Dinamani - தொழில்நுட்பம் - http://www.dinamani.com/lifestyle/lifestyle-technology/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2944294 லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் பட்ஜெட் ஃபோன் வேண்டுமா? இதோ மைரோமேக்ஸ் 2 ப்ளஸ் முயற்சித்துப் பாருங்கள்!  ராக்கி Thursday, June 21, 2018 12:40 PM +0530  

ஸ்மார்ட்டாக நீங்கள் இருக்க வேண்டும் எனில் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துங்கள் என்று சொல்லும் அளவுக்கு மொபைல் ஃபோன்களின் தேவையும் ஆதிக்கமும் நம் வாழ்க்கையில் அதிகரித்து விட்டது. விதவிதமான ப்ராண்டுகள், நம்முடைய பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ள முடிகிற வசதிகள் என இதுவரை இல்லாத டிஜிட்டல் புரட்சி நடைமுறையில் உள்ளது. பொதுவாக எல்லாருக்கும் பெரிய திரையுள்ள போன் தான் பிடிக்கும். ஆனால்  விலை அதிகம் என நினைத்து பலர் வாங்கத் தயங்குவார்கள். 

ப்ராண்டெட் என்பதைத் தாண்டி, வசதிகள் அதிகம் எதில் உள்ளதோ அதையே மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். மைக்ரோமேக்ஸ் தற்போது அத்தகைய சகல வசதிகளையும் உடைய ஒரு ஃபோனாக களம் இறங்கியுள்ளது. இந்த ஃபோனைப் பொருத்தவரையில் முன்பு அது ஹீட்டாகிறது, மேலும் பேட்டரி நீடித்து வருவதில்லை போன்ற பிரச்னைகள் இருந்தது என பயனாளர்கள் கருதுவார்கள். ஆனால் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் 'கேன்வாஸ் 2 பிளஸ்'-ல் இதுபோன்ற பிரச்னைகள் எதுவுமில்லை. காரணம் இதில் 4000 mAH பேட்டரி வசதி உள்ளது என்பதால் சார்ஜ் பிரச்னைகள் இருப்பதில்லை. மேலும் இதில் வேறென்ன வசதிகள் உள்ளன என பார்க்கலாம்.

திரை  5.7 இன்ச் ஹெச்டி திரை- 18:9 ரெசல்யூஷன். 3 GB டிடிஆர்3 ரேம், 18:9 ஸ்கிரீன், 32 GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் கேமரா - 8 எம்பி செல்ஃபி கேமராவுடன் வருகிறது. பின் பக்க கேமரா 13 எம்பியுடன் வருகிறது. மேலும் செல்ஃபி அல்லது போட்டோ எடுத்ததும் தேவைக்கு ஏற்றவாறு பில்டர்கள், வாட்டர் மார்க் செய்து கொள்ளும் வசதி இதிலுள்ளது. விடியோவைப் பொருத்தவரையில் டைம் லாப்ஸ் (Time lapse) வசதி உள்ளது. மேலும் ஒரு விஷயம் என்னவென்றால் இந்த ஃபோனில் ஃபிங்கர்ப்ரின்ட் அன்லாக் (Finger Print Unlock) மற்றும் பேஸ் அன்லாக் (Face Unlock) வசதி உள்ளது. இது புதிது இல்லை என்றாலும் குறைந்த விலைக்கு கிடைக்கும் சலுகை என்றே சொல்லலாம்.

இதன் இயங்குதளம் ஆண்ட்ராய்ட் 7.0 Nougat, பிராசஸர்  1.3GHz குவாட் கோர் பிராசஸர். இரண்டு கலர்களில் கிடைக்கிறது - மேட் பிளாக், ஜெட் பிளாக், விலை - ரூ.8,999/- 

]]>
Smart phone, ஸ்மார்ட்ஃபோன், Micromax, Micromas 2 Plus, 4000 mAH, மைரோமேக்ஸ் 2 ப்ளஸ் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/21/w600X390/Micromax-Phones-with-5MP-front-cam-under-7000.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-technology/2018/jun/21/specifications-of-micromas-2-plus-smartphone-2944294.html
2942844 லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் வாட்ஸ்அப்பில் இனி உருப்படியாக நேரத்தை செலவழிக்கலாம்! அறிமுகமாகிறது வாட்ஸ்அப் பேமன்ட்! Tuesday, June 19, 2018 01:45 PM +0530  

தினமும் காலையில் எழுந்தவுடன் நம்மில் அனேகம் பேர் தேடுவது மொபைல் போனைத்தான். அதிலுள்ள வாட்ஸ்அப்பில் வந்து குவியும் காலை வணக்கத்துக்கு பதில் வணக்கமும் போட்டுவிட்டுத்தான் நாளைத் துவங்குவோம். நேரில் சந்திக்க முடியாதவர்களிடம் வாட்ஸ்அப் நலம் விசாரணைகள், தொலைதூரத்தில் இருப்பவர்களுடன் விடியோ சாட் என்று அனைவரும் அதன் பல பயன்பாடுகளை தினமும் பிரயோகித்து வருகிறோம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ் அப்பில் பண பரிவர்த்தனை செய்ய முடியும் என்று தகவல் வந்தது. கிட்டத்தட்ட 200 மில்லியன் பயனாளர்களைக் கொண்ட வாட்ஸ் அப்பில் இந்த பண வர்த்தகங்கள்  தொடங்கவிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது. தற்போது பத்து லட்சம் பயனாளர்கள் இதில் சோதனை முறையில் வாட்ஸ்அப் பேமன்ட் வசதியை பயன்படுத்த உள்ளனர். 

வாட்ஸ்அப் நிர்வாகிகள் இதுகுறித்து கூறுகையில், 'இந்தியாவில் இந்த வசதியை 10 லட்சம் பயனாளர்கள் சோதனை முறையில் பயன்படுத்த முடியும். பண பரிவர்த்தணைகளை எளிமைப்படுத்தும் வகையில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் பிறகு பணம் அனுப்புவது ஒரு மெசேஜை அனுப்புவது போல மிக சுலபகிவிடும். இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது’ என்றார்.

அனைத்து வங்கிகளுடனும் சுலபமான பரிவர்த்தணை செய்ய UPI (ஒருங்கிணைந்த பரிவர்த்தணை முகமை) மற்றும் NPCI (தேசிய பண பரிவர்த்தணை சங்கத்திடம் ) ஒப்புதல் பெற்றுள்ளது வாட்ஸ்அப் நிறுவனம். இனி நாம் வாட்ஸ்அப் மூலமாகவே யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம், பணத்தையும் பெற்றுக் கொள்ளலாம். இந்த சோதனை இயக்கம் முடிந்தபின், மேற்கொள்ள வேண்டிய சிற்சில மாறுதல்களுடன் விரைவில் வெளியாகும் என்றனர் வாட்ஸ் அப் நிறுவனத்தினர்.

]]>
வாட்ஸப், பணம், whatsup, வாட்ஸ்அப், money transaction in whatsup http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/30/w600X390/whatsup.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-technology/2018/jun/19/வாட்ஸ்அப்பில்-இனி-உருப்படியாக-நேரத்தை-செலவழிக்கலாம்-அற்முகமாகிறது-வாட்ஸ்அப்-பேமன்ட்-2942844.html
2930543 லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன் போதையிருந்து விலக நீங்கள் முடிவெடுத்துவிட்டீர்களா? அ.சர்ஃப்ராஸ் Thursday, May 31, 2018 05:42 PM +0530 சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரையும் அடிமையாக்கி வைத்திருக்கும் ஒரே கருவி 'ஸ்மார்ட் போன்'. ஸ்மார்ட்போன் போதையில் இருந்து தங்கள் குழந்தைகளை மீட்க பெற்றோர்கள் படும்பாடு சொல்ல மாலாது.
காரணம் ஸ்மார்ட் போன்களில் உள்ள விளையாட்டு மற்றும் சமூக இணையதள ஆப்கள், அதில் நொடிக்கு நொடிக்கு வரும் 'நோட்டிபிகேஷன்'களும் தான் காரணம். இது பயன்பாட்டாளர்களை மயக்கி அடிமையாக்கிவிடுகிறது. இதில் இருந்து தப்பிக்க நினைத்தாலும் அது நடப்பதில்லை. 

ஸ்மார்டபோன்களை உற்று நோக்கி பார்த்து கொண்டே நமது அன்றாடப் பணிகளைத் தொடர்வது வியாதியாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில், அதில் இருந்து விடுபட புதிய ஆப் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சியம்போ (siempo) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வித்தியாசமான ஆப்பை பதிவிறக்கம் செய்தால்போதும், அது நமது கவனத்தை ஸ்மார்ட் போனில் இருந்து திசை திருப்புகிறது.

சமூக வலைதளங்களின் முக்கிய அம்சமே அவ்வப்போது வரும் தகவல்கள்தான் (நோட்டிபிகேஷன்). இந்த சியம்போ ஆப், அவ்வப்போது வரும் தகவல்களைக் காண்பிக்காது. நமது விருப்பத்துக்கு ஏற்ப இந்தத் தகவல்களை அரை மணி நேரத்துக்கோ, ஒரு மணி நேரத்துக்கோ அல்லது ஒரு நாளில் ஒரு முறையோ காண்பிக்க நாமே தேர்வு செய்து கொள்ளலாம்.

மேலும், ஸ்மார்ட் போன்களில், ஆப்கள் நிறைந்த வண்ணமயமான முகப்பு திரைதான் நமது கவனத்தை அதிகமாக ஈர்ப்பதால், இந்த சியம்போ ஆப், முகப்பு திரையை கருப்பு, வெள்ளை நிறத்தில் மாற்றிவிடுகிறது. அதில், அவசிய தேவையான முக்கியமான ஆப்கள் சிறிய வடிவத்தில் இடம் பெற்றிருக்கும். இதனால் அவை நமது கவனத்தை ஈர்க்காது. தேவைப்பட்டால் சமூக வலைதள ஆப்களையும் நாம் அதில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், அந்த ஆப்பின் முதல் எழுத்து மட்டுமே சிறிய அளவில் அங்கு இடம் பெறும்.

முகநூலில் ஒருவர் நமது படத்துக்கு விருப்பம் தெரிவித்திருந்தாலோ, சுட்டுரையில் ஒருவர் நமது கருத்தைக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலோ எந்தத் தகவலும் ஸ்மார்ட் போனில் காண்பிக்காது.

இதனால் நமது கவனம் ஸ்மார்ட் போன் மீது நொடிக்கு நொடி திரும்பாது என்பதால், ஸ்மார்ட் போன் போதைக்கு அடிமையானவர்கள் மெல்ல மெல்ல விடுபடுவார்கள். 'ஸ்மார்ட் போனை அதிக அளவு பயன்படுத்துவதைக் குறைத்து, சுயகட்டுப்பாடு செய்து கொள்ள உருவாக்கப்பட்ட ஆப் இது' என்றும் சியம்போ தலைமைச் செயல் அதிகாரி ஆன்ட்ரீவ் டன் தெரிவிக்கிறார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2015/7/2/11/w600X390/Smartphone.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-technology/2018/may/31/app-to-control-addiction-on-smart-phone-2930543.html
2920276 லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் எலக்ட்ரானிக் கைப்பை போல வேலையை எளிதாக்கித் தரும் மைக்ரோசிப் இம்ப்ளாண்ட்! ஹரிணி வாசுதேவ் Tuesday, May 15, 2018 11:06 AM +0530  

பார்ப்பதற்கு சிறிய நெல்மணியளவே இருக்கிறது அந்த மைக்ரோசிப். அதை நமது கைகளுக்குள் இஞ்ஜெக்ட் செய்தால் போதும். பிறகு நமக்கு கிரெடிட் கார்டுகள் தேவை இல்லை, கார் சாவி தேவையில்லை, பஸ் மற்றும் டிரெயின் டிக்கெட்டுகள் தேவையில்லை. இதெல்லாம் நம்மைப் பொறுத்தவரை பகற்கனவுகளாக இருக்கலாம். ஆனால், ஸ்வீடனில் இதை சாத்தியப் படுத்தி இருக்கிறார்கள். தொழிற்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில்   தனிமனிதர்களின் தகவல்களைத் திருடுதல் என்பது ஆட்சேபணைக்குரியது மட்டுமல்ல கடும் கண்டனத்துக்குரிய குற்றம் என்ற ரீதியில் உலக நாடுகள் தகவல் திருட்டுக்கு எதிராக போராடி வருகையில் ஸ்வீடனில் இப்படி ஒரு புது முயற்சி தனி மனிதர்களின் தகவல் திருட்டு சமாச்சாரங்களுக்கு உறுதுணையாக அமைவதைப் போல கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப் பட்டிருப்பது பிற நாடுகளை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. 

ஸ்வீடிஷ் மக்களைக் கேட்டால் அவர்கள் இதற்கு வேறு பெயர் சொல்கிறார்கள். இதன் பெயர் தகவல் திருட்டு அல்ல. அவர்கள் இதற்கு வெளிப்படைத்தன்மை எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். நாட்டின் அனைத்து மக்களும் தங்களைப் பற்றிய அனைத்து தகவல்களும் பொதியப்பட்ட மைக்ரோ சிப்களை கைகளில் பொருத்திக் கொள்வதின் பொருட்டு தங்கள் அன்றாட வேலைகளை எளிதாக்கிக் கொள்வதோடு தங்களது அரசுடன் அந்தரங்கத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறவர்களாகவும் ஆகிறார்கள். 

2015 ஆம் ஆண்டில் ஸ்வீடனில் முதல்முறையாக இத்தகைய மைக்ரோ சிப்கள் பயன்பாட்டுக்கு வந்த போது பல நாட்டு மக்களும் அதைக் குறித்த தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். இது வேலையை எளிதாக்குவதோடு தங்களை பற்றிய தகவல் திருட்டுக்கும் அல்லவா துணை போகும் எனப் பலர் இந்த தொழில்நுட்பத்தை வெறுத்தனர். ஆனால் ஸ்வீடனில் இதுவரை சுமார் 3000 பேர் இந்த மைக்ரோ சிப்களை தங்களது கைகளில் பொருத்திக் கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவரான 28 வயதான உல்ரிகா செல்சிங் இதைப் பற்றிப் பேசும் போது, இப்போதெல்லாம் நான் எனது அலுவலகத்துக்குச் செல்லும் போது கதவின் முன் நின்று கொண்டு மைக்ரோ சிப் இம்பிளாண்ட் பொருத்தப்பட்ட கைகளை அசைத்தால் போதும் கதவு தானாகவே திறந்து விடுகிறது. மைக்ரோ சிப் எனது வேலைகளை எளிதாக்கி விட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியால் விளையும் புதுமைகளை நாம் நமது எதிர்கால நலன் கருதி ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதனால் நமக்கு நன்மை விளையும் போது எதற்காக அதை புறக்கணிக்க வேண்டும் என்கிறார்.

கடந்த வருடத்திலிருந்து இந்த மைக்ரோ சிப் இம்பிளாண்ட் தனக்கொரு எலக்ட்ரானிக் கைப்பை போல உதவி வருவதாக உல்ரிகா கூறுகிறார். தனது ஜிம் கார்டுகள், ஏடிஎம் கார்டுகள், முடிந்தால் டிரெயின் டிக்கெட்டுகளைப் புக் செய்து பதிந்து வைக்கும் மினி கம்ப்யூட்டர்கள் போலக்கூட அவை செயல்பட்டு வருகின்றனவாம். ஸ்வீடனின் எஸ் ஜே நேஷனல் ரயில்வே கம்பெனி இதுவரை சுமார் 130 பயணிகளுக்கு மைக்ரோ சிப் ரிசர்வேஷன் சர்வீஸ் செய்து கொடுத்துள்ளது. ரயில் நிலையங்களில் டிக்கெட் பரிசோதகர்கள் டிக்கெட்டுகளைப் பரிசோதிப்பதற்கு பதிலாக பயணிகளின் மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட கைகளை ஸ்கேன்செய்து கொள்வார்களாம். 

இப்படி தனிப்பட்ட தகவல்களை தொழில்நுட்ப வளர்ச்சியின் பெயரால் பொதுவில் பகிர்ந்து கொள்வதில் ஸ்வீடன் மிகப்பெரிய சாதனை செய்து வருகிறது. இதை வளர்சி என்று ஒரு சிலர் கூறினாலும் அந்நாட்டு மக்களில் இதை எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். ஸ்வீடனின் மேக்ஸ் 4  ஆய்வகத்தில் பணிபுரியும் நுண்ணுயிரியியலாளர் பென் லிப்பெர்டன் கூறுகையில், மைக்ரோ சிப்களை இம்ப்ளாண்ட் முறையில் கைகளில் பொருத்திக் கொள்வது நாளடைவில் தொற்று நோய்களை உருவாக்கி மனித உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தையே  பாதிக்கக் கூடும் என்று எச்சரிக்கிறார். புதிய தொழில்நுட்பங்களுக்கு வழக்கமாக எழக்கூடிய எதிர்ப்புகள் தான் இவை. ஆனாலும் வேலைகளை எளிதாக்கித் தருவதால் கூடிய விரைவில் இந்தியர்களும் இதை விரும்பக் கூடும்.
 

