Dinamani - ஸ்பெஷல் - http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2945016 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ் போட்டுக் கொள்வது ஆண் தன்மை இல்லையென யார் சொன்னது?! கார்த்திகா வாசுதேவன் Friday, June 22, 2018 03:33 PM +0530  

தங்கை மகனுக்கு டிரெஸ் வாங்க கடைக்குச் சென்றிருந்தோம். நானும், தங்கையும் அவனுக்காகப் பல உடைகளைத் தேடிக் களைத்து கடைசியில் பிங்க் நிறத்தில் ஒன்றும் இளநீல நிறத்தில் ஒன்றுமாகத் தேறியதை அவனுக்குப் போட்டுப் பார்க்கலாம் என்று அழைத்தோம். இரண்டையும் பார்த்தவனுக்கு பிங்க் நிறத்தைக் கண்டதுமே முகம் சுளுக்கிக் கொண்டது. என்னம்மா இது? பிங்க் கேர்ள்ஸ் கலர். என்னால அதெல்லாம் போட்டுக்க முடியாது. ஃப்ரெண்ட்ஸ் கேலி பண்ணுவாங்க என்று உடனே அதை ஒதுக்கி வைத்து விட்டான். உண்மையில் அவனுக்கு பிங்க் நிறம் பிடிக்காது என்று சொல்ல முடியாது. நண்பர்கள் கேலி செய்வார்கள் என்று தான் ஒதுக்கி விட்டான்.

இந்த சமூகம் சிற்சில விஷயங்களில் இப்படித்தான் சில பாலியல் பேதமைகளைப் புகுத்தி விடுகிறது.

 • பிங்க் நிற உடை அணிய வேண்டுமானால் நீ பெண்ணாகப் பிறந்திருக்க வேண்டும்.
 • லிப்ஸ்டிக், நெயில் பாலீஷ் போட்டுக் கொள்ள வேண்டுமென்றால் நீ பெண்ணாகப் பிறந்திருக்க வேண்டும்.
 • குறைந்த பட்சம் சமையற்கட்டில் அம்மாவுக்கு உதவுவது என்றாலும் கூட நீ பெண்ணாகப் பிறந்திருக்க வேண்டும் இத்யாதி... இத்யாதி.

சில ஆண்கள் தப்பித்தவறி விதிவிலக்காக சமூகம் வகுத்த பாலியல் பேதங்களைப் பொருட்படுத்தாமல் தங்களுக்குப் பிடித்தமாதிரியெல்லாம் நடந்து கொண்டு விட்டால் அப்புறம் போயே போச்சு!

‘ஐயே! அங்க பாருடா... அவன் நெயில் பாலிஷ்லாம் போட்டுக்கறான், ஒருவேளை அவன் ஆம்பளையே இல்லையோ?’ என்றெல்லாம் சக நண்பர்கள் மத்தியில் அவனை ஒதுக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

உறவில் ஒரு சிறுவனுக்கு பள்ளி நாட்களில் ஆண்டுவிழா மேடைகளில் பரத நாட்டிய உடையணிந்து கொண்டு நடனமாட அத்தனை ப்ரியம். அந்த விருப்பம் அவனுக்குள் எப்படிப் புகுந்ததெனத் தெரியவில்லை. ஒரு வேளை அம்மா ஆசிரியப் பணியில் இருந்ததால் அவன் பெரும்பாலும் பாட்டியின் ஆதிக்கத்தில் தான் வளர்ந்தான். பாட்டிக்கு அந்தக்கால லலிதா, பத்மினி நாட்டியத் திரைப்படங்கள், பாடல்கள் என்றால் இஷ்டம். அதைப் பார்த்துப் பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ இவனுக்கு பெண்களைப் போல பரத உடையணிந்து பள்ளி மேடையில் நாட்டியம் ஆட மிகப்பிடித்தமாக இருந்தது. தொடர்ந்து நான்கைந்து வருடங்கள் அப்படி ஆடவும் செய்தான். இதனால் அவனுக்கு கிடைத்த பட்டப் பெயர் பொம்பள தினேஷ்.

அவனை இப்படிக் கேலி செய்து அவனது இயல்பான ஆசைகளை, ஆர்வங்களைக் கொச்சைப்படுத்திய நண்பர்களைப் பற்றியெல்லாம் அவன் பெரிதாக வருத்தப்பட்டதில்லை.

அவர்களது கேலிகளை எல்லாம் தனது வசைகளாலும் மீள் கேலிக் கணைகளாலும் எதிர்கொண்டு அவன் மிகத்திறம்பட சமாளித்தான். ஏனெனில், நண்பர்களால் காயப்பட்ட போதெல்லாம் அவனுக்கு ஆறுதல் தரவும், எதிர்த்துப் போராடும் முறைகளைப் பற்றிச் சொல்லித் தரவும் இந்தப் பொல்லாத வாழ்வைப் பற்றிய போதிய அனுபவஞானம் கொண்ட பாட்டி இருந்தார்.

அவர் அவனுக்குச் சொல்லித் தந்தது.

‘ஆண்மை என்பது வெளித் தோற்றங்களிலோ, அல்லது ஒரு சிறுவனோ, இளைஞனோ தன்னை மகா கனம் பொருந்திய ஆணாக வெளிப்படுத்திக் கொள்ள முயலும் பாவனைகளிலோ இல்லை. அது செயலில், எண்ணத்தில், அதனால் கிடைக்கக் கூடிய பெருமித உணர்வில் இருக்கிறது. அதுவே ஆண்மைத்தனம். அது நீ லிஸ்ப்ஸ்டிக் போட்டுக் கொண்டு, பரத உடை அணிந்து கொண்டு நாட்டியம் ஆடுவதால் கெட்டுப் போக அது ஒன்றும் பழைய சோறில்லை என்றார்.’

எத்தனை உத்தமமான வார்த்தைகள் இவை!

இதோ இந்த அலகாபாத் பையனைப் பாருங்கள்.

இவனுக்கும் லிப்ஸ்டிக், நெயில் பாலீஷ் போட்டுக் கொள்வதென்றால் ரொம்பப் பிடிக்குமாம். சமையலறை சென்று சமைப்பது, பரிமாறுவது உள்ளிட்ட வேலைகளைச் செய்யப் பிடிக்குமாம். ஆனால், அவன் இவற்றையெல்லாம் செய்யும் போது அதை யாராவது பார்த்து விட்டுச் சிரித்தால் மட்டும் கூசிக் குறுகி ஓடிப்போய் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள்வானாம். இந்தக் கூச்சம் எதற்காக என்றால்? யாரும் தன்னைக் கேலி செய்து சிரித்து விடக்கூடாது எனும் தன்பயத்தால்.

இந்த பயத்தின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கலாம் என்றால், ஒவ்வொரு முறை லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ள ஆசைப்படும் போதும் இவன் இப்படித்தான் கட்டிலுக்கு அடியிலோ அல்லது பீரோவுக்கு உள்ளேயே ஒளிந்து கொண்டாக வேண்டியதாயிருக்கும். அப்படி ஒழிந்து கொண்டு செய்ய அவன் என்ன திருட்டுத்தனமா செய்கிறான். ஆஃப்டர் ஆல் லிப்ஸ்டிக். அதை குடும்பத்தில் அனைவர் மத்தியிலும் போட்டுக் கொள்வதென்பது எந்த விதத்திலும் தவறான செயலாக ஆக முடியாது. இதை அந்தச் சிறுவன் உணர வேண்டும். அன்றியேல் அவனது சுயமரியாதைக்கு மதிப்பில்லை என அவனது சகோதரி திக்‌ஷா பிஜிலானி சிந்தித்தார்

அந்தச் சிந்தனையின் விளைவு தான் இன்று காலை முதலே டிவிட்டரில் வைரலாகிக் கொண்டிருக்கும் புகைப்படங்கள்.

லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ள இனி அந்த ‘Little Cuz' கூச்சப்பட மாட்டான் என நம்புவோம்.

விடுமுறைக்கு உறவினர் வீட்டுக்குச் சென்ற திக்‌ஷா பிஜிலானிக்கு தனது குட்டித் தம்பியின் நடவடிக்கை வினோதமாக இருந்திருக்கிறது. அவனது எண்ணம் தவறு. இதை திருட்டுத்தனமாகச் செய்ய வேண்டிய அவசியமில்லை என அந்தச் சிறுவனுக்கு உணர்த்த விரும்பினார் திக்‌ஷா. அதன் விளைவாக தன் மூத்த சகோதரனுக்கும் கூட லிப்ஸ்டிக் போட்டு விட்டு அதையும் புகைப்படமெடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் திக்‌ஷா.

இப்படித்தான் பெரிதாக்கப்படத் தேவையற்ற சின்னஞ்சிறு விஷயங்களைக் கூட அப்படியே போகிற போக்கில் ஸ்மூத்தாகக் கையாளாமல் அதை என்னவோ பெருங்குற்றம் போல கையாண்டு பலரை துக்கத்தில் ஆழ்த்தி விடுகிறோம். இதனால் சம்மந்தப்பட்டவர்கள் காலத்துக்கும் கூனிக் குறுகிப் போய்விட வேண்டியதாகி விடுகிறது. அது தவறு. அந்தத் தவறை இனி யாரும் உங்கள் வாழ்வில் உங்களுக்கு நெருக்கமானவர்களிடத்திலும், நண்பர்களிடத்திலும் இழைத்து விடாதீர்கள். எனும் விண்ணப்பத்தோடு தனது மற்றும் தன் குட்டிச் சகோதரனின் புகைப்படத்தையும் ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார் திக்‌ஷா.

ஹாட்ஸ் ஆஃப் டு யூ திக்‌ஷா & ‘Little Cuz’

Image courtesy: NDTV.COM

]]>
male centric household, effeminate, conditioned gender binary, ஆண்மை அடையாளங்கள், புரையோடிய சமூக பழக்கம், லிப்ஸ்டிக் ஆண்மை அடையாளமில்லையா?, ஆண்மை, பெண்மை, ஆன்மை VS பெண்மை, http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/22/w600X390/thiksh_bijilani_with_her_cuz.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/jun/22/bullied-for-wearing-lipstick-then-his-cousins-did-this-2945016.html
2944959 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் வளர்ப்பு பிராணிகளா அல்லது செல்ல அடிமைகளா? கார்த்திகா வாசுதேவன் Friday, June 22, 2018 11:37 AM +0530  

வளர்ப்புப் பிராணிகளைப் போஷிப்பதில் என்ன இருந்தாலும் நம்மை விட மேற்கத்தியர்களுக்கு நாட்டம் அதிகம் தான். அதென்ன அப்படி சொல்லி விட்டீர்கள்? கண்ணும் கருத்துமாக வளர்க்கிறோம் பாருங்கள் எங்கள் வளர்ப்புப் பிராணிகளை  என்று ஊருக்கு உரக்கச் சொல்லி விளம்பரமெல்லாம் தேடாமலே நம் கடையெழு வள்ளல்களில் ஒருவரும் பழந்தமிழ் சிற்றரசர்களில் ஒருவருமான பேகன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மயிலுக்குப் போர்வை தந்த கதையை மறந்து விட்டீர்களா? என்று யாரேனும் குரலுயர்த்தலாம். ஆம் ஐயா! ஆனால் அதெல்லாம் பழங்கதை தானே?! இப்போது பாருங்கள்... கடந்த மாதம் கூட வளர்ப்பு நாயை பால்கனியில் கட்டிப் போட்டு விட்டு, கடுங்கோடையும் அதுவுமாக அதற்குப் போதுமான தண்ணீர் கூட வைக்காமல் கதவைச் சாத்திக் கொண்டு ஊருக்குப் போன குடும்பத்தைப் பற்றி செய்தி வெளியிட்டிருந்தோமே?! அதை அதற்குள் மறந்து விட முடியுமா? அப்படி, இன்று நாம் நமது அந்தஸ்தைப் பறைசாற்றிக் கொள்ளவும், ஆசைக்கும் தான் வளர்ப்புப் பிராணிகளை வளர்க்கிறோமே தவிர... உண்மையில் அந்தந்த மிருகங்களின் பால் உள்ள அக்கறையாலும், பாசத்தாலும் அவற்றை வளர்க்கத் தலைப்படுகிறோமா என்றால், பெரும்பாலும் இல்லையென்றே பதில் கூற முடிகிறது. ஆனால், இந்த விடியோக்களைப் பார்க்கையில் மேலை நாடுகளில் அப்படியல்ல என்று தோன்றுகிறது. 

நாமெல்லாம் மிஞ்சிப் போனால் நாய், பூனை, கிளி, முயல், பஞ்சவர்ணக்கிளி, லவ் பேர்ட்ஸ் என்று வேண்டுமானால் பெட் அனிமல்ஸை வளர்க்க விரும்பலாம். இந்தியாவில் இப்படியான வளர்ப்பு பிராணிகளின் சதவிகிதமே அதிகம். இவற்றைத்தவிர குரங்காட்டிகள் காடுகளில் இருந்து பிடித்து வந்த குரங்குகளை வைத்து வித்தை காட்டி காசு சம்பாதிக்கலாம். அதை வளர்ப்புப் பிராணிகள் லிஸ்டில் வைப்பதென்றால் அதை அதன் உரிமையாளர்கள் பாசத்துடன் அணுகுவதில்லையே ஒரு அடிமையைப் போலல்லவா நடத்துகிறார்கள் என்றிருக்கிறது. கேரளாவில் யானை வளர்க்கிறார்கள். அதை அவர்கள் அங்கு வளர்ப்புப் பிராணிகள் லிஸ்டில் வைத்திருக்கிறார்களோ? அல்லது தமிழ்நாட்டில் பசுக்களையும், ஆடுகளையும் வீட்டு விலங்குகளாக வளர்த்து வருகிறோமே அப்படி வைத்து வளர்க்கிறார்களா? என்பது மலையாளிகளுக்கே வெளிச்சம். வளர்ப்புப் பிராணிகள் விஷயத்தில் நமது லட்சணம் இப்படி.

ஆனால்... இந்த மேற்கத்தியர்களைப் பாருங்கள்... 

அணில், குரங்கு, குள்ளநரி, கங்காரு, எலி, காட்டெருமை, மான், முள்ளம்பன்றி, கடற்கரையோரங்களில் மட்டுமே வாழக்கூடிய சீல்கள், எறும்புத்தின்னி, ஆமைகள், ஓணான், கரடி, பாம்பு, சிங்கம், புலி, சிறுத்தை, அலபகா( ‘இந்தியன்’ திரைப்படத்தில் கவுண்டமணியை கடித்து வைக்குமே ஒரு ஆஸ்திரேலிய மிருகம் அதன் பெயர் தான் அல்பகா, காட்டுப்பூனை, தேவாங்கு, வெள்ளைப் பன்றிகள் என்று பலவற்றையும் அவர்கள் வளர்ப்பு மிருகங்களாக வளர்த்து வருகிறார்கள். பார்க்கப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது. 

சிலவற்றை ஆபத்தான மிருகங்கள் என்று நாம் ஒதுக்கி வைத்திருக்கிறோம். நம் நாட்டில் அவற்றை வீடுகளில் வளர்க்க நமக்கு அனுமதி இல்லை. அனுமதி இல்லையென்பதால் மட்டுமல்ல நமக்கே அவற்றையெல்லாம் வீடுகளில் வைத்து வளர்க்கப் பிடிப்பதில்லை என்பதும் நிஜம். இந்தியர்களைப் பொறுத்தவரை நாய், பூனை, கிளி, முயல், சிலர் விதிவிலக்காக புறாக்கள் வளர்ப்பார்கள். அரிதாகத்தான் இந்த வளர்ப்பு பிராணிகளைத் தாண்டி வேறு சிலவும் இங்கு இடம்பிடிக்ககூடும். தமிழில் பல்லவி என்றொரு நடிகை இருந்தார்... அவர் பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது அவரது நடிப்பை பற்றி பேசினார்களோ இல்லையோ அவர் வளர்த்த குரங்கைப் பற்றி பேசியவர்கள் அதிகம். ஏனென்றால் தமிழ்நாட்டில் அப்போதெல்லாம் குரங்குகளை வளர்ப்புப் பிராணிகள் லிஸ்டில் வைத்துப் பார்ப்பவர்கள் எவருமிருந்திருக்கவில்லை.

நாமெல்லாம் ராமநாராயணம் திரைப்படங்களில் மட்டுமே விலங்குகளுக்கு விதம் விதமாக ஆடைகள் அணிவிக்கப்பட்டு பார்த்திருப்போம். நிஜத்தில், வீட்டில் வளரும் வளர்ப்புப் பிராணிகளுக்கு ஆடைகள் எல்லாம் கிடையாது. அவை தேமேவென அலைந்து கொண்டிருக்கும். ஆனால், மேற்கத்தியர்கள் வளர்ப்புப் பிராணிகளுக்கு ஆடை அணிவிப்பதில் இருந்தெல்லாம் பல படிகள் முன்னேறி கங்காருவுக்கு நாப்கினும், பன்றிகளுக்கு கவுனும் அணிவித்து பழக்குவது வரை வந்து விட்டார்கள். நம்மூரில் வெள்ளைப் பன்றிகளை போர்க் பிரியாணிக்காக மட்டும் தான் பண்ணைகளில் வளர்க்கக் கூடும்.

சரி சரி இந்தக் கதையெல்லாம் எதற்கு? வளர்ப்புப் பிராணிகள் விஷயத்தில் இந்திய வழக்கத்தை மட்டம் தட்டுவது அல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம். 

என்ன இருந்தாலும் இந்தியர்களான நமக்கு வீட்டு விலங்குகளாக இருந்தாலும் சரி, காட்டு விலங்குகளாக இருந்தாலும் சரி அல்லது பெட் அனிமல்ஸ் என்று சொல்லக்கூடிய வளர்ப்பு விலங்குகளாகவே இருந்தாலும் சரி... நம்மால் அவற்றின் மீது 100 சதம் பாசத்தைக் கொட்டவே முடிந்ததில்லை. அவற்றை நம் ஆசைகளுக்கான, அல்லது அந்தஸ்தைக் காட்டிக் கொள்வதற்கான அல்லது மன அழுத்தத்தை தீர்த்துக் கொள்வதற்கான வடிகால்களாகவே பயன்படுத்திக் கொள்ள முடிந்திருக்கிறதே தவிர அவற்றையும் நமது சக ஜீவன்களாக நடத்த முடிந்ததே இல்லை என்பதே!

அதென்னவோ மேற்கண்ட விடியோக்களைக் காண்கையில் வளர்ப்புப் பிராணிகள் விஷயத்தில் நம்மை விட மேற்கத்தியர்கள் மேலும் கரிசனையோடும், மிருகங்களுக்கும் சம உரிமை வழங்கி நடந்து கொள்வதாகத் தோன்றுகிறது. எத்தனை பேருக்கு இப்படித் தோன்றுமெனத் தெரியவில்லை. வளர்ப்புப் பிராணிகளை செல்ல அடிமைகளாக நடத்தும் நமது மனப்போக்கு மாற வேண்டும் என்று தோன்றியதால் இந்தக் கட்டுரை உருவானது. 

அட வளர்ப்புப் பிராணிகளின் நிலைக்காக வருத்தப்பட வந்து விட்டீர்கள் நம்மூரில் குழந்தைகளையே நாம் செல்ல அடிமைகளாகத்தானே வளர்த்து வருகிறோம் என்கிறீர்களா? அதுவும் நிஜம் தான்.

]]>
pet animals, வளர்ப்பு பிராணிகள், இந்தியா VS மேலை நாடுகள், pet animals or pet slaves, வளர்ப்பு பிராணிகளா அல்லது செல்ல அடிமைகளா? http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/22/w600X390/pet_animals.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/jun/22/are-pets-or-pet-slaves-2944959.html
2944264 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ஜேசிபி வண்டியில் கல்யாண ஊர்வலம் வந்த வித்யாசமான புதுமணத்தம்பதிகள்! RKV Thursday, June 21, 2018 11:13 AM +0530  

புதுமணமக்களின் கல்யாண ஊர்வலம் என்றாலே ஒன்று குதிரை பூட்டிய சாரட் வண்டியிலே அல்லது பூக்களால் அலங்கரிக்கப்பட்ட காரிலோ தான் செல்வது தான் வழக்கம். இதுவரை நமது கண்கள் பார்த்துப் பழக்கப்பட்டதும் அப்படியான காட்சிகளைத் தான். ஆனால் கர்நாடகாவைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகளான 28 வயது சேத்தன் கல்லகட்டாவும் 22 வயது மமதாவும் இந்த விஷயத்தில் கொஞ்சம் மாற்றி யோசித்திருக்கிறார்கள். அந்த மாற்று யோசனையில் ஒரு சிறிய வாழ்வியல் தத்துவத்தையும் புகுத்தி அசத்தியது தான் இந்த ஜேசிபி கல்யாண ஊர்வலத்தில் ஹைலைட்டான விஷயம்.

திங்களன்று சேத்தன், மமதாவின் திருமணம் முடிந்ததும் நண்பர்களும், உறவினர்களும் இருவரையும் வாழ்த்தினர். வாழ்த்திய உறவினர்கள் அடுத்தடுத்து அவரவர் சொந்த வேலையில் மூழ்கி விட நண்பர்கள் மட்டும் சேத்தனை விட்டு அகலாமல் அவருடனே இருந்திருக்கின்றனர். மமதாவுக்கு ஆச்சர்யமாக இருந்தாலும், சரி கணவரின் நெருங்கிய நண்பர்கள் போலும், காரில் நம்மை வீடு வரை விட்ட பின் விடை பெறுவார்கள் என்று நினைத்து விட்டார். அவர் நினைத்தது சரி தான். அந்த நண்பர்கள் அதற்காகத் தான் காத்திருந்தார்கள். ஆனால், அவர்கள் புதுமணத்தம்பதிகளை வீடு வரை ஊர்வலமாக அழைத்துச் சென்று விட்டது அலங்கரிக்கப்பட்ட காரில் அல்ல. அலங்கரிக்கப்பட்ட ஜேசிபி வண்டியில். 

ஜேசிபி வண்டியில் ஊர்வலம் என்றதும் முதலில் மணமகளுக்கு கொஞ்சம் ஜெர்க் ஆகி அவர் பயந்திருக்கிறார். அப்போது மணமகனான சேத்தன், தன் புது மனைவியிடம், ‘பயப்படாதே, நான் ஒரு ஜேசிபி டிரைவர். இது தினமும் நான் இயக்கும் வாகனம் தான். இதில் அமர்ந்து செல்ல எந்தப் பயமும் வேண்டாம். நான் உன் அருகிலேயே இருக்கிறேனே! யோசிக்காமல் வா’,  என்று உற்சாகப்படுத்தியிருக்கிறார்.

புதுக்கணவர் இத்தனை சொல்லும் போது மனைவிக்கும் அந்த உற்சாகம் தொற்றிக் கொள்ள, இருவரும் ஜேசிபியில் குதூகலமாக ஊர்வலம் வந்து வீட்டை அடைந்தனர்.

இதென்ன ஜேசிபி யில் கல்யாண ஊர்வலம்?! புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்று இப்படிச் செய்தீர்களா? என்ற கேள்விக்கு சேத்தன் அளித்த பதில், 

‘அப்படி இல்லை, கல்யாணத்திற்கு ஊர்வலம் போவது வழக்கமான விஷயம் தான். அந்த ஊர்வலத்தை நான் தினமும் ஓட்டும் ஜேசிபி வண்டியிலேயே போனால் என்ன? என்று என்  நண்பர்கள் சிலர் என்னை உற்சாகப் படுத்தினார்கள். சொல்லப்போனால் எனக்கு காரிலும், குதிரை வண்டியிலும் ஊர்வலம் போகத்தான் பயமாக இருந்தது. எனவே நண்பர்கள் சொன்னது எனக்கும் சரி என்று தோன்றியது’ அதனால் சென்றோம். அது வித்யாசமானதா? இல்லையா என்றெல்லாம் அப்போது நான் யோசிக்கவில்லை. என்றார். 

சேத்தன், மமதா திருமண ஊர்வலத்தை புகைப்படமெடுத்த அவரது நண்பர்கள் அதை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார்கள்.

புகைப்படங்களில் காணும் போது, தம்பதியினர் ஜேசிபி வண்டியிலும் கூட வண்டிக்கும் அமர்ந்து ஊர்வலம் வரவில்லை. ஜேசிபியின் முன்புறம் மண்ணை அள்ளிக் கொட்ட அகலமான கை போன்ற உறுப்பு ஒன்று இருக்குமே. அதில் உட்கார்ந்து ஊர்வலம் வந்திருக்கின்றனர். அந்தப் புகைப்படங்கள் ஒவ்வொன்றிலுமே மணமக்கள் தங்களது சிரிப்பை அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டு போஸ் கொடுத்திருப்பது நன்கு புலப்படுகிறது. இந்த ஊர்வலத்தைப் நேரில் பார்த்தவர்களுக்கும் கூட இந்த வினோதக் காட்சி முகத்தில் சிரிப்பை வரவழைத்திருக்கும்.

எது எப்படியோ, ஆடம்பரமாகத் திருமணம் செய்து, அந்த ஆடம்பரத்தை மேலும் அதிகரிப்பது போல அலங்கரிக்கப்பட்ட காரையோ, குதிரை வண்டியையோ வாடகைக்கு அமர்த்திக் கொண்டு கல்யாணச் செலவை மேலும் அதிகரிக்கச் செய்வதைக் காட்டிலும் சேத்தன், மமதா தம்பதிகளைப் போல புதுமணத் தம்பதிகள் தங்கள் வீட்டிலிருக்கும் சொந்த வாகனங்களிலேயே திருமண ஊர்வலத்தை திட்டமிடுவது கூட புத்திசாலித்தனமான காரியம் தான். இல்லையா?!

Image courtesy: The news minute.com

]]>
JCB Wedding walk, ஜேசிபியில் கல்யாண ஊர்வலம், கர்நாடகா, சேத்தன் மமதா தம்பதி, chethan kallakatta, mamatha, http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/21/w600X390/jcp_wedding.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/jun/21/karnataka-man-takes-wife-home-in-a-jcb-vehicle-after-wedding-2944264.html
2940261 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் வியந்து பாராட்டிய சூப்பர் வுமன் இவர்! RKV ANI Friday, June 15, 2018 11:52 AM +0530  

மத்தியப் பிரதேசம், ஷிகோரைச் சேர்ந்த லஷ்மிபாய் தான் அந்த சூப்பர் வுமன். லஷ்மிபாய்க்கு 72 வயதாகிறது. ஆனால், இன்றும் கூட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரில் அமர்ந்து அங்கே மனு அளிக்க வருகின்ற பொதுமக்களுக்காக டைப்ரைட்டரில்  விண்ணப்பங்களை டைப் செய்து தரும் பணியைச் செய்து கொண்டிருக்கிறார். லஷ்மிக்கு வயது ஒரு பிரச்னையாகத் தோன்றவில்லையா? ஏன் இந்த தள்ளாத வயதில் டைப் ரைட்டரோடு மல்லுக்கட்ட வேண்டும் எனப் பலர் அவரிடம் விசாரித்ததுண்டு.

அவர்களுக்கு லஷ்மி அளிக்கும் வழக்கமான பதில், 

‘எனக்கு வயதாகி விட்டதால் என்னால் வேலை எதுவும் செய்ய முடியாது என்று நான் நினைக்கவில்லை. அது மட்டுமல்ல, சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த விபத்தில் என் மகள் மோசமான காயங்களுடன் காப்பாற்றப்பட்டாள், அவளுடைய இடத்தில் இருந்து குடும்பத்தைத் தாங்க இப்போது நான் இருக்கிறேன். என்னால் பிச்சை எடுத்து உண்ண முடியாது. குடும்ப காரியங்களை நிகழ்த்த முடியாது. எனக்கு வருமானம் ஈட்ட ஒரு வேலை தேவைப்பட்டது. அப்போது தான், மாவட்ட ஆட்சியர் ராகவேந்திர சிங் மற்றும் துணை டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட் பாவனா விளம்பே உதவியாலும், பரிந்துரையாலும் எனக்கு இந்த வேலை கிடைத்தது. வங்கிக் கடனை அடைத்து விட்டு ஒரு வீட்டை சொந்தமாகக் கட்டிக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே இப்போதைய எனது ஒரே தேவை. அதற்காகத் தான் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.’

லஷ்மி பாய் பற்றி அறிய நேர்ந்த இந்தியக் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவக், அவரை வியந்து பாராட்டி தனது ட்விட்டர் தளத்தில் பதிய... இப்போது லஷ்மி பாய் உலகறிந்த ஸ்டெனோகிராபர் ஆகி விட்டார்.

சேவக் லஷ்மி பாய் பற்றி குறிப்பிடுகையில்...

என்னுடைய சூப்பர் வுமன் இவர் தான்... இவரது பெயர் லஷ்மி பாய். மத்தியப் பிரதேசம், ஷிகோரைச் சேர்ந்த இந்த லஷ்மி பாய்... தான் செய்யும் வேலையைச் சிறியதென நினைக்கவில்லை. கற்றுக் கொள்ளவோ, வேலை செய்யவோ வயது ஒரு தடையில்லை என இந்த உலகம் உணர்ந்து கொள்ள சிறந்த வாழும் உதாரணம் இந்த லஷ்மி பாய்’ அவரே எனது எனது சூப்பர் வுமன். எனக்குறிப்பிட்டிருந்தார்.’

சேவக்கின் ட்விட்டர் பாராட்டுரை குறித்து கேள்விப்பட்ட லஷ்மி பாய், அது குறித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதோடு... முதலில் வங்கிக் கடனை அடைத்து விட்டு சொந்தமாக, நிரந்தரமாக ஒரு வீட்டை கட்டிக் கொள்ள வேண்டும். அதற்காக நான் தொடர்ந்து உழைப்பேன் எனக்கூறும் போது அந்த வார்த்தைகள் பறைசாற்றுகின்றன அவரது உழைப்பின் வெற்றியை!

]]>
72 years stenographer, lakshmi bai, virender shewag, twiter, வீரேந்திர சேவக், ட்விட்டர், 72 வயது ஸ்டெனோகிராபர், சூப்பர் வுமன் ஆஃப் விரேந்திர சேவக், super woman of virender sehwag http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/15/w600X390/shewag_paraised_lakshmi_bai_72_yrs.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/jun/15/meet-72-year-old-superwoman-stenographer-2940261.html
2939581 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் புறப்பாடு... இது ஒரே ஒரு கமலியின் கதை மாத்திரமல்ல! கார்த்திகா வாசுதேவன் Thursday, June 14, 2018 05:51 PM +0530  

கமலா அடிக்கடி கண்ணாடி பார்த்து சலித்தவாறு இருந்தாள். சலிப்பென்றால் பெருங்கொண்ட சலிப்பு.

சற்றைக்கெல்லாம் ஆட்டோ வந்து விடும், அவள் புறப்பட்டாக வேண்டும். அக்கா காரோடு வந்து கொண்டிருப்பதாக அம்மா யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள். காரோ, ஆட்டோவோ எதுவானாலும் அவள் சீக்கிரமே புறப்பட்டுத் தான் தீர வேண்டும்.

பெரியவன் தினா டியூசனுக்குப் போயிருந்தான், சின்னவனுக்கு இந்த தை வந்தால் மூன்று வயது முடிகிறது, எந்தப் பள்ளியில் சேர்ப்பதென்று நினைத்த மாத்திரத்தில் கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது, ஆனால் பொங்கி வழியக் காணோம், கண்ணில் நீர் வற்றிப் போயிற்றா என்ன!

அம்மா ஆதூரமாய் நெருங்கி வந்து,

"கமலி சீலயச் சுத்திக்கிறியாம்மா... நாழி ஆச்சு பாரு"

என்றாள் மிக மிக மிருதுவாய், எங்கே கூடக் கொஞ்சம் அழுத்திச் சொன்னால் மகளுக்கு வலிக்குமோ என்று அஞ்சுவதைப் போல! என்ன வலித்து என்ன?!

"சீலையெல்லாம் வேணாம்மா... இந்த நைட்டி போறும். இடுப்புல நிக்கான்டாமா சீலை? நழுவிண்டே இருக்கச்சே என்னத்துக்கு சீலையச் சுத்திண்டு!"

கை நடுங்க மகளைப் பார்வையால் அணைத்துக் கொண்ட அந்தம்மாள் மனசும் நடுங்கிப் போனவளாய் எதுவும் சொல்லாமல் பேசாது அவளையே பார்த்தவாறு இருந்தாள்.

கமலியின் புடவைக் கட்டு வெகு நேர்த்தி.

அந்தத் தெரு மொத்தமும் இளம்பெண்கள் அவளிடம் வந்து புடவை கட்டிக் கொண்டு போனதுண்டு. "கமலிக்கா மாதிரி எட்டு ப்ளீட்ஸ் வச்சு புடவை கட்டனும், விசிறி மாதிரி அழகா படிஞ்சு நிக்கணும் முன் கொசுவம். தம்பி மனைவியின் தங்கை ஆசை ஆசையாய் புடவையைத் தூக்கிக் கொண்டு ஓடி வருவாள் கமலியிடம்.

எந்நேரமும் வாகனம் வந்து விடும் அறிகுறிகள் இருந்தாலும் இன்னும் வரவில்லை தானே!

கமலி மீண்டும் சலித்துக் கொண்டு அந்த கனமான மரப்பீரோவில் பொருத்தப் பட்ட பெரிய பெல்ஜியம் கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்துக் கொண்டாள், ஒரே நொடி தான், தனக்குத் தானே சகிக்க மாட்டாமல் முகம் சுணங்கி ஒதுங்கி மெல்ல நடந்து தூங்கிக் கொண்டிருந்த சின்னவனின் அருகே வந்தாள்.

மூணே வயசு தானே! பிஞ்சு பிஞ்சாய் ரப்பர் பந்து போன்ற கைகளும் கால்களும் "அம்மா என்னைக் கொஞ்சேன்" என்று உயிரை வதைத்தன. அவனைத் தொட்டு தூக்கி அணைத்து முத்தமிடும் ஆசையை வெகு பிரயத்தனப்பட்டு அடக்கிக் கொண்டு ஏக்கத்தோடு அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க ஆரம்பித்தாள்.

கனத்த சிப்பி இமைகளுக்குள் குண்டு விழிகள் உருண்டன, பிள்ளை எதோ கனவு காண்கிறானோ! எழுந்து விட்டால் வம்பு! 

அம்மா... இவன நீ நல்லா வளர்பியோன்னா! ரொம்பச் சமத்தும்மா! பெரியவனா அவன் அப்பா பாட்டி கிட்ட ஒப்படைச்சுடு, இவன நீ தான்... நீ தான் பார்த்துப்பியாம். கொஞ்சம் பேசினாலே கமலிக்கு மயக்கம் வரும் போலிருந்தது .

அம்மா கலங்கிப் போனவளாய் அவசர அவசரமாய் சத்தியம் செய்பவளைப் போல,

"சரிடிம்மா, சரிடிம்மா, எம் பேரன நான் வளர்ப்பேன்டி... ஒரு ராஜாவப் போல நான் வளர்ப்பேன், நீ கலங்காதடி என் சித்திரமே!"

மனம் அது பாட்டுக்கு எங்கெங்கோ சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது.

போன் ஒலித்த சப்தம் கிணற்றுக்குள் இருந்து கேட்பதைப் போல கமலியின் காதுகளை உரசிச் சென்றது. அவள் அலட்டிக் கொள்ளாமல் எங்கோ பார்வையை நிலைக்க விட்டு கட்டிலில் சாய்ந்து கொண்டிருந்தாள்.

போனில் அழைத்தது கமலியின் கணவன் ராஜாராமன் தான், பாவம் கடந்த மூன்று மாதங்களாக நாய் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறான்.

என்ன பேசினானோ... மாமி மருமகனிடம் "தினாவையும் அழைச்சுண்டு போயிடலாமே, இவ அவனப் பார்க்காம தவிச்சிண்டில்ல இருக்கா" என்றாள் மெல்ல விசித்துக் கொண்டே.

போனை வைத்து விட்டு மகளிடம் வந்தவள்.

ஏண்டி குழந்தே ...சின்னவன எழுப்பித் தரட்டுமா, செத்த நேரம் விளாட்டு காட்றையா?

அவள் எதோ சம்பிரதாயத்துக்கு தன்னை சமாதனப் படுத்தத்தான் கேட்கிறாள் என்பதைப் போல "வேண்டாம் என" மெல்லக் கையசைத்தாள் கமலி .

கமலி உங்காத்துக்காரர் எவ்ளோ டிப் டாப்பா இருக்கார் பாரேன், 

அன்றைய கமலிக்கு இந்த வார்த்தைகள் கேட்ட மாத்திரத்தில் அத்தனை பரபரப்பாயிருக்கும். இப்போது நினைத்துப்பார்த்தால் "இருக்கட்டுமே...போ" என்பதான ஒரு அலட்சியம்!

கல்யாண ஆல்பத்தை திறந்து பார்த்து வருசத்திற்கு மேல் ஆகிறது.

அந்தக் கமலியா இந்தக் கமலி!

சின்னவனை கார்த்தால எழுப்பும் போதே கைல ஒரு முழு பிரிட்டானியா பிஸ்கட் பாக்கெட் வைச்சிண்டு தான் எழுப்பனும், இல்லேனா அழுது ஆகாத்தியம் பண்ணி ஊரைக் கூட்டுவான்.

தினாவுக்கு அடிக்கடி புழுத் தொல்லை வரும், சர்க்கரை டப்பாவ எடுத்து ஒளிச்சு வச்சிக்கணும். இனிப்புன்னா எறும்பா வாசம் பிடிச்சிண்டு அதி வேலையா தின்னு தீர்ப்பான். இந்த அம்மா தள்ளாத வயசுல என்னான்னு சமாளிப்பா!

ரெண்டையும் குளிக்கப் பண்றதுக்குள்ள போறும், போறும்னு ஆயிடுமே !

அவருக்கு ஓட்ஸ் கஞ்சியும், ஹார்லிக்சும் மட்டும் தான் கார்த்தால. ஒரு பொம்மனாட்டி வந்து சிசுருஷை பண்ணித் தான் தீரணும்னு இல்லை, அவர் கைலன்னா இருக்கு எம் புள்ளைங்களோட எதிர் காலம், இன்னொருத்தி வந்து தான் தீருவாளோ! நினைத்த மாத்திரத்தில் குடலைப் புரட்டிக் கொண்டு வாந்தி எடுக்கும் உணர்வு தலை தூக்க, தலையை இறுக்கப் பிடித்துக் கொண்டாள் கமலி.

"கமலிக்கா ஆத்துக்காரர் ஆள் ஜம்முன்னு இருக்கார்" பலர் பல நேரங்களில் காற்று வாக்கில் சொன்னதெல்லாம் இப்போது ஞாபகத்தில் உறுத்திக் கொண்டு பிராணனை வாங்குகிறதே!

பிராணன்... பிராணன் 

எளவெடுத்த பெருமாளே! அந்தாளுக்கு ஏன் இம்புட்டு அழக கொடுத்த நீ? சனிக் கிழமை தவறாது இவள் விரதம் காத்த பெருமாளின் மேல் ஆத்திரம் திரும்பியது.

அக்கா காரோடு வந்து விட்டிருந்தாள்.

கமலியால் எட்டெடுத்து வைக்க முடியவில்லை.

கணவன் ஒரு புறமும், அக்கா மறு புறமுமாய் தாங்கி அவளை நடத்திக் கொண்டு போனார்கள் காருக்கு.

அம்மா முந்தானையில் வாய் பொத்தி சத்தமடக்கி தீவிரமாய் அழ தொடங்கி இருந்தாள்.

மெல்ல மெல்லப் புலன்கள் அடங்குவதான உணர்வு.

சுறு சுறுப்பாய் விழிகளைக் கூட அசைக்க இயலா மந்தகதி.

காருக்குள் நுழையும் முன்பே, இப்போது கேட்கா விட்டால் இனி எப்போது கேட்க என்று பரிதவிப்பவளைப் போல, கணவனின் கன்னம் தொட்டு திருப்பி, திணறலாய்... 

"ஏன்னா, ஏம் பிள்ளைங்கள நன்னா பார்த்துக்குவேளோன்னா! நான் இல்லேன்னு இன்னொரு கல்யாணம் பண்ணிண்டு போய்டுவேளா?

கேட்ட மாத்திரத்தில் அவளது புறங்கையை கண்களுக்குள் அழுத்திக் கொண்டு ஹோவென கதறி விட்டான் ராஜாராமன்.

"அசடே... அசடே... ஏன்டீ... ஏன்டீ?  இப்டி பேசி பிராணன வாங்கற? உனக்கு ஒன்னும் இல்லடீ. பார்த்துண்டே இரு, நீயும் நானும் சேர்ந்து சுபிட்சமா இருப்போம்டீ நூறாயுசுக்கு, ஒனக்கு ஒன்னும் இல்லடீ, நீ திரும்பி வருவடீ, நம்ம பிள்ளைங்கள நல்ல வளர்க்கத் தான் போறோம், அவன் அவளைக் கட்டிக் கொண்டு அழ!

சின்னவன் படுக்கையில் மெல்லப் புரண்டான், அக்கா கசிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மெல்ல அதட்டினாள்.

‘கமலி உம் புள்ள முழிஞ்சிண்டா ஒன்ன விட மாட்டான்.’

‘எம் பிள்ளைங்க... ஏம் பிள்ளைங்க...’ விக்கி விக்கி அழ வேண்டும் போலான உணர்வு நெஞ்செலாம் நிரம்பித் ததும்ப கமலி தூங்கும் தன் மகனை திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே காரில் ஏறினாள்.

கணையத்தில் வந்த கேன்சர் அவளை முக்காலும் தின்று முடித்த பின் தன் பிள்ளைகளின் ஏக்கத்தோடு கமலி காரில் போய்க் கொண்டிருக்கிறாள்.

அவளுக்கு வெகு நிச்சயமாய் தெரியும்.

ஆறு மாதங்களிலோ ஒரு வருடத்திலோ ராஜாராமன் மறுபடி மணமகன் ஆகலாம்.

கேன்சர் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என உணர்ந்து கொள்வதற்கு கிடைத்த நேரடி சாட்சி இந்தக் கமலி. வில்லிவாக்கத்தில் நாங்கள் குடியிருந்த வீட்டின் மாடியில் ஒரு கூட்டுக் குடும்பமிருந்தது. அதன் இளைய மருமகளை அந்தக் குடியிருப்பில் வசித்த அனைவருக்கும் மிகப்பிடிக்கும். ஒத்த வயது என்பதால் மட்டுமல்ல, அவளது பழகும் தன்மையாலும் கூட. அவளுக்கு மேலே கதையில் விவரித்திருப்பதைப் போலவே நண்டும், சிண்டுமாக இரண்டு மகன்கள். வீட்டுக்கு யார் வந்தாலும் சரி இன்முகத்துடன் வரவேற்று சாப்பிட ஏதாவது தந்து வெகு ப்ரியமாகப் பேசிக் கொண்டிருப்பாள் அந்த இளம்பெண். ஒருமுறை கோடை விடுமுறைக்காக நாங்கள் அம்மா வீட்டுக்குச் சென்று விட்டு ஒரு மாதம் கழித்து திரும்பி வந்து பார்த்தாள், அந்தப் பெண்ணைக் காணோம். கணவர் வளைகுடா நாடொன்றில் பணியிலிருந்ததால் குழந்தைகளுடன் அங்கே சென்றிருப்பார்களாயிருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்... பிறகு குழந்தைக்கு எல்கேஜி அட்மிஷன், புத்தகங்கள், எனது வேலை, உறவில் நடந்த சில திருமண விழாக்கள் என பிஸியாக நாட்கள் கரைய 6 மாதங்களுக்கும் மேலாக அந்தப் பெண்ணைப் பற்றிய நினைப்பே இன்றி நாட்கள் ஓடியிருந்தன. திடீரென ஒரு நாள் நான் வீட்டிலிருக்கும் நாளாகப் பார்த்து, அவளது மாமியை பார்க்க வாய்த்ததில் அவர் ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டார். அந்தப்பெண் இரண்டு மாதங்களுக்கு முன்பே பான்கிரியாட்டிக் கேன்சர் முற்றிய நிலையில் மிகவும் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திடீரென இறந்து விட்டதாகக் கூறினார்கள். 

என்னால் இந்த தகவலை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.

அதெப்படி இவளுக்குப் போய் கேன்சர் வரும் என்று திகைத்துப் போய் யோசித்துக் கொண்டிருந்தேன்... அந்த தாக்கத்தில் எழுதிய சிறுகதை இது.

பெண்கள் திருமணமாகி, குழந்தைகள் பெற்று விட்டால் பின்னர் தங்களது உடல்நிலை குறித்து அசட்டையாகி விடுகிறார்கள். அவர்களுக்கு எல்லாமும் கணவரும், குழந்தைகளும் மட்டுமே என்றாகி விடுகிறார்கள். இந்தப் பெண்ணின் விஷயத்திலும் கூட அது தான் நிகழ்ந்திருக்கிறது. கேன்சர் கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு முற்றிய பிறகே அதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதுவரையில் காய்ச்சல், தலைவலி, என்று வேறு வேறு சிகிச்சைகளில் நேரத்தை விரயம் செய்து கொண்டு அசட்டையாக விட்டதில் நோய் ஆளைச் சுருட்டி காவு வாங்கி விட்டது.

அதனால்... சொல்லத் தோன்றுகிறது.

திருமணமான பெண்களே! தயவு செய்து உங்களது உடல்நிலை குறித்து கவனமாக இருங்கள், உங்களுக்காகவும்... உங்கள் குடும்பத்தினருக்காகவும்!

]]>
Departure - its not a story of kamali, real life story, women's health, cancer, புறப்பாடு - ஒரே ஒரு கமலியின் கதையல்ல, கேன்சர், மகளிர் நலம், உண்மைச் சம்பவம், லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் சிறுகதை, lifestyle special short story http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/14/w600X390/lonely_woman.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/jun/14/journy-its-not-a-story-of-one-kamali-its-the-story-of-all-mariied-women-who-doesnt-care-about-themselves-2939581.html
2935686 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் கீரை ப்ரியர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்! 40 வகை கீரைகளும், பலன்களும் (படங்களுடன்) கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. Wednesday, June 13, 2018 02:11 PM +0530  

கீரையில் பலவகைக் கீரைகள் உள்ளன. அவற்றில் சுமார் 20 வகைகளைத் தவிர பிற கீரை வகைகளை நாம் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. முதலில் உங்களுக்கு நன்கு அறிமுகமான கீரைகள், இதுவரை நீங்கள் சமைத்து சாப்பிட்ட கீரை வகைகளை எல்லாம் பட்டியலிடுங்களேன்... பிறகு தெரியும் நமக்குத் தெரியாமலும், இன்னும் சமைத்து உண்ணப்படாமலும் எத்தனை, எத்தனை கீரை வகைகளை நாம் விட்டு வைத்திருக்கிறோம் என; பொதுவாக...

அரைக்கீரை...

 • இக்கீரையை உணவில் சேர்த்து வர வாயுக் கோளாறுகள், வாத வலி நீங்கும்.
 • இக்கீரை விதைகளை எண்ணெயிலிட்டு காய்ச்சி, தலையில் தேய்த்துக் குளித்து வர தலைமுடி நன்கு வளரும். தலைச்சூடு குறையும்.
 • இக்கீரை குழம்பு அடிக்கடி உண்டுவர தலைவலி, உடல்வலி நீங்கும். காய்ச்சல், உடல் குளிர்ச்சியை இக்கீரை குணப்படுத்தும்.
 • இக்கீரையை அரைத்துச் சாறு எடுத்து, தேனில் கலந்து அருந்த உடல் பலத்தைக் கூட்டும். தாது பலத்தை அதிகரிக்கும்.
 • இக்கீரையை பிரசவமான பெண்களுக்கு உணவோடு கொடுக்க, உடல் பலவீனம் மாறும். அரைக்கீரை கூட்டு மலச்சிக்கலை நீக்கும். ஜலதோசம் மாறும்.
 • இக்கீரையோடு நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து சமைத்து உண்டிட குளிர் காய்ச்சல் சளி தீரும்.
 • இக்கீரை நரம்பு நோய்களைக் குணப்படுத்தும்.
 • இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், பசியற்ற நிலையை மாற்றி பசியையூட்டும்.
 • இக்கீரை பித்தக் கோளாறுகளால் ஏற்படும் தலைச்சுற்று வாந்தி போன்றவற்றைக் குணப்படுத்தும்.
 • இக்கீரையை எவ்விதத்திலாவது உணவில் சேர்த்து வந்தால் இருதயம், மூளை வலுப்பெறும்.
 • இருமல், தொண்டைப் புண் இவற்றை அரைக்கீரை குணப்படுத்தும்.
 • உடலில் வைட்டமின் குறைப்பாட்டால் ஏற்படும் நோய்களை இது தடுக்கும்.

முளைக்கீரை...

 • முளைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் உடலுக்கு போதிய அளவில் கிடைக்கும்.  குழந்தைகளுக்குத் தொடர்ந்து 40 நாட்கள் கொடுத்து வந்தால் நன்கு உயரமாக வளருவார்கள். 
 • முளைக்கீரை சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்தி, தூள் செய்து சாப்பிட்டால் பித்த நோய், மயக்கம், ரத்த அழுத்தம் போன்றவை சரியாகும்.
 • சிறுவர், சிறுமியருக்கு முளைக்கீரை நல்லது. முளைக்கீரையை சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். காச நோயால் ஏற்படும் காய்ச்சலை நீக்கும் ஆற்றல் உடையது. முளைக்கீரையுடன் சிறு பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் குடல்புண் குணமாகும்.
 • முளைக்கீரை சாற்றில் முந்திரி பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தடவிவந்தால், முகப்பரு, தேமல் போன்றவை மறைந்து முகப்பொலிவு உண்டாகும்.
 • சொறி, சிரங்கு முதலிய நோய்கள், இக்கீரையை உண்பதினால் குணமடையும். இந்த கீரையானது வெப்ப சுரத்தை தணிக்க வல்லது. முளைக்கீரை சாற்றில் உளுந்து ஊற வைத்து அரைத்து சாப்பிட்டால் நீர் கடுப்பு மறையும்.

அகத்திக்கீரை...

 

 • அகத்திக்கீரை, பூ, பிஞ்சு ஆகியவை சமைத்து உண்ணப்படுகின்றன. இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. பொதுவாக கீரை மலமிளக்கியாகவும், வேர் உடல் பலம் தரும் மருந்தாகவும் பயன்படும்.
 • அகத்திக்கீரையை வாரம் ஒருமுறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பும், லமச்சிக்கல், காபி, டீ இவை குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும்.
 • அகத்திக் கீரை மரப்பட்டையையும், வேர்ப்பட்டையையும் குடிநீராக்கிக் குடித்து வர சுரம், தாகம், கை கால் எரிவு, மார்பு எரிச்சல், உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிச்சல், அம்மைச்சுரம் ஆகியவை தீரும்.
 • குழம்பு வைக்கையில் தாளிதத்துடன் கறிவேப்பிலைக்கு பதிலாக அகத்தியை சிறிது வதக்கி சேர்த்தால் உடல்சூடு, வாய்ப்புண், வயிற்றுப் புண் அகலும். 

முருங்கைக்கீரை...

 • முருங்கைக் கீரையை 40 நாட்கள் நெய்விட்டு, வெங்காயம் போட்டு, பொறியல் செய்து நண்பகலில் உணவில் சாப்பிட ஆண்மை பெருகும். விந்து கெட்டிப் படும். உடலுறவில் மிக்க இன்பம் பெறுவார்கள். புளியைக் குறைக்க வேண்டும். தவிர்க்க வேண்டும். பெண்களுக்கு வரும் சூதகவலிக்கு இதன் இலைச்சாறு பிழிந்து 30 மில்லி இரு வேளை குடிக்க குணமாகும். அடிவயிற்றில் வலியும், விலக்கு தள்ளிப் போவதால் ஏற்படும் வலியும் குணமாகும்.
 • இலையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய், கபம், மந்தம் தீரும். கீரையில் சுவையான கீரையும் சத்தான கீரையும் இதுதான். இலையை ஆமணக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க வாத மூட்டுவலி, இடுப்பு வலி, உஷ்ணத்தால் வரு வயிற்று வலி நீங்கும்

புளிச்ச கீரை (கோங்குரா)...

 • பெயருக்கு ஏற்றார்போல புளிப்பு சுவையுள்ள இந்த கீரை, உடல் வலிமையை பெருக்குவதில் முதன்மை வகிக்கிறது. நோஞ்சானாக தெரியும்
 • குழந்தைகளுக்கு அடிக்கடி இந்த_கீரையை சிறிதளவெனும் சமைத்து சாப்பிட கொடுத்து வந்தால் உடம்பு தேறுவார்கள். 
 • இதன் மகத்துவம் தெரிந்துதான் ஆந்திர மக்கள் இந்த கீரையை "கோங்குரா சட்னியாக" செய்து தினமும் உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள்.
 • இந்த கீரையில் தாதுபொருட்களும், இரும்பு சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. இது தவிர வைட்டமின் சத்துக்களும் கணிசமான அளவு கலந்துள்ளன.
 • எல்லாவிதமான வாத கோளாறுகளையும் குணப்படுத்தும் வல்லமை இந்த கீரைக்கு உண்டு என்பார்கள்.
 • சொறி, சிரங்கு போன்ற சரும நோய் உள்ளவர்கள் இந்த கீரையை சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம் என்பார்கள்.

சிறுகீரை...

 • இதில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து மிக அதிக அளவில் உள்ளன. 90 சதவிகிதம் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்பு, மாவுச் சத்து ஆகியவையும் இதில் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி மூன்றும் இதில் சம விகிதத்தில் கலந்துள்ளன.
 • சர்க்கரை நோய் உள்ளவர்கள் இக்கீரையை தினமும் சாப்பிட்டால் இன்சுலின் இயல்பாக சுரக்கும்.
 • சிறுகீரையுடன் துவரம்பருப்பும், வெங்காயம் சேர்த்து இந்தக் கீரையை நெய்யில் வதக்கிக் கடைந்து, தொடர்ச்சியாக 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், உடல் வலிமை பெறும்.
 • குடல், இருதயம், மூளை, இரத்தம் இவைகளுக்கு நல்ல வலிமையை தரும். சிறுகீரையை அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் இருதய வியாதிகள் நீங்கும்.
 • சிறுகீரை உடலுக்கு அழகையும், முகத்துக்குப் பொலிவையும் தரவல்லது.

வல்லாரைக் கீரை...

