Dinamani - ரசிக்க... ருசிக்க... - http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2866469 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... கடுமையான சளி, இருமல், தலைவலியா சூடா ஒரு கப் திரிகடுக காஃபீ குடிங்க சரியாகிடும்! கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. DIN Monday, February 19, 2018 06:07 PM +0530  

தேவையான பொருட்கள்:

சுக்கு: 50 கிராம்
மிளகு: 50 கிராம்
திப்பிலி: 50 கிராம்
தேன்: சிறிதளவு
நாட்டுச் சர்க்கரை அல்லது பனைவெல்லம்: தேவையான அளவு.

செய்முறை: 

சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் திரிகடுகம் என்பார்கள். மனிதனின் உடல் ஆரோக்யத்தில் இதன் பங்கு அதிகம். சளி, இருமல், கபம், ஆஸ்துமா போன்ற சுவாச மண்டலத்துடன் தொடர்புடைய நோய்களுக்கு இந்த திரிகடுகம் கண்கண்ட மருந்து. மேலே சொல்லப்பட்ட மூன்று பொருட்களையும் சொல்லப்பட்ட அளவுகளில் எடுத்துக் கொண்டு நன்கு அரைத்து நைஸான பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியில் ஒரு கிராம் எடுத்து சுத்தமான தேன் கலந்து சப்பிட்டு வர விரைவில் சளி, இருமல், கபக்கட்டு அகலும். 

இப்படி அருந்துவது போர் என்று நினைப்பவர்கள். சுக்குமல்லிக் காஃபீ போல இந்தப் பொடியை ஒரு தேக்கரண்டி எடுத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதில் நாட்டுச் சர்க்கரை அல்லது பனை வெல்லம் கலந்து அருந்தலாம். கூட நாலு ஏலம் கலந்தால் மணக்க, மணக்க இந்த திரிகடுக காஃபீ நாக்கைச் சுண்டி இழுக்கும்.

சுக்குமல்லியில் கொத்தமல்லி விதைகளைப் பயன்படுத்துவோம், திரிகடுகத்தில் திப்பிலி சேர்க்கிறோம் அவ்வளவு தான் வித்யாசம். இதில் திப்பிலி இருக்கிறதே அது மிளகைக் காட்டிலும் காரம் அதிகமானது. எனவே கார்ப்புச் சுவை வேண்டாம் என நினைப்பவர்கள் திப்பிலியின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். காய்ந்த இஞ்சி தான் சுக்கு எனவே மூன்றையும் சில மணி நேரங்கள் வெயிலில் காய வைத்து எடுத்து மிஷினில் அரைத்து வைத்துக் கொண்டால் வீட்டில் யாருக்கெல்லாம் சளித்தொல்லை, இருமல், கபம் இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் திரிகடுக காஃபீ போட்டுக் கொடுத்து அருந்த வைத்து சளித்தொல்லையிலிருந்து தப்பலாம்.

]]>
sukku milagu thippili, three kadugam coffee, சுக்கு மிளகு திப்பிலி, திரிகடுகம், திரிகடுகக் காஃபீ http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/19/w600X390/sukku.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2018/feb/19/three-kadugam-coffee-for-to-reduce-severe-cold-2866469.html
2858546 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... இட்லி, தோசைக்கு கும்பகோணம் கடப்பா தொட்டுச் சாப்பிட்டிருக்கீங்களா?! கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. DIN Tuesday, February 6, 2018 03:36 PM +0530  

தமிழ்நாட்டின் டிரெட் மார்க் உணவுவகைகள் என்றால் அது  பெரும்பாலும் இட்லி, தோசை, பொங்கல், வடை தான். இதில் இட்லி, தோசை, பொங்கலுக்குத் தொட்டுக் கொள்ள வழக்கமாக சாம்பார் மற்றும் சட்னி வெரட்டிகள் தான் வைப்பார்கள். ஆனால், தமிழகத்தில் தஞ்சை, ஒரத்த நாடு, கும்பகோணம் உள்ளிட்ட ஏரியாக்களில் எல்லாம் கடப்பா என்றொரு ரெசிப்பி படு பேமஸ். அதென்னடா கடப்பா?! ஆந்திராவில் கடப்பா என்ற பெயரில் ஒரு ஊர் இருப்பது தெரியும். ஆனால், இதென்ன சாம்பார் மாதிரியான ஒடு தொடுகறிக்கு கடப்பா என்று பெயர் வைத்திருக்கிறார்களே என்று தேடியதில் அருமையான கடப்பா ரெசிப்பியே கிட்டியது. அதன்படி கும்பகோணத்தில் பாரம்பரிய முறையில் சூப்பர் சுவையில் கடப்பா எப்படிச் செய்வார்கள் என் இன்று தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்...

 • விளக்கெண்ணெய் - 1 தேக்கரண்டி
 • பட்டை - 3
 • லவங்கம் - 4
 • ஏலக்காய் - 4
 • பிரியாணி இலை - 1
 • கல்பாசிப்பூ - 1
 • கிராம்பு - 3
 • மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
 • உப்பு - தேவையான அளவு
 • ஊற வைத்த முந்திரிப்பருப்பு - 6
 • ஊற வைத்த கசகசா - 1 தேக்கரண்டி
 • எண்ணெய் - 2 தேக்கரண்டி
 • கறிவேப்பிலை, கொத்துமல்லி இலைகள் - சிறிதளவு
 • பச்சை மிளகாய் நறுக்கியது - 5
 • எலுமிச்சம்பழம் நறுக்கியது - 1/2 மூடி
 • பாசிப்பருப்பு - 1/2 கப்
 • தேங்காய்த்துருவல் -1/2 கப்
 • பெரிதாக நறுக்கிய வெங்காயம்- 1 கப்
 • தக்காளி பெரியது - 1
 • இஞ்சி நறுக்கியது =- 1 தேக்கரண்டி
 • பூண்டு - 7 பல்
 • உருளைக் கிழங்கு நறுக்கியது - 1 கப்

செய்முறை: 

கடப்பா செய்வதற்கு முதலில் துருவி வைத்த ஒரு கப் தேங்காய்த்துருவல், நறுக்கிய பச்சை மிளகாயில் பாதி, இஞ்ஜி, பூண்டு, ஊற வைத்த கசகசா, ஊற வைத்த முந்திரிப்பருப்பு இவற்றையெல்லாம் ஆட்டுரலில் இட்டு நன்கு பேஸ்ட் பதத்துக்கு ஆட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். கடப்பா செய்வதற்கு இது தான் முதல்படி. அடுத்ததாக அடுப்பில் வாணலியை வைத்து அடுப்பு மூட்டி பாசிப்பருப்பை அதில் கொட்டி 1 நிமிடம் மட்டுமே கலர் மாறாது மிதமாக வறுக்கவும். 1 நிமிடத்துக்குப் பிறகு வாணலியை இறக்கி பாசிப்பருப்பை ஆற விடவும் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பி ஏற்றி அதில் பாசிப்பருப்பு மூழ்கும் அளவுக்கு சிறிது நீர் விட்டு வறுத்த பாசிப்பருப்பை அதில் கொட்டவும். பின்பு அதனுடனேயே விளக்கெண்ணெய், மஞ்சள் தூள், தக்காளி, பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், உருளைக் கிழங்கு, எல்லாவற்றையும் சேர்த்து நன்கு வேக விட வேண்டும். பொதுவாக மண் பாண்டத்தில் செய்தால் சுவையாக இருக்கும், ஆனால் மண் பாண்டம் இல்லாதவர்கள் வெறும் ஈயப்பாத்திரம் அல்லது ஸ்டீல் பாத்திரத்தையும் பயன்படுத்தலாம். இப்போது வேக விடப்பட்ட கலவையைப் பாருங்கள். கலவை நன்கு நிறம் மாறியிருப்பதோடு மணமும் எட்டூரை இழுக்கும் வண்ணம் மிக அருமையாக மூக்கை நெருடும்.  இப்போது கொதிக்கும் பருப்புக் கலவையில் நாம் முன்பே தயார் செய்து வைத்திருக்கும் மசாலா பேஸ்டை கொட்டவும்.. இப்போது மீண்டும் கலவையால் கிளறும் போது மசாலாவும், தேங்காய்க் கலவையும் ஒன்றாக இணைந்து விடும். அதனுடன் தேவையான அளவு உப்பைச் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கினால் கும்பகோணம் கடப்பா தயார். இதை அடுப்பிலிருந்து இறக்கும் முன்பாக கொத்துமல்லி, கறிவேப்பிலை இலை கிள்ளிப்போட்டு அரை மூடி எலுமிச்சம் பழத்தையும் பிழிந்து முன்னரே எடுத்து வைத்த பட்டை லவங்கம், பிரியாணி இலை, கல்பாசிப்பூ சேர்த்து தாளிதல் செய்து இறக்கினால் சுவை! சும்மா சொல்லக்கூடாது சுவை நாவோடு சேர்த்து மனதையும் மயக்கும் என்பதில் ஐயமில்லை.

]]>
kumbakonam kadappa recipe, கும்பகோணம் கடப்பா ரெஸிப்பி, லைஃப்ஸ்டைல் ரெஸிப்பி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/6/w600X390/kummonam_kadappa.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2018/feb/06/kumbakonam-kadappa-recipe-for-idly--dosa-2858546.html
2857825 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... நாவூறும் ஒரு சுவையான ரெஸிபி! பன்னீர் புலாவ் வித் ஆலு  சினேகா DIN Monday, February 5, 2018 01:02 PM +0530  

தேவையான பொருட்கள் :
 

பாஸ்மதி அரிசி - 1 கப்,
உருளைக்கிழங்கு - 200 கிராம்
பன்னீர் - 15 துண்டுகள்,
தக்காளி - 2,
பெரிய வெங்காயம் - 2,
பச்சைமிளகாய் - 2,
முந்திரி பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
சாட் மசாலா  - 1/2 டீஸ்பூன்,
பட்டை - சிறிது, கிராம்பு - 2,
சோம்பு - 1 டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை - 1,
நெய் - 2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

பாஸ்மதி அரிசியை கழுவி 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

தண்ணீரை வடிகட்டி, வெறும் வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கவும். பன்னீரை துண்டுகளாக  நறுக்கிக் கொள்ளவும்.

லேசாக வறுத்த பாஸ்மதி அரிசியை தேவையான அளவு நீர் விட்டு உதிரியாக வடித்து கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பன்னீர், நறுக்கிய உருளைக்கிழங்கைப் போட்டு பொரிக்கவும்.

வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றை சிறிதும் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் சிறிதளவு மற்றும் நெய்யை விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சு இலை, சோம்பு போட்டு தாளிக்கவும்.

இந்தக் கலவையில் அரைத்த வெங்காயம், தக்காளி விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.

இவை நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறி மிதமான தணலில் வைக்கவும்.

ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது பொரித்த பன்னீர், உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டு கிளறி இறக்கவும்.

கடைசியாக இதில் உதிரியாக வடித்த சாதத்தை போட்டு கிளறி இறக்கவும்.

சுவையான பன்னீர் புலாவ் வித் ஆலு ரெடி

]]>
Paneer Pulao, Aloo, Veg recipe, பன்னீர் புலாவ், ஆலு, ரெசிபி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/5/w600X390/pulao.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2018/feb/05/paneer-pulao-with-aloo-a-tasty-receipt-2857825.html
2856082 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... பட்சணம் செய்யப் போறீங்களா? அப்போ படிங்க... இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவலாம்! சி.ஆர்.ஹரிஹரன், கொச்சின் DIN Friday, February 2, 2018 05:51 PM +0530  

 • பொடியாக நறுக்கிய புதினா சேர்த்துப் பிசைந்து தட்டை தட்ட  ருசி கூடும். நல்ல மணமாகவும் இருக்கும்.
 • தேன் குழல் செய்யும்போது நீருக்குப் பதில் தேங்காய்ப் பால் சேர்த்துச் செய்ய சுவை கூடுதலாக இருக்கும்.
 • எந்த பட்சணம் செய்வதாக இருந்தாலும் அதன் மொறுமொறுப்புக்கு வெண்ணெய் சேர்த்தால் உத்திரவாதம் தரும். சீக்கிரம் பட்சணங்கள் நமத்தும் போகாது.
 • மைக்ரோ அவனில் உட்புறப் பகுதியைச் சுத்தப்படுத்த ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் அரை மூடி எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து அவனில் இரண்டு நிமிடங்கள் வைத்து எடுத்துத் துடைக்க பளிச்சென்று     இருக்கும்.
 • காரம் சேர்த்து செய்யும் பட்சணத்துக்கு காரப்பொடி போடாமல், பச்சைமிளகாயுடன், ஓரிரு காய்ந்த மிளகாயைச் சேர்த்து அரைத்து, வடிகட்டி, அந்தத் தண்ணீரைப் பயன்படுத்திச் செய்தால் பட்சணம் நல்ல   நிறமாக இருக்கும்.
 • வெண்ணெய் சேர்த்து செய்யும் பலகாரங்களுக்கு மாவுடன் வெண்ணெய்யை நன்கு கலந்தபின் தண்ணீர்விட்டுப் பிசைய வேண்டும்.
 • பட்சணங்கள் செய்ய பயன்படுத்தும் பெருங்காய நீர் மீந்துவிட்டால் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
 • லட்டு, ரவா லட்டு, பொட்டுக் கடலை மாவு உருண்டை போன்றவற்றை பிடிக்கும் போது கையில் சிறிது நெய்தடவிக் கொண்டு பிடித்தால் நன்கு பிடிக்க வருவதுடன் மணமாகவும் இருக்கும்.
 •   குலோப்ஜாமூன் பாகு மீந்து விட்டால் அதில் மைதா மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து பிசைந்து சப்பாத்தி போல திரட்டி சதுர துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்தெடுத்தால் சுவையான, மணமான   பிஸ்கெட் தயார்.
 •  ரசத்தில் மண்டி மீந்துவிட்டதா? பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு சேர்த்துத் தாளித்து, நறுக்கி   வைத்ததைப் போட்டு நன்கு வதக்கவும். பின்னர் மிஞ்சிய ரசத்தை ஊற்றி சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். அரிசி அல்லது கடலைமாவு, வெல்லம் ஆகியவற்றையும் போட்டு அடிப்பிடிக்காமல்   கிளறி இறக்கினால் அருமையான தொக்கு ரெடி. இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி போன்ற பலகாரங்களுக்கு இந்த தொக்கு நல்ல "காம்பினேஷன்'.
]]>
லைஃப்ஸ்டைல் , ரசிக்க ருசிக்க, lifestyle recipe, cooking tipS, சமையல் டிப்ஸ் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/2/w600X390/cooking_tips.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2018/feb/02/cooking-tips-2856082.html
2851177 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... வயிற்றுப் புண் உபாதை தீர்க்கும் அதிமதுர மூலிகைப் பால் ரெஸிப்பி! கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. DIN Thursday, January 25, 2018 06:22 PM +0530  

அதிமதுரம் அனைத்து வகை நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

வாதம், பித்தம், கபம் எனும் முப்பிணியால் ஏற்படும் உபாதைகளைப் போக்க வல்லது அதுமதுரம். அதி மதுரம் என்றால் அதிக இனிப்பு என்று பொருள். அடிப்படையில் இது ஒரு மூலிகைச்செடியின் வேர். மேலே சொல்லப்பட்ட மூவகைப் பிணிகளாலும் வயிற்றில் ஏற்படும் புண்களை ஆற்றக் கூடிய திறன் அதிமதுரத்துக்கு உண்டு.

 • இது இயல்பாகவே இனிப்புச் சுவை கொண்டதாக இருப்பதால் தினமும் ஒரு அரை தேக்கரண்டி அளவில் அதுமதுரப் பொடியை எடுத்துக் கொண்டு அதை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதிமதுர தேனீர் என்ற பெயரில் அருந்தலாம். இதுவே இனிப்பாகத்தான் இருக்கும்...
 • மேலும் இனிப்பு தேவை என நினைப்பவர்கள் இதில் கொஞ்சம் சுக்கு, கொஞ்சம் பனைவெல்லம், ஏலம் எல்லாம் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டியும் அருந்தலாம். அதையும் அதிமதுர தேனீர் என்று தான் சொல்கிறார்கள். அதிமதுரத்தை இப்படி தினமும் அருந்தினால் அன்றன்றைக்கு உடலில் சேரக்கூடிய நஞ்சுகளை நீக்க அவை உதவும்.
 • அதிமதுரத்தை பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் நாம் சமைக்கக் கூடிய கஞ்சி அல்லது ரசத்தில் தூவியும் உண்ணலாம். அதன் பெயர் அதிமதுர ரசம். சற்றே இனிப்புச் சுவையுடன் இருக்கும்.
 • அதிமதுரப் பொடியை தேனில் கலந்து அப்படியே சுவைத்தும் சாப்பிடலாம். இப்படிச் செய்வதால் வயிற்றுப் புண் வரும் அபாயத்திலிருந்து நமது உடல் ஆரோக்யத்தை வரும் முன் காத்து பலம் பெற வைக்கலாம்.

அதிமதுரப் பால் ரெசிப்பி:

தேவையான பொருட்கள்:

 

 • அதிமதுரம்: 3 அல்லது 5 சிறு வேர்
 • அதிமதுரச் சாறு: 1 டம்ளர்
 • தேங்காய்ப் பால்: 1 டம்ளர்
 • சுக்குப் பொடி : 1 சிட்டிகை
 • பனை வெல்லம்: தேவையான அளவு
 • ஏலம்: 1 சிட்டிகை

அதிமதுரத்தை ஒன்றிரண்டாகத் தட்டி அல்லது நசுக்கி எடுத்து 4 முதல் 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு அதை அரைத்து ஒரு டம்ளர் அளவுக்குச் சாறு எடுத்து அந்தச் சாற்றை வெறு வாணலியை சூடாக்கி காய்ச்ச வேண்டும். அதிமதுரச் சாறு கொதித்ததும் அந்தச் சாறுடன் சம பங்கு தேங்காய்ப்பால் சேர்த்து அது ஒரு கொதி வந்ததும் சுக்கு, பனைவெல்லம் கலந்து அதிமதுரப் பால் தயாரிக்க வேண்டும். இந்தப் பாலை நன்கு ஆற வைத்துப் பின் அருந்துவதால் வயிற்றுப் புண் உபாதை உடனடியாகக் குறைய வாய்ப்புண்டு என சித்த மருத்துவம் கூறுகிறது.

நன்றி: செல்வ சண்முகம் (சித்த மருத்துவர்)

]]>
அதி மதுரம் மூலிகைப் பால், உணவே மருந்து, ரசிக்க ருசிக்க, adhimadhuram herbal milk, http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/25/w600X390/adhimathuram_herbal_milk.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2018/jan/25/adhimathuram-herbal-milk-recipe-2851177.html
2843642 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... சுவையும் சத்தும் நிறைந்த கேரட் கேசரி சாப்பிட்டு இருக்கிறீர்களா? சினேகா DIN Friday, January 12, 2018 02:36 PM +0530 கேரட் அல்வா சாப்பிட்டு இருப்போம். ரவா கேசரியும் பலமுறை சுவைத்திருப்போம். இதென்ன கேரட் கேசரி? குழந்தைகளை கேரட் சாப்பிட வைக்கும் ஒரு அம்மா கண்டுபிடித்த ரெசிபியாகத் தான் இது இருக்கும். கேரட்டை துருவி அதை தோசை மாவில் போட்டு கேரட் தோசை என்று கொடுத்தால், சில பிள்ளைகள் கவனமாக கேரட்டை நீக்கிவிட்டு தோசையை சாப்பிடும் கலையை கற்றுக் கொள்கிறார்கள். கேரட் கண்ணுக்கு நல்லது என்று பொதுபுத்தியிலிருந்து ஏதாவது சொல்வீர்கள் என்றால், எவன் சொன்னான் அவனை முதல்ல வரச் சொல்லு என்று வியாக்யானம் படிப்பார்கள். பேசாமல் அவர்களுக்குப் பிடித்த வகையில் இனிப்பாகவே கொடுத்துவிட்டால் வாதம் செய்யாமல் சாப்பிட்டுவிடுவார்கள். இது ஒரு எளிமையான ரெசிபி. முயற்சித்துப் பாருங்கள் அதன் பின் அடிக்கடி கேரட் கேசரியை நீங்களும் சாப்பிட ஆரம்பித்துவிடுவீர்கள்.

தேவையானவை:

ரவை - 1/2 கப்
கேரட் விழுது - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
தண்ணீர் - 1/2 கப்
முந்திரி, பிஸ்தா, பாதம் - தேவைக்கேற்ப
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
நெய் - 1/4 கப்
 

செய்முறை:

வாணலியில் சிறிதளவு நெய்யை விட்டு லேசாகச் சூடாக்கவும்.

முந்திரி, பிஸ்தா மற்றும் பாதாம் பருப்புக்களை சேர்த்து வறுத்துத் தனியாக வைக்கவும். அதே நெய்யில் ரவையை வறுக்கவும்.

அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்து ரவை, கேரட் விழுது சேர்த்துக் கட்டிகள் இல்லாமல் வேகும் வரை கிளறவும்.

பின்னர் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், முந்திரி, பிஸ்தா, பாதாம் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது இறக்கவும்.

நெய் தடவிய தட்டில் கேசரியைச் சமமாக பரப்பி, சதுரமாக அல்லது டயமெண்ட் ஷேப்பில் வெட்டி எடுக்கவும்.

சுவையான கேரட் கேசரி தயார்.

]]>
Carrot Kesari, Sweet Recipe, கேரட் கேசரி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/12/w600X390/Carrot-Kesari-pillaiyar.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2018/jan/12/carrot-kesari-recipe-2843642.html
2842385 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... டயட் ஆம்லெட் சினேகா DIN Wednesday, January 10, 2018 02:48 PM +0530 தேவையானவை:

முட்டையின் வெள்ளைக் கரு மட்டும் - 2  
வெங்காயம் - 1/2 டீஸ்பூன்
தக்காளி -  1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி (நறுக்கியது) - சிறிதளவு
இஞ்சி - தேவைக்கேற்ப
ஸ்பிரிங் ஆனியன் -  1 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன்
கோதுமை பிரெட் டோஸ்ட் - 2 ஸ்லைஸ்

செய்முறை:

தோசைக்கல் நன்கு சூடானவுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, கொத்தமல்லித்தழை, இஞ்சி, ஸ்ப்ரிங் ஆனியன் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். 

நன்கு அடிக்கப்பட்ட முட்டையின் வெள்ளைப் பகுதியை இதன் மீது ஊற்றி, வெந்தவுடன் திருப்பிப் போட்டால் சூடான ஆம்லெட் தயாராகி விடும். இந்த டயட் ஆம்லெட்டுடன் கோதுமை பிரெட்டை டோஸ்ட் செய்து சாப்பிடலாம்  

]]>
Omlette, Diet food, டயட் முட்டை டோஸ்ட், முட்டை தோசை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/10/w600X390/omelet.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2018/jan/10/டயட்-ஆம்லெட்-2842385.html
2841821 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... கார சாரமான பேபி உருளைக்கிழங்கு ரெசிபி! சினேகா DIN Tuesday, January 9, 2018 03:08 PM +0530  

உருளைக் கிழங்கில் செய்த உணவுகள் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் சிறிய அளவிலான பேபி உருளை என்றால் அவர்கள் மறு வார்த்தைப் பேசாமல் சாப்பிட்டுவிடுவார்கள். குளிர்காலத்தில் பேபி உருளைக்கிழங்குகளின் சீசன் என்பதால், இந்த மாதத்தில் பேபி உருளையை வெரைட்டியாகச் சமைத்து அவர்களுக்குத் தரலாம். 

தேவையான பொருட்கள் :

பேபி பொட்டேடோ - 200 கிராம்
குடை மிளகாய் - 1
இஞ்சி-பூண்டு விழுது - 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி சாஸ் - 50 கிராம்
இடித்த மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு - 10 கிராம்
மைதா மாவு - 50 கிராம்
கார்ன்ஃப்ளார் - 100 கிராம்
வெங்காயத்தாள் - 10 கிராம்
தக்காளி - 1
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

தக்காளி, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெங்காயத்தை சதுரமாக வெட்டிகொள்ளவும். இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

குடைமிளகாயை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பேபி பொட்டேடோவை நன்றாக கழுவிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, அதனுடன் பேபி பொட்டேடோவை சேர்த்து பிசறி சிறிது நேரம் ஊற வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஊற வைத்துள்ள பேபி உருளைக்கிழங்கைப் போட்டு பொரித்தெடுக்கவும்.

இன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய இஞ்சி, பூண்டு, பெரிய வெங்காயம், குடைமிளகாய் போட்டு வதக்கவும்.

அனைத்தும் சிறிது வதங்கியதும் இதில் சிறிது தண்ணீர் சேர்த்து தக்காளி சாஸ், இடித்த மிளகாய்த்தூள், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

கடைசியாக பொரித்த உருளை, தக்காளி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.

குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடும் சைட் டிஷ் இது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/9/w600X390/Chotti_Aloor_Dum.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2018/jan/09/spicy-tasty-devilled-potatoes-2841821.html
2841802 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... ஜப்பானியர் விரும்பிச் சாப்பிடும் பச்சை மீன் உணவு இதுதான்! உமா DIN Tuesday, January 9, 2018 12:56 PM +0530  

ஜப்பானியர் பாரம்பரிய உணவுப் பழக்கத்தை பெரிதும் விரும்புபவர்கள். சுறுசுறுப்புக்கும் ஆரோக்கியத்துக்கும் பெயர் பெற்றவர்கள் அவர்கள். ஒல்லியான அதே சமயம் உறுதியான உடல்வாகைக் கொண்டவர்கள் அவர்கள். தொப்பை பிரச்னை அவர்கள் நாட்டில் அதிகம் கிடையாது. 

ஜப்பானியரின் உணவுப் பட்டியலில் காய்கறிகள், பழங்கள், தானிய வகைகள் மீன், முட்டை, கடற்பாசி, சோயா, அரிசி, கிரீன் டீ போன்றவை நிச்சயம் இடம்பெற்றிருக்கும். இறைச்சி மற்றும் பால் பொருட்களை அவர்கள் ‌மிக‌க் குறை‌ந்த அள‌வில் மட்டுமே உட்கொள்கின்றனர்.

ஜப்பானியர்களின் சமைக்கும் முறையும் சற்று வித்தியாசமானது. எந்தந்த உணவை எப்படிச் சமைக்க வேண்டும் என்று அவர்களுக்கு ஒரு பழக்கம் உள்ளது. சில உணவை வேக வைத்து உண்பார்கள். சிலவற்றை தீயில் வாட்டினால் போதுமானது. குறைந்த தீயில் மிகக் குறைந்த அளவு எண்ணெயைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களை வறுத்து சாப்பிடுவார்கள். பச்சையாக இருக்கும் மீன் வகை ஷாஷிமி (sashimi) என அழைக்கப்படுகிறது.

சல்மோன் மீன் வகைகளும் பெரும்பாலும் ஜப்பானியர்களால் பச்சையாகவே உண்ணப்படுகிறது. லேசான புகை காட்டப்பட்ட விலாங்கு மீன் வகையை 'உனாங்கி' என அழைக்கக்கிறார்கள். ஃபுகு என்ற ஒரு வகை ஷாஷிமி உணவு பஃப்பர் மீனிலிருந்து செய்யப்படுகிறது. ப்ஃப்பர் மீனின் உடலில் சில பாகங்களில் உள்ள விஷம் தசைகளை மரத்துப் போக வைக்குமாம். இது உயிருகே ஆபத்தானது. ஆனாலும் ஷாஷிமியை முறையாக தயாரித்து உண்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள் ஜப்பானியர். 

