Dinamani - மகப்பேறு மருத்துவம் - http://www.dinamani.com/health/maternity/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2775914 மருத்துவம் மகப்பேறு மருத்துவம் இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால் குழந்தை கறுப்பாக பிறக்குமாமே? Tuesday, September 19, 2017 11:34 AM +0530
இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால் குழந்தை கறுப்பாக பிறக்குமாமே?

தாய் சேய் இருவருக்கும் இரும்புச்சத்து மிக அவசியம். அதுதான் ரத்த சோகை வராமல் காக்கும். கர்ப்பத்திலுள்ள குழந்தையின் கல்லீரலில் இரும்புச்சத்து சேர்த்து வைக்கப்படுவதால் பிறந்த பிறகு முதல் மூன்று மாதங்களுக்கு இச்சத்தையே குழந்தை பயன்படுத்திக் கொள்கிறது. குழந்தை கருப்பாகப் பிறப்பதற்கு, இரும்புச்சத்து, மாத்திரைகள் மற்றும் டானிக் ஆகியவை எந்த வகையிலும் காரணமில்லை. குழந்தையின் சரும நிறம், வடிவம், உடல்வாகு, அறிவுத்திறன் மற்றும் குணங்கள் ஆகிய அனைத்தும் பெற்றோரிடமிருந்து வருபவையே.

கர்ப்பமாக இருக்கும்போது சூடான பானங்கள் சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு சூடு தெரியுமா?

கர்ப்பிணிகள் என்றில்லை, பொதுவாகவே மிதமிஞ்சிய சூட்டில் பானம் - உணவுப் பொருள்களை சாப்பிடும் பழக்கம், ஒரு சிலருக்கு இருக்கலாம். அப்படி சாப்பிடும்போது உணவுக்குழாய் புண்ணாகி அல்சர் வர வாய்ப்புள்ளது.

கர்ப்பிணிகள் சர்க்கரைக்குப் பதிலாக தேன் கலந்து சாப்பிடலாமா?

தேனில் ஆன்ட்டி - ஆக்சிடன்டுகள் அதிகமிருப்பதால் ஆக்ஸிஜன் ப்ரீ - ரேடிக்சின்களைக் கட்டுப்படுத்தி, மூளை, இதயத்திற்குச் செல்லும் ரத்தக்குழாய் செல்களை ஒழுங்காக இயங்க வைக்கும். ரத்த சர்க்கரை அளவில் இன்சுலின் குறைவாக இருப்பவர்கள், சர்க்கரைக்குப் பதிலாக தேன் பயன்படுத்தலாம். இது 'ரத்த சர்க்கரை' அதிகமாக இருப்போருக்கு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மேலும் அதிகரித்து, வயிற்றில் இருக்கும் குழந்தை பாதிக்கப்படும்.

கர்ப்ப காலத்தில் கார்போ ஹைட்ரேட்டு மிகுந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால், உடல் எடை கூடுமா?

இது முற்றிலும் தவறு. வயிற்றிலிருக்கும் குழந்தையின் போஷாக்கிற்கு கார்போ ஹைட்ரேட்டுகள் மிகவும் அவசியம். உடம்பின் ரத்த சிவப்பணுக்கள் மற்றும் மூளை செல்கள் ஆகியவை, தங்களுக்கான இயங்கு சக்திக்கு கார்போ ஹைட்ரேட்டுகளையே பெரிதும் நம்பி உள்ளன.

இவற்றை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு, நீங்களாகவே ஒரு டயட் பின்பற்றினால், உடம்பில் மாவுச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டு கர்ப்பகால மலச்சிக்கல், மார்னிங் சிக்னஸ் போன்ற அவதிகள் வரும்.

கர்ப்பகாலத்தில் ரத்தத்தில் இன்சுலின் - உப்பின் அளவு திடீரென்று கூடுவது ஏன்?
சிலருக்கு ஒபிசிட்டி - மரபியல் காரணமாக இப்படி நிகழலாம். அப்பாவுக்கோ, தாத்தாவுக்கோ இரத்த சர்க்கரை இருந்து, அது அம்மாவின் வழியாக கருவில் இருக்கும் குழந்தைக்கும் பரவ வாய்ப்பு உண்டு. அப்படி பரவும்போது குறைப்பிரசவம், கருப்பையிலேயே குழந்தை இறந்து போதல் போன்ற சிக்கல்கள் ஏற்படும் கருவில் இருக்கும் குழந்தைக்கு அம்மாவின் மூலமாக ரத்தத்தில் உப்பின் அளவு அதிகமாவது 'இன்ட்ராயூட்டரின் குரோத்ரி டார்டேஷன்'. 

