Dinamani - நிகழ்வுகள் - http://www.dinamani.com/lifestyle/nigazhvugal/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2826987 லைஃப்ஸ்டைல் நிகழ்வுகள் ஆடிக் கொண்டிருக்கும் நாற்காலியையும் ஆடாமல் நிறுத்தி வைக்கும் சக்தி எழுத்துக்கு உண்டு! வெ.இறையன்பு ஐஏஎஸ்! ஹேமா பாலாஜி DIN Friday, December 15, 2017 12:48 PM +0530  

'ஆடிக் கொண்டிருக்கும் நாற்காலியையும் ஆடாமல் காப்பாற்றி நிற்க வைக்கும் ஆற்றல் எழுத்துக்கு உண்டு' என்று ஆராவாரக் கைதட்டல்களுக்கு நடுவே தொடர்ந்தது, சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த வெ. இறையன்பு அவர்களின் பேச்சு.

டிசம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் சாகித்திய அகாடமியும் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலமும் இணைந்து இளம் எழுத்தாளர்களுக்கான சிறுகதை பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தியது. எனக்கும் அதில் கலந்துகொள்ளும் பெரும் வாய்ப்பு கிட்டியது. என்னுடைய அனுபவங்களை உங்களுடன் தினமணி மூலம் பகிர்வதில் மகிழ்கிறேன். மேலும் இம்மாதிரி பயிற்சி முகாம் நடக்கும் பொழுது என் போன்ற ஆரம்ப நிலை எழுத்தாளர்களும், எழுதும் ஆர்வம் இருப்பவர்களும் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

இம்முகாமின் துவக்க விழாவில் முனைவர் அ.சு. இளங்கோவன் அவர்கள் (பொறுப்பு அலுவலர், சாகித்திய அகாதெமி) வரவேற்புரை ஆற்றினார். விழாவினை ஒருங்கிணைப்பு செய்து நடத்திய எழுத்தாளர் பாரதி பாலனின் (பேராசிரியர்-தலைவர், தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்) நோக்க உரை மற்றும் முனைவர். மு.பாஸ்கரன் அவர்களின் (துணை வேந்தர், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம்) தலைமை உரையோடு விழா இனிதே தொடங்கியது.

இதில் விசேஷச் செய்தி என்னவென்றால் துணை வேந்தரும் சிறப்பு விருந்தினரும் கல்லூரித் தோழர்கள். ஒரே அறைவாசிகள். வெ. இறையன்பு அவர்களுடனான கல்லூரி காலத்தின் அனுபவங்களை சுவையாக தன் பேச்சின் நடுவே சர்க்கரைத் தூரலாக சிதறவிட்டார். 'அப்போதெல்லாம் இறையன்பு கவிதைகள் நிறைய எழுதுவார். எழுதியவற்றை இரவு ஒரு மணியானாலும் எங்களுக்குப் படித்துக் காட்டி, எங்களது கருத்துக்களை கேட்பதில் ஆர்வமாக இருப்பார். கட்டுரைப் போட்டியோ பேச்சுப் போட்டியோ எதுவாக இருந்தாலும் இறையன்பு கலந்து கொள்கிறார் என்றால் முதல் பரிசு போச்சு போ என்று நாங்கள் செல்லமாக அங்கலாய்பது உண்டு. தழிழ் ஆர்வலர். திறம்பட பேசுபவர்' என்று அவருடனான தனது பால்ய காலத்து அனுபவங்களைக் கூறி எங்களையும் அந்த காலத்துக்கே இட்டுச் சென்றுவிட்டார்.

அவரைத் தொடர்ந்து பேச வந்தார் சிறப்பு விருந்தினரான முனைவர் வெ. இறையன்பு.  'முனைவர் பாஸ்கரன் குறிப்பிட்டது போல எழுத்தின் தொடக்க நிலையில் இருப்பவர்களுக்கு தாங்கள் எழுதியதை அடுத்தவர்களிடம் படித்துக்காட்டும் பழக்கம் இருக்கும். எனக்கும் அது இருந்தது என்று கூறி சிரித்த இறையன்பு அவர்கள் மேலும் தொடர்ந்தார். 'ஒரு நாள் நான் எழுதியதை மேசையில் வைத்துவிட்டு வேறு வேலையாக வெளியில் சென்றுவிட்டேன். வந்து பார்க்கும் போது நான் எழுதிவைத்த காகிதத்தை காணோம். சுற்றுமுற்றும் தேடியபோது, அந்தக் காகிதம் எட்டாக மடிக்கப்பட்டு, ஆடிக் கொண்டிருந்த நாற்காலியின் காலுக்கு அடியில் முட்டு கொடுப்பதற்காக  வைக்கப் பட்டிருந்தது. அப்போது ஒரு உண்மையை புரிந்து கொண்டேன்' ஆடிக் கொண்டிருக்கும் நாற்காலியையும் ஆடாமல் நிறுத்தி வைக்கும் சக்தி எழுத்துக்கு உண்டு என்பதை' என்றவுடன் கரகோஷம் அரங்கை நிறைத்தது. 

