Dinamani - இனிய இல்லம் - http://www.dinamani.com/lifestyle/sweet-home/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2828628 லைஃப்ஸ்டைல் இனிய இல்லம் மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? இந்த 7 விஷயம் ரொம்ப முக்கியம்! உமா பார்வதி Monday, December 18, 2017 12:21 PM +0530  

நீங்கள் பார்க்குக்கு போகும்போது அங்கு வரக்கூடிய முதிய தம்பதிகளைப் சிறிது நேரம் கவனித்துள்ளீர்களா? ஒருவர் கையை மற்றவர் ஆதரவுடன் பற்றிச் செல்வார்கள். அப்படி செல்பவர்களாக இருந்தால் அவர்கள் மண வாழ்க்கையில் நிறைவாக வாழும் தம்பதியர் என்று நாம் புரிந்து கொள்ளலாம். இளமையில் ஒற்றுமையாக வாழ்ந்தவர்களால்தான் முதுமையிலும் அதைத் தொடர முடியும். ஒருசிலருக்கு, ஆரம்பத்தில் பிரச்னைகள் ஏற்பட்டிருந்தாலும், ஏதோ ஒரு புள்ளியில் அவர்கள் ஒருவரை மற்றவர் உணர்ந்தவர்களாக மாறியிருக்கலாம். அல்லது இளமைக் காலம் முழுவதும் சண்டைக் கோழிகளாக இருந்துவிட்டு முதுமையிலாவது நிம்மதி தேடும் பறவைகளாக மாறியிருக்கலாம். எது எப்படியோ பற்றிய கரங்களை ஒருபோதும் விட்டு விடாமல் கடைசி மூச்சு வரை தொடர்வது என்பது ஒரு அழகான தாம்பத்தியம் என்பது உண்மைதானே? கணவன் மனைவிக்குள் இந்த சில விஷயங்கள் முக்கியம் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். 

1) நேர்ப்பேச்சு

சில பெண்கள் நேரடியாக ஒரு விஷயத்தைக் கூறாமல் சுற்றி வளைத்துப் பேசுவார்கள். ஆண்களுக்கு பெரும்பாலும் அதைக் கேட்பதற்கு பொறுமை இருப்பதில்லை. இப்ப என்ன தான் சொல்ல வர்றே? என்று கத்துவார்கள். ஜாடை பேசுவது, பொருட்களை நங்கென்று வைப்பது, பிள்ளைகளை அல்லது வேறு யாரையோ திட்டும் சாக்கில் கணவனை இடித்துரைப்பது போன்றவற்றை மனைவியானவள் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் அந்த இல்லறத்தில் விரிசல் விழக் கூடிய சாத்தியங்கள் அதிகம் உண்டு. ஒரு சில வார்த்தைகளில் சொல்ல வேண்டிய விஷயத்தை பளிச்சென்று சொல்வதே சிறப்பு. மேலும் எல்லா விஷயங்களும் இருவரும் ஒளிவு மறைவின்றி விவாதிக்க வேண்டும். Transparency என்பது திருமண உறவுக்குள் மிகவும் முக்கியம்.

2) கேள்விகள்

அனேக ஆண்கள் கேள்விகள் கேட்கப்படுவதை விரும்புவதில்லை. வீட்டிலிருந்து மனைவி செல்ஃபோனில் பேசும் போது எடுத்தவுடன் எங்க இருக்கீங்க? என்ன செய்யறீங்க போன்ற கேள்விகளைத் தவிர்க்கலாம். தேவையிருப்பின் அவர்களே கூறுவார்கள். வீட்டுக்குள் நுழையும் போதும், ஏன் இவ்ளோ லேட்? எங்க ஊர் சுத்திட்டு வர்றீங்க? அல்லது நீங்க எங்க போயிருப்பீங்கன்னு தெரியும் போன்ற கேள்விகள் கணவர்களை எரிச்சலுக்குள்ளாக்கும். ஒருவருக்கொருவர் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையுடன் வாழ்தல் வேண்டும். கணவரும் தமது நிகழ்ச்சி நிரல்கள் மொத்தத்தையும் ஒப்பிக்க முடியாவிட்டாலும், இந்த நேரத்தில் இங்கிருப்பேன், இந்த நேரத்துக்கு வீடு திரும்புவேன் என்பதை மனைவிக்கு தெரிவித்துவிட்டால் அவர்கள் ஏன் நச்சரிக்கப் போகிறார்கள்?

3) தேவையில்லாத சச்சரவு

யார் போன்ல உங்க தங்கச்சியா என்று ஃபோன் பேசி முடியும் வரை அருகிலேயே இருப்பது, கணவரின் பெற்றோர்களை மதிக்காமல் இருப்பது போன்ற விஷயங்கள் குடும்ப ஒற்றுமைக்கு நல்லதல்ல. கணவன் மனைவி இருவரும் ஒருவர் பெற்றோர்களை மற்றவர்கள் மதித்து நடக்க வேண்டும். சீரியலில் பார்க்கும் சண்டைகளை குடும்பத்துக்குள் இழுத்து வரக் கூடாது.

கணவன் எடுக்கும் முயற்சிகளுக்கு மனைவி உறுதுணையாக இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை, அது சரிப்பட்டு வராது, உங்களால் முடியாது என்று முட்டுக்கட்டை போடும் மனைவிகள் மீது கணவருக்குத் தீராத எரிச்சல் ஏற்படும். மாறாக கணவர் அகலக்கால் எடுத்து வைக்கிறார் என்று மனைவி நினைத்தால், அதனைக் காரண காரியத்துடன் பொறுமையாக விளக்கி  அவருக்குப் புரிய வைக்க வேண்டும். சிலருக்கு பட்டால்தான் புத்தி வரும் என்று தோன்றினால் பட்டுத் தெளிய விட்டுவிட வேண்டும். அதன் பின் நான் தான் அப்பவே சொன்னேனே நீங்க கேட்டாதானே என்று தோல்வியுற்ற சமயத்தில் மீண்டும் இடித்துரைக்கக் கூடாது. பரவாயில்லை எவ்வளவோ கஷ்டப்பட்டுட்டோம், இதையும் கடந்துட முடியும் என்று நம்பிக்கையுடன் ஒரு மனைவி தோள் கொடுக்க வேண்டும்.


4) நினைவுத் திறன்

பெண்களுக்குப் பொதுவாக நினைவுத் திறன் அதிகம். அதற்காக அன்னிக்கு அப்படி சொன்னீங்களே, மூணு வருஷத்துக்கு முன்னாடி அப்படி இப்படி நடந்தவரு நீங்க தானே என்பது போன்ற குத்திக் காட்டல்களை ஆண்கள் விரும்புவதில்லை. நல்ல விஷயங்களை எதுவும் சொல்லிக் காட்டாமல் கணவர் சறுக்கிய விஷயங்களை அலசி ஆராய்ந்து அவ்வப்போது சுறுக்கென்று குத்தும் இயல்பு இருந்தால் உடனடியாக மாற்றிக் கொள்ளுங்கள். மன்னிப்பதும் மறப்பதும் இனிய தாம்பத்தியத்தின் அத்தியாவசிய குணங்கள்.

5) புரிந்துணர்வு

நீங்க எப்ப தான் என்னை புரிஞ்சுக்கப் போறீங்களோ என்று அடிக்கடி சொல்லும் மனைவியைப் பார்த்தால் கணவனுக்கு கோபம்தான் வரும். காரணம் அவர்களும் அதே நிலையில் தான் இருப்பார்கள். நீ தான் என்னை புரிஞ்சி நடத்துக்கணும் என்று இருவருமே ஏட்டிக்குப் போட்டியாக நின்றால் நாளாவட்டத்தில் குடும்ப நீதிமன்ற வாசலில்தான் நிற்க வேண்டிவரும். எனவே நான் நீ என்ற பேதமைகளை மறந்து நாம் என்ற ஒற்றுமையான புரிந்துணர்வு இருவருக்கும் தேவை.

6) பாராட்டுதல்

சில பெண்கள் குற்றம் குறைகளை பூதக் கண்ணாடி போட்டுப் பார்பார்கள். ஆனால் தன் கணவர் செய்யும் சில நல்ல விஷயங்களை ஒரு போதும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஒருவருக்கொருவர் தட்டிக் கொடுப்பதும், பாராட்டிக் கொள்வதும் உற்சாகத்துடன் வாழ்க்கையை நடத்திச் செல்ல வைக்கும். போலவே, ஒருவருக்கு ஒருவர் நன்றி சொல்லிக் கொள்வதும் ஒரு நல்லியல்புதான். வார்த்தைகளில் சொல்லவில்லை என்றாலும் உணர்வுகளில் அது கூடி இருக்கலாம். நம் கணவர் குடும்பத்துக்காக இப்படி ஓடியோடி உழைக்கிறார் என்றும், மனைவி தனக்காக வேலைக்குச் சென்று தன் சுமையைக் குறைக்கிறாள், வீட்டையும் திறமையாக நிர்வகிக்கிறாள் என்று கணவரும் நினைக்க வேண்டும்.

7) அன்பு

ஒரு குடும்பத்தில் அதிகாரம் ஆட்சி செலுத்தினால் அங்கு சந்தோஷம் தங்காது. அன்பின் பகிர்தல்களே ஆனந்தத்தின் அடிப்படை. இனிய தாம்பத்தியத்தில் உடல்மொழிகளை விட மனத்தின் ஒத்திசைவுகளே அழகைக் கூட்டும். ஈகோ, பொறாமை, கோபம், வெறுப்பு போன்ற எதிர்மறை உணர்வுகளை ஒருபோதும் கணவன் மனைவி இருவருக்கிடையில் அனுமதிக்கக் கூடாது. 

கணவன் மனைவிக்கு இடையே எவ்வித பிரச்னை ஏற்பட்டாலும் அதை அவர்களே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். வார்த்தைகள் தடிக்க விடாமல், நிதானமாக யார் மீது தவறு உள்ளது என்பதை உணர்ந்து அதைத் தவிர்த்துவிட்டால் இல்லறம் என்ற நல்லறம் என்றென்றும் தொடர்ந்திருக்கும். 

]]>
Married life, Husband and wife, tips for life, கணவன் மனைவி, மண வாழ்க்கை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/18/w600X390/couple.jpg http://www.dinamani.com/lifestyle/sweet-home/2017/dec/18/tips-for-happy-married-life-between-husband-and-wife-2828628.html
2821375 லைஃப்ஸ்டைல் இனிய இல்லம் வீட்டுப் பராமரிப்பில் நம்மை டென்சனில் தள்ளும் சில விடாப்பிடிக் கறைகளை நீக்கச் சில எளிய வழிகள்! கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. Wednesday, December 6, 2017 01:00 PM +0530  

கோகோ கோலா  கொண்டு சில விடாப்பிடி கறைகளை அகற்றும் முறை...

 • தலைமுடியில் சூயிங்கம் ஒட்டிக் கொண்டால் அதை பிரித்தெடுப்பது எத்தனை சிரமம் என்று எல்லோருக்கும் தெரியும். மிக எரிச்சலை உண்டாக்கக் கூடிய அச்சமயத்தில் வீட்டில் கோகோ கோலா இருந்தால் அதில் சூயிங்கம் ஒட்டிக் கொண்ட இடத்தில் குளிரத் தேய்த்து ஊற விடுங்கள். நிமிடத்தில் சூயிங்கத்தை எளிதாகப் பிரித்தெடுத்து விடலாம்.

