Dinamani - செய்திகள் - http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3037325 லைஃப்ஸ்டைல் செய்திகள் தனக்குக் கீழே ஒருவன் இருக்க வேண்டும், அவனை மிதித்துக் கொண்டே இருக்க வேண்டும்! இது எப்போது உடையும்?! கார்த்திகா வாசுதேவன் DIN Monday, November 12, 2018 12:34 PM +0530  

சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்களில் இயக்குனர் மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’ மிகச்சிறந்த கவனிக்கப்பட வேண்டிய திரைப்படமாக திரைவிமர்சகர்களாலும், ரசிகர்களாலும் கருதப்படுகிறது. பரியேறும் பெருமாள் எதைப் பற்றிப் பேசுகிறது என்றால்? தமிழகத்தில் நிலவும் ஏன் மொத்த இந்தியாவிலுமே நிலவும் ஜாதி ஏற்றத்தாழ்வுகள் குறித்து ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலான கணிசமான காட்சிகளை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது. அத்திரைப்படத்தின் மதிப்பாய்வில் கலந்து கொண்ட பிரபலங்கள் பலரது பேச்சும் இன்றைய இளைய தலைமுறையினர் கட்டாயம் அறிந்து பின்பற்றத்தக்க வகையில் அமைந்திருந்தன. மதிப்பாய்வில் மேடையேறிப் பேசிய பலருள் ‘பூ’ திரைப்படத்தில் பேனாக்காரராக நடித்த ராமுவின் பேச்சு குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

பிறநாடுகளில் ஜாதி என்பது கிடையாது. அங்கெல்லாம் கருப்பு, வெள்ளை பேதம் மட்டும் தான். நம் நாடு, பக்கத்தில் இருக்கும் இலங்கை உள்ளிட்ட சில சிறு சிறு நாடுகளில் மட்டும் தான் ஜாதி. ஒரு அறிஞர் சொல்கிறார்... 

'Dont walk in front of me, I am not a follower. Dont walk behind me, I am not a lead. walk beside me, and be friends.'
- Albert comes

அங்கே இந்த இரண்டு தான். ஆனால், இங்கே நான்கு இருக்கிறது. மேலே, கீழே, நடுவில் ஒன்று, அதற்கு கீழே ஒன்று என நான்கு இருக்கிறது.

இதை வெகு சுருக்கமாகச் சொல்கிறார் அம்பேத்கார்;

‘எனக்கு ஒரு அடிமை தேவையில்லை, நான் அடிமை இல்லை‘

- என்று;

பெரியார் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுகையில் இன்னும் கொஞ்சம் ஆழமாகச் செல்வார். அவரிருந்த காலகட்டங்கள் வேறு. இன்றைய காலகட்டங்களில் நாம் எல்லோரும் ஓரிடத்தில் சமமாக உட்காரவாவது முடிகிறது. அப்போது அதெல்லாம் கிடையாது. அதை வெகு நுணுக்கமாகச் சொல்கிறார் பெரியார்... எப்படியென்றால்;

‘ஜாதியின் ஆணிவேர் மதம், மதத்தின் ஆணிவேர் வர்ணாசிரமம்,  வர்ணாசிரமத்தின் ஆணிவேர் மநு, மநுவின் ஆணிவேர் கடவுள்!’

என்கிறார். இப்படி எல்லா இடங்களிலும் ஜாதி இருக்கிறது. கடவுள்களில் ஜாதி இருக்கிறது, கோயில்களில் ஜாதி இருக்கிறது. குடிக்கும் தண்ணீரில் ஜாதி இருக்கிறது. குளத்தில் ஜாதி இருக்கிறது. எங்கே இல்லை ஜாதி?!

‘கடவுளை நம்புகிறவர்கள் சொல்வார்கள். எங்கும் நிரந்தரமானவன் கடவுள் என்பது மாதிரி கடவுள் மறுப்பாளர்கள் சொல்கிறார்கள் ‘எங்கும் இருக்கிறது ஜாதி’

- என்று. அந்த மாதிரி தான்.

இந்தப் படத்தில் ஆரம்பத்தில் எனக்கு வாய்ப்பு வந்தது பி.கே ராஜா கதாபாத்திரத்துக்கு, அப்போது நான் வேறொரு படப்பிடிப்பில் இருந்தபடியால் அந்த வாய்ப்பு தவறியது. அடுத்ததாக கதாநாயகனின் தந்தை கதாபாத்திரத்துக்கு வாய்ப்பு வந்தது. அப்போதும் நான் வேறொரு படப்பிடிப்பில் இருந்ததால் என்னால் அதை ஒப்புக் கொள்ள முடியவில்லை. கடைசியாக கிடைத்தது தான் அந்த பிரின்ஸிபால் கதாபாத்திரம்.  இன்று நிறைய பேர் சொல்வது என்னவென்றால், யூ டியூபில் அது தான் அதிகமாகப் பார்க்கப்படுகிறது என்று, அந்தக் கதையினுடைய மையம் அது தான். அந்தக் கதாபாத்திரம் மூலமாக இயக்குனர் மாரி சொல்லிவிட்டார், எனக்கு முன் பேசியவர்கள் எல்லோரும் சொன்னார்கள். ஜாதி ஒழியாது, ஒழியாது... ஒழியாது என்று சரி தான் அது கரெக்ட் தான். ஆனால், உரையாடல் தொடங்கலையே, அது தானே பிரச்னை! க்ளைமாக்ஸில் அதைத்தான் வைத்திருப்பார் மாரி. ‘ நீ நீயாக இருக்கும் வரைக்கும், என்னை நீ நாயாகப் பார்க்கிற வரைக்கும் ஒன்றும் நடக்காது. விவாதத்தைத் தொடர வேண்டும். அதனால் தான் பெரியார் சொல்கிறார்.

‘ஆணால் பெண்ணுக்குக் கிடைக்க வேண்டும் சுதந்திரம், ஆதிக்க ஜாதியினரால் ஒடுக்கப்பட்ட ஜாதியினருக்குக் கிடைக்க வேண்டும் சுதந்திரம்’

ஆனால் அது கிடைக்காது. அப்படியென்றால் இது ஒன்றிணைந்து போராட வேண்டிய விஷயம். பெண்ணடிமை தீர வேண்டுமென்றால், அந்தப் போராட்டத்தில் ஆணும் சேர்ந்து இணைய வேண்டும் அந்தப் போராட்டத்தில்  இடைநிலை ஜாதிகள், தனக்குக் கீழே ஒரு ஜாதி இருக்கிறதே என்று திமிராக இருக்கிறார்கள் வேறு ஒன்றுமில்லை. அதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. பார்ப்பானுக்கு கீழே மூன்று ஜாதி. பார்ப்பானுக்குக் கீழே வைஸ்யனும், சத்ரியனும் தன்னைத் தானே பார்ப்பானைப் போல நினைத்துக் கொள்கிறான். அதைத்தான் பார்ப்பனீயம் என்று பெரியார் சொல்கிறார். வேறு ஒன்றுமில்லை. தனக்குக் கீழே ஒருவன் இருக்க வேண்டும், அவனை மிதித்துக் கொண்டே இருக்க வேண்டும். இது எப்போது உடையும்? இந்த விவாதத்தை இதற்கு முன் வந்த பல திரைப்படங்கள் முன்னெடுத்திருந்தாலும் இந்த திரைப்படம் அதை மிகச்சரியாகவும், தெளிவாகவும், அழுத்தமாகவும் சொல்லி இருக்கிறது. அதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஏனென்றால், இந்தத் திரைப்படம் பார்த்து விட்டு எனக்கு மூன்று திரைப் பிரபலங்கள் தொலைபேசியில் அழைத்துப் பேசினார்கள். அவர்கள் பேசும் போதே எப்படித் தொடங்கினார்கள் என்றால், ‘தோழர் நான் எந்த சமுதாயம் என்று உங்களுக்குத் தெரியும், ஆனால், இந்தப் படம் பார்த்த உடனே தான், நான் உணர்ந்தேன் உண்மையிலேயே நாங்கள் யாரையோ மிதித்துக் கொண்டிருக்கிறோம் என’ - என்று அவர்களே சொல்லி விட்டார்கள். அந்தக் குற்ற உணர்வை ஏற்படுத்தியதற்கான மாரி செல்வராஜுக்கு வாழ்த்துக்கள்! நன்றி!

]]>
பூ ராமு, பரியேறும் பெருமாள் திரைப்படம், மாரி செல்வராஜ், ஜாதி, தீண்டாமை, குற்ற உணர்வு, poo Ramu, mari selvaraj, pariyerum perumal, untouchability, guilty http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/12/w600X390/poo_ramu.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/nov/12/who-creates-untouchablity-how-can-we-breake-this-3037325.html
3033749 லைஃப்ஸ்டைல் செய்திகள் தீபாவளி! மகிழ்ச்சி நன்றியுள்ளம் நிறைந்ததே தீப ஒலி ஒளி! மாலதி சுவாமிநாதன் DIN Monday, November 5, 2018 11:36 AM +0530  

எங்கும் பொலிவூட்டும் பிரகாசமாக வண்ணங்களும், புத்தம் புதிய ஆடைகளும், பூத்துக் குலுங்கும் மலர்களும், கனிகளும் வீட்டு வாசலிலும், உள்ளேயும் வண்ண நிறக் கோலங்கள் அலங்கரிக்க, ஒலி மயமான பட்டாசுகளுடன் நெஞ்சார்ந்த சிரிப்பு, ஆர்வம், ஒளிவூட்டும் மகிழ்ச்சி நிரம்பியதே தீபாவளி!

பண்டிகைகள் பல இருந்தாலும் தீபாவளியின் தனித்தன்மையே எல்லா வயதினரும் இதன் வருகைக்காக ஆர்வத்துடன் காத்திருந்து, மிகுந்த ஈடுபாட்டுடன் ஏற்பாடுகள் செய்து கொண்டாடுவதுதான். இதுவா இல்லை அதுவா; இப்படியா, ஊம் அப்படியா என்று எல்லாருடன் ஆலோசனை பல வாரங்கள் நடந்து கொண்டிருக்கும், கொஞ்சமும் சலிப்பே தட்டாமல்!

இந்த ஒன்று கூடிச் செய்வது தீபாவளிக்கு மட்டுமே உரியது! வரும் நாட்களில், இந்த உணர்ச்சியை தக்க வைப்பது நம் கையில்!

தீபாவளியின் அழகு: ‘எனது’ என்பது அல்ல ‘நமது’ என்பதில் அடங்கும்!

தீபாவளி கொடுக்கும் சந்தர்ப்பங்கள், வாய்ப்புகள்

தீபாவளி பண்டிகை என்றாலே பகிர்ந்து கொள்வது. பெற்றுக் கொள்வதற்கு மேல் பகிர்ந்து கொள்வதில் இருக்கும் ஆனந்தம் இனிதே! நம் உறவினர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், நம் உதவியாளர்கள், நமக்கு என்று பணிபுரியும் அரசாங்க ஊழியர்கள் (போஸ்ட், சுற்றுச்சூழல் காப்போர்) என்ற பலருக்கும் நாம் தயாரித்த இனிப்பு - காரம் - தீபாவளி மருந்து, தாராளமாகப் பகிர்ந்து கொள்வோம். இந்த ஒரு நாள், நாம் அணியும் உடை போல், உண்ணும் உணவும் போல் மற்றவர்களுக்கும் இருந்தால் நல்லது என்று எண்ணி, தருவதும் வழக்கமான பழக்கமாகியது.

இப்படிப் பகிர்ந்து கொள்ள நாம் உறவினருடன் பல்வேறு இனிப்பு - காரமும், தீபாவளி மருந்தும் / லேகியம் செய்ய பல கைகள் சேருகையில், வகைகள் கூடுகின்றன. நேரம் போவது தெரியாமல் இப்படி ஒரு உல்லாசமான சந்தர்ப்பம் தீபாவளியின் தயாரிப்பினால் அமைகிறது. இப்படி, சேர்ந்து தயார் செய்வதில் பல நாட்கள் ஒன்று கூடும் தருணங்கள் நம்மை மேலும் ஒன்றிணைக்கும். ஒவ்வொரு தீபாவளிக்கும் இப்படி எல்லோரும் கூடி பல வகை பலகாரம் செய்து, பகிர்ந்து, ஒவ்வொருவரின் திறனை பார்த்து, கற்றுக் கொள்வதும், சரி செய்வதும், இதில் அடங்கும். இந்த ஒன்றுகூடுதல் தன் பங்குக்குச் சுவையை கூட்டி விடும்!

புதிய ஆடைகள் வாங்கித் தருவது இன்னும் ஒரு மன நிறைவு அளிக்கும். தீபாவளிக்காக நாம் நமக்கு வாங்கும் பொழுது இதில் தன்னலம் சேராது. மற்றவர்களுக்காக அவர்களுடன் சென்று ஆடைகள் எடுப்பதும் ஒரு சுகம். அதே போல், நம் வீட்டின் பெரியோர், சிறியோர்க்கு ஆடைகள் தேடி, பொருத்தமாக எடுத்து, அதைப் பார்த்து அவர்களின் புன்முறுவலில் நமக்குக் கிடைக்கும் மிகப் பெரிய சந்தோஷமே.

பட்டாசு வெடிக்கும் பொழுது, நம் சுற்றுச்சூழலை கருதிச் செய்தால், நம்முடன் வளரும் செடி, கொடி, மரம், விலங்குகளுக்குத் தெரிவிக்கும் மரியாதையும், அன்புமாகும். பட்டாசு சத்தம் சொல்லும், நம் இன்ப நிலையை. பட்டாசின் ஒலி போல் விளங்கும் அன்று முழுவதும் நம்முடைய உற்சாகமும், சிரிப்பும், பண்பும், அன்பும்.

கொடுக்க சந்தர்ப்பம்!

தீபாவளி வரும் பொழுது எல்லோருடனும் பகிர்ந்து கொள்வதால், சமநிலை மேலோங்கி இருக்கும். இதனால் தான், நாம் மனப்பூர்வமான சந்தோஷத்துடன் நம் வீட்டில் வேலை செய்வோருக்கும், நம் தொழிற்சாலையிலும், வேலை செய்யும் இடங்களில் எங்கும் உதவும் ஒவ்வொரு உதவியாளர்க்கும், வேறுபாடின்றி, புத்தாடைகள், இனிப்பு - காரம் இல்லா விட்டால் சில சமயங்களில் ஒரு மாத சம்பளம் அதாவது போனஸ், பட்டாசுடன் கொடுப்பதுண்டு. கொடுப்பவர்க்கும், வாங்குபவரின் உறவு இன்னும் கூடுகிறது. இந்த ஈர்ப்பு, நம்மை மற்றவர்கள் பற்றி சிந்தித்து செயல் செய்ய வைப்பது, தீபாவளியின் யுக்தியாகும்.

தீபாவளி என்றால் குடும்பத்தில் எல்லோரும் பங்கேற்று, ஏதேனும் ஒரு விஷயத்திருக்கு தாராளமாக நேரம் ஒதுக்குவார்கள் - மற்றவருடன் இணைந்து செயல்படவே! கொஞ்சமும் சலிக்காமல் நேரத்தை அள்ளிக் கொடுப்போம். அதே போல், தீபாவளிக்கு முன்னேற்பாடுகள் செய்யும் பொழுது பல வேலைகள் சேர்ந்தாலும், இந்தத் தீபாவளி வேலைக்கே முக்கியத்துவம் கூடும்.

தீபாவளி தினத்தன்று நம் கொண்டாட்டம் ஒரு பக்கம் இருந்து கொண்டே இருக்கும். அதே சமயத்தில், நாம் நம் குடும்பத்தினரை, உறவினரை, நண்பர்களை, கை நிறைய இனிப்புகளுடன் போய் வாழ்த்தி வருவோம். இத்துடன், குறுஞ்செய்தி, மற்றும் பல சமூக இணையத்தளத்திலும் பகிர்ந்து கொள்வோம்.

தீபாவளி: நன்றியுணர்வும் ஆசியும்

நாம் எல்லோருடன் கூடி, தயாரிப்பதும், பல பொருட்கள் வாங்குவதும், தீபாவளி வருவதற்கு பல வாரங்கள் முன்பே ஆரம்பமாகும். இதில் பளிச் என்று தெரிவது என்னவென்றால், இந்தப் பண்டிகையை நம்மையும் அறியாமலேயே ஒரு நன்றியுடைய பாவத்தில் நாம் அணிகிறோம் என்று. உதாரணத்திற்கு, நாம் உடை வாங்கும் பொழுது, நம் முதல் கவனம் ‘போன தடவை என்ன வாங்கினோம்? ஓகோ அது. சரி, அப்போது, இந்தத் தடவை இதை வங்கலாமே' என்று! ஏன் இப்படி அணுகுகிறோம்? சலிப்போ, மனவெறுப்போ இல்லாமல், பழகிப் போன வேலையாகக் கருதாமல், உற்சாகத்துடன் அணுகுகிறோம்.

மேலும், வருடம் பூராகவும் பலமுறை பலர் நமக்குத் தோள் கொடுத்திருக்கிறார்கள். அதற்கு இப்பொழுது நாம் திரும்பி “நன்றி” செலுத்தும் தருணம் இதுவே! இந்த உதவிகளை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இவர்கள் செய்திருப்பார்கள். நாம், நம் பங்குக்கு அந்த நல்ல எண்ணத்தைக் கொண்டாடவே நன்றி செலுத்துகிறோம்.

தீபாவளி கொண்டாட்டம், நாம் சேமித்தது என்னவென்று கணக்கெடுக்கும் நாளாகும். பொருட்கள் வாங்க, வழங்க பணம் ஒரு சேமிப்பு. வழங்குவதற்கு நாம் சேமித்த உறவுகள் முக்கியமாகும். நன்மை செய்ய துண்டுதலும் மனதின் சேமிப்பே. இந்த சேமிப்பின் சந்தோஷத்தை நாம் பகிர்ந்து கொள்வதிலும், சந்தோஷத்தை இரட்டிப்பாக்கும். அதே போல், நம்மைத் தேடி வரும் வாழ்த்துக்கள், நமக்கு இன்பத்தை உண்டாக்கும்.

நாம் எத்தனைப் பேரின்பத்தை பகிர்ந்து கொள்கிறோம் என்று விரல் விட்டு எண்ண எண்ண, இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போவதும் அழகே! இதில், நமக்குத் தெரிந்தவருக்கும் சரி, எங்கோ விடுதியில் தங்கும் நபர்களுக்கும் கூட நம் பொருட்களை பகிர்ந்து கொள்வது மன நிறைவு தரும். நாம் பகிர்ந்த பொருட்களால் அவர்களின் சந்தோஷம் நம் தீபாவளியின் ஒலி ஒளியைக் கூட்டி விடும் (இதுதான் நாம் வெகு துரத்தில் வானத்தில் பார்க்கும் பட்டாசுகளோ?). தீபாவளியன்று இந்தப் பண்டிகைக்கு ஏற்றாற் போல் பலரின் மன-விளக்கை ஏற்றி ப்ரகாசிப்போம்!

தீபாவளி அன்று செய்நன்றி (ஆங்கிலத்தில் gratitude) தெரிவிக்க நல்ல வாய்ப்பாகும். சந்தோஷம், சிறியதோ, பெரியதோ, அதை ஞாபகத்தில் வைத்து வாழ்த்துவது தீபாவளியின் இன்னும் ஒரு ஒலி ஒளியாகும்.

நாம் இப்படி மன நிறைவுடன் சந்தோஷமாக கூடி இருந்தால், நம் மூளை பல நிற பூங்கொத்து போல் பூத்துக் குலுங்கும் என்றும், நம் உடல்-மன நலம் கூடும் என்றும் விஞ்ஞானம் கூறுகிறது. நமக்கு, நம் கலாச்சார செய்முறையில் ஒரு அனுபவமாகக் கொடுத்திருப்பதே நமது இந்தத் தீபாவளி!

தீபாவளி, மகிழ்ச்சி் நன்றியுள்ளம் நிறைந்ததே தீப ஒலி ஒளி!

]]>
Diwali, தீபாவளி, deepavali, தீபம், Festival, ஒளி, lights http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/5/w600X390/download_18.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/nov/05/தீபாவளி-மகிழ்ச்சி்-நன்றியுள்ளம்-நிறைந்ததே-தீப-ஒலி-ஒளி-3033749.html
3033252 லைஃப்ஸ்டைல் செய்திகள் ஒரு கதை கேளுங்க! DIN DIN Sunday, November 4, 2018 04:00 PM +0530 ஒரு ஏழைக் குடும்பத்தில் ராமன் என்ற சிறுவன் இருந்தான். சிறுவயதிலேயே தந்தையை இழந்தான். அவனுடைய தாய் மகனை அழைத்துக் கொண்டு பிறந்த ஊரான தெனாலிக்கு புறப்பட்டார். அங்கு ராமன் தாய் மாமா வீட்டில் வளர்ந்தான். படிப்பு வரவில்லை. ஆனால், நகைச்சுவையாக பேசும் திறமை இருந்தது.

ராமன் விடலைப் பருவத்தை கடந்த பிறகு குடும்பத்தைக் காப்பாற்ற என்ன செய்வது என்ற கவலை எழுந்தது.

ஒரு நாள் தெனாலிக்கு ஒரு துறவி வந்தார். அவரிடம் தன் நிலையைச் சொல்லி வருந்தினான். இரக்கப்பட்ட துறவி, காளியின் மூல மந்திரத்தை உபதேசித்து, 'இந்த மந்திரத்தை நம்பிக்கையுடன் ஜெபித்துவா. காளி உனக்கு பிரசன்னமாகி வேண்டும் வரம் தருவாள்' என்று வழி காட்டினார்.

அதன்படி ராமனும் அந்த ஊரில் இருந்த காளி கோயிலுக்குச் சென்றான். மந்திரத்தை 108 முறை ஜெபித்து விட்டு கண்களைத் திறந்து பார்த்தான். காளியின் தரிசனம் கிடைக்கவில்லை. இருந்தாலும் செய்ததை விடாமல் தொடர்ந்தான்.

இரவாகிவிட்டது. ராமன் கோயிலை விட்டு நகரவில்லை. ஒருவழியாக காளி அவன் எதிரில் தோன்றினாள். 

'உனக்கு என்ன வேண்டும்' என்று கேட்டாள்.

'தாயே! நான் வறுமையில் வாடுகிறேன். அதைப் போக்குங்கள். படிக்காத எனக்கு நல்லறிவும் தாருங்கள்' என்றான்.

இதைக் கேட்ட காளி கலகலவெனச் சிரித்தாள்.

அடேய்! 'உனக்கு பேராசைதான். கல்வியும் வேண்டும். எல்லாமும் வேண்டுமா?'
என்றாள்.

'ஆமாம், தாயே புகழ் பெற கல்வி வேண்டும். வறுமை நீங்கப் பொருள் வேண்டும்' என்றான்.

காளி தன் இரண்டு கைகளையும் நீட்டினாள். அதில் இரண்டு பால் கிண்ணங்கள் இருந்தன. அந்தக் கிண்ணங்கள் அவனிடம் தந்தாள் காளி.

'ராமா இதிலுள்ள பால் விசேஷமானது. வலது கிண்ணம் கல்வி. இடது கிண்ணம் செல்வம். நீ ஒரு கிண்ணத்திலுள்ள பாலை மட்டும் இப்போது குடித்துக் கொள்ளலாம். எது தேவை என்பதை நீயே முடிவு செய்து கொள்' என்றாள்.

ராமன், நான் இரண்டையும் தானே கேட்டேன். ஒன்றை மட்டும் குடிக்கச் சொன்னால் எப்படி? எதை எடுப்பது என்று தெரியவில்லையே என்று யோசித்தபடி நின்றான்.

பிறகு சட்டென்று இடது கையிலிருந்த பாலையும் (செல்வம்) வலது கையிலிருந்த பாலையும் (கல்வி) கலந்து வேகமாகக் குடித்துவிட்டான். அது கண்டு காளியே திகைத்துப் போனாள். 

'அடேய்! உன்னை நான் ஒரு கிண்ணத்துப் பாலைத்தானே குடிக்கச் சொன்னேன்'.

'ஆமாம் தாயே! நானும் ஒரு கிண்ணத்துப் பாலைத்தானே குடித்தேன்' என்றான்.

'ஏன் இரண்டையும் ஒன்றாகக் கலந்தாய்?'

'கலக்கக் கூடாது என்று நீங்கள் சொல்லவில்லையே அம்மா!'

அவனது புத்திசாலித்தனத்தால் மகிழ்ந்த காளி! 'பாலகா நான் உக்கிர தேவதை. என்னிடம் வரம்பு மீறினால் அவர்களை அழித்து விடுவேன். என்பதை நீ அறிவாய். ஆனால், கோவக்காரியான என்னையே மடக்கி விட்டாயே! ஏமாற்றினாலும் நீ அறிவில் சிறந்தவன். 'விகடகவி' என்ற பெயருடன் வாழ்வில் சிறந்து விளங்குவாய்' என்று வரம் அளித்து மறைந்தாள்.

இந்த ராமன்தான் பிற்காலத்தில் கிருஷ்ண தேவராயரின் அரண்மனையில் விகடகவி தெனாலி ராமனாக புகழ் பெற்று விளங்கினார். புத்திசாலிகளைத் தேடி கடவுளும் வருகிறார் என்பது புரிகிறதல்லவா
- மயிலை மாதவன்

]]>
tenali raman, raman, short story, தெனாலி ராமன், காளி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/4/w600X390/download.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/nov/04/ஒரு-கதை-கேளுங்க-3033252.html
3026886 லைஃப்ஸ்டைல் செய்திகள் உங்களுக்கு ஏற்பட்டிருக்கா ‘சில்லுன்னு’ இப்படி ஒரு அனுபவம்?! பிடிங்க அதைக் கடந்து வர எளிய டிப்ஸ்! RKV DIN Thursday, October 25, 2018 01:40 PM +0530  

முகநூலில் தோழி ஒருவர் ‘Nose Warmer' குறித்துப் பகிர்ந்திருந்தார். அடடே! என்று ஆச்சர்யமாக இருந்தது. இப்படி ஒரு வசதி இருப்பதே தெரியாமல் சில்லிடும் மூக்குடன் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறோம் இல்லையா நம்மில் பலரும். அவர்களுக்கெல்லாம் உதவும் பொருட்டு இதை அறிமுகப்படுத்துகிறோம். 

சிலருக்கு மழை, குளிர் என்று சீதோஷ்ண நிலையில் சிறு மாற்றம் நிகழ்ந்தாலும் போதும் உடனடியாக மூக்கு சில்லிட்டுப் போகும். உடலில் வேறெந்தப் பாகமும் குளிர்கிறதோ இல்லையோ... மூக்கு மாத்திரம் தொட்டால் காஷ்மீர் குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பது போல சில்லிட்டுப் போயிருக்கும். அவர்கள் காரிலோ, AC பஸ்ஸிலோ பயணிக்கையில் மூக்கை உறிஞ்சிக் கொண்டே வருவார்கள், பிறகு உள்ளங்கையால் மூக்கின் நுனியை அழுத்தித் தேய்த்து விட்டுக் கொண்டே இருந்தாலன்றி அந்த சில்லிடல் மாறவே மாறாது. கடைசியில் இது கடுமையான சளித்தொல்லை அல்லது காய்ச்சலில் கொண்டு விடும். சரி இந்த நிலையை தவிர்ப்பது எப்படி என்கிறீர்களா? கூகுளில் தேடினால் அழகழகான நோஸ் வார்மர்கள் கிடைக்கின்றன. பார்க்க ஸ்கார்ஃப் போலவே இருக்கிறது. ஸ்கார்ஃப் பின்னுவதில் ஆர்வம் இருப்பவர்கள் கூகுளில் ஆர்டர் செய்யாமல் தாங்களே உல்லன் நூல் வாங்கி தங்களுக்கென எக்ஸ்க்ளூஸிவ்வாக இப்படி ஒரு நோஸ் வார்மரை பின்னி வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பிறந்தநாள், நட்பு நாள் என்று இதையே பரிசாகவும் அளிக்கலாம். அத்தனை பயனுள்ளதாக இருக்கக் கூடும் இந்த நோஸ் வார்மர்கள்.

கடைகளில் வாங்குவதை விட நாமே பின்னிக் கொள்ளும் போது நமக்குப் பிடித்த நிறங்களில் பிடித்த டிஸைன்களில் அழகழகான டிஸைனர் நோஸ் வார்மர்களை உருவாக்கலாம்.

]]>
nose warmers, cold climate , nose shield, nose production, cold, running nose, நோஸ் வார்மர், மூக்கு பாதுகாப்பு உறை, சளி, மூக்கு ஒழுகுதல் பிரச்னை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/25/w600X390/nose_warmerr.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/oct/25/intro-about-nose-warmers-3026886.html
3026864 லைஃப்ஸ்டைல் செய்திகள் கண்ணாடிப் பாத்திரங்களில் சிறு கீறல் விழுந்தால் என்ன செய்யலாம்? DIN DIN Thursday, October 25, 2018 11:11 AM +0530 டைனிங் ரூமில் கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி புதினா இலைகளைப் போட்டு வைத்தால் ஈ தொல்லை இருக்காது.

உருளைக் கிழங்கை வெங்காயத்துடன் கலந்து கூடையில் வைத்தால் பத்து நாட்களுக்கு மேல் கெடாமல் இருக்கும்.

காய்ச்சின பாலோடு சிறிது பச்சைப் பாலை சேர்த்து உறை ஊற்றி வைத்தால் தயிர் கெட்டியாக கிடைக்கும்.

வெள்ளைத் துணிகள் பளிச்சிட வெள்ளைத் துணிகளை துவைக்கும் போது தண்ணீரில் சிறிது டேபிள் சால்ட் சேர்த்துக்கொண்டால் துணிகள் வெள்ளை வெளேர் என்று இருக்கும்.

மிதியடிக்கு அடியில் அதே சைசில் பழைய நியூஸ் பேப்பரை வெட்டி வைத்து விட்டால் மிதியடிகள் அழுக்கு எல்லாம் பேப்பரில் சேர்ந்திருக்கும்.

கொஞ்சம் நீரில் கடுகு எண்ணெய் கலந்து மிருதுவான துணியில் நனைத்து மரச் சாமான்களை துடைத்தால் வார்னிஷ் செய்தது போல இருக்கும்.

பழைய புத்தகங்களை பூச்சி அரிப்பில் இருந்து பாதுகாக்க புத்தக அலமாரியில் சிறிதளவு புகையிலை தூவினால் பூச்சி அரிப்பு இருக்காது.

பூரி மாவை அப்பளமிட்டு பிரிட்ஜில் வைத்து பிறகு பொரித்தால் போட்டவுடன் பொரியும். எண்ணெய் குடிக்காது.

தயிரைக் கடைந்து சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்து மறுபடி கடைந்தால் வெண்ணெய் சீக்கிரமாக திரண்டு வரும்.

கண்ணாடிப் பாத்திரங்களில் சிறு கீறல் விழுந்தால் அந்த இடத்தில் டூத் பேஸ்ட்டைத் தேய்த்தால் கீறல் மறைந்து விடும்.

ஆடையில் சுவிங்கம் ஒட்டிக்கொண்டால் ஐஸ் கட்டியை அந்த இடத்தில் சற்று தேய்த்துப் பார்த்தால் எளிதில் வந்துவிடும்

பட்டுப்புடவை, பட்டுச் சட்டை முதலியவற்றை வாசனை சோப்பு போட்டுத்தான் துவைக்க வேண்டும். ஏனெனில் அதில்தான் காரத் தன்மை குறைவு. பட்டுத்துணிகளுக்கு சேதம் வராது.

(முத்துக் குவியல் -என்ற நூலிலிருந்து)

]]>
glass, broken glass, tips, டிப்ஸ், உடைந்த கண்ணாடி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/25/w600X390/vase-breaking.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/oct/25/how-to-fix-broken-glass-vessels-3026864.html
3026255 லைஃப்ஸ்டைல் செய்திகள் சதா சர்வ காலமும் ஸ்மார்ட்ஃபோனும் கையுமாக இருக்கிறீர்களா? இது உங்களுக்கான எச்சரிக்கை ரிப்போர்ட்! சினேகா DIN Wednesday, October 24, 2018 05:58 PM +0530  

ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தும் பெரும்பாலான இளைஞர்கள் சதா சர்வகாலமும் அதிலே லயித்துக் கிடக்கிறார்கள். இளைஞர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகள், பெரியவர்கள் என பலரும் இதற்கு அடிமையாகிக் கிடப்பதைப் பார்க்கிறோம். உண்ணும் போதும் உறங்கும் போதும் கூட இந்த ஃபோனுடன் தான் பொழுதுகள் கழிகின்றன. இது எத்தகைய ஆபத்துக்களை வரவழைக்கும் என்று தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் அந்தத் தவறுகளைத் திரும்பத் திரும்பச் செய்கின்றனர். தேவையான சமயங்களில் மட்டும் போனில் பேசிவிட்டு அல்லது பயன்படுத்திவிட்டு அதைத் தூர வைப்பது உடல் மற்றும் மனதுக்கு நல்லது. அண்மையில் வெளிவந்த இந்த செய்தியைப் படித்தாலாவது அலைபேசியை சற்று அணைத்து வைக்கிறோமா என்று பார்க்கலாம்.

ஒரு வாரமாக ஓய்வின்றி தொடர்ந்து ஸ்மார்ட்போன் உபயோகித்து வந்த பெண்மணி, திடீரென விரல்களை மடக்க முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் ஃபோன்களை மிக அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைக்கு உதாரணமாக சீனாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சீனாவில் சங்ஷா என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே தனது ஸ்மார்ட்ஃபோனில் மூழ்கியிருந்துள்ளார். உறங்கும் நேரத்தைத் தவிர மற்ற சமயங்கள் முழுவதும் போனும் கையுமாக கிட்டத்தட்ட ஒரு வாரம் இருந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக அவருக்கு வலது கையில் தாங்க முடியாத அளவிற்கு வலியெடுத்துள்ளது. கைவிரல்கள் அதிக வலி எடுத்தது மட்டுமல்லாமல் இயங்கவும் இல்லை. பதறியடித்து மருத்துவமனைக்குச் சென்றவருக்கு அதைவிட அதிர்ச்சி காத்திருந்தது. 'டெனோசினோவிடிஸ்' என்ற நரம்பியல் நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததை பரிசோதித்து கண்டறிந்தனர். தொடர் சிகிச்சைக்குப் பிறகே மருத்துவர்களின் அதீத கவனிப்பில் அந்தப் பெண்மணிக்கு மீண்டும் விரல்கள் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளது. முக்கியமாக இனி இந்தப் பிரச்னை மறுபடியும் வராமல் இருக்க வேண்டுமெனில் ஸ்மார்ட்போனை தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்த கூறியுள்ளனர்.

உலகம் முழுவதும் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு அடிமையாவோர் எண்ணிக்கை அதி விரைவாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதே வேளையில் அவர்களுக்கு நோய்களும் பிரச்னைகளும் கண்ணுக்குத் தெரியாமல் உருவாகி வருகிறது. சீனப் பெண்மணிக்கு நேர்ந்தது போல் நீண்ட நேர செல்ஃபோன் பயன்பாட்டால் கை விரல் பாதிப்பு யாருக்கு வேண்டும்னாலும் வரலாம். 

]]>
Smart phone, phone, cell phone, செல்ஃபோன், ஸ்மார்ட்ஃபோன், அலைபேசி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/24/w600X390/cell_phone.JPG http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/oct/24/excess-usage-of-smart-phones-3026255.html
3026248 லைஃப்ஸ்டைல் செய்திகள் உங்கள் தங்கம், வெள்ளி, முத்து நகைகளை புத்தம் புதியதாக வைத்திருக்க இதோ சில டிப்ஸ்! DIN DIN Wednesday, October 24, 2018 04:29 PM +0530 வெள்ளி நகைகள்

அரை டம்ளர் தண்ணீரில் ஷாம்பூ போட்டுக் குலுக்கி அரைமணி நேரம் கழித்த பிறகு அதில் வெள்ளி கொலுசுகளைப் போட்டுக் ஊறவைத்து தேய்த்துவிட்டு, சுத்தமான  தண்ணீரில் தேய்த்துக் கழுவி ஈரம் போகத் துடைத்தால் பளபளவென்று இருக்கும்.

வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைத்தால் அவை கறுப்பாவதைத் தவிர்க்கலாம்.

குத்துவிளக்கு, காமாட்சி விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.

புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரைமணி நேரம் ஊறப்போட்டு பின்  எடுத்து துலக்கினால் அவை புதியவை போல்  இருக்கும்.

முத்து நகைகள்

முத்துப் பதித்த நகைகளை மற்ற நகைகளோடு சேர்த்து வைக்கும் போது முத்துகள் சேதமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே முத்துகள்  பதித்த நகைகளை தனியாக ஒரு பெட்டியில் வைப்பதே நல்லது.

முத்துகள் பதித்த நகைகளை நீரில் அமிழ்த்திக் கழுவக்கூடாது. அப்படிக் கழுவினால் முத்துகள் ஒளியிழக்கும்.  அது போன்று,  வாசனைத் திரவியங்கள் பட்டால், முத்துகளின் பொலிவு நாளடைவில் மங்கி விடும். எனவே, ஒப்பனைகள் முடிந்த பின் முத்து நகைகளை அணிவதே நல்லது.

முத்து நகைகளை பயன்படுத்தாத போது,  அவற்றை தூய்மையான வெள்ளை நிற காட்டன் துணியினுள் வைக்க வேண்டும். பேப்பர் அல்லது மற்ற துணிகளுக்குள் வைத்தால், முத்துக்களின் நிறம் நாளடைவில் மங்கிவிடும்.

கற்கள் பதித்த நகைகள்

கற்கள் பதித்த நகைகளை தினசரி அணிந்தால்,  ஒளி மங்கிவிடும்.  இதற்கு சிறிது நீலக் கலர் பற்பசையை கற்கள் மீது பூசி, அழுத்தம் கொடுக்காமல் பிரஷ்ஷால் மெதுவாக தேய்க்க வேண்டும்.  பின்பு தூய நீரில் கழுவி, நீராவியில் காண்பித்தால், அவற்றிலுள்ள எண்ணெய்ப்  பிசுக்கு போன்றவை வெளியேறிவிடும்.

கற்களில் கீறல் விழுவதைத்  தவிர்க்க,  டிஷ்யூ பேப்பர் அல்லது மென்மையான பனியன் துணி ஆகியவற்றையே கற்கள் பதித்த நகைகளை சுத்தம்  செய்ய பயன்படுத்த வேண்டும்.

தங்க நகைகள்

தங்க நகைகளை அதற்கென இருக்கும் பெட்டியில் வைக்க வேண்டும். அப்போதுதான், அதில் கல் மற்றும் முத்து போன்றவை பதிக்கப்பட்டிருந்தால் அவை விழாமல் இருக்கும்.  

தங்க நகைகளுடன் பிற கவரிங் நகைகளைச் சேர்த்து அணியக் கூடாது.  அவ்வாறு அணிந்தால், தங்க நகைகள் சீக்கிரம் தேய்ந்து விடும்.

பூந்திக் கொட்டையை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரால் தங்க நகைகளைக் கழுவலாம். இப்படிச் செய்தால், அழுக்கு நீங்கி நகைகள் பளபளப்பாக இருக்கும்.

நாம் அன்றாடம் அணியும் செயின், தோடு, மூக்குத்தி ஆகியவற்றில் அதிகமாக அழுக்குகள் சேர்ந்துவிடும். எனவே இவற்றை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தரமான ஷாம்பூ  அல்லது சோப்புத் தூளால் தேய்த்து தூய நீரில் கழுவ வேண்டும். பின் இவற்றை நீராவியில் காண்பித்தால், அழுக்குகள் நீங்கி, பளபளவென்று ஜொலிக்கும்.

]]>
jewels, pearl, gold, தங்க நகை, வெள்ளி நகை, ஆபரணம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/24/w600X390/Gold-Limit_IndiaTVPaisa-860x508.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/oct/24/how-to-clean-gold-and-silver-ornaments-3026248.html
3024821 லைஃப்ஸ்டைல் செய்திகள் தினமணி இணையதளத்தின் ‘உங்கள் வீட்டு கொலு இன்ஸ்டாகிராம் புகைப்படப் போட்டி’ புகைப்படங்கள் DIN DIN Monday, October 22, 2018 05:39 PM +0530  

நவராத்திரி நம்மில் பலர் கொண்டாடி மகிழும் ஒரு பண்டிகை. இதை முன்னிட்டு, தினமணி இணையதளத்தின் ‘இன்ஸ்டாகிராம் புகைப்படப் போட்டி’க்கு வாசகர்கள் அனுப்பிய சிறந்த புகைப்படங்கள் இங்கே இடம்பெற்றுள்ளன.

 

பெயர்: கே. நடராஜன்

கேமரா: Samsung mobile

நவராத்திரி வந்து விட்டால் வீடே சுறு சுறுப்பாகி விடுகிறது. குழந்தைகள் மட்டும் அல்ல... வயதான " பெரிய குழந்தைகளும் " (என்னையும், என் மனைவியும் சேர்த்துதான்!) பால்ய வீதியில் நடை பயின்று மலரும் பால்ய நினைவுடன் கொலு படிக்கட்டு அமைத்து, பொம்மை அடுக்கி அழகு பார்க்கும் நேரம் ,வயதான பெரியவர்களுக்கும் ஒரு பொன்னான நேரமே!

எங்கள் வீட்டுக் கொலுவில் "தீம் " ஒன்றும் இருக்காது. எங்கள் இருவரின் "டீம் ஒர்க்" மட்டுமே இருக்கும்!... சுண்டல் உண்டு தினமும்! 

 

பெயர்: கீர்த்தனா

கேமரா: Samsung Galaxy J8

நாங்கள் கடந்த 40 ஆண்டுகளாக நவராத்திரி பண்டிகையை கொலு அலங்கரித்து சிறப்பாக கொண்டாடி வருகிறோம்.

 

பெயர்: சௌமினி பிகேஎஸ், பெரம்பூர் - சென்னை.

கேமரா: Nikon DSLR 5300

பால கிருஷ்ணன் முதல் ராதா கிருஷ்ணன் வரை கிருஷ்ண லீலைகளை மையப்படுத்தி இம்முறை எங்கள் வீட்டு கொலு அலங்கரிக்கப்பட்டது. 

பூங்கா அலங்காரத்தில் கிருஷ்ண லீலைகளை டிரைவ் இன் திரையரங்கில் இருந்து கண்டு களிக்கும விதமாகவும், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் விஷன் 2020 அடிப்படையில் விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக பசுமை சமூகம் அமைத்துள்ளேன். 

 

உங்களுக்கு புகைப்படக் கலையில் ஆர்வம் இருக்கிறதா? நீங்கள் எடுக்கும் புகைப்படங்கள் உங்கள் கணினி அல்லது மொபைலில் மட்டும் தேங்கிப் போகாமல் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் எனில் அதற்கான களமாக தினமணி இணையதளத்தின் ‘இன்ஸ்டாகிராம் புகைப்படப் போட்டி’யை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அந்தந்த தலைப்புக்கு ஏற்ற வகையில் புகைப்படம் இருக்க வேண்டும். தனி நபர்களை புகைப்படம் எடுத்து போட்டிக்கு அனுப்பும் போது அந்த நபர்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே அனுப்ப வேண்டும்.  நீங்கள் எடுக்கும் புகைப்படங்கள் டிஎஸ்எல்ஆர் கேமரா / டிஜிட்டல் கேமரா மற்றும் மொபைலில் கூட எடுக்கப்பட்டதாக இருக்கலாம்.

நீங்கள் எடுக்கும் அழகான புகைப்படங்கள் தினமணி டாட் காம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (www.instagram.com/webdinamani) வெளியிடப்படும்.

போட்டிக்கான சில விதிமுறைகள்:

இமெயில் மூலம் மட்டுமே புகைப்படங்களை அனுப்ப வேண்டும். இந்தப் போட்டிக்கான இமெயில் முகவரி: dinamaniphotocontest@gmail.com

புகைப்படத்துடன் உங்கள் பெயர், ஊர், மொபைல் எண், இமெயில் ஐடி, இன்ஸ்டாகிராம் ஐடி, ஃபேஸ்புக் ஐடி, ட்விட்டர் ஐடி, ஃபோட்டோ எடுக்கப் பயன்படுத்தப்பட்ட கேமராவின் மாடல், புகைப்படக் குறிப்பு (3 வரிகளுக்கு மிகாமல்), ஆகியவற்றை மறக்காமல் எழுதி அனுப்புங்கள்.

அடுத்த போட்டிக்கான தலைப்பு மிக விரைவில்... 

]]>
Dinamani Instagram, photo contest, dinamani , தினமணி, இன்ஸ்டாகிராம், புகைப்படப் போட்டி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/22/w600X390/insta_clicks.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/oct/22/தினமணி-இணையதளத்தின்-உங்கள்-வீட்டு-கொலு-இன்ஸ்டாகிராம்-புகைப்படப்-போட்டி-புகைப்படங்கள்-3024821.html
3022979 லைஃப்ஸ்டைல் செய்திகள் மழைக்காலத்தில் இதையெல்லாம் செய்யாதீர்கள் பெண்களே! DIN DIN Friday, October 19, 2018 02:50 PM +0530 மழைக்காலங்களில் பலவித தொற்றுநோய்கள் வந்து நம்மை பாடாய்ப்படுத்தும். பிடித்த உணவுகளை சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகாமல் வயிற்றுக் கோளாறுகள் ஏற்படும். சளி, இருமல், காய்ச்சல் இவற்றில் இருந்தெல்லாம் நாம் மழைக்காலத்தில் நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மழைக்காலத்தில் பெரும்பாலோரை பாதிப்பது சிறுநீர் தொற்று. இது, ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், பெண்கள் இறுக்கமான ஜீன்ஸ் உள்ளிட்ட உடைகளை அணியும்போது, சிறுநீர் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சிறுநீர் தொற்று குறித்து முக்கிய விஷயங்கள் இதோ:

5 பெண்களில் ஒருவருக்கு சிறுநீர் தொற்று ஒருமுறையாவது அவருடைய வாழ்நாளில் ஏற்படும்.

குழந்தைகளுக்கு சிறுநீர் தொற்று ஏற்படாமல் பெற்றோர் கவனித்துக் கொள்ள வேண்டும்.

உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளாமை, அசுத்தமான நீச்சல் குளத்தில் குளித்தல் உள்ளிட்டவை சிறுநீர் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

ஜீன்ஸ் உள்ளிட்ட இறுக்கமான ஆடைகளை அணிந்தாலும் மழைக்காலத்தில் சிறுநீர் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். இறுக்கமான உடைகள் அணியும்போது காற்று உட்புகாமல், பாக்டீரியா தொற்று அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, கல்லூரி செல்லும் பெண்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

மாதவிடாய் பிரச்சனைகள் இருக்கும் பெண்களுக்கும் சிறுநீர் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், அவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.

நைலான் துணியாலான உள்ளாடைகளை தவிர்ப்பது நலம். திரவ உணவுகளை மழைக்காலங்களில் எடுத்துக் கொள்வதன் மூலமும், காய்கறிகள், பழங்களை உணவில் அன்றாடம் சேர்த்துக் கொள்வதன் மூலமும் சிறுநீர் தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும்.

நறுமணம் ஊட்டப்பட்ட சோப்புகள் உள்ளிட்டவற்றை பெண்கள் தவிர்க்க வேண்டும். சில சமயங்களில் அவை சிறுநீர் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்.
- பா.கவிதா

]]>
ஜீன்ஸ், உடை, rainy season, dress, jeans, மழைக்காலம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/19/w600X390/women-standing-in-the-rain.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/oct/19/dont-do-these-things-in-rainy-season-3022979.html
3022976 லைஃப்ஸ்டைல் செய்திகள் தேங்காய்த் துருவல் மீந்து போனால் என்ன செய்யலாம்? DIN DIN Friday, October 19, 2018 01:50 PM +0530
 • மிளகாய் வற்றலை வறுக்கும் போது சிறிது உப்பு சேர்த்து வறுத்தால் நெடியினால் தும்மல் ஏற்பட்டு பாடாய்படுத்தாது.
 • வடகத்தை வெறும் வாணலியில் வறுத்த பின் எண்ணெயில் வறுத்தால் நன்றாக பொறிந்து மொறு, மொறுப்பாக இருக்கும்.
 • வேப்பம் பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து பயன்படுத்தினால் ஜுரம், வரவே வராது. வேப்பம்பூவிற்கு எங்கே போவது என நினைக்க வேண்டாம். கடைகளில் கிடைக்கிறது.
 • அருகம்புல் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடுவது நல்லது. தாது உப்புக்களும், வைட்டமின்களும் அருகம்புல்லில் அதிகம்.
 • ஓமப்பொடி செய்யும் போது கடலை மாவு, மூன்று பங்கு, அரிசி மாவு ஒரு பங்கு சிறிது மைதா கலந்து செய்தால் எண்ணெய் குடிக்காமலும், தூள் அதிகமாகாமலும், நன்றாக எடுக்க வரும். 
 • மைசூர் பாகு செய்வதற்குக் கடலை மாவை டால்டாவில் கரைத்து பின் சர்க்கரைப் பாகில் கிளறினால் கட்டியில்லாமல் மென்மையாக வரும்.
 • ஜாடியில் ஊறுகாயைப் போடும் முன் கொதிக்கும் எண்ணெய்யில் நனைக்கப்பட்ட துணியால் ஜாடியின் உட்புறத்தை துடைத்த பின் ஊறுகாயைப் போட்டு மூடி வைத்தால் பூசனம் பிடிக்காமல் இருக்கும்.
 • பாயசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.
 • வெங்காயப் பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையைப் பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.
 • சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.
 • சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய்ப் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.
 • தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.
 • உளுந்து வடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால், வடை எண்ணெய்க் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.
 • கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான் ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம்.
 • ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.
 • தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.
 • பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து, கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு காணாமல் போய்விடும்.
 • இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.
 • தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி செய்தால் பர்பி நன்றாக இருப்பதோடு, வில்லை போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்.
 • தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொரு மொருவென இருக்கும்.
 • எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாளத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.
 • உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும்.
 • தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அரைத்து ஊற்றவும், குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.
 • துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன், வரமிளகாய், பூண்டு, கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால், பொடி மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.
 • - ஏ.எஸ்.கோவிந்தராஜன்

  ]]>
  veppam poo, omam, coconut tree, arugam pul, அருகம்புல், சப்பாத்தி மாவு, தேங்காய் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/19/w600X390/cocunut.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/oct/19/what-to-do-with-coconut-grated-3022976.html
  3020247 லைஃப்ஸ்டைல் செய்திகள் வீக் எண்ட் ஜோக்ஸ்! DIN DIN Sunday, October 14, 2018 04:44 PM +0530 'ஒரு கூடயிலே 100 ஆப்பிள் இருக்குது. இரண்டு கூட சேர்ந்தா மொத்தம் எவ்வளவு இருக்கும்டா?'
  '102 சார்'

  'நம்மளை விட ஆடு மாடுக்குத்தான் செல்வாக்குன்னு எப்படி சொல்றே?'
  'நமக்கு லோன் தரமாட்டேங்கறாங்க... அதுக்குன்னா உடனே தந்துடுறாங்க'

  'என் மனைவி அப்பவே சொன்னா... குடிச்சிட்டு வந்தா செருப்பு பிஞ்சுடும்ன்னு. அவ சொன்னது கரெக்டா ஆயிடுச்சு'
  'ஏன் என்னாச்சுடா?'
  'குடிச்சிட்டு வெளியே வந்தேன். செருப்பு பிஞ்சு போச்சுடா'
  தீ.அசோகன், சென்னை-19

  அவள்: பக்கத்து வீட்டுக்காரருக்கு குக்கர் என்று ஏன் பெயர் வைத்திருக்கிறாய்?
  இவள்: என்னைப் பார்த்து விசில் அடிக்கிறார்டி
  டி.மோகனதாஸ், நாகர்கோவில்.

  ]]>
  jokes, ஜோக்ஸ், காமெடி, சிரி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/8/w600X390/JOKE.JPG http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/oct/14/வீக்-எண்ட்-ஜோக்ஸ்-3020247.html
  3017000 லைஃப்ஸ்டைல் செய்திகள் நீங்கள் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உடையவரா? இந்தப் அறிவிப்பு உங்களுக்குத்தான்! DIN DIN Thursday, October 11, 2018 02:47 PM +0530 மூன்றாம் போட்டிக்கான தலைப்பு : உங்கள் வீட்டு கொலு

  இந்தியா முழுவதும் பரவலாக மக்கள் கொண்டாடி மகிழும் பண்டிகை நவராத்திரி.  அதை முன்னிட்டு இன்று முதல் அக்டோபர் 19-ம் தேதி வரை உங்கள் வீட்டு கொலுவை அல்லது நீங்கள் ரசித்த கொலுவை க்ளிக் செய்து இந்தப் போட்டிக்கு அனுப்புங்கள்.

  தேர்ந்தெடுக்கப்படும் புகைப்படங்கள் தினமணி இணையதளத்திலும், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிடப்படும்.

  இதில் கொலுவைப் பற்றிய குறிப்பையும், உங்கள் அனுபவங்களையும் ஒரு சில வரிகளில் எழுதி அனுப்புங்கள்.

  போட்டிக்கான சில விதிமுறைகள்

  • இமெயில் மூலம் மட்டுமே புகைப்படங்களை அனுப்ப வேண்டும். இந்தப் போட்டிக்கான இமெயில் முகவரி: dinamaniphotocontest@gmail.com
  • புகைப்படத்துடன் உங்கள் மொபைல் எண், இமெயில் ஐடி, ஃபேஸ்புக் ஐடி, ஃபோட்டோ எடுக்கப் பயன்படுத்தப்பட்ட கேமராவின் மாடல், புகைப்படக் குறிப்பு, ஆகியவற்றை மறக்காமல் எழுதி அனுப்புங்கள். 
  • இந்த வாரத் தலைப்புக்கு ஏற்ற வகையில் மட்டுமே புகைப்படம் இருக்க வேண்டும். 
  • நீங்கள் எடுக்கும் புகைப்படங்கள் டிஎஸ்எல்ஆர் கேமரா / டிஜிட்டல் கேமரா மற்றும் மொபைலில் கூட எடுக்கப்பட்டதாக இருக்கலாம்.
  ]]>
  golu, navaratri, கொலு, நவராத்ரி, உங்கள் வீட்டு கொலு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/9/w600X390/Navaratri.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/oct/09/golu-photos-in-instagram-3017000.html
  3018327 லைஃப்ஸ்டைல் செய்திகள் எச்சரிக்கை! பாடி ஸ்பிரேயினால் ஆபத்தா?  - மாலதி சந்திரசேகரன் DIN Thursday, October 11, 2018 11:31 AM +0530 பெண்களுக்கு இயற்கையாகவே, தான் தனியாகத் தெரிய வேண்டும் என்கிற எண்ணம் உண்டு. அதனால், அவர்கள் உடுத்தும் உடையிலிருந்து பயன்படுத்தும் உதட்டு சாயம் வரை தனித்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்களின் அலங்கார வஸ்துக்களைத் தவிர இன்றைய நாட்களில் அதிமாக பெண்களால் உபயோகப் படுத்தப்படும் இன்னுமொரு வஸ்து பாடி ஸ்பிரே.

  நம் உடலில் இருந்து கழிவுகள் வியர்வை மூலமாகவும் வெளியேறுகிறது என்பதை நாம் எல்லோருமே அறிவோம். இது இயற்கை நமக்குத் தந்த ஒரு வரப்பிரசாதம். பொது இடங்களுக்குப் போகும் போது சுற்றி இருப்பவர்களுக்கு முகச் சுளிப்பை ஏற்படுத்தும் படி வியர்வை துர்நாற்றம் வீசுமோ என பயந்து பலரும், அக்குள் பகுதிகளில், டியோடரண்ட் மற்றும் பாடி ஸ்பிரேயைப் பயன்படுத்துகிறார்கள்.

  வியர்வையைக் கட்டுப்படுத்த டியோடரண்டும், மேனியிலிருந்து நறுமணம் வீசுவதற்காக பாடி ஸ்பிரேயையும் உபயோகப் படுத்துகிறார்கள். ஒரு பெண்ணானவள் சராசரியாக ஒரு நாளைக்கு நூற்று அறுபத்து எட்டு வஸ்துக்களை மேனியில் உபயோகப் படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன (சோப்பு முதல் தலை டை வரை).

  ஆண்கள், டியோடரண்ட் மற்றும் பாடி ஸ்பிரே உபயோகப் படுத்துவதால் அதிக பாதிப்பிற்கு உள்ளாவது இல்லை. ஆனால் அவற்றையே பெண்கள் உபயோகப்படுத்தும் போது, அவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

  பெண்கள் பாடி ஸ்பிரேயை அக்குள் பகுதிகளில் பாய்ச்சிக் கொள்ளும் போது, அதில் இருக்கும் நஞ்சுப் பொருளான அலுமினியம் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவை, அக்குள் மூலமாக மார்பகங்களை எளிதில் அடைந்து விடுகின்றன. அலுமினியமானது மார்பகத் திசுக்களுடன் வினை புரிந்து சிஸ்டிக் என்னும் திரவத்தினை அதிகமாக்குகிறது. டியோடரண்ட்டில் உள்ள ட்ரிக்ளோசன் என்னும் பொருளும் நச்சுத்தன்மையை கூட்டுகிறது. ரசாயனங்களில் இருக்கும் 'பாரபின்' என்னும் பொருளும் பெண்களின் ஈஸ்ட்ரோஜென்னில் சேர்ந்து மார்பகங்களில் கட்டியை உண்டாக்குகிறது.

  இவைகளைத் தொடர்ந்து உபயோகித்து வந்தால், பெண்களுக்கு, மார்பகப் புற்று நோய் விரைவில் வந்து விடும் என்று மருத்துவ ஆராய்ச்சியில் கூறப்படுகிறது. நம் உடலில் இருக்கும் உறுப்புகளிலேயே மிகப் பெரிய உறுப்பு தோல்தான். தோலில் தங்கும் நச்சுத் தன்மை வியர்வைத் துவாரங்கள் வழியே இருபத்தாறு செகண்டுகளில் நம்முடைய ரத்த ஓட்டத்தில் கலந்து விடுகிறது.

  சமீபமாக, டியோடரண்ட் உபயோகப் படுத்திக் கொண்டிருந்த பெண்கள், உபயோகித்து நிறுத்திய பெண்கள் இருவரிடமும் அக்குளில் ஆராய்ச்சி செய்யப்பட்டதாம். உபயோகப்படுத்திக் கொண்டிருந்த பெண்களிடம் மிகக் குறைந்த அளவே பாக்டீரியா காணப்பட்டதாம். உபயோகித்து நிறுத்திய பெண்களிடம் அதிக அளவு பாக்டீரியா காணப்பட்டதாம். சரி, குறைவாக இருந்தால் நல்லதா? அதிமாக இருந்தால் நல்லதா? என்று யோசனை செய்ய வேண்டாம்.

  நம் உடலுக்கு நன்மை செய்யும் அதாவது நச்சுத் தன்மையை தோலுக்கு உள்ளே விடாமல் அரணாக இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் அதிக அளவில் இருப்பதே உடலுக்கு ஆரோக்கியம். ஆகையால், பெண்களே! இயற்கையாக வெளியேறும் வியர்வையை தடை செய்யாதீர்கள். வம்பை விலை கொடுத்து வாங்கி ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். ஒரு வருடத்தில் சுமார் நாற்பத்து இரண்டாயிரம் பெண்கள் மார்பகப் புற்று நோயினால் தாக்கப்படுகிறார்களாம் எனவே உஷாராக இருங்கள்.

  ]]>
  deodorant, body spray, breast cancer, skin disease, பாடி ஸ்ப்ரே, சரும பிரச்னை, மார்பக புற்றுநோய் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/11/w600X390/bs.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/oct/11/usage-of-body-spray-good-or-bad-3018327.html
  3018306 லைஃப்ஸ்டைல் செய்திகள் உங்கள் வீட்டு கொலு ஜொலி ஜொலிக்க வேண்டுமா? DIN DIN Thursday, October 11, 2018 10:42 AM +0530  

  கொலுப் படிகளை ஒற்றைப் படையில் 3,5,7 என்று அமைத்து பொம்மைகளை அழகாக அடுக்க வேண்டும். படிகளில் பொம்மைகள் வைத்தபிறகு அவற்றுக்கு தெய்வாம்சம் வந்துவிடும். அதனால் வைத்தபின் எடுப்பதோ, இடம் மாற்றி வைப்பதோ கூடாது.