 • வல்லாரை கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தி அதிகரிப்பதுடன், மூளை நரம்புகள் வலுப்பெறும். இக்கீரை, இருமல், தொண்டைக்கட்டை நீக்குவதுடன், பல் ஈறுகளை வலுப்படுத்தும். காச நோய்க்கு சிறந்த மருந்து.
 • வல்லாரை கீரை, சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் மிளகு சேர்த்து சட்னியாக்கி, தொடர்ந்து, 48 நாட்கள் சாப்பிட்டால், மூளை சோர்வு நீங்கி, ஞாபக சக்தி அதிகரிக்கும்.

மணத்தக்காளிக் கீரை...

 • சருமம் தொடர்பான பல நோய்கள் வராமல் கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது.
 • இதில் வைட்டமின் இ, டி அதிக அளவில் உள்ளன. நார்ச்சத்து மிகுந்தது. இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், வயிற்றில் ஏற்படும் புண்களைக் குணப்படுத்தும்.
 • மணத்தக்காளிக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால், இருமல், இளைப்பு பிரச்னை குணமாகும். வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும் சக்தி மிகுந்தது இந்தக் கீரை. சிறுநீர், வியர்வையைப் பெருக்கி உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும். மணத்தக்காளி இலைச்சாற்றை 35 மி.லி வீதம் நாள்தோறும் மூன்று வேளைகள் உட்கொண்டுவந்தால், சிறுநீரைப் பெருக்கும்; உடலில் நீர் கோத்து ஏற்படும் வீக்கம், உடல் வெப்பம் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.

பசலைக்கீரை...

 • பசலைக் கீரையில் வளமான அளவில் இரும்புச் சத்து இருப்பதால், இதனை உட்கொண்டால் ரத்த சோகையில் இருந்து விடுபடலாம். மேலும் இது ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு சிறப்பான உணவுப்பொருள்.
 • முக்கியமாக உடல் பருமனால் அவஸ்தைப் படுபவர்கள், இதனை தினமும் டயட்டில் சேர்த் தால் நல்ல பலன் கிடைக்கும். இது மாதிரி பசலைக் கீரையை உட்கொண்டால், கிடைக்கும் நன்மைகளைப் பற்றி சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம்.

பாலக் கீரை அலைஸ் பருப்புக் கீரை...

 • பாலக்கீரை போல் உடலுக்கு நன்மை தரும் கீரை வேறெதுவும் இல்லை. இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் போன்றவை இதில் அடங்கியுள்ளன.
 • இந்த கீரையில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைவை தடுக்கிறது. மலச் சிக்கலை போக்கிறது.
 • இதில் மிக அதிகமாக உள்ள பச்சையம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது.
 • ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது.

குப்பைக்கீரை...

 • குப்பைக்கீரையுடன் பருப்பு சேர்ந்து கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.
 • குப்பைக்கீரை, முடக்கறுத்தான், சீரகம் மூன்றையும் சூப்வைத்து சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும்.
 • ஒரு கைப்பிடி குப்பைக்கீரையுடன் இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள், அரை டீ ஸ்பூன் ஓமம் சேர்த்து நன்றாக காய்த்து அந்த சாற்றை பருகினால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
 • உடலின் மேல் ஏற்படும் கட்டிகளின்மீது இந்தக் கீரையை அரைத்து பூசிவந்தால் கட்டிகள் கறந்து குணம் கிடைக்கும்.
 • அடிப்பட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டால் குப்பைக்கீரையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் வீக்கம் வடியும்.

பச்சைப் பொன்னாங்கன்னி...

 • கண்பார்வைக்கு மிகவும் நல்லது.
 • சருமத்துக்கு மிகவும் நல்லது.
 • மூல நோய், மண்ணீரல் நோய்களை சரிப்படுத்தும் ஆற்றல் உடையது.
 • ரத்தத்தைச் சுத்தீகரிக்கும்
 • உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.
 • வாய் துர்நாற்றத்தை நீக்கும்.
 • இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும்.

இக்கீரையின் சாறு எடுத்து நல்லெண்ணையுடன் சேர்ந்து தைலம் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வர கண் எரிச்சல், உடல் உஷ்ணம்- போன்றவைகள் நீங்கி உடல் குளிர்ச்சிப் பெறும்.

சிவப்புப் பொன்னாங்கன்னி...

பச்சைப் பொன்னாங்கண்ணியில் இருக்கும் அத்தனை சத்துக்களும், பயன்களும் சிவப்புப் பொன்னாங்கண்ணிக்கும் உண்டு. ஆனால் பச்சை தான் நாட்டுப் பொன்னாங்கண்ணி என கொண்டாடப்படுகிறது. சிவப்பை சீமைப் பொன்னாங்கண்ணி என்றும் அதில் நாட்டுப் பொன்னாங்கண்ணியைக் காட்டிலும் சத்துக்களும், பயன்களும் குறைவு என்றும் மக்கள் கருதுகிறார்கள். சீமைப் பொன்னாங்கண்ணியை வெறும் அழகுக்காக வளர்ப்பவர்களும் இருக்கிறார்கள்.

வெந்தயக்கீரை...

 • வெந்தயக் கீரையோடு, நாட்டுக் கோழி முட்டையில் வெள்ளை கரு, தேங்காய் பால், கசகசா, சீரகம், மிளகு, பூண்டு போன்றவற்றை சேர்த்து சிறிதளவு நெய் கலந்து சமைத்து சாப்பிட்டால் இடுப்பு வலி குணமாகும்.
 • கபம் சளி உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால் விரைவாக குணமடையலாம்.
 • மந்தமாக உணர்பவர்கள், அல்லது உடல் சோர்வாக உணர்பவர்கள் வெந்தயக் கீரை சாப்பிடலாம். இது உடலின் செயலாற்றலை அதிகரித்து சுறுசுறுப்பாக உதவும்.
 • நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு வெந்தயக் கீரை ஓர் சிறந்த மருந்தாகும், இது நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவர சீரிய முறையில் உதவும்.

புதினாக்கீரை...

 • இக்கீரையை உணவில் சேர்த்து கொள்வதால் பசியைத்தூண்டி உணவிற்கு  ருசியையும் கொடுக்கிறது .
 • வாந்தியையும் கட்டுப்படுத்துகிறது .
 • தொடர்ந்து எடுக்கும் விக்கல் நீங்கும் .
 • மயக்கத்தை நீக்க இக்கீரையை கசக்கி நுகரலாம் .
 • தலைவலிக்கு இதன் சாற்றை   நெற்றியில் பூசலாம் .
 • வாத நோய்க்கும் காய்ச்சலுக்கும் ,வறட்டு இருமலுக்கும்  இது சிறந்த மருந்தாகும் .
 • மாதவிடாய் தாமதமாகும் பெண்கள் இக்கீரையை உலர்த்தி தூள் செய்து  தேனில் கலந்து தினமும் மூன்று வேளை உட்கொண்டால் மாதவிடாய் தாமதவாது  நீங்கும் .
 • புதினா இலையை ஒரு தம்புளர் நீரில் கொதிக்க வைத்து எடுத்து ஆறிய பிறகு இளசூட்டில் குடித்தால் நன்றாக பசி எடுக்கும் .
 • புதினாவுடன்  இஞ்சியையும் உப்பும் சேர்த்து  அரைத்து தினமும் உணவில் மூன்று வேளை சேர்த்து வந்தால் வாய்நாற்றம்,அஜீரணம் ,பித்தமும் அகலும் .
 • புதினாவை துவையல் செய்து நல்லெண்ணெய் விட்டு சாதத்தில் பிசைந்து சாப்பிட பித்தம் மூட்டு வலி ,ஆஸ்துமா ,ஈரல் சம்பந்த பட்ட நோய்கள், சிறுநீர்  உபத்திரம் நீங்கும் .  

கொத்தமல்லிக்கீரை...

 

கொத்தமல்லிக் கீரை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார் போன்றவற்றில் மணத்திற்காக இக்கீரையைப் பயன்படுத்துவார்கள்.

கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது.

 • கொத்தமல்லிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் காய்ச்சல் குணமாகும். வாதம், பித்தம் நீங்கும். உடல் பலம் பெறும். தாது விருத்திக்கும் நல்லது.
 • இக்கீரை பசியைத் தூண்டும் சக்தி படைத்தது.
 • இக்கீரையின் சாறு பிழிந்து பித்தத் தழும்புகள் மீது பூசினால் விரைவில் குணம் கிடைக்கும்.
 • இக்கீரையை எண்ணெயில் சிறிது வதக்கி, கட்டிகள், வீக்கங்களின் மீது வைத்துக் கட்டினால் குணம் கிட்டும்.
 • கொத்தமல்லிக் கீரையைத் துவையல் செய்து சாப்பிடலாம். தினமும் இக்கீரையை உணவில் சேர்த்து வந்தால் சிறுநீர் எளிதாய் பிரியும்.
 • பற்களுக்கு உறுதியை அளிக்கும். பல் சம்பந்தமான எல்லா நோய்களும் இக்கீரையை உண்டுவரக் குணமாகும்.
 • முதுமைப் பருவத்தில் ஏற்படும் தோல் சுருக்கத்தைப் போக்கி தேகத்திற்கு அழகையும் மினுமினுப்பையும் தரும்.

- மேலே பட்டியலிடப்பட்டுள்ள போன்ற கீரைகள், நாம் அடிக்கடி சமைத்து சாப்பிட்டுப் பழகிய கீரை வகைகள்.

சுக்காங்கீரை...

 • சுக்காங்கீரை உடலிலுள்ள அதிக வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சியைத் தரவல்லது.இது ரத்தத்தைச் சுத்தப்படுத்துவதோடு, புதிய இரத்தம் உற்பத்தியாகவும் துணைபுரியும்.
 • பசியின்மையால் சாப்பிட விரும்பாதவர்களுக்கு இந்தக் கீரை பசியைத் தூண்டுவதோடு,சாப்பிடும் ஆர்வத்தை உண்டாக்கும்.
 • பித்த சம்பந்தமான நோய்களை நீக்கவல்லது.பித்த வாந்தி மயக்கம்,நெஞ்சரிப்பு, பித்தத்தலைவலி போன்ற தொல்லைகளை நீக்கும்.
 • வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும் இது நிவாரணமளிக்கிறது.வயிற்றுவலியைப் போக்கும்.குடல் பலவீனத்தினால் ஏற்படும் கேடுகளைக் களையும் குடலுக்கு வலுவையும் சீராக இயங்கும் சக்தியையும் அளிக்கிறது.
 • இக் கீரை அதிக குளிர்ச்சியைத் தரவல்லது.அதனால் தொடர்ந்து சாப்பிடாமல் சில சமயங்களில் மட்டும் சாப்பிடலாம்.

முடக்கத்தான் கீரை...

வாரம் ஒருமுறை முடக்கத்தான் ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடலில் தங்கும் தேவையற்ற நச்சு வாயுக்கள் வெளியேறி விடும். வாயு, வாதம், மலச்சிக்கல் உள்ளிட்ட அத்தனை பிரச்னைகளும் அகன்று விடும்.

முள்ளங்கி இலைக்கீரை...

முள்ளங்கி கீரையில் இருக்கு வைட்டமின் எ , வைட்டமின் பி, வைட்டமின் சி இவை அனைத்தும் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதுதான், ஆனால் இந்த கீரையை அதிகம் உணவில் உட்கொள்ள கூடாது சிலருக்கு இதனால் பிரச்சனைகள் எழ வாய்ப்புண்டு. வயிற்று கோளாறுகள் அல்லது இதய கோளாறுகள் ஏற்படலாம். அதனால் குறைந்த அளவிலே எடுத்து கொள்ளுங்கள்.

நீர் அடைப்பு தொல்லையா முள்ளங்கி கீரையை சுத்தம் செய்து ஒரு நாளைக்கு இரு வேளை சாப்பிட சில நாட்களில் பிரச்சனை இருக்காது.

அனைத்து கீரை வகைகளும் கண்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுப்பது போலவே இந்த முள்ளங்கி கீரை கண்களுக்கு நல்ல பார்வை திறனை கொடுக்கும்.

இதில் இருக்கும் புரத சத்துக்கள், கால்சியம் எலும்புகளுக்கு உறுதியை கொடுக்கும் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட செய்யும்.

தூதுவளைக் கீரை...

 

 • தூதுவளை இலையை சிறிய வெங்காயத்துடன் சேர்த்து நல்லெண்ணெயில் வதக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு பின்பு மூன்று நாட்கள் விட்டு மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக 21 நாட்கள் சாப்பிட சுவாசகாசம் நீங்கும்.
 • இலையை அரைத்து அத்துடன் சம அளவு பசு வெண்ணெய், பின்பு 10 கிராம் பொடித்த அரிசித் திப்பிலி, ஓமம், கடுக்காய்த் தோல் சேர்த்துக் கலக்கி சூடு செய்து பிழிந்து கிடைக்கும் நெய்யைத் தேக்கரண்டியளவு தொடர்ந்து 40 நாட்கள் உள்ளுக்குச் சாப்பிட ஷயரோகம் குணமாகும்.
 • தூதுவளைப் பூவை நெய்யில வதக்கி தயிருடன் சாப்பிட விந்து கட்டும், அறிவு விருத்தியாகும். தூதுவளை இலையைத் துவையல் செய்து சாப்பிட மாந்தம், தாது நஷ்டம், இளைப்பு இவைகள் போகும். பருப்புடன் சேர்த்து இதைக் குழம்பு வைத்துச் சாப்பிட மகோதரம் (பெருவயிற்றுநோய்), கர்ண சூலை இவை குணமாகும். தூதுவளை இலைச் சாற்றை காதில் பிழிய காதடைப்பு, காதெழுச்சி முதலிய நோய்கள் குணமாகும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்தக் கீரைகள் எல்லாம் இப்போதும் சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கின்றன. இவற்றையும் கூட நாம் முழங்கால் வலியென்றோ, மூட்டு வலியென்றோ, உடலில் இரும்புச் சத்து குறைவு, நார்ச்சத்து குறைவு போன்ற காரணங்களுக்காகவோ நாம் வாழ்க்கையில் ஒருமுறையேனும் சமைத்துச் சாப்பிட்டிருப்போம்.

இவை தவிரவும் இன்னும் பலவகைக் கீரைகள் உள்ளன. அவற்றை மூலிகைக்கீரைகள் எனப் பெயர் சூட்டி நாம் பெரும்பாலும் சமைத்து உண்பதைத் தவிர்த்து வருகிறோம். சிலவற்றை சமைத்தும் உண்ணக்கூடாது. அவற்றை பாரம்பர்ய சித்த மருத்துவர்களின் உதவியுடன் கஷாயமாகவோ அல்லது குளிகைகளாகவோ உருமாற்றித்தான் உண்ணவோ, அருந்தவோ முடியும். அவற்றுள் சிலவற்றின் பெயர்கள்...

மஞ்சள் கரிசலை...


பிண்ணாக்குக் கீரை...


பரட்டைக்கீரை...


வெள்ளைக்கரிசலைக் கீரை


கல்யாண முருங்கைக் கீரை...


கீழாநெல்லிக் கீரை...


நஞ்சுமுண்டான் கீரை அல்லது நச்சுகொட்டைகீரை...


தும்பைக்கீரை...


மணலிக்கீரை...


சக்ரவர்த்திக் கீரை...


தவசுக்கீரை


சாணக்கீரை...

இந்தக் கீரையின் புகைப்படம் கிடைக்கவில்லை...

விழுதிக்கீரை...


கொடி காசினி...


துயிளிக்கீரை...

இந்தக் கீரைக்கும் படம் கிடைக்கவில்லை. 

ஓமவல்லி அலைஸ் கற்பூரவல்லி கீரை...


துத்திக் கீரை...

 

வாதநாராயணன் கீரை...

காரகொட்டிக் கீரை, மூக்குதட்டை கீரை, நறுதாளி கீரை...

இந்த மூன்று வகையான கீரைகளுக்கும் படம் கிடைக்கவில்லை.

பொடுதலை இலைக்கீரை...

 

பண்ணைக்கீரை...

 

-இப்படி கிட்டத்தட்ட 42 வகைக் கீரைகளைப் பற்றி நாம் இங்கே தெரிந்து கொண்டிருக்கிறோம். இவற்றுள் 20 வகைக் கீரைகளை மட்டுமே வாரத்தில் இருமுறையோ, மூன்று முறையோ உணவாகப் பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சில வீடுகளில் குழந்தைகள் யாரும் கீரையே உண்பதில்லை. அப்படிச் சொல்வதைக் காட்டிலும் குழந்தைகளை பெரியவர்கள் உண்ணப் பழக்கவில்லை என்று சொல்லலாம். அப்படியான வீடுகளில் வாரம் ஒருமுறையோ 15 நாட்களுக்கு ஒரு முறையோ மட்டுமே கீரை சமைக்கப்படுகிறது. சமைத்த கீரையிலும் பெரும்பாலான பகுதி வீணடிக்கப் படுகிறது. ஏனெனில் சமைத்த கீரையை பிற காய்கறிகளைப் போல ஃப்ரிஜ்ஜில் வைத்துப் பயன்படுத்தக் கூடாது. அதில் நச்சுத்தன்மை மிகுந்து விடும் என்பதால் சமைத்து உடனே உண்ணத்தக்க உணவாகவே கீரை கருதப்படுகிறது.

குழந்தைகளுக்கு 6 ஆம் மாதம் முதலே கீரையை மசித்து சாப்பிடத் தந்து  பழக்க வேண்டும்.

கீரை வகைகளைப் வதக்கி உண்பதைக் காட்டிலும் மசித்து உண்டால் நிறைந்த பலன் கிடைக்கும், அதன் சத்துக்கள் வீணாவதைத் தடுக்கலாம்.

சிறுவர், சிறுமிகளுக்கு சிறு வெங்காயத்தை பொடியாக நறுக்கி, சீரகம், பச்சை மிளகாய், ஒன்றிரண்டு பூண்டுப்பல் இட்டு எண்ணெய் விட்டு வதக்கியும் தரலாம். ஆனால் எந்தக் கீரையாக இருந்தாலும் அதன் குக்கிங் டைம் அதாவது சமைக்கும் நேரம் 3 முதல் 5 நிமிடமாக மட்டுமே இருக்க வேண்டும். அதைக் காட்டிலும் அதிக நேரம் சமைத்தால் அதன் சத்துக்கள் கெடும் பின்னர் அந்தக் கீரையை உண்பதால் எந்தப் பலனும் கிட்டாது.

எனவே இன்று முதல் தினம் ஒரு கீரை என்ற மந்திரத்தை மனதில் ஒலிக்க விட்டு தினம், தினம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள கீரை வகைகளில் முதல் 20 ல் ஏதோ ஒரு கீரையை மசித்தோ, வதக்கியோ, சாம்பாரில் அல்லது காரக் குழம்பில் கலந்தோ சமைத்துக் கொடுத்து உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு உண்ணப் பழக்குங்கள்.

குழந்தைகளே கீரை சாப்பிட விரும்புவார்கள் எனில் நிச்சயம் பெரியவர்களுக்கும் அந்தப் பழக்கம் தானாக கைவந்து விடும். பிறகு சாப்பாட்டில் உப்பில்லாமல் கூட உண்டு விடுவார்களாயிருக்கும் ஆனால் கீரை இல்லாமல் மட்டும் உண்ணவே மாட்டோம் என்று பெருமிதமாகச் சொல்லிக் கொள்ளலாம்.

]]>
40 வகை கீரைகள், கீரை மகத்துவம், பச்சைத் தங்கம், மூலிகைக் கீரைகள், spinach varieties, 40 varies spinaches, indian spinaches, herbs, eatable indian spinaches, spinaches and its health benefits, கீரைகளும் அவற்றின் மருத்துவ பயன்களும் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/8/w600X390/keerai_shop.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/jun/08/inadian-spinach-verieties-how-many-of-spinaches-ypu-know-in-ypur-whole-life-2935686.html
2934969 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் போதைகள் பலவிதம்... இதில் உங்கள் போதை எந்த விதமானது? கண்டுபிடிங்க பார்க்கலாம்! கார்த்திகா வாசுதேவன் Thursday, June 7, 2018 04:06 PM +0530  

வாழ்க்கையில் பலவிதமான போதைகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் நம்மால் உடனடியாகப் பட்டியலிட்டு விட முடியாது. ஏனெனில் எவையெல்லாம் போதை எனக் கண்டுபிடிக்கவே நமக்கு சில ஆண்டுகள் தேவைப்படலாம். எதுவொன்று சாதாரண பழக்கமாகத் துவங்கி மீண்டும், மீண்டும் செய்யத் தூண்டி மீள முடியாத தொடர் செயலாகவும், அவஸ்தையாகவும் மாறுகிறதோ அதையே நாம் போதை என்கிறோம். அப்படிப்பட்ட போதைகளில் சுமார் 20 போதைகளைப் பற்றி நாம் இங்கு காண்போம்.

கண்டதும் காதல் போதை...

சிலருக்கு சிலரைக் கண்டதுமே காதல் உணர்வு வந்து விடும். ஆனால், அந்த உணர்வுக்கான ஆயுள் தான் வெகு குறைவாக இருக்கும். இவர்களது போதையே அந்த உணர்வை அடிக்கடி பெற விளைவது தான். இதற்குப் பெயர் தான் கண்டதும் காதல் போதை. இந்தக் காதல் வெற்றி பெற்றாலும் சரி தோற்றாலும் சரி அதற்கான ஆயுள் மட்டும் எப்போதும் குறைவே.

வெயில் போதை (டேனரெக்ஸியா)...

நம்மில் பெரும்பாலானோர் வெள்ளைக்காரர்களைப் பார்த்து, அவர்களைப் போல நமது தோலின் நிறம் இல்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம், ஆனால் அவர்களில் பலர் இந்தியர்களைப் போல பிரெளன் நிற சருமம் தங்களுக்கு இல்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டு தினமும் கடற்கரை வெயிலில் படுத்துப் புரண்டு தங்களது மேனி நிறத்தை குறைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்த செய்தியாகவே இருக்கலாம். இப்படி சன் பாத் எடுப்பது தினமும் இரண்டு முதல் மூன்று மணிநேரம் என்பது போல இயல்பாக இருந்தால் அது நார்மல் மனநிலை. அதே நாள் முழுவதும் சூரியன் உதித்து மறைவது வரை எல்லா நேரமும் சன் பாத் எடுத்துக் கொள்ளும் ஆவல் யாரையாவது ஆட்டிப் படைத்தால் அவர்களுக்கு டேனரெக்ஸியா இருக்கிறது என்று அர்த்தம். இதை தமிழில் சூரிய போதை அல்லது வெயில் போதை என்று சொல்லிக் கொள்ள வேண்டியது தான். 

இண்டர்நெட் போதை...

இப்போது அனைவரும் ஸ்மார்ட் ஃபோன்கள் பயன்படுத்துகிறோம். இதில் service provider காரர்கள் தரும் விதம் விதமான இணைய சலுகைகள் காரணமாக இப்போது இண்டர்நெட் என்பது யாருக்கும் அரிதான விஷயமல்ல என்றாகி விட்டது. எல்லோருக்கும் சோறு கிடைக்கிறதோ இல்லையோ நிச்சயமாக நீங்கள் நாட்டின் எந்த மூலையிலிருந்தாலும் சரி... மலைக்குன்றின் சிறு குகைக்குள் வாழ நேர்ந்தாலும் உங்களுக்கு இலவச இண்டர்நெட் நிச்சயம் கிடைக்கக் கூடும். விளைவு தினமும் குளித்துச் சாப்பிடுகிறோமோ இல்லையோ காலை கண்விழிப்பது முதல் இரவில் கண் அயர்வது வரை விடாமல் இண்டர்நெட்டில் புழங்கிக் கொண்டே இருக்கும் போதை பலருக்கு அதிகரித்திருக்கிறது. சிலர் வெளியில் ஒரு வாழ்க்கை, இண்டர்நெட்டில் இன்னொரு வாழ்க்கை என்று இரட்டை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களை இண்டர்நெட்டில் இருந்து பிரிக்க நினைத்தால் உயிரை வேண்டுமானால் தியாகம் செய்வார்களாயிருக்கும் ஆனால் இண்டர்நெட்டை விடமாட்டார்கள். இத்தகைய போதைக்குப் பெயர் தான் இண்டர்நெட் போதை.

மேக்அப் போதை...

இந்தப் போதை எல்லாப் பெண்களுக்கும் உண்டு என்று உடனே கருத்துச் சொல்லி யாருக்கும் முந்திரிகொட்டைகள் ஆகி விடவேண்டாம். இந்தப் போதை இப்போது ஆண்களுக்கும் தான் அதிகமிருக்கிறதாம். இம்மாதிரியான போதை இருப்பவர்கள் அடிக்கடி மேகப் செய்து கொள்வது என்ற நிலையிலிருந்து முன்னேறி சதா சர்வ காலமும் மேக் அப் பற்றிய நினைவிலேயே வாழ்வார்கள். உதாரணத்துக்கு சொல்வதென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சி பார்த்திருப்பீர்களே? அதில் ரைஸா என்றொரு மாடலும் கலந்து கொண்டிருந்தார். அவரை பிக் பாஸ் வீட்டில் பார்க்க நேரும் போதெல்லாம் கையில் மேக் அப் மிரரும் கையுமாகவே இருப்பார். எல்லா நேரங்களிலும் லிப்ஸ்டிக், ஃபேஸ் பேக், ஃபேஸ் க்ரீம், அட முகத்தில் அப்பிக் கொள்ள எதுவுமில்லையென்றால் சும்மா கண்ணாடியில் முகத்தை ஆராய்ந்து கொண்டிருப்பது மாதிரியான போதைக்குப் பெயர் மேக் அப் போதை. இந்த போதை பெரும்பாலும் நடிகைகள் மற்றும் மாடல்களுக்குத் தான் அதிகமிருக்கும் என்றும் சொல்ல முடியாது... ஸ்கூட்டர் முகப்பு மிரர், கார் கண்ணாடி, முதல் நமது தோற்றத்தை பிரதிபலிக்கக் கூடிய கண்ணாடி போன்ற எதைக் கண்டாலும் சுற்றுப்புற பிரக்ஞை இன்றி உடனே அவற்றை முகக்கண்ணாடிகளைப் போல பாவித்துக் கொண்டு தலை சீவிக் கொள்ளவோ, லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ளவோ தொடங்கினோமெனில் நமக்கும் மேக் அப் போதை இருக்கிறது என்று அர்த்தம்.

ஃபிட்னஸ் போதை...

ஃபிட்னஸ் இருக்க நினைப்பது ஆரோக்யமானது தானே... அதை எப்படி போதையில் சேர்க்கலாம் என்று தோன்றும். நிஜம் தான், தினமும் 2 மணி முதல் 3 மணி நேரம் வரை ஃபிட்னஸுக்கு ஒதுக்கினால் அது ஆரோக்யம். அதுவே தினமும் வேலை நேரம் போக மற்ற எல்லா நேரமும் ஜிம்மே கதி என்று கிடந்தாலோ அல்லது வாக்கிங், ஜாகிங், ஜூம்பா டான்ஸ், ஏரோபிக்ஸ் என்று பித்துப் பிடித்து திரிந்தாலோ அதன் பெயர் ஃபிட்னஸ் போதை. இந்த போதையை நம்மால் எளிதில் அடையாளம் காண இயலும். இப்படி சதா சர்வ காலமும் ஃபிட்னஸ் போதை நீடித்தால் அப்படிப்பட்டவர்களுக்கு குடும்பத்தினருடன், குழந்தைகளுடன் செலவளிக்க நேரமே இருப்பதில்லை. அதனால் அவர்கள் எளிதில் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்.

தூக்க போதை...

மனிதனின் அனுமதிக்கப்பட்ட தூக்க நேரம் 8 மணி முதல் 10 மணி நேரம் தான். அதையும் தாண்டி அதிக நேரம் சிலர் தூங்கலாம். அவர்களுக்கு நோய் அல்லது உடலில் அசெளகர்யங்கள் இருந்தால் அம்மாதிரியான நேரங்களில் மருந்துகளின் வீரியத்தில் 10 மணி நேரங்களுக்கும் மேலாக தூங்குவது இயல்பு. பிறந்த குழந்தைகள் எனில் அவர்களின் தூக்க நேரமும் பெரியவர்களிடமிருந்து நிச்சயம் மாறுபடும். அவையெல்லாம் இயல்பான தூக்க விகிதங்கள். ஆனால் எவ்வித உடல் அசெளகர்யங்களும் இன்றி ஒருவருக்கு தூக்கத்தின் மீது பெரு விருப்பம் இருந்து தினமும் 10 மணி நேரத்துக்கும் மேல் தூங்க விரும்புகிறார்கள் எனில் அவர்கள் மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனெனில் அதை தூக்கமென்று கருத முடியாது. அது தூக்க போதை என்பார்கள்.

சத்தானதை மட்டுமே உண்ணும் போதை (ஆர்தோரெக்ஸியா நெர்வோஸா)

இப்போது பலருக்கும் ஆர்கானிக் உணவுகளை மட்டுமே உண்ணும் போதை இருக்கிறது. அப்படி வாழ்வது நல்லது தானே? என்று பலருக்குத் தோன்றும். நல்லது தான். நல்லதை உண்டு, நல்லதையே பிறருக்கும் உண்ணத் தந்து வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளது. ஆனால் அந்த நல்ல தனத்துக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லை கடந்து சதா சர்வ காலமும் நான் சத்தான உணவை மட்டுமே உண்பேன், அப்படியான உணவு கிடைக்காத நேரத்தில் பட்டிணி கிடந்து நோவேனே தவிர பிற உணவுகளை உண்ணவே மாட்டேன் என்று விரதமிருப்பதன் பெயர் ஆர்தோரெக்ஸியா நெர்வோஸா எனும் குறைபாடு என்கிறது உளவியல். அதாவது நமக்கு வெகு ப்ரியமான உணவு என்றாலும் கூட பிற சுவையான உணவுகளை உண்ணாமல் தள்ளி வைப்பது இதில் அடங்கும்.

டாட்டூ போதை...

இப்போது பலருக்கும் உடலில் எந்தப் பாகத்தில் வேண்டுமானாலும் டாட்டூ (பச்சை குத்திக் கொள்வது) போட்டுக் கொள்வது ஒரு வகை போதையாகப் பரிணமித்துள்ளது. அது ஃபேஷன் தானே? அதை எப்படி போதை என்று சொல்ல முடியும்? என்கிறீர்களா? ஆம்... நீங்கள் ஃபேஷனுக்காக எப்போதோ ஒரு முறை டாட்டூ வரைந்து கொள்கிறீர்கள் என்றால் அது ஃபேஷன். ஆனால் அதே வேலையாக எந்தெந்த காலத்தில் எந்தெந்த டாட்டூ ட்ரெண்டிங் என்று பார்த்து அதை மாற்றி மாற்றி உடல் பாகங்களில் வரைந்து கொள்வதைப் பழக்கமாக வைத்திருந்தீர்கள் என்றால் உங்களுக்கு டாட்டூ போதை இருக்கிறதென்று அர்த்தம். 

பிகோரெக்ஸியா (தோற்றத்தைப் பற்றிய போதை)...

சிலர் நிறம் குறைவானவர்களாக இருப்பார்கள், சிலர் வெளுத்துப் போய் எப்போது பார்த்தாலும் சோர்வான தோற்றத்துடன் இருப்பார்கள். சிலர் அதீத உயரத்துடன் இருப்பார்கள், சிலர் குள்ளமாக இருப்பார்கள், குண்டாக இருப்பார்கள், வற்றலும், தொத்தலுமாக இருப்பார்கள் எல்லாமே தோற்ற அளவில் தான். அவர்களின் மன உறுதியிலோ, வேலைத்திறனிலோ எந்த விதமான குறைபாடும் இருக்காது. ஆனால் அவர்களோ மனதளவில் தங்களது தோற்றத்தைப் பற்றி மட்டும் சதா சர்வ காலமும் குறைபாட்டுடனே இருப்பார்கள், ஐயோ நாம் இன்னும் கொஞ்சம் உயரமாகப் பிறந்திருக்கக் கூடாதா? இன்னும் சற்று வெளுப்பாகப் பிறந்திருக்கக் கூடாதா? ஏன் நெட்டைப் பனைமரமாக வளர்ந்து நிற்கிறோம்? கொஞ்சம் நடுத்தர உயரத்துடன் இருந்திருக்கக் கூடாதா? என்றும் சிலர் சதா கவலைப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். இந்தக் கவலையானது சாதாரணமானதாக இருக்கும் வரை எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் அந்தக் கவலைகள் நம்மை கூனிக் குறுகச் செய்யும் அளவுக்கு இருந்தால் அதன் பெயர் பிகோரெக்ஸியா என்கிறது உளவியல். அதாவது தோற்றத்தைப் பற்றிய போதை.  

த்ரில் போதை...

சிலருக்கு வாழ்க்கையை த்ரில்லாக அனுபவிக்கும் ஆசை அதிகமாக இருக்கும். வாழ்க்கை முழுவதையுமே இப்படியான அட்வெஞ்சர் ஆசைகளின் மேலே தான் கட்டமைத்திருப்பார்கள். இப்படியானவர்களுடன் சேர்ந்து மனமொத்து வாழ்வதென்பது அவர்களின் வாழ்க்கைத்துணைகளுக்கு கடினமான காரியம். ஆனால் அட்வெஞ்சர் பித்துப் பிடித்து அலைபவர்களுக்கு குடும்பம், குழந்தைகள்,  மற்றும் வாழ்வின் மீதான ஏனைய கமிட்மெண்டுகள் குறித்தெல்லாம் பெரிதாக அக்கறை இருக்காது. பெரிதாக குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை இன்றி எப்போது பார்த்தாலும் பயணங்கள், அட்வெஞ்சரி விளையாட்டுக்கள் என்று அலைவார்கள். இவர்களுக்கு மிகப்பிடித்த விளையாட்டுகளாக ஸ்கீயீங், பாராகிளைடிங், ட்ரெக்கிங், டைடல் சர்ஃபிங், போன்றவை இருக்கும். இந்த விளையாட்டுக்களின் மீதான ஆர்வம் ஒரு கட்டுக்குள் இருக்கும் வரை பிரச்னை இல்லை. ஆனால், அந்த ஆர்வம் உயிரைப் பணயம் வைத்து ஆடும் அளவுக்கு தீவிரமானதாக இருந்தால் அவர்களுக்கு நிச்சயம் த்ரில் போதை இருக்கிறதென அர்த்தம்.

சூதாட்ட போதை...

மகாபாரத யுதிஷ்ட்ரர் முதல் இன்றைக்கு நெட்டில் சீட்டு விளையாடும் நவ யுக இளைஞர், இளைஞிகள் வரை அத்தனை பேருக்கும் இருக்கிறது சூதாட்ட போதை. வாழ்வே நிகழ்தகவாக இருக்கும் சூழலில் மொத்த வாழ்க்கையையும் பணயம் வைத்தாடும் இந்த சூதாட்ட போதை பலரது வாழ்வை நிர்மூலமாக்கி இருக்கிறது. சீட்டு விளையாடுவது மட்டுமே சூதாட்ட போதை அல்ல, கிரிக்கெட் பெட்டிங், குதிரைப் பந்தயம், புறாப் பந்தயம், சேவல் சண்டை, எல்லாமும் சூதாட்ட போதையில் சேர்ந்தது தான்.

ட்ரங்கோரெக்ஸியா (எடை குறைப்புக்கு உணவுக்குப் பதில் மது எனும் போதை)...

மது அருந்தினால் எடை குறையுமா? எடை குறைகிறதோ இல்லையோ பசி மந்தித்துப் போகும் என்பது உண்மை. அப்படி நினைத்துத் தான் மேலை நாடுகளில் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களும், கட்டுக்குள் வைக்க நினைப்பவர்களும் உணவு நேரத்தில் சாப்பாட்டை குறைத்து விட்டு அதை ஈடு செய்யும் விதத்தில் மது அருந்துகிறார்களாம். இப்படியான மனநிலையை அடைவதை உளவியலில் ட்ரங்கோரெக்ஸியா என்கிறார்கள். அதாவது உடல் எடையைக் குறைக்க உணவுக்குப் பதில் மது அருந்துவது.

ஷாப்பிங் போதை...

இதைப் பற்றி பெரிதாக விளக்கம் அளிக்கத் தேவை இராதென்று நினைக்கிறேன். குறிப்பிட்ட அளவுக்கு இந்த போதை நம் எல்லோருக்குள்ளும் உண்டு. வாங்க வேண்டியது ஒரே ஒரு பொருளாக இருக்கும். உதாரணத்துக்கு 100 ரூபாயில் தேங்காய் துருவி வாங்கலாம் என சூப்பர் மார்க்கெட் சென்று விட்டு அங்கிருந்து திரும்பி வருகையில் 1000 ரூபாய்க்கும் மேலாக செலவளித்து மேலும் சில பொருட்களை அள்ளிக்கொண்டு வருவோம். இங்கே நமது அப்போதைய தேவை தேங்காய் துருவி மட்டுமே, ஆனால், தேவையை மீறி நாம் வேறு சில பொருட்களையும் வாங்கிக் குவித்திருப்போம். அதற்குப் பெயர் தான் ஷாப்பிங் போதை. இதை எல்லாவிதமான ஷாப்பிங்கிலும் நாம் பின்பற்றுவோம். ஃப்ரிஜ் வாங்கலாம் என்று ஹோம் அப்ளையன்சஸ் கடைக்குள் நுழைந்து விட்டு ஃப்ரிஜ் மட்டும் வாங்காமல் அதனோடு சேர்த்து இண்டக்ஸன் ஸ்டவ், மைக்ரோ வேவ் ஓவன், ஹேர் ட்ரையர், அயர்ன் பாக்ஸ் என்று சில உதிரிப் பொருட்களையும் அள்ளிக் கொண்டு வருவோம். துணிக்கடை ஷாப்பிங் பற்றி சொல்லவே வேண்டாம். 1000 ரூபாய்க்கு ஒரே ஒரு உடை வாங்க உள்ளே நுழைந்து விட்டு கடையை விட்டு வெளியே வருகையில் 10,000 க்கும் மேல் பர்ஸை பழுக்க வைத்திருப்போம். இதற்குப் பெயர் தான் ஷாப்பிங் போதை. நமது தேவை என்ன என்பதை உணராமல் பொருட்களை வாங்கிக் குவிக்கும் இந்த போதை பலரை குற்ற உணர்ச்சியில் ஆழ்த்தக் கூடியதாக இருக்கிறது.

வொர்க்கஹாலிக் போதை...

சிலர் வேலையில் இறங்கி விட்டார்கள் என்றால் அவர்களை யாராலும் திசை திருப்ப முடியாது. சரியான கடுவன் பூனைகளாக முகத்தை வைத்துக் கொண்டு அப்படியே முற்று முழுதாக தங்களது வேலையில் மூழ்கிப் போய் விடுவார்கள். சாப்பாடு, தூக்கம், இயற்கைக் கடன் கழிப்பது, நண்பர்களுக்கு ஹாய், பை சொல்வது, புன்னகைப்பது, குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது. மனைவியிடம் ரொமான்ஸ் செய்வது, பெற்றோர்களுடன் கரிசனையாக நேரம் செலவிடுவது எல்லாவற்றையுமே மறந்து விடுவார்கள். அவர்களுக்கு அப்போதைய ஒரே நட்பு அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலை மட்டுமே. இம்மாதிரியான மனநிலை அவசர காலகட்டங்களில் அதாவது முக்கியமான வேலைகளை முடித்துக் கொடுக்கும் நேரங்களில் மட்டும் இருந்தால் அது சாதாரணமானது. ஆனால் இதே மனநிலை சதா சர்வ காலமும் நீடிப்பதன் பெயர் வொர்க்கஹாலிக் போதை.

சோஷியல் மீடியா போதை...

நாமெல்லாம் இந்த பாழும் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்... ஆனால் இந்த சோஷியல் மீடியா போதை பிடித்த மனிதர்கள் இருக்கிறார்களே அவர்கள் வாழ்வதும் இந்த பூமியில் தானென்றாலும் அந்த நினைப்பே அவர்களுக்கு இருக்காது எனும் வகையில் 24 மணி நேரமும் ஃபேஸ் புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், மெசஞ்சர் சாட் என்று உலவிக் கொண்டிருப்பார்கள். அவர்களோடு நீங்கள் நட்பு வைத்துக் கொள்ள விரும்பினால் நேரில் சென்று பார்த்துப் பேசி நட்பாக முடியாது. அவர்கள் உலவும் சோஷியல் மீடியாக்கள் ஏதாவதொன்றில் நீங்களும் மெம்பராகி அவர்களைப் பின் தொடர்ந்து நட்பு வட்டத்தில் இணைந்து அவர்கள் பகிரும் மொன்னை ஸ்டேட்டஸ்களுக்கெல்லாம் லைக்குகள் இட்டு வாவ், ஃபெண்டாஸ்டிக், இட்ஸ் டிவைன், க்யூட், நைஸ், லால் (lol) என்றெல்லாம் கமெண்டுக்கள் இட்டீர்களெனில் அவர்கள் உங்களுக்கு எளிதில் நட்பாகி விடுவார்கள். இந்த போதைக்குப் பெயர் தான் சோஷியல் மீடியா போதை.

ஸ்மார்ட் ஃபோன் போதை...

நீங்கள் எங்கே வேண்டுமானாலும் காத்திருக்கலாம், அது மருத்துவமனையோ, சூப்பர் மார்க்கெட்டோ, சினிமா தியேட்டரோ, பஸ் ஸ்டாண்ட்டோ, கேண்ட்டீனோ, எங்கே வேண்டுமானாலும் இருக்கலாம் உங்கள் விரல்கள், நேரம் கிடைத்தால் போதும் உடனே ஸ்மார்ட் ஃபோனை எடுத்து நோண்டத் தொடங்கி விடுகிறது எனில் நிச்சயம் உங்களுக்கு ஸ்மார்ட் ஃபோன் போதை இருக்கிறதென்று அர்த்தம். சுருங்கச் சொல்வதென்றால் டிராஃபிக் சிக்னலில் காத்திருக்க நேரும் அந்த மீச்சிறு நொடிகளைக் கூட வீணாக்க விரும்பாமல் எவரெல்லாம் ஸ்மார்ட் ஃபோனில் நேரம் செலவிடத் துடிக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் பீடித்திருக்கிறது ஸ்மார்ட் ஃபோன் போதை.

காஃபி போதை...

காலையில் ஒரு காஃபி, மாலையில் ஒரு காஃபி இடையில் ரெஃப்ரெஷ் செய்து கொள்ள ஒரு காஃபி என்று மூன்று காஃபிகள் அருந்துவதொன்றும் பிழையல்ல. ஆனால், சிலருக்கு காஃபி பித்து தலைக்கேறி இருக்கும். நினைக்கும் போதெல்லாம் காஃபி அருந்தியாக வேண்டும். இல்லாவிட்டால் தலைவலி வரும், காஃபி கிடைக்காத கோபத்தை காட்டுக் கத்தலில் தீர்த்துக் கொள்வார்கள் அல்லது தனக்குக் கீழ் பணிபுரிபவர்களை வறுத்து எடுத்து விடுவார்கள். எது எக்கேடு கெட்டாலும் அவர்களுக்கு தங்கு தடையின்றி காஃபி கிடைப்பதில் மட்டும் எவ்விதச் சிக்கலும் வந்து விடக்கூடாது. இப்படியொரு மனநிலை இருந்தால் அவர்களுக்கு காஃபி போதை இருக்கிறதென்று அர்த்தம்.

எளிதில் சலிப்படையும் விதமான போதை (இதைத்தான் ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்கிறார்களோ?!)

சிலர் மிகத்தீவிரமாக ஒரு விஷயத்தில் இறங்குவார்கள். அது காதலாக இருக்கலாம், வேலையாக இருக்கலாம், அல்லது புது நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளும் ஆர்வமாக இருக்கலாம், புது கல்விமுறையைத் தேர்வு செய்வதாக இருக்கலாம், ஏன் புதிய தொழில் துவங்கும் முயற்சியாகக் கூட இருக்கலாம். ஆரம்பத்தில் எல்லாம் ஜோராக இறங்குவார்கள். ஆனால் எல்லாம் சில நாட்கள் வரை தான். பிறகு படிப்படியாக தாங்கள் எதைத் தொடங்கினார்களோ அதில் சலிப்புற்று வெறுக்கத் தொடங்கி வெகு எளிதாக அதிலிருந்து வெளியில் வந்து விடுவார்கள். இம்மாதிரியான மனநிலை கொண்டவர்கள் எந்த விஷயத்திலும் உறுதியாக இருக்க மாட்டார்கள். இவர்களை நம்பி எதில் இறங்குவதும் ஆபத்தில் முடியலாம்.

விடியோ கேம் போதை...

இது கிட்டத்தட்ட சூதாட்ட போதை, ஸ்மார்ட் ஃபோன் போதை, இண்டர்நெட் போதை போன்றதே. சதா சர்வ காலமும் விடியோ கேம் ஆடிக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்குள் ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி இருக்கும். எப்படி இண்ட்டர்நெட் கேம் ஷோக்களில் பல கேரக்டர்களை ஒருவரே கையாண்டு விளையாடுகிறாரோ அதே போல இவர்கள் வாழ்க்கையையும் கையாளத் தொடங்குவார்கள். அதனால் இவர்களின் இயல்பான குணநலன்கள் பாதிக்கப்பட்டு பிறகு முற்றாக அழிந்து கேம் ஷோ கதாபாத்திரங்களை இமிடேட் செய்யத் தொடங்கி விடுவார்கள். இந்த தாக்கத்தை தான் விடியோ கேம் போதை என்கிறார்கள்.

சென்ட்டிமெண்ட் போதை...

சிலருக்கு அம்மா வாங்கித் தந்த புடவையோ, மோதிரமோ, அப்பா வாங்கித் தந்த விலையுயர்ந்த இம்போர்டெட் பேனாவோ, இல்லை ப்ரியமான நண்பர்கள் அளித்த கிஃப்டுகளோ, பொம்மையோ, குட செண்ட்டிமெண்ட்டாக இருக்கலாம். அதை எப்போதும் பிரிய விரும்பமாட்டார்கள். மாமா பெண்ணொருத்திக்கு குளிக்கும் நேரம் தவிர பிற எல்லா நேரங்களிலும் வாட்ச் அணிந்து கொள்ளும் பழக்கம் இருந்தது. அது பழக்கமாக இருந்த வரை பிரச்னையில்லை. அந்த வாட்ச் ரிப்பேராகி மீண்டும் புது வாட்ச் வாங்கும் காலம் வரை அந்த இடைப்பட்ட ஓரிரு நாட்களில் அவளடித்த கூத்தை நினைத்தால் இப்போதும் சிரிப்பு வருகிறது. அவளால் அந்த வாட்ச் ரிப்பேர் ஆனதை ஒப்புக் கொள்ளவே முடியவில்லை, அதற்குப் பதிலாக வேறு வாட்ச் அணியவும் பிடிக்கவில்லை. நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்பது போல எனக்கு அந்த வாட்ச் தான் வேண்டும், ரிப்பேர் ஆனாலும் பரவாயில்லை அதையே சரி செய்து மீண்டும் பழைய மாதிரி எனக்குத் தாருங்கள் என்று அவள் மிக மூர்க்கமாக அடம்பிடிக்கத் தொடங்கி விட்டாள். இதற்குப் பெயர் தான் செண்ட்டிமெண்ட் போதை. இம்மாதிரியான போதைகள் அவற்றின் எல்லைகளைக் கடக்கும் போது மனிதர்களிடையே பிடிவாதமும், மூர்க்கத்தனமும் அதிகரித்து விடுகிறது. இது அவர்களது மனநலனுக்கு உகந்ததல்ல.

மேலே பட்டியலிடப்பட்டுள்ள போதைகளில் எந்தெந்த விதமான போதைகள் எல்லாம் நமக்கும் இருக்கிறது என்று அலசி ஆராய்ந்து கண்டுபிடித்து அந்த போதைகளைச் சரியாக கையாளப் பழகுங்கள். இம்மாதிரியான போதைகள் கட்டுப்பாட்டை இழந்து விட்டால் வருவது தான் தீவிர மன உளைச்சலும், மனச்சிதைவும், ஃபோபியாக்களும் எனவே அவற்றை கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் மனநல மருத்துவரை அணுகித் தேவையான வழிகாட்டுதல்களைப் பெற வேண்டியது அவசியமாகிறது.

]]>
20 type of addictions, 20 மீள முடியாத போதைகள், அடிமைத்தனம், வியக்கத்தக்க போதைகள் 20, various types of addictions http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/7/w600X390/shopping_addiction.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/jun/07/போதைகள்-பலவிதம்-இதில்-உங்கள்-போதை-எந்த-விதமானது-கண்டுபிடிங்க-பார்க்கலாம்-2934969.html
2934222 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் நீட் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி கல்பனா குமாரி! RKV DIN Wednesday, June 6, 2018 11:10 AM +0530  

மே 6-ல் நடந்த இந்த நீட் தோ்வு நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் பேர் எழுதினா். மேலும், தமிழகத்தில் மட்டும் சுமார் 1.03 லட்சம் மாணவா்கள் நீட் தோ்வு எழுதியுள்ளனா். தமிழ் மொழியில் சுமார் 24,720 பேர் எழுதி  இருந்தனர். தமிழகத்தில் மொத்தம் 1.7 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர்.

இந்தநிலையில் தேர்வு முடிவு பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 12.30 மணிக்கே வெளியிடப்பட்டுள்ளது. 

நீட் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற தளத்தில் சிபிஎஸ்இ வெளியிடப்பட்டது.  நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வில் 691 மதிப்பெண் முதல் மதிப்பெண்ணாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓ.சி பிரிவுக்கு 119, ஓபிசி, எஸ்சி.எஸ்டி பிரிவுக்கு 96 மதிப்பெண் தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

180 கேள்விகள். தலா 4 மதிப்பெண்கள் என 720 மதிப்பெண்களுக்கு ‘நீட்’ தேர்வு நடைபெற்றது.  நீட் தேர்வில் 720க்கு 691 மதிப்பெண் எடுத்து பிகார் மாநிலம் சியோகர் நகரத்தைச் சேர்ந்த மாணவி கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இயற்பியலில் 180க்கு 171, வேதியியலில் 180க்கு 160, உயிரியல், விலங்கியலில் 360க்கு 360 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

நீட் தேர்வில் முதலிடம் பெற்றுள்ள மாணவி கல்பனா, தினமும் 13 மணி நேரம் நீட் தேர்வுக்காக தான் பயிற்சி பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.

17 வயது கல்பனா சியோகரில் இருக்கும் YKJM கல்லூரியில் 12 ஆம் வகுப்பை முடித்த பின் டெல்லிக்குச் சென்று அங்கு மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதுவதற்குப் பிரத்யேக பயிற்சி பெற்றுள்ளார். 

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் நீட் தேர்வுக்காக தான் மிகவும் சிரமப்பட்டு பயிற்சி எடுத்துக் கொண்டதாகக் கூறும் மாணவி கல்பனா, ‘நான் தேர்வை நல்லமுறையில் எழுதியுள்ளதாக நினைத்து சந்தோசப் பட்டேனே தவிர நீட் தேர்வில் முதலிடம் பெறுவேன் என்றெல்லாம் எதிர்பார்த்திருக்கவில்லை, இது எனக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி’ என்றும் தெரிவித்திருக்கிறார்.

மாணவி கல்பனாவின் தந்தை ராகேஷ் மிஸ்ரா ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகவும், தாயார் மம்தா குமாரி அரசுப் பள்ளி ஆசிரியையாகவும் பணியாற்றி வருகிறார்கள்.
 

]]>
நீட் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி, கல்பனா குமாரி, பிகார், NEET TOPPER 2018, KALAPANA KUMARI, BIHAR, http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/6/w600X390/neet_topper_kalpana_kumari.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/jun/06/neet-topper-from-bihar-kalpana-kumari-studied-13-hours-a-day-2934222.html
2933624 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் பசுமைப் பொருளாதாரம் என்றால் என்ன? ரஞ்சனி நாராயணன் Tuesday, June 5, 2018 06:00 PM +0530  

மனித இனத்தின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொண்டு, சமச்சீரான சமுதாயம் அமைய உருவாக்கப்படும் பொருளாதார திட்டங்கள் நமது சுற்றுச்சூழலை பேணிக் காப்பதாகவும், பூமியின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதகவும் இருக்கவேண்டும். இவற்றின் அடிப்படையில் அமையும் பொருளாதாரம் தான் ‘பசுமைப் பொருளாதாரம்’. இது ஏதோ நான்கு சுவர்களுக்குள் சிலர் உருவாக்கும் திட்டங்கள் அல்ல; நீங்களும், நானும், இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனும் உளப்பூர்வமாக இணைந்து செயலாற்ற வேண்டிய திட்டங்கள்.

எந்தெந்தத் துறைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று யுனைடெட் நேஷன்ஸ் இணையதளம் 10 துறைகளைக் குறிப்பிடுகிறது:

கட்டுமான துறை: கட்டுமானப் பணிகளால் உலகின் வளங்களும் பருவ நிலைகளும் மிகவும் பாதிக்கப் படுகின்றன. காட்டு மரங்களை வெட்டுவதற்கு பதிலாக அந்தந்தப் பகுதியில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தண்ணீர் மற்றும் மின்சாரத்தை திறமையான முறையில் பயன்படுத்தி உறுதியான கட்டிடங்களை கட்டுவது நம் கையில் இருக்கிறது.

மீன்வளத்துறை: கடல் உணவு ருசிகரமானது; ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் அளவுக்கு மீறி மீன் பிடிப்பது எதிர்காலத்தில் மீன்களே இல்லாத நிலைமையை உண்டாக்கும். நமது நாக்கின் சுவைக்காக அரிதான மீன் வகைகளை வேட்டையாடாமல் இருப்பது; மீன்கள் குறைவாகக் கிடைக்கும் இடங்களில் மீன் பிடிக்காமல் தவிர்ப்பது போன்ற முறைகளை கடைப்பிடிக்கலாம்.

வனத்துறை: காட்டை அழிப்பது பெரும் குற்றம். விலங்கினங்கள் மட்டுமன்றி பல்லாயிரக்கணக்கான தாவர இனங்கள், அவற்றை நம்பி வாழும் மனிதர்களும் பாதிக்கப் படுகிறார்கள் இந்தக் காட்டு அழிப்பால். காட்டு விலங்குகளை அவற்றின் தோலுக்காகவும், இறைச்சிக்காகவும் வேட்டை ஆடுவதும் தவறு. இந்த பூமி நமக்கு மட்டுமல்ல; விலங்கினங்கள், தாவர இனங்களுக்கும் சொந்தமானது.

