Dinamani - கலைகள் - http://www.dinamani.com/lifestyle/art/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2820156 லைஃப்ஸ்டைல் கலைகள் கார்டூன் வரைந்தால் இதுதான் கதியா? இவர் வரைந்த இந்த ஓவியங்களுக்காக நாடு கடத்தப்பட்டார்!   உமா பார்வதி Monday, December 4, 2017 11:09 AM +0530  

மானுடத்தின் வலி நிறைந்த பக்கங்களை ஒருவரும் புரட்டிப் பார்க்க விரும்புவதில்லை. கண் முன்னே நிகழும் அவலங்களைக் கூட கடந்து போகிறவர்களாகவே நம்மில் பலர் இருந்து வருகிறோம்.

காரணம் அவசர உலகம், நம்மை நிற்க நிதானிக்க அடுத்தவர்களை கவனிக்க இதற்கெல்லாம் யாருக்கு நேரம் இருக்கிறது என்று கூறுவோம். 

ஆனால் கலைஞர்களால் அப்படி இருக்க முடியாது. தனியொரு மனிதனுக்கு உணவில்லையென்றால் ஜகத்தை அழிக்கும் ரெளத்திரம் அவர்களுக்கு ஏற்படும். 

Bait

சம காலத்தில் நிகழும் சம்பவங்களை அந்தக் காலத்தின் பதிவாக அவர்களுடைய பேனா அல்லது தூரிகை அழுத்தமாக பதிந்துவிடும்.

குன்டஸ் அகயெவ் (Gunduz Agayev) எனும் ஓவியர் அத்தகைய காத்திரமான படைப்புக்களை தனது ஓவியங்கள் மூலமும் கேலிச்சித்திரங்களாகவும் படைத்து வருகிறார். ஒருவர். அவருடைய ஓவியங்கள் அனைத்தும் வித்யாசமானவை. 

Just Leader

உண்மையை தனது ஓவியத்தின் மூலம் உரக்கச் சொல்வதில் குன்டஸ் தயங்கியதேயில்லை.

War and Peace

தனது தாய்நாடான அசர்பைஜானில் நிகழும் சமூக அநீதிகளை அவரது ஓவியங்கள் சுட்டிக் காட்டிக் கொண்டே இருந்தது.

Political Prisoners

அவரிடம் இருந்தது தூரிகையா அல்லது கண்ணுக்குத் தெரியாத சவுக்கா என்று புரியாத அசர்பைஜான் அரசு, அவரை நாடு கடத்தியது.

Migration

சொந்த நாட்டில் வசிக்க முடியாமல் போனாலும் குன்டஸ் அகயெவ் முடங்கிப் போய்விடவில்லை.

Smile We will become famous

இன்னும் தீவிரமாக கலைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு நேர்மையாகவும் தன் மனச்சாட்சிக்கு உட்பட்டும் இயங்கி வருகிறார். 

Made In China

அவர் வரைந்த இந்தச் சித்திரங்களுக்கு விளக்கம் வேண்டியதில்லை. காரணம் உலகின் எந்த மூலையாக இருந்தாலும் அவை பொருந்தக் கூடியதே.

மேலும் சில ஓவியங்கள்,

Tourist

***

Sweet Dreams

***

Justice is Dead

***

Virtual Patriatism

***

Flying Cage

ஓவியங்கள் / நன்றி - குன்டஸ் அகயெவ் (Gunduz Agayev)

]]>
Azerbaijan, Cartoonist Gunduz Agayev , குன்டஸ் அகயெவ், கார்டூனிஸ்ட், அசர்பைஜான் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/4/w600X390/gunduz.jpg http://www.dinamani.com/lifestyle/art/2017/dec/04/illustrations-of-cartoonist-gunduz-agayev-2820156.html
2741633 லைஃப்ஸ்டைல் கலைகள் குரோம்பேட்டை கல்சுரல் அகடமியின் 12-ஆம் ஆண்டு நாடக விழா! Friday, July 21, 2017 12:38 PM +0530 குரோம்பேட்டை கல்சுரல் அகடமியின் 12-ஆம் ஆண்டு நாடக விழா ஜூலை 22 முதல் 27 வரை நடைபெற உள்ளது. 

நிகழ்ச்சி நிரல் :

22.7.2017 (சனிக்கிழமை) மாலை 6 மணி – 2017 வருடாந்திர விருது வழங்கும் விழா. தலைமை – திரைப்பட இயக்குனர் பாம்பே சாணக்யா.

