Dinamani - உணவே மருந்து - http://www.dinamani.com/health/healthy-food/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2944334 மருத்துவம் உணவே மருந்து வாவ்! பச்சை மாங்காயில் இவ்ளோ நன்மைகளா! பொ.பாலாஜிகணேஷ் Thursday, June 21, 2018 04:30 PM +0530  

பலருக்கும் மாங்காயைக் கண்டால் நாவில் இருந்து எச்சில் ஊறும். ஆனால் மாங்காய் சாப்பிட்டால் உடல் வெப்பம் அதிகரிக்கும், பருக்கள் வரும் என்று பலரும் அதை வாங்கி சாப்பிடமாட்டார்கள். உங்களுக்கு ஒன்று தெரியுமா? மாங்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உண்மையில் இதனை சாப்பிட்டால் நாம் சந்திக்கும் பல பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். மாங்காயை சாப்பிட்டால் பெறும் நன்மைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் மாங்காயை வேண்டாம் என்று தவிர்க்காதீர்கள்.

கோடையில் அதிகப்படியான வெப்பத்தால் உடலின் நீர்ச்சத்தை இழந்து, அதனால் உடல் வெப்பமடைந்து காய்ச்சல் அல்லது சில நேரங்களில் சுய நினைவை இழக்க நேரிடும். ஆனால் மாங்காயை திண்பதன் மூலம், அதில் உள்ள சக்தி வாய்ந்த குளிர்மிக்க உட்பொருள், உடலில் நீர்ச்சத்தை சீராகப் பராமரித்து, இப்பிரச்னையைத் தடுக்கும்.

மாங்காயில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது உடலில் எலக்ட்ரோலைட் அளவை பராமரிக்க உதவி, அதனால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்து, இதய நோயின் அபாயத்தில் இருந்து பாதுகாக்கும்.

பச்சை மாங்காயில் ஆவியாகக் கூடிய உட்பொருட்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது செரிமான திரவத்தின் உற்பத்தியைத் தூண்டி, செரிமான பிரச்னைகளில் இருந்து தடுத்து, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆகவே கோடையில் வயிற்று பிரச்னைகளை சந்திக்காமல் இருக்க வேண்டுமானால், மாங்காய் துண்டுகளை சாப்பிடுங்கள்.

பருவ நிலை மாற்றம் அல்லது ஏதேனும் வைரஸ் தொற்றுக்களால் நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுபவராயின், பச்சை மாங்காயை சாப்பிடுங்கள். ஏனெனில் பச்சை மாங்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. 

நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்பட்டு வந்தால், பச்சை மாங்காயை சாப்பிடுங்கள். அந்தப் பிரச்னையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பச்சை மாங்காயை மதிய வேளையில் ஒரு துண்டு சாப்பிட்டால், மதிய வேளையில் வரும் தூக்கத்தைத் தவிர்க்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

பச்சை மாங்காய் கல்லீரல் சம்பந்தமான பிரச்னைகளைத் தடுக்கும். ஏனெனில் மாங்காய் பித்தநீரின் சுரப்பை அதிகரிக்கும் மற்றும் குடலை பாக்டீரியா தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கும். பச்சை மாங்காய் இரத்தம் சம்பந்தமான பிரச்னையில் இருந்து விடுதலை தரும். ஏனெனில் மாங்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அதிலும் மாங்காயை உட்கொண்டு வந்தால், இரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும் மற்றும் புதிய இரத்த செல்கள் உருவாகும்.

மாங்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கொலாஜனின் கூட்டுச்சேர்க்கையில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆகவே மாங்காயை சாப்பிடுவதால் சருமத்தின் பொலிவு அதிகரிப்பதோடு, முதுமையும் தள்ளிப் போகும்.

மாங்காயில் உள்ள உட்பொருட்கள், சருமத் துளைகளில் எண்ணெய் மற்றும் அழுக்குகள் தேங்குவதைத் தடுக்கும். 

பச்சை மாங்காயை துண்டுகளாக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து, பின் அந்த நீரைக் கொண்டு இரவில் படுக்கும் முன் முகத்தைக் கழுவி, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ, முகப்பரு பிரச்னையில் இருந்து விடுபடலாம்.

]]>
Mango, Raw mango, மாங்காய், பச்சை மாங்காய் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/21/w600X390/mangoes.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/jun/21/வாவ்-பச்சை-மாங்காயில்-இவ்ளோ-நன்மைகளா-2944334.html
2942916 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: வெற்றிலை Tuesday, June 19, 2018 10:14 PM +0530 உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

 • மலட்டுத்தன்மை குறைபாடு நீங்க வெற்றிலை வேர், மிளகு இவை இரண்டையும் சம அளவு எடுத்து  அரைத்து காலை மாலை என இருவேளையும் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை நீங்கும்.
 • காதில் சீல் வடிவது நிற்க வெற்றிலைச் சாற்றில் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி வைத்துக்கொண்டு காலை, மாலை என இருவேளையும் காதில் சில சொட்டுகள் விட்டுவந்தால் காதில் சீழ் வடிவது நிற்கும்.
 • மலச்சிக்கல் குணமாக வெற்றிலைக் கொடியின் வேரை சிறிதளவு எடுத்து அதனுடன் மிளகு(3) சேர்த்து  தினமும் இரவு  வேளை சாப்பிட்ட பின்பு சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
 • வயிற்று வலி குணமாக வெற்றிலையுடன், கல் உப்பு சேர்த்து மென்று  தின்று வந்தால் வயிற்றுவலி குணமாகும்.
 • வயிற்றுப்போக்கு நிற்க வெற்றிலையோடு ஒமம் சேர்த்து அரைத்து அதனுடன்  தேன்(1ஸ்பூன்) அளவு கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
 • தலைவலி குணமாக இளம் வெற்றிலையின் நுனிப் பகுதியை எடுத்து அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டுவந்தால் தலைவலி குணமாகும்.
 • நெஞ்சுவலி உடனே நிற்க வெற்றிலை(2) எடுத்து அதனுடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சளை வைத்து மென்று தின்று வந்தால் நெஞ்சுவலி உடனே நின்றுவிடும்.

KOVAI  HERBAL  CARE  VEGETABLES CLINIC

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609 / Covaibala15@gmail.com

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/19/w600X390/vettrielai.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/jun/19/இன்றைய-மருத்துவ-சிந்தனை-வெற்றிலை-2942916.html
2941034 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: வில்வம். Saturday, June 16, 2018 10:58 PM +0530 உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

 • நன்றாகப் பசி எடுக்க வில்வ மர வேரைக் காயவைத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் (3கிராம்) அளவு எடுத்து பசு மோரில் கலந்து குடித்து வந்தால் நன்றாகப் பசி எடுக்கும்.
 • உதட்டில் உண்டாகும் வெள்ளை நிறம் மறைய வில்வ மரத்தின் காயை உடைத்து அதன் மேல் ஒட்டை தாய்ப்பால் விட்டுத் தேய்த்து உதட்டில் தடவிவந்தால் திட்டுதிட்டான வெள்ளை நிறம் மாறும்.
 • மண்டைக் குடைச்சல் குணமாக வில்வ இலையைக் காயவைத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் (2கிராம்) அளவு எடுத்து மாலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் மண்டைக் குடைசாசல் குணமாகும்.
 • மஞ்சள் காமாலை குணமாக வில்வ இலையை அரைத்து  10 மில்லி அளவு எடுத்து அதனுடன் சிறிதளவு மிளகுத் தூள் சேர்த்து காலை மாலை என இருவேளையும் குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.
 • மனநலம் சார்ந்த பிரச்சனைகள் நீங்க வில்வ இலையை தினமும் 4 என காலை மாலை என இருவேளையும் மென்று தின்று பின்பு தேன் குடித்து வந்தால் மனநலப் பாதிப்புகள் குணமாகும் .
 • தோல் எரிச்சல் குணமாக வில்வ மரத்தின் கொழுந்து இலைகளைப் பறித்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து அதனை  பசு மோரில் (150மில்லி) அளவு  கலந்து குடித்து வந்தால் தோல் எரிச்சல் குணமாகும்.

KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC

கோவை பாலா,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609 / Covaibala15@gmail.com

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/16/w600X390/vilvam.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/jun/16/இன்றைய-மருத்துவ-சிந்தனை-வில்வம்-2941034.html
2940310 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: விளா மரம் Friday, June 15, 2018 10:10 PM +0530 உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

 • சர்க்கரை நோயிலிருந்து விடுபட விளா ஒடு, வில்வ ஒடு, மாதுளை ஒடு, மாம்பருப்பு, மஞ்சள் அனைத்தையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து, தினமும் காலை மாலை  என இரு வேளையும் இரண்டு கிராம் பொடியைச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
 • வாய்ப்புண், வெள்ளைப் படுதல் குணமாக விளாம் பிசினை மஞ்சள் சேர்த்து ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால் வாய்ப் புண், வெள்ளைப்படுதல் குணமாகும்.
 • சொரி, சிரங்கு, வியர்க்குரு நீங்க விளா மர இலையை, குளிக்கும் மஞ்சளுடன் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளித்து வந்தால் சொரி, சிரங்கு, வியர்க்குரு போன்றவை நீங்கும்.
 • சிறநீர் எரிச்சல் தணிய விளா மரத்தின் பிசினைஎடுத்து தண்ணீரில் கரைத்து , தெளிந்த பிறகு அந்த தண்ணீரைக் குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் தணியும்.
 • இருமல், இரைப்பு, ஆஸ்துமா நீங்க விளா ஓடு, அதிமதுரம், வெள்ளரி விதை மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடிசெய்து, தினமும் இரண்டு கிராம் பொடியைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால்  இருமல், இரைப்பு, ஆஸ்துமா போன்றவை குணமாகும்.
 • ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிய விளாம்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.

KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609 / Covaibala15@gmail.com

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/15/w600X390/vizhamaram.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/jun/15/இன்றைய-மருத்துவ-சிந்தனை-விளா-மரம்-2940310.html
2939578 மருத்துவம் உணவே மருந்து தினமும் 5 முந்திரி சாப்பிட்டால் என்ன ஆகும்? பி. பரத் Friday, June 15, 2018 10:57 AM +0530 முந்திரிப் பழத்தில் புரோட்டீன், பீட்டா - கரோட்டீன், டானின் என்ற ஆண்டி-ஆக்ஸிடண்ட், நார்ச்சத்துக்கள் போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

ஆரஞ்சு பழத்தை விட 5 மடங்கு அதிகமான சத்துக்கள் ஒரு முந்திரிப் பழத்தில் உள்ளது. நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்தினால் கஷ்டப்படுபவர்கள், முந்திரிப் பழத்தை சாப்பிட்டு வந்தால், அதனை குணமாக்கலாம்.

முந்திரிப் பழத்தைச் சாப்பிட்டால், வைட்டமின் சி குறைவினால் ஏற்படும் ஸ்கர்வி என்ற நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

முந்திரிப் பருப்பில் நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாதுக்கள் உள்ளதோடு, நோய்கள் மற்றும் புற்றுநோயினை வராமல் தடுக்க உதவும். இதில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய ஒற்றை நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்களான ஒலியிக் மற்றும் பால்மிட்டோயிக் அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகிறது.

முந்திரிப் பழமானது, நமது உடம்பின் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கி, ஈறுகளில் ரத்தக் கசிவுகள், பற்களின் பிரச்னைகள் மற்றும் நகங்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

]]>
cashew, nuts, cashew nut, முந்திரி, உடல் பலம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/14/w600X390/cashew.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/jun/14/health-benefits-of-cashew-nut-2939578.html
2934283 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: வெங்காயத் தாள் Wednesday, June 6, 2018 05:39 PM +0530 உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

 • உடல் சூடு குறைய வெங்காயத் தாளை அரைத்து (100 மில்லி) அளவு எடுத்து அதனுடன்  வெந்தயம் (100 கிராம்) ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து  வைத்துக் கொண்டு தினமும் ஒரு ஸ்பூன் அளவு  காலை மாலை என இருவேளையும் சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும்.
 • குடற் புண், வாய்ப் புண் குணமாக வெங்காயத் தாள், துத்தி இலை  இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து அதனுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வெறும் வயிற்றில்  சாப்பிட்டு வந்தால் குடற் புண்  மற்றும் வாய்ப்புண் குணமாகும்.
 • உடலுறவில் நீடித்த இன்பம் பெற வெங்காயத் தாள், ஒரிதழ் தாமரை இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து காலை மற்றும் மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் விந்தின் சூடு குறையும்.உடலுறவில் நீடித்த இன்பம் கிடைக்கும்.
 • தீராத தாகம் தீர வெங்காயத் தாளுடன் சீரகம், சோம்பு சேர்த்து அரைத்து கஷாயமாகச் சாப்பிட்டு வந்தால் தீராத தாகம் தீரும்.
 • மாதவிலக்கு சார்ந்த பிரச்சனை தீர வெங்காயத் தாளை அரைத்து அதில் கருப்பு எள், கருஞ்சீரகம் இரண்டையும் சம அளவில் கலந்து நன்கு  காயவைத்து அரைத்துக் கொள்ளவும்.மாதவிலக்கு வராத சமயங்களில் ஓரு ஸ்பூன் அளவுக்கு காலை மாலை என மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால்  மாதவிலக்கு சம்மந்தமான  பிரச்சனை தீரும்.
 • சளி, இருமல், ஆஸ்துமா குணமாக வெங்காயத் தாளை அரைத்து (100 கிராம்) எடுத்து அதனுடன் திப்பிலி (50 கிராம்) அளவு கலந்து காயவைத்துப் பொடியாக்கிக் கொள்ளவும். இவற்றை அரை  கிராம் பொடியை எடுத்து தேனில் கலந்து காலை மாலை என இருவேளையும்  சாப்பிட்டு வந்தால் சளி, இருமல், ஆஸ்துமா போன்றவை குணமாகும்.

KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609 / Covaibala15@gmail.com

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/6/w600X390/spring_onions.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/jun/06/இன்றைய-மருத்துவ-சிந்தனை-வெங்காயத்-தாள்-2934283.html
2934252 மருத்துவம் உணவே மருந்து உங்கள் உடல் எடை குறைய வேண்டுமா? எளிய தீர்வு இதுதான்! பொ.பாலாஜிகணேஷ்   Wednesday, June 6, 2018 01:21 PM +0530 வாரத்தில் குறைந்தது ஒரே ஒரு முறையாவது கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் பல நாம் அன்றாடம் உண்ணும் உணவின் மூலமாகவே கிடைத்துவிடுகின்றன. ஆனால் நாம் சரியான சரிவிகித உணவை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம். எனவே, அனைவருக்கும் சரிவிகித உணவு அவசியமாகிறது.

உடல் எடை குறைய : உடல் எடை குறைய பொண்ணாங்கன்னி கீரை உதவுகிறது. பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

உடல் எடை அதிகரிக்க : பொன்னாங்கண்ணி கீரை உடல் எடையை குறைக்க மட்டுமில்லாமல் கூட்டவும் உதவுகிறது. துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடைக்கூடும் என்பது இந்த கீரையின் தனித்தன்மை. பொன்னாங்கண்ணி கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால், உடல் வலிமை பெரும். எலும்புகள் உறுதியாகும்.

வாய் துர்நாற்றம் : வாயில் இருந்து வரும் துர்நாற்றம் நமது பலவீனமாக அமையும். பொன்னாங்கண்ணி கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய் துர்நாற்றம் போகும்.

புத்துணர்ச்சி : பொன்னாங்கண்ணி கீரையைத் தினமும் சாப்பிட்டு வந்தால், இதயம் மற்றும் மூளை புத்துணர்வு பெறுகிறது. இதனால் நாம் சுறுசுறுப்பாக செயல்பட முடிகிறது.

நோய்கள் : பொன்னாங்கண்ணி கீரை மூலநோய் மற்றும் மண்ணீரல் நோய்களைப் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

பார்வை திறன் : பொன்னாங்கண்ணி கீரையைத் தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பகலிலும் நிலவை பார்க்கலாம். அந்த அளவுக்கு கண் பார்வை நன்றாக தெரியும்.

ரத்த சுத்திகரிப்பு : பொன்னாங்கண்ணி கீரையை நன்றாக நீரில் இட்டு கழுவி, சிறிது சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு வந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும்.

சிவந்த கண்கள் : இரவு சரியாக தூக்கமில்லாத காரணத்தாலும், நீண்ட நேரம் செல்போன், கணினி போன்ற எலட்ரானிக் சாதனங்களைப் பார்ப்பதாலும் கண்கள் சிவந்து காணப்படுகிறது. இதனை போக்க பொன்னாங்கண்ணி கீரையைப் பொறியல் செய்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்னை நீங்கும்.

பொன்னிறம் : பொன்னாங்கண்ணி கீரை தங்கம் போன்ற சருமத்தை தரும் ஆற்றல் கொண்டது. இந்தக் கீரையைச் சாப்பிட்டால் அழகு மேம்படும்.

இவ்வளவு பயனுள்ள கீரைகளை வீட்டில் வளர்த்தும் பயன்படுத்தலாம் பொன்னாங்கண்ணி கீரையின் தண்டுகளைக் கிள்ளி மண்ணில் ஊன்றி வைத்தாலே கீரை செடி நன்றாக வளர்ந்து விடும். இதனை நீங்கள் வீட்டிலேயே வளர்க்கலாம்.
 
 

]]>
keerai, ponanganni keerai, greens, கீரை, பொன்னாங்கண்ணி கீரை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/6/w600X390/weight-loss.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/jun/06/benefits-of-greens-2934252.html
2933575 மருத்துவம் உணவே மருந்து நச்சுக்கொட்டைக் கீரை Tuesday, June 5, 2018 12:31 PM +0530 உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

இன்றைய மருத்துவ சிந்தனை: நச்சுக் கொட்டைக் கீரை (சண்டிக் கீரை)

 • வாயுக் கோளாறுகள் அனைத்தும் நீங்க நச்சுக்கொட்டைக் கீரையுடன் மிளகு , சீரகம், பூண்டு, வெங்காயம் ,மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால் வாயுக் கோளாறுகள் , வாதத்தினால் ஏற்படக்கூடிய வலிகள் அனைத்தும் தீரும்.
 • உடல் பருமன் குறைய நச்சுக்கொட்டைக் கீரைச் சாறு (அரை டம்ளர்) எடுத்து அதனுடன் பாதி அளவு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து காலையில் வெறும் வயிற்றில்  குடித்து வந்தால் உடல் பருமன் குறையும்.
 • கழுத்து வலி , இடுப்பு வலி குணமாக நச்சுக்கொட்டைக் கீரையைத் தொடர்ந்து 21 நாட்கள் வேகவைத்து  சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி , கழுத்து வலி குணமாகும்.
 • சிறுநீர் நன்றாக வெளியேற நச்சுக்கொட்டைக் கீரை இலைகளை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி, தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, வடிகட்டி அத்துடன் வெந்தயத்தூள் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் சீராக  வெளியேறும்.
 • பாசிப்பருப்பை  வேகவைத்து மசித்து சிறிதளவு வெங்காயம், சீரகம், தக்காளி சேர்த்து லேசாக வதக்கி பின்பு நச்சுக்கொட்டைக் கீரையையும் ,  வேகவைத்த பாசிப்பருப்பையும் கலந்து மிளகாய் பொடி, மஞ்சள்பொடி சேர்த்து மறுபடியும்  நன்கு வேகவைத்து  மதிய உணவுடன் சாப்பிட்டு வர சிறுநீர் நன்கு வெளியேறும்.
 • குடற்புண்கள் ஆற நச்சுக்கொட்டைக் கீரையை அரிந்து , பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் குடற்புண்கள் ஆறும்.

KOVAI  HERBAL  CARE  VEGETABLES CLINIC

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609 / Covaibala15@gmail.com

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/5/w600X390/nanjukottankeerai.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/jun/05/நச்சுக்கொட்டைக்-கீரை-2933575.html
2932993 மருத்துவம் உணவே மருந்து சுவையான அத்திப்பழ அல்வாவில் இத்தனை சத்துக்களா? பாத்திமா பீ Monday, June 4, 2018 04:37 PM +0530  

தேவையானவை:
பேரீச்சம் பழம் - 100 கிராம்
உலர்ந்த அத்திப் பழம் - 2
நெய் - 150 கிராம்
சர்க்கரை - கால் கிலோ
எண்ணெய் - 50 மி.லி
முந்திரி - 25 கிராம்
திராட்சை 25 கிராம்
வெள்ளரி விதை - 2 தேக்கரண்டி
பழ ரக எசன்ஸ் - சிறிதளவு

 

செய்முறை: பேரீட்சை மற்றும் அத்திப் பழங்களைச் சேர்த்து முதல் நாள் இரவு மூழ்கும் அளவில் நீர் சேர்த்து காலை வரை ஊற வைக்கவும். பின்னர், அந்த நீருடன் நைசாக அரைக்கவும், வாணலியில் நெய், எண்ணெய்யை ஒன்றாக சேர்க்கவும். பின் சர்க்கரை, அரைத்த பேரீட்சை விழுது சேர்த்து நன்றாக கிளரவும். கிளறும் போது நெய், எண்ணெய் கலவை ஒன்றாக சேரும் அளவு நன்றாக கிளரவும் ஒட்டாமல் வரும்போது முந்திரி, திராட்சை, வெள்ளரி விதை மற்றும் சிறிதளவு பழ ரக எசன்ஸ் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான பேரீச்சை அத்தி பழ அல்வா தயார். 

குறிப்பு: பேரீச்சை அல்வா செய்யும் போது கருப்பு பேரீச்சையாக இருக்க வேண்டும். பொள்ளாச்சி பகுதிகளில் பேரீட்சை அல்வா பிரபலம். இதில் அதிகளவு இரும்பு சத்து இருப்பதால், ரம்ஜான் நோன்பு காலங்களில் உடல் சோர்வை நீக்குகிறது. 

]]>
fig, halwa, dates, பேரீச்சம் பழம், அத்திப்பழம், அல்வா http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/4/w600X390/alwa.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/jun/04/fig-halwa-and-its-recipe-2932993.html
2931828 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: பொடுதலைக் கீரை Saturday, June 2, 2018 12:59 PM +0530 உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

 1. பேன், பொடுகு பிரச்சனைகள் தீர பொடுதலைக் கீரைச் சாற்றில் வசம்பு, வெள்ளை மிளகு இரண்டையும் சம அளவு ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, ஒரு ஸ்பூன் பொடியை நல்லெண்ணெய்யில் குழைத்து, தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து குளித்தால், பேன், பொடுகு பிரச்சனைகள் நிரந்தரமாகத் தீரும்.
 2. ரத்தம் சுத்தமாக, உடல் வலிமை பெற பொடுதலைக் கீரையுடன், கடுக்காய் (1), நெல்லிக் கனி (1), தான்றிக்காய் (1) இவை மூன்றையும் தட்டிப் போட்டு கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால்  ரத்தம் சுத்தமாகும், உடல் வலிமை உண்டாகும்.
 3. சர்க்கரை நோய் கட்டுப்பட பொடுதலைக் கீரையை வெந்தயம் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
 4. வெள்ளைப் படுதல் பிரச்சனை தீர பொடுதலைக் கீரையுடன் சம அளவு வெள்ளருக்கு சேர்த்து அரைத்து மூன்று சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து அதிகாலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனை நிரந்தரமாகத் தீரும்.
 5. சிறுநீர் பிரச்சனைகள் தீர பொடுதலைக் கீரையுடன் சிறிது சீரகம், பார்லி சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கி, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
 6. சளி, கபம், நுரையீரல் பிரச்சனைகள் தீர பொடுதலைக் கீரையுடன் மிளகு, பூண்டு, மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் சளி, கபம், நுரையீரல் நோய்கள் குணமாகும்.

KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609  / Covaibala15@gmail.com

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/2/w600X390/potutalai-keerai.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/jun/02/இன்றைய-மருத்துவ-சிந்தனை-பொடுதலைக்-கீரை-2931828.html
2930503 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: வாதநாராயணன் கீரை Thursday, May 31, 2018 03:14 PM +0530 உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

 • முடக்கு வாதம், விரை வாதம் குணமாக வாதநாராயணன் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் பூண்டு (3 பல்), சுண்டைக்காய், பெருங்காயம், விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி அரைத்துச் சாப்பிட்டு வந்தால் முடக்கு வாதம், விரை வாதம் குணமாகும்.
 • வாதநோய் குணமாக வாதநாராயணன் கீரை மற்றும் வேர்ப் பட்டை இரண்டையும் சிறிதளவு எடுத்து நன்றாக  அரைத்து தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் வாதநோய் சார்ந்த பிரச்சனை குணமாகும்.
 • வாயுத் தொல்லை  நீங்க வாதநாராயணன் கீரையைக் காயவைத்துப் பொடிசெய்து வைத்துக்கொண்டு தினமும் (5கிராம்) பொடியை எடுத்து சுடுநீரில் கலந்து காலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வாயுத்தொல்லை தீரும்.
 • மூட்டு வலி, இடுப்பு வலி குணமாக வாதநாராயணன் கீரையை கேழ்வரகு மாவில் சேர்த்து தோசை செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, இடுப்பு வலி குணமாகும். வாதநாராயணன் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனை கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி போன்றவை குணமாகும்.
 • நகச்சுத்தி குணமாக வாதநாராயணன் கீரையை நன்றாக அரைத்து வெண்ணெய் சேர்த்து நகச்சுத்தி மீது வைத்து துணியால் கட்டிக்கொண்டு வந்தால்  மூன்றே நாள்களில் நகச்சுத்தி குணமாகும்.

KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell  :  96557 58609 / Covaibala15@gmail.com

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/31/w600X390/kerai1.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/may/31/இன்றைய-மருத்துவ-சிந்தனை-வாதநாராயணன்-கீரை-2930503.html
2929866 மருத்துவம் உணவே மருந்து கோடைக்கேற்ற சத்தான சுவையான மில்க் ஷேக் இதுதான்! பாத்திமா பீ Wednesday, May 30, 2018 03:53 PM +0530 பேரீச்சம் பழ மில்க் ஷேக்

தேவையானவை:
பேரீச்சம் பழம் - 200 கிராம்
பால் - முக்கால் லிட்டர்
உலர்ந்த திராட்சை - 25 கிராம்
முந்திரி - 20 கிராம்
வால்நட் - 10 கிராம்
ஏலக்காய் - 4 

செய்முறை: பாலை கொதிக்க வைத்து அதில் சுத்தம் செய்த பேரீச்சம் பழத்தை ஊறவைக்கவும். நன்கு ஊறியவுடன் மற்ற பொருட்களைச் சேர்த்து அரைக்கவும். குளிர்சாதனப் பெட்டியில் சிறிது நேரம் வைத்திருந்து சில்லென்று பரிமாறவும். சுவையான பேரீச்சம் பழ மில்க் ஷேக் தயார்.

]]>
dates, milkshake, dates milkshake, பேரீச்சம் பழ மில்க் ஷேக் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/30/w600X390/dates.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/may/30/dates-milk-shake-recipe-2929866.html
2929848 மருத்துவம் உணவே மருந்து அடடடடா! பிஸ்தாவில் இத்தனை ஊட்டச்சத்துக்களா! பொ.பாலாஜிகணேஷ் Wednesday, May 30, 2018 01:28 PM +0530 பிஸ்தா பருப்பு மிகுந்த ஊட்டச்சத்து கொண்டது. உதாரணமாக சுமார் 28 கிராம் பருப்பில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், வைட்டமின் பி6 மற்றும் மாங்கனீஸ் அதிக அளவு உள்ளன.

பிஸ்தா பருப்பில் மிக அதிகமாக ஆன்டி-அக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை எல்லாமே மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை தரும். ஆராய்ச்சி முடிவுகள், பிஸ்தா பருப்பு இதயத்திற்கு நன்மை தரும் கொழுப்பை கொண்டிருப்பதால் பல்வேறு இதய வியாதிகளை தடுக்கும் தன்மை கொண்டது. மேலும் இது கெட்ட கொழுப்பை குறைத்து இதய நோய்கள் வருவதை 12% வரை குறைக்கும்.

மன அழுத்தத்தினால் வரும் இரத்தக் கொதிப்பை பிஸ்தா பருப்பு நல்ல வகையில் கட்டுப்படுத்தும். மேலும் இரத்த குழாய்களை விரிவடைய செய்து, நல்ல இரத்த ஓட்டத்தை உண்டாக்கி ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

பிஸ்தா சாப்பிட்ட பிறகு உடலில் க்ளுகோஸ் மற்றும் இன்சுலின் அளவு குறைவாக இருப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளது. இது பெப்டைட் 1 என்னும் ஹார்மோன் அளவை அதிகரித்து உடலின் க்ளுகோஸ் அளவை சீராக வைக்கிறது.

பிஸ்தாவில் உள்ள நார்ச்சத்து உணவு செரிமானத்தை சீர் செய்து மலச்சிக்கலை தடுக்கிறது மற்றும் இந்த நார்ச்சத்து குடலில் நல்ல பாக்டீரியா வளர்ச்சிக்கு உதவுகிறது. குடலில் உள்ள பாக்டீரியா இந்த நார்ச்சத்தை நொதிக்கச்செய்து மற்றும் பல நன்மைகளை கொண்ட குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்களை உற்பத்தி செய்கிறது.

பிஸ்தா பருப்பில் உள்ள துத்தநாகம் உடலின் நோயெதிர்ப்புத் தன்மையை உயர்த்துவதாக அறியப்படுகிறது. மேலும் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கச் செய்யும்.

பிஸ்தா பருப்பு கர்ப்ப காலத்தில் உடலுக்குத் தேவையான மற்றும் முக்கியமான பல ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கிறது. பிஸ்தா பருப்பு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மிக அதிகமாகப் பயன்படுவதோடு, தாய்மார்களுக்கு அளவிட முடியாத ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்குகிறது.

]]>
pista, health, பிஸ்தா, உடல்நலம், சத்துள்ள பிஸ்தா http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/30/w600X390/pista.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/may/30/health-benefits-of-pista-2929848.html
2925359 மருத்துவம் உணவே மருந்து ஆண்மை பெரு​க வைக்கும் பால் கஞ்சியின் ஆரோக்கிய நன்மைகள்! வேத​வல்லி Wednesday, May 23, 2018 11:40 AM +0530 பொ​ரி அரிசி உருண்​டைக்கு நல்ல மருத்​துவ குணம் இருக்கு. இதை தின​மும் சாப்​பிட்டு வந்​தால் வாதம், கபம் சம்​பந்​த​மான நோய்​கள், வாந்தி வரு​வது போன்ற பிரச்​னை​கள் காணா​மல் போய்விடும். எந்த நோயாக இருந்​தா​லும் உடல் சோர்வு ஏற்​ப​டும்​போது நெற்​பொரி (அரி​சிப் பொரி) கஞ்சி குடிக்க, நோயி​னால் உண்​டா​கிற உடற்​சோர்வு மாறும். உடல் வன்மை பெரு​கும். அதிக தாகம் எடுப்​பது, வாந்தி, வயிற்​றுப்​போக்கு, வயிறு மந்​தம், நாக்கு ருசி​யில்​லா​மல் போவது போன்ற பிரச்​னைக்கு நெற்​பொரி கஞ்சி நல்ல தீர்வு.

பால் கஞ்சி: பச்​ச​ரி​சி​யும் பசும்​பா​லும் சேர்த்து காய்ச்​சு​வது, பால் கஞ்சி! இதைக் குடித்து வரும்​போது பித்​தத்​தால் வரும் உடல் எரிச்​சல் தீரும், ஆண்மை பெரு​கும்.

கொள்​ளு கஞ்சி: கொள்​ளும் அரி​சி​யும் சேர்த்து காய்ச்​சும் கஞ்சி! இதைக் குடிப்​ப​தால், நல்ல பசி உண்​டா​கும்.