ஷாஷிமி என்பது நறுக்கப்பட்ட, சமைக்காத, குளிர்விக்கப்பட்ட இறைச்சி அல்லது மீன். ஷாஷிமி என்பதற்கு அர்த்தம் துளைக்கப்பட்ட இறைச்சி. ஷாஷிமி செய்யப்படும் மீன்கள் தூண்டில்கள் மூலம் பிடிக்கப்பட்டவுடன், அவை உயிருடன் இருக்கும்போதே, ஒரு உலோக கம்பியில் குத்தி வைக்கப்படுகின்றன. ஷாஷிமிக்கு சூரை, சால்மன், சங்கரா, கணவாய், கானாங்கெளுத்தி போன்ற மீன்கள் பயன்படுத்தப்படுகின்றன. மாட்டிறைச்சியும் சிக்கனும்கூட இதில் பயன்படுத்தப்படும். 

ஜப்பானியரின் உணவின் தொடக்கத்தில் இவை பரிமாறப்படும். இந்த உணவின் ஒரு பகுதியாக மீசோ சூப், அரிசி சாதத்துடன் பரிமாறுவார்கள். ஷாஷிமி வகை உணவை உண்பதற்கு முன் முக்கியமாக இருக்க வேண்டியது சுவைச்சாறும் (கிச்சாப்) 'வசாபியும்' (காரமானச் சாறு). ஷாஷிமி சோயா சாஸிலும் முக்கியெடுத்து பரிமாறப்படும்.  கரிப்பு சுவைக்காக 'கிச்சாப்பை' தெளித்துக் கொள்வதற்காக பயன்படுத்துவார்கள். சில வேளைகளில் காரச் சாறுடன் (வசாபி) 'கிச்சாப்பை' கலந்துவிடுவார்கள். வசாபியின் மிகுந்த காரச் சுவையுடையது. 

ஷாஷ்மி​ மீன் உணவின் ஆரோக்கிய பலன்கள்

சமைக்காத மீன்கள் ஆரோக்கியமானவையே. ஆனால் அதில் சில சிக்கல்கள் உள்ளன. வாசாபியுடன் சாப்பிட்டால் பாக்டீரியா தொடர்பான சிக்கல்கள் சரி செய்யப்படும். இதை மீசோ சூப் சாதத்துடன் முழு உணவாக சாப்பிடும்போது அதில் மொத்தமுள்ள சோடியம் அளவுக்கு அதிகமாக இருக்கும்.

ஷாஷ்மி ஆரோக்கியமான உணவாக கருதப்பட்டாலும் வேக வைத்து உணவுகளை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதும் உண்மைதான்

]]>
Japanese food, sashimi, Salmon fish, ஜப்பானிய உணவு, ஷாஷிமி, சாஷிமி மீன் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/9/w600X390/1.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2018/jan/09/japanese-food-sashimi-fish-health-benefits-2841802.html
2838146 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... அடைக்குப் பொருத்தமான அவியல் ரெசிப்பி! கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. DIN Wednesday, January 3, 2018 05:24 PM +0530  

தேவையான பொருட்கள் :

 • அவரைக்காய் - நூறு கிராம்
 • கத்தரிக்காய் - நூறு கிராம்
 • பீன்ஸ் - நூறு கிராம்
 • சேப்பங்கிழங்கு - நூறு கிராம்
 • உருளைக் கிழங்கு - ஒன்று
 • முருங்கை காய் - ஒன்று
 • வாழைக்காய் - ஒன்று
 • புடலங்காய் - நூறு கிராம்
 • தேங்காய் - அரை மூடி
 • கெட்டித் தயிர் - ஒரு கப்
 • பச்சை மிளகாய் - பத்து
 • சீரகம் - இரண்டு டீ ஸ்பூன்
 • கருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
 • தேங்காய் எண்ணெய் - கால் கப்

அவிக்க...

முதலில் சொல்லப் பட்ட காய்கறிகளையும்,கிழங்கு வகைகளையும் அளவில் சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் ,பிறகு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து தேவையான உப்பு சேர்த்து காய்கள் முங்கும் அளவு தண்ணீர் ஊற்றி மேலாக ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும் .வேக வைக்கப் பட்ட காய்கறிகளை எடுத்து அதிலிருக்கும் நீரை வடிகட்டி பிரிக்கவும்.

அரைக்க...

அரை மூடி தேங்காயை துருவி அல்லது நறுக்கி அதனோடு இரண்டு டீ ஸ்பூன் சீரகம் பத்துப் பச்சை மிளகாய்கள் சேர்த்து மையாக அரைத்து எடுத்து ஒரு கப் கெட்டித் தயிரில் கலந்து வைத்துக் கொள்ளவும் .

அவியல்:

அரைத்து எடுத்த தேங்காய் தயிர் கலவையில் முன்பே வேக வைத்து எடுத்துக் கொண்ட காய்கறிகளைப் போட்டு நன்றாகக் கொதிக்க விட்டு இறுதியாக தேங்காய் எண்ணெய் விட்டு ஒரு கைப்பிடி கருவேப்பிலையும் தூவி கிளறி விட்டு இறக்கிப் பரிமாறலாம் .இதற்க்கு தாளிதம் அவசியமில்லை.

அடைக்கு மிகப் பிரமாதமான சைடு டிஷ் அவியல் தான், அருமையான காலை டிபனுக்கு அடை அட்டகாசமாய்பொருந்தும், நிறையக் காய்கறிகளும் பருப்புகளும் கலப்பதால் நல்ல சத்து மிக்க உணவும் கூட.

குறிப்பு :-

இன்னும் நிறைய காய்கள் சேர்த்துச் செய்ய விரும்பினால் அப்படியும் சேர்க்கலாம். என்னென்ன காய்கள் சேர்க்க வேண்டும் என்பது சாப்பிடுபவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது.

அடையைத் தயிர் கலந்தும் செய்யலாம், ஆனால் அது ஒரு முழுநாள் வைத்திருந்து சாப்பிடுவதற்கு மட்டுமே உகந்தது. அதையே தயிருக்குப் பதிலாகப் புளிக்கரைசல் சேர்த்து செய்தீர்கள் எனில் மறுநாளும் வைத்திருந்து உண்ணலாம்.

]]>
அவியல் ரெசிப்பி, அடை அவியல், aviyal recipe. adai aviyal, lifestyle taste, taste http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/3/w600X390/adai_aviyal.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2018/jan/03/aviyal-recipe-for-adai-dosa-2838146.html
2835210 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... வாணி, ராணி தொடரில் நேற்று பூமிநாதன் குறிப்பிட்ட ‘உத்தம வடை’ ரெஸிப்பி! கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. DIN Friday, December 29, 2017 01:10 PM +0530  

நேற்று வாணி, ராணி மெகாத்தொடரில் ‘பாதாம் வடை’ என்ற புது ரெஸிப்பி ஒன்றைப் பற்றி அதில் வரும் பூமிநாதன் கதாபாத்திரம் கூறியது. இம்மாதிரி ரெஸிப்பிகளைக் கண்டுபிடிக்க அந்த வசனத்தை எழுதியவருக்குக் கடுமையான உழைப்பு தேவைப்பட்டிருக்கலாம். அது அத்தொடரின் வசனகர்த்தா பா.ராகவனின் கைவண்ணமாகவே இருக்கக் கூடுமென அவரது எழுத்துக்களை அறிந்தவர்களுக்கு எளிதில் தெரிந்திருக்கக் கூடும். பா.ரா தனது ‘ருசியியல்’ என்ற தொடரில் இந்த பாதாம் வடை எனும் உத்தம வடையைப் பற்றி முன்பே பகிர்ந்திருக்கிறார். அதென்ன பாதாம் வடை?! அதெப்படி உத்தம வடையாகும் என்கிறீர்களா? அதாவது எண்ணெயில் முழுக்காட்டிப் பொறிக்கப்படும் வடைகள் எல்லாம் கொலஸ்ட்ராலை அதிகரிக்கக் கூடிய பொல்லாத வடைகளாம். ஆனால் இந்தப் பாதாம் வடை அப்படியல்ல, இதனோடு மாவு சேர்க்கப் படுவதில்லை என்பதால் இதில் கொலஸ்ட்ராலின் சதவிகிதம் குறைவு எனும் அர்த்தத்தில் இதை உத்தம வடை என்கிறார் பா.ரா.

சரி மெகாத்தொடரில் பார்ப்பதோடு நிறுத்தி விட முடியுமா என்ன? அப்படி ஒரு வடைக்கான ரெஸிப்பி எங்கிருக்கிறது என்று இணையத்தில் தேடியதில் கடைசியில் கிடைத்தே விட்டது.

இதோ அதற்கான ரெஸிப்பி இது தான். உத்தம வடை சாப்பிட ஆர்வமிருப்பவர்கள் பேஷாக இதை முயற்சித்துப் பாருங்கள். சத்துக்குச் சத்து, ருசிக்கு ருசி!

தேவையான பொருட்கள்:

பாதாம் பருப்பு: ஒரு பிடி
முட்டைக்கோஸ்: கொஞ்சம்
வெங்காயம்: நான்கைந்து சிறு வெங்காயங்கள்
பூண்டு: 3 பல்
உப்பு: தேவையான அளவு
மிளகு: 1 டீஸ்பூன்

செய்முறை:

பாதாம் பருப்பு மற்றும் பூண்டை அரைத்துப் பேஸ்ட் ஆக்கிக் கொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய கோஸ் மற்றும் வெங்காயத்தைக் கலந்து தேவையான அளவு உப்பும், மிளகும் சேர்க்கவும். பிறகு இந்த மாவுக் கலவையை நன்றாகக் பிசிறி விட்டு மைக்ரோ மசால் வடைகள் போல குட்டிக் குட்டியாக கைகளில் தட்டி எடுத்து தோசைக்கல்லில் எண்ணெய் தடவி சுட்டு எடுக்கலாம். அல்லது மைக்ரோ வேவிலும் எண்ணெய் தடவி சுட்டு எடுக்கலாம். அதை அப்படியே சாப்பிட்டாலும் ருசியாகத் தான் இருக்கும் அல்லது பா.ரா விவரித்திருப்பது போல சுடச்சுட உருக்கிய நெய்யில் இரண்டு நிமிடங்கள் போட்டுப் புரட்டி ஊறவைத்து எடுத்துச் சாப்பிட்டாலும் சுவையாகத் தான் இருக்கும். ஆனால், நெய்யில் போட்டுப் புரட்டிய பின் அந்த வடையை உத்தம வடை என்று என்னால் சொல்ல இயலாது. அது அந்த வடையை ருசிப்பவர்களின் ஆரோக்யத்தைப் பொறுத்தது.
 

Thanks to writer PaRa.

Image : Representional purpose only

]]>
BADHAM VADA, GOOD TO HEALTH, SOUTH INDIAN SNACKS, UDHDHAMA VADA, உத்தம வடை, பாதாம் வடை, பா.ராகவன், லைஃப்ஸ்டைல், http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/29/w600X390/0000badham_vadai.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/dec/29/வாணி-ராணி-தொடரில்-நேற்று-பூமிநாதன்-குறிப்பிட்ட-உத்தம-வடை-ரெஸிப்பி-2835210.html
2833375 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... இந்த குளிருக்கு ஏற்ற சத்தான சுவையான காய்கறி சூப் உமா DIN Tuesday, December 26, 2017 05:44 PM +0530  

தேவையானவை

பீன்ஸ், கேரட், முட்டைகோஸ் - 150 கிராம்
தக்காளி - 2
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

காய்கறிகள் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கவும்

நறுக்கிய காய்களை ஒரு கப் தண்ணீர் விட்டு குக்கரில் போட்டு நன்கு வேக வைக்கவும்

மூன்று விசில் வந்ததும் இறக்கி நன்றாக ஆற வைக்கவும்

தண்ணீரை வடித்து ஒரு கிண்ணத்தில் தனியாக வைத்துவிட்டு, காய்கறியை மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்

இந்த விழுதுடன் வடித்து வைத்த தண்ணீரைச் சேர்க்கவும். மீண்டும் லேசாக சூடு படுத்தவும்

உப்பு மிளகு தேவையான அளவு சேர்க்கவும்.

]]>
vegetable soup, veg soup, clear soup, வெஜிடபிள் சூப், காய்கறி சூப் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/26/w600X390/soup.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/dec/26/recipe-of-vegetable-soup-2833375.html
2831187 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... குளிருக்கு இதமாக ஒரு சமையல் குறிப்பு! சோள ரொட்டி செய்வது எப்படி? உமா DIN Friday, December 22, 2017 02:23 PM +0530  

தேவையானவை :

மக்காச் சோள மாவு - 1 கப்
கோதுமை மாவு - 1 கப்
எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கேற்ப
மல்லித்தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
தண்ணீர் - மிதமான சூட்டில் தேவையான அளவு

செய்முறை :

சோள மாவையும் கோதுமை மாவையும் கலக்கி அதில் உப்பு போடவும் 

நெய், உப்பு, மல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு மிதமான சூட்டில் உள்ள தண்ணீரை விட்டு ரொட்டிப் பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

30 நிமிடங்கள் ஊற வைத்தபின், எலுமிச்சை அளவு உருண்டைகளாக எடுத்துக் கொள்ளவும். 

எண்ணெய் தடவிய வாழை இலை அல்லது பாலித்தீன் கவரில் வைத்து லேசாகத் தண்ணீர் தொட்டு சப்பாத்தியைவிட சற்று தடிமனான ரொட்டிகளாகத் தட்டவும்.

தோசைக்கல்லில் மிதமான தீயில் எண்ணெய் பூசி போட்டு இரண்டு பக்கமும் நன்றாக வேக வைக்கவும். 

சூடான சுவையான சோள ரொட்டி தயார்! சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு இது சிறந்த உணவாகும்.

]]>
Chola Roti, Recipe, சோள ரொட்டி, சமையல் குறிப்பு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/22/w600X390/corn.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/dec/22/recipe-of-corn-roti-2831187.html
2818544 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... சுவையான சாக்லெட் மில்க் ஷேக் தயாரிப்பது எப்படி? உமா DIN Friday, December 1, 2017 02:39 PM +0530  

குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை சாக்லெட்டை விரும்பாதவர்கள் யார் உள்ளார்கள். எல்லா முக்கியத் தருணங்களையும் ஸ்வீட் எடு கொண்டாடு என்றே மகிழ்ந்திருப்போம். சாக்லெட்டில் டார்க் சாக்லெட்தான் உடல்நலத்துக்கு நல்லது.

சோர்வு, குறைந்த ரத்த அழுத்தம், இதய நோய்களை எதிர்த்துப் போராடும். அளவாக சாப்பிட்டால் டார்க் சாக்லேட் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும், மன அழுத்தத்திலிருந்து விடுவிடுக்கும்.  இவைத் தவிர டார்க் சாக்லெட் உடல் எடையையும் குறைக்க உதவும். 

டார்க் சாக்லெட்டில் மில்க் ஷேக் அல்லது ஸ்மூத்தி தயாரித்து குடிக்கலாம். இணையத்தில் இந்த ரெசியின் காணொலி உள்ளது. அவரவர் சுவைக்கு ஏற்ப இதன் ருசியை மேம்படுத்த சாக்கோ சிப்ஸ், ராஸ்பெரி, செர்ரி அல்லது உலர்ந்த திராட்சையை சேர்த்துக் கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

பாதாம் பால் - 1 கப்
கோகோ பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
சாக்லேட் ப்ளேவர் புரோட்டீன் பவுடர் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
சில்லியம் உமி பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
பசலைக்கீரை - 1 கையளவு
முந்திரி வெண்ணெய் - 15 கிராம்
ஆளி விதை பவுடர் - 15 கிராம்

செய்முறை:

மேற்சொன்ன அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு, 30 நொடிகள் நன்கு அரைக்கவும்.

ஒரு நீளமான க்ளாஸில் ஊற்றி, கெட்டியாக அப்படியே குடிக்கலாம்.
 

]]>
Dark Chocolate, Chocolate milk shake, smoothie, ஸ்மூதி, சாக்லெட் மில்க் ஷேக், டார்க் சாக்லெட் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/1/w600X390/smoothie.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/dec/01/சுவையான-சாக்லெட்-மில்க்-ஷேக்-தயாரிப்பது-எப்படி-2818544.html
2817344 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... உருளைக் கிழங்கைப் பற்றி 5 மொறு மொறு தகவல்கள் உமா DIN Thursday, November 30, 2017 04:44 PM +0530  

உருளைக் கிழங்கை நன்றாக மொறு மொறுவென்று வறுத்து, சாம்பார் அல்லது தயிர் சாதத்துடன் சாப்பிடும்போது, எளிமையான அந்த உணவு அதீதமாக ருசிக்கும். அரிசி, கோதுமைக்கு அடுத்து மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவது உருளைக்கிழங்கைத்தான் என்கிறது ஒரு புள்ளிவிபரம். எல்லா நாட்டிலும், எத்தகைய தட்பவெப்ப நிலைகளிலும் விளையக்கூடியது என்பதால், உலகின் மிகமுக்கியமான வியாபாரப் பொருளாகவும் உருளை உள்ளது. எல்லா நாட்டு மக்களின் உணவுத் தட்டிலும் ஏதாவது ஒரு வடிவத்தில் இந்தப் பதார்த்தத்தைப் பார்க்கலாம்.

100 கிராம் உருளைக் கிழங்கில் கிடைக்கும் கலோரி 97. இதில் ஈரப்பதம் 75%, புரதம் 2%, கொழுப்பு 0.1%, தாது உப்புகள் 0.61%, நார்ச்சத்து 0.41% மீதி கார்போஹைடிரேட்டும் ஆகும். இவைத் தவிர வைட்டமின் சி 17 மில்லி கிராமமும், கால்ஷியம் 10 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 40 மில்லி கிராமும், வைட்டமின் ‘ஏ’ வைட்டமின் ‘பி’ ஆகியவையும் உள்ளன. சோடா உப்பு, பொட்டாஷியம் ஆகியவையும் இதிலுள்ளன.

உருளைக் கிழங்கை அவித்தோ, சுட்டோ, வேகவைத்தோ, வறுத்தோ சமைத்து சாப்பிட்டாலும் அதன் மருத்துவக் குணம் மாறவே மாறாது என்கின்றனர் ஊட்டச் சத்து நிபுணர்கள்.

சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய உணவுப்பொருள் உருளைக்கிழங்கு. எளிதில் ஜீரணிக்கக் கூடியதும் என்பது இதன் சிறப்பம்சம்.

தினமும் பாலும், உருளைக்கிழங்கும் சாப்பிட்டால் ஒருவர் உடலுக்குத் தேவையான எனர்ஜி கிடைத்துவிடும். அந்த அளவுக்கு கார்ப்போஹைடிரேட் உருளைக்கிழங்கில் அதிகளவில் உள்ளது. 

]]>
உருளைக் கிழங்கு, potato, french fries http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/30/w600X390/potato-fry.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/nov/30/potatoes-are-healthy-2817344.html
2817273 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... நீங்கள் காஃபி பிரியரா? காபி குடிப்பதன் 5 நன்மைகள் உங்களுக்கே! உமா DIN Wednesday, November 29, 2017 12:40 PM +0530  

லேசாக மழை தூறிக் கொண்டிருக்கும் ஒரு இளம் காலையை மேலும் அழகாக்க என்ன செய்யலாம்? ஒரு கப் காஃபியை விட அத்தருணத்தை அழகூட்டுவது எதுவாக இருக்க முடியும்? காஃபி என்றதும் முதலில் நம் நினைவுக்கு வருவது அதன் மணம். காஃபி பிரியர்களுக்கு டிகாஷன் காஃபிதான் பிடிக்கும். என்னதான் தூள் காஃபியை கலக்கினாலும், டிகாஷனும் பாலும் சிறிதளவு சர்க்கரையும் சேர்ந்த காஃபியின் சுவைக்கு ஈடாக இந்த ஈரேழு உலகில் வேறு எதுவும் உள்ளதா என்ன?  சரி காஃபியின் மகிமையைப் பற்றிக் கூறிக் கொண்டே போகலாம்.

காஃபி குடிக்கும் பழக்கம் பற்றிய ஆராய்ச்சிகள் அனேகம் உள்ளன. சில ஆய்வாளர்கள் காஃபி குடிப்பது உடல் நலத்துக்குக் கெடுதல், நரம்புத் தளர்ச்சியை ஏற்படுத்தி, விரைவில் பலவித உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்திவிடும் என்கின்றனர். ஆனால் வேறு சில ஆராய்ச்சியாளர்கள் காஃபி தேவாம்ருதம், அது உடல்நலத்தை மேம்படுத்தி உங்கள் ஆயுளை அதிகரிக்கச் செய்யும் என்றும் கூறி வருகின்றனர்.

இதில் எது சரி, எது தவறு? ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவழித்து லட்சக்கணக்கான நபர்களை வைத்து இவர்கள் மேற்கொள்ளும் ஆய்வு முடிவுகள் சுவாரஸ்யமாக இருந்தாலும், பெரும்பாலானோர்க்கு குழப்பம்தான் மிஞ்சுகிறது. ஆனால் நம்முடைய சுய அறிவைப் பயன்படுத்தி, யோசித்துப் பார்த்தால், காஃபி குடித்து இதுவரை யாரேனும் மரணம் அடைந்தார்கள் என்று கேள்விப்பட்டதில்லை அல்லவா? காஃபியோ டீயோ அதற்கு அடிக்ட் ஆகி, அளவுக்கு அதிகமாக குடித்தால் நிச்சயம் பிரச்னைகள் ஏற்படும். ஆனால் அளவாக காஃபி குடிப்பது நலமே தரும். அது சுவையுடன் சேர்ந்து ஒரு பரவச அனுபவம் தரும் என்பது உண்மை. 

1. ஒரு நாளில் எத்தனை காபி குடிக்கலாம்?

ஒரு நாளைக்கு 2 அல்லது 3 கோப்பை காஃபி குடிக்கலாம். சராசரியாக ஒரு கப் காஃபியில் 95 மில்லிகிராம் கஃபைன் கலந்திருக்கும். ஏற்கனவே கஃபைன் அதற்கு மேல் பால் மற்றும் சர்க்கரை சேர்த்தால் காஃபியின் நன்மைகளை அழிந்து விடும். எனவே பாலும் சர்க்கரையும் சேர்க்காத ப்ளாக் காஃபியைக் குடித்துப் பழகுங்கள். ஆரம்பத்தில் கசக்கும் ஆனால் காஃபியின் ருசியே கசப்புத்தானே? அதுவே பழகிவிடும். இந்த ப்ளாக் காபி பல நன்மைகள் தரவல்லது. பால் சேர்க்காத கருப்பட்டி காபி குடிக்கும் பழக்கம் ஒருசிலருக்கு உள்ளது. 'கடுங்காபி' என்று அந்த காபியை சொல்லுவார்கள். அதுவும் உடல் நலத்தை மேம்படுத்தும்.

2. நோய்களுக்கு நோ என்ட்ரி

பல ஆண்டுகள் காஃபி குடிப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் குறைவு. கேன்சர், டிமென்ஷியா, அல்ஸீமர் போன்ற மறதி நோய், இதயம், லிவர் சம்மந்தப்பட்ட பிரச்னைகள், பார்க்கின்சன், டைப் 2 டயபடீஸ், உள்ளிட்ட பல நோய்கள் வராமல் தடுக்கும் சக்தியும் காஃபிக்கு உண்டு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

3. ஆக்டிவ் எனர்ஜி தரும் காஃபி

காஃபியில் ஆன்டி ஆக்ஸிடெண்டுகள் அதிகம் உள்ளன. அது உங்களை சுறு சுறுப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவும். சூடான காஃபி உடலுக்கு உடனடி தெம்பை அளிக்கும் என்பது கண்கூடான உண்மை. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் காஃபி பீனில் உள்ளது. காபி குடிக்கும்போது ஹார்மோன்கள் தூண்டப்பட்டு மூளையை சுறுசுறுப்பாக்கும். உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கச் செய்து, தசைகளுக்கு அதிக ரத்தம் அனுப்பப்படுகிறது. காஃபி குடுக்கும்போது, கண் பார்வை விரியும். சுவாசக் குழாய் நன்கு திறந்து புத்துணர்வு கிடைக்கும்.  இதன் மூலம் நாம் செய்து கொண்டிருக்கும் வேலையில் தீவிரமாக ஆழ்ந்து உற்சாகத்துடன் செய்ய முடியும்.

4. காஃபி குடிப்பதால் நீண்ட நாள் வாழலாம்

4,00,000 நபர்கள் பங்கேற்ற ஒரு மாபெரும் ஆராய்ச்சியொன்றின் முடிவில் காஃபி குடிப்பவர்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ முடியும் என்று கண்டறிந்துள்ளார்கள். தினமும் இரண்டு கப் காஃபி குடித்தவர்கள் காபி குடிக்காதவர்களை விட 10 சதவிகிதம் அதிக காலம் உயிர் வாழ்ந்தார்கள். இதில் காஃபி குடிக்கும் பெண்களின் ஆயுள் 13 சதவிகிதம் ஆண்களை விட அதிகமிருந்தது என்பதையும் கண்டுபிடித்தனர்.

5. ஒவ்வாமை

காஃபி  குடிப்பதால் சிலருக்கு படபடப்பு, பதற்றம், தூக்கமின்மை, வயிற்றில் கோளாறு, ப்ராஸ்டேட் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. காரணம் அவர்களுக்கு ஒவ்வாமை இருக்கலாம். காஃபி குடிப்பதால்தான் அத்தகைய பிரச்னைகள் வருகிறது என்று தெரிந்தால், காஃபி குடிப்பதைத் தவிர்ப்பதே நல்லது.

காபி அருந்துபவர்கள் பெரும்பாலும் புகைப் பிடிப்பவர்களாகவும், குறைந்த உடற்பயிற்சி செய்பவர்களாகவும், கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகம் உண்பவர்களாகவும் இருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

]]>
cafe, coffee, காபி, காஃபி, Black Cafe, ப்ளாக் காபி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/29/w600X390/Coffee-coffee-lovers-drinking.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/nov/29/5-proven-benefits-of-drinking-coffee-2817273.html
2816581 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... தலைவன் ஆக ஆசையா? உங்களுக்கு தேவையான பண்புகள் இவைதான்! உமா பார்வதி DIN Tuesday, November 28, 2017 01:01 PM +0530  

அனைவருக்கும் தலைவனாக விளங்க ஆசை நிச்சயம் இருக்கும். பள்ளியில் வகுப்பு லீடரில் தொடங்கி அலுவலகத்தில் மேலாளர் வரை வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலையிலும் நமக்கு மேலே சிலர் நம்மை வழிநடத்திச் செல்வார்கள். ஏன் நாம் மந்தையில் உள்ள ஆடுகளாக இருக்க வேண்டும்? மேய்ப்பனாக மாறுவது அத்தனை கடினமா என்ன என்று யோசித்திருக்கிறோமா? யோசித்தாலும் நடைமுறை சாத்தியங்களை கணித்திருக்கிறோமா? எந்த ஆசையும் நிறைவேறும், ஆனால் அதற்கு நம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும்.

மிகச் சிலருக்கு இயல்பிலேயே தலைமைப் பண்புகள் இருக்கும். அதனைக் கண்டுணர்ந்து அதற்கேற்ப பயிற்சி செய்தால் நிச்சயம் தலைவனாக உருவாகலாம். தலைவனாக இருக்க விரும்புபவர்களுக்கு human relations என்று சொல்லப்படும் மனிதத் தொடர்பு அறிவுத் திறன் இருக்க வேண்டும். சக மனிதர்களுடன் சுமுகமான நட்புறவு கொள்ளத் தெரிய வேண்டும். அறம் சார்ந்து இயங்கத் தெரிய வேண்டும். பரந்த அறிவும், சுருங்கிப் போகாத மனதும் அவசியம். மேலும் தன்னைப் போல பிறரை எண்ணும் மனப்பக்குவம் இருக்க வேண்டும்.

