Dinamani - ஃபிட்னஸ் - http://www.dinamani.com/health/fitness/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2646560 மருத்துவம் ஃபிட்னஸ் உடல்பருமனுக்கு எளிய சித்த மருத்துவம் Thursday, February 9, 2017 11:07 AM +0530  

கொழுப்புகள் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அளவுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேர்வதால் உடல்பருமன் ஏற்படுகிறது.

உடல் பருமனுக்கான காரணங்கள்:

அதிக அளவு உணவு எடுத்துக்கொள்ளல், குறைவான சக்தியைச் செலவிடல், அதிக சக்தி தரும் உணவுகளை உட்கொள்ளல் (இனிப்புகள்/ ஐஸ்-கீரிம்/ குளிர்பானங்கள்), மதுப் பழக்கம் போன்றவற்றால் கூடுதல் பருமன் ஏற்படுகிறது. வயது மற்றும் பரம்பரைக் காரணிகளும்கூட உடல்பருமனுக்குக் காரணங்கள். தைராய்டு சுரப்புக் குறைவதாலும், அட்ரீனல் சுரப்பு அதிகரிப்பதாலும் உடல் பருமன் அதிகரிக்கும். கூடுதல் உடல்பருமனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டு வாதம், மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன.

உடல்பருமனுக்கு எளிய சித்த மருத்துவம்:

இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு டேபிள் ஸ்பூன் சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol) 
ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.

கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.

சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.

பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.

எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள் ஸ்பூனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.

சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:

தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.

தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:

இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள்.
தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்.

- எஸ்.சண்முகம்

]]>
உடல் பருமன், சித்த மருத்துவம், Obesity, siddha remedy for obesity http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/9/w600X390/Parenting-an-Obese-Child.jpg http://www.dinamani.com/health/fitness/2017/feb/09/உடல்பருமனுக்கு-எளிய-சித்த-மருத்துவம்-2646560.html
2626556 மருத்துவம் ஃபிட்னஸ் உடற்பயிற்சியும் மன உறுதியும் சுமதி Tuesday, January 3, 2017 04:54 PM +0530 உடல் பருமனாக இருந்தால் ஒல்லியாக முயற்சி செய்வோம். மெலிந்து இருந்தாலோ சதை பிடிக்க  ஆசைப்படுவோம். உயரத்துக்கு ஏற்ற எடையுடன் இருப்பது பெரும்பாலனோர்க்கு சவாலான ஒரு விஷயம் தான். எப்படிப்பட்ட உருவ அமைப்புடன் இருந்தாலும் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். எப்படி இருந்த நான் இப்படியாகிட்டேன் என்று நம்மில் பலர் புலம்புவது உண்மைதானே?

உடல் பருமன் தேவையில்லாத சில பிரச்னைகளுக்கு வழி வகுத்துவிடலாம். எனவே கவனத்துடன் உடல் நலத்தில் அக்கறை எடுக்க வேண்டும். தினமும் சிறிது நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்தால் நமக்கு நாமே ஒரு பரிசு கொடுத்துக் கொள்கிறோம் எனக் கொள்ளலாம். ஆம் மருத்துவமனையில் நோயில் வீழ்ந்து கிடக்கும் நிலைக்குச் செல்லாமல் எப்போதும் சக்தியும் புத்துணர்வுடன் இருக்க நம்மைப் பழக்கிக் கொள்வது எவ்வளவு அவசியம்?  முதலில் உங்களுக்கு உடற்பயிற்சி தேவையா இல்லையா என்பதை ஒரு சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

  1. ஒரு மைல் தூரம் நடக்கும்போதோ, இரண்டு மாடிகள் ஏறும்போதோ உங்களுக்குக் களைப்பு, மூச்சு வாங்குவது இருக்கிறதா?
  2. கால்களை அருகருகே வைத்து முழங்கால் முட்டிகளை மடக்காமல் குனிந்து உங்கள் இரு கைகளாலும் உங்கள் கால்களின் பெருவிரல்களைத் தொட முடிகிறதா?
  3. வேகமாக நடக்கும்போது உங்களால் தயக்கமின்றிப் பேசிக் கொண்டே வரமுடிகிறதா? அல்லது தடையின்றி பாடமுடிகிறதா?

இதெல்லாம் முடிந்தால் நீங்கள் ஆரோக்கியமான உடல் உள்ளவர்கள்தான். முடியவில்லை என்றால் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்தே ஆக வேண்டும். சிலர் புது வருட சபதம் எடுப்பார்கள். நாளையிலிருந்து நான் வாக்கிங் போவேன். இரண்டு மூன்று நாட்கள் அல்லது சில வாரங்கள் ஜோராக வாக் செய்வார்கள். ஆனால் அடுத்த நாள் மனம் தன் வேலையை தொடங்கிவிடும். இன்னிக்கு ஒரு நாள் லீவ் விட்டுக்கலாம் என்று ஆரம்பித்து படிப்படியாக ஆர்வம் குறைந்து, இப்ப வாக்கிங் போய் என்ன சாதித்துவிட்டோம், ஒண்ணும் குறைந்த மாதிரி தெரியலையே என்று ஒரேடியாக கைவிட்டுவிடுவார்கள். இத்தகைய சோம்பல் தான் அவர்கள் வாழ்க்கையில் மிகப் பேரிய நோய்க்கூறு. மனத்தை ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் பழகினால் உடல் சொன்னதைக் கேட்கும். ஒழுங்கமைதியில் இருக்கும். நல்ல ஆரோக்கியமான உடலை வில்லாக வளையச் செய்யலாம்,, வேகமாக ஓடலாம், ஆடலாம் உடலின் உச்சபட்ச சாத்தியங்களை செய்யலாம். ஆனால் இறைவன் கொடுத்த வரமான இந்த உடலை வெறும் உணவுக் கிடங்காக பலர் வைத்திருப்பதால் தான் ஆரோக்கிய கேடு நிகழ்கிறது. உணவு நன்றாக செரித்துவிட்டாலே பாதி பிரச்னைகள் தீர்ந்துவிடும். அதற்கு அடிப்படை சுறுசுறுப்பாக இருப்பதே. எனவே எதோ ஒரு பயிற்சியை தினமும் மேற்கொண்டால் நிச்சயம் அதற்கேற்ற பலன் கிடைக்கும்.

உடற்பயிற்சியை பல விதமாக செய்து கொள்ளலாம். வாய்ப்பும் வசதியும் இருப்பவர்கள் ஜிம்முக்கு சென்று தங்கள் உடலை பேணிக் கொள்ளலாம். கண்களை மூடிக் கொண்டு அவர்கள் சொல்வதை பின்பற்றினால் சில வாரங்களிலேயே மேஜிக் செயல்படத் தொடங்கிவிடும். 

ஜிம்முக்குப் போக நேரமில்லை என்று வருந்துபவர்கள் வீட்டிலேயே சில எளிய பயிற்சிகளை செய்யலாம். அதிகபட்சமாக அரை மணி நேரம் அல்லது குறைந்த பட்சமாக 15 நிமிடம் செலவழித்தால் போதும். ஆரோக்கிய வாழ்க்கை ஆரம்பநிலைக்கு வந்துவிடலாம்.