]]>
ஸ்வீடன், தொழில்நுட்ப வளர்ச்சி, மைக்ரோ சிப் இம்ப்ளாண்ட், எலக்ட்ரானிக் கைப்பை, swedon, micro chip implant, electronic bag, technology, affects immune system http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/15/w600X390/microchip.png http://www.dinamani.com/lifestyle/lifestyle-technology/2018/may/15/this-micro-chip-replaces-car-keys-atm-cards-train-tickets-2920276.html
2910622 லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் காலி டிரம்களை வைத்து இப்படி வித்யாசமாக ஏதாவது முயற்சி செய்யுங்களேன்! RKV Monday, April 30, 2018 05:25 PM +0530  

நம்மூரில் காலி டிரம்கள் பெரும்பாலும் தண்ணீர் பிடித்து வைக்கத்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கொஞ்சமே கொஞ்சம் கிரியேட்டிவிட்டியும், ஆர்வமும், பொறுமையும் கையில் கொஞ்சம் காசும் இருந்தால் போதும், இதோ இந்த வீடியோவில் காணும் குட்டிக் குட்டி கியூட் ஐடியாக்களைக் கூட காலி டிரம்களை வைத்து செய்து பார்க்கலாம். வீட்டுக்கு பயனுள்ளதாக மாறுவதோடு அந்தப் பொருட்களின் கிரியேட்டிவிட்டிக்கு ஏற்ப நல்லதொரு செய்தொழிலும் கிடைக்கும்.

 

இந்தக் காணொளியில் காலி டிரம்களை வைத்து வரவேற்பறை சோஃபாக்கள், டேபிள்கள், அடுக்குப் பூந்தொட்டிகள், தந்தூரி அடுப்புகள், சி.டி, டிவிடி ரேக்குகள், கார்டன் சேர்கள், லாக்கர்கள், வார்ட் ரோப்கள், புத்தக அலமாரிகள், வாஷ்பேசின் சிங்க்குகள், மருத்துவமனை காத்திருப்பு சேர்கள்,  பார் டேபிள்கள்,  சமையலறை அலமாரிகள் எனப் பல வீட்டு உபயோகப் பொருட்களை முயன்று பார்த்திருக்கிறார்கள். பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு பயனுள்ளவையாகவும் உள்ளன. ஹை ஸ்கூல் மாணவர்கள் விடுமுறை நாட்களில் இம்மாதிரியான கிரியேட்டிவ் உபகரணங்கள் செய்யும் நுட்பமான முறைகளையும் கற்றுக் கொண்டு தங்களது பெற்றோருக்கும், நண்பர்களுக்கும் இவற்றில் ஏதாவது ஒரு பொருளைத் தங்களது கைத்திறனில் உருவாக்கி பரிசளிக்கலாம். மிக அருமையான பொழுது போக்கு மட்டுமல்ல. எதிர்காலத்தில் பெரிய அளவில் வருமானமீட்டித் தரக்கூடிய தொழிலாகவும் இதை மாற்றிக் கொள்ள முடியும்.

]]>
Recycling Of Old Drums, காலி டிரம்கள், கால் டிரம் டு கிரியேட்டிவ் ஹோம் அப்ளையன்சஸ், வீட்டு உபயோகப் பொருட்கள், http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/30/w600X390/z_empty_drum_technology.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-technology/2018/apr/30/recycling-of-old-drums-2910622.html
2896804 லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் வாட்ஸ்அப்பில் இது புதுசு! சினேகா Monday, April 9, 2018 05:55 PM +0530  

வாட்ஸ்அப் ஆப்பில் நீங்கள் உங்கள் குரலை பதிவு செய்து மெசேஜ் அனுப்புவதற்காக சிறிது சிரமப்படவேண்டும். அதாவது மைக்ரோபோன் பட்டனை விரல்களால் நீண்ட அழுத்திக் கொண்டே குரலை பதிவு செய்ய வேண்டியிருந்தது. அழுத்தம் கொடுத்ததை விடுவித்த உடன் பதிவு செய்த ரெக்கார்டிங் அனுப்ப வேண்டிய நபருக்கு அனுப்பப்படும். வாட்ஸ்அப் பயனர்களுக்கு இந்த முறை எரிச்சலாக இருந்தது. காரணம் சில சமயம் சாட் செய்யும் போது அல்லது தவறுதலாக கை பட்டு ரெக்கார்டிங் ஆகி மறுமுனைக்கு அடுத்த நொடி சென்றுவிடும். மேலும் தவறுதலாக பேசி விட்டால், அவற்றை எடிட் செய்ய இயலாது.

தற்போது லாக்ட் ஆடியோ ரெக்கார்டிங் (Locked Audio Recording) என்ற புதிய அம்சம் வாட்ஸப்பில் வெளி வந்துள்ளது. இந்தப் புதிய வசதியை இயக்க, வாட்ஸ்அப் திரையில் தெரியும் மைக்ரோபோன் பட்டனை 0.5 நொடிகளுக்கு அழுத்த்ங்கள். அதன்பின், வாட்ஸ்அப்பில் லாக் மைக்ரோபோன் பட்டன் தோன்றும். இதனை ஸ்வைப் செய்து லாக் ரெக்கார்டிங் அம்சத்தை ஆன் செய்ய வேண்டும். இவ்வாறு ஆடியோ ரெக்கார்டிங்கை செயல்படுத்தியதும், மைக்ரோபோன் பட்டனை அழுத்தாமல் சாட்டிங் திரைக்கு யூஸர் இன்டர்ஃபேஸ் எடுத்துச் செல்லப்படும். மேலும், இனி வரும் வாட்ஸ்அப் அப்டேட்களில் ஆடியோ பதிவுகளை அனுப்பும் முன் ஒருமுறை கேட்கும் வசதியும் அளிக்கப்படும் என்று தெரிகிறது. 

வாட்ஸ்அப் பயனர்கள் அனைவரும் அப்டேட்ஸ் வரும் சமயம் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

]]>
whatsup, வாட்ஸ்அப் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/30/w600X390/whatsup.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-technology/2018/apr/09/வாட்ஸ்அப்பில்-இது-புதுசு-2896804.html
2889128 லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் 'கிண்டில் லைட்' செயலி: அமேசான் அறிமுகம்! Raghavendran Wednesday, March 28, 2018 05:55 PM +0530  

நவீன டிஜிட்டல் உலகில் வாசிப்பை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் விதமாக கிண்டில் எனும் செயலியின் வழியாக புத்தகங்கள் டிஜிட்டல் முறையில் வெளியிடப்பட்டது. இதில் பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள் எளிய முறையிலும், குறைந்த விலையிலும் கிடைக்கும்படி வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இது வாசிப்பில் ஆர்வமுள்ள பலருக்கு, புத்தகங்களை பாதுகாக்கவேண்டிய கட்டாயமின்றி புதிய வசதியை ஏற்படுத்தியது. இதன்மூலம் தங்களுக்கு தேவையான புத்தகங்களை கிண்டிலில் பதிவிறக்கம் செய்து படிக்கும் வசதியை ஏற்படுத்தியது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்நிலையில், இந்திய அளவில் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் செயல்படக்கூடிய 'கிண்டில் லைட்' செயலியை அமேசான் நிறுவனம் புதன்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் உலகளவிலேயே மிகவும் எளிமையான வாசிப்பு செயலியாகவும் இடம்பெற்றுள்ளது.

கிண்டில் லைட் செயலி வெறும் 2 மெகா பைட் அளவு மட்டுமே கொண்டதாக அமைந்துள்ளது. இதனால் மொபைல் ஃபோனில் அதகளவிலான இடவசதியை ஆக்கிரமிக்கும் என்ற அச்சமும் தேவையில்லை. இதில் தனிப்பட்ட பரிந்துரைகள் மற்றும் விஸ்பர்ஸிங்க் (ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் இயங்கக்கூடிய பலதரப்பட்ட உபகரணங்களிலும் சுலபமாக இயங்கும் வசதி), இலவச டிஜிட்டல் புத்தகங்களின் மாதிரி உள்ளிட்ட வசதிகளைப் பெற முடியும். இவை ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், மராத்தி, குஜராத்தி மற்றும் மலையாள மொழிகளில் முதல்கட்டமாக அறிமுகமாகிறது.

இதுகுறித்து கிண்டில் இந்தியா மேலாளர் ராஜீவ் மேத்தா கூறுகையில்,

இந்திய அளவில் எங்களின் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளோம். தற்போது எங்களின் முழுக் கவனமும் இந்தியாவில் தான் உள்ளது. எங்கள் வாடிக்கையாளர்களின் வாசிப்புத் தன்மையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். மொபைல் ஃபோன்களில் உள்ள செயலிகள் அதிக இடவசதியை ஆக்கிரமித்துவிடும். ஆனால் கிண்டில் லைட்டில் இந்த பாதிப்பு இருக்காது. இருந்தாலும் எங்களின் தரத்திலும் குறைவிருக்காது. இதில் இணையத்தின் வேகம் குறைவாக இருந்தாலும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. எனவே தான் கிண்டில் லைட் செயலியை வெறும் 2 மெகா பைட் அளவில் தயாரித்துள்ளோம். இது 2ஜி மற்றும் 3ஜி நெட்வோர்க்கில் கூட சுலபமாக இயங்கும். இந்த செயலி அறிமுகமாக முதல் மாதத்தில் மட்டும் அமேசான் பே வழியாக பதிவிறக்கம் செய்யப்படும் புத்தகங்களுக்கு 80 சதவீத சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

]]>
Amazon, Android, Kindle, Kindle Lite app, ஆண்ட்ராய்ட், அமேசான், கிண்டில், கிண்டில் லைட் செயலி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/28/w600X390/Kindle_Lite.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-technology/2018/mar/28/amazon-launches-kindle-lite-app-for-android-in-india-2889128.html
2885563 லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் இதை ஃபேஸ்புக்கில் பகிர முடியுமா? முடியாதா? ஃபேஸ்புக் இழைத்த தவறுகளுக்கு மன்னிப்பு கோரினார் மார்க்! ராம் Thursday, March 22, 2018 01:20 PM +0530  

நாம் காலையில் எழுந்தவுடன் செய்யும் முதல் காரியம் வாட்ஸப், ஃபேஸ்புக்கில் நமக்கு வந்திருக்கும் குறுஞ்செய்திகளையும் தகவல்களையும் படிப்பதுதான். அதன் பின்னர் தான் அந்த நாள் தொடங்கும். சிலர் தங்கள் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை நேரடியாக ஃபேஸ்புக்கில் ஒளிபரப்பாக்கிக் கொண்டிருப்பார்கள். உண்டது, உறங்கியது, காதலித்தது, திருமணம் செய்து கொண்டது, குழந்தைகள் பெற்றது, விவாகரத்தானது, இறந்து போவது (அதை நண்பர்கள் பார்த்து கொள்வார்கள்) இப்படி ஒட்டு மொத்த வாழ்க்கையையும் ஃபேஸ்புக் வசம் ஒப்படைத்தவர்கள் பலர் உள்ளனர். ஃபேஸ்புக் ப்ரெண்ட்ஸ் என்று ஒரு க்ரூப் வாட்ஸப்பில் இறங்கி வாழ்க்கைக்குள் ஊடுருவும். நன்மை தீமை என இரண்டும் கலந்துள்ள இந்த மெய்நிகர் வாழ்க்கையை மிகுந்த கவனத்துடன் கையாளவேண்டும். இல்லையென்றால் நம்மைப் பற்றி நமக்கே தெரியாத விஷயங்களைக் கூட அவர்கள் சொல்லிவிடுவார்கள். யார் அவர்கள்? அவர்கள் தான் செயலிகள் (ஆப்) மூலம் நமக்கு ஆப்பு வைக்கத் துடிப்பவர்கள். நம்முடைய தகவல்கள் அனைத்தையும் திருடி பத்திரமாக டேட்டா பேஸில் சேமித்து வைத்துள்ளனர். அண்மையில் நடந்த சம்பவம் இதனை உண்மையென உறுதியாகச் சொல்கிறது.

ஃபேஸ்புக்கில் நடந்த சில தவறுகளால், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் நிறுவனம் லட்சக் கணக்கான ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை எடுத்தாளக் கூடிய நிலை ஏற்பட்டள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்பது ஒரு அரசியல் ஆலோசனை நிறுவனமாகும். இந்நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த தவறை ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார். நம்பிக்கை மீறல் நடந்துவிட்டது’ என தனது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார் மார்க்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில் 'மிகவும் வருந்துகிறேன். நேர்மையற்ற செயலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒரு தொலைகாட்சி பேட்டியில் தெரிவித்தார் மார்க். இது எதிர்கொள்ள தான் தயாராக இருப்பதாதவும் தெரிவித்தார்.

'ஃபேஸ்புக்கை தொடங்கியது நான்தான் எனவே இதில் என்ன நடந்தாலும் நான்தான் பொறுப்பு. உங்கள் தகவல்களை பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது; எங்களால் பாதுகாக்க முடியவில்லை என்றால் உங்களுக்கு சேவையாற்றும் தகுதியை நாங்கள் இழப்போம் என்ற மார்க், இனி வரும் காலங்களில் செயலிகள் மூலமாக ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை எடுத்தாளும் நிலையை மாற்றி அதற்கான செட்டிங்க்ஸ்களை  கடுமையாக்கிவிடுவோம் என்று மார்க் உறுதி கூறினார்.

ஃபேஸ்புக் பின் வரும் முடிவுகளை எடுத்துள்ளது. இனி வரும் காலஙக்ளில் ஃபேஸ்புக்கில் எந்தவொரு செயலியையும் பயனாளிகள் மூன்று மாதத்திற்கு மேல் பயன்படுத்தாமல் இருந்தால், அந்தப் பயனாளிகளின் தகவல்கள் அந்த குறிப்பிட்ட செயலியிலிருந்து நீக்கப்படும். ஒரு செயலியை தரவறக்கம் செய்யும்போது பயனாளிகள் தரும் தகவல்களை குறைத்து பெயர், புகைப்படம், மின்னஞ்சல் ஆகியவற்றை மற்றும் பெறுவது. இனிமேல் செயலிகளை உருவாக்குபவர்கள், தனிநபர் தகவல்களையோ பதிவுகளையோ பெற வேண்டுமெனில் அப்பயனாளர்களின் சம்மதம் கேட்டு கையெழுத்து ஒப்புதல் பெற வேண்டும்

நல்ல முடிவுதான். ஆனால் இதை முன்னரே செய்திருந்தால் பிரச்னைகளை தவிர்த்திருக்கலாம்.

]]>
facebook, Mark Zuckerberg, British analytica, ஃபேஸ்புக், மார்க் ஜுக்கர்பெர்க், மன்னிப்பு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/22/w600X390/2780.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-technology/2018/mar/22/mark-zuckerberg-apologises-for-facebooks-mistakes-over-cambridge-analytica-2885563.html
2879260 லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் நிதி உதவி வேண்டுமா? உங்களுக்கு என்னென்ன தேவையோ அவை எல்லாமும் அதற்கு மேலும் இவற்றில் கிடைக்கும்! சினேகா Tuesday, March 13, 2018 11:19 AM +0530 சமீப காலங்களை ஆப்களின் காலம் என்றே சொல்லலாம். முன்பெல்லாம் நம்மை தினமும் காலையில் எழுப்பி விட, ஒரு வட்ட வடிவ டேபிள் க்ளாக் இருக்கும். அதில் பெரிய முள் சிறிய முள் இரண்டையும் ஒருவழியாக திருக்கி, அலாரம் வைத்து அது அடிக்க அடிக்க அணைத்து எப்படியோ ஒருவழியாக கண் விழிப்போம். கால மாற்றத்தின் விளைவாக இப்போது துயில் எழ மட்டுமல்லாமல் உடற்பயிற்சி செய்ய, சரியான அளவு தண்ணீர் குடிக்க, மாதவிலக்கு தினங்களை ட்ராக் செய்ய, உடற்பயிற்சி செய்ய, கார் புக் பண்ண என்று எதற்கெடுத்தாலும் ஆப், ஆப் என ஆப்களால் சூழ்ந்த உலகத்தில் வாழ்கிறோம்.