உப்பின் அளவு அதிகரிப்பால், கருவிலேயே குழந்தை இறந்துவிடும் நிலைக்கு 'இன்ட்ராயூட்டரின் டெத்' என்று பெயர். அதனால் கர்ப்ப காலங்களில் குறிப்பிட்ட இடைவெளியில், தொடர்ந்து "செக்-அப்' செய்து வர வேண்டும்.

கருவைச் சுமந்திருக்கும் பெண்கள் மல்லாக்க படுத்தால், கருவை நஞ்சுக்கொடி சுற்றிக் கொள்ளும் என்கிறார்களே, உண்மையா? எப்படி படுக்க வேண்டும்?

மல்லாந்த நிலையில் படுக்கக்கூடாது என்பது சரிதான். ஆனால் அதற்காக கூறப்படும் காரணம்தான் சரியல்ல. மல்லாந்த நிலையில் படுத்தால், கனமான கருப்பை இதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் ரத்தக்குழாய்களை அழுத்தும். அப்போது இதயத்துக்குத் தேவையான ரத்தம் போய்ச் சேராமல் பி.பி. இறங்கும். இதனால் தலை சுற்றி மயக்கம் வரும். இடது பக்கமாக ஒருக்களித்துப் படுப்பதே தாய் - சேய் இருவருக்கும் நல்லது.

(பவித்ரா எழுதிய 'பெண்களுக்கான கர்ப்ப  கால ஆலோசனைகள்' நூலிலிருந்து...  வெளியீடு: அருணா பப்ளிகேஷன்)

 

]]>
Pregnancy, Iron, மகப்பேறு, இரும்புச் சத்து, ரத்த சோகை, கர்ப்பிணி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/19/w600X390/pregnancy_620x350_71485332521.jpg http://www.dinamani.com/health/maternity/2017/sep/19/pregnancy-care-frequently-asked-questions-2775914.html
2770199 மருத்துவம் மகப்பேறு மருத்துவம் கர்ப்பிணிகளுக்குப் பாதிப்பை உண்டாக்கும் ‘ஹைப்பர் மெசிஸ் கிரேவிடம்’ என்றால் என்ன? கார்த்திகா வாசுதேவன் Saturday, September 9, 2017 12:06 PM +0530  

இங்கிலாந்து இளவரசரான வில்லியம், அவரது மனைவி கேட் மிடில்டனைத் தெரியாதவர்களென எவருமிருக்க வாய்ப்பில்லை. கடந்த வாரத்தில் தான் இவர்களது முதல் வாரிசும் அடுத்த கேம்பிரிஜ் இளவரசனுமான குட்டிப்பையன், ப்ரின்ஸ் ஜார்ஜ் முதல்முறையாகப் பள்ளி செல்லத் தொடங்கினான். இங்கிலாந்து இளவரசர்கள் வழக்கமாகப் பயிலும் தாமஸ் பாட்டர்ஸீ பள்ளியில் தான் ஜார்ஜும் சேர்ந்து பயிலவிருக்கிறார். ப்ரின்ஸ் ஜார்ஜுக்கு ஒரு குட்டித் தங்கை உண்டு. அவரது பெயர் ப்ரின்சஸ் சார்லட். ஜார்ஜ் முதல் முறையாகப் பள்ளிக்குச் செல்வது அரண்மனையின் கொண்டாட்டங்களில் ஒன்றாக இருந்த போதிலும், ஜார்ஜின் தாயாரான இளவரசி கேட் மிடில்டனால் அந்த கொண்டட்டத்தில் பங்கு கொள்ள இயலவில்லை. ஏனென்றால் அந்தச் சமயத்தில் கேட், தனது மூன்றாவது குழந்தையைக் கருவுற்றிருந்ததோடு கடுமையான ஹைப்பர் மெசிஸ் கிரேவிடம் எனும் உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் தான் தனது மகன், முதன்முதலில் பள்ளி செல்லும் போதான கொண்டாட்டங்களில் அவரால் பங்கு கொள்ள முடியவில்லை. இன்னும் சில நாட்களில் குட்டி இளவரசன் ஜார்ஜுக்கும், குட்டி இளவரசி சார்லட்டுக்கும் அடுத்ததாக மற்றுமொரு குட்டி இளவரசனோ, இளவரசியோ பிறந்து இங்கிலாந்து அரச குடும்பத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தவிருக்கின்றனர்.

