Dinamani - மகளிர் நலம் - http://www.dinamani.com/health/womens-health/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2653613 மருத்துவம் மகளிர் நலம் மெனோபாஸ் என்றால் என்ன? Tuesday, February 21, 2017 05:49 PM +0530 இந்தியப் பெண்களுக்கு பொதுவாக இறுதி மாதவிடாய் சுமார் 50 வயதில் ஏற்படும். ஒரு பெண்ணின் உடலில் பூப்பெய்தலுக்குப் பிறகு ஏற்படும் பெரிய மாற்றமாக இதைக் கூறலாம். மெனோபாஸிற்கான அறிகுறிகள், சிகிச்சைகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் இவற்றைத் தெளிவாக விளக்குகிறது இக்கட்டுரை -டாக்டர். பவானி பாலகிருஷ்ணன்

மருத்துவ ரீதியாகக் கூறவேண்டுமானால் ‘மெனோபாஸ்’ என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் கடைசியாக ஏற்படும் மாதவிடாயைக் குறிக்கும். தொடர்ந்து 12 மாதங்களுக்கு மாதவிடாய் ஏற்படாத போதுதான் அதை இறுதி மாதவிடாய் என்று கூறமுடியும். ஆனால் பொதுவாக மெனோபாஸ் என்று குறிப்பிடுவது இறுதி மாதவிடாய்க்கு முன்னதாக சில வருடங்கள் (3 – 4 வருடம்) உடலளவில் ஏற்படும் மாற்றங்களைத்தான்! சிலருக்கு 40 வயதுக்கு முன்னதாகவே இது ஏற்படும். வேறு சிலருக்கு கர்ப்பப்பையை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றிய பிறகு மாதவிடாய் ஏற்படுவது நின்றுவிடும்.

மெனோபாஸ் எவ்வாறு ஏற்படுகிறது?

ஒவ்வொரு பெண்ணிலும் கருமுட்டைப் பை, கருமுட்டைகளை உற்பத்தி செய்து, விடுவிக்க ஆரம்பிக்கிறது. அப்போது ஈஸ்ட்ரோஜென் (Estrogen), ப்ரோஜெஸ்டெரோன் (Progesterone) எனப்படும் ஹார்மோன்களின் துணையினால், பல்வேறு செயல்களின் மூலம், மாதவிடாய் ஆரம்பமாகிறது. இச்செயல் 30 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்கிறது. சுமார் 45 வயதிற்குமேல் ஈஸ்ட்ரோஜென் சுரப்பது படிப்படியாகக் குறைந்து சில வருடங்களில் முழுமையாக நின்றுவிடுகிறது. இதனால் மாதவிடாய் ஏற்படுவதும் நின்றுவிடுகிறது.

இறுதி மாதவிடாய் ஏற்படப் போவதற்கான அறிகுறிகள்

மாதவிடாயில் மாற்றம்

இதுதான் பொதுவாக முதலில் ஏற்படும். மாதாமாதம் வராமல் இருப்பது, அதிக அல்லது குறைவான ரத்தப்போக்கு, அதிக நாட்கள் அல்லது குறைவான நாட்கள் ரத்தப்போக்கு.

ஹாட் ஃப்ளஷ்ஸஸ் (Hot flushes)

கிட்டத்தட்ட 75 சதவிகிதப் பெண்களுக்கு இது ஏற்படும். திடீரென முகம், கழுத்து, நெஞ்சுப்பகுதி, பாதம் மற்றும் உள்ளங்கைகள் சூடாகி விடும். சில நொடிகள் முதல் சில நிமிடங்கள் வரை இது நீடிக்கும். இரவு பகல் என்று ஒரு நாளில் பல தடவை இது ஏற்படலாம். சில மாதங்கள் முதல் சில வருடங்கள் வரை இது நீடிக்கும். இதன் வீரியம் நபருக்கு நபர் மாறுபடும். இதைக் கண்டு பயப்படத் தேவையில்லை. அசௌகரியத்தைத் தவிர வேறு எந்தப் பாதிப்பும் இதனால் உடலுக்கு ஏற்படுவதில்லை.

வியர்வை

பொதுவாக இரவு நேரங்களில் வியர்க்கும். சிலருக்கு இது தூக்கத்தைப் பாதித்து, ஆடை மற்றும் தலையணை, போர்வைகளைக்கூட நனைத்துவிடும்.

தூங்குவதில் சிரமம்

மேற்சொன்ன காரணங்களாலும், படபடப்பு, பதட்டம் போன்றவற்றாலும் சரிவரத் தூக்கம் இருக்காது.

பிறப்புறுப்புகளில் மாற்றம்

ஈஸ்ட்ரோஜன் குறைவாகச் சுரப்பதால் உலர்ந்து போகும். இதனால் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படும். உடலுறவு கொள்வதிலும் சிரமம் ஏற்படலாம். தொற்று ஏற்படும் வாய்ப்பும் அதிகம்.

சிறுநீர் கழித்தல்

அடிக்கடி சிறுநீர் கழித்தல் அல்லது சிறுநீர் போவதைக் கட்டுப்படுத்த முடியாமை போன்றவை ஏற்படும்.

எலும்புகள்

மூட்டு, தசை வலி ஏற்படும். வயதாக ஆக எலும்பு திசுக்கள் குறைந்துகொண்டே வரும். உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும்பொழுது எலும்பு திசுக்களின் அடர்த்தி குறையும். இதைத்தான் ‘ஆஸ்டியோபோரோஸிஸ்’ என்பார்கள். இது எந்த அறிகுறியையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் எளிதாக சிறு காயங்களுக்கே எலும்பு முறிவு ஏற்படும். இடுப்பு, கை, முதுகுத் தண்டு எலும்புகள்தான் பொதுவாக பாதிப்புக்கு உள்ளாகும்.

முடி

மாதவிடாய் நின்றபிறகு, அக்குள் மற்றும் உடலின் பிற பகுதிகளில் ரோமம் குறைவாகக் காணப்படும். சிலருக்கு முகத்தில் முடி அதிகமாகலாம். தலைமுடி உதிர்தலும் அதிகமாகலாம்.

பற்கள்

உமிழ்நீர் சுரப்பது குறையும். ஈறுகளில் எரிவு எளிதாக ஏற்படலாம். பற்களும் எளிதில் விழுந்துவிடும்.

இதயம்

மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தின் அபாயம் அதிகரிக்கும். நெஞ்சு படபடப்பு ஏற்படும்.

சருமம்

சருமம் உலர்ந்து அரிப்பு ஏற்படும். ஜவ்வுத் தன்மை குறைந்து தொய்வு ஏற்படும். சிலருக்கு சருமத்தில் எரிச்சல், மரத்துப் போதல், ஏதோ ஊறுவது போன்ற உணர்வுகள் ஏற்படும்.

மனோ ரீதியான அறிகுறிகள்

மனச்சோர்வு, பதட்டம், எளிதில் எரிச்சல், கோபம் அடைதல், கவனம் செலுத்துவதில் சிரமம் போன்றவை ஏற்படும்.

மெனோபாஸ் – சமாளிப்பது எப்படி?

மேற்சொன்னவற்றைக் கண்டு பயப்படத் தேவையில்லை. இந்த அறிகுறிகள் அனைத்தும் எல்லோருக்கும் ஏற்படும் என்பது கிடையாது. ஆனால் இவை ஏற்பட்டால் எப்படிக் கையாள்வது என்று தெரிந்து கொள்வது அவசியம்.

ஹாட் ஃப்ளஷ்

மெல்லிய காற்றோட்டமான உடைகளை அணியவும். இது ஏற்பட்டால் பதட்டம் அடையாமல், இது போய்விடும், என்று அமைதியாக இருக்கவும்.

ரொம்பவும் சிரமமாக இருந்தால் மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை பேரில் உட்கொள்ளலாம்.

குளிர்ந்த பானங்கள் பருகுதல், சூடான பானங்கள் தவிர்த்தல், சூடு அதிகமான சூழ்நிலைகளைத் தவிர்த்தல், காரமான உணவுகள் தவிர்த்தல் ஆகியவை உதவும்.

தூக்கக் கோளாறுகள்

தூக்கம் குறித்த சரியான நெறிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் இதை பெரும்பாலும் சரி செய்ய முடியும். (உ-ம்:) பகலில் நல்ல உடல் உழைப்பு, தூங்குவதற்கு முன் காபி, டீ போன்றவற்றைத் தவிர்த்தல், குறிப்பிட்ட நேரத்தில் உறங்கி குறிப்பிட்ட நேரத்தில் விழித்தல், படுக்கையறையை தூக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்துதல் போன்றவை.

பிறப்புறுப்புகள் உலர்தல்

இதற்கு பிரத்தியேகமாக மருந்துகள் உள்ளன. இதை மருத்துவ ஆலோசனையின் பேரில் உபயோகப்படுத்தலாம். சில வகையான சோப்புகளும் இதனை அதிகப்படுத்தலாம், எனவே அதைக் கவனிக்கவும்.

சிறுநீர் பிரச்சினைகள்

இது வேறு பல காரணங்களால் ஏற்படவில்லை என்று மருத்துவ ரீதியாக உறுதி செய்த பின்னர் மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம்.

முடிப் பிரச்சினைகள்

மருத்துவ ஆலோசனை பெறவும். இது தவிர முகத்தில் ஏற்படும் ரோம வளர்ச்சிக்குத் தரமான அழகு நிலையங்களில் செய்யப்படும் குறிப்பிட்ட சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம்.

மூட்டு, தசைவலி

HRT வலி குறைக்க உதவும். உடற்பயிற்சி செய்வதும் உதவும்.

ஆஸ்டியோ போரோஸிஸ்

ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டிருந்தால் மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே உடற்பயிற்சி செய்யவும். திடீர் மற்றும் வேகமான உடல் அசைவுகளைத் தவிர்க்கவும். வைட்டமின் D கால்சியம் மாத்திரைகள் உதவும். இது தவிர, வேறு சில மாத்திரைகளும் ஆஸ்டியோபோரோஸிஸ் தடுக்க உதவும். இதற்கு மருத்துவரை அணுகவும். உணவு மற்றும் உடல் எடையில் கவனம் தேவை. ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

HRT (Hormone Replacement Therapy) என்றால் என்ன?

இந்த சிகிச்சையில் உடம்பில் குறைந்துவரும் ஈஸ்ட்ரோஜன் அளவை சரி செய்ய உதவும். எல்லா வகையான HRT-யிலும், கருமுட்டைப் பை உற்பத்தி செய்யாத ஈஸ்ட்ரோஜனின் குறைபாட்டை வெளியிலிருந்து எடுத்துக்கொள்ளும் ஈஸ்ட்ரோஜன் மூலம் சரிசெய்து கொள்ளலாம். இது ஹாட் ப்ளஷ்ஸஸ், பிறப்புறுப்புகள் உலர்தல், தூக்கத்தைச் சரிசெய்தல், ஆஸ்டியோபோரோஸிஸ் தடுத்தல் போன்றவற்றைச் செய்யும். ஆனால் இந்த சிகிச்சையில் சில பாதிப்புகள் உள்ளன. அதனாலேயே மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

மெனோபாஸ்-க்கு பிறகு செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்

வருடத்திற்கு ஒரு முறையாவது மகளிர் மற்றும் மகப்பேறு நிபுணரைச் சந்தித்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

‘பாப் ஸ்மியர்’ என்னும் பரிசோதனை, கர்ப்பப் பையின் வாயில் ஏற்படும் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க உதவும்.