22.7.2017 (சனிக்கிழமை) மாலை 7 மணி – கிரேஸி கிரியேஷன்ஸ் வழங்கும் கிரேஸி மோகன் மற்றும் மாது பாலாஜி நடிக்கும் ‘ரிட்டர்ன் ஆஃப் தி க்ரேஸி தீவ்ஸ்’ (Return of the Crazy Thieves) (குபீர் சிரிப்பு நாடகம்)

23.7.2017 (ஞாயிற்றுகிழமை) மாலை 6.45 மணி – U.A.A வழங்கும் ஒய்.ஜி.மகேந்திரா, சுப்புணி, ஆனந்தி நடிக்கும் ‘பரீட்சைக்கு நேரமாச்சு’ (சிவாஜி கணேசன் நடித்த திரைப்படத்தின் நாடகமாக்கம்)

24.7.2017 (திங்கள்கிழமை) மாலை 6.45 மணி – சிறப்பு விருந்தினர் பத்மஸ்ரீ Dr. நல்லி K.குப்புசாமி செட்டியார் அவர்கள் முன்னிலையில் நாடக காவலர் கலைக்கூடம் வழங்கும் ‘அவதார புருஷர் ஸ்ரீ ராமானுஜர்’ (ஸ்ரீ ராமானுஜர் 1000-வது ஆண்டு சிறப்பு ஆன்மிக நாடகம்)

25.7.2017 (செய்வாய்கிழமை) மாலை 6.45 மணி – சத்யசாயி கிரியேஷன் வழங்கும் மாப்பிள்ளை கணேஷ் நடிக்கும் ‘மனிதன் என்பவன்’ (புதிய நகைச்சுவை நாடகம்) கதை, வசனம் : திரைப்பட புகழ் எழுச்சூர் அரவிந்தன்

26.7.2017 (புதன்கிழமை) மாலை 6.45 மணி – ஸ்டேஜ் கிரியேஷன் வழங்கும் காத்தாடி ராமமூர்த்தி நடிக்கும் ‘நீயா நானா’ (சமூக நகைச்சுவை நாடகம்) கதை, வசனம் : S.L.நாணு

27.7.2017 (வியாழக்கிழமை) மாலை 6 மணி மயூரபிரியா வழங்கும் ‘விவாஹமாலை.com’ (சமூக நாடகம்) 11 விருதுகளைப் பெற்ற சிறந்த நாடகம் கதை, வசனம் : P.முத்துக்குமரன்

20.7.2017 முதல் அரங்கத்தில் டிக்கெட் கிடைக்கும்.

ஃபோன் 22651809, மொபைல் : 9840892413 / 9444690174 டிக்கெட் கிடைக்கும்.

நேரம் காலை 9.00 மணி முதல் 10.30 வரை மாலை 5.30 முதல் 7.30 மணி வரை

விழா நாட்களில் மாலை 6 மணி முதல் கேண்டீன் வசதி உண்டு

5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் அவசியம்

முகவரி :

குரோம்பேட்டை கல்சுரல் அகடமி Regd Trust

3, Indira Gandhi Cross Street, Off Radha Nagar Main Road

(Near St. Mark's School) Radha Nagar, Chrompet

Chennai - 44 

Ph - 22651809 / email - cca1969@rediffmail.com

மேலும் விபரங்களுக்கு : ஜி.நாகராஜன் - 9444690174

]]>
Nadaga vizha, Crazy Mohan, நாடக விழா, கிரேஸி மோகன் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/logo-cca.png http://www.dinamani.com/lifestyle/art/2017/jul/21/chromepet-cultural-academy-celebrates-12th-nadaga-vizha-2741633.html
2683301 லைஃப்ஸ்டைல் கலைகள் கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நேரத்தில் குச்சிப்புடி நடனம் ஆடிய 7000 மாணவிகள்! கார்த்திகா வாசுதேவன் Wednesday, April 12, 2017 01:52 PM +0530  

ஆந்திர மாநிலம் விசாகபட்டிணத்தில் (வைசாக்) கின்னஸ் சாதனை முயற்சியாக அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மூன்று பாடல்களுக்கு ஒரே நேரத்தில் சுமார் 7000 மாணவிகள் இணைந்து குச்சிப்புடி நடனம் ஆடினர். 

ஆந்திராவின் வடக்கு கடற்கரை மாவட்டங்களின் அரசு உண்டு உறைவிடப் பள்ளிகளில் பயிலும் 7000 மாணவிகள் இந்த சாதனை நிகழ்வில் பங்கேற்றனர். அம்பேத்கரின் 125 வது பிறந்தநாளை ஒட்டி அவரது நினைவுகளைப் போற்றும் விதத்தில் அம்பேத்கரின் வாழ்க்கையை இன்றைய தலைமுறையினரும் எளிதில் அறியும் வண்ணம் எழுதப்பட்ட மூன்று பாடல்களுக்கு அம்மாணவிகள் ஆந்திராவின் பாரம்பரிய நடமான குச்சிப்புடி நடனம் ஆடினர்.

