Dinamani - மனநல மருத்துவம் - http://www.dinamani.com/health/mental-health/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2925401 மருத்துவம் மனநல மருத்துவம் நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? இதோ ஒரு எளிய வழி! மாலதி சுவாமிநாதன் Thursday, May 24, 2018 10:46 AM +0530  

நம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமானது, கனவு கண்டு, துணிந்து, செய்து காட்டுவது (I dream, I dare, I do)! இதிலிருந்து மனநிறைவு வருகிறது. நாம் ஒன்றை நினைத்து, அதை முடித்ததால் இப்படி நேர்கிறது. வரும் கரவொலி, மனத்துக்கு மிக இதமானதாகவும் தோன்றும்! இதுதான்  நம்மை ஊக்கப்படுத்தி, முன்னேறுவதற்கு வழி செய்யும் கருவி. அதுவும், நாம் செய்வது மற்றவருக்கும் பயன்படுவதை பார்த்தால், அது மேலும் செய்ய தூண்டி விடுகிறது. இவை எல்லாம் சேர்ந்து, நம் வாழ்விற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது என்று எண்ண வைத்து, நம் மனநலனைக் காக்க, வாழ்வு நன்றாக இருக்க உதவுகிறது.

ஆனால் எல்லோரும், எப்பொழுதும் இப்படி அமைத்துக் கொள்வதில்லை. நம் கருத்துக்கள், எண்வோட்டங்கள், சூழ்நிலைகள், மனப்பான்மை எல்லாமே மனநலனைப் பாதிக்கச் செய்யும். இவற்றை அடையாளம் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டால், நம் நடைமுறை வாழ்வில் இன்னல்களாகவும், உபாதைகளாகவும் அமையும். நினைத்ததை முடிக்க முடியாமல் போக, வெறுப்பு ஏற்படக் கூடும். இந்த பாதிப்புகளை அடையாளம் கண்டு கொள்வது எப்படி? நாம் வாழ்க்கையை எப்படி அணுகுகிறோம் என்பதைப் பார்த்து, நம் மன நலம் பாதிக்கப் பட்டிருக்கிறதா என்று அறிந்து கொள்ள முடியுமா? பாதிப்பின் சில ரூபங்களையும் அதன் அடையாளங்களையும் இங்கே பார்க்கப் போகிறோம்.

மனநலம் அறிய, கீழ் சொல்லப்படும் ஒவ்வொரு பகுதியிலும் இருவித தோற்றங்கள் காணலாம். ஒன்று நம் மனநலனைக் காத்து, நம் வாழ்வைச் செழிக்க வைக்க உதவுகிறது. மற்றொன்று நம் மனநலத்தை, குறிக்கோள்களை அடைவதைப் பாதிக்கும் தடைகளின் அறிகுறி. இதனால் மனக்கலக்கம், மனக்கிலேசம் ஏற்படலாம்.

கீழே விவரித்ததிலிருந்து, நமக்கு எந்த சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது  என்பதை அறிந்து கொள்ளலாம். அதை மாற்ற  வேண்டும் என்று எண்ணுபவர்கள், அதற்குத் தேவையான பயிற்சிகளைச் செய்ய ஆரம்பிக்கலாம். எந்த வயதினரும், எந்த வயதிலும் மாற்றத்தை அமைத்துக் கொள்ளலாம். மாற்றத்தின் முதல் படி, நாம் என்ன செய்கிறோம் என்பதைப் புரிந்து கொள்வதாகும். அதிலிருந்து மாற்றத்தை வகுக்கலாம். ஆரம்பிக்கலாமா?

நன்றியுணர்ச்சி (அல்லது) என் உரிமை!

மனநலத்தைக் காக்கும் மிக உத்தமமானது, நன்றியுணர்ச்சி (Gratitude)! கடவுள், பெற்றோர்கள், கூடப்பிறந்தவர், ஆசிரியர், படித்த புத்தகம், நண்பர், சக ஊழியர், சமயத்திற்கு உதவுபவர், அலையின் ஓசை, குயில் பாட்டு என்று பலவற்றிற்கு நமக்கு நன்றி உணர்வு இருக்கலாம். நன்றி உணர்வு இருந்தால் அது சந்தோஷத்தை மேம்படுத்தும்.நமக்கு இப்படித் தோன்றுவதே நமக்குச் செய்த உதவியை, பெற்றதையும் மனதில் வைத்திருப்பதைக் காட்டுவதாகும். 

அவர்கள், நம்மேல் காட்டிய பாசமும், அக்கறையும், கொடுப்பினைகளும் நமக்கு ஆதரவு, பாதுகாப்பாகிறது. இந்த அனுபவிப்பின் பிரதிபலிப்பே நம் நல்லுணர்வு. இதனால், நாம் பல நல் விளைவுகளை அனுபவித்திருப்போம். இதை விவரிக்கும் போது, யாரால் நடந்தது என்பதைச் சொன்னால் அது நன்றி உணர்வு எனச் சொல்லலாம். பலரிடம் பகிர்ந்து கொள்வதே நம்முடைய நன்றி உணர்வைக் காட்டுகிறது.

நன்றியுணர்வு உள்ளவர்கள், மற்றவர்கள் தங்களுக்கு செய்தது போல், பலருக்கு தங்களால் முடிந்ததைச் செய்வார்கள். மேலும் தான் பெற்ற ஆதரவுக்குக் கைமாறாக, அதைப் பற்றி எல்லோரிடமும் பகிரங்கமாக நினைவூட்டிப் பகிர்ந்து கொள்வார்கள். நன்றி சொல்வது, ஓயாத சொல் என்றே சொல்லலாம்!

நன்றியுணர்வு உள்ளவர்களிடம் அவர்களின் பாதுகாப்புத் தன்மை நன்றாகத் தெரியும். அதனாலேயே, எந்த வித பகட்டு, சத்தம் இல்லாமல் நன்மை செய்து கொண்டே இருப்பதால் இவர்களை அணுகுவது மிக எளிதானது. அவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள், அவர்களுடன் இருப்பவரும்!

இதற்கு நேர்மாறானது, எல்லாம் என் உரிமை (my entitlement) என்பது, மனநலனைப் பாதிக்க கூடிய ஒன்றாகும். யார் தனக்கு எது செய்தாலும், செய்வது அவர்கள் கடமை, பெறுவது தன் உரிமை என்று கருதுவார்கள். மேலும், மற்றவர்கள் செய்யட்டுமே, என்று எண்ணுவார்கள். எந்த ஒளிவு மறைவும் இல்லாமல், வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் இதை தெரியப் படுத்துவார்கள். தங்களுக்கு விழுந்து விழுந்து உழைப்பாக, காசு பணமாக, பொருளாகச் செய்ய விடுவார்கள். இவர்களிடம் லஞ்சம், ஜால்ரா அடிப்பது செல்லும்.

இப்படி, தன் உரிமை வழங்கல் பிரதானமாக எண்ணுபவர்கள் தங்களின் அதிகாரத்தை மையமாக்கி உரிமைகளைக் கொண்டாடுவார்கள். செய்வோரின் மீது முழு உரிமை செலுத்திக் கொண்டு, தங்களின் அடிமையாக நடத்துவார்கள். தன் முன்னேற்றம், செழுமை எல்லாம் தன் சாமர்த்தியம், தன் உழைப்பினால் தான் என்று சாதிப்பார்கள், மற்றவரின் பங்கேற்பை மூடி மறைத்து விடுவார்கள், துச்சப் படுத்துவார்கள்.

தங்களின் திறமையை, திறனை மேம்படுத்தத் தெரியாதவர்கள் இப்படியே இருப்பார்கள். இப்படி நடந்து கொள்வதும், அதிகாரத்தை உபயோகிப்பதும் அவர்களின் சுய திறன் இல்லாததினால் தான்.

தாங்களாக எந்த முயற்சியும் எடுக்காமல், எந்த ஒரு சிரமமும் படாமல் மற்றவர்களை வைத்தே செய்து முடிப்பார்கள். உள் மனதில் அவர்களுக்கு தங்களின் இயலாமை தெரியும். அதை மறைப்பதற்கு இந்த அகம்பாவமும், பந்தா போர்வையும்.

உங்களின் அடையாளம்: பணிவா? என் உரிமையா? சரி, அடுத்ததைப் பார்ப்போம்

பகிர்ந்து கொள்வது (அ) பதுக்கி,மறைத்து வைப்பது

நமக்குத் தெரிந்ததையும், தகவல்கள் கிடைத்த இடங்களையும் சொல்வது பாதுகாப்பு தன்மையையும் பரந்த மனப்போக்கையும் காட்டுகிறது. அடுத்தவர்களுக்கு விளக்கிச் சொல்வது, சந்தேகத்தை தனக்கு தெரிந்த வரையில் நீக்கி விடுவது, பதில்களை எங்குக் கிடைக்கும் என்ற விவரங்களை எடுத்துச் சொல்லுவது எல்லாம் பகிர்ந்து கொள்வதற்குள் அடங்கும். பகிர்ந்து கொள்வதால் தெரிந்தது இன்னும் அதிகமாகுமே தவிர குறையவே குறையாது. இந்த புரிதலே நன்றாக இருக்கும் மனநலத்தின் அறிகுறியாகும்!

இதற்கு எதிர்ப்பதமாக,தகவல்களைப் பதுக்கி, மறைத்து வைப்பவர்கள் ஆவார்கள். இவர்கள்,  மனக்கலக்கம் உள்ளவர்களாக இருப்பவர்கள். மழுப்பலான விடை, பொய் சொல்வது, தாமதித்துத் தருவது என்ற பல வகையில் மறைப்பதைச் செய்வார்கள். அந்தத் தகவல் தன்னிடம் இல்லாதது போல் காண்பித்துக் கொள்வது, ஒளிப்பதற்கு தன் உயர் அதிகாரியே காரணம் என்று பழியை யார் மேலேயோ போடுவது என்ற ஏதோ ஒரு யுக்தியைக் கையாளுவார்கள்.

மறைத்துப் பதுக்கி வைக்கும் நபர்கள் அந்த விஷயம் தங்களிடம் இருப்பதால் தான் மற்றவர்கள் தங்களை அணுகுகிறார்கள், மதிக்கிறார் என்று எண்ணும் காரணத்தினால் யாரிடமும் அதை முழுவதாகச் சொல்ல மாட்டார்கள். தங்களை மேம்படித்திக் கொள்ள வேறு எந்த முயற்சியும் மேற்கொள்ளாததால் இப்படி நேர்கிறது.

எப்பொழுதும் ஒளித்துவைப்பதால் தன்நம்பிக்கை இழந்தவர்களாகத் தென்படுவார்கள். சில சமயங்களில், தன்னிடம் மட்டுமே அந்த தகவல் இருக்கிறது என்ற கர்வத்துடன் தென்படுவார்கள். இப்படிச் செய்வதை நினைத்து, உள்ளுக்குள்ளே வெட்கத்தில் மூழ்கி இருப்பார்கள். சஞ்சலங்கள் நிறைந்து இருப்பதால், மனதில் அலை மோதிக் கொண்டே இருப்பதால், மனநலம் சரியாக இருக்காது. நீங்கள் கையாளும் விதம்? உங்கள் மனநிலை?

பாராட்டுவது (அ) விமரிசனம் / குறை காணல்

தனக்குத் தெரிந்தவரோ, தெரியாதவர்களோ என்று யாராக இருந்தாலும், செயல்பாட்டு நன்றாக இருந்தால், பலனை எதிர்பார்க்காமல் தாராளமாக பாராட்டைச் சொல்வார்கள். தன்னைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இருப்பவர்கள், ஓர் அளவிற்கு நன்றாகத் தன்னை அறிந்திருப்பதால், யாராக இருந்தாலும் நன்றாகச் செய்வோரை முழு மனதுடன் பாராட்டுவார்கள்.

இதற்கு நேர்மாறானவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் எல்லாவற்றையும் விமரிசனம், குறை காணல் செய்வார்கள். எளிதாகக் எதிலும் குறை காண்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் குறையை மட்டும் பார்ப்பதால் அவர்கள் அருகில் இருக்க யாரும் விரும்ப மாட்டார்கள். இதுவே அவர்களை மேலும் வெறுப்பூட்டும், விளைவு, மேலும் மேலும் விமர்சனம் செய்வதாகும்.

குறைபாட்டையே அடையாளம் காண்பதால் ஏளனமாகத் தெரிவிப்பார்கள். இதனால், சிலருக்கு இயல்பாகவே நக்கல், நையாண்டி பேச்சாக இருக்கும். நக்கலாகப் பேசுவதும், கிண்டல் அடிப்பதும், அதிகமாகக் குறை கூறுவதும் உள்ளதால் அவர்களிடம் பேச விருப்பம் இல்லாமல் இருக்கும். இதை மரியாதை என்று எடுத்துக் கொண்டு, தங்களைப் பற்றி பெருமை பட்டுக் கொள்வார்கள், மற்றவர்களின் மனது துன்படுதுவதை உணர மாட்டார்கள். வார்த்தைகள் கசப்பாக இருப்பதால் இவர்களின் முக பாவமே சிடுசிடுவென்று, முறைப்பாக இருக்கும். இதுவெல்லாம் மனநல குறைவே. நாம் எதைச் செய்கிறோம்?

கருத்துக்கள் பரிமாற்றமா? (அ) மற்றவர்களைப் பற்றிப் பேச்சா?

ஒருவரைச் சந்தித்து பேசும் போது மூன்றாமவர்களைப் பற்றிப் பேசலாம், அல்ல கருத்துக்களை பரிமாறவும் செய்யலாம். என்ன வித்யாசம்?

கருத்துக்களைப் பரிமாறி கொள்வதால் நாம் அந்த குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி கலந்து ஆலோசித்து, தான் யோசித்த விதத்தை மேலும் மெருகேற்றிக் கொள்ள முடியும். மற்றவர்களின் குறிப்புகளை கேட்பது, மதிப்புடன் பதில் கூறுவது இதில் அடங்கும். நான் சொல்வது மட்டுமே சரி என்று இருந்தால் அதில் ஒருத்தரின் கருத்து மட்டும் வெளியாகும். பேசிக் கொள்பவர்களின் இடையில் நல்ல புரிதல் இருந்தால் பகிர்ந்து கொள்வது எளிதாகும். இருவரும் மற்றவர் கருத்துக்கு மரியாதை கொடுத்துப் பகிர்ந்தால் அதில் சண்டை, கூச்சல் இருக்காது. அதற்குப் பதிலாக பல தகவல்கள் பரிமாறிக் கொள்வார்கள். தெரியாத பலவற்றை தெரிந்து கொண்டதால், இவர்களை மறுபடியும் சந்திக்க தோன்றும்.

மற்றவர்களைப் பற்றி பேச்சு என்றால், அந்த குறிப்பிட்ட நபரின் வாழக்கையை அலசி நம்முடைய விமர்சனத்தைப் பகிர்ந்து கொள்வோம். பேசப் படுபவர்கள் அங்கு இல்லாததால் அது வீண் பேச்சாகும். இதில் அவர்களின் குறைவுகள் தான் அதிகம் பேசப்படும். இதனால் பேசுபவருக்கோ, பேசப்படும் நபருக்கோ எந்த விதத்திலும் உபயோகம் இல்லை. இப்படிப் பேசுபவரை கண்டு அஞ்சுவார்கள்.
எதைத் தேர்வு செய்பவர், நீங்கள்?

ஸர்வே ஜனா ஸுகினோ பவந்து (அ) 'அவர்கள் தோல்வி அடைய வேண்டும்' நம் இந்திய கலாச்சாரத்தில் மிக அழகானது ‘ஸர்வே ஜனா ஸுகினோ பவந்து’ என்ற எண்ண ஓட்டம். பிறர் நலன் விரும்புவது, செழிப்பிலும், ஐஸ்வர்யத்திலும், உடல் நலத்திலும். இப்படி விரும்புவோர், தனக்கு மட்டுமே இன்றி எல்லோருக்கும் நல்லதையே எண்ணுவார்கள். இந்திய நாடு, கூட்டுச் சமுதாயமாக இருப்பதும் இப்படித் தோன்றச் செய்கிறது. அதனால் தான் பகிர்ந்து கொள்வது நாம் எப்போதும் செய்வதே. எல்லோர் நலத்தில் நம் நலனும் அடங்கி விடுகிறது.

போட்டி, பொறாமையினால் வருவது, மற்றவர் தோல்வி அடைய வேண்டும் என்ற எண்ணம். இதில் மற்றவருக்கு எப்படிச் சரிவு ஏற்படுத்தலாம் என்ற சிந்தனையே கொண்டிருப்பது, வருத்தப் பட வேண்டிய ஒன்றாகும். வாழ்வின் எல்லாத் துறைகளிலும் போட்டி அதிகரிப்பதால், இது வளரும் பருவங்களிலும் பார்க்கிறோம். ஏன் இப்படிச் செய்ய வேண்டும்? தன் திறமையினால் வெல்ல வேண்டும் என்பதைவிட, எப்படியாவது வென்று விட வேண்டும் என்ற மனப்பான்மை. தங்களுக்குக் கிடைக்காதது மற்றவருக்கும் கிடைக்கக் கூடாது என்ற எண்ணம். எதைத் தேர்வு செய்பவர், நீங்கள்?

எந்த வழியைப் பின்பற்றுவது?

கற்றுக் கொண்டு இருப்பது / இதெல்லாம் தெரியும்

வாழ்நாள் முழுவதும், நமக்குத் தெரியாது என்று பல உண்டு. ‘கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு’ தெரியாததை, தெரிந்து கொள்ளத் தூண்டும். இப்படி, கற்றுக்கொண்டே இருப்பதால் பலவகையான விஷயங்களை அறிந்து கொள்கிறோம். “ஆம், எனக்கு இது தெரியாது” என்று ஏற்றுக்கொள்வதே நம் அடக்கத்தை உயர்த்தும். இந்த ஆற்றல் நாம் மேலே வளர உதவுகிறது.

பின்பற்றத்தக்க வழிமுறைகளில் இதன் இடமும் உண்டு. மேலும், விஷயம் தெரியவில்லை என்பவரை ஏளனப் படுத்த மாட்டோம்.

நமக்குத் தெரியும் என்று எண்ணி விட்டால் கற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லாமல் போய்விடும். ‘இதுவா? தெரியும்’ என்றே எப்போதும் இருந்தால் அது நம் கற்றலுக்கு குறுக்கே நிற்கும். அத்துடன் கர்வத்தை உண்டு செய்யும். தெரியாதென்றால் தெரிந்து கொள்ள முயற்சிக்க மாட்டோம், மற்றவர் நம்மை மூடர் என்று நினைப்பார்களோ என்று அஞ்சுவோம். அதனால் முன்னேற மாட்டோம்.

கடந்த மாதங்களை எந்த விதத்தில் நாம் அணுகினோம்? 

இப்போது, நாம் எதை ஏன், எப்படிச் செய்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதுவே மாற்றத்தின் முதல் படி. தேவைக்கு ஏற்றாற்போல் மாற்றி அமைத்து நலனை அடைவது இனி நம்மிடமே! அப்படி என்றால் நான்? என்பதற்கும் விடைகள் நம்மிடமே உள்ளது!

- மாலதி சுவாமிநாதன் - மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் malathiswami@gmail.com

]]>
depression , மன நலம், who am i, dream, யார்? http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/23/w600X390/images.jpg http://www.dinamani.com/health/mental-health/2018/may/24/how-i-define-myself-2925401.html
2921612 மருத்துவம் மனநல மருத்துவம் விதவிதமாய் தவறு செய்கிறீர்களா? கவலை வேண்டாம் திருத்திக் கொள்ளலாம் வாருங்கள்! மாலதி சுவாமிநாதன் Thursday, May 17, 2018 01:59 PM +0530  

தவறு என்றாலே ஏனோ துச்சமாக, இழிவாகப் பார்க்கப்படுகிறது. ஒரு செயலைச் நாம் செய்யும்போது, சில சமயம் தவறுகள் நேரலாம். தவறு செய்து விட்டோம் என்று உணர்ந்ததும், நம்மை வெட்கம் சூழ்ந்து விடுகிறது. மற்றவர்கள் நாம் செய்த தவற்றை மற்றவர்கள் சுட்டிக் காட்டும் போது குற்றவுணர்வும் குத்திக் காட்டும் போது கோபமும் ஏற்படுவது சகஜம்.

‘என்ன இப்படி?’, ‘பார்த்துச் செய்யக்கூடாதா?’, ‘எப்பவுமே இப்படியா?’ என்று அவர்கள் அபிப்பிராயங்களைத் தெரிவிக்க, ஒரு அமைதியற்ற நிலை நமக்குள் தோன்றும். இப்படி நிகழ்வதால், அந்தத் தவறை சீர் தூக்கிப் பார்க்க நம் மனம் ஒப்பாது. நேர்ந்துவிட்டத் தவறை ஆராய்ந்து பார்க்கத் தவிர்ப்பதனால், மீண்டும் அதே போன்ற தவறுகளைச் செய்யலாம்,

முயற்சிகளின் இடையில் தவறுகள் ஏற்படுவது சகஜம் என்று அதை சாதாரணமாக எடுத்துக் கொள்பவர்களையும் நாம் பார்த்திருக்கிறோம். இவர்கள் அச்சமின்றி அணுகுவதால், செய்ததை வெளிப்படையாக ஒப்புக் கொள்வதால், அடுத்த நிலையை அடைய முடிகிறது. இவர்கள் தவறை பற்றி யோசித்து, ‘ஏன் இது நிகழ்ந்தது?’, ‘என்ன செய்ய வேண்டும்?’ என்று எண்ணுவதால் திருத்திக் கொண்டு முன்னேறுகிறார்கள். நேர்ந்த தவறுகளை தங்களுக்கு வந்த வாய்ப்பாகக் கருதி, செயல்படுகிறார்கள்.

தவறுகளை மதிப்பீடு இல்லாமல், துச்சமாகப் பார்ப்பதற்கு பதிலாக, அவை, ஏன் தோன்றுகிறது என்பதை அறிந்து கொண்டால் அது நம்மை மேம்படுத்த உதவும். தவறுகளின் வெவ்வேறு வகைகள் என்ன, அவற்றின் மூல காரணிகள் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் அவைகளை கண்டு கொண்டு சரி செய்ய உதவும். எட்வர்ட் ஃப்ரைசேன்யோ என்றவர் தவறுகளை, ஸ்ட்ரெச் (stretch) தவறு, ஆஹா மோமென்ட் (Aha moment), ஸ்லாப்பி (sloppy) தவறு, ஹை ஸ்டேக்ஸ் (high stakes) தவறு என்று பகுத்திருக்கிறார். இவற்றைப் பற்றின விவரங்களை மேற்கொண்டு பார்ப்போம். பிறகு, தவறுகளைப் பார்த்து அஞ்ச மாட்டோம், நம் வெற்றியை நிர்ணயிக்கும் யுக்தியாக உபயோகிப்போம்!

கூடுதலாக எட்டிச் செய்வது?

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட திறன்கள் உண்டு. இதிலிருந்து, நம்முடைய தனித்துத்துவம் வெளிப்படையாகிறது. இவையே நம் அடையாளமாகும், வெற்றிகளைக் கொடுக்கும். அதற்காகவே இந்தத் திறன்களை மேம்படுத்தும் பலவிதமான முயற்சிகளை செய்வோம். ஈடுபாடு அதிகமிருந்தால், மேலும் மேலும் சவாலாக இருப்பதைச் செய்ய முயற்சிப்போம். சில சமயங்களில், தவறுகள் வரலாம். நமக்கு முடிந்த வரை, மற்றவர்களின் உதவி இல்லாமல் செய்து பார்ப்போம்.

முயற்சிக்கும் போது, ‘இப்படிச் செய்யவா?’, ‘அப்படியா?’ என்று செய்ய, சிலவற்றில் தவறுகள் ஏற்படும். அதற்காக, தவறுகள் வந்துவிடுமோ என்று அஞ்சினால், முயற்சிக்கவே மாட்டோம். ‘செய்து பார்ப்போமே’ என்று செய்தால் தான் நாம் செய்து கொண்டு இருப்பதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வோம். அப்பொழுது நிகழும் தவறுகள், இப்படி நம் திறன்களை சற்று இழுத்துக் கொண்டு நீட்டிச் செல்வதே ‘ஸ்ட்ரெச் தவறு (stretch)’ என்பது.

இது எப்படி ஏற்படும் என்பதைப் பார்ப்போம். நாம் ஒன்று செய்வதற்கு முயற்சியில் ஈடுபட்டு வருகையில், தவறு நிகழ்ந்தால், வேறு உத்திகளை யோசிக்க வேண்டிவரும். இதைத் தொடர்ந்து செய்தால், நம்மால் எந்த அளவிற்கு முடிகிறதோ நாம் செய்வோம். அடுத்ததாக எப்படிச் செய்வது என்று தெரியாமல் தத்தளிக்கும் போது இப்படி-அப்படிச் செய்து பார்ப்போம். அப்போது, தவறுகள் நேரலாம். அதனால், நிறுத்தி விடலாமா என்ற யோசனை வரலாம். அந்த எண்ணத்தை நிராகரித்து விட்டு, முயற்சி செய்வோம்.

மேலும் செய்வதற்கு, பிறர் உதவியை நாடுவோம்.  இந்த நிலையை ‘ஜோன் ஆஃப் ப்ராக்ஸிமல் டிவலப்மென்ட்’ (Zone of proximal development, ZPD) என்று லெவ் வைகாட்ஸ்கீ (Lev Vygotsky) என்ற ஸோவியட் உளவியாளர் விவரித்தார். இந்த ZPD நிலையில், நமக்கு ஓர் அளவிற்குச் செய்ய வரும். அதற்கு மேல் செல்ல, மற்றவரின் உதவி தேவையாகும். இந்த, ஒரு நிலையில் நாமாகவும், மற்ற நிலைக்கு இன்னுருவர் உதவுவதே ZPD என்பது. நம்முடன் மேலும் நன்றாக இந்த விஷயத்தை அறிந்தவர் நமக்குக் கற்று தந்து, நமக்குப் புரியும் வரை கூட இருப்பார். நாமாகச் செய்ய முடிகிறது என்று தெரிந்ததுமே அவர்கள் தங்களை விலக்கிக் கொள்வார்கள்.

வைகாட்ஸ்கீயின் இந்த வழிமுறையைப் பின்பற்றுவதால், சில குணங்களும் மேம்படுகின்றன. நமக்கு உதவி தேவை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய பக்குவத்தை நாம் வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பாக அமைகிறது. உதவிக் கேட்க தைரியமும் மனோபலமும் தேவையாகிறதால், கூடவே வளரச் சந்தர்ப்பமாகி விடுகிறது. அது மட்டும் அல்லாமல், இவை எல்லாம் ஒன்றாகக் கூடி தவறுகளை சரி செய்யவும் வழி காட்டுகிறது.

இதில் முக்கியமான அம்சம், நாம் மற்றவர்களுடன் போட்டி இடாமல், நம்மைச் சீர்திருத்தி கொள்கிறோம் என்பதே. இதனாலேயே, நாம் அடுத்த முறையும் முயற்சிப்போம், தவறுகள் வந்தாலும், உதவிக் கேட்டு, அடுத்த நிலைக்குப் போக வழியைத் தேடுவோம். இப்படிச் செய்து வருவதால், ஒவ்வொரு முறையும் நம் தரத்தை உயர்த்திக் கொண்டு போவோம். இப்படி இழுத்துக் கொண்டு நீட்டிச் செல்வதினால் தான் ‘ஸ்ட்ரெச் தவறு (stretch)’ என்ற பெயர். ‘ஸ்ட்ரெச் தவறு’, ZPD, எல்லா வயதினருக்கும் பொருந்தும்!

உள்ளத்தில் திடீரென தோன்றும் ‘ஆஹா!’

சில சமயங்களில் நாம் ஒன்றைச் செய்து முடித்த பின் நாம் செய்ததை பார்த்ததும், திடீரென நமக்கு, ‘ஆஹா!’, நாமா செய்தோம் என்று தோன்றும். சில சமயங்களில், குறிப்பிட்ட ஒரு நிகழ்வினால், நாம் ஒன்றை நினைத்தாலும் வெறொன்றை செய்துவிடுவோம், அது சரியாக இல்லாமல் போகும் போது ‘ஆஹா, தவறல்லவா!’ என்று உணர்வோம்.

உதாரணத்திற்கு, நாம் ஒருவருக்குப் பாடத்தை விளக்கித் தெளிவாக்கியதும், அவர்கள் இதற்காக நம்மை நாடவில்லை என்று திடீரென உணர்வோம், ‘ஆஹா! இதுவென்ன செய்தோம்’ என்று தோன்றும். அவர்களுக்கு இது தேவையா என்பதை கூர்மையாகக் கவனிக்காததால் நேர்கிறது.

‘ஆஹா! இதுவென்ன செய்தோம்’ நம்முடைய கவனக்குறைவினாலும் நேரலாம். நமக்குத் தெரிந்த ஒருவரைக் கைப்பேசியில் அழைத்துப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்கிறோம். வாழ்த்தின மறுகணம் அன்றைக்கோ அவர்களின் திருமண நாள் என்று நினைவுக்கு வர, ‘ஆஹா!’ எனத் தோன்றும்.

இன்னொரு உதாரணம், ஒரு மீட்டிங் முடிந்ததும் ‘ஆஹா நாம் எப்பொழுதும் மற்றவரை ஒதுக்கி விட்டு இருவரை மட்டும் மிகத் திறமைசாலி என்று புகழ்கிறோமே’ என்று. ஒரு முறை அவர்களின் திறமையை உணர்ந்த பிறகு அவர்களின் பங்களிப்பு மட்டுமே கணக்குகள் எடுத்துக் கொள்வது என்று இருந்து விடுவதால் இந்த ஆஹா தவறு நேர்கிறது. ஓரளவிற்குப் பார்த்தபின், புரிந்த கொண்டபின், முழுமையாகப் பார்க்காமல், தீர யோசிக்காமல், இவ்வளவுதான், இப்படித்தான் என்று எண்ணிவிடுவது தான் இதற்குக் காரணம். கண்டிப்பாக நாம் கவனத்தை சுதாரித்துக் கொள்ள வழிகளை அமைக்க வேண்டும். இல்லையேல், மேலும் மேலும் ‘ஆஹா!’ தவறுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

ஈடுபாடற்ற காரியம் 

சில நேரம், ஒரு காரியத்தைச் செய்கையில் நம் கவனம் சிதறும். இதனால், செய்யும் வேலையில் தவறுகள் வர நேரிடும். இது தான் ‘ஸ்லாப்பி தவறு’. இப்படி ஆவதற்குக் காரணங்கள்: எந்த ஒரு ஈடுபாடும் இல்லாமல் செய்வதால்; ஒரு எந்திரம் போல் செய்து கொண்டே போனால்; அவசரப்பட்டு செய்வதால்; ஒரே சமயத்தில் பல வேலைகள் செய்வதால் என்று பல. சில சமயங்களில், பல மணி நேரம் அதையே செய்து கொண்டு இருந்தாலும் நிகழலாம். ‘ஸ்லாப்பி’ தவறுகள் நம் உடல்-மனத்திற்கு நாம் செய்வது சரியாக இல்லை, மாற்றிச் செய்ய வேண்டும் என்பதைத் தெரிவிக்கின்றன. சில சமயங்களில், நமக்கு ஓய்வு தேவை என்பதை நமக்கு ‘ஸ்லாப்பி தவறு’ புரியச் செய்கிறது. சொல்வதை மதித்து, மாற்றி அமைத்தால் நன்று.

‘ஸ்லாப்பி’, நம் வழிகளை எப்படி சீர் செய்தால் நன்றாக அமையும் என்று ஆராய ஓர் வாய்ப்பாகிறது. சற்று சிந்தித்தால், நமக்கே புரிய வரும், நமக்குத் தேவை வேறு விதமாகச் செய்வதா, இல்லை உதவி தேவையா, இல்லை ஓய்வு தேவையா என்று. அதே போல், நாம் ஒன்றைச் செய்யும் போது எது அதனுடன் ஜோடி சேர்வதில்லை என்றும் அறிந்து கொள்வோம். உதாரணத்திற்கு, நம் வேலையுடன், டிவி பார்ப்பது ஒப்புவதா இல்லையா என்று. நாம் உடற்பயிற்சி செய்தால் அதன் பின்னர் வேலையை நன்றாகச் செய்கிறோம் என்று உணர்ந்தால், அது உடற்பயிற்சியின் நேரத்தை நிர்ணயிப்பதற்கு உதவும்.

நம் மூளை நாற்பத்தைந்து நிமிடத்திற்குக் தான் முழு கவனம் செலுத்தும். அதற்குப் பிறகு அதற்கு ஓய்வு தேவை. இந்த ஓய்வு எதற்கென்றால், இதுவரை வந்த தகவல்களை பத்திரப்படுத்தி வைக்கவே. அதனால்தான் கல்வி நிலையங்கள், கான்ஃப்ரென்ஸ் என்று பாடங்கள் நடத்தும் இடங்களில், தொடர்ந்து நடத்தும் நேரம் 45 நிமிடமே. இதைப் புரிந்து செயல்பட்டால், நமக்குச் சாதகமாகும்.

இனிமேல், ஏதோ செய்யத் தேவை என்றால், நாம் கவனிக்க வேண்டியது: அதிலிருந்து நம் மனம் திசை திரும்புகிறதா? வேலையை ஒரு அவசரத்துடன் முடிக்க முயலுகிறோமா? ஈடுபாடு குறைகிறதா? இவை எல்லாம் இருந்தால், நிச்சயமாக ‘ஸ்லாப்பி’ தவறுகள் ஆவதற்கு இடம் கொடுக்கிறோம்.

பெரிய இக்கட்டு

ஆணவமாக, ‘எல்லாம் என் கட்டுப்பாட்டில் தான்’ என்று எண்ணி செயல் படுவது ‘ஹை ஸ்டேக்ஸ் தவறு’ என்று குறிப்பிடப்படுகிறது. அது ஆபத்தைத் தரக் கூடியதாகவும் இருக்கலாம். போதை பொருள் உபயோகிப்பது, அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது போன்றவை உள்ளடங்கும். ஆரம்பிக்கும் பொழுது ‘என்ன செய்துவிடும்? என்னால் இதைக் கட்டுப்படுத்த முடியும்’ என்ற அகந்தை. இந்த மனோபாவம் தான் ஹை ஸ்டேக்ஸ் தவற்றின் அடிக்கல்லாகும், பெரும் தோல்வியில் கொண்டு விடும்.

சில முறை நம்மால் நிச்சயம் முடியாது, அல்லது ஆபத்தானது என்று எண்ணுவதை முயற்சிக்க வேண்டிய இக்கட்டான நிலை ஏற்படும். மொழி தெரியாத ஊரில் போய் பிழைப்பது, கடினமான ப்ராஜெக்ட் பொறுப்பை ஏற்றுக் கொள்வது போன்றவை. முற்றிலும் வேறுபட்டதாக இருப்பதால் அதிக கவனம் செலுத்தத் தேவை, இங்கே மேலே சொல்லப்பட்ட ZPD நேரிடும். ஒரு விதத்தில் ‘ஸ்ட்ரெச்’ தவறுகளின் அம்சங்களும் இருக்கும்.

இந்த ‘பெரிய இக்கட்டு’ நிலையில் தவறு வராமல் இருக்க, நாம் கடும் உழைப்பாளியாக, அதற்குத் தேவையான திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். செய்வதை, முன்னேற்றத்தைக் கூர்ந்து கவனித்து குறித்துக் கொள்ளும் பழக்கம் செய்வதை மேம்படுத்த உதவும். ஒவ்வொரு முறையும் செய்ததையும், செய்யப் போவதையும் ஆராய்ந்து வந்தால் தவறுகளையும் அகற்றலாம், அதே நேரத்தில், தடங்களை, தடுப்புகளைக் கவனித்து, சரி செய்ய வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளவும் வேண்டும். நாம் நினைத்ததை அடைய முடியும்.

தவறுகள் பல வண்ணங்களில்

வாழ்வில் பல இடங்களில் நம் கவனத்துடன் செயல்பட்டால், செய்வது நன்றாக அமையும். அதே சமயம், நம்மைத் திசை திருப்பும் தருணங்களும் உண்டு. தவறுகள் ஒரு விதத்தில் எச்சரிக்கைகளே. அவற்றை மதிப்போம், புரிந்து செயல்படுவோம்.

எந்த ஒரு செயலிலும் தவறுகள் நேருவது நிதர்சனம். அது நேர்ந்த பின் என்ன செய்கிறோம் என்பதுதான் முன்னேற்றத்தை முடிவு செய்கிறது.

மாலதி சுவாமிநாதன், மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்

malathiswami@gmail.com

]]>
மன அழுத்தம், தவறு, mistake, stretch, ZPD, தப்பு, மிஸ்டேக் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/17/w600X390/7-common-life-mistakes-----and-how-to-avoid-making-them-6.png http://www.dinamani.com/health/mental-health/2018/may/17/mistakes-too-have-variations-2921612.html
2919569 மருத்துவம் மனநல மருத்துவம் திருமணமே வேண்டாமா? தாம்பத்திய உறவில் பயமா? உங்களுக்கு ஜீனோஃபோபியாவா? மாலதி சந்திரசேகரன் Monday, May 14, 2018 11:50 AM +0530  

தேவகி, கல்லூரியில் கடைசி வருடம் படிக்கும் ஒரு ஜாலியான பெண். அவள், எல்லோரிடமும் மிகவும் சகஜமாகப் பழகுவாள். அவள் இருக்கும் இடத்தில், சிரிப்பலைகளுக்குப் பஞ்சமே இருக்காது. அவளது கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் நல்ல ஒரு வரனாகப் பார்த்து, சிறப்பாக அவள் கல்யாணத்தை நடத்த வேண்டும் என்று அவளது பெற்றோர்கள் தீர்மானம் செய்து இருந்தார்கள். அதற்காக சொந்தக்காரர்கள், அறிந்தவர்களிடம் நல்ல நாளாகப் பார்த்து, தேவகியின் ஜாதகத்தினை கொடுத்தார்கள்.

பெண் பார்க்கும் படலமும் தொடர இருந்த சமயத்தில், எந்த வரன் வந்தாலும் 'வேண்டாம் 'பிடிக்கவில்லை', 'எனக்குக் கல்யாணம் வேண்டாம்' போன்றவையே தேவகியின் பதிலாக இருந்தது. பெற்றோர்கள் மிகவும் குழம்பிப் போனார்கள். பெண்ணுக்கு ஏதாவது காதல் விஷயம் இருக்குமோ என்று நினைத்து, 'உனக்குப் பிடித்த பையன் யாராவது இருக்கிறானா? சொல்லித் தொலை. கல்யாணம் பண்ணிக் கொடுத்து விடுகிறோம்' என்று கூட சொல்லிப் பார்த்தார்கள். எதுவுமே இல்லை என்று துண்டைப் போட்டுத் தாண்டும் பெண்ணிடம் பெற்றோர்கள் என்னதான் செய்வார்கள்?

வீட்டில் பெரியவர்களோ, 'ஒரு வயசுப் பெண் அப்படித்தான் சொல்வாள். கல்யாணம் வேண்டும் என்றா சொல்லிக் கொண்டு அலைவாள்? என்று கூறியதின்  பேரில், உறவிலேயே ஒரு பையனைப் பார்த்து நிச்சயம் செய்து, திருமணத்தை, நல்ல முறையில் நடத்தினார்கள். முதல் இரவும் வந்தது. வீட்டில் வயதில் மூத்தவர்கள் என்னென்ன அறிவுரைகள் கூற வேண்டுமோ அவற்றை தேவைக்கு அதிகமாகவே கூறியும் வைத்திருந்தார்கள். ஆனால் நடந்தது என்ன?

தேவகி, அறைக்கதவைத் திறந்து கொண்டு, அலறிய வண்ணம் முதலிரவு அறையை விட்டு வெளியே ஓடி வந்தாள். அவளைத் தொடர்ந்த அவளுடைய கணவன், காரணம் புரியாமல், வெட்கிய மனநிலையில், அவளை வெளியே விட்டுவிட்டு ஏமாற்றத்துடன் வந்த வழி நடந்தான். ஓரிரு நாட்களில் சரியாகி விடுவாள் என்று நம்பியிருந்த அவள் பெற்றோர், கணவன் மற்றும் புக்ககத்தினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

கடைசியில், அவளை ஒரு மனோதத்துவ நிபுணரிடம் அழைத்துச் சென்றார்கள். ஒரு சிட்டிங், இரண்டு சிட்டிங் ஆன பின்பு மூன்றாவது சிட்டிங்கில் தான், தேவகி மனம் திறந்தாள். அவள், தோழியருடன், தாம்பத்தியம், குழந்தைப் பேறு  போன்ற விஷயங்களை பற்றி பேசுவதோடு, யூட்யூப் மூலம் அவற்றைப் பார்த்து தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டி வந்திருக்கிறாள். உடலுறவு கொள்ளுதல், கர்ப்பம் தரித்தல், குழந்தைப் பெறுதல் போன்ற விஷயங்கள் பற்றி விவாதிக்கவும் செய்திருக்கிறாள். அவளுடைய பயம் எல்லாம் உடலுறவிற்கு சம்மதித்தால், கர்ப்பமுற்று விடுவோம். பிறகு குழந்தை எப்படி சிறிய துவாரம் வழியாக வெளியே வரும்? மிகவும் வேதனையைக் கொடுக்குமே? நம்முடைய உடல் இதைத் தாங்குமா? என்பதே அவளுடைய பயமாக இருந்திருக்கிறது. இதை அவள் வெளியில் சொல்லி விடை தேட முடியாமல் பயந்து போயிருந்திருக்கிறாள்.

தேவகியின் மன நோயினை அறிந்து கொண்ட மருத்துவர், அவளின் பயத்தினைப் போக்கி, உலகில் உள்ள எல்லா தாய்மார்களின் அனுபவமும் இதுதான் என்பதை விளக்கி, வீட்டிற்கும் நாட்டிற்கும் ஒரு தாயால்தான் நல்ல பிரஜைகளை உருவாக்கித் தர முடியும் என்பதை விளக்கி, அவளது கணவரிடமும் சில நாட்கள் பக்குவமாக நடந்து கொள்ளும்படி அறிவுறுத்தி, அனுப்பி வைத்தார்.

உடலுறவு சம்பந்தமாக பல சம்பவங்கள் நித்தமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன, பொதுவாக இதுபோன்ற மனபீதிக்கு, ஜீனோஃபோபியா (XENOPHOBIA) என்று பெயர். புது மனிதர்களைக் கண்டாலோ, வேற்று நாட்டவர் மீதான வெறுப்பையோ ஜீனோஃபோபியா என்று சொல்வார்கள். ஒரு பெண்ணுக்கு திருமணம் என்ற பெயரில் ஒரு ஆணுடன் அன்யோன்யமாகப் பழகும்படி கட்டாயப்படுத்தப்பட்டால் இதே போன்ற மனவுணர்வு தோன்றிவிடுகிறது. அதன் தொடர்ச்சியாக சிலருக்கு கடும் பீதி ஏற்படுவதுண்டு. இதற்கு மனோதத்துவ நிபுணர்கள் கூறும் விளக்கம் என்ன தெரியுமா? '18 வயது முதல் 35 வயது வரை இருக்கும் பெண்களுக்கு, 'டெஸ்ட்டாஸ்டரோன் என்னும் ஹார்மோன், வழக்கத்தை விட குறைந்த அளவில் சுரப்பதால், இந்தக் குறை ஏற்படுகிறது. இக்குறை தனக்கு இருப்பதை ஒருவர் உணர்ந்தால் மருத்துவரை அணுகி உபாயம் தேடிக் கொள்வது நல்லது' என்கிறார்கள்.

தாம்பத்தியம் என்பது பயப்படவேண்டிய விஷயம் அல்ல என்பதை பெண்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். போதியளவு உடலுறவு கொள்வதால், பெண்களுக்கு, ஸ்ட்ரோக், மார்பகப்  புற்று நோய், இருதய சம்பந்தப்பட்ட நோய்கள், மன அழுத்தம் வருவது போன்றவை குறைகிறது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும் பொழுதும், ஆண்களுக்கு 200 கலோரிகளும், பெண்களுக்கு 70 கலோரிகளும் எரிக்கப்படுகின்றன.

இவ்வளவு சாதகமான விஷயங்கள் பெண்களுக்கு இருக்கும் பொழுது தாம்பத்திய உறவுக்குப் பயப்படுவானேன்? ஒரு ஆரோக்கியமான ஆணின் ஒரு ஸ்பூன் விந்துவில், 300 மில்லியன் உயிரணுக்கள் இருந்தாலும், ஒரு உயிரணு மட்டுமே,  மாதத்தில் ஒரு முறை, பெண் வெளிப்படுத்தும் ஒரு கரு முட்டையுடன் சேர்ந்து குழந்தையாக ஜனிக்கிறது.

ஆகையால், பெண்களே, கண்டதை படித்தும், கண்டதை பார்த்தும் மனதைக் குழப்பிக் கொள்ளாமல், உங்களுக்கு எழும் சந்தேகங்களை, பெரியவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். வீட்டில் மூத்தவர்களும், சந்தேகங்களை அலட்சியப்படுத்தாமல், கேள்வி கேட்பவர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு, அவர்களின் பயத்தினைப் போக்குங்கள். ஏனென்றால், இதில் வெட்கப்படுவதற்கு எதுவுமே இல்லை. பள்ளிப் பாடங்களிலேயே  எல்லாமே மாணவர்களுக்கு, அறியப்படுத்தப் படுகிறது.

இக்கட்டுரையே ஒரு உண்மை சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது தான். ஆகையால்,  குழந்தை வேண்டுபவர்கள், தாம்பத்தியத்தில் ஈடுபடும்பொழுது முழுமனதுடன் ஈடுபட்டால்தான், அதற்குண்டான பலன் கிடைக்கும்.

]]>
xenophobia, phobia, marriage fears, திருமணம், பயம், உடலுறவு, தாம்பத்திய உறவு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/14/w600X390/584ff91726b55c09f47275e1.jpg http://www.dinamani.com/health/mental-health/2018/may/14/how-to-overcome-anxiety-and-xenophobia-2919569.html
2912582 மருத்துவம் மனநல மருத்துவம் வேண்டவே வேண்டாம்! இனி ஒருபோதும் சொல்லாதீர்கள் அந்த வார்த்தையை! மாலதி சுவாமிநாதன் Friday, May 4, 2018 11:35 AM +0530  

அப்படி என்ன வார்த்தை அது?

சமீப காலத்தில் ‘ஸ்ட்ரெஸ்’, ‘டென்ஷன்’ என்று சொல்வது ஒரு ஃபாஷன்  வார்த்தையாக மாறிவிட்டது. அதுவும், ஒரு வயது வரம்பு இல்லாமல், இப்பொழுது எல்லா வயதினரும் தங்கள் நிலையை வர்ணிப்பதே ஸ்ட்ரெஸ், டென்ஷன் என்ற வார்த்தையால்தான். ஸ்ட்ரெஸ் என்பது மன அழுத்தம், இதைப் புரிந்து கொள்வது அவசியமாகும்.

ஸ்ட்ரெஸ் நன்மையும் அளித்து, ஊக்கப் படுத்தவும் செய்கிறது. ஒரு வேலையை குறிப்பிட்ட கால வரையறைக்கும் செய்து முடித்தாக வேண்டும் எனும் போது நம்மில் பலருக்கு மன அழுத்தம் உருவாகிறது. எதிர்பார்த்த ஒன்று நடக்காத போது ஏமாற்றம் விளைகிறது. அதுவும் கூட ஸ்ட்ரெஸ்ஸுக்குக் காரணம். ஸ்ட்ரெஸ் ஏற்பட ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காரணங்கள் உள்ளன. மென்மையான மனது உடையவர்களுக்கு வசைச் சொற்கள் கூட ஸ்ட்ரெஸ் ஏற்படுத்தும். சிலருக்கு இந்த சமூகத்தைப் பார்த்தும், சுற்றியிருக்கும் விஷயங்களை அவதானிக்கும் போதும் கடுமையான மன பாதிப்புக்கள் ஏற்படலாம். அல்லது வாழ்க்கை சூழல், குடும்பப் பிரச்னை, உடல் உபாதை என பல்வேறு வகையாக துயர்களாலும் அழுத்தங்களாலும், ஒருவரால் சமாளிக்க முடியாத அளவுக்கு ஒரு விஷயம் கைமீறிப் போகும் போதெல்லாம் ஸ்ட்ரெஸ் எனச் சொல்லப்படும் இந்த மன அழுத்தம் ஏற்படுகிறது.

சில சமயம் ஸ்ட்ரெஸ் நல்லதாகவும் பாசிட்டிவாகவும் இருக்கும். இதில், ‘நாம் செய்யப் போகிறோம்’ என்பது முன்னே நிற்பதால், ஸ்ட்ரெஸ் நன்மையைச் செய்யும். பரீட்சைக்கு நன்றாகத் தயாராக இருக்க, எழுதத் துடிக்கையிலும் நாம் அனுபவிப்பது ஸ்ட்ரெஸ் தான். இப்படி, செய்யத் தயார் படுத்தி வழிகளை அமைத்துக் கொடுப்பது, ‘யூஸ்ட்ரெஸ்’ (Eustress), அதாவது நலம் தரும் ஸ்ட்ரெஸ்!

அதற்கு நேர்மாறாக, ஸ்ட்ரெஸினால், நம்முடைய மனோபலம், உறவுகள், உணர்வுகள் பாதிக்கப்படும்போது, அந்த ஸ்ட்ரெஸ் மன அழுத்தம் தரும். மனநலத்தில் இதைத் தான் ‘ஸ்ட்ரெஸ்’ என்று கூறப்படுகிறது. ஸ்ட்ரெஸ் ஏற்படுத்தும் மன நிலையில் தொடர்ந்து நாம் இருந்து கொண்டே இருந்தால், உடலும், மனமும் கடுமையாக பாதிக்கப்படும்.

ஸ்ட்ரெஸின் அறிகுறிகளைப் புரிந்து செயல்பட்டால், அதிலிருந்து வெளியேறி நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். அறிதலும், அதற்கு ஏற்றாற் போல் பாதை அமைத்துக் கொள்வதும், உடல்-மனநல பாதுகாப்பின் முதல் படி!

ஸ்ட்ரெஸ் எதைக் குறிக்கிறது? ஸ்ட்ரெஸ் என்றால் என்ன?

ஏதோ அவசரம் மற்றும் அபாயமான நேரங்களில், நம் உடலும் மனமும் பரபரப்பாக இருக்கும். இந்த நிலையே ஸ்ட்ரெஸ். பெரும்பாலும் ஸ்ட்ரெஸ் தரும் சூழ்நிலைகளை சந்திக்கக் கையாளும் முறைகளை ‘ஸ்ட்ரெஸ் ரெஸ்பான்ஸ்’ (Stress response) என்போம். இவை மூன்று வகையாகப் பிரிக்கப் படுகிறது. போராடுவது (Fight): சூழ்நிலையில் வெற்றி பெற முயற்சிப்பது. அடுத்தது, சூழ்நிலையை விட்டு ஓடி விடுவது (Flight): வெற்றி பெற முடியாது என்று எண்ணி விட்டு விடுவது. மூன்றாவது, உறைந்து நிற்பது (Freeze): சண்டையும் போடாமல், விட்டும் விடாமல், என்ன செய்வது என்று புரியாததால், ஒன்றுமே செய்யாமல் திகைத்திருப்பதும் நேரலாம்.

எதற்கோ பயந்தோ, ஆர்வப்பட்டாலோ, உடனே ஸ்ட்ரெஸை சமாளிக்க, நமது உடலில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் (stress hormone) ஆட்ரினலினும், (adrenaline), கார்ட்டீஸால் (cortisol) உற்பத்தியாகும். இந்தப் போராளிகள், நம்மைச் சவாலுக்கு தயார்படுத்தும்.

அதன் உடல் அறிகுறிகள்: இதயம் வேகமாகத் துடிப்பது, மூச்சு வேகமாக விடுவது, நம் மற்ற உறுப்புகள் தயார் நிலையில் இருப்பது. இப்படி ஆனதும், ஆட்ரினலின், கார்டிஸால் சுரப்பதால் இன்னும் தெம்பு கூடுவது போல் தோன்றும். உடல், மூளை சுருசுருப்பாக வேலை செய்யும். இதைப் பல முறை கவனித்து இருப்போம், தேவை என்றால் அசதி கூடத் தெரியாமல் வேலை செய்வோம். பின்பே அசதி தெரியும்.

அதே சமயம் நம் மனது இதை உணர்ந்து, நம் உடலின் செய்கைகளுக்கு ஏற்றாற் போல் பயம், தைரியம் என்ற உணர்வுகளைக் காட்டும். ஸ்ட்ரெஸை, ஆட்கொள்ளவா, ஓடிப்போய் விடவா என்று அலசிக் கொண்டிருப்போம்.

செயல் முடிந்த பின் நம் மனம் அதிலிருந்து விலகவில்லை என்றால், உடலும், மனமும் ஸ்ட்ரெஸ் நிலையிலேயே இருக்கும், ஸ்ட்ரெஸ் அறிகுறிகள் இருந்து கொண்டே இருக்கும்.

ஸ்ட்ரெஸ் ஏற்படுத்தும் விளைவுகள்

உடலும் மனமும் அதிவேகத்தில் செயல்படுவதால், சதா சர்வகாலமும் ஸ்ட்ரெஸுடன் இருந்தால், நம் மன நலனை அது பாதிக்கும். சில சமயங்களில் இருக்கும் வலிகள், நோய்கள் ஸ்ட்ரெஸினால் இன்னும் அதிகரித்தது போலவும் கூடத் தோன்றும். நீடித்த ஸ்ட்ரெஸ் நம்முடைய ஒவ்வொரு அங்கத்தையும் பாதிக்கக்கூடும். பதற்றம், படபடப்பு, வலிகள், சோம்பல், அதிகப்படியான தூக்கம் அல்லது தூக்கமின்மை, தோல் பிரச்னைகள், மறதி, நினைவாற்றலில் தடுமாற்றம் உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படலாம்.

 ஸ்ட்ரெஸ் ஆட்கொண்டால்

ஸ்ட்ரெஸ் ஒரு முறை நிலைக்கச் செய்து விட்டால், அது ஒரு பழக்கம் போல் ஆகி, திரும்பத் திரும்ப அப்படியே செயல் படுவோம். இப்படித் தான் இருக்கும், இதிலிருந்து விடுதலை இல்லை என்று ஏற்றுக் கொண்டால், ஸ்ட்ரெஸ் நம்முள் வளர்ந்து, நம்மை ஆக்கிரமிப்பு செய்து கொள்கிறது.

நம் அறிவுணர்வியலில் (Cognitive) அதாவது, யோசித்து, புரிந்து கொள்வதில் ஸ்ட்ரெஸ் உட்புகுந்து கொண்டால் மறதி ஏற்படும். ‘ஞாபகம் இருப்பதில்லை’ என்று சொல்லி கொண்டே இருந்தால், இதை மாற்ற மாட்டோம். இப்படி நமக்குளே சொல்லி நிலை நாட்டுவதை ‘ஆடோ ஸஜஷன்’ (Auto suggestion) என்பார்கள். ஸ்ட்ரெஸினால் மறதி - மறதியால் ஸ்ட்ரெஸ் என்ற ஜோடி சேர்ந்துவிடும். முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். எப்பொழுதும் கவலையான எண்ணங்கள் ஓடும், அதிகமாகக் குறை கூறுவோம், கவனம் சிதறும்.

நம்முடைய உணர்வுகள்: ஸ்ட்ரெஸ் இருந்து கொண்டே இருந்தால், அதிகமான நேரம் பதற்றம், சோகம் இருந்து, ஒருவிதமான வெலவெலத்துப் போதலான உணர்வு தோன்றும். சலிப்பு, எரிச்சல் தோன்றி, வெறுப்பு தட்டும். ஸ்ட்ரெஸ் இருக்கையில், எல்லோருடன் இருந்தாலும், தனிமையாக இருப்பது போலவே உணருவோம்.

நம் உடல் ஸ்ட்ரெஸை பற்றி தெரிவிக்கும் விதம்: உடல் வலி, தலை சுற்றல், அடிக்கடி சளி, ஜுரம், மார்பில் வலி, வாந்தி பேதி, என்று ஏதோ ஒரு பாகத்தில் பாதிப்பு இருக்கலாம்.

ஸ்ட்ரெஸினால், ஒரு சிலருக்கு சாப்பிட்டுக் கொண்டே இருக்கத் தோன்றும், சிலருக்கு சுத்தமாகப் பசி எடுக்காது. அதே போல், தூக்கமும் அதிகம், குறைச்சல் ஆகலாம். செய்ய வேண்டிய வேலைகள் தாமதமாகும். இதைச் சமாளிக்க, நகத்தைக் கடிப்பது, புகை பிடித்தல், மது அருந்துவது, போதைக்கு  அடிமையாவது என்ற பழக்கங்கள் ஆரம்பமாகும். 

இவையெல்லாம் அதிகமான ஸ்ட்ரெஸ் தொடர்ந்து ஏற்படும் போது தலை தூக்கும். சூழ்நிலைகளை நன்றாக சமாளிக்கக் கற்றுக் கொண்டால், ஸ்ட்ரெஸ் அதிகமாவதைத் தவிர்க்கலாம்.

ஸ்ட்ரெஸின் காரணிகள்

நம் வாழ்வில் நடக்கும் நல்ல விஷயங்களும், நெருக்கடிகளும், கட்டாயங்களும், ஸ்ட்ரெஸின் காரணிகள் ஆகலாம். வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள், இழப்பு, உறவுமுறை மாறுதல் இவையும் காரணியாகலாம். வாழ்வில் தினந்தோறும் நேரிடும் நிகழ்வுகள்: காலை நேரத்திற்குள் வேலையை முடிப்பது / வேலைக்குப் பயணம் செய்வது இதுபோல் ‘தினசரி தொந்தரவுகள்’ (daily hassles) என்பதும் காரணிகளாகலாம். இவற்றைச் சமாளிக்கும் திறன், அல்லது வலு இல்லாமல் போனால் ஸ்ட்ரெஸ் உண்டாகிறது. இதைத் தவிர, நம்முடைய கண்ணோட்டங்கள், சிந்தனைகள் ஒன்றுக்கொன்று எதிர்மறையாக இருந்தாலும் ஸ்ட்ரெஸ் நிலவும்.

எந்த ஸ்ட்ரெஸ் வகைகள், நலம் குறைக்கக் கூடும் என்பதை ஹோம்ஸ், ராஹே (Holmes and Rahe) ஸ்ட்ரெஸ் பட்டியல் இட்டிருக்கிறார்கள். அவற்றில் முதல் பத்து : வாழ்க்கைத் துணையின் மரணம், விவாகரத்து, கல்யாண வாழ்க்கையில் பிரிவு, சிறைத் தண்டனை, நெருங்கிய குடும்பத்தினரின் மரணம், உடல் நலக் குறைவு, திருமணம், வேலை இழப்பது, திருமண வாழ்க்கையில் இணக்கமின்மை, வேலையிலிருந்து ஓய்வு பெறுவது.

ஸ்ட்ரெஸ் பாதிக்காமல் இருக்க

வலுவான, நம்பகமான, ஆதரவான உறவினர், நண்பர்கள் கூட்டமைப்பு (network) இருந்தால், ஸ்ட்ரெஸ் உணரும் போது மற்றவர்கள் இருக்கிறார்கள் என்கிற மனதிடம் பாதிப்பு வராமல் காக்கும். இதற்கு மாறாக, தனிமை சூழ்ந்திருந்தால், ஸ்ட்ரெஸின் தாக்கம் தெரியும்.

என் கட்டுக்குள் இருக்கிறது’ என்ற எண்ணம் இருந்தால் ஸ்ட்ரெஸை எதிர் கொள்ள வழிகளை அமைப்போம். ‘எதுவும் என் கையில் இல்லை’ என்ற மனப்பான்மை இருந்தால், எதையும் செய்ய முயல மாட்டோம். ஸ்ட்ரெஸ் தன் ராஜ்யத்தை நிலை நாட்டி நம்மை அதற்கு அடிமையாக்கும்.

மனப்பாங்கு, மனப்பான்மையின் பங்கு உண்டு! பாதிப்புகளை வாய்ப்பாகப் பார்க்கிறவர்கள், நன்மையை யோசிக்கும் பக்குவம் உள்ளவர், தன் வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்து செயல்படுபவர், வாழ்க்கை என்றால் சுக-துக்கத்துக்குச் சம பங்கு என்று நினைப்பவர், இவர்கள் நம்பிக்கை உள்ளவர்கள் எனலாம். இந்தப் பட்டியலில், ஏதேனும் இரண்டு இருந்தாலும் ஸ்ட்ரெஸ் நெருங்காது.

உணர்வுகளை கையாளத் தெரிவதும் உதவும்! உணர்வுகளைப் புரிந்து, அவைற்றைக் கண்டு கொண்டு, உணர்வைச் சமாதானம் படுத்தத் தெரிவது உதவும். இதனால், உடல்-மனநலம் பாதிக்காமல் இருக்கும், உடலும் பாதிப்பு இல்லாமல், ஸ்ட்ரெஸை சமாதானப் படுத்தி அனுப்பி விடும். ஸ்ட்ரெஸ் ஏற்பட்டாலும் உணர்வைப் புரிவதனால், முடிந்த பிறகு உணர்வைப் புரிந்து கொள்வோம், அதுவே நம்மை நல்ல நிலைக்கு வரச் செய்ய உதவும்.

உங்களின் ஸ்ட்ரெஸ் அடையாளம் காணுங்கள்

ஸ்ட்ரெஸ் எப்பொழுது தோன்றுகிறது என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமானது. அதற்கு ஏற்றவாறு எப்படி அணுக வேண்டும் என்பது புரிய வரும்.

ஸ்ட்ரெஸ், என்னவெல்லாம் செய்யலாம்?

உடற் பயிற்சி

தினசரி விடாமல், உடல் பயிற்சி செய்வது. அது நடப்பதோ, நீச்சலோ, ஓடுவதோ, ஏதேனும் விளையாட்டு என்று தினம் 30-40 நிமிடத்திற்குச் செய்வதால் வலு அதிகரிக்கும். பயிற்சிகள் நம் மனநலத்தை மேம்படுத்த, அதன் விளைவு, செய்வதை அருமையாகச் செய்வோம்.

உணர்வாற்றல்

நம் ஐந்து புலன்கள் (sensory organs): நமக்கு நேர்ந்த ஸ்ட்ரெஸ் சரி செய்ய, பார்வை, சத்தம், ஸ்பரிசம், சுவை, மணம் உபயோகமாகலாம். இவற்றில் எந்த உறுப்பு ஸ்ட்ரெஸை குறைக்கிறது என்று நாம் அறிய வேண்டும்: பாட்டுக் கேட்பதா, மணல், புல் மேல் நடப்பதா, நற்மணம் சுவாசிப்பதா என்று.

மற்றவர்களுடன் சந்திப்பு

சிறிது நேரம் மற்றவர்களுடன் நேரம் கழிப்பது என்ற பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இப்படித்தான் என்று இல்லாமல், நண்பர்கள், மற்றவருக்கு உதவி செய்வதற்காக என்று ஏதோ ஒரு விதத்தில் குறிக்கோளற்ற நேருக்கு நேர் சந்திப்புகள் வளர்த்துக் கொள்ளலாம். இப்படி இருப்பது, நம் மனதுக்கு இதமாக இருக்கும். மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு தரும். உடல்-மனதுக்கு ரிலாக்ஸ் செய்யவும் உதவும்.

உணவு வகைகள்

சாப்பாட்டில், காய்கறிகள், பழங்கள், நிறைய உட்கொள்ள வேண்டும். சிப்ஸ், எண்ணெய்யில் பொறித்த பண்டங்களை தவிர்த்து இயற்கை உணவு, 2-3 லிட்டர் தண்ணீர் என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஓய்வு

நன்றாகத் தூங்குங்கள் நேக பிரச்னைகளுக்கு அதுவே தீர்வாகும். தினந்தோறும் அதே நேரத்திற்குத் தூங்க வேண்டும். கைப்பேசி, லேப்டாப் படுக்கை அறையில் இல்லாமல் பழகிக் கொள்ள வேண்டும்.

மொத்தத்தில், ஸ்ட்ரெஸ் என்பது நாம் கையாளும் விதத்தில் அடங்கி உள்ளது. மேற்சொன்ன விஷயங்களைப் புரிந்து செயல்பட்டால், ஸ்ட்ரெஸ் நமக்கு ஊக்கம் தரும் கருவியாக உபயோகிக்க முடியும். ஸ்ட்ரெஸ், டென்ஷன் மன அழுத்தம் எல்லாம் நம்மை ஆக்கிரமிக்க நாம் ஏன் விட வேண்டும்?

- மாலதி சுவாமிநாதன் - மனநல மற்றும் கல்வி ஆலோசகர் malathiswami@gmail.com

]]>
மன அழுத்தம், Stress, ஸ்ட்ரெஸ், mental pain, agony, tension, மன பாதிப்பு, பிர்ச்னை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/3/w600X390/cb78fb952f877560290aef99370515bd-700.jpg http://www.dinamani.com/health/mental-health/2018/may/03/live-a-happy-and-stress-free-life-2912582.html
2898769 மருத்துவம் மனநல மருத்துவம் நீங்க எந்த டைப்? மற்றவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்காதவரா? இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான்! மாலதி சுவாமிநாதன் Thursday, April 12, 2018 11:41 AM +0530 மற்றவர்கள் பேசும் போது அவர்கள் சொல்வதை நாம் கேட்பது பொதுவாக அனைவரும் செய்வதே. காது கொடுத்து கேட்பதை நாம் பல விதங்களில்
செய்வதுண்டு.

தினசரி வாழ்க்கையில் செய்வதை 'நடைமுறை கேட்பது' (Practical listening) என்பார்கள். இதை, தினசரி தேவைகளைப் பூர்த்தி செய்ய உபயோகிப்போம். 'என்ன,முடிச்சியா?’, ’சாப்பிட்டியா?’ என்று கேட்டறிவது போல், சாதாரண வாழ்கையில் பரிமாறப்படும் தகவல்கள் இதில் அடங்கும். மற்றவர்களுடன் மேலோட்டமாகப் பேசும் போதும் இது இயங்கும், உதாரணமாகச் சாலையில் பார்ப்பவரை 'எப்படி இருக்கீங்க?’, அல்லது 'எல்லாம் ஓகே தானே?’ என்ற விசாரிப்புகள்.

இந்த நடைமுறை கேட்பதில், மற்றவர் நிலைமையை மனதில் வைத்துக் கொண்டு பேச பெரும்பாலும் யாரும் முயற்சிப்பதில்லை. வாழ்க்கையின் சிறுசிறு விவகாரங்கள், உறவாடல்கள் நடத்திக் கொள்வதுதான் குறிக்கோளே தவிர, யாரிடம் பேசுகிறோமோ அவர்களின் மனநிலை அறிவதற்காக அல்ல. பதில் வராவிட்டால் கூட சில சமயம் அடுத்ததிற்கு நகர்ந்து விடுவோம்.

மற்றொரு வழிமுறை 'தொடர்புடன் கேட்பது’ (Relational listening). இதில் நம்முடன் பேசிக் கொண்டிருப்பவரின் நிலை, அவர்களின் உணர்வுகள், நமக்கு என்ன தகவல்கள் தெரிவிக்கின்றன என்பதில் கவனத்தை செலுத்துவோம். சொல்வதற்கு முக்கியத்துவம் கொடுப்போம். ஆனால், நாம் எப்போதும் இப்படிச் செய்வது இல்லை. அதற்குப் பதிலாக, பெரும்பாலும் நாம் மற்றவர்களுடன் பேசும் போது நாம் பேசுவதற்கு எப்பொழுது வாய்ப்பு வரும் என்று அவர்கள் சொல்வதை முடிப்பதில் ஆர்வம் காட்டுவோம்! அதற்கான சைகைகளான, வாயை கொஞ்சம் திறந்த படி, தலையை வேகமாக ஆட்டிக்கொண்டு, 'ஆ’, 'நா..’ என்றெல்லாம் ஆரம்பித்த படி காத்திருப்போம். 

இப்படி நிகழ்வதற்குக் காரணம் உண்டு. அவர்கள் சொல்வதை கேட்டுக் கொண்டு இருக்கையில், நம் சிந்தனை வேறு ஒன்றுடன் இருக்கலாம். அவர்கள் பகிர்ந்து
கொள்ளுவதைப் போல் வேறொன்று நமக்கு நடந்ததையோ, கேட்டதையோ சொல்லத் துடித்துக் கொண்டிருக்கலாம். இப்படி இருந்தால், நாம் காத்திருப்பதே,  
பதிலை அளிக்கத்தான். சில நேரங்களில், சொல்லுபவரை விட நாம் ஒரு படி மேலாகச் சொல்வோம் என்பதை நிரூபிப்பதே நோக்கம் ஆகும்.

சொல்பவருக்கு, தான் சொன்னதைக் கேட்பது போல் நாம் பாவனை செய்தோம் என்று கூடத் தோன்றலாம். நிஜத்தில், சொல்பவரின் விஷயத்தை நாம் உள்வாங்கிக் கொள்ளவில்லை. இத்துடன், பேசிக்கொண்டு இருப்பவரைக் கண்ணோடு கண் பார்க்காமல், அவர்களைத் தாண்டி எதையோ கவனித்தபடி அவர்கள் சொல்வதை காதில் போட்டுக் கொண்டிருப்போம். நாமே கூட, இதை அனுபவித்திருக்கலாம். அவர்கள் சொல்வதை பாதியில் நிறுத்தி விடுவார்கள். அதற்கு 'ஓ, அவ்வளவு தானா?’ என்று நாம் கூறும்போது, சொல்லுவோரின் முக வாட்டத்தைக் கவனித்தால், நமக்கு நம் தவறு புரிய வரலாம், ஏதோ மிஸ்ஸிங் என்று. சில சமயங்களில் இதைத் திருத்தி, மன்னிப்பு கேட்டு, அவர்களைத் தொடர்ந்து சொல்லச் சொல்வோம். கவனிக்காமல் இருந்து விட்டால், சொல்லுபவர் தன் பேச்சை நிறுத்தி கொள்ளவும் செய்வார்கள். இதனாலேயே அடுத்த முறை நம்மிடம் பகிர்ந்து கொள்ளத் தயங்குவார்கள். 

நமக்கும், இது நேர்ந்திருக்கலாம். அப்படியும் ஏன் மற்றவர்களுக்கு அதையே நாமும் செய்கிறோம்? தொடர்புடன் கேட்பதில், சொல்லுபவரும், கேட்பவரும் ஒருங்கிணைந்து பேச்சை எடுத்துச் செல்வார்கள். இப்படி நேர்வதற்காக் கடைப்பிடிக்கும் வழிமுறைகள் சிலவற்றை பார்ப்போம்: 

இதுவரையில் கேட்டதை சுருக்கமாகச் சொல்லிவிட்டு, பிறகு நாம் சொல்ல வந்ததைச் சொல்லலாம். அப்பொழுது, அவர்கள் பகிர்ந்ததை எந்த அளவிற்கு நாம் கேட்டு உள் வாங்கிக் கொண்டோம் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்கிறோம். கேட்கும் விஷயத்தில் ஆர்வமுள்ளதைத் தெரிவிக்க வேண்டும்: 'ம்ம்ம், ….’, 'இன்னும் சொல்லுங்க’, 'விளக்கம் அளிக்க முடியுமா?’

நாம் கேட்கும் கேள்விகள் வெறும் ஆம்/ இல்லை பதில் உள்ளதாக  இல்லாமல், அவர்கள் மேலும் தகவல்கள் சொல்லுவதற்கு வாய்ப்பு அமைத்துக் கொடுக்க வேண்டும். இப்படித் தொடர்புடன் கேட்பதில், அவர்களுக்கு முகம் கொடுத்துப் பேசுவோம். அவர்கள் கண்களிலிருந்து நம் கண்கள் நகராது. நம் எண்ணங்கள் எதை எதையோ நினைத்து ஓடிக்கொண்டு இருக்காது. அவர்கள் சொல்லுக்கு ஏற்றவாறு நம் வார்த்தைகள், நம் குரலின் த்வனி, சப்புக் கொட்டுவது, சைகைகள் எல்லாம் பொருத்தமாக இருக்கும். இதன் மிக முக்கியமான விளைவாக, சொல்பவர் தான் சொல்வது முழுமையாக கேட்கப்படுகிறது என்று எண்ணுவார்கள். தாம் சொல்வதைக் கேட்க யாரோ ஒருவர் இருக்கிறார் என்பதே மனத்திற்கு ஆறுதல் அளிக்கும்!

வாய்ச் சொற்களுடன், நம் உடலின் அசைவுகளாலும் சொல் இல்லாமலே நாம் உற்றுக் கேட்பதை தெரிவிக்க முடியும். இதைத்தான் 'நான்-வெர்பல் கம்யூனிகேஷன்’ (Non-verbal communication), 'பாடி லேங்குவேஜ்’ (Body Language) என்பார்கள். 20% தான் வார்த்தைகள், 80% நம் உடலின் பேச்சுகள்!

இதிலிருந்து 'ஆழ்ந்து கேட்பது’ (Profound listening) உருவாகும். மேல் விவரித்த, தொடர்புடன் கேட்பதின் நுணுக்கங்களுடன், கேட்பவரின் ஒவ்வொரு உணர் திறன்கள் உட்கொள்ளும் விவரங்களை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து, அவற்றை புரிந்து கொள்வதற்கு உபயோகிப்பார்கள். வாய் வார்த்தைகள் மட்டும் அல்ல, இந்த ஆழ்ந்து கேட்பதில் நம் கண்கள் பார்ப்பதை, காதுகள் கேட்பதை, மூக்கு முகர்வதை, ரோமங்கள் உணர்வதை எல்லாம் சொல்லப்படுகிற விஷயங்களுடன் இணைத்து அர்த்தங்களைப் புரிந்து கொள்வோம்.  உதாரணமாக, சொல்பவரின் அசைவுகள், அவர்களின் விசும்பல், சிரிப்பு என்ற சத்தங்கள், வியர்வை-மணம், சொல்வதினால் நம் ரோமங்களின் பாதிப்பு இவையெல்லாம் சொல்லும் வார்த்தைகளுடன் ஒன்றிணைந்தால், அதன் தகவல் ஒன்று.  ஒன்றிணையாவிட்டால், அதன் தகவல் வேறு.

ஆழ்ந்து கேட்டால், மௌனமும் பேசும். பாஷையாகும். அதாவது, சொல்பவர் சற்று நிறுத்தி விட்டால், கேட்பவரிடமிருந்து அதைத் தொடர வேண்டும் என்ற அவசரமோ, அழுத்தமோ இருக்காது. அடுத்தவருக்கு இடம் கொடுக்கும் மனப்பான்மை தெளிவாகத் தெரியும். இருவரின் மனநிலையும் ஒன்றிணைந்திருக்கும். வித்தியாசங்கள் நேர்ந்தால், அதுவும் ஏற்கப் படும்.

இப்படி ஒரு பரந்த நிலை நிலவுவதால், இன்னொரு முக்கியமான அம்சம் தோன்றுகிறது. 'சுய பிரதிபலிப்பு’ (Self-reflection) வந்து விடுகிறது. இதன் வருகையினால், 'நான் என்ன சொல்லிக் கொண்டு இருக்கிறேன்? 'நான் சொல்வதில் எது புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது? 'சொல்பவர், என்ன சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்? 'அவர்கள் சொல்வதில், எதைப் புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது?’ இந்தத் தெளிவு பெறவே பல நேரத்தில் மொளனம் தேவையாகிறது. மேலும் பல தெளிவு பெறும் பாதைகள் அமைகின்றன. சொல்வதை ஆக்கப் பூர்வமாக படைப்பது, தன்னுடைய தனித்துவம் பங்கமாகாமல் இருப்பது, ஆழமான தெளிவு பெறுவது, நிலையாக இருப்பது என்று பல விதங்கள். அமைதியாக இருந்தால் மேலும் கேட்கும்!

மாலதி சுவாமிநாதன்
மன நலம் மற்றும் கல்வி ஆலோசகர் 
malathiswami@gmail.com

]]>
communication, hearing, listening, கேட்பது, செவி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/12/w600X390/listening-skills.jpg http://www.dinamani.com/health/mental-health/2018/apr/12/listening-problems-2898769.html
2889752 மருத்துவம் மனநல மருத்துவம் கொஞ்சம் மானர்ஸ் கத்துக்கங்க மக்களே! வாழ்க்கை தேன் போல் இனிக்க அது மிகவும் முக்கியம்! சினேகா Thursday, March 29, 2018 12:21 PM +0530  

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரும் தன்னளவில் சந்தோஷமாக இருக்கவே விரும்புகிறது. தன்னை சுற்றி இன்னொரு உலகம் இயங்குகிறது என்றே சிலருக்கு மறந்துவிடும். அந்த அளவுக்கு சுயமோகம் தலைக்கேறிய காலகட்டமாக ஆகிவிட்டது. அப்படிப்பட்டவர்களுக்கு மற்றவர்களின் இருப்பு என்பது அனர்த்தம். அல்லது தங்களை விட வேறு எதுவும் முக்கியமில்லை என்று நினைப்பவர்கள் அடுத்தவரை சமயத்துக்கு தகுந்தவாறு பயன்படுத்திக் கொண்டு வேண்டாத சமயத்தில் விட்டெறிந்துவிடுவார்கள். பொய்மையும் கயமையும் ஏமாற்றமும் சூழ்ந்த இந்த மனித வாழ்க்கையில் மனிதர்கள் மேலும் மேலும் தற்குறிகளாகிக் கொண்டிருக்கிறார்கள். சில மனிதர்களும் சில சம்பவங்களும் அதில் கிடைக்கும் அனுபவங்களையும் பாடமாக ஏற்றுக் கொண்டு தொடர்ந்து நம் வாழ்க்கையில் தெளிவை நோக்கிப் பயணப்படுவதே வாழ்வதை எளிமைப்படுத்தும்.

பொது இடங்களிலில் சத்தமாக ஃபோனில் சிலர் பேசுவார்கள். அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ட்ரங்கால் தொலைபேசியில் பேசுவதைப் போல அவர்களின் அலறல் போன்ற குரல் பலசமயம் அடுத்தவர்களை அச்சுறுத்தும். வீட்டு விஷயம் முதல் நாட்டு விஷயம் வரை அவர்கள் தங்கள் சொந்தக் கதை சோகக் கதையை உரக்க பேசி முடிப்பதற்குள் நமக்கு மூச்சு வாங்கிவிடும். சங்கீதம் தெரியாவிட்டால் கூட பரவாயில்லை, இங்கிதம் தெரிந்திருக்க வேண்டும். சில இளம் பெண்களைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். ஃபோனில் பேசுகிறார்களா அல்லது உதடுகளை சும்மாவேனும் அசைத்துக் கொண்டிருக்கிறார்களா எனத் தெரியாது. சத்தமே இல்லாமல் செல்ஃபோனில் பேசுவது எப்படி எனும் கலை அறிந்தவர்கள் அவர்கள். அந்தளவுக்கு நாகரிகமாகப் பேசாவிட்டாலும் அடுத்தவர் காது ஜவ்வைக் கிழிக்காமல் சற்று மென்மையாகப் பேசலாமே? அல்லது வீடு வரும் வரை அந்த உரையாடல் காத்திருக்கலாம் என்றால் பொறுமையாக சாவகாசமாக ஏன் சத்தமாகக் கூட பேசி மகிழுங்கள்.