அதிகாரம் செய்வதும் அதட்டி உருட்டுவதும் தலைமைப் பண்பு என்று தவறாக கருதப்படுகிறது. ஒரு நல்ல தலைவன் அரவணத்துச் செல்பவனாகவே இருப்பான். அவனுடைய ஆளுமையில் கடினமும் உறுதியும் இருக்குமே தவிர மனிதர்களிடம் பழகும் தன்மையில் அவை இருக்காது. சோம்பேறிகளையும், செயல் திறன் அற்றவர்களையும் அவர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். தான் சார்ந்த கூட்டத்துக்காக அல்லும் பகலும் அயராது உழைப்பதுடன், மேன்மேலும் தன்னைப் போல் தலைவர்களை உருவாக்கிச் செல்பவனே நல்ல தலைவன். இந்த உலகம் சங்கிலித் தொடராக அத்தகைய தலைவர்களின் வழிநடத்துதல்களால் இயங்குகிறது. மக்கள் விரும்பும் சில தலைவர்கள் மகாத்மா காந்தி, காமராஜ், நெல்சன் மண்டேலா, சேகுவாரா, லீ குவான் யூ உள்ளிட்ட பலர்.

தலைவனாக இருப்பதற்கான அடிப்படை மற்றவர்களின் உணர்வுகளை நன்கு புரிந்து கொள்ளும் திறன். தனது நடத்தையாலும் கருத்தாகத்தாலும், செயல்பாடுகளாலும் அனைவருடைய நம்பிக்கையைச் சம்பாதிப்பார்கள் தலைவர்கள். துணிவே துணை, செய் அல்லது செத்து மடி, உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை எனும் உறுதியான நிலைப்பாட்டை உயிரே போனாலும் எடுப்பார்கள். தான் எடுத்த சார்பிலிருந்து ஒரு போதும் மாற மாட்டார்கள். செயற்கரிய விஷயங்களை துணிச்சலாக செய்து முடிப்பார்கள்.

நான் சொல்கிறேன் நீ கேட்டுத் தான் ஆகவேண்டும், இல்லையென்றால் உன் வேலை போய்விடும், அல்லது உயிரையே எடுத்துவிடுவேன் என்ற அளவுக்கு அதிகார போதையுடன் செயல்பட்டால் வெகு விரைவில் அவன் அருகில் சொந்த நிழல் கூட நிற்காது. அவனால் தலைவனாக இல்லை, ஒரு மனிதனாகக் கூட இருக்க முடியாது. மனித நேயமும், உடல் ஆற்றலும், தீர்க்கமான சிந்தனையும், எதிர்காலத்தைப் பற்றிய சரியான கணிப்பும் தலைமைப் பண்புகளின் சில கூறுகள். 

நல்ல தலைவனாக விளங்குபவன் கருத்துப் பரிமாற்றத்தில் நம்பிக்கை உள்ளவனாக இருப்பான். தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, பொது வாழ்க்கையிலும் சரி தன்னுடைய கருத்துக்கு எதிர் கருத்தை வைப்பவர்களையும், விமரிசனம் செய்பவர்களையும் கூர்ந்து கவனிப்பான். அது சரி என்று மனதுக்குத் தோன்றினால் தீவிர பரிசோதனைக்கும் சுய அலசலுக்குப் பிறகும் அதனை ஒப்புக் கொள்வான். அவ்வகையில் அவனது மனிதத் தொடர்பின் சங்கிலி அறுபடாமல் அவன் செல்லும் இடங்களுக்கு எல்லாம் விரிவாக்கம் பெற்றுக் கொண்டிருக்கும். இத்திறனை மேலும் மேலும் வளர்த்தெடுக்க முயற்சிப்பவர்களே புற உலகிலும், அக வாழ்விலும் வெற்றி பெறுகிறார்கள்.

இயல்பிலேயே சிலரிடம் தலைமைப் பண்பு காணப்படும். சிலர் வாழ்க்கை அனுபவம் மூலமும் சுயம் சார்ந்த தேடலில் அத்தகைய பண்பை வளர்த்துக் கொள்வார்கள். உங்களிடம் தலைவனாக மாறக் கூடிய பண்புகள் உள்ளதா என்பதை நீங்களே சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு ‘ஆம்’ சில நேரங்களில் ஆம் – சில நேரங்களில் இல்லை’, அல்லது ‘இல்லை’ ஆகிய ஏதோ ஒரு விடை அளிக்கவும். விடைகளை நேர்மையாக சுய பரிசீலனையில் அடிப்படையில் எழுத வேண்டும். நான் இப்படித்தான் இருக்க விரும்பினேன். அல்லது இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆசையை பதிலாக மாற்றக் கூடாது. உள்ளது உள்ளபடி குறிக்க வேண்டும். ஒரு தலைவனாக இருக்க அடிப்படை குணங்கள் உள்ளதா என்பதற்கான  செக் லிஸ்ட் இதோ :

 1. அந்தந்த சூழ்நிலைக்கு தக்கபடி மதிநுட்பத்துடன் / விழிப்புணர்வுடன் செயல்படுகிறீர்களா?
 2. குழுவாகச் செயல்படும்போது அசெளகரியமாக இருந்துள்ளதா?
 3. சிலருடன் மட்டும்தான் உங்களால் சகஜமாகப் பழக முடிகிறதா?
 4. பிறருடைய எதிர்பார்ப்புக்களை துல்லியமாகக் கணித்ததுண்டா?
 5. ஒரு பிரச்னையைத் தீர்க்க பொய் சொல்வதுண்டா?
 6. திடீரென கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தத் தெரிந்தவரா?
 7. புதிய மனிதர்களுடன் பழகும்போது பதற்றமாக உணர்வீர்களா?
 8. குழு கலந்துரையாடலில் பங்கேற்க ஆவல் உண்டா?
 9. திடீரென்று பிரச்னை ஏற்பட்டால் சூழலைக் கட்டுக்குள் கொண்டு வரத் திணறியதுண்டா?
 10. உங்களோடு இருப்பவர்கள் உங்களை நம்பி ரகசியங்களைப் பகிர்ந்ததுண்டா? தகுதியானவர்களை உடன் வைத்துக் கொள்வீர்களா?
 11. மேடை பேச்சு என்றால் பயமா?
 12. அறிவார்த்தமாகவும் அதே சமயம் சுவாரஸ்யமாக உரையாற்றியதுண்டா? புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவரா?
 13. தனிமையில் இனிமை காண்பவரா?
 14. மற்றவர்களுடைய தேவைகளை அறிவீர்களா? அதை நிறைவேற்ற முனைபவர்களா?
 15. புரியாத புதிரா நீங்கள்? 
 16. தன் முனைப்பு அற்றவரா? கேள்வி கேட்கப்பட்டால் பதில் சொல்லவோ தன்னை முன் நிறுத்திக் கொள்ளவோ தயங்குவீர்களா?
 17. ஒழுக்கத்திற்கு முதலிடம் தருபவரா? கொள்கைப் பிடிப்புடன், அதே சமயம் எந்த சூழலிலும் நடுநிலை தவறாமல் இருப்பவரா?
 18. புதிதாய்ப் பழகியவரிடமும் சகஜமாகப் பழகியதுண்டா?
 19. உங்களுடைய பிரச்னைகளை மிகையாக நினைத்து அடிக்கடி கவலை கொள்வதுண்டா?
 20. மற்றவர்கள் மீது அக்கறை இருக்கிறதா? சமூக அக்கறையில் கவனம் செலுத்தியதுண்டா?
 21. உயர்ந்த குறிக்கோள்கள் உடையவரா? உங்கள் முடிவுகளை நன்கு யோசித்து தீர்க்கமாக எடுப்பீர்களா? 
 22. குழுவாக எடுக்கும் தீர்மானத்தை ஏற்றுக் கொள்வீர்களா?
 23. உங்கள் மனநிலைக்கு ஏற்றபடி அடுத்தவர்களிடம் பழகுவீர்களா?
 24. கருத்தாக்கம் இல்லாதவரா?
 25. சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கக் கூடியவரா? அதை விரைவாகச் செயல்படுத்த முனைவீர்களா
 26. பாகுபாடின்றி அனைவரிடம் பழகக் கூடியவரா? மற்றவர்களுக்கு முன் மாதிரியாக விளங்கக் கூடிய அதாவது ரோல் மாடலாக விளங்கக் கூடிய தகுதி உள்ளதா?

பதில்களை சரி பார்த்துக் கொள்ளுங்கள்!

1, 4, 6, 8, 10, 12, 14, 17, 18, 20, 21, 22, 25, 26 ஆகிய கேள்விகளுக்கு உங்கள் பதில் ‘ஆம்’ என்றால் நீங்கள் உறுதியாகத் தலைமைப் பண்பு மிக்கவர் தான். அரசியல்வாதி, மருத்துவர், மனித வள மேலாளர், கல்வியாளர், மனோதத்துவ நிபுணர், உளவியல் ஆலோசகர், விற்பனையாளர் போன்றவற்றில் தலைமை ஏற்கக் கூடிய திறன் உங்களிடம் பிரகாசமாக உள்ளன.

'ஆம்' என்றும், 'சொல்வதற்கில்லை', 'இல்லை' என்றும், 'சொல்லிவிட முடியாது' என்பது போன்ற குழப்பமான பதில்கள் இருந்தால் நீங்கள் முதலில் உங்களை உற்றுக் கவனிக்க வேண்டும். 

மேலே குறிப்பிடப்பட்ட எண்களில் உள்ள கேள்விகளுக்கு ‘இல்லை’ என்ற பதில்தான் நிறைய அளித்திருந்தால் உங்கள் பலம் வேறு திறனாக இருக்கலாம். அதற்காகக் கவலை கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. 

]]>
leader, leadership, தலைவன், தலைமை பண்பு, லீடர் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/28/w600X390/leadership_1.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/nov/28/leadership-qualities-2816581.html
2815906 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... ஆந்திரா ஸ்டைலில் ருசிக்கும் முத்த பப்பு! DIN DIN Monday, November 27, 2017 05:56 PM +0530
தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு - 1 கப்
வெங்காயம் - 1
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவைகேற்ப
தண்ணீர் - 1 1/2 கப் (துவரம் பருப்பு முங்கும் அளவுக்கு)


செய்முறை

அடுப்பை சிம்மில் வைத்தபின், அடி கனமான வாணலியில் துவரம் பருப்பைப் போட்டு 3 அல்லது 4 நிமிடங்களுக்கு லேசாக வறுக்கவும். 

பருப்பு முங்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றவும். 

குக்கரில் குழைவாக வேக விடவும். வெந்தபின் அதில் உப்பும் சிறிதளவு மஞ்சள் தூளும் சேர்த்து நன்றாக மசிக்கவும்.

வேக வைத்த பருப்பில் சூடான சாதத்தை போடவும் கொள்ளவும். சிறிதளவு நெய் விட்டு, அதன் பின் ஆவக்காய் ஊறுகாயை அதில் சேர்க்கவும். மாங்காய், பருப்பு, நெய் மற்றும் சூடான சாதம் தரும் சுவையே அலாதி. சமைப்பதற்கும் மிக எளிதானது.

அந்திராவில் இந்த முத்த பப்புவுடன் திப்பி புலுசு அல்லது சாறு இணையாகச் சேர்த்துச் சாப்பிடுவார்கள்.

]]>
Mudda pappu, Andhra recipe, dal rice, பருப்பு சாதம், முத்த பப்பு, ஆந்திரா ரெசிபி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/27/w600X390/mudda-pappu-recipe.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/nov/27/andhra-style-mudda-pappu-recipe-2815906.html
2814827 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... அடடே! நீங்க இன்னும் ஒரு தடவை கூட அதலைக்காய் சாப்பிட்டதில்லையா? கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. DIN Saturday, November 25, 2017 04:00 PM +0530  

சென்னையில் பலருக்கும் அதலைக்காய் பற்றித் தெரிந்திருக்கவில்லை. அது என்னவோ சாப்பிடக் கூடாத வஸ்து போல அதைச் சீண்டுவார் இல்லை இங்கே! 

நேற்று கடையில் அதலைக்காயைக் கண்டதும் எனக்கு அப்படி ஒரு சந்தோஷம்!

கெட்டிப் பருப்புச் சாதத்தில் நெய் விட்டுப் பிசைந்து உருட்டி அதன் நடுவில் லட்டுக்கு நடுவில் முந்திரிப்பருப்பு போல பொரித்த அதலைக்காயை கையோடு அதக்கி எடுத்து உண்டிருந்தால் தானே தெரியக்கூடும் அதன் அருமை. பாகற்காய் கசப்புத்தான், காஃபீ கூட கசப்புத்தான் தான் ஆனால் சாப்பிடாமலோ அருந்தாமலோ இருக்கிறோமா என்ன? அந்தந்தச் சுவைகளை அது அதற்கு ஏற்றமாதிரி பக்குவமாகச் சமைத்துண்ணலும், அருந்தலும் ஒரு கலை. 

அந்த வகையில் அதலைக்காயையும் கூட நன்கு அலசி, அளவாகத் தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி பக்குவமாக ஒரே கொதியில் இறக்கி வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து தாளித்துக் கருவேப்பிலை இட்டுப் பொரிந்து வருகையில் பொடியாக நறுக்கிய வெங்காயமும், நீள நறுக்கிய பச்சை மிளகாயும் இட்டு அதலைக்காய்க்கு வலுக்குமோ, வலிக்காதோ எனப் பூம்பிரட்டலாக நான்கைந்து முறை கிளறி விட்டு அடுப்பை அணைத்து வாணலியைத் தட்டுப் போட்டு மூடி விடவேண்டும்.

பிறகு சூடான சாதத்தில் கெட்டிப் பருப்பும் நெய்யும் விட்டுப் பிசைந்து கூட இந்த அதலைக்காய்ப் பொரியலையும் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள், அப்புறம் பரிமாறுபவர்களை அடிக்கடி கேட்பீர்கள்;

ஒன்ஸ் மோர், ஒன்ஸ் மோர் என்று!

மழைக்காலத்தில் தான் அதலைக்காய் சீசன் தொடங்கும்; இதோ இப்போது கூட சீசன் தான். காய்கறி மார்க்கெட்டிலோ அல்லது தெருவில் விற்று வரும் காய்கறி வண்டியிலோ எங்கே கண்டாலும் அதலைக்காயை மட்டும் விட்டு விடாதீர்கள். வெறுமே ருசிக்காக மட்டுமில்லை. அதலைக்காய்க்கும், பாகற்காய் போலவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. அதைப் பற்றியும் பார்த்து விடலாம்.

மருத்துவ குணம் கொண்ட அதலைக்காய் சாத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அமோகமாக விளைந்து வருகிறது.
 விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியான கரிசல்பட்டி, கலிங்கபட்டி, வண்ணிமடை, ஓடைப்பட்டி, கொல்லபட்டி, பெத்துரெட்டிபட்டி, பெரியஓடைப்பட்டி, நடுவபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குளிர் காலங்களில் தானகவே அதலைச் செடிகள் முளைக்கின்றன. இந்தச் செடிகளில் மழையின் ஈரப்பதம் காரணமாகவும், மண்ணின் தன்மை காரணமாகவும் அதிக அளவில் அதலைக்காய்கள் விளைகின்றன.
 

இந்த காய்கள் சர்க்கரை நோய், மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது. அதனால் இவற்றை அனைவரும் விரும்பி வாங்கி உண்டு வருகின்றனர். மேலும் அதலைக்காயின் மனமும், ருசியும் அனைத்து தரப்பினரையும் கவர்வதால், சாத்தூர் பகுதியில் விளையும் அதலைக்காய்களுக்கு சுற்று வட்டார பகுதிகளில் தனி மவுசு ஏற்பட்டுள்ளது. இங்கு விளையும் அதலைக்காய்கள் திருச்சி, மதுரை, தேனி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.
 

அதலைக்காய்கள் பிற மாவட்டங்களில் விளைவதற்க்கு முன்பே சாத்தூர் பகுதியில் விளைவதற்கு இப்பகுதியின் மண்ணின் தன்மை மற்றும் தட்பவெப்பநிலையே காரணம் என்று கூறப்படுகிறது. பிற மாவட்டங்களைவிட முன்பே விளைச்சல் காண்பதால் சாத்தூர் பகுதி அதலைக்காய்கள் பிரபலமாகி வெளிமாவட்டங்களுக்கும், வெளியூர்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.
 பொதுவாக அதலைக்காயை பறித்த உடன் உடனடியாக சமைத்துவிட வேண்டும். அதனாலயே பிஞ்சு அதலைக்காய்களை அனைத்து தரப்பினரும் வாங்கி விரும்பி உண்டு வருகின்றனர். இவற்றைத் தனியாக விவசாயம் செய்ய முடியாது. தானாகவே கரிசல்காட்டில் வளரக் கூடிய தன்மை கொண்ட, இத்தகைய செடிகள் களையை போல் தானகவே வளரும் தன்மை கொண்டவை.
 

இதுகுறித்து அதலைக்காய் வியாபாரிகள் கூறியது: 

காலையில் காட்டுக்கு போகும்போது சாதாரணமாக வளர்திருக்கும் அதலைக்காய்களை பறிப்போம், மழை காலமாக இருப்பதால் ஒரு நாளைக்கு 7-லிருந்து 15 கிலோ கிடைக்கிறது. இதை சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வோம். கிலோ ரூ. 60 முதல் 80 வரை கிடைக்கும். இது விதையாக விதைக்க கூடியது அல்ல, மேலும் மற்ற காய் மாதிரி முதலீடு கிடையாது, முதலீடு இல்லாமல் வருமானம் கிடைக்கக் கூடியது.


இதுகுறித்து மருத்துவர் வெங்கடேஷ் கூறுகையில்: அதலைக்காய், பாகற்காய்-க்கு இணையான மருத்துவக் குணம் கொண்டது. இது சர்க்கரை நோய், மஞ்சள் காமாலை நோய்களை கட்டுப்படுத்தும் தன்மையுடையது. கசப்புத்தன்மை இருந்தாலும் ருசியுள்ளது. இந்த அதலைக்காய் மற்ற காய் மாதிரி அறுத்து சமைக்க முடியாது. அப்படியே தான் சமைக்க முடியும். தென்மாவட்டங்களில் மட்டுமே அதிகளவில் விளையக்கூடியது என்றார்.

தகவல் போதுமல்லவா? இனி கடைகளில் அதலைக்காய்களைக் கண்டால் ஐயோ... என்று விலகி ஓட மாட்டீர்கள் தானே?!

]]>
Momordica cymbalaria, athalaikai, அதலைக்காய், அதலைக்காய் பொரியல், ரெஸிப்பி, உணவே மருந்து http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/25/w600X390/0000_athalaikay_poriyal.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/nov/25/havent-you-ever-eat-momordica-cymbalaria-2814827.html
2813516 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... நாவூறும் காளான் ஃப்ரை! டேஸ்ட் அன்லிமிடட்! உமா DIN Thursday, November 23, 2017 04:09 PM +0530  

குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பிடிக்கும் காளானைச் சமைப்பது எளிது. காரணம் சில உணவுப் பொருட்களை நாம் அதன் தன்மை கெடாமல் சமைத்தால் போதும், அதனுள் ருசி பொதிந்துகிடக்கும்.

காளான் தண்ணீரை மிக விரைவாக உறிஞ்சும் தன்மை உடையது, அதைக் கழுவினால் வேகமாகத் தண்ணீரை தன்னுள் இழுத்துக் கொள்ளும், இதனால் அதிலுள்ள வைட்டமின் சத்துக்களை இழக்கப்படும்.  அழுக்கும் மண்ணும் கலந்திருந்தால் சில விநாடிகள் மட்டும் தண்ணீரில் முக்கி எடுக்கலாம்.

காளானைப் பலவகையாக சமைக்கலாம், வித்யாசம் எல்லாம் சாப்பிடுவர்களின் கையில் இல்லையில்லை வாயில்தான் உள்ளது. இதோ ஒரு எளிமையான ரெசிபி :

தேவையானவை

நறுக்கிய காளான் - ஒரு பாக்கெட்
பெரிய வெங்காயம் - 1
மிளகாய் வற்றல் - 3
சீரகம் - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு (விழுதாக அரைத்தது) 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
மிளகுத் தூள் - சிறிதளவு
கொத்துமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
சோயா சாஸ்  - 1/2 டீஸ்பூன்
வினிகர் - 1/2 டீஸ்பூன்

செய்முறை :

வாணலியில் எண்ணெய் ஊற்றி, சீரகம் மற்றும் வரமிளகாய் போட்டு தாளிக்கவும்.

இஞ்சி பூண்டு விழுதைச் சேர்க்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் போட்டு பிரட்டவும்.

பச்சை வாசனை போனவுடன் மிளகாய்த் தூள் மற்றும் மஞ்சள் தூளைப் போடவும். அதன்பின் நறுக்கிய காளானைச் சேர்த்து நன்கு வதக்கவும். சோயா சாஸ் மற்றும் வினிகர் ஊற்றி, கரம் மசாலாவைச் சேர்த்து வறுக்கவும்.

மிளகத் தூள் மற்றும் கொத்துமல்லியை அளவாகச் சேர்த்து பரிமாறவும்.

]]>
mushroom, Kaalan, Mushroom fry, காளான் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/23/w600X390/musroom_fry.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/nov/23/mushroom-fry-2813516.html
2808415 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... கர கர மொறு மொறு கருப்பட்டி முட்டாசு... சாப்பிட்டதுண்டா?! கார்த்திகா வாசுதேவன் DIN Wednesday, November 15, 2017 12:19 PM +0530  

விடுமுறையில் பாட்டி வீட்டுக்குப் போய் சில பல நாட்கள் சீராடுவதெல்லாம் கல்யாணம் ஆன கையோடு கனவு போலத்தான் ஆகி விட்டது, இப்போதெல்லாம் அப்படிப் போனாலும் கூட எங்கே தங்க முடிகிறது? குழந்தைகளுக்குப் பள்ளி, ஓரிரு நாட்களுக்கு மேல் அலுவலகத்தில் விடுமுறை கேட்க முடியாது. என்னதான் பாட்டி வீடு என்றாலும் அடிக்கடி போய்த் தங்கினால் பிரியம் கெட்டு விடும். இப்படிச் சில பல காரணங்களைக் இட்டுக் கட்டிய பின், பாட்டி வீட்டு செல்லச் சீராடல் எல்லாம் கானல் நீரானது தான் மிச்சம் .

அதை ஏன் இங்கே புலம்புவானேன்! சொல்ல வந்த விஷயம் வேறு... பாட்டி வீடு என்றதும் எல்லோருக்குமே சில விஷயங்கள் சட்டென்று நினைவை நிரப்பும் அப்படி ஒரு விஷயம் தான் எனக்கு உச்சிக்குடுமி முட்டாசுக் கடை! இந்த மனிதருக்கு ஏன் இப்படிப் பெயர் வந்ததென்பது இன்னும் கூட எனக்குப் புரியாத விஷயம். அவருக்கு தலையில் முடியே இருந்ததில்லை... முழு வழுக்கை. பெயரா முக்கியம்? தினம் தினம் மாலையானால் போதும் அவர் கடையில் சுடச் சுடத் தயாராகும் கருப்பட்டி முட்டாசின் சுவைக்கு எதுவும் ஈடில்லை!

அப்போது உச்சிக்குடுமி கடையில் மைதா கேக், அதிரசம், முறுக்கு என்று இன்னும் சில பலகாரங்கள் கூட செய்து விற்றுக் கொண்டிருந்தார்கள், ஆனாலும் இந்தக் கருப்பட்டி முட்டாசுக்கு ஈடு இணை எதுவுமே இல்லை,

அதுவும் மாலை சரியாக ஒரு ஐந்து அல்லது ஆறு மணிக்கு அகலமான பெரிய மூடி போன்ற ஓலை நார் தட்டின் மீது பழைய (பெரும்பாலும் எண்ணெய்க் கரை படிந்த ஒரே அழுக்குத் துண்டு தான்) துண்டை விரித்து அதன் மேல் பழைய தினசரிப் பேப்பரைப் போட்டு அதற்கும் மேல் பொன்னிறமான கருப்பட்டி முட்டாசுகளை அடுக்கி அதற்கும் மேலே இன்னொரு தினசரியை வைத்து மூடி உச்சிகுடுமியின் மகள் பாண்டீஸ்வரி கை இடுக்கில் இடுக்கிக் கொண்டு வருவாள், கூட ஒரு பொடியன் காசு வாங்கிப் போட சுருக்குப் பையுடன் வருவான்.

அவர்கள் தலையைக் கண்டாலே போதும் தெருவில் மொய்த்துக் கொண்டு கூட்டம் கூடும். தினம் தினம் வருவதால் எல்லோரும் நூறு கிராம், இருநூறு கிராம் என்று வாங்கி அங்கேயே தின்றும் விடுவார்கள். மாலையானால் கிராமப் புறங்களில் அப்போதெல்லாம் ஒவ்வொரு திண்ணையிலும் பெண்கள் உட்கார்ந்து கொண்டு ஊர்க்கதை, உலகக் கதை, அடுத்த வீட்டுப் புறணி, ஆகாசப் புறணிகள் எல்லாம் பேசுவது வாடிக்கை ஆயிற்றே. முட்டாசோடு ஊர், உலகக் கதைகளை மெல்வதும் கூட சுகம் தான் போலும்.

சென்ற விடுமுறையில் அம்மா வீடு, மாமியார் வீடு, சித்தி வீடு, அத்தை வீடு என்று சுற்றி விட்டு பாட்டி வீட்டில் எட்டிப் பார்க்கும் போது பாட்டிக்கும் வயதாகி விட்டது... சேர்ந்தார் போல இரண்டு நாட்கள் ஆசைதீரப் பாட்டியோடு தங்கினால் தான் என்ன?! என்று தோன்றி விட... தங்கினோம். வழக்கம் போல உறவுகள், நட்புகள், தெரிந்தவர், தெரியாதவர் என்று திண்ணையில் ஜமா சேர்ந்ததில் மெல்ல மெல்லப் பேச்சு கருப்பட்டி முட்டாசுக்குப் போய் விட்டது.

‘மொறு மொறுவென்று பங்காரம் போல (பங்காரம் என்றால் தெலுங்கில் தங்கம்) என்னமா இருக்கும் உச்சிக் குடுமி கடை முட்டாசு!’

‘இப்ப ஒருத்தன் முட்டாசு போட்டு விக்கறான் மதினி, வாயில போட்டா என்னமோ இனிப்பாத்தான் இருக்கு, ஆனா ஒரு மொறு மொறுப்பு இல்ல ஒண்ணுமில்ல, சும்மா சவ சவன்னு என்னமோ பச்சைப் புல்லைக் காய்ச்சி சீனி போட்டு மென்டாப்புல(மெல்லுதல்) இருக்கு, நம்ம உச்சிக்குடுமி முட்டாசு மாதிரி இல்லை ஹூம்! ஓட்டு வீட்டு தனக்கா சொல்லி அங்கலாய்க்க ,

பாட்டி உடனே உச்சிக்குடுமி பெருமையை கொஞ்ச நேரம் சிலாகித்தார்.

எனக்கோ இந்த முட்டாசெல்லாம் சென்னையில் எங்கே கிடைக்கப் போகிறது?! இப்போது யாராவது விற்று வந்தால் சூடாக வாங்கி ஒரு விள்ளல் வாயில் போட்டால் தேவலாம் என்று இருந்தது அந்த மாலை நேரக் கூதல் காற்றுக்கும் கிராமங்களுக்கே உரிய ஒரு வித இதமான வாசனைக்கும்.

அதென்னவோ நீண்ட நேரம் எதிர்பார்த்தும் முட்டாசு விற்பவனைக் காணோம்.