ஆண்டவா இதையெல்லாம் கேட்க நீ எங்கே தான் இருக்கிறாய் என்று தேடிப் பார்க்க ஒரு ஆப் நம் போனிலிருந்து இங்கே தான் உள்ளேன் என்று பதில் சொல்கிறது. ஆம் கோவிந்தா என்று ஒரு ஆப்பில் சாட்சாத் ஏழுமலையானை கண்டு அடைய நீங்கள் பயன்படுத்தலாம். அப்பப்பா எத்தனை எத்தனை ஆப்கள் என்று வியந்து போகிறீர்களா, அல்லது டெக்னாலஜி கடவுள் உண்மையில் அளித்த வரமா என்பதெல்லாம் ஆராய்ச்சி செய்த பின்னரே முடிவு செய்ய வேண்டும். அதற்கு முன் இந்த மாய எதார்த்த ஆப்களின் உலகத்தில் சமீபத்தில் வந்து இறங்கியுள்ள சில பயனுள்ள ஆப்களைப் பற்றி இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 

பாடம் படிக்க உதவும் ஆப் இது (Anatomy Learning 3D Atlas)

உடற்கூறுயியல் சொல்லித் தருகிறது இந்த ஆப். 3Dயில் செரிமான அமைப்பு, இதயம் செயல்படும் விதம் உள்ளிட்ட பலவற்றை இந்த ஆப் மூலம் கற்றுக் கொள்ளலாம். இந்த செயலியின் மூலம் உயிரியல் படிக்கும் மாணவர்களுக்கு குறிப்பாக மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஆப் இது. எலும்பு நரம்பு மஜ்ஜைகள் என ரத்தமும் சதையுமாக மனித உடலை ஒரு ஆசிரியர் போலக் கற்றுத் தருகிறது இந்த அற்புதமான ஆப்.

வேடிக்கையாக வேதியியல் கற்க (Chemistry Lab)

வேதியலை விளையாட்டாகக் கற்றுக் கொள்ள ஆசையா? உடனே இந்த ஆப்பை தரவிறக்கம் செய்துவிடுங்கள். இந்த செயலி மிக எளிமையாக கெமிஸ்ட்ரி கற்றுத் தருகிறது. ஒரு ஆக்ஸிஜன் அணு, இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் சேர்ந்தது நீரின் மூலக்கூறு என மனனம் செய்வதை விடவும் அந்த அணுக்களைச் சேர்த்து நீர்த்துளி உருவாக்கினால் எப்படி இருக்கும்? அதைத்தான் செய்து காட்டுகிறது இந்தச் செயலி. மீத்தேன், ஈத்தேன் இனி பிரச்னையில்லை. படித்தேன் முடித்தேன் என மாணவர்கள் ஈஸியாக பாஸ் ஆகலாம்.

மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும் ஆப்

இ-சைக்ளினிக் டாட் காம் என்ற நிறுவனத்தினர் தன்னம்பிக்கை வளர்த்தெடுக்கும் ஒரு ஆப் ஒன்றினை உருவாக்கியுள்ளார்கள். இந்த ஆப் தரவிறக்கம் செய்து பயன்படுத்தினால் ஸ்ட்ரெஸ் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்னைகளிலிருந்தும் விடுபட்டு மன அமைதியுடன் திகழலாம் என்று உறுதி கூறுகிறது ஆப்பைத் தயாரித்த டெக்னிகல் டீம்.  இந்த ஆப்பின் தீம் என்னவெனில் ‘ஐ வில்’ அதாவது ‘என்னால் முடியும்’ என்பதே. எதையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தை வளர்த்தெடுப்பதே இந்த ஆப்பின் முக்கிய பணி. சட்டென்று உணர்ச்சி வசப்படுதல், கோபம் வந்து உச்ச குரலில் கத்துதல், உயர் ரத்த அழுத்த பாதிப்புக்களுக்குள் சிக்குதல் போன்ற பிரச்னைகளிலிருந்து விடுபட இந்த ஆப் மிகவும் பயன்படும். இவைத் தவிர இந்த ஆப் ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேவைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

ஆரோக்கிய வாழ்க்கைக்கு இந்த ஆப் உதவும்

எந்த உணவு எதற்காக என்பதே நம்மில் பெரும்பாலும் யாருக்கும் தெரிவதில்லலி. உணவே மருந்தாக இருந்த காலம் மலையேறி மருந்தே உணவாகிவிட்ட நிலை உருவாகிவிட்டது. நம் தேவையை இந்த ஆப்பிடம் சொன்னால் போதும். டிப்ஸ்களை வழங்கிக் குவித்துவிடும். சர்க்கரை வியாதியை கட்டுப்பாட்டில் வைக்க, உடல் எடையைக் குறைக்க என பல கேள்விகளுக்கு பக்குவமாக பதில் அளிக்கிறது இந்த ஆப். தரவிறக்கம் செய்ய goo.gl/Jtd6Cr என்று உங்கள் மொபைலைலில் தேடுங்கள்.

நிதி உதவி வேண்டுமா?

தினசரி வரவு செலவு கணக்குகளை மெயிண்டெய்ன் செய்ய இந்த ஆப் உதவும். அந்த ஆப்பை டவுன்லோட் செய்து அன்றாடம் நீங்கள் செய்த செலவுகளை அதில் பதிவிட்டு கணக்கு வைத்துக் கொள்ளலாம். தினந்தோறும் செய்யும் செலவுகளான உணவு, பொருட்கள் வாங்குவது, பெட்ரோல் போடுவது, சினிமா என என்ன செலவு செய்தாலும் தனித்தனியாக பதிவிட வசதி உள்ளது. நாள், வாரம்,மாதம் என பிரிவும் உண்டு. சாப்பாட்டுக்கா இவ்வளவு செலவு செய்தேன் என்று நீங்கள் அதிகம் செலவு செய்யும் விஷயங்களை அடுத்த தடவை குறைத்துக் கொள்ள முடியும். நெட் கனெக்‌ஷன் இல்லாத சமயங்களிலும் இந்த ஆப்பை பயன்படுத்தலாம் என்பது இதன் கூடுதல் சிறப்பு. goo.gl/8qUcgb

மேற்சொன்ன செயலிகளை ஆண்ட்ராய்ட் வசதி உள்ள செல்ஃபோன்களில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

]]>
app, ஆப்கள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/12/w600X390/apps.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-technology/2018/mar/13/new-apps-to-make-your-life-easier-and-better-2879260.html
2873208 லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் ஸ்மார்ட்வாட்ச் பிரிவிலும் முத்திரைப் பதித்த ஆப்பிள்: போட்டியின்றி முதலிடம்! Raghavendran Friday, March 2, 2018 06:03 PM +0530  

நவீன யுகத்தில் டிஜிட்டல் மற்றும் ஸ்மார்ட் ரக உபகரணங்களின் தேவைகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்ஃபோன்களில் தொடங்கிய இந்த தேவை ஏசி, ஃபிர்ட்ஜ், டிவி என தொடர்ந்து ஸ்மார்ட்வாட்ச்கள் வரை உருவெடுத்துள்ளது.

எனவே பெரும்பாலான நிறுவனங்கள் இவற்றின் உற்பத்தியை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஸ்மார்ட்ஃபோன்களை தயாரித்து வரும் பிரபல நிறுவனங்கள் பல இதுபோன்ற பலதரப்பட்ட உபகரணங்களை உருவாக்குவதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

அப்பிள், சியோமி, ஹுவே போன்ற நிறுவனங்கள் ஸ்மார்ட்வாட்ச் உற்பத்தியை அதிகரித்து வருகின்றன. டச் ஸ்க்ரீன் வசதி கொண்ட இதில், நேரத்தை பார்ப்பது மட்டுமல்லாது ஜிபிஎஸ், அல்டிமீட்டர், தினசரி நடவடிக்கைகளின் தொகுப்பு, தொலைபேசி உள்ளிட்ட பலதரப்பட்ட வசதிகளைக் கொண்டுள்ளன.

இந்த ஸ்மார்ட்வாட்ச் இளைஞர்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ஆப்பிள் நிறுவனம் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதன்மூலம் ஸ்மார்ட்வாட்ச் விற்பனைப் பிரிவில் போட்டியின்றி முதலிடத்தையும் பிடித்துள்ளது.

இதுகுறித்து இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் (ஐடிசி) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 2017-ம் ஆண்டின் கடைசி 3 மாதத்தில் மட்டும் ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் 8 மில்லியன் அளவுக்கு விற்பனையாகியுள்ளது. இது கடந்த ஒராண்டில் மட்டும் 57.5 சதவீத வளர்ச்சியாகும். அதுபோல ஸ்மார்ட்வாட்ச் மொத்த சந்தையின் மதிப்பில் 21 சதவீதம் என்று தெரிவித்துள்ளது. 

இதன்மூலம் ஃபிட்பிட் மற்றும் சியோமி நிறுவனங்களை பின்னுக்குத்தள்ளி போட்டியின்றி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதனால் ஃபிட்பிட், சியோமி, கார்மின், ஹுவே ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

]]>
Apple, Smartwatches, ஆப்பிள், ஸ்மார்ட்வாட்ச் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/2/w600X390/smart_watch.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-technology/2018/mar/02/apple-takes-top-spot-in-global-wearables-market-2873208.html
2838110 லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் 500 பேரிடம் ஒரே சமயத்தில் பேச வேண்டுமா? இதோ வந்துவிட்டது சோமா வீடியோ கால் மற்றும் சாட்! சினேகா Wednesday, January 3, 2018 12:37 PM +0530  

ஒவ்வொரு நாளும் புத்தம் புது ஆப்கள் தோன்றிய வண்ணம் உள்ளன. Soma Free Video Call and Chat என்ற ஆப்பைப் பற்றிக் கேள்விப்பட்டு உடனே தரவிறக்கினேன். அதென்ன சோமா?

உங்கள் வீட்டு நிகழ்ச்சிக்காக அல்லது அலுவலக வேலைக்காகவோ ஒரு பெரிய கூட்டத்தை நீங்கள் நிர்வகிக்க வேண்டியதாக இருந்தால் கவலை வேண்டாம். சோமாவை முதலில் இன்ஸ்டால் செய்யுங்கள். அதன் மூலம் ஒரே சமயத்தில் நீங்கள் 500 நபர்கள் வரை குரூப் சாட்டிங் செய்ய முடியும். அதுவும் முற்றிலும் இலவசமாகவே!

வீடியோ சாட்டிங் வசதியும் உள்ளது. பேசுங்க பேசுங்க...பேசிட்டே இருங்க....என்று சொல்லாமல் சொல்கிறது இந்த ஆப். மேலும் இந்தச் செயலியில் டுடுல் கேமரா என்ற வசதி உள்ளது. நிகழ்ச்சியை போட்டோ எடுத்து அப்படியே பகிர்ந்து கொள்ளலாம். ஃபோட்டோவில் பலவிதமான மாற்றங்களையும் செய்து கொள்ளலாம். வண்ணக் கலவைகள் மட்டுமல்லாமல் ஃபன்னி ஸ்னாப் ஷாட் வசதிகளும் இதில் உள்ளது.

உங்கள் எண்ணங்களை வண்ணங்களாக மேலும் மெருகேற்ற பலவிதமான ஸ்டிக்கர்கள் மற்றும் ஜிஃப் (Gif) இமேஜ்கள் உள்ளது. சோமாவின் உதவியால் உங்களுடைய உரையாடல்களில் கவிநயம் உள்ளதோ இல்லையோ கலை நயம் நிச்சயம் இருக்கும். நீங்கள் கேம் பிரியர்களாக இருந்தால் எண்ணற்ற புதுப் புது கேம்களை விளையாடி மகிழ்வதுடன் அவற்றையெல்லாம் சேமித்து வைக்கவும் இந்த செயலி உதவுகின்றது. 

இது தவிர சோமோ வெப் மூலம் கணினி இணைய இயங்குதளத்திலும் நீங்கள் தகவல்களை உடனுக்கு உடன் அனுப்பி மகிழலாம்.   

என்ன! அதற்குள் சோமாவை டவுன்லோட் செய்துவிட்டீர்களா!

]]>
வாட்ஸப், whatsup, Soma Free Video Call, Group Chat, சோமா வீடியோ கால், வீடியோ கால் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/3/w600X390/app.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-technology/2018/jan/03/benefits-of-soma-video-call-and-chat-2838110.html
2835249 லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் இனி உங்கள் செல்போனில் டிஸ்ப்ளே உடைந்தால் கவலை வேண்டாம்! இதோ தீர்வு Friday, December 29, 2017 05:51 PM +0530  

செல்போன் பயனாளர்கள் அடிக்கடி சந்திக்கும் பிரச்னை கைதவறி ஃபோனைக் கீழே போடுவதும் உடனடியாக அதன் டிஸ்ப்ளே உடைவதுதான். இப்பிரச்னையை தீர்க்க ஒரு வழியைக் கண்டுபிடித்துவிட்டனர் ஜப்பானியர்.

போனில் டிஸ்ப்ளே ஸ்க்ரீன் உடைந்துவிட்டால் இனி கவலை வேண்டாம் என்கிறார்கள் ஜப்பான் ஆய்வாளர்கள். இதற்கான தீர்வாக அதனை நாமே சரி செய்து கொள்ளும் வகையில் ஒரு டிஸ்ப்ளே பகுதியை உருவாக்கியுள்ளனர். ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழக பேராசிரியர் டாகுசோ ஐடா தலைமையில் உடைந்தால் ஒட்டிக்கொள்ளும் டிஸ்ப்ளேவை கண்டுபிடித்துள்ளனர் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

பொதுவாக உடைந்த டிஸ்ப்ளேவை ஒட்டவைக்க, அதிக அளவு வெப்ப நிலைக்கு சூடாக்க வேண்டும். பின்னர்தான் ஒட்ட முடியும். பாலிஈதர்-தியோரிஸ் (polyether-thioureas)  எனும் பொருள் கொண்டு தயாரிக்கப்படும் டிஸ்ப்ளேக்களை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். இதனை மிக எளிதாக ஒட்ட வைத்து விடலாம். இது மிகுந்த எடை குறையுடன் இருக்கக் கூடிய ஒன்றாகும். இந்த வகை டிஸ்ப்ளே உடைந்தாலோ, விரிசல் விழுந்தாலோ, லேசாக அதனை அழுத்தி, இரு விரல்கள் மூலமே ஒட்டி விடலாமாம்.

இனி இஷ்டம் போல உங்கள் செல்போனில் புட்பால் விளையாடலாம்! டிஸ்ப்ளேயை உடைத்து மீண்டும் ஒட்டிக் கொள்ளலாம்!

]]>
cell phone repair, display problems, செல்போன் டிஸ்ப்ளே, உடையாத ஃபோன் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/29/w600X390/ph.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-technology/2017/dec/29/easily-replaceable-new-display-for-cell-phones-2835249.html
2832807 லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் 2017 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த 7 கார்கள் பட்டியல்! RKV Monday, December 25, 2017 02:39 PM +0530  

கடந்தாண்டு இந்தியாவில் லாஞ்ச் செய்யப்பட்ட புத்தம்புது கார்களில் பெஸ்ட் செல்லிங் கார்கள் எவையெனக் கண்டறிந்து அதன் அடிப்படையில் கிடைத்த விவரங்களைக் கொண்டு இந்த 7 கார்கள் 2017 ஆம் ஆண்டுக்குரிய இந்தியாவின் சிறந்த கார்கள் எனப் பட்டியிலிடப்பட்டிருக்கின்றன. இவற்றில் Suv வகைக் கார்களைச் சேர்க்கவில்லை. நான்கு பேர் அளவிலான நியூக்ளியர் குடும்பங்கள் மட்டுமே பயணிக்கத் தக்க வகையில் அமைந்த கார்களுக்கான பட்டியல் இது. 

1. மாருதி சுஸுகி இக்னிஸ்

2. மாருதி சுஸுகி டிஸையர்

3. ஹூண்டாய் வெர்னா

4. ரெனால்ட் கேப்டர்

5. ஆடி A5

6. பிஎம்டபிள்யூ 5 சீரிஸ்

7. மெர்ஸிடிஸ் பென்ஸ் E கிளாஸ்

இந்த லிஸ்ட் கடந்த வருடத்தின் பெஸ்ட் செல்லிங் கார்கள் அடிப்படையில் தயாரானது. கஸ்டமர் எண்ணிக்கை கொண்டு மட்டுமல்ல கார் மெயிண்டனன்ஸ், சர்வீஸ், லிட்டர் பெட்ரோலுக்கு எத்தனை கிலோ மீட்டர்கள் பயணிக்கலாம். நெடுந்தூரப் பயணங்களுக்கும் இயக்கக் கூடிய வகையில் அமைந்த கார்களா? எனும் வகையில் சகலவிதத்திலும் கஸ்டமர்களுக்கு திருப்தி அளிக்கக் கூடிய விதத்தில் கடந்த ஆண்டில் லாஞ்ச் செய்யப்பட்ட பலவிதமான கார்களில் இந்த 7 கார்களே டாப் 7 இடத்தைப் பிடித்துள்ளன. 

