Dinamani - முதியோர் நலம் - http://www.dinamani.com/health/elders-health/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2596050 மருத்துவம் முதியோர் நலம் ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே IANS Friday, November 11, 2016 02:39 PM +0530 ஒவ்வொரு ஆண்டும் வயது அதிகமாக ஆக அனைவருக்குமே நினைவுகள் மங்கத் தொடங்கும். எதை எங்கே வைத்தோம் என்று ஆரம்பித்து முகங்களும் மெல்ல மறக்க ஆரம்பிக்கும். பொருட்களை அல்லது பணத்தை மறந்துவிட்டு தேடிக் கொண்டிருக்கும் நிலையில் பல முதியோர்கள் அவதியுறுகிறார்கள். நினைவாற்றல் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

பெரும்பாலான பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கும் சமயங்களில் பலவித உடல் மற்றும் மனப் பிரச்னைகள் ஏற்படும். அதற்கு முன்னிய காரணம் ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் சுரப்பு இச்சமயங்களில் குறைந்துவிடும். அது அவர்களின் ஞாபக சக்தியை அதிகம் பாதிக்கிறது. ஏற்கனவே பழைய விஷயங்களை மறப்பது தவிர புதிதாக எதுவொன்றும் நினைவில் கொள்ள முடியாது. இவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் ஆண்களின் நினைவாற்றலை விட நடுத்தர வயதுப் பெண்களின் நினைவாற்றல் சிறப்பாகவே செயல்படுகிறது என்கிறது இந்த ஆராய்ச்சி. 

நினைவுத் திறன் குறைதல் என்பது பெரிய பிரச்னை இல்லையென்றாலும், அதனால் சம்பந்தப்பட்டவர் நடைமுறை சிக்கல்களில் அவதிப்படுகிறார்கள் என்கிறார் ஜான் பின்கர்டன், நிர்வாக இயக்குனர், தி நார்த் அமெரிக்கன் மெனோபாஸ் சொசைட்டி The North American Menopause Society (NAMS). 

45 லிருந்து 55 வயது வரையிலுள்ள 212 ஆண்கள் மற்றும் பெண்களை இந்த ஆராய்ச்சிக்காக அவர் உட்படுத்தியிருந்தார். அவர்களின் மூளைச் செயல்பாடுகள், நினைவுத் திறன், பேச்சாற்றல் ஆகியவற்றை சோதித்த பின்னரே இந்த ஆராய்ச்சி முடிவை அவர் வெளியிட்டார். முப்பது வருடங்களுக்கு முன்னால் ஒரு பிறந்த நாளை அல்லது முக்கிய நிகழ்வை மறந்துவிட்டதாக இன்று வரை பெண்கள் கணவரை குற்றம் சாட்டுவது இந்த நினைவாற்றலின் சக்தியால் தான் போலும்!

]]>
Memory, Menopause, Man http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/11/10/w600X390/GTY_memory_jtm_140828_16x9_608.jpg http://www.dinamani.com/health/elders-health/2016/nov/10/ஞாபகம்-வருதேஞாபகம்-வருதே-2596050.html
2596032 மருத்துவம் முதியோர் நலம் ஆஸ்டியோபோரோசிஸ்! எலும்புச் சிதைவு நோய்! Thursday, November 10, 2016 12:57 PM +0530  

வீட்டின் கட்டமைப்புக்கு பொறியாளரை அணுகி சிறப்பாக வரவேண்டும் என்று சிரத்தை எடுக்கும் நாம் நம் உடல் கட்டமைப்புக்கு முக்கியத்துவம் தருகிறோமா என்றால் நிச்சயமாக இல்லை என்று சொல்வேன். தொடர் போராட்டம் மிக்க வாழ்க்கை ஓய்வற்ற வேலைப்பளு என்று பல்வேறு காரணங்கள் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கும் பொழுது உடல் ஆரோக்கியமாக இருக்க நாம் எடுத்துகொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக சொற்பமே. ஏன் இல்லை என்றே சொல்லலாம்.

உடல் கட்டமைப்பை எந்த பகுதி தாங்கி கொண்டிருக்கிறது என்று உங்களுக்கு அனைவருக்கும் தெரியும் ஆம், உங்கள் உடல் எலும்புகளே உங்கள் உடல் கட்டமைப்பை(INFRASTRUCTURE) தாங்கி பிடித்திக் கொண்டும் நிர்வகித்து கொண்டும் இருக்கிறது. உங்கள் உயரம் கைகளின் நீளம் கால்களின் நீளம் அனைத்தும் வடிவங்களும் பொதிந்து வைத்திருப்பது உங்கள் உடல் எலும்புகள். 206 எலும்புகளே! மனித உடலமைப்பு ஒருவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் அதன் உறுதித்தன்மையை நிர்ணியம் செய்கிறது. குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற டார்வின் கோட்பாடு உண்மையெனில்   உங்கள் தண்டுவட எலும்புகளும் கால் எலும்புகளும் பல்வேறு மாற்றத்திற்கு உள்ளான பின் நாம் இரண்டு கால்களில் நடக்கும் மனிதனாக உருபெற்றோம். இரண்டு கால்களில் மனிதன் எப்பொழுது நடக்க ஆரம்பித்தோமோ நம் தொடை எலும்புகளின் வலுவும் இன்னும் மற்ற எலும்புகளின் எலும்புகளின் தேவை நமக்கு இன்றியமையாததாகிறது.

எலும்புகள் உடல் கட்டமைப்பு மட்டுமே உதவுகிறது என்றால் அது  நிச்சயாமாக உணமையில்லை. உடலின் பல்வேறு இயக்கங்கங்கள் நம் உடல் எடையை தாங்கிக் கொள்ளுதல், வெள்ளை அணுக்கள் உற்பத்தி என்று பல்வேறு தனிப்பட்ட முக்கிய வேலைகளை சீரும் சிறப்புமாக அன்றாடம் செய்து கொண்டேயிருக்கிறது. உதராணமாக உங்கள் வீட்டில் இருக்கும் மேஜை நீங்கள் வைக்கும் புத்தகம் அல்லது இன்னும் பிற பொருட்களின் எடையை தாங்க வேண்டும் என்றால் அதன் கால்கள் மிகுந்த உறுதியுடன் இருக்க வேண்டுமல்லவா. அதே போல் அந்த மர கால்கள் செய்யப்பட்ட பலகை நல்ல நலத்துடன் இருக்க வேண்டுமல்லவா. ஆம் எனில் நீங்கள் உங்கள் உடல் எலும்புகளின் எடையை உறுதியாக வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் சுமார் உங்கள் 55 கிலோ எடையை தாங்கிக்கொள்ள உங்கள் கால், முதுகு, தண்டுவட எலும்புகள் உறுதியுடன் இருக்க வேண்டுமே. ஆனால் மருத்துவ ஆய்விகளின் படி நமக்கு எலும்புகள் 55 வயதுக்கு பின்பு உறுதி தன்மையை இழக்க ஆரம்பித்து விடுகிறது. உறுதித்தன்மை இழப்பதால் அதன் நிலைத்தன்மை இழக்க நேரிடுகிறது. இதனை ஆங்கிலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் (OSTEOPOROSIS) எலும்பு மெலிதல் அல்லது எலும்பு சிதைவு நோய் என்கிறார்கள். சமீபத்திய ஆய்வுகளின்படி இந்த நோயின் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்வதாக கூறப்படுகிறது, இதனை மருத்துவர்களும் பல்வேறு உடல் பரிசோதனைகள் மூலம் உறுதிபடுத்தி வருகின்றனர்.

மருத்துவ ஆய்வறிக்கைகளின் படி உலகில் வாழும் மூன்று பெண்களில் ஒருவருக்கு இந்த நோய் தாக்குவதாகவும், அதேபோல் ஆண்களில் 5 இல் ஒருவருக்கு இந்த நோய் தாக்குவதும் கண்டறியப்பட்டுள்ளது. (F = 1:3, M = 1:5). மருத்துவத்துறை இதனை சைலென்ட் டிசீஸ் (SILENT DISEASE) என்கிறது. அதாவது இந்த நோய் கண்டறிந்த எவருக்கும் நோயின் தொடர் விளைவுகளோ அல்லது நோயின் வீரியமோ அறிந்து கொள்ள வெளியில் உணரும் வண்ணம் எந்த நோய் அறிகுறிகளும் தெரியாது. இதனால் நோய் பாதிக்கபட்டவர்கள், அதாவது பெண்களை அதிகம் தாக்கும் இந்த எலும்புச் சிதைவு  குறைபாடு (இது ஒரு நோய் அல்ல) அவர்களின் எலும்புகளை நிலைத்தன்மையும் உறுதித்தன்மையும் நாளாக நாளாக சீர் குலைத்து எலும்புகளைச் மெலியச் செய்து ஒரு நாள் எளிதில் உடைந்து போகச் செய்கிறது. நாளுக்கு நாள் நம் வயது முதிரும் பொழுது எலும்புகள் நொறுங்கி போதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படுகிறது. ஆம் இந்த நோயால் பாதிக்கக்பட்டவரின் எலும்புகள் எளிதில் உடைந்து போகும் (FRACTURE). தொடை எலும்புகள்(FEMUR) மற்றும் இடுப்பு எலும்புகள் எளிதில் உடைந்து போக நேரிடுகிறது. இதனைத் தொடர்ந்து வரும் பக்க விளைவுகள் மிக அதிகம்.

அதே போல் முதுகு எலும்புகள் கடுமையாக இந்த நோயால் பாதிக்கப்படும்  பொழுது உடல் முதுகு குருத்தெலும்புகள் உறுதித்தன்மையை இழந்து கூன் விழ ஆரம்பித்துவிடுகிறது. இதனை ஆங்கிலத்தில் HUMP/KYPHOSIS என்பார்கள். இதனால் தான் வயது முதிர்ந்தவர்களுக்கு கூன் விழுவது என்பது பொதுவான ஒரு விளைவாகிறது. நாள்பட்ட நோயின் தாக்கம் உடல் கட்டமைப்பை ஆட்டம் காணச் செய்யும்போது உடலில் தடுமாற்றம், நடுக்கம், தசைச் சேர்வு, விழுந்து விடுவோமோ என்ற பயம் (FEAR OF FALL) தொடர் விளைவுகளால் பாதிக்கப்பட்ட பெண் அல்லது ஆண் படுத்த படுக்கையாக நேரிடுகிறது. இதனைத்தொடர்ந்து படுக்கையில் அதிகம் ஓய்வு எடுக்க நேரிடும் பொழுது தொடர் நோய்கள் தாக்கி உயிரழப்பை ஏற்படுத்தும் என்கிறது தொடரும் மருத்துவ ஆய்வுகள்.

