Dinamani - குழந்தைகள் நலம் - http://www.dinamani.com/health/children-health/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2801634 மருத்துவம் குழந்தைகள் நலம் உங்கள் குழந்தையின் வருங்காலம் எப்படி என்று தெரிய வேண்டுமா? இந்த சோதனையை செய்து பாருங்கள்! மாலதி சுவாமிநாதன் Saturday, November 4, 2017 12:55 PM +0530  

பொதுவாக, பெற்றோர்கள், தம் குழந்தைகள் நல்லவர்களாகவும், வெற்றியுடனும் வாழ வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை: இரண்டுமே நம் முடிவு செய்யும் திறன்களில் அடங்கியுள்ளது.

இதைப் புரிந்து கொள்ளவே நாற்பது ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆராய்ச்சி மேற்கோண்டார்கள். இது மிகப் பிரசித்தி பெற்ற "மார்ஷ்மெல்லோ டெஸ்ட்" (Marshmallow test). இந்த, ஆராய்ச்சியில் கலந்து கொண்டவர்களை 40 வருடங்களாகத் தொடர்ந்து கவனித்து வந்ததில், பல விஷயங்களை அறிந்துள்ளார்கள். நாம் இங்குக் குறிப்பாக, முடிவு செய்யும் விதங்களைப் பற்றி  பார்க்கலாம். 

மார்ஷ்மெல்லோ ஆராய்ச்சி செய்தவர்கள், ஒரு அறையில், பல மார்ஷ்மெல்லோ (மிட்டாய் போன்றவை) ஒரு மேஜையின் மீது, கிண்ணத்தில் வைத்தார்கள். பிறகு, 5-7 வயதுள்ள குழந்தைகளை ஒவ்வொருவராக உள்ளே அனுப்பி, “வேண்டுமென்றால் உடனே ஒரு மிட்டாய் எடுத்துக் கொள்ளலாம், அல்லது 15 நிமிடத்திற்குக் காத்திருந்தால், இரண்டு மிட்டாய் எடுத்துக் கொள்ளலாம்" என்று சொன்னார்கள். எல்லாக் குழந்தைகளும் காத்திருக்கிறேன் என்றார்கள்.  

காத்திருந்த நேரத்தில், சில குழந்தைகள் உடனே மிட்டாயை வாயில் போட்டு கொண்டன, ஒரு சிலர் கீழ் பக்கத்தையோ, மேல் பக்கத்தையோ நக்கிப் பார்த்தார்கள். சில குழந்தைகள் மிட்டாய் கிண்ணத்தின் மேலே உட்கார்ந்து கொண்டு, மிட்டாய் மேல் கவனத்தை குறைத்துக் கொண்டார்கள் . இன்னும் சிலர், பாட்டுப் பாடி, காலை ஆட்டி, தன்னை சமாதானப் படுத்தி 15 நிமிடத்தைக் கழித்தார்கள். 

பொறுத்திருந்த குழந்தைகள், மிகத் தெளிவான சிந்தனை உள்ளவர்களாக வளர்ந்தார்கள். இவர்களின் நுண்ணறிவு எண் (IQ) சராசரியாக இருந்தும், அதிகமான மதிப்பெண்கள் பெற்றார்கள். படிப்பை முழுவதுமாக முடித்து இருந்தார்கள். உறவுமுறைகள் நன்றாக இருந்தது. எடுத்த குறிக்கோள்களை அடைந்திருந்தார்கள்.

இவர்கள் இப்படி, செயல் பட்டதை, “காக்நிடிவ் கண்ட்ரோல்" ("Cognitive Control") “அறிந்து-புரிந்து-செய்வது" என்போம். 

“அறிந்து-புரிந்து-செய்வது" இருந்து விட்டால், நம் குறிக்கோளை அடைய முடியும். தேவையான படி நம் உள்ளும், வெளியிலும் உள்ள வளங்களையும் பயன் படுத்தி, அதற்கு ஏற்றப் பாதையை அமைத்துக் கொள்வோம். நாம் சென்று கொண்டு இருக்கும் பாதையில் பல இன்னல்களைச் சந்திக்க நேரிடும், அப்பொழுது துவண்டு போகலாம், பதட்டப்படலாம், சந்தோஷத்தின் உச்சிக்கும் போகக்கூடும். இந்த ஒவ்வொரு தருணத்திலும் நம்மை, ஆசுவாசப் படுத்தி, சமநிலைக்குக் கொண்டு வருவதே நம் "காக்நிடிவ் கண்ட்ரோல்" ஆன அறிந்து-புரிந்து-செய்வது!

அப்போழுது தான், நாம் கவனம் சிதறாமல், திடீர் தூண்டுதலுக்கு அடிமையாகாமல் செய்யும் வேலையில் ஈடுபாட்டுடன் செயல்படுவோம். எதிர்மறை உணர்ச்சிகளான அலட்சியம், சலிப்புத்தன்மை, போன்றவற்றை எதிர்த்துப் போராடாமல் அவற்றைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம் (இதைத் தான் “எமோஷ்னல் இன்டெலிஜென்ஸ்” Emotional Intelligence என்பார்கள்).

இப்படிச் செய்வதின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வோம். நம் மூளையில் முடிவு எடுக்கும் பாகங்களின் பெயர், ப்ரீ ப்ஃரான்டல் கார்டெக்ஸ் (Prefrontal cortex), வென்ட்ரல் ஸ்ட்ரையாட்டம் ( Ventral striatum). அவை நாம் முடிவுகளை எடுக்கும் விதத்தைக் கூர்ந்து கவனிக்கும். நம்மை எது அதிகமாகப் பாதிக்கிறதோ, அந்தச் செய்கைகளை அப்படியே பதிவு செய்யும். நாம் இதுபோல் சில முறை செயல் பட்டால், நம் மூளையைப் பொருத்தவரை “இப்படிப் பட்ட நிலையில், இது தான் பொருந்தும்” என்றே குறித்து வைத்து, பின்னர் அம்மாதிரி சூழ்நிலைகளில், அதேபோல் இயங்க நம்மை தயராக்கிவிடும். உதாரணத்திற்கு, வழக்கமாகப் பதட்டம், எரிச்சல் படுபவர்கள் என்றால், அடுத்த முறையும் அதே எரிச்சல், பதட்டத்தைக் காட்டுவோம். 

இப்படி நடப்பதைப்  புரிந்து கொண்டால், முயற்சி செய்து நடத்தையை மாற்ற முடியும்! விளைவு, நம் மூளையும் தன் பதிவுகளை மாற்றி எழுதிக் கொள்ளும்! பயன்? கவனம் தவறாது. இல்லையேல், கவனம் அலை மோதும், வேலை முடியாது. நம்மால், பொறுத்து இருக்க முடியவில்லை என்றால், நம் முடிவுகளும் பரபரப்புடனும், அர்த்த மற்றதாகவும் கூட இருக்கக் கூடும். நாம் எல்லோரும் பல தடவை, கோபத்தில் செயல் பட்டு வருத்தப் பட்டிருக்கிறோம்.

இதை மாற்றுவதற்கே, "காத்திருக்க" கற்றுக் கொண்டால், நம் எண்ணங்களைச் சிதற விடாமல் இருக்கக் கற்றுக்கொள்வோம். காத்திருப்பதிலும் பலன் கிடைக்கும் என்பதையும் புரிந்து கொள்வோம்.

வளரும் பருவத்திலேயே இந்த காக்கும் குணத்தை வளர்த்தால் பல விதங்களில் பயன் படும். என்ன செய்கிறோமோ, அதில் மட்டும் கவனம் இருக்கும். இதனால், ஒன்று, சன்மானமும் இரண்டு! செய்வதை நன்றாகச் செய்வதால், விளைவு நன்றாகவே அமையும். விளைவுக்காக மட்டும் அல்லாமல், செய்வதைப் பிடித்து செய்வோம். இது, பாடம் படித்து கொண்டிருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி, இரண்டுக்குமே பொருந்தும்! 

வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு எதை எப்படிச் செய்வது என்பதை வழிகாட்டுவதற்காகச் சொல்லி தருவதும் தேவை. எப்படிச் செய்வது, ஏன் செய்கிறோம் என்பதை வழி வகுப்பதால் குழந்தைகளும் தடைகளை அறிவார்கள். 

சில சமயங்களில், குழந்தைகள், நாம் சொல்வதை தவிர வேறு எதையோ செய்ய ஆசைப் பட்டால், அமைதியாக அவர்களுடன் சேர்ந்து, கலந்துரையாடலாம். அவர்களாக யோசிக்க, இதிலிருந்து  "எது நல்லது” என்று தேர்வு செய்யக் கற்றுக்கொள்வார்கள். தானாக யோசித்து, நல்லதைத் தேர்வு செய்து, முடிவு எடுக்கும் திறனை வளர்க்கும் வாய்ப்பாக அமைந்து விடுகிறது.

இப்படி இல்லாமல், அவசர அவசரமாக, முடித்துவிட வேண்டும் அல்லது சொன்னதை கேட்க வேண்டும் என்று மட்டும் இருந்தால், அதில் "அரிந்து-புரிந்து-செய்வது" பூஜ்யம்! தரமும் இருக்காது. சற்று, விளைவுகளை ஆராய்ந்து, வேறு வழிகளைக் கண்டு பிடித்து, சலசலப்பு இல்லாமல் செய்ய பழக்கப் படுத்த வேண்டும். 

இப்படிச் செய்தால், நம் மூளை சமநிலையில் வேலை செய்ய முடியும் என்று உணர்வோம். பல முறை இப்படிச் செய்தால் நம் மூளையின் செயல் படும் விதமே மாறும். இது தான் "அறிந்து-புரிந்து-செய்யும்" காக்நிடிவ் கண்ட்ரோல்! 

மனதில் ஒன்று  வைத்துக் கொள்ள வேண்டும், குழந்தைகளிடம் சரி தருகிறேன் என்று சொல்லி விட்டு, தராமல் இருந்தால், ஏமாற்றம் அடைவதும் மனதில் பதியும்.  இதனால் அவர்கள் உறவுகளைச் சந்தேக கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடும், நம்பிக்கை முறிந்து போகும்.

எனக்குப் பொறுத்திருக்க முடியாது. என்னால் மாற முடியாது என்று இருந்தால், சாக்குச் சொல்லிக் கொண்டும், வேலையை நாளைப் பார்த்து கொள்ளலாம் என்று தள்ளி போட்டு, இஷ்டப் பட்டதை செய்யத் தோன்றும். கடைசி நேரத்தில், ஏனோ-தானோ என்று வேலையை முடிப்போம். எதிலும், எப்பொழுதும் தாமதம் நிலவும். குறைகளை மட்டும் சொல்வது, நிறையக் கோபம் கொள்வது, எல்லாம் சேர்ந்து தாழ்வு மனப்பான்மை நிலவும். மார்ஷ்மெல்லோ ஆராய்ச்சியிலும், அவசரப் பட்டு மிட்டாயைத் தின்றவர்களை 40 ஆண்டுகளுக்குப் பின் பார்த்ததில், அவர்கள் இந்தக் குணாதிசயங்களுடன் காணப்பட்டார்கள். இவர்களில் பல பேர் போதைக்கு அடிமையானார்கள், உடல் பருமனாக இருந்தார்கள். 

இதனுடன் இன்னும் ஒன்றைச் சேர்க்கலாம். நாம் நம் சிந்தனை திறன்களை வலுப் படுத்தாமல் இருந்தால் பல விதங்களில் பாதிக்கப் படுவோம். இதன் ஒரு விளைவு தான், சமீபத்தில் தோன்றிய “புளூ வேல்” (Blue Whale) பிரச்சனை. இது ஒரு தூண்டுதல், இதில் நன்மை-தீமை ஆராயாமல், சாவி போட்ட பொம்மை போல் இயங்குவோம். நம் உடல், மனதுக்கு ஆபத்து என்பதைக் கூட யோசிக்கப் பொறுமை இல்லாதவர்களாக இருக்கிறோம். உணர்ச்சி வசப்பட்டு, தூண்டுதலுக்கு அடிமையாகுபவர்கள் எளிதில் தீங்கிற்கு ஆளாகும் நிலையில் இருப்பார்கள். இதனால் தான் இந்த “புளு வேல்” (Blue Whale) போன்ற வலையில் சிக்கி கொள்வார்கள்.

மாற, என்ன செய்யலாம்? 
சலசலப்பு ஏற்படும் போது, டக்கென்று வேறு சிந்தனையை புகுத்தலாம், அங்கிருந்து நகர்ந்து விலாம். சிந்தனையை ஆறு வினாடிகளில் திசைதிருப்பிக் கொள்ளலாம். கூடவே, வேலை முடித்தால் எப்படி இருக்கும் என்பது போல நற் சிந்தனைகளை நினைவூட்டிக் கொள்ளலாம்.

முடிவு எடுக்கத் தைரியம் தேவை. தைரியத்திற்குத் தெளிவான சிந்தனை இருக்க வேண்டும். இதற்கு, “அறிந்து-புரிந்து-செய்வது” ஒரு வழியாகும், உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வதால் (எமோஷ்னல் இன்டெலிஜேன்ஸ்) வலுவைச் சேர்க்கும்!

மாலதி சுவாமிநாதன்
மனநல மற்றும் கல்வி ஆலோசகர்
malathiswami@gmail.com

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/4/w600X390/veettil-kuzhanthai-ullatha-nichayam-ithai-padiyungal-4.jpg http://www.dinamani.com/health/children-health/2017/nov/04/marshmallow-test-with-children-2801634.html
2780151 மருத்துவம் குழந்தைகள் நலம் குழந்தைகளிடம் செல்போன் கொடுத்தால் என்ன ஆகும்? ANI Tuesday, September 26, 2017 12:57 PM +0530 அன்பான பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே செல்போன் வாங்கித் தருவது தேவையில்லாத பிரச்னைகளையும் ஆபத்துக்களையும் அவர்களுக்கு ஏற்படுத்திவிடக் கூடும் என்கிறது சமீபத்திய ஆய்வு.

சொந்தமாக செல்போன் வைத்திருக்கும் மூன்று முதல் ஐந்தாம் வகுப்புக் குழந்தைகளை ஆய்வுக்கு உட்படுத்திய போது, அவர்கள் ஏதோ ஒரு கட்டத்தில் சைபர் கொடுமைக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியின் காலகட்டம் 2014 - லிருந்து 2016 -ம் ஆண்டுக்குள்.  நிபுணர்கள் 3, 4 மற்றும் 5-ம் வகுப்புகளிலிருந்து 4,584 மாணவர்களைச் சந்தித்துப் பேசி ஆய்வுக்கான தரவுகளைச் சேகரித்தனர். இந்த ஆய்வின்படி, 9.5 சதவிகித குழந்தைகள் இணைய வழி அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி மனரீதியாக பாதிப்படைந்திருந்தனர். இந்த செல்போன் உரிமையாளர்களில் மூன்று மற்றும் நான்காம் வகுப்பு மாணவர்களே அதிகமாக சைபர் புல்லியிங் எனப்படும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியிருந்தனர்.

இந்த மூன்று வகுப்பு மாணவர்களைத் தவிர செல்போன் வைத்திருக்கும் மற்ற வகுப்பு மாணவர்களும் கூட தாங்களும் இந்த சைபர் புல்லியிங்கில் (Cyber Bullying) மாட்டியிருக்கிறோம் என்று தாமாகவே ஒப்புக்கொண்டனர்.  

பெற்றோர் தங்கள் குழந்தைக்கு செல்போன் வாங்கித் தருவதற்கான காரணங்களை அடுக்குகின்றனர். ஆனால் இந்த இளம் வயதில் அதனை அவர்கள் வைத்திருப்பதால் ஏற்படும் எதிர்பாராத அபாயங்களைப் பற்றி அவர்கள் நினைப்பதில்லை என்றார் பிரிட்ஜ்வாட்டர் மாநில பல்கலைக்கழகத்தின் உளவியல் துறைப் பேராசிரியர் எலிசபெத் கே. இங்கிலாந்தர்.

சமூக ஊடகங்களில் சின்னஞ்சிறிய வயதிலேயே பங்கு பெறுவதும், தொடர்ந்து இணையத் தொடர்பில் இருப்பதும், அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதும் பல சமயங்களில் ஆபத்தை வரவழைத்து விடும். கையில் ஃபோன் எப்போதும் இருப்பதால் இணைய வழிக் குற்றவாளிகளின் இலக்காக இவர்கள் உள்ளார்கள். மேலும் நல்லவர்கள் யார் தங்களுக்கு கெடுதல் விளைவிப்பவர்கள் யார் என்று பகுத்தறிய முடியாத வயது என்பதால் இவ்வயதினரை எளிதாக அணுக முடிகிறது. 

அறியாத வயதில் செல்போன் வைத்திருப்பது எதிர்மறையான விளைவுகளை அக்குழந்தைகளுக்கு ஏற்படுத்திவிடும் வாய்ப்புகள் உள்ளது. மேலும் ஆன்லைன் தொடர்புகளின் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ளும் வயதும் அவர்களுக்கு இல்லாதபட்சத்தில் தங்களுக்கு நேரக் கூடும் ஆபத்துக்களைப் பற்றி அறிந்து கொள்வதில்லை. சோஷியல் மீடியாவில் பங்கு கொண்டு மற்றவர்களின் இடுகைகளுக்கும் செய்திகளுக்கும் பதில் அளிக்கவே விருப்பம் கொள்கிறார்கள்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே செல்போன் கொடுக்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்ய உதவி செய்யவே இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. செல்போன் குழந்தைகளிடம் இருப்பது மிகச் சில நன்மைகளை தந்தாலும், அதனால் ஏற்படும் அபாயங்களை யோசித்து அதன் அடிப்படையில் எலிமெண்டரி பள்ளிக்குச் செல்லும் குழந்தைக்கு எதற்கு செல்போன் வழங்க வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிக்க வேண்டும்.