]]>
best cars of india 2017, 2017 ஆம் ஆண்டின் சிறந்த கார்கள், லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/25/w600X390/0000best_cars.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-technology/2017/dec/25/best-cars-of-india-2017-2832807.html
2828183 லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் ஆன்லைனில் உங்களுக்கு பாதுகாப்பு இல்லையா? இதைப் படியுங்கள்! உமா Sunday, December 17, 2017 05:27 PM +0530 இணையதளம் இன்றளவும் பெண்களுக்கு ஆபத்தான ஒரு இடமாகவே இருக்கிறது. சைபர் க்ரைம் என்பது வெவ்வேறு வகையில் அவர்களை அச்சுறுத்தி வரும் நிலையில் இதனை எதிர்க்க கடுமையான சட்டங்கள் இல்லை என்பதும் நிஜம். இந்தியாவில் தகவல் தொழிநுட்பம் குறுகிய காலத்தில் மிகவும் வேகமாக வளர்ந்துவிட்டது.

சைபர் க்ரைம் என்றால் என்ன ?

இணையத்தின் மூலம் நடக்கும் குற்றச் செயல்களை சைபர் க்ரைம் எனலாம். இணைய வெளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் அத்துமீறி பேசுவது. ஈமெயில், சோஷியல் நெட்வொர்க்கில் அவர்கள் விரும்பாத போதும் பின் தொடர்ந்து தொந்திரவு செய்வது, ஃபோர்னோகிராபி, அவதூறு, ப்ளாக்மெயில் உள்ளிட்ட விஷமச் செயல்களை செய்வது இவை எல்லாம் பொதுவாகக் காணப்படும் சைபர் க்ரைம்கள். இவை பெண்களின் கண்ணியத்தை குலைக்கும் நோக்கம் உடையவை. கடுமையான சைபர் க்ரைம் சட்டங்கள் நடைமுறைப்படுத்தால் இவற்றை தவிர்க்க முடியும். 

இவற்றில் எல்லாம் கவனம் தேவை!

  • உங்களுடைய பர்சனல் விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
  • தேவையில்லாத விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
  • யாரிடமும் உங்கள் பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
  • இணையத்தில் மிரட்டும் நபர்களிடம் தொடர்ந்து பேசுவது, சர்ச்சையில் சிக்குவதை தவிர்த்து விடுங்கள்.
  • இணைய தளங்களில் கேட்கப்படும் சுய விபரங்களுக்கு பதில் அளிக்காதீர்கள்.
  • தேவைப்படும் போது ஆண்டி வைரஸ் செயலியை பயன்படுத்துங்கள்.

பாதுகாப்பது எப்படி?

  • உங்கள் பாஸ்வேர்டுகளில் எண்கள், ஆஸ்ட்ரிக் சிம்பல்கள் மற்றும் சில எழுத்துக்கள் உள்ளவாறு அமைத்துக் கொள்ளுங்கள்.
  • உங்கள் மெயிலை யாராவது ஹேக் செய்துவிட்டால் உடனடியாக அதை ஈமெயில் சேவை நிறுவனத்தினரிடம் தெரியப்படுத்துக்கங்கள். தேவைப்படும் எனில் போலீஸிலும் புகார் அளிக்கலாம். ஆனால் இன்னொரு ஹேக்கரிடம் உதவி பெற வேண்டாம். அது மேற்கொண்டு சிக்கலை அதிகரிக்கவே செய்யும். 

  • ஃபேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியாவைப் பொருத்தவரையில், அக்கவுண்ட் செட்டிங்ஸ், செக்யூரிட்ட பேஜில் உங்களுடைய தகவல்கள், புகைப்படங்கள் போன்றவற்றை க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் மட்டும் (Close friends only) என்ன செட்டிங்கில் வைத்துக் கொள்ளுங்கள். ஒன்லி மீ என்றும் ஒரு ஆப்ஷன் உண்டு.
  • சைபர் க்ரைம் தொடர்பான பிரச்னைகளை உடனுக்கு உடன் நிவர்த்தி செய்வதுதான் புத்திசாலித்தனம். இதற்கு சென்டர் ஃபோர் சைபர் க்ரைம் விக்டிம் கவுன்சலிங்கிடம் உதவி பெறலாம் (www.cybervictims.org).
]]>
cyber crime, internet, cyber bullying, சைபர் க்ரைம், சோஷியல் மீடியா, ஃபேஸ்புக் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/17/w600X390/Cyberbullying-770x514.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-technology/2017/dec/17/protection-against-cyber-crime-2828183.html
2827048 லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் உங்கள் மொபைல் ஃபோன் அடிக்கடி ரிப்பேர் ஆகிறதா? அதற்கான 5 காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்! உமா பார்வதி Friday, December 15, 2017 04:47 PM +0530  

கணவன் மனைவி தகறாரில் முன்பெல்லாம் சட்டி பானைகள்தான் உடைந்து கொண்டிருந்தன. நவீன வாழ்வியலில் இப்பிரச்னைக்கு இலக்காவது மொபைல் ஃபோன்தான். கோபத்தில் ஃபோனை தூக்கி எறிவதும், அதை ஆயுதமாகவும் பயன்படுத்துவதும் வீட்டில் சாதாரணமாக நடக்கும் விஷயமாகிவிட்டது.

சண்டை முடிந்த நிலையில் கணவன் மனைவிக்கு அல்லது மனைவி கணவனுக்கு  புதிய மொபைல் வாங்கித் தந்து சமரசம் ஆவதும் அழகுதான். 

வேடிக்கையோ உண்மையோ, இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி இவ்விதமாக இருக்கிறது. மொபைல் ஃபோன்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதைப் பயனாளிகள் மிகவும் பத்திரமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது

சிலருக்கு சார்ஜ் நீடித்து வராது, ஃபோன் மிகவும் சூடாகும், பேட்டரி விரைவில் பழுதாகிவிடும், அல்லது ஃபோனை அடிக்கடி கீழே போட்டு டிஸ்ப்ளேயை உடைத்துக் கொள்வார்கள். இது போன்ற செயல்களால் அந்த ஃபோனில் உள்ள அதன் ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட்வேரை பாதிப்படையும்.

நம் மீது பிரச்னையை வைத்துக் கொண்டு என்ன ஃபோன் இது, ஒரு வருஷம் கூட உருப்படியா வேலை செய்ய மாட்டேங்குது என்று நிறுவனத்தை குறை சொல்பவர்கள்தான் அதிகம். இந்தப் பிரச்னைகளிலிருந்து விடுபட சில வழிமுறைகள் உள்ளன. அவை என்ன என்று பார்க்கலாமா?

ஃபேன்ஸி கவர் வேண்டாம்!

நீங்கள் பார்த்து தேர்ந்தெடுத்து, மனத்துக்குப் பிடித்த பின்னர் வாங்கிய பொருள் அல்லவா உங்கள் மொபைல் ஃபோன்? அதற்கு நிச்சயம் உரிய பாதுகாப்பு தேவைதான்.

அதற்குரிய பாதுகாப்பு கவசத்தை உடனடியாக அதே சைஸில் வாங்குவீர்கள் அல்லவா? அதுவும் கூட சரிதான். ஆனால் அப்படி வாங்கிய கவர்கள் மிகவும் ஃபேன்ஸியாகவோ, ப்ளாஸ்டிக் அல்லது மெட்டலில் மலிவு விலையில் வாங்கிப் போடும் போதுதான் பிரச்னை ஆரம்பமாகிறது. உங்கள் ஃபோனை சார்ஜ் செய்யும்போது, அதிகப்படியாக வெப்பத்தை அவை உள்வாங்கிவிடும். இது உங்கள் அலைபேசிகளுக்கு தீங்கு விளைவிக்கும். சிறிது சிறிதாக உங்கள் மொபைல் ஃபோனை செயல் இழக்கவைத்துவிடும்.

எப்போதும் தரமான செல் ஃபோன் கவர்களைப் பயன்படுத்துவது நல்லது. அதிக கனமானதையும் தவிர்த்து விடுங்கள். உங்களுக்கு சில சமயம் இது குறித்து ஏதாவது சந்தேகம் இருந்தால் அதை கடைக்காரர் அல்லது நண்பரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் தவறில்லை. மாறாக விளம்பரங்களைப் பார்த்து கவரும்விதமாக இருக்கிறது என்று வாங்கி பயன்படுத்தி, கடைசியில் முதலுக்கே மோசம் எனும் நிலைக்கு நம்மை ஆட்படுத்திக் கொள்ள வேண்டாம்.

மாதம் ஒரு முறையாவது இவ்வாறு சார்ஜ் செய்யுங்கள்

நம்மில் பலருக்கு ஒரு பழக்கம் உள்ளது. ஃபோனில் சார்ஜ் முழுவதும் தீருவதற்குள் உடனே ப்ளக்கை மாட்டி ரீசார்ஜ் செய்து கொள்வோம். அல்லது நமக்கு நேரம் இருக்கும் போது, கொஞ்ச நேரம் சும்மாவே போனை சார்ஜில் போட்டுவோம். பயணத்துக்கு கிளம்பும் போதும் சார்ஜ் 80 சதவிகிதம் இருந்தாலும் மீதி இருபதையும் ஏற்றுக் கொள்ள நினைத்து சார்ஜை போடுவோம்.

ஆனால் இந்தப் பழக்கம் மொபைல் ஃபோனின் ஆயுளுக்கு ஒத்து வராத ஒன்று என்பதை மட்டும் தெரிந்து கொள்ள மாட்டோம். காரணம் ஒவ்வொரு தடவை நீங்கள் சார்ஜ் செய்யும் போதும் உங்கள் மொபைல் சூடாகும். அடிக்கடி சார்ஜ் செய்தால் ஒருகட்டத்தில் பேட்டரி வீக்காகி பழுதடைந்துவிடும். மொபைலில் 50 சதவிகிதம் வருவதற்குள் நீங்கள் மூன்று அல்லது நான்கு தடவை சார்ஜ் செய்துவிடுவீர்கள். 20 சதவிகிதம் வந்தபிறகு சார்ஜ் செய்வது கூட பரவாயில்லை. ஃபோனில் முழுவதும் சார்ஜ் தீர்ந்தவுடன்தான் அதில் மீண்டும் சார்ஜ் ஏற்றிக் கொள்ள வேண்டும். ரீ சார்ஜ் என்பதன் அர்த்தமும் அதுதான்.

மாதம் ஒருமுறையாவது உங்கள் ஃபோனில் சார்ஜ் முற்றிலும் குறைந்து பூஜ்ஜியத்துக்கு வந்த பின்னர், அதை சார்ஜ் செய்யுங்கள். இதனால் பேட்டரி நீடித்து வரும். அடிக்கடி ஃபோனில் சார்ஜ் வடிந்து போகாமல் மொபைலில் நீண்ட நேரம் சார்ஜ் நிற்கும்.

நீண்ட நேரம் சார்ஜரை மின்சார இணைப்பில் வைத்திருக்காதீர்கள்

சிலர் இரவில் மொபைல் ஃபோனை சார்ஜில் போட்டுவிட்டு தூங்கி விடுவார்கள். காலையில்தான் அதன் ஸ்விட்சை அணைப்பார்கள். உங்கள் மொபைல் போனில் பேட்டரி பிரச்னைகள் அதிகம் ஏற்படுவதன் காரணம் தேவைக்கும் அதிகமான நேரம் மொபைல் சார்ஜில் இருப்பதால்தான்.

சில ஃபோன்களின் மாடல்களில் பேட்டரியை வெளியில் எடுக்க முடியாது. அது போன்ற மொபைல் ஃபோன்களை அதிக நேரம் சார்ஜில் வைத்திருக்கையில் நிச்சயம் ஃபோன் சூடாகி உடல் நலத்துக்கும் கேடு விளைவிக்கும். அடுப்பில் பாலை காய்ச்சும் போது கவனமாக அதன் அருகிலேயே இருப்போம். பால் பொங்கி வழியாமல் தடுக்க உரிய நேரத்தில் அடுப்பை அணைத்துவிடுவோம் அல்லவா? போலவே சார்ஜ் போடும்போதும், அந்த அளவுக்கு இல்லையென்றாலும் 100 சதவிகிதம் சார்ஜ் ஏறியதும் உடனடியாக ஃபோனை சார்ஜிலிருந்து வெளியே எடுத்துவிட வேண்டும். அது பேட்டரியின் ஆயுளை அதிகரிக்கும்.

தரமான இணைச் சாதனங்களை மட்டுமே பயன்படுத்துங்கள்

பெரும்பாலான மக்கள் குறைந்த விலையில் சந்தையில் கிடைக்கும் மலிவான மொபைலுக்குத் தேவையான இணை சாதனங்களையே பயன்படுத்துகிறார்கள். ஆனால் அது உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். ஒவ்வொரு நிறுவன ஸ்மார்ட் போன்களும் வெவ்வேறு மின்னழுத்தத்தை வழங்கக் கூடியதாக இருக்கும். மொபைல் ஃபோனுடன் சேர்த்து வாங்கும் சார்ஜர் தொலைந்துவிட்டால், சில சமயம் சந்தையில் கிடைக்கும் மலிவான சார்ஜர்களை அவசரமாக வாங்கிவிடுவோம்.

ஆனால் அவை உங்கள் ஃபோனுக்கு பொருத்தமில்லாத வேறு தர மதிப்பீட்டைக் கொண்டிருக்கும். அவை ஒரு குறிப்பிட்ட ஸ்மார்ட்போனிற்காக உருவாக்கப்படவில்லை, எல்லா சாதனங்களுக்கும் பொருந்தும்படியாக பொத்தாம்பொதுவாக வடிவமைக்கப்பட்டிருக்கும். எனவே அவை எந்த சாதனத்திற்கும்  குறிப்பாக பொருத்தமானதாக இருக்க முடியாது. 

அந்தந்த ஃபோனுக்குரிய சார்ஜரையே அதற்குப் பயன்படுத்த வேண்டும். சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கிறது என தரமற்ற சார்ஜர்களை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொரு ஃபோனுக்கும் மின்சார சப்ளை இந்தளவுக்கு இருக்க வேண்டும் என்ற குறிப்பு இருக்கும். ஆனால் அதை விடுத்து வேறு அளவில் இருந்தால் நாளாவட்டத்தில் அது பிரச்னை தர ஆரம்பித்துவிடும். 

சாஃப்ட்வேர் அப்டேஷன்

சாஃப்ட்வேர் அப்டேஷன் செய்து கொள்கிறீர்களா என்று அடிக்கடி உங்கள் ஃபோனில் ஒரு மெசேஜ் வருகிறதா? ஓசியில் கிடைக்கிறதே என்று எந்த அப்டேட்ஸ் வந்தாலும் அதற்கு ஓகே கொடுத்துவிடக் கூடாது. அப்டேஷன் சில சமயம் நல்லதுதான். ஆனால் 17 அப்டேஷன்கள் கிடைத்தால் ஒட்டுமொத்தமாக அதை செய்யும் போது உங்கள் ஃபோன் ஓவர் ஹீட்டாகிவிடும்.

தவிர லேட்டஸ்ட் வெர்ஷன் என்று சில அப்டேட்டுக்கள் தரவிறக்கமாகும் ஆனால் உங்கள் போனில் அதற்கான வசதி இல்லாமல் போனால் பிரச்னைதான். மேலும் வைரஸ், பக்ஸ் போன்ற அழையா விருந்தாளிகள் உங்கள் மொபைல் ஃபோன்களில் தஞ்சம் அடைந்தால் விரைவில் அது மென்பொருளை அழித்து உங்கள் ஃபோனை குட்டிச்சுவராக்கிவிடும். தேவையில்லாத ஆப்களை டவுன் லோட் செய்யாமல் இருப்பதும் உங்கள் மொபைல் ஃபோனின் ஆயுள் நீடித்திருக்கச் செய்யும் ஒரு வழியாகும்.

நீரின்றி அமையாது உலகு, போலவே ஃபோனின்றி இயங்காது அன்றாட வாழ்வு என்று இயந்திரம் சூழ் வாழ்நிலையில், நாம் பாடுபட்டு வாங்கிய மொபைல் ஃபோன்களை பத்திரமாக பாதுகாப்பது நமக்கும் நல்லது, நம் பர்ஸுக்கும் நல்லது. 

]]>
Smart phone, mobile phone, accessories, மொபைல் ஃபோன், செல்போன், Charger, அலைபேசி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/15/w600X390/girl.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-technology/2017/dec/15/your-some-habits-can-decrease-the-life-of-your-mobile-2827048.html
2822700 லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் இந்தப் புத்தாண்டில் ரூ.10,000/-க்குள் ஒரு ஸ்மார்ட் ஃபோன் வாங்க வேண்டுமா? உமா Friday, December 8, 2017 01:30 PM +0530  

நம்மைச் சுற்றியுள்ள உலகமே ஆண்ட்ராய்டில் இயங்குகிறதோ என்று எண்ணும் அளவுக்கு நம்மில் பலர் ஸ்மார்ட்ஃபோன் பயனாளர்களாகிவிட்டோம். செல்ஃபோன் என்பது கூடுதல் வசதி என்பது மாறி அத்யாவசியமான பொருள் போலாகிவிட்டது. காரணம் தினந்தோறும் வாட்ஸ் அப் தகவல்கள், டிஜிட்டல் செய்தித்தாள்களைப் படிக்கும் பழக்கம் என மக்கள் காலத்துக்கு தகுந்தபடி தங்களின் பழக்க வழக்கங்களையும் மாற்றிக் கொள்கின்றனர். இது தகவல் புரட்சிக்கான ஒரு காலகட்டம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆனால் இது சரியா தவறா என்பது இன்னும் கேள்விக்குறியாக இருந்து வருகிறது எனினும், தற்போதைய நிலையில் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை ஸ்மார்டாக இருப்பதற்குக் ஒரு காரணம் இத்தகைய நவீன வசதிகளே! இந்தப் புத்தாண்டில் உங்கள் பட்ஜெட்டில் புதிய ஃபோன் வாங்க இடம் இருந்தால் இந்தத் தகவல்கள் உங்களுக்குப் பயன்படக் கூடும். இந்த ஃபோன்களின் விலை பத்தாயிரத்திற்கும் குறைவானது.

