியைத் தவிர்க்க அவர் இப்படியெல்லாம் கீழ்த்தரமான அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

பட்டேல் சமூக நலனுக்காக துவங்கப்பட்ட அரசியல் கட்சியான PAAS ( Patidar Anamat Andolan Samiti ) தலைவர்களில் ஒருவரான அஸ்வின் பட்டேல் இது குறித்துக் கருத்து தெரிவிக்கையில், 2015 ஆம் ஆண்டு, ஹர்திக், தனது பெண் தோழி ஒருவருடன் முஸோரிக்குச் சென்று தங்கியிருந்தமைக்குத் தன்னிடம் ஆடியோ பதிவுகள் மற்றும் டெலிஃபோன் அழைப்புப் பதிவுகள் அடங்கிய ஆதாரம் உண்டு எனவும், ஹர்திக்குக்கு 4 நாட்கள் அவகாசம் அளிக்கிறோம், அதற்குள் அவர், தன் மீதான குற்றச்சாட்டை இல்லையென நிரூபிக்காவிட்டால், தன்னிடமுள்ள ஆதாரங்களை தான் ஊடகத்தின் முன் வைக்க வேண்டியதாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளார். அது மட்டுமல்ல, பட்டேல் இனத்தலைவர்கள், தங்களது அதிகாரத்தை இப்படி முறைகேடாகப் பயன்படுத்துவது தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.

Image courtesy: spokesman.com

]]>
sex cd / Hardik patel/ BJP, பாலியல் சிடி, ஹர்திக் படேல், பாஜக http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/14/w600X390/harthik.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/nov/14/sex-cd--hardik-patel-bjp-2807746.html
2805976 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் வேலை நேரம் முடிந்து விட்டதால் பயணிகளைப் பாதியில் இறக்கி விட்டு கம்பி நீட்டிய விமானி! RKV DIN Saturday, November 11, 2017 12:55 PM +0530  

கடந்த புதன் அன்று, லக்னெளவிலிருந்து புறப்பட்டு டெல்லியில் தரையிறங்க வேண்டிய அல்லயன்ஸ் ஏர் ஃப்ளைட் விமானம் (ஏர் இந்தியாவுக்குச் சொந்தமானது)... பாதி வழியில் ராஜஸ்தானை நெருங்கியதும் அங்கிருந்த சங்கனேர் விமான நிலையத்தில் தரையிறங்கியது., அத்தோடு தனது வேலை நேரம் முடிந்து விட்டதால்.. இனி தன்னால் தொடர்ந்து விமானத்தை இயக்க முடியாது, ‘பொது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்தின்’ ஆணையின் படி, ஒரு விமானி தனது வேலை நேரத்தையும் தாண்டி அதிகப்படியாக விமானத்தை இயக்க வேண்டியது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது விமானிகளுக்கான பொது விதி. அதன்படி தான் இனி இந்த விமானத்தை இயக்க முடியாது. என்று கூறி விமானி, விமானத்தையும், அதனுள் டெல்லியில் தரையிறங்கக் காத்திருந்த பயணிகளையும் அம்போவென பாதியில் விட்டு விட்டு இறங்கிச் சென்றுள்ளார். புதனன்று ராஜஸ்தானில் தரையிறக்கப்பட்ட விமானம், வியாழன் வரையிலும் அங்கு தான் இருந்திருக்கிறது.

பைலட்டின் செயலால் நொந்து போன பயணிகள் சங்கனேர் விமான நிலைய இயக்குனர் ஜே.எஸ் பல்ஹாராவிடம் முறையிட்டதில், ‘வேலை நேரம் முடிந்து விட்டதால், விமானியால் மீண்டும் விமானத்தை இயக்க முடியாது, எனவே அவர் இறங்கிச் சென்று விட்டார்’ என்று அவர் தெரிவித்ததாக பிடிஐக்கு அளித்த செய்திக் குறிப்புகள் கூறுகின்றன.

விமானியால் ராஜஸ்தானில் தரையிறக்கப்பட்ட பயணிகளில் சிலர் அன்றைய தினமே சாலை வழியாகப் பயணித்து டெல்லி சென்றைடைந்தனர், எஞ்சியோருக்கு ஜெய்ப்பூரில் தங்கும் வசதி செய்து தரப்பட்டு மறுநாள் வேறொரு விமானம் வழியாக அவர்கள் டெல்லியை சென்றடைந்தனர்.

வேலை நேரம் முடிந்த பின் தன்னால் விமானத்தை இயக்க முடியாது, என்று உறுதியைக் கடைபிடித்து பாதிப் பயணத்தில் பயணிகளை இறக்கி விட்டுச் சென்று விட்ட அந்த விமானியின் செயலுக்கு தற்போது பொதுமக்களிடையே பாராட்டுதலும், கண்டனங்களும் குவிந்து வருகின்றன.
 

]]>
விமானி, ஏர் இந்தியா விமானம், பாதியில் தரையிறங்கிய விமானம், pilot leaves in middle of the journy, air india flight, jaipur airport http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/11/w600X390/air_india_flight.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/nov/11/pilot-leaves-flight-in-jaipur-after-exceeding-duty-hours-2805976.html
2799765 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! RKV DIN Wednesday, November 1, 2017 11:34 AM +0530  

தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் பல இடங்களில் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. சென்னையில் பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட 5 மாவட்டப் பள்ளிகளுக்கு மழையை ஒட்டி இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி தஞ்சமடைந்துள்ளனர். புறநகர்ப் பகுதி மக்களும் மழையினால் பெருத்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் வசிக்கும் பகுதிகளை நகரத்தின் முக்கியப் பகுதிகளுடன் இணைக்கும் இணைப்புச் சாலைகளும், பாலங்களும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதிப்படுகின்றனர்.

சென்னையில் நேற்றிரவு பெய்த கனமழையில் பள்ளிக்கரணையில் உள்ள நாராயணபுரம் ஏரி உடைந்து , சுமார் 500 வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மழைநீர் வடியத் தாமதமானதால் நேற்று முன் தினம் பெய்த கனமழையின் போதே தாம்பரம் முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அங்கு வசிக்கும் மக்கள் 2015 ஆண்டின் கனமழை நேரத்தைய அவஸ்தைகளை கடந்த இரண்டு நாள் மழையிலேயே அனுபவிக்கும் சூழல் நிலவியது. 

துவக்க கட்ட மழைப்பொழிவுக்கே மழையை எதிர்கொள்ள முடியாமல் சென்னைவாசிகள் தவித்துக் கொண்டிருக்கும் சூழலில் மேலும் 5 நாட்களுக்கு தமிழகத்தில் தொடர்மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மன்னார் வளைகுடா அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தெற்கு கடலோர ஆந்திரா, தமிழகம், புதுவை, கேரளா மற்றும் ராயலசீமா பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்  எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Image courtesy: google

]]>
tamilnadu rain, தமிழகத்தில் மழை, rain, மழை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/1/w600X390/00000chennai_rains.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/nov/01/தமிழகத்தில்-மேலும்-5-நாட்களுக்கு-இடியுடன்-கூடிய-கனமழை-நீடிக்கும்-இந்திய-வானிலை-ஆய்வு-மையம்-எச்சரிக்-2799765.html
2799136 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் பிடிக்காத கணவருக்கு மட்டுமல்ல அவரது மொத்தக் குடும்பத்துக்கும் சேர்த்து விஷம் வைத்துக் கொன்ற விபரீதப் பெண்! RKV DIN Tuesday, October 31, 2017 12:39 PM +0530  

எல்லாம் நம் தமிழ் சினிமாக்களிலும், தொலைக்காட்சி மெகா சீரியல்களிலும் முன்னரே பல முறை நாம் கண்ட காட்சி தான் இன்று பாகிஸ்தானில் நிஜமாகி இருக்கிறது.

இந்தியாவிலிருக்கும் பஞ்சாம் மாநிலத்தைப் போலவே பாகிஸ்தானிலும் ஒரு பஞ்சாப் மாகாணம் உண்டு. அங்கு முசாஃபர்கர் நகரில் வசிப்பவர் அம்ஜத், இவரது மனைவி ஆசியா பேகம். ஆசியா பேகத்துக்கு அம்ஜத்தை திருமணம் செய்து கொள்ள இஷ்டமில்லாமல் இருந்து வந்த நிலையில் வீட்டினர் வற்புறுத்தி ஆசியாவை அம்ஜத்துக்கு நிக்ஹா செய்து வைத்திருந்தனர். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி முட்டலும், மோதலுமாகவே இருந்திருக்கிறது.

இந்நிலையில் நிக்ஹா முடிந்து சில தினங்களே ஆன நிலையில் சமீபத்தில் கணவரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குத் திரும்பிய ஆசியா பேகத்தை அவரது தாய்வீட்டினர் சமாதானப்படுத்த முயற்சித்து முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில் வற்புறுத்தி கட்டாயப்படுத்தி மீண்டும் அம்ஜத் வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தனர். இதனால் தனது உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் மீண்டும், மீண்டும் கணவன் வீட்டில் தன்னைத் தள்ளி விடப் பார்க்கும் தன் பிறந்த வீட்டார் மீதும் ஆசியா பேகத்துக்கு மனம் நிறைந்த வருத்தங்கள் இருந்து வந்தன. அதோடு புகுந்த வீட்டிலும் கணவரால் ஏற்பட்ட தொல்லைகள் அதிகரிக்கவே ஆசியா பேகம் தன் கணவர் அம்ஜத் அருந்தும் பாலில் விஷம் கலந்து கொடுத்திருக்கிறார்.

என்ன காரணத்தாலோ ஆசியா அளித்த பாலை அம்ஜத் அருந்தாமல் தவிர்த்து விட பாலை வீணாக்க மனமில்லாமல் அதை வைத்து லஸ்ஸி செய்து வீட்டிலிருந்த அத்தனை பேரும் அருந்தியிருக்கிறார்கள். முன்னரே ஆசியா பேகம் அந்தப் பாலில் விஷம் கலந்திருந்த காரணத்தால் லஸ்ஸி அருந்திய அத்தனை பேரும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி 13 பேர் விஷத்தால் மரணமடைந்தனர் மீதமுள்ள 28 பேரும் கூட விஷத்தால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்கிறது அந்நாட்டு ஊடகச் செய்திகள்.

விருப்பத்துக்கு மாறாக வற்புறுத்தி செய்து வைக்கப்பட்ட நிக்ஹாவின் பலன்  மணவாழ்க்கையை ஆனந்தமாக அனுபவிக்க வேண்டிய நேரத்தில் ஆசியா பேகம் தனது தவறான முடிவுகளால் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த கூட்டுக் கொலையில் ஆசியாவுக்கு எவரேனும் உதவியிருக்கக் கூடுமா? அவர் ஆணாக இருந்தால் அவர் தான் இந்தக் கொலைகளின் மாஸ்டர் பிரெய்னாக இருக்கக் கூடுமா? என்ற ரீதியில் இந்த வழக்கின் விசாரணை சென்று கொண்டிருக்கிறது.

]]>
கணவர் வீட்டாரை விஷம் வைத்துக் கொன்ற மருமகள், பாகிஸ்தான் பரிதாபம், புது மணப்பெண் கைது, new bride kills 13 in laws, pakisthan tragedy, http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/31/w600X390/00000_poisonous_milk.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/oct/31/new-bride-accidentally-kills-13-in-laws-while-trying-to-poison-husband-2799136.html
2796924 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் செல்லாது... செல்லாது இந்தக் ஆய்வுக்கட்டுரையில் சொல்லப்பட்ட விஷயம் தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது! RKV DIN Friday, October 27, 2017 04:18 PM +0530  

நம்மூரில் அரசுப் பேருந்துகள், மின்சார ரயில்களில் பயணிக்கும் போது நமக்கு உட்கார இருக்கை கிடைத்தாலும் வயதான தாத்தா, பாட்டிகள் வந்தால் அவர்களை நமது இருக்கையில் உட்கார வைத்து விட்டு நாம் நின்று கொண்டு வருவோம். சில நல்ல மனிதர்களின் பழக்கம் இது. இதை பெரியவர்களுக்குச் செய்யும் உபகாரமாக நினைத்து நாம் செய்வதுண்டு. இது நமக்கு மட்டுமே சொந்தமான பண்பாட்டுப் பிரதிபலிப்பு இல்லை. உலகிலுள்ள எல்லா நாடுகளிலுமே பயணத்தின் போது பெரியவர்கள் நின்று கொண்டு வந்தால் சிறியவர்கள் எழுந்து கொண்டு அவர்களை உட்கார வைப்பது ஒரு மரபு. ஆனால் இந்த மரபைத் தான் தவறு! என்று இப்போது சில விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். பெரியவர்கள் வந்தால் உட்கார இடம் தரத் தேவையில்லை... அது அவர்களுக்குச் செய்யும் உபகாரம் ஆகாது. பெரியவர்கள் நின்று கொண்டே பயணிப்பது தான் அவர்களுக்கு மிகச் சிறந்த உடற்பயிற்சி என்று சர் மியூர் கிரே எனும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானி ஒருவர் கண்டறிந்து ஆய்வுக் கட்டுரை ஒன்றை சமீபத்தில் சமர்பித்திருக்கிறார். இதற்காக அவர் தொடர் ஆய்வில் ஈடுபட்டு பல முதியவர்களிடம் சோதனை நடத்திய பின்பே இப்படி ஒரு முடிவை அறிவித்திருக்கிறார். அவரது ஆய்வில் முன்வைக்கப்பட்டுள்ள மேலும் சில தகவல்கள், 

முதியவர்கள் பொது இடங்களில் எலிவேட்டர், எஸ்கலேட்டர் போன்றவற்றைக் கூடப் பயன்படுத்தத் தேவையில்லை எனவும் அவர்கள் மாடிப்படிகளில் ஏறி, இறங்குவது, நடப்பது, நிற்பது மாதிரியான 10 நிமிட உடற்பயிற்சிகளையாவது செய்தால் தான் அவர்களால் சோர்வின்றி இயங்க முடியும் எனவும் அந்த ஆய்வுக்கட்டுரை கூறுகின்றது.

அது மட்டுமல்ல, முதியவர்களின் கால்கள் நாளொன்றுக்கு குறைந்தபட்சமாவது இயங்கிக் கொண்டிருந்தால் மட்டுமே அவர்களால் அந்த நாளை எந்த வித சுமைகளும் இன்றி எளிதாகக் கடக்க முடியும் என்றும்; ஒரே இடத்தில் அமர்ந்து ஓய்விலேயே இருப்பதென்றால் கால்கள் மரத்துப் போய் பிறகு தானாக இயங்குவது கூட அவர்களுக்கு கடினமானதாகி விடும் என்றும் அக்கட்டுரை கூறுகிறது.

ஆக, முதியவர்கள் ஆரோக்யமாக இருப்பார்களெனில் அவர்கள் தொடர்ந்து தங்களது வேலைகளைத் தாங்களே செய்து கொள்ளும் அளவுக்கு சுறுசுறுப்பானவர்களாக இருக்க வேண்டும் என்கிறது இந்த ஆய்வுக்கட்டுரை.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்? 80 வயதிலும் சுறுசுறுப்பாக வீட்டில் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய முயற்சிக்கும் பாட்டிகளையும், தாத்தாக்களையும் எங்கே கீழே விழுந்து வைத்து நம்மை மருத்துவமனைக்கு இழுத்தடிப்பார்களோ என்ற பயத்தில் உங்களால் முடியாது, வயதான காலத்தில் கையைக், காலை வைத்துக் கொண்டு சும்மா இருந்தால் என்ன? என்று கூறிக் கூறியே எந்த வேலைகளையும் செய்ய விடாமல் மூலையில் உட்கார வைத்து விடுகிறோம். அதைத்தான் தவறு என்கிறது இந்த ஆய்வுக்கட்டுரை. அந்த வகையில் தான் இந்தக் கட்டுரை முடிவை இந்தியர்களான நாம் அணுக வேண்டியதாக இருக்கிறது. 

ஏனெனில் இந்தக் கட்டுரை முடிவைப் படித்து விட்டு சென்னை அம்பத்தூரில் இருந்து பாரிஸ் கார்னர் வரை செல்ல அரசுப் பேருந்தில் ஏறும் ஒரு பாட்டியோ அல்லது தாத்தாவோ உட்கார இடமின்றி பிதுங்கும் கூட்டத்தில் சிக்கிச் சின்னாபின்னமாகி மூச்சுத் திணறிக் கொண்டு பயணிக்கையில் அவர்கள் அப்படியே நின்று கொண்டு வரட்டும். அது தான் அவர்களுக்கு மிகச்சிறந்த உடற்பயிற்சி என்று எண்ணி விட்டு விட முடியாது இல்லையா? அப்படியே  விட்டாலும் கூட பிறகு நம்மை முட்டாள்களென்றும், மனிதாபிமானமற்றவர்கள் என்றும் இந்த உலகம் கரித்துக் கொட்டி விடாதோ என்ன?!

வாழ்வியல் தர்க்கங்கள் கண்டத்த்துக்கு கண்டம், நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், ஏன் சொல்லப்போனால் ஊருக்கு ஊர், வீட்டுக்கு வீடு கூட மாறித்தானே இருக்கின்றன!  

]]>
முதியவர்கள், இருக்கையை விட்டுக் கொடுத்தல், சிறியவர்கள், ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வுக்கட்டுரை, elders, youngers, courtesy seating, Sir Muir Gray, a professor at Oxford University, http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/27/w600X390/0000_seating.png http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/oct/27/தமிழ்நாட்டில்-இது-செல்லுபடியாகாது-2796924.html
2796904 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் எலியைக் கட்டி வைத்து குரூரமாகப் பலி வாங்கிய மனிதன்! விலங்கிட வருமா விலங்குகள் நல வாரியம்?! RKV DIN Friday, October 27, 2017 12:56 PM +0530  

மளிகைக் கடைகளில் எலிகள் நடமாடுவது சகஜமான விஷயம். பழைய நாட்களில், சில புத்திசாலி மளிகைக் கடைக்காரர்கள் கடைகளில் முன்னெச்சரிக்கையாக பூனையையும் சேர்த்து வளர்த்து வருவதைப் பலருக்கும் பார்க்க வாய்த்திருக்கலாம். ஆனால் இன்றெல்லம், எந்த மளிகைக் கடைகளிலும் பூனைகளைக் காண முடியவில்லை. ஆனால் எலிகளாலான தொல்லைகளுக்கு மாத்திரம் எந்தக் காலத்திலும் எந்தக்குறையும் இருப்பதில்லை. சுண்டெலிகள் முதல் பெருச்சாளிகள் வரை போஷாக்குடன் வளர பெரும்பாலும் மளிகைக் கடைகள் நிறைந்த அங்காடித்தெருக்கள் தான் உதவுகின்றன. இதனால் எலிகளுக்கும் கடை உரிமையாளர்களுக்குமான பந்தம் எப்போதுமே ஜென்மப் பகையே!

பூனைகள் கூட சில நேரங்களில் எலிகளை மன்னித்து விடக்கூடும், ஆனால் இந்த மளிகைக்கடை எஜமானர்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு எலிகள் தான் ஜென்ம வைரிகள். கடைகளிலுள்ள எலிகளை ஒழிக்க எல்லோரும் என்ன செய்வார்கள்? எலிவலைகளை வாங்கி வைப்பார்கள், மருந்து உருண்டைகள் வாங்கி இரவுகளில் கடைகளுக்குள் போட்டு வைப்பார்கள். இவற்றில் அகப்படும் எலிகள் சாவது உறுதி. இவையெல்லாம் எலிகள் ஒழிப்பில் மக்கள் ஏற்றுக்கொள்ளும்படியான வழிமுறைகள்.

ஆனால், இதே எலித்தொல்லை விஷயத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மைசூரில் நடந்த ஒரு சம்பவம் பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

மைசூரில் மளிகைக்கடை வைத்திருக்கும் ராமண்ணாவுக்கு தன் கடையிலுள்ள பருப்பு வகைகள் மற்றும் மளிகைப் பொருட்களை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக துவம்ஸம் செய்துவரும் எலியார் மீது பல நாட்களாகவே  மகாக்கோபம் இருந்திருக்கிறது. ஆனால், எலியாருக்கு என்ன நல்ல நேரமோ,. பல நாட்களாக அவர் ராமண்ணாவின் கையில் அகப்படாமல் கடைக்குள் எவருக்கும் அடங்காத கோயில் எலியாகவோ, அல்லது ராஜா வீட்டு ராஜ எலியாகவோ சுற்றித் திரிந்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் தனது கடைப்பொருட்கள் எலியாரால் வீணாகிக் கொண்டிருப்பதைக் கண்டு மனம் பொருமிக் கொண்டிருந்த ராமண்ணாவுக்கு வகையாகக் கிடைத்தது ஒரு வாய்ப்பு. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற கணக்கில் எலியார், கடந்த வாரத்தில் ஒரு நாள் ராமண்ணாவிடம் சிக்கிக் கொண்டார். சிக்கிய எலியாரை ராமண்ணா, அப்படியே கொன்று யாருக்கும் தெரியாமல் தூக்கிப் போட்டிருந்தால் இன்றைக்கு இந்தியா முழுவதும் செய்திகளில் இடம்பிடித்திருக்க மாட்டார். எலியாரின் மேலிருந்த பகையில் ராமண்ணா செய்த விஷமத்தனமான தாக்குதல் தான் இப்போது அவர் மீதான கண்டனமாகக் குவிந்து கொண்டிருக்கிறது.

தன்னிடம் சிக்கிய எலியின் கால்களை ராமண்ணா ரப்பர் பேண்டால் கட்டி ஒரு ஜாருக்குள் சிறை வைத்து அவ்வப்போது குச்சியால் அடித்து, இனிமேல் என் கடைக்குள் வருவாயா? இனிமேல் என் கடையிலுள்ள கடலைப் பருப்பை தின்பாயா? கோதுமையைத் தின்பாயா? என்றெல்லாம் கேட்டு அடிப்பதை ஒரு ஹாபியாகச் செய்து வந்ததோடு, தன் செயலை வேடிக்கை பார்க்க நண்பர்களையும் அழைத்து வந்திருக்கிறார். அப்படி வந்த நண்பர்களில் ஒருவர் அந்தக் காட்சியை தனது அலைபேசியில் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட இன்று அந்த வீடியோ விலங்குகள் நல வாரிய உறுப்பினர் ஒருவரது கையில் சிக்கி இந்தியா முழுக்க டிரெண்ட் அடித்திருக்கிறது.

அந்த வீடியோவைப் பார்த்தவர்கள் அனைவரும் ராமண்ணாவை வசைபாடிக் கொண்டிருக்கின்றனர் ‘இப்படியா வாயில்லாத ஒரு அப்பாவி ஜீவனை வதைப்பது?! துளியும் மனிதாபிமானமற்ற செயல்.’ எலியைக் கட்டி வைத்து பலி வாங்குவதெல்லாம் முற்றிலும் மனிதத் தன்மையற்ற செயல், மனநோயாளிகள் தான் இப்படியெல்லா செய்வார்கள்!’ என்றெல்லாம்  கண்டனங்கள் வலுத்து வருகின்றன.’

32 வினாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோ காட்சியின் இறுதியில் அகஸ்மாத்தாக எலியைச் சிறை வைத்த ஜார் சரிந்ததில் உள்ளிருந்த எலி தப்பி விட்டது. ஆனால் காயங்களுடன் தப்பியுள்ள அந்த எலியின் தலையெழுத்தை எவர் அறிவர்?! அதற்கு இப்போது என்ன ஆகியிருக்கக் கூடுமென்று தெரியவில்லை. ஆனால் வீடியோவில் பின்னணியில் ஒலிக்கும் சிரிப்புக் குரல், அருமையான வீடியோ இதில் இசையையும் சேர்த்திருந்தால் இன்னும் அட்டகாசமாக இருக்கும் என்கிறது.

இந்த வீடியோவைப் பார்வையிடக் கூடிய விலங்குகள் நல வாரிய உறுப்பினர்களை விடுங்கள் சாதாரண பொதுஜனங்களாலும் கூடத்தான் இத்தகைய வன்மங்களைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நாட்டில் எத்தனையோ விதமான மனநோயாளிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எளிய உயிர்கள் என்றால் அத்தனை உதாசீனமாகி விடுகிறது. எலி என்றால் மளிகைப் பொருட்களை உண்பது தான் அதன் வாழ்வியல் நீதி. அது இயற்கை அதற்குப் பணித்த வேலையை சரியாகத் தான் செய்திருக்கிறது. ஆனால் இங்கே மனிதன் தான் தன் வேலையை சாத்தான் தனமாகக் வெளிக்காட்டியிருக்கிறான். இம்மாதிரியான மனிதர்கள் தான் இந்தியாவின் தலையெழுத்தை உலகின் பார்வையில் மாற்றிப் பதிவிட்டுதலைகுனிய வைத்து விடுகிறார்கள்.

]]>
humanity, மனிதன் VS விலங்குகள், எலியைப் பலி வாங்கிய மனிதன், மைசூர் அநாகரீகம், shop keeper tortued mouse, mysuru, human VS animals http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/27/w600X390/0000_mouse.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/oct/27/shopkeeper-tortured-mouse-for-stealing-food-from-his-store-2796904.html
2796292 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் நகைக்கடைகளின் தங்கநகை விற்பனை மோசடி பற்றிய எச்சரிக்கை! DIN DIN Thursday, October 26, 2017 05:05 PM +0530  

தங்க மோசடி!

உலகில் நடக்கும் வியாபாரங்களில் அதிக அளவிலான மோசடி நடக்கும் வியாபாரம் தங்க வியாபாரம் தானாம்! அதைப்பற்றி முகநூலில் ஒருவர் பகிர்ந்திருந்த வாட்ஸ் அப் தகவல் அடிப்படையிலான கட்டுரை தங்கம் வாங்குவோரை யோசிக்க வைக்கும் விதத்தில் இருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் இதுவரை எந்தப் பிரபல அல்லது பிரபலமில்லாத தங்க நகைக்கடை அதிபர்களாவது பதில் சொல்ல முயன்றிருக்கிறார்களா?

இந்தக் குற்றச்சாட்டுகளில் நிஜமிருக்கும் பட்சத்தில் மக்களுக்கு அது குறித்த கவலைகள் ஏதுமில்லையா? இப்போதும் நகைக்கடைகளில் தேன்கூட்டில் மொய்க்கும் தேனீக்களைப் போலத்தானே மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. 

முதல் மோசடி: 

 • கல்லுக்கும் தங்கத்தின் விலையை வாங்குகிறார்கள்
 • நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் அமெரிக்கன் டைமன் எனும் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும்?! நாற்பது கிராம் தங்கத்துக்கு தங்கத்தின் விலையையும் பத்து கிராம் அமெரிக்கன் டைமன் கல்லுக்குக் கல்லின் விலையையும் தான் நிர்ணயிக்க வேண்டும்.
 • ஆனால் ஐம்பது கிராம் தங்கத்துக்கான விலையை நம்மிடம் வாங்கி விடுகின்றனர். ‘தங்கத்தின் விலையும் கல்லின் விலையும்’ சமமானவை அல்ல. இரண்டுக்கும் இடையே ஏணி வைத்தாலும் எட்ட முடியாத வித்தியாசம் உள்ளது.
 • நாற்பது கிராம் தங்கத்துக்கு ஐம்பது கிராம் பணத்தை வாங்குவது மோசடியாகும். ஐம்பது கிராம் தங்கத்துக்குப் பணத்தை வாங்கிக் கொண்டு கல் முத்து பவளம் இலவசம் என்று கூறி மக்களை மேலும் மதிமயக்குகிறார்கள். சில பேர் நாற்பது கிராமுக்கு ஐம்பது கிராமுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு ‘கல்லுக்கு தனியாகவும்’ பணத்தை வாங்கி ‘இரட்டை மோசடி’ செய்கிறார்கள்.
 • அதே சமயம் நாம் பழைய நகையை விற்கச் சென்றால் ‘கல்லை அப்புறப்படுத்தி விட்டு’ தங்கத்தை மட்டும் எடை போட்டு பணம் தருகிறார்கள். இதற்கு நிகரான ஒரு மோசடி வேறு எந்த வியாபாரத்திலும் இருக்குமா? என்று தெரியவில்லை.

இரண்டாவது மோசடி:

 • சொக்கத் தங்கம் எனப்படும் தனித்தங்கத்தில் நகை செய்ய முடியாது. அதில் செம்பு கலந்தால் தான் நகை செய்ய முடியும். ஆயிரம் கிராம் நகை செய்ய 916 கிராம் தங்கமும் 84 கிராம் செம்பும் சேர்த்து செய்யப்படும் நகை 22 காரட் என்றும் 916 KDM என்றும் சொல்லப்படுகிறது.
 • 916 கிராம் தங்கத்துடன் 84 கிராம் செம்பு சேர்த்து விட்டு 1000 கிராமுக்கும் தங்கத்தின் விலை போடப்படுகிறது. செம்புக்கு தங்கத்தின் விலை போடுவது மற்றொரு மோசடியாக உள்ளது.

மூன்றாவது மோசடி:

 • தங்கத்துக்கு இன்றைய காலத்தில் ‘இரண்டு விலை’ உள்ளது.
 • ஒன்று மூலப் பொருளுக்கான விலை. மற்றொன்று நாம் விரும்பும் வகையில் 
 • தயார் செய்வதற்கான கூலியாகும்.
 • ஐந்து பவுன் தங்கத்தில் ஒரு நகை வாங்கினால், ஐந்து பவுன் தங்கத்திற்கான விலையையும் நாம் கொடுக்க வேண்டும். அதைக் குறிப்பிட்ட நகையாக செய்ததற்கான கூலியையும் கொடுத்தாக வேண்டும். இது மட்டும் இருந்தால் இதில் மோசடி ஏதும் இல்லை.
 • ஆனால் ஐந்து பவுன் தங்கத்துக்கும் நம்மிடம் பணம் வாங்கிக் கொண்டு அதற்கான கூலியையும் நம்மிடம் வாங்கிக் கொண்டு ‘சேதாரம்’ என்ற பெயரில் ஒரு தொகையையும் வாங்கிக் கொள்கின்றனர்.
 • அதாவது மேற்கண்ட நகையைச் செய்யும் போது பத்து சதவிகிதம் சேதாரம் ஆகி விட்டது எனக் கூறி அதற்கான பணத்தையும் நம்மிடம் வாங்கிக் கொள்கின்றனர்.
 • அதாவது ஐந்து பவுனுக்கு மட்டும் பணம் வாங்காமல் இன்னொரு அரை பவுனுக்கும் சேர்த்து நம்மிடம் பணம் கறந்து விடுகிறார்கள்.
 • நகை செய்யும் போது அரை பவுன் சேதரமாகி வீணாகி விட்டால் அதை நம்மிடம் இருந்து வாங்குவது முறையானது தான். ஆனால் தங்கத்தில் எதுவுமே சேதாரம் ஆவது கிடையாது.
 • நகை செய்யும் போதும் பட்டை தீட்டும் போதும் தூள்களாக கீழே சிந்துபவை சேதாரமாகி குப்பைக்குப் போகாது. துகள்களாக உள்ளதை மீண்டும் வேறு நகைக்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.
 • இதற்கெல்லாம் சேர்த்துத் தான் செய்கூலி வாங்கிக் கொள்கின்றனர். மக்களுக்குப் புரியாத டெக்னிகல் வார்த்தைகளைப் பயன்படுத்தி மோசடி செய்கின்றனர். இதைச் செய்யாத நகை வியாபாரிகளைக் காண முடியவில்லை.
 • அது போல் பழைய நகை வாங்கும் போது செய்கூலி சேதாரம் எல்லாம் தர மாட்டார்கள். அது நியாயமானது தான்.
 • ஆனால் நாம் கொடுக்கும் நகையில் கல்லையும் நீக்கி விட்டு எடை போட்டு அந்த எடைக்கு உள்ள பணத்தைத் தர வேண்டும். அவர்கள் விற்பனை செய்யும் விலையைத் தர வேண்டும் என்று நாம் கூறவில்லை. 
 • அவர்கள் வாங்கும் விலையைக் கொடுக்க வேண்டுமல்லவா?! அப்படி கொடுக்க மாட்டார்கள். மாறாக நாம் நாற்பது கிராம் நகையை விற்கச்சென்றால் அதில் கால் வாசிக்கு மேல் குறைத்துத் தான் தருவார்கள்.

‘கிட்டத்தட்ட பகல் கொள்ளையே தான்!’

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களில் நிஜமில்லை எனில் தங்க நகை விற்பனையாளர்கள் மேற்கண்ட குற்றச்சாட்டுகளை மறுத்து  மக்களுக்குப் புரியும் வகையில் எளிமையாக விளக்கம் தரலாம். விளக்கத்தையும் வெளியிடத் தயாராக உள்ளது தினமணி.காம்.

]]>
gold fraudulance, தங்க மோசடி, http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/26/w600X390/0000jewellery_shop.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/oct/26/நகைக்கடைகளின்-தங்கநகை-விற்பனை-மோசடி-பற்றிய-எச்சரிக்கை-2796292.html
2796278 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் புதைக்கப்பட்ட பெண்ணின் பிணத்தைத் தோண்டி எடுத்த திருடர்கள்: தங்கத்துக்காகவாம்! RKV DIN Thursday, October 26, 2017 02:18 PM +0530  

கர்நாடக மாநிலம், கல்புர்கி பகுதியின் கஜூரி கிராமத்தைச் சேர்ந்த பிரேமா பாய் தாகே சில தினங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவருக்கு குழந்தைகள் இல்லை. வாரிசுகள் எவரும் இல்லாத காரணத்தால் அவரது சடலம் சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிக்கப்பட்டு அவருக்குச் சொந்தமான 50 கிராம் தங்க நகைகளுடன் புதைக்கப்பட்டிருக்கிறது. இதை அறிந்த திருடர்கள், நேற்று முன் தினம் பிரேம் பாயின் சடலம் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி 6 அடி ஆழத்தில் இருந்த சடலத்தை கண்டடைந்து அதிலிருந்த 50 கிராம் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொள்ளையடித்தவர்கள் கொஞ்சமும் மனிதாபிமானமே அற்றுப் போய் நகையைத் திருடியதுமல்லாமல், திருடிய பின் பிணத்தை மீண்டும் குழியில் இட்டு புதைத்து விட்டுச் செல்லாமல் அப்படியே குழிக்கு வெளியே கிடத்தி விட்டுச் சென்றிருக்கிறார்கள். மறுநாள் காலையில் இந்த அவலகரமான திடுக்கிடும் காட்சியைக் காண நேர்ந்த மக்கள் திகிலில் உறைந்து காவல்துறைக்கு புகார் அளிக்கவே தற்போது இந்த திருட்டுச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பழங்கால ராஜாக்களை அவர்கள் இறந்த பின் அவர்களுக்குப் பிடித்தமான பொருட்கள் மற்றும் நகைகளுடன் புதைப்பார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். அதைப் போலத்தான் இருக்கிறது இந்த பிரேமா பாய் சம்பவம். பிரேமா பாயை தங்க நகைகளுடன் புதைத்தது தான் புதைத்தார்கள், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருக்க வேண்டாமோ?! நாடிருக்கும் நிலையில் திருடர்களுக்குப் பிணமென்று பரிதாபமோ, மனிதாபிமானமோ இருக்குமென்று எப்படி எதிர்பார்க்க முடியும்?! இறந்தவர்களைப் புதைக்கும் போது நகைகளுடன் புதைப்பதைக் காட்டிலும் அவர்கள் பெயரைச் சொல்லி ஏதாவது காப்பகங்களுக்கு அந்த நகைகளுக்குண்டான தொகையை இறந்தவர் பெயர் சொல்லி தானமாகக் கூட அளித்திருக்கலாம். குறைந்த பட்சம் இறந்தவரின் புண்ணியக் கணக்காவது இந்து தர்மப்படி அதிகரித்திருக்கும். எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி 50 கிராம் நகையுடன் புதைக்கப்பட்டு இன்று மரணத்தின் பின்னும் நிம்மதியாகத் துயில் கொள்ள முடியாமல் தோண்டி எடுக்கப்பட்ட பிரேமா பாயின் சடலத்திற்கு நேர்ந்த கதி அதிர்ச்சிகரமானது மட்டுமல்ல! ஆச்சர்யப்படத்தக்கதும் தான்.

]]>
thieves dig up grave, corpse burried with 50 g gold, 50 கி தங்கத்துடன் புதைக்கப்பட்ட சடலம், பிணத்தின் நகையை கொள்ளையடித்த திருடர்கள், கர்நாடக சம்பவம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/23/w600X390/Gravediggers-in-Hungary-compete-in-first-national-grave-digging-contest.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/oct/26/thieves-dig-up-grave-to-rob-corpse-buried-with-50-grams-of-goldபுதைக்கப்பட்ட-பிணத்திலிருந்து-நகைகளை--2796278.html
2796269 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் ஆக்ராவுக்கு சுற்றுலா வந்த ஸ்விஸ் தம்பதி ரெளடிகளால் தாக்கப்பட்டு படுகாயம்! RKV DIN Thursday, October 26, 2017 12:49 PM +0530  

கடந்த வாரம் இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருந்த இளம் ஸ்விஸ் தம்பதி இருவர் கடந்த ஞாயிறு அன்று ஃபதேபூர் சிக்ரியில் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நான்கு ரெளடிகளால் பின் தொடரப்பட்டு, கடுமையான தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, இந்த ஸ்விஸ் தம்பதிகள் ஃபதேபூர் சிக்ரிக்கு வருவதற்கு முன்பு சனிக்கிழைமை அன்று தாஜ்மஹாலுக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

ரெளடிகளால் தாக்கப்பட்டதில் ஸ்விஸ் ஜோடிகளில் ஆண்,  குவாண்டன் ஜெரிமி  கிளெர்க்குக்கு தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதோடு காது கேட்கும் திறனும் கடுமையான பாதிப்புக்கு உட்பட்டுள்ளதாக அவரைச் சோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தனது நண்பர் தாக்கப்பட்டதை அறிந்து அவரை காப்பாற்ற வந்த குவாண்டனின் ஸ்விஸ் தோழியும் ரெளடிகளின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். பின்பு அவரது கதறலைக் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்த மனிதர்கள் இவர்களது உதவிக்கு வரத் தொடங்கியதும்... தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடி இருக்கின்றனர். தப்பி ஓடியவர்களில் ஒருவன் மட்டும் பிடிபட்டுள்ளதாகவும் பிறர் காவல்துறையின் தேடுதல் வலையில் இருப்பதாகவும் ஆக்ரா காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த நேரத்தில் தனக்கேற்பட்ட இந்த மோசமான விபத்தைப் பற்றிப் பேசுகையில் குவாண்டன் ஜெரிமி கூறியது; நாங்கள் இருவரும் நேற்று தாஜ்மஹலைப் பார்த்து விட்டு இன்று ஃபதேபூர் சிக்ரிக்கு வந்து சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது அடையாளம் தெரியாத நால்வர் எங்களைப் பின் தொடர்ந்தனர். எங்களது அனுமதியில்லாமல் அவர்கள் என்னையும், எனது தோழியையும் புகைப்படம் எடுக்கவும் முயன்றனர். அறிமுகமில்லாத அந்த நால்வரும் எங்களை வீண் சண்டைக்கு இழுக்கப் பலவாறு முயன்றனர்.  அவற்றைப் பொருட்படுத்தாமல் நாங்கள் எங்கள் வழியில் நடந்து வந்து கொண்டிருந்த போது தான் திடீரென என்னைத் தாக்கத் தொடங்கினர். எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த எனது தோழி சத்தம் கேட்டு எனக்கு உதவ ஓடி வர, அதைத் தொடர்ந்து நால்வரும், தங்களிடமிருந்த ஸ்டிக் போன்ற ஆயுதத்தால் என்னைக் கடுமையாகவே தாக்கத் தொடங்கி விட்டனர். இதனால் என் தலை உடைந்து கடுமையான காயம் ஏற்பட்டதோடு, எனது செவிகளின் கேட்கும் திறனும் இப்போது பாதியாகக் குறைந்து விட்டது. என்று கூறி இருக்கிறார்.

இந்தச் சம்பவம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கவனத்துக்கு வர, அவர் உடனடியாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் இச்சம்பவம் குறித்து முழு விளக்கம் தருமாறு முதல்வர் அலுவலகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

உலக நாடுகள் அனைத்தும் சுற்றுலாப் பயணிகளின் மனம் கவர்ந்து அதிக அளவில் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா மூலமாக வருமானம் ஈட்டும் முயற்சிகளில் மூழ்கி இருக்கையில் இந்தியாவில், குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகள் மிரட்சி கொள்ளும் வகையிலான இம்மாதிரியான தாக்குதல்கள் நிச்சயம் கண்டிக்கத்தக்கவை. 

ஸ்விஸ் சுற்றுலாத் தம்பதிகள் தாக்கப்பட்டதின் நிஜமான பின்னணி குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை. தற்போது சிகிச்சையில் இருக்கும் அவர்கள் தெரிவித்த வரையில், அவர்கள் ஏன் தாக்கப்பட்டார்கள்? என்பதற்கான காரணம் வலுவின்றியே இருக்கிறது. மேலதிக விவரங்கள் பின்னர் காவல்துறை விசாரணையில் தெரிய வரலாம்.

Image courtesy: ANI NEWS WEB

]]>
தாக்குதல், India, UP, sushma, இந்தியா, சுற்றுலா, ஸ்விஸ் தம்பதி, Switzerland couple, tourist attacked by unknowns http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/26/w600X390/00000ani_news_photo.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/oct/26/ஆக்ராவுக்கு-சுற்றுலா-வந்த-ஸ்விஸ்தம்பதி-ரெளடிகளால்-தாக்கப்பட்டு-படுகாயம்-2796269.html
2793579 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் முச்சந்தியில் இளைஞனால் தாக்கப்பட்ட சிறுமி! மனசாட்சியின்றி வேடிக்கை பார்த்த மும்பைவாலாக்கள்! (வீடியோ இணைப்பு) RKV DIN Saturday, October 21, 2017 03:30 PM +0530  

கடந்த 17 ஆம் தேதி மும்பை, நேர்நகர் பகுதியில் வழக்கம் போல பள்ளிச் சிறுமியொருத்தி டியூஷன் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். அவளது வழியில் திடீரெனக் குறுக்கிட்ட இளைஞன் ஒருவன் அந்தச் சிறுமி எதிர்பாராத நேரத்தில் சரமாரியாக அவளது முகத்தில் தாக்கத் தொடங்கினான். தக்குதலுக்கு சிறுமி எதிர்ப்புக் காட்டியதும் அவனது வேகம் இன்னும் அதிகமானது. அவனது முரட்டுத்தனமான அடிகளால் அதிர்ச்சியடைந்து அச்சிறுமி மயங்கி விழுந்து விட அவளைத் தூக்கி விடக்கூட மனமின்றி அப்போது அங்கிருந்த மக்கள் அச்சம்பவத்தை வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள். அதற்கான சாட்சியாக அப்போது அங்கே பதிவான சிசிடிவி வீடியோ பதிவுகள் உள்ளன.

அந்த வீடியோ காட்சி; 

 
 
இந்தத் தாக்குதல் தொடர்பாக சிறுமியின் சகோதரி சம்பந்தப்பட்ட இளைஞனின் தாயாரிடம் சென்று புகாரும் அளித்திருக்கிறாள். ஆனால், அதற்கு அந்தத் தாய் அளித்த பதிலோ; ‘யாரும் இன்னொஸண்ட் இல்லை’ என் மகனுக்கு அத்தனை கோபம் வரும் அளவுக்கு, உன் தங்கை என்ன செய்தாளோ?! என்பதாகவே இருந்திருக்கிறது. ஒரு தாயின் இத்தகைய பொறுப்பற்ற பதிலைக் கேட்டு நொந்து போன பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தார் காவல்துறையில் புகார் அளிக்கவே; தற்போது அந்த இளைஞனின் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 324 (கொடுமையான ஆயுதத்தால் வலியத் தாக்குதல்) பிரிவு 506( மிரட்டலுக்கான குற்றவியல் தண்டனைப் பிரிவு) எனும் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. காவல்துறை வழக்குப் பதிந்தாலும் இந்த நிமிடம் வரை, தாக்கப்பட்ட சிறுமி, தாக்கிய இளைஞ யார் என்ற அடையாளம் வெளியாகவில்லை எனத்தெரிகிறது.

மக்கள் நடமாட்டம் மிகுந்த மும்பை சாலையில், சிறுமி ஒருத்திக்கு நேர்ந்த இந்தச் சம்பவமும், அதில் மக்கள் தலையிடாமல் ஒதுங்கிச் சென்ற பாவனையையும் காணும் போது சிறுமிகள் மற்றும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளில் தலைநகர் டெல்லிக்கு இணையாக மாறிக் கொண்டிருக்கிறது என்று சந்தேகமாக இருக்கிறது. இம்மாதிரி கண் எதிரில் ஒரு பள்ளிச்சிறுமி ஆணொருவனால் தாக்கப்படும் போது சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது என்ன மாதிரியான மனநிலை எனப் புரியவில்லை.

Thanks to yahoo.com & ANI NEWS.

]]>
மும்பை, CCTV footage, mumbai minor girl, man knocks minor girl, சிறுமியைத் தாக்கிய இளைஞன், வேடிக்கை பார்த்த மக்கள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/21/w600X390/mumbai_young_girl.png http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/oct/21/man-assaults-minor-girl-knocks-her-unconscious-2793579.html
2792927 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் 19 வயதில் 100 கோடி ரூபாய்க்குச் சொந்தக்காரனான பள்ளி மாணவன்! RKV DIN Friday, October 20, 2017 04:07 PM +0530  

அக்‌ஷய் ருபரேலியா! 19 வயதில் 100 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதி. அத்தனையும் பாட்டனார், முப்பாட்டனார் சம்பாதித்து சேமித்து வைத்து விட்டுச் சென்றதில்லை. மொத்தமும் அக்‌ஷய் மட்டுமே பாடுபட்டு உழைத்துச் சேர்த்த பணம். 19 வயதில் சிறுவர்களாகவும் இல்லாமல் இளைஞர்களாகவும் இல்லாமல் தடுமாற்றமான நிலையில் இருக்கும் பருவத்தில் எல்லா இளைஞர்களுக்குமான பொதுவான கவலை ஒன்றே ஒன்று தான். அது என்னவென்றால்; ஐயோ... பாக்கெட் மணி தீர்ந்து விட்டால் மேற்கொண்டு யாரிடம் தேற்றலாம்! என்பதே! ஆனால் அக்‌ஷய்க்கு அந்தப் பிரச்னையே இல்லை பாருங்கள். சொத்து மதிப்பு 100 கோடியைத் தாண்டிய பின்பும் இந்தப் பையன் ஒரு முக்கியமான விஷயத்துக்காக இன்றைக்கும் காசு சேர்த்துக் கொண்டு தான் இருக்கிறான். அது எதற்கு தெரியுமா? தனக்குப் பிடித்தமான அழகான லக்ஸுரி கார் ஒன்றை வாங்க! பள்ளிப்படிப்பை முடித்திராத மாணவன் ஒருவன் 19 வயதுக்குள் 100 கோடிக்கும் அதிகமாகச் சொத்து சேர்த்திருக்கிறான் என்றால், அது எப்படி? என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோருக்கும் எழுவது இயற்கையே!

வடக்கு லண்டனைச் சேர்ந்த சிறுவன் அக்‌ஷய் ருபரேலியா, சமீபத்தில் எடுக்கப்பட்ட லண்டனின் இளம் கோடீஸ்வரர்கள் லிஸ்டில் இடம்பெற்றிருக்கிறார். கடந்த ஒரே வருடத்தில் அவரது நிறுவனத்தின் டர்ன் ஓவர் 103.33 மில்லியன் ரூபாய்கள். பள்ளியில் படித்துக் கொண்டே அக்‌ஷய் தொடங்கிய ஆன்லைன் பிஸினெஸ் நிறுவனத்தின் பெயர் doorsteps.co.uk. டோர் ஸ்டெப்ஸ் என்ற பெயர் கொண்ட இந்த நிறுவனத்தின் பணி இங்கிலாந்தில் வீடுகளை அதன் உண்மையான மதிப்பிற்கு நஷ்டமின்றி விற்க விரும்புபவர்களுக்கு, பொருத்தமான வாடிக்கையாளர்களைக் கண்டறிந்து அடையாளம் காட்டுவது தான். 16 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த ஆன்லைன் நிறுவனம் குறுகிய காலத்திலேயே, தற்போது லண்டனின் மிகப்பெரிய ஆன்லைன் தொழில் நிறுவனங்களின் பட்டியலில் 18 வது இடத்தைப் பெற்றுள்ளது.