காகிதத்திற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வெட்டி சாய்க்கப் படுகின்றன என்பது வேதனைக்குரிய விஷயம். காகிதத்திற்கு பதில் மின்னணு கோப்புகளைப் பயன்படுத்தலாம்.

போக்குவரத்துத் துறை: நீங்கள் மட்டும் உங்கள் கப்பல் போன்ற காரில் செல்லுவது சுற்றுச்சூழலுக்கும், உங்களது பொருளாதாரத்திற்கும் நல்லதல்ல; நீங்கள் தனித்தும் விடப்படுகிறீர்கள். மற்றவர்களுடன் காரில் செல்லும்போது எரிபொருள் மிச்சம் ஆகிறது; உங்கள் நண்பர் குழாம் விரிவடைகிறது. சுற்றுச்சூழல் வாழ உங்கள் பங்கை ஆற்றிய மனத் திருப்தியும் கிடைக்கும். அருகில் இருக்கும் இடங்களுக்கு காலாற நடந்து போகலாம்; அல்லது சைக்கிளில் செல்லலாம்; உடற்பயிற்சியும்  ஆயிற்று; உடலும் உள்ளமும் பலம் பெறவும் வழி செய்தாயிற்று! ஒரு கல்லிலே இரண்டு மாங்காய்கள்!

நீர் வளத்துறை: உலகெங்கிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சுத்தம் செய்யப்பட்ட குடி நீர், மேம்படுத்தப் பட்ட சுகாதார வசதி இல்லாமல் தவிக்கிறார்கள். ஜனத்தொகை அதிகமாக அதிகமாக, இந்தப் பிரச்சினை வளர்ந்து கொண்டுதான் போகும். குழாயை வெகு வேகமாகத் திறக்காமல் நிதானமான அளவில் திறந்து நீரை பயன்படுத்திய உடன்  மூடவும். போதுமான அளவு துணிகள், பாத்திரங்கள் சேர்ந்த பின் அவற்றிற்கான இயந்திரங்களைப் பயன்படுத்தவும். இருக்கும் வளங்களை திறமையாகக் கையாளுவது நம் கையில் இருக்கிறது.

உழவுத் துறை: உங்களுக்கு தேவையான காய்கறிகளை நீங்களே வளர்ப்பது புத்திசாலிதனம். இல்லாத போது, அந்தந்தப் பகுதியில் விளையும், அந்தந்த பருவத்தில் கிடைக்கும் காய்கறிகளை சாப்பிடுவது ஒருபடி மேலான புத்திசாலித்தனம்.

எரிசக்தித் துறை: நாம் தற்சமயம் பயன்படுத்தும் எண்ணெய், நிலக்கரி, எரிவாயு ஆகியவை நிலைத்து நிற்கக்கூடியவை அல்ல. புதுப்பிக்கக் கூடிய எரிசக்திகளை உருவாக்க உங்கள் ஆதரவைக் கொடுங்கள்; அதில் முதலீடு செய்யவும் முன் வாருங்கள். தேவை இல்லாத போது மின்விளக்குகளை அணைக்கவும்; வீட்டு உபயோகப் பொருட்களை பயன்படுத்தாத சமயம் மின் துண்டிப்பு செய்து வையுங்கள்.

சுற்றுலாத்துறை: ஒரு குழுவாக பிரயாணம் செய்வது நல்லது. நீரையும், எரிபொருளையும் சிக்கனமாக உபயோகியுங்கள். நீங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் நீங்கள் சாப்பிட்ட மிச்ச மீதிகளையும், ப்ளாஸ்டிக் பைகளையும் போட்டுவிட்டு வர வேண்டாம்.

கழிவுப் பொருட்கள்: எந்தப் பொருளையும் தூக்கி எறிவதற்கு முன், அதை திரும்பவும் பயன்படுத்த முடியுமா என்று யோசிக்கலாம். வீட்டுக் கழிவுகளை – மக்கும் பொருட்களை உரமாக மாற்ற தனியாகவும், மறுசுழற்சிக்கு ஏற்றவற்றை ஒருபுறமும  இனம் பிரித்து வைப்பது சாலச்சிறந்தது.

உற்பத்தி துறை மற்றும் தொழிற்சாலை: சுற்றுச்சூழலை மாசு படுத்தும் இவைகள் தான் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. தொழிற்சாலைக் கழிவுகளை சுத்தம் செய்து வெளியேற்றுவது சுற்றுச் சூழலை மேம்படுத்த உதவும். தொழிற்சாலைகள் புதுப்பிக்கக் கூடிய எரிபொருள்களை பயன்படுத்தியும், அவைகளை தயாரிப்பதில் முதலீடு செய்வதும் சுற்றுச்சூழலில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

ஸ்காட்லாந்து தேச செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஒரு கருத்தின்படி டைனோசர்களின் அழிவுக்கு காரணம்: அவைகளின் பழக்க வழக்கங்கள் தான். அவைகள் அளவுக்கு மீறி பச்சை தாவரங்களை தின்று தீர்த்ததால், மீத்தேன் அளவு அதிகரித்து அதன் விளைவாக பூமியின் வெப்பம் அதிகரித்தது அவை அழிந்தே போயின.

நாம் மனிதர்கள்; கட்டாயம் டைனோசர்களை விட புத்திசாலிகள். நம் அழிவை நாமே தேடிக்கொள்ளக் கூடாது இல்லையா?

இந்த சுற்றுச்சூழல் தினத்தில் ‘பூமியின் வளங்களுக்கு நாம் மிகச்சிறந்த பாதுகாவலர்களாக இருப்போம் என்ற உறுதி மொழியையும் எடுத்துக் கொள்ளுவோம்.

]]>
Go green economy, green economy, பசுமைப் பொருளாதாரம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/5/w600X390/0000green_economy.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/jun/05/what-you-mean-by-go-green-economy-2933624.html
2931192 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் நீங்கள் சாப்பாட்டுப் ப்ரியரா? இதையெல்லாம் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்! சினேகா Friday, June 1, 2018 12:06 PM +0530  

தினமும் மூன்று வேளை அல்லது எத்தனை வேளை வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் எப்படி சாப்பிட வேண்டும் என்பது மிகவும் முக்கியம். சாப்பிட உட்காரும் பொழுதிலிருந்து சாப்பிட்டுக் கைகளை கழுவும் வரை சில நடைமுறைகள் கடைப்பிடிப்பது நல்லது.

சாப்பிடும் முன் முதலில் கை, கால், வாய் ஆகியவற்றை தண்ணீரில் கழுவ வேண்டும். காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே சாப்பிடத் தொடங்கிவிட வேண்டும்.

உங்களுக்கு வயிற்றுப் பொருமல் இருந்தாலோ பசி இல்லாத நிலையிருந்தாலோ சாப்பிட வேண்டாம். எப்போது நன்றாக பசிக்கிறதோ அப்போது சாப்பிட்டால் போதும். 

சாப்பாடு பரிமாறுபவர்கள் இலை அல்லது தட்டில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது. 

சாப்பிடும் போது சத்தமாகப் பேசக் கூடாது, முடிந்தால் மெளனமாக சாப்பிடுதல் நல்லது. புத்தகங்களைப் படிக்கக் கூடாது. டிவி மொபைல் ஆகியவற்றை நோக்காமல் தட்டைப் பார்த்து ரசித்து ருசித்து நன்றாக மென்று உணவை உட்கொள்ள வேண்டும்.

சாப்பிடுகையில் இடது கையை கீழே ஊன்றியபடி சாப்பிடக்கூடாது.

செருப்பு அல்லது ஷூ அணிந்தபடி சாப்பிடக் கூடாது.

அந்தி சந்தி வேளைகளில் சாப்பிடக் கூடாது. அதாவது காலையில் சூரிய உதயத்தின் போதும், மாலையில் அது மறையும் போதும் உணவினைத் தொடக் கூடாது.

உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். தயவுசெய்து வலைத்தளம், செல்ஃபோன் உள்ளிட்ட சாதனங்கள் அப்போது வேண்டாமே!

இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து உட்கார்ந்து சாப்பிடக் கூடாது.

வெளிநாட்டவரிடமிருந்து நாம் பழகிய பஃப்பே சிஸ்டம் ஒத்துவராது. ஒருபோதும் நின்று கொண்டு சாப்பிடவே கூடாது.

உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கும் போதோ, கோபமான மனநிலையிலோ உணவை சாப்பிடாதீர்கள். அது உடல்நலத்துக்கு கேடு.

சாப்பிடும்போது தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் சாப்பிடக் கூடாது. தட்டை கையில் ஏந்தியபடி சாப்பிடாதீர்கள். தரையில் வட்டிலை வைத்து சாப்பிடுவதே நல்லது.

தட்டை வழித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை நக்கி சாப்பிடுவதும் நாகரிகமான செயல் அல்ல. மேலும் சாப்பிடும் போது உணவு ருசியாக இருக்கிறதே என்று அதிகமாக சாப்பிடக் கூடாது. வயிறு புடைக்க மூச்சு முட்ட ஒருபோதும் சாப்பிடக் கூடாது. 

சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்த பின்னரே பழங்களை சாப்பிட வேண்டும். உணவுடன் ஒரே நேரத்தில் பலவித பழங்களைச் சேர்த்து ஒன்றாகச் சாப்பிடக் கூடாது. 

எச்சில் தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது. 

இரவு நேரத்தில் கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய், இஞ்சி, முட்டை மற்றும் செரிமானம் ஆக கடினமான உணவுப் பொருட்கள் எதையும் சாப்பிடக் கூடாது.

]]>
food, உணவு, சாப்பாடு, foodie, how to eat http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/1/w600X390/soru.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/jun/01/certain-basic-food-practices-2931192.html
2930545 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் திட்டமிடு, வெற்றி பெறு! சுகி. சிவம் Thursday, May 31, 2018 05:09 PM +0530 நீ... நான்... நிஜம்! -20

பொதுவாக உலகியல் வாழ்வில் வளர, முன்னேற, சமய உணர்வு, இந்திய சமயக் கோட்பாடுகள் பெருந்தடை என்று நாத்திகர்களும் பொதுவுடைமைவாதிகளும் குற்றம் சொல்வதுண்டு. இந்தியா போதுமான முன்னேற்றம் பெறாமைக்கே நமது சமயம் சார்ந்த வாழ்வியல் தான் காரணம் என்று நாத்திகர்கள் உறுதிபட நம்புகிறார்கள். நிலையாமை, மரணம் மீதானபயம், சாமியார்த்தனமான துறவுச் சிந்தனைகள், பொருட்பற்றைக் கண்டிக்கும் போக்கு இவை சமயத்தின் ஒரு பகுதி. ஆனால் மறுபகுதி வெகு மதிப்புக்குரியது. உலகியல் வெற்றிக்கும் உறுதுணையாவது.

திட்டமிடுதல், வெற்றி பெறுதல் என்பதை இந்தப் பிறவியுடன் நிறுத்தும் பொருள் முதல் வாதிகளைத் தூக்கிச் சாப்பிட்டது மெய்ஞானம். அடுத்த பிறவி, தொடர்பிறவிகள் வரை இன்றைய திட்டம், எண்ணம், செயல், எப்படி பாதிக்கிறது என்று ஆன்மிக உலகம் பேசத் தொடங்கியது. வினை - எதிர்வினை என்று பேசியது. அடுத்த ஊர் போக முன்னதாகவே திட்டமிடு என்ற உலகியலை விழுங்கி அடுத்த உலகம் (மோட்சம்?) மறுபிறவி என்றெல்லாம் யோசிக்க வைத்தது மெய்ஞானம். மரணம் வரை சுய முன்னேற்றவாதிகள் பேசியதை மரணம் தாண்டியும் கொண்டுபோகிறது ஆன்மிகம். "அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்' என்ற ஆழ்வார்வாக்கை சுயமுன்னேற்றப் பாடத்திட்டத்தில் சேர்க்க முடியாதா என்ன? ஐந்து பொறிபுலன்களும் தளர்ந்து அறிவு கலங்கி மரணம் நிகழும் போது, இறைவா உன்னை நினைக்க அழைக்க முடியாமல் போகும் எனவே நன்றாக இருக்கும்போதே Advance Booking பாணியில் ஆண்டவன் அருளை Reserve செய்து கொண்ட மகான்களை திட்டமிடாதவர் என்றா சொல்லமுடியும்? இவர்களைவிட முன்கூட்டி யார் திட்டமிட முடியும்? யோசியுங்கள்.

மனிதவள ஆலோசகர் அமரர் திருப்பத்தூர் சந்திரசேகர், மதம் வளர்க்கும் மங்கை மாதா அமிர்தானந்தமயி இருவரும் தங்கள் தங்கள் கருத்துக்களை விளக்க ஒரே கதையைக் கையாண்டிருப்பதை நான் சொல்லட்டுமா? நல்ல கதை...
ஒரு வித்தியாசமான நாடு. வருடம் ஒரு முறை புதிய அரசர் தேர்ந்தெடுக்கப்படுவார். ராஜ வாழ்வு... ஏகக் கொண்டாட்டம். யானை மாலை போடுவதன் மூலம் எந்தப் பிரஜையும் அரசராகி விடமுடியும். (பொதுத் தேர்தலில் மட்டும் வேறுகதையா என்ன?) ஆனால் ஒருவருடம் முடிந்ததும் அரசரைப் படகில் ஏற்றி நதியில் கொண்டுபோய் தொலைதூரவனத்தில் கொடுங்காட்டில் விட்டு விடுவார்கள். புலி, சிங்கம், பாம்பு என்று கொடிய விலங்குகளுக்கு ராஜ போஜனம் மகா ராஜா... அப்படி வழக்கம் போல தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் பதவிக்காலம் முடிந்து படகில் ஏற்றப்பட்டார். பலரும் வருந்தினர்... படகோட்டி உட்பட "மகாராஜாவை மரணவாசலுக்கு அனுப்புகிறோமே' என்று மனம் வருந்தினார். அரசர் மட்டும் ஏக மகிழ்ச்சியுடன் வந்தார். ""ஓர் அரசர் போகிற படகா இது.. படகுக்கு அலங்காரம் போதாது.. இன்னும் அலங்கரியுங்கள்'' என்று ஆணையிட்டார். வெற்றிப் புன்னகையுடன் கையசைத்து படகில் புறப்பட்டார். மவுனம் கலைத்த படகோட்டி, ""நான் பல மகாராஜாக்களை வழி அனுப்பி இருக்கிறேன். தாங்கள் மரணத்தீவுக்குப் பயணிக்க அஞ்சவில்லையா?'' என்றான். மகாராஜா சிரித்தபடி, ""இந்த ஒருவருடம் நான் என்ன செய்திருக்கிறேன் என்று தெரியாமல் பேசுகிறாய். நமது படை வீரர்களை எப்போதோ அங்கு அனுப்பி காட்டை அழித்து நாடாக்கி விட்டேன். வளமான நாடு என் தலைமைக்காக அங்கே தயாராக உள்ளது... நீ வருவதானால் என்னுடன் வா!'' என்றார். இந்தக் கதையைக் கூறி, ""இந்த ஜன்மத்திலேயே அடுத்த ஜன்மத்திற்குப் புண்ணியம் செய்... தயாராகு'' என்கிறார் மாதா அமிர்தானந்தமயி. "நிகழ்காலத்தில் எதிர்கால வாழ்வுக்குத் திட்டமிடு பாடுபடு' என்ற செய்திக்கு மேற்கோள் காட்டுகிறார் மனிதவள ஆலோசகர். எனவே சமயம் வளர்ச்சிக்குத் தடையானது என்கிற ஓலத்தை நான் நிராகரிக்கிறேன். சமயம் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டால் இக பர செüபாக்யமே இறை உணர்வின் தகுதி என்பது புரியும். இப்போது "ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து' என்ற குறளைப் படித்தால் விண்கலப் பயணம் விண்ணுலக மோட்சம் இரண்டுக்கும் அந்தக் குறள் பொருந்துவதை உறுதி செய்வீர்கள்.

இப்போது மீண்டும் ஐன்ஸ்டீனைப் பற்றி நான் சொல்ல வேண்டி உள்ளது. பிரபஞ்சம் பெருவெளி குறித்து அவர் துல்லியமாக ஆராய்ந்து சொன்னபோது அவரது சார்பியல் கொள்கை (Theory of Relativity) எள்ளலாகப் பேசப்பட்டது. இந்த கோட்பாடு உலகில் இரண்டே பேருக்குத்தான் புரியும். ஒன்று ஐன்ஸ்டீன். மற்றொன்று கடவுள் என்று கேலி செய்தார்கள். எளிய முறையில் இதை விளங்கிக் கொள்ள எங்கள் குடியிருப்பில் உள்ள பேராசிரியர் நவநீதத்துடன் பேசிக் கொண்டிருந்தேன். Space என்கிற வெளி, சூரியன் போன்ற கோள்களால் வளைகிறது என்பதை உதாரணம் மூலம் விளக்கினார். மெல்லிய துணியின் நான்கு மூலைகளையும் இறுகப் பிடித்துக் கொண்டு ஒரு ரப்பர் பந்தை அதன்மீது போட்டால் துணி லேசாகத் தொய்வு கொடுக்குமல்லவா அப்படி வெளி, கோள்களால், அவற்றின் புலங்களின ஈர்ப்பால், வளைகிறது. அதனால் எப்போதும் நேர்கோட்டில் பயணிக்கும் ஒளி கூட, வெளியிள் வளைவுகளில் வளைந்து பயணிக்கிறது என்பது ஐன்ஸ்டீன் கோட்பாட்டை பாமரனும் புரிந்து கொள்ளும் படி விளக்கினார். ஐன்ஸ்டீன் சொன்னபோது, ஏற்கவும் முடியாது நிராகரிக்கவும் முடியாது தவித்த அறிவுலகம், முப்பதாண்டுகளுக்குப் பின் ஆப்பிரிக்காவில் நிகழ்ந்த முழு சூரிய கிரகணத்தின்போது சரி என்று ஒப்புக் கொண்டது. சூரியன் பின்னிருக்கும் ஒரு நட்சத்திர ஒளி கிரகணத்தின் (நல்ஹஸ்ரீங்) கண்ணுக்குப் போது புலப்பட்டது. புகைப்படத்தில் அகப்பட்டது. சூரியப்புலம், வெளியில் ஏற்படுத்தும் அழுத்தத்தால் வெளிவளைவதால், வெளி வழி பயணிக்கும் ஒளி (Space) வளைந்து கிரகணத்தின் போது புலப்பட்டது என்று உலகம் கரவொலி எழுப்பி ஐன்ஸ்டீனைப் பாராட்டியது. ஒரு நிருபர் ஐன்ஸ்டீனிடம், "ஒருவேளை இப்படி நடக்காதிருந்தால் நீங்கள் உங்கள் கோட்பாட்டைப் பற்றி என்ன நினைப்பீர்கள்?'' என்று கேட்டார். "கடவுளுக்கு இயற்கையைச் சரியாகப் படைக்கத் தெரியவில்லை என்று நினைப்பேன்'' என்று சிரித்தபடி பதில் சொன்னார் ஐன்ஸ்டீன். பாருங்கள் தான் கண்டறிந்த கோட்பாடு மீது எத்தனை உறுதி அவருக்கு. காரணம்... ஐயத்தின் நீங்கித் தெளிந்த காரணத்தால் வானம் அவருக்கு நணியதாகிவிட்டது. இப்படி "எதிலும் திட்டமிடு வெற்றிபெறு' என்பதே இளைஞருக்கு என் அறைகூவல். மிகவும் கனமான விஷயங்களால் வாசகரைச் சங்கடப்படுத்தி விட்டேன் என்று தோன்றுகிறது. அதனால் எளிய ஆனால் நுட்பமான திட்டமிடல் பற்றிப் பேச நினைக்கிறேன். AVM அவர்களைப் பற்றி "அப்பச்சி' என்றொரு புத்தகம் வந்துள்ளது. திட்டமிடுதலில் அவர் எப்படிப்பட்டவர் என்பதை அப்படியே தருகிறேன்.

கல்யாணச் சாப்பாட்டை அவர் திட்டமிட்ட முறை பிரமிப்பூட்டும். தன் வீட்டுத் திருமணங்களில் உணவின் தரத்திற்கு அவர் தந்த முக்கியத்துவம் வியப்பில்லை. இருந்தாலும் அதை அவர் அணு அணுவாகத் திட்டமிட்ட முறைதான் வியப்புக்குரியது. 

தலைசிறந்த சமையற்கலைஞர்கள்தான் திருமண விருந்து சமையலுக்குப் பொறுப்பேற்பார்கள். காய்கறிகள் தவிர, விருந்தின் மற்ற அனைத்து அயிட்டங்களும் - கல்யாணத்தன்று எப்படிச் சமைக்கப்படுமோ அப்படியே சமைக்கப்பட்டு ஒரு மாதம் முன்பிருந்தே தினமும் ஏவி.எம் அவர்களுக்கும், அவரது நண்பர்களுக்கும் பரிமாறப்படும். குறைகள் இருந்தால் சமையல் கலைஞருக்குத் தெரிவிக்கப்படும். அந்தக் குறையை நிவர்த்தி செய்து மறுநாள் சமையல் நடக்கும். இப்படியே சகல உணவு அயிட்டங்களும் ஒரு முழுமையான தரத்தை அடைந்து விடும்.

இலை எந்த அளவில் இருக்க வேண்டும், என்னென்ன பதார்த்தங்களை இலையில் எங்கெங்கு வைக்க வேண்டும் என்ற லே}அவுட் அவருக்கு முக்கியம். ஒரு பேப்பரை வாழை இலை சைஸுக்கு வெட்டியெடுத்து அதில் என்னென்ன உணவு வகை எங்கெங்கே வைக்கப்பட வேண்டும் என்பதை வரைந்து அதை சமையல் கலைஞரிடம் தந்து விடுவார். எந்தெந்தக் கரண்டிகளில் எவற்றை எடுத்து பரிமாற வேண்டும் என்பதையும் கரண்டிகளைக் கண்ணால் பார்த்து ஒப்புதல் தருவார். அவ்வளவு துல்லியமான திட்டமிடுதலில் அவருடைய குணம். 

பெரிய இடத்துத் திருமணங்களில் வி.வி.ஐ. பிகள் காரின் டிரைவர் சாப்பிட்டாரா என்று கவனிக்க ஆளிருக்காது. பார்க்கிங் பகுதிக்கு அருகிலேயே வசதியாகப் பந்தல் போட்டு கார் டிரைவர்களுக்காகப் பிரத்யேக விருந்து பரிமாறப்படும். டிரைவர்களின் பசி பற்றியும் அவர் யோசித்திருந்தார்.

காலண்டரில் தேதி கிழிக்காமல் இருந்தால் கோபம் வரும். இந்த சின்ன விஷயத்தைக் கூட செய்ய முடியவில்லையா என்று சப்தம் போடுவார். இன்று வந்ததும் இதையிதைச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுவதை தான் மட்டும் கடைப்பிடிக்காமல், தன்னைச் சார்ந்த ஊழியர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். 

AVM இன் வெற்றி எப்படி என்பது இப்போது நன்றாகப் புரிந்திருக்குமே!
 

]]>
plan, execute, திட்டமிடு, செய்லபடு, நிஜம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/31/w600X390/1e3254d5539dc4195600e47310e0ee23.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/may/31/திட்டமிடு-வெற்றி-பெறு-2930545.html
2929872 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் எச்சரிக்கை! விவகாரத்து மனிதர்களின் வாழ்நாளைக் குறைக்கும் என்கிறது புதிய ஆய்வு முடிவு, எப்படி?! RKV Wednesday, May 30, 2018 04:36 PM +0530  

விவாகரத்து இன்று சர்வ சாதாரணமான விஷயமாகி விட்டது.

விவாகரத்து என்ற விஷயம் உண்மையில் ஏற்படுத்தப்பட்டது. மணவாழ்க்கை என்ற பெயரில் கொடுமைகளை அனுபவித்து வரும் பெண்களுக்கும், ஆண்களுக்கும் விமோசனம் தேடித்தரவே!

ஆனால் இன்றைய தலைமுறையினர் அதன் அர்த்தம் உணர்ந்து சரியாகத்தான் அந்த சட்டப்பூர்வமான உறவுமுறை விடுதலையை பயன்படுத்துகிறார்களா? என்றால்? பெரும்பாலான விவாகரத்துகள் அப்படி அல்ல என்கின்றன. இன்றைக்கு விவாகரத்துக்கான காரணங்களில் பலவும் உப்புப் பெறாத விஷயங்களாகவும் இருக்கின்றன. திருமண உறவின் மூலம் வாழ்வின் சரிபாதியாக அங்கம் வகிக்கத் தொடங்கும் சக மனுஷியைப் பற்றியும், மனுஷனைப் பற்றியதுமான புரிதல் ஆண், பெண்களுக்குள் குறைந்து கொண்டே வருகின்றன. விளைவு; கணவரின் குறட்டைச் சத்தத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் மேலை நாட்டு மனைவிகளுக்கு சற்றும் குறைவின்றி இந்திய மனைவிகளும் சிறுசிறு குடும்பச் சண்டைகளுக்காகக் கூட கோர்ட் படி ஏறி விடுகிறார்கள். விவாகரத்து கோரி குடும்ப நல கோர்ட் முன் கூடும் கூட்டங்களே இதற்கான சாட்சிகள்.

விவாகரத்துக்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக முன் வைக்கப் படுவது நடத்தைக் கோளாறுகள், இந்த நடத்தைக் கோளாறுகளைப் பொறுத்தவரை கணவனோ, மனைவியோ தங்களுக்கிடையே மற்றொரு சாய்ஸ் வர ஏன் இடமளிக்க வேண்டும்? அப்படியானால் அவர்கள் பூரணமான அன்பில் இணையவில்லை. அல்லது திருமண பந்தத்தில் இணைந்த பிறகும் ஒருவருக்கொருவர் பூரண அன்பைப் பெற முயலவில்லை என்று தான் அர்த்தம். இப்படி உறவின் மீது அக்கறையும், பொறுப்புணர்வும் இல்லாமலிருந்தால் இவர்களைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கு மட்டும் அந்த பொறுப்புணர்வு எங்கிருந்து வரும்? இப்படித்தான் தலைமுறைகள் சீரழிகின்றன என்கிறார் விவாகரத்து வழக்குகளைக் கையாளும் பெண் வழக்கறிஞர் ஒருவர்.

விவாகரத்துக்கு ஏனைய காரணங்களாக; கணவர்களின் குடிப்பழக்கம், புகைப்பழக்கம், மனைவியின் மீதான வன்முறைகள் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்து உதைப்பது, வார்த்தைகளால் குதறுவது, குழந்தைகளை அடித்துச் சித்ரவதை செய்வது, வரதட்சிணை கொடுமை, கணவன் அல்லது மனைவியின் தீர்க்கவே முடியாத உடல்நலக் கோளாறுகள், தீராத வியாதி, இருசாரரிடையே நிலவும் மலட்டுத்தன்மை, தாம்பத்யத்தில் ஈடுபாடின்மை என்பன போன்ற காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. இத்தனை காரணங்களும் திருமண பந்தத்தை உடைப்பதற்கான சட்டப்பூர்வமான அங்கீகாரம் பெறுவதற்கான காரணிகள். இவற்றில் ஏதாவதொன்றை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் இருப்பின் மனமொத்து வாழ முடியாத தம்பதிகள் சட்டப்பூர்வமாகப் பிரிந்து வாழ கோர்ட் அனுமதி வழங்கும்.

கஷ்டப் பட்டு விவாகரத்து  வாங்கியாயிற்று, விவாகரத்துப் பெற்றவர்கள் இனியாவது நிம்மதியாக இருக்கலாம், அவரரவர்க்குப் பிடித்த வாழ்க்கைத்துணைகளைத் தேடிக் கொண்டு வாழ்வை அமைதியான முறையில் கழிப்பார்கள் என்று பார்த்தால் அது தான் இல்லை என்கிறது இந்தப் புதிய மனோதத்துவ ஆய்வு.

விவாகரத்துப் பெற்ற ஆண்களில் சரிபாதி பேருக்கு புகைப்பழக்கமும், குடிப்பழக்கமும் இருப்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக திருமணம் ஆகி ஒத்த மனதுடன் இணைந்து வாழும் தம்பதிகள் மற்றும் விவாகரத்துப் பெற்றவர்கள் எனச் சுமார் 5,786 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் நடத்திய சோதனையில் விவாகரத்துப் பெற்றவர்களிடம் தான் குடிப்பழக்கமும், புகைப்பழக்கமும் அதிகமிருப்பது தெரிய வந்திருக்கிறது. காரணம் அவர்களுக்குக் கிடைத்த கட்டுப்பாடற்ற சுதந்திரம். உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த விதமான கெட்ட பழக்கங்களாகட்டும் அவற்றை நிர்பந்தம் செய்து நிறுத்தக் கோருவது கணவனோ அல்லது மனைவியோவாகத் தான் இருக்கிறார்கள். விவாகரத்தானவர்கள் விஷயத்தில் அந்தத் தடை அகன்று விடுவதால் அவர்களது வாழ்க்கைமுறை கட்டுப்பாடற்ற ஒழுங்கீனங்கள் நிறைந்ததாகி விட 100 % வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. எனக்கூறும் அந்த ஆய்வு இவர்களில் 46% பேர் திருமணமாகி இணைந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களைக் காட்டிலும் அதிகமான அளவில் குறுகிய வாழ்நாளைப் பெற்றவர்களாகி விடுகிறார்கள் என்று எச்சரிக்கிறது.

எதற்காக விவாகரத்தை... மனித வாழ்நாளை அளக்கப் பயன்படுத்துகிறீர்கள் என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு இந்த மனோதத்துவ ஆய்வு தரும் பதில்.

மனிதர்களின் நீண்ட வாழ்நாளைத் தீர்மானிப்பது பெரும்பாலும் ஆரோக்யமான உடல்நலனும், சந்தோஷமான இல்லற வாழ்வுமே. அந்த இரு விஷயங்களிலும் சறுக்கல் நேர்ந்தால் பிறகு மனித வாழ்நாள் குறைவது சகஜம் தானே என்கிறது அந்த ஆய்வு. இந்த ஆய்வுக் கட்டுரையை சமர்பித்திருக்கும் கெலி போரஸ்ஸா, மனிதர்கள் சட்டப்பூர்வமான உறவுமுறையில் பிணைந்திருக்கும் போது ஒருவர் மற்றொருவர் வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அது உணவுப் பழக்கமாகட்டும், குடிப் பழக்கமாகட்டும், புகைப்பழக்கமாகட்டும், உடற்பயிற்சி செய்யும் விஷயமாகட்டும் அனைத்திலும் கணவன் அல்லது மனைவியின் தாக்கம் இருக்கிறது. இருவர் இணைந்து வாழும் போது மேற்கண்ட பழக்கங்களில் ஒருவருக்கொருவர் விருப்பு, வெறுப்பு இருப்பினும் ஒருவருக்காக மற்றவர் என விட்டுக் கொடுத்து அனுசரித்து முறையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறார்கள். இதனால் அவர்களது வாழ்வின் ஆரோக்யம் நிலை நிறுத்தப் படுகிறது. அதுவே விவாகரத்தானவர்கள் விஷயத்தில் இந்த பொறுப்புணர்வோ, கண்டிப்போ இல்லாமலாகி விடுவதால் விவாகரத்து மனிதர்களின் வாழ்நாளைக் குறைப்பதில் முக்கிய பங்காற்றுவதாகத் தனது ஆய்வு முடிவில் தான் கண்டறிந்ததாகக் கூறுகிறார்.

போரஸ்ஸாவின் ஆய்வு முடிவை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?

விவாகரத்து மனிதனின் வாழ்நாளைக் குறைக்குமா? 

மாற்றுக் கருத்து இருப்பவர்கள் அதையும் எங்களுடன் கருத்துரை வாயிலாகப் பகிர்ந்து கொள்ளலாம்.

 

Image courtesy: trenzy.in

]]>
life span, divorce, மனித வாழ்நாள், விவாகரத்து, ஆரோக்யம், Divorce can shorten lifespan http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/30/w600X390/beware_divorce_leads_to_shorten_lifespan.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/may/30/beware-divorce-can-shorten-lifespan-2929872.html
2929832 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் மோடியால் ஒரே நாளில் ஸ்டார் ஆன டீக்கடைக்காரர், இந்தியா ஒளிர்வது இப்படிப் பட்டவர்களால் தான்! கார்த்திகா வாசுதேவன் Wednesday, May 30, 2018 12:45 PM +0530  

 ‘மே 26 ஆம் தேதி பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்’ உரையைக் கேட்ட பின் இப்போதெல்லாம் வழியில் என்னைக் காணும் மக்கள் கால்களைத் தொட்டு வணங்கத் தொடங்கி விடுகிறார்கள்.’

- என்று புளகாங்கிதப் படுகிறார் 54 வயது பிரகாஷ் ராவ். பிரதமர் மோடி ஏன் இவரைப் பாராட்டிப் பேச வேண்டும்? இந்தியாவில் எத்தனையோ டீக்கடைக்காரர்கள் இருக்கிறார்கள், ஆனால், அவர்களுக்கெல்லாம் கிடைக்காத பேரும், புகழும் இவருக்கு மட்டும் கிடைக்க வேண்டுமெனில் இவர் ஏதாவது அதிசயிக்கத் தக்க செயற்கரிய செயல்களைச் செய்திருக்க வேண்டுமே?! என்று யோசிக்கிறீர்களா? ஆம், பிரகாஷ் ராவ் செயற்கரிய மனிதரே!

அடிப்படையில் பிரகாஷ் ராவ் ஒரு டீக்கடைக் காரர். ஆறு வயது முதல் அவரது வாழ்நாளின் பெரும்பகுதி கழிவது டீக்கடையில் தான். நன்றாகப் படித்துக் கொண்டிருந்த மாணவனொருவன் குடும்ப வறுமை காரணமாக 5 ஆம் வகுப்பு முதல் பள்ளிக்கே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. டீக்கடைகளில் சூடான டீ, காப்பி விற்றுக் கொண்டிருந்தாலும் சரி, எச்சில் கிளாஸ்களை கழுவிக் கொண்டிருந்தாலும் சரி சிறுவன் பிரகாஷின் சிந்தையில் எப்போதும் நீக்கமற நிறைந்திருந்தது பள்ளி வகுப்பறைகளும், பாடப்புத்தகங்களுமே! காலங்கள் மாறின. சிறுவன் பிரகாஷ் வளர்ந்து இளைஞனானார். கூடவே அவரது வருமானமும் சிறிதளவு பெருகியது. சிறிதளவு தான்... பிரகாஷ் இப்போதும் வசதி படைத்தவரெல்லாம் இல்லை. அவரது மாத வருமானம் அவரது குடும்பத் தேவைகள் போக ஏதோ கொஞ்சம் மிஞ்சும். அந்த மிச்சத்தில் துணிந்து ஒரு பள்ளி தொடங்கினார். அந்தப் பள்ளி ஒதிஷாவின், கட்டாக் பகுதியைச் சேர்ந்த வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களின் ஏழைப் பிள்ளைகள் படிக்கும் பள்ளி. 

ஏதோ ஆர்வக் கோளாறில் பள்ளி தொடங்கி விட்டாரே தவிர, அந்தப் பள்ளியில் பயில ஏழைக் குழந்தைகளை ஈர்க்க வெகு பாடுபட வேண்டியதாயிருந்திருக்கிறது. பிள்ளைகள் தெருவில் வெட்டியாகச் சுற்றக் கூட விரும்பினார்களேயன்றி பிரகாஷ் ராவின் பள்ளிக்கு வர அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் பள்ளி என்றால் புத்தகங்கள், படிப்பு, ஆசிரியர்களின் கட்டுப்பாடுகள் என்று வழக்கமான பள்ளியைக் கற்பனை செய்து கொண்டு பள்ளிக்கு வர விருப்பமற்று இருந்தார்கள். அவர்களை ஈர்க்க ஒரே வழியாக அப்போது உணவு மட்டுமே இருந்தது. எனவே குழந்தைகளை பள்ளியை நோக்கி ஈர்க்க முதலில் உணவு இலவசம் என்று அறிவித்தேன். பலர் இப்போது பள்ளிக்கு வரத் தொடங்கினர். கற்பதற்காக அல்ல, உணவு கிடைக்கிறதே என்று. ஒருவேளை உணவு கூடக் சரிவரக் கிடைக்காத குழந்தைகளுக்காகத் தானே நான் இந்தப் பள்ளியைத் தொடங்கியது. அதனால் அவர்களது முதல் தேவை உணவு தான் என்பது எனக்கப்போது புரிந்தது. பிறகு அந்தக் குழந்தைகளுக்கு ஏற்றவாறு பாடப்புத்தகங்கள் வாயிலான கல்வி முறையாக இல்லாமல், பாட்டு, நடனம், ஜூடோ போன்றவற்றைக் கற்றுத்தரும் பள்ளியாக என் பள்ளியின் கற்பித்தல் முறையையும் மாற்றினேன். இப்போது பல குழந்தைகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வரத் தொடங்கினர்.

இப்போது 70 குழந்தைகள் வரை பயிலும் பிரகாஷ் ராவின் பள்ளியில் அத்தனை குழந்தைகளுமே ஆர்வத்துடன் பள்ளிக்கு வருபவர்கள் தான். சாதாரண டீக்கடைக் காரராக இருந்து கொண்டு எப்படி ஏழைக் குழந்தைகளுக்கு பள்ளி நடத்த முடிகிறது? என்று கேள்வியெழுப்பினால் அதற்கு பிரகாஷ் ராவின் பதில்; ‘ சீஸன் நேரங்களில் என் கடையில் நாளொன்றுக்கு 700 முதல் 800 ரூபாய் வருமானம் கிடைக்கும், சீஸனற்ற நாட்களிலும் கூட குறைந்த பட்சம் 600 ரூபாய் கிடைக்கும். இந்த வருமானத்தை வைத்து என்னால் என் பள்ளியை திறம்பட நடத்த முடிகிறது. முதலில் பள்ளியைத் தொடங்கியதால் என்னைப் பள்ளி ஆசிரியர் என சில மக்கள் நினைத்தனர். எனக்கு ரத்த தானம் செய்யப் பிடிக்கும், அதோடு மருத்துவமனைகளுக்குச் சென்று அங்கே நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் தேவையான சிறு சிறு உதவிகள் செய்து கொடுப்பதும் எனது வழக்கம். அதை வைத்துக் கொண்டு மக்கள் என்னை டாக்டர் என்று கேலி செய்வார்கள். ஆக, படிக்காமலே நான் டீக்கடைக்காரராகவும், டீச்சராகவும், டாக்டராகவும் என் மக்களால் மதிக்கப்படுகிறேன். என்று நினைக்கும் போது வேடிக்கையாக இருந்தாலும் பெருமையாகவும் இருக்கிறது.

எனது ஒரே நோக்கம் என்னால் முடிந்த உதவியை என்னைச் சுற்றியுள்ள மக்களுக்குச் செய்ய வேண்டும் என்பது மட்டும் தான். அதைத் தான் செய்து கொண்டிருக்கிறேன். எனது செயல்களை அறிந்த பிரதமர் மோடி, அவரது ஒதிஷா வருகையின் போது என்னைச் சந்திக்க விருப்பப் பட்டார். இந்தத் தகவலை அறிந்ததும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உலகமே வியக்கும் ஒரு தலைவர் என்னைக் காண விரும்புகிறார் என்றதும் மனம் உருகிவிட்டது. மே 26 ஆம் நாள் மோடிஜியை சந்திக்க என்னை அழைத்துச் சென்றார்கள். என்னுடன் 15 முதஒ 20 மாணவர்களையும் அழைத்துச் செல்ல அனுமதி இருந்தது. நாங்கள் மோடிஜியைப் பார்க்க அறைக்குள் நுழைந்தோம், என்னைப் பார்த்ததும், கையசைத்து வரவேற்ற மோடிஜி, ராவ்ஜி, உங்களைப் பற்றி நன்றாக அறிந்து கொண்டு தான் உங்களைச் சந்திக்க விரும்பினேன், எனக்கு உங்களைப் பற்றி புதிதாக ஒரு அறிமுகம் தேவையில்லை’ என்றவாறு அவரது அருகில் என்னை அமர வைத்துக் கொண்டார். எங்களது சந்திப்பு சுமார் 18 முதல் 20 நிமிடங்கள் வரை நீடித்தது. மறுநாளே வானொலியில் தனது 44 ஆவது ‘மன் கி பாத்’ உரையில் மோடிஜி என்னைப் பற்றி சிலாகித்துப் பேசினார். இதனால் மொத்த இந்தியாவுக்கும் என்னை அடையாளப்படுத்தினார்.

‘ராவ், கட்டாக்கில் ஒரு சாதாரண டீக்கடைக் காரர், ஆனால் அவரது வருமானத்தில் 50% க்கு மேல் ஏழைக்குழந்தைகளின் படிப்பிற்காக செலவிடுகிறார். சொன்னால் நீங்கள் ஆச்சர்யப் படுவீர்கள், இதுவரை சுமார் 70 குழந்தைகளுக்கும் மேலாக அறிவுக் கண்களை திறந்து வைக்க உதவியிருக்கிறார் இந்த மனிதர். தன்னுடைய மிக சொற்பமான வருமானத்தில் ‘ஆஷா அவாஷன்’ எனும் பள்ளியைத் தொடங்கி அதன் மூலமாக வறுமையில் வாடும் குழந்தைகளுக்கான பள்ளியொன்றை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார் ராவ். அந்தப் பள்ளியின் வாயிலாக அந்தக் குழந்தைகளின் கல்விக்கு மட்டுமல்ல, அவர்களுக்கான ஆரோக்யம், மற்றும் உணவுக்கும் உதவிகள் பல செய்து வருகிறார். அவரை மன் கி பாத்தில் அறிமுகம் செய்வதில் பெருமிதம் அடைகிறேன்’ 
- என பாரதப் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். 

அது முதல் என்னை வழியில் காணும் மக்கள் எல்லோரும் மரியாதையுடன் கால்களைத் தொட்டு வணங்க முயல்கின்றனர். இதெல்லாம் ஒரு பக்கம் கூச்சமாக இருந்தாலும் மோடிஜி எனக்கு கொடுத்த அங்கீகாரத்தை நினைக்கையில் மனம் பெருமிதம் கொள்கிறது. இப்போது என்னைப் பலரும் அழைத்து எனது செயல்களுக்காக விருதுகள் தருகிறார்கள். ஆனால், என் மனைவி என்னைக் கடிந்து கொள்கிறார். ‘இவற்றை வைப்பதற்கு இனி வீட்டில் இடமே இல்லை’ என. 

என்று பெருமிதம் கொள்ளும் பிரகாஷ் ராவ் போன்றவர்களால் தான் இந்தியா ஒளிர்கிறது.
 

]]>
மோடி, PM modi, பிரகாஷ் ராவ், டீக்கடைக்காரர், இந்திய ஸ்டார், D Prakash Rao, a Cuttack-based tea seller, 'Mann Ki Baat' , indian star tea seller, மன் கி பாத் உரை, http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/30/w600X390/tea_seller.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/may/30/a-tea-seller-teacher-doctor-meet-pm-modis-mann-ki-baat-star-2929832.html
2926704 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ‘டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணன்’ நமது இளம் தலைமுறை அறிந்து கொள்ள வேண்டியது இத்தகைய மனிதர்களைத் தான்! கார்த்திகா வாசுதேவன் Friday, May 25, 2018 05:18 PM +0530  

தினமணி கொண்டாட்டத்தில் ‘அம்மா’ எனும் சிறப்புத் தொடரில், டாக்டர் ப்ரியா ராமச்சந்திரன் தனது தாயாரும் தீக்காய சிகிச்சை சிறப்பு நிபுணரும் பிளாஸ்டிக் சர்ஜனுமான டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணனைப் பற்றி சிறப்புரப் பகிர்ந்திருந்தார். அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் ஆவலில் கூகுள் செய்து பார்த்ததில் இணையத்தில் தகவல்கள் கொஞ்சமே கிடைத்தன. ஒரு பிரபலமற்ற நடிகைக்கு கிடைக்கும் அளவுக்கான இணையத் தகவல்கள் கூட இவரைப் பற்றி இல்லையா என்று மேலும் கொஞ்சம் தேடிப் பார்த்ததில்... யூ டியூபில் அவரது உரையாடல் ஒன்று ஆங்கிலத்தில் பார்க்கக் கிடைத்தது.

உண்மையில் இன்றைய இளம் தலைமுறை அறிந்து கொள்ள வேண்டியது இத்தகைய மனிதர்களைத் தானில்லையா? பிறகு ஏன் இவரைப் பற்றிய அதிகப்படியான தகவல்களை நாம் சேமித்து வைத்துக் கொள்ளக் கூடாது என்று தோன்றியது. தேடியதில் கிடைத்ததை தினமணி இணையதள வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது நிச்சயம் அனைவருக்கும் உபயோகமானதொரு நேர்காணல்.

இதுவரை டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணனைப் பற்றிய அறியாதவர்களுக்கு அவரைப் பற்றிய சிறு அறிமுகம்...

மனிதர்களான நாம், நமது உள் உறுப்புகளால் ஏற்படும் உடல்நலக் குறைபாட்டை ஏதோ ஒருவகையில் எதிர்கொள்ளப் பழகிக் கொள்கிறோம். ஆனால், தீ விபத்து, வாகன விபத்து, சமையலறைக் காயங்கள் என எதிர்பாராத விபத்துக்களால் முகம் மற்றும் உடலில் ஏற்படும் கோரங்களை சுமந்துகொண்டு வெளிவரத் தயங்கி, முடங்குபவர்கள் நம்மில் பலருண்டு. கிட்டத்தட்ட 46 வருடங்களாக, அப்படி ஆயிரக்கணக்கானவர்களை, தன் மருத்துவ சிகிச்சையால், சேவையால், வெளியுலகைத் தைரியமாக எதிர்கொள்ள வைத்து, தன்னம்பிக்கையுடன் நடமாடவைத்துக் கொண்டிருக்கிறார், டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணன்.

பிளாஸ்டிக் சர்ஜரி எனப்படும் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மற்றும் தீப்புண் மருத்துவத்துறையில் தொண்டாற்றி வரும் இவர், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள 'காஞ்சி காமகோடி சைல்ட்ஸ் டிரஸ்ட்’ மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர். இவருடைய சேவைகளைக் கௌரவிக்கும்விதமாக, 2014-ம் ஆண்டுக்கான 'ஒளவையார் விருது’ வழங்கி கெளரவித்தது தமிழக அரசு!

''சிறுவயதில் இருந்தே, மற்றவர்களின் கஷ்டத்தை ஏதோ ஒரு வகையில் தீர்க்கும்போதெல்லாம், என் மனம் உணரும் மகிழ்ச்சி அலாதியானது. அந்த அர்ப்பணிப்புதான், மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் 'பெஸ்ட் அவுட்கோயிங் ஸ்டூடென்ட்’ என்கிற சிறப்புத் தகுதியுடன் எம்.பி.பி.எஸ். முடிக்க வைத்தது. பிளாஸ்டிக் சர்ஜரி மீதான அளவில்லாத ஆர்வமும், சேவை எண்ணமும், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழத்தில் 'டாக்ட்ரேட் ஆஃப் சயின்ஸ்' பட்டம் பெற்ற, தமிழகத்தின் முதல் பிளாஸ்டிக் சர்ஜன் என்ற பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறது.

கீழ்ப்பாக்கம் மெடிக்கல் கல்லூரியின் 'பிளாஸ்டிக் அண்ட் ரீகன்ஸ்ட்ரக்டிவ்’ துறைத் தலைவராக நான் இருந்தபோதுதான், தென்னிந்தியாவிலே முதல் முறையாகவும், மிகப்பெரியதுமான 50 பெட் வசதிகளை கொண்ட 'பர்ன் யூனிட்' (Burn unit) மற்றும் அதற்கான தனி கட்டடத்தையும் எழுப்பினோம். அன்றிலிருந்து ரிட்டயர் ஆகும்வரை, கிட்டத்தட்ட 25 வருடங்களாக, என் மனமும் மூளையும் இடைவிடாமல் இயங்கிய இடம் அது'' என்று சிலிர்ப்பவர், அதன்பிறகுதான் 'காஞ்சி காமகோடி சைல்ட்ஸ் டிரஸ்ட்’ பொறுப்பேற்றிருக்கிறார். இவருடைய கணவர் ராமகிருஷ்ணன், எழும்பூர் மருத்துவமனையின் முன்னாள் முதன்மை மருத்துவர். மகள் ப்ரியா ராமச்சந்திரன், குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணர்.

இனி டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணன் அவர்கள் யூ டியூப் உரையாடலில் பகிர்ந்துகொண்ட விஷயங்களைப் பார்ப்போம்.

இந்தியாவில் தீக்காயங்களால் பெரிதும் அவதிக்குள்ளாகக் கூடியவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளாகவே இருக்கிறார்கள்.

தீவிபத்துகள் தற்செயலானதாகவோ அல்லது குடும்ப வன்முறையால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பாதிப்பு எண்ணிக்கையில் பெண்களும், குழந்தைகளுமே அதிகமாக இருக்கிறார்கள். பெரும்பாலான ஆண்கள், தீவிபத்தில் சிக்கிய பெண்களை காப்பாற்றி அழைத்து வந்ததாகக் கூறி எங்களிடம் அவசர சிகிச்சை பெற வருவார்கள். உண்மையில் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முயன்றிருந்தால் காயம் உள்ளங்கையில் இருக்க வேண்டும். பலருக்கு அப்படி இருப்பதில்லை. அதை வைத்தே அது விபத்தா? தற்கொலை முயற்சியா? அல்லது கொலை முயற்சியா? என்பதை எளிதில் கண்டறிய வாய்ப்பிருக்கிறது.

தீவிபத்துகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...

 • புடவை அணிந்து கொண்டு சமையலறையில் வேலையில் ஈடுபடும் பெண்கள் ஏப்ரன் அணிந்து கொள்வது நல்லது. எதற்காக என்றால் புடவை என்பது மிகத் தளர்வான உடைகளில் ஒன்று. காற்றுக்கு எளிதில் விலகும். சரியாக இழுத்துச் சொருகிக் கொள்ள மறந்ததாலோ, அல்லது வேலை மும்முரத்தாலோ புடவை காற்றில் பறந்து ஸ்டவ் மீது விழ அதிக வாய்ப்புகள் உண்டு. எனவே ஏப்ரன் அணிவது நல்லது. அதோடு தரை மட்டத்தில் அடுப்பு அல்லது ஸ்டவ் வைத்து பலகாரங்கள் செய்ய முயற்சிக்கும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். குழந்தைகள் விளையாட்டுத் தனமாகப் பின்புறமிருந்து இடித்தால் பலகாரம் செய்யும் வேலையிலிருப்பவர்கள் நேராக கொதித்துக் கொண்டிருக்கும் எண்ணெய்ச் சட்டியில் தான் விழ வேண்டும். சில நேரங்களில் குழந்தைகளே கூட தெரியாத்தனமாக அவசரத்தில் ஓடி வந்து அடுப்பின் மீது விழக்கூடிய சந்தர்ப்பங்களும் அமைந்து விடலாம். இவையெல்லாம் நொடியில் நடந்து விடக்கூடிய சமாச்சாரங்கள். நடந்து முடிந்த பிறகு எண்ணி எண்ணி அவஸ்தைப் படுவதைக் காட்டிலும் முன்னெச்சரிக்கையாக சிந்தித்து நடப்பது நல்லது.
 • சமையலுக்குப் பயன்படுத்தும் அத்தனை மசாலா ஐட்டங்களையும் மைக்ரோ வேவ் ஓவனின் அருகில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
 • கேஸ் அடுப்புக்கும் சிலிண்டருக்குமான இணைப்புக் குழாய் 6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டும். சோம்பலினாலோ அல்லது அலட்சியத்தினாலோ இந்த வேலையை நாம் தள்ளிப்போடவோ அல்லது நிராகரிக்கவோ கூடாது. ஏனெனில் பெரும்பாலான தீ விபத்துகளுக்கு இந்த இணைப்புக் குழாயில் ஏற்படும் பழுதுகளும் முக்கியக் காரணங்களாக அமைந்து விடுகின்றன. கேஸ் சிலிண்டர்களில் எப்போதும் பெரிதாக பழுதுகள் வருவதில்லை. ஆனால் இந்த இணைப்புக் குழாய் பழுதால் கேஸ் லீக் ஆகி அதனால் தான் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இது தொடர்பான விழிப்புணர்வை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தார் சிலிண்டர் டெலிவரி செய்யும் ஒவ்வொரு முறையும் பாம்ப்லெட்டுகள் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அவர்கள் அப்படித் தான் செய்து வருகிறார்கள் என்றாலும் மேலும் அதிகமான விழிப்புணர்வை இது விஷயமாகப் பொதுமக்கள் பெற வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்.

பட்டாசு வெடிப்பதால் நேரும் தீவிபத்துகள்...

தீபாவளி, புது வருடப்பிறப்பு, திருமணம், போன்ற விழாக்காலங்களில் பட்டாசு வெடிக்கிறோம். அது ஒரு கலாச்சாரமாகி விட்டது. ஆனால், தீபாவளிக்கு முதல் நாளும் தீபாவளி முடிந்த மறுநாளும் இந்த பட்டாசு வெடிப்பாளர்கள் செய்யும் அட்ராஸிட்டிகள் இருக்கின்றனவே அது மிகக் கண்டிக்கத் தக்கது. குறைந்த பட்சம் இந்த பட்டாசுகள் மற்றும் வெடிபொருட்களைத் தயாரிப்பவர்களாவது இது விஷயத்தில் பொறுப்புணர்வோடு இருக்க வேண்டும். தாங்கள் தயாரிக்கும் பட்டாசுகளில் இது இன்னின்ன வயதுக் குழந்தைகள் தான் வெடிக்க வேண்டும். 5 வயதுக்கு மேற்பட்டோருக்கானது, 10 வயதுக்கு மேற்பட்டோருக்கானது என்று அவர்கள் தங்களது தயாரிப்புகளை லேபிள் செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் அந்தக் கடமையை வெறும் சம்பிரதாயமாகவே செய்து வருகிறார்கள். அதனால் இப்போது பாருங்கள் பட்டாசில் விருப்பமுடைய குழந்தைகள் எனில் அவர்கள் வயதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதே இல்லை. எல்லா வயதினரும் எல்லாவிதமான பட்டாசுகளையும் வெடிக்கத் தொடங்கி விடுகிறார்கள். இதனால் தான் தீபாவளி சமயங்களில் பட்டாசுகளால் தீக்காயமுற்று மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தீபாவளி சமயத்தில் பார்த்தீர்களானால் குறைந்த பட்சம் நாளொன்றுக்கு 20 பேஷண்டுகளுக்காவது அதிகபட்ச தீக்காயங்களுடன் நாங்கள் சிகிச்சையளித்துக் கொண்டிருக்கிறோம்.