லெனொவா கே6 பவர் (Lenovo K6 Power)

ஜியோமி ரெட் மி நோட் 3 போன்ற வடிவமைப்பு பெற்ற செல்போன் இது. இது கோல்டன், சில்வர் மற்றும் பிரவுஜ் ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கிறது. ஜியோமி நிறுவனத்தின் ரெட்மி 3எஸ் பிரைம் திறன்பேசிக்கு போட்டியாக லெனவோவின் கே 6 பவர் திறன்பேசி இருக்கும் என கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்ட் 6.0.1 வெர்ஷனுள்ள இதில் 4,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, 5.0 அங்குல முழு ஹெச்.டி திரை, உலோகத்திலான வெளிப்புற அமைப்பு, இரட்டை சிம் வசதி, குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 ஆக்டோ கோர் பிராசசர், 3 ஜிபி ராம், 32 ஜி.பி உள்ளக நினைவகம், 128 ஜிபி வரை விரிவுப்படுத்தக் கூடிய தற்காலிக நினைவகம் ஆகிய அம்சங்கள் லெனவோ கே6 பவர் போனில் உள்ளன.

இது தவிர 13 எம்.பி திறனுள்ள பின்புற கேமிரா, எல்.ஈ.டி பிளாஷ் விளக்குகள், மற்றும் 8 எம்.பி திறனுள்ள முன்புற கேமிரா ஆகிய வசதிகளும் இதில் உள்ளன.

கைரேகை உணர்வு வசதி இந்த செல்போனின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர 4ஜி ஆதரவு, வை-ஃபை, 4.2 ப்ளூடூத், எப்.எம் வானொலி, சிறிய யூ.எஸ்.பி இணைப்பு ஆகியவற்றையும் கொண்டிருக்கிறது. 


ஜியோமி ரெட்மி நோட் 4 (Xiaomi Redmi Note 4)

பொதுவாக ஸ்மார்ட் ஃபோன் வைத்திருப்பவர்களின் பெரிய பிரச்னை பேட்டரி. வெகு விரைவில் காலாவதியாகிவிடும். இந்த ஸ்மார்ட்போன் 4100mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுவதால், பேட்டரி லைஃப் மிகவும் நீடித்திருக்கும். 

5.5 இன்ச் எச்டி அளவுள்ள ஸ்மார்ட்போன் 64 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டது. மேலும் 3ஜிபி ரேம் உள்ளடக்கி குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 ப்ராஸஸசர் மூலம் இயக்கப்படுகிறது. பின்புற கேமரா: 13 மெகாபிக்சல், முன் கேமரா: 5 மெகாபிக்சல்  மற்றும் ப்ளாஷ் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஜியோமி ரெட்மி 4 32 ஜிபி (Xiaomi Redmi 4 32 GB)

நோட் 4-க்கு அடுத்தபடியாக இந்த ஸ்மார்ட்ஃபோன் சிறப்பானது. இதில் ஸ்னாப்ட்ராகன் 435 உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டது. இதன் செயல் திறன் மிகவும் நன்றாக இருக்கும். 4100mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது.

யு யுரேகா ப்ளாக் (Yu Yureka Black)

இந்தப் புதிய மாடல் கெமிக் ஸ்னாப்டிராகன் 430 625 ப்ராஸஸசர் மூலம் இயக்கப்படுகிறது.  இந்த வகையறாவில் இதுவே சிறப்பான மாடல் ஆகும். மேலும் 32ஜிபி ஸ்டோரேஜ் உடன் 4ஜிபி ரேம் உள்ளடிக்கியது இந்த மாடல்.

கூல் பேட் நோட் 5 (Coolpad Note 5)

இந்த மாடல் ஃபோனில் பேட்டரியின் திறன் மிக நன்றாக இருக்கும். 4010mAh பேட்டரி திறன் உடைய இந்த ஃபோனில் இரண்டு நாட்கள் வரை சார்ஜ் நீடித்திருக்கும். இந்த போனிலுள்ள கேமரா மிகச் சிறப்பாக வடிவமைக்க்கப்பட்டுள்ளது.

]]>
(Xiaomi Redmi Note 4, Lenovo K6 Power, லெனொவா கே6 பவர், ஜியோமி ரெட்மி 4 http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/8/w600X390/xiaomi-redmi-note-4-recenzja-23-850x478.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-technology/2017/dec/08/best-android-smartphones-under-ten-thousand-2822700.html
2820816 லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் ஃபேஸ்புக்கில் புதுசு... பேரன்ட்டல் கன்ட்ரோலுடன், 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பிரத்யேக சாட் மெசஞ்சர்! கார்த்திகா வாசுதேவன் Wednesday, December 6, 2017 10:49 AM +0530  

ஃபேஸ்புக்கைப் பொருத்தவரை புதிதாக பயனாளர் கணக்கு துவங்க வேண்டுமானால், சம்மந்தப்பட்ட நபருக்கு 18 வயது கடந்திருக்க வேண்டும் என்பது முக்கியமான கட்டுப்பாட்டு விதிகளில் ஒன்று. இதனால் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகள் மிகவும் தவித்துப் போனார்கள் என்று கருதியோ என்னவோ ஃபேஸ்புக் 13 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு எனப் புதிதாக சாட் மெசஞ்சர் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த செயலியின் மூலமாக 13 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகள் தங்களது பெற்றோரின் மேற்பார்வையின் கீழ் தேவையான போது தங்களது நண்பர்களுடன் உரையாடலாம். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலியை சிறுவர்கள் தங்களுக்கென பயனாளர் கணக்குத் தொடங்கி அதன் மூலமாக நிறுவிக் கொள்ளும் வசதி இல்லை. பெற்றோரின் பயனாளர் கணக்கின் துணைக்கணக்காகத் தான் இந்தச் செயலி கட்டமைக்கப் பட்டுள்ளது. எனவே பெற்றோர் மூலமாகத்தான் புதிய நண்பர்களைச் சேர்க்கவோ, நீக்கவோ, அனுப்பிய மெசேஜ்களை டெலிட் செய்யவோ முடியும்.

இப்படி பெற்றோர் கண்காணிப்பில் தான் எல்லாமே செய்ய முடியும் எனில் தனியாக டீன் ஏஜர்களுக்கென பிரத்யேக சாட் மெசஞ்சர் என இதற்கு ஏன் பெயரிட வேண்டும்? எல்லாமே பெரியவர்களுக்கான ஃபேஸ்புக் வடிவமைப்பு போலத்தானே இருக்கிறது என்று சலித்துக் கொள்ளும் சிறுவர், சிறுமிகளுக்கும் தகுந்த பதிலை தருகிறது ஃபேஸ்புக்!

அது என்னவென்றால்; இதுவரையில் பெற்றோர் பயன்படுத்தி வந்த ஃபேஸ்புக் பயனாளர் கணக்குகள் எல்லாம் பெரியவர்களின் வயதுக்கேற்ற முறையில் இருந்து வந்தது, ஆனால் சிறுவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய மெசஞ்சர் செயலியானது முற்றிலும் அவர்களுக்குப் பொருத்தமான சமூக வலைத்தள செயலிகளுடன் இருக்கும். இதற்கான ஐடியாவை குழந்தைகள் மனநல வல்லுனர் ஒருவரின் உதவியுடன் சிறுவர்களுக்குப் பிடித்தமான வகையில் ஃபேஸ்புக் உருவாக்கியுள்ளது.

சிறந்த நோக்கம் மதிப்பிழந்து விடக்கூடாது...

மெசஞ்சர் கிட்ஸ் ஐடியாவின் நோக்கமே, குழந்தைகள் எதை விரும்புகிறார்கள் என்று அறிந்து கொண்டு அதை அவர்களுக்குத் தருவது தான். படங்கள், ஈமோஜிக்கள், லைக்குகள், ஃபேஸ் ஃபில்டர்கள், விளையாட்டுத்தனம் நிறைந்த மாஸ்க்குகள் மட்டுமே இதன் சிறப்பம்சங்கள் என்று கூறி விட முடியாது. புதிதாக நட்புறவுகளை எப்படி உருவாக்குவது, அவற்றை நிர்வகிப்பது மற்றும் தேவைப்படும் போதெல்லாம் குழந்தைகள், பெற்றோருடன் தொடர்பு கொண்டு தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவும் இந்த மெசஞ்சர்கள் உதவும் என்கிறார் குழந்தைகள் மனநல வல்லுனரான மிஸஸ். லாவலீ.

மேலும் அவர் கூறூகையில்; பெற்றோரை சிறந்த கண்காணிப்பாளர்களாகக் கொண்ட இந்த மெசஞ்சர் கிட்ஸ் மிகச்சிறந்த டூல். ஆனால் இதைப் பெற்றோர் எவ்விதமாகத் தங்களது குழந்தைகளின் நட்புறவுகளை மேம்படுத்தவும், இணையத் தொடர்புகளுக்காகவும் பயன்படுத்தச் சொல்லி ஊக்குவிக்கக்கூடும் என்று ஃபேஸ்புக்கால் இப்போதும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை என்றும் தெரிவிக்கிறார்.

ஏனெனில் ஃபேஸ்புக் இதுவரை வெளியிட்டுள்ள அத்தனை புதுமையான தொழில்நுட்ப ஐடியாக்களிலுமே அவை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூல நோக்கம் நிறைவேற்றப்படவே இல்லை. உதாரணமாக ஃபேஸ்புக் லைவ் வீடியோ ஸ்ட்ரீமிங் மூலமாக எத்தனையோ புதுமையான விஷயங்களை உடனுக்குடனாகக் கற்றுக் கொள்ள வசதியுண்டு. ஆனால், மக்கள் அதை லைவ் தற்கொலை நிகழ்வுகளைப் பதிவு செய்யவும், ஆபாச வீடியோக்களை லைவாகப் பதிவு செய்யவும், குற்றச்செயல்களை லைவாகப் பதிவு செய்யவும் தான் பயன்படுத்துகிறார்கள். இதனால், அவற்றின் நிஜமான நோக்கங்கள் அடிபட்டுப் போகின்றன. அல்லது மதிப்பிழப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன.

தரவுகளைச் சேகரிக்காது...

ஃபேஸ்புக்கின் பிற பயனாளர்கள் கணக்குகளைப் போல இந்த மெசஞ்சர் கிட்ஸ் செயலியின் மூலமாக பெற்றோருக்குத் தெரியாமல் உலகம் முழுவதுமுள்ள 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பற்றிய தரவுகளைச் சேகரிப்பதோ அல்லது மார்கெட்டிங் விளம்பர யுக்திகளோ எதுவும் கையாளப் பட மாட்டாது என அறிவிக்கப் பட்டுள்ளது.

தற்போது அமெரிக்காவில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருக்கும் மெசஞ்சர் கிட்ஸ் செயலியை ஆப்பிள் தயாரிப்புகளான ஐ ஃபோன், ஐ பாட், மற்றும் ஐ பாட் டச் உபகரணங்களில் மட்டுமே தரவிறக்கிக் கொள்ள முடியும். ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்கான செயலி மிக விரைவில் மேம்படுத்தப்படும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

]]>
Facebook, ஃபேஸ்புக், messenger kids, new chat app for children, மெசஞ்சர் கிட்ஸ், சாட் செயலி, லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம், lifestyle technology http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/5/w600X390/0000messenger_kids.jpeg http://www.dinamani.com/lifestyle/lifestyle-technology/2017/dec/05/messenger-kids-2820816.html
2815308 லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் ஜியோவின் மீதான நம்பிக்கை தொடருமா? ஏர்டெல்லின் புதிய முயற்சி வெற்றி பெறுமா? உமா Sunday, November 26, 2017 03:06 PM +0530  

ஜியோவின் வருகை இந்திய டெலிகாம் துறையில் நிறைய மாற்றங்களை விளைவித்தது. ஜியோ வழங்கிய சிறந்த திட்டங்களால் இன்று பலதரப்பட்ட மக்கள் அதற்கு வாடிக்கையாளர்களாகி பயனடைந்து வருகின்றனர்.

ஜியோ நிறுவனம் அடுத்தடுத்து வழங்கி வரும் அதிரடி சலுகை திட்டங்களை எதிர்கொள்ள முடியாமல் தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டுள்ள பிற நிறுவனங்கள் திணறி வருகின்றன. தங்கள் வாடிக்கையாளர்களுடன் இணைப்பில் இருக்க ஒவ்வொரு நாளும் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தியும் வருகின்றன.

சமீபத்தில் ஜியோ அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த சலுகை ஒன்றினை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. ஜியோவின் இந்த அறிவிப்பின்படி, இனி நவம்பர் 25-ம் தேதியிலிருந்து ஜியோ வாடிக்கையாளர்கள் 100% கேஷ் பேக் வாய்ப்பை பெற முடியாது.

ஜியோ அதன் வாடிக்கையாளர்களுக்காக கடந்த மாதம் ஒரு புதிய சலுகை ஒன்றை அறிமுகப்படுத்தி இருந்தது நினைவில் இருக்கலாம். இதன்படி, உங்கள் ஜியோ எண்ணில் நீங்கள் 399 ரூபாய்களை ரிச்சார்ஜ் செய்தால், 400-க்கு திரும்பப் பெறுவீர்கள் என்பதுதான் அது. அதாவது நீங்கள் ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு அதற்கான கூப்பன்கள் கிடைக்கும். அதனை அடுத்த ரீசார்ஜ் சமயத்தில் பயன்படுத்த முடியும். ஆனால், நீண்ட காலமாக செயல்பட்டுவந்த இந்தத் திட்டத்தை இப்போது நிறுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, நவம்பர் 25-க்குப் பிறகு, ஜியோவின் இந்த வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாது.

இந்நிலையில் ஜியோவின் ஆக்டோபஸ் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட பார்தி ஏர்டெல் தயாராகி வருகிறது. சந்தையில் ஜியோவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஏர்டெல் நிறுவனம் புதிய வியூகங்களை வகுத்து அதனை அதிரடியாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஜியோவுக்கு போட்டியாக, வெறும் ரூ.2,500-ரூ.2,700 விலையிலேயே அனைத்து வசதிகளுடன் கூடிய 4ஜி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய ஏர்டெல் தயாராகி வருகிறது. இதற்காக அந்த நிறுவனம் பல்வேறு செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனங்களிடம் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. எந்தெந்த நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தையில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்ற தகவல் சஸ்பென்ஸாகவே வைக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு, எதிர்கால சந்தை திட்டங்கள் அனைத்தும் ரகசியம் காக்கப்பட வேண்டியவை. அதுவே நிறுவனத்தின் கொள்கையும் கூட என்பதை மட்டுமே ஏர்டெல் பதிலாக தருகிறது.

ஏர்டெல் இணையதள இணைப்புடன் குறைந்த விலையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ள 4ஜி ஸ்மார்ட்போன் சந்தையில் அதிக விலை கொண்ட போன்களுக்கு நிகராக இருக்கும் என்று கருதப்படுகிறது. அந்த ஸ்மார்ட்போன், நவீனரக ஆண்ட்ராய்டு இயங்கு தளம், 1ஜிபி ரேம், இரட்டை 4ஜி சிம் வசதி, நான்கு அங்குல தொடுதிரை, இருபக்க கேமரா, வோல்டி அழைப்பு தொழில்நுட்பம், நீடித்து உழைக்கும் பேட்டரி உள்ளிட்ட பல அம்சங்களை உள்ளடக்கியிருக்கும் என தெரிகிறது.

அந்த ஸ்மார்ட்போனுடன், வெகுஜன வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையிலான மிக குறைந்த விலையில் 4ஜி இணைப்பு, இலவச அழைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை ஜியோவுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் விதமாக ஏர்டெல் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏர்டெலின் இந்த முயற்சி, வாடிக்கையாளர்களை சாதாரண செல்லிடப்பேசி பயன்பாட்டிலிருந்து ஸ்மார்ட்போனுக்கு தரம் உயர்த்தும் என்பதை நிச்சயமாக நம்பலாம்.

