Dinamani - செய்திகள் - http://www.dinamani.com/health/health-news/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2723631 மருத்துவம் செய்திகள் உடல் பருமனால் ஆபத்து! அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோய்த் தொற்று அபாயம்! IANS Tuesday, June 20, 2017 12:58 PM +0530 பை பாஸ் சர்ஜரி முடித்த நோயாளிகள் உடல் பருவமனாகவும் உள்ள நிலையில் அவர்களுக்கு ஆபரேஷன் முடிந்த 30 நாட்களில் நோய்த் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக புதிய ஆய்வொன்று கூறுகிறது.

நார்மல் பி எம் ஐ (BMI) எடையுள்ள நோயாளிகளை விட பி எம் ஐ 30 விட அதிகமிருப்பவர்களுக்கு 1.9 தடவை அறுவை சிகிச்சைக்குப் பின் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக கனடாவிலுள்ள அல்பர்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் டஸுகு டெராடா கூறுகிறார். மேலும் அவர் கூறுகையில், ‘உடல் பருமன் மற்றும் இதய நோய் மருத்துவத்தை மேம்படுத்துவதற்கு மேலும் சிறந்த மருத்துவ ஆய்வுகள் தேவை’ என்று பதிவு செய்தார்.

பி எம் ஐ மற்றும் கரோனரி ஆர்டெரி பைபாஸ் க்ராஃப்டிங் (CABG) அறுவைசிகிச்சை மற்றும் பெர்க்யூடேனியஸ் கரோனரி இண்டெர்வென்ஷன் (பி.சி.ஐ.) (இது கொரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி எனவும் அறியப்படுகிறது) ஆகிய பல்வேறு நோய்களுக்கும் இடையேயான தொடர்புகளை ஆய்வு செய்ய 56,722 நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகளை கனடியன் ஒபிஸிடி சம்மிட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.  

அறுவை சிகிச்சைக்குப் பிறகான நோய்த் தொற்று நோயாளிகள் மருத்துவமனையில் தங்கியிருக்கும் காலகட்டத்தை அதிகரித்துவிடுகிறது. இதனால் அவர்களுக்கு கூடுதல் மருத்துவ உதவிகள் தேவைப்படுகின்றன, தவிர மருத்துவ செலவுகள் மிகவும் அதிகரித்துவிடுகின்றன.

'அறுவை சிகிச்சைக்குப் பிறகு தகுந்த மருத்துவ பரிசோதனை செய்து வர இத்தகைய நோய்த் தொற்றுகளின் அபாயம் குறையும், தவிர நோயாளிகளும் தகுந்த கவனிப்பும் பெறுவார்கள்’ என்றார் அல்பர்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உதவி பேராசிரியர் மேரி ஃபோர்ஹன். 

'அறுவை சிகிச்சைக்குப் பிறகு பயன்படுத்தப்படும் செஸ்ட் பைண்டர்ஸ் (chest binders) சரியான அளவில் இருக்கிறதா, சரியாக வேலை செய்கிறதா என்பது மிகவும் முக்கியம். எங்களுடைய குழுவினர் அறுவை சிகிச்சைக்குப் பிறகான மருத்துவ கருவிகளை மறு ஆய்வு செய்வதிலும் புதிய கருவிகளை வடிவமைப்பதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் பை பாஸ் சர்ஜரி முடிந்தபின் நோயாளிகள் எவ்வித தொற்று நோய்க்கும் ஆளாகாமல் இருப்பார்கள்' என்றார் ஃபோர்ஹன்.

]]>
Obesity, bypass surgery, உடல் பருமன், நோய் தொற்று http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/19/w600X390/heart_attack_14417.jpg http://www.dinamani.com/health/health-news/2017/jun/19/obesity-linked-to-higher-infection-risk-after-bypass-surgery-2723631.html
2723838 மருத்துவம் செய்திகள் தமிழகத்தில் 5 மாதங்களில் 3,000 பேருக்கு டெங்கு பாதிப்பு: தடுப்பு பணிகளைத் தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல் ஜெனி ஃப்ரீடா Tuesday, June 20, 2017 02:54 AM +0530 தமிழகத்தில் 5 மாதங்களில் 3,000-த்துக்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
2016-ஆம் ஆண்டு 2,500 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 5 மாதங்களிலேயே 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளது நோயின் தீவிரத்தை அறிவிப்பதாக உள்ளது. எனவே, தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
டெங்கு பாதிப்பு: அண்மைக்காலமாக பிற நோய்களைக் காட்டிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. 1980 முதல் 2000 ஆண்டுகளுக்குட்பட்ட ஆண்டுகளில் தில்லி, ஹரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், இமாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மட்டுமே அதிக அளவில் காணப்பட்ட டெங்கு பாதிப்பு, தற்போது பெரும்பாலான மாநிலங்களுக்கு பரவியுள்ளது.
ஆண்டு முழுவதும் பாதிப்பு: ஏடிஸ் எனப்படும் நல்ல நீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் கொசுக்களால் டெங்கு பரப்பப்படுகிறது. பருவமழைக் காலங்களில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்திய இந்த வகைக் கொசுக்கள் அண்மைக் காலமாக ஆண்டு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இது தொடர்பாக முன்னாள் பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் இளங்கோ கூறியதாவது:
ஏடிஸ் கொசுக்களானது எல்லா காலநிலைகளுக்கும் நிலைத்திருக்கும் வகையில் அதன் குணம் மாறியுள்ளது.
மேலும் 20 முதல் 25 நாள்களாக இருந்த அதன் ஆயுள்காலம் தற்போது 40 நாள்களாக அதிகரித்துள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கொசுக்களால் பரவும் பிற நோய்களைப் பொருத்தவரை கொசுக்களின் அடர்த்தியைக் (எண்ணிக்கையைக்) கொண்டு அவை பரவும். ஆனால், ஒரு ஏடிஸ் கொசுவால் பலருக்கு டெங்கு காய்ச்சலைப் பரப்ப முடியும். இந்தக் காரணங்களால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஆண்டு முழுவதும் ஏற்படுகிறது என்றார்.
தமிழகத்தில் அதிகரிப்பு: இந்நிலையில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது டெங்கு பாதிப்பு தீவிரமாகியுள்ளது. 2016-ஆம் ஆண்டில் 2,531 பேர் பாதிக்கப்பட்டு, 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் 2017-ஆம் ஆண்டில் மே 31-ஆம் தேதி வரையில் 3,259 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று மத்திய சுகாதாரத் துறையின் இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குறிப்பாக கன்னியாகுமரி, ராமநாதபுரம் (பரமக்குடி), திருநெல்வேலி சங்கரன்கோவில்), திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை தற்போதுதான் தொடங்கியுள்ளது என்பதாலும், வடகிழக்கு பருவமழைக் காலம் அடுத்து வரவுள்ளதாலும் இந்த எண்ணிக்கை மேலும் பலமடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மத்திய அரசு கடிதம்: இந்நிலையில் மத்திய அரசின் தேசிய ஊரகத் திட்டத்தின் கூடுதல் செயலர் அருண் கே பாண்டா அனைத்து மாநிலத்தின் சுகாதாரத் துறை செயலர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் டெங்கு பாதிப்பு கடந்த ஓரிரு ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. 2016-ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். டெங்கு சிகிச்சைக்கென்று இதுவரை பிரத்யேக மருந்துகளும், தடுப்பு மருந்துகளும் இல்லை. எனவே, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, நோய் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியது: தமிழகத்தில் வறட்சி நிலவி வருவதால், தண்ணீரைச் சேமித்து வைக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. அவற்றை முறையாக மூடி வைத்து பராமரிக்காத காரணத்தால் டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் பரவுகின்றன. மேலும் பருவமழைக் காலத்தில் சுற்றுப்புறங்களில் உள்ள பயன்படுத்தாத டயர், தேங்காய் ஓடுகள், கட்டுமானப் பணியிடங்களில் உள்ள குழிகளில் போன்றவற்றில் நீர் தேங்கி, அதில் ஏடிஸ் கொசுக்கள் பரவுகின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை அரசு சார்பில் 75 இடங்களில் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியைத் தடுப்பதற்கு உள்ளாட்சி நிர்வாகங்களுடன் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் உள்ளன என்றார்.
எல்லைகளில் கண்காணிப்பு: டெங்கு காய்ச்சல் பாதிப்பு அண்டை மாநிலமான கேரளத்தில் அதிகமாகக் காணப்படுகிறது. எனவே, தமிழக - கேரள எல்லைகளான கன்னியாகுமரி, தேனி, கோவை, திருநெல்வேலி ஆகியப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக - ஆந்திரம் மற்றும் கர்நாடக எல்லைகளும் கண்காணிப்பில் உள்ள என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மலேரியா இடத்தைப் பிடித்த டெங்கு கொசுக்கள்!
டெங்கு கொசுக்கள் அதிகரித்துள்ளதால் மலேரியாவைப் பரப்பும் கொசுக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
காடுகள், காட்டில் உள்ள காய்ந்த மரப்பொந்துகள், ரப்பர் தோட்டங்களில் பால் வடிவதற்காக வைக்கப்படும் கொட்டாங்குச்சிகள், அன்னாசிப்பழச் செடியில் உள்ள தண்டுகள் உள்ளிட்டவற்றில் அதிக வீரியமுடைய ஏடிஸ் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன.
ஆனால் காடுகள் அழிக்கப்படுவதால் இந்தக் கொசுக்கள் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்துவிட்டன என்பது 2016-ஆம் ஆண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மலேரியாவைப் பரப்பும் கொசுக்களும் நல்ல நீரில் இனப்பெருக்கம் செய்பவை ஆகும். இந்நிலையில், டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து, மலேரியாவைப் பரப்பும் கொசுக்களை உயிரியல் மாற்றம் செய்துவிட்டன. இதனால் மலேரியா பாதிப்பு குறைந்து, டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது என்று பூச்சியியல் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/20/w600X390/mosquto.jpg http://www.dinamani.com/health/health-news/2017/jun/20/தமிழகத்தில்-5-மாதங்களில்-3000-பேருக்கு-டெங்கு-பாதிப்பு-தடுப்பு-பணிகளைத்-தீவிரப்படுத்த-மத்திய-அரசு-2723838.html
2723096 மருத்துவம் செய்திகள் கேரளம்: வைரஸ் காய்ச்சலுக்கு 6 மாதங்களில் 103 பேர் சாவு Monday, June 19, 2017 12:34 AM +0530 கேரளத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பல வகையான காய்ச்சலுக்கு இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனவே, போர்க்கால அடிப்படையில் அரசின் துப்புரவுப் பணிகளில் மக்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மாநில சுகாதாரத் துறையின் சமீபத்திய தகவல்படி, கடந்த ஜனவரி மாதம் முதல், பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல், எலி காய்ச்சல் போன்ற பல வகையான விஷக்காய்ச்சல்களுக்கு பெண்கள், குழந்தைகள் உள்பட 103 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், முதல்வர் பினராயி விஜயன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
குப்பைகள் தேங்குவதால், கொசுக்கள் பெருகுவதே, இந்த காய்ச்சலும், தொற்றுநோய்களும் பரவுவதற்கு முதன்மைக் காரணங்களாகும். நோய்கள் பரவாமல் தடுப்பதற்கு, தூய்மையைப் பராமரிக்க வேண்டியது அவசியமாகும். எனவே, இந்தச் சூழலை எதிர்கொள்வதற்கு, போர்க்கால நடவடிக்கையாக, அரசியல் கட்சிப் பிரமுகர்களும், தன்னார்வ அமைப்பினரும், அரசு ஊழியர்களும் ஒன்றிணைந்து அரசின் துப்புரவுப் பணிகளில் ஈடுபட வேண்டும். ஏற்கெனவே மாநில அரசு மேற்கொண்ட தூய்மைப் பணிகளின் காரணமாக, காய்ச்சல் பரவுவது குறைந்துள்ளது.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், போதிய மருத்துவர்கள் உள்ளனர். போதிய அளவில் மருந்துகளும் உள்ளன என்று பினராயி விஜயன் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்து வைரஸ் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்காக சில ஆலோசனைகளைத் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
காய்ச்சல் காரணமாக, அரசு மருத்துவமனைகளுக்குச் சராசரியாக 20,000 பேர் சிகிச்சைக்காக வருகிறார்கள். இந்த அவசரகால சூழலை எதிர்கொள்வதில், மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜாவும், அவரது துறையும் தோல்வியடைந்து விட்டனர் என்று ரமேஷ் சென்னிதலா கூறினார்.
இதனிடையே, அவரது குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்த அமைச்சர் சைலஜா, இந்தப் பிரச்னையை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதற்கு ரமேஷ் சென்னிதலா முயலுகிறார் என்றார்.
மேலும், இந்தப் பிரச்னையில் இருந்து மீள்வதற்கு கூட்டு முயற்சி அவசியம் என்றும் அவர் கூறினார்.

 

]]>
http://www.dinamani.com/health/health-news/2017/jun/19/கேரளம்-வைரஸ்-காய்ச்சலுக்கு-6-மாதங்களில்-103-பேர்-சாவு-2723096.html
2722609 மருத்துவம் செய்திகள் ஸ்டான்லி மருத்துவமனை: தாமதமில்லா சிகிச்சைப் பிரிவில் கூடுதல் படுக்கைகள் DIN DIN Sunday, June 18, 2017 02:21 AM +0530 ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள காலதாமதமில்லா அறுவை சிகிச்சைப் பிரிவில் கூடுதலாக 25 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.55.5 லட்சம் செலவில் கூடுதல் படுக்கைகளுடன் புதுப்பிக்கப்பட்ட வார்டு, அலங்கார நுழைவு வாயில் ஆகியவற்றை நிதியமைச்சர் பா.ஜெயக்குமார், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனர்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் உள்ள இந்த காலதாமதமில்லா அறுவைச் சிகிச்சை வார்டுக்கு (Zero delay surgical ward)   கொண்டு வரப்படும் முன்பே தகவல் தெரிவிக்கப்படும். அதன் அடிப்படையில் நோயாளிக்கு தேவையான அவசர முதலுதவிகளை எவ்வித தாமதமும் இன்றி மேற்கொள்ள முடியும்.
இந்த அறுவைச் சிகிச்சை வார்டானது 24 மணி நேரமும் செயல்படும். ஏற்கெனவே 15 படுக்கைகளுடன் செயல்பட்ட இந்த வார்டு தற்போது 40 படுக்கைகளாக விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வார்டில் குளிர்சாதனை வசதியுடன்கூடிய நவீன படுக்கை வசதி, செயற்கை சுவாசக் கருவிகள், அருகிலேயே எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் என அனைத்தும் உள்ளன.
இந்த வார்டில் உள்ள மருத்துவக் குழுவில் பொது அறுவைச் சிகிச்சை நிபுணர், எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் மற்றும் தலைக்காய சிகிச்சை, நரம்பியல் நிபுணர்கள் ஆகியோர் 24 மணி நேரமும் பணியில் இருப்பர் என்று மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ, கல்லூரி மருத்துவமனை முதல்வர் பொன்னம்பலம் நமச்சிவாயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/18/w600X390/stanly.jpg சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட, தாமதமில்லாத அறுவைச் சிகிச்சை பிரிவை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து பார்வையிடும் நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் http://www.dinamani.com/health/health-news/2017/jun/18/ஸ்டான்லி-மருத்துவமனை-தாமதமில்லா-சிகிச்சைப்-பிரிவில்-கூடுதல்-படுக்கைகள்-2722609.html
2722608 மருத்துவம் செய்திகள் குழந்தைகளுக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை!: மியாட் மருத்துவமனையில் மறுவாழ்வு Sunday, June 18, 2017 02:19 AM +0530 தான்சானியா நாட்டைச் சேர்ந்த 6 மாதக் குழந்தைக்கும், செஷல்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 வயதுக் குழந்தைக்கும் கல்லீரல் மாற்று சிகிச்சை செய்து சென்னை மியாட் மருத்துவமனையில் மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மியாட் மருத்துவமனை கல்லீரல் மாற்று சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர் ஆர்.சுரேந்திரன், டாக்டர் பாரி விஜயராகவன், மியாட் மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:
6 மாதக் குழந்தைக்கு...தான்சானியா நாட்டைச் சேர்ந்த 6 மாத ஆண் குழந்தை அமீத் ஹாஃபித் பிறந்த 15 நாள்களில் மஞ்சள்காமாலை, ரத்தப் போக்கு கண்டறியப்பட்டது. வயிற்றில் நீர் சேர்ந்தது; மஞ்சள்காமாலை அதிகரித்தது. தாய்ப்பால் உள்ளிட்ட உணவை குழந்தையால் சாப்பிட முடியவில்லை. குறைவான உணவு கிரகிப்பு, வெள்ளை களிமண் போன்ற மலம், குழந்தையின் எடை வெறும் 6 கிலோ ஆகிய விளைவுகள் ஏற்பட்டன. 4 மாதங்களில் கவலைக்கிடமான நிலை ஏற்பட்டது.
உயர் சிகிச்சைக்காக குழந்தையை சென்னை மியாட் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பிறப்பிலேயே பித்த நாளங்கள் பாதிக்கப்பட்டதால் ('பைலரி அட்ரீஸியா') செயலிழப்பு நிலைக்கு கல்லீரல் தள்ளப்பட்டது. இதையடுத்து தாயின் கல்லீரலின்
ஒரு பகுதியை வெட்டி எடுத்து, 12 மணி நேர மாற்று சிகிச்சை மூலம் குழந்தைக்கு புதிதாக கல்லீரல் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
2 வயது குழந்தைக்கு...செஷல்ஸ் நாட்டின் 2 வயது பெண் குழந்தை கிரேஸ் கியாரா செரிலுக்கும் 'பைலரி அட்ரீஸியா' எனப்படும் பித்தநாள பிறவிக் குறைபாடு இருந்தது. பிறந்த 6 மாதத்தில் இலங்கையில் இதற்காக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அண்மையில் 2 வயதை இக்குழந்தை அடைந்தபோது மஞ்சள் காமாலை, உணவு சாப்பிட முடியாமை உள்ளிட்ட கல்லீரல் செயலிழப்பு பாதிப்புகள் ஏற்பட்டன.
இதையடுத்து சென்னை மியாட் மருத்துவமனையில் தாயின் கல்லீரலின் ஒரு பகுதி எடுக்கப்பட்டு, குழந்தை கிரேஸ் கியாரா செரிலுக்கும் மாற்று சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.
இரு குழந்தைகளும் தாயுடன் நலமாகி விரைவில் அவர்களின் நாடுகளுக்குத் திரும்புகின்றனர்.


 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/18/w600X390/miot.jpg கல்லீரல் மாற்று சிகிச்சை மூலம் மறுவாழ்வு பெற்ற குழந்தைகள், அவர்களது தாயுடன் டாக்டர் ஆர்.சுரேந்திரன், மருத்துவமனைத் தலைவர் மல்லிகா மோகன்தாஸ். http://www.dinamani.com/health/health-news/2017/jun/18/குழந்தைகளுக்கு-கல்லீரல்-மாற்று-சிகிச்சை-மியாட்-மருத்துவமனையில்-மறுவாழ்வு-2722608.html
2722452 மருத்துவம் செய்திகள் பாதி எலுமிச்சை பழத்தை படுக்கை அறையில் வைத்தால் என்ன ஆகும்? Saturday, June 17, 2017 02:43 PM +0530 எலுமிச்சை பழத்தின் பாதியைப் படுக்கை அறையில் வைப்பதால் பல நன்மைகள் உண்டாகும். அவை:

 • படுக்கை அறையில் உறங்கும்போது எலுமிச்சையின் நறுமணம் சுவாசத்துடன் மார்புக்குள் செல்வதால், சளி, ஆஸ்துமா, அலர்ஜி, தொண்டை அடைப்பு போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும்.
 • நினைவுத்திறன் அதிகரிப்பதோடு, மனம், மூளையின் செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்கும் என்பது ஜப்பானிய விஞ்ஞானிகள் கருத்து.
 • எலுமிச்சை, நோய்த்தொற்றுக்களை அழிக்கும் தன்மைக் கொண்டது. இதை படுக்கை அறையில் வைப்பதால், கிருமிகளை அழிக்கிறது.

 • உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் உறங்கும் அறையில் எலுமிச்சையை வெட்டி வைத்தால் அதன் வாசனை ரத்த அழுத்த பிரச்னையை சரி செய்ய உதவும்.
 • எலுமிச்சையை இரண்டாக வெட்டி அதில் கிராம்பை குத்தி வைத்து, அதை படுக்கும் அறையில், சமையல் அறையில் வைத்தால், வீட்டில் எறும்புகள், கொசுக்கள் மற்றும் பூச்சிகளின் தொல்லைகள் இல்லாமல் இருக்கும்.

- கண்ணம்மா பாரதி

]]>
lemon, லெமன், எலுமிச்சை பழம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/17/w600X390/household-uses-lemons.jpg http://www.dinamani.com/health/health-news/2017/jun/17/benefits-of-lemon-kept-in-bed-room-2722452.html
2721994 மருத்துவம் செய்திகள் ஜூலை முதல் குழந்தைகளுக்கு ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து Saturday, June 17, 2017 02:30 AM +0530 தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ், ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் தமிழகத்தில் ஜூலை மாதம் முதல் தொடங்க உள்ளது. குழந்தை பிறந்த ஒன்றரை மாதம், இரண்டரை மாதம், மூன்றரை மாதம் என 3 தவணைகளாக இந்தத் தடுப்பு மருந்து வழங்கப்படும்.
ஜூலை மாதம் முதல் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இந்த மருத்து இலவசமாக வழங்கப்படும். இதனை தனியார் மருத்துவமனைகளில் பெற ரூ.3 ஆயிரம் வரை செலவாகும்.
ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து அளிப்பதற்கு மாநில பயிற்றுநர்களுக்கான பயிற்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியது:
உலக அளவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பதற்கு வயிற்றுப்போக்கு இரண்டாவது முக்கியக் காரணமாக உள்ளது. இந்தியாவில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் மிதமான மற்றும் கடுமையான வயிற்றுப்போக்குகளில் 40 சதவீதம் ரோட்டா வைரஸ் கிருமி தொற்றினால் ஏற்படுகிறது. ஓராண்டில் 32.7 லட்சம் குழந்தைகள் புறநோயாளிகளாகவும், 8.72 இலட்சம் குழந்தைகள் உள்நோயாளிகளாகவும் ரோட்டா வைரஸ் தொற்றினால் ஏற்படும் வயிற்றுப்போக்குக்காக சிகிச்சை பெறுகின்றனர்.
வயிற்றுப்போக்கின் தாக்கம் மற்றும் இறப்புகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த அணுகுமுறை மிகவும் அவசியம். அதன்படி, ரோட்டா வைரஸ் மற்றும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பு மருந்துகள் அளித்தல், சுகாதாரம் பேணுதல், தாய்ப்பால் அளிப்பதை ஊக்குவித்தல், துத்தநாக மாத்திரை அளித்தல் உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டியது அவசியம்.
ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து திட்டம் தற்போது 92 நாடுகளில் நடைமுறையில் உள்ளது என்றார் அவர்.
சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/17/w600X390/ROTO.jpg ரோட்டா வைரஸ் மருந்து திட்டத்தில் மாநில பயிற்றுநர்களுக்கான பயிற்சி கையேட்டை வெள்ளிக்கிழமை வெளியிட்ட சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். http://www.dinamani.com/health/health-news/2017/jun/17/ஜூலை-முதல்-குழந்தைகளுக்கு-ரோட்டா-வைரஸ்-தடுப்பு-மருந்து-2721994.html
2721990 மருத்துவம் செய்திகள் 'இந்தியாவில் 25 லட்சம் பேருக்கு இதய அறுவை சிகிச்சை தேவை' Saturday, June 17, 2017 02:27 AM +0530 இந்தியாவில் ஆண்டுக்கு 25 லட்சம் பேருக்கு இதய அறுவை சிகிச்சைகள் தேவைப்படுகின்றன என்று மத்திய மருந்துகள் துறை முன்னாள் செயலர் வி.கே.சுப்புராஜ் கூறினார்.
கிலென்ஈகிள்ஸ் குளோபல் மருத்துவமனையின் சார்பில், ஒருங்கிணைந்த இதய செயலிழப்பு சிகிச்சைத் திட்டம் மற்றும் இதய செயலிழப்பு குறித்த இணையதள பதிவேடு ஆகியவைத் தொடங்கும் திட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வி.கே.சுப்புராஜ் பேசியது:
கடந்த 2015 -ஆம் ஆண்டில் இந்தியா இதய நோய்களுக்கான தலைநகரமாக மாறும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. அந்த நிலையை நாம் அடைந்துவிட்டோம் என்றாலும், அதன் தீவிரம் என்ன என்பதைத் தெரிவிக்கும் புள்ளிவிவரங்கள் குறித்த பதிவேடு எதுவும் இல்லை.
இதே போன்றதொரு பிரச்னையை 1972 -ஆம் ஆண்டு பின்லாந்து சந்தித்தது. அங்கு இதய நோய்களால் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். அந்த நாட்டினர் பால் அதிகமாகப் பருகுவது வழக்கம். ஆய்வில் நாட்டில் பாலின் தரம் வேறு வேறாக மாறுபட்டிருந்தது கண்டறியப்பட்டது. எனவே, ஒரே தரத்திலான பால் பயன்பாட்டை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டதில், 20 ஆண்டுகளுக்குப் பின் இதய நோய்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது.
ஆனால், இந்தியா போன்ற நாட்டுக்கு அது சாத்தியமில்லை. எனவே, தற்காத்துக் கொள்வதுதான் சிறந்த நடவடிக்கையாக இருக்கும்.
இந்தியாவில் ஆண்டுக்கு 25 லட்சம் பேருக்கு இதய அறுவை சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. ஆனால், 4 லட்சம் பேருக்குத்தான் இந்த சிகிச்சைகள் கிடைக்கிறது. மீதம் 21 லட்சம் பேர் அறுவை சிகிச்சைகள் இல்லாமல் வாழ்கின்றனர். அதிக செலவு காரணமாக, பலர் தங்களுக்கு இதய பாதிப்பு இருப்பது தெரிந்தும், சிகிச்சை பெறாமலேயே உயிரிழக்கின்றனர் என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் ஐஜி ஆனந்த் மோகன், மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சைகள் துறை இயக்குநர் டாக்டர் சந்தீப் அட்டாவார், இதய செயலிழப்பு மற்றும் இதய மாற்று அறுவை சிகிச்சைத் திட்டத்தின் இணை இயக்குநர் டாக்டர் ஆர்.ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

]]>
http://www.dinamani.com/health/health-news/2017/jun/17/இந்தியாவில்-25-லட்சம்-பேருக்கு-இதய-அறுவை-சிகிச்சை-தேவை-2721990.html
2720679 மருத்துவம் செய்திகள் டெங்கு: வளர்ந்த கொசுக்களை ஆய்வு செய்யத் திட்டம் Thursday, June 15, 2017 11:14 AM +0530 டெங்கு காய்ச்சலைப் பரப்பும் வளர்ச்சியடைந்த ஏடிஸ் வகை கொசுக்களைச் சேகரித்து, ஆய்வு மேற்கொள்ளும் திட்டத்தை தமிழக அரசு விரைவில் தொடங்க உள்ளது. இதன் மூலம் டெங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த முடியும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவுவது வழக்கம்.
டெங்கு சவால்: பிற தொற்றுநோய்களை ஓரளவு கட்டுக்குள் வைத்திருந்தாலும், டெங்கு காய்ச்சல் தடுப்பு பெரும் சவாலாக உள்ளது. மத்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் 2016 -ஆம் ஆண்டில் 2,531 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். நேரடியாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே இந்த புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பிற பிரச்னைகளோடு டெங்கு காய்ச்சலும் தாக்கி உயிரிழந்தவர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. அந்த வகையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
கட்டுப்படுத்த நடவடிக்கை: நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்துவது போன்று நோய் தடுப்புப் பணிகளிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
தமிழகப் பொது சுகாதாரத் துறையினர் களப்பணியாளர்களின் மூலம் கொசு உற்பத்தியைத் தடுப்பது, சுற்றுப்புறங்களில் கிடக்கும் பொருள்களில் தண்ணீர் தேங்கி கொசு இனப்பெருக்கம் செய்வதைத் தடுப்பது உள்ளிட்டப் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய ஆய்வுத் திட்டம்: வழக்கமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து, வளர்ச்சியடைந்த கொசுக்களைச் சேகரித்து ஆராய்ச்சி செய்யும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஓசூரில் உள்ள அரசு பூச்சியியல் மற்றும் விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் தடுப்பு நிறுவனம் இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள உள்ளது.
இந்த ஆராய்ச்சி நிறுவனமானது 1987 -ஆம் ஆண்டு, பிளேக் நோய் கண்காணிப்புக்காக ஓசூரில் நிறுவப்பட்டது. தொற்றுநோய்கள் குறித்த பரிசோதனைகள், கள ஆய்வுகள், தொற்றுநோய் மற்றும் விலங்குகளின் மூலம் பரவும் நோய்கள் குறித்த கண்காணிப்புப் பணிகள் உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
கொசுக்கள் ஆய்வு: இந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ள பகுதிகள், காய்ச்சல் பரவியுள்ள இடங்கள் ஆகியவற்றில் முட்டைகளில் இருந்து வெளியே வந்து வளர்ச்சியடைந்த கொசுக்கள் சேகரிக்கப்பட உள்ளன. மேலும் அந்த கொசுக்களைப் பரிசோதனை செய்து, அவற்றில் டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் இருப்பது கண்டறியப்படும்.
இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியது:
ஓசூரில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் ஏற்கெனவே ஜப்பானிய மூளைக்காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது. அந்த முயற்சி வெற்றி பெற்ற நிலையில், அதே முறையில் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்களையும் ஆய்வு செய்யத் தீர்மானித்துள்ளோம்.
ஏடிஸ் கொசுக்களை ஆய்வு செய்வதற்கான கருவிகள், கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம். இன்னும் 6 மாதத்தில் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து ஆராய்ச்சி தொடங்கும். இதன் மூலம் டெங்கு பாதிப்பு உள்ள இடங்களில் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்த முடியும் என்றார் அவர்.
ஏடிஸ் கொசுக்கள் பெருகுவது எப்படி?
டெங்கு, சிக்குன்குனியா, ஸிகா வைரஸ் உள்ளிட்டவை ஏடிஸ் வகை கொசுக்களால் பரவுகின்றன. இந்தக் கொசுக்கள் நல்ல நீரில் உருவாகிதான் இனப்பெருக்கம் செய்கின்றன. வீடுகளில் திறந்த நிலையில் இருக்கும் தண்ணீர் தொட்டிகள், சுற்றுப்புறங்களில் கிடக்கும் டயர், தேங்காய் மட்டை உள்ளிட்டவற்றில் மழை நீர் தேங்கும்போது அதில் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். மேலும், இந்த வகை கொசுக்கள் இரவு நேரங்களில் மனிதர்களைக் கடிக்காது. அதிகாலை, மாலை நேரங்களில்தான் பெரும்பாலும் கடிக்கும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2013/5/14/2/w600X390/dengue-3.jpg http://www.dinamani.com/health/health-news/2017/jun/15/வளர்ந்த-கொசுக்களை-ஆய்வு-செய்யத்-திட்டம்-2720679.html
2720678 மருத்துவம் செய்திகள் சங்கர நேத்ராலயா பட்டமளிப்பு விழா DIN DIN Thursday, June 15, 2017 03:26 AM +0530 சங்கர நேத்ராலயா அகாதெமி சார்பில் 30 பேருக்கு மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பப் பட்டம் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் ஓர் அங்கமாக 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அகாதெமியின் முதல் பட்டமளிப்பு விழா இது.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற இந்த அகாதெமியில் மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பம், கண் மருத்துவம், மருத்துவமனை மேலாண்மை படிப்புகள் வழங்கப்படுகின்றன.
நிகழ்ச்சியில் இளநிலை மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பம் படித்த 30 பேருக்கும், முதுநிலை மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பம் படித்த 2 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. இவர்களில் 17 பேர் முதல் தலைமுறை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த சேவை செய்த மருத்துவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 9 பேர் நிகழ்ச்சியில் கெளரவிக்கப்பட்டனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/15/w600X390/sankaranethralaya.jpg மாணவிக்குப் பட்டம் வழங்குகிறார் மருத்துவமனை நுண்ணுயிரியல் துறை தலைவர் டாக்டர் எச்.என்.மாதவன். http://www.dinamani.com/health/health-news/2017/jun/15/சங்கர-நேத்ராலயா-பட்டமளிப்பு-விழா-2720678.html
2720677 மருத்துவம் செய்திகள் மூளைச்சாவு அடைந்த மில் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்: 9 பேருக்கு மறுவாழ்வு Thursday, June 15, 2017 03:24 AM +0530 சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மில் தொழிலாளியின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கியதன் மூலம் 9 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் தாலுகா ராம் நகரைச் சேர்ந்தவர் என்.செல்வராஜ் (43). இவர், பொங்கலூரில் இருந்து பல்லடம் நோக்கி இருசக்கர வாகனத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, எதிரே வந்த வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயத்துடன் சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், உயர் சிகிச்சைக்காக அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், செல்வராஜ் செவ்வாய்க்கிழமை மூளைச்சாவு அடைந்ததாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவரது உடலில் இருந்து இதயம், கல்லீரல், நுரையீரல், இரண்டு சிறுநீரகங்கள், கண்கள், தோல், எலும்பு ஆகியவை புதன்கிழமை அகற்றப்பட்டு சென்னை, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தானமாக வழங்கப்பட்டது.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/15/w600X390/selvaraj.jpg http://www.dinamani.com/health/health-news/2017/jun/15/மூளைச்சாவு-அடைந்த-மில்-தொழிலாளியின்-உடல்-உறுப்புகள்-தானம்-9-பேருக்கு-மறுவாழ்வு-2720677.html
2720623 மருத்துவம் செய்திகள் சென்னையில் மெட்ரோ ரத்த வங்கி Thursday, June 15, 2017 01:33 AM +0530 மத்திய அரசின் நிதியுதவியுடன் சென்னையில் ரூ.213 கோடியில் மெட்ரோ ரத்த வங்கி அமைக்கப்பட உள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
உலக ரத்தக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு, ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் அளித்த பேட்டி:
சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய பெருநகரங்களில் மெட்ரோ ரத்த வங்கியை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ரூ.213 கோடியில் இந்த ரத்த வங்கி அமைய உள்ளது.
அந்த வகையில் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், புதுச்சேரி, அந்தமான் மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்களுக்கும் ஒருங்கிணைப்பு ரத்த வங்கியாக இது அமையும் என்றார் அவர்.
கிண்டியிலா? அண்ணா நகரிலா?: மெட்ரோ ரத்த வங்கி குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'சென்னை அண்ணா நகர், கிண்டி கிங் ஆராய்ச்சி மைய வளாகம் ஆகிய இடங்களில் மெட்ரோ ரத்த வங்கிக்காக அரசுக்குச் சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஏதாவது ஒரு இடத்தை தமிழக அரசு இறுதி செய்யும். மத்திய அரசிடம் இருந்து மெட்ரோ ரத்த வங்கிக்கான நிதி இதுவரை கிடைக்கவில்லை. இடம் இறுதி செய்யப்பட்டு, நிதி கிடைத்த உடன் இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கும்' என்று தெரிவித்தனர்.
2,827 யூனிட் ரத்தம்: ரத்தக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் 55 ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டன. இதன் மூலம் 2,827 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. சென்னை மாவட்டத்தில் 8 அரசு ரத்த வங்கிகளின் மூலம் முகாம் நடத்தப்பட்டு 638 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/15/w600X390/vijayabaskar.jpg உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை, சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் ரத்ததான முகாமை தொடக்கி வைத்த சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். http://www.dinamani.com/health/health-news/2017/jun/15/சென்னையில்-மெட்ரோ-ரத்த-வங்கி-2720623.html
2719999 மருத்துவம் செய்திகள் ஸிகா வைரஸ் தடுப்புப் பணிகள் தீவிரம்: 9 மாவட்டங்களில் ஆய்வு ஜெனி ஃப்ரீடா DIN Wednesday, June 14, 2017 02:41 AM +0530 தமிழகத்தில் பூச்சியியல் நிபுணர்கள் ஸிகா வைரஸ் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடந்த 2015 -ஆம் ஆண்டில் இருந்து ஸிகா வைரஸ் நோய் பல நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. தற்போது அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட 67 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்துள்ளது.
இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் குஜராத் மாநிலத்தில் 3 பேருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு இருப்பது ரத்தப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதில் இருவர் பெண்கள். ஒருவருக்கு பிரசவம் முடிந்ததும் கண்டறியப்பட்டது, மற்றொருவருக்கு 37 -ஆவது வார கர்ப்பக் காலத்தில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து நாடு முழுவதும் ஸிகா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத் துறை முடுக்கிவிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனர். யாரேனும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் வந்தால் அங்கேயே அவர்கள் பரிசோதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்திலும் பொது சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஸிகா வரைஸ் தடுப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
3 ஆய்வகங்கள்: மதுரை, ஓசூர், புதுச்சேரி ஆகிய மூன்று இடங்களில் உள்ள பூச்சியியல் ஆய்வு நிறுவனங்களின் மூலம் ஸிகா வைரஸ் பரவுகிறதா என்பது குறித்து கண்டறியப்பட்டு வருகிறது. டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்டவற்றைப் பரப்பும் ஏடிஎஸ் கொசு வகையின் மூலம் ஸிகா வைரஸ் பரவும் என்பதால், அந்தக் கொசுக்கள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
9 மண்டல குழுக்கள்: நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், கோவை, சேலம், தஞ்சாவூர், வேலூர், திருச்சி, கடலூர் ஆகிய இடங்களில் தமிழக அரசின் சார்பில் 9 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காணிப்புக் குழுக்களில் உள்ள பூச்சியியல் நிபுணர்கள், ஸிகா வைரஸ் பரவுவது குறித்து ஆய்வுப் பணிகளையும், கண்காணிப்புப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் திடீரென்று காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாவோரின் மருத்துவ வரவாறு குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விமான நிலையம், துறைமுகம்: சென்னை விமான நிலையத்தில் ஸிகா வைரஸ் பாதிப்புள்ள நாடுகளுக்கு பயணிப்போர், அங்கிருந்து வருவோர் ஆகியோர் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றனர். விமான நிலையங்களில் ஸிகா வைரஸ் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் துறைமுகம், விமான நிலையங்கள் அமைந்துள்ள இடங்களிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் கொசுக்கள் பரவாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியது: தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் தீவிர கண்காணிப்புகளில் இருந்து ஸிகா வைரஸ் தப்புவதற்கு வாய்ப்பில்லை. இதுவரை தமிழகத்தில் யாருக்கும் ஸிகா வைரஸ் பாதிப்பு இல்லை. இருப்பினும் பொதுமக்கள் தங்களையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் ஏடிஎஸ் கொசுக்களின் மூலம் பரவும் நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
ஸிகா வைரஸ் பாதிப்பைத் தடுப்பதற்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் இல்லை. எனவே, கொசுக்கள் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். ஸிகா வைரஸ் பாதிப்பைக் கண்டறியும் வசதி சென்னை கிங் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ளது என்றார் அவர்.
ஸிகாவை அறிவது எப்படி?
ஒருவருக்கு ஸிகா வைரஸ் தொற்றியிருந்தால் காய்ச்சல், தோலில் அரிப்பு, கண்நோய், எலும்பு மூட்டுகளில் வலி, உடல்சோர்வு போன்ற சாதாரண அறிகுறிகளே தோன்றும். இந்த வைரஸை சுமந்து வரும் ஏடிஸ் கொசுக்கள் கடித்த 2 முதல் 7 நாள்களில் இந்த அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். இந்த வகை கொசுக்கள் நல்ல நீரில் இனப்பெருக்கம் செய்யும்; காலை, பிற்பகல் வேளைகளில் மனிதர்களை கடிக்கும்.
ஒரு பெண் கர்ப்பம் தரித்த முதல் 3 மாதங்களில் அவருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் பிறக்கும் குழந்தைக்கு மரபணு, நரம்பியல் உள்ளிட்ட நோய்களால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த வைரஸால் தாக்கப்பட்ட கர்ப்பிணிக்கு பிறக்கும் குழந்தையின் தலை சிறியதாக காணப்படுகிறது. இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்த முடியும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/3/18/0/w600X390/zika.jpg http://www.dinamani.com/health/health-news/2017/jun/14/ஸிகா-வைரஸ்-தடுப்புப்-பணிகள்-தீவிரம்-9-மாவட்டங்களில்-ஆய்வு-2719999.html
2719998 மருத்துவம் செய்திகள் நோய் எதிர்ப்புத் திறன் குறைபாடு: 2 சதவீதம் குழந்தைகளுக்கே சிகிச்சை: நிபுணர் தகவல் Wednesday, June 14, 2017 02:40 AM +0530 இந்தியாவில் நோய் எதிப்புத் திறன் குறைபாட்டுடன் பிறக்கும் 1 லட்சம் குழந்தைகளில் 2 சதவீதம் பேருக்கு மட்டுமே சிகிச்சை கிடைக்கிறது என்று அப்பல்லோ மருத்துவமனையின் குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் ரேவதி ராஜ் கூறினார்.
இது தொடர்பாக சென்னை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இந்தியாவில் குழந்தைகள் உயிரிழப்புக்கான முதன்மையான காரணங்களுள் ஒன்றாக நோய்எதிர்ப்புத் திறன் குறைபாடு (Primary immune deficiency) உள்ளது. இக்குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளில் பாதிக்கும் அதிகமானோர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள். நெருங்கிய உறவினரைத் திருமணம் செய்து கொள்வதன் காரணமாக தென்னிந்தியாவில் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் இந்தக் குறைபாட்டுடன் பிறக்கும் 1 லட்சம் குழந்தைகளில் வெறும் 2 சதவீதம் பேருக்கு மட்டுமே சரியான சிகிச்சை கிடைக்கிறது.
இந்தக் குறைபாட்டோடு பிறக்கும் குழந்தைகளுக்கு நோய்எதிர்ப்புத் திறன் மிகவும் குறைவாகக் காணப்படுவதால், அதன் தாய் ஒரு முத்தம் கொடுத்தால் கூட அது உயிருக்கும் ஆபத்து விளைவிக்கக் கூடிய நிலை உருவாகிவிடும். புற்றுநோய், எச்ஐவி உள்ளிட்ட தீவிர நோய் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
நோய்க் கிருமிகளையும், நோய்த்தொற்றுகளையும் எதிர்த்துப் போராடும் நிலையை உடல் இழந்து விடுவதால், சிறிய தொற்றுகூட அச்சுறுத்தலாக விளங்கும். இந்தக் குறைபாட்டுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, சரும தடிப்புகள் போன்ற சாதாரண அறிகுறிகளே ஏற்படும்.
மருத்துவத் துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இந்த குறைபாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படவில்லை.
கடந்த 5 ஆண்டுகளில் இந்தக் குறைபாட்டுக்கான நவீன சிகிச்சை முறைகள் முன்னேற்றம் அடைந்துள்ளன. எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை இதற்கு சிறந்த தீர்வாக உள்ளது.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/14/w600X390/child.jpg நோய்எதிர்ப்புத் திறன் குறைபாடு உடைய குழந்தைகளுடன் அப்பல்லோ மருத்துவமனையின் குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் ரேவதி ராஜ் மற்றும் ரம்யா. http://www.dinamani.com/health/health-news/2017/jun/14/நோய்-எதிர்ப்புத்-திறன்-குறைபாடு-2-சதவீதம்-குழந்தைகளுக்கே-சிகிச்சை-நிபுணர்-தகவல்-2719998.html
2719923 மருத்துவம் செய்திகள் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைவது எங்கே?: முதல்வர் பழனிசாமி பதில் Wednesday, June 14, 2017 01:51 AM +0530 மறைந்த முதல்வர் ஜெயலலிதா பரிந்துரைத்த 5 இடங்களில் ஓர் இடத்தில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறினார்.
'எய்ம்ஸ்' மருத்துவமனை மதுரையில் அமைக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி எம்.எல்.ஏ.க்களும், தஞ்சாவூரில் அமைக்கப்பட வேண்டும் என்று அப்பகுதியினரும் கோரி வந்த நிலையில் முதல்வர் இவ்வாறு கூறியுள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் செவித்திறன் குறைபாடுடைய 200 -ஆவது குழந்தைக்கு காக்ளியர் கருவி பொருத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (ஜூன் 13) நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ரிக்ஷிதா என்ற 4 வயது பெண் குழந்தைக்கும், அன்பு என்ற 2 வயது ஆண் குழந்தைக்கும் பொருத்தப்பட்ட காக்ளியர் கருவியின் இயக்கத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
ஏற்கெனவே காக்ளியர் கருவி பொருத்தப்பட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளிடமும் அவர் கலந்துரையாடினார். மேலும் காது - மூக்கு - தொண்டை சிகிச்சைப் பிரிவு உள்நோயாளிகளைச் சந்தித்து, சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம் செயல்படுத்தப்படும் கட்டடத்தை முதல்வர் பார்வையிட்டார்.
அதன் பிறகு அவர் அளித்த பேட்டி: அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டத்தின்கீழ் இதுவரை 16,500 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தத் திட்டம் பிற அரசு மருத்துவமனைகளுக்கு படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு 5 இடங்களை மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார். அந்தப் பரிந்துரை மத்திய அரசிடம் உள்ளது. அது பரிசீலிக்கப்பட்டு ஐந்து இடங்களில் ஓரிடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்றார் முதல்வர்.
முன்னதாக, காக்ளியர் கருவி பொருத்தும் நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியது:
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் இதுவரை 2,856 செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு காக்ளியர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.220.66 கோடி செலவில் இந்தக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
தனியார் மருத்துவமனையில் ரூ.10 லட்சம் வரை செலவாகும் இந்தச் சிகிச்சை, அரசு மருத்துவமனையில் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.
இதன் மூலம் பிறவியில் இருந்து செவித்திறன் இல்லாத குழந்தைகள், செவித்திறனைப் பெற்று எல்லோரையும் போல இயல்பான வாழ்க்கையைத் தொடர முடியும் என்றார் அவர்.
தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ, பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி, சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் நாராயண பாபு, காது - மூக்கு - தொண்டை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் முத்துக்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

]]>
எடப்பாடி கே. பழனிசாமி,ஜெயலலிதா,'எய்ம்ஸ்' மருத்துவமனை ,Edappadi Palanisami,Jayalalitha,AIIMS Hospital http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/14/w600X390/palanisamy.jpg சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், காது நுண் எலும்பு கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 200 -ஆவது குழந்தைக்கு செவித்திறன் கேட்கும் கருவியின் செயல்பாட்டை தொடக்கி வைத்த முதல்வர் http://www.dinamani.com/health/health-news/2017/jun/14/எய்ம்ஸ்-மருத்துவமனை-அமைவது-எங்கே-முதல்வர்-பழனிசாமி-பதில்-2719923.html
2716785 மருத்துவம் செய்திகள் காஸ்ட்ரிக் பலூன் சர்ஜரி எடையைக் குறைக்கவா? உயிரைப் போக்கவா? RKV Thursday, June 8, 2017 05:51 PM +0530  

இதுவும் எடை குறைப்பு அறுவை சிகிச்சை முறைகளில் ஒன்றே! எடை குறைப்பு தொழில்நுட்பங்களில் ஒன்றான இதில், எண்டோஸ்கோபி முறையில் சிலிகானால் ஆன சிறிய காஸ்ட்ரிக் பலூன் சிகிச்சை எடுத்துக் கொள்பவரின் வயிற்றினுள் செலுத்தப்படும். சிகிச்சையளிக்கும் மருத்துவர் இந்த பலூனை சலை வாட்டர் கொண்டு நிரப்புவார். இப்படி நிரப்பப் படுவதால் உணவுண்ணும் போது,வயிறு நிறைந்திருக்கும் உணர்வு சீக்கிரமே ஏற்பட்டு விடும். இதனால் அளவுக்கு அதிகமாக உண்ணும் வழக்கம் தடை படும். தொடர்ந்து இப்படி அளவு மீறி உண்ணும் வழக்கம் குறையும் போது தன்னியல்பாக எடை குறையும் சாத்தியக் கூறுகள் உண்டு.