மக்களும் மனித சமூகத்துக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக ஆஸ்டியோபோரோசிஸ் நாள் அக்டோபர் 20-ம் தேதி கொண்டாப்படுகிறது. இந்த நாள் கொண்டாப்படுவதின் முக்கிய நோக்கம் அனைவரும் இந்த நோய் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதேயாகும். தொடர் உடற்பயிற்சிகள் நம்மை நாம் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், கால்சியம் நிறைந்த கீரை வகைகள், காய்கறிகள், தானியங்கள், உணவு முறைகளில் கட்டுப்பாடு, சூரிய ஒளியின் முக்கியத்துவம் உணர்ந்து உடலில் சூரிய ஒளி படும்படி சிறிது நேரம் நடக்கும் உடற்பயிற்சிகள் இது போன்ற சின்ன சின்ன வாழ்க்கை முறை மாற்றங்கள் இந்த எலும்புகளில் ஏற்படும் குறைபாட்டை தடுத்து கொள்ளவும், நோயின் தாக்கத்திலிருந்து நம்மை விடுவித்து கொள்ள பெரிதும் உதவுகிறது.

- செந்தில்குமார் தியாகராஜன், MPT, MIAP, PGDFWM,

பிசியோதெரபிஸ்ட், சாய் பிசயோ கேர் & க்யூர், ராசிபுரம்

கல்லூரி விரிவுரையாளர்

தி ஆக்ஸ்போர்டு பிசியோதெரபி கல்லூரி, பெங்களூர். கைபேசி : 8147349181

]]>
Osteoporosis, எலும்புச் சிதைவு நோய்!, ஆஸ்டியோபோரோசிஸ் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/11/10/w600X390/landscape-1445711467-g-osteoporosis-103060411.jpg http://www.dinamani.com/health/elders-health/2016/nov/10/ஆஸ்டியோபோரோசிஸ்-எலும்புச்-சிதைவு-நோய்-2596032.html
2584486 மருத்துவம் முதியோர் நலம் ஆண்களுக்கும் வரலாம் எலும்பு நலிவு நோய் உமா ஷக்தி Thursday, October 20, 2016 06:04 PM +0530 இன்று (20.10.2016) உலக ஆஸ்டியோபொராசிஸ் தினம். பெரும்பாலும் பெண்களுக்கு வரும் நோய் என்று கருதப்பட்ட ஆஸ்டியோபொராசிஸ் ஆண்களுக்கும் பாதிப்பை தருகிறது. ஹார்மோன் மாற்றங்கள், குறைந்த அளவு டெஸ்டோஸ்ட்ரோன் சுரப்பு, தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யும் வாழ்க்கை முறை, அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம், புகைக்கும் பழக்கம் அல்லது புகையிலை உட்கொள்ளுதல் போன்ற காரணங்களால்தான் ஆண்களுக்கு ஆஸ்டியோபொராசிஸ் வருகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். சர்வதேச ஆஸ்டியோபொராசிஸ் அமைப்பின் கணக்கின் படி 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் சராசரியாக ஐந்தில் ஒருவர் இந்நோய்க்கு ஆளாகின்றனர்.

ஆஸ்டியோபொராசிஸ் ஏற்பட்டால் எலும்புகள் பலவீனமாகி உடைந்து விடக் கூடிய அளவிற்கு ஆகிவிடும். பெண்களின் எலும்புகள் ஆண்களை விட வலிமை குறைந்தது. ஆஸ்டியோபொராசிஸ் ஏற்பட்டால் எலும்புகள் மேலும் மென்மையாகி உடைந்துவிடும் நிலைக்கு வந்துவிடும். மெனோபாஸ் வயதை எட்டும் பெண்களுக்கு இந்நோய் வர அதிக வாய்ப்புக்கள் உள்ளன என்கிறார்கள் மருத்துவர்கள். இச்சமயத்தில் பெண்களின் ஆரோக்கியத்துக்கு முக்கிய காரணியான ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் சுரப்பு குறைவிடும். 45 வயதுக்கு மேலுள்ள பெண்களும் 70 வயது நெருங்கும் ஆண்களும் நிச்சயம் இந்நோய் வருவதற்கு முன்னரே தற்காப்பு முயற்சிகளை ஆரம்பித்துவிட வேண்டும். காரணம் இது வந்துவிட்டால் நடப்பது பாதிப்படைந்துவிடும், தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு ஏற்பட்டு மன அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

பெண்களை மட்டுமே அதிகம் தாக்கும் என்று சொல்லப்பட்ட இந்நோய் ஆண்களையும் விட்டு வைக்கவில்லை, வைட்டமின் டி குறைபாடு, கால்ஷியம் சத்து போதாமை மற்றும் டெஸ்ஸ்டிரோன் குறைந்த அளவு மற்றும் மேற்சொன்ன காரணங்கள் ஆகியவை ஆண்களின் ஆஸ்டிபொராசிஸின் முக்கிய காரணங்கள் என்கிறார் ஸ்போர்ட்ஸ்  ரானா கே.செங்கப்பா. இவர் ஆக்டிவ் ஆர்த்தோ எனும் விளையாட்டு மருத்துவ நிறுவனத்தின் மருத்துவ இயக்குநர் ஆவார். இந்நோய்க்குரிய இன்னொரு பிரச்னை என்னவெனில் அது ஆரம்பத்தில் வெளியே தெரியாது. போன் மினரல் டென்சிட்டி (Bone Mineral Density) என்ற பரிசோதனையை செய்து பார்த்து தான் தெரிந்து கொள்ள முடியும்.

சமீபத்திய ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூல் ஆராய்ச்சி ஒன்றில் போன் டென்சிட்டி குறைவதற்கான காரணம் ஆண்களின் அதிக எடை, பெரிய தொப்பை என்று கண்டறியப்பட்டுள்ளது.

அதிகப்படியான கொழுப்பினால் இதய நோய்கள், நீரிழிவுப் பிரச்னைகளுடன் சேர்த்து எலும்பு நோய்களும் ஏற்படும் என்கிறார் வட அமெரிக்க ஆராய்ச்சியாளர் மிரியம் பிரிடெல்லா.

ஆஸ்டியோபொராஸிஸ் தவிர்க்க  சில வழிமுறைகள் :

யோகா, நடனம், ஏரோபிக்ஸ் என உடல் உழைப்பைக் கோரும் ஏதாவது ஒன்றினை தொடர்ந்து செய்ய வேண்டும்.

எடை தாங்கும் பயிற்சிகள் செய்ய வேண்டும். ஓடுவது, ஜாக்கிங், வாக்கிங், படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது போன்ற செயல்கள் எலும்புகளை உறுதியாக வைத்திருக்க உதவும் விஷயங்கள்.

உணவைப் பொருத்தவரையில் கொழுப்பு நீக்கப்பட்ட பால், யோகர்ட், சீஸ், பழங்கள், பச்சைக் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.

]]>
Osteoporosis, எலும்பு நலிவு நோய், ஆஸ்டியோபொராசிஸ் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/10/20/w600X390/1258_620x290.jpg http://www.dinamani.com/health/elders-health/2016/oct/20/ஆண்களுக்கும்-வரலாம்-எலும்பு-நலிவு-நோய்-2584486.html
2584454 மருத்துவம் முதியோர் நலம் சிறுநீரக பிரச்னைகளை குணமாக்கும் இஞ்சி மருத்துவம்  Thursday, October 20, 2016 12:19 PM +0530 இன்றைய சமூகம் உடம்புக்கு எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று உள்ளது. சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்மையாகத்தான் உள்ளது.

கடந்த சில வருடங்களாக நமது ஊரில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) அதிகம் நடைபெறுகிறது. இதற்கு பல பெரிய வைத்தியர்கள் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்தும் முழு பலன் அடைவதில்லை.

மதுரையில்  பேராசிரியர் திரு. சண்முகம் அவர்களுக்கு 2006ல் திடீரென்று சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது சிறுநீரக செயல்பாடு 5%க்கும் (ஒரு நாளைக்கு 50 மில்லி லிட்டர் சிறுநீர் வெளியேற்றம்) கீழ் சென்றுவிட்டது. இந்த செயலிழப்புக்கு முக்கிய காரணம் அவர் கொழுப்பை (Cholesterol) கட்டுபடுத்த உட்கொண்ட ஒரு வகை மருந்துகள் (statin drugs).

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபின் தினமும் மூன்று முறை பெரிடொனியல் டயாலிசிஸ் (Peritoneal dialysis) அவரே செய்து கொண்டார். டயாலிசிஸினால் அனைத்துச் சத்துக்களும் ஊறியப் பெற்று துரும்பாய் இளைத்து, நடக்க கூட சக்தியின்றி சோர்ந்து போனார். அவரது மகன் திரு.பாரி அவர்கள் கணிணி வல்லுநராக இருந்தாலும் ஆன்மீகம், யோகா, இலக்கியம், சுற்றுபுறவியல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர்.

அவர் இயற்கை வழியின் படி, பழங்கால மருத்துவத்தில் கூறியுள்ள இஞ்சி ஒத்தட முறையை கூறினார்.

தினமும் எவ்வளவு சிறுநீர் வெளியெறுகிறது என்று அளந்து, குறித்து வைப்பார். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, சிறுநீரை ஆய்வகத்திற்கு அனுப்பி அதிலுள்ள, அனைத்து சத்து மற்றும் உப்பு பொருட்களின் அளவை அறிந்து அதையும் ஆய்வு செய்வார்.

மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுக் கட்டுப்பாட்டையும் கடுமையாக பின்பற்றினார். இதன்மூலம் இரண்டே மாதத்தில் சிறுநீரக செயல்பாடு தினமும் 50 மில்லிலிட்டர் (5%) சிறுநீரக வெளியேற்றத்திலிருந்து 650-700 மி.லி சிறுநீர் (80%) வெளியேற்றம் என்று தனது செயல்பாட்டை திரும்ப பெற்று, இன்று முழுவதும் குணமடைந்துள்ளார்.

இஞ்சி ஒத்தடம்:

1. ஒரு பானையில் மூன்று லிட்டர் நீரை கொதிக்க வைக்கவும்.

2. 125கி இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.

3. அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டை போல் கட்டவும்.

4. இப்போழுது கொதிக்கும் நீரில் இஞ்சிச் சாறை நன்கு பிழிந்துவிட்டு,
துணி முடிச்சையும் போட்டு ஒரு தட்டை கொண்டு மூடவும்.

5. அடுப்பை குறைந்த எரி நிலையில் (சிம்) 20 – 25 நிமிடங்கள் வைக்கவும்.

6. பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடிய நிலையிலே 5 நிமிடங்கள் விடவும்.

7. சிகிச்சைக்கான நபரை சட்டையை கழற்றிவிட்டு தலைக்குப்புற படுக்க சொல்லவும்.

8. பிறகு ஒரு சிறு துணியை, கொதிக்கும் இஞ்சி நீரில் நனைத்து புழிந்து, வேறு ஒரு கிண்ணத்தில் புழியவும். அந்த துண்டை சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அடிபகுதியில் விரித்து போடவும்.

9. சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும் நனைத்து, விரித்து தொடரவும். இவ்வாறாக நீர் ஆ றும் வரை தொடர்ந்து அரை மணி நேரம் செய்யவும்.

பாதத்தின் நான்காம் விரல்:

நம் முன்னோர்கள் அறிவாளிகள். நமது சடங்குகள் அனைத்திற்கும் ஒர் அறிவியல் காரணமுண்டு. உதாரணமாக, பெண்ணின் கால் இரண்டாம் விரலில் அவளின் கர்பப்பையின் நரம்பு முடிவுகள் உள்ளன. அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கவே திருமணத்தின் அன்று பெண்ணின் இரண்டாம் விரலில் மெட்டி அணிவிக்கப்படுகிறது. அதை போலவே பாதத்தின் நான்காவது விரலில் சிறுநீரக நரம்புத் தொடர்கள் முடிவடைகின்றன. ஆகவே, அமைதியான இடத்தில் அமர்ந்து முழுமனதுடன் நான்காம் விரலை தினமும் சிறிது நேரம் சுற்றி சுற்றி அமுக்கிவிடுவார் (மசாஜ்). இச்செய்கை சிறுநீரகத்தை புத்துணர்வு அடைய செய்யும்.

உணவு முறை

சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்க்கு, உணவுக் கட்டுபாடு மிகவும் அவசியமானதாகும்.

சோடியம்: உப்பை தவிர்ப்பதன் மூலம் சோடியம் அளவை குறைக்கலாம். எனவே உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ளவும். உப்புக்கு பதில் எலுமிச்சை சாறு, மிளகு அல்லது குறைந்த அளவு சோடியமுள்ள ஏதெனும் தாவர இலைகளை சேர்த்து கொள்ளவும். நீ ங்கள் பெரிடோனில் டயாலிசிஸ் செய்தால் உப்பை குறைக்க வேண்டாம், ஏனெனில் டயாலிசிஸினால் அதிக அளவில் சோடியம் வெளியெற்றப்படுகிறது.

பொட்டாசியம், பாஸ்பரஸ்: உணவில் பொட்டாசியம், பாஸ்பரஸ் அளவையும் குறைத்துக் கொள்ளவும். பயிர் வகைகளை தவிர்க்கவும். காய்கறிகளிலுள்ள பொட்டாசியம் அளவை சமைப்பதன் மூலம் குறைக்களாம். மேலும், காய்களை துண்டுதுண்டாக நறுக்கி ஒர் பானை நீரில் 4 மணி நேரத்திற்கு ஊறவைத்து உண்பதன் மூலமும் பொட்டாசியம் அளவை குறைக்களாம். பாஸ்பரஸ் நிறைந்த பா ல் மற்றும் பால் பொருட்கள் தவிர்க்கவும்.

புரதங்கள் (ப்ரோடீன்): புரதங்கள் மனித உடலுக்கு இன்றியமையாதது. டயாலிசிஸ் செய்பவர்கள் அதிகம் புரதத்தை இழக்கிறார்கள் எனவே அவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துகொள்ள வேண்டும். குறிப்பாக ஊறவைத்த, முளை கட்டிய பயிர்கள் மிகச்சிறந்த புரத பொருளாகும்.

நீர்: நீரின்றி அமையாது இவ்வுலகமென்பது போல், நமது சிறுநீரக செயல்பாட்டுக்கும் அதன்மூலம் இரத்த அழுத்த கட்டுபாட்டுக்கும் நீரின் அளவு முக்கியமானது. தினமும் 1.4 லிட்டர் நீர் அருந்தவும். அதிக நீர் உயர் இரத்த அழுத்திற்க்கு வித்திடும். நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் பழங்கள், சாம்பார், இரசம் முதலியவையும் நமது நீர் தேவையை பூர்த்தி செய்கிறது என்பதை நினைவில் கொள்க.

சேர்த்து கொள்ள வேண்டியவை

ஒமம் : ஒம இலை சிறுநீரக செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் உணவுடன் சிறிது ஒம இலையை சேர்த்து கொள்ளவும்.

புளி : புளியிலுள்ள டார்டாரிக் அமிலம், சிறுநீர ஆக்சலேட் கற்கள் உருவாக்கத்தை தடுகிறது. புளியை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதால்தான் இந்தோனேசிய மக்களுக்கு அதிகம் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதில்லையென்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மஞ்சள் : மஞ்சள் சிறுநீரக செயல்யிழப்பை தவிர்க்கவும், இழந்த செயல்பாட்டை புத்துணர்வு அடையவும் செய்யும் மகிமையுடையது என்று சித்த மருத்துவத்தின்படியும், இக்கால அறிவியலின்படியும் நிருபிக்கபட்டுள்ளது.

காய்கறிகள் : பூண்டு, வெங்காயம், காரட், கத்திரிக்காய், முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, முட்டைக்கோஸ், காலிபிளவர்.

பழங்கள் : ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை, பேரிக்காய், அன்னாசி, ப்ளம்ஸ், தர்பூசணிஎண்ணெய்: நல்லெண்ணெய், ஆலிவ்

தவிர்க்க வேண்டியவை
 

காய்கறிகள்: தக்காளி, புழுச்சைகீரை, உருளை, சர்க்கரைவள்ளி கிழங்கு
பழங்கள்: வாழை, மாம்பழம், பப்பாளி, ஆரன்ஜு, உலர் பழங்கள்

]]>
சிறுநீரக பிரச்னைக்கு இஞ்சி மருத்துவம், ginger therapy for kidney http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/10/20/w600X390/Ginger-Root-Benefits.jpg http://www.dinamani.com/health/elders-health/2016/oct/20/சிறுநீரக-பிரச்னைகளை-குணமாக்கும்-இஞ்சி-மருத்துவம்-2584454.html
2558513 மருத்துவம் முதியோர் நலம் இஞ்சி மகத்துவம்! Saturday, August 27, 2016 02:17 PM +0530 அஜீரணப் பிரச்னைகள் அடிக்கடி ஏற்படுமாயின் பின் வரும் எளிய மருத்துவ குறிப்பை பயன்படுத்தி நலம் பெறலாம்.

* இஞ்சிச் சாறுடன் பாலைக் கலந்து  உட்கொண்டால் வயிறு சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

* பாலையும் இஞ்சிச் சாறையும் காய்ச்சிக் கலந்து வெல்லம், நெய், திப்பிலி பொடி ஆகியவற்றைச் சேர்த்து உட்கொண்டால் கர்ப்பிணிகளுக்கு வரும் வயிற்று, இடுப்பு நோய்கள் நீங்கும்.

* இஞ்சியைத் துவையல் செய்து சாதத்தில்  கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது.

* இஞ்சியைப் பச்சடி செய்து உணவுடன், கலந்து சாப்பிட வயிற்றுவலி, கபம், களைப்பு நீங்கும்.

* இஞ்சியைச் சிறு துண்டுகளாக நறுக்கி உப்பில் தோய்த்துத் தின்றால், பித்தத்தாலும் கபத்தாலும் தோன்றும் நோய்கள் வருவதில்லை.

 - நெ. இராமன்

]]>
indigestion problems, ginger http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/27/w600X390/Ginger1.jpg http://www.dinamani.com/health/elders-health/2016/aug/27/இஞ்சி-மகத்துவம்-2558513.html
2558247 மருத்துவம் முதியோர் நலம் ரத்தக் கொதிப்பு என்றால் என்ன? Thursday, August 25, 2016 12:49 PM +0530 ரத்தம் உடல் முழுவதும் செல்வதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு அழுத்தம் தேவை. இந்த அழுத்தம் அதிகமாகும்போது, அதையே ரத்தக் கொதிப்பு என்கிறோம்.

ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்கலாம்?

ரத்த அழுத்தத்தில் சுருக்கழுத்தம் (systolic blood pressure) விரிவழுத்தம் (Diastolic blood pressure) என இரண்டு அலகுகள் உள்ளன.
 
2-வது வகையில் உள்ளவர்கள் ரத்தக் கொதிப்பு வராது தடுக்க வேண்டுமானால், உணவு மற்றும் வாழ்க்கை முறையில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.அதிக ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு உணவில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் ஆகிய தனிமங்கள் அதிக அளவிலும், கொழுப்பு குறைவான அளவிலும் இருக்க வேண்டும்.

ரத்தக் கொதிப்பை ஏற்படுத்தக்கூடிய காரணிகள்

இயற்கையாகவே வயதாக ஆக ரத்த நாளங்கள் அதனுடைய ஜவ்வுத்தன்மையை இழப்பதால், நாளங்களின் அகலம் குறுகி ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. மரபணுக்களால் மட்டுமின்றி, அதே உணவு, உடற்பயிற்சியின்மை, புகைபிடித்தல் என்று பெற்றோர் வாழ்ந்த சூழ்நிலையிலேயே வாழும்போது குழந்தைகளுக்கும் அந்த நோய்கள் வரும் வாய்ப்பு அதிகமாகிறது. தற்போதைய வாழ்க்கைமுறையில் அதிக ரத்த அழுத்தத்திற்கு மன அழுத்தமே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

•   உடல் எடை அதிகரிப்பால் ரத்தக் கொதிப்பு வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது
•   உணவில் அதிகம் உப்பு சேர்த்துக் கொள்ளுதல்
•   அதிகக் கொழுப்பு மற்றும் குறைவான நார்ச் சத்துள்ள உணவுகள்
•   மது மற்றும் புகைப் பழக்கம்
•   சரியான உடற்பயிற்சி இன்மை
•   நீரிழிவு நோய்
 

ரத்தக் கொதிப்பின் வகைகள்:

வகை 1: பெரும்பான்மையோருக்கு வரும் ரத்தக் கொதிப்பு இந்த வகைதான். இதற்கு இன்னமும் காரணம் கண்டறியப்படவில்லை.

வகை 2: இது சீறுநீரகம் மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சில வகை மருந்துகளால் ஏற்படுகிறது. கர்ப்பக் காலத்தில் வரும் ரத்தக் கொதிப்பும் இந்த வகைதான்.