 

ஹப்பர் மெசிஸ் கிரேவிடம்...

கேட் மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கப் போவதோ, அல்லது இளவரசன் ஜார்ஜ் பள்ளிக்குச் செல்லப் போவதோ கூட வழக்கமான விஷயம் தான். இங்கே நம்மைச் சற்றே குழப்பத்தில் ஆழ்த்தக்கூடிய ஒரே விஷயம். இந்த ‘ஹைப்பர் மெசிஸ் கிரேவிடம்’ எனும் உடல்நலக் குறைபாடு மட்டுமே தான்! அதென்ன கேட்கவே புதுமையாக இருக்கிறதே? ஹைப்பட் மெசிஸ் கிரேவிடம் என்பது இந்தியாவில் இருக்கும் கர்ப்பிணிகளிலும் கூடப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வழக்கமான ஒரு குறைபாடு தானா? அல்லது, இது ஒரு புது விதமான நோய்க்குறியா? என்றெல்லாம் கேள்விகள் எழலாம்...

உண்மையில் பெயர் தான் ரொம்பவும் அந்நியமாகத் தோன்றுகிறதே தவிர, இது உலகில் உள்ள அனைத்து கர்ப்பிணிப் பெண்களிலும், குறிபிட்ட சிலரைத் தாக்கக் கூடிய வழக்கமான பாதிப்பு தான். இந்தியாவில் இதை கடுமையான தலைச்சுற்றல் மற்றும் வாந்தி மயக்கம் என்று சிம்பிளாக முடித்து விடுகிறோம். 

ஆனால் அந்த வாந்தி, மயக்கத்திலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையிலானது இந்த ஹைப்பர் மெசிஸ் கிரேவிடம். கர்ப்பிணிகளுக்கு, கருவுற்ற தொடக்க மாதங்களான 1 முதல் 6 மாதங்கள் வரை மட்டுமே வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கும். சிலருக்கு ஆறாம் மாதத்தின் இறுதியிலிருந்து படிப்படியாக வாந்தியும், தலைச்சுற்றலும் வெகுவாகக் குறைந்து பிரசவ நெருக்கத்தில் வாந்தி முற்றிலுமாக நின்று விடும். இது தான் வழக்கமான ஒன்று. ஆனால் மேலே குறிப்பிட்டதைப் போல உலகில் வெகு சிலருக்கு மட்டும் வாந்தியும், தலைச்சுற்றலும், மயக்கமும் பிரசவ நெருக்கத்திலும் கூட மிகக் கடுமையாக இருக்கும். அதைத் தான் மருத்துவர்கள் ஹைப்பர் மெசிஸ் கிரேவிடம் என்று குறிப்பிடுகிறார்கள்.

ஹைப்பர் மெசிஸ் கிரேவிடம் அறிகுறிகள்...

 • உடலில் கடுமையான நீரிழப்பு ஏற்படும்.
 • நிரிழப்பின் காரணமாக உடல் ஆரோக்யத்துக்குத் தேவையான மினரல்கள் மற்றும் உப்புக்கள் உடலிலிருந்து அதிக அளவில் வெளியேறி விடும்.
 • இதனால் பாதிப்படைந்த கர்ப்பிணிகளின் உடல் எடை தொடர்ந்து குறைந்து கொண்டே வரும்.
 • எந்த அளவுக்கு என்றால் தாயின் எடையானது கருவுறுவதற்கு முன்பிருந்த நிலையைக் காட்டிலும் 5 சதவிகிதம் குறைய் வாய்ப்புகள் உண்டு. இந்த எடைக்குறைவு வயிற்றுக்குள்ளிருக்கும் குழந்தையின் வளர்ச்சி விகிதத்தைப் பாதிக்கும்.
 • பொதுவாக இத்தகைய பாதிப்புகள் உலக கர்ப்பிணிகளிடையே நூற்றில் 1 சதவிகிதம் மட்டுமே வர வாய்ப்புகள் உண்டாம். ஆனால் கேட் தனது முதல் பிரசவ காலத்திலும் இதே விதமான சிக்கலைச் சந்திர்க்க நேர்ந்த காரணத்தால் அவருக்கு இந்த 3 ஆவது பிரசவத்தில் ஹைப்பர் மெசிஸ் கிரேவிடம் பிரச்னையின் பாதிப்பு 15 சதவிகிதமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனராம்.

