Dinamani - முகப்பு - http://www.dinamani.com/Home/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 940 முகப்பு கடற்படை அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணைக்கு உத்தரவு kirthika Express News Service Thursday, May 26, 2016 01:14 PM +0530 கடற்படையின் மூத்த மருத்துவ அதிகாரி ஒருவர் மீது இளநிலை பெண் அதிகாரி ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார்.
 இதையடுத்து, அந்த மூத்த அதிகாரி கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் புதன்கிழமை கூறியதாவது:
 கடற்படையின் தலைமை அதிகாரி ஒருவர் விசாகப்பட்டினத்துக்குச் சென்றிருந்தார். அந்த சமயத்தில், அவரது தாயாருக்கு உடல்நலம் சரியில்லாததால் மருத்துவக் குழு வரவழைக்கப்பட்டது.
 அந்தக் குழுவில் இடம்பெற்ற மூத்த மருத்துவ அதிகாரி ஒருவர், அங்குள்ள இளநிலை பெண் அதிகாரியிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
 தன்னிடம் அந்த அதிகாரி வெவ்வேறு சமயங்களில் இரண்டு முறை அத்துமீறி நடந்துகொண்டதாக அந்தப் பெண் புகார் கூறியுள்ளார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 விசாரணைக்கு உத்தரவு: இந்த விவகாரம் குறித்து கடற்படையின் செய்தித்தொடர்பாளர் டி.கே.சர்மா கூறியதாவது:
 இந்த விவகாரத்தை நாங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளோம். இதுகுறித்து துறை ரீதியான விசாரணை நடத்தி விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
 விசாரணையின் முடிவில், தவறு நடந்திருப்பது உறுதியானால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை கடற்படை ஒருபோதும் பொருத்துக் கொள்ளாது என்றார் அவர்.

]]>
http://www.dinamani.com/home/2016/may/26/கடற்படை-அதிகாரி-மீது-பாலியல்-குற்றச்சாட்டு-விசாரணைக்கு-உத்தரவு-940.html
939 முகப்பு கடற்படை அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணைக்கு உத்தரவு kirthika Express News Service Thursday, May 26, 2016 01:11 PM +0530 கடற்படையின் மூத்த மருத்துவ அதிகாரி ஒருவர் மீது இளநிலை பெண் அதிகாரி ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார்.
 இதையடுத்து, அந்த மூத்த அதிகாரி கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் புதன்கிழமை கூறியதாவது:
 கடற்படையின் தலைமை அதிகாரி ஒருவர் விசாகப்பட்டினத்துக்குச் சென்றிருந்தார். அந்த சமயத்தில், அவரது தாயாருக்கு உடல்நலம் சரியில்லாததால் மருத்துவக் குழு வரவழைக்கப்பட்டது.
 அந்தக் குழுவில் இடம்பெற்ற மூத்த மருத்துவ அதிகாரி ஒருவர், அங்குள்ள இளநிலை பெண் அதிகாரியிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
 தன்னிடம் அந்த அதிகாரி வெவ்வேறு சமயங்களில் இரண்டு முறை அத்துமீறி நடந்துகொண்டதாக அந்தப் பெண் புகார் கூறியுள்ளார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 விசாரணைக்கு உத்தரவு: இந்த விவகாரம் குறித்து கடற்படையின் செய்தித்தொடர்பாளர் டி.கே.சர்மா கூறியதாவது:
 இந்த விவகாரத்தை நாங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ளோம். இதுகுறித்து துறை ரீதியான விசாரணை நடத்தி விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
 விசாரணையின் முடிவில், தவறு நடந்திருப்பது உறுதியானால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை கடற்படை ஒருபோதும் பொருத்துக் கொள்ளாது என்றார் அவர்.