ரத்தக் கொதிப்பு வருவதற்கான அறிகுறிகள்: பொதுவாக இது எந்தவித அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை. மற்ற பல காரணங்களுக்காக உடலைப் பரிசோதிக்கும்போது இது கண்டு பிடிக்கப்படுகிறது. எனினும் சிலருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகும்போது தலை சுற்றல், தலைவலி போன்றவை ஏற்படலாம்.

ரத்தக் கொதிப்பால் ஏற்படும் விளைவுகள்: மாரடைப்பு, இதயத் துடிப்பில் கோளாறு, இதயம் பெரிதாகுதல், பக்கவாதம், மூளையில் ரத்தக் கசிவு, ரத்த நாளங்களில் நோய்கள், சிறுநீரகத்தில் பாதிப்பு, மற்றும் கண்களில் பாதிப்பு போன்றவை.

சிகிச்சை முறைகள்:

ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் மருத்துவரை அணுகி, பரிசோதித்து, தவறாது மருந்துகள் உட்கொள்ள வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தவறாது ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம். கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பக் காலம் முழுவதிற்கும் ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

‘அம்’ மந்திர உட்சாடணை தெளிவையும், ஸ்திரத்தன்மையையும் தருவதால், நாட்பட்ட நோய்களான ஆஸ்துமா,நீரிழிவு, வாதம், ரத்தக் கொதிப்பு மற்றும் சைனஸ் போன்றவற்றிலிருந்து விடுபடலாம்.

உணவு முறைகள்:

அதிக ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு உணவில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் ஆகிய தனிமங்கள் அதிக அளவிலும், கொழுப்பு குறைவான அளவிலும் இருக்க வேண்டும். பொதுவாகப் பல்வேறு காய்கறிகளையும் பழங்களையும் உணவில் சேர்த்துக் கொண்டாலே இவை கிடைத்துவிடும். சோடியம் என்னும் தனிமத்தைத் தவிர்ப்பது நல்லது. சமையல் உப்பு, பேக்கரியில் உபயோகப்படுத்தப்படும் சோடா உப்பு, சைனீஸ் உணவில் பயன்படுத்தப்படும் அஜினோமோட்டோவில் சோடியம் அதிகம் இருக்கும். எனவே, இவற்றைத் தவிர்க்கவும். வடகம், ஊறுகாய், சாஸ், கெட்சப், பீட்ஸா, பர்கர் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. இவற்றில் உப்பு அதிகம் இருக்கும்.

உடற்பயிற்சி

ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 முறையாவது, 20 நிமிடங்கள் வீதம் மிதமான ஓட்டம், வேக நடை, நீச்சல் போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.

யோகப் பயிற்சி

ஆசனங்கள், ‘அம்’ மந்திர உட்சாடணை, மூச்சுப் பயிற்சிகள், கிரியைகள், தியானம் அனைத்துமே ரத்த அழுத்தத்தைச் சீர்செய்ய பெரிதும் உதவுகின்றன. சூன்ய தியானம் மற்றும் ஷக்தி சலனக் கிரியை பயிற்சிகளால் ரத்தக் கொதிப்பு குறைவதாக மருத்துவ ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

யோகா எவ்வாறு உதவுகிறது?

தொடர் யோகப் பயிற்சிகளால் குறைந்தபட்சம் 10 முதல் 15 அளவு வரை ரத்த அழுத்தம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.யோகப் பயிற்சிகளால் உடல் எடை சீராவதால், ரத்த அழுத்தமும் சீராகும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இரவில் அனைவருக்கும் ரத்த அழுத்தம் பொதுவாகக் குறைந்தாலும் ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு மட்டும் இரவிலும்கூட ரத்த அழுத்தம் குறைவதில்லை. யோகா இந்த நிலையை மாற்றுகிறது.தொடர் யோகப் பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. எனவே மன அழுத்தத்தால் ஏற்படும் அதிகப்படியான ரத்த அழுத்தம் நீங்குகிறது.

யோகா தளர்வு நிலையை அளிப்பதால் மன அழுத்தம் நீங்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. யோகப் பயிற்சிகள் அனைத்துமே தானியங்கி நரம்பு மண்டலத்தைச் சமன்செய்வதால் ரத்த அழுத்தம் சீராக இருக்க உதவுகிறது.

மனதளவில் ஏற்படும் பாதிப்புகள் உடலிலும் பிரதிபலிக்கின்றன. அப்பாதிப்பு ஒருவருக்கு நீரிழிவாகவும், இன்னொருவருக்கு வயிற்றில் புண்ணாகவும், இன்னொருவருக்கு ரத்தக் கொதிப்பாகவும் வெளிப்படுகிறது.

நீங்கள் விரும்பியபடி விஷயங்கள் நடக்காதபோது, உங்கள் உடல், மனம் அனைத்துமே போராட்டத்துக்கு உள்ளாகிறது. இதனால் உடலில் வளர்சிதை மாற்றம் தீவிரமாகி நாட்பட்ட நோய்க்குக் காரணமாகிறது. யோகப் பயிற்சிகள் தொடர்ந்து செய்து வரும்போது, உங்கள் உடல், மனம் அனைத்துமே அமைதியாகவும் விழிப்பாகவும் மாறும். எனவே மன அழுத்தம் உண்டாகும் என்னும் பேச்சுக்கே இடமில்லை. மனம் எப்படியோ…. உடலும் அப்படியே! 

நாள்பட்ட நோய்களான நீரிழிவாகட்டும், ஆஸ்துமாவாகட்டும், அல்லது ரத்தக் கொதிப்பாகட்டும், அனைத்துநோய்களுக்கும் அதே யோகப் பயிற்சிகள்தான் பரிந்துரைக்கப்படுகிறது. சக்தி உடலில் ஏற்படும் பாதிப்பு உடலில் நோயாக வெளிப்படுகிறது. ஆசனப் பயிற்சிகள், சக்தி உடலில் முழு அதிர்வுகளையும் சரியான சமநிலையையும் பெறச் செய்கிறது. எனவே உடலில் நோய் ஏற்பட வாய்ப்பில்லை.

நன்றி - ஈஷா காட்டுப்பூ

]]>
yoga, blood pressure, food control http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/25/w600X390/yoga-and-blood-pressure.jpg http://www.dinamani.com/health/elders-health/2016/aug/25/ரத்தக்-கொதிப்பு-என்றால்-என்ன-2558247.html
2556934 மருத்துவம் முதியோர் நலம் இதயம் காப்போம்! Monday, August 15, 2016 04:37 PM +0530 வேலை விஷயமாக அல்லது சொந்தக் காரணங்களுக்காக வெளியூர் செல்ல வேண்டிய சூழலில் இதய நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவற்றைப் பற்றி விளக்குகிறார் மதுரை இதய நோய் நிபுணர் பாலசுப்ரமணியன்.

சிலர் மாரடைப்பு வந்து அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்னரும், பயம் நீங்காமல் தனக்கு இனி எல்லாம் முடிந்துவிட்டது என்று முடிவெடுத்து கடைசி நாட்களை எதிர்நோக்கி படுக்கையை விட்டு எழும்பாமல் இருப்பார்கள். இன்னும் சிலர் தங்களுக்கு நெஞ்சு வலி சரியாகிவிட்டது என்றவுடன் துளி கூட அதைப் பற்றிப் பயப்படாமல் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவார்கள். முன்பு போலவே உணவில் அதிகக் கொழுப்பு, மது, புகை, உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை என்று திரும்ப அதே போல வாழத் தொடங்கிவிடுவார்கள். இவை இரண்டுமே சரியில்லை. கூடுமானவரை இதயம் சம்மந்தப்பட்ட பிரச்னைகள் வராமல் நம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். வந்துவிட்டால் எவ்வளவு கவனமாகவும் பாதுகாப்புடனும் இருக்க  முடியுமோ அந்த அளவு நம்மை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டியது உயிர்த் தேவை. அதற்காக இயல்பாக செய்ய வேண்டியவற்றை தவிர்க்க சொல்லப் போவதில்லை. மாரடைப்பு வந்தாலும் ட்ராவல் செய்யலாம், நமக்கான சந்தோஷங்களை விட்டுக்கொடுக்காமல்புத்துணர்ச்சியுடன்  புதிய வாழ்க்கை முறை வாழலாம். 

இதய அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

மீண்டும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புக்களை குறைக்க வேண்டும்.

மாரடைப்பின் மனத்தளர்ச்சி பயம் போன்றவற்ரிலிருந்து விடுதலை அடைய வேண்டும். பாசிட்டிவாக இருக்க வேண்டும்.

யோகா உடற்பயிற்சி தியானம் போன்றவற்றின் மூலம் உடலையும் உள்ளத்தையும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.

டாக்டர்கள் பரிந்துரைத்த மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ரத்த கொதிப்பு சர்க்கரை போன்ற பிரச்னைகளை கட்டுக்கள் வைத்திருக்க வேண்டும்.

இல்லற வாழ்வில் மீண்டும் புத்துணர்வோடு ஈடுபடலாம். இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடவேண்டும். அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப, மருத்துவரின் பரிந்துரைப்படி வேலைக்கு மறுபடியும் போகலாம்.

வெளியூர் செல்லும் போது கவனிக்க வேண்டியவை

1) நீண்ட தூர‌ப்பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத பயணங்களின் போது டாக்டர் பரிந்துரைத்த மாத்திரைகளை போதிய அளவு கையில் எடுத்துச் செல்வது நல்லது. மருத்துவ குறிப்புகள், டாக்டரின் தொலைபேசி எண், போன்ற தகவல்களை எப்போதும் தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும். குறிப்புகளை தங்கள் மொபைலில் கூட சுருக்கமாக வைத்திருக்கலாம்.

2) கையில் எப்போதும்  விலாசம் அவசர எண் ஆகியவற்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

3) பயணத்தின் போது எவ்வித பரபரப்புக்கும் உள்ளாகாமல், தேவையற்ற விவாதங்களில் ஈடுபடாமல் மனதை அமைதியாக வைத்திருப்பது நலம்.

4) ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற பிரச்னைகள் இருந்தால் கிளம்புவதற்கு முன் ஒரு முறை பரிசோதனை செய்து மருத்துவரின் பரிந்துரைக்குப் பின் டூருக்குக் கிளம்புது நல்லது.

5) ரயில் அல்லது விமானப் பயணம் நல்லது. நீண்ட தூரம் பஸ்சில் அமர்ந்து பயணிப்பது உடல் அசெளரியத்தை ஏற்படுத்தலாம்.

6) மருந்து தீர்ந்து போனால் அதே மாத்திரைகள் வாங்க வேண்டும். மாற்று மருந்து அல்லது டோசேஜ் மாறினால் பிரச்னையாகிவிடலாம்.

