Dinamani - தொடர்கள் - http://www.dinamani.com/health/health-serials/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2577651 மருத்துவம் தொடர்கள் புதையல் - 2 பிரியசகி Saturday, October 8, 2016 11:36 AM +0530 வழக்கமாக பள்ளியா அல்லது சந்தையா என சந்தேகத்தை எழுப்பும் விதத்தில் மிக அதிக சத்தத்துடன் இருக்கக் கூடிய பள்ளியில் அன்று குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் என்பது போன்ற அசாதாரண அமைதி நிலவியது. காரணம் புதிய தலைமை ஆசிரியர் அடிக்கடி வகுப்பு வராண்டாக்களில் சுற்றி நடந்து பார்வையிட்டுக் கொண்டிருந்ததும், அவரிடம் கெட்ட பெயர் வாங்கி விடக் கூடாதென ஆசிரியர்கள் போனில் பேசுதல், பிற ஆசிரியர்களிடம் அரட்டை அடித்தல், அந்த வகுப்பிற்கு தொடர்பற்ற வேறு வேலைகள் பார்த்தல் போன்றவற்றை எல்லாம்  விடுத்து  ஒழுங்காகப் பாடம் நடத்திக் கொண்டிருந்ததுமே  முக்கிய காரணம்..

அப்படி வந்து கொண்டிருந்த போது ஒரு வகுப்பிலிருந்து மட்டும் சத்தம் வரவே ஜன்னலருகில் நின்று பார்த்தார் அறிவொளி. முன் இருக்கையில் இருக்கும்  சில மாணவர்கள் மட்டும் ஒழுங்காக வகுப்புத் தேர்வு எழுதிக் கொண்டிருக்க, பின் இருக்கை மாணவர்கள் பலரும் புத்தகத்தைப் பார்த்து காப்பி அடித்துக் கொண்டிருந்தனர். திடீரென கடைசி இருக்கையிலிருந்த  இரு மாணவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர், ஒருவன்  மற்றவனின் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட சில்லு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது,    நடப்பது எதுவுமே தன்னை பாதிக்காததுபோல் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அலைபேசியை   நோண்டிக்கொண்டிருந்த தமிழாசிரியர் ராஜாராம், ‘ஐயோ சார் இரத்தம்’, என்ற மாணவர்களின்  சத்தம் கேட்டு நிஜவுலகிற்கு மீண்டு வந்தார்.

ரமேஷ் என்ற மாணவனின் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டுவதைக் கண்டு ‘என்னடா ஆச்சு?’ என அதிகாரத் தொனியில் மிரட்டினார். ‘கார்த்திக்கும்  விஷ்ணுவும்  காப்பி அடிச்சிக்கிட்டிருந்தாங்க  சார். உங்க கிட்ட சொல்லிடுவேன்னு சொன்னதுக்கு என்ன அடிச்சுட்டான் சார்’  என அவன் பக்கத்திலிருந்த கார்த்திக்கைக்    காட்டினான். உடனே  மூக்குடைந்த ரமேஷை வகுப்புத் தலைவனோடு  முதலுதவிக்காக  அனுப்பிவிட்டு கார்த்திக் விஷ்ணு இருவரையும் நோட்டை எடுத்துக் கொண்டு முன்னால்  வரச்சொன்னார். இருவரது நோட்டியிலும் ஒரே மாதிரியான பதில் ஒரே விதமான பிழைகளுடன் இருப்பது கண்டு காப்பி அடித்ததை உறுதி படுத்திக்கொண்டார்.

ராஜாராம்: சொல்லுங்க, யாரு யாரைப் பார்த்து எழுதுனீங்க?

இரண்டு பேருக்கும் பிரம்பு கொண்டு காலில் ஒரு அடி போட்டார். பின் கார்த்திக்கின் சட்டையை பிடித்து இழுத்து   மீண்டும் அடிக்க கைஓங்கினார். ஓங்கிய அவரது கையை பிடித்து தடுத்தான் கார்த்திக்.

கார்த்திக் : சார் சும்மா அடிக்காதிங்க. நாங்க காப்பி அடிச்சதை  நீங்க பாத்தீங்களா? கிளாஸ் டைம்ல  போன்ல ஏதோ பண்ணிக்கிட்டிருந்தீங்க? உங்களுக்கு எப்படி நாங்க ஒழுங்கா எழுதினோமா இல்ல காப்பி அடிச்சோமான்னு   தெரியும்?

ராஜாராம் : ஏண்டா, மொசப் புடிக்கிற நாயை மூஞ்சியப் பாத்தா தெரியாது? நீ எப்புடி படிப்பேன்னு எனக்குத் தெரியாதா? காப்பி அடிக்கிறதுமில்லாம என்னையே எதிர்த்து பேசுறியா? 

ஆத்திரத்தில் கண்கள் சிவக்க   கார்த்திக்கைப்  பிரம்பு கொண்டு அடிக்க ஆரம்பித்தார். ‘மிஸ்டர். ராஜாராம்’ என்ற குரல் கேட்டு  திரும்பிப்  பார்த்தபோது தான் ஜன்னலருகே தலைமை ஆசிரியர் நிற்பதை கண்டு  அதிர்ந்தார் ராஜாராம். வகுப்பறையை விட்டு வெளியே வந்தவர் தலைமை ஆசிரியர் நடந்ததைப்  பற்றி  ஒன்றுமே சொல்லாமல் கார்த்திக்கையும் விஷ்ணுவையும்  என் அறைக்கு அனுப்புங்கள் என்று சொல்லிவிட்டு  போவதைக் கண்டு இது புயலுக்கு முன் அமைதியோ எனக்  குழம்பினார். 

அவர் சென்று சில நிமிடங்களில் பள்ளி அலுவலக ஊழியர் ஒரு சுற்றறிக்கையைக் கொண்டு வந்தார். அதில் ஆசிரியர்கள் தங்கள் அலைபேசியை காலை வந்ததும் தலைமை ஆசிரியர் அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு மாலை வீட்டிற்குச் செல்லும் போது  எடுத்துக் கொள்ளலாம். மாணவர்களை கடும் வார்த்தைகளால் திட்டவோ, அடிக்கவோ  கூடாது, என்பது உள்ளிட்ட இருபது விதிமுறைகள் பட்டியலிடப்பட்டிருந்ததோடு அன்று மாலை பள்ளி முடிந்ததும் ஆசிரியர்களுக்கான கூட்டம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப்  படித்ததும் ராஜாராம்   கோபத்தில் சுற்றறிக்கையில்  கையெழுத்து போடாமல் அதைக் கொண்டு வந்தவரின் முகத்திலேயே விட்டெறிந்தார்.

ராஜாராம் :  எங்கள என்ன இவர் வீட்டு வேலைக்காரங்கன்னு நெனச்சாரா? இவருக்கு யாரு இந்த அதிகாரத்தை கொடுத்தது?

ஊழியர் :  உங்க கோபத்தை என்கிட்ட ஏன் சார் காட்டுறீங்க? முடிஞ்சா அவர் கிட்ட காட்டுங்க.

(கீழே விழுந்த சுற்றறிக்கையை  எடுத்துக் கொண்டு அடுத்த ஆசிரியரை நோக்கிப் போனார்)

ராஜாராம் : காட்றேன். நான் யாருனு அவருக்கு காட்றேன் .

(கறுவிக் கொண்டே ஆசிரியர் ஓய்வறையை நோக்கிச் சென்றார்.)

தலைமை ஆசிரியர் அறையில் அறிவொளி நாற்காலியில் அமர்ந்திருக்க கார்த்திக்கும் விஷ்ணுவும் தலை குனிந்தபடி நின்று கொண்டிருந்தனர்.

அறிவொளி : என்ன விஷ்ணு, என்ன நடந்துச்சு?

(விஷ்ணு  அமைதியாக இருக்கவே  கார்த்திக் பேச ஆரம்பித்தான்.)

கார்த்திக்: சார் என்ன மன்னிச்சுடுங்க .எனக்குப்  பாடம் புரியாததால நான் படிக்கல. மார்க் கம்மியா எடுத்தா சார் அடிப்பாருனு   நான் தான் சார் காட்ட சொல்லி தொந்தரவு பண்ணேன். ஃப்ரெண்டாச்சே காட்டலேன்னா கோச்சிக்குவேனோன்னு நினச்சு அவன் காட்டிட்டான். தப்பு எம் மேல தான்.

அறிவொளி : காப்பி அடிக்கிறது, காப்பி அடிக்க உதவுறது ரெண்டுமே தப்புதான். நீயா முன்வந்து   ஒத்துக்கொண்டது எனக்கு சந்தோசம். ஆனா கிளாஸ்ல சார் கேட்டப்போ ஏன் நீ ஒத்துக்கல ?