 

சமீபத்தில் மறைந்த பிரபல தெலுங்கு தயாரிப்பாளாரான தாசரி நாராயண ராவுக்கு எடை குறைப்பு மற்றும் ஆரோக்கியத்துக்காக ‘காஸ்ட்ரிக் பலூன் அறுவை சிகிச்சை இருமுறை செய்யப்பட்டுள்ளது. முதல் முறை செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் போது அவர் நலமாகவே மீண்டு வந்துள்ளார். ஆனால் இரண்டாம் முறை அதே அறுவை சிகிச்சை எதற்காகச் செய்தார்கள் எனத் தெரியவில்லை. முதல்முறை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய அறுவை சிகிச்சை நிபுணர் கிடைக்காத போதிலும் இரண்டாம் முறையும் அவர் இந்த அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்டதாக அவரது மகள் தெரிவித்துள்ளார். இரண்டாம் முறை இந்த அறுவை சிகிச்சை முடிந்து சில மாதங்களுக்குள் ஆரோக்கியமாகவே காட்சியளித்த அவர் திடீரென உடல் நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு மறைந்து விட்டார்.

லிப்போ சக்ஸன் முறையில் எடை குறைப்பு அறுவை சிகிச்சைக்கு உட்பட்டு உயிரிழந்த நடிகை ஆர்த்தி அகர்வால், எகிப்திலிருந்து எடை குறைப்பு சிகிச்சைக்கு இந்தியா வந்து இந்திய மருத்துவரை குற்றம் சாட்டி விடைபெற்ற உலகின் அதிக எடை கொண்ட பெண்ணான இமான் அஹமது, இப்போது தாசரி நாராயண ராவ் என நாமறிந்த உதாரணங்கள் அனைத்துமே எடை குறைப்பு அறுவை சிகிச்சைகளை எண்ணி அச்சமூட்டக் கூடிய அனுபவங்களாகவே இருக்கின்றன.

எடை குறைப்பில் ஈடுபட நினைப்பவர்கள் அறுவை சிகிச்சை போன்ற கடின முயற்சிகளில் இறங்காமல் டயட், உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றம் என அவரவருக்கு ஏதுவான ஏதாவது ஒரு எளிய பயிற்சியை மேற்கொள்வதே சாலச் சிறந்ததாக இருக்கக் கூடும் என்றெண்ண வேண்டியதாகிறது.

]]>
தாசரி நாராயண ராவ், dasari narayana rao, WEIGHT LOSS SURGERY, GASTRIC BALOON SURGERY, காஸ்ட்ரிக் பலூன் சர்ஜரி, எடை குறைப்பு அறுவை சிகிச்சை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/8/w600X390/weight_loss.jpg http://www.dinamani.com/health/health-news/2017/jun/08/gastric-baloon-surgery-is-for-weight-loss-or-life-loss-2716785.html
2712564 மருத்துவம் செய்திகள் கூடுதலாக 41 மருத்துவமனைகளில் வாழ்வியல் சிகிச்சை மையங்கள் Friday, June 2, 2017 03:20 AM +0530 தமிழகத்தில் கூடுதலாக 41 மருத்துவமனைகளில் வாழ்வியல் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிறப்பு உடல் பருமன் குறைப்பு சிகிச்சைத் தொகுப்பு அறிமுக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு இந்த மருத்துவமனையில் உள்நோயாளியாகவும், வெளிநோயாளியாகவும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உள்நோயாளிகள் ஒரு வாரம் முதல் 4 வாரம் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்தச் சிகிச்சைத் தொகுப்பில் பக்கவிளைவுகள் இல்லாத நீராவி குளியல், வாழை இலை குளியல், மண் குளியல், இயற்கை உணவு, உண்ணாநோன்பு சிகிச்சை, இயற்கை மூலிகை சிகிச்சை, யோகா, மசாஜ் சிகிச்சை உள்ளிட்டவை இலவசமாக அளிக்கப்படும்.
உள்நோயாளிகளுக்கு தங்கும் வசதியும் இலவசமாக வழங்கப்படும்.
நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியது:
இந்திய முறை மருத்துவத்துக்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, இந்த ஆண்டு ரூ.6.43 கோடி செலவில், சென்னை உள்ளிட்ட இடங்களில் 31 வாழ்வியல் சிகிச்சை மையங்களும், மத்திய அரசுடன் இணைந்து 10 மையங்களும் அமைக்கப்பட உள்ளன என்றார் அவர்.
விழாவில், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி முதல்வர் மணவாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/health/health-news/2017/jun/02/கூடுதலாக-41-மருத்துவமனைகளில்-வாழ்வியல்-சிகிச்சை-மையங்கள்-2712564.html
2712545 மருத்துவம் செய்திகள் தடுப்பூசி உற்பத்தி மையம் அமைக்கும் பணி: அமைச்சர் ஆய்வு Friday, June 2, 2017 02:48 AM +0530 மத்திய அரசின் நிதியுதவியுடன் செங்கல்பட்டை அடுத்த மேலேரிபாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் எச்.எல்.எல். பயோடெக் தடுப்பூசி உற்பத்தி மையத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அண்மையில் பார்வையிட்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் பல அடுக்குப் பாதுகாப்பு வசதிகளுடன் இந்த ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
95 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளது. வெகு விரைவில் மிகப்பெரிய அளவில் திறப்பு விழா நடைபெறவுள்ளது. இந்த தேசத்துக்கு பெருமை சேர்க்கக் கூடிய வகையில் எந்தெந்த நோய்களுக்கெல்லாம் தடுப்பூசி போட்டு தடுக்க முடியுமோ, அத்தனை நோய்களுக்கும் உரிய தடுப்பூசிகளை இந்தியா முழுவதும் தரக்கூடிய வகையில் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது பெருமை தரக்கூடிய விஷயமாகும். அனைத்து வகை தடுப்பூசிகளும் இங்கேயே தயாரிக்கப்படுவதுடன், இங்கேயே சோதனைக்கு உள்படுத்தப்பட்ட, பிறகே மக்களுக்கு விநியோகிக்கப்படும். இத்திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 590 கோடி வழங்கியுள்ளது. இனி வரும் காலங்களில் இந்த தயாரிப்பு மட்டுமன்றி, எதிர்காலங்களில் நோய் தீர்க்கக்கூடிய தேவைப்படும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்து ஆராய்வதற்கும், தடுப்பூசிகள் கண்டுபிடிப்பதற்கும் ஒருகுழு நியமிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தரத்துடன் கூடிய இந்நிறுவனம் 500 பேருக்கு நேரடியாகவும், 500 பேருக்கு மறைமுகமாவும் வேலைவாய்ப்பு அளிக்கும் என்றார்.
ஆய்வின்போது, மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்பநலத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், தொழுநோய் ஆராய்ச்சி மைய இயக்குநர் செளஹத் அலி, மாவட்ட ஆட்சியர் பொன்னையா, நகராட்சி ஆணையர் செளந்தரராஜன், திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ எம்.கோதண்டபாணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/2/w600X390/vijayabaskar.jpg எச்.எல்.எல். பயோடெக் தடுப்பூசி உற்பத்தி மையத்தை பார்வையிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர். http://www.dinamani.com/health/health-news/2017/jun/02/தடுப்பூசி-உற்பத்தி-மையம்-அமைக்கும்-பணி-அமைச்சர்-ஆய்வு-2712545.html
2712012 மருத்துவம் செய்திகள் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'செப்சிஸ்' பாதிப்பு ஏற்பட வாய்ப்பு Thursday, June 1, 2017 02:28 AM +0530 நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரத்தத்தில் நச்சேற்றம் (செப்சிஸ்) ஏற்பட வாய்ப்புள்ளது என்று அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு தலைவர் டாக்டர் சுசித்ரா ரஞ்சித் கூறினார்.
குழந்தைகளுக்கான ரத்தத்தில் நச்சேற்ற அதிர்ச்சி (செப்ஸிஸ் ஷாக்) குறித்த செய்தியாளர் சந்திப்பு அப்பல்லோ மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது.
அதில் டாக்டர் சுசித்ரா ரஞ்சித் பேசியது: குழந்தைகளுக்கு ஏற்படும் சாதாரண காய்ச்சல், நிமோனியா, சிறுநீரகப் பாதைத் தொற்று ஆகிய அறிகுறிகள் செப்ஸிஸாக இருக்கக்கூடும். உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான குழந்தைகள் இந்த நோயால் உயிரிழக்கின்றனர். புற்றுநோய், இருதய நோய் உள்ளவர்கள் உயிரிழப்பதற்கு பொதுவான காரணிகளில் செப்சிஸ் பாதிப்பு முன்னிலையில் உள்ளது. மேலும் சிறு குழந்தைகள் உயிரிழப்புக்கு முதன்மையாக காரணமாகவும் உள்ளது.
எனவே, குழந்தைகளுக்கு சாதாரண காய்ச்சல் தானே என்று அலட்சியப்படுத்தக் கூடாது. செப்சிஸ் பாதிப்புக்கு ஒரு மணி நேரத்துக்குள் சிகிச்சை அளித்துவிட்டால், பாதிப்புகளை வெகுவாகக் குறைக்க முடியும். உயிரிழப்பையும் தடுக்க முடியும்.
முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்றால் தீவிர செப்சிஸாக மாறி, இறுதியில் செப்சிஸ் ஷாக் நிலைக்கு வரும். இதன் காரணமாக பல உறுப்புகள் செயலிழந்து உயிரிழப்பு ஏற்படும். நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள 10 வயது குழந்தைகளுக்கு இந்தத் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, குழந்தைகளுக்கு இரவில் காய்ச்சல் பாதித்தால், காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருக்கக் கூடாது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில், அப்பல்லோ மருத்துவமனைகளின் செயல் துணைத் தலைவர் டாக்டர் பிரீதா ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/health/health-news/2017/jun/01/10-வயதுக்குட்பட்ட-குழந்தைகளுக்கு-செப்சிஸ்-பாதிப்பு-ஏற்பட-வாய்ப்பு-2712012.html
2711977 மருத்துவம் செய்திகள் அம்மா ஆரோக்கிய திட்டம் 129 மருத்துவமனைகளுக்கு விரிவுபடுத்தப்படும் Thursday, June 1, 2017 01:41 AM +0530 அம்மா ஆரோக்கிய திட்டம் மேலும் 129 மருத்துவமனைகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
சர்வதேச புகையிலை ஒழிப்புத் தினத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் மனிதச் சங்கிலி மற்றும் கண்காட்சி சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியது:
தமிழகத்தில் 2009-10 -ஆம் ஆண்டில் 16.2 சதவீதமாக இருந்த புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தற்போது 5.2 சதவீதமாக குறைந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்ட வாய் புற்றுநோயைக் கண்டறியும் திட்டம் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் மருத்துவர்கள் வீடு வீடாகச் சென்று வாய்ப் புற்றுநோய் பரிசோதனையில் ஈடுபடுவர். இதுவரை 22.24 லட்சம் மக்களுக்கு நேரடி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மேலும், அம்மா ஆரோக்கிய திட்டத்தின்கீழ் வாய்ப் புற்றுநோயைக் கண்டறியும் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் 20.67 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தற்போது 400 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அம்மா ஆரோக்கிய திட்டம், 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், 98 அரசுப் பொது மருத்துவமனைகளுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், பொது மருத்துவத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி, மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ, கல்லூரி முதல்வர் டாக்டர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/1/w600X390/vijayabaskar.jpg http://www.dinamani.com/health/health-news/2017/jun/01/அம்மா-ஆரோக்கிய-திட்டம்-129-மருத்துவமனைகளுக்கு-விரிவுபடுத்தப்படும்-2711977.html
2711463 மருத்துவம் செய்திகள் உயரிய மருத்துவ சேவையில் தமிழகம் முன்னிலை : அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம் Wednesday, May 31, 2017 02:36 AM +0530 அகில இந்திய அளவில் உயரிய மருத்துவ சேவையில் தமிழகம் முன்னிலை வகிப்பதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்
ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நுழைவு வாயில் மற்றும் நிர்வாக அலுவலர்கள் குடியிருப்பு கட்டடங்களின் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு கட்டடங்களைத் திறந்து வைத்துப் பேசியதாவது:
இந்தியாவில் உயரிய மருத்துவ சேவை பெற வசதியுள்ள மாநிலமாக (மெடிக்கல் ஹப்) தமிழகம் கருதப்படுகிறது. மேலும் இறந்தோரின் உடல் உறுப்புகளை மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்துவதிலும் நாட்டிலேயே முன்னிலை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதற்காக மத்திய அரசிடமிருந்து மக்கள் நல்வாழ்வுத் துறை இரண்டு முறை தொடர்ந்து விருதுகளை பெற்றுள்ளது.
இந்த அரசு மக்கள் நலனில் மட்டுமல்லாது மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து பிரிவினரின் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கி 50 ஆண்டுகளாகிறது. இங்கு எம்பிபிஎஸ் சீட் 50 இடங்களாக இருந்ததை 100 ஆக உயர்த்தியவர் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.
மேலும் சென்னை, மதுரை ஆகிய மருத்துவக் கல்லூரிகளிலும் 250 சீட்டாக உயர்த்தியதும் ஜெயலலிதாதான். செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி செவிலியர்கள் தங்கும் விடுதிக்காக ரூ. 8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணி விரைவில் தொடங்கப் படும். மேலும் உயர்சிறப்பு மருத்துவ சிகிச்சைக்கான கட்டடங்களை (நமடஉத நடஉஇஐஅகஐபவ ஆகஞஇஓ) கட்டவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
விழாவில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, சார் ஆட்சியர் ஜெயசீலன், மருத்துவக் கல்லூரி முதல்வர் குணசேகரன், மத்திய தொழுநோய் ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனை இயக்குநர் செளகத் அலி, எம்எல்ஏக்கள் திருப்போரூர் எம்.கோதண்டபாணி, ஸ்ரீபெரும்புதூர் கே.பழனி, மாவட்ட அதிமுக செயலாளர் எஸ். ஆறுமுகம், நிர்வாகிகள் காஞ்சி பன்னீர் செல்வம், சிட்லபாக்கம் ராஜேந்திரன், நகரச் செயலாளர் செந்தில்குமார், முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மருத்துவமனை பணியாளர் குடியிருப்பு கட்டடங்கள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/31/w600X390/vijayabaskar.jpg செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயிலைத் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றிய அமைச்சர் விஜயபாஸ்கர். http://www.dinamani.com/health/health-news/2017/may/31/உயரிய-மருத்துவ-சேவையில்-தமிழகம்-முன்னிலை--அமைச்சர்-விஜயபாஸ்கர்-பெருமிதம்-2711463.html
2711446 மருத்துவம் செய்திகள் பெண்ணின் வயிற்றில் இருந்த 4.5 கிலோ கட்டி அகற்றம்: மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை Wednesday, May 31, 2017 02:24 AM +0530 பெண்ணின் வயிற்றில் இருந்த 4.5 கிலோ கட்டியை அகற்றி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.
விழுப்புரத்தை அடுத்த விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மனைவி உண்ணாமுலை (52). இவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமடையவில்லையாம்.
இதற்காக ஏராளமான பணத்தை செலவழித்து மனமுடைந்த உண்ணாமுலை, கடைசியாக சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உண்ணாமுலையை உள் நோயாளியாக சேர்த்து தீவிர பரிசோதனைகளை செய்தனர். அப்போது, உண்ணாமுலையின் கர்பப்பையில் 4.5 கிலோ அளவுள்ள கட்டி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தியின் அறிவுரையின்பேரில், மகப்பேறு பிரிவு இணைப் பேராசிரியர்கள் சாந்தி சிவக்குமார், நளினி ஆகியோர் தலைமையிலான மருத்துவர்கள், உண்ணாமுலையின் கர்பப்பையில் இருந்த கட்டியை அறுவைச் சிகிச்சை மூலம் செவ்வாய்க்கிழமை அகற்றினர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது: உண்ணாமுலை தனது வயிற்றில் இருப்பது கட்டி எனத் தெரியாமல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்துள்ளார்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்த அவருக்கு சிடி ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன.
இறுதியாக தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
அப்போது, உண்ணாமுலையின் வயிற்றில் இருந்த புற்றுநோய் அல்லாத 4.5 கிலோ அளவிலான கட்டி அகற்றப்பட்டது. இதுபோன்ற அறுவைச் சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் செய்ய வேண்டுமென்றால் ரூ. ஒரு லட்சம் வரை செலவாகும் என்றார்.
இதுகுறித்து உண்ணாமுலை கூறுகையில், 'ஒன்றரை ஆண்டு பிரச்னைக்கு தற்போதுதான் தீர்வு கிடைத்துள்ளது. அறுவைச் சிகிச்சை செய்தபிறகு வயிறு வலி தெரியவில்லை. நல்ல முன்னேற்றம் தெரிகிறது' என்றார்.
சிறப்பான முறையில் அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவக் குழுவை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி பாராட்டினார்.

 

]]>
http://www.dinamani.com/health/health-news/2017/may/31/பெண்ணின்-வயிற்றில்-இருந்த-45-கிலோ-கட்டி-அகற்றம்-மருத்துவக்-கல்லூரி-மருத்துவர்கள்-சாதனை-2711446.html
2708597 மருத்துவம் செய்திகள் தசை நார்கள் கிழந்தால் என்ன செய்வது? உமா ஷக்தி Thursday, May 25, 2017 01:00 PM +0530 'ஸ்டேஷனில் ரயில் நின்றதும், அவசரமாகக் கீழே இறங்கிய சுகியின் ஹை ஹீல்ஸ் சட்டென நழுவ, நிலைதடுமாறி விழுந்தாள். சுதாரித்து மெல்ல எழுந்து, காலை உதறிச் சமாளிப்பதற்குள் வலி உயிர்போனது. இரண்டடி நடப்பதற்குள் முட்டி விலகுவது போல் ஓர் உணர்வு. எப்படியோ ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தும்,  வலி நிற்கவில்லை. ஆயின்மென்ட், வலி நிவாரணி மருந்து என எதற்கும் வலி கட்டுப்படாமல் போகவே எங்களிடம் வந்தாள். சுகிக்கு ஏற்பட்டிருந்தது 'லிகமென்ட் டேர்’(Ligament Tear). உரிய சிகிச்சை கொடுத்து முற்றிலும் குணப்படுத்தினோம்' என்றார் ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் விஜய் பால். மேலும் லிகமென்ட் டேர் பாதிப்பைப் பற்றி  விரிவாகச் சொல்ல ஆரம்பித்தார்.

'நம் உடலில் உள்ள மூட்டுக்களின் சந்திப்பில், இரண்டு எலும்புகளை இணைக்கும் தசை நார்கள் (லிகமென்ட்) உள்ளன. இந்தத் தசை நார்கள்தான், நாம் நடக்கும்போது இரண்டு மூட்டு எலும்புகளையும் தாங்கிப்பிடித்து, நகர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்கிறது.

வழுக்கி விழுதல், காயம் ஏற்படுதல் போன்றவற்றால் இந்தத் தசை நார் கிழிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. விளையாட்டு வீரர்கள், நடனம் ஆடுபவர்களுக்கு இது அடிக்கடி நேரும். தசை நார் கிழிந்துவிட்டால் மூட்டுக்கள் இணையாமல், அங்கு வீக்கம், வலி, அசைவின்போது சிரமம் போன்றவை ஏற்படும்.

தசை நார் நெகிழ்வு (எலாஸ்டிக்) தன்மை கொண்டது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் நெகிழ்ந்துவிட்டால், பழைய நிலைக்கு சுருங்க முடியாது. அதனால், லிகமென்ட் நார் தசையானது மிகவும் நெகிழ்ந்து, கிழிந்துவிட்டால் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் போனால், பிரச்னையின் வீரியம் அதிகமாகும். மூட்டு மிக விரைவாக தேயும் அபாயமும் உண்டு.

முட்டியில் நான்குவிதமான நார்த் தசைகள் உள்ளன. இதில் அதிக அளவில் காயம், கிழிவு ஏற்படுவது 'ஏ.சி.எல். லிகமென்ட் மற்றும் மீடியல் லிகமென்ட்’டில்தான்.

விளையாடுபவர்கள், நடனம் ஆடுபவர்கள், உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்ப்பவர்கள், வேகமாக மாடிப்படிகளில் ஏறுபவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் இது வரலாம். மாற்று மருத்துவ முறைகளில் இதற்கு நான்கு வார ஓய்வும், ஆர்த்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சையும் பரிந்துரைக்கப்படுகிறது.

பழங்கால ஆயுர்வேத மருத்துவத்தில், மூங்கில்களைக் கொண்டு எலும்புகளுக்கு போடப்படும் ஒருவிதக் கட்டை 'கோஷபந்தம்’ என்பார்கள். ஒரு குறிப்பிட்ட பகுதியில் எலும்பு அல்லது எலும்புகளை இணைக்கும் பகுதி ஆடாமல் இருக்க இந்தக் கட்டுப் போடப்படுகிறது.  ஆனால், தற்போது மூங்கில்களைப் பயன்படுத்துவது இல்லை. லிகமென்ட் டேர் இருந்தால், அந்தப் பகுதியில், இரண்டு வித எண்ணெய்களைப் (முறிவு எண்ணெய் மற்றும் கந்தகத் தைலம்) பயன்படுத்தி, கட்டுப்போடப்படுகிறது. இந்தக் கட்டு 8 மணி நேரம் இருக்க வேண்டும். இரவில் போட்டால் காலையில் எடுத்துவிடலாம். இதுபோன்று 14 நாட்கள் கோஷபந்தக் கட்டுகளுடன் ஆயுர்வேத மருந்துகளும் சாப்பிட்டு வர, லிகமென்ட் டேர் குணமடையும்.  மாதக்கணக்கில் ஓய்வு எடுக்க வேண்டிய அவசியமும் இல்லை.’என்று கூறி முடித்தார்.

தசை நார்கள் வலுப்பெற டிப்ஸ்:

 • விளையாட்டு வீரர்கள் ஆட்டம் தொடங்கும் முன் சில ஸ்ட்ரெச்சிங் எக்சர்சைஸ் செய்வதன் மூலம் மூட்டுகள் மற்றும் தசை நார்கள் இலகுவாகி உடல் நன்றாக வளையும். அடிபட்டாலும் கிழியாது.
 • தினமும் நீர்மோர், ரசாயனம் சேர்க்காத உணவுகள், அடர் நிறமுள்ள பழத்தைச் சாப்பிட வேண்டும்.  
 • ஒருவேளை அரிசி, ஒருவேளை கோதுமை, ஒருவேளை கம்பு/கேழ்வரகு/சோளம் என உணவுப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
 • கார்பனேட் பானங்கள், சர்க்கரை சேர்ந்த இனிப்புகளைத் தவிர்க்க வேண்டும்.
 • தினசரி உடற்பயிற்சி, முழங்காலுக்கான பயிற்சிகளைத் தவறாமல் செய்ய வேண்டும்.
 • காரம், புளி, உப்பு, மைதா உணவு தவிர்க்க வேண்டும்.
 • அரைத்து வைத்த மாவை, தொடர்ந்து பல நாட்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
 • வாரத்துக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும். எலும்புகள் மற்றும் தசை நார்கள் வலுவடைய லாஷாதி தைலம், பலாஸ்வகந்த் தைலம் மிகவும் நல்லது.
 • ஒல்லியானவர்கள் ஸ்கிப்பிங்கும், குண்டானவர்கள் மிதவேகமான வாக்கிங்கும் செய்யலாம். இதனால், எலும்பு உறுதிக்கு உத்தரவாதம்.
]]>
Ligament tear, தசை நார்கள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/25/w600X390/Fotolia_66788620_Subscription_Monthly_XL-medium.jpg http://www.dinamani.com/health/health-news/2017/may/25/what-is-the-treatment-for-ligament-tear-2708597.html
2708169 மருத்துவம் செய்திகள் ஸ்ரீ ராமச்சந்திரா பல் மருத்துவமனையில் வாய் புற்றுநோய் கண்டறிய இலவச முகாம் Thursday, May 25, 2017 03:41 AM +0530 சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா பல் மருத்துவமனையில் வாய் புற்றுநோய் கண்டறியும் இலவச மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, வாயில் ஏற்படும் புற்றுநோயைக் கண்டறியும் இலவச முகாம் சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா பல் மருத்துவமனை, மருத்துவமனை வளாகத்தில் வரும் மே 31 (புதன்கிழமை), ஜூன் 1 (வியாழக்கிழமை) ஆகிய நாள்களில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்துகிறது.
வாயில் நாள்பட்ட புண், சாப்பிடும் போது எரிச்சல், சதை வளர்ச்சி மற்றும் வீக்கம், நாள்பட்ட வெண்ணிறப்படை உள்ளவர்களும், புகை பிடிப்பவர்கள், புகையிலை, பான் மசாலா, பாக்கு மெல்லும் பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த முகாமில் இலவசப் பரிசோதனைகள் செய்யப்படும்.
அடிப்படை ரத்த மற்றும் சதை பரிசோதனை, தாடை எக்ஸ்ரே போன்றவை இலவசமாகவும், தாடை ஸ்கேன் மற்றும் அறுவை சிகிச்சை சலுகைக் கட்டணத்திலும் செய்யப்படும். ஸ்ரீ ராமச்சந்திரா பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் வாய்நோய் அறிதல் மற்றும் கதிரியக்கத்துறை இந்த இலவச முகாமை நடத்துகிறது.

 

]]>
http://www.dinamani.com/health/health-news/2017/may/25/ஸ்ரீ-ராமச்சந்திரா-பல்-மருத்துவமனையில்-வாய்-புற்றுநோய்-கண்டறிய-இலவச-முகாம்-2708169.html
2707946 மருத்துவம் செய்திகள் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிடாதீர்கள்! Wednesday, May 24, 2017 01:51 PM +0530 காபி

தினமும் காலையில் காபி குடிக்காவிட்டால் தலை வெடித்துவிடும் அளவுக்கு பலர் காபி மற்றும் டீக்கு அடிமையானவர்கள். ஆனால் காலையில் சூடான காபியை வெறும் வயிற்றில் குடிப்பது உடல் நலத்துக்கு கெடுதல் விளைவிக்கும் என்பது தெரியுமா உங்களுக்கு? காபியில் இயற்கையிலேயே அதிகமாக அமிலத்தன்மை உள்ளது.

காலை நேரத்தில் காபியை முதலில் குடிப்பதால் இது அதிகரித்து அல்சர் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடும். எனவே முதலில் ஒரு தம்ளராவது தண்ணீர் குடித்துவிட்டு சிறிது இடைவெளிக்குப் பிறகு ஒரு சிறிய கப் காபிக்கு மேல் பருக வேண்டாம். காபிக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து விடுபட வேண்டுமெனில் உடனடியாக காபி குடிப்பதை நிறுத்திவிட வேண்டாம். சிறுகச் சிறுக காபியின் அளவைக் குறைத்து அதன் பிறகு நிறுத்திவிடலாம். தினசரி 2 கப் காபி என்ற கட்டுப்பாட்டைப் பின்பற்றலாம். அதுவும் வெறும் வயிற்றில் குடிக்கவே கூடாது என்ற உறுதியினையும் பின்பற்றவேண்டும்.

தேநீர்

சிலர் டென்ஷன் ஏற்படுகிறது என்று அடிக்கடி டீ குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகியிருப்பார்கள். மேற்சொன்னபடி வெறும் வயிற்றில் காலை எழுந்ததும் பால் சேர்க்கப்பட்ட டீயை குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். க்ரீன் டீ அல்லது ப்ளாக் டீயைப் பொருத்தவரையில் அதிக பிரச்னைகள் இல்லை. ஆனால் எதுவொன்றைப் பருகுவதாக இருந்தாலும் முதலில் ஒரு க்ளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு அதன் பின் காபி டீ குடிப்பது நல்லது.

டீயிலும் காஃபின் அதிகம் உள்ளதால் அளவாகப் பயன்படுத்துவது நல்லது. டீயை அதிகமாகக் குடிப்பதால் புற்றுநோய் மற்றும் இதயநோய்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்றது ஒரு மருத்துவ ஆய்வு. உயர் ரத்த அழுத்தம், தூக்கப் பிரச்னைகள், எனவே அதிகமாக டீ குடிக்கும் பழக்கம் இருந்தால் உடனடியாக குறைத்துக் கொள்ளுங்கள். அல்லது படிப்படியாக நிறுத்தி கொள்ளுங்கள்.

பால் மற்றும் தயிர்

பால் மற்றும் தயிர் இயற்கையின் அருமருந்து என்பதில் மாற்று கருத்து இல்லை. தயிரை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டால் வயிறு உப்புசத்தை ஏற்படுத்திவிடும். காலையில் வெறும் வயிற்றில் சூடான பாலைக் குடிப்பதால் பிரச்னைதான். காரணம் அதில் கால்ஷியம், புரதம் மற்றும் வைட்டமின் பி போன்றவை இருப்பதால் உடலில் அவை செரிக்க அதிக நேரம் எடுக்கும்.

பாலை விட தயிர் விரைவாக செரிக்கக் கூடியது என்றாலும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அதிலுள்ள பாக்டீரியாக்கள் சில வேதியில் மாற்றங்களை வயிற்றில் ஏற்படுத்தி மந்தமாக்கிவிடும்.

தக்காளி

தக்காளியை ஒருபோதும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிடாதீர்கள். காரணம் அதிலுள்ள டேனிக் அமிலம் இரைப்பையில் சுரக்கும் அமிலத்துடன் சேர்ந்து ஒருவகையான கரைய முடியாத ஜெல்லை உருவாக்கிவிடும். இது சிறுநீரகத்தில் கற்கள் உருவாக ஒரு காரணமாகும்.

வாழைப்பழம்

இரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. ஆனால் காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை சாப்பிட்டால் அது ரத்தத்தில் மெக்னீஷியத்தின் அளவைக் கூட்டி விடும். இது தொடர் பழக்காமாக இருந்தால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படலாம் என்கிறது ஒரு ஆராய்ச்சி.

சோடா மற்றும் குளிர்பானம்

சோடா மற்றும் செயற்கை குளிர்பானங்களில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் உள்ளது. காலையில் எழுந்ததும் இதனை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள அமிலங்களுடன் ஒன்று கலந்து, வாந்தி அல்லது குமட்டல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.

இவைத் தவிர மது, காரமான உணவுகள், மாத்திரை போன்றவற்றையும் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளக் கூடாது. இவை உடலில் அசெளரியத்தை ஏற்படுத்துவதுடன் செரிமான மண்டலம் பாதிக்கப்படும். சிலருக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும்; இரைப்பையின் உட்பகுதி பாதிக்கப்படும்.

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றில் வைட்டமின் சி உள்ளதால் இவற்றை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதல்ல. இவையும் அமிலச் சுரப்பை அதிகப்படுத்தி நெஞ்செரிச்சல் மற்றும் குடல்புண்களை ஏற்படுத்தும்.

காலை எழுந்ததும் நீர் ஆகாரம் குடித்து வாழ்ந்த நம் முன்னோர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் நிறைந்த ஆயுளுடனும் இருந்தார்கள் என்பதை நாம் மறந்துவிட்டோம். எனவே உணவு குறித்த அதிக விழுப்புணர்வுடன் எதை எப்போது எவ்வகையில் சாப்பிடலாம் என்று தெரிந்து கொண்டு அதற்கேற்ப சாப்பிட்டால் நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

]]>
food awareness, acidity foods, வெறும் வயிற்றில், அல்சர் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/24/w600X390/tea_cafe.jpg http://www.dinamani.com/health/health-news/2017/may/24/dont-eat-these-food-items-in-empty-stomach-in-morning-2707946.html
2707930 மருத்துவம் செய்திகள் கோடைகால சரும பிரச்னைகளுக்கு இதோ தீர்வு! மாலதி சந்திரசேகரன் Wednesday, May 24, 2017 12:18 PM +0530 இன்றைய தினங்களில், ஒருவர், எதிர்படும் போதெல்லாம் முதல் விசாரிப்பே, 'உஷ், அப்பாடி, போதுமா   வெயில்?  என்றுதானே கேட்கிறோம்? 

சென்னை பாஷையில் சொல்லப் போனால், 'உங்க வீட்டு வெயில், எங்க வீட்டு வெயில் இல்ல. சும்மா சாத்து சாத்துனு சாத்துது' என்பதுதான். 

இவ்வளவு பயங்கரமான சூட்டில், வியாதிகளும் பஞ்சமில்லாமல், அழையா விருந்தாளியாக நம்மை வந்து அடைகின்றன. அதுவும் சரும நோய்கள், நான், நீ, என்று போட்டி போட்டுக் கொண்டு அட்டென்டென்ஸ் கொடுத்து விடுகின்றன. 

இந்த உஷ்ணத்திலிருந்து, நம் சருமத்தை,  எப்படி   பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது பற்றி Dr. விஷ்ராந்த் S. P.M. D. Dermatologist, நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். 

'இதைப் போன்ற வெயில் நாட்களில் சருமத்தில், குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும், ஒவ்வொரு விதமான  பாதிப்புகள் ஏற்படுகின்றன. (நான்கு முதல் பதினெட்டு வயது உள்ளவர்கள் வரை குழந்தைகள் என்கிற கணக்கில்தான் நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்.) 

வெயில் நாட்களில், குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவது,  prickly heat என்று கூறப்படும் வியர்க்குருவினால்தான். எண்ணை சுரப்பிகளும், வியர்வை சுரப்பிகளும் அடைத்துக் கொள்வதால், வியர்க்குரு உண்டாகிறது.  இது போன்ற நாட்களில், பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும்.  நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சின்னக் குழந்தைகளுக்கு உபயோகப்படுத்தும் சோப், மற்றும் பவுடரை உபயோகமாகப் படுத்த வேண்டும். 

அடுத்ததாக முகப்பருக்கள் உண்டாகும். அவை, முகம் மட்டுமல்லாமல், கழுத்து, நெஞ்சு,தோள்பட்டை ஆகிய இடங்களில் தோன்றும்.  அது போன்ற சமயங்களில், ஒரு நாளைக்கு, குறைந்தபட்சம் நான்கு அல்லது ஐந்து முறைகள் முகத்தை கழுவ வேண்டும். மெல்லிய காட்டன் துணியால், அழுத்தித் தேய்க்காமல், ஒற்றியவாறு துடைக்க வேண்டும். உணவில், உப்பு, சர்க்கரை இவற்றின் அளவைக் குறைக்க வேண்டும். 

இன்னொரு முக்கியமான விஷயம். இந்த சம்மர் சீசனில், அநேக பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளை, ஸ்விம்மிங் க்ளாசில் போடுகிறார்கள். அந்தத் தண்ணீரில், அதிகப்படியான க்ளோரின் கலந்திருக்கும். வெப்பக்கதிர்களும் க்ளோரினும் சேர்ந்து எதிர்மறை விளைவுகளை உண்டாக்குகிறது. , ஏற்கனவே உலர்ந்த சருமத்தை, மேலும் ட்ரை ஆக்கி, தோலில், எரிச்சலை ஏற்படுத்துகிறது. தோலில் வெடிப்புகளும் உண்டாகின்றன. அதனால், நீச்சலுக்குச் செல்பவர்கள், நீந்தப்போவதற்கு முன், லேசாக  சன் க்ரீம் அப்ளை செய்து கொள்ள வேண்டும். நீந்தி முடித்த பின்னர், தலைக்கு மைல்ட் ஷாம்பூ மற்றும் உடலுக்கு மைல்ட் சோப்பு போட்டு குளிக்க வேண்டும். தலைமுடியையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், folliculitis என்று சொல்லப்படும், பாக்டீரியாவினால் அடைப்பு உண்டாகும். 

இந்த சீசனில், குழந்தைகளுக்கு, அம்மை நோய் உண்டாக வாய்ப்புகள் அதிகம் உண்டு . வைரல் இன்ஃபெக்ஷன் அதிகமாக ஏற்படும் ஆகையால், வராமல் தடுக்க, நீர்ச்சத்து அதிகமாக உள்ள காய்கள், மற்றும் பழங்களை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

மேலும் ஃபங்கல் இன்ஃபெக்ஷனால் வரும், தேமல் மற்றும் படர்தாமரை போன்றவைகள். இவைகள் வராமல் தடுக்க, குளித்தபின், ஈரத்தோடு துணியைப் போட்டுக்கொள்ளக் கூடாது. ஃபேன் காற்றில் நன்கு சருமத்தை உலர விட்டு பின்பு தான் அணிந்து கொள்ள வேண்டும். 

வியர்க்குரு, தேமல், படர்தாமரை போன்றவை குழந்தைகள், பெரியவர்கள் இருவருக்குமே பொதுவாகவே வருவதுதான். 

அதிகப்படியான உஷ்ணத்தால், ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, herpes zoster என்று சொல்லப்படும் அக்கி வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. சருமத்தில் எரிச்சல், சிறிய நீர்க்கொப்புளங்கள் ஆகியவைகள் இது வருவதற்கு உண்டான அறிகுறிகள்  எனக்கொள்ளலாம். இந்த பாதிப்பு உள்ளவர்கள், நீர்ச்சத்து அதிகமாக உள்ள காய்கள், நிறைய பழங்கள் சாப்பிட வேண்டும். 

மார்க்கெட்டிங் லைனில் 

மார்க்கெட்டிங் வேலையில் உள்ளவர்களுக்கு, sun burn வரலாம். கண் எரிச்சலுடன், தோலில்  எரிச்சல், வெடிப்புகளும் உண்டாகி, தோல் உரிய ஆரம்பிக்கும். ஆகையால், வெளியே செல்லும் போது, பெண்கள், முழு கையுறை, கூலிங் க்ளாஸ், ஆண்கள், முழுக்கை சட்டையை அணிவதுடன், கருப்பு கண்ணாடி ஆகியவற்றை அணிந்து கொள்ள வேண்டும். 

ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு முதல் ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். 

உடல் dehydrate ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

உணவில், கேசரி பௌடர் போன்ற அங்கீகரிக்கப்படாத கலர் பொடிகளைத் தவிர்க்க வேண்டும்.

சரும நோய்கள் பாதிக்கப்பட்டவர்களின் துணியை, தனியாகத் துவைத்து, அரைமணிநேரம் சுடுநீரில் ஊறவைத்துக் காயப்போட வேண்டும். 

உங்களின் உடம்பையும் கவனித்துக் கொண்டு, அடுத்தவர்களின் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்கள்’ என்று கூறி முடித்தார்.

டாட்காம் வாசகர்களே, வெயிலோடு விளையாடாதீங்க. அங்க இங்கன்னு அலைந்து வம்பை விலை கொடுத்து வாங்காதீங்க. 