வருடத்திற்கு ஒருமுறை, ‘மாமோகிராம்‘ மூலம் மார்பகங்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

மாதம் ஒருமுறை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளலாம். தைராய்ட் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

6 மாதத்திற்கு ஒருமுறை இரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை இரத்தத்தில் கொழுப்பின் அளவைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

யோகா எவ்வாறு உதவும்?

யோகப் பயிற்சிகள் செய்து வரும் பெண்களுக்கு மெனோபாஸின்போது உடலில் ஏற்படும் உபாதைகள் குறைவாக இருக்கும். மனதளவில் சமநிலையை உணர்வர்.

யோகப் பயிற்சிகள் நாளமில்லா சுரப்பிகளை நன்கு சமன்செய்யும். அதனால் மெனோபாஸில் ஈஸ்ட்ரோஜனால் ஏற்படும் உடல் அறிகுறிகளை நன்கு சமாளிக்க முடியும்.

மனோரீதியான பிரச்சினைகள், தூக்கக் கோளாறுகள் போன்றவற்றிற்குப் பெரிதும் உதவும். உடல் வளையும் தன்மையை அதிகரிக்கும். மூட்டு மற்றும் தசைகளை உறுதிப்படுத்துவதால் வலி குறைய உதவும். உடல், மனம் தளர்வு நிலையை அடைவதால், எளிதில் கோபம் எரிச்சலடைதல் போன்றவை குறைகிறது.

நன்றி - http://isha.sadhguru.org/blog/ta/iruthi-mathavidai-samalippathu-eppadi

]]>
மெனோபாஸ், மகளிர் பிரச்னை, Menopause http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/21/w600X390/shutterstock_343216721.jpg http://www.dinamani.com/health/womens-health/2017/feb/21/மெனோபாஸ்-என்றால்-என்ன-2653613.html
2638200 மருத்துவம் மகளிர் நலம் நினைத்த காரியத்தை செய்ய முடியாதபோது! Wednesday, January 25, 2017 03:51 PM +0530 மன நலம் காப்போம் - 1
கிளினிக்கல் சைகாலஜி ஸ்பெஷலிஸ்ட் எஸ்.வந்தனாவின் கேள்வி-பதில் பகுதிக்கு ஏராளமான கேள்விகள் வந்து குவிந்தன. இன்னமும் கேள்விகள் வந்துகொண்டே இருக்கின்றன. தேர்வு செய்யப்படும் கேள்விகளுக்கு எஸ்.வந்தனா இந்த வாரம் முதல் பதில் அளிக்கிறார்: 

எனக்கு முதல் குழந்தை பிறந்து 9 ஆண்டுகள் ஆகின்றன. இப்போது நான் இரண்டாம் முறையாக தாய்மை அடைந்திருக்கிறேன். எனக்கு சுகப்பிரசவம் அடைய என்ன செய்யலாம் என்று ஆலோசனை கூறுவீர்களா?
- பவானி மனோன்மணி, 
பாரதிபுரம்.
 
கர்ப்ப நிலை என்பது தாய்க்கும், அவர்களின் குழந்தைக்கும் முக்கியமான தருணமாகும். 

ஏனென்றால், அந்தப் பருவத்தில்தான் குழந்தை உடல் ரீதியாகவும் நன்கு வளர்ச்சியை  தொடங்கும். கர்ப்ப நிலையை மூன்று மூன்று மாதங்களாகப் பிரிக்கலாம்.

அதில் முதல் மூன்று மாதங்கள் உடல் சார்ந்த வளர்ச்சிகள் நடைபெறும். அடுத்த மூன்று மாதத்தில் உடல் வளர்ச்சி மற்றும் மன ரீதியாக வளர்ச்சிகள் நடைபெறும். இது உங்களுக்கு இரண்டாவது பிரசவம் என்பதால் உங்களிடம் பதட்ட நிலை சற்று குறைவாகவே இருக்கும். எனவே இந்த நிலையைப் பயன்படுத்தி உங்கள் குழந்தையின் உடல் மற்றும் மனரீதியான வளர்ச்சியில் கவனத்தை கொண்டீர்களேயானால் நீங்கள் நினைத்ததை விட உங்கள் பிரசவம் சுலபமாக அமைய வாய்ப்புகள் உள்ளது. உங்களின் புலன்களைப் பயன்படுத்தி தங்களை உற்சாகமாக மாற்றக்கூடிய காரியங்களில் ஈடுபடுதல் வேண்டும். இவற்றையெல்லாம் கடைப்பிடித்தீர்களேயானால் உங்களின் பிரசவத்திற்கு மிக உதவிகரமாக அமையும். 

எங்கள் இளைய மகன் வயது 29. அவனுக்கு 13 வயதில் பள்ளிக்கூடத்தில் வலிப்பு வந்தது. பள்ளியில் இருந்து டி.சி கொடுத்துவிட்டார்கள். கடந்த எட்டு ஆண்டுகளாக சைக்யாட்ரி டாக்டரிடம் காண்பித்தோம். 5 ஆண்டுகளாக மூளை நரம்பியல் டாக்டரிடம் காண்பித்து வருகிறோம். மூளை குறைபாடு எப்படி கண்டுபிடிப்பது? மருந்து மாத்திரை தவிர வேறு சிகிச்சை உள்ளதா? திருமணம் செய்து வைக்கும்படி அடம் பிடிக்கிறான். அவனுக்குத் திருமணம் செய்யலாமா? மதுரையில் தங்களைப்போன்ற கிளினிக்கல் சைக்காலஜி நிபுணர்கள் இருந்தால் முகவரி தருவீர்களா?
- கே.வெங்கடேஷ், மதுரை.

வலிப்பு நோய்களில் பல வகை உள்ளது. அதில் உங்கள் மகனுக்கு எந்த மாதிரியான வலிப்பு நோய் உள்ளது என்பதை நீங்கள் விவரமாக கூறவில்லை. தற்போது அந்த வலிப்பு நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதா என்பதையும் நீங்கள் கூறவில்லை. நீங்கள் தற்போது எடுத்துக்கொள்ளும் சிகிச்சையை தவிர்த்துக் கொள்ளாமல் அதனுடன் தகுந்த உளவியலாளரை(சைக்கார்டிஸ்ட்) அணுகி அவரின் ஆலோசனைப்படி செயல்படுதல் வேண்டும். அதற்கு முன்னதாக நீங்கள் நரம்பியல் மருத்துவரை சந்தித்து அவரின் மூளை வளர்ச்சி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்... நரம்பியல் மருத்துவர் ஆலோசனைப்படி சிகிச்சையைப் பின்பற்ற வேண்டும். தற்போதைய மூளை வளர்ச்சி எவ்வாறாக உள்ளது என்பதை அறிந்த பின்பு உளவியல் சார்ந்த மேல் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

என் மூத்த மகன் வயது 30. சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி சென்னையில் 5 வருடம் அலைந்தான். சேமித்த பணத்தையும் இழந்து, வாய்ப்பும் இல்லாமல் கஷ்டப்பட்டு திரும்பி வந்தான். இப்போது பைத்தியம் போல பேசியதையே திரும்ப திரும்ப பேசுகிறான். இதனால் அவனுக்குத் திருமணம் செய்ய பெண் தர மறுக்கிறார்கள். அவனை எப்படி குணப்படுத்துவது?
- வாசகி, திருவண்ணாமலை.

பெரும்பாலும் மனிதர்கள் அவர்கள் நினைத்த காரியத்தை செய்ய முடியாத போது மன  உளைச்சலுக்குத் தள்ளப்படுவார்கள். அதேபோல் உங்கள் மகனும் அவர் நினைத்த  இலக்கை அடைய முடியாத காரணத்தினால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். அவரின் இந்த நிலையை முதலில் நீங்கள் புரிந்து கொண்டும், ஏற்றுக்கொண்டும் அவருக்கு ஆதரவாக இருத்தல் வேண்டும். பின்பு அவர்களின் அன்றாட செயல்கள் எவ்வாறாக உள்ளது என்பதை அறிதல் வேண்டும் உதாரணமாக, அவரின் தூக்கம் பற்றியும், பசியைப் பற்றியும், அவரின் விருப்பத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருக்குமானால் அந்த மாற்றம் 2 வாரங்களுக்கு தொடர்ச்சியாக நீடித்தால் தகுந்த உளவியல் ஆலோசகரை அணுகி  அவரின் ஆலோசனைப்படி செயல்படுதல் வேண்டும். அவரின் மன நிலை இயல்பு நிலைக்குத் திரும்பிய பின்பு திருமணத்தைப் பற்றிக் கலந்து ஆலோசித்தல் நல்லது. 

எனக்கு வயது 80. கடந்த ஒரு வருடமாக மூட்டுவலி உள்ளது. அதைப் பொருட்படுத்தாமல், வழக்கம்போல் நடைப்பயிற்சி செய்து வருகிறேன். மற்றபடி, எனக்கு வேறந்த பழக்கங்களும் கிடையாது. எனது அன்றாடப் பணிகளை தொய்வின்றி செய்துவருகிறேன். இருந்தும் கடந்த ஒரு வருடமாக தூக்கம் சரிவர இல்லை என்பதே பெரிய குறை. அப்படியே தூக்கம் வந்தாலும், இடையே தூக்கம் கலைந்தால் திரும்ப உறக்கமே வருவதில்லை.
- சு.நடராஜன், பழனி.

உங்களுக்கு மூட்டு வலி உள்ளது என கூறி உள்ளீர்கள். முதலில் மூட்டு வலியின் காரணமாக உங்களுக்கு தூக்கம் வரவில்லை என்றால் தக்க ஃபிசியோ அல்லது பிற மருத்துவரை அணுகி சரியான மூட்டுவலி சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே உங்கள் வலியினாலும் கூட தூக்கம் பாதிக்கப்படலாம்.

தூக்கம் மன பிரச்னையில் மட்டும் பாதிக்கப்படுவது அல்லது உடல் பிரச்சனையாலும் பாதிக்கும். மேலும் உங்கள் உடலின் முழு மருத்துவ பரிசோதனை செய்து எல்லா விதத்திலும் ஆரோக்கியமாக உடல் அளவில் உள்ளீர்களா என அறிய வேண்டும். 

இவை அனைத்தும் அறிந்த பின் தூக்கம் வரவில்லை என்றால் மனநலம் சார்ந்த வேறு பிரச்னை ஏதாவது உள்ளதா? தனிமை, உணவு உட்கொள்ளும் பழக்கத்தில் மாறுபாடு போன்றவை என அறிந்துகொள்ளுங்கள். 