]]>
porrdige, kanji, பால் கஞ்சி, கொள்​ளுக் கஞ்சி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/23/w600X390/bfdd5d930f9fbc9d713e34b057f368f0.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/may/23/health-benefits-of-rice-porridge-2925359.html
2925289 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: பிண்ணாக்குக் கீரை Wednesday, May 23, 2018 05:56 AM +0530 உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

 • வெள்ளைப்படுதல் குணமாக பிண்ணாக்குக் கீரையை அரைத்து சாறு (250 மி.லி) எடுத்து அதனுடன் கடுக்காய் தோலை (5) ஊறபோட்டு பிறகு காயவைத்து எடுத்து பொடியாக்கி காலை மாலை என இருவேளையும் தலா 2 கிராம் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
 • உடல் பலம், நரம்புகள் வலுப்பெற பிண்ணாக்குக் கீரையை அரைத்து சாறு (250 மி.லி) எடுத்து அதனுடன் 20 கிராம் அளவு அமுக்கரா கிழங்கை ஊறவைத்து பின்பு காயவைத்துப் பொடியாக்கி காலை மாலை என இருவேளையும் தலா 2 கிராம் அளவு எடுத்து சுடுநீரில் கலந்து குடித்து வந்தால் உடல் பலம் அதிகரிக்கும், உணர்வு நரம்புகளும் வலுப்பெறும்.
 • மலச்சிக்கல் குணமாக பிண்ணாக்குக் கீரையுடன் மிளகு, பூண்டு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
 • பிண்ணாக்குக் கீரையுடன் நிலாவரை இலையைச் சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடித்து வந்தால், மலம் தாராளமாகக் கழிந்து குடலில் உள்ள கிருமிகள் ஒழியும்.
 • உடல் சூடு தணிய பிண்ணாக்குக் கீரையை அரைத்து சாறு எடுத்து அதனுடன் நெல்லிக்காய், சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து கலந்து ஊறவைத்து பின்பு காயவைத்துப் பொடியாக்கி வைத்துக் கொண்டு தினமும் காலை மாலை என இருவேளையும் தலா இரண்டு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

KOVAI  HERBAL  CARE  VEGETABLES CLINIC

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609 / Covaibala15@gmail.com

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/23/w600X390/pinakku-keerai.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/may/23/இன்றைய-மருத்துவ-சிந்தனை-பிண்ணாக்குக்-கீரை-2925289.html
2922267 மருத்துவம் உணவே மருந்து தலைமுடி அடர்த்தியாக வளர என்ன செய்யலாம்? இதோ ஒரு எளிய வழி! சினேகா Friday, May 18, 2018 11:37 AM +0530 நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் பொருட்களில் வெந்தயம் முக்கிய பங்கு வகுக்கிறது. இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது. நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான பயன்களும் வெந்தயத்தில் உள்ளது.

வெந்தய விதைகளில் புரதம், சர்க்கரை, வைட்டமின், உலோகச்சத்து, அமினோ அமிலங்கள் ஆகியவை அடங்கியிருக்கின்றன. வெந்தய இலைகளிலும், தண்டுகளிலும் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன் உடலை சமநிலையில் வைக்கவும் வெந்தயம் பயன்படுகிறது.

இரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் எழுந்து அந்த தண்ணீரை பருகி வந்தால் உடல் குளிர்ச்சியாகவும், மலக்சிக்கலை போக்கவும் நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது. கோடைக்காலத்தில் மோரில் வெந்தயத்தை ஊற வைத்து குடித்து வர நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.

வெந்தயத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் குறைவதோடு சீக்கிரம் புண்ணை ஆற்றும் தன்மைக் கொண்டது. வயிற்றுப்போக்கை குணமடையச் செய்வதோடு, தாய்ப்பால் பெருக்கும் தன்மையும் இதற்கு உண்டு.

சர்க்கரை வியாதி குறைக்கும் மருத்துவ குணமும் இதில் உள்ளது. வெந்தய கீரையைப் பகலில் சமைத்து சாப்பிட்டு வர வாய்வு தொல்லையிலிருந்து விடுபடலாம். வயிற்று உப்புசம் இருந்தாலும் குறையும். வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும்.

மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்புசம் இருந்தாலும் தணிந்து விடும். வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, சுண்டக்காய்ச்சி, இருவேளையும் அரை டம்ளர் வீதம் குடித்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும். பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்னையில் இருந்து விடுபட வெந்தயம் உதவுகிறது.

இரவு உறங்க செல்லும் முன் வெந்தயத்தை ஊற வைத்துவிட்டு காலையில் அதை விழுதாக அரைத்து அரை மணி நேரம் தலையில் தடவி குளித்து பாருங்கள், முடி உதிர்வது குறைவதோடு, அடர்த்தியாக வளரவும் செய்கிறது. பொடுகுப் பிரச்னை, அரிப்பு, குறைவதோடு முடி பளபளப்பாகவும் வைக்கிறது. வெந்தய விழுதை பருக்கள் மீது தடவ பருக்கள் மறையும்.

]]>
வெந்தயம், Fenugreek, methi seeds, venthayam, வெந்தய விதை, வெந்தய கீரை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/18/w600X390/Long-hair.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/may/18/health-benefits-of-methi-seeds-vendhayam-2922267.html
2917755 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: பருப்புக் கீரை Friday, May 11, 2018 05:48 PM +0530 உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

 • நன்றாகப் பசி எடுக்க பருப்புக் கீரையுடன்,குடை மிளகாய், வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டு வந்தால் நன்றாகப் பசி எடுக்கும். முகப்பொலிவும் கூடும்.
 • உடல்சூட்டால் உண்டாகும் தலைவலி நீங்க பருப்புக் கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து நெற்றியில் பறாறுப் போட்டு வந்தால் உடல் சூட்டால் உண்டாகும் தலைவலி நீங்கும்.
 • கல்லீரல் வீக்கம் குணமாக பருப்புக் கீரை, கீழாநெல்லி இவை இரண்டையும் சம அளவு எடுத்து அதனுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகும்.
 • மதுப்பழக்கத்தில் இருந்து விடுபட பருப்புக் கீரை (ஒரு கைப்பிடி அளவு), சீரகம் (1 ஸ்பூன்) இரண்டையும் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால்  குடிப்பழக்கத்திலிருத்து முற்றிலும் விடுபடலாம்.
 • கொழுப்புகள் கரைய பருப்புக் கீரை (ஒரு கைப்பிடி அளவு), பூண்டு (3 பல்) சேர்த்து அரைத்து காலையில் வெறும்வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கொழுப்புகள் கரையும்.
 • தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க தாய்ப்பால் சுரப்பு குறைவாக உள்ள தாய்மார்கள் தினமும் உணவில் பருப்புக்கீரையைச் சேர்த்து  சமைத்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609 / Covaibala15@gmail.com

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/11/w600X390/parapukeerai.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/may/11/இன்றைய-மருத்துவ-சிந்தனை-பருப்புக்-கீரை-2917755.html
2917081 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: அகத்திக் கீரை Thursday, May 10, 2018 03:16 PM +0530 உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

 • பித்த வெடிப்புகள் குணமாக அகத்திக் கீரை , மருதாணி இலை , மஞ்சள்  இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துத் தடவி வந்தால் கால்களில் ஏற்படும்  பித்தவெடிப்பு குணமாகும்.
 • தொடர் தும்மல் நிற்க அகத்திக் கீரைச் சாறு மற்றும் அகத்திப் பூச்சாறு இவை இரண்டையும் சம அளவு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலையில் குடித்து வந்தால் தொடர் தும்மல் நிற்கும்.
 • நெஞ்சு வலி குணமாக அகத்திக் கீரையை வெய்யிலில் காயவைத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 5 கிராம் அளவுக்கு எடுத்து காலை மாலை என இருவேளையும் சுடுநீரில் கலந்து குடித்து வந்தால் நெஞ்சு வலி குணமாகும்.
 • வயிற்று வலி உடனே குணமாக அகத்திக் கீரை வேகவைத்த தண்ணீரில் தேன் சேர்த்து கலந்து குடித்துவந்தால் வயிற்று வலி உடனே குணமாகும்.
 • கண் எரிச்சல் நீங்க அகத்திக் கீரைச் சாற்றுடன் , துவரம் பருப்பு (100 கிராம்) மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்து வேகவைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் குணமாகும்.
 • மூலக்கிருமிகள் , இரத்தமூலம் குணமாக அகத்திக் கீரைச் சாறு எடுத்து அதனுடன் கடுக்காய்(5) உடைத்துப் போட்டு கஷாயமாகத் தயாரித்து அதனை வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி சுமார் அரை மணிநேரம் ஆசனக் குளியல் செய்து வந்தால் , மூலக் கிருமிகள் , மூல எரிச்சல் , மூலச் சூடு , இரத்த மூலம் போன்றவை முழுமையாகக் குணமாகும்.

KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609 / covaibala15@gmail.com

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/10/w600X390/agathikeerai.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/may/10/இன்றைய-மருத்துவ-சிந்தனை-அகத்திக்-கீரை-2917081.html
2916462 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: நன்னாரி DIN DIN Wednesday, May 9, 2018 03:47 PM +0530 உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

 • உடல் பருமன் குறைய நன்னாரி, தனியா, சோம்பு இவை மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து  தினமும் காலை மாலை என இருவேளையும் தலா மூன்று கிராம் அளவுக்கு தேனில் அல்லது சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
 • கொழுப்புகள் கரைய நன்னாரி வேரை (100 கிராம்), நெல்லிக்காய் சாற்றில் (500 மில்லி) ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு கரையும் . இதயம் வலுவடையும்.
 • சிறுநீரக சார்ந்த பிரச்சனைகள் தீர நன்னாரி, சதகுப்பை இவை இரண்டையும் சம அளவு எடுத்து கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் சிறுநீரக சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
 • அஜீரணம் குணமாக நன்னாரி வேரை இடித்துச் சாறு பிழிந்து தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் அஜீரணம் குணமாகும்.
 • சிறுநீரக, பித்தப்பைக் கற்கள் கரைய நன்னாரி, நெருஞ்சில் இவை இரண்டையும் சம அளவு எடுத்து கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள், பித்தப் பை கற்கள் கரையும்.
 • பித்தம் மற்றும் உடல் சூடு தணிய குறைய நன்னாரி,வெட்டி வேர் இவை இரண்டையும் சம அளவு எடுத்து கஷாயம் வைத்து குடித்து வந்தால் பித்தம் மற்றும் உடல் சூடு தணியும்.
 • தோல் நோய்கள் குணமாக நன்னாரி வேரை இடித்துச் சாறு (10 மில்லி) எடுத்து காலை மாலை என இருவேளையும் குடித்து வந்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist

Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/9/w600X390/nanaari.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/may/09/இன்றைய-மருத்துவ-சிந்தனை-நன்னாரி-2916462.html
2915810 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: பிரமந்தண்டு Tuesday, May 8, 2018 10:21 PM +0530 உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

 • மலக்குடல் புழு, கீரிப்பூச்சி நீங்க பிரமந்தண்டு வேரை அரைத்து (5 கிராம்) அளவு எடுத்து சுடுநீரில் (50 மி.லி), கரைத்து, காலையில் வெறும் வயிற்றில் கொடுத்து வந்தால் மலக் குடலில் உள்ளபுழு மற்றும் கீரிப்பூச்சிகள்  போன்றவை குணமாகும்.
 • கண்பார்வை மங்கல், எரிச்சல் நீங்க பிரமந்தண்டு பூவை நீரில் ஊறவைத்து அந்த நீரை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் 40 நாளில் கண்பார்வை மங்கல், எரிச்சல், நீர் வடிதல் குணமாகும்
 • பல் ஆட்டம், சொத்தை நீங்க பிரமந்தண்டு செடியை உலர்த்திய பின் எடுத்துச் சாம்பலாக்கி, துணியில் சலித்து வைக்கவும். இப்பொடியில் பல் துலக்கி வந்தால் பல் ஆட்டம், சொத்தை, சீழ் வடிதல், வீக்கம் குணமடையும். சிறந்த மருந்து பற்பொடி இதுவாகும்.
 • ஆஸ்துமா, இரைப்பு, இருமல் நீங்க பிரம்ந்தண்டு இலையை காயவைத்து எரித்து அந்த சாம்பல் பொடியை (2கிராம்) அளவு எடுத்து தேனில் குழைத்து தினமும் காலை மாலை என இருவேளையும் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா, இரைப்பு, இருமல், காசம் ஆகிய நோய்கள் குணமாகும்.
 • உள்ளங்கால், கை புண்கள் ஆற பிரமந்தண்டு இலையை அரைத்து உள்ளங்கால், கை, பாதங்களில் வரும் புண்கள், சொறி, சிரங்கு நீர் வடியும். கரப்பான் படை போன்றவற்றின் மீது பூசி வந்தால் அவை விரவில் குணமடையும்.

KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609 
Covaibala15@gmail.com

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/8/w600X390/moolagai.JPG http://www.dinamani.com/health/healthy-food/2018/may/08/இன்றைய-மருத்துவ-சிந்தனை-பிரமந்தண்டு-2915810.html
2911932 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: மருதாணி Wednesday, May 2, 2018 02:56 PM +0530 உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

 • கல்லீரல், மண்ணீரல் பிரச்சனைகள் தீர மருதாணிச்  செடியின் பட்டைகளை நீரில் ஊறவைத்து பின்பு அந்த நீருடன் தேன் கலந்து காலை மாலை என இருவேளையும் குடித்துவந்தால் கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்கள் குணமாகும்.
 • இளநரை நீங்க மருதாணி இலைச் சாறு (2 லிட்டர்), நல்லெண்ணெய் (2லிட்டர்), பசும்பால் (2லிட்டர்), மூன்றையும் ஒன்றாகக் கலந்து காய்ச்சி வைத்துக்கொண்டு தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் இளநரை நீங்கும்.
 • பித்தவெடிப்பு நீங்க மருதாணி இலையை தயிர் சேர்த்து அரைத்து, இரவு படுப்பதற்கு முன் காலில் உள்ள பித்த வெடிப்புகளில் தடவிகொண்டு வந்தால் விரைவில் பித்த வெடிப்பு குணமாகும்.
 • நன்றாகத் தூக்கம் வர மருதாணிப் பூக்களைப் பறித்து, தலையணையின் கீழ் வைத்து படுத்தால் நன்றாகத் தூக்கம் வரும்.
 • தேமல், படை குணமாக மருதாணி இலைச் சாறு, வெங்காயச் சாறு இரண்டையும் ஒன்றாகக் கலந்து தேமல், படை மீது இரவில் தடவி காலையில் குளித்து வந்தால் விரைவில் குணம் பெறலாம்.
 • முடி கருப்பாக மாற மருதாணி இலை, அவுரி இலை இரண்டையும் தேங்காய் எண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்துவந்தால் முடி கறுப்பாக மாறும்..

KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609 /  covaibala15@gmail.com

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/2/w600X390/marudhani.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/may/02/இன்றைய-மருத்துவ-சிந்தனை-மருதாணி-2911932.html
2910615 மருத்துவம் உணவே மருந்து இந்தக் கோடை காலத்தில் உங்கள் குழந்தைகள் ஒழுங்காக சாப்பிடுகிறார்களா? சினேகா DIN Monday, April 30, 2018 04:27 PM +0530  

கொளுத்தும் வெயில் காலம் தொடங்கிவிட்டது. குழந்தைகள் ஓடியாடி விளையாடிவிட்டு களைப்பாக வருவார்கள். வெயில் வியர்வை போன்றவற்றால் அவர்கள் உடலிலிருந்து வெளியேற நீர்ச்சத்தை திரும்ப பெற, உணவில் அக்கறையுடன் இருக்க வேண்டும். கோடையில் பெரும்பாலும் குழந்தைகள் சாதம் போன்ற திட உணவுகளை சாப்பிட மறுப்பார்கள். முக்கியமாக காய்கறிகள், பழங்கள் என்றாலே முகம் சுளிப்பார்கள். எப்படி அவர்களை சத்தான உணவுகளை சாப்பிட வைப்பது? அதுவும் வேலைக்குப் போகும் தாய்மார்கள் என்றால் இன்னும் சிரமம்தான்.

இந்தக் காலத்து குழந்தைகளின் உணவு விருப்பம் என்வென்பதைத் தெரிந்து கொள்ள நீங்கள் கேஎஃப்சி அல்லது மெக் டொனால்ட் பக்கம் தான் போய்ப் பார்க்க வேண்டும். அவர்கள் சாப்பிடும் உணவில் நிச்சயம் போதிய ஊட்டச் சத்துக்கள் இருக்காது. அல்லது அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகளையே பெரிதும் விரும்புகிறார்கள். பள்ளி நேரங்களில் காலை உணவு சாப்பிட நேரம் இருக்காது, மதியம் டப்பாவில் அடைக்கப்பட்ட அளவு உணவு பெரும்பாலும் அது அவர்களுக்குப் போதாது. மாலை வீட்டுக்கு வந்தபின் எதாவது ஸ்னாக்ஸ் என்ற பெயரில் கொறிக்கிறார்கள். இரவு உணவு டிவி அல்லது செல்ஃபோனைப் பார்த்தபடியேதான். இப்படி நிலைமை தொடர்ந்து கொண்டிருந்தால் குழந்தைகள் கடும் உடல்நிலை பாதிப்புக்குள்ளாவார்கள்.

பெரும்பாலும் டயட்டீஷியன்கள் பரிந்துரைப்பது நமது பாரம்பரிய உணவு வகைகளைத் தான். அன்றாடம் நம் வீட்டில் சமைக்கும் இட்லி, தோசை, பூரி, பொங்கல், சப்பாத்தி என இதில் ஏதாவது ஒன்றை காலையில் சாப்பிட வையுங்கள். இணை உணவாக காய்கறிகளை வேக வைத்து சூப் தயாரித்து கொடுங்கள். தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி, கறிவேப்பிலை அல்லது கொத்தமல்லியில் சட்னி சிறந்தது.

பழங்களை நன்றாக நறுக்கி, சிறிதளவு தேன் சேர்த்து விதவிதமான சாலட்களைத் தயாரித்து மதிய உணவுக்கு முன்னால் சாப்பிடக் கொடுங்கள். கூடுமானவரை பழங்களாகவே சாப்பிடப் பழக்குங்கள். ஜூஸ் வேண்டாம். 

மதிய வேளையில் வயிறு நன்றாக நிரம்பும் படியாக உணவு தரவேண்டும். நெய் விட்டுப் பிசைந்த பருப்பு சாதம் அல்லது சாம்பார் சாதம், கீரை சாதம், காய்கறி சாதம் என சத்துள்ளதாக தரவேண்டும். புளி சாதம் கலந்து தருவதை வெயில் காலத்தில் தவிர்க்கவும். அதிகமான மசாலாவும் சேர்க்க வேண்டும். மைதா கலந்த உணவுகளை அறவே தவிர்க்கவும். ஊறுகாய், அப்பளம் உள்ளிட்ட எண்ணெயில் தயாரிக்கப்படும் உணவுகளுக்கு தடா போடுங்கள். ஜன்க் புட்ஸ் நிச்சயம் கூடாது. ஹோட்டல், அல்லது தெருமுனை கடைகளில் விற்கப்படும் உணவுகளை தவிர்ப்பது நலம்.

நவதானியங்களைச் சேர்த்து அரைத்த மாவில் செய்த தோசையை மாலை வேளையில் கொடுங்கள். அவித்த வேர்க்கடலை, பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு போன்றவை உடல் பலத்துக்கு நல்லது. பயிறு வகைகளையும் பிடித்த வகையில் சமைத்து அவ்வப்போது கொடுத்து வாருங்கள். உங்கள் குழந்தைகளுக்கு அதிகளவு எனர்ஜி கிடைப்பதுடன் நோய் எதிர்ப்பு ஆற்றலும் விரிவாகும்.

ப்ரிட்ஜ் வாட்டர் தான் வேண்டும் என வாண்டுகள் அடம் பிடிக்கலாம். மண் பானை வைத்து அதிலிருந்து நீரை எடுத்துப் பருகச் சொல்லுங்கள். மோர், லெமன் ஜூஸ், இளநீர், நுங்கு, தர்பூசணி, கிர்ணிப் பழம் என தினமும் ஒன்று சாப்பிடத் தரலாம்.

]]>
food, summer food for kids, குழந்தைகள் சத்துணவு, வெயில், கோடை ரெசிபி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/30/w600X390/kidos.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/apr/30/summer-food-for-kids-2910615.html
2910592 மருத்துவம் உணவே மருந்து இளமைத் தோற்றம் வேண்டுமா? இதைச் சாப்பிடுங்கள்! சினேகா Monday, April 30, 2018 03:14 PM +0530  

இறால் மீனில் செலினியம் அதிகமாக உள்ளதால் புற்றுநோய் வருவதை தடுக்கிறது. மேலும் இதில் அஸ்டக்ஸாந்தின் என்ற கரோடெனாய்ட் அதிகளவில் அடங்கியுள்ளது. இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாகும். அதனால் சூரிய ஒளி மற்றும் புற ஊதா கதிர்வீச்சுகளால் ஏற்படும் சரும சுருக்கங்கள் மற்றும் பாதிப்புக்களை நீக்கி இளமையைத் தக்க வைக்க உதவும். தினமும் அல்லது வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வர உடல் எடை குறைவதுடன் சருமம் பளபளப்பாகும்.

இறாலில் உள்ள கார்போஹைட்ரேட், புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்துக்கள் போன்றவை உடலுக்கு தேவையான அளவு சக்தியை தருகின்றன. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. வைட்டமின் பி12 மற்றும் இரும்புச்சத்து உள்ளதால் அதிக ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து ரத்தசோகை ஏற்படுவதைத் தடுக்கும்.

அடிக்கடி இதனை உணவில் சேர்த்துக் கொண்டால், இதிலுள்ள பாஸ்பரஸ் மற்றும் கால்ஷியம் எலும்புகளை வலுப்படுத்துகின்றன. இறாலிலுள்ள மக்னீஷியம் சத்து சர்க்கரை நோய் வருவதை தடுக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள். இறாலில் சமைத்த உணவு கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. காரணம் இதில் அயோடின் சத்து உள்ளது. இது தவிர ருசிக்காக சாப்பிடும் இறாலில் உடல் நலத்துக்காக அனேக விஷயங்கள் உள்ளது என்கிறார்கள் ஊட்டச் சத்து நிபுணர்கள்.

சுவையான இறால் ரெசிபி ஒன்று - பூண்டு இறால்

தேவையான பொருட்கள்: 

இறால் - ½ டீஸ்பூன்

சோள மாவு - 1 டீஸ்பூன்

மிளகு - ½ டீஸ்பூன்

முட்டை - ½

மைதா - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

வெங்காயம் - 2

மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்

தக்காளி காய் - 1 ½ டீஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் சுத்தப்படுத்தி வைத்துள்ள இறால், மிளகு தூள், உப்பு, முட்டை கரு, மைதா, சோள மாவு இவை அனைத்தும் கலந்து ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நசுக்கிய பூண்டு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், மிளகாய் விழுது, தேவையான அளவு தக்காளி சாஸ், சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிய பின், வறுத்து வைத்துள்ள இறால், மிளகுத் தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் பிறகு பரிமாறவும்

சப்பாத்தி, சாதம், தயிர் சாதம் ஆகியவற்றுக்குப் இணை உணவாக இது பொருந்தும்.
 

]]>
prawns, iraal, fish, sea food, இறால், ப்ரான்ஸ், கடல் உணவு, இறால் ரெசிபி, பூண்டு இறால் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/30/w600X390/garlic-prawns.jpeg http://www.dinamani.com/health/healthy-food/2018/apr/30/இளமைத்-தோற்றம்-வேண்டுமா-இதைச்-சாப்பிடுங்கள்-2910592.html
2904111 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: சித்தரத்தை Friday, April 20, 2018 04:58 PM +0530 உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

 • மூட்டு வலி, வாத வலிகள் நீங்க சித்தரத்தை, அமுக்கரா, சுக்கு இவை மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து, இரண்டு கிராம் பொடியை தினமும் காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால், மூட்டு வலி, வாத நோய்கள் அனைத்தும் குணமாகும்.
 • மாரடைப்பு வராமல் தடுக்க சித்தரத்தை,தாமரைப் பூ  இவை இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து, ஒரு ஸ்பூன் அளவுக்குத் தினமும் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.
 • நெஞ்சில் உள்ள கோழை வெளியேற சித்தரத்தை(10 கிராம்) எடுத்து இவற்றுடன் பனைவெல்லம் சேர்த்து கஷாயமாக்கி குடித்து வந்தால் நெஞ்சில் கட்டியிருக்கும் கோழை கரைந்து வெளியேறும்.
 • இருமல், வறட்டு இருமல் தணிய சித்தரத்தை(5 கிராம்) எடுத்து இவற்றுடன் உலர்ந்த திராட்சை (10) ஆகியவற்றைச்  சேர்த்து கஷாயம் காய்ச்சிக் குடித்து வந்தால் இருமல் தணியும்.
 • சித்தரத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுத்துக் கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் சளி குணமாகும்.
 • பல் கூச்சம், பல் சார்ந்த பிரச்சனை தீர சித்தரத்தை, காவிக்கல், படிகாரம், ஆலம்பட்டை ஆகியவற்றைச் சம அளவு எடுத்துப் பொடி செய்து, அதில் பல் துலக்கி வந்தால், பல் வலி, பல் கூச்சம்  உள்ளிட்ட பல் மற்றும் ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும்.


KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist

Cell  :  96557 58609 / Covaibala15@gmail.com

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/20/w600X390/siddharathai.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/apr/20/இன்றைய-மருத்துவ-சிந்தனை-சித்தரத்தை-2904111.html
2904092 மருத்துவம் உணவே மருந்து வெயிலுக்கு இதமாக கம்மங்கூழ் குடிக்கலாம் வாங்க! ராக்கி Friday, April 20, 2018 01:31 PM +0530 தேவையான பொருட்கள்

கம்பு குருணை - 1 கப்
தண்ணீர் - 3 கப்
தயிர் - 1 கப்
மோர் - 2 கப்
வெங்காயம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு

செய்முறை

கம்பு குருணையைக் கழுவி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் 3 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 6 விசில் வரை நன்றாக வேக விடவும். வெந்து ஆறியதும் மோர், தயிர், உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு நன்றாக நீர்க்கக் கரைக்கவும். சுவையான கம்மங்கூழ் தயார்.

வேக வைத்த கம்பை உருண்டைகளாக உருட்டி வைத்து, தேவைப்படும் போது ஒரு உருண்டை எடுத்து கரைக்கலாம். சூடாக இருக்கும் போது சாதமாகவும் சாப்பிடலாம். மீதமான கம்புருண்டைகளைத் தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும்.  

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/20/w600X390/koozh.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/apr/20/வெயிலுக்கு-இதமாக-கம்மங்கூழ்-குடிக்கலாம்-வாங்க-2904092.html
2902648 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: லவங்கப் பட்டை Wednesday, April 18, 2018 10:46 AM +0530 உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

 • சர்க்கரை நோய்க்குத் தீர்வு லவங்கப் பட்டை, சிறுகுறிஞ்சான் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து வைத்துக்கொண்டு தினமும் இருவேளை 2கிராம் அளவுக்கு  சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
 • நுரையீரல் சார்ந்த பிரச்சனை தீர லவங்கப்பட்டை (100கிராம்) மற்றும் மிளகு, திப்பிலி தலா 10கிராம் எடுத்துப் பொடி செய்துகொள்ளவும். இதில் தினமும் காலை வெறும் வயிற்றில் இரண்டு கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட்டுவந்தால் நுரையீரல் சார்ந்த கோளாறுகள்,   சளி, தலைபாரம் போன்றவை குணமாகும்.
 • வயிற்றுவலி உடனே தீர லவங்கப் பட்டை, சுக்கு, ஏலக்காய் மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து, இரண்டு கிராம் அளவு மோரில் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி உடனே தீரும்.
 • அதிக இரத்தப்போக்கு நிற்க லவங்கப் பட்டையைப் பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டுவந்தால் மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு நிற்கும்.
 • கெட்ட கொழுப்புகள் கரைய லவங்கப் பட்டையுடன் வேப்பிலை, மிளகு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து, அதிகாலையில் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.
 • அனைத்து வாயுக் கோளாறுகள் நீங்க லவங்கப் பட்டை, சுக்கு, ஓமம் மூன்றையும் தலா 50 கிராம் எடுத்துப் பொடி செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு எடுத்து காலை, மாலை உணவுக்குப் பிறகு சாப்பிட்டு வந்தால் அனைத்துவிதமான  வாயுக் கோளாறுகளும் குணமாகும்.

KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC

கோவை பாலா, 

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609 / Covaibala15@gmail.com

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/18/w600X390/lavangaPattai.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/apr/18/இன்றைய-மருத்துவ-சிந்தனை-லவங்கப்-பட்டை-2902648.html
2901995 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: மகிழ மரம் Tuesday, April 17, 2018 01:03 PM +0530  

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

 • ஆண்மைக் குறைபாடு நீங்கி ஆண்மை அதிகரிக்க மகிழம் பூ , மல்லிகப் பூ இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து ஆண்குறியில் தடவி வந்தால் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.
 • மகிழம் பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி  அவற்றை வடிகட்டி அந்த தண்ணீருடன் கொஞ்சம் பால் கலந்து குடித்துவந்தால் ஆண்மை அதிகரிக்கும்.
 • கருப்பை பலமடைய மகிழம் பட்டையை (10கிராம்) எடுத்து அவற்றை பொடியாக்கி அரை லிட்டர் நீரில் போட்டு 100 மி.லி.யாகக் காய்ச்சி வடி கட்டி தேன் சேர்த்து தினமும் 50 மி.லி வீதம் காலை, மாலை  என இருவேளையும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கருப்பை பலவீனம் தீரும். காய்ச்சல் தணியும்.
 • பல் சார்ந்த பிரச்சனைக்குத் தீர்வு மகிழ மரத்தின் பிஞ்சுகளை(2) வாயில் மென்று அவற்றை துப்பிவிட்டு வெந்நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.
 • தளர்ந்த மார்பகம் அழகாக மகிழம் பூவை பறித்து பெண்களின் தளர்ந்த மார்பகங்கள் மீது வைத்துக்கட்டிக் கொண்டு வந்தால் மார்பகங்கள்  இறுகி எடுப்பாகாத் தோன்றும்.
 • உடலுறவு வேட்கை அதிகரிக்க மகிழம் பூ , ஜாதிக்காய் இவை இரண்டையும் சம அளவு சேர்த்துச் அரைத்து சாப்பிட்டு வந்தால் உடலுறவு வேட்கை அதிகம் உண்டாகும்.

 

குறிப்பு :  மகிழமரம் தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தானாகவே வளர்கிறது. இதற்கு அதிக ஈரப்பதம் தேவையில்லை ஆனால் தண்ணீர் தேங்கக் கூடாது.

KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC

கோவை பாலா,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609 / Covaibala15@gmail.com

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/17/w600X390/magilammaram.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/apr/17/இன்றைய-மருத்துவ-சிந்தனை-மகிழ-மரம்-2901995.html
2899483 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: பாகற்காய் Friday, April 13, 2018 03:46 PM +0530
உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

 • ஆசனவாய் புண் விரைவில் குணமாக பாகற்காய் இலையை அரைத்துச் சாறு எடுத்து ஆசனவாய்ப் புண்களில் தடவி வந்தால் புண்கள் விரைவில் குணமாகும்.
 • பெருவயிறு கரைய பாகற்காய் சாறு(500 மில்லி), அதில் ஒமத்தை (150 கிராம்) ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து, தினமும் 5 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் பெருவயிறு கரையும்.
 • நீரிழிவு கட்டுப்பாட்டில் வைக்க பாகற்காயை வெய்யிலில் காயவைத்துப் பொடி செய்து, தினமும் உணவு சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம்.
 • பாகற்காய் சாற்றில் வெந்தயத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் குடல் நோய்கள், சர்க்கரை நோய், உடல் பலவீனம் போன்றவை குணமாகும்.
 • வயிற்றுப் பூச்சிகள் ஒழிய பாகற்காயின் விதையை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.
 • பாகற்காயில் “பீட்டா-கரோட்டின்”மற்றும் “வைட்டமின்-ஏ” உள்ளதால், கண் சம்மந்தமான நோய்களுக்கு தீர்வாக உள்ளது. மேலும் இதில் உள்ள “வைட்டமின்-சி” மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து உங்களை பாதுகாக்கும்.
 • பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் மூட்டு வலி வராது.


KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist
Cell : 96557 58609 / Covaibala15@gmail.com

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/13/w600X390/paakarkai.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/apr/13/இன்றைய-மருத்துவ-சிந்தனை-பாகற்காய்-2899483.html
2894875 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: பரட்டைக் கீரை DIN DIN Friday, April 6, 2018 02:59 PM +0530 உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

 • சளி, இருமல் குணமாக பரட்டைக் கீரையை அரைத்துச் சாறு எடுத்து அவற்றில் சுக்கை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தேனில் ஒரு கிராம் அளவு குழைத்துச் சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் குணமாகும்.
 • வாயுக் கோளாறு, பெரு வயிறு குறைய பரட்டைக் கீரையுடன் பூண்டு, மிளகு, ஒமம் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டு வந்தால் வாயுக் கோளாறுகள், பெருவயிறு குணமாகும்.
 • கை, கால், இடுப்பு, மூட்டு வலிகள் குணமாக பரட்டைக் கீரை, வாதநாராயணன் கீரை, முடக்கத்தான் கீரை இவை மூன்றையும் சம அளவு எடுத்து சாறு பிழிந்து, அதில் நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி தைலமாக்கித் தேய்த்துவந்தால் கை, கால், இடுப்பு,மூட்டு வலிகள் குணமாகும்.
 • மூச்சிரைப்பு குணமாக பரட்டைக் கீரை, தூதுவளை, முசுமுசுக்கை இவை மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் 2கிராம் அளவுக்கு எடுத்து  காலை,மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு குணமாகும்.
 • மலச் சிக்கல் பிரச்சனை தீர பரட்டைக் கீரையை உலர்த்திப் பொடியாக்கி, இரவில் அரை ஸ்பூன் அளவு  எடுத்து சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
 • சொறி, சிரங்கு, படை குணமாக பரட்டைக் கீரைச் சாறு எடுத்து அவற்றில் தேங்காய் எண்ணெய் கலந்து தைலமாகக் காய்ச்சி பயன்படுத்தி வந்தால் படை, சொறி,சிரங்கு போன்றவை குணமாகும்.
 • குறிப்பு : பரட்டைக் கீரை குளுமையான தட்பவெப்பத்தில் பயிராகிறது. அதிக குளிர் அல்லது சூடான பருவங்களில் பயிராகுவதில்லை.

KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC

கோவை பாலா,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609 / Covaibala15@gmail.com

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/6/w600X390/parataikeerai.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/apr/06/இன்றைய-மருத்துவ-சிந்தனை-பரட்டைக்-கீரை-2894875.html
2893590 மருத்துவம் உணவே மருந்து கோடையை வென்றெடுக்க குல்பி ஐஸ் சாப்பிடுங்க! இதோ ரெசிபி! உஷாகுமாரி DIN Wednesday, April 4, 2018 01:48 PM +0530 தேவையானவை: 

பால் - 1 லிட்டர்
பிரட் - 2 துண்டுகள்
சர்க்கரை - 3 தேக்கரண்டி
ஏலக்காய்ப்பொடி - சிறிது
குல்பி எஸன்ஸ் - சிறிதளவு
குல்பி - மோல்டு
துருவிய முந்திரி,பாதாம் - அரை கிண்ணம்


செய்முறை: பிரட்டின் ஓரங்களை நீக்கி பாலில் ஊறவைத்து சர்க்கரைப் பொடி, பாதி துருவிய பருப்புகள், பால் சேர்த்து நன்கு அடிக்கவும். அடுப்பில் மிதமான தீயில் வைத்து கிளறி ஒரு கொதிவிட்டு ஏலக்காய் தூவி அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட்டு குல்பி எஸன்ûஸ மீதமுள்ள பருப்புகள் சேர்த்து மோல்டில் ஊற்றி பிரிஜ்ஜில் 10 மணி நேரம் வைத்து எடுத்தால் சுவையான குல்பி தயார்.

]]>
gulfi, ice cream, kulfi, குல்பி, ஐஸ், ரெசிபி, குல்ஃபி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/4/w600X390/gulfi.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/apr/04/recipe-of-kulfi-ice-cream-2893590.html
2893589 மருத்துவம் உணவே மருந்து கூல் ரெசிபி ஃபலூடா உங்களுக்காக! உஷாகுமாரி DIN Wednesday, April 4, 2018 01:45 PM +0530 தேவையானவை:
வேக வைத்த சேமியா - அரை கிண்ணம்
ஜவ்வரிசி - அரை கிண்ணம்
சப்ஜா விதைகள் - 1 தேக்கரண்டி
பழத்துண்டுகள் - 1 கிண்ணம்
(கருப்பு திராட்சை (விதை இல்லாதது), மாம்பழம், 
ஆப்பிள், வாழைப்பழம், பைனாப்பிள் )
ரோஸ் சிரப் - 2 தேக்கரண்டி
கண்டன்ஸ்டு மில்க் - அரை டின்
வெண்ணிலா ஐஸ்கிரீம் - 1 கப்
பால் - 1 டம்ளர்

செய்முறை: சப்ஜா விதைகளை இரவே ஊற வைத்து வைக்கவும். பாலை சுண்ட காய்ச்சவும். ஒரு உயரமான கண்ணாடி டம்ளரில் முதலில் சப்ஜா விதையைப் போடவும் பிறகு பாதிபாலில் ரோஸ் சிரப் சேர்த்து கலக்கவும் பிறகு பழத்துண்டுகள் ஒவ்வொன்றாகச் சேர்தது கண்டன்ஸ்டு மில்க் பாதியளவு ஊற்றவும் பிறகு சேமியா, ஐவ்வரிசி ஒவ்வொரு லேயராக சேர்க்கவும். பிறகு பால், ரோஸ் சிரப், பழத்துண்டுகள் சேர்த்து கண்டன்ஸ்டு மில்க் ஊற்றி மேலே ஐஸ்கீரிம் போட்டு ஒரு தேக்கரண்டி சேர்த்தால் ஃப்லூடா தயார்.

]]>
falooda, juice, recipe of falooda, ஃபலூடா, கூல், சம்மர், ஜூஸ் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/4/w600X390/falooda.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/apr/04/falooda-recipe-2893589.html
2893588 மருத்துவம் உணவே மருந்து சூடு தணிய ஜில் ஜில் ஜிகிர்தண்டா தயாரித்து குடியுங்கள்! இதோ எளிமையான ரெசிபி! உஷாகுமாரி Wednesday, April 4, 2018 01:41 PM +0530 தேவையானவை:

பாதாம் பிசின் - 2 தேக்கரண்டி
சுண்ட காய்ச்சிய பால் - 1 டம்ளர்
கண்டன்ஸ்டு மில்க் - கால் கிண்ணம்
நன்னாரி சிரப் - 2 தேக்கரண்டி
வெண்ணிலா ஐஸ்கிரீம் - 1 கப்

செய்முறை:

பாதாம் பிசினை 6 மணி நேரம் ஊறவிடவும்.

ஒரு நீளமான டம்ளரில் பாதாம் பிசினை போட்டு சுண்ட காய்ச்சிய பாலை ஊற்றவும்

அதில் நன்னாரி சர்பத் சேர்க்கவும்.

அதன் மேலே கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து, மேலே ஐஸ்கிரீம் போட்டுப் பரிமாறவும். தேவைப்பட்டால் ஜெல்லி சேர்த்துக் கொள்ளலாம்.  

சுவையான ஜிகர்தண்டா தயார்.

]]>
jigirthanda, summer recipe, cool, ஜிகிர்தண்டா, கோடை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/4/w600X390/images_1.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/apr/04/jigirthanda-2893588.html
2893573 மருத்துவம் உணவே மருந்து ஒரு நிமிடத்தில் ரய்த்தா தயாரிக்க இதோ ஓர் ஐடியா! சி.ஆர். ஹரிஹரன் DIN Wednesday, April 4, 2018 12:07 PM +0530  

பச்சை மிளகாய்களை மிக்ஸியில் அரைக்கும்போது துண்டுகளாக்கிப் போட்டாலும் பல சமயங்களில் நைஸாக அரைபடாமல் அப்படியே நறுக்நறுக்கென்றிருக்கும். மிளகாயை நீளவாக்கில் இரண்டாக வெட்டி அரைத்தால் நன்கு மசிந்துவிடும். மிளகாய் ரொம்ப நீளமாக இருந்தால் கூடுதலாக குறுக்காகவும் வெட்டிப் போடுங்கள்.

பாகற்காய் சமைக்கும்போது கசப்பு தெரியாமல் இருக்க சர்க்கரை அல்லது வெல்லம் சேர்ப்போம். அதற்கு பதில் பாகற்காயை பொரியலாகச் செய்யும் போது கேரட் அல்லது பீட்ரூட் துருவி தாளிப்புடன் சேர்த்து வதக்கிவிட்டு பின்னர் பாகற்காய் சேர்க்கவும். பாகற்காய் குழம்பு அல்லது பாகற்காய் பிட்லை செய்யும் போது சில துண்டுகள் கேரட்டையும் சேர்த்து வேகவிட்டால் ருசியும் சத்தும் கூடுவதோடு பாகற்காயின் கசப்புத் தன்மையும் குறைந்துவிடும்.

அதிக கனமுள்ள தோசைக்கல்லை தோசை சுடவும், கனமில்லாத கல்லை சாப்பாத்திக்கும் உபயோகிக்க வேண்டும்.

சாதம் வடிக்கும் போது சற்று குழைந்து விட்டது போன்று தெரிந்தால் உடனே சிறிதளவு நல்லெண்ணெய்யைத் சேர்த்தால் மேலும் குழையாமல் இருக்கும்.

குக்கரில் பொருள்களை வேக வைக்கும்போது தேவையான விசில் சத்தம் வந்ததும் உடனே அடுப்பை அணைக்காமல் அடுப்பை சிம்மில் இரண்டு நிமிடங்கள் வைத்தபின் அணைத்தால் பொருள்கள் சரியான பதத்தில் வெந்திருப்பதுடன் குக்கரையும் வழக்கத்தைவிட சீக்கிரம் திறக்கலாம்.

ஒரு நிமிடத்தில் ரய்த்தா தயாரிக்க இதோ ஓர் ஐடியா! ஒரு கிண்ணம் கெட்டித் தயிரில் இரண்டு சிட்டிகை உப்பும், அரை தேக்கரண்டி சாட் மசாலா அல்லது சன்னா மசாலா பொடியும் சேர்த்துக் கலக்கினால் ப்ரைடு ரைசுக்கு ஏற்ற அவசர ரய்த்தா ரெடி.

]]>
raitha, cucumbar, onion, ரய்த்தா, வெங்காய பச்சடி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/4/w600X390/download.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/apr/04/one-minute-raitha-2893573.html
2893570 மருத்துவம் உணவே மருந்து லேகியங்களைவிட இந்தப் பழம் அருமையான மருந்து! தினமும் சாப்பிடுங்கள்! எல்.மோகனசுந்தரி Wednesday, April 4, 2018 11:55 AM +0530 பலரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று பப்பாளிப் பழம். இது சத்துக்கள், மருத்துவ குணங்கள் நிறைய கொண்ட பழமாகும். பெரும்பாலும் கோடைகாலம்தான் இந்த பழத்திற்கான சீசன். இந்த பழத்திலிருந்து கிடைக்கும் சில பயன்கள்:


பப்பாளிப் பழத்தில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் நார்ச்சத்து நிறைய உள்ளது.

பப்பாளியில் உள்ள பேராக்ஸ்நேஸ் என்ற தாதுப்பொருள் உடலின் தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது.

அல்சர் தொல்லை உள்ளவர்கள் இந்தப் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம்.

இதிலுள்ள வைட்டமின் "ஈ' குடல் பகுதியில் கேன்சர் வராமல் தடுக்கிறது.

மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு லேகியங்களைவிட, பப்பாளிப் பழம் அருமையான மருந்து. இதை தவறாமல் தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வரவே வராது.

கிட்னியில் கல் இருப்பவர்கள் பப்பாளிப் பழத்தை தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் அடையலாம்.

சிலருக்கு அதிக புரோட்டின் நிறைந்த உணவு சாப்பிட்டால் செரிக்காமல் வயிறு கோளாறு ஏற்படும். அப்படி உள்ளவர்கள் உணவுக்குப்பின் இந்தப் பழத்தை சாப்பிட்டால் உணவை விரைவில் செரிக்க வைக்கும்.

பப்பாளிப் பழத்தை கூழாக்கி வாரம் இரண்டு முறை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள், சொரசொரப்பு தன்மை மாறி முகம் பளபளப்பாக மாறிவிடும்.

]]>
Papaya, medicine of papaya, பப்பாளி, மருத்துவ பலன், பப்பாளி ஜூஸ் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/4/w600X390/papaya.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/apr/04/eat-papaya-daily-for-better-health-2893570.html
2892896 மருத்துவம் உணவே மருந்து உங்களை இளமையாக மாற்றவல்ல காளான் காபியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உமா பார்வதி Tuesday, April 3, 2018 03:30 PM +0530  

நீங்கள் காபி பிரியர்களா? இதோ அது பற்றிய புதிய செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. உங்கள் மனத்துக்கு நெருக்கமான காபியை பலவிதமான ருசியில் குடித்திருப்பீர்கள். கருப்பட்டி காபி, சுக்குக் காபி, இஞ்சி காபி, பால் சேர்க்காத காபி, எலுமிச்சை காபி என இப்படி பலவகையான காபிகள் இருக்க, அதிலொன்று புதியதாக சேர்ந்தால் குடிக்க கசக்கவா செய்யும்? (காபி சற்றுக் கசந்தால் தான் சுவை என்பது காபி பிரியர்களின் கணக்கு) அப்படிப்பட்ட உங்கள் விருப்பமான காபியில் புதிய சுவையொன்றையும் சேர்த்து அருந்தி மகிழுங்கள். அதுதான் காளான் காபி! அதாவது வெளிநாடுகளில் இப்போது பிரபலமாகி வரும் மஷ்ரூம் காபி. இதற்கு முன்னால் இதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? இல்லையெனில் இதோ அது என்ன காளான் காபி என்று ஒரு கை பார்த்துவிடலாம்.

பொதுவாக காளான் வகை உணவுகள் ருசியாக இருப்பதுடன் அதன் மருத்துவப் பலன்களும் அதிகம் தான். காளானை காலகாலமாக சமைத்து சாப்பிட்டுவரும் சமூகம் தானே நாம். உணவில் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த இந்தக் காளானை காபியிலும் பயன்படுத்தலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் சில சுவை வல்லுநர்கள். 

அவ்வகையில் காளான் காபியை பிரபலமாக்கிய நிறுவனம்தான் ஃபோர் சிக்மாடிக். இதன் நிறுவனர் டெரோ இசொகெளபில்லா என்பவர் 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் காளான் காபியின் நன்மைகளைப் பற்றிக் கூறினார். 'காளான் காபிகள் வெவ்வேறு ருசிகளில் கிடைக்கின்றன. ரெய்ஷி எனும் காளான் வவையில் தயாரிக்கப்பட்ட காபியை குடித்தால், அது சருமத்தின் பளபளப்பை அதிகரிக்கும். தவிர இதில் இளமையைத் தக்க வைக்கக் கூடிய ஆன்டி ஆக்ஸிடெண்டுகள் அதிகம் உள்ளன’ என்றார் டெரோ.

காளான் காபி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ரத்த ஒட்டத்துக்கு மிகவும் நல்லது. மேலும் உடலின் சர்க்கரை அளவை சீராக்கி உடலின் மெட்டாபாலிச சக்தியை அதிகரிக்கச் செய்யும் என்று காளான் மகிமையை அடுக்கிக் கொண்டே போகிறார்கள் இதன் விரும்பிகள்.

காபியில் மட்டுமல்லாமல் காளானை மற்ற பானங்களிலும் கலந்து குடிக்கலாம். டீ மட்டும் மில்க் ஷேக்குகளிலும் கூட காளானைப் பயன்படுத்தினால் அதன் ருசி அதிகரிக்கும். லாஸ் ஏஞ்சலஸில் உள்ள 'வெல்னஸ் கஃபே' என்ற கடையில் 'ஷ்ரூம் ஷேக்' மற்றும் 'எலுமிச்சை மற்றும் காளான் கலந்த டீ மிகவும் பிரபலம்.

பிரபல உணவுச் சத்து நிபுணரான மாஷா டேவிஸ் என்பவர் கூறுகையில், ‘இந்தக் காளான் காபியில் நன்மைகள் இருப்பது உண்மைதான். ஆனால் நிறுவனங்கள் விளம்பர நோக்கில் அதன் பலன்களை மேலதிகமாகச் சொல்வதைத் தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது விற்பனைத் தந்திரமாக இருக்கலாம். பயனர்கள் அவர்வர் விருப்பத்துக்கும் சுவைக்கும் ஏற்ற வகையில் தங்களுக்கு  பிடித்த சத்தான உணவு மற்றும் பானங்கலை எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று அறிவுறுத்துகிறார்.

இந்த விளம்பர உலகில் காளான் காபி என்பது கார்ப்பரெட் காபியின் மறுபெயரா என்று நினைக்கத் தோன்றுகிறது. எனக்கெல்லாம் காலையில் எழுந்ததும் சுடச் சுட, சுழல் சுழலாக ஆவி பறக்க, அன்றைய செய்தித்தாளுடன் டிகாஷன் காபியே பரம சுகம்! அந்த நாளையென்ன? வாழ்க்கையே ருசிகரமாக கடந்துவிடலாம்!

]]>
cafe, காளான், Mushroom Cafe, காளான் காபி, மஷ்ரும் காபி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/3/w600X390/coffee-woman-stress-pixabay-1266295_1920aa-770x470.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/apr/03/mushroom-coffee-watch-out-for-this-new-caffeine-fad-2892896.html
2892899 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: எலுமிச்சை Tuesday, April 3, 2018 03:14 PM +0530 உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

 • அஜீரணக் கோளாறுகள் நீங்க எலுமிச்சம் பழச்சாறு, வெள்ளரிப் பிஞ்சு, உப்பு  மூன்றையும் ஒன்றாகக் கலந்து சாப்பிட்டு வந்தால்  அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
 • தலைமுடி கருமையாக வளர எலுமிச்சம் பழச்சாற்றில் தேயிலைத் தண்ணீரைக் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் தலைமுடி கருமையாக வளரும்.
 • பொடுகுத் தொல்லை நீங்க தேங்காய் எண்ணெய்யில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காய்ச்சி வைத்துக் கொண்டு  தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை தீரும்.
 • உடலில் உள்ள வெண்புள்ளிகள் மறைய எலுமிச்சம் பழச்சாறு, வல்லாரைக்கீரை (3)  எடுத்து அரைத்து காலை மாலை என இருவேளையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால் உடலில் உள்ள வெண்புள்ளிகள் மறையும்.
 • நீர்க்கடுப்பு நீங்க எலுமிச்சம் பழச்சாற்றை மோரில் கலந்து குடித்து வந்தால் நீர்க்கடுப்பு  குணமாகும்.
 • ரத்தக் கொதிப்பு குணமாக எலுமிச்சம் பழச்சாறு,பேரீச்சம்பழம்(2), சீரகம்(1ஸ்பூன்)  சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில் காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு குணமாகும்.
 • வயிற்றுப் போக்கு நிற்க எலுமிச்சம் பழச்சாறு(1 ஸ்பூன்), வெங்காயச்சாறு(1 ஸ்பூன்) இவை இரண்டையும் ஒன்றாகக் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப் போக்குநிற்கும்.
 • தேமல் மற்றும் வியர்குரு நீங்க இளநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து உடலில் தேய்த்து வந்தால் தேமல், வியர்குரு போன்றவை குணமாகும்.
 • இருமல் குணமாக எலுமிச்சம் பழச்சாறு, தேன் இவை இரண்டையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் இருமல் குணமாகும்.
 • மாதவிலக்கு வயிற்றுவலி நீங்க எலுமிச்சம் பழச் சாற்றை எடுத்து தண்ணீர் கலந்து  மாதவிலக்குச் சமயங்களில் குடித்து வந்தால் அந்த நேரத்தில் ஏற்படக்கூடிய வயிற்று வலி குணமாகும்.

KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609 / Covaibala15@gmail.com

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/3/w600X390/lemon.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/apr/03/இன்றைய-மருத்துவ-சிந்தனை-எலுமிச்சை-2892899.html
2892193 மருத்துவம் உணவே மருந்து வெயிலுக்கு இதமாக ஒரு க்ளாஸ் வெள்ளரி சூப் தயாரித்து சாப்பிடுங்கள்! இதோ ரெசிபி! சினேகா Monday, April 2, 2018 03:37 PM +0530  

தேவையானவை :

வெள்ளரிக்காய் - 2
உருளைக்கிழங்கு - 2 
பால் - 2 கப்
நெய் - 2 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

இரண்டு வெள்ளரிக்காயை பாதியாக வெட்டி, அவற்றின் தோலைச் சீவி, பொடியாக நறுக்கித் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். (விதை பிடிக்காது என்பவர்கள் அதனை நீக்கிவிடலாம், ஆனால் விதையுடன் சாப்பிடுவதான் உடலுக்கு நல்லது)

மீதி பாதி வெள்ளரிகளை மற்றும் உருளைக்கிழங்குகளை தோல் சீவி சேர்த்து நன்கு விழுதாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மிகவும் திக்காக இருப்பதாகத் தோன்றினால் சிறிதளவு நீர் விட்டுக் கொள்ளலாம்.

வாணலியில் நெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெள்ளிக்காயை லேசாக வதக்கவும். பின் பால் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைத்தபின்னர், அரைத்து வைத்த விழுதை சேர்க்கவும். 3 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும். சூப் தயார்.

இதில் வெள்ளை மிளகுத் தூள் மற்றும் உப்பைப் போட்டு நன்றாக கலக்கி சூடாகப் பரிமாறவும்.

]]>
cocumber, soup, வெள்ளரிக்காய் சூப், வெள்ளரி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/2/w600X390/cucumber-soup.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/apr/02/cocumber-soup-recipe-2892193.html
2890472 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: அரைக் கீரை Friday, March 30, 2018 03:03 PM +0530 உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

 • கப சார்ந்த பிரச்சனைகள் தீர அரைக் கீரையை  தண்டுடன் எடுத்து அதனுடன் மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் வைத்து தினமும் அதிகாலையில் குடித்து வந்தால் சளி, இருமல், நுரையீரல் தொடர்பான கப நோய்கள் குணமாகும்.
 • பேன், பொடுகு நீங்கி முடி நன்கு வளர அரைக்கீரையை அரைத்துச் சாறு எடுத்து அதனுடன்  வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் பேன், பொடுகுப் பிரச்சனைகள் நீங்கி முடி நன்றாக வளரும்.
 • மலச் சிக்கல் நீங்க அரைக் கீரையுடன் பாசிப் பயிறு, மிளகு, நெய் சேர்த்து வேகவைத்துச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
 • கை, கால் நடுக்கம், நரம்புத் தளர்ச்சி நீங்க அரைக்கீரையை அரைத்துச் சாறு எடுத்து அதனுடன்  மிளகை ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து, அதில் தினமும் ஐந்து சிட்டிகை அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் கை, கால் நடுக்கம், நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
 • குளிர் காய்ச்சல், ஜன்னி, வலிப்பு நீங்க அரைக்கீரையுடன் சுக்கு, மிளகு, இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் குளிர் காய்ச்சல், ஜன்னி, வலிப்பு நோய் போன்றவை குணமாகும்.
 • ரத்த சோகை நீங்க அரைக்கீரையுடன்  சிறு பருப்பு சேர்த்து வேகவைத்துத்  தொடரந்து 21 நாள்களுக்குச் சாப்பிட்டு வந்தால், உடலில் ரத்த உற்பத்தி அதிகரித்து ரத்த சோகை மறையும்.
 • காய்ச்சல் குணமாக அரைக்கீரையுடன் மிளகாய் வற்றல், சிறுபருப்பு, மிளகு ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்கவைத்து சாற்றை வடித்து சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குணமாகும்.
 • வாயுத் தொல்லை நீங்க அரைக் கீரையுடன் சீரகம், பூண்டு, மிளகு  சேர்த்து வேகவைத்துச் சாப்பிட்டுவந்தால் வாயுத் தொல்லை குணமாகும்.

KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609 / Covaibala15@gmail.com

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/30/w600X390/arai_keerai.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/mar/30/இன்றைய-மருத்துவ-சிந்தனை-அரைக்-கீரை-2890472.html
2889766 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: உளுந்து Thursday, March 29, 2018 01:24 PM +0530 உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

 • குடல் புண்கள் குணமாக உளுந்தை மாவாக்கி, அதனுடன் மிளகு, சீரகம், கொத்தமல்லி, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து கஞ்சி காய்ச்சிக் குடித்து வந்தால் குடல் புண்கள் ஆறும்.
 • தாய்ப்பால் அதிகம் சுரக்க உளுந்து, சிறுபருப்பு, பச்சரிசி இவை மூன்றையும் சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடித்து வந்தால், பாலூட்டும் பெண்களுக்கு தாராளமாகப் பால் சுரக்கும்.
 • வெள்ளைப்படுதல், வெட்டைச் சூடு நீங்க உளுந்து, பார்லி இவைகளை தலா 100 கிராம் எடுத்து அதனுடன் மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் இவற்றை தலா 10 கிராம் எடுத்து இரண்டையும் அரைத்து, கஞ்சி காய்ச்சிக் குடித்து வந்தால் வெட்டைச் சூடு, வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும்.
 • மூட்டு வலி, மூட்டு வீக்கம் குணமாக உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் இவை மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடி செய்துகொள்ளவும். இதில் தேவையான அளவு எடுத்து வெந்நீரில் கலந்து பற்றுப்போட்டால், மூட்டு வலி, மூட்டு வீக்கம் உள்ளிட்ட வாத நோய்கள் குணமாகும்.
 • ஆண்மைக் குறைபாடு நீங்க உளுந்து, சின்ன வெங்காயம் இவை இரண்டையும் சேர்த்துக் கஞ்சி காய்ச்சிக் குடித்து வந்தால் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.
 • சிறுநீரக நோய்கள் குணமாக உளுந்தை தண்ணீரில் போட்டு ஊறவைத்து, மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரைக் குடித்து வந்தால் சிறுநீரக நோய்கள் அனைத்தும் குணமாகும்.

KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC

கோவை பாலா, 
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist

Cell : 96557 58609 / Covaibala15@gmail.com

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/29/w600X390/dhal.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/mar/29/இன்றைய-மருத்துவ-சிந்தனை-உளுந்து-2889766.html
2889134 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: மணலிக் கீரை Wednesday, March 28, 2018 06:56 PM +0530 உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

 • நன்றாகத் தூக்கம் வர மணலிக் கீரை, துளசி, வில்வம் இவை மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் இரவு நேரத்தில் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் நன்றாகத் தூக்கம் வரும்.
 • சைனஸ் குணமாக மணலிக் கீரைச் சாறு எடுத்து அதனுடன் திப்பிலியை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி காலை, மாலை என இருவேளையும்  2 கிராம் வீதம் சாப்பிட்டு வந்தால் சைனஸ் பிரச்சனை குணமாகும்.
 • வறட்டு இருமல் குணமாக மணலிக் கீரைச் சாறு (அரை டம்ளர்) எடுத்து அதனுடன் உலர்ந்த திராட்சை(5)  சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு  வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
 • ரத்த அழுத்தம் சீராக மணலிக் கீரை சாற்றில் சீரகத்தை ஊறவைத்து , உலர்த்திப் பொடியாக்கி , தினமும் காலை மாலை என இருவேளையும் 2 கிராம் அளவுச் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராகும்.
 • மூக்கில் இருந்து நீர் கொட்டுதல் நிற்க மணலிக் கீரையுடன் , மிளகு சேர்த்துக் கஷாயமாக்கிச் குடித்து வந்தால்  மூக்கில் இருந்து நீர் கொட்டுதல் குணமாகும்.
 • மூட்டு வலி , வாத வலி அனைத்தும் தீர மணலிக் கீரை(சிறிதளவு) எடுத்து அதனுடன்  மிளகு , பூண்டு ,மஞ்சள் , ஓமம்  ஆகியவற்றோடு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலிகள் , வாத வலிகள் போன்றவை குணமாகும்.
 • மன அழுத்தம் , மனக்கோளாறு நீங்க மணலிக் கீரையை உலர்த்திப் பொடியாக்கி ,தினமும் காலை , மாலை என இரு வேளையும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் மன உளைச்சல் , மன அழுத்தம் , மனநலக் கோளாறுகள் குணமாகும்.

KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC

கோவை பாலா,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609 / Covaibala15@gmail.com

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/28/w600X390/manalikkeerai.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/mar/28/இன்றைய-மருத்துவ-சிந்தனை-மணலிக்-கீரை-2889134.html
2888493 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: நல்வேளைக் கீரை Tuesday, March 27, 2018 10:34 PM +0530  

 • வாயுக்கோளாறுகள் அனைத்தும் தீர நல்வேளைக் கீரையை (கால் கிலோ) எடுத்து உலர்த்தி  அதனுடன் வாய்விளங்கம் , ஒமம் , மிளகு ஆகியவற்றைத் தலா 50 கிராம் சேர்த்துப் பொடியாக்கி , தினமும் காலை மாலை என இருவேளையும் 2 கிராம் அளவுக்கு வெந்நீரில் கலந்து குடித்துவந்தால் வாயுக் கோளாறுகள் அனைத்தும் விலகும்.
 • உடல் பருமன் குறைய நல்வேளைக் கீரையைப் பூண்டு சேர்த்து வதக்கி ஒரு வேளை உணவாகச் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
 • மார்பு வலி உடனே குணமாக நல்வேளைக் கீரையுடன் தாமரைப்பூ சம அளவு சேர்த்துக் கஷாயமாக்கிக் குடித்து வந்தால் மார்புவலி உடனே குணமாகும்.
 • வயிற்றுப் புழு , நாக்குப் பூச்சி வெளியே நல்வேளைக் கீரையை கைப்பிடி அளவு  எடுத்து அதனுடன் மூன்று மிளகு , சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புழுக்கள் , கீரிப் பூச்சி ,நாக்குப் பூச்சிக் கோளாறுகள் தீரும்.
 • நன்றாகப் பசி எடுக்க நல்வேளைக் கீரையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நன்றாகப் பசி எடுக்கும்.
 • நீண்டநாள் தலைவலி குணமாக நல்வேளைக் கீரையை அரைத்து தலையில் வைத்துக்கட்டி வந்தால் நெடுநாள் தொல்லைதரும் தலைவலி குணமாகும்.
 • காது வலி குணமாக நல்வேளைக் கீரையை அரைத்து சாறு எடுத்து அந்தச் சாற்றை  ஒரிரு துளிகள் காதில் விட்டுக்கொண்டால் காது வலி உடனே  குணமாகும்.

KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist

Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/27/w600X390/keerai.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/mar/27/இன்றைய-மருத்துவ-சிந்தனை-நல்வேளைக்-கீரை-2888493.html
2887225 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: அருநெல்லி Sunday, March 25, 2018 03:48 PM +0530 உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

 • மஞ்சள் காமாலை குணமாக அருநெல்லி இலையை (20 கிராம்) அரைத்து புளித்த மோரில் (500 மில்லி) கலந்து குடித்துவந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.
 • வெள்ளைப்படுதல் குணமாக அருநெல்லி, பச்சை திராட்சை, வெள்ளை வெங்காயம் இவை அனைத்திலும் தலா 20 கிராம் எடுத்துச் சாறு எடுத்து, அதில் படிகார பஸ்பத்தை (ஒரு கிராம்) அளவுக்குக் கலந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும்.
 • கண்பார்வை கூர்மையாக அருநெல்லி , நெல்லி இவை இரண்டையும் சம அளவு எடுத்துச் சாப்பிட்டு வந்தால்  கண்பார்வை கூர்மையாகும்.
 • குடல் புண் குணமாக அருநெல்லிக்காய் சாறு எடுத்து , தினமும் 30 மில்லி அளவில் சாப்பிட்டுவந்தால் உள் சூடு , வேக்காடு , குடல் புண் போன்றவை குணமாகும்.
 • வாந்தி உடனே நிற்க அருநெல்லிச் சாற்றில் சீரகம் , நெல் பொரி , திப்பிலி ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் வைத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் வாந்தி உடனே நிற்கும்.
 • அருநெல்லிக்காய் சாற்றில் தேன் கலந்து குடித்து வந்தால் வாந்தி உடனே நிற்கும்.

KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC
 

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist

Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/25/w600X390/shrinelli.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/mar/25/இன்றைய-மருத்துவ-சிந்தனை-அருநெல்லி-2887225.html
2885599 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: ஆடாதொடா Thursday, March 22, 2018 03:31 PM +0530
 • இரைப்பு இருமல் குணமாக ஆடாதொடா வேர் , கண்டங்கத்தரி வேர் , சுக்கு, கொள்ளு ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளை (2கிராம்) அளவு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இரைப்பு இருமல் குணமாகும்.
 • ஆடாதொடா இலையில் வாசிசின் என்னும் வேதிப்பொருள்  நுரையீரல் செல்களில் புகுந்து வேலை செய்து விரிவடைய செய்வதால் ஆஸ்துமா, நாட்பட்ட இருமல், சளி போன்ற நோய்களை இது குணப்படுத்துகிறது.
 • இருமல் மற்றும் சளியுடன் ரத்தம் வெளியேறுவது நிற்க ஆடாதொடா  இலையை அரைத்துச் சாறு (5 மி.லி) அளவு எடுத்து , அதில் தேன் கலந்து காலை வேளையில்  குடித்து வந்தால் இருமல் மற்றும் சளியுடன் ரத்தம் வெளியேறுவது நிற்கும்.
 • காசநோய் குணமாக ஆடாதொடா இலையைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து , பாதியாகச் சுண்டிய பிறகு தினமும் 50 மில்லி அளவு குடித்து வந்தால் காசநோய் குணமாகும்.
 • தசைப்பிடிப்பினால் உண்டாகும் வலி நீங்க உடலில் தசைப்பகுதிகளில் உண்டாகும் வலி போன்றவற்றிற்கு ஆடாதொடா  இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து குடித்து வந்தால் தசைபிடிப்பினால் உண்டாகும் வலி குணமாகும்.
 • அனைத்துவிதமான உடல் வலி நீங்க ஆடாதொடா வேரை கஷாயம் வைத்துக் (50 மி.லி) அளவு காலை வேளையில்  குடித்து வந்தால் அனைத்துவிதமான உடல் வலிகளும் குணமாகும்.
 • KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC

  கோவை பாலா,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist

  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/22/w600X390/aaduthoda.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/mar/22/இன்றைய-மருத்துவ-சிந்தனை-ஆடாதொடா-2885599.html
  2884911 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: கல்யாண முருங்கை Wednesday, March 21, 2018 05:14 PM +0530
 • இரத்தச் சோகை குணமாக கல்யாண முருங்கை , முருங்கை இலை, மிளகு, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும்.
 • தாமதமான மாதவிலக்கு சீராக கல்யாண முருங்கை இலையை கருப்பு எள் ஊற வைத்த தண்ணீரில் அரைத்து காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் தாமதித்த மாதவிலக்கு சீராகும்.
 • மலம் தாராளமாக வெளியேற கல்யாண முருங்கை இலையுடன் ஓமம், வாய்விளங்கம் இரண்டையும் சேர்த்து அரைத்து இரவில் சாப்பிட்டு வந்தால் அதிகாலையில் மலம் தாராளமாக வெளியேறும்.
 • சிறுநீர் எரிச்சல் குறைய கல்யாண முருங்கை இலையுடன் சிறிது பார்லியைச் சேர்த்து அரைத்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும். சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
 • உடல் சூடு , வெள்ளைப்படுதல்  நீங்க கல்யாண முருங்கை இலையுடன், ஊறவைத்த வெந்தயத்தை ஓரு ஸ்பூன் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு , வெள்ளைப்படுதல் ,வெட்டைச் சூடு போன்ற குறைபாடுகள் தீரும்.
 • சளி, கப சார்ந்த பிரச்சனை தீர கல்யாண முருங்கை இலையுடன் மூன்று மிளகு சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் சளி மற்றும் கப நோய்கள் குணமாகும்.
 • KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC

  கோவை பாலா,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist

  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/21/w600X390/kalayana-murungai.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/mar/21/இன்றைய-மருத்துவ-சிந்தனை-கல்யாண-முருங்கை-2884911.html
  2883608 மருத்துவம் உணவே மருந்து கொளுத்தி அடிக்கும் வெயிலைச் சமாளிக்க ஒரு டானிக் உள்ளது! அது என்ன தெரியுமா? சினேகலதா Monday, March 19, 2018 03:45 PM +0530  

  வெயில் காலம் வந்தாலே முதல் பிரச்னை அடிக்கடி தாகம் எடுப்பதுதான். கொஞ்ச தூரம் வெயிலில் நடக்கும் போதே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குவதுடன் வியர்வை ஆறு போல உச்சி முதல் உள்ளங்கால் வரை பிசுபிசுக்கும். வியர்வை வருவது ஒரு பிரச்னையல்ல. வராமல் போனால்தான் பிரச்னை. சரி வெயிலை சமாளிக்க கைவசம் நிறைய டிப்ஸ் இருந்தாலும், மேற்சொன்ன டானிக்கின் விலை மிகவும் குறைவு. எளிதாகக் கிடைக்கக் கூடிய அதன் சத்துக்களும் பலன்களும் மிக அதிகம். அதுதான் எலுமிச்சைப் பழம். 

  அனைவருக்கும் இது தெரிந்த விஷயம் தான் என்றாலும் அலட்சியப்படுத்தும் விஷயமும் கூட. ஒரு படத்தில் தங்கவேலு சமையல் குறிப்பு சொல்லித் தருவார். அவர் மனைவி எதை எடுத்தாலும் அதான் எனக்குத் தெரியுமே என்பார். ஆனால் செயல்பாடு எனும் வரும்போது அது எனக்குத் தெரியாது என்று கையை விரிப்பார். அது போலத்தான் நம்மில் பெரும்பாலானோர். தெரியும் ஆனால் தெரியாது என்ற நிலைதான். மேலும் பத்திரிகை இணையம் என எங்கு நோக்கினும் சக்தியின் வடிவம் போல இக்காலகட்டத்தில் தகவல்களின் களஞ்சியம் கொட்டிக் கிடப்பதால் அவற்றில் எது சரி எது தவறு என்று ஆய்வு செய்ய ஒருவருக்கும் நேரம் இருப்பதில்லை. லெமன் பற்றி சில பயனுள்ள டிப்ஸ் தருவதற்குத் தான் இவ்வளவு பெரிய முன்னுரை.

  முதலில் லெமன் வாட்டர் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். ஒரு பெரிய க்ளாஸில் சிறிதளவு வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்து அதில் எலுமிச்சைச் சாறை கலந்து தினமும் வெறும் வயிற்றில் குடியுங்கள். இதனால், செரிமானப் பிரச்னைகள், குமட்டல், வாந்தி போன்றவை குணமாகும். மேலும் அனேக பலன்கள் இந்த எலுமிச்சை வாட்டரில் உள்ளன. அவை

  1. உடல் எடை குறையும்

  தினமும் காலையில் எலுமிச்சைச் சாறு பருகினால் நேர்த்தியான மெல்லிய உடல்வாகைப் பெறலாம் என்கிறார்கள் ஊட்டச் சத்து நிபுணர்கள். அது உங்கள் எடையை குறைக்கும். ஜீரண மண்டலத்தை சீர் செய்துவிடும் திறன் எலுமிச்சம் பழத்துக்கு உண்டு. மேலும் உங்கள் உடலில் சேர்ந்துள்ள டாக்ஸின்கள் எனப்படும் நச்சுக் கழிவுகள் அனைத்தும் லெமன் ஜூஸ் குடிப்பதால் வெளியேறிவிடும். உங்கள் குடல் சுத்தமாவதுடன், மலச்சிக்கல் ஏற்படுவதும் தவிர்க்கப்படும். ஓர் அற்புத இயற்கை உணவாக இது செயல்படுகிறது. 

  2. தாகம் அடங்கும்

  வெறும் சுடு நீரை வெறும் வயிற்றில் குடிப்பது சிலருக்குப் பிடிக்காது. லெமன் நறுமணத்துடன் குடிக்கும்போது எளிதாக குடிக்க முடிவதுடன் சுவையும் இருப்பதால் நிச்சயம் குடித்து விடுவீர்கள். தேவைப்பட்டால் சிறிதளவு தேனை சேர்த்துக் கொள்ளுங்கள். இது உங்கள் சுவை நரம்புகளை உற்சாகப்படுத்துவதுடன் காலையிலேயே ஊட்டச் சத்துடன் அந்த நாளை நீங்கள் தொடங்க முடியும். தாகம் அடங்குவதுடன் உடலைக் குளிர்ச்சியாக்க இயற்கையான முறை இதுதான்.

  3. சருமம் பளபளப்பாகும்

  லெமன் போன்று பளபளப்பான சருமம் வேண்டும் என்றால் லெமன் வாட்டர் தினமும் குடித்துவிடுங்கள். எலுமிச்சம் பழத்தில் வைட்டமின் சி மற்றும் சிட்ரஸ் அதிகளவில் உள்ளது.  அது சருமத்தின் அடி ஆழம் வரை ஊடுருவி சருமத்தை பொலிவாக்கிவிடும். தோலைப் பளபளப்பாக்கும். உடலுக்கு மெருகூட்டும். தோலிலுள்ள சுருக்கங்களை மாற்றும். கரும்புள்ளிகளை மறையச் செய்யும். விரைவில் தோல் சுருக்கம் ஏற்படுவதை தடுக்கிறது இது. வைட்டமின் சி அதிகம் உட்கொள்பவர்களுக்கு தோல் சுருக்கம் ஏற்படாது. சருமம் புத்துணர்வுடன் பொலிவாகக் காணப்படும். லெமனின் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் முதுமை அடைவதைத் தள்ளிப் போடும். இன்னொரு டிப்ஸ் - எலுமிச்சம் பழத்தோலை காய வைத்து பொடி செய்து கடலைமாவு, தயிர் சேர்த்து ஃபேஸ்பேக்காகப் பயன்படுத்தலாம்.

  4. சுவாசப் புத்துணர்ச்சி

  சிலரின் அருகில் போக முடியாது. காரணம் ஏதோ ஒரு துர்நாற்றம் லேசாக அடிக்கும். அதற்குக் காரணம் வாய் துர்நாற்றத்துடன் இருப்பதுதான். மேலும் வாய் உலர்ந்து போதல் அல்லது பாக்டீரியாவின் வேலையாகவும் இருக்கலாம். தினமும் லெமன் வாட்டர் குடித்தால் சுவாசத்தில் புத்துணர்ச்சி ஏற்படுவதுடன் நறுமணம் வீசும். லெமன் ஜூஸ் குடிப்பதால் வாயில் சலைவா நன்றாக ஊறும், நா வறட்சி, உதட்டு வறட்சி போன்ற பிரச்னைகள் தவிர்க்கப்பட்டு சுவாசம் புத்துணர்ச்சியுடன் வெளிவரும். வாரத்துக்கு ஒருமுறை எலுமிச்சம் பழச்சாறில் பற்களை சுத்தம் செய்தால் பற்கள் முத்துப்போல பிரகாசிக்கும். உணவுடன் வெங்காயம், பூண்டு அல்லது மீன் சாப்பிட்டால் நிச்சயம் சிறிதளவு லெமன் ஜூஸ் குடிப்பது நல்லது. நமக்கு நல்லதோ இல்லையோ அருகில் இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது.

  5. சிறுநீரகக் கோளாறை சீர்படுத்தும்

  எலுமிச்சைச் சாற்றுடன் சிறிதளவு இஞ்சிச் சாறு, சிறிது தேன் சேர்த்து, சுடுநீரில் கலந்து குடிக்கலாம். வைட்டமின் சி அதிகளவு லெமனில் இருப்பதை ஏற்கனவே பார்த்தோம். கிட்னி ஸ்டோன் உருவாவதை லெமன் தடுக்கிறது. தினமும் அரை க்ளாஸ் லெமன் சாறு குடித்தால் கால்ஷியம் ஆக்ஸலேட் ஸ்டோன் கிட்னியில் உருவாகுவதை தடுக்கப்படுகிறது.

  6. லிவர் செயல்பாடு அதிகரிக்கும்

  லிவரில் கொழுப்புச் சத்து சேராமல் பாதுகாக்கிறது லெமன் ஜூஸ். நச்சுப் பொருட்களை வெளியேற்றவும் துணை புரிகிறது. லிவர் ஆரோக்கியமாக இருக்க தினமும் ஒன்று அல்லது இரண்டு க்ளாஸ் லெமன் வாட்டர் குடிப்பது சாலச் சிறந்தது.

  7. ரத்தத்தை சுத்தப்படுத்தும்

  கெட்ட ரத்தத்தை தூய்மைப்படுத்தும் மருந்துகளில் இதைவிட சிறந்தது வேறு எதுவும் இல்லை எனலாம். ரத்தம் சுத்தமானால் அது புத்துணர்ச்சி தருவதுடன் சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும்.

  லெமன் நல்லது என்று சொன்னதற்காக தினமும் தண்ணீருக்கு பதிலாக லெமன் வாட்டரை குடித்திவிடாதீர்கள். எதுவும் அளவுக்கு மிஞ்சினால் பிரச்னைதான். தவிர லெமனில் அசிடிக் ஆசிட் உள்ளது. இதிலுள்ள அதிகப்படியான அமிலத்தன்மை பற்களிலுள்ள எனாமலை அழித்து விடக்கூடும். மேலும் அளவுக்கு அதிகமாக லெமன் ஜூஸ் குடித்தால், சில சமயம் நெஞ்செரிச்சலை உண்டாக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரும். சிலருக்கு உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும். வீஸிங் போன்ற பிரச்னை இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே குடிக்க வேண்டும். இல்லையென்றால் ஒவ்வாமை, அலர்ஜி, தலைவலி உள்ளிட்ட பிரச்னைகளும் உபாதைகளும் ஏற்படும்.

  ]]>
  Lemon, lemon juice, lemon water, லெமன், எலுமிச்சை, லெமன் சாறு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/19/w600X390/honey-lemon-water.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/mar/19/drinking-lemon-water-in-the-morning-could-lead-to-these-amazing-benefits-2883608.html
  2881891 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: தூதுவளை Friday, March 16, 2018 11:37 PM +0530 உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!

  இளைத்த உடல் பெருக்க தூதுவளைக் கீரையின் மேல் இருக்கும் முள்ளை நீக்கி நன்றாக அரைத்து பச்சரிசியுடன் (அரை கிலோ) கலந்து காயவைத்து அரைத்து அடை செய்து சாப்பிட்டுவந்தால் இளைத்த உடல் பெருக்கும்.

  தொடர் தும்மல் உடனே நிற்க தூதுவளைக் கீரை (சிறிதளவு) , மிளகு (5) சேர்த்து நன்றாக அரைத்து தண்ணீரில் (2 லிட்டர்) போட்டுக் கொதிக்கவைத்து , பிறகு அதில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் தும்மல் உடனே குணமாகும்.

  அதிகப்படியான கொழுப்பு கரைய தூதுவளைக் கீரைச் சாற்றை அரைத்து (30 மில்லி) அளவு  எடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில்  குடித்து வந்தால் அதிகப்படியான கொழுப்பு கரையும்.

  இரத்தம் தூய்மையாக தூதுவளைக் கீரை , வேப்பந்தளிர் இவை இரண்டையும் சம அளவு எடுத்து கஷாயமாக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில்  குடித்துவந்தால் ரத்தம் தூய்மையாகும்.

  காது சார்ந்த பிரச்சனை தீர தூதுவளைக் கீரையைக் காயவைத்துப் பொடியாக்கி  வைத்துக் கொண்டு தினமும் காலை மாலை என இரு வேளையும் தலா இரண்டு வீதம் சுடுநீரில் கலந்து  சாப்பிட்டு வந்தால் காது தொடர்பான நோய்கள் குணமாகும்.

  மூக்கடைப்பு நீங்க தூதுவளைக் கீரையுடன் சீரகம் , பூண்டு , மிளகு , மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்கவைத்து ,  வடிகட்டி அந்தச் சாற்றை குடித்து வந்தால்  மூக்கடைப்பு குணமாகும்.

  KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC

  கோவை பாலா,
  இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist

  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/16/w600X390/thuduvalai.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/mar/16/இன்றைய-மருத்துவ-சிந்தனை-தூதுவளை-2881891.html
  2880555 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: முள்ளங்கிக் கீரை Wednesday, March 14, 2018 06:49 PM +0530 உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!

  • சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முள்ளங்கிக் கீரைச் சாற்றில் வெந்தயத்தை ஊறவைத்துப் பொடியாக்கி ,தினமும் காலை மாலை என இருவேளையும்  தலா இரண்டு கிராம் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிட்டுவந்தால் சர்க்கரை  நோய்  கட்டுக்குள் இருக்கும்.
  • கல்லீரல் சார்ந்த பிரச்சனைகள் தீர முள்ளங்கிக் கீரைச் சாறு எடுத்து  (அரை டம்ளர்) அதனுடன் சிறிதளவு வெல்லம் கலந்து காலையில் வெறும்  வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய்கள்அனைத்தும் குணமாகும்.
  • சிறுநீர் தாராளமாகப் பிரிய முள்ளங்கிக் கீரையுடன் ஒரு ஸ்பூன் பார்லியை வேகவைத்துச் சாப்பிட்டுவந்தால் சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
  • சிறுநீர் கற்கள் கறைய முள்ளங்கிக் கீரைச் சாற்றை (30மில்லி) அளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில்  தொடர்ந்து 21 நாட்கள் குடித்து வந்தால் சிறு நீரகக் கற்கள் கரையும்.
  • ஆண்மை , உயிரணுக்கள் அதிகரிக்க முள்ளங்கிக் கீரை சாற்றையும் (அரை  டம்ளர்) எடுத்து அதனுடன் பாதாம் பருப்பையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.
  • முள்ளங்கிக் கீரைச் சாற்றில் நெருஞ்சில் முள்ளை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி ,தினமும் காலை மாலை எனஇருவேளையும் இரண்டு கிராம்  அளவுக்குச் சாப்பிட்டு வந்தால்    விந்தில் உயிரணுக்கள் எண்ணிக்கை  அதிகரிக்கும்.


  KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC

  கோவை பாலா,
  இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist

  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/14/w600X390/mullangi_keerai.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/mar/14/இன்றைய-மருத்துவ-சிந்தனை-முள்ளங்கிக்-கீரை-2880555.html
  2877529 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: மஞ்சணத்தி DIN DIN Friday, March 9, 2018 03:39 PM +0530 உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!

  பல் சொத்தை குணமாக மஞ்சணத்தி காய்களை (முதிர்ந்தது) சேகரித்து உப்பு நீரில் ஊற வைத்து வெயிலில் காய வைத்து சுட்டு கரியாக்கி சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தூளால் பல் துலக்கி வந்தால் பல் சொத்தை குணமாகும்.

  மாதவிடாய் கோளாறுகள் நீங்க மஞ்சணத்தி இலையை பசையாக அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து, அதே அளவு அதன் காயையும் அரைத்துச் சேர்த்து சிறிது மிளகுத்தூள், சீரகம்(கால் ஸ்பூன்) சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். அதில் 50 முதல் 100 மி.லி வரை எடுத்து 48 நாள்கள் தொடர்ந்து காலை வேளை மட்டும் குடித்து வந்தால் மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கிவிடும்.

  காய்ச்சல் மற்றும் வயிற்றுக்கோளாறுகள் அனைத்தும் குணமாக  மஞ்சணத்தியின் பட்டை சிறிதளவு எடுத்துக் கொண்டு சீரகம் (அரை ஸ்பூன்) , பனங்கற்கண்டு சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து கஷாயம் செய்து கொள்ள வேண்டும். அதை வடிகட்டி சுமார் 50 மி.லி அளவு காலை மற்றும் இரவு உணவுக்கு முன்  அருந்தி வந்தால் காய்ச்சலைத் தடுப்பதுடன் வயிற்றுக் கோளாறுகளையும் குணப்படுத்தும். 

  தொண்டைச் சார்ந்த பிரச்சனைகள் தீர மஞ்சணத்திக் காயை அரைத்துச் சாறு எடுத்து தொண்டையில் பூசி வந்தால் தொண்டை சார்ந்த  நோய்கள் நீங்கும்.

  இடுப்பு வலி மறைய மஞ்சணத்தின் இலையை இடித்துப் பிழிந்து சாறு எடுத்து இடுப்புவலி உள்ள இடங்களில் பூசி வந்தால் வலி மறையும் .

  குழந்தைகளின் வயிற்று உப்புசம் குணமாக மஞ்சணத்தி இலை (5) , வேப்பங்கொழுந்து (ஒரு கொத்து) இரண்டையும் நன்றாக வதக்கி, இதனுடன் சீரகம் (1 டீஸ்பூன்) , ஓமம் (1டீஸ்பூன்) , பொரித்த பெருங்காயம் (ஒரு சிட்டிகை) சேர்த்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி காலை மாலை என இரு வேளைகள் தலா (2டீஸ்பூன்) அளவு உள்ளுக்கு கொடுத்து வந்தால்  வயிற்று உப்புசம் குணமாகும்.

  KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC

  கோவை பாலா,
  இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist

  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/9/w600X390/keerai.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/mar/09/இன்றைய-மருத்துவ-சிந்தனை-மஞ்சணத்தி-2877529.html
  2876838 மருத்துவம் உணவே மருந்து நாக்கில் எச்சில் ஊற வைக்கும் பானி பூரி உங்களுக்குப் பிடித்த உணவா? இதை முதலில் படித்துவிடுங்கள்! சினேகலதா Thursday, March 8, 2018 04:16 PM +0530  

  பானி பூரியின் பூர்வீகம் வட இந்தியா, குறிப்பாக தெற்கு பீஹார் என்கிறார்கள். வாரணாசி, வங்கதேசம் என்கிறனர் சிலர். பானி பூரியின் பின்புலம் என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும், அதன் அசாத்திய சுவையை நம் நாக்கறியும். தற்போது தெருவோரக் கடைகளில் அதிகம் விற்பனை செய்யப்படுவது பானி பூரிதான். சிறுவர்கள் முதல் முதியோர் வரை ஆங்காங்கே விற்கப்படும் பானி பூரியை உண்டு மகிழ்கிறார்கள். ஆனால் இது எந்த அளவுக்கு உடல் நலத்துக்கு நல்லது?

  அடிக்கடி பானி பூரி குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வலைத்தளங்களில் வளைய வந்தாலும், நம்மால் அச்சமயம் நாக்கைக் கட்டுப்படுத்த முடியாமல் சாப்பிட்டுவிடுவோம். தென்னிந்திய ஸ்னாக்ஸ்களான போண்டா, வடை, பஜ்ஜி, மிக்ஸர், காராசேவு, பக்கோடா இவையெல்லாம் வாங்க ஆளற்று விற்பனை நிலையங்களில் தேங்கி வரும் நிலை அதிகரித்துள்ளது. அண்மை காலமாக அனைவருக்கும் விருப்ப உணவாக விளங்குவது பாவ் பாஜி, பேல் பூரி, பானி பூரி, தய் பூரி, சமோஸா சென்னா, கட்லெட் போன்ற உணவுகள் தான். 

  வட மாநிலத்தவரின் வரத்தால் நமக்கு பானி பூரி, பேல் பூரி எல்லாம் கிடைத்தாலும், நம்ம ஊர் திண்பண்டங்களின் மவுசு குறைந்து வருவது கண்கூடு. அதிக நேரம் வேலை செய்தல், சொன்ன வேலையை செய்தல், வார இறுதி நாளில் விடுப்பு எடுக்காமை போன்ற பல காரணங்களால் வட மாநில மக்களுக்கு ஹோட்டல் உரிமையாளர்கள் இரு கரம் நீட்டி வரவேற்பு அளித்தனர். அதன் தொடர்ச்சியாக, அது நாளடைவில் அனைத்துத் துறைகளிலும் பரவி தற்போது தமிழர்களின் உணவியலிலும் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. வட இந்திய உணவுகளை நாம் மாற்று உணவாக சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக பானிபூரி போன்ற உணவுகளுக்கு அடிமையாகிவரும் நிலை உருவாகி வருவதும் நல்லதல்ல. 

  சூப்பர் மார்கெட் உள்ளிட்ட பல டிபார்ட்மென்ட் கடைகளின் வாசல்களிலும் சூப் மற்றும் பானி பூரி கடைகளைப் போட்டிருப்பார்கள். தெருவோரங்கள் முதல் அலுவலக வாசல்கள் வரை சின்ன தள்ளு வண்டிகளில் திரும்பும் திசைகளில் எல்லாம் ஒரு பானி பூரிக் கடைக்காரர் பான் பராக் போட்டுக் கொண்டே வியாபாரம் செய்து கொண்டிருப்பார்.

  நான்கைந்து பேர் சூழ்ந்திருக்க பரபரப்பாக அவர் இயங்குவார். ஒவ்வொருவரின் கையிலும் ஒரு சின்ன தட்டு தரப்படும். அதில் முதலில் பூரியை வைத்து, அதில் ஒரு ஓட்டையைப் போட்டு, அதற்குள் அவர் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த வேக வைத்து மசிக்கப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் நறுக்கி வைத்திருந்த பச்சை வெங்காயம் ஆகிய மசாலாக் கலவையைத் திணிப்பார், அதன் பின் தான் க்ளைமேக்ஸ்.

  பூரியில் பானி (ரசம் போன்ற ஒரு கலவை நீர்) ஊற்றித் தர, அதை ஒரே வாயில் சாப்பிட்டு முடிப்பார் வாடிக்கையாளர். ஒவ்வொருவருக்கும் பம்பரமாக இந்த கலவையை செய்து தர, வியாபாரம் அமோகமாக நடக்கும். 

  இப்படி வாயில் திணித்து சுவையில் ஊரிய இந்த பானி பூரி ஆரோக்கியமாகத்தான் தயாரிக்கப்படுகிறதா என்றெல்லாம் யாரும் யோசிப்பதில்லை. இருபது ரூபாய்க்கு இவ்வளவு ருசியா என்று வாங்கி சாப்பிட்டு விடுவார்கள். ஆனால் பானி பூரிக்கு பயன்படும் முக்கிய மூலப்பொருள்கள் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் மைதா மற்றும் பேக்கிங் சோடா போன்றவைதான் அதிகம் என்பதெல்லாம் யாரும் யோசிக்காத விஷயம்.

  பானியில் உள்ள தண்ணீர் சுகாதாரமற்றதாக இருந்தால், அது பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். ஹெபடைடிஸ் ஏ தொற்று டைஃபாட், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பல பிரச்னைகளின் மூல காரணம் சுகாதாரமற்ற இடங்களில் தயாரித்து விற்பனை செய்யப்படும் இத்தகைய உணவுகளினாலும்தான்.

  பானி பூரியை சிலர் தினமும் ஒரு முறை சாப்பிடும் வழக்கத்தை கடைபிடிக்கிறார்கள். இது தவறு. மாதம் ஒன்று அல்லது இரண்டு முறை சாப்பிடலாம். அதற்கு மேல் என்றால் உங்கள் வயிற்றின் ஆரோக்கியத்திற்கு யாரும் உத்திரவாதம் தர முடியாது.

  பானி பூரியில் பான் மசாலா மற்றும் சோடியம் கலந்திருப்பதால் அதை தனி உணவாக அடிக்கடி சாப்பிடும் போது பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்கிறார்கள் உணவுச் சத்து நிபுணர்கள். நாம் இவற்றைத் தொடர்ச்சியாக உணவில் சேர்த்துவந்தால் உடல் பருமன், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். பூரி செய்யப் பயன்படுத்தும் எண்ணெயை பல முறை மறு சுழற்சி செய்திருந்தால் அது புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை வரவழைத்துவிடும்.

  அடுத்த முறை பானி பூரியை சுகாதாரமற்றக் கடைகளில் வாங்கி சாப்பிடும் முன் ஒரு தடவைக்கு இரண்டு தடவை யோசித்துச் செயல்படுங்கள். வீட்டிலேயே சுத்தமான முறையில் தயாரிக்கக் கூடிய எளிமையான ரெஸிபிதான் அது. 

  ]]>
  Pani Puri, Dhai Poori, chenna, Pav Bhaji, பானி பூரி, பாவ் பாஜி, ஆரோக்கியம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/8/w600X390/pani_puri.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/mar/08/road-side-pani-puri-shop-bad-for-health-2876838.html
  2876803 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: ஆடு தீண்டாப்பாளை Thursday, March 8, 2018 12:22 PM +0530 உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!

  • உடல் வலுப்பெற ஆடுதீண்டாப் பாளை இலையை காயவைத்து பொடியாக்கி (2 ஸ்பூன்) எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு செம்பு நீரை ஊற்றி ஒரு டம்ளராக சுண்டவைத்து கஷாயமாக்கி வடிகட்டி அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும்.
  • வயிற்றுப் பூச்சிகள் ஒழிய ஆடுதீண்டாப் பாளையை நிழலில் உலர்த்தி நன்றாக பொடி செய்து வைத்துக் கொண்டு (1ஸ்பூன்) அளவு எடுத்து அதில் தேன் கலந்து கொடுத்து இரவு படுக்கப்போகும் முன் கொடுத்து வந்தால் வயிற்றுப் பூச்சிகள் விரைவில் நீங்கும்.
  • தலைமுடி உதிர்வை தடுக்க ஆடுதீண்டாப் பாளை இலைகளை எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி சீயக்காய் தூளுடன் கலந்து வைத்துக் கொண்டு தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி கொட்டுவது உடனே நிற்கும்.
  • மாதவிடாய் வயிற்று வலி, ஒழுங்கற்ற இரத்தப்போக்கு சீராக ஆடுதீண்டாப்பாளை இலைகள் (5) எடுத்து பாத்திரத்தில் போட்டு ஒரு செம்பு தண்ணீரை ஊற்றி ஒரு டம்ளராக சுண்டவைத்து கஷாயமாக்கி ஒருவேளை குடித்து வந்தால் மாதவிடாய்  வயிற்று வலி , ஒழுங்கற்ற இரத்தப்போக்கு  பிரச்சனைகள் தீரும்.
  • ஆடுதீண்டாப் பாளையை அரைத்து (10 மி.லி)அளவு சாறு  எடுத்து காலை மாலை என இருவேளையும் குடித்துவந்தால்  ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகும். விட்டுவிட்டுவரும் காய்ச்சல் குணமாகும்.
  • ஆரோக்கியமான சுகப்பிரசவம் பெற ஆடுதீண்டாப்பாளை வேர் (2 கிராம்) எடுத்து பொடி செய்து தினந்தோறும்  ஒரு டம்ளர் சுடுநீரில் கலந்து ஒரு வேளை குடித்து வந்தால் ஆரோக்கியமான சுகப் பிரசவம் ஏற்படும்.

  KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC

  கோவை பாலா,
  இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist

  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/8/w600X390/aadhathodaillai.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/mar/08/இன்றைய-மருத்துவ-சிந்தனை-ஆடு-தீண்டாப்பாளை-2876803.html
  2876221 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய் Wednesday, March 7, 2018 02:19 PM +0530 உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!

  • வயிற்றுப் போக்கு குணமாக ஜாதிக்காய் பொடியை (அரைகிராம்) அளவு எடுத்து பாலில் கலந்து தினந்தோறும் மூன்று வேளையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு தீரும் .
  • ஜாதிக்காய் தூள் (10 கிராம்) அளவு எடுத்து வாழைப்பழத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால்  அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு தீர்ந்து விடும்.
  • சீரற்ற இதயத்துடிப்பு சீராக இயங்க ஜாதிக்காய் (5 கிராம்) பொடி எடுத்து அதனுடன் புதிதாக நெல்லிக்காய்ச் சாறு அரைத்து  ஒரு மேஜைக் கரண்டியளவு எடுத்து இரண்டையும் இரவு வேளை  கலந்து சாப்பிட்டு வந்தால்  அதிமறதி, விக்கல், தூக்கமின்மை, ஒழுங்கற்ற இருதயத்துடிப்பு ஆகியவை குணமாகும்.
  • முகம் பொலிவாக மாற ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும் , முகம் பொலிவடையும்.
  • அம்மை கொப்பளங்கள் மறைய ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை பொடி செய்து வைத்துக் கொண்டு அம்மை நோயின் போது உணவிற்கு முன் (5 கிராம்) அளவு எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும்.
  • நாவறட்சி குணமாக ஜாதிக்காய்த் தூளை சிறிது நீரில் போட்டு ஊற வைத்து குடித்து வந்தால் நா வறட்சி சரியாகும்.

  KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist

  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/7/w600X390/jathikai.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/mar/07/இன்றைய-மருத்துவ-சிந்தனை-ஜாதிக்காய்-2876221.html
  2875581 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: செம்பருத்தி Tuesday, March 6, 2018 07:55 PM +0530 உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!

  • இரத்தச் சோகை குணமாக செம்பருத்தி பூவை காயவைத்து அரைத்து (100 கிராம்) , மருதம் பட்டைத் தூள் (100 கிராம்) இரண்டையும் ஒன்றாகக் கலந்து 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரித்து இரத்த சோகை நோய் குறையும்.
  • சிறுநீர் எரிச்சல் குணமாக செம்பருத்திப் பூ (10 இதழ்களை) நீரில் போட்டு நன்றாக கொதிக்கவைத்து காய்ச்சி வைத்துக்கொண்டு அந்த நீரை கொஞாசம் கொஞாசமாக குடித்து வந்தால் சிறு நீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்
  • தலைச் சுற்றல் , மயக்கம் குணமாக செம்பருத்திப் பூவுடன் (2) , சீரகம் (சிறிதளவு) சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் பித்தத்தினால் வரக்கூடிய மயக்கம் , தலைச்சுற்றல் , ரத்த அழுத்தம்  போன்றவை குணமாகும்.
  • இரத்தம் சுத்தம் அடைய செம்பருத்திப் பூவுடன் மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் ரத்தச் சுத்தி உண்டாகும். தோல் நோய்களும் குணமாகும்.
  • பேன், பொடுகுத் தொல்லை தீர செம்பருத்திப் பூக்களை எடுத்து இரவு படுக்கும் போது தலையில் வைத்துப் படுத்துக் கொண்டால் பேன், பொடுகுத் தொல்லை தீரும்.
  • மாதவிடாய் வயிற்று வலி குணமாக செம்பருத்தி மொட்டை எடுத்து மாதவிடாய் நாட்களில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின்போது ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.
  • மாதவிலக்கு ஒழுங்காக செம்பருத்திப் பூக்களை (3) ,எலுமிச்சம் பழத் தோலுடன் அரைத்து  காலை வேளை வெறும் வயிற்றில்  சாப்பிட்டுவந்தால் மாதவிலக்கு ஒழுங்காகும்.

  KOVAI  HERBAL CARE VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist

  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/6/w600X390/sembaruthi.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/mar/06/இன்றைய-மருத்துவ-சிந்தனை-செம்பருத்தி-2875581.html
  2873211 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: அசோகு Friday, March 2, 2018 06:31 PM +0530 உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!