வங்கி முதல் வாக்கிங் போவது வரை சிலருக்கு அடுத்தவரை குறுக்கிடுவதில் அலாதி சுகம். எங்கேர்ந்து சார் வரீங்க என்று ஆரம்பிப்பார்கள். நம் கையில் செய்தித்தாள் இருந்தால் ஒரு நிமிஷம் தரீங்களா என்று பதிலை எதிர்ப்பார்க்காமல் பறித்துக் கொள்வார்கள். ரயிலில் போகும்போது நம்மிடம் புத்தகம் இருந்தால் அபேஸ்தான். தாகத்துக்குத் தானே கேட்கிறார்கள் என்று நம் கையில் உள்ள பாட்டிலை கொடுத்தால் ஒரு சொட்டு கூட நமக்கு வைக்காமல் முழுவதையும் குடித்து வைப்பார்கள். இன்னும் சிலர் என் ஃபோனில் சார்ஜ் போச்சு அர்ஜெண்டுக்கு ஒரு கால் பேசிக்கறேன். மிஸ்டு கால் கூட தர மாட்டார்கள். நேரடியாகப் பேசத் தொடங்கு நம் பிபி அதிகளவு ஏறியபின் தான் மனமிறங்கித் திருப்பித் தருவார்கள். மறக்காமல் அவர்கள் பேசிய நம்பரை அழித்துவிட்டுத்தான் தருவார்கள். இப்படி வெளியே சொல்ல முடிகிற, சொல்ல முடியாத எரிச்சல்களை எல்லாம் தினந்தோறும் கூசாமல் அடுத்தவர்களுக்குத் தந்துவிட்டு தன்போக்கில் அவர்கள் ஜாலியாக போய்விடுவார்கள். நம்மைப் பற்றி நமக்கே தெரியாமல் புறம் பேசுவார்கள். நமக்குத் தான் மண்டைக்குள் நமநமவென்று வெகு நேரம் ஏதோ செய்யும். இதுபோன்ற ஆசாமிகளை அடையாளம் கண்டு கொண்டு ஒரு பர்லாங்கு தூரம் எட்டியிருப்பதே மன அமைதிக்கு ஒரு எளிய வழி.

சிலர் டிப்ஸ் தருவதையே வாழ்க்கை தர்மமாக கடைபிடித்து வருவார்கள். நம்மைக் கண்டுவிட்டால் போதும், அவர்களின் அன்றைய பொழுதுபோக்கு சாட்சாத் நாமேதான், என்ன சார் இவ்வளவு டல்லா இருக்கீங்க? இப்படி கருத்துப் போயிட்டீங்க? உடம்பு இவ்வளவு இளைச்சிருக்கே உங்களுக்கு சுகர் வந்திருக்கும்னு நினைக்கறேன்...உடனே போய் செக் பண்ணுங்க என்பார்கள். அல்லது அய்யோ ஒரேடியா வெயிட் போட்டுட்டீங்க உங்களுக்கு ஹார்ட் அட்டாக்தான் வரப்போகுது...இல்லையில்லை உங்களுக்கு கேன்சர் அபாயம் இருக்குன்னு வேணும்னா இந்தப் புத்தகத்துல இருக்கற அறிகுறிகளைப் படிச்சுப் பாருங்க என்று சொல்லி வேண்டாத அறிவுரைகளை எல்லாம் நம் தலையில் கட்டி, கிட்டத்தட்ட அரை நோயாளிகளாக நம்மை மாற்றிய பின் தான் அவர்களுக்கு திருப்தி ஏற்படும். தாங்கள் படித்ததையோ பின்பற்றியதையோ அடுத்தவர் மீது திணிக்கும் நபர்களை அடுத்த முறை கண்டால் அவர்களை நீங்கள் முந்திக் கொள்ளுங்கள். ஏன் இப்படி ஆயிட்டீங்க முகத்துல பரு மாதிரி ஏதோ இருக்கே, என்று நீங்கள் ஆரம்பித்தால் போதும் ஆசாமி எஸ்கேப் ஆகிவிடும்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் உலகத்தின் ஒட்டுமொத்த துயரத்தையும் தன் தலைமீது சுமந்து வலம் வருவார்கள். அவர்கள் பிரச்னையை நம்மிடம் சொல்லி அதற்கு தீர்வு கேட்பார்கள். நாமும் பாவம் என்று பச்சாதப்பட்டு ஏதாவது சொன்னால் உங்களுக்கு என் வலி தெரியாது அப்படி எல்லாம் செய்தால் சரிவராது என்று மேலும் தங்கள் பிரச்னையை கூறுவார்கள். நாமும் இப்படி பண்ணுங்க இது தான் தீர்வு என்றெல்லாம் சொல்லியும் அவர்களை அத்தனை எளிதாக சமாதானம் செய்ய முடியாது. உண்மையில் இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். உங்களையும் ஏதோ ஒருவகையில் துயரெனும் பள்ளத்தாக்கில் தள்ளிவிட நினைப்பவர்கள். நான் இப்படி அழுதுட்டு இருக்கேன், அவன் மட்டும் எப்படி சந்தோஷமாயிருக்கான் என்று சிலர் வெளிப்படையாகவும் சிலர் மறைமுகமாகவும் நம்மைப் பார்த்து பொருமிக் கொண்டிருப்பார்கள். நீங்கள் உஷாராக இருந்து அவர்களிடமிருந்து விலகி இருப்பதே மேல். உண்மையிலேயே உங்கள் உதவியோ அறிவுரையோ தேவைப்படுபவர்கள் நீங்கள் சொல்வதை ஒருகட்டத்தில் ஏற்றுக் கொள்வார்கள். எனவே எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் நம்மிடமிருந்து பிடுங்கப் பார்ப்பது நம்முடைய அமைதியான மனநிலையைத்தான். 

நம்மில் சிலர் திடீரென்று ஒரு பீடத்தில் நின்று கொண்டு அடுத்தவருக்கு நல்லது செய்கிறேன் பேர்வழி என்று பெரும்பான்மையான நேரத்தை செலவழித்துக் கொண்டிருப்போம். நமக்கு சொந்தமாக ஒரு குடும்பம் இருக்கிறது பிள்ளைகள் உள்ளார்கள் என்றெல்லாம் மறந்து அடுத்தவர் நலனில் மகிழ்ச்சி கொள்பவர்கள் நாம். ஆனால் ஒரு உண்மை நமக்குத் தெரியாது. நம்மிடம் ஆதாயம் கிடைக்கப் பெற்றவர்கள் எல்லாம் அது கிடைத்ததும் நம்மிடம் ஒருவார்த்தைக் கூடச் சொல்லாமல் ஓடிப் போவார்கள். கடைசியில் குடும்பமும் விலகி, நம்மை அண்டிப் பிழைத்தவர்கள் ஒருவரும் இல்லாமல் நாம் மட்டுமே தனிமையில் நிற்போம். வேறென்ன செய்வது? உதவ மறுப்பது பாவம் இல்லையா என்று தோன்றுகிறதா? அவர்கள் துன்பத்திலிருந்து எப்படி விடுதலை அடைவார்கள் என்று நினைக்கிறீர்களா? நம்மை நம்பி வந்துவிட்டார்கள் நாமே கைவிட்டால் எப்படி என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களா?  இந்த உலகத்தை திருத்த அல்லது அறிவுரை கூட நமக்கு என்ன தகுதி இருக்கிறது என்று ஒருமுறை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். அதன்பின் உங்களுக்குக் கிடைக்கும் பதிலை வைத்து நீங்கள் மேற்படி விஷயங்களை செய்யலாம். ஆனால் ஒருபோதும் பயத்தாலும், சந்தேகத்தாலும், கெட்ட எண்ணங்களாலும் சூழப்பட்ட ஒருவரை உங்களால் மாற்ற இயலாது. அதெல்லாம் சினிமாவில்தான் சாத்தியம்.

எதையாவது ஆழ்ந்து சிந்திக்கலாம் என்றால் அப்போதுதான் ஒரு மெசேஜ் உள்ளேன் ஐயா என்று செல்ஃபோன் வடிவத்தில் தன் இருப்பை மீட்டுருவாக்கம் செய்யும். கண நேரம் கூட அந்த ஃபோனை பிரிந்திருக்க முடியாமல் கையில் சங்கு சக்கரம் தரித்த பெருமாள்களைப் போல ஒட்டுமொத்த சமூகமே செல்லடிமைகளாக மெள்ள மாறிக் கொண்டிருக்கிறது. பாத்ரூம் முதல் பாடை வரை செல்ஃபோனில் ஆதிக்கம் சற்று அதிகம்தான். எனக்கு தெரிந்தவர் ஒருவர் மரணப் படுக்கையில் இருந்த போது அவர் மிகவும் வருத்தப்பட்டது வாணி ராணி முடிவதற்குள் இறந்து போகிறோமே என்றுதான். அந்தளவுக்கு தொலைக்காட்சியும் அலைபேசியும் லேப்டாப்பும் வாழ்வின் அந்திம காலம் வரை நீக்கமற நிறைந்துவிட்டது. கிருஷ்ணா ராமா கோவிந்தா என்ற காலம் எல்லாம் போய், பெரிசுகளுக்கும் சீரியல், வாட்ஸப், பேஸ்புக் காலமாகிவிட்டது. இந்த கருவிகள் எல்லாம் தேவைதான். அத்யாவசியம் தான். ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு அல்லவா? எதை எந்த இடத்தில் எப்படி வைக்க வேண்டும் என்ற தெளிவு நமக்கிருக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை இனிக்கும்.

இந்த மின்மயமான வாழ்க்கையில் சிலருக்கு சினிமா ஆறுதல், சிலருக்கு அரசியல் இன்னும் சிலருக்கு ஆன்மிகம். அவரவர் புத்திக்கும் அனுபவத்திற்கும் ஆசைக்கும் ஏற்ப தங்களுக்கு தேவையானதை ஒன்றையோ அல்லது அத்தனையும் சேர்த்து ஒரு பாதையை தேர்ந்தெடுப்பார்கள். இதில் என்ன பிரச்னை என்று நினைக்கிறீர்களா? அவர்களுக்குத் தேவை வழிகாட்டி. வழிகாட்டி என்று ஒருவரை நினைத்துவிட்டால் அவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றத் தொடங்குவார்கள். அவன் தான் தலைவன். அவன் தான் நடிகன். அவர் தான் குரு என்று தங்களை ஒட்டுமொத்தமாக ஒரு தனி மனிதருக்கு சமர்ப்பணம் செய்துவிடுவார்கள்.

பேஸ்புக் முதல் பேஸ் டு பேஸ் வரை அந்த மனிதரைப் பற்றி யாரேனும் குறை சொல்லிவிட்டால் அவ்வளவுதான் அடிதடியில் இறங்கக் கூடத் தயங்க மாட்டார்கள். இது தேவையா என்று கேட்டால் ரசனை தவறா, அவர் போல நான் ஒருநாள் ஆவேன் என்பார்கள். ஒருவரைப் போல நீங்கள் ஆவதற்கு அல்ல நீங்கள். உங்களைப் போல இருக்கவே நீங்கள் படைக்கப்பட்டிருக்கிறீர்கள். ரோல்மாடல்களாக சிலரை நினைப்பதில் தவறில்லை. ஆனால் அதிலே விழுந்து கிடப்பதுதான் தவறு. தொண்டரடிப் பொடி ஆழ்வாரின் பெயர் ஏன் அப்படி ஆனது? யோசித்துள்ளீர்களா? இலக்கியம் முதல் இயல்பு வாழ்க்கை வரை உங்களுக்கு முதல் ஹீரோ நீங்கள் தான். தன்னை நேசிக்கவும் மதிக்கவும் கற்றுக் கொள்பவர்கள் நிச்சயமாக பிறரையும் நேசிப்பார்கள். ஆனால் தலைவா என்று சொல்லிக் கொண்டு தன்னைத் தொலைத்துக் கொண்டால் யார் மீது தவறு? தங்களுக்கு என்ன தேவை என்றே தெரியாத அளவுக்கு தனி மனித வழிபாட்டில் சுயம் தொலைத்தவர்களின் மயக்கம் தீருவதற்குள் அவர்கள் ஆயுள் முடிந்திருக்கும். இத்தகைய காலவிரையச் செயல்களில் ஈடுபடாமல் தன்னுள் இருக்கும் ஒளியை கண்டு அடைய வேண்டியது தான் இந்த வாழ்க்கையின் இந்த இருப்பின் அர்த்தம். அவரவர் வேலை அவரவர் வாழ்க்கை அவரவர் பாடு என்று பறந்து கொண்டிருப்பார்கள். நம்முடைய நிதானமும் பொறுமையையும் அமைதியும் மட்டுமே நமக்கான விளக்கு. புரிந்து கொண்டு நடந்தால் வாழ்க்கை ஒளிரும். 

]]>
டிப்ஸ், toxic people, rude people, nasty people, அறிவுரை, மானர்ஸ் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/29/w600X390/mewo.jpg http://www.dinamani.com/health/mental-health/2018/mar/29/learn-some-manners-for-happy-and-free-life-2889752.html
2885547 மருத்துவம் மனநல மருத்துவம் என்றென்றும் ஜொலிக்கும் இளமையுடன் வலம் வர வேண்டுமா? இதோ சில வழிமுறைகள்! சினேகா Thursday, March 22, 2018 11:28 AM +0530  

மனித வாழ்க்கையில் பால்யம் அனைவருக்கும் பிடிக்கும். பதின் பருவம் முதிராத பருவம் எனினும் முத்தானது. இனிக்கும் இளமையைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால் நாற்பதுக்கு பின்? அனைவருக்கும் சற்று நடுக்கம் ஏற்படத் தொடங்கும். இன்னும் சில காலத்தில் முதுமையடைவோம் என்ற அச்சத்தில் அதை முன்னதாகவே வரவழைத்துக் கொள்பவர்கள்தான் நம்மில் பலர். 

என்றும் இளமையாக இருக்க வேண்டும்... முதுமையே வரக்கூடாது அல்லது கூடுமானவரை எனது முதுமையைத் தள்ளிப் போடுவேன் என்று நினைக்கத் தொடங்கினால் மன அழுத்தம்தான் ஏற்படும். அதனை வரவேற்கும் பக்குவம் கைகூடினால் தானே தாமதப்படுத்திக் கொள்ளும் என்பதுதான் இயற்கையின் விதி. இளமையை நீட்டிக்க இதோ சில வழிகள் :

இளமையை இழக்கிறோமோ என்று மனத்தில் சந்தேகத்தை விதைத்துக் கொள்ளாதீர்கள். இரவு பகல் போலவே வாழ்வில் இளமை முதுமை இரண்டும் முக்கியம். பக்குவப்பட வாழ்க்கை ஒரு வாய்ப்பை அளிக்கிறது. யாராவது உங்களிடம், 'என்ன வெயிட் போட்டு விட்டீர்கள், முடி நரைத்துவிட்டதே, இப்படி கறுத்துவீட்டீகளே? ஏன் சோர்வாக இருக்கீறீர்கள் உடல் நலமில்லையா? என்ன வெயிட் போட்டுவிட்டீர்கள்? என்றெல்லாம் கேட்பார்கள். அதை நீங்கள் ஒருபோது தலையில் ஏற்றிக் கொள்ளக் கூடாது. அவர்கள் போகிற போக்கில் கேட்டு வைத்துவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால், கேட்கப்பட்டவர்களுக்கு அது எத்தகைய மன அழுத்தங்களை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஏதோ அக்கறையாக இருக்கிறோம் என்பதை காண்பித்துக் கொள்ளவும் கூட இருக்கலாம்.

உண்மையாக இருக்கும்பட்சத்தில் அவர்களே அதற்கொரு தீர்வையும் சொல்வார்கள். நீங்கள் செய்ய வேண்டியது அதை அதில் உண்மை எது பொய் எது என பகுந்தாய்ந்து உங்களுக்கு ஏற்றவற்றை மட்டும் எடுத்துக் கொள்வதுதான். வயது ஏற ஏற நம்முடைய நிறம், உருவம் எல்லாமே மாற்றத்துக்கு உள்ளாகும். அவரவர் வயதுக்கு ஏற்ற வகையில் இருப்பதுதான் அழகு. எல்லா காலத்திலும் யாரும் ஒரே தோற்றத்தில் இருக்க முடியாது. எனவே இதுபோன்ற கேள்விகளில் மன சஞ்சலம் அடையாமல் உங்கள் போக்கில் இருப்பதுதான் நல்லது.

ஜீரோ சைஸ் எல்லாம் தேவையில்லை ஆரோக்கியமே முக்கியம்

அழகாக இருப்பதென்றால் ஒல்லியாக இருப்பது என்று பலர் தவறாக நினைக்கிறார்கள். பருமனாக இருந்தால் வயது கூடுதலாகத் த்ரெஇயும், அழகு குறையும் எனக் குறைப்பட்டுக் கொள்ளாதீர்கள். ஆரோக்கியத்துடனும், நல்ல உடல் கட்டுடனும் இருப்பது முக்கியம்தான். ஆனால், அது நீங்கள் ஜீரோ சைஸில் இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. காலையில் எழுந்து கொள்ளும் போது எப்படி உணர்கிறீர்கள். அந்த நாளை எதிர்கொள்ள உடலும் மனமும் தெம்புடன் உள்ளதா, உற்சாகத்துடன் இருக்க முடிகிறதா என்று தான் நீங்கள் பார்க்க வேண்டும். ஒருவேளை உடல் சோர்வாக இருக்கும் போது அதை சரிப்படுத்த முயலுங்கள். என்ன காரணம் என்பதை கண்டறிந்து அதற்கேற்ற வகையில் தீர்வை தேடுங்கள். முக்கியமாக சரியான நேரத்தில் சாப்பிட்டு, சரியான நேரத்தில் வேலை செய்து, மிகச் சரியான நேரத்தில் தூங்கச் சென்றால் இளமை ஒரு பூனைக்குட்டியைப் போல உங்கள் வசம் எப்போதும் இருக்கும்.

வயது என்பது அவரவர் மனநிலையைப் பொருத்தது

சிலர் இளம் வயதிலேயே மிகவும் முதிர்ச்சியடைந்தவராக காணப்படுவார்கள். அவர்களின் எண்ணங்களும் அப்படித்தான் இருக்கும். நாற்பது வயதுக்குள் ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்து முடித்த அலுப்பும் சலிப்பும் அவர்களிடம் காணப்படும். இன்னும் சிலர் நாற்பது வயதிலிருந்தும் இருபது வயதினரைப் போல சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையில் அடுத்து என்ன அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருப்பார்கள். உயிர்த் துடிப்பும் உற்சாகமுமாக அவர்களின் வாழ்க்கை இன்பத்தின் ஒட்டுமொத்த ரேகைகளை கொண்டிருக்கும். வயது என்பதெல்லாம் சும்மா மற்றவர்களிடம் சொல்லிக் கொள்வதற்குத்தான் என்று நினைப்பார்கள் அவர்கள். மற்றபடி அவர்கள் தங்கள் மனத்திலோ புத்தியிலோ அதை ஏற்றிக் கொள்வதில்லை. 

ஒரு போதும் எதற்காகவும் கவலை கொள்ளாதீர்கள்

காலை ஒரு தொற்றுநோய். அது உங்களைத் தொற்றிவிட்டால் உங்கள் இருப்பை நிம்மதியிழக்கச் செய்துவிடும். நீங்கள் கவலைப்பட பட காலம் உங்களை மிக வேகமாக முதுமையடைய ஆயத்தப்படுத்திவிடும். வயது பற்றியே நினைக்காமல் என்ன வந்தாலும அதை துணிவாக எதிர்கொள்ளும் பக்குவத்துடன் வாழ்ந்தீர்கள் எனில் அதுவே உற்சாக டானிக்காக செயல்பட்டு உங்கள் இளமைக்கு கியாரண்டி கொடுக்கும். 

ஹாபியில் ஈடுபடுங்கள் ஜாலியாக வாழுங்கள்

உங்கள் நேரத்தை பயனுள்ளதாக மாற்றத் தெரிந்து கொண்டால் படு பிஸியாக உள்ள உங்களுக்கு வயதைப் பற்றியெல்லாம் நினைத்துக் கொண்டிருக்க நேரம் எப்படி இருக்கும்? பதின் வயதில் செய்ய முடியாமல் போனவற்றை பட்டியல் இடுங்கள். வயலின் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டேனே, இப்போது நிறைய நேரம் இருக்கிறது எனவே துணிந்து வகுப்புகளில் சேருங்கள். சில வருடங்களில் உங்கள் மனத்தை குளிர்விக்க நீங்களே வயலின் வாசிக்க முடியும். ஓவியம், மொழி, நடனம் என எது உங்களுக்குப் பிடிக்கிறதோ அதை கற்றுக் கொள்ளுங்கள். வயதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை எனும் உண்மை உங்களுக்குப் புரியும்.

நீங்கள் பழகும் சுற்றம் எப்படியிருக்க வேண்டும்

எப்போதும் இளைஞர்கள் சூழ இருங்கள். அவர்களின் பேச்சும் உற்சாகமும் உங்களைத் தொற்றிக் கொள்ளும். அவர்கள் உங்களை சீனியர் என்று உணர வைக்க முடியாத அளவிற்கு நீங்கள் அப்டேட்டாக இருந்தால் போதும், உங்களை விட மூத்தோர்களிடம் நட்பாக இருப்பது நல்லது. அவர்களுடன் பழகும் போது நீங்கள் தான் மிக இளமையானவர். உங்கள் வயதுள்ளோர் புலம்பல்காரர்களாக இருந்தால் அவர்களிடமிருந்து தூர விலகியே இருங்கள்.

உங்களை விட இளையவரோ, மூத்தவரோ அல்லது சம வயதினரோ சதா கவலையைச் சுமந்தபடியே இருப்பவர்கள், துயரத்துடன் காணப்படுவர்கள், எதிர்மறை சிந்தனையாளர்கள் ஆகியோரை விட்டு பத்து அடி தள்ளியே இருங்கள். அவர்கள் ஒரு குட்டைப் போல, தானும் சேறாகி தன்னுடன் பழகுபவர்களையும் சகதியாக்கிவிடுவார்கள். உங்கள் உற்சாகத்தைத் தக்க வைக்க வேண்டுமெனில் உங்கள் எண்ண அலைவரிசைக்கு ஒத்திசைவாக இருப்போரிடம் நட்பு பாராட்டுங்கள். 

இயற்கையான விஷயங்களுக்கு வரவேற்பு கொடுங்கள்

நாற்பது வயதுக்கு மேல் பெண்களுக்கு மெனோபாஸ் பிரச்னைகள் ஏற்படும், சிலருக்கு முடி நரைக்கத் தொடங்கும், உடல் முன்பு போல் இருப்பதில்லை. அடிக்கடி ஏதேனும் சிறு சிறு பிரச்னைகள் வந்து நீங்கும். இதற்கெல்லாம் சோர்ந்து போய் இனி அவ்வளவுதான் என வயோதிகர் லிஸ்டில் நீங்களாக போய் சேர்ந்து கொள்ளாதீர்கள். இவையெல்லாம் இயல்பாக நடப்பதுதான் என்ற விழிப்புணர்வுடன் மலர்ச்சியுடன் எதிர்கொள்ளுங்கள். எல்லாமே ஈஸியாக உங்களை கடந்து போகும். வாழ்க்கையை ரசிப்பதுபோல் உங்கள் உடலின் மாற்றங்களை ரசிக்கப் பழகுங்கள். வாக்கிங், உடற்பயிற்சி, யோகா, என சிலவற்றை தினமும் செய்து பழங்குங்கள். உங்கள் ஆளுமையை வளர்த்துக் கொள்ளுங்கள். தைரியமும் துணிவும் வாழ்க்கை கொடுத்த பக்குவமும் உங்களை ஒரு முழுமையானவராக மாற்றியிருக்கும். அந்த பக்குவத்துடன் நடந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் இனிக்கும்.

மனசை லேசாக வைத்துக் கொள்ளுங்கள்

குடும்பத்தில் பிரச்னையா அல்லது உடல் பிரச்னையா எதையும் மனத்துக்குள் பூட்டி வைத்து மருகிக் கொண்டிருக்காதீர்கள். அது மன அழுத்தம் ஏற்படுத்தி உங்களை சோர்வுக்குள்ளாக்கிவிடும். உங்கள் தோற்றத்திலும் சிறுகச் சிறுக சோகம் ஒட்டிக் கொள்ளும். உங்கள் செல்களும் உற்சாகம் இழந்து ஏனோ தானோவென்று இயங்கும். இதற்கு ஒரே வழி நீங்கள் விரும்பும் ஒருவரிடம் உங்கள் மனம் திறந்து பேசுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாய்விட்டு அட்டகாசமாகச் சிரியுங்கள்.

சிரித்தால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும், இளமையாக இருப்பவர்கள் பலரைப் பார்த்தால் தெரியும் அவர்கள் விட் அடித்து சிரித்துக் கொண்டும் மற்றவர்களை சிரிக்க வைத்துக் கொண்டிரும் இருப்பார்கள். அவர்களைச் சுற்றி சிரிப்பு ஒரு அலையாக ஒரு அரணாக அவர்கள் இளமையை காப்பாற்றிக் கொண்டிருக்கும். எனவே ஸ்மைல் ப்ளீஸ்...

]]>
age, young, youth, 40 years, இளமை, வயது, முதிமை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/22/w600X390/13674_max.jpg http://www.dinamani.com/health/mental-health/2018/mar/22/how-to-remain-young-always-2885547.html
2876207 மருத்துவம் மனநல மருத்துவம் நீங்கள் எப்போதும் என்றென்றும் சந்தோஷமாக இருக்க விரும்புகிறீர்களா? இதோ உங்கள் மகிழ்ச்சிக்கான எளிய வழிமுறைகள்! சினேகலதா Wednesday, March 7, 2018 01:12 PM +0530  

இந்த பூமியில் பிறக்கும் எல்லா உயிர்களின் நோக்கமும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே. சிலர் மட்டுமே அடுத்தவரையும் சந்தோஷப்படுத்த ஆசைப்படுவார்கள். இன்னும் சிலர் அடுத்தவர் சந்தோஷங்களைப் பறித்து அதில் இன்பம் காண்பார்கள். இவர்கள் சாடிஸ்டுகள் அல்லது மனப்பிறழ்வு உடையவர்கள். சரி சந்தோஷம் என்பது அத்தனை எளிதில் வந்துவிடுமா? வாழ்க்கையில் நமக்கு எது தேவை? நிம்மதியா சந்தோஷமா அல்லது இவை இரண்டுமா?

என்னதான் அரும்பாடுபட்டு நம்முடைய சந்தோஷங்கள் எதுவென்று கண்டடைந்து அதை நோக்கிய பயணத்தில் பல பிரச்னைகளை துயரங்களை எதிர்நோக்கி இறுதியாக, அதனை அடைந்தாலும், அது கானல் நீரைப் போன்றதாகிவிடுகிறது. கையில் அள்ளிய நீரைப் போலவே நொடி நேரத்தில் காணாமலாகிறது. ஏன் இவ்விதம்? ஏன் சந்தோஷம் என்பது தற்காலிகமானதாகவே இருக்கிறது?

எனக்கு இது கிடைக்கவில்லை. அது படிக்க ஆசைப்பட்டேன் ஆனால் இதுதான் கிடைத்தது. அந்த வேலைக்கு விண்ணப்பித்தேன், ஆனால் கிடைத்ததோ இதுதான். என்னுடைய தகுதிக்கும் திறமைக்கும் நான் வாங்கும் சம்பளம் மிகக் குறைவு. என் உறவுகள் எல்லாமே என்னைக் கைவிட்டுவிட்டது. எனக்கு உண்மையாக இருப்பவர்கள் யாருமில்லை என ஒவ்வொருவருக்கும் ஒருபாடு குறைகள், குற்றம் சுமத்தல்கள் எந்நேரமும் உள்ளது. மிஸ்டர் ரைட் அல்லது அதி உன்னத மனிதர் என்பவரை நீங்கள் என்றேனும் பார்த்ததுண்டா? முதலில் நீங்கள் அப்படி இருக்கிறீர்களா? எது சரி? எது தவறு?

நீங்கள் சுட்டிக் காட்டும் நபர்களையோ பிரச்னைகளையோ ஒரு நிமிடம் புறம் தள்ளிவிட்டு அந்த விரலை உங்கள் நெஞ்சுக்கு எதிராக விரல்களை சுட்டிப் பாருங்கள். பிரச்னை அங்கிருந்துதான் தொடங்கியிருக்கும். அந்த நூல்கண்டின் முனையை நீங்கள் தான் முதலில் விடுவித்திருப்பீர்கள். இயலாமைகளை ஒருபோதும் பட்டியல் இடாதீர்கள். தோல்விகள் இடர்பாடுகள் இவையெல்லாம் வெற்றிக்கான இன்னொரு வாய்ப்பு என்பதை புரிந்து கொண்டால் வீண் புலம்பல்களில் நேரத்தை விரயம் செய்ய மாட்டோம். எல்லாம் என் விதி, தலையெழுத்து, கடவுள் என் விஷயத்தில் கருணையே இல்லாமல் இருக்கிறார் என்றெல்லாம் மருகிக் கொண்டிருக்காமல், சரி இப்படி ஆகிவிட்டது அடுத்து என்ன செய்யலாம். முதலில் இதிலிருந்து மீள்வதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைப்பதே தெளிவுக்கான பாதையின் முதல் படி.

ஒவ்வொருவர் வாழ்விலும் வெவ்வேறு பிரச்னைகள் இருந்து கொண்டிருக்கும். நமக்கே கூட ஒரே பிரச்னை மீண்டும் மீண்டும் நம் முன் வந்து நிற்கும். ஏன், எதற்கு என்று ஆழமாக சிந்தித்து பிரச்னையை வேர்நுனி முதல் ஆழ்ந்து ஆய்ந்து பார்த்தால் அதைத் தகர்த்தெறியும் உளி நம்மை வந்தடையும். எதற்கும் சோர்வு அடையாமல் ஒவ்வொரு தடைக்கல்லையும் படிக்கட்டுக்களாக்கிவிடும் வல்லமை நமக்கு உண்டு என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

அதற்கு முதலில் என்ன நடந்தாலும் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்ற உறுதியை ஒரு தீர்க்கமான முடிவை நாம் எடுத்துவிட்டால் அது நிச்சயம் வசப்படும்தானே? மகிழ்ச்சியான மனநிலை உள்ளவர்களுக்கு மகிழ்ச்சிக்கான கதவு என்றும் திறந்தே இருக்கிறது அதை உணராதவர்களே மகிழ்ச்சிக்கான சாவியைத் தேடி பல இடங்களில் அலைகிறார்கள் என்பார் பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜிம் கேரி. எனவே இன்று இல்லையில்லை இப்போது இந்த நொடியே உங்கள் மகிழ்ச்சிக்கான திறவுகோலை எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களிடம் மட்டும்தான் உள்ளது.

மனிதனின் செயல்பாடுகளில் பெரும் சதவிகிதம் அவனது ஆழ்மனத்தைச் சார்ந்துதான் இயங்குகிறது. ஒருவரின் நடை உடை பாவனை செயல்கள் என எல்லாம் அவரது ஆழ்மனத்தின் இயல்புப்படியே நடக்கிறது என்கிறார்கள் உளவியலாளர்கள். இந்த ஆழ்மனத்தின் விந்தைமிகு ஆற்றலுடன் உங்கள் மகிழ்ச்சியும் பிணைக்கப்பட்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? உண்மை அதுதான். உங்கள் ஆழ்மனத்தை நீங்கள் சரியான விதத்தில் பயன்படுத்தினால் சந்தோஷம், வெற்றி, அமைதி என எதை நீங்கள் விரும்பினாலும் அது உங்களுக்கு கிடைக்கும். ஆனால் அதற்கு நீங்கள் ஆழ்மனத்தை சரியான வகையில் பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும்.

தேவையற்ற விஷயங்களிலிருந்து விலகி, உங்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவற்றில் கவனம் செலுத்துங்கள். கவலை உங்களை அரித்துக் கொன்றொழிக்கும் குணம். எனவே உங்களால் மாற்ற முடியாதவற்றைப் பற்றி சிந்திப்பதை விடுத்து உங்களால் செய்ய முடிந்தவற்றின் மீது அக்கறை காட்டுங்கள். நிதானம், பொறுமை, பக்குவம் ஆகியவற்றை அனுபவங்கள் மூலம் அறிந்து கொள்ளுங்கள். வாழ்நாள் முழுக்க கோபக்காரனாகவே இருப்பேன் என்பது உங்கள் முடிவாக இருந்தால் சந்தோஷம் எப்படி நிலைக்கும்? சின்ன சின்ன விஷயங்களில் கூட பரவசங்கள் கொட்டிக் கிடக்கும். கண் விழித்துப் பார்ப்பதில் தான் உள்ளது. எந்த நிலையிலும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால், அது உங்களின் வாழ்க்கையை செம்மைபடுத்தும்.

எது எனக்குத் தேவை, என்னுடைய கனவுகளை நாம் எப்படி நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றெல்லாம் தயங்காதீர்கள். எல்லாமும் முடியும். உங்களுடைய கனவுகள் உங்களுக்குப் பெரிதாகவும், எதைவிடவும் முக்கியமானதாக உங்களுக்கு இருந்தால், நிச்சயம் அதை அடையும் வரை நீங்கள் ஓயமாட்டீர்கள். அப்படி உங்கள் ஓய்வெடுக்க விடாது உங்கள் ஆழ்மனது. இடையறாது அது உங்களுக்கு பக்கபலமாக திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும். உங்கள் முயற்சிகளில் நீங்கள் வெற்றி அடையும்போது நீங்கள் பட்ட பாடெல்லாம் கரைந்து சந்தோஷம் மட்டுமே உங்கள் முன் தடாகமாக நிரம்பியிருக்கும். 

எந்த இடர்பாடுகள், பிரச்னைகள் வந்தாலும், இவை என் சந்தோஷத்துக்கும் கனவுகளுக்கும் தொந்திரவாக உள்ளது இதனை மாற்ற என்ன வழி வகை உள்ளது என்று ஆராய்ந்து பாருங்கள். மாற்றி யோசித்தால் போதும் எந்தப் பிரச்னையும் சுலபமாக நீங்கிவிடும். இதை ஒரு உதாரணம் மூலம் பார்க்கலாம். நாம் அனைவரும் ஜூவுக்குச் செல்லும்போதெல்லாம் வன விலங்குகளைப் பார்த்து ரசிப்பதுடன் அவர்கள் மீது திடீரென்று பொங்கும் பாசத்தால் அவை சாப்பிட நாம் எடுத்துச் சென்ற பழங்கள் அல்லது பிஸ்கெட்டுக்களைப் போடுவோம். சிலர் ஆர்வ மிகுதியில் தயிர் சாதம், சாம்பார் சாதம் அல்லது கறி மீன் உள்ளிட்ட முழு சாப்பாட்டையும் கூட போட முன் வருவார்கள். ஆனால் உப்பு புளி காரம் போட்டு சமைக்கப்பட்ட உணவுகள் அந்த விலங்குகளின் உடல் நலத்துக்கு ஏற்றவை அல்ல என்பது பற்றி யாருக்கும் அக்கறை இருக்காது.

இதில் பெரிய இம்சையை அனுபவிக்கும் விலங்குகள் யானைகள் மற்றும் குரங்குகள்தான். அதற்கு அடுத்தபடியாக மீன்கள். ஒரு குளத்தைக் கண்டால் போதும் நம்மவர்கள் பொரியை அள்ளி வீசுவார்கள். பொரி கூட பரவாயில்லை சிலர் மிதமிஞ்சிய அன்பால் சாக்லெட்டுகள், கடலை உருண்டைகள் என மீனுக்கு உணவுத் தருகிறேன் என்று கையில் கிடைத்தவற்றை எல்லாம் குளத்தில் எறிவார்கள். கோவில் அல்லது ஆறில் உள்ள மீன்களுக்கு பொரியைப் போடலாம். ஆனால் பராமரிப்பில் உள்ள மீன்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு அந்த வனவிலங்கு காப்பாளர்கள் அதற்குரிய உணவினை சரியான நேரத்துக்கு அளித்துவிடுவார்கள். 

ஜூவிலுள்ள விலங்குகளுக்கு நீங்கள் சாப்பிட வைத்திருக்கும் உணவை அளித்து தேவையற்றதை அவைகளுக்குத் திணிக்காதீர்கள். காரணம் மிருகங்களில் உணவுப் பழக்கம் வேறானது. நீங்கள் போடும் உணவு வகைகளை அவை சாப்பிடும்போது அவற்றுக்கு ஒவ்வாமை ஏற்படும். பலவிதமான உடல் பிரச்னைகள் வரும். இந்த பிரச்னை அதிகமிருந்த ஒரு வனவிலங்கு பூங்காவில் ‘விலங்குகளுக்கு உணவு தராதீர்கள்’ என்ற வாசகம் தாங்கிய பதாகைகளை பூங்கா முழுவதும் வைத்தனர். ஆனால் அங்கு வருகை தரும் பார்வையாளர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் மிருகங்களுக்கு சாப்பாடு போட்டு அவற்றின் ஆரோக்கியத்துக்கு பாதிப்பு விளைவித்த வண்ணம் இருந்தார்கள்.

என்ன செய்வது என அந்தப் மிருகக் காட்சி சாலையின் ஊழியர்கள் கவலையுடன் யோசித்துக் கொண்டிருந்த போது, அங்கு பழைய அதிகாரி மாற்றாகி சென்றுவிட புதியவர் ஒருவர் வந்து சேர்ந்தார். அவரிடம் இந்தப் பிரச்னையை முறையிட்டார்கள் ஊழியர்கள். அவரும் சிரித்தபடி இது ரொம்ப சுலபம் என்று கூறி ‘விலங்குகளுக்கு உணவு தர 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்’ என அறிவித்து ஒரு பதாகையை வைத்தார்.

மறுநாளிலிருந்து அங்கு வருகை தந்த பார்வையாளர்கள் அதைப் படித்து எங்களுடைய உணவைத் தருவதற்கு நாங்கள் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும். வேற வேலையில்லை என்று முடிவு செய்து அதன் பின் விலங்குகளுக்கு உணவு போடுவதை நிறுத்திவிட்டனர். ஊழியர்களுக்கும் நிம்மதி ஏற்பட்டது. விலங்குகளும் அவற்றுக்குரிய உணவை சாப்பிட்டு நலமுடன் வாழ்ந்தன.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் மாற்றத்துடன் யோசிப்பவர்களே ஜெயிக்கிறார்கள்! மேற்சொன்ன பிரச்னையில் முதல் நாம் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். ஜூவுக்குள் மிருகங்களைப் பாதுகாக்கும் காவலர்களா, தேவையற்ற உணவை போடும் மனிதர்களா இல்லை மாற்றத்தை யோசித்து வழிமுறையை கூறிய வெற்றியாளரா? யாராக இருக்க நாம் விரும்புவோம்? வெற்றியாளராக இருக்க ஆசைப்பட்டால் அதற்காக நம்மை அதற்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நம்முடைய கனவுகள் நனவாகும்போது மனது தன்னம்பிக்கையை தன்னுள் தக்க வைத்துக் கொள்ளும். அப்போது மனத்துக்குள் சந்தோஷம் தானாகவே வந்தடையும்.

]]>
self esteem, வெற்றி, success, மகிழ்ச்சி, சந்தோஷம், Happiness, self analysis http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/7/w600X390/happiness.jpg http://www.dinamani.com/health/mental-health/2018/mar/07/here-is-the-secret-of-happiness-and-success-2876207.html
2864001 மருத்துவம் மனநல மருத்துவம் ஓய்வு என்கிற பெயரில் வீட்டுப் பெரியவர்களை கூண்டில் அடைக்கிறோமா நாம்? மனநல ஆலோசகர் சொல்வதை கேளுங்கள்! மாலதி சுவாமிநாதன் Friday, February 16, 2018 04:10 PM +0530  

தினந்தோறும் வாழ்வில் அர்த்தம் செய்து கொண்டு, மற்றவர்களுக்கும் நம்மால் பிரயோஜனம் உண்டு என்று இருந்தாலே வயதானாலும், உடல், மன நலம் கூடி இருக்கும்.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் வயதானவர்கள் பலவற்றை செய்வதைப் பார்க்கிறோம். பலர், தினம் வாக்கிங் போவது, பூங்காவில் சந்தித்து, குழுவாக பேசிக் கொள்வது, கச்சேரிக்குப் போவது, ட்யூஷன் எடுப்பது என்று இருப்பார்கள். இன்னும் சிலர் பேரக்குழந்தைகளை பார்த்துக் கொள்வது, அவர்களுடன் விளையாடுவது, பள்ளிக்குக் கூட்டி செல்வதும் உண்டு. பூத்தொடுத்து விற்பது, மீன், முட்டை, கீரை, காய்-கனிகள் விற்பது என்று தொழில் செய்வோர்களையும் பார்க்கிறோம். பெசன்ட் நகர் கடற்கரையில் மோர் விற்கும் தாத்தா மிகப் பிரபலமானவர்!

இவர்களைப் போல் இல்லாமல், துவண்டு போய், ஒரே இடத்தில் பல மணிநேரம் உட்கார்ந்தோ, படுத்துக் கொண்டோ இருக்கும், அல்லது நாள் முழுவதும் டிவி மட்டும் பார்த்துக் கொண்டிருக்கும்  வயதானவர்களும் உண்டு.

நம் வீட்டில் உள்ள வயதானவர்களை, நாம் மிக அக்கறையாக பார்த்துக் கொள்ள எண்ணுவோம். அதனால்  அவர்களை எதையும் செய்ய விடமாட்டோம், சிரமப் படுவார்களோ, அல்ல தடுமாறி, விழுந்து விடுவார்களோ என்ற பயத்தினால் நாமே எல்லாவற்றையும் செய்து விடுவோம். நாம் வயதானவரை வேலை வாங்குகிறோம் என்று யாரேனும் எண்ணி விடுவார்களோ என்று கூட அஞ்சிச் செய்வோம்.

பார்த்துக் கொள்வது நல்லது தான். ஆனால், கூண்டில் அடைத்த பறவை போல் அல்ல. அவர்களும், முடிந்த அளவிற்கு தன் வேலையை சுயமாக செய்யலாம், வீட்டிலும்  எதிலாவது தன் பங்கிற்கு உதவி செய்யலாம். அப்போது, தன்னாலும் உபயோகம் உண்டு என்பதை உணருவதே அவர்களின் நலனை மேம்படுத்தும். ஆனால், வற்புறுத்திச் செய்ய வைப்பதைத் தவிர்க்க வேண்டும். எதைச் செய்வது என்று அவர்கள் சொந்தமாக முடிவெடுத்தால்  நன்மை உண்டாக்கும். அவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்பதும் ஒரு விதமாகும்.

நாற்பது வருடத்திற்கு முன்னால், வெளி நாட்டில், தேர்ந்தெடுத்த சில முதியோர் இல்லங்களில் இதைப் பற்றின ஆராய்ச்சி செய்தார்கள். அங்குள்ளவர்களில் சிலருக்கு பூந்தொட்டி கொடுத்து  அதைப் பாதுகாக்கும் பணி அவர்களிடம் ஒப்படைத்தார்கள். எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களின் தீர்மானத்திற்கே விட்டு விட்டார்கள். தண்ணீர் விடுவது, காய்ந்த இலைகளை அகற்றுவது அவர்களாகப் பார்த்துச்  செய்தார்கள் . ஆராய்ச்சி செய்வோர் என்ன கவனித்தார்கள் என்றால், செடியை ஈடுபாட்டுடன் கவனித்த முதியோரின் உடல் நலன் நன்றாகத் தேறி வந்தது. அவர்களின் ஞாபகத் திறன், பிரச்சினைகளைச்  சமாளிக்கும் திறன்களிலும் நல்ல முன்னேற்றம் தெரிந்தது .

அர்த்தமுள்ள செயலை செய்வதால், அதிலும்  சொந்தமாக  தேர்ந்தெடுப்பு  இருந்து விட்டால், அதற்கு நம் உடலைச் சீர் செய்யும் சக்தி உள்ளது. இன்றைய காலகட்டத்தில், அறுவது வயதிற்கு மேற்பட்டவர்கள் நம் அரசாங்க கணிப்பின் படி 8.6% உள்ளார்கள். இவர்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தின் மேல் கவனம் செலுத்துவது அவசியம் .

ஆரோக்கியம் என்றால் என்ன? உலகளவில், WHO-வின் (வர்ல்ட் ஹெல்த் ஆர்க்கனைஸேஷன்) ஆரோக்கியத்தின் வர்ணனையையே ஏற்றுக் கொண்டு இருக்கிறது. அதன் படி, ஆரோக்கியம் என்றால்  “நோய் இல்லாததும், நலிந்த, தளர்ந்த நிலை இல்லாதிருப்பதை மட்டும் குறிப்பது அல்ல; உடல், மனம், சமூக தொடர்பு நலன் எல்லாம்  உட்கொண்டுள்ளது”. உடல்/மனம்/சமூக தொடர் நலனில், ஏதாவது  ஒன்றில் ஏற்றத்தாழ்வு நேர்ந்து விட்டால், நலன் தடுமாறிவிடக்கூடும். 

எதையும் செய்யாமல் இருந்தால், தன் தேவைகளை மற்றவர்கள் பூர்த்தி செய்தால், மற்றவர்களே முடிவுகளை எடுத்தால், இல்லை தனிமைப்பட்டு இருந்தால், இவற்றினாலேயே நலன் கெடும். அதற்காகத்தான்  நம் கலாச்சாரத்தில் பெரியவர்களுடன்  கலந்து ஆலோசிப்பது, முக்கியமான காரியங்களில் அவர்களுக்குப்  பங்களிப்பு என்று அமைந்து இருக்கின்றது. இப்படிச் செய்து வருகையில், அவர்கள் இருப்பதற்கு அர்த்தம் இருக்கிறது என்பதைச் செயல் மூலம் காட்டுகிறோம்.

அதே நேரத்தில் ஒரு சிலருக்கு ஞாபக மறதி, பக்கவாதம், பார்க்கின்ஸன்ஸ், டிமென்ஷியா, மனச்சோர்வு என இருக்கலாம். இதற்கு மாத்திரை மருந்து அவசியமே. அத்துடன் சிறிதளவு சுறுசுறுப்பைச் சேர்த்துக் கொண்டால் நலனைக் கூடுதலாக்கும். 

எந்த வயதினரையும் உடலையும், மூளையையும் ஆக்டிவாக வைத்துக் கொள்ளவே டாக்டர் பரிந்துரைப்பார்கள். தினம் ஏதாவது ஒன்று செய்வது என்றும், வெவ்வேறு விதமாக வைத்துக் கொண்டால், ஆவலுடன் செய்யத் தோன்றும். எந்த அளவு முடிகிறதோ அந்த அளவிற்கு மட்டும் செய்து வந்தால், தொடர்ந்து செய்யலாம்.

சிலருக்கு,  முன் போல், செய்ய முடியாததாலோ, அடுத்தவர்கள் செய்து கொடுப்பதினாலோ  தயக்கமும்  தடுமாற்றமும்  வரலாம். மற்றவர்களுக்கு நாம் கஷ்டம் கொடுக்கக் கூடாது என்றும் சிலர் மௌனமாக, ஊமையாக  இருப்பார்கள்.

இப்படி எந்த மனப்பாங்குடன் இருந்தாலும் அவர்களின் நலனை உயர்த்திக் கூடுதலாக்கச் செய்யலாம். செய்யக் கூடிய பல வகைகளை வரிசைப் படுத்த போகிறேன். இதில், எதைத் தேர்ந்தெடுத்தாலும் வயதினரின் உடல் நலனை மனதில் வைத்தே தேர்வு செய்ய வேண்டும். 

I. ஒரே இடத்தில், படுத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு

 • வீட்டுக்  குழுந்தைகளுக்கோ , பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுக்கோ  சில பாடங்களை படிக்கும்போது, செய்யும்போது கவனிக்கலாம் . உதாரணத்திற்குக் கணக்கு வாய்ப்பாடு, கவிதை மனப்பாடம் செய்வதை, க்ராப்ஃட் செய்வதை  என்று.
 • தினசரி நாளிதழ்களை வாசிப்பது: அவர்கள் அருகில் உட்கார்ந்து, வாய் விட்டுப் படிக்கலாம்.
 • கதை, கவிதை, கட்டுரைகள் படிக்கலாம்.
 • அவர்களுடன் பாட்டு கேட்கலாம், பாடலாம்.
 • வார்த்தை, பாடல் அந்தாக்க்ஷரி விளையாடலாம்
 • அவர்களுடன் சுடோகு (Sudoku), க்ராஸ்வர்ட் (crossword) போடலாம்.
 • பல்லாங்குழி, தாயக் கட்டை, லுடோ விளையாடலாம்.

அவர்களையும் சேர்த்துக்.கொண்டு செய்வது என்பது பாசம் காண்பித்து, அவர்கள் உயிர் வாழ்வதை நல்ல கண்ணோட்டத்தில் பார்ப்பதாகும். இதனால், அவர்களுக்கும் புத்துணர்ச்சியாக இருக்கும்.

II.அவர்களுக்கு, நாம் தெரிவிப்பது, “உங்களின் இடம், என் வாழ்க்கையில்..

 • ஆலோசிக்க, பகிர்ந்துகொள்ள, முடிவுகள் எடுப்பதில்.
 • அவர்கள் வாழ்வதற்கு அர்த்தம் உள்ளது என்பதைக் காட்டுவது முக்கியம்: நம்முள் ஒருவராகக் கருதுகிறோம் என்பதைக் காட்ட, நம் நண்பர்களை அறிமுகம் செய்வது, விருந்தாளிகளுடன் கலந்து கொள்வது.

நடந்து கொள்ளும் முறை முக்கியமானது. பெரியவர்களுடன் வாழும் நபர்களே இதை வார்த்தைகளாலும், செயலாகவும் காட்டலாம்.

III. ஒதுக்கி வைத்து விடுவதலின் காரணங்கள் 

 • தினசரி வாழ்வில் இடைஞ்சல் என்று கருதி ஒதுக்கி வைப்பது.
 • பாரம் என்று கருதி முதியோர் இல்லத்தில் சேர்ப்பது
 • மறதி இருப்பதால் 
 • நலன் குறைந்ததால்

இவர்களின் நிலைக்கு நாம் என்ன செய்ய முடியும் என்று  
யோசிக்காமல், மிக எளிதாக எதிர்மறை முடிவெடுப்பது. 
தீர்வு: டாக்டரை சந்தித்து ஆலோசித்து மேற்கொண்டு எப்படிப் பார்த்துக்  கொள்வது என்ற தெளிவு பெறலாம்.

IV. பெரியோர்கள்

வீட்டில், பக்கத்தில் இருக்கும் ஸ்கூல், மருத்துவ மனை, கோயில்களில் தங்களால் முடிந்ததைச்  செய்யலாம்.
நலன் இருப்பதைப் பொருத்து, முடிந்த அளவில் தன்னுடைய திறன்களைப் பகிர்ந்து கொண்டால், மேலே குறித்த மூன்று நலன்களும் நன்றாக இருக்கச் செய்யும்.

 • தன் பேரக்குழந்தைக்கோ, மற்ற குழந்தைகளுக்கு கற்றுத் தருவது
 • பக்கத்தில் இருக்கும் ஸ்கூலில் கதை சொல்லலாம் (கலாச்சாரம், வீரர்கள் பற்றி, சாதனையாளர்கள்…)
 • கண் பார்வை இல்லாதவர்களுக்கு எழுதி உதவுவது
 • பாடங்களை விளக்கிச் சொல்வது .
 • பாடங்களைப் கேஸட்டுகளில், பதிவு செய்தல்
 • ஹாஸ்டல், அனாதை விடுதி பிள்ளைகளுக்குப் பாடம், பாட்டு, நடனம் கற்பிப்பது.
 • பூக்களைத் தொடுப்பது
 • பூச் செடிகளுக்குத் தண்ணீர் விடுவது.
 • துணிகளை மடிப்பது
 • குடும்பத்தினருடன் வேலையைச் செய்வது: சுத்தம் செய்ய, தண்ணீர் நிரப்பி வைப்பது.
 • எப்பொழுது சாப்பிட விரும்புகிறார்கள் என்பதின் முடிவை  அவர்களிடமே விட்டு விடலாம்.
 • அவர்கள் அணியும் ஆடையைத்  தானாகவே தேர்ந்தெடுப்பது.
 • டிவி பார்ப்பதா? இல்லையா என்பதையும். நாம் பரிந்துரைப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

V. “ரிட்டையர்மென்ட் கம்யூனிடி ” ஓய்வு பெற்றவர்கள் இருப்பிடம்

சமீப காலங்களில், வயதானவர்கள் இருப்பிடமாக இது அமைந்து வருகிறது. இந்த இல்லங்களிலும் தங்குவோரின் வாழ்விற்கு அர்த்தம் தர பலவற்றைச் செய்து வரலாம். அன்றாடம் ஏதாவது ஒன்றைக் குறிக்கோளுடன்  செய்வதால் அவர்களின் நலன் மேலோங்கும்.

ரிட்டையர்மென்ட் கம்யூனிடியில் வாழலாம் என்று முடிவெடுப்பது பெரியோர்களே. தங்கள் பிள்ளைகளுக்கு பாரம் இல்லாமல் இருக்கவும், அதே சமயம், தங்களுக்குத் தேவைப்படும் வசதிகளுடன் இடமாக இருப்பதால் இதைத் தேர்வு செய்கிறார்கள். பெற்றோர் தங்களின் முடிவினால் அங்குச் சேர்வதால் பெற்றோர்-பிள்ளைகள் இருவருக்கும், குற்ற மனப்பான்மை இல்லாமல் இருக்கும்.

மொத்தத்தில், வயதானவர்களிடம் பல சொத்துக்கள் உண்டு. அனுபவம் என்ற மிகப் பெரிய சொத்து. வேறொன்று அறிவும், அவர்களிடம் இருக்கும் பல திறன்கள். இதை எல்லாமே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், புரிய வைக்கலாம், வாதாடலாம். இதில் எதைச் செய்து வந்தாலும் அவர்களின் நலன் கூடும், மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். எதற்காக வயதானால், பாரம், அல்லது முழுவதும் ஓய்வெடுக்க வேண்டும் என்ற கருத்து? 

மாலதி சுவாமிநாதன்
மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்        
malathiswami@gmail.com

]]>
old age, சிறை, cell, life, rest, வயதானவர்கள், முதுமை, கொடிது http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/15/w600X390/gutsy-granny-thrashes-robbers-with-her-walking-stick-in-dadar.jpg http://www.dinamani.com/health/mental-health/2018/feb/15/how-to-treat-old-people-2864001.html
2853471 மருத்துவம் மனநல மருத்துவம் படிச்சதெல்லாம் பரீட்சையின் போது மறந்து போகிறதா? இதோ ஒரு ஸிம்பிள் ட்ரிக்! மாலதி சுவாமிநாதன் Monday, January 29, 2018 03:53 PM +0530  

படிப்பதை எப்படிப் படித்தால் பரீட்சைக்கு உபயோகமாக இருக்கச் செய்யலாம்? 

பரீட்சை என்பது நாம் படித்ததையெல்லாம் சரியாக எழுதி மதிப்பெண் வாங்குவது மட்டுமல்ல நம்முடைய கட்டுப்பாட்டின் அடையாளம் அது. எந்த அளவிற்கு நாம் ஒழுக்கமாக இருந்து செயல் பட்டு இருக்கிறோம் என்பதிற்கான அளவு கோள் ஆகும். எவ்வாறு நம்முடைய பொறுப்புகளை கையாளுகிறோம் என்பதை பற்றியும் காட்டும். இதற்கு, வயது வரம்பு என்பது இல்லை.

இப்போழுது தான் உயர் கல்வி நிலயங்களில் பரீட்சைகள் முடிந்துள்ளது, மூன்று மாதத்துக்குப் பிறகு மறுபடியும் தயாராக வேண்டும். இதோ, ஒரு மாதத்தில், பத்தாவது, பன்னிரண்டாவது தேர்வு வந்து கொண்டிருக்கிறது. இந்த இரண்டிற்கும் தரும் கவனம் மற்றதற்குக் கொடுப்பதில்லை. அதனாலேயே இந்தப் பரீட்சையை எழுதப் போகிறவர்கள் பல வாரங்களுக்குத் திகில் படம் பார்ப்பது போல் இருப்பார்கள். இப்படி இருப்பது தேவையா?

இங்கு வயது வித்தியாசம் இல்லாமல், எப்படிப் படித்தால் பரீட்சைக்கு உபயோகமாக இருக்கச் செய்யலாம் என்பதை விவரிக்கப் போகிறேன். முதலில் வெற்றியை அடையச் செய்ய அதிகமாக விவரிக்கப் படாத சிலவற்றை எடுத்துச் சொல்ல போகிறேன். இதைத் தொடர்ந்து, தெரிந்தவற்றையும், கடைசியில் அன்றாடம் செய்ய வேண்டியவை (ஆனால் பலர் இவற்றை தள்ளிப் போட்டோ, தவிர்த்தோ விடுவார்கள்) பற்றியும் சொல்லப் போகிறேன்.

அம்மா-டீச்சர்-தாத்தா சொன்னதே:

“வாய் விட்டுப் படியுங்கள்” என்றதையே ஆராய்ச்சிகளும் காட்டுகிறது. வாய் விட்டுப் படித்தால், சீக்கிரமாகப் புரியும் என்பதை காட்டி இருக்கிறார்கள். அம்மா-டீச்சர்-தாத்தா சொல்லிக் கொண்டு இருப்பதை ஆராய்ச்சிகளும் உறுதிப் படுத்துகிறது!

எப்படி?: வாய்விட்டுப் படிக்கும்போது, நாம் பாடத்தை பார்க்கச் செய்ககிறோம் அதே நேரம், கேட்டும் கொள்கிறோம். அதனாலேயே நம் கவனம் பாடத்தில் மட்டும் இருக்கும். நன்றாக புரிந்துக் கொள்வோம்.

முக்கியமானதை:
●    வாய்விட்டுப் படித்து, குறித்துக் கொள்ளலாம், அடிக்கோடு போட்டுக் குறிப்புகளை வலியுறுத்தச் செய்யலாம்.
●    படித்து முடித்து, மூன்று நிமிட அவகாசம் விட வேண்டும்.
●    மூன்று நிமிடங்கள் சென்ற பின், பாடத்தைப் பார்க்காமல், ஞாபகப் படுத்தி பார்க்கலாம். இப்படி செய்தால், நாமே கணித்துக் கொள்ளலாம், எந்த அளவிற்குக் கவனம் செலுத்தினோம், புரிந்து இருக்கிறது என்பதை அறிவோம்.
●    ஞாபகத்தைச் சோதனை செய்ய, அதே பாடத்தை நாள் முடிவிலும், மூன்று நாட்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என்றும் சோதனை செய்து கொள்ளலாம். ஞாபகம் இருந்தால், நல்ல அறிகுறி!

இப்படிச் செய்தால் நேரம் வீணாகிப் போய்விடும் என்று நினைக்கக் கூடும். இதைப் பின்பற்றி பழக்கமாகியவர்கள் பலனைத் அனுபவித்து இருக்கிறார்! 

கான்ஸெப்ட் மேப் (Concept Map): 

படித்த முக்கியமான ஒரு விஷயத்தை எழுதி அதைத் தொடர்ந்து வரும் தகவல்களை இதனுடன் சேர்த்துக் கொண்டே போகலாம். இதை வரைப்படமாக செய்துக் கொள்ளலாம். தேவைக்கு ஏற்றார் போல், குறிப்புகளை வெவ்வேறு வர்ணத்தில் செய்யலாம். புது விவரங்களை இணைத்துக் கொண்டே இருக்கலாம்.

புதிர் போல், தேடிக் கண்டுபிடித்து சேர்ப்பதால், படிப்பின் மீது பிடிப்பு ஏற்படுத்தும். புதிதாகப் படித்ததை எங்குச் சேறும் என்ற தேடுதலே ஒரு பயிற்சி மையமாகி விடும். புதியதைச் சேர்க்க, பாடங்களை மனதில் பதிய வைக்கும்.  

இவ்வாறு செய்வதால் கற்றுக் கொள்வது பிடித்து விடும். பரீட்சை என்பதற்கு சஞ்சலப் பட மாட்டோம். இது தானே படிப்பின் குறிக்கோள்!

இடைவெளியும் பொறுப்பும்:

படித்துக் கொண்டு இருக்கும் பொழுது, இடைவெளி தேவை. ஆராய்ச்சியில் இதை கண்டுபிடித்து இருக்கிறார்கள். பலன்களை காட்டி வருகின்றனர்!

நாற்பது நிமிடம் படிக்க வேண்டும். படித்ததை ஒரு சிறுகுறிப்பாக செய்து கொண்டவுடன் 5-10 நிமிடம் இடைவெளி கொடுத்துக் கொள்ளலாம். அப்போழுது அடுத்ததாகப் படிக்க போவதைக் கவனம் கொடுத்துப் படிப்போம். 

சிட்டிகீ பொறுப்பு:

இடைவெளிக்குப் பிறகு திரும்பி வந்து படிக்க துவங்குவது படிப்பவரின் பொறுப்பாகும். 5-10 நிமிடம் என்பதை நீட்டிக் கொண்டே போனால், அது சாக்கு-போக்கு, இடைவெளி இல்லை. பரீட்சைக்குத் தயாராகும் விதம் நம் பல குணாதிசயங்களைக் காட்டி விடும்!

இடைவெளி எடுத்துக் கொள்வதே, நாம் படித்ததை நன்றாக உள் வாங்கிக் கொள்ளத் தான். இந்தப் பத்து நிமிடங்களில், குறும்செய்தி, டிவி பார்ப்பது, தவிர்க்க வேண்டியவை. 

கலவையாகப் படிப்பது:

தினம் இரண்டோ, மூன்றோ பாடங்களை படித்தால் கவனம் தளராமல் படிக்க ஒரு வழி என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. அதே போல், ஒரே வகையான பாடங்களாக இருக்கக் கூடாது. வெரைட்டி இருந்தால், ஆர்வம் கூடும். 

“ஓபன் ஸிஸேமீ”:

ஆ, மாயப் கதவு திறந்தது! இதில், உங்களின் கவலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்: இப்படி எதுவாகவும்  இருக்கலாம்:

❏    “நான் பரீட்சையை நன்றாகச் செய்வேனா?” இதுவாகவும் 
❏    “கடைசி நிமிடத்தில், ஞாபகம் வரவில்லை என்றால்”? இல்லை,
❏    “நான் நினைப்பதை விட பரீட்சை இன்னும் கடினமாக இருந்து விட்டால்?” என்று பல இருக்கலாம்.

ஏன் “ஓபன் ஸிஸேமீ”?: பயம், சந்தேகம் வருவதும், இப்படி எல்லாம் யோசிப்பதும் இயல்பு. என்றாலும், இவையே நம் மூளையில் ஓடிக் கொண்டே இருந்தால், இந்த உணர்வுகளில் நாம் மூழ்கிப் போய் விடுவோம். ஃபெயில் என்றே முடிவெடுத்து விடுவோம். படிக்க முயல மாட்டோம். 

வழி என்ன:

மாணவர்கள், தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது முக்கியம். நம் அனைவருக்கும் இது பொருந்தும்.

நம் உணர்வுகளைப் பற்றி எழுதுவது ஒரு வழியாகும். எழுத, எழுதப் பதட்டத்திலிருந்து விடுபடுவதை உணர முடியும்.

இதைப் பதட்டத்துடனோ, அவசரமாகவோ, அடித்து புடிச்சுன்னு இல்லாமல் எழுத வேண்டும். 

குறிப்பாக
●    “படித்தேன், ஆனால்…” என்பதைப் பூர்த்தி செய்யலாம்.  
●    “நன்றாகச் செய்ய, நான்….” என்பதை விவரிக்கலாம்.
●    “மறந்து போகிறதே” என்னவென்று பகிர்ந்து கொள்ளலாம்.

இப்படி எழுதுவது தான் ஜர்னலிங் (Journaling) என்றது. மெதுவாக, எதிர்மறை எண்ணங்கள் குறைய, கவனம் அதிகரிக்கும். 

உணர்வை குறித்துக் கொள்ள, சரியான ஆரம்பம்

படிப்பதற்கு முன்னால், “இப்பொழுது எனக்கு -----” நாம் உணரும் உணர்வை எழுதி விட வேண்டும். அதைத் தொடர்ந்து மூச்சை நன்றாக உள்ளே இழுத்து, வெளியே விட்டுப் படிக்க ஆரம்பித்தால், படிப்பது பதியும். 

பயங்களைக் கணக்கிடுவது: 

பதட்டத்தைக் தருவதை குறித்துக் கொள்ளலாம். நமக்கு, ஆதரவு புரியும் பெற்றோர்களுடனோ, டீச்சருடனோ, ஸ்கூல் கொளன்ஸ்லருடனோ பகிர்ந்து கொள்ளலாம். ஆறுதலும், வழியும் தெரிய, மனதைப் பாடத்தின் மீது செலுத்த மிக ஈஸியாக இருக்கும்.

தெரியும், ஆனால் செய்வதில்லை:

இங்கு, பேசப் படுபவை அனைத்தும் தெரிந்ததே ஆனால் பெரும்பாலும் பின்பற்ற மாட்டோம்!

நாமே நமக்குப் பரீட்சை அமைத்தல்:

நாமாக, நமக்கு வினா-விடை, பரீட்சை அமைத்து-எழுதி-திருத்திக் கொள்ளுதல். நம்முடைய கற்றலை நாமே மேம்ப் படுத்திக் கொள்ள இது ஒரு வழியாகும். நம் வகுப்பு பாட புத்தகங்களுடன் மற்ற வளங்களிலிருந்தும் இப்படி நமக்குப் பரீட்சையை அமைத்துக் கொள்ளலாம். 

ஏன்?: நன்றாகப் புரிந்ததையும், புரியாததையும் தெளிவு படுத்தவே! 

மிக முக்கிய  தேவை: உதவி கேட்பது!

பரீட்சை வரும் வேளையில் சந்தேகங்களை கேட்கச் சங்கடமாக இருக்கலாம். “இவ்வளவு நாளா என்ன செஞ்ச?” என்று கேட்பார்கள். அதற்காகவே அச்சம் கொண்டு, தள்ளிப்போட நேர்ந்திருக்கும். சந்தேகத்தைத் தெளிவு படுத்திக் கொண்டால், பாடமும் புரியும், மதிப்பெண்களும் கூடும்! 

“நாளை, அப்புறமாக படிக்கிறேன்”
தெரியாததைத் தள்ளி போடாமல் படிக்க தேவை.

நமக்குக் கடினம் என்று கருதும் பாடங்களை நாம் சுறுசுறுப்பாக இருக்கும் பொழுது இதை எடுத்துப் படிக்க வேண்டும். புரியாததை புரிந்து கொள்ள அதிக நேரமாகக் கூடும். தாராளமாக நேரத்தைக் கொடுத்தால், அதன் விளைவு நமக்கே நன்மையைச் சேர்க்கும்! இன்னுமா தயக்கம்?

அவ்வப்போது திறனாய்வு: திறனாய்வு செய்து கொள்வது பழக்கமாக வேண்டும்.

படிப்புடன் டிவி, ஃபோன்:

இரண்டு வேலைகளை ஒரே நேரத்தில் செய்வதால் கவனம் சிதரும். அதிலும், படித்துக் கொண்டே டி.வி. பார்ப்பதும், குறும்செய்தி அனுப்புவதும். இந்த நேரங்களில் நெட் இல்லாமல், தோலைப்பேசியை வேறு அறையில் வைத்தால், அதன் கவனத்தை தவிர்க்கலாம். 

அன்றைய தினத்தின் பாடம் படித்து விட்டால்:

அன்றைய பாடத்தை குறித்து வைத்தது போல், முடித்த பின், கொஞ்சம் வேறு ஏதாவது செய்யலாம். இதில் சில தினங்களுக்கு உடற் பயிற்சிக்காக நடப்பது, ஓடுவது, நீச்சல் அடிப்பது என்றெல்லாம் செய்யலாம். சில தினங்கள் டிவி பார்க்கலாம், குடும்பத்தினருடன் ஜோக்ஸ் அடித்து, ஜாலியாக பேசலாம், இப்படி ஏதாவது ஒன்றைச் செய்யலாம்.

அன்றாடம்…

வேளாவேளைக்கு சாப்பிட வேண்டும்.
சுத்தமாக இருப்பது.
குளிப்பது அவசியம்.
எட்டு குவளை தண்ணீர் குடிக்க வேண்டும். 
எட்டு மணி நேரம் தூக்கம் தேவை. நம் மூளை படித்ததை பதிவு செய்ய நேரம் கொடுப்பதால், படித்ததை நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ள முடியும். 

பாடம் கற்பது நம்முடைய ஆர்வத்தையும் புரிதலையும் காட்டுகிறது. பரீட்சை என்பது நம் ஆற்றல், சமாளிக்கும் திறன்களை குறிக்கிறது. படிப்பதும், பரீட்சையும் நம் நண்பர்களே!

மாலதி சுவாமிநாதன்
மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்
malathiswami@gmail.com

]]>
பரீட்சை, அன்றாடம், ட்ரிக், மறப்பது http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/29/w600X390/colouring-kid-writer-image-credits-weheartit.jpg http://www.dinamani.com/health/mental-health/2018/jan/29/படிச்சதெல்லாம்-பரீட்சையின்-போது-மறந்து-போகிறதா-இதோ-ஒரு-ஸிம்பிள்-ட்ரிக்-2853471.html
2847418 மருத்துவம் மனநல மருத்துவம் வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை! மாலதி சுவாமிநாதன் Friday, January 19, 2018 03:11 PM +0530  


நம் வீட்டில், உபயோகமாக இல்லாத பல்வேறு பழைய பொருட்களை பரணையில் வைப்பது பழக்கமே.  இங்கு நான் விவரிக்கப் போவது வீட்டின் “மேல்” பரணை என்பதோ அலுவலகத்தைச் சார்ந்ததோ அல்ல. நம் மேல் மாடியான “தலை-மனம்-உள்ளம்” பற்றி கொஞ்சம் உரையாடலாம். 

நம் “தலை-மனம்-உள்ளத்தை”, வீட்டின் பரணையை போலவே இதையும் நாம் உபயோகிப்பதுண்டு. வித்தியாசம் என்னவென்றால், பல்வேறு பொருட்களை வைத்துக் கொள்ள இது இடம் செய்து கொண்டே போகும்! ஒரு விதத்தில், இப்படிச் சேகரித்து வைப்பது உதவி செய்யும். ஆனால், சில சமயம் இப்படிக் குவித்து வைப்பது தேவைதானா என்ற கேள்வியும் எழும். அப்பொழுது, அந்த சேமிப்பிலிருந்து சிலவற்றைத் தூக்கி எறிய வேண்டியது மிகவும் அவசியம். 

உலகளவிலும் வருடத்திற்கு சில முறை இதே போல் வீட்டை முழுவதும் துப்புரவு செய்வது வழக்கம். சில வெளிநாடுகளில் குளிர் காலத்தை ஒட்டியும், சில கலாச்சாரங்களில் குறிப்பிட்ட மாதத்தில் என்றும் அமைந்திருக்கிறது. நம்முடைய நாட்டிலும் இதைப் போகி, ஹோலீ, விஷு, புது வருடப்பிறப்பு, எனப் பல பண்டிகைகளுடன் தழுவிய சடங்குகளாகச் செய்கிறோம்.

இடங்களை எப்படி அவ்வப் பொழுது சுத்தம் செய்கிறோமோ, அதே போல் நம்  தலை-மனம்-உள்ளம் ஆகிய சேமிப்பு இடங்களையும் சுத்தம் செய்ய முடியும். நம்முள்ளே ஓடிக் கொண்டிருக்கும் முன்னீடுபாடுகளை, உள் காயங்களை, வடுக்களை, கசப்பான அனுபவங்களை நம்முடைய மேல் மாடியில் வைத்துக் கொள்கிறோம். அவைகளை ஆராய்ந்து, வேண்டாததை அகற்றி விடுவது மனதுக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. 

ஏன் இப்படிக் குவிந்து கிடைக்கிறது? நம் தலை-மனம்-உள்ளத்தில் கடந்த கால நிகழ்வுகளினாலோ, மற்றவர் சொன்ன சொல்லினாலோ இப்படி நடக்கலாம். அதாவது, அந்த கால கட்டத்தில் ஒன்று நடந்து விட்டது, அல்லது சொல்லி விட்டார்கள். நம்மைப் பாதித்தது, மறக்க முடியாததால், மனதில் வைத்துக் கொள்கிறோம். நடந்ததை மறுபடி நினைத்து நினைத்து, பத்திரப் படுத்தி கொள்கிறோம். அதை நினைவூட்டும் படி எதைச் சிந்தித்தாலும் அந்தச் சம்பவம் மீண்டும் உயிர் பெறுகிறது. நாம், அசை போட ஆரம்பிப்போம். நாளடைவில், இதுவே, நம்மை வாட்ட ஆரம்பிக்கும்.

மேல் மாடியில் இருப்பவை: சில உதாரணங்கள்

மனக் குவிப்புகள்  பல விதங்களில் இருக்கலாம்.  நாம் சந்தித்த தருணங்கள் எப்படி இருந்திருக்கலாம், அவைகளால் நாம் எப்படி பாதிக்கப் படுகிறோம் என்று சற்று பார்ப்போம்:

●    “அன்று அவர்கள் வாய் வைத்ததால் தான் என் வாழ்வே மாறி, வீணாகி விட்டது” என்று நாம் கணிக்கலாம்.

என்றோ நடந்ததை மையமாக வைத்து, அதுதான் நம்முடைய இன்றைய வாழ்வைத் தீர்மானிக்கிறது என்று நாம் நம்புகிறோம். கேட்ட வார்த்தைகளுக்கு அடிமையாகி விடுகிறோம்? இது எப்படிச் சாத்தியமாக முடியும்? அவர்கள் சொல் நம் வாழ்வை எப்படி மாற்ற முடியும்? அவர்களின் சொல்லுக்கோ, அவர்களுக்குக்கோ, அப்படி என்ன சக்தி உள்ளது? அந்தச் சொல்லினால் நம் முயற்சிகள் எப்படி செயலற்றதாக ஆக முடியும்?

●    நம்மை எல்லோர் முன்னிலும் அலட்சியப் படுத்தியது.

அதை நினைக்க நினைக்க, செய்தவரை  சும்மா விடக்கூடாது என்ற உறுதி மேலோங்கலாம்.

●    என்னைத் தாழ்த்தியவர்கள் தவித்தால், மனதுக்குக் குஷி (வெளியில் காட்டிக் கொள்ளாமல்).

நாம் பழி வாங்க நினைப்பது, அவர்கள் நடந்து கொண்டது இரண்டும் ஒற்றுப் போகிறது. இப்படிப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது என்றால், நாம் அவர்கள் சொல்லின் / செயலின் பிடியில் சிக்கிக் கொண்டோம் எனலாம். இப்படி நடப்பதற்குக் காரணம், நம்முடைய தன்நம்பிக்கை குறைந்து விட்டதாலும் அதனால் தோன்றிய பயத்தினாலும் ஆகலாம். பழி வாங்கும் எண்ணத்தை விட்டு விட்டு நம் குறைகளை சீர்திருத்தி, மனதை திடப் படுத்திக் கொண்டால் உபயோகமாக இருக்கும்.

●    அன்று சொன்னது இன்றும் ரீங்காரமாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

அதே வார்த்தைகள் நிரந்தரமான எதிரொலியாக நீடித்துக்  கொண்டே போவதால், மன அமைதி தொலையத் தான் செய்கிறது. இருந்தும் அந்த வார்த்தைகளை நம்மிடமே பத்திரப் படுத்தி வைத்திருக்கிறோம். ஏன்?

மேல் மாடியில் வைத்ததால்

அன்று, மனம் தளர்ந்து போனதால் தடுமாறினோம்.  தர்மசங்கடமாக இருந்ததால் மனதைச் சுதாரித்து செயல்பட இயலவில்லை. வார்த்தைகள் மனதைப் பாதித்தது. அதற்குப் பிறகு சமாதானம் பெற என்ன தடுத்தது? இவை, நமக்குள் குமிறல்களாக இருந்து கொண்டே இருப்பதற்கு சில காரணங்கள்: 

●    அன்று நடந்தது நமக்குத் தலை குனிவாக ஆயிற்று. அதைச் சமாளிக்க திண்டாடினோம். வழி தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறோம், இன்றும்!
●    நமக்கு ஏற்பட்டது இன்னும் யாருக்கெல்லாம் தெரியுமோ என்ற சஞ்சலம் வாட்டலாம். மற்றவரைச் சந்திக்க தயக்கம், வெட்கத்தினால் ஒளிந்து கொண்டு நமக்குள்ளேயே புழுங்கிக் கிடப்போம்.
●    இதைப் பற்றி யாரிடம் பகிர்ந்து கொள்ள முடியும்? “நம்மை இன்னும் ஏளனமாகக் கருதிவிட்டால்…” என்ற அச்சம் தடுக்கலாம். பகிர்ந்து கொள்ளாததினால் குமுறல்கள் நமக்குள்ளேயே இருந்து விடுகிறது. 
●    “இவர்களை இப்படியே விட்டு வைக்கக் கூடாது. நலு வார்த்தை நறுக்கென்று கேட்க வேண்டும்.அவர்களுக்குப் பாடம் கற்பித்தால் தான் என்னுடைய ரணம் ஆறும்”.
●    “பழி வாங்க, சரியான வேளைக்குக் காத்திருப்பேன்…”
●    “நான் பின் தங்கி இருப்பதற்கு அவங்க தான் காரணம்" (தன் குறைபாடுகளை பார்க்காமல் மற்றவர் மேல் பழி போடுதல்).

இதன் விளைவாக நம் உடல்-மனநலம் சோர்ந்து போகிறது. உறவுகள் முறிகிறது, இதனால் எஞ்சி இருப்பவர்களிடமும் விட்டேத்தியாக இருக்கின்றோம். நியாயமா? 

அந்த நிகழ்ச்சி நடந்து வாரங்களோ, மாதங்களோ, வருடங்களோ ஆகி இருக்கலாம். நடந்ததை ஞாபகப் படுத்திக் கொண்டே இருந்தால் அதை விட்டுத் தாண்டி வர இயலாது. மேலும் தகவல்களை அடுக்கிக் கொண்டே போவோம். 

மேல் மாடியில் வைத்துக் கொள்வதை நியாயப் படுத்த: “எப்படி மறக்க முடியும்?”, “இப்படித் தான் சொன்னார்”, “என்னை மட்டும்...” என்று பல விதமான சுமைகளை ஏற்றிக் கொண்டே போவோம்.  உடைந்த டேப்ரெக்கார்டரை போல அதே சம்பவத்தை ரீவைன்ட் செய்வதால் ரணங்கள், மனவெறுப்பு அதிகரிக்கும்.

ரணங்கள் ஏற்பட்டது அவர்களினால் இருக்கலாம். ஆனால் அதை அதிகரித்தது யார் என்று ஆராய்ந்தாலே, நம் மேல் மாடியை சுத்தப் படுத்த தயாராகி விடுவோமோ?