தொலைத் தொடர்பு சேவையில் தனது மேலாதிக்கத்தை செலுத்தி வாடிக்கையாளர்களிடம் அடாவடி கட்டண வேட்டையில் ஈடுபட்ட நிறுவனங்களுக்கு கடிவாளம் போட்டதற்கு ஜியோவின் வரவே அடிப்படை காரணம் என்பதும் மறுப்பதற்கில்லை.

]]>
Jio, Reliance, Airtel, ஜியோ, ஏர்டெல், செல்ஃபோன் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/26/w600X390/cell_phone.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-technology/2017/nov/26/jio-made-big-announcement-but-few-offers-are-no-longer-available-2815308.html
2795712 லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் 'இன்ஸ்டாகிராம் 2.0': 'லைவ் விடியோ கால்' வசதி அறிமுகம் Raghavendran Wednesday, October 25, 2017 04:32 PM +0530  

ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டின் கூகுள் ப்ளே ஸ்டோர் ஆகிய இயங்குதளங்களில் சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் வெர்ஷன் 2.0 அறிமுகம் செய்யப்பட்டது.

இதில், லைவ் விடியோ கால் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும். இதன்மூலம் நமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள நண்பர்களுடன் முகம் பார்த்து பேசும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் நீங்கள் இருவரும் சேர்ந்து பேசிக் கொண்ட அந்த விடியோ பதிவை உடனடியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்ய முடியும்.

மேலும் இந்த விடியோ பதிவின் போது சம்பந்தப்பட்டவர்கள் அடுத்தவர்களை தானாக நீக்கவும், விலகவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அடுத்தவருடன் எளிதில் தொடர்பு கொள்ள முடியும்.

இந்த வசதியானது இன்ஸ்டாகிராமின் 2.0 வெர்ஷனுக்கு அப்கிரேட் செய்தால் மட்டுமே உபயோகிக்க முடியும். அதன்படி அந்த பக்கத்தின் வலது கீழ்ப்பகுதியில் உள்ள ஐகானின் உதவியுடன் லைவ் விடியோ கால் வசதியை உபயோகிக்க முடியும். 

முன்னதாக, 2016-ம் ஆண்டில் லைவ் விடியோ வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், நாம் விரும்பும் காட்சியை நேரடியாக நமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்ய முடியும்.

இதுவரை ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதள பக்கத்தில் மட்டுமே இருந்த இந்த லைவ் விடியோ கால் வசதி தற்போது தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

]]>
Instagram, இன்ஸ்டாகிராம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/25/w600X390/Insta_oct25.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-technology/2017/oct/25/now-go-live-with-a-friend-with-instagrams-new-update-2795712.html
2794161 லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் விலை குறைகிறது புதிய மாடல் ஆப்பிள் ஐஃபோன்! Sunday, October 22, 2017 03:18 PM +0530 ஐஃபோன் வைத்துக் கொள்வது ஒரு ஸ்டேட்டஸ் சம்பந்தப்பட்ட விஷயம் என்பது பரவலான கருத்து. காரணம் அதன் வேகம் மற்றும் பிராண்ட் நேம் போன்றவற்றால் அது தனித்துவமாக இருந்து வருகிறது. ஆனால் ஐஃபோன் வாங்க நினைப்பவர்கள் முதலில் யோசிப்பது அதன் விலைதான். மற்ற ஸ்மார்ட்ஃபோன்களைவிட அதிகமான விலையில் தான் ஐஃபோனை வாங்க முடியும். ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு மலிவு விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. 

சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள ஐபோன் 8 மற்றும் ஐபோன் gX இரண்டுமே செல்ஃபோன் பிரியர்களுக்கிடையே அமோக வரவேற்பினைப் பெற்றது. இதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் 2018-ம் ஆண்டு ஐபோன்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி ஐபோன் gX -ல் ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து வசதிகளுடனும் குறைந்த விலையில் கிடைக்கும். அதாவது சந்தையில் தற்போது இருக்கும் ஸ்மார்ட்போன் விலையை விட மூன்று மடங்கு குறைவாக இருக்குமாம்.

]]>
iPhone, செல்போன், iphone 8, Apple phone, ஐஃபோன் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/22/w600X390/iphone_8.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-technology/2017/oct/22/price-slashes-for-new-model-iphone-2794161.html
2769629 லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் ஜியோ Vs ஏர்டெல் சவாலுக்கே சவால்! Friday, September 8, 2017 04:57 PM +0530  

ஜியோ 4ஜி போட்டியை சமாளிக்க புதிய சலுகைகள் மட்டும் போதாது, அதற்கும் மேல் ஏதாவது செய்ய வேண்டும் என இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல் நிறுவனம் முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து விரைவில் வோல்ட்இ (VoLTE) சேவைகளை துவங்கவிருப்பதாக அந்நிறுவன வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் வோல்ட்இ சேவையை வழங்கும் இரண்டாவது நிறுவனமாக ஏர்டெல் இருக்கும்.

வோல்ட்இ சேவைகளை வழங்கிய முதல் நிறுவனம் எது?

2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வோல்ட்இ சேவைகளை வழங்கியவர்கள் சாட்சாத் ரிலையன்ஸ் ஜியோ தான். ஜியோ தான் இந்தச் சேவையை இந்தியர்களுக்கு வழங்கிய முதல் நிறுவனம். ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே இதுவரையில் வோல்ட்இ சேவைகலை வழங்கி வரும் நிலையில், மற்ற நிறுவனங்கள் சர்கியூட் - ஸ்விட்ச் எனும் பழைய தொழில்நுட்பத்தைதான் இன்னும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தொழில்நுட்பத்தில் மொபைல் டேட்டா 4ஜி நெட்வொர்க்கில் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் நிறுவனம் முதல் கட்ட பணியாக வோல்ட்இ சேவைகயை மும்பையில் தொடங்கவுள்ளனர். அதைத் தொடர்ந்து கொல்கத்தா, தில்லி, பங்களூரூ, சென்னை என தொடர்ந்து 2018 இறுதிக்குள் இந்த வோல்ட்இ சேவைகளை நாடு முழுவதும் வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான சோதனையை ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே துவங்கியுள்ளது. 

இந்தியாவில் வோல்ட்இ தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை ரிலையன்ஸ் ஜியோவால் அதிகரித்துள்ளது. காரணம் 2ஜி மற்றும் 3ஜி தொழில்நுட்பங்களைவிட வோல்ட்இ சேவைகளை கொண்டு மேற்கொள்ளப்படும் அழைப்புகளின் தரம் உயர்வாக இருக்கிறது. கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதம், வோல்ட்இ அழைப்புகளை முற்றிலும் இலவசமாக வழங்கும் திட்டத்தை ஜியோ அறிவித்தது. இதனால் பாதிப்படைந்த சில நிறுவனங்கள் இந்தப் போட்டியை சமாளிக்க வோல்ட்இ முக்கிய தீர்வாக இருக்கும் என முடிவு செய்து களமிறங்கியுள்ளனர். ஏர்டெல்லைத் தொடர்ந்து ஐடியாவும் இதைப் பின்பற்றப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

]]>
Airtel, Jio, 4g, VoLTE, ஏர்டெல், ஜியோ, ரிலையன்ஸ், வோல்ட்இ http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/8/w600X390/voLTE.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-technology/2017/sep/08/irtel-set-to-start-volte-services-from-next-week-2769629.html
2769076 லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் இனி வாட் ஆப்ஸ் அரட்டைக்கு மட்டுமல்ல, புக்கிங் செய்யவும் பயன்படும்! Thursday, September 7, 2017 05:40 PM +0530  

இனி வெறும் தகவல் பறிமாற்ற செயலியாக நீங்கள் வாட்ஸ்ஆப்பை நினைக்க முடியாது. தற்போது வெவ்வேறு புதிய சேவைகளை அதில் இணைக்கப் படவிருக்கிறது.  கார் முன்பதிவு, பஸ், ரயில் மற்றும் விமான டிக்கெட்டுகள், ஹோட்டல், என பலவிதமான தேவைக்கு ஏற்றவாறு அப்டேட் ஆகவுள்ளது வாட்ஸ் ஆப்.

வாட்ஸ் ஆப்பில் புத்தம்புதியதாக பல்வேறு சேவைகளை உள்ளடக்கி நவீனமாக இச்செயலியை மாற்றிவிட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.  சினிமா டிக்கெட்டிலிருந்து ப்ளைட் டிக்கெட்டுகள் வரை இனி இதில் முன்பதிவு செய்யலாம். கேப் புக் செய்யவும், வெளியூர்களில் ஹோட்டலில் தங்குவதற்கு முன்பதிவு செய்யவும் இணையதளங்களை தேடி செல்லத் வேண்டியதில்லை. இனி 'வாட்ஸ் ஆப்பின் மூலமாகவே இந்தச் சேவைகளை பெற முடியும்.

இதில் முதல் கட்ட வேலையாக திரைப்பட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய 'புக் மை ஷோ' நிறுவனத்துடன் வாட்ஸ் ஆப் நிறுவனம் இணைந்துள்ளது. 'புக் மை ஷோ'வில் டிக்கெட் பதிவு செய்தால் 'வாட்ஸ் ஆப்'-இல் டிக்கெட் முன்பதிவு செய்ததற்கான உறுதித் தகவல் அனுப்படும். போலவே ஓலா, ஒயோ, போன்ற பிற சேவை நிறுவனங்களும் இணைய உள்ளது. இவை தவிர பண பறிமாற்ற வசதிகளையும் 'வாட்ஸ் ஆப்' செயலியின் மூலம் நிகழ்த்தலாம். 

நவீன வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்ட வாட்ஸ் ஆப்பில் வாழ்பவர்களுக்கு இனி துளியும் கவலையில்லை. 

]]>
whatsup, new services in whatsapp, வாட்ஸ் ஆப், சினிமா http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/7/w600X390/WhatsApp.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-technology/2017/sep/07/whatsapp-used-for-booking-movie-tickets-and-block-hotels-2769076.html
2769018 லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் விண்ணில் பறக்கும் போது ஹாயாக ஒரு செல்ஃபி எடுத்த விமானி! Thursday, September 7, 2017 12:24 PM +0530  

எதற்கெல்லாம் செஃல்பி எடுப்பது என்று இளைஞர்களுக்கு வரம்பு முறையே இருப்பதில்லைல். ஒரு கூட்டத்தில் தனித்து தெரியும் நபர்களாக இந்த செல்ஃபி பிரியர்கள் ஆரம்பத்தில் இருந்தார்கள். ஆனால் தற்போது ஒரு கூட்டமே செல்ஃபி வெறியர்களாக மாறியிருப்பது காலத்தின் சோகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இதோ பறக்கும் விமானம் ஒன்றின் ஜன்னலுக்கு வெளியிலிருந்து இப்படி ஒரு செஃல்பியை இந்த பைலட் எடுக்கவில்லை என்று யார் அழுதார்கள்? துபாய் விமானியான இவருடைய இந்த சாகஸ செல்ஃபி தற்போது இணையதளங்களில் வைரலாகிவருகிறது.

இந்த செஃல்பி த்ரில்லர் வகையச் சார்ந்தது என்கிறார்கள். அதாவது யாரும் செய்ய முடியாத ஒரு நிகழ்வைச் செய்து அதை புகைப்படமாக்குவது. இதில் மிருகங்களுடன் செஃல்பி எடுப்பது, உயரமான இடத்தில் நின்று செஃபி எடுப்பது போன்றவை அடங்கும். ஆனால் சிலர் தன்னை மறந்து செஃல்பி எடுக்கும் போது சுற்றுயிருக்கும் ஆபத்தை உணரக் கூட முடியாமல் பரிதாபமாக இறந்து போகிறார்கள். சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் அதிக செல்ஃபி மரணம் இந்தியாவில் தான் ஏற்படுகிறது என்று கூறியுள்ளது.

ஒரு விமானியின் முக்கிய பணி அனைவரையும் பத்திரமாக உணரச் செய்து பயண நேரத்தில் பாதுகாப்பு அளிப்பது. ஆனால் இந்த இளம் விமானியான செஃல்பி பிரியர் பறக்கும் விமானத்தில் மேகங்கள் மிதக்கும் வெளியை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபடி செல்ஃபி எடுத்துள்ளதுள்ளார். உண்மையில் இந்தக் காட்சி பார்க்க அழகாக இருந்தாலும், இது அவர் உயிர் சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால் சற்று பதை பதைக்க வைக்கிறது. சமூக வலைத்தளங்களில் அவர் சில புகைப்படங்களைப் பதிவிட்டவுடன் ஏகப்பட்ட லைக்ஸ்கள் குவிந்தனவாம். தவிர சிலர் அது உண்மையான செஃல்பி இல்லை. விமானியின் தலைமுடி காற்றில் சற்றும் கலைந்திருக்கவில்லை. எனவே ஏதோ மார்ஃபிங் வேலை என்றும் கூறிவருகின்றனர். 

உண்மையோ பொய்யோ இது போன்ற செஃல்பிக்களை யாரேனும் பதிவிட்டால் அதை நிராகரிக்க வேண்டும். 

]]>
Selfie, Dubai Pilot, Viral in Instagram, விமானி, செல்ஃபி, செஃல்பி ஆபத்துக்கள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/7/w600X390/pilot-slfie1.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-technology/2017/sep/07/ilot-shares-dangerous-cockpit-selfie-flying-over-dubai---but-people-cant-decide-if-its-real-2769018.html
2764408 லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் புது மொபைல் ஃபோன் வாங்கப் போகிறீர்களா? இதோ சில டிப்ஸ் Wednesday, August 30, 2017 03:54 PM +0530  

மற்ற பொருட்களை வாங்குவது போல நமக்குப் பிடித்த ஒரு மொபைல் ஃபோனை  வாங்குவது அத்தனை சுலபம் அல்ல.ஆசை ஆசையாகத் தான் வாங்கியிருப்போம், ஆனால் ஏனோ திடீரெனப் பிடிக்காமல் போய்விடும். வாங்கிவிட்டபின் மாற்றவும் முடியாது. என்ன செய்யது? கடையிலோ இணைய தளத்திலோ தரமான எலக்ட்ரானிக் ஐட்டங்களை தேர்ந்தெடுப்பது செய்வது எப்படி?

விசாரித்து தெரிந்து கொள்ளவும்

எந்த பொருளை வாங்குவதாக இருந்தாலும் அது பற்றிய முழுமையான தகவல்களை நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் விரும்பும் ஃபோனில் என்னென்ன வசதிகள் உள்ளன, அது உங்கள் பட்ஜெட்டுக்கு பொருத்தமாக உள்ளதா என்று முதலில் முடிவு செய்து கொள்ளுங்கள். அந்த ஃபோனைப் பற்றிய விமரிசனங்களை இணையத்தில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் அதே மொபைல் வைத்திருந்தால் அவர்களிடம் அதன் பயன்பாட்டைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும். தவிர உங்களுக்குப் பிடித்த பிராண்டையும் சந்தையில் கிடைக்கும் அனைத்துப் பிராண்டுகளுடன் ஒப்புமைப் படுத்திப் பார்த்தபின் வாங்குவது நல்லது.

ஆஃபர் வரும் வரை காத்திருக்கவும்

பண்டிகை காலத்தில் பலவிதமான ஆஃபர்களின் அணிவகுப்பு இருக்கும், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது முதல் பழைய ஃபோனுக்கு புதியது, ஆயிரம் ரூயாய் தள்ளுபடி என்பதிலிருந்து அதனுடன் இது ஃப்ரீ என்று விதவிதமான சிறப்பு சலுகைகள் கிடைக்கும். எனவே சலுகை விலையில் நமக்குத் தேவையான ஃபோனை வாங்கலாம்.

ஆன்லைனில் வாங்கும்போது 

மொபைலை ஆன்லைனில் வாங்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டியது அது தரமான விற்பனைத் தளமா அல்லது ஊர் பெயர் தெரியாத நிறுவனமா என்பதுதான். சில சமயம் இந்த இணையதள விற்பனையாளர்கள் சலுகை விலையில் மொபைல் விலையை நிர்ணயிப்பார்கள். ஆனால் அது டெலிவரி ஆகாது. எத்தனை நாள் தான் காத்திருப்பது. இணையத்துக்குத் தகவல் அனுப்பினால் செல்லர் அனுப்பும்போது மொபைல் உடைந்துவிட்டது ஆர்டர் கேன்சல் என்று சொல்லிவிடுவார்கள். உங்கள் பணத்தை உங்கள் அக்கவுண்டுக்கு ஏழு நாட்களுக்குள் அனுப்பிவிடுவார்கள் என்றாலும் ஆசையாக புக் செய்த மொபைல் கைக்கு வந்து சேரவில்லை என்ற கோபம் உங்களுக்கு நிச்சயம் ஏற்படும். இதைத் தவிர்க்க இணையத்தில் வாங்காமல் நேரடியாகக் கடைக்குச் சென்று உங்களுக்கு பிடித்த மொபைலின் அத்தனை அம்சங்களையும் சரி பார்த்து வாங்கிக் கொள்வது சாலச் சிறந்தது.