அசட்டுத்தனமான மத நம்பிக்கைகளால் நேரும் தீவிபத்துகள்...

மத நம்பிக்கை, இறை வழிபாடு என்று சொல்லிக் கொண்டு சிலர் கையில் கற்பூரம் கொளுத்தி ஆரத்தில் காட்டி வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதனால் உள்ளங்கை பொத்துப் போகிறது. அங்கு தீயால் கருகிய தோல் பகுதியை எப்படியாவது சரி செய்யுங்கள் என்று இங்கே வந்து மன்றாடுகிறார்கள். அம்மாதிரியான சந்தர்பங்களில் காலின் உட்பாதப் பகுதியில் இருந்து சதையை எடுத்து அறுவை சிகிச்சை மூலம் உள்ளங்கையின் கருகிய பகுதியைச் சீரமைக்க வேண்டியதாகி விடுகிறது. இவையெல்லாம் ஏன்? கடவுளை இத்தனை உக்கிரமாக வழிபடச் சொல்லி அவர் யாரிடமும் சொல்லவில்லை. மதத்தின் பெயரால் தீச்சட்டி எடுப்பது, தீக்குளி இறங்குவது, கையில் கற்பூரம் கொளுத்திக் கொள்வது போன்றவற்றை எல்லாம் பெரியவர்கள் செய்யும் போது சில தற்காப்புமுறைகளை அவர்கள் கையாளக்கூடும். ஆனால் சிறுவர்களுக்கு அது தெரியாதே... அவர்களையும் இத்தகைய மூடநம்பிக்கை வழிபாட்டு முறைகளில் பெரியவர்கள் ஆழ்த்தும் போது அது பலசமயங்களில் மிகக் கோரமான தீவிபத்தாகி விடுகிறது. உதாரணத்திற்கு, 2 வயதுக் குழந்தை ஒன்றை அதன் பெற்றோர் தம்முடன் சேர்த்து தீக்குளியில் நடக்க வைக்க முயன்றிருக்கிறார்கள். இது இந்துமத சம்பிரதாயம் என்று சொன்னாலும் குழந்தை அதில் நடக்கத் தெரியாமல் தீயின் உக்கிரம் தாங்க முடியாமல் கீழே விழுந்து விட்டது. எங்களிடம் சிகிச்சைக்கு வந்த போது அதன் உடலில் 70 % தீக்காயங்கள் இருந்தன. எப்படியாவது குழந்தையக் காப்பாற்றித் தாருங்கள் என்று அழுதார்கள். நாங்கள் காப்பாற்றி விட்டோம். ஆனாலும்... இதன் பாதிப்பை நினைத்துப் பாருங்கள்.

நெருப்பில் இறங்குவது என்பது இந்தியாவில் தொன்று தொட்டு மனிதர்களின் பரிசுத்தத்தை நிரூபிக்கும் ஒரு செயலாக கையாளப்பட்டு வருகிறது. இதில் நமக்கு புராணங்களின் துணையும் உண்டு. அதன் வெளிப்பாடுகள் தான் சதி மற்றும் உடன்கட்டை ஏறும் வழக்கங்கள். அங்கிருந்து தொடங்குகின்றன நெருப்பின் மூலமாக தாம் வெறுப்பவர்கள் அல்லது தம்மை வெறுப்பவர்களைத் தண்டிக்கும் முறைகள். வெறுப்பவர்களை அயர்ன் பாக்ஸால் சுடுவது, சிகரெட்டால் சுட்டுக் கொடுமைப் படுத்துவது, அமிலத்தை முகத்தில் வீசுவது போன்ற முயற்சிகள் எல்லாம் அவற்றின் நீட்சியே. நெருப்பின் மூலமாக ஒருவரை எளிதில் கொல்ல முடியும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. எனவே நெருப்பை எந்த வடிவத்திலாவது ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி தண்டனை தரும் வழக்கம் மனிதர்களிடையே ஒரு புரையோடிப் போன பழக்கமாக நீடிக்கிறது. இப்போது தற்கொலை செய்து கொள்ளப் புதிய பல முறைகளை மனிதர்கள் கண்டுபிடித்து விட்டார்கள், ஆனால் ஆதியில் நெருப்பு மட்டுமே அவர்களது ஒரே மார்க்கமாக இருந்தது.

திரைப்படங்களில் நெருப்பைக் கையாளும் முறை மிக கண்டிக்கத்தக்கதாக இருக்கிறது. நெருப்பு உண்மையில் மனிதனின் நண்பன். ஆனால், அதை எப்படியெல்லாம் தவறாகப் பயன்படுத்தக் கூடாதோ அப்படியெல்லாம் பயன்படுத்தி நெருப்பின் தீயஅம்சங்களைக் கற்றுத்தருவனவாக இன்றைய திரைப்படங்கள் இருக்கின்றன. இதை எடுத்துச் சொன்னால், எங்கள் வேலையில் தலையிடாதீர்கள் என்கிறார்கள் அவர்கள். அந்த மனப்பான்மை தவறு. 

தீவிபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நாங்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று விழிப்புணர்வு பிரச்சாரங்களை நிகழ்த்துகிறோம். ஒருமுறை எக்மோர் அரசுப் பள்ளியொன்றில் நான் பேசிய போது அங்கிருந்த குழந்தைகள் தீ விபத்து குறித்தும் அதை எப்படி புத்திசாலித்தனமாக எதிர்கொள்வது என்பது குறித்தும் மிக அருமையான கேள்விகள் பல கேட்டார்கள். அம்மாதிரியான விழிப்புணர்வுக் கேள்விகள் எல்லாக் குழந்தைகளின் மனதிலும் எழ வேண்டும். தங்களது பாடத்திட்டங்களோடு சேர்த்து குழந்தைகள் இப்படியான தற்காப்பு கல்வியையும் பெற வேண்டும். நாங்கள் எங்களோடு வரும் பயிற்சி பெற்ற தீயணைப்புத்துறை அலுவலர்கள் மூலமாக தீவிபத்துகளை எப்படி சாமர்த்தியமாக எதிர்கொள்வது என்பதை செயல்முறையில் விளக்குவது உண்டு. அப்போது ஆர்வமுள்ள குழந்தைகள் பலர் அதில் அஞ்சாமல் கலந்துகொண்டு அந்த டெமோ நிகழ்ச்சியை பயமின்றி எதிர்கொண்டார்கள். நமது அரசாங்கள் தீயணைப்புத் துறையில் சாதிக்கும் வீரர்களுக்கும் கூட பத்மஸ்ரீ போன்ற கெளரவமிக்க விருதுகளை அளிக்கலாம். ஆபத்துக் காலங்களில் அவர்களது பணி மகத்தானது. கும்பகோணம் பள்ளித்தீவித்தின் போது தீயணைப்புத் துறை வீரர்கள் மிக அருமையாகச் செயல்பட்டார்கள்.

குடும்ப வன்முறை தீவிபத்துகள்...

வரதட்சிணைத் தகராறு காரணமாக மண்ணெண்ணெய் ஊற்றி மருமகள் எரிப்பு, கேஸ் ஸ்டவ் லீக்காகி இளம்பெண் மரணம், என்பது போன்ற குடும்ப வன்முறையில் பெண்கள் பாதிப்படையும் போது பெரும்பாலும் அதை விபத்து என்றோ தற்கொலை முயற்சி என்றோ கூறி குற்றவாளிகள் தப்பிக்க முயல்கிறாரகள். பெண்ணைப் பெற்றவர்களும், அப்படிப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் காவல்துறை கமிஷனர்களும் அத்தகைய குற்றங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தே ஆக வேண்டும் என்று தீவிரமாக முயன்றால் மட்டுமே அந்த விபத்துகளில் தண்டனை பெற்றுத் தர முடிகிறது. இது விஷயத்தில் பெண்களுக்கும் சரி, பெற்றோருக்கும் சரி மேலும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அவர்கள் தவறு செய்தவர்களை எக்காரணம் கொண்டும் மன்னிக்கக் கூடாது.

அரசியல் தீ விபத்துகளும் ஆசிட் முட்டை எரிதலும்...

இந்தியாவில் தலைவர்களின் ராஜினாமா, கைது மற்றும் மரணத்திற்காக தொண்டர்கள் தீக்குளிப்பு என்ற விஷயம் இன்று ஒட்டுமொத்த உலகையை இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்யும் விதத்தில் இருக்கிறது. தீக்குளிப்பில் ஒருவர் மரணமடைவதே பெரும் சோகம் அதிலும் தீக்குளித்தவர் குற்றுயிரும், குலையுயிருமாக மீட்கப் பட்டால் அப்போது அவர்கள் படும் அவஸ்தைகள் நரகத்திற்கு ஒப்பானவை. அதைப் பற்றிய முன்கூட்டிய ஞானம் இருந்தால் நிச்சயம் தொண்டர்கள் தங்களது தலைவர்களுக்காக இம்மாதிரியான சாகஸ முயற்சிகள் இறங்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். தீக்குளிப்பு இந்தியாவில் மட்டுமே இருக்கிறது என்று சொல்ல முடியாது. உலகம் முழுவதும் இது வெவ்வேறு பரிமாணங்களில் நிகழ்த்தப்படுகிறது. மலேசியாவிலிருந்து ஒரு பேஷண்ட் எங்களிடம் சிகிச்சைக்கு வந்திருந்தார். அவரது விரோதி அவர் மீது ஆசிட் பல்பை வீசியதில் உடலெல்லாம் ஆசிட் காயங்களுடன் கிட்டத்தட்ட முக்கால்பாகம் எரிந்து போன உடலுடன் அவர் இங்கு கொண்டு வரப்பட்டிருந்தார். அவரைக் காப்பாற்றினோம். பல்பில் மிக நுண்ணிய துளையிட்டு அதில் ஆசிட்டை நிரப்பி எதிரிகளின் மீதோ வெறுப்பவர்களின் மீதோ வீசி தண்டிப்பது அங்கே ஒரு பழிவாங்கும் முறையாக பின்பற்றப்படுகிறது. சூடான பாத்திரத்தில் தெரியாமல் கை பட்டுவிட்டாலே நாம் எப்படித் துடித்துப் போகிறோம். அப்படி இருக்கையில் உடல் முழுக்க நெருப்பில் வெந்து போவது கொடுமையானது. இதை ஏன் தீக்குளிப்பு, ஆசிட் வீச்சு போன்ற செயல்களில் ஈடுபடக்கூடியவரகள் உணரவில்லை என்பது தான் மிகப்பெரிய கேள்விக்குறி. இம்மாதிரியான விபத்துகளில் வலி மட்டுமல்ல தீக்காயங்களால் உடலில் உண்டாகும் எரிச்சல், நமைச்சலை எந்தச் சொல்லாலும் விவரிக்க முடியாது.

தீக்குளிப்பைக் கண்டு அஞ்சும் உலக தற்கொலை ஆர்வலர்கள்... 

யூ.கே வில் லண்டனை மையமாகக் கொண்டு இயங்கும் தற்கொலை அமைப்புகள் பல உள்ளன. அவற்றில் உறுப்பினர்களாக இருக்கும் விந்தையான மனிதர்கள் பலர், எப்படியெல்லாம் தற்கொலை செய்து கொள்ளலாம் என அவ்வப்போது அந்த அமைப்புகள் வாயிலாகப் பகிர்ந்து கொள்வார்கள். அதை நமது மீடியாக்கள் துப்பறிந்து செய்தியாக்கி இருந்தார்கள். அந்த அமைப்பினரே கூட தற்கொலை செய்துகொள்ள தயவு செய்து நெருப்பை மட்டும் தேர்ந்தெடுத்து விடாதீர்கள் என தங்களது சக உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்களாம். பெண்டதால் சோடியம் மருந்தை இஞ்ஜெக்‌ஷன் வாயிலாக உடலில் ஏற்றினால் இரண்டே நொடிகளில் வலிக்காமல் மரணித்து விடுவார்கள். பல மருத்துவர்கள் வலியின்றி தற்கொலை செய்து கொள்ள இந்த வழியைத் தான் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். ஒருவர் தற்கொலை செய்து கொள்வது என்று தீர்க்கமாக முடிவெடுத்து விட்டால் இப்படி முயற்சிக்கலாம். அனாவசியமாக நெருப்பைத் தேர்ந்தெடுத்து உயிரோடு சித்ரவதைக்கு உள்ளாகத் தேவையில்லை என்பதாக இருந்தது அந்த சங்கத்தினரின் கலந்துரையாடல்.

நெருப்பை தற்கொலைக்கான மார்க்கமாகத் தேர்ந்தெடுத்த பெண்ணொருவர் எங்களிடம் சிகிச்சைக்கு வந்திருந்தார். அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்துக் கண்காணித்துக் கொண்டு இருந்தோம். கணவர் மீதான கோபத்தில் தன்னைத்தானே எரித்துக் கொண்டு மிக மோசமான தீக்காயங்களுடன் அவர் அட்மிட் ஆகியிருந்தார். கணவரைப் பயமுறுத்த இந்தச் செயலில் இறங்கும் போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை இது மரண விளையாட்டு என. ஆனால், இங்கே மருத்துவமனையில் தீவிரமான தீக்காயங்களுடன் போராடும் போது அந்தப் பெண்ணுக்கு பயம் வந்துவிட்டது. நான் உள்ளே நுழைந்ததும் என் கரங்களை இறுகப் பிடித்துக் கொண்டு ஓவென்று கதறி அழுதார். என்னை எப்படியாவது காப்பாற்றி விடுங்கள் என்று மன்றாடினார். ஆனால், என்ன செய்வது? காப்பாற்றவே முடியாத அளவுக்கு உடலில் பெரும்பகுதி நெருப்புக்கு இரையான பின் எப்படிக் காப்பாற்ற முடியும். அவர் இறந்து விட்டார். இந்தச் சம்பவம் மறக்க முடியாத அளவுக்கு பல ஆண்டுகளாக என்னில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக நிலைபெற்று விட்டது.

கொதிக்கும் எண்ணெயால் தீக்காயம் ஏற்பட்டால் தண்ணீர் ஊற்றி அதை அணைக்கக் கூடாது. எண்ணெயும், தண்ணீரும் கலந்து உடலில் காயத்தை இன்னும் ஆழமானதாக்கி விடும். எல்பிஜி கேஸால் விபத்து எனில் ஜன்னல் மற்றும் கதவுகளை விரியத் திறந்து வைக்க வேண்டும். அதோடு எல்பிஜிகாரர்கள் ஒவ்வொருமுறையும் கேஸ் சிலிண்டர் விபத்துகள் நிகழ்வதற்கான முகாந்திரங்களைப் பட்டியலிட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கலாம். அலுவலகங்கள் மற்றும் திரையரங்குகளில் தீயணைப்பு சாதனங்கள் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். 

சில சமயங்களில் மக்களின் அறியாமையும் கூட தீவிபத்துகளுக்கு காரணமாகி விடுகிறது.

உதாரணமாக ஒரு சம்பவத்தைப் பற்றிச் சொல்கிறேன். அப்போது கடுமையான மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நிலவிய காலகட்டம். மக்கள் கெரோசினுக்காக அலைமோதிக் கொண்டிருந்தார்கள். வடநாட்டில் இருந்து மேற்கு வங்காளத்திலிருந்து மண்ணெண்ணெய் லோடு ஏற்றி வந்த லாரியொன்று ஒதிஷா, ஆந்திரா வழியாக தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருந்தது. இடையில் ஆந்திராவில் ஏதோ தகராறு காரணமாக அந்த லாரி தடுத்து நிறுத்தப்பட்டதில் பொதுமக்களுக்கு அந்த லாரியில் மண்ணெண்ணெய் லோடு இருப்பது தெரிய வருகிறது. உடனே மக்கள் என்ன செய்கிறார்கள்? அந்த லாரியில் இருந்த கெரோசினை ஆளாளுக்கு பிரித்து எடுத்துக் கொள்ள ஆளாய் பறந்து கிடைத்த பொருட்களில் எல்லாம் மண்ணெண்ணெய் நிரப்பிக் கொண்டு செல்கிறார்கள். அந்த வழியாக வந்த பால்காரர் ஒருவர் தன்னிடமிருந்த பாலைக் கேனில் இருந்து கொட்டி விட்டு அதில் மண்ணெண்ணெய் நிரப்பிக் கொள்ளும் அவலமும் அங்கே நடக்கிறது. அப்படி நிரப்பியவர் அந்த கேனை கவனமாக எடுத்துச் சென்றிருக்க வேண்டும். ஆனால், போதிய விழிப்புணர்வு இன்மையாலும், அறியாமையாலும் என்ன நடந்தது என்றால்? பால்காரரோடு இருந்த நண்பர் ஒருவர் சிகரெட் பிடித்துக் கொண்டே சென்றவர் மிஞிய சிகரெட்டை யோசிக்காமல் பால்கேனைத் தாண்டி வீச முயற்சிக்க கேன் மொத்தமும் வெடித்து தீப்பற்றி எரிந்ததில் அந்த இருவருக்குமே கடுமையான தீக்காயங்கள். வெடிக்கக் கூடிய, எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை எப்படிக் கையாள வேண்டும் என்ற போதிய விழிப்புணர்வு நம் மக்களுக்கு வேண்டும் இல்லாவிட்டால் இப்படித்தான் தாங்களாகவே தங்களை விபத்துக்கு உள்ளாக்கிக் கொள்ளும் அவலம் நடந்து விடுகிறது.

மறக்க முடியாத கும்பகோணம் பள்ளியின் கோர தீவிபத்து!

தமிழகத்தையே உலுக்கிய கும்பகோணம் தீவிபத்தின் போது நாங்கள் அங்கே விரைந்த போதே அங்கே பெரும்பாலான குழந்தைகள் இறந்து விட்டார்கள். பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 20% பேரை மட்டுமே எங்களால் காப்பாற்ற முடிந்தது. பாக்கியுள்ள குழந்தைகள் அத்தனை பேருக்கும் உடல் உள்ளுறுப்புகள் நெருப்பால் வெந்து போயிருந்தன. அப்படிப்பட்டவர்களில் பலரை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. எங்களுக்கென்று ஒரு கூட்டமைப்பு இருக்கிறது. பர்ன்ஸ் அசோஸியேசன் ஆஃப் இந்தியா மற்றும் பர்ன்ஸ் அகாதெமி ஆஃப் இந்தியா என்ற பெயரில் இயங்கும் எங்களது கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நாடு முழுவதும் இருக்கிறார்கள். அவர்களும் அப்போது அங்கே உதவிக்கு வந்திருந்தார்கள். ஆனால், கடுமையான தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. சிலர் அரசு மருத்துவமனைகளிலும், சிலர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை எடுத்துக் கொள்ள விரைந்தார்கள். ஆனால், கும்பகோணம் பள்ளியில் நிகழ்ந்த தீவிபத்து மிகக்கோரமான தீவிபத்துகளில் ஒன்று.

இந்தியாவின் தோல்வங்கி குறித்து சில தகவல்கள்...

நம் நாட்டில் மகாராஷ்டிராவில் மட்டும் தான் முன்பு தோல்வங்கி இருந்தது. இங்கே கடுமையான தீக்காயம் அடைந்தோருக்கு மாற்றுத்தோல் பொருத்த நாம் அவர்களைத் தான் நம்பியிருந்தோம். தோல் வங்கிகள் எப்படிச் செயல்படுகின்றன என்றால், இறந்தவர்களின் சடலங்களில் இருந்து அவரது பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர் அனுமதியுடன் பெறப்படும் தோல் மைனஸ் 30 டிகிரி குளிர்பதனத்தில் பாதுகாக்கப்படும். தோல்வங்கிகள் பொதுவாக இறந்தவர்களின் சடலங்களில் இருந்து உடலின் பின்பாகத்தில் உள்ள தோலையே எடுத்து பதப்படுத்துவதால் மீண்டும் அந்த உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப்படும் போது அதிலிருந்து தோல் நீக்கப்பட்டிருப்பதே தெரியாத அளவுக்கே தோல்தானம் இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்ளப்படுகிறது. இது ஒரு நல்ல திட்டம். ஏனென்றால் உலகிலேயே நெதர்லாந்தில் தான் முதல்முறையாக மிகப்பெரிய தோல்வங்கி இருந்தது. இப்போது இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் தவிர தென்னிந்தியாவில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தமிழ்நாடு உறுப்பு தான ஆணையம் மற்றும் தேசிய உறுப்பு திசு மாற்றுதல் எனும் இரு அமைப்புகளின் முயற்சியில் அரசு தோல்வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இதுவே தென்னிந்தியாவின் முதல் தோல்வங்கி.

தீக்காயத்தில் மேல் தோல் முற்றிலுமாகக் கருகும் போது மாற்றுத்தோல் தேவைப்படுகிறது. இந்த மாற்றுத்தோலை நோயாளியின் உடலில் இருந்து எடுப்பதென்றால் மிக நல்லது. நோயாளியின் உறவினர் அல்லது பெற்றோர் தோல் தானம் செய்கிறார்கள் என்றால் அதை  ஹோமோகிராஃப்டிங் என்போம் அதுவும் கூட  நல்லதே. ஆனால், இதை நாம் தமிழ்நாட்டில் காண முடியாது. குஜராத் மாநிலத்தில் யாரோ ஒருவருக்கு கடுமையான தீக்காயம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அங்கே பாதிக்கப்பட்ட நோயாளிக்கு தோல் தானம் செய்ய அத்தை, மாமா, தாத்தா, பாட்டி என்று எல்லோருமே ஓடி வந்து தங்களது தோலை தானமாகத் தர முன்வருவார்கள். அந்த தோலை வைத்துக் கொண்டு நாங்கள் இரண்டு, மூன்று வாரங்களுக்கு சிகிச்சை அளிக்கலாம். அவருக்கு வலி குறையும். மனிதத் தோலின் இயல்புப்படி அது வளரவும் தொடங்கும் எனவே அம்மாதிரியான சந்தர்பங்களில் உறவினர்கள் தோல்தானம் அளிப்பது வரவேற்கத் தக்க அம்சம்.

தோல் தானம்...

அப்படியல்லாமல் தோல் தானம் பெற பிறரை நம்பி இருப்பவர்கள் விஷயத்தில் தாமதத்தை சமாளிக்க நாங்கள் கொலாஜன் மெம்பரேனைக் கண்டுபிடித்தோம். இந்த மெம்பரேனை நோயாளியின் காயத்தின் மீது தகுந்த சிகிச்சை முறையில் அப்ளை செய்து விட்டால் குறிப்பிட்ட கால இடைவெளியில் அது மேற்புறத்தோலை வளரச் செய்து தடிமனாக்கி தோல் பாதிப்படையும் விகிதத்தைக் குறைக்கும். தீக்காயங்களில் மூன்று விதம் உண்டு. 1, 2,3 இதில் முதல் இரண்டு கேட்டகிரியைச் சேர்ந்தவர்களை எங்களால் நிச்சயம் காப்பாற்றி வீட்டுக்கு அனுப்பி விட முடியும். 3 தான் மிகக் கடுமையானது. ஆரம்பத்தில் நாங்கள் ஆம்னியாட்டிக் மெம்பரேன் பொருத்துதல் எனும் சிகிச்சைமுறையைப் பின்பற்றி வந்தோம். ஆனால், உலகில் எய்ட்ஸ் நோயின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியதும் அந்த முறை தடை செய்யப்பட்டு விட்டது. ஆம்னியாட்டிக் மெம்பரேன் என்பது தாயின் தொப்புள் கொடி ரத்தத்தில் இருந்து பெறப்படும் மெம்பரேனை அடிப்படையாகக் கொண்ட சிகிச்சைமுறை. அதற்குப் பிறகு தான் கொலாஜன் மெம்பரேன் முறையைப் பின்பற்றத் தொடங்கினோம். அது மிகச்சிறந்த முறையாக இன்றளவும் கருதப்படுகிறது. இறந்த ஆடு, கன்று போன்றவற்றின் தோல் சீரத்தில் இருந்து பெறப்படும் இந்த மெம்பரேன் மிகப்பாராட்டப் பட வேண்டிய முறைகளில் ஒன்று.

பிளாஸ்டிக் சர்ஜனாகும் தகுதி...

ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜன் ஆக வேண்டுமென்றால் முதலில் அடிப்படை மருத்துவ முதுநிலைக் கல்வியான எம் எஸ் முடிக்க வேண்டும். அதன் பிறகு மூன்றாண்டு தோல் மருத்துவப் படிப்பான எம்சிஹெச் முடிக்க வேண்டும். அதையடுத்து 6 ஆண்டுகள் கழித்தே அவர் ஒரு தகுதி வாய்ந்த பிளாஸ்டிக் சர்ஜனாகக் கருதப்படுவார். பிளாஸ்டிக் சர்ஜனாகும் தகுதி வந்ததால் அவர் ஒரு சிறந்த அனுபவமிக்க பிளாஸ்டிக் சர்ஜன் என்று கருத முடியாது. அந்த நிலையை அடைய அவர் ஒரு மருத்துவக் கல்லூரியில் துணைப்பேராசிரியராக இணைந்து பணியாற்றி இத்துறையில் போதிய அனுபவம் பெற வேண்டும்.

இன்சூரன்ஸ் கம்பெனிகளின் கவனத்துக்கு... 

பிளாஸ்டிக் சர்ஜரியை காஸ்மெடிக் சர்ஜரியாக இன்ஸூரன்ஸ் கம்பெனிகள் அணுகுவதைத் தவிர்க்க வேண்டும். மிக ஏழ்மையானவர்கள் உதட்டுப் பிளவு அறுவை சிகிச்சைக்காகவோ அல்லது வேறு ஏதேனும் பிறவிக் குறைபாடு காரணமாகவோ பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள வேண்டிய நிலை வந்தால் அதற்கான தொகையை சேமிப்பதற்காக அவர்கள் மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டியதாக இருக்கிறது. சில சமயங்களில் காத்திருப்பே உபயோகமற்றதாக மாறி விடக்கூடும். இதை சம்மந்தப்பட்ட இன்ஸூரன்ஸ் நிறுவனங்கள் கணக்கில் கொள்ள வேண்டும். நான் யுனைடேட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியிடம் இது குறித்து பெர்சனலாகக் கோரிக்கை வைத்தபோதும் அவர்கள் இதை உயிர்காக்கும் அறுவை சிகிச்சைமுறைகளில் ஒன்றாக ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள் என்பதே நிஜம்.

நியாயமான காரணங்களுக்காக காஸ்மெடிக் சர்ஜரிகள்...

உலகநாடுகளிடையே இந்தியப் பெண்களுக்கு அத்தனை சீக்கிரத்தில் வயோதிகம் வருவதில்லை. மேலை நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியப் பெண்கள் இளமையாகத் தான் தோன்றுகிறார்கள். இந்தியர்களை விட சீனப் பெண்கள் 80 வயதிலும் கூட 40 வயது போல தோற்றமளிக்கக் கூடியவர்கள் உண்டு. அது அவரவர் நாட்டின் சீதோஷ்ண நிலை மற்றும் மக்களின் வாழ்க்கை முறை சார்ந்தது. அழகியல் காரணங்களுக்காக பிளாஸ்டிக் சர்ஜெரி செய்துகொள்வதை சில சமயங்களில் நியாயப் படுத்த முடியும். ஒரு இளைஞர், தான் ஒரு விளம்பர மாடல் என்றும் தன் முகத்தில் இருக்கும் வடு தனது மாடலிங் தொழிலுக்கு உறுத்தலாக இருப்பதால் அதை சரி செய்ய வேண்டுமென்றும் சொல்லி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள விரும்புவதை நாம் தவறெனச் சொல்ல முடியாது. அதில் ஒரு நியாயமான காரணம் இருக்கிறது. இதுவே சினிமாத்துறையில் இருப்பவர்களுக்கும் பொருந்தும். ஆனால், எப்போது இது தவறாகிறது என்றால் ஒருவர் தொடர்ந்து லிப்போ சக்‌ஷன் என்றும், ஃபேஸ் சர்ஜரி என்றும் மீண்டும் மீண்டும் முயன்று உடல் ஆரோக்யத்தைக் கெடுத்துக் கொள்ள முயலும் போது தான் இது ஆபத்தானதாகிறது. அது தவறு.

தீவிபத்தின் காரணமாக உடல் மற்றும் தோற்றக் குறைபாடு அடைந்தவர்களை சகஜமாக அணுகும் மனப்பான்மை...

தீக்காயங்களால் உடலுறுப்புகளை இழந்த குழந்தைகள், முகம் சிதைந்த குழந்தைகள் பிற குழந்தைகளுடன் இணைந்து பழகலாம். அதனால் ஒன்றும் இல்லை. அவர்கள் நார்மல் பள்ளிகளில் பயிலலாம். அவர்களால் பிற குழந்தைகளைப் போலவே நார்மலாக செயல்படமுடியும். அந்தக் குழந்தைகள் இயல்பான வாழ்வை எதிர்கொள்ள பொதுமக்களும் தங்களாலான பங்களிப்பைச் செய்ய வேண்டும். அது என்னவென்றால் அவர்களை பேதம் பார்த்து தங்களது குழந்தைகளை அணுக விடாமல் தடுப்பதை தவிர்த்தாலே போதும்.

தீவிபத்தில் பாதிப்படைந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு...

குழந்தைகள் மட்டுமல்ல தீவிபத்துகளால் மோசமான உடல் குறைபாடுகளுக்கு ஆளானவர்களை பணியில் வைத்துக் கொள்வதும், வேலை வாய்ப்பு தருவதும் சமூகத்தில் குறைவு. அவர்களுக்கான வேலை வாய்ப்புகளைத் தருவதில் சுய விருப்பு, வெறுப்புகள், கற்பனைகள் தேவையற்றவை. அவர்களுக்குத் தங்களால் சுயகால்களில் நிற்க முடியும் என்ற தன்னம்பிக்கை உணர்வு தருவது நம் ஒவ்வொருவருடைய கடமையும் கூட. இந்த விஷயத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே! என்ன செய்வது இம்மாதிரியான புறக்கணிப்புகளை இந்த சமூகம் தவிர்க்க வேண்டும்.

உண்மையில் தீவிபத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களை இந்த சமூகம் அணுகும் விதம் மாற வேண்டும். சிலரை இந்த விஷயத்தில் பாராட்டலாம்,  ஒருமுறை ஒரு பெண்ணின் சிகிச்சைக்கு அதிகத் தொகை தேவைப்பட்டது. உதவி பெறுவதற்காக நாங்கள் விளம்பரம் கொடுத்திருந்தோம் அதைப் பார்த்து பலவிதமான மனிதர்கள் சிகிச்சைக்காகப் பணம் அனுப்பியிருந்தார்கள். அவர்களில் ஒரு மனிதர் திருப்பூரில் கார்மெண்ட் ஃபேக்டரி வைத்திருப்பவர். அவர் 1 லட்சம் ரூபாய்க்கு செக் அனுப்பி விட்டு, டாக்டர்,  சில ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் என் மகனுக்கு சிகிச்சையளித்து காப்பாற்றினீர்கள். அப்போது என்னிடம் அத்தனை பணமில்லை. ஆனால், இப்போது இருக்கிறது நீங்கள் பரிந்துரைக்கும் நோயாளிகளுக்கு எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம். அவர்களது சிகிச்சைக்காக என்னிடம் தொகை நிரப்பப்பட்ட செக் தயாராக இருக்கும் என்றார். இப்படிப்பட்ட தயாள குணம் கொண்ட மனிதர்களும் நம்மிடையே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆத்ம திருப்தி...

தீக்காயத்தால் கடுமையாகக் காயமுற்ற நோயாளிகளை நாம் சிகிச்சையளித்துக் காப்பாற்ற முடிவது கூட சமயங்களில் பெரிதாகத் தோன்றவில்லை. சிகிச்சைக்குப் பிறகு அவர்களது வாழ்க்கை என்னவாகும்? அவர்கள் தங்களது குறைபாடுகளுடன் இந்த உலகை எதிர்கொள்ள எத்தனை தூரம் அஞ்சுகிறார்கள்? மனதளவில் இந்த உலகை எதிர்கொள்ள அவர்கள் எத்தனை தூரம் கடுமையாகத் துன்புறுகிறார்கள் என்பதில் இருக்கிறது விஷயம். அவர்கள் தங்களது சவால்களை எதிர்த்துப் போராடி இந்த உலகில் தமக்கான வாழ்தல் உரிமையை மீட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படிப் போராடி வென்ற நோயாளிகள் அனேகம் பேர் இருக்கிறார்கள். 

அப்படி வென்றவர்களின் கடிதமோ, வாழ்த்தோ, நன்றியுரைத்தலோ அவ்வப்போது எனது மேஜையில் இருக்கும். அதைக் காணும் போதெல்லாம் நான் தேர்ந்தெடுத்த எனது மருத்துவ சேவையின் பால் எனக்குப் பெருமிதமும் தோன்றும். அது தான் எனது வேலையின் மூலமாக எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கெளரவ விருது எனக் கருதுகிறேன் நான்.

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 50 நோயாளிகளுடன் தொடங்கிய தீக்காய சிகிச்சைத்துறை இன்றைக்கு இத்தனை வளர்ச்சியுற்று தனிச் சிறப்புமிக்க சிகிச்சையளிக்கக் கூடிய மருத்துவமனைகளில் ஒன்றாக வளர்ந்து நிற்பதைக் கண்டு நான் பெருமையுறுகிறேன். 

டாக்டர் அப்துல் கலாமின் பாராட்டு...

டாக்டர் அப்துல் கலாம் கையால் பத்மஸ்ரீ விருது பெறும் போது அவர் எனக்குச் சொன்னது;

நான் ஏன் இந்த விருதுக்கு உங்களைத் தேர்ந்தெடுத்தேன் என்று தெரியுமா? என்று கேட்டார்.

நான் தெரியாது என்றேன், அதற்கு அவர் அளித்த பதில்;

இந்த விருதை உங்களது சான்றிதழ்களுக்காகவும், நீங்கள் பெற்றுள்ள மற்றை பிற கெளரவ விருதுகளின் அடிப்படையிலும் நான் உங்களுக்குத் தர முன் வரவில்லை. நான் உங்களை பத்மஸ்ரீக்குத் தேர்ந்தெடுக்க முக்கியமான காரணம், நீங்கள் இதுவரை 40,000 நோயாளிகளின் தீக்காயமுற்ற உடல்களை உங்களது கைகளால் தொட்டு சிகிச்சையளித்திருக்கிறீர்கள். அந்த அர்ப்பணிப்பு உணர்வுக்காக மட்டுமே நான் இந்த விருதுக்கு உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்றார். 

அப்துல் கலாமிடமிருந்து அப்படி பாராட்டுப் பெறுவது எனக்கு மிகப் பெருமிதமாக இருந்தது. அந்த நாள் என் வாழ்வில் மிக முக்கியமான நாள். மற்றபடி விருது மயக்கங்கள் எல்லாம் எனக்கு இல்லை. என் தொழிலில் நன் விரும்பி தேர்ந்தெடுத்த எனது துறையில் நான் திருப்தி அடைந்தேன். அடைந்து கொண்டிருக்கிறேன்.

]]>
டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணன், பிளாஸ்டிக் சர்ஜன், பத்மஸ்ரீ, தீக்காயம் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி சிறப்பு மருத்துவப் பிரிவு, Doctor madhangi ramakrishnan, plastic surgeon, padmasri award winner http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/25/w600X390/dr.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/may/25/dr-madhangi-ramakrishnan---must-to-be-known-2926704.html
2926064 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் நத்தை கிரேவி... உலகம் முழுவதும் பல்லாண்டுகளாக இது மிக ருசியான ஸ்பெஷல் ரெஸிப்பிகளில் ஒன்று! கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. Thursday, May 24, 2018 05:02 PM +0530
‘வாகை சூட வா’ திரைப்படத்தில், ஒரு பாடல்காட்சியில் இனியா, வாத்தியார் விமலுக்கு நத்தை அவித்து சாப்பிடத் தருவார். முதல்முறை அந்தக் காட்சியைக் காணும் போது வியப்பாக இருந்தது. அட நத்தையைக் கூடவா சாப்பிடுவார்கள்? என்று ஒரே அதிசயமாகக் கூட இருந்தது. ஆனால் இணையத்தில் நத்தை கறி என்று தேடிப்பார்த்தால் உலகம் முழுதும் மக்கள் விதம் விதமாக நத்தையை ரசித்துச் சமைத்து ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது. நத்தை வேண்டுமானால் மெதுவாக ஊர்ந்து செல்லலாம் ஆனால் அதன் கறியோ தொண்டைக்குள் வழுக்கிக் கொண்டு இறங்கும் என்கிறார்கள் ஒருமுறை அதை உண்டு பழகியவர்கள்.

 • கிட்டத்தட்ட ஆய்ஸ்டர், ஸ்கைலாப், ஸ்குயிட் வெரைட்டிகளைப் போன்ற சுவையுடனிருக்கும் நத்தை கறி மூலவியாதிக்கு நல்லது என்ற நம்பிக்கை பலரிடம் இருக்கிறது.
 • சிலர் கடுமையான வறட்டு இருமலுக்கு இதை நல்ல மருந்து என்கிறார்கள்.

சரி நத்தை இந்தியப் பாரம்பரிய உணவு வகைகளிலும் ஒன்றே என்பதால், வாழ்நாளில் ஒருமுறையேனும் நத்தையை ருசி பார்க்கும் ஆர்வம் இருப்பவர்களுக்கு அதை எப்படிச் சமைப்பது எனக் கற்றுத் தரும் முயற்சியே இந்த புதிய ரெசிப்பியின் நோக்கம்.

நத்தைகளில் இரண்டு வகை உண்டு;

நில நத்தை, கடல் நத்தை.

இதில் நில நத்தை என்பது மழைக்காலங்களில் காடு, கழனிகள், ஈரப்பதமான இடங்கள் மற்றும் நன்னீர் ஏரி, குளம் போன்ற தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் கிடைக்கக் கூடியது. பொதுவாக அதிக விஷத்தன்மை அற்றது.

கடல் நத்தையில் கொடிய விஷம் கொண்ட வகைகளும் உண்டு. அந்த விஷத்தன்மை அவற்றின் இரைகளைப் பிடிக்கவே பயன்படுத்தப் படுகிறது. மனிதர்கள் தப்பித் தவறி கடல் நத்தைகளின் விஷக் கொடுக்குகளில் அகப்பட்டுவிட்டார்கள் எனில் உயிராபத்து இல்லையென்றாலும் பக்கவாதத்தில் கொண்டு விடும். அடடா... அதை ஏன் இப்போது சொல்கிறீர்கள்? நத்தையைப் பிடித்து சமைத்துச் சாப்பிடப் போகையில் இதென்ன அபச்சொல் என்று நினைத்து விடாதீர்கள். ஒன்றைத் தொடங்கும் முன் நன்மை, தீமை இரண்டையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டுமே!

இந்தியன் ஸ்பெஷல் நத்தை கிரேவி...

செய்முறை: 

நம்மூரில் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் நத்தை சாப்பிடும் வழக்கம் அதிகம். வயல்களில் கிடைக்கும் நத்தைகளை உயிரோடு பிடித்து வந்து கொதிக்க வைத்த நீரில் சற்று நேரம் போட்டு வைத்தால் போதும் நத்தை இறந்து விடும் பிறகு ஓடுகளை உடைத்து நத்தைகளைத் தனியாகப் பிரித்தெடுத்து நல்ல தண்ணீரில் இரண்டு, மூன்று முறை நன்கு அலசி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து விட்டு, அடுப்பை ஏற்றி அதில் பெரிய வாணலியை வைத்து சமையல் எண்ணெய் ஊற்றி பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் அரிந்து போட்டு வதக்கி அதனுடன் நைஸாக நசுக்கிய இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பிட்டுக் கிளறிக் கொண்டே இருக்கவும். நத்தை கறி வெந்து கொண்டே இருக்கும் போது அதனுடன் தேவையான அளவு மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு நத்தை கறியின் அளவுக்கு ஏற்ப அரை லிட்டர் முதல் 1 லிட்டர் வரை தண்ணீர் விட்டு கறியை நன்கு வேக விடவும். இறுதியில் ஒரு கைப்பிடி பொறிகடலையை அப்படியே கல்லுரலில் நைஸாக அரைத்தோ, அல்லது மிக்ஸியில் அரைத்தோ குழம்பு நன்றாகக் கொதித்து வரும் போது அதில் சேர்த்துக் கிளறவும். கறி நன்கு வெந்த வாசம் வந்ததும் அடுப்பை அணைத்து குழம்பை இறக்கி அதில் பொடியாக நறுக்கிய கொத்துமல்லித் தளை தூவி இறக்கவும்.

இப்போது நத்தை கறி பரிமாறத் தயார்.

மேலே சொன்னது ஆந்திரத்து பாட்டி ஸ்டைல் நத்தை குழம்பு.

கம்போடியன் ஸ்பெஷல் நத்தை கிரேவி செய்முறை...

இதையே கம்போடியன் ஸ்டைலில் செய்வதென்றால் பொறிகடலை அரைத்துச் சேர்ப்பதற்கு பதிலாக நிலக்கடலையை பாதியாக உடைத்துச் சேர்த்துச் சமைக்கிறார்கள் அங்கு. அதோடு நத்தையின் ஓட்டையும் அவர்கள் முழுதாக உடைப்பதில்லை. நம்மூரில் மீன்களை அப்படியே முழுதாகப் பொரிப்பதென்றால் மேலே கீறித்தருவார்களே அப்படி நத்தையோட்டின் தலைப்பகுதியைக் கீறி ஓட்டை போட்டு அதனுள் நன்றாக மசாலா இறங்கும் வண்ணம் செய்து அப்படியே ஓட்டுடன் சமைக்கிறார்கள் கம்போடியாவில். மற்றபடி ரெஸிப்பி என்னவோ இந்தியன் ஸ்டைல் தான். கறி நன்றாக வெந்து கிரேவி தயாரானதும் உள்ளிருக்கும் நத்தை கறியை டூத்பிக்கால் சுண்டி இழுத்துச் சுவைக்கிறார்கள். அது கிட்டத்தட்ட நன்றாக வேக வைத்த நல்லி எலும்புக் குழம்பில் இருந்து மஜ்ஜையை உறிஞ்சிச் சுவைத்து உண்பதற்கு ஒப்பானதாக இருக்கிறது.

நத்தை கறி சுத்தம் செய்வது எப்படி?

நத்தையை நீங்கள் நன்னீர் ஏரிகளில் பிடித்து உண்பதாக இருந்தாலும் சரி, கடல் நத்தைகளை கடையில் வாங்கி உண்பதானாலும் சரி அவற்றை சுத்தம் செய்வது கொஞ்சம் கஷ்டமான வேலையே. பொதுவாக நத்தைகளின் குடல் பகுதியில் மகிய அசுத்தமான கழிவுகளும், விஷத்தன்மை கொண்ட கழிவுகளும் தேங்கி இருக்க வாய்ப்புகள் அதிகம். வீட்டில் நத்தை வளர்த்து உண்ண ஆசையென்றால் உயிருடன் நத்தைகள் வாங்கி வந்து அவற்றை சமைத்து உண்பதற்கு முன்பே முதல் மூன்று நாட்களுக்கு அவைகளுக்கு வெறும் முட்டைக்கோஸை மட்டுமே உணவாகத் தர வேண்டும். அப்போது தான் நத்தைகளின் குடல் சுத்தமாகி தேவையற்ற நச்சுகள் அவற்றின் குடலில் இருந்து நீங்கும். பிறகு தான் அவற்றை நம்மால் சமையலுக்குப் பயன்படுத்த முடியும்.

நத்தை கறி ருசி எப்படிப்பட்டது?

நத்தை பல ஆண்டுகளாக இந்தியர்களின் உணவுப் பழகக்த்தில் சிறப்பான இடம் பிடித்த உணவாகவே இருந்த போதும். பெரும்பாலானவர்களால் அது உண்ணப்படவில்லை என்பதே நிஜம். இன்றும் கூட அசைவ உணவகங்களில் நத்தை வழக்கமான உணவு இல்லை. நட்சத்திர விடுதிகளில் மட்டுமே கஸ்டமர்களின் விருப்பத்துக்கு ஏற்ப சில இடங்களில் நத்தை சமைத்து தரப்படுகிறது. மற்றபடி ஆடு, வாத்து, கோழி, மீன், இறால், மாட்டுக்கறி போல இது வழக்கமான அசைவ உணவு வகைகளில் ஒன்றாக இல்லை. நத்தை கறியின் ருசி எப்படி இருக்கும்? என்று இணையத்தில் தேடினால் அது சுவையில் ஆயிஸ்டர்( முத்துச்சிப்பி) ஸ்கைலாப், லாப்ஸ்டர், இறால் போன்ற சுவைகளில் இருக்கும் எனப் பலரும் பலவிதமாகக் கருத்துக் கூறி இருக்கிறார்கள்.

நத்தை கறி ஹெல்த் பெனிஃபிட்ஸ்...

100 கிராம் நத்தையில் 3.5 மில்லிகிராம் அயர்ன் கிடைக்கிறது. இது மாட்டுக்கறியில் கிடைப்பதை விட அதிகம். பொட்டாசியம்

மாட்டுக்கறியில் எத்தனை சதம் இருக்கிறதோ அதற்கு மிகச்சரியான விகிதத்தில் நத்தையிலும் உண்டு. 100 கிராம் நத்தை சாப்பிட்டால் உங்களது உடலில் 90 கலோரி ஆற்றல் ஏறும். நத்தையில் கொழுப்பு குறைவு. புரதம் அதிகம். புதிதாக உண்பவர்களுக்கு செரிமானப் பிரச்னைகள் வரலாம். ஆனால், பழகிப் போனால் பெரிதாக எந்தக்குறையும் அதில் இல்லை.

உலகில் எங்கெல்லாம் நத்தை உணவாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது? 

ஆசியா, அமெரிக்கா, ஆஃப்ரிக்கா, ஃப்ரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் நத்தை ஒருவகை ஃபேன்ஸி உணவாகக் கருதி உட்கொள்ளப்பட்டு வருகிறது. இதை எஸ்கார்கோ எனவும் சிலர் குறிப்பிடுகிறார்கள். ரோமில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவிழாக்களின் போது திராட்சை ரசத்துடன் சேர்த்து நத்தையை உணவாகச் சாப்பிடும் வழக்கம் இருந்திருக்கிறது என ரோமானிய வரலாற்று ஆசிரியர் பிளைனி தி எல்டர் குறிப்பிடுகிறார். ரோமானியர்கள் நத்தையை வேக வைத்து, உப்பில் ஊற வைத்துப் பிறகு நன்கு அலசி மைக்ரோ ஓவனில் அவித்துச் சாப்பிடும் வழக்கைத்தை பின்பற்றியிருக்கிறார்கள்.

ஆரம்பகாலங்களில் நத்தைகளை வேட்டையாடுவது சற்று சிரமமாகத் தான் இருந்திருக்கிறது. காடுகளில் ஈரப்பதமான இடங்களில் உலவும் நத்தைகளைப் பிடித்து வந்து வீட்டுத் தோட்டங்களில் ஒரு கூடையில் முட்டைக்கோஸ் இதழ்களைப் போட்டு ஐந்து முதல் ஆறு நாட்கள் வளர்த்து அதன் குடலில் உள்ள நச்சுகளை அகற்றி அவற்றை மனிதக் குடலின் செரிமான திறனுக்கு உட்பட்ட வகையில் மாற்றிய பிறகே சமைக்கப் பயன்படுத்தி இருக்கிறார்கள். ரோமானியர்கள் எதற்காக நத்தைகளை உண்ணப் பழகி இருக்கிறார்கள் எனில்? அதில் புரதம் அதிகமாகவும் கொழுப்பு குறைவாகவும் இருந்ததால்.

நத்தைகளை ஓவனில் அவித்து அதன் மீது பூண்டும், வெண்ணெயும் தடவி சாப்பிடுவது ரோமானியர் ஸ்பெஷல்.

]]>
நத்தை கிரேவி, கம்போடியன் நத்தை கிரேவி, ரோம், நத்தை அசைவ உணவு, snail gravy, combodian snail gravy, rome's baked snail, delicious snail food, non veg food culture, international snail lovers, http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/24/w600X390/snail_gravy.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/may/24/snail-gravy-a-delicious-food-across-the-world-2926064.html
2924136 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் சொந்தத் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைச் சாப்பிடும் கனவு யாருக்கில்லை? இதோ அதை நனவாக்க ஒரு வாய்ப்பு! கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. Monday, May 21, 2018 04:48 PM +0530  

உங்களுக்கு மாடித்தோட்டமோ அல்லது வீட்டைச் சுற்றிலும் இடமிருந்தால் வீட்டுத்தோட்டமோ போட்டுக் கொள்ளும் ஆவல் இருக்கிறதா? அப்படியானால் நீங்கள் செய்யவேண்டியது தமிழக அரசின் பெண்கள் நல மேம்பாட்டுத்துறையை அணுக வேண்டியது மாத்திரமே!

அங்கே மாநிலம் முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறத்தின் நலிவடைந்த பெண்களுக்கு தோட்டக்கலைத்துறை சார்பாக மாடித்தோட்டம் போடக் கற்றுத்தருகிறார்கள். கற்றுக் கொண்ட பெண்களுக்கு போதுமான பயிற்சி அளித்து நகரங்களில் மாடித்தோட்டம் போடும் ஆசையிருப்பவர்களுக்கு அருகிருந்து உதவுமாறு வேலை வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறார்களாம். கடந்தாண்டு டிசம்பரில் தொடங்கிய இந்த பயிற்சியில் இதுவரை 220 பெண்கள் பயிற்சி பெற்று தேர்ந்துள்ளனர். பயிற்சி பெற்ற பெண்கள் முன்னதாக விவசாயம் மற்றும் தோட்டம் போடுதலில் அனுபவமுடையவர்களாக இருந்தால் அவர்களுக்கு நகர்ப்புறத்தில் காய்கறிகள் மட்டும் மூலிகைச் செடிகளுடன் கூடிய மாடித்தோட்டம் போடுவது எப்படி? என்பது குறித்துப் பிரத்யேகப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சிக்காக இதுவரையில் நலிவடைந்த நிலையிலுள்ள பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வந்து குவிந்த வண்ணம் இருக்கிறதாம். வறுமையில் வாடும் பெண்கள் தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறும் பெண்கள் நல மேம்பாட்டுத்துறையின் உயர் அதிகாரி ஒருவர் மாடித்தோட்டம் அமைக்கும் பயிற்சியில் மேலும் பல பெண்கள் இணைவதை மகிழ்ச்சிக்குரிய வளர்ச்சிக்குரிய விஷயங்களில் ஒன்றாக தமிழக அரசு கருதுவதாகத் தெரிவித்தார்.

பயிற்சி பெற்ற பெண்களின் விருப்பத்துக்கேற்ப அவர்கள் நகர்ப்புறத்தில் மாடித்தோட்டம் போட ஆவலாக இருப்பவர்களுக்கு வழிகாட்ட அனுப்பி வைக்கப்படுகிறார்கள். குறைந்த பட்ச முதலீட்டில் அருமையான மாடித்தோட்டம் போடக் கற்றுத்தருவதுடன் குறிப்பிட்ட இடைவெளிகளில் அந்தத் தோட்டங்களைக் கண்காணித்து தேவையான ஆலோசனைகள் மற்றும் மாறுதல்களைச் செய்யவும் அவர்கள் உதவுகிறார்கள்.

அப்படி அரசு உதவியால் மாடித்தோட்டம் அமைக்கும் பயிற்சி பெற்று தூத்துக்குடியிலிருந்து சென்னை வந்திருக்கும் பெண்களில் ஒருவரான மாலா, இங்கே தான் பொறுப்பில் எடுத்துக் கொண்ட மாடித்தோட்ட வீடுகளுக்கு குறிப்பிட்ட இடைவெளிகளில் சென்றூ தோட்டங்களை மேற்பார்வையிட்டு அவற்றில் களை நீக்கப்பட்டுள்ளதா? போதுமான அளவு சூரிய வெளிச்சமும், தண்ணீரும் கிடைக்கக் கூடிய இடங்களில் செடிகள் வளர்கின்றனவா? என்பதையெல்லாம் சோதிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

எத்தனைக்கெத்தனை சொந்தமாகத் தோட்டம் போட்டு காய்கறிச் செடிகளை வளர்க்கும் ஆசையுடன் இருக்கிறீர்களோ அத்தனைக்கத்தனை நீங்கள் நோயிலிருந்து விலகி நிற்கிறீர்கள் என்று அர்த்தம். வீட்டுத் தோட்டத்தில் வளரும் செடிகளில் பெரும் பண்ணைச் செடிகளைப் போலவோ அல்லது சந்தைகளில் நீங்கள் விலைக்கு வாங்கும் காய்கறிகளைப் போலவோ பூச்சி மருந்துகளின் தாக்கம் இருப்பதில்லை.’ என்கிறார் மாலா.

அதுமட்டுமல்ல, பல வகைக் கீரைகள், கற்றாழை, கால்ஃபிளவர், மற்றும் விதைப் பயிர்களையும் கூட நாம் மாடித்தோட்டத்தின் வாயிலாக வளர்க்க முடியும் என்று கூறும் மாலா, ஊதா நிற கத்தரிக்காய்களுக்கு தொண்டைபுண்களை தீர்க்கும் திறனுண்டு என்கிறார்.

மாடித்தோட்டம் போடப் பயன்படுத்தும் மூங்கில் கூடை முதற்கொண்டு அத்தனை பொருட்களையும் அரசு சல்லிசான விலையில் தந்து உதவுகிறது. அவற்றைப் பராமரிப்பதும் கூட எளிதானது தான். இதில் பயன்படுத்தப்படும் மண்ணில் உலர்ந்து காய்ந்த தாவர இலைகள் மற்றும் பசுஞ்சாணம் கலக்கப் படுவதால் அவற்றுக்கு பூச்சிகளை விரட்டும் தன்மையோடு நோய்களை விரட்டும் தன்மையும் உண்டு என்றும் கூறுகிறார் மாலா.