கார்த்திக் : நீங்க கேக்குறது போல அவர் தனியா கூப்பிட்டு கேட்டிருந்தா ஒத்துக்கிட்டிருப்பேன் சார், எடுத்தவுடனே குச்சிய வெச்சு எல்லார் முன்னாடியும் அடிக்கிறவர்கிட்ட நான் ஏன் உண்மையை சொல்லணும், எதிர்த்து பேசணும்னு தான் தோணும். நான் காப்பி அடிச்சது தப்புன்னா அவர் கிளாஸ்ல  உக்காந்துக்கிட்டு  போன்ல வாட்ஸ் அப்  பாக்குறதும்  தப்பு தானே சார். அவர் ஒழுங்கா டெஸ்ட் வெச்சு ரவுண்ட்ஸ் வந்து காப்பி அடிக்காம பாத்துக்கலாம் இல்ல?   

அறிவொளி : இதெல்லாம் சரி தம்பி, இப்ப நீ பத்தாவது படிக்குற, வகுப்புத்தேர்வுல எல்லாம் காப்பி அடிச்சுக்கிட்டிருந்தா கடைசியில என்னாகும் யோசிச்சியா?

(ஒரு நிமிடம் அமைதியாக யோசித்தான்  கார்த்திக். அந்த ஒரு நிமிடமும் அதைத் தொடர்ந்து அவன் அறிவொளியுடன் பல நாட்கள் பேசிக் கற்றுக்கொண்ட பல விஷயங்களும் அவனது வாழ்க்கையை மாற்றி போட்டன)

கார்த்திக் : பத்தாவது ஃபெயிலாகி நான்தான் வாழ்க்கையில கஷ்டப்படணும். சாரி சார், இனி நான் காப்பி அடிக்க மாட்டேன். ஆனா படிக்கணும்னு உக்காந்தாலும் எனக்கு எதுவும் புரிய மாட்டேங்குது சார்.என்ன பண்றது?

அறிவொளி : விஷ்ணு நீ சொல்லு இதுக்கு என்ன பண்ணலாம்?

விஷ்ணு : சார், டெஸ்ட் நேரத்துல காப்பி அடிக்க உதவுறதுக்கு பதிலா தினமும் ஸ்கூல் முடிஞ்ச பிறகு ஒரு மணி நேரம் நான் இவனுக்கு சொல்லித்தரேன் சார்.

அறிவொளி : வெரி  குட். பதிலுக்கு கார்த்திக் நீ உனக்கு தெரிஞ்ச நல்ல விஷயங்களை விஷ்ணுவுக்கு சொல்லிக் கொடு.

கார்த்திக் : எனக்கு என்ன சார் தெரியும்? நான் தான் எதுக்கும் லாயக்கில்லை, சுத்த வேஸ்ட்டுனு எல்லாரும் சொல்றாங்களே.

அறிவொளி : விஷ்ணு நீ கார்த்திக் கிட்ட கத்துக்க கூடிய நல்ல விஷயம் ஏதாவது இருக்கா?

விஷ்ணு : ஓ! நிறைய இருக்கு சார். கார்த்திக் ரொம்ப தைரியமானவன் சார். இப்பக்கூட பாருங்க ராஜாராம் சார் பண்ற தப்பைக் கூட தைரியமா உங்ககிட்ட சொல்லிட்டான். எல்லோரையும் பேசியே கவுத்துடுவான் சார் . விவாதம்னு வந்தா இவனை பேசி ஜெயிக்க முடியாது. இவனை சுத்தி எப்பவும் நண்பர்கள் கூட்டம் இருக்கும். நல்லா பாட்டு பாடுவான். சமயத்துல எனக்கு பொறாமையா கூட இருக்கும்.  

அறிவொளி : பாத்தியா கார்த்திக், உன்னோட பலம் உனக்கு தெரியல. ஆனா உன் பிரெண்டுக்கு நல்லா தெரிஞ்சுருக்கு. உலகத்துல யாருமே வேஸ்ட்  கிடையாது. நல்ல படிக்குறவங்க மட்டும் தான் வாழ்க்கையில பெரிய ஆளா ஆக முடியும்னு எல்லாம் எந்த சட்டமும் கிடையாது. மொத்தம் எட்டு விதமான அறிவுத் திறன் இருக்கு. ஒவ்வொருத்தருக்கும் இதில் இரண்டு அல்லது மூணாவது இருக்கும். நம்ம பலம் என்ன பலவீனம் என்ன என்ற விழிப்புணர்வும், எதையும் கத்துக்கணும் என்ற ஆர்வமும், முயற்சியும் இருந்தாலே போதும். எல்லோராலும் சாதிக்க முடியும்.  

கார்த்திக் :  சார், அது  என்ன சார் எட்டு விதமான அறிவுத்திறன்?

அறிவொளி : இப்ப நேரமாச்சு, வகுப்புக்கு போய்ட்டு  நாளைக்கு வாங்க நான் சொல்றேன்.

கார்த்திக் : சரிங்க சார்.

(சந்தோஷமாக செல்லும் பிள்ளைகளை ரசித்தவாறே மாலை ஆசிரியர் கூட்டத்தில் என்ன பேச வேண்டும் என்பது பற்றி சிந்திக்கலானார் அறிவொளி.)

பிள்ளைகள் தவறு செய்யும் போது, தான் தவறு செய்கிறோம் என்பதை அவர்கள் உணரும்படி செய்து அதைத் திருத்திக் கொள்ள வேண்டுமென  அவர்களாகவே முடிவெடுக்கும்படியாக உதவி செய்வதுதான் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பணி . மாறாக அறிவுரை கூறுவதோ , திட்டுவதோ, அடிப்பதோ எவ்விதத்திலும் பயனளிக்காது.

 தேடலாம்….

- பிரியசகி

priyasahi20673@gmail.com 

]]>
kanden puthaiyalai, priyasaki http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/10/7/w600X390/GettyImages-487332630_resized-450x400.jpg http://www.dinamani.com/health/health-serials/2016/oct/08/புதைய-2577651.html
2689 மருத்துவம் தொடர்கள் முடமாக்கும் மூட்டு நோய்களும் குணமாக்கும் ஹோமியோ மருந்துகளும் dn Wednesday, July 27, 2016 02:31 PM +0530 மூட்டுவலி நோய் வருவதற்கு வயது வரம்பு இல்லை. சிறு பிராயத்திலும் வருகிறது. முதுமையிலும் வருகிறது. பறவைகள் போல் சுதந்திரமாய் ஓடியாடித் திரிய வேண்டிய இளம் தளிர்களையும் கூட இந்நோய் தாக்கி, முடக்கிப் போடுவது பரிதாபக்குரியது. முதியவர்களுக்கு இந்நோய் தாக்கி முதுமையைச் சுமையாகவும் சோகமாகமாவும் மாற்றி விடுகிறது. மூட்டு வலியால் பாதிக்கப்படைந்த பெரும்பாலனவர்கள் நடைபிணங்களாகவே வாழ்ந்து வருகின்றனர். மூட்டு வலி இல்லாத குடும்பமே இல்லை என்று கூறுமளவு இந்நோய் பரவியுள்ளது. மூட்டுவலி நோய்க்கு Arthritis என்று பெயர். இது லத்தீன் சொல்லாக்கம். Arthritis என்பதற்கு மூட்டு Joint என்றும் itis என்பதற்கு வேக்காடு என்றும் பொருள். ஒன்று அல்லது மேற்பட்ட மூட்டுகளில் ஏற்படும் அழற்சி வீக்க நோய் Arthritis எனப்படுகிறது.

மூட்டுவலி நோய்களில் பல வகைகள் உண்டு. Rheumatoid Arthritis எனப்படும் வாதமூட்டு அழற்சி பல மூட்டுகளில் ஏற்படும் பாதிப்பாகும். இதனால் மூட்டுகள் மட்டுமன்றி பிற உறுப்புகளும் பாதிக்கக்கூடும். ஆண்களை விடப் பெண்களிடம் அதிகம் காணப்படும். இந்நோய் 20 வயது முதல் 50 வயது வரையிலானவர்களைத் தாக்குகிறது. இந்நோயாளிகளில் 10 முதல் 12 சதவிகிதம் பேர்கள் மட்டும் மரபுக் காரணங்களால் பாதிக்கப்பட்டவர்கள். இந்நோயில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுகளின் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக விரல் மூட்டுகளில் அழற்சி வலியும், விரல்களின் செயல்பாடு குறைந்தும் மூட்டுத் தசைகள் இளைத்தும் காணப்படும். மூட்டுகள் தவிர கண்கள், ஜீரண உறுப்புகள், சுவாச உறுப்புகள், இருதயம் போன்றவையும் பாதிக்கபடக்கூடும். காலப்போக்கில் மூட்டுகளில் உருவ அமைப்பு (Deformitis) உருக்குலைந்து போகும்.