ஒரு செல்போனை பெற்றோர் வாங்கித் தரும்போது, குறைந்தபட்சம், தங்கள் குழந்தைகளுடன் அது குறித்த சாதக பாதகங்களைப் பற்றி தெளிவாகப் பேசிப் புரிய வைக்க வேண்டும். அவர்களுக்கு அதைக் கையாளும் பொறுப்புகளை பொறுமையாகக் கற்றுத் தர வேண்டும். மேலும் சமூக வலைத்தளங்களில் தொடர்பு கொள்வதை தவிர்க்கச் சொல்ல வேண்டும் அல்லது சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகையில் அதற்கான பொதுவிதிகளை அவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும்’ என்றார் இங்க்லாந்தர்.

இந்த ஆய்வு சிகாகோவில் அமெரிக்க மருத்துவ அகாடமி தேசிய மாநாடு மற்றும் கண்காட்சியில் சமர்ப்பிக்கப்பட்டது. 

]]>
cell phones, kids using cell phones, குழந்தைகள், செல்போன், பெற்றோர்களின் கவனத்துக்கு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/26/w600X390/should-kids-have-cell-phones.jpg http://www.dinamani.com/health/children-health/2017/sep/26/school-kids-with-phones-more-prone-to-cyberbullying-says-study-2780151.html
2745110 மருத்துவம் குழந்தைகள் நலம் நீங்கள் நல்ல பெற்றோரா? Thursday, July 27, 2017 04:13 PM +0530 ஒரு நல்ல பெற்றோராக இருப்பது என்றால் என்ன பொருள்? குழந்தைகளின் வளர்ச்சியில் நமது ஈடுபாடு எப்படி இருக்கவேண்டும்?

ஒரு குழந்தை பிறந்துவிட்டால், பெரியவர்கள் அனைவரும், தாங்கள் ஆசிரியராக மாறும் காலம் வந்துவிட்டது என்று நினைத்துக்கொள்கிறார்கள். உங்கள் வீட்டிற்கு ஒரு குழந்தை வரும்பொழுது, அது, நீங்கள் ஆசிரியர் ஆகும் நேரம் அல்ல, நீங்கள் கற்றுக்கொள்வதற்கான நேரம். ஏனென்றால், உங்களையும் உங்கள் குழந்தையையும் பார்த்தால், இதில் யார் அதிகமான ஆனந்தத்துடன் இருக்கிறார்கள்? உங்கள் குழந்தைதான், இல்லையா? எனவே அவனிடமிருந்து நீங்கள் வாழ்க்கையை கற்றுக்கொள்வதற்கான நேரம் இது. உங்களிடமிருந்து அவன் கற்றுக்கொள்வதற்கான நேரம் அல்ல. நீங்கள் உங்கள் குழந்தைக்குக் கற்றுத்தரக்கூடிய ஒரே விஷயம், பிழைத்தலுக்கான சில உபாயங்கள் – வாழ்க்கை நெருக்கடிகளில் இருந்து எப்படி தப்பிப்பது, எப்படி ஓரளவுக்கு பணம் சம்பாதிப்பது போன்றவைதான். ஆனால் உயிரோட்டமாய் வாழ்வது என்று வரும்போது, அதை ஒரு குழந்தை உங்களைவிட அனுபவபூர்வமாக அறிந்திருக்கிறது.

அவன் இயல்பே உயிரோட்டம்தான். உங்களைப் பொறுத்த வரையிலும் கூட, உங்கள் மனதின் மீது நீங்கள் சுமத்தியிருக்கும் உங்கள் தாக்கங்களை விலக்கிக் கொண்டால், எப்படி இருக்கவேண்டும் என்று உங்கள் உயிர்சக்திகளுக்குத் தெரியும். உங்கள் மனதிற்குத் தான் எப்படி இருப்பது என்று தெரியவில்லை. இந்த நிலையில், ஏற்கெனவே குழம்பிப்போய் துயரம் மற்றும் பல பாதிப்பு நிலைகளில் இருக்கின்ற உங்கள் மனதை, புதிதாய்ப் பிறந்திருக்கும் உங்கள் குழந்தை மீது சுமத்த நினைக்கிறீர்கள். ஒவ்வொருவரும் இங்கே துயரத்தில் இருப்பதாக நான் கூறவில்லை. ஆனால் எல்லாவிதமான துன்பங்களையும் கற்பனையாகவே உருவாக்கிக் கொள்வதில் நீங்கள் வல்லவர்கள்.

இது கற்றுக்கொள்வதற்கான நேரம், கற்றுத் தருவதற்கானது அல்ல. உங்களால் செய்ய முடிந்த ஒரே விஷயம், குழந்தை வளர்வதற்கான அன்பான சூழல், கவனிப்பு மற்றும் பக்கபலமாக இருப்பது மட்டும்தான். நல்லபடியாக வளர்ப்பது என்றால், என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதையெல்லாம் குழந்தைகளுக்கு கற்றுத் தருவதல்ல; நீங்கள் செய்ய வேண்டியது ஒரு நல்ல சூழலை அவர்களுக்கு உருவாக்கித் தருவது மட்டுமே. உங்களுடைய தோட்டத்தை வளர்ப்பதற்கு தினம்தினம் நீங்கள் அங்கே சென்று உட்கார்ந்துகொண்டு இன்னும் மலரே வராத செடியிலிருந்து மலர்களையோ அல்லது பழங்களையோ பறித்தெடுக்க முயற்சிப்பது கிடையாது. தோட்டத்திற்குத் தேவையான சூழலை மட்டுமே உருவாக்குகிறீர்கள், அப்போது மலர்களும், பழங்களும் தானாக வருகின்றன. எனவே நீங்கள் சூழலை மட்டும் நன்கு பராமரித்தாலே குழந்தை நன்றாக வளர்கிறது. உங்களால் செய்யக்கூடியது அதுதான், அது மட்டுமல்ல செய்யப்பட வேண்டியதும் அதுதான்.

பெரும்பாலான பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை தங்களின் நீட்சியாகவே பார்ப்பதால்தான், குழந்தைகள் தங்களைப் போலவே இருக்கவேண்டும் என்று விரும்புகின்றனர். அப்படி இல்லையென்றால், தாங்கள் தனித்து விடப்பட்டதாகவும் பாதுகாப்பின்றியும் உணர்கின்றனர். தங்களைப்போலவே குழந்தைகள் இல்லாமல் இருந்தால், இவர்கள் எங்கிருந்துதான் வந்தனர் என்று ஆச்சரியப்படவும் செய்கின்றனர். உங்கள் குழந்தைகள் உங்களைப் போலவே இருக்கவேண்டிய அவசியமில்லை. அடுத்த தலைமுறையினர் உங்களைப் போன்றே சிந்திக்கவும், உணரவும் கூடாது. நீங்கள் ஒருக்காலும் நினைத்துப் பார்க்கக்கூடத் துணியாத விஷயங்களை அவர்கள் சிந்திக்கவும், உணரவும், செயல் செய்யவும் வேண்டும். பெற்றோர், தாங்கள் அறிந்திருப்பதைக் குழந்தைக்குக் கற்றுத் தர எப்போதும் முயற்சிப்பதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று, தங்களது குழந்தைகள் மூலமாக, தங்களையே நீட்டித்துக்கொள்ளும் ஒரு தேவை அவர்களுக்குள் இருப்பதுதான். அல்லது வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், தங்கள் வாழ்வை நடத்திச் செல்வதற்கு தங்களது குழந்தைகளின் வாழ்வைப் பிழிந்து எடுப்பதற்கு முயற்சிக்கின்றனர். இது தேவையில்லாதது. வாழ்க்கை குறித்த நிறைவற்ற ஒரு உணர்விலிருந்தும், பாதுகாப்பற்ற உணர்வின் காரணத்தாலும்தான் இந்தத் தேவை அவர்களுக்கு எழுந்துள்ளது. இந்தத் தேவையை மட்டும் அவர்கள் கைவிட்டுவிட்டால், குழந்தைக்கு என்ன தேவை, தாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை அவர்கள் தாங்களாகவே அறிந்து கொள்வார்கள்.

தங்களது குழந்தைகள் மேல் உண்மையிலேயே பெற்றோருக்கு அக்கறை இருக்குமானால், பெற்றோருக்கான தேவையே ஒருபோதும் குழந்தைகளுக்கு ஏற்படாத வகையில், அவர்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டும். நீங்கள் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துகிறீர்கள் என்றால் உங்களது அன்பான வழிமுறை குழந்தைகளுக்கு சுதந்திரம் தருவதாக இருக்கவேண்டும், சிக்கவைப்பதாக இருக்கக்கூடாது. ஆனால் பல வழிகளிலும் குழந்தையைத் தங்களுக்குரியவர்களாகப் பிணைத்துக் கொள்வதற்குப் பெற்றோர்கள் முயற்சி செய்கின்றனர். ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு முழுக்க முழுக்கக் குழந்தைகளின் மூலமாகத்தான் உங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள். வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் உங்கள் அடையாளங்கள் மற்ற வழிகளில் வெளிப்படுகிறது. ஆனால் உங்களது குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட நிலையை எட்டியதும், உங்கள் குழந்தைகளின் மூலமாக உங்களை அடையாளப் படுத்திக்கொள்ள நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். அவர்கள் மூலமாக வாழ்வதற்கு நீங்கள் முயற்சிக்கிறீர்கள். ஆகவே உங்களுடைய இயல்பு, சிந்தனை மற்றும் உணர்தலுக்கு ஏற்ப அவர்கள் பொருந்தி வரவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். அப்படியெல்லாம் இருக்கவேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் உங்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கமுடியும்.

ஒரு நிறைவான உயிராக உங்களை நீங்கள் உணர்ந்தால், அப்போது வேறொருவர் மூலமாக உங்கள் வாழ்க்கையை வாழவோ அல்லது உருவாக்கவோ எந்தத் தேவையும் ஏற்படுவதில்லை. பல வழிகளிலும், ஒரு குழந்தையானது கையறு நிலையிலும், அளவுக்கு மிஞ்சி நிர்ப்பந்திக்கப்படும் நிலையிலும் இருக்கிறது. ஏனெனில் குழந்தைக்கு உங்களுக்கு எதிரான தற்காப்பு எவ்வகையிலும் இல்லை. “இல்லை, நான் தவறாக எதுவும் செய்யவில்லை. நான் குழந்தையை அடிப்பதோ அல்லது திட்டுவதோ இல்லை.” அது முக்கியம் அல்ல – உங்கள் எண்ணங்களையும், உங்கள் உணர்ச்சிகளையும் உங்கள் குழந்தை மீது நீங்கள் திணித்துக் கொண்டிருக்கிறீர்கள். இதற்கு எதிராக எதுவும் செய்யமுடியாத கையறு நிலையில் அந்தக் குழந்தை இருக்கிறது.

ஒரு குழந்தை பிறந்துவிட்டால், தன்னைச் சுற்றியுள்ளவற்றை கவனிக்கவும், இயற்கை மற்றும் தன்னுடன் நேரம் செலவிடவும் அந்தக் குழந்தையை அனுமதியுங்கள். அன்பும், உறுதுணையுமான ஒரு சூழலை உருவாக்கித் தருவதுடன், எந்தவிதத்திலும் உங்களது நீதிபோதனைகள், கருத்துக்கள், மதம் அல்லது எந்த ஒன்றையும் திணிப்பதற்கு முயற்சி செய்யாதீர்கள். அவனாகவே வளர அனுமதியுங்கள், அவன் அறிவு வளர அனுமதியுங்கள். வெறும் ஒரு மனித உயிராக உங்கள் குடும்பத்துடனோ அல்லது உங்களது செல்வச் செழிப்புடனோ அல்லது வேறு எதனுடனும் அடையாளப்படாமல் வளர்வதற்கு அனுமதியுங்கள். குழந்தை தனக்கேயுரிய தன்மையில் வாழ்க்கையைப் பார்ப்பதற்கு உதவி செய்யுங்கள். அதனுடைய நல்வாழ்விற்கும் உலகத்தின் நல்வாழ்விற்கும் இது மிகவும் அத்தியாவசியமானது.

அதேநேரத்தில், குழந்தையின்மீது எந்நேரமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்கின்ற மற்ற சக்திகள் சமூகத்தில் உண்டு. கல்விமுறை, நட்பு வட்டம், உங்கள் குழந்தைகள் நடந்துசெல்லும் வீதி இவற்றின் தாக்கம் அனைத்தும் அவன் மேல் நிச்சயம் உண்டு. ஏதோ ஒருவிதத்தில், தன்னுணர்வற்ற நிலையில் இந்த சமூகக் கட்டமைப்பை நாம் உருவாக்கியுள்ளோம். அவற்றின் தாக்கங்களை குழந்தையிடமிருந்து 100% நீக்கிவிட முடியாது. ஆனால் உங்கள் வழியிலோ அல்லது சமூகத்தின் வழியிலோ இல்லாமல், அவன் தனது புத்திசாலித்தனத்திலிருந்து, வாழ்க்கையைப் பார்ப்பதற்கான உதவியையும், உறுதுணையையும் மட்டும் நிச்சயம் உங்களால் அளிக்கமுடியும். தற்போது குழந்தையின்மீது வீதியின் தாக்கம் வலிமையாக உள்ளது. அதேநேரத்தில் நீங்கள் அவன் மீது வேறுவகையில் தாக்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறீர்கள். எத்தனையோ காரணங்களை முன்னிட்டு அவன் உங்களை எதிர்க்கவே செய்வான். ஏனென்றால் இளம் வயதில் வீட்டுக் கலாச்சாரத்தைக் காட்டிலும், வீதிக் கலாச்சாரம் மிக அதிகமான ஈர்ப்பு கொண்டுள்ளது. பெரும்பாலான தருணங்களில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மேல், மாற்று வழிகளில் தாக்கம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். இது அவர்களை மேலும் அதிகமாக வீதியின் தாக்கத்தை நோக்கியே தள்ளிவிடுகிறது.

வீதியின் அபாயங்கள் எப்போதும் காத்துக்கிடக்கின்றன. வீதியினால் வரும் அபாயங்கள் என்றால் இவ்வுலகில் வாழ்பவர்களால் வரும் அபாயங்கள்தான். அந்த அபாயங்கள் போதைப் பொருட்களாக இருக்கலாம், ஒரு விபத்தாக இருக்கலாம், மதுவாக இருக்கலாம், ஒரு மரணமாக இருக்கலாம், மேலும் பல்வேறுபட்ட தவறான முறைகளாக இருக்கலாம். இந்த எல்லா விஷயங்களும் வீதியில் உள்ளன. ஆனால் நீங்கள் என்ன புரிந்துகொள்ள வேண்டும் என்றால், நீங்கள் அதை விரும்புகிறீர்களோ, இல்லையோ, இன்றோ அல்லது நாளையோ, உங்கள் குழந்தை, தனது சொந்த புத்திசாலித்தனத்துடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த வாழ்க்கையில் எதை, எந்த அளவிற்கு செய்யவேண்டும் என்னும் தேர்வையும் அவன் செய்ய வேண்டியிருக்கிறது. இதற்கு எந்த அளவுக்கு அவன் விரைவில் தகுதி பெறுகிறானோ, அந்த அளவுக்கு நல்லது. ஆனால் அவன் விரைவில் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, ஒரு குழந்தையை நீங்கள் வீதிக்குத் தள்ள வேண்டும் என்றோ அல்லது உங்களுடைய சொந்த நீதிபோதனைகளால் அவன் மீது எதிர்முனைத் தாக்கத்திற்கு முயற்சிக்க வேண்டும் என்பதோ அதன் பொருளல்ல. மற்றவர்களால் அவன் தாக்கத்திற்கு உள்ளாவதற்கு பதிலாக, அவன் தன் சொந்த புத்திசாலித்தனத்துடன், தன் வாழ்க்கையை பார்ப்பதற்கு நீங்கள் உதவி செய்கிறீர்கள், அவ்வளவுதான்.

பல வழிகளிலும் அவன் தனக்கான வழிகாட்டுதல்களை வீதியிலிருந்துதான் எடுத்துக் கொள்கிறான். ஏனெனில் விழிப்புணர்வற்ற முறையில் வீட்டில் திணிக்கப்படும் ஒழுக்கங்கள், நீதிபோதனைகள் மற்றும் புரியாத மத ஆசாரங்கள் இவற்றில் அவனால் எந்த அர்த்தத்தையும் பார்க்க முடியவில்லை. அவனால் அவற்றை புரிந்துகொள்ள முடியவில்லை அல்லது அவற்றில் எந்த அர்த்தமும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் அவற்றைப் பின்பற்றும்படி அவன் எதிர்பார்க்கப்படுகிறான். தொலைநோக்கில் பார்க்கும்போது, வீதி கலாச்சாரம், அவன் வாழ்க்கையை அழித்துவிடும் என்றாலும் வீட்டிலிருந்து வரும் திணிப்புகளை விட இது மிகவும் அர்த்தமுள்ளதாக அவனுக்குத் தெரிகிறது. 