உடல் ஆரோக்கியத்துக்கு கடைபிடிக்க வேண்டிய அடிப்படை உடற்பயிற்சிகள் கற்றுக் கொள்ளுங்கள். முப்பதி நாட்கள் போதுமானது உங்களில் சின்னதாக ஒரு மாற்றம் தெரியும்.  ஜீரோ சைஸ் எல்லாம் வேண்டாம். உடல் நலம் ஒன்றே இலக்காக வைத்துக் கொள்ளுங்கள். உங்களால் முடியும் என நம்புங்கள்!

]]>
உடற்பயிற்சி, Excercise, Weight Reduction, fitness http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/3/w600X390/how-to-do-mountain-climber-exercises.jpg http://www.dinamani.com/health/fitness/2017/jan/03/உடற்பயிற்சியும்-மன-உறுதிய-2626556.html
2586754 மருத்துவம் ஃபிட்னஸ் ட்ரைசெப் புஷ் அப்ஸ் Monday, October 24, 2016 06:04 PM +0530 15 நிமிடத்தில் செய்யக்கூடிய ஒரு எளிமையான பயிற்சி தான் இது. இதற்கு எவ்வித உபகரணங்கலும் தேவையில்லை. ஒரு நாற்காலி போதுமானது.

  1. நாற்காலியை எடுத்துக் கொண்டு உட்காராமல் அதன் முன்னால் நிற்கவும்.
  2. அதே நிலையில் இரு கைகளையும் பின்புறமாக அதன் கைப்பிடியில் பிடித்துக் கொண்டு உடலை சாய்த்த நிலையில் உட்கார்ந்து எழுவது போல அமர்ந்து எழந்து கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் உட்காரக் கூடாது.
  3. இதனால் கைகளின் பின் பக்கங்களில் உள்ள தசைப் பகுதிகளுக்கு அழுத்தம் கிடைக்கும்.
  4. ஒரு தடவைக்கு 15 எண்ணிக்கை வீதம் மூன்று தடவைகள் இந்தப் பயிற்சியை செய்ய வேண்டும்.
  5. எல்லா வயதினரும் செய்யலாம். 

இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்வதன் மூலம் கைகள், இடுப்புப் பகுதிகளில் உள்ள தசைகள் வலுவடையும். அப்பகுதிகளிலுள்ள தேவையற்ற சதை குறையும்.

]]>
Tricep push ups, exercises http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/10/24/w600X390/tricep-pushups-chair-400x400.jpg http://www.dinamani.com/health/fitness/2016/oct/24/ட்ரைசெப்-புஷ்-அப்ஸ்-2586754.html
2577059 மருத்துவம் ஃபிட்னஸ் நீங்கள் உடற்பயிற்சி செய்பவரா? இதைக் கடைபிடியுங்கள்! Thursday, October 6, 2016 03:54 PM +0530 சிலர் உடல் எடையைக் குறைக்க பயிற்சி செய்வார்கள். சிலர் உடல் எடையைக் கூட்ட செய்வார்கள். வேறு சிலர் சக்திக்காகவும், உடலை நன்றாக வைத்திருக்க வேண்டும் என்ற சுய விருப்பம் காரணமாகவும் பயிற்சியில் ஈடுபடுவார்கள். நோக்கம் எதுவாக இருந்தாலும் அதைச் சரியாக செய்வது மிகவும் முக்கியம். எந்த அளவுக்கு நாம் பயிற்சிக்கு முக்கியத்துவம் தருகிறோமோ அதே அளவு பயிற்சி செய்யும் முன்னர், செய்கையில் மற்றும் பயிற்சியை முடித்த பின் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பற்றிய தெளிவும் நமக்குத் தேவை.

வொர்க் அவுட்ஸ், வாக்கிங், ஸ்விமிங் அல்லது எந்தவிதமான உடற் சார்ந்த பயிற்சியாகட்டும் சரியான அளவு உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வது அவசியம். 

பயிற்சிக்கு முன் (ப்ரீ வொர்க் அவுட்)

பயிற்சியைத் தொடங்கும் போது வெறும் வயிற்றில் தொடங்கக் கூடாது. பயிற்சியை செய்வதற்கு முதலில் உடலில் தெம்பு வேண்டும். பயிற்சி செய்கையில் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுகிறது. அதற்கு மிகவும் சக்தி தேவை. சக்தி தேவை எனும் போது உணவும் தேவை. வெறும் வயிற்றில் செய்தால் தலை சுத்தலாம், அல்லது உடல் மிகவும் சோர்வடைந்துவிடலாம். அதனால் ப்ரீ வொர்க் அவுட் சத்துணவு எடுத்துக் கொள்வது முக்கியம். ஆனால் அதற்றாக எந்த மாதிரியான உணவையும் சாப்பிட முடியாது. நாம் சாப்பிடும் உணவு மெதுவாக செரிமானம் ஆகவேண்டும். இத்தகைய உணவை காம்ப்ளக்ஸ் கார்போ ஹைட்ரேட் என்போம். இந்த உணவின் சிறப்பு அது நம் ரத்தத்தின் சர்க்கரை அளவை அப்படியே நிலைத்திருக்க வைக்கும். பயிற்சிக்கு முன் முழுச் சாப்பாடு சாப்பிட்டால் அது செரிமானம் ஆகிவிடும். அந்த உணவில் மாவுச் சத்து அதிகம் இருப்பதே காரணம். 

பயிற்சிக்கு முன் சாப்பிட வேண்டியவை பழங்கள், நட்ஸ் சாப்பிடலாம். இதில் நார்ச்சத்து இருக்கிறது. காம்ப்ளக்ஸ் கார்போ ஹைட்ரேட் இருப்பதால் மெதுவாக செரிமானம் ஆகும். பயிற்சி செய்யும் போது முழுக்க முழுக்க தெம்பாக இருக்கலாம். சோர்வு ஏற்படாது. 

பயிற்சியின் போது (வொர்க் அவுட் செய்கையில்)

உடற்பயிற்சி செய்கையில் உடலில் சக்தியை முடிந்த அளவு எரிக்கிறோம். கையிருப்பில் உள்ளவற்றை செலவு செய்துவிட்டால், அதன் பின் கஜானா காலியாகிவிடுமே...இதற்குத் தேவை சத்து. இப்போது எந்த மாதிரியான உணவு தேவை என்றால் உடலில் உடனே போய் சேர்ந்துவிடக் கூடிய சத்தான உணவுப் பொருள். நீரின்றி அமையாது உலகு என்பது போல நீரின்றி அமையாது உடலும் கூட. சிலர் தண்ணீர் குடித்தால் பயிற்சி செய்ய முடியாது என்பார்கள். அது சரியில்லை. பயிற்சியின் போது ஒரேடியாக தண்ணீர் குடிக்கக் கூடாதே தவிர, ஒரு மணி நேரத்தில் அரை லிட்டர் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்துவிடவேண்டும். தண்ணீரைத் தவிர எதைக் குடிக்கலாம் என்றால் இயற்கைத் தந்த பெரும் கொடையான இளநீர் தான். பயிற்சியின் போது இடையிடையே இதைக் குடித்தால் மிகவும் நல்லது. இதில் பொட்டாஷியம் இருப்பதால் தசைகள் சோர்வடையாமல் இருக்க உதவும். ஒரு மணிப் பயிற்சியை உற்சாகமாக செய்து முடிக்கலாம். தசைகள் வலிக்காது. கையைத் தூக்க முடியவில்லை என்று சொல்லாமல் நன்றாக இலகுவாக செய்ய முடியும். 