 • பாலோ, காஃபீயோ ஊற்றி வைத்த ஃப்ளாஸ்கை கழுவ மறந்து விட்டீர்களா? அடடா, ஃபிளாஸ்க்கின் உட்புறத்தில் காய்ந்து போன கஃபீ & டீ மிச்சங்கள் அப்படியே உறைந்து ஒட்டிக் கொண்டு எத்தனை தேய்த்துக் கழுவினாலும் நீக்க முடியாத பிடிவாதக் கரையாகி வலுவாக ஒட்டிக் கொள்ளும். அதற்கும் கோகோ கோலா தான் தீர்வு, கரை மூழுகுமாறு கோகோ கோலாவை ஊற்றி சில நிமிடங்கள் ஊற வைத்து பிறகு தேய்த்துக் கழுவினீர்கள் எனில் ஃபிளாஸ்க்கின் உட்புறம் பளிச்சென மின்னும்.

 • வீட்டு டாய்லெட் பீங்கான் கோப்பையில் விடாப்பிடி மஞ்சள் கறை படிந்து போவேனா என்கிறதா? அதற்கும் கோகோகோலா அருமருந்து. கோலாவை கோப்பையின் உள்ளே அப்ளை செய்து 5 நிமிடங்கள் கழித்து ஃபிளஷ் அவுட் செய்தால் போதும் அப்புறம் கறை போயே போச்சு!

 • வீட்டில் இருக்கும் ஸ்பேனர், ஸ்க்ரூ டிரைவர், கத்தரி உள்ளிட்ட உபகரணங்கள் துருப்பிடித்துப் பார்க்க அவலட்சணமாக இருக்கிறதா? உடனே எடுங்கள் கோகோ கோலாவை, குறிப்பிட்ட உபகரணங்களை கோலாவில் ஊற வைத்து பிறகு டிஷ்வாஸர் கொண்டு தேய்த்துக் கழுவினால் உபகரணங்கள் புத்தம் புதிது போலப் பளிச்சென மின்னத் தொடங்கி விடும்.

டீ பாத்திரம் அடிப்பிடித்து தீய்ந்து அடிப்பிடித்தால் கறை நீக்குவது எப்படி?

டீ பாத்திரம் தீய்ந்து அடிப்பிடித்து காய்ந்த பின்னால் அதை சுத்தம் செய்வது படு கஷ்டம். அம்மாதிரியான சூழலில் டீ பாத்திரத்தில் கறை முங்குமாறு தண்ணீர் ஊற்றி அதை கொதிக்க விட்டு இறக்கி அதன் மீது டிஷ்யூ பேப்பரைப் போட்டு மூழ்க விட்டுப் பின் துடைத்து எடுத்தால், தேய்த்துக் கழுவ வேண்டிய அவசியமில்லாமல் கறை சுத்தமாகக் கழன்று வந்து டிஷ்யூ பேப்பரில் ஒட்டிக் கொள்ளும். 

சுவர் மட்டும் வீட்டுத் தரையில் குழந்தைகளின் கிறுக்கல் கறைகளை நீக்குவது எப்படி?

சுவர், ஷோபாக்கள் மற்றும் தரைகளில் குழந்தைகள் பென்சில், ஸ்கெட்ச், பேனா, மார்க்கர் கொண்டு கிறுக்கினால் அவற்றைச் சுத்தமாகத் துடைத்து அழிப்பது மிகச்சிரமமான காரியம். இதற்கென WD 40 என்ற திரவ அழிப்பானைப் பயன்படுத்தலாம். ஜெர்மானியத் தயாரிப்பான இந்த கறை நீக்கி திரவ அழிப்பான் இந்தியாவிலும் தற்போது கிடைக்கிறது. பிடிலைட் நிறுவனத்துடன் கூட்டு வைத்துள்ள இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் பிடிலைட்டுடன் இணைந்து கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தினால் கறைகளைப் பற்றிய கவலையின்றி இருக்கலாம். (WD - Water DIsplacement)

 • இந்த WD 40 கொண்டு ஷூ கால்களால் அழுத்தி மிதிக்கப்பட்டு கார்பெட்டில் ஒட்டிக் கொண்ட சூயிங்கம் கறைகளைக் கூட சுத்தமாகத் துடைத்தெடுக்க முடியும்.

 

 

காய்கறி நறுக்கப் பயன்படும் மூங்கில் பலகையை துர்நாற்றமும், கறைகளும் இன்றி சுத்தம் செய்வது எப்படி?

 • எலுமிச்சம் பழத்தை நறுக்கி அரைப்பழத்தை பிழிந்து மூங்கில் பலகை மேல் தடவவும், அதன் மீது பரவலாகத் தூள் உப்பைத் தூவி நன்றாக ஸ்கிரப் செய்து கழுவினால் பலகையில் உள்ள துர்நாற்றமும், கறைகளும் போயே போச்சு!
]]>
house keeping, stain removal, வீட்டுப் பராமரிப்பு, கறை நீக்குதல், இனிய இல்லம், home sweet home http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/6/w600X390/1corpet_stain.jpg http://www.dinamani.com/lifestyle/sweet-home/2017/dec/06/how-to-remove-stains-while-house-keeping-2821375.html
2820763 லைஃப்ஸ்டைல் இனிய இல்லம் உங்கள் பெயிண்ட் நச்சு வாயுக்களை வெளியேற்றக் கூடியதா? தெரிஞ்சிகிட்டு வீட்டுக்கு பெயிண்ட் அடிங்க பாஸ்! கார்த்திகா வாசுதேவன் Tuesday, December 5, 2017 11:31 AM +0530  

வீட்டுக்குப் பெயிண்ட் அடிக்கப் போறீங்களா? அப்படியானால், நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பெயிண்ட் கொந்தளிப்பான ஆர்கானிக் சேர்மங்கள் (volatile organic compounds)  கலந்த பெயிண்டா அல்லது நச்சுத்தன்மை குறைவான பெயிண்ட்டா என்று தெரிந்து கொண்டு பிறகு வீட்டுக்குப் பெயிண்ட் அடிக்கத் துவங்குங்கள்.. ஏனெனில் மேற்கண்ட கொந்தளிப்பான ஆர்கானிக் சேர்மங்களின் சதவிகிதம் அதிகமிருக்கும் பட்சத்தில் உங்களது பெயிண்ட் அறை வெப்பநிலையிலேயே கூட பதங்கமாகி நச்சுத்தன்மை நிறைந்த வாயுக்களை வெளிவிடக்கூடிய தன்மை கொண்டதாக இருக்கும். ஒருநாள், இரண்டு நாள் என்றில்லை அந்த பெயிண்ட்டை நீங்கள் அடித்த நாள் முதலாய் இந்த வேலை நடந்து கொண்டே இருக்கும்.

நீங்கள் உங்கள் வீட்டு பெயிண்ட்டின் அழகை ரசித்துக் கொண்டிருக்கும் அதே வேலையில் மூக்கை நெருடும் புத்தம் புது பெயிண்ட் வாசத்தோடு சேர்த்து இந்த நச்சு வாயுக்களும் உங்கள் நுரையீரலைப் பதம் பார்க்கத் தொடங்கும். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நச்சு வாயுக்கள் ஸ்லோ பாய்சனாக நமது உடலில் ஊடுருவ இது நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். இதனால் என்னென்ன பின் விளைவுகள் ஏற்படக்கூடும் என்று அறிந்தால் அதிர்ந்து போவீர்கள்;

பின் விளைவுகள்...

 • கேன்சர்
 • கல்லீரல் செயல் இழப்பு
 • நுரையீரல் குறைதிறன்
 • ஆஸ்துமா
 • மூளைச்செயல்திறன் குறைதல்

இவையெல்லாம் வேண்டாத விருந்தாளிகளாக நம் உடல் நலனுக்கு ஊறு விளைவிக்கலாம்.

சரி முதலில் இந்த கொந்தளிப்பான ஆர்கானிக் சேர்மானங்கள் என்றால் எவையெவை என்று தெரிந்து கொள்ளுங்கள், தெரிந்தால் தானே தவிர்க்க முடியும்.

பெயிண்ட்டில் ஃபார்மால்டிஹைட் இருந்தால் அது அறை வெப்பநிலையில் ஆவியாகிக் கசியும் போது குவார்ட்ஸை வெளியிடும். குவார்ட்ஸ் மிக மிகக் குறைவான வெப்பநிலையான - 2 டிகிரி ஃபாரன்ஹீட்டிலேயே பதங்கமாகி அறையில் நிரம்பியுள்ள காற்றில் கலந்து வீட்டிலுள்ள பொருட்கள் முதல் மனித நுரையீரல் வரை அனைத்திலும் படியத் தொடங்கும். இது ஆரோக்யத்துக்கு உகந்தது இல்லை. மேலும் இப்படிப்பட்ட கொந்தளிப்பான ஆர்கானிக் சேர்மங்கள் பெயிண்டில் கலப்பது என்வது இருவகைகளில் நிகழ்கிறது.

முதல் வகையில் இயற்கையாகவே சில வகை பெயின்டுகளில் சேர்க்கப்படும் சேர்மானங்கள் தனக்குத் தானே மிக எளிதில் பதங்கமாகும் தன்மை கொண்டவையாக இருக்கும்.

இரண்டாவது வகையில் மனிதர்களே அப்படியான கொந்தளிப்பான ஆர்கானிக் சேர்மங்களை பெயிண்ட் தயாரிக்கும் போது உருவாக்குவார்கள்.
 
இந்த இரண்டு முறையில், எந்த வழியாக இந்த சேர்மங்கள் நமது உடல் உள்ளுறுப்புகளில் ஊடுருவுவதாக இருப்பினும் அது நிச்சயம் உடனடியாக எந்தவிதமான மோசமான உடல்நலக்கோளாறுகளையும் உண்டாக்கி விடப் போவது இல்லையெனினும் இத்தகைய சேர்மங்களால் விளையக்கூடிய கொடிய பாதிப்புகள் தாமதமாகவே தெரிய வரும்.

அதனால் பெயிண்ட்டைத் தேர்ந்தெடுக்கையில் முதலாவதாக நாம் தேர்ந்தெடுக்கும் பெயிண்ட்டில் கொந்தளிப்பான ஆர்கானிக் சேர்மங்களின் சதவிகிதம் இருக்கிறதா? எனத் தெரிந்து கொண்டு மிகக் குறைவான அளவில் அவற்றின் சேர்மானங்கள் இருந்தால் மட்டுமே அவற்றைப் பயன்படுத்த வேண்டும். 


 

]]>
இனிய இல்லம், பெயிண்ட், கொந்தளிப்பான ஆர்கானிக் சேர்மங்கள், home sweet home, paint, volatile organic compounds, lifestyle, லைஃப்ஸ்டைல் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/5/w600X390/paint_voc.jpg http://www.dinamani.com/lifestyle/sweet-home/2017/dec/05/volatile-organic-compound-paints-are-harmful-to-human-health-environment-2820763.html
2812857 லைஃப்ஸ்டைல் இனிய இல்லம் பேக்கிங் சோடா அலைஸ் சோடியம் பை கார்பனேட்டை சமையலறை தாண்டி வேறு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?! கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. Wednesday, November 22, 2017 11:37 AM +0530  

பேக்கிங் சோடாவை நாம் முக்கியமாக வீடுகளில் எதற்குப் பயன்படுத்துகிறோமோ அதே காரணத்துக்காகத் தான் பேக்கரிகளிலும் பயன்படுத்துகிறார்கள். பேக்கிங் சோடா எனப்படும் சோடியம் பை கார்பனேட் பிரெட், கேக், பிஸ்கட், ரஸ்க் போன்ற பொருட்களை உப்பச் செய்து அவற்றை மென்மையானதாகவும் மொறு மொறுப்பானதாகவும் மாற்றப் பயன்படுகிறது. அதனால் தான் பேக்கரிகள் தவிர வீட்டிலேயே கூட  வடை அல்லது பகோடாக்கள் செய்யும் போது மிகக் குறைந்த அளவில் நாம் பயன்படுத்தும் சமையல் உப்புடன் இந்த பேக்கிங் சோடாவும் கலந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. பேக்கிங் சோடாவுக்கு இந்தப் பயன்கள் மட்டும் தான் உண்டு என்பதில்லை. இது தவிரவும் அவற்றால் வேறு சில நல்ல உபயோகங்களும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

 • பற்களை வெண்மையாக்க உதவும்
 • முகச்சருமத்தைப் பாழாக்கும் சிவப்பு மற்றும் கருப்புத் தேமல்களை இல்லாமலாக்கும்
 • நகைகளை சுத்தப்படுத்தி பளிச் என மாற்ற உதவும்.