உங்களது கலாச்சாரம், கருத்துக்கள் மற்றும் நீதிபோதனைகளைக் குழந்தை மீது திணிக்கும் ஒரு இடமாக வீடு இருக்கக்கூடாது. குழந்தையின் மீது திணிப்புகள் இல்லாத மற்றும் குழந்தையின் புத்திசாலித்தனத்திற்கு ஊக்கமளிக்கக்கூடிய, உறுதுணையான சூழல் உள்ளதாக ஒரு வீடு இருக்க வேண்டும். எப்போதெல்லாம் ஒரு குழந்தை குழப்பத்திற்கு ஆளாகிறதோ – வளரும் பருவத்தில் வாழ்வின் பல்வேறு அம்சங்களையும் எதிர்கொள்ளத் துவங்கும் எவருக்கும் இது நிகழ்வது இயல்புதான் – அப்போதெல்லாம் எப்போதுமே, குழந்தையின் சிந்தனையானது வீதியின் தாக்கத்துக்கு உள்ளாகிறது அல்லது வீட்டினரால் எதிர்முனைத் தாக்கத்துக்கு உள்ளாகிறது. அதற்கு பதில், குழந்தையின் சொந்த புத்திசாலித்தனத்தை அது உபயோகிப்பதற்கு நீங்கள் அனுமதித்தால் – இந்த புத்திசாலித்தனத்தை நான் நம்புகிறேன் – பொதுவாக உங்கள் குழந்தை சரியானதையே தேர்ந்தெடுக்கும். ஆம், சில குழந்தைகள் தவறான பாதையில் போகலாம். ஆனால் அதுதான் உலகின் நிதர்சனம். அவர்களிடம் நீங்கள் தாக்கம் ஏற்படுத்த முயன்றாலும் அது அப்படித்தான் நிகழும்; அப்படி நீங்கள் செய்யவில்லை என்றாலும், அப்போதும் அது நிகழும். ஆனால் குழந்தை மீது வீட்டில் எந்தத் திணித்தலும் இல்லையென்றால், தவறாகப் போவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கும்.

வீட்டிலேயே குழந்தை அதிக இணக்கமாகவும், சௌகரியமாகவும் உணர்ந்தால், இயற்கையாகவே அவன் வெளியில் செல்வதைவிட வீட்டில் அதிக நேரம் செலவழிக்க முயற்சிப்பான். தற்போது, வீட்டின் திணிப்புகள் அவனைத் திணறச் செய்வதால், வீட்டில் இருப்பதைவிட வீதிமுனையில் இருப்பதை அவன் அதிக சௌகரியமாக உணரக்கூடும். வீட்டில் அந்த இடைஞ்சல் இல்லாமல் இருந்தால், வீதிமுனையில் அவன் சரணடைய மாட்டான். வீதிமுனையிலிருந்து தப்பித்துவிட்டால், உலகின் கடினமான நிதர்சனங்களை அவன் எதிர்கொள்ள மாட்டான் என்று பொருளல்ல. அது இருக்கத்தான் செய்யும், ஏதோ ஒரு வழியில் அவனை தாக்கத்திற்கு உள்ளாக்கவே செய்யும். ஆனால், தானாகவே சிந்திக்கக் கற்றுக் கொள்வதற்கும், தனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி தனக்கு எது சிறப்பானது என்று பார்ப்பதற்கும் நீங்கள் அளிக்கும் ஊக்கம்தான் உங்களுக்கான சிறந்த காப்பீடாக, குழந்தை நன்றாக வளர்ச்சி பெறுவதற்கான சிறந்த உத்தரவாதமாக இருக்கிறது.

நன்றி : ஈஷா மையம்

]]>
Parenting, children, பெற்றோர், குழந்தை வளர்ப்பு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/27/w600X390/Kid_with_lots_of_homework_tevong_Fotolia_large.jpg http://www.dinamani.com/health/children-health/2017/jul/27/best-way-of-parenting-2745110.html
2718018 மருத்துவம் குழந்தைகள் நலம் என் குழந்தை எதிர்காலத்தில் நன்றாக இருக்க நான் என்ன செய்ய வேண்டும்? Saturday, June 10, 2017 01:54 PM +0530 குழந்தைகளை நல்ல குழந்தைகளாக வளர்க்கிறோம் என்ற பெயரில் பெற்றோர்களும் சுற்றத்தார்களும் தங்களது கருத்துக்களையும் எண்ணங்களையும் திணிப்பதுதான் பெரும்பான்மையான இல்லங்களில் நிகழ்கிறது. இதனால் ஏற்படும் தீமையைச் சுட்டிக்காட்டுகிறது இந்த பதிவு!

என் குழந்தை எதிர்காலத்தில் நன்றாக இருக்க நான் என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகளுடைய எதிர்காலத்தை நீங்கள் தீர்மானிக்காதீர்கள். முதலில் உங்களுடைய எண்ணங்களை உங்கள் குழந்தை மேல் திணிக்காதீர்கள். அவர்களுக்கு உங்கள் அன்பை மட்டும் கொடுங்கள். உங்கள் எண்ணங்கள் இறந்தகாலத்தைச் சார்ந்தவை. உங்களுடைய முட்டாள்தனமான எண்ணங்களை குழந்தைகள் மேல் திணிக்காதீர்கள். 

குழந்தையே தன்னுடைய வாழ்க்கையை அதன் சொந்த வழியில், சொந்தப் புரிதலில், சொந்த அறிவுணர்ச்சியோடு உணர்ந்து, உள்வாங்கிக் கொள்ளட்டும். குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்தே நம்முடைய மதம், ஒழுக்க விதிகள், கோட்பாடுகள், தத்துவங்கள், சிந்தனைகள் என்று எல்லா முட்டாள்தனங்களையும் அதன் மீது சுமத்தி வருகிறோம், இல்லையா? குழந்தை மலர ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அதை அழித்துவிட விரும்புகிறீர்கள். இந்த உலகில் மிக அதிகமாக சுரண்டப்படுபவர்கள் தொழிலாளிகளோ அல்லது பெண்களோ அல்லது விலங்குகளோ அல்ல, குழந்தைகள்தான் மிகவும் சுரண்டப்படுபவர்கள். 

தன் வாழ்க்கையில் நீங்கள்தான் மிகவும் நம்பகமானவர் என்று நினைத்து குழந்தை உங்களிடமிருந்தே ஒவ்வொன்றையும் எதிர்பார்க்கிறது. ஆனால் நீங்களோ அதன் வாழ்க்கையை மிக மோசமாக சீர்குலைக்கிறீர்கள். உங்களைப் போலவே உங்கள் குழந்தையும் துன்பப்படுமாறு எப்படியும் பார்த்துக் கொள்கிறீர்கள்.

குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

பெற்றோர்களுக்கென்று எத்தனையோ லட்சியங்கள் உண்டு. வாழ்வில் அவர்களால் என்னவெல்லாம் ஆக முடியவில்லையோ, அப்படியெல்லாம் அவர்கள் குழந்தைகளை ஆக்கிப்பார்க்க நினைக்கிறார்கள். தங்களுடைய பெற்றோர் வழங்கிய சில அடிப்படைகளைத் துணையாகக்கொண்டு தாங்கள் ஓரளவு செயல்பட்டது போல, தாங்கள் வழங்கும் சில அடிப்படைகளின் உதவியோடு தங்கள் குழந்தைகள் செயல்பட வேண்டும் என்று பெற்றோர் கருதுவது இயற்கை. ஆனால் ஒரு சில பெற்றோர்கள் அதீத ஆர்வம் காரணமாக தங்கள் குழந்தைகளிடம் கொடுமையாக நடந்துகொள்வதும் உண்டு. இன்னும் சிலரோ, குழந்தைகளிடம் அன்பாக நடந்துகொள்வதாகக் கருதி அளவுக்கதிகமாகச் செல்லம் கொடுத்து குழந்தைகளை வலிமையில்லாமலும் உலகுக்குப் பயன்படாத வகையில் வளர்த்துவிடுவதும் உண்டு.

சொல்லப்போனால், குழந்தை வளர்ப்பில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று சொல்வதற்கு சரியான எல்லைக் கோடுகள் இல்லை. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு அளவிலான கவனம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்ப அதனிடம் செலுத்த வேண்டிய கனிவின் அளவும் கண்டிப்பின் அளவும் வேறுபடுகிறது.

குழந்தைகளுக்கு விதிக்கின்ற கட்டுப்பாடுகள் மிகவும் கொடுமையாக உள்ளன. பள்ளியிலும் வீடுகளிலும், இந்தக் கட்டுப்பாடுகள் குழந்தைகளுக்கு மிகுந்த சிரமம் தருவதாய் இருக்கின்றன. பொதுவாகவே பள்ளி வாழ்க்கை குழந்தைகளிடமிருந்து குழந்தைத்தன்மையை முற்றிலும் அகற்றுவதாகவே உள்ளது. குழந்தைத்தன்மையை அகற்றிவிட்டால், பெரியவர்கள் போல் நடந்துகொள்கிற குழந்தைகள்தான் மிஞ்சுவார்கள். இதை எல்லா இடங்களிலும் பார்க்கிறீர்கள். பல பெரியவர்கள் பதின் பருவத்தினர் போல் நடந்து கொள்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தில் குழந்தைத்தன்மையை இழந்திருக்கிறார்க்ள்.

இந்நிலை மேலை நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. குழந்தைப் பருவத்தில் தங்கள் குழந்தைத்தன்மையை இழந்தவர்கள், பிற்காலத்தில் குழந்தைத்தனமாக நடந்து கொள்ளத் தொடங்குகிறார்கள். ஒரு குழந்தை குழந்தையாக இருப்பது மிகவும் முக்கியம். அந்தக் குழந்தையை பெரியவர்களாக்க எந்த அவசரமும் இல்லை. ஒரு குழந்தை குழந்தைத்தனமாக நடந்து கொள்வது அற்புதமான விஷயம். ஆனால் பெரியவர்கள் குழந்தைத்தனமாக நடந்துகொண்டால் அது வளர்ச்சியின்மையின் அடையாளம்!

நீங்கள் உங்கள் குழந்தையை நல்லவிதமாக வளர்க்க ஆசைப்பட்டால், முதலில் உங்களுக்குள் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்த இயலும் என்று பார்க்க வேண்டும். இதற்கு ஓர் எளிய பரிசோதனையைச் செய்து பார்த்தாலே போதும். ஓரிடத்தில் தனியாக அமர்ந்து உங்கள் வாழவில் எதையெல்லாம் மாற்றினால் நன்றாக இருக்கும் என்று தீவிரமாகச் சிந்தித்துப் பாருங்கள். அந்த மாற்றங்களை அடுத்த மூன்று மாதங்களில் கொண்டுவர என்ன வழி என்று சிந்தியுங்கள். அந்த மாற்றங்கள் வெளியுலகைச் சார்ந்ததாக இருக்கக் கூடாது. உங்களைச் சார்ந்ததாக இருக்க வேண்டும். உங்கள் நடவடிக்கைகள், உங்கள் பேச்சு, உங்கள் செயல்முறைகள், உங்கள் பழக்கங்கள் ஆகியவற்றை மூன்று மாதங்களில் உங்களால் மாற்றிக்கொள்ள முடிந்தால் உங்கள் குழந்தைக்கு போதனை செய்கிற உரிமை உங்களுக்கு உண்டு.

குழந்தையை வளர்ப்பதில் ஆலோசனைகள் உதவாது. ஒவ்வொரு குழந்தையையும் கூர்ந்து கவனித்து அதன் வளர்ச்சிக்கு என்ன தேவை, அதற்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்கிற புரிதல்தான் முக்கியம். ஏனெனில் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதத்தில் அரியதோர் அற்புதம்!

இளம் குழந்தைகளுக்கு தயவுசெய்து ஆன்மீகத்தை அறிமுகம் செய்யாதீர்கள். இது ஒரு செடிக்கு மலர்ச்சியைச் சொல்லிக்கொடுப்பது போன்றது. எந்தச் செடிக்கும் ஒரு பூவை எப்படி மலர்விப்பது என்று சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை. அதேபோல குழந்தைகளுக்கு ஆன்மீக போதனை அவசியம் இல்லை. எந்த அடையாளத்தையும் ஏற்றுக்கொள்ளாத விதத்தில், உங்களோடும்கூட தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் வளர்வதற்கு, உங்கள் குழந்தைக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். மனதில் எந்த அடையாளமும் இல்லாமல் வளர்கிற குழந்தை ஆன்மீகத் தன்மையோடுதான் மலரும். 

நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுத்தந்த அபத்தங்களையும் தந்திரங்களையும் மறக்கடிக்கச் செய்தால், இயல்பாகவே உங்கள் குழந்தை ஆன்மீகத்தன்மையை அடையும். குழந்தைப் பருவத்திலிருந்தே குறிப்பிட்ட சில விஷயங்கள் உங்கள் மேல் திணிக்கப்பட்டிருக்கின்றன. அந்த அடையாளங்களை இறுகப் பற்றிக்கொள்ளுமாறு பலரும் உங்களை ஊக்குவித்து வந்திருக்கிறார்கள். 

உங்கள் பெற்றோர்களும் உங்கள் ஆசிரியர்களும் அந்த அடையாளங்களை உங்கள் மேல் திணித்திருக்கிறார்கள். ஏனென்றால் அதுதான் அவர்களின் கல்வி முறையாக இருக்கிறது. உங்கள் தலைவர்கள் உங்கள் சாதி, இனம், நாடு ஆகிய அடையாளங்களை நீங்கள் சார்ந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒவ்வொருவருக்கும் இப்படி ஒவ்வொரு நோக்கம் இருக்கிறது. இவையெல்லாம் எந்தப் பொருளுமற்றவை என்று நான் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் செய்கிற ஒரு விஷயம் மிகவும் பயனுள்ளது என்பதற்காகவே அதனோடு உங்களை ஆழமாக அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. 

எப்போது உங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்களோ, அப்போதே நீங்கள் உருக்குலைந்து போகிறீர்கள். உருக்குலைந்து போனவர்களால் மக்களுக்கு நலவாழ்வைக் கொண்டுவர இயலாது. உங்களுக்கு நல்ல நோக்கங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் அடையாளங்களாலேயே இந்த உலகத்தை பல லட்சம் துண்டுகளாகச் சிதறடித்துவிடுகிறீர்கள். இது மனித குலத்தின் ஒட்டு மொத்த நன்மைக்கு எந்த விதத்திலும் உதவாது. 

எனவே உங்கள் குழந்தைகளுக்கு ஆன்மீக போதனையை வழங்காதீர்கள். அவர்களது உடல் மற்றும் மன மேம்பாட்டுக்காக சில எளிய யோகப் பயிற்சிகளை அவர்கள் மேற்கொள்ளலாம், அதுவே போதுமானது! 

-சத்குரு

]]>
குழந்தை வளர்ப்பு, Parenting, child http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/10/w600X390/en-kuzhanthai-ethirkalathil-nandraga-irukka-nan-enna-seyya-vendum.jpg http://www.dinamani.com/health/children-health/2017/jun/10/what-is-good-parenting-2718018.html
2707311 மருத்துவம் குழந்தைகள் நலம் ஆட்டிசம் நோய் அல்ல குறைபாடுதான் ராம் முரளி Tuesday, May 23, 2017 04:14 PM +0530

ஆட்டிசம் (AUTISM)  / மதியிறுக்கம் என்பது மூளை வளர்ச்சி சம்பந்தமான வேறுபாட்டை குறிக்கும். இந்த ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றவர்களுடன் தங்கள் எண்ணங்களை பறிமாறவோ, சமூகத்தில் இணைந்து இருக்கவோ, தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவோ இயலாதவர்களாக இருப்பார்கள். ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான சிகிச்சை முறை இரண்டாக பிரிக்கப்படுகிறது. ஒன்று மருந்துகள் மூலமாக அனுகுவது மற்றொன்று குழந்தைகளின் குண நலன்களின் அடிப்படையில் அணுகுவது. கோவையில் உள்ள வாமனா அட்வான்ஸ்டு தெரஃபி அன்ட் கைடன்ஸ் சென்டரின் (advanced theraphy and guidance centre) இயக்குனர் மனோஜ்குமார் ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளை மருந்துகளை விட அவர்களின் குண நலன்களை வைத்து அனுகுவதே நல்ல சிகிச்சை முறை என்கிறார்.

ஆட்டிசம் என்பது ஒரு நிறப்பிரிகை (spectrum disorder) வகையிலான குறைபாடு, அதாவது ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மாதிரியாகவோ, ஒரே அளவிலோ பாதிக்கப்படுவதில்லை. இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மொழியை புரிந்துக்கொள்வதில், சகஜமாக மற்றவர்களோடு உரையாடுவதில் மிகவும் சிரமப்படுவார்கள். சில குழந்தைகளுக்கு பேச்சுத்திறன் முழுமையாக இருக்காது. சைகைகள் முகபாவங்கள் மற்றும் குரலின் தன்மையை புரிந்துக்கொள்வதில் தடுமாறுவார்கள். கேள்விகளை புரிந்துக்கொண்டு பதிலளிப்பதில் கஷ்டம். ஒருவர் சொல்வதை கேட்டு திரும்ப சொல்வதில் கஷ்டம், இதை எக்கோலேலியா என்று சொல்லுவார்கள். இப்படி பல வகைகளில் இந்த ஆட்டிசம் குழந்தைகளை தாக்குகிறது. இந்த குறைபாடு உள்ள குழந்தைகள் ஏதோ ஒரு விதத்தில் தனி உலகத்தில் இருப்பதை போன்ற பாவனையில் இருப்பார்கள். பொதுவாக ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஒரு வயதிற்குள் கண்டறிவது கடினம். ஒரு குழந்தை மூன்று வயது வரை எப்படி வளருகிறது என்பதை கூர்ந்து கவனித்தால் தான் இந்த குறைபாட்டை கண்டுபிடிக்க முடியும்.