சிவகாசியில் வேலாயுத நாடார் கடையில் சீனி, கருப்பட்டி முட்டாசு ரெண்டுமே பேமஸ் என்று ஊருக்கு கிளம்பும் போது சித்தியும் பாட்டியும் ஆளுக்கு ஒரு கிலோ வாங்கிக் கொடுத்து அனுப்பினார்கள். அங்கே கேட்டால், பனை ஓலைப் பெட்டியில் முட்டாசு அடுக்கித் தருவார்கள். அது ஒரு பாரம்பரியச் சுவை என்றால் மிகை இல்லை. பாலித்தீன் பைகளில் சுற்றித் தரப்படும் எந்தப் பண்டமுமே ஈர்ப்பதில்லை எனக்கு.

இதே போல வாழை இலையில் வைத்து சூடாகக் கட்டித் தரும் சாத்தூர் லாலாக் கடை அல்வாவையும் சொல்லாம். பால்யத்துடன் கலந்து விட்ட இனிமையான நினைவுகள் அவை. இங்கே இனிப்பானவை முட்டாசும், அல்வாவுமா? இல்லை பால்ய நினைவுகளா என்பதை பூதக் கண்ணாடி கொண்டு பார்த்தாலும் பகுத்துப் பார்த்து விட முடியாது.

ம்... என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்... ஆமாம் வேலாயுத நாடார் கடை முட்டாசும் கூட எனக்கென்னவோ உச்சிக்குடுமி கடை கருப்பட்டி முட்டாசுக்கு ஈடாகத் தோன்றவில்லை என்பதே!

உச்சிக்குடுமியோடு போய் விட்டது அவரது மொறு மொறுப்பான முட்டாசுகளும்!

அவர் இறந்து விட்டார்.

கருப்பட்டி முட்டாசை சாத்தூர், சிவகாசிக்காரர்கள் எப்போதுமே தங்களது வீடுகளில் செய்து சாப்பிட நினைக்க மாட்டார்கள். ஏனெனில் பக்குவம் சரியாக அமையாது என்பதோடு அதொரு சல்லை பிடித்த வேலையாகி விடக்கூடும் என்பதாலும்!

ஆனால் தினமணி வாசகர்கள் எல்லோரும் இதற்காக சாத்தூருக்கும், சிவகாசிக்கும் சென்று இந்தப் பண்டத்தை ருசி காண்பது முடியாது என்பதால், செய்முறையையும் தருகிறோம்.

ஆர்வமிருப்பவர்கள் வீட்டிலேயே தயாரித்து ருசியுங்கள். பக்குவம் சரியாக அமைந்து நீங்கள் செய்த கருப்பட்டி முட்டாசை எவரேனும் பாராட்டினால் அதைக் குறித்து எங்களுக்கும் எழுதி அனுப்புங்கள்.

தேவையான பொருட்கள்:

வெல்லம்- 3/4 கிலோ 
சுக்கு- 1 டீஸ்பூன் 
பச்சரிசி மாவு / அரிசி மாவு - 1/2 கிலோ 
உளுந்து - 50 கிராம் 

செய்முறை: 

ஒரு அடி கனமான பத்திரத்தை எடுத்து கொண்டு, பச்சரிசியையும், உளுந்தையும் நன்றாக ஊற வைக்க வேண்டும். பிறகு அதை இட்லி மாவு பதத்தில் அரைத்து கொள்ள வேண்டும் இப்பொழுது வெல்லத்தை எடுத்துக் கொண்டு, ஒரு பத்திரத்தில் தண்ணீரை நன்றாகச் சுட வைத்து அதில் இந்த வெல்லத்தை கரைக்க வேண்டும். வெல்லப்பாகு தயாரான பின் அதைத் தனியாக வைத்து கொள்ளவும் ஒரு துணியை எடுத்து கொண்டு அதில் காலணா சைஸில் துளையிட்டுக் கொண்டு அதில் மாவுக்கலவையை இட்டு, கொதிக்கும் எண்ணெயில் முறுக்கு பிழிவது போல் பிழிய வேண்டும். பிழிந்த மாவு வெந்து பொன்னிறமாக வந்த பின் அதை வெல்லப்பாகில் பத்து நிமிடங்களுக்கு ஊறவைத்தால் கருப்பட்டி முட்டாசு தயார்.

 

Image courtesy: pettikadai.in

]]>
jaggery candy, sathur sivakasi famous jaggery candy, கருப்பட்டி மிட்டாய், கருப்பட்டி முட்டாசு, சாத்தூர் சிவகாசி புகழ் கருப்பட்டி முட்டாசு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/15/w600X390/jaggery_candy.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/nov/15/sathur-sivakasi-famous-jaggery-candy-2808415.html
2807058 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... சூப்பர் டேஸ்ட்டி இட்லி மிளகாய்ப் பொடி தயாரிப்பது எப்படி? DIN DIN Monday, November 13, 2017 01:27 PM +0530 தேவையான பொருட்கள்

நன்கு உலர்ந்த மிளகாய் வற்றல் – 8 (பெரியது)
பூண்டு - தேவைக்கேற்ப
கறுப்பு எள் – 100 கிராம்
உளுந்தம் பருப்பு & கடலைப் பருப்பு – 150 கிராம்
பெருங்காயப் பொடி – ஒரு டீஸ்பூன்
காய வைக்கப்பட்ட கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

மிளகாய் வற்றலின் காம்புகளை நீக்கி மிதமான வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளவும். 

கறிவேப்பிலையை நீரில் அலசி தனித்தனி இலைகளாக உருவி காய வைத்து எடுத்து தனியாக வைக்கவும். 

வெறும் வாணலியில் மிதமான சூட்டில் கறுப்பு எள், பூண்டு மற்றும் மிளகாய் வற்றலை போட்டு வறுக்கவும்.

எள் பொறிந்து வெடிக்கும் சமயத்தில் வாணலியில் இருந்து எள்ளினையும், மிளகாய் வற்றலையும் வெளியே எடுத்து வைக்கவும். அதன் பிறகு உளுந்தை அதே வாணலியில் போட்டு வறுக்கவும்.

உளுந்து வறுபட்ட வாசனை வந்த பின் வாணலியில் இருந்து தனியே கொட்டி விடவும். அதன் பின் கடலைப் பருப்பை வறுக்கவும்.

கறிவேப்பிலையை போட்டு நன்கு சுருளும் வரை வதக்கவும். தொடர்ந்து அடுப்பை சிம்மிலேயே வைத்திருக்கவும். வறுத்த அனைத்துப் பொருட்களை நன்கு ஆற வைக்கவும்.

மிக்ஸியில் சிறிதளவு உளுந்தம் பருப்பு, சிறிதளவு எள், மீண்டும் சிறிதளவு உளுந்து மறுபடியும் எள் என மாறி மாறி போடவும்.

அதனுடன் வறுத்த மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, தேவையான உப்பு, பெருங்காயப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து அரைக்கவும். மிகவும் பொடிந்து போகாமல் சற்று கொரகொரப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். சூப்பர் டேஸ்ட்டி இட்லிப் பொடி தயார். 

இட்லி மிளகாய்ப் பொடியுடன் நல்ல எண்ணெய் குழைவாக ஊற்றி இட்லி அல்லது தோசையுடன் சாப்பிடும் போது அதன் சுவைக்கு ஈடு இணை இருக்க முடியாது.

]]>
Idli Podi, Dosa side dish, Recipe, இட்லி மிளகாய்ப் பொடி, இட்லி பொடி, தோசை பொடி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/13/w600X390/Idli_podi_recipe.JPG http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/nov/13/home-made-idly-podi-2807058.html
2803463 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... கின்னஸ் உலக சாதனைக்காக மாஸ்டர் செஃப் சஞ்சீவ் கபூரால் கிண்டப்பட்ட ஜெயண்ட்  கிச்சடி! கார்த்திகா வாசுதேவன் DIN Tuesday, November 7, 2017 12:47 PM +0530  

கடந்த வாரத்தில் நம்ம ஊர் உப்புமாவை பலவகை காய்கறிகளைக் கலந்து கிச்சடி என்ற பெயரில் தேசிய உணவாக அறிவித்தது மத்திய அரசு. கிச்சடியை தேசிய உணவாக அறிவித்ததை யார்
வரவேற்கிறார்களோ இல்லையோ? நிச்சயமாக இந்திய இல்லத்தரசிகள் மிகக் குதூகலமாக ஏகோபித்த ஆதரவுடன் வரவேற்பார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஏனென்றால் சட்டென்று சடுதியில் தயாரித்து விடக்கூடிய வகையிலான ஈஸி ரெசிப்பி என்பதால் தேசிய உணவுத் தேர்வில் கிச்சடியை அடித்துக் கொள்ள எந்த உணவும் ஈடில்லை!

கிச்சடியை தேசிய உணவாக அறிவித்து விட்டு ஐயோ பாவம்! என்று அப்படியே விட்டு விட முடியுமா என்ன? பிறகு ஏர்டெல் வாசிங் பவுடர் விளம்பரப் புகழ் மாஸ்டர் செஃப் சஞ்சீவ் கபூர் எதற்கு இருக்கிறார்? அவரை வைத்து மொத்த இந்தியாவுக்குமாகச் சேர்த்து இந்தியக் கிச்சடி கிண்டினால் உலகம் முழுக்க நமது கிச்சடி வெகு ஜோராக வழுக்கிக் கொண்டு போய்ச் சேராதா பின்னே?! அப்படியானயான முயற்சிகளில் ஒன்றாக சஞ்சீவ் கபூர் தன் கையால் கிண்டிப்போட்ட பிரமாண்ட இந்தியக் கிச்சடி, இன்று கின்னஸ் உலக சாதனைகளில் ஒன்றாகி இருப்பது நமக்கும் பெருமை என்று நினைத்துக் கொள்ள வேண்டியது தான்.

வேர்ல்டு ஃபுட் இந்தியா என்பது இந்தியாவில் என்றுமில்லாத வகையில் முதன்முதலாக இந்த ஆண்டு கொண்டாடப்பட்ட பட்ட உணவுத் திருவிழாக்களில் ஒன்று. இந்திய உணவு வகைகளுக்கு உலக நாடுகளிடையே இருக்கும் வரவேற்பு மற்றும் வியாபார வாய்ப்புகளுக்காக இந்திய அரசால் திட்டமிடப்பட்டது இந்த உணவுத் திருவிழா. கடந்த நவம்பர் 4 ஆம் தேதி இந்த உணவுத் திருவிழா நிகழ்வில் தான் சஞீவ் கபூர் தனது மகா மெகா கிச்சடியை கிண்டத் தொடங்கினார். அந்தக் கதையை நீங்களும் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். நூறு கிலோவுக்கும் அதிகமான உயரதர அரிசி, பருப்பு, கம்பு, ராகி, அமராந்த் (தண்டுக்கீரை), ஃப்ரெஷ்ஷாகப் பறுத்தெடுக்கப்பட்ட புத்தம் புது காய்கறிகள் மற்றும் சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்ட 1000 லிட்டர் ஆர்கானிக் நெய், உள்ளிட்ட பொருட்களுடன் 7 அடி விட்டம் கொண்ட மகாப் பெரிய ராட்ஷதக் கடாயில் தயாரிக்கப்பட்டது அந்த கிச்சடி. கிட்டத்தட்ட 918 கிலோ கிச்சடி! கிச்சடி தயாரிக்க எரிபொருளாக நெருப்பைப் பயன்படுத்தாமல் 150 மீட்டர் நீளமான குழாய் வழியாக நீராவியைப் பயன்படுத்தி இருப்பது இதில் சிறப்பான அம்சம் எனலாம். அதுமட்டுமல்ல, கிச்சடி சமைப்பது அதிலும் இப்படி ஜெயண்ட் கிச்சடி சமைப்பதென்றால் சமையலைத் தாண்டியும் சில விஷயங்களில் கவனம் செலுத்தியாக வேண்டுமே... பயன்படுத்தக் கூடிய சேர்மானப் பொருட்களின் சுத்தம் முதற்கொண்டு சமைக்கும் போது எந்த விதமான விபத்துக்களோ அல்லது அசம்பாவிதங்களோ நேர்ந்து விடக்கூடாது எனும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை வரை பலவிதமான புரோட்டோகால் முறைகள் இந்த கிச்சடி தயாரிப்பில் பின்பற்றப்பட்டிருக்கிறது.

சரி இப்படி தயாரான கிச்சடி யாருக்கு வழங்கப்பட்டது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும் இல்லையா? ஜெயண்ட் கிச்சடி தயாரான நாளும் வட இந்தியர்கள் குரு பிரவாஸ் விழா கொண்டாடும் நாளும் ஒன்றாக அமைந்து விடவே அந்தக் கிச்சடியை டெல்லியிலிருக்கும் அட்சயபாத்ரா ஃபவுண்டேஷன் அமைப்பின் கீழுள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டது.

பிரமாண்ட உணவுத் திருவிழாவில் மெகா கிச்சடி கிண்டி முடித்து அதைக் குழந்தைகளுக்கும் வழங்கி விட்டு, இப்படி ஒரு பிரமாண்ட நிகழ்வு வெற்றிகரமாக நிகழத் துணை புரிந்த நமது இந்திய அரசுக்கும், அதன் உணவுத்துறை அமைச்சருக்கும், தனக்கு உதவி செய்த தனது சக செஃப்களுக்கும், கிச்சடியைப் பெற்றுக் கொள்ள மனமுவந்து முன் வந்த அட்ஷயபாத்ரா ஃபவுண்டேஷன் அமைப்பினருக்கும் இந்த நிகழ்வை கின்னஸ் உலக சாதனைகளில் ஒன்றாக அங்கீகரித்த கின்னஸ் சாதனை தேர்வுக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என முகநூலில் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார் மாஸ்டர் செஃப் சஞ்ஜீவ் கபூர்!

அதுமட்டுமல்ல, தனது பிரமாண்டமான இந்த சாதனைக் கனவு நிறைவேறத் துணையாக நின்ற அத்தனை பேருக்கும் அவர் நன்றி சொல்லியிருக்கிறார்.

வீடுகளில் மட்டுமல்ல, உணவுத் திருவிழாக்களில் மட்டுமல்ல, இனி இந்திய அரசியல் மேடைகளிலும் கூட கிச்சடி தொடர்ந்து பல விற்பன்னர்களால் கிண்டப்படலாம். அதற்கு அடிகோலிய பெருமை மத்திய அரசை மட்டுமே சாரும்.

]]>
it's a Guinness World Record!, Guinness khichidi, கிச்சடியில் கின்னஸ் சாதனை, ஜெயண்ட் கிச்சடி, மாஸ்டர் செஃப் சஞ்சீவ் கபூர் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/7/w600X390/00000_world_record_kichidi_by_sanjeev_kapoor.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/nov/07/its-a-guinness-world-record-2803463.html
2802803 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... சுவையான புளியோதரை தயாரிப்பது எப்படி? DIN DIN Monday, November 6, 2017 03:10 PM +0530 தேவையான பொருட்கள் :

அரிசி - 2 தம்ளர்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
எள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் வத்தல் - 5
கொத்தமல்லி - 1 டீஸ்பூன்
உடைத்த வேர்க்கடலை - 50 கிராம்
தேங்காய் - 1 கப் (துருவியது)
புளி - 1 எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்
வெல்லம் - 25 கிராம்
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரி பருப்பு - தாளிக்க தேவைக்கேற்ப
பட்டை - தேவைப்பட்டால் ஒரு துண்டு

செய்முறை

புளியை ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நீர் விட்டு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்

அரிசியை நன்கு கழுவி நான்கு தம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் வைக்கவும். சாதம் குழைவாக இல்லாமல் உதிரியாக இருக்க வேண்டும். ஒரு பெரிய பாத்திரத்தில் சாதத்தை ஆற வைக்கவும்.

ஒரு வாணலியில் வெந்தயம் மற்றும் பட்டை இரண்டையும் போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுத்து, இத்துடன் கொத்தமல்லி, மிளகாய் வத்தல், மிளகு, சீரகத்தையும் சேர்த்து வறுத்து நன்றாக பொடித்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் இந்த பொடியுடன் புளிக் கரைசலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பிறகு 1 டீஸ்பூன் எண்ணெய் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான வெப்பத்தில் வைக்கவும்.

நன்கு கெட்டியான பதத்துக்கு வந்ததும் வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

மீதமிருக்கும் எண்ணெயை ஒரு வாணலியில் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகாய் வத்தல் சேர்த்து தாளித்த பிறகு வேர்க்கடலையும் அதனுடன் சேர்த்து பொன்னிறமாக வறுத்து கருவேப்பிலையையும் சேர்த்து புளிக்காய்ச்சலில் கொட்டவும்.

எள்ளைத் தனியாகச் சிறிது எண்ணெயில் தாளித்துச் சேர்க்கவும். தேங்காயையும் தனியாக வாணலியில் லேசாக வறுத்து புளிக்காய்ச்சலில் கொட்டிக் கிளறவும்.

ஆற வைத்திருந்த சாதத்தில் கொஞ்சம் கொஞ்சமாக புளிக்காய்ச்சலை ருசிக்கேற்ப கலக்கவும். 

சுவையான புளியோதரை தயார்.

]]>
puliyogare, puliyodharai, கோவில் புளியோதரை, புளி சாதம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/6/w600X390/puliyodhara.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/nov/06/tasty-puliodharai-recipe-2802803.html
2798010 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... கம கமவென்று சாம்பார் மணக்க இதை செய்து பாருங்கள்! DIN DIN Sunday, October 29, 2017 01:37 PM +0530 உங்களிடம் உள்ள அரிசியில்  சாதம் வடித்தால் நிறம் மங்கலாக இருக்கிறதா, அரிசி வேக வைக்கும் போது தண்ணீருடன் சிறிது கெட்டியான மோர் அல்லது பால் கலந்து விடுங்கள் சாதம் வெள்ளையாக இருக்கும்.

நெய் ஜாடியில் ஒரு சிறிய வெல்லக்கட்டியை போட்டு மூடி வைத்துவிட்டால் மூன்று மாதங்கள் ஆனாலும் நெய் கெட்டுப்போகாது.

சோயா பீன்ஸ் பருப்புகளை  உளுந்துக்குப் பதிலாக  போட்டு ஆட்டி இட்லி சுட்டால்,  இட்லி அருமையாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.

எப்போதும் சாம்பாரில் பெருங்காயத்தைப் பொரித்துத்தான் சேர்ப்போம். மாறுதலாக கொத்துமல்லி விதைகளை  சிறிது நெய்யில் வறுத்துப் பொடி செய்து சாம்பாரில்  சேர்த்துப் பாருங்கள். அதன் மணமே அலாதிதான்.

- கீதா ஹரிஹரன்

]]>
Tasty Sambar, Tips for cooking, சாம்பார், டிப்ஸ் டிப்ஸ் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/29/w600X390/super_sambar.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/oct/29/for-tasty-sambar-simple-tips-2798010.html
2798002 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... ருசியான ஊறுகாய் போடுவது எப்படி? DIN DIN Sunday, October 29, 2017 12:16 PM +0530 ஊறுகாய் தயாரிப்பது எளிமையானது ஆனால் அதைப் பராமரிப்பது சற்றுக் கடினம் தான். சீக்கிரம் கெட்டுப் போய்விடும். சின்னச் சின்ன விஷயங்களை கவனம் வைத்தால் அற்புத சுவையுள்ள ஊறுகாய்களை தயாரித்து, அதன் தன்மை மாறாமல் நீண்ட நாட்கள் வைத்துப் ருசிக்கலாம்.

ஊறுகாய்   தாளிக்கும் போது  அதற்குரிய  பொருட்களுடன் சிறிது  எள்ளையும் வறுத்துப் பொடி செய்து போட்டால் ஊறுகாய் வாசனை மிகுந்து இருக்கும்.  அதுமட்டுமல்லாமல் ஊறுகாய் சீக்கிரம் கெட்டும் போகாது.

வெயில் காலத்தில் ஊறுகாயைத் தயாரித்து வைத்துக் கொண்டால், அந்த வருடம் முழுவதும் அதைப் பயன்படுத்தலாம்.

உப்பும் உரைப்பும் தான் ஊறுகாயின் பிரதான காரணி. ஊறுகாய் தயாரிப்பதற்குப் பொடி உப்பை விட கல் உப்பே சிறந்தது. தேவைப்பட்டால் கல் உப்பை மிக்ஸியில் நன்றாகப் பொடித்தும் பயன்படுத்தலாம்.  

ஊறுகாய் விரைவில் கெட்டுப் போக முதல் காரணம் ஈரத்தன்மை தான். ஊறுகாயை நன்கு உலர்ந்த ஜாடியில் அல்லது பாட்டிலில் பத்திரப்படுத்த வேண்டும்.  ஒவ்வொருமுறை அதன் எடுக்கும்போதும் மரத்தாலான ஸ்பூன் உபயோகப்படுத்தவேண்டும். கைகளால் தொடக் கூடாது. அப்படியே கையால் எடுக்க நேர்ந்தால், ஈரக்கையில் தொடாமல் நன்றாக உலர்ந்த கைகளால் எடுக்க வேண்டும்.

ஊறுகாய் தயாரிக்கும் போது அதன் நிறம் முக்கியம். மிளகாய் மற்றும் புளி புதியதாக பளிச் நிறத்தில் இருந்தால், ஊறுகாயும் நல்ல நிறத்தில் இருக்கும். கறுத்து நிறம் மாறி விடாது.

ஊறுகாயைத் தாளிப்பதற்கு நல்லெண்ணெயைப் பயன்படுத்த வேண்டும்.

ஊறுகாயை பாட்டிலில் ஊற்றிய பின், மேலே சிறிதளவு எண்ணெய் நின்றால் ஊறுகாய் கெடாமல் நீண்ட நாட்கள் அப்படியே இருக்கும்.

ஜாடியில் அல்லது பாட்டிலில் ஊறுகாயை பத்திரப்படுத்தும் போது விளிம்பு வரை போட்டு நிரப்பக் கூடாது. ஒரு இஞ்ச் அளவேனும் வெற்றிடம் விட வேண்டும்.

எலுமிச்சை ஊறுகாய் தயாரிக்கும் போது, மெல்லிய தோலுள்ள பழங்களைத் தேர்ந்தெடுத்துப் போடவும். காரணம் அவற்றில்தான் அதிகளவு சாறு இருக்கும்.

நெல்லிக்காய் ஊறுகாய் தயாரிக்கும் போது அரி நெல்லிக்காயை நன்கு அலசி அதனுடைய மேற்பரப்பு உலர்ந்தவுடன் துணியில் லேசாக துடைத்து விட்டு உப்பில் ஊற விடவும்.

பூண்டு ஊறுகாய் தயாரிக்கும்போது, சிறிதளவு பூண்டை விழுதாக அரைத்துக் சேர்த்தால், நல்ல மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

ஆவக்காய் ஊறுகாயை தயாரிக்கும் போது மாங்காய் புதியதாக இருந்தால், நன்றாக வரும்.

]]>
Pickle, mango prickle, ஊறுகாய் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/29/w600X390/pickles.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/oct/29/how-to-prepare-tasty-pickles-2798002.html
2796929 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... மொறு மொறு வடை எப்படி தயாரிப்பது? உமா DIN Friday, October 27, 2017 04:40 PM +0530 தேவையானவை :

உளுந்து - 1 கப்
பச்சை மிளகாய் - 4
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை 

 • உளுந்தை ஊற வைக்கவும்
 • ஊற வைத்த உளுந்து, பச்சை மிளகாய் மற்றும் உப்பு ஆகியவற்றை க்ரைண்டரில் மையாக அரைக்கவும்
 • இந்த மாவில் கறிவேப்பிலை மற்றும் சீரகம் சேர்த்து நன்றாக கிளறவும்
 • அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை எண்ணெயை காய வைக்கவும். 
 • உள்ளங்கை அளவு மாவை எடுத்துக் கொண்டு அதைச் சிறு உருண்டையாக்கி அதன் பின் வட்டமாகத் தட்டவும்.
 • அதன் நடுவில் தண்ணீர் தொட்டு துளை போடவும்
 • இப்போது வடை மாவை வாணிலியில் போடவும்.
 • இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டபின் எடுத்து தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்
 • பொடியாக‌ நறுக்கிய கீரையை சேர்த்து அரைத்து கீரை வ‌டையாக‌வும் சுட‌லாம்.

சில டிப்ஸ்

மாவை நைசாக அரைக்க வேண்டும். எந்தளவுக்கு என்றால் அரைத்து முடித்ததும் சிறிதளவு மாவை கையில் எடுத்துக் கொண்டு ஊதினால் அது பஞ்சு போல் பறக்க வேண்டும். அப்படி அரைத்த மாவில் வடை சுட்டால் மொறு மொறுவென்று அதிக ருசியில் வடை சூப்பராக இருக்கும்.

மொறு மொறுவென்று வடை தயாரிக்க ஒரு டீஸ்பூன் அரிசி மாவு சேர்க்கலாம்.

வடைக்கு அரைக்கும் போது தண்ணீர் அதிகமாகிவிட்டால் பொரிக்கும் போது அதிக எண்ணை குடிக்கும். எனவே அளவாக நீர் விடவும். மேலும் மிக்ஸியில் அரைப்பதை விட க்ரைண்டரில் அரைப்பது சுவை அதிகமாக இருக்கும். 

மிக்ஸியில் அரைக்க நேர்ந்தால், அதன் பிளேடுகளில் நடுவில் சிறிதளவு எண்ணை விட்டால் சிக்காமல் அரையும்.
 

]]>
Vada, Super Soft Vadai, வடை, ருசியான வடை, வடை ரெசிபி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/27/w600X390/img_4783.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/oct/27/மொறு-மொறு-வடை-எப்படி-தயாரிப்பது-2796929.html
2795677 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... சப்பாத்தி….சப்பாத்திதான்…சுவையான சப்பாத்திக்கு 7 டிப்ஸ் DIN DIN Wednesday, October 25, 2017 12:06 PM +0530 1

குழந்தைகளுக்கு தயாரிக்கும் சப்பாத்தியை தவாவில் மூடிப் போட்டு மூடி வைத்து வேக வைத்தால் சப்பாத்தி மிருதுவாகவும் இருப்பதுடன் பூரி போல உப்பும்.

2

மாவு பிசையும் போது தளரப் பிசைந்து கொண்டாலே சப்பாத்தி நீண்ட நேரம் மிருதுவாக இருக்கும். போலவே பூரிக்கு மாவை இறுகப் பிசைந்து கொண்டால் அதிகம் எண்ணெய் உறிஞ்சாது. 

3

சப்பாத்தி மாவில் நன்றாகப் பழுத்த வாழைப்பழம் ஒன்று சேர்த்து பிசைந்து சப்பாத்தி செய்தால் சப்பாத்தி மென்மையாக இருக்கும். சுவையும் கூடுதலாக இருக்கும்.

4

ச‌ப்பா‌‌த்‌தி‌க்கு ‌திர‌ட்டு‌ம் போது மாவை தொ‌ட்டு‌ ‌‌ச‌ப்பா‌த்‌தி ‌திர‌ட்டுவா‌ர்க‌ள். மேலு‌ம் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி ‌திர‌ட்டினா‌ல் ச‌ப்பா‌த்‌தி சுடு‌ம்போது அ‌திக எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்ற‌த் தேவை‌யி‌ல்லை.

5

ச‌ப்பா‌த்‌தியை ந‌ன்கு பே‌ப்ப‌ர் போ‌‌ல் ‌திர‌ட்டி அத‌ன் மே‌ல் எ‌ண்ணெ‌ய் உ‌ற்‌றி அதனை நா‌ன்காக மூடி ‌‌மீ‌ண்டு‌ம் ஒரு முறை ‌திர‌ட்டி எடு‌த்து தோசை‌க் க‌ல்‌லி‌ல் போடு‌ங்க‌ள். ச‌ப்பா‌த்‌தி எ‌ப்படி உ‌ப்பு‌கிறது எ‌ன்று தெ‌ரி‌‌யு‌ம். 