உங்களுக்கு எந்தவிதமான பயன்பாடு என்பதைப் பொருத்து மொபைல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். தேவையில்லாமல் பணம் கொடுத்து ஹையர் எண்ட் ஃபோன் வாங்கிவிட்டு அதைப் பயன்படுத்தாமல் வைத்திருப்பது வீண். 

புது மொபைல் வாங்கிய உடன் அதை எத்தனை மணி நேரம் சார்ஜில் போடுவது என்பதிலிருந்து சிக் கார்ட் பயன்பாடுகளையும் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். ஹெட் செட், சார்ஜர், டெம்பர் க்ளாஸ், மொபைல் கவர், பவர் பேங்க் என தேவைப்படும் மொபைல் ஆக்ஸசரிஸ் அனைத்தையும் மொபைல் வாங்கும்போதே சேர்த்து வாங்கிவிடுவது நலம்.
 

]]>
New mobile, Cell phones, மொபைல், புது ஃபோன் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/30/w600X390/A-new-iPhone-7-Plus.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-technology/2017/aug/30/tips-for-buying-a-mobile-phone-2764408.html
2754226 லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் பார்வையற்றோரால் ஃபோட்டோ எடுக்க முடியுமா? முடியும் என்கிறார்கள் இவர்கள்! RKV DIN Saturday, August 12, 2017 03:22 PM +0530  

பார்வையற்றவர்கள் யாராவது ஒருத்தர் உங்க கிட்ட வந்து, எனக்கு ஃபோட்டோகிராபில ஆர்வம் இருக்கு. நானும் புகைப்படங்கள் எடுப்பேன்னு சொன்னா நீங்க நம்புவீங்களா? இதுவரை நம்பலேன்னாலும் இனி நம்பித்தான் ஆகனும். அவங்களாலும் அருமையாக புகைப்படங்கள் எடுக்க முடியும்னு நிரூபணம் ஆகியிருக்கு. அவங்களுக்காகவே பிளைன்ட் வித் கேமரான்னு ஒரு கான்செப்ட் 2006 ஆம் வருஷத்துல இருந்து இயங்கிக்கிட்டு இருக்கு. இந்தியாவுக்கு இந்த விஷயத்தை கொண்டு வந்து சேர்த்த பெருமை பார்த்தோ போமிக் என்ற பார்வையற்ற புகைப்படக்காரரைச் சேரும். அவர் புகைப்படங்கள் எடுக்கறதோட மட்டுமல்லாமல் அதைக் கற்றுத்தருவதற்கான வொர்க் ஷாப்புகளும் நடத்தி வருகிறார். பார்த்தோ யரைப்பார்த்து இன்ஸ்பையர் ஆகி இந்த விஷயத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தார்ன்னு பார்த்தா அவரோட பெயர் ஈவ்ஜென் பாவ்கர். அவரும் ஹங்கேரியைச் சேர்ந்த ஒர் பார்வையற்ற புகைப்படக்காரரே!

'பிளைன்ட் வித் கேமரா' என்பது புகைப்படக் கலையில் ஆர்வம் கொண்டுள்ள பார்வையற்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வசதிக்காக நடத்தப்படும் பயிற்சிப் பட்டறை... சிம்பிளாகப் புரிய வேண்டுமென்றால் வொர்க் ஷாப். கடந்த பல ஆண்டுகளாக நூற்றுக் கணக்கான பார்வையற்ற மாணவர்களும், இளைஞர்களும் இந்த வொர்க் ஷாப்களில் கலந்து கொண்டு பார்த்தோவிடம் பயிற்சி பெற்று தங்களது புகைப்படக் கலைக் கனவை நனவாக்கிக் கொண்டு வருகிறார்கள்.

பார்த்தோவின் இந்த வொர்க் ஷாப் மூலமாகத் தூண்டப்பட்டு மேலும் தங்களது புகைப்படக் கலை ஆர்வத்தை பட்டை தீட்டிக் கொண்டவர்களில் முக்கியமானவராக பிரணவ் லாலைக் கூறலாம். பிரணவ் டெல்லியைச் சேர்ந்த ஒரு சைபர் செக்கியூரிட்டி அலுவலர். அதோடு அவருக்குப் பிறவியிலிருந்தே பார்வைக் குறைபாடு இருந்தது. ஆனாலும் தன்னால் மிக அருமையான புகைப்படங்கள் எடுக்க இயலும், தனது கற்பனையின் துணை கொண்டு தனது ஆர்வத்தை வெற்றிகரமானதாக்கிக் காட்ட தன்னால் முடியும் என பிரணவ் நம்பினார். அந்த நம்பிக்கையின் அடுத்த கட்டம் தான் பார்த்தோவின் ‘பிளைன்ட் ஃபோட்டோகிராபி’ வொர்க் ஷாப்பில் கலந்து கொள்ளத் தொடங்கியது.

வொர்க் ஷாப்பில் கலந்து கொள்ள புகைப்படக் கலை மீது கொண்ட ஆர்வம் மட்டுமே காரணமில்லை. அதைத் தாண்டி தனது புலன்களுக்குத் தட்டுப்படாத, தனது அறிவின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட சில விஷயங்களை பதிவு செய்து, அதை உணர வேண்டும் என்ற ஆர்வம் பிரணவுக்கு இருந்தது.

அப்போது தான் அவருக்கு voice எனும் தொழில்நுட்பத்தின் அறிமுகம் கிடைக்கிறது. இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படை என்னவென்றால் ஒளி அலைகளை ஒலி அலைகளாக மாற்றித் தரக்கூடிய வல்லமை. முகமூடிக் போன்ற இந்த உபகரணத்தில் இரண்டு கருப்புக் கண்ணாடிகள் பொருத்தப் பட்டிருக்கும். அந்தக் கண்ணாடிகளுடன் ஒரு மினியேச்சர் கேமரா மிக மெல்லிய வயர்களால் இணைக்கப்பட்டிருக்கும். இதை கண்களில் அணிந்து கொண்டு பார்க்கையில் பார்வையற்றவர்களால் தங்களது பார்வைப் புலனுக்கு புலப்படாத உருவங்களைப் பற்றி அவர்கள் அது வரை அறிந்திராத புது புதுப் பரிணாமங்கள் கிடைக்கக் கூடும் என்கிறார் பிரணவ். அதுமட்டுமல்ல, இந்த உபகரணம் மூலமாக புகைப்படப்படமெடுக்கவிருக்கும் நபர்களின் அசைவுகளைக் கணித்து அதன் மூலம் அந்தக் குறிப்பிட்ட பொருளின் அல்லது நபரின் உயரம், தேவையான ஒளி அமைப்புகள் முதலியவற்றைக் கணிக்க முடியும் என்றும் அவர் கூறுகிறார்.

இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகளையும், தொழில்நுட்ப உபகரணங்களையும் காணும் போதெல்லாம், தொழில் நுட்ப வளர்ச்சி அதன் உச்ச பட்ச இலக்கை எட்டி விட்டதா? என்றால் ஆம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. பார்வையற்றவர்களால் புகைப்படமெல்லாம் எடுக்க முடியாது என இனி யாரும் துணிந்து சொல்ல முடியாது பாருங்கள்!


 

]]>
blind photography, voice technology, பிளைன்ட் ஃபோட்டோகிராபி, வாய்ஸ் தொழில்நுட்பம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/12/w600X390/000blind_photographyyy.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-technology/2017/aug/12/blind-photography-2754226.html
2744479 லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் சீனாவில் ஆன்லைன் லைவ் ஸ்ட்ரீமிங் ஷோ வழங்கினால் மாதம் 65 லட்ச ரூபாய் சம்பாதிக்கலாமாம்! கார்த்திகா வாசுதேவன் Wednesday, July 26, 2017 01:16 PM +0530  

சைனாவில் ‘யூ லீ’ எனும் இளைஞர் ஒருவர் தன்னைத்தானே லைவ் வீடியோ எடுத்து அதை நிகழ்ச்சிகளாக்கி YY எனும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மாதம் 1 மில்லியன் டாலர் வரை சம்பாதிக்கிறார். இந்தியப் பணத்துக்கு அந்தத் தொகையின் இன்றைய மதிப்பு 6442750.00 ரூபாய்கள். இதற்காக யூ லி கொஞ்சம் மெனக்கெடத்தான் வேண்டியிருக்கிறது. எப்படித் தெரியுமா? கேமராவுக்கு முன்பு வருவதற்கு முன்பு தன்னுடைய தோற்றம் பார்வையாளர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கிறதா? தலைமுடி ஒழுங்காக படிய வாரப்பட்டு கச்சிதமாக அமைந்திருக்கிறதா? முகத்தில் பவுடர் கோட்டிங் போதுமா? என்று சரி பார்த்து விட வேண்டும்.அப்புறம் எந்த நேரமானாலும் யூ லீ கேமராவுக்கு முன்னால் வர ரெடி தான். இப்படிச் செய்தால் 64,42.750 ரூபாய் கிடடைக்குமென்றால் அதைச் செய்ய யாருக்குத் தான் கசக்கும்?!

அது மட்டுமல்ல, சைனாவின், சென்யாங் மாகாணத்தில் பிரதர் யூ லீ நடத்தி வரும் வுடி மீடியா ஏஜன்ஸியில் வெற்றிகரமாக எப்படி ஆன்லைன் ஸ்டார்களாவது? எனும் பயிற்சி வகுப்புகளையும் அவர் நடத்தி வருகிறாராம். அது சரி தான் மட்டும் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தால் தான் அது மோசமான செய்கை எனப் பிறரால் விமர்சிக்கப் படக்கூடும். ஆனால் லி தனது இந்தத் திறமையை பயிற்சி வகுப்புகள் மூலம் விருப்பமுள்ள அனைவருக்குமே கற்றுத் தரத் தயாராக இருக்கிறார் எனும் போது அவரை வரவேற்பவர்கள் அதிகமாகி விட்டனர். தனது ஆன்லைன் ஷோவில் லீ அடிக்கும் ஜோக்குகள், பஞ்ச் டயலாக்குகள் அனைத்துக்குமே அவரது பார்வையாளர்களிடமிருந்து விர்ச்சுவல் அன்பளிப்புகள் வேறு உடனுக்குடன் வந்து சேருகின்றனவாம். அதாவது உடனடியாகப் பணமாக மாற்றிக் கொள்ளத்தக்க விர்ச்சுவல் அன்பளிப்புகள் அனுப்புகிறார்கள் அவரது ரசிகர்கள்.

லீயின் ஷோவில் கொஞ்சம் காமெடி, கொஞ்சம் இசை, கொஞ்சம் உரையாடல் என எல்லாம் கலந்து இருக்கும், பொதுவாக வடகிழக்கு சீனாவில் டாங்பேய் கலாச்சாரத்தை வெளிப்படுத்தக் கூடிய வண்ணம் லியின் ஷோக்கள் வடிவமைக்கப் படுகின்றன. லீயின் நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருப்பவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவர்களுக்குள் இருக்கும் ஆசையும், கனவும் தான் அவர்களை பணம் சம்பாதிக்கச் செய்யத் தூண்டுகிறது. தொலைக்காட்சித் திரையின் முன்புறமாக நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவர் அந்நேரத்தில் பல் துலக்கிக் கொண்டு இருக்கலாம், அல்லது வேலை முடிந்து வீட்டுக்குச் செல்வதற்கான கடைசி நிமிடங்களில் யூ லியின் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு அலுவலகத்தில் இருந்து வெளியேறக் காத்திருக்கலாம். ஆனால் இவர்கள் எல்லோருக்குமே தங்களது குரலாலோ, அல்லது தோற்றத்தாலோ ஏதாவது ஒரு வகையில் மக்கள் ரசிக்கும் செலிபிரிட்டியாகி விடும் ஆசை மனதின் ஒரு மூலையில் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு யூ லீ மிகச்சிறந்த இன்ஸ்பிரேஷன், அவர்களை தனது நிகழ்ச்சிகளின் மூலம் மன அழுத்தத்திலிருந்து வெளிவர உதவும் லீ, அதற்கான பலனை பணமாக அறுவடை செய்து விடுகிறார். இப்படியாக யூ லீ யின் நிகழ்ச்சிகளை மக்கள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக ஆயிரக்கணக்கில் பார்க்கப், பார்க்க லீயின் வாழ்க்கை பெரிய புராணக் கதாபாத்திரம் போன்று அங்கே மாறிவருகிறது. சொல்லப்போனால் சீனப் பிரதமரின் பிரசித்தி பெற்ற முழக்கமான ‘சீனக் கனவு’ எனும் பதத்துக்கான அடையாளமாகவே யூ லீ மாறிக்கொண்டிருக்கிறார் என்று சொன்னாலும் அதில் தவறில்லை.

இணைய நிகழ்வுகளில் லைவ் ஸ்ட்ரீமிங் என்பது அமெரிக்கா போன்ற பல நாடுகளில் பிரபலமானது தான். ஆனால் சீனாவைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் நிறையக் கட்டுப்பாடுகள் இருந்தாலும் அங்கிருக்கும் 700 மில்லியன் இணையப் பயன்பாட்டாளர்களில் பாதிக்குப் பாதி யூ லீயின் இந்த ஆன்லைன் லைவ் ஸ்ட்ரீமிங் ஷோவை ரசித்துப் பார்த்து வருகிறார்களாம். அப்படிப்பார்த்தால் இந்த புள்ளி விவரக் கணக்கீடு என்பது அமெரிக்காவின் மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகம் தான்.

2016 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரக் கணக்கீட்டின் படி சீனாவில் ஆன்லைன் ஸ்ட்ரீம் மார்க்கெட்டின் சந்தை மதிப்பு $3 பில்லியன் டாலர்களாக இருந்தது. ஆனால் ஆய்வாளர்களின் கணிப்பின்படி விரைவிலேயே இந்த நிலை மாறும், கூடிய விரைவில் சீனாத் திரைப்படங்களுக்கான பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷன் மதிப்பை விட ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மதிப்பு உச்சத்தை எட்டும் எனக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் சமூக வலைத்தளங்கள் விளம்பரங்கள் மற்றும் தகவல் ஒளிபரப்புதல் மூலமாகப் வருவாய் ஈட்டி வருகின்றன. அதே டெக்னிக்கைப் பின்பற்றித்தான் சீனாவின் ஆன்லைன் ஸ்டார்களும் வருவாய் ஈட்டி வருகிறார்கள். இங்கே என்ன வித்யாசம் என்றால் சீனாவின் ஆன்லைன் ஸ்டார்களுக்கு வருவாய், விர்ச்சுவல் கிஃப்டுகள் எனும் பெயரிலும் மிதமிஞ்சிக் குவியத் தொடங்கி விட்டது. இதன் மூலமாக ஆன்லைன் ஸ்ட்ரீமிங் வருவாய் விகிதம் ஆண்டு தோறும் 180 விழுக்காடு அதிகரிக்குமென நம்பப்படுகிறது.

அதோடு இன்று வரை சீனாவில் அமெரிக்க பின்புலம் கொண்ட ஃபேஸ்புக் மற்றும் கூகுளுக்கு இன்று வரை அனுமதியில்லை. இதனால் உள்ளூர் சமூக  வலைத்தள நிறுவனங்களான டென்சென்ட் உள்ளிட்ட லோக்கல் நிறுவனங்கள் நன்கு செழித்து வளர்கின்றன. யூ லீ யின் YY.com  ஆரம்பத்தில் ஒரு கேமிங் போர்ட்டலாகத் தான் தொடங்கப் பட்டது ஆனால் அது ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிகழ்ச்சிகளுக்கு மக்களிடையே கிடைத்த அதீத வரவேற்பைக் கண்டபின் இன்று சீனாவின் சமூக தகவல் தொடர்பு வலைத்தள மேடையில் லீடர் என்று சொல்லத் தக்க அளவில் பல புதுமையான உத்திகளை தனது நிகழ்ச்சிகளில் பயன்படுத்தி சீனாவின் ஆன்லைன் லைவ் ஸ்ட்ரீமிங் சந்தையில் முதலிடத்தில் நிற்கிறது.

ஒருபக்கம் அந்நிய தகவல் தொடர்பு நிறுவனங்களையும் சமூக வலைத்தள நிறுவனங்களையும் அனுமதிக்காத சீனா உள்நாட்டில் ஆன்லைன் லைவ் ஸ்ட்ரீமிங் ஷோக்களால் உலக அளவில் பிரபலமாகிக் கொண்டிருப்பதோடு அதன் மூலமாக பெருவாரியாக தனிநபர் வருமானம் ஈட்ட முடியும் என்றும் கற்றுத் தரும் நிலையில் இருப்பது ஆச்சரியமான விஷயம் தான்.