இந்த ஆட்டிசத்தின் முக்கிய காரணமாக பரம்பரை மரபணுக்களின் குறைபாடு, பாதரசம் கலந்த மருந்துகளை தெரியாமல் அருந்திவிடுவது, உடலில் தாது உப்புகள் மற்றும் உயிர்ச் சத்துகளின் குறைபாடு, சுற்றுச் சூழல் பாதிப்புகள் ஆகியன முக்கியமாக கருதப்படுகின்றன. இந்த குறைபாடு உள்ள குழந்தைகள் உரையாடும் போது கண்ணோடு கண் பார்த்து பேச தடுமாறுவார்கள், மழலைகள் செய்யும் குறும்புகள் எதையும் செய்யாமல் இருப்பார்கள், பதினாறு மாதங்கள் ஆன பிறகும் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருத்தல், இப்படி சில அறிகுறிகளை வைத்து ஆட்டிசத்தை கண்டறியலாம்.

ஆட்டிசம் சிலருக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடிய ஒரு குறைபாடு ஆகும். அதன் காரணிகள் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதால் இதற்கென்று பிரத்யேக சிகிச்சை முறை எதுவும் கிடையாது. சில மருந்துகளின் மூலம் ஓரளவுக்கு கட்டுக்குள் மட்டுமே வைக்க முடியும். மனநல மருத்துவர்கள், நரம்பியல் நிபுணர்கள், மருத்துவர்கள் சில மருந்துகள் மூலம் நடத்தை பிரச்சனைகள், தன்னை தானே காயப்படுத்திக் கொள்ளுதல் போன்றவற்றை கட்டுக்குள் வைக்கின்றனர்.

ஆனால் ஒரு குழந்தையின் அறிவுத்திறன், குண நலன்கள், செயல்பாடுகள் அந்த குழந்தை வளரும் சூழ்நிலை, குடும்பத்தின் பராமரிப்பு, நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அரவணைப்பு ஆகியவற்றை வைத்தே மாறுபடுகின்றது. இந்த ஆட்டிசம் குறைபாட்டை பற்றிய விழிப்புணர்வு சமூகத்தில் அதிகமாக தேவைப்படுகிறது. மருந்துகளை காட்டிலும் இந்த குழந்தைகளை அரவணைத்து அவர்களை புரிந்து அவர்களுக்கு ஏற்றாற்போல் பயிற்சிகள் அளித்தால் இசை, ஓவியம், அறிவியல், விளையாட்டு போன்ற துறைகளில் சாதித்து பெரிய சாதனையாளர்களாக வருவார்கள். முதலில் அவர்களையும் சராசரி குழந்தைகளை போல பார்க்க வேண்டும். எங்கள் வாமனா க்ளினிக்கில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உரிய பரிசோதனை செய்து அவர்கள் குறைபாட்டின் தீவிரத்தை மதிப்பிட்டு அதற்கு ஏற்றார் போல சிகிச்சை அளித்து வருகிறோம். அவர்களுக்கு சகஜமாக பழகும் பயிற்சிகள், மற்றவர்களிடம் கலந்துரையாட பயிற்சிகள், அவர்களின் அறிவை மேம்படுத்தும் பயிற்சிகள் அளித்து வருகிறோம். இந்த ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மருந்துகளை விட அவர்களிடம் அவர்களுக்குத் தகுந்தாற்போல் இயல்பாகி பழகுவது இந்த குறைப்பாட்டுக்கான எளிமையான வழிமுறை’ என்கிறார் மனோஜ்குமார்.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டு பெரிய அளவில் சாதித்தவர்கள்
1.ஸ்டீவன் ஸ்பீல்பர்க் ( ஹாலிவுட்டின் இயக்குனர் )
2.பில்கேட்ஸ் ( மைக்ரோசாஃப்ட் நிறுவனர் )

மருத்துவரை தொடர்பு கொள்ள: மனோஜ்குமார் 9843566510

]]>
Autism, autistic child, ஆட்டிசம், மூளை வளர்ச்சி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/23/w600X390/autistic_child.jpg http://www.dinamani.com/health/children-health/2017/may/23/autism-is-a-condition-not-a-disease-2707311.html
2703895 மருத்துவம் குழந்தைகள் நலம் குழந்தைகள் சொல்பேச்சு கேட்க வேண்டுமா? Wednesday, May 17, 2017 03:21 PM +0530 குழந்தை பெற்றுக் கொள்வது அனைத்து பெற்றோருக்கும் சந்தோஷம்தான் என்றாலும், அக்குழந்தையை வளர்த்தல் என்று வரும்போது, 'ஏன்தான் குழந்தை பெற்றுக்கொண்டோமோ?' என்ற கேள்வி பெரும்பாலானோருக்கு வந்துவிடுகிறது. 'குழந்தைகள் நம் சொல் பேச்சு கேட்க வேண்டும்' என்கிற எதிர்பார்ப்பும்கூட இதற்கு காரணம் என்கிறார் சத்குரு. குழந்தை வளர்ப்பு பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்…

குழந்தைகளுக்கு நாம் கற்பிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம், அனைத்தையும் கேள்வி கேட்கப் பழக வேண்டும். சந்தேகக் கண்ணோடு இல்லாமல், தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உண்மையான ஆர்வத்தோடு அவர்கள் கேள்வி கேட்கவேண்டும். உங்கள் குழந்தையின் மனதில் அவன் எந்த கேள்வியை வேண்டுமானாலும் கேட்கலாம் என்ற எண்ணம் வந்துவிட்டால், உங்களையும், நீங்கள் நடக்கும் வழிகளையும் நல்லவிதமாக கேள்வி கேட்பதற்கு நீங்கள் அவனை அனுமதித்தால், உங்கள் குழந்தை தன்னுடைய புத்திசாலித்தனத்தை தொடர்ந்து பெருக்கிக் கொள்ளமுடியும்.

குழந்தைகள் சொல் பேச்சுக் கேட்க வேண்டுமா?

சொல் பேச்சுக் கேளாமை கூட குழந்தைகளுக்கு அழகுதான்! இருந்தாலும், நீங்கள் சொல்லும்படி உங்கள் குழந்தைகள் கேட்க வேண்டும் என நினைத்தால், எதற்காக அப்படிச் சொல்கிறீர்கள் என்பதை அவர்களுக்குப் புரிய வையுங்கள். என் பெற்றோர் சொன்னாலுமே எதற்கு என்று தெரியாமல் நான் கூட எதுவும் செய்ததில்லை. புரிய வைத்துவிட்டால், பிறகு அவர்களே செய்து விடுவார்கள். ஒரு சிலர் விதிவிலக்காக இருக்கலாம். அதைப் புரிய வைக்காமல் வெறுமனே நீங்கள் சொல்வதை அவர்கள் கேட்க வேண்டும் என நினைத்தால் இருவருக்குமே உயிர் போகும். திணிப்பதில் உங்கள் உயிர் போகும், ஏமாற்றுவதில் அவர்கள் உயிர் போகும்.

முத்திரை குத்தலாமா?

குறைபாடுள்ள குழந்தைகள் என்று யாரும் இல்லை. அவர்கள் மாற்றுத் திறனாளிகள். இங்கு பல்வேறு விதமான உடல்களும், மனங்களும் இருக்கின்றன. அவற்றை முத்திரைக் குத்தத் தேவையில்லை. குழந்தைகள் வெவ்வேறு விதங்களில் பிறக்கின்றனர்.

ஒவ்வொரு மனிதனும் ஒருவிதமான வாய்ப்புடன் பிறந்திருக்கிறான். அவனால் என்ன சாதிக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால் நமது தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், அரசியல்துறை, போன்ற அனைத்திலும் நாம் உற்பத்தி கெடுவை நிர்ணயித்துவிட்டதால், அதற்கேற்ற மனிதர்கள்தான் நமக்குத் தேவை. அதனால் சில மனிதர்களை நாம் தகுதியில்லாதவர்கள் என்று நிராகரித்து விடுகிறோம். இப்படி குழந்தைகளை முத்திரை குத்துவது கொடூரமான குற்றம். இதே குழந்தைகள் பழங்குடி இனத்தில் பிறந்திருந்தால், அந்த இனத்தின் மூத்தவர்கள் “இந்தக் குழந்தையால் இதை மட்டும்தான் செய்ய முடியும்,” என்று புத்திசாலித்தனமாக யோசித்திருப்பார்கள். அந்தக் குழந்தையை அந்த மாதிரியான வேலையில் ஈடுபடுத்தியிருப்பார்கள். அவர்களை கடினமான வேலைகளில் ஈடுபடுத்தி கொடுமைப்படுத்தியிருக்க மாட்டார்கள்.

எனவே ஒவ்வொரு மனிதனும் எதோ ஒரு செயலைச் செய்யும் அளவு திறமைசாலியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நிர்ணயிக்கிறீர்கள். அதை அவரால் செய்ய முடியாமல் போகும் போது, அவர்களை நீங்கள் முத்திரை குத்துகிறீர்கள், என்றால் குறைபாடுள்ளது அந்தக் குழந்தையல்ல, இந்த சமுதாயம்தான். அந்தக் குழந்தைகளுக்கு முத்திரை குத்தத் தேவையில்லை. முத்திரை குத்துவதன் குறிக்கோள் அந்தக் குழந்தைகளுக்குத் தேவையான கவனமும், அக்கறையும் கொடுப்பதாக இருக்கலாம். இருந்தாலும், அந்த முத்திரை அவர்களுக்கு நன்மை செய்வதை விட இன்னும் அதிகமான சேதத்தைத் தான் விளைவிக்கிறது.

கற்றுக் கொள்வதற்கான நேரம், கற்றுக் கொடுப்பதற்கான நேரம் அல்ல!

பிழைப்புக்கான சில தந்திரங்களைத்தான் உங்களால் குழந்தைக்குக் கற்றுத் தர முடியும். உங்களையும் குழந்தையையும் ஒப்பிட்டுப் பார்த்து, யார் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பதற்குத் தகுதியானவர், நீங்களா அல்லது உங்கள் குழந்தையா என்று பாருங்கள். உங்களை விட அவன் அதிக மகிழ்ச்சியோடு இருந்தால், வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று ஆலோசனை சொல்வதற்கு யாருக்கு தகுதி அதிகம், உங்களுக்கா அல்லது அவனுக்கா? எனவே, ஒரு குழந்தை வரும்போது, அது கற்றுக் கொள்வதற்கான நேரம், கற்றுக் கொடுப்பதற்கான நேரம் அல்ல.

உங்கள் குழந்தை வளர்வதற்கு அவசரப்படாதீர்கள்…

ஒரு குழந்தை, குழந்தையாகவே இருப்பது மிக முக்கியமானது. அவனை ஒரு இளைஞனாக்குவதற்கு எந்த அவசரமும் இல்லை, ஏனென்றால், அதை உங்களால் திரும்பப் பெற முடியாது. அவன் குழந்தையாக இருக்கும்போது, குழந்தையைப் போல நடந்து கொண்டால், அது அற்புதமானது. அவன் இளைஞனான பிறகும், குழந்தையைப் போல நடந்து கொண்டால், அது அற்பமானது, அது வளர்ச்சி குன்றிய ஒரு வாழ்க்கை. அதனால், ஒரு குழந்தை இளைஞனாவதற்கு எந்த அவசரமும் இல்லை.
 
கேட்டதெல்லாம் வாங்கித்தந்தால்… 

குழந்தையை அன்பாக வளர்ப்பது என்றால் அவன் கேட்பதையெல்லாம் வாங்கித் தருவது என்று பெற்றோர் நினைத்துக் கொள்கிறார்கள். யோசித்துப் பார்த்தால், அவன் கேட்பது எல்லாவற்றையும் வாங்கித் தருவது என்பது முழு முட்டாள்தனம் என்பது புரியும். இதற்கு நீங்கள் ‘அன்பு’ என்று பெயர் சூட்டுகிறீர்கள். பிறகு எப்படித்தான் குழந்தையை வளர்ப்பது? எந்த சூழ்நிலையில் தள்ளப்பட்டாலும், அவன் ஆனந்தமாக வாழவேண்டும். அந்த மாதிரி அவனை வளர்க்க வேண்டும். உங்கள் குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டுமென்றால், முதலில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இப்போது எப்படி மகிழ்ச்சியாக இருப்பது என்று உங்களுக்கே தெரியாது. தினந்தோறும் உங்கள் வீட்டில், பதற்றம், கோபம், பயம், ஆற்றாமை, பொறாமை போன்றவை அரங்கேறிக் கொண்டிருந்தால், அவனும் இதைத்தான் கற்றுக் கொள்வான். உங்களுக்கு உண்மையிலேயே உங்கள் குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற நினைப்பு இருந்தால், நீங்கள் இப்போது இருக்கும் வழியை மாற்றிக்கொள்ள வேண்டும். உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள முடியாவிட்டால், உங்கள் குழந்தையை வளர்ப்பதைப் பற்றி என்ன செய்யமுடியும்?

உங்களை உண்மையில் விரும்பத்தக்க அளவுக்கு மாற்றிக் கொள்ளுங்கள்

குழந்தைகள் எப்போதும் தொலைக்காட்சி, அண்டை அயலார்கள், ஆசிரியர்கள், பள்ளி, வீதி, மற்றும் பல தாக்கங்களுக்கு உள்ளாகிறான். யாரை அவன் மிகவும் வசீகரமானவர் எனக் கருதுகிறானோ, அவன் அவர்கள் வழியில்தான் செல்வான். எனவே, உங்களை அவன் விரும்பத்தக்க அளவுக்கு மாற்றிக் கொண்டு, பெற்றோருடன் இருப்பதற்கு அவன் ஆசைப்படும்படி செய்யுங்கள். உங்களை நீங்கள் ஒரு மகிழ்ச்சியான புத்திசாலியான, அற்புதமான மனிதராக வெளிப்படுத்தினால், அவன் வேறெங்கும் சென்று துணை தேட மாட்டான். எதுவாக இருந்தாலும், அவன் உங்களிடம்தான் வந்து கேட்பான். தினந்தோறும் பயத்தையும், பதட்டத்தையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினால், அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்வதை நீங்கள் எதிர்பார்க்க முடியாது, அல்லவா? அவர்களும் அதையேதான் கற்றுக் கொள்வார்கள். உங்களை ஒரு அமைதியான, அன்பான மனிதராக மாற்றிக் கொண்டு, அவர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு சூழலை உருவாக்குவதுதான் உங்களால் செய்ய முடிந்த சிறந்த செயலாக இருக்கும்.

நன்றி : ஈஷா மையம்

]]>
children, parenting, குழந்தைகள் நலம், குழந்தை வளர்ப்பு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/17/w600X390/kuzhanthaigal-solpaechu-kaetka-vaendumaa.jpg http://www.dinamani.com/health/children-health/2017/may/17/does-your-children-want-to-obey-you-2703895.html
2699035 மருத்துவம் குழந்தைகள் நலம் அரைஞாண் கயிறு ஏன் அணிகிறோம் தெரியுமா?! கார்த்திகா வாசுதேவன் Thursday, May 11, 2017 01:54 PM +0530  

ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ எந்தக் குழந்தையா இருந்தாலும் அவங்கவங்க வசதிக்கு தக்கபடி தங்கம், வெள்ளி, வெறும் கறுப்புக் கயிறுன்னு குழந்தை பிறந்த சில நாட்களில் அதனோட இடுப்புல கட்றோமே அரைஞாண் கயிறு,  அத ஏன் கட்றோம்னு தெரியுமா உங்களுக்கு ?!
 
ஆயிரம் வந்தாலும் சரி அருனாக்கயிறு அந்தாலும் சரி !!!
 
எழுபது எண்பதுகளில் பிறந்தவர்களை கேட்டுப் பாருங்கள். அப்போதெல்லாம் புழக்கத்தில் இருந்த வேடிக்கையான ஒரு பழமொழி, ஆயிரம் வந்தாலும் சரி அருனாக்கயிறு அந்தாலும் சரி என்று சொல்லிக்கொண்டே, மார்கழி குளிரில் சில்லென்று இருக்கும் தொட்டித் தண்ணீரை அள்ளி தலையில் ஊற்றிக்கொள்வார்களாம். அப்போதெல்லாம் விறகடுப்புதானே! வீட்டிற்கு நான்கைந்து குழந்தைகள் எனில், ஆளாளுக்கு தனித் தனியாய் யார் வெந்நீர் வைத்துக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள் பிள்ளைகளுக்கு?!
 
இந்தப் பழமொழியில் அரைஞாண் கயிறு ஏன் வருகிறது? அரைஞாண் கயிறு ஏன்  அறுந்து விழ வேண்டும் என்று யோசித்தீர்களா? குளிரில் உடல் விறைக்கும்போது இடுப்பில் கட்டி இருக்கும் அரைஞாண் கயிறு இறுக்கமாகி அறுந்து விழும் சூழல் வரலாம்.  


கைக்குழந்தைகளின்  போஷாக்கை அளக்க உதவும் அரைஞாண் கொடிகள்!