  • மாதவிலக்கு சுழற்சி முறையாக இருக்க  அசோகப் பட்டை (கால் கிலோ) மாவிலங்கப் பட்டை (100 கிராம்) ,  சுக்கு (25 கிராம்) , கருஞ்சீரகம் (25 கிராம்) ஆகியவற்றை அரைத்துத் தூள் செய்து வைத்துக் கொள்ளவும்.  இதில் மூன்று கிராம் அளவு காலை,  மாலை இரு வேளையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதாந்திர சுழற்சி முறையாக ஏற்படும்.
  • அதிக இரத்தப்போக்கு உடனே நிற்க  அசோகப் பட்டையை பொடியாக்கி வைத்துக்கொண்டு அவற்றில் (5 கிராம்) பொடியை  எடுத்து கட்டித் தயிரில் கலந்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால்  இரத்தப்போக்கு உடனே நிற்கும்.
  • வயிற்றுப் போக்கு  குணமாக அசோகு பூ , மாம்பருப்பு  இவை இரண்டையும் சம அளவு எடுத்து பொடி செய்து 3 சிட்டிகை அளவு எடுத்து  பாலில் சாப்பிட்டால்  வயிற்றுப்போக்கு நிற்கும்.
  • மாதவிலக்கின் போது உண்டாகும் வயிற்று வலி முற்றிலும் குணமாக அசோகப் பட்டைத் தூள் (200 கிராம்) , பெருங்காயத்தூள் (25 கிராம்) இரண்டையும் எடுத்து கலந்து வைத்துக் கொள்ளவும். இவற்றில் இரண்டு கிராம் அளவு பொடியை  எடுத்து பசு வெண்ணெயில் குழைத்து தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வரவும். இதனால் ஓரிரு மாதங்களில் மாதவிடாயின்போது உண்டாகும் வயிற்றுவலி முற்றிலுமாய் குணமாகிவிடும்.
  • கருச்சிதைவு , பெண் மலடு பிரச்சனை தீர அசோகுப் பட்டை, மாதுளை வேர்ப்பட்டை, மாதுளம்பழ ஓடு(தோல்) இவை மூன்றையும்  சம அளவு எடுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 3 சிட்டிகை அளவு எடுத்து  காலை, மாலை என இருவேளையும்  சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால்  கருச்சிதைவு  வயிற்றுவலி, கர்ப்பச் சூலை, வாயுத்தொல்லை நீங்கும் . இந்த பொடியை  (4 மாதங்கள்) தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண் மலட்டுத்தன்மை  தீரும்.

  KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/2/w600X390/ashok.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/mar/02/இன்றைய-மருத்துவ-சிந்தனை-அசோகு-2873211.html
  2872466 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: பிரண்டைக் கீரை Thursday, March 1, 2018 02:07 PM +0530 உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  பிரண்டைக் கீரை:

  • குடற் புண் , தொண்டைப் புண் , ஆசணப் புண் குணமாக உலர்ந்த பிரண்ட இலையை (100கிராம்), சுக்கு (10 கிராம்), மிளகு(10 கிராம்) ஆகியவற்றுடன் சேர்த்துப் பொடியாக்கி தினமும் காலையில் 2 கிராம் அளவிற்கு சாப்பிட்டு வந்தால் குடற் புண் , தொண்டைப் புண் , ஆசனப் புண் போன்ற அனைத்தும் குணமாகும்.
  • மூட்டு வலி , மூட்டுத் தேய்வு , இடுப்பு வலி நீங்க பிரண்டை இலை , முடக்கத்தான் இலை ,சீரகம் மூன்றையும் தலா 10 கிராம் அளவு எடுத்து அரைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் மூட்டூ வலி , மூட்டுத் தேய்வு , இடுப்பு வலி போன்ற குறைகள் தீரும்.
  • மாதவிலக்குப் பிரச்சனை தீர பிரண்டையை  இடித்துச் சாறு எடுத்து, அதில் சிறிது பெருங்காயம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்குப் பிரச்சனைகள் சரியாகும்.
  • இளைத்த உடல்  பெருக்க பிரண்டையைக் கணு மற்றும் நார் நீக்கி ,நெய்யில் வதக்கி ,மிளகு ,உப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் பெருக்கும்.
  • இதயம் சார்ந்த பிரச்சனை தீர பிரண்டைத் தண்டுடன் , வாதநாராயணன் இலை ,பூண்டு ,மிளகு ,மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாக்கி குடித்து வந்தால் இதய நோய்கள் குணமாகும்.
  • பித்த மயக்கம் , உடல் எரிச்சல் நீங்க பிரண்டை இலையுடன் இஞ்சி ,பூண்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம் , உடல் எரிச்சல் போன்றவை விலகும்.


  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/1/w600X390/pindai-keerai.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/mar/01/இன்றைய-மருத்துவ-சிந்தனை-பிரண்டைக்-கீரை-2872466.html
  2871810 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: நாவல் மரம் Wednesday, February 28, 2018 11:24 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  நாவல் மரம்:

  • உள் , வெளி , இரத்த மூலம் அனைத்தும் குணமாக நாவல் கொட்டை , தேற்றான் கொட்டை  இவை இரண்டையும்  சம அளவு எடுத்துப் பொடி செய்து சாப்பிட்டு வந்தால் உள் மூலம் , கீழ் மூலம் , ரத்த மூலம் போன்றவை குணமாகும்.
  • இரத்த அழுத்தம் குணமாக நாவல் பருப்பு , சீரகம் இவை இரண்டையும் சம அளவு  எடுத்து எலுமிச்சம் பழச் சாற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால்  ரத்த அழுத்தம் குணமாகும்.
  • சர்க்கரை நோய்க்குத் தீர்வு நாவல் கொட்டை , சிறுகுறிஞ்சான் , வெந்தயம் , மாம்பருப்பு ஆகியவற்றைச் சம அளவு எடுத்துப் பொடி செய்து தினமும்  மூன்று கிராம் அளவுக்கு சாப்பிடுவதற்கு முன்பு சாப்பிட்டு வந்தால்  சர்க்கரை நோய் குணமாகும்.
  • நாவல் பழக் கொட்டைகளை (10) இடித்து 150 மில்லி தண்ணீரில் போட்டு சுண்டக் காய்ச்சி , அந்தத் தண்ணீரை தினமும் இரு வேளையும் குடித்து வந்தால் நீரிழிவு குணமாகும்.
  • அதிக இரத்தப்போக்கு கட்டுப்பட நாவல் இலைத் துளிரை (ஒரு கைப்பிடி) அளவு  எடுத்து அரைத்து தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப் போக்கு கட்டுப்படும்.
  • மாதவிலக்கை தள்ளிப் போட நாவல் பழத்தை மாதவிலக்கு  வருவதற்கு ஒரு வாரம் முன் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு தள்ளிபோகும்.
  • வாய்ப் புண் , வாய் வேக்காடு குணமாக நாவல் மர இலையை(5) ,  தண்ணீரில் (அரை லிட்டர்) போட்டுக் கஷாயம் காய்ச்சிக் குடித்து வந்தால் வாய்ப் புண் , வாய் வேக்காடு போன்றவை குணமாகும்.


  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/28/w600X390/NavalFruit.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/feb/28/இன்றைய-மருத்துவ-சிந்தனை-நாவல்-மரம்-2871810.html
  2870568 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: அமுக்கரா கிழங்கு Monday, February 26, 2018 11:27 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  அமுக்கரா கிழங்கு

  • நன்றாக தூக்கம் வர சீமை அமுக்கரா வேர் நன்கு இடித்து தூளாக்கி வைத்துக் கொள்ளவும். தினந்தோறும் (5கிராம்) வீதம் இரவில் உணவிற்குப் பிறகு பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் நல்ல தூக்கம் வரும்.
  • வயிற்று வலி , வயிற்றுப் புண் குணமாக அதிமதுரம் பொடி (100கிராம்) , சீமை அமுக்கரா பொடி (100 கிராம்) இவை இரண்டையும் ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு தினமும் 3 வேளை தலா 2 கிராம் வீதம் உணவிற்கு முன் அல்லது பின் சாப்பிட்டு வந்தால்  வயிற்றுவலி, வயிற்றுபுண் குணமாகும்.
  • ஆண்மைக்குறைவு நீங்க பூனைகாலி விதை (100கிராம்) ,சீமை அமுக்குரா வேர் (100கிராம்) இவை இரண்டையும் இடித்து பொடியாக்கி ஒன்றாகக் கலந்து காலை , மாலை என இருவேளையும் (1ஸ்பூன்) வீதம் பசும்பாலில் கலந்து குடித்து வந்தால்  ஆண்மை பெருக்கம் உண்டாகும்.
  • மூட்டு அழற்சி , பசியின்மை நீங்க அமுக்கரா கிழங்குப் பொடியை (2கிராம்) அளவுக்கு எடுத்து தேனில் குழைத்து காலை மாலை என இருவேளையும்  சாப்பிட்டு வந்தால்  உடல் பலவீனம்,  பசியின்மை, மூட்டு அழற்சி, செரிமானக் குறைவு, இருமல், உடல் வீக்கம், முதுமைத் தளர்ச்சி ஆகியவை நீங்கும்.
  • கை , கால் , இடுப்பு , மூட்டு , தொடை வலி குணமாக அமுக்கரா , சுக்கு , ஏலக்காய் , சித்தரத்தை இவை அனைத்தையும் தலா 100 கிராம் எடுத்து  அரைத்து வைத்துக்கொண்டு காலை , மாலை என இருவேளையும்  தலா 2 கிராம்  அளவுக்கு உணவிற்குப் பின் சாப்பிட்டு வத்தால் கை, கால் , மூட்டு , இடுப்பு ,தொடை வலி அனைத்தும் குணமாகும்.
    
  • உடல் வலி , அலுப்பு , களைப்பு நீங்க அமுக்கரா பொடியை தினமும் 2ஸ்பூன் அளவு எடுத்து பசும்பாலில் கலந்து உணவிற்குப் பின் சாப்பிட்டு வந்தால் உடல் அலுப்பு, உடல்வலி, களைப்பு மாறும்.
    
  • உடல் பருமனாக அமுக்கரா பொடி (2கிராம்) அளவு எடுத்து  நெய்யில் கலந்து இருவேளையும்  தொடர்ந்து சாப்பிட்டுவந்தால்  உடல் பருமனாகும்.


  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/26/w600X390/ht444994.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/feb/26/இன்றைய-மருத்துவ-சிந்தனை-அமுக்கரா-கிழங்கு-2870568.html
  2865287 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: வாழை Saturday, February 17, 2018 11:28 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!

  வாழை:

  • சிறுநீரகக் கோளாறுகள் நீங்க வாழைத்தண்டு, பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்து வாரம் மூன்று முறை சாப்பிட்டு வந்தால் சீறுநீரகக் கோளாறுகள் குணமாகும்.
  • வெள்ளைப்படுதல் நீங்க வாழைப்பூவை இடித்து சாறு எடுத்து அதில் பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் ரத்தக் கடுப்பு நீங்கும். வெள்ளைப்படுதல் பிரச்சனையும் தீரும்.
  • உடல் எடை குறைய வாழைத்தண்டுச் சாறு, பூசணிக்காய் சாறு, அருகம்புல்ச் சாறு இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து ஒருநாள் விட்டு ஒருநாள் குடித்து வந்தால் உடல் எடை குறைந்து அழகு பெறும்.
  • வயிற்றுப் புண் குணமாக பிஞ்சு வாழைக்காயை உலர்த்திப் பொடி செய்து, அரை ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் குணமாகும்.
  • நீர்க்கடுப்பு குணமாக வாழைத்தண்டுச் சாறு எடுத்து மண் சட்டியில் ஊற்றி சுடவைத்துக் குடித்து வந்தால் நீர்க்கடுப்பு குணமாகும்.
  • வாயுத் தொல்லை நீங்க வாழைக்காயை இஞ்சி , பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை தீரும்.
  • கல் அடைப்பு நீங்க வாழைத் தண்டுச் சாறு எடுத்து தினமும் 4 அல்லது 5 டம்ளர் வீதம் மூன்று நாள்கள் குடித்து வந்தால் கல் அடைப்பு நீங்கும்.


  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/17/w600X390/banana.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/feb/17/இன்றைய-மருத்துவ-சிந்தனை-வாழை-2865287.html
  2864674 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: கரிசலாங்கண்ணிக் கீரை Friday, February 16, 2018 12:12 PM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  கரிசலாங்கண்ணிக் கீரை:

  • தலைவலி குணமாக கரிசலாங்கண்ணிக் கீரையை மிளகு, சோம்பு சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் தலைவலி குணமாகும்.
  • பித்தப்பை கற்கள் கரைய கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறு எடுத்து , அதிகாலையில் 30 மில்லி அளவுக்கு 48 நாள்களுக்குத் தொடர்ந்து குடித்து வந்தால் பித்தப்பை கற்கள் கரையும்.
  • வாய்ப்புண் குணமாக கரிசலாங்கண்ணிக் கீரைச் சாற்றில் (30 மில்லி) நல்லெண்ணெய் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
  • இளநரை மறைய கரிசலாங்கண்ணிக் கீரைச் சாற்றில் நெல்லிமுள்ளி , சீரகம்  இரண்டையும் சம அளவு எடுத்து ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி , தினமும் காலை மாலை இருவேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் இளநரை மறையும்.
  • ஆரம்பநிலை புற்றுநோய் குணமாக கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறு (30மில்லி), பருப்புக் கீரை சாறு (30 மில்லி) இரண்டையும் ஒன்றாகக் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் ஆரம்பநிலை புற்று நோய் குணமாகும்.
  • மூச்சிரைப்பு குணமாக கரிசலாங்கண்ணிங் கீரைச் சாற்றில் திப்பிலியை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி , தினமும் காலையில் இரண்டு  கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் மூச்சிரைப்பு குணமாகும்.


  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/16/w600X390/karisalanganikeerai.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/feb/16/இன்றைய-மருத்துவ-சிந்தனை-கரிசலாங்கண்ணிக்-கீரை-2864674.html
  2863980 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: மாம்பூ Thursday, February 15, 2018 11:31 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  மாம்பூ:

  • நீரிழிவு குணமாக மாம்பூ, நாவல் பழக்கொட்டை, மாந்தளிர் மூன்றையும் சம அளவாக சேகரித்து வெயிலில் காயவைத்து இடித்து வைத்துக்கொண்டு தினம் அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் குணமாகும் .
  • மூலநோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்க மாம்பூ, சீரகம், இரண்டையும் சம அளவாக எடுத்து தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி சலித்து எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். இந்த தூளில் 2 சிட்டிகை அளவு எடுத்து சர்க்கரையுடன் சேர்த்துக் காலை, மாலை தினமும் சாப்பிட்டு வந்தால்  மூலநோய் கட்டுப்படும். உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு நேரத்திலும் இந்த மருந்தை உட்கொள்ளலாம்.
  • சீதபேதி குணமாக மாம்பூ , மாதுளம் பூ , மாந்தளிர் தலா (5 கிராம்) எடுத்து நீர் விட்டு மைபோல் அரைத்து அதனை பசும்பாலில் கலந்து காலை, மாலை, 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் சீதபோதி நீங்கிவிடும்.
  • மாம்பூக்களைச் சேகரித்து உலர்த்தி ஒரு கைப்பிடியளவு எடுத்து இரண்டு பங்கு அளவு நீர் சேர்த்துக் காய்ச்சிக் கஷாயமாக்கி வடிகட்டி அரை டம்ளர் அளவு எருமைத் தயிரில் கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் சீதபேதி நீங்கிவிடும்.
  • குமட்டல் நீங்க மாம்பூ , கொத்தமல்லி தழை , இஞ்சி (தோல் நீக்கியது) , கருவேப்பிலை சமஅளவு எடுத்து துவையல் செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் குமட்டல் நீங்கும்.
  • வீட்டில் கொசுத் தொல்லை வராமல் தடுக்க உலர்ந்த மாம்பூவை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் காண்பித்து வந்தால் வீடாடில் கொசுத்தொல்லை ஒழியும்.
  • தொண்டைவலி குணமாக மாம்பூக்களை பறித்து நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். அதனை நன்கு நீரில் கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டிக்கொண்டு அதில் எலுமிச்சம் பழத்தின் சாறினை பிழிந்து விடவேண்டும். அந்த தண்ணீரை நன்றாக தொண்டைக்குள் இறங்குமாறு கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குணமடையும்.
  • வாய்ப்புண் , வயிற்றுப் புண் குணமாக உலர்ந்த மாம்பூக்களை நன்றாக பொடிசெய்து மோரில் கலந்து தினசரி மூன்று வேளை குடித்து வந்தால் மூன்று நாட்களில் வாய்ப்புண், வயிற்றுப்புண் காணாமல் போய்விடும்.


  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/15/w600X390/mango-flower-leaves-fleshy-stone-fruit-belonging-to-genus-mangifera-37237826.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/feb/15/இன்றைய-மருத்துவ-சிந்தனை-மாம்பூ-2863980.html
  2862718 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: சிறுகுறிஞ்சான் Tuesday, February 13, 2018 12:22 PM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  சிறுகுறிஞ்சான்:

  • சிறுநீரில்  உள்ள சர்க்கரை அளவு குறைய சிறுகுறிஞ்சான் இலையை நிழலில் காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து வைத்துக்கொண்டு சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நெய்யில் குழைத்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைந்து நாளைடைவில் நோய் முற்றிலும் குணமடைந்து விடும்.
  • சர்க்கரை வியாதியின் வீரியம் குறைய சிறுகுறிஞ்சாக் கீரையை நன்கு நீர்விட்டு அலசி, அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து சிறிது நீர்விட்டு அவித்து சிறிது நேரம் அப்படியே ஊறவைத்து சாப்பிட வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் குறையும்.
  • நாவற்பழக் கொட்டையையும், சிறுகுறிஞ்சான் கீரையையும் நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலையில் இரண்டு டம்ளர் நீரில் ஒரு தேக்கரண்டி பொடி போட்டு காய்ச்சி ஒரு டம்ளராக  கஷாயமாக்கி குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
  • வயிற்றுப் புண் , வாய்ப்புண் குணமாக சிறுகுறிஞ்சாக் கீரையை பாசிப் பருப்புடன் சேர்த்து காரம் சேர்க்காமல் வேகவைத்து கடைந்து அதனுடன் நெய் கலந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் விரைவில் குணமாகும்.
  • சிறுகுறிஞ்சாக் கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து சமைத்து உணவில் சேர்த்துக்கொண்டு சாப்பிட்டு வந்தால்  நன்கு பசியைத் தூண்டும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
  • ஈரல் பாதிப்பு குணமாக சிறுகுறிஞ்சாக் கீரையை வேகவைத்து அதனுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஈரலில் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.


  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/13/w600X390/gymnema_sylvestre_1.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/feb/13/இன்றைய-மருத்துவ-சிந்தனை-சிறுகுறிஞ்சான்-2862718.html
  2860982 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: சீரகம் Saturday, February 10, 2018 11:04 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  சீரகம்:

  • உடல் சூடு , வயிற்று வலி மறைய சீரகத்தைப் பொடி செய்து வெண்ணெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டால் உண்டாகும் வயிற்று வலி குணமாகும்.
  • பித்தம் குறைய, இளநரை மறைய சீரகத்தை கரும்புச்சாற்றில் ஊறவைத்து , காயவைத்து பொடி செய்து தினமும் அதிகாலையில் அரை ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் , பித்தம் குறையும் , இளநரை மறையும்.
  • நன்றாகத் தூக்கம் வர சீரகம் , ஒமம் இவை இரண்டையும் சம அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து இரவு படுக்கப் போகும் முன் குளித்து விட்டு படுத்தால் இரவில் நன்றாகத் தூக்கம் வரும்.
  • குளிர்க் காய்ச்சல் உடனே குணமாக சீரகம் , குருந்தொட்டி வேர் இவை இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடிசெய்து வைத்துக்கொண்டு கஷாயமாக  காய்ச்சி மூன்று நாள்களுக்குத் தொடர்ந்து குடித்தால் குளிர்க் காய்ச்சல் உடனே குணமாகும்.
  • உடல் பருமன் குறைய சீரகம் , சோம்பு , வாய்விளங்கம் , ரோஜாப்பூ இவை அனைத்தையும் தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்துகொள்ளவும் , இதில் காலை மாலை இரு வேளையும் ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் , உடல் பருமன் குறையும்.


  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/10/w600X390/1503925447.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/feb/10/இன்றைய-மருத்துவ-சிந்தனை-சீரகம்-2860982.html
  2860389 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: ஆமணக்கு Friday, February 9, 2018 11:01 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  ஆமணக்கு:

  • மூல நோய்களுக்கு தீர்வு ஆமணக்கு எண்ணெய்யுடன் (அரை லிட்டர்), கடுக்காய் (50 கிராம்) சேர்த்துக் காய்ச்சி , தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் மூல நோய்கள் அனைத்தும் தீரும்.
  • கல் அடைப்பு, சதை அடைப்பு நீங்க ஆமணக்கு விதைப் பருப்பை ஒன்றிரண்டாகத் தட்டிப் போட்டு துணியில் சுற்றி சட்டியில் போட்டுச் சூடாக்கி ஒத்தடம் கொடுத்து வந்தால் வயிற்று வலி , கல்அடைப்பு , சதை அடைப்பு , நீர் அடைப்பு , வீக்கம் போன்றவை குணமாகும்.
  • மலச்சிக்கல் தீர மலச்சிக்கல் உள்ளவர்கள் ஆமணக்கு எண்ணெய்யை தினமும் ஆசனவாயில் தடவி வந்தால் மலம் எளிதில் வெளியாகும்.
  • தளர்ந்த வயிறு இறுக வேண்டுமா ஆமணக்கு இலை , துத்தி இலை , முல்தானி மட்டி இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து , வாழைப் பூ சாற்றில் குழைத்து வயிற்றுப் பகுதியில் பற்றுப் போட்டு வந்தால் தளர்ந்த வயிறு இறுகும்.
  • தாய்ப்பால் அதிகமாகச் சுரக்க ஆமணக்கு இலையை வதக்கி மார்பகங்களில் வைத்துக் கட்டி வந்தால்  தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.
  • குடல் புண் , காது , மூக்கு பிரச்சனைக்கு தீர்வு ஆமணக்கு எண்ணெய்யை தினமும் ஐந்து சொட்டுகள் சாப்பிட்டு வந்தால் குடல் புண் , குடல் ஏற்றம் , காது , மூக்கு , கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
  • கை , கால் வீக்கம் குறைய ஆமணக்கு இலையை வதக்கி வீக்கம் உள்ள பகுதியில் கட்டி வந்தால் கை , கால்களில் உண்டாகும் வீக்கம் தணியும்.


  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/9/w600X390/3401792_m.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/feb/09/இன்றைய-மருத்துவ-சிந்தனை-ஆமணக்கு-2860389.html
  2859726 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: கசகசா Thursday, February 8, 2018 11:07 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  கசகசா:

  • தூக்கமின்மை பிரச்சனை தீர கசகசாவை (10 கிராம்) அளவு எடுத்து மாதுளம் பழச்சாற்றில் ஊறவைத்து இரவு படுக்கபோகும் முன் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை பிரச்சனை தீரும்.
  • உடல் வலுப்பெற கசகசா , முந்திரிப் பருப்பு , பாதாம் பருப்பு இவை அனைத்தையும் தலா 100 கிராம் அளவு  எடுத்து அரைத்துக்கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் பொடியை காலை மாலை என இருவேளையும் பாலில் கலந்து  சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.
  • முகம் அழகு பெற , முகப் பரு மறைய கசகசா , முந்திரிப்பருப்பு இவை இரண்டையும் சம அளவு எடுத்து பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.  முகம் அழகு பெறும்.
  • மூட்டு வலி நீங்க கசகசா , துத்தி இலை இவை இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து கால் மூட்டுகளில் பற்றுப்போட்டால் , மூட்டுவலி உடனே குணமாகும்.
  • ரத்த உற்பத்தி அதிகரிக்க கசகசா , வாழைப்பூ , மிளகு, மஞ்சள் இவை அனைத்தையும் சிறிதளவு எடுத்து அனைத்தையும் சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் ரத்த உற்பத்தி  அதிகரிக்கும்.
  • இடுப்பு வலி நீங்க கசகசா , ஜவ்வரிசி , பார்லி இவை மூன்றையும் தலா 10 கிராம் அளவு எடுத்து , பச்சரிசியுடன் (100 கிராம்) அளவு  சேர்த்துக் கஞ்சி காய்ச்சிக் குடித்துவந்தால் இடுப்பு வலி குணமாகும்.
  • வயிற்றுப் புண் குணமாக கசகசாவை தேங்காய்ப் பாலில் ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால் , வயிற்றுப்புண் குணமாகும்.


  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/8/w600X390/625.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/feb/08/இன்றைய-மருத்துவ-சிந்தனை-கசகசா-2859726.html
  2859127 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: சுக்கு Wednesday, February 7, 2018 11:28 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  சுக்கு:

  • தொண்டைக்கட்டு நீங்க சுக்குப் பொடியை தேனில் குழைத்து மூன்று வேளை உணவுக்கு முன் சாப்பிட்டுவந்தால் தொண்டைக்கட்டு குணமாகும்.
  • நாவறட்சி குணமாக சுக்கைப் பொடி செய்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் நாவறட்சி குணமாகும்.
  • மூட்டு வலி , வாயுத்தொல்லை நீங்க தோல் நீக்கிய சுக்கை (2 கிராம்) ,  பசும்பாலில் (2 லிட்டர்) போட்டுக் கொதிக்கவைத்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூட்டு வலி , வாயுத் தொல்லை , உடல் அசதி போன்றவை குணமாகும்.
  • பல்வலி குறைய சுக்குத் துண்டை தோல்நீக்காமல் வாயில் போட்டு மென்றால் பல்வலி குறையும்.
  • தலைச்சுற்றல் , தலை வலி வராமல் தடுக்க சுக்கை அடிக்கடி கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் தலைவலி , தலைச்சுற்றல்  போன்றவை வராது.
  • மண்ணீரல் வீக்கம் , அஜீரணம் குணமாக சுக்கு ,  மிளகு , திப்பிலி , அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்து தூள் செய்து கஷாயமாக்கிக் குடித்து வந்தால்  காய்ச்சல் ,  வாய்ப்புண் , மண்ணீரல் வீக்கம் , அஜீரணம் போன்றவை குணமாகும்.
  • வயிற்றுவலி குணமாக சுக்குப் பொடியுடன் பூண்டுச் சாறு சேர்த்துச் சாப்பிட்டுவந்தால் கடுமையான வயிற்றுவலி  குணமாகும்.


  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/7/w600X390/113475809.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/feb/07/இன்றைய-மருத்துவ-சிந்தனை-சுக்கு-2859127.html
  2858514 மருத்துவம் உணவே மருந்து கருப்பு திராட்சை சாப்பிட்டால் மன அழுத்தம் குறையுமா? வியக்க வைக்கும் புதிய ஆராய்ச்சி முடிவு! DIN DIN Tuesday, February 6, 2018 11:38 AM +0530  

  இன்றைய சூழலில் காலை எழுந்ததில் இருந்து இரவு தூங்க செல்லும் வரை எப்போதும் டென்ஷனாகவே இருப்பதால் மனச் சோர்வு அதிகரித்து மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த மனச் சோர்வு ஏற்படாமல் இருக்கக் கருப்பு திராட்சை சாப்பிடுவது ஒரு நல்ல தீர்வு என சமீபத்திய ஆய்வில் கண்டறிய பட்டுள்ளது.

  அமெரிக்காவில் உள்ள மருத்துவ பத்திரிகை ஒன்றில்  வெளியான இந்த ஆய்வு முடிவில் திராட்சையில் இயற்கையாகவே உள்ள கலவைகள் மனச் சோர்வை கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது எனத் தெரிய வந்துள்ளது. திராட்சையில் இருக்கும் மல்விடின்-3-ஒ-குளுக்கோசைட் மற்றும் டைஹைட்ரோகாஃபிக் என்னும் அமிலம் ஆகிய இரண்டும் மனச் சோர்வு சிகிச்சைக்கான ஒரு சிறந்த மருந்தாகப் பார்க்கப்படுகிறது. 

  இப்போதிருக்கும் வழக்கமான மனச் சோர்வுக்கான சிகிச்சை முறையில் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே தற்காலிக தீர்வுகூட கிடைப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் இதை விட மேலான நிரந்தர தீர்வைத் தரக்கூடிய பக்க விளைவுகள் ஏதும் இல்லாத ஒரு மாற்று மருத்துவத்தைக் கண்டுபிடிப்பதற்கான தேவை அதிகம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் இந்த மனச் சோர்வு பிற்காலத்தில் நமது உடலில் பல நோய்கள் உருவாக ஒரு முக்கிய காரணமாக மாறிவிடுகிறது. 

  எப்படியென்றால் இந்த மனச் சோர்வு நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தாக்கி அதில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் நோய் தாக்குதலில் இருந்து நம்மைப் பாதுகாக்க நியூரான் ஒரு மின் அல்லது வேதியில் சார்ந்த சமிக்ஞை ஒன்றைச் செலுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. இப்போது இருக்கும் மனச் சோர்வை கட்டுப்படுத்தும் சிகிச்சிகள் பெரும்பாலும் செரடோனின், டோபமைன் மற்றும் பிற நரம்பியக்க கடத்திகளை ஒழுங்கு படுத்துவதோடு தொடர்புடையது. ஆனால் இந்தச் சிகிச்சைகள் ஏற்பட்டுள்ள வீக்கத்தைக் குறைக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

  இந்த ஆய்வில் திராட்சையில் அதிகம் இருக்கும் பாலிஃபினால் மனத் தளர்ச்சியை நிச்சயம் கட்டுப்படுத்தும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்தச் சிகிச்சை முறைக்கான வழி முறைகள் பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் நடந்து வருகின்றது. 

  தேர்ந்தெடுக்கப்பட்ட கான்கார்ட் திராட்சையின் சாறு, திராட்சை விதைகளில் இருந்து எடுக்கப்பட்ட சாறு மற்றும் டிரான்ஸ்-ரெஸ்வெராட்ரால் உட்படத் திராட்சையில் இருந்து பெறப்பட்ட இந்த மூன்று விதமான பாலிஃபினோல் பொருட்களின் கலவையை எலிகளுக்குக் கொடுத்து மன அழுத்தத்தை உண்டாக்கும் மனச் சோர்வை எதிர்க்கும் திறனை ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர். 

  எலிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் டி.எச்.சி.ஏ/மால்-குளூக் ஆகிய மந்தமான சுழற்சியை மாற்றியமைப்பதன் மூலம் இவை ஊக்குவிக்கப்பட்டு சிஸ்ட்டுகள் சிதைக்கப்படுவது தெரியவந்துள்ளது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த எலிகளின் உயிரணுக்களில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் எலும்பு மஜ்ஜையில் உள்ள பியோனிஃபியல்கள் தூண்டப்பட்டு மனச் சோர்வு-போன்ற பிரச்னைகள் கட்டுப்படுத்தப்படுவது நிரூபணம் ஆகியுள்ளது.

  இந்த ஆய்வில் முதல் முறையாக மன அழுத்தச் சிகிச்சைக்காக டி.என்.ஏ எபிகேனடிக் மாற்றியமைக்கப்பட்டுத் தீர்வை காண முயற்சி செய்துள்ளனர். மன அழுத்தத்தில் இருந்து விடுபடப் பல மாத்திரைகளை விழுங்குவதற்குப் பதிலாக நாம் உண்ணும் உணவையே மருந்தாக்கித் தீர்வு காண்பது என்றுமே புத்திசாலித்தனம் தான்.

  ]]>
  கருப்பு திராட்சை, மனச் சோர்வு, மன அழுத்தம், ஆய்வு, grapes, depression, stress, research http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/6/w600X390/grapes--621x414.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/feb/06/black-grapes-to-treat-depression-new-research-2858514.html
  2858511 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: வெள்ளரிக்காய் Tuesday, February 6, 2018 11:16 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  வெள்ளரிக்காய்:

  • வயிற்றுப் புண் குணமாக வெள்ளரிக்காய் நறுக்கி சாறு எடுத்து வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை அரைடம்ளர் வீதம் வெள்ளரிச்சாறு அருந்தி வந்தால் வயிற்றுப் புண் குணமாகும்.
  • உயர் ரத்த அழுத்தம் குறைய தினந்தோறும் இரண்டு வெள்ளரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இவற்றில் உள்ள சுண்ணாம்புச்சத்து இரத்தக் குழாய்களைத் தளர்த்தி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
  • உடல் பருமன் , ஊளைச் சதை குறைய வெள்ளரிக்காய் , வெள்ளை வெங்காயம் இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாறு எடுத்து  அவற்றை சாறு பிழிந்து காலை மாலை என இருவேளையும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் பருமன் , ஊளைச் சதை குறையும்.
  • சிறுநீரகக் கற்கள் கரைய வெள்ளரிகாய் , முள்ளங்கி , வாழைத்தண்டு  இவை மூன்றையும் சம அளவு  எடுத்து அரைத்து சாறு எடுத்துக் குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள் கரையும் . நீர் அடைப்பு , நீர்க் கட்டு போன்ற குறைபாடுகள் நீங்கும்.
  • முடி நன்கு வளர முடி வளர்ச்சிக்கு குறிப்பாகப் பெண்கள் வெள்ளரிச் சாற்றை அருந்த வேண்டும். வெள்ளரியில் உள்ள உயர்தரமான சிலிகானும், சல்ஃபரும் முடிவளர்ச்சிக்குப் பயன்படுகின்றன.  வெள்ளரிக்காய் சாற்றுடன்  காரட்சாறு (2 ஸ்பூன்) , பசலைக்கீரைச்சாறு (2 ஸ்பூன்) , போன்றவற்றையும் சேர்த்து குடித்து வந்தால் முடி நன்கு வளரும். முடிகொட்டுவதும் நின்றுவிடும்.
  • காரட் கிழங்கைப் போலவே, வெள்ளரிக் காயில் தோல் பகுதி அருகில்தான் தாது உப்புகளும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. எனவே, தோல் சீவாமலேயே வெள்ளரிக்காய்களை நன்கு கழுவிப் பயன்படுத்துவும்.
  • முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூசி பதினைந்து நிமிடங்கள் முகத்தில் இந்தப் பூச்சு இருக்க வேண்டும். தொடர்ந்து இந்த முறையில் பூசி வந்தால் முகம் அழகு பெறும்.முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வறண்ட தோல், பருக்கள் முதலியவை குணமாகும் . பெண்கள் இந்த முறையைத் தினசரி பின்பற்றி வந்தால் முகம் அழகு பெறும்.