இந்த மாபெரும் நிகழ்வை ஆந்திர அரசின் சமூக நலத்துறையும், ஆந்திர அரசின் உண்டு, உறவிடப் பள்ளிகளின் கூட்டமைப்பும் இணைந்து நடத்தியது.

பாரம்பரிய குச்சுப்புடி நடனத்தைப் பொறுத்தவரை இதற்கு முன்பு 6,117 கலைஞர்கள் இணைந்து குச்சிப்புடி நடனம் ஆடியது தான் கின்னஸ் சாதனையாகப் பதிவானது. அந்த முயற்சியை இது முறியடித்து விட்டது இம்மாபெரும் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள் அனைவரும் கடந்த இரண்டு மாதங்களாக திறமை வாய்ந்த பாரம்பரிய குச்சுப்புடி நடனக் கலைஞர்களிடம் பயிற்சி பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கின்னஸ் சாதனை முயற்சி குறித்துப் பேசுகையில் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு; ‘குச்சுப்புடி ஆந்திராவின் பாரம்பரிய நடனம், இதன் பெருமையை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்த வேண்டியது நம் அனைவரின் கடமை!’ என்றார்.

மேலும் அவர் பேசுகையில்; குச்சிப்புடி பாரம்பரிய நடனக்கலை வளர்ச்சிக்காக ஆந்திர மாநில அரசின் பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் தங்களது புது தலைநகரமாக உள்ள அமராவதியில் ‘குச்சுப்புடி அகாடமி’ ஒன்றும் பிரத்யேகமாக அமைய உள்ளதாக அறிவித்தார்.
 

]]>
andhra, கின்னஸ் சாதனை, ஆந்திரா, 7000 மாணவிகள் குச்சுப்பிடி, guiness record, 7000 girls kuchipudi dance http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/12/w600X390/kuchipudi_guiness.jpg http://www.dinamani.com/lifestyle/art/2017/apr/12/ஆந்திராவில்-கின்னஸ்-சாதனை-முயற்சியாக-ஒரே-நேரத்தில்-7000-மாணவிகள்-குச்சுப்புடி-நடனம்-ஆடினர்-2683301.html
2678611 லைஃப்ஸ்டைல் கலைகள் பிரபல இந்துஸ்தானி இசைக் கலைஞர் கிஷோரி அமோங்கர் மறைவு! கார்த்திகா வாசுதேவன் Tuesday, April 4, 2017 02:44 PM +0530 பிரபல இந்துஸ்தானி சாஸ்திரிய இசைக் கலைஞரான கிஷோரி அமோங்கர் நேற்று மும்பையில் அவரது இல்லத்தில் காலமானார். இந்துஸ்தானி இசையை அதன் இயல்பு கெடாமல் நவீன உத்திகளுடன் பாடும் திறன் வாய்ந்த கலைஞர்களில் கிஷோரி அமோங்கர் முதன்மையானவர். 6 வயதில் தனது தந்தையை இழந்த கிஷோரி அவரது தாயாரும் பிரபல இந்துஸ்தானி இசைக் கலைஞருமான மோகுபாய் குர்திகருடன் இணைந்து கச்சேரிகளுக்கு செல்லத் தொடங்கினார். முதலில் தம்பூரா இசைப்பதில் தொடங்கி பின்னாட்களில் தனது தாயாரைப் பின்பற்றி பிரசித்தி பெற்ற ‘ஜெய்பூர் கரணா’ இசையை அடியொற்றி பல்வேறு இந்துஸ்தானி குருக்களிடம் இசை பயின்று வட இந்திய இசை மேடைகளில் கிஷோரி தனது இசைத்திறமையை வெளிப்படுத்த தொடங்கினார். 6 வயதில் தனது தந்தையை இழந்தவர். கிஷோரியையும் அவரது இரு உடன்பிறந்தவர்களையும் தந்தை இல்லாத குறை தெரியாமல் வளர்த்து ஆளாக்கியவர் அவரது அம்மா மோகுபாய். 

