Dinamani - இளையோர் நலம் - http://www.dinamani.com/health/youth-health/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2964838 மருத்துவம் இளையோர் நலம் மாணவர்களே! படித்தது எல்லாம் மறந்து போகிறதா? ஸ்மார்ட்போன் கதிர்வீச்சு உங்களுடைய நினைவாற்றலை பாதிக்கலாம் உமா Saturday, July 21, 2018 02:51 PM +0530  

மொபைல் ஃபோன்களிலிருந்து வரும் கதிர்வீச்சு தொடர்ந்து அதைப் பயன்படுத்தி வரும் இளம் வயதினரிடையே சில மோசமான பாதிப்புக்களை உருவாக்கும் எனவும், மூளை மண்டலங்களின் நினைவாற்றல் திறனை சித்தக்க வல்லது என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் உடல்நலம் பற்றிய சஞ்சிகையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில் சுவிட்சர்லாந்தில் உள்ள கிட்டத்தட்ட 700 இளம் பருவத்தினர் பங்குபெற்றனர்.
 
ஸ்விஸ் ட்ராபிகல் மற்றும் பப்ளிக் ஹெல்த் இன்ஸ்டிடியூட் (ஸ்விஸ் டிபிஹெச்) விஞ்ஞானிகள், வானொலி அலைவரிசைக்குரிய மின்காந்த புலங்கள் (RF-EMF) வயர்லெஸ் தொடர்பு சாதனங்களின் பயன்பாட்டிற்கும் இளம் பருவத்தினரின் நினைவாற்றல் திறனுக்கு உள்ள தொடர்பைக் கண்டனர்.

இந்த ஆய்வில், ஒரு வருடத்திற்கும் மேலாக மொபைல் ஃபோன் பயன்படுத்தினால், இளம் பருவத்தினரின் ஒட்டுமொத்த RF-EMF மூளை செயல்திறன் வளர்ச்சிக்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று எடுத்துக் கூடிய முந்தைய ஆய்வின் (2015) முடிவுகளை உறுதிப்படுத்துகிறது.

Figural memory வலது மூளை அரைக்கோளத்தில் அமைந்துள்ளது மற்றும் RF-EMF உடன் தொடர்பில் இருப்பது. எனவே இளைஞர்கள் தங்களது வலது காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசுவது நல்லது. வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்களின் விரைவான பரிணாம வளர்ச்சி (ICT) நம் அன்றாட வாழ்வில் கதிர்வீச்சு அதிர்வெண் மின்காந்த புலங்களின் (RF-EMF) வெளிப்பாட்டினை அதிகரிக்கச் செய்யும். RF-EMF தொடர்பான சாத்தியமான சுகாதார விளைவுகளை அடையாளம் காண பல ஆய்வுகள் நடத்தப்பட்டன, ஆயினும் முடிவுகள் முடிவுக்கு வரவில்லை. இந்த RF-EMF மற்றும் ஸ்மார்ட்போன் தொடர்பான விளைவுகளைப் பற்றி தனது ஆய்வில் மார்டின் ரூஸ்லி விரிவாக கூறினார், இவர் சுவிஸ் TPH உள்ள சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார தலைவர் ஆவார்.

வயர்லெஸ் தகவல் தொடர்பு பயன்பாடு, மொபைல் போனின் மற்ற அம்சங்களான, குறுஞ்செய்திகளை செய்திகளை அனுப்புவது, விளையாட அல்லது இணையத்தில் உலவுதல் போன்ற செயல்களால் மூளைக்கு பிரச்னையில்லை. சில சமயம் இவை நன்மையும் செய்கின்றன. எனவே மூளை RF-EMF வெளிப்பாடு மற்றும் நினைவக செயல்திறன் வளர்ச்சியுடன் தொடர்புடையதாக இல்லை.

'இந்த ஆய்வின் தனித்துவமான அம்சம் மொபைல் ஃபோன் பயன்படுத்தும் பயனர்களிடமிருந்து நேரடியாகச் சேகரிக்கப்பட்ட தரவுகள் ஆகும் என்று ரூஸ்லி தெரிவித்தார். மற்ற காரணிகளை நிரூபிக்க இன்னும் கூடுதலான ஆய்வு தேவை என்று அவர் வலியுறுத்தினார்.

'உதாரணமாக, மொபைல் போன் பயன்பாட்டினால் பதின் வயதுப் சிறுமிகள் விரைவில் பூப்படைகிறார்கள். இது போன்ற விஷயங்களை மேலும் ஆய்வு செய்து முடிவுகளைத் துல்லியமாக கூற வேண்டியிருக்கிறது’ என்று ரூஸ்லி கூறினார்.

RF-EMF மூளை செயல்முறைகள் எவ்வாறு பாதிக்கலாம் அல்லது நீண்டகாலத்தில் எமது கண்டுபிடிப்புகள் எப்படி இருக்கும் என்பதை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் ரூஸ்லி கூறினார்.

மூளைக்கு அபாயம் தருபவை ஹெட்ஃபோன்களை அதிக சத்தத்தில் வைத்துக் கேட்பது, சிக்னல் குறைவாக இருக்கும் சமயங்களில் மொபைல் பயன்படுத்துவம் கூட. காரணம் கதிர் வீச்சின் பாதிப்பு அச்சமயங்களில் அதிகமாக இருக்கும். மேலும் ரிங் போகும் போதும் போனை காதிலேயே வைத்திருக்க கூடாது. ஸ்பீக்கர் மோடில் அல்லது சற்றுத் தொலைவில் வைத்திருந்து எதிர்முனையில் எடுக்கப்பட்டவுடன் காதில் வைக்க வேண்டும். ஒரு மொபைல் போனிலிருந்து இன்னொரு ஃபோனுக்கு ரிங் போகும் போது கதிர்வீச்சு 14 மடங்கு அதிகமாக இருக்கும் என்கிறது ஆய்வு.

செல்ஃபோன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான புற்றுநோய் கட்டிகள் உருவாகுவதாக ஆய்வாளர்கள் முந்தைய ஆராய்ச்சியில் விளக்கியிருந்தனர். Gliomas, Acoustic neuormaspe ஆகிய புற்றுநோய் கட்டிகள் உருவாகலாம். 24 மணி நேரத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் மொபைல் ஃபோன் பயன்படுத்தினால் பலவிதமான நோய்கள் வர காரணமாகிவிடும். 

மேலும் போனைப் பிடித்திருக்கும் போதும் கவனமாக இருக்க வேண்டும். முனைகளைப் பிடித்து பேசுதல் நலம். பேக் பேனலை அதாவது பின் பக்கத்தை மூடிக் கொண்டு பேசக் கூடாது. காரணம் மொபைல் போன்களின் இண்டர்னல் ஆண்டெனா பின்பகுதியில் தான் இருக்கும். மொபைல் ஃபோனில் வைப்ரேஷன் மோடில் வைப்பதையும் தவிர்க்க வேண்டும். உறங்கும் போது போனை தலையணைக்கு அடியிலோ அல்லது அருகிலேயே வைத்து படுக்கக் கூடாது. 

தகவல் தொழில்நுட்ப உலகில் செல்ஃபோன் இல்லாமல் இருக்கவும் முடியாது. எனவே கவனமாக அது தேவைப்படும் போது மட்டும், தேவைப்படும் அளவிற்கு மட்டும் பயன்படுத்தினால் நல்லது. குழந்தைகள் இளம் வயதிலேயே பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க, அதை அவர்களிடம் கொடுப்பதை தவிர்த்துவிடுதல் நலம்.
 

]]>
mobile phone, smart phone, cell phone, செல்ஃபோன், மொபைல் போன், ஸ்மார்ட்போன் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/21/w600X390/3DD1CBA800000578-0-image-a-61_1488329127591.jpg http://www.dinamani.com/health/youth-health/2018/jul/21/smartphone-radiation-may-affect-memory-in-adolescents-study-2964838.html
2938823 மருத்துவம் இளையோர் நலம் ஆணுறை தெரியும், பெண்ணுறை அறிவீர்களா? மாலதி சந்திரசேகரன் Wednesday, June 13, 2018 11:17 AM +0530
ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும், திருமணம் என்கிற பந்தம் முடிந்த பிறகு, வீட்டில் உள்ளவர்கள் அடுத்த நல்ல சமாச்சாரத்தைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், இன்றைய கால கட்டத்தில், இளவட்டங்கள், பெரும்பாலும், குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளி போடத்தான் விரும்புகிறார்கள். இன்னும் சில வருடங்கள் ஜாலியாக இருந்து விட்டு பிறகு அதைப் பற்றி யோசிக்கலாம் என்பதுதான் அவர்களின் எண்ணமாக இருந்து வருகிறது. 