இதைத் தவிர்த்து மன அளவில் உங்களுக்கு ஏதாவது பிரச்னை இருந்தால் மேலும் அதைப் பற்றி விவரத்துடன் கடிதம் அனுப்புங்கள். உங்கள் கேள்விகளுக்கு தக்க முறையில் பதில் அளிக்கப்படும். 
(பதில்கள் தொடரும்) 
- ரவிவர்மா

]]>
மன உளைச்சல், woman in depression http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/25/w600X390/034bd9e772c52690e29869b153e2d038.jpg http://www.dinamani.com/health/womens-health/2017/jan/25/நினைத்த-காரியத்தை-செய்ய-முடியாதபோது-2638200.html
2637462 மருத்துவம் மகளிர் நலம் பெண்புத்தி பின்புத்தியா? Tuesday, January 24, 2017 11:45 AM +0530 வளைகுடா நாடுகளுக்கு வந்திருந்த ஒரு அமெரிக்க வீரன் அங்கே ஒரு வித்தியாசமான காட்சியைப் பார்த்தான். உள்நாட்டைச் சேர்ந்த ஒருவன் தெருவில் நடந்து வர, இருபதடி இடைவெளிவிட்டு நான்கு பெண்கள் அவனைத் தொடர்வதைக் கவனித்தான். விசாரித்தான்.

“நான்கு பேரும் என் மனைவிகள்” என்றான் அவன்.

பெண்ணை மதிக்காத எந்தக் குடும்பமும் உயரப்போவதில்லை. “என்னது… நான்கு மனைவிகளா? கொடுத்து வைத்தவன் நீ” என்று பொருமிய அமெரிக்கன் கேட்டான்…

“அழகாக அவர்கள் புடைசூழ நடக்காமல், ஏன் தனியே முன்னால் நடக்கிறாய்?”

“இங்கே ஆண்களுக்குச் சமமாகப் பெண்கள் உடன் வர முடியாது. பின்னால்தான் தொடர வேண்டும்”.

சில நாட்களில் அமெரிக்காவுக்கும், அந்த நாட்டுக்கும் போர் வெடிக்கும் அபாயச் சூழல் வந்தது. அப்போது, அதே ஆசாமி வெளியே வந்தபோது, அவனுக்கு இருபதடி முன்னால் அந்த நான்கு மனைவிகளும் நடந்து சென்றனர். அமெரிக்க வீரன் ஆச்சர்யமானான்.

“அட, எப்போதிலிருந்து பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்தாய்?” என்று கேட்டான். அவன் சிரித்தான்.

“முன்னுரிமையாவது, மண்ணாங்கட்டியாவது! இந்த அமெரிக்க ராஸ்கல்கள் எங்கெங்கே கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்திருக்கிறார்களோ? தெரியாமல் மிதித்துத் தொலைத்துவிட்டால்? அதனால்தான் பெண்களை முன்னால் அனுப்புகிறேன்.”

இதை ஜோக்காகக் கேட்டுவிட்டு சிரிக்கலாம். ஆனால், பெண்களுக்கு எதிராக இதில் ஒளிந்திருக்கும் அநியாயத்தை நீங்கள் தவறவிட மாட்டீர்கள்.

ஆண்கள் வகுத்த சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களைக் குருட்டுத்தனமாக நம்பி தன்னை மூழ்கடித்துக் கொள்ளும் எந்தப் பெண்ணுக்கும் முழுமையான சுதந்திரம் என்பதன் ருசியே கிடைக்காது.

இன்னொரு பக்கம், ஆண்களைப் போல் உடுத்திக் கொள்வதாலோ, அதிகாரம் செய்வதாலோ, முரட்டுக் காரியங்களில் ஈடுபடுவதாலோ, சுதந்திரம் கிடைத்துவிடுவதாக சில பெண்கள் நினைத்துக் கொள்வதைப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது.

ஆண்களுடைய போலிகளாக, பிம்பங்களாக நடந்து கொள்வதில் பெண்களுக்கு என்ன பெருமை இருக்க முடியும்? அவர்கள் தங்களைவிட ஆண்களை உயர்வாக நினைத்து, அந்த உயரத்தை எட்டிப் பிடிக்கப் பார்க்கிறார்கள் என்றல்லவா ஆகிவிடும்?

உண்மையில், வாழ்க்கையை அறிவுபூர்வமாக வாழ முற்பட்டு, அதை விட்டு வெகுதூரம் ஆண் விலகி வந்துவிட்டான். வாழ்க்கையை உணர்வுபூர்வமாக வாழத் தெரிந்திருப்பதால், பெண்ணின் அனுபவங்களே ஆழமானவை. அது ஆணுக்கு சுலபத்தில் கிடைக்காத ஒன்று. அதனால் ஒரு பெண்ணைத் தன் அருகிலேயே வைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை ஆண் புரிந்து கொண்டான்.

இது புரியாமல், ஆண்களின் நிழலில் இருப்பதைப் பெண்கள் ரசித்தார்கள். பெண்ணை மதிக்காத எந்தக் குடும்பமும் உயரப்போவதில்லை. பெண்கள் எந்தத் தரத்தில் வைக்கப்பட்டு இருக்கிறார்களோ, அதைப் பொறுத்துதான் அந்த சமுகத்தின் தரமும் அமையும்.

ஒரு பெண் சந்தோஷமாக இருந்தால்தான் அவளைச் சுற்றியுள்ளவர்களும் சந்தோஷமாக இருக்க முடியும். கோயில்களுக்குள் பெண்களை அனுமதிக்காமல் இருக்க தீட்டு என்று ஒரு புதிய தந்திரத்தைக்கூட ஆண் பயன்படுத்துகிறான்.

உண்மையில் இயற்கை தந்திருக்கும் சில உடல் மாற்றங்களை அசிங்கமாக நினைப்பதுதான் கேவலம். பொதுவாக, வாழ்க்கையில் கிடைக்கும் எதையும் ஆண் தன் புத்தியை வைத்துப் பார்த்துக் கொண்டு இருக்கும் நேரத்தில், பெண் அதை அனுபவித்து உணர்ந்து விடுகிறாள்.

ஆண் கணக்குப் போட்டுக் கொண்டு இருக்கும் நேரத்தில், பெண் நேரடியாக உணர்வுபூர்வமாக வாழ்ந்துவிடுகிறாள். ஆண் அறிவுபூர்வமாக இருப்பதும் பெண் உணர்வுப்பூர்வமாக இருப்பதும் பெரிய கோளாறு அல்ல… அது அச்சப்பட வேண்டிய பிரச்சனையும் அல்ல.

உண்மையில், இரண்டும் இணைந்து செயல்பட்டால், பல உன்னதங்கள் கிடைக்கும். அற்புதங்கள் நேரும்! அப்புறம் கோளாறு எங்கே வந்தது? ஒன்றைவிட மற்றது உயர்ந்தது அல்லது தாழ்ந்தது என்ற நினைப்புதான் அத்தனை பிரச்சனைகளுக்கும் அடிப்படைக் காரணம்.

ஒரு பெண் சந்தோஷமாக இருந்தால்தான் அவளைச் சுற்றியுள்ளவர்களும் சந்தோஷமாக இருக்க முடியும். அதேபோல் ஓர் ஆண் மகிழ்ச்சியாக இல்லையென்றால், அவனைச் சுற்றியிருப்பவர்களின் மகிழ்ச்சியும் போய்விடும்.

இயற்கை, ஆணுக்கும், பெண்ணுக்கும் சில அடிப்படைக் காரணங்களுக்காகவே வெவ்வேறு உடல் அமைப்புகளையும், வித்தியாசமான உடல் உறுதிகளையும் வழங்கி இருக்கிறது. இருவருக்கும் உடல்ரீதியாக வெவ்வேறு இன்பங்கள் இருக்கலாம். ஆனால், அமைதியும், முழுமையான ஆனந்தமும் உடல் தொடர்பானது இல்லை. ஆணுக்கு வேறு ஆனந்தம், பெண்ணுக்கு வேறு ஆனந்தம் என்று இயற்கை பாகுபாடு பார்க்கவில்லை.

ஆனந்தமாக இருப்பது என்பது மனித குலத்தின் அடிப்படை. இதைப் புரிந்து நடந்து கொண்டால், சமூகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எந்த ஏற்றத்தாழ்வும் இருக்காது!

நன்றி - http://isha.sadhguru.org/blog/ta/penbuthi-pinbuthiya/

]]>
women power, பெண்கள் சக்தி, மகளிர் சக்தி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/24/w600X390/penbuthi-pinbuthiya.jpg http://www.dinamani.com/health/womens-health/2017/jan/24/பெண்புத்தி-பின்புத்தியா-2637462.html
2618736 மருத்துவம் மகளிர் நலம் பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானம்! தடுப்பது எப்படி? Tuesday, December 20, 2016 04:57 PM +0530 பெண்களுக்கு மாதவிடாய் நிறைவுபெறும் காலத்தில் எலும்புத் தேய்மானம் ஏற்படுவது இயற்கையான நிகழ்வு.ஆனால் இப்பொழுது இருபது முதல் முப்பது வயதடைய இளம்பெண்களிடையே கூட எலும்பு தேய்மான பாதிப்பு உள்ளது. பல இளம்பெண்கள் கழுத்து வலி, முதுகுவலி, மூட்டு வலியால் துன்பப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் எலும்பு தாதுவில் அடர்த்தி குறைந்து, எலும்பின் வலிமை குன்றுவது தான்.

எலும்பு தேய்மானத்திற்கான காரணங்கள்

இரவு வெகு நேரம் கண் விழிப்பது, காலையில் தாமதமாக எழுவது, இரவு பணி செய்வது, குளிரூட்டப்பட்ட இடங்களில் வேலை செய்வது, ஏ.சி. வாகனங்களில் பயணிப்பது என சூரிய ஒளி நம் உடலிலேயே படாமல் இருப்பவர்கள் இப்பொழுது அதிகம் பேர் உள்ளனர்.

சூரிய ஒளியினால் கிடைக்கக் கூடிய வைட்டமின் டி குறைவால் எலும்பின் அடர்த்தி குறையும். உடலுக்கு ஒரு வடிவத்தை கொடுப்பது எலும்பு. கால்ஷியம் மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களால் எலும்பு உருவாகின்றது. கால்சியத்தை எலும்பு ஏற்றுக்கொள்ள வைட்டமின் டி தேவைப்படுகிறது. இளம்வயதில் எலும்புகள் நீளமாகவும், அகலமாகவும் வளரும். பதினெட்டு வயதுக்கு பின் நீண்டு வளராது. அகலத்தில் தான் வளரும். 30 வயதுக்கு பின் எலும்பின் வளர்ச்சி நின்று விடும்.

அதற்குள் நாம் எலும்பின் உறுதியையும், திண்மையையும் அதிகப்படுத்தி கொள்ள வேண்டும். 30 வயதுக்கு பின் எலும்பின் அடர்த்தி சிறிது சிறிதாக குறைய ஆரம்பிக்கும்.

உணவில் தேவை அக்கறை

அதிக புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உடலில் அமிலத்தன்மையை அதிகரிக்கும். அதனால் எலும்புகள் வலுவை இழக்கும். உணவில் சேரும் அதிகப்படியான உப்பும் எலும்பின் வலிமைக்கு எதிராக அமையும். உடலில் உப்பு அதிகமாகும் பொழுது அதிகப்படியான உப்பு சிறுநீருடன் வெளியேறும். அப்பொழுது அதனுடன் கால்சியமும் தாதுவும் வெளியேறிவிடும்.