7) இரண்டு நாள் தானே என்று உணவுக்கட்டுப்பாட்டை மீறிவிட வேண்டும். எங்கே இருந்தாலும் மருத்துவர் பரிந்துரைக்கும் உணவு முறையை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும்.

உணவு முறை

உப்பும் கொழுப்பும் குறைவாக உள்ள உணவு வகைகளை சிறிய அளவில் சிறு இடைவெளிவிட்டு எடுத்துக் கொள்ளலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகளை சாப்பிடவேண்டாம்..எப்போதும் எங்கு இருந்தாலும் ஒரே விதமான உ ணவு முறையை பின்பற்ற வேண்டும். ஒரு ஸ்பூன் அதிகமோ குறைவோ சாப்பிட்டாலும் அது உடல் நிலையை பாதிக்கும். உணவு விஷயத்தில் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்

மருத்துவரின் பரிந்துரைப்படி சில‌ உடற்பயிற்சிகளை எங்கே இருந்தாலும் மறக்காமல் தினமும் செய்ய வேண்டும். வாக்கிங் செல்லவேண்டும்.

மூன்று வேளை உணவைப் பிரித்து ஐந்து வேளையாக எடுத்துக்கொண்டால் நல்லது.

விருந்தும் வேண்டாம், விரதமும் தேவையற்றது

தவிர்க்க வேண்டிய உணவுகள்

1. புகை, புகையிலை பொருட்கள். போதை வஸ்துக்கள்

2. எண்ணெயில் வறுத்த பொறித்த உணவுகள், காய்கறி மற்ரும் மாமிசம். 

3. கேக், க்ரீம் சாக்லெட், பிஸ்கெட்

4.  கொட்டை வகைகளான முந்திரி, நிலக்கடலை

5.  குளிர்பானங்கள் -  பாட்டில் டிரிங்க்ஸ்

6.  சிப்ஸ், ஊறுகாய், அப்பளம், உப்பு அதிகமுள்ள எந்த உணவுப் பொருளும்

7. சீஸ், சாஸ், பன்னீர்

]]>
heart problems http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/15/w600X390/heart-care-partner-heartinfo-800.jpg http://www.dinamani.com/health/elders-health/2016/aug/15/இதயம்-காப்போம்-2556934.html
2556839 மருத்துவம் முதியோர் நலம் முதியோரைப் பேணுதல் இளைஞர் கடனே.. Monday, August 15, 2016 09:39 AM +0530 'மற்ற குழந்தைகளை விட எனது குழந்தை எப்போதும் சிறந்தவனாக இருக்கவேண்டும். அதற்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார்’ என்ற மனநிலைதான் பெரும்பாலான பெற்றோர்களிடம் இருக்கிறது.. அதுமட்டுமில்லாமல் வயதானகாலத்தில் நம் குழந்தைகள் நம்மைக் கவனிப்பார்கள் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் கூட சில பெற்றோரிடம் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் குழந்தைகள் வளர்ந்தபின்னர் பெற்றோர்களின் தியாகத்தை மறந்துவிடுவதால் தான் இன்றைக்கு முதியோர் இல்லங்கள் அதிகரித்து வருகின்றன.

தனது குழந்தையின் நலனை மட்டுமே முன்னிறுத்தி இரவு பகலாக வேலைப்பார்த்து சம்பாதித்த தந்தையும் கண்துஞ்சாது கவனித்துக்கொண்ட தாயும், அவர்களின் வயதானகாலத்தில், ஒருசேர சேர்ந்து வாழமுடியாத நிலை தான் இன்றைக்கு இருக்கிறது. ஒரு மகன் வீட்டில் தாயும் இன்னொரு மகன் வீட்டில் தாயும் தஞ்சமடையவேண்டிய அவலத்தைக் காணமுடிகிறது. இதில் உடல்நலத்துடன் இருக்கும் தாய்க்கு மகன்கள் மத்தியில் ஏக மதிப்பு இது பாசத்தினால் அல்ல. தாய் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால், தங்கள் வீட்டு வேலையைச் செய்வார், சமையலைப் பார்த்துக்கொள்வார், குழந்தைகளைக் கவனித்துக் கொள்வார் என்பதற்காகத்தான். அதுவும் கணவனும் மனைவியும் வேலை பார்ப்பவர்கள் என்றால் உடல்நலமுள்ள தாய் சம்பளம் கொடுக்காத பணியாளாக மாற்றப்பட்டுவிடுவதைக் காணமுடிகிறது. அதுபோல குழந்தையை பள்ளியில் கொண்டு விட்டு கூட்டிவர, வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கித்தர ஏன தந்தையை பயன்படுத்திக் கொள்ளும் நிலையும் இன்றிருக்கிறது.

வயதான பெற்றோரால் எந்த பயனும் இல்லையென்றால் அவர்களின் புகலிடம் முதியோர் இல்லமாகிவிடுகிறது. அதிலும் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோரின் பிள்ளைகள் உயர்பதவிக்கு வந்து அவர்களுக்கு  திருமணமும் முடிந்துவிட்டால் தனது பெற்றோரை வீட்டில் வைத்திருக்க மகன் விருப்புவதில்லை. தனது "சமூகஅந்தஸ்து"க்கு அழுக்கான பெற்றோர் தன்னுடன் இருப்பது சரியாக இருக்காது என நினைப்பார்.

பல்லாயிரம் பணம் கட்டியேனும் முதியோர் இல்லத்துக்கு அனுப்பிவிடுவார். என் பிள்ளையை எப்படியெல்லாம் ஆசையாய், அன்பாய் வளர்த்தோம், இப்படி எங்களை கடைசிக் காலத்தில் வீட்டை விட்டு துரத்தி விட்டுவிட்டானே என்று நினைந்து உடைந்து போகும் பெற்றோர் இன்றைக்கு ஏராளம். இதற்கு அடுத்தகட்டமாக தாயை ஒரு முதியோர் இல்லத்திலும் தந்தை இன்னொரு முதியோர் இல்லத்திலும் பிரித்து அனுப்பும் "கடமை"யையும் சில குழந்தைகள் செவ்வனே செய்கிறார்கள்.

உலக அளவில் முதியோர்
வளர்ந்து வரும் அதிநவீன மருத்துவத்துவத்தால் உலக அளவில் முதியோரின் எண்ணிக்கை விறுவிறுவென அதிகரித்து வருகிறது  1900 களில் 4 சதவிகித முதியோர்கள் இருந்த அமெரிக்காவில் இன்று சுமார் 14 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. அதாவது மூன்று மில்லியன் எனும் அளவில் அப்போது இருந்த முதியவர்களின் எண்ணிக்கை இப்போது 36 மில்லியன் எனும் அளவை எட்டியிருக்கிறது. 2020 ம் ஆண்டு இது 17 விழுக்காடைத் தொட்டுவிடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. உலக அளவில் 2020ல் நூறு கோடி பேர் அறுபது வயதைத் தாண்டியவர்களாக இருப்பார்கள் என்கின்றன ஆய்வுகள்.இன்னும் பத்தாண்டுகளில் உலக அளவில் உள்ள முதியோர்களில் எழுபத்தைந்து சதவிகிதத்தினர் வளரும் நாடுகளில் இருப்பார்கள். அதுமட்டுமின்றி  80 வயதுக்கும் மேற்பட்டோர் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதையும் கணக்கெடுப்பு ஒன்று காட்டுகிறது. அதுபோல ஆண்களை விட பெண்கள் அதிக ஆண்டுகள் உயிர்வாழ்வதாக உலக அளவில் எடுக்கப்பட்ட ஆய்வுகள் சொல்கின்றன.

உலகிலேயே முதியோர்கள் அதிகமாய் இருக்கும் நாடு எனும் பெயரை சீனா தக்கவைத்திருக்கிறது. சீன மக்கள் தொகையில் 14 சதவிகிதம் பேர் முதியோர். சீனாவில் 16 கோடிக்கும் அதிகமான முதியோர்கள் இருக்கிறார்கள். ஆண்டு தோறும் மூன்று சதவிகித முதியோர்கள் அதிகரிப்பதாகவும் சீன தேசிய முதியோர் குழு தலைவர் ஹ¨ய் சொல்கிறார். இதே நிலை நீடித்தால் 2020ம் ஆண்டில் 26 கோடி முதியவர்கள் சீனாவில் இருப்பார்களாம். அதிகரித்து வரும் முதியோர்களால் சீனாவில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் முதியோர் உதவித் தொகை, மருத்துவக் காப்பீடு, மற்றும் சமூக பாதுகாப்பு அம்சங்கள் பாதிப்படைவதாக சீனா கவலை கொண்டுள்ளது. இதனால் சீனாவின் பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தில் முதியோர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கு அந்நாடு முன்னுரிமை அளித்துள்ளது.
 
இந்தியாவில் முதியோர்
முதியோர்களின் எண்ணிக்கை இந்தியாவிலும் வேகமாக அதிகரித்து வருகிறது. இன்றைய இந்திய மக்கள் தொகையில் 8.2 சதவிகிதம் பேர் முதியோர்கள். உலக முதியோர்களில் பாதிபேர் சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளில் வசிக்கிறார்கள். 1996ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025-ம் ஆண்டில் முதியோர் இந்தியாவில் 167 சதவிகிதம் அதிகரித்திருப்பார்கள். இந்தியாவில் 2016ஆம் ஆண்டில், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் 12 கோடிப் பேர் இருப்பார்கள். இவர்களில் 51 விழுக்காட்டினர் பெண்களாவர். தமிழகத்தில் 1991இல் 60 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை 44 லட்சம். இவர்களில் 60 விழுக்காட்டினர் போதிய உணவு, உடை, உறையுள் ஆகிய வசதிகளின்றி தவித்தனர், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்றது ஒரு புள்ளி விவரம். இது கவலைக்குரிய விஷயம்.
 

முதியோர் கொலையில் தமிழகம்
வயதான, தனியாக இருக்கும் முதியவர்கள் கொலை செய்யப்படுவதில் நாட்டிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தேசிய குற்ற ஆவண அமைப்பின் புள்ளி விவரங்கள்படி 2012-ம் ஆண்டில் நாட்டில் 50 வயதுக்கு மேற்பட்ட 3 ஆயிரத்து 823 பேர் பல்வேறு காரணங்களுக்காக கொல்லப்பட்டுள்ளனர். இதில் உத்தரப் பிரதேசத்தில் 383 முதியவர்கள் கொல்லப்பட்டனர். தமிழகத்தில் 301 முதியவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 123 பேர் பெண்கள். சொத்தை எழுதி வைக்க மறுத்தல், தனிப்பட்ட விரோதம், நகை, பணத்துக்காக போன்ற காரணங்களால் முதியவர்கள் கொல்லப்படுகின்றனர்.  இதன் மூலம் முதியோருக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை உணரமுடிகிறது.
 