கடுமையான பயிற்சி செய்பவர்கள் எனர்ஜி ட்ரிங் அல்லது எனர்ஜி பார் சாப்பிடலாம். இதில் எலக்ட்ரோலைட், சோடியம் பொட்டாஷியம் இருப்பதால் சக்தியை தக்க வைக்க உதவும். தசைகள் எளிதாக பழைய நிலைக்குத் திரும்பும். புது வேகத்தையும் உற்சாகத்தையும் உடலுக்குத் தரும். ஆனால் பழச்சாறு குடிக்கக் கூடாது. அது உடனே உடலில் சேர்ந்து, ரத்தத்தில் சர்க்கரையை அதிகப்படுத்திவிடும். 

பயிற்சிக்குப் பின் (போஸ்ட் வொர்க் அவுட்)

அவரவர் உடல் சக்திக்கு ஏற்ப ஒரு மணி நேரம் பயிற்சி செய்தபின் நிறைய கலோரிகள் எரிக்கப்பட்டிருக்கும். எனவே வொர்க் அவுட் செய்த பின் அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்துக்குள் கட்டாயம் சத்தான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தை கோல்டன் ஹவர் என்பார்கள். நம் உடலில் உள்ள தசைகள் பயிற்சியின் காரணமாக ப்ரேக் டவுன் ஆகி இயல்புத் தன்மை மாறி இறுகிப் போய் இருக்கும். அந்த இறுக்கத்தை நேராக்கி பழையபடி தசைகள் இலகுவாக, இயல்பு நிலைக்குத் திரும்ப புரதச் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியம். இந்த நேரத்தில் சரியான சத்தான உணவு சாப்பிட்டால் அது நம் உடலில் உள்ள தசைகள் பாதிப்படையாமல் இருக்கச் செய்யும்.

இயற்கை உணவில் புரதச் சத்து நிறைய உள்ளது. மோர், முட்டையின் வெள்ளைக் கரு சாப்பிடலாம். அல்லது ஸ்மூதி எனப்படும் பழக் கூழை சாப்பிடலாம் (வாழைப் பழம், பப்பாளி அல்லது ஆப்பிள் இதில் எதாவது ஒரு பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் தயிரைச் சேர்த்து நன்றாக கலக்கவும். அதன் பின் மிக்சியில் போட்டு அரைக்கவும். இந்தக் கலவையை வடி கட்டக் கூடாது. மில்க் ஷேக் பதத்தில் ப்ளென்ட் பண்ண வேண்டும். இது மிகவும் நல்லது. கடுமையான பயிற்சிகளை செய்பவர்கள் வே ப்ரோட்டின் எடுத்துக் கொள்ளலாம். 

]]>
fitness, exercise and food http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/10/6/w600X390/Beyond-Diet.png http://www.dinamani.com/health/fitness/2016/oct/06/நீங்கள்-உடற்பயிற்சி-செய்பவரா-இதைக்-கடைபிடியுங்கள்-2577059.html
2567848 மருத்துவம் ஃபிட்னஸ் எடை குறைப்பு சிகிச்சைக்குப் பின் செக்ஸ் வாழ்க்கை சிறக்கும்! Tuesday, September 20, 2016 12:29 PM +0530 ‘ஒரு வெற்றிகரமான எடை குறைப்பு அறுவை சிகிச்சைக்குப் பின்னர்  உங்கள் உடல் மெலிவதோடு கூடுதல் பலனாக பல வருடங்கள் செக்ஸ் வாழ்க்கை  சிறப்பாக நீடிக்கும்’ என்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.

‘Bariatric’ (எடை இழப்பு) அறுவை சிகிச்சையின் மூலம் குறுகிய காலத்திலேயே ஒருவரின் பாலியல் செயல்பாடுகள் அதிகரிக்கும் என்கிறார் அமெரிக்க வடக்கு டகோடா மாநில பல்கலைக்கழகத்தின் மருத்துவ அறிவியல் இணை பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான கிரிஸ்டின் ஸ்டீபன் ஃபார்கோ.  மேலும்
மேலும் இதன் பலன்கள் நீண்ட காலம் தொடரும் என்றும் ஸ்டீபன் குறிப்பிட்டார்.

இந்த ஆய்வில் 2,000 க்கும் மேற்பட்ட மக்கள் பங்கெடுத்தனர். இதில் கிட்டத்தட்ட 80 சதவிகித பெண்கள் - - Bariatric அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள். அறுவை சிகிச்சைக்கு முடிந்து ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து தங்கள் செக்ஸ் வாழ்க்கையை கவனிக்கும்படி அறிவுறுத்தப்பட்டார்கள்.

அதன்படி ஒரு வருடம் கழித்து, பெரும்பாலான நோயாளிகள் தங்கள் செக்ஸ் வாழ்க்கையில் முன்னேற்றம் உள்ளது என பதிவு செய்தனர். இந்த முன்னேற்றம் அறுவை சிகிச்சைக்கு முடிந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் தொடர்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த ஐந்து ஆண்டு காலகட்டத்தில், பெண்களில் சுமார் 52 வீதம் மற்றும் ஆண்கள் 58 சதவிகதத்தினர் திருப்தியான மற்றும் மகிழ்ச்சியான பாலியல் செயல்பாடு இருந்தது என்று பதிவு செய்திருந்தனர். இவர்களே தங்களின் எடை இழப்பு அறுவை சிகிச்சைக்கு முன்னர், முறையே, 31 சதவீதம் மற்றும் 28 சதவீதம் தான் திருப்தியடைய முடிந்தது என்று கூறி இருந்தனர்.

இதேபோல், 39 சதவிகதம் பெண்களுக்கும் மற்றும் 55 சதவிகிதம் ஆண்களும் அவர்கள் முன்பு இருந்ததை விட இந்த எடை இழப்பு அறுவை சிகிச்சைக்கு பிறகு பாலியல் ஈடுபாடு அதிகரித்துள்ளதாக கூறினார்கள்.

இந்த அறுவை சிகிச்சை விளைவாக பாலியல் திருப்தி நோயாளிகளுக்கு கிடைப்பதால் அவர்களால் மன அழுத்தத்திலிருந்தும் விடுபட முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சி முடிவுகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் ஓபிசிட்டி வீக், பத்திரிகையில் வெளியிடப்பட்டது.

]]>
weight loss, surgery, Bariatric http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/20/w600X390/young-couple-guide.jpg http://www.dinamani.com/health/fitness/2016/sep/20/எடை-குறைப்பு-சிகிச்சைக்குப்-பின்-செக்ஸ்-வாழ்க்கை-சிறக்கும்-2567848.html
2562414 மருத்துவம் ஃபிட்னஸ் சிக்ஸ் பேக்ஸ் வேண்டுமா? Saturday, September 10, 2016 03:30 PM +0530 சில இளைஞர்கள் விளையாட்டு வீரர்களைப் போல உடலை ஃபிட்டாக வைத்திருக்க  ஆசைப்படுவார்கள். இன்னும் சிலர் சினிமா நடிகர்கள் போல சிக்ஸ் பேக் வைத்துக் கொள்ள விரும்புவார்கள். அது அத்தனை எளிதான விஷயம் அல்ல. சிக்ஸ் பேக் வைத்துக் கொள்ள என்ன விதமாக பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விளக்குகிறார் பிரபல சினிமா நடிகர்களுக்கு ஜிம் ட்ரெயினரான ராஜேஷ்.