6

சப்பாத்தி மாவை முன் தினமே பிசைந்து வைத்தாலோ அல்லது கொஞ்சம் மீதமிருந்தாலோ, மாவின் மீது எண்ணெய் தடவி எடுத்து வையுங்கள். கருப்பாக காய்ந்து போகும் தன்மை ஏற்படாது.

7

சப்பாத்தி காய்ந்து போனால் அதில் சிறிது தண்ணீர் தெளித்து பத்து விநாடி மைக்ரோவேவ் அவனில் வைத்துச் சூடாக்கினால் சப்பாத்தி சாஃப்ட்டாகி விடும்.

]]>
சப்பாத்தி, chappathis, சாஃப்ட் சப்பாத்தி, டிப்ஸ் டிப்ஸ் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/25/w600X390/tasty_chapthi.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/oct/25/7-tips-for-tasty-chappathis-2795677.html
2795675 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... தோசை மாவை உடனே புளிக்க வைப்பது எப்படி? DIN DIN Wednesday, October 25, 2017 11:23 AM +0530 அடைக்கு ஊற வைக்கும் போது பயத்தம்பருப்பு, ஜவ்வரிசி ஊற வைத்து அரைத்தால் அடை மொறுமொறுப்புடன் சுவையாகவும் இருக்கும்.

பாகற்காய் குழம்பு வைக்கும்போது அதில் ஒரு கேரட்டையும் சேர்த்துப் போட்டால், குழம்பில் கசப்பு தெரியாது. சுவையும் கூடுதலாக இருக்கும்.

கடுகை வாங்கியவுடன் லேசாக வறுத்து, ஆறிய பிறகு டப்பாவில் போட்டு மூடி வைத்து, தேவையான பிறகு எடுத்து தாளிதம் செய்யும்போது கடுகு வெடிக்காது.

சாம்பார் பொடி அரைக்கும்போது ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டால் பொடியில் பூச்சி, வண்டுகள் அண்டாது.

முருங்கை பிஞ்சுகளை நறுக்கி ரசத்தில் போட்டு கொதிக்க விட்டால். ரசம் மிகவும் ருசியாக இருக்கும்.

கீரையைச் சமைக்கும் போது ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்தால் அதன் மனம் மாறாமல் இருக்கும்.

முட்டைகோஸ் கூட்டு வைக்கும்போது அதில் சிறிதளவு இஞ்சி சேர்த்தால் சுவை அதிகரிக்கும். வாயுத் தொல்லையும் இருக்காது.

ரவை உப்புமா செய்யும்போது ஒரு முட்டை சேர்த்து செய்தால் மெதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

பாயசம் செய்யும்போது சேமியாவை பாலிலே வேகவைத்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

தோசை மாவை இரண்டே மணி நேரத்தில் புளிக்கச் செய்து தோசை வார்க்க, மாவில் மிளகாய் வற்றல் காம்புகளைப் போட்டு விட்டால் மாவு புளித்து , தோசையும் நன்றாக வரும்.

 - எம்.ஏ.நிவேதா / எல். நஞ்சன்

]]>
Dosai, tips tips, சமையல் டிப்ஸ், தோசை மாவு, தோசை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/25/w600X390/tasty_dosai.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/oct/25/crispy-tasty-dosai-2795675.html
2795154 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... வாண்டுகளுக்குப் பிடித்த வீகன் டயட் என்றால் அது காலிஃப்ளவர் பாப் கார்ன்! கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. DIN Tuesday, October 24, 2017 12:42 PM +0530  

பல சமயங்களில் பள்ளிக்குக் கிளம்பியாக வேண்டிய காலை நேரங்களில் சில குழந்தைகள் சாப்பிட அடம்பிடிப்பார்கள். முழுமையான காலை உணவை எடுத்துக் கொள்ளாமல், எத்தனை சுவையான டிஃபனையும் கூட அரைகுறையாக உண்டு நிராகரிப்பார்கள். இதனால் அவர்களது எனர்ஜி லெவல் ஒரே சீராக இருப்பதில்லை. காலையில் பள்ளிப்பேருந்தில் ஏறி பள்ளிக்குச் சென்று இறங்கி 2 மணி நேரம் கழிவதற்குள் அவர்களை சோர்வு ஆட்கொண்டு விடும், அப்புறம் தூங்கி வழியத் தொடங்கி விடுவார்கள். மாலையில் அவர்களை பிக் அப் செய்து கொள்ளச் செல்லும் போது ஆசிரியைகளிடமிருந்து பிறகு பெற்றோருக்குத்தான் வகையாக டோஸ் கிடைக்கும். ‘உங்கள் குழந்தை ஏன் எப்போது பார்த்தாலும் சோர்வாகவே இருக்கின்றான்(ள்)!!! என்று அவர்கள் கேட்கையில் வழக்கம் போல ‘அவன்(ள்) சரியாகச் சாப்பிடுவதே இல்லை. எப்போது பார்த்தாலும் சாப்பிடச் சொன்னால் எங்களைப் படுத்தி எடுக்கிறான்(ள்) என்றா இன்னும் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்?!

ஏன் நமது துறு துறு வாண்டுகளுக்காக, அவர்களுக்குப் பிடித்த புதுப்புது மொறு, மொறு ரெசிப்பிகளை நாம் கண்டடைந்தால் என்ன கெட்டு விடப் போகிறது?! குழந்தைகள் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுத் தீர்த்தால் அது எப்போதுமே அம்மாக்களுக்கு மகிழ்ச்சிக்குரிய பெரிய காரணி தான். குழந்தைகள் மிச்சம் வைக்காமல் சாப்பிட வேண்டுமானால், அந்த உணவு வகைகள் அவர்களுக்கு பிடித்திருக்க வேண்டும். அந்த வரிசையில் இன்று கிரிஸ்பியான மொறு மொறு கால்ஃபிளவர் பாப் கார்ன் செய்து பழகலாம்.

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர்- 1 (சின்னச் சின்னப்பூக்களாக தனித்தனியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்)
சோளமாவு- 3/4 கப்
ஹாட் சாஸ்- 2 டேபிள் ஸ்பூன்
மோர்- 1 கப்
பிரெட் தூள்- 2 கப்
உப்பு- தேவையான அளவு
கொத்துமல்லி இழைகள்- ஒரு கைப்பிடி அளவு ( பாப் கார்னை அலங்கரித்துப் பரிமாற பயன்படுத்தலாம்)
சமையல் எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை: 

ஒரு பெரிய கிண்ணத்தில் சோளமாவு, ஹாட் சாஸ், மோர், உப்பு போன்றவற்றை மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளில் கலந்து நன்கு மிக்ஸ் செய்யவும். சிறு கட்டிகள் கூட இன்றி கலவை நன்றாக மிக்ஸ் ஆனதும் சின்னச் சின்னப் பூக்களாக தனித்தனியாக நறுக்கிச் சுத்தம் செய்து வைக்கப்பட்டுள்ள காலிஃபிளவரை உதிரி, உதிரியாகாந்தக் கலவையில் சேர்த்து நன்றாகக் கலவை காலிஃபிளவரில் ஒட்டிய பிறகு அதை எடுத்து மீண்டும் பிரெட் தூளில் நன்கு புரட்டி சிறிது, சிறிதாக கொதிக்கும் சமையல் எண்ணெயில் விட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். இப்போது கால் ஃபிளவர் பாப் கார்ன் ரெடி. ரெடியான காலிஃபிளவர் பாப்கார்ன் மேல் சிறு சிறு இழைகளாக நறுக்கப்பட்ட கொத்துமல்லித்தளை கொண்டு அலங்கரித்து பரிமாறலாம். எப்போதுமே காலிஃபிளவர் பாப் கார்னுக்கு ஃபிளேவர் சேர்த்த கெட்டித்தயிர் அருமையான காம்பினேஷன். கெட்டித்தயிர் மிகச்சிறந்த மைக்ரோ நியூட்ரியண்ட்ஸும் கூட என்பதால் குழந்தைகளுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கதை தான்!
 

Images: delish.com.

]]>
காலிஃபிளவர் பாப் கார்ன், கிட்ஸ் ஸ்னாக்ஸ், cauli flower recipie, kids favorite recipie, cauli flower popcorn, lifestyle food http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/24/w600X390/cauli_flower_with_thaghi.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/oct/24/kids-favo-vegan-diet-is-cauliflower-pop-corn-2795154.html
2786664 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... மொறு மொறுவென வடை தயாரிப்பது எப்படி? DIN DIN Sunday, October 8, 2017 03:30 PM +0530 நெல்லிக்காய்களை வேக வைத்து, கொட்டைகளை நீக்கி, மிக்ஸியில் விழுதாக அரைத்து அதை வடகம் மாவில் சேர்த்து வடகம் செய்தால் வித்தியாசமான சுவையில் சத்தான வடகம்  ரெடி.

கோதுமை மாவுடன் ஒரு தேக்கரண்டி கார்ன்ஃப்ளார் மாவு , ஒரு தேக்கரண்டி பாம்பே ரவை, ஒரு தேக்கரண்டி எண்ணெய்ச் சேர்த்துப் பிசைந்து ஊற வைக்காமல்  உடனே பூரி  செய்தால் பூரி உப்பலாக, மொறு மொறுப்பாகவும் இருக்கும்.

மோர்க்குழம்புக்கு அரைக்கும்போது சீரகத்துடன் ஒரு தேக்கரண்டி ஓமத்தையும் சேர்த்து அரைத்துச் செய்தால் மோர்க் குழம்பு சூப்பராக இருக்கும்.

பொடியாக நறுக்கிய வெண்டைக்காய் துண்டுகளை எண்ணெய்யில் பொரித்து, அதை மோர்க் குழம்பில் போட்டு மோர்க்குழம்பு செய்தால் அசத்தலாக இருக்கும்.

வடைக்கு அரைத்த மாவை சிறிது நேரம்  ஃப்ரிட்ஜில் வைத்து, பிறகு வடை செய்தால்  மொறு மொறு வடை கிடைக்கும்.

-  எம்.ஏ.நிவேதா

பால் திரிந்துவிட்டால்  கீழே கொட்டாமல் அப்படியே ஆற வைத்து, தயிரில் ஊற்றினால் உண்பதற்கு ருசியாக இருக்கும்.

தோசை மொறு மொறுப்பாக இருக்க சிறிதளவு வெந்தயத்தை ஊற வைத்து மாவுடன் சேர்த்து அரைக்க வேண்டும்.

ரசம் மீந்துவிட்டால் துவரம் பருப்பை வேக வைத்து மசித்து ரசத்துடன் சேர்த்தால் சுவையான சாம்பாராக ஆகிவிடும். 
  -  எல்.நஞ்சன்

வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி தயிர், வெல்லம் கலந்து சாப்பிட்டு வர தொண்டை வலி நீங்கும்.

ஐந்து சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய்யில் வதக்கி வெறும் வயிற்றில் உண்டு வர நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

வெங்காயச் சாற்றை நீராகாரத்துடன் சேர்த்துக் குடித்து வர நீர்க் கடுப்பு குணமாகும். 

வெங்காயத் துண்டுகளுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து சாப்பிட்டு வர வாயுக் கோளாறுகள் நீங்கும்.

வெங்காயச் சாற்றை மோருடன் கலக்கிக் குடித்து வர வறட்டு இருமல் குணமாகும்.
(எளிய செலவில் வெங்காய வைத்தியம்' நூலிலிருந்து)

-  நெ.இராமன்
 

]]>
டிப்ஸ், Vadai, Crispy vadai, வடை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/8/w600X390/crispy-vadai.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/oct/08/tips-to-prepare-crispy-medu-vada-ulunthu-vadai-2786664.html
2783712 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... இட்லி சூப்பர் சாஃப்டாக வர என்ன செய்யலாம்? DIN DIN Tuesday, October 3, 2017 05:56 PM +0530 காலை உணவுக்கு ஏற்றது இட்லி மற்றும் சட்னிதான். தயாரிக்கவும் எளிது. ஆனால் எல்லோர் வீட்டிலும் இட்லி சாஃப்டாக இருப்பதில்லை. நமக்கே கூட ஒரு சில நாட்கள் மிருதுவாக வரும், சில நாட்கள் கல் போன்று சுவையற்று இருக்கும். எப்போதும் ஒரே மாதிரியான மிருதுவாக இட்லி வர என்ன செய்யவேண்டும்?

தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி - 4 தம்ளர்  
உளுந்து - 1 டம்ளர்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்  
உப்பு - தேவையான அளவு 

செய்முறை :

முதலில் தரமான அரிசி மற்றும் உளுந்தை பயன்படுத்தவேண்டும். அதன் பின் உளுந்து, அரிசி இவற்றை மூன்று மணி நேரமாவது ஊற வைக்கவும். பிறகு உளுந்தை கழுவி, வெந்தயத்துடன் சேர்த்து கிரைண்டரில் அரைக்கவும். மிக்ஸியில் அரைப்பதை விட கிரைண்டரில் அரைத்தால் தான் இட்லி மிருதுவாக கிடைக்கும். அவ்வப்போது தண்ணீர் விடவும். அதிகம் தண்ணீர் விடவும் கூடாது. குறைவாகவும் தண்ணீர் விட கூடாது.

அதன் பிறகு கிரைண்டரில் அரிசியை கழுவி போடவும். அதனுடன் கல் உப்பு சேர்த்து அரைக்கவும். அரிசி ரவை பதத்தை விட சற்று மைய அரைப்பட வேண்டும். அரிசி அரைக்கும் போது அன்று வடித்த சாதத்தை கால் கப் சேர்த்து அரைத்தால் மிக மிருதுவான இட்லி கிடைக்கும். உளுந்து நன்கு மையாக அரைபட வேண்டும். மாவை வழித்தெடுக்கும் போது பஞ்சு போல பந்து பந்தாக வரவேண்டும்.

இப்படி அரைக்கப்பட்ட அரிசி மற்றும் உளுந்தை ஒரு பாத்திரத்தில் வழித்தெடுத்து இரண்டு மாவைவும் கைகளால் நன்கு கலக்கவும் அதன் பின்  வேறொரு பாத்திரத்துக்கு மாற்றி இரவு முழுவதும் புளிக்க விடவும்.  புளிக்க வைக்கும் மாவை  கிளறி விட்டால் கல் போன்ற இட்லி தான் வரும். எனவே அதைத் தொடவேண்டாம்.

மறுநாள் மாவு சரியான பதத்தில் பொங்கியிருக்கும். அப்போதும் மாவை அதிகம் கிளறாமல் அப்படியே எடுத்து, இட்லித் தட்டுக்களில் மென்மையான வெள்ளைத் துணி போட்டு அதன் மீது ஊற்றவேண்டும். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் கொதித்த பின் இட்லி தட்டை வைத்து மூடி வேக விடவும். அதிக குழிவாகவும் இல்லாமல் மேடாகவும் இல்லாமல் இட்லி ஊற்ற ஏதுவாக அமைக்க வேண்டும். 

இப்போது பூப் போன்ற சூப்பர் சாஃப்ட் இட்லி ரெடி!

]]>
idli, Soft idli, சுவையான இட்லி, மிருதுவான இட்லி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/3/w600X390/instant-rice-idli-recipe-1-768x480.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/oct/03/how-to-make-soft-and-tasty-idlis-2783712.html
2783695 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? DIN DIN Tuesday, October 3, 2017 02:47 PM +0530 சத்தும் சுவையும் நிறைந்த அரிசி பால் கஞ்சியைத் தயாரிப்பது மிகவும் சுலபம். இந்தக் கஞ்சியை ஒருவர் தொடர்ந்து ஒரு வாரம் குடித்து வந்தால், உடல் கொழுப்புக்கள் முற்றிலும் கரைத்து, உடல் மெலிந்துவிடும். 

தேவையான பொருட்கள்:

கைக்குத்தல் அரிசி – 1/2 கப்
தண்ணீர் – 4 கப்
சூரியகாந்தி எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
தேன் – 2 ஸ்பூன்

செய்முறை: 

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, அதில் அரிசியைப் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். 

சாதம் நன்கு வெந்ததும், அதை இறக்கி குளிர வைக்கவும். 

அதன் பின் சாதத்தை தண்ணீர் விட்டு நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். அதில் சூரிய காந்தி எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது தேன் சேர்த்து கொண்டால், அரிசி பால் கஞ்சி தயார்! இனிப்புப் பிடிக்கவில்லை என்றால் சிறிதளவு பட்டைத் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்தக் கஞ்சியை தினமும் இரண்டு தம்ளர் குடிக்கலாம். உடல் எடையைக் குறைக்க விரும்புவர்கள் இக்கஞ்சி அருந்துவதுடன் தொடர்ந்து உடற்பயிற்சியும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இதில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் உடலுக்கு பலம் தரும். பக்கவாதம், இதயம் சம்மந்தப்பட்ட பிரச்னைகளுக்கும் இந்தக் கஞ்சி நல்லது. 

]]>
Rice Kanji, Rice Porridge, அரிசி பால் கஞ்சி, கஞ்சி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/3/w600X390/congee.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/oct/03/how-to-prepare-rice-porridge-2783695.html
2775956 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... மீன் சாப்பிடத் தெரிஞ்சா போதுமா? பார்த்துப் பார்த்து வாங்கவும் தெரியனுமே! கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. DIN Tuesday, September 19, 2017 05:19 PM +0530  

சாதாரண மீன் சமாச்சாரம்... ஆனால் சாப்பிடத் தெரிந்த அளவுக்கு எத்தனை பேருக்குப் பார்த்துப், பார்த்து வாங்கத் தெரியும்?

மீன்! அசைவப் ப்ரியர்களின் சொர்க்கம். சிக்கன், மட்டன் சாப்பிடக் கூட சில வகை டயட்களில் தடையுண்டு. ஆனால் மீனுக்கு மட்டும் அசைவப் பட்சிணிகளிடையே எங்கும், எப்போதும் தடையே இருப்பதில்லை. சருமத்தில் ஒவ்வாமை பாதிப்பு கொண்டவர்கள் கூட கருவாடு சாப்பிடக் கூடாது என்று தான் ஒதுக்குவார்களே தவிர மீனை அல்ல; அடடா... இந்த உலகத்தில் ரசித்து, ருசித்துச் சாப்பிடத் தோதாக எத்தனை, எத்தனை மீன் வகைகளை ஜோராகப் படைத்துக் கடவுள், நமக்காக மீன் ருசிகர்களுக்காக அனுப்பித் தந்திருக்கிறார்! யோசித்துப் பாருங்கள்... குறைந்த பட்சம் சென்னை வானகரம் மீன் மார்க்கெட்டில் உங்களால் வாங்க முடிந்த சில வகை மீன்களையாவது வகைப்படுத்த முடிகிறதா? என்று பாருங்கள்...

"வாளை மீன், விலாங்கு மீன், விரால் மீன், வஞ்சிரம் மீன், சீலா மீன், கெண்டை மீன், கெளுத்தி மீன், குறவை மீன், கட்லா மீன் (ஜிலேபிக் கெண்டை), சுறா மீன், மாங்காய்ச் சாளை மீன், தேங்காய் பாறை மீன், ஊழி மீன், கிழங்கா மீன், வெள்ளைக் கிழங்கா மீன், இறால் மீன், சங்கரா மீன், சென்னாக்குண்ணி மீன், கொடுவா மீன், மத்தி மீன், கணவாய் மீன், கானாங்கெளுத்தி மீன், அயிரை மீன், அயிலை மீன், அசுரப் பொடி மீன், உழுவ மீன், நெத்திலி மீன், காரப் பொடி மீன், மீசைக்கார கடுவா மீன், வாவல் மீன், கூனிப்பாறை மீன், கூனி இறால் மீன், சுதும்பு மீன், சூடை மீன், திருக்கை வால் மீன், திமிங்கலம், வெல மீன், சால்மன் மீன், கோலா மீன், செம்மீன்... "

- இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இவையெல்லாம் எனக்குத் தெரிந்த, நான் சாப்பிட்டுப் பழகிய மீன்கள். இதைக் காட்டிலும் இன்னும் அதிகமான அளவில், தினுசு, தினுசாகச் சமைக்கத் தோதாக ருசியான மீன் வகைகள் சென்னையில் கிடைக்கலாம். உங்களுக்குத் தெரிந்தால் நீங்களும் கீழே பட்டியலிடுங்கள் தெரிந்து கொள்கிறேன்.

மீன்களைப் பொருத்தவரை, மீன் போஜனப் ப்ரியர்கள் பலருக்கும் ருசி, மசியாய்ச் சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிடத் தெரிந்த அளவுக்குப் பார்த்து, பார்த்து மீன் வாங்கத் தெரியுமா? என்றால், பலரும் சொல்லக் கூடிய ஒரே பதில், இல்லையென்பதாகவே இருக்கக் கூடும். ஆனால் சாப்பிடத் தெரிந்தவர்களுக்கு, அந்தப் பொருட்களைத் தரம் பார்த்து, கண்ணாலேயே ருசி பார்த்து வாங்கத் தெரியவில்லை என்றால் அவர்களது சுவை நரம்புகள் ஒரு மாற்றுக் குறைவு தான் என்று எண்ணத் தோன்றுகிறது.

சரி... சரி அதெல்லாம் போகட்டும், இதுநாள் வரையிலும் தான், மீன் சாப்பிடுவதைத் தவிர்த்து வாங்கத் தெரியாத மக்குகளாக இருந்து விட்டோம்... இனிமேலாவது நல்ல மீன்களாகப் பார்த்து வாங்கக் கற்றுக்கொள்வோம் என்று யாருக்காவது ஆர்வம் வந்திருந்தால் அவர்கள் தொடர்ந்து வாசியுங்கள். 

ஃப்ரெஷ் மீன்களைப் பார்த்ததுமே கண்டறிவது எப்படி?

 • மீன் வாங்கப் போகையில், மீனின் உடல் பகுதியில் விரலால் அழுத்தினால், விரலை எடுத்த வேகத்தில் மீன் மீண்டும் பழைய நிலைக்கு வரவேண்டும். அது மட்டுமல்ல மீனின் மேல் தோலில் இருக்கும் உலோக மினு, மினுப்பு மங்காமல் அப்படியே மினுங்க வேண்டும். மீனின் தோல் கிழியாமல் இறுக்கமாக இருக்கவேண்டும், செதில்கள் கூட உதிராமல் இறுக்கமாக இருக்குமாயின்; மீன் ஃப்ரெஷ் ஆன மீன் தான் என்று தாராளமாக நம்பலாம். அப்படியில்லாமல் மீனின் மேல் தோல் கிழிந்தும், செதில்கள் அனைத்தும் வாங்கும் போதே தொட்டால் உதிரும் நிலையிலோ இருந்தால் அது நிச்சயமாகக் கெட்டுப் போன மீன் தான் என்று அர்த்தம்.
 • மீன் வாங்கச் செல்கையில் மீனை முகர்ந்து பாருங்கள்... அதற்காகக் கையில் எடுத்து முகர்ந்து பார்த்து கடைக்காரரிடம் திட்டு வாங்கிக் கட்டிக்கொள்ளத் தேவையில்லை. வெறுமே மீன் கடையில் நின்றாலே மீன் நாற்றம் நாசியைத் தீண்டி மெய்மறக்கச் செய்யும். பொதுவாக மீன் எங்கே பிடிக்கப் பட்டதோ அந்த ஆறு அல்லது கடலின் இயல்பான வாசம் அந்த மீனிலும் வந்து சேரும். அந்த வாசம் இயற்கையானது. ஆனால் கெட்டுப் போன மீன் என்றால் அதில் டிரைமெத்திலமைன் வாசம் வரும். அந்த வாசத்தை உங்களால் முகர் முடிந்தால் நிச்சயம் உங்களுக்கு முன்னிருப்பது கெட்டுப்போன மீனே தான். அதனால் அதைத் தவிர்த்து விடுவது நல்லது. 
 • கெட்டுப் போன மீன்களை மட்டும் தான் தவிர்க்க வேண்டுமென்பதில்லை. சில மீன்கள் ஃப்ரெஷ் ஆக இல்லாமல் துவண்டு போய் பார்த்தாலே சமைத்து உண்ணத் தோன்றாத அளவுக்கு எந்த ஈர்ப்பையும் ஏற்படுத்தாத வண்ணமிருக்கும். அப்படி பட்ட மீன்கள் சுவையாக இருப்பதில்லை அவற்றையும் தவிர்த்து விடலாம்.
 • மீன் வாங்கச் செல்லும் போது, அது ஃப்ரெஷ் மீன் தானா? இல்லையா? என்று பார்க்க... மீனின் கண்களைப் பாருங்கள். மீன் பிடிக்கப் பட்டு சில மணி நேரங்களே தான் ஆகியிருக்கிறது என்றால் மீனின் கண்கள் நல்ல ஒளியுடன் பொலிவாக இருக்கும். அதுமட்டுமல்ல கண்களில் புகை படிந்ததைப் போலில்லாமல் மீனின் கண்கள் தெளிவுடன் இருந்தாலும் மீன் ஃப்ரெஷ் ஆன மீன் தான் என்று புரிந்து கொள்ளலாம்.
 • மீனின் செவுள் பகுதியைச் சோதித்துப் பார்த்தும் கூட அது ஃப்ரெஷ் மீன் தானா? இல்லையா? என்பதைக் கண்டுபிடித்து விடலாம். வாஙப் போகும் மீனின் செவுளைத் தூக்கிப் பாருங்கள், செவுள் பகுதி இளஞ்சிவப்பு நிறத்தில் லேசாக ஈரத்தன்மையுடன் மென்மையாக இருக்க வேண்டும். உலர்ந்தும், மெலிந்தும் நிறம் மாறியும் இருந்தால் அது பழைய மீன்.
 • மீனின் தோல்பகுதியிலிருக்கும் நிறமாற்றத்தைக் கவனியுங்கள், மீனின் மேல் தோல் மஞ்சளாகவோ, பிரவுன் நிறத்திலோ இருந்தால் அது நாள்பட்ட மீன் என்று அர்த்தம். அது மட்டுமல்ல மேல் தோல் அதிகம் சேதமாகி இருந்தாலும் கூட அது பழைய மீன் என்று தான் அர்த்தம்.

மேலே சொன்ன டிப்ஸ்களை எல்லாம் மீன் வாங்கச் செல்லும் போது மறவாமல் பின்பற்றி ஃப்ரெஷ் மீன்களாக வாங்கி அபார ருசியுடன் ரசித்துச் சமைத்து ருசியுங்கள்.

]]>
மீன், ஃப்ரெஷ் மீன், மீன் வாங்க டிப்ஸ், fish buying tips, fish, fresh fish http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/19/w600X390/fish_fry111.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/sep/19/fish-buying-tips-2775956.html
2755247 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... இன்ஸ்டண்ட் காஃபி போர் அடிக்குதா? அப்போ ஸ்ட்ராங்கா ஃபில்டர் காஃபி போடக் கத்துக்கலாமே! கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. DIN Monday, August 14, 2017 04:40 PM +0530  

சிலருக்கு கடையில் விற்பனையாகிற ப்ரூ, லியோ, நரசுஸ், உள்ளிட்ட காப்பித்தூள்களில் ஒன்றை வாங்கி ஃபில்டர் காஃபி தயாரிப்பதே திருப்தியாக இருக்கும். சிலருக்கோ, தாங்களே நேரடியாக சூப்பர் மார்கெட்டுகளுக்குச் சென்று தரமான காப்பிக் கொட்டைகளும், பீபரியும் வாங்கி தங்கள் கை பட மெஷினில் அரைத்து அதில் பதமாகச் சிக்கரி கலந்து நாசி மணக்க, மணக்க திடமான காப்பித் தூளை தாங்களே தயாரித்து அதில் காஃபி போட்டு அருந்தினால் தான் திருப்தியாக உணர முடியும். இதெல்லாம் அவரவர் மனநிலை சார்ந்த விஷயங்கள் என்றாலும் யோசித்துப் பார்க்கையில் இது கூட சற்று சுவாரஸ்யம் தரக் கூடிய விஷயம் தான் இல்லையா? சரி இப்போது தரமான, திடமான ஃபில்டர் காப்பித் தூள் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்;

காப்பித்தூள் தயாரிக்கத் தேவையானவை...