முதியோர் தற்கொலை
குழந்தைகளின் சித்ரவதை தாங்கமுடியாதபோது பெற்றோர் தற்கொலை முடிவைத் தேடிக் கொள்கின்றனர். அண்மைக்காலமாக தற்கொலை செய்து கொள்ளும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  என்கிறது ஹெல்ப் ஏஜ் இந்தியா என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம். முதியோரைத் துன்புறுத்துவதில் 39 சதவிகிதம் பங்கு மருமகள்களுக்கு.. 38 சதவிகிதம் துன்புறுத்தல்கள் மகன்களால். சில மாதங்களுக்குமுன் சென்னை சாலிகிராமத்தில், தன் தாயை கூலிப்படை வைத்து தீர்த்துக்கட்டிய மகளை காவல்துறை கைது செய்தது. இத்தனைக்கும், தன்னிடம் இருந்த 50 லட்ச ரூபாய் பணத்தைத் தனக்குப்பின் மகளே எடுத்துக் கொள்ளலாம் என்று எழுதி வைத்திருக்கிறார் அந்த தாய். தாய் இறக்கும்வரை காத்திருக்க மனமில்லை அந்த மகளுக்கு.
 

பெண் முதியோர்
தந்தை, சகோதரர், கணவர், மகன் என வாழ்நாள் முழுவதும் ஆண் உறவுகளையே சார்ந்து வாழ வேண்டிய நிர்பந்தம் நம் பெண்களில் பலருக்கு உண்டு. கணவன் இறந்துவிட்டால், பிள்ளைகளைச் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள். மகன்களோ, இன்றைய அவசர யுகத்தில் பொருளாதாரத் தேவைகளுக்காக வெளியூர் அல்லது வெளிநாடு சென்றுவிடுகின்றனர். அதனால், பல தாய்மார்கள் ஆதரவற்றுப் போகின்றனர். வயோதிகக் காலத்தில் பெண்கள் சந்திக்கும் துயரங்கள். உடல் ஆரோக்கியம் தொடங்கி சமூகப் பாதுகாப்பு, பொருளாதாரத் தேவைகள் என எல்லாவற்றிலும் பிரச்சினைகள்தான். அனைத்து வகையிலும் பாதுகாப்பற்ற சூழலில் அவர்கள் வாழ்கின்றனர்.

கிராமப்புறப் பெண்கள் கடின உழைப்பாளிகள். வாழ்நாள் முழுவதும் பல கஷ்டங்களை எதிர்த்துப் போராடி பழக்கப்பட்டவர்கள் அதனால், நகரத்துப் பெண்களுடன் ஒப்பிடுகையில், கிராமத்துப் பெண்கள் வயதான காலத்தில்  சிக்கல்களை எளிதாக எதிர்கொள்கிறார்கள்.   மேலும், கிராமங்களில் வயதான பெண்களை சம்பந்தப்பட்ட உறவுகள் அலட்சியப்படுத்தினால், மற்றவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் அவர்கள் ஆளாக வேண்டியிருக்கும். அந்தப் பயம் கிராமங்களில் இருக்கிறது. ஆனால், நகரங்களில் இதுகுறித்தெல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை. அதனால், நகரங்களைச் சேர்ந்த வயதான பெண்களுக்கு சிரமம் அதிகம்.  முதியோர் இல்லத்தில் தாயை சேர்த்து விட்டு பணத்தை மாதம்-மாதம் யார் செலுத்துவது என்று சண்டைப் போடும் மகன்களும் உள்ளனர்.
 

மதுரைக்கு முதலிடம்
தில்லியில் செயல்படும் ஹெல்ப் ஏஜ் இந்தியா தொண்டு நிறுவனம் முதியவர்களுக்கு இழைக்கப்படும் தீங்குகள் குறித்து  "இந்தியாவில் முதியோர் துன்புறுத்தல்-2013' என்ற தலைப்பில் ஆய்வு நடத்தியது. "உலக முதியோர் துன்புறுத்தல் விழிப்புணர்வு நாளான" ஜூன் 15-ஆம் தேதி தனது ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. இந்திய முதியோர்களில் ஐந்தில் ஒருவர் அவர்களுடைய குடும்பத்தினரால் துன்புறுத்தப்படுகின்றனர் என்றது அந்த அறிக்கை. அத்தோடு, "தேசிய அளவில் முதியோரை துன்புறுத்துவதில் மதுரை முதலிடத்தில் உள்ளது. மதுரையில் 63.5 சதவீதம் முதியவர்கள் தங்களது குடும்பத்தினரால், உறவினர்களால் துன்புறுத்தப்படுகின்றனர். அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் முதியோர் துன்புறுத்தல் 60 சதவீதமாக உள்ளது. பெருநகரங்களை பொருத்தவரை முதியவர்களை துன்புறுத்துவதில் ஹைதராபாத் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து கொல்கத்தா, தில்லி நகரங்கள் உள்ளன. சென்னைக்கு நான்காவது இடம்" எனப் பட்டியலிட்டது.

என்ன வகையான சித்ரவதை
"பெற்றோரை முதியோர் இல்லங்களில் கொண்டு விடுவதையே சித்ரவதை என்று சொல்கிறோம்.. ஆனால் முதியோரை வீட்டில் வைத்திருக்கவும் பிடிக்காமல், முதியோர் இல்லத்தில் அனுப்பினால் தங்களைப் பற்றி வெளியே என்ன சொல்வார்களோ என நினைத்து அவர்களை கொல்வது சர்வசாதாரணமாக நடக்கிறது" என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள் சிலர். "சில கிராமப்பகுதிகளில் படுத்த படுக்கையாக கிடக்கும் பெற்றோரை பராமரிக்க அவர்களது பிள்ளைகள் விரும்புவதில்லை.  அவருக்கு தேதி குறித்துவிடுகிறார்கள்" என்பது அவர்கள் சொல்லும் அதிர்ச்சியூட்டும் செய்தி.
அதாவது, "கொலை செய்ய முடிவு செய்திருக்கும் முதியவருக்கு "தலைக்கோதல்" நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறார்கள். தலைக்கோதல் என்றால் நோய்வாய்பட்டிருக்கும் நபரின் தலையில் நல்லெண்ணெய்யை அரக்கத் தேய்த்து படுக்கவிடுவார்கள். சில மணி நேரங்களுக்குப் பின்னர் அவரை தூக்கி வைத்து குளிப்பாட்டுவார்கள். அதிலேயே அவருக்கு காய்ச்சல் வந்துவிடும். பின்னர் வலுக்கட்டாயமாக அவருக்கு வாந்தி வரும் வரை இளநீர் ஊட்டுவார்கள். இதனால் காய்ச்சல் உச்சகட்டத்தை அடைந்து ஜன்னி கண்டு இரண்டு நாட்களுக்குள் அந்த வயதானவர் இறந்துவிடுவார்" என்பது அவர்கள் சொல்லும் செய்தி.  

மேலும் நோய்வாய்ப்பட்டிருக்கும் முதியோருக்கு விவசாய பூச்சி மருந்துடன் இனிப்பைக் கலந்து "டானிக்" என வாயில் ஊற்றி கொல்லும்  வழக்கமும் இருக்கிறதாம். அதுபோல  தென்னைமரத்தில் வண்டுகளை ஒழிக்க வைக்கும் மாத்திரையை சத்துமாத்திரை என விழுங்க வைத்துக் கொல்லும் முறையும் நடைமுறையில் இருக்கிறது என்கிறார்கள் சிலர். அதற்கெல்லாம் மேலாக படுத்த படுக்கையாக இருப்பவரை ஊசி போட்டு ஒரு சில மணி நேரத்தில் கொன்றுவிடுவதும் நடக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் அவ்வாறு நடந்த சம்பவங்கள் குறித்து இதழ்களிலேயே செய்தி வந்திருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் வயதான தனது தந்தையையோ தாயையோ அவர் நோய்வாய்ப்பட்டதும். கன்னியாகுமரிக்கு கூட்டிச் சென்று அங்கு விட்டுவிட்டு வருவதையும் மதுரையில் சிலர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். வசதியானவர்கள் கூட இதைச் செய்கிறார்கள். பத்து நிமிடம் பள்ளியிலிருந்து குழந்தை தாமதாக வந்தால் பரிதவிக்கும் பெற்றோரை இன்று கண்காணாத இடத்தில் விட்டுவிட்டு வந்து நிம்மதியாக இருக்கிறார்கள் என்றால் இது கொடூரம் இல்லையா?

மதுரை மாவட்டத்தில் மாதத்துக்கு சுமார் 15 முதியோர் தற்கொலை செய்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.  நோயுற்று உணவு உட்கொள்ள இயலாத பெற்றோரை, பிள்ளைகளே அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டு, திரும்பிப் பார்க்காமல் செல்லும் நிகழ்வுகளும் அதிமாகி வருகின்றன. பெற்றோருடன் இவர்கள் பேசுவதில்லை என்பதோடு பேரன், பேத்திகளையும் பேச அனுமதிப்பதில்லை. இதைத் தாங்க முடியாமல் மனம் புழுங்கிப் போகிறார்கள் வயதான பெற்றோர். இந்த உளவியல் ரீதியாக கொடுமைப்படுத்துதலை பல வீடுகளில் காணமுடியும். வயதாகி விட்டால் உடல் நலிந்து, தோல் சுருக்கம் விழுந்து, சாப்பிடுவது குறைந்து, நோயில் விழுந்து முதியோர் அவதிக்குள்ளாகிறார்கள். ஆனால் இதையெல்லாம் தாங்கிக்கொள்ளும் முதியவர்கள், வீட்டில் இருப்பவர்களின் அலட்சியத்தை, நிராகரிப்பைத் தாங்க முடியாமல் தவிக்கிறார்கள்.