சிக்ஸ் பேக் உடல் பெற கடுமையான உடற்பயிற்சி மட்டுமின்றி அதற்கேற்ற டயட்டையும் எடுத்துக் கொள்ள வேண்டும். புரதச் சத்து அதிகம் சேர்க்க வேண்டும். முட்டை, யோகர்ட், பீன்ஸ் போன்றவை உணவில் கட்டாயம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். உடலின் மெட்டபாலிசம் சமன் நிலையில் இருக்க நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். உடல் மெலிவுடன் கூடிய  சிக்ஸ் பேக் தோற்றம் பெற அடிக்கடி சத்துள்ள சிறு சிறு உணவுகளை சாப்பிட வேண்டும். ஊட்டச் சத்து நிபுணரிடம் கலந்து ஆலோசித்து தன்னுடைய உடலுக்குத் தேவையான பிரத்யேக டயட்டை எடுத்துக் கொள்வது நலம்.

உடற்பயிற்சியைப் பொறுத்தவரை க்ரன்சஸ் செய்வது முக்கியம் தான். ஆனால் அதைவிட முக்கியம் வேறு சில பயிற்சிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும். லாங்க் ஆர்ம் க்ரன்ச், ரிவர்ஸ் க்ரன்ச் செய்வதுடன் பின் வரும் சில முக்கிய பயிற்சிகளையும் செய்ய வேண்டும். அப்போதுதான் உடலில் வயிறு, தோள் பட்டை, மார்பு போன்ற பகுதிகளில் உள்ள தசைகள் வலுவடைந்து ஃபிட்டாக மாறும். எலும்புகள் வலுவடைந்து தசைகள் இறுக்கமாகி  சிக்ஸ் பேக்ஸ் வடிவம் பெற பின்வரும் வொர்க் அவுட்டுகளைப் பின்பற்ற வேண்டும்.

1.Neck raise workouts - Back (நெக் ரைஸ் வொர்க் அவுட்ஸ்-பேக்)

கீழிருந்து மேலாக கொண்டு உடலை ஒட்டியவாறு இந்த பயிற்சியை செய்ய வேண்டும்  பார்பில்  கம்பியின் மைய பகுதியில் இரண்டு கைகளால் இருக்க பிடித்த வாறு  கீழே 1 வினாடி அளவும் மேலே 2 வினாடி அளவும் மூச்சை நன்றாக ஆடி வயிறு வாராய் இழுத்து  உடலை ஒட்டிய வாறு 20 முறைக்கு மேல் செய்ய வேண்டும்.

பலன் : கழுத்து பகுதியில் உள்ள தசை வலுவடைந்து தசைகள் கூடும் பின் முதுகு தசை பகுதி சீராக இருக்கும் .

2.  Shoulder Front raise workouts: சோல்டர் ஃபிரன்ட் ரைஸ் வொர்க்அவுட்ஸ் 

ஐந்து கிலோ எடை கொண்ட பார்பில் கம்பியுடன் இந்த பயிற்சியைத் தொடங்க வேண்டும்.இரண்டு கால்களை அகட்டி வைத்து கொண்டு  கீழிருந்து மேலாக 40 டிகிரி அளவு மார்புவரை பார்பில் கம்பியை கொண்டு வர வேண்டும் இப்படியாக  இருபது முறை மேலும் கீழும்  கொண்டு செல்ல வேண்டும்   

பலன் : முன் தோள்பட்டை நன்றாக விரிவடையும் தசைகளும் சதை திசுக்களும்  நன்றாக ஃபிட் ஆகும். எலும்புகளும் பலம் அடையும்.

3.Side raise single hand shoulder  workouts : (சைட் ரைஸ் சிங்கள் ஹண்ட் சோல்டர்  வொர்க் அவுட்ஸ் ) 

இரண்டு கால்களையும் அகட்டிய வாறு நேராக நிமிர்ந்து நின்று. வலது கையை மடித்து இடுப்பில் வைத்து கொண்டு இடது கையில் 5 கிலோ தம்பில்ஸ்சை வைத்து சிலவினாடிகள் ஹோல்ட் செய்ய வேண்டும் 

பலன் : பக்கவாட்டில் உள்ள மேல் தசை கீழ் தசையை  வலுவாக்கும். கைப்பகுதியில் உள்ள நரம்புகள் வலுவடைந்து  ரத்த ஓட்டம் அதிகரிக்கும். கை மணிக்கட்டுப் பகுதி எலும்புகள் பலம் பெறும்.

4. Shoulder side raise thai strengthening : ஷோல்டர் சைட் ரைஸ் தை ஸ்டேரென்த்தனிங்) 

வலது காலை பின் வைத்து இடது காலை முன் வைத்து இரண்டு கைகளையும் அகலமாக வைத்து  உடலை லேசாக வளைத்த வாறு  5 கிலோ தம்பில்சை இரண்டு கைகளிலும்  வைத்து அப் டவுன் என 20 முறைக்கு மேல் செய்ய வேண்டும்  

பலன் : பக்கவாட்டில் உள்ள தோல்பட்டை தசை பகுதி நன்கு விரிவடைந்து நரம்புகளும். தசைகளும் பலம் பெரும். முன் இடது கால் தசைப்பகுதி பின் தசை பகுதி முழங்கால் எலும்பின்  பலம் அதிகரிக்கும்.

5. Barbell triceps (பார் பெல் ட்ரை செப்ஸ்) 

பார்பில் கம்பியை  மார்பளவு வைத்து ஹோல்ட் செய்து  கொண்டு இரண்டு கைகளை மட்டும் முகத்திற்கு செல்லும் அளவு பின்புறமாக  கையை  மடித்து  அப் டவுன் என உங்களால் முடிந்த வரை செய்ய வேண்டும்  

பலன் : கைப்பகுதிகளில் உள்ள தசைகள் அதிகரிக்கும். நரம்பு வலுவடைந்து மற்றும்  தசை பகுதி விரிவடைந்து அழகூட்டும்.

]]>
work outs, six packs http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/10/w600X390/25.jpg http://www.dinamani.com/health/fitness/2016/sep/10/சிக்ஸ்-பேக்ஸ்-வேண்டுமா-2562414.html
2560497 மருத்துவம் ஃபிட்னஸ் சூப்பர் குட் வொர்க் அவுட்ஸ் Tuesday, September 6, 2016 04:10 PM +0530 சமீப காலமாக நான் சந்திக்கும் இளைஞர்களிடம் இருக்கும் ஒரு பிரச்னை பலவீனம். முப்பது நாப்பது வயதுக்குள் உடலில் ஏகப்பட்ட நோய்கள். தங்கள் உடல்நலனில் அக்கறை இல்லாமல் இருப்பதினால்தான் இந்த நிலை. நான் சொல்கின்ற இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து தொடர்ந்து செய்து வந்தால், உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்; எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இந்தப் பயிற்சிகளை ஆராய்ச்சியாளர் டபாடா ஒலிம்பிக் விளையாட்டு பயிற்சி வீரர்களுக்காக வடிவமைக்கப்பட்டதால் இதனை டபாடா ப்ரோட்டோகால் என்று சொல்கிறோம். விளையாட்டு வீரர்கள் மட்டுமல்லாமல் இதை அனைவரும் கற்றுக் கொள்ளலாம், என்ன ரெடியா? என்றபடி களத்தில் இறங்கினார் உடற்பயிற்சி நிபுணர் அஜித் சிகாமணி.