குளிரில் உடல் விறைத்தால் மட்டுமே அரைஞாண் கயிறு அறுந்து விழுவதில்லை, உடல் பருமன் அதிகரித்தாலும்கூட இடுப்பின் சுற்றளவு மிகுந்து அதனாலும் கயிறு அறுந்துபோகும் சூழல் வரும். வெறும் கறுப்புக் கயிரென்றால் அறுந்து விழும். தங்கமோ வெளியோ என்றால், இடுப்பைச் சுற்றி தழும்பாகும் அளவுக்கு இடுப்பை இறுக்கிப் பிடிக்கும். இதிலிருந்து என்ன தெரிகிறது?! இந்த அரைஞாண் கயிற்றின் தத்துவம் பற்றிய ஆராய்ச்சியை அந்தக் காலத்திலிருந்து எடுத்துக்கொண்டால், குழந்தை பிறந்த சில நாட்களில் அதன் எடையை அளவிட நம் முன்னோர்கள் இந்த அரைஞாண் கயிறு அணியும் வழக்கத்தை கண்டுபிடித்திருப்பார்கள். இந்த தகவலை டாக்டர்ஹே மந்த் மற்றும் டாக்டர் அர்ச்சனா அவர்கள் உலக குழந்தைகள் நலத்திற்காக வெளியிட்டுள்ள மருத்துவ ஆய்வுப் புத்தகம் நமக்களிக்கிறது .

மருத்துவமா? மூடநம்பிக்கையா!

இந்தியாவில் குறிப்பாக தமிழ் சமூகத்தில் குழந்தை பிறந்து ஏழாம்நாளில் இந்தக் கயிற்றை அணிவிக்கிறார்கள், ஆண்கள் என்றால் அவர்களது இறப்பு வரை இந்த கயிற்றை அணியும் வழக்கம் நீடிக்கிறது. பெண்களுக்கு அவர்கள் பூப்படையும் பருவம் வரையிலும் தொடரும் இந்த வழக்கம், பிறகு அற்றுப்போய் விடுகிறது.
 
குழந்தைகளை திருஷ்டியில் இருந்து காக்க  தாயத்துகளில் அடைக்கப்படும் தொப்புள்கொடிகள்!

தொப்புள் கொடி உறவு - தொப்புள் கொடி உறவு என்று  தமிழ் சினிமாவில் பல வருடங்களாக சென்ட்மென்ட் வசனம் பேசுகிறார்களே அந்த தொப்புள் கொடிக்கும், இந்த அரைஞாண் கயிறுக்கும் ஒரு பந்தம் உண்டு,  தாயின் வயிற்றில் இருக்கும் வரை குழந்தைக்கு சாப்பாடெல்லாம் எந்த வழியாகச் செல்லும் தெரியுமா? அம்மா என்ன சாப்பிட்டாலும் ப்ளாசண்டா என்று சொல்லப்படற இந்த தொப்புள் கொடி வழியாகத்தான் குழந்தைக்கு அந்த உணவு போய்ச் சேரும்.

அம்மாவின் கருப்பையில் குழந்தை போஷாக்கா வளர உதவற இந்த தொப்புள் கொடியை, குழந்தை பிறந்து மண்ணில் விழுந்த அடுத்த கணமே நறுக்கி நீக்கிடறாங்க. அப்படி நீக்கப்படும் தொப்புள்கொடியை நம்ம மக்கள் காலங்காலமா சென்டிமென்டலா என்ன செய்றாங்கன்னா, வெள்ளியிலோ தங்கத்திலோ சின்னதா ஒரு தாயத்து செய்து, அதில் இந்த தொப்புள் கொடியை வைத்து மூடி குழந்தையோட அரைஞாண் கயிற்றில் கோர்த்து அதன் இடுப்பில் கட்டிவிடறாங்க. இப்படி கட்டிவிடறதன் மூலமா குழந்தையை காத்து, கருப்பு, திருஷ்டி போன்ற தீய சக்திகள் அணுகாதுன்னு நம்பறாங்க. இந்தப் பழக்கம் இப்பவும் நம்ம ஊர்களில் தொடருது. சிலர் அரைஞாண் கயிற்றில் கட்டி விடுவாங்க. சிலர் குழந்தையோட கழுத்திலும் இப்படி தாயத்துகளை கட்டி விடுவது உண்டு. இது ஒருவிதமான   நம்பிக்கை.

{pagination-pagination}

அரைஞாண் கயிற்றின் அறிவியல் பயன்பாடு
 
சரி அறிவியல் முறைப்படி நம்ம முன்னோர்கள் அரைஞாண் கயிறு கட்டற பழக்கத்தை ஏன் ஆரம்பிச்சாங்கன்னு ஆராய்ஞ்சு பார்த்தா, அதுக்கும் சுவாரஸ்யமான ஒரு காரணம் இருக்கு. இந்தக் காரணம் ஆக்கபூர்வமானது மட்டுமல்ல, நம்பகமான முறையாகவும் இருக்கு. அது என்னன்னு பார்க்கலாமா?!
 
இப்போதெல்லாம் குழந்தைகள் நல மருத்துவமனைகளில் குழந்தையின் எடை காட்டும் எலக்ட்ரானிக் உபகரணங்கள் (weighing  machine) பல மாடல்களில் நிறைய காணக் கிடைக்கிறது. முன்பெல்லாம் நமது தாத்தா பாட்டி காலங்களில் இந்த எலக்ட்ரானிக் எடை காட்டும் கருவிகள் எல்லாம் கிடையாது. குழந்தை வளர வளர அதன் எடை கூடுகிறதா? குறைகிறதா?! குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது போன்ற விபரங்களை எல்லாம் அவர்கள் இந்த அரைஞாண் கயிறு கட்டும் பழக்கத்தை வைத்துத்தான் அளந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா?! ஆனால் இதுதான்  நிஜம்.
 
இடுப்பின் நடுவில் கட்டப்படும் அரைஞாண் கயிறு நாளாக நாளாக இறுகி இறுக்கமாகிக்கொண்டே போனால், குழந்தை போஷாக்காக வளர்கிறது, அதன் எடை அதிகரிக்கிறது என்றும், அரைஞாண் கயிறு லூசாகி இடுப்பிலிருந்து கழன்று கால் வழியாக கீழே விழும் நிலை வந்தால், குழந்தை மெலிந்து எடை குறைந்துகொண்டிருக்கிறது என்றும் அன்றைய மக்கள் கணித்தார்கள். 
 
இந்த அரைஞாண் கயிற்றை வேறு என்னென்ன காரணங்களுக்காக எல்லாம் அந்நாட்களில் உபயோகித்திருக்கிறார்கள் என்று பாருங்கள் :
 
கிராமப்புறங்களில் நீச்சல் கற்றுத்தர அரைஞாண் கயிற்றில் சேலை அல்லது வேட்டியை கட்டி முடிச்சிட்டு நீச்சல் பழக்கிக் கொடுத்திருக்கிறார்கள். நீரில் மூழ்கிவிடும் வாய்ப்பிருந்தால், மறுமுனையைப் பற்றி வெளியில் இழுக்க அரைஞாண் கயிறுகள் உதவினவாம்.

சாவிக்கொத்து, முள்வாங்கி, ஓட்டைக் காலணாக்கள் போன்றவற்றை கோர்த்துவைக்கவும்கூட இந்தக் கயிறுகள் பயன்பட்டிருக்கின்றன. பெரும்பாலும், தாயத்துகள் கோர்த்து இடுப்பில் கட்டுவதற்கு அரைஞாண் கயிறு பயன்பட்டிருக்கிறது.

பெல்ட் கண்டுபிடிக்கப்படாமல் இருந்த காலத்தில், மனிதனின் முக்கிய அரையாடையாக இருந்த கோவணம், இடுப்பிலிருந்து நழுவாமல் இருக்க அரைஞாண் கயிறு உதவி இருக்கிறது. அந்தக் காலத்தில் மானம் காத்தது அரைஞாண் கயிறு என்று சொன்னால் மிகையில்லைதான்! அத்துடன், இன்னொரு பயனும் இருந்திருக்கிறது. அந்தக் காலத்தில் ஆண்கள் வயல்வெளிகளில்தான் அதிகம் வேலை செய்வார்கள். வயல் பகுதிகளில் பாம்புகள் அதிகம். சில சமயங்களில் பாம்பு கடித்துவிட்டால், ரத்த ஓட்டத்தில் விஷம் கலந்து உடல் முழுதும் பரவுவதைத் தடுக்க, பாம்பு கடித்த இடத்துக்கு அருகில் கட்டு போட கயிறு தேவைப்படும். அந்தச் சமயத்தில் கயிறை எங்கே தேடுவது. அப்போது, இடுப்பில் இருக்கும் அரைஞாண் கயிற்றை அறுத்து காலில் கட்டிக்கொண்டு, ஆஸ்பிடலுக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வார்கள். ஆக, உயிர் காக்கும் ஒன்றாகவும் அரைஞாண் கயிறு இருந்திருக்கிறது.

இது தவிரவும், கூகுள் buzz-ல் அரைஞாண் கயிறு தொடர்பாக நண்பர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களில் ஒன்று, யோகாசன வகுப்புகளில் வீராசனம் எனும் ஆசனப் பயிற்சியில் கைகளை மூடி வயிற்றுக்கு அடியில் வைத்து அழுத்திக்கொண்டு முன்னோக்கிக் குனிந்து பயிற்சி செய்யச் சொல்வார்களாம். இந்தப் பயிற்சியின் பலன் ஜீரண உறுப்புகள் தொடர்பான பிரச்னைகள் வராமல் இருப்பதற்காகவாம். சற்றேறக் குறைய, இடுப்பில் அணியும் அரைஞாண் கயிறும், வயிற்றை அழுத்தும் வேலையைத்தான் செய்கிறது. யோகா முறைப்படி இப்படி ஒரு பலனையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இந்துமத சம்பிரதாயப்படி அரைஞாண் கயிறு அணிந்தவனே முழு மனிதன்.{pagination-pagination}
 
இந்தியாவில் மட்டுமல்ல, பாகிஸ்தானில் சில பகுதிகளிலும்கூட அரைஞாண் கயிறுகள் அணியும் வழக்கம் உண்டாம். இந்து மத வழக்கப்படி அரைஞாண் அணிந்த மனிதனே முழு மனிதனாகக் கருதப்படுகிறான். மூடநம்பிக்கை என்று கருதி இன்றைய நவீனவாதிகள் சிலர் அரைஞாண் அணியும் பழக்கத்தை புறக்கணித்திருக்கலாம். அவர்களுக்கு ஒரு செய்தி -


 
அரைஞாண் அணிவதை  மத ரீதியாகவோ சம்பிரதாய ரீதியாகவோ மட்டுமே அணுகி அதை ஒரு மூடநம்பிக்கை என்று புறம் தள்ளாமல் இருப்பது நல்லது. காரணம், அரைஞாண் கயிறு அணிவது இன்றைய தலைமுறையினருக்கு தலையாய பிரச்னையாக உள்ள அதீத உடல் பருமன் (Obesity ) பிரச்னையையும் தீர்த்துவைக்கிறது. இடுப்பில் கட்டப்பட்ட கயிறு இறுக்கமாகி அழுத்தும்போது நமது உடல் எடை வழக்கத்தைவிட கூடுகிறது என்பதை  நாம் உணர்ந்துகொள்வோம்தானே?
 
மரங்களின் வயதைக் கணக்கிடுவதற்கு, அதன் தண்டுப் பகுதியை குறுக்குவாட்டில் வெட்டி தண்டின் மேற்புறத்தில் வட்டமான மேற்பகுதியில் இருக்கும் வளையங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அதை வைத்து மரத்தின் வயதைக் கணிப்பார்களாம். அதுபோலத்தான் இடுப்பின் நடுவில் பெல்ட்போல அணியப்படும் இந்த கயிறுகளைக் கொண்டு நமது உடலின் பருமனை நாம் கணக்கிடலாம்.

கார்டியாக் சிண்ட்ரோம் எக்ஸ் குறைபாட்டை தடுக்கும் அரைஞாண் கயிறு!

மற்றெல்லாக் காரணங்களையும் விட இந்தக் காரணம் ஏற்புடையதுதான். எப்போதெல்லாம் அரைஞான் கயிறு இறுக்கமாகி இடுப்பை அழுத்துகிறதோ அப்போதெல்லாம் எச்சரிக்கையாகி உடனே உடல் பருமனை குறைக்கும் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு உடலின் எடை கூடாமல் காக்கலாம். பெரிதாக உபாதைகள் இல்லாதவரை ஒபிசிட்டியினால் பிரச்னை இல்லை. ஆனால் சென்ட்ரல் ஓபிசிட்டி என்று சொல்லப்படுகிற அப்டாமினல் ஒபிசிட்டியால் உடலில் அப்டமன் (இடுப்பு) பகுதிகளைச் சுற்றி அதிகப்படி கொழுப்பு படிவதால் இதய சம்பந்தமான நோய்கள் அதிகரிக்கும். அப்டாமினல் ஒபிசிட்டி, இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களின் வேலைக்கு இடையூறு செய்வதால், ரத்த அழுத்தத்தில் மாறுதல் ஏற்பட்டு கார்டியாக் சிண்ட்ரோம் எக்ஸ் எனும் குறைபாடு ஏற்படுகிறது.

அரைஞாண் கயிறு அணியும் பழக்கத்தை வழக்கமாக்கிக்கொண்டால், இந்தப் பிரச்னை வரும் முன் எச்சரிக்கை அடையலாம் என்று ஒரு மருத்துவ ஏடு தகவல் வெளியிட்டுள்ளது.

ஆக, இத்தனை பலன்கள் இருக்கிறதென்றால், குழந்தைகளுக்கும் வளரிளம் வயது சிறுவர் சிறுமிகளுக்கும், ஏன் ஆண் - பெண் பேதமின்றி, பெரியவர்களும் கூட அரைஞாண் கயிறு அணியும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லதுதானே!

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/9/w600X390/babydfd.jpg http://www.dinamani.com/health/children-health/2017/may/09/reasons-for-wearing-hip-chain-for-children-2699035.html
2699021 மருத்துவம் குழந்தைகள் நலம் சாக்லேட் சாப்பிட்டா பல் சொத்தை ஆயிடும் Tuesday, May 9, 2017 03:15 PM +0530 இது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மையா அல்லது சும்மா குழந்தைகளை பயமுறுத்த சொல்லப்பட்ட கதையா?
 
கதையா, உண்மையானு இங்கே இப்போ பார்த்துடலாம்.
 
பற்குழிகள் எதனால் உருவாகின்றன?
 
வாயில் உற்பத்தியாகும் பாக்டீரியாக்களால் உருவாகின்றன.
 
நமது வாயில் பாக்டீரியாக்கள் எப்படி உற்பத்தியாகின்றன?
 
நாவுக்கு  ருசியாக வாரம்முழுவதும் முறை வைத்துக்கொண்டு சாதாரண இட்லி, தோசை, பொங்கலில் ஆரம்பித்து சிக்கன், மட்டன், முட்டை
பிரயாணிகள், மசாலா அதிகம் சேர்த்த சுவையான  கிரேவிகள், சிக்கன் பிரை, மட்டன் பிரை, முட்டை பொடிமாஸ், ஆம்லேட். ஆஃபாயில். இடைவேளைகளில் கரகர மொறு மொறு ஸ்நாக்ஸ் ஐட்டங்கள் இரவுக்கு பரோட்டா, சப்பாத்தி, ப்ரெட், பட்டர் என்று அவரவர் சக்திக்குத் தகுந்தவாறு வகை வகையாகத் தின்று கொண்டிருக்கிறோம்.
 
இந்த உணவுப் பொருட்கள் தான் வாயில் பாக்டீரியாக்களின் உற்பத்திக்கு மூல காரணங்கள். இப்படி உருவாகும் பாக்டீரியாக்களின் முக்கிய உணவுப் பொருள் கார்போஹைட்ரேட்டுகள். இந்த கார்போஹைட்ரேட்டுகள் அதிகமிருப்பது சாக்லேட், கேக், மிட்டாய்கள் மற்றுமுள்ள அனைத்து இனிப்பு வகைகளிலும் தான்.அந்த வகையில் இனிப்பு அதிகம் சாப்பிட்டால் அதை நமது வாயிலும் பற்களிலும் படிந்திருக்கும் பாக்டீரியாக்கள் உட்கொண்டு செழித்து வளர்கின்றன .இந்த பாக்டீரியாக்கள் சும்மா இருப்பதில்லை,அமிலங்களை சுரக்கின்றன.இந்த அமிலங்கள் பற்களின் இனாமல்களுக்கு மிகப் பெரிய எதிரிகள். பல் இனாமல் பாதிப்படைந்தால் என்ன ஆகும்? பற்குழிகள் உண்டாகும்? இப்படி உருவாகும் பற்குழிகள் நாளடைவில் பற்கள் சொத்தையாக முக்கியக் காரணங்களாகி விடுகின்றன. ஆக இப்படி உருவானவையே  இனிப்பு அதிகம் சாப்பிட்டால் பற்கள் சொத்தையாகும்" என்ற பொது மொழி.
 