இன்றைக்கு வீட்டு உரிமையாளர்களின் நிபந்தனைகளும் முதியோரை அவமானப்படுத்துவதாகவே உள்ளது. உதாரணத்துக்கு, வயதானவர்களை வீட்டில் வைத்திருந்தால் வீடு சுத்தமாக இருக்காது அதனால் வாடகைக்கு வீடு தரமாட்டோம் என்கிறார்கள். மேலும் வாடகைக்கு குடியிருப்பவர்களில் வயதானவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தால், சடலத்தை வீட்டு வாசலில் மட்டுமே வைக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கின்றனர்.  முதியோர் இல்லங்களில் கூட "நடக்கும் நிலையில் உள்ள முதியோர்களுக்கானது." "நடக்க இயலாதவர்களுக்கானது" என இரண்டு பிரிவுகள் வந்துவிட்டன. நடக்க இயலாதவர்களுக்கான இல்லத்தில் கட்டணம் அதிகம். சில முதியோர் இல்லங்களிலும் சாதியும் மதமும் கூட பார்க்கப்படுவது வேதனையானது.
வீடு, நிலம், நகை போன்ற மதிப்புமிக்க சொத்துக்கள் ஏதாவது இருந்தால், அந்தப் பெற்றோருக்கு நல்ல கவனிப்பு கிடைக்கிறது. அந்தச் சொத்துக்களை, தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வதில் ஆர்வம் காட்டும் பிள்ளைகள் தான் அதிகம். தங்கள் பெயரில் இருந்தால்தான், வங்கியில் கடன் வாங்க முடியும் என்று கூறி சொத்தை எழுதி வாங்கிவிட்டு பிறகு அந்தத் தாயைக் கைவிட்ட மகன்களுக்கும் ஏராளம்.

நகரங்களில் நட்சத்திர ஓட்டல்களுக்கு இணையான வசதிகள் கொண்ட முதியோர் இல்லங்கள் திறக்கப்படுகின்றன. எல்லாம் இருந்தும் அன்பாக, ஆறுதலாக வார்த்தைகள் சொல்ல யாருமில்லை என்கிற ஏக்கம் அங்கிருக்கும் முதியவர்களுக்கு உண்டு. பெற்றோர் சம்பாதித்த சொத்துக்களை தங்கள் பெயரில் மாற்றி  எழுதி வாங்கிக் கொண்டு அவர்களுக்கு போதிய அளவு உணவு கூட கொடுக்காமல் இம்சிப்பதும்  நடக்கிறது. தரக்குறைவாக திட்டுவது, ஆசைப்பட்டு ஏதாவது கேட்டாலும் வாங்கித் தராமல் அலட்சியப்படுத்துவது என பல வகைகளிலும் முதியோர்கள் சித்ரவதைக்குள்ளாகிறார்கள்.
சட்டம்

"பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டம்- 2007" நம் நாட்டில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் தேவையான பராமரிப்பை உறுதி செய்கிறது.   பெற்றோரைப் புறக்கணித்தால், மூன்று மாதம் சிறைத் தண்டனை என அரசு சட்டம் சொல்கிறது. இந்தச் சட்டம் குறித்து முதியோர் பலருக்கும் விழிப்புணர்பு இல்லை. இது குறித்துத் தெரிந்திருந்தாலும், தங்கள் கஷ்டத்தை குடும்ப கௌரவம் கருதி அடுத்த நபரிடம்கூட சொல்லாமல் தவிர்க்கும் முதியோர் 80 விழுக்காடு உள்ளனர் என்கின்றது ஆய்வு.

இந்தச் சட்டப்படி, குழந்தைகள் பெற்றோர் மற்றும் மூத்தோர் நலனை பராமரிக்கவேண்டும். கைவிடப்பட்ட மூத்த குடிமக்களுக்கு சட்டப்படியான பாதுகாப்பு வழங்கவேண்டும். மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு இல்லங்கள் நிறுவவேண்டும். மூத்த குடிமக்களின் சொத்துக்கள் மற்றும் தேவையான உயிர் பாதுகாப்பு மருந்துகள் கிடைக்க செய்தல் வேண்டும். சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு அவர்களை பாதுகாக்கத் தவறினால், அவ்வாறு எழுதி வாங்கியது சட்டப்படி செல்லாது.  சட்டம் ஒருபுறம் இருந்தாலும் முதியவர்களைப் பாதுகாப்பது குடும்ப நலனுக்கு எவ்வளவு அவசியம் என்பதை இளைய சமுதாயம் சிந்திக்க வேண்டும்.

உடல்ரீதியான பாதிப்பு
முதுமை என்றவுடனேயே உடல் நோய் குறித்தான அச்சமே பற்றிக்கொள்கிறது . முதுமை ஒரு நோயல்ல. அது வாழ்வின் ஒரு பருவமே.  ஒருபக்கம் வயதின் முதிர்ச்சி, அனுபவம், அறிவு. மறு பக்கமோ தள்ளாமை, கொடிய நோய், வறுமை, தனிமை, மரணபயம் போன்றவற்றால் ஒருவித பதற்றத்தில் இருக்கிறார்கள் முதியோர்.

வயதின் காரணமாக உடல்ரீதியாகவும், உளரீதியாகவும், சமூகரீதியாகவும் இவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. வயது முதிர்வுறும் வேளையில் நண்பர்களை இழக்க நேரிடும், பழைய நினைவுகள் மறந்து போகும். வரப்போகும் நோய்கள் பற்றிய பயம் ஏற்படும். எந்த மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ளும் திறன்குறையும். கண்பார்வை குன்றும். தலை முடி நரைக்கும் . நிமிர்ந்த நடை குறையும், பற்கள் வலு இழக்கும், உடலில் எங்கும் வலி ஏற்படும்.
முதுமையில் வரும் முக்கிய நோய்களான உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, சர்க்கரை மற்றும் மூட்டு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நல்ல சிகிச்சை உண்டு. ஆனால் ஒருசில நோய்கள் முதியவர்களை நேரிடையாகவோ அல்லது மறை முகமாகவோ தாக்கும் அபாயம் உள்ளது. அதில் அறிவுத் திறன் வீழ்ச்சி (டிமென்ஷியா) எனும்  நோய்   முதியவர்களுக்கு வரலாம்.  இந் நோயின் முக்கிய அறிகுறி ஞாபக மறதி. நிகழ் காலத்தை அறவே மறந்து விடுவார்கள்.  முக்கியமாக 70 வயதைத் தாண்டிய பெண்களுக்கு இது அதிகமாக வருகிறது. நம் நாட்டில் 50 லட்சம் முதியவர்கள் இந் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதியவர்களைத் தாக்கும் மற்றொரு நோய் எலும்பு பலவீனமடைதல் (ஆஸ்டியோ பொரோஸிஸ்) வயதான காலத்தில் சில முதியவர்களுக்கு, முக்கியமாக பெண்களுக்கு எலும்பிலுள்ள சுண்ணாம்புத் சத்து மற்றும் சில ஊட்டச் சத்துகள் குறைவதால் எலும்புகள் வலிமை இழக்கின்றன. இயலாமையின் காரணமாக ‘நாம் வாழ்வதே வீண்’ என இவர்கள் எண்ணுகின்றனர். 

முதியோர் என்ன செய்யவேண்டும்
முதியோர்களும் அந்தப் பருவத்தை சூழலை ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்ளவேண்டும். வீட்டிலோ, சமூகத்திலோ தனக்குப் பிடித்த ஏதேனும் ஒரு பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்வது மனதை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். புத்துணர்ச்சியான மனம் நோய்களின் முதல் எதிரி.

பல இடங்களைச் சென்று பார்ப்பதும், புதியவர்களுடன் நட்பு கொள்வதும், இயற்கை அழகை ரசிப்பதும் மனதிற்குத் தெம்பூட்டும். பிடித்தமான நூலை படிப்பதற்கும், படைப்பதற்கும் முதுமை ஒரு வரப்பிரசாதம் எனக் கொள்ளவேண்டும். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சிட்னி ஷெல்டன் எண்பது வயதைத் தாண்டியபின்னும் எழுதிக் கொண்டிருந்ததார். ஜான் கிளென் தன்னுடைய 77வது வயதில் தன்னுடைய இரண்டாவது விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாய் நடத்தினார்.

முதுமை இறைவனோடு ஒன்றித்திருப்பதற்கான காலம் என்று மதக் கலாச்சாரத்தில் திழைக்கும் இந்தியர்களின் கருத்தாக இருக்கிறது. உடலே இறைவனின் கொடை, எனவே உடலை தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும், தீய பழக்கங்கள் அண்டாமலும் காக்க வேண்டும் என்பது பல மதவாதிகளின் நம்பிக்கை. இந்த நம்பிக்கைகள் ஒருவகையில் மனதின் சோகங்களைத் துடைத்தெறிவதாகவும், எதிர்பார்ப்புகளுடன் கூடிய ஒரு வாழ்க்கையை முதியவர்களுக்கு நல்குவதாகவும் மனோதத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆன்மீக நாட்டமுடையவர்கள் ஆன்மீகத்தில் ஆழமாய் நுழைவது மனதுக்கு மிகவும் ஆறுதலும், உற்சாகமும் அளிக்கும்.

பொழுதுபோக்குகளைத் தொடர்வதும், காலத்துக்கேற்ற புதிய பொழுதுபோக்குகளைக் கையாள்வதும் உற்சாகத்தை மீட்டெடுக்கும். மன மலர்ச்சிக்கு தொடர்ந்து பல பொழுதுபோக்குகளைக் கையாளுங்கள் என அறிவுறுத்துகின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்.
அரசு என்ன செய்யலாம்?

"அனைத்து முதியோர்களுக்கும் உணவு, உடை, இருப்பிடம் மற்றும் சுகாதார வசதிகள் போன்றவை கிடைக்கப்பெற வேண்டும். வாழ்வதற்க்கான நல்ல சூழலை உருவாக்கிக் கொள்ள அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அவர்களை பாதிக்ககூடிய எந்த கொள்கை முடிவுகளிலும் அவர்களின் கருத்துக்களுக்கு அரசுகள் மதிப்பளிக்க வேண்டும். சமூகத்திற்கு சேவை புரியவும் வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். சமூக மற்றும் சட்டப் பாதுகாப்புகள் அவர்களுக்கு அளிக்க வேண்டும். மனித உரிமை மற்றும் அடிப்படைச் சுதந்திரத்தை அவர்களும் அனுபவிக்க வேண்டும். இவை அனைத்து நாடுகளுக்கும் பொதுவான வரைமுறை ஆகும்" என 1991-ல் ஐ.நா. அறிவுறுத்தியது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை 65 வயது என்பது முதுமையின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது. அந்த வயதில் அமெரிக்கர்கள் பணியிலிருந்து விடுபட்டு முழுமையான அரசு காப்பீடு மற்றும் சலுகைகள் பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் ஆகிறார்கள். அந்த முறையை நம்நாட்டிலும் அமல்படுத்தலாம்.

பெற்றோருக்கு ஆகும் மருந்து செல்வு கூட பிள்ளைகளுக்கு பெரும் சுமையாக இருக்கிறது. எனவே அரசு முதியோர்களுக்கான மருந்து, மாத்திரைகள் சிலவற்றை இலவசமாகவும் சிலவற்றை 50 விழுக்காடு கட்டணத் சலுகையிலும் கிடைக்கச் செய்யலாம்.