Osteoi Arthritis எனப்படும் மூட்டுவலி 50 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு மூட்டு தேய்மானத்தால் ஏற்படுகிறது. நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு, அதிக உடல் எடை, ஹார்மோன் கோளாறுகள் போன்ற காரணங்களாலும் இந்நோய் ஏற்படுகிறது. உடல் பருமனைச் சுமக்கக் கூடிய எந்த மூட்டிலும் இப்பிரச்னை ஏற்படலாம். பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலத்தில் (Menopause) இக்குறைபாடு தோன்றுகிறது. கர்ப்பப்பையை ஆபரேஷன் மூலம் அகற்றிய பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடு ஏற்பட்டு, மூட்டு எலும்புகளில் தேய்மானம் வேகமாக ஏற்படுகிறது.

நிற்க, நடக்க, படியேற முடியாத அளவு வலியின் தாக்கம் இருக்கும். மூட்டுவலியின் உக்கிரத்தால் மூட்டுகளை அசைக்கக் கூட முடியாத நிலைமை ஏற்படலாம். மூட்டுகளிலுள்ள குருத்தெலும்பு தேய்ந்து உண்டாகும். இந்த வகை மூட்டுச் சிதைவு நோய் பாரம்பரியமாக ஏற்படுவதில்லை.

Gouty Arthritis எனப்படும் மூட்டு அழற்சி வளர்சிதை மாற்றக் குறைப்பாட்டால் மூட்டுக்களிலுள்ள குருத்தெலும்பில் யூரிக் அமிலப் படிகங்கள் படிவதால் ஏற்படுகிறது. 70 சதவிகித யூரிக் அமிலம் சிறுநீரின் மூலமாக வெளியேற்றப்படுகிறது. இந்த அளவில் குறைவு ஏற்பட்டால் இந்நோய் உருவாகிறது. பெரும்பாலும் கால் கட்டை விரல் மூட்டில் இந்நோய் வீக்கம் வலியுடன் தோன்றுகிறது. அடிபடுவதால், அசைவ உணவுகள், இனிப்பு ரொட்டிகள், காளான்கள், காலிஃபிளவர் போன்ற உணவுகளால், அதிக எடையால், சுற்றுப்புறச் சூழலால், பாரம்பரியக் காரணங்களால் மாதவிடாய் நின்று விடுவதால் இந்நோய் ஏற்படக்கூடும். சிறு மூட்டுகள், முதல் பெரு மூட்டுகள் வரை இந்நோய் தாக்கக்கூடும். ஆண்களை அதிகம் பாதிக்கக்கூடிய இந்நோய்க்கு, சிகிச்சை பெறும் போதும் உணவுக் கட்டுப்பாடு அவசியம்.

இதுவரை கூறப்பட்ட மூட்டுவலிகளுக்கும் இதர வகை மூட்டுவலிகளுக்கும் அடிப்படையான ஏராளமான காரணங்கள் உள்ளன. அவற்றுள்  முக்கியமானவை உடல்நோய் எதிர்ப்பு மண்டலத்தின் திறன், செயல்பாடு பாதிப்பு, மரபியல் தன்மைகள், கால்ஷியம், யூரேட் உப்பு படிதல், தொற்று நோய்கள் ஈரமான வசிப்பிடம், அதிக உணவு, அதிக உடல் எடை, மது முறையற்ற வாழ்க்கை, இத்தகைய காரணங்களால் மூட்டுகள், சைனோவியல் உறை, குருத்தெலும்பு, இணைப்பு திசுக்கள் போன்றவை பாதிக்கப்படுகின்றன. இவற்றுடன் ஜீரண உறுப்புகள், சுரப்பிகள், கல்லீரல், மண்ணீரல் இருதயம் போன்றவற்றின் பாதிப்பும் இணைந்து கொள்ளும் போது ஆரோக்கியத்தின் அஸ்திவாரமே தகர்கிறது.

மூட்டுவலி நோயாளிகளுக்கு ஹோமியோபதி சிகிச்சையளிக்கும் போது அவர்களது உடல், மன இயல்புகளை ஒட்டுமொத்தமாக ஆய்வு செய்யப்படுகிறது. ஆங்கில மருத்துவத்தைப் பொறுத்தவரை முட்டுநீர் சுரக்கும் உறையை வெட்டி எடுத்தல் (Synovectomy) துளை மூட்டு அறுவைசிகிச்சை (Arthroscopic Surgery) செயற்கை மூட்டு பொருத்துதல் (Joint Replacement) போன்ற முறைகளைக் கையாளுகின்றனர். உடலியக்கப் பயிற்சி (Physio Therapy) மின்வெப்ப சிகிச்சை (Electrical Pads) பனிக்கட்டி, மெழுகு ஒத்தடம் (Ice and Wax Path) ஆகியவற்றோடு ஸ்ட்ராய்டு மருந்துகள், வலி நிவாரணிகளை அள்ளி வழங்குகின்றனர். இவை எல்லாம் தருவது தற்கால நிவாரணமே! மனநிம்மதி இழந்தவர்களுக்கும், விரக்தி என்ற பள்ளத்தில் விழுந்து கிடப்பவர்களுக்கும், மன எழுச்சிகளை அடக்கிக் கொண்டே இருப்பவர்களுக்கும் கூட மூட்டுவலி வருகிறது. ஆங்கில மருத்துவத்தில் இது போன்ற நோயாளிகளை மனவியல் நிபுணர்களும், எலும்பு நிபுணர்களும் இணைந்து சிகிச்சை தர வேண்டியுள்ளது. ஆயினும் சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் என்ற கதையாய் எவ்வளவு செலவழித்தாலும் மூட்டு வலி நோயாளிகள் ஆங்கில மருத்துவ சிகிச்சையால் முடமாகிக் கொண்டே போவதைத் தான் பார்க்கிறோம்.

மூட்டு அழற்சி வலி உள்ளவர்களுக்கு ஹோமியோபதி மருத்துவமே உகந்தது நோயின் நாட்பட்ட தன்மை, முற்றிய நிலையிலும் கூட அதிகபட்ச நிவாரணம் வழங்குகிறது.

மூட்டு அழற்சி வலியுள்ளவர்கள் உடல் எடை விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறுநீரகத்தின் செயல்பாட்டுத் திறன் குறைவதும், உணவில் கொழுப்பு, உப்பு அதிகரிப்பதும், இனிப்புப் பண்டங்கள் அதிகம் உண்பதும், வரைமுறையற்ற உணவுப் பழக்கங்களும் உடல் உழைப்பற்ற தன்மையும், உடல் பருமன் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள். மூட்டு வலி நோயாளிகள் கண்ட கண்ட ஆங்கில வலி நிவாரணிகளை உபயோகிப்பதை நிறுத்த வேண்டும். இறைச்சி உண்பதைக் குறைக்க வேண்டும். மீன் வகைகள் மூட்டு அலர்ஜியை ஓரளவு கட்டுப்படுத்த உதவுமென்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மூட்டுவலி நோய்களுக்கு ஹோமியோபதி மருத்துவத்தில் அரிய பல மருந்துகள் உள்ளன. உரிய சிகிச்சையோடு தேவையான அளவு உடற்பயிற்சியும்,  உணவுக் கட்டுப்பாடும் அவசியம்.

குறுகிய கால மூட்டுவலி நோய்குறிகளுக்குப் பயன்படும் மருந்துகள்:

அகோனைட், ஆண்டிமோனியம், குரூடம், ஆர்னிகா, பெல்லடோனா, பிரையோனியா, கோல்சிகம், பெர்ரம்பாஸ், கால்மியா, லேடம், ரஸ்டாக்ஸ், ரூடா.

நாள்பட்ட மூட்டுவலி நோய்க்குறிகளுக்குப் பயன்படும் மருந்துகள்:

ஆர்னிகா, ஆர்சனிகம், அர்புடஸ், பென்ஜாயிக், ஆட், காஸ்டிகம், சிமிசிபியூகா, கோல்சிகம், குவாய்கம், கால்மியா, லாச்சஸிஸ், லேடம், மங்கானம், அசடிகம், நேட்ரம் சல்ப், நேட்ரம்பாஸ்,  பல்சடில்லா, ரோடோடென், ரூடா, ஸ்டெல்லேரியா, சல்பர்.