அன்றைய தினம் மூன்று அமர்வுகளாக பிரிக்கப்பட்டு மூன்று பிரபல எழுத்தாளர்கள் தங்களுடைய அனுபவங்களையும் பயிற்சி பெற வந்தவர்களின் கேள்விகளுக்கு பதில்களையும் வழங்கிச் சிறப்பித்தனர். முதல் அமர்வில் எழுத்தாளர் முகிலை. இராசபாண்டியன் அவர்கள் 'படைப்பும் பார்வையும்' என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார். சிறுகதையின் முப்பிரிவுகளைப் பற்றியும் அதனுடைய உருவம், உள்ளடக்கம் நடை பற்றிய விரிவான விளக்கங்களையும் மிக அருமையாக எளிய முறையில் விளக்கினார்.

அடுத்து வந்த அமர்வு 'மொழியும் கதையும்' என்ற தலைப்பில் தனது படைப்பான 'விசாரணைக் கமிஷன்' என்ற நாவலுக்கு சாகித்திய அகாதெமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் சா.கந்தசாமி அவர்களின் உரையோடு விரிந்தது. 'நிறைய படிப்பது மட்டுமே எழுதுவதற்கு உதவாது. இயல்பிலேயே கற்பனைத் திறனும், படைப்பாற்றாலும் க்ரியேட்டிவிடியும் இருக்க வேண்டும். நிறைய வாசிப்பது நிறைய அனுபவங்களை வேண்டுமானால் தரும். எழுத்து என்பது இதயத்தால் எழுதப்படுவது அறிவால் அல்ல' என்றார்.

மூன்றாவது அமர்வில் எழுத்தாளர் ஆர். வெங்கடேஷ் அவர்கள் சிறுகதை எழுதும் போது என்னவெல்லாம் செய்யக் கூடாது, எவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை ஒரு பெரிய பட்டியல் இட்டே விளக்கினார். ஒரு சிறுகதையை உதாரணமாக எடுத்துக் கொண்டு, அதை படிக்கச் சொல்லி அக்கதையில் உள்ள குறை நிறைகளை பாரபட்சமின்றி பிரித்து மேய்ந்து அலசி ஆராய்ந்து தள்ளிவிட்டார். மேலும் அவர் முக்கியமானதாக கூறியதாவது 'ஒருவர் தான் கூற வந்த கருத்தை கதை சொல்வதன் மூலமாக கூறாமல் உணர்த்துவதன் மூலமாக வாசகனுக்கு கடத்த வேண்டும். அப்போதுதான் அந்தக் கதை வெற்றி பெரும்' என்று அருமையான கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.

இரண்டாம் நாள் காலை முதல் அமர்வில் மூத்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் பங்களிப்பும் பேச்சும் அபாரமாக இருந்தது. 'கற்றுத் தரும் கதைகள்' என்ற தலைப்பின் கீழ் அவரது உரை இருந்தது. கதை என்பது நாம் கேட்டது, பார்த்தது, அனுபவித்தது  அத்தோடு நமது கற்பனை போன்றவற்றின் கலவையால் தான் உருவாக்குகிறோம். அது அதற்கான சரியான விகிதத்தை கலந்து கட்டமைத்தால் கதையின் உயிரோட்டம் நன்றாக இருக்கும் என்றார். கற்பனையாகினும் நம்பகத்தன்மை மிக முக்கியம் என்பதையும் தெளிவு பெற உரைத்தார்.  ஒரு கதையில் கதாபாத்திரத்தை உருவாக்குவதுதான் முதன்மையான சவால். அடுத்து கதையின் முதல் வரி. அதுதான் அக்கதையைத் திறக்கும் சாவி. வாசகனை முதல் வரியிலேயெ ஈர்த்து உள்ளிழுத்துச் செல்ல வேண்டும் என்பது போன்ற முக்கிய ஆலோசனைகளையும் கூறினார்.

அடுத்து வந்த பிரபல எழுத்தாளர் மாலன் அவர்கள் 'கதையும் கருவும்' என்ற தலைப்பில் மிகச் சிறப்பானதொரு கலந்துரையாடலுடன் தனது அமர்வை தொடங்கி வைத்தார். முதல் நாளே எழுத்தாளர் ”கு.அழகிரிசாமி” அவர்களின் படைப்பான 'குமாரபுரம் ஸ்டேஷன்' சிறுகதையை பிரதி எடுத்துக் கொடுக்கச் சொல்லி எங்களை எல்லாம் அதை படித்துவரும் படி கூறி இருந்தார். இவரின் இத்தகைய அர்பணிப்பு மிகவும் வியப்பை அளித்தது. அது மட்டுமல்லாமல் இதில் இருந்து என்ன கேட்பாரோ என்ன பேசச் செய்வாரோ என்ற ஆர்வத்தையும் தூண்டிவிட்டது. அவர் உரையில் 'கதையில் நாம் சொல்ல வந்த கருத்தை நேரிடையாகக் கூறாமல் அதில் வாசகர்களின் பங்களிப்பையும் சேர்க்க வேண்டும்.