 • பிளாண்டேஷன் A - 1/4 கிலோ 
 • பீ பரி - 1/4 கிலோ
 • சிக்கரி - 50 கிராம்

காப்பித்தூள் தயாரிக்கத் தேவையான பொருட்களை நாமே நேரடியாக வாங்கி, வீட்டிலேயே காப்பிக் கொட்டைகளை பதமாக வறுத்து, பீபரியும், சிக்கரியும் தேவையான அளவு சேர்த்து மெஷினில் அரைத்துக் கொள்வது ஒரு வகை... அல்லது சென்னையில் பல இடங்களில் தரமான காப்பித்தூள் அரவை அங்காடிகள் உள்ளன. அவற்றில் ஒன்றில் தரமான, மணமான காப்பித்தூளை சுடச் சுட அரைத்து விலைக்கு வாங்கிக் கொண்டு அதைக் கொண்டும் ஃபில்டர் காஃபி போட கற்றுக் கொள்ளலாம். இரண்டுமே ஒன்று தான். 

ஃபில்டர் காபி போடத் தேவையானவை:

 • மணமான காப்பித்தூள்: 2 முதல் 3 டேபிள் ஸ்பூன்
 • கொதிக்கும் தண்ணீர்: அரை கப்
 • பால்: 2 கப்
 • சர்க்கரை: தேவையான அளவு
 • காஃபி ஃபில்டர்

ஃபில்டர் காஃபி தயாரிக்கும் முறை:

காஃபி ஃபில்டரில் முதலில் தேவையான அளவு காப்பித்தூளைப் போட்டு அதன் மேல், உள்ளிருக்கும் குடை கொண்டு காப்பித்தூளை கெட்டித்து அடைக்கவும். பின்னர் கொதிக்கும் தண்ணீரை அதன் மீது மெதுவாக விட்டு ஃபில்டரை அடைத்து டிகாக்‌ஷன் இறங்கும் வரை 5 நிமிடங்கள் காத்திருக்கவும். கொதிக்கும் தண்ணீர் விடப்பட்டிருப்பதால் வெகு சீக்கிரமாகவே டிகாக்‌ஷன் இறங்கி விடும். காஃபி ப்ரியர்களுக்கு கள்ளிச்சொட்டுப் போன்ற அதிகாலையின் முதல் டிகாக்‌ஷனை கண்ணால் காண்பதைப் போன்ற பேரானந்தம் தரக்கூடிய செயல் வேறில்லை! சூடான டிகாக்‌ஷனில் தேவையானதை ஒரு கப்பில் ஊற்றிக் கொண்டு, தேவையான அளவு சர்க்கரை சேர்த்து அதன் பின்னரே கொதித்து இறக்கிய பாலை அதில் கலக்க வேண்டும்.

இப்போது லோட்டாவில் அந்தக் காஃபியை ஊற்றி ஒரு ஆற்று ஆற்றிப் பாருங்கள். மணக்க, மணக்க நுரை பொங்கும் ஃபில்டர் காஃபி தயார். மனதிற்குத் திருப்தியாக, நிறம், மணம், திடம் மூன்றும் ஒருங்கே அமைந்த ஃபில்டர் காஃபியை மட்டும் நம்மால் தயாரிக்க முடிந்தந்தென்று வையுங்கள் அப்புறம் எப்பேற்பட்ட தலைவலியாலும் நம்மை ஒன்றுமே செய்து விட முடியாது. 

மனச்சோர்வு, உடற்சோர்வு, தலைவலி, தொண்டை வலி எல்லாவற்றுக்குமே மிகச் சிறந்த நிவாரணியாக நாம் இந்த ஃபில்டர் காஃபியை உணரலாம்.

ஃபில்டர் காஃபி தயாரிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை...

ஃபில்டரில் காப்பித்தூளைப் போட்டு உடனடியாக அதில் கொதிக்கும் தண்ணீரைச் சேர்த்து விடக் கூடாது. முதலில் குடை கொண்டு மூடி காப்பித்தூளை கெட்டிக்கச் செய்து அதன் மீது சிறிது, சிறிதாக நிதானமாகத் தான் கொதிக்கும் தண்ணீர் விடவேண்டும். அப்போது தான் தூள் இறங்காமல் வெறும் டிகாக்‌ஷன் மாத்திரம் ஃபில்டரில் இறங்கும். நமக்கும் கெட்டியான திடமான டிகாக்‌ஷன் கிடைக்கக் கூடும். அதே போல காஃபி போடும் போது முதலில் டிகாக்‌ஷனில் சர்க்கரை சேர்த்த பிறகே பால் சேர்க்க வேண்டும். அப்போது தான் காஃபி மணமாக இருக்கும்.

]]>
filter coffee, instant coffee, coffee powder making, ஃபில்டர் காஃபி, இன்ஸ்டண்ட் காஃபி, காப்பித்தூள் தயாரிப்பு, காப்பி பவுடர், லைஃப் ஸ்டைல், http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/14/w600X390/filter_coffee.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/aug/14/filter-coffee-making-tips-2755247.html
2739640 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... தமிழர் ஸ்பெஷல் பாரம்பரிய தின்பண்டங்கள் அத்தனையும் ஒரே இடத்தில் பெற நேட்டிவ் ஸ்பெஷல்.காம் வாங்க! RKV DIN Tuesday, July 18, 2017 03:33 PM +0530  

பகையும் விரும்பும் தனிச் சுவை கொண்டது நமது தமிழ் மட்டுமல்ல, அம்மொழி கொண்ட நிலத்தின் பண்டங்களும் தான். இன்றைக்கும் உலகின் எந்த சுவைக்கும் சரி நிகர் சவால் விடும் திறன் கொண்டவை நமது மனோகரமான ருசி மிக்க தின்பண்டங்கள்.  இத்தகைய சிறப்பு வாய்ந்த பண்டங்கள் இன்று வரை உலகப் பொது அரங்கில் தனக்கான அடையாளத்தினை நிலை நிறுத்திக் கொள்ள முடியாத நிலையில் தான் உள்ளது. இன்னும் சொல்லப் போனால் நம் வீட்டிலும் கூட இவற்றிற்கான இடம் அருகிக் கொண்டு தான் வருகிறது.

இத்தகைய சூழலை தனது வெளிநாட்டு அலுவல் காலங்களில் பல சந்தர்ப்பங்களில் எதிர் கொண்ட திரு. பார்த்திபன் அவர்களின் ஆதங்கத்தின் வெளிப்பாடாக உதயமானது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் (https://nativespecial.com) இணைய தளம்.  தமிழர் பாரம்பரிய தின்பண்டங்கள்அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொணர்ந்து அதனை மக்களிடம் சேர்க்கும் இமாலய முயற்சியின் துவக்கப் புள்ளிதான் அது.  அதன் பின் இவரது தம்பி மற்றும்  நண்பரின் கூட்டு முயற்சியால் இன்று வெள்ளியணை அதிரசம், பள்ளபட்டி பூந்தி, முதலூர் மஸ்கோத் அல்வா, ஊத்துக்குளி நெய் பிஸ்கட் முதல் தூத்துக்குடி குச்சிமிட்டாய், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், மணப்பாறை முறுக்கு தாண்டி இன்னும் பல ருசிகரமான தின்பண்டங்கள் வரை, தங்களின் இணையத்தில் சேர்த்துள்ளனர்.

ஆன்லைனில் ஆர்டர் செய்தால் இந்தியா மட்டும் இன்றி, அமெரிக்கா, ஐரோப்பா, அமீரகம், கனடா என பல நாடுகளுக்கும் வெற்றிகரமாக டெலிவரி செய்கின்றனர். இன்று நமது ஊரின் பாரம்பரிய ருசியினைச் சுவைக்க நினைப்பவர்கள் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் (https://nativespecial.com) இணையத்தில் ஆர்டர் செய்தால் போதும்.

மூவரும் கை நிறைய வருவாய் ஈட்டும்  தகவல் தொழில்நுட்பத்துறை வேலையில் இருந்தும் தங்களின் நோக்கத்தினை முதன்மையாகக் கொண்டு தங்கள் உயர் சம்பள வேலையினை உதறிவிட்டு முழு நேரமாக நேட்டிவ்ஸ்பெஷல்.காம் (https://nativespecial.com) இணையத்தில் இணைந்து பணியாற்றுகிறார்கள்.  பொருளாதார பலமற்ற விவசாய பின்னணியில் இருந்து வந்திருந்த போதும் தங்களின் நோக்கில் தெளிவாகவும், உறுதியும் கொண்ட காரணத்தால் தான் இத்தகைய முடிவினை எடுக்க இயன்றதாக இவர்கள் கூறுகின்றனர்.

இப்படி தெளிவான நோக்கம் கொண்ட ஒரு புதிய தலைமுறை தங்களின் வேரினை நோக்கிப் பயணிக்கத் துவங்கி இருப்பது தமிழ்ச் சமூகத்தின் மிகப்பெரும் நம்பிக்கையாகப் பார்க்கப் படுகிறது. இது போன்ற இளைய தலைமுறையின் முயற்சியினை உறுதியோடு ஊக்குவிப்போம்.
 

]]>
https://nativespecial.com, தமிழர் பாரம்பரிய தின்பண்டங்கள், tamil traditional sweets & snacks, நேட்டிவ் ஸ்பெஷல்.காம், பார்த்திபன், parthiban http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/18/w600X390/nativespecial.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/jul/18/httpsnativespecialcom-2739640.html
2670016 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... மிளகு ரசத்துக்கு தொட்டுக் கொள்ள அபார சுவையுடன் பிரண்டைத் துவையல்! கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. DIN Monday, July 10, 2017 02:29 PM +0530  

தேவையானவை:

இளம் தண்டுப் பிரண்டை: 2 கட்டு
உளுந்தம் பருப்பு: 1 டேபிள் ஸ்பூன்
குடம் புளி/ நாட்டுப் புளி: 1 நெல்லிக்காய் அளவு
சிவப்பு நீட்டு மிளகாய் வத்தல்: 10/ 12
இஞ்சி: 1 துண்டு
பூண்டு: 4/ 5 பல்
பெருங்காயத்தூள்: 1 சிட்டிகை
கல் உப்பு: தேவையான அளவு
பனை வெல்லம்: 1 நெல்லிக்காய் அளவு
செக்கிலாட்டிய நல்லெண்ணெய்: 1 டேபிள் ஸ்பூன்
கடுகு உளுந்தம் பருப்பு: தாளிக்க

செய்முறை:

பிரண்டையை கணு நீக்கி நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இல்லா விட்டால் துவையல் செய்து சாப்பிடும் போது போது பற்களில் நார் சிக்கிக் கொண்டே இருக்கும். எனவே கணு நீக்கி தோல் சீவி, நாரை உறித்து சுத்தமாக்கி சிறு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு வாணலியை சூடாக்கி 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, எண்ணெய் சூடானதும் முதலில் 1 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பை போட்டு சிவக்க வறுக்கவும், உளுந்துடன் 1 துண்டு இஞ்சி மற்றும் நான்கைந்து உறித்த பூண்டுப் பற்களை சேர்த்து, இஞ்சி பூண்டு வதங்கியதும் அதனுடன் 10 அல்லது 12 நீட்டு மிளகாய் வத்தலைப் போட்டு வறுக்கவும். பின்னர் இவற்றுடன் பனை வெல்லம் சேர்த்து வெல்லம் கரைந்ததும்  தேவையான அளவு கல் உப்பு சேர்த்து கிளறி விட்டு இறக்கவும். கலவை சற்று ஆறிய பின் அவற்றை மிக்ஸியில் இட்டு நீர் சேர்க்காமல் அரைக்கவும். பிரண்டை நஙு அரைக்காவிட்டால் பற்களில் சிக்கும். எனவே நைஸாக அரைத்தெடுத்து ஒரு சில்வர் கிண்ணத்தில் வழித்தெடுக்கவும். கடைசியாக வாணலியில் 1 டேபிள் ஸ்போன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுந்து தாளித்து அரைத்து வைத்த துவையலில் கொட்டி. எண்ணெய் சூடு இறங்கியதும் ஒரு கண்ணாடி ஜாரில் எடுத்து வைத்துக் கொண்டு 10 நாட்கள் வரை வைத்துச் சாப்பிடலாம். கெடாது.

பிரண்டையால் என்ன பலன்?

கிராமங்களில் பள்ளி செல்லும் சிறு குழந்தைகளுக்கு வயிற்று உப்பிசம் இருந்தால், சாதத்துடன் வெறும் மிளகு ரசம் ஊற்றிப் பிசைந்து தொட்டுக் கொள்ள பிரண்டைத் துவையல் வைத்துத் தருவார்கள். மறுநாளே வயிற்று உப்பிசம் போன இடம் தெரியாமல் மறைந்து விடும். அதோடு பசியே இல்லாமல் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கும் சாப்பிட வைக்க பாட்டியமார்கள் இதே பிரண்டைத் துவையல் டெக்னிக் தான் பின்பற்றூவார்கள். இனிப்பும், புளிப்பும் சுள்ளென்ற காரமுமாக பிரண்டைத் துவையல் இருந்தால் ரசம் சாதமும், மோர் சாதமும் கொண்டா.. கொண்டா என்று தொண்டைக்குள் இறங்கும். பிரண்டைத் துவையலை வீட்டில் செய்து சாப்பிட்டால் உங்களுக்கும் தெரிந்து விடப் போகிறது. 

Image courtsy: Google

]]>
உணவே மருந்து, pirandai thuvaiyal, herb recipy, traditional south indian dish, பிரண்டைத் துவையல், மரபார்ந்த தென்னிந்திய சமையல் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/21/w600X390/pirandai_thuvaiyal.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/mar/21/மிளகு-ரசத்துக்கு-தொட்டுக்-கொள்ள-அபார-சுவையுடன்-பிரண்டைத்-துவையல்-2670016.html
2724360 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... எடை குறைப்பில், ஆரோக்கியத்தில் ஓட்ஸுக்கு மாற்றா இந்த கின்வா?! கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. DIN Tuesday, June 20, 2017 01:52 PM +0530  

அரிசியில் இருக்கும் கொழுப்பும், புரதமும் அளவுக்கு அதிகம் என்று நினைப்பவர்கள் அரிசிக்குப் பதிலாக அரிசியின் அதே சுவையுடன் ஆனால் கொழுப்பின் சதவிகிதம் மட்டும் குறைந்துள்ள கின்வாவைப் பயன்படுத்தலாம். கின்வா பார்ப்பதற்கு தினை அரிசி போல இருக்கிறது. எடை குறைப்பில் கின்வா ரெஸிப்பிகளைப் பயன்படுத்தினால் மிகச்சிறந்த பலன் உண்டாம். கின்வாவில் செய்த உணவுகளை சாப்பிட்டு எடை குறைந்த அனுபவம் உள்ளவர்களின் கருத்து இது! நீங்களும் சாப்பிட்டுப் பார்த்து விட்டு சொல்லுங்கள்.

கின்வா கஞ்சி தயாரிக்கத் தேவையான பொருட்கள்:

 • கின்வா: 1 கப்
 • பால்- 2 1/2 கப்
 • தண்ணீர்: 2 கப்
 • பாதாம்: 6 / பெளல்
 • உலர் திராட்சை: 6 / பெளல்
 • தேன்: 1/2 டீஸ் ஸ்பூன்/ பெளல்
 • ஆப்பிள்: 1 (கியூப்களாக நறுக்கிக் கொள்ளவும்)

செய்முறை:

1 கப் கின்வா எடுத்து நன்கு கழுவி, அதனுடன் 2 கப் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.  கின்வாவை நன்கு வேக வைக்க 15 நிமிடங்கள் தேவை. 15 நிமிடங்களில் கின்வா வெந்ததும் இறக்கி சற்று ஆறியதும் நாக்கு பொறுக்கும் சூட்டில் ஒரு பெளலில் கின்வா கஞ்சியை ஊற்றி அதில் அரை கப் கொதிக்க வைத்து ஆறிய பாலை ஊற்றி நன்கு கலக்கவும். நீர்க்க கலக்கக் கூடாது. கஞ்சிப் பதத்தில் கரைத்து அதனுடன் 1/2 டீஸ் ஸ்பூன் தேன் ஊற்றி அதென் மேல் சுத்தமான 6 பாதாம், 6 உலர் திராட்சை மற்றும் ஆப்பிள் கியூப்களை அலங்காரமாக வைத்துப் பரிமாறலாம். 1 கப் கின்வாவை கஞ்சியாகக் காய்ச்சினால் அதை 4 முதல் 5 நபர்கள் தாராளமாக அருந்தலாம். 5 பேருக்கு தனித் தனியாக 1 பெளல் என்று கணக்கிட்டால் 5 நபர்களுக்கு 30 பாதாம்கள், 30 உலர் திராட்சைகள், 2 1/2 டீஸ்பூன் தேன் தேவை. தினமும் காலை உணவாக இதை எடுத்துக் கொண்டால் போதும். கின்வா கஞ்சியில் பால், பாதாம், உலர் திராட்சை, தேன், என உடலுக்குத் தேவையான விட்டமின், மினரல்கள் கலந்த சத்தான பொருட்களைத் தேவையான அளவு கலப்பதால் நன்றாகப் பசி தாங்கும். ஒரு பெளல் கின்வா கஞ்சி மட்டும் காலை உணவாகப் போதாது என்று உணர்பவர்கள் அதனுடன் சேர்த்து ஒரு வெஜ் ஆம்லெட் எடுத்துக் கொள்ளலாம். சிறந்த சத்தான, சரி விகித டயட் கொண்ட காலை உணவுக்கு இது போதும். உடல் எடை கூடிக் கொண்டே போகிறதே என்று கவலைப் படுபவர்கள் அரிசிக்குப் பதிலாக கின்வாவை முயற்சி செய்யலாம்.

கின்வாவில் மேலே கண்ட நட்ஸ் மற்றும் பழம் சேர்க்க விரும்பாதவர்கள் இப்படி வெறுமே உப்பும்,  பட்டைப் பொடி மட்டும் சேர்த்து நீர்க்க கரைத்தும் அருந்தலாம்.

இந்தியாவில் சமீப காலங்களில், காலை உணவாக ஓட்ஸ் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எத்தனைக்கெத்தனை அதிகரித்துள்ளதோ, அத்தனைக்கத்தனை ஓட்ஸ் பயன்பாடு விமர்சனத்திற்கும் உள்ளாகியிருக்கிறது. வெளிநாடுகளில் குதிரைகளுக்கு உணவாகப் பயன்படுத்தும் ஒரு வஸ்துவை எடை குறைக்க சிறந்த உணவு, இதய நோயாளிகளுக்கு சிறந்த உணவு என்று பன்னாட்டு நிறுவனங்கள் ஓட்ஸை இந்தியாவின் தலையில் கட்டி விட்டன என்ற பொதுவான குற்றச்சாட்டுக்கு இதுவரை ஒரு பதிலும் இல்லை. இந்த சஞ்சலத்துடன் ஓட்ஸ் பயன்படுத்துவதைக் காட்டிலும் கின்வா, சிறு தானியங்கள் என்று மாற்று முயற்சிகளை மேற்கொள்வதில் தவறொன்றும் இல்லை. கின்வா உபயோகிப்பதில், என்ன ஒரு கஷ்டம் என்றால்? அதன் விலை அரிசியை விட, சிறு தானியங்களை விட, ஓட்ஸை விடவும் அதிகம் என்பது தான். ஒரு கிலோ கின்வா விலை ரூ.500 க்கு குறையாமலிருக்கும். விலை அதிகம் என்று நினைப்பவர்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் கின்வா கஞ்சி சாப்பிடத் தொடங்கலாம். மற்ற நாட்களில் எடை குறைப்பிற்குத் தோதாக வேறு டயட்களும் இருக்கிறதே!

கின்வாவில் கஞ்சி மட்டுமல்ல, அரிசிக்குப் பதிலாக, அரிசியைப் பயன்படுத்திச் செய்யக் கூடிய அத்தனை ரெஸிப்பிகளையும் கின்வாவிலும் செய்யலாம். அப்போ நீங்க ரெடியா? கின்வா பிரியாணி, கின்வா தோசை, கின்வா இட்லி, கின்வா உப்புமா, கின்வா புலாவ் என்று செய்து அசத்துங்கள். எடை குறைப்பும் ஆச்சு... ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியமும் ஆச்சு. 

Image courtsy: www.padhuskitchen.com
 

]]>
kinwa nuts bowl, kinwa spicy bowl, கின்வா நட்ஸ் கஞ்சி, ஓட்ஸ், கின்வா, குயினோவா, எடை குறைக்க, ஆரோக்கியம், healthy breakfast, ஆரோக்கியமான காலை உணவு, weight loss recipy, http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/20/w600X390/breakfast_kinwa_kanji.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/jun/20/is-kinwa-replace-oats-in-indian-kitchens-2724360.html
2723632 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... காலையில் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த மாக்டெய்ல் 1 கிளாஸ் போதுமே! கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. DIN Monday, June 19, 2017 02:09 PM +0530  

பாதாம், கேரட், பனானா, டேட்ஸ் ஸ்மூத்தி...

முன்பெல்லாம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பத்து மற்றும் 12 வகுப்புகள் தவிர அனைவருமே 8.45 அல்லது 9 மணிக்குப் பள்ளியில் இருந்தால் போதும். ஆனால் இன்றைக்குப் பாருங்கள் எல்.கே.ஜி குழந்தைகளுக்குக் கூட 7.30 க்கு பள்ளி வேன் அல்லது பேருந்து அழைத்துச் செல்ல வந்து விடுகிறது. காரணம் பெரு நகரங்களின் வாகனப் போக்குவரத்து இடைஞ்சல்கள், பெருகிப் போன மாணவர்கள் எண்ணிக்கை, விரிவடைந்து விட்ட நகரத்தின் விஸ்தீரணம் எனப் பல காரணங்கள் சொல்லப் படுகின்றன. என்னென்ன காரணங்கள் சொல்லப் பட்டாலும், இன்றைய நாட்களில் பெரும்பாலான பள்ளிக் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் காலை உணவை போஷாக்காக எடுத்துக் கொள்வதே இல்லை. ஒரு இட்லி, ஒரு தோசை அல்லது ஒரு கிளாஸ் பால் என்று ஏனோ தானோவென வெறுமே கொறித்து விட்டு பள்ளிப் பேருந்தை நோக்கி ஓடி விடுகிறார்கள் என்பது பெற்றோரின் பொதுவான குற்றச்சாட்டாக இருக்கிறது. அதற்காகப் பள்ளிகள் தங்களது பள்ளி நேரத்தை மாற்றப் போகின்றனவா என்ன? அப்படியே மாற்றினாலும் கூட அதெல்லாம் இன்றைய அவசர யுகத்தில் வேலைக்காகுமா என்றும் புரியவில்லை!

சரி நம்மால் ஆனது... ஆண்டாண்டு காலமாய் குழந்தைகளின் போஷாக்குக்கு அவரவர் அம்மாக்கள் தான் பொறுப்பு என்று ஒரு மையக்கருத்து நிலவி வருவதால். மனதார அம்மாக்களான நாம் ஏதாவது செய்தே ஆக வேண்டுமில்லையா? இதோ அம்மாக்களான நமது மன திருப்திக்காகவும், நமது குழந்தைகளின் ஆரோக்கியத்துக்காகவும் இதோ ஒரு புதிய சத்து பான ரெஸிப்பி. வாரத்தில் மூன்று நாட்களேனும் காலையில் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்து, அருந்த வைத்து அனுப்பலாம். இது சத்தானது மட்டுமல்ல, சுவையானதும் கூட. சளித் தொல்லை இல்லாத குழந்தைகளுக்கு மிதமான ஜில்லிப்புடன் அருந்தக் கொடுத்தால் அவர்கள் எப்போதுமே இதை அருந்த மறுக்கவே மாட்டார்கள்.

தேவையான பொருட்கள்:

 • பாதாம் பருப்பு: 8 (முதல் நாள் இரவே ஊற வைத்து தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்)
 • கேரட்: 2 முதல் 4 வரை
 • வாழைப்பழம்: 1 (நன்கு கனிந்த மலை வாழைப் பழம்)
 • டேட்ஸ்: 4 முதல் 8
 • பால்: 2 முதல் 4 கப்
 • ஐஸ் கியூப்கள்: 6
 • சர்க்கரை: தேவையான அளவு

செய்முறை:

பாதாம் பருப்பை முதல் நாளே ஊற வைத்து தோல் உறித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கேரட்டை ஸ்லைஸ்களாக நறுக்கி கொதிக்க வைத்து ஆறிய பாலுடனும், பாதாம் பருப்புடனும் சேர்த்து ஜூஸரில் இட்டு அரைக்கவும். இவற்றோடு நன்கு கனிந்த மலைவாழைப் பழம் மற்றும் விதை நீக்கிய டேட்ஸ் சேர்த்து மீதமுள்ள பாலையும் சேர்த்து நைஸாக அரைக்கவும். பெரிய குழந்தைகள் எனில் இதில் சிறிது சர்க்கரை சேர்த்து ஐஸ் கியூப்கள் இட்டு நன்கு கலந்து அப்படியே அருந்தத் தரலாம். எல்.கே.ஜி, யூ.கே.ஜி குழந்தைகள் எனில் பழசாறு வடிகட்டி கொண்டு ஒரு முறை வடிகட்டி சிறிது சர்க்கரை சேர்த்து அருந்தத் தரலாம். ஏனெனில் சில குழந்தைகளுக்கு பாதாம் துணுக்குகள் தொண்டையில் சிக்கிக் கொண்டு புரையேறி விடக்கூடாது என்பதால். குழந்தைகளுக்கு பாதாம் அலர்ஜி இல்லையென்றால் ஜூசரில் வடிகட்டியதே போதுமானது. அப்படியே அருந்தத் தரலாம். சர்க்கரைக்குப் பதில் தேன் கலந்து சாப்பிடுவது அல்லது பனங்கற்கண்டு கலந்து சாப்பிடத் தருவது எல்லாம் அவரவர் சாய்ஸ். 

சத்து நிறைந்த மாக்டெய்ல்:

கேரட்டில் இருக்கும் விட்டமின் ‘A’, பாதாமில் இருக்கும் அதிகப் படியான புரதம், வாழைப்பழத்தின் நார்சத்து, டேட்ஸில் இருக்கும் இரும்புச் சத்து, பாலில் இருக்கும் கால்சியம் என இந்த பானம் காலையில் சாப்பிட மறுக்கும் குழந்தைகளின் வயிற்றைக் குளிர்விப்பது மட்டுமல்லாமல் தேவையான சத்துக்களையும் உள்ளே தள்ள வசதியாக அம்மாக்களுக்கு கை கொடுக்கும். எனவே இனிமேலும் சாப்பிட மறுக்கும் குழந்தைகளை வைத்து மல்லுக் கட்டிக் கொண்டிராமல் இப்படி எதையாவது சத்தாக செய்து சாப்பிடத் தரலாம்.
 