  கொலு படிகளுக்கு வெள்ளை நிற துணியைவிட அடர் நிறமுள்ள துணிகளை விரித்தால் பீங்கான் கண்ணாடி பொம்மைகள் பளிச்சென்று தெரியும்.

  கொலுப் படிகளின் பின்புறமுள்ள சுவரில் அழகான பெரிய பளபளக்கும் சுவாமி படங்களை மாட்டினால் தெய்வீகம் கமழும்.

  கொலுப் படிகளின் அடியில் தினமும் அழகான வண்ணக்கோலங்கள் போட்டால் அழகும் தெய்வீகமும் இணைந்திருக்கும்.

  தரையில் ஒரு விரிப்பைப் போட்டு அதில் மணல் பரப்பினால் கொலு முடிந்ததும் சுத்தம் செய்வது சுலபம்.

  குழிவான தட்டுகள், கிண்ணங்களில் நீர் நிரப்பி சிறு குளங்களை உருவாக்கலாம். 

  கொலு முடிந்தபின் பொம்மைகளை உள்ளே எடுத்து வைக்கும்போது அவற்றை பருத்தித் துணி அல்லது செய்தித் தாள்களில் சுற்றி வைக்க வேண்டும்.

  பாலியெஸ்டர் உடைகள் அல்லது பாலிதீன் கவர்களில் வைத்தால் காற்றோட்டமின்றி பொம்மைகளின் நிறம் மங்கி விடும்.

  கொலு வைத்துள்ள அறையில் ஜிகினாத்தாள்களை மாலைகளாக தொங்கவிட்டால் அறையே பளபளக்கும்.
  - ஆர். ராமலட்சுமி

  விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோயில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.

  ஈசனும், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்தபலன் கிடைக்கும்.

  விஜயதசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.

  நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும்.

  நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.

  நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.

  ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளை தேர்ந்தெடுப்பது கூடாது.

  தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல்,ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.

  தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவிகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பதே மிகமிக முக்கியம்.

  கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமாகும்.

  சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம்.

  நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.

  நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.

  நவராத்திரி விரதம் இருப்பவர்கள் தரையில் தான் படுத்து தூங்க வேண்டும்.

  அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட வேண்டும்.

  நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.

  நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.

  கொலு வைத்திருப்பவர்கள் அதன் முன் நவக்கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.

  நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

  நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையா? கவலை படாதீர்கள் "ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம' என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.
  - கவிதா பாலாஜிகணேஷ்

  ]]>
  golu, navaratri, goddess, festival season, நவராத்திரி, கொலு, அழகான கொலு, டிப்ஸ் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2015/10/20/17/w600X390/kolu1.JPG http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/oct/11/tips-for-a-beautiful-and-presentable-golu-for-navatri-3018306.html
  3016952 லைஃப்ஸ்டைல் செய்திகள் இது உடம்பு மற்றும் உயிர்  சம்பந்தப்பட்டது! DIN DIN Tuesday, October 9, 2018 10:46 AM +0530 வலைதளத்திலிருந்து...

  செயற்கைக் கோள், செயற்கைப் பட்டு, செயற்கை முடி, செயற்கைப் பூக்கள் என வாழ்வில் பல செயற்கையாகி விட்டன. ஆக, செயற்கையான விஷயங்கள் நமக்குப் புதிதில்லை. 

  ஆனால், செயற்கை குளிர்பானங்களை அவ்வாறு எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் இது உடம்பு மற்றும் உயிர்  சம்பந்தப்பட்டது. செயற்கைக் குளிர்பானங்களுக்கும், உயிருக்கும் என்ன தொடர்பு?   

  சிலமாதங்களுக்கு முன், இந்த வகை குளிர்பானங்களில் அங்கீகரிக்கப்பட்ட (?!) அளவுக்கு மேல் பூச்சிமருந்து கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் குளிர்பான அழிப்பு, எதிர்ப்பு, கழுதைக்கு குளிர்பானம் புகட்டுதல், சாக்கடையில் வீசுதல் போன்ற போராட்டங்கள் நடந்தன. கொஞ்ச நாட்களில் அவை அனைத்தும் காணாமல் போய்விட்டன. மக்கள் வழக்கம்போல் அடுத்த பரபரப்புக்குத் தாவி விட்டனர்.  

  இந்த மாதிரி விஷ(ய)ங்களை உலகத்திற்கு "அர்ப்பணிப்பு' செய்த அமெரிக்காவோ இப்போது, குளிர்பானங்களை பள்ளிகளில் விற்கக் கூடாது என்று மாநிலத்திற்கு மாநிலம் சட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. காரணம், பள்ளி மாணவ, மாணவியர் அதிக அளவு குளிர்பானங்களைக் குடித்துவிட்டு  பருமனாகிவிட்டனராம்...

  உள்ளூர் நெருக்கடி மற்றும் உலகமயமாக்கல் காரணமாக இந்த குளிர்பான நிறுவனங்கள் இந்தியா போன்ற ஏமாளி நாடுகள் பக்கம் வருகின்றன. பய சாதத்தை அழகாக பொட்டலம் போட்டு அதில் அமெரிக்க கொடி மற்றும் ‘ஙஹக்ங் ண்ய் ற்ட்ங் மநஅ’ என்று பொறித்தால், போட்டி போட்டுக்கொண்டு பெருமையுடன் வாங்கும் நமது இந்தியர்கள்தான் அவர்களின் இலக்கு.  

  http://thanjavuraan.blogspot.com

  முக நூலிலிருந்து....

  வைப்பர் வேகத்தினும் வேகமாய்...
  சலிக்கவே சலிக்காமல்...
  எழுதிக் கொண்டிருக்கிறது  மழை, எனக்கான கடிதத்தை.

  - இரா எட்வின்

  மிக மிக மென்மையாய் தடவிப் பார்த்து... 
  நாசிக்கு சற்று தூரத்திலேயே 
  கவனமாய்  தள்ளி வைத்து... 
  மூச்சுக்காற்றால் மெதுவாய் 
  முத்தமிட்டு ஆனந்தித்து...
  பின் புன்னகையில் மென்மை தடவியபடி சொல்கிறார்:
  'இந்த ரோசா எவ்வளவு அழகாயிருக்கு' என அந்த  பார்வையிழந்தவர்.

  - வணவை தூரிகா

  சொந்த பந்தங்களுடன் இணக்கமாக இருக்க முடியாதவர்கள்...
  சமுதாயத்துடன் ஒருபோதும் இணக்கமாக இருக்க முடியாது.

  - பாலகுருசாமி மருதா

  இந்த உலகில் பல பேரின் தோல்விக்குக் காரணம்,
  அவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களால் முதுகில் குத்தப்பட்டதே .

  - துரை பாரதி

  பொத்த வேண்டிய வாயை...
   பொத்த வேண்டிய நேரத்தில்...
  பொத்திக்கிட்டு 
  இருக்கணும்ங்கிறதுதான்... 
  புல்லாங்குழலின் 
  தத்துவம்

  - டிகே கலாப்ரியா

  சுட்டுரையிலிருந்து...

  நம்ம ஆளுங்க பைக்குக்கு பதில் சைக்கிள்ல கூட போயிடுவாங்க.  ஆனா... மொபைலுக்குப் பதில் லேண்ட் லைனை யூஸ் பண்ணுன்னு சொன்னா
  செத்தே போயிடுவாங்க.

  - பர்வீன் யூனுஸ்

  எப்பவாச்சும் யாராச்சும்  இப்படி நல்லது போதிப்பாங்க...
  கவனிக்கவும் மக்களே...

  - லதா   

  பல  அவமானங்களைக் கண்டவனுக்கு பழி சொற்கள் பெரிதான  பாதிப்பை 
  ஏற்படுத்தியதில்லை.

  - விதுண்

  அமாவாசை இருள்தான் பூரண சந்திரனுக்கு முழு விளம்பரமாயிருக்கும்!

  - ச. திவாகரன் 

  ]]>
  website, health, cool drinks, வலைத்தளம், முகநூல் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/3/w600X390/im9.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/oct/09/இது-உடம்பு-மற்றும்-உயிர்--சம்பந்தப்பட்டது-3016952.html
  3015694 லைஃப்ஸ்டைல் செய்திகள் பக்கத்து விட்டு பொறாமைக்காரன்! DIN DIN Sunday, October 7, 2018 01:08 PM +0530 ஜப்பானில் சிறு கிராமமொன்றில் வசித்து வந்த குழந்தையில்லாத வயோதிக தம்பதியினர், தங்களுடைய நாயை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தனர்.

  ஒரு நாள் அவர்கள் வீட்டுத் தோட்டத்திலிருந்த மரங்களில் ஒரு குறிப்பிட்ட மரத்தின் கீழ் நாய் சுற்றிச் சுற்றி வட்டமடித்தது. இதைக் கண்டு ஆச்சரியமடைந்த வயோதிகர், ஒரு மண் வெட்டியை எடுத்து வந்து அந்த இடத்தைத் தோண்டத் துவங்கினார். சிறிது நேரத்தில் பூமிக்கு அடியில் தங்க காசுகள் நிறைந்த பெட்டியொன்றை கண்டெடுத்தார். திடீரென கிடைத்த அந்த புதையலால் வயோதிக நம்பதியர் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

  நாய் மூலம் இவர்களுக்கு புதையல் கிடைத்த விஷயம் வெளியில் பரவியது. பக்கத்து வீட்டுக்காரனுக்கோ ஒரே ஆச்சரியம். அந்த வயோதிகரிடம் சென்று, உங்களுடைய நாயை சில நாள்களுக்கு எனக்கு கொடுங்கள். என்னுடைய தோட்டத்திலும் ஏதாவது புதையல் இருக்கிறதா என்பதை கண்டுபிடித்துக் கொடுக்குமல்லவா? என்று சொன்னான். வயோதிகருக்கு நாயை அவனிடம் கொடுக்க விருப்பமில்லை. இருந்தாலும் தொடர்ந்து வற்புறுத்தி கேட்கவே, போனால் போகிறதென்று நாயை கொடுக்க ஒப்புக் கொண்டார்.

  நாயை வாங்கிக் கொண்டு சென்ற பக்கத்து வீட்டுக்காரன், நாயை தோட்டத்தில் உலவ விட்டான். வெகு நேரமாகியும் தோட்டம் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்த நாய், இரவு நேரமானதும் தூங்குவதற்கு முன் ஒரு மரத்தின் கீழ் கால்களால் பிறண்டத் தொடங்கியது. அதற்காகவே காத்திருந்த பேராசைக்கார பக்கத்து வீட்டுக்காரன் அவசரமாக மண் வெட்டியைக் கொண்டு வந்து மரத்தின் கீழ் தோண்டத் தொடங்கினான். நாற்றமடித்த சில எலும்புத் துண்டுகள் மட்டுமே கிடைத்தன. இதனால் கோபமடைந்தவன் கையிலிருந்த மண்வெட்டியை நாயின் மீது வீசி எறிந்தான். அடிபட்ட நாய் சுருண்டு விழுந்து இறந்தது.

  நாய் இறந்தது கண்டு தங்களுடைய வருத்தத்தை கட்டுப்படுத்த முடியாத அந்த தம்பதியர், செல்லப் பிராணியின் உடலை தங்கள் தோட்டத்திலிருந்த அத்திமரத்தின் கீழ் புதைத்தனர். அன்றிரவு வயோதிகரின் கனவில் வந்த நாய், தன்னை புதைத்து வைத்த இடத்தில் உள்ள மரத்தைத் துண்டுத் துண்டாக வெட்டி முழுமையாக எரித்து அதன் சாம்பலை சேகரித்து வைத்துக் கொள்ளும்படி கூறியது. மறுநாள் காலை அந்த கிராமத்திற்கு வருகை தரும் யுத்தக் கடவுள் டைமியோ மீது அந்த சாம்பலை தூவும்படி கூறியது.

  நாய் கனவில் கூறியபடியே மரத்தை வெட்டி. எரித்து சாம்பலை சேகரித்த வயோதிகர், யுத்தக் கடவுள் டைமியோ வரும் வழியில் கையில் சாம்பலுடன் காத்திருந்தார். அவர் அருகில் வந்தவுடன் கையிலிருந்த சாம்பலை ஊதி காற்றில் பறக்க விட்டார். என்ன ஆச்சரியம். சாம்பல் அனைத்தும் நூற்றுக் கணக்கான செர்ரி மலர்களாக மாறி யுத்தக் கடவுள் மீது பொழிந்தன. இதனால் மனங்குளிர்ந்த யுத்தக் கடவுள் அந்த வயோதிகருக்கு ஏராளமான பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

  இதையறிந்த பக்கத்துவீட்டு பொறாமைக்காரன், உடனே வீட்டிற்குள் ஓடிச் சென்று அடுப்படியில் இருந்த சாம்பலை கைநிறைய அள்ளி வந்து யுத்தக் கடவுள் மீது ஊதினான். அந்த கரிச் சாம்பல் கண்களில் பட்டு எரிச்சலினால் கண்களை திறக்க முடியாமல் வலியால் டைமியோ துடித்தார். இதைக் கண்ட அவரது படைவீரர்கள் பக்கத்து வீட்டுக்காரனை பிடித்துச் சென்று ஓர் இருட்டுக் குகையில் அடைத்தனர். பேராசைக்காரனான அவன் நீண்ட காலம் தன் வாழ்நாளை அந்த இருட்டுக் குகைக் குள்ளேயே கழிக்க வேண்டியதாயிற்று. வயோதிக தம்பதியினரோ தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆடம்பரமாக வாழ்ந்தனர்.
   -அ.குமார் 
   

  ]]>
  short story, japan, nadodi kadhai, நாடோடி கதை, நாய், சிறுகதை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/6/w600X390/NADODI_STORY.JPG http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/oct/07/பக்கத்துவிட்டு-பொறாமைக்காரன்-3015694.html
  3015688 லைஃப்ஸ்டைல் செய்திகள் பெற்றோர் பெருமைப்படும்படி அக்குழந்தை என்ன செய்தாள் தெரியுமா? DIN DIN Sunday, October 7, 2018 11:12 AM +0530 இங்கிலாந்தைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு மாணவியான ஹானா மேரியை பற்றி அவளுடைய தாயார் அன்னி மேரியும், தந்தையான ஜேம்ஸýம் பெருமைக் கொள்கின்றனர். பெற்றோர் பெருமைப்படும்படி அக்குழந்தை என்ன செய்தாள் தெரியுமா?

  'கெல்லோக்' நிறுவனத்தின் கோகோ பாப்ஸ் அவளுடைய தினசரி காலை உணவாகும். அவளுடைய தாயார் ஒரு விமான நிறுவனத்தில் பணியாற்றுவதால், அவளுக்கு காலை உணவினை தந்தைதான் தயாரிப்பது வழக்கம். காலை உணவினை உட்கொள்ளும்போது அந்த உணவுப் பொட்டலத்தின் அட்டையில் இருந்த 'குழந்தைகளால் விரும்பப்படுவது, அம்மாக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது' என்ற வாசகங்கள் அவளை அதிகம் பாதித்துவிட்டன. 

  உடனே தன் பெற்றோரிடம் அவள் இவ்வாறாக 'அம்மாக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது' என்பது சரியல்ல என்றும், அதனைப் பற்றி அந்நிறுவனத்திற்குத் தெரிவிக்க விரும்புவதாகவும் கூறினாள். அவளுடைய விருப்பத்திற்கு இசைந்த பெற்றோர், அந்நிறுவனத்திற்கு அவள் கடிதம் எழுதுவதற்கு உரிய போஸ்டல் ஸ்டாம்பைத் தருகின்றனர். முகவரியை இணைய தளத்திலிருந்து அவள் பெற உதவினர்.

  அவள் அந்நிறுவனத்திற்கு பின் வருமாறு கடிதம் எழுதினாள், 'என் அப்பா எனக்காக அதிகம் உழைக்கிறார். அம்மா வெளியில் வேலை பார்க்கிறார். ஆதலால் காலை உணவு தயாரிப்பின் போது அவர் இருப்பதில்லை. ஆகவே அவ்வாசகத்தில் உள்ள அம்மாக்கள் என்பதை பெற்றோர் என்றோ பாதுகாவலர் என்றோ மாற்ற வேண்டும். சில குழந்தைகளுக்கு அம்மா இருக்க மாட்டார்கள். இதைப் படிக்கும் போது அவர்கள் சங்கடப்படுவார்கள்' என்று எழுதி அனுப்பியிருந்தார்.

  விடுமுறைக்குப் பின் வீட்டிற்குத் திரும்பிய போது ஓர் இனிய அதிர்ச்சி காத்திருந்தது ஹானாவுக்கு. அந்நிறுவனம் அவளுக்கு மறுமொழி அனுப்பியிருந்தது.

  எங்களுடைய கோகோ பாப்ஸ் உணவுப் பொட்டலத்தில் எழுதியிருந்த, அம்மாக்களால் ஏற்கப்பட்டது என்பதைப் பற்றிய உன் சிந்தனையை எங்களுடன் பகிர்ந்திருந்தாய். நாங்கள் அண்மையில் எங்களின் ஆய்வினை புதுப்பித்துள்ளோம். அதன்படி இனி வரவுள்ள புதிய வடிவமைப்பில் 'அம்மாக்களாலும் அப்பாக்களாலும் ஏற்பளிக்கப்பட்டது' என்பதைச் சேர்க்கவுள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இது தொடர்பாக ஏற்பட்ட சங்கடங்களுக்குப் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறோம். எங்கள் முடிவில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர உன் கடிதம் பெரிதும் உதவியது. நன்றி!

  கடிதத்தைப் படித்த அவளுடைய தாயார், 'என் மகளைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன். இது தொடர்பாக அந்நிறுவனம் அக்கறையோடு மறுமொழி கூறியது எனக்கு மகிழ்வைத் தருகிறது' என்றார்.

  'நான் ஒரு விமான நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். பெரும்பாலான நேரத்தில் பணியின் காரணமாக வெளியில் இருக்க வேண்டிய சூழல். என் கணவர்தான் அவளுக்கு காலை உணவினை ஏற்பாடு செய்வார். 'அம்மாக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது' என்பதில் அப்பாக்கள், தாத்தா பாட்டிகள், பாதுகாவலர்கள் என்பதும் இருக்க வேண்டும் என்று அவள் விரும்பினாள். அவ்வாறு நீ விரும்பினால் அந்த நிறுவனத்திற்குக் கடிதம் எழுதி அதனை மாற்றும்படி கேட்டுக் கொள்' என்றேன். கடிதம் எழுதி அனுப்ப உரிய ஸ்டாம்பையும் தந்தேன். மறுமொழி கிடைத்ததும் அவள் அதிக மகிழ்ச்சியடைந்தாள்' என்றார்.

  நிறுவனத்திடமிருந்து பதில் வந்ததும் அவள் முகத்தைப் பார்க்கவேண்டுமே, அவ்வளவு மகிழ்ச்சி. அதிகம் உணர்ச்சிவசப்பட மாட்டாள். ஆனால் அவள் முகத்தில் பெரிய சிரிப்பை நாங்கள் கண்டோம். அது கெல்லோக் போன்ற பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி, நாம் நம் கருத்தினை வெளிப்படுத்தும் போது அதற்கான விளைவை உணரலாம் என்பதை என்னால் உணர முடிந்தது. என்னைப் பொறுத்தவரை நாம் நம் பிள்ளைகளை அந்த அளவிற்குப் பயிற்றுவிக்க வேண்டும்.

  ஒரு சிறிய குரலால் உலகை மாற்றி விட முடியும் என்பது படிப்பதற்கு எளிதாக இருக்கலாம். ஆனால் இதுபோன்ற சிறிய வெளிப்பாடு பெரிய சாதனையை நிகழ்த்தும் என்பதை உணர்த்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்துள்ளது. 
  - பா.ஜம்புலிங்கம்
   

  ]]>
  hana, child, food, உணவு, ஹனா http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/3/w600X390/HANA.JPG http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/oct/07/பெற்றோர்-பெருமைப்படும்படி-அக்குழந்தை-என்ன-செய்தாள்-தெரியுமா-3015688.html
  3013829 லைஃப்ஸ்டைல் செய்திகள் காய்கறிகளை எப்படி சுத்தப்படுத்தலாம்? DIN DIN Thursday, October 4, 2018 01:24 PM +0530 நாம் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை விளைவிக்கும் தோட்டங்களில், அவைகளின் விளைச்சலுக்காகவும் அவைகளை பூச்சிகள், வண்டுகள் தாக்காமல் இருக்கவும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, காய்கறிகளை சமைப்பதற்கு முன்னால் எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்று பார்ப்போம்:

  முருங்கைகாய், பீட்ரூட், கேரட் போன்றவைகளை பிரிட்ஜில் வைப்பதற்கு முன்பு பலமுறை தண்ணீரில் கழுவ வேண்டும். பின்னர், ஈரத்தை துடைத்துவிட்டு, காட்டன் துணியில் சுற்றி பிரிட்ஜில் வைக்க வேண்டும். உபயோகிப்பதற்கு முன்பு அவைகளை வெளியே எடுத்து, மேல் தோலை நீக்கிவிட்டு மீண்டும் ஒருமுறை கழுவி பின்னர் பயன்படுத்த வேண்டும்.

  வெண்டைக்காய், கத்தரி, வெள்ளரி, பாகற்காய், சுரைக்காய் போன்றவைகளை மென்மையான பிரஷ் மூலம் லேசாக உரசி பின்னர், தண்ணீரில் கழுவ வேண்டும். சில தடவை தண்ணீரில் அலசிவிட்டு, வினிகர் அல்லது புளி தண்ணீரில் பத்து நிமிடங்கள் அமிழ்த்தி வைத்துவிட்டு பின்பு மீண்டும் கழுவி, துடைத்து பயன்படுத்தலாம். 

  காலிஃபிளவரில் இருக்கும் பூக்களை ஒவ்வொன்றாக பெயர்த்து எடுத்து. அவைகளை வினிகர் அல்லது உப்பு கலந்த நீரில் பத்து நிமிடம் அமிழ்த்தி வைத்து பின்னர் மீண்டும் கழுவி பயன்படுத்தவேண்டும்.

  மிளகாய், குடை மிளகாய், தக்காளி, பீன்ஸ், அவரைக்காய் போன்றவைகளை மேற்கண்ட கலவையில் ஏதாவது ஒன்றில் பத்து நிமிடங்கள் அமிழ்த்தி வைத்திருங்கள். பின்பு பலமுறை கழுவி, இரவு முழுவதும் தண்ணீர் வடியும் பாத்திரத்தில் வையுங்கள். பின்பு அதில் இருக்கும் தண்ணீரை துணியால் துடைத்துவிட்டு பயன்படுத்தலாம்.

  கொத்துமல்லி தழையில் வேர் பகுதியை நீக்கிவிட்டு, சமையலுக்கு பயன்படுத்தும் பகுதியை மட்டும் தனியாக கிள்ளி எடுங்கள். அதை டிஸ்யூ பேப்பரிலோ, காற்று புகத்தகுந்த காட்டன் துணியிலோ சுற்றி, பிளாஸ்டிக் பாத்திரத்தில் கொட்டி பிரிட்ஜில் வைக்கலாம்.
  - என். சண்முகம்

  ]]>
  vegetables, clean vegetable, veggie, veg, காய்கறி, சத்தான காய்கறி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/31/w600X390/Cauliflower-and-Broccoli-with-Fresh-Herb-Butter-4.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/oct/04/how-to-clean-vegetables-3013829.html
  3013799 லைஃப்ஸ்டைல் செய்திகள் கடம் வித்வான் விக்கு விநாயக்ராமுக்கு வாழ்நாள் விருது! DIN DIN Thursday, October 4, 2018 10:41 AM +0530 சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாதெமி சார்பில் பிரபல கடம் வித்வான் விக்கு விநாயக்ராமுக்கு 'சிறப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்படவுள்ளது.

  இவ்விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் 10-ஆம் தேதி (புதன்கிழமை) மாலை 6 மணியளவில் மியூசிக் அகாதெமியில் நடைபெறவுள்ளது. விழாவில் பண்டிட் ஹரிபிரசாத் செளராஸ்யா, சங்கீத கலாநிதி டி.என்.கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு கடம் வித்வான் விக்கு விநாயக்ராமுக்கு விருது வழங்கி கெளரவிக்கவுள்ளனர்.

  நிகழ்ச்சியின் தொடக்கமாக விக்கு விநாயக்ராம் நடத்தும் 'குரு லய சமர்ப்பணம்' சிறப்பு வாத்திய இசை நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் அவரது இசைப் பயணம் குறித்த ஒரு குறும்படம் திரையிடப்படவுள்ளது. கர்நாடக இசையில் அதீத புலமை பெற்ற விக்கு விநாயக்ராம், தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக கிராமி விருதை பெற்ற முதல் இசைக் கலைஞர்.  கடந்த 1997-ஆம் ஆண்டு 'சங்கீத கலா ஆச்சார்யா' விருதும் இவருக்கு மியூசிக் அகாதெமியால் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  ]]>
  ghatam , vikku vinayakram, விருது, சங்கீத கலா ஆச்சார்யா, விக்கு விநாயக்ராம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/22/w600X390/A_Dance_Musical_-_T_H_Vikku_Vinayakram_1.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/oct/04/special-life-time-acheivement-award-on-ghatam-maestro-shri-vikku-vinayakram-3013799.html
  3011714 லைஃப்ஸ்டைல் செய்திகள் ஒரு மைக்ரோ கதை படிங்க! DIN DIN Monday, October 1, 2018 05:45 PM +0530 திடீரென விழிப்பு வந்ததும் அலறியடித்துக் கொண்டு எழுந்தான் குமார். 'அடடா... மணி எட்டாயிருச்சே... ஒன்பது மணிக்கு ஆபிஸ்ல இருக்கணும். நல்லா தூங்கிட்டேனே. வொய்ஃப் வீட்டில இருந்தா அவ எழுப்பிவிட்டுடுவா. அவதான் ஊருக்குப் போயி நாலு நாள் ஆச்சே' என சலிப்புடன் நினைத்தவன், அவசர அவசரமாகக் குளித்து, ஆடை அணிந்து கொண்டு வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குக் கிளம்பினான்.

  எதிர்ப்பட்ட நண்பன் கிருஷ்ணன், 'என்ன குமாரு... காலையிலே இவ்வளவு அவசரமா கிளம்பிப் போற?' என்று கேட்டான்.

  'உனக்குப் பதில் சொல்ல எனக்கு இப்ப டைம் இல்லை. அவசரமா ஆபிசுக்குப் போய்க்கிட்டிருக்கேன். அப்புறமா பேசிக்கலாம்' என்று வேகமாக நடந்தான்.

  'இன்னைக்கு ஞாயித்துக்கிழமை. ஆபிசுக்குப் போறேங்கிற?' என்று கேட்டான் கிருஷ்ணன்.

  மனைவியை உடனே வீட்டுக்கு வரச் சொல்ல வேண்டும் என்று நினைத்து போனை ஆன் பண்ணினான் குமார்.
  இரா.சிவானந்தம், கோவில்பட்டி.
   

  ]]>
  story, micro story, short story, சிறுகதை, மைக்ரோ கதை, குறுங்கதை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/25/w600X390/ka3.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/oct/01/ஒரு-மைக்ரோ-கதை-படிங்க-3011714.html
  3011674 லைஃப்ஸ்டைல் செய்திகள் நீங்களும் ஒரு டிசன்டோகுவா? DIN DIN Monday, October 1, 2018 12:51 PM +0530 பலர் ஏராளமாய் புத்தகங்களை வாங்கி வைத்திருப்பர். ஆனால் படிக்க ஆர்வமோ, நேரமோ இருக்காது. அத்துடன் அவர்கள் அந்த புத்தகங்களை தாறுமாறாகப் போட்டு வைத்திருப்பர். இத்தகையவர்களை ஜப்பானிய மொழியில் டிசன்டோகு (TSUNDOKU) என அழைப்பர். நீங்களும் ஒரு டிசன்டோகுவா?
   - ராஜிராதா

  **

  மகாத்மா காந்தியின் பெருமை!

  மகாத்மா காந்தி இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் நன்கு அறிந்த தலைவர். இதனால் அவர் மீது அன்பும் மதிப்பும் கொண்ட 128 நாடுகள் அவரை கௌரவித்து தபால் தலைகளை வெளியிட்டுள்ளன. இவற்றில் ரஷ்யா. அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளும் அடக்கம்.

  **

  ஷார்ன் வார்னேயின் சுயசரிதை!

  ஆஸ்திரேலியாவின் முன்னாள் சூழற் பந்து வீச்சாளர் ஷான்வார்னே, ‘NO SPIN'
  என்ற பெயரில் புதிய புத்தகம் எழுதி அக்டோபரில் வெளியிடுகிறார். இது தனது சுயசரிதம் என்று கூறும் அவர், "என்னைப் பற்றிய புரளிகளுக்கும் புளுகுகளுக்கும் இது பதில் சொல்லும்'' என்கிறார். பிரபல காமெண்டேடர் மார்க் நிகோலஸýடன் இணைந்து இந்த புத்தகத்தை எழுதி வருகிறார்.

   

  ]]>
  புத்தகங்கள் , book, TSUNDOKU, purchaser of book, japanese, ஜப்பானிய மொழி, டிசன்டோகு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/25/w600X390/TSUNDOKU.JPG http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/oct/01/are-you-tsundoku-3011674.html
  3011105 லைஃப்ஸ்டைல் செய்திகள் ஒரு கதை சொல்றேன், கேளுங்க! DIN DIN Sunday, September 30, 2018 04:02 PM +0530 மகிழ்ச்சிபுரி என்ற ஊரை, வீராங்கன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு மந்திரிகள், ஆலோசகர்கள், படைகள் என எல்லாம் உண்டு. மனைவியர், மகிழ்ச்சியூட்ட விதூசகர்கள் எனவும் இருந்தனர். 

  மந்திரிகள், ஆலோசகர்கள் மன்னர் வாயை திறக்கும் முன் பதில் ரெடியாக வைத்திருப்பார்கள். அதேபோன்று படையினரும், வெற்றி மேல் வெற்றியை கொண்டு வந்தனர். இவ்வளவு வசதிகள் இருந்தும் மன்னர் ஏனோ துக்கமாக காட்சி தந்தார்.

  இது ராணிக்கு பொறுக்கவில்லை. 'மன்னனை, ஏதாவது ஒரு சாமியாரிடம் அழைத்துச் சென்று, அவர் ஆலோசனையை பெற்று, அதன்படி அவரை மகிழ்விக்க ஏற்பாடு செய்யுங்கள்'' என மந்திரியிடம் கூறினார்.

  மந்திரிக்கு, ஒரு புதுசாமியார். ஊருக்கு வெளியே முகாமிட்டிருப்பது தெரியும். 
  அவரிடம் மன்னரை அழைத்துச் சென்று, ஆலோசனை பெறத் தீர்மானித்தார். மன்னரும் அதற்கு சம்மதித்தார்.

  சாமியாரிடம், மன்னரும் மந்திரியும் சென்றனர்.

  மன்னனின் துக்க மனதை கூறி, 'அவரை மகிழ்விக்க வேண்டும். அதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும்' என்றார் மந்திரி.

  'ஊரிலேயே மகிழ்ச்சியாய் இருப்பவனை கண்டு பிடித்து அழைத்து வந்து காரணம் கேட்டு, அதனை மன்னரிடம் கூறுங்கள். மனம் மாறிவிடுவார்'' என்றார் சாமியார்.

  இதனால் அடுத்த நாளிலிருந்து மகிழ்ச்சியோடு இருப்பவனை தேடி அலைந்தது மன்னரின் படை.

  மகிழ்ச்சியாய் இருப்பதாக தெரிந்து அருகில் நெருங்கினால், என் கவலைகளை மறக்க சிரிக்கிறேன். மற்றபடி மகிழ்ச்சியாக இல்லை எனக் கூறி நழுவி விடுவர் பலர்.

  இந்த நிலையில் ஒரு குளத்தில் தண்ணீரில் எருமை மாட்டின் மீது அமர்ந்து ஒருவன் பாடிக் கொண்டிருந்தான். அவன் மகிழ்ச்சியில் இருந்தான்.

  இதனால் மந்திரியின் ஆலோசகர் அவனை நெருங்கி, 'மகிழ்ச்சியாக இருக்கிறாயே.. எப்படி?'  எனக் கேட்டார்.

  'என்னிடம் இருப்பது இந்த ஒரு எருமை மாடுதான். இதற்கு தீவனம் வைக்கிறேன்.

  நன்றாக பால் கறக்கிறது. தினமும் குளிப்பாட்டி, நானும் குளிப்பேன்' என்றான்.

  'இதில் எப்படி மகிழ்ச்சி வந்தது?'

  'இது பால் கறப்பதால் விற்பனை செய்து பணம் சம்பாதிக்கிறேன். அதுவே எனக்கு போதும், அதனால் இந்த வருமானம் போதுமென்று நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறேன்'

  'ஆக , போதுமென்ற மனமே மகிழ்ச்சியை தரும் என்கிறாய்'

  'நிச்சயம். போதும் என எண்ணுபவர்களுக்கு துக்கமில்லை'

  'நல்லது' என்று விடை பெற்ற மந்திரியின் ஆலோசகர்.

  அடுத்தநாள், அவனை மன்னரிடம் அழைத்துச் சென்றார்.

  மன்னர், வந்தவனிடம் பேசினார்.

  'நீ ஏன் மாடு மேய்த்து கஷ்டப்படுகிறாய், என் மகளை தருகிறேன். பொன்னும், பொருளும் தருகிறேன். அதை வைத்து நிம்மதியாக வாழ்வாயாக' என்றார். 
  'மன்னிக்கணும் மாட்டை மேய்ப்பதை விட, மனைவியை மேய்ப்பது கஷ்டம்'

  'சுகமாக வைத்துக் கொள்ள கஷ்டம் என்றுதானே கூறுகிறாய். மேலும், 10000 பொற்காசுகள் தருகிறேன்.

  மேலும் பல எருமை மாடுகளை வாங்கி பண்ணை போல் நடத்தேன்'

  'அதையெல்லாம் நான் உங்களிடம் கேட்கவில்லை'

  'பிறகு நீ என்னதான் விரும்புகிறாய்'

  'மன்னருக்கு, நாடுகள், சொத்துகள் ஆசையால் திருப்தி இருக்காது. அதனால்...'

  'அதனால்...'

  'என்னைப் போல், இருப்பதே போதும் என வாழ வேண்டும்'

  'வாழ்ந்தால்'

  'உங்கள் துக்கம் மறைந்து மகிழ்ச்சி தாண்டவமாடும்'

  'நான் அப்படி நடப்பதால் உனக்கு என்ன மகிழ்ச்சி'

  'மன்னர் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும்'

  'ஆக, நாங்கள் மகிழ்ச்சியாக கிடைத்த வாழ்வை, நிம்மதியாக தொடர...'

  'தொடர...'

  'மன்னரும் போதுமென்ற மனநிலையுடன் வாழ வேண்டும்'

  'சபாஷ், என்னை சுற்றி இருப்பவர்கள் நான் கூறுவதற்கு எல்லாம் ஆமாம் போடுபவர்கள். ஆனால் நீ, நான் கொடுத்த எதையும் மறுத்து, இருப்பதே போதும் என்பதுடன் என்னையும் மாற்றிவிட்டாய்' என முடித்தார் மன்னர்.

  ராணியோ, மன்னனின் மனதை மாற்றியதற்கு நன்றியாக, மணிமாலையை எடுத்து, எருமை சொந்தக்காரனிடம் கொடுத்து, 'இதை என் அன்பளிப்பாக, உன் மனைவியிடம் கொடு' என்றார்.

  எருமை சொந்தக்காரனும், தப்பித்தோம். பிழைத்தோம் என ஒட்டமும், நடையுமாய் அரண்மனையை விட்டு வெளியேறினான்.
  - ராஜிராதா

  ]]>
  story, short story, kadhai, சிறுகதை, கதை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/29/w600X390/NADODI_STORY.JPG http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/30/ஒரு-கதை-சொல்றேன்-கேளுங்க-3011105.html
  3011104 லைஃப்ஸ்டைல் செய்திகள் பால் சைவமா? அசைவமா? சைவப் பால் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? DIN DIN Sunday, September 30, 2018 03:48 PM +0530 'பால்' சைவமா... அசைவமா... என்று வாதிப்பவர்கள் இருக்கிறார்கள். 'சைவப் பால்' கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? 'குட்மில்க்' (Goodmylk) என்ற பெயரில் பெங்களூருவில் விற்கப்படும் பால், பதாம் பருப்பிலிருந்தும், தேங்காயிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது. தயாரிப்பவர் ATV ரங்கன் என்னும் இருபத்தொரு வயது இளைஞர். அவர் கூறியதாவது:

  'இப்படி ஒரு நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்று பதினெட்டு வயதில் தீர்மானித்தேன். நாம் எப்போதும் பயன்படுத்தும் மாட்டுப் பால் உற்பத்திக்கு ஆகும் செலவைவிட இந்த சைவப்பால் தயாரிக்க செலவு அதிகமாகும் என்பதைத் தெரிந்துதான் இந்த முடிவை எடுத்தேன். நாங்கள் தயாரிக்கும் தேங்காய்ப் பாலைக் கொண்டு காபி, தேநீர் தயாரிக்கலாம். உலகிலேயே சில நாட்கள் வரை கெடாத 'சைவ யோகார்ட்'டையும் நான் தயாரிக்கிறேன். லஸ்ஸி தயாரிக்க இது உதவும். இந்த தயாரிப்புகளில் உதவியும் ஒத்துழைப்பும் தருபவர் எனது அம்மா வீணா. அம்மா பொறியியல் பட்டதாரி. 

  2013-இல் தொடங்கிய இந்த நிறுவனத்தை நானும் அம்மாவும் இணைந்து நடத்தி வருகிறோம். ஆரம்பத்தில், நாங்கள் தயாரிக்கும் பால் நுகர்வோரை அடையும் முன் கெட்டுப் போகும். தயாரிப்பு முறையில் பல மாற்றங்கள் செய்து வெற்றி பெற்றிருக்கிறோம். தற்சமயம் குளிரூட்டும் பெட்டியில் வைக்காமல் ஒரு மாதம் வரை எங்கள் பால் கெடாமல் இருக்கும். பால் குப்பியைத் திறந்து விட்டால் மிச்சம் உள்ள பாலை குளிரூட்டும் பெட்டியில் வைக்கவேண்டும். 

  பாலுக்காக பால் பண்ணைகளில் பசு, எருமைகளை மிகவும் துன்புறுத்துகிறார்கள். அதை பார்த்த பிறகுதான் முழுக்க முழுக்க 'வேகன்' என்னும் முழுசைவம் ஆனேன். தவிர, மிருகங்களின் உரிமை குறித்தும் விழிப்புணர்வினை எனது தொண்டு நிறுவனம் மூலம் பரப்பி வருகிறேன். எங்கள் பால் ஆன்லைன்னில் விற்பனைக்கு கிடைக்கும். பெங்களூரில் இந்தப் பாலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதர நகரங்களிலிருந்து எங்களுக்கு ஆர்டர்கள் ஆன்லைன் மூலம் வருகின்றன' என்கிறார் ரங்கன்.
  - பனுஜா

  ]]>
  vegan, milk, vitamin d, lassi, பால், காபி, குட்மில்க் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/29/w600X390/SAIVAP_PAAL.JPG http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/30/பால்-சைவமா-அசைவமா-சைவப்-பால்-கேள்விப்பட்டிருக்கிறீர்களா-3011104.html
  3011102 லைஃப்ஸ்டைல் செய்திகள் அரசியல்வாதிகள் தோற்றுப் போவார்கள்! எப்போது? சமூக வலைத்தளப் பதிவுகள்! DIN DIN Sunday, September 30, 2018 03:23 PM +0530 வலைதளத்திலிருந்து...
  முகநூல் எப்படிப்பட்டதாக இருக்கிறது? யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம். எல்லாருமே எழுதலாம். சுய பெருமைகளை, அக்கப்போர்களை எழுதலாம். யாரை வேண்டுமானாலும் உயர்த்தியோ, தாழ்த்தியோ பேசலாம். கேள்விமுறை கிடையாது. பிறந்தது, வளர்ந்தது, திருமணமானது, குழந்தைகள் இருப்பது, விவாகரத்து ஆனது, குடும்பச் சண்டைகள், மகிழ்ச்சிகள், மனக்கசப்புகள் என்று எல்லாமும் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. குடும்பத்தினருடைய எல்லா நிழற் படங்களும் நிரப்பப்பட்டுள்ளன. பிறந்த நாள், கல்யாண நாள், நிழற்படங்கள், வாழ்த்துக்கள் எல்லாம் பார்க்கக் கிடைக்கின்றன. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம்; பயன்படுத்திக் கொள்ளலாம். எது அசிங்கம் என்று தெரியாத விடலைப் பருவத்து செயல்கள் என்று இவற்றைச் சொல்ல முடியாது. ஓயாமல் பொய்களை, கட்டுக்கதைகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். பொய்களும் கட்டுக் கதைகளும்தான் இப்போது மனித வாழ்க்கைக்கு உயிர்ப்பைத் தருகின்றன. வலைதளங்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை? 

  அரசியல்வாதிகளை மட்டுமே விளம்பரப் பிரியர்கள், விதவிதமாக போட்டோ போட்டு போஸ்டர் அடித்துக் கொள்கிறவர்கள் என்று யாரும் குற்றம் சாட்ட முடியாது. காரணம் முகநூலில், ப்ளாக்கில், வெப் சைட்டில் ஒவ்வொருவரும் போட்டு வைத்திருக்கிற நிழற்படங்களைப் பார்க்கும்போது வியப்பாக மட்டும் அல்ல, அரசியல்வாதிகள் தோற்றுப் போவார்கள் என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
  http://rafifeathers.blogspot.com

  முக நூலிலிருந்து....

   நான் தோற்றால்...
  உன்னாலும்,
  நீ தோற்றால்...
  என்னாலும்,
  தாள முடியாதபோது...
  விவாதங்கள் என்பது
  வீண்தானே நம்மிடையே?
  - ரதிராஜ்

  குழந்தைகள் விளையாடுவதை 
  அவர்கள் அறியாமல்
  கவனியுங்கள்...
  தனியே தியானம் செய்யத் தேவையில்லை!
  - நேசமிகு ராஜகுமாரன்

  உனக்கு கவிதைகள் 
  எழுத வராதென்பது
  எனக்குத் தெரியும்...
  காலையில் கோலங்களாக 
  வீட்டு வாசலில்
  வரைந்து விடுவாய்.
  - ராம் பெரியசாமி

  தானா போய் ஒக்காந்துக்கிட்டு...
  ஒரு ரெண்டாவதும்..
  ரெண்டு ஒன்னாவதும் 
  கணக்கு போடுதுக!
  ரெண்டாவது... டீச்சராயிட்டாக... 
  ஒன்னாவதுக்கு... கூட்டல் போலருக்கு!
  ரொம்ப பெரிய கணக்கா 
  இருக்கும்னு நினைக்கிறேன்!
  ஏன்னா? 
  தன் கை, கால் பத்தாம....
  பக்கத்தில இருக்கவனையும் 
  விரல் நீட்டச் சொல்லி
  எண்ணியாவுது...!
  - வனநீலி

  மறதி மட்டுமா நோய்? நினைவும் தான்.
  - சித்திரவீதிக்காரன்

  சுட்டுரையிலிருந்து...

  சிரித்தால் பதிலுக்கு சிரிக்கும்
  காலம் போய்... 
  இவன் ஏன் 
  என்னைப் பார்த்துச் சிரித்தான்? என்ற சந்தேகப்பார்வை
  பார்க்கும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
  - கெளரிசங்கர்

  பெரும்பாலும்
  அப்பா நமக்காக வாங்கி வரும்
  ஒவ்வொரு பொருளும்,
  அவர் காலத்தில் 
  அவருக்கு அது கிடைக்கப்
  பெறாதவையாகவே
  இருந்திருக்கும்.
  - நிலா ரசிகன்

  பாத்ரூம்ல பாடும்போது 
  குரல் நல்லாதான் இருக்கு. 
  அதையே ரிக்கார்ட் பண்ணி கேட்டா 
  கண்றாவியா இருக்கு. 
  கண்ணாடில பாத்தா மூஞ்சி 
  நல்லாத்தான் இருக்கு. 
  அதையே செல்ஃபி எடுத்து பார்த்தா... 
  பயங்கரமா இருக்கு. 
  என்ன technology யோ...? 
  போங்கப்பா. 
  - வனிதா

  'தினமும் ஏன் இந்த ஓட்டம்?' 
  என்று சலிப்புடன் கடிகாரம் பார்த்தேன்...
  அது என்னிடம் கேட்டது: 
  'நான் ஓடா விட்டால் என்ன செய்வாய்?'
  'தூக்கி எறிந்து விடுவேன்' என்றேன் நான்...
  அதற்கு அது கூறியது: 'நீயும் ஓடா விட்டால் இந்த உலகம் உன்னை தூக்கி எறிந்து விடும்' இதுதான் வாழ்க்கை
  - குட்டிம்மா

   

  ]]>
  net, internet, facebook, twitter, instagram, இணையதளம், முகநூல், ஃபேஸ்புக் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/25/w600X390/im2.JPG http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/30/அரசியல்வாதிகள்-தோற்றுப்-போவார்கள்-எப்போது-சமூக-வலைத்தளப்-பதிவுகள்-3011102.html
  3011097 லைஃப்ஸ்டைல் செய்திகள் இ சிம்! அதென்ன? DIN DIN Sunday, September 30, 2018 01:00 PM +0530 செல்போனுக்கு சிம் கார்ட் என்பது உயிர்நாடியைப் போல் செயல்படுகிறது. பல சிம் கார்டுகளை வைத்துக் கொண்டு நேரத்துக்கு ஒரு நம்பரில் தொடர்பு கொள்வதை சிலர் பொழுது போக்காக வைத்து கொண்டுள்ளனர்.

  இந்த சிம் கார்டுகள் வடிவத்தில் மைக்ரோ, மினி, நானோ சிம் கார்ட் என்று அளவில் குறைந்து கொண்டே வந்துள்ளன. 

  இது தற்போது இ-சிம் என்ற கட்டத்துக்கு வந்துள்ளது. இந்த இ-சிம்மை யாரும் பார்க்கவும் முடியாது, தனியாக எடுக்கவும் முடியாது என்பதுதான் இதன் சிறப்பு. ஸ்மார்ட் போன்களுக்குள்ளே சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இ-சிம்களைப் பயன்படுத்தி நமக்கு தேவையான செல்போன் ஆப்ரேட்டர்களை உடனடியாக மாற்றிக் கொள்ளலாம். அதுவும் ஒரு தொலைபேசி அழைப்பின் மூலமே இதைச் செய்துவிடலாம் . ஒரு சிம்மை அலுவலக பயன்பாட்டுக்காக, வெறும் டேட்டாவுக்காக பயன்படுத்தவும், மற்றொரு சிம்மை தனிப்பயன்பாட்டுக்காகவும், எஸ்எம்எஸ், தொலைபேசி பயன்பாட்டுக்காகவும் என நமது தேவைக்கேற்ப பயன்படுத்தும் வசதி இந்த இ-சிம்களில் உண்டு.

  வழக்கமாக வெளிநாடுகளுக்குச் சென்றால், அங்குள்ள சிம்கார்டுகளைப் பயன்படுத்த வேண்டும் அல்லது இங்குள்ள சிம்கார்டுக்கு இண்டர்நேஷனல் ரோமிங்கில் பயன்படுத்த வேண்டும். 

  ஆனால் இந்த இ-சிம்களைப் பயன்படுத்தி எந்த நாட்டில் இருக்கிறோமோ அந்தப் பகுதி செல்போன் ஆப்ரேட்டரை உடனடியாகத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த முடியும். இதனால் வருங்காலங்களில் வெளிநாட்டு ரோமிங் கட்டணங்களும் இருக்காது என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். ஆகையால், அவ்வப்போது வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு இந்த இ-சிம் பெரும் உதவியாக இருக்கும். 

  ஏற்கெனவே ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சுகளில் இந்த வகையான சிம்கள் உள்ளன. அண்மையில் அறிவிக்கப்பட்ட இரட்டை சிம்கள் கொண்ட ஐ போன்களில் இந்த இ-சிம் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் முதல்முறையாக பயன்பாட்டுக்கு வந்துள்ள இந்த இ-சிம்கள் விரைவில் இந்தியாவுக்கும் வந்துவிடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
  - அ.சர்ஃப்ராஸ்

  ]]>
  micro, esim, nano simcard, இ-சிம், நானோ சிம் கார்ட், மைக்ரோ http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/25/w600X390/esim.JPG http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/30/esim-card-3011097.html
  3011096 லைஃப்ஸ்டைல் செய்திகள் உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது? DIN DIN Sunday, September 30, 2018 12:52 PM +0530  

  ஒரு கிராமத்தில் பாவெலும், பியோதரும் வசித்தார்கள். பாவெலுக்குக் குதிரைகள்தான் மிகவும் பிடிக்கும். உலகத்திலேயே பெரிய செல்வம் குதிரைகள்தான் என்பது அவன் எண்ணம். ஆனால் பியோதர், இந்த உலகத்தில் குதிரைகளைவிட மிகப் பெரிய செல்வம் நண்பர்கள்தான் என்று சொல்வான். இந்த விஷயம் குறித்து அடிக்கடி இருவரும் வாக்குவாதம் செய்து கொள்வார்கள். இறுதியில் வெளிநாடுகளுக்குச் சென்று குதிரைகளையும், நண்பர்களையும் சம்பாதிப்பது என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.

  எனவே அவர்கள் பயணம் புறப்பட்டார்கள். ஒரு வருட காலம் அவர்கள் வெளிநாடுகளில் சுற்றியலைந்து குதிரைகளையும், நண்பர்களையும் சம்பாதித்து அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினார்கள். பாவெல் கேட்டான்:

  ‘நீ எத்தனை குதிரைகளைச் சம்பாதித்தாய்?’

  ‘நான் தொண்ணூற்றி ஒன்பது குதிரைகளைச் சம்பாதித்தேன். இன்னும் ஒன்று கிடைத்திருந்தால் என்னிடம் இப்போது நூறு குதிரைகள் இருக்கும்’ என்றான்.

  அதைக் கேட்டு பியோதர்.

  ‘ஒரு காரியம் செய்யலாம். என் குதிரையை நான் உனக்குக் கொடுத்துவிடுகிறேன். அப்போது உன்னிடம் நூறு குதிரை இருக்கும்’ என்றான்.

  பாவெலுக்கு மகிழ்ச்சி. அவன் சொன்னான். ‘நீ எத்தனை நண்பர்களைச் சம்பாதித்தாய்’

  ‘நான் தொண்ணூற்றி ஒன்பது நண்பர்களைச் சம்பாதித்தேன். இன்னும் ஒன்று கிடைத்திருந்தால் என்னிடம் இப்போது நூறு நண்பர்கள் இருப்பார்கள்’

  ‘அப்படியென்றால் நீ சம்பாதித்த தொண்ணூற்றி ஒன்பது நண்பர்களுடன் நானும் சேர்ந்தால் உனக்கு நூறு நண்பர்கள் இருப்பார்கள் அல்லவா?’

  அவன் சொன்னதை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டான் பியோதர். வீட்டுக்குச் சென்ற பாவெல் தன் அம்மாவிடம் சொன்னான்:

  ‘அம்மா என் கனவு நினைவாகிவிட்டது. எனக்கு இப்போது சொந்தமாக நூறு குதிரைகள் உண்டு’

  அதைக் கேட்டு அவன் அம்மாவும் மகிழ்ந்தார்கள். பியோதரும் தன் அம்மாவிடம் இப்படிச் சொன்னான்.

  'அம்மா, நான் நூறு நண்பர்களைச் சம்பாதித்தேன்’

  அம்மா சொன்னார்கள்.

  நூறு நண்பர்கள் இருப்பது நல்லதுதான். ஆனால் அவர்கள் ஆத்மார்த்தமான நண்பர்களா என்று தெரிந்து கொள்ள வேண்டும்’

  அப்படியா?

  ‘ஆமாம். நீ இப்போதே சந்தைக்குச் சென்று உன் சொத்தையெல்லாம் இழந்துவிட்டாய் என்றும் உனக்கு வாழ்வதற்கு வழியில்லை என்றும் அறிவித்துவிடு. அப்போது உன் நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம் அல்லவா?’

  பியோதர் தன் அம்மா சொன்னது போலவே செய்தான்.

  அன்று இரவு பாவெலின் வீட்டுக்குத் திருடர்கள் வந்தார்கள். அவர்கள் நூறு குதிரைகளையும் திருடிச் சென்றுவிட்டனர். மறுநாள் காலையில்தான் பாவெலுக்கு குதிரைகள் திருடுபோன விஷயம் தெரியும். அவன் பல இடங்களிலும் அலைந்து தேடினான் என்றாலும் குதிரைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏமாற்றத்துடன் வீட்டுக்குத் திரும்பிய அவன் தன் அம்மாவிடம் சொன்னான்.

  எனக்கு ஒருநாள் மட்டும்தான் மகிழ்ச்சி கிடைத்தது. இப்போது இந்த உலகத்தில் மிகவும் துயரமானவன் நான் தான்.

  அதைக் கேட்டு அவன் அம்மாவும் வருந்தினார்கள்.

  இந்த நேரத்தில் பியோதரின் வீட்டில் என்ன நடந்தது?

  அதிகாலையிலேயே பியோதரின் நண்பர்கள் பணமும், உடைகளும் உணவுப் பொருட்களும் எடுத்துக் கொண்டு அவன் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். கொண்டு வந்த பொருட்களையெல்லாம் பியோதரிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்கள்.

  நீங்கள் கவலைப்படாதீர்கள். நாங்கள் உயிரோடு இருக்கும் வரை நீங்கள் சிரமப்பட தேவையில்லை’

  அதைக் கேட்டு மகிழ்ந்தார்கள் பியோதரின் அம்மா. நண்பர்கள் எல்லோரும் விடைபெற்றுச் சென்ற பிறகு அவர்கள் சொன்னார்கள்.

  உன் நண்பர்கள் எல்லோரும் நல்லவர்கள்தான். நீ ஆபத்தில் இருப்பதை அறிந்தவுடன் உதவி செய்ய அவர்கள் ஓடி வந்துவிட்டார்கள்.

  அதன் பிறகுதான் பாவெலின் குதிரைகள் திருடுபோன செய்தி அவனுக்குத் தெரிந்தது. உடனே அவன் பாவெலின் வீட்டுக்குச் சென்றான். தன் நண்பர்கள் கொடுத்த பணத்தையும் மற்ற பொருட்களையும் அவன் பாவெலுக்குக் கொடுத்தான்.

  நண்பனே, இழந்ததை நினைத்து வருந்தாதே. இவற்றை வைத்துக் கொண்டு மக்ழிச்சியாக வாழ்ந்திரு. நல்ல நண்பர்களைப் பெற்றிருப்பவர்கள் வாழ்க்கையில் எப்போதும் கஷ்டப்பட மாட்டார்கள்.

  எனக்கு எல்லாம் புரிந்தது. உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் நல்ல நண்பர்கள்தான்!

  பிறகு அவர்கள் ஆழ்ந்த நட்புடன் வெகுகாலம் வாழ்ந்தார்கள்.

  ]]>
  horse, story, குதிரை, நாடோடிக் கதை, நண்பர்கள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/30/w600X390/dora.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/30/short-story-3011096.html
  3011095 லைஃப்ஸ்டைல் செய்திகள் தனிநபர்களைக் கொண்டாடும் மூடத்தனத்தை நிறுத்துங்கள் இளைஞர்களே! DIN DIN Sunday, September 30, 2018 11:45 AM +0530 மழை பெய்கிறது. உருப்பளிங்கு (ஸ்படிகம்) போல் வெள்ளை வெளேர் என்று நிர்மலமாய்ப் பெய்கிறது. ஆனால் பெய்த சில மணித்துளிகளில் மண்ணின் நிறம் நீரின் நிறமாகி மாறி விடுகிறது. கரிசல் காட்டில் பெய்த மழை கறுப்பாகி விடுகிறது. செம்மண்ணில் விழுந்தால் சிவப்பாகிச் சிரிக்கிறது. மண்ணில் விழாமல் மணலில் விழுந்தால் மறைந்தே போகிறது. களிமண் பகுதியில் பெய்த மழை உள்புகாமல் தேங்கி நின்று உயிரினங்களுக்கு உதவுகிறது. எதற்கும் மழை பொறுப்பில்லை. மழைக்கு எந்த உள் நோக்கமும் இல்லை. இப்படித்தான் சில கருத்துக்களை எழுத்திலும் பேச்சிலும் முன் வைக்கிறோம். என்றாலும் படிக்கிறவர்கள், கேட்கிறவர்கள், தத்தம் வண்ணம் பூசி விமரிசனங்களை வீசி எறிகிறார்கள். படைப்பாளிக்கு உள்நோக்கம் கற்பிப்பதில் படுவேகமாகச் செயல் படுகிறார்கள்.

  இந்த உண்மையை உள்வாங்கிய பிறகு பிறரது விமரிசனங்களை மதித்தாலும், பாதிக்கப்படுவதில்லை என்று தீர்மானித்துக் கொண்டேன். மேலும் புகழுக்கு ஏங்குபவர்கள் தான் பிறரது இகழுக்கு வருத்தம் அடைவார்கள் என்பது என் தீர்மானம். புகழ் பெற வேண்டும், பாராட்டுப் பெற வேண்டும் என்பதை (Motivational Speakers and writers) சுயமுன்னேற்றப் பேச்சாளர்கள் எழுத்தாளர்கள் அதிகம் வற்புறுத்துகிறார்கள். கோடிக்கண்கள் அழ அழப் பிறந்த நாம் கோடிக் கண்கள் அழ அழ இறப்பதே சரி என்று வசனம் சொல்கிறார்கள். ஆனால் எனக்கு இதில் உடன்பாடே இல்லை. பிறர் நம்மைப் புரிந்து கொள்வது, ஏற்பது, பாராட்டுவது போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என்பதே என் கருத்து. 

  பிறருக்கு உதவி செய்த பலர், அதற்காக பிறர் நம்மை மதிக்கவில்லை.. புரிந்து பாராட்டவில்லை என்று வருந்துகிறார்கள். வின்ஸ்டன் சர்ச்சில் சொன்ன கதை ஒன்று: 'கப்பலில் இருந்து கடலில் விழுந்து விட்ட சின்னஞ்சிறு குழந்தை ஒன்றை 'தயவு செய்து யாராவது காப்பாற்றுங்கள்' என்று ஒரு தாய் கதறினார். இளைஞன் ஒருவன் உயிரைப் பொருட்படுத்தாது கடலில் குதித்து குழந்தையைக் காப்பாற்றி தாயிடம் கொடுத்தான். 'நன்றி' என்ற தாய் அடுத்த கணம் கேட்டாள்...'குழந்தை காலில் போட்டிருந்த விலை மதிப்பற்ற ஷூவைக் காணவில்லை. அதை நீ கவனிக்கவில்லையா? இன்னும் கொஞ்சம் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா?’ என்று கோபித்துக் கொண்டாளாம் இதுதான் உலகம். இன்னும் ஒருபடி மேலே போய், 'மறுபடியும் கடலில் குதித்து ஷுவைத் தேடித்தர முடியுமா?’ என்று கேட்டாள்' என்று கதையை முடித்தார் சர்ச்சில். மக்கள் பலர் அவ்வளவு சுயநலம் உள்ளவர்கள். பேராசை மிக்கவர்கள். நன்றி இல்லாதவர்கள் அரைகுறை அறிவுமட்டுமே உடையவர்கள். இவர்களுக்கு உண்மையான நன்மை
  செய்வது அத்தனை சுலபமல்ல.

  ஒரு வேடிக்கை கதை படித்தேன். ஐரோப்பாவின், ஒரு சிறுநகரில், இரவு எட்டுமணிக்குத் தம் கடையை மூடிக் கொண்டிருந்தார் ஒருவர். அவசர அவசரமாகக் கடைக்குள் நுழைந்த நாய் ஒன்று, ஒரு கூடையைக் கவ்வியபடி கொண்டு வந்து கடையின் உரிமையாளர் முன் வைத்து வாலாட்டியது. திகைத்து போன கடைக்காரர் கூடைக்குள் கிடந்த சீட்டை எடுத்துப் படித்தார். அதில் குறித்த பொருட்களைக் கடையில் இருந்து எடுத்து கூடையில் போட்டார். உடனே அறிவுள்ள அந்த நாய் கூடையின் வெளிப்பகுதி ஜிப்பைத் திறந்து பணத்தை எடுத்து கடைக்காரரிடம் நீட்டியது. திகைத்துப் போன கடைக்காரர் பாக்கி சில்லறையை நீட்டியதும் கூடையின் மறுபக்க ஜிப்பைத் திறந்து அதில் போடும்படி நாய் ஜாடை காட்டியது. பிறகு நன்றியுடன் வாலை ஆட்டியபடி வெளியேறியது. அதிக Curiosity (தேடல் ஆர்வம்) காரணமாக இந்த நாய் யாருடையது என்று கண்டறிய விரும்பிய கடைக்காரர் கடையைப் பூட்டிவிட்டு நாயைப் பின் தொடர்ந்தார். பஸ்டாண்டில் நின்ற நாய் சரியாக ஒரு பஸ்ஸில் ஏறி கண்டக்டரிடம் டிக்கட்டும் வாங்கிக் கொண்டது. இறங்க வேண்டிய இடத்தில் டிரைவர் பக்கம் போய் வாலை ஆட்ட, பஸ்ஸை நிறுத்தினார். டிரைவர், கடைக்காரர் மயங்கி விழாத குறைதான். நாயுடன் இறங்கி அதன் வீடு வரை பின் தொடர்ந்தார். 