இடம் விட்டு இடம் தாவும் மூட்டுவலி நோய்குறிகளுக்குப் பயன்படும் மருந்துகள்:

காலிசல்ப், கால்மியா, மாக்னோலியா, பைட்டோலக்கா, பல்சடில்லா, ஸ்டெல்லேரியா, வலேரியனா, காலோபைலம்.

கைவிரல் மூட்டுகள், மணிக்கட்டு, கணுக்கால் மூட்டுகளைத் தாக்கும் மூட்டுவலி நோய்களுக்குரிய மருந்துகள்:

அக்டியா, ஸ்பைகேடா, ஆண்டிமோனியம், குரூடம், ஆர்னிகா, பிரையோனியா, காலோபைலம், காஸ்டிகம், கோல்சிகம், லேடம், லைகோ, நேர்டம்மூர், பெட்ரோலியம், ரஸ்டாக்ஸ், ரூடா, சபடில்லா, சிலிகா, சல்பர், சபீனா.

இருதயத்தையும் சேர்த்து பாதிக்கும் மூட்டுவீக்க நோய்குறிகளுக்குரிய மருந்துகள் :

அப்ரோடனம், பென்ஜாய்க் ஆசிட், கோல்சிகம், டிஜிடாலிஸ், கால்மியா, லிதியம் கார்ப், நக்ஸ்மாஸ், வெராட்ரம் ஆல்பம், லைகோபஸ், ஆர்சனிகம்.

]]>
homeo, medicines, health, http://www.dinamani.com/health/health_serials/2016/jul/27/முடமாக்கும்-மூட்டு-நோய்களும்-குணமாக்கும்-ஹோமியோ-மருந்துகளும்-2689.html
1545 மருத்துவம் தொடர்கள் "சர்க்கரை நோயாளிகளுக்கு தொடர்ந்து விழித்திரை பரிசோதனை அவசியம்' நாகூர் ரூமி Wednesday, July 13, 2016 08:05 PM +0530  

விழித்திரை மருத்துவ மாநாட்டில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.ராஜேந்திரனுக்கு (இடமிருந்து 2-ஆவது) நினைவுப் பரிசு வழங்கிய டாக்டர் அமர் அகர்வால். உடன் (இடமிருந்து) டாக்டர் அத்யா அகர்வால், டாக்டர் லலித் வர்மா.

சர்க்கரை நோயாளிகள் பார்வையிழப்பைத் தவிர்க்க விழித்திரையை தொடர்ந்து பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அமர் அகர்வால் கூறினார்.

சென்னையில் "அகர்வால் ரெட்டினா ஃபவுண்டேஷன்' ஏற்பாடு செய்துள்ள விழித்திரை தொடர்பான மருத்துவ மாநாட்டை நீதிபதி பி.ராஜேந்திரன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் டாக்டர் அமர் அகர்வால் பேசியதாவது:-

சர்க்கரை நோயாளிகளுக்கு தொடர்ந்து ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாமல் போகும் நிலையில் விழித்திரையில் பாதிப்பு ஏற்பட ஆரம்பிக்கும்.

இத்தகைய விளைவு குறித்து மிகவும் தாமதமாகத் தெரியவரும். விழித்திரை பாதிப்பு தீவிரமடையும் நிலையில் பார்வையிழப்பு ஏற்படும். இந்த நிலையைத் தவிர்க்க குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்த சர்க்கரை அளவைப் பரிசோதனை செய்து கொள்வதுடன் விழித்திரையையும் சர்க்கரை நோயாளிகள் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

மேலும் சர்க்கரை நோய் காரணமாக விழித்திரை பாதிப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விழித்திரை பாதிப்பு ஏற்படுவோருக்கு சிகிச்சை அளிக்க போதுமான டாக்டர்கள் இல்லாத நிலை உள்ளது.

சாதாரண மக்களுக்கும் விழித்திரை பாதிப்பு சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு "அகர்வால் ரெட்டினா

ஃபவுண்டேஷன்' செயல்படுவதால்தான் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்ட கண் மருத்துவர்கள், விழித்திரை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர் என்றார் அமர் அகர்வால்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/5/28/w600X390/sugar.jpg sugar http://www.dinamani.com/health/health_serials/2016/may/28/சர்க்கரை-நோயாளிகளுக்கு-தொடர்ந்து-விழித்திரை-பரிசோதனை-அவசியம்-1545.html
1544 மருத்துவம் தொடர்கள் தர்பூசணி பழம் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள்:  அதிகாரிகள் எச்சரிக்கை kirthika Express News Service Saturday, May 28, 2016 08:27 AM +0530
  • புகைப்படங்கள்

    சென்னை : சென்னை உட்பட தமிழகத்தில் கொளுத்தும் வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள மக்கள் நாடும் பழங்களில் தர்பூசணியும் ஒன்று.

    ஆனால், தர்பூசணியைப் பொருத்தவரை மக்கள் எச்சரிக்கையாக பார்த்து வாங்க வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து அவர்கள் கூறியதாவது: தர்பூசணி பழங்களை வாங்கும்போது அதனை முழுமையாகச் சுற்றிப் பார்த்து வாங்க வேண்டும். அதில் ஊசி போட்டது போன்ற துவாரங்கள் இருந்தாலும் பழங்களை மாற்றிவிட வேண்டும். ஏனெனில் பழங்களில் ஊசி மூலம் சிறு சிறு துவாரம் போட்டு, அதனை தண்ணீரில் ஊறவைத்து எடையைக் கூட்டுவதற்கு சிலர் முயற்சி செய்வார்கள்.

    இதுதவிர  உடலுக்கு உபாதை விளைவிக்கும் வண்ணங்களை பழங்களுக்குள் செலுத்தி விற்பனை செய்வதாக வெளிமாநிலங்களில் புகார்கள் வந்துள்ளன. தமிழகத்தில் அதேபோன்ற புகார்கள் ஏதுமில்லை. இருப்பினும் பொதுமக்கள் மிகவும் விழிப்போடு இருக்க வேண்டும். வியாபாரிகள் துண்டுகளாக விற்கும்போது சுகாதாரத்தோடு விற்பனை செய்ய வேண்டும். முத்திரையிடப்பட்ட எடைக் கற்களை பயன்படுத்த வேண்டும். விதிமுறைகளை மீறி விற்பனை செய்தால் பழங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றனர்.

    ]]>
    http://www.dinamani.com/health/health_thodarkal/2016/may/28/தர்பூசணி-பழம்-குறித்து-அதிர்ச்சியூட்டும்-தகவல்கள் -அதிகாரிகள்-எச்சரிக்கை-1544.html
    1543 மருத்துவம் தொடர்கள் வீட்டு வைத்தியம்! kirthika Express News Service Saturday, May 28, 2016 08:26 AM +0530
  • புகைப்படங்கள்
    • மாதுளம்பழச் சாறுடன் தேன் கலந்து, 48 நாட்கள் தொடர்ந்து குடித்துவர, இரத்த சோகை நீங்கும்.
    • கண்களில் எந்த நோய் தென்பட்டாலும், அன்னாசிப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
    • வாழைத் தண்டு சாறை, மண் சட்டியில் விட்டு சிறிது சுட வைத்து, அந்தச் சாறை 2-3 நாட்கள் தொடர்ந்து பருகி வர, நீர்க்கடுப்பு குணமாகும்.
    • வசம்பை இடித்துத் தூளாக்கி, இரண்டு கிராம் அளவு எடுத்து, வாயில் போட்டு சுவைத்து, வெந்நீர் குடித்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
    ]]>
    http://www.dinamani.com/health/health_thodarkal/2016/may/28/வீட்டு-வைத்தியம்-1543.html
    1542 மருத்துவம் தொடர்கள் வீட்டு வைத்தியம்! kirthika Express News Service Saturday, May 28, 2016 08:25 AM +0530 < மாதுளம்பழச் சாறுடன் தேன் கலந்து, 48 நாட்கள் தொடர்ந்து குடித்துவர, இரத்த சோகை நீங்கும்.

    < கண்களில் எந்த நோய் தென்பட்டாலும், அன்னாசிப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

    < வாழைத் தண்டு சாறை, மண் சட்டியில் விட்டு சிறிது சுட வைத்து, அந்தச் சாறை 2-3 நாட்கள் தொடர்ந்து பருகி வர, நீர்க்கடுப்பு குணமாகும்.