தனது நிறுவனத்தைப் பற்றிப் பேசும் போது, அக்‌ஷய் சொல்வது என்னவென்றால்; ஆன்லைன் நிறுவனம் தொடங்கிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு சஸ்ஸெக்ஸ் எனும் இடத்திலிருந்து ஒருவர் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டார். சஸ்ஸெக்ஸில் அவருக்கு ஒரு வீடும் கொஞ்சம் நிலமும் இருப்பதாகவும், தற்போது அதை நல்ல விலைக்கு விற்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். அப்போது என்னிடம் கார் இல்லை, கார் ஓட்டவும் தெரியாது, எனவே இந்திய மதிப்பில் சுமார் 3,500 ரூபாய் கொடுத்து என் மாமாவின் காரை அவரையே இயக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டு சஸ்ஸெக்ஸுக்குச் சென்றேன். என்னிடமிருந்த கேமராவில் வாடிக்கையாளரின் வீட்டைத் தேவையான விதங்களில் எல்லாம் புகைப்படமெடுத்து அதை எங்களது ஆன்லைன் தளத்தில் பதிவேற்றி... நல்ல விலைக்கு விற்றுக் கொடுத்தேன். அது தான் பிஸினெஸில் என்னுடைய முதல் வெற்றி. பிறகு அந்த வெற்றியை அப்படியே தக்க வைத்துக் கொண்டேன். 

என்னுடைய ஆன்லைன் வர்த்தக நிறுவனத்துக்கு நான் துடிப்பான ஆண் பணியாளர்களையோ, ஏஜண்டுகளையோ பணியிலமர்த்தவில்லை. எனது நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் அத்தனை பேருமே குழந்தை பெற்ற நடுத்தர வயதுப் பெண்கள், பெரும்பாலும்  இல்லத்தரசிகளாக இருந்தவர்கள் தான். பொதுவாகச் சொல்வதென்றால் எல்லோருமே அம்மாக்க்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!

வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு வரும் வீடுகளைக் காட்டுவது அவர்களது பொறுப்பு. பெண்கள் அதிலும் குறிப்பாக அம்மாக்கள் எப்போதும் உண்மை பேசுவதையே விரும்புபவர்கள் என்பதால் வாடிக்கையாளர்களிடம் விற்பனைக்கு வரும் வீட்டைப் பற்றிய உண்மைத் தகவல்களை மட்டுமே அவர்கள் அளிப்பார்கள் என வாடிக்கையாளர்கள் பெரிதும் நம்புகிறார்கள். ஏனெனில், வீட்டை விற்பதென்பது, ஒரு மனிதர்... தன் வாழ்நாளில் நிகழ்த்தக்கூடிய மிகப்பெரிய விற்பனையாக கருதக்கூடிய நிகழ்வு. இதில் நம்பிக்கையே முதல் மூலதனம். அந்த நம்பிக்கையை எனது நிறுவனம் சம்பாதித்துக் கொண்டது... அந்த நம்பிக்கை தான் என் நிறுவனத்தின் வெற்றிக்கான முக்கியமான காரணம் எனும் அக்‌ஷயின் நிறுவனத்தில் இப்போது 12 இல்லத்தரசிகள் ஏஜெண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார்கள்.

மிகக் குறைந்த வயதில், மிகக் குறுகிய காலத்திலேயே இத்தனை பெரிய வெற்றியைச் சாதித்த அக்‌ஷயின் பெற்றோர் இருவரும் காது கேட்கும் திறன் குறைபாடு கொண்டவர்கள். அப்பா சேவைப்பணியிலும், அம்மா பள்ளி ஆசிரியையாகவும் பணி புரிந்து வருகிறார்கள். சொந்தத் தொழிலின் மீது தனக்கிருந்த ஈடுபாட்டால் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரமும், கணிதமும் பயிலத் தனக்குக் கிடைத்த வாய்ப்பைக் கூட அக்‌ஷய் மறுத்து விட்டதாகத் தெரிவித்திருக்கிறார். படித்துக் கொண்டே தொழிலதிபராக நீடிப்பதை விட நேரடியாக தொழிலில் கவனம் செலுத்தினால் மேலும் லாபம் சம்பாதிக்கலாம் என்று கருதியதால் தற்போது முழுநேர பிஸினஸ் மேன் ஆகியிருக்கிறார் அக்‌ஷய் ருபரேலியா! அவரெடுத்த முடிவில் தவறில்லை, எல்லோரும் படிப்பது எதற்காக? பொருளீட்டுவதற்காகத் தானே?! அது தான் அக்‌ஷயிடன் நிறையவே சேர்ந்து விட்டதே!

நன்றி: ucweb.com

]]>
Britain's young billionaire, Akhsay Ruparelia, பிரிட்டனின் இளம் கோடீஸ்வரர், 19 வயது அக்‌ஷய் ருபரேலியா, http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/20/w600X390/akshay_ruberalia.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/oct/20/19-years-old-school-guy-owns-100-crores-in-uk-how-2792927.html
2792333 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் 14 வயது பள்ளி சிறுமியின் மரணம்! தூக்க முடியாத புத்தக சுமை தான் காரணமா?  DIN DIN Thursday, October 19, 2017 02:27 PM +0530  

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் 14-வயது மாணவி புத்தக பையை தூக்கிக் கொண்டு மாடிப் படியில் ஏறும் போது மயங்கி விழுந்து பின்னர் உயிர் இழந்த அவலம் நிகழ்ந்துள்ளது. 

கரிமாபாத் நகரில் உள்ள கௌடில்யா உயர்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் இந்த மாணவி பல கிலோ எடையுள்ள தனது புத்தக பையை தூக்கியவாறு மூன்று மாடிகள் ஏறிய நிலையில் மூன்றாவது தளத்தில் மயங்கி விழுந்துள்ளார். இந்தக் காட்சி அந்தப் பள்ளியின் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. காலை 9 மணி அளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. 

“மாடிப் படிகள் ஏறிய பின்னர் தனது வகுப்பில் இருந்து மாணவி வெளியே வந்த பிறகு தான் மயங்கி விழுந்தார், நாங்கள் உடனே பள்ளியில் இருக்கும் மருத்துவரிடம் அவரை அழைத்துச் சென்றோம், மாணவியின் நாடித் துடிப்பை சரி பார்த்த அவர் ரத்த அழுத்தம் குறைந்து வருவதாகத் தெரிவித்தார், அதனால் பள்ளிக்கு அருகில் இருக்கும் எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றோம்” என்று பள்ளி தரப்பில் கூறப்பட்டுள்ளது. “மருத்துவமனையில் மாணவியைப் பரிசோதித்த மருத்துவர் அவர் முன்னதாகவே இறந்து விட்டதாகத் தெரிவித்தார்” என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

ஆனால், மாணவியின் பெற்றோர் தங்களது மகளின் மரணத்திற்குப் பள்ளி நிர்வாகமே காரணம் என்று தெரிவித்துள்ளனர். “எங்களது மகளுக்கு எந்த வித உடல் உபாதையோ கோளாறோ கிடையாது, அப்படி இருக்கையில் எவ்வாறு மயங்கி விழுந்தவுடன் எங்களது மகள் உயிர் இழந்திருக்கக் கூடும்? மயங்கி விழுந்த எங்களது மகளுக்கு முதல் உதவி செய்வதிலும், சிகிச்சையளிப்பதிலும் பள்ளி தாமதித்துள்ளது, அதுவே எங்களது மகளின் மரணத்திற்குக் காரணம்” என்று குற்றம் சாட்டியுள்ளனர். 

பள்ளியின் முதல்வர் ஸ்ரீதர் கூறுகையில் மாணவியின் உடலில் நீரின் அளவு குறைந்து வறட்சி அடைந்ததன் காரணமாகவே அவர் உயிர் இழந்தார் என்று குறிப்பிட்டுள்ளார். 

கடந்த திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்த நிலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பிறகு மேற்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காவல் துறை கூறியுள்ளது. 

இந்தச் சிறுமியின் மரணத்திற்குக் காரணம் புத்தக சுமையோ அல்லது பள்ளியின் கவனக்குறைவோ பழியை யார் மேல் எப்படிப் போடுவது என்று யோசிப்பதை விடுத்து, மேலும் இது போன்ற மரணங்கள் ஏற்படாமல் தடுக்க என்ன செய்வது என்று சிந்திப்பதே புத்திசாலித்தனம். ஏனென்றால் இப்படி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் மாணவர்கள் இறந்து கிடப்பது ஒன்றும் புதிதான ஒரு கதை அல்ல. 

இதே வருடம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஹைதிராபத்தில் உள்ள ஒரு பள்ளியில் சிறுவன் ஒருவரது சடலம் அவனது வகுப்பறையிலேயே கண்டெடுக்கப்பட்டது. வகுப்பிற்குச் சென்று பள்ளி பையை எடுத்து வரச் சென்ற மாணவன் திரும்பி வராததால் சென்று பார்த்த போது அவன் மர்மமான முறையில் இறந்து கிடப்பது தெரியவந்தது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/19/w600X390/Telangana_girl_collapse.jpeg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/oct/19/telangana-student-collapses-outside-classroom-while-lugging-heavy-bag-2792333.html
2789142 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் ஏலியன்கள் இருப்பது நிஜம் தானா? RKV DIN Thursday, October 12, 2017 05:03 PM +0530  

தொடர்ந்து பல நூறு ஆண்டுகளாகக் கேட்கப் பட்டு வரும் விடை தெரியாத கேள்விகளில் ஒன்று இது. ஏலியன்கள் என்பவை நமது கற்பனையா? அல்லது நிஜமா? என்ற சந்தேகம் எழக்காரணம்

தொடர்ந்து பூமியைத் தாக்கிக் கொண்டிருக்கும் அதிவிரைவு ஆற்றல் காஸ்மிக் கதிர்களே. இந்த காஸ்மிக் கதிர்கள் எங்கிருந்து வருகின்றன? அவை தங்களது இலக்காக பூமியைத் தேர்ந்தெடுத்தது எப்படி? எனும் குழப்பங்கள் தான் விஞ்ஞானிகளை ஏலியன்கள் குறித்த ஆராய்ச்சிகளில் பன்னெடுங்காலமாக ஈடுபட வைத்துக் கொண்டிருக்கிறது. அதன் பிறிதொரு முயற்சியாக அர்ஜெண்டினாவில் இயங்கும் பியர்ரி ஆக்கர் எனும் சர்வதேச விண்வெளி ஆய்வு மற்றும் கண்காணிப்பகம் தொடர்ந்து பல தசாப்தங்களாக பூமியைத் தாக்கும் காஸ்மிக் கதிர்கள் குறித்த தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.

பூமியை தாக்கும் ஆற்றல் மிகுந்த காஸ்மிக் கதிர்கள் நமது பால்வெளி கேலக்ஸியின் வெளிப்புற அடுக்குகளிலிருந்து உருவாகின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா?

பூமியைத் தாக்கிக் கொண்டிருக்கும் இந்த அதிவிரைவு காஸ்மிக் கதிர்கள் எங்கிருந்து வருகின்றன? எனும் தொடர் ஆய்வில் ஈடுபட்டிருந்த 18 நாடுகளைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் அனைவரும் தற்போது எதைக் கண்டறிந்திருக்கிறார்கள் என்றால், காஸ்மிக் கதிர்கள் பூமியிலிருந்து 36 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிற்கு அப்பால் உள்ள வேற்றுக் கிரகங்களின் கேலக்ஸி அடுக்குகளில் இருந்து தான் வருகின்றன எனத் தங்களது பியர்ரி ஆக்கர் சர்வதேச விண்வெளி ஆய்வின் முடிவில் கண்டறிந்திருக்கிறார்கள்.

நிபுணர்களின் கூற்றுப்படி, 2001 ஆம் ஆண்டிற்கு முன்பு இதைப் போன்ற அதி விரைவு காஸ்மிக் கதிர்களின் தாக்குதலோ அல்லது வேறு எந்த பெரிய ரேடியோ வெடிப்பு பாதிப்புகளோ பூமியில் நிகழ்ந்ததில்லை என்பது உறுதியாகிறது. அப்படியானால் இந்தத் தாக்குதல்கள் வேற்றுக்கிரகவாசிகளின் சமிக்ஞைகளாக இருக்கவும் வாய்ப்புண்டு எனவும் யூகிக்கப் பட்டது. ஒரு சில விஞ்ஞானிகள் பூமி, மகத்தான ஆற்றல் கொண்ட அண்டவெளிக் கதிர்கள் மூலம் பாதிக்கப்படுவதாகக் கூறினர். ஆனால் அந்தக் கதிர்கள் கேலக்ஸியின் வெளிப்புற அடுக்கிலிருந்து உருவாகின்றனவா அல்லது பூமிக்கு அப்பால் கற்பனைக்கு எட்டாத தொலைவில் அமைந்திருப்பதாகக் கருதப்படும் பிற வேற்றுக் கிரகங்களில் இருந்து வரும் தாக்குதல்களா என்பதில் பெருத்த குழப்பம் நிலவி வந்தது. இது குறித்தான பலத்த வாதங்கள் இப்போது வரையிலும் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

பூமியைத் தாக்கும் காஸ்மிக் கதிர்களின் ஆற்றலானது, முடுக்கப்பட்ட புரோட்டான்களின் ஆற்றலை விட ஏறக்குறைய ஏழு சதவிகிதம் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதிலும் அங்குள்ள விண்மீன் திரள்களின் விநியோகம் ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

{pagination-pagination}

"எங்கிருந்து இந்த அசாதாரணமான துகள்கள் உருவாகின்றன? என்பதைப் பற்றிய சுவாரஸ்யமான சந்தேகக்கேள்விகள் வானியற்பியல் துறை வல்லுனர்கள் அனைவரிடத்திலும் உள்ளது. 

ஆனால் அதற்கான உறுதியான பதில்களை மட்டும் இன்று வரை யாராலும் அறுதியிட்டுச் சொல்லமுடிந்ததில்லை.

பூமியைத் தாக்கும் காஸ்மிக் கதிர்கள் வீடியோ இணைப்பு...

]]>
ALIENS, வேற்றுக்கிரகவாசிகள், புதிர், புதிரா? புதுமையா? http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/12/w600X390/ALIENS.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/oct/12/aliens-do-exist-2789142.html
2786252 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார் ராணுவ வீரர் குடும்பத்துக்கு முதல்வர் நிதி உதவி DIN DIN Saturday, October 7, 2017 11:19 PM +0530 அருணாசலபிரதேசம் தவாங் மாவட்டம் யாகேஷ் செக்டாரில் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் நேற்று (6.10.2017)  விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரெஜிமெண்ட் ராணுவ வீரர் பாலாஜி உள்பட 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்த விபத்து குறித்து செய்தி அறிந்ததும்  நான் மிகுந்த துயரமும்,  மன வேதனையும்  அடைந்தேன் . மேலும்  ராணுவ வீரர் பாலாஜி-யை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். பாலாஜி குடும்பத்திற்கு  இருபது  லட்சம் ரூபாய் நிதி உதவி உடனடியாக  வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/oct/07/ஹெலிகாப்டர்-விபத்தில்-உயிரிழந்தார்-ராணுவ-வீரர்-குடும்பத்துக்கு-முதல்வர்-நிதி-உதவி-2786252.html
2784946 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் மதுரையில் கனமழை காரணமாக மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் புகுந்த வெள்ளம்! (வீடியோ இணைப்பு) விஜய தங்கராஜ் DIN Thursday, October 5, 2017 04:32 PM +0530  

மதுரையில் இன்று மாலை பெய்த கனமழையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் வெள்ளம் புகுந்தது. சுமார் இரண்டு மணி நேரம் வரலாறு காணாத கனமழை பெய்த காரணத்தால், என்றுமில்லாத வகையில் முதன் முறையாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலினுள் தங்கக் கொடிமரம் அமைந்துள்ள கம்பத்தடி மண்டபத்துக்குள் வெள்ளம் புகுந்து ஆறாக ஓடியதின் வீடியோ பதிவு இது...

 

மதுரையில் இன்று மாலையில் இரண்டுமணி நேரம் கொட்டிய கன மழையில் வரலாறு காணாத வகையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது.இதுவரை ஆடிவீதிகளில் மட்டுமே தேங்கிய நின்ற மழை நீர், இன்று தங்க கொடி மரம் அமைந்துள்ள கம்பத்தடி மண்டபத்துக்குள் புகுந்து விட்டது. இதோ வீடியோ காட்சி...

Posted by Vijaya Thangaraj on Thursday, October 5, 2017

இதற்கு முந்தைய காலங்களில் ஆடி வீதிகளில் வெள்ளம் புகுந்திருக்கிறதே தவிர...கோயிலுக்குள் கம்பத்தடி மண்டபத்தில் வெள்ளம் புகுந்தது இதுவே முதல் முறை என்கிறார்கள் மதுரைவாசிகள்.

]]>
மதுரை, மீனாட்சியம்மன் கோயில், வெள்ளம், madurai, meenatchi amman temple, flood http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/5/w600X390/000_meenatchi_temple_flood.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/oct/05/flood-enters-in-meenatchi-amman-temple-at-madurai-2784946.html
2780142 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் போலி சாமியார்களிடமிருந்து மக்களைக் காக்க வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு: அலகாபாத் உயர்நீதிமன்றம் ஆணை! RKV DIN Tuesday, September 26, 2017 11:47 AM +0530  

போலிச்சாமியார்களின் ஆதிக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலிச்சாமியார்கள், தங்களை நவீன யுகக் கடவுள்களாக சித்தரித்துக் கொண்டு அப்பாவி கிராம மக்களையும், மெத்தப் படித்த அறிவாளிகளையும் ஏமாற்றி வருகிறார்கள், பாபா ராம் ரஹீமைப் போன்ற அத்தகைய போலிச்சாமியார்கள் பிடியிலிருந்து நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு மட்டுமல்ல மாநில அரசுக்கும் உண்டு என அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வெள்ளியன்று ; ஜோதிஷ பீடத்தின் தலைமைப் பொறுப்பை அதாவது  அடுத்த சங்கராச்சாரியாராகப் பதவியேற்க ஸ்வாமி வாசுதேவானந்த் சரஸ்வதி மற்றும் ஸ்வாமி ஸ்வரூபானந்த் இருவரது பெயரும் நீதிமன்றத்தில் கூட்டாகப் பரிந்துரைக்கப் பட்டது. அந்தப் பரிந்துரையை நிராகரித்த உயர்நீதிமன்றம்... புதிய தகுதி வாய்ந்த சங்கராச்சாரியாரைத் தேர்ந்தெடுக்க மடத்துக்கு மூன்று மாதங்கள் அவகாசமும் வழங்கியுள்ளது.

ஸ்வாமி வாசுதேவானந்த் சரஸ்வதி தாக்கல் செய்திருந்த மனுவின் மீதான விசாரணையின் போது ‘மீதமிருக்கும் 3 பீடங்களின் பீடாதிபதிகள் இணைந்து ஜோதிஷ பீடத்துக்கான தகுதி வாய்ந்த குரு ஒருவரைத் தலைமைப் பொறுப்பில் அமர்த்த வேண்டும். ’ என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதுமட்டுமல்ல, புது சங்கராச்சாரியாரைத் தேர்ந்தெடுக்க பாரத தேசம் முழுமைக்குமான பாரத தர்ம மகா மண்டலத்தைச் சேர்ந்த குருமார்களும், காசி வித்வத் பரிஷத் அமைப்பைச் சேர்ந்த ஆன்மீக குருக்களும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Thanks to Daily post

]]>
fraud godmen, innocent public, centre and state govt, The Allahabad High Court, போலிச்சாமியார்கள், அப்பாவி மக்கள், அரசாங்கம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/26/w600X390/fraud_godmen.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/sep/26/போலி-சாமியார்களிடமிருந்து-மக்களைக்-காக்க-வேண்டிய-கடமை-மத்திய-மாநில-அரசுகளுக்கு-உண்டு-அலகாபாத்-உயர்-2780142.html
2777825 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் ஷாங்காயில் 14 வருடங்களாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வீடு இடிப்பு! RKV DIN Friday, September 22, 2017 06:04 PM +0530  

நடு மரத்தில் ஆணி அடித்துப் பார்த்திருப்பீர்கள். ஆனால் இங்கே சீனாவில் நட்ட நடுச்சாலையில் ஒரு வீடே, ஆணி அடித்தாற் போல கடந்த 14 வருடங்களாக அசையாமல், அசைக்க முடியாமல் நின்று கொண்டிருந்து அரசாங்கத்தை வந்து பார் என கண்ணில் விரல் விட்டு ஆட்டாத குறையாக அடம் பிடித்து நீடித்திருந்திருக்கிறது. நம்மூரில் இப்படியெல்லாம் அனுமதிப்பார்களா என்ன? ஆளும், பேரும் தெரியாமல் வீட்டு ஓனரை அள்ளிக் கொண்டு வந்து மொத்தி, இடத்தை எழுதி வாங்கி ...வீட்டை இடித்து எப்போதோ அரசுக்குச் சொந்தமான இடமாக ஆக்கியிருப்பார்கள். ஆனால் அங்கே அதெல்லாம் சாத்தியப் பட்டிருக்கவில்லை. 

நாட்டின் பிரதான சாலையை ஆக்ரமித்துக் கொண்டிருந்த இந்த நடுச்சாலை வீட்டை குறிப்பிட்ட தொகையை காம்பன்சேஷனாகப் பெற்றுக் கொண்டு அரசுக்கு விற்றுவிடுமாறு சீன அரசு வீட்டு உரிமையாளர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அந்த விசேஷமான வீட்டின் உரிமையாளர்களுக்கோ கடந்த 14 வருடங்களாக அரசின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்க விருப்பமில்லாமலே இருந்து வந்தது. அதன் பலன்... வீடிருக்கும் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமானது. வீட்டை இடித்து விட்டு அந்தச் சாலையை 4 வழிச்சாலையாக மாற்றினால் அந்தப் பாதையைப் பயன்படுத்தும் அனேகம் பேருக்கு மிகுந்த நேர விரயம் தவிர்க்கப் படலாம் எனும் நிலை. ஆனால் வீட்டு உரிமையாளர்களைச் சமாளிக்கும் விதம் தெரியாமல் சீன அரசின் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மிகுந்த சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். 

நெயில் ஹவுஸ் என்றழைக்கப்படும் அந்த வீடு அப்படித்தான் கடந்த 14 வருடங்களாக நட்டநடுச் சாலையில் வாகன ஓட்டிகளுக்குப் பெருத்த இடைஞ்சலாக அந்த இடத்தில் நீடித்து வந்தது. ஒவ்வொரு முறை அந்த வீட்டைக் கடக்கும் போதும் தேசிய நெடுஞ்சாலை தானே என்று வேகமாக கடந்து விட முடிவதில்லை. வீடு நெருங்கும் போது வேகத்தை மொத்தமாகக் குறைத்து பிறகு மீண்டும் பழைய வேகத்தில் பயணிக்க வேண்டும். இது அந்தச் சாலையைப் பயன்படுத்துவோருக்கு மிகுந்த இடைஞ்சலாக இருந்தது.

ஒருவழியாக தற்போது அந்த வீட்டை இடிக்க அதன் உரிமையாளர்கள் ஒப்புக் கொண்ட பின் 14 வருடங்களாக நிலைத்து நின்ற அந்த வீடு வெறும் 90 நிமிடங்களில் இடித்து தரைமட்டமாக்கப் பட்டது. வீட்டை இடிப்பதற்கு முன் இடிப்பாளர்கள் முதலில் வீட்டின் மீது ஹெல்காப்டர் மூலம் நீர் தெளித்து பெரிதாக தூசு மண்டலம் எழும்பாமல் பார்த்துக் கொண்டனர். தற்போது வீட்டை இடிக்க ஒப்புக் கொண்டவகையில், வீட்டு உரிமையாளர்களுக்கு 4 வீடுகளும், 2.7 மில்லியன் யென்கள் பணமும் இழப்பீடாக வழங்கப்படவிருப்பதாக சீன ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன.
 

]]>
shanghai nail house, 14 years traffic hurdle, demolished, ஷாங்காய் நெயில் ஹவுஸ், 14 வருடப் போக்குவரத்து இடையூறு, இடிப்பு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/22/w600X390/china_nail_house.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/sep/22/14-years-of-traffic-hurdle-a-nail-house-atlast-demolished-in-shanghai-2777825.html
2777781 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் 50 லட்சம் கேட்டு மிரட்டுவதாக வாட்ஸப் வீடியோ அனுப்பிய பெங்களூரு மாணவர் சடலமாக குளத்தினடியிலிருந்து மீட்பு! RKV DIN Friday, September 22, 2017 12:19 PM +0530  

சரத், 19 வயது இளைஞன்... தந்தை வாங்கித் தந்த புது மோட்டார் பைக்கை நண்பர்களிடம் காட்டி விட்டு வருவதாகச் சொல்லி செப்டம்பர் 14 ஆம் நாள் வீட்டை விட்டு வெளியே சென்றவன், அதற்குப் பின் வீட்டுக்கே திரும்பவில்லை. தன்னை யாரோ கடத்தி விட்டதாகவும், விடுவிக்க வேண்டுமென்றால் 50 லட்ச ரூபாய் பிணையத்தொகை கேட்பதாகவும் இந்த வார ஆரம்பத்தில் சரத்  தன் பெற்றோருக்கு ஒரு வாட்ஸப் வீடியோ அனுப்பி இருந்தான். 

அந்தத் தகவலை காவல்துறை அதிக முக்கியத்துவம் கொடுத்து விசாரிப்பதற்குப் பதிலாக கடத்தப் பட்ட இளைஞன் மீதே சந்தேகக் கண்ணோட்டம் கொண்டு தேடுதலைச் சற்றே தாமதப் படுத்தியதின் விளைவு, இதோ இன்று அந்த இளைஞன் பெங்களூரின் ஏதோ ஒரு குளத்தின் அடியிலிருந்து பிணமாக மீட்கப் பட்டிருக்கிறான். முன்னதாக அந்த மாணவன், தனது பெற்றோருக்கு அனுப்பிய வாட்ஸப்பில்...

‘என்னைக் கடத்தியவர்கள் தொடர்ந்து துன்புறுத்துகிறார்கள், அவர்கள் கேட்ட தொகையை அனுப்பாவிட்டால், என்னைக் கடத்தியது போலவே, என் சகோதரியையும் கடத்தவிருப்பதாக மிரட்டுகிறார்கள்’ அதனால் உடனடியாக அவர்கள் கேட்கும் தொகையை அளித்து என்னைக் காப்பாற்றுங்கள்’

- என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், இந்த வழக்கை விசாரித்த காவல்துறை அதிகரி, மிரட்டுவதாக அனுப்பப் பட்டுள்ள வாட்ஸப் வீடியோவில், சரத் துன்புறுத்தப் பட்டதற்கான சுவடுகள் எதுவும் இல்லை. எனவே இது அவரே பெற்றோரை அலைக்கழித்துப் பணம் பறிப்பதற்காகச் செய்த முயற்சியாக ஏன் இருக்கக் கூடாது?! என்ற கோணத்தில் விசாரணை துரிதப் படுத்தப் பட்டது. ஆயினும் காவல்துறையின் நம்பிக்கையைப் பொய்யாக்கி இன்று பரிதாபத்துக்குரிய அந்த இளைஞன், கடத்தப் பட்டவர்களால் கொலை செய்யப்பட்டு, கை, கால்கள் கற்களுடன் பிணைக்கப்பட்டு குளத்தில் வீசி எறியப்பட்டுள்ளார். இன்று அதிகாலையில் குளத்தின் அடியில் கைகால்கள் கட்டப்பட்டு சடலமாகக் கிடந்த சரத் மீட்கப்பட்ட விதம் கொடுமையானது.

சரத் கடத்தல் மற்றும் கொலைக்குக் காரணமானவர்கள் என 6 பேரை தற்போது பெங்களூரு காவல்துறை கைது செய்துள்ளது. அதில் ஒருவர் தங்களது குடும்பத்துக்கு நெருக்கமானவர் என சரத் குடும்பத்தினர் அடையாளம் காட்டியுள்ளனர். கொலையான சரத்தின் தந்தை நிரஞ்சன் குமார் வணிக வரித்துறையில் மூத்த அதிகாரி என்பது குறிப்பிடத் தக்கது.


 

]]>
பெங்களூரு மாணவர், வாட்ஸப்,வாட்ஸப் வீடியோ,Bangalore Student,Whatsapp Video,Whatsapp http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/22/w600X390/sarath_bangalore_boy.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/sep/22/bengaluru-boy-sarath-found-dead-in-lake-after-whatsapp-videos-to-family-2777781.html
2768416 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் சுட்டுக்கொல்லப்பட்ட கௌரி லங்கேஷ்; பலியான கருத்து சுதந்திரம்! பவித்ரா முகுந்தன் DIN Thursday, September 7, 2017 08:31 AM +0530  

சமூகத்தில் நடக்கும் அநீதிகளைக் கண்டு வெகுண்டெழுபவர்கள், அநியாயமாகப் படுகொலை செய்யப்படுவது நமது வரலாற்றில் புதிதல்ல. அதுவும் முழுக் கருத்து சுதந்திரம் உள்ள ஒரு ஜனநாயக நாட்டில். தற்போது அவ்வாறு பலியாகியிருப்பது பெண் பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான கௌரி.

சமத்துவம் மற்றும் முற்போக்கு கொள்கைகளை உடைய இவர் பிரபல கன்னட வார இதழ் ‘லங்கேஷ் பத்ரிகா’வின் நிறுவனரும், ஆசிரியருமான பத்திரிகையாளர் லங்கேஷ் அவர்களது மகள். தந்தையைப் போல் சாமானிய மக்களுக்கு நிகழ்த்தப்படும் அவலங்களைப் போக்க அதிகார வற்கத்திற்கு எதிராகக் குரல் எழுப்பத் தீர்மானித்து எழுதுகோலைக் கையில் எடுத்தார். 

“நிமிர்ந்த நன்னடை,
நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும்”  

என்று பாரதி கண்ட புதுமை பெண்ணிற்கு ஒரு தலை சிறந்த உதாரணம் கௌரி லங்கேஷ் என்று ஐயமில்லாமல் கூறலாம். ஆம், பெண்களை சக மனுஷியாக மதிக்காமல் தங்களது கால்களில் போட்டு மிதித்த ஆணாதிக்க சமூகத்திற்கு முன்பு அவர் சற்று நிமிர்ந்துதான் நடைபோட்டார். பொய்யுரைப்பவர்தான் பயப்பட வேண்டும், நான் உண்மைகளையே எனது கருத்துகளில் வெளிப்படுத்துகிறேன் என்று தன்னை எதிர்த்தவர்களை நேர்கொண்ட பார்வையுடன் எதிர் கொண்டார். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று அரசாங்கத்தையே எதிர்த்து குரல் கொடுத்த அஞ்சாத நெறிகளைப் பெற்றிருந்தார். கண்மூடித்தனமாகக் கருத்துக்களை கூறாமல் உண்மையை உறக்கக் கூறினார்.

தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு தம்பி இந்திரஜித் லங்கேஷுடன் இனைந்து லங்கேஷ் பத்ரிகா வார இதழை நிர்வாகிக்க முடிவு செய்தார். லங்கேஷ் பத்ரிகா-வின் ஆசிரியரான இவர் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர் மற்றும் நக்ஸலைட் மறுவாழ்விற்கு உதவும் மனப்பான்மையுடன் பல செய்திகளை எழுதினார், ஆனால் இதழின் நிர்வாக பொறுப்பில் இருந்த இவரது தம்பி இந்திரஜித் அரசாங்கத்திற்கு எதிராக இவர் எழுதும் எழுத்துகளுக்குத் தடை போட்டார். இதனால் எழுந்த கருத்து மோதலால் தனியே ‘கௌரி லங்கேஷ் பத்ரிக்கா’ என்ற கன்னட வார இதழைத் துவங்கினார். அதன் நிர்வாக பொறுப்பையும், ஆசிரியர் பொறுப்பையும் இவர் இணைந்தே வகித்ததால் இவருடைய இடது சாரி கொள்கைகள் சார்ந்த எழுத்துக்கள் மேலும் வலுப்பெற்றன. இந்துத்துவ ஆதிக்கங்களுக்கு எதிராகப் பல செய்திகளை வெளியிட்டார், ஆளுங்கட்சியில் பெரிய பொறுப்புகளில் இருந்த ஊழல் வாதிகளின் முகத் திரைகளை கிழித்தெறிந்தார்.

பல அவதூறு வழக்குகளைச் சந்தித்த போதும் இவருடைய நிலைப்பாட்டிலிருந்து மாறுபடாமல், பத்திரிகை தர்மத்தையும் மீறாமல் காத்து நின்றார். இவர் இறுதியாக கர்நாடகாவின் ஆளுங்கட்சியின் ஊழல்களை வெளிகொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாக இவருடன் பணியாற்றியவர்கள் தெரிவிக்கிறார்கள். நக்ஸலைட் என்று குற்றம் சாட்டப்பட்டு இந்தச் சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களுக்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளேன், விரைவாக அந்த அமைப்பின் வாயிலாகப் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர் மற்றும் நக்ஸலைட் மக்களின் மறுவாழ்விற்கு வழி செய்யவுள்ளேன் என்பதே அவர் இறுதியாகப் பங்கேற்ற கூட்டத்தில் பேசியது.

 

இரவு 8 மணி அளவில் அவரது வீட்டு வாசலிலேயே அடையாளம் தெரியாத நபர்கள் இவரை நோக்கி 7 முறை சுட்டுள்ளனர், அதில் 3 தோட்டாக்கள் இவருடைய நெற்றியையும், நெஞ்சையும் துளைத்தது. சமூக சீர்கேடுகளை எதிர்த்துப் போராடியவரை நெற்றியில் திலகமிட்டு, மார்பில் பதக்கம் குத்திப் பாராட்டுவதற்கு பதிலாக மூன்று துப்பாக்கி குண்டுகளைப் பரிசளித்து பலியிட்டுவிட்டார்கள். 2015-ம் ஆண்டு மந்திரி ஒருவருக்கு எதிராக ஆதாரத்துடன் செய்தி ஒன்றை வெளியிட்டதற்காக உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஜகேந்திர சிங் என்கிற பத்திரிகையாளர் உயிருடன் எரித்துக் கொள்ளப்பட்டார். இரண்டு ஆண்டுகளாகியும் இன்னமும் அவரது மரணத்திற்கே நீதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பத்திரிகை சுதந்திரம், பெண்ணிய சுதந்திரம் என்றெல்லாம் கூக்குரலிடும் இந்திய நாட்டில் இன்று (05/09/2017) கருத்து சுதந்திரமே கொல்லப்பட்டுவிட்டது என்றுதான் வரலாற்றுப் பக்கங்கள் பதிவு செய்யும்.   

]]>
பெங்களூர், shot dead, சுட்டுக்கொலை, banglore, gauri lankesh, journalist, கெளரி லங்கேஷ், பத்திரிகையாளர் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/7/w600X390/21271073_1192757090815629311_6665997685405622765_n.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/sep/06/gauri-lankesh-murder-questions-freedom-of-opinion-2768416.html
2765631 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் நீங்கள் ஆண்மையற்றவர் என்றால் உங்களுக்கு 2 மகள்கள் எப்படிப் பிறந்தார்கள்?! ராம் ரஹீமிடம் நீதிபதி கேள்வி! RKV IANS Friday, September 1, 2017 12:45 PM +0530  

ஹரியானாவில் பாலியல் வழக்கில் சிக்கி தற்போது 20 ஆண்டுகள் ஆயுள் தண்டனை பெற்றுள்ள தேரா சாச்சா செளதா சீக்கிய மடத்தின் தலைவரான ராம் ரஹீம், நீதிமன்ற விசாரணையின் போதும், குற்றத்திலிருந்து தப்பிக்கப் பல பொய்களை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தார். அவற்றில் ஒன்று தான், தனக்குத் தானே ஆண்மையற்றவர் என்று சூட்டிக் கொண்ட பட்டம். 1990 ஆம் ஆண்டிலிருந்து தனக்கு ஆண்மைக் குறைபாடு இருந்து வருவதாக ராம் ரஹீம் காவல்துறையிடம் கூறியிருக்கிறார். ஆனால் ராம் ரஹீம், தனது ஆசிரமத்தில் இருந்த இரு சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் ஐயத்திற்கிடமின்றி போதிய சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டு விட்டதால், அவரது பொய்களை ஏற்றுக் கொள்ளாத நீதிபதி; உடனடியாக ராம் ரஹீமிடம், 

‘நீங்கள் ஆண்மையற்றவர் என்றால், உங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் எப்படிப் பிறந்தார்கள்?”

- என்று சடாரென பதிலடி கொடுத்து விட்டார். 

ஆண்மையற்றவர் என்பது மட்டுமல்ல, தான் மனரீதியாகவும் சரியான ஆரோக்யத்தில் இல்லை, மனநலம் சார்ந்த பிரச்னைகளும் தனக்கு இருப்பதால் தன்னை மன்னித்து விடுதலை செய்யுமாறும் கூட ராம் ரஹீம் காவல்துறையினர் மற்றும் நீதிபதியின் முன்னால் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார். ஆனால் நீதிபதியோ, அவர் சொன்ன எந்தவிதமான தப்பித்தல் உபாயங்களையும் ஏற்றுக் கொள்ளாமல் ஆகஸ்டு 25 ஆம் நாள் ராம் ரஹீம் பாலியல் குற்றவாளி தான் எனும் தீர்ப்பை உறுதி செய்தார்.

ஆகஸ்ட் 25 ஆம் தேதி ராம் ரஹீமின் தண்டனை உறுதி செய்யப்பட்டதன் எதிரொலியாக தேரா சாச்சா அமைப்பின் ஆதரவாளர்கள் கடுமையான கலவரத்தில் ஈடுபட்டனர். அந்தக் கலவரத்தில் 38 பேர் கொல்லப்பட்டார்கள். 250 பேர் படுகாயமடைந்தார்கள்.

இவற்றையெல்லாம் அறிந்த சிபிஐ நீதிபதி ஜக்தீப் சிங், கலவரத்தைக் காரணம் காட்டி ராம் ரஹீமை, வெறும் பாலியல் குற்றவாளியாக மட்டுமே கருதாமல் அவரை ஒரு காட்டு மிருகம் என வர்ணித்து 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையையும் உறுதி செய்தார். அவரது தீர்ப்பின் படி தற்போது ராம் ரஹீம் ரோத்தக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிபதியின் கூற்றுப்படி எந்த ஒரு பாலியல் குற்றவாளியுமே கருணைக்குரியவர் அல்ல’ அவர்கள் நிச்சயம் தண்டனைக்கு உட்படுத்தப்படத் தகுதியானவர்களே’  என்பது உறுதியானது.
ஆளும் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்ததோடு, பிரதமர் மோடி முதல் ஹரியானா முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர்களிடையே மிகுந்த செல்வாக்கு மிக்க நபராக இருந்த ஒருவருக்கு இப்படி ஒரு வரலாற்றுப்பிரசித்தி பெற்ற தீர்ப்பை வழங்கியவரான சிபிஐ நீதிபதி ஜக்தீப் சிங் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, இந்தத் தீர்ப்பின் வாயிலாக உயிராபத்து இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் கருதியதால், அவருக்குத் தற்போது z பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

]]>
Gurmeet Ram Rahim Singh,Haryana,Judge,ராம் ரஹீம்,ஹரியானா, நீதிபதி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/1/w600X390/RAM-RAHIM-MAIN.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/sep/01/ram-rahim-calls-himself-impotent-but-judge-asks-how-his-daughters-were-born-2765631.html
2763722 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் லைசென்ஸ் இல்லாதவர்களுக்கு இனி வாகனங்கள் விற்பனை கூடாதென போக்குவரத்து கமிஷனர் உத்தரவு! DIN DIN Tuesday, August 29, 2017 11:58 AM +0530  

லைசென்ஸ் இல்லாதவர்களுக்கு புதிய வாகனங்களை விற்பனை செய்ய கூடாது’ என்று வாகன விற்பனையாளர்களுக்கு போக்குவரத்து கமிஷனர், தயானந்த் கட்டாரி உத்தரவிட்டுள்ளார்.

தமிழத்தில் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. ஆகவே, தமிழகத்தில் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் நடவடிக்கைகளில், தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

அதை தொடர்ந்து, சாலை விபத்துக்களுக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. ‘விபத்துக்களை குறைக்க, நெடுஞ்சாலை, போக்குவரத்து, காவல் துறை அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும்’ என்றும் தமிழக, போக்குவரத்து கமிஷனர் தயானந்த் கட்டாரியா வலியுறுத்தி வருகிறார்.

வட்டார போக்குவரத்து அலுவலர்கள், சார்பு அலுவலர்களுக்கு, அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழகத்தில், இந்த ஆண்டு ஜூலை வரை, 9,231 விபத்துக்கள் நடந்து உள்ளன. அவற்றில், 9,881 பேர் உயிரிழந்துள்ளனர். 90 சதவீதத்துக்கும் அதிகமான விபத்துகள், டிரைவர்களின் கவனக்குறைவால் ஏற்படுகின்றன.

இதைக் குறைக்க, ஏற்கனவே உள்ள மோட்டார் வாகன சட்டங்களின்படி வாகன விற்பனையாளர்கள் ‘டிரைவிங் லைசென்ஸ்’ இல்லாதவர்களுக்கு வாகனங்களை விற்பனை செய்ய கூடாது.

அவ்வாறு விற்பனை செய்தால், விற்பனையாளர் குற்றவாளியாக கருதப்பட்டு, அவருக்கு சிறைத் தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமோ வழங்கப்படும்.

அதேபோல, புதிய வாகனத்தை பதிவு செய்யும் முன் வாகன உரிமையாளர் வாகனத்தை ஓட்டுவதற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது. மேலும், எல்.எல்.ஆர்., எனப்படும், ‘பழகுனர் லைசென்ஸ்’ வைத்திருப்போர் அந்த உரிமத்தில் உள்ள வாகனத்தை மட்டுமே இயக்க அனுமதிக்க வேண்டும்.

இந்த நடைமுறைகளை கண்டிப்பாக அனைத்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

ஆக,இனிமேல் லைசென்ஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே வாகனங்கள் விற்பனை செய்ய முடியும். இதை வாகன விற்பனையாளர்கள் பின்பற்றுவார்களா?

 

]]>
லைசென்ஸ், வாகன விற்பனை, போக்குவரத்து கமிஷனர்,License,Two &Four Wheeler Sales, Traffic Commissioner http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/29/w600X390/000_traffic.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/aug/29/hereafter-no-sale-of-2-4-wheeler-sales--for-non-license-holders-2763722.html
2760468 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் முத்தலாக் தீர்ப்பை ஆதரித்துப் பதிவிட்ட கிரிக்கெட் வீரர் முகமது கைஃபுக்கு ட்விட்டரில் குவியும் ஆதரவு மற்றும் கண்டனம்! RKV DIN Wednesday, August 23, 2017 01:29 PM +0530  

இஸ்லாமியப் பெண்களின் திருமண உரிமையில் பாரபட்சம் காட்டும் முத்தலாக் விவகாரத்தில் பல ஆண்டுகளாகப் பலருக்கும் வேறுபட்ட கருத்துகள் நிலவி வந்தன. தற்போது உச்சநீதிமன்றத்தின் ஐவர் நீதிபதிகள் குழு வெளியிட்ட தீர்ப்பின் படி முத்தலாக் முறை இந்திய அரசியல் சாசனத்துக்கு முரண்பட்டதாக இல்லா விட்டாலும் கூட, பெண்களின் திருமண உரிமையை எளிதில் பறிப்பதாக இருப்பதால், இப்படி ஒரு சட்டம் தேவை இல்லை. அது இஸ்லாமியப் பெண்களின் உரிமைகளுக்கு  தீங்கிழைக்கக் கூடியது எனக்கருதி 6 மாதங்களுக்கு அச்சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் 6 மாதங்களுக்குள் மத்திய அரசு, முத்தலாக் சட்டத்திற்கு மாற்றுச் சட்டத்தை இயற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை ஆதரித்து கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதரவுப் பதிவு ஒன்றை இன்று வெளியிட்டிருந்தார். முகமது கைஃப் ஒரு இஸ்லாமியர் என்பதால், இஸ்லாத்தின் ஷரியத் சட்டத்திற்கு முரணான இந்த தீர்ப்பை அவர் ஆதரிப்பதை விமர்சித்துச் சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதில் சிலர்; 

 • உண்மையான இஸ்லாமியனாக, குரானை முறையாக ஓதுபவர்களாக இருந்தால் அவர்களுக்கு முத்தலாக் முறைக்கும், இன்ஸ்டண்ட் தலாக் முறைக்கும் நிச்சயம் வித்யாசம் தெரிந்திருக்க வேண்டும். இன்ஸ்டண்ட் தலாக் தான் அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது முத்தலாக் அல்ல என்றும்;
 • ஹே.. ட்விட் செய்யாதீர்கள், அது கொடிய பாவம் என்றும்;
 • முதலில் நீங்கள் குரான் வாசித்திருக்கிறீர்களா இல்லையா? அப்படி வாசித்திருந்தால் தானே உண்மையான பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு என்றால் என்னவென்று உங்களுக்குப் புரியக் கூடும்!
 • இஸ்லாத்தில் பெண்கள் மிகவும் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள், உண்மையான முகமதியனென்றால் அதை நீங்களும் கண்டிப்பாக அறிந்தே இருந்திருக்க வேண்டும்! என்றும்;
 • முத்தலாக் குரானின் கொள்கைகளுக்கு முரண்பட்டது என உச்சநீதிமன்றம் அதை ரத்து செய்து விட்டது, சரி அப்போது... வந்தேமாதரத்தில் இருக்கும் வழிபாட்டு முறை கூட குரானின் கொள்கைகளிலிருந்து முரண்பட்டது தான். அப்படியானால் அதையும் ரத்து செய்து விடுமா உச்சநீதிமன்றம்?! என்றும் பல்வேறு விதமாக மக்கள் எதிர் வினையாற்றி வருகின்றனர்.

கைஃபுக்கு ஆதரவாகவும், எதிராகவும் வந்த ட்விட்களில் சில...

]]>
முத்தலாக் சட்டம், முகமது கைஃப், உச்சநீதிமன்றம், Triple Talaq,Mohammad Kaif,Supreme Court http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/23/w600X390/mugmadh_kaif.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/aug/23/mohammad-kaif-welcomes-supreme-court-verdict-on-triple-talaq-gets-mixed-responds-2760468.html
2759933 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் திறந்தவெளியில் மலம் கழித்தால், வீட்டுக்கு மின்சாரம் ரத்து... ஸ்வச் பாரத் மிரட்டல்! RKV DIN Tuesday, August 22, 2017 04:45 PM +0530  

ராஜஸ்தான், பில்வாரா மாவட்டத்திலுள்ள ஜஹஸ்பூர் கிராமத்தில், மத்திய அரசின் ஸ்வச் பாரத் திட்டத்தை மதிக்காமல் மக்கள் இப்போதும் திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்துவதால் கோபமான ஸ்வச் பாரத் செயல் திட்ட அதிகாரி ஒருவர் அதிரடியாக, இனி, இந்தக் கிராமத்தில் யாரேனும் திறந்த வெளியில் மலம் கழித்தால் உடனடியாக அவர்களது வீடுகளில் மின்சார இணைப்பு ரத்து செய்யப்படும், என்பதோடு சம்ம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் உத்தரவு பிறப்பித்து விட்டார். குறிப்பிட்ட அந்தக் கிராமத்தில் இதுவரை அரசின் ஸ்வச் பாரத் திட்டத்தை பயன்படுத்தி, தங்களது வீடுகளில் கழிப்பிட வசதி செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை வெறும் 19 % மட்டுமே. அங்கு வசிக்கும் கிராமத்தார் சிலர், இப்போதும் அரசின் இந்த நலத்திட்டத்தின் அவசியத்தை உணரக்கூடியவர்களாக இல்லை. அவர்கள் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்கருத்து கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

திறந்தவெளிக் கழிப்பிடங்களே இல்லாத நிலை வேண்டும் எனும் மத்திய அரசின் ஸ்வச் பாரத் திட்டத்தின் வெற்றியை சீர்குலைப்பதாக இருக்கிறது அவர்களது செயல்பாடு. அதனால் தான் ஜஹஸ்பூர் SDO வான கர்தர் சிங் இப்படி ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். அவரது உத்தரவின் பேரில், இன்னும் 15 நாட்களுக்குள்ளாக எஞ்சியுள்ள கிராமத்தார் அத்தனை பேரும் ஸ்வட் பாரத் திட்டத்தின் படி அவரவர் வீடுகளுக்குள் சுகாதாரமான கழிப்பிடம் கட்டிக் கொண்டு, நாள் தோறும் அதைப் பயன்படுத்தா விட்டால், குறிப்பிட்ட அந்த வீடுகளில் மின்சார இணைப்பு ரத்து செய்யப்படும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இப்படி ஒரு உத்தரவை அடுத்து, கடந்த ஞாயிறு அன்று, ஜஹஸ்பூரில், திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்திய மக்களில் 6 பேர் இந்திய தண்டனைச் சட்டம் 151 ஆவது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு மாலையே பெயிலில் விடுவிக்கப் பட்டனர். இந்தத் தகவலை அறிந்த பில்வாரா மாவட்ட ஆட்சியர் உடனடியாக ஸ்வச் பாரத் செயல்திட்ட அதிகாரியின் உத்திரவை ரத்து செய்து உத்தரவிட்டதோடு; மக்களை சுகாதாரமான முறையில் கழிப்பிட வசதிகளைச் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துவது மட்டுமே அரசின் கடமையே தவிர, அவர்களை அச்சுறுத்துவது அல்ல! அச்சுறுத்தலின் மூலம் பொதுமக்களை ஒரு வேலையைச் செய்து முடிக்குமாறு பணிக்க முடியாது. மக்கள் தாங்களே உணர்ந்தாக வேண்டும். அப்போது தான், இது போன்ற விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்த இயலும் என்றும் கூறி இருந்தார்.

இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய ஜஹஸ்பூர் கிராமத்தைச் சார்ந்த உள்ளூர் சமூகப் போராளி ஒருவர் பக்ர்ந்து கொண்ட விஷயம் யோசனையைத் தூண்டும் விதமாக இருந்தது, அதாவது இங்கே பில்வாராவில் அனேக கிராமங்களில் இப்போதும் குடி நீர் பிரச்னை இருக்கிறது. அரசால் அதைத் தீர்க்க இயலவில்லை. இந்த லட்சணத்தில் ஸ்வச் பாரத்தின் பெயரில் வீட்டுக்குள் கழிப்பிடமும் கட்டிக் கொண்டால், அதைச் சுத்தம் செய்வதற்கு தன்ணீருக்கு எங்கே போவார்கள். இங்கே குடிநீருக்காக பெண்களும், ஆண்களும் காலிக் குடங்களுடன் நெடுந்தூரம் வெயிலி நடந்து சென்றாக வேண்டிய நிலையில் இருக்கும் போது, அரசு அதிகாரிகள், கிராம மக்களை அச்சுறுத்தும் விதமாக இப்படிப் பட்ட கட்டளைகள் எல்லாம் போடாமலிருப்பதே நல்லது. என்கிறார்.

அவர் சொல்வதும் சரி தானே!

]]>
ஸ்வச் பாரத், திறந்த வெளி கழிப்பிடம், சுகாதாரமான இந்தியா, swatch barath, open defecation, electricity cut, section 151, மின்சாரம் ரத்து, பிரிவு 151 http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/22/w600X390/000swatch_barath.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/aug/22/no-power-if-you-do-open-defecation-officer-strictly-warned-bilwara-village-peoples-2759933.html
2759234 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் மிதமிஞ்சிச் சிரித்ததால், நிலைதடுமாறி மாடியிலிருந்து விழுந்து இறந்த ஆசிரியை! RKV DIN Monday, August 21, 2017 01:51 PM +0530  

விடுமுறையைக் கழிக்க மெக்ஸிகோ சென்றிருந்த பென்சில்வேனிய ஆசிரியை ஒருவர், மிதமிஞ்சிச் சிரித்ததால், நிலை தடுமாறி மாடி பால்கனியிலிருந்து கீழே விழுந்து இறந்தார்.

50 வயது ஷரன் ரிகோலி சிஃபர்னோ, மேற்கு பென்சில்வேனியாவில் இயங்கி வரும் சார்லஸ் A நடுநிலைப்பள்ளியின் ஆசிரியை. கடந்த வாரத்தில் விடுமுறையைக் கழிக்கும் நோக்கில் மெக்ஸிகோவில் இருக்கும் தனது நண்பருடன் ரிஸார்ட் ஒன்றிற்குச் சென்றிருந்தார். அங்கே மாடி பால்கனியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில், உரையாடலினிடையே ஷரன் மிதமிஞ்சி சிரிக்கத் தொடங்கி இருக்கிறார். சிரித்துக் கொண்டே நிலைதடுமாறி மாடி பால்கனியிலிருந்து கீழே விழுந்து விட்ட ஷரனை, காயங்களுடன் துக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கே சிகிச்சை பலனளிக்காமல் ஷரன் ரிகோலி இறந்து விட்டார், என அவரது சகோதரர் டேவிட் ரிகோலி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

ஷரன் ரிகோலி குடித்திருந்த மதுவில் போதையூட்டக் கூடிய வேறு மூலப் பொருட்கள் ஏதாவது கலக்கப் பட்டிருக்கலாம் அல்லது அவர் அருந்தியது கெட்டுப் போன மதுவாக இருக்கலாம் எனத் தனது மகளின் மரணம் குறித்து  ஷரனின் தந்தை சந்தேகப் புகார் கூறிய போது, அதை மறுக்கும் விதமாகப் பதிலளித்த ஷரனின் சகோதரர்; ‘ஷரன் அருந்திய மதுவில் எந்தக் கலப்படமும் இல்லை, அவர் குடித்துக் கொண்டே, தலையைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டு மிதமிஞ்சி சிரித்ததால் நிலை தடுமாறி விழுந்து, அதனால் கடுமையாகக் காயமுற்று இறந்தாரே தவிர இதில் மதுவின் பங்கு எதுவும் இல்லை’ என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் அவர் பேசியதில் இருந்து;

ஷரனின் இந்தப் பரிதாபகரமான மரணத்துக்கு மெக்ஸிகோவில் கட்டிடத் தரக்குறியீடுகள் கடுமையாக இல்லாததும் ஒரு காரணமாகக் கருதப்படுவது தெரிந்தது.

‘மெக்ஸிகோவின் கட்டிடத் தரக்குறியீடுகள் அமெரிக்காவில் பின்பற்றப்படுவதைப் போல மிகக் கடுமையாக இருந்திருந்தால், நான், எனது அன்பான சகோதரியை இப்படி ஒரு விபத்தில் இழந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. எங்களது குடும்பத்தைப் பொறுத்தவரை இது மிக, மிக மோசமான இழப்பு. என் அன்பான சகோதரியான ஷரன் ரிகோலி மிகவும் கருணை உள்ளம் கொண்டவர். அவரைக் காயங்களுடன், காப்பாற்ற இயலாமல் போனது எங்களது துரதிர்ஷடமே’ என்றும் டேவிட் ரிகோலி கூறினார்.

மரணித்த ஷரன் ரிகோலி, தான் பணிபுரிந்த பள்ளியில் மிகுந்த நம்பிக்கையையும், அன்பையும் சம்பாதித்தவராகவே கருதப்படுகிறார். ஷரனின் மரணத்திற்கு அனுதாபம் தெரிவித்துள்ள அவரது பள்ளித் தலைவரான பிரையன் ஃபெராரா, பிட்ஸ்பர்க் ட்ரிபியூன் இதழுக்கு அளித்த இரங்கல் குறிப்பில் ‘ ஷரனின் மாணவர்கள் தங்களது கோடை விடுமுறையிலிருந்து திரும்பக் கூடிய நாள் இது, இப்போது போய் ஷரனுக்கு இப்படியொரு அசம்பாவிதம் நிகழ்ந்திருக்க கூடாது, ஷரனை இழந்ததால் பள்ளியில் உண்டான வெற்றிடம் தங்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது.’ எனக் கூறி இருக்கிறார்.

மரணமடைந்த ஷரன் ரிகோலிக்கு 15 மற்றூம் 17 வயதில் இரு வாரிசுகள் இருக்கிறார்கள்.

குடும்பத்தினரிடம் மட்டுமல்ல பணியிடத்திலும் நற்பெயரையே சம்பாதித்துள்ளவரான ஷரன் ரிகோலியின் இந்த துர்மரணம் நாடு தாண்டியும் கூட பலரை மிகுந்த மன வருத்தத்தில் ஆழ்த்துவதாகத்தான் உள்ளது.

Image courtesy: focusnews.

]]>
pensnsylvania teacher died, laughing too hard, மிதமிஞ்சி சிரித்ததால் ஆசிரியை மரணம், விந்தையான மரணம், http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/21/w600X390/pensylvenia_teacher.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/aug/21/teacher-dies-after-laughing-too-hard-2759234.html
2759221 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் கணவனின் தலையில் பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டு கொன்ற மனைவி! மீண்டுமொரு டாஸ்மாக் அவலம்! RKV DIN Monday, August 21, 2017 12:25 PM +0530  

சென்னை மணலியைச் சேர்ந்த 45 வயது துரைராஜ், அடிக்கடி சிறு, சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறை செல்வது வாடிக்கை! துரைராஜுக்கு மஞ்சுளா என்ற மனைவியும், பவித்ரா என்ற மகளும் இருக்கிறார்கள். தீராத குடிப்பழக்கம் இருந்ததால், குடிப்பதற்கு பணம் கிடைக்காத போது தன் மனைவி, மகளை அடித்து அவர்கள் வீட்டுச் செலவுக்கு வைத்திருக்கும் பணத்தையும் துரைராஜ் பிடுங்கிச் செல்வது வழக்கம்.

அவர்களிடமும் பணம் பெயராது போனால், திருட்டு, வழிப்பறி, தகராறு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைதாகி சிறை செல்வார் துரைராஜ். வாழ்க்கை இப்படியே தொடர்வது துரைராஜின் மனைவி மஞ்சுளாவுக்கு பெரும் வேதனையாக இருந்தது. மஞ்சுளா, தன் மகள் பவித்ராவின் எதிர்கால நலனுக்காகவும், மகளுக்குத் திருமணம் நடத்த வேண்டியும் ஒரு சிறு தொகையை சேமித்து வந்துள்ளார். ஆனால் துரைராஜுக்கோ மகளுக்கு திருமணம் செய்யும் எண்ணமே இல்லை. சில மாதங்களுக்கு முன் துரைராஜ், தன் மனைவி சேமித்து வைத்துள்ள அந்த சொற்பத் தொகையையும் குடிப்பதற்காகத் தருமாறு கேட்டு சண்டையிட்டிருக்கிறார். மஞ்சுளா மறுக்கவே, சண்டை முற்றி, துரைராஜ், மஞ்சுளாவை பிளேடால் கீறி இருக்கிறார். கணவனின் அடாத செயலால் மனமுடைந்த மஞ்சுளா, உடனடியாக அப்போது அருகிலிருந்த காவல்நிலையத்தில் புகாரளிக்கவே, துரைராஜ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டார். 

கணவன் சிறையிலிருந்த காலகட்டத்தில், தன்னிடமிருந்த தொகை கொண்டு மகள் பவித்ராவுக்கும், ஏ.சி மெக்கானிக்கான ஸ்டீஃபனுக்கும் திருமணத்தை நடத்தி முடித்தார் மஞ்சுளா. சிறை சென்ற துரைராஜ் மீண்டும் விடுதலையாகி, வீடு திரும்பிய போது மகளுக்குத் திருமணமானது தெரிந்து கோபமாகி, தன் விருப்பத்துக்கு மாறாகத் திருமணம் செய்து கொண்டமைக்காக, மகள் பவித்ராவை மூர்க்கமாகத் தாக்கி இருக்கிறார். அப்போது மஞ்சுளா வீட்டில் இல்லை.

ஆவடிக்குச் சென்றிருந்த மஞ்சுளா வீடு திரும்பிய போது, நடந்த விவரங்களைக் கேள்விப் பட்டு மிகுந்த ஆத்திரத்துக்குள்ளானார். அன்றிரவு, கணவன் மீதான உச்ச பட்ச கோபத்திலும், ஆத்திரத்திலும் உழன்று கொண்டிருந்த மஞ்சுளா, கணவன் தூங்கிய பின் அவரது தலையில் பெரிய பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டு கொன்று விட்டு... அருகிலிருந்த காவல்நிலையத்தில் சரண்டர் ஆனார்.

தமிழகத்தில்... குடிபோதைக்கு ஆட்பட்டு குடும்பப் பொறுப்பற்றுத் திரியும் ஆண்களிடையே நிகழும் எண்ணற்ற கொலைகளில் இதுவும் ஒன்றாகி இருக்கிறது இப்போது.

குடி போதையால் மனைவி மற்றும் பிள்ளைகளிடம் மிருகத்தனமாக நடந்து கொள்ளும் துரைராஜ் போன்ற குடிகாரர்களுக்கான மரணம் இப்படித்தான் அமைய வேண்டும் என்பது விதியோ!

]]>
tasmac murder, wife kills husband, டாஸ்மாக் கொலைகள், குடிகாரக் கணவனைக் கொன்ற மனைவி, குடி போதை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/21/w600X390/000murder.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/aug/21/wife-kills-drunker-husband-with-boulder-2759221.html
2759206 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் விஜயால் இன்னொரு பலி! சென்னை, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நிகழ்ந்த சோகம்! RKV DIN Monday, August 21, 2017 11:09 AM +0530  

இந்திய வனப்பகுதிகளிலும், அரசு விலங்குகள் காப்பகங்களிலும் நமக்குக் காணக் கிடைக்கும் காட்டெருமைகள், வீட்டு விலங்குகளாகப் பழக்கப் பட்டு தற்போது புழக்கத்தில் இருக்கும் இந்திய எருமைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. அவை மிக, மிக மூர்க்கமானவை. அவற்றைப் பழக்குவது மிகக் கடினம். எனவே தான் அவற்றை ஆபத்தான விலங்குகள் பட்டியலில் வைத்திருக்கிறார்கள்.

அவற்றின் மூர்க்கத்தனம் எப்படிப்பட்டது என்பதை நான்கு வருடங்களுக்கு முன்பு வெளிவந்த பாகுபலி-1 திரைப்படத்தில் நீங்கள் கண்டிருக்கலாம். கிட்டத்தட்ட அதற்கு இணையான காட்டெருமைச் சண்டையொன்று கடந்த சனியன்று சென்னை அறிஞர் அண்ண உயிரியல் பூங்காவிலிருக்கும் காட்டெருமை பாதுகாப்பு வளாகத்தில் நிகழ்ந்துள்ளது. ஆனால் இந்த மோதல் மனிதனுக்கும், மிருகத்துக்குமானது அல்ல. இது இரண்டு காட்டெருமைகளுக்குள்ளான யுத்தம்.

ஞாயிறு அன்று சென்னை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், ஆண் காட்டெருமை ஒன்று மற்றொரு இளம் ஆண் காட்டெருமையுடனான மூர்க்கமான சண்டையில் தோல்வியுற்று மாண்டது. கடந்த சனிக்கிழமையன்று பூங்காவின் ஊழியர்கள் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது திடீரென காட்டெருமைகள் பாதுகாக்கப்பட்ட வளாகத்தில் இருந்து பிற காட்டெருமைகளின் ஒலி வழக்கத்தைக் காட்டிலும் வித்யாசமாக ஒலிக்கவே அங்கு சென்று பார்த்தபோது இரு காட்டெருமைகளுக்குள் பலத்த சண்டை மூண்டிருந்தது தெரிய வந்தது. 

அங்கு 20 வயதான ரத்னம் எனும் காட்டெருமையுடன், விஜய் எனும் இளம் காட்டெருமை கடுமையாக மோதிக் கொண்டிருந்தது. உயிரியல் பூங்காவில், விலங்குகளைப் பராமரிக்கும் சிறப்புப் பணியாளர்கள் உடனடியாக அங்கு விரைந்து அதிகக் காயங்களுடன் சண்டையில் தோற்று சோர்வுற்றிருந்த ரத்னம் எனும் காட்டெருமையை மீட்டு அரசு சரணாலய வளாகத்திலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரத்னத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல், ஞாயிறு காலையில் ரத்னம் உயிரிழந்து விட்டதாக உயிரியல் பூங்கா பணியாளர்கள் தெரிவித்தனர். அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இளம் காட்டெருமையான விஜயுடன் பிற காட்டெருமைகள் சண்டையிட்டுத் தோற்று மரணம் நேர்வது இது முதல் முறையல்ல, இதற்கு முன்பு, 2011 ஆம் ஆண்டில் மணி என்ற 20 வயது காட்டெருமை இதே விதமாக சண்டையிட்டு மாண்டது, அப்போது விஜய்க்கு வயது 6 என்பது குறிப்பிடத்தக்கது.
 

]]>
indian gaur dies, gaur vijay, gaur ratnam, bull fight, chennai arignar anna zoolagical park, இந்தியக் காட்டெருமை, காட்டெருமைச் சண்டை, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/21/w600X390/000indian_gaur_fight.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/aug/21/indian-gaur-dies-during-the-fight-with-another-one-young-indian-gaur-2759206.html
2758210 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் ஒருநாள் சப் இன்ஸ்பெக்டர்... மன வளர்ச்சி குன்றிய மாணவரின் ஆசை நிறைவேறிய நெகிழ்ச்சியான தருணம்! செல்வம் சிதம்பரம் DIN Saturday, August 19, 2017 04:45 PM +0530  

சென்னை ஜாபர்கான்பேட்டை, ராமச்சந்திர தெருவை சேர்ந்த ராஜூவ் தாமஸ் என்பவருடைய மகன் ஸ்டீவின் மேத்யூ (வயது 19), மனவளர்ச்சி குன்றியவர். இவர்கள் தொழில் நிமித்தமாக கத்தார் நாட்டில் குடியிருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு கத்தார் சென்றிருந்தபோது, அங்கு இந்திய தூதரகம் நடத்திய மனவளர்ச்சி குன்றிய மாணவர்களின் கலைநிகழ்ச்சியை பார்வையிட்டார். இதில் ஸ்டீவின் மேத்யூவும் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களை சந்தித்து அவர்களுடைய லட்சியம், விருப்பம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். அப்போது ஸ்டீவின் மேத்யூ பிரதமரிடம், ‘நான் ஒரு நாள் போலீஸ் அதிகாரியாக இருக்க வேண்டும்’ என்று தனது விருப்பத்தை தெரிவித்தார்.

போலீஸ் கமிஷனர் அனுமதி!

கத்தார் நாட்டில் இருந்து சில தினங்களுக்கு முன்பு ஸ்டீவின் மேத்யூவும், அவருடைய குடும்பத்தினரும் சென்னை திரும்பினர். போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து ஸ்டீவின் மேத்யூவின் போலீஸ் அதிகாரி ஆசையை அவருடைய பெற்றோர் எடுத்துக்கூறினர். அவரது ஆசையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையில் போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் இறங்கினார்.
அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் ஒரு மணி நேரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீருடையில் அமர்வதற்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அனுமதி வழங்கினார்.

ஒரு நாள் சப்-இன்ஸ்பெக்டர்!

அதன்பேரில் ஸ்டீவின் மேத்யூவுக்கு போலீசார் சார்பில் 2 நட்சத்திரங்களுடன் சப்-இன்ஸ்பெக்டருக்கான சீருடை வழங்கப்பட்டது. அந்த உடையை அணிந்து மாலை 5.45 மணியளவில் அசோக் நகர் போலீஸ் நிலையத்துக்கு ஸ்டீவின் மேத்யூ வந்து இறங்கினார். அவரை சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சூரியலிங்கம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பதிலுக்கு அவருக்கு ஸ்டீவின் மேத்யூ சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் போலீஸ் நிலையத்துக்குள் சென்ற ஸ்டீவின் மேத்யூவிடம் போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து இன்ஸ்பெக்டர் விளக்கம் அளித்தார். ஸ்டீவின் மேத்யூ சப்-இன்ஸ்பெக்டர் இருக்கையில் சிறிது நேரம் அமர்ந்தார். பின்னர் போலீஸ் ஜீப்பில் இன்ஸ்பெக்டருடன் சேர்ந்து ரோந்து பணியிலும் ஈடுபட்டார்.

அதன்பின்னர் அங்கிருந்து அவர் புறப்பட்டார். அவருக்கு நினைவு பரிசு வழங்கி போலீசார் வழியனுப்பி வைத்தனர். அவருடன் குழுப்புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். அப்போது ஸ்டீவின் மேத்யூவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்

]]>
living his dream, steven mathews, ஒரு நாள் சப் இன்ஸ்பெக்டர், ஸ்டீவின் மேத்யூஸ் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/19/w600X390/000steven_mathew.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/aug/19/one-day-sub-inspector-living-his-dream-2758210.html
2757581 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் அரசுப் பள்ளி ஆசிரியைகள், பணியிடத்தில் சுரிதார் அணிய அனுமதி மறுப்பு! RKV DIN Friday, August 18, 2017 11:58 AM +0530  

தற்போது தமிழ்நாட்டில் தனியார் பள்ளி ஆசிரியைகள், பணியிடத்தில் சுரிதார் அணிந்து வர அனுமதி உண்டு. தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகள் பலர் சுரிதார் அணிந்து கொண்டு பள்ளிகளுக்குச் செல்கின்றனர். இதையொட்டி அரசுப் பள்ளி ஆசிரியைகள் சார்பாகவும், பணியிடத்தில் செளகரியமாக உணர்வதற்காக வேண்டி அதே போன்றதொரு கோரிக்கை முன் வைக்கப் பட்டது. ஆனால் அந்தக் கோரிக்கையைப் பள்ளிக் கல்வித்துறை நிராகரித்துள்ளது. 

பணியிடங்களில்  புடவை மட்டுமே அணிய வேண்டுமென்பதை சில ஆசிரியைகள் விரும்பாமலிருக்கலாம், அவர்களைக் கட்டாயப் படுத்தி புடவை அணியச் சொல்வதைக் காட்டிலும் உடல் முழுவதையும் மறைக்கும் ஆடையான சுரிதார் அணிந்து கொள்ள விரும்பும் விருப்பத்தை நிறைவேற்றலாமே எனும் கோரிக்கை ஆசிரியைகள் சார்பாக ஆன்லைன் பெட்டிஷன் முறையில் முத்துகிருஷ்ணன் என்பரால் முதல்வரின் தனி செல்லுக்கு அனுப்பப்பட்டது. அரசின் பிற துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு சுரிதார் அணிய உரிமை உண்டு என்பதைப் போலவே ஆசிரியைகளின் இந்தக் கோரிக்கைக்கும் அரசு செவி சாய்க்க வாய்ப்பிருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால் ஆசிரியைகளின் அந்தக் கோரிக்கை தற்போது பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக நிராகரிக்கப் பட்டுள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியைகள் சுரிதார் அணிந்து கொள்ளலாம் எனும் மாற்றம் அரசின் கொள்கை முடிவுகளுக்கு மாறானது. எனவே தற்போது அதில் எந்த மாற்றமும் செய்ய இயலாது. அதோடு, பணியிடங்களில் சுரிதார் அணிந்து கொள்ள விரும்புவதாக இதுவரை எந்த ஒரு பெண் ஆசிரியரிடத்திலிருந்தும் தங்களுக்கு வேண்டுகோள் வரவில்லை என்பதால் தற்போதைக்கு முத்துகிருஷ்ணன் என்பவர் ஆசிரியைகள் சார்பாக விடுத்த கோரிக்கை நிராகரிக்கப் படுவதாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

]]>
school teachers, wearing churidar , online petition rejected, பள்ளி ஆசிரியைகள், சுரிதார் அணிய அனுமதி மறுப்பு, பள்ளிக் கல்வித்துறை நிராகரிப்பு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/18/w600X390/teachers_wearing_churithar.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/aug/18/teachers-should-not-wear-churidars-director-of-school-education-minister-anounced-2757581.html
2756237 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் நடிகரின் பிறந்தநாளை அரசு அலுவலகத்தில் கொண்டாடியவருக்கு கிடைத்த மறக்க முடியாத பரிசு! RKV DIN Wednesday, August 16, 2017 03:17 PM +0530  

அஜித் பிறந்தநாளை அரசு அலுவலகத்தில், தன்னுடன் பணிபுரிந்தோரிடையே கொண்டாடி மகிழ்ந்த அரசு ஊழியர் ஒருவரைக் கண்டிக்கும் விதமாக, ஓராண்டுக்கு அவரது சம்பள உயர்வு தடை செய்யப்பட்டதோடு, அவர் பணி மாறுதலும் செய்யப்பட்டுள்ளார். 

ஜூலை 7, 2017 தேதியன்று, சென்னை கார்ப்பரேஷன் சிறப்பு அதிகாரிகளின் பரிந்துரையின் படி மண்டலத் துணை ஆணையாளர் உத்தரவின் பேரில், சம்மந்தப்பட்ட அரசு ஊழியருக்கு மேற்கண்ட பணி மாறுதல் உத்தரவு மற்றும் ஓராண்டுக்கு சம்பள உயர்வு நிறுத்தப்பட்டது உள்ளிட்ட தண்டனை விவரங்கள் தெரியப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை கார்ப்பரேஷனின் கோடம்பாக்கம் கிளை அலுவலக ஊழியரான கே. ஜெயந்தி, மே 1 ஆம் தேதி, நடிகர் அஜித்தின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக அலுவலகத்தில், மதிய உணவு இடைவேளையில் தனது சக ஊழியர்களுக்கு கேக் வழங்கினார். சில ஊழியர்கள் அவரது கொண்டாட்டத்தில் இணைந்து கொண்டாலும், ஊழியர்களில் ஒருவர் அந்த நிகழ்வுகளை வீடியோப் பதிவாக்கி உயரதிகாரிகளுக்கு புகாராக அனுப்பி வைத்தார். புகாரை ஒட்டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது, விசாரணையின் போது ஜெயந்தி, நடிகர் அஜித்தின் பிறந்தநாளை, தான் பணிபுரிந்த அரசு அலுவலகத்தில், சக ஊழியர்களுடன் கொண்டாடியதை ஒப்புக் கொண்டார். இதனால், ஜெயந்தியின் தவறு நிரூபணமாகி அவருக்கு தண்டனை பரிந்துரைக்கப்பட்டது.

நடிகர் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக அரசு ஊழியர் ஒருவர் இவ்விதம் தண்டிக்கப்பட்டது இதுவே முதல் முறை, தனது இச்செயலுக்காக ஜெயந்தி அளித்த விளக்கத்தில், ஒரு பெண்ணாக, தனது பணியிடத்தில் தான் சந்தித்த சவால்கள் அதிகம், ஆயினும் அவற்றையெல்லாம் சமாளித்து தான் மிகச்சிறப்பாகவே பணியாற்றி வந்ததாகவும், நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தால் தனது அன்றைய வேலையின் செயல்திறனோ, அல்லது தனது வேலையின் மீதான அர்ப்பணிப்பு உணர்வோ எதுவும் குறையவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்ல தண்டிக்கப்பட்ட அரசு ஊழியரான ஜெயந்தி, 2015 ஆம் ஆண்டில் சிறந்த அரசு ஊழியருக்கான விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விஷயமாக மேலும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அரசு ஊழியர் ஜெயந்திக்கு ஓராண்டுக்கு சம்பள உயர்வு நிறுத்தப்பட்டது மட்டுமல்ல கோடம்பாக்கத்திலிருந்து ஆலந்தூர் கிளைக்கு அவர் பணி மாறுதலும் செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது. இதனால் ஜெயந்தி பெற வேண்டிய பதவி உயர்விலும் கூட தொய்வு ஏற்பட்டுள்ளது.

இத்தண்டனை குறித்துப் பேசுகையில், “அரசு அலுவலகங்களில், இனி இப்படி ஒரு தவறு அரசு நடத்தப்படக் கூடாது எனும் எச்சரிக்கையை ஏற்படுத்தும் வண்ணமாகவே நடிகரின் பிறந்தநாளை கொண்டாடிய அரசு ஊழியருக்கு இப்படி ஒரு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும், இம்மாதிரியான தண்டனைகளால் கார்ப்பரேஷன் நிர்வாகம் மேம்படும்” எனவும் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

]]>
தண்டனை, punishment, அஜித் பிறந்த நாள், Corporation Staff, Ajith's Birthday, கார்ப்பரேஷன் ஊழியர் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/16/w600X390/ajith_bday.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/aug/16/chennai-corporation-staff-punished-for-celeberating-ajiths-birthday-at-office-2756237.html
2752953 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் முகநூலால் வந்த வினை... 88 லட்ச ரூபாய் பூஜை விவகாரத்தில் வகையாக சிக்கிக் கொண்ட பெங்களூரு புரோக்கர்! RKV DIN Thursday, August 10, 2017 05:07 PM +0530 முகநூலில் புகைப்படத்துடன் எதையெல்லாம் பகிர்ந்து கொள்வது? எதையெல்லாம் பகிர்ந்து கொள்ளக் கூடாது! என்று ஒரு விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. முதலில் தங்களது புகைப்படங்களைக் கூட பகிரப் பயந்து கொண்டிருந்த இந்திய மெண்டாலிட்டி இப்போது தனது புகைப்படத்துடன் தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரது புகைப்படங்களையும் கூட பகிர்ந்து கொள்ளத் தயங்குவதே இல்லை. சிவ கார்த்திகேயனின் காக்கிச் சட்டை திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். திருடனான மயில்சாமி தனது முகநூல் நண்பரது வீட்டில் கொள்ளையடித்து மாட்டிக் கொண்டு நீதிபதியிடம் பேசுவதாக ஒரு காட்சி வரும். அதில் தனது முகநூல் நண்பரான அந்த பாதிக்கப் பட்ட நபர் எப்படியெல்லாம் தன்னை கொள்ளையடிக்கத் தூண்டினார் என சுவாரஸ்யமாகச் சொல்லிக்காட்டுவார். பெரும்பாலானோரின் முகநூல் தம்பட்டங்கள் எல்லாம் அப்படித்தானாகி விடுகிறது இப்போதெல்லாம்!

முன்பெல்லாம் நண்பர்களோ, உறவினர்களோ நேரில் சிக்கினால் தான் சுய தம்பட்டம் அடிக்க வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இப்போதெல்லாம் சுய தம்பட்ட ஆர்வலர்களுக்கு நண்பர்களும், உறவினர்களும் கூடத் தேவையில்லை. கையில் ஒரு ஸ்மார்ட் ஃபோன், அதில் ஒரு முகநூல் கணக்கு. அதில் கணிசமான ஃபாலோயர்கள் இருந்தால் போதும். உடனே உங்கள் வீட்டில் நீங்கள் தும்மினாலும், விக்கிக் கொண்டு தண்ணீர் குடித்தாலும் உடனுக்குடன் முகநூலில் புகைப்படங்களுடன் அப்டேட் செய்து விடலாம். அதைப் பார்த்து வாவ்... விக்கல், ஹே தும்மல்... ஃபைன், லவ்லி, lol, ROFL, என்றெல்லாம் பின்னூட்டமிட்டு லைக் செய்ய கியூவில் வந்து விடுவார்கள் உங்கள் கண் காணாத நண்பர் பட்டாளத்தார். இது ஒரு வகையிலான மாய நட்பு வட்டம். ஆனால் இந்த மாய வலையில் சிக்கிக் கொண்டு அவஸ்தையில் உழல்பவர்கள் எண்ணிக்கையிலடங்காதோர்.

'சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி' என்றொரு பழமொழி சொல்வார்கள். அதற்கேற்ப, பெங்களூருவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் ஒருவர் இந்த முகநூலால் இப்போது பட்டுக் கொண்டிருக்கும் பாட்டைக் கேட்டால் உங்களுக்கே தெரிய வரும் முகநூலின் ஆபத்தான தன்மை. பெங்களூரைச் சேர்ந்த சூரியநாராயண என்ற ரியல் எஸ்டேட் புரோக்கர் கடந்த வாரம் தனது வீட்டில் ஒரு பூஜை ஏற்பாடு செய்கிறார். அது நல்ல விஷயம் தானே என்கிறீர்களா? பூஜை நல்ல விஷயமாக இருக்கலாம்... ஆனால் அந்தப் பூஜைக்காக அவர் செய்த ஆடம்பர ஏற்பாடுகளை எல்லாம் புகைப்படமெடுத்து  முகநூலில் பகிர்ந்து கொண்டது தான் இப்போது அவரை சிக்கலில் மாட்டி விட்டது. சுமார் 88 லட்சம் ரூபாய் செலவு செய்து அந்தப் பூஜையை ஏற்பாடு செய்திருக்கிறார். பூஜை அறையில் அவரும், அவரது மனைவியும் நின்று கொண்டிருக்க உள்ளே 88 லட்சம் ரூபாய் பணம் கட்டுக்கட்டாக ஸ்வாமி பீடத்தின் கீழ் அடுக்கப் பட்டிருந்தது. பணம் மட்டுமா வெள்ளிக்கலசங்களில் சுமார் 1.23 கிலோ தங்க ஆபரணங்கள் வேறு பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்தன. இதைப் பார்த்து விட்டு முகநூல் நண்பர்கள் வேண்டுமானால் ஆஹா... ஒஹோ எனப் பாராட்டி இருக்கலாம். ஆனால் இப்போது முகநூலைப் பயன்படுத்துபவர்கள் லிஸ்டில் நண்பர்கள் மட்டும் தானா இருக்கிறார்கள். பலரது முகநூல் நட்பு வட்டத்தில் காவல்துறையினர், வணிக வரித்துறை அதிகாரிகள், நீதிபதிகள், என எல்லோரும் தானே இப்போதெல்லாம் முகநூல் பயன்படுத்துகிறார்கள். சூரியநாராயண அந்த விஷயத்தை மறந்து விட்டார் போல! இவர் தனது ஆடம்பர பூஜையை புகைப்படத்துடன் முகநூலில் பகிர்ந்ததால்... உடனே கேள்விக்கணைகள் பாயத் தொடங்கி விட்டன.

 • ரியல் எஸ்டேட் புரோக்கர் என்றால் மட்டும் அளவு மீறி வீட்டில் கட்டுக் கட்டாக பணம் வைத்துக் கொள்ள முடியுமா?
 • எங்கிருந்து வந்தது அவருக்கு இத்தனை பணம்? 
 • நேர்மையான வழியில் வந்த பணம் தானா அது? அதற்கு என்ன கணக்கு வைத்திருக்கிறார்?
 • பெங்களூரில் முறையற்ற வகையில் அரசாங்கத்தை ஏய்த்து கட்டுக் கட்டாக கணக்கில் வராத பணம் வைத்துக் கொண்டிருந்தவர்கள் எனப் பலர் கைது செய்யப்பட்ட போது இவரால் மட்டும் எப்படி தைரியமாக இப்படிப் புகைப்படம் எடுத்து அதை முகநூலில் வேறு பகிர்ந்து கொண்டு தம்பட்டம் அடித்துக் கொள்ள முடிந்தது?
 • இதற்குப் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா?
 • இந்தப் பணம் முறைகேடான வழியில் வந்த பணமா? 
 • என்றெல்லாம் ஆயிரமாயிரம் கேள்விகள் அவரை நோக்கி முளைத்த வண்ணம் இருக்கின்றன.

அந்தப் பணம் தன்னுடைய சொந்த உழைப்பில் சம்பாதித்த பணம் தான். ஆரம்பத்தில் ஆட்டோ டிரைவராக இருந்த தான், படிப்படியாக உழைத்து, முன்னேறி நேர்மையான வழியில் சம்பாதித்த பணம் தான் அது. பூஜைக்காகத் தான் அப்படி மொத்தப் பணத்தையும் கொண்டு வந்து வீட்டில் வைத்திருந்தேன், நான் வருடா வருடம் முறையாக வருமான வரி கட்டி வருகிறேன். கடந்த வருடத்தில் மட்டும் 13 லட்சம் ரூபாய் வரி கட்டியிருக்கிறேன், என்னுடைய மொத்த சொத்து மதிப்பு 15 கோடி ரூபாய், என்றெல்லாம் சூரியநாராயண அதற்கு என்ன விளக்கம் கொடுத்தாலும் இப்போதைக்குப் பிரச்னை தீர்வதாக இல்லை. 

Image courtesy: google, FB
 

]]>
bengaluru broker, FB PHOTO, 88 LAKHS POOJA, பெங்களூரு புரோக்கர், முகநூல், 88 லட்ச ரூபாய் பூஜை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/10/w600X390/0000facebook_pooja_photo.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/aug/10/bengaluru-broker-spent-rs-88-lakh-for-a-poojacalling-trouble-by-showing-off-his-wealth-on-fb-2752953.html
2752925 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் உஷாபதியிலிருந்து உப ராஷ்டிரபதியாவதால் வெங்கய்யா நாயுடு பெற்றதும், இழப்பதும்?! கார்த்திகா வாசுதேவன் DIN Thursday, August 10, 2017 02:02 PM +0530  

துணை ஜனாதிபதி தேர்தலுக்கான ஆளும்கட்சி வேட்பாளராக வெங்கய்ய நாயுடு அறிவிக்கப் பட்டபோதே அவரது வெற்றி உறுதியாகி விட்டது. அவரது மிக நீண்ட அரசியல் வாழ்வில்... சுய பகடியாக அவர் சிலமுறை, தனக்கு ராஷ்டிரபதியாகும் ஆசை எல்லாம் இல்லை தான் எப்போதும் உஷாபதியாக இருந்தாலே போதும்’ என்று தன்னைத் தானேகேலியாகக் குறிப்பிடுவது வழக்கம். அவரது ஆசையோ... இல்லை பாஜக வின் ஆசியோ எப்படிச் சொல்வதென்றாலும் இனி அவர் ஆட்சேபிக்க வாய்ப்பில்லை. இன்று இந்தியாவின் துணை ஜனாதிபதி @ உப ராஷ்டிரபதியாக அமோகமாக வெற்றி பெற்று விட்டார். அதிகாரப் பூர்வ அரசு விழாவில் நாளை 11.08.2017 அன்று நிகழப்போகும் பதவியேற்பு வைபவத்தின் பின் அவர் இனி உஷாபதி மட்டுமில்லை உபராஷ்டிரபதியும் தான்.

இழப்பது...

வெங்கய்யாவின் அரசியல் வாழ்வில் அவருக்குப் பயணங்கள் என்றால் கொள்ளைப் ப்ரியம். குடும்பத்தினரைப் பொறுத்தவரையில் அவர் எந்த நேரம் எங்கிருப்பார்? என்பதை தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்துத் தான் தெரிந்து கொள்வார்கள்... என அவரது மகளே ஒரு ரியாலிட்டி ஷோ வில் தெரிவித்திருக்கிறார். அப்படிப் பரபரப்பாக வாழ்ந்த தீவிர அரசியல்வாதியான வெங்கய்யா தற்போது எந்தக் கட்சி சார்பானவராகவும் தன்னை முன்னிறுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. உபராஷ்டிரபதியாக கட்சி சார்பற்றவராகப் கடமையாற்ற வேண்டிய அவசியம் அவருக்கு இப்போது உண்டு. அது மட்டுமல்ல ‘நடப்பு நிகழ்வுகளைப்’ (current affairs) பொறுத்தவரை உடனுக்குடன் தனது கருத்தை ஊடகங்களில் பதிவு செய்து விடும் பழக்கமுள்ள சுறுசுறுப்பான அரசியல் தலைவரான அவர் இனி அந்த த்ரில் அனுபவத்தை இழக்கப் போகிறார். முன்னைப்போல பாஜக சார்பாகவோ அல்லது சுய சார்பாகவோ தனது கருத்துக்களை சூட்டோடு சூடாகப் போல்டாகப் பதிவு செய்ய அவரது பதவி அனுமதிக்குமா? எனத் தெரியவில்லை. இந்திய ஜனாதிபதியைப் போலவே, உப ஜனாதிபதி பதவி வகிப்பவர்களுக்கும் தங்களது பதவிக் காலத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? எவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும்? எனப் பல முறைமைகள் இந்திய அரசியல் சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் அவர்கள் முறையாகக் கடைப்பிடித்தாக வேண்டும். அப்படிப் பார்த்தால் வெங்கய்யா இனி பாதுகாவலர்கள் இல்லாமல் எங்கேயும் செல்ல முடியாது. அவரைச் சந்திக்க அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்குமே கட்டுப்பாடுகள் விதிக்கப் படலாம். முன்னைப் போல ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் கட்சிக்காரர்களின் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் குடும்ப உறுப்பினரைப் போல சர்வ சகஜமாக பயணித்து சொந்த மாநில மக்களுடன் நேரடி, நெருங்கிய தொடர்பில் இருக்க முடியாது. நினைத்த மாத்திரத்தில் தமிழக, கர்நாடக, கேரள லோக்கல் அரசியல் விவகாரங்களில் தனது இன்ஸ்டண்ட் கருத்துக்களைப் பதிவு செய்ய முடியாது. மொத்தத்தில் தீவிர பாஜக விசுவாசியான தன்னை அரசியல் சார்பற்றவராகக் காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயம் இனி வெங்கய்யாவுக்கு உண்டு. தனது பழுத்த அரசியல் ஞானத்தால் அதையும் அவர் இயல்பாகக் கடந்து வர இயலலாம். என்ன இருந்தாலும் பாஜகவில் அத்வானி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், போன்ற நாடறிந்த பிரபலங்களை முந்திக் கொண்டு வெங்கய்யா உபராஷ்டிரபதியானது ஒரு திறமையான அரசியல்வதியாக அவருக்கு கிடைத்த வெற்றியே!

பெற்றது...

இதுவரை மிகப் பரபரப்பான அரசியல்வாதியாக இயங்கிக் கொண்டிருந்த வெங்கய்யா இனி சற்றே அந்தப் பரபரப்பிற்கு ப்ரியாவிடை கொடுக்கலாம். அரசியல்வாதிகளுக்கு இருக்கக் கூடிய பயண நிர்பந்தங்களும், நெருக்கடிகளும் உப ராஷ்டிரபதிக்கு இருக்கப் போவதில்லை. இந்திய அரசியல் சாசன விதிகளின் படி உபராஷ்டிரபதிக்கு மாதச் சம்பளம் ரூ 1,25,000. தவிர மருத்துவச் செலவுகள், பயணச் செலவுகள் உள்ளிட்டவை அரசால் ஏற்றுக் கொள்ளப்படும். நன்கு ஃபர்னிஷ் செய்யப்பட்ட வீடு ஒன்று ஒதுக்கப்படும். தனது 5 ஆண்டு பதவிக்காலம் முழுவதும் அவர் அங்கு தங்கி இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல ராஜ்ய சபாவில் கொண்டு வரப்படும் தீர்மானங்கள் மற்றும் மசோதாக்கள் அனைத்திலும் உறுப்பினர்களிடையே ஒத்த மனது இல்லையெனில் துணை ஜனாதிபதியின் ஒப்புகைக்குப் பின்னரே நிறைவேற்றப்படும். எனவே அந்த அதிகார வரம்புக்குட்பட்டு துணை ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை முடிவு செய்யலாம். பதவிக்காலம் முடிந்த பின் துணை ஜனாதிபதியாக இருந்தவர்களுக்கு அவர்களது மாதச் சம்பளத்தில் பாதித் தொகை ஓய்வூதியமாக வழங்கப்படும். இவை எல்லாவற்றையும் தாண்டி, இதுவரை வெறும் அரசியல்வாதியாக மட்டுமே இயங்கிய வகையில் வெங்கய்யா இந்தியா தாண்டி பிற நாட்டு அரசியல்தலைவர்களுக்கு அறிமுகமற்ற நபராகவே இருந்திருக்கக் கூடும். ஆனால் இனி அப்படி இல்லை. இந்தியா எனும் தீபகற்ப நாட்டின் 13 வது துணை ஜனாதிபதியாக வெங்கய்யாவின் பெயர் வரலாற்றில் இடம் பெற்று விட்டது. இந்தியாவின் துணை ஜனாதிபதியாக உலகத் தலைவர்கள் அனைவரும் இனி வெங்கய்யாவை அறிந்தவர்கள் ஆவார்கள். 

மக்கள் தலைவராக இனி தான் இழக்கப் போவதையும், பெறப்போவதையும் அறிந்தவராக வெங்கய்யா என்ன சொல்கிறார் தெரியுமா? 

“துணை ஜனாதிபதி பதவியில் எனது முன்னோடிகளான சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன், ஜாஹிர் ஹுசைன் உள்ளிட்டோரை முன் மாதிரியாகக் கொண்டு, எனது பதவிக்காலத்தை எப்படியெல்லாம் மக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என நான் கற்றுக் கொள்வேன். தீவிரமாக அரசியலில் இயங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் எனது பிள்ளைகளுடன் நான் நேரம் செலவளித்தது இல்லை. அவர்களுடன் நான் அணுக்கமாக இருந்த நேரங்கள் குறைவு. எப்போதும் பயணம், பயணம் என்று இந்தியா முழுதும் சுற்றிக் கொண்டிருப்பேன். உள்ளூர் மக்களுடனும் எப்போதும் நேரடித் தொடர்பிலிருக்க வேண்டி நான் எனது பயணங்களைத் தவிர்த்ததே இல்லை. இதனால் என் மனைவி, மக்களுடன் இருந்த நேரம் குறைவு. ஆனால் இப்போது எனக்கு நேரமிருக்கிறது. அந்த நேரத்தை என் பேரன், பேத்திகளுடன் செலவளிப்பதில் ஆனந்தப்பட்டுக் கொள்கிறேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள்; ஓய்வு கிடைத்தால் இப்போதெல்லாம் நான் என் பேரன், பேத்தியுடன் ரிலாக்ஸாக அவர்களுக்குப் பிடித்த திரைப்படங்கள் பார்ப்பேன், பிடித்த உணவகங்களுக்குச் சென்று அவர்களுடன் சேர்ந்து உண்பேன் என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம்.” என்கிறார் 68 வயது வெங்கய்ய நாயுடு. 

அவரது இத்தனை வருட நேர்மையான அரசியல் வாழ்வுக்கு கிடைத்த பரிசாகத் தான் இந்தப் பதவியைப் பற்றி கருதுகிறார்கள் வெங்கய்யாவை நன்கறிந்தவர்களும் அவரது நண்பர்களும்.

Image courtesy: first post. google

]]>
வெங்கய்ய நாயுடு , Venkaiah Naidu, uba rashtrapadhi, vice president of india, உஷாபதி, உப ராஷ்டிரபதி, துணை ஜனாதிபதி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/10/w600X390/venkaiah.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/aug/10/from-ushapadhi-to-ubha-rashtrapadhi-what-are-the-things-can--venkaiah-going-to-miss--receive-2752925.html
2748496 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் ஃப்ரீஸரில் மறைத்தது முன்னாள் காதலியின் சடலமா? இந்நாள் காதலியுடன் இளைஞர் கைது! RKV IANS Wednesday, August 2, 2017 12:46 PM +0530  

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தைச் சேர்ந்த நோவா அங்குள்ள யங்ஸ்டவுனில் தனது காதலி ஷனான் கிரேவ்ஸுடன் வசித்து வந்தார். இந்நிலையில் திடீரென ஷனான் கிரேவ்ஸ் கடந்த மாதம் ஜூன் 22 ஆம் தேதி காணாமல் போனார். காணாமல் போன காதலி குறித்த வருத்தங்கள் எதுவுமின்றி நோவா தனது புதுக்காதலியான காத்ரினா லாய்டனுடன் மீண்டும் அதே வீட்டில் முன்பு போலவே வசிக்கத் தொடங்கினார்.

நோவா குடியிருந்தது வாடகை வீடு. நேற்று செவ்வாயன்று வீட்டு உரிமையாளரை அணுகிய நோவா, மின்சார சப்ளையில் ஏற்படும் மாற்றங்களால் அடிக்கடி தன் வீட்டு ஃப்ரீஸர் பழுதாகி விடுவதால் உள்ளிருக்கும் இறைச்சி கெட்டுப் போவதாகக் கூறி ஃப்ரீஸரை வீட்டு உரிமையாளரின் பேஷ்மெண்ட் அறைக்கு மாற்றிக் கொள்ள அனுமதி கேட்டிருக்கிறார். இப்படிப்பட்ட விண்ணப்பங்கள் அங்கே சகஜம் என்பதால் வீட்டு உரிமையாளருக்கு முதலில் சந்தேகம் எதுவும் வரவில்லை. ஆனால் பேஷ்மெண்ட் அறைக்கு மாற்றப்படவிருந்த ஃப்ரீஸர் யூனிட் திறக்கமுடியாத அளவுக்கு பேட்லாக் கொண்டு பூட்டப்பட்டிருந்ததைக் கண்டதும் அவருக்கு என்ன தோன்றியதோ! உடனடியாக சந்தேகம் வலுக்க காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார்.