]]>
http://www.dinamani.com/home/2016/may/26/கடற்படை-அதிகாரி-மீது-பாலியல்-குற்றச்சாட்டு-விசாரணைக்கு-உத்தரவு-939.html
938 முகப்பு மாணவர்களின் குறைகளை விரைந்து தீர்க்க வேண்டும்: அதிகாரிகளுக்கு மோடி அறிவுறுத்தல் kirthika Express News Service Thursday, May 26, 2016 01:07 PM +0530 கல்வி உதவித்தொகை தாமதமாக கிடைப்பது உள்ளிட்ட மாணவர்கள் தொடர்பான அனைத்து குறைகளையும் விரைந்து தீர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
 கர்நாடகம், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி, மருத்துவம், ரயில்வே, உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த திட்டங்களின் நிலை குறித்த மாதாந்திர ஆய்வை, பிரதமர் மோடி தில்லியில் இருந்தபடி, நவீன தொழில்நுட்ப முறையில் (ஐசிடி) புதன்கிழமை மேற்கொண்டார்.
 இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 இந்த ஆய்வின்போது, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகையை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், இதற்கான காரணத்தை அறிய விரும்புவதாகவும் கல்வித் துறை அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கேட்டார். மேலும், மாணவர்கள் தொடர்பான அனைத்து குறைகளுக்கும் துரிதமாக தீர்வுகாணப்பட வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
 இந்தியா-வங்கதேசம் இடையே போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்துவதில் முக்கியமாக கருதப்படும் அக்ஹெளரா -அகர்தாலா ரயில் பாதை அமைக்கும் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்தும் துறை அதிகாரிகளிடம் மோடி கேட்டறிந்தார்.
 óதூய்மை இந்தியா திட்டம், திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம், தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைக்கும் திட்டம் ஆகிய தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பற்றியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் மோடி ஆலோசனை மேற்கொண்டார் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/home/2016/may/26/மாணவர்களின்-குறைகளை-விரைந்து-தீர்க்க-வேண்டும்-அதிகாரிகளுக்கு-மோடி-அறிவுறுத்தல்-938.html
937 முகப்பு மோடி அரசின் 2-ஆம் ஆண்டு விழா: அமிதாப் பச்சன் பங்கேற்பதால் சர்ச்சை kirthika Express News Service Thursday, May 26, 2016 12:29 PM +0530 பிரதமர் மோடி நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் இரண்டாம் ஆண்டு வெற்றி விழாவை ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்க இருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.
 பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா, தில்லியில் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவினை, நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குவதாக செய்திகள் வெளியாகின. அந்த நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்குவதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
 வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் கருப்புப் பணம் வைத்திருப்போரின் பட்டியலில் (பனாமா ரகசிய ஆவணம்) அமிதாப் பச்சனின் பெயர் இடம்பெற்றிருப்பதால், அதுதொடர்பான விசாரணை நேர்மையாக இருக்குமா? என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கேள்வியெழுப்பினார்.
 அதற்குப் பதிலளித்து அமிதாப் பச்சன் கூறுகையில், "அந்த விழாவை நடிகர் ஆர்.மாதவன்தான் தொகுத்து வழங்கவுள்ளார். மத்திய அரசின் "பெண் குழந்தைகளைக் காப்போம்' என்ற திட்டம் பற்றிய நிகழ்ச்சியில் மட்டும் நான் பங்கேற்கிறேன்' என்றார்.
 இந்நிலையில், அமிதாப் பச்சனுக்கு பாஜக மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, மத்திய சட்ட அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சதானந்தா கெளடா கூறியதாவது:
 மத்திய அரசின் விழாவில் அமிதாப் பச்சன் பங்கேற்பதற்கும், கருப்புப் பணம் தொடர்பான அவர் மீதான விசாரணைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. பனாமா ஆவணம் தொடர்பான புகாரை, சுதந்திரமான புலனாய்வு அமைப்பு விசாரிக்கும் என்றார் அவர்.
 இதேபோல், மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா, பாஜக செயலர் ஸ்ரீகாந்த் சர்மா, பாஜக எம்.பி. பரேஷ் ராவல் ஆகியோரும் அமிதாப் பச்சனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 "பனாமா ஆவணத்தில் அமிதாப் பச்சனின் பெயர் இடம்பெற்றுள்ள போதிலும், அவர் குற்றவாளி என எந்த நீதிமன்றமும் தீர்ப்பளிக்கவில்லை; சமூகத்தில் மதிப்புடன் இருக்கம் அமிதாப் பச்சன் விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியினரிடம் எழுப்புவதற்கு தற்போது எந்தப் பிரச்னையும் இல்லை என்பதால், விழாவில் அமிதாப் பச்சன் பங்கேற்பதை பிரச்னை எழுப்புகிறார்கள்' என்று அவர்கள் தெரிவித்தனர்.