அதைவிட ஆச்சர்யம் இந்த ஷோக்கள் மூலம் கிட்டும் வருவாய் பாக்ஸ் ஆஃபீஸ் கிட் திரைப்படங்களைக் காட்டிலும் அதிகமாக இருக்கப் போகிறது எனும் நிஜம்.

]]>
ஆன்லைன் லைவ் ஸ்ட்ரீமிங் ஷோக்கள், சீனா, யூ லீ, சமூக தகவல் தொடர்பு இணையதளங்கள், china, yu li, online live streaming show, market value of live streaming shows, box office collection http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/26/w600X390/brother_li_3.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-technology/2017/jul/26/how-to-make-6442750-rupees-per-month-in-china-live-streaming-your-life-2744479.html
2728984 லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் 200 கோடி பயனாளிகளை அடைந்து ஃபேஸ்புக் புதிய சாதனை!  Thursday, June 29, 2017 01:18 PM +0530 தினமும் காலையில் எழுந்த உடன் பலர் கண்ணாடியில் தான் விழிப்பார்கள். அல்லது அவர்களுக்கு மிகவும் பிடித்தமானவர்களின் முகத்தில் விழிப்பார்கள். அல்லது பசு மாட்டை முதலில் பார்ப்பார்கள். ‘யார் முகத்தில முழிச்சேனோ, இன்னிக்கு இந்த பாடு பட்டுட்டு இருக்கேன்’ என்றும் ‘இன்னிக்கு அவன் நரி முகத்துல விழிச்சிருக்கான் போல இவ்வளவு அதிர்ஷ்டம்’என்று விழிப்பதைப் பற்றிய பல விஷயம் பரவலாகப் பேசப்படும். ஆனால் இன்றைய நிலை இதற்கு தலை கீழ். பெரும்பாலான மக்கள் விழிப்பது மற்றவர்களின் முகங்களில் அல்ல சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் தான். இப்படி உலக மக்கள் தொடர்ந்து தந்த ஆதரவில் தற்போது ஃபேஸ்புக் 200 கோடி மாதாந்திர பயனர்களை எட்டியுள்ளது. ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மை அதுதான். இந்த சாதனைக் கதையை சுருக்கமாகப் பார்க்கலாம்.

அக்டோபர் 2012-ல் 100 கோடி பயனர்களை எட்டிய ஃபேஸ்புக், கடந்த மார்ச் 31-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது 194 கோடி ஃபேஸ்புக் பயனர்கள் இருந்தனர். தற்போது உலகம் முழுவதும், பேஸ்புக் பயனாளிகளின் எண்ணிக்கையானது 200 கோடியை எட்டிவிட்டதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார். தன் நிறுவனத்தில் புதிய கொள்கை வாசகத்தையும் அறிவித்தார். அது உலகத்தை இன்னும் நெருக்கமாக ஒன்றிணைப்போம்’ என்பதாகும்

பிப்ரவரி 4, 2004 ஆண்டில் தனது, மூன்று நண்பர்களுடன் இணைந்து, அமெரிக்க கல்லுாரி மாணவர்களுக்காக, 'ஃபேஸ்புக்' என்னும் சமூக வலைதளத்தை, மார்க் ஜுக்கர்பெர்க் துவங்கினார். முதல் ஆண்டிலேயே இந்த வலைதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டியது. அதன் பின் உலகம் முழுவதும் இதன் பயன்பாடு அசுர வேகத்தில் பரவியது. 2009-ம் ஆண்டு 100 கோடி பயனர்களை எட்டியது ஃபேஸ்புக். இதன் பயனர்களின் எண்ணிக்கை நாட்டின் மக்கள் தொகையை விட அதிகமாக உள்ளனர்.

இத்தகைய அபார வளர்ச்சிக்குக் காரணம் வளரும் நாடுகளில் ஃபேஸ்புக் பயன்பாட்டை அதிகரிக்கும் புதுப் புது யுக்திகளை இந்நிறுவனம் கடைபிடித்தது வருகிறது. குறைந்தளவு டேட்டாவை பயன்படுத்தும் விதமாக ஃபேஸ்புக் லைட் என்ற மென்பொருளை அறிமுகப்படுத்தியதால் மொபைல் போனில் இதை எளிதாகத் தரவறக்கம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது. தவிர அதில் பல செயலிகளையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. பயனாளர்களை மகிழ்விக்கும் விதமாக ஒரு 'பர்சனல் டச்’ இருப்பதையும் கவனமாக கையாள்கிறது.

ஃபேஸ்புக் நிறுவனம் 13 ஆண்டுகளில், 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட, கிட்டத்தட்ட ஐம்பது நிறுவனங்களை கையகப்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் தற்போது இதன் பயனாளிகளின் எண்ணிக்கை 200 கோடியை எட்டிவிட்டதில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதர சமூக வலைதளங்களைப் பொருத்தவரை 2017-ம் ஆண்டின் முதலாம் காலாண்டில் ட்விட்டர் 32.8 கோடி மாதாந்திர பயனாளிகளையும் 'ஸ்னாப்ஷாட்' 16.6 கோடி பயனாளிகளையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

]]>
ஃபேஸ்புக், Face book, Mark Zuckerberg, மார்க் ஜுக்கர்பெர்க் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/29/w600X390/Facebook-has-officially-hit-2-billion-users.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-technology/2017/jun/29/facebook-has-officially-hit-2-billion-users-2728984.html
2723664 லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் வாட்ஸ் அப்பின் புதிய முயற்சி! தவறாக அனுப்பிய செய்தியை இனி திருத்தலாம்! Monday, June 19, 2017 04:39 PM +0530 வாட்ஸ்அப்பில் ஒரு செய்தியை பகிர்ந்து கொண்ட பின் திரும்பப் பெறும் வசதி மற்றும் திருத்தம் செய்யும் வசதிகள் வரப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனுப்பிய செய்தியில் திருத்தங்கள் செய்யலாம்

தற்போது வாட்ஸ்அப்பில் ஒரு செய்தியை அனுப்பிவிட்டு, பின்னர் அதை திருத்திக் கொள்ள முடியாது. தவறாக அனுப்பினால் அது அப்படியே தான் போய்ச் சேரும். இனி ஒரு குறிஞ்செய்தியைத் திரும்பப் பெற விரும்பினால் அதைச் சாத்தியமாக்கும் வசதி அறிமுகமாக உள்ளது. இப்போதுள்ள செய்திகளை டெலிட் செய்யும் வசதியில் இருந்து இது மாறுபட்டது. ஏனெனில் செய்திகளை டெலிட் செய்தாலும் அது அனுப்பியவர் போனில் இருந்துதான் மறையும். மற்றவர்கள் போனில் இருந்து நீக்க முடியாது. ஆனால் புதிய சேவையில் இது சாத்தியம்.இதே போலவே செய்திகளைத் திருத்தும் வசதியும் அறிமுகமாக உள்ளது.அனுப்பிய செய்தியின் மீது கிளிக் செய்தால், அதைத் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புத் தோன்றும். அதை கிளிக் செய்து அந்தச் செய்தியை அழித்துவிடலாம். ஆனால் அனுப்பிய ஐந்து நிமிடத்துக்குள் இந்த திருத்தங்களை செய்துவிட வேண்டும்.

வாட்ஸ் அப்பில் வந்த ஒரு தகவல் இது. அனுப்பிவிட்டு திருத்தம் செய்ய வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள்!

உங்கள் செல்போன் எண்ணின் கடைசி எண்ணை வைத்து, உங்கள் வயதைச் சொல்லும் புதிர்க் கணக்கு இது. மூளைக்கான பயிற்சியும்கூட. வேலைப் பளு, மனஅழுத்தம் போன்ற விஷயங்களிலிருந்து விடுபட மூளைக்கு வேலை கொடுங்கள். அது உங்களை உற்சாகமாக மாற்றும். சிறு பிள்ளையைப் போல மனதை இலகுவாக்கும்.

இந்த விளையாட்டை விளையாடிப் பாருங்கள்... 

நம்முடைய செல்போன் எண்ணை வைத்து, நம்முடைய வயதைக் கணிக்கலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்.

உங்கள் செல்ஃபோனின் கால்குலேட்டரை ஆன் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டெப்-1: உங்கள் செல்போன் எண்ணின் கடைசி எண்ணை 2 ஆல் பெருக்குங்கள்.

ஸ்டெப்-2: பெருக்கியதும் வரும் எண்ணுடன் 5-ஐ சேர்த்துக்கூட்டுங்கள். கூட்டிவிட்டீர்களா?

ஸ்டெப்-3: இப்போது கிடைக்கும்  எண்ணை  50ஆல் பெருக்குங்கள். பெருக்கி முடித்ததும் என்ன தொகை வருகிறதெனப் பாருங்கள்.

ஸ்டெப்-4: வரும் எண்ணுடன் 1,767 சேர்த்துக் கூட்டுங்கள்

ஸ்டெப்-5: இத்துடன் நீங்கள் எந்த வருடம் பிறந்தீர்களோ அந்த வருடத்தை வைத்துக் கழிக்கவும்.

இப்போது மூன்று டிஜிட்டில் வரும் முதல் எண், உங்கள் செல்ஃபோனின் கடைசி எண் ஆகும். மற்ற இரண்டு எண்கள்தான் உங்கள் வயது... கணக்கு சரியா?

]]>
whatsup new update, வாட்ஸ் அப் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/19/w600X390/iphone-social-apps-whatsapp.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-technology/2017/jun/19/whatsup-new-update-you-can-edit-your-messages-2723664.html
2709234 லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் நீங்கள் வாட்ஸ் அப் பிரியரா? இதை முதலில் படித்துவிடுங்கள்! Friday, May 26, 2017 03:26 PM +0530 இப்போதெல்லாம் தினமும் காலையில் விழிப்பது அவரவர் ஃபோனில் உள்ள வாட்ஸ் அப்பில் தான். அதில் அன்பிற்கு உரியோரின் காலை வணக்கத்தைப் பார்த்த பின்பு தான் படுக்கையை விட்டு எழுந்து கொள்வோம். அதன் பின் குளியலறை நேரத்தைத் தவிர மற்ற எல்லா சமயத்திலும் நம் கரங்களில் சதா சர்வ காலமும் துடித்துக் கொண்டிருப்பது செல்ஃபோனில் உள்ள வாட்ஸ் அப் செய்திகள் தான். நம் நட்பு வட்டத்தையும் உறவுப் பாலத்தையும் தக்க வைத்திருக்க உதவி புரிவது வாட்ஸ் அப் என்றால் மிகையில்லை. சமயத்தில் 

வாட்ஸ் அப்பில் (Whatsapp) சமீபத்தில்  புதிய அப்டேட்டாக  'பின்சாட்’ (PIN CHAT) எனும் வசதி இணைக்கப்பட்டுள்ளது. 

பின் சாட் என்றால் என்ன? நமக்கு பிடித்தமான 3 தனி நபர்களையோ அல்லது மூன்று குழுக்களையோ, சாட்டிங் வரிசையில் முதல் மூன்று இடங்களில் வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் 3 நபர்களையோ அல்லது குழுக்களையோ மட்டும் பின் செய்து கொள்ள முடியும் என்கிறது இந்த வசதியை அறிமுகப்படுத்திய வாட்ஸ் அப் நிறுவனம்.

]]>
whatsup, pin chat, வாட்ஸ் அப், பின்சாட் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/26/w600X390/whatsup.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-technology/2017/may/26/pin-chat-facility-added-in-whatsup-2709234.html
2703252 லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் ஜியோமி வழங்கும் ரெட்மி 4 இப்போது இந்தியாவில்! IANS Tuesday, May 16, 2017 04:22 PM +0530  

சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனத்தின் ரெட்மி 4 மாடல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த செவ்வாய்கிழமை அறிமுகமாகி கடைகளில் அமோகமாக விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறது. இது ஜியோமியின் மற்றொரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ரெட்மி 4 மாடலுடன் எம் ஐ ரெளட்டர் 3சி தரப்படுவது கூடுதல் சிறப்பு.

ரெட்மி 4 மூன்று வித்தியாசமான மாடல்களில் வெளியாகிறது. 2GB RAM+16GB, இரண்டாவது 3GB RAM+32GB 9999 ரூபாய்க்கும், 3மற்றது 4GB RAM+64GB. இதன் விலைகள் முறையே ரூ 6,999, ரூ 8,999 மற்றும் ரூ 10,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு வரவுள்ளது. மே 23ம் தேதி நண்பகல் 12 மணிக்கு எம்.ஐ மற்றும் ப்ளிப்கார்ட் இணையதளங்களில் ஃப்ளாஷ் சேல் மூலம் விற்பனைக்கு கிடைக்கும் என்று உறுதி செய்கிறார்கள் மி.காம் மற்றும் அமேசான்.இன் நிறுவனங்கள்.

ரெட்மி நான்கை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்கிறோம். இது ரெட்மி 3S-ன் அடுத்த பதிப்பாகும். நிச்சயம் இந்த ரெட்மி 4 திருப்திபடுத்தும் என்று நம்புகிறோம். தரம் மற்றும் விலை அனைவராலும் வாங்கக் கூடிய வகையில் உள்ளது என்றார் ஜியோமி நிறுவனம் இந்திய கிளையின் தலைமை நிறுவனர் மனு ஜெயின்.

5 inch ஹெச் டி டிஸ்ப்ளே, குவால்கம் ஸ்னாப்ட்ராகன் 435 ஆக்டா கோர் ப்ராஸசர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த போன். இதற்கு முன்னர் வெளிவந்த வெர்ஷனில் ஸ்னாப்ட்ராகன் 650 ப்ராஸசர் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதேசமயம் ரெட்மி நோட் 3-ஐ காட்டிலும் இதன் பேட்டரி திறன் 25 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 4100mAh  பேட்டரி திறன் கொண்ட சற்று பெரிய பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. 4ஜி தொழில்நுட்பத்தில், ஆன்ட்ராய்டு N இயங்குதளம் கொண்டு இந்த போன் இயக்கப்படுகிறது. இதன் கேமரா 13 மெகாபிக்சல் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

எம் ஐ ரெளடர் (Mi Router) பொருத்தவரை மே 20 முதல் எம் ஐ இணையதளத்திலும் மே 23 முதல் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசானில் ஜூன் 8 முதல் கிடைக்கும். இதன் விலை ரூ.1,199/-

அதிரடியாக சிறந்த தொழில்நுட்பத்துடனும் குறைந்த விலையிலும் களம் இறங்கியுள்ள ஜியோமி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கான இடத்தை பிடித்து தக்க வைத்துக் கொள்ளும்  என எதிர்பார்க்கப்படுகிறது. 

]]>
Xiaomi unveils affordable Redmi 4 in India, ஜியோமி வழங்கும் ரெட்மி 4 http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/16/w600X390/phone.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-technology/2017/may/16/xiaomi-unveils-affordable-redmi-4-in-india-2703252.html
2674359 லைஃப்ஸ்டைல் தொழில்நுட்பம் டிரோன்களைக் கட்டுப்படுத்தும் “துப்பாக்கி”- சீனக் கண்டுபிடிப்பு! Tuesday, March 28, 2017 02:30 PM +0530  

ஏவுகணைகளையும், அணுகுண்டுகளையும் தாக்கி அழிக்க அதிநவீன தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்த வல்லரசு நாடுகளே, டிரோன்கள் எனப்படும் சிறிய ரக பறக்கும் கருவிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.

மக்கள் கூட்டம் அதிகமுள்ள பகுதிகளில் டிரோன்களில் குண்டுகளை வைத்து அனுப்பி வெடிக்கச் செய்ய பயங்கரவாதிகள் சதித் திட்டங்களைத் தீட்டுகின்றனர். மிக எளிமையான முறையில் நடத்தப்படும் இந்த வகையான தாக்குதல்களால் ஏராளமான மக்கள் உயிரிழப்பார்கள். வெடி மருந்தைச் சுமந்து வரும் டிரோன்களைச் சுட்டு வீழ்த்தினாலும் அது ஆபத்துதான் என்பதால், டிரோன்களைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது.

இந்த சவாலை சீனா வென்று சாதனை படைத்துள்ளது. ஆம், சட்ட விரோதமாக பறக்கும் டிரோன்களை ரேடியோ சிக்னல் மூலம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பத்திரமாக தரையிறக்கம் செய்யும் அதிநவீன துப்பாக்கிகளை சீன போலீஸார் பயன்படுத்துகிறார்கள்.

ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பறக்கும் டிரோன்களையும் இந்த துப்பாக்கிகள் ரேடியோ சிக்னல் மூலம் சுண்டி இழுத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுமாம். இதன் விலை ரூ. 25 லட்சம் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. 

- அ.சர்ஃப்ராஸ்

]]>
தொழில்நுட்பம், trones, controle guns, டிரோன்கள், துப்பாக்கிகள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/28/w600X390/guns_to_controle_trones.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-technology/2017/mar/28/டிரோன்களைக்-கட்டுப்படுத்தும்-ldquoதுப்பாக்கிrdquo-சீனக்-கண்டுபிடிப்பு-2674359.html