வாசகனை யோசிக்க வைத்து அவனது பார்வையை மேம்படுத்த சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். மொழி ஆளுமை என்பது கதைக்கு மிக முக்கியமான அம்சமாகும்' என்றும் கூறினார். குமாரபுரம் ஸ்டேஷன் கதையையே உதாரணமாகக் கொண்டு அதில் இருந்த சிறப்பு அம்சங்களைக் கூறி கதையின் கோணம் பரிமாணம் முடிவு போன்றவற்றை அரங்கில் இருந்த அனைவருக்கும் கலந்துரையாடல் மூலமாகவே மிக எளிமையாகப் புரிய வைத்தார்.

பயிற்சியில் பங்கு கொண்ட அனைவரையும் ஒரு சிறுகதையை சமர்ப்பிக்கச் சொல்லி அத்தோடு இல்லாமல் அக்கதைகள் சாகித்திய அகாதமியின் தொகுப்பில் இடம் பெறும் என்ற இன்ப அதிர்ச்சியையும் அளித்தார் சாகித்திய அகாடமியின் செயற்குழு உறுப்பினர் திரு. இரா. காமராசு அவர்கள்.

நூறு ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்து நிற்கும் சிறுகதை இலக்கியத்தை சிறப்பிக்கும் வகையில் தமிழின் மூத்த எழுத்தாளர்களுடனும் பன்முகத் தன்மை கொண்ட சிறந்த ஆளுமைகளுடனும் நடந்த இந்த பயிற்சி முகாம் எங்களைப் போன்ற இளம்/ஆரம்ப நிலை எழுத்தாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

]]>
Sahitya Academy, Maalan, Irai Anbu IAS, மாலன், வெ.இறையன்பு, சாகித்ய அகாதெமி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/15/w600X390/FB_IMG_1513259711911.jpg http://www.dinamani.com/lifestyle/nigazhvugal/2017/dec/15/sahitya-academy-program-for-young-writers-2826987.html
2664276 லைஃப்ஸ்டைல் நிகழ்வுகள் மார்ச் 13, அரும்பாக்கம் ராதா ரீஜெண்ட் ஹோட்டலில் ‘ரங் தே’  ஸ்பெஷல் ஹோலி டிஸ்கோதே! DIN DIN Saturday, March 11, 2017 02:53 PM +0530  

மார்ச் 13, ஹோலி பண்டிகையை முன்னிட்டு, அரும்பாக்கம், ராதா ரீஜெண்ட் ஹோட்டலில் ஸ்பெஷல் ஹோலி டிஸ்கோதே நடக்கவிருக்கிறதாம். 2016 ஆம் ஆண்டு இதே ஹோலி விழாவில் சுமார் 2500 பேர் ஒரே நேரத்தில் கலந்து கொண்டார்களாம். 20,000 சதுர அடியில் மிகப்பரந்து விரிந்த திறந்த வெளி அரங்கில் விழா நடைபெறும் என அறிவித்திருக்கிறார்கள். சிறுவர்களையும், இளம் பெண்கள், மற்றும் இளைஞர்களையும் கவரும் விதத்தில் வடிவமைக்கப் பட்டிருக்கும் இந்த ஹோலி டிஸ்கோதேவில் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தவும், பிரமிக்க வைக்கவும் ரெயின் டான்ஸ், பலூன் ஃபைட்ஸ், ஃபேஷன் ஷோ, ஒரு ஸ்பெஷல் நேஷனல் டிஜே, 10 உள்ளூர் டிஜே அரேஞ்மெண்ட், லைவ் ஜூம்பா டான்ஸ், கலர் தண்டர், மெக்கானிகல் புல்லிங், ஃபுட் ஸ்டால்கள், லைவ் டான்ஸ், லைவ் சிங்கிங், குழந்தைகளுக்கான தனித்த விளையாட்டுப் போட்டிகள் என அனைத்தும் உண்டாம்.

மாநில எல்லைகள் தாண்டி ஹோலி கொண்டாட ஆசையிருப்பவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நாள்: திங்கள் கிழமை, மார்ச் 13.
நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.
இடம்: ராதா ரீஜெண்ட் ஹோட்டல், நம்பர் 171, ஜவஹர் லால் நேரு சாலை, இன்னர் ரிங் ரோடு, அரும்பாக்கம், சென்னை.
கட்டணம்: நபர் ஒருவருக்கு ரூபாய் 499

]]>
radha regent hotel, rang de- special disco holi, arumbakkam, ராதா ரீஜெண்ட் ஹோட்டல், அரும்பாக்கம், ஸ்பெஷல் டிஸ்கோ ஹோலி விழா http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/11/w600X390/Rangde-b_banner1487748407.png http://www.dinamani.com/lifestyle/nigazhvugal/2017/mar/11/மார்ச்-13-அரும்பாக்கம்-ராதா-ரீஜெண்ட்-ஹோட்டலில்-ரங்-தே--ஸ்பெஷல்-ஹோலி-டிஸ்கோதே-2664276.html
2663699 லைஃப்ஸ்டைல் நிகழ்வுகள் ‘கவிதை உறவு’ இலக்கிய பரிசுப் போட்டி! ஏப்ரல் 10 க்குள் படைப்புகள் அனுப்பலாம். DIN DIN Friday, March 10, 2017 12:40 PM +0530  

கவிதை உறவு இலக்கிய பரிசுப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1.மரபுக்கவிதை, 2.புதுக்கவிதை, 3.மனிதநேயம்-வாழ்வியல், 4.சிறுகதை, 5.செவ்வியல் இலக்கிய கட்டுரைகள், 6.பொதுகட்டுரைகள், 7.குழந்தை இலக்கியங்கள், 8.குறுநாவல், 9.கல்வியியல்/இளைஞர்நலம்/ஆளுமை மேம்பாடு, 10. ஆன்மிகம்/மதநல்லிணக்கம் ஆகிய தலைப்புகளில் போட்டி நடைபெறும்.