யாருக்குப் பாதிப்பு?

அன்று நடந்ததை நம்மிடமே பொக்கிஷமாக வைத்துக் கொண்டுவிடுகிறோம். அவர்களின் சொல்லுக்கு வெற்றி மாலை சூட்டி, நம்மிடம் வைத்துக் கொள்கிறோம்.

இவைகளின் சுமை உணர முடிகிறது. இருந்தும் ஏன் அப்படியே விட்டு விடுகிறோம்? அதனால் வரும் அழுகை, மனபாரம், துவண்டு போவது, எரிச்சல் எல்லாம் திரும்ப திரும்ப அனுபவிக்க, பழக்கமாகி விடுகிறது என்பதாலா?

நடந்ததை நினைத்துப் பார்த்துக் கொண்டே இருப்பதால் அதன் வீரியம் அதிகரித்து விடுகிறது. நாளடைவில், அது தோற்றத்தில் பெரிதாகி, மன வடுவாக மாறி விட நேரிடலாம். 

இந்த மேல் மாடி சேமிப்புகளையே யோசித்துக் கொண்டு இருந்தால், இதனால், கோபம் வரச் செய்யலாம், துவேஷமுமாக இருக்க நேரிடலாம், நம்மைப் பழிவாங்க தூண்டுவதும் ஆகும். இப்படிச் செய்வதால், “தலை-மனம்-உள்ளம்” எதிர்மறை எண்ணங்கள் அதிகரித்து, அது நம்மைச் சூழ்ந்து கொள்ளும். மொத்தத்தில், வெறுப்பு, மனக்கசப்பு, தன்னிரக்கம் அதிகரித்து விடும்.

எச்சரிக்கை மணி

ஒன்று, இரண்டு என்று இல்லாமல் பலவற்றை இப்படி வைப்பதால் அதைத் தாங்க முடியாமல் நம் உடல் வலிகள் மூலமாக முதல் எச்சரிக்கை மணி அடிக்கும். 

இந்த வலிகளுக்கு டாக்டரை ஆலோசிப்போம். செய்யும் பரிசோதனைகளில் எல்லாம் “நார்மல்” என்று வரும். அப்படியும் நாம், மேல் மாடியைச் சுத்தம் செய்யாமல் இருந்து விட்டால், பதட்டம், துக்கம், கோபம், அழுகை, சாப்பிடப் பிடிக்காமல், தூக்கம் சரியாக இல்லாமல், சோர்வாகவே இருப்பது போல் தோன்றும். அடுத்த கட்டமாக மன உளைச்சலின் அறிகுறிகள் ஆரம்பமாகும். விளைவாக, சுயப் பச்சாதாபம் அதிகரிக்க, காலப் போக்கில் தன் மேல் வெறுப்பாக மாறக் கூடும்.

நமக்குத் தற்காப்பாக ஒன்றும் செய்து கொள்ளவில்லை என்று நம் மேல் கோபத்துடன், நம்மை நாமே தாழ்வாக பார்க்கவும் செய்வோம். ஆனால், நம்மை இந்தப் பரிதாப நிலையில் பார்க்கப் பிடிக்காததால், இந்த நிலைக்குக் காரணமான நிகழ்வுகள், கதாப்பாத்திரங்கள்-உணர்வுகளை எதிர்மறை எண்ணங்களுடன் பார்க்கத் தோன்றும்.

நாளடைவில் கூடவே நம்முடைய சில கொள்கைகளும் மங்கலாகித் தளர நேரிடலாம். உதாரணத்திற்கு, அதே வார்த்தைகளை, நிகழ்வுகளை நாம் ஞாபகப் படுத்திக் கொண்டிருந்தால் அவர்களின் முன்னேற்றத்தைப் பற்றி தெரிந்து கொண்டாலோ, பார்த்தாலோ பொறாமை ஏற்படும். அவர்களைப் பழி வாங்கத் தோன்றும். நம்முடைய நல்ல குணங்கள் நழுவாரம்பிக்கும்.

நம் எண்ணங்கள் இப்படி இருந்தால், அவர்கள் சொன்னது சரி இல்லை, நியாயம் இல்லை என்று சொன்ன நாம், நமக்குள் குமுறி பொரிந்து அவர்களைப் பற்றி தாழ்வாக நினைப்பது, பேசுவது, சாபம் இடுவதுமாக இருந்தால், நம் கொள்கைகள் குலைந்து விட்டதை எப்படி நியாயப் படுத்த முடியும்?

மறுபடியும் அவர்களுக்கே வெற்றி! நம்மைத் தாழ்த்தி, வீழ்த்தி விட்டார்கள்!

ஏன் இந்த நிலைமைக்கு நம்மை நாமே ஆளாக்கிக் கொள்கிறோம்? மன்னிக்க மனம் விடவில்லையா? இல்லை மறக்க நாம் தயாராக வில்லையா? “மன்னிக்க நான் என்ன மஹானா” என்ற எண்ணமா?

நம் மேல் மாடியான “தலை-மனம்-உள்ளத்தை” சுத்தம் செய்கிறோம் என்றால் அது யாருக்காக?  யாருக்குப் பாதிப்பு? நாம் நம்முடைய நலனுக்காகத்தான் செய்கிறோம் என்ற தெளிவு வந்துவிட்டால், “தலை-மனம்-உள்ளம்" சுத்தம் செய்வது சாத்தியமாகும், சுலபமும் ஆகும்.

சுத்தம் செய்ய:

நம் “தலை-மனம்-உள்ளம்" சுத்தம் செய்ய, கண்டிப்பாக நமக்கு மனதில் பலம் தேவை.  தாங்கிக் கொள்ள முடியும் என்ற எண்ணம் எழுந்தால் தான் நமக்கு உறுதி வரும், நாமும் முயற்சிப்போம். மனோ தைரியம் உடன் இருந்தால் மன உறுதி கூடும். இந்த இரண்டுமே கைகோர்த்து கொண்டால், நமக்கு உபயோகமே! இல்லாததையும், தேவைக்கு மிகுதியான விஷயங்களையும், மனக்கசப்பை அதிகரிக்கும் முன்னீடுபாடுகளையும் தெளிவாகப் புரிந்து கொண்டு, வெளியே எறிந்து விடத் தயாராவோம். செய்யவும் செய்வோம். 

மாற்றம் கொண்டு வரப்போகிறேன் என்ற எண்ணமே மாற்றத்தின் முதல் படி. மாற்றங்கள் கொண்டு வர எந்த அளவிற்குத் தயாராக இருக்கிறோமோ அதைப் பொருத்து தான் மாற்றங்கள் ஏற்படும். எக்காரணத்திற்கோ நாம் ஆயத்தமாக இல்லை என்றால் நாம் ஜுவித்து இருந்தும் ஜுவன் இல்லாதது போல்.

நம் மேல் மாடியில் நம்மைத் துன்புறுத்துவதை சேகரித்து வைத்துக் கொண்டே வந்தால், வரும் சந்தர்ப்பங்களை பார்க்காமல் இருந்துவிட நேரிடலாம். வாய்ப்புகள் நம்மைக் கடந்து செல்வதையும் கண்டறிய மாட்டோம். 

நம் தலை-மனம்-உள்ளம் மூன்றையும் அவ்வப்பொழுது சுத்தப் படுத்திக் கொண்டால், புது வழிகள் தென்படும். ஒவ்வொரு அனுபவம், ஆச்சரியங்களிலிருந்து, திருப்பங்களிலிருந்து, துணிவான முயற்சிகளிலிருந்தே நமக்கு ஆழ்ந்த அறிவு, தாங்கும் தன்மை பிறக்கும். 

என்றோ நடந்ததை, நம்முடைய இன்றைய வாழ்வை நிர்ணயிக்க விடுகிறோம், உடல்-மனநலம் கெட! இதைப் புரிந்து கொண்டு, மாற்றத் தீர்மானிப்பதே, நலமாவதின் முதல் கட்டம்! சிந்திப்பீர்!

மாலதி சுவாமிநாதன்
மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்    
malathiswami@gmail.com

]]>
SAD, memories, old, ஞாபகங்கள், சோகம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/19/w600X390/150103125301-memory-story-mier-super-169.jpeg http://www.dinamani.com/health/mental-health/2018/jan/19/erase-your-unwanted-old-memories-2847418.html
2846681 மருத்துவம் மனநல மருத்துவம் திடீரென்று பாலியல் விருப்பம் குறைவதற்கு என்ன காரணம்? Thursday, January 18, 2018 12:51 PM +0530  

இச்சை, தாம்பத்திய ஆசை என்பது உயிரியல் சம்பந்தப்பட்ட விஷயம். ஒவ்வொரு உயிரின் முக்கியமான பங்கு சந்ததி உருவாக்கம் எனலாம். இயற்கையாக அமையும் இந்த விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கும். உளவியல் ரீதியாக அல்லது உடல்ரீதியாக சிலருக்கு திடீரென்று விருப்பமின்மை ஏற்படலாம். அது தற்காலிகம் என்றால் கவலை வேண்டாம். ஆனால் திடீரென்று முற்றிலும் விருப்பம் இல்லாமல் போய்விட்டால் நிச்சயம் மருத்துவ உதவி தேவைப்படலாம். அதற்கான காரணங்களை முதலில் கண்டறிய வேண்டும்.

சுவாமிநாதனுக்கு திடீரென்று வேலை போய்விட்டது. ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தவர் அவர். நடுத்தர வயது. ஒரே மகன் பள்ளியில் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தான். பேங்க் பேலன்ஸ் உள்ள வரை சமாளித்துக் கொண்டு வேறு வேலை தேடிக் கொண்டிருந்தார். அவரது தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற வேலை அமையவில்லை. போதாதற்கு முந்தைய நிறுவனம் அவரை ப்ளாக் லிஸ்ட் செய்து வைத்திருந்தது. இதனால் மிகவும் மனம் உடைந்த நிலையில் அவர் தன்னை வெகுவாக சுறுக்கிக் கொண்டார்.

தன்னம்பிக்கை உருக்குலைந்து நண்பர்களிடமிருந்தும் விலகிச் செல்ல ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் பணப் பிரச்னையும் சேர்ந்து நெருக்க, அவர் தன்னிலை இழக்க ஆரம்பித்து கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளானார். அச்சமயங்களில் அவருக்கு மனைவி அருகில் வந்தாலே ஒவ்வாமையாக இருந்தது. மனைவியிடம் எரிந்து விழுவார் அல்லது தன்னை தனியே விடும்படி இறைஞ்சுவார். தனக்கு பாலியல் விஷயங்களில் துளிக்கூட விருப்பம் இல்லை என்று வெளிப்படையாகவே கூறிவிட்டார்.

வேலைக்குச் சென்று மீண்டும் தன் சுய பலம் பெற்றதும்தான் அவரால் மூச்சு விட முடிந்தது. ஆண்மை என்பது இங்கு வேலை செய்வது, குடும்பத்தை காப்பது என்பதுடன் அவர் தொடர்பு படுத்தியிருந்தார் என்பதால் அவரால் தனது மனத்துக்குள் ஏற்படுத்திக் கொண்ட திரையை விலக்க முடியவில்லை. மனைவியைத் தான் அந்தக் காலகட்டத்தில் விலக்கி வைத்திருந்தார். சில கவுன்சிலிங் எடுத்து மீண்டும் புதிய வாழ்க்கையைத் தொடங்கினார்.

ஏதோ ஒரு காரணத்தால் தீவிரமாக பாதிக்கப்பட்டு, மன அழுத்தம் ஏற்படும் போது ஒருவரது பாலியல் விருப்பம் பெரிதும் பாதிக்கப்படும். ஸ்ட்ரெஸ் போன்ற பிரச்னைகள் எதிர்மறையான எண்ணங்களைத் தோற்றுவித்து, ஹார்மோன் அளவுகள் சீர்குலைத்துவிடும். சிலருக்கு டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியில் பிரச்னை இருக்கும். இது ஒரு முக்கியமான ஆண் ஹார்மோனாகும். சிலருக்கு வயது அதிகரிக்கும்போது டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்துவிடும். மிக அதிகமாகக் குறைந்துவிட்டால் பாலியல் சார்ந்த விருப்பங்கள் குறைந்துவிடலாம்.

தூக்கமின்மை இன்னொரு பிரச்னை. சிலர் இரவு பகல் பாராது நீண்ட நேரம் வேலை செய்து கொண்டிருப்பார்கள். போதிய அளவுக்கு உறக்கம் இல்லையென்றால் எதிலும் உற்சாகம் இருக்காது. இன்னும் சிலருக்கு, மாத்திரை மருந்துகளில் பக்கவிளைவால் விருப்பமின்மை ஏற்படலாம். முக்கியமாக மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகள் உடல்ரீதியான விருப்பமின்மையை ஏற்படுத்திவிடலாம். தொடர்ந்து உடல் வலி அல்லது கடும் வியாதிகள் ஒருவரை உடல் மற்றும் மன அளவில் பெரிதும் பாதிப்படையச் செய்திருக்கும் சமயத்தில் உயிர் பயம் மிகுந்திருக்கும். அச்சமயங்களில் தாம்பத்ய உறவைப் பற்றி அவர்களால் சிந்திக்க முடியாது.

இதற்கு தீர்வு அடிக்கடி டென்ஷன் ஆகாமல் இருக்க வேண்டும். சிகரெட், மது, போதை போன்ற பழக்கங்கள் இருந்தால் உடனடியாக அதிலிருந்து விடுபட்டு, உடலை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். சத்தான உணவுகளை சாப்பிட்டு கூடுமான வரையில் உடல் மற்றும் மன நலனில் அக்கறை காட்ட வேண்டும். ஆனால் பிரச்னைகள் தொடர்ந்தால் யோசிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். தகுந்த சிகிச்சை பின்னர் பாலியல் விருப்பமின்மை நீங்கிவிடும். அவர் பரிந்துரைக்கும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

]]>
married life, தாம்பத்திய உறவு, பாலியல் பிரச்னைகள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/18/w600X390/man.jpg http://www.dinamani.com/health/mental-health/2018/jan/18/திடீரென்று-பாலியல்-விருப்பம்-குறைவதற்கு-என்ன-காரணம்-2846681.html
2843647 மருத்துவம் மனநல மருத்துவம் தந்தி அடிப்பது போல ‘குட்’ ‘சூப்பர்’ ‘நைஸ்’ என ஒரே வார்த்தையில் ஃபீட்பேக் கொடுப்பவரா நீங்கள்? சரிதானா அது? மாலதி சுவாமிநாதன் Friday, January 12, 2018 03:36 PM +0530  

நம் எல்லோருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு என்றால், அது, நாம் அனைவருமே எல்லாவற்றிற்கும் நம் அபிப்ராயத்தைத் தெரிவிப்பதாகும். கருத்துக்களைத் தெரிவிப்பதும், ஃபீட்பேக் கொடுப்பதும் இதில் அடங்கும். இவற்றை மற்றவரின் மேம்பாட்டுக்கு ஒரு கருவியாக உபயோகிக்க முடியும். 

யாரிடம் கருத்தை தெரிவிக்கிறோமோ, அதைச் சொல்கின்ற முறையில் சொன்னால், அவர்களை ஊக்கப்படுத்தி, எதைச் செய்து கொண்டு இருக்கிறார்களோ அதைக் கவனமாக செய்ய உதவிட முடியும். கருத்தைத் தெரிவிக்கும் விதத்தினாலேயே, அறிவு வளர வாய்ப்பை அமைத்து, கூடவே ஆற்றலும் பெருகச் செய்ய முடியும். மாறாக, ஃபீட்பேக் கொடுக்கும் விதத்தில் செய்பவரின் ஆர்வத்தைப் பூஜ்யமாக்கவும் முடியும்.

ஒற்றை வார்த்தை ஃபீட்பேக் பொதுவாக, கருத்து தெரிவிப்பவர் தந்தி அடிப்பது போலச் சுருக்கமாக, ஒரு வார்த்தையில் ஃபீட்பேக்கை சொல்லி நிறுத்திக் கொள்வதுண்டு. இதில், நாம் சொல்லும் “குட்”, “சபாஷ்”, “புவர்” ,”எக்ஸலென்ட்”, பேஸ்புக்கில் போடும் “லைக்” எல்லாம் அடங்கும். 

ஏன், எதற்கு “குட்”? எதைக் குறிக்கின்றது “புவர்”? எதை வைத்து “எக்ஸலென்ட்” தீர்மானிக்கப் பட்டது? எதனால் “லைக்” போட்டார்கள்? என்பது எல்லாவற்றையும் தாமே யூகித்துக் கொள்வதா?  

கருத்தைத் தெரிவித்தவர்கள், எதைக் குறித்து இப்படிச் சொன்னார்கள்? எதை யோசித்தார்கள் என்று எப்படித் தெரிய வரும்? இந்த ஒற்றை வார்த்தையைக் கொண்டு என்னவென்று புரிந்து கொள்ள முடியும்? அவர்கள் தெரிவித்த ஃபீட்பேக்கோ, கருத்தோ என்ன தகவலை தெரிவிக்கிறது? 

கருத்து தெரிவிப்பதினால் வெவ்வேறு பாதிப்புகள், தாக்கங்கள் ஏற்படலாம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் வரக்கூடிய விளைவுகளைப் பற்றி அறிந்து கொண்டால் தான் நம்மால் கருத்து என்ற கருவியை பயனுள்ளதாக மாற்ற முடியும். 

இதற்காக, எங்கு, எதைச் செய்தால் பயனுள்ளதாக ஆக்க முடியும் என்றும், எவையெல்லாம் நேர் எதிராக நேரிடும் என்பதைப் இங்குப் பார்க்கலாமா?

செய்வதைக் குறித்து கருத்து தெரிவித்தல் நாம், ஒருவர் செய்ததை பார்த்தோ, படித்தோ நம் எண்ணத்தைத் தெரிவிப்பதுண்டு. இது, செய்பவருக்கு உபயோகமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சொன்னால் அதை பீஃட்பேக் என்று கூறப்படும்.

பீஃட்பேக் உபயோகமாக இருக்க, கருத்து தெரிவிக்கும் பொழுது, செய்பவர் செய்து கொண்டு இருப்பதை மையமாக வைத்திருக்க வேண்டும். அவர்கள்
செய்ததில் எது சரியாக இருக்கின்றது என்று குறிப்பது மிக அவசியமாகும். வித்தியாசமாகச் செய்ததைத் தழுவிய தகவல்கள் பற்றிய ஃபீட்பேக் அளிப்பதால், ஊக்குவிக்கவும் செய்யும், தெளிவும் ஏற்படும்! நாம் அவர்கள் செய்வதை புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதும்  தெரிய வரும். மறுபடி அதைச் செய்யம் போது, அந்த வித்தியாசத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று முயல்வார்கள், வேறு புது மாற்றங்கள் கொண்டு வரவும் முயற்சி செய்வார்கள்.

அதே போல், அவர்கள்  செயல்படும் விதத்தைப் பற்றிய தகவலை எடுத்துச் சொல்வதாலும் அவர்கள் மேலும் தெளிவு அடைவார்கள். சிலாகிப்பதிலும், குறை காண்பதிலும் மட்டும் அல்ல. 

அவர்கள் இந்த முறை வேறு என்ன வெற்றி தரும் வழிகளைப் பயன்படுத்தி உள்ளார்கள் என்று எடுத்துச் சொல்வதும் அடங்கும். இப்படி ஃபீட்பேக் தெரிவிப்பது ஒரு சிறந்த கருவியாகிறது. அதனால் தான், ஃபீட்பேக் தெரிவிப்பதில் ஊக்கப் படுத்துவதும், மனந்தளர்வதும் இரண்டுமே அடங்கி உள்ளது என்று சொல்லலாம். இதைத் தெரிவிக்கும் விதத்திலும், தெரிவிப்பவர் காட்டும் அக்கறையிலும் இது வெளிப்படுகிறது.

ஃபீட்பேக்கினால் ஈடுபாட்டை இழக்க வைக்க முடியும்!

சில நிலைகளில், நாம் கருத்து தெரிவித்த விதத்தினால் செய்பவர் ஈடுபாட்டை இழக்கக் கூடும். சில நேரங்களில், நாம் செய்பவரை மிகக் கூர்மையாக கவனித்துக் கொண்டே இருப்பதால் இது நேரிடலாம். இல்லையேல், கண் சிமிட்டாமல், மிகக் கூர்ந்தோ, மிகப் பக்கத்திலிருந்தோ அவர்களைக் கவனித்து, கருத்தை எடுத்துச் சொல்லும் பொழுதும் இப்படி ஆகலாம். 

இப்படி நிகழ்ந்தால், செய்பவருக்கு, நடுக்கமும் அச்சமும் கூடி விடுவதற்கான சந்தர்ப்பமாகலாம். இதனால் தடுமாற்றம் வரலாம். இதன் விளைவாக, தாம் செய்வதின் மீது சந்தேகம் சூழ்ந்து கொள்வதால், செய்வதை நிறுத்தியும் விட நேரிடலாம். இதனாலேயும், மிக நுண்ணிப்பாகவும், துல்லியமாகவும் கவனித்துச் சொல்லும் கருத்தை எடுத்துக் கொள்ள மனம் ஒப்பாமல் போகலாம்.

அதே போல், கருத்தைத் தெரிவிக்கும் பொழுது, அவர்களின் வேலையைப் பற்றி சார்ந்ததாக இல்லாமல் அவர்களின் குணாதிசயங்களை பற்றி விமர்சனம் செய்தால், அது வேறு திசையில் போகக் கூடும். அதாவது “நீ எப்பவும் ஸ்லோ”, “எது செஞ்சாலும், தப்பாகச் செய்யற” என்பதெல்லாம் நபரைக் குறிப்பதாகும். அதுவும் குறிப்பாகக் குறைபாடுகளை பற்றி இருப்பதால் அது மன வருத்தத்தைத் தரும். ஏனெனில், இந்த மாதிரியான ஃபீட்பேக்கில், செயலைப் பற்றி மட்டுமின்றி, செய்பவரையே நமக்குப் பிடிக்க வில்லை என்றே தோன்றி விடும்.

மற்றவருக்குக் கருத்து தெரிவிக்கும் பொழுது, “இதை நீ இப்படித் தான் செய்ய வேண்டும்” என்று சொல்லி விட்டால், ஒரு தடை போடுவது போல தோன்றி விடலாம். அதாவது, அவர்களை நம் எண்ணத்தின் படி செய்ய வேண்டிய நிலையில் கொண்டு வருவது போல் ஆகிவிடும். இதனால் ஒவ்வொரு முறையும் அறிவுறுத்தல்களுக்காகக் காத்திருக்க வேண்டி நேரிடும். இப்படிச் செய்வதில், அவர்களின் சுதந்திரம் தடைப் படுவதால் அடிமை சாயல் தோன்றிவிடும். இதன் விளைவாக, சிலர், சாவி கொடுத்த பொம்மை போல், சொன்னால் மட்டும் செய்வார்கள். மற்றவர்களோ, சுரம்  இல்லாமல் இயங்குவார்கள்.

சொல்லுவதை, மனக்கசப்பு இல்லாமல், மனம் புண்படாத விதத்திலும் தெரிவிக்க முடியும்.

பயனுள்ள வழிமுறைகள்

தகவல்கள் கிடைக்கும் மையங்களைப் பற்றி நமக்குத் தெரிந்ததை அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கக் கூடும் என்று நினைத்தால் தாராளமாக பகிர்ந்து கொள்ளலாம்.

அவர்கள் செய்து வரும் வேலையின் பலன்களை மதிப்பிடும் விதம் ஏதேனும் இருக்கும். அதைப் பற்றின விவரங்களை அவர்களுக்கு விவரிக்கலாம். அப்பொழுது அவர்கள், தாங்கள் செய்வதை தாமாக சுதாரித்துக் கொண்டு, செய்யும் வழிகளை நன்றாக உருவாக்கிக் கொள்ள முடியும். 

அதாவது, வேறொருவர் கருத்து தெரிவிப்பதற்குப் பதிலாக நாமே நாம் செய்வதற்கான கருத்தைக் கணித்து சரி செய்து கொள்ளலாம். தாமாகவே, செய்வதை உன்னிப்பாகக் கவனித்து, ஆராயும் முறையும் சமீப காலங்களில் பிரபலமாகி வருகிற ஒன்றே!

இப்படிப் பகிர்ந்து கொள்வதனால் திறமைகள் வலுப்பட்டு, தெரியாததைத் பற்றித் தெளிவு பெற்று, செய்வது நன்றாக அமையும்! 

நம் பாதையை பற்றிப் புரிந்து கொள்ள, நாம் ஒவ்வொரு கட்டத்திலும் சிந்திக்க வேண்டும். நாமே நமக்கு  ஃபீட்பேக் கொடுப்பதால், “நான் எங்குச் சென்று கொண்டிருக்கிறேன்?”, “எப்படி?”, “எந்த வழியை உபயோகிக்கிறேன்?”, “அடுத்து, என்ன செய்யலாம்?” என்பதற்குப் பதில் தெளிவாக இருக்கும். இப்படி இருந்து விட்டால், நம்மை நம் இலக்கின் அருகில் அழைத்துச் செல்லும். இதனுடன், அடுத்தவரின் ஃபீட்பேகும் நமக்கு உபயோகமாக இருக்கும்.

இது தான் நம் குறிக்கோள் என்று உறுதியாகத் தெரிந்து, கருத்துக்கள் வரும் தோரணையில், நாம் நோக்கத்தை எந்த அளவிற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வோம்.

மெட்டா காக்நிஷன் (Meta cognition)

மெட்டா காக்நிஷன் (Meta cognition) என்பது, நாம் நமக்கு வரும் ஃபீட்பேக்கை புரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளும் விதம் என்று சொல்லலாம்.

நமக்குக் கிடைக்கும் கருத்துக்களை வைத்துக் கொண்டு நம் சிந்தனை முறைகளைப் பற்றி நாமே ஆராய்ந்து, அதை மேலும் சிறப்பாக்க முடியும். அதாவது, நம் சிந்தனைகளை நாமே ஆராய்வதால், நமது குறைகள், புரியாத விஷயங்களை அடையாளம் கண்டு, நாமாக யோசித்து வழி செய்து கொள்வோம். நம்மை மேம்படுத்திக் கொள்ள, மேலும் உழைத்து, பாதையை வகுத்துக் கொள்வோம். இதனால், நேரத்தையும் நன்றாக உபயோகிப்போம். நாம் செய்வதை பார்த்து, அதன் உபயோகத்தையும், விளைவுகளையும் பார்த்து, மற்றவரும் பின்பற்றுவார்கள்!

ஃபீட்பேக் கொடுப்பதின் பயன், சொல்லின் வன்னத்திலும், தேர்ந்தெடுக்கும் வார்த்தையைப் பொருத்து இறுக்கு. இதிலிருந்தே, இது, எந்த அளவிற்கு மற்றவருக்கு உபயோகப் படும் என்பதும் நிர்ணயமாவதும் எனலாம்.

கருத்துச் சொல்வதின் மூலம் மற்றவர்களை எப்படி ஊக்கப் படுத்தி மேலும் வளரச் செய்யலாம், எப்படி உதவலாம் என்பதைப் பார்த்தோம். இதே போல் பிசக்கு சொல்லும் கருத்தினால் மற்றவர்களைக் கீழ்ப் படுத்தவும் முடியும். இனிமேல் எந்த விதத்தில் கருத்து தெரிவிப்பது, ஃபீட்பேக் கொடுப்பது என்பதை நாம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மாலதி சுவாமிநாதன்
மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர்
malathiswami@gmail.com

]]>
metacognition http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/12/w600X390/pandiyan.jpg http://www.dinamani.com/health/mental-health/2018/jan/12/metacognition-2843647.html
2840066 மருத்துவம் மனநல மருத்துவம் நம்முள் கொண்டு வர விரும்பும் மாற்றத்தை நாம் ஏன் ஜனவரி-1 முதல் துவங்க நினைக்கிறோம்?  மாலதி சுவாமிநாதன் Saturday, January 6, 2018 02:53 PM +0530  

2018-ல், இது வரையில் நம் நடைமுறையில் இல்லாததைக் கொண்டு வர முயற்சிக்கலாமா?

புதிய வருடத்தை புதிய எண்ணங்களுடன், புதிய செயல்களுடன், புதிய விதத்தில் ஆரம்பிப்பது என்பது வழக்கமாகச் செய்வதே. “இதை எல்லாம் இந்த வருடம் செய்தே தீருவேன்” என்ற முடிவு எடுப்பதும் இதில் அடங்கும். எதைச் செய்ய ஆரம்பிக்கிறோமோ, அதை 21 நாட்களுக்குத் தொடர்ந்து செய்து வந்தால், மாற்றம் நிலைத்து விடும் என்பது கேள்விப் பட்டிருக்கிறோம்.

மாற்றத்தை நாம் ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்தே துவங்க வேண்டும் என்று  நிர்ணயித்து, உறுதியாக இருப்போம். அதனாலேயே, டிசம்பர் 31வது மாலை நெருங்க, இன்னமும் சுருசுருப்பு கூடிவிட, ஒரு பரபரப்புடன் இருப்போம். நாம் ஒன்றை ஆரம்பிக்கும் போது அதனுடன் வரும் ஆவலால் தவிப்பூட்டும் சேர்ந்து விடும். செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொள்வதும், நம்மை மேம்படுத்திக் கொள்ள முயற்சிப்பது என்ற அணுகுமுறையும் மிக நல்ல விஷயமே!

புது வருடத்தின் ஆரம்பக் காலத்தில் இன்னொரு விஷயமும் வருவதுண்டு. வருடப்பிறப்பை முன்னிட்டு, நாம் எந்த அளவிற்குச் சந்தோஷமாக இருக்கலாம் என்பதைக் குறித்தே விளம்பரங்கள் காட்டப் படுகிறது. வித விதமாகப் பொருட்கள் நமக்கு மிக அத்தியாவசியம் போல், நம் மனது வசப்படும் அளவிற்குத் தகவல்கள் விளம்பரங்களில் அமைக்கப் பட்டிருக்கும். இது, “பர்சுவேஸிவ் தின்கிங்” (Persuasive Thinking) என்பதைச் சார்ந்தது, அதாவது நம்மை மறைமுகமாகத் தூண்டிவிடுவது என்று வர்ணிக்கலாம். அதன் விளைவாக, நாம் இவற்றை வாங்கி உபயோகப் படுத்துவதும் உண்டு. விளம்பரத்தின்  வெற்றி, நாம் ஈர்க்கப் படவிடுவதிலேயே!

ஒரு விதத்தில், நமக்கு என்று வாங்கி, நம்மை அலங்கரித்துக் கொண்டு, புது வருடத்தை வரவேற்பது நமக்கு இனிய தருணங்களாகும். இன்னொரு விதத்தில், வருட ஆரம்பத்திலேயே நம்மைச் தன்னலம் தூண்டி விட, நாமும் பர்சுவேஸிவ் தின்கிங்கினால் அதை ஏற்றுக் கொள்கிறோமே என்பதும் நினைத்துப் பார்க்க வேண்டியவையே. 

இதை ஒட்டினார் போல், அன்றைய தினத்தில், தொடர்ந்து எதைச் செய்தாலும், நமக்கே என்று மட்டும் என்று எண்ணி விடக்கூடும். நமக்குப் பிடித்ததை மட்டும் செய்ய, மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அதைப் பற்றி யோசிக்கக் கூட மனம் மறுத்து விடக்கூடும்.

இதனுடைய பிரதிபலிப்பை நாம் புது வருடம் பிறக்கும் வேளையில் பார்க்க முடிகிறது. பலர், வெளியில் கவனமின்றி வாகனங்களைத் தாறுமாறாக ஓட்டி,  கூச்சலிட்டு, தாம் படும் சந்தோஷத்தை உலகுக்கே காட்டுவதை பார்க்கிறோம். இது மருத்துவ மனை அருகிலும் நடக்கிறது. பறவைகள், சத்தத்தில் பயந்து, விழித்துக் கலங்கி பறந்தால் என்ன, விலங்குகள் அரண்டால் தான் என்ன என்று கண்டு கொள்வதில்லை. இதில் பகிர்ந்து கொள்வது கடுகளவாகும். இப்படிச் செய்வது, புத்தாண்டு என்ற போர்வையில் போடப்படுகிறது. 

எல்லா விதத்திலும் அப்படியே இயங்கினால் இது சுயநலத்தையே காட்டும். இந்த நிலையினால் கிடைக்கும் மன நிறைவு மிகச் சிறிய காலமே நிலைக்கும். கொஞ்சம் வித்தியாசமாக, மற்றவர்களுடன் நம் பொருட்களையோ, சந்தோஷத்தையோ பகிர்ந்து கொள்ள முயற்சிக்கலாம்.  நம் தேவைகளை தாண்டி யோசித்துச் செய்வதில் வரும் அனுபவம், சந்தோஷம் மிக அலாதியானது. அதனால் தானே “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து”! இதை அனுபவிக்க வில்லை என்றால், இதோ ஒரு வாய்ப்பு.

பகிர்ந்து கொள்வதில் பல விதங்கள் உள்ளன. நமக்கு என்று வாங்கிக் கொள்ளாமல் அடுத்தவர்களுக்காகத் தேடி, பார்த்து வாங்குவதில் வருவதும் இனிய சுகமே! யார் சொல்லியோ, கேட்டோ, படித்தோ, நமக்கு அடுத்தவர்களின் அடிப்படைத் தேவைகள் இதுதான் என்று தெரிய வரும். இதை மனதில் வைத்துக்கொண்டு அதிலிருந்து ஒன்றைத் தரமுடியும். பெரிய-சிறிய தொகையோ, பொருட்களோ என்பதில் இல்லை, கொடுப்பதை முழு மனதுடனும் விருப்பத்துடனும் கொடுப்பது தான் மிக முக்கியம். இது, பண்டிகைகளுக்கு உடை, இனிப்பு தருவது போலவே ஆகும். நாம் மனதார பங்களித்துக் கொள்வதின் இனிய உணர்வை உணரவே பண்டிகைகளுக்குக் கொடுக்கும் பழக்கமே. செய்யச் செய்ய, பகிர்ந்து கொள்வது ஒரு பழக்கமாகிவிடும்!

கொடுப்பது பழகி வர, ஒரு சிறு வித்தியாசத்திற்கு, யாருக்குக் கொடுக்கிறோம் என்று அடையாளம் தெரியாமல்,  அவர்களுக்கும் நாம் யார் என்று காட்டாமல் செய்யலாம். இந்த அனுபவமும் மிக இனியதாகும். செய்து பாருங்கள், வெகு நாளைக்கு மனநிறைவு நிறைந்து இருப்பது, நிச்சயம்!

அதே போல், நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து கொள்வதும் நம் மனதின் விசாலத்தைக் காட்டும். கிழிந்து கந்தலான பிறகு கொடுப்பதில் பெரிய விஷயம் இல்லை. ஒரு ஸூஃபி மகான் சொன்னது போல் “என்னிடம் கொஞ்சம் இருந்தாலும், இருப்பதிலிருந்து மற்றவருக்கும் கொடுக்கும் மனது எனக்கு இருந்தால் போதும்” என்று. 

கொடுப்பதில் வரும் சந்தோஷத்துடன், பெற்றுக் கொள்பவர்களின் முக பாவத்தில் பிரகாசிக்கும் ஆனந்தம் நமக்கு மன நிறைவை அளிக்கிறது. அது மட்டுமல்ல நம்மால் இன்னொருவரின் தேவையை உணர்ந்து, செயல் பட முடிந்தது என்பது திருப்தி அளிக்கிறது.

இதனுடன், எந்த அளவிற்கு நாம் பவ்யமாக கொடுக்கிறோம் என்பதிலும் முக்கிய பங்கும் உண்டு. இப்படி இயங்குவதால், நாம் வாழ்வதற்கான ஒரு அர்த்தம் புரிய வரும்.

மற்றவரின் கவனம் நம்மேல் வருவதற்காகத் தான் செய்து வருகிறோம் என்றால் அதை வாங்கிக் கொள்பவர்கள் கூச்சத்துடன் பெற்றுக் கொள்வார்கள். ஏனெனில் இதில் முழுக்க முழுக்க கர்வமே தலை தூக்கி நிற்கும். 

அதே போல், எக்காரணத்திற்கோ “அவர்கள் எனக்கு என்ன செய்தார்கள்?” என்பது எண்ணத்தில் நுழைந்து விட்டால், சந்தோஷம் போய், பேரமாகிவிடும். நாம் செய்வது மற்றவரின் புகழுக்காகவோ, கவனத்திற்காகவோ என்று இருந்து விட்டால் இதில் சுயநலம் கலந்து நல்லெண்ணம் மறைந்துவிடும்.

ஒரு செயலில் ஈடுபடும்போது அதை முழுமனதோடு, நன்றாகச் செய்ய வேண்டும் என்றிருந்தால், அது மேலோங்கும். ஆரம்பத்திலேயே விளைவுகளின் எண்ணிக்கையைத் தொடங்கினால் நம் சிந்தனை முடிவை நோக்கி இருக்குமே தவிர செய்வதில் இருக்காததால், செய்வது கடினமாகும். 

அதே போல், “என்ன” நோக்கத்துடன் செய்யப் போகிறோம் என்பதைப் பற்றி கவனம் செலுத்தினால் பயன் அடையலாம். நாம் செய்வதில் எந்த விதமான உள் அர்த்தமும் இல்லாமல் இருந்தால், சந்தோஷம் தானாக வரும், நீண்ட காலம் நல் உணர்வைக் கொடுக்கும். அதிலும், நமக்கு அறிமுகமே இல்லாதவர்களுக்கு உதவுவது இதில் அடங்கும்.

இந்த வருட ஆரம்பத்தில், “இதைச் செய்யலாம்” என்ற பட்டியலில் நம்மால் பலர் சந்தோசப்படச் செய்வதையும் சேர்த்துக் கொள்ளலாம். நம்முடன் இருப்பவர்களின் சந்தோஷத்தை எப்படி எல்லாம் ஊர்ஜிதம் செய்ய முடியும் என்பதையும் சேர்த்து கொள்ளலாம். அந்நியர்களுக்கும் நம்மால் என்ன செய்ய முடியும் என்பதையும் கவனமாக செய்து வந்தால், வருகிற பன்னிரண்டு மாதங்களும் மிகவும் இனிமையாக இருக்கச் செய்யும்!

“எதை மாற்ற? ஏன்? எப்படி மாற்ற வேண்டும் புரிந்தது. இனி, ஆக்க்ஷன் தான்!”        

மாலதி சுவாமிநாதன்
malathiswami@gmail.com

]]>
resolution, new year, january 1, start http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/6/w600X390/2011-year-resolution-400x400.jpg http://www.dinamani.com/health/mental-health/2018/jan/06/new-year-with-resolutions-2840066.html
2835815 மருத்துவம் மனநல மருத்துவம் திரைப்படத்தில் ஒரு கதாப்பாத்திரம் அழுதால் நமக்கும் கண்ணில் நீர் வர இதுதான் காரணம்! ‘மிரர் நியுரான்ஸ்’ மாலதி சுவாமிநாதன் Saturday, December 30, 2017 04:37 PM +0530  

வருட முடிவில் நாம் எல்லோரும் வழக்கமாகச் செய்வது வருடத்தின் நிகழ்வுகளை புரட்டிப் பார்த்துக் கொள்வதே!  இந்த 12 மாதங்களில் நாம் உணர்ந்த பல விதமான சந்தோஷம் தரும் தருணங்களை நினைத்துப் பார்க்கையில், நம் மனதைத் தொட்ட பல ஞாபகங்கள் மறுபடி அப்படியே அச்சு அசலாக உணர்வது போலத் தோன்றும். அப்பொழுது உணர்ந்த அதே குதூகலமும், புத்துணர்ச்சியும் திரும்ப அப்படியே உண்டாகும்! இப்படித்தான் என்று ஆராய்ச்சியிலும் உறுதி செய்திருக்கிறார்கள்.

அதாவது, ஃப்ளாஷ்பக்கில் தோன்றும் சந்தோஷப் படும் நேரங்களை, நம் மூளை அதை நாம் அப்பொழுது எப்படி அனுபவித்தோமோ அது போலவே மறுபடி தத்ரூபமாக உணரச் செய்யும். ஒரு சில நிமிடங்களுக்கு, அப்பொழுது இருந்த நிலைக்கே சென்று விடுவோம். நம் ரசாயனங்களும் இதற்கு ஏற்றார் போலவே சுரக்கும்.

இதன் இன்னொரு வடிவமும் உண்டு. நம்மைச் சார்ந்தவர்கள் வெற்றி அடைந்து இருக்கிறார்கள் என்று அறிந்ததுமே, அது நமக்கே கிடைத்தது போல் பூத்துக்குலுங்கி ஆனந்தப்படுவோம். 

இதே போல் வெவ்வேறு அனுபவங்கள் நமக்கு மனச் சந்தோஷத்தைத் தரக்கூடும். பல முறை, புத்தகத்தில், சினிமா, நாடகங்களில் வரும் கதாப்பாத்திரங்களின் அனுபவங்களுடன், சூழ்நிலைகளுடன் நாமும் ஒன்றிவிடுவோம். அதன் பிரதிபலிப்பாக அந்தக் கதாப்பாத்திரத்துடன் நாமும் சிரிப்பதும், அழுவதும், சந்தோஷப் படுவதும் உண்டு!

இதற்கான காரணம், “மிரர் நியுரான்ஸ்” என்பதால் தான். இந்த நிலையில் இருவரும் (கதாப்பாத்திரம் + பார்வையாளர்கள்/படிப்பவர்கள்) ஒன்றிணைந்து அனுபவிப்பது போல் ஆகும். அதாவது காட்சிகள் அங்கே நடந்து கொண்டிருந்தாலும், இங்கே நமக்கு அதே நிலை தொற்றிக் கொண்டு விடுகிறது.  இருவருமே அதே உணர்ச்சிகளைக் காண்பிப்பார்கள். இது, கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போல் இருப்பதாலேயே இதை “மிரர் நியுரான்ஸ்” என்று அழைக்கப்படுகிறது.

விளையாட்டிலும் இதைப் பார்த்திருக்கிறோம். விளையாட்டு களத்தில் அவர்கள் உற்சாகத்துடன் துள்ளிக் குதித்து ஆனந்தப் பட, பார்வையாளர்களான நாமும் அதே அளவுக்குச் சந்தோஷப் படுவோம். இதுவும் “மிரர் நியுரான்ஸ்”! 

சந்தோஷம் எத்தனை எளிதானது! நாம்தான் அவ்வப்போது, இதை வேறு ஒரு விஷயத்துடனோ, செயலுடனோ கோர்த்து விடுகிறோம். அதாவது இதைச் சாதித்தால் தான் சந்தோஷப் படுவேன், இது மட்டும் கிடைத்து விட்டால் அல்லது நடந்து விட்டால் தான் எனக்குச் சந்தோஷம் என்று முடிவு செய்து கொள்கிறோம். இப்படி இருந்தால் நாம் சந்தோஷத்திற்காக காத்துக் கொண்டே இருக்க வேண்டி வரும்.

இப்படிச் செய்வதால் நாம் சந்தோஷத்தை பின்னோடியாக செய்து விடுகிறோம். நிஜத்தில், சந்தோஷம் என்பது முன்னோடி. நாம் முடிந்த வரையில் சந்தோஷமாக இருக்க பழகிக் கொண்டால், தானாகவே நன்றாக இயங்குவோம். புத்துணர்ச்சி கூடி, செய்யும் எல்லாவற்றையும் கவனித்து செய்வோம், வெற்றி பெற வாய்ப்பு அதிகரிக்கும். சந்தோஷம் முன்னோடியாக இருந்தால் நிலைத்து நிற்கும்!

இதன் பயன்களோ கணக்கிலடங்காது! இப்படி மனச் சந்தோஷத்துடன் செயல்பட, எதை நாம் செய்கிறோமோ அது கடினமாக தோன்றவே தோன்றாது. அதற்குப் பதிலாக பல மடங்கு பலம் வந்தது போல் தோன்றும். ஆனந்தமாக ஆழ்ந்து செய்வதால், நேரம் கடந்து போவதும் தெரியாது, சோர்வும் தெரியாமல் செயல்படுவோம். இப்படி மும்முரமாக, ஆழ்ந்து செயல்படும் நிலையில் இருப்பதற்கு “ஃப்ளோ” (flow) என்ற பெயர் சூட்டப் பட்டிருக்கிறது!

சந்தோஷம் நிலைத்து விட்டாலே, எல்லாவற்றையும் நாம் பாஸிட்டிவ் கண்ணோட்டத்தில் பார்ப்போம். இதனாலேயே பரந்த மனப்பான்மையும் சேர்ந்துவிடும். நாம் பல முறை கேட்டிருக்கிறோம் - “சந்தோஷம் என்பது உன் கையில்” என்று. ஆராய்ச்சியும் இதைக் காட்டி இருக்கிறது: 80% சந்தோஷம் நம்முள்ளிலிருந்தே, 20% மற்றவற்றிடமிருந்து. ஒரு வேளை நாம் தடுமாறினாலும் சற்று முன் சொன்னது போல், கடந்த கால சந்தோஷங்களை நினைவூட்டி அதே நிலையை உணர்ந்து, திரும்பவும் சந்தோஷ நிலையைக் கொண்டு வர முடியும். சந்தோஷம் என்பது பின்னோடியாக இருக்கத் தேவையில்லை, முன்னோடியாக்க முடியும்!

- மாலதி சுவாமிநாதன்
malathiswami@gmail.com

]]>
mirror neurons http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/30/w600X390/158979-163217.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/dec/30/mirror-neurons-facts-2835815.html
2831857 மருத்துவம் மனநல மருத்துவம் பெற்றோர்கூட அடம் பிடிப்பார்களா? ஆர்ப்பாட்டம் செய்வதுண்டோ? மாலதி சுவாமிநாதன் Saturday, December 23, 2017 03:53 PM +0530  

தம் குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்களோ, அதைப் பெற்றோர்கள் தம் பேச்சில், உரையாடலில் நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடித்தால் தான் குழந்தைகளால் அதைப் பின் பற்ற முடியும்.

அதே நேரத்தில், பெற்றோர்களே தம் பேச்சிலும், நடந்து கொள்வதின் முறைகளிலும் தத்தளித்தால் எந்த விதமான பெற்றோராக இருக்க விரும்புகிறார்களோ அப்படி இருக்க முடியாமலேயே போய்விடும். இப்படி நடப்பதற்கான காரணங்களோ, பெற்றோர்கள் வெளிப்படுத்தும் வார்த்தைகள், செய்கைகளில் அடங்கி உள்ளது.

ஆனால், பெரும்பாலான புத்தகங்கள், மற்றும் ஊடகங்களில் பிள்ளைகளை “கண்ட்ரோல்” (control) “கட்டுப்படுத்துவது”, “கட்டுக்குள் வைப்பது” எப்படி என்பதைப் பற்றியே உள்ளது. பெற்றோரைப் பற்றி விவரித்திருந்தாலும், Parenting Styles (பேரென்டிங் ஸ்டைல்) என விவரிப்பிலும், பிள்ளைகளை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதைச் சார்ந்ததாகவே இருக்கின்றது.

பெற்றோரின் தாக்கங்கள் பிள்ளைகளைப் பாதிக்கும் என்பது தெரிந்ததே. அவற்றைச் சரி செய்யும் முறை புரிய வர, பெற்றோர்கள் தன்னை தானே கண்காணிக்கும் அவசியத்தைப் புரிந்து கொள்வார்கள். இதைப் புரிந்து கொண்டு செயல் பட, அவர்களுக்கும் நன்றாக இருக்கும், பிள்ளைகளுக்கும் எடுத்துக் காட்டாக அமைந்துவிடும். 

இதை மையமாகக் கொண்டு, இங்குப் பரிந்துரைக்க போவது மூன்று அம்சங்கள். பெற்றோர்கள்

 • தங்களை பார்த்துக் கொள்வதின் அவசியம்,
 • உணர்ச்சிகளுக்கு வசப்படுவதால் நடத்தும் அடமும், ஆர்ப்பாட்டம்,
 • தன்னை மாற்றிக் கொள்ள சில வழிமுறைகள்.

பெற்றோர் தம்மை கண்காணித்துக் கொள்வது அவசியமே!

பெற்றோர்களின் பேசும் விதம், எண்ணத்தைத் தெளிவு படுத்தும் திறன்கள், உணர்ச்சியைக் கையாளும் விதங்கள் சரியாக இல்லையென்றால், அவர்களிடம் பிடிவாத ஆர்ப்பாட்டங்கள் தலை தூக்கி ஆட ஆரம்பிக்கும். இது வெளிப்படையாகும் விதங்களோ: பெற்றோர் தான் சொல்வதை மட்டும் பிள்ளைகள் செய்ய வேண்டும் என்பார்கள். மறுத்தால், கண்களை விரித்து, குரலை எழுப்பி, தான் சொன்னதை செய்யும் வரை கோபமாகவோ, மௌனமாகவோ, கண்ணீர் நிரம்பிய கண்களுடன் இருப்பார்கள். மற்றவர்கள் சொல்வதை எடுத்துக் கொள்ள மனம் இடம் கொடுக்காது. கருத்து வேறுபாடுகளும் நிலவி இருக்கும்.

பெற்றோர் சூழ்நிலைகளை எப்படி அணுகுகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்த்து, அவர்கள் கையாளும் முறைகளையே பிள்ளைகள் தாங்களும் உபயோகிப்பது உண்டு. இதனுடைய பிரதிபலிப்பை பிள்ளைகள் பயன் படுத்தும் வார்த்தைகள், உடை அலங்காரம், அணுகுமுறைகளில் பார்க்கலாம். இப்படி இயங்குவதை “அப்ஸர்வேஷ்னல் லர்நிங்” (Observational Learning) என்போம். 

ஒரு மிக முக்கியமான அம்சம், பெற்றோர் நிபந்தனையற்ற அன்பு (unconditional love) செலுத்துவது. இது, மிக அற்புதமானது! இதில், நீ இப்படிச் செய்தால் தான், இருந்தால் தான், அன்பாக இருப்பேன் என்றே இருக்காது. இந்த நிலையில், பெற்றோர் பிள்ளைகளிடம் பேசுகையில், புறக்கணிப்பதோ, திட்டுவதோ, கசப்பான வார்த்தைகளோ உபயோகிக்காமல், அன்பு பூசிய சாந்தத்துடன் தங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்வார்கள்.
 
இப்படிச் செய்வதால், பெற்றோர் தன் சொல்லினாலும், செயலினாலும் வழி காட்டுவார்கள். ஆகவே, எந்த விதமான சிக்கலோ, விரக்தியோ இல்லாமல் இதமான உறவை அமைத்துக் கொள்ள முடிகிறது. பிள்ளைகளும் தங்கள் பங்கிற்கு நன்றாக ஒத்துழைப்பார்கள்; உறவுகள் மேலும் வலுப்பெற்று, பிள்ளையுடன் பற்றும் பிடிமானமும் பலப்படும். இதற்காகத் தான் பெற்றோர் தம்மைப் பார்த்துக் கொள்வது அவசியமாகிறது.

இந்த அணுகுமுறையை எளிதாகப் பழக்கமாக்கி கொள்ளலாம். அதற்கு, பெற்றோர் தன்னையும் நிபந்தனையற்ற தன்மையுடன் ஏற்றிக் கொண்டு, அன்பு செலுத்த வேண்டும். இப்படிச் செய்தால், தம்மைப் பாசத்துடன் அரவணைப்பதால், தேர்வுரிமை அளித்துக் கொள்வார்கள். இதனாலேயே தம்மை மதிக்கவும் செய்வார்கள். மன தைரியம் உறுதியாகும். விளைவாக, தம்முள் உள்ள அறிவையும் நம்பிக்கையையும் பூரணமாக உபயோகிக்க ஆரம்பிப்பார்கள். 

இப்படிச் செய்வதில், அழுத்தம் அகன்று விடும். என்ன செய்ய விரும்புகிறார்களோ அதைச் சுமூகமாக முடிக்க முடிகிறது. இதே பாதையில் இருந்து வர, மனக் கண்ணாடியில் பார்த்துப் பழகிக் கொள்ளலாம். 

பெற்றோர், நிபந்தனையற்ற அன்பு செலுத்தாமல் இருந்தால், தன்னிலும் சரி, பிள்ளைகளிடத்திலும் குறைகளே தென்படும். சந்தேகம் அதிகரிக்க இதிலிருந்து பிடிவாதமும், ஆர்ப்பாட்டங்களும் ஆரம்பமாகும்.

உணர்ச்சிகள் நம்மைக் கடத்தாமல் இருக்க நாம் செய்ய வேண்டியவை.

சில நேரங்களில் நாம் அதிகமாக உணர்ச்சி வசப்படுவதால் நாமே விரும்பாத வகையில் சில நொடிகளுக்குப் பேசுவோம், நடந்து கொள்வோம்.

உணர்ச்சிகளும் சிந்தனையும் நம்மைக் கடத்தி விடுகின்றதனாலேயே சமநிலையில் இல்லாமல் இருப்போம். இப்படிக் கடத்தாமல் இருக்க உணர்ச்சிகளான கோபம், ஆத்திரம், புண்படுதல் எனப் பலவற்றை புரிந்து கொள்வது அவசியமாகிறது. இவை நம்மைக் கடத்தி விடுவதின் தோற்றம் தான் பிடிவாதமும் ஆர்ப்பாட்டமும் ஆக காணப் படுகிறது.

பிடிவாதத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் தூண்டி விடுவதோ நாம் நம்மேல் சுமத்திக் கொள்ளும் நிபந்தனைகளும், வற்புறுத்தல்களும் ஆகும். அவற்றில் சில:
 
“நான், இதைச் செய்தே ஆக வேண்டும்”,
“இப்படித் தான் செய்ய வேண்டும்”, 
“இதை முடித்தே தீர வேண்டும்”. 
“இப்போதே”, எனப் பல.

இவற்றுக்கு இடம் கொடுத்து விட்டால், தன்னை ஒரு சிறையில் அடைத்துக் கொள்வது போல் ஆகும். இதனால், சமாளிக்க முடியாமல் தத்தளிப்பதில், செய்ய வந்தது கைக்குள் அடங்காமல் போய் விடுமோ என அஞ்சி, பதட்டம் வர ஆரம்பிக்கும் பொழுதே, ஆர்ப்பாடங்கள் தலையை காட்டும். நம்மையே நாம் கேட்டு கொள்ளலாம் (இதுவும் மனக்கண்ணாடியிலே பார்த்துக் கொள்வதே) “நான் எந்தக் காரணத்திற்கு இப்படி ஒரு நிபந்தனை போட்டுக் கொள்கிறேன்”? “செய்து கொள்வதின் அவசியம் என்ன”? இவை இரண்டுக்குமே விடைகள் கிடைக்க, அடம், ஆர்ப்பாட்டம் இடமில்லாமல் போய்விடும். பல முறை நாமே யோசித்திருப்போம், “இப்படி, முகம் சுளித்து, படபடப்புடன் பேசுவதும், சத்தம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்வதை நான் ஆசைப்படவில்லையே.” என்று. 

பெற்றோர் உணர்வுகளைக் கையாளுகிற விதத்தைப் பிள்ளைகள் கற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு அதிகமே! பல சமயங்களில் பெற்றோர்கள் செய்வதை போலவே பிள்ளைகளும் செய்வார்கள், இதை, “இமிடேஷன் லர்நிங்” (Imitation learning) என்போம். பெற்றோரிடம் இல்லா விட்டால், பிள்ளைகளிடம் இருக்காது.

இதன் ஒரு உருவத்தை நாம் பார்த்திருப்போம். உணர்வுகளைக் கடத்துவது பிள்ளைகளின் முன் நடப்பதால், நகல் அடித்தது போல், பிள்ளைகளும் தங்களுக்கு ஏதேனும் வேண்டுமென்றால் பெற்றோர் செய்வது போலவே செய்வார்கள். சாதித்தும் கொள்ளக் கற்றுக் கொள்வது இந்தத் தவறான யுக்திகளிடமிருந்து.

வித்தியாசம் என்னவென்றால், இதைப் பிள்ளைகளிடம் பார்த்தவுடன் “என்ன இது?” என்று பெற்றோர் பிள்ளையைக் கடுமையாக கண்டிப்பதும், தண்டிப்பதும் தான்!
இவை இல்லாமல் ஆர்ப்பாட்டங்களையும், அடம் பிடிப்பதையும் சம நிலையில் கொண்டு வர முடியும். அதற்கு:

 • செய்து கொண்டிருப்பதை ஒரு நிமிடத்திற்கு நிறுத்தி விட்டு அங்கிருந்து நகர்ந்து விட வேண்டும்.
 • நிதானமாக யோசிக்க ஒரு குவளை தண்ணீர் குடித்தால் கூட மனதைத் திசை திருப்பி விட முடியும்
 • கை, கால்களை ஓடும் தண்ணீரில் காட்டியும் மனதை அமைதிப் படுத்த முடியும்.
 • ஆர்ப்பாட்டம் வரும் காரணத்தை வாய் விட்டுச் சொன்னாலும் மனதை சாந்தப் படுத்தி, தெளிவுடன் செயல் பட முடியும். 
 • மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொண்டு, மெதுவாக வெளியில் விடுவதினாலேயே நம் சிந்தனையை தெளிவு செய்ய முடியும்.
 • செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றனவே என்ற பதட்டத்தை விலக்க, ஒரு மணிக்கு ஒரு தடவை எச்சரிக்கை மணி வைத்துக் கொள்ளலாம். 

மணி அடித்தவுடன், செய்ய வேண்டிய பட்டியலில் என்ன செய்ய வேண்டும் என்பதை எண்ணிப்பார்த்தால் ஒவ்வொரு வேலையாகச் செய்து முடிக்க, பளுவும் குறையும், ஆர்ப்பாட்டமும்!

இப்படிச் செய்து வந்தால், உணர்வுகள் நம்மைக் கடத்தி விட முடியாது. 

செய்வதை பாரமாக கருதுவது:

ஆர்ப்பாட்டத்தின் இன்னொரு முகம், பிள்ளை வளர்ப்பதை பாரமாக கருதி விடுவது. இக் கருத்து, பெற்றோரே பிள்ளைகளுக்கு எல்லாம் செய்து கொடுப்பதாலையும் வருவதுண்டு. எல்லாவற்றையும் செய்வதை உணர்த்தவே “பார் உனக்கு எவ்வளவு செய்கிறேன்” என்று கணக்கிடுவார்கள். தங்களைத் தியாகி போல் பாவிப்பதால், நாளடைவில் விரக்தி வளர்ந்து விடும். சொல்லிக் காண்பிப்பது பழக்கமாகும். இவற்றால், உறவை ஒரு கணக்காக பார்க்க நேர்கிறது. இதையே பிள்ளைகளும் கற்றுக் கொள்வதால் தான், பிற் காலத்தில் பெற்றோர் முதியோர் இல்லத்தில் வாழ நேர்கிறது (?)

மாற்றத்திற்காகச் செய்ய வேண்டியவை:

அன்றாடம் என்ன செய்து வருகிறோம் என்பதைக் கூர்ந்து கவனித்துப் பார்த்தால், எப்படிக் கையாளுகிறோம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். மன கனத்துடன், பரபரக்க வேலைகள் செய்து வந்தால், இயந்திரம் போல் தோன்றி விட, நம்மை ஒரு எந்திரன் போலவே உணர்வோம். இதனால், பிடிப்பு இல்லாமல், வேலையை முடித்தால் போதும் என்றே இருப்போம்.
 
இதில், பிள்ளைகளுடன் உறவு இணைந்து இருக்காது. உணர்வுகள் பின் தங்க, பிள்ளைகளும், எப்படி இயங்குவது என்று தெரியாமலேயே, மந்தமாகி மெதுவாகச் செயல் படுவார்கள். பெற்றோரின் நடத்தையில் அடமும், ஆர்ப்பாட்டமும் தொடங்கும். விளைவாக, பெற்றோர்கள் பிள்ளையை தண்டிக்க, உறவில் விரிசல் ஏற்பட நேரிடலாம்.
இதைச் சுதாரிக்க, நேரம் கூடுதலாக வேண்டும் என்றால், சற்று முன் எழுந்து கொள்ளலாம். சிலவற்றை முன் தினமே கொஞ்சம் தயார் செய்து கொள்ளலாம். 

பிள்ளைகளுடன் போராடுவதற்கு பதிலாக நிறையச் சிரித்து, ரசித்துச் செய்யலாம். இணைந்து சிரிப்பதில் ஆக்சிடோசின் (Oxytocin) ரசாயன பொருள் சுரக்கும். இதுதான், சந்தோஷத்தையும், புத்துணர்ச்சியையும் உண்டாக்கும் ரசாயனம். அத்தோடு, உறவும் பலமாகும்!

இந்த நிலை நீடிக்க, பிள்ளைகளுக்கு அவர்களின் சில தேவைகளைத் தானே பார்த்துக் கொள்ளும் வாய்ப்பை அளிக்க வேண்டும். அவர்களால் செய்ய முடியும் என்று நம்பிக் கொடுப்பதால், “நம்மால் முடியும்” என எண்ணி செயல் படுவார்கள். இது உறவை மேலும் மேம் படுத்தும்.

அதனால் தான் பெற்றோரிடமிருந்து மாற்றம் தொடங்க வேண்டும்!

இன்னொரு விஷயத்தையினாலையும் இதைச் செய்ய தேவைப் படுகிறது. பல முறை பெற்றோரின் மைன்ட் வாயஸ் இதையே சொல்லும் “நான் ஒரு பெற்றோராக தோல்வி அடைந்ததால் தான் பிள்ளையை சரிப் படுத்த முடியவில்லை. அதனால் தான் இப்படிச் செய்கிறார்கள்” என்று. பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவுக்கும், பெற்றோர் தாமே பொறுப்பு ஏற்றுக்கொள்வதனாலேயே இப்படித் தோன்றிவிடுகிறது.

இதுவும், பெற்றோர்களின் ஆர்ப்பாட்டம், அடம் பிடிப்பதின் தொடக்க நிலையாகலாம். இதை மாற்றி, “நான் எதற்கு இப்படிச் செய்கிறேன்? ஏன் செய்கிறேன்?” என்று தைரியத்துடன் கேட்டுக் கொண்டால், இப்படித் தோன்றுவதையும் மாற்றிக் கொள்ள இயலும்.

பெற்றோருக்கு தங்களுக்கு என்று ஒரு தனித்துவம் உண்டு. பிள்ளைகளின் செயல்களை எல்லாம் தம்முடைய பிம்பம் என்று எண்ணுவதும் பெற்றோரின் அடத்திற்கும் ஆர்ப்பாட்டத்திற்கும் ஒரு காரணமாகும். பிள்ளைகள் பெறும் சபாஷும் தனக்கு என்று, முன்-பின் இருந்தாலும் “என்னாலேயே” என்று நினைப்பது. இதை “பர்ஸ்னலைஸேஷன்” (personalization) என்றும் சொல்லலாம். அதாவது பிள்ளைகளுக்கு நேர்வதற்கான காரணமே நாம் என்று எடுத்துக் கொள்வது. பெற்றோர், தம்மை வளர்ப்பு வடிவத்தில் மட்டும் பார்த்துக் கொள்வதால் இது நேர்வதுண்டு. இதன் விளைவாக, பெற்றோரின் சுய அடையாளம் மறைந்து விடுகிறது. இதனால் மன இறுக்கம் தோன்றலாம். இப்படிச் செய்வது நியாயம் இல்லையே!

மாற்றத்தைக் கொண்டு வருதல்:

பிள்ளைகள் எப்பொழுதும் சரியான பாதையில் போக வேண்டும் என்று பெற்றோர் விரும்புவதுண்டு. ஒரு சிறிய மாறுதல் ஏற்பட்டாலும் அது தங்களின் வளர்ப்பினால் தான் என்று அஞ்சி, பிள்ளை செய்வதை ஓடிப் போய் நிறுத்துவதும் இல்லாமல், தன்னையே குற்றம்சாட்டிக் கொள்வார்கள். இது அவசர பட்டனை அழுத்துவது போல் ஆகும்.
இந்த அவசர நிலை திரும்ப நிகழும் பொழுது நாம் எப்படி அதை அணுகுகிறோம் என்று பெற்றோர்கள் கவனித்துக் கொண்டால், ப்ரேக் போட்டுச் சுதாரித்து அதற்குத் தீர்வு காணலாம் என்ற சிந்தனையை மேம்படுத்தும்.

இப்படிச் செய்யா விட்டால், பிள்ளைகளின் எல்லா அசைவுக்கும் தடுப்பு போட்டு விடுவதால் வளர்ச்சி குன்றி விடும். பெற்றோரும் எல்லாவற்றையும் ஆபத்து என்று கருதினால், “டென்ஷன் பார்டீ” என்ற பெயர் கொள்வார்கள். பிள்ளைகளும் தானாக மாற்றிக் கொள்ள முயல்வதற்கு அஞ்சுவார்கள்.

இதற்காகத் தான் பெற்றோர் நிபந்தனையற்ற அன்புடனும் தன்மையை நடந்து கொண்டால், தம்மையோ, பிள்ளைகளையோ குற்றவாளி கூண்டில் வைத்துப் பார்க்கும் அவசியம் இருக்காது. பெற்றோர் செய்வதை பிள்ளைகளும் பார்த்து, புரிந்து, மாற்றிக் கொள்வார்கள்.

சுய பராமரிப்பு:

இவற்றையெல்லாம் செயல்படுத்த, முதலில் பெற்றோர் தம்மை அக்கறையுடன் பார்த்துக் கொள்வது அவசியமாகும்! 

வேளாவேளைக்கு சாப்பிடுவது, ஓய்வு எடுத்துக் கொள்ளுதல், பிடித்ததைச் செய்வது, என்பதெல்லாம் தம்மை சுயமாகப் பராமரிப்பதாகும். நம்மை பார்த்துக் கொள்வது சுய நலம் அல்ல. நம்மை பார்த்துக் கொள்வதும் நமக்கு நாம் கொடுக்கும் மரியாதையாகும். பெற்றோரின் இந்த அணுகுமுறையைப் பார்க்க பார்க்க, பிள்ளைகளும் கற்றுக் கொள்வார்கள். 

நாம் நமக்கே தயை (self-compassion) காட்டிக் கொள்வதால் தன்னம்பிக்கை அதிகமாகும். தன் மேலேயே தயை காட்டி கொள்பவர்கள், உறுதியாயிருப்பதினால் எந்த விதமான கஷ்டங்கள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு வந்துவிடுவார்கள். அதுமட்டுமின்றி, ஆரோக்கியமற்ற பழக்கங்களில் (அடம், ஆர்ப்பாட்டம் சேர்த்துக் கொள்ளலாம்) மாற்றங்களை மிகச் சுலபமாக செய்து கொள்ள முடிகிறது. 

இதை எல்லாம் செய்து வந்தால், பெற்றோருக்கு அடம் பிடிக்கவோ ஆர்ப்பாட்டம் செய்யும் நிலையோ வராது. அதற்குப் பதிலாக புத்துணர்ச்சி நிலவி இருக்கப் பிள்ளை வளர்ப்பு பாசத்துடன் சுகமாக இருக்கும்!

ஆக, பெற்றோர்களின் பலம், நிபந்தனையற்ற தன்மையிலா? அடம் ஆர்ப்பாட்டத்திலா?


மாலதி சுவாமிநாதன்,
மன நலம் மற்றும் கல்வி ஆலோசகர்
malathiswami@gmail.com
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/23/w600X390/img_how_to_tell_indian_parents_you_are_gay_12133_600.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/dec/23/parents--their-tantrums-why-when-what-way-out-2831857.html
2824401 மருத்துவம் மனநல மருத்துவம் பெற்றோர்களின் கவனத்திற்கு! செஃல்போன் பயன்படுத்தும் டீன் ஏஜ் வயதினருக்கு இத்தனை ஆபத்துக்களா?  உமா பார்வதி Monday, December 11, 2017 01:02 PM +0530  

சின்னஞ்சிறியவர்கள் முதல் கல்லூரியில் படிக்கும் இளையோர்கள் வரை அனைவரின் கையிலும் விடாப்பிடியாக இடம் பிடித்திருக்கும் வஸ்து மொபைல் ஃபோன். நாம் நினைத்தவுடன் வீட்டினர், நண்பர்கள், உறவினர்கள் என யாருடன் வேண்டுமானாலும் எளிதாக பேச முடிவதால், இது அன்றாட வாழ்க்கையின் அத்தியாவசியமான சாதனமாகிவிட்டது. பிஸினெஸ் செய்பவர்களுக்கு இந்த செல்ஃபோன்களின் சேவை மிகவும் தேவை. விரல் நுனியில் உலகத்தை தொடர்பு கொள்ள வேறு என்ன வழியிருக்கிறது? எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இந்த ஃபோன்களால் தொல்லைகளும் அதிகம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அதிலும் குறிப்பாக டீன் ஏஜ் வயதினர் இதனை அதிகம் பயன்படுத்துவதால், மற்றவர்களைவிட மிக அதிகமாக பாதிப்புக்கு உள்ளார்கிறார்கள். மெட்ரோ என்ற படத்தில் வரும் விஷயங்கள் எல்லாம் கற்பனையில் எழுதப்பட்டவை அல்ல. செல்ஃபோனுக்காக தொடர் குற்றங்களை செய்யும் ஒரு கல்லூரி இளைஞனின் கதை அது. ஆசைப்படுவது தவறில்லை ஆனால் பேராசைப்படுவதும், தன் வயதுக்கு மீறி செயல்படுவதும் நிச்சயம் தவறு. பதின் பருவத்தினர் அதிகளவில் செல்ஃபோன் பயன்படுத்தினால் ஏற்படும் சில தீமைகள் இவை : 

1. கை மற்றும் முதுகு வலி

டீன் ஏஜ் வயதினர் குறுஞ்செய்தி, வாட்ஸ் அப், கேம், ஃபேஸ்புக் போன்றவற்றை தங்களின் ஸ்மார்ட் ஃபோனில் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் ஃபோனை பயன்படுத்தும் போது ஆணியடித்தது போல் ஒரே இடத்தில் மணிக்கணக்காக அமர்ந்திருப்பார்கள்.

சாப்பிடும் போதும், நடக்கும் போதும் கூட ஒரு கையில் போனுடன் கேம் அல்லது வாட்ஸ் அப் செய்து கொண்டிருப்பதால் அடிக்கடி கை வலி, முதுகு வலி போன்ற பிரச்னைகள் ஏற்படும். இது தொடர்ந்தால் டெண்டினைடிஸ் (tendinitis) என்ற பிரச்னை ஏற்படும்.

மணிக்கட்டில் தொடர்ந்து தாங்க முடியாத வலி எடுத்தால் உடனடியாக மருத்துவரின் பரிந்துரைக்குப் பின் பிஸியோதெரபி செய்துதான் இந்தப் பிரச்னையை குணப்படுத்த முடியும். கைகளுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கும் வேலைகளைச் செய்வதால் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது.

தோட்டவேலை, கார்பண்டரி, பெயிண்டிங், டென்னிஸ் விளையாடுவது, போன்றவற்றைச் செய்யும்போது கைகளில் கடுமையான அழுத்தம் ஏற்பட்டால் Tendinitis ஏற்படும். தற்போது இளைஞர்களின் செல்ஃபோன் பயன்பாட்டாலும் ஏற்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

2. கண் பார்வைக் கோளாறுகள்

தொடர்ந்து மொபைல் ஃபோனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் இளையோருக்கு கண் பார்வையில் பிரச்னைகள் ஏற்படுகிறது. தூங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னால் செல்ஃபோன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

நாள் முழுவதும் ஃபோன் திரையைப் பார்ப்பதாலும், இரவில் குறைந்த விளக்கொளியில் செல்ஃபோன்களைப் பயன்படுத்துவதாலும், கண்களில் கடுமையான அழற்சி தோன்றுகிறது. அது நாளாவட்டத்தில் கண்களில் அழுத்தத்தை உருவாக்கி பலவிதமான பிரச்னைகளை வரவழைத்துவிடும். இத்தகைய பாதிப்புக்கள் கடுமையாக இருந்தால் பார்வைக் குறைபாடு அல்லது பார்வை இழப்பும் கூட ஏற்படலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

3. தூக்கமின்மை

பெரும்பாலான டீன் ஏஜ் பிள்ளைகள் தங்கள் தலையணைக்கு அடியில்தான் மொபைல் ஃபோனை வைத்திருப்பார்கள். காரணம் 24 மணி நேரமும் அவர்கள் ஆன் லைனில் இருக்க நினைக்கிறார்கள். தூங்கிக் கொண்டிருக்கும் போது ஏதாவது மெசேஜ் அல்லது அழைப்பு வந்தால், எடுப்பதற்கு வசதியாக இருக்கும் என்று தங்கள் அருகிலேயே ஃபோனை வைத்திருப்பதை வழக்கமாக்கிக் கொள்கிறார்கள்.

மொபைல் லேசாக சிணுங்கினால் கூட இவர்கள் தூக்கத்திலிருந்து எழுந்துவிடுவார்கள். அது என்ன ஏது என்று பார்த்த பிறகு, மீண்டும் தூங்க முயற்சிப்பார்கள். ஆனால் ஆழ்ந்த உறக்கம் அதன்பின் தடைபட்டுவிடும். இதனால் நாளாவட்டத்தில் தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் அவர்களுக்கு ஏற்படும்.

காலையில் சீக்கிரம் எழுந்து பள்ளிக்கு அல்லது கல்லூரிக்குக் கிளம்ப முடியாமல் சிரமப்படுவார்கள். வகுப்பறையிலும் பாடங்களில் கவனம் செலுத்த முடியாமல் தூங்கி வழிவார்கள். தூக்கக் கலக்கத்தில் வண்டி ஓட்டினால், விபத்துகளில் மாட்டிக் கொள்வார்கள். இதனால் படுகாயம் அடைவதுடன் சில சமயம் உயிரையே இழக்க நேரிடலாம். 

4. நரம்புக் கோளாறுகள்

செல்ஃபோன்களிலிருந்து வெளிப்படும் மின் காந்த சக்தி உடலுக்குள் ஊடுருவி விடக் கூடியது. நீண்ட நேரம் செல்போனை கைகளில் வைத்திருந்தாலோ பாக்கெட்டில் வைத்திருப்பதோ ஆபத்தில்தான் முடியும். அது நரம்பு மண்டலத்தை பாதித்து, மூளைப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை உருவாக்கிவிடலாம்.

5. இளம் குற்றவாளிகள்

சைபர் க்ரைம் விஷயங்களில் அதிகளவு ஈடுபடுவது டீன் ஏஜ் வயதினர்தான் என்கிறது ஒரு ஆய்வு. இத்தகைய குற்றங்களில் மூன்றில் ஒரு பங்கு டீன் ஏஜ் பிள்ளைகளின் பங்கு இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சமீபத்தில் படித்த ஒரு செய்தியும் இதை ஊர்ஜிதப்படுத்துகிறது. பத்தாவது வகுப்பு படிக்கும் மாணவன் தன் அம்மா மற்றும் அக்காவை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்று விட்டான். படிப்பு கெட்டுவிடும் என அவனது ஃபோனை பறித்துள்ளார்கள் என்ற ஒரே காரணத்துக்காக இத்தகைய கொடும் செயலை செய்திருக்கிறான்.

தினந்தோறும் இதுபோன்ற சிறியதும் பெரியதுமான குற்றங்களை இவர்கள் சிறிதும் மனசாட்சியோ அச்சமோ இல்லாமல் செய்யத் துணிவதற்குக் காரணம் செல்ஃபோனில் அடிமையாகிவிட்ட நிலைதான். 

வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கையில் ஒரு ஃபோன் இருக்கும் சிறுவர்களின் மனநிலை எவ்வித குற்றச் செயலுக்கும் தூண்டிவிடக் கூடிய அளவுக்கு ஆபத்தானது.

இது அவர்களின் மன நலனுக்கு மட்டுமல்லாது உடல் நலனுக்கும் பேராபத்து என்கின்றன ஆய்வுகள். எத்தனை ஆராய்ச்சிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வந்தாலும், மேலும் மேலும் செல்ஃபோன்களின் உற்பத்தியும், பயன்பாடும் அதிகரித்துதான் வருகிறது. அதனால் நாம் தான் சற்று கவனமாக செயல்பட வேண்டும். நாமே அதில் மூழ்கிக் கிடக்காமல், அதன் சாதக பாதங்களை கவனத்தில் கொண்டு பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய குழந்தைகளின் கைகளில் செல்போன் இருப்பதை பெருமையாக நினைக்காமல் ஆபத்தின் ஒரு எளிய வடிவமாக அதனைப் பார்க்க வேண்டும். அவர்களை அதன் பயன்படுத்த அனுமதிக்கலாம், ஆனால் அந்தக் கருவிக்கு அடிமையாகிவிடாமல் ஒவ்வொரு பெற்றோரும் தங்களை குழந்தைகளை தற்காக்க வேண்டும்.

முன்பு எப்போதையும் விட இந்தக் காலகட்டம் மிகவும் குழப்பமானதாகவும், அதி வேக தொழில்நுட்ப வளர்ச்சிக்கானதாகவும் இருப்பதால் எது சரி எது தவறு என்பதை அவரவர் யோசித்து முடிவு செய்து அதற்கேற்ப இளைய சமூகத்தை வழிநடத்த வேண்டும். 

]]>
mobile phone, Teen age problems, செல்ஃபோன், Cell Phone dangers, டீன் ஏஜ் பிரச்னை, சைபர் க்ரைம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/11/w600X390/teen_ager.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/dec/11/harmful-effects-of-mobile-phones-on-teenagers-2824401.html
2814146 மருத்துவம் மனநல மருத்துவம் மற்றவர் பேசும் போது அதைக் கவனிக்காமல் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் நோண்டுவதும் ஒரு மன நோய் தான்! மாலதி சுவாமிநாதன் Friday, November 24, 2017 03:18 PM +0530  

நிகழ்வு 1:

“டாக்டர் கிட்ட போனீங்களே, என்ன ஆச்சு?” 
“டாக்டர் ஸ்டென்ட் போட...” சொல்லி முடிப்பதற்குள் 
“சரி, அது இருக்கட்டும், நயூஸ் ஆரம்பித்துவிட்டது”. (செய்திகளைப் பார்த்தபடியே கையில் இருக்கும் ஃபோனை நோண்டினார்)

நிகழ்வு 2:

அவர்: “ஹலோ, கேள்விப் பட்டேன்.”
இவர்: “அவ்வளவு வேகமா நடந்து போச்சு”(விசும்பல் சத்தம்).
அவர் : “ஆமாம், ரொம்ப கஷ்டம் தான்”.
இவர் : “உனக்குத் தான் தெரியுமே…”
அவர் : (டக் டக் என்று எதிர் முனையில் கணினி சத்தம்) ஓ!
இவர் : (கணினி சத்தம் கேட்க, உள்ளூர “ஏன் கூப்பிட்டு விட்டு, இப்படி”?) என்று தோன்கிறது.
அவர்: “ம், சொல்லு”(டைப் அடிக்கும் சத்தம் தொடர்ந்தது).
இவர்: “நான் கவனமா இருந்திருக்கலாம்”
அவர்: “... அப்புறமா” தொலைப்பேசி துண்டிக்க பட்டது. 
இவர்:  (“அவரே ஃபோன் செய்து விட்டு எண்ணிடமும் ஒழுங்காகப் பேசாமல் அங்கு எதையோ டைப் செய்து கொண்டிருந்ததும் இல்லாமல் பேசும் போதே இணைப்பைத் துண்டித்துவிட்டார்!”)