  சிக்னல் பார்த்து, சாலையைக் கடந்து, வீட்டுமுன் சென்று மரியாதையுடன் நாய் காலிங் பெல்லை அழுத்தியதும் வீட்டுக்காரன் வந்து கதவைத் திறந்தார். எரிச்சலுடன் நாயிடமிருந்து கூடையைப் பறித்துக் கொண்டு, ஓங்கி அதன் தலைமேல் இரண்டு குட்டு வைத்தார். பதறிப் போன கடைக்காரர், ‘இவ்வளவு புத்திசாலியான நாயை ஏன் அடிக்கிறீர்கள்?’ என்று கேட்டதும் வீட்டுக்காரர் கோபமாக, 'முட்டாள் நாய்.. எத்தனை முறை சொன்னாலும் இதற்கு உரைப்பதே இல்லை. போகும் போதே வீட்டு சாவியை எடுத்துப்போ... வந்து என்னைத் தொந்தரவு செய்யாமல் கதவைத் திறந்து கொண்டு வா என்று பலமுறை சொல்லி இருக்கிறேன். மண்டையில் ஏறுவதே இல்லை. நேரம் கெட்ட நேரத்தில் காலிங் பெல்லை அடித்து கழுத்தை அறுக்கிறது’ என்றபடி கதவை அறைந்து சாத்திக் கொண்டார். இதுதான் உலகம். நீங்கள் யாருக்கு என்ன உதவி செய்தாலும் நிறைவே கிடையாது; நன்றியே கிடையாது. உதவி செய்வதோடு நம்பணி முடிந்து விடுகிறது. அதற்கான அங்கீகாரத்திற்கு ஏங்கக் கூடாது. குறைந்த பட்சம் நாம் செய்த உதவியை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூட எதிர்பார்க்கக் கூடாது.

  நம்முடைய சுக துக்கங்களின் கேந்திரமாகப் பிறரை நாம் ஆக்கிக் கொண்டு விடுவதன் மூலம், நிம்மதியற்ற ஒரு வாழ்வு வாழ வேண்டி இருக்கிறது. பிறரைச் சார்ந்தே நாம் இன்பம் அடைகிறோம். அல்லது துன்பம் அடைகிறோம். மெல்ல பிறருக்கு அஞ்சுகிறோம். அல்லது அடிமையாகிறோம். சுதந்திரம் இழக்கிறோம். பிறரால் ஆட்டி வைக்கப்படுகிறோம். 

  பிறரால் பாதிக்கப்படாத சுதந்திர உணர்வுதான் இளையதலைமுறையைச் சரியாக வடிவமைக்கும் என்று கருதுகிறேன். இன்று பல இளைஞர்கள் பல கட்சிகளில் தீவிரமான தொண்டர்களாக உலா வருவதை நான் பார்க்கிறேன். ஒரு தலைவன் எங்கு போனாலும் அவன் முன்னும் பின்னும் காரில் பிதுங்கி வழிந்தபடி தெருவில் கூச்சல் போட்டுக் கொண்டு போகும் ஏமாளிகளை மந்தை மந்தையாகப் பார்க்கிற போது என் மனம் வேதனைப்படுகிறது. இந்த இளைஞர்கள் சுயவிழிப்புப் பெறாமல் அடிமைகளாகிறார்கள் என்று நான் அஞ்சுகிறேன். இன்று எந்த அரசியல் கட்சியிலாவது தலைமையைக் கண்டிக்க முடியுமா? கருத்துச் சுதந்திரம் எந்த இயக்கத்திலாவது அனுமதிக்கப்படுகிறதா? தலைமைக்கு விசுவாசம் என்ற அராஜக அடிமைத்தனம் கட்சிகளில், இயக்கங்களில் காலுன்றி விட்டது.

  இளைஞர்கள் இதை நிராகரிக்க வேண்டும். தனிநபர்களைக் கொண்டாடும் மூடத்தனத்தை நிறுத்திவிட்டு சரியான கருத்தை ஏற்றல், பிழையான கருத்தை நிராகரித்தல் என்கிற சுதந்திர உணர்வுடன் வாழவேண்டும். நபர்கள் வருவார்கள்... போவார்கள்... கருத்துகள் தான் நிரந்தரம். தலைவனைவிட தத்துவமே தலைமையானது என்கிற சொந்த ஒளி உள்ளவனாக இளைஞர் வாழவேண்டும். எல்லா மதங்களில் இருந்தும் நல்ல விஷயங்களை உள்வாங்க வேண்டும். தன் மதப்புத்தகத்தில் உள்ள தவறுகளைத் தவறு என்று சொல்லும் தைரியம் வேண்டும். 

  மொழி வெறி, இனவெறி, மதவெறி, யாவுமே பிழை என்ற தெளிவு இன்றைய அவசரத் தேவை. மிகைபட புகழ்தல், மிகைபட இகழ்தல் ஒரு வகை மனநோய் என்று புரிந்து கொள்ள வேண்டும். முன்னோரை மதித்தல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அவர்களது தவறுகளை. அறியாமைமிக்க செயல்முறைகளை அடையாளம் கண்டு உறுதியுடன் விலகி நிற்றல். சத்தியத்தைக் காக்க ராமன் காடும் போகும் போது, குலகுரு வசிட்டரே பாசத்தால் தடுமாறி, 'நீ போகாதே.. குரு சொல்கிறேன்’ என்றதும், 'நீங்களா இப்படிப் பேசுவது?' என்று கண்டித்தபடி ராமன் குருவை மீறியதும் ராமாயணத்தில் தான் இருக்கிறது என்பது பல மதவாதிகளுக்குப் புரியாமல் போனது எனக்கு வேதனை தருகிறது. பழையனவற்றை மதிக்க வேண்டியது மட்டும் நம் வேலை அல்ல.. புதியனவற்றைத் தோற்றுவிப்பதும் நம்பணி தான் என்று சுதந்திர இளைஞன் உணர வேண்டும். மகாகவி பாரதி கேட்கிறார்: 'எவ்வளவு காலம்தான் காலத்தின் பின்னாலேயே போவது? நமக்குப் பின்னாலேயே வந்து கொண்டிருக்கிற காலத்திற்குக் கதவு திறந்து வைக்கிற வேலையை யார் செய்வது?'

  எவ்வளவு அறிவுபூர்வமான கேள்வி இது?

  - சுகி சிவம்

  ]]>
  இளைஞர்கள், youth, young, advise, sugi sivam, சுகி சிவம், பாதை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/25/w600X390/im4.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/30/தனிநபர்களைக்-கொண்டாடும்-மூடத்தனத்தை-நிறுத்துங்கள்-இளைஞர்களே-3011095.html
  3011094 லைஃப்ஸ்டைல் செய்திகள் ஒருவர் எங்கேயும் அலையாமல் வீட்டிலிருந்தே விசா பெற முடியும்! எப்படி? - இரா.மகாதேவன் DIN Sunday, September 30, 2018 11:34 AM +0530 புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2005 முதல் செயல்பட்டு வருகிறது BLS International நிறுவனம். இதை தொடங்கியவர் திவாகர் அகர்வால்.

  பாஸ்போர்ட், விசா, தூதரகம் சார்ந்த சேவைகளை வழங்கி வரும் இந்த நிறுவனம், இந்தியாவில் உள்ள அரசு வாடிக்கையாளர்கள் (Client Governments) மூலம் அதிக அளவிலான ஒப்படைப்புப் பணிகளையும், போர்ச்சுக்கல், கிரேக்கம், ஹங்கேரி ஆகிய நாடுகளில் இருந்து சிறிய அளவிலான வெளிப் பணிகளையும் பெற்று வந்தது.

  இந்த நிலையில், கடந்த 2014-இல் இந்த நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குநராகப் பொறுப்பேற்றார் திவாகர் அகர்வாலின் 23 வயது மகன் சிகார் அகர்வால். இவர் தில்லி பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டம் பெற்று, Indian internship at Grant Thornton-இல் நிர்வாகப் பயிற்சி பெற்றவர். படிக்கும் போதே, தன் குடும்பத் தொழிலை சர்வதேச அளவில் உயர்த்த வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட, அவ்வாறே அதில் சேர்ந்தவுடன், நிறுவனத்தில் செயல்பாடுகளில் தொடர்ச்சியாகப் பல மாற்றங்களை கொண்டுவந்தார். 

  குறிப்பாக, ஆவணங்களைப் பரிசீலிப்பதற்கான நேரத்தை குறைக்கும் வகையில், அவற்றில் பயோமெட்ரிக்ஸ் முறைகளை அறிமுகப்படுத்தியதோடு, இணையதளத்தையும் சீரமைத்தார். பல்வேறு நாடுகளில் இருந்தும் ஊழியர்களைத் தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்தினார். 

  சிகார் அகர்வாலின் தேடல் காரணமாக, BLS நிறுவனத்தின் வருவாய் 4 ஆண்டுகளில் ரூ. 854 கோடியாக உயர்ந்தது. மேலும், இந்த நிறுவனம் 62 நாடுகளில் கால் பதித்துள்ளதோடு, இந்தியாவில் 36 அரசு நிறுவன வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளது. மேலும், 2014-2018-க்குள் நிறுவனத்தின் லாபம் ரூ. 105 கோடி என 4 மடங்காக உயர்ந்தது.

  தற்போது, 27 வயதாகும் சிகார், முக்கியமான விசா சேவைகளைக் கடந்து, அரசு சேவைகளான குடிமக்களுக்கு பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ், அடையாள அட்டை, வாக்காளர் அட்டை வழங்கும் பணிகளைப் பெற்று செயல்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். 

  இதன் ஒரு பகுதியாக, வசதி படைத்தவர்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகளின் வசதியை கருத்தில் கொண்டு, நடமாடும் பயோமெட்ரிக்ஸ் சேவையையும் அளித்து வருகிறார். இதன்மூலம், விண்ணப்பதாரர்கள் விசா மையத்திற்கு நேரில் வந்து நாள் கணக்கில் காத்திருக்கும் பிரச்னை தவிர்க்கப்பட்டிருக்கிறது.

  விசா பெற விரும்புபவர்கள் அவர்கள் வீட்டிலோ, அலுவலத்திலோ, எங்கே அவர்களுக்கு வசதியோ அங்கே சென்று, விசா விண்ணப்பப் படிவம், தேவையான சான்றுகள், பயோ மெட்ரிக் தகவல்கள் ஆகியவற்றை இந்த நிறுவனத்தினர் சேகரித்துக் கொண்டு வருவார்கள். பிறகு அந்த விசா விண்ணப்பத்தின் நிலையை ஒவ்வொரு ஸ்டேஜிலும் எஸ்எம்எஸ் மூலமாகவோ, இ மெயில் மூலமாகவோ தெரிவிப்பார்கள். எல்லாப் பணிகளும் முடிந்த பிறகு, விண்ணப்பதாரரிடம் இருந்து பெற்றுவந்த பாஸ்போர்ட் கூரியர் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

  இதன் மூலம் ஒருவர் எங்கேயும் அலையாமல் வீட்டிலிருந்தே விசா பெற முடியும். ஏனென்றால் காத்துக் கிடக்க நேரமின்றி இயந்திரம் போல் ஓடிக் கொண்டிருக்கும் பலருக்கு இந்த நடமாடும் பயொமெட்ரிக்ஸ் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் அதிக அளவிலான தொழிலாளர்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைக் குழுக்களை இலக்காக வைத்து இந்தச் சேவையைத் தொடங்கியிருக்கிறார் சிகார்.

  இந்தியாவிற்கு மட்டுமல்ல, பிற நாடுகளுக்கும் தனது விசா சேவையை விரிவுபடுத்தியிருக்கிறார் சிகார். கடந்த மே மாதத்தில் விசா புதுப்பித்தல் பணிகளுக்காக பிரிட்டன் அரசிடமிருந்து ரூ. 980 கோடிக்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது BLS. அதோடு, கடந்த 2016, டிசம்பர் மாதம் ஸ்பெயின் அரசுக்காக உலகம் முழுவதும் விசா சேவை மையங்களை அமைத்து கொடுப்பதற்காக ரூ. 1400 கோடியில் 5 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது இந்த நிறுவனம். ஐரோப்பா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் புதிய பணிகளைப் பெறும் பொருட்டு, அங்கும் ஊழியர்களை நியமித்துள்ளார் சிகார் அகர்வால். 

  வெளிநாட்டுத் தூதர்களை சந்தித்துப் பேசுவதற்காகவும், தூதரக சேவைப் பணிகளுக்காகவும் இவர் கடந்த 3 ஆண்டுகளில் 25 நாடுகளுக்குப் பயணித்துள்ளார். இவரது கடுமையான உழைப்பால், சர்வதேச ஏலங்களில் பங்கேற்கவும், ஒப்பந்தங்களைப் பெறவும் BLS நிறுவனம் முன்தகுதி பெற்றுள்ளது. 

  BLS நிறுவனம் தற்போது உலக அளவில் முதல் 3 நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. 62 நாடுகளில் 2,325 அலுவலகங்கள், 9 ஆயிரம் ஊழியர்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், இதுவரை 3.1 கோடி விண்ணப்பங்களைக் கையாண்டுள்ளது. 

  கடினமான மற்றும் அதிநவீன உலக போட்டியை வரவேற்கும் சிகார் அகர்வால், அதை எதிர்கொள்ள விசா சேவை மற்றும் மின் ஆளுகையில் புதிய தொழில்நுட்பங்களைப் பெறுவதற்காக தனது நிறுவனத்தில் முடுக்கும் பிரிவையும் (accelerator division) ஏற்படுத்தியுள்ளார்.
   

  ]]>
  visa, Client Governments, BLS International, biometrics, பயோமெட்ரிக்ஸ், விசா, ஆவணம், சிகார் அகர்வால் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/25/w600X390/im7.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/30/ஒருவர்-எங்கேயும்-அலையாமல்-வீட்டிலிருந்தே-விசா-பெற-முடியும்-எப்படி-3011094.html
  3011092 லைஃப்ஸ்டைல் செய்திகள் நம்முடன் பலர் நெருக்கமானவர்களாக இருக்கலாம், நாம் யாரை நண்பர்களாக்கிக் கொள்ளலாம்? DIN DIN Sunday, September 30, 2018 11:29 AM +0530 'உன் நண்பன் யார் என்று சொல் நீ யாரென்று சொல்கிறேன்' என்பது சான்றோர் வாக்கு. பெறுதற்கு அரிய செல்வம் நட்புடைமையாகும். மற்ற உறவுகள் நாம் பிறக்கும் போதே இயற்கையாக உருவாகிவிடும். ஆனால் நாம் வாழும் காலத்தில் நம்மால் உருவாக்க முடிந்த உறவு நண்பர்களே. யாரை வேண்டுமானாலும் நாம் நண்பர்களாக ஆக்கிக் கொள்ளலாம். ஆனால் நல்ல மனிதர்களை நண்பர்களாக்கிக் கொள்வதன் மூலமே நம் வாழ்வை நல்ல முறையில் உருவாக்கிக் கொள்ள முடியும். கூடா நட்பு கேடாய் முடியும் என்பார்கள். எனவே நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். நம்முடன் பலர் நெருக்கமானவர்களாக இருக்கலாம். அவர்களில் நாம் யாரை நண்பர்களாக்கிக் கொள்ளலாம்?

  நேர்மையானவர்: எந்த ஓர் உறவுக்கும் உண்மையும், நேர்மையுமே அடித்தளம். நேர்மையானவர்களின் நட்பைப் பெற நாம் எப்படியேனும் முயற்சிக்க வேண்டும். நமது நண்பர் நாம் தவறான வழியில் செல்லும் போது நம்மை திருத்தி வழிகாட்டுபவராகவும், நாம் சரியான வழியில் செல்லும் போது நமக்கு பக்கபலமாக தோள் கொடுப்பவராகவும் இருத்தல் வேண்டும். "டேய் உனக்கு பச்சை சட்டை செட் ஆகலடா' என்று சொல்வது முதல் "அந்த பொண்ணுக்கு உன்னை பிடிக்கல மச்சான்' என்று சொல்வது வரை மனதில் படும் உண்மையை நமக்காக நேர்மையாக எடுத்துக் கூறுபவரையே நமது நண்பராக தேர்ந்தெடுக்க வேண்டும்.

  எப்போதும் விட்டுக்கொடுக்காதவர்: நம்மை எங்கும் எப்போதும் விட்டுக் கொடுக்காதவர்களின் நட்பை நாம் எப்போதும் விட்டுவிடக் கூடாது. நாம் தேர்ந்தெடுக்கும் நண்பர்கள் நமது கருத்துகளுக்கு மதிப்பளிப்பவராகவும், நமது கருத்தறிந்து நடந்து கொள்பவராகவும், நம்முடன் ஒத்த கருத்துடையவராகவும் இருக்க வேண்டும். சிரிப்பு, கவலை, மகிழ்ச்சி, துக்கத்தில் பங்கு கொள்பவராக இருக்க வேண்டும். சமயத்தில் மற்றவர்கள் முன் நாம் சொல்லும் மொக்கை ஜோக்குகளையும் சகித்துக் கொண்டு, "நல்லா காமெடி பண்ற மச்சான்'' என்று நம்மை விட்டுக் கொடுக்காமல் பேசுபவர்களை நாம் நண்பர்களாக்கிக் கொள்வது மிக நல்லது!

  இடுக்கண் களைவதாம் நட்பு: ஆபத்தில் உதவுபவனே நல்ல நண்பன். நாம் சந்தோஷத்தில் இருக்கும் போது மட்டுமல்லாமல் நமது கஷ்ட காலங்களிலும் துணை நிற்பவரே உண்மையான நண்பர். நாம் தேர்ந்தெடுக்கும் நண்பர்கள், நமக்கு துன்பம் வரும் வேளைகளில் அதை சரிசெய்ய நமக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி, நம்முடன் பக்கபலமாக இருந்து 'தோள் கொடுக்க தோழன் உண்டு' என்ற நம்பிக்கையைத் தர வேண்டும். அதற்காக நண்பன் தேர்வறையில் பதில் தெரியாமல் ஆபத்தில் இருக்கிறான் என்று விடைத்தாளை தூக்கிக்கொடுத்து நட்பை நிலை நாட்ட எண்ணிவிடக் கூடாது.

  உரிமையோடு பழகுதல்: சிலர் நம்மிடம் இருந்து அவர்களுக்கு தேவையான காரியங்களை சாதித்துக்கொள்ள மட்டும் நம்மை பயன்படுத்திக்கொள்வார்கள். ஆனால், நமக்கு தேவையான நேரத்தில் உதவி புரிய முன்வர மாட்டார்கள். அத்தகையோரிடமிருந்து விலகியே இருக்க வேண்டும். ஒருவர் மட்டுமே கொடுப்பதும், அதை மற்றொருவர் பெறுவதும் உதவியே தவிர, நட்பல்ல. கொடுத்து வாங்கும் உரிமை நண்பர்களிடம் மட்டுமே கொள்ள வேண்டும்.

  நம்பிக்கையானவர்: நாம் தேர்ந்தெடுக்கும் நண்பர் நமக்கு மிகுந்த நம்பிக்கையானவராக இருக்க வேண்டும். நாம் ஒரு பொறுப்பை நம்பி கொடுக்கும் போதும், ஒரு விஷயத்தை நம்பி சொல்லும் போதும் நமது நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பவரையே நண்பராக்கிக் கொள்ள வேண்டும். நமது செயல்கள் சிலவற்றில் தமக்கு விருப்பமில்லை என்றாலும் நமது உணர்வுகளுக்கு மதிப்பளித்து பழகுபவரை நமது நண்பராக்கிக் கொள்ள வேண்டும்.

  கருத்தொற்றுமை: நண்பர்களுக்கிடையே சில நேரங்களில் கருத்து வேறுபாடு ஏற்படுவதும் இயல்பே. எனினும் மற்றவரின் கருத்துகளுக்கு மதிப்பு அளித்து, நமது செயல்களை விரும்பி ஏற்றுக் கொண்டு, விட்டு கொடுத்து போவதே நட்புக்கு அழகு. அத்தகைய நபர்களிடம் நட்பு கொண்டால் வாழ்வும் அழகு பெறும்.
   - க. நந்தினி ரவிச்சந்திரன்

  ]]>
  friend, friendship, best friend, நண்பன், நட்பு, தோழி, ப்ரெண்ட்ஷிப் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/30/w600X390/469543358-612x612.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/30/friendship-mantras-to-find-out-who-is-your-best-friend-for-life-3011092.html
  3009799 லைஃப்ஸ்டைல் செய்திகள் லாபம் கொழிக்கும் தொழில் செய்ய ஆசையா? இதோ டிப்ஸ்! DIN DIN Friday, September 28, 2018 03:52 PM +0530 'சுப நிகழ்ச்சிகளுக்கு தேவையான ஆரத்தி தட்டு, காசியாத்திரை குடை, மாப்பிள்ளை தலைப்பாகை, ரெடிமேட் கூந்தல் உள்ளிட்ட பொருட்களை தயாரிப்பதைத் தொழிலாக எடுத்து செய்யலாம் என்கிறார் சுயதொழில் ஆலோசகர் உமாராஜ்:

  ஆரத்தி தட்டு: தற்போது பெரும்பாலான திருமணங்களில் ஆரத்தித் தட்டு தனி இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆரத்தித் தட்டை பல வடிவங்களில் தயார் செய்யலாம். நாம் சற்று வித்தியாசமாக பொம்மைகள் போன்றவற்றை நமது கற்பனை திறனுக்கு ஏற்றவாறு பல வடிவத்தில் செய்து வைத்து விற்பனையும் செய்யலாம், வாடகைக்கும் விடலாம். திருமண காலங்களில் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும். இதன் மூலம் நமக்கு நல்ல வருமானமும் கிடைக்கும்.

  காசியாத்திரை குடை: கடையில் விற்கும் குடையை வாங்கி அப்படியே கொடுப்பதை விட, சற்று வித்தியாசமாக அதில் கற்கள் பதித்து அல்லது 3 டி வைத்து அழகான வடிவங்கள் வரையலாம். குடையின் முனையில் உல்லன் நூல் அல்லது பட்டு நூல் கொண்டு குஞ்சலம் தொங்கவிடலாம். இதனால் குடை அலங்காரமாகவும், பார்க்க அழகான தோற்றத்துடனும் இருக்கும்.

  மாப்பிள்ளை தலைப்பாகை: பெரும்பாலான இந்து திருமணங்களில் அவரவர் வழக்கப்படி திருமணத்தன்று மாப்பிள்ளைக்கு தலைப்பாகை கட்டுவது வழக்கம். தற்போது சென்னைப் போன்ற நகர்புறங்களில் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் தலைப்பாகை கட்டத் தெரிவதில்லை. இதனால் திருமணத்தின்போது தலைப்பாகை கட்டிவிட ஆளில்லாமல் தவிக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு பிரிவினருக்கும் உள்ள வழக்கப்படி ரெடிமேட் தலைப்பாகை செய்து விற்பனை செய்யலாம். நல்ல வரவேற்பு இருக்கும்.

  ரெடிமேட் கூந்தல் அலங்காரம்: திருமணம் என்றதும் பெண்கள் தங்கள் அலங்காரத்திற்காக நிறைய செலவு செய்வார்கள். அதிலும் தற்போதுள்ள பெண்கள் தங்கள் அலங்காரம் தனித்துவமாக இருக்கும் வேண்டுமென்பதில் மிகவும் சிரத்தையுடன் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே தற்போது பிரத்யேகமான ரெடிமேட் ஜடைகள் நிறைய வந்துவிட்டன. அந்த ரெடிமேட் ஜடைகளை நாம் நமது கற்பனைக்கேற்றவாறு பல வடிவங்களில் செய்து விற்பனை செய்யலாம். உதாரணமாக, கடைகளில் கிடைக்கும் சவுரி மூடியை வாங்கி வந்து அதில் முத்துக்கள் வைத்து அலங்காரம் செய்யலாம் அல்லது ஏலக்காய், விதவிதமான பூக்கள், பழங்கள் என மணப்பெண்ணின் சேலை நிறத்திற்கு தகுந்தவாறு தயார் செய்து விற்பனை செய்யலாம்.

  இவற்றை விற்பனை செய்வது எப்படி என்று நீங்கள் கேட்பது புரிகிறது.. இதோ அதற்கான பதில், வீட்டு வாசலில், தெருமுனையில் போர்ட் வைப்பது, உறவினர், தோழிகள் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்கு உங்களது பரிசாக செய்து தாருங்கள். இதன் மூலம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களின் பார்வையில் பட்டு ஆர்டர்கள் கிடைக்கும். இணையதளம் மூலம் பரப்பலாம். மேலும், திருமண காண்ட்ராக்டர்களிடம் பேசி வைத்தும் ஆர்டர் பிடிக்கலாம். நல்ல வருமானம் தரும் தொழில் இது.
   - ஸ்ரீ

  ]]>
  tips, harathi, kasi yathirai, சுப நிகழ்ச்சி, குடை, மாப்பிள்ளை, திருமணம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/26/w600X390/mm1.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/28/லாபம்-கொழிக்கும்-தொழில்-செய்ய-ஆசையா-இதோ-டிப்ஸ்-3009799.html
  3008335 லைஃப்ஸ்டைல் செய்திகள் பால் குடிக்க அடம் பிடிக்கும் குழந்தைகளை பால் அருந்த வைக்க இதை ட்ரை பண்ணுங்க! DIN DIN Wednesday, September 26, 2018 01:52 PM +0530 மணத்தக்காளி கீரையை வதக்கி பருப்போடு மிளகாய், உப்பு, புளி சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.பெரியவர் முதல் சிறியவர் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

  தோசைமாவில் தேங்காய்ப்பாலை சேர்த்து தோசை வார்த்து பாருங்கள். தோசையின் மணம் ஊரையே கூட்டும். மிகவும் சுவையாக இருக்கும்.

  சிலர் அவல் உப்புமா என்றால் விரும்பி சாப்பிட மாட்டார்கள். அதனால் கொத்துமல்லி, இஞ்சி சேர்த்து அரைத்து தயிரில் கலந்து அவலையும் போட்டு கிளறினால் தயிர் அவல் ரெடியாகிவிடும். இது ஆரோக்கியமான சிற்றுண்டியாக இருக்கும். 

  ஒரு கரண்டி எண்ணெய் அல்லது நெய் அடுப்பில் வைத்து காய்ந்ததும் பஜ்ஜி மாவில் ஊற்றிப் பிறகு மாவைக் கரைத்து பஜ்ஜி செய்தால் வாசனையாக இருக்கும்.

  தோசை நன்றாக மெல்லியதாக வரவேண்டும் என்றால் சிறிதளவு அரிசியுடன் சிறிது ஜவ்வரிசி சேர்த்து அரைத்தால் பளபளவென்று சுவையான மெல்லியதான தோசை வரும்.

  உளுந்து வடை எண்ணெய் குடிக்காமல் இருக்க, வடைக்கு அரைத்து எடுத்ததும் அதில் இரண்டு ஸ்பூன் அரிசிமாவைக் கலந்து வடை தட்டினால் மொறு மொறுவவென்று சூப்பராய் வரும். எண்ணெய்யும் குடிக்காது.

  இரவு நேரங்களில் சப்பாத்தி போன்றவற்றை சாப்பிட்டால் சிலருக்கு எளிதில் ஜீரணமாகாது. இதை தடுக்க மாவு பிசையும்போது ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய்யைச் சேர்க்க வேண்டும்.

  புதிய பாத்திரங்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை பிய்த்து எடுத்தாலும் அந்த பசை பாத்திரத்தை விட்டு பல நாட்களுக்கு போகாது. இதை உடனடியாக நிவர்த்தி செய்ய, அந்த ஸ்டிக்கர்களின் மீது சமையலுக்கு உபயோகப்படுத்திய எண்ணெய்யின் இரண்டு சொட்டை விட்டு அதை விரலால் தேய்த்தால் ஸ்டிக்கரும் பசையும் பாத்திரத்தை விட்டு சுத்தமாக அகன்று விடும்.

  பன்னீர் பட்டர் மசாலா வீட்டில் செய்யும் போது இஞ்சி வெங்காய விழுதை நன்கு வதக்கி பின்னர் கெட்டியாக முந்திரி கசகசா ஒரு ஸ்பூன் தேங்காய் விழுது சேர்த்து அரைத்து விட்டால் சுவையும் மணமும் ஹோட்டலை தோற்கடிக்கும்.

  பால் வேண்டாம் என அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு அதே பாலில் இரண்டு ஸ்பூன் ப்ருட் ஜாமைப் போட்டுக்கலக்கி ப்ருட்டி மில்க் ஷேக்காகக் கொடுத்து ஜமாயுங்கள்.

  மோர்குழம்பு செய்யும் போது ஒரு மஞ்சள் வாழைப்பழத்தை நன்கு பிசைந்து சேர்த்துக் கொண்டால் சூப்பர் ருசிதான்.

  தோசைக்கல்லில் தோசை வார்க்க வராமல் இருந்தால் வெண்டைக்காயை தடவி தோசை வார்த்தால் தோசை நன்றாக வரும்.

  வெல்லம் சேர்த்து செய்யும் பொங்கல், பாயசம் போன்றவற்றிற்கு வெல்லத்தைக் கொஞ்சம் குறைத்துப் போட்டு கடைசியில் சர்க்கரையைக் கொஞ்சம் சேர்க்க சுவை கூடும்.

  வாழைத் தண்டை பொடிப் பொடியாய் நறுக்கி பக்கோடாவிற்கு கலந்து வைத்த மாவில் போட்டு பிசைந்து பக்கோடா செய்தால் வெங்காயத்திற்கும் வாழைத்தண்டிற்கும் வித்தியாசம் தெரியாமல் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். 

  பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் - நூலிலிருந்து
  - சி.பன்னீர்செல்வம்

  ]]>
  milk, kids, tips, டிப்ஸ், பால், குழந்தை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/26/w600X390/download.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/26/பால்-குடிக்க-அடம்-பிடிக்கும்-குழந்தைகளை-பால்-அருந்த-வைக்க-இதை-ட்ரை-பண்ணுங்க-3008335.html
  3008311 லைஃப்ஸ்டைல் செய்திகள் இந்த வாய்ப்பு கிடைத்தது எனது வாழ்நாள் சாதனை! - கண்ணம்மா பாரதி. DNS Wednesday, September 26, 2018 11:17 AM +0530 தமிழகத்தில் மறக்கப்பட்டு வரும் கோலத்தை திருச்சி ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்து வரும் மங்களம் சீனிவாசன் முகநூல் மூலமாக உலகம் முழுக்க வாழும் தமிழ் குடும்பங்களுக்குக் கொண்டு போய் சேர்க்கிறார். கோலத்துடன் நின்று விடாமல் தனது வட்டத்தை ரங்கோலி, தஞ்சாவூர் ஓவியம் என்று விரிவாக்கி தனது இல்லத்தையும், முகநூலையும் ஒரு கலைக்கூடமாக மாற்றியுள்ளார். இதுகுறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

  'பிறந்தது ஸ்ரீரங்கத்தில். வளர்ந்தது நெய்வேலியில். அப்பா நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வந்தார். அம்மா அருமையாகக் கோலம் போடுவார். கோலத்தில் அவர்தான் எனது குரு. நெய்வேலியில் கிடைக்கும் வெண்நிற மணலைத்தான் கோலமாவாகப் பயன்படுத்துவோம். ஐம்பது புள்ளி, எண்பது புள்ளி கோலம் என்று போட்டி போட்டுக் கொண்டு போடுவோம். அப்படித்தான் கோலத்தைக் கற்றுக் கொண்டேன். எனது மாமா மகனைத் திருமணம் செய்து கொண்டதால் ஸ்ரீரங்கத்தில் நிரந்தரவாசியாகி விட்டேன். கணவர் 'பெல்' நிறுவனத்தில் பணிபுரிகிறார். 

  கோயில்களுக்குப் போவதில் எனக்கு அத்தனை விருப்பம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஸ்ரீரங்கத்தைச் சுற்றியுள்ள எல்லா கோயிலுக்கும் சென்று வழிபட்டு வருவேன். கோயிலில் கோலம் போடுவேன். வில்வ, வன்னி மரக் கன்றுகளை கோயிலில் நட்டு வருவேன். இவைதான் எனது அன்றாட வேலைகளாக இருந்தன. 

  'தமிழ்நாடு அரசின் கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் எனது வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது. எனக்கு கோலம் வரைய வரும் என்றாலும் ஓவியம் வரைய வராது. இந்தக் கழகம் ஓர் ஆண்டு ஓவியப் பயிற்சி வகுப்புகளை உதவித் தொகை வழங்கி நடத்தியது. நூறு பெண்கள் இந்த பயிற்சி வகுப்பில் சேரலாம். சுமார் இரண்டாயிரம் பெண்கள் மனு செய்திருந்தனர். தேர்வு வைத்து தெரிவு செய்யப்பட்டவர்களில் நானும் ஒருத்தி. 

  46-ஆம் வயதில் நான் மீண்டும் மாணவியானேன். சிரத்தையுடன் ஓவிய நுணுக்கங்களை கற்றுக் கொள்ளத் தொடங்கினேன். முதல் ஏழுமாதம் மனித உடல் கூறுகளை வரைவதை அக்கு வேறு ஆணி வேறாகச் சொல்லிக் கொடுத்தார்கள். பென்சில் கொண்டுதான் வரைய வேண்டும். மை கொண்டு வரையத் தொடங்கியது எட்டாம் மாதத்தில். பிறகு தஞ்சாவூர் ஓவியம் வரைவது குறித்து பயிற்சிகள் தரப்பட்டன. 

  இந்த அடிப்படை பயிற்சிகள் என்னுள் ஒளிந்திருந்த கலைத் திறனைப் பட்டை தீட்டி வெளியே கொண்டு வந்தன. இப்போது மனித உருவத்தை அல்லது சிக்கலான ஓவியத்தை எந்தக் கோணத்திலும் என்னால் சரியாக வரைய முடியும். இந்த தன்னம்பிக்கையை அந்த பயிற்சி வகுப்புகள் தந்தன. 

  வீட்டில் விழாக் காலங்களில் பல வண்ணப் பொடிகளைக் கொண்டு ஓவியம் வரைவேன். வருகிறவர்கள் பாராட்டுவார்கள். என்னைப் பற்றி அறிந்த ஒரு விழா அமைப்பாளர், 'மாதம் இருபதாயிரம் தருகிறேன்... விழா சமயங்களில் பொருத்தமான கோலங்களை போட்டுத் தர வேண்டும் என்று அணுகினார். அப்போது வியாபார ரீதியாக இயங்க மனம் இடம் தரவில்லை. அதனால் அந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

  'தஞ்சாவூர் ஓவியத்தில் நகாசு வேலைகள் அதிகம். தவிர ஓவியம் வரையும் துணியை சலவைக் கல் அளவுக்கு வழுவழுப்பாகக் கொண்டு வந்த பிறகுதான் ஓவியம் வரையத் துவங்க வேண்டும். உழைப்பு அதிகம். நான் பயன்படுத்தும் தங்கத்தில் உருவாகும் மெல்லிய தகடுகள் (foil) அசலானவை. மாசு குறைந்த தங்கத் தகடுகளை பயன்படுத்துவதில்லை. தஞ்சாவூர் ஓவியத்திற்கு ஆரம்ப வேலைகளுக்காக உதவியாளர்கள் இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணி நேரம் ஓவியங்களுக்காகச் செலவிடுகிறேன். தஞ்சாவூர் ஓவியங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பலரும் தங்கள் குலதெய்வத்தை வரையச் சொல்லி ஆர்டர்கள் செய்கிறார்கள். அவர்கள் தரும் படத்தை அடிப்படையாக வைத்து வரைந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி ஒப்புதல் பெற்ற பின் ஓவியத்தை பூர்த்தி செய்வேன். எனது ஓவியங்களைப் பார்த்து திருப்தி அடைந்த காஞ்சி மடம் ஆதிசங்கரருக்குப் பின் அவதரித்த எழுபத்திரண்டு சங்கராச்சாரிகளின் படங்களை வரையச் சொல்லியிருக்கிறார்கள். இந்த வாய்ப்பு கிடைத்ததை எனது வாழ்நாள் சாதனை என்று சொல்லலாம். இந்த அரிய வாய்ப்பு நான் வணங்கும் அகிலாண்டேசுவரி அருளால் கிடைத்திருக்கிறது என்று நம்புகிறேன்.

  கோலம், ரங்கோலி ஓவியம் எனது ஆத்ம திருப்திக்காக வரைகிறேன். அதை நான் வணங்கும் கடவுள்களுக்கு கலை வழிபாடாகக் கருதுகிறேன். 2013 -இல் எனது மகள்களான பார்கவி, ஐஸ்வர்யா 'மை மாம்ஸ் ஆர்ட் கேலரி' என்ற முகநூல் பக்கத்தைத் தொடங்கினார்கள். எனது கலைப் படைப்புகளின் படங்களை அதில் பதிவேற்றம் செய்தார்கள். இது மட்டும் நடந்திருக்காவிட்டால், என்னைப் பலருக்கும் தெரியாமல் போயிருக்கும். பெற்ற தாய்க்கு மகள்கள் உரிய விதத்தில் உதவினார்கள். எனது முகநூலைப் பார்த்தவர்கள் என்னைத் தொடர்பு கொள்கிறார்கள். சுமார் ஒரு லட்சம் பேர்கள் இந்த முக நூல் பக்கத்தைத் தொடர்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

  வண்ணக் கோலப் பொடியில் ஜரிகை வேலைக்காக பயன்படுத்தும் தங்க நிறப் பொடியை சரியான வண்ணம் வரும் விதத்தில் உருவாக்குவதில் சிக்கல் உள்ளது. பல ஆண்டுகளாக பரீட்சித்துப் பார்த்து, எலுமிச்சை நிற மஞ்சள், காவி, ஆரஞ்சு, அடர் சிவப்பு நிறங்களை உரிய விகிதத்தில் கலந்து தங்கத்தின் உண்மையான பகட்டினை பொடியில் கொண்டு வந்திருக்கிறேன். இது எனக்குத் தொழில்ரீதியாகக் கிடைத்த வெற்றி. கோலம், ரங்கோலி, தஞ்சாவூர் ஓவியங்களில் கின்னஸ் சாதனை நிகழ்த்த வேண்டும். அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளேன்' என்கிறார். 

  ]]>
  painting, oviyam, kolam, rangoli, ஓவியம், கோலம், ரங்கோலி, தஞ்சாவூர் ஓவியம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/26/w600X390/THANJAAVOOR_OVIYAM.JPG http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/26/இந்த-வாய்ப்பு-கிடைத்தது-எனது-வாழ்நாள்-சாதனை-3008311.html
  3006935 லைஃப்ஸ்டைல் செய்திகள் நீங்கள் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உடையவரா? இந்தப் போட்டி உங்களுக்குத்தான்! DIN DIN Monday, September 24, 2018 03:12 PM +0530 இரண்டாம் போட்டிக்கான தலைப்பு : ட்ராவல் க்ளிக்ஸ்

  செப்டம்பர் 27 உலக சுற்றுலா தினம். அதை முன்னிட்டு இன்று முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீங்கள் ஜாலி டிரிப் சென்ற இடங்களை க்ளிக் செய்து இந்தப் போட்டிக்கு அனுப்புங்கள்.

  தேர்ந்தெடுக்கப்படும் புகைப்படங்கள் தினமணி இணையதளத்திலும், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிடப்படும்.

  இதில் அந்த இடத்தைப் பற்றிய குறிப்பையும் உங்கள் அனுபவங்களையும் ஒரு சில வரிகளில் எழுதி அனுப்புங்கள்.

  போட்டிக்கான சில விதிமுறைகள்

  • இமெயில் மூலம் மட்டுமே புகைப்படங்களை அனுப்ப வேண்டும். இந்தப் போட்டிக்கான இமெயில் முகவரி: dinamaniphotocontest@gmail.com
  • புகைப்படத்துடன் உங்கள் மொபைல் எண், இமெயில் ஐடி, ஃபேஸ்புக் ஐடி, ஃபோட்டோ எடுக்கப் பயன்படுத்தப்பட்ட கேமராவின் மாடல், புகைப்படக் குறிப்பு, ஆகியவற்றை மறக்காமல் எழுதி அனுப்புங்கள். 
  • இந்த வாரத் தலைப்புக்கு ஏற்ற வகையில் மட்டுமே புகைப்படம் இருக்க வேண்டும். 
  • நீங்கள் எடுக்கும் புகைப்படங்கள் டிஎஸ்எல்ஆர் கேமரா / டிஜிட்டல் கேமரா மற்றும் மொபைலில் கூட எடுக்கப்பட்டதாக இருக்கலாம்.
  ]]>
  instagram, tour, trip, சுற்றுலா, ஜாலி டிரிப் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/24/w600X390/tour.png http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/24/photography-contest-3006935.html
  2996608 லைஃப்ஸ்டைல் செய்திகள் நீங்கள் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உடையவரா? இந்தப் போட்டி உங்களுக்குத்தான்! DIN DIN Monday, September 24, 2018 02:46 PM +0530  

  உங்களுக்கு புகைப்படக் கலையில் ஆர்வம் இருக்கிறதா? நீங்கள் எடுக்கும் புகைப்படங்கள் உங்கள் கணினி அல்லது மொபைலில் மட்டும் தேங்கிப் போகாமல் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் எனில் அதற்கான களமாக தினமணி இணையதளத்தின் ‘இன்ஸ்டாகிராம் புகைப்படப் போட்டி’யை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

  நீங்கள் எடுக்கும் அழகான புகைப்படங்கள் ஒவ்வொரு வாரமும் தினமணி டாட் காம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்படும்.

  விநாயகர் சதுர்த்தி நம்மில் பலர் கொண்டாடி மகிழும் ஒரு பண்டிகை. இந்தப் போட்டியை துவங்க இதுவே சரியான தருணம். முதல் போட்டிக்கான தலைப்பு :

  இன்று முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை நீங்கள் பார்க்கும் விதவிதமான விநாயகர் சிலைகளை ‘க்ளிக்’ செய்து இந்தப் போட்டிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் புகைப்படங்கள் தினமணி இணையதளத்திலும், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிடப்படும்.

  இதில் உங்கள் வீட்டு விநாயகரையும் க்ளிக் செய்து, அதனுடன் உங்கள் விநாயக சதுர்த்தி அனுபவங்களையும் எழுதி அனுப்புங்கள்.

  போட்டிக்கான சில விதிமுறைகள்

  • இமெயில் மூலம் மட்டுமே புகைப்படங்களை அனுப்ப வேண்டும். இந்தப் போட்டிக்கான இமெயில் முகவரி: dinamaniphotocontest@gmail.com
  • புகைப்படத்துடன் உங்கள் மொபைல் எண், இமெயில் ஐடி, ஃபேஸ்புக் ஐடி, ஃபோட்டோ எடுக்கப் பயன்படுத்தப்பட்ட கேமராவின் மாடல், புகைப்படக் குறிப்பு, ஆகியவற்றை மறக்காமல் எழுதி அனுப்புங்கள். 
  • அந்தந்த வாரத் தலைப்புக்கு ஏற்ற வகையில் புகைப்படம் இருக்க வேண்டும். தனி நபர்களை புகைப்படம் எடுத்து போட்டிக்கு அனுப்பும் போது அந்த நபர்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே அனுப்ப வேண்டும். 
  • நீங்கள் எடுக்கும் புகைப்படங்கள் டிஎஸ்எல்ஆர் கேமரா / டிஜிட்டல் கேமரா மற்றும் மொபைலில் கூட எடுக்கப்பட்டதாக இருக்கலாம்.
  ]]>
  வினாயகர் சதுர்த்தி, Vinayagar, photo contest, vinayaga chathurthi http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/8/w600X390/Ganesh_Chaturthi_idols.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/08/நீங்கள்-புகைப்படம்-எடுப்பதில்-ஆர்வம்-உடையவரா-இந்தப்-போட்டி-உங்களுக்குத்தான்-2996608.html
  3006289 லைஃப்ஸ்டைல் செய்திகள் உங்களாலும் முடியும்! நம்புங்கள்  - ஸ்ரீதேவி DIN Sunday, September 23, 2018 03:55 PM +0530 சென்னை வள்ளுவர் கோட்டத்தை அடுத்து அமைந்துள்ளது அன்னை தெரசா மகளிர் வளாகம். அங்கு 'மாடித் தோட்ட  பயிற்சி'யை சுயஉதவிக் குழு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வகையில், அங்கு மாடித் தோட்ட பயிற்சி பெற்று, தற்போது மாடி தோட்ட பயிற்றுநர்களாக மாறியிருக்கின்றனர் 'மாடித் தோட்ட தொழிற் குழு' அமைப்பினர்களான  ரேவதி, ஸ்ரீமதி, புனிதா, காஞ்சனா  ஆகிய நால்வர். அவர்களில் ரேவதி  நம்மிடம் பகிர்ந்து கொண்டவை: நாங்கள் நால்வரும் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். கடந்த 12 ஆண்டுகளாக ஒவ்வொருவரும் தனித்தனியாக சுயஉதவிக்குழுவை நடத்தி வருகிறோம். சமீபத்தில் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மாடித் தோட்ட பயிற்சி அளிப்பதை அறிந்து நாங்கள் நால்வரும்  பயிற்சி பெறலாம் என்று முடிவு செய்து வந்தோம்.

  15 நாள் பயிற்சி, அந்த பதினைந்து நாளும் நாங்கள் மகளிர் வளாகத்திலேயே தங்கி பயிற்சி பெற்றோம்.  பின்னர் பயிற்சி முடிந்து திரும்பியதும். அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது.  மாடித்தோட்டம்  பயிற்சி பெற்ற எங்களுக்கு  வேலை வாய்ப்பும் அவர்களே ஏற்படுத்தி தந்தார்கள்.  

  இதன் மூலம் கிருஷ்ணசாமி கல்லூரியில் முதன்முதலில்  காய்கறி, கீரை பயிர்களை  25 கூடைகளில் அமைத்து தந்தோம்.   நாங்கள்  அமைத்த பயிர்கள் செழித்து வளர ஆரம்பித்தது. இதனால் கல்லூரி முதல்வர், தனது  வீட்டில் அமைத்து தரும்படி கேட்டார்.  அதன்பிறகு கிண்டி என்யூஎல்எம் அலுவலகம், மகேஸ்வரி ஐஏஎஸ் அம்மாவின் வீடு என ஒவ்வொரு ஆர்டராக வரத் தொடங்கின. பெரும்பாலும்  அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகள் என அரசு சார்ந்த இடங்களில்தான் வாய்ப்புகள் வந்தன.  நாங்கள் நன்றாக மாடித்தோட்டம் அமைத்து கொடுக்க  தொடங்கியதும்.   வங்கியில் லோன் பெற்று  மேலும் விரிவு படுத்த  தொடங்கியுள்ளோம்.  தற்போது  நால்வரும் சேர்ந்து  எங்களுக்கென ’மாடித் தோட்ட தொழிற்குழு'  என அமைப்பை உருவாக்கி அதன்மூலம் மாடித்தோட்டம் அமைத்து தருகிறோம். 

  நவம்பர் மாதம்தான்  பயிற்சியைப் பெற்றோம். அதற்குள் 300 கூடைகளுக்கு மேல் அமைத்துக் கொடுத்துவிட்டோம். தற்போது,  அன்னை தெரசா வளாகத்தில் பயிற்சி பெற வருபவர்களுக்கு எங்களை பயிற்சி ஆசிரியராகவும் நியமித்திருக்கிறார்கள். இதுவரை 22 பேருக்கு நாங்கள் பயிற்சியும்  அளித்துள்ளோம்.   

  சென்னையில் சிறந்த முறையில் மாடித் தோட்டம் அமைத்து கொடுத்ததற்காகவும், சிறந்த  பயிற்றுனர்களாகவும்   எங்களைத் தேர்வு செய்து மகளிர் வளாகத்தின் மூலம் பரிசு அளித்துள்ளனர். மாடித் தோட்டம் அமைப்பதற்கான அனைத்து உபகரணங்களையும் நாங்களே எடுத்துச் சென்றுவிடுவோம்.  இது நம்மால்  முடியுமா?  என்ற தயக்கத்துடன் களமிறங்கிய எங்களுக்கு  முயன்றால்  நிச்சயம் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது'' என்றார். 

  ]]>
  roof garden, garden, lifestyle, தோட்டம், அம்பத்தூர் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/19/w600X390/mn10.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/23/roof-garden-at-chennai-3006289.html
  3006280 லைஃப்ஸ்டைல் செய்திகள் உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெற இதை உடனடியாக முயற்சி செய்யுங்கள்! DIN DIN Sunday, September 23, 2018 12:47 PM +0530 மோர்க்  குழம்பில் பூசணி, சுரை, வெண்டை போன்ற காய்கள் ஏதாவது ஒன்றை சேர்த்து செய்தால் மோர்க் குழம்பு  கூடுதல்  ருசியாக இருக்கும்.

  சர்க்கரைப் பாகில் சிறிது பால் விட்டால்  கசடுகள் மேலே தேங்கும்.  அவற்றை ஒரு கரண்டியால் எடுத்து விட்டால்  கூடுதல் சுவையாக இருக்கும். அது போன்று வெல்லப்பாகில் எலுமிச்சை சாறு ஒரு துளி விட்டு வடிக்கட்டினால் கசடுகள் வந்துவிடும்.

  புளிக்கரைசலில் உப்புக் கலந்து தேய்க்கப் பித்தளை - செம்பு  பாத்திரம் பளபளக்கும். நல்லத் தண்ணீரில் கழுவித் துடைக்க வேண்டும்.

  ரவா கேசரியில், ஊறவைத்த ஜவ்வரிசி (அ) வறுத்த சேமியா கலந்தால் பார்க்க அழகாகவும், சுவை கூடுதலாகவும் இருக்கும்.

  மாதுளைச் சாறு, காய்ச்சி ஆறிய பால், பனங்கற்கண்டுடன் பருகினால் பானம் சுவை கூடுவதுடன்  எலும்பு, நரம்பு, பற்கள் பலப்படும்.  இரும்புச்சத்து கூடிடும்.

  எலுமிச்சைச் சாறு, ஆரஞ்சு சாறு, இஞ்சிச் சாறு இவற்றுடன் மிளகுத் தூள் ஒரு சிட்டிகை, நாட்டுச் சர்க்கரை  சேர்த்துப் பருகிட  உடல் அசதி  நீங்கும். ஜீரணசக்தி,   புது ரத்தம்  ஊறும். உடல் நிறங்கூடும்.  

  துவரம் பருப்பு,  மிளகாய் வற்றல், பூண்டுப் பற்கள்  தனித்தனியே வறுத்து, சிறிது உப்பு சேர்த்து  துவையலாக அரைத்து  காரக் குழம்பு சாதத்துடன்  சேர்த்து சாப்பிட்டால் சுவை  கூடுதலாக இருக்கும்.

  எலுமிச்சை, பூண்டுச்சாறு அல்லது துளசிச்சாறு தடவ முகப் பரு சரியாகி, வடுமறைந்து முகம் அழகாகும்.

  உலையிலிட்ட அரிசி கொதி வரும் நுரையோடு  கூடிய நீரை ஒரு டம்ளர் எடுங்கள். அதில் பனங்கற்கண்டு, வெண்ணெய் சேர்த்துப் பருகிட உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். வயிற்று சம்பந்தபட்ட நோய் விலகும். உடல் சூடும் குறையும். 

  பிஞ்சு முருங்கை, அவரை, நாட்டுக் கத்திரிக்காய், சுரை, சௌசௌ, முள்ளங்கி, வெள்ளை வெங்காயம், கோஸ்  இவற்றையெல்லாம் அடிக்கடி உணவில்  சேர்க்க நோய் எதிர்ப்பு சக்தி கிட்டும். நினநீரோட்டம் சீராகும். உடல் சூடு சமநிலையில் இருக்கும். கீரைகளும் நல்லது. ஆரோக்யம் கூட்டும். தோல்  சுருக்கம் ஏற்படாது.

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/23/w600X390/3C4CB4E000000578-4138234-image-a-2_1484865821508.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/23/உடல்-சோர்வு-நீங்கி-புத்துணர்ச்சி-பெற-இதை-உடனடியாக-முயற்சி-செய்யுங்கள்-3006280.html
  3002871 லைஃப்ஸ்டைல் செய்திகள் தினமணி இணையதளத்தின் ‘விக்கி க்ளிக்ஸ் இன்ஸ்டாகிராம் புகைப்படப் போட்டி’ புகைப்படங்கள் DIN DIN Tuesday, September 18, 2018 06:23 PM +0530  

  விநாயகர் சதுர்த்தி நம்மில் பலர் கொண்டாடி மகிழும் ஒரு பண்டிகை. இதை முன்னிட்டு, புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள தினமணி இணையதளத்தின் ‘இன்ஸ்டாகிராம் புகைப்படப் போட்டி’க்கு வாசகர்கள் அனுப்பிய சிறந்த புகைப்படங்கள் இங்கே இடம்பெற்றுள்ளன. 

   

  ஜாக்சன் ஹெர்பி, நாகர்கோயில்.

   

  ரவி அருணாச்சலம், தி.நகர் - சென்னை.

   

  விக்னேஷ் காமுதுரை, தேனி.

   

  கடம்பாவனம் தமிழரசு, கொளத்தூர் - சென்னை.

   

  எஸ்.ஆர்.பார்த்திபன்

   

  விக்னேஷ்வரன், சென்னை.

  *

  உங்களுக்கு புகைப்படக் கலையில் ஆர்வம் இருக்கிறதா? நீங்கள் எடுக்கும் புகைப்படங்கள் உங்கள் கணினி அல்லது மொபைலில் மட்டும் தேங்கிப் போகாமல் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் எனில் அதற்கான களமாக தினமணி இணையதளத்தின் ‘இன்ஸ்டாகிராம் புகைப்படப் போட்டி’யை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

  அந்தந்த வாரத் தலைப்புக்கு ஏற்ற வகையில் புகைப்படம் இருக்க வேண்டும். தனி நபர்களை புகைப்படம் எடுத்து போட்டிக்கு அனுப்பும் போது அந்த நபர்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே அனுப்ப வேண்டும். 
  நீங்கள் எடுக்கும் புகைப்படங்கள் டிஎஸ்எல்ஆர் கேமரா / டிஜிட்டல் கேமரா மற்றும் மொபைலில் கூட எடுக்கப்பட்டதாக இருக்கலாம்.

  நீங்கள் எடுக்கும் அழகான புகைப்படங்கள் ஒவ்வொரு வாரமும் தினமணி டாட் காம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (www.instagram.com/webdinamani) வெளியிடப்படும்.

  போட்டிக்கான சில விதிமுறைகள்

  இமெயில் மூலம் மட்டுமே புகைப்படங்களை அனுப்ப வேண்டும். இந்தப் போட்டிக்கான இமெயில் முகவரி: dinamaniphotocontest@gmail.com

  புகைப்படத்துடன் உங்கள் மொபைல் எண், இமெயில் ஐடி, ஃபேஸ்புக் ஐடி, ஃபோட்டோ எடுக்கப் பயன்படுத்தப்பட்ட கேமராவின் மாடல், புகைப்படக் குறிப்பு, ஆகியவற்றை மறக்காமல் எழுதி அனுப்புங்கள். 

  ]]>
  விநாயகர் சதுர்த்தி , Vinayagar Chaturthi http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/12/w600X390/vinayagar-1.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/18/தினமணி-இணையதளத்தின்-விக்கி-க்ளிக்ஸ்-இன்ஸ்டாகிராம்-புகைப்படப்-போட்டிபுகைப்படங்கள்-3002871.html
  3002884 லைஃப்ஸ்டைல் செய்திகள் பள்ளியில் படிக்கும் போது சராசரி மாணவன், இப்போது பறப்பதற்குத் தடையில்லை என்கிறார்! இதுவொரு உண்மைக் கதை! DIN DIN Tuesday, September 18, 2018 05:41 PM +0530 ஆர்வமும், விடாமுயற்சியும் இருந்தால் எத்தனை உயரங்களுக்கும் செல்லலாம் என்பதை நிரூபித்திருக்கிறார், கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உண்ணியூர்கோணத்தைச் சேர்ந்த சேர்ந்த இளைஞர் ரவி ஆர்.சங்கர்.

  பள்ளியில் படிக்கும் போது ஒரு சராசரி மாணவராய் இருந்த இவர், இப்போது அமெரிக்காவில் 'பிளையிங் இன்ஸ்ரக்டர்' என்று சொல்லப்படும் விமான ஓட்டிகளுக்கான பயிற்றுநராக உள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இவர் தான்  விமான ஓட்டிகளுக்கான முதல் பயிற்றுநர்  என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.  ரவி ஆர். சங்கரிடமிருந்து உரையாடியதிலிருந்து....

  'எனது தந்தை ரவீந்திரன்நாயர், தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளித் தலைமை ஆசிரியராக உள்ளார். தாய் நிர்மலா ரவீந்திரன். சகோதரி ரவீணா லக்ஷ்மி. நான் திருவட்டாறு  ஆற்றூர் என்.வி.கே.எஸ். மேல் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தேன். தொடர்ந்து குமாரகோயில் நூருல் இஸ்லாம் கல்லூரியில் ஏரோனாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்தேன். பள்ளியில் படிக்கும் போது நான் ஒரு சராசரி மாணவன் தான்.  

  நான் 8 ஆம் வகுப்பு படிக்கும் போது  ஒருமுறை எனது தந்தையுடன் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு சென்ற போது அங்கு பறந்து வந்த விமானங்களைப்  பார்த்து   பிரமிப்பும், பரவசமும் அடைந்தேன். விமானங்களை ஓட்டும் பைலட்டுகள் அங்கு மிடுக்காக நடந்து வருவதைப் பார்த்த போது எனக்குள்ளும், கற்பனை சிறகுகள் விரிந்தன. நானும் விமானங்களை ஓட்ட வேண்டும் என்ற ஒரு லட்சியத்தை ஏதோ ஒரு நம்பிக்கையில் மனத்திற்குள் விதைத்துக் கொண்டேன். பின்னர் விமானங்கள் எப்படி பறக்கின்றன என்பதைப் பற்றியெல்லாம் புத்தகங்களிலும், இணையத்திலும் படிக்கலானேன். கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்  சேர்ந்து படித்த  போது  விமான தொழில் நுட்பங்களை குறித்து அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது.  

  விமானம் ஓட்டி அல்லது விமானி ஆவதற்கு அடிப்படை கல்வித் தகுதி பிளஸ் 2 படிப்பாகும். விமானம் ஓட்டுவதற்கான பயிற்சிப் பள்ளிகள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ளன. இதே போன்று வெளிநாடுகளிலும் உள்ளன. அமெரிக்கா போன்ற நாடுகளில் பயிற்சி பெறுவதற்கு சற்று கூடுதல் செலவாகும். இந்தியாவில் விமான பயிற்சிக்கு மத்திய அரசின்  உதவித் தொகை வழங்கும் திட்டங்களும் உள்ளன.   

  ஒருவர் விமானம்  ஓட்டிக்கான பயிற்றுநராவதற்கு முன்பு,  முதலில் விமானம் ஓட்டுநராக அதாவது விமானியாக பயிற்சி பெற வேண்டும். இந்தப் பயிற்சியானது 3 கட்டங்களைக் கொண்டது. முதலில் எஸ்.பி.எல். எனப்படும் ஸ்டூடன்ட் பைலட் லைசென்ஸ் பெற வேண்டும். இதனைத் தொடர்ந்து பி.பி.எல். எனப்படும், பிரைவேட் பைலட் சைசென்ஸ் பெற வேண்டும். இவை இரண்டும் பெற்ற பின்னர்  சி.பி.எல். எனப்படும் கமர்சியல் பைலட் லைசென்ஸ் பெற வேண்டும். இதில் கமர்சியல் பைலட் லைசென்ஸ் என்பது முக்கியமானது. இந்த லைசென்ஸ் தான் விமானங்களை ஓட்டுவற்கு கற்றுத் தருகிறது.  இந்த

  உரிமத்தை விரைவாகப் பெறுவது  ஒருவருடைய திறமையையும், ஆர்வத்தையும் பொறுத்தது. கமர்சியல் பைலட் லைசென்ஸ் பெற்றவர் விமானங்களைத் தனியாக  இயக்கலாம். விமான ஓட்டிகளாக பயிற்சி பெற்றவர்கள்,  விமான ஓட்டிகளுக்கான பயிற்றுநர் ஆக வேண்டுமென்றால், சி.எப்.ஐ.  எனப்படும் சர்டிபைடு பிளைட் இன்ஸ்ரக்டர் பயிற்சி பெற்று அதில் தேர்ச்சி பெற வேண்டும்.  