மாலாவின் வார்த்தைகளில் நம்பிக்கை இருப்பின் மாடித்தோட்டம் போட ஆவலிருப்பவர்கள் 044 - 28173412 எனும் எண்களில் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெறலாம்.

]]>
terrace vegetable garden, pesticise free gardening, மாடித்தோட்டம், ஆர்கானிக் காய்கறிகள், பூச்சிமருந்து கலக்காத காய்கறிகள், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், ஆரோக்யம், லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல், lifestyle special http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/21/w600X390/000000000terrace_garden.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/may/21/want-to-grow-your-own-garden-contact-this-number-044---28173412-2924136.html
2924085 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் மண்பானைத் தண்ணீரால் சளி பிடிக்குமென்று பயமா? அதை ஆரோக்யமானதாக மாற்ற சில டிப்ஸ்! கஸ்தூரி ராஜேந்திரன், தேனி. Monday, May 21, 2018 12:56 PM +0530  

கோடை கடுமையாகத் தன் வேலையைக் காட்டத் தொடங்கி வாரங்கள் கடந்து கொண்டிருக்கின்றன. ஏப்ரல், மே, ஜூன் மாத இறுதி வரையிலும் சமயங்களில் சீதோஷ்ண நிலை சதி செய்தால் செப்டம்பர் வரையிலும் கூட நமக்கு கோடை தான். அருங்கோடையில் கூட ஃப்ரிஜ்ஜில் நீரைக் குளிர வைத்துக் குடிப்பது பலருக்கு ஒத்துக் கொள்வதில்லை. கடும் சளித்தொல்லை, ஆஸ்துமா போன்ற அவஸ்தைகளுடன் ஜில்லென்று குடிநீர் அருந்தி தாகத்தை தணித்துக் கொள்ளக்கூட முடியாமல் பலர் சிரமப் பட்டுக் கொண்டு இருப்பார்கள். ஃப்ரிஜ்ஜில் தண்ணீர் வைத்துக் குடித்தால் உடல்நிலைக்கு ஒத்துக் கொள்ளாது என்று நினைப்பவர்கள் மண்பானைத் தண்ணீரை முயற்சி செய்யலாம். மண்பானைத் தண்ணீர் கூடத்தான் சளி, ஆஸ்துமாக்காரர்களுக்கு எதிரி என்று சொல்வீர்களானால் அதற்கு சில மாற்று வழிகள் உண்டு. மண்பானைத் தண்ணீரே ஆரோக்யமானது தான் என்றாலும் அதன் குளிர்ச்சியால் சளி பிடிக்காமலிருக்க என்னென்ன மாற்று ஏற்பாடுகள் செய்து அதன் அபாயத்தைத் தவிர்க்கலாம் என்று இப்போது பார்க்கலாம்.

மண்பானைத் தண்ணீரை ஆரோக்யத் தண்ணீராக மாற்றும் வழிமுறைகள்...

 • தண்ணீர்: முக்கால் லிட்டர்
 • வெட்டி வேர்: கைப்பிடி அளவு 
 • சந்தனக் கட்டை: சுண்டுவிரல் நீள சந்தனக் கட்டை
 • நன்னாரி வேர்: 5 துண்டுகள்
 • கொத்தமல்லி விதை: 2 டீஸ்பூன்
 • சீரகம்: 2 டீஸ்பூன்

திடப்பொருட்கள் அனைத்தையும் ஒருமுறை நன்றாக நீரில் அலசி வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொண்டு பயன்படுத்த வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் மேற்கண்ட பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு அவற்றை முக்கால் லிட்டர் நீரில் ஊற வைத்து விடலாம். ஏனெனில் இந்தப் பொருட்களை எல்லாம் நேரடியாக அப்படியே மண்பானைத் தண்ணீரில் சேர்த்தால் சந்தனக் கட்டை எடை அதிகம் என்பதால் நீரில் மூழ்கிவிடும் ஆனால் வெட்டிவேர், கொத்தமல்லிவிதை, சீரகம் எல்லாம் நீரில் மிதக்கத் தொடங்கி விடும். ஒவ்வொரு முறையும் இவற்றை வடிகட்டி, வடிகட்டி நீர் அருந்த நமக்கு சோம்பேறித்தனமாகி பிறகு நாளடைவில் வெறும் தண்ணீரே மேல் என்ற மனநிலைக்கு வந்து விடுவோம். அதனால் முக்கால் லிட்டர் நீரில் இவற்றை சுமார் 5 மணி நேரமாவது ஊற வைத்துவிட வேண்டும். பிறகு ஊறிய நீரை வடிகட்டி, அதை மண்பானையில் முன்னரே ஊற்றி வைத்து சில்லென்று இருக்கும் நீரோடு சேர்த்தோமென்றால் நமக்கு அருந்த வசதியாக இருக்கும்.

இந்த பொருட்களைச் சேர்ப்பதனால் கிடைக்கும் ஆரோக்யப் பலன்கள்...

 • மண்பானைத் தண்ணீரில் சேர்க்கப்படும் மேற்கண்ட பொருட்கள் அனைத்துமே உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியவை மட்டுமல்ல, மனதுக்குப் புத்துணர்ச்சி தரத்தக்க நல்ல நறுமணமும் கொண்டவை. இவை மனச்சோர்வைப் போக்கி சிறுநீரக நோய்களைத் தவிர்க்கும் விதத்தில் ரத்தத்தை சுத்திகரிக்கவும் உதவுகின்றன என்கிறது சித்தமருத்துவம்.
 • அதுமட்டுமல்ல, இந்தத் தண்ணீரை தொடர்ந்து 1 மாதம் நாம் அருந்திக் கொண்டிருந்தோமென்றால் நமது உடலின் வியர்வை நாற்றத்தைக் கூட குறைக்கும் தன்மை இதற்கு உண்டு என்கிறார்கள் இந்த முறையைப் பின்பற்றி மண்பானைத் தண்ணீர் அருந்தியவர்கள்.

சரி இப்போது தண்ணீர் ஊற்றி வைக்க மண்பானையை இதுவரை உபயோகித்துப் பழக்கமில்லாதவர்கள் புதிதாக மண்பானைத் தண்ணீர் குடிக்க ஆசைப்பட்டு வாங்குகிறார்கள். ஆனால், முறையாக மண்பானையைப் பயன்படுத்தத் தெரியவில்லை.

எப்படி மண்பானையில் தண்ணீர் ஊற்றி வைத்து புழங்குவது என்ற சந்தேகத்திற்கான தீர்வு.

 • இப்போது அனைத்துச் சந்தைத் திடல்களிலும் மண்பானை கிடைக்கிறது. மண்பானையைத் தட்டிப் பார்த்து வாங்க வேண்டும். தட்டும் போது சுடப்பட்டு, நன்கு காய்ந்த மண்பானை எனில் சொத், சொத்தென சத்தம் வராமல் வெண்கலப் பானை போல ‘நங்’கெனச் சத்தம் வரும். அப்படிப்பட்ட மண்பானையாகப் பார்த்து வாங்கி அதில் சாதாரண குழாய்த் தண்ணீரை நிரப்பி இரண்டு நாட்கள் ஊற விட்டு பிறகு மீண்டும் தேங்காய் நார் அல்லது உடல் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தும் பீர்க்கை நார் கொண்டு மிருதுவாகத் தேய்த்துக் கழுவி வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
 • பிறகு இந்த மண்பானைக்கு ஒரு அருமையான ஸ்டாண்டு தயார் செய்ய வேண்டும். ஸ்டாண்ட் என்றால் சாதாரண வளை அல்ல. ஒரு வாயகன்ற பிளாஸ்டிக் அல்லது எவர்சில்வர் பேசினில் ஆற்றுமணல் + கல் உப்பு சம அளவு கலந்து பேசினின் முக்கால்பாகம் வரை நிரப்பி அதை மண்பானைக்குரிய ஸ்டாண்ட் ஆகப் பயன்படுத்த வேண்டும். இப்படிச் செய்வதால் உப்பு மற்றும் ஆற்றுமண் உதவியால் வெயில் ஏற, ஏற மண்பானையின் சில்லிட்ட தன்மை குறையாமல் அப்படியே நீடித்திருக்கும். 
 • நன்றாகக் காற்றுப் புகும் தன்மை கொண்ட் மண்பானை எனில் அதில் நிச்சயம் ஈரப்பதம் இருக்கும். ஈரப்பதம் பானையின் வெளியில் கசிந்தால், உடனே அது ஓட்டைப் பானை என்று கருதி விடாதீர்கள். அது நல்ல பானை தான். பானையின் வெளிப்புறத்தில் கசியும் நீரை ஸ்டாண்ட் பேசினில் நாம் சேர்க்கும் மணல், உப்புக் கலவை ஈர்த்துக் கொள்ளும். 

இப்படியெல்லாம் முன்னேற்பாடுகள் செய்து விட்டோமென்றால் போதும், இனி சளி பிடிக்கும் என்ற பயமின்றி சந்தோஷமாக அருந்தலாம் இயற்கை ஃப்ரிஜ்ஜான மண்பானைத் தண்ணீரை. கோடையில் ஃப்ரிஜ்ஜால் கரண்ட் பில் எகிறுமோ என்ற பயமும் கூட இனித் தேவையில்லை.

]]>
summer, lifestyle Special, லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல், மண்பானைத் தண்ணீர், சளித் தொல்லை, ஆஸ்துமா, கோடை வெயில், earthen pots, cold, asthma, earthen water healthy water http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/21/w600X390/000000earthern_pot_water.jpeg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/may/21/earthen-pot-water-drinking-habits-good-for-health-2924085.html
2922942 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ‘குளிக்கும் போது அருவியில் தவறி விழுந்து இளைஞர் மரணம்’ போன்ற பேரிழப்புகளைத் தவிர்க்க சில டிப்ஸ்... RKV Saturday, May 19, 2018 03:15 PM +0530  

கோடை விடுமுறையைக் கழிக்க நண்பர்களுடன் பெங்களூரு அருவி ஒன்றுக்கு குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் 50 அடி உயரப் பாறையிலிருந்து வழுக்கித் தவறிக் கீழே விழுந்து உயிரிழந்த காட்சி மனதைப் பதறச் செய்கிறது. இந்தச் சம்பவம் பெங்களூரு ராம்நகர் மாவட்டத்தில் உள்ள ஹக்கில்புரா என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த இளைஞரின் பெயர் சீனிவாச ரெட்டி எனத் தெரிய வந்துள்ளது. நண்பர்களுடன் விடுமுறையக் கொண்டாட அருவிக்கு வந்த போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

கோடை விடுமுறை என்றாலே மக்கள் குடும்பம், குடும்பமாக கடற்கரை, அருவிக் குளியல், பீச் ரிஸார்ட்டுகள், மலைவாசஸ்தலங்கள் என்று கிளம்புவது வழக்கமான செயல். ஆனால் மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டிய அந்த விடுமுறைக் கொண்டாட்டங்கள் இப்படி துயரமானதாக முடிந்தால் அது வாழ்நாள் முழுமைக்குமாக ஜீரணிக்க முடியாத இழப்பாக மாறிவிடக்கூடும். எனவே பொதுமக்கள் விடுமுறையைக் கழிக்க அருவிக் குளியல் செய்வதெல்லாம் சரி என்றாலும் கூடுமானவரை போதுமான எச்சரிக்கை நடவடிக்கைகளுடனே தங்களது பயணத் திட்டங்களையும், பொழுதுபோக்கு அம்சங்களையும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் இப்படியான திடுக்கிடும் விபத்துக்களில் சிக்கி உயிரிழக்க வேண்டியதாகி விடும்.

அருவி, நீச்சல்குளம் மற்றும் கடலில் குளிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகள்...

 • நீங்கள் சென்றிருக்கும் இடத்தைப் பற்றிய துல்லியமான விவரங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
 • அருவியில் அரசு அல்லது தனியார் சுற்றுலாத்துறையினர் குறிப்பிட்டிருக்கும் எல்லைகளில் நின்று மட்டுமே குளிக்க முயல வேண்டும். தடுப்புக் கட்டைகளை மீறி த்ரில் விளையாட்டுகளில் ஈடுபடுகிறோம் என்ற பெயரில் நீர்ச்சுழி இருக்கும் இடங்களில் சென்று குளிக்க முயல்வதோ அல்லது விளிம்புகளில் நின்று குளிக்க முயல்வதோ தவறு.
 • அருவியில் குளிக்கச் செல்கையில் தலையிலும், உடலிலும் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு செல்வது தவறு. இது சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல தனிமனிதர்களுக்கும் ஆபத்தானது. எண்ணெய் தண்ணீரோடு கலக்கும் போது நீங்கள் மட்டுமல்ல உங்களுக்கு அருகிலிருப்பவர்களும் கூட வழுக்கி விழ வாய்ப்புகள் அதிகம்.
 • மிக உயரமான இடங்களில் நின்று கொண்டு குளிக்கிறீர்கள் எனில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சேர்த்து அதற்கு போதுமான அனுமதி பெறப்பட்டுள்ளதா? அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை சம்மந்தப்பட்ட சுற்றுலாத்துறை நிர்வாகம் பெற்றுள்ளதா? என்பதை முழுமையாகச் சோதித்து விட்டு பிறகு அந்த முயற்சியில் இறங்கவும்.
 • ஆழம் அதிகமுள்ள ஏரிகள் அல்லது கடற்பகுதிகளில் போட்டிங் செல்ல ஆசை என்றால் லைஃப் ஜாக்கெட் அணிந்து கொள்ள வேண்டும். நம்மூரில் போட்டிங் செல்ல ஆசைப்பட்டால் லைஃப் ஜாக்கெட் என்ற பெயரில் துர்நாற்றம் மிக்க கிழிந்த ரெக்ஸின் கோட்டுகளைத் தருகிறார்கள். பணத்தைக் கொட்டிக் கொடுத்து டூர் பிளான் செய்பவர்கள் பேசாமல் தங்களுக்கே தங்களுக்கென்று தரமான லைஃப் ஜாக்கெட்டுகளை வாங்கி சொந்தமாக அணிந்து கொள்ளலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் லைஃப் ஜாக்கெட்டுகள் அணியாமல் ஆழம் அதிகமுள்ள பகுதிகளில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.
 • நீச்சல் குளங்களில் குளிக்க ஆசைப்படுபவர்கள் குளத்தில் இறங்கும் முன் தங்களது ரத்த அழுத்தம் சராசரி அளவில் இருக்கிறதா என்று செக் செய்து கொள்ளலாம். சமீபத்தில் சென்னை மெரீனா நீச்சல் குளத்தில் குழந்தைகளை நீச்சல்பயிற்சியில் விட்டு விட்டு தானும் நீந்திக் குளிக்கலாம் என குளத்தில் குதித்த இளைஞர் ஒருவர் குதித்த மாயத்தில் ஹார்ட் அட்டாக் வந்து இறந்தார் என்றொரு செய்தி வெளியானது. எனவே நீச்சல் குளத்தில் குளிப்பவர்கள் தங்களது ரத்த அழுத்தம், இதய ஆரோக்யம் எல்லாவற்றையும் சோதித்து நார்மலாக இருந்தால் மட்டுமே நீச்சலில் இறங்கவும். 
 • நார்மல் ஹெல்த் இருப்பவர்களில் நீந்தத் தெரியாதவர்கள் இருப்பின், ஆழம் அதிகமான நீச்சல் குளங்கள் எனில் ரப்பர் டியூபுகள் அல்லது பேடுகளைப் பயன்படுத்தி நீந்தலாம்.
 • குழந்தைகளை கடலில் குளிக்க அழைத்துச் செல்ல ஆசைப்படுபவர்கள் அந்தப் பகுதிகளில் லைஃப் கார்டுகள் என்று சொல்லப்படக்கூடிய பாதுக்காப்பாளர்கள் பணியிலிருக்கிறார்களா என்பதை அறிந்து கொண்டு கடலில் கால் வைக்கவும். குளிக்க விரும்பாத குழந்தைகளை போதுமான பாதுகாவலர்களை ஏற்பாடு செய்தோ அல்லது உங்களில் ஒருவர் கண்காணிப்பிலோ பத்திரப்படுத்தி விட்டு கடல் மற்றும் நீச்சல் குளங்களில் இறங்கலாம்.

விடுமுறைகளில் அருவி, மலை, கடற்புறங்கள் என சுற்றுலா செல்வது எதற்காக?  ஆனந்தமாக இயற்கையழகையும், சுத்தமான காற்றையும் சுதந்திர உணர்வையும் அனுபவிக்கத் தானே தவிர த்ரில் விளையாட்டுகளில் ஈடுபட்டு உயிரை இழக்க அல்ல. எனவே மேற்சொல்லப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை கவனமாகப் பின்பற்றி இன்பச் சுற்றுலா மனநிலைக்கு குந்தகம் வராமல் பார்த்துக் கொள்வீர்களாகுக! 

]]>
அருவிக் குளியல், பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், Swimming pool bath, seashore bath, நீச்சல் குளம், கடல், அருவி, Precautions before we take bath at falls, tour tips, சுற்றுலா டிப்ஸ், http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/19/w600X390/zzzz_aruvi.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/may/19/precautions-we-must-follow-before-taking-bath-at-water-falls-swimming-pools--sea-2922942.html
2920978 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் அதென்னது அது  ‘சாதனா கட்’?  நீங்க ட்ரை பண்ணி இருக்கீங்களா கேர்ள்ஸ்?! கார்த்திகா வாசுதேவன் Wednesday, May 16, 2018 04:32 PM +0530  

மகளுக்கு ஹேர் கட் செய்வதற்காக நேச்சுரல்ஸ் பார்லருக்குச் சென்றிருந்தேன். எந்த ஸ்டைலில் கட் செய்யட்டும் என்று கேட்டார் அங்கிருந்த இளம்பெண். எனக்குத் தெரிந்தது கொஞ்சம் தான். சின்னவளுக்கு என்றால் பாய் கட், மஷ்ரூம் கட், டயானா கட், சம்மர் கட், பெரியவளுக்கு என்றால் யூ கட், ஸ்ட்ரெயிட் கட், ஸ்டெப் கட்.  அவ்வளவு தான். இதையே மாற்றி, மாற்றி எத்தனை முறை தான் முயற்சிப்பது. விடுமுறை நாட்கள் வேறு... எனவே கொஞ்சம் ஸ்டைலாக வெட்டிக் கொண்டால் பெரியவள் சந்தோஷப்படுவாள் என்று நினைத்தேன். 

எனவே திடீரென்று உதித்த ஞானோதயத்தில் ‘நீதானே என் பொன் வசந்தம்’ திரைப்படத்தில் சமந்தா கட் செய்திருப்பாரே அப்படி முன்நெற்றியில் கற்றையாக கொத்து முடி ஸ்டைலாக காற்றடிக்கும் போதெல்லாம் நெற்றியில் வந்து விழுந்து அசையும் விதத்தில் வெட்டச் சொன்னேன். என் மகளுக்கு குஷி தாங்க முடியவில்லை. அவளும் நானும் சேர்ந்தே தான் ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்தை பார்த்திருந்தோம் என்பதால், குழந்தை அதே போல தன்னைக் கற்பனை செய்து கொண்டு, ‘ஹைய்யா... ஜாலி’  என்று சொல்லிக் கொண்டே பார்லர் நாற்காலியில் சமர்த்தாக அமர்ந்து கொண்டாள். 

எதற்கும் இருக்கட்டுமே என்று... ‘ஏம்மா வேற ஹேர் கட் ஸ்டைல்ஸ் எல்லாம் சூஸ் பண்றதுக்கு ஏத்தமாதிரி உங்க கிட்ட கேட்டலாக் எதுவும் இல்லையா?’ என்றும் கேட்டு வைத்தேன். அந்தப் பெண்.. ‘அப்படியெல்லாம் நாங்கள் எதையும் மெயின்டெயின் செய்வதில்லை மேடம், கஸ்டமர்கள் கேட்கும் விதத்தில் ஹேர் கட் செய்வது தான் வழக்கம்’ என்று சொல்லி விட்டார்.

‘அட... விதம். விதமாக ஹேர் கட் செய்து கொள்ளும் ஆசையிருந்தாலும் எந்த ஸ்டைலில் வெட்டிக் கொள்வது என்பதை வார்த்தைகளால் விவரிக்கத் தெரியாதவர்கள் என்ன செய்வார்கள்? கேட்டலாக் இருந்தால் அதைப்பார்த்து சரியாகக் கேட்பார்கள், உங்களுக்கும் வெட்டுவதற்கு ஈஸியாக இருக்குமே! ஏன் அப்படியெல்லாம் யோசித்து நீங்கள் ஒரு கேட்டலாக் மெயிண்டெயின் செய்யக்கூடாது’ என்று எனது மேதாவித்தனத்தை அந்தப்பெண்ணிடம் கேள்வியாக்கி விட்டு நான் அங்கு டேபிளில் கிடந்த ஒரு ஃபேஷன் வீக்லியை எடுத்துக் கொண்டு படம் பார்க்கத் தொடங்கினேன். 

அந்தப் புத்தகங்களின் ராசியோ அல்லது பார்லரின் AC யோ... ஏதோ ஒன்று அடுத்த பத்திருபது நொடிகளில் என்னைத் தூங்க வைத்து விட்டது. மகள் ஃப்ரிங்கி கட் செய்யும் போது தலையை உயர்த்தக் கூடாது என்பதால் என் பக்கம் திரும்பவில்லை. எவ்வளவு நேரமானதென்று தெரியாமல் சுகமாக நித்திரையில் ஆழ்ந்திருந்த போது யாரோ கிணற்றுக்குள் இருந்து மேடம்... மேடம் என்று அழைப்பது போலிருந்தது. ச்சே இதென்னடா இது? வேலை கெட்ட வேலையில் நட்ட நடு ராத்திரியில் தூக்கத்திலிருந்து எழுப்புவது! என்ற கனவில் நான் புரண்டு படுப்பதாகப் பாவித்து சோபாவில் நகர்ந்து அமரும் முயற்சித்ததில் பக்கத்தில் புதிதாக வந்து அமர்ந்திருந்த மற்றொரு அம்மாளின் முகரைக் கட்டையில் இடித்து விட்டேன் போலும்... அவர் ‘ச்சு’ வெனும் ஆட்சேபணையுடன் நகர்ந்து உட்காருவதாக நினைத்துக் கொண்டு வசமாக ஹைஹீல்ஸ் செருப்பால் என்கால் சுண்டு விரலை பதம் பார்த்து விட்டார். அதற்குள் விழித்துக் கொண்ட நான் எரிச்சலுடன் அந்தம்மாளை முறைத்து விட்டு பார்லர் பெண்ணின் அழைப்பிற்கு காது கொடுத்தேன்.

‘மேடம்... இதோ பாருங்க இந்த அளவு போதுமா? இன்னும் கொஞ்சம் லெங்த் குறைக்கனுமா?’ என்றார் அந்தப்பெண்.

ஐயோ... இதென்னது இது? நான் கேட்டது இப்படியில்லைங்க. நீங்க நீ தானே என் பொன் வசந்தம் படம் பார்த்திருக்கீங்களா இல்லையா? என்று கத்தாத குறையாக நான் மேலும் குரலுயர்த்த.

அந்தப் பெண்ணோ, கரகாட்டக்காரன் செந்திலாக, அட... அதான் மேடம் இது என்றார்.

எனக்கு நம்பிக்கை வரவில்லை. ஏங்க, அந்தப் படத்துல சமந்தாவுக்கு அந்த ஹேர் கட் எவ்வளவு கியூட்டா இருக்கும் தெரியுமா? நீங்க என்னடான்னா... இப்படி கிளியோபாத்ரா  கட் மாதிரி பழம்பஞ்சாங்கமா கட் பண்ணி வச்சிருக்கீங்களே? நான் கேட்டது இப்படி இல்லை. ச்சே எப்போ பார்த்தாலும் உங்க ஆளுங்க இப்படித்தான் பண்ணி வைக்கறீங்க. நான் சமந்தா கட் தானேங்க கேட்டேன். இது வேண்டாம். மாத்துங்க ப்ளீஸ் என்றேன்.

அந்தப் பெண்... செம கூலாக ‘ஐயோ மேடம் இனி எப்படி மாத்தறது? நான் நடுவுல ரெண்டு தடவை ஹைட் குறைக்கனுமானு கேட்கவும், லெங்த் போதுமானு கேட்கவும் உங்களைக் கூப்பிட்டேனே... நீங்க நல்லா தூங்கிட்டிதால கண்ணையே திறக்கலை’ இப்போ ஒன்னும் பண்ண முடியாது. இனி முடி வளர்ந்து இந்த ஸ்டைல் மாறினப்புறம் தான் வேற ஸ்டைல் கட் பண்ண முடியும்’ என்று குண்டைத் தூக்கிப் போட்டார்.

இத்தனைக்கும் நடுவில் என் மகள்... படு உக்கிரமாக என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டு வேறு இருந்தாள்.

நான் சமாளிக்கும் விதமாக, ‘இல்லடா குட்டி... இந்த ஹேர் கட் கூட நல்லாத்தான் இருக்கு. சமந்தா கட் இல்லைன்னா என்ன? இது சாதனா கட்டுடா. அந்தக் காலத்துல ஃபேமஸான பாலிவுட் ஆக்ட்ரஸ் எல்லாம் இப்படித்தான் ஹேர்கட் பண்ணுக்குவாங்க. என்றேன்.

அவள் என்னைப் பார்த்து உம்மென முகத்தை வைத்துக் கொண்டு. பேசாதீங்கம்மா... நான் உங்களை கேட்டேனா சமந்தா கட் வேணும்னு பேசாம யூ கட் இல்லன ஸ்டெப் கட் பண்ணிட்டுப் போயிருக்கலாம்ல. புதுசா ஸ்டைலா ட்ரை பண்றாங்களாமாம். என் முடியே போச்சு... போங்க. இனிமே உங்ககூட பார்லர் வந்தேனா பாருங்க நான் எம்பேரையே மாத்திக்கிறேன்’ ச்சே...ச்சே சுத்த மோசம். என்றவாறு போதும் ஆன்ட்டி ட்ரையர் போட்டு ஹேர் செட் பண்ணி விடுங்க. என்று விஷயத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தாள்.

நான் மட்டும் விடாக்கண்டியாக;

இருடா... அதுக்காக அப்படியே விட்டுட முடியுமா? இரு என்று பார்லர் பெண்ணின் பக்கம் திரும்பி;

சமந்தா கட் தான் தெரியலை அட்லீஸ்ட் சாதனா கட்டாவது தெரியுமா? இதையே கொஞ்சம் அப்படி, இப்படி ட்ரிம் பண்ணி சாதனா கட்டா மாத்திடுங்க... அதையாவது ஒழுங்கா செய்ங்க. இதோ இப்படி நெற்றியில் விழற கொத்து முடியை இப்படியே தேமேனு விடாம ஏதாவது ஒரு பக்கமா ஒதுக்கி அழகா செட் பண்ணுங்க. அதுக்குப் பேர் தான் சாதனா கட் என்று வேறு பில்ட் அப் கொடுத்தேனா? என் மகள் குறுக்கே புகுந்து, ‘அம்மா... நீங்க ஆணியே பிடுங்க வேண்டாம். அவங்க ஏற்கனவே ஒதுக்கி செட் பண்ணதே போதும்... நீங்க வாங்க இன்னொரு விஷப்பரீட்சைக்கு நான் தயாரில்லை, கமான்... லெட்ஸ்கோ’ என்று என்னை பில்லிங் பக்கமாக நகர்த்திக் கொண்டு போய் விட்டாள்.

அங்கே போய் எனக்கு செமத்தியான அர்ச்சனை.

ஸ்கூல் திறக்க இன்னும் ஒரு மாசம் இருக்கு. அதுக்குள்ள என்னோட இந்த ஹேர்ஸ்டைல் மாறினா தேவலாம். இல்லனா... கிளியோபாத்ரா வர்றா பாருன்னு ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்றாப்ல ஆயிடும். முடி மட்டும் வளராம போகட்டும், அப்புறம் இருக்கு உங்களுக்கு!’ என்றவாறு என்னை சிலபல நல்ல வார்த்தைகளால் அபாரமாக அவள் அர்சித்துக் கொண்டே வர ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தோம்.

அப்போது தான் அவள் மிக மிக முக்கியமான அந்தக் கேள்வியைக் கேட்டாள்... அதென்னதும்மா அது சாதனா கட்? சும்மா வாய்ல வந்ததை உளறி வச்சீங்களா? அப்படி ஒரு கட் இருக்கறதைப் பத்தி நீங்க இதுவரை என்கிட்ட சொன்னதே இல்லையே! என்றாள்.

எனக்கே நேத்திக்கு தானே தெரியும்... நெட்ல எங்கயோ நடிகை சாவித்ரி பத்தி வாசிக்கும் போது தெரிஞ்சுகிட்டேன். அவங்க அந்தக்காலத்துல சாதனா கட் பண்ணிக்கிட்டாங்கன்னு ஏதோ ஒரு நியூஸ் கண்ல பட்டுச்சுடா’ அதைத் தான் சொன்னேன்.

சாவித்ரி ஸ்டைல் சாதனா கட்...

ஆமாம்... சும்மா பேர் தெரிஞ்சா போதுமா? அந்த கட் எப்படி இருக்கும்? அதை யார் பண்ணிக்கிட்டாங்களோ அவங்க ஃபோட்டோ இப்டி எதுனா கையோட ரெஃபரன்ஸ் காட்டினா தானே அவங்க அதைப் பார்த்து கட் பண்ண முடியும். சும்மா வாயாலயே முழம் போட்டா இதோ இப்படித்தான் ஆகும்! என்று தன் ஹேர்ஸ்டைலைச் சுட்டி விட்டு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு வீட்டருகில் இருந்த சூப்பர் மார்கெட்டில் ஒரு பெரிய டெய்ரி மில்க் ஒரியோ வாங்கித் தரச்சொல்லி பழிவாங்கிய பிறகு தான் அவள் சமாதானமானாள்.

அவள் முகம் சுணங்கும் அளவுக்கு அவளது ஹேர் ஸ்டைல் அப்படியொன்றும் மோசமாக இல்லை. நன்றாகத்தான் இருந்தது. ஆனாலும் நமக்குத்தான் எதையாவது ஒன்றைப் பார்த்து அதே போல அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டு விட்டோமானால் எளிதில் மனம் சமாதானமடைய மறுக்கிறது. என்று தோன்றவே மொபைலில் சாதனா கட் எப்படி இருக்கும் என்று கூகுளில் தேடினேன்.

60, 70 களில் பாலிவுட்டில் பிரபலமாக இருந்த நடிகை சாதனா, தனது ஹேர் ஸ்டைலுக்காக அந்தக்காலத்திய ஃபேஷன் ஐகானாக மதிக்கப்பட்டவர்.

அவரது ஹேர்ஸ்டைல் புதுமையாகவும், அழகாகவும் இருந்ததால் அவரது பெயராலேயே சாதனா கட் எனக் குறிப்பிடப்பட்டு அப்போது பலரால் விரும்பப்பட்டது.

அப்படி விரும்பி சாதனா கட் செய்து கொண்டவர்களில் ஒருவர் நமது நடிகையர் திலகம் சாவித்ரி.

இந்தச் செய்தியை ஜெமினி கணேசனின் மகள்களில் ஒருவரும், பத்திரிகையாளருமான நாராயணி, பதிவு செய்திருக்கிறார்.

‘சாவித்ரி அப்போது  ‘கங்கா கினாரெ’என்றொரு இந்திப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அதற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்ள அவர் மும்பை சென்ற போது அவரது மகள் விஜியுடன் நானும் அவருடன் சென்றிருந்தேன். அப்போது அவர் தனது கூந்தலை சாதனா கட் செய்திருந்தார். பார்க்க அழகாக இருந்தது, எனக்கும் அதைப்போலவே ஹேட் கட் செய்ய ஆசை வந்ததால் அவரிடம் அதே விதமாக எனக்கும் ஹேர் கட் செய்து விடச் சொன்னேன். முதலில் மறுத்தாலும் பிறகு என் பிடிவாதத்தைப் பார்த்து மும்பையிலிருந்து ஒரு சைனீஸ் பார்லருக்கு அழைத்துச் சென்று அதே விதமாக எனக்கும் ஹேர் கட் செய்து விடச் சொன்னார் சாவித்ரி. எனக்கு சாவித்ரி ஆன்ட்டியை ரொம்பப் பிடிக்கும். அப்பாவுடன் நெருங்கியிருக்கக் கிடைத்த ஒரு வாய்ப்பாக நான் அதைக் கருதினேன். அப்பாவுக்குப் பிடித்த சாவித்ரி எனக்கும் பிடித்தவராகிப் போனது இப்படித்தான்’ என்கிறார் நாராயணி.

இது ஒரிஜினல் சாதானாவே தான். 60 களில் பாலிவுட் ஃபேஷன் ஐகானாகத் திகழ்ந்த சாதனாவுக்கு இப்படி ஒரு ஹேர் ஸ்டைலுக்கு மாறியதற்கும் ஒரு சுவாரஸ்யமான பின்னணி உண்டு.

சாதனாவை இந்திப் படங்களில் அறிமுகம் செய்தவர் பிரபல இயக்குனர் ஆர்.கே.நய்யார். அவரது ‘லவ் இன் சிம்லா’ திரைப்படத்தில் நடிக்க சாதனாவை அவர் தேர்வு செய்தபோது சாதனாவுக்கு இருந்த ஏறு நெற்றி முகவெட்டில் அவருக்கு திருப்தியில்லை. எனவே சாதனாவின் ஹேர் ஸ்டைலை மாற்ற விரும்பினார். பலவிதமாக யோசித்துப் பார்த்து விட்டு முடிவில் ஹாலிவுட் நடிகை ஆத்ரே ஹெப்பர்ன் புகைப்படமொன்றைத் தருவித்து சாதனாவிடம் காட்டி அவரைப் போல முன் நெற்றியில் கற்றை முடியை கொத்தாக வெட்டி விட சம்மதம் வாங்கினார். அதன் படி அவர்களது ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆத்ரே ஹெப்பர்னின் ஃப்ரிங்கி ஹேர் ஸ்டைலை சாதனாவுக்கு வெட்டி விட, அந்த தோற்றத்துடன் லவ் இன் சிம்லாவில் நடித்து முடித்தார் சாதனா. படம் வெளியான போது மிகப்பெரிய வெற்றி கண்டது.

அந்த திரைப்படத்தில் ஆரம்பக் காட்சிகளில் சாதனா மிகச் சாதாரண தோற்றத்துடன் நாயகன் வெறுக்கத்தக்க பெண்ணாக வருவார். எப்படியாவது ஹீரோவால் விரும்பத்தக்க பெண்ணாக மாற எண்ண செய்வது? என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போது படத்தில் சாதனாவின் பாட்டியாக வரும் ஒரு பெண், சாதனா ஹேர்ஸ்டைலுக்கு மாறச் சொல்லி அவரது தோற்றத்தை மாற்றுவார். ஒரு இந்திப் படம் நாயகியின் ஹேர்ஸ்டைல் மற்றும் ஸ்பெஷல் லுக்குக்காகவும் சூப்பர், டூப்பர் ஹிட் அடித்ததென்றால் அது லை இன் சிம்லாவாகத் தான் இருக்கக் கூடும். படத்தின் வெற்றிக்குப் பிறகு அந்த ஹேர்ஸ்டைலுக்கு சாதனா கட் என்ற பெயரே நிலைத்து விட்டது. அது மட்டுமல்ல, இப்படி ஒரு ஹேர்ஸ்டைலை சாதனாவுக்கு அறிமுகப்படுத்தி அவருக்கு பாலிவுட்டில் ஏறுமுகத்தை உருவாக்கித் தந்த இயக்குனர் ஆர்.கே. நய்யார் பிறகு அவரையே தனக்கு மனைவியாகவும் தேர்ந்தெடுத்தது தனிக்கதை.

பல படங்களில் சாதனாவுக்கு பெரும்புகழையும், கணக்கற்ற ரசிகர்களையும் பெற்றுத் தந்த இந்த சாதனா கட், ஒரு சமயத்தில் அவருக்கு கிடைத்திருந்த அருமையான பட வாய்ப்பொன்றை தட்டிப் பறித்து கீழே தள்ளவும் காரணமாக அமையவிருந்தது. ஆனால், அதை தனது சாமர்த்தியத்தால் முறியடித்தார் சாதனா என்பார்கள். அதாவது பாலிவுட்டின் அந்நாளைய பிரபல இயக்குனரான பிம்லா ராய் தனது பராக் திரைப்படத்துக்காக சாதனாவை ஒப்பந்தம் செய்திருந்தார். சாதனாவுக்கு செம குஷி. பிம்லா ராய் பட நாயகி என்றால் சும்மாவா என்ன? ஆனால், முதல் நாள் ஷூட்டிங்கின் போது ஒப்பனையுடனும், தனது சாதனா கட் ஹேர்ஸ்டலுடனும் தன் முன்னால் வந்து நடிக்க நின்ற சாதனாவைப் பார்த்து பிம்லா ராய்க்கு வேப்பங்காயை வெறு வாயில் மென்றது போல படு கசப்பாகி விட்டது. ஒன்றும் பேசாமல் பேக் அப் சொல்லி விட்டு படுகோபமாக நாற்காலியில் சரிந்தவரைக் கண்டு சாதனாவுக்கு குழப்பமாகி விட்டது. என்னவாயிருக்கும் என்று கேட்டதில், என் படமோ மிக எளிமையான... இயல்பான கிராமத்துப் பெண்ணின் கதையை பின்னணியாகக் கொண்டது, நீ என்னடாவென்றால் இப்படி ஒரு படு ஸ்டைலான ஹேர் ஸ்டைலில் வந்து முன்னால் நிற்கிறாய். இந்த தோற்றத்தில் இந்தப் படத்தில் நீ நடித்தால் படம் ஓடாது. உனக்கு இந்த ஹேர் ஸ்டைல் வேண்டுமா? இல்லை எனது படத்தின் நாயகி என்ற வாய்ப்பு வேண்டுமா? நீயே முடிவு செய். என்று சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்.

சாதனாவுக்கோ தனக்குப் பெயரையும், புகழையும் பெற்றுத் தந்த ஹேர் ஸ்டைலை இழக்க மனமில்லை. மெளனமாக தனது ஒப்பனை அறைக்குள் நுழைந்தவர், முன் நெற்றியில் காற்றிலாடிக் கொண்டிருந்த ஃப்ரிங்கி கூந்தலை நெற்றி வகிட்டின் இருபுறமும் ஒதுக்கி ஹேர்பின் இட்டு கலையாமல் வழித்து நிறுத்தினார். இப்போது பார்க்க படு குடும்பஸ்த்ரியாகத் தெரிந்தார். அப்படி வந்து நின்றதும் பிம்ல ரயும் சந்தோஷமாகி விட்டார். சாதனாவுக்கு அப்பாடி என்றிருந்தது. காரணம் ஒருவழியாக அவர் தனது சாமர்த்தியத்தால் புகழ் பெற்ற தனது சாதனா கட்டை இழக்காது... இயக்குனரின் கோபத்திலிருந்தும் தப்பி விட்டார் இல்லையா? அதனால் தான்.

அந்த ஹேர் ஸ்டைலைத் தான் நம்மூர் நடிகையர் திலகம் பாலிவுட்டில் நடிக்கப் போய் தானும் முயன்று பார்த்தார். அதையே தனது இருமொழிப் படமொன்றில் டபிள் ஆக்ட் வேடத்தில் இரு வேறு வேடங்களை வித்யாசப் படுத்திக் காட்டவும் பயன்படுத்திக் கொண்டார். படித்த, ஸ்டைலான, பிடிவாதம் நிறைந்த பெண் வேடத்துக்கு சாதனா ஹேர் கட் ஸ்டைல், அப்பாவி இல்லத்தரசி வேடத்துக்கு சாதரண நீளப்பின்னல் கூந்தல் ஸ்டைல். இது எப்படி இருக்கு!

அட... ஒரு சாதரண சாதனா ஹேர் கட்டுக்குப் பின்னால் இத்தனை விஷயம் இருக்குமென்று யார் கண்டார்கள்?!

இதை முதலிலேயே கூகுளில் தேடிக் கண்டடைந்திருந்தால் நேச்சுரல்ஸில் குழப்பத்திற்கு இடமில்லாதிருந்திருக்கும்.

ஆனால் பாருங்கள்... மேலே குறிப்பிட்ட சமந்தா கட்டுக்கும், சாதனா கட்டுக்கும் அப்படி ஒன்றும் பெரிய வித்யாசமில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

]]>
சாதனா கட், ஃபேஷன் ஐகான் ஆஃப் பாலிவுட், சாதனா, சாவித்ரி, நடிகையர் திலகம், பார்லர் அனுபவங்கள், sadhana hair cut style, mahanati savithri, audrey hepburn, hollywood star audrey hepburn, ballywood star sadhana, gemini ganeshan, hairstyle, fashion icon http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/16/w600X390/z_sadhana.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/may/16/அதென்னது-அது--சாதனா-கட்--நீங்க-ட்ரை-பண்ணி-இருக்கீங்களா-கேர்ள்ஸ்-2920978.html
2919581 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் என் தாயைக் கொன்றவர்களுக்கு உச்சபட்ச தண்டனை அளியுங்கள்! ருக்மிணியம்மாளின் மகன் உருக்கமான வேண்டுகோள்! RKV Monday, May 14, 2018 01:09 PM +0530  

குழந்தைக் கடத்தல் வதந்தியாலும், தவறான புரிதலாலும் கடந்த வாரம் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட ருக்மிணியம்மாளின் மகன் 42 வயது கோபிநாத்தின் துயரம் எல்லையற்றது. கோபிநாத்தைப் பின் தொடர்ந்து வந்த அவரது 2 வயது மகன் தனது பாட்டியைக் காண வேண்டும் என்று அழுத காட்சி மேலும் உருக்கமாகவும், வேதனையாகவும் இருந்தது. கடந்த வாரம் செவ்வாய் மாலை வரை தனது பேரன், பேத்திகளுடன் சென்னையை அடுத்த பல்லாவரத்தில் இருந்த தனது மகன் வீட்டில் கதை பேசி மகிழ்ந்து சோறூட்டிக் கொண்டாடி இரவுகளில் அவர்களைத் தூங்க வைத்து தலை கோதிக் கொண்டிருந்த ஒரு வயதான பெண்மணியை அறிமுகமில்லாத கிராம மக்களில் சிலர் குழந்தைக் கடத்தல்காரி எனச் சந்தேகித்து சரமாரியாகத் தாக்கிக் கொன்ற விதம் காணொளியாகக் காணக் கிடைக்கிறது. அதைக் கண்டு துக்கத்திலும், ஆத்திரத்திலும் பொங்கியவராக அவரது மகன் கோபிநாத், ‘எனது தாயை இப்படி அநியாயமாகச் சந்தேகித்துக் கொன்றவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும், எது அதிகபட்ச தண்டனையோ அது அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்’ என்று அரற்றுவது ஒருவகையில் நியாயமானதாகக் கூடத் தோன்றுகிறது. 

காரணம் பிற குழந்தைக் கடத்தல் வதந்திகளைப் போல அல்லாது ருக்மிணியம்மாளின் மரணம் மிக மிக அபத்தமானதாக இருக்கிறது.

கடந்த வாரம் புதன் அன்று அதிகாலை 4 மணிக்கு தனது மருமகன் மற்றும் மைத்துனருடன் அத்திமூர் கிராமத்தில் இருக்கும் குல தெய்வக் கோயிலைத் தேடி காரில் கிளம்பிய ருக்மிணியம்மாளுக்கு அங்கே சென்று நெடுங்காலம் ஆனபடியால் கோயிலிருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதில் சிரமமும், குழப்பமும் இருந்திருக்கிறது. இரண்டு, மூன்று இடங்களில் காரை நிறுத்தி கோயிலிருக்கும் இடத்தைப் பற்றி விசாரித்திருக்கின்றனர். பின்னரும் குழப்பம் நீடித்ததால் மூன்றாவதாக ஓரிடத்தில் காரை நிறுத்தி கோயிலைப் பற்றி விசாரிக்கையில் அங்கே சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்ட ருக்மிணியம்மாள் காரில் இருந்து சில சாக்லேட்டுகளை எடுத்து அவர்களிடம் ப்ரியமாக உண்ணத் தந்திருக்கிறார். அதைக் கண்டு சந்தேகித்த அங்கிருந்த கிராம மக்கள் சத்தம் போடத் தொடங்கியுள்ளனர்.

அம்மாவின் இத்தகைய செயலைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவரது மகன் கோபிநாத் கூறியது;

‘என் அம்மாவுக்கு எப்போதுமே குழந்தைகள் என்றால் அதிகப் ப்ரியம் உண்டு. எங்கே குழந்தைகளைக் கண்டாலும் அவர்களுடன் அன்பாகப் பேசத் தொடங்கி விடுவார், அந்தச் சமயத்தில் கையில் ஏதும் தின்பண்டங்கள் இருந்தால் குழந்தைகளுக்குத் தராமல் உண்ணவே மாட்டார். இதெல்லாம் அன்பினால் செய்யக்கூடிய காரியங்கள். சம்மந்தப்பட்ட கிராம மக்கள் இதை தவறாக எண்ணி சாக்லேட் கொடுத்து குழந்தைகளைக் கடத்த வந்தவர்கள் என எண்ணி என் அம்மாவையும், அவருடனிருந்த உறவினர்களையும் தாக்கிய செயல் முற்றிலும் வன்முறையானது மட்டுமல்ல கொடூரனமானதும் கூட. குல தெய்வக் கோயிலைக் காண மலேசியாவில் இருந்து தமிழகம் வந்திருந்த உறவினர்களுடன் என் தாய்க்கு நேர்ந்த இந்த கதியை காணொளியாகக் காணும் போது இதயம் நொறுங்கிப் போகிறது’ 

 

கிராம மக்களுக்கு சந்தேகம் இருந்திருந்தால் உடனடியாக காவல்துறையை அணுகியிருக்கலாம். பொதுமக்கள் இரும்புக் கம்பிகளாலும், ஆயுதங்களாலும் தாக்கத் தொடங்கியதுமே அவர்கள் தகராறு எதற்கு என காரை கிளப்பியுள்ளனர். அதைப் புரிந்து கொள்ளாமல் தப்பியோடப் பார்ப்பதாகக் கருதி மேலும் மூர்க்கமாகத் தாக்கி வயதான பெண்மணி என்றும் பாராமல் கொலை செய்த விதம் மனிதத் தன்மையற்றது.

என் அம்மா இதுவரையிலும் யாருக்கும் தீங்கு நினைத்தவரே அல்ல. அவருக்கு இப்படியொரு முடிவு ஏற்பட்டது கண்டு நெஞ்சம் பதறுகிறது.

என் குடும்பத்தினருக்கு இது ஈடு செய்ய முடியாத இழப்பு. இப்படியொரு மோசமான துர்நிகழ்வு வேறு எவருக்குமே ஏற்படக்கூடாது. நமது நீதிஅமைப்பு இப்படிப்பட்ட வதந்தி பரப்புவர்கள் மற்றும் ஆராயாது கொலைத் தாக்குதலில் ஈடுபடுவோருக்கு உச்சபட்ச தண்டனை அளித்து சம்மந்தப்பட்டவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். என்று கதறுகிறார் தாயை இழந்த கோபிநாத்.

Video Courtesy:  sun news.

]]>
குழந்தை கடத்தல் வதந்திக் கொலைகள், ருக்மிணியம்மாள், போளூர் சம்பவம், child trafficking rumours, Whatsapp led to mob violence, rumour mongers, Give maximum punishment, victim rukmini, polur village http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/14/w600X390/polur_incident_victim_rukmini.jpeg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/may/14/give-maximum-punishment-to-my-mothers-killers--gopinath-so-rukmini-2919581.html
2916459 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் வெளிநாடுகளில் எகிறிக் கொண்டிருக்கும் தமிழக முருங்கைக் கீரையின் மவுசு! RKV DIN Wednesday, May 9, 2018 03:30 PM +0530  

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள கடகுளம் கிராமத்தைச் சேர்ந்த 45 வயது நெல்சன் வெளிநாடுகளுக்கு முருங்கைக் கீரை இலைகளை தெர்மாக்கோல் பெட்டிகளில் அடைத்து ஏற்றுமதி செய்து விற்பனை செய்து வருகிறார்.

துபாய், ஏமன் உள்ளிட்ட நாடுகளில் நம்மூர் முருங்கை இலைகளுக்கு கிடைத்த ஏகோபித்த வரவேற்பால் இது சாத்தியமானது என்று கூறும் நெல்சன், ஆரம்பத்தில் காய்கறி ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் கூலித்தொழிலாளியாகப் பணியாற்றி வந்தவர். 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரான நெல்சன் முருங்கை இலைகளுக்கு கிடைக்கும் வரவேற்பைக் கண்டு வியந்து அவற்றை ஏற்றுமதி செய்து வருவாய் ஈட்டுவதற்கான முயற்சிகளை எடுத்தார். அவரது முயற்சி வெற்றியைத் தந்துள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளைப் பகுதியில் அமோகமாக நடைபெற்று வரும் முருங்கை சாகுபடியை ஒட்டி கடந்த 2 வருடங்களாக நெல்சன் முருங்கை இலைகளை ஐஸ்பார் பொருத்தப்பட்ட தெர்மாக்கோல் பெட்டிகளில் பிளாஸ்டிக் உறைகளில் இட்டு அடைத்து ஏற்றுமதி செய்து வருகிறார்.

இதைப்பற்றி நெல்சன் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்;

‘ஆரம்பத்தில் காய்கறி ஏற்றுமதி நிறுவனமொன்றில் கூலித்தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்த எனக்கு, நாமே இந்த ஏற்றுமதித் தொழிலில் இறங்கினால் என்ன என்ற எண்ணம் வந்தது. ஆனால் ஏற்றுமதி லைசென்ஸ் எடுக்கும் முறைகளை எல்லாம் நான் அறிந்திருக்கவில்லை. சொந்தமாக ஏற்றுமதி செய்யவேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக நானாக முயன்று ஏற்றுமதி லைசென்ஸ் எடுப்பது எப்படி எனத் தெரிந்து கொண்டேன். அதன் பயனாக இன்று  என்னால் 50 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித்தர முடிந்திருக்கிறது. இந்த விஷயத்தில் அரசாங்க உதவி இருந்தால்... அதாவது ஐஸ் பிளாண்ட், பேக்கிங் ஹவுஸ், குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட கண்டெய்னர் வண்டிகள் என அரசு உதவி கிடைத்தால் என்னால் இத்துறையில் மேலும் 1000 பேருக்கு வேலை தர முடியும்.’  

- என்கிறார்.

முருங்கை இலை மற்றும் முருங்கைக் காய்க்கு கிடைத்த வரவேற்பால் இந்தப் பகுதியில் முருங்கை சாகுபடி அதிகரித்துள்ளது.

Concept courtesy: Thanthi TV

]]>
முருங்கை இலை மவுசு, முருங்கைக் கீரை மகிமை, ஏற்றுமதியாகும் முருங்கைக் கீரை, drumstick leaves, drumstick export http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/9/w600X390/murungai_kai.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/may/09/வெளிநாடுகளில்-எகிறிக்-கொண்டிருக்கும்-தமிழக-முருங்கைக்-கீரையின்-மவுசு-2916459.html
2916444 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ஒரே வாரத்தில் 3 முதல் 5 கிலோ வரை எடை குறைக்க ஒரு சூப்பர் டயட்! RKV Wednesday, May 9, 2018 01:39 PM +0530  

அதிகாலையில் வெறும் வயிற்றில் காஃபீ, டீ அருந்துவதைத் தவிர்த்து விட்டு தேங்காய்ப்பாலோ அல்லது மலை நெல்லிக்காய் சாறோ தொடர்ந்து ஒரு வாரத்துக்கு அருந்துங்கள். இவை இரண்டுமே மிகச்சிறந்த நச்சு நீக்கிகள். உடலில் தேங்கி இருக்கும் நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி குடலைச் சுத்தம் செய்வதில் இவை முக்கியப் பங்காற்றுகின்றன.

காலையில் 8 மணி முதல் 9 மணிக்குள் காலை உணவைச் சாப்பிட்டு விடுங்கள். காலை உணவாக முளைகட்டிய பயிறுகளை சாப்பிடலாம். முளை கட்டிய பயிறுகளில் உடல் ஆரோக்யத்துக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் பூரணமாக இருக்கின்றன. அவற்றை காலையில் உட்கொள்வதால் மூளை சுறுசுறுப்படைவதுடன் உடல் இயங்க போதிய ஆற்றலும் கிடைத்து மதிய உணவு நேரம் வரை பசியுணர்வும், சோர்வும் இல்லாமலும் இயங்க முடியும். எந்தெந்தப் பயிறுகளை முளை கட்டுவதென்றால் பாசிப்பயிறு, உளுந்து, கேழ்வரகு, கம்பு, முக்கடலையுடன் சிறிது வெந்தயத்தையும் முளைகட்டி எடுத்துக் கொள்ளலாம். பாசிபயிறில் புரதம் அதிகமிருக்கிறது, கம்பில் கால்சியச் சத்து அதிகமுண்டு, கேழ்வரகில் இரும்புச்சத்து போதுமான அளவு இருக்கிறது. இவற்றோடு வெந்தயம் எடுத்துக் கொண்டால் போதிய நார்ச்சத்தும் கிடைத்து விடும். முளைகட்டிய பயிறுகளை அப்படியே சாப்பிட போர் அடித்தால் அதில் கொஞ்சல் எலுமிச்சைச் சாறு பிழிந்து, சிறிது அரிந்த சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டுத் துறுவல் இட்டு உப்பும், மிளகும் அளவாகத் தூவியும் சாப்பிடலாம். சுவையாக இருப்பதோடு சலிக்காமலும் இருக்கும். முளைகட்டிய பயிறு சாப்பிட சலிப்பாக இருந்தால் ஒரு நாள் முளை கட்டிய பயிறு வகை மறுநாள் சத்தான காய்கறி சாலட்டுகள் என மாற்றி மாற்றியும் சாப்பிட்டுக் கொள்ளலாம். காய்கறி சாலட்டுக்கு கேரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், முட்டைக்கோஸ், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளைப் பயன்படுத்தலாம்.