விளைவுகள்...

 • சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ள மறந்தால் ஏற்படும் 
 • இதற்கு சரியான வகையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால், இதன் பக்க விளைவுகள், கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சி விகிதத்தில் பாதிப்பை ஏற்படுத்தி குறைப்பிரசவமாகும் வாய்ப்பு உண்டாம்.
 • அது மட்டுமல்ல தாயின் உடலில் ஏற்படும் கடுமையான நீரிழப்பின் காரணமாக ரத்தத்தில் நீரின் சதவிகிதம் குறைந்து அடர்த்தி மேலும் அதிகரித்து பிசுபிசுப்புத் அதிக தன்மையுடன் உடல் உள்ளுறுப்புகளுக்கும் ரத்தம் உறைவதற்கும் அதிக வாய்ப்புகள் உண்டாம்.
 • அதோடு கருவுற்றிருக்கும் பெண்களுக்கு இந்த பாதிப்பு பிரசவ காலம் வரை தொடர்வதால் அவர்களுடைய மனநிலையிலும் தொடர்ச்சியான மாறுதல்கள் ஏற்பட்டு அவர்களது நிலையைக் கவலக்குள்ளாக்கி பிரசவத்தை சிக்கலாக்கி விடக் கூடும்.

ஹைப்பர் மெசிஸ் கிராவிடம் குறைப்பாட்டைக் களைவதற்கான சிகிச்சை முறைகள் ஏதாவது...

இதற்கான குறிப்பிட்ட சிகிச்சைமுறை என்ற ஒன்றை இதுவரையிலும் வரையறுக்க முடிந்ததில்லை.  ஆனால் சில வழிமுறைகளைப் பின்பற்றி வந்தால் இந்தக் குறைபாட்டின் தீவிரம் குறைவதாக மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

 • கர்பிணிகள் எப்போதுமே வயிறு நிறைந்து திணறும் அளவுக்கு உண்ணக் கூடாது. பிடித்த பதார்த்தங்கள் என்றாலும் அவற்றை ஒரே வேளையில் நிறைவாக ருசித்து உண்பதைக் காட்டிலும், தனித்தனியாகப் பிரித்து பசி உணர்வு எழும் போது மட்டுமே, அதாவது ருசிக்காக அல்லாமல் பசிக்காக மட்டுமே உண்ணுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். அதனால் கடுமையான வாந்தி என்பது படிப்படையாகக் குறைய வாய்ப்புகள் உண்டு.
 • இஞ்சியை அப்படியே பச்சையாகவோ அல்லது பிஸ்கட்டுகள், அல்லது மாத்திரைகள் வடிவத்திலோ எடுத்துக் கொண்டாலும் கடுமையான வாந்தி பாதிப்பு குறையும்.
 • தகுந்த மகப்பேறு மருத்துவர் உதவியுடன், அவரது வழிகாட்டுதலில் நே குவான் அக்குபிரஸ்ஸர் சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் கூட கடுமையான வாந்தி மற்றும் மயக்கத்திலிருந்து விடுபட வாய்ப்புகள் உண்டு.
 • ஹப்பர் மெசிஸ் கிரேவிடம் பாதிப்பால் உடலிலுள்ள விட்டமின்கள் குறிப்பாக நீரில் கரையும் விட்டமினான தயமின் இழப்பு அதிகரிக்க வாய்ப்பிருப்பதால், அம்மாதிரியான சூழலில் இயற்கையாகத் தயமின் அளவு அதிகமிருக்கக் கூடிய உணவுப் பொருட்களை உண்பதில் அக்கறை செலுத்த வேண்டும் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள்.