இவை தவிர;

 • பேக்கிங் சோடா முகத்துக்கான மிகச்சிறந்த ஸ்கிரப்பராகவும் பயன்படுகிறது. சில ஸ்பூன்கள் பேக்கிங் சோடாவை வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து அந்தத் தண்ணீரால் முகத்திலடித்து முகத்தைக் கழுவி துடைக்காமல் அப்படியே உலர வைத்து விட்டால் தண்ணீரில் கரைந்திருக்கும் பேக்கிங் சோடா முகத்திலுள்ள இறந்த செல்களை அகற்றி முகத்தைப் பொலிவானதாக மாற்றி விடத்தக்கதாம்.
 • அப்போது தான் பிழிந்தெடுத்த எலுமிச்சைச் சாறு அல்லது தண்ணீரில் பேக்கிங் சோடாவைக் கலந்து பேஸ்ட் போன்ற பதம் வந்ததும். அதை அப்படியே டூத்பிரஷ் உதவியுடன் பற்களில் தடவி 1 சில நிமிடங்களில் தேய்த்துக் கழுவி வாய் கொப்பளித்தால் பற்கள் முன்னை விடப் பொலிவானதாகவும் கூடுதல் வெண்மையானதாகவும் காட்சியளிக்கும்.
 • பேக்கிங் சோடா நாம் பயன்படுத்தும் மெத்தைகளில் இருந்து வரும் துர்நாற்றத்தையும் போக்கவல்லது. பேஸ்ட் போன்ற பதத்தில் தயார் செய்யப்பட்ட பேக்கிங் சோடாவை அப்படியே மெத்தையில் முழுதாகத் தடவும் போது அது மிகச்சிறந்த நாற்ற நீக்கியாகப் பயன்படுகிறது. கூடுதலாக இதனுடன் சில துளிகள் லாவண்டர் அல்லது ஜாஸ்மின் பெர்ஃப்யூம் சேர்த்துக் கொண்டால் மெத்தையிலிருந்து புத்துணர்ச்சியான வாசமும் கிடைக்கும்.
 • பேக்கிங் சோடாவை நீரில் கரைத்து அதில் தங்க நகைகளை சற்று நேரம் ஊற வைத்து தேய்த்துக் கழுவினால் போதும் நகைகள் புதியது போலப் பள பளக்கும்
 • வெகு நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் இருக்கும் ஓவன்களைக் கூட பேக்கிங் சோடா கொண்டு அருமையாகச் சுத்தப்படுத்தலாம். பேக்கிங் சோடா கலந்த நீரை ஓவன்களில் விடாப்பிடிக் கறைகள் ஒட்டிக் கொண்டிருக்கும் பகுதிகளில் தெளித்து ஊற வைத்து சற்று நேரம் கழித்து தேய்த்துக் கழுவும் போது ஓவனில் நீண்ட நாட்களாக நீடித்து வரும் முடை நாற்றமும், விடாப்பிடி கறைகளும் கூட மறைந்து விடும்.
 • டியோடரண்ட் இல்லாத சமயங்களில் எட்டில் ஒரு பங்கு பேக்கிங் சோடாவை எடுத்து அதில் நீரைத்தொட்டு அது கரையும் முன் கையிடுக்குகளில் தடவிக் கொண்டால் வியர்வை நாற்றத்தைப் பற்றிக் கவலைப் படத்தேவையில்லை. டியோடரண்டுகளின் வேலையை பேக்கிங் சோடா செய்யும்.
 • பூச்சிக்கடி அல்லது தோல் அரிப்புக்கும் பேக்கிங் சோடா சிறந்த நிவாரணம் தரும். பேஸ்ட் போன்ற பதத்தில் கரைக்கப்பட்ட பேக்கிங் சோடாவை பாதிக்கப்பட்ட சருமப் பகுதிகளில் தேய்த்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
 • கூந்தலுக்கு ஷாம்பூ போட்டுக் குளிக்கையில் ஷாம்பூவைத் தலையில் தேய்ப்பதற்கு முன்பு சிறிதளவு பேக்கிங் சோடாவை கையில் தெளித்துக் கொண்டு அதன் மேல் நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் ஷாம்பூவையும் சேர்த்து தலைக்குத் தேய்த்துக் குளித்தால் தலைமுடி சிக்கு விழும் அவஸ்தையிலிருந்து மீளும். மேலும் வறண்ட கூந்தலை பட்டுப்போன்ற மென்மையான கூந்தலாக மாற்றும் சக்தியும் பேக்கிங் சோடாவுக்கு உண்டு.
]]>
பேக்கிங் சோடா, சோடியம் பை கார்பனேட், baking soda, sodium bicarbanate, uses of baking soda( NaHCO3) http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/22/w600X390/baking-soda-e1462990338656.jpg http://www.dinamani.com/lifestyle/sweet-home/2017/nov/22/uses-of-baking-soda-nahco3-2812857.html
2802782 லைஃப்ஸ்டைல் இனிய இல்லம் மழைக்கால இலவச இணைப்புகளான கொசுக்கள், ஈக்கள், கரப்பானை ஒழிக்க ஆபத்தில்லாத மிக எளிய டிப்ஸ்! கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. DIN Monday, November 6, 2017 11:15 AM +0530  

மழைக்காலம் என்றாலே வீடு, அலுவலகம், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், நிறுத்தங்கள், சிறூ மளிகைக் கடைகள் முதல் பெரும் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள் உள்ளிட்ட வியாபார கேந்திரங்கள் வரை எங்கு பார்த்தாலும் ஒரே ஈரப்பதமாகத் தான் இருக்கும். ஒரேயடியாக மழை நின்று இரண்டு நாட்களேனும் முற்று முழுதாக வெயில் அடித்தால் ஒழிய இந்த ஈரப்பதம் குறையவே வாய்ப்பில்லை.

ஈரமான இடங்கள் என்றால் அவற்றினோட இலவச இணைப்பாக எங்கு பார்த்தாலும் ஈக்களுக்கும், கொசுக்களுக்கும், இன்னபிற பூச்சி இனங்கள் சகதிப் புழுவினங்கள் என்று சில ஜீவராசிகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான். வீட்டிற்கு வெளியே துவைத்தை துணிகளைக் கூட காய வைக்க வாய்ப்பில்லாது ஈக்களும், கொசுக்களும் அடை போல வந்து அவற்றின் மீது அப்பிக் கொள்ளும். இதனால் சுகாதாரம் கேடு மட்டுமல்ல ஆரோக்யக் கேடும் மிகுதியாகும். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தமிழகத்தில் அதிகரித்து விட்ட டெங்கு காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதற்கொரு உதாரணம்.

டெங்கு மட்டுமல்ல இந்தப் பூச்சிகள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத பல்வேறு பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள், பூஞ்சைகளுக்கும் கூட ஈரப்பதமான இடங்கள் உற்ற நண்பனாக விளங்குவதால் மழையினால் உண்டாகும் ஈரப்பதத்தை நம்மால் தடுக்க முடியாது என்றாலும் அங்கே ஒட்டி உறவாடும் கிருமிகள் மற்றும் பூச்சிகளையாவது சுயநலம் கருதியாவது  நாம் தடுத்துத் தான் ஆக வேண்டும்.

தடுப்பதென்றால் எப்படி? நாங்கள் தான் ஏற்கனவே கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை ஒழிக்க கருப்பு& சிவப்பு ஹிட் பூச்சிக் கொல்லி மருந்துகள், டோமெக்ஸ் ஃபீனால், ஹார்பிக், லைஸால்,  டெட்டால், கொசுக்களை ஒழிக்க குட்நைட் ஆக்டிவ், ஆல் அவுட், டார்ட்டாஸ் கொசுவத்திச் சுருள் வரை எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்துக் கொண்டு தானே இருக்கிறோம்... அப்படியும் அவையெல்லாம் எங்கே ஒழிகின்றன. அந்த மருந்துகளைப் பயன்படுத்தி எங்களுக்குத் தான் விஷத்தன்மை அதிகரிக்கிறதே தவிர அவையெல்லாம் இந்த மருந்துகளை ஊட்டச்சத்து பானங்களைப் போல பருகி விட்டு மேலும் உரத்துடன் பல்கிப் பெருகி தங்களது புஜபல பராக்கிரமத்தை முன்னை விட அதிகமாக அல்லவா காட்டத் தொடங்கி விடுகின்றன?! இவற்றின் தொல்லைகளில் இருந்து எப்படித்தான் தப்புவதோ தெரியவில்லையே! என்று தலையில் கை வைத்து உட்கார்ந்து விடுகிறீர்களா?! இனி அப்படியொரு நிலை உங்களுக்கு வேண்டவே வேண்டாம்.

இதோ ஈரமான இடங்களில் வாழும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளையும், ஈக்களையும், கொசுக்களையும் முற்றிலுமாக ஒழித்தழிக்க புதிதாக ஒரு வழிமுறை; இதையும் தான் ஒருமுறை பின்பற்றிப் பாருங்களேன்!

தேவையான பொருட்கள்:

ஷாம்பு- 1/2 கப்
தாவர எண்ணெய் - 1/2 கப் (ஆலிவ் எண்ணெய்)
வினிகர்- 1/2 கப்

தயாரிப்பு முறை:

மேற்கண்ட மூன்று பொருட்களையும் சொல்லப்பட்ட அளவுகளில் நன்கு கலந்து ஒரு பிளாஸ்டிக் ஸ்ப்ரே பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும். கொசுக்கள், கரப்பான் பூச்சிகள், ஈக்கள் அடிக்கடி அதிகமாக வரக்கூடிய இடங்களில் இந்த ஸ்ப்ரே அடித்து விடுங்கள். பிறகு பாருங்கள் மேற்கண்ட ஜந்துக்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் காணாமலே போய்விடும். தினமணி வாசகர்கள் இந்த வழிமுறையைத் தங்களது வீடுகளில் செயல்படுத்திப் பார்த்து விட்டு எங்களுக்கு எழுதுங்கள். 

குறிப்பு:

இந்த ஸ்ப்ரே குறித்தான வரவேற்கத்தக்க அம்சங்களில் முக்கியமானது இது வளர்ப்புப் பிராணிகளுக்கோ அல்லது குழந்தைகளுக்கோ ஆபத்தானது இல்லை. பிற பூச்சிக் கொல்லி மருந்துகளைப் போல தவறுதலாக இவற்றை குழந்தைகளோ அல்லது வளர்ப்புப் பிராணிகளோ வாயில் வைத்து விட்டால் மோசமான விளைவுகளை இவை ஏற்படுத்தாது என்பது ஆறுதலான விஷயம்.