மதிய உணவாக நிறையக் காய்கறிகளையும் ஒரே ஒரு கப் சிறு தானிய சோற்றையும் ஒரு கப் கீரையையும் சாப்பிட வேண்டும். சிறு தானியங்களென்றால் சாமை, வரகு, திணை, கம்பு, கேழ்வரகு, சீரகச் சம்பா குருணை அரிசி, என ஏதோவொன்றை சோறாக வடித்துப் பயன்படுத்தலாம். அரிசிச் சோற்றை கூடுமான வரை நிச்சயமாக உடல் எடை குறையும் வரை தவிர்த்து விடுதல் நல்லது. இதே அசைவ உணவுப் பழக்கம் இருப்பவர்கள் 150 கிராம் மட்டுமே அசைவ உணவுகளை உண்ணலாம் அவற்றோடு சேர்த்து சிறு தானிய உணவு ஒரு கப் சாப்பிடலாம்.

இரவு உணவாக வெறும் பழங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். கொய்யா, வாழை, செவ்வாழை, மாதுளை என எல்லாவகைப் நாட்டுப் பழங்களையும் இரவில் சாப்பிடலாம். படுக்கைக்குச் செல்வதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே இரவு உணவை முடித்து விட வேண்டும்.

இந்த டயட்டை தொடர்ந்து 7 நாட்களுக்குப் பிடிவாதமாகப் பின்பற்றினால் நிச்சயமாக உங்களது உடல் எடை 3 முதல் 5 கிலோ வரை குறையும் என யூ டியூப் காணொளியொன்றில் கூறுகிறார்கள்.

அந்தக் காணொளி...

பின்பற்றிப் பார்த்து விட்டு பலிதமானால் எங்களுக்கு எழுதுங்கள். இது பெரிதாக நோய்த்தாக்குதல் இல்லாத சாமானியர்களுக்கு ஆபத்தில்லாத டயட் தான். இதனால் எதிர்விளைவுகள் எனப் பெரிதாக ஏதும் நிகழ்ந்து விடப் போவதில்லை. ஆரோக்யக் குறைபாடுகளோ அல்லது பெரிய நோய்த்தாக்கங்களிலோ இருப்பவர்கள் இம்மாதிரியான டயட்டுகளை மருத்துவர் ஆலோசனையோ, பரிந்துரையோ இல்லாமல் எடுப்பது உசிதமானதல்ல.

]]>
weight loss, super diet plan, ஒரே வாரத்தில் எடை குறைப்பு, டயட் பிளான், 3 முதல் 5 கிலோ எடை குறைப்பு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/9/w600X390/diet_plan.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/may/09/3-to-5-kgs-weight-lossing--diet-plan-within-a-week-2916444.html
2916410 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் கார்பைடு ரசாயன ஆபத்தில்லாத சரியான மாம்பழங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?  RKV Wednesday, May 9, 2018 12:18 PM +0530 மாம்பழங்கள் சுவையாக இருந்தால் வெறுப்பவர் யார்? எல்லோருக்குள்ளும் இருக்கிறது சுவையான மாம்பழ தாகம். ஆனால் இப்போது சந்தைக்கு வரும் மாம்பழங்கள் சுவையாக இருக்கின்றன. கார்பைட் கல் வைத்துப் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களில் சுவையை எதிர்பார்ப்பது கூட மடத்தனம். கடந்த ஆண்டு கூட ஓரளவுக்கு மாம்பழ சீசனான மே, ஜூன் மாதங்களில் கடைகள் தோறும் ஓரளவுக்கு மாம்பழங்கள் குவிந்திருந்தன. அவை சுவையானவையா? சுவையற்றவையா? என்பது தாண்டி கண்களுக்குக் குளிர்ச்சியாக கடைகள் தோறும் ரகம், ரகமாக மாம்பழங்கள் அடுக்கப்பட்டிருந்த காட்சி கண்களுக்கு விருந்தாகின. ஆனால், பாருங்கள் இந்த ஆண்டு இதோ மே முதல் வாரம் கடந்து விட்டது. இப்போதும் கூட கண்ணுக்கு குளிர்ச்சியாக குவியல், குவியலாக மாம்பழங்களைக் காண முடியவில்லை.

மாந்தோப்புகள் நிறைந்த தேனி மாவட்டத்தில் கூட மாம்பிஞ்சுகளைத் தான் காண முடிகிறதே தவிர கொத்துக் கொத்தாக கைக்கெட்டும் தூரத்தில் சிக்கும் மாம்பழங்களைக் காணவே முடியவில்லை. இது ஒரு மாம்பழப் ப்ரியையான என் போன்றோருக்கு மிகப்பெரிய ஏமாற்றம். அதற்காக மாஸா, ஸ்லைஸ் பழரச விளம்பரங்களில் மூளைச் சலவை செய்யப்படுவதற்கேற்ப அவற்றை வாங்கிக் குடித்தா என் மாம்பழ தாகத்தைப் போக்கிக் கொள்ள முடியும். எனக்கு இந்த சீசன் முடிவதற்குள் மாம்பழச்சாறு முழங்கையில் வழிய வழிய மாம்பழம் சாப்பிட்டே ஆக வேண்டும். ஒருவேளை இந்த ஆசை சீசன் முடிவதற்குள் ஈடேறலாம்.

சரி இப்போது கார்பைடு ஆபத்தில்லாத சரியான மாம்பழங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி எனப் பார்க்கலாம்...

 • மாம்பழங்களை மாம்பழ சீசனில் மட்டுமே வாங்கி உண்பதே சாலச் சிறந்தது. இன்றைய இணைய உலகில் எப்போது வேண்டுமானாலும் எதையும் ஆர்டர் செய்து பெற்று விடலாம் எனும் முயற்சியில் சீசன் இல்லாத போது கூட மாம்பழங்களும், பலாப்பழங்களும், தர்பூசணிகளும் கிடைக்கக் கூடும். ஆனால் அவற்றை சீசன் இல்லாத காலகட்டங்களில் அழுகாமல் பாதுகாக்க என்னென்ன விதமான ரசாயனங்களைத் தடவி, குளிப்பாட்டிப் பாதுகாக்கிறார்கள் என்பதெல்லாம் நமது கற்பனைக்கு அப்பாற்பட்டவை. எனவே அந்தந்த சீசனில் விளையும் பழங்களை மட்டுமே அவ்வப்போது வாங்கி உண்ணப் பழகுங்கள். அந்த வகையில் மாம்பழங்கள் வாங்கிச் சுவைக்க ஏற்ற பருவம் ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டம் மட்டுமே.
 • அனுபவஸ்தர்கள் எனில் மாம்பழங்களை அழுத்திப் பார்த்தால் அவற்றின் இளகுதன்மை, பழத்திலிருந்து கசியும் வாசனை, மற்றும் தோலின் சுருக்கங்களைக் கொண்டு பழங்கள் பழுத்தவையா அல்லது பழுத்து விட்டவை போலத் தோற்றமளிப்பவையா என எளிதில் கண்டறிந்து விடலாம்.
 • மாம்பழங்களின் மேல்தோல் சுருங்கி, அவற்றில் கரும்புள்ளிகள் சில தோன்றத் தொடங்கி விட்டதென்றால் அத்தகைய பழங்கள் உடனடியாக உண்பதற்குத் தோதானவை என்று அர்த்தம். அதற்கு மேல் நாட்களைக் கடத்தினால் அந்தப் பழங்கள் அழுகி விடக்கூடும்.
 • நீங்கள் வாங்கிய மாம்பழங்கள் பழுத்தவையா, அல்லது அரைவாசி பழுத்தவையாகவோ, ஏன் பழுக்காத காய்களாகவோ கூட இருக்கட்டும், அவற்றை வீட்டுக்கு எடுத்து வந்த உடனே சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து விட்டுப் பிறகு கழுவி சாப்பிடத் தொடங்குங்கள். ஏனெனில் தற்போது மாம்பழங்களிலும் கூட கவர்ச்சியாகத் தோன்றவும், விற்பனையை அதிகரிக்கவும் மெழுகு பூசப்படுவதாகக் கேள்வி. தண்ணீரில் ஊற வைத்தால் மாம்பழத் தோலில் படிந்துள்ள ரசாயனங்கள் கரைந்து விடும். 
 • மாம்பழம் வாங்குவதாக இருந்தால் காய்ப்பருவத்திலேயே வாங்கி வீட்டில் வைத்து பழுக்க வைத்துச் சாப்பிடுங்கள். மாம்பழங்களை பழுக்க வைக்க இயற்கையான முறையில் வைக்கோலில் புதைத்து வைப்பது, அரிசிக்குள் புதைத்து வைப்பது எனச் சில முறைகளை இல்லத்தரசிகள் தொன்று தொட்டு பயன்படுத்தி வருகிறார்கள். அந்த முறையே உகந்தது.
 • மாம்பழங்களின் மேல்தோல் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால் அது செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டிருக்க அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.

Image courtesy: moneycontrol.com

]]>
mango season, ripened mangoes, ripeining without carbide, மாம்பழ சீசன், தேர்வு செய்ய டிப்ஸ், ரசாயனமற்ற மாம்பழங்கள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/9/w600X390/mangoe1.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/may/09/mangoes-ripened-without-carbide-stones-2916410.html
2915777 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் டாய்லெட் சுத்தம் செய்வதில் ஆசிட், ஹார்பிக்குக்கு ‘நோ’ சொல்லுங்க பாக்டீரியாவுக்கு ‘எஸ்’ சொல்லுங்க! RKV Tuesday, May 8, 2018 04:35 PM +0530  

இன்று இந்தியா முழுவதுமிருக்கிற ஒரே மிகப்பெரிய பிரச்னை கழிவு நீர் சுத்திகரிப்பு தான். கழிவுநீரை முறையாகச் சுத்திகரிக்க முடிந்தால் நாம் நீர் மேலாண்மை பற்றிக் கவலை கொள்ளத் தேவை இல்லை என்கிறார் இந்தப் பெரியவர். காரணம் கழிவுநீர் சுத்திகரிப்பில் மிக மோசமானதாகக் கருதப்படுவது மனித திடக் கழிவுகளைச் சேகரிக்கும் செப்டிக் டேங்குகள் அல்லது கழிவுநீர்க் குட்டைகளைச் சுத்தம் செய்வது தான். மிக எளிதான முறையில் இந்த செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்ய முடிவதோடு மனிதக் கழிவுகளை முற்றிலுமாக இல்லாமலாக்கி அந்தக் கழிவுநீரை சுத்திகரிக்க முடியுமென்றால் அது நிச்சயம் அருமையான வழிமுறையாகத் தான் இருக்கக் கூடும்.

மனிதக் கழிவுகளை உண்ணக்கூடிய பாக்டீரியாக்களை வாங்கி செப்டிக் டேங்குக்குள் ஒருமுறை போட்டு விட்டால் போதும். அவை உள்ளிருக்கும் திடக் கழிவுகளை உண்ட பின்பு வெறும் நீர் மட்டுமே செப்டிக் டேங்குகளில் மிஞ்சும். அந்த நீரில் தற்போது மனித சிறுநீரில் இருக்கக் கூடிய யூரியா மட்டும் தான் இருக்கும் என்கிறார்கள் இத்தகைய கழிவுநீர் மேலாண்மையில் அக்கறையும், சமூகப் பொறுப்புணர்வும் கொண்டவர்கள். இப்போது சுத்திகரிக்கப்பட்டு யூரியா மட்டுமே மீந்த இந்த நீரை காய்கறிச் செடிகளுக்கு ஊற்றலாம். அது மிகச்சிறந்த ஆர்கானிக் உரமாகவும் செயல்படும் என்கிறார்கள் தோட்டக்கலைத்துறையினர்.

செப்டிக் டேங்குகள் மற்றும் பாத்ரூம் டாய்லெட்டுகளை சுத்தம் செய்ய பெரும்பாலும் ஆசிடுகள் (அமிலங்கள்) பயனபடுத்தப் படுகின்றன. இது முற்றிலும் தவறான முறை. அமிலங்கள் பயன்படுத்துவதால் செப்டிக் டேங்க்குகளில் விஷவாய்ய்க்கள் உருவாகி அவற்றைச் சுத்தம் செய்வதற்காக மனிதர்கள் உள்ளிறங்குகையில் உயிர்ப்பலி நேரிட்டு விடுகிறது. அது மட்டுமல்ல கழிவுநீரும் சுத்திகரிக்க இயலாத வண்ணம் விஷத்தன்மை கொண்டதாக மாறிவிடுகிறது. கழிவுநீர் மேலாண்மையில் இது மிக மோசமான அணுகுமுறை. அப்படிச் செய்யக் கூடாது. செப்டிக் டேங்கில் இருக்கும் கழிவுகளை சுத்தம் செய்ய மனிதமலம் உண்ணும் பாக்டீரியாக்களை 10 வருட்னக்களுக்கு ஒருமுறை செப்டிக் டேங்குக்குள் போட்டு விட்டால் போதும். பிறகு அதைப்பற்றி வருந்தாமல் செப்டிக் டேங்கில் சேரும் திரவக் கழிவுநீரை அப்படியே எடுத்து வீட்டுத் தோட்டங்கள் மற்றும் மாடித்தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சப் பயன்படுத்தலாம். அதே போல வீட்டிற்குள் டாய்லெட்டுகளை சுத்தம் செய்ய விரும்பும் போது ஆரஞ்சு, லெமன் உள்ளிட்ட பொருட்களை தோலோடு காயவைத்து நன்கு காய்ந்த பின் அப்படியே மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவை கொண்டு டாய்லெட்டுகளைச் சுத்தம் செய்தால் விஷ வாயுக்கள் உருவாவதைத் தடுக்க முடிவதோடு நமது வீட்டுத் தோட்டங்களுக்கு அருமையான ஆர்கானிக் உரமும் கிடைக்க உத்தரவாதமளிக்கலாம்.
 

]]>
கழிவு நீர் மேலாண்மை, செப்டிக் டேங்க் சுத்திகரிப்பு, கழிவு நீர் சுத்திகரிப்பு, டாய்லெட், ஹார்பிக் ஆசிட், horpic, toilet http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/8/w600X390/zkazivu_neer_melanmai.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/may/08/டாய்லெட்-சுத்தம்-செய்வதில்-ஆசிட்-ஹார்பிக்குக்கு-நோ-சொல்லுங்க-பாக்டீரியாவுக்கு-எஸ்-சொல்லுங்க-2915777.html
2915094 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் விமான நிறுவனங்கள் பெரும்பாலும் வெளிப்படுத்த விரும்பாத விமான ரகசியங்கள்... RKV Monday, May 7, 2018 04:16 PM +0530  

விமானத்தில் பயணிப்பது இன்றும் கூட பெரும்பாலானோருக்கு ஒரு வாழ்நாள் கனவே. விருப்பத்துக்குரியவர்களை விமானத்தில் அழைத்துச் சென்று திரும்ப வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்ட ஆண்களையும், பெண்களையும் நீங்கள் கதைகளிலோ, நேரிலோ கண்டிருக்கலாம். அந்த அளவுக்கு விமானப் பயணமும், விமானங்களும் நம் மக்கள் மனதில் ஆடம்பரத்திற்குரிய அல்லது கொண்டாட்டத்துக்குரிய ஒரு விஷயமாகத் தான் இன்றளவும் அணுகப்படுகிறது. ஆனால், ஒருமுறை விமானத்தில் நெடுந்தூரப் பயணமோ அல்லது குறும்பயணமோ சென்று திரும்பியவர்களிடம் கேட்டுப் பார்த்தால் தெரியும். விமானத்தில் பயணிப்பதென்பது அனைவருக்குமே அப்படி ஒன்றும் ரசமான அனுபவமாக அமைந்திராது என்று.

விமானப் பயணத்தின் செளகர்யங்கள் விமானத்தில் நாம் பயணிக்கும் வகுப்பைப் பொருத்தது. எகனாமிக் கிளாஸ் என்பது நம்மூர் டவுன் பஸ் கணக்காகத் தான் இருக்குமென்பது அடிக்கடி அதில் துபாய், சிங்கப்பூர், சீனா என்று சென்று திரும்பும் நெருங்கிய உறவினர் ஒருவரது கூற்று. அவரைப் பொருத்தவரை டவுன் பஸ்ஸிலாவது மூச்சு முட்டினால் திடீரென நடுவில் நிறுத்தி வேறு பஸ் பிடித்துச் செல்லலாம். ஆனால் விமானத்தில் மூச்சு முட்டுகிறது என்று அவ்வாறு செய்ய முயன்றால் அதன் பெயர் தற்கொலை :) அதுவே பிஸினஸ் கிளாஸில் பயணித்தால் அதன் ரேஞ்சே வேறு. அங்கே 5 நட்சத்திர உபசாரம் நடக்கும். ஆனால், எல்லோராலும் பிஸினஸ் கிளாஸ் அல்லது எக்ஸிகியூட்டிவ் கிளாஸில் பயணிக்க முடியாது என்பதே நிதர்சனம். விமானத்தில் பயணிப்பதென்பது இந்திய மனநிலையைப் பொருத்தவரை லக்ஸுரி என்பதாகவே இன்றளவிலும் நீடிக்கிறது. அதை உடைப்பதே இக்கட்டுரையின் நோக்கம். அதையும் கூட விமான நிறுவன ஊழியர் ஒருவர் அளிக்கும் தகவல்களின் துணை கொண்டு உடைத்தால் சுவாரஸ்யமாகத் தான் இருக்குமில்லையா?

கொஞ்சம் வேடிக்கையும் கொஞ்சம் சமூக அக்கறையும் கலந்த அந்த விமான ரகசியங்களைப் பற்றிப் பார்ப்போமா?

 1. விமானத்தில் விமானப் பணிப்பெண்கள் உங்களுக்கு அளிக்கும் தலையணைகள் மற்றும் போர்வைகள் பலமுறை பயன்படுத்தப்பட்ட பிறகே துவைக்க அனுப்பப்படுகின்றனவாம்.

நாம் விமானப் பயணத்தின் போது கொண்டு செல்லும் லக்கேஜுகள் (Transportation Security Administration (TSA அப்ரூவ்டு லாக்குகள்)) என்று குறிப்பிடப்படக்கூடிய பூட்டுகளால் பூட்டப்படவில்லை எனில் உங்கள் சூட்கேஸுகள் வளைவு முகவர்கள், கேட் ஏஜண்ட்டுகள், மற்றும் சக பயணிகளால் கூட திறக்கப்படக் கூடும் அபாயமிக்கவையாக மாறக்கூடுமாம்.

விமானப் பயணத்தின் போது விமானப் பணிப்பெண்களால் உங்களுக்கு அளிக்கப்பட்ட ஹெட் ஃபோன்கள் எப்போதுமே புதியவை அல்ல. அவை புதிது போல பிளாஸ்டிக் கவர் சுற்றி எடுத்துவரப்பட்டு உங்களுக்கு அளிக்கப்பட்டாலும் கூட அவை பழையவையும் பல முறை பயன்படுத்தப் பட்டவையுமே என்கிறார்கள்.

விமானப் பணிப்பெண்கள் உங்களை சோதிக்கும் போது உங்களது கைப்பையில் மீச்சிறு அதிர்வொலி எழுந்தாலும் கூட உடனடியாக அவர்கள் அதைச் சோதிக்க முன்வர வேண்டும். 

விமானப் பயணத்தின் போது உங்களுக்கு அளிக்கப்படும் காஃபீ, டீ போன்றவை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீர் நீங்கள் நினைக்கும் அளவுக்கு அல்லது உங்களது எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு அத்தனை சுத்தமானது இல்லையாம்.

மழைநாட்களின் போது கடினமாகத் தோன்றும் விமானத் தரையிறக்க முயற்சி கூட விமானிகளால் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் செயலாகத் தான் கருதவேண்டியதாயிருக்கிறது. ஏனெனில் புயலினால் ஓடுதளத்தில் பரவிய கடினமான தரைத்தளத்தை உடைக்கும் முயற்சியாக அவர்கள் கடினமான லேண்டிங் முறையை முயற்சிக்கக் கூடும் என்கிறார்கள் சில விமானநிலைய ஊழியர்கள்.

விமானக் குளியலறையின் வெளியே ஒரு ரகசியப் பூட்டு உள்ளது. பயணிகள் எவரேனும் தவறுதலாக குளியலறைக் கதவை திறக்க முடியாத அளவில் பூட்டிக் கொண்டார்கள் எனில் அப்போது விமானப் பணிப்பெண்கள் கதைவைத் திறந்து பயணிகளைக் காக்க இந்தப் பூட்டு உதவுமாம்.

விமானப் பணிபெண்களுக்கு அன்பளிப்பாக அள்ளித்தர உங்களிடம் பணம் கொட்டிக் கிடக்கிறதென்றால் நீங்கள் எந்த வகுப்பில் பயணித்தாலும் அது பிஸினஸ் கிளாஸ் தரத்தில் அமையுமாறு செய்வதில் சமர்த்தர்களாம் விமானப் பணிப்பெண்கள். 

சில விமானிகள் நடுவானில் விமானத்தை ஆட்டோமாடிக் ஃப்ளை ஆப்சனில் போட்டு விட்டு பயணத்தின் இடையே இப்படி குட்டித் தூக்கம் போடுவதும் உண்டாம்.

பெரிய கட்டணத்தைத் தவிர்க்க லக்கேஜ்களை கேட்டில் பரிசோதிப்பது நல்லது.

விமானத்தின் கதவுகள் மூடப்பட்ட நொடி முதல் அந்த விமானத்தை இயக்கும் விமானிக்கு உள்ளிருப்பவர்கள் எவரேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்களை கைது செய்யும் அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

பதவி மூப்பு மற்றும் அனுபவத்திறன் அடிப்படையில் என்ன தான் வேறுபாடுகள் நிலவினாலும் விமானியும், துணை விமானியும் தங்களுக்கிடையே சரிசமமாகத் தான் வேலையைப் பங்கிட்டுக் கொள்கிறார்கள்.

மனித உடலுறுப்புகளை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்காக பத்திரமாகக் கொண்டு சென்று சேர்ப்பதில் விமானங்கள் எப்போதும் முதலிடத்தில் இருக்கின்றன. அது முறையானதாக இருந்தாலும் முறையற்று சட்டத்திற்குப் புறம்பானதாக சட்டத்தை ஏமாற்றும் விதமாக இருந்தாலும் கூட.

நீங்கள் மிகப்பெரிய பிரபலமான விமானநிறுவனத்தின் விமானத்தில் பயணிக்கிறீர்கள் என்பதற்காக உங்களது விமானி மிகவும் அனுபவத் திறன் வாய்ந்தவர் என்று கற்பனை செய்யாதீர்கள். 

பெரும்பாலான விமானப் பணிப்பெண்கள் தங்களது பயணிகளின் செல்ஃபோன்களை ஆஃப் செய்யச் சொல்லி ஆணையிடும் அதே நேரத்தில் தங்களது செல்ஃபோன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்வதில்லை.

வானில் மின்னல் தோன்றக்கூடிய எல்லா நேரங்களிலும் பெரும்பாலும் விமானங்கள் இயற்கைத் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.

விமானங்களில் பயணிகளுக்கானதைப் போல அல்லாது விமானிகளுக்கான உணவு வேறு தரத்தில் தயாரித்து அளிக்கப்படுகின்றனவாம்.

விமானங்களில் உங்களது இருக்கைக்கு மேலிருக்கும் ஆக்ஸிஜன் முகமூடிகளில் 15 நிமிடங்களுக்கான ஆக்ஸிஜன் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.

Source: Travel website.

]]>
விமான ரகசியங்கள், airline secrets, travel tips, விமானப் பயணக் குறிப்புகள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/7/w600X390/bribe_the_flight_attendant.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/may/07/airline-secrets-they-do-not-want-to-be-exposed-2915094.html
2908085 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ஒழுக்கம் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன? சொல்கிறார் சைலேந்திர பாபு ஐபிஎஸ்! RKV Thursday, April 26, 2018 04:01 PM +0530  

யூ டியூப் இணையதளத்தில் சைலேந்திர பாபு ஐபிஎஸ் அவர்களின் நேர்காணலொன்றைக் காண நேர்ந்தது. தமிழ்நாட்டில் எத்தனையோ ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கலாம். அவர்களில் பெயர் சொன்னால் தெரியுமளவுக்கு மக்களுக்கு நன்றாக அறிமுகமானவர்கள் வெகு சிலரே. அவர்களில் எஸ்பி சைலேந்திர பாவுவும் ஒருவர். அவரிடம் நிகழ்ச்சியின் நெறியாளர் பல கேள்விகள் கேட்டார். அதிலொன்று இன்றைய இளம் தலைமுறையினர் பின்பற்ற வேண்டிய எதிக்ஸ் என்று சொல்லப்படக்கூடிய நெறிமுறைகள் மற்றும் ஒழுக்கம் பற்றியது.

உண்மையில் எதிக்ஸ் என்றால் என்ன? ஒழுக்கம் என்றால் என்ன?

நான் பல கல்லூரி விழாக்களில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறேன். அப்படிச் செல்லும் போது அனைத்துக் கல்லூரிகளிலும் முதல்வர்கள் என்னிடம் பேசும் போது, ‘எங்கள் கல்லூரியில் மாணவர்களின் ஒழுக்கத்திற்கு தான் முன்னுரிமை அளிக்கிறோம். எக்காரணம் கொண்டும் கல்லூரி ஒழுக்க விதிகளை மாணவர்கள் மீறக்கூடாது என்பதில் நாங்கள் மிக ஸ்ட்ரிக்ட்டாக இருக்கிறோம் என்பார்கள்.

இங்கே அவர்கள் ஒழுக்க நெறிமுறைகள் என்று சுட்டிக் காட்டுவது கல்லூரியில் செல்ஃபோன்கள் பயன்படுத்தத் தடை, மாணவர்கள் மது அருந்தாமல் இருப்பது, புகைக்காமல் இருப்பது, மாணவிகளிடம் அனாவசியமாகப் பேசாமல் இருப்பது, போன்ற விஷயங்களாக இருக்கும். மேற்கண்ட விஷயங்களை மட்டுமே எந்த விதத்தில் இவர்கள் ஒழுக்க நெறிமுறைகளில் சேர்க்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

நிஜம் தான் மாணவர்கள் தங்களது கல்லூரி நேரத்தில் அவர்கள் மேலே குறிப்பிட்ட விஷயங்களைச் செய்யக் கூடாது என்பது ஒழுக்க நெறிமுறை தான். ஆனாலும், அதையும் தாண்டி ஒழுக்கம் என்பதற்கு வேறு ஆழமான அர்த்தம் இருப்பதாக நான் நம்புகிறேன்.

பிறரை நேசிக்க வேண்டும், பிறருக்கு எந்த விதமான கெடுதலும் செய்யாமல் இருக்க வேண்டும். இது தான் உலகின் மிகப்பெரிய எதிக்ஸ் மற்றும் ஒழுக்கவிதி என்பேன் நான்.

உலகில் எதிக்ஸ் என்பது மிகப்பெரிய விஷயம். அதன் அடிப்படை இதிலிருந்து தான் தொடங்குகிறது. இது சரியான விதத்தில் புரிந்து கொள்ளப்பட்டால் உலகின் தலைசிறந்த ஒழுக்க விதியாக இதைத்தான் சொல்வேன் நான்.’ என்றார்.

அதுமட்டுமல்ல; யூபிஎஸ்இ உள்ளிட்ட குடிமைப் பணித்தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் தனியார் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சியில் சேர சிரமப்பட்டார்கள் எனில் அவர்களுக்காகவே அரசு சார்பாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் இயங்கும் அரசு அனைத்திந்திய குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெறலாம். அங்கே உணவு, தங்குமிடம், பயிற்சி கட்டணம் உள்ளிட்டவை அனைத்தும் இலவசம் என்றும் கூறினார்.

குடிமைப் பணித்தேர்வுகளுக்கு தயாராகும் போது தொடர்ந்து அதில் வெற்றியடைய முடியாவிட்டாலும் கூட அதற்கென தயார் செய்த காலம் வீணென்று கருத வேண்டியதில்லை. அப்போது பெற்ற அனுபவங்களையும், பயிற்சிகளையும் கொண்டு மாற்று வேலைவாய்ப்புக்கான தகுதியைப் பெற்றிருக்கிறோம் என 100 % திருப்தி அடையலாம். ஏனெனில் குடிமைப் பணித்தேர்வுகளுக்கான பயிற்சிகளால் கிடைக்கக் கூடிய உலக ஞானத்தை வேறு எந்த பயிற்சிகளாலும் தரமுடியாது. எனவே இந்த உலகில் உண்மையான அர்ப்பணிப்பு உணர்வும், கடின உழைப்பும் வீணாவதில்லை எனும் நம்பிக்கையோடு அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி முன்னேற வேண்டும். அதுவே இன்றைய இளைஞர்களுக்கு தேவையான முதல் பாஸிட்டிவ் எனர்ஜி என்கிறேன் நான். எனவும் அவர் கூறினார்.

பாஸிட்டிவ் எனர்ஜியை வெளியில் இருந்து பெறுவதைக் காட்டிலும் அது அவர்களுக்கு உள்ளிருந்து உற்பத்தியாகக் கூடியது எனும் விஷயத்தில் நம்பிக்கை இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் பாஸிட்டிவாகவே அணுகவேண்டும் என்பதை நாம் முன்கூட்டியே முடிவு செய்து கொள்வது ஒன்று தான் பாஸிட்டிவ் அப்ரோச்சுக்கான எளிய வழி என்கிறார் சைலேந்திர பாபு ஐபிஎஸ்.

இன்றைய இளைஞர்களுக்கு அவர் சொல்லும் முக்கியமான மூன்று அவுரைகள்;

 1. ஃபிட்டாக இருங்கள்... தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். அப்போது தான் உற்சாகமான மனநிலை கிடைக்கும்.
 2. புத்தகங்கள் வாசியுங்கள், நிறையக் கற்றுக் கொள்ளுங்கள் அப்போது தான் மகிழ்ச்சியாக இருப்பதற்கான மனநிலை கிடைக்கும்.
 3. வேலைத்திறனில் அக்கறையோடு இருங்கள். சம்பளத்துக்காக வேலை செய்யாமல் அந்த வேலையை உங்களால் எத்தனை சிறப்புரச் செய்ய முடியும் என்று யோசித்து நீங்கள் செய்த வேலை உங்களுக்கே திருப்தி அளிக்கும் வகையில் கொடுக்கப்பட்ட வேலையை திறம்படச் செய்து முடியுங்கள்.

இந்த மூன்று குணங்களும் இருந்தால் போதும். உங்கள் வாழ்வுக்கான வெற்றி உங்களைத் தேடி வந்து அரவணைக்கும். என்கிறார்.


 

]]>
SYLENDRABABU IPS, DISCIPLINE, ETHICS, சைலேந்திர பாபு ஐபிஎஸ், ஒழுக்க நெறிமுறைகள், இளம் தலைமுறை, ஊக்கப்படுத்தும் பேச்சு, InSPIRATIONAL SPEACH http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/26/w600X390/z_sylendrababu_IPS.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/apr/26/csylendra-babu-ips-discribes-the-meaning-of-discipline-2908085.html
2907399 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் பழச்சந்தையில் இந்திய கிவி பழங்களை யாரும் சீந்துவாரில்லை... அந்தக் கோபத்தில் உதித்ததே இந்த கிவி ஒயின் ஐடியா! கார்த்திகா வாசுதேவன் Wednesday, April 25, 2018 04:34 PM +0530  

கிவி பழங்கள் இன்று அனைத்து சூப்பர் மார்க்கெட்டுகளிலும், பழக்கடைகளிலும் கிடைக்கின்றன. லோக்கல் அண்ணாச்சி கடைகளிலும் கிவி பழங்கள் கணிசமான இடங்களை ஆக்ரமித்துள்ளன. காரணம் கிவி பழங்களில் ஆன்ட்டி ஆக்ஸிடண்டுகள் அபிரிமிதமாக இருப்பதாக அனைத்து ஊடகங்களும் தொடர்ந்து எழுதி வந்ததன் விளைவு இது. கிவியில் இருக்கும் அளவை விட அதீதமாக ஆன்ட்டி ஆக்ஸிடண்டுகள் நம்மூர் கொய்யாப் பழத்தில் இருப்பதாக நம்பப் பட்டாலும் கொய்யாவை இன்று நம்மிடையே வயதானவர்களும், அப்பழத்தை தொடர்ந்து உண்ணும் வழக்கம் கொண்டவர்களும் மட்டுமே உண்கிறோம். கொய்யாவோடு ஒப்பிடும் போது கிவி பழம் சாப்பிடுகிறோம் என்று சொல்லிக் கொள்வது இன்றைய இளம் தலைமுறைக்கு பெருமிதமாகக் கூட இருக்கலாம்.

அல்லது அவர்களுக்கு கொய்யா சப்பிட்டுப் பழக்கமில்லாமலும் இருக்கலாம். ஏதோ ஒரு விதத்தில் நாம் நமது பாரம்பரியமான கொய்யா பழத்தின் சத்துக்களை கிவி போன்ற அயல்நாட்டுப் பழங்களின் வருகையால் இழந்து விட்டோம் என்பது மட்டும் யதார்த்த உண்மை.

கொய்யாவின் இடத்தை கிவி பிடித்தது வாஸ்தவமே என்ற போதும் அப்படி நாம் விரும்பி வாங்கும் கிவிப் பழங்களும் நியூசிலாந்தில் விளைந்ததாக இருக்க வேண்டுமென்று நினைப்பதில் ஏதாவது லாஜிக் இருக்க முடியுமா? இல்லை. ஆனால், ஏனோ இந்தியாவில் விளையும் கிவி பழங்களுக்கு விற்பனை வரவேற்வு இல்லை என்கிறார்கள். இந்திய பழச்சந்தைகளில் நியூசிலாந்து, இத்தாலி, சிலியில் இருந்து இறக்குமதியாகும் கிவி பழங்களுக்கு இருக்கும் மதிப்பு இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் ஏகபோகமாக விளைவிக்கப் படக்கூடிய இந்திய கிவிபழங்களுக்கு இல்லை. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் நிழல் மறைவுப் பிரதேசங்களில் ஒன்று. அங்கே கிவி பழங்களை அதிகமாக விளைவிக்கக் கூடிய அருமையான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. பழங்களும் எக்கச்சக்கமாக விளைகின்றன. ஆனால் அவற்றுக்கு விற்பனை வரவேற்பு இல்லையென்றால் அந்தப் பழங்களை வைத்துக் கொண்டு என்ன செய்ய?

இந்தியர்களான நமக்கு கிவி பழங்கள் பாரம்பரியப் பெருமை எதுவும் இல்லை. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் நமக்கு இந்தப் பழங்கள் அறிமுகம் ஆயின. வெகுஜன புழக்கத்துக்கு வந்தது அதற்கும் ஐந்தாண்டுகள் கழிந்த பின்னரே! இந்தியர்களைப் பொருத்தவரை கிவி பழங்களில் துவர்ப்புச் சுவை அதிகமிருந்த போதும் ஏனோ நமக்கு அந்தப் பழம் தினமும் உண்ணக்கூடிய பழக்கத்தை உண்டாக்கும் அளவுக்கு கவர்ச்சிகரமான அம்சம் கொண்ட பழங்களில் ஒன்றாகி விட்டது.

இப்படி ஒரு கேள்வி அருணாச்சலப் பிரதேசத்தில் கிவி பழங்களை அதிகமாக விளைவித்துக் கொண்டிருக்கும் டகி ரிட்டா டாகேவுக்கும் அவரது கணவரான டகே டாமோவுக்கும் வந்தது. அடிப்படையில் அக்ரிகல்ச்சுரல் இஞ்சினியரான டகி ரிட்டா தங்களது பண்ணைகளில் விளையக்கூடிய கிவி பழங்கள் வீணாகாமல் காக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். வழக்கறிஞரான தன் கணவருடன் இணைந்து மிகப்பெரிய பண்ணை நடத்தி வரும் டகி ரிட்டா தோட்டக் கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பதால் தனது பிரச்னைக்கான உரிய தீர்வுக்காக யோசித்தார். அதில் கிடைத்தது தான் கிவி ஒயின் ஐடியா! இந்திய கிவி பழங்களுக்கு பழச்சந்தையில் வரவேற்பு இல்லாவிட்டால் என்ன? அதற்காகப் போராடி நேரத்தையும், பழங்களையும் வீணடிப்பதைக் காட்டிலும் மாற்று வழி யோசிப்போம் என்று முனைந்ததில் கண்டறிந்தது தான் கிவி ஒயின் ஐடியா.

இந்தியாவிலேயே கிவி பழங்களை விளைவிக்க முடிந்தபோதும் கூட ஆண்டுதோறும் 6000 மெட்ரிக் டன் அளவிலான கிவி பழங்களை இன்றும் நான் ஏன் அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும்? அப்படியொரு நிர்பந்தம் நமக்கு ஏன்? என்று ஒருபக்கம் கோபத்துடன் குரல் எழுப்பினாலும் பல ஆண்டுகளாக விளைந்து விற்பனைக்குத் தயார் நிலையில் உள்ள கிவி பழங்களை யாருமே வாங்கக் கொள்ள முன் வராத சோகத்தை எப்படிக் கடப்பது? அப்போது தான் தொடர்ந்து பழங்களை வீணாக்குவதைக் காட்டிலும் அவற்றை நொதிக்க வைத்து அதிலிருந்து ஒயின் தயாரிக்கலாமே என்றொரு எண்ணம் தோன்றியது. உடனடியாக டகி ரிட்டா தனது கணவரின் உதவியுடன் அதைச் செயல்படுத்தத் தொடங்கி விட்டார். தங்களது நிலத்தில் விளையும் பழங்களில் இருந்து மட்டுமல்ல தமது மாநிலத்தில் கிவி விளைவிக்கும் அனைத்து விவசாயிகளின் பழப்பண்ணைகளில் இருந்தும் இன்று மொத்தமாகக் கிவி பழங்களை வாங்கி அதிலிருந்து கிவி ஒயின் தயாரிக்கிறார்கள் இந்தத் தம்பதியினர். அதற்கு நார ஆபா எனப் பெயரிட்டிருக்கிறார்கள். ஒயின் அருந்துவதை தனது வாழ்வின் மிகப்பெரிய கொண்டாட்டமாக நினைத்த மாமனாரின் பெயரைத்தான் தங்களது கிவி ஒயினுக்கு சூட்டியிருக்கிறார்கள் இந்தத் தம்பதியினர்.

ஒயின் குடிப்பது என்பது அருணாச்சலப் பிரதேசப் பழங்குடி கலாச்சாரங்களில் பரம்பரையாக உள்ள பழக்கம் தான். என்றாலும் அவர்களுக்கு ஒயினை ஆண்டுக் கணக்கில் பதப்படுத்திப் பயன்படுத்தும் பக்குவம் தெரியாது. அந்தப் பழமையான பழக்கத்தை மீட்டெடுத்து அதில் புதுமையான ஒயின் பதப்படுத்தும் தொழில்நுட்பத்தை புகுத்தி பழமைக்கும், புதுமைக்குமான பள்ளத்தை நிரப்பி கிவி பழங்களில் இருந்து தயாரிக்கும் ஒயினை நீண்டகாலப் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்ததில் கிடைத்தது எங்களுக்கான வெற்றி. இன்று இந்த மக்கள் தங்களது ஒயினை தாங்களே தயாரிக்க முடிவதோடு அவற்றை நெடுங்காலத்துக்கு பராமரிக்கவும் முடிகிறது.

இவர்கள் விளைவிக்கும் கிவி பழங்களின் மற்றொரு சிறப்பு, அவை முற்றிலும் ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்படுவது. எந்தவிதமான வேதி உரங்களையும் இவர்கள் பயன்படுத்துவதில்லை. 2300 சதுர அடி இடத்தில் இயங்கும் இவர்களது கிவி ஒயின் தயாரிப்பு தொழிற்சாலையில் தற்போது 25 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு தங்களது நிலத்தில் விளைந்த பழங்களோடு நாசிக், இத்தாலி, சீனா, டென்மார்க்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிவி பழங்களைக் கொண்டும் ஒயின் தயாரிக்கப்படுகிறது. ஒயின் தொழிற்சாலைகள் சுத்தமாக பராமரிக்கப்படுவது எப்படி என்பதை இவர்களிடம் கற்றுக் கொள்ளலாம் என்கிறார்கள். அந்த அளவுக்கு தயாரிப்பில் சுத்தமும் சுகாதாரமும் பேணப்படுகிறது.

நமது சொந்த நாட்டில் உற்பத்தியாகும் பழங்களை விற்பனை செய்ய முடியவில்லையே? அயல்நாட்டு இறக்குமதி பழங்களுடன் போட்டியிட முடியவில்லையே எனச் சோர்ந்து போய் உட்காராமல் பழங்களைத் தானே விற்கமுடிவதில்லை... நாங்கள் அவற்றை பாரம்பரியச் சுவையுடன் ஒயினாக மாற்றி அவற்றின் சத்துக்கள் கெடாமல் பயன்பாட்டுக்குத் தருகிறோம் என்ற சிந்தனை நிச்சயம் ஆரோக்யமானதே!

]]>
kiwi fruits, indian Kiwi fruit, fruit market, Naara-Aaba., kiwi wine, கிவி ஒயின், நார ஆபா ஒயின், அருணாச்சலப் பிரதேசம், இந்தியப் பழச்சந்தை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/25/w600X390/zkiwi-wines.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/apr/25/6000-metric-tonnes-of-kiwi-is-still-imported-into-india-every-year-2907399.html
2902717 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்... RKV Wednesday, April 18, 2018 05:11 PM +0530  

 1. நீங்கள் எங்கும் நிற்காமல் சென்று கொண்டே இருக்கும் வரை, நீங்கள் மெதுவாகச் செல்கிறீர்கள் என்பதெல்லாம் ஒரு பிரச்னையே அல்ல!
 2. உங்களை விடச் சிறந்தவர்களாக இல்லாதவர்களுடன் எக்காரணம் கொண்டும் நட்பு வைத்துக் கொள்ளாதீர்கள்.
 3. கோபம் வரும்போது விளைவுகளை எண்ணிப்பாருங்கள்.
 4. உங்களது இலக்குகளை அடைய முடியாதென வெளிப்படையாகத் தெரிய வரும் போது, ஒருபோதும் இலக்குகளை மாற்றிக் கொள்ளாதீர்கள், செயல்படும் முறைகளை மாற்றிப் பாருங்கள்.
 5. நீங்கள் ஒரு நபரை மோசமாக வெறுக்கிறீர்கள் என்றால், நீங்கள் அவர்களால் தோற்கடிக்கப் பட்டுவிட்டீர்கள் என்று தான் அர்த்தம்.
 6. சிறந்த மனிதர்களின் தேடுதல் எப்போதும் அகம் சார்ந்ததாக இருக்கிறது. அவர்கள் தங்களுக்குள் தேடுகிறார்கள். எளிய மனிதர்களின் தேடுதல் எப்போதும் புறம் சார்ந்ததாக இருக்கிறது, அவர்கள் எப்போதும் தேடலை வெளியிலேயே வைத்துக் கொள்கிறார்கள்.
 7. நீங்கள் எதில் இறங்குவதாக இருந்தாலும் முழு மனதுடன் இறங்குங்கள்.
 8. தங்கள் அறியாமையைப் புரிந்து கொண்டு அதிலிருந்து வெளியில் வர விரும்பும் அறிவுத்தேடல் மிக்கவர்களுக்கு மட்டுமே அறிவுரை அளியுங்கள்.
 9. எப்போதும் சிறிய அனுகூலங்களையே எதிர்பார்த்து அடுத்து கிடைப்பதாக இருக்கக்கூடிய பெரிய அனுகூலங்களை அவை முழுதாக ஈடேறும் முன் இழந்து விடாதீர்கள்.
 10. சிலர் எப்போதும் உங்களைப் பின்னால் இருந்து இகழ்கிறார்கள் என்றால் நீங்கள் எப்போதும் அவர்களை விட ஒருபடி முன்னால் இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்திருங்கள்.
]]>
chinese philoshoper confucius, 10 life changing lessons, கன்ஃபூசியஸ் தத்துவங்கள், வாழ்க்கையை மாற்ற உதவும் 10 கட்டளைகள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/18/w600X390/live-a-positive-life.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/apr/18/10-life-changing-lessons-from-chinese-elite-confucius-2902717.html
2899495 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் வாழ்க்கை சுத்த போர்னு தோணுதா? அப்போ வாங்க கொஞ்ச நேரம் கால் வீசி ஊஞ்சல் ஆடலாம்! கார்த்திகா வாசுதேவன் Friday, April 13, 2018 05:44 PM +0530  

இப்படி யோசித்து பாருங்களேன் நன்றாகவே இருக்கிறது... கூடவே சுவாரஸ்யமும் கூட... அப்புறம் சின்ன திருப்தி கூட உண்டு.

வயதான பாட்டி கால் பந்தாட்ட மைதானத்துக்கு அருகில் நடந்து போய்க் கொண்டு இருக்கிறார், எதோ ஒரு கணத்தில் பந்து தவறிப் போய் அவரது காலடியில் வந்து விழுகிறது, பாட்டி அதை அமைதியாக புன்னகையுடன் எடுத்து பந்தை உதைத்த இளைஞனிடம் தருகிறார். இது இயல்பான நிகழ்வு.

அதே பாட்டி காலடியில் உரசும் கால்பந்தை எல்லையில்லாக் குறும்புடன் எட்டி உதைத்து விட்டு தானும் அந்த விளையாட்டில் கலந்து கொள்ளத் தயாராக நிற்பதாக கற்பனை செய்து பாருங்கள். பாட்டிகளுக்கும் ஏதோவொரு நொடியில் கால் பந்து விளையாடிப் பார்க்க ஆசை வராதா என்ன? அந்த ஆசையை அடக்கி வைக்காமல் இந்தக் காலத்துப் பேரன், பேத்திகளோடு ஆடிப் பார்த்து விட்டார் என்றால் பிறகு அவருக்கு ஜென்ம சாபல்யம் கிட்டிவிட்டதாகத் தான் அர்த்தம்.

நடுத்தர வயதை தாண்டிய அத்தையோ அல்லது அம்மாவோ, சித்திகளோ பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்... அருகில் சறுக்கு மரத்தில் குழந்தைகள் சறுக்கி விளையாடிக் கொண்டிருக்கின்றனர்... அவர்களைக் கண்காணித்தவாறே பேசிக் கொண்டிருக்கும் அத்தையோ ...அம்மாவோ, சித்தியோ பேச்சின் ஏதோவொரு கணத்தில் முகமெல்லாம் த்ரில்லுடன் எழுந்து போய் சிறுவர்கள் சறுக்கி விளையாடும் அந்த சறுக்கு மரத்தில் ஒன்றுக்கு இரண்டு முறை அட்டகாசமான சந்தோசத்துடன் சறுக்கி முடித்து விட்டு வந்து மறுபடியும் பேச அமர்ந்தால் அப்போது அவர்களது முகத்தைப் பார்க்க வேண்டுமே... அந்த சந்தோசத்துக்கு ஈடு இணையே கிடையாது.

பழைய எம்.ஜி.ஆர் பாட்டுக்கு மொத்த குடும்பத்தினர் முன்னும் தாளம் போட்டு டான்ஸ் ஆடும் தாத்தா... அதை ரசித்துக் கொண்டே கூட ஆடும் பாட்டி.

மழை வந்ததும் குதூகலமாகப் பிள்ளைகளை ஓடி வரச்சொல்லி முற்றத்திலோ, மொட்டை மாடி வெற்று வெளியிலோ ரெயின் டான்ஸ் ஆடும் அப்பாக்கள்... அதை தடுக்காமல் கூட நனையும் அம்மாக்கள்.

வயதாகிறது என்ற நினைப்பே இல்லாமல் தெருவில் செப்பு வைத்து விளையாடும் குழந்தைகளோடு குழந்தைகளாய் ஆற்று மணலை அரிசிச் சோறாய் பாவனை செய்து வெறும் தண்ணீரை சாம்பாராகவும் ...உதிர்த்த முருங்கைப் பூக்களை கூட்டு பொரியலாகவும் சுகமான கற்பனை செய்து கொண்டு விளையாடித் தீர்க்கும் மனம் கொண்ட அத்தைகளும்... மாமாக்களும்.

கண்ணா மூச்சோ, குலை குலையாம் முந்திரிக்காயோ எந்த விளையாட்டானாலும் குடும்பத்தோடு என்றேனும் ஓர்நாள், ஒரே ஒரு நாளேனும் ஆடிப் பார்த்து விடும் ஆரோக்கியமான ஆசைகள் உள்ள மனிதர்கள் நிறைந்த வீடு... பிரியம் சமைக்கிற கூடு.

வாழ்க்கையில் இன்னும் சுவாரஸ்யங்கள் மிச்சம் இருக்கின்றன.

நம்புங்கள்...

மேலே சொன்ன எல்லாவற்றையும் விட பலருக்கும் மிகப் பிடித்த விஷயம் ஒன்றுண்டு அது ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடுவது. எந்த வயதிலும் இது அலுக்காத ஒரு செய்கை. இப்போதும் கூட கிண்டி சிறுவர் பூங்காவிலோ அல்லது வேறு ஏதோ பூங்காக்களிலோ பார்க்கலாம் வயது வித்யாசம் பாராமல் சிலர் ஊஞ்சலில் உட்கார்ந்து வீசி வீசி ஆடி ரசிப்பதை.

வேகம் கூடக் கூட ஜிவ்வென்று வானத்தில் பறப்பதைப் போல ஆனந்தம் பொங்கும் அற்புத ஆடல் அது. அதனால் தானோ தெய்வங்களையும் ஊஞ்சலில் வைத்து ஆட்டி உள்ளம் குளிர்விக்கிறோமோ என்னவோ?! மீனாட்சி அம்மையின் ஊஞ்சல் விளையாட்டை பிள்ளைத் தமிழில் ரசிக்கலாம்.

வீட்டில் நீளமான பலகை ஊஞ்சலோ அல்லது பிரம்புக் கூடை ஊஞ்சலோ வாங்கி மாட்டி ஆட இடம் இருந்தால் கண்டிப்பாக ஒரு ஊஞ்சல் வாங்கி மாட்டி விடுங்கள்... டென்சன் குறையும்.

அப்புறம் மனமிருந்தால் எந்த வயதிலும் சைக்கிள் விடலாம்... அது கூட ரிலாக்ஸ் செய்து கொள்ள மிகச் சிறந்த வழி தான். கண்களைக் குளிர்விக்க பச்சை பசேல் மரகத மலைகள்... சைக்கிள் வழுக்கிக் கொண்டு நழுவ குண்டு குழி நிரடல் இல்லா தார்ச்சாலை, எதிர் காற்றில் முகம் தழுவும் ஜில் ஜில் குளிர்... எல்லாம் கிடைத்தால் 80 வயதிலும் சைக்கிள் விடலாம். அது ஒரு பரவசம் மட்டுமல்ல ஆனந்தம்... பேரானந்த அனுபவம்!

வாழ்க்கை இப்படிப்பட்ட சுவாரஸ்யங்களால் நிரம்பியதாகத் தான் இருக்க வேண்டுமே தவிர; நீருக்குள் இருந்து தரையில் தூக்கி எறியப்பட்ட மீனின் போராட்டம் போலாகி விடக்கூடாது.

எனவே ரசித்து வாழுங்கள்... என்றென்றைக்குமாய் ரசித்து... வாழ்வை ருசித்து வாழ்ந்தால் கடும் மன உளைச்சலையும் கூட ‘ஃபூ’ என ஊதித்தள்ளி விடலாம்.

]]>
life, stress, swing, வாழ்க்கை, போர், மன உளைச்சல், ரிலாக்ஸ், ஊஞ்சல், ஸ்ட்ரெஸ் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/13/w600X390/swinging.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/apr/13/swing-in-the-rain-can-make-your-life-wonderful-2899495.html
2895540 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ஹூண்டாய், ஆப்பிள், டாப்லரோன் சாக்லேட், டொயோட்டோ, எல்ஜி, பிராண்ட் லோகோக்களின் கியூட் பின்னணி! கார்த்திகா வாசுதேவன் Saturday, April 7, 2018 05:56 PM +0530  

நீங்கள் தினமும் பார்க்கும் இந்த பிரபலமான பிராண்ட் லோகோக்களின் பின் ஒளிந்திருக்கும் சுவாரஸ்யப் பின்னணியை அறிந்தால் ஆச்சர்யத்தில் உங்களது புருவம் ஒரு அதார் லவ் ப்ரியா பிரகாஷ் வாரியர் போல அனிச்சை செயலாக ஏறி இறங்கக்கூடும். அத்தனை கியூட்டான கதைகள் மறைந்திருக்கின்றன இந்தப் பிராண்டுகளின் லோகோ வடிவமைப்பின் பின்.

நாம் தினமும் தொலைக்காட்சிகள், ஸ்மார்ட் ஃபோன்கள், துண்டுப் பிரசுரங்கள், ஃபிளெக்ஸ் போர்டுகள் வாயிலாகவும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகைப்பொருட்கள் வாயிலாகவும் நமக்கு நன்கு அறிமுகமான எண்ணற்ற பிராண்ட் பொருட்களின் லோகோக்களைப் பார்க்கிறோம். ஆனால், நமக்குப் பல சமயங்களில்  அந்தப் பொருட்கள் தான் நினைவிருக்கின்றனவே தவிர லோகோக்கள் குறித்து நாம் பெரிதாக யோசிப்பதாக இல்லை. லோகோக்கள் நாம் நன்கு அறிந்தவையாகவே இருப்பினும் அவற்றின் பின்னணி பற்றி நாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. நாம் அலட்டிக் கொள்ளாத காரணத்தால் லோகோக்களின் மவுசு ஒன்றுமில்லாததாக ஆகிவிடாது. அவை, அவற்றின் தனித்தன்மையுடனும், காலம் கடந்த வெற்றிகளுடனும் பல்லாண்டுகளாக ஜொலித்துக் கொண்டே தான் இருக்கின்றன. ஏனெனில் நமக்குப் பிடித்தமான பொருட்களை நாம் வாங்க ஒருவகையில் மறைமுகத் தூண்டலாக அமையக் கூடியவையும் இந்த லோகோக்கள் தான். எனவே லோகோக்களின் முக்கியத்துவம் பற்றி வாடிக்கையாளர்களான நாம் அலட்டிக் கொள்ளாவிட்டாலும் தயாரிப்பாளர்களுக்கும், அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப லோகோக்களை வடிவமைக்கும் டிசைனர்களுக்கும் அது குறித்த அக்கறையும், தெளிவும் நிறையவே இருக்கும்.

அப்படி மக்களிடையே நன்கு பிரபலமான சில பொருட்களின் லோகோ பின்னணி குறித்துத் தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.

அடிடாஸ் ...

அடிடாஸ் விளம்பரங்களில் அதன் லோகோவைப் பார்த்திருக்கிறீர்களா? மூன்று கோடுகள் இடம்பெற்றிருக்கும். லோகோவின் டிசைன் மாறினாலும் பெரும்பாலும் இந்த மூன்று கோடுகள் மாறுவதே இல்லை. அவை சற்றேறக்குறைய மலைகளை ஞாபகப்படுத்தக் கூடிய விதத்தில் அமைந்திருக்கும்.