  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/6/w600X390/Cucumber-1.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/feb/06/இன்றைய-மருத்துவ-சிந்தனை-வெள்ளரிக்காய்-2858511.html
  2857804 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: பச்சை பட்டாணி Monday, February 5, 2018 10:57 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  பச்சை பட்டாணி:

  • குழந்தைகளின் ஆரோக்கியம் பெற பச்சை பட்டாணி (3 தேக்கரண்டி) , கேரட், புதினா, பீன்ஸ் இவை அனைத்தையும்  சேர்த்து வேகவைத்து அதனுடன் உப்பு சேர்த்து சூப்பாக சிற்றுண்டிக்கு பதில் கொடுத்து வந்தால்  குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும்.
  • பச்சை பட்டாணியை (3 தேக்கரண்டி அளவு) வேகவைத்து அதனுடன் சிறிதளவு உப்பு, மிளகு சேர்த்து வாரம் இரண்டு  முறை வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களின் உடல், மனம் பலப்பட்டு ஆரோக்கியமாக காணப்படுவர்.
  • மனநல பிரச்சனையில் இருந்து விடுபட பச்சைப் பட்டாணி (100 கிராம்) எடுத்து வேகவைத்து  சுண்டல் செய்து சாப்பிட்டு வந்தால் மனநலம் பிரச்சனையில் இருந்து விரைவில் குணமடைவார்கள்.
  • இதயநோய் , பக்கவாதம் வராமல் தடுக்க பச்சை பட்டாணி(100 கிராம்) எடுத்து காய்கறிகளுடன் சேர்த்து தினந்தோறும் சாப்பிட்டு வருவதன் மூலம் இவற்றில் உள்ள  கரையாத நார்சத்து நம் உடம்பில் உள்ள  கொழுப்பு சத்தை குறைத்து இதயநோய், பக்கவாதம் வராமல் தடுக்கிறது.
  • உடல் சோர்வு நீங்கி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பச்சை பட்டாணியை  தினசரி உணவில் சேர்த்து கொண்டு வரும் பொழுது இவற்றில் உள்ள இரும்புசத்து அதிகம்  இருப்பதால் நம் உடலில் ரத்த அணுக்கள் உற்பத்தியை அதிகரித்து ரத்த சோகையை போக்கி உடல் சோர்வையும் நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது .
  • ரத்தம் , நுரையீரல் , ஆசனவாய் புற்றுநோய் வராமல் தடுக்க தினந்தோறும் பச்சை பட்டாணியை சாப்பிட்டு வந்தால் இவற்றில் உள்ள விட்டமின் (சி ) , ரத்த புற்று, நுரையீரல் புற்று, ஆசனவாய் புற்று போன்ற எல்லா புற்று நோய்களும் வராமல் தடுக்கிறது.
  • வயதானவர்களுக்கு உண்டாகும் கண்புரை வளர்ச்சியை குறைக்க பச்சை பட்டாணியை வயதானவர்கள் வேகவைத்து  தினமும் சாப்பிட்டு வந்தால் இவற்றில் லுட்டின்(Lutin) என்ற கரோட்டீனாய்டு(carotenoid) ,  வயதானவர்களுக்கு கண்ணில் ஏற்படும் கண்  புரை வளர்தலை குறைக்கிறது.


  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/5/w600X390/418232_245605218893280_1095168563_n.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/feb/05/இன்றைய-மருத்துவ-சிந்தனை-பச்சை-பட்டாணி-2857804.html
  2856685 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: தக்காளி Saturday, February 3, 2018 11:35 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  தக்காளி:

  • உடல் பருமன் குறைய தினமும் மூன்று தக்காளி பழங்களைச் சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸி மூலம் அரைத்து வடிகட்டி  சாறாக மாற்றி அருந்தி வந்தால்  நாக்கு வறட்சியும் அகலும் . உடலும் மினு மினுப்பாய் மாறும். உடல் பருமனும் குறையும்.
  • தாய்ப்பால் நன்கு சுரக்க தக்காளி செடியின் தண்டை அரைத்து, அதில் வினிகரையும் கலந்து மார்புகளின்மீது வைத்துக் கட்டி வந்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
  • ஆஸ்துமா , நுரையீரல் நோய் குணமாக தக்காளி (4) எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து  ஒரு  டம்ளர் அளவுக்கு தக்காளிச் சாறு எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் அளவு தேனும் , சிறிதளவு ஏலக்காய் தூளும் கலந்து  இரவில் படுக்கப்போகும் போது குடித்து வந்தால் ஆஸ்துமா , நுரையீரல் நோய் போன்றவை குணமாகும்.
  • ரத்தசோகை குணமாக தக்காளிச் சாறு ஒரு டம்ளர் அளவுக்கு தினந்தோறும் குடித்து வருவதன் மூலம்  இவற்றில் உள்ள இரும்புச்சத்து எளிதில் ஜீரணமாகிறது. அத்துடன் முழுமையாக உடலில் கலந்துவிடுகிறது. இதனால் இரத்த சோகை நோயாளிகள் விரைந்து குணமடைவார்கள்.
  • பார்வை நரம்புகள் பலமடைய தக்காளிப் பழம் அல்லது தக்காளிச் சாற்றை தினந்தோறும் சாப்பிட்டு வருவதன் மூலம் வெண்ணெயில் உள்ளதைவிட அதிக அளவு வைட்டமின் ‘ஏ’ தக்காளிப் பழங்களில் இருப்பதால்  கண் பார்வைக் கோளாறுகள் நீங்கி பார்வை நரம்புகள் பலப்படும்.
  • வாயு தொந்தரவு , நெஞ்செரிச்சல் நீங்க தினந்தோறும் ஒரு டம்ளர் தக்காளிச் சாறுடன் ஒரு சிட்டிகை உப்பு , சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில்  குடித்து வந்தால் உணவு செரியாமை , வாயு தொந்தரவு , நெஞ்செரிச்சல் போன்றவை குணமாகும்.


  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/3/w600X390/food-wood-tomatoes.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/feb/03/இன்றைய-மருத்துவ-சிந்தனை-தக்காளி-2856685.html
  2856045 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: மிளகாய் / மிளகாய் வற்றல் Friday, February 2, 2018 11:49 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  மிளகாய் / மிளகாய் வற்றல்:

  • வலி மற்றும் வீக்கம் குறைய மிளகாய் (4), பூண்டு (4 பல்), மிளகு(10), மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து தடவினால்   வலி , வீக்கம் போன்றவை குணமாகும்.
  • அஜீரணக் கோளாறுகள் நீங்க மிளகாயை (3)அரிந்து , சிறிது மஞ்சள் சேர்த்து கஷாயம் காய்ச்சி மூன்று நாள்களுக்குக் குடித்து வந்தால் அஜீரணக் கோளாறு , வயிற்று நோய் குணமாகும்.
  • பச்சை மிளகாய் (2) , வெல்லம் (சிறிதளவு) , புளி (சிறிதளவு) இவை மூன்றையும் சேர்த்து துவையல் அரைத்து வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் ஜீரணக் கோளாறுகள் வராது.
  • காது வலி , காது குத்தல் நீங்க சிறிது நல்லெண்ணெயில் விதை நீக்கிய மிளகாயைப் போட்டு சூடாக்கி ஆறிய பிறகு , காதில் இரண்டு துளிகள் எண்ணெய் விட்டால் காது வலி , காது குத்தல் போன்றவை தீரும்.
  • வயிறு உப்புசம் நீங்க மிளகாய்வற்றல் (ஓன்று) , புளி (சுண்டைக்காய் அளவு) இவை இரண்டையும் நன்றாக அரைத்து மூன்று நாள்களுக்கு காலை மாலை என இருவேளை சாப்பிட்டுவந்தால் வயிற்று உப்புசம் தீரும்.
  • மாதவிலக்கின் போது ஏற்படும் வலி நீங்க மிளகாய்வற்றல் (ஒன்று) , பூண்டு (2பல்) , இவை இரண்டையும் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் சூதகவலி குணமாகும்.


  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/2/w600X390/622779534.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/feb/02/இன்றைய-மருத்துவ-சிந்தனை-மிளகாய்--மிளகாய்-வற்றல்-2856045.html
  2855363 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: சுண்டைக்காய் Thursday, February 1, 2018 11:03 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  சுண்டைக்காய்:

  • ஆசனவாய் அரிப்பு  நீங்க சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து வைத்துக் கொண்டு தினமும் ஐந்து கிராம் அளவு எடுத்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும்.
  • தைராய்டு கோளாறுகள் நீங்க சுண்டைக்காய் வற்றல் , சீரகம் , சோம்பு இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் காலை , மாலை இரு வேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் தைராய்டு கோளாறுகள் குணமாகும்.
  • நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் வைக்க சுண்டைக்காய் வற்றல் , மாதுளை ஒடு இவை  இரண்டையும் சேர்த்து அரைத்து , தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
  • உடல் பருமன் குறைய சுண்டைக்காய் வற்றலை பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும்  ஐந்து கிராம் பொடியை எடுத்து காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
  • ரத்தசோகை குணமாக சுண்டைக்காயை அடிக்கடி சமையலில்  சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும்.
  • குடல் பூச்சிகள் வெளியேற சுண்டைக்காய் வற்றல் , ஒமம்  இவை  இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து வைத்துக் கொண்டு  தினமும் காலையில் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் குடல் பூச்சிகள் ஒழியும்.


  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/1/w600X390/sundaikkai-gravy.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/feb/01/இன்றைய-மருத்துவ-சிந்தனை-சுண்டைக்காய்-2855363.html
  2854007 மருத்துவம் உணவே மருந்து இந்த 6 காய்களும் இந்த 6 நோய்கள் வராமல் தவிர்க்க உதவும்! சினேகா Tuesday, January 30, 2018 03:02 PM +0530  

  நம்முடைய வாழ்க்கையில் நவீன வசதிகள் பெருக பெருக உடல் நலத்தை இழந்துவருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். இந்தத் தலைமுறையினர் தான் முப்பது வயதிலிருந்து நாற்பது வயதிற்குள் பலவிதமான நோய்களுக்கு சொந்தக்காரர்களாகிவிடுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் சரியான உடல் உழைப்பு இல்லாததும், சத்துள்ள உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதாகும்.

  குப்பை உணவுகளிலுள்ள நச்சுப் பொருட்கள், கொழுப்புகள் போன்றவை நமது ரத்தத்தில் அதிகமாக கலக்கிறது.இதனால் ரத்த ஓட்டம் குறைய ஆரம்பிக்கும். ரத்த ஓட்டம் குறைவதனாலேயே பெரும்பாலான நோய்கள் உண்டாகின்றன. ஆரோக்கியமான உணவுகள் ரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு, ரத்தத்தை சுத்தப்படுத்திக் கொள்ளவும் செய்யும். 

  முருங்கைக்காய்

  முருங்கைக் காய் ஆஸ்துமா சம்மந்தப்பட்ட பிரச்னைகளுக்கு நல்ல மருந்தாகும். முருங்கைக் காய் போட்டு ஆவி பிடித்தால் சுவாசப் பிரச்னைகளுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

  எலுமிச்சை

  எலுமிச்சை, நோய்த் தொற்றுக்களை அழிக்கும் தன்மைக் கொண்டது. தைராய்டு பிரச்னைகள் வராமல் தடுக்க எலுமிச்சை பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சளி, ஆஸ்துமா, அலர்ஜி, தொண்டை அடைப்பு போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும். நினைவுத்திறன் அதிகரிப்பதோடு, மனம், மூளையின் செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்கும் என்பது ஜப்பானிய விஞ்ஞானிகள் கருத்து.

  வெண்டைக்காய்

  வெண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் அது ரத்த அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்க உதவும். காரணம் வெண்டைக்காயில் பொட்டாஷியம் மற்றும் வைட்டமின் சி சத்து உள்ளது. இதில் மிக அதிக அளவில் ஃபோலிக் அமிலமும் உள்ளது. மேலும் அதில் புரதம், இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின் ஆகியவை இருப்பதால் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

  புடலங்காய்

  சிலருக்கு படுத்தவுடன் உறக்கம் வராது. அல்லது ஆழ்ந்த தூக்கம் வராமல் சிரமப்படுவார்கள். உணவில் புடலங்காய் சேர்த்து சாப்பிட்டுவந்தால் இத்தகைய உறக்கமின்மை பிரச்னை தீரும். நார்ச்சத்தும் ஃபோலிக் அமிலமும் கொண்ட குறைந்த கலோரி அளவுள்ள காய்களுள் ஒன்று புடலங்காய். சர்க்கரை, இதய நோய்கள், ரத்த அழுத்தம் ஆகிய பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் புடலங்காய் சேர்த்துக் கொள்வது நல்லது.

  கோவைக்காய்

  உடம்பில் சேரும் அதிகப்படியான கொழுப்பை கரைக்கவல்லது கோவைக்காய். கோவைக்காயில் இயற்கையாகவே கொழுப்பை வெளியேற்றும் தன்மை இருப்பதால், வளர்சிதை மாற்றத்தால் உண்டாகும் உடல்பருமன் போன்ற பிரச்சனை நீங்கும். அனேக ஊட்டச்சத்துகள் மற்றும் தாது பொருட்கள் நிறைந்துள்ள இந்தக் கோவைக்காய் உடலில் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும். 

  பீர்க்கங்காய்

  சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பாகற்காய்க்கு பதிலாக பீர்க்கங்காயை சாப்பிடலாம். பீர்க்கங்காய் இலையிலிருந்து சாறு எடுத்து அதனை சூடாக்கி தினமும் ஒரு டீஸ்பூன் அருந்தி வர சர்க்கரை வியாதி கட்டுப்பாட்டில் இருக்கும்.

  இந்த 6 காய்கறிகளும் குறைந்த கலோரிகள் கொண்டவை. மேலும் இவற்றில் வைட்மின்களும் மினரல்களும் புரதச்சத்தும் தேவையான அளவு நிறைந்திருக்கின்றன. 

  ]]>
  green veg, fresh vegetables, பச்சை காய்கறிகள், நோய் நீக்கும் காய் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/30/w600X390/1.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/jan/30/eat-these-6-vegetables-to-avoid-6-diseases-2854007.html
  2853452 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: அருகம் புல் Monday, January 29, 2018 01:49 PM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  அருகம் புல்:

  • வெள்ளைப்படுதல் குணமாக அருகம் புல் வேரை வெண்ணெய் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் வெட்டைச் சூடு , வெள்ளைப்படுதல் குணமாகும்.
  • தோல் சார்ந்த பிரச்சனைகள் தீர அருகம் புல் வேர் , சிறியா நங்கை வேர் இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.
  • அருகம் புல் வேரைக் காயவைத்து அரைத்து 100 கிராம் பொடி செய்து அதனுடன்  நல்லெண்ணெய் (500 மில்லி) கலந்து சூடுபடுத்தி , உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் தோல் நோய்கள் அனைத்தும்  குணமாகும்.
  • நெஞ்சுவலி குணமாக அருகம் புல் வேரை நிழலில் உலர்த்திப் பொடி செய்து  தினமும் காலை மாலை என இருவேளையும் ஒரு டம்ளர் அளவுக்கு  கஷாயம் வைத்து குடித்து வந்தால் நெஞ்சு வலி குணமாகும்.
  • வயிற்றுப் புண் குணமாக அருகம் புல்லை அரைத்து சாறு எடுத்து தினமும் காலை 50 மில்லி அளவுக்கு வெறும் வயிற்றில்  குடித்து வந்தால் வயிற்றுப் புண் குணமாகும்.
  • பல்வலி குணமாக  அருகம் புல் , தூதுவளை வேர் இவை இரண்டையும் கசக்கிச் சாறு எடுத்து ஒரு துளி வீதம் இரண்டு காதுகளில் விட்டால் பல் வலி குணமாகும்.
  • தலைவலி மறைய அருகம் புல் , ஆல மர இலை  இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து உச்சந்தலையில் பற்றுப் போட்டு வந்தால்  தலைவலி உடனே குணமாகும்.
  • ஆஸ்துமா , சைனஸ் , சளி நீங்க அருகம்  புல்லை (ஒரு கைப்பிடி) இடித்துச் சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ஆஸ்துமா , சளி ,சைனஸ் , நீரிழிவு போன்றவை குணமாகும்.
  • மாதவிலக்கு பிரச்சனை தீர அருகம் புல்லை அரைத்து சிறிதளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
  •  

  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/29/w600X390/c.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/jan/29/இன்றைய-மருத்துவ-சிந்தனை-அருகம்-புல்-2853452.html
  2851762 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: கொத்தமல்லி தழை Friday, January 26, 2018 11:13 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  கொத்தமல்லி தழை:

  • குளிர்காய்ச்சல் குணமாக கொத்தமல்லியோடு , மஞ்சள் மற்றும் மிளகு சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் குளிர்காய்ச்சல் குணமாகும்.
  • கொத்தமல்லியுடன் துளசியைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.
  • கொழுப்பு கரைய கொத்தமல்லிச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை என இருவேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு குறையும் . ரத்த அழுத்தமும் சீராகும்.
  • அதிகப்படியான கபம் வெளியேற கொத்தமல்லியோடு உப்பைக் கொஞ்சம் கூடுதலாகச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் வாந்தி ஏற்பட்டு அதிகப்படியான கபம் வெளியேறும்.
  • மாதவிலக்கு கோளாறு நீங்க கொத்தமல்லிச் சாற்றில் கருஞ்சீரகத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி , தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
  • தலைவலி, தலைப்பாரம் குணமாக கொத்தமல்லிச் சாற்றில் சுக்கை இழைத்து நெற்றியில் பற்றுப்போட்டு வந்தால் தலைபாரம் , தலைவலி குணமாகும்.
  • கொத்தமல்லி , சீரகம் (2 ஸ்பூன்) இரண்டையும் தண்ணீரில் போட்டுக் காய்ச்சிக் குடித்து வந்தால் தலைவலி குணமாகும்.
  • கரும்புள்ளிகள் மறைய கொத்தமல்லியைப் பசும்பால் சேர்த்து அரைத்து முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மீது தடவி வந்தால் அவை விரைவில் மறைந்து முகம் பளபளக்கும்.


  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/26/w600X390/478214874.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/jan/26/இன்றைய-மருத்துவ-சிந்தனை-கொத்தமல்லி-தழை-2851762.html
  2851129 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: வில்வம் Thursday, January 25, 2018 10:51 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  வில்வம்:

  • சர்க்கரைநோய் , அல்சர் குணமாக வில்வம் இலையை (5) தினந்தோறும் அரைத்து வெறும் வயிற்றில்  சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் , அல்சர் குணமாகும்.
  • வில்வ இலையைக் காயவைத்துப் பொடி செய்து  காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
  • சளி , இருமல் குணமாக வில்வம் இலையுடன் (3) ,மிளகு (5)  சேர்த்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு  காலையில் மட்டும் அரை ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டுவந்தால் சளி , இருமல் குணமாகும்.
  • குடல் சுத்தமாக வில்வ பழத்தின் தோலுடன்  சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் குடல் சுத்தமாகும்.
  • வெண்புள்ளிகள் மறைய வில்வ இலை , வேர் , பட்டை  ஆகியவற்றுடன் மஞ்சள் தூள் (1 ஸ்பூன்) சேர்த்துக் அரைத்து குளித்துவந்தால் உடலில் உள்ள வெண்புள்ளிகள் மறையும்.
  • கண்பார்வை தெளிவாக வில்வ இலையைக் காயவைத்துப் பொடி செய்து , வெந்தயம் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும். கண்பார்வை தெளிவாக இருக்கும்.
  • வயிற்று வலி நீங்க வில்வ மரத்தின் பிஞ்சுகளை நசுக்கி சாறு எடுத்து , தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்றுவலி குணமாகும்..
  • தொழுநோய் குணமாக வில்வ இலை (10), சீரகம் (ஒரு ஸ்பூன்)  இவை இரண்டையும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்துவந்தால் குடல் புண் , சொரி , சிரங்கு , கரப்பான் மற்றும் தொழுநோய் குணமாகும்.


  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/25/w600X390/cemara_poto_010.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/jan/25/இன்றைய-மருத்துவ-சிந்தனை-வில்வம்-2851129.html
  2850510 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: தண்டுக் கீரை Wednesday, January 24, 2018 11:40 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  தண்டுக் கீரை:

  • ரத்தம் சுத்தமாகி புது ரத்தம் உற்பத்தியாக தண்டுக் கீரை , மிளகு , மஞ்சள் , தேங்காய்ப் பால் ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்கவைத்துச் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும் . உடலில்  புது ரத்தம் உற்பத்தி ஆகும். உடல் வலுப்பெறும். இதனால்  படை , சொறி , சிரங்கு போன்ற  தோல் நோய்களும் குணமாகும்.
  • மூல நோய்கள் குணமாக தண்டுக் கீரையுடன் வெந்தயம் , சீரகம் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் மூல நோய்கள் குணமாகும்.
  • உடல் எரிச்சல் தீர தண்டுக்கீரையுடன் சிறுபருப்பு , பூண்டு இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எரிச்சல் தீரும்.
  • வெள்ளைப்படுதல் நீங்க சிவப்பு நிற தண்டுக் கீரைக்கு விசேஷ குணம்உண்டு . இந்தக்  கீரைத் தண்டுடன் , துத்தி இலையைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்துவந்தால் வெட்டைச் சூடு , வெள்ளைப்படுதல் குணமாகும்.
  • கொழுப்புகள் கரைய தண்டுக் கீரையுடன் மிளகு ,மஞ்சள் இரண்டையும் சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்பு கரையும்.
  • நரம்பு சார்ந்த பிரச்சனைகள் தீர தண்டுக் கீரையுடன்  உளுந்து , மஞ்சள் இரண்டையும் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் நரம்புக்கோளாறுகள் சரியாகும்.
  • கண்நோய்கள்  குணமாக தண்டுக் கீரையுடன் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து சாறு எடுத்து , சாறுக்கு சமமாக தேன் கலந்து காய்ச்சி இறக்கி தினமும் இரண்டு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் கண்நோய்கள் அனைத்தும் குணமாகும்.


  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/24/w600X390/rau-den.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/jan/24/இன்றைய-மருத்துவ-சிந்தனை-தண்டுக்-கீரை-2850510.html
  2849846 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: கற்பூரவள்ளி இலை Tuesday, January 23, 2018 11:49 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  கற்பூரவள்ளி இலை:

  • சைனஸ் , தலைப்பாரம்  நீங்க கற்பூரவள்ளிச் சாற்றுடன் (200 மில்லி) சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி இறக்கித் தலையில் தேய்த்து வந்தால்  சைனஸ் , தலைபாரம் , மூக்கில் நீர் கொட்டுதல் போன்றவை குணமாகும்.
  • குழந்தைகளின் இருமல் குணமாக கற்பூரவள்ளிச் சாற்றில் சிறிதளவு எடுத்து பனங்கற்கண்டு சேர்த்துக் கொடுத்து வந்தால் குழந்தைகளின் இருமல் நிற்கும்.
  • காசநோய் குணமாக கற்பூரவள்ளி இலையைத் தினமும் இரண்டு என்ற அளவில் சாப்பிட்டுவந்தால் காசநோய் குணமாகும்.
  • மூக்கடைப்பு நீங்க கற்பூரவள்ளி இலையை இரண்டு வீதம்  அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விலகும்.
  • இருமல் குணமாக கற்பூரவள்ளி இலையைச் சாறு பிழிந்து சிறிதளவு அளவுக்கு  குடித்து வந்தால் இருமல் குணமாகும்.
  • மார்புச் சளி கரைய கற்பூரவள்ளி இலைகளை  கழுவி சாறெடுத்து (5 மில்லி) , அதனுடன் தேன் (10 மில்லி) கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி அகலும்.
  • குழந்தைகளின் மாந்தம் நீங்க கற்பூரவள்ளி இலைச் சாறு (5 மில்லி) அளவுக்கு  எடுத்து குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம் விலகும்.


  KOVAI  HERBAL CARE
  கோவை பாலா ,

  இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/23/w600X390/Capture.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/jan/23/இன்றைய-மருத்துவ-சிந்தனை-கற்பூரவள்ளி-இலை-2849846.html
  2849195 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: அவுரி Monday, January 22, 2018 11:32 AM +0530 உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  அவுரி:

  • சர்க்கரை நோயிலிருந்து விடுபட அவுரி இலையை சாறு எடுத்து அவற்றில் வெந்தயத்தை ஊறவைத்துக் காயவைத்துப் பொடி செய்து ,தினமும் காலை மாலை என இருவேளையும் ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டுவந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
  • இளநரை மறைய அவுரி இலையுடன் நெல்லிக்காய் சாறு சேர்த்து அரைத்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் இளநரை மாறும்.
  • தலைமுடி செளிப்பாக வளர அவுரி இலை , கரிசாலை , கறிவேப்பிலை இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் மூன்று வேளையும் ஐந்து கிராம் அளவுக்குச்  சாப்பிட்டுவந்தால் தலைமுடி செழிப்பாக வளரும்.
  • மூட்டுவாதம் , மூட்டு வலியிலிருந்து விடுபட அவுரி இலை , வாதநாராயணன் இலை , பூண்டு , மிளகு இவை அனைத்தையும் சம அளவு எடுத்து அரைத்து , தினமும் ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் மூட்டு வாதம் , மூட்டு வீக்கம் போன்றவை குணமாகும்.
  • அவுரி இலையுடன் விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி ஒத்தடம் கொடுத்து வந்தால்  மூட்டு வலி குணமாகும்.
  • தோல் நோய்களிலிருந்து விடுபட அவுரி இலையை (5) , மிளகுடன் (5)  இவை இரண்டையும் அரைத்துச் சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் அனைத்தும் குணமாகும்.
  • பச்சிளம் குழந்தை மலச்சிக்கல் தீர அவுரி இலை சிறிதளவு எடுத்து  அரைத்து விளக்கெண்ணையுடன் கலந்து சிறு குழந்தைகளின் தொப்பிளை சுற்றி தடவி வந்தால் பச்சிளம் குழந்தைகளின் மலச்சிக்கல் விலகி தாராளமாக  மலம் வெளியாகும்.


  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/22/w600X390/E_1488100908.jpeg http://www.dinamani.com/health/healthy-food/2018/jan/22/இன்றைய-மருத்துவ-சிந்தனை-அவுரி-2849195.html
  2848600 மருத்துவம் உணவே மருந்து நீங்கள் செல்வச் செழிப்போடு உடல் நலமுடன் வாழ்வதற்கு இதோ ஒரு எளிய வழி! சினேகா Sunday, January 21, 2018 11:10 AM +0530  

  உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள். உணவில் காரம் குறைந்தால் கூட சாப்பிட்டுவிடுவோம் ஆனால் உப்பு குறைந்தால்? ஒருவரை மட்டம் தட்டிப் பேச வேண்டும் என்றால் சாப்பாட்டில் உப்பு போட்டுத்தான் சாப்பிடறயா என்று சூடு சொரணைக்கு உப்பை சம்மந்தப்படுத்தி திட்டுவோம். உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்கிறது ஒரு முதுமொழி. இவ்வாறு தாயின் வயிற்றில் குழந்தை உருவானது முதல் உடலிலிருந்து உயிர் பிரியும் வரை உப்பும் நீரும் மனிதருக்கு இன்றியமையாத ஒன்று. அத்தகைய உப்பை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்து கொள்வோமா?

  நமது உணவில் சேர்க்கும் உப்பு சாதாரண உப்பாகும். இதன் வேதியியல் பெயர் சோடியம் குளோரைட். உப்பு என்பதில் சோடியம் என்பதே முக்கியமானதாகும். காரணம் சோடியம் ஒவ்வொரு மனித செல்லின் ஆரோக்கியத்திற்குத் தேவையானது. இது ஒவ்வொரு செல்லுக்கிடையே உள்ள நீர்மத்தை உட்புகவைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. குறிப்பாக செல்லின் வெளிப்புறப் பகுதி செயல்பாட்டிற்கு இதுவே காரணமாகும். 

  செல்லின் உட்புற செயல்பாட்டிற்கு பொட்டஷியம் காரணமாக இருக்கிறது. சோடியமும் பொட்டாஷியமும் தேவையான அளவில் ஒவ்வொரு செல்லிலும் மாறாமல் இருந்தால் மட்டுமே ஒவ்வொரு செல்லும் தன் வேலையைச் சரியாக செய்து, சத்துக்களை உருவாக்கவும் கழிவுகளை வெளியேற்றவும் முடிகிறது. 

  சோடியமும் பொட்டாஷிமும் குறைந்தாலோ அல்லது அதிகமானாலோ செல்கள் பாதிக்கப்பட்டு உடல் ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கப்படும்.

  உடலில் உள்ள ரத்தத்திற்கும், ரத்தத்திற்கு தேவையான வெள்ளை அணுக்களை எடுத்துவரும் திரவத்திற்கும், இரைப்பையில் அமிலம் சுரப்பதற்கும், புரத உணவு செரிப்பதற்கும், தசைகள் சரியாக சுருங்கவும், நரம்புகள் செயல்படவும் உடலில் உள்ள திரவ நிலை, அமிலத்தன்மை போன்றவைகளை நிலையாக வைத்திருக்கவும் சோடியம் மிக முக்கியத் தேவையாகும்.

  உடல் எளிதாக எடுத்துக் கொள்கிற நல்ல சோடியமே அதர்குத் தேவை. அது இயற்கையில் கிடைக்கும் உப்பில் உள்ளதால் உப்பை நமது முன்னோர்கள் பிரதானப்படுத்தியிருக்கிறார்கள். விருந்து பரிமாறும்போது அந்த இலையில் உப்பை ஒரு ஓரமாக வைக்கும் பழக்கம் இதனால்தான் ஏற்பட்டது.

  உப்பைப் பற்றி விழிப்புணர்வை உண்டாக்க உலக அளவில் பல அமைப்புகள் செயல்படுகின்றன. குறிப்பாக  உப்பு மற்றும் சுகாதாரத்திற்கான உலக நடவடிக்கை (World Action on salt and health) எனும் அமைப்பு 2005-லிருந்து பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. உப்பை நாம் எந்த அளவுகளில் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும். நமது வீடுகளில் மட்டுமல்ல, வெளியில் உள்ள உணவகங்கள் மற்றும் முன்பே தயாரித்து பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அனைத்து வகையான உணவுப் பொருட்களில் எவ்வளவுச் சோடியம் இருக்க வேண்டும், போன்ற பல்வேறு அம்சங்களில் இந்த அமைப்பு தலையிடுகிறது. 

  உணவுப் பொருட்களில் மட்டுமல்லாது உப்பை வீட்டுப் பராமரிப்புக்கும் பயன்படுத்துகிறார்கள்.

  கடல் உப்பை நீருடன் கலக்கி அதை வீட்டை முழுக்க கழுவ வேண்டும். இது வீட்டில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் நீக்கி விடும் என்கிறார்கள் நிபுணர்கள்.


   
  ஒரு தம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு கலந்து அதை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்து விடுங்கள். இது வீட்டில்  இருந்து வறுமையை விலக செய்யுமாம். எப்போதெல்லாம் நீரின் வண்ணம் மாறுகிறதோ, அப்போதெல்லாம் நீரை மாற்றி உப்பு சேர்த்து வைக்கவும்.
   
  உள்ளங்கை அளவு உப்பை எடுத்து அதை ஒரு கிண்ணத்தில் போட்டு அதனை குளியலறையின் ஒரு மூலையில் வைத்து விடவும். இந்த உப்பை சீரான இடைவேளையில் நீங்கள் மாற்ற வேண்டும். இது வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளைக் குறைந்து, பணப் பிரச்னைகளை சீராக்கும்.