இவை இரண்டுமே, நிஜ வாழ்வின் நிகழ்வுகள். இரண்டிலும்,  ஒருவர் தம்மை பற்றிக் கேட்டதால், தன் விவரத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அப்பொழுது கேட்டவர் தன் வேலையில் கவனத்தை செலுத்த, அரவணைப்பு மறுக்கப் படுகிறது. இதை பல்பணியாக்கம் (multitasking) என்ற போர்வையில் சேர்த்து விட முடியாது.

அக்கறையும், நிராகரிப்பும் நம்மால் பல விதங்களில் காட்ட முடியும். இரண்டையுமே, சைகைகளிலும், பேச்சிலும் தெரிவிப்போம்.

மற்றவர்களை நலம் கேட்கும் போது அக்கறை வெளிப்படும். பொதுவாக, மற்றவர்களைப் பரிவோடு நலம் விசாரிப்போம். அவர்களைச் சான்றவர்களை பற்றியும் கேட்போம், “எப்படி இருக்கீங்க? வீட்டில்? வேலை எல்லாம் நல்லா போய் கொண்டு இருக்கா?” என்று. இப்படிக் கேட்கும் விதத்திலேயே உறவுக்குக் கொடுக்கப்படும் இடமும், முக்கியத்துவமும் தெளிவு படுகிறது!

இதை நிராகரிப்பு கலந்த வகையிலும் காட்ட முடியும். ஒருவரைப் பார்த்ததும், நம் மனதில், “இன்றைக்கு என்ன கேட்கலாம்?” என்பதே மனதில் ஓடும். அவர்கள் எதோ தகவல் சொல்ல வர, “ஆ ஆ”, “சரி, இருக்கட்டும்”, “அதை விடு” என்று நிறுத்தி விட்டு, “எனக்கு, இதை செஞ்சிட்டு” என்று சொல்லுவது, நன்றிக்கோ, ஸாரீக்கோ இடமே இல்லை.

இன்னொரு வடிவமும் எடுப்பதும் உண்டு. ஒருவரை அழைத்து விட்டு, அவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது, குறுஞ்செய்தி, வாட்ஸ்அப், டிவி, பார்த்துக் கொண்டு இருப்பது. அவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள், இல்லை வேறு எங்கேயோ பார்த்துக் கொண்டு, ஈமேய்ல் டைப் அடித்தபடியோ, கேம்ஸ் ஆடியபடியோ இருக்கக் கூடும்!

“அது இருக்கட்டும்” மற்றும் “அது கிடக்கட்டும்” உடன் சேர்ந்ததே. இவை என்ன தெரிவிக்கின்றன? மற்றவரின் நிலையோ, நிலைமையைத் தெரிந்து கொள்வதோ முக்கியமில்லை என்று. அதாவது, தமக்கு வேண்டிய வேலையை முடிப்பதில் மட்டும் கவனம் செலுத்துவது. மற்றவரை ஒரு ஜீவனாகக் கருதாமல் அவர்களை வெறும் பொருட்கள் போல்க பார்ப்பது தெரிகிறது.

இதில், மற்றவர்களை தமக்கு பயனுள்ள “பொருளாக” மட்டும் கருதுவார்கள். இப்படிச் செய்வதை “ஆப்ஜெக்டிஃபிக்கேஷன்” (objectification) என்று சொல்வார்கள். இதில் சுயநலம் தெரியும், மற்றவர்களைப் பற்றிய சிந்தனை மிகக் குறைவாக இருக்கும். இவர்களைப் பொருத்த வரை உறவைத் தராசில் போட்டு, ஏதேனும் உபயோகமாக இருக்கும் என்று எண்ணினால் மட்டும் உறவைத் மதிப்பார்கள் . 

இப்படிச் செய்வோருடன், மற்றவர்கள் உறவு வைத்துக் கொள்வது பல வகைகளில் இருக்கும். சிலர் இவர்களிடம் உள்ள வேறு நல்ல குணாதிசயங்களினால் இதைப் பொறுத்து கொள்வார்கள். இவர்களிடமிருந்து தமக்கு வேறு ஏதாவது செய்து கொள்வதாலும், இந்த உறவினால் மற்றவரிடம் தம்மை உச்ச நிலையில் காட்டிக் கொள்வதற்கும்  “ஜால்ரா”வாக மாறி விடுவார்கள். வேறு சிலர் இப்படிப்பட்ட உறவை முறித்து விடுவார்கள், சிலருக்குத் தாங்க முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளாகலாம்.

பல சமயங்களில் நாம் மற்றவரைப் பற்றி சிந்திக்காமலேயே, அவர்களைப் பொருளாக அணுகி விடுகிறோம். நிராகரிப்பதோ, ஒரு பொருளாக கருதுவதோ நமக்குப் பிடிக்காது. பல நேரங்களில், பணிபுரியும் சிப்பந்திகளை ஒரு மனிதராகப் பார்க்க மாட்டோம், அவர்கள் செய்யும் வேலையே அவர்களின் அடையாளமாக நாம் பார்ப்போம். இதுவும் நிராகரிப்பு தான். “வசூல் ராஜா” திரைப்படத்தில் ஒரு வயதானவர் இதைத் தான் ஆணி அடித்தார் போல் தெரிவிப்பார் “நாற்பது வருஷமா வேலை செய்கிறேன், என் பேர் கூடத் தெரியாது”. 

அக்கறையோடு இருப்பது இதமாக இருந்தாலும் பின் ஏன் நிராகரிப்பு செய்கிறார்கள்? மற்றவர்கள் அலட்சியப் படுத்துவது, ஒதுக்கி வைப்பதைப் பார்த்து தானும் அதேபோல் இருக்க வேண்டும் என்று எண்ணிச் செய்து வருவார்கள். 

“வைக்க வேண்டிய இடத்தில் வைக்கணும்” என்ற எண்ணம் உள்ளவர்களாகச் செயல்படுபவர்கள் வேறுபாடு காட்டும் மனப்பான்மையைக் காட்டுகிறது. அடிமைகளை வைத்தே வாழ்க்கையை ஓட்ட எண்ணுபவர்கள். உறவுகளை தன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மட்டும் வைத்துக் கொள்வார்கள். சமநிலையில் இருக்க அஞ்சி இப்படிச் செய்வதும் உண்டு. 

ஏதோ ஒரு இழப்பைச் சந்தித்திருக்கலாம் அதனாலேயே அக்கறை காட்ட அஞ்சி நடக்க, நிராகரிப்பே அவர்களின் குணமாகிவிடும்.

தெளிவு இல்லாமல், தன்னுறுதி இல்லாததால் இப்படிச் செய்வதும் உண்டு. இதை மறைக்கவே தன்னை உயர்ந்தவராகக் காட்டுவதாக நினைத்து ஆணவம் என்ற ஆடை அணிவார்கள். இவை எல்லாமே நிராகரிப்பின் பல தோற்றங்கள். தன்னைச் சிறிய வட்டத்துக்குள் சுருக்கி வைத்துக் கொள்கிறார்கள். 

டாம் டூம் என இருப்பதும், அதிகாரம் செய்வதால் மட்டும் வெல்ல முடியும் என்று நம்புவதால் பலர் இப்படிச் செய்வார்கள். இவையும், நிராகரிப்பதும்,  பாதுகாப்பின்மையைக் காட்டுகிறது.

மாற வேண்டும் என்றால், வேறு வழி தெரியாமலேயே இருக்கிறோமா இல்லை வழிகளை அரிந்தும் பின் பற்ற மறுப்பதால் இப்படி எல்லாம் செய்கிறோமா என்று சிந்தித்தால், விடை கிடைக்கலாம்!

உறவை மதிப்பவர்கள் தான் என்ன செய்து கொண்டிருந்தாலும் தன் நேரத்தை மற்றவருடன் செலவிடுவார்கள். அக்கறை உள்ளவர்களை அடையாளம் கண்டு கொள்வது மிகச் சுலபம். இவர்கள் சைகையால் வரவேற்பார்கள், கண்களைப் பார்த்து பேசுவார்கள். மற்றவருடன் இருக்கும் நேரம் தன் வேலையை அந்த நிமிடத்திற்கு நிறுத்தி வைத்துக் கொள்வார்கள். இதை க்வாலிடி டைம் என்றும் சொல்லலாம், இதனாலேயே சுமுகமான சூழல் உண்டாகும், கேட்பதற்கும், பேசுவதற்கும்!

அக்கறை காட்டுவதா? நிராகரிப்பதா?

மாலதி சுவாமிநாதன்
மனநல மற்றும் கல்வி ஆலோசகர்
malathiswami@gmail.com
 

]]>
Facebook, whatsapp, addiction, mental problem http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/24/w600X390/d10d29_dc3ddcc94a124ce080641190267a954c.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/nov/24/giving-quality-time-to-others-2814146.html
2795177 மருத்துவம் மனநல மருத்துவம் இரவில் படுத்தவுடன் தூக்கம் வர இதைச் செய்யுங்கள்! உமா Thursday, October 26, 2017 11:43 AM +0530 சிலருக்கு படுத்த உடன் தூக்கம் வந்துவிடும். அவர்கள் உண்மையில் வரம் பெற்றவர்கள் தான். இரவில் 7 லிருந்து 8 மணி நேரம் தூங்கினால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் நலக் கோளாறுகளுக்கு தூக்கமின்மை ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். 

விழித்திருக்கும் போது நம்முடைய புலன்களும் விழிப்படைந்த நிலையில் இருக்கும். தூங்கினால் தான் நம் உடல் உறுப்புக்களுக்கும், புலன் உணர்வுக்கும் சிறிது ஓய்வு கிடைக்கும். தூக்கமின்மையால் அவதிப்படும் பலருக்கு நாளாக ஆக சோர்வும் மன அழுத்தமும் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாவார்கள்.

தூங்குவதில் கூடவா பிரச்னை? ஆம் உலகளாவிய பிரச்னை இது. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற டாக்டர் ஆன்ட்ரூ வீல்  தியானம் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார். தூக்கமின்மை பிரச்னைக்கான எளிதான ஒரு தீர்வை முன் வைக்கிறார். மூச்சில் கவனம் வைத்தால் மன அழுத்தம் கட்டுக்குள் வரும் என்கிறார் டாக்டர் வீல். உள் மூச்சு மற்றும் வெளி மூச்சினை விடும் போது மூளையானது தனது செயல்பாடுகளை நிறுத்திவிட்டு அமைதியான நிலைக்கு தானாகவே வரும்.

மேலும் அவர் கூறுகையில், 'மூக்கின் வழியே சுவாசம் நான்கு நிமிடங்கள் உள் எடுக்கவும். ஏழு அல்லது எட்டு நொடிகள் மூச்சை உள் நிறுத்தி, அதன் பின் வாய் வழியே எட்டு நொடிகள் வெளி மூச்சை விட வேண்டும். இப்படி செய்யும் போது மூளை புத்துணர்ச்சி பெறுவதுடன் தூக்கமும் நன்றாக வரும்’ என்கிறார் டாக்டர் வீல்.

இதைத் தொடர்ந்து செய்து வந்தால், இதயத்துக்கும் மிக நல்லது. தேவையற்ற பதற்றங்கள், ரத்த அழுத்தங்கள் குறைந்து மன அமைதி ஏற்படும். ஒரு தடவை முயற்சி செய்து பார்த்தால் தான் இதை நன்கு உணரமுடியும்.

இவ்வாறு மூக்கின் வழியே உள்மூச்சு எடுத்து, சில நொடிகள் உள்ளே மூச்சை நிறுத்தி அதன் பின் வாய் வழியே வெளிமூச்சை விடும் செயலை நாலு அல்லது ஐந்து முறை தொடர்ச்சியாகச் செய்யும் போது, மூச்சை கவனித்தபடியே நீங்கள் உறக்கத்தில் விழுவீர்கள். 60 நொடிக்கும் குறைவான நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்தினுள் அமிழ்வீர்கள் என்பது உறுதி.

ஆரம்பக் கட்டத்தில் இது வேலை செய்யாதது போல தோன்றினாலும், மூளைக்கு இது ஒரு பயிற்சியாக மாறிய பின் மந்திரம் போட்டது போல், அல்லது ஸ்விட்ச்சை அணைத்தது போல் மூச்சுப் பயிற்சியின் இசையில் தூக்கம் கண்களை சுழற்றும். 

]]>
meditation, உறக்கமின்மை, தூக்கமின்மை, தியானம், sleepless, restless, calmness, மூச்சு பயிற்சி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/24/w600X390/yoga.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/oct/24/you-can-train-your-brain-to-fall-asleep-in-just-60-seconds-heres-the-best-trick-to-fall-asleep-immed-2795177.html
2787844 மருத்துவம் மனநல மருத்துவம் அக்டோபர் 10: உலக மனநல தினம்! மன அழுத்தத்தை அதிகரிக்கின்றதா பணியிடங்கள்? Tuesday, October 10, 2017 03:27 PM +0530  

உலகம் முழுவதிலும் மனநலம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த 1992-ம் ஆண்டு முதல் வருடந்தோறும் அக்டோபர் 10-ம் தேதி மனநல தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக மனநல தினத்துக்கான இந்த வருடக் கருப்பொருளாக உலக சுகாதார மையம் அறிவித்திருப்பதாவது ‘பணியிடத்தில் மனநலம் பேணுதல்’ என்பதாகும். உலக சுகாதார மையத்துடன் இனைந்து தேசிய மனநல கூட்டமைப்பு ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட கருத்தைப் பிரகடனம் செய்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

உலகம் முழுவதிலும் 150-கும் மேற்பட்ட நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் இந்தத் தினம் ஆஸ்திரேலியா போன்ற ஒரு சில நாடுகளில் மட்டும் மனநல வாரமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒரு தற்கொலை நிகழ்கிறது, அதாவது ஆண்டுக்கு எட்டு லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் அதிலும் பெரும்பான்மையானோர் வேலையிடத்தில் ஏற்படும் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொள்பவர்கள் என்னும் அதிர்ச்சி தகவலை தருகிறது ஒரு ஆய்வு. உளவியல் ரீதியான மனநல விழிப்புணர்வை மக்களிடையே உண்டாக்குவதன் மூலம் இதுபோன்ற தற்கொலை எண்ணங்களைத் தவிர்க்கலாம் என்றும் உளவியல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

ஒரு பிரபல நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் 33% பேர் தாங்கள் வேலையில் ஏற்படும் பிரச்னை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாவதாகக் கூறியுள்ளார்கள். அவர்களில் 90% பேர் மன அழுத்தத்தாலும், 78% பேர் கவலையாலும், 60% பேர் மனச் சோர்வாலும், 52% பேர் தூக்கமின்மையாலும் பாதிக்கப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் பெரும்பாலும் 8 முதல் 9 மணி நேரம் மட்டுமே வேலை நேரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது, ஆனால் இதையும் தாண்டி பலர் அதிக நேரம் இரவு முழுவதும் அவர்கள் கண் விழித்து வேலை செய்வது மிகப் பெரிய அபாயத்தை ஏற்படுத்தும் என்பதை அறியாமல் இருக்கிறார்கள்.

தூக்கம் என்பது நாம் உடலுக்கு மட்டும் தருகின்ற ஓய்வு அல்ல, சதா சர்வ நேரமும் எண்ணற்ற விஷயங்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்கும் மனதிற்கும் தருகின்ற ஓய்வாகும். அந்த வகையில் உறக்கம் என்பது மனிதர்களுக்கு மிக முக்கியமான ஒன்று. அந்த உறக்கத்தைத் தியாகம் செய்து பணி செய்வதால் கட்டாயம் மன அழுத்தம் மற்றும் மனச் சோர்வு ஏற்பட்டு இறுதியில் எந்த வேலைக்காக அவ்வளவு கஷ்டப்பட்டோமோ அந்த வேலையிலேயே கவனம் செலுத்த முடியாமல் போகும். இன்னிலையில் ஏற்கனவே இருந்த மனச் சோர்வு பிறகு வேலையில் கவனம் செலுத்த முடியாததால் ஏற்படும் மன அழுத்தம் இவையனைத்தும் சேர்ந்து மனநலத்தை முற்றிலும் பாதிக்கும். இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவே இந்த வருடம் ‘பணியிடத்தில் மனநலம் பேணுதல்’ என்ற கருப்பொருளை தேர்வு செய்திருக்கிறது உலக சுகாதார மையம்.  

இதில் இருந்து தங்கள் ஊழியர்களைக் காப்பாற்ற நிறுவனங்கள் வேலை நேரத்திற்கும் மேலாக ஒருவர் அதிக நேரம் பணி செய்வதை ஊக்குவிக்காமல், அதிக பணி சுமையை அலுவலர்களுக்குக் கொடுக்காமல், ஒருவேளை ஒருவர் மன சொர்வு அல்லது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களை உளவியல் ஆலோசகர்களிடம் ஆலோசனை பெற செய்து அதிலிருந்து அவர்கள் விடுபட உதவ வேண்டும். பணி செய்பவர்களுக்கு ஏற்றப் பணி சூழலை ஏற்படுத்தித் தந்து, அவர்கள் மன ஆரோக்கியத்தைச் சீர் படுத்த யோகா, தியானம் அல்லது ஆன்மிக பயிற்சிகளை அவர்களுக்குத் தர வேண்டும். மேலும் எப்பொழுதும் வேலை பற்றிய எண்ணம் மட்டும் இல்லாமல் சமூக பணிகளிலும் அவர்களை ஈடுபடச் செய்து அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்.

இந்தியாவைப் பொருத்த வரையில் மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நகரத்தைக் காட்டிலும் கிராமப்புறங்களிலேயே அதிகம். இதற்காகக் கிராமப்புறங்களில் மனநல சேவை மையங்களை அரசே துவங்கி நடத்தி வருகிறது. இங்கு விரைவாக மனநல பாதிப்பை கண்டறிந்து, அதற்குத் தகுந்த சிகிச்சையை வழங்கி வருகிறது தமிழக அரசாங்கம். குடும்பத்தினரும் ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களை ஒதுக்காமல், காய்ச்சல், இதய நோய் போன்று இதையும் கருதி அவர்களுக்குப் பக்கபலமாக இருந்து அதிலிருந்து அவர்கள் மீள உதவி செய்ய வேண்டும். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/10/w600X390/69329_thumb115.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/oct/10/world-mental-health-day-2017-2787844.html
2773768 மருத்துவம் மனநல மருத்துவம் உங்களுக்கும் இந்த ஃபோபியா இருக்கலாம்! - அச்சத்தின் உச்சம்!!  பவித்ரா முகுந்தன் Friday, September 15, 2017 02:32 PM +0530  

நாம் அனைவருக்கும் அச்ச உணர்வு என்பது பொதுவானது. வாழ்நாள் முழுவதும் ஏதோ ஒன்றைப் பார்த்து நாம் பயந்துகொண்டுதான் இருக்கிறோம். ஆனால் ஃபோபியா என்பது பயத்தில் இருந்து சிறிது மாறு பட்டது, அதீதமான அச்ச உணர்வே ஃபோபியா எனப்படுகிறது, நம்மில் பலருக்கும் நம்மையே அறியாமல், இதுதான் ஃபோபியாவா என்று நமக்கே தெரியாமல் நமக்குள் பல பயங்கள், அதாவது இதயத்தையே உறைய வைக்கின்ற அளவிற்கான பயங்கள் மறைந்து கிடக்கின்றன. அதில் சிலவற்றை இங்குப் பார்ப்போம்.

1. பாதோஃபோபியா (Bathophobia):

ஆழத்தின் மீதுள்ள பயம். ஆழமான நீரில் தான் முழுகுவதைப் போல் நினைத்துப் பார்ப்பதே இவர்களுக்குள் அளவுக்கு மீறிய அச்சத்தை ஏற்படுத்தும். வாழ்நாளில் எப்போதாவது ஆழமான தண்ணீரில் மூழ்கி சுய நினைவை இழந்து உயிர் பிழைத்த அனுபவம் இருந்தால் அவர்களுக்கு இந்த ஃபோபியா இருப்பதற்கான வாய்ப்புண்டு. சில சமயங்களில் இருள் சூழ்ந்த முடிவு தெரியாத அரையைப் பார்ப்பதும் இவர்களுக்கு ஆழத்தை நினைவூட்டி அச்சத்தில் வேர்த்துக் கொட்ட செய்யும்.

2. ஏரோஃபோபியா (Aerophobia):

வானில் பறப்பதற்கு பயம். விமானம், ஹெலிகாப்டர் அல்லது ராட்சத பலூனில் வானில் பறப்பது என்பது இவர்களுக்கு என்றுமே ஒரு கெட்ட கனவுதான். இது உயரத்தினால் வரும் பயமல்ல இவர்களால் 500 அடி உயரமுள்ள மிகப் பெரிய கட்டிடங்களின் உச்சியில் நின்று கீழே எந்தவொரு பயமும் இல்லாமல் பார்க்க முடியும் ஆனால், தரையில் இருந்து 5 அடி உயரத்தில் காற்றில் பறப்பது என்பது இவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். 

3. லிகிரோஃபோபியா (Ligyrophobia):

சத்தத்தின் மீதுள்ள பயம். ஃபோனோஃபோபியா அல்லது லிகிரோஃபோபியா என்று சொல்லப்படுவது அதிகமான சத்தமுள்ள ஒலியினால் ஏற்படும் பயம். இவர்களால் சத்தமாக யாராவது பேசினால் கூட அவர்களையும் அறியாமல் இவர்களுக்குள் பயம் ஏற்படும், சிலருக்கு அவர்கள் சத்தமாக பேசுவதே அச்ச உணர்வை ஏற்படுத்தும். உதாரணத்திற்குத் தீபாவளி கொண்டாட்டத்தின் போது வெடிச் சத்தத்திற்கு பயந்து சில நாய்கள் பயந்து அழக்கூடச் செய்யும், அதுவே லிகிரோஃபோபியா.

4. சைனோஃபோபியா (Cynophobia):

நாயைக் கண்டால் ஏற்படும் பயம். இது நம்மில் பலருக்கும் இருக்கக் கூடிய ஒரு பயம். நாயைப் பற்றிய நினைப்பு வந்தாலே அச்சம் கொள்வது, தூரத்தில் இருந்தாலும் நாயை பாரத்தால் அப்படியே உரைந்து போவது, உறவினர்கள், நண்பர்கள் என யாராக இருந்தாலும் நாய் வளர்ப்பவர்களைத் தவிர்ப்பது, மேலும் நாயை அடிப்பது அல்லது துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணம் எழுவது இவை அனைத்தும் இந்த ஃபோபியா இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும். மிருகங்கள் மீதுள்ள பயத்தால் ஏற்படும் ஃபோபியாக்களில் 36% பேர் சைனோஃபோபியாவால் தான் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.

5. பிடியோஃபோபியா (Pediophobia):
 

   

பொம்மைகள் மீதுள்ள பயம். நமது ஊரு ‘வா அருகில் வா’ படமாக இருந்தாலும் சரி ஹாலிவுட் ‘அன்னாபெல்’ படமாக இருந்தாலும் சரி பேய் படங்களில் குழந்தைகள் விளையாடும் பொம்மைக்குள் பேய் புகுந்து நம்மையெல்லாம் படாத பாடு படுத்தியிருக்கும். இதனால் ஏற்பட்ட பாதிப்பு ஒரு சிலருக்கு ஆழமாக மனதில் பதிந்து பொம்மைகளைப் பார்த்தாலே நாக்கெல்லாம் வறண்டு, இதயத் துடிப்பு அதிகமாகி, வேர்த்து விறுவிறுத்து போகச் செய்யும். 

6. ஃபாஸ்மோஃபோபியா (Phasmophobia):

பேய் மீதுள்ள பயம். உலகில் உள்ள அனைவருக்கும் பேய் பயம் என்பது மிகவும் பொதுவான ஒன்றுதான். மூடப்பட்ட கதவுகளில் காற்றைப் போல் புகுந்து அந்தரத்தில் பறந்தவாறு, வெள்ளை உடையில் ரத்தக்காயங்களுடன் இருட்டில் திடீர் என்று நம் கண் முன் ஒரு உருவம் வரும் என்று நினைத்துப் பார்ப்பது அனைவரையும் சற்று அதிகமாகவே பீதி அடையத்தான் செய்யும். அதற்காகப் பேய் பயம் உள்ளவர்கள் அனைவரும் ஃபோபியாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல, ஃபோபியா என்பது மிகவும் அதிகமான பயம், தன்னை மறந்து அப்படியே உறைந்து போய் நிற்பது, பேய் பற்றி பேசினாலே பதற்றமடைவது போன்றவையே இதற்கான அறிகுறிகள் ஆகும். 

7. எனோக்லோஃபோபியா (Enochlophobia):

கூட்ட நெரிசல் மீதுள்ள பயம். இந்த ஃபோபியா உள்ளவர்கள் இந்தியாவைல் வாழ்வது என்பது மிகவும் கடினம். திருவிழா, கோவில்கள், கடை வீதிகள், திரையரங்குகள், அரசியல் கூட்டங்கள் என அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமுள்ள நாடு இந்தியா. ஆனால் இந்த ஃபோபியாவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட்டத்தைப் பார்த்தாலே மயக்கம் போட்டு விழுந்துவிடுவார்கள். இந்த ஃபோபியா ஆண்களைவிடப் பெண்களையே அதிகமாகத் தாக்கும். 

8. நெக்டோஃபோபியா (Nyctophobia):

இருட்டின் மீதுள்ள பயம். இது அதிகமாகக் குழந்தைகளிடம் காணப்படும், சிறு வயதிலேயே இந்தப் பயத்தை சரி செய்யாவிட்டால் பெரியவர்கள் ஆனபிறகு இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். தூங்கும் போது கூட இவர்களால் இருட்டில் இருக்க முடியாது. இருள் நிறைந்த பேய் படங்கள், நைட் கிளப்புகள், இசை விழாக்கள் இவை அனைத்தையும் இவர்களால் கனவில் கூடத் தைரியமாக நினைத்துப் பார்க்க முடியாது. 

9. ஃபிலோஃபோபியா (Philophobia):

காதல் மீதுள்ள பயம். அன்பு, பாசம் மற்றும் காதல் போன்ற உணர்வுகள் இவர்களை அச்சம் அடையச் செய்யும். காதலில் தோல்வி அடைந்தவர்கள், அன்பானவர்களால் ஏமாற்றப்பட்டவர்கள், பசத்தின் பெயரால் வஞ்சிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு இந்த ஃபோபியாவின் தாக்கம் இருக்கும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் மற்றவர்களை நம்புவதற்குத் தயங்குவார்கள்.

10. ஹீமோஃபோபியா (Hemophobia):

ரத்தத்தின் மீதுள்ள பயம். இந்த ஃபோபியா உள்ளவர்கள் ரத்தத்தைப் பார்த்தாலே மயங்கி விழும் சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் விபத்துகளில் சிக்கி உயிர் பிழைத்தவர்கள் அல்லது தங்களது கண் முன்னரே ரத்த வெள்ளத்தில் யாராவது இறந்து கிடப்பதை பார்த்தவர்களை இந்த ஃபோபியா தாக்கும். ரத்தம் மட்டுமின்றி சில சமயங்களில் ரத்தச் சிவப்பு நிறத்தில் எந்தத் திரவத்தை பார்த்தாலும் இவர்களுக்குப் பதட்டம் அதிகரிக்கும். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/15/w600X390/n00042904-b.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/sep/15/types-of-phobia-2773768.html
2767819 மருத்துவம் மனநல மருத்துவம் மன அழுத்தப் பிரச்னையா? மீண்டு வர என்ன செய்யலாம்? உமா பார்வதி Tuesday, September 5, 2017 03:18 PM +0530  

என்ன வாழ்க்கை இது என்று சில சமயம் நாம் மனச் சோர்வு அடைந்து செயலற்றுப் போய்விடுவோம். நாம் மிகவும் நம்பியவர்கள் நம்மை விட்டு விலகியிருக்கலாம். நாம் நேசித்த ஒருவர் பிரிந்து போயிருக்கலாம். அல்லது பொருளாதாரப் பிரச்னை, வாழ்வியல் சிக்கல், தீர்க்கமுடியாத வியாதி என்று ஏதேனும் ஒன்றால் நாம் நிலைகுலைந்து தடுமாறி நின்றிருக்கலாம். எந்த வழியிலும் திரும்பிப் போக முடியாத அளவுக்கு ஒருவழிப்பாதையில் சிக்கி  சூழல் கைதியாகியிருக்கலாம். தாங்கவே இயலாத துயர் நம்மை அல்லும் பகலும் சிறிது சிறிதாக கொன்றொழித்துக் கொண்டிருக்கலாம். இன்னும் இன்னும் எத்தனையோ பேரிடர்கள்..பெரும் பிரச்னைகள்...புதிக்கட்டங்கள் என எதுவொன்றிலோ நாம் சிக்கியிருக்கலாம். அதிலிருந்து மீள்வது எப்படி? புறச் சூழல்களின் அழுத்தத்தால் நம்மை தொலைத்துவிடாமல் விரைவில் மீண்டு எழுவது எப்படி?

தனிமையில் இருக்காதீர்கள்

தோல்வியிலும் துயரிலும் மனம் வாடியிருந்தீர்கள் என்றால் நிச்சயம் தனிமையில் இருக்கக் கூடாது. உங்களுக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அல்லது உறவினர்கள் என்று யாரேனும் ஒருவரின் உதவியை நாடுங்கள். வயதும் அனுபவமும் உள்ள முதியோரிடம் பிரச்னைளைச் சொல்லிப் பாருங்கள்.  உங்களுடைய பிரச்னையை முதலில் சொல்லத் தயங்கினாலும், சும்மாவேனும் எதாவது பேசிக் கொண்டிருங்கள். நீங்கள் சொல்லாவிட்டாலும் கூட உங்களுக்கு நெருக்கமானவர்களால் நிச்சயம் உங்கள் பிரச்னையை புரிந்துணர முடியும். எனவே இனி எல்லாம் முடிந்தது என்று நினைத்து உங்களை நீங்களே வருத்திக் கொண்டு தனிமையை தேடிச் செல்ல வேண்டாம்.  

தனிமை ஒரு போதும் தீர்வு தராது. சமுக உறவுகளை பேணுவது இத்தகைய மன அழுத்தத்தை போக்கும். உலகத்துடன் வாழ்க்கையுடன் தொடர்பில் இருங்கள். தவிர இச்சமயங்களில் தான் நண்பர் யார் துரோகி யார் என்றும் தெளிவாகத் தெரிந்து விடும். உங்கள் நண்பர்களில், சரியானவர் யார், தீங்கு செய்பவர் யார் எனக் கண்டறிந்து கொள்ளுங்கள். அனுபவம் தான் சிறந்த ஆசான். சில சமயம் மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து நாம் பாடம் படிக்க முடியும்.

வெளிச்சம் எந்தத் திசையிலிருந்து எந்தக் கணத்தில் வரும் என்று உங்களுக்குத் தெரியாது. எனவே காத்திருங்கள். நம்பிக்கை என்பது வெளியில் இல்லை. அது உங்களுக்குள் தான் பொதிந்து கிடக்கிறது. எது நேரினும் அழியாத ஒரு மனம் நம்மிடம் தான் உள்ளது.  

நேர்மறை எண்ணங்கள்

எனக்கு எப்படி துரோகம் செய்யலாம் என்று ஆத்திரத்தில் மனக் கொந்தளிப்பில் இருக்கிறீர்கள் என்றால் அது துரோகம் செய்து உங்களை விட்டு நீங்கியவர்களை பாதிக்காது. உங்களைத்தான் பாதிக்கும். உங்கள் உடல்நிலை இதனால் தளர்ந்துவிடும். நம்பிக்கை துரோகம் மகா பாதகச் செயல்தான். ஆனால் அதற்காக உங்கள் மனத்தை ஏன் சித்திரவதைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்? உணர்வுகளின் உச்ச நிலைக்கும் கோபத்துக்கும் உள்ளாவது ரத்தக் கொதிப்பை ஏற்படுத்தும். அத்தகைய நிலை பழி வாங்கத் தூண்டும் செயல்களுக்கு இட்டுச் செல்லும்.

பழி வாங்குவதில் ஒருவித குரூர திருப்தியை சிலர் அடைவார்கள். ரத்தத்துக்கு ரத்தம், கண்ணுக்கு கண் என்பதாக தன்னை துன்பத்துக்கு உட்படுத்தியவர்களை உடல்ரீதியாகவோ உளவியல் ரீதியாகவோ அச்சுறுத்துவது ஒரு பழிவாங்கும் செயலாகக் கருதப்படுகிறது. சமயம் வரும் வரை காத்திருந்து முன்பு எனக்கு செய்தாயே அப்போது இப்படித்தான் வலித்தது என்பதை எதிரியை உணரச் செய்வதும் இன்னொரு வகைப் பழிவாங்குதல். பழிவாங்கும் குணமே ஒருவரின் நிம்மதியை குலைத்து சதா சர்வ காலமும் பகை உணர்வைச் சுமந்து எதிர்மறை எண்ணங்களால் மன அழுத்தத்துடன் வாழச் செய்துவிடும்.

உண்மையில் மன்னிப்பது தான் ஆகச் சிறந்த பழிவாங்குதல் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஒருவர் செய்த தீங்கினை மறந்து மன்னித்துவிட்டால் அதைவிடவும் நேர்மறையான விஷயம் எதுவும் இருக்க முடியாது. அவர்களின் குற்றவுணர்வு தான் அவர்களுக்கான தண்டனை என்பது உண்மை. எனவே மனத்தை தூய்மையாக, நிம்மதியாக வைத்துக் கொள்ள நேர்மறை எண்ணங்களுடன் வாழ்தல் வேண்டும். 

உன்னை அறிந்தால்..உண்மை அறிந்தால் பிரச்னை தீரும்

உங்களிடம் உள்ள பலம் மற்றும் பலவீனங்களை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். பலவீனத்தை பலமாக மாற்றும் கலை எளிது. அது தொடர் முயற்சியால் சாத்தியப்படும். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாதது மாற்றம். அது தவிர்க்க முடியாத ஒரு விஷயம். எனவே வாழ்க்கை மாற்றத்தை ஏற்று அதன் நிறை குறைகளை அறிந்து செயல்படுகையில் மன அழுத்தம் குறையும்.

உங்கள் பாதை மற்றும் பயணத்தில் உறுதியாக இருங்கள். மற்றவர்களின் மனம் நோகாமல், அன்போடு வாழுங்கள். நல்ல பழக்க வழக்கங்களை சிறந்த பண்பு நலன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

மனத்தை லகுவாக்குங்கள்

மனத்தை லேசாக்குவதில் இசை முக்கிய பங்கு வகிக்கும். மனத்தில் வலி இருந்தால் வேறு எந்த வேலைகளையும் திறம்படச் செய்ய முடியாது. உங்களுக்கு மிகவும் பிடித்த இசையை கேளுங்கள். உறங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் தொடர்ந்து இசை கேட்பது உங்கள் மனத்தை லகுவாக்கும். இசை கேட்கப் பிடிக்கவில்லை என்றால் திரைப்படம் செல்லுங்கள். அல்லது இயற்கை காட்சியை ரசியுங்கள். தினமும் பீச் அல்லது பார்க் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது புதிய ஒன்றைக் கற்றுக் கொள்ளுங்கள்.

வேறு ஒரு விஷயத்தில் கவனத்தை திசை திருப்புவது உங்களை மீட்டெடுக்க வைக்கும் எளிய வழி. பிரச்னையை நேர்வழியில் எதிர் கொள்ளுங்கள். தவறு உங்கள் மீது இருந்தால் அதை தைரியமாக ஒப்புக் கொள்ளுங்கள். குற்றவுணர்வு உங்களை சிறுக சிறுக அழித்துவிடும். மன்னிப்பு கோருதல் ஒரு நல்ல பண்பு. இந்த உலகில் தவறு செய்யாதவர்கள் யாருமே இல்லை. எனவே அதிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்குங்கள்.

மனச் சோர்விலிருந்து விடுபட நிச்சயம் உங்களுக்கு ஓய்வு தேவை. சிலருக்கு மன அழுத்தப் பிரச்னையால் உறக்கம் வராது. ஆனால் போதிய ஓய்வு எடுப்பதால் மூளை மற்றும் உடம்பு புத்துணர்ச்சி பெறும். முயற்சி செய்து ஓய்வு எடுத்து மன அழுத்தத்தை குறைத்துவிடுங்கள். இவைத் தவிர வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களை செய்து பாருங்கள். நல்ல சத்தான உணவு, போதிய உறக்கம், தினமும் அரை மணி நேர உடற்பயிற்சி ஆகியவை சிறப்பான வாழ்க்கை முறைக்கு மிகவும் தேவை. இதை சரியாகச் செய்தால் மன அழுத்தத்தை மிக விரைவில் குறைக்கலாம். 

பயணம் செய்யுங்கள்

'உலகைச் சுற்றிப்பார் விழித் தெழுந்து,
மறுமுறையும் மனிதப் பிறப்பு வாய்க்குமா உனக்கு?
மனிதப் பிறப்பு தொடர்ந்தாலும்
மறுமுறையும் இளமை கிடைக்குமா உனக்கு?’
 

வெளி ஊருக்கு அல்லது வாய்ப்பு இருப்பவர்கள் வெளிநாட்டுக்கு பயணம் செய்யுங்கள். ஒரே இடம், ஒரே மனிதர்கள், ஒரே ஊரில் இருப்பது மனத்தை மேலும் இறுக்கமாக்கும். பயணம் உங்களை முற்றிலும் வேறொரு மனிதராக உணரச் செய்யும் அளவுக்கு நன்மை தரும். நாம் நம்பும் வாழ்க்கை அல்லது நாம் பார்க்கும் விஷயங்கள் மட்டுமல்ல வாழ்க்கை. அது மிகப் பெரியது. மிகவும் பிரம்மாண்டமானது என்பதை உணர்வுபூர்வமாகத் தெரிந்து கொள்வீர்கள்.

அனுபவங்கள் பெருகப் பெருகத் தான் மனம் விலாசமாகும். மனம் விலாசமானால் குப்பை கூளங்கள் தேங்காது. எவ்வித பிரச்னையையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களுக்குக் கிடைக்கும். வாழ்க்கை மிகவும் எளிமையானது. சிக்கலற்றது அதை சிக்கலாக்குவது வேறு யாரும் இல்லை. சாட்சாத் நீங்களே தான் என்பதை உணர்ந்து அதற்கேற்றபடி வாழ்க்கையை வாழ முடிவெடுப்பீர்கள். இதற்கு பயணம் மட்டுமே ஆகச் சிறந்த வழி.

புத்தகம் படிக்கலாமே

புத்தகம் படிப்பதில் விருப்பமுள்ளவர்களாக இருந்தால் அதிக நேரம் படிப்பதில் செலவழியுங்கள். தன்னம்பிக்கை புத்தகங்களை இந்தச் சமயம் தேர்ந்தெடுக்க வேண்டாம். உங்கள் மனநிலைக்கு அது அதிக எரிச்சலை ஊட்டும் விதமாக அமைந்துவிடும். ஃபேண்டஸி கதைகள், அல்லது பயோகிராபி அல்லது காமிக்ஸ் போன்றவற்றை தேர்ந்தெடுங்கள். அது உங்கள் மனத்தை லேசாக்கும். புனைவினைப் படிப்பதால் இது போன்ற சமயங்களில் கடினமான வாழ்நிலைச் சூழலிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க முடியும்.

எழுத்தின் வழியே உங்களை நீங்கள் மறக்க முடியும். எழுத்து தரும் சிந்தனையால் உங்களை சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும். உலகத் தரமிக்க புதினங்களை படிக்க படிக்க நம்முடைய பிரச்னைகளை எதிர்கொள்ள மனப்பக்குவம் கிடைக்கும். குறைந்தபட்சம் மனம் கலக்கத்திலிருந்து மீண்டு தெளிவாகச் சிந்திக்க முடியும்.

வாசிப்பு எப்போதும் ஒரு புதிய சாளரத்தை திறந்து விடும் என்பதை புத்தகப் பிரியர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். அதனால் தான் அவர்களுடைய அந்த பிரத்யேக உலகத்தில் தன்னை மறந்து பல மணி நேரம் அவர்களால் வசிக்க முடிகிறது. 

தியானம் பழகுங்கள்

யோகா தியானம் என்றெல்லாம் அடிக்கடி படிக்கிறோம், கேட்கிறோம். இதெல்லாம் மற்றவர்களுக்கானது என்று நினைத்து அதுபற்றி தெரிந்து கொள்ள எந்த முயற்சியும் எடுக்காமல் இருக்கிறீர்களா? நமக்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் நம் உடல். ஒவ்வொரு நாளும் புதியதாகப் பிறக்கிறோம். எவ்வளவோ பாடுகளுக்கு இடையேயும் ஒரு சிறு துளி தேன் போன்று தித்திக்கும் வாழ்க்கையை அனுபவிக்க இந்த உடலையே சார்ந்திருக்கிறோம் அல்லவா? அத்தகைய உடலை போற்றுவதற்கான ஒரே சிறந்த வழி யோகா. எளிய யோகப் பயிற்சியை தினமும் 15 லிருந்து 30 நிமிடம் செய்தால் கூடப் போதும். அது உங்களிடம் செய்விக்கும் மாற்றத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவீர்கள். போலவே தியானம். தியானம் நம்மை யார் என்று நமக்கு புரிய வைக்கும் ஒரு கருவி.

இந்த உலகில் நாம் பிறந்தது இன்ப துன்பங்களை அனுபவித்து இறந்து போவதற்காக மட்டுமல்ல என்ற பேருண்மையை விளங்கச் செய்யும் ஒன்று. எல்லாவித மாயைகளிலிருந்து மனத்தை தூய்மைப்படுத்தி நாம் யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்கச் செய்யும் மந்திரச் சாவி அது. தேடுவதிலும் கூட ஒரு அகங்காரம் உள்ளது, எனவே சும்மாயிருப்பது எப்படி என்ற சூட்சுமத்தை உணர்த்தும். அடுத்தடுத்த படிநிலைகளுக்கு நம்மை உயர்த்திச் செல்லும் ஒரே விஷயம் தியானம் தான். அஞ்ஞானச் சேற்றிலிருந்து நம்மை விடுவித்து ஞானத்தின் பாதையில் நடக்கச் செய்வதும் தியானம் தான்.

ஒரே வரியில் சொல்வதெனில் எவ்வித சுமையும் இல்லாமல் எடையற்று மிதப்பது போல நம்மை உணரச் செய்வது தியானம் தான். அதை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. அனுபவத்தில் ஒருவர் உணர்ந்தால் மட்டுமே அதன் பலன்களை அறிவது சாத்தியம்.

பயம் வேண்டாம்

மரணம் என்பது இறுதி அல்ல. பிறப்பு என்றால் இறப்பு என்பது நிச்சயம். குழந்தைப் பருவம் இறந்து தான் பதின் வருத்துக்குள் நுழைகிறோம். அதுவும் முடிந்த நிலையில் இளமை. இளமையின் இறப்பு முதுமை. முதுமையின் இறப்பு உயிர் நீத்தல். நன்றாக வாழ்வது தான் மரணத்தை வரவேற்கும் ஒரு எளிய வழி. பிறப்பு, வாழ்வு, இறப்பு இந்த மூன்றே அத்தியாயங்களைக் கொண்டது தான் வாழ்க்கை. கருக்கதவைத் தட்டுவதில் தொடங்கி, மரணக் கதவை தட்டி இறக்கும் இவ்வாழ்க்கையில் இடைப்பட்ட நேரத்தில் என்ன செய்தோம் என்பதில் தான் முக்கியத்துவம் ஆகிறது மற்ற இரண்டும் என்பது உண்மைதானே? நன்றாக வாழ்வதென்பது மனத்தை பரிபக்குவ நிலையில் வைத்திருப்பது. இன்ப துன்பங்களுக்கு உட்படாமல் மனத்தை ஒருநிலையில் வைத்திருக்க பழக்குவது. அதெப்படி சாத்தியம் என்று நினைத்தால் ஒருபோதும் அற்புதங்கள் நடக்காது. எதுவும் சாத்தியம்.  

பிரச்னைகளைப் பார்த்து பயந்து கொண்டிருந்தால் ஒடுங்கிப் போய்விடுவோம். அதை எதிர்த்து நின்று போராடினாலும் அது மேலும் மேலும் புதிய வடிவத்தில் உருக்கொண்டு நம்மை உருக்குலைக்க முயற்சி செய்யும்.

பிரச்னையையும் அதன் தீவிரத்தையும் அலசி ஆராய்ந்து சமன் நிலை குலையாமல் தீர்ப்பவரே இவ்வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள். அவர்களுடைய பெயர்கள் சரித்திரத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் சற்று நிமிர்ந்து பார்த்தால் உங்கள் தலைக்கு மேலே ஒளிரும் நட்சத்திரங்கள் யாவும் அவர்களாக நிறைந்திருக்கிறார்கள். நீங்களும் நானும் கூட நட்சத்திரமாகலாம்.

இறுதியாக, இந்த சுலோகத்தை ஒரு முறை படித்துப் பாருங்கள். 

க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த்த
நைதத் த்வய்யுபபத்யதே |
ஷுத்ரம் ஹ்ருதயதெளர்பல்யம்
த்யக்த்வோத்திஷ்ட பரந்தப ||

அர்ஜுனா! பேடித்தனத்திற்கு இடம் தராதே. இது உனக்குப் பொருந்தாது. எதிரியை வாட்டுபவனே! அற்பமான இந்த மனத்தளர்ச்சியை உதறித் தள்ளிவிட்டு எழுந்திரு! (2:3)

இந்த ஒரு சுலோகத்தை ஒருவன் படித்தால் அவன் கீதை முழுவதையும் படித்த பயனைப் பெறுகிறான். ஏனெனில் இந்த ஒரு சுலோகத்தில் கீதையின் முழுச் செய்தியும் அடங்கியுள்ளது. எழுந்து நின்று போர் செய். ஓரடி கூடப் பின்வாங்கக் கூடாது. அது தான் கருத்து. எது வந்தாலும் சரி, போராடு. உலகம் முழுவதும் நம்மை எதிர்த்து நிற்கட்டும்! அதனால் என்ன? கோழைகளாவதால் ஒரு பயனையும் அடைய முடியாது. ஓரடி பின்வாங்குவதால் நீங்கள் எந்தத் தீமையையும் கடந்துவிட முடியாது. - சுவாமி விவேகானந்தர்

]]>
Depression, Sad, Stress, மன அழுத்தம், தியானம், வாழ்வியல் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/5/w600X390/af1d9f23492e0239e192c078a266e6c4--overcoming-depression-a-natural.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/sep/05/how-to-overcome-depression-2767819.html
2765056 மருத்துவம் மனநல மருத்துவம் உங்கள் வாழ்க்கையிலிருந்து ரொமான்ஸ் தொலைந்துவிட்டதா? இதோ தீர்வு! Thursday, August 31, 2017 03:37 PM +0530  

ரொமான்ஸ் இல்லாத வாழ்க்கை சுத்த போர். ஆனால் பரபர வாழ்க்கையில் ஆசைகள் எல்லாம் வெகு சீக்கிரம் ஆவியாகிவிடுகின்றன. தேவதை மனைவி நார்மலாகத் தென்பட ஆரம்பிக்கும் சமயத்தில் தான் ரொமான்ஸ் மறைந்து ரியாலிட்டி விழித்துக் கொள்கிறது. வேலை, அதை சார்ந்த ஸ்ட்ரெஸ், பதவி உயர்வு, ஐபோன் முதல் ஆவடியில் லேண்ட் வரை வாங்கிக் குவித்த பொருட்களுக்காக கட்ட வேண்டிய தவணை என்று வாழ்க்கை ஒரு சக்கரத்துக்குள் சிக்கிவிடுகிறது. கண் திறந்து மூடுவதற்குள் ஸ்லிம் ப்யூட்டியாக இருந்த மனைவி குழந்தை பெற்ற பின் சற்று எடை கூடி பருமனாகிவிட, ரொமான்ஸ் என்பதெல்லாம் என்றோ நடந்து முடிந்துவிட்ட மத்தாப்பூ நினைவுகளாகி விட்டிருக்கும். ஆனால் உண்மை அப்படியில்ல. உங்கள் மனத்தை கூலாக வைத்திருந்தால், இன்று காதலிக்க ஆரம்பித்த ஒருவரின் மனநிலைக்குச் சென்று உங்கள் துணையை சந்தோஷக் கடலில் ஆழ்த்த முடியும். எனவே ரொமான்ஸ் விஷயங்களுக்குத் தடையாக இருப்பவை என்னவென்று முதலில் பார்க்கலாம். 

1. பாலியல் நாட்டக் குறைவு 

வேலை அல்லது குடும்பப் பிரச்னை காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டால் பாலியல் சார்ந்த விஷயங்களில் மனம் லயிக்காது. ஒரு நிறுவனத்தில் ஆள் குறைப்பு செய்தார்கள். நல்ல சம்பளத்தில் உயர் பதவியில் இருந்த ஒருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டார். மனத்தளவில் பெரிதும் பாதிக்கப்பட்ட அவருக்கு வீட்டில் மனைவியைப் பார்த்தாலே ஒரே எரிச்சல். அவர் சாதாரணமாக பேசினாலும் கூட இப்ப எதுக்கு என் பக்கத்துல வரே என்று தேவையில்லாமல் கோவப்படுவார். தாம்பத்ய விஷயங்களில் துளியும் ஆர்வம் இல்லாமல் போனார். சில மாதங்கள் கழித்து வேறு வேலை கிடைத்தவுடன் தான் அவரால் பழைய மனநிலைக்கு வர முடிந்தது. இதற்குக் காரணம் மன அழுத்தத்துக்கு உள்ளாகும் போது ஆண்களின் ஹார்மோன் அளவுகள் சீர்குலைந்துவிடும், இது தமனிகளைச் சுருக்கவும் வாய்ப்புள்ளது. தமனிகள் சுருக்கமடைந்து ரத்த ஓட்டம் தடைபட்டால் அது விருப்பன்மைக்கு வழிவகுக்கலாம்.

2. சலிப்பான வாழ்க்கைமுறை

சிலருக்கு ஒரே விதமான வாழ்க்கை முறை சலிப்பாகிவிடும். தினமும் ரொட்டீனாக செய்ததையே செய்து கொண்டிருப்பதும், குடும்பத்தை பாதுகாக்க சம்பாதித்தே ஆக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் போதும் அவர்கள் எளிதில் சலிப்படைந்துவிடுவார்கள். தினமும் செய்யும் ஒரு விஷயம் போல ரொமான்ஸ் விஷயங்களையும் அணுகிவிடுவார்கள். அது துணையின் விருப்பம் சார்ந்த ஒன்று என்பது கூட அவர்கள் நினைப்பதில்லை. ரொமான்ஸை கடமை என்று நினைக்கும் கணவர்கள் உள்ளார்கள். இயந்திரத்தனமாக இவ்விஷயங்கள் இருந்தால் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்காது.  

3. நெடுநாள் வியாதிகள்

நெடுநாளான வியாதிகள் அல்லது வலி போன்ற பிரச்னைகள் ஒருவருக்கு இருந்தால் ரொமான்ஸ் பற்றி யோசிக்கவே முடியாதபடி அவர் மனம் மரத்துப் போயிருக்கும். வியாதி குறித்த கவலையும், உயிர் பயமும் வேறெந்த சிந்தனையும் அவரை நெருங்கவிடாது. உடல் நலமடைந்தவுடன் மெள்ள பழைய வாழ்க்கைக்குத் திரும்ப அவர்கள் முயற்சி செய்ய வேண்டும். மனைவியுடன் வெளியூர்ப் பயணம்ம அதுவும் மலை வாசஸ்தலத்துக்கு செல்வது பலன் தரும்.

4. டெஸ்டோஸ்டிரோன்

டெஸ்டோஸ்டிரோன் ஆண்களின் விந்தணு உற்பத்தியைத் தூண்டும் முக்கியமான ஹார்மோன். இந்த டெஸ்டோஸ்டிரோனின் அளவு ஏதேனும் காரணத்தால் குறைந்துவிட்டால் (ஆண்ட்ரோஜன் குறைபாடு) ரொமான்ஸ் மூட் பாதிக்கப்படுகிறது. பொதுவாக வயது அதிகரிக்கும் போது இதன் அளவு குறைவது இயல்பு. ஆனாலும் இந்தப் பிரச்னை ஏற்பட்டால் உடனே மருத்துவரை நாடுவது ரொமான்ஸ் வாழ்க்கையை மீட்டெடுக்க உதவும். ரத்தத்தில் ஆண்ட்ரோஜன் குறைபாடு (குறைவான டெஸ்டோஸ்டிரோன் அளவு) இருப்பதாகக் கண்டறியப்பட்டால், டெஸ்டோஸ்டிரோன் மாற்று சிகிச்சை தேவைப்படலாம்.

5. மருந்துகளின் பக்கவிளைவு

சில உடல் வியாதிகளுக்காக எடுக்கப்பட்ட தொடர் சிகிச்சை, ரத்த அழுத்தம் மற்றும் மன இறுக்கத்திற்காக உட்கொண்ட மாத்திரைகள் போன்றவை சிலருக்கு பாதகமாக அமைந்துவிடலாம். அது ஹார்மோன் சமன்நிலையை பாதிக்கச் செய்தால் ரொமான்ஸ் என்பது ஒரு எரிச்சலான விஷயமாகிவிடும். 

மேற்சொன்ன பிரச்சனைகள் சமாளிக்க முடியாத அளவுக்கு அதிகரித்துவிட்டால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது. 

தீர்வு

ஒருவர் சந்தோஷமாக இருந்தால் தான் ரொமான்ஸ் மனநிலையில் இருக்க முடியும். சந்தோஷம் என்பதை விலை கொடுத்து வாங்க முடியாது. ஆரோக்கியமான உணவு, நல்ல உறக்கம், சமன் நிலை குறையாத மன நிலை, மனக் கட்டுப்பாடு, திருப்தியான வாழ்க்கை இவை இருந்தால் போதும் மகிழ்ச்சி உங்களிடம் எப்போதும் நிலைத்திருக்கும். தவிர உங்கள் துணையின் மீது நீங்காத அன்பும், விட்டுக் கொடுக்காத தன்மையும் இருந்தால் ரொமான்ஸ் என்பதெல்லாம் வார்த்தையாக இருக்காது, அழகான வாழ்க்கையாக இருக்கும். சரிதானே?

]]>
low libido, romance, boredom, பாலியல் நாட்டக் குறைவு, ரொமான்ஸ் ரகசியம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/31/w600X390/images.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/aug/31/male-low-libido-reasons-and-solutions-2765056.html
2759273 மருத்துவம் மனநல மருத்துவம் உங்கள் காதலி ஃபேஸ்புக்கிலேயே வாழ்கிறாரா? Tuesday, August 22, 2017 10:00 AM +0530  

ஃபேஸ்புக்கிற்கு அடிமையாக இருக்கும் காதலியை எப்படி மீட்பது என்று சில இளைஞர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் (வேறெங்கே அதே ஃபேஸ்புக்கில் தான்) அவற்றின் சுவாரஸ்யமான தொகுப்பு :

தனது காதலிக்கு பேஸ் புக்கில் நிறைய நண்பர்கள் இருந்தால் கண்டிப்பாக ஆண்களுக்கு பாதுகாப்பின்மை உணர்வு தோன்றுமாம். யார் இவன் எதற்கு உனக்கு லைக் போடுகிறான் என்று ஆரம்பித்து தரமணி பட ஹீரோவைப் போல் பல கேள்விகள் கேட்கத் தொடங்குவார்கள். என்னுடன் பேசும் நேரத்தை விட உன் நண்பர்களுடன் அரட்டையடிக்கும் நேரம் தான் அதிகம் என்று மனம் வேதனைப்படுவார்கள். மேலும் சாட் செய்யும் போது மேசேஜ் தாமதமாக வந்தால், இந்த இடைப்பட்ட நேரத்தில் யாருடன் பேசிக்கொண்டிருப்பார் என்ற எண்ணம் தான் தோன்றும்! இதனால் எத்தனை அன்புள்ளவர்களாக இருந்தாலும் கூட அந்த சூழ்நிலையில் ஃபோனை அல்லது கணினியை ஆஃப் செய்துவிடுவார்கள். (வேறு எதற்கு நேரடியாகப் போய் ஒரு கை பார்த்துவிடலாம் என்றுதான்)

காதலர்களுக்குள் நடக்கும் பர்சனல் விஷயங்கள், புகைப்படங்களை எல்லாம் கூட நண்பர்களிடம் இருந்து லைக் வாங்குவதற்காக பேஸ்புக்கில் போடும் போது, நமக்குள் எந்த ஒரு விஷயமும் பர்சனாலாக இல்லையா? என்ற எண்ணம் தோன்றும். உங்களிடையே உள்ள இடைவெளி குறையும் என்கிறது ஒரு க்ரூப். இரவு எல்லாம் தூங்காமல், இன்னும் பேஸ் புக்கில் அப்படி என்ன தான் வேலை? என்று மனம் குமைந்து போகும் எண்ணங்கள் தொடர்ந்தால் மன அழுத்தம் ஏற்படும்.

பொழுதுபோக்க பயன்படும் ஃபேஸ்புக் உங்கள் வாழ்க்கையை பழுதடையச் செய்துவிடலாம். கவனமாக கையாளும் போது அதுவே உறவுப் பாலமாகிவிடும். அன்பின் இருப்பிடங்கள் எத்தனை எத்தனையோ அதில் மெய் நிகர் உலகமும் ஒன்றுதானே?

]]>
facebook, fb, முகநூல் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/21/w600X390/fb.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/aug/22/facebook-creates-personal-life-problems-2759273.html
2757597 மருத்துவம் மனநல மருத்துவம் மன அழுத்தத்தால் மலட்டுத்தன்மையா? அல்லது மலட்டுத்தன்மையால் மன அழுத்தமா? கார்த்திகா வாசுதேவன் Friday, August 18, 2017 01:03 PM +0530  

பலருக்கும் இந்தக் குழப்பம் இருக்கக் கூடும். மன அழுத்தமே மலட்டுத் தன்மைக்கான மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் பெரும்பாலானோருக்கு இப்போதெல்லாம் மலட்டுத்தன்மையால் தான் மன அழுத்தமே வருகிறது. அப்படியானால் மன அழுத்தத்துக்கு காரணம் மலட்டுத் தன்மையா? அல்லது மலட்டுத் தன்மையால் தான் மன அழுத்தம் ஏற்படுகிறதா? என்பது பெரும்பாலோரிடையே குழப்பத்திற்குரிய கேள்வியாக எஞ்சி விடுகிறது. இப்போது நீங்கள் சொல்லுங்கள் இந்தக் கேள்விக்கான பதிலை. கோழி வந்ததா? முதலில் முட்டை வந்ததா? கதை தான். சைவப் பட்ஷிணிகள் வேண்டுமானால்; காற்று வந்ததால் கொடி அசைந்ததா? கொடி அசைந்ததால் காற்று வந்ததா? என்று மாற்றிக் கேட்டுக் கொள்ளலாம். அத்தனைக்கு விடை காண முடியாத குழப்பம் இந்த விஷயத்திலும் நிலவுகிறது என்பதே நிஜம்!

சரி இப்போது மன அழுத்தம் என்றால் என்ன? அது ஏன் மனிதர்களுக்கு வருகிறது? என்று தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறதா... என்று பாருங்கள்;

மனிதர்களுக்கு மன அழுத்தம் எதற்கு வருகிறது? எத்தனை முயன்றாலும் செய்து முடிக்க முடியாத மிதமிஞ்சிய வேலைப்பளு, நெருங்கிய உறவுகளுடனான மன மற்றும் கருத்து வேறுபாடுகள், சண்டை, சச்சரவுகள், நெருங்கியவர்களுக்குச் செய்து விட்ட துரோகத்தை மனதில் பூட்டி வைக்கும் போது ஏற்படும் கலக்கம், உறவுகள் மற்றும் நட்புகளுக்கிடையே சந்தர்ப வசத்தில் வளர்ந்து விடும் தேவையற்ற சந்தேகம், தாழ்வு மனப்பான்மை, அறிந்தும், அறியாமலும் செய்து விட்ட தவறுகளுக்குப் பொறுப்பேற்கத் தயங்கும் கோழைத்தனம், மானுட வாழ்வின் பல்வேறு சிக்கல்களைக் கையாளத் தெரியாத தெளிவின்மை, புறக்கணிப்பு, பணம் மற்றும் கல்வியால் அமையும் வாழ்க்கைத் தரம் சார்ந்து ஏற்படக்கூடிய ஏற்றத்தாழ்வுகள் குறித்த கோபங்கள், சந்தான பாக்கியம் இல்லாத குறை இத்யாதி, இத்யாதி என்று மனிதனுக்கு மன அழுத்தம் வரத்தக்க, உண்டாக்கத்தக்க காரணங்களை நாம் நீட்டித்துக் கொண்டே செல்லலாம். சரி காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் எனும் போது அவற்றுக்கான தீர்வுகளுக்கும் அங்கே இடமிருக்கிறது என்று தானே அர்த்தம். ‘மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்’ என்ற பழமொழிக்கு இணங்க பிரச்னைகளைத் தருவது கடவுள் என நாம் நம்பினால் அதைத் தீர்ப்பதற்கான வழிகளையும் அவரே உண்டாக்கி வைத்திருப்பார் தானே?! அப்படி எடுத்துக் கொண்டு இந்த விஷயத்தை அணுகினால் மன அழுத்தம் வருவதற்காக காரணங்களை அடுக்கியது போல அதைத் தீர்ப்பதற்கான காரணங்களையும் நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

உள்ளுக்குள் அடக்கி வைக்க, வைக்கத்தான் அது அழுத்தம். அதையே வெளியே தூக்கிப் போட்டு விட்டால் ஒரே நிமிடத்தில் நீர்க்குமிழி போல எந்தப் பிரச்னையும் லேசாகிக் காற்றில் பறந்து காணாமலாகி உடையும்! பெரும்பாலும் அதை நாம் செய்வதில்லை. காரணம் நமது பிடிவாதங்கள். மனிதன் தனது தனி மனிதப் பிடிவாதங்களை மட்டும் சற்றே தளர்த்திக் கொள்வான் எனில் அவனுக்கு மன அழுத்தமாவது ஒன்றாவது. வேறு எந்தப் பிரச்னையுமே வராது தவிர்க்கலாம். சக மனிதர்களிடம் எத்தனை துவேஷமிருந்தாலும் தேவை ஏற்படும் பட்சத்தில் மனம் விட்டு உங்களது கவலைகளை எங்காவது நம்பிக்கையான ஓரிடத்தில் இறக்கி வையுங்கள். மனதை ரணமாக்கிக் கொண்டிருக்கும் பிரச்னைகளை வேறு எங்கும் மனமுவந்து பகிர்ந்து கொள்ள இயலாவிட்டாலும் கூட உங்களுக்கு நீங்களே கடிதம் எழுதிக் கொள்வதன் மூலமாகவாவது உங்கள் பிரச்னைகளை ஆழ் மனதிலிருந்து கொஞ்சம் இறக்கி வைக்கப் பழகுங்கள். பிறகு மன அழுத்தம் தரத்தக்க வாழ்வின் தடைகள் அனைத்தும் எங்கோ காணாமல் போகும். மன அழுத்தம் என்று மருத்துவரை அணுகுவது சிலருக்கு வேண்டுமானால் பயன் தரலாம். ஆனால், பலருக்கும் மன அழுத்தத்திற்கான மருந்து தங்களிடமே இருப்பது தெரிந்தே இருப்பதே நல்லது. ஏனெனில் பிறகு வெண்ணெயைக் கையில் வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்த கதையாகி விடும். எவரெல்லாம், தங்கள் வாழ்வின் எந்தச் சூழலிலும் பிரச்னைகளை எதிர்கொள்ளத் தயங்காது, அவற்றுக்கான தீர்வுகளை நோக்கி முன் நகர்கிறார்களோ... அவர்களுக்கு மன அழுத்தம் என்பது நிரந்தரமாக வாய்ப்பே இல்லை. இதில் இன்னொரு விந்தையான விஷயம் என்னவென்றால், மன அழுத்தம் என்பது மனிதர்களுக்கு மட்டும் தானா? பிற உயிரினங்களுக்கிடையே இப்படி ஒரு விஷயமே கிடையாதா? என்பதும் யோசிக்க வேண்டிய விஷயமே! சரி இனி மலட்டுத்தன்மை பற்றிப் பார்க்கலாம்.

மலட்டுத்தன்மைக்கான காரணங்கள் என்ன?

இந்திய மருத்துவத்துறையின் பல்வேறு பிரிவுகளின் கீழ் எண்ணற்ற ஆய்வுகள் நடத்தப் பட்ட பின்னரும் கூட மனிதர்களில் மலட்டுத்தன்மைக்கு இன்னது தான் காரணம், அதைத் தீர்க்க இது தான் மருந்து என ஒன்று இதுவரை கண்டுபிடிக்கப் படவேயில்லை. இன்னதெல்லாம் காரணங்களாக இருக்க வாய்ப்பிருக்கிறது... இப்படியெல்லாம் சிகிச்சை எடுத்துக் கொண்டால் அதற்கு தீர்வு காணலாம் எனச் சில வழிமுறைகள் முன் வைக்கப் படுகின்றனவே தவிர, மலட்டுத்தன்மை நீங்க நிரந்தரத் தீர்வென்ற ஒன்று இதுவரை கண்டிபிடிக்கப் படவேயில்லை. போலவே; மலட்டுத்தன்மை இதனால் தான் வருகிறது என்பதற்கும் எந்த விதமான முகாந்திரங்களும் இதுவரை அறியப்படவில்லை. மன அழுத்தம், தீரா வியாதி, விபத்து, உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை மாற்றங்கள் முதற்கொண்டு தற்போது மடிக்கணினி, அலைபேசி, லேசர் விளக்குகளில் இருந்து கசியக் கூடிய ஒளி, ஒலி அலைகள் வரை பல காரணங்கள் மலட்டுத்தன்மைக்கான காரணிகளாகக் கருதப்பட்டாலும் அவையெல்லாம் தவிர்க்க முடியாத அங்கங்களாகி விட்ட இந்நாளில் மலட்டுத் தன்மை என்பதும் மனித வாழ்வின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகத் தான் ஆகிக் கொண்டிருக்கிறது. 

மலட்டுத்தன்மை என்பது ஒரு நோயல்ல; அது ஒரு குறைபாடு மட்டுமே. தகுந்த முறையில் உடல் அல்லது உள சிகிச்சை எடுத்துக் கொண்டால் அது தீரக்கூடியது தான். தீர்வு என்பதற்கான அர்த்தம்  உடனடியாக மலட்டுத்தன்மை நீங்கி தாங்களே பயலாஜிக்கலாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என்பது மட்டுமே இல்லை. ஒருவேளை குழந்தைப் பேறு கிட்டாவிட்டாலும் கூட, தத்தெடுத்தல் அல்லது சோதனைக்குழாய் முறையில் குழந்தைப் பேறு அடைவதும் கூட மலட்டுத்தன்மையை வெல்வதற்கான வழி தான் என்பதை பாதிக்கப்பட்டவர்கள் மனதார நம்பவேண்டும். அப்படித்தான் இதனால் உண்டாகக்கூடிய மன அழுத்தத்தைக் கடக்க வேண்டும். 

மனித வாழ்வில் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்ட இந்த இரு முக்கியமான பிரச்னைகளையுமே இவ்விதமாக அணுகுவதே நல்ல பயனைத் தரக்கூடும். அதை விடுத்து மீண்டும் முதலிலிருந்து மன அழுத்தத்தால் தான் மலட்டுத் தன்மை வருகிறது என்றோ அல்லது மலட்டுத்தன்மையால் தான் மன அழுத்தம் வருகிறது என்றோ எண்ணிக் கொண்டு தானும் குழம்பி தன்னைச் சார்ந்தவர்களையும் குழப்பி வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்ளத் தேவை இல்லை.


 

]]>
Stress, Infertility, stress VS infertility, மன அழுத்தம் VS மலட்டுத்தன்மை, மருத்துவம், ஹெல்த், health http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/18/w600X390/stress_infertility.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/aug/18/stress-vs-infertility-which-comes-first-2757597.html
2741670 மருத்துவம் மனநல மருத்துவம் உண்மையான மகிழ்ச்சி எதில் உள்ளது?  IANS Friday, July 21, 2017 06:57 PM +0530 பயணங்கள் வாழ்வின் தலைசிறந்த ஆசான். அதுவும் ஆன்மிகப் பயணங்களைப் பொருத்தவரையில் இன்னும் ஆழமானவை. காரணம் ஆன்மிகப் பயணம் என்பது சாதாரணமாக இடங்களைச் சுற்றிப் பார்ப்பதில் மட்டும் அடங்கிவிடுவதில்லை. ஒருவரின் ஞானத்தையும் தேடுதலையும் விரிவுபடுத்திவிடும் அற்புதத்தன்மை உடையவை பயணங்கள்.

புத்தம் என்பது மதமல்ல அது மகிழ்ச்சியை கண்டடையும் நல்வழி என்கிறார் பல நாடுகளுக்குப் பயணம் செய்து வரும் புத்தத் துறவியான கேயல்வா துகம்பா (Gyalwa Dokhampa). 'உங்களுடைய வாழ்வின் சந்தோஷத்தை கொண்டு வருவதில் பொருட்களின் பங்களிப்பு எந்தளவுக்கு முக்கியம் என்று நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார் 21 நூற்றாண்டில் தன் இளமையின் பெரும் பகுதியைக் கழித்த இந்த இளம் துறவி.

புத்தம் என்பது சூழலியல் சார்ந்தது. மக்களிடையே நல்லிணக்கத்தையும், ஆண் பெண் சமத்துவத்தையும் வலியுறுத்துவது என்ற கருத்தை வெளிப்படுத்தியவர் கேயல்வாங் திருபா என்ற பெளத்த துறவி. கேயல்வாங் திருபா, கேயல்வாங் திருபாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர். திபெத்திய புத்த மதத் தலைவரான தலாய் லாமாவால் ஒன்பதாம் கேயல்வா துகம்பா என்ற அங்கீகாரத்தைப் பெற்றவர்.

'பெரும்பாலோருக்கு நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். வெற்றியாளராக வலம் வர வேண்டும் என்ற லட்சியம் இருக்கும். ஏன் வெற்றியாளராக வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று தெரியுமா? காரணம் ஒருவர் வெற்றியை அடைந்துவிட்டால் பிற்சேர்க்கையாக சந்தோஷமும் உடன் வரும் வசதி வாய்ப்புக்கள் என எல்லாம் கிடைக்கும் என்பதற்காக வெற்றியை மகிழ்ச்சியின் இலக்காக நினைக்கிறார்கள்.

ஆனால் சந்தோஷத்தை அப்படியெல்லாம் துரத்திச் சென்றுவிட முடியாது. இது எனக்குக் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று எண்ணி ஒன்றைத் துரத்தி செல்வோம் அதை அடைந்துவிடுவோம். ஆனால் அது போதாது. அது நம்மை முழுமையாக சந்தோஷப்படுத்தாது. வேறு ஒன்று நமக்கு தேவைப்படும். அதையும் நம்மால் அடைந்துவிட முடியும்...ஆனால் மறுபடியும் இன்னொன்று தேவையாக இருக்கும்.

ஆன்மிகத்தில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு இணையாக பெரும் புகழ் அல்லது பொருள் கிடைக்கும் என்றால் அதனை விட்டுக் கொடுப்பீர்களா? மன மகிழ்ச்சி என்பது நட்பில், அன்பில், திருப்தி உணர்வில், மற்றவர்களுடைய தவறுகளை பொறுத்துக் கொள்வதில் என சில விஷயங்களில் அடங்கியுள்ளது. 

இளைஞர்கள் சிலர் நினைக்கலாம் வெற்றி பெற்ற சில முதியவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று. வயதானால் என்ன? அவர்களும் தாம் முக்கியமாக கருதும் ஏதோ ஒன்றை இன்னும் கூட துரத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படி வாழ்நாள் முழுதும் அடையவே முடியாத ஏதோ ஒன்றினை துரத்தியபடி இருக்கிறார்கள். 

இந்தப் போராட்டத்தில் அவர்கள் இழப்பது அவர்கள் முதலில் தேடிய சந்தோஷத்தைதான். அதன் பின் நட்பு, சிரிப்பு, ஆரோக்கியம் என நீளும் இந்தப் பட்டியல், இறுதியில் வாழ்க்கையையே தொலைக்கச் செய்துவிடும். எல்லாவற்றையும் இழந்து எதைப் பெறத் துடிக்கிறோம், இப்படி ஒன்றுமே பெற முடியாதவர்களாகி விடுவதற்காகவா இந்த வாழ்க்கை’ என்று கேள்வி எழுப்புகிறார் இந்த 36 வயதான குரு.

நேபாள் மற்றும் பூடானில் பெரும்பாலும் வசிக்கும் கேயல்வா துகம்பா தான் கற்றத் தேர்ந்த பழமையான பெளத்தம் சார்ந்த பாடங்களை மிகவும் எளிமைப்படுத்தி புதிய பார்வையுடன் எடுத்துரைக்கிறார். ஒருவருடைய சந்தோஷத்துக்கும் துயரத்துக்கு காரணம் அவரவர் மனம்தான் என்கிறார் இவர். மகிழ்ச்சி அல்லது திருப்தி வெளியிலிருந்து வருகிறதா அல்லது உள்ளிருந்தா என்று கவனித்துப் பாருங்கள் என்று வலியுறுத்துகிறார்.

'யாரேனும் உங்களுக்கு மில்லியன் டாலர்கள் தந்தால், உங்களுக்கு உடனே மிகவும் சந்தோஷமாக இருக்கும். ஏன் அவ்வளவு சந்தோஷம் கொள்கிறீர்கள்? காரணத்தை நீங்களே சொல்வீர்கள் நான் இப்போது மில்லினியர். ஆனால் பத்து நாட்களுக்குப் பிறகு உங்களுக்கு கேன்சர் வந்துவிட்டது. அதை குணப்படுத்த ஒரு மில்லியன் தேவை என்றால் அந்தப் பணத்தை என்ன செய்வீர்கள்? அந்த ஒரு மில்லியனை சந்தோஷத்துடன் கொடுத்து விடுவீர்கள் அல்லவா? 

இதிலிருந்து ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சந்தோஷம் என்பது அந்த ஒரு மில்லியன் டாலரில் உங்களுக்குக் கிடைத்ததா அல்லது திருப்தி உணர்வில் கிடைத்ததா? ஒரு மில்லியன் டாலர் கையில் இருந்தால் ஒருவர் வெற்றியாளராகிவிட முடியுமா? அனைவருக்குமே வெற்றியாளராக வேண்டும் என்று ஆசைதான் ஆனால் அனைவராலும் பில்லியனாரவோ மில்லியனராகவோ முடியாது என்பது தானே உண்மை. அதற்காக நாம் என்ன தோல்வியுற்றவர்கள் ஆகிவிடுவோமா என்ன? இவ்விதமான வெற்றி என்பது புற வயமானது. உள்ளார்ந்த மகிழ்ச்சி தேவை எனில் வாழ்க்கையில் திருப்தியும் நிறைவும் இருக்க வேண்டும். அதற்கு இந்தத் தருணம் விழிப்புணர்வுடன் இருப்பதே ஒரே வழி’

சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி வருபவர் கேயல்வா துகம்பா. சூழல் பற்றிய விழிப்புணர்வு குறித்து இளைஞர்களிடம் கலந்துரையாடுவதை விரும்புகிறவர். கேயல்வா துகாம்பரைப் பொருத்தவரையில் இமாலயம் மற்றும் ஜம்மு காஷ்மீரிலுள்ள லடாக் ஆகிய இடங்கள் இந்தியாவுடன் 300 வருட காலத்துக்கும் மேலாக ஆழமான சரித்திர தொடர்புடையவை. 'இமய மலைப்பகுதி மற்றும் லடாக்கில் நாங்கள் நடைப்பயணம் மேற்கொண்ட போது, அங்கு பயணிகள் அதிகளவு குப்பை கூளங்களைப் போட்டுவிட்டு சென்றதைப் பார்த்தோம். அந்தக் குப்பைகள் அங்குள்ள ஆறு, குளம் மற்றும் சிற்றோடைகளில் விழுந்து அந்த நீர்நிலைகளை மாசுபடுத்திவிடுகிறது. இந்த ஆறுகள் மற்றும் சிற்றோடைகள் தான் 30 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகித உலக மக்களின் நீராதாராமாக விளங்குகிறது. எங்களுடைய பணி இந்தக் குப்பைகளை அகற்றுவதிலிருந்து ஆரம்பமாகிறது’ என்று கூறியுள்ளார் கேயல்வா துகம்பா.

ஆன்மிக தலைவராக மட்டும் இல்லாமல் செயல்வீரராகவும் இருப்பவர் கேயல்வா துகாம்பர். அவருடைய வாழ்வின் ஆரம்ப காலகட்டத்தில் டார்ஜிலிங்கில் கழித்தார். அமெரிக்கா, இங்கிலாந்து, வியட்நாம், மலேஷியா, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய உலக நாடுகளைச் சேர்ந்த மாணவர்களிடம் உரையாற்றி, நல்ல பல கருத்துக்களை கூறி வருகிறார். தீவிரமான ஆன்மிக நூல்கள் பலவற்றை எழுதி வெளியிட்டுள்ளார். 

அவர் சமீபத்தில் எழுதிய புத்தகம் ‘தி ரெஸ்ட்ஃபுல் மைண்ட் - எ நியூ வே ஆஃப் திங்கிங், எ நியூ வே ஆஃப் லைஃப்’ (The Restful Mind - A New Way of Thinking, A New Way of Life). இந்தப் புத்தகம் நவீன வாழ்க்கையின் அழுத்தங்களையும் அதிலிருந்து மீள வழிமுறைகளைச் சொல்லித் தருகிறது. தவிர இப்புத்தகம் மனத்தை அமைதியாக வைத்துக் கொள்வதற்கான ஒரு கையேடு எனலாம். 

It isn't about never being angry or upset, but about how much we hold on to such restless emotions.

"The Restful Mind", by His Eminence Gyalwa Dokhampa

]]>
Buddhist monk, Gyalwa Dokhampa, கேயல்வாங் திருபா, புத்த துறவி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/maxresdefault.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/jul/21/for-this-buddhist-monk-happiness-is-a-sense-of-satisfaction-within-2741670.html
2739627 மருத்துவம் மனநல மருத்துவம் இளமைக்கு என்ன கியாரண்டி? Tuesday, July 18, 2017 01:33 PM +0530 சிறியவர்களாக இருக்கும் போது நமக்கெல்லாம் ஒரே கனவு. நான் சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிவிட வேண்டும் என்பதே அது. ஆனால் பெரியவர்களாகி வாழ்க்கையில் நாம் நினைத்தவை சில கிடைத்து, பல கிடைக்காமல் போகும் போது ஒரு ப்ளாஷ்பேக் போடுவோம். 'ஆஹா, என்னுடைய சின்ன வயசுல எவ்வளவு சந்தோஷமா இருந்தேன். நினைச்சது எல்லாமே எனக்கு கிடைச்சுது’ என்று ஏக்கப் பெருமூச்சு விடுவோம். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது பால்யமும் இளமைக்காலமும் அதைக் கடந்த முதிய பருவமும் சொல்லிக் கொடுக்கும் பாடங்கள். வயது அதிகரிக்க அனுபவமும் நிறைவும் நமக்கு ஏற்பட வேண்டும், மாறாக ஏக்கமும் சுய பச்சாதபமுமே நம்மில் பெரும்பாலோருக்கு மிஞ்சுகிறது.