சிறந்த நூல்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது. முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000.

நூல்கள் 2016-ஆம் ஆண்டில் வெளியானதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தலைப்பிலும் 3 பிரதிகளை அனுப்ப வேண்டும். நூல்கள் கிடைத்த விவரங்களை அறிந்து கொள்ள சுயமுகவரியிட்ட அஞ்சல் அட்டையை அனுப்ப வேண்டும்.


நூல்களை, ""ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன், எண்.420இ, மலர் காலனி, அண்ணாநகர், சென்னை-600040'' என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். நூல்கள் வந்துசேர வேண்டிய கடைசி நாள் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதியாகும்.

]]>
கவிதை உறவு இலக்கிய பரிசு போட்டி, kavithai uRavu ilakkiya parisu potti, tamil literature, தமிழ் இலக்கியம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/10/w600X390/attai-kavithaiuravu-maraimalai.jpg http://www.dinamani.com/lifestyle/nigazhvugal/2017/mar/10/கவிதை-உறவு-இலக்கிய-பரிசுப்-போட்டி-ஏப்ரல்-10-க்குள்-படைப்புகள்-அனுப்பலாம்-2663699.html
2661826 லைஃப்ஸ்டைல் நிகழ்வுகள் மார்ச் 8 ல் சென்னை, பாரதீய வித்யா பவனில் சாகித்திய அகாதெமி நடத்தும் இலக்கிய நிகழ்வு! DIN DIN Tuesday, March 7, 2017 02:58 PM +0530  

சர்வ தேச மகளிர் தினத்தை முன்னிட்டு சாகித்திய அகாதெமி ‘ நாரி சேதனா’ என்றொரு இலக்கிய நிகழ்வை நடத்தவிருக்கிறது. இந்த நிகழ்வில் பங்கேற்போர் பிரபல இலக்கிய ஆளுமைகளான ஆண்டாள் பிரியதர்ஷினி, அரங்க மல்லிகா, முபீன் சாதிகா, பிரிய சகி உள்ளிட்டோர். மயிலாப்பூர் கிழக்கு மாட வீதி, பாரதிய வித்யாபவன் சிற்றரங்கில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

விழா அழைப்பிதழ்:


 

தேநீர்: மாலை 5.30 மணிக்கு
நாள்: புதன் கிழமை 07.03.17
நிகழ்ச்சித் தொடக்கம்: மாலை 6 மணிக்கு

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/7/w600X390/Women_s_Day_1.jpg http://www.dinamani.com/lifestyle/nigazhvugal/2017/mar/07/மார்ச்-8-ல்-சென்னை-பாரதீய-வித்யா-பவனில்-சாகித்திய-அகாதெமி-நடத்தும்-இலக்கிய-நிகழ்வு-2661826.html
2657639 லைஃப்ஸ்டைல் நிகழ்வுகள் ஃபிப்ரவரி 28 முதல் மார்ச் 2 வரை சென்னை கலாஷேத்ராவில் ‘சரஸ்வதி அந்தர்வாஹினி’  நாட்டிய விழா!   DIN DIN Tuesday, February 28, 2017 05:37 PM +0530  

கலாஷேத்ரா நிறுவனரும் பிரபல இந்திய பரதக் கலைஞருமான ருக்மிணி தேவி அருண்டேலின் நினைவைப் போற்றும் வகையில் கலாஷேத்ரா வளாகத்தில் ‘சரஸ்வதி அந்தர்வாஹினி’ எனும் தலைப்பில் ஃபிப்ரவரி 26 முதல் மார்ச் 2 வரை ஐந்து நாள் விழா கொண்டாடப்படுகிறது. பார்வையாளர்கள் வரவேற்கப்படுகின்றனர்.

நாள்: ஃபிப்ரவரி 26 முதல் மார்ச் 2 வரை

இடம்: கலாஷேத்ரா, திருவான்மியூர், சென்னை.

]]>
rukmini devi arundel, kalashethra, saraswathi andharvahini, ருக்மிணி தேவி அருண்டேல், சரஸ்வதி அந்தர்வாஹினி, கலாஷேத்ரா http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/28/w600X390/saraswati-02.jpg http://www.dinamani.com/lifestyle/nigazhvugal/2017/feb/28/ஃபிப்ரவரி-26-முதல்-மார்ச்-2-வரை-சென்னை-கலாஷேத்ராவில்-சரஸ்வதி-அந்தர்வாஹினி--நாட்டிய-விழா-2657639.html
2657627 லைஃப்ஸ்டைல் நிகழ்வுகள் மார்ச் 3 அரும்பாக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கே.எம்.மியூசிக் கன்சர்வேட்டரியின் ரங்ரஸா! DIN DIN Tuesday, February 28, 2017 03:27 PM +0530  