கிஷோரி அமோங்கர் பிரபல இந்துஸ்தானி இசை வடிவங்களான கஜல், தும்ரி, பஜன்ஸ் உள்ளிட்டவற்றை ஜெய்பூர் கரணா இசையை அடியொற்றி பாடுவதில் கை தேர்ந்தவர். கிஷோரி மேடையில் பாட வேண்டுமென்றால் அரங்கத்தில் இருக்கும் ரசிகர்கள் உண்மையான இசை ஆர்வலர்களாக இருக்க வேண்டும். அப்படியில்லாமல் அந்தப்பக்கம் இசைப் பிரவாகம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்க இந்தப் பக்கம் ரசிக சிகாமணிகள் தங்களது பிரதாபங்களை சகட்டுமேனிக்கு அளந்து கொண்டு இசைக்கச்சேரிக்கு காது கொடுக்காமல் கண்டதையும் பேசிக் கொண்டிருந்தால் கிஷோரி கடும் கோபம் கொண்டவராகி தனது கச்சேரியையே ரத்து செய்து விடுவாராம். அந்தளவுக்கு தனது இசையை நேசிப்பவராக இருந்தார் அவர் என்கிறார்கள் அவரைப் பற்றி அறிந்தவர்கள். ரசிகர்கள் இசையை ரசிக்கலாம், ஆனால் அவரகளது ரசனை இசைக் கலைஞர்களை இடைஞ்சல் செய்வதாக இருக்கக் கூடாது என்பாராம் கிஷோரி.

கிஷோரிக்கு அந்நாட்களில் இந்தி திரைப்படங்களில் பாடுவதற்கு மிகுந்த விருப்பம் இருந்தது. 1990 ல் வெளிவந்த ‘திருஷ்டி’ இந்தி திரைப்படத்தில் கிஷோரி பாடி இருக்கிறார். மேலும் சில இந்திப் படங்களிலும் கிஷோரி பாடி பாடல்கள் வெளிவந்த நிலையில்... இந்தி திரைப்பட உலகினரின் முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகளை கிஷோரி போன்ற அசல் இசைக் கலைஞரால் ஏற்றுக் கொள்ள முடியாததால் அவர் தனது பாரம்பரிய சாஸ்திரிய சங்கீத உலகிற்கே திரும்பி விட்டார்.

திரை இசையில் கிஷோரி மீண்டும் பங்கு பெறாமல் போனதற்கு அவரது தாயாரையும் சிலர் காரணமாக்குகின்றனர். கிஷோரியின் தாயார் மோகுபாய்க்கு தனது மகளின் திரையிசைப் பிரவேஷம் பிடிக்கவில்லை என்றும், ‘தொடர்ந்து இந்தி திரைப்படங்களில் கிஷோரி பாட்டிக் கொண்டிருந்தால், தனது கச்சேரி மேடைகளில் கிஷோரிக்கு இடமில்லை என அவர் கூறியதாகவும். அதனால் தான் கிஷோரி அமோங்கர் இந்தி திரைப்படங்களில் பாடுவதை நிறுத்தி விட்டார். என்று கூறுபவர்களும் உண்டு. எது எப்படியோ கிஷோரி தான் கற்றுக் கொண்ட தனது இந்துஸ்தானி இசைக்கு பல்வேறு விருதுகள் மூலம் நியாயம் செய்து விட்டார்.

மும்பையில் 1932 ஆம் வருடம் ஏப்ரல் 10 ஆம் நாள் பிறந்த கிஷோரி, தான் பிறந்த அதே ஏப்ரல் மாதத்தில், தனது 85 வது பிறந்த நாளுக்கு சில தினங்களே இருக்கையில் ஏப்ரல் 3 ஆம் தேதி தனது தூக்கத்திலேயே உயிர் நீத்தார். கிஷோரியின் கணவர் ரவீந்திர அமோங்கர், பள்ளி ஆசிரியராக இருந்து 1992 ஆம்வருடத்தில் மறைந்தார். கிஷோரி தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

மறைந்த பிரபல இந்துஸ்தானி இசைக் கலைஞரான கிஷோரி அமோங்கருக்கு சோனியா காந்தி உள்ளிட்ட வட இந்திய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

தமிழ் ரசிகர்களுக்கு கிஷோரி புதியவராக இருந்தாலும், நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டிய பட்டியலில் இருப்பவர் தான்.

எழுபது ஆண்டுகளாக இந்துஸ்தானி இசை மேடைகளில் ஒலித்துக் கொண்டிருந்த கிஷோரிக்கு “கான சரஸ்வதி” விருது கொடுத்து மகிழ்ந்தது வட இந்திய இசை உலகம்.

கிஷோரி பின்பற்றிய ஜெய்பூர் கரணா இசை உத்திக்காக அவருக்கு பத்ம விபூஷன், சாகித்திய அகாதெமி உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இசைக் கலைஞராக மட்டுமல்ல, பாடல்களின் போது பாவங்களை வெளிப்படுத்துவதைக் குறித்து மிக அருமையாக உரையாற்றக் கூடியவர் கிஷோரி. ராகங்கள் மற்றும் அவை வெளிப்படுத்தும் பாவனைகள் குறித்த கிஷோரியின் மேடைப் பேச்சுகள் இன்றளவும் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றவை.

கிஷோரி அமோங்கரின் டாப் டென் பாடல்களைக் கேட்க...

கிஷோரி பாடிய திருஷ்டி இந்தி திரைப்படப் பாடல்...