 

]]>
pregnancy, ஹைப்பர் மெசிஸ் கிரேவிடம், Hyperemesis Gravidarum, severe nausea & vomiting, Kate Middleton http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/9/w600X390/hyperemesis_gravid.jpg http://www.dinamani.com/health/maternity/2017/sep/09/what-is-hyperemesis-gravidarum-which-affect-pregnent-mothers-2770199.html
2674997 மருத்துவம் மகப்பேறு மருத்துவம் தலைப்பிரசவமா? பயம் வேண்டாம்! Wednesday, March 29, 2017 03:32 PM +0530
 
பிரசவம் என்பது மறுபிறவி மாதிரி... அதை உடல் வலுவுடனும், மனவலுவுடனும் தாங்க வேண்டும் என்பதற்காகவே நம் இந்திய பாரம்பரியத்தில் எத்தனயோ விஷயங்களைப் பார்த்து பார்த்து செய்து வைத்திருக்கின்றார்கள்.
 
அவை ஆச்சரியமானவை மட்டுமல்ல, விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டவை என்பதுதான் இன்னும் அதிசயமானவை என்று சொல்ல வேண்டும்.
 
மனதுக்கான நல்ல விஷயங்களும் நம்முடைய பாரம்பரியத்தில் நிறைய அடங்கியிருக்கின்றன. முக்கியமாக, பிரசவத்துக்கு முன்பு வளைகாப்பு நடத்துகிற விஷயத்தையே சொல்லலாம். வளைகாப்புக்கு நிறைய பெண்கள் கூடி, கர்ப்பவதிக்கு மூத்த சுமங்கலிகள் வளையல் போடுவார்கள். இதற்கான காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், 'எங்களை எல்லாம் பார்...நாங்கள் எத்தனை பிள்ளைகளைப் பெற்று உன் முன் நிற்கிறோம்?! நீயும் உன் பிரசவத்தை சுலபமாக கடப்பாய்... தைரியமாக இரு!' என்பதை இங்கு நாம் எடுத்துக் கொள்ளலாம்.
 
இந்தச் சடங்கில் ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமையையும் கவனிக்கலாம். வளையல் இடும் பெண்ணின் கையை கர்ப்பப்பைக்கு ஒப்பிட்டுப் பாருங்கள். கை விரல்களை கூப்பி, வளையல்களை உள்ளே செலுத்தும்போது சற்று சுலபமாக இருக்கும். வளையலை மணிக்கட்டுப் பகுதிக்குச் செலுத்தும்போது சற்று கடினமாகி, அந்த வலியைச் சற்றே சற்று பொறுத்துக் கொண்டால்...  அடுத்த நிமிடமே கரங்களில் வளையல் ஏறிவிடும். இப்படித்தான் பிரசவமும்!
 
இந்த வளையல்கள் ஏற்படுத்தும் அதிர்வு ஓசை, கருவில் வளரும் குழந்தைக்கு நல்ல தாலாட்டு. நம் தாய் நம்முடன் இருக்கிறாள் என்று குழந்தைக்கு அது கொடுக்கும் பாதுகாப்பு உணர்வு, அழகானது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.
 
அந்தக் காலத்தில் வீடு என்பது பெரியதாக இருந்தது. பிரசவத்துக்கு முன்பு அடிக்கடி உறக்கம் கலைந்து, அந்தப் பெண்ணுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். இரவு நேரத்தில் கர்ப்பமான பெண் அறையைக் கடந்து, கூடத்தைக் கடந்து, பின்புறமிருக்கும் கழிவறைக்குப் போகும்போது அந்த வளையல் சப்தம் அந்த பெண் எங்கே செல்கிறாள் என்பதை சட்டென்று சுட்டிக்காட்டும்.  'ஏன்டி, என்னை எழுப்பக்கூடாதா... இரு நானும் வர்றேன்' என்று உதவிக்குச் செல்வார்கள் வீட்டில் இருக்கும் பெண்கள்.
 