]]>
mocktail, smoothi, badham. carrot. banana.dates smoothi, school going kids, மாக்டய்ல் ரெசிப்பி, பாதாம் கேரட் பனானா டெட்ஸ் ஸ்மூத்தி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/19/w600X390/Orange-Carrot-Ginger-Smoothie.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/jun/19/badham-carrot-banana-dates-smoothi-moctail-recipy-2723632.html
2722423 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... கூடுதலாக இரண்டு சப்பாத்தியை உள்ளே தள்ள வைக்கும் ‘கிரீன் தால் கார்லிக் பனீர் கிரேவி’! கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. DIN Saturday, June 17, 2017 12:16 PM +0530  

இல்லத்தரசிகளின் அன்றாடக் கவலைகளில் தலையாயது... இன்று என்ன சமையல் என்பதில் இருந்து  தொடங்குகிறது. காலையில் இட்லி, தோசை, மதியம் மீல்ஸ்,  இரவுக்குச் சப்பாத்தி என்பது பல வீடுகளில் இன்றைக்கு ரொட்டீன் மெனு.  இவற்றில் ஐட்டங்கள் மாறுமே தவிர மெனு அப்படியே தான் இருக்கும். இந்த மெனுவிலும் கூட இட்லி, தோசை, சப்பாத்தி, மீல்ஸ் வரை எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால் அவற்றுக்கு தொட்டுக் கொள்ள என்ன சமைப்பது என்பது தான் பல நேரங்களில்  மிகப்பெரிய குழப்பமாகி விடும். 

பெரும்பாலும் நமது தென்னிந்திய வீடுகளில் இட்லி, தோசை என்றால் சாம்பார், சட்னி வகைகள், சப்பாத்தி என்றால் உருளைக் கிழங்கு குருமா, நவரத்ன குருமா, காளான் கிரேவி, பனீர் கிரேவி என்று வழக்கமாக ஒரே விதமான கிரேவிகளை மட்டுமே செய்து கொண்டிருப்போம். சில நேரங்களில் அந்த மெனுவை நினைக்கும் போது நமக்கு போர் அடிக்கத் தொடங்கி விடும். இதைத் தவிர்க்க நாமே புதிதாகவும், சத்தாகவும் ஏதாவது புது ரெசிப்பி கண்டுபிடித்தால் என்ன என்று தோன்றியதின் பலன் தான் இந்த ரெசிப்பி. குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள் என்பதோடு இது மிக மிக சத்தான கிரேவியும் கூட! இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, பூரி எனப் பல ஐட்டங்களை இதைத் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:

 • பாசிப் பயறு: 1 கப்
 • தக்காளி- 2 (பெரியது)
 • சின்ன வெங்காயம்: 8 (பொடியாக நறுக்கவும்)
 • பனீர்: 1/2 பாக்கெட் (கியூப்களாக நறுக்கிக் கொள்ளவும்)
 • சோம்பு: 1/2 டீஸ்பூன்
 • மிளகு: 1 டீஸ்பூன்
 • முந்திரிப்பருப்பு: 4
 • புதினா: 1 கைப்பிடி
 • இஞ்சி: 1 சி. துண்டு
 • பூண்டு: 6 பல்
 • கொத்தமல்லி தளை: கொஞ்சம்
 • மஞ்சள் தூள்: 1/2 டீஸ்பூன்
 • கரம் மசாலத்தூள்: 1 டீஸ்பூன்
 • உப்பு: தேவையான அளவு
 • கடுகு, உளுந்தம் பருப்பு: 1/2 டீஸ்பூன்
 • நெய்: 2 டீஸ்பூன்
 • கறிவேப்பிலை: 1 ஆர்க்

அரைக்க:

மேலே சொன்னவற்றில் இஞ்சி, 4 பூண்டுப் பற்கள், ஒரு கைப்பிடி புதினா, மிளகு, சோம்பு, தக்காளி, எல்லாவற்றையும் போட்டு நன்கு அரைத்து எடுத்து தனியாக வைக்கவும்.

செய்முறை: 

ஒரு கப் பாசிப்பயிறை எடுத்துக் கொண்டு அதை நீரில் நன்கு கழுவவும். கழுவிய பாசிப்பயிறை குக்கருக்கு மாற்றி விட்டு, ஒரு கப் பாசிப்பயிறுக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை வேக விடவும். வேக வைக்கும் போது உப்பு சேர்க்கத்தேவை இல்லை. பாசிப்பயிறு வெந்து இறக்கியதும் அதில் உள்ள தண்ணீரைக் கீழே கொட்டி வீணாக்கத் தேவையில்லை. அதை அப்படியே தேவையான அளவுக்கு கடைசியில் கிரேவியில் கலந்து கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளலாம். பயிறு வெந்த தண்ணீர் என்பதால் இதனால் கிரேவிக்குக் கூடுதல் சுவை கிடைக்கும்.

வெந்த பாசிப்பயிறை இறக்கி வைத்து விட்டு, இப்போது அடுப்பில் வாணலியை ஏற்றி 1 ஸ்பூன் நெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து விட்டு பொடியாக நறுக்கிய  சின்னவெங்காயத்தைப் போட்டு வதக்கவும்,  வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதனுடன் மேலே அரைத்து வைத்த கலவையைச் சேர்த்து கொஞ்சமாக பயிறு வடித்த தண்ணீரையும் ஊற்றி நன்றாகக் கிளறி விடவும். இந்தக் கலவை ஒரு கொதி வந்ததும் அதனுடன் வெந்த பாசிப்பயிறைச் சேர்த்து நாசூக்காக கிளறவும் ஏனெனில் பாசிப்பயிறு குழைந்து விடக் கூடாது. அரைத்த மசாலாக் கலவை பாசிப்யிறுடன் கலந்ததும் எடுத்து வைத்துள்ள மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள் உள்ளிட்ட ஐட்டங்களைச் சேர்க்கலாம். மசாலாக் கலவை, பாசிப்பயிறுடன் நன்றாகக் கலந்ததும், இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு பனீர் கியூப்களை கிரேவியின் மேற்பகுதியில் ஒவ்வொன்றாக உடைந்து விடாமல் கவனமாகச் சேர்க்கவும். கியூப்களுடன் மசாலா ஒட்டும் அளவுக்கு மிக நாசூக்காக கரண்டியால் கிரேவியை அடியிலிருந்து மேலாக  ஓரிரு முறை மெல்லப் புரட்டி விட்டால் உப்பும், மசாலாக்கலவையில் பனீரில் நன்கு கலந்து விடும். பனீரைப் போட்டுக் கிளறி ஓரிரு கொதி வந்ததும் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து அப்படியே அடுப்பை அணைத்து  வாணலியை கீழிறக்கி கொத்தமல்லித் தளை கிள்ளிப் போட்டு அலங்கரித்து பரிமாறலாம்.  சுவையும், மணமுமாக இந்தக் கிரேவி கூடுதலாக இரண்டு சப்பாத்திகளை உண்ணும் ஆசையைத் தூண்டக் கூடியது.

நிஜமா? இல்லையா? என்பதை சமைத்து சாப்பிட்டு விட்டுச் சொல்லலாம்.

 

 

]]>
green dhal garlic paneer gravy, chappathi, idly, dosai, கிரீன் தால் கார்லிக் பனீர் கிரேவி, சப்பாத்தி, இட்லி, தோசை, ரசிக்க... ருசிக்க http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/17/w600X390/green_dhal_garlic_paneer.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/jun/17/சப்பாத்திக்கு-தொட்டுக்கொள்ள-ஈஸி-கிரீன்-தால்-கார்லிக்-பனீர்-க்ரேவி-2722423.html
2712410 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... அரிசி, கோதுமை வேண்டாம்; ஆம்லெட், சாலட், ஃப்ரெஷ் ஜூஸ் போதுமே ப்ரேக்ஃபாஸ்டுக்கு! கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. DIN Thursday, June 1, 2017 04:30 PM +0530  

இப்போதெல்லாம் மார்கெட்டிங் துறை தவிர அலுவலகத்தில் டெஸ்க் வொர்க் வகை  வேலைகளில் ஈடுபடும் பெரும்பாலனோருக்கு உடல் உழைப்பு என்பதே இல்லாமல் போய் விட்டது. காலையில் போய் டெஸ்கில் அமர்ந்தால் இடையிடையே காஃபி, டீ, ஸ்நாக்ஸுக்கு எழுவது தவிர வேறு எந்த விதமான உடல் அசைவுகளும் அவர்களுக்கு இருக்கப் போவதில்லை. இப்படியான வேலைகளில் ஈடுபடுவோருக்கு காலையில் பிரேக்ஃபாஸ்டாக 4 இட்லிகளோ, 3 சப்பாத்திகளோ சாப்பிட்டு விட்டுச் சென்றால் கூட அது மதிய லஞ்ச் க்குள் செரித்து மீண்டும் பசி எடுக்குமா? என்றே தெரிவதில்லை. ஆனால் சரியாக 1 மணிக்கு சாப்பாட்டு நேரத்தில் லஞ்ச் வேறு எடுத்தாக வேண்டும். இப்இப்டி முதலில் உண்ட உணவு செரித்ததா? இல்லையா? என்பதையே உனராமல் மூன்று வேலையும் பல்க்காக உண்டால் என்ன ஆகும்? நாளடைவில் ஒபிஸிட்டி வரும். வேறென்ன?! அப்படியான வருத்தம் யாருக்கேனும் இருக்குமென்றால் பிரேக்ஃபாஸ்டுக்கு இங்கே உள்ள ரெசிப்பியை பின்பற்றிப் பார்க்கலாம். இது ஆரோக்கியமானது என்பதோடு ஃபார்ச்சூன் விளம்பரத்தில் சொல்லப்படுவது போல வெரி வெரி லைட்டானதும் கூட !

தேவையான பொருட்கள்:
ஆம்லெட்டுக்கு:
முட்டை: 2
சின்ன வெங்காயம்: 10 (பொடியாக அரிந்தது)
கேரட்: 1( பொடியாக அரிந்தது)
பச்சை மிளகாய்: 2 (பொடியாக அரிந்தது)
உப்பு: தேவையான அளவு

செய்முறை: ஒரு கப்பில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அவற்றோடு சின்ன வெங்காயம் மற்றும் கேரட் + பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து கலக்கி தோசைக்கல்லில் ஆம்லெட்டுகளாக ஊற்றி பொன்னிறமாக  வார்த்து எடுக்கவும்.

சாலட்டுக்கு:
பெங்களூர் தக்காளி: 2 (ஸ்லைஸ் செய்து கொள்ளவும்)
கேரட்: 2 (ஸ்லைஸ் செய்து கொள்ளவும்)
வெள்ளரிக்காய்:1 (ஸ்லைஸ் செய்தது)

மூன்றையும் ஸ்லைஸ்களாக நறுக்கி அப்படியே சாப்பிட வேண்டியது தான்.

ஃப்ரெஷ் ஜூஸ் தயாரிக்க:

தேவையான பொருட்கள்:

ஆப்பிள், ஆரஞ்சு, நெல்லிக்காய், வாட்டர்மெலன், சப்போட்டா, பப்பாளி, மஸ்க் மெலன், மாதுளை என சீஸனுக்கு ஏற்றவாறு ஏதாவது ஒரு பழவகை.

சர்க்கரை அல்லது தேன்...

ஆரோக்கியத்தில் விருப்பமுள்ளவர்கள் எனில் சர்க்கரை சேர்க்காமல் குறைந்த அளவு தேன் கலந்து அருந்துவது நல்லது. அப்படியே ராவாக அருந்தினாலும் சரி தான். சர்க்கரை கலந்து தான் அருந்துவீர்கள் என்றால் உங்களது சுவைக்குத் தக்க சர்க்கரை சேர்க்கலாம்.

காலையில் அலுவலகத்துக்கு கிளம்பும் அவசரத்தில் காய்கறி பழங்களை நறுக்கிக் கொண்டிருக்க முடியாது என்று நினைப்பவர்கள் முதல் நாளே காய்கறி பழங்களை நறுக்கி ஜிப் லாக் கவரில் போட்டு ஃப்ரிஜ்ஜில் வைத்து விட்டு மறுநாள் பயன்படுத்தலாம். பிறகு காலையில் உங்களுக்கு ஆம்லெட் ஊற்றுவதும், ஃப்ரெஷ் ஜூஸ் அரைப்பது மட்டுமே தான் வேலை.

இரண்டு முட்டைகள் மற்றும் கணிசமான அளவு காய்கறிகள், பழங்களை எடுத்துக் கொள்வதால் மதியம் லஞ்ச் சாப்பிடும் வரை உற்சாகமாகவே இருக்க முடியும். 

]]>
ப்ரேக்ஃபாஸ்ட், லைட் ப்ரேக்ஃபாஸ்ட், ஆம்லெட், வெஜ் சாலட், ஃப்ரெஷ் ஜூஸ், light breakfast, amlet, salad, fresh juice http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/1/w600X390/amlet_salad_fresh_juice_1.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/jun/01/no-rice-and-wheat-for-breakfast-2712410.html
2709165 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... பொன்னிறத் தேனீர் தயாரிக்க தெரியுமா உங்களுக்கு?! கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. DIN Friday, May 26, 2017 11:12 AM +0530  

உங்களுக்குத் தேனீர் தயரிக்க தெரிந்திருக்கலாம். ஆனால் அது நமது அம்மாக்களும், பாட்டிகளும் கற்றுத் தந்த வழக்கமான முறையாக இருக்கும். தேனீர் தயாரிப்பதென்றால் என்ன செய்வீர்கள்? முதலில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் தேயிலைத் தூளைக் கொட்டி அதை நன்கு கொதிக்க விட்டு வடிகட்டி தேவைப்பட்டால் பால் சேர்த்தும், சேர்க்காமலும் சர்க்கரை சேர்த்து தேனீர் தயாரிப்பது தானே வழக்கம். சிலர் பாலுடன் தேயிலையைக் கொதிக்க வைத்து சுண்டக் காய்ச்சி 2 கப் பால் 1 கப்பாக வற்றும் வரை காத்திருந்து கள்ளிச்சொட்டு போல திக்காக தேனீர் தயாரிப்பார்கள். இதில் இஞ்சியும், ஏலமும் கலந்தால் மணம் எட்டு ஊருக்கு சேதி சொல்லும். இந்த வகையில் தேனீர் தயாரிக்க எப்படியும் 15 நிமிடங்களாவது ஆகலாம். ஆனால் அருமையான டீ தயாரிக்க வெறும் மூன்று நிமிடங்கள் மட்டுமே போதுமென்கிறார் ஒருவர். அது எப்படி?

தேவையான பொருட்கள்:

சூப்பர் பிரீமியம் தேயிலைத் தூள்: 1 டீஸ்பூன்
நன்கு கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீர்: 1 கப்
சர்க்கரை: 1 அல்லது 2 டீஸ்பூன்
ஏலம்: 2

தயாரிப்பு முறை:

முதலில் நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை ஒரு கப்பில் எடுத்துக் கொண்டு அதில் 1 டீஸ்பூன் தேயிலைத் தூளைக் கொட்டி 3 நிமிடங்களுக்கு ஒரு தட்டால் இறுக மூடி வைக்கவும். பிறகு மூடியைத் திறந்து தேவையான அளவு சர்க்கரை கலந்து ஸ்பூனால் கிளறி விட்டு கரைத்து வடிகட்டவும். வெறும் மூன்று நிமிடங்கள் மட்டும் போதும் இல்லா விட்டால் தேனீரின் பொன்னிறம் மாறி விடக்கூடும். வடிகட்டிய தேனீரை இப்போது அருந்தலாம். இது தான் மலையாளிகளின் கட்டன் சாயா. பெரும்பாலும் பால் சேர்க்காமல் அருந்துவதே நன்றாகத் தான் இருக்கிறது. நமக்கு பால் சேர்க்க வேண்டுமெனில் கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் ஒரு கப் எடுத்து அதில் மேலே சொன்னவாறு தேயிலைத் தூள் சேர்த்து 3 நிமிடங்களுக்கு தேயிலை வாசம் வெளியேறாமல் மூடி வைத்து பின்னர் வடிகட்டினால் அந்த தேனீர் பொன்னிறமாக இல்லாவிட்டாலும் கூட சுவையும், மணமும் கியாரண்டி என்கிறார் மூணாறில் டீ ஷாப் வைத்திருக்கும் வேலுசாமி.

தேயிலை சேர்த்ததும் மூடி வைப்பதில் இருக்கும் ரகசியம் அதன் மணம் கப்பை விட்டு வெளியேறி விடக் கூடாது என்பதால் தான். இப்படி தேனீர் தயாரித்து அருந்திப் பாருங்கள். நிஜமாகவே அதன் சுவையும், மணமும் அலாதியாகத் தான் இருக்கிறது.

Image courtsy: google

]]>
golden tea, velusamy, பொன்னிறத் தேனீர்,preparation,தயாரிப்பு முறை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/26/w600X390/golden_tea.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/may/26/how-to-make-a-golden-tea-2709165.html
2708590 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... சுரைக்காய் டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்! கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. DIN Thursday, May 25, 2017 10:55 AM +0530  

கிரீன் டீ சாப்பிட்டு உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு சுரைக்காய் டீ அப்படியொன்றும் ருசிக் குறைவாக இருக்கப் போவதில்லை. சுரைக்காய் பன்னெடுங்காலமாக நம்து நாட்டுக் காய்களில் ஒன்று. இதனை உண்பதால் உடல் ஆரோக்கியத்தில் எதிர்விளைவுகளோ, கெடுதலோ எதுவும் புதிதாக வந்து விடப் போவதில்லை. சிலருக்கு எப்போதுமே கேரட், முட்டைக்கோஸ், பீட்ரூட், பிரக்கோலி, இப்படி ஆங்கிலக் காய்கறிகளை உண்பதாகச் சொல்வதே பெருமை என்று நினைத்துக் கொண்டு நமது பாரம்பரிய நாட்டுக்காய்கறிகளை பெரும்பாலும் புறக்கணித்து விட நினைக்கிறார்கள். ஆனால் அவற்றினால் கிடைக்கும் மருத்துவ மகத்துவத்தைப் பற்றிக் கேள்விப்பட்டால் அல்லது அனுபவபூர்வமாக உணர்ந்தால் நிச்சயம் தங்களது உணவுக் கொள்கைகளை மாற்றிக் கொள்வார்கள் என்று நம்பலாம்.

அந்த வகையில் இப்போது சுரைக்காய் டீ எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம். இதை ஏன் சுரைக்காய் டீ என்று சொல்கிறோமெனில் தேயிலையை நீரில் காய்ச்சி வடிகட்டினால் தேனீர் என்கிறோமே அதே ஃபார்முலா தான் இதிலும் பின்பற்றப் படுகிறது. எனவே இதை சுரைக்காய் டீ என்றால் தவறில்லையே!

தேவையான பொருட்கள்:

சுரைக்காய் சாறு: 100 மிலி

இலவங்கப் பட்டை: 2 துண்டு

எலுமிச்சை சாறு: 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்: சிறிது
மிளகுப் பொடி: சிறிது
ராக் சால்ட்: கொஞ்சம்

செய்முறை: 

பிஞ்சு சுரைக்காயாகப் பார்த்து தேர்ந்தெடுத்து வாங்கி வந்து தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். விதைகள் முற்றலாக இல்லையென்றால் அவற்றையும் சேர்த்தே பயன்படுத்தலாம். பின்பு நறுக்கிய சுரைக்காயை மிக்ஸியிலோ அல்லது உங்களுக்கு நேரமிருந்தால் கையடக்கமான சிறு கல் உரலிலோ அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். அரைத்த விழுதை வடிகட்டி 100 மிலி அளவுக்கு சாறு எடுக்கவும்.  பின்பு இதனோடு 2 துண்டு லவங்கப் பட்டை, 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொதி கொதிக்க வைத்து இறக்கி மீண்டும் வடிகட்டி, எலுமிச்சை சாறு மற்றும் சிறிது உப்பு சேர்த்து மிதமான சூட்டில் ஆற வைத்து அருந்தலாம்.

சுரைக்காய் டீயின் பலன்கள்:

உடலில் சேர்ந்த கொழுப்பை எரித்து வெளித்தள்ளும் சக்தி சுரைக்காய்க்கு உண்டு. இதிலிருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கிறது. உடற் திசுக்களில் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கரைக்கப் பட்டு, தினமும் மலச்சிக்கலின்றி அன்றன்றைய உணவு செரிக்கப் பட்டு வெளியேற்றப் பட்டாலே உடல் இயக்கம் சரியாக இருக்கிறது என்று தான் அர்த்தம். உடல் இயக்கம் சரி வரப் பராமரிக்கப் பட்டால் உடல் பருமன் கூடும் அபாயம் தடுக்கப் படும் என்பது ஒரு எளிமையான லாஜிக். அது மட்டுமல்ல உடல் உள்ளுறுப்புகளில் குறிப்பாக குடலில் புண்கள் வராமல் காக்கும் சக்தியும் சுரைக்காய்க்கு உண்டு என்பதால் தினம் ஒரு வேளை காலையில் மட்டும் இந்த சுரைக்காய் டீ எடுத்துக் கொண்டால் நிச்சயம் உடல் எடை குறையும் என சித்த மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். சித்த மருத்துவர்கள் மட்டுமல்ல இது ஒரு வகையான பாட்டி வைத்திய முறையும் கூட என்பதால் இதனால் மோசமான பின்விளைவுகள் எதுவும் ஏற்பட்டு விடக் கூடும் என்ற அச்சமின்றி இதைப் பின்பற்றலாம்.

]]>
bottle gourd tea,reduce obesity, சுரைக்காய் டீ, உடல் பருமனை குறைக்கும், ஒபிஸிட்டி,weight reduce http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/25/w600X390/bottle_gourd_tea.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/may/25/bottle-gourd-teawill--reduce-obesity-2708590.html
2701538 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... வேலைக்குச் செல்லும் பெண்களின் வசதிக்காக ரெடிமேட் தாளித வடகம் செய்முறை! கோதையம்மாள் வேலுச்சாமி, அம்பை DIN Saturday, May 13, 2017 12:15 PM +0530  

வேலைக்குச் செல்லும் பெண்கள் காலையில் சமையற்கட்டில் சமைப்பது ஒரு பேரழகு! அப்போது சமையலறை ஒரு குட்டிப் போர்க்களமாகவே காட்சியளிக்கும். கணவர்கள் மனைவியிடம் ஏதேனும் சந்தேகம் கேட்க வேண்டுமெனில் அந்த நேரத்தைப் பக்குவமாகத் தவிர்த்து விடுதல் நலம். ஏனெனில் அந்நேரத்தில் தாளிதம் செய்ய கடுகு டப்பா கைக்கெட்டும் தூரத்தில் இல்லாமல் எங்கே வைத்தோம் என குழம்பிப்போய் தேடிக் கொண்டிருக்கும் மனைவிகள் சமூகம்; வாணலியில் எண்ணெய் சூடாகிக் கொண்டிருக்க கடுகு கிடைக்காத கோபத்தில் கணவர்களான உங்களையே தாளித்துக் கொட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! புத்திசாலிக் கணவர்கள் எனில் உங்கள் அம்மா, பாட்டி அல்லது மாமியாரிடம் ரெடிமேட் தாளித வடகம் ரெஸிப்பி கேட்டுக் கொண்டு அதை சர்ப்பிரைஸாக உங்கள் மனைவிக்கு அனுப்பி வைக்கலாம். தாளித வடகத்தில் சின்ன வெங்காயம் அல்லது சாம்பார் வெங்காயத்தின் பங்கு பிரதானம் என்பதால் கண்ணைக் கசக்கிக் கொண்டு அதை செய்வதற்கு பொறுமை வேண்டும். அதனால் ஊரிலிருந்து மாமியாரோ, அம்மாவோ உங்கள் வீட்டுக்கு விருந்தாட வருகையில் அன்பொழுகப் பேசி அவர்களை இந்த வடக தயாரிப்பில் மனைவியோடு கோர்த்து விட்டு விடுங்கள். அதுவும் முடியாது எனில் நகரத்தின் சூப்பர் மார்க்கெட்டுகள் எதிலாவது இந்த ரெடிமேட் வடகங்கள் கிடைக்கிறதா என்று தேடி உங்கள் மனைவிக்கு வாங்கித் தரலாம். என்ன இருந்தாலும் கடைகளில் வாங்குவது வீட்டில் செய்வது போல வராது என்பது மட்டும் உறுதி!

வீட்டில் தங்களது சொந்த முயற்சியில் தாளித வடகம் செய்ய ஆசைப்படுபவர்கள் கீழுள்ள ரெஸிப்பியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வடகத்தில் நம்மை ஈர்க்கக் கூடிய முக்கிய அம்சம் அதன் மணம். உங்கள் வீட்டில் வத்தக்குழம்பு வைத்து நீங்களே தயாரித்த வடகத்தால் தாளிதம் செய்து பாருங்கள் மணம் எட்டுத் தெருவைத் கூட்டும்.

தேவையான பொருட்கள்:
சாம்பார் வெங்காயம்: 1 கிலோ
பூண்டு: 10 பல்
கறிவேப்பிலை: ஒரு கைப்பிடி
உளுந்தம்பருப்பு: 200 கிராம்
கடுகு: 50 கிராம்
வெந்தயம்: 50 கிராம்
சீரகம்: 1 டீஸ்பூன்
உப்பு: 1 1/2 டேபிள் ஸ்பூன் அல்லது அவரவர் தேவைக்கேற்ப

செய்முறை: 
சாம்பார் வெங்காயம் அல்லது சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோலுரித்து நீளவாக்கில் இரண்டிரண்டாக நறுக்கிக் கொள்ளவும். பொடியாக நறுக்க வேண்டாம். உளுந்தை 10 நிமிடங்கள் நீரில் ஊற வைத்து நறுக்கிய வெங்காயத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து தனியாக வைக்கவும். இதனுடன் மேலே சொல்லப்பட்ட கறிவேப்பிலை, பூண்டு கடுகு, வெந்தயம், சீரகம் போன்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். பிசைந்த உருண்டைகளை கையில் லேசாக எண்ணெய் தொட்டுக் கொண்டு சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். இந்த உருண்டைகளை குறைந்த பட்சம் 10 நாட்களாவது வெயிலில் காய வைத்து எடுத்து டப்பாவிலோ அல்லது சில்வர் சம்புடத்திலோ சேமித்து பயன்படுத்தலாம். பல நாட்களுக்கு வீட்டில் தாளிதப் பிரச்னை தீர்ந்தது. மாத பட்ஜெட்டில் கடுகு வாங்க மறந்து தாளித வாசனையின்றி சாப்பிட்டாக வேண்டிய சங்கடம் குறையும். 

வடகம் செய்து சாப்பிட்டுப் பாருங்கள். இந்த வடகத்தில் இன்னொரு விசேஷம் என்ன தெரியுமா? சிலருக்கு தாளிதத்தில் மட்டுமல்ல வெறுமனே நெய் ஊற்றிப் பிசைந்த கெட்டிப் பருப்புச் சாதத்துக்கு பொறித்த வெங்காய வடகம் வைத்துச் சாப்பிடப் பிடிக்கும். பருப்பும், நெய்யும், தாளித்த வெங்காய வடகமும் அபாரமான சுவையாக இருக்கும். அதனால் தாளிக்க மட்டுமன்றி பருப்புச் சாதத்துக்கு தொடுகறியாகவும் இந்த வடகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். செய்து சாப்பிட்டுப் பாருங்கள் அப்போது தெரியும் இதன் மகத்துவம்!

Image courtsy: www.yarlcuisines.com, www.geethachalrecipe.com

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/13/w600X390/Vadakam.JPG http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/may/13/readymade-onion-vadam-recipe-2701538.html
2687883 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... கரண்டி ஆம்லெட்! கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. DIN Thursday, April 20, 2017 05:53 PM +0530  

தோசைக் கல்லில் முட்டையை உடைத்து ஊற்றினால் அது ஆம்லெட். அதே பணியாரக் கல்லில் முட்டைகளை உடைத்து ஊற்றி முழுக்கரண்டி எண்ணெயில் பொன்னிற உருண்டையாக பந்து போல பொரித்து எடுத்தால் அது கரண்டி ஆம்லெட்.