வீட்டு உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில்  நோவாவை விசாரிக்க வந்த இடத்தில், சந்தேகத்திற்கிடமான அவரது ஃப்ரீஸரைத் திறந்து பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். ஃப்ரீஸரில் உள்ளே பல்வேறு பிளாஸ்டிக் கவர்களில் மனித சடலத்தின் மிச்சங்கள் துண்டு, துண்டாக பாதுகாக்கப்பட்டு வைக்கப் பட்டிருந்தன. அந்த சடலம் யாருடையது என்று இன்னும் ஆதாரத்துடன் நிரூபணமாகவில்லை. ஆனால் அது நோவாவின் முன்னாள் காதலியின் உடல் பாகங்களாக இருக்கவும் சாத்தியமுண்டு எனும் வதந்தி அங்கு நிலவுகிறது. அப்படி இருக்கவும் வாய்ப்பு உள்ளதாக வீட்டு உரிமையாளர் உட்பட சிலர் காவல்துறையிடம் வாய்மொழி வாக்குமூலம் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் நோவா மற்றும் அவரது தற்போதைய காதலி காத்ரினா லாய்டன் இருவரையும் காவல்துறை கைது செய்துள்ளது. 

வீட்டு உரிமையாளரின் வலுவான சந்தேகத்துக்கு காரணம், சந்தேகத்துக்கிடமான அந்த ஃப்ரீஸரை வாங்கியது நோவாவின் இப்போதைய காதலியான காத்ரினா லாய்டன் தான் என லாய்டனே ஒப்புக் கொண்டுள்ளார். அதுமட்டுமல்ல, கடந்த மாதம் வரை நோவாவுடன் இருந்த ஒரு பெண் திடீரென மாயமான அடுத்த சில நாட்களில் அந்த வீட்டுக்கு குடி வந்த காத்ரினா லாய்டன், கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் காணாமல் போன அந்தப்பெண் பயன்படுத்திய அவரது கார் மற்றும் பொருட்களை உடனடியாக தன்னுடையதைப் போல பாவித்துக் கொண்டு பயன்படுத்தத் தொடங்கி விட்டார். பொருட்கள் மட்டுமல்ல ஷனான் கிரெவ்ஸின் நாயைக் கூட காத்ரினா தனதாக்கிக் கொண்டார். இந்தச் செயல்கள் மற்றும் ஃப்ரீஸரில் இருக்கும் சடலத்தின் பாகங்கள் எல்லாம் சேர்ந்து நோவாவையும், காத்ரின் லாய்டனையும் இந்த வழக்கில் வகையாகச் சிக்க வைத்துள்ளது.

வழக்கு குறித்து விசாரணை நடந்து வருகிறது. ஃப்ரீஸரில் இருப்பது ஷனான் கிரேவ்ஸின் உடல் பாகங்கள் தானா? அல்லது இதில் வேறு மர்மங்களும் உறைந்திருக்கின்றனவா? என்பது விழக்கு விசாரணை முடிந்ததும் தெரிய வரும். ஒருவேளை ஃப்ரீஸரில் இருப்பது ஷனான் கிரேவ்ஸின் சடலம் இல்லையெனில் காணாமல் போன முன்னாள் காதலி என்னவானார்? என்பதைச் சொல்லும் நிர்பந்தமும் இப்போது நோவாவுக்கு இருக்கிறது.

Image courtesy: NDTV

]]>
World News, நோவா, ஷனான் கிரேவ்ஸ், காத்ரினா, ஃப்ரீஸரில் சடலம், corpse in freezer, உலகச் செய்திகள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/2/w600X390/novao_girl_friend.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/aug/02/ohio-man-hid-corpse-in-freezer-as-new-girlfriend-moved-in-2748496.html
2748479 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் வட கொரியாவுக்கெதிரான போருக்கு ஆயத்தமாகிறதா அமெரிக்கா?! RKV DIN Wednesday, August 2, 2017 11:16 AM +0530  

அமெரிக்காவுக்கு தீராதலைவலியாக மாறிக் கொண்டிருக்கும் வடகொரியாவைக் கண்டு தினம், தினம் தூக்கமிழந்து கொண்டிருக்கிறார் அதிபர் டிரம்ப். அந்தக் கோபத்தின் வெளிப்பாடு தான் இந்த அறிவிப்பு! 

‘தொலைவில் உள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் புதிய அணு ஆயுதச் சோதனை என்ற பெயரில் வடகொரியா தினம், தினம் புதுப்புது குடைச்சல்களை துவக்கிக் கொண்டே இருந்தால் அதை இனியும் அமெரிக்கா பொறுப்பதாக இல்லை, உடனடியாகப் போரைத் துவக்கி உலக வரைபடத்தில் வட கொரியா என்ற ஒரு தேசத்தையே காணாமலாக்கி விடும்’ முடிவிலிருக்கிறது அமெரிக்கா’ எனும் சூளுரை!

டிரம்ப் அமைச்சரவையில் செல்வாக்கு மிக்க சட்டமன்ற உறுப்பினராகத் திகழும் லின்ட்சே கிரஹாம், மேற்கண்ட எச்சரிக்கையை; அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையின் விதிகளுக்கு உட்பட்டு NBC ஷோ வில் அறிவித்துள்ளார். அதன் மூலம் வடகொரியாவின் அணு ஆயுதச் சோதனைகளை மட்டுமல்ல வடகொரியாவையே முற்றிலுமாக ஒழித்துக் கட்டி விட முடியும். எனவும் லிண்ட்சே தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்; தமது சமீபத்திய கண்டுபிடிப்பானது, அமெரிக்காவின் எந்த மூலையில் இருக்கும் இலக்கையும் திட்டமிட்டுத் துல்லியமாகத் தாக்கி அழிக்கக் கூடிய திறன் வாய்ந்தது என பெருமை அடித்துக் கொண்டார். 

உலகின் சக்திவாய்ந்த நாடுகள், பியாங்யாங்கின் ஆயுதத் திட்டங்களையும், அணு ஆயுதச் சோதனைகளையும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவியால் விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள் மூலமாக தொடர்ந்து கட்டுப்படுத்த முயன்று வருகின்றன. ஆனால் வடகொரியாவைப் பொறுத்தவரை அந்த முயற்சி தொடர்ந்து தோல்வியிலேயே முடிந்து கொண்டிருக்கிறது. இதனால் அமெரிக்கா மிகுந்த விரக்தியிலிருக்கிறது.

வடகொரியாவின் அண்டை நாடான சீனா, ராஜதந்திர முறையிலாவது வடகொரியாவின் குள்ளநரித்தனத்தை தடுத்து நிறுத்த முயலாவிட்டால், பின்னர் அமெரிக்கா தன் விருப்பமின்றியே வடகொரியாவுக்கெதிரான போரை அறிவிக்க நேரும் சூழல் தற்போது நிலவுகிறது.

ICBM உடன் இணைந்து கொண்டு வடகொரியா தொடர்ந்து அமெரிக்கா மீது அணு ஆயுத ஏவுகணைகளை ஏவ முயலும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்குமாயின் டிரம்ப் இனிமேலும் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்.
 
அண்டை நாடானா சீனாவுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது வடகொரியாவை சமரசப்படுத்த. ராணுவ முறையிலோ, அல்லது ராஜதந்திர முறையிலோ ஏதோ ஒரு உபாயத்தைக் கையாண்டு அதன் ஆணு ஆயுத ஏவுகணைச் சோதனை முயற்சிகளுக்கு சீனா முட்டுக்கட்டை போட்டே தீரவேண்டும். இல்லாவிட்டால் அந்தக் காரணத்தை மட்டுமே முன் வைத்து அமெரிக்கா போரைத் துவக்க தயங்காது.


சீனா இவ்விஷயத்தில் ராஜ தந்திர முறையைக் கையாண்டு வெற்றி கொள்ளும் என நான் நம்புகிறேன். என லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார்.
 

]]>
north korea, america, UN, trumph, வடகொரியா, அமெரிக்கா, டிரம்ப், ஐநா சபை, சீனா, போர், war http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/2/w600X390/TRUMP.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/aug/02/donald-trump-ready-for-war-to-destroy-north-korea-2748479.html
2745087 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் முகநூல் பதிவைப் பார்த்து சாலைச் சீரமைப்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்த சென்னை ஐ.பி.எஸ் அதிகாரி! கார்த்திகா வாசுதேவன் DIN Thursday, July 27, 2017 05:46 PM +0530  

‘சென்னைட்டிஸ்’ எனும் முகநூல் பக்கத்தில், சென்னையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சாலை பழுதாகியுள்ளது... அதனால் ஒருவர் உயிரிழந்துள்ளார், ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது, எனும் பதிவை புகைப்படத்துடன் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

அதைக் கண்ட சென்னையைச் சேர்ந்த அரவிந்தன் ஐபிஎஸ் எனும் காவல்துறை அதிகாரி உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அந்தச் சாலையை சரி செய்துள்ளார். அதுமட்டுமல்ல முகநூலில் சாலைப்பழுது புகைப்படத்தை பகிர்ந்து கொண்டிருந்த நபருக்கும் உடனடியாக தொடர்பு கொண்டு சாலை சரி செய்யப்பட்ட விஷயத்தைத் தெரிவித்திருக்கிறார்.

மக்கள் நலப் பிரச்னைகள் மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் சம்மந்தப்பட்ட துறையைச் சார்ந்தவர்களே நடவடிக்கை எடுக்காமலிருக்கும் இன்றைய நாட்களில், தனது துறை சார்ந்த விஷயம் இல்லையென்றாலும் உடனடியாக நடவடிக்கை எடுத்த அரவிந்தன் ஐபிஎஸ் அவர்களை அந்தப் பகுதி மக்கள் மனதாரப் பாராட்டினர்.

சென்னை தி.நகர் காவல் துணை ஆணையராக தற்போது அரவிந்தன் பணியாற்றி வருகிறார். தனது அலுவல் மட்டுமல்ல அதைத் தாண்டி அரவிந்தன் ஐபிஎஸ் சமூகப் பொறுப்புள்ள பல நிகழ்ச்சிகளை முன்னெடுத்து நடத்துவதில் மிகுந்த ஆர்வமுள்ளவராகக் காணப்படுகிறார். கடந்த 18 ஆம் தேதி சென்னையிலுள்ள பின் தங்கிய மாணவர்களை அழைத்து அவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். “ஒரு சிறு வழிகாட்டுதல் இருந்தால் போதும், இவர்கள் தங்களது கனவை அடைந்து விடுவார்கள். இவர்களை மேம்படுத்தும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது” என அரவிந்தன் ஐபிஎஸ் அந்நிகழ்வில் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையினர் பற்றிய எதிர்மறைச் செய்திகளே இதுவரை ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அதே காவல்துறையில் அரவிந்தனைப் போன்று சமூகப் பொறுப்புள்ள நல்லிதயம் கொண்ட அதிகாரிகளும் பணியாற்றி வருகிறார்கள் என்பது பொதுமக்களிடையே அரிதான விஷயமாகக் கொண்டாடப்படுகிறது.

]]>
facebook post, ARAVINDHAN IPS, SUDDEN ACTION IN ROAD REPAIR, அரவிந்தன் ஐபிஎஸ், முகநூல் பதிவு, உடனடி நடவடிக்கை, லைஃப்ஸ்டைல் செய்திகள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/27/w600X390/aravindan.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jul/27/aravindhan-ips-an-officer-who-taken-sudden-action-in-road-repair-process-while-watching-after-a-face-2745087.html
2745076 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் இணையத்தில் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கும் இந்தியா டுடேவின் ‘So Sorry' பாலிடூன்! கார்த்திகா வாசுதேவன் DIN Thursday, July 27, 2017 01:01 PM +0530  

பரப்பன அக்ரஹாரா சிறையில், சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்று 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலாவுக்கு, அவர் ஒரு ஊழல் குற்றவாளி என்பதைப் புறம் தள்ளி சிறைத்துறை டிஜிபி எச்.என்.சத்யநாராயணா 2கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு, சசிகலாவுக்கு தனி சமையலறை, சிறைக்காவலர் ஒருவரின் உதவி உட்பட சில சிறப்பு வசதிகள் செய்து கொடுத்துள்ளார் என அப்போது பரப்பன அக்ரஹார சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா தனது உயரதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தார். தனது புகாருக்கு ஆதாரமாகச் சில சான்றுகளையும், தெளிவான விளக்கங்களையும் கூட ரூபா தனது உயரதிகாரிகளுக்கு அனுப்பி இருந்ததாக அவரே அப்போதைய தனது நேர்காணல்களில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இவ்விவகாரத்தில் உண்மை நிலையைக் கண்டறிய விசாரணைக் குழு அமைக்கப் பட்டுள்ளது. அதற்கு முன்பாக சிறைத்துறை டிஜிபி மீது புகார் அளித்த ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவர் யார் மீது புகார் அளித்தாரோ அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப் பட்டுவிட்டார். இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து ‘இந்தியா டுடே’ இணையத்தில் தனது 'So Sorry Politoon'  அரசியல் நையாண்டி கார்டூன் வரிசையில் சசிகலாவின் அரசியல் செல்வாக்கு மற்றும் பண அதிகார வீச்சு எது வரை பாயும் என்பதாக இவ்விஷயத்தை கலாய்த்து  புதிய பாலிடூன் ஒன்றை வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் பலரால் பார்க்கப்பட்டு, பலமுறை பகிரப்பட்டு தொடர்ந்து  வைரலாகி வருகிறது.

அந்தக் கார்ட்டூன் இது தான்...

 

]]>
sasikala,so sorry politoon,karnataka, இந்தியா டுடே,சசிகலா ,கர்நாடகா http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/27/w600X390/so_sorry_politoon.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jul/27/so-sorry-politoon-a-political-cartoon-by-india-today-its-a-latest-viral-on-net-2745076.html
2653537 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் கேரள நடிகை கடத்தி துன்புறுத்தப் பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப்புக்கு தொடர்பு உண்டா? KV DIN Tuesday, July 18, 2017 04:57 PM +0530  

பிரபல கேரள நடிகை நேற்று முன் தினம் மர்மக் கும்பலால் காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில் ஏழு பேரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தமிழ், மலையாளப் படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை நேற்று முன்தினம் இரவு படப்பிடிப்பு முடித்து கொச்சியிலிருந்து திருச்சூருக்குத் திரும்பிவந்துகொண்டிருந்தார். எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த அங்காமலி அருகே உள்ள அதானிப் பகுதியில் அவர் கார் வந்துகொண்டிருந்தபோது மர்மக் கும்பல் ஒன்று காரை வழிமறித்தது. வேனில் வந்த அந்தக் கும்பல் நடிகையின் காரை மோதியது. அந்தச் சூழலைப் பயன்படுத்தி காருக்குள் புகுந்தது மர்மக் கும்பல்.

ஓட்டுநர் மார்டினைத் தாக்கி வெளியேற்றி, எதிர்பாராதவிதமாக அந்த நடிகையை அதே காரில் வைத்து கடத்தியது. ஒன்றை மணி நேரம் காரில் நடிகைக்கு பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் அளித்தது. பலரிவட்டோம் என்கிற இடம் வருகிறவரை இந்தத் தொல்லை நீடித்துள்ளது. கூடுதலாக நடிகையைப் புகைப்படம் எடுத்தும் வீடியோவில் பதிவு செய்தும் அத்துமீறல் நிகழ்த்தப்பட்டது. பிறகு காரில் இருந்து இறங்கி மற்றொரு காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளது அந்தக் கும்பல்.

இதையடுத்து காகாநாடில் உள்ள ஓர் இயக்குநரின் வீட்டுக்குத் தானே காரை ஓட்டிச் சென்று உதவி கோரியுள்ளார் அந்த நடிகை. பிறகு இச்சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. நடிகையின் முன்னாள் கார் ஓட்டுநர் சுனில் குமார் அந்தக் கும்பலில் இருந்து காருக்குள் நுழைந்ததாக கூறியுள்ளார். மேலும் தற்போது தனக்கு ஓட்டுநராக உள்ள மார்டினுக்கும் இச்சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக அவர் புகார் அளித்ததையடுத்து கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காவல்துறை உயரதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ' இந்த சம்பவம் தொடர்பாக ஏழு பேரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். அவர்களிடம் முறையாக உறுதி செய்த பின்தான் இந்த விவகாரத்தில் அவர்களது பங்கு என்ன என்பது தெரிய வரும்' என்று தெரிவித்தார்.  

கேரளா முதல்வர் பினராயி விஜயன் பேசும் பொழுது இந்த விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்,.  

கேரள காவல்துறை டி.ஜி.பி லோக்நாத் பெஹெரா இந்த விவகாரத்திற்காக சிறப்பு விசாரணைக் குழு ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் பிற குற்றவாளிகளை தேடும் பணி நடந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

பிரபல நடிகைக்கு நேர்ந்த இச்சம்பவத்தால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது நடிகை கடத்தி துன்புறுத்தப் பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருவதாக கேரள காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் நடிகை கடத்தப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப்புக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது. திலீப் தனது முதல் மனைவியான பிரபல நடிகை மஞ்சு வாரியரை பிரிவதற்கு அந்த நடிகை தான் காரணமாக இருந்தார் என மலையாளப் பட உலகில் செய்திகள் கசிகின்றன. இதனால் இந்த விவகாரத்தில் நடிகர் திலீப்புக்கும் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப் பட்ட நிலையில் திலீப் அதை மறுத்திருக்கிறார்.

நடிகை கடத்தப் பட்ட விவகாரத்தில் மலையாளப் பட உலகோடு தமிழ் திரையுலகினரும் குற்றவாளிகளுக்கு எதிராகக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிரபலமாக நடித்துக் கொண்டிருந்த ஒரு இளம் நடிகைக்கே இத்தனை பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது எனில் பிற இளம் பெண்களின் பாதுகாப்பு குறித்து எந்த விதத்தில் நம்பிக்கை கொள்ள முடியும்? இந்தியா முழுவதுமே மூன்று வயதுக்குழந்தை முதல் பிரபல நடிகை வரை பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்ற நிலையில் பெண் இனத்தின் பாதுகாப்பு குறித்து தற்போது  பரவலான அச்சமும், கடும் கண்டனமும் நிலவி வருகிறது.

]]>
dilip, மலையாள நடிகர் திலீப், குற்றச்சாட்டு மறுப்பு http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/feb/21/நடிகை-பாவனா-கடத்தி-துன்புறுத்தப்-பட்ட-வழக்கில்-மலையாள-நடிகர்-திலீப்புக்கு-தொடர்பு-உண்டா-2653537.html
2739628 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் பாலகங்காதர திலகரின் கொள்ளுப்பேரன் பாலியல் வன்முறை வழக்கில் கைது! RKV DIN Tuesday, July 18, 2017 01:40 PM +0530  

சுதந்திரப் போராட்ட வீரரும், லோகமான்யா என்ற பட்டப் பெயர் கொண்டவருமான பால கங்காதர திலகரின் கொள்ளுப் பேரன் ரோஹித் திலக்கை 40 வயதுப் பெண்மணி ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் கைது செய்திருக்கிறது மகாராஷ்டிர காவல்துறை. ரோஹித் மகாராஷ்டிர காங்கிரஸ் கட்சியில் முக்கிய உறுப்பினராகச் செயல்பட்டு வருபவர். இவரது தாத்தா ஜெயந்த்ராவ் திலக் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவியவர்.

புனேவில் வசித்து வரும் ரோஹித் திலக், தனக்கு முன்பே அறிமுகமானவரான அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். தற்போது இயற்கைக்கு மாறான உறவுக்கு தன்னை வற்புறுத்துவதாகக் கூறி ரோஹித் மீது அப்பெண்மணி புகார் அளித்ததின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளது மகாராஷ்டிர காவல்துறை.

]]>
bal gangadhar thilak, rohith thilak, congress, பால கங்காதர திலகர், ரோஹித் திலக், பாலியல் வன்கொடுமை வழக்கு, rape case http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/18/w600X390/rohith_thilak.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jul/18/bal-gangadhar-thilaks-great-grandson-accused-for-rape-2739628.html
2739612 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் வெங்கய்ய நாயுடு ராஜினாமா செய்த அமைச்சரவைப் பொறுப்புகளை இனி நிர்வகிக்கப் போவது இவர்களே! RKV DIN Tuesday, July 18, 2017 11:55 AM +0530  

துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு, தான் இதுவரை பொறுப்பு வகித்து வந்த பதவிகளான, தகவல் தொடர்பு, ஒளிபரப்புத்துறை அமைச்சர் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆகிய இரண்டு பதவிகளையும் ராஜினாமா செய்துள்ளார். அவரது பொறுப்புகள் முறையே ஸ்மிருதி இரானிக்கும், அமைச்சர் நரேந்திர  தோமருக்கும் பங்கிடப்பட்டு அவர்கள் ஏற்கனவே வகித்து வரும் பொறுப்புகளுடன் கூடுதல் பொறுப்புகளாக வழங்கப் பட்டுள்ளன. முன்னதாக அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஜவுளித்துறை அமைச்சர் பொறுப்பையும், அமைச்சர் நரேந்திர தோமர் சுரங்கத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
வெங்கய்ய நாயுடு , ஸ்மிருதி இரானி,இந்தியா,Venkaiah Naidu,Smriti Irani,India http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/18/w600X390/smriti_irani.gif http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jul/18/smriti-irani-gets-additional-incharge-after-venkaiah-naidu-resigns-2739612.html
2737324 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் ஐஐடி கோச்சிங் செல்ல வற்புறுத்தியதால் 11 வயது மாணவன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை! RKV DIN Friday, July 14, 2017 02:46 PM +0530  

தெலுங்கானா, கரீம் நகரைச் சேர்ந்த 11 வயது மாணவன் ஒருவன், தனது பெற்றோர் ஐஐடி கோச்சிங்கில் சேர தன்னைத் தொடர்ந்து வற்புறுத்தியதில் மனமுடைந்து தான் படித்த பள்ளியின் 2 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அப்பகுதி மக்களை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. கரீம் நகர், சித்தார்த்தா உயர்நிலைப் பள்ளியின் 7 ஆம் வகுப்பு மாணவனான குர்ரம் ஸ்ரீகர் ரெட்டி... தன் விருப்பத்தை மீறி, தனது பெற்றோர் தன்னை தொடர்ந்து வற்புறுத்தி ஐஐடி பயிற்சியில் சேர வற்புறுத்தி வந்ததால் மன உளைச்சல் தாங்காது வியாழனன்று காலையில் இப்படி ஒரு முடிவெடுத்திருக்கிறான். உயிரிழந்த ஸ்ரீகர் ரெட்டி தனது பெற்றோருக்கு ஒரே வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று காலையில், பள்ளி நேரத்தில் தனது சக மாணவர்களுடன் பள்ளியின் 2 வது மாடிக்குச் சென்ற ஸ்ரீகர் ரெட்டி, திடீரென எந்த முன்னறிவிப்பும் இன்றி மாடியிலிருந்து கீழே குதித்து விட்டிருக்கிறான். உடல் முழுதும் கடுமையான காயங்களுடன் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்ததில் அங்கே அவன் இறந்து விட்டதாக அறிவித்திருக்கின்றனர். இதைப் பற்றி அவனது பெற்றோரிடம் பேசுகையில், மகனை இழந்த தீராத சோகத்தில் மூழ்கியிருந்த அவர்கள்... நாங்கள் எங்கள் மகனை நல்ல பள்ளியில் படிக்க வைத்து...அவனது எதிர்காலத்துக்கான சிறப்பான கல்வியை அளிக்க நினைத்ததைத் தவிர நாங்கள் வேறெந்த தவறையும் செய்யவில்லையே என்று மகனது நினைவில் மறுகுகின்றனர். மகனை இழந்து துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்கள் மேற்கொண்டு எதுவும் பேசும் நிலையில் இல்லை.

சில சமயங்களில் பெற்றோர்களின் பெருங்கனவுகளை பிள்ளைகளால் ஈடு செய்ய முடியாமலாகும் போது, அவர்கள் அந்தக் கனவுகளை தங்களது பிள்ளைகளின் உணர்வறிந்து மறுதலிக்கலாம். இல்லாத பட்சத்தில் இப்படித்தான் பிள்ளைகளை இழக்க நேரிடும். இதற்கு பல உதாரணங்களை கடந்த காலங்களில் நாம் கண்டிருந்த போதிலும் மீண்டும், மீண்டும் விரும்பாத கல்விப் பிரிவை தமது பிள்ளைகளிடம் திணிப்பதன் மூலம் மேலும் இம்மாதிரியான மரணங்கள் சம்பவிக்க காரணமானவர்களாக ஆகிப் போகும் பெற்றோரை என்ன சொல்ல?!

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/14/w600X390/IIT_NEWS.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jul/14/11-year-old-commited-suicide-after-parents-send-him-for-iit-coaching-2737324.html
2736178 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் பெங்களூரில் 3 குழந்தைகளுக்கு இழந்த குடும்பத்தை மீட்டுக் கொடுத்தது ஆதார் அட்டை! RKV DIN Wednesday, July 12, 2017 04:45 PM +0530  

நேற்றைய நாள் பெங்களூரு அரசுக் காப்பகத்தில் இருந்த அந்த மூன்று குழந்தைகளுக்கும் தங்களது வாழ்வில் மறக்க முடியாத பொன்னாள் ஆகியது. இந்த மூவருமே அறிவுத்திறன் மற்றும் மூளை வளர்ச்சிக் குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகள் உடைய குழந்தைகள். இவர்கள் மூவரும் ஓசூர் சாலையில் உள்ள அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் பல ஆண்டுகளாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

மோனு, ஓம்பிரகாஷ், மற்றும் நீலகண்டா எனும் அந்த மூன்று குழந்தைகளும் தங்களது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து  பல ஆண்டுகளுக்கு முன்பே வெவ்வேறு விதமான காரணங்களுக்காக பிரிய நேர்ந்து பல விதமான சந்தர்பங்களில் தனித்தனியாக கண்டுபிடிக்கப் பட்டு இந்த காப்பகத்தில் ஒப்படைக்கப் பட்டவர்கள். இவர்கள் ஒப்படைக்கப் பட்ட அந்த அரசு காப்பகத்தில் சமீபத்தில் அங்கிருந்த குழந்தைகளுக்கான ஆதார் அடையாள எண் பதிவு நடத்தப் பட்டது. அப்போது இந்த மூன்று குழந்தைகளின் பயொமெட்ரிகள் அடையாளங்கள் அதாவது கண் கருவிழி மற்றும் கை ரேகை அடையாளங்கள் வேறு மாநில குழந்தைகளுடன் ஒத்துப் போகவே இவர்களது ஆதார் பதிவு நிராகரிக்கப் பட்டது. ஆனால் இவர்களது பதிவுகள் ஒத்துப் போன இடங்களில் உள்ள முகவரிகளை ஆராய்ந்ததில் அங்கிருந்த பெற்றோர் குறிப்பிட்ட ஆதார் எண்களுக்கு உரியவர்களான தங்களது குழந்தைகள் நெடுங்காலமாகக் காணவில்லை என்று புகார் அளித்திருந்தமை கண்டுபிடிக்கப் பட்டது. அதையொட்டி அறிவு சார் மூளைத்திறன் வளர்ச்சி குறைந்த மேற்கண்ட மூன்று குழந்தைகளும் அவர்களது பயோமெட்ரிகள் ஆதார் அடையாளங்கள் கண்டறியப்பட்ட முகவரிகளில் இருந்த அவரவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்டனர். உண்மையில் இந்திய அரசு ஆதார் அடையாள எண் என ஒன்றை நடைமுறைப்படுத்தியதற்காக பெருமை கொள்ள வேண்டிய தினமாக நேற்றைய தினம் அமைந்தது என்றால் அது மிகையில்லை.

இதே விதமாக இவர்களைப் போலவே பல்வேறு காரணங்களை முன்னிட்டு காணாமல் போன குழந்தைகளுடன் ஒத்துப் போகக் கூடிய ஆதார் அடையாளங்களை மையமாக வைத்து கடத்தப் பட்டு பிச்சையெடுத்தல், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட அபாயகரமான வேலைகளுக்கு உட்படுத்தப் படும் குழந்தைகளையும் நம்மால் எளிதில் கண்டுபிடித்து விட முடியும் என்கிறார்கள் பெங்களூரு காவல்துறையினர். நாடு முழுதும் ஆதார் நடைமுறைப் படுத்தப்பட்டதனால் உண்டான பலன் இது!

]]>
AADHAR CARD, REUNITE 3 KIDS WITH FAMILY, ஆதார் அடையாள அட்டை, பெங்களூரு, குடும்பத்தை மீட்டுக் கொடுத்தது, மூன்று குழந்தைகள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/12/w600X390/000kids_adhar_biometric.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jul/12/aadhaar-helps-three-kids-unite-with-family-2736178.html
2736146 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் 20 வருடங்களாக வீட்டுக்குள் சிறை வைக்கப் பட்ட பெண் மீட்பு! கார்த்திகா வாசுதேவன் DIN Wednesday, July 12, 2017 02:06 PM +0530  

கோவாவில் 20 வருடங்களாக வெளி உலகத் தொடர்பே இல்லாமல் வீட்டுக்குள் சிறை வைக்கப் பட்டிருந்த பெண்மணி ஒருவர் இன்று காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளார். தனியார் பெண்கள் பாதுகாப்பு மற்றும் உரிமைக்கான சேவை அமைப்பு ஒன்றின் முயற்சியால் மட்டுமே இது சாத்தியமாகி இருக்கிறது. கோவா பீச் ரிசார்ட்டுக்கு வெகு அருகிலிருக்கும் கிராமப் பகுதியான கண்டோலிமில் தான் இப்படி ஒரு சம்பவம் 20 ஆண்டுகளாக நிகழ்ந்து கொண்டிருந்திருக்கிறது. ஆனால் இது குறித்த புகார்கள் எதுவும் இதுவரை தங்களுக்கு வந்ததில்லை என கோவா காவல்துறை தெரிவித்திருக்கிறது. தினம் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் கோவா கடற்கரை கிராமம் ஒன்றில் 20 வருடங்களாக ஒரே அறைக்குள் பெண் ஒருவர் சிறைவைக்கப் பட்ட விதம் கடும் கண்டனத்திற்குரியதாகக் கருதப் பட்டாலும், இதன் பின்னணியை ஆராயும் போது மனிதர்களை மிருகங்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும் விசயங்களில் முக்கியமானதாகக் கருதப் படும் மனிதாபிமானத்தின் மீது தான் சந்தேகம் எழுகிறது. மனிதாபிமானம் என்ற ஒரு விசயமே இன்றைய குடும்ப அமைப்பில் இல்லாமல் போய் விட்டதோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.

மீட்கப் பட்ட அந்தப் பெண்மணி 20 வருடங்களுக்கு முன்பு தமது குடும்பத்தாரால் மும்பையைச் சேர்ந்த  நபர் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்கப் பட்டவர். அந்தத் திருமண உறவு நிலைக்கவில்லை.  தன் கணவருக்கு தன்னைத் திருமணம் செய்யும் முன்பே ஒரு வாழ்க்கை இருந்திருக்கிறது. அதில் மனைவி என்றொரு நபர் இருந்திருக்கிறார். தான் இரண்டாம் மனைவி அல்லது இரண்டாம் பட்சமான உறவு மட்டுமே எனத் தெரியவந்த நிலையில் அந்தப் பெண்மணி தனது கணவரிடம் கோபித்துக் கொண்டும், உறவை முறித்துக் கொண்டும் மீண்டும் தாய்வீட்டுக்குத் திரும்பி விட்டார். திரும்பியவருக்கு கடும் மன உளைச்சல் காரணமாக அப்நார்மல் பிகேவியர் (நடத்தைக் கோளாறு) இருந்திருக்கிறது. இதன் காரணமாக அவரது மூர்க்கமான, வித்யாசமான நடவடிக்கைகள் கண்டு பயந்த அவரது உடன்பிறந்தவர்கள் அப்பெண்ணை தங்களது பூர்வீக வீட்டின் ஓர் அறைக்குள் போட்டுப் பூட்டி வைத்திருக்கிறார்கள். உணவோ, தண்ணீரோ எல்லாமே ஒரு ஒரு சின்ன ஜன்னல் திறப்பினூடாக மட்டுமே என்று நாட்களைக் கடத்தி இருக்கிறார்கள். இப்படி கடந்த 20 வருடங்களாக அந்தப் பெண்ணுக்கும், வெளி உலகத்துக்குமான தொடர்பென்பது இந்த சிறு ஜன்னல் திறப்பின் வழியாக மட்டுமே என்றிருந்திருக்கிறது. இதை அறிந்த பெண்கள் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்று இவ்விசயத்தை காவல்துறையின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல தற்போது அந்தப் பெண் மீட்கப் பட்டு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

இதில் சோகமான விசயம் என்னவெனில்; தமது குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு இப்படியாகி விட்டால், முதலில் அவர்களுக்கு அளிக்கப் பட வேண்டியது மருத்துவ சிகிச்சையும் அதன் பின்னர் குடும்பத்தினரின் அரவணைப்புமே என்பது ஏன் பெரும்பாலானோருக்குத் தெரிவதே இல்லை. காரணம் தான், தன் மனைவி, தன் மக்கள் என்று சுருங்கி விட்ட சுயநல மனப்பான்மை தானே! இந்தப் பெண் விசயத்திலும் அதுவே தான் நடந்திருக்கிறது. உடன் பிறந்தோர் இவர் விசயத்தில் தனிக் கவனம் செலுத்த விரும்பவில்லை விரும்பவில்லை. உடன்பிறந்த குற்றத்திற்கு உணவும், தண்ணீரும் அளித்து ஒரு அறைக்குள் பாதுகாப்பாக சிறை வைத்திருந்தால் போதுமென தீர்மானித்து விட்டார்கள். கணவரைப் பிரிந்து வந்த நிலையில் மீண்டும் அவருக்கென பாதுகாப்பாக ஒரு வாழ்க்கை அமைத்துக் கொடுப்பதற்கான முனைப்போ அல்லது அவரது மனப்பிரச்னைகளைத் தீர்த்து அவரை இயல்பானவராக மாற்றும் ஆறுதலான நோக்கமோ எதுவுமே அவர்களிடத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. கோவாவில் மீட்கப் பட்ட பெண்ணுக்கு மட்டுமே இப்படி நிகழ்ந்ததென்று கூற முடியாது. இந்தியாவெங்கும் கிராமங்கள் தோறும் இப்படியான பெண்கள் நிறைந்திருக்கிறார்கள்.

அவர்களது முதல் தேவை உணவோ, தண்ணீரோ அல்ல... அதை விட முக்கியமான மனநல சிகிச்சை! அது குடும்பத்தாரால் உணரப் பட்டால் மட்டுமே இப்படியானவர்களுக்கு நிரந்தர விடுதலை கிடைக்க முடியும்.
 

]]>
கோவா, 20 வருட தனிமைச் சிறை, பெண் மீட்பு, goa, women rescued from dark room, women in dark room for 20 years http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/12/w600X390/000goa_incidant.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jul/12/woman-locked-in-darkroom-for-the-last-20-years-rescued-in-goa-2736146.html
2734872 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் அமெரிக்காவின் MIT யில் பயில இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள ஒரே ஒரு மாணவி! RKV DIN Monday, July 10, 2017 06:17 PM +0530  

அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான மாஸாசூஸெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் பயில இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டுமே அனுமதி கிடைத்திருக்கிறது. அந்தப் பெண்ணின் பெயர் காவேரி நாதமுனி. 17 வயது காவேரி  பெங்களூரு சர்வ தேசப் பள்ளி மாணவி. மொத்த இந்தியாவிலும் ஒற்றாஇ நபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் இந்தப் பெருமை குறித்து காவேரியிடம் பேசுகையில், பாஸ்டனில் இயங்கும் MIT தொழில்நுட்பக் கல்லூரியில் கணினிப் பாடப் பிரிவில் சேர்ந்து பயில தனக்கு அட்மிஸன் கிடைத்திருப்பதாகவும், கல்லூரியில் சேர ஆகஸ்ட் மாதம் தான் அங்கே செல்லவிருப்பதாகவும் கூறினார். பெங்களூரு சர்வதேசப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தவரான காவேரி கடந்த வாரத்தில் தான், 12 ஆம் வகுப்புகளுக்காக நடத்தப் படும் சர்வதேசப் பள்ளிகளுக்கான IB போர்டு தேர்வில் 45 மதிப்பெண்களுக்கு 44 மதிப்பெண்கள் என உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்றுத் தேறினார்.

தனது பள்ளிப் படிப்பு மற்றும் மதிப்பெண் விகிதங்களில் தான் பெற்று வந்த தொடர் வெற்றிகளே உலக அளவில் சிறந்த இத்தனை பாரம்பரியம் வாய்ந்த ஒரு கல்வி நிறுவனத்தில் தனக்கான இடத்தை உறுதி செய்ததில் முக்கியப் பங்காற்றியதாக காவேரி தெரிவித்தார்.

மகளின் இந்தப் பெருமைக்குரிய சாதனையைப் பற்றிப் பேசும் போது காவேரியின் அப்பா ஸ்ரீகாந்த் நாதமுனி சொன்னதாவது; காவேரிக்கு சிறு வயதிலிருந்தே எதையும் பகுப்பாய்ந்து தெளிவடையும் மனது இருப்பதால் அவரது இந்த வெற்றி குறித்து நாங்கள் முன்னரே அனுமானித்திருந்தோம். டேட்டா சயின்ஸ் பாடப்பிரிவில் அவருக்கிருக்கும் ஆர்வம் அவரை உலகின் பல முக்கியமான புராஜெக்டுகளில் கைகோர்க்க வைக்கலாம். காவேரி நிச்சயமாக நிறையச் சாதிப்பார் என்று நாங்கள் நம்புகிறோம் என்றால். படிப்பு மட்டுமல்ல பெண்ணுக்கு இசையிலும் நிறைய ஆர்வம் உண்டாம். 4 வயதிலிருந்து தன்னுடைய பாட்டியிடமிருந்து கர்நாடக இசை கற்று வருகிறாராம் காவேரி. படிப்பு, படிப்புக்கு நடுவில் பாட்டு, பாட்டுக்குப் பிறகு தனது புதிய புராஜெக்டுகள் என காவேரி எப்போதும் செம பிஸி!

அமெரிக்காவின் புதிய அதிபராக ட்ரம்ப் வந்த பிறகு இந்தியா மற்றும் அயல்நாடுகளில் இருந்து அமெரிக்க கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களில் பயில விண்ணப்பிக்கும் மாணவர்களில் பலருக்கு கல்விக்கான விசா கிடைப்பதில்லை. அதற்கு காரணம் ட்ரம்ப்பின் H- 1B விசா நடைமுறைக் கட்டுப்பாடுகளே! இச்சூழலில் இந்தியாவைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கும் அமெரிக்காவின் புகழ் வாய்ந்த கல்வி நிறுவனம் ஒன்றில் பயில அனுமதி கிடைத்திருப்பதற்காக அந்த மாணவியை எத்தனை பாராட்டினாலும் தகும்!

]]>
KAVERI NADHAMUNI, MIT ADMISSION, US, காவேரி நாதமுனி, எம்ஐடி, அமெரிக்கா, பெங்களூரு, சர்வ தேசப் பள்ளி மாணவி, எம் ஐ டியின் ஒரே இந்தியப் பெண் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/10/w600X390/kaveri_nadhamuni.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jul/10/bengaluru-girl-only-indian-to-get-into-mit-2734872.html
2733511 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் படுக்கை அறையில் ரகசிய கேமரா: திருமண தகவல் மைய உரிமையாளர் கைது DIN DIN Saturday, July 8, 2017 11:29 AM +0530  

சென்னை வளசரவாக்கத்தில் கணவர், மனைவி படுக்கை அறையில் ரகசிய கேமிரா வைத்திருந்த திருமண தகவல் மைய உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் சிவபாலன் கதிரேசன் (49). இவர் வளசரவாக்கத்தில் திருமண தகவல் மையம் நடத்தி வருகிறார். இங்கு, தஞ்சாவூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம், அவரது மனைவி மோகனப்பிரியா இருவரும் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தனர். இவர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்காமல் கதிரேசன் இழுத்தடித்து வந்தாராம்.
இந்நிலையில் அண்மையில் இருவரும் ஊதியம் கேட்டபோது, கதிரேசன் அவர்களது படுக்கை அறையில் ரகசிய கேமிரா பொருத்தியிருப்பதாகவும், அதில் இருவரின் அந்தரங்க காட்சிகள் இருப்பதாகவும், ஊதியம் கேட்டால் அதை இணையதளத்தில் வெளியிடுவேன் எனவும் மிரட்டினாராம்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மோகனப்பிரியா, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்தனர். விசாரணையில், படுக்கை அறையில் ரகசிய கேமரா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் கதிரேசன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

 

]]>
hidden camera, matrimonial broker arrested, bedroom, employees, சென்னை தனியார் திருமணத் தகவல் மைய தரகர், படுக்கை அறையில் ரகசிய கேமரா, புரோக்கர் கைது, சென்னை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/8/w600X390/hidden_cameraaa.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jul/08/படுக்கை-அறையில்-ரகசிய-கேமரா-திருமண-தகவல்-மைய-உரிமையாளர்-கைது-2733511.html
2732272 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் சமூக ஊடகங்களில் பரவிய புகைப்படம் மூலம் பாஜக தலைவர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது! RKV IANS Wednesday, July 5, 2017 01:03 PM +0530  

மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான ரவீந்திர பவன்தடே, கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி, தான் பயணித்த தனியார் சொகுசுப் பேருந்தில் செய்துள்ள அராஜகமான காரியமொன்று புகைப்பட ஆவணத்துடன் சமூக ஊடகங்களில் பலமுறை பகிரப்பட்டு அதன் மூலம் அவருக்கு தண்டனையைப் பெற்றுத் தந்துள்ளது.

கடந்த ஜூன் 27 ஆம் தேதி தனது பேருந்துப் பயணத்தின் போது ரவீந்திர பவன் தடே தன்னருகில் அமர்ந்திருந்தவரான சக பெண் பயணி ஒருவரை வலிந்து முத்தமிட்டு பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறார். இந்தச் சம்பவம் புகைப்படமாகி சமூக ஊடகங்களில் பயணிக்கத் தொடங்கியது. இந்தப் புகைப்படத்தைக் கண்ட பலதரப்பட்ட மக்களும் அமைச்சரின் இந்த அராஜகச் செயல் கண்டு கொதித்தெழுந்து தங்களது கண்டனத்தைப் பதிவு செய்யத் தொடங்க, தற்போது ரவீந்திரா பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சர் இத்தகைய பலாத்காரச் செயலில் ஈடுபட்டார் என்பதற்கு பேருந்தில் இருந்த பிற பயணிகள் சாட்சியம் அளித்துள்ளனர். அவ்வகையில் சமூக ஊடகத்தில் பகிரப் பட்ட புகைப்படம் ஆவணமாகி தவறு செய்த பாஜக தலைவருக்குத் தண்டனை பெற்றுத் தந்துள்ளமை பாராட்டப் பட வேண்டிய விசயமே!

 

Image courtsy: NDTV

]]>
BJP LEADER AREESTED, RAVINDRA BAVANTHADE, RAPE CASE, PRIVATE BUS, KISSING CO PASSENGER, பாஜக தலைவர், மஹாராஷ்டிரா, பாலியல் பலாத்கார வழக்கில் கைது, ரவீந்திர பவன் தடே, சக பெண் பயணி, தனியார் பேருந்து, சமூக ஊடகம், புகைப்படம், photo, social media http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/5/w600X390/000_maharashtra_minister.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jul/05/maharashtra-bjp-leader-filmed-kissing-woman-in-bus-arrested-for-rape-2732272.html
2732260 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் இதுவரை வெளிவராத காந்தி கடிதங்கள் மூலமாகவாவது நேதாஜி மரண மர்மம் விலகுமா? கார்த்திகா வாசுதேவன் IANS Wednesday, July 5, 2017 12:22 PM +0530  

1931 ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள காந்திஜி லண்டன் சென்றார். அப்போது அங்கே வைத்து ஜான் ஹென்றி எனும் ஓவியர் காந்தியை பென்சில் ஓவியம் வரைந்தார்.

இந்த ஓவியம் அந்நாளில் கிங்ஸ்லி ஹால் அலுவலகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்த லண்டன்வாசி ஒருவருக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டிருந்தது. ஆழ்ந்த சிந்தனையுடன் காந்திஜி தரையில் அமர்ந்து கொண்டு எழுதுவது போல வரையப் பட்டுள்ள இந்த பென்சில் சித்திரத்தின் அடியில் ஜான் ஹென்றி... வரையப்பட்ட நாள், தேதி, ஆண்டுடன்

“Truth is God / MK Gandhi / 4.12.'31."

என்றவாசகங்களைப் பொறித்திருந்தார். 

இந்த ஓவியம் மட்டுமல்ல, இதனோடு இணைந்து 1940 ஆம் ஆண்டு வாக்கில் காந்திஜி தமது கையால் சரத் சந்திர போஸுக்கு எழுதிய சில கடிதங்களும் கூட லண்டன் மாநகரின் சோத்பிஸில் ஜூலை 11 ஆம் நாள் அன்று விற்பனைக்கு வைக்கப்பட உள்ளனவாம். இந்திய சுதந்திரம் அறிவிக்கப்படுவதற்கு முன்னான கடைசி சில மாதங்களில் தாம் அனுபவித்த அரசியல் நெருக்கடி நிலைமைகளைக் கொட்டி காந்தி சரத் சந்திர போஸுக்கு எழுதிய அக்கடிதங்கள் அன்றைய அரசியல் உண்மை நிலையை அறிய உதவலாம். இந்தக் கடிதங்கள் இதற்கு முன்பு இந்தியாவில் எங்கும் வெளியிடப்படாதவை என்ற சிறப்புடையவை என்பதால், காந்தி அப்படி என்ன விதமான அரசியல் நெருக்கடி நிலைகளை போஸிடம் பகிர்ந்து கொண்டிருப்பார் என்றறிந்து கொள்ளும் ஆர்வத்தை இக்கடிதங்கள் தூண்டுகின்றன.

அதோடு இக்கடிதங்களில் பலவும், சரத் சந்திர போஸ் குடும்பத்தினருடன் காந்திஜி கடைசிவரை பேணி வந்த ஆழ்ந்த நட்பையும் வெளிக்காட்டுகின்றன. சரத் சந்திர போஸ் மறைந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சகோதரர் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கக் கூடிய செய்தியே! 

சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்து, மோடி இந்தியப் பிரதமர் ஆவதற்கு முன்னும், பின்னுமாக பல விதமான விமர்சனங்களும், சர்ச்சைகளும் நிலவி வருகின்றன... ஆயினும் அதைப் பற்றிய தெளிவான ஒரு முடிவுக்கு வர முடியாத நிலையே இன்றும் நிலவுகிறது. காரணம் போதிய ஆவணங்கள் இல்லாத நிலையே!

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு என்பது ஒரு சில குடும்பங்கள் செய்த தியாகத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்ததாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இன்றைய இந்தியப் பிரபலங்களான அந்தக் குடும்பத்து நபர்களைத் தவிரவும் இந்திய விடுதலைக்காக ரத்தம் சிந்தியவர்கள், சிறைச்சாலைகளில் வாடி வதங்கியவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் உள்ளனர். அத்தகைய சுதந்திரப் போராட்ட வீரர்கள் அனைவரது வாழ்க்கைக் கதையும் வெளிக்கொண்டு வரப்பட்டு இந்திய சுதந்திர வரலாற்றில் சேர்க்கப் பட வேண்டும் என பாரதப் பிரதமர் மோடி சமீபத்தில் ஒரிஸ்ஸாவில் நடைபெற்ற தேச விடுதலை வீரர்களது வாரிசுகளுக்கு விருதளிக்கும் விழாவில் பேசி இருந்தார். அதையொட்டி காந்திஜியின் வெளியிடப்படாத கடிதங்களும் கிடைக்குமாயின் உண்மையில் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக தம் இன்னுயிரை ஈந்த மறைக்கப் பட்ட தலைவர்களது வரலாற்றையும் நாம் அறிந்து கொள்ள வகை ஏற்படலாம். ஆனால் அது நடக்குமா? இல்லையா? என்பதற்கான உத்தரவாதம் மட்டும் எப்போதும்  ஆட்சியாளர்கள் கையில் தான் உள்ளது. அவர்களே வரலாற்றை உருவாக்குபவர்களாக இருப்பதால் தான் இந்த நிலை!