பிள்ளைப் பேற்றினைத் தள்ளிப் போட புதுமணத் தம்பதியினர் பல கருத்தடை முறைகளை பின்பற்றி வருகிறார்கள். அதில் ஒரு வகை கர்ப்பத்தடை மாத்திரைகள். சில பெண்கள்,  மருத்துவரின் அறிவுரையோடு மாத்திரையை விழுங்குகிறார்கள். ஆனால், பிள்ளை  பெற்றுக் கொள்ள நினைக்கும் போது, இத்தனை நாட்கள் சாப்பிட்ட மாத்திரைகள் ஏதேனும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுமோ? அதனால், பிறக்கும் குழந்தை ஊனத்துடன் பிறக்குமோ? என்கிற பயம் தொற்றிக் கொண்டு விடுகிறது. அப்போது மருத்துவர் எவ்வளவு தேற்றினாலும் அத்தம்பதியினர் திருப்தி அடைவது இல்லை.

அதனால் கர்ப்பத்தைத் தள்ளிப் போட  ஆரோக்கியத்தைக் கெடுக்காத வண்ணம் ஆண்கள், உடலுறவின் போது, ஆணுறையை அணிந்து கொள்கிறார்கள். இதன் மூலம், முழு அளவு திருப்தி உண்டாவதில்லை என்று பல ஆண்கள்  கூறி வந்தாலும், பெண், கர்ப்பம் தரிப்பது தவிர்க்கப்படுகிறது. அதிலும் சில சமயங்களில், கவனக் குறைவால், எதிர்பார்க்கும் பலன் அதாவது கர்ப்பத்தடை சரியாக அமைவதில்லை என்கிற குறைபாடும் உண்டாகிறது. அதனால், ஆண்கள் ஆணுறையைத் தவிர்க்க எண்ணம் கொள்கிறார்கள்.

ஆண்களின் இந்தப் பிரச்னையை போக்க, பெண்ணுறைகள் சந்தைக்கு வந்து விட்டன. அதாவது, ஆணுக்குப்  பதில் பெண்ணானவள் தன்னுடைய உறுப்பில் உறையைப் பயன்படுத்துவதுதான். மருத்துவக் கண்ணோட்டத்தில், ஆணுறையை விட பெண்ணுறை கூடுதல் பலனை அளிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கருத்தடைச் சாதனம், பால்வினை நோய்கள்  பரவாமல் பாதுகாப்பதுடன், விந்தணுக்கள், கருமுட்டையை அடைந்து கருவுறாமல் காக்கிறது.

பாலியூரத்தீன் எனப்படும் மெல்லிய பிளாஸ்டிக்கால் பெண்ணுறைகள் தயார் செய்யப்படுகின்றன. இவற்றை பேக்கிங்கிலிருந்து வெளியே எடுக்கும் போது கூரான பொருட்களைக் கொண்டு வெளியே எடுக்கக் கூடாது. அப்படி எடுத்தால், பெண்ணுறை சேதம் அடைந்துவிடும். பின்பு எதிர்பார்க்கும் பலனைத் தராது. பொறுமையைக் கையாள வேண்டும்.

கடையிலிருந்து வாங்கும் போது, பொருள் காலாவதியாகும் தேதியைப் பார்த்து வாங்க வேண்டும். இவற்றை சரியான முறையில் பயன்படுத்தும் பொழுது, 95% பலன் தருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். முக்கியமாக இந்தக் கருத்தடை சாதனத்தினை மருத்துவரின் ஆலோசனை அல்லது பரிந்துரை பெறாமலே பயன் படுத்தலாம் என்பதுதான் ப்ளஸ் பாயிண்ட். மேலும் தேவையான சமயத்தில் மட்டும் உபயோகப் படுத்தினால் போதும். ஆணுறை போல் ஆரம்ப நிலையிலிருந்தே உபயோகிக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதனால் பக்க விளைவுகள் எதுவும் உண்டாகாது.

இதை சரியான முறையில் எப்படி  பயன்படுத்துவது என்பதைப் பார்ப்போம். இந்த சாதனம் ஒரு சிறிய குழல் போன்ற பை போன்று  தோற்றம் அளிக்கும். இரு முனைகளிலும், நெகிழ்தலான வளையங்கள் காணப்படும். மூடிய முனையை உடல் உறுப்புக்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆழத்தில் பொருத்திக் கொள்ள வேண்டும். திறந்த முனை உறுப்பின் வெளி பாகத்தை முழுவதுமாக கவர் செய்து விடும். ஆண்  பெண்ணின் தேவை பூர்த்தி ஆனவுடன், வெளிப்புறம் இருக்கும் வளையத்தை சிறிது முறுக்கினாற்போல் வெளியே எடுக்க வேண்டும்.

அழகைப் பராமரிக்கவோ அல்லது கர்ப்பத்தைத் தள்ளிப் போடவோ தெரியாது. அனேக புதுமணத் தம்பதிகள் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் எதனாலோ புரியவில்லை. அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும் போது அந்த சௌபாக்கியம் பலருக்கு அமைவதில்லை. பிறகு ஜோசியரைப் பார்ப்பதும் கோயில் கோயிலாக வேண்டுதலைச் செலுத்தியும் வருகிறார்கள். மனச் சுமை, பண விரயம், நேர விரயம் என பலதும் உண்டாகிறது. 

உடலில் உண்டான சில குறைபாடுகளால் கர்ப்பம் தரிப்பது தள்ளிப் போகலாம். ஆனால் வலிய நாமே வம்பினை விலைக்கு வாங்குவானேன்? எது எது காலா காலத்தில் நடக்க வேண்டுமோ அதை இயற்கையின் வழியிலேயே விட்டுவிடுவதுதான் நல்லது. பெண்ணுறையைப் பற்றி கூறிவிட்டு கூடவே உபதேசமா? என்று எண்ண வேண்டாம். பக்க விளைவுகள் இல்லாமல் பெண்கள் பாதுகாப்பான முறைகளை மேற்கொள்ளவே இந்தக் கட்டுரை. ஆரோக்கியம் பேணுங்கள். ஆனந்த  வாழ்வினை அனுபவியுங்கள்.

]]>
ladies condem, women condem, condem, ஆணுறை, பெண்ணுறை, கர்ப்பத்தடை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/13/w600X390/couple_2.jpg http://www.dinamani.com/health/youth-health/2018/jun/13/ஆணுறை-தெரியும்-பெண்ணுறை-அறிவீர்களா-2938823.html
2896790 மருத்துவம் இளையோர் நலம் லேப் டாப்புக்கு நோ சொல்லுங்கள் ஆண்களே! Monday, April 9, 2018 04:33 PM +0530  

மடிக் கணினி என்பது நம் வாழ்வுடன் ஒன்று கலந்த ஒன்றாகிவிட்டது. இணையத்தில் ஒரு கவிதை எழுதவும், ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை போடுவதும் என லேப் டாப் அனைவருக்கும் அத்யாவசியப் பொருளாகிவிட்டது. பேப்பர் படிப்பது முதல் பொருட்கள் வாங்குவது வரை எல்லாமே இணையத்தின் தயவில்தான் என்று வாழ்க்கை சிலருக்கு சுருங்கிப் போய்விட்டது. இந்த சிலர் பலராகிக் கொண்டிருப்பது முன்னேற்றமா வீழ்ச்சியா என ஒரு பக்கம் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த லேப்டாப்பால் ஏற்படும் உடல்ரீதியான பிரச்னைகள் பல. அதில் குறிப்பிடத்தக்கது அதனை மடியில் வைத்து வேலை பார்ப்பதால் விந்தணு குறைபாடு ஏற்படும் என ஆய்வு முடிவுகளில் கூறப்படுகிறது.