    < வசம்பை இடித்துத் தூளாக்கி, இரண்டு கிராம் அளவு எடுத்து, வாயில் போட்டு சுவைத்து, வெந்நீர் குடித்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

    ]]>
    http://www.dinamani.com/health/health_thodarkal/2016/may/28/வீட்டு-வைத்தியம்-1542.html
    1541 மருத்துவம் தொடர்கள் கருவளையமா, கவலை வேண்டாம்! kirthika Express News Service Saturday, May 28, 2016 08:24 AM +0530
  • புகைப்படங்கள்

    இளம் பெண்கள் பலருக்கு கண்ணைச் சுற்றி கருவளையம் ஏற்படுகிறது. இது அவர்களுடைய முகப் பொலிவை குறைக்கிறது. பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் இந்த பிரச்னை உள்ளது. கருவளையம் ஏற்படக் காரணம் கண்களைச் சுற்றியுள்ள தசைகளுக்கு அதிக வேலை கொடுப்பதால் தான். தவிர தூக்கமின்மை, சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பது, உடல் நலக் குறைவு, புகைப் பிடிக்கும் பழக்கம், இன்சோம்னியா (Insomnia) போன்ற உறக்கமின்மைப் பிரச்னைகளாலும் கருவளையம் தோன்றும். கடைகளில் இதற்கான நிறைய க்ரீம்கள் கிடைத்தாலும் இயற்கை முறையில் சரி செய்வதே நல்லது. முதலில் உணவுப் பழக்கத்தையும் உறக்கப் பழக்கத்தையும் சீர் செய்ய வேண்டும். அதன் பின் சில எளிமையான யோகாசனங்கள் உள்ளன. அவற்றையும் கடைபிடிக்க வேண்டும்.

    உணவு

    இயற்கை உணவு வகைகள் (ஆர்கானிக் ஃபுட்ஸ்), பழங்கள் மற்றும் காய்கறிகள் தினமும் சாப்பிடுவது நல்லது. நீர்ச்சத்துள்ள காய்கறிகள், மற்றும் அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களையும் சாப்பிடுவதாலும் நல்ல பலன் கிடைக்கும்.  கூடுமானவரையில் மாவுச் சத்து மற்றும் அதிக கொழுப்புள்ள உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. 

    தினமும் போதிய அளவு தண்ணீர் குடிப்பதும் அவசியம். காரணம் தேவையான அளவு நீர்ச்சத்து உடம்பில் இருக்க வேண்டும். தினமும் மூன்று அல்லது நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீராக மட்டுமில்லாமல் மோர் அல்லது இளநீர் குடிக்கலாம். ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த சத்தான உணவுப் பொருட்களை சாப்பிட அது தோலின் இளமைத்தன்மையைப் பாதுகாக்கும். சுருக்கங்கள் வராமல் காக்கும்.  அடிக்கடி ஃபாஸ்ட் புட்ஸ், ஜன்க் புட்ஸ் சாப்பிட்டால் சீக்கிரமே வயோதிக தோற்றம் ஏற்பட்டுவிடும். கண்களைச் சுற்றி அடர்த்தியான கருவளையம் தோன்றக் கூடும். சீஸ், சாக்லேட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். உடல் நலத்தைக் கெடுக்கும் மது பானங்கள், குட்கா, புகையிலை மற்றும் சிகரெட் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.

    உறக்கம்

    சரியான அளவு தூக்கம் மிகவும் அவசியம். தினமும் ஆறிலிருந்து ஏழு மணி நேரம் தூக்கம் கட்டாயம் தேவை. ஒரு நாள் எட்டு மணி நேரம் தூங்கி அடுத்த நாள் நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கி பின் அதை அட்ஜெஸ்ட் செய்கிறேன் என்று பத்து மணி நேரம் தூங்குவது உடலுக்கு நல்லது அல்ல. ஒரு நேர ஒழுங்கு இருக்க வேண்டும். தூக்கம் சரியான நேரம் வரை இருக்கும்போது உடலிலுள்ள ஹார்மோன் சுரப்பும் சரியாக இருக்கும். முக்கியமாக தோல் வளமாக இருக்கத் தேவையான கொலாஜன் எனப்படும் க்ரோத் ஹார்மோனின் சுரப்பு நன்றாக இருக்கும். அதனால் தோல் சுருக்கம் அடையாது. இரவுப் பணியில் வேலை செய்பவர்கள் அதற்கேற்றபடி பகலில் தூக்கம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தூக்கப் பிரச்னைகள் தொடர்ந்து இருந்தால் மன அழுத்தம் ஏற்பட்டுவிடலாம். மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும். இது மனதை மட்டுமல்ல உடலையும் சோர்வடையச் செய்துவிடும். அதிகப்படியான கோபம், டென்ஷன், இயலாமை, தாழ்வு மனப்பான்மை போன்றவை ஸ்ட்ரெஸ் ஏற்படுத்திவிடும். இவை தொடர்ந்து இருந்தால், ஹார்மோன்கள் சமச்சீராக சுரக்கும். இதனால் சீக்கிரம் முதுமை தோற்றம் வந்துவிடும். தலைமுடியும் நரைத்துவிடும். 

    யோகாசனம்

    உடலையும் மனதையும் புத்துணர்வாக்க, தினமும் வாக்கிங் போக வேண்டும், யோகா அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும். தினமும் செய்ய இயலாவிட்டால் வாரத்தில் நான்கு நாட்களாவது கட்டாயம் செய்ய வேண்டும்.  ஆசனங்கள் செய்வதன் மூலம் முகத்தில், கண்களில் மற்றும் மூளையில் ரத்த ஓட்டம் சீராகிறது. யோகா மூலம் எல்லா வியாதிகளையும் குணப்படுத்த முடியும் போது கண்ணில் ஏற்படும் கருவளையம் மிகவும் சாதாரணமானது. தினந்தோறும் யோகப் பயிற்சி செய்து உடல் நலம் பேணுவோம். கருவளையம் பிரச்னையைப் பொருத்தவரையில் தினமும் நான்கு ஆசனங்களைத் தொடர்ந்து செய்யலாம். அவை விபரீதகரணி, ஹஸ்தபாதாசனம், சாம்பவி முத்ரா மற்றும் சூர்ய நமஸ்காரம்.. இவை தவிர நாடி சுத்தி, பிராணாயாமம், கபாலபாத்தி ஆகியவற்றையும் சேர்த்து செய்தால் நலம். ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள், இதய நோயாளிகள், ஸ்பாண்டிலைடிஸ் இருப்பவர்கள் இந்த ஆசனங்களை செய்யக் கூடாது. மற்றவர்களும் தகுந்த ஆசிரியரின் நேரடி உதவியுடன் கற்றப் பின்னரே தினமும் செய்ய வேண்டும். தவிர உடல் இந்த ஆசனங்களை எவ்வித கஷ்டமும் இல்லாமல் எளிதல் செய்ய முடிந்தால் தான் செய்ய வேண்டும். ஏதேனும் அசெளரியமோ வலியோ இருந்தால் மருத்துவரின் பரிந்துரைக்குப் பின்னரே தொடரவேண்டும்.

    கடவுள் மனிதர்களுக்கு இயற்கையாகத் தந்த ஆரோக்கியமான உடலை தவறான பழக்கங்களால் கெடுத்துக் கொண்டு நோயை வரவழைத்துக் கொள்ளக்கூடாது. சமச்சீரான எல்லா சத்துக்களும் கிடைக்கும்படியான உணவுப் பழக்கமும், அமைதியான மனத்தும், நிம்மதியான உறக்கமும் தான் உண்மையில் வரம்.  நமக்கான வரம் கை அருகே தான் உள்ளது? கண்களில் தொடங்கி உடல் முழுவதும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருப்போம்.

    ]]>
    http://www.dinamani.com/health/health_thodarkal/2016/may/28/கருவளையமா-கவலை-வேண்டாம்-1541.html
    900 மருத்துவம் தொடர்கள் ஹீமோ-பிலியா நோய் பெரும்பாலும் ஆண்களை பாதிக்கிறது:ஜிப்மர் இயக்குநர் பரிஜா புதுச்சேரி PTI Wednesday, May 18, 2016 04:18 PM +0530 உலக ஹீமோ-பிலியா தினத்தையொட்டி ஜிப்மர் மருத்துவம் மற்றும் மறு சீரமைப்புத் துறை (டஙத), ஹீமோ-பிலியா சங்கம் சார்பில், ஹீமோ-பிலியாவினால் எலும்பு, மூட்டு மற்றும் தசைகளில் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய மருத்துவக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

    கருத்தரங்கை தொடங்கி வைத்து இயக்குநர் எஸ்.சி.பரிஜா பேசியதாவது: 8,000 மக்களில் ஒருவருக்கு இந்த நோய் பாதிப்பு இருக்கிறது. இந்த நோய்க்கு நிரந்தர தீர்வு இன்னும் காணப்படவில்லை.