பயிற்சிகளை ஆரம்பிக்கும் முன் வார்ம்&அப் செய்யவேண்டும். 

20 நொடி வொர்க் அவுட் செய்து முடித்ததும், 10 நொடிகள் ஓய்வு எடுக்க வேண்டும். 
இந்த நான்கு பயிற்சியையும் செய்து முடித்த பின் நன்றாக மூச்சு வாங்கும். இதயம் படபடப்பது போலிருக்கும். அதனால் பயப்படத் தேவையில்லை. 
பயிற்சி ஆரம்பிக்க 1 1/2 மணியிலிருந்து இரண்டு மணி நேரத்துக்கு முன் உணவு சாப்பிட்டிருக்க வேண்டும். 
பயிற்சி ஆரம்பிக்க 15 வினாடிக்கு முன் 1/2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். (இடையில் எதுவும் அருந்தக் கூடாது) 
பயிற்சியை முடித்து இதயத் துடிப்பு சமன்நிலைக்கு வந்தபின், தண்ணீர் அல்லது ஜூஸ் குடிக்கலாம்.

உடல் நன்றாக வளைந்து கொடுக்கும் தன்மையில் இருந்தால் மட்டுமே இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து செய்ய முடியும். ஒவ்வொரு பயிற்சியின் இடையிலும் இரண்டு நிமிடம் இடைவெளி கொடுக்க வேண்டும். அந்த நேரம் ஆழந்த மூச்சை உள்ளே வெளியே விட்டு மூச்சுப் பயிற்சி செய்யலாம். அல்லது கொஞ்சம் தூரம் நடக்கலாம். தொடக்க நிலை பயிற்சியில் இருப்பவர்கள் இதை ஒரு சுற்று செய்தால் போதும். அடுத்த நிலையில் உள்ளவர்களால் இரண்டு தடவை செய்ய முடியும். விளையாட்டு வீரர்களால் மட்டுமே மூன்று தடவை செய்ய முடியும். 

இனி பயிற்சிகளை செய்யலாம்.

1. ஹை நீஸ்  

சமதளமான தரையில் நேராக நிற்கவும். முதுகை முடிந்தவரையில் பின்னால் சாய்க்கவும். கால் முட்டியை இடுப்புக்கு மேல் தூக்கியவாறு, நின்ற இடத்திலேயே வேகமாக ஓடுவது போல் கை கால்களை வீசவும். கால்களை தரையில் இறக்கும் போது அழுத்தமாக இறக்கக் கூடாது. முன்பாதம் படுமாறு இறக்கவும். எவ்வளவு வேகமாக செய்ய முடியுமோ செய்ய வேண்டும். முழு வேகத்துடன் இடைவெளிவிடாமல் 20 நொடி செய்யவும். அதன் பின், பத்து நொடி இடைவெளி விட்டு மீண்டும் தொடங்கவும். இப்படி நான்கு நிமிடம் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் செய்ய முடியவில்லை என்றால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு செய்யலாம்.

2. ஸ்டார் ஜம்ப்ஸ் 

முதுகுத் தண்டு நேராக இருக்கும்படி கால்கள் இரண்டையும் விரித்து நிற்கவும். கைகளை தலைக்கு மேல் உயர்த்தி நமஸ்காரம் செய்வது போல் குவித்தபடி வேகமாக குதிக்கவும். (க்ளாப் செய்வது போல்) காலை தரையில் இறக்கும் போது உடலை லகுவாக்கி கவனமாகக் கீழ் இறக்கவேண்டும். ஒரே சீராக இதைச் செய்ய வேண்டும். 20 நொடி செய்த பின், பத்து நொடி இடைவெளி விட்டு இப்படி நான்கு நிமிடம் செய்ய வேண்டும். முடியவில்லை என்றால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு செய்யலாம்.

3. குளுட் கிக்  

லேசாக உடலை முன் நகர்த்தவும். இரண்டு கைகளையும் பின்புறத்தில் படுமாறு வைக்கவும். நின்ற இடத்திலேயே ஓடுவது போல ஓடவும். இப்போது எந்தக் காலை உயர்த்தினாலும் அந்தக் காலின் கணுக்கால் பின் பாகத்தை (பட்) தொட வேண்டும். ஆனால் கால் முட்டியைத் தூக்கக் கூடாது, கால் பாதத்தை மட்டுமே உயர்த்த வேண்டும். 20 நொடி செய்த பின், பத்து நொடி இடைவெளி விட்டு இப்படி நான்கு நிமிடம் செய்ய வேண்டும். முடியவில்லை என்றால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு செய்யலாம்.

4. ஃப்ளையிங் ஸ்குவாட்ஸ்  

நேராக நிற்கவும். குதிக்க ஆரம்பிக்கவும். இப்போது காலை அகட்டிய நிலையில், கால் முட்டிகள் நெஞ்சு வரை வருமாறு குதிக்கவும். கைகளை முஷ்டியாக்கி கால்களுக்கு இடையில் வைக்கவும். தரையில் இறங்கும் போது உடலை இறுக்கமாக வைத்துக் கொள்ளக் கூடாது. உடலை லகுவாக்கித் தரையில் குதிக்க வேண்டும். 20 நொடி செய்த பின், பத்து நொடி இடைவெளி விட்டு இப்படி நான்கு நிமிடம் செய்ய வேண்டும். முடியவில்லை என்றால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு செய்யலாம்.

நல்ல உடல்நிலையில் இருப்பவர்கள் மட்டுமே இந்த நான்காவது பயிற்சியை செய்யவேண்டும்.

பலன்கள்

இதை தொடர்ந்து செய்து வந்தால் இதயம் வலுப்பெறும். நுரையீரலின் சக்தி அதிகரிக்கும். அதனால் சுவாசிக்கும் திறன் அதிகமாகும். இந்த பயிற்சிகளை முழு வீச்சில் தொடர்ந்து செய்து வர கொழுப்பு வேகமாக கரைய ஆரம்பிக்கும். உடல் மிகவும் உறுதியாகவும் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

]]>
work outs, simple exercises http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/6/w600X390/10-minute-trampoline-cardio-workout-star-jumps.jpg http://www.dinamani.com/health/fitness/2016/sep/06/சூப்பர்-குட்-வொர்க்-அவுட்ஸ்-2560497.html
2557864 மருத்துவம் ஃபிட்னஸ் சாதனைப் பெண் பி.வி.சிந்து! உமா ஷக்தி Tuesday, August 23, 2016 03:17 PM +0530 வயது 21 தான். ஆனால் அதற்குள் உலகப் புகழ்.  2016 ஆகஸ்ட் மாதம்  ரியோ-டி-ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற சாதனை பி.வி.சிந்துவுக்கு. இந்த வெற்றி, திடீர் அதிர்ஷ்டத்தில் கிடைத்தது இல்லை.  பல தடைகளைக் கடந்து நின்று வென்று தன்னை முழுமையாக நிரூபித்துள்ளார் இந்த இளம் பெண். கடந்த சில வருடங்களாக உலக அரங்கில் பேட்மின்டனில் புதிய வெளிச்சங்களை இந்திய அணி பெறத் தொடங்கியுள்ளது. சர்வதேச அரங்கத்தில், இந்தியாவுக்கு புகழாரம் தேடித் தந்துள்ளார் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகி ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்று, ஆணித்தரமாக தடம் பதித்த பி.வி. சிந்து. தன்னுடைய ஃபிட்னெஸ் ரகசியங்களை ஒரு பேட்டியில் கூறியது :

செம ஹைட்...செம ஃபிட். சிந்து நீங்க இவ்வளவு பக்கா ஃபிட்னெஸ்க்கு என்ன பண்றீங்க?