]]>
ஈரப்பதமான இடங்கள், கிருமிகள், கொசுக்கள் ஈக்கள் கரப்பானை ஒழிக்க டிப்ஸ், to avoid mosquitoes flies cockroaches, home sweet home, இனிய இல்லம், லைஃப் ஸ்டைல் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/6/w600X390/to_kill_germs_and_flies.jpg http://www.dinamani.com/lifestyle/sweet-home/2017/nov/06/to-avoid-mosquitoes-flies--cockroaches-during-rainy-season-2802782.html
2800368 லைஃப்ஸ்டைல் இனிய இல்லம் வெள்ளைத்துணிகளில் விடாப்பிடி கறையா? நொடியில் போக்க என்ன செய்யலாம்? கார்த்திகா வாசுதேவன் Thursday, November 2, 2017 03:15 PM +0530  

பிற மாநிலங்களில் எப்படியோ நம் தமிழக சட்டமன்றத்தை தொலைக்காட்சியில் பார்த்தீர்களானால் அனைத்து அமைச்சர்களும் சுத்த வெண்மையில் பளிச்சென்று தெரிவார்கள். அவர்கள் அணிந்துள்ள வெண்ணிற வேஷ்டி, சட்டைகளின் தயவால் பளீரென்ற வெண்மை பார்ப்பவர்களின் கண்களைப் பறிக்கும். தங்கள் வாழ்வின் வெறெந்த இருட்டு மூலையிலும் பளீரிடும் சுத்த வெள்ளையை அனுமதித்திராத அரசியல்வாதிகள் கூட குறைந்தபட்சம் தங்கள் உடைகளிலாவது அவற்றை அனுமதித்தது ஆறுதலான விஷயம் தான். இல்லையா பின்னே! சரி அதை விடுங்கள்.. கட்டுரை மோசமான அரசியல்வாதிகளைப் பற்றியது அல்ல. உடைகளில் இழந்த வெண்மையை எப்படி மீட்டெடுப்பது என்பதைப் பற்றியது.

நம்மில் பலருக்கும் கூட வெண்ணிற உடைகள் என்றால் இஷ்டம் தான். ஆனால் அவற்றை பராமரிப்பதில் காட்டப்பட வேண்டிய சிரத்தையை முன்னிட்டு அந்த நிறத்தை நாம் பெரும்பாலும் தவிர்த்து விடுவோம். வெண்மை தூய்மையின் நிறம். ஒரு சிறு கரும்புள்ளியோ அல்லது அழுக்கோ அந்த உடைகளில் எங்கேனும் ஒரு மூலையில் இருந்தாலும் கூட அது அந்த உடையின் வெண்மைத்தன்மையை குறைத்து விடக் கூடும். அதனால் தான் வெள்ளுடுப்புகளைப் பெரும்பாலோர் தவிர்த்து விடுகின்றனர்.

ஆனால் சிலருக்கு எத்தனை முயன்றாலும் வெள்ளை உடுப்புகளைத் தவிர்க்க முடியாது. கல்லூரிகளில் அறிவியலை முதன்மைப் பாடமாக எடுத்த மாணவ, மாணவியருக்கு சோதனைச் சாலைகளில் அணிய வெள்ளை நிற டாக்டர் கோட் ஒன்று தரப்படும். மூன்றாண்டுப் படிப்போ அல்லது 5 ஆண்டுப் படிப்போ எதுவானாலும் வருட இறுதியில் அந்த கோட்டை அதன் நிஜ நிறம் மாறாமல் காப்பது பெரும் சாதனை. சில மாணவ, மாணவியருக்கு வருட இறுதிக்குள் வெள்ளை கோட், டிடர்ஜெண்டுகள், சொட்டு நீலங்கள், ஒயிட்டனர்கள் எனப் பலத்த சித்ரவதைகளுக்குட்பட்டு கிட்டத்தட்ட பழுப்பு கோட் ஆகியிருக்கும். இதிலிருக்கும் வேதனை என்னவென்றால்... ஆஃப்டர் ஆல் ஓரிரு பீரியட்களுக்கு மட்டுமே அணியும் கோட் தானே அது வெள்ளையாக இருந்தால் என்ன பழுப்பாக இருந்தால் என்ன என்று விட்டு விட முடியாது. அது வெண்மைக்கே உரிய பிரத்யேக குணம். நம்மால் அந்த வெண்மையின் பரிசுத்தத்தைப் பாதுகாக்கவோ, பராமரிக்கவோ முடியாவிட்டால் அதுவே பிறகு தொடர்ந்த மனச்சுமையாகவே கூட மாறி விடும். கல்லூரிக்காலத்தில் இளங்கலை அறிவியல் பயிலும் போது ஆய்வக வகுப்பு நேரத்தின் போது ஒவ்வொரு முறையும் பழுப்பு கோட் அணிய நேர்கையில் இது அனுபவ ரீதியாக நான் அறிந்த உண்மை. சரி அப்படியென்றால் சுத்த வெண்மையை வேறெப்படித்தான் பராமரிப்பதாம்? 

டிடர்ஜெண்டுகள் கூடாது...
ஒயிட்டனர்களும் கூடாது
சொட்டு நீலம் அறவே கூடாது...
பிறகெப்படி 
வெண்மை...வெண்மை... சுத்த வெண்மை சாத்தியமாகும்?

இதோ அதற்கான சில இயற்கை வழிமுறையிலான எளிய டிப்ஸ்கள்...

சமையல் சோடா...

ஒரு பிளாஸ்டிக் டப்பில் 4 லிட்டர் தண்ணீர் நிரப்பி அதில் ஒரு கப் சமையல் சோடாவைப் போட்டு கலக்குங்கள். சமையல் சோடா நன்கு கரைந்ததும் அதில் கறை படிந்த வெண்ணிற ஆடைகளை நனைத்து ஊற வைக்கவும். சில நிமிடங்களிலேயே கறை ஆடைகளிலிருந்து பிரிந்து தண்ணீருக்குள் கரைவது நமக்கு கண் கூடாகத் தெரியக்கூடும். வெண்ணிற ஆடை சிறிது சிறிதாக சில நிமிடங்களில் தனது இயல்பான நிறத்தைத் திரும்பப் பெற்று விடும்.

ஆஸ்பிரின் மாத்திரை...

என்ன தான் சமையல் சோடா கொண்டு ஊற வைத்து அலசியும் சில விடாப்பிடி கறைகள் உண்டு. ஒயின், காஃபிக்கறை, இங்க் கறை, குருமா, கிரேவி கொட்டியதால் உண்டான கறை, எண்ணெய்க்கறை போன்றவற்றை அத்தனை எளிதில் அகற்றி விட முடியாது. அவற்றை அகற்ற வேண்டுமானால் மிக, மிக எளிதான டிப்ஸ் ஒன்று உள்ளது. அதன்படி ஒரு பிளாஸ்டிக் டப்பில் இருக்கும் தண்ணீரில் 6 ஆஸ்பிரின் மாத்திரைகளை நங்கு பொடி செய்து கரைத்து கலக்கவும். ஆஸ்பிரின் கலந்த அந்த தண்ணீரில் விடாப்பிடிக் கறையுள்ள வெண்ணிற ஆடைகளை சுமார் 30 நிமிடங்களுக்கு நனைத்து ஊற வைத்த பின் வழக்கம் போல உங்களது வாடிக்கையான டிடர்ஜெண்ட் சோப் கொண்டு துணிகளைத் தோய்த்து எடுத்து பின் நீரில் அலசினால் போதும் வெண்மை டாலடிக்கும்.

எலுமிச்சை சக்தி மற்றும் வினிகர்...

எலுமிச்சை சாறு மற்றும் வினிகரை சம அளவு எடுத்துக் கலந்து அதை பிளாஸ்டிக் பக்கெட்டில் இருக்கும் தண்ணீரில் கலந்து அதில் விடாப்பிடிக் கறை படிந்த வெண்ணிற உடைகளை முக்கி நனைத்து துவைத்தெடுத்தால் கறை போயே போச்சு!

இம்முறையில் துவைப்பதால் கறை மட்டும் நீங்குவதில்லை, உடைகளில் ஏதாவது துர்நாற்றம் இருந்தால் அதுவும் நீங்கி உடைகளில் எலுமிச்சையின் நறுமணம் சேகரமாகும் என்பதும் உபரி நன்மை!

இங்கே சொல்லப்பட்டுள்ள எளிய முறைகள் தவிர உங்களுக்கே உங்களுக்கென பிரத்யேகமாக வெள்ளை உடைகளில் படிந்துள்ள விடாப்பிடி கறைகளை அகற்ற ஏதேனும் டிப்ஸ் தெரிந்தால் அதை எங்களுடன் பகிரலாம்.

Image Courtesy: you tube.

Article Concept Courtesy: youtube.
 

]]>
how to remove stain in white dress?, remove stains from white, stain, white dress, விடாப்பிடி கறை, வெண்மை, கறை நீக்குதல், இனிய இல்லம், http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/2/w600X390/0000_WHITE_STAIN.jpg http://www.dinamani.com/lifestyle/sweet-home/2017/nov/02/tips-to-remove-stains-from-white-dresses-2800368.html
2799799 லைஃப்ஸ்டைல் இனிய இல்லம் வாவ் சூப்பர் ஐடியா! வீட்டின் மூலையில் இடத்தை அடைக்காமல் நமக்கே நமக்காக ஒரு சின்னஞ்சிறிய லிஃப்ட்! கார்த்திகா வாசுதேவன் Wednesday, November 1, 2017 03:21 PM +0530  

லைஃப்ஸ்டைல் லிஃப்ட்!

யூ டியூபில் காணக்கிடைத்த இந்த புது ஐடியா கொஞ்சமல்ல நிறையவே கவனம் ஈர்க்கிறது.

யோசித்துப் பாருங்கள். வீட்டின் மூலையில் இடத்தை அடைக்காமல் கைக்கு அடக்கமாக நமக்கே நமக்காய் ஒரு சின்னஞ்சிறிய லிஃப்ட் வசதி அருமையான ஐடியா தான் இல்லையா?

இனி வரும் காலங்களில் வீட்டிலுள்ள மற்ற அத்யாவசியப் பொருட்களான கட்டில், பீரோ, ஃப்ரிஜ், வாஷிங் மெஷின், சோஃபா செட் போல இந்தக் குட்டி லைஃப்ஸ்டைல் லிஃப்ட்டும் வீட்டின் அழகுபடுத்தும் புராஜக்டுகளில் ஒன்றாகி விடக்கூடும்.

இந்த வசதி இன்னும் இந்தியாவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. தற்போது இங்கிலாந்தில் விற்பனைக்கு கிடைக்கும் இத்தகைய லிஃப்டுகள் நம் இந்தியாவுக்கு ஒத்து வருமா?! என்றும் தெரியவில்லை. பார்க்க அழகாக இருப்பதோடு அடிப்படையில் அதன் கட்டமைப்பு  திட்டமிட்ட வகையிலும் கூட  இது வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் வீடுகளுக்கு மிகப் பயனுள்ள ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆனால் வீட்டின் ஏதாவது ஒரு மூலையைக் கணக்கில் கொண்டு டிசைன் செய்யப்பட்ட இந்த தானியங்கி லிஃப்ட் இயங்குவது ஹைட்ராலிக் முறையிலா அல்லது மின்சாரத்திலா என்பது குறித்து அங்கே தகவல்களை காணோம். அதுமட்டுமல்ல, லிஃப்ட் இயங்கிக் கொண்டிருக்கையில் அது கட்டமைக்கப்பட்டுள்ள மூலையில் வீட்டின் வளர்ப்புப் பிராணிகளோ அல்லது சிறுவர், சிறுமிகளோ, குழந்தைகளோ கவனமின்றி சென்று நின்று விட்டால் மேலிருந்து வரும் லிஃப்ட் ஆட்டோமேட்டிக்காக சென்ஸார் உதவியால் தானே இயக்கத்தை நிறுத்தி அப்படியே அந்தரத்தில் நிற்குமா அல்லது பொத்தென்று கீழே வந்து நின்று நம் பிரியத்துகந்தவர்களை விபத்தில் சிக்க வைக்குமா என்பதற்கும் அந்த தளத்தில் பதிலில்லை. மின்சாரத்தில் இயங்கும் லிஃப்ட் என்றால் இடையில் ஸ்டக் ஆகி நிற்கையில் வீட்டிற்குள்ளே சிறையில் மாட்டிக் கொண்ட உணர்வு தான்.