  நான் இப்போது அமெரிக்காவில் புளோரிடா மகாணத்தில் டேட்டோனா  பீச் சர்வதேச விமான நிலையத்தில் பீனிக்ஸ் ஈஸ்ட் ஏவியேஷன் நிறுவனத்தில் விமான ஓட்டிகளுக்கான பயிற்றுநராக உள்ளேன். இதே நிறுவனத்தில் தான் விமான ஓட்டிக்கான பயிற்சியையும் முடித்து விமானி ஆனேன். 

  விமான ஓட்டியாகவும், பயிற்றுநராகவும் பணி செய்ய முதலில்  ஒருவருக்கு ஆர்வம் ஏற்பட வேண்டும். மேலும் விடா முயற்சியும், சவால்களை எதிர் கொள்ளும் மனத்திடமும் உள்ளவராக இருக்க வேண்டும். நுண்ணறிவு முக்கியம். பிற படிப்புகளை விட இதற்கு பணத்தேவை சற்று அதிகம் தான். அதே வேளையில் இப்பயிற்சிகளுக்கு கல்விக் கடன்களும் கிடைக்கின்றன.  

  கிராமப் பின்னணியில் வளர்ந்த நான்,  ஒரு விமானி ஆக வேண்டும். விமான ஓட்டிகளக்கான பயிற்றுநராக வேண்டும் என்ற ஆர்வமும், அதனைத் தொடர்ந்த தேடலும் தான் என்னை இந்த உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது.  எனவே கிராமம், நகரம் என்றில்லை. பள்ளியில் படிக்கும் போது குறைந்த மதிப்பெண்கள் பெற்று விட்டோம் என்று உடைந்து போக வேண்டிய அவசியமில்லை.  நமக்கான சிந்தனைகளை உயரத்தில், மிக உயரத்தில் வைக்கும் போது  எதுவும் சாத்தியம் தான்' என்றார். 

  ]]>
  flight, flight instructor, fly high, dreams, விமான பயிற்சி, பிளையிங் இன்ஸ்ரக்டர் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/18/w600X390/im4.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/18/பள்ளியில்-படிக்கும்-போது-சராசரி-மாணவன்-இப்போது-பறப்பதற்குத்-தடையில்லை-என்கிறார்-இதுவொரு-உண்மைக்-கத-3002884.html
  3002865 லைஃப்ஸ்டைல் செய்திகள் ஜங்கிள் ஜிலேபியா? அதென்ன அவ்வளவு ருசியானதா? DIN DIN Tuesday, September 18, 2018 02:27 PM +0530 வலைதளத்திலிருந்து...

  கொடுக்காபுளியங்காவுக்கு கோணப்புளியங்கா, சீனிப்புளியங்கா, கொருக்கா புளி என ஊருக்கு ஒரு பெயர் உண்டு. ஒவ்வொரு ஊரிலும் இன்னும் நிறையபெயர்களால் கொடுக்காபுளி அழைக்கப்படுகிறது. 'அண்ணா உங்கூர்ல அப்படியா சொல்வாங்க... எங்கூர்ல சீனிபுளிங்காம்போம்' என்கிற ஆச்சரியத்தை அடிக்கடி சந்திப்பதுண்டு. இந்தியில் இதற்கு பெயர் ஜங்கிள் ஜிலேபியாம்! (பேர் சூப்பரால்ல...) 

  கிராமத்தில் வளர்ந்தவர்களோ நகரமோ இன்றைக்கு இருபது ப்ளஸ் வயதான யாருமே தங்களுடைய பள்ளிப்பருவத்தில் ஒருமுறையாவது கொடுக்காப்புளியை ருசிக்காமல் கடந்திருக்க முடியாது. என்னுடைய பள்ளிக்காலங்கள் முழுக்க இலவசமாக கிடைத்த ஒரே தின்பண்டம் இதுதான். ஊருக்குள் எங்கு பார்த்தாலும் கொடுக்காப்புளி மரங்கள் நிறைந்திருக்கும். ஒரு நாளும் அதை காசு கொடுத்து வாங்கித் தின்றதில்லை.

  கொடுக்காப்புளியை காய்களாக இருக்கும்போதே பார்த்து வைத்து அது பழுக்கும் வரை காத்திருந்து பறித்து தின்றால், நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அதற்கெல்லாம் அவகாசம் இருக்காது. ஏரியாவில் கொடுக்காப்புளி பறிக்கவே நிறைய புளியங்கா கேங்ஸ் இருக்கும். அதில் ஒன்று நமக்கு முன்பே போய் காயாக இருந்தாலும் பறித்துவிடும். அதனால் கண்களில் சிக்கியதை பிஞ்சோ, காயோ, பழமோ அப்போதே பறித்து அப்போதே தின்றுவிடுவது நல்லது என்பது எங்கள் கேங்ஸின் எழுதப்படாத விதி. 

  சிகப்பும் பச்சையுமாக சிலது அதிகமாக பழுத்தும் சிலது பச்சைபசேலென காயாகவும் இருக்கும். இதைப் பறிக்கவே ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு நீண்ட கழியும் அதன் உச்சியில் ஒரு கொடுக்குமாக வைத்திருப்பார்கள். அதனால்தான் கொடுக்கா புளி என்று பெயர் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு பயனும் தராத தானாக வளரக் கூடிய இவ்வகை மரங்களை யாரும் வெட்டுவதில்லை.

  - அதிஷா

  முக நூலிலிருந்து....

  புதுசா போன் வாங்குனவனையும்... 
  புதுசா சமைக்கிறவனையும்...  
  பக்கத்துல வச்சிக்கவே கூடாது. 
  சும்மா சும்மா இது நல்லாருக்கான்னு
  கேட்டே சாவடிக்கான்.

  - வால்டர் வெற்றிவேல்

  யோசித்து ஒரு செயலைத் தொடங்கும்போது செவிடனாய் மாறிவிடுங்கள்...
  ஏனெனில், முதலில்  உற்சாகமான சொற்களை விட, கேலி சொற்கள்தான் 
  அதிகம் இருக்கும்.

  - அய்யாதுரை சாம்பசிவம்

  முறைக்கிறவன் 
  என்னைய மாதிரி 
  உண்மையா இருப்பான்.
  சிரிக்கிறவன் 
  பொய்யா மட்டும் தான் இருப்பான்...
  ப்ளீஸ்... புரிஞ்சிக்கோங்க...

  - செல்வா வெங்கட்

  நீங்க யாரை நம்புறீங்கன்னு கேட்டா...
  ஆயிரம் பேரை யோசிச்சு 
  அதுல ஒரு பேரைச் 
  சொல்றானுகளே தவிர,
  நான் என்னை நம்பறேன்னு 
  எவனும் சொல்றதில்ல...
  முதல்ல 
  உங்களை நம்புங்க...
  அப்புறம் பாருங்க...

  - ஆத்தாடி இவனா

  குடிக்கிறது நீ... ஆனால் உன் பொண்டாட்டி,
  'குடிகார நாயே'ன்னு என்னையும் சேர்த்து திட்டுது.

  - சிந்தனை சிற்பி செல்வ.ரமேஷ்

  சுட்டுரையிலிருந்து...

  ஜன்னலோர இருக்கையில்
  யாரையும் அமர விடாமல்... 
  எனக்காக இடம் போட்டு
  வைத்திருந்தது மழை.

  - யாத்திரி

  வயலும்
  வயல்சார்ந்த இடம்
  மருதம் அல்ல...
  ப்ளாட்டுகள்.
  கடலும்
  கடல் சார்ந்த இடம்
  நெய்தல் அல்ல...
  அமிலக்கழிவுகள். 

  - கோமாளி ராஜா

  தடுமாறினாலும் 
  தடம் மாறாமல் 
  தற்காத்து கொள்ளுவோம்...
   வாழ்க்கையை.

  - யுவராணி  

  எல்லாரும் ஒருவிதத்தில் 
  அன்னப்பறவை தான்...
  சிலர் நல்லதை மட்டும் 
  பிரித்துப் பார்க்கிறார்கள்!
  சிலர் கெட்டதை மட்டும் 
  பிரித்துப் பார்க்கிறார்கள்!

  - திவாகரன்

  ]]>
  kodukkapuli, jilebi, jungle jilebi, கொடுக்காபுளி, கொருக்கா புளி, கொருக்கலிக்கா http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/31/w600X390/im11.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/18/ஜங்கிள்-ஜிலேபியா-அதென்ன-அவ்வளவு-ருசியானதா-3002865.html
  3002151 லைஃப்ஸ்டைல் செய்திகள் 8 ஜோக்ஸ்! DIN DIN Monday, September 17, 2018 03:31 PM +0530 என் மனைவி கடைவீதியில் எது வாங்கினாலும் வாயில போட்டுப் பார்த்துதான் வாங்குவார்'
  அப்ப கொஞ்சம் எலிமருந்து வாங்கிட்டு வரச்சொல்லுங்க
  - எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.

  வழிப்பறியைத் தடுக்க நகர்வலம் சென்றேன். அப்படியொன்றும் நடக்கவில்லை மந்திரியாரே...'
  தாங்கள் மாறுவேடத்தில் செல்வதாக நினைத்து இயல்பான வேடத்தில் சென்று விட்டீர்கள் மன்னா
  - செ.தர்மலிங்கம், திருச்சி.

  நல்லாப் பேசின பஞ்சவர்ணக்கிளியை ஏன் விற்றே?
  அது உங்க அம்மா கூட சேர்ந்து என்னைத் திட்ட ஆரம்பிச்சிடுச்சு
  - செ.தர்மலிங்கம், திருச்சி. 

  கபாலி... நீயும் வழிப்பறியில் இறங்கிவிட்டாயா?
  ஆமாம் ஏட்டய்யா.... பொழைப்பே சரியில்லை... எல்லா வீட்லயும் கேமரா வெச்சுட்டாங்க
  - செ.தர்மலிங்கம், திருச்சி.

  உங்களுக்குத்தான் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் இருக்கே....மெடிக்கல் பில்லை கிளெய்ம் பண்ணி பணத்தை வாங்கிக்கலாமே சார்?
  மெடிக்கல் பில்லை கிளெய்ம் பண்ணி பணத்தை வாங்குறதுக்குள்ள செத்துப் போயிடுவேன் சார்
  - வி.ரேவதி, தஞ்சை.

  கொஞ்சம் தள்ளி உட்காருங்களேன்
  நீங்க பஸ்சில வரக்கூடாது... ஆட்டோவுல போக வேண்டியதுதானே?
  ரொம்ப தேங்க்ஸ்... ஆட்டோ சார்ஜ் 100 ரூபா தாங்க
  - கு.அருணாசலம், தென்காசி.

  நான் வாரத்துல ஒரு நாள்தான் என் மனைவிக்கு பயப்படுவேன்
  பரவாயில்லையே
  மீதி ஆறுநாள் நான் ஊர்ல இருக்க மாட்டேன்
  - வி.பார்த்தசாரதி, சென்னை-5

  வாஸ்துப்படி நான் வீடு கட்டி கூட கோர்ட்டு கேஸ்ன்னு அலையறேன்
  ஏன் அப்படி?
  நான் பொறம்போக்கு நிலத்துல வீடு கட்டிட்டேன்
  - வி.பார்த்தசாரதி, சென்னை-5

  ]]>
  jokes, siri, lol, சிரி, சிரிப்பு, ஜோக்ஸ் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/11/w600X390/sirisiri.JPG http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/17/8-ஜோக்ஸ்-3002151.html
  3001481 லைஃப்ஸ்டைல் செய்திகள் இப்படி எல்லாம் தலை சீவினால் முடி உதிராது! DIN DIN Sunday, September 16, 2018 11:51 AM +0530
  தலைக்கு குளித்தவுடன் ஈரமாக உள்ள கூந்தலை சீவக் கூடாது.  ஏனெனில் கூந்தலானது ஈரமாக இருக்கும் போது சீவினால் முடியில் முடிச்சுகள் மற்றும் சிக்குகள் அதிகமாக இருக்கும்.  இந்த நிலையில் சீப்பை கொண்டு சீவினால் முடியானது கொத்தாக வேரோடு வந்துவிடும்.

  தலை சீவும் போது மண்டை ஓட்டில் நன்கு பதியும்படி சீவ வேண்டும். கூந்தலும், தலைச் சருமமும் ஒன்றல்ல. ஆகவே தலைச்சருமத்தில் நன்கு படும்படி சீவினால் தலைச்சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து மயிர்க்கால்  தூண்டப்பட்டு  முடி நன்கு வளரும். இவ்வாறு தினமும் செய்தால் கூந்தலானது நன்கு ஆரோக்கியமாக வளரும்.

  கூந்தலை முதலில் சீவ ஆரம்பிக்கும்போது கூந்தலின் முனையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.  ஏனென்றால் கூந்தலில் முடிச்சுகளானது முனையிலேயே அதிகமாக இருக்கும். ஆகவே  முதலில் இந்த முடிச்சுகளை அகற்றிப் பின் ஆரம்பத்தில் இருந்து சீவினால்  கூந்தல் உதிராமல் இருக்கும். இல்லையென்றால் கூந்தல் வேரோடு தான் வரும்.

  கூந்தலை இறுக்கமாக கட்டக்கூடாது.  நிறையபேர் இந்த மாதிரியே கூந்தலை கட்டுகின்றனர்.   அதுபோன்று கூந்தலை போனி டைல் போடக்கூடாது. அப்படி போட்டால் முடியானது பிளவுபட்டு  வளர்ச்சி தடைப்படும்.

  ]]>
  hair, hair loss, grooming hair, combing hair, தலைமுடி, தலைமுடி பராமரிப்பு, கூந்தல் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/12/w600X390/mn6.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/16/how-to-avoid-hair-loss-few-useful-tips-3001481.html
  3001480 லைஃப்ஸ்டைல் செய்திகள் கொதிக்கக் கொதிக்க சாதம் சாப்பிடக் கூடாது! ஏன்? DIN DIN Sunday, September 16, 2018 11:47 AM +0530 பலரும் இன்று குக்கரில் வேகவைத்த சாதம்  சாப்பிடுகிறார்கள். கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது.

  சாதம் வடித்த கஞ்சி சூடாக இருக்கும் போது சிறிது உப்பைப் போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை அகலும். அதுவே கஞ்சி ஆறிப்போய் குடித்தால் வாயுவை ஏற்படுத்தும். 

  சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப்பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும்.

  கொதிக்கக் கொதிக்க சோற்றை சாப்பிடக் கூடாது. மிதமான சூட்டிலேயே சாப்பிட வேண்டும். அதே நேரம் சில்லென்று ஆறிப்போய் சாப்பிட்டால் கீல் வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும்.

  பழையமுது சாப்பிட்டுத்தான் நம் முன்னோர் நல்ல தெம்புடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தார்கள்.

  முதல் நாள் சாதத்தில் தண்ணீர்  ஊற்றி, மறுநாள் காலையில் பழைய சோற்றை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக் கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள் எதுவும் பாதிக்காமல் பாதுகாக்கிறது.

  பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிடக் கூடாது. மோராக கடைந்து  ஊற்றி சாப்பிட வேண்டும்.

  சோறு வெதுவெதுப்பாக இருக்கையில் பசும்பால் ஊற்றி சாப்பிட்டால்,  தண்ணீர்த் தாகம் ஏற்படுவதும் பித்தம் உண்டாவதும் நீங்கும்.

  பச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச் சாப்பிட வாதம், பித்தம் நீங்கும்.

  சிலர் சாம்பார், ரசம், வற்றல்குழம்பு என்று சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு மோர் போட்டு சாப்பிடாமல் எழுந்து விடுவார்கள். இது உடம்புக்கு மிகவும் கெடுதல். மோர் சாதம் செரிமானக் கோளாறுகளை நீக்கி, வாதம், பித்தத்தை தணிக்கிறது.

  மாதாந்திர பிரச்னை உள்ள பெண்களுக்கு சிவப்பரிசி சாதம் மிகவும் நல்லது.

  சம்பா சோறு வயிற்றுப் பொருமலுக்கு மிகவும் நல்லது.

  வாழை இலையில் சாப்பிடுவதால் அதிலுள்ள துவர்ப்பு சத்து உடலில் சேர்ந்து நன்மை செய்கிறது. 

  ]]>
  white rice, rice, hot rice, boiled rice, அரிசி, சுடுசோறு, சாதம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/16/w600X390/white-rice.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/16/rice-should-not-be-consumed-too-hot-3001480.html
  3001477 லைஃப்ஸ்டைல் செய்திகள் பகல் தூக்கம் நல்லதா கெட்டதா? ஆய்வு முடிவுகள் என்ன சொல்கின்றன? DIN DIN Sunday, September 16, 2018 11:41 AM +0530 பகலில் தூங்கினால்  உடல் குண்டாகிவிடும். இதுதான் பலரது கருத்து. ஆனால் அது தவறு. வயிறு நிறைய உணவு சாப்பிட்டுவிட்டு, அளவுக்கு அதிகமாக தூங்கினால் தான் ஆபத்து என்கிறது புதிய ஆய்வுகள்.

  பொதுவாக, நமது உடல் ஒரு நாளைக்கு இரண்டு வேலை தூங்கும் விதமாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது. இரவில் 6 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். காலை முதல் மதியம் வரை மூளைக்கு கடுமையான வேலை கொடுக்கும் பொது, சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள மூளையோ, உடலோ தானாக ஒய்வு கேட்கும். அந்த நேரத்தில் எல்லாவற்றையும் மறந்து அரை மணி நேரம் குட்டித் தூக்கம் போட்டால், உடலும் மூளையும் மீண்டும் சுறு சுறுப்பாகி விடுகின்றன. இப்படிப் போடும் பகல் குட்டித்தூக்கம் மூளையின் செயல்பாட்டை  அதிகரிப்பதாக கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. 39 பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டார்கள்.அப்போது பகலில் தூங்கினால் மூளை செயல் பாடு அதிகரித்து அறிவுத்திறன் வளரும் என்பது தெரியவந்தது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 39 பேரை இரவு நேரத்தில் நன்றாக தூங்க வைத்து, பகல் நேரத்தில் நீண்ட நேரம் படிக்க வைத்தனர்.

  அதே நேரத்தில் சுமார் 20 பேரை பகலில் 90 நிமிடம் மட்டும் சிறிய அளவில் தூங்க வைத்தார்கள். இவர்களின் செயல் திறன் பின்னர் பரிசோதிக்கப்பட்டது. இதில் இரவில் மட்டுமே தூங்கியவர்களை விட பகலில் சிறிது நேரம் தூங்கியவர்களின் மூளை செயல்பாட்டுத்திறன் அதிகரித்து காணப்பட்டது. இந்த சோதனையை பல முறை மேற்கொண்ட போதிலும் ஒரே முடிவு தான் வந்தது.

  மேலும் பகல் நேரத்தில் தூங்குவது, இதயத்திற்கு நல்லது என்று அமெரிக்காவின் பென்சில்வேனியா கல்லூரி பேராசிரியர்கள் ரியான் பிரிண்டில், சாரா கன்குளின் ஆகியோரும் கண்டறிந்துள்ளனர். இவர்கள் 89 மாணவர்களிடம் மேற்கொண்ட  ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

  இவர்களால் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினரை பகலில் ஒரு மணி நேரம் தூங்கும் படியும், மற்றொரு பகுதியினரை, பகலில் தூங்காமல் இருக்கும் படியும் இருக்கச் செய்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் பகலில் ஒரு மணி நேரம் தூங்கினால் ரத்த அழுத்தம் குறைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.  பகலில் தூங்குவதன் மூலம் இதய நோய் தாக்குவது தடுக்கப்படுகிறது என்பதும்  தெரிய வந்துள்ளது.

  இந்த இரண்டு ஆய்வுகளுமே இன்னொரு எச்சரிக்கையையும் கொடுத்துள்ளன. பகலில் குட்டித் தூக்கம் மட்டுமே பயன் தரும். அதை  விட்டு  அரை மணி நேர தூக்கம் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என நீடித்துக் கொண்டே போனால், அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்ப்பட வாய்ப்பு அதிகம் என்பது தான் அந்த எச்சரிக்கை. எனவே பகலில் அளவாக தூங்கினால் நலமாக வாழலாம்!

  ]]>
  sleep, morning, nap, பகல் தூக்கம், உறக்கம், பகல் உறக்கம், உடல்நலம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/16/w600X390/01-why-herbal-remedis-fatigue-BraunS.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/16/பகல்-தூக்கம்-நல்லதா-கெட்டதா-ஆய்வு-முடிவுகள்-என்ன-சொல்கின்றன-3001477.html
  3001476 லைஃப்ஸ்டைல் செய்திகள் மிளகு ரசம் அதீத சுவையுடன் இருக்க இதை செய்து பாருங்க! DIN DIN Sunday, September 16, 2018 11:35 AM +0530 கேரட்டை   அரைத்து மோரில் கலந்து  அடிக்கடி சாப்பிட்டு வர உடல் பருமன் குறையும்.

  கர்ப்பிணி பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணிப்பழம் ஆகியவை சாப்பிட்டு வந்தால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும்.

  பொன்னாங்கண்ணி கீரையுடன் வெள்ளைப் பூண்டு கலந்து சாப்பிட சர்க்கரை நோய் இருக்காது.

  கேசரி செய்யும் போது நீரின் அளவைக் குறைத்து அதிக அளவு பால் கலந்து செய்து பாருங்கள். கேசரி நல்ல மணத்துடன் பால்வாசனையுடன் மாறுதலான சுவையுடன் இருக்கும்.

  மிளகு ரசத்திற்கு குழைவாக வெந்திருக்கும் பட்டாணி நீரை சேர்த்தால் ரசம் சுவையாக இருக்கும்.

  கீரை பயத்தம் பருப்பு கூட்டு செய்யும்போது ஒரு கப் பாலை விட்டால் மணமாக இருக்கும்.

  திராட்சை ரசத்தை தேனுடன் கலந்து உணவிற்குப்பின் சாப்பிட்டு வந்தால் இதய பலவீனம் குணமாகும்.

  மாம்பழச்சாற்றுடன் கேரட்சாறும் கலந்து அருந்த சிறுநீர் வழிகள் தூய்மை அடையும். தோல்நோய்கள் மறையும். முகப்பரு மறையும்.

  அவரைக்காய் விதைகளை அரைத்து முகத்தில் பூசி வர முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளப்பளக்கும்.

  தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், வேப்பஎண்ணெய் இவைகளை சம அளவில் கலந்து வலியுள்ள மூட்டுகள் மேல் பூசி லேசாகத் தேய்த்து விட்டால் மூட்டு வலி குணமாகும்.

  தினமும் சுத்தமான தேனுடன் பேரிச்சம் பழம் கலந்து குடித்து வந்தால் உடல் பருமன் குறையும்.

  நல்லெண்ணெய்யில் வேப்பம் பூ போட்டு தலைக்கு தேய்த்துக் குளித்தால் பொடுகெல்லாம் போய்விடும்.

  பீர்க்கங்காய் இலையை அரைத்துப் பூசி குளித்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும்.

  வயிற்று வலிக்கு பச்சை வெங்காயத்துடன் உப்பு கலந்து சாப்பிட குணமாகும்.

  ஒரு லிட்டர் நல்லெண்ணெய்யில் 35 கிராம் சீரகத்தை பொடித்து சேர்த்துக் காய்ச்சி வாரம் இருமுறை நீராடினால் பித்தம், மயக்கம், தலைச்சுற்றல், தலைவலி, ஒற்றைத்தலைவலி நீங்கும்.

  (பயனுள்ள வீட்டு குறிப்புகள்-நூலிலிருந்து )

  ]]>
  rasam, milagu rasam, pattani, peas, பட்டாணி, மிளகு ரசம், ரசம், டிப்ஸ் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/16/w600X390/rasam.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/16/மிளகு-ரசம்-அதீத-சுவையுடன்-இருக்க-இதை-செய்து-பாருங்க-3001476.html
  2994716 லைஃப்ஸ்டைல் செய்திகள் புதிய திட்டங்களோடு வாடிக்கையாளர்களைக் கவர வருகிறது ஏர்டெல்! RKV DIN Friday, September 14, 2018 05:11 PM +0530  

  தமிழ்நாட்டில் ஏர்டெல் நிறுவனம் செயல்பாட்டுக்கு வந்த காலம் தொட்டு, வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த தொலைபேசிச் சேவையை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டின் எந்த இடத்துக்குச் சென்றாலும் தங்களின் தரமான மொபைல் சேவையை வழங்குவதில் ஏர்டெல் நிறுவனம் முன்னணி வகிக்கிறது. தமிழ்நாட்டில் ஏர்டெல் நிறுவனம் 4ஜி சேவைகளை அறிமுகப்படுத்திய, முதல் தொலைத்தொடர்பு நிறுவனமாகும். தமிழ்நாட்டில் மட்டும் 23 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டு தரமான சேவை வழங்குவதில் ஏர்டெல் முதலிடம் வகிக்கிறது.

  என்னதான் முதலிடத்தில் இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்குச் சீரான இடைவெளியில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த ஏர்டெல் நிறுவனம் தவறியதில்லை. அந்த வகையில், “project-leap” என்ற புதிய திட்டத்தை ஏர்டெல் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டத்தின்படி, 12,000 புதிய மொபைல் தளங்களை உருவாக்கி கிராமப்புற எல்லைவரை தரமான இணையதள சேவை வழங்க ஏர்டெல் முடிவு செய்துள்ளது.

  தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஏர்டெல் நிறுவனம் முடிவு செய்துள்ளதோடு, இங்குள்ள மக்களுக்கு பெரும் வர்த்தகச் சேவைகளை வழங்குவது எப்படி என்பதையும் உறுதிப்படுத்துகிறது. உங்கள் மொபைல் ஃபோனில் உள்ள கவரேஜ் முன்பைவிட இன்னும் சிறப்பாக மாறும். மற்றும் மொபைல் தளங்கள் அதி வேகமாக இயங்கும். நீங்கள் உங்கள் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் அதிகமான சிக்னலைப் பெறும் மொபைல் நெட்வொர்க்கைப் பெறுவீர்கள். நீங்கள் வெவ்வேறு இடங்களில் அதி வேகத்தில் இணையதள சேவையை அனுபவிக்க முடியும்.

  மொபைல் நெட்வொர்க் மட்டுமல்லாமல், ஏர்டெல் நிறுவனம் தமிழகத்திலேயே முதன்முறையாக தங்களது பிராட்பேண்ட் சேவைகளைச் சிறந்த முறையில் தமிழகத்துக்குக் கொண்டுவருவதற்கும் தயாராகிவிட்டது. அதற்காக சுமார் 3000 கி.மீ. புதிய ஃபைபர் கேபிள் நெட்வொர்க்கை அமைத்து, மாநிலத்தின் எல்லை வரை பிராட்பேண்ட் சேவைகளைக் கொண்டுசெல்ல முடிவு செய்துள்ளது. https://www.airtel.in/broadband என்ற இந்த இணைப்பை கிளிக் செய்வதன் மூலம், ஏர்டெல் நிறுவனத்தின் அற்புதமான பிராட்பேண்ட் திட்டங்களை நீங்கள் பார்க்கலாம்.

  தமிழ்நாட்டில் தன்னுடைய சேவைகளை மேம்படுத்துவதற்கு ஏர்டெல்லின் இந்த அர்ப்பணிப்பு, உண்மையில் தமிழக மக்களுக்கு ஒரு பம்பர் பரிசு என்பதில் சந்தேகமில்லை. அதனால்தான், ஏர்டெல் தமிழ்நாட்டின் நெம்பர் 1 நெட்வொர்க்காகத் திகழ்கிறது.
   

  ]]>
  Airtel Broadband super fast speed airtel V fiber., புதிய திட்டங்களோடு கவர்ந்திழுக்கும் ஏர்டெல், சூப்பர் ஹை ஸ்பீட் இண்டர்நெட், ஏர்டெல் பிராட்பேண்ட் http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/05/airtel-broadband-super-fast-speed-airtel-v-fiber-2994716.html
  3000214 லைஃப்ஸ்டைல் செய்திகள் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஜோஸின் நீலநிற பைஜாமாவின் பின் ஒளிந்திருக்கும் காருண்யம்! கார்த்திகா வாசுதேவன் DIN Friday, September 14, 2018 12:17 PM +0530  

  அமேசான் அதிபர் ஜெஃப் பெஜோஸ் தனது நிறுவனத்தின் போர்டு மீட்டிங்குக்கு பைஜாமா அணிந்து சென்றது இந்த வார இணைய வைரலாகியிருக்கிறது. ஒரு அயல்நாட்டுக்காரர் இந்திய உடையான பைஜாமா அணிவதற்கான அவசியம் என்ன வந்தது? நிறுவனத்தின் போர்டு மீட்டிங்கில் கலந்து கொண்ட பிற உயரதிகாரிகளும், நிர்வாகிகளும் ஃபார்மல் உடைகளில் இருக்க... ஜெஃப் மட்டும் ஏன் பைஜாமா அணிந்து கலந்து கொண்டார் என்று நெட்டிஸன்கள் பேசித் தீர்க்க... தனது நீலநிற பைஜாமாவுக்கான காரணத்தை அடுத்த 10 மணி நேரங்களில் தனது இன்ஸ்டாகிராமில் ஜெஃப் வெளிப்படுத்தினார்.

  உலகெங்கும் குழந்தைகளைத் தாக்கக் கூடிய சைல்ட்குட் கேன்சருக்கு( குழந்தைப் பருவ கேன்சர்) எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தான் இந்த நீல நிற பைஜாமா அணிந்து தான் மீட்டிங்கில் கலந்து கொண்டதாகப் புகைப்படத்துடன் விளக்கியிருக்கிறார் ஜெஃப்.

  ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் சர்வதேச குழந்தைகள் கேன்சருக்கு எதிரான விழிப்புணர்வு மாதமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அமேசான் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் அமெரிக்கன் சைல்ட்குட் கேன்சர் ஆர்கனைசேஷனுடன் இணைந்து இம்மாதிரியான விழிப்புணர்வு நிகழ்வுகளை முன்னெடுப்பது உண்டு. ஏனெனில் தற்போது அமெரிக்காவில் 4 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கிடையிலான மரணங்களில் இரண்டாவது பெரும் காரணமாகத் திகழ்வது கேன்சர் என்பதால் அதற்கு எதிரான விழிப்புணர்வைத் தூண்டுவதில் அமேசான் இணைந்து செயல்பட விரும்பியதின் விளைவாக இப்படி ஒரு நடவடிக்கை முன்னெடுக்கப் பட்டுள்ளதாக ஜெஃப் தெரிவித்தார்.

  நீலநிற பைஜாமாவைத் தொடர்ந்து அடுத்தபடியாக சர்வ தேச அளவில் குழந்தைகளைத் தாக்கக் கூடிய சைல்ட்குட் கேன்சருக்கு எதிராக ‘கோ கோல்டு பாக்ஸஸ்’ என்றொரு திட்டத்தையும் அறிமுகப்படுத்தவிருக்கிறதாம் அமேசான்.

  சர்வ தேச அளவில் குழந்தைப் பருவ கேன்சருக்கான அடையாளமாக சித்தரிக்கப்படுவது இந்த தங்க ரிப்பன் அடையாளம் தான். எனவே அமேசான் தனது நிறுவனப் பொருட்களுக்கான பாக்ஸுகளின் மேல் புறத்தில் இந்த தங்க ரிப்பன் லட்சினைகளை இட்டு பொருட்களை விற்பனை செய்யத் தொடங்கி இருக்கிறது.

  இதன் மூலம் திரட்டப்படும் நிதி சர்வதேச அளவில் குழந்தைப் பருவ கேன்சர் நோயுடன் போராடும் குழந்தைகளின் நலனுக்காக செலவளிக்கப்படும் என ஜெஃப் தெரிவித்தார்.

  ]]>
  september, Amazon CEO, JEF BEJOS, BLUE PAJAMAS, GO GOLD BOXES, WORLD CHILDHOOD CANCER AWARENESS MONTH, நீலநிற பைஜாமா, ஜெஃப் பெஜோஸ், அமேசான் நிறுவனர், சர்வ தேச குழந்தைப் பருவ கேன்சர் விழிப்புணர்வு மாதம், செப்டம்பர் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/14/w600X390/jef_bejos_blue_pajama.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/14/amazon-ceo-wears-pajamas-to-a-board-meeting-why-3000214.html
  2998950 லைஃப்ஸ்டைல் செய்திகள் கலை, மைம்முகன், கோலாங்கூலம், கள்வன், முசு, ஒரி...இவை என்ன? DIN DIN Wednesday, September 12, 2018 01:10 PM +0530 வலைதளத்திலிருந்து...

  தமிழ் இலக்கியங்களில் பார்த்தால், குரங்குகள் பற்றி நிறைய குறிப்புகள் இருக்கின்றன. குரங்குகளுக்கு அவற்றின் வகைகளுக்கு ஏற்ப நிறைய பெயர்களைச் சூடி அழகு பார்க்கிறது' தமிழ். 

  கவி, கோகிலம், நாகம், பிலவங்கம், யூகம், கோடாரம், அரி, மந்தி, வலிமுகம், கடுவன், வானரம் - இவையெல்லாம், அழகர்மலை பக்கம் செல்லும் போது, வழிமறித்து நம்மை டார்ச்சர் பண்ணக் கூடிய மங்க்கீஸ்களின் தமிழ்ப் பெயர்கள். அடுத்த முறை அவற்றைச் சந்திக்கிற சமயம்... இந்தப் பெயர்களைச் சொல்லிக் கூப்பிட்டுப் பாருங்கள். கண்களைச் சுருக்கி, தலையைச் சாய்த்து... லேசாக  அவை ஒரு பிளாஷ்பேக் போனாலும்  ஆச்சர்யப்படுவதற்கில்லை!  

  இது வரைக்கும் பார்த்தது, வாழைப் பழத்துக்காகவும், இதர ஸ்நாக்ஸ் தேடியும் நம்மை அண்டும் லோக்கல் குரங்குகள். கரு மந்தி, கருங்குரங்கு என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதையும் தமிழ் விட்டு வைக்கவில்லை. காருகம், யூகம் - இது இரண்டும் கரு மந்திக்கான தமிழ் பெயர்கள். நீலகிரி, வால்பாறை வனப்பகுதிகளுக்குச் சென்றால், அங்கு ஒரு புது வித குரங்குகளை நாம் சந்திக்க முடியும். நிஜமாகவே மங்க்கி குல்லா போட்டது போல, முகமெல்லாம் பளபளவென இருக்க, தலைக்கு மேல் குபுகுபுவென முடி முளைத்திருக்கும். லங்கூர் குரங்குகள் என்று இதை கூப்பிடுகிறார்கள். 

  இந்த லங்கூர்ஸ்களுக்கும் தமிழில் பெயர் இருக்கிறது, தெரிந்து கொள்ளுங்கள். அனுமன் குரங்குகள் என்று பேச்சு வழக்கில் அழைக்கப்படுகிற இந்த லங்கூர் குரங்குகளுக்கு கலை, மைம்முகன், கோலாங்கூலம், கள்வன், முசு, ஒரி என்று தமிழில் பெயர் இருக்கிறதாக்கும்.

  http://poonaikutti.blogspot.com

  முக நூலிலிருந்து....

  நாம் எதைப் பிரதிபலிக்கிறோமோ அதையே 
  திருப்பிக் காட்டுவது கண்ணாடி மட்டுமல்ல...
  முகநூலும் தான்.

  - தனுஜா ஜெயராமன்

  "எனக்கு ஒரு பிரச்னை' என்று ஒரு போதும் சொல்லாதீர்கள்...
  பிரச்னை என்று சொன்னாலே கவலையும் பயமும்  கட்டாயம் வரும்.
  "எனக்கு ஒரு சவால்'  என்று சொல்லிப் பாருங்கள்.
  தைரியமும் தன்னப்பிக்கையும் தானாகவே வரும்.  

  - மாரியப்பன்

  முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், முயற்சிக்கு முக்கியத்துவம் 
  அளித்தால்...
  முழுமையான வெற்றி நிச்சயம்.  

  - பி.ஸ்ரீனிவாசன்

  நீ  இழுக்கும்  கோடுகளை வைத்துதான், என்னால் முடிவு செய்ய இயலும்...
  உன் கைகளின் நீளத்தை.

  - மானா பாஸ்கரன்

  கட்டி வைத்தாலும்...  பறக்க வேண்டுமென்பதே கொடிகளுக்கான விதி.

  - யாழினி தமிழ்வாணி

  சுட்டுரையிலிருந்து...

  அவளை நினைத்துக்
  கவிதை எழுத 
  கண்களை மூடினேன்...
  அய்யோ... 
  அப்படியே உறங்கிவிட்டேன்.

  - கோபி

  பெண்கள் ஸ்கூட்டிய வீட்டில் இருந்து வாசலுக்கு கொண்டுவரும்...
  அழகு இருக்கே ...
  அட... அட... அட...
  குடிகாரன் தோத்துருவான்.

  - கனவுலகவாசி

  எப்ப பார்த்தாலும் உன்னைப் பத்தி பெருமையா பேசுற மாதிரி...பேசியே 
  உசுப்பேத்தி விடுவான். 
  அவனை  மட்டும்  நம்பாதீங்க!

  - சின்ன நண்பன்

  வண்டி ஓட்டும்போது
  போன் பேச கஷ்டமாருக்குன்னு
  ஹெட்செட் வாங்குனேன்.
  அது அடிக்கடி டேமேஜ் ஆகுதுன்னு
  ப்ளூடூத் ஹெட்செட் வாங்குனேன்.
  அது மொபைல் சார்ஜ off பண்ணுதுன்னு
  பவர்பேங் வாங்குனேன்.
  இப்ப அத பேண்ட் பாக்கெட்ல 
  வைக்க முடியலைன்னு பேக் வாங்கிருக்கேன்.
  - துக்ட்விட்ஸ்

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/12/w600X390/monkey.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/12/different-types-of-monkeys-2998950.html
  2998324 லைஃப்ஸ்டைல் செய்திகள் என் நண்பனைக் கொன்ற உனக்கு, இதுதான் தண்டனை! போலந்து நாடோடிக் கதை  - குடந்தை பாலு DIN Tuesday, September 11, 2018 03:45 PM +0530  

  ஒரு மாந்தோப்பில் சிட்டுக்குருவி ஒன்று வாழ்ந்து வந்தது. ஒருநாள் அது பக்கத்து ஊருக்குப் பறந்து சென்றது.

  அங்கு ஒரு சாலை ஓரத்தில் இறைச்சிக் கடை ஒன்று இருப்பதை அது கண்டது. அங்கு குட்டிநாய் ஒன்று பசியோடு அந்த இறைச்சித் துண்டுகளைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் குருவி கவனித்தது.

  கடைக்காரன் அயர்ந்த நேர்த்தில் ஓர் இறைச்சித் துண்டைக் கொத்தியது. அதைக் குட்டிநாயின் அருகே போட்டது. ஆசையுடன் இறைச்சித் துண்டைக் கவ்விய நாய்க்குட்டி ஒரு மரத்தின் பின்னால் அமர்ந்து உண்டது. குருவியைப் பார்த்து 'நன்றி' என்றது.

  நாளடைவில் இரண்டும் நண்பர்களாகின. தினமும் குருவியும் நாய்க்குட்டியும் சந்தித்து மகிழ்ச்சியாக விளையாடின. ஒருநாள் குடிகாரன் ஒருவன், குதிரை வண்டி ஓட்டிக் கொண்டு அந்த வழியில் வந்தான். வேண்டுமென்றே சாலை ஓரத்தில் அவன் வந்தான்.

  'ஓரமாக வராதே' எனக் குருவி எச்சரித்தது. இருந்தாலும் அவன் கேட்வில்லை. சாலை ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்த நாய்க்குட்டி மீது வண்டி ஏறியது, சிறிது நேரத்தில் நாய்க்குட்டி இறந்தது.

  இதைக் கண்டு வருந்திய குருவி, வண்டிக்காரன் மீது, கோபம் கொண்டது. இனிமேல் உனக்குக் கேடு காலம்தான் எனக் கத்தியது. அவன் வந்த வண்டியில் இரண்டு பீப்பாய்களில் தேன் இருப்பதைக் கண்டது.

  ஒரு பீப்பாயின் மூடியைப் பலங்கொண்ட மட்டும் கொத்திக் கொத்தி இழுத்தது. அதனால் பீப்பாயில் இருந்த தேன் தெருவில் கொட்டி பிறகு காலியானது.

  மீண்டும் குருவி பறந்து சென்று மற்றொரு பீப்பாயின் மூடியைக் கொத்தி இழுத்தது. அதிலிருந்த தேனும் சாலையில் கொட்டியது.

  பிறகு வண்டியின் முன்னால் சென்ற குருவி, முதல் குதிரையின் கண்களைக் கொத்தியது. வேதனையால் குதிரை துள்ளியது; கனைத்துக் கொண்டே திமிறியது.

  வண்டிக்காரன் மிகுந்த கோபத்துடன், சவுக்கை எடுத்து குருவியின் மீது வீசினான். குருவி சட்டென்று பறந்து விட்டது. அதனால், சவுக்கின் நுனி குதிரையின் நெற்றியில் பட்டு வலி உண்டாக்கியது. வலி பொறுக்காத குதிரை அந்த இடத்திலேயே விழுந்து இறந்து விட்டது.

  குருவி பறந்து வந்து இரண்டாவது குதிரையின் கண்களைக் கொத்தத் தொடங்கியது. மீண்டும் வண்டிக்காரன் சவுக்கை எடுத்தான். முன்பு போலவே சவுக்கடி குதிரையின் மீது பட்டு, அந்தக் குதிரையும் இறந்தது.

  வண்டிக்காரன் தன் மனைவியிடம் நடந்த நிகழ்ச்சிகளை மிகவும் வருத்தத்துடன் கூறினான். 'என் கையில் குருவி அகப்படட்டும்... அதன் கழுத்தை இறுக்கிக் கொன்று விடுகிறேன்' என்றான்.

  அந்த நேரம் குருவி, ஜன்னலின் மீது வந்து அமர்ந்தது. 'இதுதான் நமக்கு கஷ்டத்தைத் தந்த குருவி' என்று கத்தினான். உடனே அவன் மனைவி, கொள்ளிக்கட்டையை எடுத்து வந்து குருவி மீது வீசினாள்.

  குருவி தப்பித்தது. ஆனால் ஜன்னலில் இருந்த திரைச்சீலையில் தீப்பிடித்தது. அது 'சரசர'வெனப் பரவி வீட்டையே எரிக்கும் அளவுக்கு வந்தது. என் நண்பனைக் கொன்ற உனக்கு, இந்த தண்டனை போதுமென்று நினைக்கிறேன்; இனிமேல் தீங்கு செய்யும் எண்ணத்தை அடியோடு விட்டுவிடு' என்று கூறிவிட்டு அந்த இடத்திலிருந்து பறந்து சென்றது குருவி.
   

  ]]>
  poland, short story, kuruvi, நாடோடி கதை, போலந்து, குருவி கதை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/11/w600X390/8409212e3ae9ee54a47c20f7a6462f21.JPG http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/11/என்-நண்பனைக்-கொன்ற-உனக்கு-இதுதான்-தண்டனை-போலந்து-நாடோடிக்-கதை-2998324.html
  2998312 லைஃப்ஸ்டைல் செய்திகள் குறிஞ்சிப் பூவைப் பார்க்க ஆவலா? - சலன் DIN Tuesday, September 11, 2018 03:16 PM +0530 துலீப் மலர்களுக்காக பலரும் நெதர்லாந்து நாட்டிற்கு பயணமாகிறார்கள். ஆண்டுதோறும் மலரும் துலீப் மலர்களுக்காக அந்த நாட்டிற்கு செல்லும் போது, நமது குறிஞ்சி மலருக்காக யாரும் தமிழ்நாட்டிற்கு வருகிறார்களா? என்று பார்த்தால் இல்லை என்ற வருத்தமான பதிலைதான் சொல்ல வேண்டும். உலகில் பல நாடுகளில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் பார்க்க விரும்பும் இந்த மலர், இங்கே ஏக்கர் கணக்கில் பறந்து விரிந்து, மலர்ந்து, பார்க்கும் மக்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது.

  சரி, இந்த குறிஞ்சி மலர் எங்கே எல்லாம் வளரும் அல்லது பூக்கும்? 

  குறிஞ்சிச் செடி அல்லது நீலக்குறிஞ்சி என்பது இந்தியாவின் மேற்கு மலைத்தொடர்ச்சியில் பரவலாக வளரும் ஒரு செடியாகும். இதில் பூத்துக் குலுங்கும் நீல மலர்களினால் இம்மலைப் பிரதேசமே நீல நிறத்தில் பட்டாடை உடுத்திக் கொண்டு இருப்பது போல் தோன்றும். குறிஞ்சிச் செடிகள் புதர்வகையைச் சேர்ந்தவை. "ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா' என்பது அவற்றின் தாவரவியல் பெயர். மணி போன்ற வடிவம் கொண்ட குறிஞ்சி மலர்கள், மலைச் சரிவுகளில் பூத்துக் குலுங்கி மலைப் பகுதிகளுக்கு புதிய வண்ணங்களைத் தீட்டிவிடுகின்றன. நீலக் குறிஞ்சி மலர் அதிகம் பூத்துக் குலுங்கும் கண்கொள்ளாக் காட்சியால்தான், நீலகிரி அல்லது நீலமலை என்றும், இந்த ஊட்டியே பெயர் பெற்றது என்று கூறுவோரும் உண்டு.

  இந்த குறிஞ்சி மலரில் ஏறக்குறைய 200 வகைச் செடிகள் உண்டு. அவை அத்தனையும் ஆசிய நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. அவற்றில் 150 வகைகள் வரையில் நமது இந்திய திரு நாட்டில் மட்டுமே காணப்படுகின்றன. இன்னும் குறிப்பாக, முப்பதுக்கும் மேற்பட்ட வகைகள் மேற்கு தொடர்ச்சிமலைகள், நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைகளில் மட்டுமே காணலாம். 

  பழந்தமிழர்களின் நிலவகையில் மலையும் மலை சார்ந்த நிலமும் குறிஞ்சி திணையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இது தமிழரின் மலை நிலத்துக்கும் இந்தச் செடிகளுக்குமிடையேயான பிணைப்பை காட்டுகிறது. அது மட்டும் அல்லாமல் தமிழ் இலக்கியதுடன் இந்த குறிஞ்சி என்ற சொல்லும், மலரும் பின்னி பிணைந்துள்ளது என்பதற்கு பல்வேறு எடுத்துக் காட்டுகளை கூறமுடியும். தொல்காப்பியம், அகநானூறு, குறிஞ்சிபாட்டு, குறுந்தொகை, சிறுபாணாற்றுப்படை, திருமுருகாற்றுப்படை, நற்றிணை, பரிபாடல், புறநானூறு, அகநானூறு ஆகியவைகளில் இந்த பெயர் அல்லது பூ குறிப்பிடப்பட்டுள்ளது. 

  ஆதிவாசிகளும் நீலமலையில் குறிஞ்சிப் பூ சுழற்சியை வைத்து தங்களது வயதை கணக்கிடுகின்றனர் என்று சரித்திரங்கள் குறிப்பிடுகின்றன. அதிலும் குறிப்பாக நீலகிரியில் உள்ள 'தோடர்' இன மக்கள் எத்தனை முறை குறிஞ்சி பூத்ததைப் பார்த்தார்கள் என்றும், மேற்குத் தொடர்ச்சி மலைவாழ் 'பளியர்' என்ற மற்றொரு பழங்குடியினர் தங்கள் வயதை இப்படிதான் கணித்துக் கொள்வார்களாம். 2006 -ஆம் ஆண்டில் பூத்தது. இந்த வருடம் (2018) ஆகஸ்டு மாதம் முதல் டிசம்பர் வரை இம்மலர்களைக் காண முடியும். 

  சுற்றுலாத்துறையின் பல்வேறு சங்கங்களில் தலைவராகவும், பல்வேறு பொறுப்புகளிலும் இருப்பவரான மதுரா டிராவல்ஸ் தலைவர் வி.கே.டி. பாலன் இந்த குறிஞ்சி மலர்களை பற்றி மிகவும் சிலாகித்து பேசுகிறார், ""நான் பலமுறை இந்த மலர்களை பார்த்து ரசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் ஒரு புதிய அனுபவத்தை எனக்கு இந்த குறிஞ்சி மலர்கள் தந்திருக்கின்றன. என்னைக் கேட்டால் குறிஞ்சி மலர் கூட ஒருவகையான அதிசயம்தான். பன்னிரெண்டு வருடத்திற்கு ஒருமுறை மலரும் மலர் அதிசயம் இல்லாமல் வேறு என்ன? அதனால் நமது சுற்றுலாத் துறையினர் இந்தப் பூக்களைப் பற்றி அதிகமாக மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும்'' என்றார். 

  ஊட்டியிலேயே வாழும் செல்வி கூறுகையில், "நான் இந்த குறிஞ்சிப் பூக்களை ஒரே ஒருமுறைதான் பார்த்துள்ளேன். இதிலிருந்து என் வயதை நீங்கள் குத்து மதிப்பாக தெரிந்து கொள்ளலாம். சென்ற முறை இந்த குறிஞ்சி மலர்கள் மலர்ந்த போது தினமும் அதை பறித்து வந்து என் வீட்டில் பலமுறை அலங்காரமாக வைத்தேன். சென்ற முறை மலர்ந்த பூவை எனது புத்தகத்தில் நான் வைத்திருந்தேன். சிலவருடங்களுக்கு பிறகு அது காய்ந்தாலும் இருந்தது. பின்னர் ஒரு நாள் திடீரென்று அது காணாமல் போய்விட்டது. இந்த முறை மலரும் பூவை நான் பத்திரமாக வைத்திருக்க முடிவு செய்திருக்கிறேன்'' என்றார்.

  ]]>
  kurinji, flower, குறிஞ்சி, குறிஞ்சிப்பூ, குறிஞ்சிபாட்டு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/11/w600X390/c2880bb394cba9052efe132fa8e27cd6.JPG http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/11/குறிஞ்சிப்-பூவைப்-பார்க்க-ஆவலா-2998312.html
  2997642 லைஃப்ஸ்டைல் செய்திகள் மனிதர்கள் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்? அதைத் தீர்ப்பதற்கான எளிய உற்சாக மந்திரம் இதோ! பரணி DIN Monday, September 10, 2018 01:07 PM +0530  

  நம்மைப் போன்ற சாமானிய மனிதர்களுக்கு ஒருநாளைத் துவக்கும் போது தான் எத்தனை எத்தனை இடைஞ்சல்கள்?!

  தெனாலி கமல் போல... மனிதர்களுக்கு எல்லாவற்றுக்குமே ஒரே பயமயம்!

  மனிதர்கள் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்? 

  அவர்களது பயத்தைப் போக்குவதற்கான உற்சாக மந்திரம் என்ன? அப்படி ஏதாவது இருக்கிறதா? என்று அடிக்கடி தேடிப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

  ஏனெனில் ஒவ்வொரு மனிதனின் தனி வாழ்க்கை முதல் பொது வாழ்க்கை வரையிலும் அனைத்திலும் நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்த வல்ல சக்தி இந்த பய உணர்வுக்கு உண்டு என்பதால் தான். அதைப் பற்றி விவேகானந்தர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை ஒருமுறை அறிந்தோமெனில் நிச்சயம் இம்மாதிரியான உணர்வுகளைக் கைவிட்டு நாம் எல்லோருமே பராக்ரமசாலிகள் ஆகி விடலாம்.

  இனி விவேகானந்தரின் சொற்பொழிவில் இருந்து சில துளிகள்...

  மனிதர்கள் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்கள்? 

  அவர்களே தங்களை பலவீனர்களாகவும் பிறர் துணையை நாடுபவர்களாகவும் ஆக்கிக் கொண்டது தான் இந்த பயத்திற்கு காரணம். நாம் சோம்பேறிகள், நாமாக எதையும் செய்ய விரும்புவதில்லை, ஒரு கடவுளோ, மகானோ, ஒரு அவதார புருஷரோ வந்து தான் நமக்காக எல்லாம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். பெரிய பணக்காரன் நடப்பதே இல்லை. எப்போதும் வண்டியிலேயே போகிறான். பல ஆண்டுகள் கடக்கின்றன. திடீரென்று ஒருநாள் அவனை வாதநோய் தாக்குகிறது. அவன் விழிக்கிறான். தான் வாழ்ந்த முறை சரியில்லை என்று அப்போது தான் அவனுக்கு உரைக்கிறது. எனக்காக வேறு யாரும் நடக்க முடியாது. எனக்காக இன்னொருவர் நடந்த ஒவ்வொரு முறையும் கொஞ்சம் கொஞ்சமாக கேட்டையே நான் தேடிக் கொண்டிருந்தேன். ஒருவருடைய வேலையை எல்லாம் அவருக்காக இன்னொருவர் செய்து வந்தால் முன்னவருடைய அங்கங்கள் எல்லாம் இயற்கைத் திறனை இழந்து விடும். நமக்கு நாமே செய்யும் செயல்கள் மட்டுமே நம் செயல்கள். நமக்காக வேறொருவர் செய்கின்ற எதுவும் நம் செயல் ஆகாது. எனது சொற்பொழிவுகளால் நீங்கள் ஆன்மீக உண்மைகளை அறிந்து கொள்ள முடியாது. அப்படி ஏதாவது உங்களால் அறிந்து கொள்ள முடிந்தால், நான் அதை வெளிப்படுத்த உதவிய ஒரு சிறு கருவி. அவ்வளவு தான். மகான்களும், ஆச்சார்யர்களும் இதைத்தான் செய்ய முடியும். உதவிக்காக பிறரைத் தேடி ஓடுவது முட்டாள் தனம். இந்தியாவில் மாட்டு வண்டிகள் இருப்பது உங்களுக்குத் தெரியும். பொதுவாக இரண்டு மாடுகளை வண்டியில் கட்டி இழுப்பார்கள். ஒரு கற்றை வைக்கோலை மாடுகளின் கண்களுக்கு முன்னால் அவற்றின் வாய்க்கு எட்டாத அளவில் கட்டித் தொங்க விடுவார்கள். மாடுகள் அந்த வைக்கோலைத் தின்ன முயன்று கொண்டே நடக்கும். ஆனால், அவை எட்டாது. நமக்குப் பிறரால் கிடைக்கும் உதவியும் இது போன்றது தான். பாதுகாப்பு, அறிவு, வலிமை, இன்பம் இவையெல்லாம் வெளியிலிருந்து கிடைக்குமென்று நாம் நினைக்கிறோம். என்றுமே எதிர்பார்க்கிறோம். ஆனால், அது கிடைப்பதில்லை. ஒரு உதவியும்.. .ஒரு போதும் வெளியிலிருந்து வருவதில்லை.  மனிதனுக்கு உதவ யாரும் இல்லை. யாரும் இதுவரை இருந்ததில்லை, இருக்கப் போவதுமில்லை. ஏன் இருக்க வேண்டும்? நீங்கள் மனிதர்கள் இல்லையா? உலக நாயகர்களான உங்களுக்கு பிறரது உதவியா? வெட்கமாக இல்லை. நீங்கள் மண்ணாக மட்கிப் போகும் நிலை வரும் போதே உதவி வரும். ஆனால், நீங்கள் ஆன்மா! நீங்களே முயன்று துன்பங்களில் இருந்து விடுபடுங்கள். உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கு உதவ யாருமில்லை. முன்பு இருந்ததுமில்லை., இருப்பதாக நினைப்பது ஒரு இனிய மயக்கம்! அதனால் எந்த லாபமும் இல்லை.

  ]]>
  vevekanandha quotes, விவேகானந்தர் பொன்மொழிகள், மனிதனின் பயம், பயம், பயத்தைக் கடப்பது எப்படி?, vivekanandha quotes, fear factor, human's scarying nature http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/10/w600X390/bayam.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/10/why-humans-so-scared-in-the-world-2997642.html
  2994025 லைஃப்ஸ்டைல் செய்திகள் கேடு விளைவிக்கும் மோனோ சோடியம் குளூட்டாமேட் அற்ற ஃபுட்டிக்ஸ் உணவு பொருட்கள்! DIN DIN Saturday, September 8, 2018 02:59 PM +0530  

  எங்களுடைய ஏஞ்சல் ஸ்டார்ச்  & ஃபுட் நிறுவனமானது ஃபுட்டிக்ஸ் என்ற பெயரில், உணவுப் பொருள்களில் தீமை விளைவிக்க கூடிய கொழுப்புகள், மோனோ சோடியம் குளுட்டாமேட், ரசாயன பொருட்கள் போன்றவைகளை சேர்க்காமல் அக்கறையுடன் தயார் செய்து, தாய்மார்கள் மனமுவந்து குற்ற உணர்ச்சி இல்லாமல் குழந்தைகளுக்கு ஆரோக்கியமாகவும் சுவையுடனும் கொடுப்பதற்கு ஏதுவாக மக்காச்சோள மாவு, கிறிஸ்பி மிக்ஸஸ், சூப்ஸ், ஹெர்பல் சூப்ஸ், மில்க்ஷேக் மிக்ஸஸ், டேஸ்ட் மேக்கர் மசாலா, கஸ்டர்டு பவுடர், மில்க் மிக்ஸஸ், ஹல்வா மிக்ஸஸ், ஜாம் மிக்ஸஸ், சாஸ் மிக்ஸஸ், ஜாம் சாஸ், ஸ்குவாஷ், ஸிரப்ஸ், வினிகர் & ரைஸ் மிக்ஸஸ் ஆகியவற்றை தயார் செய்து வழங்குகிறோம்.

  பம்பர சுழற்சியாக இருக்கக்கூடிய இன்றைய அதிவேக மனித வாழ்விற்கு ஆற்றலையும், உத்வேகத்தையும் அளிக்கக்கூடிய வகையில் ஃபுட்டிக்ஸ் எனும் துரித வகை உணவுப் பொருட்களின் தயாரிப்புகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம்.

  வியாபார நோக்கை மட்டும் கருத்தாக கொள்ளாமல் எங்களின் ஃபுட்டிக்ஸ் நிறுவனமானது ஒளிரும் ஈரோடு, ஒளிரும் ஈரோடு ஸ்கில்ஸ் அகாடமி, யூத் எம்பவர்மென்ட் ஸ்கில் டெவெலப்மென்ட் போன்ற அமைப்புகளில் இணைந்தும், பசுமை உலகை உரைத்துக்கூற மரம் நடும் நிகழ்வு மற்றும் பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வு போன்ற பல்வேறு சமூக அக்கறையுடனான தொண்டுகளிலும் தம்மை இணைத்து கொண்டுள்ளது.

  மேலும் தமிழகமெங்கும் எங்களின் ஃபுட்டிக்ஸ் பொருள்களானது தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

  கணினி மயமான உலகில் எங்கள் நிறுவனப் பொருள்களானது அமேஸான், பிளிப்கார்ட் போன்ற மின்வர்த்தக தளங்களிலும் எளிதாக கிடைக்கும்.

  ஃபுட்டிக்ஸ் நிறுவனத்தின் மின் வர்த்தக முகவரி www.angelshopee.com

  உணவுப் பொருள்களை ஆன்லைனின் வாங்க: https://angelshopee.com/shop/

  ]]>
  FOODIX BRAND MASALAS, NO MSG, HEALTH CONSCIOUS, ஃபூடிக்ஸ் உணவுப் பொருட்கள், நோ மோனோ சோடியம் குளூட்டாமேட் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/4/w600X390/1.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/04/foodix-2994025.html
  2996119 லைஃப்ஸ்டைல் செய்திகள் ஒடிசி நடனத்தில் ஜங்கிள் புக்!  - பூர்ணிமா DIN Friday, September 7, 2018 03:31 PM +0530 ரூட்யார்ட் கிப்லிங் 124 ஆண்டுகளுக்கு முன் குழந்தைகளுக்காக எழுதிய உலக பிரசித்திப் பெற்ற கதை 'ஜங்கிள்புக்'. இக்கதை பெங்களூரைச் சேர்ந்த தேவ்ஜனி சென் (52) என்பவர் மூலம், ஒடிசி நடன பாணியில் நாட்டிய நாடகமாக அரங்கேறியுள்ளது.