அதைப் பற்றி பேசுகையில் அடிடாஸின் நிறுவனரான அடால்ஃப் டாஸ்லர் சொன்னது; விளையாட்டு வீரர்கள் தங்களது வாழ்வில் ஒவ்வொரு நாளுமே பல்வேறு விதமான தடைகளைக் கடந்து வர வேண்டியதாக இருப்பதை நினைவுறுத்தும் வகையில் இந்த மூன்று கோடுகளை, தடை பல கடந்து செல்ல வேண்டிய மலைகளை நினைவுறுத்தும் விதத்தில் வடிவமைத்திருப்பதாகக் கூறியிருந்தார். அடிடாஸ் ஸ்போர்ட்ஸ் சார்ந்து விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான அனைத்து விதமான பொருட்களையும் விற்பனை செய்யக்கூடிய ஃபேமஸ் பிராண்டுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள்...

உலகின் தலைசிறந்த கம்ப்யூட்டர் நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிளின் பிராண்ட் லோகோ உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அந்த லோகோவுக்குள் ஒளிந்திருக்கும் அர்த்தம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அதைப் பற்றி பேசுகையில் ஆப்பிள் லோகோ வை வடிவமைத்தவரும் உலகின் தலைசிறந்த லோகோ வடிவமைப்பாளர்களில் ஒருவருமான ராப் ஜனாஃப் சொன்னது; ஆப்பிள் நிறுவனத்தின் லோகோவை வடிவமைப்பதற்காக நான் நிறைய சிந்தித்தேன். ஒரு கூடை நிறைய ஆப்பிளை வாங்கி வைத்துக் கொண்டு அதை எந்த வடிவத்தில் இன்னும் எளிமைப்படுத்தி வடிவமைத்தால் பயனாளர்களான மக்களின்  மனதில் எளிதில் பதியும் என பல மணி நேரங்கள் நான் ஆப்பிளின் தோற்றத்தை பலவிதங்களில் வரைந்து பார்த்தேன். முடிவில் ஒரு முனையில் கொஞ்சம் கடிக்கப்பட்ட ஆப்பிளைக் கண்டதும் எனது மூளைக்குள் மின்னல் வெட்டியது. கடிப்பதை ஆங்கிலத்தில் பைட் (Bite) என்போம். கம்ப்யூட்டர் மொழியிலும் ஒரு பைட் (byte) உண்டு. அந்த ஒற்றுமையை எண்ணித்தான் இறுதியில் இந்த லோகோவைத் தேர்வு செய்தோம். இன்று உலகில் அதிகம் பேரால் விரும்பத்தக்க காஸ்ட்லி பிராண்ட் லோகோக்களில் ஒன்றாகத் திகழ்கிறது இந்த ஆப்பிள் லோகோ என்றார்.

ஹூண்டாய்...

தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டிருக்கும் கார்களில் முக்காலே மூணு வீசம் ஹூண்டாய் பிராண்ட் கார்கள் தான் அதிகம். நடுத்தர குடும்பத்தினர் விரும்பி வாங்கக்கூடிய வகையில் நடுத்தர பட்ஜெட்டில் வாங்கக் கூடிய வசதியில் அமைந்திருக்கும் கார்களில் ஒன்று இந்த ஹூண்டாய். இதன் லோகோவைப் பார்த்திருக்கிறீர்களா? H எனும் ஆங்கில எழுத்தின் நடுவில் இடம்பெற்றிருக்கும் கோடு சற்றே சாய்வாக இணைந்திருக்குமாறு இந்த லோகோ வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதை நன்கு உற்றுக் கவனித்தீர்கள் எனில் இருமனிதர்கள் இணைந்து கைகுலுக்கிக் கொள்வதைப் போல ஒரு புடைப்புச்சித்திரம் கிடைக்கும்.

அவர்கள் வேறு யாருமல்ல... ஹூண்டாய் கார் நிறுவனத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர் பிரதிநிதியும், அவரிடம் கார் வாங்க வந்த வாடிக்கையாளரும் தான். வாடிக்கையாளர், வாகன விற்பனைப் பிரதிநிதி உறவை சிறப்பிப்பதாக இந்த லோகோ வடிவமைக்கப் பட்டிருக்கிறது என்பதை எப்போதாவது உங்களால் ஊகிக்க முடிந்திருக்கிறதா? மிக அருமையான நினைவில் பதியக்கூடிய சிறப்பான லோகோ வடிவமைப்பு என இதைப் பாராட்டலாம் தானே!

VAIO (வாயோ)...

லேப்டாப்களை உற்பத்தி செய்து தரும் வாயோ பிராண்ட் லோகோவின் முதல் இரண்டு எழுத்துக்கள் VA அனலாக் அலைகளையும் (analogue wave) கடைசி இரண்டு எழுத்துக்கள் IO  என்பது 1, 0 எனும் எண்களுடனான டிஜிட்டல் சிக்னல்களையும் நினைவூட்டக் கூடியவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

கம்ப்யூட்டர் நிறுவனமான வாயோவின் லோகோ அதற்கேற்ற வகையில் பொருத்தமாக கம்ப்யூட்டர் மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ளது அதன் சிறப்பு என்பது எத்தனை பேருக்குத் தெரிந்திருக்க கூடும்?!

அமேஸான் Amazon...

அமேஸான் லோகோவை உற்றுக் கவனித்திருக்கிறீர்களா?  A எனும் முதல் எழுத்தையும் Z எனும் நான்காம் எழுத்தையும் இணைக்குமாறு ஒரு அம்புக்குறி தென்படும்.

கம்பெனியின் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி அவர்கள் விரும்பக்கூடிய விதத்தில் A TO Z வரையிலான அத்தனை பொருட்களையும் ஒரே பிராண்டின் கீழ் அளிக்கக்கூடியது அமேஸான் நிறுவனம் என்பது தான் இந்த லோகோவின் அர்த்தம். ஒருவகையில் இது தான் அமேஸானின் விற்பனை தத்துவம் அல்லது தந்திரம் என்று வேண்டுமானாலும் சொல்லலாம்.

பாஸ்கின் ராபின்ஸ்...

BASKIN ROBBINS ஐஸ்கிரீம் பிராண்ட்... இது ஐஸ்கிரீமுக்கு மட்டுமல்ல யோகர்ட்டுக்கும் ஃபேமஸ். இந்த ஐஸ்கிரீம் பிராண்ட் லோகோவின் நடுவிலிருக்கும் இளஞ்சிவப்பு நிற 31 எதைக் குறிக்கிறது தெரியுமா? 31 விதமான ஃபிளேவர்களில் ஐஸ்க்ரீம் வெரைட்டிகளை இந்தக் கம்பெனி தயாரித்து அளிக்கிறது என்பது தான் அதன் லோகோவின் அடையாளம்.

நீங்கள் எப்போதாவது இந்த பிராண்டு ஐஸ்கிரீம் சாப்பிட்டிருக்கிறீர்களா? நம்மூரில் அருண், கார்னெட்டோ, ஐபாகோ அளவுக்கு இது பிரபலமானதாகத் தெரியவில்லை. 

டொயோட்டா...

டொயோட்டா கார் லோகோ உங்களுக்கெல்லாம் நன்கு பரிச்சயமானதே. அதைப்பார்த்ததும் உங்களுக்கு என்னவெல்லாம் தோன்றியிருக்கிறது? கொஞ்சம் கற்பனை செய்து தான் பாருங்களேன். பலரும் அது குதிரையில் தொப்பி அணிந்து வரும் கெளபாயை நினைவூட்டும் விதத்தில் உள்ளது என்கிறார்கள். ஆனால் நிஜம் அதுவல்ல,

டொயோட்டோவின் லோகோ கதையை ஆராய்ந்தால் அந்நிறுவனத்தின் ஆரம்ப கால வியாபார வரலாறு வெளிவருகிறது. இன்று உலகின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் இந்த ஜப்பான் நிறுவனம் ஆரம்பகாலங்களில் ஜவுளித்துறையில் சாதனை புரிந்து வந்திருக்கிறது. அந்த அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இந்த லோகோவில் ஊசியில் நூல் கோர்ப்பது மாதிரியான வடிவம் புலப்படுகிறதா என்று உற்றுப் பாருங்கள். ஆம்... டொயோட்டோ லோகோ உருவானதின் பின்னணி இது தான்.

பின்னாட்களில் இவர்கள் கார் தயாரிப்பில் ஈடுபடுகையில் பழைய பாரம்பர்யத்தை மறவாமல் அதே லோகோவை தமது காரின் அனைத்து எழுத்துக்களிலும் டிசைன் செய்து விட்டார்கள்.

காண்டினெண்டல் லோகோ...

காண்டினெண்டல் எனப்படும் உலகின் தலைசிறந்த கார் டயர் தயாரிப்பு நிறுவனத்தின் லோகோவைப் பார்த்திருக்கிறீர்களா? continental எனும் சொல்லின் முதலிரண்டு எழுத்துக்களைப் பாருங்கள். முதல் எழுத்தான C க்குள் சிக்கென உள்ளடங்கிப் பொருந்தி O எனும் ஆங்கில எழுத்து இருக்குமாறு வடிவமைக்கப்பட்டிருக்கும் அதன் லோகோ. இதற்கான காரணத்தைத் தனியாக விளக்க வேண்டியதில்லை.

காண்டினெண்டல் தனது தயாரிப்பான கார் டயர் வடிவத்தை அப்படியே தனது லோகோ வடிவமைப்பில் பயன்படுத்தி இருக்கிறது என்பது இப்போது உங்களுக்கும் புரிந்திருக்க கூடும்.

டாப்லெரோன் சாக்லெட் லோகோ...

சுவிஸ் தயாரிப்புகளான டாப்லெரோன் சாக்லெட்டுகள் உங்கள் குழந்தைகளுக்கு நிச்சயம் பிடித்த சாக்லெட் வெரைட்டிகளில் ஒன்றாக இருக்கக் கூடும். அதன் லோகோவைப் பார்த்ததும் உங்களுக்கு இதுவரை என்னவெல்லாம் தோன்றியிருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். பலருக்கும் அதன் லோகோ நினைவிருக்கிறதா எனத் தெரியவில்லை ஆனால் அதன் வடிவம் நினைவிருக்கக் கூடும்.

நீளமான முக்கோண வடிவ இந்த சாக்லேட் பார்கள் மிகவும் சுவையானவை. இதன் லோகோவில் இடம்பெற்றிருக்கும் மேட்டர்ஹார்ன் மலையின் வடிவத்தை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு தானிந்த வகை சாக்லெட்டுகள் தயாராகின்றன. நீங்கள் கவனித்தீர்களா? இல்லையா எனத் தெரியவில்லை. இந்த சாக்லேட் பிராண்ட் லோகோவில் இருக்கும் மலையை இன்னும் சற்று துல்லியமாகக் கவனித்தீர்கள் எனில் அதற்குள் நீங்கள் ஒரு அழகான தாவிக்குதிக்கும் கரடியையும் பார்க்கலாம். முன்னொரு காலத்தில் சுவிட்ஸர்லாந்தின் இந்த மலைப்பகுதியில் கரடிகள் மிகுந்திருந்தனவாம். அந்த ஊரே கரடிகளின் நகரம் என்று அழைக்கத்தக்க வகையில் எங்கு பார்த்தாலும் கரடிகள் நிறைந்திருக்கும் என்கிறார்கள். அதை நினைவூட்டும் விதத்தில் தான் முக்கோண வடிவ மலை போன்ற சாக்லேட் உறையின் மேல் மலையினுள் உறையும் கரடி பொம்மை லோகோ.

எல் ஜி...

கொரியன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான இதன் லோகோவை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆனால் அர்த்தம் தான் தெரிந்திருக்காது. LG என்றால் Life's Good என்றொரு பொருள் வருகிறது.

அதே தான் எல் ஜி யின் வாடிக்கையாளர்கள் ஒரு முறை எல்ஜி பொருட்களை வாங்கி விட்டால் பிறகு அதனால் கிட்டிய திருப்தியுடனே வெறும் வாய்மொழிப் பிரச்சாரமாகவே பல புதுப்புது வாடிக்கையாளர்களை அந்நிறுவனத்துக்கு பெற்றுத் தந்து விடுவார்கள் என்பது அவர்களது நம்பிக்கை. இந்த நம்பிக்கை இதுவரை பொய்த்துப் போனதே இல்லை.

]]>
india;s popular logos, hidden cute meanings, இந்தியாவின் பாப்புலர் லோகோக்கள், மறைந்திருக்கும் சுவாரஸ்யப் பின்னணிகள், ஹூண்டாய் முதல் எல் ஜி வரை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/7/w600X390/hyundai-logo-ppcorn.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/apr/07/indias-10-popular-logos-with-cute-hidden-meanings-2895540.html
2894265 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் உங்கள் வேலைக்கு உலை வைக்கக் கூடிய இந்த 7 விஷயங்களைச் செய்யாதீர்கள்! உமா பார்வதி Thursday, April 5, 2018 01:44 PM +0530  

வீட்டில் இருப்பது போல் எல்லா இடத்திலும் நம்மால் இருக்க முடியாது. குறிப்பாக அலுவலகத்தில். வேலை செய்யும் இடத்தில் சிலவற்றை கடைபிடித்தாக வேண்டியது அவசியம். இல்லை நான் இப்படித்தான். எல்லா இடத்திலும் இதுதான் என் குணம் என்று சொல்வீர்கள் எனில் நஷ்டம் யாருக்கும் இல்லை, சாட்சாத் உங்களுக்கு மட்டும்தான். எனவே பணியிடங்களில் பின் வரும் விஷயங்களை ஒருபோதும் செய்யாதீர்கள். பாடி லாங்குவேஜ் எனப்படும் உடல்மொழி உங்களை யார் என்று மற்றவர்களுக்கு உணர்த்திவிடும். அதிக கவனத்துடன் சரியான உடல்மொழியுடன் அலுவலகத்தில் இருந்தால் பிரச்னை ஏதும் ஏற்படாது. முக்கியமாக பின் வரும் 7 விஷயங்களில் கவனமாக செயல்படுங்கள்.

கைகளை கட்டி உட்கார்வது, கால் மேல் கால் போட்டு அமர்வது
 
கைகளை கட்டி உட்கார்வது மரியாதை நிமித்தம் என்று பலர் நினைக்கிறார்கள். அது உண்மையாகவும் கூட இருக்கலாம். ஆனால் இடம் பொருள் ஏவல் பார்த்து உங்கள் நடவடிக்கை இருப்பது அவசியம். அலுவலக மீட்டிங்கில் நீங்கள் கையை குறுக்காக கட்டியிருக்கும் அதே சமயம் கால் மேல் கால் போட்டும் அமர்வது முரண்பாடுகளை கொண்ட ஒரு செய்கையாகும். கையை மார்பில் இறுக்கமாக கட்டியிருந்தால் நீங்கள் பிடிவாதக்காரர் எனும்படியான ஒரு தோற்றத்தை தரவல்ல உடல்மொழியாகும். உங்கள் மேலதிகாரி எதாவது சொல்லும் போது, கையை கட்டியிருந்தால் அது இறுக்கமான ஒரு சூழ்நிலையை உங்களுக்குத் தெரியாமலேயே உருவாக்கிவிடும்.

உங்கள் கேபினில் அல்லது குளிருக்காக நீங்கள் உங்கள் கையை கட்டிக் கொள்வது பிரச்னையில்லை. யாரும் பார்க்காத நேரங்களில், கால் மேல் என்ன தலைமேல் கூட உங்கள் காலை வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தர்க்கத்தின் போதோ அல்லது விவாதத்தின் போதோ, அப்படிச் செய்வது மற்றவர்களுக்கு அசெளரியமாக உணரச் செய்யும். நீங்கள் எதிராளியின் கவனத்தை ஏதோ ஒருவகையில் அசைக்க முயல்வதாக அது இருக்கக்கூடும் என ரான் ஃப்ரீட்மான் மற்றும் ஆண்ட்ரூ ஜெ.எலியட் உடல்மொழி குறித்த ஆராய்ச்சியில் குறிப்பிட்டுள்ளனர். 

செல்போனை தள்ளி வைத்துவிடுங்கள்

தேவையான சமயங்களில் மட்டுமே அலுவலகங்களை செல்போனை பயன்படுத்துங்கள். உங்கள் சொந்தக் கதைகளை பேசிக் கொண்டிருக்க நிறுவனம் உங்களுக்கு சம்பளம் தரவில்லை. அலுவலக நேரத்தில் செல்பி எடுப்பது, ஃபேஸ்புக்கில் எழுதுவது, வாட்ஸப்பில் பேசுவது போன்றவற்றை கூடுமானவரை தவிர்த்துவிடுங்கள். அதுவும் ஏதாவது மீட்டிங் நடக்கும் சமயம் உங்கள் செல்போன் மணி அடித்தால் அது உங்கள் வேலைக்கான ஆப்பு மணி என அறிக. தவிர அலுவலத்தில் இருக்கும் போது மொபைலை சைலண்ட் மோடில் வைத்திருங்கள். குறுஞ்செய்தி மணி அடிக்கடி அடித்துக் கொண்டிருந்தால் அது உங்கள் கவனத்தை சிதறடிக்கும். மற்றவர்களின் கவனத்தையும் சேர்த்துதான். எனவே தேவைப்படும் அவசரமான விஷயங்களை மட்டுமே மொபைலில் பேசுங்கள்.  

மூன்றடி தள்ளியே நில்லுங்கள்

பேசும் போதும் பழகும் போதும் உங்களுடைய மேலாளர் அல்லது சக ஊழியர்களிடமிருந்து ஒரு அடி தள்ளியே நில்லுங்கள். அது உங்களுக்கும் அவர்களுக்கும் நல்லது. நெருக்கத்துக்குப் போனால் நெருக்கடிக்கு உள்ளாவீர்கள் என்று அனுபவித்து சொன்னவர்கள் பலர். உங்கள் அலுவலக நண்பரின் தோளில் கை போட்டுச் செல்வது, அரட்டை அடிப்பது போன்றவை எல்லாம் அலுவலக இடங்களில் மதிக்கப்படுவதில்லை. மேலும் அவரவருக்கான இடங்களில் அவரவர் வேலையில் கவனம் செலுத்துவதே நல்லது. பணி இடங்களைப் பொருத்தவரையில் ப்ரெண்ட்ஸாக இருப்பதை விட ஃப்ரெண்ட்லியாக இருப்பதுதான் சாலச் சிறந்தது.

உறுதியாக கை குலுக்குங்கள்

அலுவலங்களில் உங்களுக்கு யாராவது கை கொடுக்க முயற்சித்தால் ஏனோ தானோவென்று கையை கொடுக்காதீர்கள். அழுத்தமாக உறுதியாக கை குலுக்குங்கள்.

அதே சமயம் எதிரில் இருப்பவர்களின் கண்களை நேராக பாருங்கள். அது உங்கள் தன்னம்பிக்கை சார்ந்த விஷயம். எங்கோ பார்ப்பதும், கை கொடுப்பதற்கு தயங்குவதும் உங்கள் ஆளுமை குறைபாடாக கணிக்கப் படலாம்.

எக்ஸ்க்யூஸ் மீ - கதவை தட்டுங்கள்

உங்கள் மேலதிகாரி அல்லது சக ஊழியரின் அறைக்குச் சென்றால் கதவை தட்டிவிட்டுச் செல்லவும். மீட்டிங் நடக்கும் போது சற்று தாமதமாக உள் நுழையும் போது மன்னிப்பு கோருங்கள். அது முடியாவிட்டால் ஒரு புன்னகையோ ஒரு தலை அசைவோ கூட போதும் உங்கள் தாமதத்தை சமன் செய்ய உதவக் கூடும்.

அடிக்கடி கடிகாரத்தைப் பார்க்காதீர்கள்

சிலர் கடிகாரத்தையே முறைத்துக் கொண்டிருப்பார்கள். எப்போது ஆறு மணி அடிக்கும், வெளியே போகலாம் எனும்படியான முகபாவத்துடன் இருப்பார்கள். இன்னும் சிலர் தங்களுடைய சீட்டில் மிகச் சாய்வாக தளர்ந்து உட்கார்ந்து எப்போது கிளம்புவோம் என்று காத்திருப்பார்கள். இன்னும் சிலர் வெட்டியாக கம்யூட்டரில் எதையாவது பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆறு மணி அடித்த அடுத்த நொடி இவர்கள் ஒருநொடியும் தாமதிக்காமல் கிளம்பிவிடுவார்கள்.

நம்மை யார் கவனிக்கிறார்கள் என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். அதற்காகத் தான் சிலருக்கு சம்பளமே தரப்படுகிறது. மேலும் அலுப்பான முகபாவத்துடனோ, இஞ்சி சாப்பிட்டது போன்ற கடுப்புடனோ காணப்படாதீர்கள். அது உங்களுக்கு எதிராக மாறிவிடக் கூடும். வேலை அலுப்பாக இருந்தால் ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு ரிலாக்ஸ் ஆனதும் திரும்பி வாருங்கள். நீங்கள் எந்தளவுக்கு ஆர்வமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறீர்களோ அது வரையில் தான் அந்த வேலை உங்களுக்கு நிச்சயம். அலுப்பும் சலிப்புமாக தொடர்ந்தால் ஒரு நாள் இல்லை ஒருநாள் வேலையின் இறுதி நாளாகிவிடும் ஜாக்கிரதை. 

இதையெல்லாம் ஒருபோதும் செய்யாதீர்கள்

சொடக்கு போடுவது, சோம்பல் முறிப்பது, தலைமுடியை ஒதுக்கி கொள்வது, உடலை சொறிவது, நகத்தை கடிப்பது, உதடுகளை கடிப்பது, சுவரில் அல்லது பர்னிச்சர்களில் சாய்ந்து நிற்பது, அலுவலக சோபாவில் பொத்தென்று விழுவது, நாற்காலியை சத்தம் ஏற்படுமாறு இழுப்பது, லிப்டில் சத்தமாக பேசுவது, கெட்ட வார்த்தை பேசுவது, தேவையில்லாத கருத்துக்களை கூறுவது, சத்தமாக சிரிப்பது, போன்றவற்றை அலுவலகத்தில் செய்யாதீர்கள்.

உங்களை சோம்பேறியாக காட்டக் கூடிய செய்கைகள் முதல் இரண்டு. மற்றவை ஒழுக்க விஷயங்களுடன் தொடர்புடையவை. ஒவ்வொரு ஆபிஸிலும் டெகோரம் என்று ஒரு விஷயம் கடைப்பிடிக்கப்பட்டுவரும். அதில் அடிப்படை விதிமுறைகளை பணியாளர்கள் கடைபிடித்தாக வேண்டும் அப்போதுதான் வேலையில் உத்திரவாதம் கிடைக்கும்.

நீங்கள் அலுவலகத்தில் இருக்கும் போது செய்யும் சிறு தவறுகள் கூட ஒருநாள் பூதாகரமாக வெடிக்கக் கூடும். எனவே எப்போதும் விழிப்புணர்வுடன் வேலை நேரத்தில் வேலையில் மட்டுமே கவனத்துடன் செயல்படுவது அடுத்தடுத்த நிலைகளுக்கு உங்களை உயர்த்தும். 
 

]]>
resign, வேலை, Job, mistakes, அலுவலகம், body language, உடல் மொழி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/5/w600X390/boss.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/apr/05/get-ahead-in-your-career-by-avoiding-these-body-language-mistakes-2894265.html
2892189 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் தினமணி இணையதளத்தின் மார்ச் மாதப்போட்டியில் பட்டுப் புடவை பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிகள்! கார்த்திகா வாசுதேவன் Monday, April 2, 2018 03:17 PM +0530  

                                                                               தினமணி இணையதளத்தின் மார்ச் மாதப் போட்டி “காரியம் யாவிலும் கை கொடுப்பாள்’- க்காக கிடைத்த வாசக வரவேற்பு அமோகமாக இருந்தது. போட்டிக்காகத் தங்களது வாழ்வில் ஒளியேற்றிய பெண்கள் குறித்து பலரும் மின்னஞ்சல் வாயிலாகவும், கடிதம் மூலமாகவும் எழுதி அனுப்பியிருந்தனர். ஒவ்வொரு கடிதத்தையும், மின்னஞ்சலையும் வாசிக்க, வாசிக்கப் பெண்களை மகாசக்தி ரூபமாகக் கண்ட பாரதியின் கனவு வரிகள் என்றுமே பொய்த்துப் போவதில்லை என்பதை உணர முடிந்தது. ஆம்... பாட்டியென்றும், அம்மாவென்றும், சித்தியென்றும், அத்தையென்றும், சகோதரியென்றும், மகளென்றும், மனைவியென்றும், தோழியென்றும், காதலியென்றும் பெண்கள் தான் எத்தனையெத்தனை ரூபங்களாகத் தங்களுக்குப் பிரியமானவர்களின் வாழ்வியல் முன்னேற்றத்துக்காக சலிப்பின்றி உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று யோசிக்கையில் பெருமிதமாக இருந்தது.

எங்களுக்கு வந்த கடிதங்கள் ஒவ்வொன்றுமே வாசிப்பவருக்கு மன உறுதியைத் தரத்தக்க வகையிலான வாழ்வியல் அனுபவப் பாடங்களே எனினும் பரிசு என்பது மூவருக்கு மட்டுமே என்பதால் அந்த மூவர் யார்? அவர்களது கடிதம் எந்த விதத்தில் சிறந்தது என்றும் தெரிந்து கொள்ளத்தான் வேண்டுமில்லையா?! 

தினமணி இணையதளத்தின் மார்ச் மாதப் போட்டி ‘காரியம் யாவிலும் கை கொடுத்தாள்’ லில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல்.

முதல் பரிசு

விஜயலக்‌ஷ்மி,

மதுரை

மதுரையைச் சேர்ந்த விக்னேஷ் தமது சித்தியார் குறித்து மின்னஞ்சலில் அனுப்பியிருந்த கடிதம் வாசகர் பார்வைக்கு...

“காரியம் யாவிலும் கை கொடுப்பாள் ”

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை - என்ற பாடல் வரிகள் எல்லோருக்கும் பரிச்சயமான ஒன்று. 

தானும் ஒரு தாயின் வயிற்றில் பிறந்தோம் என்று அறியாத ஒரு மிருகத்திற்கு வாழ்க்கைப் பட்டு, அந்தக் கயவனின் கொடுமை தாளாமல் என்னை இரண்டு மாத குழந்தையாக தன் தாயின் வீட்டுக்கு அழைத்து வந்தாள் என் தாய். 1970 களில் பெண்கள் அவ்வளவாக படிப்பறிவோ, வேலை வாய்ப்போ இல்லாமல் இருந்த காலம். ஆண் துணை இல்லாத குடும்பத்தில் என்னையும், என் தாயையும் காக்க தன் பள்ளிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்தார்கள் என் தாயின் சகோதரி, என் சித்தி விஜயலக்ஷ்மி. 

தட்டச்சும், சுருக்கெழுத்தும் உயர் நிலையில் கற்றுத் தெரிந்தார்கள். பின் அரசுப் பணியில் சேர்ந்தார்கள். பள்ளிப் படிப்பு முதல் கல்லூரி வரை ஒரு பைசா கூட செலவழிக்காத என் தந்தையின் முன் என் சித்தி எனக்காகவும், என் தாய்க்காகவும் தன் கனவுகளை மாற்றிக்கொண்டார்கள். ஆம். திருமணம் வேண்டாம் என்று தன் குடும்பத்துக்காக முடிவெடுத்துக் கொண்டார். ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளாமல் வேலைக்கு போகிறாளா? என்று அன்று கேள்விக்கணைகளை தொடுத்த சமூகம், இன்று எங்களின் உயர்ந்த நிலை கண்டு வாய் பொத்தி நிற்கிறது. ஒரு ஆண் தராத தைரியத்தையம், தொலைநோக்குப் பார்வையையும் தந்தது என் சித்தி மட்டுமே. எனக்கு வேண்டியதை நான் கேளாமல் என் மனக்குறிப்பு அறிந்து அதை பூர்த்தி செய்பவர் என் சித்தி. உன்னால் முடியாவிட்டால் வேறு யாரால் முடியும் என்று எனக்குள் இருக்கும் உந்துதலை தூண்டிவிட்டவர். 

இன்று நான் கல்லூரிப் பேராசிரியராக இருந்து அவர் சொன்ன கருத்துக்களைத் தான் என் மாணவர்களுக்கும் பகிர்கிறேன். உங்கள் ரோல் மாடல் யார்? என்று யாரும் கேட்டல் தயங்காமல் ‘என் சித்தி’ என்று தான் கூறுவேன். அந்த அளவிற்கு என் தாயை விட என் சித்தியை நான் முன்னிலைப் படுத்திக் கூறுவேன்.  

நான் பல முறை தோல்வியால் துவண்டிருந்த போதும் சரி, நோய்வாய்பட்டிருந்த போதும் சரி என் மீது பரிதாபம் காட்டி கோழையாக்காமல் இது தான் வாழ்வு, இது தான் யதார்த்தம் என்று தாய்க்கும் மேலாக வாழ்வின் சாசுவத்தைப் புரிய வைத்தார். மாற்றாந்தாயாக பார்வை இல்லாமல் மாசற்ற தாய்க்கும் மேலாக என்னை வழிப்படுத்திய என் சித்தி, என்  வாழ்வின் வழிகாட்டியாக அமைந்தது இறைவன் எனக்கு கொடுத்த வரம். 

இவ்வளவு செய்த என் சித்திக்கு இது வரை பெரிய கைமாறு ஒன்றும் செய்ததில்லை. என் முயற்சியால் அவரை வெளிநாட்டு பயணத்திற்கு விமானத்தில் கூட்டிச் சென்றதில் இன்று வரை ஒரு ஆத்மார்த்த திருப்தி இருக்கிறது. 

எல்லாருக்கும் ஒரு தாய் என்றால் எனக்கு இரு தாய் என்பது நிதர்சனம்.

எம்.  விக்னேஷ் 

எங்களுக்கு வந்திருந்த கடிதங்களில் பலவும் அவரவர் அம்மா, மனைவி, சகோதரி குறித்த கடிதங்களே அதிகமிருந்த நிலையில். சகோதரியின் வாழ்வுக்காக, சகோதரியின் மகனது எதிர்காலத்திற்காகத் தன் வாழ்வைத் தியாகம் செய்து திருமணமே செய்து கொள்ளாது அவர்களது எதிர்காலத்துக்கு மிகச்சிறந்த உறுதுணையாக இருந்த விஜயலக்‌ஷ்மி ஆச்சர்யப்படுத்துகிறார்.

இரண்டாம் பரிசு

ரா. நளினி,

தாடா கிராமம், ஆந்திரா.

தற்போது ஆந்திர மாநிலம் தாடா கிராமத்தில் வசித்து வரும் 48 வயது நளினியின் கதை... 14 வயதில் திருமணமாகி, 17 வயதில் இரு குழந்தைகளுக்குத் தாயாகி படிப்பறிவற்ற நிலையில், குடிகாரக் கணவரின் சித்ரவதைக்குட்பட்டு, பிறந்த வீட்டினரும் காப்பாற்றாமல் விஷம் அருந்தி செத்து விடச் சொல்லி இகழ்ந்து புறக்கணித்த போதும் மனம் தளராமல் தனது இரு குழந்தைகளின் ஜீவிதத்துக்காவும், முன்னேற்றத்துக்காகவும் மாநிலம் விட்டு மாநிலம் சென்று கடின உழைப்பால் உயர்ந்து தன்னைப் போன்ற பிறருக்கு வாழ்வியல் வழிகாட்டியாகத் திகழும் நளினி பாராட்டப்பட வேண்டியவர்.

அம்மா நளினி குறித்து மகள் ப்ரியா எழுதிய கடிதம்...

மூன்றாம் பரிசு

இருதயமேரி, வாரியன்வயல் கிராமம்.

சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் திருநெல்வேலியின் கடைக்கோடி கிராமமான வாரியன்வயலில் வசிக்கும் தன் அம்மா இருதயமேரி குறித்து எழுதியுள்ள நம்பிக்கை மிகுந்த கடிதம்... 

வெற்றி பெற்ற அனைவருக்கும் வழக்கம் போல தினமணி இணையதளக்குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

]]>
தினமணி.காம், பட்டுப்புடவை பரிசு, dinamani.com march contest winners list, மார்ச் மாதப் போட்டி, காரியம் யாவிலும் கை கொடுப்பாள், வெற்றியாளர்கள் லிஸ்ட் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/2/w600X390/0_silkcrepe_silk.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/apr/02/dinamanicom-march-womans-day-contest-winners-list-2892189.html
2889119 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் அடடா... உங்க குழந்தைங்க காலையில என்ன தாங்க சாப்பிடுவாங்க? கார்த்திகா வாசுதேவன் Wednesday, March 28, 2018 05:44 PM +0530  

குழந்தைகள் காலையில் ப்ரேக் ஃபாஸ்டாக என்ன சாப்பிட விரும்புகிறார்கள்?

ப்ரேக்பாஸ்ட் மெனு...

இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, ஆப்பம், அடை, இடியாப்பம், வெஜிடபிள் உப்புமா, சேமியா பாத், கார்ன் பிளேக்ஸ், முட்டை, ப்ரெட் சாண்ட்விச், ப்ரெட், பட்டர் அல்லது சீஸ். இவையெல்லாம்   வழக்கமாக நமது வீடுகளில் தினம் ஒன்றாக மாற்றி மாற்றி நாம் சமைத்துக் கொண்டிருக்கிறோம். இத்தனை வகைகளில் பெரும்பாலும் குழந்தைகள் இட்லி.தோசை, பூரி, ப்ரெட் சாண்ட்விச் மற்றும் சப்பாத்திகளோடு தமது விருப்ப உணவு லிஸ்ட்டை நிறுத்திக் கொள்கிறார்கள்.

இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் பூரியும், தோசையும் மட்டும் தான் என்று சுருங்கி விடுகிறது லிஸ்ட்.

கேலாக்ஸ் கார்ன் பிளேக்ஸ் பனானா, ஆப்பிள், ஆரஞ்சு, மேங்கோ என்று பல்வேறு ஃப்ளேவர்களில் இப்போது கிடைக்கிறது ஆனால் நமது குழந்தைகள் இந்த உணவை அத்தனை விருப்பத்தோடு சாப்பிடுகிறார்களா என்பது சந்தேகமே, பல இளம் தாய்மார்களிடம் பேசியதில் இருந்து தெரிந்து கொண்ட விஷயம் இது போன்ற2சுவைகள் குழந்தைகளுக்கு சில நாட்களில் சலித்து விடுகின்றன.  அவர்களுக்கு வெரைட்டி தேவைப்படுகிறது.

வெரைட்டியாக என்னவெல்லாம் செய்து கொடுக்கலாம் என்று பலர் கிச்சன் டிப்ஸ் தருகிறார்கள் ஆனால் குழந்தைகளை அவற்றை எப்படி சாப்பிட வைப்பது என்பதில் தான் இருக்கிறது அம்மாக்களின் திண்டாட்டங்கள். காலையில் அரக்கப் பரக்க சமையலை முடித்து விட்டு குழந்தைகளை சாப்பிட வைத்து பள்ளிக்கு அனுப்ப தயார் படுத்தும் அம்மாக்களுக்கு ப்ரேக் ஃபாஸ்ட் நேரம் மிகக் குறைவு.

பள்ளி வேனோ,பேருந்தோ வருவதற்குள் சத்து மிக்க ஏதாவதொரு காலை உணவை தமது குழந்தைகளை சாப்பிட வைத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் அவர்கள். சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் வாழும் குழந்தைகளில் பெரும்பாலான குழந்தைகள் காலை வேளையில் வெறுமே ஒரு கிளாஸ் ஹெல்த் ட்ரிங்கோடு பள்ளிக்கு கிளம்பி விடுகின்றன. 11  மணிக்கு ஸ்நாக்ஸ் டைம் அப்போது பிஸ்கட்,ட்ரை ப்ரூட்ஸ்,சிப்ஸ்,சாக்லேட்ஸ் என்று எதையாவது கொறிப்பதோடு அடுத்து முழுமையான உணவென்றால் 12 .30  க்கு லஞ்ச் தான் .

பரிந்துரைக்கப்பட்ட சரிவிகித உணவு விகிதங்கள்...     

வயது கலோரி
3 - 6 years  1400
7 - 10 years 1800
11 - 14 years 2000
15 - 18 years  2500

பரிந்துரைக்கப்பட்ட சரிவிகித உணவு விகிதங்கள்...

Food shedule  Menu Quantity calorie
Breakfast

Idli

Dosai

Idiyappam

Corn flakes

Wheat flakes

Bread

Cheese

Butter

2 nos

2 nos

2 nos

1 cup

1 cup

2 slices

1cube

1 table spoon

130

216

269

94

133

120

112

103

ஸ்நாக்ஸ் டைம்...

தொடர்ந்து இப்படி பற்றாக்குறையாக காலை உணவு சாப்பிட்டால் என்ன ஆகும்
குழந்தைகள் சீக்கிரமே சோர்வடைவார்கள், இதற்கென்ன தீர்வு ?

சரி லஞ்ச் பாக்ஸில் உங்கள் குழந்தைக்கு தினமும் என்ன கொடுத்து
விடுகிறீர்கள் சாப்பிட?

பள்ளிக்குழந்தைகளுக்கு சாதம், குழம்பு, காய்கறிகள் தனித்தனியாக செய்து கொடுத்தனுப்புவதை  விட தக்காளிச்சாதம், தயிர் சாதம், புளியோதரை, லெமன் ரைஸ், கோக்கனட் ரைஸ் இப்படி வெரைட்டி ரைஸ்களே உகந்தவை. சைட் டிஷ் ஆக ஏதாவது ஒரு காய்கறி, காய்கறிகளிலும் பொரித்தது, வறுத்தது, அவித்தது, கூட்டு என்று சில வெரைட்டிகள் இருந்தாலும் இவற்றில் குழந்தைகளுக்கு என்றே தனி விருப்பங்கள் இருக்கின்றன. அவர்கள் பெரும்பாலும் பொரித்த காய்கறிகளையே விரும்புகிறார்கள், க்ரிஸ்பியாக கர கர மொரு மொரு வென வறுத்த உருளைக்கிழங்கு வறுவல், கேரட்,  பீட்ரூட், முட்டை கோஷ் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பிட்டு செய்த பொரியல்கள் என்றால் வற்புறுத்த தேவை இன்றி அவர்களே விரும்பி சாப்பிடுவார்கள். சில காய்கறிகளைப் பொறுத்தவரை அவர்களது விருப்ப லிஸ்ட் இத்தோடு சுருங்கி விடுகிறது, பல குழந்தைகள் வெரைட்டி ரைஸ்களுக்கு உருளைக் கிழங்கு சிப்ஸ்,பப்படம்,பொறித்த அப்பளங்கள்  என்றுசாப்பிட்டுப் பழகி விடுகிறார்கள். அப்பளங்களில் உளுந்து அப்பளங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு நல்லவை. மற்றபடி ஜவ்வரிசி அப்பளங்கள் சுவையே தவிர அரிசி, உளுந்து அப்பளங்கள் அளவிற்கு அவை சத்துள்ளவை அல்ல.

இவை தவிர  வெண்டைக்காய் பொரியல், பச்சைப் பட்டாணி, புரதச் சத்து நிறைந்த காராமணி பொரியல், பூசணிக்காய் கூட்டு, புடலங்காய் கூட்டு, கீரை மசியல் (கீரையை பொறித்து கொடுப்பதை விட மசித்துக் கொடுப்பதே சத்து மிக்க முறை) ஆனால் இவையெல்லாம் குழந்தைகள் அத்தனை விரும்பிச் சாப்பிடுவதில்லை. இவற்றை எல்லாம் சிரமப் பட்டு அவர்களுக்குப் பழக்கினாலும் கூட  அவர்களின் நாக்கின் சுவை மொட்டுகளுக்கு இந்த சுவைகள் அத்தனை சீக்கிரம் பிடித்துப் போய்விடுவதும் இல்லை. இந்த மூன்று நான்கு விதமான காய்கறிகளையே மாற்றி மாற்றி செய்து கொடுத்து அனுப்ப வேண்டியதை இருக்கிறது லஞ்ச்சுக்கு. இல்லா விட்டால் அப்பளம் என்று கடக்கின்றன குழந்தைகளின் லஞ்ச் நேரங்கள். 

மாலை சிற்றுண்டியாக சமோசா, பப்ஸ் போன்ற ஜங் புட்கள் சாப்பிடுவதற்குப் பதிலாக வெஜிடபிள் உப்புமா, பிரெட் சான்ட்விச், ஒரு டம்ளர் பால், அல்லது ஹெல்த் டிரிங் அல்லது ஏதாவது ஒரு  பழச்சாறு இப்படி கொடுத்துப் பழக்கலாம். பெரும்பாலான குழந்தைகளுக்கு பானி பூரியும், பேல் பூரியும், கட்லெட்டும், சமோஷாவுமாக மசாலா நிறைந்த ஜங் வகை உணவுகள் தான் இஷ்டமாக இருக்கின்றன. நமது பாரம்பர்யப் பலகாரங்களான அதிரசம், எள்உருண்டைகள், குழிப்பணியாரங்கள் எல்லாம் இப்போதைய குழந்தைகளின் விருப்ப லிஸ்டில் இல்லை.

ஆனால் ஐஸ்க்ரீம், சாக்லேட்களுக்கு மட்டும் குழந்தைகளிடையே  எப்போதும் பெரிய வரவேற்பு உண்டு. ஆனால் இவை அளவு மீறி சாப்பிட்டால் சளி, காய்ச்சல், இருமலில் கொண்டு போய் விடும். பிறகு பள்ளிக்கு லீவு போட்டு விட்டு வீட்டில் ஓய்வெடுக்க வேண்டி வரும். இப்போதைய ஹெவி சிலபஸ் பாட முறைகளில் ஒரு நாள் லீவ் எடுத்தாலே மறுநாள் கிளாஸ் வொர்க், ஹோம்வொர்க் என்று சமாளிப்பது பெரும்பாடு. இதில் தங்களது குழந்தைகளை விரும்பிப் போய் உடல்நலனைக் கெடுத்துக் கொள்ள அனுமதிக்க முடியுமா பெற்றோர்களால்?!

எப்போதுமே ஐஸ்க்ரீம் சாக்லேட்டுகளை விட பழங்கள்  சாப்பிடுவது நல்லது, நன்றாக கழுவிய பின் அப்படியே சாப்பிடலாம், ஜூஸ் செய்தும் சாப்பிடத் தரலாம்.

பழங்கள் என்றால் என்ன பழங்கள் சாப்பிடப் பிடிக்கும் குழந்தைகளுக்கு?

ஆரஞ்சு,சாத்துக்குடி, ஆப்பிள், அன்னாசிப்பழம், தர்பூசணி, கிர்ணிப்பழம், வாழைப்பழம், சப்போட்டா, மாம்பழம், மாதுளம்பழம், மங்குஸ்தான்பழம், பேரீச்சம் பழம் (இப்போது இந்தியாவிலும் விளைவிக்கப்படுகிறது), திராட்சை, பப்பாளி, கொய்யா, நாவல்பழம், சீதாப்பழம், ப்ளம்ஸ், இலந்தைப்பழம், ஈச்சம் பழம், பனம்பழம்... அடேயப்பா ஒரு டஜனுக்கும் மேலே இந்தியப்
பழவகைகள் நீண்டு  கொண்டே போகின்றன.

எல்லாப் பழவகைகளும் அந்தந்த சீசன்களில் பழமார்க்கெட்டுகளில் தட்டுப்பாடின்றி கிடைக்கின்றன. மழைக்காலங்கள், குளிர் காலங்கள் தவிர்த்து மற்ற நாட்களில் தடையின்றி குழந்தைகளின் உடல் நலனைப் பொறுத்து அவர்களுக்கு பிடித்த பழங்களை உண்பதற்குப் பழக்கலாம். பழங்களைப் பொறுத்த மட்டிலும் மதிய உணவோடு சேர்த்துக் கொடுப்பது நல்ல பலனைத் தரும். தினமும் குழந்தைகளுக்குச் சலிப்பை ஏற்படுத்தி விடாமல் புதிது புதிதாக சாலட்களாகவோ, வெயில் காலங்கள் எனில் ஜில்லென்று சர்பத்களாகவோ,பழச்சாறுகளாகவோ தரலாம்.

இந்தியாவில் விளையும் பழங்கள் மட்டுமல்ல, இப்போது கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனை பழ நிலையங்களில் வெளிநாட்டு பழ வகைகளும் கூட அந்தந்த பழங்களின் சீசன் காலங்களில் தாராளமாகக் கிடைக்கிறது. விலையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் நமது ஆப்பிளுக்கும் ஆரஞ்சுக்கும் ஈடான விலை தான். கிலோ ஒன்றுக்கு 140 முதல் 200  ரூபாய்கள். ஒரேயடியாக ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம், வாழைப்பழம் என்று சாப்பிட்டு சலித்து புதுமையான பழங்களைத் தேடும் குழந்தைகளுக்கு இந்த வெளிநாட்டுப் பழங்களை அறிமுகப்படுத்தி உண்ணப் பழக்கலாம்.

மார்கெட்டில் வந்திறங்கி இருக்கும் சில புதுமையான பழவகைகளைப் பாருங்கள்;

1. டிராகன் ஃப்ரூட் (Dragon  fruit )

2. ஸ்டார் ஃப்ரூட் (Star  fruit )

3 .கோல்ட் கிவி ஃப்ரூட் (Gold  kiwi  fruit )

4 .பேசன் ஃப்ரூட் (Passion  fruit )

5 .மங்குஸ்தான் (Mangosteen)

 ( மங்குஸ்தான் - தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் இந்த பழம் கிடைப்பதில்லை, நாகர்கோயில் பக்கம் இந்தப் பழம் சரளமாகக் கிடைக்கும்)

]]>
குழந்தைகள், Parenting, குழந்தை வளர்ப்பு, காலை உணவு, குழந்தைகளின் ஆரோக்யம், போஷாக்கு, children health, children diet, standard morning diet for children http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/28/w600X390/0000_kids_eating_food.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/mar/28/உங்க-குழந்தைங்க-காலையில-என்ன-தாங்க-சாப்பிடுவாங்க-2889119.html
2886168 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ஆறு வயதில் பாலியல் வன்முறைக்கு ஆளானேன்: அந்நாள் குழந்தை நட்சத்திரம் டெய்ஸி ராணியின் பகீர் குற்றச்சாட்டு! கார்த்திகா வாசுதேவன் Friday, March 23, 2018 03:08 PM +0530  

குழந்தை நட்சத்திரங்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகாதவாறு காக்க வேண்டியது யார் பொறுப்பு?

60 களில் நம்பர் ஒன் குழந்தை நட்சத்திரமாகத் திகழ்ந்த டெய்ஸி ராணியை அறியாதவர்கள் இருக்க முடியாது. ஜெமினி, சாவித்ரி நடித்த ‘யார் பையன்’ திரைப்படத்தில் சிறுவனாக நடித்த டெய்ஸி ராணியின் குறும்பை ரசிக்காதவர்கள் யார்? டெய்ஸி ராணி இன்று பாலிவுட்டில் பிரபல நடிகரான ஃபர்கான் அக்தர் மற்றும் பிரபல நடன இயக்குனருமான ஃபாராகானின் பெரியம்மாவாகவும் அறியப்படுகிறார். தான் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் டெய்ஸி ராணி இது போன்றதொரு குற்றச்சாட்டை எழுப்பவில்லை. தற்போது இந்திய நடிகைகளிடையே பரவலாகி வரும் #metoo ஹேஷ்டேக் தொடர் மூலமாக பாலிவுட், டோலிவுட், கோலிவுட், சாண்டல்வுட், மல்லுவுட் என அனைத்து வுட்களைச் சார்ந்த நடிகையரும் தமக்கு திரைப்படத்துறையில் நுழைந்த கணத்தில் இருந்து இப்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கும் பாலியல் துஷ்பிரயோக அவமதிப்புகளை ஊரறியச் செய்து அம்பலப்படுத்தி வருகின்றனர். இந்த தொடக்கத்துக்கு வித்திட்டவர் என கடந்த ஆண்டு தனக்கு நேர்ந்த பாலியல் வன்முறைக் கொடுமையை எதிர்த்து வலுவாகக் குரல் கொடுத்து போராடத் துணிந்த கேரள நடிகையைத் தான் பாராட்ட வேண்டும். திரைப்பட உலகில் பணியாத நடிகைகளைப் பணிய வைக்க பட அதிபர்கள், இயக்குனர்கள், முன்னணி நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் முதல் அடுத்தடுத்த கட்டப் பணிகளைச் செய்யும் தொழிலாளர்கள் வரை நடிக்க வாய்ப்புக் கேட்டு வரும் பெண்களை எவ்விதமாக துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என அவரது வழக்குக்குப் பிறகே பலர் துணிந்து வெளியில் சொல்ல முன்வந்தனர். தனக்கு எதிராகப் பிரபல முன்னணி நடிகர் ஒருவர் கூலிக்கு ஆட்களை அமர்த்தி நடிகையைக் கடத்தி பாலியல் வன்முறை செய்து அதைக் காணொளியாகப் பதிவு செய்து நடிகையை மிரட்டத் துணிந்த போது இந்த அநியாயத்தை முறியடிக்க சற்றும் அச்சமின்றி அவர் துணிந்து முதலடியை எடுத்து வைத்ததால் அவரைத் தொடர்ந்து திரைத்துறையில் இருக்கும் பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த பழைய பாலியல் துயரங்களைக் கூட பிறருக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும் என்ற ரீதியில் சமூக ஊடகங்களில் #meetoo ஹேஷ்டேக் மூலமாகப் பகிரத் தொடங்கினர். வயது வித்யாசங்களின்றி இதுவரை தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்முறைகளை அப்படிப் பதிவு செய்த நடிக, நடிகையர் பல்லாயிரக் கணக்கானோர் இருக்கலாம். தற்போது பிரபல குழந்தை நட்சத்திரமான டெய்ஸி ராணியும் அவர்களில் ஒருவராகி இருக்கிறார்.

டெய்ஸி ராணிக்கு 6 வயதாக இருக்கும் போது சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்ள தனது பாதுகாவலருடன் டெய்ஸி சென்னைக்கு வந்துள்ளார். அன்றைய தினம் படப்பிடிப்பு முடிந்ததும் இரவு ஹோட்டல் அறையில் வைத்து தனது பாதுகாவலர் 6 வயதுச் சிறுமியென்றும் பாராது தன்னைப் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியதாகவும். பயந்து போய் அவரது விருப்பத்துக்கு உடன்பட மறுத்த தன்னை பெல்ட்டால் அடித்துத் துன்புறுத்தி இதை வெளியில் எவரிடமாவது சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டியதாகவும்; தனது பதிவில் தெரிவித்துள்ளார். டெய்ஸி குற்றம் சாட்டியுள்ள அந்த பாதுகாவலர் தற்போது உயிருடன் இல்லை. எனினும், இன்றும் கூட திரைப்பட உலகில் ஏராளமான சிறுவர், சிறுமியர் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகின்றனர். அவர்களை குழந்தைகள் தானே? யாரென்ன செய்து விடப் போகிறார்கள் என்ற அலட்சியத் தொனியுடன் பெற்றோர் அவர்களைப் படப்பிடிப்புத் தளங்களில் தனியாக இருக்க அனுமதிக்கக் கூடாது. தங்களது குழந்தைகளை நடிப்பதற்கு அனுப்பும் பெற்றோர் அவர்களது பாதுகாப்பு விஷயத்திலும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எனக்கு நேர்ந்த கதி அவர்களுக்கும் நேர வாய்ப்பு உண்டு. எனக்கு நேர்ந்த அந்த கசப்பான அனுபவத்தின் பின்னர் தான் நான் என் தங்கைகள் மேனகா ராணியும், ஹனி ராணியும் பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகையில் அவர்களது பாதுகாப்பு விஷயத்தில் மிகுந்த கவனத்துடனும், அச்சத்துடனும் இருந்தேன். அந்த உண்மை இன்றைய பெற்றோர்களும் அறிந்து கொண்டு தங்களது குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இப்போது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

டெய்ஸி ராணி சொல்வது வாஸ்தவமான விஷயம் தான். 

கோலிவுட்டின் குழந்தை நட்சத்திரங்களைப் பற்றி நடிகை ரோகிணி சில வருடங்களுக்கு முன்பு ‘சைலண்ட் ஹியூஸ்’ (Silent Hues)  என்ற பெயரில் ஒரு குறும்படம் எடுத்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்தது என்னவென்றால்; குழந்தை நட்சத்திரங்களை மிகக்குறைந்த சம்பளத்தில் வெறும் சாக்லேட், ஐஸ்கிரீம் வகையறாக்களைக் காட்டி நடிக்க வைத்து அவர்களது இனிமையான குழந்தமையை, இயல்பாக பிற குழந்தைகளுக்கு கிடைக்கக் கூடிய சுய விருப்ப உணர்வை திரையுலகம் பறிக்கிறதோ என்ற கவலையைத் தான். குழந்தை நட்சத்திரங்களின் எதிர்கால வாழ்வு பிரபல ஹீரோ, ஹீரோயின் ஆகும் திரைப்படத்துறையுடன் ஒட்டிய கனவுகளுடனும், நடைமுறை வாழ்வுக்கு ஒவ்வாத கற்பனைகளுடனும்... பல சமயங்களில் அவை நிறைவேறாத நிராசையுடனே முடிந்து விடுமோ? என்ற கவலையும் ரோகிணியின் குறும்படத்தில் தொனித்தது. ரோகிணியும் குழந்தை நட்சத்திரமாக இருந்து பிறகு டப்பிங் குரல் கலைஞராகவும் பின்னர் கதாநாயகியாகவும் வளர்ந்து வந்தவர் என்பதால் நிச்சயம் அவரது கூற்றில் உண்மை இருக்கும். தான் ஒரு குழந்தை நட்சத்திரமாகப் பட்டுத் தெரிந்து கொண்ட அவலங்களைத் தான் அவர் குறும்படமாக்கி இருந்தார். 