(சிரிக்கிறார்) என்னோட விளையாட்டுக்கு முதல் தகுதி ஃபிட்டா இருக்கறது தான். என்னோட ஹைட் 5.10’’ அம்மா அப்பா கொடுத்த வரம் இது. உடம்புல தெம்பு இருந்தா தான் நினைச்சதை சாதிக்க முடியும்னு என் பேரன்ட்ஸ் சொல்வாங்க. ஏன்னா அவங்க ரெண்டு பேருமே அதை சொல்றது மட்டுமில்லாம ஃபாலோ பண்ணியவங்க. என்னோட பெற்றோர், தேசிய அளவில் கைப்பந்து வீரர்களாக ஆடியவர்கள். அப்பா பி.வி.ரமணா அர்ஜூனா அவார்ட் வாங்கியவர்.  எனக்கு பேட்மின்டனில் ஆர்வம் தொடங்கிய சமயத்துல, தகுந்த பயிற்சியாளர்களிடம் அனுப்பி உற்சாகப் படுத்தினாங்க. முகமத் அலி தான் என்னோட முதல் கோச். அதுக்கப்பறம் கோபிசந்த் அகாதமில சேர்ந்துவிட்டாங்க. அதனால சின்ன வயசிலேர்ந்து என்னோட கான்சன்ட்ரேஷன் ஒரே பாதையிலே இருந்துச்சு. அதுக்கான அடிப்படை உடல் தகுதியை நான் படிப்படியா வளர்த்துக்கிட்டேன்.

தினமும் காலைல நாலு மணிக்கு எழுந்து நான் பயிற்சி எடுத்துக்கற கோபிசந்த் அகாதெமிக்கு கிளம்பிடுவேன். அது என்னோட வீடு இருக்கற செகந்த்ராபாத்லேர்ந்து கிட்டத்தட்ட 40 கிலோ மீட்டர் தொலைவில இருக்கு. என் ப்ரென்ட்ஸ் சில பேர் ஆரம்பத்துல கேட்டாங்க ஏன் இவ்ளோ தூரம் ட்ராவல் தேவையான்னு நான் சிரிச்சிட்டுப் பேசாம இருந்துடுவேன். ஆனா அந்த தூரம் தான் வெற்றிக்கும் எனக்கும் நெருக்கம் வர காரணமாவே இருந்துச்சுன்னு இப்ப புரிஞ்சுக்கிட்டாங்க. ஆறு வருஷம் இப்படி பயிற்சி. அப்பா என்னோட தீவிரமான பயிற்சியையும் பயணத்தையும் பார்த்து ஒரு முடிவெடுத்து மூன்று வருஷத்துக்கு முன்னாடி அகாடமி பக்கத்திலேயே ஒரு வீடு வாங்கிட்டார். இப்ப எனக்காக அப்பா 40 கிலோ மீட்டர் பயணம் செஞ்சு அவரோட ஆபிசுக்கு போக வேண்டி இருக்கு. என் பேரன்ட்ஸ் எனக்காக எவ்வளவோ தியாகங்கள் செஞ்சி தான் என்னோட வெற்றிக்கு உறுதுணையா இருக்காங்க. அவங்க சப்போர்ட் இல்லைன்னா என்னால ஒரு ஸ்டெப் கூட எடுத்து வைச்சிருக்க முடியாது. அடுத்து என்னோட குரு கோபிநாத். அவரோட வழிகாட்டல், கூடவே இருந்து நுணுக்கங்கள் சொல்லிக் கொடுத்ததுதான் எனக்கு பேஸ். அகாதெமில தினமும் 7.30 லேர்ந்து 9.30 வரைக்கும் பயிற்சி. அதுக்கப்பறம் காலை உணவு சாப்பிட்டுட்டு அங்கேயே கொஞ்ச நேரம் ரெஸ்ட். மறுபடியும் 11 மணிக்கு ஆரம்பிக்கற பயிற்சி ஒரு மணி வரைக்கும் நீடிக்கும். லன்ச் ப்ரேக் முடிச்சிட்டு ஈவ்னிங் 4.30 லேர்ந்து 6.30 மணி வரைக்கும் இடைவிடாத பயிற்சி.  தினமும் காலை 4 மணிக்கு அகாடமிக்குள் நுழைகிற கோபிசந்த், வீடு திரும்ப இரவு ஏழு மணி ஆகிவிடும். இந்த அர்ப்பணிப்புதான் இன்னிக்கு இந்த வெற்றியை தேடித் தந்திருக்குன்னு சொல்லலாம்.

எங்க அகாதெமில ஃபிட்னெஸ் பயிற்சிகள் எல்லாமே கடுமையா இருக்கும். ரன்னிங், ஸ்ட்ரென்த் ட்ரெயினிங், கோர் மசில்ஸ், இடுப்பு, கால் தசைகளுக்கான பயிற்சி, தோள்களுக்கான பயிற்சி, தவிர மொத்த உடலுக்கான பயிற்சி க்ரிஸ் மாஸ்டர் தருவாங்க. தவிர வெயிட் தூக்கற பயிற்சிகளும் இருக்கும். நீச்சல் பயிற்சி தினமும் செய்வேன். பேன்ட்மின்டன் டெக்னிக்ஸ் பயிற்சி நடக்கும். கட்டாயம் யோகா செய்வேன். அது மனசை ஒருமுகப்படுத்த ரொம்ப உதவியா இருக்கு. ஒவ்வொரு ஸ்ட்ரோக்கை எதிர்கொள்ளும் போது நமக்கு எதிராளியை கூர்மையா கவனிக்கணும், ஆப்போனன்ட் அடுத்து என்ன மாதிரி விளையாடுவாங்கன்னு அவங்களோட மூவ்மென்ட்டை அவதானிக்கணும், அதுக்கு மைன்ட் கால்குலேஷன் ரொம்ப முக்கியம், யோகாவால இது எனக்கு இயல்பா செய்ய முடியுது. மனசையும் டென்ஷன் வர விடாம, ரிலாக்ஸா இருக்க வைக்குது. உடற்பயிற்சி மட்டும் ஒரு விளையாட்டு வீரருக்கு முக்கியம்னு சொல்வாங்க, ஆனா என்னைப் பொறுத்த வரைக்கும் மன உறுதியும் உற்சாகமும் தெளிவும் ரொம்பவே தேவை. அதுக்கு அடிப்படை யோகா மட்டும் தான்.

ஏன் பேட்மின்டன்? வேற எவ்வளவோ துறை இருக்குதே?