    பெரும்பாலும் தசைகளையும், மூட்டுக்களையும் பாதிக்கும் இந்த நோய்க்கு தேவையான மருந்து நரம்பில் உடனே ஏற்றப்பட்டு, தொடர்ந்து பயிற்சிகள் செய்யப்படாவிட்டால், உடல் ஊனம் உண்டாகும். பெரும்பாலும் ஆண்களையே இந்த நோய் பாதிப்பதால் அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார் பரிஜா.

    மருத்துவமனைக் கண்காணிப்பாளர் பாலசந்தர் முன்னிலை வகித்தார். எலும்பு மருத்துவ சிகிச்சைப் பிரிவு தலைவர் ஜகதிஷ் மேனன் வரவேற்றார். டாக்டர்.டி.கே.பத்ரோ தலைமை வகித்தார். டாக்டர்கள் டி.கே. தத்தா, பமிலா நாராயண், ரமேஷ் கண்ணன், பிரசன்னா ஆகியோர் ஹீமோ-பிலியா தசை மூட்டு பாதிப்பு, அதை மாற்றக்கூடிய வழிமுறைகள் பற்றி விவாதித்தனர்.

    ஏற்பாடுகளை மருத்துவம் மற்றும் மறுசீரமைப்புத் துறை சிறப்பு மருத்துவர் நவீன் குமார் அகர்வால், டாக்டர் நளினி செய்திருந்தனர்.

    ]]>
    http://www.dinamani.com/health/health_thodarkal/2016/may/18/ஹீமோ-பிலியா-நோய்-பெரும்பாலும்-ஆண்களை-பாதிக்கிறதுஜிப்மர்-இயக்குநர்-பரிஜா-900.html
    899 மருத்துவம் தொடர்கள் நீண்ட ஆரோக்கியத்துக்கு வயிறு சொல்வதைக் கேட்டால் போதும் நியூயார்க் PTI Wednesday, May 18, 2016 04:17 PM +0530

    ஆம், மதிய உணவு வேளை வந்து விட்டது என்பதற்காகவோ, உங்களுக்கு பிடித்தமான உணவு என்பதாலோ ஒரு உணவை நீங்கள் சாப்பிடுகிறீர்கள் என்றால், அது உங்கள் உடல் நலனை பாதிக்கும்.

    பலரும், ருசியான உணவுப் பொருட்கள் கிடைத்ததும் சாப்பிட்டுவிடுகிறார்கள். ஆனால், அப்போது அவர்களுக்கு பசி இருக்கிறதா இல்லையா என்பது பற்றி கவலைப்படுவதில்லை.

    ஆனால், நீண்ட ஆரோக்கியமான உடலைப் பெற வேண்டும் என்றால், உணவு கிடைத்த போதெல்லாம் உண்ணாமல், உங்களுக்கு பசி வந்த பிறகே உண்ண வேண்டும் என்று சிகாகோ பல்கலைக்கழகத்தின் டேவிட் கல் குழுவின் ஆராய்ச்சியில் உறுதி சய்யப்பட்டுள்ளது.

    இளைஞர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், பசியோடு இருப்பவர்கள் உணவு சாப்பிட்ட பிறகு அவர்களது ரத்தத்தின் குளுக்கோஸ் அளவு குறைந்த அளவிலேயே உயர்வதாகவும், பசி இல்லாத நேரத்தில் உணவு சாப்பிட்டவர்களின் ரத்தத்தின் குளுக்கோஸ் அளவு மிக அதிகமாக உயர்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

    ]]>
    http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/5/18/w600X390/eating.jpg http://www.dinamani.com/health/health_thodarkal/2016/may/18/நீண்ட-ஆரோக்கியத்துக்கு-வயிறு-சொல்வதைக்-கேட்டால்-போதும்-899.html
    898 மருத்துவம் தொடர்கள் மாரடைப்பே நலமா? டி.இன்பராஜ் PTI Wednesday, May 18, 2016 04:13 PM +0530

    டாக்டர் எஸ். அருள்ராஜ், தலைவர் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர், சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை, தூத்துக்குடி

    வித்தியாசமான தலைப்பாக இருக்கிறது என நினைக்கிறீர்களா?  தலைப்பின் நோக்கம் என்னவென்றால் நமது வாழ்க்கை முறை மாற்றங்களினால் மாரடைப்பைத் தவிர்க்கலாம் அல்லது ஒத்திப் போடலாம். ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம் என்பதே நோக்கமாகும். மாரடைப்பே நலமா என்று இந்திய மக்கள் கேட்கும் நாள் வர வேண்டும்.

    இன்றைய காலகட்டத்தில் பல்வேறு காரணங்களால் இளம் வயதினருக்குக்கூட மாரடைப்பு வருகிறது. ஜங் புட் எனப்படும் பீட்சா, பர்கர் போன்ற உணவுகள், குறைந்த உடல் உழைப்பு, புகைப்பிடித்தல், அதிக அளவு மது அருந்துதல் ஆகியவற்றால் மாரடைப்பு ஒரு சாதாரணமான உயிர்க்கொல்லி நோயாகிவிட்டது.

    தற்போது நாளுக்கு நாள் புதிய மருத்துவ முறைகள் வந்து கொண்டிருக்கின்றன. நெஞ்சுவலி அல்லது மாரடைப்பு ஏற்பட்ட பிறகு, நவீன ஆஞ்சியோ பிளாஸ்ட்டி மற்றும் பைபாஸ் இருதய அறுவை சிகிச்சை முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

    அடைப்பின் அறிகுறி: நெஞ்சுவலி என்பது நடுநெஞ்சில் ஏற்படக்கூடிய ஒருவகை அழுத்தம் ஆகும். இது இதயத் தசைகளில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பின் அறிகுறி ஆகும். நெஞ்சில் வலி ஏற்படும்போது, அதை மாரடைப்பு ஏற்படுவதற்கு உரிய முக்கிய அறிகுறியாகக் கருத வேண்டும். வாயு பிரச்னை என அலட்சியமாக இருக்கக் கூடாது.

    நெஞ்சுவலி மார்பின் நடுவில் அழுத்தம் போன்று வலி ஏற்படும். அங்கிருந்து தோள்பட்டை, கழுத்து, தாடை, இடது கை, வலது கை, முதுகுக்கு வலி பரவலாம். அதிக வலியின் போது வியர்வை, மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்படும்.

    ஆஸ்பிரின் உதவும்: நெஞ்சுவலி ஏற்பட்டால் நடந்து செல்லாமல் ஆட்டோ அல்லது ஆம்புலன்ஸ் மூலம் இசிஜி வசதியுள்ள மருத்துவரிடம் உயிர்காக்கும் பொன்னான முதல் ஒரு மணி நேரத்திற்குள் (Golden hour) உடனடியாக சென்று விட வேண்டும்.

    ஆஸ்பிரின் மாத்திரை இருந்தால், 300 கிராம் மாத்திரையைப் பொடி செய்து, நீரில் கலந்து மாரடைப்பு ஏற்பட்டவரை குடிக்கச் செய்யலாம்.

    மாரடைப்பு என்றால் என்ன? இதயம் எப்போதும் துடித்துக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் உயிர் இருக்கும். இதயத் தசை வேலை செய்ய குறிப்பிட்ட அளவு ரத்தம் தேவைப்படும். இதயத்தில் உள்ள மூன்று கரோனரி ரத்தக் குழாய்களின் வழியாக இதயத் தசைக்கு ரத்தம் செல்கிறது. கரோனரி ரத்தக் குழாய்களில் தடை ஏற்பட்டாலோ, சுருங்கிவிட்டாலோ ரத்த ஓட்டத்தின் அளவு குறைந்துவிடும். ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இதயத்துக்கு ரத்தம் செல்வது தடைபடுவதால் மாரடைப்பு ஏற்படுகிறது.

    பொன்னான நேரம்: ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் நிலையில், முதல் ஒரு மணி நேரம் மிக முக்கியமான நேரமாகும். அதாவது மாரடைப்பு ஏற்பட்டவரின் உயிரைக் காக்க, மாரடைப்பு ஏற்பட்ட ஒரு மணி நேரத்துக்குள் த்ராம்போஸிஸ் மருந்துகளை ரத்தக் குழாய்களுக்குள் செலுத்தி, ரத்த உறைவைத் தடுத்து, ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தி, ரத்தம் செல்வதற்கு ஏற்பட்டிருந்த தடையை நீக்குவது மிக முக்கியமானதாகும். ஆஞ்சியோபிளாஸ்ட்டி அல்லது ஸ்டென்ட்டுகள் பொருத்தியும் தடையை நீக்கலாம்.