 

]]>
kishori amonkar, hindusthani vocalist, jaipur gharana, thumri, kazals, bajans, kishori amonkar dies, கிஷோரி அமோங்கர் மறைவு, பிரபல இந்துஸ்தானி இசைக் கலைஞர் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/4/w600X390/1_kishori_amonkar.jpg http://www.dinamani.com/lifestyle/art/2017/apr/04/பிரபல-இந்துஸ்தானி-இசைக்-கலைஞர்-கிஷோரி-அமோங்கர்-மறைவு-2678611.html
2667137 லைஃப்ஸ்டைல் கலைகள் கதக் நடனப் புகழ் மது நட்ராஜ்! Monday, March 20, 2017 02:31 PM +0530  

"நடனம் என்பது நான் என் தாயின் கருவில் இருந்தபோதே உருவானதாகும்'' என்று கூறும் மது நடராஜ் (44) பிரபல கதக் நடனக் கலைஞர் மாயாராவின் புதல்வியாவார். கூடவே பக்கபலமாக உதவியவர் இவரது உறவினர் சித்ரா வேணுகோபால்.

கதக் நடனத்தை முறையாகக் கற்பதற்கு முன் சிறுமியாக இருந்த மதுவுக்கு ஒருவிதமான பயம் இருந்தாலும், தாயுடன் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது அவரது நடன அசைவுகளுடன் எழுந்த சலங்கை ஒலியைக் கேட்டபோதுதான் நடனத்தில் ஆர்வம் ஏற்பட்டதாம்.

"நடனம் எப்போது என்னுடைய வாழ்க்கையில் ஓர் அங்கமாயிற்று என்பது எனக்கு நினைவில்லை. என்னுடைய தாயின் நடனப் பயிற்சிகளையும், நிகழ்ச்சிகளையும் பார்க்க அவரது கைகளைப் பிடித்துக்கொண்டு கூடவே சென்ற போதுதான் இந்த நடனம் என்னை வசீகரித்தது மட்டுமின்றி எனக்கோர் அடையாளத்தையும் கொடுத்தது. இருந்தாலும் எனக்கென்று சுதந்திரமான தனித்துவத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்று தோன்றியது. சில காரணங்களுக்காக நடனத்திலிருந்து விலகியிருக்க நினைத்தேன்.

ஜர்னலிசத்தில் ஆர்வம் காட்டினேன். உடனடியாக ஒரு வேலையைத் தேடவும் விரும்பவில்லை. அம்மாவும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை. ஒருநாள் ஒரு புகழ்பெற்ற நடனக் கலைஞரின் நாட்டிய நிகழ்ச்சியைப் பார்க்க வரும்படி அம்மா அழைத்தார். நானும் போயிருந்தேன். நாட்டியத்தைப் பார்க்கும்போது என் மனதிற்குள் ஏதோ ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியது. என்னுடைய வாழ்க்கையில் நான் செய்ய வேண்டியது என்ன என்ற எண்ணம் தோன்றியது. அப்போதுதான் நடனம் என் வாழ்க்கையின் ஓர் அங்கம் என்பதை உணர்ந்தேன். இப்போது நடனத்திற்காகவே என்னுடைய நேரத்தைச் செலவழிக்கிறேன்'' என்கிறார் மது நடராஜ்.

நியூயார்க் சென்ற மது, இந்திய நடனத்துடன் சமகாலத்திய நடனங்களில் பயிற்சி பெற்றார். இந்தியா திரும்பியதும் இந்திய நடனங்களுடன், கதக் நடனத்திற்கென்று ஓர் அடையாளத்தையும் புகழையும் ஏற்படுத்தித் தந்த தனது தாயார் நடனத்துடன் மேல்நாட்டு நடனத்தையும் இணைத்து கதக் நடனத்திற்கு ஒரு புதிய வடிவத்தைக் கொடுத்தார் மது.

1995-ஆம் ஆண்டு நாட்டியா ஸ்டெம் (ஸ்பேஸ் டைம் எனர்ஜி மூவ்மெண்ட்) என்ற நடனக் குழுவை உருவாக்கி, பெங்களூரில் 45 ஆண்டுகள் பழமை வாய்ந்த கதக் நாட்டியப் பள்ளியுடன் இணைத்தார் மது.