இதற்கு யார் காரணம்? ஏன் இப்படி எனக்கு மட்டும் நிகழ்கிறது? என்று யோசிக்கிறீர்களா? சாட்சாத் அதற்கு காரணம் நாம் தான். நம்முடைய சிக்கல்களுக்கும் தோல்விகளுக்கும் நாமே தான் காரணம். அடுத்தவர் மீதோ ஆண்டவன் மீதோ அல்லது விதியின் மீதோ பழியைப் போட்டுவிட்டு தப்பிக்க முடியாது. ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் இன்றைய நம்முடைய நிலைக்கு வெளிக் காரணிகள் சில இருந்தாலும் உண்மையில் நாம் தான் காரணம். நம்முடைய தேர்வுகள் தான் நம்மை இந்த நிலைக்கு இழுத்துச் சென்றுள்ளது. ஏன் எனக்கு மட்டும் என்ற கேள்வியைக் கேட்காத மனிதர்கள் வெகு சிலரே. ஏன் என்றால் அதற்குக் காரணமும் நாம் தான். எதிலும் அதிருப்தி மற்றும் சுயநலம் இன்னும் சில குணக் கேடுகள் இவைதான். ஆச்சரியமாக உள்ளதா? ஆம். சிறிதும் சமரசம் இன்றி உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்து பாருங்கள். கிடைக்கும் விடை உங்களை நிச்சயம் அதிர்ச்சிக்குள்ளாக்கும். 

வேலை, குடும்பம், அலுவலகம், சமூகம் என ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் உண்மையில் நமக்கு என்ன வேண்டும் என்ற புரிதல் கூட நமக்கு இருப்பதில்லை. அடிபடையாக ஒரு மனிதனுக்கு என்ன தேவை. உணவு, வசிப்பிடம், குடும்பம், நல்லுறவுகள் இவை போதாதா. இவற்றை சம்பாதித்துக் கொள்ள போதுமான பணம். ஆனால் அந்தப் போதுமான பணம் போதவே இல்லை என்பதால் தான் மேலும் மேலும் பணம் தேடி ஓடுகிறோம். அப்படி ஓடும் போது உயிர் வாழ்தலுக்கு அடிப்படை விஷயமான உணவைப் பற்றிய அக்கறை சிறிதும் இன்றி உணவை தவிர்ப்த்து அல்லது தாமதப்படுத்தி அல்லது குப்பை உணவுகளை சாப்பிட்டோ உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கிறோம். மன அழுத்தம், ரத்த அழுத்தம், இதயக் கோளாறு என விதம் விதமான நோய்கள் ஒவ்வொன்றும் இதோ நான் இருக்கிறேன் என்று தேடி வந்து ஒட்டிக் கொள்ளும் அளவுக்கு கவனக் குறைவாக இருக்கிறோம். 

எதற்காக சம்பாதிக்கிறோம்? ஆர அமர சாப்பிட வழியின்றி, ரசித்துப் பிடித்து வாழ வகையின்றி பந்தயத்துக்கு நேர்ந்துவிட்டது  போல் நமக்கு இந்த ஓட்டம் அவசரம் ஏன்? குடும்பத்துடன் அமர்ந்து நல்ல சத்தான உணவை சாப்பிடுவதில் என்ன பிரச்னை? காலை உணவைச் சாப்பிடச் சொல்லி நம் உடலில் இயங்கும் பயாலாஜிகல் க்ளாக் பசி உணர்வு எனும் அலாரத்தை அடிக்கும். போலவே எப்போதெல்லாம் தேவையோ மதியம் மாலை இரவு என அது உள்ளார்ந்த குரல் கொடுக்கும். ஆனால் அதை கண்டு கொள்ளாமல் இருக்கப் பழக்கப்பட்டால் ஒருகட்டத்தில் அது குழம்பி அலாரம் தருவதை நிறுத்திவிடும். நன்றாகப் பசியெடுத்து சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்துக்கு நல்லது. ஏதோ ஒரு நேரத்துக்கு என்னமோ ஒரு உணவு என வாழப் பழகிவிட்டால் உடல் நம்மை ஒரு கட்டத்தி பழிவாங்கிவிடுவது நிச்சயம். மேலும் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, நம் உடலில் கொழுப்புச்சத்து அதிகரிக்கத் தொடங்கும். எனவே, குறைந்த அளவு கொழுப்புச்சத்து உடைய உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

தினமும் ஆறு முதல் எட்டு க்ளாஸ் தண்ணீர் குடிப்பது நல்லது. அசைவப் பிரியராக இருந்தால் கோழி, இறைச்சி உணவுகள் அடிக்கடி சாப்பிடாமல் தினமும் மீன் உணவை சாப்பிடலாம். இதில் ஒமேகா எனும் அரிய சத்து உள்ளது. செல் மீட்டுருவாக்கத்துக்கு மிகவும் நல்லது. எனவே உணவு விஷயத்தில் மிகுந்த அக்கறையுடனும் கவனத்துடன் இருப்பது தான் இளமையை தக்க வைப்பதற்கான முதல் படி.

அடுத்து மனம் சார்ந்த அமைதியும் திருப்தி மிகவும் முக்கியம். அவனிடம் கார் இருக்கிறது, என்னிடம் பைக் கூட இல்லை. ஒரு சைக்கிளுக்காவது வழி இருக்கிறதா என்று நினைத்துப் பொறுமிக் கொண்டிருந்தால் நடக்கக் கூட முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம். காரணம் மனத்தில் எதிர்மறை எண்ணங்களான பொறாமை, கோபம், வெறுப்பு ஆகியவை ஒருபோதும் நம்மை ஏற்றமான வழிகளுக்கு இட்டுச் செல்லாது. அது ஒரு புதைகுழி போலத்தான். ஒருநாள் இல்லையெனில் மற்றொரு நாள் நம்மை அமிழ்த்திவிடும். நமக்கான அரிசியில் நம்முடைய பெயர் எழுதப்பட்டுள்ளது என்பது உண்மையிலும் உண்மை. நமக்குக் கிடைக்கவேண்டியதை நியாயமான முறையில் நமக்குக் கிடைக்கச் செய்வதுதான் வாழ்க்கையில் முக்கியமானது. அடித்துப் பிடுங்கி, ஊழல் செய்து, அடுத்தவர் வயிற்றில் அடித்து சம்பாதிக்கும் பணம் வந்த வழி தெரியாது போய்விடும்.

நம்மை மேன்மையான உயிர்களாக தக்க வைக்க எளிமையும், அன்பும், சக மனிதர்கள் மீதான அக்கறையும், எளியோர் மீதான கருணையும் தான். அன்பு, நன்றி, மன்னிப்பு இவை மூன்றும் நேர்மறையானவை. உங்களை முன்னேற்றப் பாதைக்கு மேன்மேலும் உயர்த்திச் செல்லும் மந்திரத்தன்மை உடையவை. இக்குணங்கள் எல்லோருக்கும் இயல்பில் இருப்பதுதான். ஆனால் அவற்றை முன்னெடுக்க விடாமல் ஈகோ தடுக்கும். நேர்முறை உணர்வுடன் வாழ்ந்தால் எப்போதும் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். அப்போது உள் அமைதியும் ஏற்படும். அது முகத்தில் புன்னகையாக வெளிப்படும். இயல்பாகவே சிரிப்புடன் இருப்பவர்களைப் பாருங்கள், அவர்களின் வயதைக் கணிக்கவே முடியாது. அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். காலம் அவர்களின் வயதை தள்ளிப்போட்டுவிட்டது. இளமையும் வசீகரமும் அவர்களுக்கு இவ்வகையில் வசமானது. 

இத்தகைய இளமையுடன் இருக்க நம்மை நாமே உள்ளும் புறமும் சரியாக பேணுவோம். அப்போது நம்முடைய இளமைக்கு நாமே கியாரண்டி!

]]>
youth, young, beauty, அழகு, இளமை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/18/w600X390/youth.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/jul/18/how-to-he-young-always-2739627.html
2736155 மருத்துவம் மனநல மருத்துவம் விடுப்பு எடுத்த பெண் ஊழியரின் மின்னஞ்சலுக்கு தலைமை நிர்வாக அதிகாரியின் பதில் என்ன? Wednesday, July 12, 2017 03:26 PM +0530 இந்த உலகம் எப்போதுமே கடுமையான ஓரிடமாக இருக்க வேண்டுமா என்ன? சில சமயம் இது போன்ற சம்பவங்களைக் கேள்விப்படும் போது அடடே என்று நம்மை வியப்பில் ஆழ்த்திவிடும். அத்தகைய ஒரு விஷயம் தான் இது.

மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த மேட்லின் பார்கர் என்பவர் பெரிய நிறுவனம் ஒன்றில் வெப் டெவலப்பராக பணி புரிந்து வருகிறார். சமீபத்தில் மனது சரியில்லை என விடுப்பில் சென்ற அவர், தனது சக பணியாளர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் தனக்கு  மனச் சோர்வினால்,  இரண்டு நாட்கள் பணி விடுப்பில் இருப்பதாகவும், விரைவில் மீண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார். எதிர்பாராதவிதமாக, அந்த மின்னஞ்சலுக்கான பதிலை தலைமை நிர்வாக அதிகாரியே மேட்லினுக்கு அனுப்பியிருந்தார். அந்த மெயிலைப் படித்த மேட்லின் நெகிழ்ந்துவிட்டார். 

மேட்லின் இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

'மனச் சோர்வு காரணமாக லீவில் இருந்த சமயத்தில், டீம் நண்பர்களுக்கு அனுப்பிய மெயிலுக்கு என்னுடைய தலைமை நிர்வாக அதிகாரி ஆதரவாக பதில் சொல்லியதுடன், பணி விடுப்பையும் உறுதிப்படுத்தியுள்ளார்’

இந்தப் பதிவு இணையத்தில் உடனே பரவத் தொடங்கி மேட்லினுக்கும் அவரது தலைமை நிர்வாக அதிகாரிக்கும் பாராட்டுக்கள் குவிந்தன. 

மேட்லின் பகிர்ந்திருந்த டிவீட்டுகளுக்கு குவிந்த வரவேற்பைப் படித்த அவருடைய தலைமை நிர்வாக அதிகாரி பென் காங்லிடன் மற்றொரு பதிவை எழுதினார். அதன் தலைப்பு - இந்த 2017-லும் கூட மன அழுத்தம் சார்ந்த பிரச்னைகள் இன்னும் பணி இடங்களில் விவாதிகப்படும் ஒன்றாகவே இருந்து வருகிறது.

இது 2017, இன்னும் கூட பணி இடங்களில் மன நலம் குறித்து வெளிப்படையாக பேச முடியவில்லை என்பதை என்னால் நம்ப
முடியவில்லை. இத்தனைக்கும் ஆறில் ஒரு அமெரிக்கருக்கு மன அழுத்தப் பிரச்னை உள்ளது.

இது 2017,  இன்னும் என்னால் முழுவதும் நம்ப முடியவில்லை. பணி செய்பவர்கள் விடுப்பில் செல்லும் போது அவருக்கு பணி ஊதியம் தர வேண்டுமா என்பது இன்னும் சர்ச்சைக்குள் தான் உள்ளது. 37 சதவிகித முழு நேரப் பணியாளர்கள் மட்டும்தான் சிக் லீவுக்கான சம்பளத்தைப் பெறுகின்றனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இது 2017. நாம் பொருளாதாரத்தில் தேர்ந்த அறிவு பெற்றிருக்கிறோம். நம்முடைய வேலைகள் நம் மனதையும் உடலையும் சக்கையாக பிழிந்துவிடக் கூடியதாக இருக்கிறது. ஒரு தடகள வீரர் காயமடைந்தால், அவர்கள் சிறிது நேரம் பெஞ்சில் அமர்ந்து ஓய்வு எடுத்த பின் சரியாகிவிடுவார்கள். ஆனால் மூளையால் செய்யக் கூடிய வேலைகள் அப்படியல்ல என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?

]]>
Madalyn Parker, CEO, Sick Leave, மன நலப் பிரச்னை, பணி விடுப்பு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/12/w600X390/madlyn_parker.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/jul/12/woman-requests-time-off-for-mental-health-boss-sends-the-perfect-reply-2736155.html
2729506 மருத்துவம் மனநல மருத்துவம் ஆசைகள், துன்பங்கள் எப்படி கையாள்வது? DIN DIN Friday, June 30, 2017 12:20 PM +0530 நிறைவேறாத ஆசைகள் நம்மை சோகத்தில் ஆழ்த்துகின்றன. இதை எப்படி சமாளிப்பது?

ஒன்றை சமாளிப்பது, அல்லது அடக்கி ஆள்வது என்றால் அதற்கு என்ன அர்த்தம்? அதன்மீது நீங்கள் ஏறி அமர்ந்து கொள்ள விரும்புகிறீர்கள். ஒரு பிரச்சினையின் மேல் நீங்கள் அமர்ந்து கொள்வதால், உங்கள் வாழ்க்கை எவ்வழியிலாவது மேன்மையடையும் என்று நினைக்கிறீர்களா? இல்லை. அதையெல்லாம் ஏற்கெனவே முயற்சி செய்து பார்த்து விட்டீர்கள் தானே? அது வேலை செய்வதில்லை. துயரத்தை எப்படி தவிர்ப்பது என்று என்னைக் கேட்காதீர்கள், ஆனந்தமாய் வாழ்வது எப்படி என்று கேளுங்கள்.

துயரங்கள் நீங்களே உருவாக்கிக் கொள்வது. அது உங்களுக்கு இயல்பாக ஏற்படுவதில்லை. உங்கள் மனதோடு குளறுபடிகள் செய்யாமல், இங்கு சும்மா அமர்ந்திருந்தால், நீங்கள் நன்றாகவே இருப்பீர்கள். ஆனால் இப்போது மனதுடன் மிகவும் சிக்கிப் போய் விட்டீர்கள், தொடர்ந்து மனதைக் கிளறிக்கொண்டே இருக்கிறீர்கள். ஒரு நொடி கூட அதைவிட்டு விலகி வர முடியவில்லை. அது தான் பிரச்சினை.

‘துயரத்தில் உழலாமல் இருப்பது எப்படி?’ என்பதே பொருத்தமற்ற கேள்வியாக இருக்கிறது. ஏனெனில் அதை உருவாக்குவதே உங்கள் மனம் தான். மனதைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கான ‘ஸ்விட்ச்’ தெரியாமல், இருட்டில் துழாவிக் கொண்டிருக்கிறீர்கள். சிலநேரம் தற்செயலாக ஏதோ ஒன்றைத் தொட்டுவிட, எல்லாம் நன்றாக இருக்கிறது. சிலநேரம் வேறேதோ ஒன்றைத் தொட, அது துயரத்தை வரவழைக்கிறது. இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இது நீங்கள் ஒரு ‘காரை’ வைத்திருந்து, ஆனால் அதை ஓட்டும் வழி தெரியாமல் இருப்பது போல. மனம் போனபடி கீழிருக்கும் அந்த மூன்று மிதிக்கட்டைகளை (க்ளட்ச், பிரேக், ஆக்ஸெலரேட்டர்)யும் மாற்றி மாற்றி மிதித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் எந்தளவு மோசமான ஓட்டுனராக இருப்பீர்கள் என்பதை அறிவீர்களா? பயணம் மிகவும் குலுங்கிக் குலுங்கித்தானே நடக்கும்? இப்போது உங்கள் உடலையும், மனதையும் அப்படித்தான் செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவை எப்படி செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி எடுக்காமல், தற்செயலாக அவற்றைச் செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

ஒரு காரை ஓட்டவேண்டும் என்றால் அதைப் பற்றி உங்களுக்கு நிறையத் தெரிந்திருக்க வேண்டும். அந்த எந்திரம் எப்படி வேலை செய்கிறது, அதை இயக்கும் விதிகள் என்ன என்பதெல்லாம் தெரிந்திருந்தால் அதை சுலபமாக இயக்கலாம். இது உங்கள் உடலிற்கும், மனதிற்கும், உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திற்கும் பொருந்தும்.

இன்று பரவலாய் ஒரு கலாச்சாரம் இருக்கிறது. நாம் விரும்பும் ஒன்று நடக்கவேண்டுமெனில், அதற்கு என்ன தேவையோ அதை செய்வதற்குப் பதிலாக, மற்றதை எல்லாம் செய்துவிட்டு, நாம் விரும்புவது நடந்துவிட வேண்டும் என்று வேண்டிக் காத்திருப்பதுதான். வாழ்க்கை எப்போதும் இப்படி நடக்காது என்பதை நீங்கள் புரிந்து கொள்வது நல்லது. குழந்தைகள் போல் இல்லாமல், இனியேனும் கொஞ்சம் முதிர்ச்சியோடு செயல்படுங்கள். ‘இன்று நான் கடவுளிடம் வேண்டிக் கொண்டுவிட்டேன், அதனால் இன்றைக்கு எதுவும் தவறாக நடக்காது’ இப்படிக் கூட நினைக்கிறீர்கள், இல்லையா? ஆனால் கடவுளை வேண்டிக் கொள்பவர்களும் தினமும் இறந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் தானே? பிரார்த்தனை போன்ற விஷயங்கள் எல்லாம் வேறொரு காரணத்திற்காக செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால், காலப்போக்கில், இப்போது, எதற்கு எது என்பதே புரியாது ஏதேதோ செய்து கொண்டிருக்கிறீர்கள். ஓட்டுவது சரியாக நடக்கவில்லை, வேண்டிக் கொள்வதும் சரியாக நடக்கவில்லை, தியானமும் சரியாக நடக்கமாட்டேன் என்கிறது. ஏனெனில் என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்யாமல், வேறெதையோ நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

உங்களுக்குச் செடி வளர்க்க வேண்டுமென்றால், எல்லா பிரார்த்தனைகளும் செய்துவிட்டு, பிறகு விதையை மண்ணில் விதைக்காமல், அதைக் கூரையில் ஒட்டிவைக்கிறீர்கள். அது எப்போதாவது வளருமா? மண்ணில் தேவையான உரங்களைக் கலந்து, அதைச் சரியான பதத்தில் தயார் செய்து, அதில் வளரக்கூடிய விதையை விதைத்தால், அது வளரும். சரியான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்பவருக்குத் தான் வாழ்வின் புதையல்கள் கிட்டும். நீங்கள் நல்லவராகவோ, கெட்டவராகவோ இருப்பதால் செடியில் பூக்கள் மலராது. “அவன் கெட்டவன். ஆனால் அவனிடம் செல்வம் சேர்கிறது. எனக்கு மட்டும் ஏன் நடக்கமாட்டேன் என்கிறது” என்று பலர் அலுத்துக் கொள்வதைக் கேட்டிருப்பீர்கள். நீங்கள் நல்லவர் தான், ஆனால் முட்டாளாய் இருக்கிறீர்கள், என்ன செய்வது? சரியான விஷயங்களை செய்யாதவரை, உங்களுக்கு வேண்டியவை நடக்காது.

ஆனந்தமாக இருக்கவேண்டும் என்று நீங்கள் எண்ணினால், அதற்கு, உங்களுக்குள் என்ன செய்யவேண்டுமோ அதை நீங்கள் செய்யவேண்டும். வேண்டிக் கொள்வதாலோ, அல்லது அது ‘வேண்டும், வேண்டும்’ என்று ஆசை கொள்வதாலோ, அது உங்களுக்குக் கிடைத்துவிடாது. உங்களுக்குள் தேவையான சூழ்நிலையை நீங்கள் உருவாக்கிக் கொண்டால், ஆனந்தம் உங்களுக்குள் ஊற்றெடுக்கும். ஒரு மலரை உங்களால் மலரச் செய்யமுடியாது. ஆனால் அது மலர்வதற்குத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்கினால், ஒன்றல்ல ஓராயிரம் பூக்கள் மலரும். வாழ்வில் இதைத்தான் நீங்கள் செய்யமுடியும். அதைச் செய்தாலே போதும். வாழ்வில் ஏதோ ஒன்று உங்களுக்கு நடப்பதற்கு நீங்கள் வேறு எதையும் செய்யத் தேவையில்லை. உங்களுக்கு என்ன வேண்டுமோ, அதற்கு சரியான சூழ்நிலைகளை நீங்கள் அமைத்தால் போதும், தேவையானது நடந்துவிடும்.

உங்களுக்கு சாதம் சமைக்க வேண்டும் என்றால், கொஞ்சம் அரிசி, நீர், வெப்பம் இவற்றை எப்படி வைக்கவேண்டுமோ அப்படி வைத்தால், சாதம் தயார் ஆகிவிடும். அதை நீங்கள் போய் சமைக்கவேண்டாம். சரியான சூழ்நிலைகளை உருவாக்க நீங்கள் கற்றுக்கொண்டால் போதும், சமைப்பது தானாக நடந்துவிடும். முதல்முறை செய்தபோது சரியான சூழ்நிலைகள் என்னவென்று உங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். அவ்வப்போது கையை உள்ளே விட்டு, அன்று சாதத்திற்கு பதிலாக கஞ்சியை உருவாக்கினீர்கள். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல, சரியான சூழ்நிலையை உருவாக்க நீங்கள் கற்றுக்கொண்ட பிறகு, அங்கே நீங்கள் நின்றுகொண்டிருக்க வேண்டும் என்றுகூட அவசியம் இல்லை. சரியான சூழ்நிலையை உருவாக்கிவிட்டு, நீங்கள் அக்கம்பக்கத்தில் பேசிக் கொண்டிருந்துவிட்டு வந்தாலும், சாதம் தயாராகி விடும். இது அவ்வளவு சுலபம். உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் கூட இதேபோன்று தான். எங்கெல்லாம் சரியான சூழ்நிலைகளை நீங்கள் அமைத்தீர்களோ, அங்கெல்லாம் நடக்கவேண்டியவை நன்றாகவே நடக்கிறது. எங்கெல்லாம் சரியான சூழ்நிலையை உங்களுக்கு அமைக்கத் தெரியவில்லையோ, அங்கெல்லாம் எவ்வளவு முயற்சி செய்தாலும், நீங்கள் தலைகீழாகவே நின்றாலும், அது நடப்பதில்லை.

ஒரு சிறு கடையில் 300 ரூபாய் வியாபாரத்தை தினமும் சமாளிப்பவருக்கு இரத்தக்கொதிப்பு ஏற்பட்டு, அது தாங்கமுடியாத பாரமாய் இருப்பதும், உலகெங்கும் 300 தொழில் ஸ்தாபனங்கள் நிறுவி, அவற்றை நேரில் சென்று பார்வையிடாமலேயே அவருக்கு எல்லாம் அற்புதமாய் நிகழ்வதையும் பார்த்திருக்கிறீர்கள் தானே? ஏன் இப்படி? இது ஏனெனில், தொழில்கள் வெற்றிகரமாக நடப்பதற்கு ஏதுவான சூழ்நிலையை எப்படி உருவாக்குவது என்பதை அவர் கற்றுக் கொண்டுவிட்டார். அந்த சூழ்நிலைகளை உருவாக்கிவிட்டு, அவை செயல்படுவதற்கு அனுமதித்தால், எல்லாம் நன்றாகவே நடக்கிறது. சரியான சூழ்நிலையை உருவாக்காமல், அதை சரியாக நானே நடத்துகிறேன் என்று முயற்சித்தால், உங்களுக்கு பித்துப் பிடித்துப் போகும். வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் இதுதான் உண்மை. உங்களுக்கு எது வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அது நடப்பதற்குத் தேவையான சூழ்நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும். இல்லையெனில் அது நடக்காது.

இப்போது ஆனந்தமாய் வாழவேண்டும், துயரத்தில் உழலக்கூடாது என்ற ஆசை உங்களுக்கு வந்திருக்கிறது. இதை உருவாக்கிக் கொள்ள எந்த மாதிரியான சூழ்நிலைகளை அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொண்டு, அப்படி அமைத்துக் கொள்ளவேண்டும். அப்போது அது நடக்கும். அவ்வாறு இல்லாமல், ஏதோ ஒன்றைக் கைவிட வேண்டும் அல்லது ஒதுக்கிவிட வேண்டும் என்று முயன்றால், இப்போது இருப்பதை விட இன்னும் ஆழமான துயரத்தில் நீங்கள் உழல்வீர்கள். ‘எப்படியேனும் நான் என்னை மாற்றிக் கொண்டே ஆக வேண்டும்’ என்று தன்னை கட்டாயப்படுத்தி முயல்பவர்கள், ஆனால் அதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல் சாதாரணமாய் வாழ்பவர்களை விட, அதிகமாக அவதியுறுவதைப் பார்த்திருக்கிறீர்களா? இப்படி இருக்கவேண்டும், அப்படி இருக்கவேண்டும் என்று தங்களுக்குத்தானே விதிகளை வகுத்துக் கொண்டு வாழ்பவர்கள், மற்றவர்களை விட மிக அதிகமாக துன்பத்தில் உழல்கிறார்கள். அதற்குக் காரணம், திட்டவட்டமாய் வகுக்கமுடியாதவற்றை வகுக்க நினைப்பதால் தான். என்ன வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அது நடப்பதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்குங்கள். அது போதும், வேண்டியது நடக்கும்
 
இப்போது ஆனந்தமாய் வாழவேண்டுமெனில், அதற்கு எவ்வகையான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்? இதில் ஒன்று, நாம் ஏற்கெனவே பார்த்தது போல், அடிப்படை ஆசை எப்போதும் எல்லையற்று விரியவே முயல்கிறது. அதனுடைய வழியில் நீங்கள் முட்டுக்கட்டை உருவாக்கினால், அது உங்களுக்குத் துயரத்தை உருவாக்கும். நிறைவேறாத ஆசை என்பது அப்படித்தான் நிகழ்கிறது. ஆசை என்றாலே அது ஒரு பெரிய மாளிகைக்கோ, தங்க அட்டிகைக்கோ உருவாவது என்பதல்ல. அது ஒரு சாதாரண கூழாங்கல்லிற்குக் கூட உருவாகலாம். அப்பொருளின் மதிப்பு துயரத்தை நிர்ணயிக்கவில்லை. ஆனால் விரிவடையவேண்டும் என்ற அந்த ஏக்கத்திற்கு தடை வந்துவிட்டது. அதுதான் அங்கே துயரத்தை விளைவிக்கிறது.

இந்தத் துயரம் எப்படி உருவாகிறது, ஆனந்தம் எப்படி உருவாகிறது என்று அவற்றின் இயக்கமுறையைப் பாருங்கள். ஏதோ ஒரு குறிப்பிட்ட பொருளை அடைந்துவிட்டால், அது எல்லையற்று விரிவதற்கு ஒரு படியென நினைத்தீர்கள். ஆனால் அது நிறைவேறவில்லை, துயரம் வந்துவிட்டது. இதைச் சற்று கவனியுங்கள். அந்த ஏதோ ஒன்று கிடைக்கவில்லை என்பதனால் துயரம் வரவில்லை. எல்லையற்று விரியும் அந்த ஆசை நிறைவேறவில்லை என்பதால் தான் துயரம் வந்தது.

எதன் மீது உங்களுக்கு ஆசை வருகிறது என்பது, எத்தகைய சூழ்நிலையில் உங்கள் வாழ்க்கையை அமைத்துள்ளீர்கள் என்பதைப் பொறுத்து அமைகிறது. ஒரு கூழாங்கல், ஒரு தங்க ஆபரணம், ஒரு ஆண், ஒரு பெண், அது எதுவாய் இருந்தாலும், நீங்கள் எதன் மீது ஆசைப்படுகிறீர்களோ, அது கிடைக்காதது உங்கள் துயரத்திற்குக் காரணமல்ல. எப்படியேனும் விரிவடைந்திட நீங்கள் கொண்ட ஏக்கம் நிறைவேறாது போனது தான் உங்கள் துயரத்தின் காரணம். பலநேரங்களில் நீங்கள் ஆசைப்படும் பொருளின் மீது கூட உங்கள் கவனம் நிலைத்திருப்பதில்லை. ஆனால் இக்கணமே அது கிடைக்காவிட்டால், அந்த ஒன்றே உங்கள் வாழ்க்கை என்பது போல், உங்கள் முழு கவனமும் அதில் படிந்துவிடும். நிஜத்தில் அந்தப் பொருள் உங்களுக்கு அவ்வளவு முக்கியமில்லை. அதைக் கொண்டு நீங்கள் சற்றே விரிவடைய நினைத்தீர்கள். அது தான் முக்கியம். ஆசை என்பது இந்த ‘விரிவடைதலுக்கு’ ஒரு வழி.

ஆனால் இந்த விரிவடையும் ஏக்கத்திற்கு பொருள்நிலையில் நீங்கள் வடிகால் தேடினால் அது நடக்காது. நொடிக்கு நொடி ஆசைகள் இதை, அதை என்று மாற்றி மாற்றிக் கேட்கும். அப்போது துயரம் தவிர்க்க முடியாததாக ஆகிறது. ஆம், உலகத்தில் இருக்கும் எல்லாவற்றையும் நீங்கள் அடைந்திட முடியாதே! உங்களிடம் என்னவெல்லாம் இருந்தாலும், உங்களிடம் இல்லாததும் இருக்கும் தானே! இவ்வழியில் நீங்கள் சென்றால், ஆனந்தமாய் வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை. ஆம், உங்களின் ஒரு ஆசை நிறைவேறும் போது, அந்த நிமிடம் சந்தோஷமாக இருந்தாலும், அடுத்த நொடியே வேறொன்றின் மீது ஆசை வருகிறது. ஆக ஆசைகள் ஒழுங்கற்ற முறையில் வெளிப்படுகிறது.

ஆசை என்பது சரியும் அல்ல தவறும் அல்ல. ஆசைக்கு பொருள் முக்கியமில்லை. அப்பொருளோடு உங்கள் ஆசையை இணைத்தது நீங்கள். இது வேண்டும், அது வேண்டும் என்ற பாகுபாடு எல்லாம் மனதில் தான் இருக்கிறது. இதன் மேல் ஆசை கொள்ளலாம், அதன்மேல் வேண்டாம் என்ற வரையறைகளை வகுத்தது யார்? கடவுளா? இல்லை. நீங்கள் தான். நீங்கள் ஏதோ ஒன்றைச் செய்கிறீர்கள் என்றால், அதற்கு பலன்கள் கிடைக்க வேண்டும் தானே. இந்த வரையறையை விதித்துக் கொண்டதால், உங்களுக்கு என்ன கிடைத்தது? ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப்போனால், பெறுவதற்கு பதிலாக இழந்திருக்கிறீர்கள், இம்முழு உலகத்தை, உங்கள் முழு வாழ்வை இழந்திருக்கிறீர்கள்.

நன்றி - சத்குரு ஜக்கி வாசுதேவ்

]]>
Desires, Wishes, Failure, ஆசை, தோல்வி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/30/w600X390/asaigal-thunbangal-eppadi-kaiyalvathu.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/jun/30/desires-and-failures-how-to-handle-them-2729506.html
2729498 மருத்துவம் மனநல மருத்துவம் பெண்களிடம் (இந்த) ரகசியத்தை சொல்லாதீர்கள்! Friday, June 30, 2017 11:34 AM +0530 சராசரி பெண்களால் எந்தவொரு ரகசியத்தையும் 47 மணி நேரத்துக்கு மேல் காப்பாற்ற முடியாது என்கிறது ஒரு புதிய ஆராய்ச்சி. 

பெண்களிடம் நீங்கள் ஒரு ரகசியத்தைச் சொல்லிவிட்டு யாரிடமும் சொல்லிவிடாதே என்ற வார்த்தையையும் கூடுதலாக சொல்லிவிட்டால் போதும் அது உடனடியாக அவர்களுக்குள் ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்திவிடுகிறதாம். ஒரு விஷயம் தனக்கு மட்டும் தெரியும் என்ற நிலையில் அவர்களால் நீடித்திருக்க முடியாது. உடனே அவ்விஷயத்தை தனக்கு முக்கியமானவர்களிடம் சொல்லிவிட வேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு கொழுந்துவிட்டு எரியும். 15 நிமிடத்திலிருந்து 47 மணி நேரத்துக்குள் அவர்களுக்குத் தெரிந்த எந்தவொரு பரம ரகசியத்தையும் யாரேனும் ஒருவரிடமாவது நிச்சயம் சொல்லிவிடுவார்கள் என்று அடித்துச் சொல்கிறது இந்த ஆய்வு.

அந்த ரகசிய செய்தி யாரைப் பற்றியது என்பதைப் பொருத்துதான் முதலில் யாரிடம் சொல்வது என்பதும் அமையும். உதாரணமாக ரகசியத்தை சொல்லத் துடிப்பது தங்களின் ஆண் நண்பர், காதலர் / கணவர், நெருங்கிய தோழி அல்லது அம்மா இவர்களுள் யாராவது ஒருவரிடம் சொல்லியே தீர்வார்களாம்.

18 வயதிலிருந்து 65 வயது வரையிலான 3000 பெண்களை வைத்து இந்த ஆய்வினை மேற்கொண்டனர். இதில் பத்தில் நான்கு பெண்கள் தங்களால் ரகசியத்தைப் பாதுகாக்க முடியாது என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டனர். அது எவ்வளவு அந்தரங்கமானதும் ரகசியமானதாகவும் இருந்தாலும் கூட தங்களால் சில மணி நேரத்துக்கு மேல் அதை மனத்துக்குள் பூட்டி வைத்திருக்க முடியாது என்றனர். 

பத்தில் ஐந்து பெண்கள் ஒன்று அல்லது இரண்டு க்ளாஸ் வைன் குடித்தபின் தங்கள் மனத்தில் ஒளித்து வைத்திருந்த அத்தனை விஷயங்களும் வெளியில் கொட்டிவிடுவோம், அது எத்தகைய ரகசியமாக இருந்தாலும் கவலையில்லை என்றனர். 

இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட 'வைன்ஸ் ஆஃப் சைல்' என்ற நிறுவனத்தைச் சார்ந்த மைக்கேல் காக்ஸ் என்ற ஆய்வாளர் இதைப் பற்றி கூறுகையில், ‘பெண்கால் ரகசியத்தை காப்பாற்ற முடியாது என்பது உலகறிந்த உண்மைதான். இதை ஆராய்ச்சி செய்து உறுதி செய்ய விரும்பினோம். எங்களால் ஒரு ரகசியத்தைப் பெண்களிடம் சொல்லி அதை வெளியில் சொல்கிறார்களா என்பதைக் கூட கண்டறிய முடிந்தது. ஆனால் அது எவ்வளவு விரைவாக வெளியே சொல்லப்படுகிறது அந்த காலகட்டம் என்னவாக இருக்கிறது என்பதை தான் பகுத்தாய முடியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் மிக உறுதியாக எங்கள் ஆய்வில் தெளிவானது. அது எவ்வளவு ரகசியமானதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான செய்தியாக இருந்தாலும் சரி பெண்களிடம் சொல்லப்பட்ட 48 மணி நேரத்தில் வெளி உலகத்துக்கும் தெரிந்து வெட்ட வெளிச்சமாகிவிடுகிறது’ என்றார்.

ஒரு ரகசிய செய்தியை ரகசியம் என்றே ஒரு பெண் தன் தோழியிடம் சொல்ல, அதை அவர் அப்படியே இன்னொருவரிடம் சொல்ல, இப்படி வெளியில் விரைவில் காட்டுத்தீ போலப் பரவி விடுகிறது. தனக்கு சம்மந்தம் இருக்கும் விஷயமாக இருந்தாலும் சரி, துளி கூட சம்பந்தம் இல்லையென்றாலும் சரி, அதை ரகசியம் என்று மட்டும் சொல்லிவிட்டால் போதும் பத்தில் ஒன்பது பெண்கள் அதை மற்றவர்களிடம் சொல்லியே தீர்கிறார்கள்.

சுவாரஸ்யமான செய்தியாக இருந்தால், பெண்கள் மது அருந்தும் போது அதைப்பற்றி அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து விவாதிக்கிறார்கள் என்றனர் ஆராய்ச்சியாளர்கள். 

மற்ற பெண்களிடமிருந்து ஒரு பெண் மூன்று ரகசியங்களையாவது வாரத்தில் ஒரு நாள் பெறுகிறார் அதில் ஒன்றையாவது அவர்கள் மற்றவர்களிடம் பகிர்ந்து விடுகிறார்கள் என்று மேலும் கூறுகிறது இந்த ஆய்வு.

பத்தில் ஆறு பெண்கள் ஒரு ரகசியத்தை அதில் துளியும் சம்பந்தப்படாதவர்களிடம் சொல்கிறார்கள். காரணம் அவர்களுக்குத் தெரியாத விஷயத்தில் ஆர்வம் காட்டாமல் இருப்பதுடன் அதை மற்றவர்களிடம் சொல்ல மாட்டார்கள். அவர்களிடம் அந்த ரகசியம் தேங்கிவிடும் என்று நம்புகிறார்கள்.

பத்தில் மூன்று பேர் மற்றவர்களின் ரகசியத்தை வெளியில் சொல்ல விரும்புவர்களாக இருப்பதை ஒப்புக் கொண்டார்கள். கிட்டத்தட்ட பாதி பெண்கள் (45 சதவிகிதம்) ரகசியத்தை வெளியில் சொல்வதற்கான காரணம் அது தங்களை உறுத்திக் கொண்டே இருப்பதால் அதை வெளியே சொல்லிவிடுவதன் மூலம் நிம்மதியாக உணர்வதாக ஒப்புக் கொண்டனர்.

இதில் சில பெண்கள் மற்றவர்களிடம் சொல்லக் கூடாத ரகசியத்தைக் கூட வெளியில் சொல்லிவிடுவதால் குற்றவுணர்வுக்கு உள்ளாகித்  தவிப்பதாகத் தெரிவித்தனர்.

இந்த ஆராய்ச்சியில் பங்குபெற்ற கால்வாசி பெண்கள் ரகசியத்தை பாதுகாப்பதில் தங்களுக்கு ஒரு பிரச்னையும் இருந்ததில்லை என்றனர். இதில் 83 சதவிகிதத்தினர் தங்களின் நெருங்கிய தோழியிடம் சொல்வதன் மூலம் அந்த ரகசியம் காப்பாற்றப் படுகிறது என்றே நம்புகிறார்கள். தங்களையும் அவர்களையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாத நெருக்கமான நட்பில் அல்லது உறவில் இருக்கும் போது ரகசியங்கள் அவசியமற்றது என்று கூறுகிறார்கள். 

பத்தில் நான்கு பெண்கள் நெருங்கிய தோழியிடம் மற்ற தோழிகள் பற்றிய வம்புச் செய்திகளையும் ரகசியங்களையும் சொல்லிவிடுகிறார்கள். 

பத்தில் நான்கு பெண்கள் தங்கள் தோழியிடம் அவளுக்குத் தெரியாத நபரைப் பற்றிய ரகசியத்தை சொல்வதில் பிரச்னையில்லை என்றே நினைக்கிறார்கள். தன்னிடமிருந்து வெளியே சென்றுவிடும் அதே சமயம் அது தோழிக்கு தெரியாத நபர் என்பதால் அவர் அதை அவள் வெளியிலும் சொல்லப் போவதில்லை என்று நம்புகிறார்கள். இதே போல் சம்மந்தம் இல்லாத நபரைப் பற்றிய ரகசியத்தை 40 சதவிகிதத்தினர் தங்கள் கணவரிடம் சொல்வதில் ஆறுதல் அடைகின்றனர்.  

அந்தரங்கமான விஷயங்கள், அடுத்தவர்கள் வாங்கிய பொருள்களின் உண்மை விலை, கள்ளக் காதல்கள், போன்றவையே ரகசியங்களின் பட்டியலில் எப்போதும் முதலில் இருப்பவை. இதைச் சார்ந்த விஷயங்களைப் பற்றி தோழிகளிடம் நேரில் அல்லது ஃபோனில் ரகசியமாக அரட்டை அடிப்பது அல்லது குறுஞ்செய்திகளை அனுப்பி பகிர்வதை பெண்கள் அடிக்கடி செய்து வருகிறார்கள்.

27 சதவிகிதப் பெண்கள் மட்டுமே தங்களிடம் சொல்லப்பட்ட ரகசியத்தை அடுத்த நாளே மறந்துவிடுகிறார்கள்.

]]>
Women, Gossip, Secrets, பெண்கள், ரகசியம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/30/w600X390/A41.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/jun/30/women-cannot-keep-a-secret-for-longer-than-47-hours-2729498.html
2728974 மருத்துவம் மனநல மருத்துவம் திட்டமிட்டபடி ஒன்றும் நடப்பதில்லையே? நான் என்ன செய்வது?  Thursday, June 29, 2017 12:19 PM +0530 ‘எத்தனைதான் திட்டமிட்டாலும், வாழ்க்கை நான் விரும்பும்படி நடக்கமாட்டேன் என்கிறது. என்னதான் செய்வது?’ என்று புலம்புகிறவரா நீங்கள்? இந்தக் கட்டுரை உங்களுக்கானது தான்.

கேள்வி : என் வாழ்வில் ஒவ்வொன்றையும் நான் திட்டமிட்டுத்தான் செய்கிறேன். ஆனால் எத்தனை திட்டமிட்டாலும் நான் விரும்பும்படி எதுவும் நடப்பதில்லை. நான் என்ன செய்வது?

திட்டம் என்பது மனதில் உருவாக்குவது. ஆனால் கைகளில் என்ன இருக்கிறதோ, அதை வைத்துத்தான் நீங்கள் வேலை செய்யமுடியும். எவ்வளவு நேரம் திட்டமிடுவது, எவ்வளவு நேரம் வேலை செய்வது என்பதெல்லாம் அவரவரின் வாழ்வைப் பொறுத்து ஒவ்வொருவரும் முடிவுசெய்ய வேண்டும். நீங்கள் செயற்திட்டக் குழுவின் அங்கமாக இருந்தால் திட்டமிடுவதை மட்டுமே நீங்கள் செய்வீர்கள்… ஏனெனில் அதுமட்டும்தான் உங்கள் வேலை. அதற்குத் தேவையான செயல்களைச் செய்து, அதை நிறைவேற்றுவது வேறொருவரின் வேலை.

உங்கள் வேலை எப்படிப்பட்டதாக இருந்தாலும், வாழ்வைப் பொறுத்தவரை நீங்கள் இந்தநொடியில், இந்தக்கணத்தில், இப்போது மட்டும்தான் எதையும் செய்யமுடியும். இப்போது தான் சாப்பிடமுடியும், இப்போது தான் சுவாசிக்கமுடியும், இப்போது தான் வாழமுடியும். திட்டமிடுவதும் கூட, நீங்கள் இப்போதுதான் செய்யமுடியும். நீங்கள் நாளை பற்றி திட்டமிடலாம், ஆனால் ‘நாளைய நாளை’ திட்டமிட முடியாது.

வாழ்க்கை நாம் திட்டமிட்டபடிதான் நடக்கவேண்டுமா?

திட்டம் என்பது நம் மனத்தில் உருவாகும் ஒரு யோசனை… அவ்வளவுதான். அதுவும் அது நாம் ஏற்கனவே அறிந்திருப்பவற்றில் இருந்தே தோன்றுகிறது. என்னவொன்று, அது கடந்தகாலத்தின் மேம்படுத்தப்பட்ட அச்சு. அதாவது கடந்தகாலத்தின் ஏதோவொரு நிகழ்வை எடுத்து, அதை மெருகேற்றுவது போன்றது. இது வாழ்வை வாழ்வதற்கு பரிதாபமான வழி. அப்படியென்றால் வாழ்வில் திட்டமிடக்கூடாதா? அப்படியல்ல. திட்டங்கள் வேண்டும்தான். ஆனால் அந்தத் திட்டத்தின்படி மட்டும் உங்கள் வாழ்க்கை நடந்தால், நீங்கள் மிகவும் பரிதாபமான வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். ஏனெனில், வாழ்க்கை என்பது நீங்கள் கற்பனை கூட செய்திராத விதத்தில் நடக்கவேண்டும்.

வாழ்வின் சாத்தியங்கள் கணக்கிலடங்காது. அந்த அளவிற்கு யாருமே திட்டமிட முடியாது. உங்கள் திட்டங்களை காப்பீட்டுத்திட்டம் போல் வைத்துக்கொள்ளுங்கள்… ஆனால் வாழ்வை அதன்வழியில் நடக்க அனுமதியுங்கள். இப்போது இருக்கும் நிலையில் அது வழங்கும் சாத்தியங்களை ஆராய்ந்து பாருங்கள். எப்படிப்பட்ட கதவுகள் வேண்டுமானாலும் திறக்க வாய்ப்பிருக்கிறது. இதுவரை எந்த மனிதருக்கும் நிகழ்ந்திராத ஏதோவொன்றும் கூட உங்களுக்கு நிகழலாம்.

ஆனால் நீங்கள் திட்டமிட்டபடி வாழ்க்கை நடக்கும்போது, இதுவரை இவ்வுலகில் நடந்த அதே அபத்தமான விஷயங்கள்தான் உங்களுக்கும் நடக்கும்… புதிதாக எதுவும் நடக்காது. ஏனெனில் திட்டம் என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததிலிருந்தே வருகிறது. கடந்தகாலத்தில் நீங்கள் சேகரித்த விஷயங்கள் மற்றும் அனுபவங்களிலிருந்து வருகிறது.

எந்த அளவிற்குத் திட்டமிடுவது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். எவ்விதத் திட்டமும் இல்லாமல் இருந்தால், நாளை என்ன செய்வதென்றே உங்களுக்குத் தெரியாது. அதனால் எதைத் திட்டமிடுவது, எதைப்பற்றி சிந்திக்காமல் அதன்போக்கில் விட்டு ஆனந்தமாய் வாழ்வது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு ஒரு சமநிலையும், வாழ்க்கை பற்றிய புரிதலும், விவேகமும் தேவைப்படுகிறது.

பெரும்பாலான மனிதர்களின் திட்டங்கள் ஆழமான தொலைநோக்கின் காரணமாய் உருவானவையல்ல. எதிர்பாராததை சந்திக்க அவர்களுக்கு இருக்கும் பயத்தால் உருவானவை. வாழ்வில் மனிதர்களுக்கு இருக்கும் ஒரே துயரம், வாழ்க்கை அவர்கள் விரும்பும் விதத்தில் நடக்கவில்லை என்பதுதான். காலையில் காஃபி வேண்டும் என்று நினைத்தீர்கள், அது வரவில்லை, உடனே துயரத்தில் ஆழ்கிறீர்கள். ஆனால் அதே சமயத்தில் அங்கு அதிஅற்புதமான ஒரு சூரியோதயம் நடந்துகொண்டிருக்கிறது… அதைத் தவறவிடுகிறீர்கள். நீங்கள் நினைத்தது போல் உங்களின் ஏதோவொரு அற்பமான திட்டம்தான் வேலை செய்யவில்லை, ஆனால் பிரம்மாண்டமாக வேறொன்று நடந்து கொண்டிருக்கிறது.

இந்த அண்டவெளியின் விஸ்தாரத்தில், உங்களைச் சுற்றி நிகழும் வாழ்வெனும் நாட்டியத்தில், உங்கள் திட்டம் மிகவும் சிறியது. அதற்கு இத்தனை முக்கியத்துவம் தராதீர்கள். நாளை காலை என்ன செய்வது என்று தெரிவதற்கு நீங்கள் திட்டமிட வேண்டும்தான், ஆனால் அத்திட்டத்தின்படியே உங்கள் வாழ்க்கை நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். இதெல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் வாழ்க்கை எப்போதுமே உங்கள் திட்டம், கற்பனை, எதிர்பார்ப்புகள் என எல்லாவற்றிகும் அப்பாற்பட்டு நடக்கவேண்டும் என்றே கனவு காணுங்கள்.

நன்றி - சத்குரு ஜக்கி வாசுதேவ்

]]>
வாழ்க்கை, plan, life, action, திட்டம், கனவு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/29/w600X390/thittamittapadi-ondrum-nadappathillaiye-nan-enna-seivathu.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/jun/29/nothing-happens-as-per-plan-in-life-2728974.html
2728454 மருத்துவம் மனநல மருத்துவம் பிறருக்காக கவலைப்படுபவர்கள் முதலில் செய்ய வேண்டியது Wednesday, June 28, 2017 01:07 PM +0530 ‘உலகில் இத்தனை பேர் துயரத்தில் இருக்க, நான் மட்டும் எப்படி சந்தோஷத்தில் இருக்கமுடியும்?’ இந்த எண்ணம் பலரின் மனதை உறுத்துவது அவர்களின் மனிதாபிமானத்தை குறிக்கிறது! ஆனாலும், இது துன்பத்தில் இருப்பவருக்கு எந்தவிதத்தில் உதவிடக்கூடும்? அடுத்தவருக்கு உதவ நினைப்பவர்கள் முதலில் செய்யவேண்டியது என்ன? 

'முதலாளித்துவம்’ நிறைந்த நமது சமூகத்தில், லாப நோக்குடன் தான் செயல்பட வேண்டியிருக்கிறது. கடையில் பொருள்களைக் குறைந்த விலையில் வாங்கினால், என் சுயநலத்திற்காக, மற்றவர்களின் உழைப்பை சுரண்டுவதாக எண்ணுகிறேன். இதுபோன்ற சமூகங்கள்தான் ஏதோ ஒரு வகையில் உலகில் வன்முறையைத் தூண்டுகின்றன என்று எண்ணுகிறேன். இப்படி நினைக்கும்போது, என்னால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. எனவே நான் என்னைப் பற்றி மட்டும் நினைக்கவும் உலகில் உள்ள மற்ற துயரங்களைப் புறக்கணிக்கவும் என்ன செய்வது?

ஒரு மனிதன், மனிதனாக ‘ஆக’ வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். இங்கு பிறக்கும்போதே ஒருவர் மனிதராகப் பிறப்பதில்லை. மெதுமெதுவாக பண்பட்டு, அவர் மனிதனாக ‘ஆகிறார்’. மனித கருவில் இருந்து பிறப்பதால் மட்டும் நீங்கள் மனிதராவதில்லை. ‘மனிதன்’ என்பது மிக சிக்கலான ஆனால் அழகான ஒன்று. அதை நீங்கள்தான் உருவாக்க வேண்டும். அது உங்கள் பொறுப்பு. உங்கள் தாய் உங்களை அற்புதமான மனிதனாக பெற்றெடுப்பதில்லை. வெறும் ஒரு மூலப்பொருளாகத்தான் பெற்றெடுக்கிறாள். நீங்கள் எவ்வளவு அற்புதமான மனிதராக மாறுகிறீர்கள் என்பது, இந்த உயிரை நீங்கள் எப்படி நடத்திக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்து தான் அமைகிறது. ஆக, அடுத்தவரின் துயரத்தை உணர ஆரம்பித்து இருக்கிறீர்கள். இது நல்லது தான். ‘மனிதனாகும்’ பாதையில் நடக்க ஆரம்பித்து விட்டீர்கள்.

பாதி உலகம் இன்று துயரத்தில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். வைத்துக் கொள்வது என்ன, அதுதான் உண்மையான நிலை. இப்போது நீங்களும் சந்தோஷமாக இல்லை என்றால், நீங்கள் இருக்கும் பிரச்சினையை அதிகரிக்கிறீர்களா, குறைக்கிறீர்களா? மற்றவர்கள் ஒரு காரணத்திற்காக துயரத்தில் இருந்தால், நீங்கள் வேறொரு காரணத்திற்காக துயரத்தில் இருக்கிறீர்கள். இது இருக்கும் பிரச்சினைக்கான தீர்வல்ல. நீங்கள் பிரச்சினையை இன்னும் பெரிதாக்குகிறீர்கள்.

நீங்கள் ஆனந்தமாய் இருந்து, அழகான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளத் தெரிந்தவராய் இருந்தால்தானே, அடுத்தவருக்கும் அதை அமைத்துக் கொடுக்க முடியும்? உங்களுக்கே ‘சந்தோஷம் என்றால் என்ன’ என்று தெரியாவிட்டால், அதை அடுத்தவருக்கு எப்படி வழங்குவீர்கள்? உங்களை சுற்றி இருக்கும் உயிர்களைப் பற்றி உங்களுக்கு அக்கறை இருந்தால், முதலில் உங்களைப் பற்றி நீங்கள் அக்கறை கொள்ளவேண்டும். உங்கள் உயிர், உங்கள் வாழ்க்கையை உங்களால் சரியாக பார்த்துக் கொள்ளமுடியவில்லை என்றால், அடுத்தவரை நீங்கள் எப்படிப் பார்த்துக் கொள்வீர்கள்? உங்களை மிகச் சிறந்த நிலையில் வைத்துக்கொள்ள உங்களுக்குத் தெரிந்திருந்தால், அடுத்தவரை எப்படி நன்றாக வாழவைக்க வேண்டும் என்பதும் உங்களுக்குத் தெரியும். இல்லையெனில், உங்கள் நல்ல எண்ணங்களைக் கொண்டு, பிறருக்கு இன்னும் பாதிப்பை தான் உண்டு செய்வீர்கள். கெட்ட எண்ணத்தை விட நல்ல எண்ணங்கள் தான் இவ்வுலகிற்கு பெருமளவில் தீங்கு இழைத்திருக்கின்றன.
 
உலகில் வாழும் மற்றவர்களைப் பற்றி நீங்கள் அக்கறை கொண்டுள்ளீர்கள் என்றால், இப்படித்தான் எல்லோரும் இருக்க வேண்டும், இவற்றில் எது சிறந்தது: அவர்களையும் உங்களாகவே நினைத்து, அவர்கள் மீது அக்கறை கொள்வதா? அவர்களை ‘மற்றவர்’களாக எண்ணி விட்டுவிடுவதா? உங்கள் மீது நீங்கள் எப்படி அக்கறை கொள்கிறீர்களோ, அதேவிதமாக எல்லோர் மீதும் அக்கறை கொள்வது தானே சிறந்தது? அப்படியென்றால் இந்த உயிரை (உங்களை) முதலில் சரிசெய்து கொள்ளாமல், அந்த உயிரை (மற்றவரை) நீங்கள் சரி செய்யச்சென்றால், அது உங்களுக்கு புத்தி சொல்லும், ‘முதலில் உன்னை நீ சரியாக வைத்துக்கொள். நீ இப்படி இருந்து கொண்டு, எனக்கு என்ன முட்டாள்தனத்தை செய்ய நினைக்கிறாய்’ என்று.

எங்கு எதை செய்ய நினைத்தாலும், உடலளவிலும், மனதளவிலும் எந்த நிலையில் இருக்க நீங்கள் விரும்புவீர்கள்? ஆப்பிரிக்க நாட்டின் ஸியரா லியோன் பகுதியில் நாம் சில சமூகநல செயல்கள் செய்து வருகிறோம். உங்களை அவ்விடத்தில் விட்டு, இரண்டு ஆண்டுகள் நேரமும் கொடுத்து, அங்கிருக்கும் நிலையை சரி செய்யுங்கள் என்று சொன்னால், அங்கிருக்கும் பிரச்சினைகளில் நீங்கள் தொலைந்தே போவீர்கள். இதுபோன்ற செயலில் ஈடுபடுவதற்கென்றே, நான்கு ஐந்து வருடங்கள் பயிற்சி மேற்கொண்டு, தங்களை தயார் செய்து கொண்டவர்களை அங்கே சமூகப் பணியில் ஈடுபட அனுப்பியிருக்கிறோம். அங்கு சென்ற மூன்றே மாதங்களில், அவர்கள் அங்கு பெருமளவில் மாற்றம் ஏற்படுத்தினர். ஏனெனில் அவர்களுக்கு தங்களை எப்படி பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும் தெரியும், அங்கிருப்பவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதும் தெரியும். இந்த அளவிற்கு உங்கள் திறனை வளர்த்துக் கொள்ள நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். இப்படி இல்லாமல், அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு, இருக்கும் சூழ்நிலையை சரிசெய்யப் பார்த்தால், அந்தப் பிரச்சினையில் நீங்கள் தொலைந்து போவீர்கள்.

ஒரு மாற்றத்தை உருவாக்க நினைத்தால், நல்ல எண்ணங்கள் மட்டும் போதாது, அதை நிகழ்த்துவதற்குத் தேவையான திறனும் வேண்டும். இல்லையென்றால் ஒன்றுமே நடக்காது. வீட்டிலே சும்மா உட்கார்ந்து கொண்டு எல்லாவற்றையும் குறை கூறிக் கொண்டிருக்க வேண்டியது தான். உண்மையிலேயே ஏதோ ஒன்று செய்ய நினைத்தால், முதலில் உங்கள் திறனை எப்படி வளர்த்துக் கொள்வது எனப் பார்த்து, உங்கள் வாழ்வை நல்ல நிலையில் நீங்கள் நடத்திக் கொள்ளவேண்டும். உங்களை நல்ல நிலையில் வைத்துக் கொள்ளாமல், மற்றவருக்கு நீங்கள் என்ன நல்லது செய்துவிட முடியும்? ஒவ்வொரு டீக்கடையிலும் அமர்ந்துகொண்டு, இந்நாட்டை எப்படி நடத்த வேண்டும் என்று பேசுகிறவர்கள் ஏராளம். அவர்கள் பிரதமருக்கு ஆலோசனை சொல்கிறார்கள், டென்டுல்கர் எப்படி மட்டை பிடித்து ஆட வேண்டும் என்று அவருக்கு பயிற்சியாளராகவும் ஆகிவிடுகிறார்கள். அங்கேயே, அந்த டீக்கடையிலேயே, புரட்சிகள் பல செய்து உலகத்தை மாற்றுகிறார்கள்… என்ன, டீ முடிந்தவுடன், புரட்சிகளும் அங்கேயே, அக்கணமே முடிந்து போகிறது. வெறும் அக்கறையும், உணர்ச்சிவசப் படுவதும் மட்டும் போதாது. நம் திறனை வளர்த்துக் கொண்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும். உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள நீங்கள் நேரம் ஒதுக்காவிட்டால், இவ்வுலகின் நிலை மேன்மேலும் மோசமாகிக் கொண்டே தான் இருக்கும்.

மனித இனத்தின் மீது உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கிறது என்றால், முதலில் உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். உங்களை எந்த மாதிரியான கடினமான சூழ்நிலையில் வைத்தாலும், நீங்கள் உடைந்து போக மாட்டீர்கள், தூள் தூளாக நொறுங்கிப் போக மாட்டீர்கள் என்ற அளவிற்கு உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் முழுத் திறனிற்கு நீங்கள் செயல்படுவீர்கள். அதனால், முதலில் உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்குத் தான் யோகா – உங்களை நீங்களே வளர்த்துக் கொள்வதற்கான தொழில்நுட்பம்.

நன்றி - சத்குரு

]]>
Worries, mental health, கவலை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/28/w600X390/pirarukkaga-kavalaippadubavargal-muthalil-seyya-vendiyathu.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/jun/28/stop-worrying-start-living-2728454.html
2727958 மருத்துவம் மனநல மருத்துவம் பதின் வயதில் இப்படித்தான் நடந்து கொள்வார்கள்! உமா பார்வதி Tuesday, June 27, 2017 04:31 PM +0530 சென்னையில் கடும் கோடை முடிந்த நிலையில் சில்லென்று காற்றடிக்கும் ஒரு மாலை. அண்ணாநகர் டவர் பார்க்குக்குச் சென்றிருந்தேன். வெகு நாள் கழித்து ஒரு தோழியை அங்கு சந்தித்ததும் மகிழ்ச்சி ரெட்டிப்பானது. ஆனால் தோழியோ எதையோ பறிகொடுத்தது போன்ற முகபாவத்தில் இருந்தாள். என்னவென்று கேட்கவே மடை திறந்த வெள்ளம் போல் தன் பிரச்னைகளை கொட்டித் தீர்த்தாள்.

'மகளுக்கு பதினைந்து வயது ஆகிறது. எப்போதும் சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபப்படுகிறாள். நன்றாகப் படிப்பதால் கம்யூட்டர் முதல் அவள் கேட்ட லேட்டஸ்ட் செல்போன் வரை வாங்கிக் கொடுத்துள்ளோம். ஆனால் இவள் எவ்வளவு தூரம் எடுத்துச் சொல்லியும் தூங்கும் வரை காதில் ஹெட் போன் மாட்டிக் கொண்டு பாடல்கள் கேட்கிறாள். தினமும் தூங்க இரவு பதினொன்றுக்கு மேல் ஆகிறது. காலை ஏழு மணிக்கு ஸ்கூலுக்கு கிளம்ப வேண்டும், சீக்கிரம் தூங்கும்மா என்றால் அதற்கும் ஒரு கோபம். கொஞ்சம் அதட்டினாலும் முகம் சிவந்துவிடும். பொதுவாகவே சாப்பாடு ரொம்பக் குறைவு. டிபன், ஜூஸ், ஸ்னாக்ஸ் இருந்தால் போதும். நாங்கள் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்துவிட்டோம், கோபப்பட்டும் சொல்லிவிட்டோம், ஆனால் எதற்கும் அவள் கேட்பதில்லை. அதற்கு மேல் எதாவது சொல்லிவிட்டால், எனக்கு இந்த வீட்டிலே இருக்கவே பிடிக்கலை என்கிறாள். தாத்தா பாட்டி வீடு அடுத்த ப்ளாட்டில் எப்போதும் அங்கு தான் இருப்பாள். ஆனாலும் லோன்லி என்ற வார்த்தையை அடிக்கடி சொல்கிறாள். கஷ்டமாக இருந்தாலும் இதை அவள் தந்திரமாகத் தான் பயன்படுத்துகிறாள் என்று புரிகிறது. இவளை எப்படி வளர்ப்பது, பேசாமல் வேலையை விட்டுவிடலாமா என்று பெரும் குழப்பத்தில் இருக்கிறேன். என்ன பண்றதுன்னே தெரியலை என்று அலுத்துக் கொண்டாள்.

இது அவளுடைய தனிப்பட்ட பிரச்னை மட்டுமில்லை. இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் இப்படித்தான் இருக்கிறார்கள். பத்திரிகை வேலையில் சில மன நல மருத்துவர்களை சந்தித்து அவர்களிடம் இது குறித்துப் பேசிய அனுபவத்தின் சாரத்தை மற்றும் எனக்குத் தெரிந்த சிலவற்றையும் அவளிடம் பகிர்ந்து கொண்டேன்.  

'அம்மா மகளுக்கு இடையில் எப்போதும் புரிதல் இருக்க வேண்டும். எவ்வளவு பிஸியாக இருந்தாலும் குழந்தைகளுக்கான நேரத்தை ஒருபோதும் குறைக்கக் கூடாது. அரை மணி நேரமாக இருந்தாலும் கூட, அதை குவாலிட்டி டைமாக அவர்களுடன் செலவழிக்க வேண்டும். முக்கியமான ஸ்கூல் விஷயங்கள், அவர்களுடைய தோழமைகளைப் பற்றி, டீச்சர்கள் பற்றி பேசி, அவர்களுடைய பிரதானமான விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும். அவர்கள் உங்களிடம் பேசும் போது ஆர்வமாகக் கேட்டு தேவைப்படுமாயின், உங்கள் கருத்துக்கள் ஆலோசனைகளையும் சொல்லலாம். உங்கள் மகளை ஒரு நாள் பார்க் அல்லது பீச் அழைத்துச் சென்று மனம் விட்டுப் பேசுங்கள். வேலையை விட்டு விடலாமா என்று அவளிடமே அட்வைஸ் கேளுங்கள் (சும்மாவாச்சும்). அவளுக்கு 15 வயது, தன்னைப் பார்த்துக் கொள்வாள், தவிர பாட்டி வீடும் அருகில் உள்ளது என்கிறீர்கள். வேலையின் முக்கியத்துவம் நிச்சயம் அவளுக்கும் தெரிந்திருக்கும். எனவே வேலையை விடச் சொல்ல மாட்டாள்.

பிள்ளைகள் மீது நம்பிக்கை தேவை தான் ஆனால் அதற்காக சுதந்திரம் கொடுக்கிறேன் என்று அவர்களை கண்டும் காணாமல் இருந்துவிடக் கூடாது. அதற்கென்று ஒரேடியாக கண்டிப்புடனும் இருக்க வேண்டாம். பாலன்ஸ் செய்து அவர்கள் போக்கில் போகத் தெரிந்திருக்க வேண்டும். தனி அறையில் கம்ப்யூட்டர் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம். ஹாலில் அல்லது டைனிங் ரூமில் வைத்திருக்க வேண்டும். அவ்வப்போது அவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்களின் நட்பு வட்டம் எத்தகையது எங்கு போகிறார்கள், ஃபோனில் யாரிடம், எவ்வளவு நேரம் பேசுகிறார்கள் என்பதை எல்லாம் நிச்சயம் கவனிக்க வேண்டும். இது கண்காணிப்பாக நினைக்க வேண்டாம். இவை குழந்தைகள் மீதான சந்தேகமும் இல்லை. பெற்றோரின் கடமை.

சில குழந்தைகள் கோபத்தை ஒரு ஸ்டைலாகவே நினைத்துக் கொள்கிறார்கள். அதை கேஷுவலாக எதிர்கொள்ளுங்கள். தீவிரமான கோபமாக இருந்து பொருட்களை தூக்கி எறியும் அளவிற்கு அவர்கள் போனால் நிச்சயம் கவுன்சிலிங் தேவைப்படும். இந்த வயதில் சாப்பாடு விஷயம் அவர்களுக்கு கசப்பு தான். பிடித்த உணவை, சத்தான ரெசிபிக்களை செய்து கொடுங்கள்.

தாத்தா பாட்டி அருகில் இருப்பதால் நிச்சயம் தனிமையாக அவள் இல்லை உங்களை குற்றவுணர்வுக்கு உட்படுத்த அப்படிச் சொல்லலாம். இத்தகைய எமோஷனல் ப்ளாக்மெயில்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். ஆரம்பத்திலேயே இப்பழக்கத்தை முளை விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை என்று ஒரு பெண் குழந்தை சொல்லும் போது அதை முழுவதும் நிராகரிக்கக் கூடாது. இது வேறு எதாவது பிரச்னையில் க்ளூவாக இருக்கலாம். ஏன் பிடிக்கவில்லை என்ன நடந்தது என்பதை அன்பும் அணுசரணையுடன் கேட்டுப் பாருங்கள், பிரச்னை சாதாரணமாக இருந்தால் இதுக்குப் போயா இவ்வளவு டென்ஷன் என்று அவள் மனம் புண்படும்படி எதுவும் சொல்ல வேண்டாம். நம்முடைய மெச்சூரிட்டி லெவல் வேறு அவர்களின் மெச்சூரிட்டு வேறு என்ற வித்யாசத்தை நாம் உணர வேண்டும். வேறு எதாவது சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்தால் உடனடியாக அவளிடம் கோபத்தைக் காண்பிக்க வேண்டாம். தெளிவாக யோசித்து அதற்கான தீர்வை தேடித் தாருங்கள். பெற்றோர்களுக்கு சகிப்புத் தன்மையும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் அதிகம் தேவை.

நம்முடைய குழந்தைகளின் சந்தோஷம் தானே நம்முடைய சந்தோஷமும்?'

]]>
Teen talk, Teen age problems, பதின் வயது பிரச்னைகள், டீன் ஏஜ் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/27/w600X390/iStock_Teenager_with_mom_and_laptop_XSmall.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/jun/27/teen-problems-and-solutions-2727958.html
2727437 மருத்துவம் மனநல மருத்துவம் ஆண்களுக்காக ஒரு ஆராய்ச்சி! பெண்கள் படிக்க வேண்டாம்! ராம் கிஷோர் Monday, June 26, 2017 04:24 PM +0530 உலகில் எந்த பிரச்னைக்கும் தீர்வு கண்டு பிடித்துவிடலாம் ஆனால் ஆண் பெண் உறவில் ஏற்படும் சிக்கல்களுக்கும் பிரச்னைகளுக்கும் முடிவென்பதே கிடையாது. 'கல்யாணமா அது ஒரு ஜெயில் வாழ்க்கை' என்று ஆண்களும், 'இப்ப கல்யாணத்துக்கு என்ன அவசரம்' என்று கூடுமானவரை அதை ஒத்திப் போடுவதில் பெண்களும் திருமண வாழ்க்கையை ஒவ்வாமையாக நினைத்து ஒதுக்குகிறார்கள் அல்லது தள்ளிப் போடுகிறார்கள். ஆனால் உண்மையில் பெண்களை விட ஆண்களுக்கு திருமண வாழ்க்கை மன அழுத்தத்தைக் குறைக்கிறது என்கிறது ஒரு ஆராய்ச்சி. 

திருமணம் முடிந்து சில மாதங்கள் வரை பலருக்கு வாழ்க்கை அழகாக போய்க் கொண்டிருக்கும். ஆனால் நாளாக ஆக ஒருவர் மற்றவரை குறை சொல்லத் தொடங்கி மெல்ல பிரச்னைகள் வேர் விடத் தொடங்கும். அது பெரிதாகி ஒரு கட்டத்தில் சண்டை சச்சரவு என்பது வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிப்போய்விடும். கணவன் மனைவி ஜோக்ஸ், மீம்ஸ்கள் உருவாக்குவது ஆண்கள் தான் அதிகம். மிக சிலர் தவிர்த்து பெரும்பாலனவர்களுக்கு திருமண வாழ்க்கை என்பது பெரிய அட்ஜெஸ்ட்மெண்ட் தான். வேறு வழியில்லாமல் ஒரே கூரையின் கீழ் வாழும் தம்பதியினர் தான் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.

தற்போதைய சூழலில் பிடிக்காத உறவுக்குள் யாரும் இருக்க விரும்பாத நிலையில் விவாகரத்து வழக்குகள் பெருகி வருகின்றன. விவாகரத்துக்குப் பின் பெண்கள் கூட ஓரளவுக்கு மீண்டு வருகின்றனர். ஆனால் ஆண்கள் சற்று அதிகம் பாதிப்படைகிறார்கள். எனவே ஆண்களை ரிலாக்ஸ் செய்வது திருமண உறவு தான் என்று இந்த ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. எந்த வயதிலும் பெண்களை விட ஆண்கள்தான் தாம்பத்திய வாழ்க்கையில் அதிக சுகமும்,  சந்தோஷமும் அடைகிறார்கள் என்று மேலும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. 

ஆனால் பெண்களின் நிலை இதற்கு நேர்மாறாகவே உள்ளது. திருமணமான பெண்களை விட தனியே வாழும் பெண்கள்தான் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்கிறது ஆராய்ச்சி. வயதான காலத்தில் கணவருக்கு முன்னால் மனைவி இறந்துவிட்டால் பெரும்பாலான கணவர்கள் அந்த வாழ்க்கையை, மனைவி இல்லாத தனிமையை எதிர்கொள்வதில் கஷ்டப்படுகிறார்கள். காரணம் அவர்களின் ஒவ்வொரு தேவையையும் மனைவியே பூர்த்தி செய்பவராக இருந்துள்ளார். அவரின் மறைவுக்குப்  பின்னால் இவர்கள் எந்த வேலையும் செய்யத் தெரியாதவர்களாக பிள்ளைகளிடம் சார்ந்து வாழ்பவர்களாக இருக்க நேரிடுகிறது. பல முதியோர்கள் மனைவி இறந்த ஒரு சில ஆண்டுகளில் இறப்பதும் தனிமை போன்ற பிரச்னைகளால் தான்.

ஆனால், பெண்களைப் பொருத்தவரை கணவனை இழந்த பின்னரும் பல காலம் வாழ்வார்கள். குடும்பத்தைப் பேணி தன் குழந்தைகளையும் நன்றாக வளர்த்து படிக்க வைத்து, ஆளாக்கிவிடுவார்கள். பிள்ளைகள் பிரிந்து அவரவர் வழியே சென்றாலும் பெண்களை பொருத்தவரையில் தனிமை ஒரு பெரிய பிரச்னையாக இருப்பதில்லை. அக்கம் பக்கத்து பெண்களிடம் நட்புறவு பாராட்டி எப்படியோ தங்கள் காலத்தை சந்தோஷமாகவே கழித்துவிடுகிறார்கள். வோல்கா எழுதிய ‘துணை’ என்ற பிரபலமான சிறுகதையின் கதை இதற்குச் சான்று. 

உடலுறவு பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகள் Sex In America என்ற பெயரில் பெரிய புத்தகமாக 1994-ல் வெளியானது. அதில்  ஒரு கட்டுரையில் செக்ஸ் வாழ்க்கையில் அதிக சந்தோஷம் யாருக்குக் கிடைக்கிறது என்ற கேள்விக்கு 88 சதவிகிதம்  திருமணமானவர்கள்தான்  என்று கூறப்பட்டுள்ளது. எனவே திருமண உறவுதான் 100 சதவிகிதம் வெற்றி பெறும் என முடிவாக சொல்லிவிட முடியாது. அது அவரவர் வாழ்க்கை. திருமணத்தைப் பொருத்தவரை வெற்றி, தோல்வி என்பது சம்பந்தப்பட்ட தம்பதியரைப் பொருத்துதான் அமையும்

]]>
Men woman relationship, ஆண்கள், திருமண பிரச்னைகள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/26/w600X390/bad-relationshi.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/jun/26/marriage-life-is-good-for-men-2727437.html
2727387 மருத்துவம் மனநல மருத்துவம் ஃபேஸ்புக்கில் தேவையா? உமா பார்வதி Monday, June 26, 2017 01:20 PM +0530 சமீப காலங்களாக மனிதர்களின் வாழ்க்கை மிகவும் சுருங்கிப் போய்விட்டது. பெரும்பாலான மனிதர்கள் தங்கள் மொபைல் போனில் புதைந்து போய் விட்டனர். வெளியுலகில் நடமாடினாலும் மெய் நிகர் உலகில் தான் அவர்களின் இருப்பு. தொழில்நுட்பம் ஒன்றிற்கு இந்தளவுக்கு அவர்கள் அடிமையாகிப் போனது பெரும் சோகம். நான் இப்போது பூமியிலிருது 30,000 அடி உயரத்தில் இருக்கிறேன், இப்படி திருமண வாழ்வில் சிக்கிக் கொண்டாலும் சந்தோஷமாகவே இருக்கிறேன்...இன்று எனக்குத் மண நாள், இன்று சாப்பிட்ட தாஹி பூரியில் தயிர் ஒரே புளிப்பு, தோழிகளுடன் கடைகளுக்கு சென்று நான்கு கம்மல் வாங்கினேன் - இப்படி இன்னும் பல தகவல்கள் சொந்த விஷயங்களை ஃபேஸ்புக்கில் புகைப்படத்துடன் பதிவிடுவதில் என்ன கிடைக்கிறது?

நம் மனங்களில் எழும் எண்ணங்கள் அனைத்தையும் ஃபேஸ்புக் அல்லது வலைத்தளத்தில் பதிந்தாக வேண்டும் என்பது என்ன மாதிரியான மனநிலை? மகத்தான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் போதும், புதிய சிந்தனை அலைகளை எழுப்ப முடிகிறது எனில் அதை வெளிப்படுத்த இத்தகைய ஊடகத்தைப் பயன்படுத்தலாம். தவிர செய்திகளை மின்னல் வேகத்தில் தெரிவிக்கவும் ஒரு செய்தியைப் பற்றிய நமது பார்வையை பதிவிடவும் ஆக்கபூர்வமான விஷயங்களை எழுதுவதற்கும் ஃபேஸ்புக்கை பயன்படுத்தினால் நல்லது. ஆனால் நொடிக்கொருதரம் புகைப்படத்தை பகிரவும், மேற்கூறிய அர்த்தமற்ற, பயனற்ற குறிப்புக்களை பகிர்ந்து கொள்ளவும் நமக்கு பிரத்யேகமான டைரி போதுமானது, ஃபேஸ்புக் எதற்கு. பொருளற்ற பதிவுகளை எழுதிவிட்டு அதற்கு லைக்ஸ் வரவில்லை என்றால் மனம் உடைந்து போகிறவர்கள் எத்தனை எத்தனை பேர்? 

சமூக இணையதளங்களில் எழுதுவதன் மூலமும் தங்கள் கருத்துக்களை பதிவிடுவதன் மூலமும் ஒவ்வொரு நபரும் ஒரு நடமாடும் ஊடகமாகவே தங்களை நினைத்துக் கொள்கிறார்கள். எல்லாம் சரிதான். ஆனால் ஊடகம் என்பது ஒரு மாபெரும் சக்தி. தனி மனிதனாக ஒரு ஊடக வேலையை யாரும் செய்துவிட முடியாது. டிவிட்டர் மற்றும் முகநூல் பதிவர்களுள் காணப்படும் ஒரு நோய்க்கூறு எதையும் ஆராயமல் அப்படியே ஒரு விஷயத்தை வலையேற்றிவிடுவார்கள். இன்னார் இறந்தார் என்று எங்கேனும் ஒரு புரளி கேட்டால் போதும் தாங்கள் தான் முதன்முதலில் அந்தச் செய்தியை தரவேண்டும் என்ற அவசரத்தில் அச்செய்தியை உறுதி செய்யாமலேயே பதிவிட்டுவிடுவார்கள். சம்மந்தப்பட்ட நபர் நான் இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன் என்று கதறி மறுப்பு தெரிவித்தாலும் இவர்களைப் பொருத்தவரை போட்ட பதிவை அழிப்பார்களே தவிர அதற்கான மன்னிப்பு கோருதலோ அல்லது மனம் வருந்துவதோ இல்லை. எல்லாவற்றையும் செய்தியாகப் பார்ப்பதும், இன்று எதைப் பற்றி எழுதலாம் என்று சப்ஜெக்ட் தேடுவதும் இவர்களுக்கு பொழுதுபோக்கு. ஊடகம் செய்யும் வேலையை தனி நபர்கள் செய்ய முனையும் போது இத்தகைய அபத்தங்கள் நிகழ்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க, வைரல் என்ற வார்த்தை சமீப காலமாக மிகவும் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அதென்ன வைரல் என்று பார்த்தால் ஒரே விஷயத்தை சுற்றி சுற்றி வலைத்தளம் முழுக்க பரவ வைப்பதும், அதிகம் லைக் ஷேர் வாங்கிய ஒரு பதிவு ட்ரெண்ட் ஆகி அனைவரும் படிக்கப்பட்ட அல்ல பார்க்கப்பட்ட ஒரு பகிர்வு தான் வைரலாகிறது. முன்பெல்லாம் ஊடகங்கள் பிரபலங்களிடம் தேதி வாங்கி அவர்களின் நேர்காணலை சில எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்களுடன் தங்கள் பத்திரிகையில் வெளியிடுவார்கள். இப்போதெல்லாம் பிரபலங்களே தங்கள் டிவிட்டர் / இன்ஸ்டாகிராம் பக்கங்களிலிருந்து தங்களைப் பற்றி அவ்வப்போது செய்திகளையும் நிறைய புகைப்படங்களையும் வெளியிட்டு நெட்டிசன்களின் தேவைகளை நேரடியாகப் பூர்த்தி செய்துவிடுகிறார்கள். பத்திரிகைகளுக்கு வேறு வழியில்லாமல் பிரபலங்கள் வெளியிட்ட அதே புகைப்படங்களை மறு வெளியீடு செய்து இணைய வசதியில்லாத வாசகர்களின் பார்வைக்கும் கவனத்திற்கும் கொண்டு வருவதை கடமையாகச் செய்கிறார்கள். 