]]>
http://www.dinamani.com/home/2016/may/26/மோடி-அரசின்-2-ஆம்-ஆண்டு-விழா-அமிதாப்-பச்சன்-பங்கேற்பதால்-சர்ச்சை-937.html
934 முகப்பு முதல்வருடன் அணிவகுக்கும் வாகனங்கள் குறைப்பு: அஸ்ஸாம் அமைச்சரவையின் முதல் முடிவு kirthika Express News Service Thursday, May 26, 2016 12:17 PM +0530 முதல்வர் செல்லும்போது அவரது வாகனத்துக்கு முன்னும், பின்னும் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க அஸ்ஸாம் மாநிலத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
 மாநிலத்தின் முக்கியப் பகுதிகளுக்கு முதல்வர் செல்லும்போது, அதனால் பொதுமக்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவு ஏற்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 அஸ்ஸாமில் பாஜக தலைமையிலான அரசு செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றது. சர்வானந்த சோனோவால் முதல்வராகப் பதவியேற்றார். இதையடுத்து குவாஹாட்டியில் புதன்கிழமை சோனோவால் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மாநிலத்தின் வளர்ச்சியை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், அரசின் செலவினங்களையும், ஆடம்பரத்தையும் குறைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
 அப்போது, "மக்களின் குறைகளைப் போக்க முடிந்த அளவுக்கு விரைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாநிலத்தின் நலனைக் கருத்தில் கொண்டு முழுமூச்சுடன் செயல்பட வேண்டும். ஒவ்வொரு துறையும் சிறந்த நிர்வாகத்தை அளிக்க வேண்டும்' என்று அமைச்சர்களிடம் சோனோவால் கேட்டுக் கொண்டார்.
 முதல்வரின் வாகனம் செல்லும்போது முன்னும், பின்னும் அணிவகுத்துச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, பிற மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளை மூடுவது, மத்திய அரசில் உள்ளதுபோல குரூப் 3,4 பணித் தேர்வின்போது நேர்முகத் தேர்வை ரத்து செய்வது போன்ற முக்கிய முடிவுகளும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/5/26/w600X390/81.jpg 81 http://www.dinamani.com/home/2016/may/26/முதல்வருடன்-அணிவகுக்கும்-வாகனங்கள்-குறைப்பு-அஸ்ஸாம்-அமைச்சரவையின்-முதல்-முடிவு-934.html
932 முகப்பு மருத்துவப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம் kirthika Express News Service Thursday, May 26, 2016 12:10 PM +0530

சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் இன்று காலை முதல் தொடங்கியது.

தமிழகத்தில் இந்த ஆண்டு பொது நுழைவுத் தேர்வு இன்றி வழக்கம்போல் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org-லிருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூன் 7-ஆகும்.

கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஜூன் 17-ஆம் தேதி வெளியிடப்படும்.

சென்னை உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டுக்கு உரிய 2,253 எம்.பி.பி.எஸ். இடங்கள், 6 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் 470 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியின் 65 எம்.பி.பி.எஸ். இடங்கள் ஆகியவற்றில் மாணவர்களை சேர்க்க சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் ஜூன் 20-ம் தேதி முதல் கட்டக் கலந்தாய்வு தொடங்கும்.

முதல் கட்டக் கலந்தாய்வில் காலியிடங்கள் ஏற்படும் நிலையில் ஜூலை 18-ம் தேதி இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/5/26/w600X390/medica.jpg medica http://www.dinamani.com/home/2016/may/26/மருத்துவப்-படிப்புக்கான-விண்ணப்ப-விநியோகம்-தொடக்கம்-932.html