நேர்காணல் - மாலதி சந்திரசேகரன்

]]>
skin care, hot summer, சரும பராமரிப்பு, வெயில் காலம், வியர்க்குரு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/24/w600X390/home-remedies-for-glowing-skin-in-summer-for-oily-skin--best-skincare-tips.jpg http://www.dinamani.com/health/health-news/2017/may/24/skin-care-tips-in-this-hot-summer-2707930.html
2707407 மருத்துவம் செய்திகள் மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி பெற உதவும் 'மிலாப்' Wednesday, May 24, 2017 03:22 AM +0530 பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் மருத்துவ சிகிச்சைகளுக்கு நிதியுதவி அளிப்பதற்கு உதவும் வகையில் 'மிலாப்' என்ற கூட்டு நிதிய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மருத்துவ சிகிச்சை, குழந்தைகள், பெண்கள், கல்வி, விலங்குகள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிதியுதவி தேவைப்படுவோருக்கு நன்கொடையாளர்களிடம் இருந்து நிதி திரட்டித் தரப்படும்.
இது தொடர்பாக 'மிலாப்' அமைப்பின் இணை நிறுவனர் அனோஜ் விஸ்வநாதன் சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
இந்த இணையதளத்தின் மூலம் இதுவரை ரூ.160 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. சுமார் 80,000 திட்டங்களுக்கு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் நாடு முழுவதும் 3,000 பேருக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டும் 350 பேருக்கு சுமார் ரூ.10 கோடி அளவுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது.
இதற்காக 45 நகரங்களில் உள்ள 100 மருத்துவர்களிடம் தொடர்பு வைத்துள்ளோம். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நபர்களுக்கு நிதி திரட்டப்படும். மேலும் நன்கொடை அளிக்க விரும்புவோர் மருத்துவனையில் அளிக்கப்படும் ரசீதுக்கு நேரடியாகவே பணம் செலுத்த முடியும். எந்த நோயாளிக்கு நன்கொடை அளிக்கப்படுகிறதோ, அது தொடர்பான உண்மைத்தன்மையை சிகிச்சை அளிக்கும் மருத்துவரையே நேரடியாகத் தொடர்பு கொண்டு அறிய முடியும்.
ஒரே நபருக்கு சிறிய தொகையாக பலர் இணைந்து உதவி செய்யவும் முடியும். இதன் மூலம் புற்றுநோய், தலசீமியா, உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள், அவசர சிகிச்சை, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டணம் என அனைத்து வகையான தேவைகளுக்கு உதவி அளிக்க முடியும் என்றார்.
அப்பல்லோ மருத்துவமனையின் குழந்தைகள் புற்றுநோய் நிபுணர் ரேவதி ராஜ், காஞ்சி காமகோடி மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் பிரியா ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/24/w600X390/milap.jpg சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட (இடமிருந்து) மிலாப் அமைப்பின் இணை நிறுவனர் அனோஜ் விஸ்வநாதன், டாக்டர் ரேவதி ராஜ், டாக்டர் பிரியா ராமச்சந்திரன். http://www.dinamani.com/health/health-news/2017/may/24/மருத்துவ-சிகிச்சைக்கு-நிதியுதவி-பெற-உதவும்-மிலாப்-2707407.html
2707303 மருத்துவம் செய்திகள் கோடையில் உடல் குளுமையாக இருக்க மாலதி சந்திரசேகரன் Tuesday, May 23, 2017 03:28 PM +0530 உடல் குளுமையாக இருக்க 

உடல் வாகினால் தேகச்சூடு இருந்தாலோ, வெயில்  அதிகமாக இருப்பதினால் உடலில் உஷ்ணம் ஏற்பட்டாலோ கவலைப்படாதீர்கள். ஒரு பிடி ஜவ்வரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்துக் கொள்ளுங்கள். மிக்ஸியில் போட்டு மாவாக்கிக் கொள்ளுங்கள். முடியவில்லையா? முழுசாகவே எடுத்துக் கொள்ளுங்கள். கஞ்சியாக வைத்துக்கொண்டு, தேவைக்கு சர்க்கரை பால் சேர்த்தோ அல்லது உப்பும்  மோரும் கலந்தோ குடித்துப் பாருங்கள். டி. வி. விளம்பரத்தில் உடல் கூலாகி விட்டால், போலார் கரடி குதிப்பது போல் காட்டுவார்களே, அந்த ஃபீலிங்கை உணர்வீர்கள். 

புளித்த ஏப்பம் வராமலிருக்க 

தடபுடலான விருந்தில் கலந்து கொண்டு, ஒரு பிடி பிடித்துவிட்டீர்களா? எண்ணை பலகாரத்தை ஒரு கை பார்த்து விட்டீர்களா? ஜீரணம் ஆகாமல் 'பாவ் பாவ்’ என்று ஏப்பம் வந்து அருகிலிருப்பவர்கள் முகம் சுளிக்கும் வகையில் தொல்லை கொடுக்கிறதா? உங்களுக்கே எரிச்சல் உண்டாகும் வகையில் புளித்த ஏப்பம் ஏடாகூடமாய் வருகிறதா? ஒரு டேபிள் ஸ்பூன் ஓமத்தை ஊறவைத்து, ஒரு சிட்டிகை உப்பு, இரண்டு மிளகுடன் நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். சிறிது நல்லெண்ணெய்யைக் காயவைத்து, அதில் அரைத்த விழுதை, சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு, பொரித்து எடுத்து சாப்பிடுங்கள். அஜீரணம் அப்ஸ்காண்ட் ஆகிவிடும். 

- மாலதி சந்திரசேகரன்

]]>
tips for summer, டிப்ஸ், கோடை, உடல் குளுமையாக இருக்க  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/23/w600X390/i-love-summer.jpg http://www.dinamani.com/health/health-news/2017/may/23/how-to-keep-cool-in-summer-2707303.html
2705310 மருத்துவம் செய்திகள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை இந்த ஆண்டுக்குள் அமைக்கப்படும்: சுகாதாரத் துறை அமைச்சர் Saturday, May 20, 2017 02:30 AM +0530 தமிழகத்தில் இந்த ஆண்டுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள நுழைவாயில், ரூ.1.3 கோடி மதிப்பில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு அறுவைச் சிகிச்சை மையம் ஆகியவற்றின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் நுழைவு வாயில், சிறப்பு சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களிடம் கூறியது:
ஆசியாவிலேயே சிறந்ததான எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை 837 படுக்கைகள் கொண்டது. இதில் கூடுதலாக 40 படுக்கைகள் இணைக்கப்பட்டுள்ளன.
பச்சிளம் குழந்தைகள் அறுவை சிகிச்சை மையம் இந்தியாவிலேயே முதன்முறையாக இங்குதான் திறக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் கடத்தல் முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் பயோமெட்ரிக் முறை நாட்டிலேயே முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தாயின் விரல் ரேகையை அந்தக் கருவியில் வைத்தால் மட்டுமே குழந்தைகள் இருக்கும் பெட்டி திறக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனை வளாகங்களுக்கு வெளியே இருக்கும் தள்ளுவண்டிக் கடைகளில் விற்கும் சுகாதாரமற்ற உணவுப்பொருள்கள் தொடர்பாக மாநகராட்சி வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சடலங்களில் முறைகேடு: திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் 2012, 2013-ஆம் ஆண்டுகளில் சடலங்கள் காணாமல் போனது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது நவீன பிணவறைகள் அமைக்கப்பட்டுள்ளதால், முறைகேடுகள் நடைபெற வாய்ப்பில்லை. சென்னை, கோவை அரசு மருத்துவமனைகளிலும் மேம்படுத்தப்பட்ட பிணவறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
எய்ம்ஸ் மருத்துவமனை: தமிழகத்தில் இந்த ஆண்டுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா உறுதியளித்துள்ளார் என்றார் அவர்.
சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் நாராயண பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/20/w600X390/medical.jpg சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான புதிய அறுவை சிகிச்சை அரங்கைப் பார்வையிடுகிறார் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். http://www.dinamani.com/health/health-news/2017/may/20/தமிழகத்தில்-எய்ம்ஸ்-மருத்துவமனை-இந்த-ஆண்டுக்குள்-அமைக்கப்படும்-சுகாதாரத்-துறை-அமைச்சர்-2705310.html
2705271 மருத்துவம் செய்திகள் 104 சேவைக்கு 4 ஆயிரம் அழைப்புகள் Saturday, May 20, 2017 01:30 AM +0530 த்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானதைத் தொடர்ந்து 104 தொலைபேசி சேவைக்கு சுமார் 4 ஆயிரம் அழைப்புகள் சென்றன.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதைத் தொடர்ந்து 104 சேவையில் ஆலோசனை வழங்குவதற்காக 8 உளவியல் ஆலோசகர்கள் குழு அமைக்கப்பட்டது.
இது தொடர்பாக 104 மருத்துவ சேவையின் மண்டல மேலாளர் பிரபுதாஸ் கூறியது: பெரும்பாலும் மாணவர்களே ஆலோசனைக்காக அழைத்திருந்தனர். குறைவான மதிப்பெண் பெற்றோர், தேர்ச்சி பெறாதோர், அதிக மதிப்பெண் பெற்றும் திருப்தி இல்லாத மாணவர்கள் அதிக அளவில் அழைத்திருந்தனர்.
மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை எண்ணத்தோடும் சில மாணவர்கள் அழைத்தனர். அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள், பெற்றோருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
வெள்ளிக்கிழமை மாலை தேர்வு தொடர்பாக 4 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன. 220 பேருக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டன என்றார் அவர்.
ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால் சக மாணவர்கள், பெற்றோரிடம் இருந்து மாணவர்களுக்கு அளிக்கப்படும் அழுத்தம் குறைந்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் ஏற்படும் பரபரப்பு குறைந்துள்ளது என்று உளவியல் ஆலோசகர்கள் தெரிவித்தனர்.

 

]]>
http://www.dinamani.com/health/health-news/2017/may/20/104-சேவைக்கு-4-ஆயிரம்-அழைப்புகள்-2705271.html
2705164 மருத்துவம் செய்திகள் இந்தக் கோடையில் நீங்கள் பத்திரமாக இருக்க வேண்டுமா? Friday, May 19, 2017 04:46 PM +0530 இன்றைய தினங்களில், ஒருவர், எதிர்படும் பொழுதெல்லாம் முதல் குசல விசாரிப்பே, 'உஷ், அப்பாடி, போதுமா வெயில்?'  என்றுதானே. சென்னை பாஷையில் சொல்லப் போனால், 'உங்க வீட்டு வெயில், எங்க வீட்டு வெயில் இல்ல. சும்மா சாத்து சாத்துனு சாத்துது'. என்பதுதான். இவ்வளவு பயங்கரமான சூட்டில், வியாதிகளும் பஞ்சமில்லாமல், அழையா விருந்தாளியாக நம்மை வந்து அடைகின்றன. அதுவும் சரும நோய்கள்,  நான், நீ, என்று போட்டி போட்டுக் கொண்டு அட்டென்டென்ஸ் கொடுத்து விடுகின்றன. 

இந்த உஷ்ணத்திலிருந்து, நம் சருமத்தை, எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது பற்றி Dr. விஷ்ராந்த் S.P., M. D. Dermatologist, நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். 

'இதைப் போன்ற வெயில் நாட்களில் சருமத்தில், குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும், ஒவ்வொரு விதமான  பாதிப்புகள் ஏற்படுகின்றன. (நான்கு முதல் பதினெட்டு வயது உள்ளவர்கள் வரை குழந்தைகள் என்கிற கணக்கில்தான் நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்).

வெயில் நாட்களில், குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவது,  prickly heat என்று கூறப்படும் வியர்க்குருவினால்தான். எண்ணை சுரப்பிகளும், வியர்வை சுரப்பிகளும் அடைத்துக் கொள்வதால், வியர்க்குரு உண்டாகிறது.  இது போன்ற நாட்களில், பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும்.  நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சின்னக் குழந்தைகளுக்கு உபயோகப்படுத்தும் சோப், மற்றும் பவுடரை உபயோகமாகப்படுத்த வேண்டும். 

அடுத்ததாக முகப்பருக்கள் உண்டாகும். அவை, முகம் மட்டுமல்லாமல், கழுத்து, நெஞ்சு, தோள்பட்டை ஆகிய இடங்களில் தோன்றும்.  அது போன்ற சமயங்களில், ஒரு நாளைக்கு, குறைந்தபட்சம் நான்கு அல்லது ஐந்து முறைகள் முகத்தை கழுவ வேண்டும். மெல்லிய காட்டன் துணியால், அழுத்தித் தேய்க்காமல், ஒற்றியவாறு துடைக்க வேண்டும். உணவில், உப்பு, சர்க்கரை இவற்றின் அளவைக் குறைக்க வேண்டும். 

இன்னொரு முக்கியமான விஷயம். இந்த சம்மர் சீசனில், அநேக பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளை, ஸ்விம்மிங் க்ளாசில் போடுகிறார்கள். அந்தத் தண்ணீரில், அதிகப்படியான க்ளோரின் கலந்திருக்கும். வெப்பக்கதிர்களும் க்ளோரினும் சேர்ந்து எதிர்மறை விளைவுகளை உண்டாக்குகிறது. , ஏற்கனவே உலர்ந்த சருமத்தை, மேலும் ட்ரை ஆக்கி, தோலில், எரிச்சலை ஏற்படுத்துகிறது. தோலில் வெடிப்புகளும் உண்டாகின்றன. அதனால், நீச்சலுக்குச் செல்பவர்கள், நீந்தப்போவதற்கு முன், லேசாக  சன் க்ரீம் அப்ளை செய்து கொள்ள வேண்டும். நீந்தி முடித்த பின்னர், தலைக்கு மைல்ட் ஷாம்பூ மற்றும் உடலுக்கு மைல்ட் சோப்பு போட்டு குளிக்க வேண்டும். தலைமுடியையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், folliculitis என்று சொல்லப்படும், பாக்டீரியாவினால் உண்டாகும் அடைப்பு உண்டாகும். 

இந்த சீசனில், குழந்தைகளுக்கு, அம்மை நோய் உண்டாக வாய்ப்புகள் அதிகம் உண்டு . வைரல் இன்ஃபெக்ஷன் அதிகமாக ஏற்படும் ஆகையால், வராமல் தடுக்க, நீர்ச்சத்து அதிகமாக உள்ள காய்கள், மற்றும் பழங்களை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

மேலும் ஃபங்கல் இன்ஃபெக்ஷன்ஸ் வரும், தேமல் மற்றும் படர்தாமரை போன்றவைகள். இவைகள் வராமல் தடுக்க, குளித்தபின், ஈரத்தோடு துணியைப் போட்டுக்கொள்ளக் கூடாது. ஃபேன் காற்றில் நன்கு சருமத்தை உலர விட்டு பின்பு தான் அணிந்து கொள்ள வேண்டும். 

வியர்க்குரு, தேமல், படர்தாமரை போன்றவை குழந்தைகள், பெரியவர்கள் இருவருக்குமே பொதுவாகவே வருவதுதான். 

அதிகப்படியான உஷ்ணத்தால், ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, herpes zoster என்று சொல்லப்படும் அக்கி வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. சருமத்தில் எரிச்சல், சிறிய நீர்க்கொப்புளங்கள் ஆகியவைகள் இது வருவதற்கு உண்டான அறிகுறிகள்  எனக்கொள்ளலாம். இந்த பாதிப்பு உள்ளவர்கள், நீர்ச்சத்து அதிகமாக உள்ள காய்கள், நிறைய பழங்கள் சாப்பிட வேண்டும். 

மார்க்கெட்டிங் லைனில் உள்ளவர்களுக்கு, sun burn வரலாம். கண் எரிச்சலுடன், தோலில்  எரிச்சல், வெடிப்புகளும் உண்டாகி, தோல் உரிய ஆரம்பிக்கும். ஆகையால், வெளியே செல்லும் பொழுது, பெண்கள், முழு கையுறை, கூலிங் க்ளாஸ், ஆண்கள், முழுக்கை சட்டையை அணிவதுடன், கருப்பு கண்ணாடி ஆகியவற்றை அணிந்து கொள்ள வேண்டும். 

 • ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு முதல் ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். 
 • தேகம் dehydrate ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 
 • உணவில், கேசரி பௌடர் போன்ற அங்கீகரிக்கப்பட்ட கலர் பொடிகளைத் தவிர்க்க வேண்டும்.
 •  
 • சரும நோய்கள் பாதிக்கப்பட்டவர்களின் துணியை, தனியாகத் துவைத்து, அரைமணிநேரம் சுடுநீரில் ஊறவைத்துக் காயப்போட வேண்டும். 
 • உங்களின் உடம்பையும் கவனித்துக் கொண்டு, அடுத்தவர்களின் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்கள்.

டாட்காம் வாசகர்களே, வெயிலோடு விளையாடாதீங்க. அங்க இங்கன்னு அலைந்து வம்பை விலை கொடுத்து வாங்காதீங்க. 

நேர்காணல் - மாலதி சந்திரசேகரன் 

]]>
skin care, summer, சரும பராமரிப்பு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/19/w600X390/face1.jpg http://www.dinamani.com/health/health-news/2017/may/19/skin-care-tips-during-summer-2705164.html
2704593 மருத்துவம் செய்திகள் தாய் - சேய் வீடு திரும்ப 102 வாகன சேவை: முதல்வர் தொடக்கி வைத்தார் Friday, May 19, 2017 01:45 AM +0530 தாய் சேய் வாகன சேவை திட்டத்துக்கான 102 வாகன சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.
102 சேவை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளை அவர்களின் வீடுகளுக்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லவும், ஒரு வயதுக்குள்பட்ட உடல்நலம் குன்றிய குழந்தைகளை, சிகிச்சை முடிவடைந்த பிறகு அல்லது தடுப்பூசி அளிக்கப்பட்ட பின் வீடு திரும்பும் குழந்தைகள் மற்றும் தாய்மார்களை அவர்கள் இல்லத்துக்கு அழைத்துச் செல்லவும், அரசு மருத்துவமனைகளில் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்பவர்களை அவர்களின் இல்லத்துக்கு அழைத்துச் செல்லவும் 102 தாய்சேய் நல வாகன சேவைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
2013-ஆம் ஆண்டு சென்னையில் சோதனைத் திட்டமாக தொடங்கப்பட்ட இந்தச் சேவை தற்போது அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தில் தற்போது 61 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.
இச்சேவையை மேம்படுத்தும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டுக்காக 10 புதிய வாகனங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தச் சேவையை இந்திய செஞ்சிலுவைச் சங்கம் செய்து வருகிறது.
என்னென்ன வசதிகள்?: முதல்வரால் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்ட 35 வாகனங்களிலும் புவியியல் தகவல் அமைப்பு (ஜிபிஎஸ்) தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் வாகனங்கள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டு, தேவைப்படும் பகுதிக்கு உடனடியாக அனுப்ப முடியும்.
108 ஆம்புலன்ஸ் சேவைக்காக ரூ.3.55 கோடியில் 25 வாகனங்களையும், தாய் சேய் நல வாகன சேவைக்காக ரூ.86.89லட்சம் செலவில் 10 புதியவாகனங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
108 வாகன சேவையில் தற்போது 855 வாகனங்கள் இயங்குகின்றன. இச்சேவையைக் கடந்த 6 ஆண்டுகளில் 12.13 லட்சம் கர்ப்பிணிகள் உள்பட 48.19 லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளனர். இப்போது கூடுதலாக 25 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/19/w600X390/palanisamy.jpg தலைமைச்செயலகத்தில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் வாகனங்களைக் கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. http://www.dinamani.com/health/health-news/2017/may/19/தாய்---சேய்-வீடு-திரும்ப-102-வாகன-சேவை-முதல்வர்-தொடக்கி-வைத்தார்-2704593.html
2703957 மருத்துவம் செய்திகள் ஆஸ்துமா சிகிச்சைக்காக 1 லட்சம் மீன்கள் ஏற்பாடு: தெலங்கானா அரசு உத்தரவு Thursday, May 18, 2017 02:46 PM +0530 ஹைதராபாதில் ஆஸ்துமா நோய்க்கு மீன் மருந்து சிகிச்சை அளிக்கும் நிகழ்ச்சி, அடுத்த மாதம் 6-ஆம் தேதி நடைபெறவிருப்பதையொட்டி, சுமார் 1 லட்சம் மீன்களை தயார்நிலையில் வைக்கும்படி கால்நடைத் துறை அதிகாரிகளுக்கு தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

ஹைதராபாதைச் சேர்ந்த பாதினி கௌடு குடும்பத்தார் சார்பில், அங்கு ஆண்டுதோறும் மீன் மருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. உயிருள்ள சிறிய மீனின் வாயில் வைத்து தரப்படும் அந்த மூலிகை மருந்தை சாப்பிட்டால், ஆஸ்துமா நோய் குணமாகும் என்ற நம்பிக்கை நீண்ட காலமாக நிலவுகிறது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

நிகழாண்டு மீன் மருந்து வழங்கும் நிகழ்ச்சி, ஹைதராபாதின் நம்பள்ளி பகுதியில் உள்ள கண்காட்சி மைதானத்தில் அடுத்த மாதம் 8-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் குறித்து, தெலங்கானா மாநில கால்நடைத் துறை அதிகாரிகளுடன் அந்த துறையின் அமைச்சர் ஸ்ரீநிவாஸ் யாதவ் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். அப்போது, மீன் மருந்து வழங்கும் நிகழ்ச்சிக்காக சுமார் 1 லட்சம் மீன்களை தயார் நிலையில் வைக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

மேலும், வெளியூர்களில் இருந்து வருவோரின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்கவும் மாநில சாலை போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.

பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் மீன் மருந்து மீது பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை இருந்தபோதிலும், அதற்கு ஆஸ்துமாவை குணப்படுத்தும் திறன் உள்ளதா? என்று பகுத்தறிவுவாதிகள் சிலர் கேள்வியெழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/5/w600X390/mbbs1.jpg http://www.dinamani.com/health/health-news/2017/may/18/ஆஸ்துமா-சிகிச்சைக்காக-1-லட்சம்-மீன்கள்-ஏற்பாடு-தெலங்கானா-அரசு-உத்தரவு-2703957.html
2704048 மருத்துவம் செய்திகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை Thursday, May 18, 2017 05:01 AM +0530 கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் பேறுகால நலத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை புதன்கிழமை அளித்தது.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், முதல்முறையாக கர்ப்பம் தரிக்கும் அல்லது குழந்தை பெறும் தாய்மார்களுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை அளிக்கும் பேறுகால நலத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பிறகு, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தத் தகவலை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், 'முன்பு சோதனை முயற்சியாக 56 மாவட்டங்களில் மட்டும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டபோது, முதல் 2 குழந்தைகளின் பிறப்பின்போது உதவித் தொகை அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது இத்திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், முதல் குழந்தைக்கு மட்டுமே என்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.
இந்தத் திட்டம் குறித்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
பேறுகால நலத் திட்டத்தின்கீழ், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித் தொகை 3 தவணைகளாக, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்தால் அளிக்கப்படும். இந்த திட்டத்தில் பதிவு செய்தவுடன் கர்ப்பிணிப் பெண்களுக்கு முதல் தவணையாக ரூ.1,000 அளிக்கப்படும். அதைத் தொடர்ந்து, 6 மாத காலத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் பரிசோதனை முடிந்ததும் ரூ.2,000 அளிக்கப்படும். இதையடுத்து, குழந்தை பிறப்பு குறித்து பதிவு செய்ததும் ரூ.2,000 வழங்கப்படும். இவ்வாறாக, ரூ.5,000 உதவித் தொகை அளிக்கப்படும். அதனைத் தொடர்ந்து, எஞ்சிய தொகையும் அரசு விதிகளின்படி அளிக்கப்படும்.
இந்த உதவித் தொகையானது, தாய்மார்களின் வங்கிக் கணக்கில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்தால் நேரடியாக செலுத்தப்படும் என்று அந்த அறிவிப்பில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டிலுள்ள 56 மாவட்டங்களில், கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித் தொகை வழங்கும் பேறுகால நலத் திட்டம் மத்திய அரசால் சோதனை முயற்சியாக 2010-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வந்தது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி பேசியபோது, நாடு முழுமைக்கும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/18/w600X390/motherandchild.jpg http://www.dinamani.com/health/health-news/2017/may/18/கர்ப்பிணிப்-பெண்களுக்கு-ரூ6-ஆயிரம்-உதவித்-தொகை-2704048.html
2704007 மருத்துவம் செய்திகள் போலி மருத்துவர்களாக சித்திரிக்கப்படும் இந்திய முறை மருத்துவர்கள்: யுனானி மருத்துவர்கள் போராட்டம் Thursday, May 18, 2017 02:24 AM +0530 இந்திய முறை மருத்துவர்கள் போலி மருத்துவர்கள் போன்று சித்திரிக்கப்பட்டு காவல் துறையினரால் கைது செய்யப்படுவதை எதிர்த்து யுனானி மருத்துவர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆங்கில மருத்துவ முறையைப் பயன்படுத்திய யுனானி மற்றும் சித்த மருத்துவர்கள் மீது
ஊரக நலப்பணிகள் இயக்கக அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில், காவல் துறையினர் அவர்களை அண்மையில் கைது செய்தனர்.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், யுனானி மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவ இயக்கக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக தென்னிந்திய யுனானி மருத்துவச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஹிமுல்லா கூறியது:
இந்திய முறை மருத்துவர்கள் மீது ஏதேனும் புகார் இருந்தால், அதனை மாநில ஆயுஷ் துறையின் இணை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்ககத்தின் பதிவாளர் அறிவுறுத்தலின் பேரில், அந்தந்த மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விதிமுறை. ஆனால் இந்த விதிமுறையைப் பின்பற்றுவதில்லை.
இந்திய முறை மருத்துவர்களும் ஆங்கில மருத்துவர்கள் போன்று ஐந்தரை ஆண்டுகள் படிப்பை முடித்துவிட்டுதான் மருத்துவச் சேவையில் ஈடுபடுகிறோம். அந்தந்த மருத்துவத் துறையின் கவுன்சிலில் பதிவு செய்துவிட்டுதான் பணியாற்றுகிறோம். ஆனால், இந்தியமுறை மருத்துவர்களை, போலி மருத்துவர்களை போன்று தொடர்ந்து சித்திரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும். ஏற்கெனவே, இந்திய முறை மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்த காவல் துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
இதையடுத்து, இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையர் மோகன் பியாரேவைச் சந்தித்து அவர்கள் மனு அளித்தனர். சுகாதாரத் துறை செயலருக்கும் மனு அளிக்கப்பட்டது.

 

]]>
http://www.dinamani.com/health/health-news/2017/may/18/போலி-மருத்துவர்களாக-சித்திரிக்கப்படும்-இந்திய-முறை-மருத்துவர்கள்-யுனானி-மருத்துவர்கள்-போராட்டம்-2704007.html
2704004 மருத்துவம் செய்திகள் 4 வயது சிறுமியின் சிறுநீரகங்களில் கற்கள் அகற்றம் Thursday, May 18, 2017 02:22 AM +0530 நான்கு வயது சிறுமியின் இரண்டு சிறுநீரகங்களிலும் தலா 4.5 செ.மீ. அளவுள்ள கற்களை நுண்துளை சிகிச்சையின் மூலம் டாக்டர்கள் அகற்றியுள்ளனர்.
இது தொடர்பாக ஆர்.ஜி.யூராலஜி மற்றும் லேப்ராஸ்கோப்பி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஆர்.விஜயகுமார் சென்னை செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: சென்னையைச் சேர்ந்த காய்கறி விற்பனை செய்யும் பெற்றோரின் நான்கு வயது மகள் கடந்த ஆறு மாதங்களாகத் தொடர்ந்து காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு வந்தனர்.
சிறுமியைப் பரிசோதனை செய்ததில் இரண்டு சிறுநீரகங்களிலும் தலா 4.5 செ.மீ. அளவுள்ள கற்கள் உருவாகியிருந்தது தெரியவந்தது. குழந்தை பிறந்த 3 மாதங்களில் இருந்து இந்த கற்கள் சிறுநீரகத்தில் வளர்ந்து வந்துள்ளது. இதனால் அந்தச் சிறுமி ஊட்டச்சத்து குறைபாட்டுடனும், ரத்த சோகையுடனும் காணப்பட்டார். பொதுவாக குழந்தைகளுக்குத் தாய்ப்பாலுக்கு பதில் புட்டிப்பால் அல்லது பவுடர் பால் கொடுப்பதால் அதிலுள்ள வேதிப்பொருள்கள் சேர்ந்து சீறுநீர்ப் பாதையில் கற்கள் உருவாகும். இதை எளிதாகக் கையாள முடியும். ஆனால் சீறுநீரகங்களில் கற்கள் உருவாவது அரிதானது. எனவே, நுண்துளை சிகிச்சை மூலம் கற்களை அகற்றத் தீர்மானிக்கப்பட்டு இடுப்புப் பகுதியில் 4 மி.மீ. அளவுள்ள சிறுதுளைகள் போடப்பட்டன. அதன் வழியாக அல்ட்ரா சவுண்ட் கருவி செலுத்தப்பட்டு, கற்கள் உடைக்கப்பட்டு நீக்கப்பட்டன.

 

]]>
http://www.dinamani.com/health/health-news/2017/may/18/4-வயது-சிறுமியின்-சிறுநீரகங்களில்-கற்கள்-அகற்றம்-2704004.html
2703884 மருத்துவம் செய்திகள் உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் இருக்க வேண்டுமா? IANS Wednesday, May 17, 2017 01:18 PM +0530 இன்று (மே 17) உலக உயர் ரத்த அழுத்த தினம் (Hyper Tension Day) அனுசரிக்கப்படுகிறது.

அறியாமை வரம் என்று ஒரு பழமொழி உண்டு. ஆங்கிலத்தில் இதனை Ignorance is bliss என்பார்கள். ஆனால் உயர் ரத்த அழுத்தத்தைப் பொருத்தவரையில் இந்தப் பழமொழி சுத்தமாகப் பொருந்தாது. காரணம் கவனிக்கப்படாத உயர் ரத்த அழுத்தம், மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் பாதிப்புக்கள் ஏற்படுத்தி ஸ்ட்ரோக்கை (பக்கவாதம்) வரவழைத்துவிடும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

தமக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பதே பலருக்குத் தெரியாது. அந்தளவுக்கு சத்தமே இல்லாமல் ஆளை அடித்துவிடும். இந்தியாவைப் பொருத்தவரையில் உயர் ரத்த அழுத்தப் பிரச்னைகள் மிகப் பரவலாக உள்ளது. மூன்றில் ஒரு பகுதி நகர்ப்புற மக்களுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளதென்றும், கிராமப்புறங்களில் இதுவே நான்கில் ஒரு பகுதியினருக்கு இப்பிரச்னை உள்ளது என்று சமீபத்தில் வெளியான ஜர்னல் ஆஃப் ஹைபர் டென்ஷன் என்ற பத்திரிக்கைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர் ரத்த அழுத்தம் அதிகரிப்பதால், ரத்த உறைவு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து ஏற்படும். இது இதயத்தை பாதிக்கும்போது இதயம் வீங்கிவிடும். மாரடைப்பு வரும். மூளை பாதிக்கப் படும்போது பக்கவாதம் வரும் என்கிறார் புது தில்லியிலுள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையின் இயக்குனர்  தபன் கோஸ்.

உயர் ரத்த அழுத்தப் பிரச்னையால் இதயத்தில் தமணி சுருங்கிவிடுகிறது. ரத்த ஓட்டம் பாதிப்படைந்து, ரத்த உறைவும் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து மூளை பாதிப்படைந்து பக்கவாதம் ஏற்படும் ஆபத்துக்கள் அதிகம் உள்ளன என்கிறது அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்.

இரண்டு வகையான பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. முதலாவதாக ஐஸ்கிமிக் ஸ்ட்ரோக் (ischemic stroke), இது மூளையில் ரத்த ஓட்டப் பற்றாக்குறையினால் ஏற்படுவது, இரண்டாவதாக ஹெமராகிக் ஸ்ட்ரோக் (hemorrhagic stroke), இது மூளையில் ரத்தகசிவால் ஏற்படும் பக்கவாதம்.

முதலாக கூறப்பட்ட ஐஸ்கிமிக் ஸ்ட்ரோக் அல்லது ப்ரெயின் அட்டாக்கிற்கான மூல காரணம் உயர் ரத்த அழுத்தம்தான். இது இதயத்தையும் செயலிழக்கச் செய்துவிடும். முதலில் ஐஸ்கிமிக் ஸ்ட்ரோக் வந்தபின் அது ஹெமராகிக் ஸ்ட்ரோக்காக மாறும் ஆபத்து உள்ளது என்று கூறினார் நொய்டாவிலுள்ள ஜெய்பி மருத்துவமனையின் கார்டியாலஜி பிரிவு இயக்குனர் குன்ஜன் கபூர். 

50 சதவிகித அடைப்புக்கள் மற்றும் மூளையில் ரத்த கசிவுகளுக்கான காரணியான உயர் ரத்த அழுத்தம் ஐஸ்கிமிக் ஸ்ட்ரோக் ஏற்படச் செய்கிறது என்று கூறுகிறார் விபுல் குப்தா. இவர் குர்கானிலுள்ள அர்டெமிஸ் மருத்துவமனையின் இயக்குனராவார்.

உயர் ரத்த அழுத்தம் இருப்பதை விரைவில் கண்டுபிடித்தால் அதற்கான சிகிச்சையைத் தொடங்கி, பல சிக்கல்களையும் உயிர் இழப்புக்களையும் தடுத்துவிடலாம். சராசரி மனிதனின் ரத்த அழுத்தம் 120/80 மி.மீ மெர்க்குரி. நடுத்தர வயதில் உள்ள ஆரோக்கியமான மனிதர்களுக்கு இந்த அளவானது சிறிது மாறுபடும். 139/89 மி.மீ மெர்க்குரி என்னும் அளவைக் கூட நார்மல் என்றே கூறலாம். 140/90 முதல் 160/110 மி.மீ மெர்க்குரி வரை உள்ள அளவுகள் சற்று உயர்ந்த ரத்த அழுத்தத்தைக் குறிக்கும். இதற்கு மேல் உள்ள அளவுகள் மிகவும் அதிகப்படியான உயர் ரத்த அழுத்தத்தினைக் குறிக்கும். அதுவே ஸ்ட்ரோக் போன்ற பிரச்னைகளுக்கான முக்கிய காரணம் என்கிறார் புது தில்லி வெங்கடேஸ்வர் மருத்துவமனையின் கார்டியாலஜி துறை இயக்குநர் டாக்டர் பி.கே.துபே

உயர் ரத்த அழுத்தத்திற்கான சரியான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், சிலவற்றை குறிப்பிடலாம். உடல் உழைப்பு இல்லாமை, புகை பிடிக்கும் பழக்கம், மது அருந்துவது, உணவில் அதிக உப்பு சேர்த்துக் கொள்வது, மன அழுத்தம், ஹார்மோன்களின் அளவு மாறுதல், சிறுநீரகக் கோளாறுகள், மரபு வழியாக ஏற்படும் பிரச்னைகள் போன்றவற்றால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

உடல் எடை அதிகம் இருப்பதால் உயர் ரத்த பிரச்னைகள், இதய நோய்கள் மற்றும் டைப் 2 டயபடீஸ் பிரச்னைகள் ஏற்படுத்தி ஸ்ட்ரோக் ஏற்படும் ஆபத்துக்கள் அதிகம் உள்ளது என்கிறார் புது தில்லி, மாக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையைச் சேர்ந்த நியூராலஜி துறை சீனியர் இயக்குநர் ஜெ.டி.முகர்ஜி.

தலைவலி, நெஞ்சு வலி, படபடப்பு, மூச்சிரைப்பு, தாறு மாறான இதயத்துடிப்பு, மயக்கம், வாந்தி, மூக்கில் ரத்தக்கசிவு, ஆகியவை உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள். பெரும்பாலோருக்கு இந்த அறிகுறிகள் எதுவும் வெளியில் தெரியாது.

திடீரென்று மயக்கம், பக்கவாதம், மாரடைப்பு என்று ஏதாவது ஒன்று வந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இந்த உயர் ரத்த அழுத்தம் பெரும்பாலும் உடலில் அமைதியாக இருந்து ஆளைக் கொல்லும் தன்மை இருப்பதால் விரைவில் இதைக் கண்டுபிடித்து சிகிச்சையை தொடங்கிவிடுவது தான் இதன் விளைவுகளிலிருந்து தப்புவதற்கான ஒரே வழி. தவிர வாழ்க்கைமுறைகளில் ஒழுங்கை கடைப்பிடிப்பதும் முக்கியம். ஆரம்பக் கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் மருத்துவர் பரிந்துரைக்கும் வாழ்க்கைமுறை, உணவுக் கட்டுபாடு, உடற்பயிற்சி மற்றும் மருந்துக்களை தொடர்ந்து கடைபிடிப்பதன் மூலம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். புகை மற்றும் மதுப்பழக்கத்தை விடுவதும் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படும் என்றார் புது தில்லி பி எல் கே சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நியூரோ சர்ஜன் அனில் கன்சல். 

நிறைய பழங்கள், காய்கறிகள் தினமும் சாப்பிட வேண்டும். பால் பொருட்கள், ஐஸ் க்ரீம், சீஸ், இறைச்சி போன்ற கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்த்துவிடுவதும், குப்பை உணவுகளை சாப்பிடாமல் இருப்பதும் உயர் ரத்த அழுத்தத்தை தடுக்கும் சில வழிமுறைகள்.

உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால் ரத்த அழுத்தம் ஏற்படாது. எப்படியோ அது வந்துவிட்டால் சோர்ந்து விடாமல் விடா முயற்சியுடன் மருத்துவம் செய்துகொள்ள வேண்டும். தினமும் உடலுக்கும், மனத்துக்கும் நல்ல பயிற்சிகள் தர வேண்டும்.  அதிகாலை நடைப்பயிற்சி, எளிமையான சில உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்துவர வேண்டும். யோகா செய்வது புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். இதயத்துக்கு நல்லது, மன அழுத்தத்தைக் குறைக்கும் என்று தெரிவித்தார் தில்லியைச் சேர்ந்த ஃபிட்னெஸ் மற்றும் நியூட்ரிஷனிஸ்ட் ரட்சித் துவா.

- விவேக் சிங் செளவான், (தமிழில் உமா ஷக்தி)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/17/w600X390/hypertension.jpg http://www.dinamani.com/health/health-news/2017/may/17/hypertension-can-put-you-at-increased-risk-of-stroke-may-17-is-world-hypertension-day-2703884.html
2703417 மருத்துவம் செய்திகள் தொற்றுநோய்கள் கட்டுப்பாட்டில் உள்ளன: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் Wednesday, May 17, 2017 02:45 AM +0530 தமிழகத்தில் அனைத்துத் தொற்றுநோய்களும் கட்டுப்பாட்டில் உள்ளன என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
தமிழக பொது சுகாதாரத் துறை சார்பில் தேசிய டெங்கு விழிப்புணர்வு தினம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்த சுத்தம் சுகம் தரும் என்ற குறும்படம் வெளியிடப்பட்டது
அப்போது அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியது: தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட அனைத்துத் தொற்றுநோய்களும் கட்டுப்பாட்டில் உள்ளன. தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயாராக உள்ளன.
தென்னாப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கானோரைப் பாதித்த எபோலா நோய் கூட, தமிழகத்தில் பரவாமல் தடுக்கப்பட்டது. டெங்கு நோய் குறித்த விழிப்புணர்வுக்காக வெளியிடப்பட்டுள்ள 'சுத்தம் சுகம்' என்ற குறும்படம் அனைத்துத் திரையரங்குகளிலும் வெளியிடப்படும் என்றார்.
சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசியது: உலகத்தில் 125 நாடுகளில் டெங்கு பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் 2012-இல் டெங்கு பாதிப்பு அதிகமாகக் காணப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் அதன் தாக்கம் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/1/w600X390/vijayabaskar.jpg http://www.dinamani.com/health/health-news/2017/may/17/தொற்றுநோய்கள்-கட்டுப்பாட்டில்-உள்ளன-தமிழக-சுகாதாரத்-துறை-அமைச்சர்-சிவிஜயபாஸ்கர்-2703417.html
2703220 மருத்துவம் செய்திகள் எச்சரிக்கை! அதைக் குடிக்காதீர்கள்! IANS Tuesday, May 16, 2017 02:40 PM +0530 நாம் பெரும்பாலும் நல்லது என்று நினைத்து செய்யும் செயல்கள் நமக்கே தீங்காக விளைந்துவிடும். குடிப்பது தவறு என்ற கொள்கைப் பிடிப்பு உடையவர்கள், அதை விட தவறான சிலவற்றை குடித்து தங்கள் உடல்நலத்துக்கு தீங்கு விளைவித்துக் கொள்கிறார்கள். இது என்ன புதுக் கதை என்று யோசிக்கிறீர்களா? இதை பெரும் செலவு செய்து ஒரு ஆராய்ச்சியின் முடிவில் கண்டு பிடித்துள்ளார்கள். டயட் குளிர்பானங்கள், சோடா போன்றவற்றைக் குடித்தால் உடல் எடை அதிகரிக்கும் என்பது தான் அந்த ஆய்வின் குறிக்கோள்.

டயட் என்று போட்டிருக்கிறதே இது உடல் எடையைக் குறைக்கும் என்று நினைத்து நீங்கள் அவற்றை டின் டின்னாக வாங்கிக் குடித்துக் கொண்டிருக்க, அது உங்களுக்கே தெரியாமல் ஒபிசிடி பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்று ஆணித்தரமாக சொல்கிறது அந்த ஆய்வு. உண்மையில் நீங்கள் உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருக்கிறீர்கள் என்றால் உடனடியாக சோடா அல்லது டயட் சாஃப்ட் ட்ரிங்ஸ் போன்றவற்றை குடிப்பதை நிறுத்திவிடுங்கள். அப்போதுதான் சில நாட்களிலேயே உடல் எடை குறையும் என்கிறது இந்த ஆய்வு.

ஆல்கஹால் மற்றும் இனிப்பான குளிர்ப்பானங்களுக்கு மாற்றாக சோடா மற்றும் டயட் குளிர்பானங்களை சிலர் குடிக்கிறார்கள். ஆல்கஹால் அல்லது மற்ற குளிர்பானங்களைப் போல் இது கெடுதல் இல்லை, சோடா தானே, இது சாப்பிட்ட உணவை செறிக்க உதவும், அல்லது உடல் எடையைக் குறைக்க உதவும், உடல் நலத்துக்கும் நல்லது என்று பலர் நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. உண்மையில் இந்த கார்பனேட்டட் சோடா மற்றும் டயட் குளிர்பானங்கள் உங்கள் வயிற்றை காலியாக இருப்பது போல உணரச் செய்யும். அதனால் நீங்கள் அதிகப்படியான உணவை சாப்பிடத் தொடங்கிவிடுவீர்கள். இது தொடர்கையில் ஒரு கட்டத்தில் உங்கள் உடல் எடை அதிகரித்து விடும் என்கிறார்கள் பாலஸ்தீனியன் பிர்சியட் யூனிவர்சிட்டியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். express.co.uk இணையதளத்தில் இக்கட்டுரையை வெளியிட்டுள்ளார்கள்.

மேலும் அவர்கள் கூறுகையில், இந்த குளிர்பானங்களில் அடைக்கப்பட்டுள்ள கார்பன் டை ஆக்ஸைட் பசியைத் தூண்டும் க்ளெரிலின் (ghrelin) எனும் ஹார்மோனைத் தூண்டிவிடுகிறது என்றார்கள்.

இந்த ஆராய்ச்சிக்காக எலிகளை கிட்டத்தட்ட ஒரு வருடம் பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். சில எலிகளுக்கு தண்ணீரும் வேறு சில எலிகளுக்கு அதிக இனிப்பான குளிர்பானங்களை புகட்டினார்கள். இன்னும் சில எலிகளுக்கு சோடா மற்றும் டயட் குளிர்பானங்களை குடிக்கச் செய்தார்கள். ஆய்வு முடிவில் தண்ணீர் குடித்த எலிகள் அப்படியே இருந்தன. அதிக இனிப்புள்ள குளிர்பானங்களைக் குடித்த எலிகள் சற்று எடை அதிகரித்திருந்தன.

ஆனால் இவற்றை விட அதிக எடை போட்ட எலிகள் யார் தெரியுமா? சாட்சாத் டயட் குளிர்பானங்களும் சோடாக்களையும் குடித்த எலிகள் தான். அவை மிகவும் பருத்து பெருச்சாளிகள் போலத் தோற்றமளித்தன. அவற்றின் முக்கியமான உறுப்புக்களில் எல்லாம் கொழுப்பு அதிகரித்திருந்ததை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்தனர். இது தவிர அவற்றின் க்ளெரிலின் ஹார்மோன் சுரப்பு அளவுகளும் கணிசமாக அதிகரித்திருந்தன. எலிகளுக்கு ஏற்பட்ட கதி தான் சோடா மற்றும் டயட் பானங்களை குடிக்கும் மனிதர்களுக்கும் என்று முத்தாய்ப்பாக கூறுனார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
 

]]>
Soda, Diet cool drinks, சோடா, டயட் குளிர்பானங்கள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/16/w600X390/diet_soda.jpg http://www.dinamani.com/health/health-news/2017/may/16/diet-drinks-soda-may-make-you-gain-weight-study-2703220.html
2702647 மருத்துவம் செய்திகள் பீட்ரூட் ஜூஸ் குடிங்க! ஹார்ட் அட்டாக்கை தடுத்துடுங்க! IANS Monday, May 15, 2017 12:46 PM +0530 சமீபத்தில் நடத்திய ஆய்வொன்று பீட்ரூட் ஜூஸ் அடிக்கடி குடிப்பதினால் உயர் ரத்த அழுத்த பாதிப்புக்கள் மற்றும் ஹார்ட் அட்டாக் ரிஸ்க் குறையும் என்கிறது. காரணம் பீட்ரூட்டில் இயற்கையாக உள்ள டயட்டரி நைட்ரேட் ரத்தக் குழாயில் உள்ள அழுத்தங்களை ஒழுங்கமைத்து ரத்த ஓட்டத்தை சீராக்கும் என்கிறது இந்த ஆய்வு.