ஆண்கள் சிலர் வீட்டுக்கு வந்தும் அலுவலக வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். கட்டிலில் அமர்ந்து கொண்டு மடியில் இந்த லேப்டாப்பை வைத்து வேலை செய்து கொண்டிருப்பார்கள். இப்படி செய்வதால் அவர்களுடைய விந்தணுக்கள் அவர்களுக்கே தெரியாமல் பாதிப்படைந்து கொண்டிருக்கிறது என்று தொடர் ஆராய்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் தெரிவித்து வருகின்றன.

ஆண்களைப் பொருத்தவரை விரைகளின் வெப்ப நிலை இயல்பைவிட அதிகரித்தால் விந்தணு உற்பத்தி பாதிக்கப்படும். நீண்ட நேரம் லேப் டாப் பயன்படுத்தும் போது கூலம் பேட்களை பயன்படுத்தியிருந்தாலும் கூட, அதில் உருவாகும் வெப்பம் உடலுக்குள் ஊடுருவுகிறது. அது விரைகளின் வெப்பநிலையை அதிகரித்து விந்தணு உற்பத்தியை பாதிக்கிறது. திருமணம் முடிந்து குழந்தைப் பேறுக்காக நீங்கள் காத்திருக்கிறீர்கள் எனில் இது குறித்த விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது.

லேப் டாப் டேபிள் அல்லது ஒரு தலையணைக்கு மேல் வைத்து பயன்படுத்துவது நல்லது. உடலை விட்டு சற்று தள்ளி இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக உங்கள் இடைப்பகுதிக்கு அருகில் வைத்திருக்க வேண்டாம். 

புகைப்படிப்பது, சத்தற்ற உணவுகளை உட்கொள்வது, இரவில் உறக்கமின்மை, செல்போனை பேண்ட் பாக்கெட்டில் வைத்திருப்பது, நீண்ட தூரம் பைக்கில் பயணம் செய்வது, வெப்பான பருவ நிலையில் இறுக்கமான ஜீன்ஸ் போன்ற உடைகளை அணிவது, சமையல் வேலை செய்யும் போது நீண்ட நேரம் வெப்பத்தில் இருப்பது போன்றவை விந்தணு குறைப்பாடுகள் ஏற்படக் கூடிய பிற காரணங்கள் எனலாம்.

]]>
Infertility, ஆண், men, sperms, மடிக் கணினி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/9/w600X390/laptop.jpg http://www.dinamani.com/health/youth-health/2018/apr/09/using-a-laptop-make-men-infertile-2896790.html
2885608 மருத்துவம் இளையோர் நலம் அலட்சியம் வேண்டாம்! இது உங்கள் வாழ்க்கை சம்பந்தப்பட்டது! (ஆண்களுக்கு மட்டும்) ராம் Thursday, March 22, 2018 04:30 PM +0530  

ஹாலிவுட் இயக்குநர் ஆல்போன்ஸோ க்யூரன் இயக்கிய சில்ரன் ஆஃப் மென் (Children of Men (2006) என்ற திரைப்படத்தை நீங்கள் பார்ததால் நிச்சயம் லேசான பயம் ஏற்படும். காரணம் 2027-ம் ஆண்டில் நடப்பதாக எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் திடீரென்று இனப்பெருக்கம் இல்லாமலாகி குழந்தைகள் பிறப்பது நின்றுவிட்டால் உலகம் என்னவாகும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. தற்போது உலக நாடுகளில் பலவற்றில் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துக் கொண்டு வருகிறது என்ற செய்தியை படிக்கும் போது அந்தப் படம் உண்மையாகிவிடுமோ என்று கூடத் தோன்றுகிறது. இது தொடர்ந்தால், மனித இனத்தின் அடையாளமே அழிந்து போய்விடலாம் என்று பல ஆய்வறிக்கைகளின் முடிவுகள் எச்சரிக்கின்றன. 

ஒரு மில்லிலிட்டர் விந்தில் 1.5 முதல் 3.9 மில்லியன் அளவிலான விந்தணுக்களின் எண்ணிக்கை இருப்பது இயல்பானது என்கிறது உலக சுகாதார நிறுவனம். தந்தையாக விரும்பும் ஆண்கள் இரவு நேரத்தில் சீக்கிரம் படுக்கைக்குச் சென்றால் அவர்களின் விந்தணுக்கள் ஆரோக்கியமாக இருக்கும் என்கிறது ஆண்களுக்கான பிரத்யேக ஆராய்ச்சி.

மேற்கொண்டு இந்த ஆய்வு தெரிவிப்பது என்னவெனில், ஆண்களுக்கு இரவு 8 மணியிலிருந்து 10 மணிக்குள் விந்தணுக்களின் செயல்பாடு துரிதமாக இருக்கும், அதாவது விந்தணுக்கள் கருமுட்டையுடன் வேகமாக இணைந்து கருவை உருவாக்க ஏதுவான தன்மையில் இருக்கும்.

ஆனால் நள்ளிரவு தாண்டி தூங்கச் செல்லும் ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையில் குறைந்தும், வலுவிழந்தும் போகும் என்கிறது அந்த ஆய்வு. 

ஆறு மணி நேரத்துக்கும் அதற்கு குறைவாகவும் தூங்கும் ஆண்களின் நிலைமையும் விடிந்தும் அதிக நேரம் படுக்கையில் இருப்போர்களின் நிலைமையும் இதைவிட மோசம். அவர்களின் விந்தணுக்கள் விரைவில் இறந்துவிடுமாம்.

 இரவு தாமதமாக படுக்கைக்குச் செல்வது, உடலுக்குத் தேவையான ஓய்வை தர மறுப்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் ஆண்களின் விந்தணுக்களில் குறைபாடுகள் ஏற்படும். 

காரணம் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு அமைப்பிலிருந்து உருவாகும் ஒருவகை புரதம் விந்தணுக்களுக்கு எதிராக செயல்பட்டு ஆரோக்கியமான விந்தணுக்களை அழித்துவிடும் என்கிறார்கள் சீனாவில் உள்ள ஹார்பின் மெடிக்கல் யூனிவர்சிட்டியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். இந்த ஆய்வறிக்கையை டெய்லி மெயிலில் வெளியிட்டுள்ளார்கள்.

இதற்கு முந்தைய ஆய்வில், ஆறு மணி நேரம் மட்டும் தூங்கும் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை, எட்டு மணி நேரம் நன்றாக தூங்கும் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை விட குறைவாக இருந்தது என்று கண்டறிந்தனர்.

இந்த ஆய்வின் முடிவில், தினசரி 6 மணி நேரத்திற்கு குறைவாக உறங்குபவர்களின் இனப்பெருக்க திறன் 31 சதவிகிதம் குறைய வாய்ப்பு இருக்கிறது. 

மெடிக்கல் சயின்ஸ் மானிட்டர் என்ற பத்திரிகையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. ஆய்வுக் குழுவினர் இதற்காக 981 ஆண்களை தேர்வு செய்தனர். அவர்களில் சிலரை தினமும் 8 மணியிலிருந்து பத்தி மணிக்குள் தூங்கிவிடும்படியும், சிலரை நள்ளிரவில் தூங்கும்படியும், இன்னும் சிலரை நள்ளிரவுக்குப் பிறகு தூங்கும்படியும் அறிவுறுத்தினார்கள். அவர்களின் அலாரத்தை ஏழிலிருந்து எட்டு மணி நேரத்துக்கும், சிலரை ஆறு மணி நேரத்துக்கும் இன்னும் சிலரை ஒன்பது மணி நேரம் கழித்தும் அடிக்கும்படியாக வைக்கச் சொன்னார்கள். ஒரு ஆணின் விந்துவில் 5 முதல் 15 கோடி வரை விந்தணுக்கள் இருந்தால் மட்டுமே அவை வெளிப்பட்ட உடனே பெண்ணின் கருப்பையை நோக்கி நீந்த ஆரம்பிக்கின்றன. பல நேரங்களில் ஒற்றை விந்தணு மட்டுமே பெண்ணின் கருப்பையை சென்றடையும். குறைவான தூக்கமும் சரியான உணவு பழக்கமும் இல்லாதவர்களுக்கு விந்தணு எண்ணிக்கை குறைந்துவருகிறது. எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதற்கும், கருவூட்டும், கருத்தரிக்கும் திறனுக்கும் தொடர்பு இருக்கிறது. ஆணோ, பெண்ணோ தினசரி ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்கவில்லை என்றால், அது இனப்பெருக்கத்தை நேரிடையாக பாதிக்கும். குறிப்பிட்ட சில நாள்கள் கழித்து அவர்களின் விந்து எண்ணிக்கை, வடிவம் மற்றும் இயக்கம் ஆகியவற்றை ஆராய்ந்த பிறகுதான் மேற்சொன்ன ஆய்வு முடிவுக்கு வந்தனர்.