]]>
gandhi, london round table conferance, rare portrait, letters to sarath chandra bose, nedhaji subash chandra bose death secret, நேதாஜி மரண மர்மம், காந்திஜி கடிதங்கள், சரத் சந்திர போஸ், காந்தியின் அரிய ஓவியம், பென்சில் ஓவியம், ஜான் ஹென்றி, லண்டன் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/5/w600X390/0000_gandhi__bose.gif http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jul/05/rare-portrait-unpublished-letters-of-gandhi-on-sale-is-these-letters-can-reveal-subash-chandra-bose-death-secracy-2732260.html
2731630 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் இந்த 12 வயதுச் சிறுவனுக்கு இருக்கும் அக்கறையில் கொஞ்சமாவது நமக்கிருக்கிறதா?! கார்த்திகா வாசுதேவன் DIN Tuesday, July 4, 2017 05:10 PM +0530  

இதோ, அதோ என்று போக்குக் காட்டிக் கொண்டிருந்த மழைக்காலம் ஒரு வழியாக வந்தே விட்டது. இனி தினமும் மழை பெய்யலாம்...அல்லது ஒன்றிரண்டாகப் பெய்தும் கெடுக்கலாம் அதுவல்ல விசயம். வெறும் அரைமணி நேர மழைக்கே அசந்து போய் தங்களது உருவிழந்து, பொலிவிழந்து பல் இளிக்கும் நமது நகரங்களின் சாலைகள் தான் இப்போதையை முக்கியமான பேசுபொருள்.

யோசித்துப் பாருங்கள்... ஒரு மழை ஓய்ந்த மறுநாள் காலையின் சாலைத் தோற்றத்தை. எங்கே பார்த்தாலும் குண்டும், குழியுமாக சென்னைச் சாலைகளின் பிச்சைப் பாத்திர தோற்றத்தை நினைத்தால் வாகன ஓட்டிகளுக்கு இனிமேல் மழைக்காலம் முடியும் மட்டும் அனுதினமும் அடிவயிற்றுக் கலக்கம் தான். இதில் புதிதாகத் தோண்டப்பட்டு அவசர கதியில் காங்கிரீட் போட்டு மூடப்படும் யானைப் பள்ளங்களின் கதியை நினைத்துப் பாருங்கள். நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் வாகனப் பெருக்கத்தை யோசித்தால் புதிதாகப் போடப்பட்ட சாலைகளின் தரம் குறித்து அச்சமாகத் தான் இருக்கிறது.

தினமும் அலுவலகம் வரும் போது கவனித்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கிய மழை நீர் வடிகால் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகளுக்காக தோண்டப்பட்டு... செப்பனிடல் முடிந்ததும் காங்கிரீட் போட்டு மூடப்பட்டுக் கொண்டிருக்கும் நகரத்தின் பள்ளங்களின் மேலுள்ள சாக்கடை மூடிகளில் சில வாகன ஓட்டிகளால் ஏற்கனவே பழுது பட்டு ஆங்காங்கே சிதிலமாகத் தொடங்கி விட்டன. சில இடங்களில் உடைந்து, கம்பிகள் வெளியில் நீட்டிக் கொண்டிருக்கும் பாதாளச் சாக்கடை மூடிகளின் தரிசனம் கிடைக்கிறது.

இன்னும் சில இடங்களில், குறிப்பாக அபார்ட்மெண்டுகள் கட்டும் இடங்களை ஒட்டி திறக்கப் பட்டுள்ள கழிவு நீர் பள்ளங்களுக்கு மூடிகளே கிடையாது. அவை திறந்த நிலையில் அப்படியே விடப்பட்டுள்ளன. இரண்டு, மூன்று நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால் இந்தப் பள்ளங்களில் நிரம்பும் மழை நீரால் அவை இருக்கும் இடமே நமக்குத் தெரியப் போவதில்லை. அறிமுகமில்லாத சாலைகளில் பயணிக்கும் எத்தனை வாகன ஓட்டிகளை இத்தகைய பள்ளங்கள் எப்படியெல்லாம் விழத்தட்டுமோ என்று யோசிக்கும் போது பீதியாகத் தான் இருக்கிறது. 

2015 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரக் கணக்கீட்டின் படி 10,727 மரணங்கள் இம்மாதிரியான திறந்திருந்த பாதாளச் சாக்கடைகள், வேகத்தடைகள் மற்றூம் ஒழுங்கற்ற சாலைகள் உள்ளிட்ட காரணங்களால் நிகழ்ந்திருக்கின்றன. இன்னும் துல்லியமாகக் கூற வேண்டுமானால் 3, 416 மரணங்களுக்கான காரணம் திறந்திருக்கும் பாதாளச் சாக்கடை மூடிகளால் நிகழ்ந்திருக்கின்றன. இதுவே மரண எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டில் 3,039 ஆக இருந்திருக்கிறது. ஆண்டு தோறும் எண்ணிக்கைகள் கூடிக் கொண்டிருக்கின்றனவே தவிர குறையக் காணோம்.

இதற்கெல்லாம் என்ன தான் தீர்வு?!

இதோ இந்தப் 12 வயதுச் சிறுவன் நமக்கொரு தீர்வைச் சொல்கிறான். இதில் நாம் செய்வதற்கு உரித்தான ஒன்று அவனைப் பின்பற்றுவது ஒன்று மட்டுமே!

தற்போது 6 ஆம் வகுப்பு மாணவனான ரவி என்ற அந்தச் சிறுவன் ஹைதராபாத்தின் ஹப்சிகுடா பகுதியில் இப்படி திறந்திருந்த பாதாளச் சாக்கடை காரணமாக நேர்ந்த ஒரு விபத்தை நேரில் கண்டதிலிருந்து எங்கே அப்படியான மோசமான திறப்புகளைக் கண்டாலும்... அரசாங்கத்தையோ, அதிகாரிகளையோ நம்பாமல் தானே முன் வந்து அவற்றைச் சரி செய்ய முயல்கிறான்.

கட்டுமானப் பணியாளரான சூர்யநாராயண மற்றும் இல்லத்தரசி நாகமணி இருவரின் மகனான இந்த ரவி இந்த வேலையைச் செய்வதற்காக யாருடைய உதவியையும் எதிர்பார்ப்பதில்லை. முதலில் தன் கண்ணில் பட்ட சாலைப் பள்ளங்களை மட்டுமே மூடிக் கொண்டிருந்த ரவி இப்போது தான் வசிக்கும் இடத்தைச் சுற்றியுள்ள இப்படியான திறப்புகளை எல்லாம் மூடுவதில் முனைந்திருக்கிறான். இந்த வேலையைச் செய்யச் சொல்லி அவனை யாரும் நிர்பந்திக்கவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திர கிராமமொன்றில் ஆழ்துளைக் குழாய்க்குள் சிக்கி உயிரிழந்த 6 மாதக் குழந்தையை தொலைக்காட்சிகளில் கண்ட பிறகு ரவியின் பொறுப்புணர்வும், கவலையும் மேலும் கூடிவிட்டது. தற்போது சாலைப் பள்ளங்கள், பாதாளச் சாக்கடைகள் மற்றும் கை விடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் என மனிதர்களுக்கும், அறியாச் சிறுவர்களுக்கும் ஊறு விளைவிக்கக் கூடிய அனைத்து விதமான பள்ளங்களையும் அடைத்து விடும் மனநிலையில் தொடர்ந்து வார இறுதிகளில் ரவி வேலை செய்து கொண்டிருக்கிறான்.

அரசுப் பள்ளி மாணவனான ரவியின் இச்செயல் அந்தப் பகுதி மக்களின் கவனத்தைக் கவரவே, இப்போது ரவி அந்தப் பகுதியில் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆகி விட்டான். பள்ளங்களை அடைக்கத் தேவையான சிமெண்ட், கற்கள், ஜல்லிகள், பலகைகள் முதலானவற்றைச் சேகரிப்பது, கூடவே தனது வீட்டுப் பாடங்களையும் முடிப்பது என தனது சேவைப் பணிக்காக ரவி மிகக் கடுமையாகவே உழைக்கிறான்.

யாரைப் பார்த்து நீ இதையெல்லாம் செய்யக் கற்றுக் கொண்டாய் என்ற கேள்விக்கு மட்டும் எப்போதும் தவறாமல் ஒரே பதிலையே கூறிக் கொண்டிருக்கிறான். அந்தப் பதில்;

“நான் யாரைப் பார்த்தும் இதைச் செய்யவில்லை, நானாகத்தான் கற்றுக் கொண்டு செய்கிறேன்... தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன்” என்கிறான்.

நாமும் ரவியைப் பின்பற்றி நம் கண்ணில் படும் பள்ளங்களையும், பாதாளச் சாக்கடைகளையும் செப்பனிட வேண்டியது தான்.

]]>
ravi, potholes, real social service, ரவி, சாலைப்பள்ளங்கள், உண்மையான சமூக சேவை, மழைக்கால சென்னை சாலைகள், damaged roads in chennai at rainy season http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/4/w600X390/000pot_holes.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jul/04/why-this-12-year-boy-filling-potholes-of-roads-2731630.html
2731613 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் மந்திரம் ஓதி குளத்து ஆவியை விரட்டினால் நீரில் மூழ்கிய குழந்தை பிழைத்து விடுமா? கார்த்திகா வாசுதேவன் DIN Tuesday, July 4, 2017 01:06 PM +0530  

மேற்கு வங்க மாநிலம் சுந்தர வனப்பகுதியைச் சேர்ந்த கிராமத்தில் 3 வயதுக் குழந்தை ஒன்று நேற்று பிற்பகலில் காணாமல் போனது. ஊரெல்லாம் குழந்தையைத் தேடிய பெற்றோர் மற்றும் கிராம மக்கள் கடைசியாக குழந்தையை மூழ்கிய நிலையில் அவளது வீட்டின் பின்புறமிருந்த குளத்தில் இருந்து கண்டெடுத்தனர். குழந்தையிடம் எந்த அசைவுகளுமில்லாத நிலையிருந்தும் குழந்தை அப்போது உயிருடன் தான் இருந்ததென கிராம மக்களில் சிலர் தெரிவித்துள்ளனர். அப்படி குளத்தில் இருந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்ட குழந்தையை உடனடியாக கிராமத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு ஓடி காப்பாற்றுவதை விட்டு விட்டு அடுத்ததாக அந்த கிராம மக்களும், அந்தக் குழந்தையின் உறவினர்களும் செய்த செயல் அறியாமை மற்றும் மூடநம்பிக்கையின் உச்சம்.

குழந்தையைத் தனது புஜங்களில் தூக்கி அமர வைத்துக் கொண்ட அதன் உறவினர் ஒருவர் மீண்டும் அந்தக் குளத்துக்குள் இறங்கி குழந்தையோடு நீரில் மூழ்கியுள்ளார். அப்போது அவரைச் சுற்றியிருந்த உறவினர்களும், கிராம மக்களும் ஏதோ மந்திர உச்சாடனம் செய்து குளத்து நீரை கையால் அடித்து தள்ளிக் கொண்டிருந்தனர். இது தொன்று தொட்டு குளத்தில் மூழ்கியவர்களைக் காப்பாற்ற அவர்களது கிராமத்தினர் பின்பற்றும் முறையாம். இப்படிச் செய்வதால் குழந்தையை குளத்தில் மூழ்கடித்ததாக நம்பப்படும் குளத்து ஆவி ஓடி விடுமாம். இப்படித் தான் சொல்கிறார்கள் அந்த கிராமத்தினர். 

குழந்தையின் உறவினர்கள் இந்த சடங்குகளை எல்லாம் முடித்து விட்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓட அங்கே மருத்துவர்கள், குழந்தை இறந்து விட்டது என அறிவித்திருக்கிறார்கள். இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அக்கிராமத்து பள்ளி மாணவியொருத்தி;
“ உண்மையில் குழந்தையைப் பலி கொண்டது குளத்து ஆவி அல்ல; எங்கள் ஊர் மக்களின் அறியாமையும், மூட நம்பிக்கையும் தான்”

எனக் கூறி இருக்கிறார். இந்தியாவில் பூரண கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் சிலவற்றுள் முதன்மையானதாகக் கருதப் படும் மேற்கு வங்கத்தில் இன்னமும் இப்படியான மூடநம்பிக்கைகள் வலுவுடன் இருப்பதும் அது ஒரு குழந்தையின் உயிரைப் பலி கொள்வதும் மிகுந்த துக்கத்தைத் தருகிறது.

இதைப் பற்றி அந்தக் கிராமத்து மக்களிடம் கேட்டால், “குழந்தை இறந்தது குறித்து எங்களுக்கும் துக்கமாகத் தான் இருக்கிறது. ஆனால் நாங்கள் எங்களது மூத்தோரும், முன்னோரும் செய்த சடங்கு முறைகளைத் தானே பின்பற்றினோம்... இதில் எங்களது தவறென்ன? என்று பதில் வருகிறது. ஒரு பக்கம் டிஜிட்டல் இந்தியாவுக்காகப் போராடும் பாரதப் பிரதமர் மோடி அவர்களே உங்களது வேலையோடு வேலையாக...முதலில் நமது இந்தியப் பெருநாட்டில் நிலவி வரும் மூடநம்பிக்கைகளைப் பற்றிய பட்டியல் ஒன்றையும் தயாரித்து அதையும் வேரோடு களைய முற்படுங்கள்.
 

Image courtsy: NDTV

]]>
west bengal, 3 years girl, drown in pond, villagers perform rituals, மேற்கு வங்கம், 3 வயதுப் பெண்குழந்தை மரணம், மூடநம்பிக்கை, சடங்குகள், மருத்துவம், ignorance http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/4/w600X390/west_bengal_girl.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jul/04/girl-drowning-in-pond--villagers-performing-rituals-instead-of-giving-her-treatment-2731613.html
2731608 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் காட்டுக்குள் இரை தேட வேண்டிய சிறுத்தை மின்சாரக் கம்பத்தில் ஏறி இரை தேட வேண்டிய அவசியமென்ன? கார்த்திகா வாசுதேவன் DIN Tuesday, July 4, 2017 12:37 PM +0530  

தெலங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்து ‘மல்லாரம்’ வனப்பகுதியில் சிறுத்தை ஒன்று இரை தேடிக் கொண்டிருந்தது. இரை எதுவும் சிக்காத காரணத்தால் வனத்தை ஒட்டி,  மக்கள் வசிக்கும் கிராமப் பகுதிக்கு சிறுத்தை நகரத் தொடங்கியது. அங்கே அது எந்த இரையக் கண்டதோ தெரியவில்லை... தான் கண்டடைந்த இரையை அடைய அங்கிருந்த மின்சாரக் கம்பத்தின் மீது சிறுத்தை ஏறியதில் உயர் அழுத்த மின்கம்பிகளில் இருந்து கசிந்த மின்சாரத்துக்கு பலியாகி பரிதாபமாக உயிரிழந்தது. உயிரிழந்த நிலையில் மின்கம்பத்தின் உச்சியில் ஊசலாடிக் கொண்டிருந்த சிறுத்தையைக் கண்டு ஊர் மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கும், மின் பகிர்மான அலுவலக அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்க விரைந்து வந்த அதிகாரிகள் உடனடியாக மின்பகிர்மானத்தை நிறுத்தி இறந்த சிறுத்தையின் உடலை கம்பத்தில் இருந்து கீழே இறக்கினர்.

யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அடர் வனத்தை வசிப்பிடமாகக் கொண்டவை. அந்த அடர் வனப்பகுதிகளில் அவற்றுக்கான இரையோ, உணவோ கிடைக்காத பட்சத்தில் தான் அவை வனத்தின் பிற பகுதிகளுக்குச் செல்லக் கூடும். தொடர்ந்து உணவுக்காக கிராம வயல்களைத் துவம்சம் செய்த யானைகள் பிடிபட்டன, கிராமத்தில் ஊடுருவிய சிறுத்தை பிடிபட்டது. ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும் போது யானை பலியானது. இரைக்காக மின் கம்பத்தில் ஏறிய சிறுத்தை பலியானது மாதிரியான செய்திகளை கடக்கும் போதெல்லாம் மனதை நெருடும் ஒரு கேள்வி... இந்தியாவில் வனப்பகுதிகள் குறைந்து வருகின்றனவா? அல்லது வன விலங்குகளுக்கான இரைகளுக்கும், உணவுகளுக்கும் பற்றாக்குறை ஆகி விட்டதா? எதற்காக இந்த விலங்குகள் தங்களது வசிப்பிடத்தை விட்டு வெளியில் வந்து ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றன? என்பதே அது!

உயிரியல் சமன்பாட்டைப் பொறுத்த வரை இந்த பூமிக்கு யானையும் தேவை, சிறுத்தையும் தேவை... ஏன் ஓரறிவு முதல் ஆறறிவு வரை கொண்ட அனைத்து ஜீவராசிகளும் தான் தேவை. ஒன்றையொன்று சார்ந்தும், உண்டும் வாழும் அந்த உயிரியல் சமன்பாட்டில் எந்த ஒன்று முற்றிலும் அழிந்தாலும் ஒட்டு மொத்த மனித குலத்துக்குமே அது மிகப்பெரிய கேடாக முடியக் கூடும். எனவே வனப்பகுதியை ஆக்ரமிப்பது, வன விலங்குகளை வேட்டையாடுவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு தண்டித்தல் அவசியமாகிறது. ஆனால் அரசு இதிலெல்லாம் தீவிரமாகக் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. அரசு செலுத்தவில்லையா? அல்லது அதிகாரிகள் செலுத்தவில்லையா? என்பதும் கவனிக்கத்தக்க வினாவே!

Image courtsy: NDTV
 

]]>
leopard electrocuted, சிறுத்தை மின்சாரத்துக்குப் பலியானது, இரை தேடல், hunting for it's food, telangana, தெலுங்கானா, http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/4/w600X390/000_leopard.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jul/04/why-that-leopard-climbed-upon-the-electric-wall-2731608.html
2731064 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் மாற்றத்தை உருவாக்க தைரியம் தேவை: இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடையே மோடி உரையாடல்! RKV DIN Monday, July 3, 2017 05:46 PM +0530  

புதுதில்லி: புதிதாகப் பதிவியேற்கவிருக்கும் இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடையே உரையாற்றிய இந்தியப் பிரதமர் மோடி; புதிய இந்தியாவை ஆற்றல் மிக்கதாக மாற்றப் போகும் நிர்வாக ரீதியிலான புதிய மாற்றங்களை எதிர்க்கக் கூடிய மனப்பான்மை உங்களில் யாருக்காவது இருக்குமானால் அதை மாற்றிக் கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறினார். 

இந்தியக் குடிமைப் பணிகளுக்கான இறுதிக் கட்டத் தேர்வில் 2015 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்று உதவிச் செயலாளர் பதவிகளை ஏற்கவுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை வாழ்த்தி அவர்களுக்கு பணி உத்தரவு வழங்கவிருந்த விழாவில் அவர்களை வரவேற்றுப் பேசும் போது மோடி இவ்விதம் கூறினார். அவர் குறிப்பிட்டதின் படி ‘இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து பிற நாடுகளோடு ஒப்பிடும் போது பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.’ என்பதாக மோடியின் உரை அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அரசு அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி, இந்திய விடுதலைக்கு வெகு காலத்துக்குப் பின் விடுதலை அடைந்த நாடுகள் கூட வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி, முன்னேற்றம் உள்ளிட்ட விசயங்களோடு ஒப்பிடுகையில் இந்தியாவை விடப் பலபடிகள் முன்னேறிய நிலையில் உள்ளன. மாற்றத்தை உருவாக்க தைரியம் தேவை. அதிகாரிகளின் கூட்டுத் திறன்களைப் பயன்படுத்த சிதறடிக்கப்பட்ட நிர்வாகம் எப்போதும் அனுமதிப்பதில்லை. இத்தகைய பயனற்ற நிர்வாக முறையை ஒழிக்க வலிமை வாய்ந்த மாற்றங்கள் தேவை. 

இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்களது பயிற்சிக் காலமான இந்த மூன்று மாதங்களுக்குள் அவரவர் உயரதிகாரிகளுடன் தயக்கமின்றி கலந்து பேசுங்கள். அப்போது தான் மூத்த அதிகாரிகளின் அனுபவமும், இளம் அதிகாரிகளின் செயல்திறனும் கூடிய ஒரு வலிமையான நிர்வாக அமைப்பை நம் நாடு பெற முடியும். என்று மோடி தன் வரவேற்புரையில் குறிப்பிட்டார். 

]]>
Modi, India, IAS OFFICERS ADDRESSING CEREMONY,மோடி, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பயிற்சி நிறைவு விழா,மோடி உரையாடல்,மாற்றம், வலிமை, தைரியம்,நிர்வாகம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/3/w600X390/0000_modi.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jul/03/avoid-rigidity-of-mind-pm-to-young-ias-officers-2731064.html
2731047 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் யார் செத்தாலும் பரவாயில்லை வீடியோ எடுத்து யூ டியூப்ல அப்லோட் பண்றது தான் ரொம்ப முக்கியமா? RKV DIN Monday, July 3, 2017 04:47 PM +0530  

ஹரியானா மாநிலம் பரோலியைச் சேர்ந்த சஞ்சு என்ற பெண்மணிக்கும் அவரது கணவருக்குமிடையே சந்தேகத்தின் பேரில் முற்றிய குடும்பச் சண்டை ஒன்று கடைசியில் கொலை முயற்சியில் முடிந்தது. கடுமையான வாக்குவாதம் முற்றி மனைவியைக் கோடலியால் தாக்கிய கணவர் அங்கிருந்து தப்பி ஓட மனைவி ரத்த வெள்ளத்தில் தெரிவில் கிடந்தார். இதைக் கண்டு பயந்து போன அவர்களது மூன்று குழந்தைகள் செய்வதறியாது திகைக்க உதவ வேண்டிய அண்டை வீட்டுக்காரர்களோ முதலுதவி செய்யத் தோதான அந்தப் பொன்னான நிமிடங்களை வீணடித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சஞ்சுவின் மரணப் போராட்டத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். இதைக் கண்டு யாரோ காவல்துறைக்கு இந்த அவலத்தை எடுத்துரைக்க விரைந்து வந்தனர் காவலர்கள்.

காவலர்களில் ஒருவரான ராம் மெஹர் இந்த அவலம் குறித்து கூறுகையில், ” “பாதிக்கப்பட்ட பெண்மணி தரையில் கிடந்து “ என் ரத்தம் வெளியேறிக் கொண்டே இருக்கிறது... என் உயிர் போய்க் கொண்டு இருக்கிறது... என்னை யாராவது காப்பாற்றுங்களேன்... காப்பாற்றுங்களேன் ”  என்று தீனமாகக் கதறிக் கொண்டிருக்கிறார். அதைக் கேட்ட பின்னும் அங்கிருப்போர் எவரும் அவருக்கு முதலுதவி அளிக்காமல் அவரது மரண அவஸ்தையை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் அந்த இடத்தை அடையும் போது இது தான் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது. காவலர்களான எங்களைப் பொறுத்தவரை பொது மக்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள் உள்ளது. தயவு செய்து ஒரு உயிர் ஆபத்தில் இருக்கையில் அதை ஆவணப் படுத்துவதை விட காக்க முயல்வது தான் முக்கியம் ... என்பதை மக்கள் உணர வேண்டும்.” என்றார்.

 

Image courtsy: Times of india

]]>
hariyana incidant, sanchu, woman hitted by axe,வீடியோ, மரண அவஸ்தை, உதவி, காவலர்கள், அண்டை வீட்டுக்காரர்கள்,you tube http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/3/w600X390/000jind-woman-axe-attack.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jul/03/i-am-dying-help-me-please-save-me-please-haryana-laday-begging-her-neigbours-they-made-videos-2731047.html
2731037 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் தாயின் வயிற்றிலிருக்கும் 26 வாரக் கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி! RKV DIN Monday, July 3, 2017 04:28 PM +0530  

தாயின் வயிற்றிலிருக்கும் கருவுக்கு தீராத இதய நோய் அறிகுறிகள் இருப்பதால், கருவைக் கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. நீதிமன்ற அனுமதிக்கு முன் 26 வாரக் கருவைக் கலைப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப் பட்டது. இந்திய மருத்துவ வரலாற்றில் தாயின் வயிற்றிலிருக்கும் கருவுக்கு இந்த உலகில் பிறந்து வாழ பூரண உரிமை உண்டு. எனவே இம்மாதிரியான வழக்குகளில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பலவும் கருவுக்கு ஆதரவளிப்பதாகவே இயற்றப்பட்டுள்ளன. அதனால் தான் இன்று அளிக்கப் பட்டுள்ள இந்த தீர்ப்பு கவனத்திற்குரியதாகக் கருதப் படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கருக்கலைப்பு சட்டப்படி தவறு. ஆனால் இந்தக் குறிப்பிட்ட வழக்கில் 6 மாத வளர்ச்சிக்கும் அதிகமான இந்தக் கருவுக்கு பிறவி இதய நோய் காரணங்கள் அதிகமிருப்பதால் இந்தக் கரு பிறந்த பின்னும் உயிர் வாழ்தல் கடினம் என்பதால் மட்டுமே இப்படி ஒரு தீர்ப்பு அளிக்கப் பட்டுள்ளதாகக் கருதப் படுகிறது.

]]>
supreme court, 26 WEEKS FOETUS, ALOOWS PERMISSION TO TERMINATE FOETUS, உச்சநீதிமன்றம், கருவில் இதய நோய், தாய், கருச்சிதைவு அனுமதி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/3/w600X390/000Supreme-Court-of-India.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jul/03/sc-gave-permission-to-abort-26-weeks-foetus-2731037.html
2728436 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் மீண்டும் உக்ரைனிலிருந்து உலகை உலுக்க புறப்பட்டு வந்திருக்கிறது புதிய மால்வேர்! RKV DIN Wednesday, June 28, 2017 11:32 AM +0530  

கடந்த மே மாதத்தில் உலகையே உலுக்கிய இணைய வைரஸ் போலவே இப்போதும் புதிதாக ஒரு மால்வேர், இணைய வைரஸ் உலக நாடுகளிடையே பரவிக் கொண்டிருக்கிறதாம். இந்தப் புதிய மால்வேர், ரஷ்யாவின் உக்ரைனில் விதைக்கப் பட்டதாகக் கருதப்படுகிறது. இது, மே மாதத்தில் உலகின் முக்கிய நாடுகள் அனைத்திலும் உள்ள மிகப் பெரிய மருத்துவமனைகள், நிதி நிறுவனங்கள், வங்கிகள், கல்லூரிகளின் முக்கியமான டேட்டா ரெகார்டுகள் அனைத்தையும் முடக்கிய இணைய வைரஸுக்கு சற்றும் குறைந்ததல்ல. அப்போதைய இணையத் தாக்குதலின் போது; இணையத் திருடர்கள் எனப்படும் ஹேக்கர்கள் கேட்கும் தொகையை அளித்தால் மட்டுமே குறிப்பிட்ட மால்வேர்களின் தாக்குதலிலிருந்து சம்மந்தப் பட்ட நிறுவனங்களின் கணினிகள் விடுதலை செய்யப்பட முடியும். என அறிவிக்கப் பட்டிருந்தது.

அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் நேற்று மதியத்திலிருந்து உலகின் பல நாடுகளில் அதைக் காட்டிலும் கூடுதல் வலிமை கொண்ட இணைய வைரஸ் ஒன்று தன் வேலையைக் காட்டத் தொடங்கி உள்ளது. உலகெங்கிலும் இருந்து பலர் மால்வேர் தாக்குதலுக்குட்பட்டு செயலிழந்து விட்ட தங்கள் மடிக்கணினிகள் மற்றும் மேஜைக் கணினிகளின் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

ரஷ்யாவிலிருந்து பரவத் தொடங்கிய இந்த மால்வேர் ஐரோப்பாவின் அனைத்து கணிகளையும் ஊடுருவியதோடு மொத்த உலகையுமே ஒரு ஆட்டு ஆட்டி வைக்கப் போவதாக என் உள்ளுணர்வு சொல்வதால் எனக்கு மிகுந்த கவலையாக இருக்கிறது என இன்ஃபோசேஃப் எனும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் செயல் தலைவர் விக்டர் ஸோரா குறிப்பிட்டுள்ளார். 

ஐரோப்பாவில் 60% கணினிகளைத் தாக்கி முடக்கியுள்ள இந்த வைரஸ் உக்ரைனிலும் கணிசமாகத்ட் ஹன் கைவரிசையைக் காட்டியிருக்கிறது. மிகப்பெரிய மால்கள், மருத்துவமனைகள், வங்கிகள், கேஸ் ஏஜன்ஸிகள், என முக்கியமான வர்த்தக மற்றும் சேவை நிறுவனங்களின் கணினிகளை எல்லா முடக்கியுள்ள இந்த மால்வேரை எப்படி ஒழித்துக் கட்டுவது என கணிப்பொறியியல் வல்லுனர்கள் தற்போது தலைமுடியைப் பற்றிக் கொண்டு கடுமையாக விவாதித்து வருகிறார்கள்.

]]>
internet, மால்வேர், ransomware, MALWARE, UKRAIN, உக்ரைன், உலகம், இணையம், virus, இணைய வைரஸ், இணையத் திருடர்கள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/28/w600X390/0malware.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jun/28/malware-causes-disruption-across-the-globe-and-it-starts-from-ukrain-2728436.html
2727972 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் கழனியூரன் - இன்றுடன் மெளனித்தார் ஒரு கதை சொல்லி! கார்த்திகா வாசுதேவன் DIN Tuesday, June 27, 2017 05:53 PM +0530  

கி ரா வின் நாட்டுப்புறக் கதை சொல்லி வாரிசாக அறிமுகமான எழுத்தாளர் கழனியூரன் இன்று மறைந்தார். தெற்கத்தி கிராமியக் கதைகளை அவற்றின் ஈரம் குறையாது கரிசல் மண்ணின் வாசம் குறையாது இலக்கிய வாசகர்களிடையே எடுத்துச் சென்றதில் கழனியூரனுக்கும் முக்கியப் பங்குண்டு. புற்று நோயால் அவதிப்பட்டு வந்த கழனியூரனின் இயற்பெயர் எம்.எஸ். அப்துல் காதர். புனித ரமலான் பண்டிகைக்கு மறுநாள் மறைந்தது அவர் பெற்ற பெரும் பேறாகவும் இருக்கலாம். ஆனால் கழனியூரன் எழுதிய, வெளிக்கொணர்ந்த கதைகள் எதிலும் இருந்ததில்லை அவரது மத அடையாளங்கள் எதுவும்! இன்று அவர் மறைந்த பின்னரே தெரிய வருகிறது அன்னாரது இஸ்லாமிய அடையாளம்.

ஆயினும் கரிசக்காட்டுக் கதைகளை கி ரா வின் அடியொற்றி பிசகாது பதிவு செய்ததில் இவரது பங்கு மிக முக்கியமானது. நாட்டார் கதைகளைப் பதிவு செய்வதில் கி ரா வைத் தொடர்ந்து எளிய வாசகர்களுக்கும் விளங்கும் வண்ணம் கர்ண பரம்பரைக் கதைகளையும், கிராமிய வாழ்வையும், நாட்டார் தெய்வங்களையும் காட்சிப் படுத்தி கதைக் களன்களாகவும், சம்பவங்களாககும் விரித்தெழுத நமக்கு வாய்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் கழனியூரனும், பாரத தேவியும் முக்கியமானவர்கள். அவர்களில் ஒருவரை இழந்தது நாட்டார் இலக்கியத்துக்குக்கான நஷ்டமே என்றால் மிகையில்லை. 

கி ரா வின் அடியொற்றி அவரது கதை சொல்லி இதழில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர் கழனியூரன். இதுவரை சுமார் 50 நூல்களை எழுதி இருக்கிறார், அவை பெரும்பாலும் நாட்டார் வழக்காற்றியல் சிறுகதைகள், சொலவடைகள், சிறுவர் நாடோடிக் கதைகள். ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய கழனியூரன் நெல்லைச் சீமைக்காரர். கூடிய விரைவில் கி ரா பற்றிய புத்தகம் ஒன்றை எழுதி முடித்து விடும் தீரா ஆவலைச் சுமந்து கொண்டிருந்த கழனியூரன் அந்த ஆசை ஈடேறாமலே மறைந்தது வருத்தமான விசயமே என கழனியூரனின் நண்பர் ஒருவர் முகநூல் அஞ்சலியில் தெரிவித்திருக்கிறார். எது எப்படியோ நாட்டுப்புறக் கதை சொல்லிகளில் ஒருவர் இன்றோடு தன் கதை சொல்லலை நிறுத்திக் கொண்டமைக்கு ஆழ்ந்த இரங்கல்கள் உரித்தாகட்டும்!
 

]]>
கழனியூரன் மறைவு, நாட்டுப்புறக் கதைசொல்லி, kazhaniyuran died, folk litreature, folklores, tamil folklores, story teller, கதை சொல்லி, http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/27/w600X390/0000kazaniyuran.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jun/27/கழனியூரன்---இன்றுடன்-மெளனித்தார்-ஒரு-கதை-சொல்லி-2727972.html
2726547 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் இந்தியப் பெண்களை மத மாற்றம் செய்து நாடு கடத்த ISIS  நிர்ணயித்திருக்கும் அதிர்ச்சி தரும் ரேட் கார்டு விவகாரம்! கார்த்திகா வாசுதேவன் DIN Monday, June 26, 2017 12:40 PM +0530  

கேரள மாநிலம் காசர்கோடில் இயங்கும் ‘விஸ்டம் அகாடமி’ எனும் டுடோரியல் கோச்சிங் மையத்தில் படிப்பதற்காக சேரும் இந்து இளம்பெண்களை அங்கிருக்கும் சில ஏஜண்டுகள் கலிபாக்கள் எனும் இஸ்லாம் மதகுருக்கள் மூலமாக இஸ்லாம் மதத்துக்கு மாறிவிடும் அளவுக்கு மூளைச் சலவைச் செய்து வருகிறார்கள். இந்தியாவைச் சேர்ந்த இந்துப் பெண்களை முஸ்லிம்களாக மாற்றி அவர்களை சிரியாவுக்கு அழைத்துச் செல்லவும், சிரியன் மொழியைக் கற்றுக் கொள்ள வைக்கவும் இங்கேயே ஏஜண்டுகள் வாயிலாக ரகசியமாக சதி வேலைகள் நடந்து வருகின்றன. காஸா எனப்படும் காசர்கோடு டுடோரியல் பள்ளியில் பயிலும் போது இப்படி மூளைச் சலவை செய்து மனம் மாற்றம் செய்யப் பட்ட, பாதிக்கப் பட்ட இளம்பெண் ஒருவரின் தாயார்  அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று மாலை 'Times now'  ல் பிரேக்கிங் நியூஸ் ஓடிக் கொண்டிருந்தது. தமிழ் சேனல்களில் இது தொடர்பான செய்திகள் எதுவும் உண்டா? என்று தேடியதில் பாக்கியின்றி எல்லாவற்றிலும் நமது அரசியல் அண்ணாத்தைகளும், விமர்சகப் புலிகளும் இணைந்து ஆழ்ந்த விவாத நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஒரு நிமிடம் யாருமே ‘Times Now' பார்த்திருக்கவில்லையா? அல்லது இது ஃபேக் நியூஸா? என்று சந்தேகமாகி விட்டது. இன்று இந்நேரத்தில் இணையத்தில் தேடுகிறேன். அப்போதும் Times Now ல் மட்டுமே அந்தச் செய்தி காணக் கிடைக்கிறது. என்ன தான் நடக்கிறது எனத் தெரியவில்லை. இதோ கூப்பிடு தூரத்தில் இருக்கும் கேரளாவின் காஸர் கோடில் தேசப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் விளைவிக்கும் வண்ணம் ஒரு விசயம் நடந்திருக்கிறது என்றால் நமது ஊடகங்களில் ஏன் அதைப் பற்றிய செய்திகள் இல்லை? 

கடந்த மாதத்தில் இந்தியாவைப் பரபரப்புக்குள்ளாக்கிய செய்திகளில் ஒன்றை இப்போது குறிப்பிட்டாக வேண்டும்;

டெல்லியைச் சேர்ந்த 22 வயதுப் பெண்ணான உஸ்மா அஹமது, மலேசியாவில் பணிபுரியும் போது தனது நண்பரான தாஹிர் அலி எனும் இஸ்லாமியருடன் இணைந்து பாகிஸ்தானுக்கு சுற்றுலா சென்றார். சுற்றுலாவுக்கென அழைத்துச் சென்ற தாஹிர் அங்கே துப்பாக்கி முனையில் தன்னை மிரட்டி திருமணம் செய்து கொண்டு அறைக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்தான். பாகிஸ்தானில் நான் இருந்த பகுதியில் என்னைப் போலவே மலேசியாவைச் சேர்ந்த இளம்பெண்கள் பலர் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர். அதிருஷ்டவசமாக நான் அங்கிருந்து தப்பி இஸ்லாமாபாத்தில் இருக்கும் இந்திய தூதரகத்த்துக்கு வந்து சேர்ந்து அங்கேயே 20 நாட்கள் தங்கியிருந்து இந்திய வெளியுறவுத் துறையின் உதவி மூலமாக மறுபிறவி எடுத்ததைப் போல இந்தியா வந்து சேர்ந்தேன். பாகிஸ்தான் ஒரு மரணக் கிணறு அங்கே என்னைப் போல சென்று மாட்டிக் கொண்டு பெண்கள் மீள்வது நினைத்துப் பார்க்க முடியாத விசயம். அங்கே ஒவ்வொரு வீட்டிலும் 2 அல்லது 3 மனைவிகள் இருக்கிறார்கள். என்னால் தப்ப முடிந்திரா விட்டால் இப்போது என்னை யாருக்காவது விற்றிருப்பார்கள் அல்லது வேறு ஏதாவது தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்தி இருப்பார்கள் எனக் கண்ணீருடன் பேட்டியளித்த உஸ்மாவை நாம் அதற்குள் மறந்து விடக் கூடாது. உஸ்மா ஏன் பாக்கில் அடைத்து வைக்கப் பட்டார் என்ற விசயத்தை ஆராய்ந்தால் நேற்றைய பிரேக்கிங் நியூஸ் விவகாரத்தையும் நம்மால் புரிந்து கொள்ள இயலும்.

இந்தியாவில் கேரளாவிலிருந்தும், குஜராத்திலிருந்தும் இந்து இளம்பெண்களை மூளைச் சலவை செய்து மதமாற்றம் செய்து தீவிரவாதப் பணிகளுக்குப் பயன்படுத்தவென்றே ஒரு கும்பல் இந்தியா வந்திறங்கியிருக்கிறது. அவர்களுக்கு கொடுக்கப் பட்ட அஜண்டாவே; குடும்பத்தின் போதிய அரவணைப்பின்றி அனாதையாக தன்னை உணரக் கூடிய இந்து இளம்பெண்களை அடையாளம் கண்டு அவர்களை கொஞ்சம், கொஞ்சமாக மூளைச் சலவை செய்து தங்களது நாசவேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதே ஆகும். இதற்கென அவர்களது தலைமை அவர்களுக்கு ரேட் கார்டு ஒன்றையும் தயாரித்துத் தந்திருக்கிறது. அதிகமான இளம்பெண்களை மதமாற்றம் செய்து அரேபிய நாடுகளுக்கும், சிரியாவுக்கும் அனுப்பும் ஏஜண்டுகளுக்கு போனஸ், இன்செண்டிவ் எல்லாம் உண்டாம். 

அதிர்ச்சி தரும் அந்த ரேட் கார்டுகள் தெரிவிக்கும் விவரங்களைக் கண்டால் அதில் இருக்கும் பயங்கரத் தன்மை விளங்கும்...

இந்துப் பெண்களை அவர்கள் சார்ந்துள்ள மதம், ஜாதி, உள் ஜாதி எனப் பகுத்து ஒவ்வொருவருக்கும் ஒரு விலை நிர்ணயித்திருக்கிறார்கள். 

 • இந்து பிராமணப் பெண்ணுக்கு - 5 லட்சம் ரூபாய்கள்
 • இந்து சத்ரியப் பெண்ணுக்கு -   4. 5 லட்சம் ரூபாய்கள்
 • இந்து (OBC, SC, ST, NT)  -  2 லட்சம் ரூபாய்கள்
 • ஜெயின் இனத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு- 3 லட்சம் ரூபாய்கள்
 • குஜராத்தி பிராமணப் பெண்ணுக்கு- 6 லட்சம் ரூபாய்கள்
 • குஜராத்தி ( கட்ச் பெண்ணுக்கு) - 3 லட்சம் ரூபாய்கள்
 • பஞ்சாபி சீக்கியப் பெண்ணுக்கு- 7 லட்சம் ரூபாய்கள்
 • பஞ்சாபி இந்துப் பெண்ணுக்கு - 6 லட்சம் ரூபாய்கள்
 • ரோமன் கத்தோலில் கிறிஸ்தவப் பெண்ணுக்கு - 4 லட்சம் ரூபாய்கள்

என்று அவர்களது விலைப்பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இப்படி இந்தியப் பெண்களை மதமாற்றம் செய்ய ISIS அமைப்பு முஸ்லீம் கலிபாக்கள் மூலம் தொடர்ந்து முயன்றுவருகிறது. இதற்கு முன்னேற்பாடாக இந்தியாவெங்கும் அவர்களது ஏஜண்டுகள் ஊடுருவியிருக்கிறார்கள் என்கிறது Times Now செய்தி. ஆனால் இதை மறுக்கும் ஊடகங்களும் நம்மிடையே உள்ளன. இந்தியாவில் முஸ்லிம் வெறுப்புணர்வை வளர்க்க இது போன்ற செய்திகளை சில ஊடகங்கள் வலிந்து உருவாக்கி மக்களிடையே திணிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றன. இது கண்டிக்கத் தக்கது எனும்படியான கண்டனங்களும் எழாமல் இல்லை. நெருப்பில்லாமல் புகையாது என்பார்களே அதற்கேற்ப பாதிக்கப் பட்ட பெண்ணின் அம்மாவே புகார் அளிக்கும் வீடியோ ஆதாரம் ஒன்று நேற்று வெளியாகி இருந்தது. அதுமட்டுமல்லாமல் கலிபாக்கள் நிர்ணயித்த அந்த ரேட் கார்டு ஆதாரமும் வெளியாகியிருக்கிறது. இவற்றை எல்லாம் அத்தனை சீக்கிரம் கற்பனைக் கட்டுக் கதை என்று புறம் தள்ளி விட முடியாது. உண்மையில் இந்தியாவில் இப்போது நடந்து கொண்டிருப்பது என்ன? மதத்தின் பெயரால் பிரிவினையைத் தூண்டும் முயற்சியா? அல்லது இந்துப் பெண்களை சந்தை அடிமைகளாக ஆக்குவதின் மூலம் இந்துக் கலாச்சாரத்தை இழிவு படுத்தும் முயற்சியா? இந்த விசயத்தில் உலகின் எந்த மூளையில் இருந்தாலும் இந்தியப் பெண்களின் முதல் தேவை விழிப்புணர்வும், எச்சரிக்கையும் மட்டுமே.

 

Image courtsy: Times now.

]]>
India, ISIS, CONVERSION, INDIAN GIRLS MYSTEERIOUS RATE CARDS FIXED BY ISIS, ISIS நிர்ணயித்த அதிர்ச்சி தரும் ரேட் கார்டுகள், இந்தியப் பெண்கள், மத மாற்றம், முஸ்லிம் கலிபாக்கள், டைம்ஸ் நவ், times now, breaking news http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/24/w600X390/0rate_card1.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jun/24/isis-fixed-7-lakhs-to-1-lakhs-assigned-to-women-from-different-religionssub-castessections-of-india-2726547.html
2727382 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் மனிஷாவுடன் அமைதியாக உணர்கிறேன்... ரோப் கார் விபத்தில் இறந்தவரின் இறுதி முகநூல் ஸ்டேட்டஸ்! கார்த்திகா வாசுதேவன் DIN Monday, June 26, 2017 11:49 AM +0530  

மனிதர்களுக்கு சில நேரங்களில் முடிவெடுக்க தெரிவதே இல்லை. அல்லது த்ரில் என்ற பெயரிலோ அல்லது சாகஷப் பயணம் என்ற அசட்டு நம்பிக்கையிலோ எதையாவது செய்து இக்கட்டில் மாட்டிக்கொண்டு உயிரை விட்டு விடுவது வாஸ்தவமாகி வருகிறது. ஜம்மு- காஷ்மீர் ரோப் கார் விவகாரத்திலும் அப்படியே தான் நிகழ்ந்துள்ளது. விடுமுறைக்காக வடக்கு டெல்லி வாசியான அரசு ஊழியர்
ஜெயந்த் அந்த்ராஸ்கர் தன் மனைவி மனிஷா மற்றும் குழந்தைகள் அனகா மற்றூம் ஜான்வியுடன் காஷ்மீரின் குல்மார் சுற்றுலா விடுதிக்குச் சென்றுள்ளார். குல்மார் விடுதிக்கு வரும் சுற்றூலாப் பயணிகள் 100 அடி உயர ரோப் காரில் ஏறி, ஜம்மு காஷ்மீர் மலைகளைச் சூழ்ந்துள்ள இயற்கை அழகை ரசிப்பது வழக்கம். ஆனால் 1 ஆம் வகுப்பு மாணவியான அனகாவையும், பிளே ஸ்கூல் குழந்தையான ஜான்வியையும் அழைத்துக் கொண்டு 100 அடி உயர ரோப் கார் பயணத்துக்கு திட்டமிட்ட அந்தப் பெற்றோர்களை நினைத்தால் ஒரு நொடி பரிதாபமாக இருக்கிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அந்த நால்வரும் இப்போது உயிருடன் இல்லை. அவர்களது ரோப் கார் பயணத்தின் போது கடுமையான காற்றடித்ததில் மரம் சரிந்து ரோப் கார் கம்பத்தில் விழ 100 அடி உயரத்திலிருந்து ரோப் கார் விழுந்து நொறுங்கியது. அத்துடன் அதில் பயணித்த 7 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இதில் மனதை உருக்கும் வேடிக்கை என்னவெனில்; ஜெயந்த் தனது முகநூல் ஸ்டேட்டஸில் கடைசியாகப் பதிவு செய்த வாக்கியம் அவரை மட்டுமல்ல அவரது மொத்தக் குடும்பத்தையுமே எல்லையற்ற அமைதியில் ஆழ்த்தி விட்டது. ரோப் காரில்ஏறுவதற்கு முன்பு ஜெயந்த் தனது முகநூல் ஸ்டேட்டஸை “Feeling peaceful" வித் மனிஷா அந்த்ராஸ்கர் என அப்டேட் செய்துள்ளார். விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் தற்போது அதுவே ஜெயந்தின் இறுதி முகநூல் ஸ்டேட்டஸ் என்றாகி விட்டது. இனிமேல் ஜெயந்த் மட்டுமல்ல அவரது முழுக் குடும்பத்துக்கும் எல்லையற்ற அமைதி தான். ஆனால் இச்சம்பவத்தோடு பொருத்திப் பார்க்கையில் ஜெயந்தின் முகநூல் ஸ்டேட்டஸ் அவரது நண்பர் வட்டங்களில் கண்ணீருடன் காலத்துக்கும் நினைவு கூரப்படும் ஒன்றாகி விட்டது.