இதற்கென்ன தீர்வு:

'அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்பது பெரியோர் வாக்கு,அதற்கேற்ப அளவாக இனிப்பு சாப்பிடலாம் அப்படியே ஏதாவது ஒரு சந்தர்பத்தில் இனிப்பு அதிகம் சாப்பிட வேண்டியதாகி விட்டாலும் அப்போதெல்லாம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாராக இருந்தாலும் காலையில் எழும் போதும் இரவு தூங்கப் போகும் முன்பும் தினமும் இருமுறை பற்களை விளக்கும் பழக்கத்தை  எக்காரணம் கொண்டும் மறக்கக்கூடாது. அதே சமயம் கிரீம்கள் நிறைந்த கேக்குகள்,ஐஸ்க்ரீம் கல் சாப்பிடும் போது இரவு பல் விளக்கிக்கொள்ளலாம் என்று வாய் கொப்பளிக்கும் பழக்கத்தையும்  தவிர்க்கக் கூடாது.இவை இரண்டும் வயது வித்தியாசமின்றி எல்லோருக்கும் பொதுவான விதிகள். இந்த விதிகளைப் பின்பற்றி மேலே சொல்லப்பட்ட "இனிப்பு அதிகம் சாப்பிட்டா பற்கள் சொத்தையாகும்" என்ற கூற்றை பொய்யாக்குவோம்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/9/w600X390/Sugar_Children.jpg http://www.dinamani.com/health/children-health/2017/may/09/causes-for-tooth-decay-2699021.html
2699005 மருத்துவம் குழந்தைகள் நலம் குழந்தையின் மென்மையான காதுக்குள் காட்டன் பட்ஸ் வேண்டாம்! ஷக்தி Tuesday, May 9, 2017 01:15 PM +0530
பெற்றோர்களின் கவனத்துக்கானது இந்தக் கட்டுரை! குழந்தைகளின் காதுகளை சுத்தப்படுத்தும் என நினைத்து நீங்கள் பயன்படுத்தும் காட்டன் பட்ஸ் நன்மை செய்வதை விட அதிக கெடுதல்களையும் உண்மையில் கடுமையான பாதிப்புக்களையும் ஏற்படுத்திவிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

1990-லிருந்து 2010 ஆம் ஆண்டு வரை கடந்த 21 வருட காலத்தில் 18 வயதுக்கு உட்பட்ட 2,63,000 குழந்தைகள் மருத்துவமனைக்கு காது சார்ந்த பிரச்னைகளுக்காக அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதாவது தினமும் குறைந்தது 34, ஒரு வருடத்துக்கு 12,500 குழந்தைகள் காது வலியால் அவதியுற்றிருக்கிறார்கள் என்கிறது இந்தத் தரவு.

அமெரிக்காவில் உள்ள நேஷன்வைட் சில்ரன்ஸ் ஹாஸ்பிடலைச் சேர்ந்த மருத்துவரரான கிறிஸ் ஜடானா கூறுகையில், ‘இரண்டு தவறான நம்பிக்கைகள் இது குறித்து நிலவுகின்றன. முதலாவதாக காதுகளை வீட்டில் கிடைக்கும் பொருட்களால் சுத்தம் செய்து கொள்ளலாம் என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொள்வது, இரண்டாவதாக காட்டன் பட்ஸ் அல்லது அது போன்று கடைகளில் கிடைக்கும் குச்சிகளை வைத்து காதை சுத்தப்படுத்தலாம் என்று நம்புவது. இவை இரண்டுமே தவறு’ என்றார் அவர்.

காதில் உருவாகும் மெழுகு போன்ற அழுக்கை எடுக்கக்கூடாது. காரணம் வேக்ஸ் போன்ற அதுதான் உங்கள் காதுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது என கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். காது ம்ற்றும் அதன் உட்பகுதி பெரும்பாலும் தானாகவே சுத்தப்படுத்திக் கொள்ளும் இயல்புடையவை. குச்சியில் சுற்றப்பட்ட பஞ்சு துடைப்பான்கள், பட்ஸ் போன்றவற்றை பயன்படுத்தும் போது அது அழுக்குகளை வெளியேற்றுவதற்கு பதில் செவிப்பறைக்குள் சென்று அழுக்குடன் அதன் துகள்களும் இணைந்து  அடைத்துக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. இதனால் சிறிய அல்லது பெரிய பாதிப்புக்கள் நாளாவட்டத்தில் ஏற்படும்’ என்றார் ஜடானா.

குழந்தைகளுக்கு நாம் பட்ஸ் பயன்படுத்தி காதுகளை சுத்தம் செய்வது பெரும் தவறு. பட்ஸ் அல்லது குச்சி போன்றவற்றை பயன்படுத்தி பிஞ்சுகளின் காதுகளை சுத்தம் செய்வதால், அந்த மெழுகு போன்ற பொருள் காதின் உட்புறத்தில் கெட்டியாக சேர்ந்து அழுக்கு அங்கே படர ஆரம்பித்துவிடும். உடனடியாக இப்பழக்கத்தை நிறுத்திவிடுங்கள்.

ஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறுகையில், 'காட்டன் கூர் முனை கொண்டவற்றை காதுக்குள் விடும்போது அது காதுகளை சுத்தப்படுத்துவதில்லை. மாறாக காயப்படுத்திவிடுகின்றன (73 சதவிகிதம்) சிலர் காது குடையும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். (10 சதவிகிதம்) சிலர் குழந்தைகளுக்கு இதைப் பயன்படுத்துகையில் அது உடைந்து காதுக்குள் தங்கிவிடுகிறது (9 சதவிகிதம்). குழந்தைகள் தாமாகவே காதுக்குள் இவற்றைப் பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும் (77 சதவிகிதம்). சில சமயம் குழந்தையின் பெற்றோர் அல்லது உடன் பிறந்தவர்கள் அவர்களின் காதை சுத்தப்படுத்த முயற்சிக்கையில் ஊறு விளைவித்துவிடுவார்கள் (16 சதவிகிதம்)

இந்தப் பிரச்னையில் மருத்துவமனைக்கு வரும் மூன்றில் இரண்டு குழந்தைகள் எட்டு வயதுக்கு உட்பட்டவர்கள். 40 சதவிகித நோயாளிகள் மேற்கூறிய எல்லா பாதிப்புக்களுக்கும் உள்ளானவர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

8-17 வயது குழந்தைகள் காதுக்குள் ஏதோ இருப்பது போலிருந்தது அதனால் தான் அதை வெளியே எடுக்க முயற்சி செய்தேன் என்பார்கள். ஆனால் மிகவும் மென்மையாக இருக்கும காது ஜவ்வுப் பகுதிகள் என்பது தெரியாமல் தங்களுக்குத் தானே தீங்கு செய்ய ஏதுவாக அமைந்துவிடுகிறது. காதின் உட்பகுதியில் இருக்கும் மென்மையான ஜவ்வு பகுதி இவர்கள் தவறாக அழுத்திக் குத்துவதால் பாதிக்கப்படும்.

மேற்சொன்ன பாதிப்புக்களுக்காக மருத்துவமனைக்கு வரும் 99 சதவிகித குழந்தைகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு குணம் அடைந்த பின் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். ஆனால் சற்று பெரிய பாதிப்புக்கள் இருக்கும்பட்சத்தில், அதாவது செவி மடல், அல்லது உட் செவி அல்லது செவிப்பறை என இதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு மயக்கம் போன்ற பிரச்னைகள் இருந்தால், அதன் தொடர்ச்சியாக காது செவிடாகிவிடும் அபாயங்கள் உண்டு.

வெளிப்படையாக பார்க்கும் போது சாதரணமாக இருக்கும் இந்த காது துடைப்பான்கள் உண்மையில் செவிப்பறைக்கு பெரிய ஆபத்துக்களை விளைவிக்கும் அபாயகரமானவை. எனவே ஆரம்பத்திலேயே கவனத்துடன் செய்லபட்டு ஈடு செய்ய முடியாத இழப்புக்களை அடைய வேண்டாம் என்றார் ஜடானா.

இந்த ஆய்வு முடிவுகளை தி ஜர்னல் ஆஃப் பீடியாட்ரிக்ஸ் பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.

]]>
cotton ear buds, children ear problems, காது பிரச்னைகள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/9/w600X390/Baby-care-big-head-cotton-ear-buds.jpg http://www.dinamani.com/health/children-health/2017/may/09/cotton-buds-may-be-harmful-for-children-2699005.html
2691987 மருத்துவம் குழந்தைகள் நலம் குழந்தைகள் நன்றாக வளர Thursday, April 27, 2017 03:41 PM +0530 நம் குழந்தை வளரும்போது அதன் கவனத்தை எதில் திருப்புவது? அது எந்தத் துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் எந்த அளவிற்கு முடிவெடுக்கலாம்?”

வளரும் வயதில் குழந்தையின் கவனத்தை எதில் திருப்புவது நல்லது?

வளரும் வயதில் குழந்தைக்கு எந்தக் குறிப்பிட்ட நோக்கமும் தேவையில்லை. அதிலும் குறிப்பாக, அவர்களுக்கு பெற்றோரின் மீது கவனம் இருக்கத் தேவையில்லை. அவர்கள் இயல்பாக வளர வேண்டும். வளர்ச்சி என்பது உடலைப் பொறுத்தது மட்டுமல்ல. கட்டாயம் இன்றி, ஏதொன்றும் வலுக்கட்டாயமாக அவர்கள் மீது திணிக்கப் படாமல் அவர்கள் வளர வேண்டும். நீ நல்லவனாக வளர வேண்டும். தப்பான வழிகளில் போகாதே, போகாதே என்று சொல்லத் தேவையில்லை. நல்லவனாக வளர வேண்டும் என்று அறிவுறுத்துவதால் மட்டுமே அவர்கள் அப்படி வளர்ந்து விட முடியாது.

வளரும் குழந்தைகளுக்கு டாக்டராக வேண்டும், இன்ஜினியராக வேண்டும் என்றெல்லாம் ஐந்து வயதிலிருந்தே கனவு இருக்கத் தேவையில்லை. அவர்களுக்குத் தங்கள் வளர்ச்சி பற்றி கவனம் இருந்தால் போதும்.

சமூகம் மிகப் பெரியதாகக் கொண்டாடுவதைத்தான் நாமும் செய்ய வேண்டும் என்ற அவசியமேயில்லை. ஒரு குழந்தை இசையில் ஆர்வம் கொள்கையில், நீ அரசனாக வர வேண்டும் என்று பெற்றோர் தங்கள் விருப்பத்தை அதன் மீது திணிப்பது புத்திசாலித்தனமல்ல. எத்தனையோ அரசர்களை நாம் மறந்து விட்டாலும், தான்சேன் என்ற இசைக்கலைஞனை நாம் மறக்கிறோமா?

உடல், மனம், உயிர்சக்தி இவை முழுமையாக வளர்ந்தால் போதும். மற்றவற்றை இயற்கை கவனித்துக் கொள்ளும். உயிர் அதன் உச்சத்தில் இயங்க வேண்டுமென்றால், அதற்கான முழு வளர்ச்சியை அவ்வுயிர் கண்டிருக்க வேண்டும். வேறு எதில் கவனம் பதிந்து விட்டாலும், சுய வளர்ச்சி பற்றிய கவனம் சிதறிவிடும். செய்வதை முழுமையாகச் செய்தால், ஒரு புல்லை வளர்த்தால் கூட, அது பிரமிப்பூட்டும் விதமாக அமைந்து காட்டும்.

தன் குழந்தை எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் எந்த அளவிற்கு முடிவெடுக்கலாம்?

பொதுவாக பெற்றோர் வாழ்ந்த காலம் வேறு, குழந்தைகள் வாழும் காலம் வேறு. இது புரியாமல், சூழல்கள் மாறிவிட்டபோது குழந்தைகளுக்கு பெற்றோர் வழிகாட்ட முனைவது, சமயத்தில் அர்த்தமற்றுப் போகலாம். அதேசமயம், பெற்றோரின் அனுபவங்களைப் பயன்படுத்தாமல், தாமாக தவறானவற்றை முயன்று அதில் கிட்டும் அனுபவத்தால் குழந்தைகள் கற்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. இவை இரண்டிற்கும் இடையில் ஒரு பொதுவான சமநிலையை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படித் தேர்ந்தெடுக்கும் சமநிலையில், நம் குழந்தைக்கும் உடன்பாடு இருக்க வேண்டும்.

குழந்தையுடன் நல்ல நட்புடன் நீங்கள் பழகி வந்திருந்தால், குழந்தை தானாகவே உங்கள் வழிகாட்டுதலை விரும்பும். குழந்தைகளை அம்மாவாக, அப்பாவாக சில காலம் மட்டுமே நடத்த முடியும். அதற்குப் பிறகு அவர்களிடம் நீங்கள் நண்பராகத் தான் பழக வேண்டும். விரும்பாத இடத்தில் அறிவுரைகள் சொன்னால், அவை வேலை செய்யாது.

நண்பர்களாக சேர்ந்து உட்கார்ந்து பார்த்தால், இருக்கும் வாய்ப்புகளில் எது சிறந்தது என்று அறிவுரைகள் சொல்லாமலேயே தேர்ந்தெடுக்க முடியும்.

இன்றைக்கு கல்வி கூட பணம் சம்பாதிக்கும் தொழிலாகிவிட்டதே?

பணம் என்பது நம் வாழ்வின் எல்லாப் பகுதியிலும் எல்லாக் கோணத்திலும் நுழைந்துவிட்டது. வணிகம் நம் வீட்டிற்குள்ளேயே வந்துவிட்டது. மருத்துவம், கல்வி, கோயில் என்று வாழ்க்கையின் அத்தியாவசியமான அம்சங்கள் எல்லாவற்றிலும் பணம் பிரதானமாகிவிட்டது. வாழ்வின் சில மிக முக்கிய அம்சங்களான கல்வி, ஆரோக்கியம், ஆன்மீகம் போன்றவற்றை பொருளாதார ரீதியில் அணுகுவது சரியல்ல. அவற்றை வேறு மனநிலையுடன் அணுக வேண்டும். ஆனால் இன்று, இவை அனைத்தும் பொருள் சார்ந்திருப்பது வருத்தத்துக்குரியது.

நன்றி - சத்குரு
 

]]>
Parenting, children, வளரும் வயதில் குழந்தை, குழந்தைகள் நன்றாக வளர http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/27/w600X390/children.jpg http://www.dinamani.com/health/children-health/2017/apr/27/best-ways-for-parenting-2691987.html
2688542 மருத்துவம் குழந்தைகள் நலம் எந்த வயதில் பால் பற்கள் விழ ஆரம்பிக்கும்? Friday, April 21, 2017 05:15 PM +0530 ஒரு குழந்தையின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும் அதன் பெற்றோருக்கும் சுற்றத்தாருக்கும் மகிழ்ச்சியைத் தரக் கூடியது. மேல் வரிசையில் இரண்டு பற்களும் கீழ் வரிசையில் இரண்டு பற்களுமாக சிரிக்கும் குழந்தைகள் கொள்ள அழகு. அவர்களின் பொக்கை வாய்ச் சிரிப்புக் காலங்கள் முடிந்து பால் பற்கள் மெள்ள முளைக்கத் தொடங்கும் போது பெற்றோர்கள் சற்று கவனத்துடன் இருப்பது அவசியம். டாக்டர் ஸ்மைல்ஸ் பல் மருத்துவமனையின் பல் மருத்துவரான டாக்டர் ஆர்.சிவபிரகாஷை சந்தித்து பால் பற்கள் பற்றி உரையாடினோம். பல சுவாரஸ்யமான மருத்துவ தகவல்களை சளைக்காமல் அளித்தார் அவர். டாக்டர் ஆர்.சிவபிரகாஷுடனான பேட்டி :

எந்த வயதில் பால் பற்கள் விழ ஆரம்பிக்கும்?

ஆறு வயதில் பால் பற்கள் விழ ஆரம்பித்து பதிமூன்று வயது வரை விழும்.

ஆறு வயதில் பால் பற்கள் விழ ஆரம்பித்து பதிமூன்று வயது வரை விழும்.

2. பால் பற்களை சிறு வயதில் எப்படி பராமரிக்க வேண்டும்?

20 பால் பற்களும் பதிமூன்று வயது வரை பாதுகாக்கப் பட வேண்டும். பால் பற்களில் இரண்டு வகை உண்டு. முன் பற்கள் 12 பின் பற்கள் எட்டும் என வேறு வேறு விதத்தில் நமக்கு உதவும். முன் பற்கள் கேரட் ஆப்பிள் போன்ற உணவுகளை கடிக்கவும், பின் பற்கள் உணவை நன்கு மென்று சாப்பிடவும் உதவும்.

3. ஏன் பால் பற்களை பராமரிக்க வேண்டும்?

மேலே கூறப்பட்ட விதத்தில் பால் பற்களிலே முன் பற்களும் பின் பற்களும் வேறு வேறு விதமாக வேலை செய்வதால் எல்லா பால் பற்களும், பதிமூன்று வயது வரை பராமரித்து காப்பது மிகவும் அவசியம்.

4. பால் பற்களை இயற்கையாக சரியான வயதில் விழுவதற்கு முன் எடுக்க வேண்டிய நிலை வந்தால் என்னவாகும்?

சரியான வயதிற்கு முன் எடுக்க நேரிட்டால் அடுத்து வர வேண்டிய நிரந்தர பற்கள் முளைக்கும் அந்த இடைவேளை சுருங்குவதால், நிரந்தர பற்கள் தாறுமாறாக முளைக்கும்.

5. எந்த வயதிலிருந்து குழந்தைகளுக்கு பல் துலக்க வேண்டும்?

குழந்தையின் ஆறு மாதத்தில் பால் பல் முளைக்க ஆரம்பிக்கும் அப்போது தண்ணீரின் நனைத்த பஞ்சினைக் கொண்டு பற்களை துடைக்கலாம். 1 ½ வயது முதல் குழந்தைகளுக்கான ப்ரஷ் பயன்படுத்தி பற்பசை இல்லாமல் பல் துலக்கலாம் அதனுடன் வாய் தண்ணீரால் கொப்பளிக்க பழக்க வேண்டும். வாய் கொப்பளிக்க கற்றுக் கொண்ட பின் பற்பசையுடன் பல் துலக்க வேண்டும். 60 நாட்களுக்கு ஒருமுறை ப்ரஷை மாற்ற வேண்டும்.

6. எந்த வயதில் பல் சீரமைப்பு சிகிச்சை தேவைப்படும்?