'பெங்களூரில் இந்திய நடனங்களுடன் சமகால நடனங்களையும் இணைத்து நடனக் குழுவை உருவாக்கியபோது, இதுபோன்று வேறு நடனக் குழுவினர் யாரும் இல்லை. எதற்காக இந்திய நடனங்களுடன் மேற்கத்திய நடனங்களை இணைக்க வேண்டும் என்ற கேள்வியை சிலர் எழுப்பினர். ஆனால், எங்கள் புதுமையான முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கதக் நடனத்துடன் ஜாஸ், கிராமிய நடனம், மார்ஷல் ஆர்ட்ஸ், யோகா போன்ற கலைஞர்களும் இணையத் தொடங்கினர். எங்களுடைய மாணவர்களும் இந்தப் புதிய நடனக் கலவையை மிகவும் விரும்பிக் கற்றனர். சுமார் 75 வகையான புதுமையான படைப்புகள் உருவாயின. இந்தப் புதுமையான பாடத்திட்டம் அவர்களுக்கு ஆர்வத்தை அதிகரித்தது.

கதக் நடனத்துடன் மார்ஷல் ஆர்ட், யோகா போன்ற கலைகளைக் கற்க மாணவர்கள் விரும்பினர். எங்கள் புதுமை முயற்சிகள் மேலும் தொடர்ந்தன. மாணவர்கள் தாங்களாகவே புதிய தயாரிப்புகளை உருவாக்கினர். இதன் மூலம் பல சமூகக் கருத்துகள் வெளியாயின. இதற்கென்று நாங்கள் மேடைகளைத் தேடுவதில்லை. எந்த இடத்திலும் எங்கு வேண்டுமானாலும் நிகழ்ச்சிகளை நடத்த முற்பட்டோம். எந்தக் கலையாக இருந்தாலும் அவை சமூகம், அரசியல், கலாசாரம் ஆகியவற்றுடன் ஒட்டியிருப்பதால் மக்களிடையே சுலபமாகப் போய்ச் சேரும்'' என்கிறார் மது.

"நடனப் பயிற்சி பெறுவதற்கு முன் அந்த நடனங்களைப் பற்றிய சரித்திரத்தை அறிவது அவசியமாகும். ஏனெனில் அப்போதுதான் ஒரு நடனக் கலைஞரை உங்களால் உருவாக்க முடியும். என் குழந்தைப் பருவத்தில் தாயுடன் இருந்த தருணங்கள் மறக்க முடியாதவை. அவர் எனக்கு தாயாகவும், ஆசிரியராகவும், வழிகாட்டியாகவும் விளங்கியவர். நான் தற்போது செய்து வரும் முயற்சிகள், கதக் நடனக் கலைக்கு அவர் ஆற்றிய சேவைக்கு காணிக்கையாகும்' என்கிறார் மது நடராஜ்.
 

-பூர்ணிமா

]]>
மது நடராஜ், கதக், kATHAK, Madhu Natraj http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/20/w600X390/NATYA-STEM-DANCE-KAMPNI-1.jpg http://www.dinamani.com/lifestyle/art/2017/mar/16/புதிய-முயற்சிக்கு-கிடைத்த-வரவேற்பு--2667137.html
2657010 லைஃப்ஸ்டைல் கலைகள் சிதம்பரம் நாட்டியாஞ்சலி! Monday, February 27, 2017 05:50 PM +0530  

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் இந்த நாட்டியாஞ்சலி விழா மென்மேலும் வளர்ச்சி பெறும் என்று நடிகையும், பரதநாட்டியக் கலைஞருமான ஸ்வர்ணமால்யா கூறினார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் சார்பில், கடந்த 24-ஆம் தேதி முதல் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் திரைப்பட நடிகையும், பரத நாட்டியக் கலைஞருமான ஸ்வர்ணமால்யா மற்றும் அவரது குழுவினர் பரத நாட்டியம் ஆடினர். பின்னர், அவர் கூறியதாவது:
ஆடல் வல்லான் நடராஜப் பெருமானே நடத்தும் விழாதான் இந்த நாட்டியாஞ்சலி விழா. இது மென்மேலும் வளர்ச்சி பெறும்.
ஆண்டுதோறும் இந்த நாட்டியாஞ்சலி விழாவில் பங்கேற்று, நான் நாட்டியமாடுவேன் என்றார் ஸ்வர்ணமால்யா.

]]>
பரதநாட்டியம், சிதம்பரம் நாட்டியாஞ்சலி, ஸ்வர்ணமால்யா, classical dance, chithambaram natiyanjali, swarnamalya http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/27/w600X390/swarnamalya.jpg http://www.dinamani.com/lifestyle/art/2017/feb/27/சிதம்பரம்-நாட்டியாஞ்சலி-2657010.html
2622724 லைஃப்ஸ்டைல் கலைகள் ஹமீர் கல்யாணியில் கம்பராமாயணம்! DIN Tuesday, December 27, 2016 11:29 AM +0530 நாரத கான சபா சிற்றரங்கத்தில் கடந்த வியாழக்கிழமையன்று காலை 8.30 மணி கச்சேரி சுபா கணேசனுடயது. மீரா சிவராமகிருஷ்ணன் வயலின், குருராகவேந்திரா மிருதங்கம்.