]]>
Jammu Kashmir,Rope Car Accident, India, ஜம்மு காஷ்மீர் ,ரோப் கார் விபத்து, இந்தியா http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/26/w600X390/jayanthu_rope_car_victim.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jun/26/feeling-peaceful-with-manisha-kashmir-rope-car-accidant-death-victims-last-status-at-facebook-2727382.html
2724893 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் நடுவானில் இயந்திரக் கோளாறு காரணமாக  தரையிறக்கப் பட்ட விமானம்! RKV DIN Wednesday, June 21, 2017 01:07 PM +0530  

இன்று அதிகாலை 5.30 மணியளவில் சென்னையிலிருந்து ஷார்ஜா புறப்பட்ட ‘ஏர் அரேபியா’ விமானம் நடுவானில் இயந்திரக் கோளாறு காரணமாக 6.45 மணியளவில் மீண்டும் தரையிறக்கப் பட்டது. நடுவானில் இயந்திரக் கோளாறு காரணமாக விமானத்தில் பிரச்னை என்றது பீதிக்குள்ளான பயணிகளிடையே, விமானியின் சாமர்த்தியத்தால் 158 பயணிகளின் உயிர் எவ்விதச் சேதமும் இன்றி காப்பாற்றப் பட்டது. தரையிறங்கிய விமானத்திலிருந்த பயணிகள் விடுதிகளில் தங்க வைக்கப் பட்டுள்ளனர் எனவும், விமானத்தில் இயந்திரக் கோளாறுகள் சரி செய்யப் பட்டதும் மீண்டும் இன்று இரவு விமானம் ஷார்ஜா செல்லவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

]]>
air arabia flight, mechanical error, chennai to sharjah, flight, சென்னை டு ஷார்ஜா விமானம், தரையிறங்கிய விமானம், நடுவானில் இயந்திரக் கோளாறு, http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/21/w600X390/Air-Arabia-airbus320online.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jun/21/நடுவானில்-இயந்திரக்-கோளாறு-காரணமாக--தரையிறக்கப்-பட்ட-விமானம்-2724893.html
2724887 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் லடாக்கில் மைனஸ் 25 டிகிரி செல்ஸியஸ் குளிரில் யோகப் பயிற்சி செய்த இந்திய ராணுவ வீரர்கள்! கார்த்திகா வாசுதேவன் DIN Wednesday, June 21, 2017 12:39 PM +0530  

சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப் படுகிறது. 2014 ஆம் ஆண்டில் இதற்கான முன்முயற்சியை மேற்கொண்டவர் பாரதப் பிரதமர் மோடி. ஐக்கிய நாடுகள் பொதுக் கூட்டமைப்பில் யோகாவின் முக்கியத்துவத்தைக் குறித்து 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் நாள் மோடி தனது முதல் உரையை நிகழ்த்தினார். உலகில் பயங்கரவாதத்தை ஒழிக்க சட்டங்களும், தண்டனைகளும் மட்டும் போதாது. மனிதர்களை மனம், உடல், சிந்தனை வாயிலாக நல்வழிப்படுத்த யோகா போன்ற பயிற்சிகளும் வேண்டும், அந்த வகையில் யோகா இந்தியா உலகுக்கு அளித்த நற்கொடையாகத் திகழ்கிறது. அப்படிப்பட்ட மேன்மை வாய்ந்த யோகப் பயிற்சிகளை உலக மக்களிடையே பரவலாக அறிமுகப்படுத்தி யோகக் கலையை வளர்க்க உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும். அதன் படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் நாளை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என மோடி கோரிக்கை வைத்தார். ஜூன் 21 ஆம் நாள் போமியின் வடபகுதியில் உள்ள நாடுகளில் மிக நீண்ட பகலையும், தென்பகுதியில் உள்ள நாடுகளுக்கு மிக நீண்ட இரவுப் பொழுதையும் கொண்ட நாள் என்பதால் அந்த நாளை உலக யோகா தினத்தைக் கொண்டாட சிறந்த நாளாகத் தேர்வு செய்து ஐக்கிய நாடுகள் சபையில் பரிந்துரைத்தார் மோடி. அதனடிப்படையில் 2015 ஆம் ஆண்டு முதல் ‘சர்வதேச யோகா தினம்’ ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று இந்தியாவில் சிறப்புற கொண்டாடப் பட்டு வருகிறது. நாடு முழுவதும் பிரதமர் மோடி உட்பட அரசியல், சமூக, கலைத்துறை பிரமுகர்கள் அனைவரும் யோகப் பயிற்சிகளில் கலந்து கொண்டு நாட்டு மக்களுக்கு யோகப் பயிற்சிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்று வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டு சர்வதேச யோகா தினமான இன்று அதிகாலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லடாக்கில் இருக்கும் ராணுவ முகாமைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர்கள் அதிகாலையில் மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் உறைபனியையும் பொருட்படுத்தாமல்18,000 அடி உயரத்தில் யோகா பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த காட்சி மெய் சிலிர்க்க வைப்பதாக இருந்தது.

 

லடாக்கில் மட்டுமல்ல உத்திரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னெளவில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற மிகப் பிரமாண்டமான யோகப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பிரதமர் மோடியும் யோகா பயிற்சி செய்ததோடு அங்கிருந்தவாறு யோகாவின் முக்கியத்துவம் குறித்து நாட்டு மக்களுக்காக ஊடகங்கள் வாயிலாக உரையாற்றினார். அவரது உரையின் படி கடந்த மூன்றாண்டுகளில் இந்தியாவில் யோகா குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. நாடெங்கும் யோகா பயிற்சி வகுப்புகள் மிக அதிக அளவில் அதிகரித்துள்ளன. யோகா கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. யோகா உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும், சிந்தனைக்கும் மிக ஆரோக்கியத்தை அளிக்கும் எளிய பயிற்சி முறைகளில் ஒன்று. யோகா இந்தியா உலகிற்கு அளித்த நன்கொடை. அதை சிறப்பிக்கும் வகையில் மக்கள் யோகா கற்றுக் கொண்டு தமது உடல் நலன், ஆன்ம நலன் இரண்டையும் மேம்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். எனவும் மோடி உரையாற்றினார்.

தமிழ்நாட்டிலும் கோவையில் ஈஷா யோக மையம் சார்பாக அமைக்கப் பட்டுள்ள ஆதியோகி தியான மந்திரில் நடைபெற்ற சர்வதேச யோகா தின யோகப் பயிற்சிகளில் மத்திய அமைச்சர் மற்றும் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


 

]]>
indian jawans performing yoga, - 25 degree, 18000 altitude, சர்வ தேச யோகா தினம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/21/w600X390/0ladakh_international_yoga_day.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jun/21/army-jawans-performs-yoga-in-minus-degrees-in-ladakh-2724887.html
2724873 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் மாட்டிறைச்சி மற்றும் 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் அறிவிப்புகள் முழு விவரம்: C.P.சரவணன், வழக்குரைஞர் DIN Wednesday, June 21, 2017 11:28 AM +0530  

சந்தைகளில் கால்நடைகள் சந்தைப்படுத்துதலை முறைப்படுத்தும் விதிகள் - 2017 குறித்த உரை...

தமிழ்நாட்டில் பசு வதை தடுப்பு கடந்த 40 ஆண்டுகளாக அமலில் உள்ளது என்பதை இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது, சந்தைகளில் கால்நடைகள் சந்தைப்படுத்துதலை முறைப்படுத்தும் நோக்கத்தோடு மத்திய அரசின் சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றம் துறையின் மூலம், கடந்த 23.5.2017 அன்று, 1960 ஆம் ஆண்டைய பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ், கால்நடைகள் சந்தைப்படுத்துதல் விதிகள், 2017 வெளியிடப்பட்டது. இவ்விதிகள் மாட்டினங்களான பசு, எருது, எருமை, கன்றுகள் மற்றும் ஒட்டகம் ஆகியவற்றிற்குப் பொருந்தும்.

இவ்விதிகளின் 22(b)(ii), 22(d)(ii) மற்றும் 22(e) பிரிவுகளின் படி, சந்தைகளில் விற்கப்படும் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்விதிகளின் பிரிவு 22(d)(iv) ன்படி, மாடுகளை வாங்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்கு விற்பனை செய்யக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விதிகளின் 8வது பிரிவின் படி மாநில எல்லைகளுக்கு 25 கிலோ மீட்டர் தொலைவிற்குள் மாட்டுச் சந்தைகள் செயல்படக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்விதிகளின் பிரிவு 22(e)(iii)ன் படி, மாட்டினைக் கொள்முதல் செய்தவர், அதனை மதம் சார்ந்த நிகழ்வுகளுக்காக பலியிடக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய விதிகளை  செயல்படுத்தத் தடை ஆணை கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் கடந்த 23.5.2017 அன்று மனுக்கள் (W.P.No.10128/2017 மற்றும் 10127/2017) தாக்கல் செய்யப்பட்டு, உயர்நீதிமன்ற அமர்வு, இவ்விதிகள் செயல்படுத்துவதற்கு நான்கு வாரத்திற்கு இடைக்காலத் தடை வழங்கியுள்ளது. இந்த விதிகளுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் ஐதராபாத்தைச் சேர்ந்த திரு.அப்துல் பகீம் குரேஷி என்பவர் வழக்கு பதிவு செய்துள்ளார். இவ்வழக்கு வரும் 11.7.2017 அன்று விசாரணைக்கு வரவுள்ளது.

மேலும், மத்திய அரசுக்கு; இந்த விதிகளால் விவசாயிகள் பலவிதங்களில் பாதிக்கப்படுவார்கள் என்பதையும், விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் நாட்டின் பல பகுதிகளிலிருந்து வருவதைக் கருத்தில் கொண்டு, விதிகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் எண்ணம் மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பதாக மாண்புமிகு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர்  திரு. ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளதாக பல பத்திரிக்கைகளில் செய்தி வெளிவந்துள்ளது. உச்சநீதி மன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும், இது குறித்த வழக்குகள் நிலுவையில் உள்ளது.

தீர்ப்பிற்குப்பின் உரிய நிலைப்பாட்டினை இவ்வரசு எடுக்கும் எனவும் பெரும்பான்மையான மக்களின் கோரிக்கையினை ஏற்று அரசு செயல்படும் என்பதையும் இம்மாமன்றத்தில் தெரிவித்து கொள்கிறேன்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி  எண் 110-ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் அறிக்கை ...

பள்ளிக் கல்வித் துறை:

சமுதாயத்தின் விளிம்பில் உள்ள ஏழை எளிய மக்கள், பொருளாதார வளர்ச்சி பெற்று, ஏனையோருக்கு இணையாக உயர்வடைய வேண்டும் என்றால் அவர்கள் கல்வி வளர்ச்சி பெற வேண்டும். மாநிலம் முழுவதும் சிறந்த கல்வி அளிக்கப்பட்டால் தான் பொருளாதார வளர்ச்சி, அடித்தட்டு மக்களுக்கும் சென்றடையும். எனவே தான் கல்விக்கும் அதன் வளர்ச்சிக்கும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வந்தார்கள்.

கடந்த ஆறு ஆண்டுகளில், மாணவ மாணவியருக்கு 4 இணைச் சீருடை, விலையில்லா பாட நூல்கள், விலையில்லா நோட்டுப் புத்தகங்கள், விலையில்லா புத்தகப் பை, விலையில்லா கணித உபகரணப் பெட்டிகள், கிரையான்ஸ், நில வரைபட புத்தகம் ஆகிய கல்வி உபகரணங்கள், ஒர் இணைக் காலணிகள், விலையில்லா மிதி வண்டிகள், கட்டணமில்லாப் பேருந்து பயணச் சலுகை, சத்தான மதிய உணவு போன்ற பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வந்தார்கள்.

மேலும், மேல்நிலைப் பள்ளி மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணிணிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு மொத்தம் 5,000 ரூபாய் கல்வி உதவித் தொகை போன்ற உன்னதத் திட்டங்களும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களால் செயல்படுத்தப்பட்டது.

பள்ளிக் கல்வித் துறை சார்பாக வெளியிட்ட அறிவிப்புகள்:

1. வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், அரசுப் பள்ளி மாணாக்கர்கள் போதிய கணினி திறன்களை அடையும் வகையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் (Hitech labs) ஏற்படுத்தப்படும். இதன்படி, 3,090 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா 10 கணினிகளும், 2,939 மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா 20 கணினிகளும், அதனுடன் தொடர்புடைய இதர சாதனங்களும் வழங்கப்படும். இதற்கென அரசுக்கு 437 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

2. அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலமாக பாடங்களை பயிற்றுவிக்கும் வகையில் முதற்கட்டமாக 3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத்திறன் வகுப்பறை, அதாவது Smart Class room ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும் 2 லட்சம் ரூபாய் வீதம் 60 கோடி ரூபாய் இதற்கென செலவிடப்படும்.

3. பள்ளிக் கல்வி இயக்ககம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக டி.பி.ஐ. வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது. இக்கட்டடம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இதனால், இதனை பராமரிப்பது கடினமாகவும், மிகுந்த செலவினம் கொண்டதாகவும் உள்ளது. அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து அலுவலர்களும், பணியாளர்களும் அதிக அளவு இங்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், இந்த இயக்ககத்தில் இயங்கும் பல்வேறு பிரிவுகளுக்காக கூடுதல் இட வசதி தேவைப்படுகிறது. 

இதற்காக, ஒரு லட்சம் சதுர அடியில், 33 கோடி ரூபாய் செலவில் பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும். இந்த கட்டடம் மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவினைக் குறிக்கும் வகையில் “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடம்” என்ற பெயரில் அழைக்கப்படும்.

4. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாணாக்கர்களுக்கும் தரமான கல்வியை அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் சிறப்பான சூழ்நிலையில் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேவைப்படும் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், அறிவியல் உபகரணங்கள், கலை மற்றும் கைவினை அறைகள், கணினி அறைகள், நூலகம், கழிவறைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் 39 கோடியே ஒரு லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

உயர்கல்வித் துறை...

பள்ளிக் கல்வித் துறைக்கு அளித்து வரும் அதே அளவு முக்கியத்துவத்தை உயர்கல்விக்கும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அளித்து வந்தார்கள். மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கடந்த 6 ஆண்டுகளில் 21 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 24 பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 16 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் 4 அரசு பொறியியல் கல்லூரிகள் என 65 புதிய கல்லூரிகளும், ஸ்ரீரங்கத்தில் ‘தகவல் தொழில்நுட்ப பயிலகம் மற்றும் தேசிய சட்டப்பள்ளி’ ஆகியவை துவக்கப்பட்டுள்ளன. எனவே தான் உயர்கல்வியில் தேசிய மாணவர் சேர்க்கை விகிதம் 24.5 என இருந்தாலும், தமிழ்நாட்டின் மாணவர் சேர்க்கை விகிதம் 44.3 ஆக உள்ளது. இதனால் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது.

உயர் கல்வித் துறை சார்பாக வெளியிட்ட அறிவிப்புகள்:

1.கல்வியின் தரத்தினையும், மாணாக்கர்களின் அறிவுத் திறனையும் உயர்த்தும் பொருட்டு, கடந்த ஆறு ஆண்டுகளில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 961 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் மூலம் 2011-12-ஆம் கல்வியாண்டில் 7,17,442-ஆக இருந்த மாணாக்கர்கள் எண்ணிக்கை 2016-17-ஆம் கல்வியாண்டில் 9,85,974-ஆக உயர்ந்துள்ளது. இவ்வளர்ச்சிக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், 43 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள், கழிப்பறைகள், ஆசிரியர் ஓய்வறைகள், மாநாட்டு அறைகள், கூட்டரங்கங்கள், கூடுதல் அறைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் 210 கோடி ரூபாய் செலவில் இரண்டாண்டுகளில் முடிக்கப்படும். இந்த 43 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கட்டப்படும் கட்டடங்கள், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவினைக் குறிக்கும் வகையில் “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடங்கள்” என்ற பெயரில் அழைக்கப்படும். இதற்கென, முதற்கட்டமாக இந்த ஆண்டு 105 கோடி ரூபாய் நிதி  ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். மீதமுள்ள 105 கோடி ரூபாய் அடுத்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்படும்.

 2. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது. மாணவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து உயர்கல்வி கற்பதை தவிர்க்கும் பொருட்டும், குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி பெறுவதற்கும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 7 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 3 புதிய பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 2017-18-ஆம் கல்வியாண்டில் துவங்கப்படும். இதற்காக அரசுக்கு 100 கோடியே 31 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

3. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மிகக் குறைந்த கட்டணத்தில் மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர். இம்மாணாக்கர்கள், வேலைவாய்ப்பினை பெறுவதற்கு தேவைப்படும் புதிய பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்துவது அவசியமாகிறது. மாநிலத்தில் பின்தங்கிய பகுதியை சேர்ந்த மாணாக்கர்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவு மாணாக்கர்கள் மற்றும் அதிகளவில் மாணவிகள் உயர்கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2017-18-ஆம் கல்வியாண்டிலிருந்து 268 புதிய பாடப்பிரிவுகள் (60 இளங்கலை, 75 முதுகலை, 133 ஆராய்ச்சி) அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இப்பாடப்பிரிவுகளை கையாள 660 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இதற்காக அரசிற்கு ஆண்டிற்கு 40 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை...

இளைஞர்கள் நாட்டின் செல்வம். விளையாட்டு, ஒருங்கிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவம், நேர்மையாக செயல்படும் பக்குவம் ஆகியவற்றை கற்றுத் தருவதுடன், வெற்றி, தோல்வியை சமமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய மனத் திண்மையையும் அளித்து இளைஞர்களை சிறந்த பண்புகளுடன் கூடிய மனிதர்களாக உருவாக்க உதவுகின்றன. எனவே தான் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கல்விக்கு அளித்த அதே முக்கியத்துவத்தை விளையாட்டிற்கும் அளித்து வந்தார்கள்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை குறித்த அறிவிப்புகள்:

1.காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டப்பட்டு 42 ஆண்டுகள் ஆகி விட்டதால், இந்த வளாகத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டடங்கள் மற்றும் விளையாட்டு உட்கட்டமைப்புகளை இடித்து விட்டு அதே இடத்தில் நவீன தரத்துடன் கூடிய புதிய விளையாட்டு வளாகம் ஒன்று 15 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். இவ்வளாகம் பார்வையாளர் மாடம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நல அலுவலர் அறை, நிர்வாக அறை, பயிற்சியாளர் அறை, வீரர்கள் உடை மாற்றும் அறை, கழிவறைகள், சேமிப்பு அறை முதலான வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

2.திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் 5 கோடி ரூபாய் செலவில் நீச்சல் பயிற்சிக் குளம், உடற்பயிற்சி கூடம், உடை மாற்றும் அறைகள், கழிவறைகள், அலுவலகம் மற்றும் பயிற்சியாளர்கள் அறையுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த நீச்சல்குள வளாகம் அமைக்கப்படும்.
 
 3.‘கெனாயிங்’ மற்றும் ‘கயாக்கிங்’ எனும் நீர் விளையாட்டு உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளது. தற்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இவ்விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது. சர்வதேச ‘ரெகெட்டா’ எனப்படும் மிகப்பெரிய அளவிலான படகு போட்டிகளை நடத்தும் மையமாக சென்னை திகழ்கிறது. எனவே, காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகம் அருகில்,  ‘கெனாயிங்’ மற்றும் ‘கயாக்கிங்’ விளையாட்டுகளுக்கு, முதன்மை நிலை விளையாட்டு மையம் ஒன்று 4 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை...

தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவு பாதுகாப்பு அளிப்பது நமது பொது விநியோகத்  திட்டத்தின் முக்கியக் குறிக்கோளாகும். நாடு முழுவதும் செயல்படும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை நாம் பின்பற்றினாலும் வருமான அடிப்படையினை கருத்தில் கொள்ளாமல், பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானதாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் பொது விநியோகத்  திட்டம் தனிச்சிறப்பாக கருதப்படுகின்றது. இப்படிப்பட்ட புரட்சிகரமான முன்னோடி  திட்டங்களைத் தான் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தமிழ்நாடு மக்களின் நலன் கருதி செயல்படுத்தினார்கள்.

இச்சிறப்பு மிக்க நமது பொது விநியோகத் திட்டத்திற்கு நம் கூட்டுறவு சங்கங்களே பக்கபலமாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்படும் இச்சங்கங்கள் வேளாண் உற்பத்தியை பெருக்குவதில் முக்கியப் பங்காற்றுகின்றன.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவிப்புகள்:

1. தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தை முழு கணினிமயமாக்கலின் ஒரு பகுதியாக அனைத்து நியாய விலைக் கடைகளிலும் விற்பனை இயந்திரம் வழங்கப்பட்டு, அதன் மூலம் குடும்ப அட்டைகளுக்கான அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடும்ப அட்டைதாரர் கோரும் அத்தியாவசியப் பொருட்களுக்கான விவரம், மேற்படி இயந்திரத்தில் பதிவு செய்தவுடன், குடும்ப அட்டைதாரரால் பதிவு செய்யப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு அவர் பெற்ற பொருட்கள் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்களுக்கான பட்டியல் (Bill) தற்போது வழங்கப்படுவதில்லை. இதை சரி செய்யும் விதமாகவும், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் படி பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் பயோமெட்ரிக் முறையில் வழங்கப்பட வேண்டுமென்பதாலும், தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரல்ரேகை படிப்பி (Finger Print Reader) மற்றும் அச்சுப்பொறி வழங்கப்படும்.

2. நமது நாட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு, வணிக வங்கிகளுக்கு இணையாக, விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் வழங்கும் சேவையை மேம்படுத்தவும், கிராமப்புறங்களில் பொதுமக்களுக்கு நவீன வங்கி சேவையினையும் வழங்க நபார்டு வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாட்டில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அனைத்தும் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டு மைய வங்கியியல் கணினி சேவை முறை (Core banking Solution) 134.67 கோடி ரூபாய் செலவில் மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

3. கூட்டுறவு நிறுவனங்களில், சொந்த அடிமனை இருந்தும், வாடகைக் கட்டடங்களில் செயல்படும் அனைத்து சங்கங்களுக்கும் சொந்தக் கட்டடங்கள் கட்டப்படவேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையை செயல்படுத்திட, இந்த ஆண்டில் 114 கூட்டுறவு நிறுவனங்களுக்கு 23 கோடியே 10 இலட்சம் ரூபாய் மதிப்பில் சொந்தக் கட்டடங்கள் கட்டப்படும். மேலும், மதுரை மாவட்டம், விரகனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 70 இலட்சம் ரூபாய் செலவில் வணிக வளாகம் கட்டப்படும். வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் குடியிருப்புகளுக்கு அருகாமையிலேயே சேவை அளிக்கும் பொருட்டு திருச்சி மற்றும் தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் 15 புதிய கிளைகள் 2 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் துவக்கப்படும். கூட்டுறவு நிறுவனங்களின் தோற்றப் பொலிவினை அழகுபடுத்தும் பொருட்டு, வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறவும், வணிக வங்கிகளுக்கு ஈடாக கூட்டுறவு சங்கங்களின் சேவையை வழங்க 27 கூட்டுறவு நிறுவனங்கள் 3 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்படும்.

4. சிறு வணிகர்கள், தனியாரிடமிருந்து அதிக வட்டியில் கடன் பெறுவதை தவிர்த்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு, மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளில் தற்போது வழங்கப்பட்டு வரும் சிறு வணிகக் கடன் உச்ச வரம்பினை 10,000/- ரூபாயிலிருயது 25,000/- ரூபாயாக உயர்த்தி  வழங்கப்படும்.

5. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சென்னையில் அண்ணாநகர், நந்தனம், திருவான்மியூர், தங்கசாலை மற்றும் கோபாலபுரம் ஆகிய 5 இடங்களில் கிடங்கு வளாகங்கள் உள்ளன. அவற்றில் 86,068 மெட்ரிக் டன் உணவுப் பொருட்கள் இருப்பு வைத்துக் கையாளப்படுகிறது. இதிலிருந்து சென்னை மாநகரை சுற்றிலும் 30 கிலோ மீட்டர் சுற்றளவில் பொது விநியோக திட்டத்திற்கான பொருட்கள் நகர்வு செய்யப்படுகின்றன. உணவு தானிய சேமிப்பு கிடங்குகளின் கொள்ளளவினை மேலும் அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, சென்னை பெருநகரை ஒட்டியுள்ள மாதவரம் பகுதியில் 12,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட விஞ்ஞான முறையிலான, இயந்திர கையாளுமை திறனுடன் கூடிய நவீன சேமிப்புக் கிடங்கு 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த நிதியாண்டில் கட்டப்படும்.

6. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்திற்கு 9.82 இலட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவுள்ள சொந்தக் கிடங்குகளும், பிற நிறுவனங்கள் மற்றும் தனியாரிடமிருந்து வாடகை அடிப்படையில் 2.27 இலட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவுள்ள கிடங்குகளும் சேர்த்து 288 கிடங்குகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இக்கிடங்குகளின் சேமிப்பு கொள்ளளவு தற்போதைய தேவைக்கு போதுமானதாக இல்லை என்பதால், இவற்றின் கொள்ளளவினை அதிகப்படுத்திடும் வகையில், முதற்கட்டமாக 9 மாவட்டங்களில் 14 சொந்த இடங்களில், 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 30,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சூரிய ஒளி கூரை கொண்ட சேமிப்பு கிடங்குகள் கட்டப்படும்.

7. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் 25 கிடங்கு வளாகங்களுக்கு உட்புற சாலை வசதி, சுற்றுச் சுவர் கட்டுதல் மற்றும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குடிநீர் வசதி, ஓய்வு அறை மற்றும் அடிப்படை வசதிகள் நபார்டு வங்கி நிதியுதவியுடன் 25 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

8. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 40 வருட தொடர் பயன்பாட்டில் இருந்து வரும் பழைய 15 சேமிப்பு கிடங்கு வளாகங்களில் அடிப்படை பராமரிப்பு பணிகளும், 6 அங்கு பணிபுரியும் சுமைத்தூக்கும் பணியாளர்கள் மற்றும் வாகன ஒட்டுநர்களின் நலன் சார்ந்த பணிகளும் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை சார்பாக அறிவிப்புகள்... 

1. வன வளத்தையும், வன உயிரினங்களையும், பொதுமக்களையும் பாதுகாக்கும் மகத்தான பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள வனப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் போது வன உயிரினத் தாக்குதலால் உயிரிழக்கும் துயர நேர்வுகளிலும், வனக் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுடனான மோதல்களில் உயிரிழக்க நேரிடும் நேர்வுகளிலும், வீர தீர செயல் மற்றும் எதிர்பாராத அசம்பாவித சூழ்நிலை போன்ற நேர்வுகளிலும், காவலர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகின்ற இழப்பீட்டுத் தொகைக்கு இணையாக வனப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கும் இழப்பீட்டுத் தொகையை 4 லட்சம் ரூபாயிலிருந்து 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தி  வழங்கப்படும்.

2. 2013 முதல் 2015 வரையிலான காலத்திய இந்திய வன அளவை நிறுவனத்தின், வன அறிக்கையின்படி நாட்டிலுள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும், வனம் மற்றும் மரங்கள் அடங்கிய பரப்பளவு தமிழகத்தில் மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது. தமிழகத்தினுடைய வன வளத்தை மேலும் பாதுகாக்கவும் அவ்வுணர்வினை அனைவரிடமும் வளர்க்கவும், வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்ற மலைவாழ் மக்களுடைய இயற்கைச் சார்ந்த வாழ்க்கை முறையினை தற்கால சந்ததியினருக்கு, குறிப்பாக, மாணாக்கர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும், உள்ளூர் மக்களை இயற்கைச் சுற்றுலா  திட்டத்தில் முழுமையாக பங்கேற்கச் செய்து அவர்களது வேலைவாய்ப்பை பெருக்குவதுடன், சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகை செய்யும் வகையிலும் தமிழ்நாடு சூழல்சார் சுற்றுலாக் கொள்கை, 2017 உருவாக்கப்படும்.

3. பவானி ஆறு, நீலகிரி மலையில் உற்பத்தியாகி காவிரி ஆற்றில் கலக்கின்றது. இந்த ஆற்றின் நீர் 90 சதவீதம் கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களின் பாசனத்திற்கு பயன்படுகின்றது. மேலும், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் பவானி ஆறு விளங்குகிறது. பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் வடிகால் கழிவுநீர் வெளியேற்றத்தால் ஆற்று நீரில் ஏற்படும் தாக்கத்தை கண்காணிக்கும் வண்ணம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தற்போது மாதம் ஒருமுறை நீர் மாதிரி எடுத்து ஆய்வு செய்கின்றது. ஆற்று நீரின் தன்மையை தொடர்ச்சியாக 24 மணி நேரமும் கண்காணிக்கும் நோக்கத்துடன் நடப்பு நிதியாண்டில் பவானி ஆற்றில் 2 இடங்களில் இணைய வழி தொடர் நீர் தர கண்காணிப்பு நிலையங்கள் ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இந்நிலையங்கள் தலைமை அலுவலகம் மற்றும் உரிய மாவட்ட அலுவலகங்களுடன் இணைய வழியாக இணைக்கப்படும்.

ஆதார நூல்கள்:

1. தமிழ்நாடுசட்டபேரவை எண்: 016 நாள் : 20.06.2017

2. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி  எண்.110-ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் அறிக்கை – நாள் 19.6.2017

கட்டுரையாளரைத் தொடர்பு கொள்ள:  9840052475

]]>
Edappadi Palanisami,Legislative Assembly,Tamilnadu,எடப்பாடி பழனிசாமி,சட்டப்பேரவை,தமிழ்நாடு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/21/w600X390/assembly_Edappadi.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jun/21/tamilnadu-chief-minister-edapadi-pazhanisamys-anouncements-under-the-rule-110-on-20062017-2724873.html
2717392 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் இன்றைய இணைய வைரல்: சென்ற வேகத்தில் செல்ஃபீ எடுத்து வெளியிட்ட மான்ஸ்டர் ராக்கெட் GSLV Mark 3! கார்த்திகா வாசுதேவன் DIN Friday, June 9, 2017 02:14 PM +0530  

‘ஃபேட் பாய்’ என்று செல்லமாக அழைக்கப்படும் GSLV MARK 3,  இந்தியா இதுவரை தயாரித்த ராக்கெட்டுகளிலேயே மிக அதிக சக்தி வாய்ந்த, மிக மிக அதிக எடை கொண்ட ராக்கெட்டுகளில் முதன்மையானது. அதன் எடையைக் கணிக்க வேண்டுமானால் 200 யானைகளின் பலம் கொண்டது என்று சொல்லலாம் அல்லது 5 ஜம்போ ஜெட்டுகளுக்கு இணையான எடை கொண்டது என்று கூறலாம். இந்த மீத்திறன் வாய்ந்த GSLV Mark 3 ராக்கெட்டை ISRO கடந்த திங்களன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. ஏவிய மாத்திரத்தில் ராக்கெட் தன்னைத்தானே செல்ஃபி எடுத்து அனுப்பியது. அந்த செல்ஃபி தான் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

ட்விட்டர் தளத்தில் இந்த செல்ஃபீ புகைப்படம் பலமுறை ரீ ட்வீட் செய்யப்பட்டு ஹிட் அடித்துக் கொண்டிருப்பது தான் தற்போதைய இணைய வைரல். எல்லாவற்றுக்கும் மேலாக என் டி டி வி இந்தியாவின் அதிக எடை கொண்ட இந்த ராக்கெட்டுக்கு ’பாகுபலி ராக்கெட்’ என்று வேறு பெயரிட்டுக் குறிப்பிட்டிருப்பது இன்னும் வேடிக்கை! 

]]>
GSLV mark-3,ISRO,GSLV, இஸ்ரோ, ஜிஎஸ்எல்வி மார்க்-3,ஜிஎஸ்எல்வி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/9/w600X390/baghubali_rocket2.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jun/09/isros-baghubalir-rocket-sends-home-selfies-finds-major-fans-on-twitter-2717392.html
2716759 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் கத்தார் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல் RKV IANS Thursday, June 8, 2017 01:30 PM +0530  

கத்தாரிலிருக்கும் இந்தியர்கள், தங்களது விமானப் பயணத் திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்படுவது குறித்து உடனுக்குடன் அறிந்து கொள்ள அவரவர் பயண முகவர்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும், என இந்திய தூதரகம் அறிவுறுத்தி இருக்கிறது.

கத்தார் நாடு தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டி இஸ்லாமிய நாடுகளில் சில அந்நாட்டுடனான அரசியல் உறவு மற்றும் போக்குவரத்தை துண்டித்துக் கொள்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்தியத் தூதரகம் கத்தாரிலிருக்கும் இந்தியர்களின் கலக்கத்தைப் போக்க மேற்கண்டவாறு அறிவுறுத்தி இருக்கிறது.

இந்திய தூதரகம் சார்பில், கத்தாருடன் விமானப் போக்குவரத்தை துண்டித்துள்ள இஸ்லாமிய நாடுகளின் விமானப் போக்குவரத்து நிறுவனங்களிடமிருந்து, அவர்கள் வசூலித்த விமானக் கட்டணங்களை உடனடியாகத் திருப்பி அளிக்க ஆவன செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் கத்தாரிலிருந்து இந்தியா திரும்ப நினைக்கும் இந்தியர்கள் தங்களது விமானப் பயண முகவர்களுடன் நீடித்த தொடர்பில் இருந்தால், பயண மாற்றங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் எனவும் இந்தியத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. 

மேலும் கத்தாரிலிருக்கும் இந்தியர்கள் நிலை குறித்து இந்திய அரசு தீவிரமாகக் கண்காணித்து வருவதோடு, கத்தாரிலிருக்கும் தூதரக அதிகாரிகளுடன் நிரந்தரத் தொடர்பில் இருப்பதால் அங்கிருக்கும் இந்தியர்கள் தங்களது பாதுகாப்பு குறித்து வீண் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை எனவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில் இந்தியத் தூதரகம் கத்தாரில் இருக்கும் இந்தியர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதுமட்டுமல்ல; இந்திய ஊடகங்களைக் கண்டு உடனடிச் செய்திகளை அறிந்து கொண்டு, நடப்பவற்றைக் குறித்து தெளிவாக இருக்க வேண்டும், வீண் வதந்திகளை நம்பி ஆபத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம் எனவும் இந்தியத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

 சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து உள்ளிட்ட 4 இஸ்லாமிய நாடுகள் கடந்த வாரத்தில் கத்தார் நாடு தொடர்ந்து தீவிரவாதத்தை ஊக்குவிப்பதால் தங்களது நாடுகளின் பாதுகாப்புக்கு பலத்த அச்சுறுத்தல் நிலவுகிறது எனக் குற்றம் சாட்டி அந்நாட்டுடனான தங்களது உறவை ரத்து செய்து விட்டதாக அறிவித்து விட்டன. இவ்விதமாக கடந்த ஒரு வருட காலமாக மேற்கண்ட நாடுகள் கத்தார் மீது எழுப்பிக் கொண்டிருந்த தீவிரவாதக் குற்றச்சாட்டு ஒரு முடிவுக்கு வந்தது.

இந்த நாடுகளைத் தொடர்ந்து மாலத்தீவு, ஏமன், மொரீஸியஸ், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளும் கத்தாருடனான உறவைத் துண்டித்துக் கொள்வதாக முடிவெடுத்துள்ளன.

இந்நிலையில் அங்கு வசிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களின் பாதுகாப்பு குறித்து அனைத்து நாடுகளும் கவலையுறும் சூழல் அங்கு நிலவி வருகிறது.

கத்தாரிலிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 6,30,000. பிற நாட்டுக் மக்களின் பாதுகாப்பு குறித்து கத்தார் உரிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், உணவுத் தேவையும், இயல்பு வாழ்க்கையும் கெடாமலிருக்குமாறு கத்தார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்நாட்டு தூதரகம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்தியாவுக்கு பெருமளவில் இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் கத்தார் முக்கிய இடம் வகிக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.

]]>
Qatar, Indian Embassy, Qatar Indians, கத்தார், இந்தியத் தூதரகம்,கத்தார் இந்தியர்கள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/8/w600X390/qatar-saudi-arab.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jun/08/indians-in-qatar-advised-to-remain-alert-2716759.html
2715509 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் கமுதி மக்களுக்கு சாபமாக மாறிப்போன, அதானியின் பசுமை ஆற்றல் சூரிய எரிசக்தி ஆலை! RKV DIN Tuesday, June 6, 2017 06:10 PM +0530  

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் 2500 ஏக்கர் பரப்பளவில் அதானி குழுமத்தால் நிறுவப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி ஆலையானது, அவர்கள் குறிப்பிட்ட படி அப்படியொன்றும் நிலையானதாகவும், பசுமையை நிலை நிறுத்தக்கூடியதாகவும் இல்லை என அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 648 மெகா வாட் புதுப்பிக்கத் தக்க ஆற்றலை உருவாக்கும் தன்மை கொண்ட இந்த ஆலையானது மிக அதிக அளவில் நீரை விழுங்கக் கூடியதாக உள்ளது.

இந்த எரிசக்தி ஆலையின் 25 லட்சம் சூரிய அலகுகளைச் சுத்தமாக்க நாளொன்றுக்கு 2 லட்சம் லிட்டர்கள் சுத்தமான தண்ணீர் தேவைப்படுகிறது. இப்படித் தேவைப்படும் தண்ணீர், மாவட்ட நிர்வாகத்தின்  அனுமதியின்றி சம்மந்தப்பட்ட எரிசக்தி ஆலைகள் அமைந்துள்ள இடங்களில் இருந்து 5 கிமீ தூரத்தில் உள்ள இடங்களில் இருந்து ஆழ்துளைக் குழாய் கிணறுகள் வழியாக உறிஞ்சப் பட்டு பயன்படுத்தப் படுகிறது என ஊர் மக்கள் கூட்டாகத் தெரிவித்தனர்.

ஆழ்துளைக்கிணறுகள் வழியாக அனுமதியின்றி நல்ல நீர் உறிஞ்சப்பட்டு டிராக்டர்களுடன் இணைக்கப்பட்ட 6,000 முதல் 8000 வரை கொள்ளளவு கொண்ட பெரிய பெரிய டேங்குகளில் சேகரிக்கப்பட்டு கொண்டு செல்லப் படும் காட்சியை; கோட்டை மேடு பகுதியிலிருக்கும் கமுதி- முதுகுளத்தூர் சாலையின் வறண்ட குண்டாறு சாலையில் பயணிக்கும் யார் வேண்டுமானாலும் இரவும், பகலும் இடைவிடாது தொடர்ச்சியாக காண முடியும்.

சூரிய சக்தி ஆலையின் ராட்சத சூரிய அலகுகள் ஒவ்வொன்றையும் சுத்தம் செய்வதற்காக அதானி குழுமத்தின் பசுமை ஆற்றல்( தமிழ்நாடு) மூலமாக சுமார் 40 டிராக்டர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.

ராட்சத சூரிய அலகுகள் ஒவ்வொன்றும் சுமார் 125 அடி நீளமும் 28 அடி அகலமும் கொண்டவை. நாளொன்றுக்கும் இருமுறை இரண்டு பணியாளர்கள் இந்த சூரிய அலகு பேனல்களைச் சுத்தப் படுத்தும் பணியில் ஈடுபடுகிறார்கள். இந்தப் பேனல்கள் தினமும் சுத்தப் படுத்தப் படாவிட்டால் மொத்த உற்பத்தியில் 25 % குறையக் கூடும் என்கிறார்கள்.

அதானி எரிசக்தி ஆலையின் பாதுகாப்பு அதிகாரியான எஸ்.கே. ஷர்மாவிடம் கிராம மக்களின் புகாரை முன் வைத்ததில் அவர் அளித்த பதில்; கிராமங்களில் இருந்து அதானி குழுமம் நேரடியாக தண்ணீரை ஆழ்துளைக் கிணறுகள் மூலம் உறிஞ்சவோ அல்லது விலைக்கு வாங்கவோ இல்லை எனவும், சூரிய அலகு பேனல்களை சுத்தப் படுத்தும் பணி அவுட் சோர்ஸிங் முறை கையாளப்படுவதால் அது ஒப்பந்ததாரர்களுடைய பொறுப்பாகி விடுகிறது. இந்த விவரத்தை அதானி குழுமம் தங்களது ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இது பற்றி அதானி குழும உயரதிகாரிகளின் கருத்தை அறிய முயன்ற போது அவர்களில் எவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. 

இது குறித்துப் பேசிய, கமுதி தாலுவுடன் இணைந்த ஒரு வருவாய் அதிகாரி ஒருவர், "எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ நிலத்தடி நீர் விற்க அனுமதிக்கப்படவில்லை, ஆனால் அவை சோலார் தொகுதிகள் சுத்தம் செய்ய ஒப்பந்தக்காரர்களுக்கு விற்கப்படுகின்றன." என்று கூறினார்.

தற்போது கமுதி கோட்டை மேடு பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 100 முதல் 150 அடி ஆழம் வரை அதானி குழும சூரிய பேனல்களை சுத்தம் செய்வதற்காக ஒப்பந்ததாரர்கள் மூலமாகத் தண்ணீர் உறிஞ்சப் பட்டுக் கொண்டிருக்கிறது. இதை அந்த கிராம மக்களுக்கு கிட்டிய சாபம் என்று தான் சொல்ல வேண்டும். தொடர்ந்து சூரிய எரிசக்தி ஆலைக்காக இப்படி அதிக அளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு வீணடிக்கப் பட்டால் அந்தப் பிரதேசங்களில் நிச்சயம் நிலத்தடி நீரே இல்லாத நிலை ஏற்பட்டு விடும். என ஆரம்பம் முதலே இந்த விசயத்தில் சம்மந்தப்பட்ட கிராம மக்களுக்காக குரல் கொடுத்து வரும் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் ராஜு தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இது குறித்துப் பேசும்போது; மாநில அரசு தேவைப்படும்  நில விஸ்தீரணம் உட்பட,  அதானி குழுமத்தின் சூரிய எரிசக்தி ஆலையின் செயல்பாடுகளுக்கான அனைத்து வசதிகளையும் முன்னரே செய்து கொடுத்துள்ளது. அப்படி இருந்தும் அந்த குழுமம் அனுமதியின்றி முறைகேடாக கிராம மக்களின் நீராதாரமான நிலத்தடி நீருக்கு ஊறு விளைவிக்க முயல்வது நிச்சயம் கண்டனத்துக்குரியது. சட்டத்திற்குப் புறம்பான இச்செயல் நிறுத்தப்படவில்லை எனில் மக்களை ஒருங்கிணைத்து போராட்டத்தில் குதிப்போம் என எச்சரித்துள்ளார்.

]]>
adhani green energy, worlds largest solar energy unit, kamudhi, naam thamizhar katchi, seeman, அதானி பசுமை ஆற்றல், உலகின் மிகப்பெரிய சூரிய எரிசக்தி ஆலை, கிராம மக்களுக்கு கிடைத்த சாபம், நாம் தமிழர் கட்சி, சீமான், http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/6/w600X390/ADHANI_GREEN_ENERGY.JPG http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jun/06/adani-solar-plant-guzzles-illegal-fresh-water-in-drought-hit-tamil-nadu-2715509.html
2715498 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் இந்தியப் புலி, சீன டிராகனை விழுங்கி விட்டது! RKV DIN Tuesday, June 6, 2017 04:25 PM +0530  

கடந்தாண்டுகளை விட பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் இந்தியா, சீனாவை விட பின் தங்கி விட்டதாக சில மாதங்களுக்கு முன்பு வரை சீனா மகிழ்ச்சியில் இருந்தது. இதைப் பற்றி குறிப்பிடும் போது; இந்தியப் புலியை, சீனா டிராகன் விழுங்கி விட்டது என்பதாக சீனாவின் பொருளாதார வல்லுனர்கள் கூறி மகிழ்ந்தனர்.

ஆனால் உலக வங்கி வெளியிட்டுள்ள 2016 ஆம் ஆண்டுக்கான வேகமான பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா 6.8 சதவிகித வளர்ச்சியுடன் சீனாவை முந்தி விட்டது. இதே விகிதத்தில் இந்தியப் பொருளாதாரம் நீடித்து வளர்ந்தால் 2017 ஆம் ஆண்டில் அதன் வளரும் பொருளாதார விகிதம் 7.2 % ஆகவும், 2018 ல் 7.5 % ஆகவும் தொடர்ந்து ஏற்றம் பெற்ற நிலையிலேயே நீடிக்கும் என உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இப்போது இந்தியா சீனாவைப் பார்த்து ‘சீன டிராகனை இந்தியப் புலி விழுங்கி விட்டது’ என்று சொன்னாலும் தவறில்லை. உலக வங்கி தான் சாட்சிக்கு நிற்கிறதே!

]]>
india vs china, economical growth, இந்தியா VS சீனா, பொருளாதார வளர்ச்சி, வேகமாக வளரும் பொருளாதாரம், இந்தியப் புலி VS சீன டிராகன், உலக வங்கி, world bank http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/6/w600X390/india_vs_china.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jun/06/indian-tiger--swallows-chinese-dragon-2715498.html
2715452 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் பள்ளிக்கல்வித் துறை சார்பாக மேலும் 42 புதிய அறிவிப்புகள் இன்று வெளியிடப்படலாம்! RKV DIN Tuesday, June 6, 2017 11:44 AM +0530  

கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் நாளை திறக்கப் படவிருக்கின்றன. இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக 42 புதிய அறிவிப்புகள் இன்று அறிவிக்கப்பட இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவந்த போது; கடந்த வருடங்களைப் போல் இல்லாமல் அதிரடியாக மதிப்பெண் அடிப்படையிலான மாணவர்களின் தர வரிசைப் பட்டியல் தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் வெளியிடப் படக்கூடாது எனும் முடிவை எடுத்தது முதல் பள்ளிக்கல்வித் துறையில் மாணவர்கள் நலன் சார்ந்து பல்வேறு மாற்றங்களைக்  கொண்டு வரும் முடிவில் இருக்கிறது தமிழக அரசு.

அந்த வகையில் பிளஸ் ஒன் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு வைத்தல் முதலிய புது அறிவிப்புகளுடன் மேலும் பல புதிய 42 விதமான அறிவிப்புகள் பள்ளிக் கல்வித் துறை சார்பாக இன்று வெளியாகலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

]]>
school of education ministry, பள்ளிக் கல்வித்துறை அமைச்சகம், செங்கோட்டையன், tamilnadu schools, 42 புதிய அறிவிப்புகள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/6/w600X390/zee_news.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jun/06/42-more-new-announcements-on-behalf-of-the-school-of-education-2715452.html
2715445 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் ராகுல் காந்தி பேசாமல் ஆர்.எஸ்.எஸ் ஸில் இணைந்து விடலாம்: தமிழிசை! RKV DIN Tuesday, June 6, 2017 11:24 AM +0530  

திமுக தலைவர் கருணாநிதியின் 94 வது பிறந்தநாளை ஒட்டி அவரது சட்டப்பேரவை வைரவிழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வுக்காக சென்னை வந்த ராகுல் காந்தி விழாவில் பேசும் போது; பாஜக வுக்கும், ஆர்.எஸ்.எஸ் ஸுக்கும் தகுந்த பதிலடி கொடுக்கவே தான் பகவத் கீதையையும், உபநிடதங்களையும் வாசித்து அறிந்து கொண்டிருப்பதாகக் கூறினார். அது மட்டுமல்ல மேடையில் பேசுகையில் அவர்; ‘தமிழ் எனக்குப் பிடிக்கும்’ என்றும் கூறினார்.

ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை; “இலங்கையில் கணக்கில்லாமல் தமிழர்கள் கொல்லப்பட்ட போது ராகுல் காந்தி எங்கே போனார்? என்று கூறி விட்டு. கீதை படிப்பதை விட்டு விட்டு பேசாமல் ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ்ஸில் இணைந்து விடலாம். அப்போது தான் அவருக்கு சரியான புரிதல் கிடைக்கும்” எனக் கூறினார்.

]]>
thamizhisai, ragul gandhi, karunanidhi vaira vizha, ராகுல் காந்தி, கருணாநிதி வைர விழா, தமிழிசை, பாஜக தமிழகத் தலைவர் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/6/w600X390/thamizisai.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jun/06/ragul-can-join-in-bjp-on-behalf-of-reading-bagavadh-geetha-said-thamizisai-2715445.html
2715442 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் மும்பையில் சரக்கு ரயில் மோதி இளம்பெண் உயிர் தப்பிய வைரல் வீடியோ! RKV DIN Tuesday, June 6, 2017 11:06 AM +0530  

மும்பை குர்லா ரயில் நிலையத்தில் கடந்த மே 13 ஆம் தேதி சரக்கு ரயில் மோதி இளம்பெண் ஒருவர் உயிர் தப்பிய காட்சிகள் ரயில் நிலைய சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது.