வளையல் போட்ட 'கையோடு' கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக தாய் வீட்டுக்குச் செல்வதிலும் அடங்கி இருக்கின்றன அவர்களின் மனநலம் சம்பந்தப்பட்ட நுணுக்கங்கள். இந்திய நாட்டில் மட்டுமின்றி, ஆசிய நாடுகளில் எல்லாம் பிரசவம் என்று வந்தாலே அந்தப் பெண் தாய் வீட்டுக்குச் சென்று விடுவது வழக்கமாக இருக்கிறது. ஆம்... பிரசவமாகும் பெண்ணின் உடல்நலம் மட்டுமல்ல, மனநலத்தையும் பாதுகாக்கிற பணி, தாய் வீட்டுக்குத்தான் என்று பார்த்துப் பார்த்து இந்த ஏற்பாட்டை செய்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.
 
நம் அம்மா, அப்பா, கணவர், சொந்தங்கள், மருத்துவர் எல்லாம் நம்மைப் பிரசவம் எனும் அந்த பெருநிகழ்வில் இருந்து பத்திரமாக மீட்பார்கள்...' என்ற நம்பிக்கைதானே அன்று அட்டவணைகள் இல்லாமல், செக்கப்புகள் இல்லாமல், மருந்து - மாத்திரைகள் இல்லாமல் எல்லா பிரசவங்களையும் சுகப்பிரசவமாக்கின!
 
அந்த நம்பிக்கையை கர்ப்பிணிகளின் மனத்தில், அவளைச் சுற்றியுள்ளவர்களே ஆழமாக விதைக்கலாம். அதையெல்லாம் செய்து பாருங்கள்... இரண்டு, நான்கு, ஆறு... என்று மாதங்கள். அவர்களுக்குத் தெரியாமலே சுகப்பிரசவத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும்....
 
ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்க்கைமுறை அவசயம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்.....!

ச.பாலகிருஷ்ணன், கோவை

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/29/w600X390/bangles.jpg http://www.dinamani.com/health/maternity/2017/mar/29/தலைப்பிரசவமா-பயம்-வேண்டாம்-2674997.html
2671340 மருத்துவம் மகப்பேறு மருத்துவம் பிரசவத்தின் போதான மரணத்தை தடுக்கும் புதிய மருந்து! Thursday, March 23, 2017 01:31 PM +0530 பெண்கள் பிரசவத்தின் போது மரணமடைவது பெரும்பாலும் பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் மேலதிகமான ரத்தப் போக்கு, நோய்க்கிருமிகளின் தாக்கம், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளால்தான். இதற்குத் தீர்வாக சமீபத்தில் இன்ஹேலர் வடிவில் புதிய மருந்து ஒன்றினை மருத்துவத் துறை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் பெண்கள் பிரசவத்தின் போது ஏற்படும் அதிகளவு ரத்தப்போக்கினால் விளையும் திடீர் மரணத்தைத் தடுத்துவிட முடியும் என்கிறார்கள் இவர்கள்.

ஊசி மூலம் செலுத்தப்பட்டுவந்த ஆக்ஸிடோசின் எனும் மருந்து, இப்போது தூள் வடிவில் தயாரித்துள்ளார்கள். இந்த தூளை இன்ஹேலரில் அடைத்து.  பிரசவத்துக்கு முன் இந்த மருந்தை வாய் வழியே இன்ஹேலரின் துணையுடன் உறுஞ்சுவதன் மூலம் பிரசவ சமயத்தில் ஏற்படக்கூடிய போஸ்ட்பார்டம் ஹெமரேஜ் postpartum haemorrhage (PPH)அல்லது போஸ்ட்பார்டம் ப்ளீடிங் (postpartum bleeding)போன்ற பிரச்னைகளால் ஏற்படும் உயிரிழப்பைத் தவிர்த்துவிடலாம். 