ஜர்னல் ஆஃப் பிஸியாலஜி - ஹார்ட் அண்ட் சர்க்குலேட்டரி பிஸியாலஜி (Journal of Physiology - Heart and Circulatory Physiology)என்ற பத்திரிகையில் இந்த ஆராய்ச்சி கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.  இந்த பீட்ரூட் ஜூஸ் நரம்பு மண்டலங்களில் நுட்பமாக செயல்பட்டு ஹார்ட் அட்டாக் வருவதற்கான அடிப்படை காரணிகளை தடுத்து இதயத் துடிப்பை சீராக்கிவிடும் என்கிறது.

கனடாவில் உள்ள யூனிவர்சிட்டி ஆஃப் கெல்ஃப் ஆராய்ச்சியாளர்கள் express.co.uk எனும் இணையதளத்தில் இது குறுத்து கூறும் போது, ‘பீட்ரூட் ஜூஸில் கிடைக்கப்பெறும் அதிகப்படியான நைட்ரேட் உடற்பயிற்சி செய்யும் போது அல்லது ஓய்வாக இருக்கும் போதும் கூட தசைகளுக்கு புத்துணர்வை ஊட்டும்’என்றார்கள்.

இந்த ஆராய்ச்சிக்காக 27 வயதுடைய 20 இளம் தன்னார்வலர்களை உட்படுத்தினார்கள். இவர்களிடம் இரண்டு கட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவர்களுக்கு நைட்ரேட் அல்லது ப்ளாசிபோ (placebo) சப்ளிமெண்ட் உடைய ஜூஸ்கள் தரப்பட்டன.

அவர்களுடைய ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு குறிக்கப்பட்டது. இது தவிர அவர்கள் ஓய்வில் இருக்கும் போது மற்றும் கைகளுக்கான பயிற்சியை மேற்கொள்ளும் போதும் எம்எஸ்என்ஏ (muscle sympathetic nerve activity (MSNA)) என்ற பரிசோதனையையும் ஆராய்ச்சியாளர்கள் செய்தனர்.

இந்த ஆராய்ச்சி முடிவில் ப்ளாசிபோ எடுத்துக் கொண்டவர்களைவிட பீட்ரூட் ஜூஸ் குடித்த தன்னார்வலர்களுக்கு MSNA குறைவாக இருந்தது. ரத்த அழுத்தத்தைப் பொருத்தவரையில் ஓய்வாக இருக்கும் போதும் பயிற்சி செய்யும் போதும் பெரிய வித்தியாசங்கள் காணப்படவில்லை. அது சீராகவே இருந்தது என்றார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
 
இதிலிருந்து டயட்டரி நைட்ரேட் சப்ளிமெண்ட் உடலினுள் செயல்படும் விதத்தைப் புரிந்து கொண்டு அது கார்டியோ வாஸ்குலர் பிரச்னைகளை சீராக்குகிறது என்ற முடிவுக்கு வரலாம் என்று குறிப்பிட்டனர்.

இதற்கு முன்னால் யூனிவர்சிட்டி ஆஃப் எக்ஸிடர் (University of Exeter) வெளியிட்டுள்ள ஆய்வில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் 16 சதவிகிதம் அதிகப்படியாக உடற்பயிற்சி செய்ய முடிந்தது.

]]>
Beet root joice, Reduce heart attack risk, இதய நலம், பீட்ரூட் ஜூஸ் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/15/w600X390/beetroot_juice.jpg http://www.dinamani.com/health/health-news/2017/may/15/a-glass-of-beetroot-juice-could-lower-bp-heart-attack-risk-2702647.html
2699792 மருத்துவம் செய்திகள் மூளைச்சாவு அடைந்த எலக்ட்ரீஷியன் உடல் உறுப்புகள் தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு Thursday, May 11, 2017 01:34 AM +0530 சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த எலக்ட்ரீஷியனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கியதன் மூலம் 7 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
கோவை, வடவள்ளி அருகே லிங்கனூர், சொக்கலிங்க முதலியார் வீதியைச் சேர்ந்தவர் கே.சண்முகசுந்தரம் (53). இவர் தென்னம்பாளையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் கடந்த மே 6-ஆம் தேதி வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
நீலாம்பூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் தலையில் பலத்த காயத்துடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சண்முகசுந்தரம் செவ்வாய்க்கிழமை மூளைச்சாவு அடைந்ததாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அவரது உடலில் இருந்து கல்லீரல், நுரையீரல், இதய வால்வுகள், இரண்டு சிறுநீரகங்கள், கண்கள் ஆகியவை புதன்கிழமை அகற்றப்பட்டு சென்னை, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/11/w600X390/SHAN.jpg http://www.dinamani.com/health/health-news/2017/may/11/மூளைச்சாவு-அடைந்த-எலக்ட்ரீஷியன்-உடல்-உறுப்புகள்-தானம்-7-பேருக்கு-மறுவாழ்வு-2699792.html
2699149 மருத்துவம் செய்திகள் அம்மா திட்ட முகாம்களில் கண், உடல் பரிசோதனைகள் Wednesday, May 10, 2017 02:23 AM +0530 அம்மா திட்ட முகாம்கள்: தமிழக அரசு அறிவிப்பு நடைபெறும் இடங்களில் கண், உடல் பரிசோதனைகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை எழிலகத்தில் அனைத்து மாவட்ட வருவாய் அலுவலர்களின் (டி.ஆர்.ஓ.) ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் நிலங்களை மறுசீராய்வு செய்த பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும், அதற்கான நடைமுறைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த மறுசீராய்வால் எடுக்கப்பட்ட உபரி நிலங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் விவசாயத்துக்கு அளிக்கப்படும்.
தடையில்லாத உதவித் தொகை: முதியோர், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. தகுதியில்லாதவர்களுக்கு உதவித் தொகை ஏன் நிறுத்தப்படுகிறது என்பதற்கான காரணத்தை எழுத்து மூலம் அளிக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வறட்சியால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை முழுவதையும் வங்கிக் கணக்கில் சேர்க்க வேண்டும் என்றார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
சென்னை எழிலகத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தலைமையில், அனைத்து மாவட்ட சமுக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சத்தியகோபால், தமிழகத்தில் 29 லட்சத்து 60 ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். அவர்களுக்கு அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்களில் கண் பரிசோதனையும், உடல் பரிசோதனையும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். கண்புரை இருந்தால் அவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/10/w600X390/eyetest.jpg http://www.dinamani.com/health/health-news/2017/may/10/அம்மா-திட்ட-முகாம்களில்-கண்-உடல்-பரிசோதனைகள்-2699149.html
2698879 மருத்துவம் செய்திகள் இன்றைய மருத்துவ சிந்தனை பெருங்காயம் Tuesday, May 9, 2017 08:37 AM +0530 பெருங்காயத்தை நீர் சேர்த்து அரைத்து, குழந்தைகளின் நெஞ்சில் தடவிவந்தால் கக்குவான் இருமல் குணமாகும்.

பெருங்காயம், கிராம்பு இரண்டையும் போட்டுக் கொதிக்க வைத்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால் பல் வலி குணமாகும்.

பெருங்காயம் ஒரு பங்கு, வெந்தயம் பத்து பங்கு எடுத்து இரண்டையும் வறுத்துப் பொடி செய்து, கால் ஸ்பூன் பொடியை மோரில் கலந்து குடித்துவந்தால் கடுமையான வயிற்று வலி உடனே குணமாகும்.

பெருங்காயம், மிளகு இரண்டையும் தலா அரை கிராம் எடுத்து வெந்நீரில்  போட்டுக் குடித்தால் தலைவலி குணமாகும்.

பெருங்காயத்துடன் கோழி முட்டையின் மஞ்சள் கருவைக் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் குணமாகும்.

பெருங்காயத்தை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி, ஆறிய பிறகு அந்த எண்ணெயில் இரண்டு துளிகளை காதில் விட்டால் காது வலி குணமாகும்.

பெருங்காயத்தைப் பொரித்து பூண்டு மற்றும் பனை வெல்லத்தோடு சேர்த்து தினமும் காலையில் சாப்பிட்டால், பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப் பையில் உள்ள அழுக்கு வெளியேறும்.

KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  
Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

]]>
Perungayam, asafoetida, பெருங்காயம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/9/w600X390/perungayam.jpg http://www.dinamani.com/health/health-news/2017/may/09/medicinal-benefits-of-asafoetida-2698879.html
2698465 மருத்துவம் செய்திகள் ஊதியத்துடன் 26 வாரங்களுக்கு பேறுகால விடுப்பு: ஏற்கெனவே விடுப்பில் உள்ளவர்களுக்கும் பொருந்தும்: மத்திய அரசு Tuesday, May 9, 2017 12:55 AM +0530 பேறுகால நலச் சட்டத் திருத்தத்தின்கீழ், பணிபுரியும் கர்ப்பிணிகளுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு 26 வாரங்களாக உயர்த்தப்பட்டிருப்பது, ஏற்கெனவே விடுப்பில் உள்ளவர்களுக்கும் பொருந்தும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
பணிபுரியும் கர்ப்பிணிகளுக்கு இதற்கு முன்பு ஊதியத்துடன் 12 வாரங்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே, இந்த விடுப்பை 26 வாரங்களாக அதிகரிக்கும் வகையில், பேறுகால நலச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து, இந்த சட்டத் திருத்தம், நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், பேறுகாலத்துக்காக ஏற்கெனவே விடுப்பு எடுத்திருக்கும் கர்ப்பிணிகளுக்கும் இந்த விடுப்பு பொருந்துமா? என்ற குழப்பம் ஏற்பட்டது. இதற்கு மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பேறுகால நலச் சட்டத் திருத்தத்தில் அளிக்கப்பட்டுள்ள 26 வாரகால விடுப்பு, ஏற்கெனவே பேறுகாலத்துக்காக விடுப்பில் இருக்கும் கர்ப்பிணிகளுக்கும் பொருந்துமா? என்று மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்திடம் ஏராளமானோர் கேள்விகள் எழுப்பினர். இதையடுத்து, பேறுகால நல சட்டத் திருத்தத்தின் பல்வேறு ஷரத்துகள் குறித்தும் விளக்கங்கள் அளித்து மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் கடந்த ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. அதில், ஏற்கெனவே பேறுகாலத்துக்காக விடுப்பில் இருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் 26 வார விடுப்பு பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/30/w600X390/women.jpg http://www.dinamani.com/health/health-news/2017/may/09/ஊதியத்துடன்-26-வாரங்களுக்கு-பேறுகால-விடுப்பு-ஏற்கெனவே-விடுப்பில்-உள்ளவர்களுக்கும்-பொருந்தும்-மத்தி-2698465.html
2698403 மருத்துவம் செய்திகள் குறைவாய் தூங்கி நிறைவாய் ஓய்வெடுக்க 10 டிப்ஸ்   Monday, May 8, 2017 04:35 PM +0530 சந்தோஷமா? துன்பமா?

#1 வாழ்க்கையுடன் போராடாதீர்கள் உடலுக்கு ஓய்வு தேவை, தூக்கமல்ல. பெரும்பாலானவர்கள் அனுபவத்தில், அவர்கள் அறிந்திருக்கும் ஆழமான ஓய்வு தூக்கம்தான், அதனால் அவர்கள் தூக்கம் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் அடிப்படையில் உடல் தூக்கத்தைத் தேடுவதில்லை, ஓய்வுநிலையையே தேடுகிறது. உங்கள் இரவுப்பொழுது ஓய்வு தருவதாக இல்லாவிட்டால் உங்கள் பகல்ப்பொழுது மோசமாகவே இருக்கும். அதனால் வித்தியாசத்தை ஏற்படுத்துவது தூக்கமல்ல, ஓய்வுதான். நாள் முழுவதும் உடலை ஓய்வுநிலையில் நீங்கள் வைத்திருந்தால், உங்கள் வேலை, உடற்பயிற்சி, என்று நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உடலைத் தளர்த்தி ஓய்வுதருவதாக மாறிவிட்டால், நீங்கள் தூங்கத் தேவையான நேரம் தானாகக் குறையும். பிரச்சனை என்னவென்றால், மனிதர்களுக்கு எல்லாவற்றையும் கடினமாகச் செய்திடவே கற்றுத்தரப்படுகிறது. உடற்பயிற்சிக்காக நடந்துசெல்பவர்கள் கூட மிகவும் டென்ஷனாக நடந்துசெல்வதை நான் கவனிக்கிறேன். இப்படிப்பட்ட உடற்பயிற்சி நல்வாழ்விற்கு பதிலாக பாதிப்பைத்தான் ஏற்படுத்தும். எல்லாவற்றையும் போர்புரிவது போல அணுகாதீர்கள். நீங்கள் நடந்துகொண்டிருந்தாலும், ஓடிக்கொண்டிருந்தாலும், உடற்பயிற்சி செய்தாலும், அதை முயற்சியின்றி, ஆனந்தமாக ஏன் செய்யக்கூடாது?

வாழ்க்கையோடு சண்டை போடாதீர்கள். உங்களை ஆரோக்கியமாகவும் நலமாகவும் வைத்துக்கொள்வது ஒரு போராட்டமல்ல. விளையாட்டு, நீச்சல், நடப்பது என்று நீங்கள் விரும்புவதைச் செய்யுங்கள். நீங்கள் நாள் முழுவதும் மைசூர்ப்பா சாப்பிட விரும்பினால் மட்டுமே அது பிரச்சனையாகும்! இல்லாவிட்டால் எந்தவொரு செயலையும் தளர்வாக, ஓய்வாக செய்வதால் எந்தப் பிரச்சனையுமில்லை.

2 யோகப்பயிற்சிகள் – ஷாம்பவி மஹாமுத்ரா 

ஷாம்பவி மஹாமுத்ரா போன்ற யோகப் பயிற்சிகளை உங்கள் வாழ்க்கைக்குள் கொண்டுவந்தால், சீக்கிரமே உங்கள் நாடித்துடிப்பில் மாற்றம் ஏற்படுவதை கவனிப்பீர்கள். உதாரணத்திற்கு, சமீபத்தில் ஈஷா யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சி செய்யத் துவங்கியிருக்கும் ஒருவர், சாப்பிடும் முன்னும் சாப்பிட்ட பிறகும் நாடித்துடிப்பை பரிசோதித்துவிட்டு, ஆறு வாரங்களுக்கு தினமும் இரண்டுமுறை ஷாம்பவி செய்தபிறகு நாடித்துடிப்பைப் பார்த்தால், அது 8 முதல் 15 எண்கள் குறைந்திருக்கும். ஷாம்பவி மஹாமுத்ரா மூலம் ஒருவர் உண்மையிலேயே ஆழமான ஓய்வுநிலைக்குச் சென்றால் நாடித்துடிப்பு மேலும் குறையும். 12 முதல் 18 மாத பயிற்சியிலேயே, ஓய்வுநிலையில் நாடித்துடிப்பை 50 அல்லது 60ஆகக் குறைத்துவிட முடியும். நீங்கள் தூங்கத்தேவையான நேரமும் குறைந்துவிடும், ஏனென்றால் அப்போது நாள் முழுதும் உடல் ஓய்வுநிலையில் இருக்கும். நீங்கள் என்ன செயல் செய்துகொண்டு இருந்தாலும் உடல் ஓய்வுநிலையில் இருக்கும், அதனால் அதற்கு அதிக தூக்கம் தேவைப்படாது. 

#3 யோகப்பயிற்சிகள் – சூன்ய தியானம் 

சூன்ய தியானம் என்று ஒரு தியானத்தை நாங்கள் கற்றுத்தருகிறோம். இதை தென்னிந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள மையங்களில் நடத்தப்படும் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியில் மட்டுமே கற்றுத்தருகிறோம். இதை வேறெங்கும் கற்றுத்தருவதில்லை, ஏனென்றால் இதைக் கற்றுக்கொடுக்க ஒருவிதமான சூழ்நிலையும் பயிற்சியும் வேறுசில செயல்முறைகளும் தேவைப்படுகின்றன. தூங்கத்தேவையான நேரத்தை சூன்ய தியானம் பெரிய அளவில் குறைத்திட முடியும். இது வெறும் 15 நிமிட தியானம், ஆனால் இந்த தியானத்தில் நீங்கள் முறையாக ஈடுபட்டால், உடலின் வளர்சிதை மாற்றம் இருபத்திநான்கு சதவிகிதம் வரை குறையமுடியும். விழிப்புணர்வான தியான நிலைகளில் அதிகபட்சமாக இருபத்திநான்கு சதவிகிதமே குறைத்திட முடியும். அதற்குமேல் குறைத்தால், சாதாரணமாக விழிப்புணர்வு என கருதப்படும் நிலையில் நீங்கள் இருக்கமாட்டீர்கள். ஒரு குறிப்பிட்ட நிலை வரை உடலைத் தளர்த்தி, விழிப்புணர்வாக அந்த நிலையிலிருந்து வெளியே வரவேண்டும் என்றால், இருபத்திநான்கு சதவிகிதத்திற்கு மேல் வளர்சிதை மாற்றத்தைக் குறைக்கமுடியாது. இந்த பதினைந்து நிமிட தியானம் தரும் ஓய்வு, இரண்டு முதல் மூன்று மணி நேர தூக்கத்திற்கு சமமானது. உடலியக்க அளவில் அவ்வளவு பெரிய மாற்றங்கள் நிகழ்கின்றன, குறிப்பாக ரத்தத்தின் ரசாயன அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும். அதனால் இது மிகுந்த கட்டுப்பாட்டுடன், கவனமாக பரிமாறக்கூடிய சூழ்நிலைகளில் மட்டுமே கற்றுத்தரப்பட வேண்டும். 

#4 தினசரி உணவில் இயற்கை உணவுவகைகள் 

நீங்கள் தினமும் எட்டு அல்லது ஒன்பது மணி நேரம் தூங்குகிறீர்கள் என்றால், நீங்கள் சாப்பிடும் உணவையும் கவனிக்கவேண்டும். சமைக்காமல் அவை இயற்கையாக இருக்கும் நிலையிலேயே உண்ணக்கூடிய காய்கறிகளையும் பழங்களையும் கணிசமான அளவு சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு அவசியமானது. உணவை சமைக்கும்போது, அதிலுள்ள பிராணா அல்லது உயிர்சக்தி பெருமளவு அழிந்துவிடுகிறது. உடலிற்குள் சோம்பல் அல்லது மந்தத்தன்மை புகுவதற்கு இதுவும் ஒரு காரணம். போதுமான அளவு பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்வது பல பலன்களைத் தருகிறது, ஆனால் நீங்கள் தூங்கத்தேவையான நேரம் சட்டென குறைவதை கவனிப்பீர்கள். 

#5 அடுப்பிலிருந்து சீக்கிரமாக தட்டிற்கு வரவேண்டும்

இந்திய கலாச்சாரத்தில், சமைத்த உணவு எதையும், சமைத்து ஒன்றரை முதல் இரண்டு மணி நேரத்திற்குள் புசித்துவிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. சமைத்த உணவை குளிர்சாதனப் பெட்டியில் நீண்டகாலம் வைத்து உண்பது அதிகமான தூக்கத்தைத் தருவதோடு, உடலில் வேறு பல பிரச்சனைகளையும் உருவாக்கும். பதப்படுத்தப்பட்ட உணவும் அப்படித்தான். “தமஸ்” என்ற சொல் மந்தத்தன்மையைக் குறிக்கிறது. சமைத்தபின் நீண்டகாலம் வைத்திருக்கும் உணவில் “தமஸ்” அதிகமாக இருக்கும், இது மனதின் சுறுசுறுப்பையும் விழிப்பையும் குறைத்துவிடும். 

#6 எவ்வளவு சாப்பிடுவது? 

உங்கள் சக்திகளை எவ்வளவு நுட்பமாக நிர்வகிக்கிறீர்கள் என்பதே நீங்கள் எவ்வளவு விழிப்பாக இருக்கிறீர்கள் என்பதை நிர்ணயிக்கிறது. தியானம் செய்வதற்கு மனம் மட்டும் விழிப்பாக இருந்தால் போதாது, உங்கள் சக்தியே அப்படி இருக்கவேண்டும். இதற்கு உதவியாக, யோகப் பாதையில் இருப்பவர்கள், இருபத்திநான்கு கவள உணவே சாப்பிடவேண்டும் என்றும், ஒவ்வொரு கவள உணவையும் இருபத்திநான்கு முறை மென்ற பிறகே விழுங்கவேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. உணவு உள்ளே போகும் முன்பே அது ஜீரணமாவதற்கு இது வழிசெய்யும், அதனால் இது மந்தத்தன்மையை ஏற்படுத்தாது. மாலை உணவு உண்ணும்போது இப்படிச்செய்தால், காலை மூன்றரை மணிக்கெல்லாம் சுலபமாக விழித்திடுவீர்கள். யோகமரபில் இந்த நேரத்தை பிரம்மமுகூர்த்தம் என்பார்கள். இது யோகப்பயிற்சிகள் செய்ய உகந்த நேரம், ஏனென்றால் இயற்கையிடமிருந்து இந்த நேரத்தில் கூடுதல் உதவி கிடைக்கிறது. 

#7 உடலை வற்புறுத்தி தூக்கத்தைப் புறக்கணிக்காதீர்கள் 

உடலுக்கு எவ்வளவு ஓய்வு தேவை என்பது நீங்கள் எந்த அளவு செயல் செய்கிறீர்கள் என்பதைப் பொருத்தது. தூக்கமும் உணவும் எப்போதும் ஒரே அளவாக இருக்கவேண்டும் என்று உறுதியாக வகுக்கத்தேவையில்லை. உங்கள் செயல் குறைவாக இருக்கும்போது குறைவாக உண்கிறீர்கள், அதிகமாக செயல் செய்யும்போது சற்று அதிகமாக உண்பீர்கள். இது தூக்கத்திற்கும் பொருந்தும். உடல் போதுமான அளவு ஓய்வெடுத்த பிறகு அது தன்னால் எழுந்துவிடும், அது 3 மணியானாலும் சரி, 8 மணியானாலும் சரி. உங்கள் உடல் அலாரம் சப்தத்தினால் எழக்கூடாது. போதுமான அளவு ஓய்வெடுத்ததும் அது தன்னால் விழித்தெழ வேண்டும். உடலை வற்புறுத்தி தூக்கத்தைப் புறக்கணித்தால், உடலும் மனதும் திறம்பட செயல்படும் ஆற்றல் குறைந்துவிடும். அதனால் உடலை ஒருபோதும் வற்புறுத்தி விழித்திருக்கச் செய்யக்கூடாது. தேவைப்படும் ஓய்வை நீங்கள் உடலிற்குக் கொடுக்க வேண்டும். ஆனால் படுக்கையை கல்லறையைப் போல பயன்படுத்தினால், உடல் வெளியே வர விரும்பாது. யாராவது உங்களை கல்லறையிலிருந்து எழுப்பவேண்டும்! உங்கள் வாழ்க்கையை நீங்கள் எப்படிக் கையாளுகிறீர்கள் என்பதைப் பொருத்தது இது. வாழ்க்கையைத் தப்பித்துக்கொள்ளும் மனநிலையில் நீங்கள் இருந்தால், இயல்பாகவே அதிகம் சாப்பிட்டு அதிகம் தூங்குவீர்கள். 

#8 சாப்பிட்ட உடனே தூங்காதீர்கள் 

இப்படி சிலர் இருக்கிறார்கள், வயிறுநிறைய உணவு சாப்பிட்டு உடலை மந்தமாக்காவிட்டால் அவர்களால் தூங்கமுடியாது, அவர்களுடைய மனநிலையால் அவர்கள் இப்படி இருப்பார்கள். தூங்குவதற்கு முன் ஜீரணம் நடப்பதற்கு போதுமான நேரம் கொடுக்க வேண்டும். சாப்பிட்டு இரண்டு மணி நேரத்திற்குள் தூங்கிவிட்டால் நீங்கள் சாப்பிட்ட உணவில் 80% வீணாகும் என்றே நான் சொல்வேன். வயிறு நிறையாமல் உங்களால் தூங்கமுடியாத நிலையில் நீங்கள் இருந்தால், இந்தப் பிரச்சனையை நீங்கள் சரிசெய்ய வேண்டும். இது தூக்கத்தைப் பற்றியதல்ல, இது ஒருவித மனநிலையைக் குறிக்கிறது.

#9 சரியான திசையில் தலைவைத்துத் தூங்குவது 

உங்கள் உடல் கிடைநிலைக்கு வரும்போது, உடனே உங்கள் நாடித்துடிப்பு குறைவதை கவனிக்கமுடியும். உடலில் இந்த மாற்றம் நிகழ்வதற்குக் காரணம், கிடைநிலையிலும் அதே வேகத்தில் இரத்தத்தை நாளங்களுக்குள் செலுத்தினால், தலைக்கு அதிக இரத்தம் செலுத்தப்பட்டு சேதம் ஏற்படலாம். இதயத்திற்குக் கீழே போகும் இரத்தநாளங்களோடு ஒப்பிடும்போது, மேலே போகும் நாளங்கள் மிகவும் மெல்லியதாய் இருக்கின்றன. மூளைக்கு வரும்போது, மயிரிழை போல மெல்லியதாய் இருக்கின்றன. அந்த இரத்தநாளங்களால் அதிக இரத்தத்தை ஒருதுளிகூட எடுத்துக்கொள்ள இயலாது. நீங்கள் தூங்கும்போது, உங்கள் தலையை வடக்கு நோக்கி வைத்தபடி 5 முதல் 6 மணி நேரத்திற்கு இருந்தால், பூமியின் காந்தசக்தி மூளையில் அழுத்தத்தை ஏற்படுத்தும், ஏனென்றால் உங்கள் இரத்தத்தில் இரும்புச்சத்து முக்கிய அங்கம் வகிக்கிறது. இப்படி வடக்கில் தலைவைத்துப் படுத்தால் இறந்துவிடுவீர்கள் என்று கிடையாது. ஆனால் இப்படி தினமும் செய்தால், நீங்கள் பிரச்சனையை கேட்டு வாங்கிக்கொள்கிறீர்கள். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்டவராய் நீங்கள் இருந்து, உங்கள் இரத்தநாளங்கள் வலுவிழந்து இருந்தால், இதனால் அடைப்புகள் ஏற்பட்டு வாதம் வந்துவிடலாம். உடல் வலுவாக இருந்தால் உங்களுக்கு தூக்கம் கெட்டுப்போகலாம், ஏனென்றால் மூளையில் சாதாரணமாக இருப்பதைவிட அதிக இரத்த ஓட்டம் இருக்கும். நீங்கள் வடதுருவத்தில் இருந்தால், தூங்கும்போது தலைவைக்க சிறந்த திசை கிழக்குதான். வடகிழக்கு, பரவாயில்லை. அடுத்தது மேற்கு. வேறு வழியில்லை என்றால், தெற்கு. வடக்கில், கூடாது. தென்துருவத்தில், உங்கள் தலையை தெற்கு நோக்கி வைக்கக்கூடாது. 

#10 உங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள் 

மனிதனின் தன்மை எத்தகையது என்றால், மற்ற உயிரினங்கள் அனைத்தும் தாம் இருக்கும் சூழலுக்கேற்ப தம்மை மாற்றிக்கொள்கின்றன. ஆனால் மனிதனோ தான் விரும்பும்விதமாக சூழ்நிலைகளை மாற்றக்கூடியவனாக இருக்கின்றான். அதுதான் நம்மை தனித்துவம் வாய்ந்தவர்களாக்குகிறது. உங்கள்மீது சிறிதேனும் உங்களுக்கு அக்கறை இருந்தால், உங்களுக்குள் என்ன உள்ளீடு போகிறது என்பது குறித்த கவனத்துடன் இருக்கவேண்டும். நீங்கள் எவ்வளவு காலம் வாழ்கிறீர்கள் என்பதல்ல, நீங்கள் எவ்வளவு அற்புதமாக வாழ்கிறீர்கள் என்பதே கேள்வி. என்ன கேட்கிறீர்கள், என்ன பேசுகிறீர்கள், என்ன சாப்பிடுகிறீர்கள் என்று அனைத்திற்கும் யோகமுறையில் பயிற்சியளிக்கப்படுகிறது. வாழும் சூழல், நாக்கு, மனது மற்றும் உடலை தூய்மையாக வைப்பதன் மூலம், உங்கள் இருப்பில் ஒரு சுதந்திரத்தையும் புத்திசாலித்தனத்தையும் பரவசத்தையும் உணரமுடியும்.

உங்களுக்கு நான் ஒரு ஜோக் சொல்கிறேன். இரண்டு பிரிஸ்பிட்டேரியன் கன்னியாஸ்திரிகள் மொன்டானா கிராமப்பகுதியில் காரில் சென்றுகொண்டு இருந்தார்கள். அப்போது பெட்ரோல் தீர்ந்துவிட்டது. அதனால் அவர்கள் ஐந்து மைல் தூரத்திலிருந்த ஒரு வயலுக்கு நடந்து சென்றார்கள். அங்கே சேறும் சகதியுமாக வேலை செய்துகொண்டிருந்த விவசாயியிடம் “எங்களுக்கு கொஞ்சம் பெட்ரோல் வேண்டும்” என்று கேட்டார்கள். அவர், “என் டிராக்டரில் இருக்கிறது, எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார். அவர்கள் டிராக்டர் நிற்கும் இடத்திற்கு சென்றார்கள், ஆனால் அவர்களிடம் பெட்ரோல் எடுத்துச்செல்ல பாட்டில் எதுவுமில்லை. வீட்டிலிருந்தபடியே சிறுநீர் கழிக்கப் பயன்படுத்தப்படும் பழைய பாத்திரம் ஒன்றைக் கண்டார்கள். டிராக்டரிலிருந்து பெட்ரோலை அந்த பாத்திரத்தில் நிரப்பிக்கொண்டு, மீண்டும் கார் இருக்கும் இடத்திற்கு ஐந்து மைல் தூரம் நடந்துசென்றார்கள். மெதுவாக அந்தப் பாத்திரத்திலிருந்து பெட்ரோலை காரில் ஊற்றினார்கள். அப்போது அந்தப்பக்கமாக வந்த பாப்டிஸ்ட் பாதிரியார் ஒருவர் இதைப் பார்த்தார். உடனே அவர்களைப் பார்த்து, “சிஸ்டர்ஸ், உங்க விசுவாசத்தை நான் பாராட்டுகிறேன், ஆனால் இது இப்படி வேலைசெய்யாது!” என்று கூறிச்சென்றார். அதையும் இதையும் ஆங்காங்கே எடுத்துக்கொண்டு உங்கள் உடலுக்குள் போட்டால், அது வெகுதூரம் போகாது.

நன்றி - ஈஷா மையம்
 

]]>
sleepless, tips for deep sleep, உறக்கமின்மை, குறைவாய் தூங்கி நிறைவாய் ஓய்வெடுக்க 10 டிப்ஸ் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/8/w600X390/Valuable-Sleep.jpg http://www.dinamani.com/health/health-news/2017/may/08/குறைவாய்-தூங்கி-நிறைவாய்-ஓய்வெடுக்க-10-டிப்ஸ்-2698403.html
2697446 மருத்துவம் செய்திகள் ஏழைகளின் டாக்டர் ஜாக் பிரெகருக்கு ஆசிய விருது Sunday, May 7, 2017 02:19 AM +0530 மேற்கு வங்க மக்களால் ஏழைகளின் மருத்துவர் என அழைக்கப்படும் டாக்டர் ஜாக் பிரெகருக்கு (86) இந்த ஆண்டின் சிறந்த மனிதநேயருக்கான ஆசிய விருது வழங்கப்பட்டுள்ளது. வறுமையோடு உழன்று வரும் பல லட்சக்கணக்கான மக்களுக்கு கடந்த 38 ஆண்டுகளாக இலவச மருத்துவ சிகிச்சையும், கல்வியும் வழங்கியதற்காக அவருக்கு இந்த கெளரவம் கிடைத்துள்ளது.
இங்கிலாந்தில் பிறந்த ஜாக் பிரெகர், மருத்துவப் படிப்பை முடித்து பல்வேறு நாடுகளில் பணியாற்றினார்.
பிறகு நவ நாகரீக உலகில் எவருமே கண்டுகொள்ளாத விளிம்பு நிலை மக்களுக்காகத் தொண்டாற்ற வேண்டும் என அவர் முடிவு செய்தார். அதன் தொடர்ச்சியாக கடந்த 1972-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்துக்கு வந்த ஜாக் பிரெகர், அந்த மாநிலத்தில் சாலையோரத்தில் வசித்து வந்த மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவைகளை வழங்கத் தொடங்கினார்.
பின்னர் 'கொல்கத்தாவை பாதுகாப்போம்' என்ற தன்னார்வ அமைப்பை நிறுவிய அவர், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு இலவச கல்வி மற்றும் மருத்துவ உதவிகளைச் செய்து வருகிறார்.
இதுவரை சுமார் 5 லட்சம் பேர் ஜாக் பிரெகரால் பயன் பெற்றுள்ளனர். அவரது இந்த தன்னிகரற்ற சேவையைப் பாராட்டும் விதமாக இந்த ஆண்டின் சிறந்த மனிதநேயருக்கான ஆசிய விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் ஆசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. உலகப் புகழ் பெற்ற இவ்விருதைப் பெறுவது ஒருவரது வாழ்நாள் கெளரவமாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், லண்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் சிறந்த மனிதநேயர் விருது ஜாக் பிரெகருக்கு வழங்கப்பட்டது. ஆசியர் அல்லாத ஒருவர், தனது வாழ்நாளின்போதே இவ்விருதைப் பெறுவது இதுவே முதன்முறையாகும். கடந்த ஆண்டு இந்த விருதை அன்னை தெரசா பெற்றது நினைவுகூரத்தக்கது.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/7/w600X390/JACKPREGER.jpg http://www.dinamani.com/health/health-news/2017/may/07/ஏழைகளின்-டாக்டர்-ஜாக்-பிரெகருக்கு-ஆசிய-விருது-2697446.html
2697309 மருத்துவம் செய்திகள் உணவுப் பொருட்களில் வண்டு, பூச்சி வராமல் இருக்க! Saturday, May 6, 2017 02:38 PM +0530 உளுத்தம் பருப்பை வாங்கியதும் அதை முறத்தில் போட்டு தட்டினால் மாவு மாதிரியான பொருள் வெளியேறும். தட்டியபிறகு டப்பாவில் வைத்தால் வண்டு வராது.

பிரியாணி அரிசியில் சிறிதளவு உப்புத்தூள் கலந்து நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தினால் வண்டுகள், பூச்சிக் கூடுகள் பிடிக்காது.

பருப்புகளில் பெருங்காயத்தை தட்டிப்போட்டு வைத்தால் பூச்சி வராது.

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பில் பூச்சி வராமல் இருக்க காய்ந்த வேப்பிலைகளையும் வசம்புத்துண்டுகளையும் போட்டு வைத்தால் போதும். உளுத்தம்பருப்பு எனில் மஞ்சள் தூளும், உப்பும் கலந்து வைக்கலாம்.

அரிசியில் மிளகாய்வற்றல் சிலவற்றைப் போட்டு வைத்தால் வண்டுபிடிக்காது.

புளியை வாங்கி வந்ததுமே அதிலுள்ள கொட்டைகளையும், நார்களையும் நீக்கிவிட்டு நன்கு வெயிலில் காயவிட்டு சிறிது கல் உப்பு சேர்த்து ஜாடியில் அடைத்துவிட்டால் ஓர் ஆண்டுக்கு மேல் புழுக்கள், பூச்சிகள் வராமலிருக்கும்.

பயிறு, தானியங்களில் வேகமாக வண்டுவிழும். அந்த டப்பாக்களில் பூண்டையோ, மஞ்சள் துண்டையோ அல்லது வசம்புப் பொடியையோ கலந்து வைத்தால் சீக்கிரம் வண்டு பிடிக்காது.

தனியா டப்பாவில் நாலைந்து துண்டுகள் அடுப்புக்கரியை போட்டுவைத்தால் வண்டுகள் அண்டாமல் இருக்கும்.

எள் டப்பாவில் சிறிது நெல்லைப்போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

பூண்டில் புழு வராமல் இருக்க அதில் கேழ்வரகை சிறு மூட்டையாக கட்டிப் போடலாம்.

சர்க்கரை மற்றும் இனிப்பு வகைகளில் எறும்பு வராமலிருக்க கொஞ்சம் கிராம்புகளை அதில் போட்டு வைத்தால் போதும்.
 

]]>
insects in food grains, வண்டு, பூச்சி வராமல் இருக்க http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/6/w600X390/Gluten-Free-Grains-1.jpg http://www.dinamani.com/health/health-news/2017/may/06/to-avoid-insects-in-food-grains-2697309.html
2696847 மருத்துவம் செய்திகள் 'திருவண்ணாமலை, தேனியில் இந்தியமுறை மருத்துவமனைகள்' Saturday, May 6, 2017 02:27 AM +0530 தமிழகத்தில் திருவண்ணாமலை, தேனி ஆகிய மாவட்டங்களில் இந்தியமுறை மருத்துவமனைகள் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று இந்திய மருத்துவமுறை மற்றும் ஹோமியோபதி ஆணையர் மோகன் பியாரே கூறினார்.
மத்திய ஆயுஷ் அமைச்சகம், தமிழக அரசின் இந்திய மருத்துவ முறை மற்றும் ஹோமியோபதி ஆணையரகம், இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஆகியவை இணைந்து நடத்தும் 'தேசிய ஆரோக்யா - 2017' என்ற தேசிய மருத்துவக் கண்காட்சி சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 4 நாள்கள் இக்கண்காட்சி நடைபெற உள்ளது.
தொடக்க நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியது:
இந்திய முறை மருத்துவத்தில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா மருத்துவமனையில்தான் உள்நோயாளிகள் பிரிவும், வெளிநோயாளிகள் பிரிவும் செயல்பட்டு வருகிறது.
இந்திய முறை மருத்துவம் குறைந்த செலவில் நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும். இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா - இயற்கை மருத்துவம் ஆகிய மருத்துவ முறைகளுக்கென்று 6 அரசு மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன என்றார் அவர்.
மோகன் பியாரே பேசியபோது, 'தமிழகத்தில் தேனி, திருவண்ணாமலை மாவட்டங்களில் இந்திய முறை மருத்துவமனைகள் அமைப்பதற்கான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும், மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். 2017 - 2018-ஆம் ஆண்டில் மேலும் 2 இந்திய முறை மருத்துவமனைகள் தொடங்குவதற்கான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது' என்றார் அவர்.

 

]]>
http://www.dinamani.com/health/health-news/2017/may/06/திருவண்ணாமலை-தேனியில்-இந்தியமுறை-மருத்துவமனைகள்-2696847.html
2696830 மருத்துவம் செய்திகள் அரசு மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் Saturday, May 6, 2017 01:34 AM +0530 முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி அரசு மருத்துவர்கள் நடத்திய போராட்டம் வெள்ளிக்கிழமை வாபஸ் பெறப்பட்டது.
மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும். போராட்டம் தொடர்ந்தால் எஸ்மா சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பேச்சுவார்த்தை: இந்நியில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் சங்கங்களிடம் தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை பேச்சுவார்த்தை நடத்தினர்.
போராட்டம் வாபஸ்: பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் கூறுகையில், அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழக்குத் தொடர்பாக நீதிமன்றம் சாதகமான தீர்ப்பை வழங்கும் என்று நம்புகிறோம். நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்து, எங்களின் அனைத்து விதமான போராட்டங்களையும் வாபஸ் பெறுகிறோம் என்றார்.
போராட்டத்தை வாபஸ் பெறுவதில் சங்கங்களுக்கு இடையே முரண்பட்ட கருத்துகள் ஏற்பட்டுள்ளன.
போராட்டம் தொடரும்: தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டம் கைவிடப்பட்டாலும், போராட்டம் தொடரும் என்று அரசு மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இந்தப் பிரச்னைக்காக தொடர்ந்து 17 நாள்களாக டிஎம்எஸ் வளாகத்தில் போராடி வரும் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவது தொடர்பாக முடிவு எதுவும் தெரிவிக்கவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து செயற்குழு கூடி முடிவு செய்யும் என்று தெரிவித்தனர்.
உயர்நீதிமன்றம் அதிரடி: மருத்துவர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசு எடுத்த நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை ஆஜராக உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. ஒரு பகுதி மருத்துவர்கள் மட்டும் போராட்டத்தில் ஈடுபடுவதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: அரசியல்வாதிகள் யாரும் மருத்துவமனைக்குச் செல்வதில்லை. அரசு மருத்துவமனையை சாதாரண மக்கள் தான் நாடுகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் தொழிலாளர்கள் அல்ல.
மருத்துவர்களுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துவதோடு, போராட்டத்தைக் கைவிட சற்று கால அவகாசம் வழங்குங்கள் எனக் கூறிய நீதிபதிகள், போராட்டத்தைக் கைவிட்டு, மருத்துவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்கள் மீது 'எஸ்மா' சட்டப்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றனர்.

 

]]>
http://www.dinamani.com/health/health-news/2017/may/06/அரசு-மருத்துவர்கள்-போராட்டம்-வாபஸ்-2696830.html
2696746 மருத்துவம் செய்திகள் மரணம் என்பது என்ன? Friday, May 5, 2017 05:55 PM +0530 உங்கள் அனுபவத்தில் இல்லாத எதையும் நீங்கள் நம்பவேண்டாம் என்று நான் உங்களை வலியுறுத்தி வந்திருக்கிறேன். நீங்கள் கேள்விப்பட்ட விஷயத்தில் நம்பிக்கை வைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. உங்களுக்கு அதுபற்றி ஒன்றும் தெரியாது, அவ்வளவுதான். யாரோ உங்களுக்கு ஒரு கதை சொன்னார்கள், அது உண்மையா உண்மையில்லையா என்று உங்களுக்குத் தெரியாது. எனவே நான் கூட ஏதாவது சொன்னாலும், அதை நீங்கள் நம்பவேண்டாம். அதேநேரத்தில் அதை நம்பாமலும் இருக்க வேண்டாம். யாரோ ஒருவர் இப்போது உங்கள் அனைவர் முன்னிலையிலும் உட்கார்ந்து மிகவும் முட்டாள்தனமாக ஒன்றைப் பேசுகிறார். சரி, இது என்னவென்று பார்ப்போம் என்னும் ஒரு திறந்த மனதுடன் இருந்தால் உங்கள் வாழ்க்கையில் உண்மைக்கான சாத்தியக்கூறு எப்போதும் உயிருடன் இருக்கும். உங்கள் அனுபவத்தில் இல்லாத ஒன்றை நம்பினாலும் அந்த சாத்தியத்தை அழித்து விடுவீர்கள் அல்லது நம்பாவிட்டாலும் அழித்துவிடுவீர்கள்.

நீங்கள் எப்போதாவது இறந்திருக்கிறீர்களா? இல்லை, சரி, இறந்த மனிதனையாவது பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் இறந்த உடலைப் பார்த்திருக்கலாம். ஆனால் இறந்த மனிதனைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லை. நீங்கள் இறந்த மனிதனைப் பார்த்ததில்லை. உங்கள் அனுபவத்திலும் அது இல்லை. நீங்கள் பார்க்கவும் இல்லை. அல்லது இறந்த ஒரு மனிதன் எழுந்து வந்து, ‘நான் இப்படி இறந்தேன். அப்படி இறந்தேன்’ என்று சொன்னதும் இல்லை. நீங்களும் இறக்கவில்லை, இறந்த மனிதனையும் பார்த்ததில்லை. எனவே இறக்கப் போகிறீர்கள் என்னும் கருத்தை எப்படி உருவாக்கிக் கொண்டீர்கள்? இறப்பு என்பது ஒரு கட்டுக்கதை. ஏராளமானவர்கள் இதைப்பற்றி பேசி உங்களை நம்ப வைத்து விட்டார்கள். இறப்பு என்று எதுவும் கிடையாது. உயிர், உயிர், உயிர் மட்டுமே இருக்கிறது. ஒரு பரிமாணத்திலிருந்து இன்னொரு பரிமாணத்திற்கும், இன்னொரு பரிமாணத்திலிருந்து மற்றோர் பரிமாணத்திற்கும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

எனவே, உடல் மிகவும் தளர்ந்து விட்டாலும் அல்லது ஏதாவது காரணத்தால் முறிந்துவிட்டாலும், அல்லது விபத்தில் சிக்கிக்கொண்டாலும், அல்லது குடித்துவிட்டு உங்கள் கல்லீரலை அழித்துக் கொண்டாலும், அல்லது காதல் தோல்வியால் இதயம் முறிந்து போனாலும் அல்லது மிகவும் வயதாகிவிட்டதால் உடல் தளர்ந்துவிட்டாலும் உயிரை தக்கவைத்துக் கொள்ள இந்த உடலால் முடியாது போனால், உயிர் வேறு ஒரு பரிமாணத்திற்கு நகர்ந்தாக வேண்டும். அதனால்தான் இன்னொரு பரிமாணத்திற்கு உயிர் நகர்ந்து போகிறது.