உறக்கத்தைத் தவிர உணவும் இதில் முக்கிய பங்காற்றுகிறது. ஆண்களின் விந்துக்களின் எண்ணிக்கையானது ஒருவர் உட்கொள்ளும் உணவுடனும் தொடர்புடையது. மனித உடலின் அத்தனை செயல்பாடுகளுக்கும் அடிப்படைத் தேவை உணவுதான். தினமும் ஒருவர் உட்கொள்ளும் உணவில் கொழுப்புச் சத்து அதிகம் இருந்தால், விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும் என்கிறது இன்னொரு ஆய்வு. 

அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் 99 ஆண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளையும், ஜன்க் புட்ஸ் என்று அழைக்கப்படும் குப்பை உணவுகளை அதிகம் சாப்பிட்டு வருவோர்களின் விந்தணுக்களின் தரம் மோசமாக இருந்தது எனக் கண்டறியப்பட்டது.  மீன் மற்றும் காய்கறி எண்ணெய்களில் ஒமேகா-3 அதிக அளவில் உள்ளது. இந்த ஆய்வின்படி, கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை உட்கொள்பவர்களின் விந்தணுக்களின் தரம் 43 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது. ஒமேகா-3 அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடுபவர்களின் விந்தணுக்கள் அதிக தரமுள்ளதாக இருக்கிறது.

மேலும் விந்தணு குறைப்பாட்டுக்கு இன்னொரு முக்கிய காரணம் ஒருவரது பழக்க வழக்கங்கள். ஷிப்ட் முறை வேலைகள், மன அழுத்தத்தால் உறக்கமின்மை, பசியின்மை அல்லது நொறுக்குத் தீனியை அதிகம் உண்ணுவது, உடல் உழைப்பு இல்லாதது என பல தவறான வாழ்க்கை முறைகளை கடைப்பிடிப்பவர்கள் உடனடியாக அதனை மாற்றிக் கொள்ளவில்லை எனில் அவர்கள் சந்ததி இல்லாமல் போக அதிக வாய்ப்பு ஏற்படும்.

இந்த பிரச்னையிலிருந்து மீள்வது எப்படி?

  • மீன் உள்ளிட்ட ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலங்கள் அதிகமுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். 
  • ஜீன்ஸ், டைட் ஷார்ட்ஸ் போன்ற அதிக இறுக்கமான ஆடைகளை அணியக்கூடும். 
  • பாலியல் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கவும்.
  • இனப் பெருக்கத்திற்கும் ஆழ்ந்த உறக்கம் அவசியமானது.
  • குடி போதை பழக்கங்கள் இருந்தால் நிறுத்திவிட வேண்டும்.
  • கொதிக்கும்படியான சூடு நீரில் குளிக்கவேண்டாம்.
  • தினமும் வாக்கிங், உடற்பயிற்சி அல்லது யோகா செய்ய வேண்டும்
]]>
ஆண்கள் , Fertility, sperm, men, child birth, விந்தணு, குழந்தையின்மை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/22/w600X390/man-looking-depressed-with-girlfriend.jpg http://www.dinamani.com/health/youth-health/2018/mar/22/fertility-issues-in-men-how-to-increase-sperm-count-2885608.html
2876794 மருத்துவம் இளையோர் நலம் குளிக்கப் போகிறீர்களா? ஒரு நிமிடம்! வெறும் குளியல் சமாசாரம்தானே என்று அலட்சியம் காட்டாமல் முழுவதும் படித்துவிடுங்கள்!  மாலதி சந்திரசேகரன் Thursday, March 8, 2018 11:06 AM +0530
 
கூழானாலும் குளித்துக் குடி என்பது ஆன்றோர் வாக்கு. உண்மை. குளிப்பதினால் உடல் மட்டும் சுத்தமாகிறது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. மேனியில் தண்ணீர் பட்டவுடன் உடலுடன் சேர்ந்து, உள்ளமும் சுத்தமாகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்து இருக்கிறார்கள். 

சிலருக்கு, குளியலறைக்குச் சென்றதும்தான் பாட்டு வரும். பக்கெட்டிலிருந்து தண்ணீரை மொண்டு மொண்டு விட்டுக் கொண்டோ, பாத் டப்பிலோ அல்லது ஷவரின் கீழேயோ நின்று கொண்டு, பாடிக் கொண்டே மணிக்கணக்கில் நேரம் போவது கூடத் தெரியாமல் குளித்தபடி பாத்ரூமையே ஒரு வழி பண்ணிவிட்டுத்தான் வெளியே வருவார்கள். நிறைய நேரம் குளிப்பதால், உடலுக்கும், நீர்வளத்திற்கும்  ஏற்படும் சில பிரச்சினைகளும், அது மட்டுமல்லாது குளியலறை சுகாதாரக்கேடுகள் என்னென்ன என்பதையும் சற்றே பார்ப்போம். 

ஒரு நாளைக்கு எட்டு நிமிடங்கள் குளிப்பதாக வைத்துக் கொள்வோம். அப்பொழுது, வருடத்திற்கு சுமார் 48 மணி நேரம் குளிப்பதற்காக நேரம் எடுத்துக் கொள்கிறீர்கள். அந்த நேரத்தைச் சுருக்கி, ஒரு நாளைக்கு நான்கு நிமிடங்கள் குளியலுக்காகச் செலவழித்தால், வருடத்திற்கு சுமார் 24 மணி நேரம்தான் குளியலுக்காக அவகாசம் ஒதுக்குகிறீர்கள். 

தண்ணீர் செலவழிவதும் கணிசமாகக் குறைகிறது. மோட்டார் போட்டு  அதனால் கரண்ட் பில் ஏறுவதும் குறைகிறது. தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாகவே இருக்கும் நம் நாட்டில், தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

சிலருக்கு, ஒருமுறை சோப்பு போட்டுக் குளித்தால் திருப்தி உண்டாகாது. இரண்டு முறை, மூன்று முறை சோப்பைப் போட்டு, தேய் தேயென்று தேய்த்துக் குளித்தால் தான் நிறைவு உண்டாகும். A. A. D. என்று கூறப்படும் அமெரிக்கன் அசோசியேஷன் ஆஃப் டெர்மட்டாலஜி மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா? அதிகமாக சோப்பை உபயோகித்தால், நம் சருமத்தினை பாதுகாக்கும் நல்ல பாக்டீரியாக்கள் அழிந்து விடுகின்றன என்றும் அதனால் சருமம் வறண்டு, சிவந்து, சொறி ஏற்பட வாய்ப்பு உண்டாகிறது என்கிறார்கள் அந்த ஆய்வாளர்கள். 

தலைக்குக் குளிக்கும் போது, முதலில் தலைக்கு ஷாம்பூவை போட்டுக்கொண்டு, உடம்பெல்லாம் சோப்பு தேய்த்த பின்தான் தலையை அலசும் பழக்கம் பொதுவாக உள்ளது. அது தவறான பழக்கம். தலையின் சருமப் பகுதியில் ஷாம்பூவில் இருக்கும் ரசாயனம் வேர்க்கால்களில் இறங்கி சருமத்தில் பாதிப்பினை உண்டாக்கிவிடும். ஷாம்பூ தடவிய முடியை அலசி விட்டே உடலுக்கு சோப்பு போட வேண்டும். இல்லாவிட்டால் கடைசியாக தலைக்கு ஷாம்பூ குளியல் எடுத்துக் கொள்ளலாம். 