ஒவ்வொரு வருடமும் உலகம் முழுதும் 3,00,000 பெண்கள் பிரசவத்தின் போது மரணமடைந்துள்ளனர். பொருளாதரீதியாக பின் தங்கிய நாடுகளில் மிக அதிக அளவில் பெண்கள் பிரசவத்தின் போது மரணம் அடைகிறார்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதற்குக் காரணம் போதிய மருத்துவ வசதி இல்லாதாதும், அத்தியாவசிய மருந்துகளை உரிய முறைகளில் பாதுகாக்க முடியாததும் என்பது வருத்தமடையச் செய்யும் உண்மை. இதற்குக் தீர்வாக இந்த கண்டுபிடிப்பு இருக்கும் காரணம் முன்பு ஊசி வடிவத்தில் ஆக்ஸிடோசின் இருந்ததால் அதை பாதுகாப்பது கடினமாக இருந்துவந்தது. தவிர திறமையான மருத்துவர்களால் மட்டுமே அதை கவனமாகக் கையாள முடியும். ஆனால் இப்போது இன்ஹேலர் வடிவில் வந்துவிட்ட ஆக்ஸிடோசினை பாதுகாப்பதும் எளிது, பயன்படுத்துவதும் சுலபம். 

இந்த கண்டுபிடிப்பால் குறைந்த மருத்துவ வசதி இருக்கும் இடங்களில் கூட இன்ஹேலரைப் பயன்படுத்தி தேவையற்ற உயிர் இழப்புகளைத் தடுத்துவிடலாம் என்றார் ஆராய்ச்சிக் குழு தலைவர் மிஷல் மெக்டோஷ். இந்த ஆராய்ச்சி முடிவுகள் மூலம் ஆக்ஸிடோசின் இன்ஹேலர் அல்லது ஊசி மூலம் செலுத்தப்படலாம், ஆனால் அந்தந்த சூழல்களுக்கு ஏற்ப, அந்தப் பயன்பாடு இருக்கும். தவிர இந்த ஆராய்ச்சியை மேலும் தொடர்ந்து புதிய மருந்தொன்றை தயாரிக்கவேண்டும் எனவும் அதற்கு அதிக செலவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கர்ப்பமடையாத சில பெண் தன்னார்வலர்களுக்கு இரண்டு விதத்திலும் ஆக்ஸிடோசின் தரப்பட்டது. இன்ஹேஸர் மூலம் கொடுக்கப்பட்ட மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டது இரண்டும் ஒரே பலனைத் தந்தது என கண்டறிந்தனர்.  இந்த ஆராய்ச்சி முடிவுகள் தென் ஆப்ரிகாவிலுள்ள ராயல் கல்லூரியில் செய்வாக்கிழமை வெளியிடப்பட்டது. (Royal College of Obstetricians and
Gynaecologists World Congress in Cape Town, South Africa)

MIPSஐ சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து லண்டன் க்ளாஸ்கோ ஸ்மித்க்ளைன் (GlaxoSmithKline) நிறுவனம் இந்த தூள் வடிவ இன்ஹேலர் வகை ஆக்ஸிடோசின் மருந்தை தயாரித்துள்ளது.
 

]]>
பிரசவம், பேறுகாலப் பிரச்னைகள், Pregnancy death, Oxytocin http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/23/w600X390/baby.jpg http://www.dinamani.com/health/maternity/2017/mar/23/பிரசவத்தின்-போதான-மரணத்தை-தடுக்கும்-புதிய-மருந்து-2671340.html
2664256 மருத்துவம் மகப்பேறு மருத்துவம் பேறுகால பலன் திட்டம் முதல் குழந்தைக்கு மட்டுமா? Saturday, March 11, 2017 11:13 AM +0530 பேறுகாலப் பலன் திட்டத்தின் (எம்பிபி) கீழ் நடைமுறையில் இருக்கும் முறையை மாற்றி முதல் பிரசவத்துக்கு மட்டும் முழு பலனையும் அளிக்கும் வகையிலான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது.

மாநிலங்களவையில் இதுதொடர்பாக மத்திய பெண்கள், குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி கூறுகையில், "நாடு முழுவதும் பேறுகாலப் பலன் திட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதல் நடைமுறைகள் வரைவு தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்தத் திட்டத்தின்படி முதல் இரண்டு பிரசவங்களுக்கும் பெண்களுக்கு நிதி உதவி அளிக்கப்படும். நிதி உதவியை முதல் பிரசவத்துக்கு மட்டுமாக குறைக்கலாம் என்ற முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை' என்றார்.

புத்தாண்டு தினத்தையொட்டி, கடந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தியபோது, பேறுகாலப் பலன் திட்டம் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.