உயிருக்கு என்ன நடக்கிறது?

எனவே யாராவது இறந்துவிட்டால் அவர் இனி நம்முடன் இல்லை என்றுதான் நீங்கள் சொல்கிறீர்கள். அவர் இனி இல்லவே இல்லை, உண்மையாகவே அவர் இனி இல்லை என்று நீங்கள் சொல்லவில்லை. அவர், இனி உங்களுடன் நீங்கள் அவரை தெரிந்திருக்கும் விதமாக இருக்கப் போவதில்லை. ஒருவருடைய உடல் ஏதோ ஒரு காரணத்தால் மேற்கொண்டு வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போகும்போது, அவர் அந்த உடலைவிட்டுப் போக நேரிடுகிறது. இது நடக்கும்போது அந்த உயிருக்கு என்ன நேரிடுகிறது? பொருள்தன்மையிலான உடலும், விழிப்புணர்வான மனமும் போய்விடுகிறது. மனதின் பகுத்துப்பார்க்கக்கூடிய அம்சம் போய்விடுகிறது. ஆனால் மனதின் தன்மை போகவில்லை. அதாவது அவர் இன்னமும் மனதின் தன்மைகளைக் கொண்டிருக்கிறார், ஆனால் பகுத்துப்பார்க்க முடியாது.

உங்கள் தந்தை அல்லது உங்கள் தாயார், உங்கள் கணவன், மனைவி, குழந்தை, இனிய நண்பர் இப்படி யார் இறந்தாலும், அவர் உடலை விட்டு நீங்கிய வினாடியே அவருக்கும் உங்களுக்குமான தொடர்பு முடிந்துவிட்டது. ஏனெனில் அவர் உங்களைப்பற்றி அறிந்திருப்பதெல்லாம் பொருள்தன்மையிலானது, இல்லையா? பொருள்தன்மை என்னும்போது உடல்மட்டுமல்ல, மனம், உணர்ச்சி ஆகியவையும்தான். அவரைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பதும், உங்களைப் பற்றி அவர் அறிந்திருப்பதும், பொருள்தன்மையிலான உடல் அல்லது மனம் அல்லது உணர்ச்சி குறித்துத்தான். அவை பொருள்தன்மைக்குள் வருவதுதான். எனவே அவர் பொருள்தன்மையை விட்டுப் போகும்போது அனைத்தும் நீங்கிவிடுகிறது. அப்போது, நான், எனது இறந்த அப்பா என்றெல்லாம் கிடையாது. அவர் இறந்துவிட்டால், அவர் உங்கள் அப்பா கிடையாது. அவரின் கதை முடிந்துவிட்டது.

இறக்கும் தருவாயில்…

எனவே மனதின் பகுத்துப் பார்க்கும் தன்மை போனவுடன், அவர் தனது இயல்பின் படியே செயல்படுவார். அதனால்தான் இந்தியாவில், ஒரு மனிதர் எந்த சூழ்நிலையில் இறக்கிறார் என்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகிறது, எந்த சூழ்நிலையில் அவர் இறக்கவேண்டும் என்பதை நிர்ணயித்து அந்த சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. அவர் எப்படி வாழ்ந்திருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. அவர் இறக்கும் தருணம் வந்தவுடன், ‘ராம், ராம்‘ என்றோ அல்லது வேறெதாவது உச்சரித்தோ மக்கள் தாங்கள் விரும்பும்வண்ணம் அந்த சூழ்நிலையை உருவாக்குகின்றனர். அடிப்படையாக அப்படிச் செய்வதன் பொருள் என்னவென்றால் அவர் இறக்கும்போது பயத்திலோ, பேராசையிலோ, அல்லது இப்படிப்பட்ட காரணங்களாலோ இறக்கக்கூடாது என்பதுதான். ஏனெனில் அவர் இறக்கும் அந்தக் கடைசி தருணத்தில் அவர் மனம் எப்படி இருக்கிறதோ அதுதான் அவருடைய இயல்பாக அவர் இறந்தபின் செயல்படும்.

விழிப்பிலிருந்து தூக்கத்திற்கு…

இன்றிரவு நீங்கள் தூங்கும்போது இதை முயற்சித்துப் பார்க்கலாம். நீங்கள் விழிப்பிலிருந்து தூக்கத்திற்குச் செல்லும் அந்த கடைசி வினாடியை வெறுமனே விழிப்புணர்வுடன் இருந்து பாருங்கள். முடிந்தால் அப்படி முயற்சித்துப் பாருங்கள். அப்போது நீங்கள் விழித்திருப்பீர்கள், உங்கள் விழிப்புணர்வை நழுவவிடும்போதுதான் தூக்கத்திற்குப் போவீர்கள். விழிப்புணர்வுடன் இருக்க முடிந்தால் சில அற்புதங்கள் நடக்கும். அப்படி முடியவில்லையென்றால் தூக்கத்தில் விழும்முன், அந்த கடைசி வினாடிகளில் ஒரு தன்மையுடனாவது இருக்க முயற்சியுங்கள். அந்த நேரங்களில் உங்களுக்குள் அன்பாக இருக்க முடிந்தால், அல்லது மகிழ்ச்சியாக இருக்க முடிந்தால், அதே தன்மை தூக்கத்திலும் தொடர்வதைக் காணமுடியும். விழிப்பிலிருந்து தூக்கத்திற்குச் செல்லும் அந்த கடைசி வினாடிகளில் என்ன தன்மை கொண்டு வருகிறீர்களோ, அந்த குணம் தொடர்ந்து இருக்கும். இதேதான் இறப்பிலும் நடக்கிறது. மரணத்தின் இறுதி தருணங்களில் ஒரு குறிப்பிட்ட குணத்தைக் கொண்டிருந்தால், பிறகு அந்த தன்மை தொடர்ந்து இருக்கும்.

காசியில் போய் இறப்பது ஏன்?

இந்த நம்பிக்கை இருப்பதால்தான், மக்கள் இறக்க விரும்பும்போது மும்பையில் இறக்க விரும்பாமல், காசிக்குச் சென்று இறக்க விரும்புகிறார்கள். இன்னமும் மக்கள் அங்கே செல்கிறார்கள். நிறைய ஞானோதயமடைந்த மனிதர்கள் அங்கிருப்பதால், பல நூற்றாண்டுகளாகவே இலட்சக்கணக்கான மக்கள் அங்கு வந்து காத்திருந்து இறக்கிறார்கள். இறந்துபோவதற்கான மையமாக காசி இருந்துவந்தது. எனவே அங்கு சென்று இறந்தால் தாங்கள் மோட்சம் அடைவதற்கான உதவி கிடைக்கும் என நினைத்தார்கள். 

சரியான சூழ்நிலையில் இறக்கமுடியும் என நினைத்தார்கள். ஏதாவது காரணத்தால் இந்த உடல் உரிய காலத்திற்கும் முன்னதாகவே உடைந்து விட்டாலும் உயிர்சக்தி மட்டும் இன்னமும் அதிர்வுடன் இருக்கும். விபத்தில் சிக்கி இறந்தாலோ அல்லது அதிகக் குடியின் காரணமாக இறந்தாலோ அல்லது தற்கொலையின் காரணமாக இறந்தாலோ உடல் போய்விடும். ஆனால் உயிர்சக்தி தளர்ந்துவிடாது, அது இன்னமும் அதிர்வுடன் இருக்கும். எனவே அந்த உயிர்சக்தியானது அடுத்த பரிமாணத்திற்குச் செல்ல அதிக காலம் எடுத்துக் கொள்ளும். ஏனெனில் சக்தியானது அதிர்வுநிலையிலிருந்து தளர்வான நிலைக்கு வரவேண்டியுள்ளது.

பிராரப்தா கர்மா

‘பிராரப்தா’ பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பிராரப்தா என்பது ஒரு ஆயுள்காலத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட கர்மா. ஏனெனில் நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் அனைத்து கர்மாக்களையும் ஒரு ஆயுள்காலத்திற்கே ஒதுக்கிவிட்டால் உங்களால் தாங்கமுடியாது, உங்களால் வாழமுடியாது. உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கர்மா குடோன் இருக்கிறது. அதை ‘சஞ்சிதா’ என்று குறிப்பிடுகிறோம். அந்த கர்மா குடோனிலிருந்து இந்த ஆயுளுக்காக மட்டும் என்று குறிப்பிட்ட அளவு கர்மா ஒதுக்கப்படுகிறது. ஏனெனில் குடோனிலுள்ள அவ்வளவு கர்மாவையும் உங்களால் கையாள முடியாது. எனவே இந்த ஆயுளில் கையாள்வதெற்கென்று குறிப்பிட்ட அளவு கர்மா ஒதுக்கப்படுகிறது. ஆனால் பொதுவாக, ஒரு பிறவிக்கென ஒதுக்கப்பட்ட கர்மாவைக் கழிப்பதை விடவும் அந்தப் பிறவியில் புதிதாக சேர்த்துக் கொள்வது அதிகமாக இருக்கிறது. இப்படி கர்மா சேர்ந்து, சேர்ந்து, சேர்ந்து கொண்டே போகிறது. இதன் காரணமாக உயிர்சக்தியில் ஒருவித அதிர்வு இருக்கிறது. அந்த அதிர்வு தளர்ந்து போகாவிட்டால் அந்த உயிருக்கு அடுத்த உடம்பு கிடைக்காது. நீங்கள் இந்த உடலை விடவேண்டுமானால் உங்கள் உயிர்சக்தி தளர்வடைய வேண்டும். இன்னொரு உடலைப் பெற வேண்டுமானால் உங்கள் உயிர்சக்தி தளர்வடைய வேண்டும். இதைத்தான் நாம் சமாதி நிலை எனக் குறிப்பிடுகிறோம். இந்த நிலையில் நீங்கள் விழிப்புணர்வுடன் உயிர்சக்தியின் தீவிரத்தை குறைத்துக் கொள்கிறீர்கள். உங்கள் உயிர்சக்தி மிகவும் தளர்வடைந்து போகும்போது, விரும்பினால் நீங்கள் இந்த உடலை விட்டுப் போய்விட முடியும், மேலும் இன்னொரு உடலில் நுழைய முடியும்.

நன்றி - ஈஷா
 

]]>
Death, Karma, Life, மரணம் என்பது என்ன? http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/5/w600X390/pirappu-irappu.jpg http://www.dinamani.com/health/health-news/2017/may/05/what-is-death-2696746.html
2696166 மருத்துவம் செய்திகள் கொல்லிமலையில் எலிக் காய்ச்சல்: 10 நாள்களில் 4 பேர் பலி, 3 பேருக்கு சிகிச்சை Friday, May 5, 2017 01:27 AM +0530 கொல்லிமலையில் எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 10 நாள்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 பேர் நோய் அறிகுறியுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை குண்டனிநாடு ஊராட்சி, கீரைக்காடு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் விவசாயக் கூலித் தொழிலாளர்கள். கடந்த சில மாதங்களுக்கு முன் சிலர் குடும்பத்துடன் கூலி வேலைக்கு கர்நாடகம், கேரள மாநிலங்களில் உள்ள எஸ்டேட்டுகளுக்கு வேலைக்குச் சென்றிருந்தனர். இதில் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் கடந்த 20 நாள்களுக்கு முன்பு கொல்லிமலைக்குத் திரும்பினர்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலர், கொல்லிமலை செம்மேடு அரசு மருத்துவமனை மற்றும் சேந்தமங்கலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதில், கீரைக்காடு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்-சுசீலா தம்பதியின் மகள்கள் சுகன்யா (16), மீனா (20), அதே கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார், பொன்னம்மாள் ஆகியோர் கடந்த 10 நாள்களில் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் 30ஆம் தேதி, போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்காக, சுகாதாரத் துறையினர் கீரைக்காடு பகுதிக்குச் சென்றனர். அப்போது அப் பகுதியைச் சேர்ந்த வசந்தா (25), நீலா மணி (26), ராஜ் (52) ஆகிய 3 பேர் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு சுகாதாரத் துறையினர் தகவல் அளித்தனர். பின்னர், நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் ரமேஷ்குமார் உத்தரவின்பேரில், சுகாதாரத் துறை அதிகாரிகள் கிராமத்தில் முகாமிட்டு சிகிச்சை அளித்தனர்.
மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 பேரின் ரத்த மாதிரியை எடுத்து நாமக்கல் அரசு மருத்துவமனை ஆய்வகத்தில் ஆய்வு செய்தனர். இதில், அவர்களுக்கு எலிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கடந்த 3- ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 3 பேரும் கொல்லிமலை அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்தக் கிராமத்தில் மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநர் ரமேஷ்குமார் கூறியது, கொல்லிமலை பகுதியில் உள்ளவர்கள் கர்நாடகம், கேரள மாநிலங்களில் உள்ள எஸ்டேட்னýகளில் கூலி வேலைக்குச் சென்றிருந்தபோது அங்கு எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுடன் பழகியிருந்ததாலோ, எலி சாப்பிட்ட உணவை சாப்பிட்டதாலோ இந் நோய் ஏற்பட்டிருக்கலாம் என்றார்.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/5/w600X390/doctor.jpg கீரைக்காடு கிராமத்தில் முகாமிட்டு சிகிச்சை அளித்த மருத்துவக்குழுவினர். http://www.dinamani.com/health/health-news/2017/may/05/கொல்லிமலையில்-எலிக்-காய்ச்சல்-10-நாள்களில்-4-பேர்-பலி-3-பேருக்கு-சிகிச்சை-2696166.html
2696086 மருத்துவம் செய்திகள் காது, மூக்கு, தொண்டைப் பிரச்னையா?  Thursday, May 4, 2017 05:34 PM +0530 மூக்கடைப்பு, சளி, தொண்டை கரகரப்பு போன்றவற்றால் எல்லோரும் அவ்வப்போது பாதிக்கப்படுவோம். இருந்தாலும், நம்மில் பலருக்கு இவை பற்றிய விழிப்புணர்வு குறைவு. இது எதனால் ஏற்படுகிறது, எவ்வாறு நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று தெரிந்துகொண்டால் ஆரோக்கியம்தானே! அதை அறிய இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்…

சளி 

வைரஸ், பாக்டீரியா மற்றும் சில உறுத்தல் ஏற்படுத்தும் பொருட்களால் மூக்கின் உட்பகுதியில் உள்ள மெல்லிய சவ்வில் வீக்கம் மற்றும் எரிவு (inflammation) ஏற்பட்டு, நீர் சுரக்கும். இதனுடன் தொண்டையில் சளி மற்றும் மூக்கடைப்பு ஏற்படும். கண், தொண்டை மற்றும் காதையும் பாதித்து அங்கேயும் அதிக நீர் சுரக்கச் செய்யும். தவிர, சிலருக்கு மூச்சிரைப்பு, வாசனை தெரியாமை, காதடைப்பு, சைனஸ் பிரச்னை ஏற்படும்.

வைரஸ்களினால் ஏற்படும் சளி தானாகவே ஒரு வாரத்துக்குள் சரியாகிவிடும். ஒரு வாரத்துக்கு மேல் நீடிக்குமானால், மருத்துவரை அணுகவும். ஒவ்வாமையால் சளி பிடித்தால், கண், மூக்கு, தொண்டைப் பகுதிகளில் அரிப்பு ஏற்படும். இவை பொதுவாக தூசி, மகரந்தத் துகள்களால் ஏற்படும். மகரந்தத்தைத் தவிர வேறு எந்த பொருட்கள் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன என்று கண்டறியவும். இதைப் பல வகையான சோதனைகள் மூலம் தெரிந்துகொள்ளலாம். தேர்ந்த மருத்துவரிடம் அத்தகைய சோதனைகளைச் செய்யவும். ஏனெனில், இச்சோதனையே ஆபத்தாகலாம். இவற்றில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்று பார்க்கலாம்.

பொதுவாக, பூ பூக்கும் மாதங்களில் மகரந்தங்களினால் இது ஏற்படும். இது அதிகமாக இருக்கும் காலை மற்றும் மாலை வேளைகளில் வெளியே செல்வதைத் தவிர்க்கலாம். வெளியே செல்வதானால் மூடிய வண்டிகளில் செல்லவும். வீட்டிலும் அலுவலகத்திலும் இந்த மகரந்தத் துகள்கள் வராத வண்ணம் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடிவைத்திருக்கவும்.

வீட்டிலும் அலுவலகத்திலும் இந்த மகரந்தத் துகள்கள் வராத வண்ணம் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடிவைத்திருக்கவும். வெளியே சென்றுவிட்டு வந்த பிறகு, குளித்து வேறு ஆடைகளுக்கு மாறவும். ஏனெனில், மகரந்தம், தூசி போன்றவை ஆடை, உடல், முடி இவற்றில் படிந்து உபாதை அளிக்கக்கூடும். வீட்டையும் நன்கு கூட்டி, துடைத்து, சுத்தமாக வைத்துக்கொள்ளவும். தூங்கும் மெத்தை, தலையணை, திரைச்சீலை, சோபா, கம்பளம் போன்றவற்றையும் சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.

மூக்கடைப்பு 

சுவாசம், மூக்கின் ஒரு துவாரம் வழியாகவோ அல்லது இரண்டு துவாரங்கள் வழியாகவோ செல்ல முடியாமல் தடை ஏற்படுவதை மூக்கடைப்பு என்கிறோம்.

காரணங்கள்: 1. மூக்குச்சவ்வு வீங்குதல் 2. மூக்கின் சில்லு தள்ளியிருத்தல் 3. மூக்கின் வால்வுகள் சுருங்கிவிடுதல் 4. மூக்கு, தொண்டைப் பகுதியில் அடைப்பு ஏற்படுதல்

இது அசௌகரியமாக, குறிப்பாக மூச்சுப் பயிற்சி செய்பவர்களுக்கு பெரும் தடையாக இருக்கும். தொடர்ந்து இருந்து வந்தால், காது, மூக்கு, தொண்டை நிபுணரை அணுகவும். மருந்துக் கடைகளில் கிடைக்கும் சொட்டு மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்தினால் பெரும் பாதிப்பு ஏற்படலாம். மூக்கிலிருந்து ரத்தம் வருதல்: இது பலருக்கு ஏற்படும். சிறிது நேரத்தில் தானாகவே சரியாகிவிடும். ரத்தம் வரும்பொழுது மூக்கின் கீழ் பாகத்தை அழுத்திப் பிடித்தால், 15 நிமிடங்களுக்குள் நின்று விடும். இல்லையென்றால், மருத்துவரை உடனே அணுகவும்.

தொண்டை கட்டுதல்:

குழந்தைகளுக்கு வரும் தொண்டை வலி பொதுவாக சளி மற்றும் இருமலுடன் இருக்கும். பெரியவர்களுக்கு தொண்டை வலி பொதுவாக பனிக்காலங்களில் ஏற்படும். இதனுடன் சளி, இருமல், தும்மல், குரல் கரகரத்தல், வறட்சி போன்றவையும் ஏற்படும். இது சிறிது நாட்களிலேயே சரியாகிவிடும். இருப்பினும் அசௌகரியத்தைச் சரிசெய்ய கீழ்கண்டவற்றைச் செய்யலாம்.

 • நிறைய ஓய்வு எடுக்க வேண்டும். 
 • நிறைய நீராகாரங்கள் அருந்த வேண்டும். 
 • வலி மாத்திரைகள் மருத்துவரின் ஆலோசனை பேரில் உட்கொள்ளலாம். 
 • உப்பு போட்டு வாய் கொப்பளிக்கலாம். 
 • தேன் மற்றும் எலுமிச்சைச் சாறுகள் உதவும்.

அறிகுறிகள் தொடர்ந்து இருந்தாலோ, தொண்டை வலி அடிக்கடி ஏற்பட்டாலோ, மருத்துவரை அணுகவும்.

தொண்டைக் கரகரப்பு: 

சளி பிடித்தாலோ, ஏதேனும் வளர்ச்சியோ, கட்டியோ ஏற்பட்டாலோ, வயிற்றில் சுரக்கும் அமிலத்தாலோ, குரல்வளையின் அமைப்பில் மாறுபாடுகள் ஏற்பட்டு, குரலில் மாற்றம் தோன்றுகிறது. இந்தக் குரல் மாற்றத்தை தொண்டைக் கரகரப்பு என்கிறோம். இதனால் பேசுவதற்குச் சிரமமாக இருக்கும். நம்முடைய குரல்வளை சரிவர இயங்காததால்தான் இது ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் உண்டு. இவை பொதுவாக சில நாட்களிலேயே சரியாகிவிடும்.

இருப்பினும் நம்முடைய குரலுக்கு ஓய்வு கொடுத்தல், நிறைய நீர்பானங்கள் சாப்பிடுதல், ஓய்வு எடுத்தல், வயிற்று அமிலப் பிரச்னை இருந்தால் அதைச் சரிசெய்தல், மது மற்றும் புகை பிடித்தலைத் தவிர்த்தல் போன்றவை மூலம் விரைவாக நிவாரணம் அடையலாம். கீழ்க்கண்டவை இருந்தால், உடனே மருத்துவரை அணுகவும்.

 • நான்கு வாரங்களுக்கு மேல் தொடர் கரகரப்பு. 
 • அடிக்கடி தொண்டைக் கரகரப்பு மற்றும் வைரஸ் நோய் அல்லது ப்ளூ அறிகுறி தோன்றுவது. 
 • இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர் கரகரப்பு மற்றும் விழுங்குவதற்கு சிரமமாய் இருத்தல். 
 • குரலில் அதிக மாற்றம் ஏற்பட்டு சரியாகாமல் இருத்தல்.

வாய் நாற்றம் 

இது நம்மில் பலருக்கும் ஏற்படுகிறது. மற்றவர்கள் சுட்டிக்காண்பிக்கும்போதுதான் இது தெரிகிறது. உணவுத் துகள்கள் பற்களுக்கிடையில் சிக்கிக் கொண்டு இருப்பது பொதுவான காரணம்.

தவிர, வாய் உலர்ந்துபோவது, புகை பிடித்தல், பூண்டு போன்ற உணவுகள், மது அருந்துதல், சைனஸ், தொண்டை அல்லது டான்சில்களில் தொற்று ஏற்படுதல், நாக்கில் கிருமிகள் சேர்வது, மாவுச் சத்துள்ள உணவுகளைத் தவிர்த்தல், வயிற்றில் ஏற்படும் உபாதைகள் போன்றவற்றாலும் வாய் நாற்றம் ஏற்படும்.

இதைத் தவிர்க்க, வாய்ப் பகுதியைச் சுத்தமாகப் பராமரித்தல், சரியான முறையில் பல் துலக்குதல், பல்லிடுக்குகளைச் சுத்தம் செய்தல், நாக்கு சுத்திகரிப்பானைக்கொண்டு நாக்கைச் சுத்தம் செய்தல், கிருமிநாசினியைக் கொண்டு வாயைக் கழுவுதல், வாய் உலரா வண்ணம் அடிக்கடி நீர் பருகுதல், புகை மற்றும் மதுப்பழக்கத்தை விடுதல் ஆகியவை உதவும். வாய், மூக்கு, தொண்டை, சைனஸ், வயிற்றுப் பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகிச் சரிசெய்துகொள்ளவும்.

சைனஸ் பிரச்னை 

நமது நுரையீரலுக்குச் செல்லும் காற்றின் சீதோஷ்ண மற்றும் தட்பவெப்ப நிலையைச் சீர் செய்ய நான்கு ஜோடி சைனஸ்கள் நம் மூக்கைச் சுற்றி உள்ளன. இவை சிறிய துவாரங்கள் மூலமாக மூக்குடன் இணைந்திருக்கின்றன. இந்தத் துவாரங்களில் ஒவ்வாமையாலோ, தொற்றாலோ, உறுத்தலாலோ, மூக்கின் அமைப்பில் ஏற்படும் மாற்றத்தாலோ, அடைப்பு ஏற்படும்போது பிரச்னைகள் ஏற்படுகின்றன.

சைனஸ் தொந்தரவுகளைத் திடீரென ஏற்படுபவையாகவும், நாட்பட்டவைகளாகவும் பிரிக்கலாம். சளி பிடித்ததற்குப் பின் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு மஞ்சள் பச்சை நிறத்தில் மூக்கில் இருந்து சளி வரும். இதனுடன்கூட கன்னம், கண்கள் மற்றும் தலையில் வலி ஏற்படும். வீக்கம் மற்றும் ஜுரம் ஏற்படலாம். தொடர்ந்து பல வாரங்கள் மேற்கூறிய அறிகுறிகள் நீடிக்குமானால், இதை நாட்பட்ட சைனஸ் பிரச்னை எனக் கூறலாம். இதில் மேற்கூறிய அறிகுறிகளுடன் மூக்கடைப்பு, ஜுரம், வாசனை உணர்வு குறைந்துபோதல், முகத்தில் வலி மற்றும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.

சிகிச்சை: திடீரென ஏற்படும் பிரச்னைகளை ஆன்டிபயாடிக்ஸ் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் மருந்துகள் மூலம் சரிசெய்யலாம். நாட்பட்ட பிரச்னைகளுக்கு தொடர்ந்து மருந்துகள் உட்கொள்ள வேண்டி இருக்கும்.

சைனஸ் பிரச்னையினால் வரும் சிக்கல்கள் 

சைனஸ்கள் தலையில் பல முக்கிய உறுப்புகளுக்கு நடுவில் அமைந்திருப்பதால், இதில் பாதிப்பு ஏற்பட்டு கவனிக்காமல்விடும்பொழுது அருகில் உள்ள கண், மூளை மற்றும் இவற்றைக்கொண்டுள்ள எலும்புகளையும் பாதிக்கும் வாய்ப்பு அதிகம். முக்கியமாக, ஆஸ்துமா நோய் மோசமாகும். காலப்போக்கில் சுவை மற்றும் மணத்தை உணரும் சக்தியைக் குறைக்கும்.

நன்றி : டாக்டர்.பவானி பாலகிருஷ்ணன், ஈஷா மையம்

]]>
cold, cough, ENT, சைனஸ் பிரச்னை, மூக்கடைப்பு  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/4/w600X390/cold.jpg http://www.dinamani.com/health/health-news/2017/may/04/ear-nose-throat-ent-problems-and-cure-2696086.html
2695598 மருத்துவம் செய்திகள் தடுப்பூசிகள் புற்றுநோயை ஏற்படுத்துவதில்லை: விழிப்புணர்வை ஏற்படுத்த அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு Thursday, May 4, 2017 03:55 PM +0530  

நோய்த் தடுப்பூசிகள் புற்றுநோயை ஏற்படுத்துவதில்லை என்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனின் மகனான அன்பரசு (6) ஆறு மாதக் குழந்தையாக இருந்தபோது, அங்கன்வாடி மையத்தில் அம்மை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பின்னர் ஊசி போடப்பட்ட அவரது வலது தொடை பகுதியில் சிறிய ரத்தக்கட்டு உருவானது. நாளடைவில் அது சரியாகிவிடும் என கருதினர்.

இருப்பினும், இரண்டு வயது வரை சிறிதாக இருந்த ரத்தக்கட்டு, பின்னர் பெரிதாக வளர்ந்தது. தற்போது சிறுவனுக்கு ஆறு வயதாகும் நிலையில், மூன்று கிலோ எடையில் புற்று நோய் கட்டியாக மாறியிருக்கிறது. இதுவரை, சிறுவனின் சிகிச்சைக்கு ரூ.3 லட்சத்துக்கும் மேல் செலவழித்தும் குணமடையவில்லை. இதுகுறித்து நாளிதழில் செய்தி வெளியானது. இந்த செய்தியின் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிவுசெய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வானது, அரசு செலவில் அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டனர்.

மேலும், தமிழக அரசின் சார்பில் சிறுவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த அறிக்கையை தில்லி எய்ம்ஸ் மற்றும் மும்பை டாடா நினைவு மருத்துவமனையின் புற்றுநோய் துறை ஆய்வு செய்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு:

மருத்துவ நிபுணர்களின் அறிக்கையில், சிறுவனுக்கு உருவான புற்றுநோய்க்கு தடுப்பூசி காரணமல்ல என்பது தெளிவாக தெரிகிறது. தடுப்பூசி போட்டதால் ஏற்பட்ட கட்டியானது, புற்றுநோயாக உருவானது என்று, பயத்தை உண்டாக்கும் வகையில் தெளிவுபடுத்தாமல் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர். இந்தச் செய்தி, மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியது என்பதை உணர முடிகிறது.

எனவே, நோய் தடுப்பூசிகள் புற்றுநோயை ஏற்படுத்துவதில்லை என்பது குறித்து மக்களிடையே பத்திரிகைகள், ஊடகங்கள் வாயிலாக, தமிழக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறி, வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/11/28/w600X390/abortionlaw2.jpg http://www.dinamani.com/health/health-news/2017/may/04/தடுப்பூசிகள்-புற்றுநோயை-ஏற்படுத்துவதில்லை-விழிப்புணர்வை-ஏற்படுத்த-அரசுக்கு-உயர்-நீதிமன்றம்-உத்தரவு-2695598.html
2695603 மருத்துவம் செய்திகள் அரசு மருத்துவர்கள் கடவுளிடம் மனு அளிக்கும் நூதன போராட்டம் Thursday, May 4, 2017 02:21 AM +0530 கடவுளிடம் மனு அளிக்கும் நூதன போராட்டத்தில் அரசு மருத்துவர்கள் புதன்கிழமை ஈடுபட்டனர்.
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் 50 சதவீத இடஒதுக்கீடு கோரி அரசு மருத்துவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் சார்பில் அரசு மருத்துவமனைகளில் திட்டமிடப்பட்ட அறுவைச் சிகிச்சைகள், முதல்வரின் காப்பீட்டுத் திட்ட மருத்துவ சேவைகள், மருத்துவ முகாம்கள், முக்கிய நபர்களுக்கான மருத்துவக் குழு, மாணவர்களுக்கான வகுப்புகள் அனைத்தும் புதன்கிழமை நிறுத்தப்பட்டன. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தர்னாவில் ஈடுபட்டனர்.
நூதனப் போராட்டம்: இந்த நிலையில், டிஎம்எஸ் வளாகத்தில் 15 -ஆவது நாளாக போராடி வரும் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள், கடவுளிடம் மனு கொடுக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி, கருப்பு நிற பலூன்களில் ஒரு மனு பொறிக்கப்பட்டிருந்தது. அந்த மனுவில், 'பெறுநர் கடவுள் என்று குறிப்பிட்டு, தமிழகத்தின் உரிமையை மீட்பதற்காகவும், அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கவும் கடந்த 15 நாள்களாக போராடி வருகிறோம்.
இதுவரை பிரச்னையை கண்டுகொள்ளாத மத்திய அரசுக்கு நல்ல புத்தி வழங்கி, அதன் மூலம் இந்தியாவில் இருக்கும் அனைத்து அரசு மருத்துவமனைகளையும் காப்பாற்ற அருள் புரிவீராக!' என்ற கோரிக்கை எழுதப்பட்டிருந்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 500 -க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கருப்பு நிற பலூன்களை கடவுளிடம் அனுப்பவதைக் குறிக்கும் வகையில், வானத்தை நோக்கி அவற்றை பறக்கவிட்டனர்.
அரசுடன் பேச்சுவார்த்தை: இந்நிலையில் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவப் பிரதிநிகளுடன் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தமிழக அரசானது போராடும் மருத்துவர்களுக்கு ஆதரவாகவே உள்ளது.
தமிழக உரிமைகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. போராட்டத்தினால் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்று பேச்சுவார்த்தையின்போது அரசு தெரிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

]]>
http://www.dinamani.com/health/health-news/2017/may/04/அரசு-மருத்துவர்கள்-கடவுளிடம்-மனு-அளிக்கும்-நூதன-போராட்டம்-2695603.html
2695019 மருத்துவம் செய்திகள் இடஒதுக்கீடு: பணிகளைப் புறக்கணிக்க அரசு மருத்துவர்கள் முடிவு DIN DIN Wednesday, May 3, 2017 02:18 AM +0530 முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் தங்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரி அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில செயற்குழுக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநில அமைப்புச் செயலாளர் டாக்டர் ராமலிங்கம் கூறியது:
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான அவசரச் சட்டத்தை இயற்ற வேண்டும்.
'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்குப் பெறுவதற்கான மசோதாவில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வந்தோம். நோயாளிகளுக்கு எவ்விதப் பாதிப்பும் இன்றி அறவழியில் போராடி வந்தோம்.
ஆனால், தமிழக அரசிடம் இருந்து எவ்வித உறுதியும் அளிக்கப்படவில்லை. எனவே, எங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவெடுத்துள்ளோம்.
அதன்படி, அரசு மருத்துவமனைகளில் திட்டமிட்ட அறுவைச் சிகிச்சைகள், முதல்வரின் காப்பீட்டுத் திட்ட மருத்துவ சேவைகள், மருத்துவ முகாம்கள், முக்கிய நபர்களுக்கான மருத்துவக் குழு, மாணவர்களுக்கான வகுப்புகள் அனைத்தும் புதன்கிழமை (மே 3) முதல் நிறுத்தப்படும்.
மே 5, 6 தேதிகளில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தற்செயல் விடுப்பு எடுத்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவர். மேலும் மே 8-ஆம் தேதி அனைத்து மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சை தவிர பிற சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படும் என்றார்.
14 நாள் போராட்டம்: டிஎம்எஸ் வளாகத்தில் தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கத்தின் சார்பாக 14-ஆவது நாளாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை மனிதச் சங்கிலி நடைபெற்றது.
அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்: சென்னை ஆட்சியர் அலுவலகம் முன் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசுதான் உறுதிப்படுத்த வேண்டும். மாநிலத்தின் உரிமைகளைக் காப்பாற்றும் வகையில் இதற்கான முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும். 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்குப் பெறும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை விரைந்து பெற வேண்டும் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/3/w600X390/doctor1.jpg ஆர்ப்பாட்டத்தில் பேசுகிறார் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலர் ரவீந்திரநாத். உடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன், மூத்த தலைவர் தா.பாண்டியன். http://www.dinamani.com/health/health-news/2017/may/03/இடஒதுக்கீடு-பணிகளைப்-புறக்கணிக்க-அரசு-மருத்துவர்கள்-முடிவு-2695019.html
2695018 மருத்துவம் செய்திகள் 'தொழுநோயாளிகளைப் பாதுகாக்கும் சட்ட முன்வரவை நடைமுறைப்படுத்த வேண்டும்' Wednesday, May 3, 2017 02:18 AM +0530 தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்கும் சட்ட முன்வரைவை (256), சட்டமாக்கி நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய தொழுநோய் ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் செளகத் அலி கூறினார்.
சென்னையை அடுத்த முட்டுக்காடு, தேசிய ஊனமுற்றோர் மேம்பாட்டு நிறுவனத்தில் சனிக்கிழமை நிறைவு பெற்ற கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது:
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால் அவர்களை எவ்வித உடல் ஊனப்பாதிப்பும் இல்லாமல் குணமாக்க முடியும் என்றார் அவர்.
மத்திய அரசால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டம் குறித்தும் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.
இந்திய தொழுநோய் சேவை அறக்கட்டளை நிர்வாகிகள் டீனா மெண்டிஸ், நிகிதா சாரா, தமிழ்நாடு கிளை மேலாளர் ராம் கே.ராபர்ட், முட்டுக்காடு தேசிய ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோர் மேம்பாட்டு மையத்தின் இயக்குனர் டாக்டர் ஹிமான்ஸ் தாஸ், பதிவாளர் சங்கரநாராயணன், சமூகநலத் துறை இயக்குனர் அமர்நாத், வழக்கறிஞர் சீமா, டிசம்பர் -3 இயக்க மாநிலத் தலைவர் தீபக் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.

 