அதனால் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சாஸ், அப்பளம், ஊறுகாய், வறுவல் மற்றும் நொறுக்குதீனியை குறைத்து சாப்பிட வேண்டும். பாஸ்போரிக் அமிலம் உள்ள குளிர்ப்பானங்கள் கால்ஷியம் தாதுவை அழிக்கும் தன்மையுள்ளவை. காபி, டீ போன்ற பானங்கள் அதிகம் பருதுவதும் கால்ஷியம் குறைய காரணமாகின்றது.

கால்ஷியம் நிறைந்த உணவுகள்

பால் மற்றும் பால் பொருட்களில் கால்ஷியம் அதிகம் உள்ளது. குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 400 மிலி. பால் அருந்த வேண்டும். வயதானவர்களுக்கு பால் அதிகம் ஜீரணமாவதில்லை. அவர்கள் கால்ஷியம் சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள் மற்றம் கீரைகள் மற்றும் சிறு தானியங்களை உண்ணலாம்.

காய்கறிகளில் பீட்ரூட், வெண்டைக்காய், முருங்கைகாய், சுண்டைக்காய், தாமரைத்தண்டு போன்றவற்றில் கால்ஷியம் அபரிமிதமாக உள்ளது. அகத்திகீரை, முருங்கைகரை, அரைக்கீரை, பசலைக்கீரை, கறிவேப்பிலை, தண்டுக்கீரை, குப்பைமேனி மற்றும் வெற்றிலையில் அதிகம் கால்ஷியம் உள்ளது.

எள், கால்ஷியம் சத்து நிறைந்த ஒரு எண்ணெய் வித்து, எள்ளை வெல்லம் உருண்டைகளாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இரண்டு எள்ளு உருண்டையில் 1400 மி.கி. கால்ஷியம் உள்ளது. எள்ளை பொடியாக செய்து உணவுடன் சாப்பிடலாம். தினமும் 5 பாதாம் பருப்புகளை ஊற வைத்து அரைத்து பாலுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

கேழ்வரகில் பாலை விட அதிக கால்ஷியம் உள்ளது. குழந்தைகளுக்கு கேழ்வரகு மாவில் முருங்கை கீரை கலந்து அடையாக செய்து கொடுக்கலாம். இது ஒரு கால்ஷியம் சத்துள்ள முழுமையான சிற்றுண்டி.

பெரியவர்கள் கஞ்சி கூழாக செய்து சாப்பிட நல்ல பலனிருக்கும்

எலும்பு தேய்மானத்துக்கு மிக அருமையான உணவு மருந்து பிரண்டை என்னும் கொடி. பிரண்டை எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது. இணைப்பு திசுக்களை விரைவில் வளரவும் உதவுகின்றது. சிறந்த வலி நிவாரணியாகவும்,வலி, வீக்கத்தை குறைக்கும் தன்மையுடையதாகவும் உள்ளது. உடைந்த எலும்புகளை எளிதில் சேர்க்கும் தன்மையும் இதற்குஉண்டு. பிரண்டையை துவையலாக செய்து தினம் இரண்டு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வரலாம்.

உடற்பயிற்சியின் அவசியம்

எலும்புகள் உறுதியாக யோகா அல்லது உடற்பயிற்சி மிகவும் அவசியம். இத்தகைய பயிற்சிகள் செய்யும்பொழுது எலும்புகள் வலிமை பெறும். இன்று குழந்தைகள் ஓடி விளையாடுவதே குறைந்து விட்டது. பள்ளி, கல்லூரியில் படிக்கும் இளம் பெண்கள் உடற்பயிற்சிக்கான நேரம் ஒதுக்குவதே இல்லை. சிறுகுழந்தைகளாக இருக்கும்பொழுதே பெற்றோர்கள் குழந்தைகளை ஏதாவது ஒரு விளையாட்டில் பழக்கி விட வேண்டும். பெற்றோர்களும் நேரம் ஒதுக்கி குழந்தைகளுடன் யோகாசனம், நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிளிங், தோட்ட வேலைகள் என்று செய்ய, குடும்ப ஆரோக்கியம் மேம்படும். உடற்பயிற்சி தசைகளை வலுவாக்கும்.

வலுவான தசைகள் எலும்புகளை பாதுகாக்கும். ஒல்லியாக இருப்பது தான் அழகு, ஆரோக்கியம் என இளம்பெண்கள் கருதுகிறார்கள். ஆனால் அது தவறான கருத்து. பலமாக உறுதியாக இருப்பது தான் அழகு, ஆரோக்கியம். பிற்காலத்திற்கான பயத்தை சேமிப்பதற்கு அக்கறையுடன் செயல்படுவது போன்று, நம் உணவுக்கும், உடற்பயிற்சிக்கும் அக்கறை அளிக்க வேண்டும்.

இளம்வயதிலேயே எலும்பை உறுதியாக வலுவாக ஆக்கிக்கொண்டால் போனஸாக நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

ச. பாலகிருஷ்ணன், 
கோயம்பத்தூர்

]]>
Osteoporosis , எலும்புத் தேய்மானம், பெண்களின் எலும்பு பிரச்னைகள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/12/20/w600X390/182657432-crop-56a6d9673df78cf772908b82.jpg http://www.dinamani.com/health/womens-health/2016/dec/20/பெண்களுக்கு-ஏற்படும்-எலும்புத்-தேய்மானம்-தடுப்பது-எப்படி-2618736.html
2599705 மருத்துவம் மகளிர் நலம் சிகப்பு இறைச்சி  சாப்பிடாதீர்கள் ! 50 வயதுப் பெண்களுக்கு எச்சரிக்கை!  Wednesday, November 16, 2016 04:39 PM +0530  

50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் அன்றாட உணவில் அதிகப்படியான புரதச் சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால் இதய சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படும் என்கிறது ஓர் ஆராய்ச்சி.குறைவான புரதச் சத்துள்ள உணவுகளை உட்கொண்ட பெண்களை விட அதிகப் புரதச் சத்துள்ள உணவினை உட்கொண்ட பெண்களுக்குத் தான் இதய நோய் வர வாய்ப்பிருக்கிறது என ஆய்வு முடிவில் கண்டறிந்துள்ளனர். இந்த ஆராய்ச்சியின் போது, காய்கறிகளிலிருந்து கிடைக்கும் புரதத்தை சாப்பிட்டவர்களுக்கு பிரச்னை எதுவும் இருக்கவில்லை ஆனால் இறைச்சியிலிருக்கும் புரதச் சத்தானது இதயத்துக்கு கெடுதலை விளைவிக்கிறது என்று கண்டுபிடித்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரெளன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் மொஹமத் ஃபிராஸ் பார்பர்.

மாமிசத்தில் உள்ள புரதச் சத்துக்கும் பெண்களுக்கு ஏற்படும் இதய நோய்களுக்கும் தொடர்பிருப்பதாக இதற்கு முந்தைய ஆராய்ச்சிகளும் கூறியுள்ளன. மெனோபாஸ் முடியும் காலத்தில் பெண்கள் பலவீனமாக இருப்பார்கள். அச்சமயத்தில் அவர்களுக்கு இதய நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. எனவே இந்த காலகட்டத்தில் உணவு குறித்த விழிப்புணர்வு அவர்களுக்கு கட்டாயம் தேவை. எத்தகைய உணவு வகைகளை உட்கொண்டால் பிரச்னைகளை தவிர்க்கலாம் என்பதை அவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார் பார்பர்.

50 வயதுக்கு மேல் பெண்களின் டயட்டில் நிச்சயம் பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் குறைவான அளவில் கொழுப்புச் சத்துள்ள பால் பொருட்கள், கோழி இறைச்சி, மீன் மற்றும் பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளள வேண்டும். அதே வேளையில் சிகப்பு இறைச்சி, இனிப்பு வகைகள் மற்றும் குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும். எப்போதாவது சாப்பிட நேர்ந்தாலும் புரதச் சத்து நீக்கப்பட்ட இறைச்சிகளை மட்டுமே சாப்பிட வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகமுள்ள மீன்களை சாப்பிட வேண்டும். இது அவர்கள் உடல் நலத்தை மேம்படுத்துவதுடன் இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும்.

இந்த ஆராய்ச்சி முடிவுகள் சமீபத்தில் லூசியானாவிலுள்ள அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் சயின்டிஃபிக் செசெஷன்ஸ் 2016-ல் வெளியாகியுள்ளது.

]]>
பெண்கள் நலம், சிகப்பு இறைச்சி, Red meat http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/11/16/w600X390/Red-meat.jpg http://www.dinamani.com/health/womens-health/2016/nov/16/சிகப்பு-இறைச்சி--சாப்பிடாதீர்கள்--50-வயதுப்-பெண்களுக்கு-எச்சரிக்க-2599705.html
2577621 மருத்துவம் மகளிர் நலம் சருமப் பராமரிப்பு டிப்ஸ்! Friday, October 7, 2016 01:02 PM +0530
 • ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி, ஆழ்ந்த உறக்கம், அமைதியான ஆனந்தமான மனநிலை, இவை அனைத்துமே தோலின் பொலிவை மேம்படுத்தும் சில இயற்கையான வழிகள். 
 • முகத்தில் தேவையற்ற செயற்கைப் பூச்சுக்கள், கிரீம்களை பயன்படுத்துதலைத் தவிர்க்க வேண்டும்.
 • முகப்பரு உடையவர்கள் அனைத்து அழகு சாதனப் பொருட்கள் மற்றும் அழகு சிகிச்சை நிலையங்களில் செய்யப்படும் பேசிஷியல், ப்ளீச்சிங் போன்றவற்றை மாதம் ஒரு முறை செய்து கொள்ளலாம்.
 • தினமும் 2&3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
 • வெயிலில் அதிகமாக பணிபுரிவோர், சன்ஸ்க்ரீன் க்ரீம் பயன்படுத்தலாம். 
 • தோலில் வறட்சி தன்மை கொண்டவர்கள் Moisturizers பயன்படுத்தலாம். 
 • முகத்தில் பப்பாளி அறைத்து பூசுதல், கருவேப்பிலையை தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்த்தல் போன்றவை நமக்கு தீமை இல்லாவிட்டாலும் இந்த பொருட்களை உணவில் தினமும் உட்கொண்டால் தோல் பொலிவு பெறும். 
 • அந்தந்த சீதோஷ்ண நிலைக்கேற்ப, ஆடைகள் உடுத்துதல் தேவையற்ற தோல் நோய்களைத் தவிர்க்கும்.
 • மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்துகளையும் தோலில் பயன்படுத்தக் கூடாது. 
 • வாழ்க்கை முறை மாற்றம் (Life style modification) நம்முடைய தோலுக்கு மட்டுமல்ல, நம்முடைய ஆரோக்கியத்திற்கும் அவசியத் தேவை.
 • ]]>
  skin care http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/10/7/w600X390/flower-head-jali-jhumka-earrings-1465990333-look.jpg http://www.dinamani.com/health/womens-health/2016/oct/07/சருமப்-பராமரிப்பு-டிப்ஸ்-2577621.html
  2571831 மருத்துவம் மகளிர் நலம் பாதங்களில் வெடிப்பா? Tuesday, September 27, 2016 12:26 PM +0530 அவசர யுகத்தில் பெண்கள் நமக்கான நேரத்தை ஒதுக்கி வைப்பது இமாலய சாதனைதான். ஆனால் அழகும் ஆரோக்கியமும் தேவை எனும் போது நிச்சயம் இத்தகைய பராமரிப்பு வேலைகளை செய்தே தீர வேண்டும். பெண்களுக்கே உரிய பொதுவான பிரச்னைகளில் முக்கியமானது பாத வெடிப்பு. சில சமயம் தூசி வெடிப்புகளில் பட்டு அந்த இடம் கறுப்பாகி பாதங்களில் அழகைக் கெடுத்துவிடும். அழகை விட ஆரோக்கியமும் சுத்தமும் மிக முக்கியம் அல்லவா? சிலர் அதை மறைக்க சாக்ஸ் அணிவார்கள். அது தற்காலிக நிவாரணம் தான். 