  சிவப்பு துணியில் உப்பு சேர்த்து கட்டி வைக்கவும். அதை வீட்டின் நுழைவாயில் பகுதியில் கட்டி தொங்க விடவும். இது  வீட்டுக்குள் இருக்கும் தீய சக்திகளை விரட்டியடிக்கும்.
   

  உணவு மேஜையில், சாப்பிடும் இடத்தில் உப்பு வைப்பது செல்வ செழிப்பினை அதிகரிக்க உதவும். வீட்டில் செல்வம் குறையவே குறையாது. 

  கால் வலி ஏற்பட்டால் சுடு தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து காலை பத்து நிமிடம் ஊற வைத்தால் கால் வலி குணமாகும். தினமும் குளிக்கும் போது வாளியில் ஒரு கைப்பிடி உப்பும் சிறிதளவு எலுமிச்சை சாறும் சேர்த்தால் புத்துணர்வாக இருக்கும். 

  ]]>
  Salt, Salty, salt in food, Sodium, உப்பு, அயோடின், சோடியம், உணவும் உப்பும், நீரும் உப்பும் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/21/w600X390/food.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/jan/21/health-benefits-of-salt-2848600.html
  2846691 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: சிறு கீரை DIN DIN Saturday, January 20, 2018 12:00 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  சிறு கீரை:

  • பித்தம் சார்ந்த பிரச்சனைகள் தீர சிறு கீரையுடன் சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டுவந்தால் அனைத்துவிதமான பித்த நோய்களும் குணமாகும்.
  • சிறுநீரகக் கோளாறுகள்  தீர சிறுகீரையுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கஷாயம் தயாரித்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கோளாறுகள் அனைத்தும் சரியாகும்.
  • தோல் நோய்கள் குணமாக சிறுகீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து உடலில் தேய்த்துவந்தால் சொறி , சிரங்கு , படை போன்ற தோல் நோய்கள் குணமாகும்.
  • முகப்பரு மறைய சிறுகீரையுடன் , முந்திரிப் பருப்பு , மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து முகப்பருக்கள் மீது தடவிவந்தால் குணம் பெறலாம்.
  • கண்காசம் , கண்படலம் நீங்க சிறுகீரையுடன் மிளகு , வெங்காயம் , பூண்டு , மஞ்சள் சேர்த்து சூப்பாக செய்து சாப்பிட்டு வந்தால் கண் புகைச்சல் , கண்காசம் , கண்படலம் போன்றவை குணமாகும்.
  • உடல் வீக்கம் , உடல் பருமன் குறைய சிறுகீரை (2 கைப்பிடி) , பார்லி 
  • (ஒரு கை அளவு) ஆகியவற்றோடு கொஞ்சம் சீரகம் , நான்கு சிட்டிகை  மஞ்சள் சேர்த்துக் கொதிக்க வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடல் வீக்கம் , உடல் பருமன் குறையும்.


  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/18/w600X390/siru_keerai.JPEG http://www.dinamani.com/health/healthy-food/2018/jan/20/இன்றைய-மருத்துவ-சிந்தனை-சிறு-கீரை-2846691.html
  2846690 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: உருளைக் கிழங்கு Friday, January 19, 2018 12:00 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  உருளைக் கிழங்கு:

  • முகச் சுருக்கம் நீங்கி முகம் பளபளக்க பச்சை உருளைக் கிழங்கை தோலுடன் சிறுசிறு துண்டுகளாக்கி அதனுடன் சிறிது நீர்விட்டு அரைத்து சாறு எடுத்து அதைக் கொண்டு தினமும் முகத்தைக் கழுவி வந்தால் முகம் பளபளப்படையும் . முகச் சுருக்கங்களும் கரும்புள்ளிகளும் மறைந்து போகும். இளமையான தோற்றத்தையும் அது தரும்.
  • வயிற்று எரிச்சல் , வயிறு உப்புசம் நீங்க உருளைக் கிழங்கை எடுத்து  நன்கு வேகவைத்து மசித்துச்  சூடான பாலுடன் சேர்த்து பருகிவந்தால் அமிலச்சுரப்பு மட்டுப்பட்டு வயிற்று எரிச்சல் மற்றும் வயிறு உப்புசம் நீங்கி  தூக்கம் மற்றும் அமைதியான உணர்வு உண்டாகும்.
  • மூட்டு வலி , வாத வீக்கம் குணமாக உருளைக் கிழங்கை எடுத்து அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் அல்லது  உருளைக் கிழங்கினை வேகவைத்த நீரைப் பருகி வருவதன் மூலமும் மூட்டு வலிகள், வாத வீக்கம் ஆகியன குணமாகிறது.
  • நாட்பட்ட மலச்சிக்கல் குணமாக உருளைக்கிழங்கு சாறு எடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் நீண்ட நாட்பட்ட மலச்சிக்கல் மற்றும் குடலில் நச்சுக்கள் பெருகி அதனால் ஏற்படும் ரத்த அழுத்தம் டினல் டோக்ஸிமியா தவிர்க்கப்படுகிறது.
  • வயிறு மற்றும் இரைப்பை சார்ந்த  பிரச்சனைகள் நீங்க தினமும் அரை கப் உருளைக்கிழங்கு சாறு எடுத்து காலை மாலை என இருவேளையும்   உணவுக்கு முன் குடித்து வந்தால் வயிறு மற்றும் இரைப்பைக் கோளாறுகள் நீங்கும் மேலும் வாயு, அதிக அமிலம் சுரப்பு , வயிற்றுப்புண்கள் போன்றவையும்  குணமாகிறது.


  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/18/w600X390/Potato.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/jan/19/இன்றைய-மருத்துவ-சிந்தனை-உருளைக்-கிழங்கு-2846690.html
  2846666 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: அரசமரம் Thursday, January 18, 2018 11:21 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  அரசமரம்:

  • மலச்சிக்கல் தீர அரச விதைகளைக் காயவைத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் (1 ஸ்பூன்) அளவு எடுத்து பாலில் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மலத்துடன் இரத்தம் வெளியேறுதல் குணமாகும்.
  • வாய்ப்புண்கள் குணமாக அரச மரப் பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் அந்த நீரால் வாய் கொப்பளித்து வந்தால் வாயில் உள்ள புண்கள் விரைவில் குணமாகும்.
  • மாதவிலக்கு மற்றும் கருப்பை சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர அரச மரத்தின் இலை, பட்டை, வேர், விதை ஆகியவற்றை சம அளவு எடுத்து அவற்றை இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு மாதவிலக்குக் காலங்களில் சிறிதளவு பொடியை எடுத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் மாதவிலக்கில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.
  • பித்தவெடிப்புகள் மறைய அரச மரத்தின் பாலை எடுத்து பாத வெடிப்புகள் உள்ள பகுதிகளில் பூசிவந்தால் பித்த வெடிப்புகள் விரைவில் மறையும்.
  • மன அழுத்தம் , மன எரிச்சல் , அதீத கோபம் நீங்க அரச இலை, பட்டை, வேர் இவைகளை சிறிதளவு எடுத்து நன்கு இடித்து நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி தேவையான அளவு பனைவெல்லம் கலந்து காலை , மாலை என இருவேளையும் 50 மில்லி அளவுக்கு குடித்து வந்தால், மன அழுத்தம், மன எரிச்சல், அதீத கோபம், தீரா சிந்தனை போன்றவை தீரும்.
  • கர்ப்பம் தரிக்க அரச  இலைக் கொழுந்தை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்துபாலில் கலந்து 48 நாளகள் சாப்பிட்டு வந்தால் பெண்மலடு நீங்கி கருத்தரிக்கும். இதை சாப்பிடும் போது புளி உணவைக் குறைக்க வேண்டும்.
  • தொண்டைக்கட்டு , விக்கல் குணமாக அரச மரப்  பட்டையைத் தூளாக்கி 2 சிட்டிகைஅளவு எடுத்து வெந்நீரில் கொதிக்க வைத்து ஆற விட்டு வடித்துக் குடித்து வந்தால் விக்கல், தொண்டைக் கட்டு, குரல்வளை நோய் அனைத்தும் தீரும்.


  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/18/w600X390/39d65aa7d1996e10756db3dda39f796e.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/jan/18/இன்றைய-மருத்துவ-சிந்தனை-அரசமரம்-2846666.html
  2844766 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: பிஸ்தா பருப்பு Monday, January 15, 2018 10:24 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  பிஸ்தா பருப்பு:

  • வகை 2 சர்க்கரை நோயிலிருந்து விடுபட வகை 2 சர்க்கரை  குறைபாடு உள்ளவர்கள் தினமும் சிறிதளவு பிஸ்தா சாப்பிட்டு வரவும். இந்த பருப்பில் 60% மினரல் பாஸ்பரஸ் கொண்டுள்ளது. மேலும் அமினோஆசிட்ஸ், பாஸ்பரஸ் ஆசிட்ஸ் குளுக்கோஸ் ஆகியவற்றை குறைக்கவும் உதவிபுரிகிறது. மேலும் பிஸ்தாவில் உள்ள பாஸ்பரஸ் ஆனது அதிக அளவில் உள்ளதால், குளுக்கோஸை அமினோ அமிலமாக சிதைக்கிறது. இதனால் நீரழிவு நோயாளிகளுக்கு பிஸ்தா ஒரு நல்ல பயனுள்ள உணவாகும்.
  • ஆரோக்கியமான இரத்தம் உருவாக பிஸ்தா பருப்பை தினமும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமான இரத்தம் உருவாகும். ஏனென்றால் பிஸ்தா பருப்பில் விட்டமின் B6 ஊட்டச்சத்து அதிகளவு உள்ளது. விட்டமின் B6 ல் ஹீமோகுளோபின் அதிகப்படுத்தக்கூடிய தன்மையும், ஆக்ஸிஜனை ரத்தஓட்டம் வழியாக செல்களுக்கு கொண்டுசேர்க்கும் பொறுப்பு மற்றும் ஆக்ஸிஜனை அளவை அதிகரிக்கும் பணியை செய்கிறது.
  • கெட்ட கொழுப்பை நீக்கி நல்ல கொழுப்பு உருவாக தினந்தோறும் சிறிதளவு பிஸ்தா சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதோடு ஆரோக்கியம் தரக்கூடிய நல்ல கொழுப்பை அதிகரிக்கச்செய்யும்.
  • இதயத்தின் ஆரோக்கியம் மேம்பட தினந்தோறும் இதயம் சார்ந்த குறைபாடு உள்ளவர்கள் சிறிதளவு பிஸ்தா பருப்பை சாப்பிட்டு வந்தால் இவற்றில் உள்ள விட்டமின் A மற்றும் E போன்றவை  ஆன்டிஆக்ஸிடெண்டுகளை அதிகப்படுத்தி இரத்த நாளங்களை பாதுகாக்கும் மேலும் இதயநோய் அபாயத்தை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
  • ஆரோக்கியமான கண்பார்வை  பெற கண்பார்வையில்  குறைபாடு உள்ளவர்கள் தினந்தோறும் சிறிதளவு பிஸ்தா பருப்பை சாப்பிட்டு வந்தால் இவற்றில் உள்ள சியாசாந்தின் (Zeaxanthin) மற்றும் லூட்டின் (Luetin) என்ற இரண்டு கரோட்டினாய்டுகள் காணப்படுகிறது. இந்த கரோட்டினாய்டுகள் கண்ணின் விழித்திரையை சீரழியாமல் பாதுகாத்து கண்பார்வைக்கு வழிவகுக்கிறது. மேலும் இவ்விரு கரோட்டினாய்டுகளும் புற ஊதாக்கதிர்களினால் தோல் பாதிப்படையாமல் தடுப்பதற்கும், இருதய நோய்கள் வராமல் தடுப்பது மற்றும் கண்புரை (Cataract) நோய்களிலிருந்து கண்களை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. கண்பார்வையையும் மேம்படுத்தும்.


  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/15/w600X390/Cong-dung-cua-cac-loai-hat.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/jan/15/இன்றைய-மருத்துவ-சிந்தனை-பிஸ்தா-பருப்பு-2844766.html
  2844254 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: பாதாம் பருப்பு Saturday, January 13, 2018 11:48 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  பாதாம் பருப்பு:

  • ஆண்மை பெருக பருப்பு (10) எடுத்து நீரில் ஊறவைத்து மேல்தோலை நீக்கி பாலில் அரைத்து தேன் கலந்து இரவு படுக்கைக்கு செல்லுமுன் பருகி வந்தால்  ஆண்மை பெருகும்.
  • இதயநோய் வராமல் தடுக்க பாதாமை தினமும் சாப்பிட்டு வந்தால், இதய நோய் வருவதைத் தடுக்கலாம். ஏனெனில் இதில் இதயத்தை பாதுகாக்கும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது.
  • இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பாதாம் பருப்பை தினமும் சிற்றுண்டி சாப்பிடும் நேரத்தில் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம் ஏனென்றால்  பாதாமில் சோடியம் குறைவாகவும் , பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
  • புற்றுநோய் வராமல் தடுக்க பாதாம் பருப்பில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடலியக்கத்தை சீராக வைத்து குடல் புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கும் . அதுமட்டுமின்றி இதில் வைட்டமின் ஈ, பைட்டோ கெமிக்கல் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் அதிகம் இருப்பதால், மார்பக புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் வளர்வதை தடுக்கும்.
  • இரத்தசோகையை குணப்படுத்த பாதாம் பருப்பை தினமும் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் இவற்றில் காப்பர், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது. காப்பருடன் இந்த இரண்டு சத்துக்களும் நிறைந்திருப்பதால், அவை ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, இரத்த சோகையை குணமாக்கிவிடும்.
  • நினைவாற்றல் அதிகரிக்க தினமும் பாதாம் பருப்பை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் பாதாம் பருப்பில் காணப்படும் பாஸ்பரஸ் , ஒமேக 3 ,  போன்ற நல்ல கொழுப்பு அமிலங்கள் மூளையை பலப்படுத்தி நினைவாற்றலை அதிகரிக்க செய்து புத்துணர்ச்சியடைய செய்கிறது.
    

  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,

  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist

  Cell  :  96557 58609

  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/13/w600X390/almonds-940x627.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/jan/13/இன்றைய-மருத்துவ-சிந்தனை-பாதாம்-பருப்பு-2844254.html
  2843576 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: உடல்நலத்தை கெடுக்கும் ஊறுகாய் Friday, January 12, 2018 09:43 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  உடல்நலத்தை கெடுக்கும் ஊறுகாய்:

  • வயிற்றில் உப்புச உணர்வை உண்டாக்கும் ஊறுகாயில் பதப்படுத்தும் பொருட்கள் மற்றும் அதிக அளவிலான உப்பு சேர்க்கப்பட்டிருப்பதால், அவற்றை தினந்தோறும் எடுத்து வரும் போது அவை உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும். இதனால் வயிறு எப்போதும் உப்புசமாக இருப்பது போன்ற உணர்வை உணரக்கூடும்.
  • நீரிழிவை உண்டாக்கும் ஊறுகாயில் பதப்படுத்தும் பொருளான சர்க்கரை சேர்க்கப்பட்டிருப்பதால், சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் ஊறுகாயை அறவே தவிர்க்க வேண்டும்.
  • இதயநோய்ச் சார்ந்த பிரச்சனைகளை உண்டாகும் ஊறுகாயில் எண்ணெய் அதிகம் சேர்ப்பதால், அவை இரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவை அதிகரித்து இதயநோய்க்கு வழிவகுக்கும்.
  • உயர் இரத்த அழுத்தம் உண்டாகும் ஊறுகாயில் அதிக அளவில் உப்பு இருப்பதால் இரத்த அழுத்தமும் அதிகரிக்கும். ஆகவே இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஊறுகாயை தவிர்ப்பதோடு, இரத்த அழுத்தம் இல்லாதவர்கள் அன்றாடம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
  • அல்சர் உண்டாகும் ஊறுகாயில் மசாலா பொருட்கள் அதிக அளவில் சேர்ப்பதால், அவற்றை தொடர்ந்து எடுத்து வர அல்சர் பிரச்சனையை சந்திக்கக் கூடும். எனவே சாதாரணமாக அதிக அளவில் காரம் உட்கொள்வதை தவிர்ப்பதோடு, ஊறுகாயை அதிகம் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
  • செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும் ஊறுகாயை தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது, ஊறுகாயில் உள்ள சாறானது வயிற்றில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதில் அடிவயிற்றில் வலி, பிடிப்புக்கள் மற்றும் சில சமயங்களில் வயிற்றுப் போக்கை கூட உண்டாக்கும்.


  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/12/w600X390/Apple_Pickle_DSC1877_04.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/jan/12/இன்றைய-மருத்துவ-சிந்தனை-உடல்நலத்தை-கெடுக்கும்-ஊறுகாய்-2843576.html
  2841165 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: வெங்காயம் DIN DIN Wednesday, January 10, 2018 12:00 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  வெங்காயம்:

  • ஆண்களின் வீரியம் அதிகரிக்க வெங்காயச்சாறு (அரை ஸ்பூன்) , சுத்தமான தேன் (கால் ஸ்பூன்) இவை இரண்டையும் கலந்து காலை, மாலை என இரு  வேளை வீதம் 25 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு வீரியம் அதிகரிக்கும்.
  • வயிற்றுக் கடுப்பு நீங்க தோல் நீக்கிய வெங்காயத்தைச் சிறு துண்டாக நறுக்கி குளிர்ந்த நீரில் நான்கு அல்லது ஐந்து தடவை கழுவி தயிர் சேர்த்து தினமும் மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால்  வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
  • நல்ல தூக்கம் உண்டாக சிறிய வெங்காயத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சிறிதளவு எடுத்து அதனுடன் இரண்டு கரண்டி சர்க்கரை சேர்த்து தூக்கமில்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் நல்ல தூக்கம் வரும்.
  • தொண்டை வலி குணமாக வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட்டு வந்தால்  தொண்டை வலி குறையும்.
  • பல்வலி , ஈறுவலி குணமாக வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவந்தால்  பல்வலி, ஈறுவலி குறையும்.
  • பித்தம் , பித்தம் ஏப்பம் நீங்க நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால்  பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
  • நரம்புத் தளர்ச்சி நீங்க வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால்  நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
  • மலச்சிக்கல் நீங்க வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட்டு வந்தால்  மலச்சிக்கல் குறையும்.


  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/10/w600X390/onion.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/jan/10/இன்றைய-மருத்துவ-சிந்தனை-வெங்காயம்-2841165.html
  2841164 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: வெந்தயக் கீரை Tuesday, January 9, 2018 12:00 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  வெந்தயக் கீரை:

  • நெஞ்சுவலி பூரண குணமாக வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை என இரு வேளையும் அரை டம்ளர் வீதம் குடித்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.
  • இடுப்பு வலி குணமாக வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.
  • வாய்ப் புண் , தொண்டைப் புண் குணமாக வெந்தயக் கீரையை அரைத்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால்  தொண்டைப்புண், வாய்ப்புண் ஆகியவை குணமாகும்.
  • வீக்கம் , தீப்புண் குணமாக வெந்தயக் கீரையை அரைத்துச் சூடு செய்து வீக்கங்கள் மீது பூசி வந்தால் வீக்கம் குறையும். இவ்வாறு செய்தால் தீப்புண்களும் குணமாகும்.
  • நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க வெந்தயக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்கு வேக வைத்துச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. வெந்தயக் கீரை சீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டுகிறது.
  • பெருத்த உடல் இளைக்க வெந்தயக் கீரையுடன் வெள்ளைப் பூசணிக்காய்  சேர்த்து இரண்டையும் நீராவியின் மூலமாக வேகவைத்து அவற்றை சாம்பாரில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் பெருத்த உடல் இளைக்கும்.
  • மலம் , உடல் , குடல் சுத்தமாக வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து சாப்பிட்டு வந்தால் மலம் சுத்தமாகும்.
  • உடல் சுத்தமாகும். குடல் புண்களும் குணமாகின்றன.


  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/8/w600X390/p42a.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/jan/09/இன்றைய-மருத்துவ-சிந்தனை-வெந்தயக்-கீரை-2841164.html
  2841077 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: புதினா Monday, January 8, 2018 09:22 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  புதினா:

  • நன்றாகப் பசி எடுக்க புதினா இலைச் சாறு , எலுமிச்சைச் சாறு  தலா 100 மில்லி எடுத்து தேனில் (கால் லிட்டர்) ஊற்றிக் காய்ச்சி இறக்கவும் , தினமும் காலை மாலை இருவேளையும்  15 மில்லி அளவு குடித்து வந்தால் நன்றாகப் பசி எடுக்கும்.‎
  • சிறுநீர் நன்றாகப் பிரிய புதினா இலையுடன்  கடுகு (ஒரு ஸ்பூன்) சேர்த்து  எண்ணெய் விட்டு வதக்கி உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்றாகப் பிரியும்.
  • ரத்தம் சுத்தமாக புதினா இலை , வேப்பிலை  இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ரத்தம் தூய்மையாகும்.
  • சளி , இருமல் குணமாக புதினா இலை (ஒரு கைப்பிடி), மிளகு (5) இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து  காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால் சளி, இருமல் , நுரையீரல் கோளாறுகள் குணமாகும்.
  • விக்கல் , காய்ச்சல் , வயிற்று வலி நீங்க உலர்ந்த புதினா இலையில் கஷாயம் வைத்துக் குடித்துவந்தால் மஞ்சள் காமாலை , விக்கல் , வயிற்று வலி , காய்ச்சல் போன்றவை குணமாகும்.
  • மாதவிலக்கு கோளாறு நீங்க உலர்ந்த புதினா இலையோடு கறுப்பு எள் (ஒரு ஸ்பூன்) சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்துவந்தால் மாதவிலக்குக் கோளாறுகள்  குணமாகும்.


  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/8/w600X390/1024px-Mint-leaves-2007.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/jan/08/இன்றைய-மருத்துவ-சிந்தனை-புதினா-2841077.html
  2840027 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: உடல் எடை , தொப்பை குறைய Saturday, January 6, 2018 09:57 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  உடல் எடை , தொப்பை குறைய:

  • ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் ஓமம் (4 ஸ்பூன்) எடுத்து பொடி செய்து பழத்துடன் நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்க விடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.
  • கரிசலாங்கண்ணி இலையை பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட்டு வந்தால்  உடல் எடை குறையும்.
  • சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
  • பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
  • ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்து வந்தால்  உடல் பருமன் குறையும்.
  • நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.
  • கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்து வந்தால் எடை குறையும்.


  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/6/w600X390/177115587.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/jan/06/இன்றைய-மருத்துவ-சிந்தனை-உடல்-எடை--தொப்பை-குறைய-2840027.html
  2838736 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: நேந்திரம் பழம் Thursday, January 4, 2018 10:08 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  நேந்திரம் பழம்:

  • காசநோய் குணமாக நேந்திரம் பழம் (1) , முட்டை (1)இவை இரண்டையும் தினந்தோறும்  காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்டு வந்தால் காசநோய் குணமாகி உடல் ஆரோக்கியமாகும்.
  • குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அதிகரிக்க நன்றாகப் பழுத்த நேந்திரப் பழத்தை நறுக்கி அதனுடன் சிறிது உப்பைப் போட்டு வேகவைத்து நன்றாக பிசைந்து ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுத்து வந்தால் உடலுக்கு நல்ல ஊட்டச் சத்து கிடைக்கும். குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும்.
  • தொடர் இருமல் குணமாக நன்றாக பழுத்த நேந்திரம் பழத்துடன் கால் ஸ்பூன் மிளகு பொடியை கலந்து தினந்தோறும் மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் தொடர் இருமல் சரியாகும்.
  • மெலிந்த உடல் குண்டாக நன்கு கனிந்த நேந்திரம் பழத்தை சிறுசிறு துண்டுகளாக்கி இட்லி வேக வைப்பதுபோல அவித்து இதனுடன் நெய்யை கலந்து 40 நாட்களுக்கு காலை உணவாக உடல் மெலிந்தவர்கள்  சாப்பிட்டு வந்தால் மெலிந்த உடல் பூஷ்டியாகும்.
  • இதயம் வலிமை பெற நேந்திரம் பழம் இதயத்தின் வலிமைக்கு  மிகவும் சிறந்தது. ஆகவே கிடைக்கும் போது நேந்திரம் பழத்தை தவறாமல் சாப்பிட்டு வாருங்கள். இதய நோய் வராமல் பாதுகாக்கலாம், மேலும் இருதயம் சீராக செயல்படுவதற்கு தேவையான சத்துக்கள் நிறைந்த பழமாகும்.
  • மாணவர்களின் மூளை சுறுசறுப்பு அடைய நேந்திரம் பழம் சாப்பிடுவதால் மூளையின் செல்கள் பலப்பட்டு  நினைவு ஆற்றல் பெருகும், மாணவர்களுக்கு பரீட்சை நேரத்தில் சாப்பிடுவது நல்லது. பரீட்சை அன்று சாப்பிடாமல் செல்லும் குழந்தைகள் நேந்திர வாழைப்பழத்தை சாப்பிட்டு சென்றால் பசியும் அடங்கும், மூளையும் சுறுசுறுப்புடன் இருக்கும்.


  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/4/w600X390/banana.jpeg http://www.dinamani.com/health/healthy-food/2018/jan/04/இன்றைய-மருத்துவ-சிந்தனை-நேந்திரம்-பழம்-2838736.html
  2838082 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: கைகுத்தல் அரிசி/பழுப்பு அரிசி Wednesday, January 3, 2018 10:33 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  கைகுத்தல் அரிசி / பழுப்பு அரிசி:

  • பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க கைகுத்தல் அரிசியில் செலினியம் மற்றும் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால பெருங்குடல்   பகுதியில் புற்றுநோய் ஏற்படுத்தும்ரசாயனங்களை இரைப்பை குடல் பகுதிகளில் தங்கவிடாமல் பாதுகாக்க உதவும். இதனால் பெருங்குடல் புற்றுநோய் வராமல்தடுக்கப்படுகிறது.
  • மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க கைக்குத்தல் அரிசிச்சோறு போன்ற முழு தானிய உணவுகள் சாப்பிடும் போது enterolactone அளவுகளை அதிகரிக்கும் மேலும்  கைக்குத்தல் அரிசியில் பைட்டோ நியூட்ரியண்ட்டான லிக்னான் (Phytonutrients Lignan) உள்ளது. இவற்றால் பெண்களுக்கு ஏற்படும்மார்பக புற்றுநோய் மற்றும் இதய நோய்களிலிருந்து விடுபடலாம்.
  • LDL கொழுப்பை குறைக்க கைக்குத்தல் அரிசியின் தவிட்டில் இருந்து கிடைக்கும் எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தி வந்தால் இவற்றில் உள்ளநார்ச்சத்து உடலில் உள்ள எல்டிஎல் (LDL) கொழுப்பை  குறைக்கிறது .
  • பெண்களின் உடல் எடை குறைய கைக்குத்தல் அரிசியில் அதிக நார்ச்சத்து இருப்பதால், உணவின் கலோரி அளவை கட்டுப்படுத்தி, அதிக உணவை உட்கொள்வதைதடுக்கிறது. கைக்குத்தல் அரிசி உணவை பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் உடல் எடை குறையும்.
  • சர்க்கரை நோயை கட்டுப்படுத்த கைக்குத்தல் அரிசியை சர்க்கரை  நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உணவாக உட்கொண்டுவந்தால் அவற்றில் உள்ள நார்ச்சத்து, இரத்தத்தின்  சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, இரண்டாம் வகை (Type 2) நீரிழிவு நோயை சீராக வைத்துக்கொள்ளும்.
    

  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/3/w600X390/30-redrice.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/jan/03/இன்றைய-மருத்துவ-சிந்தனை-கைகுத்தல்-அரிசிபழுப்பு-அரிசி-2838082.html
  2836875 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: செவ்வாழை Monday, January 1, 2018 01:16 PM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  செவ்வாழை:

  • மாலைக்கண் நோய் நீங்க மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால்  மாலைக்கண்நோய் குணமாகும்.
  • பல் வலி , பல்லசைவு நீங்க பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து 21 நாட்களுக்கு  சாப்பிட்டு வந்தால்  ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
  • சொறி , சிரங்கு , சரும வியாதி மறைய செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு மருந்து போடாவிட்டாலும்  சருமநோய்கள் அனைத்தும் குணமடையும்.
  • நரம்புத் தளர்ச்சி குணமடைய தினந்தோறும்  இரவு ஒரு செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால்  நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
  • குழந்தைப் பேறு உண்டாக குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும் .இவ்வாறு  தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் நிச்சயமாக கருத்தரிக்கும்.
  • தொற்று நோய் வராமல் தடுக்க செவ்வாழை பழத்திற்கு
  • தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி உள்ளது. ஆகையால் வாரம் இருமுறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும். ஆரோக்கியம் மேம்படும்.
    

  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/1/w600X390/584524e613509a5ad343dfef6c200f7f_xxbig.jpg http://www.dinamani.com/health/healthy-food/2018/jan/01/இன்றைய-மருத்துவ-சிந்தனை-செவ்வாழை-2836875.html
  2835811 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: ஓமம் Saturday, December 30, 2017 11:03 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  ஓமம்:

  • உடல் பலம் பெற ஓமம் (சிறிதளவு) எடுத்து  நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.
  • வயிறு செரிமானம் சீராக ஓமத்தை (அரை ஸ்பூன்) எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகும். வயிற்றின் செரிமானமும் சீராகும்.
  • வயிற்று வலியிலிருந்து உடனடி தீர்வு ஓமம் (5 கிராம்) எடுத்து அதனுடன் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் சிறிது நேரத்தில் வயிறு லேசாகி விடும். வயிற்று வலியும் மறையும்.
  • நெஞ்சுச் சளி வெளியேற ஓமத்தை பொடி செய்து சிறிதுதளவு எடுத்து அதனுடன் உப்பு சிறிது சேர்த்து  இரண்டையும் மோரில் கலந்து குடித்து வந்தால்  நெஞ்சில் பிடித்துள்ள சளி வெளியேறும்.
  • தொப்பையைக் குறைக்க ஓமம் பொடி (இரண்டு ஸ்புன்) , அன்னாசிப் பழம் (5 துண்டுகள்) இவை இரண்டையும் முதல் நாள் இரவு தூங்கப் போகும் போது தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும் . அவை நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும்.காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்றாக  கரைத்து குடிக்க வேண்டும்.இவ்வாறு 15 நாட்கள் செய்து வந்தால் தொப்பை காணாமல் போய்விடும்.
  • இடுப்பு வலி நீங்க ஓமம் (ஒரு கரண்டி) எடுத்து சிறிது தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளவும். வடிகட்டியதோடு அதனுடன் கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வந்தால்  இடுப்பு வலி நீங்கும்.


  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/30/w600X390/214-amazing-benefits-of-carom-seeds-for-skin-hair-and-health-466769981.jpg http://www.dinamani.com/health/healthy-food/2017/dec/30/இன்றைய-மருத்துவ-சிந்தனை-ஒமம்-2835811.html
  2835196 மருத்துவம் உணவே மருந்து உங்கள் உணவில் சத்து உள்ளதா? ஆரோக்கிய வாழ்விற்கு இந்த 5 உணவை சாப்பிடுங்கள்! Friday, December 29, 2017 11:33 AM +0530 சத்தான உணவுகள்  

  நீங்கள் உண்ணும் உணவு உங்களுக்கு அதிக சக்தியையும் உடல் வலிமையும் தருவதாக இருந்தால் அதுவே சத்தான உணவாகும். தேன், பழங்கள், நட்ஸ், இளநீர், காய்கறி சாலட், பழரசம், நீராகாரம், மோர், பணியாரம், ஆவியில் வேக வைக்கப்பட்ட உணவு வகைகள் போன்றவை அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகளாகும். எண்ணெய் அல்லது நெய் ஊற்றி வறுக்கப்படாத உணவுகளையும் இந்த வகையில் சேர்க்கலாம்.

  பீட்ரூட், ஆப்பிள், கேரட், இஞ்சி, லெட்யூஸ் எனும் கீரை ஆகியவற்றை அரைத்து ஜூஸாக்கி ஒரு டம்ளர் குடிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின் பி, சி மற்றும் கரோட்டின், ஆகிய சத்துகள் கிடைக்கும். இந்த ஜூஸை தினமும் ஒருவேளை குடிப்பதால் உடல் புத்துணர்ச்சி பெறுவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும். தேவையான ஊட்டச்சத்துகளும் உடனடியாகக் கிடைக்கும். 