இப்படி இந்த லைஃப்ட்ஸ்டைல் லிஃப்ட் குறித்த சந்தேகங்கள் நீண்டு கொண்டே சென்றாலும் கூட ஒரு புதுமையான ஐடியா என்ற வகையில் இம்மாதிரியான எக்கானாமிகல் லிஃப்ட் முயற்சியைப் பாராட்டலாம். உண்மையில் இம்மாதிரியான முயற்சிகள் மேலும் பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு மேற்கண்ட சந்தேகங்கள் எல்லாம் நிவர்த்தி செய்யப்பட்டு முழுமையாக வாடிக்கையாளர்களுக்குப் பயன் தரும் வகையில் மாற்றம் செய்யப்பட வேண்டும். வளர்ந்து வரும் தொழில்நுட்பம் அதற்கு உதவலாம்.

சென்னை, மும்பை மாதிரியான நகரங்களில் குறுகிய இடங்களில் மாடி மேல் மாடி கட்டி சதுரமான வீடுகளுக்குப் பதிலாக குதுப்மினார் மாதிரியான நீளமான உயர்ந்த கட்டிடங்களில் வாழப் பணிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஐடியாக்கள் எதிர்காலத்தில் பெரும் உதவியாக இருக்கக் கூடும். 

இன்றைய காலகட்டத்தில் அபார்ட்மெண்டுகளில் லிஃப்ட் அமைக்க அங்கு வசிக்கும் மக்கள் எண்ணிக்கையைப் பொறுத்து குறைந்த பட்சம் 100 சதுர அடி இட வசதியாவது தேவைப்படும். வீட்டின் பரப்பே 400 சதுர அடிகள் தான் என்கையில் அப்படிப்பட்ட வீடுகளில் வசிப்போரின் கதியை யோசித்துப் பாருங்கள். மும்பை போன்ற பெருநகரங்களில் வெறும் 250 சதுர அடிக்குள் அதிலும் மூன்றாம் அல்லது நான்காம் மாடியில் கட்டப்பட்ட வீடுகளில் வசிப்போருக்கு குறிப்பாக முதியவர்களுக்கு இடத்தை அடைக்காத இம்மாதிரியான சின்னஞ்சிறு லைஃப்ஸ்டைல் லிஃப்டுகள் வரப்பிரசாதங்களே தான்!

லைஃப்ஸ்டைல் லிஃப்ட் இயங்கும் முறைக்கான வீடியோ காட்சி...

 

இந்த லிஃப்டுகள் இந்தியாவுக்கு எப்போது விற்பனைக்கு வரும் என்று தெரியவில்லை. அப்படியே வந்தாலும் கூட மேலே சொல்லப்பட்ட குறைகளும், சந்தேகங்களும் நிவர்த்தி வேறு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

]]>
இடத்தை அடைக்காத லிஃப்டுகள், லைஃப்ஸ்டைல் லிஃப்ட், lifestyle lift, cute lifestyle lift for single house, cute simple life for elders http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/1/w600X390/0000_lifestyle_lifts.jpg http://www.dinamani.com/lifestyle/sweet-home/2017/nov/01/cute--comfotable-lifestyle-lifts-fpr-elder-people-2799799.html
2773761 லைஃப்ஸ்டைல் இனிய இல்லம் உங்கள் குக்கரை இப்படியெல்லாம் பராமரிக்கலாமே! Friday, September 15, 2017 01:27 PM +0530  

 • குக்கரைக் கவிழ்த்துப் போட்டுத் தேய்க்கக் கூடாது. அப்படித் தேய்த்தால் மேல்பகுதி தரையில் உராயும்போது காஸ்கட் வளையம் விரிந்து விடும். 
 • குக்கரில் காஸ்கட் தளர்ந்து போய்விட்டால் பிரிஜ்ஜில் ஒருநாள் வைத்திருந்து பிறகு போட்டுப்பார்த்தால் சரியாக இருக்கும்.
 • குக்கரின் அடியில் பழுப்பு நிறம் சேர்ந்துவிட்டால் அதை எலுமிச்சைத் தோலால் தேய்த்துவிட்டு பிறகு காலி மாத்திரை அட்டைகளால் தேய்த்தால் மிகவும்  பளிச்சென்று ஆகிவிடும்.
 • பிரஷர் குக்கரில் உள்ள ‘காஸ்கெட்’டை சமையல் முடிந்ததும் தொட்டி நீரில் போட்டுவிட்டு எப்போது தேவையோ அப்போது எடுத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.
 • புதிய காஸ்கெட் வாங்கிய உடன் பழைய காஸ்கெட்டை எறிந்து விட வேண்டும். இல்லையென்றால் நமக்கே தெரியாமல்  மாற்றி பயன்படுத்த வாய்ப்புள்ளது.
 • குக்கரின் கைப்பிடியில் இருக்கும் ஆணிக்கு மாதம் ஒரு முறை எண்ணெய் விட வேண்டும். அப்போது தான் துருப்பிடிக்காமல் இருக்கும்.
 • குக்கரின் வெயிட்டை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும் போதும் தூசி, அடைப்புகள் முதலியன இல்லாமல் இருக்கிறதா என்று பார்த்த பிறகே பயன்படுத்த வேண்டும்.
 • குக்கர் மூடியில் பொங்கி வருவது ஒன்றும் பெரிய பிரச்னையில்லை. பருப்பு வேக வைத்தால் உடன் பொங்கி வென்ட் பைப் வழியாகத் தண்ணீர் வெளிவரும். பருப்பு வேக வைக்கும் போது ஒரு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றினால் பொங்காது.
 • குக்கரில் காய்கறி வேகும் போது அது முங்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

சில சமயம் குக்கரின் உட்புறம் நிறம் மாறிப் போகிறேதே ஏன்?

குக்கரின் உள்பாகத்தில் கறை படிந்து கறுப்பாகக் காணப்பட்டால் கவலைப்படத் தேவையில்லை. புளித்த மோரைக் கறையுள்ள அளவு ஊற்றி 2,3 நாட்கள் ஊற வைத்தால் அந்தக் கறை நீங்கி குக்கர் பளிச்சென்று இருக்கும்.

தரம் குறைந்த அலுமினிய உள்பாத்திரம், டிரிவெட்டை உபயோகிப்பதால் நிறம் மங்கிக் காணப்படும்.

சமையல் செய்யும் போழுது குக்கரில் ஊற்றப்படும் நீரில் சிறிதளவு புளி அல்லது நறுக்கிய எலுமிச்சைத் துண்டு ஒன்றைப் போட்டு விட்டால் மீண்டும் பழைய பளபளப்பை அடையும்.

 - நெ.இராமன்

]]>
Pressure cooker, cooker tips, குக்கர் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/15/w600X390/cooker.jpg http://www.dinamani.com/lifestyle/sweet-home/2017/sep/15/cooker-maintenance-tips-2773761.html
2749120 லைஃப்ஸ்டைல் இனிய இல்லம் சொந்த வீட்டில் சுகமாக வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்? உமா Thursday, August 3, 2017 02:44 PM +0530 முண்டாசுக் கவிஞன் பாரதியின் அழகான வரிகளை தமிழராக பிறந்த ஒருவரும் மறக்க முடியாது. ‘காணி நிலம் வேண்டும் பராசக்தி, காணி நிலம் வேண்டும்’ என்ற பராசக்தியிடம் அவர் வேண்டுவது போல நாமும் அனுதினமும் வேண்டிக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் காணி நிலம் கூட வேண்டாம், ஒரு சிறிய ப்ளாட் போதும் என்ற அளவில் வேறுபாடு உள்ளது.

வீட்டை கட்டிப் பார் கல்யாணத்தை முடித்து பார் என்று முன்பெல்லாம் சொல்வார்கள். பிரம்ம பிரயத்தனம் செய்துதான் அப்போது வீடு கட்ட வேண்டியிருக்கும். ஆனால் தற்போது எல்லாம் சுலபமாகவே நடந்து விடுகின்றது. வங்கிக் கடன், அந்தக் கடன் இந்தக் கடன் என பலவகையான கடன்களை வாங்கி பில்டர்களிடம் பணத்தைக் கொடுத்தால் போதும். மீதி விஷயத்தை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். தனி வீடு என்பது குதிரைக் கொம்பாகிவிட்ட நிலையில், நகரத்துக்கு உள்ளே அல்லது புறநகர்ப் பகுதியென்று அவரவர் வசதிக்கு ஏற்ப ஒரு ப்ளாட்டினை வாங்கிய பின் அதனை எப்படி அலங்கரிக்கலாம் என்று திட்டமிட வேண்டும்.

எலி வளையானாலும் தனி வளையாக இருக்க வேண்டும் எனும் சொலவடைக்கு ஏற்ப நமக்கே நமக்கான ஒரு புத்தம் புது வீடு தயாராகிவிட்டது. இதில் நம்முடைய ரசனைகளுக்கு உயிர் கொடுத்து பார்த்து பார்த்து ஒவ்வொரு இடத்தையும் செதுக்கி உருவாக்கிக் கொள்ளலாம். அழகியலுடன் நம் முழுத் திறமையைக் கொட்டி அலங்கரிக்கப்படும் வீடு நமக்கு பெரும் நிறைவையும் மகிழ்ச்சியையும் தரும்.

வீட்டை ரசனையுடன் அலங்கரித்தால் உள்ளே நுழையும் போதே நம்முடைய சோர்வு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். ஏனோ தானோவென்று அலங்கரித்தால் வீட்டினுள் வரும்போதே நமக்கும் அந்த மனப்பான்மை தொற்றிக் கொள்ளும். எளிமையாக நமக்குத் தகுந்த வகையில் அலங்கரித்தல் நல்லது. ஒவ்வொறு பொருளையும் அதிக விலை கொடுத்து ஆங்காங்கே நிறுத்தி பொருட்களின் கூடாராமாக்கிவிட்டால் அது வீடல்லாமல் பொருள்காட்சியகமாக மாறிவிடும். நமக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களுடன் சில அழகுப் பொருட்களையும் இணைத்து வீட்டை ரம்யமாக வடிவமைக்கலாம். வாழ்வின் பெரும்பகுதி அந்த வீட்டில்தான் நாம் கழிக்கப் போகிறோம். உழைத்துக் களைத்து வரும் போது அந்த வீடு தான் நம்மை மடியாகத் தாங்கிக் கொள்ளும். எனவே சிரத்தையுடன் வீட்டை அலங்கரித்தால் அது மனத்துக்கு சந்தோஷம் தரக்கூடியதாக மாறும். நமக்கேயான தேர்வுகள், பிரத்யேக ரசனைகள் மற்றும் ஆசைப்பட்ட விஷயங்களை செயல்படுத்தும் ஆற்றல்தான் இதற்கு முக்கியமாகத் தேவை.

வீட்டில் வளர் பருவத்தில் குழந்தைகள் இருந்தால், புது வீட்டின் சூழலை மேலும் மகிழ்ச்சி பெருகும் நந்தனவனமாக மாற்றிக் கொள்ளலாம். நம்முடைய அறையை பொறுமையாக அலங்கரித்துக் கொள்ளலாம். முதலில் பிள்ளைகளின் அறையை ஒழுங்குப்படுத்திவிட வேண்டும். குழந்தைகளின் அறையில் அழகியல் என்பது இரண்டாம்பட்சமாக இருக்கட்டும். முதலில் பாதுகாப்பு தான் முக்கியம். கண்ணாடி கதவுகள், கண்ணாடி ஜன்னல்கள் என முழுக்க முழுக்க கண்ணாடியில் ஆன அறையை குழந்தைகளின் பயன்பாட்டுக்கு அமைத்துத் தர வேண்டாம். விளையாடும் போதோ அல்லது கோபத்திலோ அவர்கள் அதை உடைத்துவிடக் கூடும். அது எதிர்பாராத ஆபத்தை கொண்டுவந்துவிடலாம். மரக் கதவுகள், கைக்கு எட்டாத உயரத்தில் ஜன்னல்கள் இருக்கும்படியான அறை குழந்தைகளுக்கு ஏற்றது.