சில இளம் பெண்கள், தலைக்குக் குளித்தபின், விளம்பரங்களில் வரும் ஆரணங்குகளைப் போல், தேங்காய்ப்பூ துவாலையை தலையில் சுற்றிக்கொள்ளும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். தேங்காய்ப்பூ டவலை (டர்க்கி டவல்) தலையிலிருந்து அவிழ்க்கும் பொழுது, முடி அதிக அளவில் உதிர்ந்து விடுவதோடு, வேர்க்கால்களுடன் கழன்று விடுவதற்கும் வாய்ப்பு உண்டாகிறது. 

தலை, உடல் துடைத்துக் கொள்ளும் துண்டுகளை பாத்ரூமிலேயே வைத்துக் கொள்ளும் வசதி இருக்கும். அவைகளை அங்கேயே வைப்பதால், பாக்டீரியாக்கள் பெருகி, தொற்று உண்டாக அதிகளவில் வாய்ப்புகள் உள்ளன. ஆகையால், துண்டுகள், உடம்பு தேய்த்துக் கொள்ளும் ஸ்பான்ஞ் போன்றவைகளை பாத்ரூமில் வைப்பதைத் தவிர்த்தல் வேண்டும். 

தலைக்குக் குளித்தபின் கண்டிஷனர்கள் உபயோகிப்பவர்கள், முடியின் வேர்க்கால்களில் அப்ளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். முடியிலும், முடியின் நுனியிலும் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். 

எல்லாவற்றையும் விட முக்கியமானது என்னவென்றால், எண்ணை தேய்த்துக் குளிப்பவர்கள், குளித்துவிட்டு வெளியில் வந்தவுடன், அடுத்தவர்களின் சௌகர்யத்திற்காக, தரையை நன்கு தேய்த்துக் கழுவி விட வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தவரின் மண்டையை உடைத்த பாவத்திற்கு ஆளாக நேரிடலாம். 

என்ன வாசகர்களே, ஒரு குளியல் சமாசாரத்திற்குள் எத்தனை விஷயங்கள் அடங்கியிருக்கின்றன, புரிந்து கொண்டீர்களா? 

]]>
Bath, Healthy bath, shampoo, குளியல், சுகாதாரம், குளியலறை, ஷாம்பு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/8/w600X390/bath.jpg http://www.dinamani.com/health/youth-health/2018/mar/08/before-taking-a-good-shower-follow-these-instructions-2876794.html
2713794 மருத்துவம் இளையோர் நலம் ஆண்களுக்கான 5 அழகுக் குறிப்புகள் Saturday, June 3, 2017 05:22 PM +0530 ஆணுக்கு எதுக்கு அழகு, ஆணாக இருப்பதே அழகு என்று சொல்லும் காலம் மலையேறி, பெண்களுக்கு போட்டியாக தங்களை அழகுப் படுத்திக் கொள்வதில் ஆண்களும் களம் இறங்கிவிட்டார்கள் என்பதே உண்மை. ப்ளீச்சிங், ஃபேஷியல், புதுவிதமான ஹேர்ஹட், ட்ரெஸ்ஸிங் என்று ஆண்கள் தங்கள் தோற்றப் பொலிவை மேம்படுத்திக் கொள்ளவே விரும்புகிறார்கள். சருமப் பராமரிப்பில் சிறிது கவனம் செலுத்தினால் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் முகம் பொலிவடையும்.அவர்களுக்கு சில டிப்ஸ்

சருமம்

ஆண்களின் சருமம் கடினமானதாக இருக்கும் அதனை சற்று மென்மையாக்க சந்தனப் பொடியுடன் சிறிது பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசிக் கொள்ளலாம். சுத்தமான தெளிவான சருமமே ஆரோக்கியமான சருமம். முகம் வறட்சியாக இருந்தால் ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சைச்சாறு கலந்து, முகத்தில் தடவி வர சரும வறட்சி நீங்கும்.

வெயிலில் முகம் வாட்டமடையாமல் இருக்க, சருமத்தை உரிய வகையில் பாதுகாக்க வேண்டும். முகம் கைகள் கழுத்துப் பகுதிகளில் தரமான சன் ஸ்க்ரீன் லோஷன்களை பயன்படுத்த வேண்டும். வெயிலில் செல்லும்போது மறக்காமல் சன் ஸ்கிரீன் அடங்கியஃபேர்னெஸ் க்ரீம் பயன்படுத்துங்கள். சூரியக் கதிர் தாக்கத்திலிருந்து கண்களைப் பாதுகாக்க சன் க்ளாஸ் அணிந்து கொள்ளுங்கள்.கண்ணுக்கு கீழ் கருவளையம் இருந்தால் அதற்கு ஸ்பெஷல் பராமரிப்பு அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் பார்லருக்குச் சென்று ஐமசாஜ் எடுத்துக் கொள்ளுங்கள்.

இரவில் நீண்ட நேரம் விழித்திருக்காமல் சீக்கிரம் தூங்கி காலையில் சீக்கிரம் எழுந்திருந்தால் உடல் நலத்துக்கும் மன நலத்துக்கும் மிகவும் நல்லது. மனம் ஆரோக்கியமாக இருந்தால் அது முகத்தில் பிரதிபலிக்கும். சிலருக்கு முகப்பரு பிரச்னை இருக்கலாம். அதற்கான தீர்வு வீட்டிலேயே உள்ளது. சந்தனம், சாதிக்காய், மிளகு இவை மூன்றையும் சேர்த்தரைத்த விழுதை பருக்களின் மீது தடவிவரவும்.

சுத்தம்

தினமும் படுக்கச் செல்லும் முன் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். அன்றைய தினத்தின் அலைச்சலாம் முகத்தில் சேர்ந்திருக்கும் அழுக்குகள் மாசுக்கள் நீக்க வேண்டும். சருமத்தின் இன்ஃபெக்‌ஷன் ஏற்படாமல் போதிய கவனத்துடன் இருக்க வேண்டும். சருமத்தில் நீர்ச்சத்து சமமாக இருக்க அடிக்கடி ஜூஸ், இளநீர் குடிக்கலாம். தண்ணீர் போதிய அளவுக்குக் குடிப்பது முக்கியம்.

முகப் பராமரிப்புக்கு உதவும் பப்பாளி

பப்பாளியைப் போல சரும அழகுக்கு நிகரான ஒரு பழம் இருக்க முடியாது. சருமத்தின் நிறமும், ஆரோக்கியமும் அழகும் பப்பாளி பயன்படுத்தினால் அதிகரிக்கும். இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் கை மேல் பலன் தரும். வீட்டிலேயே பப்பாளி ஃபேஷியல் செய்து கொள்ளலாம். ஒரு பப்பாளியை எடுத்து இரண்டு பாதியாக நறுக்கிக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்குவதற்கு முன் முகத்தில் அதைப் பூசி சிறிது நேரம் ஊற வைத்தபின் நன்றாக முகத்தை கழுவிவிட்டு தூங்கச் செல்லுங்கள். காலை எழுந்தவுடன் உங்கள் முகப் பொலிவைப் பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

நகப் பராமரிப்பு

கை மற்றும் கால்களில் நகங்களை ஒட்ட வெட்டி சீராக வைத்திருக்க வேண்டும். நகங்களில் அழுக்கும் கறையும் படிந்து உடைந்திருந்தால் அது தோல் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். விருப்பம் உள்ளவர்கள் நெயில் ஆர்ட் செய்து கொள்ளலாம்.

தலைமுடிப் பராமரிப்பு

ஸ்ட்ரெஸ் காரணமாக தலைமுடி அதிகமாக உதிரக் கூடும். தினமும் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணைய் மற்றும் நல்லெண்ணெய் ஆகிய மூன்றையும் சம அளவில் கலந்து உபயோகப்படுத்தினால் முடி உதிர்வது குறையும். உடலும் குளிர்ச்சியாக இருக்கும்.