]]>
http://www.dinamani.com/health/health-news/2017/may/03/தொழுநோயாளிகளைப்-பாதுகாக்கும்-சட்ட-முன்வரவை-நடைமுறைப்படுத்த-வேண்டும்-2695018.html
2693428 மருத்துவம் செய்திகள் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் Sunday, April 30, 2017 01:33 AM +0530 தமிழகம் முழுவதும் இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.30) நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் 43,051 மையங்கள், 1,652 பயண வழி மையங்கள், 1,000 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். முதல் தவணை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளுக்கு மீண்டும் இரண்டாம் தவணையாக முகாம்களில் சொட்டு மருந்து வழங்க வேண்டும். தமிழகத்தில் 71 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/30/w600X390/polio.jpg http://www.dinamani.com/health/health-news/2017/apr/30/இன்று-போலியோ-சொட்டு-மருந்து-முகாம்-2693428.html
2692933 மருத்துவம் செய்திகள் கோடையின் உக்கிரம்: அம்மை நோய் பரவும் அபாயம் Saturday, April 29, 2017 02:23 AM +0530 கோடைகாலம் தொடங்கி வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சின்னம்மை நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இந்த நோய் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு அவசியம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பெரியம்மை இந்தியாவில் இருந்து முழுவதுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. தட்டம்மை மற்றும் ரூபெல்லா அம்மைக்கான தடுப்பு ஊசி முகாம் தமிழக அரசால் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சின்னம்மை: கோடைகாலத்தில் பரவலாக வருவது 'சிக்கன் பாக்ஸ்' என்று அழைக்கப்படும் சின்னம்மையே. இது ஒரு நபரிடம் இருந்து மற்றொருவருக்கு நேரடித் தொடர்பு மூலமாகவோ, இருமல், தும்மல் மூலமோ பரவும். மேலும், சின்னமையினால் உடலில் ஏற்படும் கொப்புளத்தின் நீரைத் தொடுவதன் மூலமும் பரவும். பாதிக்கப்பட்ட நபருக்கு கொப்புளங்கள் ஏற்படுவதற்கு முன்னதாக முதல் ஐந்து நாள்களில் நோய்த் தொற்று பிறருக்கு பரவும். கொப்புளங்கள் காய்ந்து உதிரும் சமயத்திலும் பரவும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
வீடுகளில் முடக்கம்: இந்த நோயின் தாக்கத்தின்போது காய்ச்சல், உடலில் கொப்புளங்கள், கொப்புளங்களில் அரிப்பு ஆகியவை ஏற்படும். சின்னம்மை நோய் தாக்கினால், பிற நோய்களைப் போன்று பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் மருத்துவமனைக்குச் செல்வதில்லை. சிலர் தொற்றுநோய் மருத்துவமனைகளுக்கு மட்டும் செல்கின்றனர். சென்னையைப் பொருத்தவரை தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் இதுவரை 20 -க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
விடுதியில் பரவும்: விடுதிகளில் தங்கிப் படிப்போர் அல்லது விடுதிகளில் வசிப்போருக்கு சின்னம்மை பரவக்கூடிய வாய்ப்பு அதிகம். தற்போது கோடை விடுமுறை என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மகளிர் விடுதி, தங்கும் விடுதிகளில் வசிப்போர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நோயே தடுப்பு மருந்து: சில தொற்றுநோய்கள் ஒருமுறை வந்துவிட்டால் மீண்டும் ஏற்படாது. இதுதொடர்பாக தமிழ்நாடு சித்த மருத்துவ அலுவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.தமிழ்க்கனி கூறுகையில், 'சில நோய்கள் ஏற்பட்ட சமயத்தில் உடலில் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான அம்சம் உருவாகிவிடும். அந்த வகையில் ஒரு முறை சின்னம்மை வந்தால் மீண்டும் வராது' என்றார்.
இதுதொடர்பாக சென்னை மருத்துவக் கல்லூரியின் பொது மருத்துவத் துறை இயக்குநர் டாக்டர் ரகுநந்தன் கூறியது:
சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 5 சதவீதத்துக்கும் குறைவானோருக்கு நுரையீரல் உள்ளிட்ட பிற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நோயாளிகளை வீட்டில் வைத்து கவனித்தாலும், அவர்களுக்கு நீண்ட நாள் காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்டவை இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்றார்.
தடுப்பூசி: பிற நோய்களைப் போன்று சின்னம்மைக்கும் தடுப்பூசி உள்ளது. ஆனால், அதன் விலை அதிகம். எனவே, உயிரிழப்பை ஏற்படுத்தும் அல்லது அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதால் தேசிய தடுப்பூசித் திட்டத்தில் சின்னம்மைக்கான தடுப்பூசி சேர்க்கப்படவில்லை.
இதுகுறித்து குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறியது:
முன்பெல்லாம் 10 முதல் 13 வயதுக்குள்ளாகவே பெரும்பாலான குழந்தைகளுக்கு சின்னம்மை நோய் வந்துவிடும். ஆனால் தற்போது தனிக்குடும்பங்கள் அதிகரித்துவிட்டதால், குழந்தைகளுக்கு சிறு வயதில் சின்னம்மை வருவதில்லை. அதனால் 10 அல்லது பிளஸ் 2 படிக்கும்போது இந்த நோய் தாக்குகிறது. எனவே, தமிழக அரசு சிறுவயதில் சின்னம்மை பாதிக்காத குழந்தைகளுக்கு, 9 -ஆம் வகுப்பில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்றனர்.
குறைவான பாதிப்பு: தமிழகத்தில் மிகவும் குறைவான அளவிலேயே சின்னம்மை பாதிப்பு ஏற்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி கூறியது:
ஆண்டுக்கு சில நூறு பேருக்கு மட்டுமே சின்னம்மை பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோய்க்காக அதிக அளவில் மருத்துவமனைக்கு நோயாளிகள் செல்வதில்லை. இதனால் தொற்றுநோய் மருத்துவமனைகள், மருந்தகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நோயாளியின் உறவினர்கள் மருந்து வாங்க வருவதைக் கொண்டு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அறிகிறோம் என்றார் அவர்.
சின்னம்மை தடுப்பது எப்படி?
சுகாதாரத்தைப் பேணுவதன் மூலமும், உணவுப் பழக்கவழக்கங்களின் மூலமும் சின்னம்மை நோய் வராமல் தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு கோடைகாலத்தில் நாளைக்கு 2 முறை குளிப்பது, வாரத்துக்கு இரு நாள்கள் நல்லெண்ணெய் குளிப்பது அவசியம். நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது காலை 7 மணிக்குள் குளித்துவிட வேண்டும். வெந்நீரிலும், அதிக குளிர்ந்த நீரிலும் குளிக்கக் கூடாது. வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.
கோடைக்காலத்தில் கிடைக்கக்கூடிய நுங்கு, பதநீர், தர்ப்பூசணி, இளநீர், பழச்சாறுகள், பழங்கள் ஆகியவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சின்னம்மையால் பாதிக்கப்பட்டோரை தனியாக வைத்துக் கவனிப்பதன் மூலம் பிறருக்கு இந்த நோய் பரவாமல் தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/health/health-news/2017/apr/29/கோடையின்-உக்கிரம்-அம்மை-நோய்-பரவும்-அபாயம்-2692933.html
2692930 மருத்துவம் செய்திகள் 'ஹார்மோன் குறைபாடுள்ள பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு' Saturday, April 29, 2017 02:19 AM +0530 ஹார்மோன் குறைபாடுள்ள பெண் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவது கவலைக்குரியது என்று பேராசிரியர் நிகல் தாமஸ் கூறினார்.
குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற சுரப்பியல் கோளாறுகள் குறித்த தேசியக்கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது
மனித உடலின் பல்வேறு செயல்பாடுகளை ஊக்குவிக்கும், கட்டுப்படுத்தும்,சமன் படுத்தும் பணியை மேற்கொண்டுள்ள அட்ரினல்,பிட்யூட்ரி உள்ளிட்ட பல்வேறு சுரப்பிகளில் ஏற்படும் கோளாறுகள், ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளை அதிக அளவில் பாதிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
சத்துக்குறைபாடு,போதிய உடற்பயிற்சியின்மை,உணவுப் பழக்கம்,அதிக மனஅழுத்தம்,கொழுப்புச் சத்து,அசைவ உணவு,தூக்கமின்மை,உடல் பருமன் மரபணு மற்றும் பரம்பரைக் குறைபாடு, உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் சுரப்பியல் கோளாறுகளை உருவாக்குகின்றன. பெண் குழந்தைகளின் உடலில் காலத்திற்கேற்ப வளர்ச்சி மாற்றங்கள் இல்லாமை, மகப்பேறின்மை, மாதவிடாய் பிரச்னை, சர்க்கரை நோய் உள்ளிட்ட குறைபாடுகள் இருந்தால் உடனடியாக முழு உடல் பரிசோதனை மேற்கொள்வது மிக அவசியம்.
தைராய்டு, கணையம், கோளாறுகளைக் கண்டறிந்து உரிய மருத்துவ சிகிச்சை வழங்கும்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றார் அவர்.
ஸ்ரீபாலாஜி மருத்துவக்கல்லூரி முதல்வர் டி.ஆர்.குணசேகரன், துணை முதல்வர் சாய்குமார், கல்வி ஆலோசகர் ஆர்.வீரபாகு, மருத்துவக் கண்காணிப்பாளர் பி.சசிகுமார், துறைத் தலைவர் எஸ்.பழனியாண்டவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/29/w600X390/BALJ.jpg குரோம்பேட்டையிலுள்ள ஸ்ரீபாலாஜி மருத்துவக்கல்லூரி சுரப்பியல் துறை சார்பில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கைக் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார் வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் நிகல் தாமஸ் http://www.dinamani.com/health/health-news/2017/apr/29/ஹார்மோன்-குறைபாடுள்ள-பெண்-குழந்தைகளின்-எண்ணிக்கை-அதிகரிப்பு-2692930.html
2692926 மருத்துவம் செய்திகள் தொற்றாத வாழ்வியல் நோய்கள் பெரும் சவாலாக உள்ளன: சித்த மருத்துவர் கு.சிவராமன் Saturday, April 29, 2017 02:16 AM +0530 தொற்றாத வாழ்வியல் நோய்களே இன்றைய இளைஞர்கள் மற்றும் முதியவர்களுக்கு பெரிய சவாலாக இருந்து வருகின்றன என்று சித்த மருத்துவர் கு.சிவராமன் கூறினார்.
டாக்டர் வ.செ.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை சார்பில் முதியவர்களை பராமரிப்பவர்களுக்கான சிறப்பு கருத்தரங்கமும், குறுநூல்கள் வெளியீட்டு விழாவும் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் நூல்களை வெளியிட்டு, சித்த மருத்துவர் கு.சிவராமன் பேசியது:
இன்றைய இளைஞர்கள் மற்றும் முதியவர்களுக்கு தொற்றாத வாழ்வியல் நோய்கள் பெரும் சவாலாக உள்ளன. ஒரு கோப்பை தேநீரில், உலக நாடுகள் முழுவதும் தடை செய்யப்பட்ட 13 வகையான ரசாயன பூச்சிக்கொல்லிகள் உள்ளன. ஊடகங்களும், பெரு வணிக நிறுவனங்களும் முன்நிறுத்தும் உணவுப் பொருட்களுக்குப் பின்னால் வணிக வன்முறை உள்ளது. குப்பையான தொழில்நுட்பங்களைக் கொண்டு உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. நாம் மறந்த இழந்த மரபுகளை மீட்டெடுத்து நம் முதுமையை காக்கவும், அந்த பாரம்பரிய விழுமியங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவும் நாம் முன்வர வேண்டும் என்றார் அவர்.
டாக்டர் வ.செ.நடராஜன் பேசியது: முதியவர்களுக்கு மிக அதிகமான கட்டுப்பாடுகள் விதிப்பதைத் தவிர்க்க வேண்டும். முதியவர்களுக்கான குறுகிய கால, நீண்டகால பராமரிப்பு மையங்களின் தேவை அதிகரித்துள்ளது. 2018-இல் அமையவுள்ள தேசிய முதியோர் நல மையத்தில் இதற்கான முக்கியத்துவம் கொடுக்கப்படும். கிராமப்புற முதியவர்கள் நலனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார் அவர்.
இந்த விழாவில் நரம்பியல் மருத்துவர் புவனேஸ்வரி ராஜேந்திரன், எலும்புமூட்டு இயல் மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ், மனநல மருத்துவர் ஸ்ரீதர் வைத்தீஸ்வரன், மகளிர் நல மருத்துவர் ஜி.எஸ்.சாந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/29/w600X390/VSN.jpg டாக்டர் வ.செ.நடராஜன் எழுதிய 'உணவு முறையை மாற்றுவோம் மற்றும் முதுமையை முறியடிப்போம்' (ஆங்கிலம்) குறுநூல் வெளியீட்டு விழாவில் மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி, http://www.dinamani.com/health/health-news/2017/apr/29/தொற்றாத-வாழ்வியல்-நோய்கள்-பெரும்-சவாலாக-உள்ளன-சித்த-மருத்துவர்-குசிவராமன்-2692926.html
2692822 மருத்துவம் செய்திகள் தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் Saturday, April 29, 2017 12:57 AM +0530 தமிழகம் முழுவதும் இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.30) நடைபெற உள்ளது.
43 ஆயிரம் மையங்கள்:
சொட்டு மருந்து வழங்குவதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட 43,051 மையங்கள் செயல்படும்.
மேலும் பயணிகளின் வசதிக்காக முக்கியப் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1,652 பயணவழி மையங்கள் நிறுவப்படும். தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத இடங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க 1,000 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இடம் பெயர்நது வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் இந்த முகாம்களில் சொட்டு மருந்து வழங்கப்படும். இந்தப் பணிகளில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட உள்ளனர்.
விரலில் மை: சொட்டு மருந்து வழங்கும் மையம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும். விடுபடும் குழந்தைகளைக் கண்டறியும் வகையில் சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும்.
இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியது:
முதல் தவணை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளுக்கு மீண்டும் இந்த முகாம்களில் சொட்டு மருந்து வழங்க வேண்டும். இந்த முகாமின் மூலம் தமிழகத்தில் உள்ள 71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/6/w600X390/polio.jpg http://www.dinamani.com/health/health-news/2017/apr/29/தமிழகம்-முழுவதும்-நாளை-போலியோ-சொட்டு-மருந்து-முகாம்-2692822.html
2692823 மருத்துவம் செய்திகள் 'நாடியைப் பரிசோதித்து 4,448 நோய்களைக் கண்டறிய முடியும்' Saturday, April 29, 2017 12:56 AM +0530 மனிதர்களின் நாடியைப் பரிசோதித்து 4,448 நோய்களைக் கண்டறிய முடியும் என்று சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் நோயியல் துறைத் தலைவர் எஸ்.கே.சசி கூறினார்.
நாடியைக் கொண்டு நோய்களைக் கண்டறியும் 'நாடி பரிக்ஷா' முறை குறித்த இரண்டு நாள்கள் தேசிய பயிலரங்கம், சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஸ்ரீ ஜயந்திர சரஸ்வதி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பயிலரங்கில் பேராசிரியர் சசி பேசியது: ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பாரம்பரிய மருத்துவம் இருக்கும். ஆனால், நமது நாட்டுக்கு சித்த, ஆயுர்வேதம் என இரண்டு பாரம்பரிய மருத்துவங்கள் உள்ளன. இந்த இரண்டு மருத்துவ முறைகளிலும் நாடியைப் பரிசோதித்து நோய்களைக் கண்டறியும் முறையும், முன்கூட்டியே நோய்களைக் கணிக்கும் முறையும் உள்ளன.
4,448 நோய்கள்: மனித உடலில் 10 நாடிகள் உள்ளன. உடலை 13 கூறுகளாகப் பிரித்து, மூன்று விரல்களைக் கொண்டு நாடியைப் பரிசோதிக்க வேண்டும். நாடியைப் பரிசோதித்த பின்பு, ஒவ்வொரு மனிதரின் தேகநிலையைக் கொண்டு நோய்களுக்கு மருந்து கொடுக்க வேண்டும். இந்தக் கலையின் மூலம் 4,448 நோய்களைக் கண்டறிய முடியும்.
மனிதர்களை 64 வகையான காய்ச்சல்கள் தாக்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இவற்றுக்கு ஆயிரக்கணக்கான மருந்துகள் உள்ளன. நாடியைக் கொண்டு ஒருவரின் தேகநிலையைக் கண்டறிந்து, அதற்கு ஏற்றாற்போல் மருந்துகளைப் பரிந்துரைத்தால் எளிதில் குணமடைய முடியும் என்றார் அவர்.
வர்மானியம் அறக்கட்டளையின் தலைவரும், சித்த வைத்தியருமான அர்ஜுனன் கூறியது: நாடி பரிக்ஷா முறை யாரால், எந்த காலத்தில் உருவாக்கப்பட்டது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால் இந்தக் கலையானது சித்தர்கள், முனிவர்கள் மூலம் கற்றுக் கொடுக்கப்பட்டது. அழியக்கூடிய நிலையில் உள்ள இந்தக் கலையை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம், அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.
பயிலரங்கில், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.எஸ்.ராகவன், கல்லூரியின் முதல்வர் ராமதாஸ் மகாந்தி, நிர்வாக அலுவலர் லட்சுமணன், ஆயுர்வேத மருத்துவ பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/29/w600X390/test.jpg நாடியைப் பரிசோதித்து நோய்களைக் கண்டறியும், சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் நோயியல் துறைத் தலைவர் எஸ்.கே.சசி. http://www.dinamani.com/health/health-news/2017/apr/29/நாடியைப்-பரிசோதித்து-4448-நோய்களைக்-கண்டறிய-முடியும்-2692823.html
2692109 மருத்துவம் செய்திகள் ஆயுர்வேத நாடி பரிசோதனை: இன்று தேசிய மருத்துவப் பயிலரங்கம் DIN DIN Friday, April 28, 2017 02:18 AM +0530 நாடியைக் கொண்டு நோய்களைக் கண்டறியும் ஆயுர்வேத மருத்துவ அடிப்படையிலான 'நாடி பரிக்ஷா' தேசியப் பயிலரங்கம் சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் வெள்ளிக்கிழமை (ஏப்.28) தொடங்குகிறது.
நசரத்பேட்டை ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் சார்பில் இரண்டு நாட்கள் இந்தப் பயிலரங்கம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து கல்லூரியின் நிர்வாக அதிகாரி லட்சுமணன் கூறியது: 'நாடி பரிக்ஷா' என்பது ஆயுர்வேதம்-சித்த மருத்துவ முறையின் பண்டைய கால பரிசோதனை முறையாகும். மனிதர்களின் நாடியைப் பிடித்தே, அவர்களுக்கு என்னென்ன நோய்கள், குறைபாடுகள் உள்ள என்பதை எளிதாகக் கண்டறிய முடியும். எக்ஸ்-ரே, ஸ்கேன் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப சாதனங்கள் கண்டறியப்படுவதற்கு முன்பாகவே பண்டைய மருத்துவர்கள், நாடியின் மூலம் நோய்களை எளிதில் கண்டறிந்தனர். ஆனால் அந்தக் கலை தற்போது அழிந்து வருகிறது. எனவே, அந்தக் கலையை ஆயுர்வேத பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் இந்தப் பயிலரங்கம் நடைபெற உள்ளது.
இந்தப் பயிலரங்கில் சர்க்கரை நோயாளிகள், ஒரு சிறுநீரகம் கொண்டவர், கர்ப்பிணிகள் என 100 பேரை வரவழைத்து, அவர்களின் நாடியைக் கொண்டு உடலில் உள்ள குறைபாடுகளைக் கண்டறியும் வகையிலான நேரடி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிலரங்கில் ஆயுர்வேத மருத்துவப் பேராசிரியர்கள், மாணவர்கள் என மொத்தம் 100 பேர் கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.
நாகர்கோவிலைச் சேர்ந்த வைத்தியரும், வர்மானியம் அறக்கட்டளையின் நிறுவனருமான டாக்டர் அர்ஜுனன், சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு சித்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் எஸ்.கே.சசி ஆகியோர் இந்த 'நாடி பரிக்ஷா' முறையைப் பயிற்றுவிக்க உள்ளனர்.
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலய கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் வி.எல்.விஷ்ணு போட்டி பயிலரங்குக்கு தலைமை வகிக்கிறார்.

]]>
http://www.dinamani.com/health/health-news/2017/apr/28/ஆயுர்வேத-நாடி-பரிசோதனை-இன்று-தேசிய-மருத்துவப்-பயிலரங்கம்-2692109.html
2692108 மருத்துவம் செய்திகள் 'இன்ஹேலர் பயன்பாட்டை சுயமாக நிறுத்தக் கூடாது' Friday, April 28, 2017 02:17 AM +0530 ஆஸ்துமா நோயாளிகள் இன்ஹேலர் பயன்பாட்டை மருத்துவர்கள் ஆலோசனையின்றி சுயமாக நிறுத்தக் கூடாது என்று நுரையீரல் நிபுணர்கள் அறிவுறுத்தினர்.
உலக ஆஸ்துமா விழிப்புணர்வு தினத்தை (மே 2) முன்னிட்டு, நுரையீரல் மருத்துவ நிபுணர்கள் ஆர்.நரசிம்மன், ஸ்ரீதர் ஆகியோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: நீண்ட கால சிகிச்சை தேவைப்படும் நோய்களில் ஆஸ்துமாவும் ஒன்று. ஆஸ்துமா நோயாளிகள் பலர் சிகிச்சைக்குப் பின்பு சிறிது முன்னேற்றம் தெரிந்த உடனே இன்ஹேலர் பயன்படுத்துவதை நிறுத்தி விடுகின்றனர். இது ஆஸ்துமா நோயில் இருந்து குணமடைவதில் இருந்து பின்னடைவை ஏற்படுத்தும். இன்ஹேலர் பயன்பாட்டை மருத்துவர்கள் ஆலோசனையின்றி, நோயாளிகள் சுயமாக நிறுத்துவது பல்வேறு ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும்.
மருந்துகள் உட்கொள்வதைக் காட்டிலும் இன்ஹேலர் பயன்பாட்டில் பக்க விளைவுகள் குறைவு. அனைத்து வயதினர், கர்ப்பிணிகளும் இதைப் பயன்படுத்த முடியும். பிற மருந்துகளைக் காட்டிலும் இன்ஹேலருக்கான செலவு மிகவும் குறைவு. எனவே, ஆஸ்துமா நோயாளிகள் தயக்கம் காட்டாமல், மருத்துவர்கள் ஆலோசனைப்படி இன்ஹேலரைப் பயன்படுத்த வேண்டும்.
ஒருவர் உள்ளிழுக்கும் காற்றை எவ்வளவு விரைவாக வெளியேற்றுகிறார் என்பதை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடும் 'ஸ்பைரோமெட்ரி' பரிசோதனையின் மூலம் பல்வேறு நுரையீரல் நோய்களைக் கண்டறிய முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/28/w600X390/doctor.jpg சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார் நுரையீரல் நிபுணர் ஆர்.நரசிம்மன். உடன் மற்றொரு நிபுணர் ஸ்ரீதர். http://www.dinamani.com/health/health-news/2017/apr/28/இன்ஹேலர்-பயன்பாட்டை-சுயமாக-நிறுத்தக்-கூடாது-2692108.html
2691555 மருத்துவம் செய்திகள் 2 குழந்தைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை DIN DIN Thursday, April 27, 2017 02:37 AM +0530 சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இரண்டு குழந்தைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த சிறுவர்கள் அருள்குமரன் (11), மிதுன்(9) ஆகியோர் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதத்தில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை சிறுநீரகவியல் நிபுணர் பாலசுப்ரமணியம் கூறியது:
இந்த குழந்தைகளுக்கு பிறவிலேயே சிறுநீரகம் வளர்ச்சியடையவில்லை. இதன் காரணமாக உயர் ரத்த அழுத்தம் காணப்பட்டது. எனினும் இருவரும் மருந்துகளின் மூலமே சமாளித்து வந்தனர். குழந்தைகள் வளர வளர மருந்துகளின் மூலம் கையாள்வது சிரமமாக இருந்தது.
மேலும் ஆரோக்கியமான நீண்ட வாழ்க்கைக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையே தீர்வாகும். எனவே, இருவருக்கும் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை செய்யத் தீர்மானிக்கப்பட்டது.
இரு குழந்தைகளுக்கும் அவர்களது தாய்மார்களே சிறுநீரகத்தை தானம் செய்தனர்.
இதையடுத்து அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர். முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/27/w600X390/doctor.jpg சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட சிறுவர்களுடன் காவேரி மருத்துவமனையின் தலைமை சிறுநீரகவியல் நிபுணர் பாலசுப்ரமணியம். உடன் குழந்தைகள் சிறுநீரக அறுவைச் சிகிச்சை நிபுணர் பிரகலாத் (வலதுகோடி) http://www.dinamani.com/health/health-news/2017/apr/27/2-குழந்தைகளுக்கு-சிறுநீரக-மாற்று-அறுவை-சிகிச்சை-2691555.html
2691553 மருத்துவம் செய்திகள் அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு: மத்திய அரசு தலையிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் Thursday, April 27, 2017 02:35 AM +0530 அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் போராடி வரும் அரசு மருத்துவர்களை மு.க.ஸ்டாலின் புதன்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டி: மருத்துவ மேற்படிப்புக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து அரசு மருத்துவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமப்புறப் பகுதிகளில் பணியாற்றுபவர்களின் இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. எனவே, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா கொண்டு வந்து நிறைவேற்றினால் தான் இதற்கு பரிகாரம் காண முடியும். இது குறித்து தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
ஆனால், 'நீட்' தேர்வு ரத்து செய்யக் கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரிடம் அனுமதி பெற முடியாத நிலையில்தான் தமிழக அரசு உள்ளது. எனவே, அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்யவதற்கு மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றார் அவர்.
ஸ்டான்லி மருத்துவமனை: இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள், கல்லூரியில் இருந்து ராஜரத்தினம் விளையாட்டரங்கம் வரை பேரணியாகச் சென்று கோரிக்கைகளை நிறைவேற்றும்படி வலியுறுத்தினர். தமிழகத்தில் கடந்த 8 நாள்களாக இந்தப் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/27/w600X390/doctor1.jpg மத்திய அரசின் நீட் தேர்வைக் கண்டித்தும், இடஒதுக்கீடு கோரியும் சென்னை எழும்பூரில் புதன்கிழமை ஊர்வலம் நடத்திய மருத்துவர்கள். http://www.dinamani.com/health/health-news/2017/apr/27/அரசு-மருத்துவர்களுக்கு-இடஒதுக்கீடு-மத்திய-அரசு-தலையிட-வேண்டும்-முகஸ்டாலின்-2691553.html
2691552 மருத்துவம் செய்திகள் அரசு குழந்தைகள் இல்லத்திலிருந்து 4 சிறுமிகள் தப்பியோட்டம் Thursday, April 27, 2017 02:33 AM +0530 சென்னை கீழ்ப்பாக்கத்தில் அரசு குழந்தைகள் இல்லத்திலிருந்து 4 சிறுமிகள் தப்பியோடியது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
கீழ்ப்பாக்கம் கெல்லீஸில் தமிழக சமூகநலத்துறையின் கீழ் இயங்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் இல்லம் செயல்படுகிறது. இங்கு, சென்னையில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இங்கு அடைக்கப்பட்டிருந்த 10 வயதுக்குட்பட்ட 4 சிறுமிகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அறையின் ஜன்னல் கம்பியை வளைத்து வெளியேறி இருக்கின்றனர். பின்னர் அந்த இல்லத்தின் வளாகச் சுவரில் ஏறி குதித்து,அங்கிருந்து 4 சிறுமிகளும் தப்பியோடி உள்ளனர்.
புதன்கிழமை அதிகாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், அந்த அறை ஜன்னல் கம்பியை உடைத்து 4 சிறுமிகள் தப்பியோடியிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து அந்த இல்ல அதிகாரி உமாமகேஸ்வரி, தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

]]>
http://www.dinamani.com/health/health-news/2017/apr/27/அரசு-குழந்தைகள்-இல்லத்திலிருந்து-4-சிறுமிகள்-தப்பியோட்டம்-2691552.html
2690933 மருத்துவம் செய்திகள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வெப்பத்தில் வெந்து நோவும் பச்சிளம் குழந்தைகள்! ஆ. நங்கையார்மணி Wednesday, April 26, 2017 05:35 PM +0530  

திண்டுக்கல் அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் குளிரூட்டும் இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதால் வெப்பக் காற்றில் குழந்தைகள் பராமரிக்கப்படும் ஆபத்தான சூழல் உள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைக்கான தனிப் பிரிவில், இங்கு பிறக்கும் குழந்தைகள் மட்டுமின்றி வெளியிடங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குறைமாத குழந்தைகள், மூச்சுத் திணறல், மஞ்சள் காமாலை போன்ற நோய்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான இன்குபேட்டர், செயற்கை சுவாசக் கருவிகள், போட்டோதெரபி, குறிப்பிட்ட விசையுடன் மருந்து செலுத்துவதற்கான கருவி, வெப்பம் அளிக்கும் கருவி உள்ளிட்ட சகல வசதிகளும் உள்ளன.
இங்கு ஒரே நேரத்தில் 30 முதல் 50 குழந்தைகளை வைத்து பாரமரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிகிச்சைப் பிரிவில் குளிரூட்டும் வசதிக்காக 8 குளிரூட்டும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த 8 இயந்திரங்களும் கடந்த 15 மாதங்களாக செயல்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் வெளிக் காற்றோட்டத்திற்காக ஜன்னல் கதவுகளை மருத்துவமனை ஊழியர்கள் திறந்து வைத்துள்ளனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நண்பகல் முதல் மாலை வரை அனல் காற்று வீசுகிறது. இந்த சூழலில் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் காற்றோட்டத்திற்காக மின்விசிறிகள் பயன்படுத்தப்படுவதால் வெளியிலிருந்து வரும் வெப்பக் காற்றால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன. மேலும் வெளிப்புறங்களிலிருந்து கொசு, வண்டு உள்ளிட்ட பூச்சிகளாலும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
சுமார் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வரும் இந்த சிகிச்சைப் பிரிவில் பழுதடைந்த குளிரூட்டும் இயந்திரங்களை சீரமைப்பதில் மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து மெத்தனம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் குழந்தைகளின் பாதுகாப்பு கடந்த 15 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து அச்சுறுத்தலில் இருந்து வருகிறது.
இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆர்.சிவகுமார் கூறியது: பழுதடைந்துள்ள குளிரூட்டும் இயந்திரங்களின் நிலையை ஆய்வு செய்து அதனை சீரமைத்து மீண்டும் பயன்படுத்த முடியுமா? அல்லது புதிய இயந்திரங்கள் வாங்க வேண்டுமா என்பது குறித்து பொதுப்பணித்துறையினர் (மின்சாரப் பிரிவு)தான் முடிவு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பல முறை கடிதம் எழுதியும், இதுவரை ஆய்வு செய்வதற்கு கூட வரவில்லை. புதிய குளிரூட்டும் இயந்திரங்கள் வாங்க மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யவும் தயாராக உள்ளோம். பொதுப்பணித்துறையினரின் முடிவுக்காக கடந்த 15 மாதங்களாக காத்துக் கொண்டிருக்கிறோம் என்றார் அவர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/26/w600X390/hospital.jpg பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் பராமரிக்கப்படும் சிசுக்கள்.(கோப்பு படம்). http://www.dinamani.com/health/health-news/2017/apr/26/திண்டுக்கல்-அரசு-மருத்துவமனையில்-வெப்பத்தில்-வெந்து-நோவும்-பச்சிளம்-குழந்தைகள்-2690933.html
2690978 மருத்துவம் செய்திகள் 7-ஆவது நாளாக அரசு மருத்துவர்கள் போராட்டம்: நல்லக்கண்ணு நேரில் ஆதரவு Wednesday, April 26, 2017 02:52 AM +0530 முதுநிலை மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு கோரி அரசு மருத்துவர்கள் தொடர்ந்து 7-ஆவது நாளாக சென்னையில் போராட்டத்தில் ஈடுட்டனர்.
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில அரசுக்கான இடங்களில் 50 சதவீதம் அரசு மருத்துவர்களுக்கு அளித்து வந்த நடைமுறையை ரத்து செய்யும் அளவில் சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து மீண்டும் 50 சதவீத இடஒதுக்கீடு கோரி அரசு மருத்துவர்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தர்ணா பேராட்டம்: தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்ககத்தில் செவ்வாய்க்கிழமை தர்ணா நடைபெற்றது. புதன்கிழமை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் போராட்டம் நடத்த உள்ளதாக அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
மருத்துவ அலுவலர்கள்: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் 7-ஆவது நாளாக தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் ஒரு பகுதியாக 85 மருத்துவர்கள் ரத்த தானம் செய்தனர்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லக்கண்ணு பேசியது:
கிராமப்புற மருத்துவ சேவை பாதிக்கப்படாமல் இருப்பதற்கு அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மாணவர் சேர்க்கையில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டியவது அவசியம். 7-ஆவது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தும் மருத்துவர்களை அரசு கண்டுகொளவில்லை. இநதப் பிரச்னைக்கு விரைவில் சட்டத்தீர்வு காண வேண்டும் என்றார்.

 

]]>
http://www.dinamani.com/health/health-news/2017/apr/26/7-ஆவது-நாளாக-அரசு-மருத்துவர்கள்-போராட்டம்-நல்லக்கண்ணு-நேரில்-ஆதரவு-2690978.html
2690974 மருத்துவம் செய்திகள் மருத்துவக் கல்வி இயக்குநர் நியமனம் Wednesday, April 26, 2017 02:49 AM +0530 மருத்துவக் கல்வி இயக்குநராக டாக்டர் எ.எட்வின் ஜோ நியமிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவக் கல்வி இயக்குநராக இருந்த டாக்டர் விமலா கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். அதன் பின்பு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த டாக்டர் நாராயண பாபு மருத்துவக் கல்வி இயக்குநராக (பொறுப்பு) பணியாற்றி வந்தார். அதற்கு பின்பு அவர் சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரும், தடய அறிவியல் நிபுணருமான டாக்டர் எட்வின் ஜோ, மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணை ஏப்ரல் 24 -ஆம் தேதி இரவு வெளியிடப்பட்டது.
இதனையடுத்து அவர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்தில் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் 2019 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை இந்தப் பொறுப்பில் இருப்பார்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/26/w600X390/JOE.jpg http://www.dinamani.com/health/health-news/2017/apr/26/மருத்துவக்-கல்வி-இயக்குநர்-நியமனம்-2690974.html
2690949 மருத்துவம் செய்திகள் மருத்துவர்கள் பரிந்துரைச் சீட்டில் மருந்து மூலக்கூறுகளை குறிப்பிட வேண்டும்: இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவு DIN DIN Wednesday, April 26, 2017 02:24 AM +0530 மருத்துவர்கள் தங்கள் பரிந்துரைச் சீட்டில் அடிப்படை மூலக்கூறுகளைக் குறிப்பிட வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிக்கை அனைத்து மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், மருத்துவமனை இயக்குநர்கள், மாநில மருத்துவக் கவுன்சில் தலைவர்கள், சுகாதாரத் துறை செயலர்கள், மருத்துவக் கல்வி இயக்குநர்கள், மருத்துவ சேவைகள் துறை இயக்குநர்கள் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அறிவிக்கையின் விவரம்: மருத்துவத் துறையில் பணியாற்றும் அனைத்து மருத்துவர்களும் நோயாளிகளுக்கு மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது, மருந்துகளின் அடிப்படை மூலக்கூறுகளை குறிப்பிட்டு எழுத வேண்டும். மருந்து நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிடக் கூடாது.
மேலும் மருந்துகளை ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகளில் (இஅடஐபஅக கஉபபஉத) எழுத வேண்டும். அந்தந்த மாநிலங்களில உள்ள நிர்வாகங்கள் இந்த அறிவிக்கையை அனைத்து மருத்துவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். இந்திய மருத்துவக் கவுன்சிலின் இந்த உத்தரவை மீறுவோர் மீண்டும் அந்தந்த மாநில மருத்துவக் கவுன்சில் அல்லது இந்திய மருத்துவக் கவுன்சில் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிவிக்கையில் குழப்பம்: இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் தலைவர் டாக்டர் செந்தில் கூறியது: மருத்துவர்கள் அடிப்படை மூலக்கூறுகளை எழுதிக்கொடுக்கும்போது, எந்த மருந்து நிறுவனத்தின் மருந்துகளை வழங்குவது என்பதை மருந்து கடைக்காரர்கள் முடிவெடுப்பார்கள். மருத்துவர்களை அணுகும் மருந்து நிறுவனப் பிரதிநிதிகள் மருந்து கடைக்காரர்களை அணுகி தங்கள் நிறுவனத்தின் மருந்துகளை விற்கும்படி கூறுவர். மருந்துக் கடைக்காரர்கள் மருந்து நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மறைமுகமாகப் பெறுகின்றனர். இதனால் தரமற்ற மருந்துகளைக் கூட விற்பனை செய்ய நேரிடும்.
அரசு மருத்துமனைகளில் பொதுவாக ஒரே நிறுவனத்தின் மருந்துகளையே கொள்முதல் செய்வர். இதனால் மருத்துவர் அடிப்படை மூலக்கூறுகளை எழுதினாலும் பிரச்னை வராது. ஆனால் சிறிய கிளினிக்குகளில் மருத்துவரிடம் பரிந்துரைச் சீட்டைப் பெற்று, வெளியே மருந்துக் கடைகளில் மருந்து வாங்குவோருக்கு இது சிக்கலாக இருக்கும்.
இருப்பினும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் அறிவிக்கையைப் பின்பற்றும்படி அனைத்து மருத்துவர்களுக்கும் தகவல் அனுப்பி வருகிறோம். இந்த உத்தரவில் உள்ள நடைமுறை சிக்கல்களை விளக்கி இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் பரிந்துரைகளை அளிக்க உள்ளோம் என்றார்.

 

 

]]>
http://www.dinamani.com/health/health-news/2017/apr/26/மருத்துவர்கள்-பரிந்துரைச்-சீட்டில்-மருந்து-மூலக்கூறுகளை-குறிப்பிட-வேண்டும்-இந்திய-மருத்துவக்-கவுன்ச-2690949.html
2690785 மருத்துவம் செய்திகள் ஏப்ரல் 25 - இன்று உலக மலேரியா தினம்! Tuesday, April 25, 2017 11:14 AM +0530 ஏப்ரல் மாதம் 25-ந் தேதி (இன்று), உலக மலேரியா தின நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.  உலக சுகாதார மையம் சில ஆண்டுகளுக்கு முன்னர் இதனை அறிவித்தது. கொசு மூலம் பரவும் நோய்களில் மலேரியா முதன்மையான நோய் ஆகும். குறிப்பாக இந்த நோய் தாக்கம் மக்களிடம் தடுக்க தமிழகத்தில் பல நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மலேரியா என்பது நோய் பரப்பி அல்லது நோய்க்காவி வாயிலாக பரவும் தொற்றுப்பண்புடைய ஒரு தொற்றுநோயாகும். மலேரியா என்பது ஒட்டுண்ணிகளால் ஏற்படும் ஒரு தொற்றுநோய். இது கொசுவினால் ஒருவர் உடலிலிருந்து மற்றவர்களுக்கு கடத்தப்படுகிறது. இது முதற்கலவுரு ஒட்டுண்ணிகள் மூலம் ஏற்படுகிறது. அமெரிக்கா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளையும் சேர்த்து வெப்ப வலயம் சார்ந்த மற்றும் மிதவெப்ப மண்டல பிரதேசங்களிலும் இது பரவலாகக் காணப்படுகிறது

மலேரியாவின் அறிகுறி - குளிர் காய்ச்சல், வியர்வையுடன் தலைவலி. உடல் நடுக்கம் அதைத்தொடர்ந்து வியர்த்தல் இவை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொடருதலும் அறிகுறிகளாகும். பரிசோதனையில் மலேரியா எனக் கண்டறிந்தபின் உரிய சிகிச்சையை தொடங்கி விட, குணப்படுத்திவிடலாம்.

பாதுகாப்பாக இருக்க சில வழிகள் :

நீர்த்தேக்கத்தால் கொசு பெருகிட, அதனால் மலேரியா நோய் வேகமாகப் பரவுகிறது. சுத்தமும் சுகாதாரமும் மட்டுமே இதற்கு முக்கியத் தீர்வு. கொசு அதிகம் உள்ள பகுதியிலிருந்து வீட்டை மாற்ற முடிந்தால் நல்லது. கொசுவர்த்தி சில குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். கொசு வலை பயன்படுத்துவது நலம். கை, கால்கள் முழுவதும் மறையும்படி உடைகள் அணிவிக்கலாம். குடிக்க அல்லது குளிக்க தண்ணீர் சேமித்து வைத்தால், அதை மூடி வைத்திருக்க வேண்டும். வீட்டை மற்றும் சமையல் அறையை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நல்ல சத்துணவாகச் சாப்பிட வேண்டும். தண்ணீர் தேவைப்படும் அளவு பருக வேண்டும். வீட்டிலோ அல்லது வீட்டை சுற்றியுள்ள இடங்களிலோ தண்ணீரை தேங்கவிட கூடாது. வீட்டில் உள்ள கிணற்றில் கம்பூசியா என்னும் மீன்களை கிணறுகளில் வளர்ப்பதன் மூலம் கொசு உற்பத்தியாவதை தடுக்க முடியும்.

சிகிச்சை

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பொதுமருத்துவமனைகள், மலேரியாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மலேரியாவைப் பற்றிய விழிப்புணர்வை அரசாங்கமும் திறம்பட செய்து வருகின்றது. தனியார் மருத்துவமனைகளிலும் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. ஒரு முறை மலேரியா வந்துவிட்டால் அந்நோயாளிகள் ஒரு வருடத்துக்கு நிச்சயம் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும். வேளை தவறாது உரிய மருந்துகளை உட்கொள்ளுதல் அவசியமாகும்.

காய்ச்சல் இருந்தால் உடனடியாக ரத்தப்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மலேரியா நோய் கண்டறிந்தால் தவறாது உரிய முறையில் மலேரியா மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.

உலக சுகாதார அமைப்பின் அறிக்கைபடி மலேரியாவால் ஒவ்வொரு 60 வினாடிக்கும் 1 குழந்தை உலகில் இறப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2013-ல் 19 கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமானோர் மலேரியாவால் பாதிக்கப்பட்டார்கள். இதனால், கிட்டத்தட்ட 5,84,000 பேர் இறந்துபோனார்கள். இதில் 80 சதவீதம் பேர் ஐந்து வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் என்கிறது அந்த கணிப்பு.

உலகில் 97 நாடுகளில் மலேரியா நோய் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் உலகளாவிய முயற்சியாக இந்நோயை கட்டுப்படுத்த பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.  உலகம் முழுவதும் சுமார் நூறு நாடுகளில் மலேரியா அதிகம் பரவும் ஆபத்து இருக்கிறது. 2030 -ம் ஆண்டிற்குள் இந்தியாவில் மலேரியா தொற்று நோயை அறவே ஒழிக்கவும் மலேரியா இறப்பு விகிதத்தைத் தடுக்கவும் தீவிர செயல் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. மலேரியாவை முற்றிலும் ஒழிப்போம். ஆரோக்கிய பாரத்தத்தை உருவாக்குவோம்!
 

]]>
mosquito, Malaria, ஏப்ரல் 25 - இன்று உலக மலேரியா தினம், மலேரியாவின் அறிகுறி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/25/w600X390/malaria.jpg http://www.dinamani.com/health/health-news/2017/apr/25/world-malaria-day-april-25-2690785.html
2690329 மருத்துவம் செய்திகள் 'குழந்தைகளின் வினோத நடவடிக்கைகளை பெற்றோர் கவனிப்பது அவசியம்'  Tuesday, April 25, 2017 05:28 AM +0530  

குழந்தைகளின் வித்தியாசமான நடவடிக்கைகள், தனிமையாக இருத்தல் ஆகியவற்றை பெற்றோர் கவனிப்பது அவசியம் என டாக்டர் ஃபரின் தெரிவித்தார். 
சென்னை அண்ணாநகரில், ஊருணி அறக்கட்டளை சார்பில் அறிவுத் திறன் குறைபாடுடைய (ஆட்டிஸம்) குழந்தைகளின் பெற்றோருக்கான விழிப்புணர்வு, குழந்தைகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஊருணி அறக்கட்டளையின் நிறுவனர் ரத்தினவேல் ராஜன் தலைமை வகித்தார். இதில் டாக்டர் ஃபரின் பங்கேற்றுப் பேசியதாவது:
குழந்தைகளை திறமையானவர்களாக மாற்றவே...பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படும் அறிவுத்திறன் குறைபாடே ஆட்டிஸம் ஆகும். இந்தக் குறைபாடு பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இந்தப் பாதிப்புள்ள குழந்தைகளை பெற்றோர் கவனிப்பின் மூலம் திறமையானவர்களாக மாற்றவே ஏப்ரல் மாதம் முழுவதும் ஆட்டிஸம்
விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 
அதாவது சிலரை இந்த நோய் அதிகமாகவும், சிலரை மிதமாகவும் பாதிக்கும்.
அறிவுத்திறன் குறைபாடு ('ஆட்டிஸம்') காரணமாக ஆயிரம் பேரில் ஒருவர் அல்லது இருவரோ பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். 
இந்தியாவில் சுமார் ஒரு கோடி பேர் பேர் இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 80 சதவீதம் பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெற்றோரின் கடமை: குழந்தையின் வித்தியாசமான நடவடிக்கைகள், மொழி வளர்ச்சி இல்லாமை, தனிமையாக இருத்தல் போன்றவை மூலம் இந்த பாதிப்பை பெற்றோர்
கண்டறிய முடியும். உடனே குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு அளிக்கப்படும் ஆலோசனைகள் மூலம் இந்தப் பாதிப்பு அதிகமாக இருந்தாலும் முறையான பயிற்சியின் மூலம் குறைக்கலாம் என்றார் அவர். 
இந்த நிகழ்ச்சியில் கேட்பியல் மற்றும் பேச்சியல் நிபுணர் அகிலா விஜயகுமார், சிறப்பு கல்வி மையத்தின் நிர்வாகி தனவேந்தன், உளவியலாளர் சாதனா, டாக்டர் கிரிதரன், சிறப்புக் குழந்தைகளுக்கான பயிற்சி நிபுணர் விஜயலட்சுமி உள்ளிட்டோர், அறிவுத் திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கு உதவுவது குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர். 
அதைத் தொடர்ந்து ஆட்டிஸம் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/25/w600X390/child.jpg சென்னை அண்ணாநகரில் ஊருணி அறக்கட்டளை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற, ஆட்டிஸம் குழந்தைகளின் பெற்றோருக்கான விழிப்புணர்வு-கலை நிகழ்ச்சியில் பாடும் குழந்தைகள். http://www.dinamani.com/health/health-news/2017/apr/25/குழந்தைகளின்-வினோத-நடவடிக்கைகளை-பெற்றோர்-கவனிப்பது-அவசியம்-2690329.html
2690339 மருத்துவம் செய்திகள் 50 சதவீத இடஒதுக்கீடு: அரசு மருத்துவர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் Tuesday, April 25, 2017 02:49 AM +0530 முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் 50 சதவீத இடஒதுக்கீடு கோரி விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் அரசு மருத்துவர்கள் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பல நூறு மருத்துவர்கள் வந்து பங்கேற்றனர். இதன் காரணமாக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கானச் சேவை பாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் கூறியது: அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் இந்திய மருத்துவக் கவுன்சிலின் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான அவசரச் சட்டத்தை இயற்ற வேண்டும்.
போராட்டத்தின் தொடர்ச்சியாக, மருத்துவக் கல்வி இயக்கத்தில் செவ்வாய்க்கிழமை தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பைப் பொறுத்து எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கையைத் தீர்மானிப்போம் என்றார்.
அரசு மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் சார்பில் அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்புப் போராட்டம் திங்கள்கிழமையும் நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் 6-ஆவது நாளாக தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கத்தினர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/25/w600X390/doctor.jpg அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் http://www.dinamani.com/health/health-news/2017/apr/25/50-சதவீத-இடஒதுக்கீடு-அரசு-மருத்துவர்கள்-விடுப்பு-எடுத்து-போராட்டம்-2690339.html
2690326 மருத்துவம் செய்திகள் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு: அரசு ஊழியர் சாவு Tuesday, April 25, 2017 02:39 AM +0530 பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, விருத்தாசலம் பகுதி அரசு ஊழியர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம், கம்மாபுரத்தைச் சேர்ந்தவர் சு.பிரகாஷ் (42). இவர், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். 
இவருக்கு அண்மையில் காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, புதுச்சேரியில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிரகாஷின் ரத்த மாதிரிகளை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்ததைத் தொடர்ந்து, அவரை தனி வார்டுக்கு மாற்றி தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில், பிரகாஷ் திங்கள்கிழமை உயிரிழந்தார். அவருக்கு சாந்தி (36) என்ற மனைவியும், கிஷோர் (9), சாருமதி (4) என்ற குழந்தைகளும் உள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/health/health-news/2017/apr/25/பன்றிக்-காய்ச்சல்-பாதிப்பு-அரசு-ஊழியர்-சாவு-2690326.html
2690277 மருத்துவம் செய்திகள் எய்ட்ஸ் நோயாளிகளைப் புறக்கணித்தால் சிறை: புதிய சட்டத்துக்கு பிரணாப் ஒப்புதல் Tuesday, April 25, 2017 01:01 AM +0530 எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களைப் புறக்கணித்தாலோ அல்லது பணி வாய்ப்பு வழங்க மறுத்தாலோ 2 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
இதையடுத்து அந்தச் சட்டம் விரைவில் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஹெச்ஐவி தொற்று பாதிப்பு உள்ளவர்களின் சமூக உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சமூகத்தில் எய்ட்ஸ் நோயாளிகள் பாரபட்சத்துடனும், வெறுப்புணர்வுடனும் நடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு நிறுவனங்களில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், ஏற்கெனவே பணியில் உள்ளவர்களுக்கு அத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அவர்களை நீக்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தவிர, மருத்துவப் பரிசோதனை என்ற பெயரில் சம்பந்தப்பட்ட நபருக்கே தெரியாமல் ஹெச்ஐவி பரிசோதனைகள் நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, பொது இடங்களில் எய்ட்ஸ் நோயாளிகளை வெறுப்புணர்வுடனும், பாரபட்சத்துடனும் நடத்தும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
இத்தகைய அவலங்களைத் தடுக்கும் பொருட்டு புதிதாக ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் தடுப்புச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
அதன்படி, எய்ட்ஸ் நோயாளிகள் மீது வெறுப்புணர்வை உருவாக்குபவர்களுக்கும், அவர்களை புறக்கணிப்பவர்களுக்கும் சிறைத் தண்டனை விதிக்க அச்சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
அத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு மூன்று மாதங்களில் இருந்து 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட நபரின் அனுமதியின்றி ஹெச்ஐவி பரிசோதனை நடத்தவோ, எய்ட்ஸ் நோய் உள்ளதா என்பது குறித்த விவரங்களைத் தெரிவிக்குமாறு அவரை நிர்பந்திக்கவோ கூடாது என்றும் புதிய சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்தச் சட்டம் தொடர்பான மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்நிலையில், அதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அண்மையில் ஒப்புதல் அளித்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/25/w600X390/pranap.jpg http://www.dinamani.com/health/health-news/2017/apr/25/எய்ட்ஸ்-நோயாளிகளைப்-புறக்கணித்தால்-சிறை-புதிய-சட்டத்துக்கு-பிரணாப்-ஒப்புதல்-2690277.html
2688665 மருத்துவம் செய்திகள் 50 சதவீத இடஒதுக்கீடு போராட்டம் தொடரும்: அரசு மருத்துவர்கள் அறிவிப்பு Saturday, April 22, 2017 02:25 AM +0530 முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டைப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சென்னையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக, பல்வேறு இடங்களில் அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். சென்னை டிஎம்ஸ் வளாகத்தில் தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கத்தினரின் போராட்டம் 3ஆவது நாளாக நீடித்தது.
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு, முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடு ரத்தாகும் வகையில் அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானது.
இதனை எதிர்த்து, அரசு மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
உள்நோயாளிகள் சிகிச்சை: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் 2 மணி நேரம் உள்நோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக டாக்டர் ராமலிங்கம் கூறுகையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கு, ஏப். 24-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. மேலும், தமிழக சுகாதாரத் துறை செயலரை நேரில் சந்தித்து, இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டு வர வலியுறுத்தினோம். அவரும் தமிழக ஆளுநரிடம் இந்த விவகாரத்தை எடுத்துச் செல்வதாகக் கூறியுள்ளார்.
எனவே, 25-ஆம் தேதி வரை இதே முறையில் உள்நோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவோம். அதன் பிறகு, தமிழக அரசிடம் இருந்து சாதகமான பதில் வராவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றார்.
தமிழக அரசு அலட்சியம்: டிஎம்எஸ் வளாகத்தில் 3-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் கூறுகையில், உயர் மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை தமிழக அரசின் அலட்சியத்தின் காரணமாக இழந்து விட்டோம்.
தற்போது, முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையிலும் அரசு மருத்துவர்களின் இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்துள்ளது. இந்தப் பிரச்னையில், தமிழகத்தின் உரிமைகளை மீட்கும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/health/health-news/2017/apr/22/50-சதவீத-இடஒதுக்கீடு-போராட்டம்-தொடரும்-அரசு-மருத்துவர்கள்-அறிவிப்பு-2688665.html
2688650 மருத்துவம் செய்திகள் 'நடமாடும் இலவச மருத்துவ சிகிச்சை திட்டம் விரைவில் தொடக்கம்' Saturday, April 22, 2017 02:14 AM +0530 எஸ்.ஆர்.எம். பிசியோதெரபி கல்லூரியின் வெள்ளி விழாவை முன்னிட்டு, நடமாடும் இலவச பிசியோதெரபி மருத்துவச் சிகிச்சை திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர் கூறினார்.
சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற எஸ்.ஆர்.எம். பிசியோதெரபி (இயன்முறை) கல்லூரியின் வெள்ளி விழாவில் அவர் பேசியது:
பிசியோதெரபி சிகிச்சை முறையின் தேவை, அவசியம் குறித்த விழிப்புணர்வு தற்போது சாமானியர்களிடமும் சென்றடைந்துள்ளது. மூட்டுவலியால் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேரை உரிய பிசியோதெரபி சிகிச்சை மூலம் குணமாக்க முடியும் என்று கண்டறியப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
கல்லூரியின் வெள்ளி விழாவை முன்னிட்டு, மருத்துவக் கல்லூரியைச் சுற்றி 20 கி.மீ. சுற்றளவில் பிசியோதெரபி சிகிச்சை தேவைப்படும் ஏழை, முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளைக் கண்டறிந்து, அவர்களுக்காக நடமாடும் இலவச பிசியோதெரபி மருத்துவ சிகிச்சை திட்டம் தொடங்கப்படும் என்றார் அவர்.
விழாவில், இந்திய தொழுநோய் மருத்துவச் சேவை மைய மருத்துவரும், முன்னாள் மாணவருமான என்.ஆர்.ராஜா உள்ளிட்ட பல்வேறு மருத்துவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
எஸ்.ஆர்.எம்.மருத்துவக் கல்லூரி முதல்வர் சுந்தரம் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/22/w600X390/doctor.jpg இந்திய தொழுநோய் மருத்துவச் சேவை மையத்தின் இயன்முறை மருத்துவருமான என்.ஆர்.ராஜாவுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறார் பல்கலை வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர் http://www.dinamani.com/health/health-news/2017/apr/22/நடமாடும்-இலவச-மருத்துவ-சிகிச்சை-திட்டம்-விரைவில்-தொடக்கம்-2688650.html
2688021 மருத்துவம் செய்திகள் தொடர்கிறது அரசு மருத்துவர்கள் போராட்டம் Friday, April 21, 2017 02:28 AM +0530 முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கக் கோரி அரசு மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு முதுநிலை மாணவர் சேர்க்கையில் வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீடு ரத்தாகும் வகையில் அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானது.
இதனை எதிர்த்து அரசு மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
2-ஆவது நாள்: சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் சுமார் 800 மருத்துவர்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புறநோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்பு: தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை காலை 2 மணி நேரம் புறநோயாளிகள் சிகிச்சையை மருத்துவர்கள் புறக்கணித்தனர்.
தொடர்ந்து போராட்டம்: சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் கவுன்சில் வெள்ளிக்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்தனர்.
அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை புறநோயாளிகள் சிகிச்சையைப் புறக்கணித்தும் அறுவைச் சிகிச்சைகளை புறக்கணித்தும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் தமிழகம் முழுவதும் சங்கத்தின் சார்பில் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம் என்றார்.