  பாத வெடிப்பு ஏற்படுவது எதனால்?

  நம்முடைய தோலுக்கும் காலுக்கும் ஏற்ற தரமான செருப்பைத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். ஹை ஹீல்ஸ் அல்லது கடினமான செருப்புக்களை அணிவதால் கால் பாதங்களில் சிறுகச் சிறுக வெடிப்பு தோன்ற ஆரம்பிக்கும். சோப்பில் உள்ள வேதிப்பொருட்கள் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்திவிடும். எனவே பிரச்னையின் வேர் என்னவென்று தெரிந்து கொண்டால் அதற்கேற்றவாறு தீர்வை கண்டுபிடிப்பது எளிது. கால் பாதங்களின் அழகை மீட்டெடுக்க, இதோ சில எளிய வழிகள்.

  ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது வாரத்தில் ஒரு நாள் இந்த எளிய மருத்துவத்தை வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.

  சிறிதளவு எலுமிச்சை சாறு எடுத்து, பாதங்களில் மேல் மற்றும் கீழ் நன்கு தேய்த்துவிட்டு, 

  ஒரு டப்பில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் சிறிது உப்பு சேர்த்து சிறிதளவு ரோஸ் வாட்டர் ஊற்றி கால்களை அதனுள் வைத்திருக்க வேண்டும்.

  ம்யூசிக் ப்ளேயரில் மனத்துக்குப் பிடித்த பாடல் அல்லது இசையை ஒலிக்கச் செய்து, கண்களை மூடி 15 நிமிடம் அப்படியே உட்கார்ந்திருக்கவும்.

  அதன் பின் மைல்ட் ஷாம்பூ அல்லது சோப் போட்டு பாதங்களை நன்றாக கழுவவும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகளை ஒழிக்கும்.

  சுத்தமான காட்டன் துணியால் பாதங்களை ஒற்றி எடுத்த பின், மாய்ஸ்சரைஸர் தடவவும்.

  தொடர்ந்து இப்படி செய்து வருகையில், பாதம் பட்டுப் போல் பளபளப்பதுடன் வெடிப்பு மறைந்து கால் பாதங்கள் மென்மையாக மாறிவிடும். எலுமிச்சை சாறுடன் மருதாணி, பப்பாளி கூழ் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

  தினமும் குளிப்பதற்கு முன்னால் கால் பகுதிகளில் ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தேய்த்து பத்து நிமிடமாவது ஊற வைத்தபின் குளிக்கவும். கடுகு எண்ணெயை தினமும் கால் பாதம் மற்றும் கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/27/w600X390/feet-beauty.jpg http://www.dinamani.com/health/womens-health/2016/sep/27/பாதங்களில்-வெடிப்பா-2571831.html
  2562410 மருத்துவம் மகளிர் நலம் பெண்களுக்கு அவசியம் தேவையான பொருட்கள்! Saturday, September 10, 2016 02:53 PM +0530 நவீன இந்திய பெண்கள் இப்போதெல்லாம் வீட்டின் நான்கு சுவர்களுக்கு மத்தியில் அடைபட்டு இருப்பதில்லை. ஆண்களுக்கு நிகராக தீவிரமாக வாழ்க்கை பணிகளில் ஈடுபடும் பெண்கள் அடிக்கடி பயணிக்கவும் செய்கின்றனர். எனினும்  வீட்டிற்கு வெளியே செலவிடப்படுகின்ற இத்தகைய நேரங்கள்  தினசரி சுத்தம் மற்றும் சுகாதார நடைமுறைகளை தவறாது பின்பற்றுவதிலும் மற்றும் பராமரிப்பதிலும் பல்வேறு சவால்களை முன்வைக்கின்றன.

  பயணத்தின்போது நீங்கள் எடுத்துச்செல்லும் பயணப்பையின் ஒரு அங்கமாக கட்டாயம் இருக்கவேண்டிய சில சுகாதார தயாரிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன. அனைத்து நேரங்களிலும் நீங்கள் சுத்தமாகவும் வசதியாகவும் மற்றும் நம்பிக்கையோடும் திகழ்வதற்கு இவைகள் உதவும்.

  ஹேண்ட் சானிடைசர்: உங்கள் பர்ஸில் கையை சுத்தம் செய்கிற ஒரு ஹேண்ட் சானிடைசரை நீங்கள் கண்டிப்பாக எடுத்துச் செல்லவேண்டும். நீங்கள் செல்கின்ற ஊரில் சாலைகளில் விற்பனை செய்யப்படும் உணவை ஆசையோடு உட்கொள்கின்ற வேலையில் இது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். ஒரு ஹோட்டல் அல்லது உணவகத்தில் உங்கள் கைகளை கழுவுவதற்கான வசதி இவ்விடங்களில் இருக்காது என்பதால் இது அவசியமானது. கைகளை கழுவுவதற்கு பெரும்பாலான நேரங்களில் சோப் இருக்காது என்பதால்  ஒரு பொது கழிவறையை பயன்படுத்தவேண்டிய அவசியம் ஏற்படும்போது  ஒரு ஹேண்ட் சானிடைசர் உங்களோடு இருப்பது நல்லது.

  பல்லிடுக்கு நூல் (டென்டல் ஃப்ளாஸ்): வெற்றிகரமான புன்னகை உங்களது மிக வலுவான ஆயுதம் மற்றும் உங்கள் நம்பிக்கையின் அடையாளம். பதற்றத்தை தணிக்கவும்  சிக்கலான சூழ்நிலைகளிலிருந்து நழுவி வெளியே வரவும் மற்றும் புதிய நட்புறவுகளை உருவாக்கவும் இந்த புன்னகை உதவுகிறது. ஆரோக்கியமான  பளிச்சிடும் மென்மையான பற்கள் உங்கள் புன்னகையை இன்னும் அழகானதாக ஆக்குகின்றன. ஆகவே  உங்கள் பற்களுக்கு இடையே சிக்கியிருக்கிற கோழி இறைச்சி எலும்புத் துண்டுகள் அல்லது கீரை துணுக்குகள்  உங்கள் அழகான புன்னகையை பார்க்க சகிக்காதவாறு மாற்றிவிடுவதை தவிர்க்கவும் மற்றும் இந்த உணவுத் துகள்களை அகற்றவும் ஒரு பல்லிடுக்கு நூலை எப்போதும் உடன் கொண்டுசெல்வது பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு உணவுக்குப் பிறகும்  இந்த பல்லிடுக்கு நூலை பயன்படுத்துங்கள்.

  ஃபேஸ் வாஷ்: இப்போதெல்லாம் மாசு அளவுகள் பயமுருத்தும் அளவுக்கு அதிகமாக இருப்பதால் உங்கள் முகத்தில் பார்க்க சகிக்காத கறுமுள் (பிளாக் ஹெட்) அல்லது வலியேற்படுத்தும் தடிப்புகள் (ரேஷஸ்) உருவாகாமல் தடுப்பதற்காக உங்கள் முகத்திலிருந்து தூசி மற்றும் அழுக்கை கழுவி அகற்றுவது முக்கியமானதாகும். முகத்தில் உலர் நிலை ஏற்படுவதை தவிர்க்க சோப் இல்லாத ஃபேஸ் வாஷ் தயாரிப்பினை பயன்படுத்த வேண்டும் என்பதே நினைவில் கொள்ளவும். புதிதாக கழுவிய மென்மையான முக சருமத்தை தீங்கு விளைவிக்கும் புறஊதாகதிர்கள் எதிர்மறையாக பாதிக்காமல் தடுப்பதற்காக, உங்கள் முகத்தை நீங்கள் கழுவி துடைத்தபிறகு, உங்கள் சன் ஸ்கிரீன் லோஷனை மீண்டும் தடவிக்கொள்ளவும்.

  ஈரப்பதமுள்ள துடைப்பான்கள் (வெட் வைப்ஸ்): முகத்திலுள்ள அழுக்கு மற்றும் தூசியை கழுவி அகற்றுவதற்கு ஒரு வாஷ் பேஸினை கண்டுபிடிப்பது அநேக நேரங்களில் சிரமமாக இருக்கக்கூடும். சில நேரங்களில் முகத்திலுள்ள வியர்வை மற்றும் அழுக்கை துடைத்து எடுத்தால் போதும் என்று நீங்கள் விரும்பக்கூடும். ஆனால் இதற்கு ஒரு வழக்கமான கைகுட்டை மற்றும் போதுமானதல்ல. உங்கள் முகம், கழுத்து மற்றும் கைகளை துடைத்தெடுப்பதற்கு ஈரப்பதமுள்ள தாள் துடைப்பான்களை பயன்படுத்தவும். இந்த தாள் துடைப்பான்கள் மிருதுவான தூய்மைப்படுத்தும் அம்சங்களைக் கொண்டிருப்பதோடு முகத்தில் உலர் நிலை ஏற்படுவதைத் தவிர்க்க நீர்ப்பதத்தையும் செறிவாகக் கொண்டதாக இருக்கின்றன.

  மேலே குறிப்பிடப்பட்ட இந்த நான்கு அத்தியாவசிய சுகாதாரம் பேணும் தயாரிப்பு பொருட்கள் உங்கள் கை பையின் ஒரு அங்கமாக எப்போதும் இருக்கட்டும். நீங்கள் அடிக்கடி வெளியே செல்பவராக இருந்தாலும்கூட உங்கள் தினசரி சுகாதார நடைமுறைகள் மீது எப்போதும் சிறந்த கட்டுப்பாட்டினை நீங்கள் கொண்டிருக்க இவை உங்களை ஏதுவாக்கும்.

  ]]>
  travel bag for woman http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/10/w600X390/Travel_safety_tips.jpg http://www.dinamani.com/health/womens-health/2016/sep/10/பெண்களுக்கு-அவசியம்-தேவையான-பொருட்கள்-2562410.html
  2561548 மருத்துவம் மகளிர் நலம் பெண்களுக்கு ஏற்படும் சில பிரச்னைகள் Thursday, September 8, 2016 03:53 PM +0530 ‘பதினொரு  வயதில் இருந்து 35 வயதுக்குள் பெண்கள் பூப்படைதல், திருமணம், குழந்தைப்பேறு போன்ற வாழ்வின் முக்கியமான விஷயங்களை கடக்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் கவனத்துடன் இருந்தால் எதிர்காலத்தில் பல பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்’ என்கிறார் சென்னை மருத்துவர்  லீமா ரோஸ்.