  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி கார்ட்டூன், அனிமேஷன் மூவி, ஆக்ஷன் மூவி என பல வகையில் பார்த்து ரசிக்கும் 'ஜங்கிள் புக்' கதை தேவ்ஜனிசென் முயற்சியால், நாட்டிய நாடகமாக உருவாகி, இந்தியாவின் பல நகரங்களில் மேடையேறி மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

  1980-ஆம் ஆண்டு முதல் கட்டாக், புவனேஷ்வர், கொல்கத்தா போன்ற நகரங்களில் பெற்றோருடன் வசித்தபோதே தேவ்ஜனி சென், காலஞ்சென்ற ஒடிசி நடன குரு கேளுசரண் மகோபத்ராவிடம் நடனம் பயின்றுள்ளார். 2003-ஆம் ஆண்டு பெங்களூரில் ஒடிசி நடன பள்ளியை தொடங்கியபோது, முழு அளவில் நடந்த ஸ்மிருதி நந்தன் கலாசார மையத்துடன் இணைந்து, 7 மாணவிகளுடன் நடனப்பள்ளியை தொடங்கினார். இன்று 55 மாணவிகளுடன் பெங்களூரில் இந்திரா நகர் மற்றும் இந்திய அறிவியல் கழகம் ஆகிய இரு இடங்களில் கிளைகளாக இந்த நடனப்பள்ளி வரிவடைந்துள்ளது. ஜங்கிள் புக் கதையை நாட்டிய நாடகமாக தேர்ந்தெடுக்க என்ன காரணம் என்பதை தேவ்ஜனி சென் விளக்குகிறார்:

  'கொல்கத்தாவில் வசித்தபோது நான்காவது படிக்கும்போதே நான் பரதம், மணிப்புரி, கதக் ஆகிய நடனங்களை பயிலத் தொடங்கினேன். ஆனால் பிற்காலத்தில் நான் நடனத்தையே தொழிலாக கருதுவேன் என்று நினைத்ததில்லை. மும்பையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப ஊழியராக பணியாற்றி வந்தேன். பல ஆண்டுகளாகியும் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்காது என்று தெரிந்ததால், வேலையை விட்டுவிட்டு நடனத்துறையில் முழு ஈடுபாட்டை காட்டினேன். பெங்களூரு வந்த பிறகு நடனப்பள்ளியொன்றை தொடங்கி பயிற்சியளிக்க தொடங்கினேன். அப்போதுதான் ஜங்கிள் புக் பற்றிய நினைவு வந்தது. இந்த கதை உலகம் முழுவதும் பல மொழிகளில் அனைவருக்கும் தெரிந்த கதைதான். பசுமை நிறைந்த காட்டில் வசிக்கும் மௌகிலி என்ற சிறுவனை, கருணை உள்ளம் கொண்ட ஓநாய் தாயன்புடன் கவனித்துக் கொள்வதும், காட்டினுள் வழி காட்டும் வயதான கரடியும் எப்படி அந்த சிறுவனை பாதுகாக்கின்றன என்பதை அறியும்போது, கூடவே நட்பு, வீர செயல்கள் அனைத்தும் அந்த கதையில் அடங்கியிருப்பது தெரிந்தது. இந்த கதை மூலம் குழந்தைகள் வன்முறைக்கு ஆளாவதை தடுக்கவும், பாதுகாப்பு குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடியுமென என் மனதில் தோன்றியது.

  ஒடிசி நடனத்தில் புதுமையை புகுத்த வேண்டுமென்று நினைத்த எனக்கு ஜங்கிள் புக் கதையை நாட்டிய நாடகமாக்க நினைத்தேன். அதே சமயம் அன்னதா பட் நாயக் என்ற புல்லாங்குழல் இசைக் கலைஞர் எனக்கு அறிமுகமானார். ஒடிசி நடன அடிப்படையில் நான் வடிவமைத்த மேடை கதைக்கு ஏற்றபடி முழுமையாக இசையமைத்து கொடுத்தார். இந்த நாட்டிய நாடகத்தில் 35 மாணவிகளை பயன்படுத்தியுள்ளேன்.

  ஒடிசியில் ஆண் நடன கலைஞர்களையும் சேர்ப்பதன் மூலம் ஒடிசி நடனத்தை மேம்படுத்த நினைத்தேன். இதற்கு ஒத்துழைப்பு தர ருத்ராக்ஷயா பவுண்டேஷன் முன் வந்தது. ஒடிசி நடனத்தில் 'தாண்டவம்' என்ற பிரிவுக்கு மட்டும் ஆண் நடன கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இதுவும் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

  நம் நாட்டில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குழந்தைகள் வன்கொடுமைக்கு ஆளாவது குறித்தும், பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு புனர்வாழ்வு கொடுக்கவும் தன்னார்வ தொண்டு நிறுவனமான ஃபெயித் பவுண்டேஷனுடன் கைகோர்ப்பதென தீர்மானித்தேன். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி, நிதியுதவி அளிக்க போதுமான நிதிவசதி இல்லை என தெரிந்தது. மேலும் பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளின் பெற்றோரும் தங்கள் உரிமைகளை உணர்ந்து புகார் அளிக்க தயங்குவதும் தெரிந்தது. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்தேன். இதற்காகவே ஜங்கிள் புக் கதையை நாட்டிய நாடகமாக அரங்கேற்றி, அதன்மூலம் கிடைக்கும் தொகையை ஃபெயித் பவுண்டேஷனுக்கு கொடுத்து வருகிறேன். இந்த நடன நிகழ்ச்சியின் மூலம் நான் வெளிப்படுத்தும் கருத்துகள் நிகழ்ச்சியைப் பார்க்கும் மக்கள் மனதில் நிச்சயம் பதியுமென நினைக்கிறேன்'' என்றார் தேவ்ஜனி சென்.

  நிகழ்ச்சிகள் நடத்தியதில் வசூலாகும் தொகையை அறக்கட்டளைகளுக்கு கொடுத்து உதவுவது தேவ்ஜனி சென்னுக்கு புதிதல்ல.

  2014-ஆம் ஆண்டு நடத்திய நிகழ்ச்சியில் வசூலான தொகையை அப்படியே பெங்களூரில் உள்ள முதியோர் இல்லத்திற்கு கொடுத்து உதவினார். இதே போன்று இவரது குரு கேளுசரண் மகோபத்ராவின் பத்தாவது நினைவு நாளான்று, புவனேஸ்வரில் உள்ள அவரது குழுவினர் அனைவரையும் பெங்களுருக்கு வரவழைத்து நிகழ்ச்சிகளை நடத்தி வசூலான தொகை அனைத்தையும் மூத்த குடிமக்களுக்காக உதவி வரும் ஆஷ்வாசன் பவுண்டேஷனுக்கு கொடுத்து உதவியுள்ளார்.

  ]]>
  http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/07/ஒடிசி-நடனத்தில்-ஜங்கிள்-புக்-2996119.html
  2995428 லைஃப்ஸ்டைல் செய்திகள் பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க என்ன செய்யலாம்? DIN DIN Thursday, September 6, 2018 01:40 PM +0530
 • பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. 
  • பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சாரத்தை மிச்சப்படுத்த உதவும்.
  • பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.
  • பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.
  • வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.
  • பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.
  • பிரிட்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.
  • அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவெளி விட்டு வைக்க வேண்டும்.
  • பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.
  • பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். 
  • பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.
  • உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
  • பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்.
  • பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.
  • பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.
  • கொத்துமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.
  • பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.
  • சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெய்யைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.
  • பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் மொறுமொறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.
  • அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும். 

  - கவிதா

  ]]>
  fridge, refrigerator, tips, டிப்ஸ், ப்ரிட்ஜ் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/5/w600X390/mm4.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/06/பிரிட்ஜிலிருந்து-துர்நாற்றம்-வீசாமல்-இருக்க-என்ன-செய்யலாம்-2995428.html
  2995386 லைஃப்ஸ்டைல் செய்திகள் கோடி ரூபாய் மதிப்புள்ள நிஜாம் காலத்து தங்க டிஃபன் பாக்ஸ் திருடு போனது! RKV DIN Thursday, September 6, 2018 10:42 AM +0530  

  ஹைதராபாத் நிஜாமின் விலைமதிப்பற்ற கற்கள் பதித்த தங்க டிஃபன் கேரியர் ஞாயிறு அன்று திடீரென திருடு போனது ஹைதராபாத் நிஜாம் மியூசியத்தில் நிஜாம் நினைவாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அந்த தங்க டிஃபன் கேரியரில் மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட கப் அண்ட் சாஸர் மற்றும் ஸ்பூனோடு சேர்த்து திருடப்பட்டதாகத் தகவல்.

  மியூசிய அதிகாரிகள் திங்களன்று காலையில் வந்து மியூசியத்தைப் பார்வையிட்டபோது நிஜாமின் டிஃபன் கேரியர் திருடு போனதைக் கண்டறிந்து காவல்துறையிடம் புகார் அளித்தனர். திருட்டு நடந்த இடத்தை சோதனையிட்ட காவல்துறையினர் மியூசியத்தின் புகைபோக்கியில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி ஜன்னலை உடைத்துக் கொண்டு திருடர்கள் உள்ளே இறங்கி திருட்டை நிகழ்த்தியிருக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். உடைக்கப் பட்ட கண்ணாடி ஜன்னல் 4 அடி அகலமானது. ஜன்னலை உடைக்கும் முன் திருட்டில் ஈடுபட்டவர்கள் முதல் மாடிக்கு வந்து அங்கிருந்து புகைபோக்கி ஜன்னல் வழியாக இறங்கி இந்த திருட்டை நிகழ்த்தியுள்ளதாகத் தெரிகிறது.

  காவல்துறை விசாரணையில் மேலும் தெரிய வந்த செய்தி,  மியூசியத்தில் திருடியவர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவில் சிக்காமல் மிக சாமர்த்தியமாக வேறொரு டைரக்‌ஷனில் மியூசியத்தில் நுழைய முற்பட்டிருப்பதால் திருடர்கள் உள்ளே வந்து சென்றதற்கான தகுந்த ஆதாரப் பதிவுகளை சிசிடிவி கேமிராவில் இருந்து பெற இயலவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறியதிலிருந்து, நிஜாம் அரண்மனையில் தற்போது போதிய பாதுகாப்பு இல்லை என்பதால் மியூசியத் திருட்டை நிகழ்த்தியது மியூசியத்தின் உள்ளிருக்கும் நபர்களில் ஒருவரே தவிர பிறிதொருவராக இருக்க வாய்ப்பில்லை, திருட்டுக்குக் காரணமானவர்களைப் பிடிக்க 10 தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்.

  தற்போது திருட்டைக் கண்டுபிடிக்கும் முனைப்பில் தேவையான சாட்சியங்களையும், ஆதாரங்களையும் பாதுகாக்கும் பொருட்டு மியூசியத்தில் நிஜாமின் டிஃபன் கேரியர் திருடு போன பகுதியில் பார்வையாளர்கள் வருகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

  நிஜாமின் தங்க டிஃபன் கேரியர் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள் சில...

  • திருடப்பட்ட டிஃபன் பாக்ஸ் 2 கிலோ எடை கொண்டது. டிஃபன் பாக்ஸ் மீது அலங்காரத்திற்காக மாணிக்கம், மரகதம் மற்றும், வைரக் கற்கள் பதிக்கப்பட்டிருக்கும்.
  • பழங்கால ஆண்டிக் வகை நினைவுச் சின்னங்களில் ஒன்றாகப் பாதுகாக்கப் பட்டு வந்த இந்த டிஃபன் பாக்ஸ் ஹைதராபாத் 7 ஆம் நிஜாமான மிர் உஸ்மான் அலி கான் காலத்தைச் சேர்ந்தது என்கின்றன மியூசியப் பதிவேடு. மிர் உஸ்மான் 1911 முதல் 1948 வரை ஹைதராபாத் நிஜாமாக இருந்தார். அவரது காலத்தின் பின் ஹைதராபாத் ஒருங்கிணைந்த இந்தியாவோடு இணைக்கப்பட்டது.
  • திருடப்பட்ட டிஃபன் பாக்ஸ் ஹைதராபாத் நிஜாமின் அரண்மனைகளில் ஒன்றான புரானி ஹவேலி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. நிஜாமுக்கு இதைப்போல பல மாளிகைகள் ஹைதராபாத் ஓல்ட் சிட்டியில் இருக்கின்றன.
  • திருடப்பட்ட நிஜாமின் டிஃபன் பாக்ஸின் இன்றைய சந்தை மதிப்பு 60 லட்சத்துக்கும் மேலிருக்கலாம் என்கிறார் நிஜாமின் சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்தவரான வரலாற்று ஆசிரியர் சயீஃபுல்லா. வெறும் தங்கத்திற்கான விலை மதிப்பு இது... கூடுதலாக டிஃபன் பாக்ஸில் செய்யப்பட்டுள்ள கலையலங்காரங்களில் பொருத்தப்பட்டுள்ள விலையுயர்ந்த கற்களுக்கும் மதிப்பு சேர்த்தால் இன்றைய தேதிக்கு 1 கோடி ரூபாய்க்கு பெறுமானமுள்ளது அந்த தங்க டிஃபன் பாக்ஸ் என்கிறார் சயீஃபுல்லா..
  • ஹைதராபாத் நிஜாம் மியூசியத்தில் இது போன்ற நிஜாம் காலத்து தங்கம் மற்றும் வெள்ளி கலைப்பொருட்களுடன் நிஜாம் காலத்திய கட்டடக் கலை மாதிரிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையே அதன் சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது.
  ]]>
  Nizam's gold tiffin box stolen, நிஜாமின் தங்க டிஃபன் பாக்ஸ் திருட்டு, 1 கோடி ரூபாய் மதிப்பு, ஹைதராபாத் நிஜாம் அரண்மனை, புரானி ஹவேலி, http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/6/w600X390/0000nizams_golden_box.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/06/diamond-studded-gold-tiffin-box--stolen-from-nizams-museum-2995386.html
  2994729 லைஃப்ஸ்டைல் செய்திகள் சர்ச்சைக்குரிய ‘மீஷா’ நாவலுக்குத் தடை இல்லை உச்சநீதிமன்றம் அறிவிப்பு! RKV DIN Wednesday, September 5, 2018 03:50 PM +0530  

  மீஷா என்பது சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த சர்ச்சைக்குரிய நாவல்களில் ஒன்று. முதலில் தொடராக மாத்ருபூமி வார இதழில் வெளிவந்தது இந்நாவல். தொடராக வெளிவந்த காலத்தில் மலையாள இந்துத்வா அமைப்புகளிடையே கடும் விமர்சனத்துக்கும், கண்டனத்துக்கும் உள்ளானது. கேரள பாஜகவினர் முதல் யோக ஷேம சபா, ஹிந்து ஐக்கிய வேதி அமைப்பு, என் எஸ் எஸ் உள்ளிட்ட மலையாள அமைப்புகள் மாத்ருபூமியில் வெளிவந்த இத்தொடரை தடை செய்யக்கோரி போராடவே நாவலின் ஆசிரியரான மலையாள அறிமுக எழுத்தாளர் எஸ்.ஹரி மாத்ருபூமியில் எழுதுவதை நிறுத்தி விட்டு தொடரை முழுவதுமாக முடித்து புத்தகமாக்கி வெளியிட்டார். 

  மீஷா நாவலைப் பொறுத்தவரை இந்து மத நம்பிக்கைகளைக் குலைப்பதாகவும். இந்துப் பெண்கள் கோயிலுக்குச் செல்லும் வழக்கத்தை பாலியல் தேவைகளைக் காரணம் கட்டி கேவலமாகச் சித்தரித்து  எழுதப் பட்டிருப்பதால் கேரள இந்துத்வ அமைப்பினர் ஒன்றாகத் திரண்டு அந்நாவலைத் தடை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

  இந்துப் பெண்கள் கோயிலுக்குச் செல்லும் போது குளித்து அழகாக ஆடை உடுத்திச் செல்வது தங்களது பாலியல் விருப்பங்களைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகத்தான் என்று மீஷா நாவலின் கதையாக்கம் சொல்கிறது. மாதவிடாய் காலங்களில் பெண்கள் கோயிலுக்குச் செல்லாமல் தவிர்ப்பதின் காரணம் அச்சமயங்களில் கூடல் தவிர்க்கப்பட்டிருப்பதால் தான் என்றெல்லாம் நாவலின் போக்கு சொல்வதால் கேரள் இந்துக்கள் ஒட்டுமொத்தமாகக் கொதித்து எழுந்து நாவலுக்கு தடை கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  ஆனால், உச்சநீதிமன்றத்தில் ‘மீஷா’ நாவலுக்கு எதிரான மனு விசாரணைக்கு வருகையில், ‘எழுத்தாளர்களை சுதந்திரமாக இயங்க விடுங்கள்.’ நாவலைத் தடை செய்தால் அது கருத்துச் சுதந்திரத்தை முடக்குவதாக ஆகும்; என்று கூறி உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது.


   

  ]]>
  meesha by S. Harish, malayalam novel meesha, மலையாளம் நாவல்மீஷா, எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு, Supreme Court of India refused to ban the book http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/5/w600X390/meesha_novel.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/05/supreme-court-dismisses-plea-seeking-ban-on-malayalam-novel-meesha-by-s-harish-2994729.html
  2994028 லைஃப்ஸ்டைல் செய்திகள் ஆற்றல் வாய்ந்த ஆசிரியர்களின் நெறிமுறை அடையாளங்கள் மாலதி சுவாமிநாதன் DIN Wednesday, September 5, 2018 10:00 AM +0530  

  திருமதி. ரங்கசாமி டீச்சர் யாரிடம் பேசினாலும் அவர்களின் தலையை கோதியபடி பேசுவார். அவரிடம் படித்தவர்களுக்கு அவரின் அரவணைப்பு, பாசக் கண்கள், கனிவான பேச்சு நன்றாக ஞாபகம் இருக்கும். திருமதி. ரங்கசாமி டீச்சர் ஒரு நர்சரி ஆசிரியர்.

  எட்டாம் வகுப்பில் அந்தக் கணக்கு வாத்தியார் என்றாலே எல்லோருக்கும் நடுக்கம். அவரை ‘டெரர்’ என்றே அழைப்பது அவருக்கும் தெரிந்ததே. நகைத்து தன்னுடைய நண்பர்களிடம் பகிர்வார்.  ஆனால், அவர் எந்த வகுப்புக்கெல்லாம் செல்கிறோரோ, கணக்கில் தட்டுத்தடுமாறுவோர்களுக்கு இவர் ‘ஹீரோ’. மாணவர்களை குறை கூறுவதோ, சுட்டிக்காட்டிப் பேசுவதோ, தாழ்வாக நடத்துவதோ இல்லை. மேலும், அவர்களுக்கும் பாடம் புரியும் வகையில் (வரையில்) விதவிதமாக சொல்லித் தருபவர்.

  ஆங்கில பாடம் கற்றுத் தரும் ஆசிரியை விமலா டீச்சர், பாடத்தைப் புத்தகத்திலிருந்து படிக்கும்போது மாணவர்களையும் பார்ப்பார்கள். வகுப்பின் எல்லா வரிசையையும், ஒவ்வொரு மாணவரையும் அவர்களின் இதமான பார்வை சந்திக்கும். அவர்களைப் போலவே யாரையும் விட்டு விடாமல் பார்க்கக் கற்றது ஒன்று. மற்றொன்று, முகம் பார்த்து படிப்பது  பழக்கமானது.

  மாணிக்கம் சாரின் வகுப்பில் எப்பொழுதும் எழுந்து நின்று படிக்கச் சொல்வார். சில நேரங்களில், சரி ஒரு சேன்ஜுக்கு என்று சொல்லி இன்னொருவருடன் தானும் சேர்ந்து படிப்பார். பிறகு தான் புரிந்தது, அதனால் உச்சரிக்கத் தவிப்போரை, பேசப் பயப்படுவோர் என்ற பலருக்கு மாணிக்கம் சார் துணைபுரிந்ததால் தைரியம் வளர வாய்ப்பானது. அவரின் செயல்பாட்டால், கார்மேக நிறத்தை மதிக்கச் செய்தது.

  அதனால்தான் எந்த விதத்தில் பார்த்தாலும், படிப்பை அழகு படுத்துவதே அதைத் சொல்லித் தருபவர்கள் தான். நம் வகுப்பாசிரியர்கள், ட்யூஷன் சொல்லி தருபவர் மட்டுமின்றி சந்தேகங்களைத் தெளிவு செய்யும்: நண்பர்கள், கூடப்பிறந்தவர்கள், உறவினர், பெற்றோர் எல்லோரும் என்னைப் பொருத்தவரை கற்றுத் தரும் அந்தத் தருணத்தில் ஆசிரியர்களே!

  நன்றாக கற்றுத் தருபவர்கள், புரிய வைப்பது மட்டுமல்ல, கற்பதிலும், கற்கும் விஷயத்திலும் நம் ஆர்வத்தைத் தூண்டி விடுகிறார்கள் அதுவும் இவர்கள் சொல்லி தரும் விதத்தில் தான் ஈர்ப்பு ஏற்படுகிறது.

  சொல்லித் தருகையில் அவர்களின் பேரார்வமே இவர்கள் அனைவரையுமே ஒற்றுமை படுத்துகிறது. இவர்கள் கற்பிக்கும் பொழுது, அந்தப் பொருளின் மேல் அவர்களுக்கு இருக்கும் ஆர்வம் வெளிப்படையாகத் தென்படும்! இந்த விஷயம் முக்கியமானது என்று நமக்குத் தோன்றி, அதைப் பற்றி மேலும்-மேலும் தெரிந்து கொள்ள தூண்டிவிடும்.,

  அதனாலேயே, நல்ல ஆசிரியரிடம் கற்றுக் கொள்கையில் அதைப் பற்றிய ஆழமான புரிதல் ஏற்படுகிறது. பிறருடன் பகிர்ந்து கொள்ளும் போது ‘இதை கேள்விப் பட்டிருக்கியா?’, ‘இது தெரியுமா?’, ‘இதைக் கேளேன்’ என்பது நம் ஆர்வத்தைக் காட்டிவிடும். இதில் அழகு என்னவென்றால், நமக்குத் தெரிந்ததை பகிர்வதால், நாமும் ஆசிரியராவது மட்டுமில்லாமல், நம் புரிதலும் மேம்படுகிறது!

  சந்தேகமின்றி, நம் ஆர்வம் மற்றவருக்குத் தொற்றிக் கொள்ளும். அவ்வளவு ஆர்வத்துடன் சொல்ல, கேட்பவரையும் நம் ஆர்வ வெள்ளத்தில் அழைத்துச் சென்று விடுவோம். வகுப்பறைகளில் இப்படிப் பட்ட சூழல் இருக்கையில் அது மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும். இப்படி அமைக்கப்பட்டிருக்கும் வகுப்பறையில் தோல்விகளுக்கு இடமே இல்லை என்று தன் அனுபவத்தைக் குறித்து எழுதி இருக்கிறார் ஜான் ஹோல்ட், ‘ஹொவ் சில்ரன் லர்ன்?’ (How Children Learn?) என்ற தன் மிகச் சிறந்த நூலில். இப்படிப் பட்ட கற்றுத் தருவோரைப் பார்க்க பார்க்க, போகப் போக, அந்தப் பாடத்தை, கற்பதை நேசிக்க ஆரம்பிப்பவர்களைப் பற்றியும் கேட்டிருக்கிறோம்.

  கற்பதில் ஆர்வம் என்பது பல விஷயங்களைப் பற்றி அறிந்துக் கொள்ளத் தூண்டுதலாகும். அதன் நேர் விளைவாக அறிவுத் திறன் விஸ்தாரமாகிறது. இந்த விஸ்தரிப்பினால் கர்வம், அகம்பாவம், கூடவே சேர்ந்து விட்டால், இவர்கள் அறிவு / பகிர்வு கஞ்சன்களாக வலம் வருவார்கள். முழு மனதோடு பகிர்வதற்கு மனம் வராமல், தயங்குவார்கள். வெகு விரைவில் இதைக் கண்டறிந்து, மேதாவிகளாகத் திகழ்ந்தால் கூட அவர்களை மற்றவர்கள் நெருங்க மாட்டார்கள்.

  ஒருவர் எவ்வளவு பேர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறாரோ அந்த அளவிற்குப் பல கருத்துக்களை தானே புரிந்து கொள்ளும் சந்தர்ப்பமாகிறது. பலருடன் பல கோணங்களில் அளாவளவல் செய்யச் செய்ய, புரிதலும், அறிதலும் ஆழமாகிறது. ’கற்றது கை மண் அளவு, கல்லாதது கடல் அளவு’ என்றும் புரிய வரும். இந்த மனப்பான்மை உள்ளவர்கள், நிறையத் தெரிந்தவர்களாக இருப்பார்கள். தங்களின் அறிவை, அறிவுத் திறனை எப்பொழுதும் காட்டி கொள்ள மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை இன்னும் தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது என்பதால் அறிவுத்திறனை காட்டிக் கொள்ள அவசியம் இல்லை என்பார்கள். மாறாக, அடக்கமாக இருப்பார்கள். இந்தப் பக்குவத்தினால் ஒவ்வொரு சந்திப்பையும், சந்தர்ப்பத்தையும் இன்னும் நன்றாக அறிந்து, புரிவதற்கென  கருதுவார்கள்.

  எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வதற்கு நமக்குள் அன்பும் அத்துடன், அடக்கமும் இருக்க வேண்டும். அன்பு இருந்தால், மற்றவரைப் பற்றி யோசிப்போம். அவர்களின் முன்னேற்றத்தை மனதில் வைத்துக் கொண்டு செயல் புரிவோம்.

  அடக்கம் இல்லா விட்டால், கர்வம், அகந்தை, தலை தூக்கி நிற்கும். மற்றவர்களின் குறைபாடுகளை மட்டும் கவனிப்போம். தெரியாதோரை, புரியாதோரைத் துச்சமாக பார்வையிடுவோம். இந்தத் தோற்றத்தை பார்த்தே, அவர்களிடம் கேட்டுக் கொள்ளவோ, கற்றுக் கொள்ளவோ பயப்படுவார்கள்.

  கற்றுத் தருவதில் எந்த அளவிற்கு நியாயமாக, சமத்துவமாக இருக்கிறோம் என்பதும் தென்படும். சிலருக்குக் கவனமாக, பொறுமையுடன் சொல்லித் தருவதும், மற்றவருக்கு மேலோட்டமாகவும், சலிப்புடனும் கற்றுத் தருவதைக் கண்டிருக்கிறோம். எந்தவித பாரபட்சம் காண்பித்தாலும் மாணவர்கள் விலகிக் கொள்வார்கள், ஆர்வம் சிதறிவிடும்.

  எப்படி கற்பிக்கக் கூடாது என்பதை இப்போது பார்ப்போம்

  • வகுப்பில் முதல் மூன்று வரிசைகளை மட்டும் பார்த்து கற்றுத் தருவது.
  • வகுப்பில் எல்லோரையும் சமத்துவமாக நடத்தாமல் இருப்பது
  • பாடம் புரியவில்லை என்று தெரிந்தும் கேள்வி கேட்பது.
  • பதில் சொன்னாலும் அவர்களின் குணாதிசயங்களைக் குறித்து குறை கூருவது.
  • கற்றுத் தருவதை வெவ்வேறு விதமாக கற்றுத் தருவது.
  • நக்கல், நையாண்டி பேச்சு
  • முறைத்துப் பார்ப்பது
  • அளவளாவல் இல்லாமல் கற்றுத் தருவது.
  • மற்றவர்களுடன் ஒப்பிடுவது
  • அபிப்பிராயங்கள்: ‘உன்னால் முடியாது’, ‘நீ எல்லாம் எப்படி படிப்ப?’
  • சமாளித்துச் சொல்லி தருவது
  • எல்லோரும் உடனே புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது
  • தவறுகளை எல்லோர் முன்னிலும் சுட்டிக் காட்டுவது.
  • பயமுறுத்தல்

  மேற்சொன்னதில் சிலவற்றைச் கற்றுத் தரும் தருணத்தில் செய்கிறோமா என்று ஆராய்வது நல்லதே. இப்படிச் செய்தால்தான் தம்மை மதிப்பார்கள் என்று நினைப்பதினால் இப்படி செய்கிறோமா என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் நேரும் விளைவுகளைக் கூர்ந்து கவனியுங்கள். இந்தச் செயல்பாடுகளினாலும், மனப்பான்மையினாலும் பலர் நம்மைப் பார்த்து அஞ்சக் கூடும். பயத்துடன் மதிப்பார்கள். இப்படித் தான் இருக்க விருப்பப் படுகிறோமா?

  இந்தப் பயம் கலந்து அஞ்சுபவர்களை போல் இல்லாமல் ஆதரவும் அக்கறையும் காட்டுபவர்களிடம் அவர்கள் பயமின்றி, சிரித்துப் பேசி, சொல்வதெல்லாம் செய்கிறார்கள் என்பதைக் காண்போம். இவற்றை ஆராய்ந்தால், காரணிகள் புரியவர, தன்னை மேம்படுத்திப்பதால் ஆற்றல் வாய்ந்த ஆசிரியர்களின் நெறிமுறைகளையும் / அடையாளங்களையும் வளர்த்துக் கொள்ள உதவும்.

  கற்றுத் தருவது மிக பொறுப்பான ஒன்று. நம் சொல்லும் செயலும் ஒருங்கிணந்து இருக்க வேண்டும். நம்மிடமிருந்து கற்பது நிதர்சனம். அதனால் பொறுப்பு உள்ளவர்களாக இருப்பது அவசியம்!

  - மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன் malathiswami@gmail.com

  ]]>
  teaching, learning, study, கற்றல், கற்பித்தல் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/4/w600X390/Teacher-and-Student.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/05/characteristics-of-effective-teachers-2994028.html
  2993279 லைஃப்ஸ்டைல் செய்திகள் தென்னக ரயில்வேயின் ஸ்பெஷல் சார்ட்டர் ட்ரெயினில் ஹனிமூன் கொண்டாடிய முதல் வெளிநாட்டுத் தம்பதிகள்! RKV DIN Monday, September 3, 2018 12:36 PM +0530  

  இந்தியாவின் தென்னக ரயில்வே நீலகிரி மலைச்சுற்றுலா திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையத்திலிருந்து நீலகிரி செல்லும் வகையில் புதிய சார்ட்டர் ட்ரெயின்களை அறிமுகம் செய்துள்ளது. ஒருவழிப் பயணத்திட்டமாக அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் இந்த ரயில் சுற்றுலா திட்டத்தின் கீழ் நீலகிரி மலையில் ஹனிமூன் கொண்டாட விரும்பும் இளம் தம்பதிகள் தங்களுக்கே தங்களுக்கென தனியாக இந்த ட்ரெய்னை தென்னக ரயில்வே இணையதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். ஒருவழிப் பயணமாக அமையும் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்பவர்கள் மேட்டுப்பாளையத்திலிருந்து நீலகிரி வரை பயணிக்க முடியும்.

  தென்னக ரயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் புதிய திட்டத்தின் கீழ் முதன்முறையாக தங்களது ஹனிமூனை நீலகிரி மலையில் கொண்டாட இந்த ஸ்பெஷல் ட்ரெய்னை புக் செய்தனர் கிரஹாம் வில்லியம் லின் (30) மற்றும் சில்வியா பிளாசிக் (27) எனும் வெளிநாட்டுப் புதுமணத் தம்பதியினர். தங்களது ஹனிமூனை மறக்க முடியாத இனிமையான நன்னாளாக மாற்ற விரும்பி இத்தம்பதியினர் தங்களது ஹனிமூன் கொண்டாட்டத்துக்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். 

  மேட்டுப்பாளையத்தில் தொடங்கி உதகமண்டலத்தில் முடியும் இந்த பயணத்திற்கான கட்டணம் 3 லட்சம் ரூபாய். இத்தனை கட்டணம் கொடுத்து தென்னக ரயில்வேயின் ஸ்பெஷல் சுற்றுலாத் திட்டத்தில் பதிவு செய்து ஹனிமூன் கொண்டாட நினைத்த அவர்களது முயற்சியைக் கெளரவிக்கும் விதத்தில் ஸ்டேஷன் மாஸ்டர்கள் இத்தம்பதியினருக்கு கடந்த வெள்ளியன்று பிரமாண்ட வரவேற்பளித்து அசத்தியுள்ளனர்.

  ஹனிமூன் தம்பதியினரை ஏற்றிக் கொண்ட ஸ்பெஷல் ட்ரெய்ன் மேட்டுப்பாளையத்தில் காலை 9.10 மணியளவில் கிளம்பி பிற்பகல் 2.40 மணிக்கு ஊட்டி சென்றடைந்தது.

  நீலகிரி மலைச்சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக 120 இருக்கைகளுடன் தென்னக ரயில்வேயின் சேலம் டிவிஷனில் இந்த ஸ்பெஷல் ட்ரெய்ன் இயக்கப்படுகிறது.

  ]]>
  ஸ்பெஷல் சார்ட்டர் ட்ரெய்ன், தென்னக ரயில்வே, ஹனிமூன் ட்ரிப், special shorter train, southern railway, honeymoon trip, biritish couple, lifestyle special, லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/3/w600X390/nilgiris_shorter_train.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/sep/03/british-couple-charters-entire-train-for-honeymoon-trip-2993279.html
  2989411 லைஃப்ஸ்டைல் செய்திகள் முயற்சி, முயற்சி, முயற்சியே வெற்றிக்கு முன்னோடி! ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ். DIN Wednesday, August 29, 2018 10:00 AM +0530 ஒரு மலைப்பாங்கான கிராமம். அந்தி மாலையில் பறவைகள் தங்களுக்குள் அன்றைய நாளில் நடந்ததைப் பேசி முடித்து அமைதியாயின. மலையோரத்து ஒற்றைக் குடிசையில் ஒரு கிழவி அடுப்பினில் களி சமைத்துக் கொண்டிருந்தாள். மீண்டும் தன் உடன்பிறப்புகளிடம் தலைநகரில் தோற்று, காட்டிற்குள் வேடனாக வேடம் தரித்திருந்தார் சந்திரகுப்த மெளரியர். அவருக்குத்  துணையாக அவரது நண்பர் சாணக்கியனும் இருந்தார். இருவரும் பசிக்காக அக்கிழவியிடம் கையேந்தினர். சூடாய்ச் சமைத்ததைச் சுடச்சுட கிழவி பரிமாறினார். தட்டில் போட்டதும், உடனிருந்த பாட்டியின் பேரன், சட்டென்று களியின் நடுவில் கையை வைத்தான். சுட்ட உணவால் 'ஆ' என்றலறி கையை எடுத்தான். 'உனக்கும் சந்திரகுப்த மெüரியனைப்போல எதை முதல்ல செய்யணும்னு தெரியல' என ஆரம்பித்தாள் கிழவி. 'தன்னை அடையாளம் கண்டு கொண்டாளோ கிழவி' என பயந்தார் சந்திரகுப்த மெüரியர். 

  'நாட்டைப் பிடிக்க முதல்ல நாட்டோட எல்லை ஓரங்களைப் பிடிச்சு முன்னேறணும். கடைசியல மொத்தப் படையோட தலைநகரைப் பிடிக்கணும். எடுத்தவுடனே தலைநகரத்துல போர் தொடுக்கிறதும், சூடான களிக்கு நடுவுல கையை வைக்கிறதும் முட்டாள்தனமான வேலை' என உணவோடு யுத்த தந்திரம் பரிமாறினார் கிழவி. அக்கிழவியின் பேச்சில் திட்டம் தயாராகியது. ஓரங்களைப் பிடித்து தலைநகரைக் கைப்பற்றினார். சந்திரகுப்த மெüரியர் மகதப் பேரரசின் மாமன்னன் ஆனார். 

  எனவே, திட்டங்கள்தாம் இலக்கின் அஸ்திவாரம். அவை தாம், ஓர் இலட்சியக் கட்டடத்தின் மாபெரும் பலம். திட்டங்கள் தெளிவானால் எகிப்தில் மட்டுமல்ல, எட்டையபுரத்திலும் பிரமிடுகள் நிமிரும். ஆக்ராவின் கரையில் மட்டுமல்ல, தாமிரவருணியிலும் தரணி போற்றும் கட்டடங்கள் கதை பேசும். மொத்தத்தில் மனதில் கனவாய் உருவாவதை நனவாக்குவதற்கான முதல் செயல்பாடு திட்டமிடுதல். திட்டமிடுதல் முயற்சியின் முதுகெலும்பு. 

  பறவைகளும், விலங்குகளும் கூட தங்களது வாழ்க்கைக்காகத் திட்டமிடுகின்றன. ஆதலால்தான் பொறியியல் படிக்காத தூக்கணாங் குருவி எந்தப் பொறியும் வைக்க முடியாத அளவிற்கு அற்புதமாய்க் கூடு கட்டுகிறது. சைபீரியாவில் இரையை எடுத்துக் கொண்ட பின்பு ஐந்தாயிரம் மைல்கள் கடந்து வேடந்தாங்கலில் இணையைத் தேடிக் கொள்கிறது. 

  மேலும், நிறைய திட்டங்களைச் செயல்படுத்த முனையும்போது, தோல்வி அடைவதுண்டு. அது நான்கு காளைகளில், ஒரு காளையை பலம் வாய்ந்த சிங்கமொன்று தாக்க முற்பட்டது போன்றது. அதே சிங்கம், அடுத்த திட்டத்தினை வகுத்தபோது காளைகள் சிதறுண்டன. சிங்கத்தின் திட்டமும் வெற்றிகண்டது என்பது ஒன்றாம் வகுப்பில் படக்கதையில் சொல்லப்பட்ட  செய்தி. 

  'எதிரியை முதன்முதலில் நேருக்கு நேர் எதிர்கொள்ளும்போது எந்தவொரு திட்டமுமே தாக்குப்பிடிப்பதில்லை'  என்று ஒரு பழைய ராணுவப் பழமொழி கூறுகிறது.  இந்திய விடுதலைக்காக, அந்நியர்களை விரட்ட,  மாவீரன் மங்கள் பாண்டேவிலிருந்து மகாத்மா காந்திவரை பல திட்டங்களைத்  தீட்டினர். 'ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், உப்பு சத்தியாகிரகம், கடைசியில் வெள்ளையனே வெளியேறு' என காலச் சூழ்நிலைக்கேற்ப உருவாக்கப்பட்ட திட்டங்கள் மட்டுமே வெற்றிக்கு வித்திட்டன. 

  வெற்றிகரமானவர்கள் எப்பொழுதுமே எழுத்துப்பூர்வமான திட்டங்களுடன்தான் தொடங்குகின்றனர்.  உலக அதிசயங்களில் தொடங்கி, நவீன காலத்தின் மாபெரும் தொழிற்சாலைகள் வரை, மனிதகுலத்தின் மாபெரும் சாதனைகள் அனைத்துமே, தொடக்கத்திலிருந்து இறுதிவரை விலாவாரியாகச் சிந்திக்கப்பட்டு, கவனமாக வடிவமைக்கப்பட்ட, விரிவான திட்டங்களுடன்தான் தொடங்கப்பட்டன.  மனதளவில் மட்டுமே உருவாக்கப்படுகின்ற திட்டங்கள் பல நேரங்களில் கரை காணாத கலன்கள் போலவே காணாமல் போய்விடுவதுண்டு. அதுவே எழுத்து வடிவத்திலிருந்தால் அது என்றாவது ஒருநாள் உயிர்பெற்று விருட்சமாகும்.

  உண்மையில், திட்டமிடுவதற்காகச் செலவிடப்படும் ஒவ்வொரு நிமிடமும், செயலில் ஏழு நிமிடங்களைச் சேமித்துக் கொடுக்கின்றது.  இந்தியாவின் மிகப்பெரிய கோயில்களெல்லாம் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கட்டப்பட்டவை. ஆனால், தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோயிலின் சாரம் முதல் இருபத்தைந்து டன் பாரம் கொண்ட விமானம் வரை பணி முடிய  இரண்டு ஆண்டுகள் திட்டம் தீட்டினார் இராஜராஜ சோழன். அதனால் நூறு ஆண்டுகள் கட்டப்படவேண்டிய கோயில், இருபத்தைந்தே ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட பெருமையை உலகிற்கு பறைசாற்றுகிறது. அதனால்தான், 'திட்டமிடத்  தவறுவது என்பது "தோற்பதற்குத் திட்டமிடுவது' என்று அர்த்தமாக கூறப்படுகிறது. 

  திட்டம் ஏதுமின்றிச் செயலில் இறங்குவதுதான் அனைத்துத் தோல்விகளுக்கும் காரணம் என்கிறார் நேர நிர்வாக வல்லுநர் அலெக் மெக்கன்சி. திட்டமிடாத வாழ்வு, திக்குத் தெரியாத வாழ்க்கை. அதிலே பயனிலாச் சொற்கள் மிகுந்திருக்கும். செயல்பாடுகள் பிறரின் முகம் சுளிக்க வைக்கும். மொத்தத்தில் வாழ்வில் இறுதி நாட்களை அசைபோடும்போது வாழத் தெரியாமல் வாழ்ந்துவிட்டோமே என்ற வருத்தம் மட்டுமே மிஞ்சியிருக்கும்.

  'ஒரு மாபெரும் கப்பலைப்போலவே, ஒரு மாபெரும் வாழ்க்கையும், ஒரே ஒரு நம்பிக்கை அல்லது ஒரே ஒரு கயிறால் ஒருபோதும் தாங்கிப் பிடிக்கப்பட்டிருக்கக்கூடாது' என்ற கூற்றைப் போல பல கோணங்களில் ஆராய்ந்தறிந்து ஓர் இலக்கை அடையவேண்டும். ஒரு தடைதாண்டும் ஓட்டத்தில் ஓடுகின்ற வீரனைப்போல், தன் இலக்கினை அடைவதற்கு முன்னால் இருக்கின்ற ஒவ்வொரு தடைகளையும், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தாண்டி இலக்கை அடையத் திட்டமிடல் வேண்டும் என்பதை திருவள்ளுவர், 'முடிவும்  இடையூறும் முற்றியாங்கு எய்தும்படுபயனும் பார்த்துச் செயல்' என்ற வரிகள் மூலம்    இறுதி இலக்கை அடைவதற்கு முன்பாக, ஒவ்வொரு நிலையிலும் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களை அறிந்து செயல்படவேண்டும் என்கிறார்.

  இருப்பினும், ஒரு செயலைத் தொடங்கும்போதே அது தோல்வியில் முடியும் என்பதற்கு காரணம் சொல்லும் ஒரு நண்பன் உடனிருந்தால் வெற்றி உறுதியாகிவிடும். அதன் மூலம்தான், திட்டத்தின் நிறைகளை மட்டும் ஆராயாமல், குறைகளையும் ஆராயும்போது, மொட்டைக் கோபுரமாய் திட்டம் நிற்பது தடுக்கப்படும். 

  'திட்டமிடுதல் ஓர் ஒழுங்கு. அது ஒரு பழக்கம். திட்டமிடுதல் ஒரு கலை. மனிதனின் தகுதியை நிர்ணயிக்கும் பண்பு. தனிமனிதன் மூலம் நாடுகள் வரை வளர்த்தெடுக்கப்பட வேண்டிய  திறமை. இது சிலருக்குத் தெரியாமலிருக்கலாம் அல்லது பழக்கமில்லாமலிருக்கலாம். அறியாமை வெட்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் அறிந்து கொள்ள விருப்பமில்லாமை அதைவிடப் பெரிய வெட்கக்கேடானது'' என்கிறார் பெஞ்சமின் ஃபிராங்க்லின். திட்டமிடுதலை பழகிக் கொண்டால் அதுவே திறமையாக உருவெடுக்கும். மன அழுத்தம் குறைவதோடு, மனச்சோர்வும் காணாமல் போகும். சுறுசுறுப்பு ஊற்றெடுக்கும்.

  ஒரு  நாளினைத் திட்டமிடுதல் என்பது அந்நாளின் அதிகாலையில் திட்டமிடுதல் அல்ல. முதல் நாளிலேயே திட்டமிடுவது. உறக்கத்திற்கு முன்னே திட்டமிடு. அடுப்படி சமையல் முதல் அகிலம் போற்றும் வெற்றி வரை தெளிவான திட்டமிடுதலே மன அதிருப்தியில்லா வாழ்வு. சரியாகத் திட்டமிடும் நாட்களில், சரியாக வாழ்ந்தால், திட்டமிட்டு வாழ்ந்த ஒவ்வொரு நாளும், திருப்திகரமான ஒரு வாழ்வைத் தரும். திருப்திகரமான வாரங்களின் தொகுப்பு, வெற்றி சொல்லும் மாதமாகும். வெற்றி கொண்ட மாதங்கள், சாதனையான வருடமாகும். சாதனை வருடங்கள், வருங்கால சந்ததிக்கு ஓர் எடுத்துக்காட்டான வாழ்வினைத் தரும். எனவே,  இன்றைய திட்டமே, எதிர் காலத்தில் நம் வரலாறாகும். 

  ஓராண்டு நோக்கிருந்தால், 
  பூக்களை வளருங்கள்! 
  பத்தாண்டு நோக்கிருந்தால், 
  மரங்களை வளருங்கள்! 
  முடிவில்லா நோக்கிருந்தால், 
  மனிதகுலத்தை வளருங்கள்!

  என்பது சீனநாட்டுப் பழமொழி. எனவே, திட்டம் தீர்க்கதரிசனமாய் இருப்பதே நல்லது. 

  புத்திசாலியும், முட்டாளும் ஒரே விஷயத்தைத்தான் செய்கின்றனர்.  ஆனால், புத்திசாலிகள், முதன்முதலில் செய்வதை முட்டாள்கள் கடைசி வரை அறியாமலே விட்டுவிடுகின்றனர். ஆம், ஒரு நிலச்சுவான்தார் தனக்குக் கீழ் பணிபுரியும் தொழிலாளிக்கு நல்லது செய்ய நினைத்தார். அவரிடம், 'காலையில் நடக்க ஆரம்பிக்க வேண்டும், மாலையில் சூரியன் மறைவதற்குள் அதே இடத்திற்கு வந்துவிடவேண்டும். எவ்வளவு தூரம் நடந்தாயோ, அவ்வளவு நிலமும் உனக்கே சொந்தம்'' என்றார். மறுநாள் கிடைத்தற்கரிய வாய்ப்பை நழுவ விடாமல் பெரிய சொத்தை அடைவதற்காக விரைவாக நடந்தார். பிற்பகல் ஆகியது. களைப்படைந்திருந்தாலும், நடந்து போய்க் கொண்டேயிருந்தார். சூரியன் மறைவதற்குள் தொடங்கிய இடத்திற்குச் செல்லவேண்டுமே என்பதற்காக ஓட்டமும் நடையுமாக வந்தார். சூரியன் மறையும் நேரம் நெருங்கிவிட்டது. 

  மூச்சிரைக்க ஓடிவந்தார். முடியவில்லை. கடைசியில் முழுவதுமாய் சோர்வடைந்து, ஆற்றலில்லாமல் தொடங்கிய கோட்டில் "தொப்' பென்று விழுந்தார். அவர் மூச்சு நின்றிருந்தது. அறுபது மைல் தூரம் கடந்தவனுக்கு ஆறடிநிலம் மட்டுமே தேவைப்பட்டது.  

  'பணியைத் திட்டமிடுங்கள்;   திட்டமிட்டு பணியாற்றுங்கள்' என்பதுதான் வெற்றியை எளிதில் அடையும் வழி. 

  திட்டமிட்டால் திசையெங்கும் வெற்றியே! 

  கட்டுரையாசிரியர்: காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு.

  ]]>
  motivation, story, கதை, முயற்சி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/21/w600X390/im9.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/29/முயற்சி-முயற்சி-முயற்சியே-வெற்றிக்கு-முன்னோடி-2989411.html
  2989413 லைஃப்ஸ்டைல் செய்திகள் பணம் தேவையே! அதை எப்படிச் சம்பாதிப்பது? - வி.குமாரமுருகன் DIN Tuesday, August 28, 2018 05:58 PM +0530 இது இளமைக் காலம். சந்தோஷத்தையும், கேளிக்கையையும் மட்டுமே நாம் அனுபவிக்க வேண்டிய வயது இது என பெரும்பாலான இளைஞர்கள் நினைத்துக் கொண்டு எதிர்கால வாழ்க்கை குறித்து சிந்திப்பதில் கவனம் செலுத்துவதில்லை.

  சில பேர் எப்போதுமே பொதுநலம் கொண்டு பிறருடன் வெளியே செல்வது, அவர்களின் வேலை தொடர்பாக அலைந்து திரிவது என வாழ்க்கையைப் பிறருக்காக வாழ்ந்து வருவார்கள். இவர்கள் சமூகத்துக்காக, மற்றவர்களுக்காகவே வாழ்ந்து தங்களின் எதிர்காலத்தை தொலைத்துக் கொள்வார்கள். பொதுநலம் தேவைதான், அது தன் நலத்துடன் ஒன்றி, இணைந்து வந்தால்தான் நாம் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் தரும்.

  கல்லூரி நட்புகளும், பள்ளி நட்புகளும் வாழ்க்கை முழுவதுமே தொடர்ந்து வரும் விஷயங்கள் அல்ல என்பதை இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் புரிந்து கொள்வதில்லை. இத்தகைய இளைஞர்களிடம் யாராவது, 'என்னப்பா? எதிர்காலத்தை பற்றி சிந்திக்காம இப்படி காலையிலிருந்து, இரவு வரை வெளியேவே சுத்திக்கிட்டு இருக்கியே?' என கேட்டால், கேட்டவர் காதைப் பொத்திக்கொள்ளும் வகையில் நண்பர்கள் கூட்டம் வெளுத்து வாங்கும். ஆனால், சில காலங்களுக்கு பின்பு இத்தகையவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறிவிடும்.

  நண்பர்கள் குழுவுடன் நேரத்தைச் செலவிடும் இளைஞர்கள் தங்களைப் பற்றி சிந்திக்க தொடங்கினால்தான் அவர்களுக்கு தன்னம்பிக்கையே பிறக்கும்.

  'நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? எதிர்காலத்தில் இப்படி எல்லாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் நமக்கு பணம் தேவையே... அதை எப்படிச் சம்பாதிப்பது?' என சிந்தித்தால் மட்டுமே எதிர்காலம் குறித்த பயம் போகும். இல்லையென்றால், சில காலத்துக்கு பின்னர் எதிர்காலம் நம்மை நோக்கி சிரிக்கும்.

  சில நேரங்களில், நண்பர்கள் மட்டுமல்ல. பெற்றோரும் கூட உங்களது எதிர்காலம் குறித்து முடிவெடுக்கத் தயங்குவார்கள். ஏனென்றால் நீங்கள் சொன்னதால்தான் நான் இதைச் செய்தேன். இப்போது பாதிக்கப்பட்டு விட்டேன் என்பன போன்ற விமர்சனங்கள் உங்களிடமிருந்து வரக்கூடும் என்ற தயக்கத்தில் சொல்ல மறுத்து விடுவார்கள். எனவே, சிந்தித்துச் செயல்பட வேண்டிய பொறுப்பு உங்களை மட்டுமே சாரும்.

  உங்களுக்கு வேண்டிய சிந்தனையை அடுத்தவர் சிந்தித்து முடிவெடுத்தால், எதிர்காலத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் கூட உங்களை விட்டு தள்ளிப் போய்விடும்.

  எனவே, சிந்திக்க தொடங்குங்கள். நாளை சிந்திப்போமே என எண்ணாமல் இன்றே, இந்தக் கணமே சிந்தியுங்கள்.

  ]]>
  life, college, youth, இளமை, வாழ்க்கை, கல்லூரி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/28/w600X390/THINKING.JPG http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/28/பணம்-தேவையே-அதை-எப்படிச்-சம்பாதிப்பது-2989413.html
  2989409 லைஃப்ஸ்டைல் செய்திகள் எவ்வளவு விலையுயர்ந்த ஸ்மார்ட் போனாக இருந்தாலும் சீக்கிரமே சார்ஜ் தீர்ந்து விடுகிறதா? DIN DIN Tuesday, August 28, 2018 05:43 PM +0530
  வாரந்தோறும் சந்தைகளில் புதிய ஸ்மார்ட்போன்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆன்ட்ராய்ட், ஐஓஎஸ் ஆப்களும் ஆயிரக்கணக்கில் அதிகரித்து கொண்டே செல்கின்றன. ஆனால், இவற்றை எல்லாம் இயக்கும் பேட்டரிகளின் சேமிப்பு சக்தி, இந்த அதிவேக வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் இல்லை. முடிவில், எத்தனை ஆயிரம் கொடுத்து வாங்கிய ஸ்மார்ட் போனாக இருந்தாலும் பேட்டரி சார்ஜ் தீர்ந்து முடங்கித்தான் போய்விடுகிறது.

  மனிதர்களுக்கு மூன்று வேளை உணவைப் போல், ஸ்மார்ட் போன்களின் பேட்டரிகளை ஒருநாளில்  மூன்று தடவைக்கும் மேலாக சார்ஜ் செய்ய வேண்டிய நிலைக்கு பயன்பாட்டாளர்கள் தள்ளப்படுகிறார்கள். பேட்டரி பயன்பாட்டைக் குறைக்க திரையின் வெளிச்சத்தைக் குறைத்தல், இன்டர்நெட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தல் ஆகியவற்றை வழக்கமாக பயன்பாட்டாளர்கள் கடைபிடிக்கின்றனர். இதைக் கட்டுப்படுத்த பல்வேறு ஆப்கள் இருந்தும், எதிர்பார்த்த அளவில் பயன் கிடைப்பதில்லை.

  இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிய செயலியை (ஆப்) கண்டுபிடித்துள்ளனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானியும் இடம்பெற்றுள்ளார். இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷிரசாகர் நாயக் கூறியதாவது:

  'இரவு முழுவதும் 100 சதவீதம் சார்ஜ் செய்துவிட்டு, வெளியே சென்று ஸ்மார்ட்போனை பகலில் பயன்படுத்தினால் பேட்டரி வேகமாக குறைந்துவிடுகிறது. இதற்கு தேவையில்லாத ஆப்கள் இயங்குவதும் ஒரு காரணம். மீண்டும் சார்ஜ் செய்து பயன்படுத்துவதால், ஸ்மார்ட்போன் சூடாகி விடுகிறது. இதனால் மூன்று ஆண்டுகாலம் ஆயுள் உள்ள பேட்டரியை 2 ஆண்டுகளில் மாற்ற வேண்டியதாகிறது.

  இதைத் தடுக்க புதிய செயலி ஒன்றை உருவாக்கி, 200 ஸ்மார்ட்போன்களில் சோதனை செய்து  பார்த்தோம்.  சோதனையின்போது,  அந்த போன்களில் ஏராளமான ஆப்கள் செயல்பாட்டில் வைக்கப்பட்டன. ஆனாலும் இந்த புதிய செயலியின் மூலம் பேட்டரி திறன் 10 முதல் 25 சதவீதம் வரை சேமிப்பில் இருந்தது. இதை வைத்து நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக ஸ்மார்ட் போனை எந்தவித இடையூறும் இல்லாமல் இயக்கலாம். இந்த புதிய செயலியைப் பயன்படுத்துவதன் மூலம் பயன்படுத்தாத செயலிகளின் பக்கத்தின் வெளிச்சம் தானாக குறைந்துவிடும். இந்தச் செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரும்' என்றார்.

  ]]>
  smart phone, cell phone, mobile, charger, சார்ஜர், ஸ்மார்ட் ஃபோன், செல்போன், மொபைல் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/21/w600X390/im10.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/28/எவ்வளவு-விலையுயர்ந்த-ஸ்மார்ட்-போனாக-இருந்தாலும்-சீக்கிரமே-சார்ஜ்-தீர்ந்து-விடுகிறதா-2989409.html
  2989404 லைஃப்ஸ்டைல் செய்திகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துவிட்டீர்களா? DIN DIN Tuesday, August 28, 2018 04:22 PM +0530 வலைதளத்திலிருந்து...
  ஹாலிவுட் படமா அல்லது ஹார்பிக் விளம்பரமா என ஐயுறும் வகையில் அத்தனை சுத்தமாக வைத்திருக்கிறார்கள் புதிய மெட்ரோ ரயில் நிலையத்தை! தரையைப் பார்த்து தலைவாரலாம், வாரிய தலையை சரி பார்க்கலாம்! காணுமிடமெல்லாம் வடநாட்டு முரட்டு செக்யூரிட்டிகள். எங்கு நோக்கினும் அழகழகான இளம் பிஞ்சு மகளிர் சிப்பந்திகள், அமெரிக்கா போவதற்கு கூட இவ்வளவு சோதனைகள் இருக்குமா தெரியவில்லை, ஆனால் எத்தனை படிகள், எத்தனை தடைகள், எத்தனை கேள்விகளை தாண்ட வேண்டியிருக்கிறது, அரும்பாக்கம் போகிறோமா? அல்லது அண்டார்டிகாவுக்கான சாகசப் பயணமா என்கிற சந்தேகம் எழுந்தபடியேயிருந்தது! 

  பத்து படிகளுக்கும் கூட எஸ்கலேட்டர் வசதி. ஒற்றை மாடிக்கே லிஃப்ட் வசதி! டிக்கட் எடுக்க தானியங்கி இயந்திரம், மிச்சக் காசை புத்தம் புது பத்துரூபாய் காயின்களாகவே அள்ளித்தருகிறது. எங்கு பார்த்தாலும் எதையாவது எழுதி எழுதி வைக்கப்பட்டிருக்கும் போர்டுகள்! தமிழ், இங்கிலீஷ் இந்தி என மும்மொழி கொள்கை! ஆனால் இன்னமுமே அதிகப் பயணிகள் பயணிக்க ஆரம்பித்துவிட்டதாய் தெரியவில்லை. நான்கு கிலோமீட்டர் ரயில் பயணத்திற்கு இரண்டுகிலோமீட்டர் நடக்கவும் சுற்றவும் படியேறவும் இறங்கவும் என சிந்துபாத் பயணமாக இருப்பதால் அப்படி இருக்கலாம். கூடவே எக்கச்சக்கமான டிக்கட் விலையும். ஒரு வேளை சென்னை முழுக்க எல்லா பாதைகளும் தயாராகி இணைக்கப்பட்டுவிட்டால் இனிக்குமோ என்னமோ! 

  கவனித்ததில் இந்த ரயில்களில் ஓர் ஏழையைக்கூட பார்க்க முடியவில்லை. அங்கு மட்டுமல்ல ரயில்நிலையம் இருக்கிற ஏரியாவிலும் கூட! மிக நன்றாக சுத்தப்படுத்தியிருக்கிறார்கள்! 
  http://www.athishaonline.com

  ***

  முக நூலிலிருந்து....
  • செல்ஃபியால்
  அழியும்
  அரியவகை உயிரினம்...
  மனிதன்.
  - நடராஜன் சுந்தரபுத்தன்

  • ஒவ்வொரு நாள் 
  தொடங்கும்போதும் 
  "இன்றே இப்படம் கடைசி' என்று 
  எண்ணி நடத்தியும்... 
  ஒழுங்காய் முடிந்ததில்லை 
  ஒருநாள் வாழ்க்கையும்! 
  - நா.வே.அருள்

  • மரணத்தைப் பற்றி
  எனக்குக் கவலையில்லை...
  நான் இருக்கும் வரை
  அது வரப்போவதில்லை...
  அது வரும்போது, 
  நான் இருக்கப் போவதில்லை.
  - மிடறு முருகதாஸ்

  • வளைந்து கொடுப்பது தவறல்ல.... 
  எங்கே ஏன் என்பதைப்
  புரிந்து வளைந்து கொடுங்கள்.
  - ஆண்டாள் ப்ரியன்

  • வனம் அழி.
  பூமியை நெகிழியில் புதை.
  கடும் புனல் கண்டு அழுது புலம்பு.
  ஒவ்வொரு பூதமாய் சிதை.
  ஒவ்வொரு பூதமும்
  உன்னைச் சிதைக்கும்!
  - நேசமிகு ராஜகுமாரன்

  சுட்டுரையிலிருந்து...
  • கல்வி கற்க 
  புத்தகங்களை விட
  "நோட்டுக்களே' 
  அதிகம் தேவைப்படுகின்றன!
  - செங்காந்தள்

  • செருக்கும், செருப்பும்,
  காலுக்கு கீழே இருந்தால்தான்
  மதிப்பு!
  - ஜினோ

  • வாழ்வதற்கான செலவு 
  ரொம்ப கம்மி...
  அடுத்தவன் போல்
  வாழ்வதற்கான செலவுதான் 
  அதிகம்.
  - ஆதிரன்

  • கிணற்றில் தள்ளியவனைத் தெரியாது....
  ஆனால் "நீந்த' கற்றுக் கொண்டேன்...
  வாழ்க்கைக்
  கடலில் தள்ளியவர்களை
  தெரியும்... 
  "சுமை' தூக்கத் தெரிந்து கொண்டேன்...
  வாழ்க்கையை கற்று முடிந்தபாடில்லை. 
  - சவேதி 

  ]]>
  metro, chennai, metro train, மெட்ரோ ரயில், அமெரிக்கா, சென்னை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/28/w600X390/im2.JPG http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/28/மெட்ரோ-ரயிலில்-பயணம்-செய்துவிட்டீர்களா-2989404.html
  2989393 லைஃப்ஸ்டைல் செய்திகள் நேற்று கர்ணன், இன்று சிவன், நாளை? DNS DNS Tuesday, August 28, 2018 03:47 PM +0530  

  கர்நாடக மாநில முதல்வர் குமாரசுவாமி, தன்னை மகாபாரத கர்ணனுடன் ஒப்பிட்டு, துரியோதனாதி (காங்கிரசார்)களிடம் மாட்டி, இருதலைக் கொள்ளி எறும்பாக அவதிப்படுவதாக புலம்பினார். தற்போதோ ஒருபடி மேலே போய், தன்னை விஷம் தொண்டையில் நிற்கும் நீலகண்டனாக உருவகப்படுத்திக் கொண்டு, கண்ணீரும் சிந்தினார். காங்கிரசார் கொடுக்கும் தொல்லையை, அவர் விஷமாக கருதுவதாகக் கொள்ளலாம்.