உடைத் தேர்வு

ஸ்டைலிஷாக ட்ரெஸ் போடுவது முக்கியம் தான் ஆனால் அதைவிட உங்களுக்கு ஏற்ற ஆடைகளைத் தேர்வு செய்து அணிய வேண்டும். ஆண்களுக்கு பெரும்பாலும் அடர் நீலம், கறுப்பு, க்ரே, வெள்ளை, வெளிர் நீலம், பிரவுன், போன்ற நிறங்கள் பொருத்தமாக இருக்கும். உடைக்குப் பொருத்தமாக ஷூ அல்லது சப்பல் அணிவது மெருகை அதிகரிக்கும்.

நீங்கள் எல்லாவிதத்திலும் அழகா இருக்க வேண்டுமானால் முகத்தில் எப்போதும் புன்னகையுடன் இருங்கள். அழகு என்பது அகத்தின் பிரதிபலிப்பு என்று அறிந்து நல்ல மனத்துடன் இருக்கப் பழகினால் மேற்சொன்ன எவ்வித பராமரிப்பும் உங்களுக்குத் தேவையே இருக்காது. சரிதானே?

]]>
skin care tips for men, ஆண்கள் அழகுக் குறிப்பு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/3/w600X390/Men-Skincare-Tips-For-Oily-Skin-4.jpg http://www.dinamani.com/health/youth-health/2017/jun/03/beauty-tips-for-men-2713794.html
2713750 மருத்துவம் இளையோர் நலம் படுக்கையை பிறர் மிதிக்காமல் மடித்துவைக்க வேண்டும், ஏன்?  Saturday, June 3, 2017 12:21 PM +0530 காலையில் தூங்கி எழுந்தவுடன் படுக்கையையும் போர்வையையும் மடித்து வைக்கச் சொல்லி வீட்டில் பெரியவர்கள் எப்போதும் சொல்கிறார்கள். எதற்காக அப்படிச் சொல்கிறார்கள்?

அந்தக் காலத்தில் படுப்பதற்கென்று தனியாக பெட்ரூம் கிடையாது. அனைவரும் சேர்ந்து ஒரே இடத்தில் படுத்திருப்பார்கள். ஒருவர் ஒரு இடத்தில் தொடர்ந்து அதிக நேரம் இருக்கும்போது, அந்த இடத்தில், அவருடைய ஒளி உடலின் தன்மை எஞ்சியிருக்கும். காட்டு விலங்குகளுக்குக் கூட இதை உணரும் சக்தி நன்கு இருக்கிறது. ஒரு மனிதன் ஒரு இடத்தில் சிறிது நேரம் இருந்துவிட்டு பின் சென்று விட்டாலும், அங்கு வரும் விலங்குகள், இங்கு ஒரு மனிதன் சிறிது நேரத்திற்கு முன்னால் இருந்திருக்கிறான் என்று தெரிந்து கொள்கின்றன. இதை வாசனை மூலம் மட்டும் அவை அறியவில்லை. அங்கிருக்கும் அதிர்வுகள் வைத்தும் அவை தெரிந்து கொள்கின்றன. சூட்சுமமாக இருக்கும் ஒரு மனிதன்கூட இப்படி அறிந்து கொள்ளமுடியும்.

எனவே படுக்கையில் ஒருவர் தொடர்ந்து 6 அல்லது 7 மணி நேரம் தொடர்ந்து இருப்பதால், படுக்கையிலிருந்து எழுந்த பின்னரும், அவருடைய ஒளி உடலின் தன்மை அந்தப் படுக்கையில் இருக்கும். படுக்கையும், போர்வையும் மடித்து வைக்காமல் இருக்கும்போது, படுக்கையை 10 பேர் மிதித்துக் கொண்டு போவார்கள். இந்த நிலையில், அதே படுக்கையில் அவர் அன்றிரவு படுப்பது, நிச்சயமாக அவருடைய ஆரோக்கியத்திற்கும், மன நலனுக்கும் நல்லதில்லை. மேலும் அவருடைய உடலும், அந்தப் படுக்கைக்கு, அந்த சூழ்நிலையில், அவ்வளவு எளிதில் ஒத்துப்போகாது. இன்னொரு உதாரணம் மூலமும் இதை விளக்க முடியும். நீங்கள் ஒரு புதிய இடத்திற்குச் செல்கிறீர்கள். எல்லாம் வசதியாகவே இருக்கின்றன. நீங்களும் களைப்பாகத்தான் இருப்பீர்கள். இருந்தாலும் படுத்தால் தூக்கம் வராது. ஏனெனில் உங்கள் ஒளி உடலுக்கு அங்கிருக்கும் தன்மையுடன் ஒத்து வரவில்லையென்றால் உங்கள் உடல் அங்கு சுகமாகவே இருக்காது. தேவையற்ற கனவுகளும் உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்க வாய்ப்புண்டு.

ஆனால் படுக்கையைச் சுருட்டி வைத்து உபயோகிக்கும்போது, உங்கள் படுக்கையின் தன்மை மற்றவர்களால் பாதிக்கப்படாமல் இருப்பதால், படுத்தவுடனேயே உங்கள் உடல் படுக்கையில் ஒத்துப்போகும். உடல் மனம் இரண்டுமே பாதிப்பின்றி சுகமாக இருக்கும். ஒருவர் உடுத்திய உடையை இன்னொருவர் உடுத்தக்கூடாது, ஒருவர் படுக்கையை இன்னொருவர் பயன்படுத்தக் கூடாது என்பதெல்லாம் இதன் அடிப்படையில்தான்.
 
இப்போது பல வீடுகளிலும் படுக்கையறை வந்துவிட்டது. அனைவரும் கட்டிலில் கனமான மெத்தை போட்டுப் படுக்கப் பழகி வருகிறார்கள். அந்த மெத்தையையும் சுற்றி வைத்தால் நல்லது. அப்படி அந்த கனமான மெத்தையைச் சுற்றி வைக்க முடிய வில்லையென்றாலும் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் ஒரு துணி போட்டு மூடிவிட வேண்டும். இப்படிச் செய்யும்போது, நம் மனநிலை மற்றும் ஆரோக்கியத்தைத் தொடர்ந்து பாதுகாக்க முடியும்.

நன்றி : ஈஷா மையம்

]]>
Bed http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/3/w600X390/padukkaiyai-pirar-mithikkamal-madithuvaikka-vendum-yen.jpg http://www.dinamani.com/health/youth-health/2017/jun/03/dont-stamp-your-bed-2713750.html
2702666 மருத்துவம் இளையோர் நலம் ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு ஆண்கள் என்ன செய்யவேண்டும்? IANS Monday, May 15, 2017 02:53 PM +0530 அப்பாவாக விரும்பும் ஆண்கள் இரவு நேரத்தில் சீக்கிரம் படுக்கைக்குச் சென்றால் அவர்களின் விந்தணுக்கள் ஆரோக்கியமாக இருக்கும் என்கிறது ஆண்களுக்கான பிரத்யேக ஆராய்ச்சி.

மேற்கொண்டு இந்த ஆய்வு தெரிவிப்பது என்னவென்றால், ஆண்களுக்கு இரவு 8 மணியிலிருந்து 10 மணிக்குள் விந்தணுக்களின் செயல்பாடு சுறுசுறுப்பாக இருக்கும், அதாவது விந்தணுக்கள் கருமுட்டையுடன் வேகமாக இணைந்து கருவை உருவாக்கும்.

அதே சமயம் நள்ளிரவு தாண்டி தூங்கச் செல்லும் ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையில் குறைந்தும், வலுவிழந்தும் போகும். ஆறு மணி நேரத்துக்கும் அதற்கு குறைவாகவும் தூங்கும் ஆண்களின் நிலைமையும் விடிந்தும் அதிக நேரம் படுக்கையில் இருப்போர்களின் நிலைமையும் இதைவிட மோசம். அவர்களின் விந்தணுக்கள் விரைவில் இறந்துவிடும்.