முன்னாடி சொன்ன மாதிரி என் அப்பா அம்மா ரெண்டு பேரும் விளையாட்டுத் துறைல இருந்தவங்க. என்னோட சின்ன வயசிலே, அப்பா க்ரவுன்ட்ல வாலிபால் ப்ராக்டிஸ் பண்ணறப்ப, நானும் அவர் கூட போவேன். க்ரவுன்ட்ல போய் விளையாடணும்னா அவ்வளவு இஷ்டம். அந்த பெரிய பரந்த இடத்துல ஓடி விளையாடுவேன். அப்ப சும்மா விளையாட்டுக்கு பேட்மின்டன் விளையாட ஆரம்பிச்சேன். அந்த கேம் என்னை ரொம்ப கவர்ந்துடுச்சு. என் அப்பாவுக்கு என்னோட ஆர்வம் புரிந்து அதுக்கேத்த மாதிரி என்னை ட்யூன் பண்ணி பயிற்சிக்கு அனுப்பினாங்க. என்னோட முதல் குரு ஹர்வீந்தர் சிங் அதுக்கப்பறம் கோபி சார். என்னோட ஒவ்வொரு வெற்றிக்கும் அடித்தளம் போட்டவர் அவர் தான்.

விளையாட்டுத் தவிர வேற என்ன ஆர்வம் சிந்துவுக்கு?

படங்கள் பாக்கறது ரொம்ப பிடிக்கும். இந்த மாதிரி படம்னு குறிப்பிட்டு இல்லாமே எல்லா ஜாலியான படங்களும் ஆர்வமா பார்ப்பேன். வீட்ல இருக்கறப்ப என்னைச் சுத்தி எப்பவும் ம்யூசிக் இருக்கும். தங்கையோட அரட்டை அடிக்கறது ரொம்ப பிடிக்கும். ம்ம்ம்ம்...அப்பறம் நல்லா ட்ரெஸ் பண்ணிக்க பிடிக்கும். ட்ரெஸிங் எலிகென்ட்டா இருக்கணும். ஆனா இந்த ஆர்வம் எல்லாம் என்னோட விளையாட்டுக்கு அடுத்தபடி தான். ஒலிம்பிக்ல தங்கம் ஜெயிக்கணும்... உலகத் தர வரிசையில நம்பர் ஒன் பட்டத்தை வாங்கறதுதான் என்னோட ஒரே கனவு ஒரே லட்சியமா இருக்கும்.

மேட்ச் விளையாட எப்படி தயார் ஆகறீங்க?

நல்லா விளையாடணும்ங்கற எண்ணம் மட்டும் தான் மனசு முழுக்க இருக்கும். என்னோட முழுத் திறனையும் காட்டணும்னு தீவிரமா இருப்பேன். முழு கவனமும் விளையாடப் போற கணங்களை எதிர்நோக்கித் தான் இருக்கும். அதுக்கறம் களம் இறங்கிட்டேனே அது மட்டும் தான் என்னோட மூச்சு.

வெற்றி தோல்வியை எப்படி எடுத்துக்கறீங்க?

சந்தோஷமா இருக்கும். இன்னும் சிறப்பா விளையாடுனும்ங்கற தீவிரத்தையும் பொறுப்பையும் ஒவ்வொரு வெற்றியும் விதைக்குது. தோல்வி வரும் தான். ஆனா அதுல வீழ்ந்திட மாட்டேன். துவண்டு போகவும் மாட்டேன். என்ன தப்பு பண்ணேன் ஏன் முடியாம போச்சுன்னு ஆழமா யோசிப்பேன். மறுபடி மறுபடி மனசுக்குள்ள அந்த தோல்விக்கான காரணத்தை உறுபோட்டு வைச்சிட்டு அடுத்த தடவை அதைத் தவிர்த்து வெற்றி வளையத்துக்குள்ள வந்துடுவேன். வெற்றி சந்தோஷத்தை தருதுன்னா தோல்வி நிறைய கத்துக்க வைக்குது. இன்னும் ஆழமான பொறுப்புணர்ச்சியை ஏற்படுத்துது. விளையாடணும், ஜெயிக்கணும், இதுதான் என்னோட பவர்புல் மந்த்ரா..

என்ன உணவு உங்களை உறுதியா வைச்சிருக்கு? எது பிடிச்ச ஃபுட்?

பிடிச்ச ஃபுட் அப்படின்னு எதுவும் தனியா பிரிச்சு பாக்கமாட்டேன். என்னோட டயட் ஹெல்தி டயட். உணவுல நிறைய புரதம் இருக்கற மாதிரி சாப்பிடுவேன். பால் பழங்கள், முட்டி தினசரி உணவுல கட்டாயம் இருக்கும். அம்மா பண்ணித் தர ஹெல்தி ரெசிபி என்னை ஆரோக்கியமா வைச்சிருக்கு.

மறக்க முடியாத சம்பவம் எதாவது இருக்கா?

20வது உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்ற முதல் இந்திய வீராங்கனைங்கற பேர் கிடைச்சது மறக்க முடியாது. இது எனக்கு அடுத்து செல்ல வேண்டிய தூரத்தை நினைவு படுத்திட்டே இருக்கு...

இந்த இளம் வயதில் இத்தனை தெளிவாக இருப்பது ஆச்சரியம்...வாழ்த்துக்கள் சிந்து....கனவு மெய்ப்படும்!

இளம் வீரர்களுக்கு சிந்து தரும் ஹெல்த் டிப்ஸ்

அதிகாலை எழுவது ரொம்ப முக்கியம். அது புத்துணர்சி தருவதோடு மனசுல வைராக்கியத்தை தக்க வைச்சிக்க அந்த சுத்தமான காத்தும், ஒரு புது நாளோட ஆரம்பமும் நம்மளை உற்சாகப்படுத்தும்.

உங்க திறமை எதுவா இருந்தாலும் அதை நோக்கி சிங்கிள் மைன்டடா ட்ராவல் பண்ணனும். இடையில் என்ன பிரச்னை வந்தாலும் அதை கைவிட்டுடக் கூடாது.

சாப்பாடு விஷயத்துல அக்கறை எடுத்துக்கணும். தினமும் நாம சாப்பிடற உணவு தான் நமக்கு எனர்ஜி. அதனால அதை ரொம்ப கவனமா சாப்பிடறது நல்லது. ஜூஸ், சாலட், பழங்கள் நிறைய சாப்பிட்டா அதுல ஆன்டி ஆக்சிடென்ட் இருக்கும். இளநீர் குடிச்சா உடனடி சக்தி கிடைக்கும். அதிக அளவுல ஆர்கானிக் புட்ஸ் எடுத்துப்பேன். எந்த நாட்டுக்குப் போனாலும் அங்க கிடைக்கற சீசனல் ப்ரூட்ஸ் சாப்பிடுவேன். அது தான் உடம்பை மட்டும் இல்லை மூளையையும் சுறுசுறுப்பா இயங்க வைக்குது.

விளையாடறப்ப நாம தெளிவான மனநிலைல இருக்கணும். பதட்டம் கூடவே கூடாது. ஜெயிப்போமா தோற்போமாங்கற தாட்ஸ் எல்லாம் வரக் கூடாது. நல்லபடியா ஷார்ப்பா விளையாடணும், அந்த விளையாட்டோட தன்மை நம்மளை வெற்றியோட படிநிலைக்கு உயர்த்தும். இது வாழ்க்கைக்கும் பொருந்தும்.