  சினிமா தயாரிப்பாளராக இருந்த குமாரசுவாமி, தற்போது தானே  கதை வசனம் எழுதி, சிறந்த நடிகராகவும் ஆகிவிட்டார் என்கின்றனர் மக்கள்.

  - ராஜிராதா

  ]]>
  karnataka, முதல்வர், CM, Kumaraswamy, குமாரசுவாமி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/28/w600X390/download.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/28/நேற்று-கர்ணன்-இன்று-சிவன்-நாளை-2989393.html
  2989357 லைஃப்ஸ்டைல் செய்திகள் சிங்கப்பூர் - மதுரை இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தும் புதிய சிக்கன சேவை! RKV DIN Tuesday, August 28, 2018 03:01 PM +0530  

  இதோ சிங்கப்பூருக்கும் மதுரைக்கும் இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தும் புதிய சீர்மிகு சேவை தமிழர்களையும் தாய் தமிழகத்தையும் இணைக்கும் மற்றொரு உறவுப்பாலம்!

  நாட்டின் முன்னணி விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தும் புதிய சேவை!

  மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கும் இடையே தினசரி நிறுத்தமில்லா மலிவுக் கட்டண விமானப் போக்குவரத்து ஆகஸ்ட் 16 முதல் அறிமுகம்!

  இனியென்ன கவலை? நினைத்த மாத்திரத்தில்... உங்கள் மனம் கவர்ந்த பெருமைமிகு ஏர் இந்தியா எக்ஸ்பிரசில் சிங்கப்பூருக்கும் மதுரைக்கும் இடையே குதூகலமாக சென்று வரலாம். ஹனிமூன் ட்ரிப்பா, பிஸினஸ் டூரா எதுவானாலும் உங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதே இந்த விமான சேவையின் பிரதான நோக்கமாகும்.

  இந்தியாவின் முதல் குறைந்த கட்டண சர்வதேச விமான சேவையைத் தொடங்கிய நிறுவனம் ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ். ஏர்-இந்தியா எக்ஸ்பிரசில் பயணம் செய்வதே மிகப் பெருமையான விஷயம்.

  நாடு முழுவதும் 30 நகரங்களுக்கு வாரந்தோறும் 583 விமான சேவைகளை ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் இயக்குகிறது. கோழிக்கோடு, கொச்சி, திருவனந்தபுரம், மங்களூரு, கோயம்புத்தூர், சென்னை, திருச்சி, விஜயவாடா, மும்பை, புணே, அமிர்தசரஸ், லக்னௌ, ஜெய்ப்பூர், வாரணசி, புதுதில்லி, சண்டீகர், மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன.

  குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்குவதில் நாட்டின் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ், இப்போது அறிமுகப்படுத்தியுள்ள சேவை மூலம் இனி மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கும் பயணிகள் நேரடியாக குறைந்த நேரத்தில் சென்று வரலாம். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் தினசரி... இடையில் எங்குமே நிறுத்தமற்ற விமான சேவை இது என்பதே!. உங்கள் பயணத்தை நீங்கள் முன்கூட்டியே திட்டமிட்டால் நேரத்தையும் பணத்தையும் மிச்சப் படுத்தலாம்.

  உங்களுக்கு கூடுதல் பொருட்கள் தேவை இருந்தால் அதை நீங்கள் பயணச்சீட்டை வாங்கும்போதே ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது ‘மை புக்கிங்’ மூலம் தேவையான மாறுதல்களைச் செய்து உங்களுக்கான இலவச அளவு பொருட்களுடன் கூடுதல் பொருட்களையும் கொண்டு செல்லலாம்.

  5 கிலோ மற்றும் 10 கிலோ அளவில் இந்தக் கூடுதல் பொருட்களின் தேவையைப் பற்றி பதிவு செய்து கொள்ளலாம். இதன்மூலம் விமான நிலையத்தில் தாமதமின்றி செல்ல ஏதுவாகிறது. கூடுதல் பொருட்கள் கொண்டு செல்வதற்கான அனுமதியை எங்களது நகர அலுவலகங்களிலோ அல்லது 24 மணிநேர தொடர்பு மையத்திலோ பெறலாம். 
    
  ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் இருக்கை தேர்வு வசதியின் மூலமாக உங்களின் விருப்பமான இருக்கையை தேர்வு செய்து கொள்ளலாம்.

  இயன்றவரை உங்களது இருக்கை தேர்வை விரைவில் தேர்வு செய்துவிடுவது நல்லது. விமானம் கிளம்புவதற்கு முன்பு நீங்கள் விரும்பும் இருக்கை கிடைக்காமல் போவதை இதன்மூலம் தவிர்த்து விடலாம்.

  கால்களை நீட்டிக் கொள்ளும் வசதி, ஜன்னலோர இருக்கை போன்ற விருப்பத்தேர்வை முன்கூட்டியே பதிவு செய்வதன் மூலம் எளிதில் பெற முடியும். விமானம் கிளம்புவதற்கு 12 நேரத்துக்கு முன்பாக இருக்கையை தேர்வு செய்யலாம். இதற்காக எங்களது அலுவலகங்களையோ அல்லது 24 மணிநேர தொடர்பு சேவை மையத்தையோ அணுகலாம்.

  விமானத்தில் உங்களுக்கு விருப்பமான சுவையான காலை, மாலை, இரவு சைவ, அசைவ உணவு வகைகளை மெனுவில் இருந்து தேர்வு செய்யலாம். இதையும் 24 மணிநேரத்துக்கு முன்பாக பதிவு செய்யலாம்.

  இத்தனை தரமான சேவையை மிகக் குறைந்த கட்டணத்தில் ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் வழங்குகிறது. இதை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி திருப்தியாகவும் பாதுகாப்பாகவும் பயணம் செய்யலாம்.

  ]]>
  Air India express, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், சிங்கப்பூர் - மதுரை, சிக்கன விமான சேவை, SINGAPORE TO CHENNAI, INDIA'S MOST ECONOMICAL AIRLINE http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/28/w600X390/air_india_add.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/28/சிங்கப்பூர்---மதுரை-இடையே-ஏர்-இந்தியா-எக்ஸ்பிரஸ்-அறிமுகப்படுத்தும்-புதிய-சிக்கன-சேவை-2989357.html
  2989379 லைஃப்ஸ்டைல் செய்திகள் உங்களுக்கு புத்தகம் படிக்க ஆசையா? இதோ 5 எளிய வழிமுறைகள்!  - வெ.ந.கிரிதரன் DIN Tuesday, August 28, 2018 01:33 PM +0530 நம்மில் பலருக்கு புத்தகம் படிக்கும் ஆர்வம் இருக்கிறது. நிறைய படிக்கிறவர்களும் இருக்கிறார்கள். ஆனால் வாசித்த புத்தகங்களின் முக்கியமான பகுதிகள், புத்தகத்தின் சாராம்சம் ஆகியவற்றைப் பற்றிக் கேட்டுப் பாருங்களேன், மறந்திருப்பார்கள். இதற்குக் காரணம், முறையாகப் புத்ககம் படிப்பதற்கான யுக்திகளும், நுணுக்கங்களும் அவர்களுக்குத் தெரியாமல் இருப்பதே.

  இவ்வாறின்றி, புத்தகம் படிப்பதற்கான ஐந்து எளிய வழிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் நாம் பயனுள்ள புத்தகங்களை படிக்கவும், படித்தவற்றை மறந்து போகாதபடி நினைவில் வைத்துக் கொள்ளவும் முடியும்.

  நோக்கம் என்ன?

  நூல்களை நாம் வாசித்தலுக்கு தேர்ந்தெடுக்கும் முன்பு, எந்த மாதிரியான புத்தகங்களைத் தெரிவு செய்ய வேண்டும்; அவை நமக்கு எந்தவிதத்தில் பயனுள்ளவையாக இருக்கும் ஆகிய கேள்விகள் நம் மனதில் எழ வேண்டும்.

  உதாரணமாக நீங்கள் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலை தேடும் வாழ்வின் முக்கியமான கட்டத்திலோ அல்லது தொழில் தொடங்கும் எண்ணத்திலோ இருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்போது நீங்கள் புனைகதைகளைப் படித்துக் கொண்டிருக்க முடியாது. வாழ்வில் நாம் எந்த தருணத்தில் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை பொறுத்துதான் வாசித்தலுக்கான புத்தகங்களைத் தெரிவு செய்ய வேண்டும். சுருங்கச் சொன்னால், நாம் வாசிக்கும் புத்தகங்கள் நம்முன் உள்ள சவால்களை தைரியமாக எதிர்கொண்டு அதில் வெற்றி பெற உதவக் கூடியவையாக இருக்க வேண்டும்.

  ஆசிரியராக எண்ணுங்கள்!

  வாசித்தலின் மூலம் நாம் பெற்ற அறிவை கொண்டு நாம் எதையாவது செயல்படுத்தும் போதுதான் அது பயனுள்ளதாக அமைகிறது, நீங்கள் படித்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது அந்த விஷயங்கள் உங்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துவிடுகிறது, அறிவும் பன்மடங்கு பெருகுகிறது. எனவே உங்களை நீங்களே ஓர் ஆசிரியராக எண்ணிக் கொண்டு நீங்கள் வாசித்தவற்றை மற்றவர்களுடன் தயக்கமின்றி பகிர்ந்து கொள்ளுங்கள். அப்போது நீங்கள் படித்தது உங்களுக்கு மேலும் தெளிவாக விளங்கும்; மறக்கவே மறக்காது!

  குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்

  ஒரு புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள அனைத்து முக்கிய தகவல்களையும் நினைவில் வைத்து கொள்வதற்கு, அவற்றை சிறு சிறு குறிப்பு எடுத்துக் கொள்வது, முக்கியமான பக்கங்களை மடித்து வைத்து மறுமுறை படிப்பது, முக்கியமான பதங்கள், சொற்றொடர்களை அடிக்கோடிட்டு கொள்வது போன்றவை சிறந்த யுக்திகளாகும்.

  நீங்கள் செல்போனிலே புத்தகங்களை படிக்கும் நவநாகரிக இளைஞர் என்றால், பிரத்யேக செயலி மூலம், டிஜிட்டல் முறையில் நீங்கள் படிக்கும் புத்தகங்களின் சாராம்சம்களையும், அவைதொடர்பான பட விளக்கங்களையும் அவ்வப்போது சேகரித்து வைத்துக் கொள்ள தனி ஃபோல்டரை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

  காட்சிப்படுத்துங்கள்

  நாம் படிப்பவற்றை நினைவில் வைத்துக் கொள்ள, அவற்றை மனதில் காட்சிப்படுத்துவது மற்றொரு சிறந்த வழிமுறையாகும். உதாரணத்துக்கு நீங்கள் ஒரு அறிவியல் பாடத்தைப் படிப்பதாக கருதுவோம். அதில் விவரிக்கப்பட்டுள்ள விதிகளை வெறுமனே மனப்பாடம் செய்வதால் நாளடைவில் அவை மறந்து போகும். மாறாக, அந்த அறிவியல் விதிகளை நடைமுறை உதாரணங்களுடன் தொடர்புப்படுத்தி காட்சிகளாக மனக்கண்ணில் உங்களால் காண முடிந்தால், அவை உங்கள் மனதில் ஆழமாக பதிந்துவிடும்.

  இதேபோல், நாம் படித்துணர்ந்த ஒரு விஷயத்தை நடைமுறை வாழ்க்கையில் நாம் எப்படி செயல்படுத்துவோமென கற்பனை செய்வதும் சுவாரஸ்யமான அனுபவமாகும்.

  உடனே செயல்படுத்துங்கள்

  ஒருவர் தன் தனித்திறன்களை வளர்த்து கொண்டு, பணத்தை ஈட்டுவதுடன், மனித உறவுகளையும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். அதுதான் நல்ல வளர்ச்சி என்று மதிப்பிடப்படுகிறது. இந்த வளர்ச்சியானது எல்லாருக்கும் அவ்வளவு எளிதில் வந்துவிடாது.

  புத்தகங்களின் மூலம் பெற்ற அறிவை நாம் நடைமுறைப்படுத்த தொடங்கும்போது தான் வாழ்வில் நம் வளர்ச்சிக்கான வித்து விதைக்கப்படுகிறது.

  மாறாக, வெறும் புத்தக அறிவை மட்டும் நிரம்ப பெற்றுக் கொண்டு நீங்கள் நான்கு சுவர்களுக்குள் முடங்கிக் கிடந்தால் அதனால் உங்களுக்கும், இந்த சமூகத்திற்கும் எவ்வித பயனும் இல்லை. அதாவது, 'ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது' என்பதை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு புத்தகத்தை படித்து முடித்த பின்பும் குறைந்தபட்சம் அதில் சொல்லப்பட்ட ஏதாவதொரு விஷயத்தை செயல்படுத்துங்கள். வாழ்வில் வெற்றியாளராக வலம் வாருங்கள்.

  ]]>
  book, book reading, reading habit, writing, புத்தகம், புத்தக அறிவு, படிப்பு, வாசிப்பு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/28/w600X390/reading.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/28/5-tips-enhance-your-reading-habits-2989379.html
  2989369 லைஃப்ஸ்டைல் செய்திகள் உங்கள் ஆங்கில மொழி அறிவை மேம்படுத்திக்கொள்ள ஆசையா? DIN DIN Tuesday, August 28, 2018 12:28 PM +0530 பணி மற்றும் தொழிலை மேற்கொள்ள தற்போது ஆங்கிலம் மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகிறது. ஓரளவுக்கு ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஆன்லைன் மூலம் டெஸ்ட் மூலம் தங்களுடைய ஆங்கிலத் திறமையை வளர்த்துக் கொள்ளலாம். அடிப்படை ஆங்கில அறிவை கூட இதன் மூலம் வளர்த்துக் கொள்ளலாம். ஆங்கிலத் திறமையை வளர்க்க உதவும் இணையதளங்கள்:


  http://www.stgeorges.co.uk/online-english/online-english-test
  https://www.cambridgeenglish.org/in/test-your-english/
  https://www.oxfordonlineenglish.com/english-level-test/grammar?nabe=5526661222367232:0&utm_referrer=https%3A%2F%
  https://www.easyenglish.com/
  https://www.examenglish.com/leveltest/grammar_level_test.htm
  https://learnenglish.britishcouncil.org/en/content
  http://www.englishtag.com/tests/level_test.asp
  http://www.freeonlinetest.in/questions-and-answers/English
  - எம்.அருண்குமார்

  ]]>
  english, language, enhancement, online, ஆங்கிலம், ஆன்லைன், மொழி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/28/w600X390/53b4a8e5acdb28aef5c5b8b245679aba.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/28/உங்கள்-ஆங்கில-மொழி-அறிவை-மேம்படுத்திக்கொள்ள-ஆசையா-2989369.html
  2987440 லைஃப்ஸ்டைல் செய்திகள் கம்பளித் துணிகள் அதிக நாட்கள் உழைக்க இதோ ஒரு வழி! - ஆர். மீனாட்சி DIN Saturday, August 25, 2018 01:14 PM +0530  

  மழைக்கு இதமாக ஒரு சூடான தேநீர் பகலிலும், இரவில் உறங்க சுகமான ஒரு கம்பளியும் இருந்தால் குளிரிலிருந்து எளிதாக தப்பிவிடலாம். மழை மற்றும் குளிர் காலங்களில் கம்பளி போர்வையை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும்.

  மழைக் காலத்த்தில் வெளியே உலர்த்த முடியாது. மேலும் காற்றில் இருக்கும் ஈரத்தன்மை கம்பளி துணியில் ஒருவித வாடையை ஏற்படுத்திவிடும். வீட்டினுள் உலர்த்தினால் அந்த ஈரத்தன்மை கம்பளி போர்வையில் பூஞ்சை மற்றும் பாக்டீரியாவிற்கு வரவேற்பு அளித்துவிடும். வாஷிங் மிஷினில் ட்ரையரைப் பயன்படுத்தி உலர்த்தலாம். அல்லது சற்று மழை விட்டதும் வெளியில் காற்றாட உலர்த்த வேண்டும். 

  கம்பளி துணியில் தூசி அதிகமிருந்தால் அது ஆஸ்துமா மற்றும் அலர்ஜியை ஏற்படுத்திவிடலாம். எனவே சுத்தமாக இருத்தல் அவசியம். முதலில் போர்வையை உதறி தூசிகளை வெளியேற்ற வேண்டும். வேக்வம் கிளீனர் பயன்படுத்தியும் தூசிகளை வெளியேற்றலாம்.

  கம்பளி துணிகளை துவைக்க அல்லது சுத்தம் செய்வதற்கு முன்னர், உற்பத்தியாளர்கள் கூறி உள்ள வழிமுறைகளை படித்து பார்த்து விட்டு, அதல் கூறியிருக்கும்படி பின்பற்றுவது நல்லது. 

  கம்பளி போர்வையை சுத்தம் செய்வதற்கு முன் அதில் ஏதாவது கறைகள் இருந்தால் அதை அகற்றிவிட்டு துவைப்பது நல்லது. 

  கம்பளி துணிகளை மற்ற துணிகளுடன் சேர்த்து துவைக்கக் கூடாது. அப்படிச் செய்தால் அதன் தன்மை மாறி, நிறமும் மங்கி விடும். கம்பளி ஆடைகள், கம்பளி துப்பாட்டாக்கள் மற்றும் போர்வைகளை தனியாகத் தான் துவைக்க வேண்டும்.கம்பளித் துணிகளை வெது வெதுப்பான நீரில்தான்  அலச வேண்டும். முறுக்கிப் பிழியக் கூடாது. லேசாகப் பிழிந்து அப்படியே நீர்வடியும்படி கயிற்றில் போட்டுவிட வேண்டும். வெயிலில் உலர்த்தக் கூடாது. கம்பளித் துணிகள் அதிக நாட்கள் உழைக்க இதுதான் வழி.

  கம்பளித் துணியில் பூச்சி அரிக்காமல் இருக்க...

  கம்பளித் துணிகளைத் துவைக்கும்போது தண்ணீரில் சிறிது நவச்சாரம்  கலந்து கொண்டால் துணியின் அழுக்கு நீங்கிப் புதிதாகத் தெரியும். அதே சமயம் பூச்சியும் அரிக்காது.

  கம்பளித் துணிகளை வைக்கும் பெட்டியில் படிகாரத்தைத் தூள் செய்து மெல்லிய துணியில் முடிச்சாக  முடிந்து போட்டு  வைத்தால் பூச்சி அரிக்காது.

  ]]>
  wool, kambali, cloth, கம்பளி போர்வை, கம்பளி துணி பராமரிப்பு, டிப்ஸ் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/25/w600X390/winter-clothes.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/25/கம்பளித்-துணிகள்-அதிக-நாட்கள்-உழைக்க-இதோ-ஒரு-வழி-2987440.html
  2987420 லைஃப்ஸ்டைல் செய்திகள் 'அதுவரை நான் சாப்பிட மாட்டேன்' என்று உண்ணாவிரதம் இருந்தாள் அந்தப் பெண்! ஏன்? எதற்கு? - கே.ராமச்சந்திரன்  DIN Saturday, August 25, 2018 11:28 AM +0530
  மல்லம்மா

  கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் தானாப்பூர் என்கிற கிராமத்தில் பத்தாம் வகுப்பு படித்து வந்த இந்த பெண்ணின் வீட்டில் கழிப்பறை இல்லை. அம்மா, 'பணம் இல்லை' என்று மறுத்து விடுகிறார். 'நீ கழிப்பறை கட்டித் தரும் வரை நான் சாப்பிட மாட்டேன்' என்று உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்து விட்டாள் மல்லம்மா. 

  இந்த செய்தி கிராம பஞ்சாயத்து தலைவரை எட்டுகிறது. அவர் மல்லம்மாவுக்கு உதவ முன் வருகிறார். இந்த செய்தி பிரதமர் மோடிக்கும் சென்றது. அவர் அந்த பெண்ணையும், பஞ்சாயத்து தலைவரையும் பாராட்டி பேசினார். மல்லம்மா வீட்டில் கழிப்பறை வசதி வந்து விட்டது! அவருடைய உண்ணாவிரதமும் முடிவடைந்தது!

  சுக்ரி

  சுக்ரி என்ற பெண்மணி கர்நாடகத்தின் வட கன்னட மாவட்டத்தில் நாட்டுப் பாடல்கள் பாடுவதில் பிரபலமானவர். பத்மஸ்ரீ - விருது பெற்றவர். இவருடைய நினைவில் 5000 நாட்டுப் பாடல்கள் இப்போதும் இருக்கின்றனவாம். இவரது பாடல்கள் கொண்ட ஒரு புத்தகத்தை கர்நாடக ஜனவாத அகாதெமி வெளியிட்டிருக்கிறது. கார்வார் வானொலி நிலையம் இவரது இனிமையான குரலில் பாடிய பாடல்களைப் பதிவு செய்து வைத்திருக்கிறது.

  இவரைப் பற்றிய இன்னொரு தகவல் தனது கணவர் குடிப்பழக்கத்தால் இறந்து விடவே பல போராட்டங்களை நடத்தி, கிராமத்தில் சாராய கடைகளை மூட வைத்தார். இந்த 80 வயதிலும் வயல்களில் வேலை செய்கிறார். 

  ]]>
  mallamma, sukri, toilet, liquor, மல்லம்மா, சுக்ரி, கர்நாடகம், கழிப்பறை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/21/w600X390/mn17.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/25/அதுவரை-நான்-சாப்பிட-மாட்டேன்-என்று-உண்ணாவிரதம்-இருந்தாள்-அந்தப்-பெண்-ஏன்-எதற்கு-2987420.html
  2985430 லைஃப்ஸ்டைல் செய்திகள் புதுமையான சுவையான பாயசம் இது! எச். சீதாலட்சுமி DIN Wednesday, August 22, 2018 05:19 PM +0530  

  தோசை, ஆப்பம் செய்யும்போது கல்லில் மாவு ஒட்டிக் கொண்டு எடுக்க முடியாமல் இருந்தால் கோலியளவு புளியை ஒரு வெள்ளைத் துணியில் மூட்டையாக கட்டி, எண்ணெய்யில் தொட்டு தோசைக் கல்லில் தேய்த்தபிறகு மாவை வார்த்தால் தோசை எடுப்பதற்கு எளிதாக வரும்.

  இரவில் சப்பாத்தியோ, பூரியோ மீதமாகிப் போனால் அவற்றுடன் ஒரு உருளைக்கிழங்கினை தோலுடன் வைத்து மூடி விட்டால் மிருதுவாக இருக்கும். புதினா, தக்காளி இரண்டையும் நன்கு அரைத்து பஜ்ஜி மாவில் கலந்து பஜ்ஜி சுட்டால் மணமும் சுவையும் சூப்பராக இருக்கும்.

  இரண்டு வாழைப் பழத்துடன் சிறிது சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஒன்றரை டம்ளர் பால் கலந்து கொதிக்க வைத்து ஏதாவது ஒரு எசன்ஸ் ஊற்றினால் புதுமையான சுவையான பாயசம் ரெடி.

  தேன் குழல் மாவுடன் வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்த்துப் பிசைந்து செய்தால் தேன்குழல் கரகரப்புடன் இருக்கும்.

  காலிஃப்ளவரை சமைக்கும்போது சிறிது பால் சேர்க்க வெள்ளை நிறம் மாறாது. பச்சை வாடை தெரியாது.

  பரோட்டா அல்லது நான் செய்யும் மாவு பிசையும்போது தண்ணீருக்குப் பதிலாக குடிக்கிற சோடாவை ஊற்றிப் பிசைந்து பாருங்கள். பரோட்டா மிருதுவாக பஞ்சுபோன்று மெத்து மெத்தென்று வரும்.

  தினமும் காலையில் எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால் நமது  உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறிவிடும்.

  ]]>
  tips, cooking, dosai, தோசை, ஆப்பம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/22/w600X390/payasam.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/22/புதுமையான-சுவையான-பாயசம்-இது-2985430.html
  2984732 லைஃப்ஸ்டைல் செய்திகள் இது ஒரு சுவாரஸ்யமான சிங்கப்பூர் சினிமா கதை! DIN DIN Tuesday, August 21, 2018 04:44 PM +0530 என் பெயர் லிம்ஜைலே. என் அத்தை டெர்ரி. அவளை நான் உயிருக்கு உயிராக நேசிக்கிறேன்...

  ஓர் ஆண்டுக்கு முன்னால் டெர்ரியை அம்மாதான் வேலைக்கு அமர்த்தினாள். நாங்கள் பௌத்தர்கள். பணியின் நிமித்தம் வேலைக்கு வந்த என் அன்புக்குரிய அந்தப் பெண் கிறிஸ்தவ பெண்மணி. பக்தி விசுவாசம் உள்ள பெண். அவள் வீட்டு வேலைக்குச் சேர்ந்ததுமே என் அம்மா லெங் அவளிடமிருந்து பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொண்டாள்.

   டெர்ரிக்கு வயது இருபத்தைந்து இருக்கும். மிகவும் பணிவுள்ள வேலைக்காரி.

   எனக்கு வயது எட்டு. பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தேன்.

  அப்பா ஒரு கம்பெனியில் வியாபார பிரதிநிதியாக வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். அம்மாவிற்கு, ஒரு கம்பெனியில் டைப்பிஸ்ட்டாக வேலை. எங்களுக்குச் சொந்தமாக  ஃப்ளாட் இருந்தது. டெர்ரி வேலையில் சேரும்போது அம்மா கர்ப்பிணி. தனக்குப் பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று அம்மா கடவுளை வேண்டிக் கொண்டாள்...

  டெர்ரி எங்கள் வீட்டில் ஒரு வருடம்தான் வேலை பார்த்தாள். ஆனால் அந்தக் குறுகிய காலத்தில் என் மேல் அபரிமிதமான அன்பைப் பொழிந்தாள். என் அம்மா லெங் எப்படி என்னை நேசித்தாளோ அப்படி என்னை டெர்ரி நேசித்தாள். அவளை நான் அத்தை என்று பேரன்புடன் அழைத்தேன்.

   வேலைக்குச் சேர்ந்த புதிதில் அவளுக்கும் எனக்கும் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் மெல்ல மெல்லத் தன் நன்னடத்தையால் டெர்ரி என் மனதில் இடம் பிடித்தாள்...

  சைக்கிளை முரட்டுத்தனமாக ஓட்டி நான் ஆக்ஸிடெண்டுக்கு ஆளானேன். வலது கை எலும்பு முறிந்துவிட்டது. அப்போது எனக்கு எல்லா வேலைகளையும் டெர்ரிதான் செய்தாள். என்னை குளிப்பாட்டி விட்டாள். எனக்கு வெட்கமாகப் போய்விட்டது. இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது என்று என்னை சமாதானப்படுத்தினாள். எனக்குச் சோறு ஊட்டி விட்டாள்.

  அப்பாவுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. கல்யாணம் ஆன புதிதில் அம்மா கண்டித்ததால் சிகரெட் பிடிப்பதைத் தற்காலிகமாக நிறுத்தினார். ஆனால் ஆண்டுகள் பல சென்றபின்

  அம்மாவுக்குத் தெரியாமல் ரகசியமாகப் புகைபிடிக்க ஆரம்பித்தார். நான் சின்னப் பையனாக இருந்தாலும் எனக்கும் சிகரெட் பிடிக்கும் ஆசை ஏற்பட்டது.

  அம்மாவின் மேக்கப் பெட்டியைத் திறந்து அத்தை டெர்ரி லிப்ஸ்டிக் எடுத்து அம்மாவுக்குத் தெரியாமல் உதட்டில்  பூசிக் கொள்வது உண்டு.

  நான் டாய்லட் அறைக்குச் சென்று யாருக்கும் தெரியாமல்  சிகரெட் குடிக்கப் பழகினேன்.

  ஒருநாள் அம்மா பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டாள்...

  எனக்குத் தெரியமால் என் மேக்-அப் பாக்ûஸத் திறந்து பார்க்கிறாய்! இல்லையா? என்று டெர்ரியிடம் கேட்டாள்.

  'சாரி மேடம்' என்றாள் டெர்ரி.

  'புகை பிடிக்கும் பழக்கம் வேறு உனக்கு

  இருக்கிறது'

  'சத்தியமாக இல்லை மேடம்! நான் புகை பிடிப்பது இல்லை'

  'டாய்லட் அறையில் ஒரு காகிதத்தில் நான்கைந்து சிகரெட்டுகள் சுருட்டி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன்'.

  என் அப்பா அந்தச் சமயம் பார்த்து அங்கு வந்தார். 'டாய்லட்  ரூமில் இருந்தது நான் புகைக்கும் சிகரெட்டுகள்''  என்றார் அப்பா. அம்மா அப்பாவைத் திட்டத் தொடங்கினாள்.

  நான் லாட்டரிச் சீட்டில் ஆர்வம் உள்ளவன். லாட்டரி பற்றி வரும் செய்திகளைக் கத்தரித்து ஒரு நோட்டுப் புத்தகத்தில் ஒட்டி வைத்துக் கொள்வேன். என் தாத்தா சமாதிக்குச் சென்றால் எனக்குப் பரிசுச் சீட்டில் - பரிசு விழவேண்டும் என்று தாத்தாவை வேண்டிக்கொள்வேன்.

  டெர்ரிக்கு சிகை அலங்காரக்கலை நன்றாகத் தெரியும். ஓய்வு கிடைக்கும் போது ப்யூட்டி பார்லர்களுக்குச் சென்று முடிவெட்டி சம்பாதிப்பாள்.  கிடைத்த பணத்தில் எனக்கும் பரிசு பொருள்கள் வாங்கி வருவாள். தனது குடும்பத்தாருடன் சில சமயம் டெலிபோனில் பேசுவது உண்டு டெர்ரி.

  அன்று நான் வகுப்புத் தோழனிடம்  என் அத்தை டெர்ரியைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொண்டு இருந்தேன்.

  'உன் அம்மாவிடம் கை நீட்டிக் காசு வாங்கிக் கொள்கிறாள் இல்லையா டெர்ரி. அதனால்தான் உன் மீது பாசத்தைப் பொழிவதுபோல் நடிக்கிறாள். உண்மையில் உன் மீது அவளுக்கு அன்பு இல்லை' என்று என் தோழன் சொன்னதும் அவன் மீது பாய்ந்து காட்டுத்தனமாகத்

  தாக்கினேன். அவன் மண்டை சுவரில் மோதியதில் ரத்தம் கொட்டத் தொடங்கியது.

  பள்ளி நிர்வாகம் கொதித்தது. என் அம்மாவை அழைத்து வரச் சொன்னார்கள். நான் அத்தை டெர்ரியை அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியையைச் சந்தித்தேன்.

  லிம் ஜெலே பொல்லாத போக்கிரி. சக மாணவனை ரத்தம் வரும்படி அடித்தான். அவன் பள்ளியைவிட்டு விலக்கி வைக்கப்படுகிறான்'' என்றார் அவர்.

  மிஸ். தயவு செய்து லிம் ஜெலேயை பள்ளியைவிட்டு விலக்கி வைக்கவேண்டாம். மறுபடியும் இதுபோல அசம்பாவிதம் நடக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன்.'' என்று டெர்ரி எனக்காகக் கண்ணீர் விட்டாள்.

  மறுநாள் பள்ளி துவங்கு முன் கடவுள் வணக்கம் முடிந்ததும் சக மாணவர்கள் முன்னால் நான் மேடைக்கு அழைக்கப்பட்டேன்.

  ட்ரில் மாஸ்டர் என்னைக் கையை நீட்டச் சொன்னார். சுளீர் சுளீர் என்று பத்துப் பிரம்படிகள். அதனால் ஏற்பட்ட வலியை விட

  மொத்த பள்ளி மாணவர்களும் என்னைப் பார்த்துக் கொண்டு இருந்ததால் ஏற்பட்ட அவமான உணர்ச்சிதான் என்னைக் கொன்று தின்றது.

  டெர்ரி, ஹாலின் ஓரத்தில் இருந்து  இந்தப் பிரம்படி வைபவத்தைப் பார்த்தாள். கண்களில் கண்ணீர் வெள்ளம். அன்று மாலை நான் வீடு திரும்பியதும் என் அன்பு அத்தை டெர்ரி என் கைகளுக்கு மருந்து தடவினாள்...

  பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அம்மா லெங், பாஸ்போர்ட்டை டெர்ரியிடம் திருப்பிக் கொடுத்தாள். அப்பாவுக்கு வேலை போய் இருந்த நேரம், தன்னை வேலையைவிட்டு நிற்கச் சொல்கிறார்கள் என்பதை என் அன்பு அத்தை டெர்ரி புரிந்து கொண்டாள். அவள் விமான நிலையம் செல்ல நாள் குறிக்கப்பட்டது.

   நான் லாட்டரி டிக்கெட் வாங்க ஓடினேன். பரிசு கிடைக்கவில்லை. பெரிய பரிசுத் தொகை கிடைத்து இருந்தால் அத்தையை வீட்டோடு இருக்கச் செய்து இருப்பேன். அன்று எல்லோரும் விமான நிலையத்திற்கு  காரில் கிளம்பினோம். அத்தை டெர்ரி காரைவிட்டு இறங்குமுன் அவள் முடிக் கற்றையில் இருந்து சிறு பகுதியைக் கத்தரித்து வைத்துக் கொண்டேன். அம்மா என்னைத் திட்டினாள். அத்தை என் அன்பைக் கண்டு நெகிழ்ந்தாள். விமானம் டெர்ரியை ஏற்றிக் கொண்டு பறந்தது.

   கர்ப்பிணியாக இருந்த என் தாயார்  ஓர் அழகான பெண் குழந்தையைப் பெற்றாள். தங்கச்சிப் பாப்பா.

  ]]>
  singapore, film, movie, சிங்கப்பூர், சினிமா கதை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/5/10/13/w600X390/eEH7aBK74V93gxWftLL64L69Xu6.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/21/இது-ஒரு-சுவாரஸ்யமான-சிங்கப்பூர்-சினிமா-கதை-2984732.html
  2984688 லைஃப்ஸ்டைல் செய்திகள் இந்த மகத்தான எழுத்தாளரின் 107-வது பிறந்த தினத்தை கூகுள் டூடுல் நினைவு கூர்ந்து சிறப்பிக்கிறது! உமா DIN Tuesday, August 21, 2018 11:12 AM +0530  

  உருது இலக்கிய ஆளுமை இஸ்லாம் பெண் எழுத்தாளரான இஸ்மத் சுக்தாய் இந்திய பாகிஸ்தான் பிரிவினை காலகட்டத்தில் தீவிரமாக இயங்கி வந்தவர். உத்திரப்பிரதேசத்தில் உள்ள பதாயுன் எனும் ஊரில் 1915-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி பிறந்த இஸ்மத் சுக்தாயின் 107-வது பிறந்த நாளை சிறப்பிக்கிறது கூகுள் டூடுல். அவரது காலகட்டத்தில் இயங்கிய எழுத்த்தாளரான சதத் ஹஸன் மண்டோவிற்கு சற்றும் குறைந்தவரல்ல சுக்தாய். அக்காலகட்டத்தில் நிலவி வந்த சமூக கலாச்சார மாற்றங்களையும் தமது எழுத்தின் மூலம் பதிவு செய்தவர்.

  சிறந்த இலக்கியப் பணிக்காக இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் (1976), தன்ஹாய் கா ஜஹர் என்ற நாடகத்திற்கு காலிஃப் விருதும் (1977), ஆந்திரப் பிரதேச உருது அகாதமியின் மக்தூம் இலக்கிய விருதும் (1979) இஸ்மத் சுக்தாய் பெற்றுள்ளார். 

  1942-ல் வெளிவந்த ‘லீஹாப்” என்ற சிறுகதை இஸ்மத் சுகாயை கடும் விமரிசனத்துக்குள்ளாகியது. காரணம் அந்தக் கதை தான் முதன்முதலில் தன் பாலின விருப்பம் கொண்ட பெண்களைப் பற்றி துணிவாகப் பேசியது. இந்தக் கதையை மையமாக வைத்தே 1996-ம் ஆண்டு தீபா மேதா ஃபயர் என்ற திரைப்படத்தை இயக்கினார். அத்திரைப்படத்தில் ஷபானா ஆஸ்மி, நந்திதா தாஸ் நடித்துள்ளனர். அந்தக் காலகட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் மையக் கதைகளை தீவிரத்தன்மையுடன் படைத்தவர் இஸ்மத் சுக்தாய்.   அவரது புகழ்ப்பெற்ற சிறுகதை  தொகுப்புகள் ஏக்பாத் மற்றும் தோ ஹாத் ஆகியவை.

  13 வயதில் நடக்க இருந்த திருமணத்தை மறுத்து கல்வியின் கரத்தை இறுகப் பிடித்த இஸ்மத் பின்னர் ஹாகித் லத்தீப் எனும் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனரை காதலித்து மணந்து கொண்டார். தொடக்கத்தில் ஆசிரியையாக பணிபுரிந்த இஸ்மத் சுக்தாய், எழுத்தின் நிமித்தம் வேலையை விடுத்து முழு நேர எழுத்தாளராக மாறினார். எண்ணற்ற கதைகளையும், நாடகங்களையும் எழுதி உருது இலக்கிய உலகில் மிகச் சிறந்த ஆளுமையாகத் திகழ்ந்தார்.

  அக்டோபர் 24, 1991-ம் ஆண்டு, தமது 76-வது வயதில் இஸ்மத் சுக்தாய் மும்பையில் காலமானார்.  

  இஸ்மத் சுக்தாயின் சிறந்த ஆக்கங்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் எழுத்தாளர் ஜி.விஜயபத்மா. 'இஸ்மத் சுக்தாய் கதைகள்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அப்புத்தகத்தைப் பற்றிய சிறு அறிமுகம் இது.

  உருது இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை விதைத்த பெண் எழுத்தாளர் இஸ்மத் சுக்தாயின் படைப்பில் வெளியான 24 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். வறுமையை மட்டுமே வாழ்க்கையில் சொத்தாகக் கிடைக்கப் பெற்ற இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சில பெண்களின் வலிகளும், வேதனைகளும்தான் பெரும்பாலான கதைகளின் கருப்பொருள்.

  முகத்தை திரையிட்டு மறைத்து வாழும் எத்தனையோ பெண்களின் அகத்துக்குள் நடக்கும் அக்னி பிரவேசங்களை எழுத்தினூடே அழுத்தமாகக் கூறியிருக்கிறார் சுக்தாய். போர்வை என்றொரு கதையில், கணவரின் அன்பும், தாம்பத்யமும் கிடைக்காத ஒரு பெண், உளவியல்ரீதியாகவும், வாழ்வியல்ரீதியாகவும் அடையும் விசித்திரமான மாற்றங்கள் விரசமின்றி விவரிக்கப்பட்டுள்ளன. அதை ஒரு சிறுமியின் பார்வையில் பதிவு செய்திருப்பது வித்தியாசமான கோணம்.

  திருமண உடை என்ற கதையில் தனது மகளின் கல்யாணத்துக்காக அழகான ஆடை ஒன்றைத் தைத்து வைக்கிறார் அவரது தாய். இறுதிவரை அப்பெண்ணுக்கு திருமணமும் ஆகவில்லை. அந்த உடையும் உபயோகப்படுத்தப்படவில்லை. அந்த ரணங்கள் அனைத்தையும் எழுத்தின் வாயிலாக கடத்துகிறார் நூலாசிரியர்.

  இஸ்மத் சுக்தாய் கதைகள்- தமிழில்: ஜி.விஜயபத்மா; பக்.496; ரூ.500; எதிர் வெளியீடு, பொள்ளாச்சி ) 04259 - 226012.

  ]]>
  Ismat Chughtai, Google doodle, Urdu writer, இஸ்மத் சுக்தாய் , கூகுள் டூடுல், பத்மஸ்ரீ விருது http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/21/w600X390/ismat_chughtai_writer.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/21/ismat-chughtai-107th-birth-anniversary-google-doodle-honors-iconic-writer-2984688.html
  2984058 லைஃப்ஸ்டைல் செய்திகள் எல்லாம் நன்மைக்கே! வாழ்வியல் அற்புதத்தை விளக்கும் சீன நாடோடி கதை!  - தங்க.சங்கரபாண்டியன் DIN Monday, August 20, 2018 04:01 PM +0530 மரங்களும், செடி கொடிகளும், புதர்களுமான வனத்தை மீறிக் கொண்டு மலைகளும், குன்றுகளும் நிமிர்ந்து நிற்கின்றன. மலையின் இடுப்பு மடிக்குள் அந்தச் சின்ன கிராமம் இருந்தது. அந்த ஊரில், ஊர் மக்களை விட்டு ஒதுங்கிய நிலப்பரப்பில் ஒரு குடிசையில் வாழ்ந்தார் அந்தக் கிழவர்.

  தனது வாலிப மகனுடன் குதிரைகளையும், தோட்டத்தையும் பராமரித்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார், கிழவர். ஒரு நாள், அவரிடமிருந்த குதிரை ஒன்று காணாமல் போனது. அதனால் குதிரை லாயத்தில் ஒரு சோகம் சூழ்ந்தது.

  "அப்பா, நம்ம குதிரையைக் காணோம்'' என்று பதற்றத்துடன் சொன்ன மகனை அமைதியாகப் பார்த்த கிழவர், "தேடிப் பார்! அந்த குதிரை நம்மிடமே வந்து சேரும்'' என்று நம்பிக்கையூட்டினார்.

  காணாமல் போன குதிரை, நல்ல குதிரை; பாசமான குதிரை. இவர் வாசம் வந்தாலே வாலையாட்டும். இவரைப் பார்க்கும் அதன் கண்களில் நன்றி உணர்வு ஒளிவீசும். அதில் அக்குதிரையின் ஈர மனது புலப்படும். ஆனால், குதிரை எங்கு தேடியும் புலப்படவில்லை.

  ஊர் மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து துக்கம் விசாரித்தனர். துக்கப் புண்ணைக் கிளறிவிட்டு இழப்பு பற்றிய மிகையான சோகத்தை மக்கள் வெளிப்படுத்தினர். நாகரிகம் கருதி பொறுமை காத்துப் பார்த்தார், கிழவர். தலையைத் தலையை ஆட்டினார். ஆனால், மக்களின் ஒப்பாரியும், புலம்பலும் எல்லை மீறி போகவே, கோபப்பட்டு வெடித்தார் கிழவர்:

  "முட்டாள்தனமா உளறாதீர்கள். ஏன் இப்படி தொண தொணக்கறீங்க? இப்போ என்னாச்சு? குதிரையைக் காணோம். அவ்வளவு தானே? இதற்குப் போய் ஏன் இப்படி சோகத்தைப் பிழிகிறீர்கள்?'' என்று சீறி, கூட்டத்தைக் கலைத்தார்.

  நான்கைந்து நாட்கள் நகர்ந்தன. குதிரைகளின் கனைப்புச் சத்தத்தால் விழித்தெழுந்தார் கிழவர். உடனே எழுந்து வந்து பார்த்தால்... காணாமல் போன குதிரை வந்து நின்றிருந்தது. இவரது வருகைக்காக கழுத்தைத் திருப்பிக் காத்திருந்தது. அதனுடன், மேலும் 12 குதிரைகள்.

  "வந்துவிட்டாயா? நல்லது. கூட்டாளிகளுடன் வந்திருக்கிறாயா?'' என்று அப்போதும் இயல்பாகச் சொன்னார் கிழவர்.

  லாயம் கொள்ளாத அளவுக்கு குதிரைகள். லாயம் குதிரை பண்ணையாகவே மாறிவிட்டது.

  "கிழவருக்கு இலவசமாகக் கிடைத்த 12 குதிரைகள்'' என்ற செய்தி காட்டுத்தீயாக ஊருக்குள் பரவ... ஊர் மக்கள் அனைவரும் வந்து பார்த்தனர். "என்ன இருந்தாலும் கிழவர் மகா யோகக்காரனய்யா! புதையல் கிடைத்தது மாதிரி 12 குதிரைகள். அடடா!'' என்றனர்.

  அவர்களைப் பார்த்து கிழவர் சொன்னார்: "சாணி விழுந்தால் மண்ணு ஒட்டும் நிலத்திலேயே ஒண்ணு விளைந்தால் நூறாய் விளையும். ஒரு பெண் பல பிள்ளைகளைப் பெற்றெடுப்பாள். இதிலே என்ன யோகம்? ஒரு குதிரை போய் 12-ஆக வருவதில் என்ன ஆஹா... ஓஹோ... போங்கைய்யா''.

  ஊர் மக்களின் முகம் சுருங்கிவிட்டது.

  இந்த 12 குதிரைகளை அடக்கும் முயற்சியில் வாலிபனான கிழவனின் மகன் பல நாட்களாக மல்லுக் கட்டினான். அப்போது முரட்டுக் குதிரை ஒன்று அவனை ஒரு கிடங்கில் தூக்கி எறிந்துவிட்டது. வலது காலில் முறிவு ஏற்பட்டது. தன் ஒரே மகன், தனக்கான ஒரே ஆதரவு தனது வம்சத்தின் ஒரே வித்து, அவனுக்கு இப்படி ஒரு விபத்தா?

  ஒருகணம் வருத்தப்பட்டார். நிலை குலைந்த மனசில் ஒரு நடுக்கம் உடைந்து உணர்வுகளின் கசிவு.

  எல்லாம் ஒரு கணம்தான். கிழவர் சுதாரித்துக் கொண்டார்: "பார்க்கலாம் இந்தத் துன்பத்திலேயும் ஏதாவது நல்லது இருக்கலாம்' என்று. செய்தி அறிந்த ஊர்க்காரர்கள் ஓட்டமாய் ஓடி வந்தனர். கண்ணீர் விட்டார்கள்.

  கிழவருக்கு கோபம் கோபமாக வந்தது. ரௌத்திரமாய் சீறி வெடித்தார்.

  "போங்கய்யா! இதுல என்ன துரதிருஷ்டத்தை கண்டுவிட்டீர்கள்? நோயில் கிடக்கிறவனுக்கு தைரியம் சொல்லலாம். பயமுறுத்தி பலவீனப் படுத்துகிற நீங்கள் தான் பூமியில் துரதிருஷ்டம். போய்த் தொலையுங்கள்'' என்று ஆத்திரமாக பேசித் துரத்தினார் கிழவர்.

  "ஊர் அனுதாபப்பட்டாலும் சீறுகிறாரே. இந்தக் கிழவருக்குக் கிறுக்குப் பிடித்திருக்கிறதா?'' என்று முணுமுணுத்துக் கொண்டே வீடு திரும்பினர் மக்கள்.

  அந்த நாட்டு ராஜா நடத்திக் கொண்டிருந்த போரில் மிகப் பெரிய பின்னடைவு. பட்டாளத்துக்குச் சிப்பாய்களைத் தேடி ஊர் ஊராக வலை வீசி அலசினர். எல்லா இளவட்டங்களையும் கட்டாயமாக, இழுத்துச் சென்றனர். "சாகத்தான் போகிறோம்' என்று பயந்து புலம்பினர் இளைஞர்கள்.

  இந்நிலையில், அந்த வனப்பகுதியின் சேனாதிபதி குதிரையில் வந்தார். ஊரிலுள்ள இளவட்டங்களையெல்லாம் அள்ளிக் கொண்டு போய் விட்டார். கிழவனின் மகன் கால் முறிவு ஏற்பட்டிருப்பதால் விட்டு விட்டனர்.

  சாவின் கையில் மகன்களை பறி கொடுத்த தாய், தந்தையர் அனைவரும் அழுது புலம்பினர். தோற்று வரும் படைக்கு அள்ளிக் கொண்டு போகப்பட்ட இளைஞர்கள் ஊர் திரும்பவே இல்லை.

  ஊரின் ஒரே இளைஞனான கிழவர் மகன்தான் தப்பியிருந்தான். அவன் கம்பீரமாக உலா வந்தான்.

  இப்போது, எல்லா ஊர்க்காரர்களும் கிழவரை வந்து மொய்ந்தனர். "நீங்கள் யோகக்காரய்யா. ஊனமே உங்கள் மகனைக் காப்பாத்திருச்சே... நாங்கள் வம்சமில்லாமல் நாசமாயிட்டோமே...! நீங்கள் அதிருஷ்டக்காரர்கள்.''

  இதையும் மறுத்து தலையை அசைந்தார், கிழவர். "இதில் ஒன்றும் அதிர்ஷ்டமில்லை...'' என்று மெதுவாகச் சொன்னார். "எல்லாத்துலேயும் நல்லதுதான் விளையும் எல்லாமே நல்லதுக்குத்தான் எண்ணும் மனோபாவத்தோட நாம இருந்தால்... நம்மைச் சுத்தி நடக்குற எல்லாமே நமக்கு மகிழ்ச்சியைத்தான் தரும். இதிலே யோகம்னு துள்ளுவதற்தோ- துரதிருஷ்டம் சொல்வதற்கோ ஒன்றுமில்லை. துரதிருஷ்டம் அதிர்ஷ்டம் என்று நினைப்பதெல்லாம் மூட நம்பிக்கை. நம்பிக்கை துணிச்சலைத் தரும். மூட நம்பிக்கை பயத்தைத் தரும்'' என்று அமைதியாகச் சொன்ன கிழவரின் தாடியையே எல்லாரும் புரியாமல் பார்த்தனர்.

  இப்போதும் அவரது சொற்களின் ஆழம் அவர்களுக்குப் பிடிபடவில்லை.

   ஆயினும்...

  "பெரியவர் சொன்னால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்'' என்ற முரட்டு நம்பிக்கையில் மனதைத் தேற்றிக் கொண்டனர் ஊர் மக்கள்.
   

  ]]>
  short story, chinese story, china, சிறுகதை, சீனம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/18/w600X390/NADODI_STORY.JPG http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/20/எல்லாம்-நன்மைக்கே-வாழ்வியல்-அற்புதத்தை-விளக்கும்-சீன-நாடோடி-கதை-2984058.html
  2984052 லைஃப்ஸ்டைல் செய்திகள் உங்கள் கையெழுத்து அழகாக இருக்க வேண்டும் என்று ஆசையா? இந்த 5 விஷயங்களை கடைபிடியுங்கள்!  - சரசுவதி பஞ்சு DIN Monday, August 20, 2018 03:23 PM +0530 அழகான கையெழுத்து நம் மனதை கொள்ளை கொள்கிறது. காண்போர் அதனைப் புகழ்வார்கள். பெரும்பாலான குழந்தைகள் எழுதுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். பல தவறுகளைச் செய்கின்றனர். இவற்றை மிக எளிதாகத் திருத்திக்கொள்ள முடியும். ûயெயழுத்து நன்றாக இல்லையெனில், மதிப்பெண் குறைவது மட்டுமல்லாமல், அவரைப் பற்றிய தவறான கருத்தினையும் உருவாக்கிவிடும்.

  ஏன் நல்ல கையெழுத்து வேண்டும்? இன்றைய ஆசிரியர்கள் ஏராளமான பணிகளை வேகமாகச் செய்ய வேண்டிய நிலையில் அவதிப்படுகிறார்கள். டன் கணக்கில் விடைத்தாள்களைத் திருத்த வேண்டியிருப்பதால், பள்ளி திறப்பது முதல் ஆண்டு விடுமுறைக்காக பள்ளி மூடிய பின்பும் தொடர்ந்து இப்பணியை செய்ய வேண்டியுள்ளது. ஆகையால், சுத்தமாக அழகாக எழுதுபவர்களுக்கு அதிக மதிப்பெண் கொடுக்கும் மனப்பான்மை உண்டாக்கிவிடுகிறது.

  அடித்தல் திருத்தல்களோடு, தேவையில்லாத புள்ளிகள், படிக்க முடியாத நிலையில் எழுதப்படும் எழுத்துகள் ஆகியவை மாணவனின் மதிப்பெண்களைக் குறைத்துவிடுகிறது. நல்ல முறையில் எழுத பயிற்சி பெற்று, எளிமையாகச் செய்தாலே, உங்களின் கருத்துக்களை காகிதத்தில் எதிரொலிக்கச் செய்யலாம்.

  கையெழுத்தின் வகைகள்: எழுத்துக்களை எழுதுவது மூன்று வகைப்பட்டதாகும். நேராக, வலப்பக்கம் சாய்வாக எழுதுதல், இடப்பக்கம் சாய்வாக எழுதுதல். எந்த முறை நமக்கு சிறப்பாக அமையும் என்பதைக் கண்டறிய முதலில் ஒரு சிறிய பத்தியை எழுதி பார்க்க வேண்டும். அதில் பெரும்பாலான எழுத்துக்கள் நேராக இருந்தால் உங்கள் கையெழுத்து நேரானது. பெரும்பாலான எழுத்துக்கள் வலப்பக்கமோ இடப்பக்கமோ சாய்ந்திருந்தால் உங்கள் எழுத்து சாய்வானது.இவற்றில் எதைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ, அவற்றை கடைசி வரை பயன்படுத்த வேண்டும்.

  எழுதுகோலை பிடிக்கும் முறை: பேனா, பென்சிலை கட்டைவிரலால் இடது பக்கம் பிடித்து, ஆள்காட்டி விரலை மேல் பக்கம் வைத்து, கீழ்ப்பக்கமாக மூன்று விரல்களால் தாங்கிப் பிடித்துக்கொள்ள வேண்டும். எழுதுகோல் நடுவிரலில் சார்ந்திருக்க, மேற்பகுதி விரல் கணுவில் தாங்கிப் பிடித்துக்கொள்ள வேண்டும். விரலிடுக்கின் பள்ளத்தில் ஆதாரமாக இருக்கக்கூடாது.

  காகிதம் இருக்க வேண்டிய நிலை: காகிதம் அல்லது குறிப்பேட்டை மேசையின் முனைக்கு வைக்கக்கூடாது. அவ்வாறு வைத்தால், எழுதும் கை உடலின் மிக அருகாமையில் வருவதால், வேகமாக எழுதுவதற்குத் தடையாக இருக்கும். காகிதத்தை மேசையின் முனைக்கு ஒரு கோணத்தில் சாய்வாக, தட்டுத்தடங்கல் இல்லாமல் எழுதுகிற நிலையில், கைக்கும் உடலுக்கும் இடையே இடைவெளி இருக்க வேண்டும்.

  எழுதாத கையின் நிலை: எழுதாத கையை தொடையிலேயோ, தலையிலேயோ வைத்துக்கொள்வதால், குறிப்பேட்டினை ஒரே நிலையில் அசையாமல் வைக்க முடியாது. ஆகையால், காகிதம் அல்லது குறிப்பேட்டினை ஒரே நிலையில் பிடித்துக்கொள்ள வேண்டும். வேகமாக மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்கு தேர்வு எழுதும்போது, காகிதத்தை வேகத்திற்கேற்ப மேலே தள்ளி, எழுதும் கைக்கு உதவிகரமாக இருக்க வேண்டும். எழுதாத கை, மேசைக்குக் கீழே அல்லது தொங்கும் நிலையில் வைத்திருக்கக் கூடாது.

  அழுத்தம்: எழுதுகோலின் அழுத்தத்தைக் குறைத்தால், எழுதும் வேகம் அதிகரிக்கும். எழுத்துக்களை சரியான வடிவத்தில், சரியான அளவில் எழுத வேண்டும். எழுத்துக்களை சிறியதாகவும், பெரியதாகவும் எழுதக்கூடாது.
   பின்பற்ற வேண்டியவை: அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுத முயற்சி செய்ய வேண்டும். ஒரு சொல்ல நீக்க வேண்டுமானால்,அதன் மீது நேர்கோட்டை இழுக்க வேண்டும்.

  எல்லா எழுத்துக்களையும் வரிக்கு மேல் எழுதுங்கள். எல்லாவித எழுத்துக்களையும் கலக்காதீர்கள்.

  (எஸ்.சந்திரமெளலி எழுதிய நலம், நலமறிய எனும் நூலிலிருந்து)
   

  ]]>
  hand writing, neat and good, writing hurdles, அழகான கையெழுத்து, நல்ல கையெழுத்து http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/18/w600X390/BACHELORS_WRITING.JPG http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/20/உங்கள்-கையெழுத்து-அழகாக-இருக்க-வேண்டும்-என்று-ஆசையா-இந்த-5-விஷயங்களை-கடைபிடியுங்கள்-2984052.html
  2984051 லைஃப்ஸ்டைல் செய்திகள் ஆடிப் பாடி வளைந்து நெளிந்து தலைகீழாய் சுழன்று வகுப்பெடுக்கிறது இந்த ரோபோ!  - பிஸ்மி பரிணாமன் DIN Monday, August 20, 2018 03:14 PM +0530 சிறு குழந்தைகளைக் கவரும்படி அமைக்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட் வகுப்பறை. அங்கு குழந்தைகளுக்கு முன் நின்று ஆடிப் பாடி... வளைந்து நெளிந்து தலைகீழாய் சுழன்று வகுப்பெடுக்கிறது அந்த ரோபோ.

  வெளிநாட்டில் இதெல்லாம் சகஜம் என்கிறீர்களா? அதுதான் இல்லை. வெளிநாட்டு ரோபோ திருக்குறள் சொல்லுமா..? 1,330 திருக்குறளில் எந்தக் குறளைக் கேட்டாலும் "டக்'கென்று சொல்லும் திறமை உடைய இந்த ரோபோவின் பெயர் "ராவா'. இதன், தலையினுள் பத்து மின்னணு மூளைகள் உள்ளன அவற்றை பயன்படுத்தி, சுயமாக சிந்திக்கும் திறமையுள்ள "ராவா', சென்னையை அடுத்துள்ள கூடுவாஞ்சேரியில் ஸ்மார்ட் கிட்ஸ் ஃபன் ஸ்கூலில் பணிபுரிகிறது என்றால் ஆச்சரியம் வரும்தானே ..!

  'ராவா' உருவானதின் பின்னணியில் உள்ளவர்கள் ஜார்ஜ் குமார்துரை. அவரது மனைவி ரம்யா ப்ரீத்தி. இருவரும் கணினி விஞ்ஞானத்தில் பொறியியல் பட்டதாரிகள். ஜார்ஜ், பன்னாட்டு கணினி நிறுவனமான "ஐபிஎம்'மில் பணிபுரிகிறார். டிசிஎஸ் நிறுவனத்தில் பணி புரிந்து வந்த ரம்யா, தற்சமயம் குழந்தைகளுக்கான இந்தப் பள்ளியை நிர்வகித்து வருகிறார்.

  'ராவா' உருவாக்கம், அதன் செயல்பாடுகள் குறித்து ஜார்ஜ் விளக்குகிறார்:

  'குழந்தைகளைக் கல்வி கற்பதில் இருக்கும் கசப்பைத் தவிர்த்து ஆர்வத்தை வளர்க்க அவர்கள் அமரும் வகுப்பை அவர்களுக்குப் பிடிக்கும் விதத்தில் அமைக்க வேண்டும். குழந்தைகளைக் கவரும் விதத்தில் ஆடிப் பாடி கதைகள் சொல்லி வகுப்புகளை நடத்த வேண்டும். குழந்தைகளுக்கு கார்ட்டூன் படங்கள் அதன் பாத்திரங்கள் என்றால் ரொம்பவும் பிடிக்கும். அந்த அடிப்படையில், ஒரு ரோபோ வகுப்பில் இந்த வேலைகளை செய்தால் எப்படி இருக்கும் என்று நாங்கள் கற்பனை செய்ததில் பிறந்ததுதான் 'ராவா'.