சுபா கணேசன் எம்.எல். வசந்தகுமாரியின் கடைக்குட்டி சீடர். இப்போது டி.என். சேஷகோபாலனிடம் தனது சங்கீதத்தை மேலும் மெருகேற்றிக் கொண்டிருக்கிறார். இவர் நல்ல இசைக் கலைஞர் மட்டுமல்ல, தேர்ந்த இசை ஆச்சார்யரும்கூட. நூற்றுக்கணக்கான இளம் கலைஞர்களை சங்கீதத்தில் தயார் செய்து கொண்டிருக்கிறார்.

சுவாமி உன்னை என்கிற பாபநாசம் சிவனின் ஆரபி ராக வர்ணத்துடன் தொடங்கியது இவரது நிகழ்ச்சி. தமிழில் வர்ணம் பாடியது ஆச்சரியமாக இருந்தது. காரணம், தமிழில் அதிகமாக வர்ணங்கள் கிடையாது என்பதுதான்.

மார்கழி மாதமாகையால், கேதாரம் ராகத்தில் அமைந்த பாடும் பரஞ்சோதி திருவெம்பாவையை அடுத்து, தர்பார் ராகத்தில் கோடீஸ்வரய்யர் இயற்றிய ஸ்ரீவேணுகோபால. அதற்குப் பிறகு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. விஸ்தாரமாக ஹமீர் கல்யாணி ராகத்தை ஆலாபனை செய்துவிட்டு அவர் பாடுவதற்கு எடுத்துக் கொண்டது கம்பராமாயணத்திலிருந்து "அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்' பாடல். இதென்ன கம்பராமாயணத்தை சாகித்யம்போல இவர் பாடுகிறாரே என்கிற வியப்பு அடங்கவே சற்று நேரமாயிற்று. அவ்வளவு அற்புதமாக கம்பராமாயணப் பாடலை ஹமீர் கல்யாணி ராகத்தில் மெட்டமைத்திருக்கிறார்கள். கச்சேரி முடிந்து சுபா கணேசனிடம் விசாரித்தபோதுதான் தெரிந்தது, இதுபோல ஐந்நூறுக்கும் மேற்பட்ட கம்பராமாயணப் பாடல்களுக்கு டி.என். சேஷகோபாலன் மெட்டமைத்து வைத்திருக்கிறார் என்பதும் தனது சீடர்களுக்கு கற்றுத் தருகிறார் என்பதும். டி.என். சேஷகோபாலனுக்கு கம்பனின் ரசிகர்களின் சார்பில் கோடானுகோடி நன்றி.

அன்றைய நிகழ்ச்சியில் முக்கியமான ஆலாபனைக்காக சுபா கணேசன் தேர்ந்தெடுத்துக் கொண்ட ராகம் மோஹனம். எம்.எல்.வி.யின் சீடர். டி.என். சேஷகோபாலனால் பட்டை தீட்டப்படுபவர். அவர் ஆலாபனையில் ராக லட்சணங்களை வெளிப்படுத்தும் நேர்த்தி குறித்து சொல்லவா வேண்டும். அப்பழுக்கில்லாத இலக்கண சுத்தமான ஆலாபனை. பாபநாசம் சிவனின் நாராயண திவ்யநாமம்தான் சாகித்யம். "மாரஜனகன் கருணாலயன்' என்கிற இடத்தில் நிரவல் அமைத்துக்கொண்டு கல்பனா ஸ்வரமும் பாடினார்.

தொடர்ந்து சாருகேசி ராகத்தில் அமைந்த "வசன மிகவேற்றி மறவாதே' என்கிற திருப்புகழும், தண்டபாணி தேசிகர் பாடி பிரபலப்படுத்திய பந்துவராளி ராகத்தில் அமைந்த "அள்ளி உண்டிடலாம் வாரீர்' என்கிற பாடலையும் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

இன்னும்கூட சுபா கணேசன் ஹமீர் கல்யாணியில் இசைத்த கம்பராமாயணப் பாடலை மறக்க முடியவில்லை.