இந்த அதிசயக் காட்சி தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகிக் கொண்டிருக்கிறது. சம்பவ தினத்தன்று அந்த இளம்பெண் காதில் Ear phone மாட்டியவாறு நண்பர்களுடன் பேசிக் கொண்டே ரயில் பாதையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென குறுக்கிட்ட சரக்கு ரயிலைக் கண்டு நிலைகுலைந்த அந்தப் பெண் அதிர்ந்து போய், செய்வதறியாது திகைத்து எந்தப் பக்கம் ஒதுங்குவது எனத் தெரியாமல் நேரே ரயிலின் முன்பாகத்தில் சென்று மோதினார். ரயில் மோதிய வேகத்தில் அந்தப் பெண் சக்கரங்களுக்கு இடைப்பட்ட இடைவெளியில் மாட்டிக் கொண்டு அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். ரயில் மோதியும் இளம்பெண் உயிர் தப்பிய இந்தக் காட்சிகள் இப்போது அதிசயமான செயலாகக் கருதப்ப்பட்டு தொடர்ந்து இணையதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சி...

 

Image courtsy: News 7 tamil.

]]>
மும்பை, mumbai, சரக்கு ரயில் , இளம்பெண், வைரல், goods train, girl alive after hit by train http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/6/w600X390/girl_hit_by_train.png http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jun/06/girl-became-alive-after-hit-by-the-goods-train-in-mumbai-news-goes-viral-in-net-2715442.html
2714796 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் என்டிடிவி பிரணாய் ராய் வீட்டு ரெய்டில் சுப்ரமணியன் சுவாமியின் பங்கு!’ கார்த்திகா வாசுதேவன் ANI Monday, June 5, 2017 04:14 PM +0530  

சிலமாதங்களுக்கு முன்பு சுப்ரமணியன் சுவாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதும் போது அந்தக் கடிதத்துடன்  என்டிடிவி யின் நிதி முறைகேடுகளை நிரூபிப்பதற்குத் தேவையான ஆதாரங்களையும் இணைத்து அனுப்பி இருந்தாராம். 

மார்ச் 8, 2010 ஆம் ஆண்டில் ரிலயன்ஸ் குழுமத்தைச் சார்ந்த நிறுவனங்களில் ஒன்றான VCPL நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தொகை Shell நிறுவன வங்கிக் கணக்கில் வரவு வைக்கப் பட்டிருந்தது. Shell நிறுவனத்தில் என்டிடிவி துணை நிறுவனர் பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி இருவரும் 50 % பங்குதாரர்கள். பரிமாறப்பட்ட தொகையானது சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் என் டி டி வி யின் பங்கை 26% லிருந்து 29.19 % மேலும் அதிகப் படுத்தும் வகையில் பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா இருவரது தனிக்கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. இது குறித்த ஆதாரங்கள் அனைத்தையும் சுப்ரமணியன் ஸ்வாமி பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் இணைத்திருந்தார் என்று கூறப்படுகிறது.

மேலும் வெளிநாட்டு நிறுவனங்கள் வாயிலாக ரூ.2030 கோடிகள் மற்றும் ரூ.640 கோடிகள் என பணப்பரிமாற்றம் நிகழ்ந்து அது எப்படி என் டி டி வி வங்கிக் கணக்குகளில் சேர்ந்தது என்பது குறித்தான ஆதாரங்களையும் கூட ஸ்வாமி முன்னதாக தெரிவித்திருந்தாராம்.
இது குறித்து ANI க்கு அளித்த பேட்டியில் சுப்ரமணியன் ஸ்வாமி தெரிவித்ததாவது; 
“ சட்டத்தின் முன் நீங்கள் யார் என்பது முக்கியமில்லை. சட்டத்திற்கு அஞ்சும் மனப்பான்மை அனைவருக்கும் அவசியமான ஒன்று’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த வழக்கில் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா மட்டுமல்ல என் டி டி வியின் பிற பங்குதாரர்களான பர்கா தத், சோனியா சிங், விக்ரம் சந்திரா உள்ளிட்டோரையும்  சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இவர்களும் வெளி நாட்டு நிறுவனங்கள் மூலம் தமது சொந்த வங்கிக் கணக்கில் முறைகேடாகப்  பணப்பரிமாற்றம் செய்த குற்றத்துக்கான ஆதாரங்கள் உள்ளன என சுப்ரமணியன் ஸ்வாமி தெரிவித்துள்ளார்.

சிபிஐ ரெய்டு குறித்து என் டி டி வி நிர்வாகத் தரப்பில் கூறப்பட்ட பதிலில்; “தங்களது துணை நிறுவனர் மற்றும் ஊக்குவிப்பாளர்கள் மேல் சுமத்தப் பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. மத்திய அரசு உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே இம்மாதிரியான சூனிய வேட்டைகளை சுதந்திரமாகச் செயல்படும் தங்களைப் போன்ற ஊடகத்தினர் மீது திட்டமிட்டு கட்டவிழ்த்து விட்டுள்ளது. அதற்காக அஞ்சி நாங்கள் ஓய்ந்து விட மாட்டோம். தொடர்ந்து என் டி டி வியும் அதன் துணை நிறுவனங்கள் மற்றும் ஊக்குவிப்பாளர்கள் அனைவரும் மத்திய அரசின் இந்த சர்வாதிகாரப் போக்குக்கு எதிராகப் போராட சளைக்க மாட்டோம்” என்று கூறப்பட்டுள்ளது. 

Image courtsy: first post.

]]>
prannoy roy, NDTV, Subramania swamy, என்டிடிவி, சுப்ரமணிய சுவாமி, பிரணாய் ராய், சிபி ஐ ரெய்டு, CBI raid http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/5/w600X390/swamy_and_roy.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jun/05/subramaniyan-swamys-effort-on-ndtv-pranay-roy-house-raid-2714796.html
2714733 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் சர்வ தேச அளவில் பரதத்துக்கு கிடைக்கும் வரவேற்பு குச்சுப்புடிக்கு இல்லையோ?! கார்த்திகா வாசுதேவன் DIN Monday, June 5, 2017 12:15 PM +0530  

இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலத்துக்கும் என்று ஸ்பெஷலாக சில பாரம்பரிய நடன வகைகள் உண்டு. தமிழ்நாட்டுக்கு பரதம், கேரளாவுக்கு கதகளி, மோகினியாட்டம், ஒடிசாவுக்கு ஒடிஸி, அஸ்ஸாமுக்கு  சட்ரியா, மணிப்பூருக்கு மணிப்புரி, வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவின் சில பிராந்தியங்களுக்கு கதக், என்பது போல ஆந்திராவுக்கு என்றே பிரத்யேகமாக குச்சிப்புடி என்றொரு பாரம்பரிய நடனம் உண்டு. ஆனால் இந்தியா முழுதும் பரதத்திற்கு கிடைத்த அளவுக்கு பரவலான அறிமுகமும், வரவேற்பும் குச்சிப்புடிக்கு இல்லையோ! வெளிநாட்டினருக்கு இப்படி ஒரு நடனம் இருப்பதைப் பற்றிய கவனம் போதாதோ என்றொரு கவலை குச்சுப்புடி நடனத்தை அறிந்த எல்லோருக்கும்  வந்தது போலவே,  ஆந்திராவைச் சேர்ந்த குச்சிப்புடி நடனக் கலைஞரான ஹலீம் கானுக்கும் வந்தது. அதன் எதிரொலியாகத் தொடங்கப் பட்டது தான் ‘Dressed To Dance' எனும் திரைப்பட முயற்சி!

ஹலீம் கான்,  ஒரு  ஆணாக இருந்த போதிலும் குச்சிப்புடி நடனம் ஆடும்போது மட்டும் உச்சி முதல் உள்ளங்கால் வரை சகலமும் ஒரு பெண்ணாகவே உருமாறி விடுகிறார். குச்சுப்புடி நடனத்தின் போது அவரது உடைகளாகட்டும், ஆபரணங்களாகட்டும், ஒப்பனைகளாகட்டும், முக பாவனைகளாகட்டும் அனைத்துமே அவரை முழுமையான பெண்ணாகவே காட்டும்படியாகப் புனையப்பட்டிருக்கும். பிற குச்சுப்புடி நடனைக் கலைஞர்களிடமிருந்து ஹலீம் கானை வித்யாசப்படுத்திக் காட்டுவது அவரது இந்த முயற்சியும், சிரத்தையும் தான்.

இதுவரை 850 முறைகளுக்கும் மேல் தனியாகவும், குழுவாகவும் குச்சுப்புடி நடனமாடி ஆந்திராவைப் பொறுத்தவரை பிரபலமான குச்சுப்புடி நடனக்கலைஞராக இருக்கும் ஹலீம் கான், ஒரு சிறந்த நடனக் கலைஞராக தனது அர்ப்பணிப்பின் அடுத்தபடியாக தேர்ந்தெடுத்திருப்பது திரைப்படத்தை. ஆம்... குச்சிப்புடியையும் பரதம் போலவே சர்வதேச அளவில் கணிசமாக அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் பொருட்டு ‘Dressed To Dance' எனும் திரைப்படத்தில்  நடிக்க முடிவெடுத்திருக்கிறார். இந்தப் படத்தை இயக்கி தயாரிக்கப் போவது ஸ்ரீனு ரெட்டி மற்றும் ஷ்ராவன் ஜடலா.

இந்தப் படம், ஒரு நடனக் கலைஞர் தனது ஆழ்மனதில் தோன்றக் கூடிய படைப்புத் திறனை தேர்ந்த கலைவடிவமாக மாற்றி எப்படி தனது பார்வையாளர்களுக்காக மேடையில் வழங்குகிறார் என்பதைப் பற்றி பேசுவதாக இருக்குமாம். இப்படத்தின் வாயிலாக பார்வையாளர்களான நாம் ஒரு நடனக் கலைஞரின் வாழ்வில் அவருடன் மிக நெருக்கமாகப் பயணித்து அவரது உணர்வுகளை, பாவனைகளை, எண்ணங்களை, சரியான வகையில் அறிந்து கொள்ள முடியும் என்கிறார் ஹலீம் கான். 

இவரது முயற்சியால் சர்வ தேச அளவில், பரதம் போலவே குச்சுப்புடி கற்பவர்களது எண்ணிக்கையும் உயர்ந்தால் நல்லது தானே!

]]>
பரதம், குச்சுப்புடி, பாரம்பரிய நடனங்கள், ஹலீம் கான், Dressed To Dance, குச்சுப்புடிக்காக ஒரு திரைப்படம், haleem khan, http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/5/w600X390/haleem_khan.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jun/05/haleen-khan-a-kussipudi-dancers-trial-to-make-a-film-represents-kussipudi-to-the-world-famous-2714733.html
2714722 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனை கொலை வழக்கில் சிக்க வைத்து பணம் பறிக்க முயற்சி! DIN DIN Monday, June 5, 2017 10:55 AM +0530  

கடந்தாண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான பாரலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று இந்தியா முழுதும் கொண்டாடப்பட்ட தமிழரான மாரியப்பன் தங்கவேலுவை கொலை வழக்கில் சிக்க வைத்து பணம் பறிக்க முயற்சிக்கிறார்கள் என்று மாரியப்பன் புகார் கூறியுள்ளார். ஓமலூர் பெரியகடம்பபட்டியில் நடைபெற்ற விபத்தொன்றில் இரு சக்கர வாகனத்தில் வந்து மாரியப்பனின் காரை இடித்த சதீஷ் என்ற வாலிபர் மரணம் அடைந்ததால். சதீஷின் மரணத்துக்கு மாரியப்பன் தான் காரணம் எனக்கூறி மாரியப்பனிடம் பணம் பறிக்க ஒரு கும்பல் முயல்வதாக மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

சதீஷ் குடிபோதையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்து தனது காரில் மோதியதில் கார் சேதமடைந்துள்ளதாக தான் முன்னரே புகார் அளித்திருப்பதாகவும். சதீஷுக்கு நடைபெற்ற விபத்து குறித்தும் அவருடைய பெற்றோருக்கு தான் முன்னதாக தெரிவித்து விட்டதாகவும், தன் தரப்பு நியாயத்தை முன் வைத்துள்ளார். மாரியப்பன்.  

]]>
Mariyappan Thangavelu,Paralimbic Gold Winner ,Tamilnadu, மாரியப்பன் தங்கவேலு,பாரா ஒலிம்பிக் போட்டி,தமிழ்நாடு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/5/w600X390/mariyappan.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jun/05/mariyappan-thangavelu-2714722.html
2713112 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் களைக் கொல்லியின் விற்பனைக்காக உருவாக்கப்பட்டதா கலப்பின கடுகு? பவித்ரா முகுந்தன் DIN Friday, June 2, 2017 06:14 PM +0530  

கடுகு சுயமாக மகரந்தம் செய்யக்கூடிய பயிர் வகையைச் சேர்ந்தது. ஒவ்வொரு கடுகுப் பூவும் ஆண் கேசரம் மற்றும் பெண் யோனி ஆகிய இரண்டு விதைகளையும் கொண்டிருக்கும். அதுவே மரபணு மாற்றப்படும் கடுகு அதாவது இந்திய கடுகு யோனிகளை ஐரோப்பா கடுகு கேசரத்துடன் சேர்த்து கலப்பின வகையில் உருவாக்கப்படும் இந்தக் கடுகு சுய மகரந்த தன்மையை இழக்கும், அதனால் இந்திய நாட்டுக் கடுகு வகைகளான சுமார் 12,755 கடுகு வகைகள் அழிந்து போகும் வாய்ப்பு அதிகமுள்ளது.

டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் தாரா காய்கறி எண்ணெய் மற்றும் உணவு நிறுவனத்தால் பொதுவுடைமை ஆக்கப்பட்டு மலிவான விலைக்கு இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகு கிடைப்பது இதன் முக்கிய அம்சங்களுள் ஒன்றாக இருந்தாலும், இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகு குளொபோசினேட் என்னும் ஒரு களைக் கொல்லியை சகித்துக்கொள்ளும் தன்மைவுடையது. குளொபோசினேட் கண்மூடித்தனமாகக் களைகளை அகற்றும், மரபணு மாற்றப்பட்ட சேடி வகைகள் மட்டுமே இதைத் தாங்கும் பலம் கொண்டிருக்கும். இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகு குளொபோசினேடால் மட்டுமே அழியக் கூடிய களைகளை வளரச் செய்யும்.

2003-ல் இந்தியன் ஜெனிடிக் இஞ்சினியரிங் அப்ரூவல் கமீட்டீ இதற்கு வணிக ஒப்புதல் வழங்காமல் ஒத்திவைத்த நிலையில் இப்பொழுது ஒப்புதல் கொடுத்துள்ளது. 2003-ல் இதன் காப்புரிமையை பெற்றிருந்த ப்ரோஅக்ரோ நிறுவனமே இந்த கலப்பின கடுகு உருவாக முக்கிய காரணமும் ஆகும். குளொபோசினேட் களைக் கொல்லியின் ஏகபோக உரிமம் கொண்ட ‘பேயர்ஸ்’ நிறுவனம், ‘ப்ரோஅக்ரோ சீட்ஸ் லிமிட்டட்’ நிறுவனத்தின் கிளைகளுள் ஒன்று. ப்ரோஅக்ரோ இந்த கலப்பின கடுகை உருவாக்க முக்கிய காரணம் குளொபோசினேட் களைக் கொல்லியின் விற்பனையை அதிகரிக்கவும் ஆகும்.

20 முதல் 30 சதவீதம் உற்பத்தியை இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகு அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 2002-ல்  இந்தியாவின் முதல் வணிகம் மற்றும் சாகுபடி செய்ய உரிமம் பெற்ற மரபணு மாற்றப்பட்ட உணவு அல்லாத ‘மான்சாடோ’ நிறுவனத்தின் பி.டி பருத்தி மத்திய அரசால் அறிமுகப் படுத்தப்பட்டது, ஆனால் இந்தப் பருத்தியால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பே இன்றுவரை சரி செய்யப் படாத நிலையில் மரபணு மாற்றப்பட்ட கடுகின் சாகுபடிக்கு உரிமம் வழங்குவதைப் பலரும் எதிர்கிறார்கள். அவ்வாறு உரிமம் வழங்கப்பட்டால் இந்தியாவின் முதல் உண்ணக்கூடிய மரபணு மாற்றப்பட்ட பயிர் கடுகு ஆகும்.

]]>
இந்தியா, கடுகு, Mustard, Genitically Modified, GM, herbicide, மரபணு மாற்றம், களைக்கொல்லி http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jun/02/genitically-modified-mustard-seeds-2713112.html
2710745 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் பிறந்த உடனே நடக்கத் தொடங்கியது சிசு! இணையதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கும் வீடியோ! கார்த்திகா வாசுதேவன் DIN Monday, May 29, 2017 12:15 PM +0530  

பிறந்த சிசு என்றாலே அது கடவுளுக்கு இணையென்பது நம் அனைவரின் கருத்து. பிறந்து பூமியில் விழும் ஒவ்வொரு குழந்தையுமே அன்றலர்ந்த சின்னஞ்சிறு பூக்குவியலே! அதனால் கைகால்களை அசைக்க முடியும், தாயின் கருவறை இருட்டிலிருந்து சட்டென்று வெளிவந்து விட்டதால் இந்த பூமியின் வெளிச்சத்தை பழகிக் கொள்ள இயலாமல் இன்னதென்று புரியாது சட், சட்டென்று வீறிட்டு அழும். ரோஜாப்பூ உதடுகள் கோணிக் கொள்ள பிறந்த, உடல் ரத்தம் முழுதையும் முகத்திற்கு ஏற்றி பிறந்த சிசு அழுவது கூட கொள்ளை அழகு! இவை மட்டுமே பிறந்த புதுக்கருக்கு அழியாத சிசுவின் இயல்புகள்.

ஆனால் இந்த வீடியோவில் இருக்கும் குழந்தை அப்படியல்ல. இது ரொம்பவே வித்யாசமான குழந்தை. தன்னை கையிலேந்தி நிற்கும் மருத்துவரின் கையின் பலம் கொண்டு அது நடப்பதைப் பாருங்கள். குழந்தை புரண்டு விழவே மூன்று மாதங்கள் தேவைப்படும். இடுப்பு பலம் பெற்றால் தான் குழந்தையால் குப்புறக் கவிழாமல் உட்கார முடியும். இத்தனை விசயங்கள் இருக்க இந்த ஆண்குழந்தை பிறந்ததும், தன்னைப் பற்றியிருக்கும் மருத்துவரின் கைகளின் பலத்துடன் சில இஞ்ச் தூரம் நடப்பது பார்க்கப் பார்க்கக் கொள்ளை அழகு மட்டுமல்ல அதிசயமும் கூடத்தான்.

பார்த்து நீங்களும் பரவசப் பட்டுக் கொள்ளுங்கள்... பிறந்த சிசு நடக்கும் வீடியோவை இது தான்... 

 

]]>
பிறந்த சிசு நடக்கும் வீடியோ,வைரல் வீடியோ,Baby Walking Immediately After Being Born,Viral Video http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/29/w600X390/0_baby.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/may/29/the-baby-walking-immediately-after-being-born-is-going-viral-in-social-media-2710745.html
2709766 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் 12,000 பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்து வரப்போகும் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் முடிவு! RKV DIN Saturday, May 27, 2017 12:16 PM +0530  

பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் 12,000 பேருக்கு சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யும் தீர்மானம் குறித்து விரைவில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஓவியம், உடற்கல்வி, கைத்தொழில் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பணிபுரிய தற்காலிக ஆசிரியப் பணியிடங்கள் கடந்த ஆண்டுகளில் நிரப்பப் பட்டன. அந்த ஆசிரியர்களுக்கு முதலில் நிர்ணயிக்கப் பட்ட சம்பளத் தொகை ரூ.5000 அது பின்னர் 2007 ஆம் ஆண்டில் ரூ.7000 உயர்த்தப் பட்டது. தற்போது இப்படி தற்காலிகமாக நியமிக்கப் பட்ட ஆசிரியர்களை நிரந்தரமாக்கி அவர்களுக்கும் நிரந்தர ஆசிரியர்களுக்குரிய வகையில் சம்பள உயர்வு, பணியிட மாற்றம், பணிச்சேவை ஊக்கத் தொகைகள் முதலியவற்றைப் பெற்றுத் தரும் வகையில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  

]]>
Tamilnadu governament,சட்டப்பேரவைக் கூட்டத் தொடர், தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை, பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள்,பணி நிரந்தரம்,ஓவியம்,உடற்கல்வி,கைத்தொழில் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/27/w600X390/0siRappu_aasiriyarkaL.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/may/27/tn-government-decides-part-time-teachers-will-be-permanent-soon-2709766.html
2709223 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் இவர்களில் யார் இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர்? கார்த்திகா வாசுதேவன் DIN Friday, May 26, 2017 01:42 PM +0530  

டாக்டர் ராஜேந்திரப் பிரசாத்தில் தொடங்கி சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன், ஜாகிர், ஹுசைன், வி.வி.கிரி, முகமது ஹிதயதுல்லா, பஹ்ருதீன் அலி அஹமது, பாசப்ப தானப்பா, நீலம் சஞ்சீவ ரெட்டி, ஜெயில் சிங், ஆர். வெங்கட் ராமன், சங்கர் தயாள் ஷர்மா, கே.ஆர்.நாராயணன், எ.பி.ஜெ. அப்துல்கலாம், பிரதிபா படீல், பிரணாப் முகர்ஜி ஈறாக இதுவரை குறிப்பிடத் தக்க தலைவர்களை குடியரசுத் தலைவர்களாகக் கண்டிருக்கிறது நமது இந்தியா. தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இந்த ஜூன் மாதத்தோடு நிறைவு பெறுவதை ஒட்டி அடுத்த குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலை தற்போது இந்தியா எதிர் நோக்கியுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, நாட்டின் நிர்வாக அதிகாரத்தில் என்ன தான் பிரதமருக்கு அதிகாரங்கள் கொட்டிக் கிடந்தாலும் கூட குடியரசுத் தலைவர் பதவியின் முக்கியத்துவமும் அதிகமே! 

குடியரசுத் தலைவர் பதவிக்கான அதிகாரங்கள்...

நெருக்கடியான காலங்களில் ஆட்சியை கலைக்கும் அதிகாரம், பாராளுமன்ற அமர்வைக் கலைக்கும் அதிகாரம் போன்றவை குடியரசுத் தலைவருக்கு மட்டுமேயான தனித்த அதிகாரங்கள். அதே போல அவசர கால சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அவசியம் எனும் அரசியல் நெருக்கடி மிகுந்த காலங்களில் இவர் எடுக்கும் முடிவுகள் மிக முக்கியமானதாக இருக்கும். அது மட்டுமல்ல தொங்கு நாடாளுமன்றம் அமையும்போது குடியரசுத் தலைவரின் முடிவே இறுதியானதாக இருக்கும். இது போன்ற காரணங்களால் தான் தனக்கு சாதகமான ஒருவரை குடியரசுத் தலைவராக கொண்டு வருவதற்கு ஆளும் கட்சிகள் படாத பாடு படுகின்றன.

இப்போது குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் எப்படி நடைபெறுகிறது எனக் காண்போம்...

இந்தியாவில் குடியரசுத் தலைவர் பதவி என்பது தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கக் கூடிய பதவியே. ஆனால் இதில் மக்கள் நேரடியாக வாக்களிக்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் இதில் வாக்களிப்பார்கள். நியமன எம்பிக்களும், எம் எல் ஏக்களும் வாக்களிக்க முடியாது. இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் மக்களால் மக்களுக்காக மக்களே தேர்ந்தெடுத்த 4114 எம்.எல்.ஏக்களும், 776 எம்.பிக்களும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க தகுதியும், உரிமையும் உடையவர்களாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் குறிப்பிடுகிறது. இந்த தேர்தலில் ஒரு எம்.பி அல்லது எம்.எல். ஏ வின் ஒரு வாக்கு மதிப்பு என்பது 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி அவர் சார்ந்துள்ள மாநிலத்தின், தொகுதியின் மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு எம்.பி மற்றும் எம்.எல் ஏக்களும் வாக்குகள் நிர்ணயிக்கப் படுகின்றன.

நடப்பில் இப்போதைய இந்திய மாநிலங்களில் இந்த மொத்த எம்.பி. எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பு என்பது மொத்தம் 10,98, 882 இதில் 5,49,442 வாக்குகளைப் பெற்றவர்கள் குடியரசுத் தலைவர் பதவிக்கான போட்டியில் வென்றவர்களாகக் கருதப் படுவார்கள். இந்நிலையில் தற்போது 5,32,037 வாக்குகள் முன்னதாகவே பாஜக வசம் உள்ளது. ஆகவே பாஜகவுக்கு இனி தேவைப்படுவது 14,405 வாக்குகள் மட்டுமே!

பாஜக வுக்கான வெற்றி வாய்ப்பு...

இப்போது பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் இல்லாத பிரதான மாநிலக் கட்சிகளான அதிமுக, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பிஜு ஜனதா தளம் இவற்றில் ஒன்று பாஜக வை ஆதரித்தாலே போதும் பாஜக வின் வெற்றி உறுதியாகி விடும். இதில் 

இவர்களில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி முன்னரே பாஜக வை ஆதரிப்பதாக கூறி இருக்கிறது. தமிழ்நாட்டிலும் அதிகரித்து வரும் உட்கட்சிப் பிளவுகளால் அதிமுக இப்போது பாஜக வை ஆதரித்தாக வேண்டிய நிலையில் தான் இருக்கிறது. எனவே தாங்கள் விரும்பும் ஒருவரை குடியரசுத் தலைவராக ஆக்கிப் பார்க்கும் வாய்ப்பு தற்போது பாஜக வுக்கு கிடைத்திருக்கிறது என்பது நிதர்சனம். சூழல் இப்படி இருந்த போதிலும் பாஜக இன்னும் தனது குடியரசுத் தலைவர் வேட்பாளரை அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆயினும் இன்னின்னவர்கள் தான்  பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப் படலாம் எனும் ஒரு யூகம் மக்களிடையே உலவுகிறது. அந்த அடிப்படையில் பாஜக மற்றும் காங்கிரஸ் சார்பில் இம்முறை குடியரசுத் தலைவர் வேட்பாளர்களாக யாரெல்லாம் முன்னிறுத்தப் படலாம் எனப் பார்ப்போம்.

பாஜக பரிந்துரைக்கவிருக்கும் வேட்பாளர்கள்...

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்...

ஜார்கண்ட் மாநில கவர்னரான திரெளபதி முர்மு... 

பாஜக இவரை குடியரசுத் தலைவராக அறிவிக்கும் பட்சத்தில் திரெளபதி முர்மு ஒதிஷா பழங்குடி இனப் பிரிவைச் சேர்ந்தவர் என்ற வகையில் ஒதிஷாவில் ஆளும் பிஜு ஜனதா தளத்தின் முழு ஆதரவும் பாஜக வுக்கு கிடைக்கலாம்.

பாஜக சார்பில் இந்த இருவரது பெயர் தான் பிரதானமாக முன் வைக்கப் படுகிறது. இவர்கள் தவிர மூத்த தலைவர் அத்வானி பெயரும் முணுமுணுக்கப் பட்டு வருகிறது. 

காங்கிரஸ் சார்பாக முன்னிறுத்தப் படும் குடியரசுத் தலைவர் பதவி வேட்பாளர்கள்;

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார்: சரத் பவார் மராட்டியர் என்பதாலும் இதற்கு முன்பு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தல்களில் இரண்டு முறை சிவ சேனை காங்கிரஸ் முன்னிறுத்திய வேட்பாளர்களுக்கே ஆதரவு தெரிவித்திருக்கிறது எனும் வகையிலும் சிவ சேனையின் ஆதரவு காங்கிரஸ் முன்னிறுத்தும் வேட்பாளரான சரத் பவாருக்கு கிடைக்கலாம் என எதிர்பார்ப்பிருக்கிறது.

இவரைத் தவிர;

முன்னாள் சபாநாயகர் மீரா குமார்

ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ்

மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி

உள்ளிட்டோரின் பெயரும் காங்கிரஸ் சார்பில் அனுமானிக்கப் படுகிறது. இவர்களில் ஒருவர் தான் அடுத்த இந்திய குடியரசுத் தலைவராகும் கெளரவத்தைப் பெறப் போகிறார். யாரந்த ஒருவர் என்பதை இனி வரும் நாட்களின் அரசியல் மாயஜாலங்கள் தீர்மானிக்கும்.

இதில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுடைய அதிமுகவின் மொத்த வாக்கு எண்ணிக்கை என்பது 59,224. இந்த வாக்குகள் அப்படியே மொத்தமாக பாஜகவுக்கு ஆதரவாக இருக்குமெனில் பாஜக குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருடைய ஆதரவையும் நாடத் தேவையில்லை. இப்போது சாமானிய இந்தியக் குடிமக்களாகிய நம்மால் ஆனது... குடி அரசுத் தலைவருக்கான தேர்தலில் என்னவெல்லாம்  நடக்கப் போகிறது என்பதை அமைதியாக வேடிக்கை பார்ப்பது மட்டுமே!

Image courtsy: google

]]>
குடியரசுத் தலைவர் தேர்தல், இந்தியா, presidant election, India, BJP, congress, காங்கிரஸ் , மாநிலக் கட்சிகள்,பாஜக http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/26/w600X390/0presidant.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/may/26/who-is-our-next-presidant-of-india-2709223.html
2700951 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் நடிகை விஜய நிர்மலாவுக்கு மலேசியாவில் இன்று டாக்டர் பட்டம்! சரோஜினி DIN Friday, May 12, 2017 04:35 PM +0530  

நடிகை விஜய நிர்மலா 70 களில் தமிழிலும் கணிசமாக நடித்திருந்தாலும் அவரது திரைப்பங்களிப்புகள் தெலுங்கில் தான் அதிகம். தெலுங்கில் ‘பாண்டுரங்க மகாத்மியம்’ பக்தித்  திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜயநிர்மலா பிறகு தமிழுக்கு வந்தார். தமிழ் ரசிகர்களில் விஜயநிர்மலாவை, விஜயலலிதா என நினைத்து ஏமாந்தவர்கள் கூட பலர் உண்டு. எழுத்தாளர் சுகாவின் வலைத்தளத்தில் அவரிட்ட பதிவுகளில் நடிகை விஜயநிர்மலா குறித்த பதிவு சுவாரஸ்யமானது. அவரது பதிவுகளில் சில ‘தாயார் சந்நிதி’ என்ற பெயரில் புத்தகமாகி இருக்கிறது. வாய்ப்பிருந்தால் விஜயநிர்மலா கட்டுரையை வாசித்துப் பாருங்கள். அந்தளவுக்கு 70 களில் பெரும்பான்மை ரசிகர்களைப் பெற்றிருந்த நடிகைகளில் விஜய நிர்மலாவும் ஒருவர்.  தமிழ் ரசிகர்களுக்கு சுருங்கச் சொல்வதென்றால் ‘பணமா பாசமா’ திரைப்படம் வாயிலாக பட்டி தொட்டியெங்கும் கொடி கட்டிப் பறந்த ‘எலந்தப் பயம்...எலந்தப் பயம்’  பாடலுக்குத் திரையில் தோன்றி ஆடிய நடிகை தான் விஜய நிர்மலா என்றால் சட்டென்று புரியும்.

அந்த விஜய நிர்மலா தமிழில் சரியான வாய்ப்புகள் அமையாது மீண்டும் தெலுங்கு தேசம் போய் திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமின்றி திரைப்படங்களை இயக்கவும் தொடங்கினார். தானே ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார். அதோடு தெலுங்கில் அப்போதைய பிரபல நடிகரான கிருஷ்ணாவின் இரண்டாவது மனைவியாகவும் ஆனார். கிருஷ்ணா வேறு யாருமல்ல இன்று தெலுங்கு தேசமே ’பிரின்ஸ்’ என்று கொண்டாடும்  ஸ்ரீமந்துடு மகேஷ் பாபுவின் அப்பா. அவரும், விஜய நிர்மலாவும் இணைந்து தான் திருமணத்துக்குப் பின் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார்கள் என்கிறது தெலுங்கு தேசச் செய்திகள். தங்களது தயாரிப்பு பேனரில் விஜயநிர்மலா இதுவரை 44 திரைப்படங்களை இயக்கியதால் சிறந்த பெண் இயக்குனர் என்ற முறையில் அதிக படங்களை இயக்கிய கின்னஸ் சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார்.

அது மட்டுமல்ல; லண்டனைச் சேர்ந்த ராயல் அகாதெமி ஆஃப் குளோபல் பீஸ் அமைப்பு விஜய நிர்மலாவுக்கு அவரது திரைச் சாதனைகளைப் பாராட்டி இன்று மலேசியாவில் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கிறது. தமிழ் பட உலகில் எலந்தப் பயம் போன்ற அந்தக் கால குத்துப் பாட்டுக்கு நடனமாடிய விஜய நிர்மலா... சினிமாத்துறையில் தனக்கிருந்த பேரார்வத்தின் காரணமாக தெலுங்குப் பட உலகம் சென்று அங்கு சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, அதிகமான திரைப்படங்களை இயக்கிய பெண் இயக்குனர் எனும் வகையில் கின்னஸ் சாதனை நிகழ்த்தி இன்று டாக்டர் பட்டமும் பெறுகிறார் எனில் அது நிச்சயம் பாராட்டப் பட வேண்டிய விசயமே!

]]>
நடிகை விஜய நிர்மலா, எலந்த பயம் பாடல், பணமா பாசமா படம், டாக்டர் பட்டம், கின்னஸ் சாதனை, vijaya nirmala, telugu actress, yesteryear actress, guinness record, doctorate http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/12/w600X390/vijaya_nirmala.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/may/12/vijayanirmala-honoured-with-doctorate-2700951.html
2699012 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் இமானுவல் மாக்ரன், ஃப்ரான்ஸின் 39 வயது இளம் அதிபர்: அவரது வெற்றிக்கான பின்னணி... கார்த்திகா வாசுதேவன் IANS Tuesday, May 9, 2017 01:30 PM +0530  

இமானுவல் மாக்ரன் 39 வயது இளம் ஃப்ரெஞ்ச் அதிபர். இந்தியாவிலும் இப்படி யாராவது இளம் குடியரசுத் தலைவர்கள் வந்தால் நன்றாக இருக்குமோ?! என்று யோசிக்க வைக்கக்கூடிய அளவுக்கு ஃபிரான்ஸ் சார்பாக உலக அரங்கில் இவரது செயல்பாடுகள் கவனம் ஈர்க்கின்றன. இத்தனைக்கும் இம்மானுவல், ஃப்ரான்ஸ் அரசியல் களத்தில்  பெரிய, பெரிய தேசியக் கட்சிகளின் வலிமையான பின்புலங்கள் கொண்டவரல்ல. ஃப்ரெஞ்ச் அரசாங்கத்தில் சிவில் அதிகாரியாகப் தன் பணியைத் தொடங்கியவர் பின்னர் படிப்படியாக பல மில்லியன் டாலர்கள் வர்த்தகம் நடக்கும் வங்கியொன்றின் முதலீட்டு வங்கியாளராக மாறி அங்கிருந்து ஃபிரான்ஸின் பொருளாதார மந்திரியாகி இன்று ஃப்ரான்ஸ் அதிபராகி விட்டார். ஃப்ரெஞ்சு அரசியல் களத்தில் நடுநிலைவாதியான மாக்ரனை நான்கு வருடங்களுக்கு முன்பு வரை ஃப்ரான்ஸ் மக்களுக்கு யாரென்று  தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இன்றோ ஃப்ரான்ஸ் மக்களின் மனம் கவர்ந்த உலகின் இளமையான அதிபர்களில் ஒருவராகி இருக்கிறார்.

தேர்தலின் போது எதிர்கட்சிகளும், அரசியல் விமரிசகர்களும் கூறியவாறு மாக்ரனுக்கு எந்த விதமான அரசியல் முன் அனுபவங்களோ, பயிற்சிகளோ கிடையாது. மரபார்ந்த புகழ் மிக்க ஃப்ரான்ஸ் தேசிய கட்சிகளின் பின்புலமும் மாக்ரனுக்கு இல்லை. இதற்கு முன்பு இவர் எந்த ஒரு அரசியல்கட்சியின் சார்பாகவும் ஃப்ரான்ஸில் தேர்தல்கள் எதுவொன்றிலும் கலந்து கொண்டதே இல்லை. இவருக்கென ஓட்டு வங்கியும் கிடையாது. ஆனால் திடீரென ஃப்ரான்ஸ் நாட்டின் வளர்ச்சியின் மீது அக்கறை கொண்டு. மக்கள் நலனுக்காக பல திட்டங்களை முன்னிறுத்தி ‘என் மார்ச்’ என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கினார். மாக்ரனின் திட்டங்கள் அனைத்தும் பலராலும் விமரிசிக்கப் பட்டாலும் அவை மக்களுக்குப் பிடித்தமானவையாக மக்களது நலன் நாடும் திட்டங்களாக அமைந்ததால் அவருக்கு கிடைத்த ஏகோபித்த மக்கள் ஆதரவில் இன்று அவர் ஃப்ரெஞ்சு அதிபராகி இருக்கிறார்.

39 வயதான இம்மானுவல் மாக்ரன் மணந்து கொண்டது தன்னை விட 24 வயது மூத்தவரான பிரிகிட் ட்ரோனியக்ஸை. முன்னாள் ஆசிரியையான பிரிகிட் மாக்ரனைச் சந்திக்கும் போது மாகரனுக்கு வயது 15. திருமண வயது வரும் வரைக்குமான மூன்று ஆண்டுகள் காத்திருந்து மாக்ரனுக்கு 18 வயதானதும் இருவரும் மணம் செய்து கொண்டனராம். தனது மனைவி குறித்துப் பேசும் போது தேர்தல் நேரத்தில் தனது பிரச்சார உரைகளைத் தயாரித்து உதவியதில் பெரும்பான்மையான பங்கு மனைவிக்கே இருப்பதாக மாக்ரன் குறிப்பிடுகிறார். 

ஒரு சிவில் சர்வீஸ் பணியாளராக இருந்து சடாரெனப் ஃப்ரெஞ்சு அதிபர் தேர்தல் வேட்பாளராகத் தேர்வானது மாக்ரனின் அரசியல் கவர்ச்சிகளில் ஒன்று. திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போலவே ஒரு சாமனியன் அதிபராவதை ஃப்ரெஞ்சு மக்களும் விரும்பினர். ஏனெனில் மாக்ரன் தனது பிரச்சார உத்திகளில் முன் வைத்தது பெரும்பாலும் முரட்டுத் தன்மையான ஃப்ரெஞ்சு அரசியல் கொள்கைகளுக்கு எதிரான வாதங்களையே. எனவே தான் வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பொருளாதார மந்திரியாக அனுபவம் பெற்று மற்றபடி பெரிதாக ஃப்ரெஞ்சு அரசியலில் அறிமுகமற்றிருந்த போதிலும் மாக்ரன் மக்களின் நம்பிக்கையை வென்று அதிபராகி இருக்கிறார்.

வேலையில்லாத் திண்டாட்டத்தை 7 % க்கும் குறைவாகக் குறைப்பது மாக்ரனின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. முந்தைய ஃப்ரான்ஸ் அதிபரான ஃப்ராங்வா ஹாலண்ட் தோல்வி கண்ட விவகாரம் இது. ஐரோப்பியச் சந்தையில் ஃப்ரான்ஸ் இழந்த இடத்தை மீண்டும் உருவாக்கி, ஃபிரான்ஸை மட்டுமே மையப்படுத்தும் ஒற்றைச் சந்தை முறையை உருவாக்குவதே தனது லட்சியமாக மாக்ரன் அறிவித்துள்ளார்.

மாக்ரன் பொருளாதார ரீதியாக தாராளவாதத் தன்மை கொண்டவராக தன்னைத் தானே வடிவமைத்துக் கொண்டுள்ளார். சார்புடைய அல்லது சார்பற்ற என எந்த மாதிரியாக இருந்தாலும் பொருளாதாரப் பிரச்னைகளில் தாராளவாதத் தன்மையைப் பின்பற்றினாலும் சமூகப் பிரச்னைகளில் இடது சார்புடையராகவும் மதச்சார்பற்றை ஃபிரான்ஸ் தேசத்தில் எந்த மதத்தைச் சேர்ந்தவரும் அவரவர் மதத்தை சுதந்திரமாகப் பின்பற்றும் அனுமதி அளித்து சமத்துவம் மற்றும் குடியேற்ற விதிமுறைகளில் முற்போக்குத் தன்மையைக் கடைபிடிக்கும் மக்கள் ஆதரவாளராகத் தன்னைக் காட்டிக் கொள்ள விரும்புகிறார். அதுவே அவரது வெற்றிக்கான காரணமாகக் கூட இருக்கலாம்.

அதுமட்டுமல்ல மாக்ரன் 120,000 பொதுத்துறை வேலைகளை குறைக்க விரும்புகிறார், பொது செலவினங்களை 60 பில்லியன் யூரோக்கள் (65 பில்லியன் டாலர்) ஆகவும் குறைக்க விரும்புகிறார், மேலும் பில்லியன் கணக்கில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் விரும்புகிறார். அதோடுமட்டுமல்ல; "தோல்வியுற்ற" மற்றும் "வீணான" பிரெஞ்சு அரசியல் அமைப்புகளை மாற்றுதல், தொழிலாளர் சட்டங்களை நிதானப்படுத்துதல், சமூக இயக்கத்தை ஊக்குவித்தல், பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைத்தல் மற்றும் ஒரு யூரோ அரசாங்கத்தை ஸ்தாபித்தல் ஆகியவையும் மாக்ரனின் அரசியல் வியூகங்களில் அடங்கும்.

ஃபிராஞ்சுப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஃப்ரான்ஸின் சார்பாக ஒலிக்கும் குரல்கள் வலுப்படுத்தவும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட ஒரு தொடர்ச்சியான வணிக நட்பு நடவடிக்கைகளை மாக்ரன் தொடர்ந்து வெளிப்படுத்திய வண்ணம் இருப்பதை ஆரோக்கியமானதாக ஃப்ரெஞ்சு மக்கள் கருதுகின்றனர்.

பாதுகாப்பு செலவினங்களை உயர்த்துவதற்காக, 10,000 காவல் அதிகாரிகளை வேலைக்கு அமர்த்தவும், இஸ்லாமிய அரசுக்கு எதிராக ரவுண்ட் தி கிளாக் முறையில் வேலை செய்யும் ஒரு அணியை உருவாக்கவும் அவர் முன்மொழிந்தார். அதுமட்டுமல்ல ஆசிரியப் பணியில் இருப்போரின் ஊதியம் கணிசமான அளவுக்கு உயர்த்தப்பட வேண்டும் என்று கருதுபராகவும் மாக்ரன் இருக்கிறார். அவரது மனைவி முன்னாள் ஆசிரியை என்பது அதற்கொரு காரணமாக இருக்கலாம். என்று கருதப்படுகிறது.

தனது பரந்த வெளியுறவுக் கொள்கையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்முடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவும், ரஷ்யா, ஈரான், துருக்கி மற்றும் சவூதி அரேபியாவுடனான உறவை மேம்படுத்திக் கொண்டு, சிரியா மற்றும் வேறு இடங்களில் நீடிக்கும் போர் விவகாரங்களை முடிவுக்குக் கொண்டு வரத் தக்க அரசியல் தீர்வைக் கொண்டு செயலாற்றுவதற்கு உறுதியளிப்பதாக கூறும் மாக்ரான் உலக நாடுகளிடையே ஃப்ரான்ஸ் அதிபராகத் தனது செயல்பாடுகளில் ஒரு இராஜதந்திர தொனியை பின்பற்றுகிறார்.

மேக்ரோன் டிசம்பர் 21, 1977 அன்று ஃப்ரான்ஸில் வடக்கு நகரமான அமியென்ஸில் ஃபிராங்வா நோஜூஸ் என்ற மருத்துவர் மற்றும் நரம்பியல் பேராசிரியரான ஜீன்-மைக்கேல் மேக்ரோன் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.

ஒரு சிவில் சர்வீஸ் பணியாளராகத் தனது வேலையைத் தொடங்கிய மாக்ரன் இன்று தனது ஆக்கப்பூர்வமான உறுதி மொழிகள் மற்றும் ராஜதந்திரத் தனமான கோட்பாடுகளால் உலகின் முக்கியமான இளம் அதிபர்களில் ஒருவராகக் கவனிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார். மாக்ரனின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் ஹாலண்ட் குடியரசுக் கட்சியின் தலைவரான ஃப்ராங்வா ஃபில்லோன். அலன் யூப்பே, மிதவாதியான பிராங்வா பெய்ரூ, முன்னாள் பிரதமரான மானுவல் வால்ஸ் ஆகியோர் இருப்பதாகக் கருதப் படுகிறது. இத்தனை பேரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகியே மாக்ரன் ஃப்ரான்ஸ் அதிபராகி இருக்கிறார். முன்னாள் அமெரிக்க அதிபரான பராக் ஒபாமா கூட மாக்ரனின் வெற்றியின் பின்னணியாகக் கருதப் படுவதாகக் கூறுகிறார்கள்.

 

Image courtsy: daily mirror. google.

]]>
immaneul macron, french president, இம்மானுவல் மாக்ரன், இளம் ஃப்ரெஞ்சு அதிபர், ஃப்ரான்ஸ், வெற்றிப் பின்னணி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/9/w600X390/Emmanuel-Macron.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/may/09/இம்மனுவல்-மாக்ரன்-ஃப்ரான்ஸின்-39-வயது-இளம்-அதிபர்-அவரது-வெற்றிக்கான-பின்னணி-2699012.html
2693229 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் ஜோசப் வெறும் டிரைவர் மட்டுமல்ல, ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தை மரணங்களைத் தடுக்க உபாயம் கண்டு பிடித்த சூழல் போராளி! RKV DIN Saturday, April 29, 2017 05:11 PM +0530 மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்து குழந்தைகள் சடலமாக மீள்வது என்பது அடிக்கொரு தரம் இந்தியாவின் எல்லா மாநிலங்களில் இருந்தும் நம்மைக் கடந்து போகும் துக்க கரமான ஒரு செய்தி. எங்கோ ஒரு சில இடங்களில் மட்டுமே குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டிருக்கக் கூடும். ஆனால் ஆழ்துளைக் கிணறுகளில் தவறுதலாக விழுந்த பெரும்பாலான குழந்தைகள் சடலமாகவே மீட்கப்பட்டுள்ளனர். இதற்கு என்ன தான் தீர்வு. ஆழ்துளைக் கிணறுகளின் உரிமையாளர்களுக்கு இவ்விஷயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதைத் தவிர வேறு என்ன தான் செய்து விட முடியும்?

பொதுவாக ஆழ்துளைக் கிணறுகள் விசயத்தில் தோண்டப்பட்டு எதிர்பார்த்த ஆழங்களில் தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் கைவிடப்படும் ஆழ்துளைக் கிணறுகளினால் தான் இப்படியான மோசமான விபத்துகள் பெரும்பாலும் நேர்ந்து விடுகின்றன என்பது மிக மிக வருத்தத்திற்குரிய செய்தி. பூமிக்குள் பல நூறு அடிகளுக்கு நீளக் கூடிய இம்மாதிரியான ஆழ்துளைக் கிணறுகளுக்கு தோண்டப்பட்ட இடத்தில் அடையாளங்கள் எதுவும் இல்லையெனில் பூமியின் மேற்பரப்பில் இருந்து பார்ப்பவர்களுக்கு அப்படியொரு பள்ளம் இருக்கும் சுவடே தெரிய வாய்ப்பில்லை. குறிப்பாக விளையாட்டுப் பருவத்திலிருக்கும் குழந்தைகளுக்கு நிச்சயமாகத் தெரிய வாய்ப்பில்லை. இதனால் தான் ஆழ்துளைக் கிணறுகளில் பலியானோர் எண்ணிக்கையில் எப்போதும் குழந்தைகளே பெரும்பான்மையினர் ஆகி விடுகிறார்கள். இந்த சோகத்திலிருந்து குழந்தைகளையும், பெற்றோர்களையும் மீட்பதற்கான வழி ஏதாவது உண்டா எனில்;  நாம் ஏன் இவரது ஆலோசனையைப் பின்பற்றக் கூடாது என தோன்றுகிறது.