  ராவாவின் உயரம் ஒன்றரை அடி. எடை ஒரு கிலோ. ராவாவில் ஏழு கேமராக்கள், பதினான்கு ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. தவிர, தேவையான சென்சர்களும், ஸ்டிமுலேட்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ரோபோவின் எல்லா பாகங்களும் இந்தியாவில் கிடைக்கின்றன. பொதுவாக ரோபோக்கள் இரண்டு வகைப்படும். ஆன்டிராய்ட் வகை ரோபோ. இரண்டாவது கைனாய்ட் பிரிவில் வருவதாகும்.

  ஆன்டிராய்ட் ரோபோவை ஆண்பால் என்று சொல்லலாம். கைனாய்ட், பெண்பால். ராவா, ஆணும் பெண்ணும் கலந்த 'ஆன்ட்ரோ கைனாய்ட்' வகை. இதனால் இரண்டுவகை ரோபோக்கள் செய்யும் பணிகளை செய்ய முடியும். சாதாரணமாக ஜப்பானின் 'அசிமோ' வகை ரோபோக்களின் விலை சுமார் இருபது லட்சம். அமெரிக்காவின் "நயோ' வகை ரோபோ ஒன்று பதினைந்து முதல் பதினேழு லட்சம் வரை விலையிருக்கிறது. ராவாவின் விலை இரண்டரை லட்சம்தான்.

  'ராவா' குழந்தைகளுக்கு ஆசிரியராக மட்டுமல்ல.. உற்ற தோழனாகவும் இருப்பான். பள்ளியில் குழந்தைகளுக்கு இந்திய ஆங்கில உச்சரிப்பில் வகுப்புகள் எடுப்பான். பொது அறிவு, அறிவியல், சரித்திரம், கணக்கு என்று எல்லாம் ராவாவுக்கு அத்துப்படி. பெரியவர்களுக்கும் 'ராவா' தோழனாக இருப்பான். தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மராட்டி மொழிகளில் செய்தி வாசித்துக் காட்டுவான். குறிப்பிட்ட செய்தித்தாளில் செய்திகள் வேண்டும் என்றால் அதைத் தேர்ந்தெடுத்து வாசிப்பான். பொழுது போக்க குறிப்பிட்ட திரைப் படப்பாடலை போடு என்றால் அதையும் தனது ஸ்பீக்கரில் ஒலிக்க வைப்பான். 'உடல்நலமில்லை .. டாக்டரை கூப்பிடு..' என்று சொன்னால், டாக்டருக்கு போன் போட்டு அழைப்பான். வீட்டில், பெண்களுக்கு விதம் விதமான சமையல் குறிப்புகளை சொல்வான். கொசுறாக அழகு குறிப்புகள் வேறு.

  இப்படிப் பல பயன்பாடுகளுக்கு உதவுவதற்காகத்தான் 'ராவா'வை தயாரித்திருக்கிறோம். 'ராவா' இயங்க இன்டர்நெட் வசதி தேவை. ஸ்விட்ச் ஆன் செய்யப்பட்டதும் 'ராவா' தயாராகிவிடுவான். ராவாவுக்குள் சுமார் எண்பதாயிரம் கட்டளைகள் பதிக்கப்பட்டுள்ளதால், எந்த சூழ்நிலைக்கும் ஏற்ப அவனால் செயல்பட முடியும். சுமார் மூன்று லட்சம் கட்டளைகளை ராகாவின் மூளையினுள் பதிக்கலாம். விளையாடவும் ராகாவுக்கு வரும். குதிக்க, ஓட, குனிய, திரும்ப, தலை கீழாய் நிற்க, நிமிர அவனால் முடியும். நடனமும் செய்வான்.

  நீர், நெருப்பினால் பாதிப்பு ஏற்படாதவிதத்தில் தயாரிக்கப்படும் இந்த 'ராவா' வகை ரோபோக்களை வாங்க இதுவரை எழுபத்திரண்டு ஆர்டர்கள் கிடைத்துள்ளன. அதில் இருபத்திரண்டு ரோபோக்கள் அனுப்ப தயாராக உள்ளன..' என்கிறார் ஜார்ஜ்.

  ]]>
  robot, asimo, android, ரோபோ, அசிமோ, ஆண்ட்ராய்ட் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/18/w600X390/sk7.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/20/ஆடிப்-பாடி-வளைந்து-நெளிந்து-தலைகீழாய்-சுழன்று-வகுப்பெடுக்கிறது-இந்த-ரோபோ-2984051.html
  2983037 லைஃப்ஸ்டைல் செய்திகள் உங்க செல்ஃபோனை தொலைத்துவிட்டீர்களா? கவலைவேண்டாம் கண்டுபிடிக்க ஒரு வழி! - வி.குமாரமுருகன்  DIN Saturday, August 18, 2018 04:26 PM +0530 சில ஆயிரம் முதல் சில லட்சம் வரை பணம் கொடுத்து கைபேசியை வாங்கியவர்கள் அது தொலைந்து விட்டால் பணத்துக்காக கவலைப்படுவதில்லை. மாறாக அதிலுள்ள தகவல்களை வைத்து அதை எடுத்தவர்கள் என்ன செய்வார்களோ? என்ற பயம்தான் தொலைத்தவர்களுக்கு ஏற்பட்டு வருகிறது. 

  அத்தகைய கவலை இனி வேண்டாம். நமது தகவல்களை இருந்த இடத்திலிருந்தே கூகுளின் உதவியுடன் அழிக்கவும் முடியும். வாய்ப்பிருந்தால் அந்த கைபேசி எங்கு இருக்கிறது என கண்டறியவும் முடியும். 

  கூகுளிலுள்ள find my device தான் இந்த வசதியை நமக்கு வழங்குகிறது.

  முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find என டைப் செய்யுங்கள்.. பிறகு உங்கள் கூகுள் அக்கவுண்டை log in  செய்ய வேண்டும். உங்களின் email and password கொடுத்த பின்பு லாக் இன் ஆகும். அப்போது ஸ்க்ரீனின் இடது புறம் நாம் தவறவிட்ட செல்போன் மாடல் எண் இருக்கும். அதன் கீழே தொலைந்த கைபேசியின் சார்ஜின் அளவு சதவீதத்தில் காட்டும். 

  மேலும் தொலைந்த கைபேசியில் ஜிபிஎஸ் ஆனில் இருந்தால் வலது புறத்தில் அந்த கைபேசி எந்த இடத்தில் உள்ளது என்பதை பச்சை நிற குறியீட்டுடன் காட்டும். ஜிபிஎஸ் ஆனில் இல்லாவிட்டால் அத்தகவல்களை காட்டாது.இடது புற விண்டோவில் play sound, Enable, Secure & Erase என்ற தகவல்கள் இருக்கும்.

  play sound கிளிக் செய்தால் அந்த செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தாலும் கூட 5 நிமிடம் ஒலிக்கும். Enable, Secure & Erase கிளிக் செய்து lock ஆப்சனை கிளிக் செல்தால் செல்போன் லாக் ஆகி விடும். erase ஆப்சனை கிளிக் செல்தால் செல்போனில் உள்ள தகவல் அனைத்தும் அழிந்து விடும். எனவே, கைபேசி தொலைந்தால் கவலை கொள்ளாதீர்கள். பதறாதீர்கள். உங்கள் தகவலை பாதுகாப்பாக அழிக்க முடியும்.

  ]]>
  cell phone, smart phone, google search, கைபேசி, செல்ஃபோன், அலைபேசி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/18/w600X390/shutterstock_140209816-390x285.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/18/உங்க-செல்ஃபோனை-தொலைத்துவிட்டீர்களா-கவலைவேண்டாம்-கண்டுபிடிக்க-ஒரு-வழி-2983037.html
  2983031 லைஃப்ஸ்டைல் செய்திகள் உங்கள் ஐஏஎஸ் கனவு நிறைவேற ஆன்லைனில் பயிற்சி! - ந.ஜீவா DIN Saturday, August 18, 2018 03:58 PM +0530 இன்றைய இளைஞர்களுக்கு நிறைய கனவுகள் இருக்கின்றன. மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை எழுத வேண்டும் என்று பலர் நினைக்கின்றனர். ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று ஆட்சியர் பணிக்குப் போக வேண்டும் என்று பலர் ஆசைப் படுகின்றனர். 

  பெரிய நகரங்களில் வாழ்பவர்களுக்கு இந்த தேர்வுகளுக்காகப் பயிற்றுவிக்கும் கல்விநிறுவனங்களில் சேர்ந்து பயில்வது எளிதாக இருக்கிறது. ஆனால் சிறுநகரங்களில், கிராமப்புறங்களில் வாழ்பவர்கள் என்ன செய்வது? நகரங்களில் உள்ள பயிற்சி மையங்களில் பயில்பவர்களுக்கே கூட அவர்கள் பயிற்சி பெற விரும்பும் படிப்புக்கான நவீன புத்தகங்கள், வீடியோக்கள் எல்லாம் கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது. பயிற்சி மையங்களில் சொல்லித் தரும் ஆசிரியர்கள் எல்லாரும் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் சொல்ல முடியாது. 

  பயிற்சி மையங்களுக்குச் சென்று கற்க மாணவர்கள் பயணம் செய்ய வேண்டும். அதற்காக ஒதுக்கும் நேரம், போக்குவரத்து நெரிசல்கள், உரிய நேரத்தில் வாகனங்கள் வராதது, அதனால் ஏற்படும் மன உளைச்சல்கள் என இளைஞர்களின் எதிர்கால கனவுகளுக்கு எதிராக நிறைய தடைகள் உள்ளன.

  இம்மாதிரியான பிரச்னைகளுக்குத் தீர்வாகத் தொடங்கப்பட்டதுதான் 'நியோஸ்டென்சில்' http://neostencil.com என்ற ஆன்லைன் கல்வி நிறுவனம். ஐஏஎஸ் மட்டுமல்ல ஐ.இ.எஸ், கேட் மற்றும் மாநில அரசுகள் நடத்தும் பல்வேறு தேர்வுகள், வங்கித் தேர்வுகள், யுஜிசி நடத்தும் தேர்வுகளுக்கு ஆன்லைன் மூலமாக பயிற்சி தரும் நிறுவனம்தான் இது. 

  2014- இல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்துக்கு புதுதில்லி, கூர்கான், ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் அலுவலகங்கள் உள்ளன. அமெரிக்காவிலும் கூட ஓர் அலுவலகம் உள்ளது.

  இதை நிறுவியவர்கள் லவ் பீஜால், குஸ் பீஜால் என்ற சகோதரர்கள். இதில் லவ் பீஜால் ஒரு டாக்டர். மருத்துவப் படிப்புக்குப் பிறகு ஐஐஎம் அகமதாபாத்தில் நிர்வாகம் பயின்றிருக்கிறார். குஷ் பீஜால் ஒரு கெமிக்கல் இன்ஜினியர். ஐஐடிபி மற்றும் ஐஐடிஎம்- கொல்கத்தாவில் பயின்றவர். 

  'அரசுப் பணிகளுக்கான தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் வகையிலேயே நியோஸ்டென்சிலை நாங்கள் தொடங்கினோம். வகுப்பறையில் அமர்ந்து நேரடியாக பாடம் கேட்பதை விட மிகச் சிறப்பான கல்வியை அளிப்பதே எங்கள் நோக்கம். சிறுநகரங்களில் , கிராமங்களில் வாழும் வசதியில்லாத ஆனால் மிகவும் திறமையுள்ள ஏழை மாணவர்கள் அரசுப் பணிகளுக்கான தேர்வை வெற்றிகரமாக எழுதுவதற்கு எங்கள் நிறுவனம் உதவுகிறது.

  அந்த மாணவர்கள் நகரங்களில் உள்ள பயிற்சி மையங்களில் சேர்ந்து பயில வேண்டும் என்றால் நகரத்தில் தங்கியிருக்க வேண்டும். அதற்கான செலவு செய்ய வசதியில்லாதவர்கள் என்ன செய்வார்கள்?  எனவே வீட்டில் கம்ப்யூட்டர், லேப் டாப், இணையதள வசதி பெறக் கூடிய ஒரு செல்போன் இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால் போதும், அவர்கள் நகரங்களில் உள்ள பயிற்சி மையங்களில் தரப்படும் கல்வியை விட மேலான கல்வியை அவர்கள் பெற முடியும். 

  ஐ.ஏ.எஸ், ஐ.இ.எஸ்., தேர்வுகளுக்கான அனைத்துப் பாடங்கள், புவியியல், இந்தியப் பொருளாதரம், வரலாறு, சட்டம், அரசியலமைப்புச் சட்டம், அரசியல் விஞ்ஞானம், பொது நிர்வாகம், சமூகவியல், பொறியியல்துறை சார்ந்த படிப்புகள் என பல்வேறு துறை சார்ந்த படிப்புகளை மாணவர்கள் கற்றுக் கொள்ள முடியும். 

  எங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்துகிறவர்கள், சம்பந்தப்பட்ட பாடப் பிரிவுகளின் திறமை மிக்கவர்கள்' என்கிறார் லவ் பீஜால்.

  இந்த ஆன்லைன் கல்வி கற்க பாடத்துக்கு ஏற்ப கல்விக் கட்டணம் உள்ளது. 

  'எங்களுடைய மாணவர்களுக்கு நவீன ஸ்டடி மெட்டீரியல்களின் மூலம் கற்றுத் தருகிறோம். வகுப்புத் தேர்வுகளையும் நடத்துகிறோம். பாடத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஆன் லைன் மூலம் ஆசிரியரிடம் பேசி தெரிந்து கொள்ளலாம். மாணவர்களின் வேலை வாய்ப்புக்குத் தேவையான கல்வி பற்றிய ஆலோசனைகளையும் தருகிறோம். ஒரு குறிப்பிட்ட பாடம் தொடர்பான கலந்துரையாடலும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகிறது. நேரடியாக வகுப்பறையில் கற்றால் என்ன அனுபவங்களை ஒரு மாணவர் பெறுவாரோ அந்த அனுபவங்களுடன், அதைவிட சிறப்பான கல்வியை எங்கள் ஆன்லைன் கல்வி மூலம் இந்தியாவின் எந்த மூலையில் வாழும் மாணவர்களும் பெற முடியும்' என்கிறார் லவ் பீஜால்.

  தொடங்கிய 4 ஆண்டுகளுக்குள்ளாகவே, ரூ.6 கோடி அளவில் வருவாய் ஈட்டும் அளவுக்கு இந்த நிறுவனம் வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  ]]>
  IAS , ias training, online training for ias, ஐ.ஏ.எஸ், ஆன்லைன் கல்வி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/14/w600X390/im8.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/18/உங்கள்-ஐஏஎஸ்-கனவு-நிறைவேற-ஆன்லைனில்-பயிற்சி-2983031.html
  2981724 லைஃப்ஸ்டைல் செய்திகள் அமெரிக்க பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவி சென்னை பெண்! ஷெபானி மந்தாகினி பாஸ்கர் பற்றி தெரிந்து கொள்ளலாமா? - அங்கவை DIN Thursday, August 16, 2018 03:21 PM +0530 அமெரிக்க  பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவி  ஒரு இந்திய பெண். அதுவும் சென்னையில் படித்தவர். தமிழ்நாட்டில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெற்றவர்.  அவர்தான்  இருபத்தி மூன்று  வயது,  ஷெபானி மந்தாகினி பாஸ்கர்.   

  உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டி 2011 -இல் பங்களாதேஷில் நடந்தது. களத்தில் அமெரிக்க அணி,  தொடர்ந்து தோல்விகளை  தழுவியது. இருந்தாலும் அதிசயமாக  அந்தத் தொடரில் அமெரிக்கா ஒரு போட்டியில் வெற்றி பெற்றது. அமெரிக்க பெண்கள் அணி தோற்கடித்தது ஜிம்பாப்வே அணியை. இந்த ஆட்டத்தில்  சிறந்த  கிரிக்கெட்  வீராங்கனைக்கான விருது  பதினேழு வயதான ஷெபானிக்கு  கிடைத்தது. ஷெபானி சொல்கிறார்:

  'ஜிம்ப்பாவே அணி  ஏழு பந்துகளில்  இரண்டு ரன்கள் எடுக்க வேண்டும். நான் பந்து வீச்சாளர். தொடர் தோல்வியிலிருந்து எனது அணியைக் காக்க அந்தப் பந்து வீச்சை  முழு  வேகத்துடன்  வீசினேன்.  எனது பந்து ஸ்டம்பை சாய்த்தது. ஜிம்ப்பாவே அணி  ஒரு  ரன்  வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  அமெரிக்க அணி வெற்றி பெற்றது. இந்தப் பந்து வீச்சால்  நான் பலரின் கவனங்களைக் கவர்ந்தேன். எனது அணிக்கும் என் மேல் நம்பிக்கை உருவானது. தொடர்ந்து அமெரிக்க அணிக்காக ஆடி வந்தேன். இப்போது அமெரிக்க பெண்கள் கிரிக்கெட் அணிக்குத்  தலைவியாகியுள்ளேன். 

  நான் பிறந்தது  அமெரிக்காவின் சிகாகோ நகரில் என்றாலும்  பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பை சென்னையில் தான் படித்தேன். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தின் அன்னையார் நடத்தி வரும் பாலர் பள்ளியில் சேர்த்து விட்டார்கள்.  அடுத்தடுத்து பள்ளி படிப்பு பல நாடுகளில் தொடர்ந்தது. நான் கிரிக்கெட் ஆடத் தொடங்கிய போது எனக்கு வயது பதினொன்று. கொல்கத்தாவில் நாங்கள் 2005 -இல் வசித்தோம்.  அங்கே பதினாறு வயதுக்கு கீழ் பிரிவில் கிரிக்கெட் மேற்கு வங்க அணிக்காக  இடம் பெற்று ஆடினேன்.   2007 - இல் மும்பைக்கு   மாறினோம்.  மும்பையில் பல மைதானங்களில்

  கிரிக்கெட் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. 2008-இல் சென்னைக்குப் பயணமானேன். தமிழ்நாட்டு பெண்கள் கிரிக்கெட் அணியிலும் சேர்ந்து விளையாடி இருக்கிறேன். சென்னை பல்கலைக்கழக பெண்கள் கிரிக்கெட் அணி,  நான் படித்து வந்த எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி கிரிக்கெட் அணிக்கும் நான்கு ஆண்டுகள் தலைவியாக விளையாடியிருக்கிறேன். இந்திய தேசிய அணியில் இடம் பெற வேண்டுமானால் இந்திய பாஸ்போர்ட் இருக்க வேண்டும். என்னிடம் அமெரிக்கப் பாஸ்போர்ட் இருப்பதால் இந்திய தேசிய பெண்கள் கிரிக்கெட் அணியில் சேர இயலவில்லை. ஆனால் அமெரிக்க பெண்கள் அணியில் இணையும்  வாய்ப்பு கிடைத்தது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நான் பதினேழு வயதில் பங்குபெறத்  தொடங்கினேன். 

  வரும் நவம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸில்  உலகக் கோப்பைக்கான  பெண்கள் கிரிக்கெட்  போட்டி நடக்கப் போகிறது. அதில் அமெரிக்க  பெண்கள் அணி பங்கு பெற இயலவில்லை. அடுத்து 2020 உலகக்  கோப்பைக்கான போட்டியில் அமெரிக்க  பெண்கள் அணியைப் பங்கு பெற வைக்க வேண்டும்  என்பதுதான் என் லட்சியம். அமெரிக்க அணியில் பங்கு பெற்றிருக்கும் பெண் வீராங்கனைகள் பெரும்பாலும் இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ்  நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டிருப்பவர்கள்தான்.

  இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வலிமையுள்ள அணியாக மாறியுள்ளது. சமீபகால விளையாட்டுகளில் இந்திய பெண்கள் அணி  மிகச் சிறப்பாக ஆகியுள்ளது. உலகின் சிறந்த மூன்று அணிகளில்  ஒரு அணியாக இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி உயர்ந்துள்ளது. கிரிக்கெட் தவிர கோல்ஃப், கூடைப்பந்து, கால்பந்து விளையாட்டுகளிலும் விருப்பம் அதிகம். விளையாடியுமுள்ளேன்' என்கிறார்  ஷெபாணி.

  ]]>
  cricket, chennai girl, american cricket team, சென்னைப் பெண், பெண்கள் கிரிக்கெட், ஷெபானி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/15/w600X390/mn2.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/16/chennai-girl-is-captain-of-american-women-cricket-team-2981724.html
  2981722 லைஃப்ஸ்டைல் செய்திகள் ஆண்கள் இதைப் படிக்க வேண்டாம்! DIN DIN Thursday, August 16, 2018 03:12 PM +0530
 • மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்.
  • பெண்கள் கோயிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது (பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது)
  • கோயில்களில் பிரசாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது .
  • பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்க விட்டு நடக்கக்கூடாது.
  • கோயிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது  பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்க வேண்டும்.
  • தலை குளிக்கும் பொழுது சுமங்கலி பெண்கள் சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டு பிறகு குளிக்க வேண்டும் .

  • கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுகொண்டு கோலமிடக் கூடாது
  • திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில் இரண்டு மூன்று மெட்டி அணிய கூடாது, அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல், வருமானம்) பாதிப்பு அடையும் .
  • கர்ப்பமான பெண்கள் உக்கர தேவதைகள் இருக்கும் கோயிலுக்கு போகக் கூடாது .
  • பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக் கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக் கொள்ளக்கூடாது.
  • அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.
  ]]>
  women, feminist, married women, tips for women, பெண்கள், டிப்ஸ் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/4/w600X390/mn2.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/16/ஆண்கள்-இதைப்-படிக்க-வேண்டாம்-2981722.html
  2981717 லைஃப்ஸ்டைல் செய்திகள் மெத்து மெத்தென்று பஞ்சு போல் இட்லி வேண்டுமா? இதோ டிப்ஸ் - ஆர். ஜெயலட்சுமி, கீதா ஹரிஹரன்,  சி.பன்னீர் DIN Thursday, August 16, 2018 02:48 PM +0530 நேற்று சுட்ட  சப்பாத்தி மீதமிருந்தால் அடுத்த நாள் காலை மீதமிருக்கும் சப்பாத்தியை இட்லி குக்கரில் லேசாக ஆவியில் வேகவைத்து சாப்பிட்டால் சப்பாத்தி மிருதுவாக  இருக்கும்.

  குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் பொருள்களை  அலுமினிய  பாயில் பேப்பரில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாது.

  மிக்ஸியை துடைக்கும்போது வெளிப்புறத்தில்  சிறிது டூத் பேஸ்ட்டை  வைத்து தேய்த்துத் துடைத்தால்  பளீரென்று இருக்கும்.

  மோர் மிளகாய் தயாரிக்கும்போது அத்துடன் பாகற்காயை வில்லைகளாக அரிந்து போட்டு வற்றலாக்கலாம். பாகல் வற்றல் காரமுடன் சுவை மாறி ருசியாக இருக்கும்.

  இட்லிக்கான அரிசியை வெந்நீரில் ஊற வைத்து அரைத்தால், இட்லி பஞ்சு போன்று இருக்கும்.

  பகலில் மீந்த சாதத்துடன் சிறிது கடலைமாவு, கோதுமை மாவு சேர்த்துக் கெட்டியாக  அரைத்து அதில் நறுக்கின வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், தேவையான உப்பு சேர்த்துக்  கிளறி காயந்த எண்ணெய்யில் கிள்ளிப் போட்டு பொரித்தெடுத்தால் சுவையான பக்கோடாக்கள் தயார்.

  உருளைக்கிழங்கு மசால் தோசை செய்யும் போது தோசையில் மசாலா வைப்பதற்கு முன் தேங்காய் சட்னி இரண்டு  தேக்கரண்டி எடுத்து தோசையின் மேல் பரவலாக தேய்த்து பிறகு மசாலாவை வைத்து மூடி எடுக்கவும். தோசை தனிச் சுவையுடன் இருக்கும்.

  தேங்காய்த் துருவலுடன் ஊற வைத்து அரைத்த வேர்க்கடலையைச் சேர்த்து, தேங்காய் பர்பி செய்தால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

  சேமியா கிச்சடி செய்யும் போது தண்ணீர் அதிகமாகி விட்டால் தளதளவென்று ஆகிவிடும். இதைச் சரி செய்ய, அவலை மிக்ஸியில் பொடியாக்கி  கிச்சடியுடன் சேர்த்தால்  கிச்சடி சுவையாக இருக்கும். 

  ]]>
  idli, chappati, poori, tips, cooking tips, சமையல் டிப்ஸ், டிப்ஸ், இட்லி சாஃப்ட் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/16/w600X390/sof_idly.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/16/மெத்து-மெத்தென்று-பஞ்சு-போல்-இட்லி-வேண்டுமா-இதோ-டிப்ஸ்-2981717.html
  2981695 லைஃப்ஸ்டைல் செய்திகள் காணத் தெவிட்டாத காட்சி... கனமழையால் நுங்கும், நுரையுமாகப் பொங்கி ஆர்ப்பரிக்கும் கர்நாடகத்தின் ஜோக் நீர்வீழ்ச்சி!  RKV DIN Thursday, August 16, 2018 12:34 PM +0530  

  கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தின் ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம் சிவமோகா பகுதியில் இருக்கும் ஜோக் நீர்வீழ்ச்சி... இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சி எனும் பெருமை கொண்டது. எனவே தேசிய அளவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்த்திழுக்கும் தன்மை இந்த நீர்வீழ்ச்சிக்கு உண்டு. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இதில் சரியான நீர்வரத்து இன்றி சுமாரான நிலையில் இருந்து வந்த நீர்ப்பொழிவு சமீபத்திய கனமழையில் எதிர்பாராத அளவுக்கு அதிகரித்து தற்போது மலை விளிம்பில் இருந்த் அதன் கிளைவழிகள் அனைத்திலும் பெருகித் திரண்ட வெள்ளம் கட்டுக்கடங்காத ஆர்வத்தோடு பாய்ந்தோடி வீழும் காட்சி காணக் காண உவகையூட்டுவதாக இருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சியானது ஷராவதி ஆறானது 253 மீட்டர் உயரத்தில் இருந்து விழுவதால் தோன்றியது. 

  கர்நாடக மாநிலத்தின் முதன்மையான சுற்றுலா மையங்களில் ஒன்றாகத் திகழும் இந்த அருவியானது கெருசொப்பெ அருவி எனவும் ஜோகதகுன்டி அருவி எனவும் அழைக்கப்படுகிறது.

  ]]>
  கனமழை, JOG Falls, ஜோக் நீர்வீழ்ச்சி, கர்நாடக மாநிலம், மேற்குத் தொடர்ச்சி மலை, western ghates falls http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/16/w600X390/joke_falls.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/16/jog-falls-in-karnataka-are-flowing-in-full-glory-2981695.html
  2981693 லைஃப்ஸ்டைல் செய்திகள் நெகிழ்ச்சியான சம்பவம் இது! தாய்க்கு மகள் கொடுத்த அழகான பரிசு! DIN DIN Thursday, August 16, 2018 12:12 PM +0530  

  ஏர் இந்தியாவில், விமானப் பணிப் பெண்ணாக  பணி புரிந்தவர் பூஜா சின் சான்கர். ஒரு தாய் தான் நல்ல நிலையில் இருந்தால் அதேபோன்று, தன் மகளும் இருக்க வேண்டும் என விரும்புவார்.

  அந்த வகையில், பூஜா சின் சான்கரின் மகள் அஷ்ரிதாவும்,  ஏர் இந்தியாவில்தான் பணிபுரிகிறார். ஆனால் விமானப் பணிப்பெண்ணாக அல்ல,  விமானியாக உள்ளார்.

  இந்த நிலையில்,  பணி ஒய்வு பெறும் தாய்க்கு,  ஒரு நூதன ஆசை.  தன்  மகள் விமானம்  ஓட்ட,  தனது இறுதி நாள் வேலையை அதில் நிறைவு செய்ய வேண்டும் என்று.

  இது பற்றி, ஏர் இந்தியாவிற்கு ஒரு கோரிக்கையாக, பூஜா வைத்தபோது, நிர்வாகம் அதனை பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டது. 

  பூஜா கடைசி நாள் வேலையை  நிறைவு  செய்த விமானத்தை, அவருடைய  மகள் அஷ்ரிதாவே ஓட்டினார்.  பலன்... ஓய்வு பெற்ற தாயை வரவேற்க வேண்டிய மகள், தானே .. தாயை, ஓய்வுக்கு வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார்.

  ]]>
  air india, air hostress, pooja sin sankar, ashritha, ஏர் இந்தியா, பூஜா, விமானப் பணிப்பெண், விமானி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/15/w600X390/mn19.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/16/நெகிழ்ச்சியான-சம்பவம்-இது-தாய்க்கு-மகள்-கொடுத்த-அழகான-பரிசு-2981693.html
  2981682 லைஃப்ஸ்டைல் செய்திகள் கட்லா மீன் மாதிரி இருந்தாலும் அதை விட அதிக சுவை கொண்ட இந்த ‘பெங்பா’ மீனின் சிறப்பு என்ன தெரியுமா? RKV UNI Thursday, August 16, 2018 11:16 AM +0530  

  மணிப்பூரின் மிக அரிதான 'பெங்பா' மீன் வகைகளை மேற்கு வங்க மாநில நீர்நிலைகளில் வளர்த்தெடுக்க அம்மாநில அரசு மிகுந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பெங்பா வகை மீன்கள் இந்தியாவில் பல மாநிலங்களில் மிகுதியாகக் கிடைக்கக் கூடிய ரோஹூ, கட்லா, சில்வர் கார்ப் உள்ளிட்ட மீன் வகைகளைப் போன்ற இயல்புடையது. ஆயினும் அவற்றைக் காட்டிலும் சுவையில் பலபடி மேலானது. அதனால் தான் பெங்பாவுக்கு மணிப்பூர் மாநிலம், மாநில மீன் எனும் சிறப்பு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

  பல்வேறு இயற்கை மற்றும் செயற்கை காரணிகளை முன்னிட்டு இந்த மீன் தற்போது அரிதான மீன் வகைகளில் ஒன்றாக ஆகிவிட்டது. அந்த காரணத்தை முன்னிட்டே மேற்கு வங்கம் பெங்பா மீன்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் குறித்து தற்போது இந்திய அளவில் பெரிதாகப் பேசப்படுகிறது. பெங்பா வகை மீன்கள் அதிகக் குளிர்ச்சியான மணிப்பூர் மாநிலத்தை தாய்மையிடமாகக் கொண்டிருந்த போதும் அம்மீன்கள் வெதுவெதுப்பான நீரிலும் வாழும் தன்மை கொண்டவை. இருவேறு வகையான தட்பவெப்ப நிலைகளைத் தாங்கும் தன்மை கொண்ட அதன் சிறப்பியல்பின் காரணமாக தற்போது மேற்கு வங்கத்தின் ஹால்டியா பகுதிகளில் இவ்வகை மீன்களை வளர்ப்பதற்கான முன்னேற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

  முன்னதாகக் குறிப்பிட்டுள்ளவாறு பெங்பா வகை மீன்கள் இந்தியாவில் பல இடங்களில் வளரக்கூடிய ரோஹு, கட்லா, ம்ரிகல் மற்றும் காமன் கார்ப் வகை மீன்களின் இயல்பையே தானும் கொண்டிருப்பதால் அவற்றுடன் ஒரே மீன் பண்ணையில் சேர்ந்து வளரும் திறனும் கொண்டதாக இருக்கிறது. எனவே இவ்வகை மீன்களை அந்த மீன்களுடன் இணைத்து ஒரே குளத்தில் வளர்ப்பது என்பது மீன் வளர்ப்பாளர்களுக்கு சாதகமான அம்சமாகக் கருதப்படுகிறது. 

  ]]>
  west bengal, மேற்கு வங்கம், பெங்பா மீன், மணிப்பூர் மாநில மீன், pengpa fish, manipur state fish, katla, rohu http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/16/w600X390/pengpa_fish.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/16/rare-pengba-fish-given-new-lease-of-life-by-bengal-govt-2981682.html
  2981176 லைஃப்ஸ்டைல் செய்திகள் சாதனைப் பெண்களின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? இதைப் படியுங்கள்! -இடைமருதூர் கி.மஞ்சுளா DIN Wednesday, August 15, 2018 05:31 PM +0530 சாதனைகள் பல புரிந்த  பெண்மணிகள் பலரைப் பற்றிய வரலாற்றுத் தரவுகளைத் தேடிப் பிடித்து, விடாமுயற்சியுடன் அவற்றை வருங்காலத் தலைமுறையினரும் அறிந்து பயன்பெற வேண்டும் என்பதற்காக அவற்றை நூலாக வடித்தெடுத்துத் தந்திருக்கிறார் பேராசிரியை பானுமதி தருமராசன். புதுக்கோட்டையை சொந்த ஊராகக் கொண்டவர் பேராசிரியை பானுமதி தருமராசன். மகளிர் இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசியும், எழுதியும் வருகிறார்.

  பேராசிரியை பானுமதி, புதுக்கோட்டை ஸ்ரீசாரதா நடுநிலைப் பள்ளியில் தொடக்கக் கல்வியையும், ஆலங்குடி கழக உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.யையும் பயின்று,  புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் படித்து பி.எஸ்.சி. (வேதியியல்) பட்டமும், பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.ஏ., (வரலாறு) எம்.ஃபில் (வரலாறு) பட்டங்களும் பெற்றவர். 1969-இல் நாமக்கல் அரசுக் கல்லூரியில் வேதியியல் விளக்குநராகவும் இருந்துள்ளார்.  (DEMONSTRATOR IN CHEMISTRY), வட சென்னை மகளிர் அரசுக் கல்லூரி, பொன்னேரி மாநிலக் கல்லூரி, ராணிமேரி  கல்லூரி ஆகியவற்றில் வரலாற்றுப் பேராசிரியையாகப் பணியாற்றி,  2006-இல் பணி நிறைவு பெற்றார். 

  பணி நிறைவுக்குப் பின்னரும் இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு செய்யப்பட்டு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் இந்திய வரலாற்றுத்துறை மதிப்புறு பேராசிரியையாகப் பணியாற்றினார். அதுமட்டுமல்ல,  இன்றுவரை "தொடர் கல்வித் துறை'யின் மூலம் வகுப்புகள் நடத்தி வருகிறார். சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான பாடங்களையும், பாட நூல்களையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.

  38 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரலாற்றுத் துறையில் முத்திரை பதித்து இயங்கி வரும் இவர், வரலாறாய் வாழ்ந்து சாதனை படைத்த பெண்மணிகள் பலரைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களை  "வரலாறு படைத்த வைர மங்கையர்' என்கிற பெயரில் மூன்று தொகுதிகளாக எழுதி வெளியிட்டுள்ளார். சாதனை புரிந்த 52 பெண்மணிகளைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இம்மூன்று தொகுதிகளிலும் உள்ளன. 

  அது மட்டுமல்ல, 45 ஆண்டுகளாக முதுகலை மற்றும் மேற்படிப்பு பயிலும் ஆய்வு மாணவர்களுக்கு வரலாற்றுப் பேராசிரியையாக  இருந்து  போதித்து வருகிறார்.

  அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்திற்காக "பன்னாட்டு உறவும் அரசியல் சூழ்ச்சித் திறனும்'; சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி நிறுவனத்துக்காக, "தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வரலாறும் அண்டை நாடுகளும்'; அழகப்பா பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி நிறுவனத்திற்காக "மொகலாய வரலாறு'  ஆகிய நூல்களைத்  தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.  வரலாறு தொடர்பான பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

  தென்னிந்திய வரலாற்றுப் பேரவை, தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை, இந்திய வரலாற்றுப் பேரவை ஆகியவற்றில் வாழ்நாள் உறுப்பினராகவும் இருக்கிறார். பல விருதுகளுக்கும் சொந்தக்காரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

  "சாதனை மங்கையர்' பட்டியலில் இடம்பெற்றுள்ள இவர், ஆழ்வார் ஆய்வு மையம் 2014-ஆம் ஆண்டிற்கான "சான்றோர்' விருதையும்,  சேக்கிழார் ஆராய்ச்சி மன்றம் 2017- சிறந்த பேராசிரியருக்கான "சேக்கிழார்' விருதையும்; சென்னை, சிவநேயப் பேரவை வழங்கிய "தமிழ்ச்சுடர் மாமணி' விருதையும்; பிரத்தியங்கரா அறக்கட்டளை வழங்கிய "காரைக்கால் அம்மையார்' விருதையும்; பெங்களூரில் நடந்த  கம்பன் விழாவில், "தமிழ் வளர்க்கும் சான்றோர்' விருதையும்; பேராசிரியர் கண்ணப்பன்-வாசுகி அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்பட்ட  "வைரமங்கை திலகம்' விருதையும் பெற்றவர். 

  அகில இந்திய சுற்றுலாத் துறை 2013-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடத்திய கருத்தரங்கில் பங்கேற்று, "புதுக்கோட்டையின் சுற்றுலா ஆதாரங்கள்' எனும் பெயரிலும்; 2014-ஆம் ஆண்டு மணிப்பூரில் நடைபெற்ற சுற்றுலாத்துறை மாநாட்டில், "புதுக்கோட்டையைச் சார்ந்த சான்றோர்கள்' எனும் பெயரிலும் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியதோடு,  "தமிழக வரலாற்றில் காலப்பகுப்பு', "இந்திய மகளிரின் உரிமைக்கான தேடல்',  "மனிதக் கல்வி உரிமைகள்'  ஆகிய ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி, பலருடைய பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இவருடைய கணவர் மு.தருமராசன் வங்கி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

  பிறந்த ஊருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக "புதுகைத் தென்றல்' என்ற சிற்றிதழை கடந்த 15 ஆண்டுகளாகத் தொய்வில்லாமல், இந்த "இலக்கிய இணையர்' நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

  ]]>
  woman, successful women, சாதனைப் பெண்கள், பேராசிரியை பானுமதி தருமராசன் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/15/w600X390/mn3.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/15/சாதனைப்-பெண்களின்-வரலாற்றைத்-தெரிந்து-கொள்ள-வேண்டுமா-இதைப்-படியுங்கள்-2981176.html
  2980509 லைஃப்ஸ்டைல் செய்திகள் இத்தனை பெரிய தானியம் எப்படி விளைந்தது? சுவாரஸ்யமான ரஷ்ய நாட்டு நாடோடிக் கதை! DIN DIN Tuesday, August 14, 2018 03:59 PM +0530 ஒருநாள் ஒரு பள்ளமான வயலில் சில சிறுவர்கள் கோழி முட்டை அளவு பெரிய தானியம் ஒன்றைக் கண்டெடுத்தனர். அந்த வழியே போய்க் கொண்டிருந்த ஒருவர், ஒரு காசு கொடுத்து அந்தப் பெரிய தானியத்தை வாங்கிக் கொண்டுபோய், அந்த ஊர் ராஜாவுக்கு அதை ஓர் அதிசயப் பொருளாக விற்று விட்டுப் போனார்.

  அத்தனை பெரிய தானியத்தைக் கண்டிராத ராஜா, உடனே தனது மந்திரிகள், இதர அறிஞர்களையெல்லாம் வர சொல்லி, அந்தப் பொருள் பற்றி விளக்கம் கேட்டார். அவர்கள் எல்லோருமே எத்தனையோ யோசித்தும், அந்தப் பெரிய தானியம் பற்றி ஒன்றும் தெரியாமல் திணறினர். அது பற்றி எதுவும் கூறுவதற்கில்லை என்றும் கூறிவிட்டனர்.

  ராஜா அந்த முட்டை அளவு தானியத்தை தனது அறையின் ஜன்னல் ஓரத்தில் வைத்திருந்தார். பிறகு ஒருநாள் கோழி ஒன்று ஜன்னல் வழியே உள்ளே வந்து அந்த முட்டையைக் கொத்தி, துளைபோட்டுச் சென்றது. அது ஒரு பெரிய கோதுமை தானியம் என்பது அப்போதுதான் எல்லாருக்கும் தெரிந்தது.

  ராஜாவுக்கு ஒரே ஆச்சரியம்! அத்தனை பெரிய தானியம் எங்கே விளைகிறது என்பதைக் கண்டறிய ஆசைப்பட்டார். மீண்டும் மந்திரிகளையும், அறிவாளிகளையும் கூட்டி, அது பற்றி கண்டறியும்படி உத்தரவிட்டார்.

  அவர்களும் திரும்பி வந்து, 'எங்களுக்கு எந்தத் தகவலும் இதுபற்றி கிடைக்கவில்லை. நாங்கள் கற்ற நூல்களிலும் எந்த விவரமும் இல்லை. ஒருவேளை சிறு விவசாய மக்களுக்குத் தெரிந்திருக்கலாம். கேட்டுப் பாருங்கள்' என்று சொல்லிவிட்டார்கள்.

  ராஜாவும் உடனே வயது முதிர்ந்த விவசாயி ஒருவரை அழைத்து வரச் செய்தார். அவரிடம் அந்த தானியத்தைக் காண்பித்தார். பார்வை மங்கிவிட்ட அந்தக் கிழவர், தானியத்தைக் கையால் தடவிப் பார்த்து பதில் சொன்னார். 'ஐயா! நான் இத்தனை பெரிய தானிய விளைச்சலை என் வயலில் விளைத்ததில்லை. வேறு எங்கும் விளைந்ததாகக் கேள்விப்பட்டதும் இல்லை. ஒருவேளை என் தந்தைக்குத் தெரிந்திருக்கலாம். அவரைக் கேட்டுப் பாருங்கள்' என்றார்.

  ராஜா, அந்தக் கிழவரின் தந்தையை அழைத்து வரச் செய்தார். அந்த முதியவர் ஒரு கவைக் கொம்பை மட்டுமே ஊன்றியவாறு நடந்து வந்தார். அவர் பார்வை நன்றாகவே இருந்தது. ராஜா காட்டிய பெரிய தானியத்தைக் கவனித்துப் பார்த்த அவர், ராஜாவைப் பார்த்துச் சொன்னார்: 'இல்லை. இத்தனை பெரிய தானியத்தை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. என் கழனியிலும், ஏன் மற்றவர்களின் கழனியிலும் கண்டதில்லை. எங்கள் தானிய பரிவர்த்தனையில் நாங்கள் கண்டது ஒரே மாதிரியான தானியங்களைத் தான். ஆனால் என் தந்தை அவர் காலத்தில் விளைந்த தானியம் பெரிய அளவில் தானியம் கிடைக்க வசதியாக வளர்த்திருந்ததாக அடிக்கடி சொல்லுவார். அவரை வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள்' என்றார்.

  ஆச்சரியம் அடைந்த ராஜா, அவரது தந்தையான முதியவரை அழைத்தார். ஆனால், அவரோ எந்த கைத்தடியின் உதவியுமில்லாமல், மிடுக்காகவே வந்தார்.
  அவரது கண்பார்வை நன்றாகவே இருந்தது. காது நன்றாகவே கேட்டது. பேச்சும் தெளிவாகவே இருந்தது. ராஜா காண்பித்த தானியத்தைத் தன் கையில் வாங்கிப் பார்த்த அவர், அதை உருட்டிப் பார்த்துவிட்டு, 'இம்மாதிரி தானியத்தைப் பார்த்து வெகு காலமாயிற்று. இப்போதுதான் மீண்டும் பார்க்கிறேன்' என்றவர், அதைக் கொஞ்சம் கடித்து ருசி பார்த்தார். பிறகு தொடர்ந்தார்: 'ஆம். இது அந்த நாளில் நான் பார்த்திருந்த அதே தானியம்தான்' என்றார்.

  அதைக் கேட்டு வியந்துபோன ராஜா, 'ஐயோ தாத்தா, விவரமாகச் சொல்லுங்கள். எங்கே எப்போது இத்தனை பெரிய தானியம் விளைந்தது? நீங்கள் வாங்கி வந்து உங்கள் கழனியில் விளைத்திருக்கிறீர்களா? உங்கள் கழனியில் இத்தனை பெரிய தானியம் விளைந்ததா?' என்று பரபரத்த குரலில் கேட்டார்.

  முதியவர் நிதானமாகப் புன்னகையோடு பதிலளித்தார்: 'நான் உழுது பயிரிட்ட நிலம் கடவுளின் பூமி. நான் எங்கு உழுதேனோ அந்த இடம் எனக்குச் சொந்தம். மற்றபடி நிலம் எல்லோருக்கும் இலவசமாக, சொந்தமாக இருந்த காலம். ஒருவரும் தன்னுடையது என்று எந்த இடத்தையும் சொந்தம் கொண்டாட முடியாத காலம். ஒருவனின் உழைப்பு ஒன்றே அவனுக்குச் சொந்தமான சொத்து'.

  அசந்து போன ராஜா, மேலும் இரண்டு கேள்விகளை அவரிடம் கேட்டார். 'ஐயா! சரிதான். அப்போதெல்லாம் பெரிய அளவில் விளைந்த தானியம் தற்போது ஏன் விளைவதில்லை? மற்றொன்று, உங்கள் பேரன் நடப்பதற்கு இரண்டு கவைக் கொம்புகள் தேவைப்படுகின்றன. உங்கள் மகனுக்கோ ஒரு கொம்பே போதுமானதாக இருக்கிறது. உங்களுக்கோ அது கூட தேவைப்படுவதில்லை. உங்கள் கண் பார்வை தெளிவாகவே இருக்கிறது. பற்கள் கூட உறுதியாக இருக்கின்றன. உங்கள் பேச்சோ தெளிவாகவும், கனிவாகவும் இருக்கிறது. உங்கள் காதுகளும் நன்றாகவே கேட்கின்றன. எப்படி இவையெல்லாம் உங்களுக்கு மட்டும் சாத்தியமாகியிருக்கின்றன?'

  முதியவர் மீண்டும் நிதானமாக பதிலளித்தார். 'காரணம் இதுதான். இப்போதெல்லாம் மனிதர்கள் உழைப்பதில்லை. பிறர் உழைப்பைச் சார்ந்திருக்கிறார்கள். அந்த நாட்களில் கடவுள் விதித்த தர்மத்தின்படி மக்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் விளைத்ததற்கே அவர்கள் சொந்தம் கொண்டாடினார்கள். மற்றவர்களின் விளைச்சலுக்கு ஆசைப்பட்டதில்லை'.

   ராஜாவின் சிந்தனை தெளிவடைய அவர் மெளனமானார்.

  (லியோ டால்ஸ்டாயின் மூலத்தின் தமிழ் வடிவம்)

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/11/w600X390/sk5.JPG http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/14/இத்தனை-பெரிய-தானியம்-எப்படி-விளைந்தது-சுவாரஸ்யமான-ரஷ்ய-நாட்டு-நாடோடிக்-கதை-2980509.html
  2980497 லைஃப்ஸ்டைல் செய்திகள் காக்காவுக்கு கறுப்பு நிறம் எப்படி வந்தது? பர்மிய நாட்டு நாடோடி சிறுகதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்! - அ.குமார் DIN Tuesday, August 14, 2018 01:14 PM +0530 நாள்தோறும் காலையில் உதித்தெழும் சூரிய பகவான், வழியில் ஓர் இளவரசியைப் பார்த்து ஆசைப்பட்டார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் மனித உருவெடுத்து இளவரசியைச் சந்தித்து அன்பு செலுத்தி வந்தார். இளவரசியும் பதிலுக்கு அவரது வருகையை எதிர்நோக்கிக் காத்திருப்பது வழக்கமாகிவிட்டது.

  ஒருநாள் சூரிய பகவான் தனது அன்பை இளவரசிக்குத் தெரிவிப்பதற்காக ரத்த சிவப்பு நிற வைரமொன்றை அவளுக்கு அன்பளிப்பாக அனுப்ப நினைத்தார். அதை ஒரு பட்டுத் துணியிலான பைக்குள் இட்டு, வேகமாகப் பறந்து கொண்டிருந்த காக்கையை அழைத்தார். அப்போதெல்லாம் காக்கைகள் பால் போன்று வெண்மை நிறத்தில் இருந்தன. மனிதர்கள் அருகில் காக்கைகள் வந்தாலே அதிர்ஷ்டம் என்று கருதினார்கள். அதனால் இளவரசிக்கு காக்கை மூலம் தன்னுடைய பரிசை கொடுத்தனுப்பினால் அவளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்குமென சூரிய பகவான் நினைத்தார்.

  வைரம் அடங்கிய பட்டுத் துணியிலான பையை அலகில் கவ்விக் கொண்டு மேகக் கூட்டங்களுக்கிடையே காகம் சென்றபோது, வழியில் எங்கிருந்தோ வந்த உணவு வாசனையை உணர்ந்தது. கீழே பார்த்தபோது திருமண விருந்தொன்று நடந்து கொண்டிருப்பது தெரிந்தது. உடனே சூரிய பகவான் தனக்களித்த வேலையை மறந்தது. முதலில் உணவை ருசி பார்த்து விடவேண்டுமென நினைத்தது.

  மரக்கிளை ஒன்றில் அமர்ந்த காகம், தன்னிடமிருந்த பையை அங்கு முடிச்சு போட்டுவிட்டு உணவைத் தேடிச் சென்றது. காகம் உணவருந்தி கொண்டிருந்த நேரத்தில், அவ்வழியே வந்த வியாபாரி ஒருவன்மரத்தில் பை தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். தன் கையிலிருந்த கோலால் அதை நெம்பி எடுத்தான். பையைத் திறந்து பார்த்தபோது அதற்குள் வைரம் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தான். 

  அவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. வைரத்தை எடுத்து தன்னுடைய பையில் போட்டுக் கொண்டு அதற்குப் பதிலாக உலர்ந்த மாட்டு சாணத்தை அதற்குள் போட்டு பழையபடி மரக்கிளையில் பையை தொங்க விட்டுச் சென்றான்.

  இவையனைத்தையும் அவன் நொடிப் பொழுதில் செய்து விட்டுச் சென்றது காகத்திற்குத் தெரியாது. வயிறாற சாப்பிட்டுவிட்டு வந்த காகம் மரக்கிளையிலிருந்த பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டது. அரண்மனை தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்த இளவரசியிடம் சென்று அந்தப் பையை காகம் ஒப்படைத்தது. இது சூரிய பகவான் அனுப்பிய பரிசாகத் தான் இருக்குமென அவளுக்குத் தெரியும்.

  ஆவலோடு பையைத் திறந்து பார்த்தாள். அதில் இருந்தவை அவளுக்கு அருவெறுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. தன்னை சூரிய பகவான் விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்தவே இப்படியொரு பரிசை அனுப்பியிருப்பதாகக் கருதிய அவள், அதைத் தூர எறிந்துவிட்டு அழுதபடியே அரண்மனைக்குள் சென்றாள். திரும்பவும் அவள் வெளியே வரவே இல்லை.

  நடந்தவற்றை அறிந்த சூரிய பகவான் மிகவும் ஆத்திரமடைந்தார். அவரது கோபத்தினால் வெளிப்பட்ட அக்னி பார்வை காகத்தைச் சுட்டெரித்தது. அதனுடைய உடலும் இறக்கைகளும் கருப்பாக மாறின. அப்போது முதல் காக்கைகள் கருமை நிறத்துடன் காட்சியளிக்க ஆரம்பித்தன. 

  கதை இத்துடன் முடியவில்லை. வைரத்தைத் திருடிச் சென்ற வியாபாரியின் பைக்குள் இருந்த வைரம் கீழே நழுவி ஒரு ஆழமான பள்ளத்திற்குள் விழுந்து மறைந்தது.

  அப்போது முதல் அந்த வைரத்தைத் தேடி பலர் பூமியை ஆழமாகத் தோண்டி வந்தாலும், வேறு வகையான வைரங்கள் தொடர்ந்து கிடைத்து வருகிறதே தவிர சூரிய பகவான் இளவரசிக்கு கொடுத்தனுப்பிய சிவப்பு வைரம் மட்டும் கிடைக்கவில்லை. ஆனால் அன்றைய பர்மா (இன்றைய மியான்மர்) உலகில் வைரச் சுரங்கங்கள் உள்ள நாடுகளில் ஒன்றாக பிரபலமாயிற்று.

  ]]>
  short story, burmese, sun, love, சூரிய பகவான், இளவரசி, காகம், நாடோடி கதை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/7/w600X390/sk6.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/14/காக்காவுக்கு-கறுப்பு-நிறம்-எப்படி-வந்தது-பர்மிய-நாட்டு-நாடோடி-சிறுகதையை-படித்து-தெரிந்து-கொள்ளுங்கள-2980497.html
  2980478 லைஃப்ஸ்டைல் செய்திகள் இனி இளையராஜாவின் பாடல்களை கேளுங்க கேளுங்க கேட்டுக் கிட்டே இருங்க! அதிகாரப்பூர்வமாக இளையராஜா ஆப் அறிமுகம்! DIN DIN Tuesday, August 14, 2018 11:25 AM +0530 இளையராஜா தரப்பில் இருந்து ஒரு மொபைல் ஆப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கான விளம்பரத்தில் இளையராஜாவே நடித்திருப்பதுதான் சிறப்பு. மொபைல் ஆப்பின் பெயர் Maestro's Music. ராஜாவின் இசையை உயர் தரத்துடன் தருகிறது. லாக் ஸ்க்ரீனில் இருந்தே பயன்படுத்த முடிகிறது. ஒவ்வொரு முறையும் ஸ்க்ரீன் திறந்து ஆப்புக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.

  ஜிமெயில் அல்லது ஃபேஸ்புக் மூலம் லாக் இன் செய்து நமக்காக ஸ்பெஷல் ப்ளேலிஸ்ட் தயார் செய்துகொள்ளலாம். நமக்கு வேண்டிய பாடல்களை டவுன்லோடு செய்துகொள்ளும் வசதியும் தருகிறது இந்த ஆப்.

  முதலில் சில நாட்களுக்கு இலவசம். அதன் பின், அன்லிமிடெட் டவுன்லோடுக்கு மாதம் 99 ரூபாய் கட்டணம் கேட்கிறது. ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய்.

  ]]>
  raja, ilaiyaraja, Ilaiyaraja app, Maestro's Music, இளையராஜா, ராஜா, ஃபேஸ்புக், மொபைல் ஆப் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/14/w600X390/Ilayaraja_songs.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/14/இனி-இளையராஜாவின்-பாடல்களை-கேளுங்க-கேளுங்க-கேட்டுக்-கிட்டே-இருங்க-அதிகாரப்பூர்வமாக-இளையராஜா-ஆப்-அறிம-2980478.html
  2980472 லைஃப்ஸ்டைல் செய்திகள் படகில் பயணம் செய்ய, நீச்சல் தெரிந்திருக்க வேண்டுமா? சுவாரஸ்யமான பதிவு! DIN DIN Tuesday, August 14, 2018 11:06 AM +0530 வலைதளத்திலிருந்து...
  அந்த அழகிய ஏரியில் உல்லாசப் படகில் பலரும் பயணித்துக் கொண்டிருந்தார்கள். அதில் நீச்சல் அறிந்தவர்களும் இருந்தார்கள். நீச்சல் அறியாதவர்களும் இருந்தார்கள். நீச்சல் அறிந்தவர்களின் கண்களும் மனமும் ஏரியின் அழகிலும் அதன் குளுமையிலும் மயங்கிக் களிக்க... அது அறியாதவர்களின் மனமும் நினைவும் ஏரியின் ஆழத்தையும் இதற்கு முன் நடந்த விபத்தையும் எண்ணியே கலங்கிக் கொண்டிருந்தது.

  படகில் பயணம் செய்ய, நீச்சல் பயின்றிருக்க அவசியம் இல்லைதான். 

  ஆயினும் ரசித்துப் பயணிக்க, நீச்சல் அறிதல் நிச்சயம் அவசியம். ஆம்... எதையும் வருந்திச் செய்யாது விரும்பிச் செய்யவும், விரும்பிச் செய்வதைத் திருந்தச் செய்யவும், பயிற்சி என்பது நிச்சயம் அவசியம்.
  http://yaathoramani.blogspot.com

  முக நூலிலிருந்து....

  எனக்கான இசையை
  யாரோ இசைக்கிறார்கள்...
  எனக்கான எழுத்தை
  யாரோ எழுதுகிறார்கள்...
  எனக்கான சினிமாவை
  யாரோ எடுக்கிறார்கள்...
  எனக்கான வாழ்வையும்
  யாரோ வாழ்கிறார்கள்.
  - ரெவித்தம்பி பொன்னன்

  இரக்கமும் உறக்கமும் ஒன்றுதான்.
  இரண்டையுமே அளவோடுதான் பயன்படுத்த வேண்டும்.
  அதிகம் உறங்குபவன் சோம்பேறி ஆகிறான்...
  அதிகம் இரக்கம் காட்டுகிறவன்...
  ஏமாளி ஆகிறான். 
  - திருப்பதி ராஜா

  அசைக்க முடியாத நம்பிக்கை வைத்தவர்களையும்...
  அசைத்துப் பார்க்கிறது
  'துரோகம்' 
  என்னும் ஒற்றை ஆயுதம்..!
  - செளந்தரபாண்டியன் 

  வார்த்தைகளின் மதிப்பு
  தெரிந்தவர்களோடு 'வாதம்' செய்...
  வார்த்தைகளினால் வதம் செய்பவரோடு
  'மெளனம்' செய்.
  - வாசுதேவன்

  காட்டும் அன்புக்கு அளவு தேவையில்லை... 
  அளவை எதிர்பார்க்கையில் தான் பலர் தடுமாறி விடுகிறார்கள்.
  - சரவணன் கீழப்பாவூர்

  சுட்டுரையிலிருந்து...

  குழந்தைகளுடன் 
  விளையாடும்போது,
  ஜெயித்துவிடுங்கள்...
  வெற்றி எளிதல்ல என 
  புரியட்டும் !
  - மெத்த வீட்டான்

  பேருந்தில்
  கை தவறிய நாணயத்தைக்
  கண்டுபிடித்து 
  எடுப்பதென்பது...
  தென் கடலில் மூழ்கி
  முத்து எடுப்பதற்குச் சமம்.

  உலகில் எதுவுமே தவறில்லை என்று
  நினைப்பது தவறில்லை.
  ஆனால், தவறைச் செய்துவிட்டு...
  'இது தவறில்லை' என்று
  நம்மை நாமே சமாதானப்படுத்திக் 
  கொள்வது தான் தவறு.
  - ஸ்ரீ

  பெட்ரோல் 
  தீர்ந்தபோதுதான்,
  பாதையின் நீளம்...
  தெரிகிறது.
  - சப்பாணி

  ]]>
  net, blog, twitter, facebook, வலைத்தளம், ட்விட்டர், ஃபேஸ்புக், கவிதை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/14/w600X390/download_1.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/14/படகில்-பயணம்-செய்ய-நீச்சல்-தெரிந்திருக்க-வேண்டுமா-சுவாரஸ்யமான-பதிவு-2980472.html
  2980468 லைஃப்ஸ்டைல் செய்திகள் இனி கடவுச் சொற்களை நினைவில் வைத்திருக்க வேண்டாம், அதற்கு மாற்றாக இனி இதுதான்!  - அ.சர்ஃப்ராஸ் DIN Tuesday, August 14, 2018 10:57 AM +0530 பள்ளிப்பாடங்களை நினைவில் வைத்துக் கொள்வது சிறுவர்களுக்கு எப்படி சவாலான விஷயமோ, அதைப்போல் வங்கி, செல்லிடப்பேசி, கணினி ஆகியவற்றின் கடவுச் சொற்களை (பாஸ்வேர்ட்) நினைவில் வைத்துக் கொள்வது இன்றைய காலங்களில் பெரியவர்களுக்கு சவாலாக உள்ளது.

  இது ஏதோ இந்தியர்களுக்கு மட்டும் உள்ள பிரச்னை என்று கருத வேண்டாம். உலகம் முழுவதும் கடவுச் சொற்களை நினைவு வைத்துக் கொள்வதற்கு படித்தவர்களே கஷ்டப்படுகின்றனர்.

  டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வந்தவுடன் இந்த கடவுச் சொற்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துவிட்டது. என்னதான் கைரேகை பதிவு, முகத் தோற்றப் பதிவு ஆகியவை வந்தாலும் கடவுச் சொற்களை நாம் நினைவில் வைத்தே ஆக வேண்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண 'பாஸ்வேர்டை'ப்போல் 'பாஸ்ஃபிரேஸ்' எனும் கடவு வாக்கியத்தை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். கடவுச் சொல்லை விட கடவு வாக்கியம் 24 சொற்களைக் கொண்டு நீளமாக இருந்தாலும், இதை எளிதில் நினைவில் வைத்து கொள்ளலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அது மட்டுமின்றி கடவுச்சொல், கைரேகைப் பதிவு, முகத் தோற்றம் பதிவு ஆகியவற்றை விட இது மிகவும் பாதுகாப்பானது என்றும் அவர்கள் உறுதியளிக்கின்றனர்.