ஏ.ஆர். ரஹ்மானின் கே.எம் மியூசிக் கன்சர்வேட்டரி இசைப்பள்ளி 'ரங்ரஸா' என்ற பெயரில் கல்லூரி மாணவர்களிடையே இசையில் சிறந்து விளங்குபவர்களுக்காக பிரத்யேகமாக ஒரு இசைப் போட்டியை அறிவித்திருக்கிறது. இந்தப் போட்டி சென்னையில் வினாயகபுரம், அரும்பாக்கம் இரு இடங்களில் நடைபெறும். அனைவருக்கும் அனுமதி இலவசம். 
நாள்: மார்ச் 3 ஆம் தேதி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை.
தகவல் தொடர்புக்கு: 044 43442786

]]>
ஏ.ஆர்.ரஹ்மான், கே.எம்.மியூசிக் கன்சர்வேட்டரி, ரங்ரஸா, a.r.rahman, k.m. music conservatory, contest for college studants http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/28/w600X390/ar-rahman-p.jpg http://www.dinamani.com/lifestyle/nigazhvugal/2017/feb/28/மார்ச்-3-அரும்பாக்கத்தில்-ஏஆர்ரஹ்மான்-கேஎம்மியூசிக்-கன்சர்வேட்டரியின்-ரங்ரஸா-2657627.html
2657624 லைஃப்ஸ்டைல் நிகழ்வுகள் மார்ச் 3 அரும்பாக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் கே.எம் மியூசிக் கன்ஸர்வேட்டரி நடத்தும் இசைப் போட்டி! DIN DIN Tuesday, February 28, 2017 03:04 PM +0530  

ஏ.ஆர். ரஹ்மானின் கே.எம் மியூசிக் கன்சர்வேட்டரி இசைப்பள்ளி 'ரங்ரெஸா' என்ற பெயரில் கல்லூரி மாணவர்களிடையே இசையில் சிறந்து விளங்குபவர்களுக்காக பிரத்யேகமாக ஒரு இசைப் போட்டியை அறிவித்திருக்கிறது. இந்தப் போட்டி சென்னையில் வினாயகபுரம், அரும்பாக்கம் இரு இடங்களில் நடைபெறும். அனைவருக்கும் அனுமதி இலவசம். 
நாள்: மார்ச் 3 ஆம் தேதி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை.
தகவல் தொடர்புக்கு: 044 43442786

]]>
A.R.Rahman, K.M.Music conservetory, contest for college studants, கல்லூரி மாணவர்களுக்கான இசைப் போட்டி, ஏ.ஆர். ரஹ்மான், கே.எம். மியூசிக் கன்சர்வேட்டரி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/28/w600X390/ar-rahman-press-conference-km-music-conservatory-002.jpg http://www.dinamani.com/lifestyle/nigazhvugal/2017/feb/28/மார்ச்-3-அரும்பாக்கத்தில்-ஏஆர்-ரஹ்மானின்-கேஎம்-மியூசிக்-கன்ஸர்வேட்டரி-நடத்தும்-இசைப்-போட்டி-2657624.html
2657620 லைஃப்ஸ்டைல் நிகழ்வுகள் மார்ச் 3, சென்னை எக்மோர் மியூசியம் தியேட்டரில் ‘ரோமியோ- ஜூலியட்’  DIN DIN Tuesday, February 28, 2017 02:48 PM +0530  

சென்னை எக்மோர் மியூசியம் தியேட்டரில் மெட்ராஸ் பிளேயர்ஸ் தியேட்டர் நாடகக் குழுவினர் ‘ரோமியோ- ஜூலியட்’ நாடகம் நிகழ்த்தப் போகிறார்களாம். இயக்கம் மைக்கேல் முத்து.
 

இடம்: எக்மோர் மியூசியம் தியேட்டர்
நாள்: மார்ச் 3, 4, 5
நேரம்: மாலை 7. 15

]]>
ரோமியோ ஜூலியட், மேடை நாடகம், romeo juliet, theater play http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/28/w600X390/event_1.jpg http://www.dinamani.com/lifestyle/nigazhvugal/2017/feb/28/மார்ச்-3-சென்னை-எக்மோர்-மியூசியம்-தியேட்டரில்-ரோமியோ--ஜூலியட்-2657620.html
2655339 லைஃப்ஸ்டைல் நிகழ்வுகள் கொல்கத்தா நியூ மார்க்கெட் சரித்திர பங்களாக்களில் ஃபிப்ரவரி 24, 25 ல் கோஸ்டு டூர்! DIN DIN Friday, February 24, 2017 12:16 PM +0530  