ஜாலியா மனசை ரிலாக்ஸ்டா வைச்சிக்கப் பழகிக்கணும். இன்னிக்கும், இந்த நிமிஷமும் மறுபடியும் வரப் போறது இல்லை. அதை ஸ்பெஷலா சந்தோஷமா வைச்சிக்கறதுதான் நம்ம கையில் இருக்குன்னு என்னோட பேரன்ட்ஸ் அடிக்கடி சொல்வாங்க. அது நூறு சதவிகதம் உண்மைன்னு புரிஞ்சுக்கிட்டேன். லிவ் தி மொமன்ட் அது சொல்லா இல்லாம செயல்படுத்திப் பார்த்தோம்னா ஒவ்வொரு நிமிஷமும் உயிர்ப்போட இருக்க முடியும்.

]]>
Rio Olympics winner, P.V.Sindhu http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/23/w600X390/sindhu_650_080114072646.jpg http://www.dinamani.com/health/fitness/2016/aug/23/சாதனைப்-பெண்-பிவிசிந்து-2557864.html
3271 மருத்துவம் ஃபிட்னஸ் இளமை மாறாத ஷாருக்கான் ! மதி Wednesday, August 10, 2016 04:30 PM +0530 கிங் கான் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார். பாலிவுட்டிலிருந்து சென்னை எக்ஸ்ப்ரஸ் பிடித்து கோலிவுட் தரையிறங்கிய இந்த 50 வயது நடிகருக்கு உலகளாவிய ரசிகர் கூட்டம் உண்டு.  இவரின் ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் மற்றும் எனர்ஜி மட்டுமே அவரை அனைத்து சென்ட்ரலும் ரசிக்க வைத்துள்ளது.  எனக்குத் தெரிந்தது எல்லாம் காலையில எழுந்ததும், ஷூட்டிங் செல்ல தயாராகி, கார்ல எஃப் எம் சானல் எதையாவது கேட்டுக்கிட்டே செட்டுக்கு போறது தான். இனிமே நடிப்பு கிடையாது அப்படிங்கற நிலைமை வந்துச்சுன்னா நான் என்ன ஆவேன்னு எனக்கேத் தெரியாது. என் வேலை தான் எனக்கு உயிர் மூச்சு என்று சொல்லும் வொர்க் ஹாலிக் ஷாரூக்கின் ஹெல்த் ஸ்கேன் இங்கே....

வொர்க் அவுட் ரெகுலராக செய்பவர்.  தினமும் 100 புஷ் அப்ஸ் மற்றும் 60 புல் அப்களை செய்துமுடித்துவிடுவார். எந்த படத்துக்கு எப்படிப்பட்ட லுக் தேவையோ அதற்காக சிரத்தை எடுப்பவர். ஓம் ஷாந்தி ஓம் என்ற படத்துக்காக சிக்ஸ் பேக் வைத்தவர். 

உடற்பயிற்சியை தீவிரமாக நம்புபவர். வாரத்தில் நான்கு நாட்கள் ஆப்ஸ்க்கான‌ பயிற்சிகள் செய்தால் போதும், அதுவும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து விட்டு கடைசி ஒரு நாள் ரெஸ்ட் எடுத்தால். உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ளலாம். தினமும் ஆப்ஸ் பயிற்சி செய்தால் தசைகள் காயமடையலாம் என்று சொல்வார். ஸ்ட்ரென் த் ட்ரெயினிங் வொர்க் அவுட்ஸ், மற்றும் வெயிட் லிப்ட் செய்வது நல்லது, அது தசைகளுக்கு அடிவயிற்றுக்கும் வலுடையவைக்கும் என்று ஃபிட்னெஸ் மந்த்ரா சொல்பவர்.

டயட்டில் கோட்டை விட்டு நிறைய சாப்பிட்டு காலரிகளை அதிகரித்துக் கொண்டால் கவலை வேண்டாம், வியர்க்க விறுவிறுக்க 50 நிமிடங்கள் கார்டியோ செய்தால் அதிகர் சேர்ந்துவிட்ட‌ கொழுப்பை கரைத்துவிடலாம் என்பார்.

தினமும் 30 லிருந்து 60 நிமிடம் வரை ரன்னிங், ஜாகிங், சைக்ளிங் அல்லது ஏராபிக்ஸ் தினமும் செய்ய வேண்டும் என்று சொல்வது மட்டுமில்லாமல் ரெகுலராக கடைப்பிடிப்பவர் அவர்.

டயட் பொருத்தவரை அரிசி, ப்ரெட், மசாலா உணவு வகைகள், எண்ணெய் நெய் தின்பண்டங்கள், போன்றவற்றை சுத்தமாக தவிர்த்துவிட்டார். சிக்கன், டர்க்கி, முட்டை வெள்ளைக்கரு, பன்னீர், மீன் உணவுகள் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வார். தானியங்கள். காய்கறிகள், பழங்கள், கட்டாயம் உணவில் இருக்கும் டயட்டை எடுத்துக் கொள்வார். ஸ்வீட் சாப்பிட ஆசையாக இருந்தால், கட்டுப்படுத்திக் கொண்டு பிடித்த பழத்துண்டை சாப்பிடுவார். தினமும் இரண்டு அல்லது மூன்று லிட்டர் தண்ணீரைக் கட்டாயம் குடித்துவிடுவார். வொர்க் அவுட் முடிந்தவுடன் ப்ரோட்டீன் ட்ரிங்க் அருந்துவார். உடலின் மீது அக்கறை செலுத்துபவர்கள் கட்டாயம் சிகரெட் மற்றும் ஆல்கஹால் பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வார். சிகரெட்டை வெகுவாக குறைத்துவிட்டார்.

கால் முட்டியில் சர்ஜரி, முதுகுத் தண்டில் காயம், தோலில் பிரச்னை என்று தொடர்ந்து விபத்துகளில் சிக்கினாலும் மனம் தளராமல் சரி செய்து கொண்டு மீண்டும் அதே உற்சாகத்துடன் களத்தில் இறங்குவார். சென்னை எக்ஸ்ப்ரஸ் ஷூட்டிங் கடைசி ஷெட்யூலின் போது தோள் பட்டை சிகிச்சை எடுத்து முடித்து டாக்டர்கள் பத்து நாள் பெட் ரெஸ்ட் எடுக்கவேண்டும் என்று சொன்னதையும் மீறி தீபிகாவுடன் க்ளைமாக்ஸ் டான்ஸ் ஆடி, டப்பிங் பேசி என தினமும் இரவு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கியவர்.

மனதை லேசாக இசை மற்றும் குடும்பத்துடன் செலவழிக்கும் ஒவ்வொரு நிமிடமும் என்கிறார்.  சர்ச்சைகளில் சிக்கினாலும் கலங்காதவர். வாடகைத் தாய் மூலம் தன் மூன்றாவது மகனை பெற்ற போது எழுந்த சர்ச்சைகளுக்கு தெளிவாக பதில் சொல்லியவர்.

செய்யும் தொழிலுக்கு உரிய மரியாதையை தந்துவிடுங்கள், இரவு பகல் பார்க்காமல் எடுத்துக் கொண்ட வேலைக்கு நூறு சதவிகிதம் நேர்மையாக உழைத்தால் யாருமே சூப்பர் ஸ்டார் தான் என்று தன்னடகத்துடன் சொல்கிறார் இந்த நட்சத்திர நடிகர்.

]]>
Bollywood actor, sharuk khan http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/10/w600X390/Bollywood-Actor-Shah-Rukh-Khan1.jpg http://www.dinamani.com/health/fitness/2016/aug/10/இளமை-மாறாத-ஷாருக்கான்--3271.html