60% மக்களுக்கு ஒரு சில பற்கள் சீராக முளைப்பதில்லை. இதனால் சிரிப்பதற்குக் கூட தயங்கக் கூடிய நிலை ஏற்படும். முன்பு கூறியது போல் 6 வயதுக்கு மேற்பட்ட பால் பற்கள் விழுந்து நிரந்தர பற்கள் முளைக்கும் சமயத்தில் நாம் சரியாக தலையிட்டு பால் பற்களை நீக்கினால் நிரந்தர பற்கள் தானாக தாறுமாறாக முளைக்காமல் சரி செய்ய வாய்ப்புள்ளது.

இந்த முறையின் பெயர் சீரியல் எக்ஸ்ட்ராக்‌ஷன் (Serial Extraction) ஆகவே 6 வயதிலிருந்து வருடம் இருமுறை பரிசோதனை செய்வதன் மூலம் இந்த முறையில் பல் சீரமைக்கலாம். இந்த விதத்தில் கிளிப் போட தேவையில்லை. ஆனால் எல்லோருக்கும் இவ்விதத்தில் பல் சீரமைப்பு செய்ய இயலாது. ஆகையால் சிலருக்கு கிளிப் போட்டு மட்டுமே சீரமைக்க வேண்டியிருக்கும். எல்லா பால் பற்களும் விழுந்து நிரந்தர பற்கள் வரும் தருவாயில் அதாவது 12 வயது அளவில் கிளிப் போடுவது நல்லது.

7. கை சூப்பும் பழக்கத்திற்கான சிகிச்சை முறை என்ன?

கை சூப்பும் பழக்கமுள்ளவர்களுக்கு கழட்ட முடியாத விதத்தில் கிளிப் பயன்படுத்தி சீர் செய்ய இயலும் அதே முறையில் சிலருக்கு உதடுகளை சூப்பும் பழக்கம் இருக்கும். இதையும் சீர் செய்யலாம். நான்கு வயது வரை விரல் சூப்பும் பழக்கம் உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை தேவையில்லை. நான்கு வயதிற்கு பிறகு கட்டாயம் சிகிச்சை தேவை.

8. எந்தக் குழந்தைகளுக்கு எந்தெந்த வகையான உணவுகள் பற்களை பராமரிக்க உதவும்?

கொய்யாப் பழம், பலாப் பழம், வாழைப்பழம், பால், எள்ளிலிருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகள், கடினமான பட்டாணி போன்ற பொருட்கள் மிகவும் பற்களை வலுப்படுத்த உதவும். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் உதாரணமாக சாக்லேட், செயற்கை குளிர்பானங்கள், பிஸ்கேட் போன்ற பதப்படுத்தப் பட்ட நீண்ட நாள் காலாவதி தேதி உடைய பொருட்களை தவிர்த்தல் நல்லது.

9. குழந்தைகளின் பற்களை எப்படி பராமரிக்க வேண்டும்?

முன்பே கூறியது போல் சரியாக பல் துலக்கி பராமரிப்பதைத் தவிர பெற்றோர்களுக்கு அதிகம் பல் சொத்தை ஏற்படும் அமைப்பு இருந்தால் குழந்தைகளுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் காண்பித்து பராமரிப்பது மிகவும் நல்லது. பால் பற்களை சொத்தை ஏற்படாமல் தடுக்க (Flouride Varnish) புளூரைடு வார்னிஷ் என்ற திரவப் பொருள் கொண்டு சிகிச்சை செய்யலாம்.

10. பற்களில் குழந்தைகளுக்கு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும்?

பால் பற்களை முடிந்தவரை இயற்கையாக விழும் வரை வேர் சிகிச்சை போன்ற முறையில் சரி செய்து காப்பாற்றிக் கொள்வது மிகவும் அவசியம்.

11. விழப் போகும் பால் பற்களுக்கு எடுக்காமல் காப்பாற்றுவது அவசியமா?

பால் பற்களில் சொத்தை இருந்து சரியான நேரத்தில் பார்க்காவிட்டால் நிரந்தர பற்களுக்கும் அச்சொத்தை பரவுவதை நாம் பார்க்க நேரிடுகிறது. அதை தவிர்க்க பால் பற்களை காப்பாற்றுவது மிகவும் அவசியம். இது தவிர முன்பு கூறியது போல் பால் பற்களை இயற்கையாக விழுவதற்கு முன் நாம் எடுக்க நேரிட்டால் நிரந்தர பற்கள் முளைக்கும் இடைவெளி சுருங்குவதால் பற்கள் தாறுமாறாக முளைக்க நேரிடுகிறது.

12. பால் பற்கள் விழுந்தாலோ, அகற்றப்பட்டாலோ திரும்ப செயற்கைப் பல் பொருத்த வேண்டுமா?

பால் பற்கள் விழுந்தாலோ எடுக்கப்பட்டாலோ முன் பற்களாக இருக்குமானால் மற்றக் குழந்தைகளுடன் ஒப்பிட்டு பார்க்க, குழந்தைகளுக்கு நேரிடும். அப்போது குழந்தைகள் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாவர்கள். ஆகையால் எடுக்கப்பட்ட பற்களை திரும்பப் பொருத்துவது நல்லது. நிரந்தர பற்கள் முளைக்கும் தருவாயில் அதை எடுத்து விட வேண்டும்.

13. பல் மருத்துவரிடம் குழந்தைகளை அழைத்து வரும் போது எப்படி அவர்களை தயார் செய்ய வேண்டும்?

குழந்தைகளை பல் மருத்துவரிடம் அழைத்து வரும் போது கைகளை இறுக்கமாக பிடித்துக் கூட்டி வரக்கூடாது. மற்றும் எதற்காக செல்கிறோம் என்பதை அரை மணி நேரம் முன்பு எடுத்துச் சொல்லி கூட்டி வருவது நல்லது. வீட்டில் விளையாட்டாக மருத்துவரிடம் கூட்டிச் சென்று விடுவேன், ஊசி போடுவாங்க போன்ற என்ற சொற்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. காரணம் மருத்துவமனைப் பற்றிய அச்சுறுத்தல்கள் அந்தப் பிஞ்சு மனத்தில் எதிர்மறை எண்ணங்களை விதைத்துவிடலாம்.

14. நர்சிங் பாட்டில் சிண்ட்ரோம் என்றால் என்ன?

பொதுவாக குழந்தைகளுக்கு இரவில் பால் பருக ஃபீடிங் பாட்டில் குடுத்து உறங்க வைக்கும் பழக்கம் சிலருக்கு உள்ளது. அவ்வாறு குழந்தைகள் பால் குடிக்க வைத்துவிட்டு, வாய் கொப்பளிக்காமல் உறங்கச் செல்லும் போது, பாலில் உள்ள சர்க்கரை வாயிலேயே தங்கிவிடும். அதனால் குழந்தைகளுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட பற்களில் பல் சொத்தை ஏற்படுகிறது. இது மத்த பற்களையும் சுலபமாக சொத்தை ஆக்கிவிடும்.

அதனால் குழந்தைகளை இரவில் உறங்க செல்வதற்கு முன்பு அவசியம் வாய் கொப்பளிக்க பழக்கப் படுத்த வேண்டும்.

கைக் குழந்தைகள் வைத்திருப்போர், ஒரு மெல்லிய வெள்ளை துணியால் குழந்தைகளின் ஈறுகளை துடைக்க வேண்டும். இவை பற்சொத்தையை தடுக்கும்.

- டாக்டர் ஆர்.சிவபிரகாஷ்

வீட்டிலிருந்தே மேல் பற்களின் அமைப்பையும், கீழ் பற்களின் அமைப்பையும் புகைப்படம் எடுத்து 9840401520 அல்லது 9841143765 என்ற எண்ணிற்கு அனுப்பி வைத்தால் உங்களுக்கு 24 மணி நேரத்தில் மருத்துவ அறிவுரை பெற்றுக் கொள்ளலாம். அல்லது நேரிலும் தொடர்பு கொள்ளலாம். எங்களின் முகவரி

டாக்டர் ஸ்மைல்ஸ் க்ரூப் ஆஃப் டெண்ட்டல் செண்டர்ஸ்

92/2, ஷிவானந்தா லட்சுமி பில்டிங்

நான்காவது அவின்யூ, அசோக் நகர், சென்னை – 83

தொலைபேசி – 044 – 42033353 வலைத்தளம் www.drsmilez.com

]]>
Milk teeth http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/21/w600X390/Milk_teeth.jpg http://www.dinamani.com/health/children-health/2017/apr/21/facts-about-milk-teeth-2688542.html
3377 மருத்துவம் குழந்தைகள் நலம் குழந்தை வளர்ப்பில் மூடநம்பிக்கை கூடாது மதி DIN Friday, August 12, 2016 12:03 PM +0530 குழந்தைகள் வளர்ப்பில் மூடநம்பிக்கைகளை பின்பற்றக் கூடாது என ஜிப்மர் பச்சிளங்குழந்தைகள் நலத் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் ஆதிசிவம் வலியுறுத்தி உள்ளார்.

ஜிப்மர் சுகாதாரக் கல்வி இயக்கம் சார்பில் பச்சிளங்குழந்தைகளுக்கான அத்தியாவசியப் பராமரிப்பு என்ற தலைப்பில், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

இதில் தாய்ப்பாலின் முக்கியத்துவம், நோய்த்தொற்று தடுப்பு முறைகள், குழந்தை வளர்ப்பில் மூட நம்பிக்கைகள் மற்றும் உண்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டன.

பல்வேறு அங்கன்வாடி ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், கர்ப்பிணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

பச்சிளங்குழந்தைகள் நலத்துறை இணைப் பேராசிரியர் ஆதிசிவம் பேசுகையில், குழந்தைகள் மருத்துவர்கள் ஆலோசனைப்படி வளர்க்க வேண்டும். மூட நம்பிக்கைகளை குழந்தைகள் வளர்ப்பதில் பின்பற்றக் கூடாது. இல்லையென்றால் பல்வேறு தீய விளைவுகள் ஏற்படும் என வலியுறுத்தினார்.

உதவிப் பேராசிரியர் நிஷாத், நோய்த் தடுப்பு சமூக மருத்துவம் உதவிப் பேராசிரியர் டாக்டர் ஜெயலட்சுமி, ஆய்வாளர் ரேச்சல் பூர்ணா ஆகியோர் கருத்துரை ஆற்றினர். மருத்துவ சமூகப்பணியாளர் சித்ரகலா தொகுப்புரை ஆற்றினார்.

]]>
child health, child care http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/12/w600X390/RSZD_Bath_baby_img.jpg http://www.dinamani.com/health/children-health/2016/aug/12/குழந்தை-வளர்ப்பில்-மூடநம்பிக்கை-கூடாது-3377.html
3359 மருத்துவம் குழந்தைகள் நலம் பாலின் பெருமை மதி Thursday, August 11, 2016 05:35 PM +0530 ஒரு தாய் ஒரு முறை என்னிடம் வந்து, ‘பள்ளிக்குச் செல்லும் என் எட்டு வயது குழந்தை அதிக உடல் பருமனுடன் இருப்பதால் மற்ற குழந்தைகள் அவனை கேலி செய்கிறார்கள். இதனால் பால் உணவில் சேர்ப்பதை நிறுத்திவிட்டேன். அதற்கு பதிலாக பழச்சாறு கொடுக்கிறேன் என்று கூறினார். ‘பால் கொடுப்பதால் எடை உயரும்’ என்று நம்பும் பலருடைய கவனத்திற்கு சில அறிவியல்பூர்வமான உண்மைகளை கூற விரும்புகிறேன்.

பசும்பால் ஒரு நல்ல புரதம் நிறைந்த உணவு மட்டுமல்ல, சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளது. வளர்சிதை மாற்றங்களுக்கு தேவையான உயர்தர புரதம் பாலில் மட்டுமே காணப்படுகிறது.

உடல் வளர்ச்சி 21 வயது அடைந்ததும் முழுமை பெறுகிறது. அதுவரை குறைந்தபட்சம் எல்லோரும் தினமும் 2 கப் (100 ml – 1 கப்) அளவாவது உட்கொள்ள வேண்டும். 21 வயது முடிந்ததும் எலும்பு மற்றும் பற்களின் பராமரிப்புக்கு பால் மிகவும் அவசியமான உணவாகும்.

பாலில் டிரிப்டோபேன் (Tryptophan) என்ற அமினோ அமிலம் இருப்பதால் நரம்பு போதிய அளவு டிரிப்டோபேன் உடம்பில் சுரக்கப்படாததால் தூக்கமின்மை போன்ற பிரச்னை உருவாகலாம். தூங்க செல்வதற்கு முன் ஒரு டம்பள் அல்லது கப், பால் அருந்திவிட்டு பத்து நிமிடம் கழித்து தூங்கச் சென்றால் நல்ல ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்.

பாலில் இருக்கும் lactose (லாக்டோஸ்) சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தலாம். இது பெரும்பாலும் குழந்தைகளிடையே காணலாம். இந்தப் பிரச்னை இருக்குமானால் பாலுக்குப் பதிலாக மோர், தயிர் போன்ற உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம். பாலை நன்கு காய்ச்சி மேலே படியும் ஏட்டிகனை நீக்கிவிட்டால் பாலின் கொழுப்புத்தன்மை குறைந்துவிடும். உடல் பருமன் உடையவர்களும், பெரியவர்களும் தினமும் உணவுடன் தயிர், அல்லது மோரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

காபி, டீக்கு பதிலாக மோர் குடிக்கலாம். பல்வேறு பழங்களில் இருந்து சாறு தயாரிப்பது போலவே நாம் பழங்களுடன் பால் அல்லது தயிரை சேர்த்து லஸ்சிகளை தயாரித்து குழந்தைகளுக்கு அளிக்கலாம். பழங்களின் சத்துகளுடன் பால் அல்லது தயிரின் சத்துக்களும், சுவையும் சேர்வதால் சிறந்த ஊட்டச்சத்து மிக்க பானமாகவும் குழந்தைகளுக்கு ஏற்றதாகவும் அமைகிறது.

உங்கள் தோல் பளபளக்கவும், முடி உதிராமல் இருக்கவும், சுருக்கங்கள் விழாமல் இருக்கவும் தினமும் உணவில் தயிரை சேர்த்துக் கொள்ளுங்கள் தயிரில் லாக்டோபாஸிஸ் (Lactobacillus) என்ற நுண்கிருமிகள் குடல் பகுதியில் அல்சரை உருவாக்கும் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது. செலினியம் என்ற நச்சுப்பொருட்களை வெளியேற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் தயிரில் அதிகமாக உள்ளதால் புற்று நோய் வருவதை தடுக்க வல்லது.

குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே தயிரை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும். முக்கியமாக வயிற்றுப் போக்கு ஏற்பட்ட குழந்தைகளுக்கு தயிர் மற்றும் மோரை கொடுப்பதால் குடலில் வெளியேற்றப்பட்ட உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான நுண்கிருமிகளை மறுபடியும் குடலில் உற்பத்தி ஆவதற்கு ஏதுவாகிறது.

(Paneer) பன்னீர் என்று அழைக்கப்படும் பாலாடைக் கட்டியும் உடலுக்கு நல்ல புரதத்தை அளிக்கிறது. எடை குறைவாகவும், நோய் எதிர்ப்புத் தன்மை குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கும் பால்கட்டியை உணவில் சேர்த்துக் கொடுப்பதால் எடை உயர்ந்து, தொற்று நோய்கள் அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/11/w600X390/jug_and_glass_of_milk.jpg http://www.dinamani.com/health/children-health/2016/aug/11/பாலின்-பெருமை-3359.html
3267 மருத்துவம் குழந்தைகள் நலம் முதல் ஆறுமாதம் தாய்ப்பால் கட்டாயம்! மதி Wednesday, August 10, 2016 03:31 PM +0530 ஒவ்வோர் ஆண்டும் "உலக தாய்ப்பால் வாரம்' ஆகஸ்ட் முதல்வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம் ஒவ்வொரு தாயும் தாய்ப்பாலின் மகத்துவத்தையும், உன்னதத்தையும் உணர்ந்து தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என்பதே. மேலும், தாய்ப்பாலின் அவசியம் குறித்தும், இளம் தாய்மார்கள் கையாள வேண்டிய முறைகள் குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் அப்பல்லோ மருத்துவமனையின் மகளிர் மற்றும் மகப்பேறு சிறப்பு மருத்துவர் கௌரி மீனா.

"இன்றைய காலகட்டத்தைப் பொருத்தவரை பெரும்பாலான இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இருப்பினும் வேலைக்குச் செல்லும் இளம் தாய்மார்களுக்கான சில ஆலோசனைகளை வழங்கலாமென நினைக்கிறேன்.

தற்போது நம் நாட்டை பொருத்தவரை வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான பிரசவகால விடுமுறை என்பது ஆறுமாதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அது மிகவும் வரவேற்க தக்க விஷயம் என்றாலும் சில அலுவலகங்களில் வேலைக்குச் செல்லும் இளம் தாய்மார்களுக்கு ஆறுமாதகால விடுப்பு கிடைக்கிறதா? என்றால்  அது கேள்விக்குறிதான்.

அப்படி ஆறுமாதகால விடுப்பு கிடைக்காத பட்சத்தில், அந்த தாய்மார்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால்? தாங்கள்  திடீரென்று வேலைக்குச் சென்றுவிட்டால் குழந்தை தாய்ப்பாலுக்காக ஏங்கிவிடும் என்பதால் குழந்தை பிறந்த இரண்டு - மூன்று மாதங்களிலேயே தாய்ப்பாலை நிறுத்தி புட்டிப் பால் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். ஒருசிலர் தனக்கு அவ்வளவாக தாய்ப்பால் சுரக்கவில்லை என்றும் அதனால் புட்டிப் பால்  பழக்கத்தை ஏற்படுகின்றனர்.