குழந்தைகளின் அறையில் உள்ள சுவர்களில் பளிச்சென்ற வண்ணங்களில் பெயிண்ட் அடிக்க வேண்டும். அது அவர்களுக்கு புத்துணர்ச்சி தந்து நேர்மறை எண்ணங்களை உருவாக்கும். அனேக குழந்தைகள் சுவற்றில் க்ரேயான்கள் கொண்டு வரைந்து தள்ளுவார்கள். அது அவர்களின் அறை. எனவே எதுவும் சொல்லவேண்டாம். அல்லது எளிதில் துடைக்கும் லெடெக்ஸ் வகைப் பெயிண்ட்களை உபயோகப்படுத்துங்கள். குழந்தைகள் பென்சிலால் கிறுக்கி வைத்திருந்தாலோ, அழுக்குக் கைகளை சுவற்றில் பதித்திருந்தாலோ எளிதில் அதனை துணி கொண்டு துடைத்து எடுத்துவிடலாம்

தரையைப் பொறுத்தவரை எளிதில் சுத்தப்படுத்தக்கூடிய வகையில் லாமினேட். டைல்ஸ், மரம் அல்லது லினோலியம் என எது ஏற்றதாகத் அந்த அறைக்கு உள்ளதோ அதனைத் தேர்ந்தெடுங்கள்.  

குழந்தைகளின் பாட புத்தகங்கள், விளையாட்டுச் சாமான்கள் போன்றவற்றை பத்திரப்படுத்த போதுமான அலமாரிகள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் பிள்ளைகள் அறையின் ஓரத்தில் எல்லாவற்றையும் போட்டுவிட்டு செல்வார்கள். அறையின் இடவசதி குறைவதோடு இல்லாமல் அழகையும் கெடுக்கும். எனவே அவர்களின் உடை, புத்தகம், மற்றும் விளையாட்டுப் பொருட்களுக்குத் தனித் தனியாக கப்போர்டுகள் தந்துவிடுங்கள்.

பர்னிச்சர்களும் அவர்களின் உயரத்துக்கும் தேவைக்கும் ஏற்ற வகையில் அமைத்துத் தாருங்கள். சிறிய சேர், எழுதப் படிக்க பயன்படும் மேஜை, புத்தக அலமாரி தேவைப்பட்டால் ஒரு சிறிய சோபா என்று சுட்டிகளின் விருப்பப்படி வாங்கிப் போடுங்கள். அவர்களது அறையை அவர்களே பராமரிக்க கற்றுக் தந்துவிடுங்கள். அவர்களின் பாடப் புத்தகங்களை மற்றும் விளையாட்டுப் பொருட்களை அந்தந்த இடங்களில் வைக்கக் கற்றுக் கொடுங்கள்.. எனக்கே டைம் இல்லை, என்னைப் போய் இதையெல்லாம் செய்ய சொல்றீங்க என்று உங்கள் பிள்ளைகள் அடம்பிடித்தால் அதை எல்லாம் கண்டு கொள்ளாதீர்கள். சில சமயம் ஒழுக்கம் போன்ற விஷயங்களைக் கற்றுத் தரும் போது ராணுவ விதிகளைத் தான் கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் அவர்கள் நல்ல பிள்ளைகளாக மட்டுமில்லாமல் குடிமக்களாகவும் இருப்பார்கள்.

குழந்தைகளின் படுக்கை செளரியமானதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அதிக வேலைப்பாடுகள் உள்ள பொருட்கள் எல்லாம் அவர்களுக்கு ஒருபோதும் தேவையில்லை. அடிப்படை வசதிதான் முக்கியம். அவர்களின் அறையில் ஒரு பாத்ரூம் இருக்க வேண்டும். அவர்கள் வளரும் வரை இரவில் பெற்றோர் அல்லது வீட்டுப் பெரியவர்கள் யாராவது அவர்களின் அறையில் இருக்க வேண்டும். காரணம் குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட்டால் பயப்படுவார்கள். பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்குமான பிணைப்பு இல்லாமல் போகும். நாம் இத்தனை பாடுபட்டு உழைத்து ஒரு வீட்டினை கட்டி குழந்தைகளுக்கும் சுதந்திரமான ஒரு இடத்தை அமைத்துக் கொடுப்பது அவர்களை சந்தோஷப்படுத்துவதற்காக மட்டுமே இருக்க வேண்டும்.

இந்தியா போன்ற நாடுகளில் உறவுகளுக்கும் பாசப் பிணைப்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்போம். வீட்டின் வெளிப்புறம் வெஸ்டர்னாக இருக்கலாம். நீங்கள் உண்ணும் உணவு கூட பாஸ்தா பர்கர் பீட்ஸா போன்ற வகையில் இருக்கலாம். ஆனால் நம் மனங்கள் இந்தியத் தன்மையுடன் எப்போதும் இருக்க வேண்டும். இப்படித்தான் சாப்பிட வேண்டும், இவ்வகையில் தான் உட்கார வேண்டும்,  இப்படித்தான் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும் என ஒவ்வொரு விஷயத்திலும் நம் முன்னோர்கள் கற்றுக் கொடுத்து விட்டுச் சென்றுள்ளனர். நம்முடைய வேர்கள் ஆழமானவை. அந்நிய விஷயங்களில் கவரப்பட்டு சுகமான வெளிப்புற விஷயங்களில் ஈர்க்கப்படலாம். ஆனால் நம்முடைய நாட்டில் காலகாலமாக நமக்குச் சொல்லித் தரப்பட்ட விஷயங்களைப் புறக்கணிக்கக் கூடாது. எனவே குழந்தைகளை அரவணைத்து அவர்களின் இளம் மனத்தில் நம்முடைய பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் கற்றுக் கொடுங்கள். மாற்றம் வளர்ச்சி எல்லாமும் தேவை தான். அவை எதில் தேவை என்பதில் முதலில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

அடுத்து வீட்டின் ஹால். வரவேற்பறைகளில் பொருட்களைக் குறைவாக வைத்திருப்பது அழகாகவும் பளிச்சென்றும் இருக்கும். தவிர ஹாலை விசாலமாகக் காட்ட உதவும்.

படுக்கை அறை, சமையல் அறை, பூஜை அறை போன்ற அறைகளை உங்கள் ரசனைக்கு ஏற்ற வகையில் அலங்கரித்துக் கொள்ளுங்கள். பொதுவான சில டிப்ஸ் :

 • பொருட்களின் விலை குறைவாக கிடைக்கிறது என்று தேவையற்றப் பொருட்களால் வீட்டை நிரப்பாதீர்கள். தேவை கருதியும், வீட்டின் அளவையும் நினைவில் நிறுத்தி பொருட்களை வாங்குங்கள்.
 • காற்றும் வெளிச்சமும் எல்லா அறைகளுக்குள் அதிகம் உள்ளே வருமாறு பார்த்துக் கொள்ளுங்கள். 
 • எந்த சாமானை எங்கே வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்ற அடிப்படை தேர்வுமுறை உங்களுக்கு இருந்தால் போதும். உங்கள் இல்லத்தை நீங்கள் அற்புதமாக்கிவிடுவீர்கள்.
 • அந்தந்த பொருட்களை அந்தந்த இடத்தில் வைத்துவிட்டு தேவைப்பட்டால் வீட்டு அலங்காரப் பொருட்களையும் வைத்து மெருகூட்டலாம். எல்லாவற்றையும் விட முக்கியமானது வீட்டினுள் காற்று வெளிச்சம் வர வேண்டும்.

வீட்டை பிடித்த வகையில் அலங்கரித்தபின் சற்று சிரமமான விஷயம் அதைப் பராமரிப்பது. சொர்க்கம் என்பது நமக்கு சுத்தமுள்ள வீடுதான் எனவே, வீட்டை சுத்தம் செய்ய நேரம் ஒதுக்குங்கள். சிலர் ஆரம்பத்தில் பார்த்து பார்த்து அலங்கரிப்பார்கள், நாளாக ஆக சலித்துப் போவார்கள். வீட்டுப் பராமரிப்பு என்பது நம்மையே பராமரித்துக் கொள்வது போலத்தான். சோம்பல் நிலை, அல்லது அலுப்பு வேலைக்காகாது. மேலும் கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் செல்லும் வீடுகளில் வீட்டை அழகாக்க ஒவ்வொரு முறையும் அதற்கான நேரம் ஒதுக்குதல் என்பதும் சிரமம். நேரம் கிடைக்கும் போது இருவரும் சேர்ந்து வீட்டினை ஒழுங்குப்படுத்தலாம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சின்ன சின்ன மாற்றங்களை வீட்டினுள் செய்து பாருங்கள். பீரோ, சோஃபா, புத்தக அலமாரி ஆகியவற்றின் இடத்தை மாற்றிப் பாருங்கள். புதிய கர்டன்கள் வாங்கிப் போடுங்கள்.  சின்ன மாற்றம் கூட பளிச்சென்று தோன்றச் செய்யும்.

நம்முடைய வீடு ஒரு கோவிலாக இருக்க நம்முடைய எண்ணங்களும் தூய்மையாக இருக்க வேண்டும். நல்லதையே நினைத்து நல்ல சூழலை உருவாக்கினால் வீட்டில் சுபிட்சம் பெறுகும்.

 

 

]]>
சொந்த வீடு , Flat, own house, kids room, வீட்டை அலங்கரித்தல் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/3/w600X390/48549936.jpg http://www.dinamani.com/lifestyle/sweet-home/2017/aug/03/decorate-your-house-lifestyle-is-very-important-2749120.html
2741663 லைஃப்ஸ்டைல் இனிய இல்லம் கடுமையான வெயிலோ, அடைமழையோ எதையும் சமாளிக்கும் விண்டோ மேஜிக் uPVC விண்டோக்கள்!! RKV Friday, July 21, 2017 04:54 PM +0530  

10 மாடி அபார்ட்மெண்டின் மொட்டைமாடியில் நின்று கொண்டு வானத்தைப் பார்ப்பது என்பது எல்லோருக்கும் எப்போதுமே சற்றுத் த்ரில்லான விஷயமே! ஆனால் யோசித்துப் பாருங்கள், நீங்கள் எப்போது உங்களது அபார்ட்மெண்ட்டின் மொட்டைமாடிக்குச் சென்றீர்கள் என்பதை! யோசிப்பது கொஞ்சம் கஷ்டம் தான், சென்ற மழைக்காலத்தில் அங்கே சுவர்களையும், கிரில் கம்பிகளையும் சோதிக்கச் சென்றிருப்பீர்கள். அதன் பின் அந்தப் பக்கம் எட்டிக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள். ஏனெனில் வெயிலாலும், தொடர் மழையாலும், குளிராலும் அங்கே என்னவெல்லாம் மராமத்து வேலைகள் எல்லாம் செய்யவேண்டி இருக்குமோ எனும்படியான ஒரு விதப் பதட்டம் நம்மைத் தொற்றிக் கொள்வதால் தான் நாம் அவற்றையெல்லாம் அடிக்கடி சென்று கவனிப்பதில்லை. 