 

]]>
http://www.dinamani.com/health/health-news/2017/apr/21/தொடர்கிறது-அரசு-மருத்துவர்கள்-போராட்டம்-2688021.html
2688004 மருத்துவம் செய்திகள் இதயத்தில் துளை: 7 மணி நேரத்தில் 7 நோயாளிகளுக்கு சிகிச்சை: ஸ்டான்லி மருத்துவனை சாதனை Friday, April 21, 2017 02:09 AM +0530 பிறவியிலேயே இதயத்தில் துளை காணப்பட்ட 7 நோயாளிகளுக்கு 7 மணி நேரத்தில் சிகிச்சை அளித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஏற்படும் இதய பாதிப்புகளில் இதய சுவரில் துளை காணப்படுவது முக்கியமானதாகும். 10 லட்சம் குழந்தைகள் பிறப்பில் 950 பேருக்கு இந்த பாதிப்பு காணப்படுகிறது. இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நவீன சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவமனையின் இதயவியல் துறை தலைவர் டாக்டர் கே.கண்ணன், பேராசிரியர் சி.மூர்த்தி ஆகியோர் வியாழக்கிழமை கூறியது:
இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெஞ்சு பகுதியைத் திறந்து அறுவைச் சிகிச்சை செய்யும் முறையே பெரும்பாலும் செய்யப்படுகிறது. ஆனால் அறுவைச் சிகிச்சையில்லாத செயல்முறை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, நோயாளியின் வலது காலின் வழியே ஒரு குழாய் செருகப்படும். அதன் வழியாக வலை போன்ற ஒரு சாதனம் செலுத்தப்படும். இந்தக் குழாய் இதயத்தில் காணப்படும் துளையின் வழியாக மறுபுறத்துக்கு செலுத்தப்படும். அதன் பின்பு குழாயை அகற்றும் வகையில் பின்புறமாக இழுக்கும்போது, அதில் செலுத்தப்பட்டிருந்த வலை போன்ற சாதனம் விரிந்து துளையை அடைக்கும்.
வாழ்நாள் முழுவதற்கும் இந்தச் சாதனத்தை அகற்ற வேண்டியதில்லை. நோயாளிகள் தங்கள் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளலாம்.
இந்தச் சிகிச்சை எங்கள் மருத்துவமனையில் 7 நோயாளிகளுக்கு ஏப்ரல் 10 -ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. காலை 8.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை சிகிச்சை நடைபெற்றது. இரண்டரை வயது குழந்தை முதல் 45 வயதுடையவர் வரை இந்தச் சிகிச்சை செய்யப்பட்டது. ஒரே நாளில் அதிகமானோருக்கு இந்தச் சிகிச்சை செய்யப்பட்டது தமிழகத்தில் இதுவே முதன்முறை என்றனர் அவர்கள்.
தனியார் மருத்துவமனையில் ரூ.3 லட்சம் செலவில் செய்யப்படும் இந்த சிகிச்சை முறையானது, முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/health/health-news/2017/apr/21/இதயத்தில்-துளை-7-மணி-நேரத்தில்-7-நோயாளிகளுக்கு-சிகிச்சை-ஸ்டான்லி-மருத்துவனை-சாதனை-2688004.html
2687371 மருத்துவம் செய்திகள் பிராஸ்டேட் சுரப்பி புற்றுநோய்: ஆண்டுக்கு 4.5 சதவீதம் அதிகரிப்பு Thursday, April 20, 2017 02:17 AM +0530 ஆண்களுக்கு ஏற்படும் பிராஸ்டேட் சுரப்பி புற்றுநோய் பாதிப்பு ஆண்டுக்கு 4.5 சதவீதம் அதிகரித்து வருகிறது என்று இந்திய பிராஸ்டேட் புற்றுநோய் அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் அனந்தகிருஷ்ணன் சிவராமன் கூறினார்.
ஒய்எம்சிஏ மெட்ராஸ் மற்றும் இந்திய பிராஸ்டேட் புற்றுநோய் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய பிராஸ்டேட் சுரப்பில் ஏற்படும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் டாக்டர் அனந்தகிருஷ்ணன் சிவராமன் பேசியது:
ஆண்களுக்கு மட்டுமே ஏற்படக்கூடிய பிராஸ்டேட் புற்றுநோய் தற்போது அதிகரித்து வருகிறது. ஆண்டுக்கு 4.5 சதவீதம் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்த புற்றுநோய்க்கான பிரத்யேகக் காரணங்கள் கண்டறியப்படாவிட்டாலும், புகை, மதுப்பழக்கம், வாழ்க்கை முறை மாற்றங்கள் உள்ளிட்ட புற்றுநோய்க்கான பொதுவான காரணிகளாலும் இது ஏற்படக்கூடும்.
சாதாரண ரத்தப் பரிசோதனை மற்றும் டிஜிட்டல் மலக்குடல் பரிசோதனை ஆகியவற்றின் மூலம் 80 சதவீத புற்றுநோயை கண்டுபிடித்துவிட முடியும். எனவே, 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், குடும்பத்தில் புற்றுநோய் பாதிப்பு இருக்கும் ஆண்கள் 45 வயதிலும் ப்ராஸ்டேட் புற்றுநோய்க்கான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
முழு உடல் பரிசோதனையில் பிராஸ்டேட் புற்றுநோய்க்கான பரிசோதனை இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.இந்த அறக்கட்டளையின் மூலம் ராணுவத்தினர், காவல் துறையினர், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு இலவசப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ராஜாராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/20/w600X390/BOOK1.jpg 'எண்ணம் போல் வாழ்க்கை' என்ற புத்தகத்தை இந்திய பிராஸ்டேட் சுரப்பி புற்றுநோய் அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் அனந்தகிருஷ்ணன் சிவராமனுக்கு அளிக்கிறார் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராம். http://www.dinamani.com/health/health-news/2017/apr/20/பிராஸ்டேட்-சுரப்பி-புற்றுநோய்-ஆண்டுக்கு-45-சதவீதம்-அதிகரிப்பு-2687371.html
2687360 மருத்துவம் செய்திகள் மதுரையில் இருந்து சென்னைக்கு பறந்து வந்த இதயம் Thursday, April 20, 2017 01:39 AM +0530 மூளைச்சாவு ஏற்பட்டதையடுத்து தானமளிக்கப்பட்ட மாணவரின் இதயம், மதுரையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு வேறு நோயாளிக்கு பொருத்தப்பட்டது.
புதுக்கோட்டையில் பொறியியல் பட்டயப்படிப்பு படித்து வந்த மாணவர் தமிழ்மணி (19) . இவர் வெள்ளிக்கிழமை (ஏப்.14) சாலை விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயங்களுடன் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பயனளிக்காமல் செவ்வாய்க்கிழமை (ஏப்.18) அவர் மூளைச்சாவு அடைந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்வதற்கு உறவினர்கள் முன்வந்தனர். அதைத்தொடர்ந்து அவரது கண்கள், இதயம், கல்லீரல், சிறுநீரகம் ஆகிய 4 உறுப்புகள் தானம் பெறப்பட்டன.
இதில் இதயம், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, தானம் பெறப்பட்ட இதயம் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு ஆம்புலன்ஸ் மூலம் புறப்பட்டு 11 நிமிடங்களில் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இதய செயலிழப்பால் சிகிச்சை பெற்று வந்த 23 வயது ஆணுக்கு அந்த இதயம் பொருத்தப்பட்டது. தானம் பெறப்பட்ட தமிழ்மணியின் கல்லீரலும், ஒரு சிறுநீரகமும் மதுரையில் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டது. கண்கள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தானம் வழங்கப்பட்டது.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/20/w600X390/tamilmani.jpg http://www.dinamani.com/health/health-news/2017/apr/20/மதுரையில்-இருந்து-சென்னைக்கு-பறந்து-வந்த-இதயம்-2687360.html
2687340 மருத்துவம் செய்திகள் பார்வைத் திறனற்றோர் யார்?: புதிய வரையறை Thursday, April 20, 2017 01:16 AM +0530 இந்தியாவில் பார்வைத் திறனற்றோர் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக பார்வையின்மைக்கான புதிய வரையறையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
உலக சுகாதார நிறுவனம்(ரஏஞ)வகுத்துக் கொடுத்துள்ள நெறிமுறைகளின் அடிப்படையில் இந்த புதிய வரையறை உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவைப் பொருத்தவரை, கடந்த 1976-ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட என்.பி.சி.பி. (பார்வையின்மையைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய திட்டம்) அளவுகோலின் அடிப்படையிலேயே பார்வையின்மை என்பது வரையறுக்கப்படுகிறது. அதாவது, ஒரு நபரால் 6 மீட்டர் தூரத்தில் காண்பிக்கப்படும் கைவிரல்களை எண்ண இயலாத தன்மையை பார்வையின்மையாக வரையறுத்து வருகிறோம்.
ஆனால், உலக சுகாதார நிறுவனமானது மேற்குறிப்பிட்ட சோதனைக்கான தூரத்தை 3 மீட்டராக நிர்ணயித்துள்ளது. எனவே, உலக சுகாதார நிறுவனம் வகுத்துக் கொடுத்துள்ள நெறிமுறைகளின் அடிப்படையிலேயே இனி பார்வையின்மை வரையறுக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்வையற்றோரின் எண்ணிக்கை குறையும்: இந்நிலையில், இந்தப் புதிய அளவுகோலின் அடிப்படையில் பார்வையின்மை வரையறுக்கப்பட்டால் இந்தியாவில் பார்வைத் திறனற்றோரின் எண்ணிக்கை கணிசமாக குறையும் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பார்வையின்மையைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய திட்டத்தின் (என்.சி.பி.டி.) துணை இயக்குநர் பிரோமிளா குப்தா கூறியதாவது: சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் சுமார் 1.20 கோடி பார்வைத் திறனற்றோர் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் புதிய வரையறையின்படி சோதனை நடத்தும்பட்சத்தில், இந்த எண்ணிக்கை 80 லட்சமாக குறைய வாய்ப்பிருக்கிறது என்றார் அவர்.

 

]]>
http://www.dinamani.com/health/health-news/2017/apr/20/பார்வைத்-திறனற்றோர்-யார்-புதிய-வரையறை-2687340.html
2686747 மருத்துவம் செய்திகள் குழந்தைகள் பராமரிப்பில் தாய்மார்கள் தனிக்கவனம் செலுத்துவது அவசியம்: அமைச்சர் சரோஜா Wednesday, April 19, 2017 05:16 AM +0530 அங்கன்வாடி மைய குழந்தைகள் பராமரிப்பில் தாய்மார்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என சமூகநலத் துறை அமைச்சர் வி.சரோஜா நேரில் அறிவுறுத்தினார்.
சென்னை திருவான்மியூர் அங்கன்வாடி மையத்தில் சமூகநலத்துறை அமைச்சர் வி.சரோஜா திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகளின் தாய்மார்களுக்கு சுத்தம், சுகாதாரம், எடை கண்காணித்தல், குடற்புழு மாத்திரை உட்கொள்வது, மைய தூய்மை, வயதுக்கேற்ற வளர்ச்சி உள்ளிட்ட விஷயங்களில் தாய்மார்கள் போதிய விழிப்புணர்வு பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
குழந்தை பராமரிப்பு பயிற்சி தொடக்கம்: அதைத்தொடர்ந்து, ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட பணிகளுக்கான திட்ட இயக்குநர் அலுவலகத்தில், ஏப்ரல் 17 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் குழந்தை பராமரிப்புக்கான பயிற்சியை அவர் தொடக்கி வைத்தார். அப்போது தொடக்க கால குழந்தை பராமரிப்பு, கல்வியின் நோக்கம், எவ்வாறு குழந்தைகளை வளர்ப்பது குறித்து பெற்றோருக்கு ஆலோசனை வழங்குதல், குழந்தைகளை நாட்டின் சிறந்த குடிமகன்களாக உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு உள்ளிட்டவை குறித்து அமைச்சர் சரோஜா எடுத்துரைத்தார்.

 

]]>
http://www.dinamani.com/health/health-news/2017/apr/19/குழந்தைகள்-பராமரிப்பில்-தாய்மார்கள்-தனிக்கவனம்-செலுத்துவது-அவசியம்-அமைச்சர்-சரோஜா-2686747.html
2686127 மருத்துவம் செய்திகள் ஓமந்தூரார் மருத்துவமனையில் முதன்முறையாக இதய மாற்று அறுவைச் சிகிச்சை Tuesday, April 18, 2017 02:52 PM +0530  

ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் முதன்முறையாக இதய மாற்று அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த ஜெயாம்மாள் (46)
இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டு கடந்த டிசம்பர் மாதம் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை நோயாளியிடம் இருந்து தானமாகப் பெற்ற இருதயம் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி இந்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.
இது தொடர்பாக இதய அறுவைச் சிகிச்சைத் துறையின் பேராசிரியர் பி.அமிர்தராஜ் சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
சாதாரணமாக இதயம் ரத்தத்தை உந்தித் தள்ளுவது 60 சதவீதமாகும். ஆனால் ஜெயாம்மாளுக்கு 20 சதவீதத்துக்கும் குறைவாகவே காணப்பட்டது. அதனால் அவருக்கு மூச்சு விடுதிலும் பிரச்னை ஏற்பட்டது. இதனால் பொருத்தமான இதயம் கிடைக்கும் வரை மருந்துகளே வழங்கப்பட்டு வந்தது. இரண்டு முறை தானம் பெற்ற இருதயத்தை அறுவடை செய்ய முற்பட்டு தோல்வி ஏற்பட்டது. அதன் பின்பு சென்னை தனியார் மருத்துவமனை தானமாகப் பெற்ற இதயத்தை 6 மருத்துவ நிபுணர்கள் 6 மணி நேரம் அறுவைச் சிகிச்சை செய்து பொருத்தினோம் என்றார்.
மருத்துவக் கல்வி இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் நாராயண பாபு கூறுகையில், ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதற்கு அங்கீகாரம் உள்ளது. விரைவில் நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சையும் நடைபெறும். தனியார் மருத்துவமனையில் ரூ.30 லட்சம் செலவில் செய்யப்படும் அறுவைச் சிகிச்சை முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.
அறுவைச் சிகிச்சைக்குப் பின்பு மாதம் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துகளும் இலவசமாக வழங்கப்படும் என்றார்.
ஓமந்தூரார் மருத்துவமனை இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் இரண்டாவது அரசு மருத்துவமனையாகும். சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் இதுவரை 5 இதய மாற்று அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஓமந்தூரார் மருத்துவமனையில் தற்போது 4 நோயாளிகள் இதய மாற்று அறுவைச் சிகிச்சைக்கான பட்டியலில் காத்திருக்கின்றனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/18/w600X390/Omandurarcollege.jpg http://www.dinamani.com/health/health-news/2017/apr/18/ஓமந்தூரார்-மருத்துவமனையில்-முதன்முறையாக-இதய-மாற்று-அறுவைச்-சிகிச்சை-2686127.html
2686125 மருத்துவம் செய்திகள் காச நோய் பரம்பரை நோயல்ல: தா.கார்த்திகேயன் Tuesday, April 18, 2017 02:28 AM +0530 காச நோய் பரம்பரை நோயல்ல, தொற்று நோய்தான் என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் கூறினார்.
புளியந்தோப்பில் இயங்கும் பெருநகர சென்னை மாநகராட்சியின் காச நோய் மையத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஒரு மாதத்திற்குரிய ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருள்களை திங்கள்கிழமை வழங்கி அவர் மேலும் பேசியதாவது:
பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத் துறை சார்பில் சென்னை மாநகர் முழுவதும் பல்வேறு நோய்த்தடுப்பு விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு சிகிச்சை முறைகள் பொது மக்களுக்குத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காசநோய் அறிகுறிகள் உள்ள நோயாளிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்குத் தொடர்ந்து 6 முதல் 8 மாத காலம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத் துறையினரால் தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்.
இந்நோயைக் கட்டுப்படுத்த தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் 36 காசநோய் அலகுகள், 70 நுண்நோக்கி மையங்கள், 105 டாட்ஸ் மையங்கள் பொதுமக்களின் சிகிச்சைக்காக இயங்கி வருகின்றன.
காசநோய் காற்றின் மூலம் பரவக் கூடிய ஒரு தொற்று நோய். இது பரம்பரை நோய் அல்ல. பாக்டீரியா கிருமி மூலம், நோய்த்தொற்றுள்ள ஒருவரிடமிருந்து அவர் தும்மும் போதும், இருமும் போதும் மற்றவர்களுக்குப் பரவுகிறது.
இதற்கு 6 முதல் 8 மாதம் வரை கூட்டு சிகிச்சை முறையில் மாத்திரைகள் எடுத்துக் கொண்டால், இதனை முற்றிலும் குணப்படுத்தலாம்.
காச நோயாளிகள் 6 மாத சிகிச்சை எடுக்கத் தவறும்போது அது தீவிர காச நோயாக மாறும். அதாவது இப்போது கொடுக்கப்படும் மருந்துகளுக்கு கட்டுப்படாத ஒரு நோயாக மாறிவிடுகிறது. தீவிர காச நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதன் மூலம் நோய் விரைவில் குணமடையும் என்பதைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருள்களை மாதந்தோறும் வழங்கவும், நோயின் தாக்கத்தினால் வேலைக்குச் செல்ல இயலாமல் வீட்டில் இருக்க நேரிடுபவர்களுக்குச் சிகிச்சை காலம் முடிவடையும் வரை மாதம் தோறும் ஊக்கத்தொகையாக ரூ.1,000 மாநகராட்சியின் சார்பில் வழங்கப்படும் என்றார் தா.கார்த்திகேயன்.
மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) எம். விஜயலட்சுமி, மாநகர சுகாதார அலுவலர் என்.எ. செந்தில்நாதன், காசநோய் திட்ட அலுவலர் லாவண்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

]]>
http://www.dinamani.com/health/health-news/2017/apr/18/காச-நோய்-பரம்பரை-நோயல்ல-தாகார்த்திகேயன்-2686125.html
2686094 மருத்துவம் செய்திகள் புற்றுநோய் பாதித்த 60 குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை: 'ரே ஆஃப் லைட்' அறக்கட்டளை உதவிக்கரம் Tuesday, April 18, 2017 01:17 AM +0530 புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 60 ஏழைக் குழந்தைகளுக்கு மருத்துவக் குழுவினர் மூலம் இலவச சிகிச்சை அளிக்க உள்ளதாக ரே ஆஃப் லைட் அறக்கட்டளை நிறுவன அறங்காவலர் டாக்டர் பிரியா ராமச்சந்திரன் கூறினார்.
'ஏழைக் குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை - 2017' என்ற திட்டத்தின் தொடக்க விழா சென்னை நுங்கம்பாக்கம் காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனையில் திங்கள்கிழமை (ஏப்.17) நடைபெற்றது. இதில் டாக்டர் பிரியா ராமச்சந்திரன் பேசியது:
இந்த அறக்கட்டளை 15 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளித்து வருகிறது. இதுவரை 124 குழந்தைகள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
வெளிநாடுகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குணமாகும் விகிதம் 90 சதவீதமாக உள்ளது. ஆனால் இந்தியாவில் 85 சதவீதக் குழந்தைகளே குணமடைகின்றனர்.
நிதியுதவி இல்லாததாலும் நோய் குறித்த அச்சத்தினாலும் பல குழந்தைகள் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழக்கின்றனர்.
எனவே, ரே ஆஃப் லைட் அறக்கட்டளை மூலம் 2017-ஆம் ஆண்டில் 60 குழந்தைகளுக்கு இலவச புற்றுநோய் சிகிச்சை, காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனையில் வழங்கப்பட உள்ளது என்றார் அவர்.
பிரபல கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர் முகமது ரேலா கூறுகையில், குழந்தைகளுக்கான புற்றுநோயை முழுவதும் குணமாக்க முடியும். அதற்குப் பணத்தைச் செலவிடுவதில் தவறு இல்லை. குழந்தைகள் சிகிச்சைக்காக மனம் உள்ளவர்கள் தொடர்ந்து உதவ வேண்டும் என்றார்.
கிரிக்கெட் வீரர் முரளி விஜய், மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் பாலசுப்ரமணியன், புற்றுநோய் மருத்துவ நிபுணர் ஜூலியஸ் ஸ்காட் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/18/w600X390/elite.jpg தொடக்க விழாவில் கலந்து கொண்டவர்கள் (இடமிருந்து) கிரிக்கெட் வீரர் முரளி விஜய், டாக்டர் முகமது ரேலா, மருத்துவமனைத் தலைவர் ஏ.சி.முத்தையா, அறங்காவலர் என்.சங்கர், http://www.dinamani.com/health/health-news/2017/apr/18/புற்றுநோய்-பாதித்த-60-குழந்தைகளுக்கு-இலவச-சிகிச்சை-ரே-ஆஃப்-லைட்-அறக்கட்டளை-உதவிக்கரம்-2686094.html
2682736 மருத்துவம் செய்திகள் உங்கள் உடலில் நச்சுத்தன்மை உள்ளதா? Wednesday, April 12, 2017 10:32 AM +0530 நம் உடலில்  நச்சுப்பொருட்கள் (toxins)அதிகம் இருந்தால் பல பிரச்னைகள் ஏற்படும். அதிலிருந்து மீள ஆன்டி ஆக்ஸிடெண்ட்ஸ் மிகுந்துள்ள உணவுகளை உட்கொள்வது, வாழ்க்கை முறையினை மாற்றிக் கொள்வது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். உடலில் நச்சுத்தன்மை அதிகரித்தால் உடல் சக்தி இழந்து சோர்வுக்கு உள்ளாகி பலவித நோய் பாதிப்புக்கள் ஏற்படும். ஆனால் முதலில் நச்சுத்தன்மை இருக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொள்வது? பின்வரும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். அதற்கு முன் தற்காப்பாக சில வழிமுறைகள் உள்ளது. உணவுப் பழக்கங்கங்களின் மூலம் நச்சுத்தன்மையை பெரும்பாலும் தவிர்க்கலாம். 

தூக்கமின்மை

பொதுவாக அனைவருக்கும் 6 முதல் 8 மணி நேர உறக்கம் தேவை. ஆனால் உடலில் நச்சுத்தன்மை இருந்தால் தூக்கம் பாதிக்கப்படும். இந்த நச்சுத்தன்மையால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. ப்ளூரோகுவினோலோன் ஆண்டிபையோடிக் மருந்துகள் இதற்கு காரணமாக இருக்கலாம், ப்ளூரோகுவினோலோன் நச்சுத்தன்மை, கடுமையான மற்றும் நாட்பட்ட தூக்கமின்மை வகைகளை உண்டாக்குகின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

நமது உடலில் மெலட்ரின் என்ற ஒரு வேதியல் பொருள் சுரக்கிறது. இது தூக்கத்தை வரவழைக்க உதவும் ஒன்று. இந்த வேதிப்பொருளை வலி மாத்திரைகளின் வேதி பொருட்கள் பாதிப்பதால் தூக்கமின்மை ஏற்படலாம். அதாவது நச்சுத்தன்மை ஏற்பட்டு பாதிப்படையலாம். 

தீர்வு

மெலடோனின் வேதிப்பொருள் சுரக்க உதவும் உணவுகளை தூங்கப்போவதற்கு முன் உட்கொள்வதால் நிம்மதியான தூக்கம் வரும். செர்ரி, வாழைப்பழம் போன்ற உணவுகளில் மெலடோனினை அதிகப்படுத்தும் தன்மை உள்ளது.

ரொட்டி, ஓட்ஸ், போன்ற கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ள, உணவுகள் சர்க்கரையை உற்பத்தி செய்து உடலில் இன்சுலினை சுரக்கச் செய்கிறது. இன்சுலின் அதிகமாக சுரக்கும் போது உறக்கம் ஏற்படும். பல ஆண்டுகளாக, நமது முன்னோர்கள் இரவில் தூங்கப்போகும் முன் பால் குடிக்கும் பழக்கம் கொண்டிருந்தனர். இதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். தூக்கமின்மையை தடுக்க பாலில் உள்ள ட்ரிப்டோபன் என்ற அமினோ அமிலம் உதவுகிறது. இதோடு பாலில் உள்ள கால்ஷியமும் தூக்கத்தை தூண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உடல் சோர்வு மற்றும் உடல் சூடு, திடீர் தொப்பை

உடலில் நச்சுக்கள் அதிகரித்தால் உடலின் வளர்சிதை மாற்றத்தின் செயல் திறன் குறையும். இதனால் வயிற்றில் கொழுப்பு சேர்ந்து தொப்பை ஏற்படும். தவிர நச்சுத்தன்மையால் ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பையும் அதிகரிக்கும். உடலில் நச்சு அதிகரிக்கும் போது கல்லீரல் செயல்பாடு கடினமாகத் தொடங்கும். இதனால் உடலில் சூடு அதிகரிக்கும். கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதை தெரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம் நச்சுக்கள் உடலின் கல்லீரலில் செயல்பாட்டை கடினமாக்குவதன் காரணமாகத் தான் வளர்சிதை மாற்றங்களை உருவாக்கி அதன் செயல்திறன் குறைகிறது. கல்லீரல் சரியாக இயங்கவில்லை எனில் வாயில் துர்நாற்றம் ஏற்படும். உடல் மிகவும் சோர்ந்து போனாலோ, அடிக்கடி மயக்கம் வருவது போலிருந்தாலோ கல்லீரலில் ஏதோ பிரச்னை அது நச்சுத்தன்மையால் பாதிப்பு அடைந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

தீர்வு

தொப்பைக்கு காரணம் கல்லீரல் கொழுப்பாகவும் இருக்கலாம். இதற்கு உணவு முறையும் ஒரு காரணமாகும். 

க்ரீன் டீ, சிட்ரஸ் பழங்கள், பாகற்காய், பால் நெருஞ்சில், முழு தானியங்கள், தக்காளி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் கல்லீரல் பிரச்னையை சமாளிக்க முடியும். ஆரஞ்சு அல்லது எலுமிச்சை சாறுகளை வெறும் வயிற்றில் குடிப்பதும் நல்ல பலனைத் தரும். ரோஸ்மேரி, பூண்டு, வெங்காயம், இஞ்சி, சிவப்பு மிளகு, கோஸ், தக்காளி, மற்றும் இலவங்கப்பட்டை, கடுகு, கிராம்பு ஆகியவையும் கொழுப்பை கரைக்க உதவுகின்றன. அதிமதுரம், டான்டேலியன் போன்ற மூலிகைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமும் கொழுப்பினை குறைக்க முடியும். ஆனால் இந்த மூலிகைகளை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக் கூடாது.  

பிற அறிகுறிகள்

அடிக்கடி தலைவலி ஏற்படும். சருமப் பிரச்னைகள் உருவாகும். இதற்குக் காரணம் ரத்த ஓட்டப் பிரச்னைகள். மருத்துவரை அணுகும் போது நாக்கை நீட்டச் சொல்வார். நாக்கின் மேற்புறத்தில் மஞ்சள், கருநீலம், வெள்ளை போன்ற நிறங்கள் தென்பட்டால் உடலில் நச்சுக்கள் அதிகம் உள்ளது என்று அவர் கண்டுபிடித்துவிடுவார்.

நச்சுத்தன்மையை சமாளிக்க வைட்டமின் சி உணவு வகைகளை அடிக்கடி உட்கொள்ள வேண்டும். உடலில் உள்ள கொழுப்புகளை சக்தியாக மாற்றும் கார்னிடைன் என்ற பொருளை சுரப்பதற்கு உதவும் வைட்டமின் சி மிகவும் தேவை. அது மட்டுமல்லாமல் மனஅழுத்தத்தால் சுரக்கப்படும் கார்டிசாலையும் வைட்டமின் சி கட்டுப்படுத்துகிறது. இந்த கார்டிசால் தான் வயிற்று கொழுப்பு அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணமாகும்.

சரியான முறையில் உணவைச் சாப்பிட்டால் 80% நச்சுத்தன்மையை நிச்சயம் குறைக்க முடியும். ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு முறையை பின்பற்றினால் அது உடலுக்கும் மனத்துக்கும் நல்லது. தேவையான அளவு நுண் மற்றும் நார்ச் சத்துக்களோ உள்ளடக்கிய ஊட்டச் சத்துக்களை சாப்பிடவேண்டும். பாக்கெட் உணவுகள், உணவுக்கு நடுவில் இடை உணவுகள், துரித உணவுகள் போன்ற குப்பை உணவுகளை அறவே தவிர்த்தால் உடல் நலம் மேம்படும். இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்கள், வேக வைத்த உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் உடலில் தேவையற்ற நச்சுத்தன்மை அதிகம் சேராது.  தண்ணீர் உடலின் தேவைக்கு ஏற்ப குடிப்பதும் ஆரோக்கியத்துக்கும் உடல் நலத்துக்கும் மிகவும் முக்கியம்.

]]>
anti oxidants, obese, உடல் நச்சுத்தன்மை, தொப்பை பிரச்னை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/11/w600X390/antioxidants1.jpg http://www.dinamani.com/health/health-news/2017/apr/11/உங்கள்-உடலில்-நச்சுத்தன்மை-உள்ளத-2682736.html
2682104 மருத்துவம் செய்திகள் உங்கள் சமையலறை ஸ்பாஞ்சை மாற்றிவிட்டீர்களா? DIN DIN Monday, April 10, 2017 11:10 AM +0530 ஒரு வீட்டின் சுபிட்சத்தை இரண்டு இடங்கள் சுத்தமாக இருப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம். அவை முறையே சமையல் அறை மற்றும் கழிப்பறையாகும். சமையலறையை தினமும் காலை மற்றும் இரவில் சுத்தப்படுத்திவிட வேண்டும் காரணம் சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் நோய்கள் பல வந்துசேரும். சமையல் பாத்திரங்களை சரியாக சுத்தப்படுத்தாவிட்டால் சால்மோனெல்லா மற்றும் ஹெபடைடிஸ் ஏ போன்ற நோய்கள், உண்ணும் உணவுகள் மூலம் வரும். சுத்தம் சோறு போடும் என்று சும்மாவா சொன்னார்கள் நம் முன்னோர்கள்?

சமையல் பாத்திரங்களை நன்றாக விளக்கி சுத்தப்படுத்தவும், கீழே சிந்திய உணவுப் பொருட்களைத் துடைக்கவும் முன்பு துணி அல்லது தேங்காய் நார்களையே பயன்படுத்தினோம். ஆனால் சமீப காலமாக நம்மில் பலர் ஸ்பாஞ்சுகளைப் பயன்படுத்துகிறோம். ஸ்பாஞ்ச் பற்றி சில தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.

ஒரு சதுரமான ஸ்பாஞ்ச் எடுத்துக் கொண்டால் அதை மூன்று நாட்கள் மட்டும் பயன்படுத்துங்கள். அது இற்றுப்போகும் வரை பயன்படுத்திக் கொண்டிருந்தால் அதில் இலவச இணைப்பாக லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள்  படிந்துவிடும். அந்தச் சிறிய ஸ்பாஞ்ச் 10 மில்லியன் பாக்டீரியாக்களின் உறைவிடமாக உள்ளது.

சமையலறையை சுத்தம் செய்யப் பயன்படுத்தும் ஸ்பாஞ்ச்சுகளை எப்படி சுத்தப்படுத்துவது?

ஸ்பாஞ்சுகளை பயன்படுத்தாத சமயங்களில் அதை உலர்வாக வைத்திருக்கவும். ஈரத்தன்மை பலவிதமான கிருமிகளை வரவேற்கும்.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஸ்பாஞ்சுகளை சுத்தம் செய்ய வேண்டும். அதுவும் ப்ளீச்சிங் பவுடரில் ஊற வைத்து பயன்படுத்தினால், கிருமிகள் அழிந்து விடும்.

ஸ்பாஞ்சுகளை கொதிநீரில் ஊற வைக்கவும். இதன் மூலம் கிருமிகளை அழிந்துவிடும். அல்லது இரண்டு நிமிடம் ஸ்பாஞ்சை மைக்ரோவேவ்வில் அதிக சூட்டில் வைக்க, 90 சதவிகிதம் நுண்கிருமிகள் அழிந்துவிடும்.

பாத்திரம் விளக்க பயன்படும் தூள் அல்லது சோப்பு வகைகளிலோ ஸ்பாஞ்சுகளை ஊறவைக்க, அவற்றிலுள்ள கிருமிகள் அழியும்.

குளிர்ந்த நீரில் கழுவ அவற்றில் உள்ள அழுக்குகள் தளர்ந்து விடும். பின்னர் ஸ்பாஞ்சில் உள்ள மீதி தண்ணீரை பிழிந்து வெளியேற்றவும்.

எத்தனை தடவைகள் ஸ்பாஞ்சுகளை பயன்படுத்துகிறோமோ அத்தனை தடவைகள் அதனை சுத்தப்படுத்த வேண்டும். மிகவும் நைந்து போய் அழுக்காக இருப்பதை பயன்படுத்தவேண்டாம். தூக்கி எறிந்துவிடுங்கள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/10/w600X390/kitchen.jpg http://www.dinamani.com/health/health-news/2017/apr/10/உங்கள்-சமையலறை-ஸ்பாஞ்சை-மாற்றிவிட்டீர்களா-2682104.html
2680592 மருத்துவம் செய்திகள் அதிக மனஅழுத்தம் சர்க்கரை நோயை ஏற்படுத்தும்: டாக்டர் வி.மோகன் Saturday, April 8, 2017 02:17 AM +0530 நீண்ட நாள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு சர்க்கரை நோய் ஏற்படும் என்று டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் மருத்துவமனைத் தலைவர் டாக்டர் வி.மோகன் கூறினார்.
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு 'மன அழுத்தமும் சர்க்கரை நோயும்' என்ற தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் டாக்டர் மோகன் பேசியது:
மன அழுத்தத்துக்கும் சர்க்கரை நோய்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு. ஆனால், நீண்ட நாள்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்டவை ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்றார்.
மருத்துவமனையின் சிகிச்சை செயல்பாடுகளின் தலைவர் டாக்டர் பூங்கோதை பேசியது:
உலகம் முழுவதும் ஆண்டுக்கு 3.5 கோடி பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். ஹார்மோன் மாற்றங்கள், குடும்பப் பிரச்னைகள் என பல்வேறு காரணங்களால் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது. 20 முதல் 40 வயதுக்குட்பட்டோர், விவாகரத்துப் பெற்றோர் அல்லது துணையிடம் இருந்து பிரிந்து வாழ்பவர்கள், சிறு வயதில் ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை அல்லது பெரும் விபத்து ஆகிய காரணங்களால் மனஅழுத்தம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் செயல்பாடுகள், நல்ல உணவுப் பழக்கம், 6 முதல் 8 மணி நேர தூக்கம், உடற்பயிற்சி, மருந்துகளை சரியாக உட்கொள்ளுதல் ஆகியவற்றால் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட முடியும் என்றார்.


 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/8/w600X390/mohan.jpg விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற (இடமிருந்து) மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.மோகன், சிகிச்சை செயல்பாடுகளின் தலைவர் டாக்டர் பூங்கோதை. http://www.dinamani.com/health/health-news/2017/apr/08/அதிக-மனஅழுத்தம்-சர்க்கரை-நோயை-ஏற்படுத்தும்-டாக்டர்-விமோகன்-2680592.html
2679831 மருத்துவம் செய்திகள் தைராய்டு – பிரச்சனைகளும் தீர்வும் Thursday, April 6, 2017 03:23 PM +0530 நம் உடல் தைராய்டு ஹார்மோன்களை அதிகம் உற்பத்தி செய்வதே தைராய்டு நோயாகும். தைராய்டு சுரப்புக் குறை என்பது பொதுவான மக்கள் தொகையில் மூன்று சதவீதம் இருக்கின்றது. இந்த தைராய்டு நோயின் பிரச்சனைகளை அலசி ஆராய்வதோடு, அதற்கான தீர்வையும் தருகிறது இக்கட்டுரை.
  
தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியின் கீழ்பாதியில் இருக்கும் நாளமில்லா சுரப்பி. இதன் முக்கிய பங்கு தைராய்டு ஹார்மோன்களை சுரப்பதுதான். இந்த ஹார்மோன் ரத்தத்தின் மூலம் உடலெங்கும் செலுத்தப்பட்டு, அனைத்து திசுக்களின் வளர்சிதை (Metabolism) மாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றது. தைராய்டு சரியாக செயல்பட மூளை மற்றும் உடலின் குறிப்பிட்ட பாகங்கள் உதவுகின்றன. தைராய்டில் பிரச்சினை என்றால், உடல் இயக்கம் முழுவதுமே பாதிப்புக்கு உள்ளாகும்.
 
தைராய்டு பிரச்சினைகள்

ஹைபோதைராய்டிஸம்: (Hypothyroidism) இது தைராய்டு சுரப்பி போதுமான அளவு தைராய்டு ஹார்மோன்களை சுரக்காமல் இருக்கும் நிலை.

அறிகுறிகள்: உடல் இயக்கம் அனைத்தும் மெதுவாக செயல்படுவதால், அதிக குளிர் உணர்வது, எளிதில் சோர்வடைவது, சருமம் உலர்வது, எடை கூடுதல், மறதி மற்றும் மனச்சோர்வு அதிகரிப்பது, மாதவிடாய் பிரச்சினைகள் மற்றும் மலச்சிக்கல் ஆகியவை.

காரணங்கள்: உடலில் அல்லது தைராய்டில் ஏற்படும் ஆட்டோ இம்யூன் வியாதிகள், தைராய்டு அறுவை சிகிச்சை, கழுத்துப் பகுதியில் கொடுக்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சை, பிறக்கும் போதே தைராய்டு பிரச்சினைகளுடன் பிறப்பது, தைராய்டில் எரிவு (inflammation), குறிப்பிட்ட சில மருந்துகள், மிக அதிக அல்லது மிகவும் குறைவான அயோடின் மற்றும் தைராய்டை கட்டுப்படுத்தும் மூளையிலுள்ள பிட்யூடரி சுரப்பியில் நோய், மற்றும் குடும்பத்தில் தைராய்டு நோய் இருப்பது.

சிகிச்சை: மருந்துகள் மூலம் இந்த ஹார்மோன் அளவை சரிசெய்ய முடியும். மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். இந்த மருந்தை தேவையை விட குறைவாக எடுத்துக்கொண்டால் உங்கள் அறிகுறிகள் முழுவதும் குணமடையாமல் இருக்கும். அதிகமாக எடுத்துக்கொண்டால் தூக்கமின்மை, எடை குறைவு, பதற்றம், அதிக பசி, படபடப்பு, சோர்வு, மூச்சுவாங்குதல் போன்றவை ஏற்படும். அதனால் சரியான அளவு எடுத்துக் கொள்வதில் கவனம் தேவை. மருத்துவர் உங்களுக்கு மருந்து ஆரம்பித்து 6 – 10 வாரங்கள் கழித்து, மருந்தின் அளவை நிர்ணயம் செய்ய, ரத்தப் பரிசோதனை செய்வார். இதன் பின்பு வருடம் ஒரு தடவை ரத்தப் பரிசோதனை செய்யலாம்.

உங்கள் அறிகுறிகள் மோசமடைந்தாலோ, மேற்கூறிய பிற அறிகுறிகள் ஏற்பட்டாலோ, பிற மருந்துகள் சாப்பிட ஆரம்பித்தாலோ, சரிவர மருந்துகள் எடுக்கவில்லை என்றாலோ, மருந்துகள் எடுப்பதை நிறுத்த வேண்டும் என்றாலோ, கர்ப்பம் தரித்தாலோ மருத்துவரை அணுகி தைராய்டு ஹார்மோனின் அளவை பரிசோதிப்பது அவசியம்.

ஹைபர்தைராய்டிஸம் (Hyper thyroidism): இது, உடலின் தேவையைவிட அதிக தைராய்டு ஹார்மோன் சுரக்கும் நிலை. இந்த நிலையில், உடலின் அனைத்து இயக்கங்களின் வேகம் அதிகரிக்கிறது. இதன் அறிகுறிகள் மிகவும் மெதுவாக ஆரம்பித்து முன்னேறுவதால், மன அழுத்தம் அல்லது பதட்டம் எனத் தவறாகப் புரிந்துகொள்ள நேரிடும்.