  ரத்த சோகை

  அறிகுறி - சோர்வு, உற்சாகம் இன்மை, உடல் மெலிவு. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்தான் ஆக்சிஜனை உடலின் எல்லா பகுதிக்கும் கொண்டு செல்கிறது. ஆக்சிஜன் கொண்டு செல்லும் திறன் பாதிக்கப்படும்போது, உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்க அதிக அளவில் இதயம் துடிக்க வேண்டியதாகிறது. இதனால் இதயம் பெரிதாவது, செயலிழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். ரத்த சோகை இருந்தால் சோர்வு இருக்கும். சருமமும் வெளிறிவிடும். 

  காரணம் - நம் உடலுக்கு தினமும்  10 முதல் 15 மில்லி கிராம் அளவுக்கு இரும்புச் சத்து தேவைப்படுகிறது. அதற்கும் குறைவான அளவில் இரும்புச் சத்து கிடைக்கும்போது ரத்தசோகை ஏற்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது.

  சோதனை முடிவுகளுக்கு ஏற்ப மருந்து மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள்.

  தீர்வு - ஈரல், கோழி இறைச்சி, மீன், கீரை, மாதுளை, பேரீச்சம் பழம் போன்ற இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் இரும்புச் சத்துக் குறைபாட்டைத் தவிர்க்கலாம். இதனுடன், வைட்டமின் சி உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். இரும்புச் சத்தை கிரகிக்க அது உதவும்.

  உடல் பருமன்:

  பல‌ நோய்களுக்குக் உடல் பரும பிரச்னை தான் காரணம்.  உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டுத் தேய்மானம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, மாதவிடாய்ப் பிரச்னை, குழந்தைப் பேறின்மை, மன அழுத்தம், மனச் சோர்வு போன்றவை ஏற்படும்.

  கால்சியம் பற்றாக்குறை

  அறிகுறி - எலும்பு மற்றும் இதர உறுப்புகளின் செயல்பாடு பாதிக்கப்படும். இந்நிலை நீடித்தால் ஆஸ்டியோபெராசிஸ் ஏற்படலாம். குழந்தை மற்றும் டீன் ஏஜில் எலும்பு வளர்ந்துகொண்டே இருக்கும். 30 வயதில் அது இன்னும் அதிகரிக்கும். எனவே, இந்தக் காலக்கட்டத்தில் பெண்களுக்கு அதிக அளவில் கால்சியம் தேவைப்படுகிறது.

  காரணம் - கால்சியமானது எலும்பு மற்றும் பற்களில் உறுதித்தன்மைக்கு அவசியமானது. மேலும் இதயம் சீராகத் துடிக்கவும், நரம்பு, தசைகள் ஒழுங்காகச் செயல்படவும் உதவுகிறது. உணவில் இருந்து போதுமான அளவு கால்சியம் (தினசரி உணவில் 600 மி.கி.) கிரகிக்கப் படவில்லை எனில் பிரச்னைதான்.

  தீர்வு - கால்சியம் பற்றாக்குறை உள்ளவர்களுக்கு, கால்சியம் சத்து மாத்திரையுடன் வைட்டமின் டி மாத்திரையும் பரிந்துரைக்கப்படும். பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் சத்து உள்ளது. முட்டை, எண்ணெய் சத்து நிறைந்த மீன் போன்றவற்றில் வைட்டமின் டி உள்ளது.

  ஹைபோதைராடிசம்

  அறிகுறி - சோர்வு, திடீரென உடல் எடை அதிகரித்தல், மாதவிலக்கில் ஒழுங்கின்மை, பொலிவற்ற சருமம் 

  காரணம் - ஐயோடின் பற்றாக்குறை, மரபியல் பிரச்னை, மருந்துகளின் பக்கவிளைவு, சீரற்ற‌ இதயத் துடிப்பு போன்ற பல காரணங்களால் இந்தக் குறைபாடு ஏற்படலாம்.

  தீர்வு - ரத்தப் பரிசோதனை செய்து அதன் முடிவுகளை வைத்து ஒருவருக்கு ஹைபோதைராடிசம் இருக்கிறதா இல்லையா என்பதை ஆய்வு செய்வார்கள். ஹைபோதைராடிசம் இருந்தால், கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள தைராய்டு சுரப்பி போதுமான அளவுக்கு தைராய்டை உற்பத்தி செய்யவில்லை என்ற முடிவுக்கு வரலாம்.

  கர்ப்ப காலத்தில் தாயின் தைராய்டு குறைபாடு கருவைப் பாதிக்க வாய்ப்பு உள்ளது. கருவில் உள்ள குழந்தைக்கு முதல் 12 வாரங்கள் வரை தைராய்டு சுரப்பி உருவாகுவது இல்லை. எனவே முதல் 3 மாதங்கள் வரை தாயின் உடலில் உள்ள தைராய்டு ஹார்மோன் அளவைக் கொண்டே கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சி நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, கருவுறும் முன்பு பெண்கள் தைராய்டு ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுதல் நல்லது.

  முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை என்றால் மன அழுத்தம், கெட்ட கொழுப்பு அளவு அதிகரித்தல், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். கருச்சிதைவு மற்றும் குழந்தைப்பேறின்மைக்கும் இது வழிவகுக்கும். கர்ப்ப காலத்தில் தாயின் தைராய்டு குறைபாடு கருவைப் பாதிக்க வாய்ப்பு உள்ளது.

  சமச்சீரான சத்துள்ள‌ உணவு, தேவையான அளவு உடற்பயிற்சி போன்றவற்றை கடைபிடித்தால் நோய்க்கு நோ என்ட்ரி  சொல்லிவிடலாம்.

  ]]>
  hypothyroid, hormonal imbalance, Anemia http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/8/w600X390/tired-women.jpg http://www.dinamani.com/health/womens-health/2016/sep/08/பெண்களுக்கு-ஏற்படும்-சில-பிரச்னைகள்-2561548.html
  2559573 மருத்துவம் மகளிர் நலம் 40 வயதுக்கு மேல்.... Saturday, September 3, 2016 04:05 PM +0530 நாற்பது வயதில் நீ நுழையும் போது, உன்
  ஓப்பனைகள் ஆடைகள் மாறுகின்றன
  சட்டையை தொளதொள வென்றோ
  இறுக்கமாகவோ போடுகிறாய்
  தலைமுடியை நீளமாகவோ
  குறுகவோ தரிக்கிறாய்
  உன்னிடமிருந்து பறந்து சென்ற
  இருபது வயது என்னும் மயில்
  உன்
  மகளின் தோள் மீது
  தோகை விரித்தாடுவதை
  தொலைவிலிருந்து பார்க்கிறாய்
  காலியான கிளைகளில்
  மெல்ல நிரம்புகின்றன,
  அஸ்தமனங்கள்,
  சூரியோதயங்கள் மற்றும்
  அன்பின் பதட்டம்
  - தேவதச்சன்

  40 வயதுக்கு மேல் பெண்கள் கண்டிப்பாக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கைமுறை மாற்றங்கள் சில உடல் நலத்துக்கு கெடுதல் செய்வது உண்மை. சரிசம விகித சத்துள்ள உணவு உண்ணாமல் இருப்பது, சரியாக ஓய்வெடுக்காமல் நீண்ட நேரம் வீட்டில் அல்லது அலுவலகத்தில் வேலை செய்வது, போதிய உறக்கம் இல்லாமல் இருப்பது என பலர் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கின்றனர். பின் வரும் விஷயங்களில் அதிக கவனத்துடன் இருந்தால் நிச்சயம் ஆரோக்கியமான அழகுடனும் இளமையுடனும் வாழலாம்.

  40 வயதுக்கு மேல் எலும்புகளில்ன் வலிமை குறையும். கை, கால்கள், கழுத்து என வலிகளின் ஆரம்பம் இந்த வயதில் தான். விழிப்புணர்வுடன் செயல்பட்டு அவற்றை வர விடாமல் தவிர்க்கவேண்டும். தினமும் வாக்கிங் போக வேண்டும். கூடுமானவரையில் எளிய உடற்பயிற்சிகளைச் செய்வது நல்லது.  

  தினமும் யோகா செய்வது உடல் நலத்துக்கும் மன நலத்துக்கும் மிகவும் நல்லது. தியான வகுப்புக்களுக்குச் சென்று தியானம் பயின்று தினமும் அதைச் செய்து வந்தால் மனம் சம நிலையில் இருக்கும், அமைதி கிடைக்கும். எந்த பிரச்னைக்கும் தீர்க்கமான முடிவை எடுக்க முடியும்.

  உடல் பருமன் அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உயரத்துக்கு ஏற்ற எடையில் இருப்பது பலவிதமான பிர்ச்னைகளைத் தவிர்க்க உதவும். உதாரணமாக மாரடைப்பு,ம் நீரிழிவு போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

  உணவுத் தேர்வும் மிகவும் முக்கியம். 40 வயது நெருங்கும் போது ரத்த சோகை பிரச்னைகள் தலைதூக்கும். உணவில் கீரை வகைகள், பழங்கள் மற்றும் தினமும் பேரீச்சம் பழம் அல்லது உலர் திராட்சை சாப்பிடுவது நல்லது. வருடத்துக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனைகளையும், மூன்று முறையேனும் ரத்த பரிசோதனையும் செய்து கொள்வது நல்லது.

  சிலருக்கு கர்ப்பப் பை சார்ந்த பிரச்னைகள் இந்த வயதில் ஏற்படலாம். ஆரம்பத்திலேயே மருத்துவர்களை அணுகி பிரச்னைக்கு தீர்வு காண்பது தான் புத்திசாலித்தனம். 

  இருந்த ஊரில் இருந்து கொண்டு ஒரு மாற்றமும் இல்லாமல் எப்போதும் பார்த்துக் கொண்டிருந்தால் மனச் சோர்வு ஏற்படும். எனவே வருடத்துக்கு இரண்டு முறை டூர் செல்வது நல்லது. 


   

  ]]>
  healthy life, 40 years woman http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/3/w600X390/nita_jha1-073cc1c77504f2abf6327066c20aac067205af50-s300-c85.jpg http://www.dinamani.com/health/womens-health/2016/sep/03/40-வயதுக்கு-மேல்-2559573.html
  2559547 மருத்துவம் மகளிர் நலம் உடல் வளர்ச்சிக்கு இரும்புச் சத்து! DIN Saturday, September 3, 2016 12:52 PM +0530 உடல் வளர்ச்சி அதிகமாக காணும் குழந்தை பருவத்திலும், விடலை பருவத்திலும், பெண்கள் கருவுரும் காலங்களிலும் ரத்த சோகை பரவலாக காணப்படும் ஒரு குறைபாடு. ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்தாலோ அல்லது ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைத் தரக் கூடிய ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தாலோ ரத்த சோகை ஏற்படும். ரத்த சோகையில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக புரோட்டீன், இரும்புச் சத்து வைட்டமின், B12,folic அமிலம் போன்ற சத்துக்கள் உடம்பில் குறைவதனால் ஏற்படக்கூடிய ரத்த சோகையை Nutritional Anemia என்று அழைக்கின்றோம்.