  குப்பை உணவுகள் 

  நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இயற்கையாக உள்ள சத்துக்களை சமையல் முறைகளால் கெடுப்பதுடன் அதில் கூடுதலாக தேவையற்ற நச்சுக்களை சேர்த்து உண்ணுவது குப்பை உணவுகள். இந்த உணவு தயாரிக்கும் முறையால் உணவில் கெட்டக் கொழுப்பு சேர்ந்து உடல் ஆரோக்கியத்தை சீர் குலைத்துவிடும். ஜன்க் உணவுகள் அனைத்துமே இந்த வகையைச் சேரும். தவிர வீட்டில் செய்யப்பட்டும் வறுத்த உணவுகள், பொறித்த காய்கறிகள் இவையும் குப்பை உணவுகள்தான். பசிக்கு உணவு சமைக்க வேண்டும், மாறாக அதீத ருசிக்கு உணவு சமைக்கத் தொடங்கினால் அது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும்.

  சமச்சீர் உணவுகள்  

  சத்தான உணவுகளில் உடலுக்குத் தேவையான அளவு நல்ல கொழுப்பு சேர்ந்திருந்தால் அதனை சமச்சீர் உணவு என்கிறார்கள் ஊட்ட்ச சத்து நிபுணர்கள். செக்கு எண்ணெயில் தேவையான அளவுக்கு அந்த உணவு வேகும் அளவுக்கு நல்ல எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

  சத்தான உணவுகள் நிறைய உள்ளன. அவற்றுள் முக்கியமான ஐந்து உணவுகள் இவை. 

  கேழ்வரகு

  பெண்களுக்கு கால்சியம் குறைபாடு 35 வயதிலிருந்தே ஏற்படத் தொடங்குகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கால்சியம் குறைபாடு உள்ளவர்களுக்கு கேழ்வரகு ஒரு வரப்பிரசாதம். இதில் உள்ள கால்சியம் தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு பாலை அதிகரிக்கச் செய்யும். ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு மட்டுமின்றி கொலஸ்ட்ரால், சர்க்கரை வியாதியையும் கட்டுக்குள் வைக்க உதவும். நீண்ட நாள்களாக கால்சியம் குறைபாடு உள்ள பெண்கள் கேழ்வரகை உணவாக உட்கொள்வதன் மூலம் இழந்த சக்தியைத் திரும்பப் பெறலாம்.

  பாதாம் பருப்பு

  பாதாம் பருப்பில் மாங்கனீசியம், செம்பு போன்ற தாதுப்பொருள்கள் அடங்கிய பாதாம் பருப்பு எலும்புகளை வலுப்படுத்தி, கவர்ச்சிகரமான தோற்றத்தை அளிக்கும். பாதாம் பருப்பில் பயோடின், வைட்டமின் பி12, இ ஆகிய சத்துகள் அடங்கியுள்ளன. வைட்டமின் இ சத்து அதிகம் காணப்படுவதால் இதய நோய்கள், புற்றுநோய், வயதானவர்களுக்கு வரும் அல்சைமர் நோய் ஆகியவற்றைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது. பாதாமில் கார்போஹைட்ரேட் குறைவாகவும், புரதச்சத்தும், நார்ச்சத்தும் அதிகமாகவும் காணப்படுகிறது. பாதாம் பருப்பு உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

  அவ்வப்போது ஒரு கை நிறைய வேர்க்கடலை, முந்திரிப் பருப்பு மற்றும் பாதாம் பருப்பு எடுத்துச் சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படாது.

  ஸ்பைரிலீனா (Spirulina)

  இதில் அதிக அளவு புரதச்சத்து நிறைந்த தாவரம் ஸ்பைரிலீனா. அமேசான் காடுகளில் காணப்பட்ட இந்தத் தாவரம் தற்போது தமிழகத்திலேயே விளைவிக்கப்பட்டு, 'காப்ஸ்யூல்' வடிவத்தில் விற்பனையாகிறது. பி 12 சத்து குறைந்த பெண்களுக்கு பரிந்துரை செய்யப்படும் மிக சிறந்த உணவு இது. படபடப்பு, மன அழுத்தம், ரத்த சோகை, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணியாக விளங்குகிறது. இதில் அதிக அளவில் அமிலச் சத்து உள்ளதால், பெண்கள் கற்றாழைச் சாறுடன் கலந்து சாப்பிட்டால் நல்ல பயன் பெறலாம். உடல் எடை குறைக்க விரும்புவோர் இதனை தினமும் சாப்பிட்டால் விரைவில் உடல் எடை குறைவதுடன் ஆரோக்கியமும் மேம்படும்.

  முருங்கைக் கீரை

  முருங்கைக் கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய், கபம், மந்தம் போன்றவை குணமாகும். உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறை முருங்கைக்கீரை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.

  • முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்தசோகை வராமல் தடுக்கலாம். தோல் நோய்களும் நீங்கும்.
  • ஆஸ்துமா, மார்புச் சளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறு பிரச்னைகளுக்கு முருங்கைக் கீரை ரசம் அல்லது சூப் நல்ல பலன் தரும்.
  • முருங்கைக் கீரைச் சாப்பிடாதவர்கள் முருங்கை இலையை நிழலில் காய வைத்து பொடி செய்து தினமும் சாம்பார் போன்றவற்றில் சேர்த்துச் சாப்பிடலாம்.
  • பெண்களுக்கு தாய்ப்பாலை அதிகம் சுரக்கச் செய்யும். ரத்த உற்பத்தியைப் பெருக்கும் தன்மை கொண்டது முருங்கைக் கீரை.
  • முருங்கை இலைகளை உலர்த்திப் பொடி செய்து வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்னையின் போது ஒரு தேக்கரண்டி வாயிலிட்டு நீர் அருந்தினால் குணம் கிடைக்கும்.
  • முருங்கைப் பட்டையை இடித்து சாறாக்கி, இஞ்சி சாறுடன் வெந்நீரில் சிறிது உப்பு கலந்து குடித்தால் வயிற்றில் உள்ள கிருமிகள் அழிந்து, வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். நன்கு பசியெடுக்கும் உணவும் மருந்தும்.

  கற்றாழை

  பண்டைய நாள்களிலிருந்தே கல்லீரல் பிரச்னைகளுக்கு "அலோவேரா' எனப்படும் கற்றாழை ஜூஸ் சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. உடலில் அதிகமான அமிலம் சுரப்பதால் ஏற்படும் வாயுத்தொல்லை, வயிறு உப்புசம் போன்றவை குணமாக கற்றாழை ஜூஸ் உதவுவதோடு, வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல் போன்றவற்றையும் குணப்படுத்துகிறது. மோரில் சோற்றுக் கற்றாழையைப் போட்டுச் சாப்பிட்டால் கண் எரிச்சல் இருக்காது.

  கற்றாழை மடலைக் கீறி உள்ளே இருக்கும் தசைப் பாகத்தை எடுத்து முகத்தில் பூசினால் முகம் மிருதுவாகும்; சுருக்கங்கள் மறையும். இந்த அதிசயத் தாவரம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சீராக வைக்கவும், அதிகப்படியான கலோரிகளைக் குறைத்து ரத்த ஓட்டத்தைச் சீராக்கி உடலை ஆரோக்கியமாக வைக்கவும் உதவும்.

  நன்றி : மகளிர்மணி

  ]]>
  junk food, good food, உணவு, பழங்கள், சத்துணவு, பாதாம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/29/w600X390/good_food.jpg http://www.dinamani.com/health/healthy-food/2017/dec/29/healthy-food-for-daily-life-2835196.html
  2835129 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: யானை திப்பிலி/திப்பிலி Friday, December 29, 2017 09:18 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  யானை திப்பிலி/திப்பிலி:

  • வயிற்றுப் புழுக்கள் வெளியேற யானை திப்பிலி, அரிசி திப்பிலி, வேப்பிலை, சுக்கு, சீந்தில் தண்டு, நிலவேம்பு, சுண்டை வற்றல் ஆகியவற்றை நன்கு உலர்த்தி, சுத்தம் செய்து, சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, பின் ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். 10 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 100 மிலியாக சுண்டியபின் வடிகட்டி, அதிகாலை வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடித்துவந்தால்  வயிற்றுப்புழுக்கள் வெளியேறும்.
  • யானைத்திப்பிலியை பொன்னிறமாக  வறுத்து, பொடித்து வைத்துக் கொள்ளவும். இதனை ஒரு  கிராம் அளவு எடுத்து தேனுடன் குழப்பி, 3 முதல் 7 நாட்கள் சாப்பிட்டுவந்தால் புழுத்தொல்லையினால் ஏற்பட்ட தோல் தடிப்பு, வெள்ளை நிற மாவு படிதல், மலவாய் அரிப்பு, பலவிதமான வயிற்று உபாதைகள் மற்றும் வயிற்றுப்புழுக்கள் ஆகியவை  மலத்துடன் வெளியேறும்.
  • வயிற்று வலி , வயிற்றுப் பொருமல் ,தொண்டை கமறல் குணமாக திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கு ஆகியவற்றை  சம அளவாக எடுத்து வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் அளவுக்கு  தேனுடன் கலந்து மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் குணமாகும்.
  • வெள்ளைப் படுதல் , பெரும்பாடு நீங்க திப்பிலி (10 கிராம்) , தேற்றான் விதை
  • (5 கிராம்) சேர்த்துப் பொடியாக்கி கழுநீரில்(அரிசி கழுவிய நீர்) 5 கிராம் எடை அளவைப் போட்டு 7 நாள் காலையில் குடித்துவந்தால்  வெள்ளைப் படுதல் , பெரும்பாடு போன்றவை  நீங்கும்.
  • இளைப்பு நோய் நீங்க திப்பிலிப் பொடி, கடுக்காய்ப் பொடி சம அளவாக எடுத்துத் தேன் விட்டுப் பிசைந்து இலந்தைப் பழ அளவு இருவேளை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டுவந்தால்  இளைப்பு நோய் குணமாகும்.
  • தேமல் குணமாக திப்பிலியைத் தூள் செய்து அரை தேக்கரண்டியளவு எடுத்து தேன் கலந்து 2 வேளையாக 1 மாதம் சாப்பிட்டு வந்தால்  தேமல் குணமாகும்.
  •  

  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/29/w600X390/thipili.jpg http://www.dinamani.com/health/healthy-food/2017/dec/29/இன்றைய-மருத்துவ-சிந்தனை-யானை-திப்பிலிதிப்பிலி-2835129.html
  2834520 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: வெங்காயப் பூ Thursday, December 28, 2017 09:15 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  வெங்காயப் பூ:

  • காசநோய் குணமாக வெங்காயப்பூவையும் , வெங்காயத்தையும் சேர்த்து அரைத்து இரண்டு ஸ்பூன் சாறு எடுத்து இரவில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் பருகிவந்தால்  காசநோய் குணமடையும்.
  • கண்பார்வை தெளிவடைய வெங்காயப்பூவைக் கசக்கி சாறு பிழிந்து எடுத்து இரண்டு சொட்டு சாறு வீதம் காலை, மாலை என இருவேளையும் கண்களில் விட்டு வந்தால்  கண்நோயால் பாதிக்கப்பட்டு பார்வை மங்கலாக இருப்பவர்களுக்கு  பத்து நாட்களில் கண்பார்வை தெளிவடையும்.‎
  • பல் மற்றும் ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர வெங்காயப்பூ மற்றும் வெங்காயம் இவை இரண்டையும் சம அளவு  எடுத்து அரைத்து சாறு பிழிந்து தினமும் வாய்கொப்பளித்து வந்தால்  பல் மற்றும் ஈறு தொடர்புடைய நோய்கள் அனைத்தும்  குணமடையும்.
  • வயிற்று வலி உடனே நிற்க வெங்காயப்பூ (ஒரு கைப்பிடியளவு) எடுத்து பொடிப்பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு அதில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடேற்றவும். வெங்காயப்பூ நன்றாக வெந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிறிதளவு உப்பு சேர்த்து குடித்தால்  வயிற்று வலி உடன் நிற்கும்.
  • பசியைத் தூண்ட மற்றும் குடலில் உள்ள தேவையற்ற வாயுவை வெளியேற்ற வெங்காயம் சேர்த்து சமைக்கும் உணவுகளில் வெங்காயத்திற்கு பதிலாக வெங்காயப்பூவையும், வெங்காயத்தாளையும் சிறியதாய் நறுக்கிப் போட்டு சேர்க்கலாம். இப்படி சேர்த்து சாப்பிட்டால் பசியை தூண்டும். குடலில் உள்ள தேவையற்ற வாயுவை அகற்றும்.


  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/28/w600X390/3.JPG http://www.dinamani.com/health/healthy-food/2017/dec/28/இன்றைய-மருத்துவ-சிந்தனை-வெங்காயப்-பூ-2834520.html
  2833938 மருத்துவம் உணவே மருந்து நூறு வருடம் நோய் நொடியில்லாமல் வாழ ஆசையா? இது உங்களுக்குத்தான்! உமா பார்வதி Wednesday, December 27, 2017 12:24 PM +0530 நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று நம் முன்னோர்கள் கூறியிருப்பதை நாம் ஏதோ சாதாரண ஒரு வாக்கியமாக கடந்து வந்திருப்போம். ஆனால் அது அப்படி கடந்து வரக் கூடிய ஒரு சொற்தொடர் அல்ல. முற்காலத்தில் மனிதர்கள் இயற்கையுடன் இயைந்து வாழ்ந்து வந்தார்கள். சுவைகளை அறு வகையாகப் பிரித்து உண்ணும் பழக்கத்தையும் அவர்கள் கடைபிடித்தனர்.

  இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு இவையே அந்த ஆறு சுவைகள். இந்த சுவைகளை உள்ளடக்கி சமைக்கப்படும் உணவுகளை அறுசுவை உணவு என்று கூறினார்கள். 

  ‘உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
  திடம்பட மெய்ஞானஞ் சேரவு மாட்டார்
  உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
  உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே’

  என்று திருமூலர் திருமந்திரத்தில் உடம்பை போற்றிப் பாதுகாக்க சொல்கிறார். உடம்பை வளர்ப்பதன் மூலம் உயிரை வளர்க்க முடியும் என்கிறார். நாம் உயிருடன் இருக்க உடல் தேவை. தினமும் நாம் உட்கொள்ளும் உணவில் நம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்கள் இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருக்க நல்லுணவு தேவை. அந்த நல்லுணவு அறுசுவைகளில் கிடைக்கப் பெறுகிறது.

  ஒரு சுவை அதிகமாகவும் இன்னொரு சுவை குறைந்தும் இருந்தால் சமன் தன்மை குறைந்து உடலுக்கு சத்துக் குறைபாடு ஏற்படுகிறது அல்லது அதிகப்படியான ஒரு சுவையால் அதிக சத்துக்கள் உடலுக்குக் கிடைத்துவிடுகிறது. இந்த சுவைகளில் சமச்சீர் இருந்தால்தான் உடல் நலத்துடன் இருக்க முடியும். இல்லையெனில் வாதம், பித்தம், கபம் போன்ற பிரச்னைகளை விளைவித்துவிடும். நாள்பட அதுவே நோய்களுக்கான மூல காரணமாகிவிடுகிறது. 

  பிரபஞ்சம் என்பது இடையறாது இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு மாபெரும் சக்தி. அதனுள் ஒடுங்கியிருப்பதே இயற்கை மற்றும் மனித உயிர்கள். இயற்கை சக்திகளான பஞ்சபூதங்களுக்கும் அறுசுவைக்கும் சங்கிலித் தொடர்பு உண்டு. பஞ்ச பூதங்களில் இரண்டு இரண்டு பூதங்கள் இணைந்து ஒரு சுவையை உருவாக்கும்.

  மண்ணும் நீரும் சேர்ந்தது இனிப்புச் சுவை. மண்ணும் தீயும் இணைவது புளிப்புச் சுவை. நீரும் தீயும் சேர்ந்தால் உவர்ப்புச் சுவை. காற்றும் வெளியும் சேர்வது கசப்புச் சுவை, காற்றும் தீயும் சேர்வதால் உருவாகிறது கார்ப்புச் சுவை. மண்ணும் காற்றும் இணைவது துவர்ப்புச் சுவையாகும்.

  புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு ஆகிய மூன்று சுவைகளிலும் நெருப்பு இருப்பதால் வெப்பம் தருவன. அது உடல் சூட்டுக்கு காரணியாக விளங்குகிறது. மற்ற மூன்று சுவைகளும் உடல் குளிர்ச்சிக்கு முக்கிய காரணமாகும். உடலில் தேவையான அளவு வெப்பமும், தேவையான அளவு குளிர்ச்சியும் இருக்க வேண்டும். இதில் எதுவொன்று அதிகரித்தாலும் பிரச்னைதான். குறைந்தாலும் வியாதிதான்.

  புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு ஆகிய சுவைகளால் ஏற்படும் பலன்கள் - வாதம் சீராகும், கபம் நீங்கும். நா வறட்சியைப் போக்கும். உடல் நலிவைத் குணமாக்கும். ஜீரண சக்தி மேம்படும். வியர்வைச் சுழற்சியை சீராக்கும். உடலின் செயல்திறனை அதிகரிக்கும்.

  இனிப்பு, கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகள் மன மகிழ்ச்சியை தரும். ஆயுளை அதிகரிக்கும். தாம்பத்திய உறவை சிறக்கச் செய்யும். பித்தத்தை போக்கும்.

  ஒவ்வொரு சுவையிலும் என்னென்ன உணவுகளைச் சாப்பிடலாம்?

  இனிப்பு - பழவகைகள் எல்லாவற்றிலும் இனிப்புச் சுவை உள்ளது. தேன், கரும்பு போன்றவற்றில் மிகச் சுத்தமான இனிப்புச் சுவை கிடைக்கும். அளவாக இனிப்புச் சுவையை உட்கொள்ள வேண்டும். அதிகமாகிவிட்டால் சர்க்கரை நோய், சிறுநீர்ப் பிரச்னைகள் ஏற்படும். 

  புளிப்பு - புளி, எலுமிச்சை, மாங்காய், மதுபானம், இறைச்சி போன்றவற்றில் புளிப்புச் சுவை இருக்கும். தேவைக்கு அதிகமாக இந்த சுவை எடுத்துக் கொண்டால் உடல் உறுதியை குலைத்துவிடும். தலைச்சுற்றல் வாந்தி ஏற்படும். சருமத்தில் பிரச்னைகள் ஏற்படும்.

  உவர்ப்பு - உப்பு, வெள்ளரிப் பிஞ்சு, இளநீர் போன்றவற்றில் உவர்ப்பு சுவை உள்ளது. அதிகம் உட்கொண்டால் தலைமுடி உதிரும். நா வறட்சி ஏற்படும். அக்கி, குஷ்டம் போன்ற சரும பிரச்னைகளை உருவாக்கும். ரத்தம் கெட்டு, உடலின் அழகை சீர்குலைக்கும். 

  கசப்பு - பாகற்காய், அதலக்காய், வேப்பங் காய், பூ, கடுகு, எள் போன்றவற்றில் கசப்புச் சுவை உள்ளது. அதிகம் உட்கொண்டால் உடல் உறுப்புக்கள் பழுதடையும், சோர்வு ஏற்படும், உடல் வலி ஏற்படும்.

  கார்ப்பு - மிளகாய், வெங்காயம், கரிலாங்கண்ணி கீரை, இளநீர், மிளகு போன்றவற்றில் இந்தச் சத்து நிறைந்துள்ளது. இயற்கையான வகையில் கிடைக்கும் காரம் உடலுக்கு நல்லது. கார்ப்பை பயன்படுத்தியும் பதப்படுத்தியும் தயாரிக்கப்படும் உணவுகள் கேன்சர் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும்.

  துவர்ப்பு - வாழைப்பூ, நெல்லிக்காய், கொட்டைப் பாக்கு, போன்றவற்றில் துவர்ப்பு உள்ளது. அதிகம் உட்கொண்டால் ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும். இதய நோய்கள் வருவதற்கும் சாத்தியத்தை உருவாக்கிவிடும்.

  ஒவ்வொரு மனித உடலும் தனித்தன்மை வாய்ந்தது. ஒருவருக்கு சேரும் உணவு சிலருக்கு ஒவ்வாமையாக இருக்கும். அடிப்படையில் ஏன் பிரச்னை ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்து அதனை சீர் செய்துவிட்டாலே வியாதிகள் இன்றி வாழலாம்.

  நம்முடைய உடல் ஒரு கடிகார நியதிக்கு உட்பட்டு இயங்குகிறது. சரியான நேரத்தில், சரியான சத்துள்ள சமச்சீர் உணவுகளை மிகச் சரியான அளவு சாப்பிட்டு, சரியான நேரத்துக்கு உறங்கி மீண்டும் காலை சரியான நேரத்துக்கு விழித்து எழுந்து இன்னொரு நாளை மற்றொரு நாளை மீண்டும் மீண்டும் வரும் வாழ்நாளின் மொத்த நாட்களையும் இம்முறையில் எதிர்கொண்டால் நீங்கள்  மிகச் சரியாக வாழ்ந்துள்ளீர்கள் என்று அர்த்தம். சரியாக வாழ்பவர்கள் நோய் நொடியின்றி நெடு நாட்கள் வாழ முடியும். சரிதானே?

  ]]>
  food, Six Taste, அறுசுவை, சமச்சீர் உணவு, சத்துணவு, பஞ்ச பூதம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/27/w600X390/the-6-tastes.jpg http://www.dinamani.com/health/healthy-food/2017/dec/27/few-tips-to-live-longer-and-healthier-2833938.html
  2831866 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: மஞ்சள் DIN DIN Wednesday, December 27, 2017 12:00 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  மஞ்சள்:

  • வயிற்று வலி குணமாக கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் ஐந்து குன்றிமணி அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை குணமாகும்.
  • உள் மூலம் மற்றும் வெளி மூலம் குணமாக மஞ்சள் தூள் இரண்டு சிட்டிகை எடுத்து  10 கிராம் வெண்ணெய்யில் கலந்து ஆசன வாயில் வைத்து அழுத்தி வந்தால் எத்தகைய உள்மூலமும் வெளிமூலமும் குணமாகும்.
  • மாதவிடாய் வயிற்றுவலி உடனே குணமாக மஞ்சள்தூள், உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் மாதவிடாய் காலத்தில் உண்டாகும் வயிற்று வலி மாயமாய் மறைந்திடும்.
  • பல்வலி குணமாக கஸ்தூரி மஞ்சள், புதினா, கருந்துளசி, உப்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி பல் பொடி போல உபயோகித்து வந்தால் பல்வலி நீங்கும்.
  • குழந்தையின் வயிற்றுப் போக்கு நீங்க மஞ்சள்தூள், சர்க்கரை, உப்பு ஆகியவற்றை தண்ணீரில் கலந்து குழந்தைகளின் வயிற்றுப் போக்கின் போது  கொடுத்து வந்தால் வயிற்றுப் போக்கும் நீங்கும் உடலும் வளம் பெறும்.
  • பொடுகு ,  பேன் தொல்லையிலிருந்து விடுபட மஞ்சள், வேப்பந்துளிர், குப்பைமேனி ஆகியவற்றை அரைத்து தலையில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் தீராத பொடுகு , பேன் பிரச்சனை நீங்கும்.


  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/23/w600X390/201712021105211597_1_turmeric.jpg http://www.dinamani.com/health/healthy-food/2017/dec/27/இன்றைய-மருத்துவ-சிந்தனை-மஞ்சள்-2831866.html
  2831864 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: பாகற்காய் DIN DIN Tuesday, December 26, 2017 12:00 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  பாகற்காய்:

  • ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவு குறைய தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் நாலைந்து பாகற்காய் பழங்களின் சாறைப் பிழிந்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் மற்றும் சிறுநீரில் மிகுந்துள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
  • வெடிப்புகள் மறைய பாகற்காய் இலைச் சாறு எடுத்து பாதங்களில் ஏற்பட்டுள்ள வெடிப்புகளில் பூசி வந்தால் வெடிப்பு மறையும்.
  • வெளிமூலம் குணமாக பாகற்காய் செடியின் வேரை எடுத்து நன்கு அரைத்து வெளி மூலத்தில் பூசி வந்தால் மூலம் குணமாகும்.
  • மாதவிடாய் வயிற்று வலி மறைய பாகற்காய் பழங்களைப் பிழிந்து சாறு எடுத்து அருந்தி வந்தால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி மாறும்.
  • மலச்சிக்கல் , வயிற்றில் உள்ள கிருமி அழிய பாகற்காய் இலை சாற்றை ஒரு கரண்டி எடுத்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றுக் கிருமிகள் அழியும். மலச்சிக்கல் நீங்கும். அதிக வீரியமுள்ள மருந்துகளால் ஏற்பட்ட தீமையை மாற்ற இலைச்சாறு அருந்தலாம்.
  • தீப்புண் , சுடுநீர் பட்ட காயங்கள் மறைய பாகற்காய் இலைச்சாறு எடுத்து அதனுடன்  சிறிதளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து, தீப்புண்கள், சுடுநீர் பட்டதால் ஏற்பட்ட காயங்கள் மேல் போட்டு வர காயங்கள் உடனே ஆறும்.
  • புண்கள் மற்றும் காயங்கள் ஆற பாகற்காய் இலைகளைத் தண்டோடு எடுத்து உலர வைத்து, பொடியாக்கி அவற்றை காயங்கள், புண்கள் மேல் தூவி வந்தால்புண்கள் மற்றும் காயங்கள் ஆறும்.
    

  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/23/w600X390/paakarkai.jpg http://www.dinamani.com/health/healthy-food/2017/dec/26/இன்றைய-மருத்துவ-சிந்தனை-பாகற்காய்-2831864.html
  2831862 மருத்துவம் உணவே மருந்து இன்றைய மருத்துவ சிந்தனை: இரணகள்ளி Monday, December 25, 2017 12:00 AM +0530
  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!


  இரணகள்ளி:

  • ஆறாத புண்கள்  ஆற இரணகள்ளி இலையை மை போல் அரைத்து, ஆறாத புண்களின் மேல் வைத்து அதன் மேல் ஒரு வெற்றிலையை வைத்துக் கட்டி வந்தால், நாளவட்டத்தில் படிப்படியாக புண்கள் ஆறும்.
  • கால் ஆணி , மரு , பாலுண்ணி மறைய இரணகள்ளி இலையின் சாற்றை எடுத்து அவற்றை  மரு, பாலுண்ணி, கால் ஆணி, சொர சொரப்பான மருக்கள் பேரில் இரவில் தடவி வைத்துக் காலையில் கழுவி விடவேண்டும். இந்த விதமாக தினசரி  பாலுண்ணி, மரு மறையும் வரைத் தடவி வந்தால் அவைகள் விரைவில் மறையும்.
  • வீட்டில் கொசு வராமல் தடுக்க இரணக்கள்ளி செடியைக் கொண்டு வந்து வீட்டில் உயரத்தில் கட்டி வைக்க கொசுக்கள் இதன் வாடையால் வீட்டில் தங்காமல் ஓடிவிடும்.
  • சிறுநீரகக் கற்களை உடனடியாக கரைக்க இரணகள்ளி இலையை சிறுநீரக கற்கள் உளாளவர்கள் அதிகாலையில்  வெறும் வயிற்றில் ஒரு நாளுக்கு ஒரு இலை வீதம் (அதை சுத்தம் செய்து) மென்று சாப்பிட்ட பின் 100 மில்லி தண்ணீர் குடித்து வந்தால் 4 வது நாள் சிறுநீரககற்கள் வெளியேறிவிடும். இதை அறிய, சாப்பிடும் முன்பும், மூன்றாவது இலை சாப்பிட்ட பின்பும் ஸ்கேன் செய்து பார்த்தால் குணமாவது கண்கூடத் தெறியும். மீண்டும் கல் உருவாவதற்கு வாய்ப்பே இல்லை.
  • தோல் சார்ந்த பிரச்சனைகள் தீர இரணக் கள்ளி செடியின் சமூலத்தை எடுத்து இடித்து சாறு (500 மில்லி) , தேங்காய் எண்ணை (400 மில்லி) , அதனுடன் கஸ்தூரி மஞ்சள் (10 கிராம்) ,  நீரடிமுத்து (20 கிராம்) , கார்போக அரிசி (30 கிராம்) , மஞ்சள் (40 கிராம்) , கசகசா (5 கிராம்)  சேர்த்து இடித்து அனைத்தையும் ஒன்றாக கலந்து அடுப்பில் சிறு தீயாக கொதிக்க வைத்து சாறு சுண்டிய பின்னர் வடிகட்டி வைத்துக் கொண்டு, காலையில் எழுந்து சர்மநோய் உடையவர் தலை முதல் கால் வரை மேலுக்குப் பூசி அரைமணி நேரம் ஊரவைத்துப் பின்னர் இளஞ்சூடான நீரில் சீயக்காய்த் தூள் போட்டுக் குளித்துவந்தால் குட்டம், மேகநீர், ஊரல் படை, கருமேகநீர், சம்பந்தமான சர்ம நோய், செம்மேகப்படை, கிரந்தி நோய்கள் அனைத்தும் நீங்கும்.
  •  

  KOVAI  HERBAL  CARE 
  VEGETABLES CLINIC

  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/23/w600X390/images-2-3.jpg http://www.dinamani.com/health/healthy-food/2017/dec/25/இன்றைய-மருத்துவ-சிந்தனை-இரணகள்ளி-2831862.html
  2832369 மருத்துவம் உணவே மருந்து தினந்தோறும் ஒரு க்ளாஸ் பால் குடித்தால் இந்த 5 பலன்களை நிச்சயம் பெறுவீர்கள்! உமா Sunday, December 24, 2017 01:16 PM +0530  

  ஒரு மனிதன் இந்தப் பூமியில் பிறந்தது முதல் இறப்பு வரை பால் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. 'பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே, இறந்தாலும் பாலை ஊற்றுவார்' என்ற வாழ்வே மாயம் பாடலில் கவிஞர் வாலி குறிப்பிட்டிருப்பது நினைவில் இருக்கலாம். 

  மற்ற உணவுப் பொருட்களை விடவும் பால் தூய்மையானது. அதிகமான புரதம் உடையது. பலவிதமான சத்துக்களை உள்ளடக்கியது. முட்டையில் கிடைக்கும் அல்புமின் என்ற சத்து பாலிலும் உள்ளது. ஒரு க்ளாஸ் பாலும், ஒரு அவித்த முட்டையும் சிறந்த சத்துணவாகவே கருதப்படுகிறது. பெளத்த துறவிகள் நீண்ட நாட்கள் தியானம் செய்யும் போது உணவினைத் தவிர்த்துவிடுவார்கள். பழம் அல்லது பால் மட்டுமே அவர்களது ஆகாரமாக இருக்கும்.

  இரவில் உடல் ஓய்வு எடுக்கும் நிலையில் உறுப்புக்கள் காலை வரை இயங்க சத்தும் ஊட்டமும் தேவை என்பதால் தினமும் இரவில் ஒரு தம்ளர் பால் குடிப்பது நல்ல பழக்கமாக கருதப்படுகிறது.

  பாலில் உடலுக்குத் தேவையான கால்ஷியம், புரதம், பாஸ்பரஸ், வைட்டமின் பி12, ரைஃபோஃபோவின் போன்ற சத்துக்கள் உள்ளன. பால் சாப்பிட உடனே செரிமானம் ஆகிவிடும்.  

  குழந்தைகளின் வளர்ச்சிக்கு பால் இன்றியமையாத உணவாகும். எலும்பு வலுவடையவும், மூளைத் திறன் அதிகரிக்கவும் பால் மிகவும் அவசியமான உணவு. டீன் ஏஜ் பிள்ளைகளின் வளர்ச்சிக்கும் உடல் போஷாக்கிற்கும் பால் மிகவும் முக்கியம். பெண்களுக்கும் பால் சிறந்த உணவு. 

  பெண்கள் இரவில் ஒரு க்ளாஸ் பால் குடித்துவிட்டு உறங்கினால் வயிற்றுவலி, மாதவிலக்கு போன்ற சமயத்தில் வரும் பிரச்னைகளை சரி செய்யும்.

  உடல் மெலிவாகவும், பலவீனமாகவும் இருந்தால் தினமும் மிதமான சூட்டில் ஒரு க்ளாஸ் பாலில் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் சிறீதளவு நெய் கலந்து குடித்துவர உடல் நன்கு தேறிவிடும்.

  வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் உடனே பால் அருந்தினால் சரியாகிவிடும். பாலில் இயற்கையாக உள்ள சர்க்கரை சத்து உடல் நலத்தை மேம்படுத்தும் லாக்டோஸ் என்று அழைக்கப்படும் இச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சிலருக்கு இந்த லாக்டோஸ் அலர்ஜியாக இருக்கும். பால் தயிர் போன்ற பொருட்களை அவர்கள் தவிர்த்துவிடுவதே நல்லது. அல்லது மருத்துவரின் பரிந்துரையின்படி பாலை அளவாக எவ்விதம் எடுத்துக் கொள்ளலாம் என்று கேட்டு அதற்கேற்றபடி அதனை அருந்தலாம்.

  ]]>
  Milk, Milk Products, FMCG, பால், பாலில் உள்ள சத்துக்கள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/24/w600X390/girl-drinking-milk.jpg http://www.dinamani.com/health/healthy-food/2017/dec/24/one-glass-milk-a-day-keeps-your-smiling-whole-life-benefits-of-milk-2832369.html