நம் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதில் நம் கவனம் இருக்க வேண்டுமே தவிர தேவையற்ற விஷயங்களில் சிக்கி, அடுத்தவர்களையும் அதைப் படிக்க வைப்பது எந்த வகையிலும் சரியில்லை. ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை ஒவ்வொரு விதம். நம்முடைய அனுபவங்கள் நமக்கானது மற்றவர்களுடையதும் அவ்வாறே. எனவே அடுத்தவர்களின் அனுபவங்களைப் படித்து நம் நேரத்தை ஏன் வீண் செய்யவேண்டும்? நம்முடைய வாழ்வானுபவத்தின் அளவு, நாம் எந்த அளவுக்கு ஒரு விஷயத்தை தீவிரத்துடன் அணுகிறோம் என்பதைப் பொருத்து அமைவது. தீவிரம் என்பது தன்னால் வராது. நம் வாழ்க்கையின் மின்சாரத்தை உயர்த்தாமல், நாம் விழிப்புணர்வுள்ளவர்களாக மாறமுடியாது. அப்படிப்பட்ட தீவிரத்தை அதிகரிக்க, நாம் முயற்சி செய்ய வேண்டியது தான் முக்கியமே தவிர முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் மல்லு கட்டுவது அல்ல. அது நம்மை நீர்த்துப் போகச் செய்துவிடும். எழுதலாம், நிச்சயம் அதில் தவறு இல்லை. ஆனால் நாம் எழுதியதை நாமே சிலாகித்துக் கொண்டு அதைப் படிப்பவர்களை நண்பர்களாகவும் படிக்காதவர்களை முட்டாள் என்றும், எதிர்ப்பவர்களை எதிரி என்றும் நினைக்கும் மனநிலை ஆபத்தானது. உளரீதியான பிரச்னைகளுக்குள் நம்மை அமிழ்த்திவிடும். விரைவில் மனச் சோர்வு ஏற்பட்டு வாழ்க்கையே சலித்துவிடும் நிலைக்குத் தள்ளப்படுவோம். எனவே நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்றால் சலிக்காத வாழ்க்கை நிலையினை அமைத்துக் கொள்ள வேண்டும்.

தீவிரமாக சிந்தித்துப் பாருங்கள் நம்மை நம்மிலிருந்து வேறுபடுத்திவிடும் மெய்நிகர் உலகம் தேவைதானா?

]]>
முகநூல் , ஃபேஸ்புக், Facebook addiction http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/26/w600X390/n-FACEBOOK-ADDICTION-628x314.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/jun/26/facebook-addiction-2727387.html
2726003 மருத்துவம் மனநல மருத்துவம் மக்களை சரியான திசையில் செலுத்த என்ன வழி? Friday, June 23, 2017 11:08 AM +0530 'கோபப்படுவதால் ஏதேனும் செயல் நடந்தால், ஏன் கோபப்படக் கூடாது?! புரட்சி நடக்கணும்னா கோபம் அவசியம்தானே!' இது ஏதோ சரியான வாதம்போல தோன்றலாம்! அப்படித்தான் நடிகர் சித்தார்த்தும் கோபம் தொடர்பான தனது முதல் கேள்வியை சத்குருவிடம் கேட்கிறார். ஆனால் சத்குரு கூறிய பதிலோ முற்றிலும் மாறுபட்டது. அந்த பதிலை அறிய தொடர்ந்து படியுங்கள்!

சித்தார்த்: இன்றைய தலைப்பு 'இளைஞர்களும் உண்மையும்.' எந்த பகுதி இளைஞர், எந்த பகுதி உண்மை என்று நாம் சற்று முன் விவாதித்துக் கொண்டிருந்தோம். 

சத்குரு: நீங்கள் இளைஞர், நான் உண்மை! சித்தார்த்: அப்போ இந்த மாலையில் நான் இளைஞனாக இருக்கிறேன். 

சத்குரு: ஆனால் நான் இளைஞனும் ஆவேன். 

சித்தார்த்: இளைஞன் என்று உங்களை சொல்வது குறைத்து மதிப்பிடுவது ஆகிவிடும் சத்குரு. இளைஞர்களுக்கு கேள்விகள் ஏராளமாக இருக்கின்றன. இந்த தேசத்தில் ஒரு இளைஞனாக எனக்கு இருக்கும் ஒரு அடிப்படை கேள்வி கோபம் குறித்தது. எங்களில் பலருக்கும் அதிகமாக கோபம் இருக்கிறது. இறுதியில் அதை வைத்து என்ன செய்வதென்றும் தெரிவதில்லை.

'நீங்கள் ஆவேசத்தை விட்டால் எங்களில் ஒருவர்' என்பேன் நான். ஒருவரின் உள்நிலை என்ற ரீதியில் பார்த்தால் கோபத்தின் பங்கு என்ன?  எனக்கு இருக்கும் அடிப்படை புரிதல் என்ன என்றால் இந்த தேசத்தில் இப்பொழுது இளைஞர்களுக்கு இருக்கும் கோபம் போதாது, இன்னும் அதிகமாக கோபம் தேவை, கோபம் வெளிப்பட வேண்டும் என்பதே. நெறிப்படுத்தப்பட்ட கோபம் வெளிப்பட்டால் இந்திய தேசத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு குறிப்பிடத்தக்க தீர்வுகள் கிடைக்குமா?

சத்குரு: இளைஞர்கள் ஆவேசத்தில் இருப்பது ஒரு தீர்வு இல்லை. தொழில், வேலை, பணம் போன்ற அம்சங்களை பார்த்து இளைஞர்கள் வளரும் காலகட்டம் இது. சே குவேரா, 'நீங்கள் ஆவேசத்தில் இருந்தால் எங்களில் ஒருவர்' என்றார். ஆனால், 'நீங்கள் ஆவேசத்தை விட்டால் எங்களில் ஒருவர்' என்பேன் நான். ஏனென்றால் கோபம் கொள்ளும் பொழுது நீங்கள் உலகத்தை பிரிக்கிறீர்கள். ஏதோ ஒன்றின் மீது கோபம் கொண்டால் பாதி உலகத்தை, ஏன் முழு உலகத்தையும் அழித்துவிட நினைப்பீர்கள். இது தீர்வு அல்ல! இது ஒரு வலுவிழந்த மனிதனின் கருவி. சிறிது காலத்துக்கு பின் இது எந்த பலனும் இல்லாது குளிர்ந்து போகும். 

சித்தார்த்: உதவி செய்யும் தேவையில் எழும் கோபம் விளைவு ஏற்படுத்துமா? 

சத்குரு: ஒரு சூழ்நிலையை உங்களால் கையாள முடியவில்லை என்று வரும்பொழுதுதான் கோபம் வருகிறது. ஆனால் ஒரு சில சந்தர்ப்பங்களில், உங்கள் கோபத்தால் சில விஷயங்கள் நடப்பதை, மனிதர்கள் செயல்படுவதை நீங்கள் ருசித்துவிட்டீர்கள். எனவே இதுவே வழி என்று நினைத்து விட்டீர்கள். உங்களுக்கு ஏதோ ஒன்றை யாரோ கோபமாக சொன்னால் பிடிப்பதில்லை. ஆனால் உலகத்துக்கான தீர்வாக இந்த கோபத்தை நினைக்கிறீர்கள். அது ஒரு ஆற்றல் இல்லாத மனிதனின் கடைசி அஸ்திரம் அவ்வளவுதான்.

கோபம் இல்லாமல் இருக்க நீங்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். விழிப்புணர்வாக இருந்தால் இணைத்து கொள்வீர்கள். இணைத்துக் கொள்ளும் பொழுது நீங்களே ஒரு தீர்வுதான். நமது புத்திசாலிதனத்தை தீர்வுகள் தேடுவதில் செலவு செய்வதில்லை, அதை பிரச்சனைகள் உருவாக்குவதில் உபயோகப்படுத்துகிறோம்.

உதாரணமாக, டெல்லி சம்பவத்தை எடுத்துக்கொள்ளுங்கள், ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த கொடூரம் அது. அந்த நிகழ்வு பலரை ஆவேசத்தில் தள்ளியது. தினமும் அது போல ஒன்று நிகழ்ந்து கொண்டிருந்தாலும் தலைநகரில் இது போல ஒரு கொடுமை நடந்தது சகித்துக் கொள்ள முடியவில்லை. மக்கள் ஆவேசம் அடைந்தனர். ஒட்டு மொத்த தேசத்தின் கவனம் இதை நோக்கி திரும்பியது. உணர்வினால் மக்கள் எழுச்சி அடையாமல், ஆவேசத்தால் மக்கள் எழுச்சி அடைந்தனர். இது ஒரு நல்ல விஷயம்தான். ஆனால் அந்த ஆவேசத்தால், அதனால் நிகழ்ந்த போராட்டத்தால், விளைவு மோசமாக இருந்திருக்க கூடும். பலர் இறந்திருக்க கூடும். 

எனவே ஒரு பிரச்சனை உருவாக்கி மற்றொரு பிரச்சனைக்கு தீர்வு காண முயல வேண்டாம். உணர்வுகளால் எழுச்சி கொள்வது அற்றுப் போனதால் கோபத்தை ஒரு அறமாக கருத ஆரம்பித்து விட்டோம். ஆனால் அது ஒரு அறம் அல்ல. மனிதனின் தரத்தை தாழ்த்துவது ஆகும். சமூகத்தில் நிலவும் உணர்ச்சி இன்மையால் மனிதன் தரம் தாழ்வது அறம் போல தோன்ற ஆரம்பித்து விட்டது.

*****

கடந்த வாரம்… 'கோபத்தால் இளைஞர்களுக்கு தீர்வு கிடைக்குமா?' என்ற கேள்வியை சத்குருவிடம் முன்வைத்த சித்தார்த், கோபத்தினால்தான் மக்களை தட்டி எழுப்ப முடியும் என்கிறார். இதற்கு சத்குரு என்ன விளக்கம் அளித்தார் என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்…

சித்தார்த்: கோபத்தை விடும் ஒருவர் உங்களில் ஒருவர் என்று சொன்னீர்கள். நான் கோபத்தை விட்டு விட்டேன் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் எரியும் பிரச்சனைகள் பல எனக்கு இருக்கிறது. பல கோடி மக்கள் நிறைந்த தேசத்தில், உங்களைப் போன்ற ஒருவர் இதை எப்படி முடிவாக மாற்றுவார். மக்களை தட்டி எழுப்ப பல ஆண்டுகள் ஆனது போல அவர்களை அமைதிபடுத்தவும் இன்னொரு நூற்றாண்டு ஆகுமா?

சத்குரு: மக்களை தட்டி எழுப்ப முடியும் என்றால் அதை கோபத்தினால் மட்டுமே செய்ய முடியும் என்ற தவறான புரிதல் உங்கள் மனதில், ஏன் பலரின் மனத்திலும் நிலை கொண்டிருக்கிறது. எழுச்சி என்றால் இன்னும் விழிப்பாக இருப்பது தானே. உறக்கம், எழுவது இரண்டுக்கும் உள்ள வித்யாசமே விழிப்புணர்வுதான். நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள், உங்களை கொசு கடிக்கிறது. அது உங்களுக்கு தெரிவதில்லை. அதே ஒரு முதலை கடித்தால் உடனே தெரிந்துவிடும். அப்படியென்றால் நீங்கள் விழிப்பாகதான் இருக்கிறீர்கள் ஆனால் கொசுவை தெரியும் அளவுக்கு விழிப்பாக இல்லை.

அதனால் உறக்கத்தில் இருந்து விழிப்பு என்பது ஒரு ஒரு விதமான விழிப்புணர்வற்ற நிலையில் இருந்து விழிப்புணர்வு நிலைக்கு கடந்து செல்வது. எழுவது என்பது எப்பொழுதும் விழிப்புணர்வு நோக்கி நகர்வதாகவே இருக்க வேண்டும். ஆனால் கோபப்படும் பொழுது நீங்கள் விழிப்புணர்வாக இருப்பதில்லை. முட்டாள்தனமான காரியங்களை செய்கிறீர்கள். இல்லையா?

சித்தார்த்: நான் சில சமயம் கோபத்தில் நல்ல விஷயங்கள் செய்திருக்கிறேன், அது போல அமைதியாக இருந்த ஒரு சில தருணங்களில் மோசமான விஷயங்கள் செய்திருக்கிறேன். ஆனால் இது எனது தனிப்பட்ட அனுபவம்.

சத்குரு: நீங்கள் கோபப்படும் பொழுது உங்களிடம் ஒரு வேகம் இருக்கிறது, உணர்ச்சி இருக்கிறது, தீவிரம் இருக்கிறது. இதற்கு கணிசமான மருத்துவ, அறிவியல் சான்றுகள் மற்றும் மனிதர்கள் அனுபவங்கள் இருக்கிறது. நீங்கள் கோபப்படும் பொழுது இருக்கும் தீவிரத்தோடு அல்லது அதையும் விட பல நூறு மடங்கு தீவிரத்துடன், ஒரு அமைதியான மனதோடு இங்கே இருந்தால் பல அற்புதமான விஷயங்களை நிகழ்த்த முடியும். மக்களை சரியான திசையில் செலுத்த முடியும்.

நன்றி : ஈஷா மையம்

]]>
Anger, Siddharth, Sadhguru, கோபம், சித்தார்த், சத்குரு, ஈஷா http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/23/w600X390/makkalai-sariyana-thisaiyil-selutha-enna-vazhi.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/jun/23/actor-siddharth-meets-sadhguru-jaggi-vasudev-2726003.html
2725474 மருத்துவம் மனநல மருத்துவம் மூளைத்திறன் அதிகரிக்க என்ன செய்யலாம்? Thursday, June 22, 2017 01:23 PM +0530 அபாகஸ் கிளாஸ், மெமரி டானிக், செஸ் விளையாட்டில் களை கட்ட நுண்ணிய வித்தை, நூறு மார்க் வாங்குவதற்கு சிறப்பு ட்யூசன் என மூளையை பட்டை தீட்டிக் கொள்ள வந்த அத்தனை திட்டங்களுக்கும் கிராக்கிதான். ஆனால் தன்னகத்தே வெற்றியின் பார்முலாவைக் கொண்ட இந்த பயிற்சியை மட்டும் நாம் வயோதிகத்திற்கு ஒத்தி வைப்பது ஏன்? இதோ மூளையை தீட்ட ஒரு எளிமையான கோர்ஸ்…

நாம் யோகா என்று சொல்வது, உடற்பயிற்சிகளைப் பற்றியது இல்லை. யோகாவிற்கு பலவிதமான தன்மைகள் உள்ளன. நமது நலவாழ்வை உருவாக்க பலவிதமான கருவிகள் உள்ளன. அவற்றை நாம் யோகா என்று சொல்கிறோம்.

யோகா என்றால் காலையில் சிறிது நேரம் உட்கார்ந்து யோகப் பயிற்சிகளைச் செய்வது என்று இல்லை. நீங்கள் அலுவலகத்திற்குச் சென்றால், அதுவும் ஒரு யோகமாக இருக்க முடியும். எப்படியிருந்தாலும் காலையிலிருந்து மாலைவரை நீங்கள் சுவாசம் செய்கிறீர்கள் இல்லையா? இரவிலும் கூட அது நடக்கிறது. மூச்சை உள்ளே எடுத்து வெளியே விடுவதைக் கூட ஒரு யோகாவாக நீங்கள் செய்ய முடியும்.

எனவே நாள் முழுவதும் நீங்கள் யோகத்தில் இருக்க முடியும். அப்படி இருந்தால் மனஅழுத்தம் என்பது இருக்காது. இதை நாம் பயிற்சியாகச் செய்வதில்லை. வாழ்க்கையின் மிக அடிப்படையான தன்மையை முற்றிலும் மாற்றக்கூடிய ஒரு கருவியாகத்தான் நாம் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

வாழ்வின் சில அம்சங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கான கருவிகள் நவீன விஞ்ஞானத்திடம் இல்லை என்பதாலும், அவற்றைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது என்பதாலும் அப்படிப்பட்ட விஷயங்களே இல்லை என்று நீங்கள் மறுக்க முடியாது. ஆனால் உலகின் மனப்பான்மை தற்போது அப்படித்தான் இருக்கிறது.

இவ்வளவு வருடங்களாக யோகா என்றாலே அனைவரும் குறைத்து மதிப்பிட்டே வந்திருக்கிறார்கள். ஆனால் தற்போது விஞ்ஞானிகள் கூட யோகா என்பது வேலை செய்கிறது என்பதைப் பற்றிப் பேசுகிறார்கள். 

மூளையில் நடக்கும் விநோதம்:

ஈஷா யோகா வகுப்பில் நாம் கற்றுக் கொடுத்திருக்கும் ஷாம்பவி மஹாமுத்ரா என்ற பயிற்சியை மேற்கொண்ட சிலரின் மூளையை டெல்லியில் உள்ள மருத்துவர்கள் சிலர் பரிசோதித்துப் பார்த்தார்கள். அந்தப் பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டவர்களெல்லாம் ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சியை ஏறத்தாழ மூன்று மாதங்களாக தொடர்ந்து செய்து வந்தவர்கள். அந்த பரிசோதனையின் அறிக்கை டெல்லியின் ஐஐடி நிறுவனத்திடமும் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்களது மூளையின் தன்மையைப் பதிவு செய்த படத்தைப் பார்த்த மருத்துவர்களால் நம்பவே முடியவில்லை. ஏனென்றால் அவர்களது மூளையின் செயல்பாடு உச்சபட்சத்தில் இருந்தது. இதற்கு முன்னால் அவர்கள் இப்படிப் பார்த்ததே இல்லை. அவர்களுக்கு ஒரே ஆச்சர்யம். எப்படி இது? இவர்கள் எப்படிப்பட்ட மக்கள் என்று அவர்கள் ஆச்சர்யப்பட்டுப் போனார்கள்.

அவர்கள் தங்கள் மூளையை பயன்படுத்துகிறார்கள்” என்று நான் அவர்களிடம் சொன்னேன். பெரும்பாலான மனிதர்கள் தங்களுடைய மூளையில் 12% மட்டுமே பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்று நவீன விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஏனென்றால் இடது மூளைக்கும் வலது மூளைக்கும் எந்த ஒரு இணக்கமும் இல்லை. போதுமான தொடர்பு இரண்டு பக்க மூளைகளுக்கும் இடையே இல்லை. மூன்று நான்கு மாதப் பயிற்சிகளுக்குப் பின்னால் இந்த இரண்டு பக்க மூளைகளுக்கும் இடையே உள்ள தொடர்பு அதிகரிக்கும்போது அவர்கள் மூளையை உபயோகப்படுத்துவதும் சொல்லிக்கொள்ளும் அளவு அதிகரிக்கிறது.

ஷாம்பவி செய்யும் அற்புதம்:

இன்று உலகிற்குத் தேவை நல்ல மனிதர்கள் இல்லை. நமக்குத் தேவையானவர்கள் அறிவோடு செயல்படும் மனிதர்கள்தான். 12% என்பது சொல்லிக் கொள்ளத்தக்க வகையில் ஒரு நல்ல சதவீதம் இல்லைதானே? உண்மையில் நாம் ஒரு முட்டாள்தனமான மனிதகுலமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால் நமக்குத் தேவையானது அறிவோடு வாழக்கூடிய மக்கள்தான்.
 
மதங்களும் சமூகக் குழுக்களும் எப்போதும் நல்ல மனிதர்களை உருவாக்கவே முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். நல்ல மனிதர்களால்தான் பிரச்சனைகள் உருவாகின்றன. உலகில் இதுவரை நடந்திருக்கும் தீமைகள் எல்லாம் நல்ல மனிதர்களால்தான் செய்யப்பட்டிருக்கின்றன. உங்களுக்குத் தேவைப்படுவது நல்லது அல்ல. உங்களுக்குத் தேவைப்படுவது அறிவோடு செயல்படுவது தான். அறிவோடு செயல்படும் மனிதர்கள் தான். அது நடக்க வேண்டுமானால் அவர்களது புத்திசாலித்தனத்தை உபயோகப்படுத்தும் திறமை அவர்களுக்கு உயரவேண்டும்.

யோகா என்பது அந்தப் பரிமாணத்தில் செயல்படும் ஒர் அற்புதமான கருவி. எனக்கு இது மிக நன்றாகத் தெரியும். அது மட்டுமல்ல பல மனிதர்களுக்கு இதை அனுபவரீதியாகவும் நிரூபித்திருக்கிறோம். இந்தப் பயிற்சியை செய்யுங்கள், மூன்று மாதகாலத்தில் நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள் என்பதைப் பாருங்கள் என்று சொல்லியிருக்கிறோம். அனுபவரீதியாக அவர்கள் அதை உணர்ந்தும் இருக்கிறார்கள். தற்போது அறிவியல் ரீதியாக அதை பரிசோதித்துக் கொண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் நான் இதை விரும்பவில்லை என்றாலும் மக்களுக்கு இதை உணரச் செய்ய நமக்கும் வேறு வழிகள் இல்லை.

நன்றி - ஈஷா மையம்

]]>
Brain power, மனஅழுத்தம், மூளைத்திறன் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/22/w600X390/brain.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/jun/22/how-to-increase-the-power-of-our-brain-2725474.html
2724339 மருத்துவம் மனநல மருத்துவம் உற்சாகத்தில் மதி மயங்காதே மாலதி சந்திரசேகரன் Tuesday, June 20, 2017 11:54 AM +0530 நாம் ஒரு செயலை செய்து முடித்தபிறகு, நம்மை உற்சாகப்படுத்தினால் தான் நம்முடைய  செய்கையில் ஒரு உத்வேகம் பிறக்கும், மேலும் செய்வதற்கு ஆர்வம் தலை தூக்கும். இது இயற்கையான மனித சுபாவம்தான். தவறில்லை.

ஆனால், நாம் ஒரு காரியத்தை செய்து முடித்துவிட்ட பிறகு உற்சாகப்படுத்தும் நண்பர்களின் செயலில், உண்மையான எண்ணம் இருக்கிறதா என்று ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள வேண்டும்.

தவறான செயலுக்கு பக்கபலம் இருந்து அதை தூண்டும் வகையில் ஊக்கம் இருந்தால் விலக்கப்படவேண்டும்.

தன்னுடைய இயற்கையான திறமையே தன்னுடைய வாழ் நாளுக்கு முத்தாய்ப்பான  ஒரு சுவாரஸ்யமான கதையினை கூறப் போகிறேன்.

முட்டையிலிருந்து வெளிவந்த கொசு ஒன்று பறக்கும் நிலைக்குத் தயாராக இருந்தது. தன்னுடைய இறக்கையினை படபடவென்று அடித்துக் கொண்டது.

மெதுவாக அங்கும் இங்கும் பறந்து பறந்து தன்னுடைய சந்தோஷத்தினை வெளிக் காண்பித்தது.

'அம்மா, அம்மா, என்னைப்  பாரேன். எப்படி பறக்கிறேன் என்று. நான் பறப்பதைக் கண்டு எத்தனை பேர்கள் கையைத் தட்டுகிறார்கள் பார்த்தாயா? நான் என்னும் வேகமாய்ப் பறக்கப் போகிறேன்' என்றது குழந்தைக் கொசு.

'அட பைத்தியமே. அவர்கள் நீ பறப்பதைப் பார்த்து கையைத் தட்டவில்லை. அவர்கள் கைகளுக்குள் உன்னை சிக்க வைக்கப் பார்கிறார்கள். ஒரு இடத்தில் அமைதியாகப் போய் உட்கார்' என்றது அம்மா கொசு.

ஆனால் குழந்தைக் கொசு கேட்கவில்லை அம்மாவுக்குப் பொறாமை என்று நினைத்துக் கொண்டு தன்னிச்சையாக நடந்து கொண்டது.

அம்மா கொசு, கவலை கொண்டது, நல்லது எது கெட்டது எது என்று அறிந்து கொள்ளும் பக்குவம் வராத நிலையில்,  
ஒருவரின் கைகளில் சிக்கி உயிரை விட்டது.

சிறு வயதில் அனுபவமில்லாத விஷயத்தில், தனக்கு எல்லாம் தெரியும் என்கிற மமதையில், எந்த விதமான நஷ்டம் உண்டாகும் என்று தெரியாது. போலியைக் கண்டு அதுதான் உண்மை என்று ஏமாந்து போக வேண்டாம்.

- மாலதி சந்திரசேகரன்

]]>
story of a mosquito, மதி மயங்காதே, ஊக்கம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/20/w600X390/mosquito.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/jun/20/be-polite-dont-be-anxious-2724339.html
2723625 மருத்துவம் மனநல மருத்துவம் உண்மையான ஆனந்தம் என்றால் என்ன?  Monday, June 19, 2017 01:10 PM +0530 நான் எவ்வாறு உங்களுக்கு சொல்வது? பலவிதமான தாக்கங்களுக்கு உள்ளானதால் இப்படியொரு கேள்வியைக் கேட்கிறீர்கள். ஏனென்றால் மனநோய்க்கான மருந்துகள் கூட ஆனந்தம் என்ற பெயரில் வெளியிடப்படுகின்றன. நீங்கள் ஆனந்தம் என்று சொல்லும் பொழுது மேற்கத்திய நாடுகளில் ஒரு குறிப்பிட்ட மாத்திரையைப் பற்றி நீங்கள் பேசிக்கொண்டிருப்பதாக அவர்கள் நினைப்பார்கள். எனவேதான் உண்மையான ஆனந்தம் என்றால் என்ன என்ற கேள்வியைக் கேட்கிறீர்கள்.

ஆனந்தத்தில் உண்மையான ஆனந்தம், பொய்யான ஆனந்தம் என்று எதுவுமில்லை. நீங்கள் உண்மையில் நிலைத்திருக்கும்போது நீங்கள் ஆனந்தத்தில் திளைக்கிறீர்கள். நீங்கள் உண்மையோடு தொடர்பு கொள்ளும்பொழுது இயல்பாகவே நீங்கள் ஆனந்தத்தில்தான் இருப்பீர்கள். நீங்கள் உண்மையுடன் இருக்கிறீர்களா அல்லது உண்மையுடன் இல்லையா என்பதைப் பொறுத்தே நீங்கள் ஆனந்தத்தில் இருக்கிறீர்களா அல்லது ஆனந்தத்தில் இல்லையா எனத் தெரிந்துகொள்ள முடியும். இது ஒரு லிட்மஸ் பரிசோதனையைப் போன்றது. இந்தக் கேள்வி ஒரு குறிப்பிட்ட சிந்தனையிலிருந்து வந்திருக்கலாம். உதாரணமாக, நான் சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கும்பொழுது ஆனந்தமடைகிறேன். இது உண்மையான ஆனந்தமா? அல்லது தியானத்தில் இருக்கும் பொழுது நான் ஆனந்தமடைகிறேன். இதுதான் உண்மையான ஆனந்தமா? இப்படி நீங்கள் எப்படி ஆனந்தமடைகிறீர்கள் என்பது முக்கியமல்ல. எப்படியோ இப்பொழுது ஆனந்தத்தில் இருக்கிறீர்கள் அதுதான் முக்கியம்.

எப்படி தக்கவைத்துக் கொள்வது? அதை எப்படி தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதே இப்போதைய கேள்வி. பெரும்பாலானவர்கள் இன்பத்தை ஆனந்தம் என தவறாக புரிந்துகொள்கிறார்கள். நீங்கள் இன்பத்தை எப்பொழுதும் தக்க வைத்துக் கொள்ள முடியாது. அது பற்றாக்குறையாகவே எப்பொழுதும் இருக்கும். ஆனால் ஆனந்தம் என்பது எதையும் சார்ந்து இருப்பதில்லை. இன்பம் என்பது எதையோ அல்லது யாரையோ சார்ந்தே இருப்பது. ஆனந்தம் என்பது எதையும் சாராதிருப்பது. அது உங்கள் இயல்பான தன்மை. ஆனந்தத்திற்கு உண்மையில் வெளியிலிருந்து எந்தவிதமான தூண்டுதலும் தேவையில்லை. நீங்கள் ஒருமுறை ஆனந்தத்தைத் தொட்டுவிட்டால் உங்களுடைய முந்தைய தேவைகள் அனைத்தும், ஆனந்தம் அடைவதற்கான உங்களுடைய குழந்தைத்தனமான முயற்சிகள் தான் எனத் தெரிந்துகொள்வீர்கள்.

நீங்கள் ஆனந்தத்துடன் இருந்தால், அதுதான் முழுமை. மேலும் ஆனந்தம் என்பது எங்கோ வெளியிலிருந்து சம்பாதிப்பதல்ல. உங்களுக்குள்ளேயே மிக ஆழமாகச் சென்று கண்டுகொள்வது. அது ஒரு கிணறு தோண்டுவது போன்றது. மழை பெய்யும் பொழுது மழைத்துளிக்காக நீங்கள் வாய் திறந்து காத்திருந்தால் சில துளிகள் செல்லக்கூடும். ஆனால் உங்கள் தாகத்தைத் தணிப்பதற்காக மழைநீருக்கு வாய் திறந்திருப்பது ஒரு விரக்தியான மனநிலையை அளிக்கும். மழை எப்போதும் தொடர்ந்து பெய்துகொண்டிருக்கப் போவதுமில்லை. ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ பெய்துவிட்டு நின்றுவிடும். அவ்வளவுதான். அதனால்தான் வருடம் முழுவதும் நீர் கிடைக்கிற மாதிரி உங்களுக்குச் சொந்தமாக ஒரு கிணறு தோண்டிக் கொள்ளுங்கள். நீங்கள் உண்மையான ஆனந்தம் எனக் குறிப்பிடுவதெல்லாம் இதுதான். நீங்களே உங்கள் சொந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து கொள்கிறீர்கள். அது உங்களுக்கு எப்பொழுதும் தண்ணீர் கொடுத்துக் கொண்டே இருக்கும். மழை பெய்யும்பொழுது நீருக்கு வாய் திறந்திருப்பது போல இல்லை இது. எப்போதும் தண்ணீரை உங்களுடன் வைத்திருக்கிறீர்கள். அதுதான் ஆனந்தம்.

- சத்குரு ஜக்கி வாசுதேவ்

]]>
Happiness, உண்மையான ஆனந்தம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/19/w600X390/unmaiyana-anandam-endral-enna.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/jun/19/what-is-true-happiness-means-2723625.html
2722403 மருத்துவம் மனநல மருத்துவம் வாழ்வில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது?  Saturday, June 17, 2017 10:36 AM +0530 'வாழ்வில் ஏற்ற இறக்கமெல்லாம் சாதாரணம்ப்பா…! டேக் இட் ஈஸி' இப்படி பலர் போகிற போக்கில் அட்வைஸ் செய்துவிட்டு செல்வதைப் பார்க்கிறோம். ஆனால், ஒருவர் துன்பப்படும்போது அதற்கான தீர்வையும், துன்பம் உருவானதற்கான மூல காரணத்தையும் பற்றி யாரும் கவனம் கொள்வதில்லை. நம் வாழ்வில் ஏற்படும் ஏற்ற தாழ்வுகளை எப்படி கையாள்வது? இதோ சத்குரு சொல்லும் தீர்வு!

ஏற்றத் தாழ்வுகள் இல்லை சூழ்நிலைகள் மட்டுமே… 

ஏற்ற இறக்கங்கள் என்று எதுவுமில்லை. வாழ்வெனும் நதி பல வழிகளில் பாய்கிறது. உலகம் என்பது சூழ்நிலைகளால் ஆனது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சூழ்நிலைகள் அமைகின்றன. அவைகளை எதிர்கொள்ளும் உங்கள் மனநிலைதான் ஏற்ற இறக்கங்கள் கூடியதாக இருக்கிறது. நீங்கள் உங்கள் மனதை சமநிலைக்கு கொண்டு வந்துவிட்டால் அழகான மலைகளின் உயரத்தையும் பள்ளத்தாக்குகளின் ஆழத்தையும் ஒரேமாதிரி வியந்து ரசிக்க முடியும். ஆனால் இப்போது வாழ்வின் சூழ்நிலைகள் உயர்ந்திருந்தாலும், தாழ்ந்து இருந்தாலும் நீங்கள் துன்புறுகிறீர்கள். உங்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டதன் காரணமாகவே நீங்கள் இந்த கேள்வியை என் முன் வைத்திருக்கிறீர்கள். ஆனால் உங்கள் துன்பத்திற்கு விஷேசமாக எந்த காரணமும் தேவையில்லை.

ஏன் துன்பம்? 

வாழ்வில் நடப்பவற்றை உங்கள் அனுபவத்தில் நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்களோ அதைப் பொறுத்துத்தான் வாழும்போதும் சரி, சாகும்போதும் சரி, நீங்கள் நிம்மதியாகவோ மகிழ்ச்சியாகவோ இல்லை. நீங்கள் எப்போதுதான் துன்பப்படாமல் இருந்திருக்கிறீர்கள்? உங்களுக்கு துன்பம் ஏற்படுகிறது. உடம்பில் ஏற்படும் வலியானது வெளியிலுள்ள சூழ்நிலைகளால் ஏற்படக்கூடும். ஆனால் துன்பப்படுதல் என்ற உணர்ச்சி மனதால் நாமே ஏற்படுத்திக் கொள்வதாகும். உண்மையில் அகநிலை நடைமுறைகளை, மாற்றங்களை நாமே உருவாக்கிக் கொள்ளமுடியும். சரியான விழிப்புணர்வுடன் மனதை நாம் கையாண்டால் புறசூழ்நிலை எப்படி இருந்தாலும் நாம் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க முடியும். ஆனால் மனம் உங்கள் கட்டுக்குள் இல்லாதிருக்கும்போது, நடக்கின்ற விஷயங்கள் எப்படி இருந்தாலும் அது உங்களுக்கு துன்பம் விளைவிப்பதாக இருக்கிறது. 

யோசித்துப் பாருங்கள், எதை எடுத்தாலும் உங்களுக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது, அல்லவா? திருமணமாகவில்லையே என்று கவலைப்படுகிறீர்கள், திருமணம் ஆனபிறகும் அதனால் கஷ்டப்படுகிறீர்கள், குழந்தைகள் இருந்தாலும் துன்பம், இல்லையென்றாலும் துன்பம். வேலை கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் கஷ்டம். வாழும்போதும் சரி, சாகும்போதும் சரி, நீங்கள் நிம்மதியாகவோ மகிழ்ச்சியாகவோ இல்லை. நீங்கள் எப்போதுதான் துன்பப்படாமல் இருந்திருக்கிறீர்கள்?

சரியான உள்சூழ்நிலை உருவாக்குங்கள் எது நடந்தது எது நடக்கவில்லை என்பதல்ல பிரச்சனை. நடப்பதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதுதான். இப்போது உங்கள் எண்ண ஓட்டங்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளமுடியும் என்று நீங்கள் புரிந்து கொண்டுவிட்டால், கட்டாயமாக உங்களுக்கு வேண்டிய வகையில் தான் அதை அமைத்துக் கொள்வீர்கள். உங்களுக்கு வேண்டிய வகையில் உங்கள் எண்ணத்தை அமைத்துக்கொள்ள முடியும் என்றால், பின் சூழ்நிலை எப்படி நிகழ்ந்தாலும், அதையும் இனிமையாய் நீங்கள் நிச்சயம் மாற்றிக் கொள்வீர்கள். அப்போது சூழ்நிலையை நல்லது என்றும் கெட்டது என்று பிரித்துப் பார்க்க மாட்டீர்கள். 

‘நான் நினைப்பது போல் நடக்கவில்லையே’ இதுதானே உங்கள் கவலை? உங்கள் உள்நிலையை நீங்கள் சரியாகக் கையாள முடிந்தால், வெளிச்சூழ்நிலை எதிர்பாராத விதங்களில் நடந்தாலும், உங்கள் முழுத்திறனிற்கு அனுசாரமாய் அதை நீங்கள் சமாளிக்க முடியும். எந்த ஒரு மனிதனும் அதிகபட்சமாய் அதைத் தான் செய்யமுடியும். வாழ்வின் சூழ்நிலை எப்படி அமைந்தாலும், தன்னை அமைதியாகவும் சந்தோஷமாகவும் வைத்திருக்க ஒருவன் அறிந்திருந்தால், அவன் ஆன்மீகப் பாதையில் அடியெடுத்து வைத்துவிட்டான் என்றே அர்த்தம். அப்போது முக்தியை யாரும் அவனுக்கு தடை செய்ய முடியாது.

நன்றி : ஈஷா மையம்

]]>
Balance in lilfe, ஏற்றத் தாழ்வுகள், டேக் இட் ஈஸி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/17/w600X390/vaazhvil-aerpadum-aetrathazhvugalai-eppadi-kaiyalvathu.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/jun/17/how-to-handle-ups-and-downs-in-life-2722403.html
2721155 மருத்துவம் மனநல மருத்துவம் விவாகரத்து செல்ஃபியா? இதென்ன கொடுமை! உமா பார்வதி Thursday, June 15, 2017 03:41 PM +0530 ஒரு உறவை உருவாக்குவது எவ்வளவு கஷ்டமோ அதைவிட கடினம் அதை முறித்துக் கொள்வது. வருடக்கணக்காக ஆசையும் அன்பும் சேர்ந்து வளர்ந்த உறவு வலியுடன் முறிந்து போவது துயரம். உலகமெங்கும் சமீப காலமாக விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருவது அனைவரும் அறிந்த செய்திதான். திருமணம் முடிந்த சில மாதங்களில் விவாகரத்து என்ற நிலைமாறி வாரக்கணக்கிலும் நாட்கணக்கிலும் கூட பிரிவுகள் நிகழ்வதுதான் சோகம். 

கோபம், ஆற்றாமை, வெறுப்பு போன்ற மனநிலையில் தான் தம்பதிகள் முன்பு பிரிந்து வந்தனர். ஆனால் சில ஜோடிகள் தங்கள் பிரிவையும் பாசிட்டிவ்வாக எடுத்துக் கொண்டு சமூக வலைத்தளங்களில் கொண்டாடும் கலாச்சாரம் சமீபத்தில் பரவி வருகிறது. டிவோர்ஸ் செல்ஃபிக்கள் என்று இன்ஸ்டாகிராமிலும் ஃபேஸ்புக்கிலும் இணையதளங்களிலும் வலம் வரும் புகைப்படங்களில் விவாகரத்தான தம்பதியரின் மகிழ்ச்சியான புகைப்படங்கள் இதற்குச் சான்று. இந்தப் புகைப்படங்களில் அவர்கள் முகம் கொள்ளாச் சிரிப்புடனும், விரல்களை உயர்த்தி தம்ஸ் அப் சின்னம் காட்டியும் தங்கள் வெற்றியையும் விடுதலையையும் காட்சிப் படுத்துகிறார்கள். (எதற்கான வெற்றி, எதிலிருந்து விடுதலை என்ற புரிதல் இருந்திருந்தால் விவாகரத்து வரை சென்றிருக்க மாட்டார்கள் அல்லவா!)

அதென்ன டிவோர்ஸ் செல்ஃபி? தம்பதிகள் எப்போது எடுக்கிறார்கள் என்று விசாரித்துப் பார்த்ததில், குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு முடிந்து, ஒருவரிடமிருந்து மற்றவர்க்கு முழுமையான விடுதலை சட்டரீதியாக கிடைத்தபின், கடைசியாக ஜோடியாக எடுத்துக் கொள்ளும் செல்ஃபிதான் இந்த டிவோர்ஸ் செல்ஃபி. சிலர் விவாகரத்து முடிந்த கையோடு லைவ் காட்சிகளாக அதை ட்வீட் செய்வதும், சிறியதாக ஒரு வீடியோ ஷூட் எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பதிவிடுவதிலும் மும்முரமாகியுள்ளனர். இது பார்க்கவும் கேட்கவும் வினோதமாக இருந்தாலும், இப்படிச் செய்வதால் விவாகரத்துப் பெற்ற தம்பதிகளுக்கு ஒருவித ஆசுவாசம், ஒரு ரிலீஃப் கிடைப்பதாக பதிவு செய்கிறார்கள். தவிர அவர்களது தோழமைகளிடமிருந்தும் குடும்பத்தாரிடமிருந்தும் ஆறுதல் கிடைப்பதும் அவர்களை இந்த மன அழுத்தத்திலிருந்து விரைவில் வெளியேற வைத்துவிடுகிறது என்கிறார்கள்.

படங்கள் மட்டுமல்ல, அதற்கு ஏற்ற சில கேப்ஷன்களும் அவர்களே தருவது புதுமை. முகத்தை கோணலாக வைத்துக் கொண்டு, விவாகரத்தான கணவருடன் நெருக்கமாக ஃபோஸ் கொடுத்தபடி ஒரு பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியது, ‘இப்போது நாங்கள் நாடக நடிகர்கள், அவ்வளவுதான்’. இன்னொரு பெண் இப்படி எழுதுகிறார், ‘பிரிந்து வாழப் போகும் மிச்ச வாழ்க்கைக்கு ஒரு பெரிய சியர்ஸ்’.
 
நல்ல வேளை நம் நாட்டில் இன்னும் இந்தக் கலாச்சாரம் வரவில்லை. ஆனால் நம்ப முடியாது இந்தக் கட்டுரைக்குப் பின் அது நடந்தாலும் நடக்கலாம், நான் பொறுப்பல்ல!

]]>
Divorce Selfie, Social networking viral, டிவோர்ஸ் செல்பி, விவாகரத்துக்குப் பின் வாழ்க்கை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/15/w600X390/divorce-selfie_759.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/jun/15/divorce-selfie-2721155.html
2719815 மருத்துவம் மனநல மருத்துவம் சந்தோஷமா இருக்க ஆசையா? இதோ மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு 5 டிப்ஸ்! உமா பார்வதி Tuesday, June 13, 2017 03:31 PM +0530 சந்தோஷம் என்ற வார்த்தையில் இருக்கும் சந்தோஷ நொடி கூட பலரது வாழ்க்கையில் இல்லாமல் போவது சோகம். அதெப்படி தொடர்ந்து துயரில் இருக்கும் வாழ்க்கை உண்டா என்று இந்தப் பக்கம் இருப்பவர்கள், அதாவது சந்தோஷத் தருணங்களை அதிகப்படியாக உணர்ந்தவர்கள் நினைக்கலாம். சந்தோஷம் துக்கம் ரெண்டும் மாறி மாறி வருவது தான் வாழ்க்கை என்று சிலர் தத்துவார்த்தமாகச் சொல்லலாம். ஆனால் வெகு சிலர் எப்போதும் எதையோ பறிகொடுத்தது போலவே சந்தோஷம் வரும் போது பெரிய பூட்டாகப் போட்டுத் தன்னை மறைத்துக் கொண்டு அதன் இருப்பை மறந்து விடுகின்றனர். அவர்களுக்கான பதிவு இது.

1. உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள், அடுத்தவர் வாழ்க்கையை அல்ல!

'நான் மட்டும் அன்னிக்கு எனக்கு பிடிச்ச படிப்பை படிச்சிருந்தா... இந்நேரத்துக்கு என்ன ஆயிருப்பேன் தெரியுமா?', 'அப்பவே சொன்னேன் எனக்கு அந்த வேலை தான் செட் ஆகும்னு ஆனா இவர் சொன்னதாலே அதை தட்டிக் கழிச்சிட்டு இப்ப சிரமப்படறேன்’, 'எத்தனை வருஷம் காதலிச்சோம், எல்லாத்தையும் எதிர்த்து போராடி அன்னிக்கே ஒரு முடிவு எடுத்திருந்தா இப்படி பொருந்தாத மனசோடு ஒரு திருமண வாழ்க்கையில் சிக்கியிருக்க மாட்டேன்’, இதில் ஒன்றினை வாழ்க்கையின் ஏதேனும் ஒரு கணத்தில் உணர்ந்திருப்பீர்கள். தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் மறுக்கப்பட்டு வேறு வழியே இல்லாத இக்கட்டான நிலையை கடந்து வந்திருக்காதவர்கள் யாருமில்லை.

அதன்பின் ட்ரெட்மில்லில் ஓடுவது போல் அன்றிலிருந்து இன்று வரை வாழ்க்கையில் ஓடிக் கொண்டே இருப்பது போன்ற நிலைதான் பெரும்பாலோருக்கும். தினம் தினம் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்க, ஆயுள் ஒரு பக்கம் குறைந்து கொண்டே இருக்க, ஆசைகளின் கனம் மட்டும் அதிகரித்துக் கொண்டிருக்கும். இந்த முன்முனைப் போராட்டத்தில் யார் ஜெயிப்பது யார் தோற்பது? ரெண்டுமே நீங்கள் தான்.

ஆசைகளை கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத வாழ்க்கை என்பது சாபம். உங்கள் கனவுகளை வெட்டிச் சாயக்க சமூக, குடும்ப, கலாச்சார காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு பழக்கப்பட்ட வாழ்க்கையின் கூண்டுக்கிளியாக உங்களை நீங்கள்தான் வடிவமைத்துக் கொண்டு விட்டீர்கள். ஆனால் நன்றாக யோசித்துப் பாருங்கள். அன்று உங்கள் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இன்று புலம்பித் தவித்துக் கொண்டிருக்க வேண்டாம். எதிலும் நிறைவின்றி வாழ்ந்து கொண்டிருக்க வேண்டாம்.

கடந்த ஒன்றை மாற்ற இயலாது எனவே இப்போதுள்ள வாழ்க்கையை புகார்கள் இன்றி ஏற்றுக் கொள்ளுங்கள். பழைய வலிகளிலிருந்து கற்றுக் கொள்ள பாடங்கள் உள்ளது. அதன் பின்னான உங்கள் வாழ்க்கை புத்தம் புதியது. உங்களுக்கே உரிய பிரத்யேகமானது, மகிழ்ச்சியின் அலைகள் உங்கள் மீது விழ முதலில் உங்களை அனுமதியுங்கள். அதற்கு முதலில் உங்களை நேசிக்கத் தொடங்குங்கள். வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள். சந்தோஷம் நிம்மதி எல்லாம் தானாகவே வரும், போகும் மீண்டும் வரும். புரிந்ததா? 

2. வேலை வாழ்க்கை இரண்டையும் சமமாகப் பாருங்கள்!

சிலர் எப்போதும் வேலை வேலை என்று வாழ்நாள் முழுக்க தங்கள் அலுவலக வேலைக்காக தங்களை அப்படியே ஒப்புக் கொடுத்துவிடுவார்கள். வாரக்கணக்காக, வருடக்கணக்காக ஓய்வு ஒழிச்சலின்றி ஒரு இயந்திரம் போல வேலை செய்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? ஆனால் வேறு வழி? ஆறு நபர்கள் சாப்பிட வேண்டும்? படிக்க வேண்டும், மானத்துடன் வாழ வேண்டும் என்ற பதில் சுடும் நிஜம் தான். ஆனால் அதற்கென்று இப்படி ஒரேடியாக சந்தோஷங்களைப் புதைத்து தியாகியாக உங்களை உருவகப்படுத்திக் கொண்டு சின்ன சின்ன சந்தோஷங்களையும் தூற எறிந்துவிடாதீர்கள். அப்படி செய்தால் ஒரு நாள் வேலையிலிருந்து ஓய்வு பெற்று வீட்டில் உட்காரும் போதுதான் உங்களுக்குத் தெரிய வரும்.

எத்தனை நாள்கள் வேலைப் பளுவில் உறங்கிவிட்டு மறுநாள் காலை அதே வேகத்துடன் ஓடியதால் விளைந்த பயன். சிறிதளவு பணம் கையிருப்பு நிச்சயம். ஆனால் காலம்? குடும்பத்தை ஒதுக்கிப் பழக்கப்படுத்தியதால் அதே குடும்பம் இப்போது உங்களுடன் ஒட்டாது. அவர்கள் ஒருபக்கம் நீங்கள் மறுபக்கம் என இரு பிரிவுகளாக மாறியிருப்பதை கண்கூடாகக் காண்பீர்கள்.

மனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக உட்கார்ந்து பேச மறுத்து, வெளியூர்களுக்குச் சென்று திரும்பி என அனேக விஷயங்கள் இல்லாமல் காலமும் கடந்துபோய் கசப்பான மனநிலை மட்டுமே எஞ்சி நிற்கக் கூடும். இனியாவது என்ன செய்யவேண்டும் என்று விழிப்புணர்வுடன் செயல்படுங்கள். வேலை முக்கியம் தான். ஆனால் அதைவிட எதற்காக வேலை முக்கியம் என்னும் சிந்தனை முக்கியம். உங்களை நம்பி வந்தவர்களை, நீங்கள் உருவாக்கிய உங்கள் குடும்பத்தை அரவணைக்க வேண்டும். நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் தான் உங்களை மன மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும் முக்கியமான விஷயம். 

3. உண்மையாக இருங்கள்!

உங்கள் உணர்வுகளை நேரடியாக வெளிப்படுத்துபவராக இருங்கள். மனத்தில் ஒன்று நினைத்தும் வெளியில் ஒன்றைச் சொல்லியும் முகமூடிகளுடன் வாழ்ந்தீர்கள் என்றால் உங்கள் சந்தோஷமும் புஸ்வானம் போலத்தான். பெரிதாக பொங்கி வரும் ஆனால் நிலைத்திருக்காது.

நீங்கள் புத்திசாலியாக இருக்கலாம் ஆனால் புத்திஜீவிகள் அதிகமாக சந்தோஷப்படுவதில்லை. அதை முட்டாள்தனம் என நினைப்பார்கள். நடந்து போகும்போது மழைச் சாரல் ஏற்பட்டு ஒரு வானவில்லை பார்த்துவிட்டால் அதைவிட மகிழ்ச்சியான கணம் எது இருக்க முடியும்? ஆனால் புத்தியால் வாழும் நீங்கள் அப்படி இருக்க மாட்டீர்கள். எப்போதும் மூளைக்கு மட்டும் இடம் கொடுக்காமல் மனத்தாலும் வாழப் பழகுங்கள்.

உங்கள் உடல் சொல்வதையும் மனம் சொல்வதையும் கேட்கப் பழகுங்கள். உடலுக்கு ஓய்வு தேவை என்றால் நிச்சயம் அது சோர்வின் மூலம் எடுத்துரைக்கும். அப்போது கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துகொள்வது தான் அதற்கு மகிழ்ச்சி அளிக்கும். மன அழுத்தம், பிரச்னையில் சிக்கிக் கொள்வது போன்ற தருணங்களில் அதிலிருந்து விடுபட மனதே வழிவகுக்கும். நீங்கள் சும்மா ஒப்புக் கொடுக்க வேண்டும். எதிர் முயற்சிகள் செய்யாமல் என்ன நடக்கிறது என்று பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய உணர்வுகளை உண்மையாக இருங்கள். அதுவே மகிழ்ச்சியை விதைத்து அறுவடையும் கொடுக்கும்.

4. நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள்!

'நாங்க எவ்வளவு நெருக்கம்னு தெரியுமா? ஒரே டீ ஷர்ட்டை ரெண்டு பேரும் பயன்படுத்தினோம்’ என்று ப்ளாஷ்பேக் சொல்லிக் கொண்டிருக்காமல் அந்த நட்பை இன்றைய தேதியில் என்ன செய்தோம் என்று நினைத்துப் பாருங்கள். தொடர்பில் இருங்கள் என்று செல்போனில் குறுஞ்செய்தியாக பதிவிடும் அந்த வார்த்தையை உண்மையில் செய்கிறீர்களா என்று யோசியுங்கள்.

ஆங்கிலத்தில் அழகான ஒரு பழமொழி உள்ளது. உங்கள் தோட்டத்தின் அழகு அதில் எத்தனை பூக்கள் இருக்கின்றன என்பதில் தான் உள்ளது. உங்கள் தினங்கள் அருமையாக அமைய, அதில் எத்தனை பொன்னான தருணங்கள் இருந்தன என்பது முக்கியம். உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க அதில் எத்தனை சந்தோஷமான புன்னகையுடன் இருந்தீர்கள் என்பது தான் சிறப்பு. மேலும் உங்கள் வயது ஏறாமல் அப்படியே இருக்க, எத்தனை நண்பர்கள் உங்களை சுற்றி இருக்கின்றனர் என்பது தான் விஷயம்.

ஆத்மார்த்தமாக உங்களுடன் இணைந்திருக்கும் நல்ல நட்புகள் கிடைப்பது அபூர்வம். அதை பொத்தி வைத்திருக்கப் பழகுங்கள். நண்பர்கள் என்பது நம்பர்களிலும் இல்லை. ஆழமான நட்பில் தான் உள்ளது. அதன் பின் மகிழ்ச்சி எப்படி தொலைந்து ஆகும்? எப்போதும் மகிழ்ச்சி வெள்ளம் தான்!

5. எப்போதும் சந்தோஷமாக இருப்பேன் என்று உறுதியாக முடிவு எடுங்கள்!

சந்தோஷம் என்பது உங்கள் தேர்வு. ஆம். அதைத் தேர்ந்தெடுத்து நமதாக்கிக் கொள்ள வேண்டும். இனிமேல் நான் சந்தோஷமாகவே இருப்பேன் என்று ஒரு தீர்மானம் உறுதியாக எடுத்து, அதைக் கடைபிடித்துப் பாருங்கள். அது உங்களுடனே பயணப்பட்டுக் கொண்டிருக்கும். அதற்கு எதிராக எதாவது நடந்தால், உடனடியாக சந்தோஷத்தை உதறிவிட்டு கோபத்துக்கோ வெறுப்புக்கோ தாவி விடுவது யார்? சாட்சாத் நீங்களே தான். உங்களைச் சுற்றி எது நடந்தாலும் உடனடியாக நீங்கள் தானே ரியாக்ட் செய்கிறீர்கள்? ஏன் அப்படி? ஒரு நிமிடம் நின்று நிதானித்து காரண காரியங்களை யோசித்ததுண்டா? இது வரை இல்லையென்றால், இனிமேலாவது அப்படிச் செய்து பாருங்கள். உங்களுடைய அனுமதி இல்லாமல் யாரும் உங்களை துன்பப்படுத்திவிட முடியாது. அது உங்கள் கைகளில் இருக்கும் போது ஏன் மற்றவர்களை அனுமதிக்கிறீர்கள்? 

எல்லாவற்றையும் மீறி சந்தர்ப்ப சூழலில் பிரச்னை துயர் வந்துவிட்டால் அது எப்படி வந்ததோ வந்த வழியே போய்விடும். அதில் மூழ்கிப் போகாமல் இருங்கள். மனத்தை சமன் நிலை குலையாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள். மற்ற படிப்பு எல்லாம் படிப்பல்ல, தன்னை எப்படி நடத்திக் கொள்வது எனும் தெளிவுதான் சிறந்த படிப்பு. ஆக்கபூர்வமாக இருங்கள். நேர்மறை சிந்தனைகளால் எப்பேர்ப்பட்ட இக்கட்டான சூழலிலும் விடுபடும் வழி கிடைக்கும். அல்லது அந்த சூழ்நிலையைத் தாக்குப்பிடிக்கும் மனப்பக்குவம் வாய்க்கும்.  

நம்மால் மாற்ற முடிந்த விஷயங்களை துணிவுடன் போராடி மாற்றும் திறனும், மாற்ற முடியாத விஷயங்களை உள்ளவாறு அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவமும், எதை மாற்ற முடியும், எதை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் எனும் ஞானமும் இருந்தால் வாழ்தல் இனிது.

]]>
5 tips for happiness, சந்தோஷம், மகிழ்ச்சியான வாழ்க்கை, வாழ்தல் இனிது http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/13/w600X390/healthy_woman.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/jun/13/5-tips-for-happy-life-2719815.html
2719782 மருத்துவம் மனநல மருத்துவம் ஃபேஸ்புக் இப்படிப்பட்ட வேலைகளைச் செய்யலாமா? IANS Tuesday, June 13, 2017 11:18 AM +0530 சமூக இணைய தளங்களில் உலகம் முழுவதிலும் மிக அதிகமான பயனாளர்களைக் கொண்டுள்ள ஃபேஸ்புக் ரகசியமாக ஒரு வேலையைத் தொடங்கியுள்ளது. அதாவது உங்கள் கணினியின் வெப்காம் அல்லது உங்கள் ஸ்மார்ட்ஃபோனிலுள்ள கேமராவின் மூலம் உங்களை ரகசியமாகக் கண்காணித்து சிலவற்றை பதிவும் செய்யப் போகிறது என்றால் அதிர்ச்சியாக இருக்கிறது அல்லவா?

ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்தப் புதிய போக்கைப் பற்றி அதன் பயனாளிகளுக்குத் தெரியப்போவதில்லை. இது ஒரு புதிய தொழில்நுட்பம் எனும் அளவில் தான் அறிமுகமாக உள்ளது. நீங்கள் உங்கள் நண்பரின் ஒரு புதிய புகைப்படத்தைப் பார்த்து லேசாக புன்முறுவல் பூத்தால் உடனே உங்கள் முக உணர்வுகள் படம் பிடிக்கப்பட்டு, நீங்கள் விரும்பிய அந்தப் புகைப்படம் அல்லது அதை ஒத்த புகைப்படங்கள் உங்கள் பார்வையில் படும் படி அடிக்கடி ந்யூஸ் ஃபீடில் வந்து கொண்டிருக்கும்’ என்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய ஆராய்ச்சியைப் பற்றி பதிவு செய்துள்ளது Independent.co.uk எனும் இந்த இணையதளம்.

உங்கள் முகத்தைப் படம் பிடித்ததுடன் இல்லாமல் அதை ஆய்ந்து எது உங்கள் விருப்பப் பதிவுகள் என்பதை அலசி நீங்கள் சைட்டில் வெகு நேரம் இருப்பதற்கான மறைமுக வேலையைச் செய்வது தான் அதன் நோக்கம். உதாரணமாக ஏற்கனவே சொன்னபடி, உங்கள் நண்பரின் புகைப்படத்தை பார்த்து சந்தோஷத்தில் நீங்கள் சிரித்துக் கொண்டிருந்தால், ஃபேஸ்புக்கின் அல்காரிதம் அந்தத் தகவலை பதிவு செய்து அதே போன்ற புகைப்படங்களை உங்கள் காட்சிக்கு தந்து கொண்டிருக்கும். அதே போல் ஒரு பூனை விளையாடிக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் அது உங்களுக்குப் பிடிக்கவில்லை அல்லது உங்களைக் கவரவில்லை என்று முகத்தை வேறு பக்கம் திருப்பினாலும் கூட அதையும் பதிவு செய்து கொண்டிருக்கும் வெப்காம் உங்கள் பார்வைக்கு ஒருபோதும் அத்தகைய காட்சிகளைக் கொண்டு வராமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளும்’. உங்கள் முக மாற்றத்துக்கு ஏற்றபடி புகைப்படங்கள் தேர்வு செய்யப்படும். சிரிப்பதும் முறைப்பதும் பதிவு செய்யப்பட்டு அதற்கேற்றாற் போல உங்கள் மனத்துக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயங்களை மட்டும் உங்கள் பார்வைக்கு கொண்டு வரப்படும்.

அதாவது உங்கள் விருப்பு வெறுப்புக்களுக்கு உட்பட்டு இயங்கும் ஒரு சாதனமாக ஃபேஸ்புக் உருமாறிக் கொண்டிருக்கிறது. இது நல்லதுதானே என்று நினைக்கத் தோன்றுகிறதா? நிச்சயமாக இல்லை. அதிலுள்ள ப்ரொக்ராம்கள் மூலம் ஒரு உளவாளியைப் போல உங்கள் முகம் படம் பிடிக்கப்பட்டு, உங்களை எலியைப் போல ஒரு பொறியில் சிக்க வைக்கும் தந்திரம் தான் இது. நீண்ட நேரம் சமூக வலைத்தளங்களில் அடிமைப்பட்டு கிடந்தால் உங்கள் மனநலம் மற்றும் உடல் நலம் பாதிப்படைந்துவிடும். ஃபேஸ்புக்குக்கு தேவை பயனர்கள். அவ்வளவே ஆனால் அதற்கு நம்முடைய பொன்னான நேரத்தையும் வாழ்க்கையையும் ஒப்புக் கொடுப்பது எத்தகைய முட்டாள்தனம்?

இன்னும் ஃபேஸ்புக் இதனைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்திருக்கவில்லை. ஆனால் எந்த நேரமும் அது இந்த திட்டத்தைச் செயல்படுத்திவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன் நீங்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு தேவையற்ற விஷயங்களுக்கு வாழ்க்கையிலும் சரி ஃபேஸ்புக்கிலும் சரி இடம் கொடுக்காதீர்கள். இந்த பரந்து பட்ட உலகில் செய்ய வேண்டிய பயனுள்ள வேலைகள் எத்தனையோ இருக்கின்றன. தேடிக் கண்டடைய நெகிழ்ந்து கரைய வேண்டிய தருணங்கள் எவ்வளவோ மிச்சம் உள்ளன. மெய் நிகர் உலகை மறந்து நிகழ் நிறை உலகில் என்றென்றும் துடிப்புடனும் மகிழ்வுடனும் வாழுங்கள்.

]]>
Facebook tracking users, webcam, ஃபேஸ்புக், வெப்காம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/13/w600X390/fb.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/jun/13/facebook-considering-secret-tracking-via-webcam-2719782.html
2717357 மருத்துவம் மனநல மருத்துவம் பணம் வந்தால் கஷ்டமும் கூட வரும்! இது உண்மையா?  Friday, June 9, 2017 11:06 AM +0530 பொருள் சேர்க்கத் துவங்கிவிட்டால் பிறகு வாழ்க்கையில் துன்பங்களும் சேர்ந்துவிடுமா? பணம் உங்களுக்குத் துன்பத்தை வரவழைப்பதில்லை. முட்டாள் தனம் தான் துன்பத்தை வரவழைக்கிறது. பணம் உங்கள் வாழ்க்கையில் நுழையும்போது, முட்டாள்தனமும், அதனால் துன்பமும் சேர்ந்து வரலாம். அதற்காக, பணம் வந்துவிட்டாலே துன்பமும் வந்தாக வேண்டும் என்று கிடையாது.

ஆனால், வசதிகள் ஏன் துன்பமாக மாற வேண்டும்? நாம்தானே வசதியை நாடினோம்? நாம் விரும்பியதே நமது துன்பத்துக்கு ஏன் காரணமாக வேண்டும்? மனிதர்களின் பெரிய பிரச்சனை இது. பல நேரங்களில் இரண்டு விஷயங்கள் சேரும்போதுதான் சமநிலை கிடைக்கிறது. ஆனால் நாம் ஒன்றை வைத்துக்கொள்கிறோம். அதனுடன் இணைந்த மற்றொன்றை முழுவதுமாய் மறந்து விடுகிறோம். காலையில் சாப்பிட உட்காருகிறீர்கள். ஊறுகாய் சுவையாக இருக்கிறது. மற்றவற்றை மறந்துவிட்டு, ஊறுகாயை மட்டுமே வயிறு நிரம்பச் சாப்பிட்டால், மாலையே பிரச்சனை ஆரம்பித்துவிடும்தானே. அதேபோலத்தான் செல்வமும் செழுமையும்!
 
ஏராளமானோர் தினமும் கோவில், மசூதி, தேவாலயம் செல்கிறார்கள். அங்கிருந்து திரும்பி வரும்போது அவர்கள் முகத்தைக் கவனித்திருக்கிறீர்களா? அவர்கள் முகம் மகிழ்ச்சியாக மாறியிருக்கிறதா? நான் 11 வயதாக இருக்கும்போது இது என்னை மிகவும் குழப்பியிருக்கிறது. அந்த வயதில் நான் ஒரு பெரிய கோவில் வாசலில் நிறைய நேரம் உட்கார்ந்துகொண்டு கோவிலிலிருந்து திரும்பி வருபவர்களைப் பார்த்துக்கொண்டே இருப்பேன். கடவுளைப் பார்த்து வந்த பின் அவர்கள் முகம் பிரகாசமாக மாறியிருக்கிறதா என்று கவனிப்பேன். கோவிலிலிருந்து திரும்பி வரும்போது கடவுளைப்பற்றி பேசுவதைவிட கோவிலில் பார்த்த மற்ற மனிதர்களைப் பற்றிய வம்புகளுடன் வெளிவருவதைத்தான் நான் அப்போது கவனித்தேன். அல்லது அவர்கள் விட்டுச்சென்ற செருப்பு வேறு யாரோடாவது நடந்து போய்விட்டால் இந்த உலகத்தை, ஏன் கடவுளைக்கூட சபிக்க ஆரம்பித்துவிடுவதைப் பார்த்திருக்கிறேன்.

கோவிலிலிருந்து வெளிவரும் மனிதர்களின் முகத்தைவிட ஹோட்டலிலிருந்து வெளிவரும் மனிதர்களின் முகம் அதிகப் பிரகாசமாக இருக்கிறது. அதிக மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் வெளிவருகிறார்கள். இது மிகவும் வெட்கக்கேடானது இல்லையா? தெய்வீகத்தைவிட தோசை அவர்களுக்கு அதிக திருப்தியைத் தந்திருக்கிறது. எனவே தெய்வீகமா, தோசையா என்பதல்ல கேள்வி. மனிதர்கள் விஷயங்களை மோசமாகக் கையாண்டால் எப்படியும் துன்பம் நிச்சயம் வருகிறது

துன்பம் செழுமையால் வரவில்லை. பணம் அவர்களின் சட்டைப் பைக்குள் போவதற்கு பதிலாக அவர்கள் தலைக்குள் போனதால்தான் துன்பம். பணத்தை சட்டைப்பைக்குள் வைத்துக்கொண்டு இந்த உலகில் அற்புதமான பணிகள் பலவற்றைச் செய்ய முடியும்.

உலகில் மனிதர்களுக்கிடையே இதுதான் பெரிய போராட்டமாக இருக்கிறது. உலகின் மேற்குப் பகுதியையும், கிழக்கு பகுதியையும் பார்த்தீர்கள் என்றால், மேற்குப் பகுதியில் உள்ளவர்கள் உள்நிலையைச் சரியாகக் கையாள்வதில்லை. அமெரிக்க நாட்டில் உள்ளவர்களில் 40 சதவிகித மக்கள் அவர்களின் வாழ்க்கையில் ஏதாவது ஒரு முறையாவது மன அழுத்தத்துக்கான மருந்தை எடுத்துக் கொள்கிறார்கள் என்று அறிகிறோம். சமநிலையில் இருப்பதற்கு 40 சதவிகித மக்கள் மருந்து உட்கொள்கிறார்கள். இது மனித நலனுக்கு உகந்த விஷயமாக இல்லை. மேற்குப் பகுதியில் உள்ளவர்களோ, வெளியில்தான் அனைத்தும் இருக்கின்றன என நினைத்து உள்சூழ்நிலையைக் கவனிக்க மறந்துவிடுகிறார்கள். எனவே, அவர்களுக்கு வாழ்க்கையே குழப்பமாகி விடுகிறது.

இங்கு, இந்தியாவில் வேறுவிதமான தவறு நடக்கிறது. எல்லாவற்றையும் சொர்க்கமாக நினைத்து வாழ்க்கையை மறந்துவிடுகிறார்கள். இங்கு பெரிய கோவிலைக் கட்டுவார்கள், ஆனால், சரியான கழிவறை இருக்காது. இது இந்தியர்களின் பிரச்சினை. எல்லாமே சொர்க்கத்தில் இருக்கிறது என்று நினைத்து வாழும் உலகை மறந்துவிடுகிறார்கள், எனவே அதற்கான விலையைக் கொடுக்கிறார்கள். எனவே, இந்த இரண்டுக்கும் இடையிலான ஒரு சமநிலை இருந்தால், துன்பத்தின் கதவுகளை செல்வம் திறக்காது!

நன்றி : ஈஷா மையம்

]]>
money, பணம், செல்வம், நிம்மதி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/9/w600X390/cash2-kMHD--621x414LiveMint.JPG http://www.dinamani.com/health/mental-health/2017/jun/09/is-money-a-problem-or-a-solution-2717357.html
2715467 மருத்துவம் மனநல மருத்துவம் உடலுறவு இல்லாமல் 'உறவு' சாத்தியமில்லையா?  Tuesday, June 6, 2017 12:57 PM +0530 அன்றைய காலத்தில் தேவதாசிகள், இன்றோ ஒவ்வொரு மாநகரிலும் இதற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்கள். சினிமா, டிவி, பத்திரிக்கை எனப் பார்க்கும் இடமெங்கும் காமம் சார்ந்த விஷயங்கள் பரவிக் கிடக்கின்றன. காமம் மகத்தான மனித உணர்வென ஒரு சாரார் உரக்க பேசுகிறார்கள். பலரது வாழ்க்கை திசை மாற இது காரணமாய் மாறிவிடுகிறது. இப்படிப்பட்ட காமம் எதற்கு?

இயற்கை காம இச்சையை தூண்டுவதற்கான முக்கிய காரணம் இனப்பெருக்கம். ஆனால், இன்று உடலுறவு கொண்டாலும் பிள்ளை பெறாமல் இருக்க பல சாதனங்கள் வந்தாயிற்று. அதனால், உடலுறவு என்பது பிள்ளை பெறுவதற்காக என்பதை ஒரு பக்கம் வைத்துவிட்டு இதை சற்றே ஆராய்வோம்.
 
உடலுறவு எதற்கு என்று பார்த்தால், அதில் கிடைக்கும் இன்பம் ஒரு காரணம், இரு மனிதர்களுக்கு இடையேயான பந்தத்தின் வெளிப்பாடாக அது இருப்பது இரண்டாவது காரணம், தத்தமது எல்லைகளை நிலைநாட்டுவது போல் தன் உரிமையை மனிதர்கள் பதிப்பது மூன்றாவது காரணம். இந்த மூன்றாவது காரணம், பிழைப்பை சரியாய் நிகழ்த்திக் கொள்வதற்கான ஒரு அமைப்பு. இனப்பெருக்கம் செய்வதற்கான அமைப்பு. இது இல்லையென்றால், உங்கள் குழந்தைகள் மற்ற உயிரினங்கள் போல் திறனோடு ஸ்திரமாக வளர்வது இயலாமல் போய்விடும்

மனிதன் எல்லை வகுப்பது ஏன்?

ஒரு நாய், குட்டி போட்டால், மூன்றே நாட்களில் அவை ஓடி விளையாடத் துவங்கிவிடும். பதினைந்தே நாட்களில், அந்தக் குட்டிகள் தன் உணவைத் தேடிக் கொண்டு, தன் வாழ்வை நடத்திக் கொள்ள ஆரம்பித்துவிடும். ஆனால், மனிதக் குழந்தைகள் அவ்வாறல்ல. அவர்கள் வளர்ந்து தம் வாழ்வை பார்த்துக் கொள்வதற்கு பல காலம் பிடிக்கும். அதுவரை அவர்கள் வளர ஒரு பாதுகாப்பான சூழல் தேவைப்படும். இதனால்தான் மனிதர்கள் எல்லைகளை வகுத்துக் கொள்வது அத்தியாவசியமாகிறது.

'யாருடன் நான் உடலுறவு கொள்கிறேனோ, அவன் அல்லது அவள் எனக்குச் சொந்தம்.' இப்படிப்பட்ட மனநிலை ஒரு குழந்தை வளர்வதற்கு பாதுகாப்பான சூழலை அமைத்துக் கொடுக்க முடியும். ஆனால், இன்றைய 'தனிமனித சுதந்திரம்' போன்ற எண்ணங்களால், இந்த பாதுகாப்புச் சுவர் உடைக்கப்படுவதால், நம் குழந்தைகள் அவதியுறுகின்றனர். இப்படி ஒரு நிலையற்ற, பாதுகாப்பற்ற சூழ்நிலையில் குழந்தைகள் வளர்வது ஆரோக்கியமான விஷயம் அல்ல. ஆனால், அதுவே இன்று சகஜமான நிலையாய் மாறிக் கொண்டிருப்பதால், இன்னும் சிறிது காலத்தில் இதற்கு நாம் பெரிய அளவில் விலை கொடுக்க நேரிடும். நிலையான, பாதுகாப்பான சூழலில் வளராத குழந்தைகள், பெரியவர்களாகும் போது, சமுதாய சீர்கேடுகள் நிகழ்வது உறுதி. அதுவே சமுதாயத்திற்கு பேரழிவையும் உண்டாக்கும்.

அதனால் உடலுறவு கொள்வது, நம் எல்லையை நிர்ணயித்துக் கொள்வது போல. 'இது என் எல்லை' என்று வெறும் வாய் வார்த்தையில் சொன்னால் போதாது. உடலளவில் பதித்து, இதை உறுதி செய்துகொள்ள வேண்டும். கல்யாணமே செய்து கொண்டாலும், உடலுறவு கொண்டால் மட்டுமே அந்த உறவு முழுமை பெறும். அப்போதுதான் அது உண்மையான திருமணம். நமக்குத்தான் திருமணம் நடந்துவிட்டதே, நாம் சும்மா கைகோர்த்து சந்தோஷமாக வாழ்வை வாழ்வோம் என்றால் ஆகாது. அப்படிப்பட்ட எண்ணத்தை மடமை, நிறைவில்லா வாழ்க்கை, இயற்கைக்கு விரோதமானது எனச் சொல்கிறார்கள். எனவே, இந்த உறவிற்கு பாதுகாப்பாய், எல்லைகளை தெளிவாகக் காட்டும் வண்ணம் உடலுறவு என்னும் விஷயம் நம் சமுதாயத்தில் அணுகப்பட்டது. திருமண வாழ்வில் இந்தப் பாதுகாப்பை நிலைநிறுத்த பல கலாச்சாரங்கள் பல நிலைகளில் உறவுமுறையை புனிதப்படுத்தின. இயற்கை ஏற்படுத்தும் உந்துதலை, கலாச்சார வாயிலாக அங்கீகரித்தன.

சிலருக்கு உடலுறவு வைத்துக் கொள்வது, தங்கள் அன்பை ஆழமாக்கிக் கொள்வது போல. உடலுறவு வைத்துக் கொள்ளாவிட்டால், ஒருவரை விட்டு ஒருவர் விலகிச் சென்றுவிட்டதாக மக்கள் எண்ணுகிறார்கள், இது உண்மையல்ல. ஆனால் உடலுறவு எனும் அம்சம் இல்லாவிட்டால், மனதளவிலும் விரிசல் ஏற்படும் என்று பரவலாகப் பேசப்படுவதால், மக்களை பயம் பீடித்துக் கொண்டுவிடுகிறது. உடலளவில் எவ்வித தொடர்புமே இல்லாமல் உங்களால் ஒருவரிடத்தில் மிக ஆழமான உறவை வைத்துக் கொள்ளமுடியும் தானே? வேடிக்கை பாருங்கள், உடலுறவு இல்லாவிட்டால், உண்மையில் அங்கு நிலவுவது உறவே அல்ல என்று மேற்கத்திய கலாச்சாரங்கள் அறிவிக்கின்றன.

மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம்

உடலுறவு இல்லாவிட்டால் ‘உறவு’ என்பது சாத்தியமில்லை என்பது அவர்கள் வாதம். உண்மையில் உங்கள் உடலோடு எவ்வித தொடர்புமே இல்லாமல், என்னால் உங்களுடன் ஒரு ஆழமான உறவை ஏற்படுத்திக் கொள்ளமுடியும். உங்கள் உடலால் எவ்வகையிலும் ஈர்க்கப்படாமல், அதேநேரத்தில் உங்களோடு ஒரு ஆழமான உறவை வைத்துக் கொள்ளமுடியும். ஆனால், இந்தச் சாத்தியங்களை மேற்கத்தியர்கள் அறவே தகர்த்து விட்டனர். உறவு என்றாலே அது உடல் சம்பந்தப்பட்டது என்று அடித்துப் பேசுகின்றனர். உடலிற்கு மிக அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து, நம் அடையாளத்தை உடலளவில் வைத்துக் கொள்வதால் வந்திருக்கும் வினை இது.

ஒருகாலத்தில் இந்தியாவில் குடும்பம் என்றால், அது 300-400 பேரைக் கொண்டதாக இருக்கும். இன்றும்கூட வடஇந்தியாவில் இதுபோன்ற சில குடும்பங்கள் இருக்கின்றன. அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, மாமா, மாமி, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா அவர்கள் பிள்ளைகள், ஒண்ணுவிட்ட தாத்தா, ஒண்ணுவிட்ட பாட்டி என அனைவரும் ஒன்றாக வாழ்ந்தனர். இவர் நெருங்கிய சொந்தம், அவர் தூரத்து சொந்தம் என்ற பிரிவினையெல்லாம் இருக்காது. எல்லாரும் ஒரே குடும்பம் என்ற உணர்வுடன் வாழ்ந்தார்கள்.

பிறகு, மேற்கத்திய கலாச்சாரத்தின் வாடை வீசியது. குடும்பம் என்றால் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, நம் பிள்ளைகள் மட்டும் என்றானது. அதன்பின், பெண் வீட்டார் நம்மவர் இல்லை, அவர்கள் வேற்று மனிதர்கள் என ஒதுக்கினர். விடுவார்களா பெண்கள்? கொஞ்ச காலம் சென்றவுடன், கணவனின் பெற்றோர்களையும் வெளியாளாக்கினர். ஆக, இப்போது குடும்பம் என்றால், கணவன், மனைவி, பிள்ளைகள் என்றாகிவிட்டது. இதிலும், இன்று குழந்தைகள் இடைஞ்சலாக இருப்பதாக மக்கள் நினைப்பதால், வளர்ந்ததும் அவர்களையும் வெளியனுப்பிவிட்டு, நீயும் நானும் மட்டும்தான் குடும்பம் என்னும் நிலைமை மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுவும் பிரச்சினையாகி, வாரம் முழுவதும் தனித்தனியாக இருப்போம். சனி ஞாயிறு மட்டும் சந்திப்போம் என்று சொல்லி உறவினை காப்பாற்றி வருகிறார்கள். ஏழு நாளும் ஒன்றாக இருப்பது சாத்தியமில்லையே!

எதனால் இப்படியொரு சூழ்நிலை உருவாகி இருக்கிறது?

'நான்' என்ற எண்ணம், கர்வம் சற்றே அதிகமாகி வருகிறது. இதுபோன்ற 'தனித்துவமயமான' எண்ணங்கள் உங்களை, உங்கள் உடல்சார்ந்த நிலையில் செயல்பட தூண்டுகிறது. உடலுடனான அடையாளம் மிக ஆழமாக இருப்பதால், உடல்சார்ந்த உறவுகள் மட்டுமே உயரியது என்று எண்ணுகிறீர்கள். இதனால் இழப்பது என்ன என்று பலருக்கும் புரிவதில்லை. உடல் மட்டும் சம்பந்தப்படாவிட்டால் ஆயிரமாயிரம் மனிதர்களோடு அற்புதமான உறவுகளை ஒருவர் வைத்துக் கொள்ளலாம். உறவினுள் உடல் புகுந்துவிட்டால், மிக சிலரோடு மட்டுமே உங்களால் உறவு கொள்ள முடியும். எவ்வளவுதான் உங்களுக்கு மோகம் இருந்தாலும், காமம் இருந்தாலும் எண்ணிக்கையில் சொற்ப அளவிலான மனிதர்களுடன் மட்டுமே உறவு கொள்ள முடியும். இதுவே, உடல் சம்பந்தப்படாத பட்சத்தில், எண்ணிலடங்கா மனிதர்களுடன் மிக அழகான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளமுடியும்! 