  வளரும் பருவத்தில் உடல் வளர்ச்சிக்கு இரும்புச் சத்து அதிகம் தேவைப்படுகிறது. இன்றைய டீன் ஏஜ் குழந்தைகள் உணவின் முக்கியத்துவமும் உடலுக்கு தேவையான சத்துக்கள் என்னவென்று அறிந்து போதுமான அளவு சாப்பிடாமல் அளவையும் தரத்தையும் குறைத்து சாப்பிடுகிறார்கள். சத்தான உணவை முறையான வேளையில் உட்கொள்ளாமல் நொறுக்குத் தீனிகளை பெரும்பாலும் உட்கொள்கிறார்கள். மதிய உணவை பெரும்பாலும், பள்ளியிலோ, கல்லூரியிலோ கழிப்பதால் கேண்டீனில் பிஸ்கட், சிப்ஸ், சமோசா, கோக் ஆகியவற்றை விரும்பி சாப்பிடுகிறார்கள். காலை வேளையில் ஸ்டைலாக இரண்டு பிஸ்கட்டை டீயுடனோ, காபியுடனோ சாப்பிட்டுவிட்டு வெளியில் கிளம்புகிறார்கள். குழந்தைப் பருவத்திலிருந்தே அடிக்கடி ஏற்படும் தொற்று நோய்களும் ரத்தச் சோகைக்கும் ஒரு காரணம் இரும்புச் சத்து பற்றாக் குறையினால் ஏற்படும் அறிகுறிகளை நாம் முதலில் கண்காணிக்க வேண்டும். மூச்சு திணறல், நோய் எதிர்ப்புத் தன்மை குறைதல், களைப்பாக இருப்பது போல் காணப்படுதல், தலைசுற்றல், அஜீரணக் கோளாறுகள் போன்றவை ஏற்படதால் அது ரத்த சோகையின் அறிகுறிகளாகும். ரத்த சோகையை மருந்துகளில் மூலமாக குணப்படுத்த முடியும். இதைத் தவிர உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இரும்புச் சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களை மட்டும் சேர்த்துக் கொள்வதால் ரத்த சோகையை குணப்படுத்த முடியாது.

  போதுமான மாவுச்சத்து, மற்றும் புரதச் சத்துடன், காய்கறி பழவகைகளும் அவசியம் உட்கொள்ள வேண்டும். அத்துடன் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு டம்ளர் பாலாவது குடிப்பது மிக அவசியம்.

  உணவுடன் வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களையும், பழச்சாறுகளையும் உட்கொள்ள வேண்டும். வைட்டமின் சி இரும்புச் சத்தை முழுமையாக உடலில் சேர்க்கிறது.

  உனவுடன் டீ, காபி குடிக்கக் கூடாது. அப்படி குடித்தால் இரும்புச் சத்து உடலில் சேராமல் போய்விடும். பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள் குறிப்பாக கொத்துமல்லி, புதினா, அரைக்கீரை, முருங்கை கீரை, சுண்டைக்காய் ஆகியன இரும்புச் சத்து நிறைந்து காணப்படுகிறது. முட்டையில் உள்ள மஞ்சள் கரு முழு தானிய வகைகள் ஈரல் போன்ற இறைச்சி வகைகள் உடம்பிற்கு இரும்பு மற்றும் ஃபாலிக் சத்தை அளிக்கிறது.

  நொறுக்குத் தீனிகள் என்ற பெயரில் பிஸ்கட், பஃப், ப்ரெட் என்று வாங்கி குழந்தைகளுக்குக் கொடுக்காமல் வேர்க்கடலை உருண்டை, வெல்லப்பாயசம், அவல், பொரி உருண்டை, உளுந்து லட்டு என்று நாம் வீட்டிலேயே சிற்றுண்டிகளை தயாரித்து பசிக்கும் நேரத்தில் உட்கொள்ளலாம்.

  முளைகட்டிய பயறுவகைகள் வைட்டமின் சியை அதிகரித்து நல்ல புரதத்தை அளிக்கிறது. முளைகட்டிய பயறுவகைகளை லேசாக ஆவி பிடித்துதான் உண்ண வேண்டும். பச்சையாக சாப்பிடக் கூடாது.

  ரத்தசோகை தாக்கியவர்கள் முதல் முதலில் வயிற்றில் பூச்சி இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும். பரிசோதித்த பிறகு அதற்கு டாக்டரிடம் சரியான ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு எடுத்துக் கொண்ட பிறகு தான் மருந்தும், உணவு முறைகளும் பலன் அளிக்கும்.

  ]]>
  iron http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/3/w600X390/health_news_image_27_7_16.jpg http://www.dinamani.com/health/womens-health/2016/sep/03/உடல்-வளர்ச்சிக்கு-இரும்புச்-சத்து-2559547.html
  2559062 மருத்துவம் மகளிர் நலம் மாதவிடாய் பிரச்னைக்குத் தீர்வு! Wednesday, August 31, 2016 12:02 PM +0530 மாதவிடாய் பிரச்னைகளுக்கு பலவிதமான மாத்திரைகளும் சிகிச்சைகளும் செய்தும் பலன் இன்றி பெண்கள் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு உடல் மன வருத்தத்தில் நொந்து போவார்கள். இதற்கு சரியான தீர்வு வீட்டிலேயே உள்ளது. கருஞ்சீரகம் எனும் அருமருந்து தான் அது. ஆங்கிலத்தில் இதனை Cumin Seeds அல்லது Black seed என்பார்கள். இதன் மருத்துவ பெயர் Nigella Sativa. கருஞ்சீரகத்தின் தாயகம் தென் ஐரோப்பியா, தெற்கு மற்றும் தென் மேற்கு ஆசியப் பகுதிகள்.

  கருஞ்சீரகம் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது என்பது பலருக்குத் தெரியாது. பீரியட்ஸ் பிரச்னையால் அவதியுறும் பெண்கள் தினமும் உணவில் கருஞ்சீரகத்தைச் சேர்த்து வந்தால் சில மாதங்களில் அப்பிரச்னை சரியாகிவிடும்.

  கருஞ்சீரகத்துள்ள MRSA (Methicillin Resistnat Staphylococcus aurous) எனும் வேதிப்பொருள் உள்ளது, கருஞ்சீரகம் ஒரு சிறந்த ஆண்டி ஆக்ஸிடெண்டாக செயல்படுகிறது. உடலில் சேர்ந்துள்ள நச்சுப் பொருட்களை அகற்றக் கூடிய தன்மையுடையது.    

  கருஞ்சீரகத்தை தேன் விட்டு அரைத்து பிரசவித்த பின் ஏற்படும் வலிக்குப்பூசிட வலி மாறும். 

  கருஞ்சீரகத்தை அரைத்து தேமல் மேல் பூசி வர தேமல் சிறிது சிறிதாக மாறும். 

  ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகத்தை எடுத்து நன்றாகப் பொடி செய்து அதனுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் கலந்து சூடு படுத்தி இரண்டு துளி மூக்கில் ஊற்றினால் மூக்கடைப்பு நீங்கும். அடிக்கடி சளித் தொல்லையால் பாதிக்கப்படுபவர்கள் கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊற வைத்துப் பிறகு மூக்கில் இரண்டு அல்லது மூன்று சொட்டுகள் விட்டால் ஜலதோஷத்துக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். 

  கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் சிறுநீரக‌ கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும்.

  கருஞ்சீரகத்தைக் வினிகரில் வேக வைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும். பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்

  சிறிதளவு கீழாநெல்லி இலைகளுடன் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து கொஞ்சம் பால் சேர்த்து அரைத்து பின் இதை ஒரு கப் பாலில் கலந்து காலை உணவுக்கு அரை மணி நேரம் பின் மற்றும் மாலை நேரம் பருகி வர மஞ்சள் காமாலை குணமாகும்.

  ]]>
  Periods problem http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/31/w600X390/black_cumin.jpg http://www.dinamani.com/health/womens-health/2016/aug/31/மாதவிடாய்-பிரச்னைக்கு தீர்வு-2559062.html
  2558022 மருத்துவம் மகளிர் நலம் நீரழிவு நோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவு! Saturday, August 27, 2016 05:59 PM +0530 சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு "திவாஸ்' என்ற ஆதரவு அமைப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

  கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோயை எவ்வாறு கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது என்பது பற்றி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த "பிட் டு பி மாம்' என்ற திட்டமும், எலும்பு அடர்த்தி நோய் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வு திட்டமும் நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கப்பட்டன. இந்த விழிப்புணர்வு திட்டங்களை சென்னையைச் சேர்ந்த "ஏசர் ஹெல்த்' நிறுவனம் தொடங்கியுள்ளது.

  இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநரும் அகநாளச் சுரப்பி நிபுணருமான உஷா ஸ்ரீராம் கூறியதாவது:

  சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்த இந்த ஆதரவு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் சர்க்கரை நோய் ஆபத்தானது. எனவே, கர்ப்ப காலத்தில் கீரைகள் உள்ளிட்ட நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை பெண்கள் சாப்பிடுவதன் மூலம் நோய் வராமல் தடுத்துக் கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி அவசியமான ஒன்று. இதனால், ரத்த சர்க்கரை அளவை இயல்பாக வைத்துக் கொள்ள முடியும்.

  முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மன வலிமையுடன் நோயை எதிர்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு மாதவிடாய் நின்ற பெண்களுக்கு வைட்டமின் டி சத்துக் குறைபாடு மற்றும் எலும்பு அடர்த்தி நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு என்றார் அவர்.

  இந்த நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) தலைமை இயக்குநர் டாக்டர் சௌமியா சுவாமிநாதன், பொது சுகாதார அறக்கட்டளையின் துணைத் தலைவர் டாக்டர் பி.பிரபாகரன், டாக்டர் சிந்தியா பாண்டியன், டாக்டர் பி.எம்.கோபிநாத், டாக்டர் பிரிதிகா சாரி, டாக்டர் சரிதா பஜாஜ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

  ]]>
  diabetes in pregnancy, control of diabetes, woman suffering diabetis http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/27/w600X390/wat.jpg http://www.dinamani.com/health/womens-health/2016/aug/24/நீரழிவு-நோயால்-பாதிக்கப்படும் பெண்களுக்கு-ஆதரவு-2558022.html
  2558514 மருத்துவம் மகளிர் நலம் பயனுள்ள மருத்துவ குறிப்பு! Saturday, August 27, 2016 02:23 PM +0530 * பிரசவத்திற்கு  பிறகு பெண்களின் எடை கூடும். தினசரி சிறிய கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் கட்டுக்கோப்பாக மாறும்.

  * முள்ளங்கி கீரையைச் சமைத்து சாப்பிட்டு வர, இரும்புச்சத்து கிடைப்பதோடு எடை அதிகமாகாமல் இருக்கும்.

  - ஆர்.ஜனனி

  * மாதவிலக்கு சீராக இல்லாத பெண்களும், வெள்ளைப்படுதல் போன்ற தொல்லைகள் உள்ள பெண்களும் நீர்முள்ளி கஷாயம் செய்து அருந்தி வந்தால் இத்தகைய தொல்லையிலிருந்து விடுபடலாம்.