கொல்கத்தாவில் டல்கெளஸி பிரபு காலத்தில் கட்டப்பட்ட பல மாளிகைகள் பல இப்போதும் இருக்கின்றன. அவற்றில் சில சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தாலும் மேலும் சில பிரமாண்ட மாளிகைகள் இன்னமும் பிரிட்டிஷ் காலத்திய கொடுமைகளின் சாட்சியாக அப்படியே இருக்கின்றன. மக்கள் புழக்கமற்ற அந்த மாளிகைகளை உள்ளீர் மக்களில் சிலர் பீதியூட்டும் சாகஸ கேளிக்கை நிகழ்வுகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். அதாவது இந்த மாளிகைகள் பேய் பங்களாக்களாக அடையாளப் படுத்தப் பட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக  கோஸ்டு டூர் என்ற பெயரில் உள்ளூர் சுற்றுலா மையங்கள் சிறப்பான திரில் டூர்களை வடிவமைத்துள்ளன. பயிற்சி பெற்ற கைடுகளின் துணையுடன் கொல்கத்தாவில் இந்த பேய் பங்களாக்களை ஒரு முறை சுற்றி வரலாம்.
இவை அனைத்தும் பிரிட்டிஷ் காலத்திய அரசு பங்களாக்கள் என்பதால் உள்ளே நுழைய அனுமதி இல்லை, ஒவ்வொரு பேய் பங்களா முன்பும் சுற்றுலாப் பயணிகளை நிறுத்தி வைத்து அந்தந்த பங்களாக்களுக்குரிய புராதன, சரித்திரக் கதைகள் கைடுகளால் சொல்லப்படும். நமது சரித்திரப் புத்தகங்களில் நாம் படித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்களுக்குள் புதைந்து கிடக்கும் எண்ணற்ற கதைகளை அறிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு! 

நாள்: ஃபிப்ரவரி 24, 25

நேரம்: காலை 11 மணி முதல்...

கட்டணம்: ரூ 666 / நபர் 
பயணம் துவங்குமிடம்: நியூ மார்க்கெட், காடிம்ஸ் வெளிப்புறத்திலிருந்து, கொல்கத்தா.
மேலதிக தகவலுக்கு: 91-9643982934.
 

]]>
நிகழ்வுகள், ghost tour at kolkata, haunted houses, பேய் பங்களா சாகஸப் பயணம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/24/w600X390/ghost_tour.jpg http://www.dinamani.com/lifestyle/nigazhvugal/2017/feb/24/கொல்கத்தா-நியூ-மார்க்கெட்-சரித்திர-பங்களாக்களில்-ஃபிப்ரவரி-24-25-ல்-கோஸ்டு-டூர்-2655339.html
2655336 லைஃப்ஸ்டைல் நிகழ்வுகள் கர்நாடகா உப்பாரஹள்ளியில் ஃபிப்ரவரி 23 முதல் 26 வரை ராம்போ சர்கஸ்! DIN DIN Friday, February 24, 2017 11:23 AM +0530  

உங்களுக்கு சர்கஸ் பிடிக்குமா? பிடிக்குமென்றால் இதோ பிரபல ராம்போ சர்கஸ்காரர்களின் சர்கஸ் நிகழ்ச்சி ஃபிப்ரவரி 23,24,25,26 உள்ளிட்ட நான்கு நாட்கள் கர்நாடக மாநிலத்தின் உப்பரஹள்ளி, துமகுருவில் நடைபெற இருக்கிறது. உலகப் புகழ் பெற்ற திறமையான சர்கஸ் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து சாகஸ சர்கஸ் நிகழ்த்துவதில் ராம்போ சர்கஸ் ஈடு இணையற்றது. அந்த வகையில் பாரம்பரிய இந்திய சர்கஸ் கலைஞர்கள் மற்றும் உஸ்பெகிஸ்தான் சர்கஸ் கலைஞர்கள், நேபாள், எத்தியோப்பியா, கொலம்பியா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்திலிருந்தும் தேர்வு செய்யப்பட்ட திறமையான சர்கஸ் கலைஞர்கள் தங்களது பிரமிக்க வைக்கும் சர்கஸ் வித்தைகளைக் காட்டவிருப்பதால் இந்நிகழ்வு குழந்தைகளுக்கு இணையற்ற குதூகலத்தை தரும் என்பதில் ஐயமில்லை. விருப்பமிருப்பவர்கள் வார இறுதி நாட்கள் விடுமுறையை முன்னிட்டு புக் மை ஷோ விலும் பதிவு செய்து கொள்ளலாம்.

சர்கஸ் அரங்கம் முழுதும் ஏர் கண்டீஷன் செய்யப்பட்டது. சிறந்த பார்க்கிங் வசதி உண்டு.

சர்கஸ் பற்றி மேலதிக தகவல் அறிந்து கொள்ள http://www.rambocircus.in/ எனும் இணைய முகவரிக்குச் செல்லவும்.

கட்டணம்: நபர் ஒருவருக்கு ரூ 100, ரூ 200, ரூ 300, ரூ 70 (3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசம்) கட்டணம் செலுத்த ஸ்வைப் மெஷின் வசதியும் உண்டு.