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த டிரைவரும், சூழல் போராளியுமான ஜோசப் அதற்கொரு நல்ல வழி சொல்கிறார். எதிர்பார்த்த ஆழங்களில் நீரின்றி கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை சுற்றி அப்படியே பத்தடி நீளம், பத்தடி அகலத்தில் ஒரு குழியை வெட்டி, ஆழ்துளைக் கிணற்றின் வாய்ப்பகுதியை வடிகட்டியாகச் செயல்படுத்தத் தக்க மூடி போன்ற அமைப்பால் மூடி அதன் திறப்பு வெறும் 5 மி.மீட்டர் அளவுக்கு மட்டுமே இருக்குமாறு திறந்து வைத்துப் அதைப் பொருத்த வேண்டும். இப்போது மழைக்காலங்களில் இந்த கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் மிகச்சிறந்த மழைநீர் சேகரிப்பு மையங்களாக செயல்படக்கூடிய அளவிலான திட்டம் தயார். மேற்புறத்தில் கிணறு போன்ற அமைப்பாலும், உள்ளே மூடப்பட்ட வாய்ப்பகுதி இருப்பதாலும் விவரமறியாமல் குழந்தைகள் விளையாட்டுத் தனமாக அதனுள் விழ நேராது. இப்போது ஆழ்துளைக் கிணற்றுக்கும் ஒரு முறையான பயன் கிட்டியது. அதனுள் தவறி விழக்கூடிய மனித மற்றும் விலங்கு உயிர்களுக்கும் ஒரு பாதுகாப்பு கிடைத்தது என்றாகி விடும்.

கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மறு நிர்மாணம் செய்வதால் ஒரெ கல்லில் இரண்டு மாங்காய் கதையாக இரண்டு விதமான பயன்களை ஈட்டலாம்.

ஒன்று பூமியின் நீராதாரங்களைக் காக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று. பல்லாயிரம் அடிகளுக்குத் தோண்டப்பட்டு நீர் உறிஞ்சுவதற்காக அமைக்கப் படும் இந்தக் குழாய்கள் மூலம் மீண்டும் நாம் நீர் சேகரிப்பும் செய்ய முடியும் என நிரூபித்த வகையில் இது மிகச் சிறந்த மழைநீர் சேகரிப்புத் திட்டங்களில் ஒன்றாகி விடுகிறது. அது மட்டுமல்ல;

இப்படி ஒரு உத்தியைப் பின்பற்றுவதின் மூலம் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளால் அகஸ்மாத்தாக அடிக்கொரு தரம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் ஒரு முடிவு கட்டலாம். என்பது இதன் இரண்டாவது பயன்.

திட்டம் எல்லாம் அற்புதமான திட்டம் தான்; ஆனால் இதை மக்களிடையே கொண்டு சேர்ப்பது யார்?

அந்த அரும்பணியைத் தான் உடுப்பியைச் சேர்ந்த டிரைவர் ஜோசப் செய்கிறார். வாழ்வின் மிக மோசமான விபத்து ஒன்றிலிருந்து மீண்டு வந்த ஜோசப்புக்கு சுற்றுப் புறச் சூழல் மீது அக்கறை வந்து இப்படி ஒரு விசயத்தை சாதித்து வருவது அவரது மனிதத் தன்மைக்கு ஒரு உதாரணம் எனலாம். ஜோசப் இப்போது டிரைவர் மட்டுமல்ல, அவர் ஒரு சூழல் போராளி. தனது வேலையோடு வேலையாக கிராமங்கள் தோறும் பயணம் செய்து கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை எவ்விதம் இப்படி புணரமைப்பது என்பது குறித்து அவர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இந்தச் செய்தியின் வழியாக இப்போது நாமும் அறிந்து கொண்டோம். எனவே ஆழ்துளைக் கிணறுகளை இப்படியும் பயன்படுத்தலாம் நாமும் நாலு பேருக்குச் சொல்லி இந்த விசயத்தைப் பகிர்ந்து கொண்டு நம்மால் ஆன சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்வோம்.

]]>
eco warrior, joseph, dead borewells, rain water harvesting, சூழல் போராளி, ஜோசப், கர்நாடக பஸ் டிரைவர், ஆழ்துளைக் கிணறுகள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/29/w600X390/DEAD_BOREWELLS.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/apr/29/he-is-not-only-a-driver-but-also-a-eco-warrior-2693229.html
2692650 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் பாகுபலிக்கு காஸ்டியூம் டிசைன் செய்ய ரமா ராஜமெளலி யாரைப் பின்பற்றினர்? சரோஜினி DIN Friday, April 28, 2017 02:02 PM +0530  

பாகுபலி 1& 2 திரைப்படங்களின் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமெளலி எனில்; அந்தத் திரைப்படங்கள் மட்டுமல்ல ராஜமெளலியின் அனைத்து திரைப்படங்களுக்குமே காஸ்டியூம் டிசைனராகப் பணியாற்றியவர் அவரது மனைவி ரமா ராஜமெளலி. பாகுபலி-1 திரைப்படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் ராஜமாதா சிவகாமி தேவியின் உடையலங்காரங்களுக்காக ரமா ரசிகர்களிடையே அதிலும் பெண் ரசிகர்களிடையே வெகுவான பாராட்டுகளைப் பெற்றிருந்தார். வழக்கமான படங்கள் போலில்லாது இது ராஜா காலத்து திரைப்படம் என்பதோடு அவற்றுக்கான காஸ்டியூம்கள் அனைத்துமே இன்றைய உடைகளை விட பல நூறு ஆண்டுகளுக்கு முந்தையவை என்பதால் எதை அடிப்படையாகக் கொண்டு அந்த உடைகளை நீங்கள் டிசைன் செய்தீர்கள் என்ற கேள்விக்கு ரமா ராஜமெளலிசொன்ன பதில் ஆச்சரியமளிக்கிறது. 

பாகுபலி1& 2 திரைப்படங்களுக்கு காஸ்டியூம் டிசைன் செய்ய ரமா பின்பற்றியது ‘அமர் சித்ர கதா’ சிறுவர் கதைப்புத்தகங்களில் வரும் கதாபாத்திரங்களுக்கான உடைகளை என்கிறார். அமர் சித்ர கதா என்பது நம்ம ஊர் அம்புலி மாமா கதைகள் தான். அவை இந்தியில் அமர் சித்ர கதாவானது. சிறு வயதில் அம்புலி மாமா படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும் அந்தப் அந்தப் படக்கதைகளில் நாம் கண்ட உடையலங்காரங்களைத் தான் ரமா பாகுபலி 1& 2 திரைப்படங்களில் பயன்படுத்தி இருக்கிறார் என்பது.

ரமாவின் பதில் உள்ளுறைந்திருக்கும் மற்றொரு சுவாரஸ்யமான விசயம் என்ன தெரியுமா? படங்களுக்கான உடைகள் மட்டுமல்ல படத்தின் சில முத்திரைக் காட்சிகளும் கூட நமக்கு அமர்சித்ர கதா அலைஸ் அம்புலிமாமாவின் பட்டி விக்ரமாதித்தன் கதையை நினைவூட்டுபவையே! குறிப்பிட்டுச் சொல்வதென்றால் பல்லாள தேவனின் மகனது சிரசை அறுத்து வீசி விட்டு விச்ராந்தியாக மகேந்திர பாகுபலி (சிவு) கையில் வாளேந்தி நடந்து வரும் காட்சி. மற்றொன்று கட்டப்பா சிவுவின் காலை எடுத்து தனது உச்சந்தலையில் சூடிக் கொள்ளும் காட்சி. இந்த இரண்டுமே நாம் அம்புலிமாமாவின் படக்கதைகளில் எப்போதோ பார்த்திருந்த உணர்வைத் தருபவை.

இந்தப் படத்தின் வெற்றிக்கான காரணங்களில் இதுவும் ஒன்று. காட்சிகள் அனைத்துமே ஒரு சிறுவர் படக்கதைக்குண்டான சாகஷங்களுடனும் அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்புடன் நகர்த்தப்படுவதால் படத்தில் கதை என்ற வலுவான பின்னணி எதுவுமின்றியும் ஒரு எளிமையான சிறுவர் படக்கதையில் பெரியவர்களுக்கான காதலையும், பழிவாங்கலையும், அரசர்களின் காலத்துக்கே உரிய போர் வியூக முறைகளையும் கலந்து பாகுபலி -1 மிகப் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றதோடு அடுத்த பாகத்துக்கான எதிர்பார்ப்பில் நம்மைக் காத்திருக்கவும் வைத்தது.

]]>
பாகுபலி-2, ரமா ராஜமெளலி, காஸ்டியூம் டிசைனர், அமர்சித்ரகதா, அம்புலிமாமா, rama rajamouli, amarchitrakadha, ambulimama, bagubali costume designer, bahubali-2 http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/28/w600X390/0000bagubali.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/apr/28/whom-rama-rajamouli-followed-to-design-bagubali1-2-costumes-2692650.html
2691967 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் ஐட்டம் நம்பர் பாடலுக்கு நடனமாட ரூ1.25 கோடி சம்பளம் வாங்கிய நடிகை! சரோஜினி DIN Thursday, April 27, 2017 12:22 PM +0530  

‘இது தான்டா போலீஸ்’ ராஜசேகரை தமிழ் ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. அவரது நடிப்பில் வெளிவரவிருக்கும் புதிய தெலுங்கு திரைப்படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடவிருக்கிறார். அந்தப் பாடலுக்கு தயாரிப்பாளர்கள் சன்னிக்கு தரவிருக்கும் சம்பளம் தான் 1.25 கோடி ரூபாய்கள். ஒரு ஐட்டம் நம்பர் பாடலுக்கு நடனமாட இப்படி அடேங்கப்பா! என வாய் பிளக்க வைக்கும் அளவுக்கு தயாரிப்பாளர்கள் சம்பளம் தர முன் வந்ததற்கு சன்னி லியோனுக்கு அங்கத்திய ரசிகர்களிடம் இருக்கும் பிரமாண்டமான வரவேற்பே காரணம் எனப் படக்குழுவினர் கூறுகின்றனர். 

அந்தப் படத்தில் ராஜசேகர் ஹீரோ, விஸ்வரூபம் புகழ் பூஜா குமார் ஹீரோயின். படத்தின் பெயர் கருட வேகா 126.18M. இத்திரைப்படத்தில் ராஜசேகர் தேசிய புலனாய்வுக் காவல்துறை அதிகாரியாக நடிக்கவிருக்கிறார். ராஜசேகர் என்றாலே அது முற்றிலும் ஆக்‌ஷன் திரைப்படமாக இருக்கும் என நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் சரி. இந்தத் திரைப்படமும் முழுக்க முழுக்க பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த ஆக்‌ஷன் திரைப்படமாகவே ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.

இந்தத் திரைப்படத்தைப் பொறுத்தவரை மும்பையில் அருமையான கிராமத்துப் பின்னணி செட் அமைத்து பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு முடிந்து விட்டதாம். படத்தில் ஒரே ஒரு ஐட்டம் நம்பர் பாடலுக்காக ஏன் இத்தனை செலவு செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு; தயாரிப்பாளர்களிடமிருந்து எந்த வித தயக்கமும் இல்லாமல் வரும் பதில், அந்தப் பாடலை ரசிகர்கள் மிகவும் விரும்புவார்கள். கொடுத்த சம்பளம் தகும் என்கிறார்களாம். அக்கட பூமி மட்டுமல்ல தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் சன்னி லியோன் பெயரைச் சொன்னாலே ரசிகர்கள் ஆர்ப்பரிக்கத்தான் செய்கிறார்கள் என்பதால் தயாரிப்பாளர்களுக்கு இத்தனை அதிக சம்பளம் என்பது பெரிய விசயமாகத் தெரியவில்லை போலும்!

எது எப்படியோ சம்பளம் தகுமா? இல்லையா? என்பது படமும், பாடலும் வெளிவந்தால் தெரிந்து விடப் போகிறது.

]]>
sunny leone, item number song,Telugu Movie,சன்னி லியோன்,பாடல் காட்சி, தெலுங்கு திரைப்படம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/27/w600X390/sunny-leone.jpeg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/apr/27/who-is-the-most-wanted-100-crores-expensive-item-number-dancer-in-southern-cini-industry-2691967.html
2691958 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் பாகுபலி- 2 திரைப்பட வெளியீட்டை ஒட்டி பீமாவரத்தில் 144 தடை உத்தரவு! சரோஜினி DIN Thursday, April 27, 2017 11:15 AM +0530  

ஏப்ரல் 28 நாளை பாகுபலி- 2 திரைப்படம் வெளியாகிறது. இந்தியா முழுதும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்புகள் எகிறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் படத்திற்கான பரபரப்புகளுக்கும் பஞ்சமில்லை.. பாகுபலி- 2 திரைப்பட வெளியீட்டை ஒட்டி நாளை ஆந்திர மாநிலம் பீமாவரம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தல, தளபதி ரசிகர்கள் அந்தந்த நடிகர்களின் திரைப்பட வெளியீடன்று எப்படி முட்டிக் கொள்வார்களோ, அதே போல ஆந்திராவிலும் பிரபாஸ் ரசிகர்களுக்கும், பவன் கல்யாண் ரசிகர்களுக்கும் இடையில் முட்டல் மோதல் உண்டாம். பவன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அவரது திரைப்படத்திற்கு ரசிகர்கள் வானளவிய கட் அவுட்கள் வைத்து கொண்டாடினார்கள். ஆனால் ஒரே இரவில் அந்த கட் அவுட்கள் அனைத்தும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டிருந்தன. இதைச் செய்தவர்கள் பிரபாஸ் ரசிகர்கள் தான் என்று எண்ணிய பவன் ரசிகர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட அப்போது நிலவரம் கலவரமாகி இருக்கிறது. 

இதே போன்றதொரு பதட்ட நிலை இம்முறை பிரபாஸ் நடிப்பில் ஒட்டு மொத்த இந்தியாவை மட்டுமல்ல சில உலக நாடுகளையும் கூட திரும்பி பார்க்க வைக்கும் நேர்த்தியில் உருவாக்கப் பட்டிருக்கும் பாகுபலி திரைப்பட வெளியீட்டின் போதும் நேர்ந்து விடக்கூடாது என ஆந்திர காவல்துறை உஷாராக இருக்கிறது. பீமாவரம் பகுதியில் பிரபாஸ் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம். எனவே பட வெளியீடு அன்று அசம்பாவிதங்கள் எதுவும் நேராமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறதாம்.

அந்த உத்தரவின் படி பீமாவரத்தில் நாளை பட பாகுபலி-2 வெளியீடன்று காரணமின்றி ரசிகர்கள் யாரும் குழுவாகவோ மூன்று, நான்கு பேர்களாகவோ பொது இடங்களில் கேளிக்கையில் ஈடுபடவோ, தங்களது தலைவனுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பவோ தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

]]>
baahubali-2,baahubali Movie,Andhra,பாகுபலி-2,'பாகுபலி' 2 திரைப்படம்,ஆந்திரா http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/27/w600X390/144_for_bahubali.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/apr/27/section-144-anounced-in-bhimavaram-because-of-baahubali-2-release-2691958.html
2691403 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் எமிரேட்ஸ் விமானத்தில் இனவெறித் தாக்குதலுக்கு ஆளனது பாகுபலி டீம்! சரோஜினி DIN Wednesday, April 26, 2017 04:29 PM +0530  

பாகுபலி- 2 திரைப்படத்தின் புரமோஷன் வேலைகளுக்காக பாகுபலி திரைப்படக் குழு சார்பாக படத்தில் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமெளலி, தயாரிப்பாளர் சோபு யர்லகடா, ஹீரோ பிரபாஸ், ஹீரோயின் அனுஷ்கா உள்ளிட்ட 5 பேர் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் துபாய் பயணம் மேற்கொண்டனர். பயணத்தின் போது எமிரேட்ஸ் விமான சேவை ஊழியர்களில் ஒருவர் தங்களிடம் வேண்டுமென்றே எந்தவித காரணமும் இன்றி கடுமையாக நடந்து கொண்டு தங்களைத் துன்புறுத்தியதாக விமானத்தில் பயணித்தவரும் படத்தின் தயாரிப்பாளருமான சோபு யர்லகடா தெரிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக  சோபுவின் ட்வீட்கள்...


இது பற்றி விளக்கமாகத் தெரிவிக்கையில், EK526 எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் தாங்கள் துபாயில் இருந்து ஹைதராபாத்துக்கு திரும்பும் போது கேட் B4 இருந்த ஏர்லைன்ஸ் விமான ஊழியர் ஒருவர் தங்களிடம் மிகுந்த வெறுப்புணர்வுடன் கடுமையாக நடந்து கொண்டதாகவும், அவருக்கு இனவெறி இருக்கக் கூடும் எனத் தான் சந்தேகிப்பதாகவும் சோபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். தான் பலமுறை எமிரேட்ஸ் விமான சேவையைப் பயன்படுத்தி இருந்த போதும் இப்படியொரு இனரீதியான தாக்குதலைச் சந்தித்தது இதுவே முதல் முறை எனவும், இது மிகவும் மோசமான மனப்பான்மை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Image courtsy: google & twiter

]]>
baahubali team harrassed, emirates flight,baahubali 2,பாகுபலி- 2,பாகுபலி டீம்,எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/26/w600X390/sobu_yarlagada22.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/apr/26/bahubali-team-harrassed-at-emirates-flight-2691403.html
2691398 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் இன்றைய இளம் இயக்குனர்கள் குறித்து தாதா சாகேப் பால்கே விருது பெற்ற இயக்குனர் கே.விஸ்வநாத்! சரோஜினி DIN Wednesday, April 26, 2017 03:55 PM +0530  

நேற்று பிரபல இயக்குனர் கே.விஸ்வநாத்துக்கு திரைப்படத்துறையில் மிக உயரியதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதை ஒட்டி தெலுங்குப் பட உலக பிரபலங்கள் அனைவரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவிக்க தொடர்ந்து அவரைச் சந்தித்த வண்ணம் உள்ளனர். திரைத்துறையில் அவரது சாதனைகளுக்காக 2016 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது கே.விஸ்வநாத்துக்கு வழங்கப்படுகிறது. தெலுங்கு சினிமாவில் இவரது சாதனைகளைக் கொண்டாடி அங்குள்ள ரசிகர்கள் இவரை  ‘கலா தபஸ்வி’ என்று அன்புடன் குறிப்பிடுகிறார்கள். கலா தபஸ்வி என்றால் ஒரு தவம் போல கலைகளை ஆராதிப்பவர்கள் என்று பொருள். இயக்குனர் கே.விஸ்வநாத் தனது ஒவ்வொரு திரைப்படத்தையுமே மாபெரும் தவம் போலத்தான் பெரும் கலைப்படைப்பாக முனைப்புடன் செதுக்கி கொணர்ந்தார். எனவே அங்கத்திய மக்கள் அவரை அப்படிப் பாராட்டுவது வழக்கமாம். 

ஆனால் கே.விஸ்வநாத்தைப் பொறுத்தவரை அவர் தனது சாதனைகளின் மேல் திருப்தி கொண்ட மனிதராக இல்லை. சமீபத்தில் அவரளித்த பேட்டியொன்றில்; நான் எதையோ சாதித்து விட்டதாக இப்போதும் நினைக்கவில்லை. சொல்லப்போனால் இது வரை நான் செய்த படங்களில் எனக்கு இன்னமும் திருப்தியில்லை என்று தான் நான் கூற விரும்புகிறேன். நான் மட்டுமல்ல; நீங்கள் எந்த ஒரு கலைஞரிடத்தில் இந்தக் கேள்வியைக் கேட்டாலும் அவர்களால் அப்படித்தான் கூற இயலும். கலை, இசை, கவிதை போன்ற துறைகள் எல்லாம் மிகப் பெரிய சாகரம் போன்றவை. அந்தக் கடலை நாம் ஒரு துளியாக்கி நம்மால் பருகி விட முடியுமா? நான் சங்கராபரணம் திரைப்படத்தை இயக்கினேன். ஆனால் அதைத் தாண்டியும் நான் இயக்க வேண்டிய படம் என ஏதோ ஒன்று இருப்பதாகவே எனக்கு இப்போதும் தோன்றுகிறது. என்னைப் பொறுத்த வரை ஒரு கலைஞனுக்கு தனது வேலையில் திருப்தி என்ற விசயம் மட்டும் எப்போதுமே கிட்டவே கிட்டாது.

சினிமாவைப் பற்றி பலருக்கும் பலவிதமான கருத்துகள் இருக்கலாம். சிலர் பொழுது போக்க மட்டுமே சினிமா பார்ப்பதாகச் சொல்லலாம். சிலருக்கோ நாங்கள் சினிமாவில் ஏதாவது ஒரு ஸ்ட்ராங்கான மெசேஜ் சொல்ல வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். என்னைப் பொறுத்தவரை நான் கலைக்காக பெரிய சாதனை எதுவும் செய்து விட்டதாக நினைக்கவில்லை. ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன், அது என்னவென்றால் எனது திரைப்படங்களில் சமூக நீதிகளை மீறி நான் எதுவும் புதுமை செய்யவில்லை என்பதே அது!

இன்றைய இளம் இயக்குனர்களுக்கு நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு; நான் ஏன் அவர்களுக்கு எதுவும் சொல்ல வேண்டும். அவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் அல்ல. அவர்கள் மிகுந்த திறமைசாலிகள் அதனால் தான் தயாரிப்பாளர்கள் அவர்களது வேலைத் திறனை நம்பி கோடி கோடியாக கொண்டு போய் அவர்களிடம் கொட்டுகிறார்கள். என்றார்

]]>
k.viswanath, Dadasaheb Phalke Award for the year 2016, இயக்குனர் கே. விஸ்வநாத், தாதா சாகேப் பால்கே விருது 2016 http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/26/w600X390/kalathabasvi.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/apr/26/still-i-am-not-satisfied-on-my-movies-kviswanath-said-2691398.html
2691394 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் பாலியல் தொழிலாளி என்றால் அவர்களுக்கு முதுகெலும்பே இருக்கக் கூடாதா? RKV DIN Wednesday, April 26, 2017 02:52 PM +0530  

இரு தினங்களுக்கு முன்பு இரவு சாப்பாட்டு நேரத்தின் போது, ஒரு தொலைக்காட்சி நெடுந்தொடரைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. எப்போதாவது தான் ரிமோட் நம் கையில் சிக்கும் என்றாலும், அன்று ரிமோட் கிடைத்தும் சேனல் மாற்ற வகையில்லாமல் போனது. எனவே அந்த நெடுந்தொடரின் ஆதி, அந்தம் எதுவும் தெரியாத போதும் பார்க்கத் தொடங்கினேன். நம்மைக் கடப்பவை எவையும் நமது கட்டுப்பாட்டில் இல்லை எனும் தத்துவத்தின் படி தொடர் அது பாட்டில் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் அதன் காட்சிச் சித்தரிப்பு தான் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு ரத்தக் கொதிப்பை ஏற்படுத்தி விட்டது. எனக்கு மட்டுமா அல்லது அப்படியான ஒரு காட்சியைக் கண்டு களித்த எல்லோருக்குமே அப்படித்தான் இருந்ததா என்பதை இந்த நெடுந்தொடரை அன்று பார்க்க வாய்த்தவர்கள் அனைவரும் அவரவர் தங்களுக்குள் ஒரு முறை கேட்டுக் கொள்வது நலம். ஏனெனில் இந்த ஒரு நெடுந்தொடரில் மட்டுமல்ல, சின்னத்திரை நெடுந்தொடர்கள் பலவற்றிலும் இது ஒரு டிரெண்டாகத் தான் பரவிக் கொண்டிருக்கிறதோ என்று ஒரு ஐயம் உண்டாகிறது. ஒரு பெண் பாலியல் தொழிலாளியாகக் காட்டப்படும் போது அவளுக்கு முதுகெலும்பே இருக்கக் கூடாது என்று யார் சட்டமியற்றினார்களோ தெரியவில்லை?! 

ஓவர் டு த சீன்...

காட்சிப்படி மோசமான இன்ஸ்பெக்டரால் வஞ்சிக்கப்பட்ட இளம் பெண்ணொருத்தி, இரவில் புகழிடம் தேடி தனது தோழியை அணுகுகிறாள், தோழி சூழலைக் காரணம் காட்டி; தான் தற்போது ஒரு பாலியல் தொழிலாளியாக இருப்பதாகக் கூறுகிறாள். அவள் அப்படி இருந்தாலும் கூட இவளுக்கு உதவத் தயங்கவில்லை. நீ என்னுடன் தங்கலாம், என்னைத் தேடி வரும் நபர்களால் உனக்கு தொந்திரவு இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன் என்றவாறு அவளை உடன் தங்க வைக்கிறாள். அந்த நேரத்தில் அவளைத் தேடி ஒரு ஆண் வருகிறான். அவனை வரவேற்கும் பாலியல் தொழிலாளி, தோழியை உறங்குமாறு சொல்லி விட்டு அவனுடன் வேறு ஒரு அறைக்குள் சென்று விடுகிறாள். இதே நேரத்தில் அவளைத் தேடி மற்றொரு ஆணும் வர இப்போது உள்ளிருப்பவனுக்கும், புதிதாக வந்தவனுக்கும் இடையில் யார் அந்தப் பெண்ணுடன் நேரம் கழிப்பது என்பது குறித்து பலத்த வாக்குவாதம் வருகிறது. தங்களது பாலியல் தேவைகளுக்காக இப்படி ஒரு இடத்துக்கு இரு ஆண்கள் வருகையில் இடையில் ஒரு இளம்பெண் அதே இடத்தில் இருந்தாள் அவள் கதி? ஆமாம் வந்தவனுக்கு அவள் தேவைப்பட வாக்குவாதம் மேலும் முற்றுகிறது. இதற்கிடையிலான வசனம்; 

பாலியல் தொழிலாளி: இப்போது வேறுஒரு கஸ்டமர் இருப்பதால், நீங்கள் இப்போது போய்விட்டு நாளை வாருங்கள்;

ஆண்: நீ சொல்லும் நேரத்தில் எல்லாம் நான் வர முடியாது. நான் கூப்பிடும் போது நீ வர வேண்டும்.

பாலியல் தொழிலாளி: நான் என்ன உன் மனைவியா நீ கூப்பிடும் போது வர, அப்படியெல்லாம் வரமுடியாது, நீ போ இப்போது வேறு கஸ்டமர் இருக்கிறார்.

இதற்கிடையில் வாக்குவாதம் செய்த ஆணின் கண்ணில் காத்திருக்கும் தோழி பட;

ஆண்: நீ வரா விட்டால் போ, இதோ இவள் இருக்கிறாளே. இவள் போதும்.

பாலியல் தொழிலாளி பயந்து போய்:

அவள் என் தோழி. வேலை தேடி இண்டர்வியூ செல்வதற்காக இங்கே என்னுடன் தங்கி இருக்கிறாள். அவள் என்னைப் போல அல்ல; 

இதற்கிடையில் அறைக்குள் காத்திருந்த ஆண் வருகிறான். 

காத்திருந்த ஆண்: எவ்வளவு நேரம் உனக்காக காத்திருப்பது. இப்போது வரப்போகிறாயா? இல்லையா?

வாக்குவாதம் செய்யும் ஆண்: அவள் என்னுடன் தான் வருவாள். நீ போ 

காத்திருந்த ஆண்: என்ன நான் போக வேண்டுமா? அவள் என்னுடன் தான் வருவாள் நீ போ

இரு ஆண்களும் அந்தப் பாலியல் தொழிலாளியாக நடித்த பெண்ணின் கைகளை இருபுறமும் பற்றிக் கொண்டு இழுத்து சண்டையிட;

நடுவில் இருவர் பார்வையும் காத்திருந்த தோழியிடம் செல்கிறது.

முடிவில் இருவருமே அந்தப் பெண்ணுக்காக சண்டையிடத் தொடங்கி கடைசியில் அக்கம் பக்கத்தவர் புகார் அளிக்க வீட்டுக்கு காவல்துறை வந்து நிற்கிறது.

இதில் என்ன இருக்கிறது. வழக்கமாக எல்லா நெடுந்தொடர்களிலும் இப்படி ஒரு காட்சி வரத்தானே செய்கிறது என்பீர்களானால். உங்களுக்கு இப்படியான காட்சிகள் சிந்தைக்குப் பழகி விட்டது என்று அர்த்தம். இதை எதிர்க்க வேண்டும் என்ற உணர்வு முதலில் பெண்களுக்குத் தான் வர வேண்டும். 

ஏனெனில் இந்த நெடுந்தொடரில் மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக எல்லா நெடுந்தொடர்களிலும் ஒன்று பெண்ணை மிக அப்பாவியாக, குட்டக் குட்டக் குனியும் தன்மை கொண்ட  பணிந்த பெண்ணாகக்  காட்டுவது, அல்லது வன்முறையின் எந்த எல்லைக்கும் சென்று கொலை கூட செய்யத் தகுந்த கொடூர வில்லியாகச் சித்தரிப்பது. இந்த இரண்டே இரண்டு வகைப் பெண்கள் மட்டும் தான் இருக்கிறார்கள் அவர்களுக்கு தங்களின் நெடுந்தொடர்களைத் டி.ஆர்.பி ரேட்டிங்கில்  தூக்கி நிறுத்த. அது தனிப் பஞ்சாயத்து. அதைப் பற்றியும் பிறிதொரு சமயம்  பேசியாக வேண்டும். இப்போது இந்த நெடுந்தொடர் சித்தரிப்புக்கு வருவோம்;

ஒரு பெண் அவள் பாலியல் தொழிலாளியே ஆனாலும் தன்னிடம் வரும் ஆண்களைத் தேர்ந்தெடுக்கவோ அல்லது யாருக்கு முன்னுரிமை தருவது என்பது குறித்தான முடிவெடுக்கவோ அவளுக்கும் உரிமை இருக்கிறது தானே?! பார்வையாளர்களிடம் கருணை ஏற்படுத்துகிறோம் என்ற மனப்பாங்கிலோ அல்லது ஆண் இப்படித்தான் இருப்பான் எனும் மனப்பாங்கிலோ நெடுந்தொடர்களில் இப்படியான காட்சி சித்தரிப்புகள் வைப்பதெல்லாம் அந்தத் தொடரை பார்க்க வாய்ப்பவர்களுக்கு கடும் எரிச்சலை உண்டாக்குவதை சம்மந்தப்பட்டவர்கள் உணர்வார்களா?  குறிப்பிட்ட அந்த நெடுந்தொடரில் பெண்கள் இருவருமே சண்டையிடும், தங்களை வற்புறுத்தும் ஆண்களைக் கண்டு அஞ்சி நடுங்குபவர்களாக ஏன் சித்தரிக்கப்பட வேண்டும். இன்றைய பெண்கள் அப்படித் தான் இருக்கிறார்கள் என்று வலியுறுத்தும் முயற்சியா இது?!

மனைவியே ஆனாலும் அவளது சுய விருப்பமின்றி கணவனின் ஆசைகளுக்கு இணங்க வேண்டியதில்லை என்கிறது சட்டம். ஆனால் பாலியல் தொழிலாளிகளை மட்டும் ‘காசு கொடுத்திருக்கிறேன் நீ இப்போது எனது அடிமை’ என்பது போல  ஆண்கள் அணுகுவதான இப்படியான காட்சியமைப்புகள் தேவையா?

]]>
நெடுந்தொடர் விமர்சனம், பெண்கள் VS ஆண்கள், பாலியல் தொழிலாளிகளின் சமூக நிலை, mega serial, t.v, sex worker's social status, mega serial critics http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/26/w600X390/mega_serial.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/apr/26/if-she-is-a-sex-worker-means-she-does-not-have-the-capacity-to-oppose-males-2691394.html
2691373 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் சொந்த நாட்டில் பலமுறை நிறவெறித் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் நானும் ஒருவன்: மிஸோரம் முதல்வர்! கார்த்திகா வாசுதேவன் IANS Wednesday, April 26, 2017 12:24 PM +0530  

உலக அளவில் நாம் அமெரிக்கர்களின் நிறவெறியைப் பற்றியும், இந்திய அளவில் வட இந்தியர்களின் நிறவெறியைப் பற்றியும் பேசி கண்டனம் தெரிவித்து வரும் வேளையில் நமது இந்திய மாநிலங்கள் ஒன்றின் முதல்வரே அத்தகைய குற்றச்சாட்டை தனது சொந்த நாட்டின் மீதே எழுப்பி இருப்பது கவனிக்கத்தக்கது. ஏனெனில் நிறவெறி என்பது யாரோ நம்மை மட்டும் குறி வைத்து தாக்கி செயல்படுத்தும் வன்முறை அல்ல, அது உலகம் முழுதும் பரவி இருக்கிறது. ஏன் நமது காலடியில் நமது சொந்த ஊரில், சொந்த வீட்டில் கூட இருக்கத்தான் செய்கிறது என்பதை அப்பட்டமாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறார் வடகிழக்கு இந்திய மாநிலமான மிஸோரம் முதல்வர் லால் தன்வாலா. இவருக்கு வயது 74. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான லால் தன்வாலா மிஸோரம் மாநிலத்தில் 5 முறை முதல்வர் பதவியை வென்று தற்போது வரை முதல்வராகவே பதவியில் நீடிப்பவர். அவர் தனது இளமை முதல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தான் சந்திக்க நேர்ந்த நிறவெறி, இனவெறி சீண்டல்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதிலிருந்து;

சில முட்டாள் ஜனங்களுக்கு தங்களது நாட்டின் தன்மை குறித்தே முழுமையாகத் தெரியவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விடுதியின் வரவேற்பறையில் நான் சந்தித்த மரியாதைக்குரிய நபர் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்வியை இன்றும் என்னால் மறக்க இயலாது. உன்னைப் பார்த்தால் இந்தியனைப் போல இல்லையே? என்று சந்தேகம் எழுப்பினார் அவர். அத்தோடு அவர் மீது நான் வைத்த மரியாதை நழுவியது. நான் அவரிடம் கூறிய பதில், இந்தியன் என்றால் எப்படி இருக்க வேண்டும்? இந்தியனைப் பற்றிய உங்களது பார்வை என்ன? என்று எனக்கு ஒரே வாக்கியத்தில் பதில் அளியுங்களேன் என்றேன்.

அவரைப் போன்றவர்கள் மட்டுமல்ல, இங்கே நாம் மிகப்பெரிய அரசியல் தலைவர்கள் என்று எண்ணிக்கொண்டு ஆட்டு மந்தைகள் போலப் பின்பற்றுகிறோமே அத்தகைய மாட்சிமை பொருந்திய அரசியல் தலைவர்களின் நிலையும் கூட இந்தியாவையும், அதன் இறையாமையையும் புரிந்து கொள்ளும் விசயத்தில் மிக மிக மோசமான ஒரு நிலையில் தான் இருக்கிறது. அவர்களுக்கும் இந்தியாவைப் பற்றிய அடிப்படைப் புரிதல் என எதுவுமே இல்லை. மாநில அரசியல் தலைவர்களை விட்டுத் தள்ளுங்கள், தேசிய அளவில் பெரியகட்சிகளை நிர்வகிக்கக் கூடிய நிலையில் இருக்கும் தேசியத் தலைமைகளின் நிலையே நிறவெறி, இனவெறி விசயத்தைப் பொறுத்த வரை இப்படித்தான் எனில், அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களைப் பற்றி பேசி என்ன பயன்?

நீங்கள் பாஜக, காங்கிரஸ், அல்லது வேறு எந்த ஒரு அரசியல் கட்சியின் தேசியத் தலைவராகவோ இருந்து விட்டுப் போங்கள், ஆனால் உங்களுக்கு, உங்களது நாட்டைப் பற்றி எதுவுமே தெரியாது என்றால். நீங்கள் எப்படி உங்களைத் தலைவன் என்று சொல்லிக் கொள்ள முடியும்?

இன்றைய நிலையில் தேசியத் தலைவர்கள் எனத் தங்களைப் பறைசாற்றிக் கொள்ளும் பல அரசியல்வாதிகளுக்கும் அரசியல் செய்யத் தெரிந்த அளவுக்கு இந்தியாவைப் பற்றி ஒன்றுமே தெரியாது. இது மிக மிக முட்டாள்தனமானது மட்டுமல்ல. அது அவர்களின் கல்வி அறிவுக் குறைபாடு மற்றும் தேசபக்தி குறைபாட்டுக்கான மிகப்பெரிய அடையாளம் என்று தான் சொல்ல வேண்டும். அது மட்டுமல்ல எந்தச் சிறப்புமே இல்லாமலிருந்தும் தங்களை உயர்வாக எண்ணிக்கொள்ளும் அவர்களுடைய குணக்குறைபாடும் கூட இது.

நாட்டின் ஒரு பகுதியைச் சேர்ந்த மக்களிடம் நிறம் மற்றும் இன ரீதியாக இவர்கள் கையாளும் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மையே ஒட்டுமொத்த நிறவெறி மற்றும் இனவெறிக்கு மூலகாரணமாக அமைந்து விடுகிறது.

இந்தியாவின்  வட கிழக்கு பிராந்தியங்கள்...

இவர்களுக்குத் தெரியாது. இந்தியா உலகின் மூன்று பெரிய இனங்களில் இருந்து தோன்றிய கலப்பின மக்களை தன்னகத்தே கொண்டுள்ளது என. சமீபத்தில் கூட மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கூறி இருந்தார், தென்னிந்தியாவைச் சேர்ந்த திராவிட மக்கள் மிகக் கருப்பானவர்கள் என, அவர்களுக்குத் தெரியவில்லை வட இந்தியா ஆரியக் கலப்பின மக்களைக் கொண்டது என்பதும், வட கிழக்கு இந்தியா மங்கோலியக் கலப்பினங்களால் ஆனது என்பதும். இவர்களைத் தவிர நமது நாட்டில் மண்ணின் மைந்தர்களென பல்வேறு பழங்குடி இனங்களும் கூட உள்ளன.

அதனால் தான் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் பிராந்தியத் தன்மை மிகுந்திருக்கிறது. அதனால் தான் அங்கு இன உணர்வும் மிக அதிகம். ஏனெனில் வடகிழக்கு மாநில மக்களை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்களுமே தங்களுக்கு இணையாகக் கருத மறுக்கிறார்கள் என்பதால் தான். இது தான் இந்திய மக்கள் தங்களது சக நாட்டவரான வடகிழக்கு பிராந்திய மக்களை மதிக்கும் லட்சணம்.

மத்திய அரசு வடகிழக்குப் பகுதி மக்களின் நலனுக்காக எத்தனை விதமான முயற்சிகளை மேற்கொண்ட போதும், அங்கு இப்போதும் பிற மாநிலத்தார் வடகிழக்குப் பிராந்திய பெண்கள் மற்றும் மாணவர்கள் மீது நிகழ்த்தும் நிறவெறி, இனவெறி துவேஷம் மட்டும் எப்போதும் ஓயவே இல்லை.

2014 ஆம் ஆண்டில் அருணாச்சலப் பிரதேசத்தைச் சார்ந்த  நிடோ டானியா எனும் மாணவர் டெல்லியில் நிறவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார். அந்த மரணத்துக்கான நீதி கேட்பு விசயத்தில் இந்தியா முழுவதிலும் வாழும் குறிப்பாக மாநகரங்களில் வாழும் அனைத்து வடகிழக்கு பிராந்திய மக்களும் ஒருங்கிணைந்து குரல் எழுப்பியதால் அரசு எம்.பி. பெஸ்பரூவா தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

இது மட்டுமல்ல, சமீபத்தில் பெங்கலூருவில் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஹிஜியோ குங்க்டே, தனது வீட்டு உரிமையாளாரால் நிறவெறித் தாக்குதலுக்கு உள்ளானதாகச் செய்தி. அந்த உரிமையாளர் ஹிஜியோவை விடாமல் 90 நிமிடங்களுக்கு இனவாத வசைச் சொற்களை எழுப்பித் தாக்கி இருக்கிறார். இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது என்ன சொல்வது? இந்தியாவில் சொந்த நாட்டினரே பிற மக்களால் அந்நியர்களாகக் கருதப்படும் நிலையை எப்போது வெல்ல முடிகிறதோ அப்போது தான் நாட்டு மக்களிடையே ஒற்றுமை நிலவ முடியும். 

தேச பக்தி என்பது என்ன? ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் நாட்டின் இறையாமையை தமக்குள் நன்கு உணருவதும், பிறருக்கு உணர்த்துவதும் தான்!

என்று முடிக்கிறார் மிஸோரம் முதல்வர் லால் தன்வாலா!

 

Image courtsy: google

]]>
மிஸோரம் முதல்வர், லால் தன்வாலா, இந்தியா,Mizoram CM ,Lal Thanhawla,India http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/26/w600X390/000Lal-Thanhawla_0.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/apr/26/i-have-faced-a-lot-of-racial-abuse-in-my-own-country-mizoram-cm-2691373.html
2690176 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் 10 நாட்களில் எளிய யோகா பயிற்சிகளை கற்றுக் கொள்ள ஆசையா? RKV DIN Tuesday, April 25, 2017 11:54 AM +0530  

இந்தியாவில் முந்தைய வருடங்களைக் காட்டிலும் சமீப வருடங்களில்யோகாசனத்தின் மீதான ஈர்ப்பு கூடிக் கொண்டே இருக்கிறது. பெரு நகரங்களில் வசிப்போர், தமது அன்றாட பிஸி செட்யூல்களுக்கு மத்தியில் உடல் நலத்தின் மீதான அக்கறை மற்றும் மனநலன் சார்ந்த ஒரு விடுபடலுக்காக யோகா, தியானம் என ஆர்வமாகக் கற்றுக் கொள்ள விரும்புகின்றனர். இந்த நிலையில் ஊரெங்கும் கிளை பரப்பி இருக்கின்றன பல்வேறு யோகாசன பயிற்சி வகுப்பு கூடங்கள். அவற்றுள் ஒன்று சென்னை மயிலாப்பூரில் இயங்கி வரும் ‘ஆத்ம ஞான யோகம்’. 

இங்கே; 

* வஜ்ராசனம்.
* எளிய உடல்வளைவு பயிற்சி
* பிராணாயாமம்
* விபாக பிராணாயாமம்
* மகத் பிராணயாமம்
* கபால பாதி
* வாழ்வதற்கான 10 கட்டளைகள்
* உணவுப் பழக்க வழக்கம்
* தியானம் 
* ஈஜோ 
* சுதர்சன கிரியா
* சத் சங்கம்

இப்படி பல விஷயங்களையும் ரூ. 400 கட்டணத்தில் தினமும் ஒரு மணிநேரம் வீதம் 10 நாளில் எளிமையாக கற்றுக் கொடுக்கும் யோகி சென்னையில் இருக்கிறார். அவர் 84 வயதாகும் டி.எஸ். நாராயணன் அவர்கள். மயிலாப்பூரில் வசிக்கிறார். அவர் நடத்தும் யோகப் பயிற்சிக்கு ஆத்ம ஞான யோகம் என்பது பெயர். இவரது சீடர்கள் இன்று முதல் ( 24.04.17) தொடங்கி சென்னையில் பல்வேறு இடங்களில் பயிற்சியை நடத்துகிறார்கள். அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ள இந்தச் சமயத்தில் குடும்பத்துடன் நீங்கள் இந்தப் பயிற்சியை முயற்சி செய்து பார்க்கலாம்.

தொடர்பு எண்கள்:
................................

97890 16935 (ராஜாராமன்).
94444 68360 (லட்சுமிமோனி).
98402 57303 (தேவகி).
94449 73799 (சீரிதரன்).
 

]]>
Yoga, யோகா, chennai, சென்னை, Mylapore, ATHMA GNANA YOGA, ஆத்ம ஞான யோகா, மயிலாப்பூர் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/24/w600X390/athama_gnana_yoga.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/apr/24/if-u-want-to-learn-yoga-with-in-10-days-2690176.html
2690794 தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்து கொள்ள நாமும் இவரைப் போலவே டிஎன்ஏ டெஸ்ட் செய்து பார்த்தாலென்ன? கார்த்திகா வாசுதேவன் DIN Tuesday, April 25, 2017 11:34 AM +0530  

இந்தியாவில் மத உணர்வைப் பற்றிய பெரும்பாலானோரின் கருத்துகள் எப்படி இருக்கின்றன? என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இந்த நடிகரின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் வீடியோவை பிறருக்கு பரிந்துரைக்கலாம். பாலிவுட் நடிகர் நவாஸுத்தீன் சித்திக். நம்ம ஊர் நாஸர், பிரகாஷ் ராஜ், சத்யராஜ் போல பாலிவுட்டில் சுதந்திரமாகச் கருத்துச் சொல்லத் தயங்காத நடிகர்களில் இவரும் ஒருவர். பாலிவுட்டின் சிறந்த நடிகர்களைக் கணக்கெடுத்தால் நிச்சயம் அதில் நவாஸுத்தீனும் இருப்பார். இப்போது அவர் புதிதாக என்ன செய்து விட்டார் என்கிறீர்களா?

எப்போதுமே மத்தியில் பாஜக ஆளும் போது மத விவகாரங்களில் ஆர் எஸ் எஸ் சின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்பது ஊரறிந்த செய்தி. மதம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளிப்படையாக முழங்கும் விசயத்தில் ஆர் எஸ் எஸ் தலைவர்களும், சீடர்களும் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல! வட மாநிலங்களில் மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் விதமாக இப்படி நாளுக்கு நாள் சர்ச்சைக்குரிய கருத்துகள் வலுப்பெற்றுக் கொண்டிருக்கும் போது அவற்றை முறியடிக்கும் விதமாக பிரபலங்களிடம் இருந்து எதிர்வினைகள் வருவதுண்டு.

இப்படித் தான் கடந்த வாரத்தில் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், குருத்வாராக்களில் வழிபாட்டு நேரத்தில் லவுட் ஸ்பீக்கர்கள் வைப்பது ஆன்மீகத்தை, மத உணர்வைத் திணிக்கும் செயல் எனக்கூறி பிரபல இந்திப் பாடகர் சோனு நிகம் கருத்து தெரிவித்திருந்தார். இதை எதிர்த்த இஸ்லாமிய மெளல்வி சோனுவின் தலையை மொட்டை அடிப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய்கள் பரிசு என அறிவித்தார். இதையும் ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொண்ட சோனு தனது தலையை தனது இஸ்லாமிய சிகை அலங்கார நண்பர் மூலம் மொட்டை அடித்துக் கொண்டு அதையும் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அவருக்கு தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க ட்விட்டர் உதவியதைப் போல இப்போது நவாஸுத்தீனுக்கு தனது மத நிலைப்பாட்டைத் தெரிவிக்க இன்ஸ்டாகிராம் உதவி இருக்கிறது.

இந்த வீடியோவில் நவாஸுத்தீன் பேசவே இல்லை. அவர் அந்த வீடியோவில் தோன்றி தன் கையில் ஏந்திய பதாகைகள் மூலம் தெரிவிக்கும் கருத்து இது தான்;

நான் சமீபத்தில் தான் எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்பதை அறிந்து கொள்ள டிஎன்ஏ சோதனை செய்து கொண்டேன். அந்த சோதனை முடிவு தெரிந்து விட்டது. அதன்படி நான் 16.66 % இந்து, 16.66 % முஸ்லீம், 16.66 % சீக்கியன், 16.66 % பெளத்தன், 16.66 % கிறிஸ்தவன், 16.66 % உலகில் உள்ள மற்ற எல்லா மதமும் கலந்தவன். ஆனால் கடைசியாக எனது ஆன்மா எதைச் சேர்ந்தது எனக் கணக்கிட்டதில் அது முற்றிலும் 100 % என்னை ஒரு கலைஞன் எனக் காட்டியது. இது தான் எனது டிஎன் ஏ சோதனை முடிவு. இது நவாஸுத்தீனின் டிஎன் ஏ சோதனை முடிவு மட்டுமல்ல. இந்தியாவில் வாழும் பெரும்பாலானோரின் டிஎன் ஏ சோதனை முடிவுகளும் இப்படியாகத் தான் இருக்கக் கூடும். ஏனெனில் அனைத்து மக்களுக்குமே மதம் ஒரு வெறியூட்டக் கூடிய உந்து சக்தியாக இருப்பதில்லை. என்பதால் நவாஸுத்தீன் இந்த வீடியோவை பகிர்ந்த உடனே அது பலரால் லைக் செய்யப்பட்டு உடனுக்குடன் அதிகளவில் பகிரப்பட்டு இணையத்தில் வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது.

இதோ அந்த வீடியோ...

 

Video courtsy: youtube.

]]>
Actor Nawazuddin Siddiqui ,DNA test,religious stand,நடிகர் நவாஸுத்தீன் சித்திக்,டி என் ஏ சோதனை, மத நம்பிக்கை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/25/w600X390/navasuththin_sidiq.jpg http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/apr/25/nawazuddin-siddiqui-got-his-dna-tested-and-found-what-religion-he-belongs-to-2690794.html