    இதய பை-பாஸ் அறுவைச் சிகிச்சை: மருந்துகள், ஆஞ்சியோ பிளாஸ்ட்டி உள்ளிட்ட சிகிச்சைகள் மூலம் இதய கரோனரி ரத்தக் குழாய்களில் ஏற்பட்டிருந்த அடைப்பை நீக்க முடியாவிட்டால், அவசர இதய பை-பாஸ் அறுவைச் சிகிச்சை செய்து மாரடைப்பு ஏற்பட்ட நோயாளியின் உயிரைக் காப்பாற்ற வேண்டியிருக்கும்.

    இதய ரத்த நாளங்களில் அடைப்பை நீக்குவது எப்படி? ஆஞ்சியோகிராம் வசதியுள்ள மருத்துவமனையில் உடனடியாக ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்படுகிறது. இன்றைய நிலையில் ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக் குழாயின் தன்மை, அடைப்புகளின் அளவு ஆகியவற்றை 30 நிமிஷங்களில் கண்டறிந்து விடலாம். அடைப்பின் தன்மை, அடைப்பு ஏற்பட்டிருக்கும் இடம், பாதித்த ரத்த குழாய் ஆகியவற்றுக்கு ஏற்ப, ஆஞ்சிபோபிளாஸ்ட்டி செய்து அடைப்பை அகற்றி ஸ்டென்ட் பொருத்தலாம். அடைப்பின் அளவு அதிகமாக இருந்தாலோ, ஒன்றுக்கும் மேற்பட்ட கரோனரி ரத்தக் குழாய்களில் அடைப்பு இருந்தாலோ மருத்துவரின் ஆலோசனைப்படி, அவசர பை-பாஸ் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும். ஏனெனில் அடைப்பை அகற்றினால்தான் நோயாளியைக் காப்பாற்ற முடியும்.

    ரத்தம் மிகவும் முக்கியம்: உடல் முழுவதற்கும் உயிரோடு இருப்பதற்கும் ரத்தம் அவசியம். அந்த ரத்தத்தை உடல் முழுவதுக்கும் விநியோகம் செய்யும் பம்ப் இதயம் ஆகும். இதயம் இயங்குவதற்கும் ரத்தம் அவசியம். ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும் போது இதயத்தின் ஒரு பகுதி சேதமடைந்து உயிரிழந்து விடுகிறது.

    இதய ரத்த நாளங்களில் நிரந்தரமாக அடைப்பு ஏற்பட்டாலோ அல்லது 30 நிமிஷங்கள் முதல் 2 மணி நேரம் வரை அடைப்பு நீடித்தாலோ மாரடைப்பு ஏற்படுகிறது. அடைப்பு ஏற்பட்டுள்ள ரத்த நாளங்கள் இதயத்தின் எந்தப் பகுதியில் உள்ளதோ, அந்தப் பகுதியில் உள்ள இதயத் தசைகள், ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச் சத்தின்றி இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாத அளவு சேதமடைகின்றன. அதிக அளவு சேதமும் அல்லது அதிக அளவு காலம் தாழ்த்தினாலோ இதயத்தின் துடிப்பு நின்று விடுகிறது.

    இதயம் விரிந்து ஹார்ட் ஃபெய்லியர் (இதயத் தசை முற்றிலும் வலுவிழந்து ரத்தத்தை பம்ப் செய்ய முடியாத நிலை) ஏற்படலாம். எனவே மாரடைப்புக்கு உடனடியாக அவசர சிகிச்சை அவசியம்.

    மாரடைப்பைத் தடுக்கும் வழிமுறைகள் என்ன? மாரடைப்பு வராமல் தடுப்பதற்கு நமது பங்கு மிகவும் அவசியம். உணவின் அளவைக் குறைக்க வேண்டும. 2 இட்லி, தோசை, சப்பாத்தி சிறிது அரிசி சாதம், அதிக அளவு காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றைச் சாப்பிட வேண்டும். அதிக கொழுப்புள்ள முட்டையின் மஞ்சள் கரு, விலங்குகளின் புரதம் அடங்கிய கறிகள், பெரிய கொழுத்த மீன்கள், ஈரல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதிக கலோரி கொண்ட பரோட்டா, பீட்சா, பர்கர், பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

    நடைப் பயிற்சி உதவும்: ஆரோக்கிய வாழ்வுக்கு உடல் அசைவு அவசியம். இருந்த இடத்தில் இருந்தே வேலை பார்ப்பது, நீண்ட நேரம் தொலைக்காட்சி, கணினி பார்ப்பது ஆகியவை உடல் ஆரோக்கியத்துக்குக் கெடுதல் தரும் விஷயங்களாகும். தினமும் சாப்பிடுவதற்கு முன் 45 நிமிஷம் விறுவிறுவென்று வேகமாக நடப்பது நல்லது. மாடிகளில் ஏறி இறங்க படிகளை உபயோகிப்பது நல்லது.

    நமது வாகனங்களை விடுமுறை நாள்களில் நாமே கழுவி சுத்தம் செய்யலாம். செடிகளுக்கு நாமே தண்ணீர் ஊற்றலாம். புகைப் பழக்கம், மது அருந்துவதை நிரந்தரமாக விட்டு விட வேண்டும்.

    புகை, மது, கொழுப்புள்ள உணவு ஆகிய மூன்றும் மாரடைப்பின் நண்பர்கள்.  சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்த கொழுப்புச் சத்து இருந்தால் மருத்துவ ரீதியாக அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். மன நிம்மதி, அமைதி மிகவும் முக்கியம். யோகா, தியானம் ஆகியவை மன அழுத்தத்தை நீக்கி ஆயுளை அதிகரிக்கிறது.

    30 வயதான அனைவரும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது முக்கியம்.

    நெஞ்சு வலி ஏற்பட்டால், உயிர் காக்கும் பொன்னான முதல் ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டவரை அழைத்துச் செல்வது அவசியம்.

    நமக்கு ஒரு வாழ்க்கைதான்

    நமக்கு ஒரு இதயம்தான்

    இதயம் நமக்காகத்தான்

    இதயத்தைப் பாதுகாப்போம்

    இனிமையாக வாழ்வோம்!

     

    ]]>
    http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/5/18/w600X390/HEART_ATTACK.jpg HEART_ATTACK http://www.dinamani.com/health/health_thodarkal/2016/may/18/மாரடைப்பே-நலமா-898.html
    897 மருத்துவம் தொடர்கள் தற்கொலை என்னும் வியாதி ! kirthika PTI Wednesday, May 18, 2016 04:08 PM +0530 சமீபத்தில் இந்தியாவில் அடுத்தடுத்து தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன – அதுவும் மாணவப் பருவத்தினர் உயிரை மாய்த்துக் கொள்ளுவது மனத்தை இறுக்குவது. தற்கொலை என்பது ஒரு வியாதி என்பதையும், அதுகுறித்த தவறான எண்ணங்கள் மக்களிடையே நிலவுவதையும் நாளிதழ் ஒன்றில் மிக அழகாகக் கூறியுள்ளார் மருத்துவர் காட்சன். அவருக்கு நம் வாழ்த்துக்கள்!

    சின்ன வயதில், எங்கள் தெருவில் நிகழ்ந்த ஒரு தற்கொலை பற்றி என் பாட்டியும், மாமியும் ரகசியமாகக் கிசுகிசுத்தவை (குழந்தைகளுக்குத் தெரியக் கூடாதாம்!) அவ்வளவு தெளிவாக நினைவில் இல்லை. கணவன் மீது சந்தேகம் என்ற தொனியில் ஒரு கருத்து மங்கலாக நினைவில் நிழலாடுகிறது!

    பாண்டிச்சேரி லாட்ஜ் ஒன்றில் விஷம் குடித்து (பீருடன்கலந்து குடித்ததாகத் தகவல்)  தற்கொலை செய்து கொண்ட ஒரு டாக்டரை நான் அறிவேன். எப்போதும் அமைதியாக, எல்லோருடனும் நட்புடன் எங்களுடன் வலம் வந்தவர்- ஒருவார இறுதியில் இப்படி வாழ்வை முடித்துக் கொண்டார். நிதி நிலையால் ஏற்பட்ட மன அழுத்தம்?