நாள்: ஃபிப்ரவரி 23, 24, 25, 26

]]>
ராம்போ சர்கஸ், கர்நாடகா, rombo circus, upparahalli, karnadaka, நிகழ்வுகள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/24/w600X390/rambo_circus.jpg http://www.dinamani.com/lifestyle/nigazhvugal/2017/feb/24/கர்நாடகா-உப்பாரஹள்ளியில்-ஃபிப்ரவரி-23-முதல்-26-வரை-ராம்போ-சர்கஸ்-2655336.html
2655327 லைஃப்ஸ்டைல் நிகழ்வுகள் சென்னை வேளச்சேரியில் ஃபிப்ரவரி 25 அன்று ஃபோட்டோஷாப் வொர்க் ஷாப்! DIN DIN Friday, February 24, 2017 11:03 AM +0530  

தொழில்முறை ஃபோட்டோ ஷாப் கற்றுக் கொள்ள ஆசையா? அப்படியானால் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சென்னையில் ஃபிப்ரவரி 25 ஆம் சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஃபோட்டோ ஷாப் வொர்க் ஷாப் நடைபெற இருக்கிறது. இதைக் கற்றுக் கொள்வதன் மூலம் உங்களது புகைப்படங்களை நீங்களே வெகு அழகாக பல்வேறு டிசைன்களில் உருவாக்கலாம். மேலும் தொழில்முறை ஃபோட்டோஷாப் கற்றுக் கொள்வதால் விளம்பரத்துறை, ஊடகத்துறை போன்றவற்றில் எளிதாக வேலை வாய்ப்பைப் பெறலாம்.

நாள்: ஃபிப்ரவரி 25

நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

இடம்: அரிஸ்டோகிராட் ஐ.டி சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை தெற்கு,

பதிவுக் கட்டணம்: ரூ 2750

]]>
நிகழ்வுகள், ஃபோட்டோ ஷாப் வொர்க்‌ஷாப், events, photoshop workshop http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/24/w600X390/photoshop_1.jpg http://www.dinamani.com/lifestyle/nigazhvugal/2017/feb/24/சென்னை-வேளச்சேரியில்-ஃபிப்ரவரி-25-அன்று-ஃபோட்டோஷாப்-வொர்க்-ஷாப்-2655327.html
2640884 லைஃப்ஸ்டைல் நிகழ்வுகள் ஃபிஃப்ரவர் 4, 5 ல் சென்னை பார்க் ஹோட்டலில் சூப்பர் செஃப் சமையல் போட்டி!   கார்த்திகா வாசுதேவன் DIN Monday, January 30, 2017 12:30 PM +0530  

ஃபிப்ரவரி 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் சென்னை பார்க் ஹோட்டலில் சூப்பர் செஃப் சமையல் போட்டி நடைபெற உள்ளது. சமைக்கத் தெரிந்த, சமையல் ஆரவமுள்ளவர்கள் அனைவரும் போட்டியில் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்பவர்கள் தங்களுடைய பிரத்யேகமான சுவை மிக்க சமையல் ரெஸிப்பி செய்முறையை பார்க் ஹோட்டலின் திறமை மிகுந்த மாஸ்டர் செஃப்கள் மற்றும் செலிபிரிட்டி விருந்தினர்கள் முன்னிலையில் சமைத்துக் காட்ட வேண்டும். போட்டியில் வெல்பவர்கள் சூப்பர் செஃப் ஆக அறிவிக்கப் படுவார்கள். இந்த போட்டிக்கான விளம்பரம் மூலம் கிடைக்கும் வருவாய் முழுதும் சேவைப் பணிகளுக்காக வழங்கப் படவிருப்பதாக பார்க் ஹோட்டல் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

]]>
சூப்பர் செஃப் சமையல் போட்டி, super chef contest, hotel park chennai, february 4, http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/30/w600X390/super_chef_contest.jpg http://www.dinamani.com/lifestyle/nigazhvugal/2017/jan/30/ஃபிஃப்ரவர்-4-5-ல்-சென்னை-பார்க்-ஹோட்டலில்-சூப்பர்-செஃப்-சமையல்-போட்டி-2640884.html
2640877 லைஃப்ஸ்டைல் நிகழ்வுகள் ஃபிப்ரவரி 15 சென்னை நுங்கம்பாக்கத்தில் மினி மிலிஸியா வீடியோ கேம் போட்டிகள்! கார்த்திகா வாசுதேவன் DIN Monday, January 30, 2017 12:10 PM +0530  

ஃபிப்ரவர் 5 வது நாள் சென்னை அண்ணாநகரில் மினி மிலிஸியா சென்னை பேட்டில்- 2017 என்ற பெயரில் வீடியோ கேம் விளையாட்டு நடைபெறவிருக்கிறது. இந்த விளையாட்டில் கலந்து கொள்ள ஸ்மார்ட் ஃபோன் கையிலிருந்தால் போதும். மூன்று பேர் கொண்ட குழுவாகத்தான் போட்டியில் பங்கேற்க முடியும். போட்டியாளர்கள் குழுவாக தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். குழு ஒன்றிற்கு பதிவுக் கட்டணம் 600 ரூபாய். போட்டிக்கென்று சில ஆட்ட விதிமுறைகள் உண்டு. நெறியாளர்கள் அவற்றைப் பட்டியலிட்டுள்ளனர். விதிமுறைகளை மீறும் குழுவானது போட்டியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் விலக்கப்பட்டு விடும். இந்த விளையாட்டுப் போட்டியில் முதற்பரிசு வெல்வோருக்கு பரிசுத் தொகை ரூபாய் 7500, இரண்டாம் பரிசு 4500 ரூபாய், மூன்றாம் பரிசு 3000.