]]>
subha ganeshan, karnatic vocalist, t.n.sesha gobalan, kamba ramayanam poems, hamir kalyani ragam, சுபா கணேசன், கர்நாடக சங்கீதம், டிசம்பர் உற்சவம், டி.என். சேஷ கோபாலன், கம்பராமாயண பாடல்கள், ஹமீர் கல்யாணி ராகம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/12/27/w600X390/subha_ganeshan_1.jpg http://www.dinamani.com/lifestyle/art/2016/dec/27/ஹமீர்-கல்யாணியில்-கம்பராமாயணம்-2622724.html
2618072 லைஃப்ஸ்டைல் கலைகள் சென்னையில் திருவையாறு: இசை சங்கமம்! கார்த்திகா வாசுதேவன் Monday, December 19, 2016 01:02 PM +0530 பன்னிரெண்டாவது ஆண்டாக 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் "சென்னையில் திருவையாறு' இசை விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
இதுகுறித்து லஷ்மண்ஸ்ருதி இசைக்குழு இயக்குநர்களில் ஒருவரும், விழா அமைப்பாளருமான வி.லட்சுமணன், பாடகி ஷோபா சந்திரசேகர், கர்நாடக இசைக் கலைஞர் அருணா சாய்ராம் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பன்னிரெண்டாவது ஆண்டாக நடைபெறவிருக்கும் "சென்னையில் திருவையாறு' இசை விழா ஞாயிற்றுக்கிழமை (டிச. 18) காமராஜர் அரங்கில் தொடங்குகிறது. காலை 11 மணிக்கு, திருப்பாம்புரம் டி.எஸ்.எச்.ராமநாதனின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியுடன் தொடங்கி, மதியம் 2 மணிக்கு பி.எஸ்.நாராயணசாமி தலைமையில் 500- க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒரே மேடையில் பஞ்சரத்ன கீர்த்தனைகளை ஒன்றாக சேர்ந்து பாடுகின்றனர்.
இதைத் தொடர்ந்து, மாலை 3.30 மணிக்கு "சென்னையில் திருவையாறு' இசை விழாவை கர்நாடக இசைக் கலைஞர் வாணி ஜெய்ராம் முறைப்படி தொடங்கி வைக்கிறார். தொடக்க விழாவின் சிறப்பம்சமாக, "சென்னையில் திருவையாறு' அமைப்பின் சார்பாக தலைசிறந்து விளங்கும் கலைஞர் ஒருவருக்கு விருது வழங்கப்படும். இசைச் சேவை, வாழ்நாள் சாதனையை பாராட்டும் விதமாக "இசை ஆழ்வார்' என்ற கௌரவ விருதும், தங்கப்பதக்கமும், நிகழாண்டு வயலின் இசைக் கலைஞர் எல்.சுப்பிரமணியத்துக்கு வழங்கப்படுகிறது.
மாலை 4.45 மணிக்கு அவரின் வயலின் இசை நிகழ்ச்சியோடு, இசை விழா நிகழ்வுகள் தொடங்கி, இரவு 7.30 மணிக்கு ஷோபனாவின் பரதநாட்டிய நிகழ்ச்சியுடன் முதல் நாள் விழா நிறைவு பெறும்.
டிசம்பர் 25-ஆம் தேதி வரை தொடர்ந்து எட்டு நாள்கள் விழா நடைபெறுகிறது. டிசம்பர் 19-ஆம் தேதி முதல் காலை 7 மணி தொடங்கி இரவு 10 மணி வரை நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம். நாள்தோறும் எட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இசை விழாவுடன் இணைந்து பிரம்மாண்டமான உணவு திருவிழா நடைபெறும்.
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டை முன்னிட்டும், எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை முன்னிட்டும் இருவரது மெழுகுச் சிலைகள் லண்டன் வேக்ஸ் அருங்காட்சியத்தில் உள்ளதை போன்று அமைக்கப்படுகிறது.
இந்தத் திருவுருவச் சிலைகளுடன் பொது மக்கள் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சிலைகளை இயக்குநர் பாரதிராஜா திறந்து வைக்கிறார். அரங்கில் 30 அடி உயரமுள்ள மாயா பஜார் கடோத்கஜனின் பிரம்மாண்டமான சிலையும், உணவுத் திருவிழாவில் அமைக்கப்படும்.
இசை ரசிகர்களுக்கான இலவச இரவுப் பேருந்து, முதியவர்களுக்கு முதல் மரியாதை, ரசிகர்களுக்கான அறிவுத் திறன் போட்டியின் மூலம் மெகா பரிசுகள் என பல்வேறு சிறப்பம்சங்கள் விழாவில் இடம்பெறவுள்ளன.
நாள்தோறும் காலை 7, 8.30, 9.45, 11, பிற்பகல் 1, 2.45 மணி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம். மாலை 4.45, இரவு 7.30 மணி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு மட்டும் நுழைவுச் சீட்டு விற்பனை நடைபெறும் என்றனர்.

]]>
சென்னையில் திருவையாறு, லக்‌ஷ்மண் ஸ்ருதி, chennaiyil thiruvaiyaru, lakshman sruthi http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/12/19/w600X390/chennaiyil_thiruvaiyaru.jpg http://www.dinamani.com/lifestyle/art/2016/dec/19/சென்னையில்-திருவையாறு-இசை-சங்கமம்-2618072.html