இது எதில் போய் முடிகிறது எனில்; உதாரணத்துக்கு டெல்லி போன்ற நகரங்களில் எல்லாம் ஒருவர் புது வீடு வாங்கவோ, விற்கவோ போகிறார் என்றால், அது அத்தனை எளிதல்ல. வீட்டை வாங்கப் போகிறவர்களுக்கு... வாங்கப் போகும் வீடு ஸ்திரமாக, வலுவாக இருக்கிறதா? இல்லையா? என்பதில் எந்தவிதக் குழப்பமும் வந்து விடக்கூடாது, அதே போல விற்பவர்களுக்கும் பழுதான ஜன்னல்கள், பட்டுப்போன இரும்பு கேட்கள் என வீட்டின் விலையைக் குறைக்கும் முயற்சிக்கான எந்தவிதமான தொல்லைகளும் இருந்து விடக்கூடாது. வீடு வாங்குவதும்/விற்பதும் இரு தரப்பும் நிம்மதியாகவும், திருப்தியாகவும் இருக்க வேண்டும். அப்படி ஒரு சமரசம் இவ்விசயத்தில் நிலவ வேண்டுமானால் நமது வீடும் சரி, வீட்டிலிருக்கும் கதவு, ஜன்னல், இரும்பு கேட்கள் போன்றவையும் சரி எல்லாமே பெர்ஃபெக்ட் தரத்தில் இருக்க வேண்டும். வீட்டையும், வீட்டின் கட்டுமானத்தையும் பெர்ஃபெக்ட்டாக வைத்துக் கொள்ள நமக்கு உதவும் விஷயங்களில் ஒன்று தான் விண்டோ மேஜிக்!

விண்டோ மேஜிக்கின் திறன் வாய்ந்த தயாரிப்புகளான uPVC விண்டோக்கள் நம் நாட்டின் மாறுபட்ட சீதோஷ்ண நிலைகளையும் சமாளிக்கக் கூடிய வகையில் தயாரிக்கப்படுகின்றன. இப்போதெல்லாம் மும்பை, டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்களில் சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ வீடு தேடும் மக்களின் முக்கியமான எதிர்பார்ப்புகளில் ஒன்றாகி வருகிறது இந்த uPVC விண்டோக்கள். ஏனெனில் அம்மாதிரியான விண்டோக்கள் இருந்தால் மட்டுமே அந்த வீடுகள் கடும் வெயிலையும், கடுமையான மழையையும் தாங்கக் கூடிய வண்ணம் இருக்கும் என மக்கள் நம்புகின்றனர்.

விண்டோ மேஜிக் இந்தியாவில் uPVC விண்டோக்களை முதன்முதலில் அறிமுகம் செய்த நிறுவனங்களில் ஒன்று. அது தற்போது ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்ட உலகின் முன்னணி கண்ணாடி நிறுவனமொன்றுடன் கைகோர்த்து தரமான விண்டோக்கள் மற்றும் கதவுகளை தயாரித்து தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் தொழில்நுட்பத்தில் உருவாக்கப் பட்டு வரும் இந்தக் கதவுகள் மற்றும் விண்டோக்கள் தரக்கட்டுப்பாட்டு சோதனைக்குட்படுத்தப் பட்டது.

ஏன் விண்டோ மேஜிக் கதவுகள் மற்றும் விண்டோக்களைப் பயன்படுத்த வேண்டும்? விண்டோ மேஜிக்கின் uPVC விண்டோக்கள் மறுசுழற்சிக்கு உட்படக்கூடியவை சாதாரண முறையில் தயாராகும் அனைத்து கதவுகள் மற்றும் விண்டோக்களும் காரீய ஸ்டெபிளைசர்களுக்குப் பதிலாக கால்சியம் ஸ்டெபிளைசர்கள் பயன்படுத்தி தயாரிக்கப் பட்டவை. ஆனால் விண்டோ மேஜிக்கிஒன் uPVC கதவுகள் மற்றும் விண்டோக்கள் நச்சுத்தன்மையல்லாத சூழலைப் பாதிக்காத காரணிகளுடன் ‘’Green line" முத்திரையுடன் வெயில், மழை, புயல் என அனைத்தையுமே எதிர்கொள்ளும் விதத்தில் தயாராகின்றன. எனவே இவற்றில் நச்சுத் தன்மை மட்டுமல்ல வேறு எந்த கெட்ட தன்மைகளும் இல்லை.

விண்டோ மேஜிக் அதிகாரபூர்வ இணையதளத்தில் மேலதிக விவரங்கள் தேவைப்படுவோர் கீழ்கண்ட தளத்துக்குச் சென்று தேவையான விவரங்களைப் பெறலாம்.

http://www.windowmagicindia.com/

]]>
window magic uPVC windows, quality and durability, விண்டோ மேஜிக் uPVC விண்டோக்கள், இனிய இல்லம், home sweet home http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/window_magic_1.jpg http://www.dinamani.com/lifestyle/sweet-home/2017/jul/21/window-magic-brings-you-windowsdoors-designed-for-this-season-2741663.html
2724331 லைஃப்ஸ்டைல் இனிய இல்லம் உணவு எப்போதுமே அருமையான அனுபவமாக இருக்க வேண்டும்! RKV Tuesday, June 20, 2017 11:28 AM +0530  

இதைச் சொன்னது யார் தெரியுமா? பாலிவுட் டான் ஷாருக்கானின் அன்பு மனைவி கெளரி கான். கெளரிக்கு இன்டீரியர் டிசைனிங்கில் ஆர்வம் மிகுதி என்பதால் அதை தனது ஹாபியாகவும், தொழிலாகவும் வைத்திருக்கிறார். சமீபத்தில் மும்பையில் ஆலியா ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட்டின் ‘அர்த்’ எனப்படும் நவீன உணவகத்துக்கு இன்டீரியர் டிசைனிங் பணிகளை மேற்கொண்டார். அந்த உணவகத்தின் திறப்பு விழாவுக்கு வருகை தந்திருந்த சமயத்தில் தான் மேற்கண்ட அந்த வாக்கியத்தை கெளரி சொன்னார். அவர் சொன்னபடி பெரும்பாலான போஜனப் பிரியர்களுக்கு நாவின் ருசி மட்டுமே முக்கியமல்ல, அமர்ந்து உணவருந்தும் இடத்தின் அழகியலும் மிக, மிக முக்கியமே! உணவருந்தும் இடத்தில் எப்போதுமே உணவுக்காக உள்ளே நுழைபவர்களைக் கவர்ந்து இழுக்கும் அம்சங்கள் இருக்க வேண்டும்.  விசாலமான சாப்பாட்டு அறை, அதில் அளவான, மிதமான வெளிச்சம், சாப்பாட்டுக் கூடத்தின் நடுவே பல பரிமாணங்களில் வெளிச்சத்தை அள்ளி வீசும் பழங்கால சாண்ட்லியர் விளக்குகள். இவை அனைத்தும் சேர்ந்து பரிமாறப்படும் அத்தனை ருசியாக உணவு வகைகளுக்கும் ஒரு புது அழகைத் தரும். உள்ளே நுழைபவர்கள் எவராயினும் நிச்சயம் சாப்பாட்டு அறையின் அழகியலுக்காகவாவது நிச்சயம் எதையாவது உண்ணாமல் வெளியேறவே முடியாது. அது தான் ஒரு நல்ல சாப்பாட்டு அறையின் கச்சிதமான வடிவமைப்புக்கும், அழகுக்கும் பெருமை சேர்க்கக் கூடியது. என்கிறார் கெளரி.

இந்த விழாவில் அவரது ஸ்டார் கணவரான ஷாருக்கான், மகன் ஆர்யன், மகள் சுஹானா, நண்பர்களான அனில் கபூர், சோனம் கபூர். அர்ஜூன் கபூர், சங்கி பாண்டே, டைனோ மொரியா, ஸ்வேதா நந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கெளரி சொன்னதில், எந்த உணவை உண்பது என்பதில் வேண்டுமானால் ஒவ்வொருவருக்கும் மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். ஆனால் ‘உணவு எப்போதுமே அருமையான அனுபவமாக இருக்க வேண்டும்’ என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.

]]>
கெளரி கான், ஷாருக் கான், அர்த் இன்டீரியர், போஜனம், சாப்பாடு, அனுபவம், gowri khan, sharuk khan, dining must be delightful experience, arth interior, sweet home, இனிய இல்லம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/20/w600X390/dining.jpeg http://www.dinamani.com/lifestyle/sweet-home/2017/jun/20/dining-must-be-delightful-experience-says-gauri-khan-2724331.html
2716774 லைஃப்ஸ்டைல் இனிய இல்லம் பாகுபலி இயக்குனருக்காக உருவாகிக் கொண்டிருக்கும் புது ராஜ்ஜியம்! சரோஜினி Thursday, June 8, 2017 04:06 PM +0530  

பாகுபலிக்காக மகிழ்மதி, குந்தளம் எனும் கற்பனை தேசங்களை உருவாக்கிக் காட்டிய இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளெலி இப்போது தனக்கே தனக்கான ஒரு கற்பனை பிரதேசத்தை கனவு கண்டு கொண்டு இருக்கிறாராம். ஆம் அது ஒரு அழகான பண்ணை வீடு.

தனது அழகான கனவை நிஜமாக்க தெலங்கானா மாநிலத்தின் ‘தோனபந்தா’ கிராமத்தில் ராஜமெளலி 100 ஏக்கர் நிலம் வாங்கி இருக்கிறாராம். அங்கே தன் குடும்பத்துக்கான அழகான பண்ணை வீடு ஒன்றை கட்டிக் கொண்டு நகரத்தின் கசடுகள் படியாத தூரத்திலிருக்கும் அந்த கிராம ராஜாங்கத்துக்கு இடம்பெயரவிருக்கிறார்.

ராஜமெளலியின் சகோதரரும், இசையமைப்பாளருமான கீரவாணியும் அதே கிராமத்தில் பண்ணை வீடு கட்ட நிலம் வாங்கி இருக்கிறார் என்றொரு செய்தியும் உண்டு. அப்படியானால் பாகுபலியின் ராஜாக்களைப் போல, ராஜமெளலியின் குடும்பம் அந்த கிராமத்தை ஆட்சி செய்யப் போகிறதா என்று தெலுங்கானா ரசிகர்கள் ஹாஸ்யக் கதை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். தனக்காக அருமையான பண்ணை வீடு கட்டி முடிக்கும் வேலையை பிரபல இயக்குனர் ரவீந்தரிடம் ஒப்படைத்திருக்கிறாராம் ராஜமெளலி. பணமிருந்தால் போதுமா? அதைக் கொண்டு ரசனையாகத் திட்டமிட்டு அழகான பண்ணை வீடு கட்ட திறமையான மனமும் இருக்க வேண்டுமே?!

]]>
எஸ்.எஸ்.ராஜமெளலி, பண்ணை வீடு, கனவு இல்லம், தோன பந்தா கிராமம், s.s.rajamouli, donabandha, thelangana, dream farm house, bhagubali, mahishmadhi, magizh madhi http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/8/w600X390/rajamouli_dream_house.jpg http://www.dinamani.com/lifestyle/sweet-home/2017/jun/08/rajamouli-and-family-shifting-into-farm-house-in-donabandha-village-near-telangana-2716774.html
2586695 லைஃப்ஸ்டைல் இனிய இல்லம் கார் வீடு! ந.ஜீவா Monday, October 24, 2016 03:27 PM +0530 அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ளது சாண்டா பார்பரா நகரம். இங்கே வாழ்ந்தவர் டான் லின்ஸ். மனைவி மார்லின். ஒரு வயதுக் குழந்தை. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, சாண்டா பார்பராவில் இருந்த அவர்களுடைய வீட்டை விற்றுவிட்டார்கள். ட்ரெய்லர் இணைக்கப்பட்ட ஒரு காரை வாங்குகிறார்கள். அந்த கார்தான் அப்போதிருந்து அவர்கள் வீடு. காரை எங்கே நிறுத்துகிறார்களோ, அதுதான் அவர்களுடைய ஊர்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது அவர்களுடைய குடும்பம் பெரிதாகிவிட்டது. டான் லின்ஸ், மார்லின் லின்ஸ் தவிர, மூன்று குழந்தைகள். கூடவே ஒரு பூனைக்குட்டி. இந்த ஐவரும் வட அமெரிக்காவின் பல பகுதிகளை இந்த எட்டு ஆண்டுகளாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படியே சுற்றிக் கொண்டிருந்தால்... வேலை?