இரவு தாமதமாக படுக்கைக்குச் செல்வது, உடலுக்குத் தேவையான ஓய்வை தர மறுப்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் ஆண்களின் விந்தணுக்களில் குறைபாடுகள் ஏற்படும்.  காரணம் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு அமைப்பிலிருந்து உருவாகும் ஒருவகை புரதம் விந்தணுக்களுக்கு எதிராக செயல்பட்டு ஆரோக்கியமான விந்தணுக்களை அழித்துவிடும் என்கிறார்கள் சீனாவில் உள்ள ஹார்பின் மெடிக்கல் யூனிவர்சிட்டியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். இந்த ஆய்வறிக்கையை டெய்லி மெயிலில் நேற்று (14 மே, 2017, சனிக்கழமை) அன்று வெளியிட்டுள்ளார்கள்.

இதற்கு முந்தைய ஆய்வில், ஆறு மணி நேரம் மட்டும் தூங்கும் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை, எட்டு மணி நேரம் நன்றாக தூங்கும் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை விட 25 சதவிகிதம் குறைவாக இருந்தது என்று கண்டறிந்தனர்.

மெடிக்கல் சயின்ஸ் மானிட்டர் என்ற பத்திரிகையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. ஆய்வுக் குழுவினர் இதற்காக 981 ஆண்களை தேர்வு செய்தனர். அவர்களில் சிலரை தினமும் 8 மணியிலிருந்து பத்தி மணிக்குள் தூங்கிவிடும்படியும், சிலரை நள்ளிரவில் தூங்கும்படியும், இன்னும் சிலரை நள்ளிரவுக்குப் பிறகு தூங்கும்படியும் அறிவுறுத்தினார்கள். அவர்களின் அலாரத்தை ஏழிலிருந்து எட்டு மணி நேரத்துக்கும், சிலரை ஆறு மணி நேரத்துக்கும் இன்னும் சிலரை ஒன்பது மணி நேரம் கழித்தும் அடிக்கும்படியாக வைக்கச் சொன்னார்கள். குறிப்பிட்ட சில நாள்கள் கழித்து அவர்களின் விந்து எண்ணிக்கை, வடிவம் மற்றும் இயக்கம் ஆகியவற்றை ஆராய்ந்த பிறகுதான் மேற்சொன்ன ஆய்வு முடிவுக்கு வந்தனர்.

]]>
For healthy Sperms, விந்தணுக்களின் எண்ணிக்கை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/15/w600X390/man-sleeping.jpg http://www.dinamani.com/health/youth-health/2017/may/15/men-who-sleep-early-may-have-healthier-fitter-sperm-2702666.html
3334 மருத்துவம் இளையோர் நலம் இரவு பகலாக விழிக்கும் வேலையா-? மதி Thursday, August 11, 2016 04:40 PM +0530 இரவு பகல் என மாறி மாறி ஷிப்ட் அடிப்படையில் பணிபுரிபவர்களுக்கு மாரடைப்பு, உடல் பருமன், தீவிர பக்கவாத நோய் அச்சுறுத்தல் உள்ளது என்று அமெரிக்காவின் டெக்ஸாஸ் ஏ & எம் பல்கலை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்தப் பல்கலையின் ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இரவு-பகல் அடிப்படையிலான 24 மணி நேர சுழற்சியில் உடலுறுப்புகளின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் "உயிரியல் கடிகாரம்' நம் உடலில் இயங்குகிறது. 

இரவு மற்றும் பகலில் நமது உடல் செய்ய வேண்டிய வேலைகளை ஒருங்கிணைக்கும் பணிகளை அது மேற்கொண்டு வருகிறது.

எப்போது சாப்பிடுவது? எப்போது உறங்குவது? என்பது உள்ளிட்ட எண்ணற்ற செயல்பாடுகளுக்கு இந்த "கடிகாரம்' மூலமாகத்தான் நமது உடலுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. 

இரவு பகல் என மாறி மாறி பணிபுரிபவரின் உணவு உட்கொள்ளும் நேரம் மற்றும் தூங்கியெழும் நேரம் ஒழுங்கில்லாமல் அடிக்கடி மாறுவதால் உடம்பின் இயக்கச் சுழற்சி சீராக இன்றித் தடுமாற்றம் அடைகிறது. இதையடுத்து, 24 மணி நேர இயற்கையான சுழற்சி தடைபடுவதுடன் உடலியக்க செயல்பாடுகளும் பாதிப்புக்குள்ளாகிறது.

இதனால், மூளையின் ஒரு பகுதியின் ரத்த ஓட்டம் துண்டிக்கப்பட்டு தீவிர ரத்த அடைப்புகள் உண்டாகி பக்கவாதம் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. 

வழக்கமான முறையில் வேலை பார்ப்பவருடன் ஒப்பிடுகையில், பகல்-இரவு என மாறி மாறி ஷிப்ட் அடிப்படையில் வேலை பார்ப்பவரின் மூளை பாதிக்கப்படுவது மட்டுமின்றி, உணர்விழத்தல், மூட்டுகளின் இயக்கம் தடைபடுதல் போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன. 

ஆண்களைக் காட்டிலும், இளவயதுப் பெண்களுக்குப் பக்கவாத பாதிப்புகள் அபாயம் குறைவாகவே உள்ளது சோதனையில் தெரியவந்துள்ளது. ஏனெனில், பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் அவர்களின் மூளைக்குப் பாதுகாப்பு அரணாக விளங்கி, நரம்பு மண்டலங்களுக்கு அதிக அளவில் பாதுகாப்பை அளிக்கிறது.

ஆனால், வயதான பெண்களுக்கு இத்தகைய பாதுகாப்பு கிடைப்பதில்லை என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஃபரீதா சொராப்ஜி என்ற ஆராய்ச்சியாளரையும் உள்ளடக்கிய டெக்ஸாஸ் ஏ & எம் பல்கலையின் இந்த ஆய்வு முடிவுகள் "எண்டோகிரினாலஜி' அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

]]>
shift work, sleep problems http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/11/w600X390/Clock-Hand-shift-work-night-black.jpg http://www.dinamani.com/health/youth-health/2016/aug/11/இரவு-பகலாக-விழிக்கும்-வேலையா--3334.html
3193 மருத்துவம் இளையோர் நலம் டீன் ஏஜ் - வலியா? ஜாலியா? test Tuesday, August 9, 2016 12:04 PM +0530 பதின் வயது என்று சொல்லும் போது சில காட்சிகள் நம் மனச் சித்திரத்தில் உதிக்கும். பள்ளிச் சாலை, ஹைகிரவுன்ட், நண்பர்கள், பட்டாம்பூச்சி, புத்தம் புது புத்தகங்கள், மைக் கறை, முதல் நண்பன், முதல் காதல் என்று தொடரும் நினைவலைகள். அந்த வயதில் நம் மனதுக்குள் வயலின் வாசித்தபடி இருக்கும், நமக்கு மட்டும் பெய்யும் ஒரு மழை.இப்படி எல்லாம் நனைந்து திளைத்துவிட்டு, அந்த நாம் எப்படி இருந்தோம் என்று மறந்து பிள்ளைகளின் வளர் இளம் பருவத்தை காமாலைக் கண் கொண்டு பார்க்கிறோம். நம்மை எப்போதும் வளர்ந்தவர்களாகவே நினைத்துக் கொண்டிருப்பதுதான் சிக்கல். பதின் வயதுப் பிள்ளைகளை எப்படி கையாள வேண்டும், அவர்களுடைய பிரச்னை என்ன,  அவர்களைப் புரிந்து கொள்ள என்ன வழி?

'குழந்தை வளர்ப்புக் கலை என இனிமையாகச் சொல்ல வேண்டிய ஒன்றைப் பிரச்னையாகப் பார்க்கத் தொடங்கியது பெரும் வேதனை. குழந்தையைப் பெறுவது மட்டும் அல்ல... நல்ல பெற்றோர்களாக இருப்பதும் சவாலான விஷயம்தான்!’ எனச் சொல்லும் மனநல மருத்துவர் ஷாலினி பதின் பருவத்தைக் கடக்கும் பிள்ளைகளை எப்படிப் புரிந்துகொண்டு கையாள வேண்டும் என்பதை விரிவாக எடுத்துக் கூறினார்.