  - அபர்ணா

  வெண்புள்ளிக்கு மருந்து!

  சிலருக்கு உதடு, முகம், கைகளில் வெளுத்ததாகவும், வேறு சிலருக்கு வெண்மையாகவும் இருப்பதைக் காண முடிகிறது. அதனால் பெண்களின் மன வேதனை சொல்லி மாளாது. அவர்கள் விரும்பாமலே உதட்டு சாயம் பூசும் நிலை உருவாகிறது. இதை தவிர்க்க, கண்டங்கத்திரிப் பழம் ( மஞ்சள் நிறமாக இருக்கும்)  பறித்து வந்து வெய்யிலில் காய வைக்கவும். காய்ந்து  போன பழத்தை இடித்து தூளாக்கி வைத்துக் கொள்ளவும்.

  நல்லெண்ணெய் 100 மில்லியை அடுப்பில் ஏற்றிக்காயவிடவும், காய்ந்த எண்ணெய்யில் 2 தேக்கரண்டி கண்டங்கத்திரி பழத்தூளைச் சேர்த்து  நன்றாக காய்ச்சவும். காய்ந்த எண்ணெய்யை இறக்கி வடிகட்டி ஆறவிட்டு ஒரு கண்ணாடி புட்டியில் அடைத்து வைத்துக் கொண்டு காலை, மாலை, இரவு படுக்குமுன் அந்த எண்ணெய்யை வெண்மையாக உள்ள இடத்தில் தடவி வர 48 நாளில் வெண்மை மாறி வருவது தெரிய வரும்.  ஆனால் சமையலில் புளி, உப்பை குறைத்து உண்டு வர வேண்டும். புளியால் நரையும், உப்பால் திரையும் என்பது சித்த மருத்துவ முது மொழி.

  - சி.செல்வராஜ்
   

  ]]>
  healthy life, tips for woman http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/27/w600X390/61.jpg http://www.dinamani.com/health/womens-health/2016/aug/27/பயனுள்ள-மருத்துவ-குறிப்பு-2558514.html
  2558277 மருத்துவம் மகளிர் நலம் டாக்டரிடம் கேளுங்கள்! Thursday, August 25, 2016 05:56 PM +0530 என் வயது 36. எனக்கு சிறுநீர்த் தொற்றுப் பிரச்னை இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது. அதற்கு முறையாக சிகிச்சை எடுத்துக் கொண்டேன். ஆனால் மீண்டும் வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. இதை எப்படித் தவிர்க்கலாம்?ராஜி, சேலம்

  மகப்பேறு மருத்துவர் நல்லினி அருள், மதுரை

  நம் உடலில் பாக்டீரியா, வைரஸ், ஃபங்கஸ்,  போன்றவை எப்போதும் இருக்கும். ஒரு ஸ்கொயர் சென்டிமீட்டரில் 2 மில்லியன் ஆர்கானிசம் வரை இருக்கும். ஈரப்பதம் அதிகம் இருக்கும் ஜெனிடல் பகுதிகளில் அதிகம் வளரக் கூடியதாக அவை இருக்கும். தண்ணீர் அதிகம் குடிக்க குடிக்க இயற்கையாகவே கிருமிகள் உடம்பிலிருந்து வெளியேறிவிடும். எதாவது காரணத்தால் சிறுநீரை அடக்கினால், அவை பன்மடங்கு பெருக  ஆரம்பிக்கும்.

  உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் போதும் இப்படி பெறுகிவிட்ட இந்தக் கிருமிகளின் ஆதிக்கம் அதிகரிக்கும்.  ஐந்து பேர் இருக்க கூடிய ஒரு அறையில் ஐம்பது பேர் இருந்தால் எப்படி அந்த அறை இருக்கும். அது போல குறைவான தண்ணீர் குடிக்க குறைவான அளவு சிறுநீர் தான் வெளியேறும்.

  மேலும் நம் உடலில் இருக்கக் கூடிய‌ நல்ல பாக்டீரியா அழிக்கப்படுவதும் இந்தப் பிரச்னைக்கான முக்கிய காரணம். அதை வளர வைக்க மருத்துவர் ஆலோசனையுடன் ‘ப்ரோ பயாடிக்ஸ்’ என்பதை மாத்திரை அல்லது பொடி வடிவில் எடுத்துக்கொள்ளலாம். ப்ரோபயாடிக்ஸ் சேர்க்கப்பட்ட தயிரும் நல்லது. திராட்சை ஜூஸ் குடிக்கலாம். ட்ராபிகானாவில் கேன்பெர்ரி ஜூஸ் குடுக்கலாம்.

   

  பெண்களின் உடலில் சிறுநீர்பையும் பிறப்புறுப்பும் அருகருகே இருப்பதால், பிறப்புறுப்பைத் தாக்கும் இன்ஃபெக்ஷன், அருகிலேயே இருக்கும் சிறுநீர் பையையும் பாதிக்கும். எனவே சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்துவிட்டால், அதை அடக்கக்கூடாது. வெளியிடங்களில் சிறுநீர் கழிக்கத் தயங்கிக் கொண்டு நீண்ட நேரம் அடக்கும் யாருக்கும் இந்தப் பிரச்னை வரலாம். சிறுநீர் பையில் சிறுநீர் தேங்கி, அதன் விளைவாக இன்ஃபெக்ஷன் வரலாம். பிரச்னை ஏற்பட்டவுடன் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி அதற்குரிய சிகிச்சையை ஆரம்பித்துவிட வேண்டும்.

  இந்தப் பிரச்னை பரம்பரையாகவும் சிலருக்கு தாக்கலாம்.

  சிறுநீர் தொற்று வராமலிருக்க, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். மலம் கழித்த பிறகு, பின்னால் இருந்து முன் பக்கமாகக் கழுவாமல், முன் பக்கத்தில் இருந்து பின்புறமாகக் கழுவுவதே சரியானது.

  மிகவும் இறுக்கமான, நைலான் உள்ளாடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும், காற்றோட்டமுள்ள காட்டன் உள்ளாடைகளை அணிய வேண்டும்.

  ]]>
  Urinary infection http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/25/w600X390/aid1578758-728px-Heal-a-Urinary-Tract-Infection-Naturally-Step-4-Version-2.jpg http://www.dinamani.com/health/womens-health/2016/aug/25/டாக்டரிடம்-கேளுங்கள்-2558277.html
  2556932 மருத்துவம் மகளிர் நலம் பெண்களின் ஆரோக்கியம்! DIN Monday, August 15, 2016 04:36 PM +0530  

  ஐ.நா.வின் உலகச் சுகாதார நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு 'சர்வதேச மகளிர் நல மகப்பேறு மேம்பாட்டு மையம்'. இம்மையம் பெண்களின் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை கொண்டு செயலாற்றி வருகிறது. மகப்பேறு சார்ந்த ஆய்வின்போது அதற்குக் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கின்றன. ஆய்வுத் தகவல்கள் வருமாறு:

  உலகில் நோய்களின் மூலம் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். இதற்கு காரணம், பெண்களுக்கான பிரச்னைகள், சக ஆண்களால் அலட்சியப்படுத்தப் படுவதே!

  இன்று பிரசவம் சார்ந்து பல முன்னேற்றங்கள் வந்துவிட்டாலும் அந்த வசதிகள் அனைவரையும் சென்று அடைவதில்லை. உதாரணமாக 2013-இல் மட்டும் மூன்று லட்சம் பெண்கள் கர்ப்பம் சார்ந்த சிக்கல்களால் இறந்துள்ளனர். கருத்தரிக்காமல் இருக்க பயன்படும் சாதனங்கள் சுமார் 23 கோடி மக்களுக்கு கிடைக்கவே இல்லை. 

  கர்ப்ப சிக்கல்கள்

  ஆண்டுதோறும் 20 வயதுக்கு உட்பட்ட இளம் பெண்களில் 1.3கோடி பேர் குழந்தை பெறுகிறார்கள்.

  கர்ப்பம் சார்ந்த மற்றும் குழந்தை பிறப்பில் ஏற்படும் சிக்கல்கள் மூலமாக ஏராளமான இளம் பெண்கள் இறந்து போகின்றனர். பாதுகாப்பற்ற கருச்சிதைவு மூலமும் பல பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
   வீட்டில் சிக்கல்

  50 வயதுக்கு உட்பட்ட பெண்களிலும் கூட 3-இல் ஒருவருக்கு வீட்டில் நேரடி மற்றும் மறைமுக செக்ஸ் பலாத்காரம் நடக்கிறது.

  செக்ஸ் கொடுமைகளால் வரும் தொத்துகள்

  மேகவெட்டை நோய், சாலம்டியா நோய் போன்றவற்றைக் கண்டுபிடித்து குணப்படுத்த வேண்டியது அவசியம்.

  வெளிப்படுத்த இயலாத வியாதிகள்

  வெளியில் சொல்ல இயலாத நோய்களால் 2012 - ஆம் ஆண்டில் மட்டும் 70 வயதுக்கு உட்பட்டோர் 47 லட்சம் பேர் இறந்து போயிருக்கிறார்கள்.

  பெரும்பாலான சாவுகள் சாலை விபத்துகள், புகையிலை, மது, போதை மருந்து மற்றும் உடல் பெருக்கம் மூலமே நிகழ்கின்றன.

  புற்று நோய்

  ஒவ்வோர் ஆண்டும் அரை மில்லியன் பெண்கள், கழுத்து மற்றும் மார்பக புற்று நோயினால் இறக்கின்றனர்.

  இவற்றை சோதிக்கவும், சிகிச்சை எடுக்கவும் வசதியில்லாத நாடுகளில் தான் மேற்கண்ட நோய்களால் மிக அதிகம் பேர் இறக்கின்றனர்.

  மன ஆரோக்கியம்

  கவலை, மன இறுக்கம் மற்றும் உடல் கூறு சார்ந்த தொல்லைகள் ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் நேர்கின்றன. இவற்றில் மன இறுக்கம் பெண்களை படாதபாடு படுத்துகிறது.

  60 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு, மேற்கூரிய காரணங்களால் தற்கொலை செய்து கொள்வது அதிகமாக நிகழ்கிறது.

  ஆண்களைப் போன்று பெண்களுக்கு பென்ஷன் கிடையாது. மருத்துவ வசதிகளுக்கும் தனிப்பட்ட முறையில் வாய்ப்பு இல்லை. இதனால் வயதாகும்போது பெண்கள் ஆண்களைவிட அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

  வயதான காலத்தில் உணவுக்கு வழி இல்லாமல் போகும் போதும், வயதானதால் வரும் வியாதிகளைச் சமாளிக்க இயலாமல் போகும்போதும் மனம் பேதலித்து; பைத்தியம் பிடித்த நிலைக்கு தள்ளப்படுவதும் உண்டு.

  ஆக மேலே கூறியவையெல்லாம் உணர்த்துவது என்ன? பெண்கள் குடும்ப உறுப்பினர்களால் சமூகத்தால் நன்கு கவனிக்கப்பட வேண்டும் என்பதே!
   - ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன்.

  ]]>
  http://www.dinamani.com/health/womens-health/2016/aug/15/பெண்களின்-ஆரோக்கியம்-2556932.html