  6 வார்த்தைகளுடன் கூடிய அந்த கடவு வாக்கியத்துக்கு ஏற்றவாறு ஒரு படத்தையும் பயனாளிகள் தமது நினைவுக்காக வரைந்து வைத்துக் கொள்ளலாம் என்றும் இதனால் அவர்கள் கடவு வாக்கியத்தை எந்தச் சூழ்நிலையிலும் மறக்கவே மாட்டார்கள் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

  இதற்கான சோதனை ஆய்வையும் ஆராய்ச்சியாளர்கள் நடத்தியுள்ளனர். அதில், 50 இளைஞர்களை ஈடுபடுத்தி அவர்களுக்கு கடவு வாக்கியத்தை அளித்துள்ளனர். பின்னர் சில நாள்களுக்கு பிறகு அவர்கள் அந்த கடவு வாக்கியத்தை எழுதி வைக்காமல் நினைவுபடுத்தி சரியாகத் தெரிவித்தும் உள்ளனர். முதல்கட்டமாக இணையதள கடவுச் சொற்களுக்கு பதிலாக கடவு வாக்கியம் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

  ]]>
  password, pass phrase, computer, digital world, பாஸ்வேர்ட், கடவுச் சொல், கடவு வாக்கியம், கணினி, டிஜிட்டல் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/14/w600X390/bg-forgot-password.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/14/இனி-கடவுச்-சொற்களை-நினைவில்-வைத்திருக்க-வேண்டாம்-அதற்கு-மாற்றாக-இனி-இதுதான்-2980468.html
  2978587 லைஃப்ஸ்டைல் செய்திகள் வணிக உலகைக் கலக்கும் சாதனைப் பெண் -சந்திர. பிரவீண்குமாா் DIN Tuesday, August 14, 2018 10:00 AM +0530 இந்தியாவில் படித்து, அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாடு வாழ் இந்தியா்களின் சாதனைப் பட்டியல் நீண்டது. அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் இன்று முதன்மை பெற்று விளங்குவதற்கு இந்திய பணியாளா்களின் திறறமையும், உழைப்பும் தான் காரணம் என்று சொல்லப்படுவதுண்டு. அவா்களில் பலரும் தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறறாா்கள். அந்தப் பட்டியலில் இந்திரா நூயி என்றற பெண்மணிக்கு சிறறப்பான இடம் உண்டு.

  இந்திரா கிருஷ்ணமூா்த்தி நூயி படித்து, வளா்ந்தது நம் சென்னை நகரில் வசித்த ஒரு தமிழ் குடும்பத்தில் தான். 25.10.1955 அன்று பிறறந்தாா். மாம்பலம், புனித ஏஞ்ஜல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் படித்து, சென்னை கிருஸ்துவ கல்லூரியில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய துறைறகளில் 1974-இல் இளநிலைப் பட்டம் பெற்றறாா். பின்னா் கொல்கத்தா, ஐ.ஐ.எம்.மில் 1976-இல் எம்.பி.ஏ. முடித்தாா். சில ஆண்டுகள் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திலும், மேட்டூா் பியா்ட்செல் என்னும் ஜவுளி நிறுவனத்திலும் பணிபுரிந்த நூயி, அமெரிக்காவின் யேல் நகரிலுள்ள யேல் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட்டில் பொது மற்றும் தனியாா் மேலாண்மைத் துறைறயில் 1980-ஆம் ஆண்டில் முதுகலைப் பட்டம் பெற்றறாா். பின்னா் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் (பி.சி.ஜி.) நிறுவனத்தில் மீண்டும் தன் பணியைத் தொடங்கினாா். பின்னா் மோடோரோலா, ஏசியா ப்ரௌன் போவேரி ஆகிய நிறுவனங்களிலும் பணியாற்றினாா்.

  1994-ஆம் ஆண்டில் பெப்சிகோ நிறுவனத்தில் சோ்ந்தது தான் அவரது வாழ்வில் திருப்புமுனை. 2001-இல் அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக (சி.இ.ஓ.) உயா்ந்தாா். அந்தப் பொறுப்பில் அவா் இருந்தபோது, நிறுவனத்தின் நிகர லாபம் இரண்டரை மடங்கு அதிகரித்தது. இந்நிலையில், பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.) இருந்த ஸ்டீவன் ரைநெமண்ட் ஓய்வு பெற்றறதை அடுத்து, 44 ஆண்டுகள் பாரம்பரியமான அந்நிறுவனத்தின் 5-ஆவது தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றறாா் நூயி. அந்நிறுவனத்தின் முதல் பெண் தலைவரும் நூயி தான். அதற்கு முன்னதாக, 1997-இல் பெப்சிகோவின் ஃபாஸ்ட் ஃபுட் பிரிவான யம் பிராண்ட்ஸ் (அப்போதைய பெயா் ‘த்ரைகோன்’) நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணிகளிலும், த்ரோபிகானா, குவேக்கா் ஓட்ஸ், கடோரேஜ் ஆகிய நிறுவனங்களை இணைப்பதிலும் முக்கியப் பங்காற்றியவா் நூயி.

  இந்திரா நூயி தலைமை பொறுப்புக்கு வந்ததும், பெப்சிகோவின் நடவடிக்கைகளில் மாற்றறம் தெரிய ஆரம்பித்தன. உற்சாகப் பானமாக அறியப்பட்ட பெப்சி, ஆரோக்கிய பானங்களை நோக்கி தன் பாா்வையைத் திருப்பியது அப்போதுதான். முதற்கட்டமாக பெப்சிகோ நிறுவனத்தின் தயாரிப்புகளைஉருளைகிழங்கு சிப்ஸ் மற்றும் சாதாரண சோடாக்கள் (ஊன்ய் ச்ா்ழ் ஹ்ா்ன்), கொழுப்பு குறைறந்த தீனிகள் மற்றும் சோடாக்கள் (ஆங்ற்ற்ங்ழ் ச்ா்ழ் ஹ்ா்ன்), ஓட்ஸ் போன்றற உணவு வகைகள் (எா்ா்க் ச்ா்ழ் ஹ்ா்ன்) என்று மூன்று விதமாகப் பிரித்தாா். அனைத்துத் தயாரிப்புகளையும் ஆரோக்கியம் நிறைறந்ததாக தயாரிப்பதில் அக்கறைற செலுத்தினாா். முக்கியமாக, ‘அஸ்பொ்டெம்’ என்றற உட்பொருளை சோ்ப்பதால் பெப்சி தயாரிப்புகள் தீமை கொண்டதாகக் கருதப்பட்டது. அந்த உட்பொருளை அனைத்துத் தயாரிப்புகளில் இருந்து விலக்கினாா் நூயி. பெண்களுக்கான பிரத்யேக உணவுப் பொருட்களை விரைவில் சந்தையில் வெளியிடவுள்ளதாக அண்மையில் அறிவித்தாா் நூயி. நூயியின் ஆண்டு வருமானம் சுமாா் ரூ.117 கோடி ஆகும் (அமெரிக்க டாலா்கள் மதிப்பில் 1.7 மில்லியன்).

  இத்தனை ஆண்டுகளில் ஏராளமான விருதுகளையும், கௌரவங்களையும் பெற்றுள்ளாா், இந்திரா நூயி. ‘ஃபோா்பா்ஸ்’ இதழ் ஆண்டுதோறும் வெளியிடும் உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்மணிகள் பட்டியலில் 13-ஆவது இடத்தில் இருக்கிறறாா். யு.எஸ். நியூஸ் & வோ்ல்ட் ரிப்போா்ட்டின் படி அமெரிக்காவின் சிறறந்த தலைவா்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளாா். அமெரிக்காவில் உள்ள 20 இந்திய வா்த்தகப் பிரமுகா்கள் உள்ள அமெரிக்க-இந்திய வா்த்தக கவுன்சிலின் தலைவராக உள்ளாா். என்டிடிவியால் கடந்த 2014-இல் உலகின் சிறறந்த 25 மனிதா்கள் பட்டியலில் தோ்ந்தெடுக்கப்பட்டு, அப்போதைய குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியால் கௌரவிக்கப்பட்டாா். சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வரும் நூயி, சா்வதேச பொருளாதார கூட்டமைப்பு, சா்வதேச மீட்புக் குழு போன்றறவற்றிலும் செயல்பட்டு வருகிறறாா். கடந்த 2016, டிசம்பா் மாதம் அதிபா் ட்ரம்ப்புக்கு பொருளாதார விவகாரங்களுக்கு ஆலோசனை தரும் பிரமுகா் குழுவிலும் இந்திரா நூயி இடம்பெற்றுள்ளாா். ஹிலாரி கிளிண்டனின் ஆதரவாளராகக் கருதப்படும் நூயி, அவா் அதிபா் தோ்தலில் போட்டியிட்டு தோற்றறபோது துவண்டு போனாா். சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் ஆா்வலராக நூயி, சா்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முதல் பெண் இயக்குநராக கடந்த பிப்ரவரி மாதம் சோ்த்துக்கொள்ளப்பட்டாா்.

  இந்திரா நூயிக்குப் பதிலாக புதிய தலைமை செயல் அதிகாரியாக ரமோன் லகுவா்டா, வரும் அக்டோபா் 3-ஆம் தேதி பொறுப்பேற்பாா் என்று அறிவித்துள்ள பெப்சிகோ நிறுவனம், எனினும் அடுத்த ஆண்டின் முற்பகுதி வரை நிறுவனத்தின் தலைவராக நூயி தொடா்வாா் என்றும் கூறியுள்ளது.

  இந்திரா நூயியின் சகோதரி சந்திரிகா கிருஷ்ணமூா்த்தி டாண்டனும் அமெரிக்க வாழ் வணிகப் பெண்மணியே. மேலும், இசையில் சிறறந்தவா்களுக்கு வழங்கப்படும் ‘கிரம்மி’ விருதைப் பெற்றுள்ள இசைக் கலைஞா் சந்திரிகா என்பது குறிப்பிடத்தக்கது.

  ]]>
  http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/11/w600X390/pepsico.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/14/வணிக-உலகைக்-கலக்கும்-சாதனைப்-பெண்-2978587.html
  2979851 லைஃப்ஸ்டைல் செய்திகள் நல்ல தரமான உணவு வகைகள் நியாயமான விலையில் வேண்டுமா?  - ஸ்ரீ DIN Monday, August 13, 2018 04:00 PM +0530 'இங்கு பலவிதமான தொழில்கள் செய்வதற்கான ஆலோசனைகள் வழங்கினாலும் உங்களால் எதை செய்தால் வெற்றிகரமாக செய்ய முடியுமோ அதை செய்யுங்கள். தற்பொழுது பெரும்பாலானோர் மத்தியில் உணவு சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. அதனால் நமது பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களைத் தேடிக் கொண்டே இருக்கிறோம். நல்ல தரமான உணவு வகைகள் நியாயமான விலையில் கடைகளில் கலப்படம் இல்லாமல் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று பலரும் நினைக்கின்றனர். எனவே, உணவுத் தொழில் எப்போதும் நமக்கு கை கொடுக்க கூடியது. அந்த வகையில், வீட்டில் இருந்தபடியே சில உணவு வகைகளை எப்படி தயார் செய்து விற்பனை செய்யலாம் என்பதை பார்க்கலாம்' என்கிறார் சுயதொழில் ஆலோசகர் உமாராஜ்.

  சேவை: சேவை எப்படி தயார் செய்வது என்பதை. அதாவது பச்சரிசியில் செய்வது இடியாப்பம், புழுங்கல் அரிசியில் செய்வது சேவை. இதை அரிசியில் மட்டுமல்லாமல் கோதுமை, கேழ்வரகு மற்றும் சிறுதானியத்திலும் செய்ய முடியும். இதை செய்வதும் எளிது. புழுங்கல் அரிசியை ஊற வைத்து பின் அரைத்து அதை இட்லி போல் வேக விட்டு பின்னர் அதை இடியாப்ப அச்சிலிட்டு பிழிய வேண்டும். பெரிய அளவில் இதைச் செய்ய இதற்கான இயந்திரங்கள் உண்டு. உங்களால் ரூ. 70,000 முதலீடு செய்ய முடிந்தால் அல்லது வங்கியில் கடன் பெற முடியும் என்றால், வீட்டில் 10க்கு 10 இடம் இருந்தாலே போதும். இதை எளிதாக செய்யலாம். இதற்கு வீட்டு உபயோகத்தில் இருக்கும் மின்சாரம் போதுமானது. என்னால் இவ்வளவு முதலீடு செய்ய இயலாது என்றால் இதனை செய்பவர்களிடமிருந்து மொத்தமாக வாங்கி அதை விதவிதமாக தயார் செய்யலாம். அதாவது அதை எலுமிச்சை சேவை, தேங்காய் சேவை, வெஜிடபிள் சேவை மற்றும் மஸ்ரூம் சேவை என பலவிதமாக தயார் செய்து விற்பனை செய்யலாம். சின்ன சின்ன கம்பெனிகள் நிறைய உள்ள இடங்களில் ஆர்டர் எடுத்து சப்ளை செய்யலாம். இதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.

  பாப்கார்ன்: நீங்கள் இருக்கும் பகுதி, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி எனில், உங்களால் ரூ. 12,000 முதலீடு செய்ய முடியும் என்றால் பாப்கார்ன் செய்யும் மிஷின் வாங்கி இதனை தயாரிக்கலாம். மேலும், மிஷின் வாங்கும் போது அதனை எப்படி உபயோகப்படுத்துவது என கற்றும் தருவார்கள். பாப்கார்னில் தற்போது நிறைய வகைகள் இருக்கிறது. அதனை அவர்களே சப்ளையும் செய்கிறார்கள். நீங்கள் சில்லறை வியாபாரிகளுக்கு மொத்த விலையில் கொடுக்கலாம்.

  சப்பாத்தி: திருமண விசேஷங்கள், ஓட்டல்கள் மற்றும் சிறிய விசேஷங்களுக்கு சப்பாத்தி செய்வது எளிதல்ல. அதிகளவில் சப்பாத்தி செய்வதற்கு இயந்திரம் உள்ளது. சில மிஷின்கள் மாவை பிசைந்து, பின் அதை உருண்டையாக்கி, பின் அதுவே வட்ட வடிவமாக செய்து தரும். இதில் கால்வாசி வெந்துவிடும். பிறகு அதை ரெடிமேட் சப்பாத்தியாக விற்பனை செய்யலாம். இது தற்போது சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கிறது. இதை வாங்கி சப்பாத்தி கல்லில் போட்டு சுட்டு எடுத்தால் சப்பாத்தி ரெடி. இன்னொரு இயந்திரம் உள்ளது அதில் மாவை போட்டால், பிசைந்து , உருட்டி, திரட்டி சப்பாத்தியாக கொடுத்துவிடும். இது விலை சற்று அதிகம். குறைந்த நேரத்தில் நூற்றுக்கணக்கான சப்பாத்திகளை செய்யக் கூடியது. ஆக உங்களால் ரூ.1 லட்சம் முதல் 2.50 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும் என்றால், வீட்டில் இடவசதி உள்ளது என்றால் சப்பாத்தி செய்யும் தொழிலை செய்யலாம். கேட்டரிங் செய்பவர்கள், ஓட்டல் நடத்துவோரிடம் ஆர்டர் பிடித்து செய்ய நல்ல லாபம் கிடைக்கும். இது போன்ற இயந்திரங்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் கிடைக்கிறது.

  ]]>
  sevai, vegetable sevai, cutlet, சேவை, பாப்கார்ன், சப்பாத்தி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/9/w600X390/mm3.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/13/நல்ல-தரமான-உணவு-வகைகள்-நியாயமான-விலையில்-வேண்டுமா-2979851.html
  2979796 லைஃப்ஸ்டைல் செய்திகள் ஸ்மார்ட்ஃபோனின் 5 தீமைகள் இவைதான்! சினேகா DIN Monday, August 13, 2018 10:35 AM +0530
   

  1. நீண்ட நேரம் அலைபேசியைப் பயன்படுத்துவோருக்கு பலவிதமான உடல் பிரச்னைகள் ஏற்படுகின்றது. ஸ்மார்ட்ஃபோன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான கேன்சர் கட்டிகள் உருவாகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.  
  2. இசைப்பிரியர்கள் ஹெட்ஃபோனைப் பயன்படுத்தி பலமணி நேரம் பாடல்களை கேட்கின்றனர், அல்லது காணொலி ஏதேனும் பார்க்கிறார்கள். இது காதுகளுக்கு மட்டுமல்லாமல் மூளைக்கும் பெரும் ஆபத்து. செல்ஃபோனை வலது காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசுவது நல்லது. வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மூளை பாதிப்பின் முதல் அறிகுறி மறதி. இந்த வயசிலேயே இவ்வளவு மறதியா என்று யாரேனும் உங்களிடம் சொன்னால் உடனடியாக அலர்ட் ஆகுங்கள்.
  3. நீண்ட நேரம் அலைபேசியையே பார்த்துக் கொண்டிருப்பதால், ஒருவர் கண்ணிமைக்கும் நேரம் குறைந்து போகிறது. அது கண்ணின் சுமையை வெகுவாக அதிகரித்து, கண்ணை உலர்ந்து போகச் செய்கிறது. கண் எரிச்சல், கண்களிலிருந்து நீர் கசிதல் உள்ளிட்ட பல பிரச்னைகள் உண்டாகி, நாட்போக்கில் கண் பார்வையை மங்க செய்கிறது.
  4. ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டால் பதின் வயதுப் பெண்கள் விரைவில் பூப்படைகிறார்கள் என்கிறது ஒரு ஆராய்ச்சி. ஸ்மார்ட்ஃபோனின் ஒளி காரணமாக, மெலடோனின் குறைபாடு உண்டாகி, ஹார்மோன் சுழற்சியில் குழப்பம் உண்டாகிறது. இதனால் இரவில் தூக்கம் வராமல் இருப்பதிலிருந்து உடல் தன் இயல்பிலிருந்து மாறும் நிலை ஏற்படுகிறது. உடல்நலத்தில் அக்கறை இல்லாமல் வாழ்க்கை முறை செல்போனால் கடுமையாக மாற்றம் அடைவதால் இயல்பாக நடக்க வேண்டிய விஷயங்கள் முன்னரே நடக்கின்றது.
  5. நீண்ட நாட்கள் செல்ஃபோன் பழக்கத்தினால் தூக்கம் இல்லாமல் இருப்பது நாளடைவில் நியூரோடாக்ஸின் என்னும் நரம்பு நச்சினை உருவாக்கிவிடும். இதனால் மன அழுத்தப் பிரச்னைகள் ஏற்படும். 
  ]]>
  Smart phone, ஸ்மார்ட் ஃபோன், mobile phone, மொபைல் ஃபோன், cell phone, செல்ஃபோன் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/13/w600X390/girl.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/13/5-damages-due-to-usage-of-smart-phone-2979796.html
  2978649 லைஃப்ஸ்டைல் செய்திகள் கலைஞர் ஸ்பெஷல்... டயட் சீக்ரெட்ஸ்! RKV DIN Saturday, August 11, 2018 05:59 PM +0530  

  கலைஞரைப் பற்றிப் பேசும் போது பலருக்கும் அவரது சோர்வில்லாத உற்சாக வாழ்க்கைமுறை பற்றி ஆச்சர்யமாகவே இருக்கும்..

  எப்படி முடிகிறது இந்த மனிதரால்?

  எப்போதும் இப்படி சுறுசுறுப்பாக இயங்க... என்று  அவரைப் பற்றி அறிய நேர்ந்த எவரும் யோசிப்பார்கள்.

  அதில் பெரிய ரகசியமெல்லாம் ஒன்றுமில்லை. நான் இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு கோட்டைப் போட்டுக் கொண்டு அந்த கோட்டுக்குள் தனக்கான அரசியல் பணி, வாசிப்பு, எழுத்துப்பணி, கலை பங்கேற்பு, குடும்பப் பொறுப்புகள், உறவுகள், தொண்டர் படைகள், டயட் முதற்கொண்டு வாழ்வின் அத்தனை விஷயங்களையும் அடக்கத் தெரிந்திருந்தது கலைஞருக்கு. அவ்வளவு தான்.

  ஆனால் அதை எப்படி தான் வாழ்ந்த அத்தனை வருடங்களும் அவர் இடைவிடாமல் கடை பிடித்தார் என்பதில் இருக்கிறது கலைஞர் இத்தனை ஆண்டு சாதனைகளுக்கான மந்திரம்.

  முதலில் கலைஞரின் டயட் சீக்ரெட்டுகளைத் தெரிந்து கொள்வோம்...

  பிறகு அடுத்தடுத்து அவரது பிற ரசனைகளையும் ஒவ்வொன்றாகத் தெரிந்து கொள்வோம்.

  • கலைஞர் எத்தனை கஷ்டங்களையும் தாங்கும் விதத்தில் வலிமையான மனம் மட்டும் மல்ல உடல் ஆரோக்யமும் கொண்டவர். அவருக்கு ஆரோக்யம் சார்ந்து எப்போதாவது வரக்கூடிய பிரச்னை என்றால் அது அஜீரணக் கோளாறு தான்.
  • சாப்பாடு விஷயத்தில் கலைஞர் எப்போதுமே மிகவும் ஸ்ட்ரிக்ட். அவருக்கு வெளியில் ரெஸ்டரெண்டுகளுக்குச் சென்று சாப்பிடுவது என்றால் சுத்தமாகப் பிடிக்காது. குழந்தைகளையும், பேரன், பேத்திகளையும் கூட ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடுவது தெரிந்தால் சத்தம் போடுவார். அதனால் அவர் ஊரில் இல்லாத நாட்களாகப் பார்த்து தான் பிள்ளைகள் வெளியில் சென்று சாப்பிடுவது வழக்கம்.
  • வீட்டில் பொங்கல் செய்திருந்தால் விரலால் தொட்டுப் பார்த்து விட்டு விரலில் எண்ணெய் ஒட்டவில்லை என்றால் தான் கொஞ்சமாகச் சாப்பிடுவார். இல்லாவிட்டால் அப்படியே தட்டில் ஒதுக்கி வைத்து விடுவார்.
  • வாரத்தில் 2 நாட்கள் ஆப்பம் செய்யச் சொல்லி சாப்பிடுவார். இட்லிக்கு தேங்காய்ச் சட்னி பிடிக்காது அவருக்கு சாம்பார் இல்லாவிட்டால் வேறு ஏதேனும் தேங்காய் சேர்க்காத சட்னி செய்ய வேண்டும்.
  • 2007 ஆம் வருடத்திற்கு முன்பு வரை 12 மணியானால் ஒரு கப் சிக்கன் சூப் குடிக்கும் வழக்கமிருந்தது. ஆனால் 2007 க்குப் பிறகு ஏனோ காய்கறி சூப்புக்கு மாறி விட்டார்.
  • சூப் சாப்பிடுவதற்கு முன்பு 11 மணி போல சூடாக ஒரு கப் காஃபி அருந்துவார். கோடைகாலமென்றால் காஃபிக்குப் பதிலாக இளநீர் அருந்துவார்.
  • மதிய உணவில் கண்டிப்பாக ஒரு கீரை இருக்க வேண்டும். முள்ளங்கி, கத்தரிக்காயெல்லாம் அவருக்கு ரொம்ப ப்ரியம். ஆனால், அதை பொரித்தோ, வதக்கியோ சமைத்து வைக்கக் கூடாது. குழம்பு வைத்துத் தான் சாப்பிடத் தர வேண்டும். இல்லாவிட்டால் பயங்கரமாகக் கோபப்படுவார்.
  • மாலையானால் ஸ்னாக்ஸ் சாப்பிடும் வழக்கம் கிடையாது. எப்போதாவது தோசை சாப்பிடுவார்... இல்லாவிட்டால் ப்ரெட்டை சூடான டீயில் முக்கிச் சாப்பிடப் பிடிக்கும்.
  • பசி அதிகமாக இருந்தாலோ அல்லது சோர்வாக இருந்தாலோ இடையில் இரண்டு பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டுக் கொள்வார்.
  • இரவு உணவாக இரண்டே இரண்டு சப்பாத்தியும் குருமாவும் எடுத்துக்கொள்வார்.
  • இரவில் கண்டிப்பாக திராட்சை, சப்போட்டா, பப்பாளிப் பழங்கள் சில துண்டுகள் சாப்பிடுவார்.

  அவருடைய உடல்நலத்துக்காக அவர் தொடர்ந்து செய்து வந்த ஒரு விஷயம் நடைபயிற்சி. அறிவாலயம் கட்டியதிலிருந்து தினமும் அங்கே 20 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வழக்கம் அவருக்கு இருந்தது. அது மட்டுமல்ல இரவு பேரக்குழந்தைகளுடன் அரட்டை, எழுத்துப்பணி எல்லாம் முடித்து எத்தனை மணிக்குத் தூங்கச் சென்றாலும் காலை 5.30 மணிக்கு எழுந்து விடுவார். 

  இப்படியெல்லாம் தனக்கென ஒரு கட்டுதிட்டமான உணவுப் பழக்கத்தை வரையறுத்துக் கொண்டு அதிலிருந்து எப்போதும் வழுவாமல் வாழ்ந்ததால் மட்டுமே கலைஞரால் 94 வயது வரை பெரிதாக எந்த ஆரோக்யக் கோளாறுகளும் இன்றி ஊர் மெச்ச உலகு மெச்ச வாழ்ந்து முடிக்க முடிந்திருக்கிறது.

  ]]>
  கலைஞர் ஸ்பெஷல் டயட் சீக்ரெட்ஸ், kalaignar special diet secrets http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/11/w600X390/kalaignars_diet_secrets.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/11/kalaignar-special-diet-secrets-2978649.html
  2978647 லைஃப்ஸ்டைல் செய்திகள் இரண்டு பேர் மட்டுமே அமரக் கூடிய விமானத்தில் பறக்கவிருக்கும் பெண்கள்!  - பனுஜா DIN Saturday, August 11, 2018 05:48 PM +0530 'சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு..' என்று கேட்பவர்கள் வானில் பறந்து சாதனை நிகழ்த்தி வரும் ஆரோஹி பண்டிட், கீதர் மிஸ்கிட்டா. இருபதுகளில் நிற்கும் இந்த இளம் விமானிகள் தொண்ணூறு நாட்களில் சுமார் இருபது நாடுகளை வலம் வரப் போகிறார்கள். இவர்களது பயணம் பாட்டியாலா விமான தளத்திலிருந்து சிறகு விரித்துள்ளது. வானிலிருந்து இயற்கை அழகை ரசிக்கும் இவர்கள் வானில் தொண்ணூறு நாட்கள் சிறிய விமானத்தில் பயணம் செய்து முதல் இந்தியப் பெண்மணிகள் என்ற பெருமையைப் பெறுவார்கள்.

  பல நாடுகளில் இவர்களின் விமானம் இறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களின் வான் பயணத்திற்கு 'மஹி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

  மஹி என்றால் வட மொழியில் புவி அல்லது பூமி என்று பொருளாம். புவியைப் பார்த்தவாறே பறப்பதால் 'மஹி' என்று பெயர் வைத்தோம் என்கிறார் ஆரோஹி.

  'நாங்கள் பயணிக்கும் இந்தக்குட்டி விமானம் ஒரு மணிநேரத்தில் 215 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் உள்ளது. விமானத்தில் வெறும் அறுபது லிட்டர் பெட்ரோல்தான் நிரப்ப முடியும். அதனால், அதிக பட்சம் வானில் நான்கரை மணி நேரம் மட்டுமே பறக்க முடியும். இரண்டு பேர் மட்டுமே அமரக் கூடிய விமானம் இது. திடீரென்று அசம்பாவிதம் நடந்தால் விமானத்திலிருந்து குதித்து உயிர் தப்ப பாராசூட் வசதி உண்டு. நாங்கள் மூன்று கண்டங்களில் இருபத்து மூன்று நாடுகளை தொண்ணூறு நாட்களில் சுற்றுவோம். அந்த நாடுகளில் தென்கிழக்கு ஆசிய நாடுகளான ஜப்பான், ரஷ்யா, கனடா, அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்தும் அடங்கும்.

  'இந்தியாவில் குட்டி விளையாட்டு ரக விமானத்தை ஓட்டுவதற்கான அனுமதியை முதன்முதலாக பெற்றிருப்பது நாங்கள்தான். நாங்கள் மும்பை பிளையிங் கிளப்பில் விமானம் ஓட்டுவதில் முதல் நிலை பட்டப்படிப்பில் தேர்வு பெற்றுள்ளோம். இந்த வான் வழி பயணத்திற்கான வேலைகள் சென்ற ஏப்ரல் மாதம் தொடங்கினோம். எங்களது பயணத்திற்கு, 'பேட்டி படாவோ பேட்டி பச்சாவோ' திட்டத்தின் கீழ் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை ஆதரவும் கிடைத்துள்ளது' என்கிறார் ஆரோஹி.

  ]]>
  fly, flight, 90 days., விமானம், இளம் விமானிகள், ஆரோஹி பண்டிட், கீதர் மிஸ்கிட்டா http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/9/w600X390/AAROHI.JPG http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/11/இரண்டு-பேர்-மட்டுமே-அமரக்-கூடிய-விமானத்தில்-பறக்கவிருக்கும்-பெண்கள்-2978647.html
  2978640 லைஃப்ஸ்டைல் செய்திகள் கலர் கலரான பட்டுப்புடவைகளை கரை படியாமல் பத்திரப்படுத்த சில வழிமுறைகள்! - எஸ்.சரோஜா DIN Saturday, August 11, 2018 04:39 PM +0530
 • பட்டுப் புடவை போன்ற விலையுர்ந்த புடவைகளை வாங்குவதற்கு முன் அதை கடையை விட்டு வெளியில் சூரிய வெளிச்சத்தில் சரி பார்த்து வாங்கவும். 
  • விலை உயர்ந்த புடவையை அணிவதற்கு முன், மறக்காமல் அதில் ஃபால்ஸ் தைத்து அணியவும்.
  • புடவையை அணிந்து கழற்றியவுடன் மடித்து வைப்பதைத் தவிர்க்கவும். துணிகளில் உள்ள வியர்வை, கறைகளை ஏற்படுத்தும்.
  • சாப்பிடும் போது ஏதேனும் கறை பட்டால் உடனே தண்ணீரில் அந்த இடத்தை சுத்தம் செய்துவிடவும்.
  • வார்ட்ரோபில் பூச்சிகளை விரட்ட ஒரு துணியில் ஓடோனில் சுற்றி வைக்கவும். நேரடியாக வைத்தால் இதன் வாசனை துணிகளில் ஒட்டிக் கொள்ளும். 

  • ரச கற்பூரத்தை தவிர்க்கவும். இதில் உள்ள ரசாயனப் பொருட்கள் ஜரிகை கறுப்பதற்கு காரணமாகிறது.
  • வாசனைப் பொருட்களை நேரடியாக ஜரிகையில் தெளிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
  • விலை உயர்ந்த துணி வாங்கி உடைகள் தைக்க வேண்டும் என்றால் அதற்கு மறக்காமல் நல்ல தரமான, அதே நிறத்தில் உள்ள லைனிங் துணியை வாங்கவும். லைனிங் வைக்கவில்லை என்றால் வியர்வையால் உடை கெட்டுப் போக வாய்ப்புண்டு.
  • டிஷ்யு, பனாரஸ் போன்ற புடவைகளை மடித்து வைத்தால் விரைவில் மடிப்பில் கிழிந்து போகும். எனவே, நூல்கண்டு போல சுற்றிதான் வைக்க வேண்டும்.
  • ஜர்தோசி, சமிக்கி வேலைப்பாடு உள்ள புடவைகளை வெள்ளை பருத்தித் துணியில் சுற்றி வைக்க வேண்டும். 
  • காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளை ஒன்று இரண்டாக மடிக்க வேண்டும். பட்டுப்புடவைகளை டிரைகிளீன் மட்டுமே செய்ய வேண்டும்.
  • நிறைய புடவைகளை ஒரே பெட்டியிலோ, பீரோவிலோ அழுத்தி அடுக்கி வைக்கக் கூடாது. இப்போது புடவைகளுக்கான கவர் கிடைக்கிறது. அதில் புடவைகளை மடித்து வைக்கலாம்.
  • ஷிபான் புடவைகளை ஹாங்கரில் தொங்கவிட வேண்டும்.
  • சமிக்கி வேலைப்பாடு உள்ள புடவைகளை பிரஷ் போட்டு துவைக்காமல், சோப்புத் தண்ணீரில் நனைத்து அலசினால் போதுமானது. 
  ]]>
  silk saree, silk preservation, சில்க், பட்டுப்புடவை, பட்டுப்புடவை பத்திரம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/10/22/w600X390/kanchipuram-bridal-sarees.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/11/how-to-preserve-your-costly-silk-sarees-2978640.html
  2978633 லைஃப்ஸ்டைல் செய்திகள் உலகின் மிக அழகான சிறுமி இவள்தான்!  - சுதந்திரன் DIN Saturday, August 11, 2018 04:06 PM +0530 நைஜீரியாவைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமிதான் இப்போதைய அழகான சிறுமி. அந்த சிறுமியின் பெயர் ஜேர். பார்க்க பார்பி பொம்மை மாதிரி இருக்கும் இந்த சிறுமியின் கண்களும் சுருள் சுருளாக இருக்கும் தலைமுடியும் அழகைக் கூட்டுகிறதாம். இது சிறுமியின் படங்களை பார்த்தவர்களின் கணிப்பு.

  இந்த சிறுமியின் படங்களை படம் எடுத்த மோஃப். கூறுகையில்: 'ஆம்... இந்தப் பெண் மனுஷிதான்... தேவதையும் ஆவாள்'. காமிராவை கிளிக் செய்யும் போது சிறுமியை சிரிக்கச் சொல்லியிருக்கலாம். ஆனால் அது செயற்கையாக அமைந்திருக்கும். சிறுமியின் கண்கள் பேசட்டும் என்று சிறுமியின் போக்கில் விட்டு படம் பிடித்தேன்' என்கிறார். இன்ஸ்ட்டாகிராமில் வெளியான இந்தப் படங்கள் வைரலாகி உலகின் மிக அழகான சிறுமி என்ற பாராட்டையும் பெற்றிருக்கிறாள். வலை தளங்களை வளைத்துப் போட்டிருக்கும் அழகான சிறுமி என்றும் போற்றப்படுகிறாள். 'உலகின் மிக அழகான சிறுமி' என்று தன்னைக் கொண்டாடுவதை ஜேர் அறிந்திருப்பாளா என்பதும் சந்தேகமே.!

  ]]>
  jare, beautiful girl, nigerian girl, ஜேர், அழகான சிறுமி, உலகில் அழகான சிறுமி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/11/w600X390/Baby-Jare.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/11/meet-jare-the-nigerian-child-most-beautiful-girl-in-the-world-2978633.html
  2978620 லைஃப்ஸ்டைல் செய்திகள் கேரளாவில் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் 44 ஆறுகள் லிஸ்ட்... RKV DIN Saturday, August 11, 2018 03:06 PM +0530  

  கேரளாவே வெள்ளத்தில் மிதப்பது தான் இன்றைய தலைப்புச் செய்தி; ஏனெனில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பலத்த மழை பொழிந்து வருவதால் கடந்த சில தினங்களாகவே கேரளாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மொத்தம் 14 மாவட்டங்களை உள்ளடக்கிய கேரள மாநிலத்தில் மொத்தம் 44 ஆறுகள் உள்ளன. இந்த 44 ஆறுகளிலும் பாரபட்சமின்றி வெள்ளம் பெருக்கெடுத்து ஒடிக் கொண்டிருப்பதால் அணைகளில் கூட வெள்ளநீரைத் தேக்கி வைத்துக்கொள்ள இடமின்றி தற்போது அத்தனை அணைகளையும் கேரள அரசு திறந்து விட்டுள்ளது. கேரளாவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் அந்த 44 ஆறுகள் என்னென்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

  பொதுவாக கேரளாவில் ஆறுகள் அளவில் சிறியவை மட்டுமல்ல, அவை கடந்து சென்று கடலில் கலக்கும் தூரமும் குறைவு என்பதாலும், கேரளாவில் மலைப்பாங்கான பிரதேசங்கள் அதிகம் என்பதாலும் ஆறுகளின் வேகம் மிதமிஞ்சியதாக இருக்கும். போலவே மழைப் பருவங்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் கோடையில் இந்த ஆறுகளில் பலவும் முற்றிலும் வற்றி உலர்ந்து போகும் தன்மையும் கொண்டவை. மொத்தம் 44 ஆறுகளில் 41 ஆறுகள் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பாயக்கூடியவையாகவும் மீதமுள்ள 3 ஆறுகள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பாயக்கூடியவையாகவும் உள்ளன.

  மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள் (41)

  1. பெரியார் ஆறு மற்றும் அதன் கிளையாறுகள்...

  • இடமலா ஆறு
  • செருத்தோணி ஆறு
  • முல்லையார் ஆறு
  • முத்திரப் புழா ஆறு
  • பெரிஞ்ஞான் குட்டி ஆறு

  2. பரதப்புழா ஆறு மற்றும் அதன் கிளையாறுகள்...

  • துத்தப்புழா ஆறு
  • காயத்ரிப் புழா ஆறு,
  • கல்பாத்திபுழா ஆறு,  
  • கண்ணாடிப்புழா ஆறு 

  3. பம்பா நதி மற்றும் அதன் கிளையாறுகள்...

  • அழுதயாறு 
  • காக்கியாறு, 
  • காகட்டாறு 
  • கல்லாறு  
  • பெருந்தேனருவி 
  • மடத்தருவி 
  • தனுங்கட்டித்தோடு 
  • கோழித்ஹ்டோடு 
  • வரட்டாறு 
  • குட்டேம்பெரூர்

  4. சாலியார் ஆறு மற்றும் அதன் கிளையாறுகள்...

  • செறுபுழா (மாவூர்)
  • இருவஞ்சிப்புழா
  • செறுபுழா (அரீகோட்)
  • குத்திரப்புழா 
  • குறுவன் புழா
  • கஞ்சிரப்புழா
  • கரிம்புழா
  • பாண்டிப்புழா
  • நீருப்புழா

  5. சாலக்குடி ஆறு & கிளையாறு...

  • பரம்பிக்குளம் ஆறு

  6. கடலுண்டி ஆறு

  7. அச்சன்கோயில் ஆறு

  8. கல்லடா ஆறு

  9. மூவாட்டுப்புழா ஆறு

  10. வலப்பட்டணம் ஆறு

  11. சந்திரகிரி ஆறு

  12. மணிமாலா ஆறு

  13. வாமனபுரம் ஆறு

  14. குப்பம் ஆறு

  15. மீனாட்சி ஆறு

  16. குட்டியாடு ஆறு 

  17. கரமனா ஆறு 

  18. சிரியா ஆறு 

  19. கரியங்கோடு ஆறு

  20. இத்திக்கர ஆறு 

  21. நெய்யாறு 

  22. மாஹே ஆறு

  23. கெச்சேரி ஆறு

  24. பெரும்பா ஆறு

  25. உப்பள ஆறு

  26. கருவன்னூர் ஆறு

  • குருமலி ஆறு

  27. அஞ்சரகண்டி ஆறு

  28. திரூர் ஆறு

  29. நீலேஷ்வரம் ஆறு

  30. பலிக்கல் ஆறு

  31. கல்லயி ஆறு

  32. கோரப்புழா ஆறு

  33. மோக்ரல் ஆறு

  34. கவ்வை புழா ஆறு

  35. தனிக்குடம் ஆறு

  36. மாமம் ஆறு

  37. தலசேரி ஆறு

  38. சித்தரி ஆறு

  39. ராமாபுரம் ஆறு

  40. அயிரூர் ஆறு

  41. மஞ்சேஸ்வரம் ஆறு

  கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகள்... (3)

  1. கபனி 
  2. பவானி 
  3. பம்பாறு

   

  ]]>
  KERALA RIVERS, LIST OF KERALA RIVERS, கேரளா ஆறுகள் , கேரளத்தின் 44 ஆறுகள் லிஸ்ட், கேரளா வெள்ள அபாயம், kerala flood http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/11/w600X390/kerala_rivers.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/11/கேரளாவில்-பெருக்கெடுத்தோடு-44-ஆறுகள்-லிஸ்ட்-2978620.html
  2978611 லைஃப்ஸ்டைல் செய்திகள் தந்தைக்கு விசா நீட்டிப்பு பெற்றுத்தந்த 9 வயது இந்தியச் சிறுவனின் சிறப்புத் திறன்! RKV DIN Saturday, August 11, 2018 01:23 PM +0530  

  ஷ்ரேயஸ் ராயல்... இந்தக் குட்டிப் பையனுக்கு வயது 9 தான். ஆனால், அதற்குள் தந்தை மெச்சிய தனயனாகியிருக்கிறார். ஷ்ரேயஸ் ராயல் ஒரு குழந்தை மேதை. தனது 9 வயதுக்குள் உலகின் தலை சிறந்த செஸ் சாம்பியன்கள் லிஸ்டில் நான்காமிடம் பிடித்திருக்கிறார் என்றார் பார்த்துக் கொள்ளுங்கள். பையனுக்கு செஸ் விளையாட்டு என்றால் சோறு, தண்ணீரே வேண்டியதில்லை.. அத்தனை ஈடுபாடாம் அந்த விளையாட்டில். அதனால் தான் 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தற்போது உலக அளவில் 4 ஆம் இடம் பெற முடிந்திருக்கிறது. 

  சரி இதற்காகத் தான் ஷ்ரேயஸை அவரது தந்தை மெச்சியிருக்கிறாரா என்றால்? அது தான் இல்லை. பிறகு வேறெதற்கு?

  ஷ்ரேயஸ் தற்போது தன் தந்தையின் வேலை நிமித்தம் வசிப்பது லண்டனில். அங்கே அவரது தந்தை ஜிதேந்திர சிங்கின் வேலைக்கான விசா காலக்கெடு அடுத்த மாதத்தோடு முடிவடையவிருக்கிறது. இந்நிலையில் விசா காலம் முடிவடைந்து விட்டால் ஸ்ரேயஸின் குடும்பம் லண்டனில் இருந்து இந்தியா திரும்பியாக வேண்டும் என்பது தான் விதி. ஆனால், குழந்தை மேதையான ஷ்ரேயஸை விட்டுத்தர பிரிட்டிஷ் எம்பிக்கள் விரும்பவில்லை. இந்தப் பையனின் திறமைக்காக இவரை மேலும் லண்டனிலேயே தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் இருந்தனர் பிரிட்டிஷ் எம்பிக்கள். அவர்களது தொடர் அழுத்தத்தின் காரணமாக  யு.கே உள்துறை செயலர் சஜித் ஜாவித், தற்போது சிறப்பு அனுமதியின் பெயரில் ஷ்ரேயஸின் சிறப்புத் தகுதியின் அடிப்படையில் அவனது தந்தையின் விசா காலத்தை நீட்டிக்க அனுமதி அளித்துள்ளது. இதை பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகம் மின்னஞ்சல் வாயிலாக ஷ்ரேயஸின் தந்தைக்கு தெரிவித்த உடனே அவர் சந்தோஷத்துடன் ஷ்ரேயஸுக்கும்  தகவலைத் தெரிவித்துள்ளார். அவ்வளவு தான் பையனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. சோஃபாவில் உட்கார்ந்து கொண்டிருந்தவன் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கத் தொடங்கி விட்டான். எங்கள் குடும்பம் மொத்தமும் அன்று முழுவதும் சந்தோஷத்தில் ஆழ்ந்திருந்தோம். என்று கூறுகிறார் ஷ்ரேயஸின் தந்தை ஜிதேந்திர சிங்.

  ஷ்ரேயஸுக்கு கிடைத்திருக்கும் இந்த சிறப்பு அங்கீகாரம் குறித்து  இங்க்லீஷ் செஸ் ஃபெடரேஸன் தனது மேலான மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டதோடு பிரிட்டிஷ் அரசுக்கும், உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கும் தனது நன்றியைப் பகிர்ந்து கொண்டுள்ளது.

  தனது மூன்று வயது வரை இந்தியாவில்,  பெங்களூரில் பெற்றோருடன் வசித்து வந்த ஷ்ரேயஸ் அதன் பின் தன் தந்தையின் பணிநிமித்தம் லண்டன் சென்றார். அங்கு சென்றதிலிருந்து தொடர்ந்து செஸ் விளையாடி வரும் ஷ்ரேயஸ் அதில் பல சாதனைகள் நிகழ்த்தியுள்ளார். அதன் காரணமாக தங்களது மகனை பிரிட்டிஷ் அரசு தனது சொத்தாகப் பாவித்து சிறப்பு கவனத்தை அளித்தால் அவர் செஸ் விளையாட்டில் மேலும் சாதிப்பார் என்பதே பெற்றோரான தங்களது நம்பிக்கை என்கிறார்கள் ஷ்ரேயஸின் பெற்றோர்.

  மகனால் விசா நீட்டிப்பு பெற்றுள்ள பெற்றோர் தற்போது தங்களது மகிழ்வை பிரிட்டிஷ் அரசோடும், தங்களது மகனுக்காகக் குரல் கொடுத்த பிரிட்டிஷ் குடிமக்களோடும் நன்றியோடு பகிர்ந்து கொண்டுள்ளனர்.

  ]]>
  UK visa extented, shreyas royal, child brodigy, uk, chess champion, யு கே விசா நீட்டிப்பு, ஷ்ரேயஸ் ராயல், குழந்தை மேதை, செஸ் சாம்பியன், http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/11/w600X390/shreyaS_royal.jpeg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/11/nine-year-old-chess-prodigy-told-he-can-stay-in-uk-2978611.html
  2975563 லைஃப்ஸ்டைல் செய்திகள் பாட்டியின் வேதனை குரங்குக்குப் புரிந்த அளவுக்கு கூட மனிதர்களுக்குப் புரியவில்லை, என்ன மாதிரியான உலகம் இது?! கார்த்திகா வாசுதேவன் DIN Monday, August 6, 2018 04:16 PM +0530  

  கடந்த வாரம் இணையத்தில் வைரல் டிரெண்ட் அடித்த புகைப்படம் இது. இந்தப் புகைப்படத்தை நன்கு உற்றுக் கவனியுங்கள். அந்தப் பாட்டியின் முகத்தில் வழியும் வேதனை உணர்வு பார்ப்போரை உருகச் செய்யும் விதத்தில் மனம் நெகிழச் செய்கிறது. பாட்டியின் வேதனையைக் கூட, ‘அட இப்படி எத்தனை பேரை நாள்தோறும் சாலையோரங்களிலும், பேருந்து நிலையங்களிலும் நகரத்தின் பரபரப்பான இன்னபிற இடங்களிலும் கடக்க நேர்கிறது. அவர்களை நின்று கவனிக்கக்கூட நேரமில்லை. வேலை தலைக்கு மேலே மூழ்கடிக்கக் காத்திருக்கையில் இப்போது இந்தப் பாட்டியின் வேதனை தானா எனக்குப் பெரிது?!’ என்ற ரீதியில் நம்மில் பெரும்பாலானோர் கடந்து விடுகிறோம். ஆனால், பாட்டியின் தோளின் மீது அரவணைப்பாக கை வைத்துக் கொண்டு அவரது வேதனையைச் செவி மடுக்கும் அந்தக் குரங்கைப் பார்க்கையில் அது  கடந்து செல்பவர் யாருக்குமே சற்று அதிசயமாகத் தான் இருக்கிறது.

  இதில் பரிதாபம் என்னவென்றால் அந்தப் பாட்டியின் வேதனைக் குரலை இந்தக் குரங்கு செவி மடுத்ததைப் போல சற்று ஆறுதலாக எண்ணக் கூட நம்மில் யாருக்கும் மனமிருப்பதில்லை என்று எண்ணும் போது இந்த விசித்திர உலகின் பரபரப்பை எண்ணி ஒரே சமயத்தில் வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருவேறு பரிணாமங்களில் துக்கம் தொண்டையை அடைக்கிறது. எனக்கு மட்டுமல்ல இந்தப் புகைப்படத்தை காண நேரும் யாருக்குமே தான்!

  கோடை விடுமுறையில் சுருளி அருவிக்குச் சென்றிருந்தோம். அருவிக்குச் செல்லும் வழியில் நிறையக் குரங்குகள் உண்டு. அரசு சுற்றுலா மாளிகையின் சுற்றுச் சுவர்கள், மாடி அருகிலிருக்கும் மரங்கள் என அங்கு எங்கெங்கு நோக்கினும் ஒரே குரங்குப் பட்டாளம் தான். சிறிது தூரம் கடந்ததும் வழியின் குறுக்கே ஓடி வந்த குட்டிக் குரங்கு ஒன்று எங்கள் கையிலிருந்த பையைப் பிடுங்க வழி இருக்கிறதா? என்று சுற்றிச் சுற்றி ஆராய்ந்து விட்டு வழியில்லை எனத் தோன்றியதும் பேசாமல் ஓடியது.

  அதையடுத்து சில அடி தூரத்தில் குரங்குக் குடும்பம் ஒன்று அடிபட்டு உடல் முழுதும் காயங்களுடன் இருந்த பெரிய குரங்கு ஒன்றுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தது. குடும்பத்தின் குட்டிக் குரங்கு, அடிபட்ட வயதான குரங்கின் உடல் முழுதும் காயங்கள் எங்கெங்கு உள்ளன என்று தடவிப் பார்த்து கண்டறிந்து ஆறுதலாக நீவி விட்டுக் கொண்டே இருந்தது. அட குரங்குகளுக்கு ஆறுதல் சொல்லத் தெரியுமா? என்று யோசித்துக் கொண்டே நாங்கள் கடந்து சென்றோம்.

  இப்போது இந்தப் புகைப்படத்தைக் காண்கையில் மிக உறுதியாகச் சொல்லத் தோன்றுகிறது, மனிதர்களைக் காட்டிலும் குரங்குகளுக்கு மிக அருமையாக மனிதர்களின் வேதனைகளைப் புரிந்து கொள்ளத் தெரிந்திருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளத் தோன்றுகிறது.

  ]]>
  பாட்டி, குரங்கு, ஆறுதல், வைரல் புகைப்படம், viral photo, monkey and granny photo http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/6/w600X390/0000000000_trending_photo.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/06/பாட்டியின்-வேதனை-குரங்குக்குப்-புரிந்த-அளவுக்கு-கூட-மனிதர்களுக்குப்-புரியவில்லை-என்ன-மாதிரியான-உலகம-2975563.html
  2974382 லைஃப்ஸ்டைல் செய்திகள் இதென்ன ட்ராகன்? தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்! DIN DIN Saturday, August 4, 2018 05:54 PM +0530
  இனிப்பு குறைவாகவும், சத்துள்ளதாகவும் கருதப்படும் டிராகன் பழத்தின் சுவை சிலருக்குப் பிடிக்கவில்லை என்றாலும், இன்று உலகம் முழுவதும் உடல் ஆரோக்கியத்திற்காக  விரும்பிச் சாப்பிடும் பழமாக டிராகன் பழம் பிரபலமாகி வருகிறது.

  இந்தப் பழம் முற்றிலும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி ஆவதாக சிலர் கருதுகிறார்கள். இந்த டிராகன் பழம் பெரும்பாலான சூப்பர் மார்க்கெட்டுகளில் இடம் பெற்றிருப்பதைப் பார்த்த கர்நாடகாவின் பெலகாவியை சேர்ந்த விவசாயி மகாதேவ் கோலேகர், இதைப்பற்றி இணையதளத்தில் தகவல்களைச் சேகரித்தபோது, இந்தியாவிலேயே பல மாநிலங்களில் இது குறைந்த நிலப்பரப்பில் நீர் அதிகம் தேவையின்றி விளைந்துவரும் தாவரம் என்பது தெரிய வந்தது.

  ஏற்கெனவே பத்தாண்டுகளுக்கு முன்பே  குடகு மாவட்டத்தில் தனியார் தோட்டமொன்றில் டிராகன் பழம் பயிரிடப்பட்டு விற்பனை  செய்யப்படுவதும் தெரிந்தது.   மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கும் சென்று டிராகன் பழம் விளைவிக்கும் பண்ணைகளைப் பார்வையிட்டு விவசாயம் செய்யும் முறைகளையும் கண்டறிந்தார்.

  பின்னர் அவரே கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா  மாநிலங்களில் 30 - க்கும் மேற்பட்ட டிராகன் பழத் தோட்டங்களை உருவாக்கினார். தொடர்ந்து கர்நாடகாவில் பல இடங்களில் டிராகன் பழத் தோட்டங்கள் உருவாகின. தும்கூரில் உள்ள மத்திய வேளாண்துறை பரிசோதனை மையம், இந்த பழங்களைப் பற்றி ஆய்வு செய்தபோது,  தகுந்த கவனிப்பும், பராமரிப்பும் இருந்தால் சுலபமாக வளரக் கூடியது என்றும் தேவையான அளவு பழங்களைத் தரும் தாவரம் இது என்றும் உறுதி செய்தது.

  ஓர் ஏக்கருக்கு நான்கு முதல் ஐந்து லட்சம் ரூபாய் முதலீடு செய்து, 450 கல் தூண்களை அமைத்து 1800 செடிகளைப்  பயிரிடலாம். இவை வளர்வதற்கு சூரிய வெளிச்சம் மிகவும் தேவை. இத்தாவரங்களை பூச்சிகளோ, நோய்களோ தாக்கும் அபாயமும் மிகக் குறைவு. மற்ற பழ தாவரங்களைப் போலன்றி  15 மாதங்களுக்குள்ளாகவே பழங்கள்  காய்க்கத் தொடங்கும். 3 ஆண்டுகளில் முழுமையான அளவில் பழங்களை அறுவடை செய்யலாம். ஓர் ஏக்கருக்கு சுமார் 5 டன் பழங்கள் உற்பத்தியாகின்றன.

  மே மற்றும் செப்டம்பர் மாதங்களில்  அறுவடையாகும் இந்தப் பழங்களை விவசாயிகள் நேரடியாகவே சூப்பர் மார்க்கெட்களுக்கு விற்பனை செய்கின்றனர். மார்க்கெட்டில் கிலோ 80 முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்தியாவிலேயே விளையும் டிராகன் பழம் வெள்ளை மற்றும் சிவப்பு தோலுடன் கிடைக்கின்றது. இறக்குமதி செய்யும் பழங்களை விட சுவையும், இனிப்பும் அதிகம் என்பதால் உள்ளூர்த் தேவைகளுக்கு ஏற்ப பயிரிடத்தொடங்கினால் இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று  கருதுகிறார்கள்.

  விவசாயிகளும், விஞ்ஞானிகளும் இது லாபமளிக்க கூடிய தாவரம் என்று கருதினாலும், எதிர்கால மார்க்கெட் நிலவரத்தைப் பார்க்கும்போது, மக்களிடமும், மார்க்கெட்டிலும் தேவையான அளவில் டிராகன்  பழத்திற்கு வரவேற்பு அதிகரிக்கவில்லை என்பது தெரிந்தது. அதனால் தவறான வாக்குறுதிகளை நம்பி, நர்சரி ஏஜெண்டுகள் பணத்திற்காக ஆசைப்பட்டு விற்பனை செய்யும் டிராகன் பழச் செடிகளை வாங்கி, அதிக அளவில் முதலீடு செய்யாதீர்கள் என்று வேளாண்துறை மையம் எச்சரித்துள்ளது. கவர்ச்சியும், சத்துகளும்  கொண்ட இந்தப் பழத்தைப் பற்றியும், பயிரிடும் முறைகளைப் பற்றியும் மேலும் ஆராய்ச்சிகள் நடந்து  வருகின்றன.

  ]]>
  dragon, fruit, ட்ராகன் பழம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/4/w600X390/f6ab9fd4c86d90f2fc69287a8071ef94.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/04/இதென்ன-ட்ராகன்-தெரிந்து-கொள்ள-தொடர்ந்து-படிக்கவும்-2974382.html
  2974380 லைஃப்ஸ்டைல் செய்திகள் வீக் எண்ட் ஜோக்ஸ்! கொஞ்சம் சிரிங்க ரீடர்ஸ்! DIN DIN Saturday, August 4, 2018 05:47 PM +0530  

  என்ன திடீர்னு ஓவர் டைம் பார்க்கப் போறேன்னு சொல்றீங்க?
  ஆபீஸ் முடிஞ்சி சீக்கிரம் போனால் சமையலை ஆரம்பித்து... அடுப்பங்கரை வேலை எல்லாம் நானே செய்ய வேண்டியிருக்கு சார்'

  - சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

  ஆசிரியர்: ஏன்டா என் தலையிலே கொட்டுன?
  மாணவன்: நீங்கதான சார் கிளாஸ்ல யார் தூங்கினாலும் "நறுக்'குன்னு  கொட்டச் சொன்னீங்க?

  பானுமதி, சென்னை-19

  நேற்று என் பைக்கில் பின்னால உட்கார்ந்து வந்தது என் மனைவிதான்னு எப்படிச் சொல்றீங்க?
  பைக்கில் விலகி, தள்ளி உட்கார்ந்திருந்தாங்க. உங்க முகம் கடுகடுன்னு இருந்துச்சே''

  எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிபட்டி.

  இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினீங்கன்னா...?
  என்னடி செய்வ?
  நான் விதவையாயிடுவேன்

  எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிபட்டி.

  முட்டாள்ங்கிற வார்த்தைக்கு கூகுள்ல டிரம்ப்  படத்தை வைச்சு ஏமாத்திட்டாங்க?
  ஏன்... நீ என்ன  எதிர்பார்த்தே?
  உன்னோட  படத்தைத்தான்

  ஜி.சுந்தரராஜன், திருத்தங்கல்.

  உன்னோட கணவர் ஏன் மகிழ்ச்சியா இருக்கார்?
  ஃபேஸ்புக்ல அவரோட சமையல் குறிப்புகளைப் பார்த்த பல பேர் லைக்ஸூம் கமாண்டும் போட்டிருக்காங்களாம்

  ம.வேதவள்ளி, பொரவச்சேரி.

  மறுபடி எப்ப டாக்டர் வரும்படி இருக்கும்?
  மறுபடி நீங்க வரும்போதுதான்''

  ***

  குடி இருக்கிறவன், வீட்டைக் கோயில் மாதிரி வைச்சிருக்கேன் சார்'ன்னு இதைத்தான் சொல்லியிருக்கான் போல
  எதைங்க?
  வீடு பூராவும் வெளவாலும் புறாவும் அடைஞ்சு கிடக்கு சார்

   வி.ரேவதி, தஞ்சை.

  ]]>
  jokes, readers, dinamani, ஜோக்ஸ், கொஞ்சம் சிரிங்க, சிரிப்பு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/4/w600X390/jokes.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/04/jokes-2974380.html
  2973665 லைஃப்ஸ்டைல் செய்திகள் ஓடு வெடிக்காமல் முட்டையை வேக வைப்பது எப்படி? DIN DIN Friday, August 3, 2018 06:15 PM +0530
  முட்டையை வேக வைக்கும் போது  தண்ணீரில் ஒரு  தேக்கரண்டி  வினிகரை விட்டால், முட்டையின் ஓடு வெடித்தாலும் உள்ளே இருப்பவை வெளியில் வராது.    

  பால் புளிக்காமல் இருக்க,  பாலைக் காய்ச்சும் போது, ஒரு ஏலக்காயைச்  சேர்த்துக் காய்ச்சினால், நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும். 

  தோல் உரித்த உருளைக்கிழங்குகள் கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரைத் தெளித்து ஃப்ரிட்ஜில்  வைக்கவும்.

  சமையல் மேடையில் படிந்திருக்கும், எண்ணெய் கறையை அழிப்பதற்கு, எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டாக வெட்டி அதை உப்பில் வைத்துப்  பின்னர் அந்த துண்டுகளை வைத்து தேய்க்கவும்.

  கத்தரிக்காய்  விரைவில் வாடி வதங்கி விடாமல் இருக்க கத்தரிக்காயை ஹாட் பாக்ஸில் வைத்து மூடினால் காய் வாடாமல், நிறம் மாறாமல் இருக்கும்.

  வடை, போண்டா பொரித்த எண்ணெய்ப் பின்னர், காறலாக இருக்கும். இதை போக்குவதற்கு எண்ணெய்யில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்துவிடவும்.  இப்படி செய்தால் எண்ணெயின் காறல் குறைந்துவிடும்.  
   

  ]]>
  egg, முட்டை, முட்டை ஓடு, egg yolk http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/3/w600X390/egg.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2018/aug/03/ஓடு-வெடிக்காமல்-முட்டையை-வேக-வைப்பது-எப்படி-2973665.html