'பதின்பருவம் என்பது சிறார்களின் உடல் அளவிலும் மனநிலையிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படுத்தும் வயது. அவரவர் பாலினத்துக்குத் தகுந்த மாதிரி ஹார்மோன்கள் உற்பத்தி அதிகரிக்கும். ஆண் என்றால் அரும்பு மீசை துளிர்விடும். பெண் குழந்தைகள் வயதுக்கு வருவார்கள். பிள்ளைகளுக்கு எனப் பிரத்யேகமாக நேரம் ஒதுக்கி, அவர்கள் மீது நாம் அக்கறையாக இருக்கிறோம் என்பதை உணர்த்தினால் போதும்’ என்கிற டாக்டர் ஷாலினி மேலும் தொடர்ந்தார்.

'நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இந்தப் பருவத்தில் அவர்களுக்கு அதிகரிக்கும். தாங்களே சுயமாக யோசிக்கவும் முடிவு செய்யவும் ஆரம்பித்துவிடுவார்கள். பதின்வயதில் மூளையில் ஐந்து முக்கியமான மாற்றங்கள் ஏற்படுகின்றன.

சிந்தனை: பதின் வயதினருக்கு மூளையின் அளவு வளரும். அவர்களின் புத்தி, கூர்மையடையும்.  'நான் சொல்றதை நீ கேட்டுத்தான் ஆகணும்’ என்ற அதட்டலாகப்  பேசும் தொனி அவர்களுக்குப் பிடிப்பதில்லை. தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து எதிர்க் கேள்வி கேட்பார்கள். உதாரணமாக 'என்னைக் கேட்காம ஏன் டூவீலரை எடுத்துட்டுப் போனே?’ என்று அம்மா கேட்டால் 'நீ மட்டும் அப்பாகிட்ட கேட்காம அவரோட காரை எடுத்துட்டுப் போகலாமா?’ என்று மடக்குவார்கள். பதமாகப் பேசிப் புரியவைக்க வேண்டும்.

எதிர்ப் பாலின ஈர்ப்பு:  பதின்பருவப் பெண்களுக்கு ஆண்கள் மீதும் அந்த வயசு ஆண்களுக்குப் பெண்கள் மீதும் ஈர்ப்பு ஏற்படுவது இயற்கை. அதில் எந்தத் தவறும் இல்லை. சரியாக இயல்பாக வளர்கிறார்கள் என்றுதான் அர்த்தம். இந்தச் சூழலில் வீட்டில் ஏற்கெனவே பெற்றோர் இடையே பிரச்னைகள் இருந்தால் அது பதின்வயதினரை பாதிப்புக்கு உள்ளாக்கும். வெளியிடங்களில் அன்பைத் தேட முனைவார்கள். வேறு பல பிரச்னைகளுக்கு இது வழி வகுத்துவிடும். பிள்ளைகளின் முன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடக்கூடாது.

தன்னுணர்வு - 'பிளஸ் டூ முடிச்சிட்டு ஃபேஷன் டிசைனிங் பண்ணப் போறேன்’ என்று ஒன்பதாவது படிக்கும்போதே சொல்வார்கள். இதற்கு முன் அவர்களின் தேர்வுகள் குழப்பமாகவும் அவர்களுக்கே உறுதி இல்லாமலும் இருக்கும். ஆனால், பதின்வயதில் ஆழமாகத் தோன்றும் விருப்பங்கள்தான் கடைசிவரை அவர்களை வழிநடத்தும். பெற்றோர்கள் அவர்களின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

மனநிலை மாறுதல்கள்: திடீர் என்று ஏற்படுகின்ற ஹார்மோன் மாற்றங்களால் பதின்பருவத்தினரின் மனநிலைகள் அடிக்கடி மாறும். காரணம் எதுவும் இல்லாமல் கோபப்படுவதும், சின்ன விஷயத்துக்கு எல்லாம் அழுவதும், நண்பர்களோடு சேர்ந்து இருக்கும்போது சத்தமாகச் சிரிப்பதும், சினிமா தியேட்டரில் கைத்தட்டி விசில் அடிப்பதும் என உணர்ச்சிக் கலவையாக இருப்பார்கள். சின்னத் தோல்வியைக்கூட அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. பெற்றோர்கள் அவர்களுடன் அடிக்கடி மனம்விட்டுப் பேசி அவர்களின் தேவை என்ன பிரச்னைகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு தோழன் - தோழியைப்போல அவர்களிடம் இதமான நெருக்கத்தையும் அன்பையும் காட்ட வேண்டும்.  

 

நட்பு சூழ் உலகம்: பாய்ஸ் படத்தில் வருவது போலப் பதின்வயதினர் எப்போதும் நான்கைந்து நண்பர்களுடன்தான் இருப்பார்கள். இந்தச் சமயத்தில் பெற்றோர்களை விட்டுக் கொஞ்சம் விலகியே இருப்பார்கள். தங்களுடைய நண்பர்களை - அல்லது ரோல் மாடலாக யாரை நினைக்கிறார்களோ அவர்களை அப்படியே பின்பற்ற முயற்சி செய்வார்கள். இத்தனை நாள் தங்களையே சுற்றிச் சுற்றி வந்த பிள்ளைகள் திடீரென்று விலகிப் போவதைப் பார்த்து பெற்றோர்களின் மனம் சங்கடப்படும்.

'காலைலேர்ந்து எங்கடா போய்த் தொலைஞ்சே?’ என்று அப்பா திட்டினால், பிள்ளைக்கு மூக்குக்கு மேல் கோபம் வரும். 'புராஜெக்ட் வொர்க் பண்ணேன்’ என்று வாயில் வந்ததைச் சொல்வானே தவிர, உண்மையில் எங்கு போனான் என்று சொல்லமாட்டான். 'என்னப்பா ரொம்ப பிஸியா? ஆளையே காணலையே?’ என்று கேட்டுப் பாருங்கள், 'ஃபிரண்ஸோட ஷாப்பிங் மால் வரைக்கும் போனோம்பா!’ என்பான். பெற்றோர்கள் தங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதையும் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதையும் பிள்ளைகள் விரும்ப மாட்டார்கள். பிள்ளைகள் யாருடன் பேசுகிறார்கள் பழகுகிறார்கள் என்று பெற்றோர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

பதின்வயதினரிடம் பேசுவதைவிட அவர்கள் பேசுவதை நிறையக் கேட்க வேண்டும். உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கவேண்டும். அதன்பின் நம் கருத்துக்களைச் சரியான முறையில் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அன்பும் அனுசரணையான பேச்சும் தேவையான அக்கறையும் தோழமையான நெருக்கமும் இருந்தால் போதும் அவர்களை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

அவர்கள் கடைப்பிடித்தே ஆக வேண்டிய சில விதிமுறைகளை அவர்களின் பங்களிப்புடனே வடிவமைத்துத் தரவேண்டும். பதின்வயதினர் ஏதேனும் தவறு செய்தால், அதை மிக நாசுக்காக, தனிமையில் வைத்துக் கண்டிக்கலாம். தேவை இல்லாமல் கடுமையாகக் கண்டிக்கப்படுவதையோ, மூன்றாம் நபரின் முன்னிலையில் விமர்சிக்கப்படுவதையோ எந்தப் பிள்ளையும் விரும்புவதில்லை.'' என்கிறார் டாக்டர் ஷாலினி.

'அடிச்சு வளர்க்காத குழந்தையும் ஒடிச்சு வளர்க்காத முருங்கையும் உருப்படாது’ எனச் சொலவடை சொல்லும் கிராமங்களில்தான், 'வளர்ந்த வாழையை வெட்டக்கூடாது’ என்றும் சொல்வார்கள். அதாவது கைக்கு உயர்ந்த பிள்ளையைக் கைநீட்டக்கூடாது என்பதற்காக! பதின் பருவத்தில் சக தோழனாக நம் பிள்ளைகளைப் பாவிப்பவதே சரியான அணுகுமுறையாக இருக்கும். அதைச் செய்யாமல் கண்டிப்பு காட்டும் வாத்தியாராக நீங்கள் செயல்பட்டால், உங்கள் வாரிசுக்கும் உங்களுக்குமான இடைவெளி இன்னும் இன்னும் கூடிக்கொண்டேதான் போகும்!

]]>
teen age, health http://www.dinamani.com/health/youth-health/2016/aug/09/டீன்-ஏஜ்-வலியா-ஜாலியா-3193.html