எனவே, உடலுறவு அத்தியாவசியம் என்றல்ல. தனிமனிதருக்கு இருக்கும் தேவையை அனுசரித்து அதை அணுகலாம்.

- சத்குரு ஜக்கிவாசுதேவ்

]]>
Relationship, உடலுறவு, ஆண் பெண் உறவு, உறவு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/6/w600X390/udaluravu-illamal-uravu-sathiyamillaiya.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/jun/06/is-relationship-possible-without-sex-2715467.html
2711305 மருத்துவம் மனநல மருத்துவம் இப்படிப்பட்ட ஃபேஸ்புக் தேவையா? IANS IANS Tuesday, May 30, 2017 04:01 PM +0530 ஃபேஸ்புக் பற்றிய புதிய ஆராய்ச்சி ஒன்று சமீபத்தில் வெளிவந்துள்ளது. பெரும்பாலானவர்கள் பேஸ்புக்கில் தங்கள் புகைப்படங்களை ஃப்ரொஃபைல் படமாக வைத்திருப்பார்கள். சிலர் ஒரே ஃபோட்டோவை நிரந்தரமாக வைத்திருப்பார்கள். சிலர் எப்போதாவது புகைப்படத்தை மாற்றுவார்கள். இன்னும் சிலர் தினமும் புகைப்படத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். ஒரே புகைப்படத்தை வைத்திருப்பவர்களுக்கும், எப்போதாவது ஃபோட்டாவை மாற்றுபவர்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அடிக்கடி தங்கள் ஃபோட்டோவை அப்லோட் செய்பவர்களுக்குத் தான் அனேக பிரச்னைகள் என்கிறது இந்த ஆராய்ச்சி.

இப்படி அடிக்கடி, நொடிக்கு நொடி தங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஃப்ரொஃபைல் படம் மாற்றுபவர்கள் ஒரு கட்டத்தில் மன பாதிப்புக்களுக்கு உள்ளாகி கடுமையான சோகத்துக்கும் காரணம் தெரியாத ஒருவித நடுக்கத்துக்கும் உள்ளாகிறார்கள் என்றும் அவர்களின் மன நலமும் பாதிப்படைகிறது என்றும் யேல் பல்கலைகழகம் மற்றும் சான் டியகோவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் சேர்ந்து  ஃபேஸ்புக் பயன்பாடுகளைப் பற்றிய ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. இந்த ஆய்வினை மேற்கொண்டவர்கள் பேராசிரியர்களான ஷாக்யா மற்றும் நிகோலஸ் க்றிஸ்டாகிஸ் ஆகியோர். இதற்காக ஃபேஸ்புக் 5208 பதிவர்களை 2013 ஆண்டிலிருந்து 2015 ஆண்டு வரை இவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அதிகப்படியாக ஃபேஸ்புக்கை பயன்படுத்துபவர்கள் கூடிய விரைவில் நிகழ்காலத்தை மறந்துவிடுகிறார்கள். எப்போதும் மானிட்டரில் வாழும் அவர்கள் சமூக அக்கறையை இழக்கிறார்கள், மேலும் அவர்களது உடல் மற்றும் மன நலனும் பெருமளவு பாதிப்படைகிறது என்று பதிவு செய்கிறது மெட்ரோ.கோ.யூகே (Metro.co.uk ) எனும் இணையதளம்.

மேலும் அடிக்கடி தங்களுடைய புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவிடுவது அல்லது மற்றவர்களுடைய பதிவுகளுக்கு அதிகப்படியாக லைக் போடுவது, போன்ற செயல்கள் ஃபேஸ்புக் பிரியர்களை நாளாவட்டத்தில் கடுமையான மனச் சிக்கல்களுக்குள் இழுத்துச் சென்றுவிடும் என்கிறது இந்த ஆய்வு. 

இந்த ஆராய்ச்சி முடிவு அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் எபிடெமியாலஜியில் வெளியிடப்பட்டுள்ளது.

]]>
Facebook, mental health facebook, ஃபேஸ்புக் பிரச்னைகள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/30/w600X390/face.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/may/30/face-book-addition-leads-to-depression-2711305.html
2711278 மருத்துவம் மனநல மருத்துவம் வாழ்க்கை வெற்றிகரமாக நடக்க DIN DIN Tuesday, May 30, 2017 12:47 PM +0530 ஈஷாவில் எப்போது மீட்டிங் இருந்தாலும், அசத்தோமா சத்கமய உச்சாடனத்துடன் துவங்கச்சொல்லி நான் வலியுறுத்துவேன். இது ஏதோவொரு கலாச்சாரம் கொண்டுவருவதற்காக அல்ல. அசத்தோமா சத்கமய என்பது ஒரு உள்ளெழுச்சிப்பாடலும் ஒரு நினைவூட்டலுமாக இருக்கிறது. நீங்கள் உருவாக்குவது எல்லோருடைய நல்வாழ்வுக்காகவும் வேலைசெய்யுமா செய்யாதா என்பதற்கான நினைவூட்டலது. நாம் உருவாக்கும் எல்லாவற்றுக்கும் இது பொருந்தும் – நமக்குள் உருவாக்கும் எண்ணங்களும் உணர்வுகளுமாக இருந்தாலும், வெளியில் பணம் சம்பாதிப்பது, தொழில் செய்வது, பிழைப்பை சம்பாதிப்பது, அல்லது பெரிய அரங்கில் நிகழும் விஷயங்களான அரசியல், பொருளாதாரம், போர், என்று எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். சூழ்நிலை என்னவாக இருந்தாலும், அடிப்படையான கேள்வி, 'இது எல்லோருடைய நலனுக்காக வேலை செய்கிறதா இல்லையா?' அல்லது குறைந்தபட்சம் அது பெரும்பாலான மக்களின் நலனுக்கு வேலை செய்கிறதா? ஏதோவொன்றை அது எப்படி வேலை செய்கிறதோ அப்படியே நீங்கள் செய்யவேண்டும் என்றால், வாழ்க்கையின் அந்த அம்சம் குறித்த உண்மையை நீங்கள் கண்டுணர வேண்டும். இதை உங்களைச் சுற்றியுள்ள உலகம், உங்கள் உள்தன்மை என்று இருவிதங்களிலும் நீங்கள் உணர்ந்திருக்க வேண்டும்.

வேலை செய்வது எதுவாயினும் எனக்கு அவற்றின் மீது ஆர்வமுண்டு. பொதுவாக இயந்திரங்கள் சரியாக இயங்கக்கூடியவை. அதனால் நான் சில சமயங்களில் கார் விளம்பரங்கள் வாசிப்பேன். ஆனால் பொதுவாக நான் அவற்றில் காண்பதெல்லாம் அதிலுள்ள ஸ்டீரியோ அமைப்பு, சீட் அமைப்பு, விசேஷ வண்ணப்பூச்சு, என்று கூடுதல் வசதிகள் குறித்த தகவல்களே. இந்நாட்களில் மக்களுக்கு பாதுகாப்பு குறித்த பதற்றம் தொற்றிவிட்டதால் அதன் ஏர்பேக் அமைப்பு குறித்த தகவலும் விளம்பரப்படுத்தப்படுகிறது. எஞ்ஜின் அமைப்பு, டிரான்ஸ்மிஷன், ஓட்டுவதில் அந்த காரிலிருக்கும் நுட்பங்கள் போன்றவை குறித்த ஒரு வார்த்தை கூட வருவதில்லை. பெரும்பாலான மக்கள் வாழும் வாழ்க்கையின் அறிகுறியாகவே இதை நான் காண்கிறேன். அவர்களுக்கு தோற்றத்தின் மீதும் கேட்ஜெட்கள் மீதும் ஆர்வம். மக்களுக்கு ஆயுள் காப்பீடு இருக்கிறது, ஆனால் ஆயுள்காலத்தில் வாழ்வதற்கு வாழ்க்கையில்லை. அவர்கள் தங்கள் துயரத்தைத்தான் காப்பீடு செய்கிறார்கள்.

உங்களுக்கு உண்மையிலேயே முக்கியமானவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, உங்களைப் பற்றிய எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, எல்லாம் நல்லவிதத்தில் இயங்கும்விதமாகச் செய்வதே ஆன்மீக செயல்முறை. உங்களுக்கு உண்மையில் முக்கியமானவற்றுக்கு நீங்கள் முக்கியத்துவம் தராத பட்சத்தில், அமைதியாக அமர்வது எப்படி என்பதைக் கூட நீங்கள் அறியமாட்டீர்கள். மக்களில் கிட்டத்தட்ட தொண்ணூறு சதவிகிதத்தினருக்கு அமைதியாக இருப்பது எப்படி என்பதற்கு பாடம் தேவை. ஒரு பசுவும் கழுதையும் வயிறு நிறைந்துவிட்டால் அமைதியாக உட்கார்ந்துகொள்ளும், ஆனால் மனிதர்கள் அதற்கு போராடுகிறார்கள். வெளி உதவி இல்லாமல், மக்கள் தங்களுக்குத் தாங்களே சொல்லமுடியாத துயரங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். ஏதோவொன்று அவர்களுக்கு விருப்பமில்லாதது நடந்துவிட்டால், மக்கள் துயரமடைவார்கள். ஏதோவொன்று அவர்களுக்கு விருப்பமானது நடக்காவிட்டால், அவர்கள் இன்னும் அதிகமாக துயரமடைவார்கள். ஆன்மீக செயல்முறை என்பது வேறொரு இடத்திற்கு செல்வது குறித்ததல்ல. அது எல்லாவற்றையும் சரியாக உள்வாங்கிக்கொள்வது குறித்தது. எல்லாவற்றையும் நீங்கள் இருக்கும்படியே பார்த்தீர்களானால், உரிய வரிசைப்படி முக்கியமானவற்றுக்கு முறையே முக்கியத்துவம் வழங்கப்படும்.

ஒரு மரம் வளர்க்க விரும்பினால், சட்டென கண்களுக்குத் தென்படும் பாகங்களான இலைகள், கிளைகள் மற்றும் தண்டிற்கு நீங்கள் கவனம் செலுத்த வேண்டுமா, அல்லது சாதாரணமாக கண்ணிக்குத் தெரியாத வேருக்கு ஊட்டமளிக்க வேண்டுமா? தோராயமாக நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, மைசூர் அருகில் எனக்கு பண்ணை இருந்தபோது, அதிசய திரவம் என்று சொல்லிக்கொண்டு என்னிடம் ஒரு பொருளை விற்பனை செய்ய சிலர் முயன்றார்கள். என் தோட்டத்தில் நிறைய மாமரங்கள் இருந்தன. நான் இந்த திரவத்தை அந்த பழங்கள் மீது தெளித்தால், அவை பெரிதாகிவிடும் என்றார்கள். நான் அப்போது ஞானோதயம் அடையாதபோதும், எனக்கு இதை உணரப் போதுமான அறிவுக்கூர்மை இருந்தது. அவர்களுடைய வாசகம், 'வேருக்கில்லை, பழத்திற்கு' என்பதே. இந்த எண்ணமே மிக அபத்தமாக இருந்ததால், இது எங்கள் பகுதியில் மிகப்பெரிய கேலிக்கூத்தாகிவிட்டது. இதை அவர்கள் உணர்ந்ததும் அவர்கள் திட்டத்தை கைவிட்டுவிட்டனர். இதற்கு நேர்மாறானதே உண்மை. வேருக்கு நீங்கள் ஊட்டமளித்தால், பழத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை, அது இயற்கையாகவே நிகழும்.

ஒருநாள் நான் ஒருவரை சந்தித்தபோது அவர்களிடம் விளையாட்டாக இப்படிக் கேட்டேன், 'நீங்கள் செய்யும் பணிகளுக்கு உங்களை போற்றுகிறார்களா?' அவர் சொன்னார், “என்ன செய்தாலும் சரி, ஈஷாவில் எதற்கும் எவரும் எவரையும் புகழ்வதில்லை. என்ன தவறாகிப்போனது என்பதை மட்டும்தான் சொல்கிறார்கள்.” அதற்கு நான் சொன்னேன், 'இந்த ஒரு கலாச்சாரத்தை அவர்கள் என்னிடமிருந்து கற்றுக்கொண்டது நல்லது. எது வேலை செய்யவில்லையோ அதற்கு மட்டும்தான் கவனம் தேவை.' நீங்கள் நன்றாக செய்யும் செயலுக்காக நான் உங்களை புகழவேண்டிய அவசியமில்லை. எப்படியும் பழங்கள் கனிந்து அதனை நீங்கள் ருசிப்பீர்கள். நீங்கள் செய்யும் செயல் படைப்பின் அடிப்படைகளுடன் ஒத்திசைவாக இல்லாத விதமாக இருந்தால், அது வேலைசெய்யாது. வேர்களின் வீரியம் தான் பழத்தை உற்பத்தி செய்கிறது. சிலநாட்களிலேயே பழத்தை செயற்கையாக பெரிதாக்கக்கூடிய ஒரு ரசாயனத்தை நீங்கள் கண்டுபிடித்தாலும், அது அம்மரத்தையும் வேரையும் எப்படி பாதிக்கும் என்பது நமக்குத் தெரியாது.
 
ஆன்மீகம் என்பது, இது வேர் பற்றியது, பழத்தைப் பற்றியதல்ல என்பதைப் புரிந்துகொள்வது. இது எப்படியென்றால், செயலின் பலன் பற்றி நீங்கள் கவலைப்படக்கூடாது என்று கீதை சொல்கிறது. 'யோகஸ்த குரு கர்மானி' என்றும் கீதை சொல்கிறது. அதாவது முதலில் உன்னை நீ யோகத்தில் வேரூன்றிக்கொள், பிறகு என்ன வேண்டுமானாலும் செய், அது வேலை செய்யும். யோகத்தில் வேரூன்றி இருப்பது என்றால், சங்கமத்தில் வேரூன்றியிருப்பது. அதாவது உங்களைச் சுற்றியுள்ள எல்லாவற்றுடனும் நீங்கள் ஒன்றியிருப்பது. இந்த விழிப்புணர்வுடன் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். விழிப்புணர்வு என்பது ஒரு கோட்பாடு கிடையாது. யோக அனுபவத்தில் நீங்கள் வேரூன்றி இருந்தால், நீங்கள் என்ன செய்தாலும் சரி, வாழ்க்கையின் பழத்தை ருசிப்பீர்கள். 

எப்படிப்பட்ட பழம் வரும் என்பது நீங்கள் எப்படிப்பட்ட மரம் என்பதைப் பொருத்தது. நீங்கள் தென்னை மரமாக இருந்து மாம்பழத்திற்குக் கனாக்கண்டால், தோல்வி நிச்சயம். ஒரு தேங்காய் வந்தால், அதை ஒரு பழமாக அடையாளம் காணமாட்டீர்கள். பல மனிதர்களுக்கு இப்படி நடப்பதை நான் காண்கிறேன். மிக அற்புதமான விஷயங்கள் அவர்கள் வழி வரும்போது, அவற்றை அடையாளம் காணும் சாமர்த்தியம் அவர்களுக்கு இருப்பதில்லை. அவர்களுக்கு நடக்கவே முடியாத ஒன்றிற்கு அவர்கள் ஆசைப்படுவார்கள். இங்கு இருக்கும் பழத்தை எப்படி ருசிப்பது என்று தெரியாமல், வராத ஒரு பழத்தை எதிர்பார்த்திருப்பதில் வாழ்க்கை வீணாகிப்போகும். தவறான எதிர்பார்ப்புகள் மக்களை பைத்தியம் பிடிக்கும் நிலைகளுக்குத் தள்ளுகிறது. இப்படி நடப்பதற்குக் காரணம், சமுதாயங்கள் இலக்கில் மட்டுமே கவனம் கொண்டவையாக மாறிவிட்டன. மக்களுக்கு அவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதில் கவனமில்லை, அவர்களுக்கு என்ன கிடைக்கவேண்டும் என்பதில் மட்டுமே கவனம். இன்று சமுதாயம் உங்களிடம் என்ன இருக்கிறது என்பதற்காகவே உங்களை அங்கீகரிக்கிறது, நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பதற்காக அங்கீகரிப்பதில்லை. யாரோ ஒருவரை அவர் 'பெரிய ஆளு' என்றால், அவருக்கு பெரிய மூளை, பெரிய இதயம், மிகுந்த விவேகம் இருக்கிறது என்று அர்த்தமல்ல, அவருக்கு பெரிய வங்கிக்கணக்கு இருக்கிறது. 'அவரிடம் என்ன இருக்கிறது?' என்பது மட்டுமே இன்று ஒரு பொருட்டாக இருக்கிறது. தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கான ஒரே வழி, மென்மேலும் எதையாவது சேர்த்துக்கொள்வது என்றே மக்கள் நினைக்கிறார்கள்.

நம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும், நாம் பூமியிலிருந்தே கொள்ளையடித்தோம். நம் பிழைப்பிற்குத் தேவையானதை நாம் ஓரளவு செய்தாகவேண்டும். ஆனால் இங்கே சும்மா அமர்ந்தபடி எப்படி முழுமையான பேரானந்தத்தில் இருப்பது என்பதை நாம் அனைவரும் அறிந்திருந்தால், நாம் எல்லாவற்றையும் எந்த அளவு தேவைப்படுகிறதோ அந்த அளவு மட்டுமே செய்வோம், அதற்கு அதிகமாகவும் செய்யமாட்டோம், குறைவாகவும் செய்யமாட்டோம். நீங்கள் யாரென்பதை உங்களைச் சுற்றியுள்ள தட்டுமுட்டுப் பொருட்களும் பிற பொருட்களும் நிர்ணயிக்கும்போது, நீங்கள் எல்லாவற்றையும் மிகையாகச் செய்து பூமியை அழித்துக்கொண்டு இருப்பீர்கள். அதனை உங்களால் கட்டுப்படுத்த இயலாது. ஏனென்றால் ஒருவர் ஆடம்பரம் என்று நினைக்கும் ஒன்றை இன்னொருவர் அத்தியாவசியம் என்று நினைக்கிறார். அவரவர் சமுதாய அனுபவங்களுக்கேற்ப கண்ணோட்டங்கள் மாறுபடுகின்றன. ஆனால் அது உங்கள் வாழ்க்கை தரத்தை நிர்ணயிப்பதில்லை. அதனால்தான் 'அசத்தோமா சத்கமய'. முதலில் உங்களை நீங்களே 'உண்மை'யில் நிலைநாட்டுங்கள், பிறகு உங்களைச் சுற்றியுள்ள உலகிற்குள் பிரவேசியுங்கள். உங்களுக்குள் நீங்கள் வேரூன்றி இருக்கவில்லை என்றால், இறுதியில் உங்களுக்கு எதிராக வேலைசெய்யக்கூடிய விஷயங்களையே நீங்கள் செய்வீர்கள். 

அன்பும் அருளும்,
சத்குரு

]]>
sadhguru, success in life, ஈஷா, சத்குரு, அசத்தோமா சத்கமய http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/30/w600X390/maxresdefault.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/may/30/asatoma-sadgamaya-chanting-of-vedic-hymns-secrets-to-success-2711278.html
2711273 மருத்துவம் மனநல மருத்துவம் மனதை எப்படிக் கட்டுப்படுத்துவது? ரஜினியிடம் கேட்கப்பட்ட கேள்வி! Tuesday, May 30, 2017 12:19 PM +0530 மனதை எப்படிக் கட்டுப்படுத்துவது? ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினியிடம் இக்கேள்வி கேட்கப்பட்ட போது அவர் வழக்கமான ஸ்டைலுடன் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு சொன்ன பதில் இது :

'இந்த கேள்வியை நிறைய பேர் என்கிட்ட கேட்டு இருக்காங்க. என்னை என்னவோ பெரிய யோகி, சாதுன்னு நினைச்சுட்டாங்க.

சில பேர் அதை ட்ரை பண்றாங்க. அதை கட்டுப்படுத்த முடியாது!

அதுக்கப்புறம் கட்டுப்படுத்த முடியாம, இன்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வந்துடுது.

அது தேவையே இல்லை.

அதைப்பத்தி கவலைப்படாதீங்க!

காலையில எழுந்தரிச்சவுடனே ஒரு அஞ்சு நிமிஷம் பிக்ஸ் பண்ணிக்கோங்க.

அப்படியே உட்கார்ந்துகிட்டு ஜஸ்ட் உங்க மனசை மட்டும் ·பாலோ பண்ணுங்க.

அது எங்காவது போகட்டும்.

எது பின்னால வேணும்னாலும் போகட்டும்

யாரு பின்னால வேணும்னாலும் போகட்டும்.

ஜஸ்ட் அப்சர்வ் பண்ணுங்க. பிறகு எழுந்திடுச்சுடுங்க.

அதை கன்டினியூ பண்ணுங்க.

அதை பண்ண பண்ண அது அப்படியே வந்து மனசு உங்க கண்டோரல்ல வரும்.

அப்ப வந்து உங்க .இஷ்ட தெய்வம் அனுமந்திரம் பத்தி கான்ஸன்ட்ரேட் பண்ணமுடியும்.

இது எப்படின்னு சொன்னா... ஒரு குப்பைத் தொட்டி இருக்கு, அதிலே ஏதாவது புதுசா போடணும்னு சொன்னா, முதலிலே தொட்டில்ல இருக்கிற குப்பையை எடுக்கணும். அதை எடுத்த பிறகு தானே புதுசா போடமுடியும். ஆக, அதெல்லாம்
போகட்டும். அது வந்து இயற்கை. அதைப் பத்தி எந்த இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் வெச்சுக்காதீங்க. நீங்க ஜஸ்ட் அதை பாலோ பண்ணுங்க போதும்'.

- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

]]>
mind power, Rajinikanth, Superstar, ரஜினிகாந்த் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/30/w600X390/22rajanikant7.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/may/30/how-to-control-your-mind-superstar-rajinikanth-answers-2711273.html
2707273 மருத்துவம் மனநல மருத்துவம் வாழ்க்கை சிறக்க 10 வழிமுறைகள் Tuesday, May 23, 2017 12:30 PM +0530 வாழ்க்கை சிறக்க பத்து வழிமுறைகள் இருந்தால் சொல்லுங்களேன்? என்ற கேள்வியை சத்குருவிடம் ஒருவர் கேட்க, அதற்கு அவர் அளித்த பதில் என்னவாக இருக்கும்… இது போன்ற மேலும் இரு சுவாரஸ்யமான கேள்விகளுக்கும் பதில் இங்கே.

வாழ்க்கையைச் சிறப்பாக நடத்த பத்து எளிய வழிமுறைகள் இருந்தால் சொல்லித் தாருங்களேன்

சில சூத்திரங்கள், சில கோட்பாடுகள், சில கோஷங்கள், சில விதிமுறைகள், இவற்றைச் சுற்றியே வாழ்க்கையைப் பின்னப் பார்க்கிறீர்கள். வாழ்க்கை அப்படி நடக்காது. உங்கள் வாழ்க்கையை அதன் அடிப்படைத் தன்மையை உணர்ந்து வாழத் தலைப்பட்டீர்கள் என்றால் தான் வாழ்க்கை அதன் உண்மையான முகத்தைத் தங்களுக்குக் காட்டும்.

காலை ஆறு மணிக்கு எழுந்திரு. மனைவியிடம் பத்து முறை ‘ஐ லவ் யூ’ என்று சொல், குழந்தையுடன் பத்து நிமிடங்களாவது செலவு செய். பக்கத்து வீட்டுக்காரர்களைப் பார்க்கையில் புன்னகைத்துக் காலை வணக்கம் சொல். என்றெல்லாம் சில வழிமுறைகளைப் பின்பற்றப் பார்த்தீர்கள் என்றால், சில நாட்களுக்குள் அது உங்களைத் தின்றுத் துப்பிவிடும். நீங்கள் மனைவிக்காக ஒதுக்கிய நேரத்தில் அவள் உங்களுடன் செலவு செய்யத் தயாராக இல்லாமல் இருந்தால், வாழ்க்கை நரகமாகிவிடும்.

சூத்திரங்களைக் கடைப்பிடித்து வாழ்பவர்கள் சில நேரம் நினைத்ததை சாதிக்கலாம். ஆனால், அவர்கள் வாழ்வது உயிர்ப்புடன் கூடிய வாழ்க்கை அல்ல. உயிரற்ற இயந்திரத்தனமான வாழ்க்கை. இயந்திரத்தனமாக வாழ்பவர்கள் அதிலேயே மூழ்கடிக்கப்பட்டு சந்தோஷமற்ற முகங்களுடன் வளைய வருவதை நீங்கள் பார்க்கலாம். சூத்திரங்களை விட்டுத் தள்ளுங்கள். வாழ்க்கையை அந்தந்தத் தருணத்துக்கு ஏற்றபடி உணர்வுப்பூர்வமாக, முழுமையான விழிப்புணர்வுடன் வாழத் துவங்குங்கள்.

போட்டி, பொறாமை உணர்வுகளிலிருந்து எப்படி என்னை விடுவித்துக் கொள்வது?

உங்களிடம் இல்லாத ஒன்று மற்றவரிடம் இருப்பதைக் கண்டால் பொறாமை வருகிறது. உங்களை விட அவர் அதிகம் வைத்திருப்பதாக நீங்கள் நினைப்பதால், இந்த உணர்வு வருகிறது. அதாவது இட்டு நிரப்ப உங்களிடம் இன்னும் பல காலியிடங்கள் இருப்பதாக நீங்கள் உணர்வதால் தான் மற்றவருடன் ஒப்பிட்டுப் பார்த்து வேதனை கொள்கிறீர்கள். ஒப்பிடுவதால் தான், போட்டி பொறாமை எல்லாம் உருவாகிறது. நீங்கள் எந்தப் பற்றாக்குறையும் கொண்டவராக உணராமல், முழுமையடைந்தவராக உணர்ந்து விட்டால், இந்த வேண்டாத எண்ணங்கள் ஏன் நெருங்கப் போகின்றன?

இதற்கு என்ன செய்வது? பொதுவாக நீங்கள் பூரண மகிழ்ச்சியாக இருக்கும்போது, மற்றவரைப் பார்த்துப் பொறாமை வருகிறதா என்று யோசியுங்கள். இல்லை. உங்கள் உயிர்ச்சக்தி ஒவ்வொரு கணமும் ஆனந்தமாக இருக்கவே விழைகிறது. அதை கவனித்து செயல்படுங்கள். பொறாமையை ஒழித்துக் கட்டுவதற்கு முனைவதை நிறுத்திவிட்டு, நீங்கள் எப்படி எப்போதும் ஆனந்தமாக இருப்பது என்று யோசியுங்கள். பொறாமை என்பதே இல்லாமல் போய்விடும்.

]]>
10 tips for success in life, success, secret of success, வாழ்க்கையின் ரகசியம், வெற்றியின் ரகசியம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/23/w600X390/--10-.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/may/23/ten-tips-for-successful-life-2707273.html
2706792 மருத்துவம் மனநல மருத்துவம் இளைஞர்களை அலைக்கழிக்கும் இன்ஸ்டாக்ராம்! IANS IANS Monday, May 22, 2017 04:43 PM +0530 சமூக வலைத்தளங்களிலேயே ஆக மோசம் என ஒன்றை சுட்டிக் காட்ட விரும்பினால், அது நிச்சயம் இன்ஸ்டாக்ராம் பயன்பாடுதான். இளம் வயதினர் பலருக்கு இரவுத் தூக்கம் இதைப் பயன்படுத்தாமல் இருந்தால் வராது. அந்தளவுக்கு இதனால் பலர் மனம் பாதிப்படைந்துள்ளனர் என்கிறது பிபிசி.

இந்த வாக்கெடுப்பை நடத்தியவர்கள் ராயல் சொசைட்டி ஃபார் பப்ளிக் ஹெல்த். இதற்காக 14 லிருந்து 24 வயதுக்குட்பட்ட 1,479 இளைஞர்களை வரவழைத்தனர். அவர்களிடம் பலதரப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. யூட்யூப், இன்ஸ்டாக்ராம், ஸ்னாப்சாட், ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பயன்பாடுகள் குறித்து பேசினார்கள். அவர்களிடம் ஒவ்வொரு பிரிவிலும் 14 மார்க்குகள் வாங்கும்படி அறிவுறுத்தபட்டது.

இந்த ஒப்பீட்டில் மனநலனைப் பொருத்தவரையில் யூட்யூப் மட்டுமே ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அதற்கு அடுத்ததாக ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் இருந்தது. ஆனால் ஸ்னாப்சாட் மற்றும் இன்ஸ்டாக்ராம் இரண்டுமே மோசமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.

சமூக வலைத்தளம் இளைஞர்களை கடுமையான மன அழுத்தப் பாதிப்புக்களுக்கு உள்ளாக்குகிறது பிபிசி என்று பதிவு செய்தது.  இணையதளங்களை நல்லவற்றுக்கும் பயன்படுத்த முடியும் ஆனால் கட்டற்ற சுதந்திரமும் விரல் நுனித் தகவல்களும் அவர்களை தீயவற்றுக்கு எளிதில் நெருங்கும்படியாக்கிவிடுகிறது. எனவே இணைய நிறுவனங்கள் தங்களின் தளங்களின் பாதுகாப்பு முறைகளை மேலும் பலப்படுத்தவேண்டும் என்றும் கூறுயது. இணையப் பயனாளர்களில் 90 சதவிகிதத்தினர் இளம் வயதினர்தான். அவர்களுக்கு எது சரி எது தவறு என்று பகுத்து உணர முடியாத வயது. ஆர்வக் கோளாறு மிகுந்து இருக்கும் அந்தக் காலகட்டத்தில் இணையத்தின் வழியே அவர்களுக்கு கிடைக்கும் பல தவறான விஷயங்கள் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையை பாதித்துவிடுகிறது. சுயமோகம் அதிரித்து அடுத்தவர்களின் நலனில் சிறிதும் அக்கறையின்றி இருப்பார்கள். இதை ஆரம்பத்திலேயே தடுத்துவிட்டால் நல்லது. பெற்றோர்களும் பள்ளி ஆசிரியர்களும் சமூகத்தினரும் இப்பிரச்னைக்கு ஒரு தீர்வை கண்டு பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அதன் விளைவுகள் பல சமூக சீர்கேடுகளுக்கு வித்திடும் என்று வருந்துகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

]]>
Instagram, Social Network, You tube, இன்ஸ்டாக்ராம், சமூக வலைத்தளம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/22/w600X390/instagram-icon-2016z.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/may/22/usage-of-instagram-by-young-generation-2706792.html
2706786 மருத்துவம் மனநல மருத்துவம் நம் பேராசையை வெல்வதற்கு எது சிறந்தவழி?  Monday, May 22, 2017 04:23 PM +0530 புத்தர் ஆசையை அறவேவிடச் சொன்னார். நீங்கள் அத்தனைக்கும் ஆசைப்படு என்ற பெயரில் தொடர் எழுதினீர்கள், ஏன்?

சத்குரு: 2500 ஆண்டுகளுக்கு முன்னால் புத்தர் என்ன சொன்னாரோ, யார் அதை எப்படித் திரித்து சொன்னார்களோ, யாருக்குத் தெரியும்? இங்கே உங்கள் கண் முன்னால் ஒன்று நடப்பதை இன்னொருவரிடம் அங்கே அப்படி நடந்தது என்பீர்கள். அவர் அதை இன்னொருவரிடம் அவர் பாணியில் விளக்கிச் சொல்வார். இப்படியே அது ஒரு சுற்று சுற்றி மீண்டும் உங்கள் காதுக்கே வரும்போது, நீங்கள் சொன்னது முழுவதும் மாறி இருக்கும். உங்களுக்கே அது பெரும் வியப்பாக இருக்கும்.

நான் பேசுவதை உட்கார்ந்து கேட்டுவிட்டு, வீட்டில் போய் அவர்களுக்குப் புரிந்தவிதமாகப் போதிக்கத் தொடங்குவார்கள். ஒரேநாளில் நான் பேசியதை மாற்றிக் கூறிவிடுவார்கள். அப்படி இருக்கும்போது 2500 வருடங்களில் எவ்வளவோ நடந்திருக்க முடியும், இல்லையா?

நீங்கள் ஆசையை விட்டுவிட்டு இங்கே இருக்க முடியுமா? ஆசையை விடவேண்டும் என்பதே ஒரு மிகப்பெரும் ஆசைதானே! துன்பங்கள், ஆசைகளால் வருவதில்லை. நிறைவேறாத ஆசைகளால்தான் வருகின்றன. ஆசையை விட்டுவிட வேண்டும் என்ற ஆசை எப்போதுமே நிறைவேறப் போவதில்லை. அப்படியானால் புத்தர் முட்டாள்தனமாய் கூறியிருக்க முடியுமா? அவரது வாழ்க்கையை சிறிது ஆழமாய்ப் பாருங்கள். அவர் ஞானம் பெற்ற நாளில் இருந்து ஏறத்தாழ 40 வருடங்கள், தேசத்தின் எல்லாப் பகுதிகளுக்கும், கிராமம், கிராமமாக ஒவ்வொரு பகுதிக்கும் நடந்தே சென்றார். ஆசையே இல்லாத மனிதன் எதற்காக இப்படிச் செயல்பட வேண்டும்? அந்த மனிதருக்கு ஆசை இருக்கவில்லை என்றா நினைக்கிறீர்கள்?

பேராசை வைத்திருந்தார் அவர். எனக்குக் கிடைத்த பேரானந்தம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற பேராசை அவருக்கு. எனக்கும் அப்படித்தான். ஒவ்வொரு உயிரும் என்னைப் போல் ஆனந்தமாய் இருக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு. நீங்கள் சின்னச் சின்ன ஆசை வைத்துக்கொள்கிறீர்கள். ஆசையில் ஏன் கஞ்சத்தனம்? என் நலனில் எப்படி எனக்கு ஆசையோ… அதேவிதமாக எல்லா உயிர்களின் நலன்மீதும் ஆசை வந்துவிட்டால் அது பேராசைதான். அதனால்தான் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’.

நம் பேராசையை வெல்வதற்கு எது சிறந்தவழி? 

நீங்கள் பேராசையை வெல்லக்கூடாது. அதை இன்னும் அதிகரித்துக் கொள்ளவேண்டும். நீங்கள் பேராசையை வெல்லவேண்டாம் என்று நான் சொல்லக் காரணம், அதை வெல்வது நடக்காத காரியம். ‘நான் பேராசையை அடக்கிவிட்டேன்’ என்பதெல்லாம் வெறும் நடிப்பு. பேராசை என்றால் என்ன? இருப்பவை எல்லாம் உங்களுக்கே வேண்டும். ‘உங்களுக்கே’ என்பது என்ன? நீங்கள், உங்கள் குடும்பம்… சிலநேரங்களில் உங்கள் சமூகம். நான் சொல்வதெல்லாம், உங்கள் பேராசையில் எல்லோரையும் சேர்த்துக் கொள்ளுங்களேன்!

எதற்காக பேராசையைத் துறக்க நினைக்கிறீர்கள்? எல்லோரையும் சேர்த்துக் கொண்டால், பேராசையும் நல்லது தான். எல்லாவற்றிற்கும் ஆசைப்படுவது, இந்த முழு பிரபஞ்சத்திற்குமே ஆசைப்படுவது பேராசையின் உச்சம் தான், இல்லையா? இதுதான் ஆன்மீகம். அதனால் இப்போது உங்களுக்கிருக்கும் பேராசை போதாது. தயவுசெய்து உங்கள் பேராசையை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
உங்கள் பேராசையை சுருக்க நினைக்காதீர்கள். அதை எவ்வளவு முடியுமோ, எந்த அளவிற்கு அது விரிவடையுமோ, அந்த அளவிற்கு அதை விரியச் செய்யுங்கள்… அப்போது நீங்கள் அற்புதமாக வாழ்வீர்கள். நான் மிகுந்த பேராசைக்காரன். இங்கிருக்கும் ஒவ்வொருவரும் நான் அறிந்திருப்பது போல் வாழ்வை அறிந்து அனுபவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரே ஒருவர் கூட இந்த சாத்தியத்தை உணராமல் இருக்கக் கூடாது என்று விரும்புகிறேன். எப்படியாவது இது அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதை உறுதி செய்ய விரும்புகிறேன். ஏனெனில் நான் மிகமிக அதிகமாக பேராசை கொண்டவன். ஒரு பத்து பேரையோ, பத்தாயிரம் பேரையோ இல்லை பத்து லட்சம் பேரையோ இது எட்டினாலும் போதாது. இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொரு உயிரையும் இது சென்றடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நன்றி - ஈஷா மையம்

]]>
wishes, desires, aasai, பேராசை, அத்தனைக்கும் ஆசைப்படு, சின்னச் சின்ன ஆசை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/22/w600X390/asaiyai-vidu-vs-athanaikum-asaipadu-ethu-sari.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/may/22/நம்-பேராசையை-வெல்வதற்கு-எது-சிறந்தவழி-2706786.html
2705140 மருத்துவம் மனநல மருத்துவம் தோல்வி அச்சம் – மீள்வது எப்படி? Friday, May 19, 2017 12:44 PM +0530 ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன்பே அந்த செயல் தோல்வியில் முடிந்து விடுமோ என்று பயப்படுகிறேன். எனவே உருப்படியாக எதையும் செய்யாமல் இருக்கிறேன். இதிலிருந்து மீள்வது எப்படி?

வெற்றியும் தோல்வியும் நன்மைக்கே…

யார் ஒருவர் இந்த வாழ்க்கையை ஒரு உயர்ந்த தன்மையை அடைவதற்குரிய ஒரு படியாக பார்க்கிறாரோ அவருக்கு தோல்வியே கிடையாது. வாழ்வின் சின்ன சின்ன விஷயங்களையே தன் லட்சியமாக கொண்டவருக்குத்தான் வெற்றியும், தோல்வியும். இந்த வாழ்க்கையை ஒரு உயர்ந்த தன்மையை அடைவதற்குரிய ஒரு படியாக பார்ப்பவர், வெற்றி கிடைத்தால், அதை தன் நன்மைக்குத்தான் பயன்படுத்துவார். தோல்வி கிடைத்தால் அதையும் தன் நன்மைக்குத்தான் பயன்படுத்துவார்.

பொருளாதாரம் நல்லநிலையில் இருந்தபோது, முட்டாள்கள் கூட வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தினர். இடையே பொருளாதாரம் சிறிது வீழ்ச்சி கண்டபோது தொழிலில் நிலைத்திருக்கவும் வெற்றி பெறவும் புதிய திறமை தேவைப்பட்டது. மக்கள் தோல்வி குறித்து பயப்படுவதாக கூறுகிறார்கள். தோல்வி என்பதே துயரம்தான். அதில் பயம் என்ற மசாலாவை வேறு ஏன் தடவுகிறீர்கள்? வெற்றி என்பது எல்லோருடைய விருப்பம்தான். ஆனால் வெறும் விருப்பத்தினால் மட்டும் வெற்றி வருவதில்லை. திறமை இருந்தால்தான் வெற்றி.

எந்த சூழ்நிலையும் அழகானதுதான்…

நீங்கள் சொல்லலாம். 'என் திறமையில் எந்த சந்தேகமும் இல்லை. ஐந்தாண்டுகளுக்கு முன் என் பணித்திறனை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். அசந்து போயிருப்பீர்கள்..!' உண்மைதான். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. புதிய சூழலை சமாளிக்கவும் ஒரு வகையான திறமை தேவைப்படுகிறது, இல்லையா? பொருளாதாரம் சிறப்பாக இருந்தபோது பணப்புழக்கம் அதிகமாக இருந்தது. அப்போதே பணம் குறித்த வேட்கையை நீங்கள் குறைத்திருக்கலாம். இப்போது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து பணவரவு குறைந்துவிட்டது. அதனால் என்ன? நிறைய பணம் கையில் இருந்தபோது வாழ்க்கையில் எதற்கும் நேரம் இல்லாமல் இருந்தீர்கள். இப்போது உங்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது. இப்போதாவது தியானம் செய்ய முடிகிறதே என்று பாருங்கள். எனவே வாழ்க்கையில் என்ன நடந்தாலும் பரவாயில்லை. உயர்ந்த நிலையை அடைவதற்கு அது ஒரு படிநிலை என்று பார்த்தால் எந்த சூழ்நிலையும் மிகவும் அழகானதுதான். மிகவும் பயன் தருவதுதான்.

முன்பெல்லாம் ஒவ்வொரு வேளைக்கும் விருந்து போல் உணவு… இப்போதோ ஏதோ சுமார்தான். ஆனால் நீங்கள் விரும்பினால் இதையும் கூட மகிழ்ச்சியுடன் சாப்பிடலாம். நிறைய பேர் இது போல் எளிய உணவை முழு விருப்பத்துடன் தேர்வு செய்கிறார்கள். கையில் அதிக பணம் இல்லாவிட்டால் என்ன? சிறிய கார், சிறிய வீடு, எளிமையான உணவு என்று வாழ முடியும். கார் இல்லாவிட்டால் நடந்து போகலாமே! கோவையில் 100 வயது கடந்த ஒருவரை 100-வது பிறந்த நாளில் பேட்டி எடுத்தார்கள். அவர் இப்போதும் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதைக் கண்டு, 'உங்கள் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன?' என்று கேட்டார்கள். அதற்கு walking தான் காரணம், நான் ஒரு walk-king” என்று பதிலளித்தார்.

விவசாயி கேட்ட வரம்

ஒரு விவசாயி இருந்தார். இயற்கை சக்திகள் தன் பயிரை ஆள்வதை குறித்து துயரம் கொண்டார். எனவே ஒருநாள் அவர் சிவனை அழைத்து, “இயற்கை சீற்றங்களால் எனக்கு மிகவும் தொல்லையாக உள்ளது. இந்த விவசாயியின் துயரம் உங்களுக்கு புரியாது. ஏனென்றால் நீங்கள் ஒரு விவசாயி அல்ல. ஒரு வேடன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எப்போது மழை பெய்ய வேண்டும். எப்போது சூரியன் வர வேண்டும் என்று எல்லாமே எனக்கு நன்றாகத் தெரியும். வேடனும், பித்தனுமான உங்களுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் புரிவது கஷ்டம்தான். எனவே இயற்கை சக்திகளை என்னிடமே விட்டுவிடுங்கள்” என்று வேண்டிக் கொண்டார். சிவனும் நல்ல மனநிலையில் இருந்ததால் அந்த வரத்தை கொடுத்துவிட்டார்.

விவசாயி நன்றாக திட்டமிட்டார். சோளம் விதைத்தார். 'மழை!' என்றார். மழை பெய்தது. ஆறு அங்குலம் நிலம் நனைந்தவுடன், 'மழை நிற்கட்டும்' என்றார். மழை நின்றது. நிலத்தை உழுதார். விதை விதைத்தார். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் மழை என்றார். பெய்தது. 'இன்று நான் வயலில் வேலை செய்ய வேண்டும். என்ன வெயில்…! வெயில் வேண்டாம். மேக மூட்டம் வேண்டும்' என்றார். அப்படியே ஆனது. மிகவும் மகிழ்ச்சியானார். பசேலென பயிரும் வளர்ந்து வந்தது. இயற்கை எப்போதுமே விவசாயியின் கையில் இருப்பதுதான் நல்லது என்று சொல்லிக் கொண்டார்.

அறுவடைக்கான நேரம் வந்துவிட்டதா என்று பார்த்தபோது, ஒரு பறவையைக் கூட காணவில்லை. அதையும் கட்டளை போட்டு விட்டாரே, பறவைகளே வரக்கூடாது என்று… அருகில் சென்று பெரிய பெரிய சோளக்கருதுகளை தொட்டுப் பார்த்தார். மெதுவாக அதை திறந்து பார்த்தார். ஒரு மணி சோளம் கூட இல்லை. “என்ன நேர்ந்தது? வெயில், மழை எல்லாம் நான் சரியாகத்தானே நிர்வகித்தேன். சிவனிடமே கேட்போம்” என்று சிவனிடம் சென்று, 'எல்லாம் சரியாக இருந்தும், ஒரு சோளம் கூட விளையவில்லை. நீங்கள்தான் கெடுத்தீர்களா?' என்று கேட்டார். 'நீ செய்வதை எல்லாம் நான் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். நீயே எல்லாவற்றுக்கும் பொறுப்பெடுத்துக் கொண்டாய். எனவே நான் சிறிதும் தலையிட விரும்பவில்லை. மழை, வெயில் எல்லாம் சிறப்பாகத்தான் செய்தாய். ஆனால் காற்றை முழுவதுமாக நிறுத்திவிட்டாய். நான் நிர்வாகம் செய்தபோது அதிக வலுவான காற்றை அனுப்புவேன். பயிர்கள் வீழ்ந்துவிடும் போல் நிலை ஏற்படும். அவை தம்மை நிலைநிறுத்திக் கொள்ள வேர்களை ஆழமாக நிலத்தில் செலுத்திக் கொள்ளும். வேர் உள்செல்வதால் பயிர் நன்றாக விளைந்து சோளமும் வரும். ஆனால், இப்போது சோளக்கருது மட்டும் உள்ளது. சோளம் எதுவும் இல்லை” என்றார்.
 
எனவே, உங்கள் வாழ்க்கையில் பல சூழ்நிலைகள் ஏற்படலாம். அவற்றை பயன்படுத்தி நீங்கள் வலிமையடையலாம். அல்லது உட்கார்ந்து அழலாம். இந்த இரண்டு வாய்ப்புகள் தாம் உள்ளன. உங்கள் வாழ்க்கையில் நடக்கும் சின்னச் சின்ன விஷயங்களை வாழ்க்கையில் படிக்கற்களாக மாற்றிக் கொள்ளலாம். உண்மையில் தோல்வி என்று எதுவும் கிடையாது. அது உங்கள் எண்ணம் மட்டுமே. உண்மையில் வெற்றி என்பதும் கூட உங்களின் முட்டாள்தனமான எண்ணம்தான்.

வெற்றி – தோல்வி என்னும் கருத்துக்கள்

எது வெற்றி, எது தோல்வி என்பது உங்கள் கருத்து மட்டுமே. உலகையும், சூழ்நிலைகளையும் மாற்றுவதைக் காட்டிலும் உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளலாம் அல்லவா? அப்படி மாற்றிக் கொண்டால் உங்களுக்கு நடக்கும் எல்லாமே நன்மைதான். ஒரு பிச்சைக்காரனுக்கு இருபது ரூபாய் கொடுத்தால் ஹோட்டலுக்கு சென்று மசால் தோசை சாப்பிடுவது வெற்றியின் உச்சம் போன்றது அல்லவா? ஆனால் அதுவா வெற்றியின் உச்சம்? சொல்லுங்கள்..

இதை ஏன் சொல்கிறேன் என்றால், நீங்கள் சமூகத்தின் கருத்துக்களுக்கு அடிமையாகி விட்டீர்கள். எனவே முதலில் வெற்றி தோல்வி குறித்து மற்றவர்களின் எண்ணத்திற்கு அடிமையாவதை நிறுத்துங்கள். வெற்றி தோல்வி மட்டும் அல்ல. நீங்கள் கொண்டுள்ள ஒவ்வொரு கருத்தும், ஒவ்வொரு எண்ணமும், ஒவ்வொரு உணர்வும் எங்கோ வெளியிலிருந்து தான் எடுத்துக் கொண்டீர்கள். அவை இப்போது உங்களுக்குள்ளிருந்து உங்களையே ஆட்டிப் படைக்கின்றன. உங்கள் முதல் வெற்றி எது தெரியுமா? நீங்கள் யாருடைய கருத்துக்கும் அடிமை இல்லை என்பதுதான்! வாழ்வில் என்ன சூழ்நிலை வேண்டுமானால் வரட்டும். நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள் என்றால், அதுவே ஒரு வெற்றிதான். நான் சொல்வது சரிதானே?

உங்களுக்கு வாழ்க்கை குறித்து எதுவும் தெரியவில்லை. உயிர் பற்றி எதுவும் புரியவில்லை. எனவே, தான் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு அழுது கொண்டு இருக்கிறீர்கள். நிறைய பணம் இழந்து விட்டேன் என்று உயிரை மாய்த்துக் கொள்ள நினைக்கிறீர்கள். பணம், வசதி போன்றவை எல்லாம் சமூக விஷயங்கள். குடும்பம், சமூகம் போன்றவை எல்லாம் உங்கள் நலத்திற்காக ஏற்படுத்தப்பட்டவை. உங்கள் உயிரை எடுப்பதற்காக அல்ல. அவை எல்லாம் நீங்கள் உருவாக்கியவை. நீங்கள் உருவாக்கியவற்றை உங்களை விட மிகவும் முக்கியம்போல் ஆக்கிவிட்டீர்கள். படைத்தவனின் அற்புதமான படைப்புகளில் நீங்களும் ஒன்று. ஆனால் உங்களுக்குள் உள்ள அற்புதத்தை பார்க்காமல் சிறிய விஷயங்களுக்கும் துன்பப்படுகிறீர்கள். காரணம் உங்கள் அறியாமையே.

எனவே தோல்வி என்று எதுவும் கிடையாது. அது உங்கள் எண்ணம் மட்டுமே. வெற்றி என்பதும் கூட கிடையாது. அதுவும் கூட உங்கள் முட்டாள்தனமான எண்ணம்தான். சமூகத்தின் கருத்துக்களுக்கு அடிமையாகி உங்கள் எண்ண ஓட்டமும் இப்படி ஆகிவிட்டது. எனவே வெற்றி என்று நினைத்து ஒன்றை பெரிதாக கொண்டாடுவதும் தோல்வி என்று நினைத்து உட்கார்ந்து கண்ணீர் வடிப்பதும் தேவையற்றது.

நன்றி : ஈஷா மையம்

]]>
Fear, Failure, வெற்றி, தோல்வி, அச்சம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/19/w600X390/tholvi-acham-meelvathu-eppadi.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/may/19/how-to-overcome-fears-and-failures-2705140.html
2703844 மருத்துவம் மனநல மருத்துவம் பகையை வெல்லும் வழி? Wednesday, May 17, 2017 10:15 AM +0530 'பகையாளியை உறவாடிக் கெடு!' என்ற பழமொழியில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது; பகையாளியை உறவாடிக் கெடுத்துவிட முடியுமா?’ இந்தக் கேள்வியை சத்குருவிடம் கேட்ட போது, பழமொழி சொல்லப்பட்ட காலகட்டத்தையும், அது இன்றைய சூழ்நிலையில் பொருந்துமா என்பதையும் விளக்குகிறார்.

பல துறைகளில், இன்று போட்டியாளர்களை எதிரிகளாகப் பார்க்கும் அபத்தம் நேர்கிறது. போட்டியாளர் என்பவர் உங்கள் திறமையை முழுமையாக வெளிக் கொணர்வதற்கு உதவுபவர். உங்கள் குறைபாடுகள் என்ன என்பதை உங்களுக்கு உணர்த்த வல்லவர், போட்டியாளர்.

அவர் உங்களுடன் ஓடி வருபவர். ஒன்று அவர் உங்கள் பின்னால் இருக்கலாம் அல்லது உங்களைத் தாண்டிப் போகலாம். அவருடைய ஆர்வம் உங்களைப் பற்றியதல்ல. அவரைப் பற்றியது. உங்களுக்கு முன்பாகப் போக வேண்டும் என்பதே அவர் குறிக்கோள்.

ஆனால், பகைவன் அப்படியல்ல. அவர் உங்கள் பாதையை மறித்து எதிரில் ஓடி வருபவர். குறுக்கில் விழுந்து மறிப்பவர் கோபம், ஆத்திரம் இவற்றை முன்வைத்து அவர் உங்களைத் தாக்க வருகிறார்.
 
சில சமயம் உங்களை அறியாமலேயே நீங்கள் எதிரிகளை சம்பாதித்து விடுவீர்கள். எந்த உள்நோக்கமும் இல்லாமலேயே நீங்கள் நடக்கும் பாதையில் சிலர் உங்களால் அடிபட்டுப் போவார்கள். காயப்பட்டுப் போவார்கள். அவர்களோ, அவர்களுடன் தொடர்பு கொள்பவர்களோ உங்களை பகையாகக் கருதக்கூடும். உங்களை அவர்கள் முன்பின் பார்த்திராமல் இருந்தால்கூட, பகையை வளர்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஒரு காலத்தில் தன் நாட்டை விரிவுபடுத்திக் கொள்ள விரும்பும் அரசன், ஒருவிதப் போர்த் தந்திரமாக, அடுத்த நாட்டுக்கு ஒற்றர்களை அனுப்புவான். ஒற்றனின் வேலையே எதிரியிடம் நட்பை சம்பாதிப்பதுதான். அந்த நட்பையும், உறவையும் பயன்படுத்தி, எதிரியைப் பற்றி அறிந்து தன் நாட்டுக்கு உளவு சொல்வான் அவன். அந்த அடிப்படையில் இந்த அரசன் போர் தொடுப்பான். எதிரியை வெற்றி கொள்வான்.

அதற்காகச் சொல்லப்ட்ட வாசகமாக இதை நினைப்பவர்கள் இருக்கலாம். மனித இனம் இவ்வளவு வளர்ச்சி பெற்ற பிறகும், எதிரியிடம் நண்பனாக நடித்து, அவன் அயர்ந்த நேரம், அவனை அழித்துவிடு என்று இதற்கு அர்த்தம் செய்து கொள்வது வெகு விபரீதமானது. உங்கள் எதிரியை அழித்துவிட வேண்டும் என்று நீங்கள் புறப்பட்டால், அதில் எவ்வளவு தூரம் வெற்றி பெறுவீர்கள் என்று சொல்ல முடியாது. யார் கண்டது. அந்த முயற்சி எதிரியை அழிப்பதற்கு பதிலாக உங்களையே அழித்துவிடக்கூடும்.

எல்லா உயிரினங்களிடத்திலும் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற உந்துதல் இருக்கும். நீங்கள் பகைவனாக நினைப்பவரிடமும் அந்த எதிர்ப்பு இருக்கும். அவரை அழிக்கப் பார்த்தால், அவர் கடைசி வரை உங்களை அடக்கிவிடப் போராடுவார். வாழ்வா, சாவா என்று வந்துவிட்டால், அவருடைய எதிர்ப்பு வலிமை மிக்கதாகிவிடும். அதனால், பகைவனை அழிப்பதற்கு பதிலாக அவர் மீது நீங்கள் பாராட்டும் பகையுணர்ச்சியை அழித்துவிடுங்கள். ஒருவர் மீது பகைமை இல்லாதபோது, அவர் அதற்கு மேல் பகைவனாகத் தொடர இயலாமல் போகிறது. அடிப்படையில் இருக்கும் பகைமையை ஒழித்துவிட்டால், ஒருவேளை அவர் உங்களுக்கு நண்பனாகி விடலாம். உங்களுக்கு பலம் சேர்க்கலாம்.

நன்றி : ஈஷா மையம்

]]>
Enemity, Enemies, பகை, பகைவன், பகையை வெல்லும் வழி? http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/17/w600X390/29-nov-13.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/may/17/how-to-treat-your-enemies-2703844.html
2703178 மருத்துவம் மனநல மருத்துவம் என் மனதை நான் எப்படிக் கட்டுப்படுத்துவது? Tuesday, May 16, 2017 10:40 AM +0530 முதலில் உங்கள் மனதை ஏன் கட்டுப்படுத்த முயற்சிக்கிறீர்கள்? உங்கள் சிறு வயதிலிருந்தே, குறிப்பாக ஆன்மீகவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் 'கெட்ட விஷயங்களை நினைக்கக்கூடாது. உங்கள் மனதை நீங்கள் கட்டுப்படுத்த பழகவேண்டும்' என்றெல்லாம் சொல்லி வந்திருக்கிறார்கள். ஆனால் அப்படிச் செய்யும்போது மனம் அந்த விஷயங்களைத்தான் முழு நேரமும் நினைக்க ஆரம்பிக்கிறது. உங்கள் மனதின் செயலைப் பொறுத்தவரையில், வகுத்தல் கழித்தல் எல்லாம் கிடையாது. அங்கே கூட்டல், பெருக்கல் மட்டும்தான். உங்கள் மனதிலிருந்து அதிரடியாக ஒரு எண்ணத்தையாவது உங்களால் நீக்க முடியுமா? முடியவே முடியாது. இல்லையா?

ஏதாவது ஒன்றைக் குறித்து இன்று நினைக்கக்கூடாது என்று நீங்கள் முடிவு செய்தால் அன்று முழுவதும் அதுதான் நடக்கிறது. நீங்கள் முயற்சித்துப் பாருங்கள். இன்று சிகப்பு நிறத்தைப் பற்றி சிந்திக்கக் கூடாது என்று முடிவு செய்யுங்கள். திடீரென்று உங்கள் அக்கம்பக்கம் எல்லாம் சிகப்பு நிறமாக இருப்பதைப் பார்க்கலாம். மனதின் அடிப்படைத் தன்மைகளை புரிந்து கொள்ளாமல் நாம் இப்படியே பலவாறு முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.

தியானத்தில் உட்காரும் போது, என் இதயம் துடிப்பதை நிறுத்த வேண்டும் என எண்ணுகிறீர்களா? என் சிறுநீரகம் தனது செயலை நிறுத்த வேண்டும் என எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? கிடையாது. அவையெல்லாம் தமது செயலை தொடர்ந்து நடத்த அனுமதித்தீர்கள்தானே? பிறகு மனதையும் அது தனது வேலையைச் செய்ய ஏன் நீங்கள் அனுமதிக்கக்கூடாது? தியானம் செய்ய உட்காரும்போது மட்டும் மனம் நின்று விட வேண்டும் என நினைக்கிறீர்கள். இது மிகவும் தவறான அணுகுமுறை. மனதை கட்டுப்படுத்த வேண்டும் என்று மக்கள் எப்போதும் உங்களுக்கு சொல்லி வந்திருக்கிறார்கள். உங்களால் எப்போதும் அப்படி மனதைக் கட்டுப்படுத்த முடியாது. மற்றவர்கள் யாராவது தன் மனதைக் கட்டுப்படுத்தி இருக்கிறார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? யாரும் அப்படி செய்ததில்லை, தெரியுமா? இயல்பாகவே அப்படிச் செய்யவும் முடியாது.

இந்த மனம் ஒரு புழுவிலிருந்து, ஒரு பூச்சியிலிருந்து, ஒரு குரங்கிலிருந்து, தற்போது மனிதன் வரை இத்தகைய பரிணாம வளர்ச்சி அடைய இலட்சக்கணக்கான வருடங்கள் எடுத்திருக்கிறது. இவ்வளவு மகத்தான முயற்சிக்குப்பின் இத்தகைய மனம் உங்களுக்குக் கிடைத்திருக்கும்போது, அதை ஏன் கட்டுப்படுத்த முயற்சிக்கிறீர்கள்? அது முழுத் தீவிரத்துடன் இருக்கவேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். ஆனால் அற்புதமாக இருக்க வேண்டிய மனம் தற்போது உங்களுக்கு துன்பத்தை உற்பத்தி செய்கிற இயந்திரமாக மாறிவிட்டது.

உங்களுடைய அனைத்து துன்பங்களும் உங்கள் மனதில்தானே உற்பத்தியாகின்றன? அப்படியென்றால் அதை எப்படி இயக்குவது என்று உங்களுக்குத் தெரியவில்லை. இந்த மனதை வைத்து ஆனந்தம் எப்படி உற்பத்தி செய்வது என்று தெரிந்துவிட்டால் பிறகு அதை கட்டுப்படுத்த எண்ணுவீர்களா? ஒருபோதும் மாட்டீர்கள். எனவே உங்கள் மனதை எப்படி சரியாக இயக்கவேண்டும் என்பதைத்தான் நீங்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்.

யோகாவில் உங்கள் மனதை கட்டுப்படுத்தத் தேவையில்லை. சில எளிமையான பயிற்சிகள் உள்ளன. அவற்றை கடைப்பிடித்தால் போதும். அப்போது ‘நான்’ என்னும் தன்மை, உங்கள் உடல், மனம் ஆகியவற்றிலிருந்து சிறிது விலகியிருப்பதை பார்க்கமுடியும். அந்த இடைவெளியை நீங்கள் உருவாக்கிவிட்டால், பிறகு உங்கள் துன்பங்கள் அனைத்தும் நிரந்தரமாக முடிவுக்கு வந்துவிடும்.

நன்றி : ஈஷா மையம்
 

]]>
Mind, Manam, Meditation, மனதைக் கட்டுப்படுத்த, தியானம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/16/w600X390/en-manathai-nan-eppadi-kattupaduthuvathu.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/may/16/how-to-control-my-mind-2703178.html
2700393 மருத்துவம் மனநல மருத்துவம் நன்றி உணர்வு என்றால் என்ன?  DIN DIN Thursday, May 11, 2017 05:57 PM +0530 நன்றி உணர்வு என்றால் என்ன? உங்களுடைய கண்களை நன்றாகத் திறந்து உங்கள் வாழ்க்கை நடக்கும் விதத்தை சற்று கூர்ந்து கவனியுங்கள். உங்கள் வாழ்க்கை நடப்பதற்கு யாரெல்லாம் எவையெல்லாம் ஈடுபடுத்தப் பட்டிருக்கிறார்கள் என்று தெளிவாகப் பாருங்கள். அப்படிப் பார்க்க முடிந்தால், உங்களால் நன்றி உணர்வு இல்லாமல் இருக்க முடியாது. ஒரு உதாரணத்திற்கு, உங்கள் முன்னால் ஒரு தட்டு நிரம்ப உணவு வைக்கப்பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த உணவைத் தயாரிப்பதற்கு எவ்வளவு மக்கள் என்னென்ன வேலை செய்திருக்கிறார்கள் என்று தெரியுமா? விதைகளை விதைத்தவர், பயிரை அறுவடை செய்தவர், தானியத்தை கடைகளுக்குக் கொண்டுச் சென்றவர், அங்கிருந்து வாங்கியவர், என்று பலதரப்பட்ட மக்கள் பலவிதமான பணிகளில் ஈடுபடுத்தப் பட்டிருக்கிறார்கள் என்று சிறிது பாருங்கள்.

'என்ன பெரிய விஷயம், நான் அதற்குப் பணம் கொடுத்துவிட்டேன். அதனால் அது எனக்குக் கிடைக்க வேண்டும்” என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த மனிதர்கள் இல்லையென்றால் அல்லது அவர்கள் செய்ய வேண்டியவற்றைச் செய்யவில்லையென்றால், நீங்கள் எவ்வளவுதான் பணம் கொடுத்தாலும் இவையெல்லாம் உங்களுக்குக் கிடைத்திருக்காது. எனவே நான் பணம் கொடுத்து விட்டேன் என்று நினைக்காமல், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நேரத்திலும், நீங்கள் மகிழ்ந்து அனுபவிக்கும் எல்லா விஷயங்களிலும், உங்களுடைய மூச்சிலிருந்து உணவு வரையிலும், இதைச் சற்றுப் பாருங்கள். இந்த உலகத்திலும், அதற்கு அப்பாலும் உள்ள அனைத்துவிதமான ஜீவராசிகளாலும் நீங்கள் எப்படி பேணி வளர்க்கப்பட்டு, காப்பாற்றப்படுகிறீர்கள் என்று உங்கள் கண்களைச் சற்றுத் திறந்து பாருங்கள். இப்படிச் செய்தால், நன்றி உணர்வுக்கான மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள உங்களுக்குத் தேவையிருக்காது.

நன்றியுடைமை ஒரு மனப்பான்மை அல்ல, அது ஒரு செயலும் அல்ல. நன்றி உணர்வு என்பது உங்களுக்கு என்னென்ன கிடைக்கிறதோ அவற்றால் நீங்கள் மூழ்கடிக்கப்படும் போது உங்களுக்கு உள்ளிருந்து நிரம்பி வழிந்து ஓடுவதாகும். அது வெறும் மனப்பான்மை அல்லது நடத்தையாக இருந்தால் வெறுக்கத்தக்கதாகும். நீங்கள் எல்லாவற்றுக்கும் எப்போதும் வெறுமனே நன்றி, நன்றி, நன்றி…' என்று சொல்வீர்களே, அப்படிக் கிடையாது.

கூர்ந்து கவனியுங்கள்… 

இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு உங்களை உயிருடன், நல்லவிதமாய் வைத்திருக்கிறது. உதாரணமாக உங்களுக்கு உணவு கிடைக்கும் விஷயத்தையே கூர்ந்து பாருங்களேன். உங்கள் தொடர்பிலேயே இல்லாத பல மனிதர்களும் பல விஷயங்களும் உங்களுக்காக உங்கள் வாழ்வின் ஒவ்வொரு ஷணத்திலும் பங்கு பெற்றிருக்கின்றனர். இதையெல்லாம் பார்க்கும்போது உங்களால் நன்றி உணர்வில் மூழ்காமல் இருக்க முடியாது.

ஆனால் நீங்கள் மேம்போக்காக உங்களை இந்த பூமியின் அரசனாக நினைத்தால், நீங்கள் எல்லாவற்றையும் பார்க்கத் தவறி விடுவீர்கள். உங்கள் கவனம் உங்களைப் பற்றியே முழுமையாக இருந்தால், இந்த வாழ்க்கை முறையை கவனிக்கத் தவறவிடுவீர்கள். அப்படி இல்லாமல் நீங்கள் சற்றே கண்களைத் திறந்து பார்த்தாலே இந்த நன்றி உணர்வால் மூழ்கடிக்கப்படுவீர்கள். எப்போது நீங்கள் நன்றி உணர்வுடன் இருக்கிறீர்களோ, அப்போது எதையும் ஏற்றுக்கொள்ளும் தன்மையிலும் இருப்பீர்கள். நீங்கள் யாரிடமாவது நன்றி உணர்வுடன் இருந்தால், அவரை மிகுந்த மதிப்புடன்தானே பார்ப்பீர்கள். அப்படி மதிப்புடன் பார்க்கும்போது அவரை ஏற்றுக்கொள்ளும் தன்மை உடையவராகவும் இருப்பீர்கள். எனவே எப்போது உங்களுக்கு நன்றி உணர்வு பொங்குகிறதோ அப்போது ஏற்றுக்கொள்ளும் தன்மையும் பொங்கி வழியும்.

ஏற்றுக்கொள்ளும் தன்மை பெற… 

என்னை பொறுத்தவரை உங்கள் நன்றி உணர்வில் உண்மையில் எனக்கு எந்த ஈடுபாடும் இல்லை. ஆனால் உங்களுக்கு அதிகமான ஏற்றுக்கொள்ளும் தன்மை இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். யோகாவின் முழுச் செயல்முறையே, நீங்கள் இதுவரை அறிந்திராத வகையில், இன்னும் ஆழமான வழிகளில், ஏற்றுக் கொள்ளும் தன்மை உடையவராகச் செய்வதே ஆகும். இதுதான் யோகாவின் ஒரே இலக்கு. ஏற்றுக்கொள்ளும் தன்மையைப் பெற, நன்றி உணர்வால் மூழ்குவது நிச்சயமாக ஒரு அழகான வழி. ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அது உங்கள் மனதைத் திறந்துவிடும்.

யாராவது கொடுப்பதாக இருந்தாலும் அதைப் பெறுவதற்கான தகுதி வேண்டும். ஞானோதயப் பாதையின் கடினமான பகுதியே ஏற்றுக்கொள்ளும் தன்மை உடையவராய் ஆவதே. இந்த உலகில் உள்ள அனைவரும் முழு ஏற்றுக்கொள்ளும் தன்மை உடையவராய் இருந்தால், ஒரு க்ஷணத்தில் நான் இந்த உலகத்தையே ஞானோதயம் அடையச் செய்து விடுவேன். அவர்கள் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கும்போது அவர்களுக்கு வேண்டியதைக் கொடுப்பது மிகவும் எளிதாக உள்ளது. பசியுடன் இருப்பவரை சாப்பிட வைப்பது கடினமல்ல. அதற்கு ஒரு முயற்சியும் செய்ய வேண்டாம். ஆனால், அவருக்கு பசியை உண்டாக்குவது மிகக் கடினமான வேலை.

நன்றி : ஈஷா மையம்

]]>
Gratitude, நன்றியுணர்வு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/11/w600X390/nandri-unarvu-endral-enna.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/may/11/what-is-gratitude-2700393.html
2700384 மருத்துவம் மனநல மருத்துவம் இதற்கெல்லாம் கூட ஆப் இருக்கா?  ஷக்தி Thursday, May 11, 2017 05:20 PM +0530 சமீப காலத்தை ஆப்களின் காலம் என்றே சொல்லலாம். முன்பெல்லாம் நம்மை தினமும் காலையில் எழுப்பி விட, ஒரு வட்ட வடிவ டேபிள் க்ளாக் இருக்கும். அதில் பெரிய முள் சிறிய முள் இரண்டையும் ஒருவழியாக திருகி, அலாரம் வைத்து, அது ஊரையே கூட்டும் அளவுக்கு பெரும் சத்தத்தில் அலறி அடிக்க, அதை எப்படியோ தட்டி, ஒருவழியாக கண் விழிப்போம். கால மாற்றத்தின் விளைவாக இப்போது துயில் எழ மட்டுமல்லாமல் உடற்பயிற்சி செய்ய, சரியான அளவு தண்ணீர் குடிக்க, மாதவிலக்கு தினங்களை ட்ராக் செய்ய, உடற்பயிற்சி செய்ய, கார் புக் பண்ண, இன்னும் இன்னும் என எதற்கெடுத்தாலும் ஆப், ஆப் என ஆப்களால் சூழ்ந்த உலகத்தில் நவீன சொகுசு வாழ்க்கையை வாழ்கிறோம்.

ஆண்டவா இதையெல்லாம் கேட்க நீ எங்கே தான் இருக்கிறாய் என்று தேடிப் பார்க்க நினைத்தால்,  ஒரு ஆப் நம் போனிலிருந்து இங்கே தான் உள்ளேன் என்று பதில் சொல்கிறது. ஆம் கோவிந்தா என்று ஒரு ஆப் உள்ளது. சாட்சாத் ஏழுமலையானை கண்டு அடைய நீங்கள் அதைப் பயன்படுத்தலாம். அப்பப்பா எத்தனை எத்தனை ஆப்கள் என்று வியந்து போகிறீர்களா, அல்லது டெக்னாலஜி உண்மையில் வரமா சாபமா என்று ஆராய்ச்சியில் இறங்கப் போகிறீர்களா? எது வேண்டுமானலும் செய்து கொள்ளுங்கள். ஆனால் அதற்கு முன் இந்த மாய எதார்த்த ஆப்களின் உலகத்தில் சமீபத்தில் வந்து இறங்கியுள்ள ஒரு விசித்திரமான ஆப்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 

இ-சைக்ளினிக் டாட் காம் (ePsyClinic.com) என்ற நிறுவனத்தினர் தான் இந்த புதிய ஆப் வெளியிட்டுள்ளார்கள். இந்த ஆப் தரவிறக்கம் செய்து பயன்படுத்தினால் ஸ்ட்ரெஸ் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்னைகளிலிருந்தும் விடுபட்டு மன அமைதியுடன் திகழலாம் என்று உறுதி கூறுகிறது ஆப்பைத் தயாரித்த டெக்னிகல் டீம். 

இந்த ஆப்பின் தீம் என்னவெனில் ‘ஐ வில்’ அதாவது ‘என்னால் முடியும்’ என்பதே. எதையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தை வளர்த்தெடுப்பதே இந்த ஆப்பின் முக்கிய பணி. சட்டென்று உணர்ச்சி வசப்படுதல், கோபம் வந்து உச்ச குரலில் கத்துதல், உயர் ரத்த அழுத்த பாதிப்புக்களுக்குள் சிக்குதல் போன்ற பிரச்னைகளிலிருந்து விடுபட இந்த ஆப் மிகவும் பயன்படும். இவைத் தவிர இந்த ஆப் ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேவைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

'எங்களுடைய பிரதான நோக்கம், பயன்பாட்டாளர்கள் தங்கள் மனம் மற்றும் உணர்வு ரீதியிலான பிரச்னை, ஸ்ட்ரெஸ் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு, மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் தங்கு தடையற்ற மனப்பாங்குடனும் இருக்க வேண்டும். அவர்களைச் சுற்றி தெரிந்தோ தெரியாமலோ உருவாகியிருக்கும் சமூக வலைகளிலிருந்து விடுபட்டு மன மகிழ்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த ஆப்பை கவனத்துடன் உருவாக்கியிருக்கிறோம்’ என்றார் இ-சைக்ளினிக் டாட் காமின் நிறுவனர் ஷிப்ரா தவார்.
 
இந்த ஆப்பை ஆண்ட்ராய்ட் வசதி உள்ள செல்ஃபோன்களில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

]]>
மன அழுத்தம், App for stress release, app in android phone, ஆண்ட்ராய்ட் ஆப் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/11/w600X390/maxresdefault.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/may/11/download-an-app-to-release-your-stress-2700384.html
2695457 மருத்துவம் மனநல மருத்துவம் கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் Wednesday, May 3, 2017 12:54 PM +0530 நம்மிடம் யாரேனும் கோபப்பட்டு கத்தினால், நாம் எரிச்சலைடைந்து கத்துவது வழக்கம்தான். இதற்கு வீட்டில் உள்ள பெரியவர்கள், 'கோபம் இருக்கிற இடத்துல தான் குணமும் இருக்கும்' – என்ற அஸ்திரத்தை எடுத்துவிட்டு நம்மை சமாதானப் படுத்துவர்கள். அப்படியென்றால் கோபம் ஒரு மேன்மையான குணமா? – இதைப் பற்றி சத்குருவிடம் கேட்டபோது…

கோபத்தை ஆதரிக்க இப்படியெல்லாம் கருத்துக்கள் உருவாக்கினாலும் அதை எவ்விதத்திலும் கொண்டாட முடியாது. சினிமாக்களில் கதாநாயகர்கள் சட்டென்று கோபப்படுவதைப் பார்த்து, கோபத்தை ஒரு மேன்மையான சக்தி என்று நினைத்து விட்டீர்களா, என்ன?

உங்களுக்குக் கோபம் எப்போது வருகிறது? நீங்கள் நினைத்தது நடக்கவில்லை என்றால், அல்லது மற்றவர்கள் நீங்கள் நினைத்தது போல் நடக்கவில்லை என்றால் தான் கோபம் வருகிறது.

கண்களை மூடுங்கள். உங்கள் மனதை எதன் மீதாவது சில நிமிடங்களுக்கு தொடர்ந்து நிலைநிறுத்த முடிகிறதா என்று பாருங்கள். முடியவில்லை அல்லவா?

உங்கள் மனமே உங்கள் விருப்பத்தை மீறி எங்கெங்கோ அலைபாயும் போது, சுற்றி உள்ளவர்கள் எப்படி உங்களுக்குக் கட்டுப்படுவார்கள்? உங்களைத் தலைவனாக ஏற்று, மற்றவர்கள் எப்போது உங்களுக்குக் கட்டுப்படுவார்கள்? உங்களிடம் இருக்கும் தெளிவும், தொலைநோக்கும் தங்களிடம் இல்லை என்று அவர்கள் நினைத்தால்தானே? அப்படி அவர்கள் உங்களைத் தலைவனாக ஏற்று, உங்களுக்குக் கட்டுப்பட்டால், அது ஒருவிதத்தில் உங்களுக்குப் பெருமையாக இருந்தாலும், மற்றொரு விதத்தில் அதுவே உங்களுக்குச் சுமையாகவும் இருக்கிறது. சந்தோஷமாக சுமக்கத் தெரியாதவர்களுக்குத் தான், சுலபத்தில் கோபம் வரும்.

மற்றவர்கள் கருத்துக்கு மாறாக நீங்கள் முடிவு எடுக்கும்போதும், அது அவர்கள் நலனுக்காகத்தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும்படி நீங்கள் அன்பாக நடந்து கொள்ளுங்கள். அப்படிச் செய்தால், அவர்கள் உங்களுடன் உறுதியாக இணைந்து நிற்பார்கள். தொடர்ந்து ஒத்துழைப்பும் கொடுப்பார்கள்.

ஒரு பறவையை நோக்கி கல்லை விட்டெறிந்தால், சுற்றியுள்ள நூறு பறவைகளும் பறந்து விடும். ஒரே ஒருவரிடம் நீங்கள் கோபத்தைக் காட்டினால் கூட, மற்றவர்களுக்கு உங்கள் மீது இருக்கும் நம்பிக்கை போய் விடும். ஏதாவது தவறாகும்போது, உங்களைக் குற்றம் சாட்டிவிட்டு, எல்லோரும் தனித்தனியே உதிர்ந்து போவார்கள்.

தன்னைப் பற்றிய பொறுப்பு ஒருவனுக்கு வந்தால்தான் மற்றவர்களுக்கும் அவன் பொறுப்பேற்று வழிநடத்த முடியும். அதனால், கோபத்தை ஒரு பெருமையான குணமாக நினைக்க வேண்டாம். விரட்டியடிங்கள்.

]]>
Yoga, தியானம், Anger, Angry, கோபம், குணம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/3/w600X390/-----.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/may/03/how-to-control-anger-2695457.html
2694859 மருத்துவம் மனநல மருத்துவம் மனம் எப்படி கர்மவினையை உண்டாக்குகிறது?! DIN DIN Tuesday, May 2, 2017 10:51 AM +0530 மனதால்கூடத் தீமை நினைக்காதே! அது அந்தத் தீமையைச் செய்வதற்குச் சமம்’ என்று ஓர் ஆன்மீகப் புத்தகத்தில் படித்தேன். என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. செய்யாத செயலுக்கு ஏது விளைவு? மனதால் நினைத்தாலே அதற்குச் செயலைச் செய்ததன் விளைவு எப்படி வரும்?

செயல் என்பது நான்கு விதமாக நடக்கிறது. உடலின் செயல், மனதின் செயல், உணர்வின் செயல், சக்தியின் செயல். மற்றவற்றை ஒப்பிடும்போது, உடலின் செயலுக்குத் தாக்கம் குறைவு

யார் மீதோ கோபம். கோபத்தின் தருணத்தில் அவரைப் பொளேர் என்று அடித்தீர்கள். அது ஒருவிதமான கர்மா. ஆனால் அந்தத் தருணத்தில் சூழ்நிலை சரியாக இல்லாமலோ, தைரியம் இல்லாமலோ அடிக்காமல் விட்டுவீட்டீர்கள். மாறாக, அவனை அடிக்க வேண்டும்… அடிக்க வேண்டும் என்று சதா மனதில் திட்டமிட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். அது மிகப்பெரிய கர்மா. ஊரிலேயே பெரிய செல்வந்தர் அவர். குருவை நாடி வந்தார். ‘குருவே இவ்வளவு வசதிகள் இருந்தும் மற்றவர்கள் செய்த துரோகம், நான் சந்தித்த ஏமாற்றங்கள், தோல்விகள் என்று என் மனம் முழுவதும் ரணங்கள். என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. எனக்கு வழிகாட்டுங்கள்’.

குரு அங்கு விளையாடிக்கொண்டிருந்த சேரிக் குழந்தையைக் காட்டி, ‘அதைப்போல் வாழ்’ என்றார்.

செல்வந்தர் குழம்பினார். ‘எல்லாச் செல்வங்களையும் துறந்து ஏழையாகச் சொல்கிறீர்களா?’