இடம்: ஆஷா நிவாஸ் சோசியல் சர்வீஸ் செண்ட்டர், நுங்கம்பாக்கம், 9, ரூத்லேண்ட் கேட், 5 வது சாலை, சென்னை, தமிழ்நாடு- 600006.
நாள்:  ஃபிப்ரவரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

மேலதிக தகவல்களைப் பெற... 7010274078, 96001 00428, 99402 53531 எனும் எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம்.

]]>
மினி மிலிஸியா வீடியோ கேம் விளையாட்டு, mini militia chennai battle 2017 http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/30/w600X390/minimilitia_game_1.jpg http://www.dinamani.com/lifestyle/nigazhvugal/2017/jan/30/ஃபிப்ரவரி-15-சென்னை-நுங்கம்பாக்கத்தில்-மினி-மிலிஸியா-வீடியோ-கேம்-போட்டிகள்-2640877.html
2633860 லைஃப்ஸ்டைல் நிகழ்வுகள் ஜனவரி 20 ல் பெங்களூர் மற்றும் சென்னையில் பப்ளிக் ஸ்பீக்கிங் வொர்க்‌ஷாப்! DIN DIN Tuesday, January 17, 2017 04:38 PM +0530 அடிக்கடி நிறைய மக்களை சந்தித்துப் பேச வேண்டிய சூழல் நிறைந்த வேலை வாய்ப்பை பெற்றவரா நீங்கள்? ஆனால் பேச்சுத் தடுமாற்றம், பொதுவெளியில் சரளமாகப் பிறருடன் உரையாடுவதில் கூச்ச சுபாவம் போன்ற தடைகள் உங்களது முன்னேற்றத்தைத் தடுக்கிறதா? ஆம் எனில் நீங்கள் இந்தப் பேச்சுப் பட்டறையில் கலந்து கொண்டால் பயன் கிடைக்கலாம். ஆர்வமிருப்பவர்கள் 92822 39388 / 044-42128965 எனும் எண்களில் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களைத் தெரிந்து கொள்ளவும்.
நாள்: ஜனவரி 20 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி.
கட்டணம்: 9500 ரூபாய்/நபர் ஒருவருக்கு.

]]>
public speaking workshop, பேச்சுப் பட்டறை, நிகழ்வுகள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/17/w600X390/public_speaking.jpg http://www.dinamani.com/lifestyle/nigazhvugal/2017/jan/17/ஜனவரி-20-ல்-பெங்களூர்-மற்றும்-சென்னையில்-பப்ளிக்-ஸ்பீக்கிங்-வொர்க்‌ஷாப்-2633860.html
2632778 லைஃப்ஸ்டைல் நிகழ்வுகள் ஜனவரி 15, 16 ல் சென்னை பெரியார் திடலில் தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா! DIN DIN Sunday, January 15, 2017 06:20 AM +0530 தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 23 ஆம் ஆண்டு விழாவின் பொருட்டு, திராவிடர் திருநாள் பண்பாட்டுத் திருவிழாவாக, தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா கொண்டாடப் படுகிறது,
இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7
நாள்: ஜனவரி 15, 16
நேரம்: மாலை 4 மணி முதல்

]]>
தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா, tamil new year pongal celeberation, periyar thidal, chennai, சென்னை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/15/w600X390/event_1.jpg http://www.dinamani.com/lifestyle/nigazhvugal/2017/jan/15/ஜனவரி-15-16-ல்-சென்னை-பெரியார்-திடலில்-தமிழ்-புத்தாண்டு-பொங்கல்-விழா-2632778.html
2567277 லைஃப்ஸ்டைல் நிகழ்வுகள் செப் 24 ல் சென்னை பெசன்ட் நகரில் ஜப்பானிய ஓரிகாமி ஒர்க் சாப்! dn DIN Monday, September 19, 2016 04:50 PM +0530 அட்ரஸ்: அஷ்விதா நிர்வாணா, 33, 5 வது அவென்யூ, பெசன்ட் நகர், சென்னை. 


செப் 24 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை பெசன்ட் நகர் அஷ்விதா நிர்வாணா கஃபே வில்  பிரபல கைவினைஞர் பிலிப் சத்யராஜ் ஜப்பானிய காகிதக் கலையான 'ஓரிகாமி' கற்றுத் தரவிருக்கிறார். இந்த ஒர்க் ஷாப்பில்  வரவிருக்கும் தீபாவளி மற்றும்கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி  ஸ்பெஷலாக காகித விளக்குகள், டிசைனர் காகித கைப்பைகள்  முதலானவை செய்யக் கற்றுத்தரவிருக்கிறாராம். 8 வயதுக்கு மேலானவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். 


டிக்கெட் விலை - 999 ரூபாய்கள் (செய்முறை பொருட்களுக்கும் சேர்த்து) 

டிக்கெட்டுகள் புக் மை ஷோ வில் கிடைக்கும். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/19/w600X390/lamps_origami.jpg http://www.dinamani.com/lifestyle/nigazhvugal/2016/sep/19/செப்-24-ல்-சென்னை-பெசன்ட்-நகரில்-ஜப்பானிய-ஓரிகாமி-ஒர்க்-சாப்-2567277.html