முதியோர்களுக்கு ஆறுதலும் கவுன்சிலிங்கும் தேவை. முதுமை தரும் சில நோய்களை ஏற்றுக்கொண்டு, அதற்கேற்ப வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை என்கின்ற ஆலோசனையை அவர்களுக்கு புரிந்துகொள்ளும் வகையில் சொல்லக்கூடிய "ஜீரியாட்ரிக் கவுன்சிலர்'களும் தேவைப்படுகிறார்கள். இதற்கு அரசு ஏற்பாடு செய்யலாம்.
முதியோர் பாதுகாப்புச் சட்டப்படி மாவட்டம் தோறும் முதியோர் நலன் பேணும் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு கலெக்டர் தலைவர். முதியோர் பாதுகாப்புச் சட்டத்தைக் தீவிரமாக அமலாக்க சமூகநலத்துறையில் தனி அதிகாரி நியமிக்கலாம்.   குழந்தைகள் காப்பகங்களை முறைப்படுத்தியது போல முதியோர் இல்லங்களையும் முறைப்படுத்திட வேண்டும்.
முதியோர் தரும் மனுக்களை பெற ஒவ்வொரு ஸ்டேஷனிலும் சிறப்பு எஸ்.ஐ. நியமிக்கவேண்டும்

வரும் தலைமுறையினர் மத்தியில் முதியோர்களை மதித்தல் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தல் மிகஅவசியம். தற்போது அந்த முயற்சியை சில தன்னார்வ நிறுவனங்கள் முன்னெடுத்திருக்கின்றன. அரசு சார் நிறுவனங்களின் ஆதரவு இருக்கும்பட்சத்தில் இதனை இன்னும் வெற்றிகரமாக நடத்திடமுடியும். 
இதற்கும் மேலாக முதியோர் எதிர்பார்ப்பது.. மருத்துவ காப்பீடு அனைத்து முதியோர்களுக்கும் அளிக்க வேண்டும். ஆதரவற்றோருக்கு வழங்கும் மாத ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து வழங்க வேண்டும். முதியோர் பாதுகாப்பு சட்டத்தை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சரியாக செயல்பட அரசு உத்தரவிட வேண்டும். முதியோர் இல்லங்களை ஒவ்வொரு தாலுகா அளவில் ஏற்படுத்த வேண்டும். மூத்த குடிமக்களுக்கு அரசு, தனியார் பஸ்களில் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்பவையாகும்.

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் முதியோர் பெருமைகள் பற்றி ஆராயப்படுதல், வெகுசனத்தொடர்பு சாதனங்களில் அடிக்கடி இதுபற்றி பேசுதல் மிகவும் இன்றியமையாதது. முதியோர் இயல் (Geriatrics) ஒரு பாடமாக்கப்பட வேண்டியது அவசியம்.


தாயின் காலடியில் சொர்க்கம் உண்டு என்பது நபிகள் நாயகம் அவர்கள் சொன்ன பொன்மொழி. தாயின் காலில் விழுந்து வணங்க வேண்டுமென்பது இதன் பொருளாகாது. மாறாக, தாயை மதித்து, அரவணைத்து, அன்பு காட்டி, தாய்க்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே இதன் கருத்தாகும். முதியோர் நலன்காத்தல் தொடர்பான நடவடிக்கையில் இப்போதே ஈடுபடுதல் அவசியம். ஏனெனில் முதியோர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் சீனியர் சிட்டிசன்களின் எண்ணிக்கை 18 கோடி வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது முதியோர்களின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும். தனை எதிர்கொள்ள இப்போதே தயாராகவேண்டும். அதற்கு இளைஞர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துதலே முக்கியமானதாக இருக்கமுடியும்.
 
- டாக்டர். ஆர். ராதிகா தேவி,
உதவி பேராசிரியர்,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

]]>
old age, care old people http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/15/w600X390/pension-759.jpg http://www.dinamani.com/health/elders-health/2016/aug/15/முதியோரைப்-பேணுதல்-இளைஞர்-கடனே-2556839.html
3204 மருத்துவம் முதியோர் நலம் இதயம் காப்போம்... test Tuesday, August 9, 2016 04:20 PM +0530 வேலை விஷயமாக அல்லது சொந்தக் காரணங்களுக்காக வெளியூர் செல்ல வேண்டிய சூழலில் இதய நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவற்றைப் பற்றி விளக்குகிறார் மதுரை இதய நோய் நிபுணர் பாலசுப்ரமணியன்.

சிலர் மாரடைப்பு வந்து அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்னரும், பயம் நீங்காமல் தனக்கு இனி எல்லாம் முடிந்துவிட்டது என்று முடிவெடுத்து கடைசி நாட்களை எதிர்நோக்கி படுக்கையை விட்டு எழும்பாமல் இருப்பார்கள். இன்னும் சிலர் தங்களுக்கு நெஞ்சு வலி சரியாகிவிட்டது என்றவுடன் துளி கூட அதைப் பற்றிப் பயப்படாமல் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவார்கள். முன்பு போலவே உணவில் அதிகக் கொழுப்பு, மது, புகை, உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை என்று திரும்ப அதே போல வாழத் தொடங்கிவிடுவார்கள். இவை இரண்டுமே சரியில்லை. கூடுமானவரை இதயம் சம்மந்தப்பட்ட பிரச்னைகள் வராமல் நம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். வந்துவிட்டால் எவ்வளவு கவனமாகவும் பாதுகாப்புடனும் இருக்க  முடியுமோ அந்த அளவு நம்மை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டியது உயிர்த் தேவை. அதற்காக இயல்பாக செய்ய வேண்டியவற்றை தவிர்க்க சொல்லப் போவதில்லை. மாரடைப்பு வந்தாலும் ட்ராவல் செய்யலாம், நமக்கான சந்தோஷங்களை விட்டுக்கொடுக்காமல்புத்துணர்ச்சியுடன்  புதிய வாழ்க்கை முறை வாழலாம். 

இதய அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

மீண்டும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புக்களை குறைக்க வேண்டும்.

மாரடைப்பின் மனத்தளர்ச்சி பயம் போன்றவற்ரிலிருந்து விடுதலை அடைய வேண்டும். பாசிட்டிவாக இருக்க வேண்டும்.

யோகா உடற்பயிற்சி தியானம் போன்றவற்றின் மூலம் உடலையும் உள்ளத்தையும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.

டாக்டர்கள் பரிந்துரைத்த மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ரத்த கொதிப்பு சர்க்கரை போன்ற பிரச்னைகளை கட்டுக்கள் வைத்திருக்க வேண்டும்.

இல்லற வாழ்வில் மீண்டும் புத்துணர்வோடு ஈடுபடலாம். இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடவேண்டும். அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப, மருத்துவரின் பரிந்துரைப்படி வேலைக்கு மறுபடியும் போகலாம்.

வெளியூர் செல்லும் போது கவனிக்க வேண்டியவை

1) நீண்ட தூர‌ப்பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத பயணங்களின் போது டாக்டர் பரிந்துரைத்த மாத்திரைகளை போதிய அளவு கையில் எடுத்துச் செல்வது நல்லது. மருத்துவ குறிப்புகள், டாக்டரின் தொலைபேசி எண், போன்ற தகவல்களை எப்போதும் தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும். குறிப்புகளை தங்கள் மொபைலில் கூட சுருக்கமாக வைத்திருக்கலாம்.

2) கையில் எப்போதும்  விலாசம் அவசர எண் ஆகியவற்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

3) பயணத்தின் போது எவ்வித பரபரப்புக்கும் உள்ளாகாமல், தேவையற்ற விவாதங்களில் ஈடுபடாமல் மனதை அமைதியாக வைத்திருப்பது நலம்.

4) ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற பிரச்னைகள் இருந்தால் கிளம்புவதற்கு முன் ஒரு முறை பரிசோதனை செய்து மருத்துவரின் பரிந்துரைக்குப் பின் டூருக்குக் கிளம்புது நல்லது.

5) ரயில் அல்லது விமானப் பயணம் நல்லது. நீண்ட தூரம் பஸ்சில் அமர்ந்து பயணிப்பது உடல் அசெளரியத்தை ஏற்படுத்தலாம்.

6) மருந்து தீர்ந்து போனால் அதே மாத்திரைகள் வாங்க வேண்டும். மாற்று மருந்து அல்லது டோசேஜ் மாறினால் பிரச்னையாகிவிடலாம்.

7) இரண்டு நாள் தானே என்று உணவுக்கட்டுப்பாட்டை மீறிவிட வேண்டும். எங்கே இருந்தாலும் மருத்துவர் பரிந்துரைக்கும் உணவு முறையை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும்.

உணவு முறை

உப்பும் கொழுப்பும் குறைவாக உள்ள உணவு வகைகளை சிறிய அளவில் சிறு இடைவெளிவிட்டு எடுத்துக் கொள்ளலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகளை சாப்பிடவேண்டாம்..எப்போதும் எங்கு இருந்தாலும் ஒரே விதமான உ ணவு முறையை பின்பற்ற வேண்டும். ஒரு ஸ்பூன் அதிகமோ குறைவோ சாப்பிட்டாலும் அது உடல் நிலையை பாதிக்கும். உணவு விஷயத்தில் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்

மருத்துவரின் பரிந்துரைப்படி சில‌ உடற்பயிற்சிகளை எங்கே இருந்தாலும் மறக்காமல் தினமும் செய்ய வேண்டும். வாக்கிங் செல்லவேண்டும்.

மூன்று வேளை உணவைப் பிரித்து ஐந்து வேளையாக எடுத்துக்கொண்டால் நல்லது.

விருந்தும் வேண்டாம், விரதமும் தேவையற்றது

தவிர்க்க வேண்டிய உணவுகள்

1. புகை, புகையிலை பொருட்கள். போதை வஸ்துக்கள்

2. எண்ணெயில் வறுத்த பொறித்த உணவுகள், காய்கறி மற்ரும் மாமிசம். 

3. கேக், க்ரீம் சாக்லெட், பிஸ்கெட்

4.  கொட்டை வகைகளான முந்திரி, நிலக்கடலை

5.  குளிர்பானங்கள் -  பாட்டில் டிரிங்க்ஸ்

6.  சிப்ஸ், ஊறுகாய், அப்பளம், உப்பு அதிகமுள்ள எந்த உணவுப் பொருளும்

7. சீஸ், சாஸ், பன்னீர்

]]>
heart care, old age, health article http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/9/w600X390/heart-care-partner-heartinfo-800.jpg http://www.dinamani.com/health/elders-health/2016/aug/09/இதயம்-காப்போம்-3204.html