தேவையான பொருட்கள்:

முட்டை: 3
உப்பு: தேவையான அளவு
மிளகுத் தூள்: தேவையான அளவு
சின்ன வெங்காயம்: 8 பொடியாக அறிந்தது
வெங்காயத்தாள்: பொடியாக நறுக்கியது
எண்ணெய்: தேவையான அளவு

செய்முறை:

முதலில் முட்டைகளை உடைத்து ஒரு கப்பில் ஊற்றவும். அதனுடன் மிளகுத் தூள், பொடியாக அறிந்த சின்ன வெங்காயம், உப்பு, வெங்காயத்தாள் எல்லாம் சேர்த்து எக் பிளண்டரால் நன்கு அடித்துக் கலக்கவும். பின்னர் பணியாரக் கல்லை அடுப்பிலேற்றி சூடாக்கவும். கல் சூடானதும் அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கப்பில் எடுத்து வைத்திருக்கும் முட்டைக் கலவையை குழிக் கரண்டியில் அள்ளி சிறிது சிறிதாக பணியாரக் கல்லில் இட்லி வார்ப்பது போல மெதுவாக சூடான எண்ணெயின் மீது வார்க்கவும். முட்டை முழுதும் வெந்து போகும் முன் அதன் பந்து வடிவம் கெடாமல் மேலே இன்னும் கொஞ்சம் மாவை வார்த்து அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டுத் திருப்பி விடவும். இப்போது பணியாரக் கல்லில் வார்த்த முட்டை அழகான பந்து போல தோற்றமளிக்கும். பந்து போன்ற முட்டை பொன்னிறமானதும் எடுத்து அழகாகத் தட்டுகளில் அடுக்கி பரிமாறலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த டிஷ் இது.

 

Image courtsy: www.7umsuvai.com

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/20/w600X390/karandi_amlet.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/apr/20/spoon-amlet-2687883.html
2667144 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... மெதுவடை, மசால் வடையெல்லாம் பழசு நாம புதுசா அத்தி வடை சாப்பிடலாமா? DIN DIN Friday, April 7, 2017 10:56 AM +0530  

தேவையானவை:
அத்திக்காய் - கால் கிலோ
துவரம்பருப்பு - கால் கிலோ
கடலைப்பருப்பு - கால் கிலோ
மிளகாய் வற்றல் - 5
பெருங்காயம் - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - அரை லிட்டர்

செய்முறை:  துவரம்பருப்பு, கடலைப்பருப்பு ஊறவைத்து எடுத்து அத்துடன் மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு, அத்திக்காய் சேர்த்து கிரைண்டரில்  வடைமாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். (இஞ்சி தேவையானால் சேர்த்துக் கொள்ளலாம்) பின்னர், வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், சிறிது சிறிதாக மாவை எடுத்து வடையாகத் தட்டிப் போட்டு சுட்டெடுக்கவும். மிக  சத்தான, மருத்துவ குணமுடைய அத்திக்காய் வடை தயார்.

- ராதா சுதர்ஸன்

]]>
அத்தி வடை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/16/w600X390/attti_vadai.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/mar/16/அத்தி-வடை-2667144.html
2673681 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... சம்மருக்கு ரெஸ்டாரெண்ட் ஸ்பெஷல் ‘வெர்ஜின் மொஜிட்டோ’ வை வீட்டிலும் செய்து அருந்தலாம்! கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. DIN Monday, March 27, 2017 11:38 AM +0530  

தேவையானவை:
புதினா இலைகள்: 5 அல்லது 6
ஐஸ் கியூப்கள்: 15
சர்க்கரை: 2 டீஸ்பூன்
எலுமிச்சை- அரை மூடி
ஸ்ப்ரைட் அல்லது லைம் சோடா: 300 மில்லி.

அலங்கரிக்க:
எலுமிச்சை: 1 ஸ்லைஸ்
புதினா: ஒரு சின்ன ஆர்க்

செய்முறை:

நேற்று நுங்கம்பாக்கம் பார்பிக்யூ நேஷன் ரெஸ்டாரெண்டில் வெர்ஜின் மொஜிட்டொ அருந்தியதில் இருந்து அதை ஏன் வீட்டிலேயே செய்து சாப்பிடக் கூடாது என்று தோன்றியது. செய்து சாப்பிட என்ன தடை இருந்து விடப் போகிறது. ஆஃப்டர் ஆல் நம்மிடம் வீட்டில் எப்போது ஃப்ரிஜ்ஜை குடைந்தாலும் வெறும் ஐந்தாறு புதினா இலைகள், எலுமிச்சை, சோடா கிடைக்காமல் போய் விடுமா என்ன? அப்படியே கிடைக்காவிட்டாலும் கூட அவை ஒன்றும் பிரமாதமான விலையில் இருந்து விடப் போவதில்லை. அதனால் பக்கத்து வீட்டில் எட்டி ஒரு கை புதினாவும், ஒரு எலுமிச்சையும் கடன் வாங்கிக் கொள்ளலாம். சரி இனி செய்முறையைப் பார்க்கலாம்.

சாஃப்ட் ட்ரிங்ஸ் அல்லது குளிர் பான வகையறாக்களை பரிமாறுவதற்கென்றே வீட்டில் உயரமான பெரிய கண்ணாடி டம்ளர்கள் வைத்திருப்போமே, அதை வெளியில் எடுங்கள். டம்ளரில் முதலில் நாஙைந்து புதினா இலைகளைப் போட வேண்டும். கூடவே அரை எலுமிச்சையை குவார்ட்டர் பீஸ்களாக கட் செய்து புதினா இலைகளின் மீது போடலாம். பின்னர் ஃப்ரிஜ்ஜில் இருந்து 15 ஐஸ் கியூப்களை வெளியில் எடுத்து கிச்சன் டவலில் கொட்டிக் கொண்டு அதை வீட்டில் இஞ்சி நசுக்க வைத்திருக்கும் சின்ன கல்லால் நசுக்கவும். இப்போது ஐஸ் கியூப்கள் ஐஸ் துகள்களாக மாறி இருக்கும். அதை அப்படியே கண்ணாடி டம்ளரில் இருக்கும் புதினா, எலுமிச்சை கலவையின் மீது கொட்டி, இரண்டு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து  பூரிக்கட்டையின் பின் புறத்தால் மெதுவாக நசுக்கவும். சர்க்கரை கலந்ததும் இப்படி நசுக்குவதால் புதினா, எலுமிச்சை நன்கு கலந்து அருமையான ஃப்ளேவரில் மணம் நாசியை நெருடும். பிறகு நசுக்குவதை நிறுத்தி வீட்டில் ஸ்ப்ரைட் இருந்தால் அதை டம்ளரில் முக்கால் பாகத்துக்கு நிரப்பி நன்கு கலக்கவும். ஸ்பிரைட் தான் கலக்க வேண்டும் என்றில்லை. செவன் அப் அல்லது லைம் சோடாவும் கலக்கலாம், இப்போது கண்ணாடி டம்ளரின் வாய்பகுதியில் ஸ்லைஸ் செய்யப்பட்ட எலுமிச்சையை அலங்காரமாக சொருகி டம்ளரின் மேல் பகுதியில் ஓரிரு புதினா இலைகளை மிதக்க விட்டுப் பரிமாறலாம். அருமையான ஃபிளேவரில் ரெஸ்டாரெண்டுகளில் பரிமாறப்படும் வெர்ஜின் மொஜிட்டோ இப்போது நம் வீட்டு சாப்பாட்டு மேஜையிலும் ரெடி. 

வெயில் நேரத்தில் அருந்தலாம். வார இறுதி அசைவச் சமையல் கொண்டாட்டங்களின் போது வீட்டிலேயே இப்படி ஃப்ரெஷ்ஷாக ‘வெர்ஜின் மொஜிட்டோ’ செய்து அருந்தலாம். ரெஸ்டாரெண்டுகளில் இவற்றின் விலை 150 ரூபாய். வீட்டில் செய்தால் வெறும் 20 ரூபாய் கூட ஆகாது. ஸ்ப்ரைட் அல்லது லைம் சோடா வாங்கி ஃப்ரிஜ்ஜில் வைத்துக் கொண்டால் தேவையான போது இஷ்டம் போல ஜில்லென்று வெர்ஜின் மொஜிட்டோ செய்து அருந்தலாம்.

நோட்:

குழந்தைகள் சோடா போன்ற நிறமற்ற வெர்ஜின் மொஜிட்டோவை விரும்பவில்லை எனில் ஸ்ப்ரைட்டுக்கு பதிலாக கோக் அல்லது பெப்ஸி அல்லது ஃபேண்டா கலந்தும் இதை தயாரிக்கலாம். கருப்பு அல்லது ஆரஞ்சு நிறத்திரவம் குழந்தைகளைக் கவரக் கூடும்! குழந்தைகளுக்கு அடிக்கடி இவற்றை செய்து தரத் தேவையில்லை. எப்போதாவது பார்ட்டிகளில் மட்டும் இவற்றைத் தரலாம். மற்றபடி ஃப்ரெஷ் ஃப்ரூட் ஜீஸ்களே அவர்களுக்கு ஏற்றவை.

வீட்டிலேயே வெர்ஜின் மொஜிட்டோ செய்வதற்கான யூ டியூப் வீடியோ லிங்க்;

 

Video Courtsy: Youtube.

]]>
virgin mojito, soft drinks, mint drink, restaurent special drinks, வெர்ஜின் மொஜிட்டோ, ரெஸிப்பி, ஹோம் ரெஸிப்பி, ரெஸ்டாரெண்ட் ஸ்பெஷல் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/27/w600X390/virjin_mojito.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/mar/27/சம்மருக்கு-ரெஸ்டாரெண்ட்-ஸ்பெஷல்-வெர்ஜின்-மொஜிட்டோ-வை-வீட்டிலும்-செய்து-அருந்தலாம்-2673681.html
2669323 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... கோதுமை தோசைக்கு சிறந்த காம்போ ஸ்பைஸி அன்லிமிடட் உப்பு, உறைப்பு மல்லிச் சட்னி! கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. DIN Monday, March 20, 2017 02:08 PM +0530 தேவையானவை:

காய்ந்த கொத்துமல்லி விதை: 4 டேபிள் ஸ்பூன்
சிவப்பு நீட்டு மிளகாய் வத்தல்: 15 லிருந்து 18 வரை
உறித்த பூண்டு: 5 பல்
உளுத்தம் பருப்பு: 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த கறிவேப்பிலை: 1 கைப்பிடி
புளி / தக்காளி: புளி 1 நெல்லிக்காய் அளவு / தக்காளி எனில் 4
பனை வெல்லம்: 1 நெல்லிகாய் அளவு
உப்பு: தேவையான அளவு
பெருங்காயத்தூள்: 1 சிட்டிகை

செய்முறை:

வாணலியை சூடாக்கி அதில் 1 டீஸ்பூன் கடலை எண்ணெய் அல்லது நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் ஏதாவது ஒரு சமையல் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பை போட்டு வறுக்கவும், உளுந்து சிவக்க பொரிந்த பின் அதில் கொத்துமல்லி விதை, நீட்டு மிளகாய் வத்தல் இரண்டையும் போட்டு கருகாமல் சிவக்க வறுக்கவும், இதனுடன் உறித்த பூண்டு மற்றும் காய்ந்த கறிவேப்பிலையையும் இட்டு மொறு மொறுவென வறுத்த பின் புளி அல்லது தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி விரைவாக வதங்க வேண்டுமெனில் அதில் தேவையான அளவு கல் உப்பு சேர்க்கவும். தக்காளி வதங்கியதும் அதனுடன் பனைவெல்லம் சேர்த்து ஓரிரு முறைகள் கிளறி விட்டு இறக்கி ஆற விடவும். தக்காளிக்குப் பதிலாக புளி சேர்ப்பதாக இருந்தால் நெல்லிக்காய் அளவு புளியை சேர்த்து கிளறி விட்டு இறக்கலாம்.

வறுத்த பொருட்கள் ஆறியதும் அளவாக தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். அரைத்த மல்லிச் சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு கடுகு, உளுந்து தாளித்து மேலாக 1 சிட்டிகை பெருங்காயத்தூள் தூவி இறக்கிப் பரிமாறவும்.

தண்ணீர் சேர்க்காமல் எண்ணெய் சற்று அதிகமாகச் சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டால் 1 வாரத்துக்கும் மேல் கெடாமல் இருக்கும். துவையல் அல்லது கெட்டிச் சட்னியாகப் பயன்படுத்தலாம். 

இது அரிசி தோசைக்கும் தொட்டுக் கொள்ளச் சுவையாகத் தான் இருக்குமென்றாலும், கோதுமை தோசை தொண்டைக்குள் இறங்காது என்று அடம் பிடிப்பவர்களுக்கு இந்த உப்பு, உறைப்பு நிறைந்த மல்லிச் சட்னி செய்து சாப்பிடக் கொடுத்தால் பிறகு காலத்துக்கும் கோதுமை தோசையை வெறுக்கவே மாட்டார்கள். அப்படி ஒரு சிறப்பான காம்போ இது!

செய்து சாப்பிட்டுப் பாருங்கள். பிறகு நீங்களே ஒத்துக் கொள்வீர்கள்.

]]>
corriander spicy chudney, kasthuri rajendran, chudney recipe, ஸ்பைஸி கொத்துமல்லி விதைச் சட்னி, கோதுமை தோசை, சட்னி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/20/w600X390/koththumalli.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/mar/20/கோதுமை-தோசைக்கு-சிறந்த-காம்போ-ஸ்பைஸி-அன்லிமிடட்-உப்பு-உறைப்பு-மல்லிச்-சட்னி-2669323.html
2661854 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... ஹோம்மேட் குழம்பு மசால் பொடி! கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. DIN Wednesday, March 8, 2017 05:30 PM +0530  

கல்யாணமாகி  முதல் ரெண்டு வருஷம் அம்மா வீட்ல இருந்து மசாலப் பொடி வந்தது, அப்புறம் ஒரு வருஷம் மாமியார் அரைச்சுக் கொடுத்தாங்க அதுக்கப்புறம் அவங்களும் மறந்துட்டாங்க, நானும் எனக்கு மசால் பொடி அரைச்சுத் தாங்கன்னு யாரையும் கேட்டுக்கல, அதான் எல்லா ஸ்டோர்லயும் விதம் விதமா பாக்கெட் பாக்கெட்டா பல பிராண்ட்ல எல்லா மசால்ப் பொடியும் கிடைக்குதேன்னு கடந்த ஆறு ஏழு வருஷமா டி.வி  விளம்பரத்துல வர எல்லா மசால் பொடி வகையும் யூஸ் பண்ணிப் பார்த்தாச்சு.

சக்தி மசாலா, ஆச்சி மசாலா, எம்.டி.ஆர்.மசாலா, எவரெஸ்ட் டீக்காலால் மசாலா, ஆசிர்வாத் மசாலா, அண்டக்காக்கா மசாலா, உண்டக்கட்டி மசாலா இத்யாதி, இத்யாதி...  எனக்குத் தெரிஞ்சு இவ்ளோ இன்னும் இதுக்கு மேல வேற என்னென்ன பிராண்ட் மசால் பொடி இருக்குமோ தெரியல .

பிரச்சினை என்னன்னா இந்த மசால் பொடி பிராண்ட்  எதுவுமே இப்ப கொஞ்ச நாளா  வாய்ல வைக்க விளங்கல. அதுக்காக காரமும் மணமுமா ஒரு மசால் பொடி அமைய பதினஞ்சு வருஷம் முன்னால கண்ணன் தேவன் டீக்காக தூர்தர்ஷன் விளம்பரத்துல பி.டி.உஷா காடு, மேடு, மலைன்னு ஓடுவாங்களே அப்படியா ஓடிட்டு இருக்க முடியும்! இதெல்லாம் நம்மால ஆகற காரியமா?!

இருக்கவே இருக்கு அம்மாவும், பாட்டியும்  அரைச்சு பக்குவம் பண்ற ஹோம் மேட் மசாலாப் பொடி. பிராண்ட் நேம் இருந்தா தான் ஸ்டைலா இருக்கும்னா இந்தப் பொடிக்கு ‘மதர்ஸ் மசாலா பொடி’ன்னு பேர் வச்சுக்கலாம்.

மசாலாப் பொடி அரைக்க மிளகாய் வத்தல், மல்லி, சீரகம்னு அதுல என்னலாம் சேர்க்கறோமோ   அதை செலவுன்னு சொல்வாங்க எங்க பாட்டி. செலவுன்னா இன்கிரடியன்ட்ஸ். 

தேவையான பொருட்கள் :

மிளகாய் வத்தல்                                                         - 3 /4 கிலோ
(குண்டு மிளகாய் அல்லது நீட்டு மிளகாய்) 
மல்லி (தனியா)                                                           - 3 /4 கிலோ
சீரகம்                                                                               - 1 /4 கிலோ   
வெந்தயம்                                                                      - 50 கிராம்  
மிளகு                                                                               -25 கிராம் 
சோம்பு                                                                            - 100 கிராம் 
துவரம் பருப்பு,கடலைப் பருப்பு                           -தலா ஒரு கைப்பிடி அளவு 
கடுகு                                                                                -3 ஸ்பூன் 
கச கசா                                                                            -3 ஸ்பூன் 
அரிசி                                                                                - 50 கிராம் 
கறிவேப்பிலை                                                            -7 ஆர்க்                                                     
கட்டிப் பெருங்காயம்                                                -3 துண்டு (சின்னது)

செய்முறை: 

மிளகாய் வத்தல் மற்றும் மல்லியை குறைந்த பட்சம் இரண்டு நாட்கள் வெயிலில் நொறுங்கக் காய வைத்து எடுத்துக் கொள்ளவும், மிளகாய் வத்தலைத் தவிர செலவுக்கென மேல குறிப்பிட்டுள்ள எல்லா பொருட்களையும் வெறும் வாணலியைக் காய வைத்து மிதமான சூட்டில் அந்தந்த பொருட்களின் மணம் வரும் வரை சிவக்க வறுத்து ஒன்றாகக் கொட்டிக் கலந்து கொள்ளவும். கறிவேப்பிலையை முன்னதாகவே நிழலில் உலர்த்தி வாணலியில் மொறுமொறுவென வறுத்து எடுத்துக் கொள்ளலாம். கட்டிப் பெருங்காயம் எண்ணெயில் பொறித்துப் போட்டால் மசால் பொடி எட்டு ஊருக்கு மணக்கும். வெறுமே வறுத்தால் சில நேரங்களில் கட்டிப் பெருங்காயம் மெஷினில் அரைபடாமல் சோதிக்கும். கட்டிப் பெருங்காயமே வேண்டாமென்று நினைப்பவர்கள் தூள் பெருங்காயம் வாங்கி வைத்துக் கொண்டு தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். 

டிஸ்கி : 
மேல சொல்லப் பட்டுள்ள மசாலாப் பொருட்களின் அளவில் பொடி அரைத்து வைத்துக் கொண்டால் நான்கு முதல் ஐந்து பேர் கொண்ட குடும்பங்களுக்கு குறைந்த பட்சம் ஐந்து மாதங்களுக்கு வரும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/7/w600X390/masal_podi.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/mar/07/ஹோம்மேட்-குழம்பு-மசால்-பொடி-2661854.html
2632267 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... வாட்டர்மெலன் லாலிபாப், டயட்டில் இருப்பவர்களும் சாப்பிடலாம்! கார்த்திகா வாசுதேவன் DIN Friday, January 13, 2017 02:33 PM +0530 தேவையான பொருட்கள்:

வாட்டர்மெலன்: 8 துண்டுகள்
கெட்டித் தயிர்/ பனீர் : 1/2 கப்
மிளகுத் தூள்: 1/2 டேபிள் ஸ்பூன்
சீரகத் தூள்: 12 டீஸ்பூன்
பிளாக் சால்ட்: 1 டீஸ்பூன்
புதினா இலை/ செலரி: 1 கைப்பிடி 
சாப் ஸ்டிக்ஸ்: தேவையான அளவு

செய்முறை:

முதலில் 1/2 கப் கெட்டித் தயிரில் மிளகுத் தூள் மற்றும் சீரகத் தூள் சேர்த்து நன்கு கலக்கி ஒரு கப்பில் எடுத்துக் கொள்ளவும்,  அல்லது பனீரை நிறம் மாறாத அளவுக்கு லேசாகப் பொறித்து எடுத்து வைத்துக்  கொள்ளவும். பின் வாட்டர் மெலனை தோல், விதைகள் நீக்கி சுத்தமாக்கிக் கொண்டு ஃப்ரூட் கட்டர் கொண்டு நமக்கு பிடித்த டிசைனில் துண்டு போட்டுக் கொள்ளவும். உதாரணமாக பூ, ஸ்டார், டைமண்ட், இலை, கியூப்கள் இப்படி ஏதாவது ஒரு வடிவத்தில் துண்டுகளாக்கிக் கொள்ளவும். அது அவரவர் கற்பனைத் திறன் சார்ந்த விசயம். ஆனால் குழந்தைகளையும் சில சமயங்களில் பெரியவர்களையும் கூட சாப்பிடத் தூண்டும் வகையில் வடிவம் இருக்க வேண்டும். அடுத்து அந்த வாட்டர் மெலன் துண்டுகளின் மீது சிறிதளவு பிளாக் சால்ட் தடவவும். பின் அதன் மீது முதலில் கலந்து வைத்த கெட்டித் தயிரில் ஒரு ஸ்பூன் எடுத்து கச்சிதமாக மேலே தடவவும், பின்னர் அதன் மீது ஃப்ரெஷ் ஆக ஒரு புதினா இலை வைத்து அழகு படுத்தி சாப் ஸ்டிக்கில் குத்தி வைத்து பரிமாறவும். இந்த வகை ஸ்நாக்ஸ் வெகு குறைவான கலோரிகள் கொண்டது என்பதால் யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். காலை மற்றும் மாலை சிற்றுண்டி நேரங்களில் இதை எடுத்துக் கொண்டால் உடல் எடை கூடுமே என்ற கவலை தேவையே இல்லை.

]]>
தர்பூசணி லாலிபாப், வாட்டர்மெலன் லாலிபாப், watermelon lolypop, low calorie diet, lifestyle recipie http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/13/w600X390/watermelon_lol1.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/jan/13/வாட்டர்மெலன்-லாலிப-டயட்டில்-இருப்பவர்களும்-சாப்பிடலாம்-2632267.html
2629856 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... ஒபிஸிட்டி குறைய குடம்புளி ஜூஸ்! கார்த்திகா வாசுதேவன் DIN Monday, January 9, 2017 05:27 PM +0530 தேவையான பொருட்கள்: 

குடம்புளி: 5 துண்டுகள்
பனை வெல்லம்: 4 துண்டுகள்
ஏலப்பொடி: 1 சிட்டிகை
சுக்கு: 1 சிட்டிகை


செய்முறை:


குடம்புளியை முதல் நாள் இரவே ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும். மறுநாள் புளி கரைந்த நீரை வடிகட்டி தனியாக ஒரு கப்பில் எடுத்துக் கொள்ளவும். பனை வெல்லம் முங்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு வெல்லம் கரையும் வரை அதைக் காய்ச்சி ஆறியதும் வெல்லக் கரைசலை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இப்போது குடம்புளி கரைசல் மற்றும் வெல்லக் கரைசல் இரண்டையும் நன்றாகக் கலந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அடுப்பில் ஒரு கொதி வரும் வரை சூடாக்கவும். பின்னர் மீண்டும் வடிகட்டி சுக்குப் பொடி, ஏலப்பொடி தூவி பரிமாறலாம். இந்த குடம்புளி ஜூஸ் செரிமானத்தை அதிகரிப்பதோடு, பசிக்கும் தன்மையை தன்னிறைவு பெறச் செய்யுமாம். இதனால் அடிக்கடி பசித்து எதையாவது சாப்பிடும், கொறிக்கும் பழக்கம் தடை படும். எனவே உடல் எடை தானாகவே குறையும் என சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/9/w600X390/kudampuli_1.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/jan/09/ஒபிஸிட்டி-குறைய-குடம்புளி-ஜூஸ்-2629856.html
3200 லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க... சுறு சுறு  சுக்கு காப்பி சாப்பிடலாமா? கார்த்திகா வாசுதேவன் DIN Thursday, August 11, 2016 03:30 PM +0530 சுக்கு காப்பிப் பொடி ராஜம் சுக்கு காப்பித் தூள்  என்று இப்போது  கடைகளில் கிடைக்கிறது. ஆனால் அந்தப் பாக்கெட்டுகள் சீக்கிரம் தீர்ந்து விடுகின்றன. இதை ஏன்  வீட்டிலேயே எளிதாக செய்து வைத்துக் கொள்ளக் கூடாது என்று தோன்றியதால் பாட்டியிடம் கேட்டு கற்றுக் கொண்ட பாரம்பரிய ரெசிப்பி இது.
  
 

 

 

 

 

தேவையான பொருட்கள்:
சுக்கு- 2 துண்டு
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
தனியா - 5 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 3 அல்லது 4 (விருப்பமிருந்தால்)
செய்முறை:
மேலே சொல்லப்பட்ட பொருட்களை சொன்ன அளவுகளில் எடுத்துக் கொண்டு வெறும் வாணலியில் சிறிது நேரம் வறுக்கவும். தனியா லேசாக நிறம் மாற ஆரம்பிக்கும் போது வாணலியை இறக்கி பொருட்களை ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும். ஆறியதும்  மிக்சியில்  இட்டு கொர கொரப்பாக அரைத்து எடுத்து மீண்டும் பொடியை ஆற வைக்கவும், ஆற வைத்த பொடியை  காற்றுப் புகாத பிளாஸ்டிக் டப்பா அல்லது கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது  பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தப் பொடியை வைத்து பால் சேர்க்காமல் வெல்லம் கலந்த  சுக்கு காப்பி  போடலாம் அல்லது டீத்தூளுடன் கலந்து கொதிக்க வைத்து பால் சேர்த்து சுக்கு டீயும் போடலாம். எப்படி பயன்படுத்தினாலும் அதன் பலன் மாறாது.

பாரம்பரிய சுக்கு காப்பி தயாரிக்கும் முறை:
 தேவையான பொருட்கள்:
சுக்கு காப்பி பொடி - 2 டீஸ்பூன்
பனை வெல்லம் -  ஒரு அச்சில் பாதி
தண்ணீர் - 5 சிறிய  கப்
செய்முறை:
தண்ணீரில் சுக்கு காப்பித் தூளை போட்டு நன்கு கொதிக்க விடவும்.  நன்றாகக் கொதித்து மணம் வந்தவுடன் இறக்கி வடிகட்டி பனை வெல்லத்தை தூளாக்கி அதனுடன் கலக்கவும். பனை வெள்ளத்தில் தூசு,துரும்புகள் இருக்கலாம். எனவே மீண்டும் ஒரு முறை  வடிகட்டியபின் சூடாகப் பருகலாம்.
பலன்:
சுக்கு காப்பியோ டீயோ எதுவானாலும் இரண்டுமே மழைக்காலங்களுக்கு ஏற்ற அருமையான இணைகள். குழந்தைகளுக்காக மிளகை குறைத்துக் கொண்டாலும் தவறில்லை. சளித்தொல்லை, அஜீரணக் கோளாறுகள், உடல் வலி எல்லாவற்றுக்கும் நல்ல தீர்வாக இருக்கும்.

]]>
dry ginger, pepper, corriander http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/9/w600X390/sukku_coffee_art.jpg http://www.dinamani.com/life-style/lifestyle-food/2016/aug/09/சுறு-சுறு-nbspசுக்கு-காப்பி-சாப்பிடலாமா-3200.html