இல்லை மகனே! இங்கிருந்தாலும், எங்கிருந்தாலும் குழந்தைகள் ஒன்றுபோலத்தான் இருக்கின்றன. அழத் தோன்றினால், ஓவென்று அழும். சிரிக்க நினைத்தால், வாய்விட்டு சிரிக்கும். அச்சம், அழுக்காறு, ஏமாற்றம், வன்மம் என்று எதுவும் குழந்தைகளின் மனதில் நிரந்தரமாகக் குடியேறுவதில்லை. உணர்ச்சிகளை அவ்வப்போது வெளிப்படுத்திவிட்டு, தங்கள் இதயங்களில் சுமை இல்லாமல், அடுத்தக்கட்ட சாகசத்துக்குத் தயாராகிவிடுவதைக் குழந்தைகளிடம் கற்றுக்கொள்’ என்றார் குரு.

ஒருவரைத் தலையில் தட்ட வேண்டும் என்று அவசியப்படும்போது கோபம் இல்லாமல், மனதில் எந்த வன்மமும் பாராட்டாமல் தட்டினால், அதற்குப் பெரிய விளைவு இல்லை. ஆனால் மனதில் அடிக்கத் திட்டமிட்டு அது செயலாக அமையும்போது, மேலோட்டமாக இல்லாமல் மிக ஆழமாகப் போகிறது. கோபம், வெறுப்பு, பழிவாங்கும் உணர்ச்சி எல்லாவற்றையும் சுமந்துகொண்டு செயலற்று உட்கார்ந்திருப்பதன் மூலம் உங்களுக்கு ஏற்படும் பாதிப்பு. அடித்திருந்தால்கூட ஏற்பட்டு இருக்காது. இப்படிச் செய்வது, வீட்டில் இருந்துகொண்டு வெளியில் இருப்பவன்மீது, கண்ணை மூடிக்கொண்டு கல்லை வீசுவதைப்போல்தான். அந்தக் கல் மறுபடி மறுபடி உங்கள் வீட்டுக்குள்ளேயே விழுந்து எதையாவது உடைத்துக்கொண்டு இருக்கும். பாதிப்பு அவனுக்கா… உங்களுக்கா?

அந்தக் கல்லை வீசுவதற்கு எவ்வளவு தூரம் கவனத்தைச் செலுத்தினீர்கள்? எந்த அளவுக்கு உங்கள் சக்தியைப் பயன்படுத்தினீர்கள்? கடைசியில் அத்தனை சக்தியும் உங்களையே காயப்படுத்துவதற்கு அல்லவா பயன்பட்டுவிட்டது! உடலிலும் மனதிலும் வலு இல்லாதவர்களுக்குத்தான் கோபமோ, வெறுப்போ, ஆத்திரமோ பொங்கிவருகிறது. தம் சக்தியைச் சரிவரப் பயன்படுத்திக்கொள்ளத் தெரியாதவர்களுக்குச் சும்மா உணர்ச்சிவசப்படுவது மட்டுமே சுலபமாகச் சாத்தியமாகிறது.

உண்மையில், ஒரு செயலைவிட அதன் நோக்கம்தான் அதன் பலனைத் தீர்மானிக்கிறது.

அந்த இளைஞன் உணவு விடுதியில் இருந்து வெளிப்பட்டான். தெருவில் 100 ரூபாய் நோட்டு ஒன்று கிடந்தது. யாரும் அதைத் தேடி வராதது கண்டு, அதை பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். தன் பைக்கை நிறுத்தியிருந்த இடத்துக்குப் போனான். பைக்கைக் காணவில்லை. இங்கே வண்டிகளை நிறுத்தக்கூடாது என்று போலீஸ் அதை இழுத்துக்கொண்டு போய்விட்டது. இதை எல்லாம் ஒரு சாது கவனித்துக் கொண்டிருந்தார்.

‘தெருவில் கிடந்த பணம் வேறு ஒருவருடையது. அதை எடுத்ததால்தான் இப்போது செலவு வந்துவிட்டது’ என்று அச்சம் கொண்டான். அந்தப் பணத்தை சாதுவின் தட்டில் போட்டான். சாது சொன்னார், ‘நீ எடுத்தது பாவம் இல்லை. கொடுத்தது புண்ணியம் இல்லை’. பணத்தை இளைஞன் எடுத்தபோது, யாரிடம் இருந்தும் அதைக் களவாடும் எண்ணத்தில் செய்யவில்லை. சாதுவுக்குக் கொடுத்த செயல் அச்சத்தினால் விளைந்தது. கருணையினால் நேரவில்லை. வெளியில் செய்யும் செயல் ஒரு முறையோடு முடிந்துபோகிறது. அதற்கான விளைவு ஏற்படாது என்று சொல்லவில்லை. அதையே மனதில் செய்யப் பார்க்கும்போது திருப்தியுறாமல், மறுபடி மறுபடி கற்பனையில் நிகழ்ந்து, அது அங்கேயே தங்கி, வேர் பிடித்துவிடுகிறது.

எதிரில் இருப்பவனைச் சாகடிக்க விஷத்தை எடுத்தீர்கள். ஆனால் அதை நீங்கள் அருந்திவிட்டு, அவன் சாகவேண்டும் என்று எதிர்பார்த்தீர்கள். நல்லவேளையாக வாழ்க்கை அப்படி நடப்பதில்லை. அடுத்தவனுக்கானது என்று மனதில் சொல்லிவிட்டு நீங்கள் அருந்திக்கொண்டு இருக்கும் விஷம் ஒருநாள் உங்களைத்தான் கொன்றுபோடும். 

தந்தையும் ஆறு வயது மகனும் மலைச் சாரலில் நடந்துகொண்டு இருந்தனர். மகனை ஒரு கல் தடுக்கியது. ‘ஒழிந்து போ!’ என்று கோபத்தில் அதை எட்டி உதைத்தான் மகன். ‘ஒழிந்து போ!’ என்று எங்கிருந்தோ பதில் குரல் வந்தது. அப்பா பக்கத்தில் இருக்கும் தைரியத்தில், ‘எதிரில் வந்தால், உன் முகரையைப் பெயர்த்துவிடுவேன்’ என்று கத்தினான். அதே மிரட்டல் பதிலாக வந்தது. பையன் இந்த முறை மிரண்டான். அப்பாவின் கையைப் பற்றிக்கொண்டான். ‘என்னைக் கவனி’ என்றார் அப்பா. உன்னை மிகவும் விரும்புகிறேன் என்று கத்தினார். ‘உன்னை மிகவும் விரும்புகிறேன்’ என்று அதே வார்த்தைகள் திரும்ப வந்தன. அவர் அடுத்தடுத்து, அன்பாகப் பேசிய வார்த்தைகள் அதேபோல் திரும்ப வந்தன. மகனிடம் சொன்னார்… ‘விஞ்ஞானத்தில் இதை எதிரொலி என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் இதுதான் வாழ்க்கை. 

அன்போ, கோபமோ, துரோகமோ, நீ மற்றவர்களுக்கு என்ன வழங்குகிறாயோ, அதுதான் உனக்குத் திரும்பி வரும். உனக்கு என்ன வேண்டுமோ, அதையே மற்றவர்களுக்கும் வழங்கக் கற்றுக்கொள்’ என்றார். உண்மையில் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ளும் பலர், கடைசிவரை உள்ளுக்குள் ஒன்று வைத்து, வெளியில் வேறுவிதமாக நடந்துகொள்ளும் ஏமாற்றுக்காரர்களாகவே விளங்குகிறார்கள். இவர்களுடைய மனதில் தந்திரங்களும், கள்ளத்தனங்களும் சதா உற்பத்தியாகிக்கொண்டு இருக்கின்றன. எல்லாவற்றையும் மனதிலேயே செய்து பார்த்துவிடுவதால், இவர்கள் கர்மவினையில் இருந்து தப்பிக்கமுடியும் என்று நினைத்திருந்தால், அது மிகத் தவறான கருத்து. அவர்களுடைய கர்மவினைதான் மிகத் தீவிரமானது. 

கர்மவினை என்பது உடல் செயலினால் மட்டும் எற்படுவது இல்லை. மனதின் விருப்பத்தால்தான் முக்கியமாக ஏற்படுகிறது. நல்ல எண்ணங்கள் கொண்டு நல்லதைச் செய்வதற்கும், தகாத எண்ணங்களை மனதில் புதைத்துவிட்டு, வெளியில் நல்ல செயல்களைச் செய்வதற்கும் வெகுவாக வித்தியாசம் இருக்கிறது. இதை நினைவில்கொண்டு மனதாலும் உடலாலும் செயல்பட்டால், வாழ்க்கை நலமாகும்'.

நன்றி : ஈஷா மையம்

]]>
Karma, கர்மவினை, மனம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/2/w600X390/karma-thumbnail-10-10.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/may/02/what-is-karma-2694859.html
2694297 மருத்துவம் மனநல மருத்துவம் ஜென் புதிரை விளக்கும் பாகுபலி கதை Monday, May 1, 2017 05:50 PM +0530 பாகுபலி பற்றி ஓர் அற்புதமான கதை உள்ளது. பாகுபலி பல போர்களைச் சந்தித்தவன். ஒரு கட்டத்தில் சொந்த சகோதரனுடனேயே போர் மூண்டது. அந்தப் போரில் ஆயிரக்கணக்கான வீரர்கள் தலைசாய்க்கப்பட்டார்கள். போர்க்களம் எங்கும் மரித்த உடல்கள்..! ரத்த ஓடைகள்..!
 
எல்லாவற்றையும் பார்த்ததும் பாகுபலிக்கு திடீரென்று தொண்டை அடைத்தது. அவனுள் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. ‘எதற்காக இத்தனை உயிர்களை பலி வாங்கினேன்..?’ என்று பதிலில்லாத ஒரு கேள்வி முளைத்தது. அடுத்த கணம், எல்லாவற்றையும் துறந்துவிட்டு தியானத்தில் நின்றுவிட்டான்.

முழுமையான கவனத்துடன் அங்குலம் கூட அசையாமல் பாகுபலி பதினான்கு வருடங்கள் தியானத்தில் ஆழ்ந்தான். அந்தச் சாதனையின் மேன்மையில் அவன் பற்று கொண்டிருந்த எத்தனையோ விஷயங்கள் தகர்ந்து விழுந்தன.

உலகையே ஆள நினைத்த அந்த மனிதன் இப்போது ஒரு கழுதைக்குக்கூட தலைவணங்கத் தயாராக இருந்தான். ஆனாலும், அவனுக்கு ஞானோதயம் நடக்கவில்லை. பதினான்கு வருடங்கள் நின்றவன் யாருடனும் பேசவில்லை. எதற்காகவும் தன் நிலையை மாற்றிக்கொள்ளவில்லை. அப்படியிருக்கையில், ‘ஏன் இன்னும் தனக்கு ஞானோதயம் கிடைக்கவில்லை..?’ என்று புரியாமல் அவன் நின்றிருந்தபோது, அந்தப் பக்கம் ஒரு குரு கடந்து போனார்.

‘இன்னும் நான் என்ன செய்ய வேண்டும்..? என்னுடைய அத்தனையையும் துறந்துவிட்டேனே..!’ என்று பாகுபலிக்கு அந்த குருவிடம் கேட்க வேண்டும் போல் இருந்தது. ஆனால், பதினான்கு வருடமும் யாருடனும் பேசாமல் இருந்தவனுக்கு குருவிடம் மட்டும் வாயைத் திறந்து கேள்விகள் கேட்க மனம் வரவில்லை. குரு அவனைத் திரும்பிப் பார்த்தபோது, பாகுபலியின் இடது கண்ணிலிருந்து ஒரே ஒரு கண்ணீர்ச் சொட்டு வெளியில் வந்து புரண்டது. ‘என்னுடைய ராஜ்ஜியத்தை இழந்துவிட்டேன்..! என் குடும்பம், அரண்மனை, வசதிகள் எல்லாவற்றையும் விட்டெறிந்துவிட்டேன். ஒரு பூச்சிக்குக்கூட தலைவணங்கும் அளவு உள்ளே உருகிவிட்டேன். இன்னும் என்னுள் நடக்க வேண்டியது என்ன இருக்கிறது..?’ என்ற கேள்வி அந்த கண்ணீர்த் துளியில் பொதிந்திருந்ததை குரு புரிந்துகொண்டார்.

குரு அவனைத் திரும்பிப் பார்த்தபோது, பாகுபலியின் இடது கண்ணிலிருந்து ஒரே ஒரு கண்ணீர்ச் சொட்டு வெளியில் வந்து புரண்டது. ‘என்னுடைய ராஜ்ஜியத்தை இழந்துவிட்டேன்..! என் குடும்பம், அரண்மனை, வசதிகள் எல்லாவற்றையும் விட்டெறிந்துவிட்டேன். ஒரு பூச்சிக்குக்கூட தலைவணங்கும் அளவு உள்ளே உருகிவிட்டேன். இன்னும் என்னுள் நடக்க வேண்டியது என்ன இருக்கிறது..?’ என்ற கேள்வி அந்த கண்ணீர்த் துளியில் பொதிந்திருந்ததை குரு புரிந்துகொண்டார். 

குரு நின்றார். 'நீ அற்புதமான மனிதனாக மாறிவிட்டாய்..! ஒரு புழுவுக்கோ, பூச்சிக்கோ கூட அடிபணியும் அளவு உனக்குள் மாற்றம் நிகழ்ந்துவிட்டது. ஆனால், இதே விருப்பத்துடன் உன்னுடைய சகோதரனிடம் உன்னால் பணிந்து போக முடியுமா..? இயலாது..! அதுதான் உன்னை இழுத்துப் பிடித்திருக்கிறது..' என்றார். பாகுபலிக்கு தன்னுடைய நிலை புரிந்தது. சகோதரனிடம் இருந்த வெறுப்பு காரணமாகக் கொண்ட பற்றைக் களைந்தான். அந்தக் கணமே ஞானோதயம் பெற்றான். 

இப்படித்தான் பலர், வீடு, வசதிகள், பணம், மனைவி, கணவன் என்ற உறவு, குழந்தைகள் மீதுள்ள பற்று, எல்லாவற்றையும் விட்டெறிந்துவிட்டு ஆசிரமத்தை நாடுவார்கள். ஆனால், ஏதோ ஒன்றை விடமுடியாமல் பிடித்து வைத்துக்கொள்வார்கள். எவ்வளவோ பேர் சிறிய வயதிலேயே அந்த வயதுக்குரிய சுகங்களை எல்லாம் துறந்துவிட்டு, ஆசைப்பட்டதைச் சாப்பிடாமல், போதைப் பழக்கம் இல்லாமல், காமத்துக்கு அடிமையாகாமல், இரவு, பகல் பாராமல், தான் என்கிற அகங்காரம் இல்லாமல் வேலை செய்வார்கள். ஆனால் ஏதோ ஒன்று அவர்களை அறியாமல் அவர்களிடம் தங்கியிருக்கும்! சமயத்தில் பார்க்கும்போது, ரத்தக் கண்ணீர் வரும். ‘அர்த்தம் இல்லாத ஏதோ ஒன்றை எதற்கு இவர்கள் பற்றிக் கொண்டிருக்கிறார்கள்..?’ என்று கவலைப்படுவேன். 

ஒரு பரிமாணத்திலிருந்து இன்னொரு பரிமாணத்துக்கு மாறும்போது, முன் பின் அனுபவமற்ற ஒரு பிரதேசத்துக்குள் நுழையும்போது, தன்னிச்சையாக ஏற்படுகிற அச்சம் காரணமாக, தனக்கு ஏற்கெனவே பழக்கமான ஏதோ ஒன்றை விட்டுவிட முடியாமல் மனம் கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறது. அவர்களுடைய இறந்த காலத்திலிருந்தோ, அல்லது அவர்கள் கற்றறிந்த விஷயத்திலிருந்தோ, அல்லது அவர்கள் ரசித்த ஏதோ ஒன்றையோ பிடித்து வைத்துக்கொள்வார்கள்.

சொர்க்கத்துக்கே அழைத்துச் சென்றாலும், அவர்களுடைய சுண்டுவிரல் மட்டும் இன்னும் ஏதோ ஒன்றைச் சுற்றி பற்றிக்கொண்டிருக்கும். அது, பணமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிலருக்கு அவர்கள் பயன்படுத்தும் போர்வையாகக் கூட இருக்கலாம். அல்லது ஒரு செல்ஃபோனைப் பிடித்து வைத்துக்கொள்வார்கள். அல்லது தனக்கான இடம் என்று ஓரிடத்தைப் பார்த்து, அங்கே உட்கார்ந்துதான் தியானம் செய்வார்கள். உடல் முழுவதும் வந்துவிட்டாலும், வால் மட்டும் சிக்கிப் போவது இப்படித்தான்! அந்த வாலை, சரியான நேரம் பார்த்துக் கத்தரித்துவிட்டால், அவர்களுக்கு ஞானோதயம் ஏற்பட்டுவிடும். இதைத்தான் அந்த ஜென் குரு தனது சீடர்களுக்கு, கதையாக விளக்கிச் சொன்னார்.

நன்றி : சத்குரு

]]>
bahubali , Zen story, பாகுபலி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/1/w600X390/bahu.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/may/01/bahubali-and-zen-story-2694297.html
2694231 மருத்துவம் மனநல மருத்துவம் நீங்கள் வேலை செய்யும் இடம் சிறப்பாக இருக்க சில டிப்ஸ் Monday, May 1, 2017 12:58 PM +0530 நீங்கள் ஒரு நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலோ அல்லது தொழிலாளர்களில் ஒருவராகவோ இருந்தால், உங்களைச் சுற்றி ஒரு ஆனந்தமான பணியிடத்தை உருவாக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. இதை செய்வதற்காக சத்குருவிடமிருந்து சில குறிப்புகள் இதோ…

1. கடின உழைப்பு வேண்டாம்

குழந்தைப் பருவத்திலிருந்தே, சந்தோஷமாக படி என்றோ, ஆனந்தமாக வேலை செய் என்றோ யாரும் நம்மிடம் சொல்லவில்லை. மக்கள் எப்பொழுதும் நம்மிடம் “படிக்கும் பொழுது நன்றாக படி, வேலை செய்யும் பொழுது கடினமாக உழைத்து செய்” என்றே சொல்லியிருக்கிறார்கள். மக்கள் எல்லாவற்றையும் கடினமாக செய்துவிட்டு, பின்னர், வாழ்க்கை எளிதாக இல்லை என்று வருத்தத்துடன் ஒரு முடிவுக்கு வருகின்றனர்.

அகங்காரத் தன்மையானது, எல்லாவற்றையும் கடினமாக செய்ய விரும்புகிறது, ஏனெனில், மற்றவரைவிட ஒரு படி மேலே இருக்கவேண்டும் என்பதே அதன் ஒரே கவலை. இப்படி வாழ்வது துரதிருஷ்டவசமானது. இதுவே முழு முயற்சி ஆகும் பொழுது, மக்கள் இயல்பாகவே எல்லாவற்றையும் கஷ்டமாக செய்வதின் மூலம் மனநிறைவு அடைகின்றனர். அவர்கள் மகிழ்ச்சியாக செயல்களை செய்தால், தாங்கள் எதுவும் செய்யவில்லை போன்று உணர்கிறார்கள்.

நீங்கள் பல செயல்களை செய்துவிட்டு, எதையும் நீங்கள் செய்யவில்லை போல உணர்வது அற்புதமான ஒன்றுதானே? அப்படிதான் இருக்க வேண்டும். நீங்கள் இருபத்திநான்கு மணிநேரம் வேலை செய்தாலும், ஒன்றுமே செய்யவில்லை என்று உணர்ந்தீர்கள் என்றால், நீங்கள் எந்த சுமையையும் உங்கள்மீது எடுத்துக்கொள்ளவில்லை என்று அர்த்தம். அப்படி உங்கள் தலைமீது எடுத்துக்கொண்டால், உங்களுடைய திறமைகள் ஒருபோதும் முழுமையாக வெளிப்படாது. மேலும், நீங்கள், இரத்தஅழுத்தம், நீரிழிவு மற்றும் அல்சரை உங்களுக்கு வரவழைத்து கொள்வீர்கள்.

2. போட்டிக்கு அப்பாற்பட்டு செல்லுதல்

மனிதனுடய உண்மையான திறமைகள் போட்டியில் வெளிப்படாது. நீங்கள் யாரோ ஒருவருடன் போட்டியிடும்பொது, அவரைவிட ஒருபடி முன்னே செல்ல வெண்டும் என்று மட்டுமே நினைக்கிறீர்கள். அவ்வளவுதான். உங்களுக்குள் மறைந்துள்ள உண்மையான ஆற்றலை பற்றி நினைப்பதில்லை. மனிதனுடய உண்மையான திறமைகள் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுதுதான் முழுமையாக வெளிப்படும். உள்ளுக்குள் அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருந்தால், உங்கள் உடல், மனம் சிறப்பாக வேலை செய்யும். பொதுவாக மக்களை தளர்வாக இருக்க சொன்னால், சோம்பேறி ஆகிவிடுகிறார்கள். தீவிரமாக இருக்க சொன்னால் இறுக்கமாகிவிடுகிறார்கள். இதன் வித்தியாசத்தை உணரமுடிகிறதா? நீங்கள் தளர்வாகவும், தீவிரமாகவும் இருக்க கற்றுக் கொள்ளவேண்டும். நீங்கள் தளர்வாகவும், தீவிரமாகவும் இருந்தால், உங்களுடைய எல்லா திறமைகளையும் முழுமையாக பயன்படுத்த முடியும்.

3. தன்னார்வ கலையை கற்றுக்கொள்ளுங்கள்

நீங்கள் தானாக முன்வந்து ஒரு வேலையை மேற்கொள்ளும் போது அது ஒரு அர்ப்பணிப்பாகிறது. ஆனால், அதே வேலையை வீட்டிலோ, பணியிடத்திலோ செய்யும்பொழுது அசிங்கமான செயலாக இருக்கிறது. அதே வேலைதான், அதே ஆள்தான். ஆனால், துன்பமாக செய்யலாமா அல்லது ஆனந்ததமாக செய்யலாமா என்ற தேர்வு உங்கள் கையில்தான் இருக்கிறது. எனவே வேலையிடத்தில் நீங்கள் என்ன செய்தாலும் அது ஏன் ஒரு அர்ப்பணிப்பாக செய்யகூடாது? எது உங்களை தடுக்கிறது?

நீங்கள் எப்போதும் தன்னார்வத்துடன் இருக்கவேண்டும். உங்கள் வாழ்க்கையை விருப்பத்துடன் நடத்திக்கொள்வதுதான் தன்னார்வம். இப்போது, நீங்கள், “நான் ஒரு தன்னார்வத்தொண்டர்” என்றால், அதற்கு, “நான் என்ன செய்கிறேனோ அதை விரும்பி செய்கிறேன்” என்று அர்த்தம். உங்கள் வாழ்க்கையை விருப்பத்துடன் நடத்திக் கொள்வதா விருப்பமில்லாமல் நடத்திக்கொள்வதா என்பதை நீங்களே தேர்வு செய்துகொள்ளுங்கள். விரும்பிச் செய்தால் வாழ்க்கை பேரின்பமாகவும், சொர்க்கமாகவும் மாறும். விருப்பமில்லாமல் இருந்தால் நரகமாகும். தன்னார்வத்துடன் இருப்பது என்பது ஈஷா யோகா வகுப்பில் பாத்திரங்களை கழுவுவதிலோ, காய்கறிகளை வெட்டுவதிலோ இல்லை. அது, வாழ்க்கையின் எல்லா சூழ்நிலைகளிலும், ஒவ்வொரு கணத்திலும் எப்படி விருப்பத்துடன் நட்த்திக்கொள்வது என்பதில் உள்ளது. ஏனென்றால், விருப்பமில்லாமல் இருந்தால், உங்களுக்கு நடந்து கொண்டிருக்கும் அழகான விஷயம்கூட எரிச்சலாக இருக்கும்.

4. உங்களுடைய சக ஊழியர்களிடமிருந்து சிறந்ததை பெறுங்கள்

நீங்கள் ஒரு தொழில் செய்தாலோ, குடும்பத்தில் இருந்தாலோ, வேறு என்ன செய்தாலும், உங்களுக்கு ஒரு வேலை ஆக வேண்டும் என்றால், உங்களை சுற்றியுள்ளவர்கள் ஏதோ ஒருவகையில் உங்கள் மீது அன்பு கொண்டிருந்தால்தான் அந்த வேலை சிறப்பாக நடக்கும். ஆனால், அவர்கள் உங்கள் மீது அன்பு செலுத்துவதற்கு முன், அவர்கள் எப்படிபட்டவர்களாக இருந்தாலும், நீங்கள் அவர்களிடம் அன்பு கொள்ள வேண்டும். அவர்கள் உங்களை நேசித்தால்தான், அவர்களிடமிருந்து சிறப்பானவற்றை நீங்கள் பெறமுடியும்.

 நன்றி - ஈஷா மையம்
 

]]>
tips for successful job, வேலை செய்யும் இடம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/1/w600X390/neengal-velai-seyyum-idam-sirappaga-irukka-sila-tips-2.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/may/01/நீங்கள்-வேலை-செய்யும்-இடம்-சிறப்பாக-இருக்க-சில-டிப்ஸ்-2694231.html
2691984 மருத்துவம் மனநல மருத்துவம் நீ தனி ஆளா? Thursday, April 27, 2017 04:25 PM +0530 குருஜி கூறுகிறார், ‘ நீ ஒரு தனி ஆள் அல்ல. நீ ஒரு கும்பல் தான். ‘நான்’ என்று கூறும்போது கூட அங்கு ஒரு ‘நான்’ இல்லை. பல ‘நான்கள்’ உனக்குள் இருக்கிறார்கள். காலையில் ஒரு நான். மதியம் ஒரு நான். மாலையில் ஒரு நான். இந்தக் குழப்பத்தை ஒரு போதும் நீங்கள் உணர்ந்து கொள்வதில்லை. ஏனெனில் அதை உணரும்படியான மையம் உங்களிடம் இருப்பதில்லை.

கும்பலாக இல்லாமல் தனி நபராக இருக்கும் போது மட்டுமே அமைதி சாத்தியம்!

நீங்கள் ஒரு கும்பல். ஒரு கும்பலானது எந்தக் கணத்திலும் கலைந்து சிதறிவிட முடியும். என்ன நேர்ந்தாலும் இருந்த இடத்திலேயே இருக்கிற ஒரு பாறையைப் போன்ற ஒன்று உங்களிடம் இல்லை. எனவே பாறையாக இல்லாமல் பலமான அடித்தளம் இல்லாமல் நீங்கள் பிழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அடித்தளமற்ற வீடு எப்போதும் அச்சத்தில் தான் இருக்கும். லேசான காற்று கூட உங்களை அசைத்து அழித்துவிட முடியும். எனவே தான் ந்க்களை நீங்களே காத்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது.

இந்த ஓயாத தற்காப்பின் காரணமாகத்தான் உங்களால் அன்பு செய்ய முடியவில்லை. நட்பாக இருக்க முடிவதில்லை. நண்பர்கள் பலர் இருக்கலாம். ஆனால் நட்பு இருப்பதில்லை. யோக ஒழுங்குகள் அனைத்தும் உங்களையே உங்கள் அதிகாரியாக ஆக்கும் பொருட்டான ஒரு முயற்சிதான்.

அன்பு காட்டுவோம்!

எப்போது மனிதன் பிறரிடமிருந்து அன்பை எதிர்பாராது, தான் பிறரிடம் அன்பு செலுத்த ஆரம்பிக்கிறானோ, அப்போதுதான் அவன் முதிர்ச்சியடைந்தவன் ஆகிறான். அவனிடம் ஏற்படும் அன்பு நிரைந்து வழிகிறது. ஆகவே அதைப் பிறருக்கு பங்கிட்டு வழங்கி மகிழ முற்படுகிறான்.

அவன் பிறரைச் சார்ந்து இல்லை. அடுத்தவர் அன்பு செலுத்தினாலும், செலுத்தாவிட்டாலும், அவன் அன்பைக் கொடுத்துக் கொண்டே இருப்பான். ஒரு அடர்ந்தக் காட்டில் யாருமே புகழ்வதற்கு இல்லாத நிலையில், யாருமே அதன் நறுமணத்தை அறியாத தன்மையில், அது எவ்வளவு அழகானது என்று சொல்ல யாரும் இல்லாத நிலையில் அதன் அழகைக் கண்டு ஆனந்தமடைய, பங்கிட்டுக் கொள்ள யாரும் இல்லாத வெறுமை நிலையில், ஒரு அழகிய மணமுள்ள மலர்ந்த மலருக்கு என்ன நேரிடும்?

ஆனாலும் அவை மலர்ந்து கொண்டே தான் இருக்கும்.

அதைத்தவிர அவற்றுக்கு வேறொன்றும் தெரியாது. அவை எப்போதும் தனது மகிழ்ச்சியைக் கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டே தான் இருக்கும்!

நீங்கள் அன்புக்காகப் பிறரை சார்ந்து இருந்தால் அது எப்போதும் துன்பத்தையே கொடுக்கும். ஏனெனில் சார்ந்து இருப்பது ஒரு வகை அடிமைத்தனம் தான்.

பிறகு, நீங்கள் உங்கள் ஆழ்மனத்தில் அவரை வஞ்சம் தீர்க்க முயல்கிறீர்கள். வழி தேடுகிறீர்கள். ஏனெனில் நீங்கள் சார்ந்திருந்த அவர், உங்களை ஆதிக்கம் செலுத்த அதிகாரம் உடையவராகிறார். பிறர் தன்னை அதிகாரம் செய்வதை யாருமே விரும்ப மாட்டார்கள். அந்த நிலையில் அன்புப் பரிமாற்றம் எப்படி ஏற்படும்?

அன்பு என்பது ஒரு சுதந்திரமான மலர்!

இந்த அதிகாரச் சண்டைதான் கணவன் மனைவிக்கிடையே எப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.

- ஓஷோ

(நன்றி – பிரணாயாமம்)

]]>
osho, அன்பு காட்டுவோம் http://www.dinamani.com/health/mental-health/2017/apr/27/osho-discourse-2691984.html
2690796 மருத்துவம் மனநல மருத்துவம் வாழ்க்கையில் இன்னும் எவ்வளவோ இருக்கிறது! Tuesday, April 25, 2017 11:49 AM +0530 நான் எங்கு சென்றாலும், மனிதர்கள் அவர்கள் மொபைல் போனுடன் கட்டுண்டு கிடப்பதைக் காண்கிறேன். தொழில்நுட்பம் என்பது அதுவாகவே நல்லதோ கெட்டதோ கிடையாது, அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் எல்லாம் இருக்கிறது. தங்களுடைய புகைப்படங்களையும், அவர்கள் மனங்களில் எழும் எண்ணங்கள் அனைத்தையும் சமூக வலைதளத்தில் பதிந்தாக வேண்டும் என்ற நிர்பந்தமும் அவசரமும் மனிதர்களுக்கு ஏன் வந்தது? அடிப்படையில் அவர்கள் வாழ்க்கை அனுபவம் அவர்கள் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளின் எல்லைகளைக் கடக்காததால்தான். அவர்கள் குப்பையை பிறரிடம் பகிர்ந்துகொள்வதைவிட அர்த்தமுள்ளது எதுவும் அவர்களுக்குத் தெரியவில்லை. மக்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்தவற்றை டைரியாக பதிந்த நாட்கள் உண்டு. அப்போதெல்லாம் எவராவது அவர்களது டைரியைத் திறந்து படித்துவிட்டால் “என் வாழ்க்கையைப் பற்றி நீ எப்படி படிக்கலாம்?” என்று மனமுடைந்து போவார்கள். ஆனால் இப்போதோ, அவர்கள் முகநூலில் பதிந்ததை எவரும் படிக்கவில்லை அல்லது லைக் செய்யவில்லை என்றால் மனமுடைந்து போகிறார்கள்.

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் என்ன செய்தீர்கள், எங்கு சென்றீர்கள் என்று எல்லாவற்றையும் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள். மகத்துவம் ஏதும் இல்லாத இடத்தில் மகத்துவம் தேட முயல்கிறீர்கள். வாழ்க்கை மகத்துவம் வாய்ந்ததாக இருக்கப்போவது, உங்கள் மன மற்றும் உணர்வு கட்டமைப்பைக் கடந்து உணரும் திறனை மேம்படுத்தும்போது மட்டுமே. பெரும்பாலான மனிதர்கள் தங்கள் எண்ணங்களிலும் உணர்வுகளிலுமே சிக்குண்டபடி தங்கள் வாழ்நாள் முழுவதையும் வாழ்ந்து செல்கிறார்கள். அவர்கள் வேறெதையும் உணராமல், இதுமட்டுமே உண்மை என்று நினைக்கிறார்கள். எண்ணங்களும் உணர்வுகளும் நீங்கள் நடத்தும் மனோரீதியான நாடகம். உதாரணத்திற்கு, இப்போது ஏதோவொன்று தவறாகிவிட்டது என்று நீங்கள் நினைத்தால், உண்மையில் எதுவும் நடக்காவிடிலும் நீங்கள் உடனே வேதனைப்பட ஆரம்பித்துவிடுவீர்கள். மாறாக, உண்மையிலேயே உங்களைச் சுற்றி ஏதோவொன்று தவறாகிப் போனாலும் எல்லாம் சரியாக இருப்பதாக நீங்கள் நினைத்தால், நீங்கள் நலமாகவே இருப்பீர்கள். உங்கள் எண்ணங்களும் உணர்வுகளும் உங்கள் உருவாக்கம், நிஜத்திற்கும் அதற்கும் எவ்விதத்திலும் தொடர்பு கிடையாது.

அதேபோல, மற்றவர்களின் அனுபவங்களைப் பார்த்து உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். வேறொருவருக்கு நடப்பதற்கு நீங்கள் கவனம் செலுத்தினால், உங்களுக்கு எதுவும் நடக்காது. பார்வையாளராக இருக்காதீர்கள் – வாழ்க்கையில் பங்கேற்பாளராக இருங்கள். நீங்கள் செய்யும் செயலின் தீவிரத்தை அதிகரிக்கமுடியுமா என்று பாருங்கள். சும்மா முயன்று பாருங்கள். நீங்கள் ஏதோவொன்றை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் – அதை பத்து சதவிகிதம் அதிக தீவிரத்துடன் பார்க்கமுடியுமா என்று பாருங்கள். எல்லோருடைய கண்களும் அதே விஷயங்களைக் காண்பதில்லை. உங்கள் அனுபவத்தின் அளவு, நீங்கள் எந்த அளவு தீவிரத்துடன் ஏதோவொன்றைச் செய்கிறீர்கள் என்பதைப் பொருத்தது. உங்கள் தீவிரத்தை அதிகரிக்க, நீங்களாக சற்று முயற்சியும் முனைப்பும் கொள்வது தேவைப்படுகிறது.

பெரும்பாலான மனிதர்கள் எங்கும் போய்ச்சேருவதில்லை, ஏனெனில் அவர்கள் எப்படியோ ஒரு படி முன்னால் கால்வைப்பார்கள், பிறகு ஒரு படி பின்னால் செல்வார்கள். நீங்கள் தெளிவான நோக்கத்துடன் ஒரு படி முன்னால் சென்று அதனை அங்கீகரித்தால், அடுத்த படி எடுப்பதற்கான உத்வேகம் பிறக்கும். தீவிரம் என்பது தன்னால் வராது. உங்கள் வாழ்க்கையின் மின்சாரத்தை உயர்த்தாமல், நீங்கள் அதிக விழிப்புணர்வாய் மாறமுடியாது. உங்களால் ஏதோவொன்றை எந்த அளவு அனுபவித்துணர முடிகிறது என்பது நீங்கள் எவ்வளவு விழிப்புணர்வாக இருக்கிறீர்கள் என்பதைப் பொருத்தது. 

நீங்கள் இப்போது உங்கள் விழிப்புணர்வை முழுவதுமாக இழந்துவிட்டால், நீங்கள் இங்கு இருப்பதும் உங்களுக்குத் தெரியாது, உங்களைச் சுற்றி ஒரு உலகம் இருப்பதும் தெரியாது. நீங்கள் ஓரளவு விழிப்புணர்வாக இருக்கிறீர்கள், அதனால்தான் நீங்கள் இங்கு இருப்பதும் உங்களுக்குத் தெரிகிறது, உங்களைச் சுற்றி ஒரு உலகம் இருப்பதும் உங்களுக்குத் தெரிகிறது. உங்கள் தீவிரத்தை நீங்கள் துரிதப்படுத்தினால், உங்கள் விழிப்புணர்வும் அதிகரிக்கும். நீங்கள் இதுவரை சாத்தியம் என்று நினைத்துக்கூட பார்த்திராத விஷயங்களை கிரகித்துக்கொள்ளத் துவங்குவீர்கள். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் உண்மையாகவே அர்த்தமுள்ளதாக இருக்கவேண்டும் என்பதே என் ஆசையும் ஆசியும். சலிப்பினால் இறப்பதை விட உற்சாகப்பெருக்கால் இறப்பது மேலானது.

நன்றி : சத்குரு ஜக்கி வாசுதேவ்

]]>
Face book, social media addiction, முகநூல், சமூக வலைதளம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/25/w600X390/addiction.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/apr/25/face-book-and--social-media-addition-2690796.html
2686029 மருத்துவம் மனநல மருத்துவம் வெற்றி வேண்டுமா? இதோ 5 டிப்ஸ் DIN DIN Monday, April 17, 2017 03:57 PM +0530 'எல்லாம் செய்துவிட்டேன், ஆனாலும் வெற்றி கழுவும் மீனில் நழுவும் மீனாக இருக்கிறது' என்பவர்கள் இங்கே வாருங்கள். சத்குரு சொல்லும் இந்த 5 வழிமுறைகளில் ஒன்றைப் பற்றிக்கொண்டால் உங்கள் வாழ்க்கையில் இனி வெற்றி வெற்றி வெற்றி மட்டும்தான். வெற்றியைத் தேடுபவர்களுக்குப் புதிய பொன்மொழிகள் இதோ.

சில சமயங்களில் எதேச்சையாக, அதிர்ஷ்டவசமாக, சில விஷயங்கள் உங்களுக்குச் சாதகமாக நிகழ்ந்துவிடலாம். அப்படிக் காற்று உங்கள் பக்கம் வீசும் சமயத்திற்காக நீங்கள் காத்திருந்தால், நல்ல விஷயங்கள் உங்கள் கல்லறையில்தான் நடக்கும், ஏனென்றால் அச்சமயம் வராமல் கூட போய்விடலாம்.

1. கைகளை நம்புவோம்! கைரேகையை அல்ல

உங்களுக்கு தெரியுமா? கோடான கோடி தடவை ஒரு திடமான சுவரின் ஊடே நடந்து அதைக் கடக்க முயன்றால், அதில் ஒரு முறை நீங்கள் கடந்துவிட முடியுமென்று குவான்டம் கோட்பாடு (Quantum Theory) கூட சொல்கிறது. அதில் சிறிய சிக்கல் அந்த கோடான கோடி தடவையைத் தொடும்முன் உங்கள் மண்டையோடு உடைந்திருக்கும்.

நீங்கள் அதிர்ஷ்டத்தை நம்பி வாழும்போது, நீங்கள் பயத்திலும் பதற்றத்திலும் வாழ்கிறீர்கள். நீங்கள் தெளிவான நோக்கத்துடனும் திறமையுடனும் வாழும்போது உங்களுக்கு எது நடந்தாலும் நடக்காவிட்டாலும், உங்களுக்கு நடப்பவை மேல் உங்களுக்கு ஆளுமை இருக்கும். அதுதான் ஸ்திரமான வாழ்க்கை.

2. தோல்வியில் தொலைவதை நிறுத்துங்கள்

உறுதியோடு இருக்கும் ஒரு மனிதனுக்குத் தோல்வி என்பதே கிடையாது. ஒரு நாளுக்கு 100 முறை நீங்கள் கீழே விழுந்தால், அவை நீங்கள் கற்கும் 100 பாடங்களாகிவிடும். நீங்கள் விரும்புவதை உருவாக்குவதில் உறுதியுடன் இருந்தால், உங்கள் மனம் ஒரே திசையில் நிலைத்துவிடும். உங்கள் மனம் இருக்கும் திசையில் உங்கள் உணர்ச்சிகளும் ஒன்றிவிடும். ஏனென்றால் நீங்கள் சிந்திக்கும் விதமாகத்தான் நீங்கள் வாழ்க்கையை உணரும் விதமும் இருக்கும். உங்கள் எண்ணமும் உணர்வுகளும் ஒன்று சேர்ந்தால், உங்கள் சக்திகளும் உங்கள் உடலும்கூட அத்திசையில் ஒருங்கிணைந்துவிடும். இவை அனைத்தும் ஒருமுகமாகின்ற போது, நீங்கள் விரும்புவதை உருவாக்கி உங்கள் கனவை நிஜமாக்கும் திறமை அபாரமாகிவிடும். பல விதங்களில் நீங்கள் படைப்பாளராகி விடுவீர்கள்.

3. தேவை தெளிவு குருட்டு நம்பிக்கை அல்ல

ஒரு மனிதனுக்குத் தேவை தெளிவு, குருட்டு நம்பிக்கை அல்ல. ஒரு கூட்டத்தின் நடுவே நீங்கள் நடக்கும்போது, உங்கள் பார்வை தெளிவாக இருந்தால், ஒவ்வொருவரும் எங்கு இருக்கிறார் என்று உங்களால் பார்க்க முடிந்தால், கூட்டத்தில் ஒருவரைக் கூடத் தொடாமல் நீங்கள் மிகச் சுலபமாக நடந்து சென்றுவிடுவீர்கள். உங்கள் பார்வைத் தெளிவாக இல்லை, ஆனால் நீங்கள் அதீத நம்பிக்கை உடையவர் என்கிறபோது, எல்லோர் மீதும் நடந்து செல்வீர்கள். தெளிவில்லாத காரணத்தால், தன்னம்பிக்கை நல்ல மாற்றுப்பொருள் என்று கருதுகிறீர்கள். அது ஒருக்காலமும் அப்படி ஆக முடியாது.

உதாரணமாக, நீங்கள் உங்கள் வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளையெல்லாம் இப்படி எடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுங்கள். “சரி, தலை விழுந்தால் முதல் திட்டப்படி செயல்படுவோம், ஒருவேளை பூ விழுந்துவிட்டால் இரண்டாம் திட்டப்படி செயல்படுவோம்,” என்று நீங்கள் முடிவெடுத்து செயல்பட்டால், உங்கள் திட்டம் வேலை செய்ய 50 சதவிகிதம் வாய்ப்பிருக்கிறதா இல்லையா? வாழ்க்கையில் 50 சதவிகிதம்தான் நீங்கள் சரியாக இருக்கிறீர்கள் என்கிறபோது, நீங்கள் இரண்டு தொழில்கள்தான் செய்ய முடியும். ஒன்று நீங்கள் வானிலை அறிக்கையாளராகவோ அல்லது ஜோசியக்காரராகவோ இருக்க முடியும். இந்த பூமியில் நீங்கள் வேறெந்த வேலையும் செய்ய முடியாது.

4. கொஞ்சம் வளைந்து கொடுங்கள்

நம் வாழ்க்கையில் பலவிதமான சூழ்நிலைகளைக் கையாள்வதற்கு, நமக்கு வெவ்வேறு விதமான ஆளுமை குணங்கள் தேவை. அதில் நீங்கள் நீரோடைபோல் வளைந்துகொடுக்கும் தன்மையுடன் இருந்தால், நீங்கள் எடுத்திருக்கும் பாத்திரத்தில் உங்களால் முழு திறனுடன் செயல்பட முடியும். அதில் சிறிதும் சிக்கலிருக்காது. ஆனால் பலருக்கோ சூழ்நிலைக்கேற்றவாறு வளைந்து கொடுக்க முடியாமல் கட்டுண்டு கிடக்கிறார்கள். அவர்களுக்கு பிடிக்காதவற்றையும் புரியாதவற்றையும் எதிர்கொள்ளும்போது, அவர்கள் சொல்ல முடியாத பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். நீங்கள் அதை உடைக்க வேண்டுமென்றால், நீங்கள் அதை முற்றிலும் வேறுவிதமாக அணுக வேண்டும். நீங்கள் செய்யக்கூடிய மிக எளிமையான செயல் இது: உங்களுக்குப் பிடிக்காத ஒருவருடன் சேருங்கள். அவர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள், மிக அன்பாக, ஆனந்தமாக! உங்களுக்குப் பிடிக்காதவற்றைச் செய்யுங்கள், உங்களுக்குப் பிடிக்காதவர்களுடன் இருங்கள். அந்த சூழ்நிலையிலும் நீங்கள் புத்தியுடன், அன்புடன், ஆனந்தத்துடன் வாழக் கற்றுக் கொண்டால் அதுவே உங்களுக்கு வெற்றி.

5. எனக்கு என்ன கிடைக்கும்?

உயர்ந்த மனிதனாக ஆக வேண்டும் என்கிற பேராவல் உங்களுக்கு இருக்கத் தேவையில்லை. நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பதன்மேல் உள்ள கவனத்தைத் தாண்டி உங்கள் குறிக்கோளையும், நீங்கள் இயங்கும் வளையத்தையும் விரிவுபடுத்திவிட்டால், எப்படியும் நீங்கள் உயர்ந்த மனிதராகத்தான் இருப்பீர்கள். உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று சில மனிதர்கள் ஏங்கியதில்லை. அவர்கள் பார்வை “எனக்கு என்ன கிடைக்கும்?” என்பதைத் தாண்டி இருந்தது. 'எனக்கு என்ன கிடைக்கும்?' என்ற இந்த ஒரு கணக்கை மட்டும் நீங்கள் கைவிட்டுவிட்டு, உங்கள் திறமையின் உச்சத்தில் செயல்பட்டால், ஏதோ ஒருவிதத்தில் நீங்கள் உயர்ந்தவராகத்தான் இருப்பீர்கள் . அப்போது இயல்பாகவே 'என்னைச் சுற்றியிருக்கும் உயிர்களுக்கு நான் என்ன செய்ய முடியும்?' என்று பார்க்கத் துவங்கிவிடுவீர்கள். உங்கள் திறமைகளையும் இயல்பாகவே அதிகரித்துக் கொள்வீர்கள், ஏனென்றால் செய்வதற்கு அவ்வளவு செயல்கள் இருக்கும்!

நன்றி - ஈஷா மையம்

]]>
Tips for success, வெற்றிக்கான வழிகள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/17/w600X390/vetri-venduma.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/apr/17/5-tips-for-success-2686029.html
2686027 மருத்துவம் மனநல மருத்துவம் தாங்க்யூ சொல்லுங்க! ஷக்தி Monday, April 17, 2017 03:41 PM +0530 நீங்கள் உங்கள் நட்பு சூழ் உலகை பத்திரமாக உள்ளங்கையில் பொத்தி வைத்திருக்க ஆசைப்படுகிறீர்களா? நெருக்கமான உறவுகள் எப்போதும் மகிழ்ச்சிக் கடலில் இருக்க வேண்டும் என எண்ணுகிறீர்களா? கவலை வேண்டாம். இது மிகவும் சுலபம். இதை சாதிக்க ஒரு வார்த்தை போதும். அன்பின் உறவுகள் யாவும் ஒருபோதும் நம்மை விட்டு நீங்காது. அந்த ஒரு வார்த்தையான மறைவார்த்தை என்னவெனில் ‘நன்றி’. ஆம். மற்றவர்கள் நமக்கு செய்த உதவியை என்றென்றும் மறக்காமல் இருப்பதும், அவர்களிடம் அதைப்பற்றி நினைவு கூறி மகிழ்வதும் அவ்வுறவின் சிறப்பை மேம்படுத்தும். தவிர நன்றி என்ற சொல் மகத்தான விளைவுகளை தரும் மந்திரச் சொல். அது நம் மனத்துக்கும் மகிழ்ச்சியை அளிக்கும். இதைத் தான் வள்ளுவர் செய்நன்றி அறிதல் எனும் அதிகாரம் முழுவதும் கூறியுள்ளார், சமீபத்திய ஆய்வு ஒன்றும் இதையே கண்டுபிடித்துள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள் ரெவ்யூ ஜர்னல் ஆஃப் கம்யூனிகேஷன் எனும் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. வாழ்க்கையையும் உறவுநிலைகளையும் மேம்படுத்தும் சக்தி நன்றி உணர்வுக்கு உள்ளது. ஒருவர் செய்த உதவியை மறக்காமல் அவருடன் இணக்கமாக நன்றியுடன் இருக்கையில் நீண்ட காலம் அவ்வுறவு பேணப்படுகிறது என்கிறது அந்த ஆராய்ச்சி.

நம்முடைய உடல் நலத்தை மேம்படுத்த தடுப்பூசிகளை போட்டுக் கொள்வது போல மனநலத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நம்மை சார்ந்த அனைத்து உறவுகளிடம் ஆழ்ந்த நன்றியுணர்வுடன் இருந்தால் போதும். அது பல நன்மைகளை நமக்கே தெரியாமல் விளைவித்துவிடும். அதுவும் முக்கியமாக காதலர் அல்லது வாழ்க்கைத் துணையிடம் நேசத்துடனான நன்றியுணர்வுடன் வாழ்வது நீண்ட கால பந்தத்துக்கு உறுதி அளிக்கும் விஷயம் என்று ஆணித்தரமாக கூறுகிறது இந்த ஆய்வு.

நன்றியுணர்வு என்பதை எப்படியெல்லாம் எந்தந்த தருணத்தில் வெளிப்படுத்தலாம் என்று யோசிக்கிறீர்களா? உங்களுக்கு ஒருவர் பரிசு அளித்தாலோ, அல்லது உங்களுக்காக ஒரு செயலை செய்து உதவினாலோ, உங்கள் அன்பை நன்றியாகத் தெரிவிப்பீர்கள் தானே. அதை ஒருமுறையாக மட்டும் குறிக்கிக் கொள்ளாமல் அதை உங்கள் மனத்தில் எப்போதும் பதித்துக் கொள்வதும் அந்த நபரை சந்திக்கும் போது அவர் செய்த நன்றியை மறக்காமல் இருப்பது நல்ல குணம். அதான் ஒரு தடவை நன்றி சொல்லிவிட்டோம் இனி அவர் யாரோ நாம் யாரோ என்று நினைத்தால் அது நல்ல உறவு நிலையை வளர்த்தெடுக்காது. எப்போதெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ அதை நேரடியாகவோ அல்லது குறிப்புணர்வாகவோ கூட அவர்களுக்கு உணர்த்தலாம். அல்லது அவரிடம் பிரத்யேகமாகவும் நன்றி சொல்லலாம் சில சமயம் உங்களுக்கு உதவி செய்தவரின் பொதுநலச் செயலையும் தயாள குணத்தையும் மற்றவர்களும் அறிந்து கொள்ளும்படி வெளிப்படையாக அனைவருக்கு மத்தியிலும் கூறலாம். அந்தந்த சூழலுக்கு தகுந்தபடி நாம் நடந்து கொள்வது நல்லது.

நன்றி உணர்வு என்பது வேறு மகிழ்ச்சியாக இருப்பதும் வேறு வேறு. நன்றி உணர்வு என்பது பிறர் நமக்காக ஒரு செயலை செய்யும் போது ஏற்படும் உணர்வு. நமக்காக மற்றவர்கள் செய்த நன்மையை உள்ளார்ந்து நினைத்துப் பார்க்க வேண்டும். பிரதி உபகாரமாக நாம் அதை வாய் வார்த்தையாகவோ அல்லது சமயம் கிடைக்கும் போது சிறு உதவிகள் செய்வதன் மூலமாகவோ சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கலாம். அவரைப் பார்க்கும் போதெல்லாம் அவர் நமக்கு செய்த ஒரு நல்லது உடனடியாக நினைவுக்கு வருமே, அதுவே நன்றியுணர்வு என்கிறார் அமெரிக்க தன்னார்வு அமைப்பான நேஷனல் கம்யூனிகேஷன் அசோசியேஷனைச் சேர்ந்த ஸ்டீபன் எம்.யோஷிமுரா.  

நன்றியறிவித்தல் என்பது மிகவும் நேர்மறையான ஒரு விஷயம். நாம் ஒருவருக்கு கடமைப்பட்டிருக்கிறோம் எனில் அவர்களிடம் அதை உணர்த்திவிடுவது நல்லது. இது உளவியல்ரீதியாக பல நன்மைகளை இருதரப்புக்கும் ஏற்படுத்தும். மேன்மேலும் பல உதவிகளையும் பெற்றுத் தரும். நன்றி என்ற வார்த்தையை ஒருவரிடம் சொல்லும் போது அவர் உள்ளம் பூரிப்படையும், சொல்லுவோருக்கும் அந்த வார்த்தை போதாது என்றே நினைக்கத் தோன்றும். தருவதும் பெறுவதுமான இந்த நீண்ட வாழ்க்கையில் நன்றி என்பது நீரூற்று. அது குளிர்ச்சியான மனநிலையை உடனடியாக உருவாக்கிவிடும். ஒருவர் மீதான பிரியத்தையும் உறவையும் அழகாக்கும் வழி அவரிடம் தாங்யூ சொல்வதுதான்’ என்கிறார் யோஷிமுரா.
  
நன்றியுணர்வுடன் நடந்து கொள்வது ஒருவருடைய சமூகத் தொடர்புடைமை அதிகரிக்கும். தவிர அவர்களுக்கு உடல் நலப் பிரச்னைகள் அதிகம் ஏற்படுவதில்லை. அவர்களுக்கு மன பாரம் ஏதுமிருக்காது. நன்றாக உறக்கம் வரும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். நன்றியை தருவதும் பெறுவதும் மனித மனங்களில் நல்விதைகளாகும். உறவு நிலைகளில் அழகான மாற்றங்களுக்கு அது வழிவகுக்கும். அது வாழ்க்கையை திருப்திகரமாக வாழ வைப்பதுடன் எதிர்மறை விஷயங்களை தவிர்க்கும். மன அழுத்தம், பதற்றம், பொறாமை, வேலை சார்ந்த நெருக்கடி எனப் பல பிரச்னைகளையும் நன்றியுணர்வு வென்றெடுக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

]]>
Gratitude, Thank you, நன்றி, செய்நன்றி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/17/w600X390/gratitude-appreciation-article.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/apr/17/expressing-gratitude-may-help-boost-your-relationship-2686027.html
2684960 மருத்துவம் மனநல மருத்துவம் இளம் வயதிலேயே சிகிச்சை! ஸ்மார்ட்ஃபோன் அபாயம்! Saturday, April 15, 2017 04:11 PM +0530 அமெரிக்காவில் பதிமூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஸ்மார்ட்ஃபோன், வீடியோ கேம் போன்ற பல டிஜிடல் விஷயங்களுக்கு அதி வேகமாக அடிமையாகிவருகின்றனர். அதிலிருந்து அவர்களை மீட்டெடுக்க முடியாமல் அவதியுறுகிறார்கள் பெற்றோர்கள். இவர்களுக்கான சிகிச்சை சமீபத்தில் அறிமுகமாகிவிட்டது என்கிறது அமெரிக்க மீடியா செய்தி.

சியாட்டில் அருகில் ‘தி ரீஸ்டார்ட் சென்டர்’ (The reSTART Life Centre) எனும் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு டிஜிட்டல் டெக்னாலஜி மற்றும் வீடியோ கேம்களுக்கு தீவிரமாக அடிமையாகிவிட்ட இளைஞர்களுக்கான சிகிச்சையை வழங்கப்படுகிறது என்கிறது ஸ்கை ந்யூஸ்.

13 வயதிலிருந்து 18 வயது வரையுள்ள இளைஞர்களுக்கான இந்தச் சிகிச்சைக்கு செரினிட்டி மவுண்டன் (Serenity Mountain) என்று பெயரிடப்பட்டுள்ளது.

மெய்நிகர் உலகில் எந்த திசையிலிருந்து, எத்தகைய ஆபத்து ஏற்படும், அது எந்த அளவுக்கு இளம் வயதினரை பாதிப்படையச் செய்துவிடும் என்பதை வரையறுத்துச் சொல்ல முடியாது. ஆனால் அவற்றிலிருந்து ஒதுங்கி இயற்கை எழில் மிக்க ஓரிடத்தில் இளைஞர்கள் சிகிச்சை பெறும் போது அது அவர்களின் மன அமைதியை மீட்டுத் தரும் என்கிறார்கள் ரீஸ்டார்ட் மையத்தினர்.

ஸ்மார்ட்ஃபோன் உள்ளிட்ட டெக்னாலஜி விஷயங்களில் இளைஞர்களின் கவனம் திரும்பிவிட்டால் அவர்கள் அதற்கு எளிதில் அடிமையாகிவிடுகின்றனர். வேறு எதிலும் அவர்களுக்கு இயற்கையான நாட்டம் குறைந்துபோய்விடும். இயல்பாக இருக்க வேண்டிய சில உணர்வுகள் கூட நாளாவட்டத்தில் மந்தமாகிவிடும் ஆபத்து ஃபோனில் நீண்ட நேரம் விளையாடுவதில் உள்ளது. தவிர மொபைல் ஃபோன்களில் உள்ள வண்ணங்களும் சப்தங்களும் இளம் வயதினரை வெகுவாக ஈர்த்துவிடுகிறது. ஒரு கேமை அவர்கள் விளையாடத் தொடங்கினால் மணிக்கணக்காக அதில் மூழ்கிவிடுகின்றனர். யாரேனும் அவர்களை அழைத்தால் கூட அவர்களுக்கு அந்தச் சமயத்தில் காதில் விழாது, அப்படியே விழுந்தாலும் சரியாக பதில் சொல்ல மாட்டார்கள். ஃபோனை நீங்கள் வாங்கிவிட்டால் அவர்களின் அதீத கோபத்துக்கு உள்ளாவீர்கள். அவர்களை கண்டிப்பதும் தண்டிப்பதும் ஒரு பயனும் அளிக்காத நிலையில் ரீஸ்டார்ட் போன்ற மையங்களின் தேவை அதிகரித்து வருகிறது என்று ஸ்கை நியூஸிடம் தெரிவித்தார் இந்த மையத்தின் தலைவர் டாக்டர் ஹிலாரி கேஷ்.

இளைஞர்களின் இந்த நவீன பிரச்னைக்கு இங்கு பிரத்யேகமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனுமதிக்கப்படும் இளைஞரின் பொதுவான குணநலன்களும், அவருடைய குடும்பப் பின்னணியும் முதலில் விசாரிக்கப்படும். ஒவ்வொரு விபரமாக சேகரித்து 8-12 வாரங்கள் வரையில் முதல் கட்ட ஆய்வில் பதிவு செய்வார்கள்.

இந்த காலகட்டத்தில் திறமையான மருத்துவ நிபுணர் குழுவொன்று இவர்களை ஆய்வு செய்யும். அவர்களிடமும் அவர்களின் குடும்பத்தாரிடமும் மனம் விட்டுப் பேசி பல கேள்விகள் கேட்பதன் மூலம் டிஜிட்டல் மீடியாவுக்கு அவர்கள் எந்த அளவுக்கு அடிமைப்பட்டுள்ளார்கள் என்பதை முதலில் கண்டறிவார்கள். பிரச்னையின் தீவிரம் தெரிந்தால் தான் சிகிச்சை அளிப்பது எளிது. அவர்களின் தீவிரத்தன்மைக்கு ஏற்றபடி அவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளும் கவுன்சிலிங்கும் தொடங்குவார்கள். முதலில் அவர்களையே மாற்றத்துக்குத் தயாராகும் மனநிலையை உருவாக்கிய பின்னர் தான் சிகிச்சை ஆரம்பிக்கப்படும்.

சில இளைஞர்களுக்கு டிஜிட்டல் மீடியாவின் நன்மை தீமைகளை புரிய வைப்பது மிகவும் கடினம். தங்களுக்கு எல்லாம் தெரியும் என்றே அவர்கள் கருதுவார்கள். அவர்களை அணுகிப் பேசிப் புரிய வைப்பதற்கே நீண்ட காலம் ஆகும். சில சமயம் ஒருவருடம் கழித்தும் கூட தாங்கள் பிடித்த பிடியிலிருந்து சற்றும் கீழிறங்க மாட்டார்கள். இப்படி விதவிதமான இளைஞர்ளின் டிஜிட்டல் சார்ந்த புதுப் புது பிரச்னைகளை தீர்க்கவே ரீஸ்டார்ட் செயல்படுகிறது. சமீப காலமாக ஸ்பார்ட்ஃபோன் அடிக்‌ஷன் தான் இளைஞர்களை கவலைத்தரக்க அளவில் பாதித்துள்ளது.

அளவுக்கு அதிகமாக ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்துபவர்கள் சொந்த வாழ்க்கையில் மட்டுமல்லாமல், வேலை செய்யும் இடங்களில் மற்றும் சமூகத்தில் என எல்லா இடங்களிலும் பிரச்னையை சந்திப்பார்கள் என்கிறது இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் ஜர்னலில் வெளியாகியுள்ள புதிய ஆராய்ச்சியொன்றின் முடிவு.

]]>
Smart phone, Teen agers, Phone Addiction , ஸ்மார்ட்போன், செல்ஃபோன் பாதிப்புக்கள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/15/w600X390/young_amican_kids.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/apr/15/smartphone-addiction-of-youngsters-2684960.html
2682121 மருத்துவம் மனநல மருத்துவம் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு 5 டிப்ஸ்! Tuesday, April 11, 2017 08:11 AM +0530 1. எது முதலில் நடக்க வேண்டும் – நிர்ணயித்துக் கொள்ளுங்கள்


உங்கள் முன்னுரிமைகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எது வேண்டாம் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டாம். நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்கள் என்று பாருங்கள், அதனை நோக்கி வேலை செய்யுங்கள். உங்கள் திறமை, தகுதி, நீங்கள் வாழும் சூழ்நிலைக்கு ஏற்றாற் போல நிலைமை வழிக்கு வரும். எந்தவிதமான வீட்டில் வாழ வேண்டும், எந்தவிதமான செயல் செய்ய வேண்டும் என்று நினைப்பதை விட்டு விட்டு, 'நான் ஆன்மீக நோக்கத்தில் இருக்க விரும்புகிறேன், நலமாக, மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறேன்' என்று சொல்லத் தொடங்குங்கள். மற்ற விஷயங்கள் இதைச் சுற்றி தானாக சீரடையும்.

2. மகிழ்ச்சியாக வாழ்வதே முக்கியம்

நீங்கள் அன்றாடம் பத்து மைல் நடக்கலாம், ஒரு விலை உயர்ந்த கார் வைத்திருக்கலாம் அல்லது ஒரு சைக்கிளில் பவனி வரலாம் – அதுவல்ல முக்கியம். உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வது, அதன் ஒவ்வொரு அம்சத்தையும் அனுபவிப்பது அதுதான் முக்கியம், இல்லையா? மற்ற விஷயங்கள் எல்லாம் சௌகரியத்திற்காக நாம் செய்து கொள்ளும் ஏற்பாடுகள் மட்டுமே.

3. 'அவனைவிட நன்றாக இருக்க வேண்டும்' எனும் நோய்

இன்னொருவரை விட நன்றாய் வாழ்வதே நல்வாழ்வு என்று, அதைப் பற்றி புரிந்து கொள்ளாதவர்கள் நினைக்கிறார்கள். இன்னொருவரை விட நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புவது நல்வாழ்வு அல்ல, அது ஒரு நோய். உலகை இந்த நோய் மோசமாக பீடித்துள்ளது. வேறு யாரும் வைத்துக் கொள்ள முடியாது என்பதற்காகவே பல பொருட்களை வைத்துக் கொள்ள மக்கள் விரும்புகின்றனர். உலகில் இருப்பதிலேயே பெரிய வைரத்தை உங்களுக்கு கொடுக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம், எதுவும் தெரியாமல் அதைப் பார்த்தால் அது வெறும் கல். ஆனால், சந்தையிலோ அதற்கு ஏகப்பட்ட கிராக்கி ஏற்படுத்திவிட்டோம், மதிப்பு கொடுத்துவிட்டோம். தெருவில் கிடக்கும் ஒரு சாதாரண கருங்கல்லை நீங்கள் கவனமாக பார்த்தால், அதுவும் அழகானதாகவே இருக்கிறது. நிறைய கிடைப்பதால் அதற்கு மதிப்பில்லாமலும் போய்விட்டது. உலகில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே வைரங்கள் கிடைக்கின்றன. எல்லோரும் வாங்கவும் முடியாது. அதனால், அதை கழுத்தில், காதில், மூக்கில் அணிந்து கொள்கிறீர்கள். அது அழகாக இருப்பதால் அல்ல என்பதே யதார்த்தமான உண்மை.

4. வாழ்க்கையை வீணாக்காதீர்கள்

வாழ்க்கை குறித்த தவறான கருத்துக்களால் மனித வாழ்வு விஷமாகிக் கொண்டிருக்கிறது. இன்னொருவரை விட, நன்றாக இருக்க முயற்சி செய்து பலர் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கின்றனர். இன்னொருவரை விட நன்றாக காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக எத்தனையோ மனிதர்கள் தங்கள் வாழ்வை வீணாக்கி இருக்கிறார்கள். உங்கள் வாழ்க்கையை அப்படி வீணாக்காதீர்கள்.

5. உங்கள் முழு திறனோடு செயலாற்றுங்கள்

இன்னொருவரை விட நன்றாக இருக்க வேண்டும் என்பதையே நினைத்துக் கொண்டிருந்தால் உங்கள் முழுத் திறன் மலராது. வாழ்க்கையில் உங்களுக்கு எது முன்னுரிமை என்று உறுதி செய்து கொண்டபின், அதனை விட்டுவிடுங்கள். உங்கள் முழுத் திறனோடு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள். என்ன நடக்க வேண்டுமோ, அது நிச்சயம் நடக்கும்.

நன்றி : ஈஷா மையம் 

]]>
வாழ்க்கை, Tips, Happy life, மகிழ்ச்சி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/10/w600X390/tips_for_happiness.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/apr/10/மகிழ்ச்சியான-வாழ்க்கைக்கு-5-டிப்ஸ்-2682121.html
2676842 மருத்துவம் மனநல மருத்துவம் உலகம் முழுவதும் 300 மில்லியன் மக்களுக்கு மனஅழுத்தப் பிரச்னை! உமா ஷக்தி Saturday, April 1, 2017 02:27 PM +0530 உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் ஒரு மதிப்பீடு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் உலகெங்கும் 300 மில்லியன் மக்களுக்கு மேல் மன அழுத்தப் பிரச்னையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்கிறது அந்த அறிக்கை.

உலக ஆரோக்கிய தினம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், மார்ச் 31 அன்று இவ்வறிக்கையை யு.என் ஏஜென்சி வெளியிட்டது,

இந்த எண்ணிக்கை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. உடனடியாக அனைத்து நாடுகளும் உளவியல் சிக்கல்களுக்கான மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், உதவி தேவைப்படுவோருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் முன் வரவேண்டும் என்றார் உலக சுகாதார அமைப்பின் ஆய்வாளர் ஜின்ஹுவா.

மன அழுத்தப் பிரச்னையில் பாதிக்கப்பட்டோரின் சதவிகிதம் 2005 லிருந்து 2015-ஆம் ஆண்டுகள் வரை கணக்கில் எடுத்தால், இது 18 சதவிகிதத்துக்கு மேலாக அதிகரித்துள்ளது என்கிறது உலக சுகாதார நிறுவனம். ஏப்ரல் 7 உலக ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு மன அழுத்தப் பிரச்னையைப் பற்றி விரிவாக பேச முடிவெடுத்துள்ளது இந்நிறுவனம். இதன் மூலம் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உதவிக் கரங்களைப் பெற வேண்டும் என்பதே ஒருவருட காலமாக இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் குறிக்கோள்.

கைவிடப்பட்ட மனநிலை, யாருமற்ற தனிமை போன்ற பல மனோவியாதிகளுக்கு எளிதில் தீர்வும் சிகிச்சையும் உள்ளது. ஆனால் அது குறித்த விழிப்புணர்வு இல்லாத நிலையில் பெரும்பாலான மக்கள் துன்புறுகின்றனர். ஆரோக்கிய நலவாழ்வைப் பற்றிய விழிப்புணர்வு தான் அவர்களுக்கு நிச்சயம் தேவை.

மன அழுத்தப் பிரச்னையின் தொடர்ச்சியாக பலருக்கு தற்கொலை எண்ணமும் தலைதூக்கிவிடும் அபாயம் உள்ளது.  இது ஒவ்வொரு வருடமும் ஆயிரமாயிரம் உயிர்களை பலிவாங்கியுள்ளது என்கிறது ஆய்வறிக்கை.

இந்த நிலையிலிருந்து அவர்களை மீட்டெடுக்க முதல் கட்டமாக பிரச்னையின் மூலத்தை கண்டறிய வேண்டும். பாரபட்சமும் ஒடுக்குமுறையும் மேலோங்கியிருக்கும் சமூகங்களில் சராசரி வாழ்க்கையை நகர்த்துவதே பெரும் சோதனை. எனவே அடிப்படை விஷயமான வாழ்தல் சார்ந்த பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்க வழி செய்யவேண்டும்.

’மன அழுத்தம் – வாங்க பேசலாம்’ (Depression: let's talk) இதுவே எங்கள் பிரச்சாரத்தின் வாசகம் என்றார் சேகர் சக்ஸேனா. இவர் உலக சுகாதார நிறுவனத்தின் மன நலப் பிரிவின் இயக்குநராவார்.

மன அழுத்தப் பிரச்னையில் சிக்கித் தவிக்கும் ஒருவரை குணமாக்க முதலில் அவர்களிடம் மனம் விட்டுப் பேச வேண்டும். அவர் சொல்வதை பொறுமையாக காது கொடுத்துக் கேட்க வேண்டும். அவரின் நம்பிக்கையை பெற்ற பின்னர் தான் சிகிச்சையை தொடங்க முடியும். தொடர் சிகிச்சைக்குப் பின்னரே அவர்களை முழுமையாக குணப்படுத்த முடியும் என்றார் சக்சேஸனா.

பெரும்பாலான நாடுகள் மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவை அளிக்க முன்வருதில்லை. அறியாமை மட்டும் இதற்குக் காரணமல்ல, இதற்கென நிதி ஒதுக்க முடியாத பொருளாதார நெருக்கடிகளும்தான் பூதாகரமாக உள்ளது. ஆனால் பொருளாதாரத்தில் நிலைப் பெற்ற நாடுகளில் கூட 50 சதவிகித மக்கள் மன அழுத்தப் பிரச்னைக்கான சிகிச்சை கிடைக்கப்பெறாமல் அவதியுறுகிறார்கள் என்பது பெரும் சோகம்.

சராசரியாக, அரசாங்கத்தின் 3 சதவிகித நிதி வளம் மட்டுமே மன நலத் துறைக்கு ஒதுக்கப்படுகிறது. அதிலும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நாடுகளில் இது ஒரு சதவிகிதமும், பொருளாதாரத்தில் மேம்பட்ட நாடுகளில் 5 சதவிகிதம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

]]>
WHO, Depression - Lets Talk, Saxena, மன அழுத்தப் பிரச்னை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/1/w600X390/depress.jpg http://www.dinamani.com/health/mental-health/2017/apr/01/உலகம்-முழுவதும்-300-மில்லியன்-மக்களுக்கு-மனஅழுத்தப்-பிரச்னை-2676842.html
3305 மருத்துவம் மனநல மருத்துவம் மனவளம் பெற தினமும் யோகாசனம் செய்யுங்கள்! மதி Thursday, August 11, 2016 12:46 PM +0530 மனவளம், மன அமைதியைப் பெற தினமும் யோகாசனம் செய்யுங்கள் என்று பள்ளி மாணவ - மாணவிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி அறிவுரை வழங்கிப் பேசினார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருவண்ணாமலை மாவட்டப் பிரிவு, மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம், மாவட்ட யோகா சங்கம் இணைந்து சர்வதேச யோகா தின விழாவை புதன்கிழமை நடத்தின. மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் பா.இந்திரராஜன் தலைமை வகித்தார்.

மண்டல விளையாட்டு ஆணைய முதுநிலை மேலாளர் ப.சிவக்குமார், மாவட்ட யோகா சங்கத் தலைவர் மு.மண்ணுலிங்கம், மாவட்ட விளையாட்டு அலுவலர் க.புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, யோகக் கலை குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு, யோகாசன பயிற்சிகளைத் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, மாணவ - மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி சா.பழனி பேசுகையில், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது யோகக்கலை. யோகக்கலையின் தாயகம் இந்தியா என்பதை மாணவ - மாணவிகள் நினைவில் கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு நினைவாற்றலை தரும் வல்லமை யோகாசனத்துக்கு உண்டு.

எனவே, ஒழுக்கம், ஆளுமைத் திறன், மன வளம், மன அமைதியைப் பெற மாணவ - மாணவிகள் தினமும் குறைந்தது 5 நிமிடமாவது யோகாசனம் செய்ய வேண்டும். இளமையில் தொடர்ந்து யோகாசனம் செய்து வந்தால், முதுமையில் இளமையோடு இருக்கலாம் என்றார்.

தொடர்ந்து, சிறந்த முறையில் யோகாசனம் செய்த பள்ளி மாணவ - மாணவிகள் 7 பேருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். முன்னதாக, மாணவ - மாணவிகள் அனைவரும் யோகாசன உறுதிமொழியேற்றனர்.

யோகா தலைமைப் பயிற்சியாளர் டி.சவுந்தரராஜன், பயிற்சியாளர்கள் என்.செந்தில்குமார், எஸ்.வெங்கடேசன் ஆகியோர் மாணவ - மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளித்தனர்.

விழாவில், செங்கம் சக்தி பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் செ.வெங்கடாசலபதி, கிருஷ்ணா வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி நிறுவனர் கிருஷ்ண கஜேந்திரன், ஹெப்ரான் மெட்ரிக் பள்ளி பி.டி.எல்.சங்கர், மாவட்ட யோகா சங்கப் பொருளாளர் கு.ப.நாகராஜன், செயலர் கோ.அருள்மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

]]>
Yoga http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/11/w600X390/india-yoga-teacher-training-certification.png http://www.dinamani.com/health/mental-health/2016/aug/11/மனவளம்-பெற-தினமும்-யோகாசனம்-செய்யுங்கள்-3305.html
3199 மருத்துவம் மனநல மருத்துவம் நவீன  உளவியல்! dn Tuesday, August 9, 2016 12:47 PM +0530 மனித மனத்தை ஆராய்வது உளவியல் (Psychology). இதை மேற்கத்திய கல்விப் பின்புலத்துடன் அறிவியல் துறையாக இந்தியாவில் அறிமுகம் செய்தவர் நரேந்திரநாத் சென் குப்தா.

வங்க மாநிலத்தின் ஃபரித்பூரில் 1889, டிச. 23-இல் பிறந்தார் நரேந்திர நாத் சென் குப்தா. சுதேசிக் கல்வி எழுச்சியால்  கொல்கத்தாவில் உருவான வங்க தேசியக் கல்லூரியில் (இதன் முதல்வராக இருந்தவர்தான் அரவிந்தர்) தனது இடைநிலைக் கல்வியை முடித்த நரேந்திரநாத்துக்கு, இளம் வயதிலேயே அறிவியலை செயல்முறைப் பயன்பாட்டுக்கு உகந்ததாக மாற்றுவதில் ஆர்வம் மிகுந்திருந்தது. அவரது முறையான உடற்பயிற்சி, வலிமையான உடலையும் திடமான சிந்தனைகளையும் அவருக்கு அளித்தது.

மேற்படிப்புக்காக அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு நரேந்திரநாத் சென்றார். 1910 முதல் 1913 வரை அங்கு படித்த அவர் பி.ஏ. பட்டம் பெற்றார். சிறந்த கல்வித் தகுதிக்காக, ரிச்சர்டு மானிங் ஹாட்ஜஸ் கல்வி உதவித்தொகை அவருக்கு அளிக்கப்பட்டது. தவிர, பெருமைக்குரிய பை பேட்டா கப்பா சங்கத்தின் உறுப்பினராக அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 

ஹார்வர்டிலேயே 1914-இல் எம்.ஏ. பட்டம் பெற்ற நரேந்திரநாத், உலகப் புகழ் பெற்ற ஜெர்மானிய அமெரிக்கரான உளவியல் நிபுணர் ஹூகோ மன்ஸ்டெர்பர்க்கின் வழிகாட்டுதலில் உளவியலில் ஆராய்ச்சி செய்தார். அவரது 'Anti-Intellectualism: A Study in Contemporary Epistemology’ என்ற தலைப்பிலான ஆய்வேட்டுக்காக அவருக்கு 1915-இல் பிஎச்.டி. பட்டம் வழங்கப்பட்டது.

பிறகு நாடு திரும்பிய அவர், 1916-இல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் உளவியல் துறை விரிவுரையாளராகச் சேர்ந்தார். அதேசமயம் அங்கு புதிதாகத் துவங்கப்பட்ட பரிசோதனை உளவியல் (Experimental Psychology) துறையின் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார். பல்கலைக்கழகத்தில் உளவியல் மற்றும் தத்துவம் பயிற்றுவித்தல், உளவியல் ஆய்வகத்தில் ஆராய்ச்சி ஆகியவை அவரது பணிகளாக இருந்தன. அதே ஆண்டில் கமலாவை அவர் மணம் புரிந்தார்.

அவரது ஆய்வக ஆராய்ச்சியின் அங்கங்களாக, முப்பரிமாண தொலைவு உணர்திறன் (Depth Perception), உளவு உடலியல் (PsychoPhysics), கவனக்கூர்மை (Attention) ஆகியவை இருந்தன.

உளவியலின் அறிவியல் தன்மையை வெகுவாக வலியுறுத்தி வந்த நரேந்திரநாத், 1923-இல் கூடிய இந்திய அறிவியல் காங்கிரஸில் பங்கேற்று, உளவியலை அறிவியலின் ஒரு துறையாக அங்கீகரிக்கச் செய்வதில் வெற்றி பெற்றார். அதில் துவங்கப்பட்ட உளவியல் தனிப்பிரிவுக்கு அவரே தலைவராகப் பொறுப்பேற்றார்.

உளவியலின் வளர்ச்சிக்காக, நரேந்திரநாத்தின் தீவிர முயற்சியால்  இந்திய உளவியல் சங்கம் 1924-இல் துவங்கப்பட்டது; அதன் சஞ்சிகையாக, Indian Journal of Psychology-ஐ 1925-இல் துவக்கி, அதன் நிறுவன ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

பரிசோதனை உளவியலில் நிபுணராக இருந்தபோதும், சமூகம் சார்ந்த, இன அடிப்படையிலான, கல்விப் பின்புலம் கொண்ட, குற்றம் தொடர்பான, சமயம் சார்ந்த உளவியல் பிரிவுகள் தொடர்பாகவும் அவர் பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

லக்னோ பல்கலைக்கழகத்தில் நிர்வாகப் பொறுப்பேற்க 1928-இல் கொல்கத்தாவிலிருந்து சென்றார். அங்கு பிரபல சமூகவியலாளரான ராதாகமல் முகர்ஜியுடன் இணைந்து சமூக உளவியல் குறித்த நூலை நரேந்திரநாத் சென் குப்தா எழுதினார். Introduction to Social Psychology: Mind in Society என்ற அந்த நூல், இந்தியாவில் எழுதப்பட்ட சமூக உளவியல் நூல்களில் முதல் நூலாகும். மேற்கத்திய நாடுகளின் அனுபவ ஆதாரங்