அறிகுறிகள்: பதற்றம், அதிக வியர்வை, படபடப்பு, கை நடுக்கம், தூங்குவதில் சிரமம், சருமம் மெலிதல், முடி உதிர்தல், தசைகள் ஓய்ந்து போதல் – குறிப்பாக தொடை மற்றும் தோற்பட்டை தசைகள், அடிக்கடி மலம் கழித்தல், பெண்களுக்கு மாதவிடாய் சரியாக இல்லாமல் இருத்தல், எடை குறைதல் ஆகியவை.

காரணங்கள்: ‘கிரேவ்ஸ்’ நோய் எனப்படும் நோயால் பொதுவாக ஏற்படும். இது தவிர தைராய்டு சுரப்பியில் ஏற்படும் கட்டி அல்லது முடிச்சுகளாலும், எரிவாலும், தொற்றாலும் சில வகையான மருந்துகளாலும் ஏற்படலாம். சிகிச்சை: மருந்து, அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு மருந்துகள், பிற மருந்துகள் என நோயின் தன்மை மற்றும் காரணத்தைப் பொறுத்து நபருக்கு நபர் தைராய்டு சிகிச்சை மாறுபடும்.

 

தைராய்டு காய்டர்: இது தைராய்டு சுரப்பி பெரிதாவதைக் குறிக்கும். இந்நிலையில் சுரப்பி அதிகமாகவோ, குறைவாகவோ அல்லது ஏதும் மாற்றமில்லாமலும் செயல்படலாம். காரணம்: உணவில் அயோடின் பற்றாக்குறை, ஆட்டோ இம்யூன் நோய், தைராய்டில் எரிவு போன்றவற்றால் இது ஏற்படும். சிகிச்சை: பெரிதான சுரப்பி உடலில் ஏற்படுத்தும் பாதிப்பை பொறுத்து சிகிச்சை அளிக்கப்படும். தைராய்டு சுரப்பி கழுத்தில் பார்க்க முடிகிறதென்றால், உடனே மருத்துவரை அணுகவும்.

தைராய்டு கட்டிகள்: தைராய்ட்டு சுரப்பியில் உள்ள செல்களின் அபரிமிதமான வளர்ச்சியால் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்டிகள் ஏற்படலாம். இவை எதனால் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்கப்படவில்லை. பொதுவாக இவை எந்த தொந்தரவையும் ஏற்படுத்துவதில்லை. சிலருக்கு கழுத்தில் வலி, விழுங்குவதில் சிரமம், மூச்சு வாங்குவதில் சிரமம், குரலில் மாற்றம் போன்றவை ஏற்படுத்தும். மருத்துவரிடம் சென்று இது புற்றுநோய் கட்டியல்ல என்று உறுதி செய்து கொள்வது அவசியம். 

தைராய்டு எரிவு: தைராய்டு செல்கள் எரிவுக்கு உள்ளாகும்போது அதன் வீரியத்தைப் பொறுத்து பாதிப்படையும். மருந்துகள், மகப்பேற்றுக்குப்பின் தொற்றுகள் (Infection) போன்றவை இவற்றை ஏற்படுத்தும். சிலவகையான எரிவுகள் வலியை ஏற்படுத்தும். தைராய்டு புற்றுநோய்: இந்தப் புற்றுநோயை பெரும்பாலும் அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்தலாம். மற்ற புற்றுநோய்கள் போன்று இது வலியோ, பாதிப்போ ஏற்படுத்துவதில்லை. பொதுவாக இவை எந்த அறிகுறியும் ஏற்படுத்துவதில்லை. சிலருக்கு வலி, விழுங்குவதில் சிரமம், குரலில் மாற்றம், மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை ஏற்படலாம். குடும்பத்தில் யாருக்கேனும் இருந்தால் வரும் வாய்ப்பு அதிகம். மருத்துவரின் ஆலோசனையின்படி தொடர் சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். 

யாருக்கு தைராய்ட் நோய் வரும் வாய்ப்பு அதிகம்?

கீழ்க்கண்டவை இருந்தால் அவர்களுக்கு மற்றவரை விட தைராய்டு நோய் வரும் அபாயம் அதிகம். பெண்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆட்டோ இம்யூன் வியாதிகள், குடும்பத்தில் யாருக்கேனும் தைராய்டு பிரச்சினைகள் இருப்பது, தைராய்டு அறுவை சிகிச்சை மற்றும் கழுத்தில் கதிர்வீச்சு சிகிச்சை செய்திருப்பவர்கள் புகைபிடித்தல், உணவில் அயோடின் குறைபாடு கர்ப்பகாலம் மற்றும் குழந்தை பிறந்த ஓரிரு வருடங்களில் கீழ்க்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா? மிகுந்த அசதி, திடீரென உடல் எடை அதிகமாகவோ குறைவாகவோ ஆவது, பதட்டம், மனச்சோர்வு, இயல்பைவிட மிகக் குறைந்த அல்லது அதிக கொலஸ்டிரால் அளவு, மலம் கழிப்பதில் பிரச்சினை, முடி உதிர்தல், சருமத்தில் மாற்றம், கழுத்துப்பகுதியில் வீக்கம், வலி அல்லது கட்டி, குரல் மாற்றம், தசை, மூட்டு வலி, பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை, கருத்தரித்தலில் சிக்கல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும். 

அயோடின்: தைராய்டு ஹார்மோனின் உற்பத்திக்கு அயோடின் மிகவும் அத்தியாவசியமானது. இதை உணவிலிருந்து மட்டுமே பெறமுடியும் அல்லது மருந்தாக உட்கொள்ள வேண்டும். இதன் குறைபாடு தைராய்டு சுரப்பியில் பல்வேறு பிரச்சினைகளை உண்டு பண்ணலாம். அனைவருக்கும் அயோடின் மிகமிக அவசியம். குறிப்பாக கர்ப்பமடைந்த பெண்களுக்கும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் அயோடின் மிக முக்கியம். போதிய அளவு அயோடின் இல்லையென்றால், குறைப்பிரசவம், குழந்தை இறந்தே பிறப்பது, மூளை வளர்ச்சி இல்லாத குழந்தை, மூளைத்திறன் குறைவான குழந்தை, பேச்சு, கேட்கும் திறனில் குறைபாடுள்ள குழந்தை பிறக்க நேரிடும். அயோடின் சேர்க்கப்பட்ட சமையல் உப்பைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த குறைபாட்டை எளிதில் தடுக்கலாம்.

தைராய்டு பிரச்சினைகளுக்கு யோகா: யோகப்பயிற்சிகள் தைராய்டின் செயல்பாட்டை மட்டுமின்றி உடலிலுள்ள எல்லா பாகங்களின் செயல்திறனையும் திறம்பட செயல்பட வைக்கிறது. யோகப் பயிற்சிகள் சுரப்பிகளின் செயல்களைச் சீராக்குகின்றன. இது தவிர உடலின் சக்தியை அதிகரித்து மனஅழுத்தத்தைக் குறைத்து, வளைவுத் தன்மையை அதிகரித்து தசை மற்றும் மூட்டின் இறுகுத்தன்மையை குறைப்பதால் தைராய்டு பிரச்சினையின் பாதிப்புகளை சமாளிக்க முடிகிறது.

2010 வருடத்தின் ஆரம்பத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் ஈஷா யோக பயிற்சி செய்ததில், 51 சதவீதத்தினர், தங்கள் நோயில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், அதில் 50 சதவீதத்தினர் மருந்தின் அளவை குறைக்க முடிந்ததாகவும் கூறியுள்ளனர்.

நன்றி : டாக்டர்.பவானி பாலகிருஷ்ணன், ஈஷா மையம்

{pagination-pagination}

]]>
Thyroid, Hypothyroidism, Hyper thyroidism, தைராய்டு பிரச்சினைகள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/6/w600X390/thyroid.jpg http://www.dinamani.com/health/health-news/2017/apr/06/தைராய்டு-–-பிரச்சனைகளும்-தீர்வும்-2679831.html
2679368 மருத்துவம் செய்திகள் அவசர சிகிச்சைக்கு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை: சவீதா மருத்துவமனையில் அறிமுகம் Thursday, April 6, 2017 02:11 AM +0530 அவசர சிகிச்சைக்கு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதி ('ஏர் ஆம்புலன்ஸ்') சென்னை தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.
அவசர சிகிச்சைக்காக 'ஏவியேட்டர்ஸ் ஏர் ரெஸ்க்யூ' என்ற நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவையை காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா புதன்கிழமை தொடக்கி வைத்தார். அப்போது வான்வழி மீட்புக்குழுத் திட்டத்தின்படி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் நேரடி மீட்புக் காட்சி நடைபெற்றது.
சவீதா பல்கலைக்கழக நிறுவனர் டாக்டர் என்.எம்.வீரையன் செய்தியாளர்களிடம் கூறியது: நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவமனையை அடைவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் நோயாளிகளுக்கு பாதிப்பு தீவிரம் அடைவதுடன் சிலர் வழியிலேயே உயிரிழக்கவும் நேரிடுகிறது.
தற்போது ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் குறுகிய நேரத்துக்குள் சிகிச்சை அளித்து நோயாளியின் உயிரைக் காப்பாற்ற முடியும். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் மிக விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவார்கள். உறுப்புகளைத் தானமாகப் பெற்று விரைவாக எடுத்து வருவதற்கு இந்த சேவை பேருதவியாக இருக்கும்.
1 லட்சம் பேருக்கு முதலுதவிப் பயிற்சி: தமிழகத்தில் முதல் முறையாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அருகிலேயே ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் தரையிறங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சவீதா மருத்துவமனையின் சார்பில் 1 லட்சம் பேருக்கு 'சிபிஆர்' (உயிர் காக்கும் இதய-நுரையீரல் முதலுதவி சிகிச்சை) கற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
ரூ.18,000 செலவில் பெற நடவடிக்கை: இது குறித்து ஏவியேட்டர்ஸ் ஏர் ரெஸ்க்யூ இயக்குநர் கேப்டன் அருண் சர்மா கூறுகையில், தற்போதைய சூழலில் ஏர் ஆம்புலன்ஸ் சேவையைப் பெற ரூ.4 லட்சம் வரை செலவாகும். ஆண்டுக்கு ரூ.18,000 செலுத்தினால் குடும்பத்தில் உள்ள 4 உறுப்பினர்கள் பலன் பெறும் வகையில் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் மூலம் சாதாரண மக்களும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை குறைந்த கட்டணத்தில் பெற முடியும் என்றார்.
சவீதா மருத்துவமனை இயக்குநர் சவீதா ராஜேஷ், அவசர சிகிச்சை துறைத் தலைவர் எம்.ராஜதுரை, சவீதா மருத்துவக் கல்லூரி
முதல்வர் டாக்டர் டி.குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/6/w600X390/saveetha-hospital.jpg ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, பல்கலைக்கழக நிறுவனர் டாக்டர் என்.எம்.வீரையன், மருத்துவமனை இயக்குநர் சவீதா ராஜேஷ் உள்ளிட்டோர். http://www.dinamani.com/health/health-news/2017/apr/06/அவசர-சிகிச்சைக்கு-ஹெலிகாப்டர்-ஆம்புலன்ஸ்-சேவை-சவீதா-மருத்துவமனையில்-அறிமுகம்-2679368.html
2679236 மருத்துவம் செய்திகள் மலச்சிக்கல் குணமாக சில ஆலோசனைகள்  DIN DIN Wednesday, April 5, 2017 12:50 PM +0530 குடல் என்பது ஜீரண மண்டலத்தின் ஒரு பகுதியாகும். குடலில் ஏற்படும் கோளாறுகள் உடல் இயக்கத்தை பெருமளவில் பாதிக்கிறது. அதில் முக்கியமானது மலச்சிக்கல் ஆகும். இந்த மலச்சிக்கல் எதனால் ஏற்படுகிறது, அதிலிருந்து விடுபடுவது எப்படி போன்றவற்றை நமக்கு தெளிவுபடுத்துகிறது இந்தக் கட்டுரை. 

டாக்டர்.பவானி பாலகிருஷ்ணன் : 

குடல் என்பது ஜீரண மண்டலத்தின் ஒரு பகுதியாகும். குடலில் ஏற்படும் கோளாறுகள் உடல் இயக்கத்தை பெருமளவில் பாதிக்கிறது. மலச்சிக்கல் ஒரு வாரத்தில் 3 அல்லது அதற்கும் குறைவான தடவை மலம் வெளியேறினால், அல்லது மலம் மிகவும் வலியுடனுடம் மிகவும் உலர்ந்தும் வெளியேறினால் அதைத்தான் மலச்சிக்கல் என ஆங்கில மருத்துவம் கூறுகிறது. நபருக்கு நபர் குடலின் செயல்பாடுகள் மாறுபடும். வாழ்வில் எல்லோருக்கும் எப்பொழுதாவது மலச்சிக்கல் ஏற்படும். இது சில காலம் நீடிக்கும். இது எதனால் ஏற்படுகிறது என புரிந்து கொண்டால் இதைத் தடுக்க முடியும். 

நாம் உண்ணும் உணவு வயிற்றிலும், சிறுகுடலிலும் பயணிக்கும்போது பல்வேறு ரசாயனங்களுக்கு ஆட்படுத்தப்பட்டு, அதில் இருந்து உடலுக்குத் தேவையான சத்துக்கள் எடுக்கப்படுகின்றது. தேவையான சத்துக்களைப் பிரித்தெடுத்த பின் மிஞ்சும் சக்கை, கழிவாக பெருங்குடலுக்கு வந்து சேர்கிறது. பெருங்குடலில் தண்ணீர் அனைத்தும் உறிஞ்சப்பட்டவுடன், மீதி உள்ளவை மலமாக வெளியேற்றப்படுகிறது. 

மலச்சிக்கல் ஏற்பட பொதுவான காரணங்கள்: உணவுமுறையில் மாற்றம் குறைந்த நார்ச் சத்துள்ள உணவு சாப்பிடுவது தேவையான அளவு நீர் மற்றும் திரவ உணவுகள் அருந்தாமை இரும்பு, சுண்ணாம்பு மாத்திரைகள் மற்றும் வலியை மட்டுப்படுத்தும் சில மாத்திரைகள் உடல் உழைப்பின்மை அதிக மனஅழுத்தம் பிரயாணம் மலம் வரும் போது கழிக்காமல் அடக்கி வைத்துக் கொள்வது பெருங்குடல் மிக மெதுவாக வேலை செய்தால், கழிவுப்பொருட்கள் அதிகநேரம் தங்கி மலம் இறுகிவிடுகிறது. மருத்துவக் காரணங்கள்: பெருங்குடல், ஆசனவாய் இவற்றில் உள்ள தசைகளில் கோளாறு ஏற்படுவது தைராய்டு குறைவாகச் சுரப்பது சர்க்கரை நோய் பெண்களில் சிலருக்கு கர்ப்ப காலத்திலும், சிலருக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு மட்டும் மலச்சிக்கல் ஏற்படும். 

எவ்வாறு விடுபடுவது: வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் சரி செய்யலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும். அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் மலத்தை இளக்கும். நீங்கள் அன்றாடம் உட்கொள்ளும் உணவினால் மலச்சிக்கல் ஏற்படுகிறதா எனக் கவனிக்கவும். 

நீர் வறட்சி மலச்சிக்கலை ஏற்படுத்தும். அதிக திரவ உணவுகள் வறட்சியைத் தடுப்பதற்கு உதவும். ஆனால் காபி, டீ மற்றும் மது போன்றவற்றைத் தவிர்க்கவும். தொடர் உடற்பயிற்சி, குடல் சுறுசுறுப்பாக இயங்க உதவும். மலம் வரும்போது, வேறு வேலையில் ஈடுபட்டிருந்தாலும் புறக்கணிக்காமல் செல்லவும். எப்போதும் தளர்வு நிலையில் இருப்பது உதவும். 

மருந்துகள்: இப்பிரச்சினை மிகவும் பாதிப்பாக இல்லையென்றால் மருந்துகளைத் தவிர்ப்பது நல்லது. மிகுந்த தொந்தரவாக இருப்பின், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே மருந்துகளை உட்கொள்ள வேண்டும். நீங்களாகவே எடுத்துக்கொள்ளும் மருந்துகள் குடலின் செயல்பாட்டைப் பாதிக்கும். 

ரத்தம் கலந்த அல்லது கறுப்பான மலம்: மலத்தில் இரத்தம் கலந்திருந்தால், ஜீரண மண்டலத்தில் ஏதோ காயம் ஏற்பட்டிருக்கிறது என அர்த்தம். வாயிலிருந்து ஆசனவாய் வரை ரத்தக் கசிவு எங்கிருந்து வேண்டுமானாலும் ஏற்படலாம். ரத்தம் கறுப்பு நிறத்திலிருந்தால் ஜீரண மண்டலத்தின் முதல் பாதியிலிருந்தும் – சிகப்பு நிறத்தில் இருந்தால், ஜீரண மண்டலத்தின் இரண்டாவது பகுதியிலிருந்தும் வருவதாகக் கொள்ளலாம். வயிற்றுப் புண், ரத்த நாளங்களின் கோளாறுகள் போன்றவை கறுப்பான மலத்தை ஏற்படுத்தும். ஆசன வாயில் வெடிப்பு, ஹெமராய்ட்ஸ், குடலில் ஏற்படும் தொற்று, புற்றுநோய் மற்றும் குடல் நோய்கள் போன்றவை சிவப்பு நிற ரத்தப்போக்கை ஏற்படுத்தும். இரும்புச் சத்து மாத்திரைகள் மற்றும் பிற மருந்துகளும் மலத்தைக் கறுப்பு நிறமாக்கும். ஆஸ்பிரின் மற்றும் புரூஃபன் போன்ற வலி மாத்திரைகளைத் தேவைக்கதிகமாக உட்கொண்டால் வயிற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே மாத்திரைகளை உட்கொள்ளவும். 

வயிற்றுப் போக்கு: மலம் நீராகக் கழிவதும், ஒரு நாளில் மூன்று முறைக்குமேல் கழிவதும் வயிற்றுப் போக்கு எனச் சொல்லலாம். பொதுவாக, ஓரிரு நாளில் இது சரியாகிவிடும். இது அதிகமானால் உடலில் சரியான அளவு நீர் இல்லாமல், வறட்சி ஏற்பட்டு, உடல் இயக்கங்கள் பாதிக்கப்படும். குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு இத்தகைய நீர்வறட்சி உயிருக்கே ஆபத்தாக முடியும். 

வயிற்றுப் போக்கின் அறிகுறிகள்: வயிற்றுப் போக்குடன், அதன் காரணியைப் பொறுத்து, வயிற்றில் வலி, அசௌகரியம், உப்புசம், குமட்டல் உடனடியாக மலம் கழிக்க வேண்டும் போன்ற உணர்வு, ஜுரமோ அல்லது இரத்தம் கலந்த வயிற்றுப் போக்கோ நேரிடலாம். 

வயிற்றுப்போக்கு எதனால் ஏற்படுகிறது? பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளாலும் ஒட்டுண்ணிகளாலும் தீவிர வயிற்றுப் போக்கு ஏற்படும். உடலில் உள்ள மற்ற நோய்களாலும் நாட்பட்ட வயிற்றுப்போக்கு ஏற்படலாம். தொற்றுநோய்க் கிருமிகள் உணவு மற்றும் தண்ணீர் மூலமாக நமது உடலுக்குள் செல்கிறது. சிலரால் குறிப்பிட்ட உணவுப் பொருட்களை ஜீரணிக்க முடியாத போது வயிற்றுப் போக்கு ஏற்படும். சில வகையான ஆன்டிபயாடிக் மருந்துகள், பெருங்குடலில் எரிச்சல் மற்றும் தொற்றால் ஏற்படும் வியாதிகள் ஆகியவை வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும். 

குழந்தைகளின் வயிற்றுப்போக்கு: மேற்சொன்ன காரணங்களினால் குழந்தைகளுக்கும் வயிற்றுப் போக்கு ஏற்படும். குறிப்பாக ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, வறட்சி எளிதாக ஏற்பட்டு இறக்கவும் வாய்ப்பு உள்ளது. உடனடியாக நீர் அல்லது திரவங்கள் கொடுத்து வறட்சியைச் சரி செய்ய வேண்டும். வயிற்றுப் போக்கின்போது மலத்தில் ரத்தம் அல்லது சளி, கறுப்பான நிறத்தில் மலம், ஜுரம், அத்துடன் வாய், தோல், நாக்கு உலர்தல் போன்றவை இருந்தால் உடனே மருத்துவ உதவி தேவை. நீர் வறட்சி (Dehydration) வயிற்றுப் போக்கின்போது மலத்துடன், நீர் மற்றும் உடலுக்கு அத்தியாவசியமான தாதுப் பொருட்கள், உப்பு மற்றும் சத்துப் பொருட்கள் வெளியேறுகின்றன. உடனே சரி செய்யாவிட்டால் இது ஆபத்தில் முடியலாம். 

வறட்சியின் அறிகுறிகள்: தாகம் சிறுநீர் கழித்தல் குறைவது, எரிச்சலுடன் சிறுநீர் கழிவது, சிறுநீர் நிறத்தில் மாற்றம் உடல் உஷ்ணம் சருமம் உலர்தல் அசதி தலைச் சுற்றல் குழந்தைகளுக்கு ஏற்படும் அறிகுறிகள்: உலர்ந்த நாக்கு, உதடு மற்றும் சருமம், குழி விழுந்த கண்கள், கன்னம், காரணமின்றி அழுவது, அதிக ஜுரம், 3 மணி நேரங்களுக்கு மேல் சிறுநீர் கழிக்காதது, அழும்பொழுது கண்ணீர் வராதது. 
வறட்சியை எவ்வாறு தடுப்பது? வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், உடனடியாக இழந்த நீர் மற்றும் தாதுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு தண்ணீர் மட்டும் போதாது. அதனுடன் தாதுப் பொருட்களும் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு எளிய வழி தண்ணீருடன், உப்பு மற்றும் சர்க்கரை கலந்து எடுத்துக் கொள்ளலாம். (ஒரு லிட்டர் சுத்தமான நீர் அல்லது காய்ச்சி ஆறிய நீர் + 1 டீஸ்பூன் உப்பு + 8 டீஸ்பூன் சர்க்கரை) 

குடலில் ஏற்படும் நோய்கள்: கீழ்க்கண்டவை அனைத்தும் மலம் கழிப்பதில் மாற்றம் ஏற்படுத்தும். குடல் எரிவு வியாதிகள் (Inflammatory bowel disease) இந்த வியாதி குடல் எங்கிலும் எரிச்சலால் புண் ஏற்படுத்தும். பொதுவாக இது 15 – 30 வயதுகளில் ஆரம்பமாகும். வயிற்று வலி மற்றும் இரத்தம் கலந்த வயிற்றுப் போக்கு ஏற்படுத்தும். இது தவிர தோலில் புண், மூட்டுவலி, எடை குறைவு, அசதி, இரத்த சோகை போன்றவை ஏற்படும். பதற்றம், மன அழுத்தம் ஆகியவை இந்த அறிகுறிகளை அதிகப்படுத்தும். 
குடல் புற்றுநோய்: மலம் கழித்தலில் மாற்றம், வயிற்றில் அசௌகரியம், ரத்தம் கலந்த மலம் போன்றவை குடல் புற்று நோய்க்கான அறிகுறிகள். 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பொதுவாக இந்நோய் ஏற்படும். குடலில் எரிவு நோய்கள், அதிக கொழுப்புள்ள உணவுகளை உட்கொள்ளுதல், ஏற்கனவே குடும்பத்தாருக்கு குடல் புற்றுநோய் இருப்பது போன்றவை இந்நோய் ஏற்படும் வாய்ப்பை அதிகப்படுத்தும். இரிடபிள் பௌவல் சின்றோம் (Irritable bowel syndrome) குடலின் செயல்பாடுகளை தானியங்கி நரம்பு மண்டலம் கட்டுப்படுத்துகிறது. சிலவகையான உணவு மற்றும் மனஅழுத்தத்திற்கு சிலரின் குடல் வெகுவாக எதிர்விளைவு உண்டாக்கும். அதன் காரணமாக, வயிற்றில் வலி, மலம் கழித்த பிறகு வயிற்றுவலி குறைதல், உப்புசம், மலத்தில் சளி ஆகியவை ஏற்படும். 
நோய்க்கான காரணிகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அதிக உணவு, சாக்லேட், பால், காபி, டீ போன்ற உணவு வகைகள், சிலவகை மருந்துகள், உணர்ச்சிவசப்படுதல், மனச் சோர்வுடன் இருத்தல், பதற்றமடைதல் இவை அனைத்தும் இந்நோயின் வீரியத்தை அதிகப்படுத்தும். யோகா எவ்வாறு உதவுகிறது? யோகா உடலை பலவகையான சூழ்நிலைகளை எதிர்கொள்ள தயார் செய்கிறது. 

உடலை எப்போதும் தளர்வான நிலையில் இருக்கச் செய்வதால் மன அழுத்தத்தை குறைக்கிறது. இதனால் உடலின் பல்வேறு செயல்கள் திறம்பட நடக்கிறது. யோகா, குறிப்பாக, தானியங்கி மண்டலத்தை சமன் செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குடலின் செயல்பாடுகள் அனைத்தும் தானியங்கி மண்டலத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அது சமனாக இருந்தாலே, குடலில் ஏற்படும் கோளாறுகள் குறைகின்றன.

நன்றி : ஈஷா மையம்

]]>
Piles, Malachikkal, மலச்சிக்கல் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/5/w600X390/mala_chikkal.jpg http://www.dinamani.com/health/health-news/2017/apr/05/மலச்சிக்கல்-குணமாக-சில-ஆலோசனைகள்-2679236.html
2679224 மருத்துவம் செய்திகள் வைட்டமின் டி குறைபாடு ஆண்களை என்ன செய்யும்? Wednesday, April 5, 2017 11:21 AM +0530 நடுத்தர வயது ஆண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியின்மை காரணமாக உண்டாகும் பல்வேறு நோய்கள் மற்றும் ஹார்மோன் பிரச்னைகளுக்கு வைட்டமின் டி குறைபாடு காரணமாகலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.  

எலும்புகளின் வலுவுக்கு கால்ஷியம் மிகவும் முக்கியம். அந்த கால்ஷியம் சத்து உடலில் கிரகிக்கப்பட வைட்டமின் டி சத்து மிகவும் அவசியம். எலும்புகளின் ஆரோக்கியத்தை காப்பாற்றுவதை தாண்டி வைட்டமின் டிக்கு பல முக்கிய பணிகள் உண்டு. அதுவும் ஆண்களுக்கு நீரிழிவு வராமல் தடுப்பதில் தொடங்கி, குழந்தையின்மையைத் தவிர்ப்பது வரை இதில் அடக்கம்.

எலும்புகளில் மட்டுமின்றி, உடல் திசுக்கள் பலவற்றிலும் இந்த வைட்டமின் இருப்பதும், மூளையின் பிட்யூட்டரி சுரப்பி, தைராய்டு சுரப்பி, கணையம் போன்றவற்றிலும்கூட இருக்கிறது. ஆண்களுக்கு உயிரணு உற்பத்திக் குறை பாட்டுக்கும், அந்த அணுக்களின் தரக் குறைவுக்கும்கூட வைட்டமின் டி குறைபாடு காரணமாகலாம் என்கிறது இந்த ஆராய்ச்சி.

வைட்டமின் டி சத்தில் குறைபாடு ஏற்பட்டுவிட்டால் அது உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்காக செயல்படும் ஹார்மோன்களின் சீரான சுரப்பை குறைத்து விடுவதுடன் நாளாவட்டத்தில் உடல் தசை சரிவடைந்து பலவீனமடையச் செய்துவிடும் என்று அந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக உடலில் உள்ள சத்துக்களை இழந்து, உடல் இயக்கப் பிரச்னை ஏற்பட்டு, வயது ஏறும் போதே வலுவிழந்து, உடல் பகுதிகளில் பாதிப்படைந்து ஒரு கட்டத்தில் மரணம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது என்று அச்சுறுத்துகிறது இந்த ஆராய்ச்சி. உலகம் முழுவதும் பலவீனம் சார்ந்த பிரச்னைகள் அதிகரித்து வருகிறது என்கிறார் அக்னிஸ்கா ஸ்விகிக்கா.

எலும்பு அடர்த்தி மற்றும் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் டி மிகவும் அத்தியாவசியமானது என்றார். மேலும் தசை உட்சேர்க்கைக்குரிய அனபாலிக் ஹார்மோன் குறைபாடு ஏற்பட்டுவிட்டால் உடல் அதிகமாக பலவீனம் அடைந்துவிடும்.ஆண்களில் வயதானவர்களிடம் காணப்பட்ட குறைந்த அளவு டிஹைட்ரோஎபியன்டோஸ்டிரோன் ஹார்மோன் (dehydroepiandrosterone sulfate (DHEA-S))அவர்களை அதிக அளவு பலவீனப்படுத்துகிறது.

இத்தகைய ஆராய்ச்சிகள் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் பொருந்தாது. இன்னும் சில தீவிர ஆய்வுக்குப் பிறகே இதனைப் பற்றி முழுமையாகக் கூற முடியும். ஆனால் வைட்டமின் டி சத்து குறைவு நடுத்தர வயது ஆண்களையும் முதியோர்களையும் நிச்சயம் கடுமையாக பாதித்துவிடும் என்று ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் அக்னிஸ்கா ஸ்விகிக்கா

இந்த ஆய்வு முடிவு ஆர்லாண்டோவில் எண்டோக்ரைன் சொசைட்டியின் 99-வது வருடாந்திர எண்டோ 2017 கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

இத்தனை அவசியமான இந்த வைட்டமினை நம் உடலே உற்பத்தி செய்கிறது. சூரிய வெளிச்சத்தில் உள்ள புற ஊதா கதிர்கள், ஒரு வித ஹார்மோனின் தூண்டுதலின் உதவியுடன், டீஹைட்ரோ கொலஸ்ட்ரால் என்பதை சில வேதியல் மாற்றங்கள் செய்து, வைட்டமின் டியாக மாற்றித் தருகின்றன.

தேவையான அளவு வைட்டமின் டி அளவுகள் உணவுமுறையில் சேர்த்தல் மற்றும்/அல்லது சூரிய ஒளி வெளிப்பாடு ஆகியவற்றின் மூலம் பெற முடியும். வைட்டமின் D2வை விட விரைவாக உறிஞ்சப்படக் கூடிய வைட்டமின் D3 (கோல்கேல்சிஃபெரால்) என்பதே விரும்பப்படும் வடிவமாகும்.

காளான், மீனின் சதை (சல்மான், டியூனா மற்றும் மாக்கரெல்) மற்றும் மீனின் குடல் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் டி அதிக அளவில் இருக்கும் எனவே அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்கு மேல் அடிக்கடி கை, கால் வலி, எலும்பு வலி, உடல் வலி போன்றவை இருந்தால் உடனே மருத்துவரை நாடி வைட்டமின் டி சத்துக் குறைபாடு இருக்கிறதா என ரத்தப் பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி குறைபாடு உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டாலும் கவலை வேண்டாம். இதற்கான சிகிச்சையை உடனே மேற்கொண்டு இரண்டு அல்லது மூன்று மாதங்களில் குணமாக்கிவிடலாம். தினமும் 20 நிமிடங்களாவது சூரிய வெளிச்சம் படும்படி இருப்பது மிகவும் முக்கியம்.

]]>
Vitamin D, Bone problems in men, வைட்டமின் டி குறைபாடு, எலும்புகளின் வலு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/5/w600X390/vitamin_d.jpg http://www.dinamani.com/health/health-news/2017/apr/05/வைட்டமின்-டி-குறைபாடு-ஆண்களை-என்ன-செய்யும்-2679224.html
2678767 மருத்துவம் செய்திகள் ஆயுர்வேதத்தை ஊக்குவிக்க இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற ஆராய்ச்சியாளர்கள் உறுதி Wednesday, April 5, 2017 03:20 AM +0530  

ஆயுர்வேத மருத்துவத்தை உலக அளவில் ஊக்குவிப்பதற்காக, இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சர்வதேச மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் உறுதிபூண்டுள்ளனர்.
ஆயுர்வேத மருத்துவம் தொடர்பான 2 நாள் சர்வதேச மாநாடு, லண்டனில் கடந்த 1, 2-ஆம் தேதிகளில் நடைபெற்றது. 55 நாடுகளைச் சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 அம்ச தீர்மானம் குறித்து, மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
பல்வேறு நோய்களையும் தீர்க்கக் கூடிய புனிதமான ஆயுர்வேத மருத்துவத்தை, உலக அளவில் ஊக்குவிப்பதற்காக இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசின் ஆயுஷ் துறை மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுடன் இணைந்து, ஒவ்வொரு நாட்டுக்கும் தனிப்பட்ட ஆயுர்வேத மருத்துவத் திட்டத்தை உருவாக்க தீர்மானித்துள்ளோம். மேலும், ஆயுர்வேத மருத்துவத்தின் தரத்தை பராமரிப்பதற்காக சர்வதேச தர வாரியத்தையும், சர்வதேச ஆயுர்வேத கூட்டமைப்பையும் அமைக்க வேண்டும்.
ஒவ்வொரு நாட்டிலும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆயுர்வேதம் குறித்த பாடங்களை அறிமுகப்படுத்துவதற்காக அந்த நாடுகளுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் அந்த தீர்மானத்தில் உள்ளன.
மாநாட்டின்போது, நீரிழிவு நோய், இதயம், மூளை சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ஆயுர்வேத சிகிச்சை மூலம் தீர்வு கிடைப்பது குறித்து ஆதாரங்களுடன் விளக்கப்பட்டது என்று அவர்கள் தெரிவித்தனர். அலோபதி மருத்துவம் போலின்றி, எந்த பக்கவிளைவையும் ஏற்படுத்தாத ஆயுர்வேத மருத்துவம், உலக அளவில் பிரபலமாகத் தொடங்கியுள்ளது. பிரிட்டன் நாட்டு தேசிய சுகாதார சேவைத் திட்டத்தில் ஆயுர்வேதத்தையும் சேர்ப்பது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அந்தத் தீர்மானத்துக்கு தற்போது 30 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.
இதேபோல, பிரேஸில் நாட்டு பொது சுகாதார மையங்களில் ஆயுர்வேத சிகிச்சை கிடைக்க வகை செய்யும் சட்டம் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது.

 

]]>
http://www.dinamani.com/health/health-news/2017/apr/05/ஆயுர்வேதத்தை-ஊக்குவிக்க-இந்தியாவுடன்-இணைந்து-பணியாற்ற-ஆராய்ச்சியாளர்கள்-உறுதி-2678767.html
2678791 மருத்துவம் செய்திகள் நூலகத்தில் தங்கும் பல் மருத்துவ மாணவர்கள்: அடிப்படை வசதி கோரி போராட்டம் Wednesday, April 5, 2017 02:28 AM +0530 விடுதிகள் கட்டப்படாமல் அரசு பல் மருத்துவ மாணவர்கள் நூலகம் மற்றும் கலையரங்கத்தில் தங்கி வருவதால், அடிப்படை வசதி கோரி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த அரசு பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அங்கிருந்து சுமார் 2 ஆண்டுகளுக்கு முன் மாற்றப்பட்டனர்.
ஆனால், இதுவரை அவர்களுக்கென்று தனி விடுதி கட்டப்படவில்லை. மேலும் தங்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை என்று கூறி கல்லூரி வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக மாணவர்கள் கூறியது: சென்னை மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்து வெளியேறிய பின், முதல் மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் பல் மருத்துவக் கல்லூரியின் பழைய வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளோம்.
அந்த வளாகத்தில் உள்ள பழைய நூலகத்திலும், கலையரங்கத்திலும் தங்கியிருக்கிறோம். எங்களுக்கு தனி விடுதி வசதி இல்லை. 42 மாணவர்களுக்கு 3 கழிவறைகள் மட்டுமே உள்ளன. மாதம் ரூ.4 ஆயிரம் கட்டணம் செலுத்தியும் உணவு, விடுதி பராமரிப்பு என்ற எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்றனர்.
மாணவிகள் கூறுகையில், பல் மருத்துவ மாணவிகளுக்கு என்று தனி விடுதி இருந்தாலும், அங்கு கழிவறை வசதிகள் முறையாக இல்லை.
சுத்திகரிக்கப்படாத தண்ணீர்தான் குடிப்பதற்கு வழங்கப்படுகிறது. புழுக்களும், பூச்சிகளும் கிடக்கும் மாசடைந்த தண்ணீரில்தான் குளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்தப் பயனும் இல்லை என்றனர்.
இதனையடுத்து மருத்துவக் கல்வி இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் நாராயண பாபு பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/5/w600X390/doctor.jpg அடிப்படை வசதி கோரி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள். http://www.dinamani.com/health/health-news/2017/apr/05/நூலகத்தில்-தங்கும்-பல்-மருத்துவ-மாணவர்கள்-அடிப்படை-வசதி-கோரி-போராட்டம்-2678791.html
2678779 மருத்துவம் செய்திகள் சிம்ஸ் மருத்துவமனையில் அதிநவீன ஆம்புலன்ஸ் சேவை Wednesday, April 5, 2017 02:16 AM +0530 வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் அதிநவீன உயிர் காக்கும் மருத்துவ வசதிகள் நிறைந்த ஆம்புலன்ஸ் சேவை தொடக்கவிழா செவ்வாய்கிழமை நடைபெற்றது.
எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் ரவி பச்சமுத்து அதிநவீன உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் சேவையைத் தொடக்கி வைத்து பேசியது:
சென்னை நகரில் செயல்படவிருக்கும் 16 அதிநவீன உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு விரைவான, தரமான மருத்துவச் சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்க பாஸ்டன் அவசர சிகிச்சை மருத்துவக் குழுவினர் மூலம் பயிற்சி அளிக்கப்பட்ட அவசர சிகிச்சை மருத்துவர்கள், ஓட்டுநர்கள், செவிலியர்கள், மருத்துவச் சேவை உதவியாளர்கள் 24 மணிநேரமும் அதிநவீன உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
சிம்ஸ் மருத்துவமனை மருத்துவப் பிரிவு துணைத் தலைவர் டாக்டர் கே.ஸ்ரீதர் பேசும்போது, 'சிம்ஸ் மருத்துவமனையின் அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு 044 -2000 2020 எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்' என்றார்.
பாஸ்டன் சர்வதேச அவசர சிகிச்சை மருத்துவப் பிரிவு தலைமை மருத்துவர் சையத் யாசின்,சிம்ஸ் மருத்துவமனை அவசர சிகிச்சை மருத்துவர் எஸ்.ஜெயராமன், துணைத் தலைவர் ராஜூ சிவசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

]]>
http://www.dinamani.com/health/health-news/2017/apr/05/சிம்ஸ்-மருத்துவமனையில்-அதிநவீன-ஆம்புலன்ஸ்-சேவை-2678779.html
2678753 மருத்துவம் செய்திகள் பழனி அரசு மருத்துவமனையில் குழந்தை மாயம் DIN DIN Wednesday, April 5, 2017 01:33 AM +0530 பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த பெண்ணின் ஒன்றரை வயது ஆண் குழந்தை செவ்வாய்க்கிழமை அதிகாலை மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பழனியை அடுத்த அ.கலையமுத்தூரைச் சேர்ந்த விவசாயக் கூலி ஒண்டிவீரன். இவரது மனைவி தேவிகா (30). இவர், காய்ச்சல் காரணமாக திங்கள்கிழமை பழனி அரசு மருத்துவமனையில் மகளிர் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தனது ஒன்றரை வயது மகன் பிரேம்குமாருடன் சென்றிருந்த தேவிகாவுக்கு உதவியாக, இவரது மாமியார் அழகு இருந்துள்ளார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு எழுந்து பார்த்தபோது, தனது ஒன்றரை வயது மகன் பிரேம்குமாரை காணவில்லையாம். பல இடங்களில் தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், அதே வார்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நெஞ்சுவலியால் அனுமதிக்கப்பட்டிருந்த மதினா நகரைச் சேர்ந்த ஷாஜிதா பேகம் என்பவரும் காணாமல் போயுள்ளார். பிரேம்குமார் காணாமல் போனதில் இவருக்கு தொடர்பு இருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த புகாரின்பேரில், பழனி டி.எஸ்.பி. வெங்கட்ராமன் மருத்துவமனைக்கு நேரில் சென்று செவிலியர்களிடமும், அங்கிருந்த நோயாளிகளிடமும் விசாரணை மேற்கொண்டார். மேலும், பழனி டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அரசு மருத்துவமனை, காவல் துறையின் போக்குவரத்து பிரிவு விடியோ பதிவு, அப்பகுதியில் உள்ள கடைகளின் சிசிடிவி பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

 

]]>
http://www.dinamani.com/health/health-news/2017/apr/05/பழனி-அரசு-மருத்துவமனையில்-குழந்தை-மாயம்-2678753.html
2678752 மருத்துவம் செய்திகள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவி சாவு: தட்டம்மை தடுப்பூசி போட்டதால் பாதிக்கப்பட்டதாக தாய் புகார் Wednesday, April 5, 2017 01:32 AM +0530 தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 ஆம் வகுப்பு மாணவி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். அவருக்கு ரூபெல்லா தட்டம்மை தடுப்பூசி போட்டதால் பாதிப்பு ஏற்பட்டதாக மாணவியின் தாய் புகார் தெரிவித்தார்.
தூத்துக்குடி கேடிசி நகர் அருகேயுள்ள காமராஜ் நகரைச் சேர்ந்த முனியசாமி- ராமலட்சுமி தம்பதி மகள் காமாட்சி (11). இவர், அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவி காமாட்சி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
போராட்டம்: இதற்கிடையே, மாணவியின் தாய் ராமலட்சுமி மற்றும் உறவினர்கள் காமாட்சியின் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவி காமாட்சிக்கு கடந்த 20 ஆம் தேதி சின்னக்கண்ணுபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ரூபெல்லா தட்டம்மை தடுப்பூசி போட்டதாகவும், அதற்கு பிறகே அவருக்கு காய்ச்சல் தீவிரமானதாகவும் குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் கூறியது: மாணவி காமாட்சிக்கு என்ன நோய் இருந்தது, தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டதால்தான் பாதிக்கப்பட்டாரா என்பது குறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிடம் அறிக்கை தரும்படி கேட்டுள்ளோம். அந்த அறிக்கை கிடைத்த பிறகே மாணவியின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்றார்.

 

]]>
http://www.dinamani.com/health/health-news/2017/apr/05/தூத்துக்குடி-அரசு-மருத்துவமனையில்-சிகிச்சை-பெற்ற-மாணவி-சாவு-தட்டம்மை-தடுப்பூசி-போட்டதால்-பாதிக்கப்ப-2678752.html
2678155 மருத்துவம் செய்திகள் ஊதிய முரண்பாடு: கோரிக்கை அட்டையுடன் பணிக்கு வந்த மருத்துவர்கள் Tuesday, April 4, 2017 02:19 AM +0530 ஆறாவது ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களையக் கோரி அரசு மருத்துவர்கள் கோரிக்கை அட்டைகளை அணிந்து திங்கள்கிழமை பணிக்குச் சென்றனர்.
இதுகுறித்து அரசு மருத்துவர்கள் கூறியது:
ஆறாவது ஊதியக் குழுவில் மத்திய அரசு மருத்துவர்களுக்கும் மாநில அரசு மருத்துவர்களுக்கும் இடையே பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. இதன் மூலம் மருத்துவர்களுக்கு 4 ஆண்டுகளில் கிடைக்க வேண்டிய சலுகை 8 ஆண்டுகளிலும், 13 ஆண்டுகளில் கிடைக்க வேண்டிய சலுகைகள் 20 ஆண்டுகளிலும்தான் கிடைக்கின்றன. மேலும், மத்திய அரசு மருத்துவர்களுக்கும் தமிழக அரசு மருத்துவர்களுக்கும் ஊதியத்தில் ஒரு மாதத்துக்கு ரூ.30 ஆயிரம் வேறுபாடு காணப்படுகிறது. இவற்றைக் களைந்த பின்புதான், 7 -ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும்.
எனவே, 6 -ஆவது ஊதியக் குழுவின் முரண்களைக் களையக் கோரும் கோரிக்கைகள் அடங்கிய அட்டையை அணிந்து பணிக்குச் செல்கிறோம் என்றனர்.

 

]]>
http://www.dinamani.com/health/health-news/2017/apr/04/ஊதிய-முரண்பாடு-கோரிக்கை-அட்டையுடன்-பணிக்கு-வந்த-மருத்துவர்கள்-2678155.html