இந்தத் திட்டமானது கடந்த 2010-ஆம் ஆண்டிலிருந்து நாடு முழுவதும் 56 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பேறுகாலப் பலன் திட்டத்தின் கீழ், பெண்களுக்கு பிரசவ காலத்திலும், குழந்தைக்கு பாலூட்டும் காலத்திலும் சில நிபந்தனைகளின் அடிப்படையில் ரூ.6,000 நிதி உதவித் தொகை வழங்கப்படும். முதல் இரண்டு பிரசவத்துக்கு இந்த நிதி உதவி வழங்கப்படும்.
நிகழ் நிதியாண்டில் (2017-18) தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில், இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரூ.2,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

]]>
Maternity Benefits, பேறுகால பலன் திட்டம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/11/w600X390/b45c0c904d6331c0f8ec65e8da9d3c6c.jpg http://www.dinamani.com/health/maternity/2017/mar/11/பேறுகால-பலன்-திட்டம்-முதல்-குழந்தைக்கு-மட்டுமா-2664256.html
2638782 மருத்துவம் மகப்பேறு மருத்துவம் கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் Thursday, January 26, 2017 05:32 PM +0530 பெண்களுக்கு மனதிலும் உடலிலும் பல மாற்றங்கள் ஏற்படும் காலம் கர்ப்ப காலம். இச்சமயத்தில் சில பெண்களுக்கு அழையா விருந்தாளியாக சர்க்கரை நோய் வந்துவிடும். பொதுவாக நாம் சாப்பிடும் உணவு குளுகோஸாக மாறி, ரத்தத்தில் கலக்கிறது. கணயத்தில் சுரக்கும் இன்சுலின் இந்த குளுகோஸை உடல் திசுக்கள் பயன்படுத்தும்படியாகச் செய்கிறது. கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடி, குழந்தையின் வளர்ச்சிக்காகப் பல்வேறு ஹார்மோன்களை சுரக்கிறது. அதன் காரணமாக இன்சுலின் செயல்பாடு பாதிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்துவிடுகிறது. இதைத்தான் மருத்துவர்கள் கர்ப்ப கால சர்க்கரை நோய் என்கிறார்கள். கர்ப்ப காலத்தில் 20 வது வாரத்தில் இது ஏற்படும். பிரசவத்துக்குப் பின் சரியாகிவிடும்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் இந்த சர்க்கரை நோயை உடற்பயிற்சிகள் மூலமாகவும் சத்துணவுகளாலும் கட்டுப்படுத்தலாம்.. 25 வயதுள்ளவர்கள், பெற்றோருக்கு சர்க்கரை நோய் உள்ளவர்கள், உடல் பருமன் உடையவர்கள் போன்றோர் கர்ப்ப கால ஆரம்பத்திலேயே அதைப்பற்றி மருத்துவரிம் கூறிவிட வேண்டும். கருவுற்ற பெண்கள் அனைவரும் ரத்தத்தில் சர்க்கரை அளவைப் பரிசோதித்துக் கொள்வது மிகவும் முக்கியம். கருத்தரித்த 24-வது வாரத்தில் இருந்து 28-வது வாரத்துக்குள்ளாக இனிஷியம் குளுகோஸ் சேலன்ஜ் டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அதன் பின் சில நாட்கள் கழித்து குளுகோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்டும் எடுத்து விட வேண்டும். உடல் எடையை கட்டுக்குள் வைத்திருந்தால் கர்ப்ப காலத்தில் சர்க்கரையைத் தவிர்க்கலாம். உணவில் நார்ச்சத்து அதிகம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். நார்சத்து நிறைந்த உணவுகளாகிய தானிய வகைகள், பழங்கள், முக்கியமாக ஆரஞ்சு, ஆப்பிள், காய்கறிகளான அவரை பச்சை பட்டாணி, ப்ரோக்கோலி, பசலை கீரை போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கலோரிகள் சரியாகக் கிடைக்கும் உணவை சாப்பிடவேண்டும். கொழுப்புச்சத்தும் அதிகரித்துவிடாமல் உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

]]>
கர்ப்ப கால சர்க்கரை நோய், diabetes, Pregnancy http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/26/w600X390/stream_img.jpg http://www.dinamani.com/health/maternity/2017/jan/26/கர்ப்ப-காலத்தில்-சர்க்கரை-நோய்-2638782.html