இதுபோன்ற இளம் தாய்மார்களுக்கு முக்கியமாக நான் சொல்ல நினைப்பது குறைந்தபட்சம் ஒரு குழந்தைக்கு கட்டாயமாக ஆறுமாத காலமாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஆறுமாத காலம் வரை நிச்சயமாக புட்டிப் பால் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தக் கூடாது.

காரணம், குழந்தை பிறந்த ஆறுமாத காலம் வரை தாய்ப்பாலை விட சிறந்த உணவு வேறெதுவும் இருக்க முடியாது. பொதுவாக தாய்ப்பாலை இரண்டுவிதமாக பிரிக்கலாம். ஒன்று (Four Milk) அதாவது ஒவ்வொருமுறை தாய் பால்கொடுக்கும்போது முதலில் வருவது ஃபோர் மில்க். அதில் குழந்தைக்கு தேவையான மாவு சத்து அதிகம் இருக்கும். அடுத்து இரண்டாவதாக வருவது ஹைன்ட் மில்க் (Hynd Milk)  இதில் கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிக மிக அவசியமானது. இயற்கையாகவே தாய்ப்பாலின் தன்மை அப்படி அமைந்திருக்கிறது. இதனால்தான் தாய்ப்பால் நல்லமுறையில் அருந்தும் குழந்தைகளுக்கு டயோரியா, ஆஸ்துமா, ஓவர் வெயிட், த்ரொட் இன்ஃபெக்ஷன் போன்றவை ஏற்படுவது மிக மிக குறைவாக உள்ளது. மேலும் குழந்தையின் "ஐக்யூ'வும் நன்றாக வளர்ச்சியடைகிறது. அப்படியில்லாமல் அம்மாவின் அரவணைப்பில் பால் அருந்தாத குழந்தைக்கு அம்மாவின் அன்பு சரிவர கிடைக்காததால் பிற்காலத்தில் குழந்தைக்கு குடும்பத்தின் மீதான பாசம் பற்றுதல் குறைவாக உள்ளதாகவும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இப்படிப்பட்ட இக்கட்டான சூழலை இன்றைய இளம் தாய்மார்கள் தவிர்க்க பல்வேறு வழிகள் இருக்கின்றன:

வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் அலுவலகம்,  வீட்டிற்கு அருகில் இருந்தால் குழந்தையைப் பார்த்துக் கொள்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு குழந்தையை கொண்டு சென்று பால் அருந்த வைக்கலாம்.

ஒருவேளை தாய்மார்களின் அலுவலகம் தூரத்தில் இருந்தால் Breast Feeding Pumps  என்ற முறையில் பம்பை உபயோகப்படுத்தி பாலை எடுத்து வைத்துவிட்டுச் செல்லலாம். பொதுவாக நமது அறையின் தட்பவெட்ப நிலைக்கு  தாயிடம் இருந்து எடுக்கப்படும் தாய்ப்பாலானது 2 மணிநேரம் வரை தாங்கும். அதுவே குளிர்சாதனப்பெட்டியின் வெளிஅறைகளில் வைத்தால் குறைந்தது 6 மணி நேரம் வரை தாங்கும் திறன் கொண்டது. ஒருவேளை தாய்  குழந்தையைப் பிரிந்து 2 நாட்களுக்கு கட்டாயமாக வெளியூர் எங்காவது செல்ல வேண்டியிருந்தால் தாய்ப்பாலை குளிர்சாதனப்பெட்டியின் ப்ரீசரில் வைத்தால் 3-4 நாட்கள்வரை கெட்டுப்போகாது. காரணம் ப்ரீசரில் உயிரிகள் வளராது. அதனால் அதன் தன்மையும் கெட்டுப் போகாது. இதில் முக்கியமானது குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும் தாய்ப்பாலை எடுத்து பயன்படுத்தும்போது அதை சூடு பண்ணக் கூடாது. அப்படி சூடுப் பண்ணினால் அதில் உள்ள உயிர்ச் சத்துக்கள் அழிந்து அது பயனற்றதாக போய்விடும்.

இதுபோன்று பம்ப் பயன்படுத்தும் முறையில் இரண்டு விதம் இருக்கிறது. ஒன்று மேனுவலாக எடுப்பது மற்றொன்று மிஷின் வைத்து எடுப்பது. பிரசவகாலம் முடிந்து வெகு சீக்கிரத்தில் அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண்கள். குழந்தை பிரசவிக்கும் மருத்துவமனையிலேயே மருத்துவர்கள், செவிலியர் உதவியுடன் பம்ப் பயன்படுத்தும் முறையைப் பற்றி நன்கு அறிந்து, பயிற்சி பெற்று வர வேண்டும். அலுவலகத்தில் குளிர்சாதனப்பெட்டி இருந்தால் அலுவலக மேலதரிகாரிகளின் அனுமதியோடு பாலை எடுத்து வைக்கலாம்.

இன்றைய பச்சிளம் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாக கிடைத்திருப்பது.  "ஹியூமன் மில்க் பேங்க்' (Human Milk Bank).  அதாவது  குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனையிலும் இதுபோன்ற மில்க் பேங்க் சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது.

இந்த மில்க் பேங்க் பெரும்பாலும் குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகள், எச்.ஐ.வியால் பாதித்த தாயின் கருவில் பிறக்கும் குழந்தைகள், ஏதாவது காரணத்தினால் தாயை பிரிந்த குழந்தைகள் அல்லது உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் தாயின் குழந்தைகளின் நலனுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.  அங்கே பலதரப்பட்ட தாய்மார்களிடம் இருந்து பெறப்பட்ட தாய்ப்பால்  உரிய சோதனைகளுக்கு பிறகு தக்கமுறையில் பதப்படுத்தி சேமித்து பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும்.  தேவைப்படுபவர்கள் அங்கிருந்து தாய்ப்பாலைப் பெற்று குழந்தைக்கு புகட்டலாம்.

தாய்ப்பால் புகட்டுவதில் இன்னொரு நன்மை என்னவென்றால் தாயின் எடையை அதிகரிக்க செய்யாது. காரணம், உட்கார்ந்த நிலையிலேயே செய்யும் ஒருவித உடற் பயிற்சி தான் தாய்ப்பால் புகட்டுவது. 

 மேலும், ஒவ்வொரு தாய்க்கும் தன் குழந்தைக்கு கட்டாயமாக பாலுட்ட வேண்டும் என்கிற  "மைண்ட் செட்' வர வேண்டும். சமீபத்தில் கூட இதுபோன்ற ஒருசெய்தி கேள்விப் பட்டிருப்பீர்கள். அதாவது பார்லிமெண்ட்டில் அமர்ந்தபடியே ஒரு பெண் அமைச்சர் தனது குழந்தைக்கு பாலூட்டியதை. அதனால் ஒவ்வொரு தாய்மாரும்  தன்  குழந்தைக்கு நிச்சயம் பாலூட்ட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டாலே அவர்களுக்கு ஏதாவது ஒரு வழி நிச்சயம் கிடைக்கும்.

-ஸ்ரீதேவி குமரேசன்.

]]>
child health, breast feeding, mother http://www.dinamani.com/health/children-health/2016/aug/10/முதல்-ஆறுமாதம்-தாய்ப்பால்-கட்டாயம்-3267.html
3095 மருத்துவம் குழந்தைகள் நலம் உலகளாவிய நீடித்த வளர்ச்சியில் தாய்ப்பால் ஊட்டும் மகளிரின் பங்கு DN Saturday, August 6, 2016 05:47 PM +0530 கருவுருதலும், ஈன்றெடுத்த குழந்தைக்கு தன் உதிரத்தில் சுரந்த பாலை ஊட்டுவதும் தாயின் தனி உரிமையும் பெருமையும் அல்லவா!

பெண்களுக்கு இயற்கை தந்திருக்கும் மணி மகுடம்! இயற்கை பெண்களை மதிக்கிறது, போற்றுகிறது என்பதற்கு இதுவே சான்று!

தாய்ப்பால் அளிப்பதால் உலகளவில் பல வளர்ச்சிகள் ஏற்படும் என்கிறது இந்த வருடத்திய உலகத் தாய்ப்பால் வாரத்தின் மையக் கருத்து “Breast feeding – key to sustainable developments’.

இந்தப் புத்தாயிரம் ஆண்டில் பல வளர்ச்சி இலக்குகள் (Millenium Development Goals) நிர்ணயிக்கப்பட்டு அவற்றில் 17 நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளாக முக்கியத்துவம் பெறுகின்றன. குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிப்பதால் இதில் 7 இலக்குகளை அடையலாம் என்கிறது Lancet என்ற உலகத்தரம் வாய்ந்த மருத்துவப் பத்திரிகை!

1. முதல் இலக்கு - வறுமையை ஒழிப்பது

குழந்தை பிறந்த 6 மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே ஊட்டி அதன் பிறகு வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளுடன் தாய்ப்பாலும் தருவதால் உடல் மற்றும் மனநலம் பேணப்படுகிறது. பால் மாவுகளுக்கான செலவுகளும் சிகிச்சைகளுக்கான செலவும் இல்லை. தாய் உடல் நலத்துடன் இருப்பதால் பணிக்குச் சென்று சம்பாதிக்கலாம். இதனால் வறுமை ஒழியும்.

2. இரண்டாவது இலக்கு – பசிப்பிணியை ஒழிப்பது

தாய்ப்பாலில் குழந்தைகளுக்குத் தேவையான கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புகள், மற்றும் இரும்பு, தாமிரம், துத்தநாகம், அயோடின், செலினியம், மங்கனீசு, மக்னீஷியம் போன்ற பல நுண்ணூட்டச் சத்துக்களும் செரிந்து இருக்கிறது. எனவே பசிப்பிணி குழந்தையை நெருங்க முடியாது.

3. மூன்றாவது இலக்கு – Good health and well being – உடல் மற்றும் மன நலம்

நல்வாழ்விற்கான முக்கியமான இலக்கு! தாய்ப்பால் தருவதால் தாய்க்கும் குழந்தைக்கும் உடல் நலம் மற்றும் மன நலம் பேணப்படுகிறது.

குழந்தைக்கு

 1. நல்ல ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதால் ஊட்டச் சத்துக் குறைபாடு நோய்கள் இல்லை.
 2. தாய்ப்பாலில் நோய் எதிர்ப்புச் சக்திகள் இருப்பதால் பல உயிர்க்கொல்லி நோய்கள் வருவது குறைகிறது
 3. தாய் சேய் பாசப் பிணைப்பு அதிகமாகிறது
 4. தாய் குழந்தையை சேர்த்து அணைத்து கண்ணோடு கண் பார்த்து சிரித்து பேசி, பாடி பால் தருவதால் குழந்தையின் உணர்வுகள் தூண்டப்பட்ட நல்ல மனநிலை கிடைக்கிறது.
 5. குழந்தைக்கு Tender affection, love, care என்ற மென்மை, அன்பு, பாசம், அரவணைப்பு ஆகியவை கிடைக்கிறது.

தாய்க்கு :

 1. என் குழந்தைக்கு, என் பாலை அளித்து வளர்க்கிறேன் என்ற பெருமிதத்தால் சுயமதிப்பு (self esteem) அதிகரித்து, அகத்தின் அழகு முகத்தில் மிளிர்கிறது.
 2. கர்ப்ப காலத்தில் உடலில் சேர்ந்த சுமார் 3 கிலோ கொழுப்பு பாலூட்டுவதால் குறைக்கப்பட்டு தாய் தன் பழைய உடல் அமைப்பை எளிதில் பெறுகிறாள்.
 3. கருப்பை எளிதில் சுருங்கி அடிவயிறு சமநிலைப் பெறுகிறது.
 4. பால் ஊட்டும் ஆறு மாதங்கள் தாய் கர்ப்பம் தரிப்பதில்லை.
 5. பாலூட்டும் தாய்க்கு மார்பகப் புற்றுநோய் மற்றும் சினை முட்டைப் பை புற்று நோய் வரும் வாய்ப்பு குறைகிறது.
 6. நான்காவது இலக்கு – Quality Education தரமான கல்வி – தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைக்கு IQ அதிகம் என்பதை Lancet (2015) பத்திரிகை குறிப்பிடுகிறது. குழந்தையின் மூளை வளர்ச்சி, திறன் வளர்தல், அறிவு மேம்படுதல் ஆகியவற்றுக்கான DHA, Epidermal growth factor, cystine, taurine போன்ற பலவகை பொருள்கள் தாய்ப்பாலில் உள்ளன. நோய்கள் இன்றி, நல்ல மனநிலையுடன் IQ அதிகமானால் கல்வி வளர்ச்சிக்கு வானமே தான் எல்லை!
 7. எட்டாவது இலக்கு – தகுந்த பணியும் பொருளாதார வளர்ச்சியும் – Decent work and economic growth – தற்போது பெண்கள் பல சிகரங்களை எளிதில் அடைகிறாரக்ள். கல்வி, பணி, பணி உயர்வு, ஆராய்ச்சி, விளையாட்டு என்று பலப்பல துறைகளில் சாதனைப் பெண்களாக மகளிர் பரிமளிக்கிறார்கள். பணி புரியும் பெண்களால் வீட்டின் மற்றும் நாட்டின் பொருளாதாரமும் உயர்கிறது. பணிபுரியும் அனைத்து மகளிருக்கும் பேறு காலத்திலும் பாலூட்டும் காலத்திலும் போதுமான ஊக்கமும் ஆதரவும் அளிக்கப்பட வேண்டும்! இது Maternity Protection Act என்று பொதுவாக குறிப்பிடப்படுகிறது. ஊதியத்துடன் 6 மாதங்கள் விடுப்பு, பணி மாற்றம், பணி இட மாற்ற, பணியில் தினமும் பாலூட்டும் இடைவெளியில் அடிப்படை வசதிகளுடன் கூடிய தனி இடம் ஆகியவை அளிக்கப்பட வேண்டும். அடிப்படையில் பெண்களால் எளிதில் Multi tasking செய்ய முடியும். தேவையான ஆதரவு அளித்தால் மகளிர் வேலையையும், பாலூட்டுவதையும் எளிதில் சமாளிக்கலாம்.
 8. பத்தாவது இலக்கு – பொருளாதார ஏற்றத் தாழ்வை குறைத்தல் (Reduced In Quality) குடும்பத்தின் ஆணி வேரான தாயும், வாரிசான குழந்தைகளும் நல்ல உடல்நலம் மற்றும் மனநலத்துடன் இருந்தால் பொருளாதார வளர்ச்சி எளிதில் ஏற்படும். பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் குறையும்.
 9. 13 வது இலக்கு – Climate action – சுற்றுச் சூழல் பாதுகாப்பு – தாய்ப்பால் அளிப்பதால் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படுகிறது. இயற்கையான தாய்ப்பாலில் waste பொருட்கள் எதுவும் இல்லைல். மாவுப் பால் வகைகள் தயாரிக்க எரிபொருள் செலவு, தொழிற்சாலைகள் வெளியிடும் புகை, மற்றும் தூசி மாசு, சந்தைப்படுத்த உதவும் வாகனங்களால் ஏற்படும் எரிபொருள் செலவு, புகை, பால் மாலை பேக்கிங் செய்ய அட்டைப் பெட்டி, டின், வீடுகளில் மாவிலிருந்து பால் தயாரிக்கத் தேவையான தண்ணீர், எரிபொருள் என்று இந்த மாசுப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

எந்த ஒரு இயற்கைச் சீற்றத்தின் போதும் பேரிடர் காலத்திலும் தொடர்ந்து தாய்ப்பால் தரப்பட வேண்டும். இது தாய்க்கும் குழந்தைக்கும் பாதுகாப்பு.

சில புள்ளி விபரங்கள்

 1. தாய்ப்பால் கொடுப்பதால் இந்தியாவில் மட்டும் வருடத்துக்கு 1,56,000 குழந்தைகள் இறப்பதைத் தவிர்க்கலாம்.
 2. தாய்ப்பால் அளிப்பதால் உலக அளவில் வருடத்துக்கு 8,20,000 குழந்தைகள் இறப்பதைத் தடுக்கலாம்.
 3. குழந்தைகள் அறிவுத் திறன் மேம்படுவதால் இந்தியாவின் வருமானம் அதிகரிக்கும். இது வருடத்துக்கு சுமார் 4300 கோடி ரூபாய்.
 4. வருடத்துக்கு சுமார் 20000 மகளிர் மார்பகப் புற்றுநோயால் இந்தியாவில் மடிகின்றனர். தாய்ப்பால் அளிப்பதால் இதில் 4915 இறப்புகளை தடுக்க முடியும்.
 5. பிறக்கும் எல்லாக் குழந்தைக்கும் தாய்ப்பால் கொடுத்தால் வருங்காலத்தில் சர்க்கரை நோய் 35% குறையக் கூடும்.

தாய் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவது என்ற ஒரு இயற்கையான செயலால் உலகளவில் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்க முடியும்.

ஒவ்வொருவரும் நமது வீட்டிலிருந்து இந்த சாதனையைத் தொடங்கலாமா!

- Dr.N.கங்கா, குழந்தைகள் மருத்துவ நிபுணர், கும்பகோணம்

]]>
Mother, Feeding, Childcare, http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/6/w600X390/194_baby-n-mom.jpg http://www.dinamani.com/health/children-health/2016/aug/06/உலகளாவிய-நீடித்த-வளர்ச்சியில்-தாய்ப்பால்-ஊட்டும்-மகளிரின்-பங்கு-3095.html