    தங்கியிருந்த ஹாஸ்டலில் ஒரு நர்ஸ் – வயது 25க்கும் குறைவு– இரவில் கயிற்றில் தொங்கி விட்டார். ஒரு நாற்காலியின் முன், கழுத்தில் கயிறுடன் , நாக்குத் தொங்கியபடி, கழுத்து ஒரு புறமாகச் சரிந்தபடி…பார்க்க சகிக்கவில்லை. ‘சார், இந்தப் பேஷண்டுக்கு ஊசி வேணாமாம் – பயமாம் சார்’ என்று முதல் நாள் பேசியவள், பயமின்றி மறுநாள் இப்படி! ‘இந்தக் காதல் வேண்டாம், சரியா வராதுன்னு அப்பவே சொன்னேன் சார் அவகிட்ட’ என்றாள் அவள் தோழியான இன்னொரு நர்ஸ். கல்யாண மாலை விழ வேண்டிய கழுத்துக்கு சுருக்குக் கயிறை தேர்ந்தெடுத்துக் கொண்டாள் அவள்.

    என் நெருங்கிய நண்பன் ஒருவன் வீட்டுப் பிள்ளை, பைபோலார் மன நிலையில், அதிக அளவில் தானும் வருந்தி, பெற்றோரையும், உறவினர்களையும் வருத்தி கொண்டிருந்தவன், இறுதியில் சமையலறையில் கயிற்றில் தொங்கியே விட்டான் – அப்போது அவனுக்கு 19 வயது.

    கலை உணர்வு உடையவர்கள் – ஓவியர்கள், ஆர்கிடெக்ட்ஸ், இசைக் கலைஞர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் ஆகியோர் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதாக ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. மொத்த இறப்புகளில், 1.2% தற்கொலைகள் என்றால், மொத்த தற்கொலைகளில் 2.1% இசைக் கலைஞர்கள் என்கிறது ஓர் ஆய்வு !

    பிரபல நடிகர், நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது சினிமா ஆரம்பித்த காலம் தொட்டே தொடர்ந்து வருவது!  எல்லாம் வாழ்வின் சோகங்களினால் வந்த மன இறுக்கங்கள்– ‘சிக் மைண்ட்’ எனும் நோயுற்ற மனதும், மூளையும்!

    புகழின் உச்சியில் இருந்துவிட்டுப் பின்னர், தோல்விகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் துவண்டு, தற்கொலை செய்து கொள்வது மர்லின் மன்ரோ முதல் சில்க் ஸ்மிதா வரை பொதுவானது. படாஃபட் ஜெயலட்சுமி, ’ஊர்வசி’ ஷோபா, மோனல், திவ்ய பாரதி, பிரத்யுஷா, கோழிகூவுது விஜி, மயூரி, கல்பனா, நடிகர் குணால், சுரேஷ், பாலமுரளி மோகன், என ஒரு நீண்ட பட்டியலே உள்ளது – எல்லோருக்கும் வயது 18முதல் 40க்குள்! காதல் தோல்வி, பணப்பிரச்சினை, தீராவியாதிகளின் வலி, ஏமாற்றம், புகழின் சரிவு, மது, போதை பொருட்களுக்கு அடிமை என்று பல காரணங்கள் !

    குழந்தையைக் காணவில்லை என்ற வருத்தத்தில், உயரத்திலிருந்து கீழே குதித்து, அதிர்ஷ்டவசமாகத் தப்பித்த ஒரு பெண், ‘ஒரு மைக்ரோ செகண்டில் ஏதோ ஒன்று என்னைக் குதிக்கச் சொல்லியது’ என்றாள் ! அந்தநொடியைத் தாண்டிவிட்டால், திரும்ப தற்கொலை எண்ணம் வருவது அரிது.

    மன அழுத்தம், பைபோலார் டிஸார்டர், போதைப் பொருள் பழக்கம், மரபு வழி மனப்பிறழ்வுகள் எனப் பல காரணங்கள் – காரணம் ஏதுமின்றி ‘செத்துப் போயிடலாம் என்று தோன்றுகிறது டாக்டர்’ என்று ஒருவர் சொன்னால், மரபுவழி மன அழுத்தத்தின் உச்சக்கட்ட எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு உடனே சிகிச்சை அளிக்கவேண்டும் –தவறினால் பத்தாவது மாடியிலிருந்து குதித்தோ, மூட்டைப்பூச்சி மருந்து குடித்தோ, கழுத்தில் சுருக்குடனோ மறுநாள்ஆபிட்சுவரியில் வந்து விடும் அபாயம்  அதிகம்.

    சாவைப் பற்றி அதிகம் பேசுவது, எழுதுவது, கத்தி, அறுவாள் போன்ற ஆயுதங்களைத் தேடி வைத்துக்கொள்வது, சில மருந்து வகைகளைச் சேர்த்து வைத்துக் கொள்வது – இவை தற்கொலை முயற்சிக்கு ஆரம்ப நிலையாக இருக்கக் கூடும். மதுப்பழக்கம் உள்ளவர்கள், முன்னரே தற்கொலை முயற்சி செய்திருந்தவர்கள், குடும்பத்தில் தற்கொலைகள், மனப்பிறழ்வுள்ளவர்கள் – இவர்களுக்கு தற்கொலைத் தாகம் அதிகமாக இருக்கலாம்!

    தீரா வியாதிகள் – கேன்சர், தாளமுடியாத வலி, போன்றநோய்கள் ஒருவரை விரக்தி அடையச் செய்து, தற்கொலையில் முடியலாம்.தற்கொலை தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றுதான் – தவிர்க்க முடியாத மனநிலையில், திடீரென்று தோன்றும் மனப்பிறழ்வுகளை இனங்கண்டு சிகிச்சை அளிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

    சிலர், தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பர் – நிச்சயம் இறக்க மாட்டோம் என்று தெரிந்தும், மற்றவர்களைத் தன் நோக்கித் திருப்பும் முயற்சியாக இதனைச் செய்யக் கூடும். SUICIDAL ATTEMPT OR THREAT  என்று இதனைக் கூறுவர். இவர்களும் மனப்பிறழ்வு உடையவர்களே – கவனம் தேவை.

    ‘இறந்தவர்’ விடுபட்டு விடுகிறார் – இருப்பவர்கள் தான், அதன் வேதனையையும், வருத்தத்தையும் அனுபவிக்க வேண்டியிருக்கிறது.எல்லாத் தற்கொலைகளுக்கும் ஏதாவது ஒரு சாயம் பூசி, இறந்தவர்களையும், உயிருடன் இருப்பவர்களையும் குற்றம் கூறிக்கொண்டிருப்பது கூட ஒரு வகை மனோவியாதியோ எனத் தோன்றுகின்றது!

    (டாக்டர் ஜெ. பாஸ்கரன்  - தொடர்புக்கு 09841057047)

    ]]>
    http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/5/18/w600X390/DR_Baskaran2.jpg http://www.dinamani.com/health/health_thodarkal/2016/may/18/தற்கொலை-என்னும்-வியாதி--897.html
    896 மருத்துவம் தொடர்கள் தர்பூசணி பழம் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள்:  அதிகாரிகள் எச்சரிக்கை kirthika PTI Wednesday, May 18, 2016 04:01 PM +0530

    ஆனால், தர்பூசணியைப் பொருத்தவரை மக்கள் எச்சரிக்கையாக பார்த்து வாங்க வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து அவர்கள் கூறியதாவது: தர்பூசணி பழங்களை வாங்கும்போது அதனை முழுமையாகச் சுற்றிப் பார்த்து வாங்க வேண்டும். அதில் ஊசி போட்டது போன்ற துவாரங்கள் இருந்தாலும் பழங்களை மாற்றிவிட வேண்டும். ஏனெனில் பழங்களில் ஊசி மூலம் சிறு சிறு துவாரம் போட்டு, அதனை தண்ணீரில் ஊறவைத்து எடையைக் கூட்டுவதற்கு சிலர் முயற்சி செய்வார்கள்.

    இதுதவிர  உடலுக்கு உபாதை விளைவிக்கும் வண்ணங்களை பழங்களுக்குள் செலுத்தி விற்பனை செய்வதாக வெளிமாநிலங்களில் புகார்கள் வந்துள்ளன. தமிழகத்தில் அதேபோன்ற புகார்கள் ஏதுமில்லை. இருப்பினும் பொதுமக்கள் மிகவும் விழிப்போடு இருக்க வேண்டும். வியாபாரிகள் துண்டுகளாக விற்கும்போது சுகாதாரத்தோடு விற்பனை செய்ய வேண்டும். முத்திரையிடப்பட்ட எடைக் கற்களை பயன்படுத்த வேண்டும். விதிமுறைகளை மீறி விற்பனை செய்தால் பழங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றனர்.

     
     
    ]]>
    http://www.dinamani.com/health/health_thodarkal/2016/may/18/தர்பூசணி-பழம்-குறித்து-அதிர்ச்சியூட்டும்-தகவல்கள் -அதிகாரிகள்-எச்சரிக்கை-896.html