இப்போது அமெரிக்காவில் உள்ள ஒரு வங்கிக்கு சென்னை ஐடி கம்பெனியிலிருந்து வேலை செய்வதில்லையா? அதுபோலதான். லின்ஸ் ஒரு வெப் டிசைனர். மார்லின் ஒரு மருந்துக் கம்பெனி வேலையை ஆன்லைனில் செய்கிறார். வருமானம் வங்கிக் கணக்கில் விழுந்துவிட, போகிற இடங்களில் தேவைப்படும்போது ஏடிஎம்}இல் எடுத்துக் கொள்கிறார்கள்.

25 அடி நீளமுள்ள காரின் பின் இணைப்பாக 200 சதுர அடி உள்ள ட்ரெய்லர். ட்ரெய்லரில் துணிகள், கம்ப்யூட்டர், மெக்ஸிகோவில் வாங்கிய ஒரு கிதார், நாற்காலிகள், ஏணி ஒன்று என மொத்த வீட்டு உபயோகப் பொருட்கள் அடங்கிவிடும்.

பகலில் டைனிங் டேபிளாக பயன்படுத்துவதை இரவில் கட்டிலாக மாற்றி அதில் படுத்துக் கொள்கிறார்கள் டான் லின்ஸியும், மார்லினும். குழந்தைகள் படுக்க ஒரு பரண் படுக்கை. பூனை எங்காவது ஒரு மூலையில் சுருண்டு கொள்ளும்.

காரே வீடு என்றால் மின்சாரத்துக்கு என்ன செய்வது? சூரிய ஒளி பேனலைப் பொருத்தியிருக்கிறார்கள். 300 வாட்ஸ் கரண்ட் அதிலிருந்து கிடைக்கும். கரண்ட் பில் கட்ட, கால்கடுக்க வரிசையில் நிற்கத் தேவையில்லை.

எட்டு ஆண்டுகளாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், காடுகள், அறிவியல் காட்சிக் கூடங்கள், பூங்காக்கள் எனச் சுற்றிக் கொண்டேயிருக்கிறார்கள்.

"நாங்கள் இருவருமே வேலைக்குப் போகிறவர்கள். ஒரு வீட்டில் தங்கி வேலைக்குப் போய் வந்து கொண்டிருந்தால், குழந்தைகளுடன் கொஞ்ச நேரம்தானே செலவழிக்க முடியும்? இப்போது பாருங்கள், 24 மணி நேரமும் குழந்தைகளுடனேயே இருக்கிறோம்'' என்கிறார் டான் லின்ஸ் பெருமையுடன்.

குழந்தைகளின் படிப்பு?

படிப்பெல்லாம் காரில்தான்... இல்லையில்லை... கார் வீட்டில்தான். இப்போது எல்லாம் ஆன்லைனில் கிடைக்கிறதே? குழந்தைகளுக்குத் தேவையான எல்லாவற்றையும் ஆன் லைனில் பதிவிறக்கம் செய்து, சொல்லிக் கொடுக்கிறார்கள்.

"பள்ளியில் படிப்பதைவிட குழந்தைகள் மிக நன்றாக, நிறைய கற்றுக் கொள்கிறார்கள். எப்படி என்கிறீர்களா? ஒரு வகுப்பில் இருபது மாணவர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஓர் ஆசிரியை ஒரு குழந்தைக்கு ஒரு மணி நேர வகுப்பில் அதிகபட்சம் 3 நிமிடங்கள்தாம் ஒதுக்க முடியும். ஆனால் நாங்கள் குழந்தைகளுக்காக அதிக நேரம் ஒதுக்குகிறோம். அதுமட்டுமல்ல, புத்தகங்களில் படிக்கக் கூடிய பலவற்றை நாங்கள் நேரிலேயே குழந்தைகளுக்குக் காட்டிவிடுகிறோம். உதாரணமாக வரலாற்றுப் புகழ்மிக்க ஓர் இடத்தைப் புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்வதைவிட நேரிலேயே பார்ப்பது அறிவை வளர்க்கும் அல்லவா?'' என்று கேட்கிறார்கள் டான் லின்ஸும், மார்லினும்.

எல்லாருக்கும் ஆண்டுக்கு ஒருமுறையோ, இரண்டு முறையோ தான் விடுமுறை வரும். அப்போதுதான் ஊர் சுற்றிப் பார்க்க கிளம்ப முடியும். ஆனால் இவர்களுக்கோ எப்போதுமே விடுமுறைதான்.

]]>
கார் வீடு, வீடே கார், car house, economic lifestyle, sweet home, http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/10/24/w600X390/car_house.jpg http://www.dinamani.com/lifestyle/sweet-home/2016/oct/24/கார்-வீடு-2586695.html
2558310 லைஃப்ஸ்டைல் இனிய இல்லம் ஃபிரிட்ஜ் பராமரிப்பு! கீதா ஹரிஹரன் Friday, September 2, 2016 02:32 PM +0530 • ஃபிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். ஃபிரிட்ஜின் உள்ளே குறைந்த பொருட்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.
• ஃபிரிட்ஜில் உணவுப் பொருட்களை சூட்டோடு வைக்காமல் குளிர்ந்தபின்தான் வைக்க வேண்டும்.
• வாழைப் பழத்தை எக்காரணம் கொண்டும் ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது.
• பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிகநாட்கள் மொறுமொறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும்.
• ஃபிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும்போது கண்டிப்பாக  சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.
• ஃபிரிட்ஜின் பின்பக்கம் உள்ள  கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில்  தண்ணீர் படக் கூடாது. ஃபிரிட்ஜின் பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.
• ஃபிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகைப்பட்டு ஃபிரிட்ஜின் நிறம் சீக்கிரத்தில் மங்கிவிடும்.
• ஃபிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகுநாள் காய்கறிகள் அழுகிப் போகாமல் இருக்கும்.
• ஃபிரிட்ஜுக்கு கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.
• ஃபிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையோ, அடுப்புக் கரித்துண்டுகளையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ தோலையோ போட்டு வைக்கலாம்.
• அதிக ஸ்டார்கள் உள்ள ஃபிரிட்ஜை வாங்கினால் மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தலாம்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/26/w600X390/frige.jpg http://www.dinamani.com/life-style/sweet-home/2016/aug/26/ஃபிரிட்ஜ்-பராமரிப்பு-2558310.html
2556445 லைஃப்ஸ்டைல் இனிய இல்லம் பெற்றோருக்கு பிரபு தேவாவின் அன்புப்பரிசு! கார்த்திகா வாசுதேவன் Monday, August 15, 2016 02:15 PM +0530 பிள்ளைகள் தங்களது அப்பா அம்மாவுக்கு என்னென்ன விதமான பரிசுகள் தரலாம்? இதற்கென்று தனி லிஸ்ட் எல்லாம் இல்லை. வானத்துக்கு கீழே உள்ள எதையும் அதன் மதிப்பு ஒரே ஒரு ரூபாய் தான் என்றாலும் கூட பாசத்திற்குரிய பிள்ளைகள் தந்தால் பெற்றோருக்கு அது மிகப்பெரிய சந்தோசமே! வாய்ப்புக்கு கிடைக்கும் போதெல்லாம் அதைச் சொல்லி சொல்லி மகிழ்வார்கள். எதற்காக இதைச் சொல்கிறேனென்றால் சமீபத்தில் பிரபுதேவா மாஸ்டர் தனது பெற்றோருக்காக மைசூரில் ஒரு அழகான வீட்டைப் பரிசளித்திருக்கிறார். வீடு அழகு தான் அதை விட அழகு அந்தப் பெற்றோரின் முகத்தில் வெளிப்படும் பெருமகிழ்ச்சி!


பிரபுதேவாவின் தந்தை சுந்தரம் மாஸ்டரின் பூர்வீகம் மைசூர். தமிழ் மட்டுமன்றி தெலுகு, கன்னடம், மலையாளம், இந்தி என இந்திய சினிமாக்களில் தனது மகன்கள் வெற்றிகரமாக தலையெடுத்த பின் நடன இயக்கத்தில் இருந்து ஒதுங்க நினைத்த சுந்தரம் மாஸ்டர் தன் மனைவியோடு சொந்த ஊரான மைசூரில் விவசாயம் செய்து கொண்டு அமைதியாக வாழ ஆசைப்பட்டார். அவரது ஆசையை உணர்ந்த பிரபுதேவா அழகான ஒரு வீட்டைக் கட்டி அதில் கோத்ரெஜ் நிறுவனம் மூலம் உள்ளலங்காரங்கள் செய்து தனது பெற்றோருக்கு பரிசளித்துள்ளார்.

மகனின் அன்புப் பரிசான அந்த விசாலமான வீட்டில் சுந்தரம் மாஸ்டர் தம்பதியர் முழு மனநிறைவோடு இருக்கிறார்கள் என்பதற்கு இந்தப் புகைப்படங்களே சாட்சி. வீடு என்றால் அது வெறும் வீடு மட்டுமல்ல. 'வீடெனப்படுவது யாதெனில் அது பிரியம் சமைக்கிற கூடு' என்று கவிஞர் ஒருவர் கூறினார் ; அதற்கேற்ப இந்த வீடு பிரபுதேவாவின் அன்பை உலகறிய வைக்கும்.

புகைப்படத்தில் வீட்டைப் பார்த்தீர்களா? வீடு பிரமாண்டமாக இருப்பது முக்கியமில்லை, அதில் இருக்கப் போகிறவர்களுக்கு மனநிறைவைத் தரும்படியாக சவுகர்யமாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். அதற்கேற்ப தென்னிந்திய பாரம்பர்யத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில் காற்றோட்டத்துக்கும் வெளிச்சத்துக்கும் குறைவே இல்லை, சமையலறை நவீன வசதிகளோடு விசாலமாக இருப்பது சிறப்பு.

வரவேற்பறை மற்றும் படுக்கை அறைகளில் புதிதாகப் போடப்பட்ட அலங்கார மேஜைகள் அன்னப்பறவை வடிவொத்த நாற்காலிகள் முதற்கொண்டு கட்டில்கள் வரை பளபளப்பு குறையாது வசீகரிக்கின்றன. வீட்டைப் பொறுத்தவரை எங்கும் எதிலும் தன் பெற்றோரின் வசதியே முக்கியம் என பிரபுதேவா தீர்மானித்ததால் பிரமாண்டத்தை விட  அவரது அன்பே பிரதானமாய் தெரிந்தது. வீட்டிலிருக்கும் ஒவ்வொரு வினாடியும் உற்சாகமாய் உணர வைப்பதாய் அந்த வீடு பார்ப்போர் கண்களை நிறைக்கிறது.

இந்திய சினிமாவின் பிரபலமான நடன இயக்குனர், தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாக்களின்  மோஸ்ட் வான்டட் திரைப்பட இயக்குனர், தென்னக மைக்கேல் ஜாக்சன் எனும் பாராட்டுக்கள் எல்லாவற்றையும் சற்றே  தூரத்தில் நிறுத்தி பெற்றோருடன் நேரம் செலவழிக்கும் இந்த அன்பான மகனை எத்தனை பாராட்டினாலும் தகும்!

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/13/w600X390/alter_11.jpg http://www.dinamani.com/life-style/sweet-home/2016/aug/13/பெற்றோருக்கு-பிரபு-தேவாவின்-அன்புப்பரிசு-2556445.html