குழந்தை நட்சத்திரங்களில் பலர் ரெகுலராகப் பள்ளிகளுக்குச் செல்ல முடியாத அளவுக்கு அவர்களது நேரம் படப்பிடிப்புத் தளங்களில் வீணே கழிகிறது. கல்வியின் மீதான முக்கியத்துவத்தை அவர்கள் உணர வேண்டும். இதற்கு அந்தக் குழந்தைகளின் பெற்றோர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தங்கள் குழந்தை பெரிய திரையிலோ, சின்னத்திரையிலோ முகம் காட்டி சில ஆயிரங்கள் சம்பாதிப்பதைக் காட்டிலும் அவர்களுக்கு கல்வி ஒன்று தான் எதிர்கால வாழ்வுக்கான அடித்தளத்தை வலிமையாக அமைத்துக் கொள்ள உதவும் என்ற உணர்வு பெற்றோருக்கு இருக்க வேண்டும்.

சில பெற்றோருக்கு திரைப்பட நடிகர், நடிகையராக ஆசையிருந்து அது நிறைவேறாமல் போயிருந்தால் அதைத் தீர்த்துக் கொள்ளும் முகமாகவும் தங்களது குழந்தைகளை குழந்தை நட்சத்திரங்களாக்கி நடிக்க விட்டு விடுகிறார்கள். உண்மையில் குழந்தைகள் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் போலத்தான். வெறும் திரைப்பகட்டை நம்பி வாழ்வில் மிக முக்கியமான அடிப்படைக் கல்வி பெறும் விஷயத்தில் கோட்டை விட்டு விடுகிறார்கள். இதனால் நடிப்பதற்கான வாய்ப்பு குறையும் போது தங்களது கனவு கலைந்து விழித்தெழத் தொடங்குகையில் கல்விக்கான வயது கடந்து வேறு வழியின்றி சின்னத்திரையிலோ, பெரிய திரையிலோ கிடைக்கும் சிறு, சிறு கதாபாத்திரங்களைச் செய்து கொண்டு எதிர்காலம் குறித்த பயத்துடனே வாழ்ந்து தீர வேண்டியதாகி விடுகிறது. இப்படியான சூழலில் குழந்தைகளின் விருப்பங்கள் குறித்த யோசனையே இன்றி அவர்களைத் தங்களது ஆசைகளை நிறைவேற்றும் இயந்திரங்களாகக் கையாளும் பெற்றோர்களுக்கு சின்னத்திரையோ, பெரிய திரையோ எங்கே என்றாலும் அறிமுகமில்லாத பல நபர்கள் பணியாற்றும் படப்பிடிப்புத் தளங்களில் தங்களது குழந்தைகளின் மன உணர்வுகள் பாதிப்புக்கு உள்ளாகாத வண்ணம் பாதுகாப்பதில் என்னவிதமான அக்கறை இருக்கக் கூடும் எனத் தெரியவில்லை. தங்களது உழைப்பு காசாக்கப்படுகிறது என்பதையே உணராமல் நேரம், காலமின்றி படப்பிடிப்புத் தளங்களில் நடித்துக் கொண்டிருக்கும் குழந்தை நட்சத்திரங்களில் பலர் அவர்களுக்கே தெரியாமல் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப் பட வாய்ப்புகள் நிறைய உண்டு. இதில் மிகக் கவனமாக இருந்து தங்களது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டியவர்கள் அந்தந்த குழந்தை நட்சத்திரங்களின் பெற்றோரே!

இன்றும் கூட பெரிய திரையில் மட்டுமல்ல, சின்னத்திரையிலும் நாம் எண்ணற்ற குழந்தை நட்சத்திரங்களைக் காண்கிறோம். திரையில் வயதுக்கு மீறி அவர்கள் செய்யும் சாகஷங்களையும், பேசும் பெரிய மனுஷத்தனமான வசனங்களையும், இயக்குனரின் வழிகாட்டுதலின் படியோ அல்லது நடன இயக்குனரின் வழிகாட்டுதலின் படியோ அவர்கள் வெளிப்படுத்தும் சற்றே அத்துமீறப்பட்ட நடன அசைவுகளையும் காண்கிறோம். சன் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், கலக்கப் போவது யாரு? உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அந்தக் குழந்தைகள் பாடும் வயதுக்கு மீறிய அர்த்தங்கள் தொனிக்கும் பாடல்களையும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனாலும், இதுவரை நம்மால் என்ன செய்ய முடிந்திருக்கிறது. இப்போதும் அந்த நிகழ்ச்சிகள் தொடர்ந்த வண்ணம் தான் இருக்கின்றன. குழந்தைகளை தங்களது குழந்தமையைத் தொலைக்க வைப்பது தான் குழந்தை நட்சத்திரத்துக்கான முதல் தகுதியோ?! என்ற ஒரு கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

டெய்ஸி ராணி பாலிவுட்டில் இருப்பதால் தயங்காமல் தனக்கு நேர்ந்த பாலியல் வன்முறையைப் பற்றி போட்டு உடைத்து விட்டார். காரணம் தன்னைப்போல இனியொரு குழந்தை நட்சத்திரம் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு விடக்கூடாது என்ற அச்ச உணர்வில் ஒரு எச்சரிக்கையாகத் தான் இதை அவர் பதிவு செய்திருக்கிறார். தமிழிலும் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமான நடிகர், நடிகையர் பலருண்டு. ஆனால் அவர்களில் கணிசமானோரின் நிலை இப்போது என்னவெனத் தெரியவில்லை. ஒருசிலர் மட்டுமே இன்னும் திரையில் வெள்ளித் தாரகைகளாக மின்னிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் பலர் மெச்சும் முன்னணி ஹீரோ, ஹீரோயின்கள் ஆனவர்களை கமல், ஸ்ரீதேவி, மீனா என விரல் விட்டு எண்ணி விடலாம்.

#metoo ஹேஷ்டேக்கில் அம்பலமாக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளைப் பொறுத்தவரை, பாலியல் குற்றவாளிகளில் முக்கால்வாசிப் பேர் நெருங்கிய உறவினர்களாகவோ, பாதுகாவலர்களாகவோ தான் இருக்கிறார்கள். எனவே வேலியே பயிரை மேயும் கதை தொடராமல் இருக்க வேண்டுமானால் பெற்றோர் தமது குழந்தைகளின் பாதுகாப்பை மனதளவிலும், உடலளவிலும் எந்தக் கேடும் நேராமல் உறுதி செய்ய வேண்டியது எத்தனை அவசியம் என்று உணர வேண்டிய நேரமிது. எந்தக் காரணத்தை முன்னிட்டும் உங்கள் குழந்தைகளைப் பிறரை நம்பி ஒப்படைத்து விட்டு செல்லுதல் என்பது முதல் தவறு. சரி வேறு வழியின்றி அப்படி ஒப்படைத்து விட்டுச் செல்ல வேண்டிய சூழல் நேர்ந்து விட்டாலும் கூட, உங்களது குழந்தைகளை ஒன்றும் அறியாத கோழிக்குஞ்சுகளைப் போல வளர்த்து விடாமல்.  பாலியல் துஷ்பிரயோகங்கள் எந்தெந்த விதங்களில் நிகழ்த்தப் படலாம், அதற்கான சமிஞ்சைகள் தெரிந்தால் அம்மாதிரியான சூழல்களில் எப்படி அதை தைரியமாக எதிர்கொண்டு தங்களைத் தற்காத்துக் கொள்வது என்பதையும் குழந்தைகள் அறியுமாறு எளிமையாகப் புரிய வைக்கப் பயிற்சிகள் தர வேண்டும்.

இல்லையேல் குழந்தை நட்சத்திரங்கள் என்ற பெயரில் சின்னத்திரை, வெள்ளித்திரைகளில் மின்னிக் கொண்டிருந்தாலும் தாம் அனுபவித்த பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களின் தாக்கத்தினால் திரைக்குப் பின்னே தன்னைத் தானே வெறுக்கக் கூடிய மனநிலையுடன் கூடிய குழந்தைகளை உருவாக்கி  அவர்களது வாழ்வைச் சீரழித்தவர்கள் என்ற பலி வந்து சேரும்.
 

]]>
குழந்தை நட்சத்திரங்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள், டெய்ஸி ராணி, daisy irani, bollywood baby artiste, sexual abuse, child abuse http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/23/w600X390/child_artiste_daisy_irani.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/mar/23/daisy-irani-child-artiste-of-bolywood-and-kolywood-films-says-she-was-sexualy-abused-at-the-age-of-six-2886168.html
2885622 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் வடுகபட்டி பூண்டு - தமிழகத்தின் மிகப்பெரிய பூண்டுச்சந்தை குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்! சுரேஷ்குமார் DIN Thursday, March 22, 2018 06:07 PM +0530  

பூண்டு...

நம்மூரில் வாயுத் தொல்லை என்றால் சட்டென்று வீட்டில் பூண்டு ரசம் வைத்து கொடுத்தால் டக்கென்று கேட்கும் என்பார்கள், நமக்கு பூண்டை பற்றி தெரியும் இவ்வளவு தான் தெரிந்திருக்கக் கூடும். ஆனால், இந்த ஊர் ஸ்பெஷல் பயணத்தில் பூண்டைப் பற்றி என்னென்ன அதிசயமான தகவல்களை எல்லாம் தெரிந்து கொண்டேன் தெரியுமா?! பொதுவாக ஒரு ஊரில் விளையும் பொருட்களுக்கு மட்டுமே அங்கு சந்தை இருக்கும், உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஈரோடு மஞ்சள், போடி ஏலக்காய், ஊத்துக்குளி வெண்ணை, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்று, இதனால் நீங்கள் ஊருக்குள் நுழையும் முன்பாக வயலில் இறங்கினால் அந்த விளைபொருட்களை பார்க்கலாம், பின்னர் சந்தைக்குச் சென்று வாங்கலாம். ஆனால், வடுகபட்டியில் பூண்டு விளையவில்லை, ஆனாலும் இங்கே பூண்டுச் சந்தை என்பது பேமஸ் என்றால் அதிசயம் இல்லாமல் வேறென்ன! பொதுவாக வீட்டின் சமையல் அறையில் பூண்டு என்பது மிகவும் கொஞ்சமாக இருக்கும், வெள்ளை வெளேரென்று இருக்கும் பூண்டை உரித்து ரசத்திலும், குழம்பிலும் போடும்போது இரண்டே இரண்டு மட்டும் போடுவார்கள், ஆனால் மூட்டை மூட்டையாக பூண்டை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? ஊருக்குள் நுழைந்தாலே பூண்டு வாசனை தூக்குகிறது... அந்த வாசனையோடு பூண்டு பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோமே...

இந்த ஊரின் இன்னொரு சிறப்பு இது கவிஞர் வைரமுத்துவின் பிறந்த ஊர்!

வடுகபட்டி, வத்தலக்குண்டுக்கும் பெரியகுளத்துக்கும் இடைப்பட்ட ஊரான தேவதானப்பட்டி வழியாகவும், தேனி - பெரியகுளம் வழியாகவும் வடுகபட்டிக்குச் செல்ல முடியும். வடுகபட்டியின் பூண்டு சந்தைதான் தமிழ்நாட்டில் பெரிய பூண்டு சந்தை. இந்த ஊருக்குள் நுழைந்தாலே வெள்ளைப் பூண்டின் மணம் காற்றில் கலந்து வாசத்தை அள்ளி வீசுகிறது. ஊருக்குள் நுழைவதற்கு முன் அங்கு இருந்த வயல் வெளிகளில் பூண்டுச் செடியை தேடி அலைந்தோம். இதற்கு முன்னே பூண்டுச் செடி பார்த்ததில்லை, அதனால் எந்த செடியை பார்த்தாலும் இதுதான் பூண்டுச் செடி என்று நான் தேடிக்கொண்டு இருக்க, அதை வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் கூடிவிட்டது. கூட்டத்தில் ஒருவர் என்ன தேடறீங்க என்று கேட்க, பூண்டுச் செடி என்றபோது அவர் அது இந்த ஊரிலேயே இல்லையே என்று சொல்ல குழப்பம் ஆரம்பம் ஆனது. இந்த ஊரில்தான் தமிழ்நாட்டின் பெரிய பூண்டு சந்தை இருக்கு, ஆனால் இந்த ஊரில் பூண்டு விளைவிப்பதில்லை... என்ன குழப்பம் இது?!

கொடைக்கானல் மலைப்பகுதியான வில்பட்டி, பூம்பாறை, கூக்கால், மன்னவனூர், பூண்டி கிராமங்களில் 650 எக்டேர் பரப்பில் பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது. அங்கு சந்தை வசதியும், அதை வாங்கும் அளவுக்கு மக்கள் தொகையும் இல்லாததால், அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது இரண்டு தலைமுறைக்கு முன்பு வடுகபட்டிக்கு அருகில் இருக்கும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விளைந்த பூண்டை அங்குள்ளவர்கள் கீழ்ப்பகுதிக்கு கொண்டுவந்து, இங்கு வாழ்ந்த மக்களிடம், வெற்றிலை, அரிசி, தேங்காய், பருப்பு போன்ற தானிய வகைகளுக்கு, 'பண்டமாற்று’ முறைப்படி மாற்றிக்கொண்டார்கள். இப்படி மாற்றத்தொடங்கிய சந்தை நாளடைவில் ஏற்றுமதியாகும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. பூண்டு சந்தை என்றவுடன் பெரிய பெரிய கட்டிடங்கள், வீதிகள் என்றெல்லாம் கற்பனை செய்ய வேண்டாம், ஒரு சிறு வீதி... பூண்டு சந்தை வீதி என்று கேட்டால் எல்லோரும் சொல்கிறார்கள். ஒவ்வொரு வியாழனும், ஞாயிறும் சந்தை நடைபெறும் அப்போது இந்த தெருவில் எள் போட இடமிருக்காது என்கிறார்கள்.

பூண்டு என்பது தாவர வகைகளுள் ஒன்று. இவை உறுதியில்லாத, ஒடிசலான, பெரும்பாலும் பச்சை நிறம் கொண்ட தண்டுகளுடன் கூடியவை. பூண்டுச்செடிகள் ஒரு மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்டவை. இவை பருவகாலத் தாவரங்கள். நிலத்துக்கு மேல் உள்ள இதன் பகுதிகளான இலை, தண்டு என்பன குறிப்பிட்ட பருவ காலங்களில் மட்டுமே காணப்படும். அதன் பின்னர் அவை அழிந்து விடுகின்றன. பூண்டு ஒரு பலபருவப் பயிராகும். மேல் மலைப்பகுதிகளில் பூண்டு இரு பருவங்களில் பயிர் செய்யலாம். கடல் மட்டத்திலிருந்து 1200 முதல் 2000 மீட்டர் உயர இடங்களில் சாகுபடி செய்யலாம், இதனால்தான் தமிழ்நாட்டில் மலைப்பகுதிகளில் மட்டுமே வளர்கிறது, இதைச் சந்தைபடுத்த முன்னொரு காலத்தில் வடுகபட்டிக்கு வந்ததால் இன்று வடுகபட்டி பூண்டு என்று ஆகிவிட்டது! பயிர் வளர்ச்சிப் பருவத்தில் குளிர்ச்சியான ஈரப்பதம் நிறைந்த வெப்பநிலையில் முற்றும் நிலையில் உலர்ந்த வெப்ப நிலையில் இருப்பது அவசியம். பூண்டு முற்றுகின்ற தருணத்தில் நீண்ட வெப்ப நாள் இருப்பது நல்லது. அதிக வெப்பம் மற்றும் கடுமையான பணி பூண்டுக்கு ஏற்றதல்ல. பூண்டு  இருமண்பாடுகள் வடிகால் வசதியுடன் கூடிய நிலத்தில் நன்கு வளரும். மணற்சாரி மண்ணாக இருந்தால் பூண்டிற்கு சிறப்பான நிறம் கிடைப்பதில்லை. ஆண்டு தோறும் 3300 டன் பூண்டு உற்பத்தி செய்யப்படுகிறது. பூண்டு பயிர் சாகுபடியில் 3000 விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். 

1.   மூலிகையின் பெயர் -: பூண்டு.
2.   வேறு பெயர்கள் -: வெள்ளைப்பூண்டு.
3.   தாவரப்பெயர் -: ALLIUM SATIVUM.
4.   தாவரக்குடும்பம் -: AMARYLLIDACEAE.

ஊரின் உள்ளே நுழைந்து சந்தைத் தெருவை தேடி கண்டுபிடித்து இதுவா அதுவா என்று யோசிக்கும்போதே பூண்டு வாசனை இந்த தெருதான் என்று வழி காட்டுகிறது. நாங்கள் சென்றிருந்த போது ஒரு லாரியில் இருந்து பூண்டை இறக்கி கொண்டு இருந்தனர். இன்றைக்கு மிகப் பெரிய பூண்டு வர்த்தக மையமாக மாறியிருக்கும் இந்த சந்தைக்கு  மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், இமாச்சலபிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்தும், ஊட்டி, கொடைக்கானல் போன்ற நமது மலைப்பிரதேசங்களில் இருந்தும் ரகம், ரகமாய் பூண்டுகள் வடுகபட்டிக்கு வந்து குவிந்து மொத்தமாக விற்பனையாகி வருகிறது. என்னதான் வெளிமாநிலங்களிலிருந்து வெள்ளைப் பூண்டு இங்கு வந்து குவிந்தாலும், கொடைக்கானல் பள்ளத்தாக்குப் பகுதியில் விளையும் மலைப்பூண்டுதான், மார்க்கெட் விலையைத் தீர்மானிக்கிறது. பூண்டு வகைகளைப் பற்றி கேட்டால் சொல்லி கொண்டே போகின்றனர், நிறைய வகை இருந்தாலும் உள்ளூர் வகைகள் என்பது சிங்கப்பூ சிகப்பு, ராஜாளி மற்றும் பர்வி, காடி. பூண்டை மூன்று வகையாக வியாபாரத்திற்கு பிரிக்கின்றனர், முதல் ரகம் என்பது கொடைக்கானல் பூண்டு, இரண்டாம் ரகம் என்பது ஊட்டி பூண்டு, மூன்றாம் ரகம் என்பது ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேஷ், உத்தரப் பிரதேஷ் காஷ்மீர், சீனா பகுதிகளில் இருந்து வருவது. மற்ற மாநில பூண்டுகள் வெள்ளை நிறத்திலும், நம்மூர் மலைப்பூண்டுகள் பழுப்பு நிறத்தில் மண் வாசத்தோடும் இருக்கும்.

பூண்டு செடி என்று சொல்லும்போது இது விதை போட்டு வளரும் தாவர வகை. விதையை விதைத்து அது வளர ஆரம்பிக்கும்போது வெங்காயம் போல மண்ணுக்கு அடியில் பூண்டு வளரும். ஒரு செடிக்கு ஒரு பூண்டு மட்டுமே, அது நன்கு வளர்ந்தவுடன் அந்த செடியில் இருந்து நீல நிறத்தில் பூ பூக்கிறது, அந்த பூ சிறிது சிறிதாக பூண்டு விதைகளை தருகிறது. அந்த விதைகளையே மீண்டும் போட்டு பூண்டு வருகிறது. பூண்டு செடியை பார்க்கும்போது ஆனந்தம்தான் !!

இப்படி வளரும் பூண்டை மலைப்பூண்டு, நாட்டுபூண்டு என்று இரு வகை கொண்டு இங்கே பிரிக்கின்றனர். அதிலும் வட நாடு, கொடைக்கானல், சீனா பூண்டு என்று வகைகள் உண்டு. இப்படி அறுவடை செய்யப்படும் பூண்டை 30 kg, 50 kg மூட்டைகளில் கட்டி லாரியில் ஏற்றி இந்த சந்தைக்கு அனுப்பி விடுகின்றனர். சந்தைக்கு செல்வதற்கு முன் இங்கே பூண்டுகளை கசடு நீக்கி, பெரியது சிறியது என்றெல்லாம் பிரிக்கின்றனர். மீண்டும் அதை மூட்டையாக கட்டி முடித்தால் பூண்டு சந்தைக்கு ரெடி.

ஒரு கிலோ மலை பூண்டு என்பது இங்கு 90 ரூபாய்க்கு மொத்த வியாபாரிகளுக்கு விற்கப்படுகிறது, நாட்டுப்பூண்டு என்பது அறுபது ரூபாய் ஆகிறது. இதில் சில்லறைக்கு வாங்குபவர்களுக்கு மலைப்பூண்டு 160 ரூபாய், நாட்டு பூண்டு 100 ரூபாய் !! ஒரு ஏக்கருக்கு சுமார் பத்தில் இருந்து பதினைந்து டன் வரை பூண்டு கிடைக்கும், கிலோ நூறு ரூபாய்க்கு என்று வைத்தாலும் உங்களுக்கு நான்கு லட்சம்! சரி, பூண்டை விளைவிப்பது எப்படி? பூண்டு செடி நமது வெங்காய செடியை போலதான், வேரில் காய்ப்பது. அதை வெட்டி எடுத்தால் பூண்டு, மேலே பூக்கும் பூ சிறிய விதைகளாக இருக்கும் அதை நட்டு வைத்தால் மீண்டும் பூண்டு ரெடி! பூண்டைப் பறித்து, சுத்தப்படுத்தி, லாரியில் ஏற்றி அனுப்பி வைக்க... மீதி எல்லாம் லாபம்தான் !! 

பூண்டு என்பது மருத்துவ குணம் கொண்டது மட்டும் இல்லாமல், அதை வகை வகையாக உட்கொள்ளலாம்! பூண்டு பல்லாக, காய வாய்த்த பொடி பூண்டாக, பூண்டு பொடியாக என்று. இதில் மருத்துவ குணம் இருப்பதால் சில மருந்து கம்பெனிகளும் இந்த சந்தையில் இருந்து நல்ல பூண்டுகளை எடுத்து செல்கின்றனவாம்.

பூண்டில் என்னென்ன மருத்துவ குணம் இருக்கிறது என்று தெரியுமா ?

 • வியற்வையைப் பெருக்கும்,
 • உடற்சக்தியை அதிகப்படுத்தும்,
 • தாய்பாலை விருத்தி செய்யும்,
 • சளியை கரைத்து சுவாச தடையை நீக்கும்,
 • சீரண சக்தியை அபிவிருத்தி செய்யும்,
 • இரத்த கொதிப்பைத் தணிக்கும்.
 • உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும்.
 • இதய அடைப்பை நீக்கும்.
 • நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைக்கும்.
 • ஆண்களின் ஹார்மோன் உற்பத்தியைப் பெருக்கி வீரியம் அதிகரிக்கக் கூடியது பூண்டு.
 • பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.
 • தொண்டைச் சதையை நீக்கும்.
 • மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.
 • மாதவிலக்குக் கோளாறுகளை சரி செய்யும்.
 • பிளேக் முதல் சார்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகள் வரை அழிக்கும் திறன் கொண்டது.
 • சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும்.
 • மூட்டு வலியைப் போக்கும்.
 • வாயுப் பிடிப்பை நீக்கும்.
 • இரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறது.

கட்டுரையாளர்: சுரேஷ்குமார்

Article courtesy: www.kadalpayanangal.com

டிஸ்கி: இணையத்தில் வாசித்துக் கொண்டிருக்கையில் கூகுள் வழியாக இந்தக் கட்டுரை கிடைத்தது. கட்டுரையாளர் கடல்பயணங்கள் என்றொரு வலைத்தளத்தில் சுவாரஸ்யமான பல விஷயங்களைப் பற்றி எழுதி வருகிறார். பயனுள்ள கட்டுரை எனத் தோன்றியதால் தினமணி இணையதளத்தில் பகிர்ந்துள்ளோம். கட்டுரையாளருக்கு ஆட்சேபமிருந்தால் கட்டுரை உடனடியாக நீக்கப்படும்.

]]>
வடுகபட்டி பூண்டு, தமிழகத்தின் பூண்டு சந்தை, vadugapatti garlic, tamilnadu's popular garlic trade market http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/22/w600X390/garlic.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/mar/22/tamilnadus-biggest--popular-garlic-market-vadugapatti-2885622.html
2885611 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் இன்றைய நடிகைகள் நட்புறவுடன் இல்லாததற்கு காரணம் கேரவன் கலாசாரமே: நளினி! சரோஜினி Thursday, March 22, 2018 05:25 PM +0530  

இந்தத் தலைமுறை நடிகர்கள் மற்றும் நடிகைகளிடையே நட்புணர்வும், ஒற்றுமையும், கலகலப்பான உரையாடலும் குறைவாக இருப்பதற்கு முதல் காரணமே இந்த கேரவன் கலாசாரம் தான் என்கிறார் நடிகை நளினி. நளினி 80 களில் பிரபல ஹீரோயின். அவர் தனது சமகால நடிகைகளாகக் குறிப்பிடும் அம்பிகா, கீதா, ஊர்வசி, வனிதா, சாதனா அனைவருடனும் இன்றும் கூட அதே இனிமையும், நெருக்கமும் நிறைந்த நட்புறவுடன் இருக்க முடிகிறதென்று குறிப்பிடுகிறார். காரணம் அப்போதெல்லாம் எத்தனை பிஸியான நடிகர், நடிகைகளாக இருந்தாலுமே படப்பிடிப்பு இடைவேளைகளில் நடிகர், நடிகைகள் கும்பலாக அமர்ந்து கொண்டு ஒருவருக்கொருவர் பேசிச் சிரித்துக் கொண்டு, கேலி செய்து கொண்டு உணவு உண்பது வழக்கம். ஆனால் இன்று அப்படியல்ல, கேரவன் கலாச்சாரம் வந்த பிறகு ஷாட் முடிந்ததும் நடிகர், நடிகைகள் கேரவனுக்குள் போய் உட்கார்ந்து கொள்கிறார்கள். பிறகெப்படி சக நடிகர், நடிகைகளுடன் நட்புறவோடு இருக்க முடியும்? என்கிறார்.  

]]>
நளினி , கேரவன் கலாசாரம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/22/w600X390/nalini.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/mar/22/இன்றைய-நடிகைகள்-நட்புறவுடன்-இல்லாததற்கு-காரணம்-கேரவன்-கலாச்சாரமே-நளினி-2885611.html
2885602 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் மாணவி தற்கொலைக்குக் காரணம் தேர்வுத் தோல்வியா? ஆசிரியர்களின் பாலியல் வன்முறையா? RKV Thursday, March 22, 2018 03:38 PM +0530  

மிக அழகாகக் கதக் ஆடத் தெரிந்த மாணவி அவள். 

வயது 15 தான். 

டெல்லியின் சிபிஎஸ்இ பள்ளியொன்றின் 9 ஆம் வகுப்பு மாணவி. 

கதக் ஆடுவதில் இருந்த விருப்பம் பாடங்களைக் கற்றுக் கொள்வதில் கொஞ்சம் குறைவாக இருந்திருக்கலாம். அதற்காக வீடும், பள்ளியும் அவளைக் கண்டித்திருக்கலாம். இது எல்லா குடும்பங்களிலும் நிகழக்கூடிய ஒன்று தான். நமக்கே தெரியாமல் மனிதத் தவறுகள் இங்கிருந்து தான் தொடங்குகின்றன. 

அவளுக்கு கதக் தான் பெருவிருப்பம் என்றால் அதிலேயே அவளை ஊக்குவித்திருக்க வேண்டும். கல்வி முக்கியமே ஆனாலும் பார்ப்போர் பிரமிக்கத் தக்க அளவில் அவளால் கதக் ஆட முடியுமெனில், அதைக் கற்றுக் கொள்ளும் விருப்பமும் ஒன்றும் தரக்குறைவானதில்லையே! 

ஆனால் நமது இந்திய மனநிலை மெக்காலே வழிக்கல்விமுறையின் அடிப்படையிலான மதிப்பெண்களை உத்தேசித்து மட்டுமே மதிக்கப்படுவதால், நமக்கு எப்போதுமே மதிப்பெண்கள் தான் முதல் முக்கியத்துவமாகப் மனதில் பதிந்து விட்டது. அது நாட்பட, நாட்பட புரையோடிப் போய் மாணவர்களை மதிப்பெண்கள் குறித்த அச்சத்தில் ஆழ்த்தி தேர்வில் தோல்வி என்றதும் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டும் அளவுக்கு விஷ விருட்சமாக இன்று வளர்ந்து நிற்கிறது.

டெல்லி மாணவி விஷயத்தில் அவளது பெற்றோர், ஆசிரியர்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் அறிவியல் ஆசிரியரும், சமூக அறிவியல் ஆசிரியரும் பாலியல் ரீதியாக அவளைத் துன்புறுத்தியதாகவும் அதற்கு மாணவி எதிர்ப்புக் காட்டியதால் தேர்வில் வேண்டுமென்றே அவள் தோல்வியுறுமாறு மதிப்பெண்களைக் குறைத்து விட்டார்கள் எனவும் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால், பள்ளியில் முதல்வர் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பெற்றோரின் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார்கள். அந்த மாணவி தேர்வில் தோல்வி அடைந்ததாகக் கூற முடியாது. அவர் மீண்டும் தேர்வெழுதி வெற்றி பெற மார்ச் 23 ஆம் தேதி தேர்வு ரீசெட்யூல் செய்யப்பட்டிருந்தது. அதற்குள் அவர் இப்படித் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது துரதிர்ஷ்டவசமானது. இதற்கு ஆசிரியர்களின் மீது பழிசுமத்துவது தவறு என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த இரண்டில் எது உண்மை?

பெற்றோர்கள் கூறுவது உண்மையா? பள்ளி நிர்வாகம் கூறுவது உண்மையா?

இரண்டுக்கும் நடுவில் விடை தெரியாக் கேள்விகள் சில இருக்கத்தான் செய்கின்றன.

சம்பவ தினத்தன்று மாணவியைத் தனியாக வீட்டில் விட்டுவிட்டு அவரது பெற்றோர்கள் இருவரும் வெளியில் சென்றுள்ளனர். வீட்டில் தனியே இருந்த மாணவி தனது நோட்டுப் புத்தகத்தில், மன அழுத்தம் மிகுந்தவராக ‘ I am failure, I am dumb, I Hate myself' என்றெல்லாம் கிறுக்கித் தள்ளியிருக்கிறார். பெற்றோர் வீட்டிலில்லாத தனிமையில் தனது மனதைத் திறந்து கொட்டி தனது உண்மையான ஏக்கத்தை, சஞ்சலத்தை வெளிப்படுத்த வாய்ப்பு தரப்படாத ஒரு குழந்தையின் மனக்கதறலே இது. இதை அந்தப் பெற்றோர் உணர்ந்தார்களா? எனத் தெரியவில்லை. ஆசிரியர்கள் மீது குற்றம் சுமத்துவது தவறெனக் கூறவில்லை. அவர்கள் குற்றச்சாட்டில் உண்மையிருக்கும் பட்சத்தில் இன்னும் குழந்தமை மாறாத அந்தச் சிறுமியின் உணர்வுகளைக் காயப்படுத்திய எவருமே தண்டிக்கப் பட வேண்டியவர்களே! ஆனால், இதில் பெற்றோர் உணர்ந்து கொண்டாக வேண்டிய விஷயமும் இருக்கிறது.

தங்கள் மகளுக்கு ஆசிரியர்களால் பாலியல் தொல்லைகள் இருக்கும் பட்சத்தில் சிறுமியின் பெற்றோர் அதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள் எனத் தெரியவில்லை. அப்படி நடவடிக்கை எடுத்திருப்பின் அதைப் பற்றியும் தங்களது புகாரில் தெரிவித்திருக்கக் கூடும். ஆனால், இதுவரை அதைப்பற்றிய செய்திகள் எதுவும் கவனத்துக்கு வரக்காணோம். மாணவியின் தந்தையும் ஒரு ஆசிரியரே எனும் போது, மகள், தனது ஆசிரியர்கள் தன்னிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்து கொள்கிறார்கள் எனத் தெரிவித்த போதே அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திருக்க வேண்டும் தானே?! அப்படியல்லாமல் மகளை இழந்த பின்பு அதற்கு காரணம் ஆசிரியர்களின் பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகள் மட்டுமே என்று ஒட்டுமொத்தமாக அவர்கள் மீது மட்டும் பழியைப்போட்டு விட முடியாது.

வீட்டில் யாருமற்ற தனிமையில் தனக்குத் தானே தோல்வியுற்றவளாகக் கருதிக் கொண்டு தூக்கில் தொங்கிய அந்தச் சிறுமியின் மனத்துயருக்கு காரணம் என்ன? வழக்கு குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கின்றன. பெற்றோர் கூற்றுப் படி ஆசிரியர்கள் தவறிழைத்தவர்கள் எனில் அவர்கள் நிச்சயம் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப் பட வேண்டியவர்களே! அன்றியும் முன்னதாக தேர்வுத் தோல்வியால் மனமுடைந்திருந்த மாணவியை வீட்டில் தனியாக விட்டு விட்டுச் சென்ற பெற்றோர் தரப்பில் தான் தவறும், பொறுப்பற்ற தன்மையும் இருந்திருக்கிறது என நிரூபணமானால் அவர்களும் கூடத் தண்டிக்கப்பட வேண்டியவர்களே!

உண்மையில் தண்டனைக்குரியவர்கள் யார் என்பது தெளிவான விசாரணையின் முடிவில் தெரிய வரலாம்.

]]>
noida girl hanged herself, failure in exams, child abuse, reason still in riddle, டெல்லி மாணவி தற்கொலை, தேர்வுத் தோல்வியா?, பாலியல் துஷ்பிரயோகமா? http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/22/w600X390/000_noida_girl_sucide.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/mar/22/மாணவி-தற்கொலைக்குக்-காரணம்-தேர்வுத்-தோல்வியா-ஆசிரியர்களின்-பாலியல்-வன்முறையா-2885602.html
2885548 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் தினமணி இணையதளத்தின் மார்ச் மாதப் போட்டியில் 'பட்டுப்புடவை' பரிசு பெறப்போகும் அதிர்ஷ்டசாலி யார்? கார்த்திகா வாசுதேவன் Thursday, March 22, 2018 03:19 PM +0530
தினமணி மார்ச் மாதப் போட்டியில் 'பட்டுப்புடவை' பரிசு பெறப்போகும் அதிர்ஷ்டசாலி யார்?

நான் வாழ்க்கைல ஜெயிச்சதுக்கு காரணம் ‘இவள்’தான்! அப்படியொரு பெண் உங்க வாழ்க்கையில் உண்டா?!

ஆண்களே! உங்களது வாழ்வில் வெற்றிக்கு வித்திட்ட பெண்களின் பெயரை உரக்கச் சொல்ல வேண்டிய நேரமிது.

மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினம். அதையொட்டி தினமணி மாதாந்திரப் போட்டிக்கான தலைப்பாக ‘காரியம் யாவிலும் கைகொடுப்பாள்’ எனும் தலைப்பைத் தேர்வு செய்திருக்கிறோம்.

மார்ச் மாதம் 8 ஆம் தேதியை உலகப் பெண்கள் தினமாக ஐ.நா. அறிவித்திருக்கிறது. அதற்காக அந்த நாளில் மட்டும்தான் பெண்களைக் கொண்டாட வேண்டும், பெருமைப்படுத்த வேண்டும் என்பதில்லை. மாதங்கள் முழுதும், வருடங்கள் முழுதும், ஏன் மொத்த வாழ்க்கையிலுமே தங்களைச் சூழ்ந்துள்ள பெண்மையைக் கொண்டாட விரும்புகிறவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.

 • மாவீரர் சத்ரபதி சிவாஜியின் வெற்றிக்குப் பின்னிருந்து அவரை ஆட்டுவித்த சக்தி அவரது தாயார் ஜீஜாபாய் என்பார்கள்.
 • நமது தமிழ் மன்னன் ராஜராஜ சோழனின் மாபெரும் வெற்றிகளின் பின்புலமாயிருந்து அவரை இயக்கிய சக்தியாகக் கருதப்பட்டவர் அவரது அக்கா (அக்கை) குந்தவை நாச்சியார்.
 • இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் அஹிம்சா கொள்கையோடு காந்திஜீ முன்னெடுத்த பல்வேறு போராட்டங்களின் பின் உறுதுணையாய் உடன்நின்றவர் அன்னை கஸ்தூரி பாய், 
 • அக்னிக் குஞ்சாகிக் கனன்றுகொண்டே எழுச்சி மிகுந்த தேசபக்திப் பாடல்கள் பல தந்த மகாகவிக்கொரு உற்ற துணையானார் செல்லம்மா! 
 • திராவிடக் கழகத் தந்தை ஈவெரா பெரியார் முன்னெடுத்த கள்ளுக்கடை மறியல் போராட்டத்தின்போது அவர் கைதான பின்பும் இந்தியாவெங்கும் அந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று மகாத்மாவால் பாராட்டப்பட்ட பெண்கள் இருவர், ஒருவர் பெரியாரின் மனைவி நாகம்மை, மற்றவர் அவரது தங்கை கண்ணம்மை.
 • இவ்வுலகில் நீடுழி வாழத்தக்க ஆயுளைத் தரக்கூடிய அதிசய நெல்லிக்கனியைத் தானுண்ணாது தனது நண்பரான மன்னர் அதியமானுக்கு அளித்தவர் அவ்வைப் பாட்டி! காரணம் மன்னனான அவன் நீண்ட காலம் வாழ்ந்தால் நாட்டு மக்களுக்கு மேலும் பல நன்மைகள் புரிவான் என்ற நம்பிக்கையே! 

இப்படித் தமது மகனின், தனயனின், கணவரின், நண்பனின் காரியங்கள் யாவிலும் கைகொடுத்து, அவர்களுக்காகத் தமது செளகரியங்களை விட்டுக்கொடுத்து உற்றதுணையாக நின்ற வாழ்க்கைத்துணைகளும், உறவுகளும், நட்புகளுமான உதாரணங்கள் சரித்திரம் நெடுகிலும் நம்மிடையே அநேகம் பேர் உண்டு.

இவர்களுக்குக் கிடைத்தாற்போல் மேலான பெண் உறவொன்று உங்களுக்கும் கிடைத்திருக்கலாம். அந்த உறவால் உங்கள் வாழ்வு மேன்மை அடைந்திருக்கலாம்.

இப்படித் தங்களது வாழ்வின் சிறந்ததனைத்தையும் கையளித்தோ, விட்டுக்கொடுத்தோ, வழிகாட்டியோ, ஒப்புக்கொடுத்தோ உங்களது வெற்றிகளுக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் அந்தப் பெண்ணை தினமணி இணையதளம் மூலமாக உலகுக்கு அறிமுகப்படுத்த ஒரு வாய்ப்பு.

உங்களது வெற்றிகளுக்குப் பின்னால் மையம் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணின் பெருமையை உலகறியச் செய்யுங்கள்.

அவர்களைப் பற்றி பெருமையுடன் தினமணியில் நினைவுகூருங்கள்!

உங்களது வெற்றிக்கு வித்திட்ட பெண்மணியின் புகைப்படம், அவரைப் பற்றிய விவரங்கள், மேற்குறிப்பிட்ட வெற்றிகரமான பெண்மணிகளைப்போல எந்தெந்த விதத்திலெல்லாம் அவர் உங்களது வெற்றிக்கு வித்திட்டார், உதவினார் என்பது குறித்து சுவாரஸ்யமாக விவரித்து சிறு குறிப்புடன் உங்களது பதிவுகளை எங்களுக்கு அனுப்புங்கள். 

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் நிச்சயம் ஒரு பெண்  இருப்பார். அந்தப் பெண் அவரது அம்மாவாகவோ, பாட்டியாகவோ, சகோதரியாகவோ, தோழியாகவோ, அத்தை, சித்தி, மாமியார் உள்ளிட்ட இன்னபிற உறவுகளாகவோ இருக்கலாம். வாழ்வில் வெற்றி என்பது நேர்மறையான விமர்சனங்கள் மற்றும் வழிகாட்டுதலின் மூலமாக மட்டும்தான் வர வேண்டுமென்பதில்லை. சில சமயங்களில் அதிகப்படியான தலைகுனிவும், அவமதிப்புகளும்கூட ஒரு மனிதனின் முதுகெலும்பைத் தட்டி நிமிர்த்தி தலை நிமிரச் செய்வதாக வாழ்வின் சூழல் அமைந்துவிடும். நம்மை ஊக்கப்படுத்தி வெற்றியை நோக்கி நடைபோடச் செய்ய பல சந்தர்பங்களில் நேர்மறை உத்திகளைவிட எதிர்மறை உத்திக்கு அதிகம் பலமிருக்கக்கூடும். எனவே எந்தவகையிலேனும் உங்களது வாழ்வின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் என நீங்கள் கருதும் பெண்களைப் பற்றி எங்களுக்கு எழுதுங்கள்.

உங்களது பதிவுகள் வழியாக அறிமுகமாகவிருக்கும் வெற்றிக்கு வித்திட்ட பெண்களில் சிறந்த மூவருக்கு தினமணி இணையதளத்தின் சார்பாக பட்டுப்புடவை பரிசுகள் உண்டு.

பதிவுகள் எங்களை வந்தடைய வேண்டிய கடைசித் தேதி

31.3.18

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி

dinamani.readers@gmail.com

 

கடிதம் மூலமாகப் பகிர விரும்புகிறவர்கள்

தினமணி இணையதளம்,

எக்ஸ்பிரஸ் கார்டன்,

29, இரண்டாவது பிரதான சாலை,

அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை - 600 058

எனும் முகவரிக்கு அனுப்பலாம்.

]]>
தினமணி இணையதளம் மார்ச் மாதப் போட்டி, பட்டுப்புடவை பரிசு, காரியம் யாவிலும் கைகொடுப்பாள், மார்ச் 8 பெண்கள் தினம், dinamani march contest, march 8th womens day, Anything will be done for you http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/22/w600X390/0_silkcrepe_silk.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/mar/22/dinamanicom-march-contest-who-is-going-to-win-silk-sari-2885548.html
2884881 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் நண்பர்களே, வேலையை விட நினைக்கிறீர்களா? காரணங்கள் என்னவென்று சரிபார்க்கவும்! ராக்கி Wednesday, March 21, 2018 01:38 PM +0530  

நம்முடைய வாழ்நாளில் பாதி நேரம் அலுவலகத்தில்தான் வாழ்கிறோம். நமக்காகவும் நம் குடும்பத்துக்காகவும் வேலை செய்ய வேண்டியது நமது கடமையாகும். அதே சமயம் வேலையை கடனே என்று செய்யாமல் உற்சாகத்துடன் செய்தால் அதில் மேன்மேலும் நல்ல வாய்ப்புக்களையும் வெற்றிகளையும் அது உங்களுக்கு உருவாக்கித் தரும்.

நல்லா தானே போய்க்கிட்டிருக்கு ஏன் வேலை மாற வேண்டும் என்று சில சமயம் நீங்கள் ஒரே வேலையில் தேங்கிவிடலாம். ஆனால் உங்களை நிறுவனம் அலசி ஆராய்ந்து சரியானவர் என்று தெரிந்த பின்னர்தான் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதே போல நீங்களும் உங்கள் நிறுவனத்தையும் அதில் வேலை செய்யும் உங்களையும் ஒரு சுய பரிசோதனைக்கு உட்படுத்தி சில கணக்குகளைப் போட்டுப் பாருங்கள். உங்கள் மனத்துக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதைப் பின் தொடருங்கள். நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலை எப்போது உங்களுக்கு ஒத்துவராமல் போகும் என்பதற்கு சில காரணங்கள் உள்ளன. 

முன்னேற்றம் இல்லாமல் போனால்...

நம்மில் சிலருக்கு வேலை என்பது பணம் தரும் ஒரு விஷயம் மட்டுமல்ல. அது வாழ்வியல் சார்ந்தது. உத்யோகம் புருஷ லட்சணம் என்பது மாறி உத்யோகம் மனுஷ லட்சணம் என்பதாகிவிட்ட நிலையில் ஒவ்வொருவரும் தங்களுடைய பணத்தேவை உள்ளிட்ட பலவிதமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேலை தேவையாக இருக்கிறது. நீங்கள் தற்போது பணிபுரிந்து கொண்டிருக்கும் இடத்தில் நிதி பிரச்னை இருந்தால் உடனடியாக வேறு வேலைக்கான முயற்சிகளில் இறங்குங்கள். இது தவிர அந்த வேலையில் உங்களுக்கான முன்னேற்றமோ, சுய வளர்ச்சிக்கான பாதை எதுவும் இல்லை என்று உங்களுக்குத் தோன்றினால் அங்கு சீட்டை தேய்த்துக் கொண்டிருப்பதில் பயனில்லை என்பதை உணர்ந்து நீங்களே வேறு வேலை தேடத் தொடங்கிவிடுவீர்கள். ஒரு நிறுவனத்தின் முன்னேற்றத்தில் தான் உங்களுடைய வளர்ச்சியும் உள்ளடங்கியிருக்கிறது. எனவே காலம் தாழ்த்தாமல் வயது போவதற்குள் உங்களுக்குப் பிடித்த வேலையில் சேர்ந்து கொள்ளுங்கள் அப்போதுதான் உங்கள் பர்ஸ் நிறைவதுடன், மனநிறைவும் ஏற்படும்.

திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால்..

உங்கள் திறமைக்கு சரியான வேலை கிடைக்காவிட்டால் நாளடைவில் நீங்கள் திறமையாளர் என்பதையே மறந்து போவீர்கள். மேலும் நீங்கள் உங்கள் வேலை சார்ந்து சாதித்த சில விஷயங்களுக்கு போதிய அங்கீகாரம் பாராட்டுக்கள், ப்ரோமோஷன்கள் கிடைக்கவில்லை என்றால் அந்த வேலையில் நீங்கள் தொடர்வதில் அர்த்தம் இல்லை. உங்கள் நிறுவனம் உங்களைக் குறைத்து மதிப்பிட்டால் அது உங்கள் தன்னம்பிக்கையை சிதைத்துவிடும். நாளடைவில் அது உங்கள் வேலையில் ஈடுபாட்டை குறைத்து மனச் சோர்வுக்கு உள்ளாவீர்கள். இதையெல்லாம் முன் கூட்டியே உணர்ந்து உடனடியாக விலகி விடுவதே உங்களுக்கு நல்லது.

மிகக் குறைவான சம்பளமாக இருந்தால்...

உங்கள் திறமைக்கும் தகுதிக்கும் சரியான வேலையோ, வேலைக்கேற்ற சம்பளமோ இல்லாவிட்டால் அதிகம் யோசிக்காமல் உடனடியாக வேலையை விட்டுவிடுங்கள். ஏன் அதிகம் யோசிக்கக் கூடாது என்றால் யோசிக்க யோசிக்க குழப்பம் தான் மிஞ்சும். Comfort zone என்று சொல்லப்படும் சொகுசு வேலைக்கு நீங்கள் உங்கள் சம்பளம் போன்ற விஷயங்களை விட்டுக் கொடுத்தால் அவ்வளவுதான் ஆயுசுக்கும் ஆயிரங்களில் முடங்கிப் போவீர்கள்.எனவே சமரசம் செய்தீர்கள் எனில் இழப்பில் வாடப் போவது நீங்கள் தானே தவிர உங்கள் நிறுவனம் அல்ல. எனவே இந்த விஷயத்தில் விரைவான புத்திசாலித்தனமான முடிவெடுப்பதுதான் உங்களுக்கு நல்லது.

மேலதிகாரியைப் பிடிக்கவில்லை என்றால்...

நிறுவனம் நன்றாக இருந்தும் நமக்கு மேலே இருக்கும் ஒருவர் அடிக்கடி நம்மை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தால் நிம்மதியாக வேலை செய்ய முடியாது. அதிகாரிகள் என்பவர்கள் அதிகாரம் செய்யத் தக்கவர்கள்தான். அதற்காகத் தான் அவர்களுக்கு சம்பளம் கொடுத்து வருகிறது நிறுவனம். ஆனால் உங்கள் வேலையை செய்து முடித்தபின்னரும் அல்லது செய்ய விடாமல் தடுத்தும் கொண்டிருந்தால் நீங்கள் விரைவில் மன உளைச்சலுக்குட்படுவீர்கள். சில அடக்குமுறை அதிகாரிகளின் குணக்கோளாறினால் நீங்கள் மன நிம்மதியை இழக்கக் கூடும். அவர்கள் பதிவி அரணாக இருக்க, உங்களை அவர்கள் பாடுபடுத்தலாம். எனவே இதை அனுமதிக்காதீர்கள். நேர்மையாக உங்கள் தரப்பினை எடுத்துச் சொல்லியும் அவர்களின் அடாத செயல் தொடருமெனில் நீங்கள் வேலையை மாற்றிக் கொள்வதுதான் இதற்கு நிவாரணம். நித்ய கண்டம் பூரண ஆயுசு என்று வாழ்வத்ற்கு பதில் தீர்க்கமாக ஒரு முடிவெடுத்து நல்ல வேலை கிடைத்ததும் வெளியேறிவிடுவதுதான் புத்திசாலித்தனம்.

உங்களுக்கு அந்த வேலையில் ஆர்வம் குறைந்துவிட்டால்

தினமும் காலையில் எழுந்தவுடன் அய்யோ இன்னிக்கு ஆபிஸ் போகணுமா என்று நினைக்கத் தொடங்கிவிட்டீர்கல் என்றால் நிச்சயம் உங்களுக்கு வேலையில் ஆர்வம் இல்லை என்றுதான் அர்த்தம். இன்று போயே ஆக வேண்டும், என்னால்தான் அதை செய்து முடிக்க வேண்டும் என்ற உற்சாகம் எல்லாம் வடிந்த நிலையில் எனக்கு அங்க என்ன இருக்கு. தினமும் செய்த வேலையே செய்யணும் என்றெல்லாம் அலுப்பும் சலிப்பும் கொண்டிருப்பீர்கள் எனில் அது வேலையில் பிரதிபலித்து உங்கள் நிலையை மேலும் சிக்கலாக்கும்.

ஜாப் சாடிஸ்ஃபேக்‌ஷன் மிகவும் முக்கியம். வேலை திருப்தி இல்லாமல் மந்தமாகப் போனால் அதில் உங்கள் மனநிலையும் பாதிக்கப்படும். எனவே உங்களுக்கு ஆர்வம் தூண்டும் விஷயம் எதுவுமே நடக்கவில்லை எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றால் அந்த வேலையை விட்டுவிட வேண்டும். அதுதான் உங்களுக்கும் அந்த நிறுவனத்துக்கு நல்லது.
 

]]>
பணி நீக்கம் , வேலை, Job, ராஜினாமா , quit a job http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/21/w600X390/quit_now.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/mar/21/5-signs-that-you-should-quit-your-job-2884881.html
2884299 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் வேலை தேடுவோர் கவனதிற்கு! இந்த 5 காரணங்களினால்தான் நீங்கள் நிராகரிக்கப்படுகிறீர்கள்! சினேகா Tuesday, March 20, 2018 05:03 PM +0530  

எல்லா நாட்டின் முக்கிய பிரச்னை வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவது. அரசு தனியார் என எந்த வேலையாக இருந்தாலும் அதற்கு தகுதியுடையவராக முதலில் நம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும்.

நிறுவனங்கள் முதலில் தங்களுக்குத் தேவையான பதவிகளையும், அதற்கேற்ற திறமைகளையும் பட்டியலிட்டுத்தான் ஆட்கள் தேவை என விளம்பரப்படுத்துகின்றன. அதை நன்றாகப் படித்த பின்னர்தான் வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

குத்துமதிப்பாக போட்டுத்தான் பார்ப்போமே என்று நீங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தை இதில் முயலக் கூடாது. அப்படிச் செய்தால் அது உங்களின் நேரத்தை மட்டுமல்ல அந்நிறுவனத்தின் அதிகாரிகளின் நேரத்தையும் வீணடிக்கிறீர்கள் என்று அர்த்தம். எனவே விண்ணப்பிக்கும் போதே இந்த வேலைக்கு எல்லா வகையிலும் நான் பொருத்தமானவனாக இருப்பேனா என்று நீங்கள் யோசித்த பின்னர் தான் அனுப்ப வேண்டும். 

நேர்முகத் தேர்வுக்குச் சென்றுவந்த பின் ஏன் இந்த வேலை எனக்குக் கிடைக்கவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இவை எல்லாம் காரணமாக இருக்கலாம்.

அனுபவக் குறைவு

நான்கு ஆண்டுகள் கட்டாயம் அனுபவம் தேவை என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தால் ஓராண்டு அல்லது இரண்டு மட்டுமே உள்ள நீங்கள் அதற்கு விண்ணப்பிக்கக் கூடாது. நிச்சயம் நிராகரிக்கப்படுவோம் என்று தெரிந்தே ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? ஒரு வேளை...என்று நீங்கள் நினைத்து செயல்படுவதற்கு இது விளையாட்டல்ல. Professional Ethics என்று கூறப்படும் சிலவற்றை நாம் கற்றுக் கொள்வது ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கும் போதிலிருந்து தொடங்குகிறது. 

படிப்பு

எம்பிஏ படித்தவர்கள் தேவை என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தில் இன்ஜினியரிங் முடித்த நீங்கள் விண்ணப்பிக்கக் கூடாது. பட்டதாரிகள் எனப் பொதுவாக குறிப்பிட்டிருந்தால் நீங்கள் முயற்சி செய்யலாம். மேலும் அதிகமான படிப்பு உங்களுக்கு இருந்து, நீங்கள் உங்கள் தகுதிக்கு குறைவான இடங்களிலும் நிராகரிக்கப்படுவீர்கள். நிறுவனங்களிடம் இவ்விஷயங்களை முன்னரே  நிர்ணயிப்பதில் தெளிவு செய்து கொள்ள முடியாத நிலை இருப்பதால் அந்த விண்ணப்பத்தை ஆழமாகப் படித்து அதில் குறிப்பிடப்பட்டவை உங்கள் ரெஸ்யூமியுடன் பொருந்தவில்லை எனில் அனுப்பாமல் இருப்பதே மேல். சில சமயம் ஓர் அவசரத்தில் உங்களை வேலைக்கான நேர்காணலுக்கு அழைத்துவிட்டாலும், அங்கு சென்ற பின் அவர்கள் நிராகரித்துவிடலாம்.  

அதிக தொடர்புகள் இல்லாதது

இந்தக் காலத்தில் மட்டுமல்ல எந்தக் காலத்திலும் வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும். எனவே உங்கள் தகவல் தொடர்பு ஆற்றலை அதிகரித்துக் கொள்ளுங்கள். நேர்காணலில் கேட்ட கேள்விக்கு ஏனோ தானோவென்று பதில் சொல்லக் கூடாது. சேல்ஸ் மார்கெட்டிங் போன்ற வேலைகளுக்குச் சேர விண்ணப்பித்திருந்தால் உங்களுடைய ஆளுமைத் திறன், எத்தனை நபர்கள் உங்கள் வட்டத்தில் உள்ளனர் போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனக்கு யாரையும் தெரியாது என்று நீங்கள் சொல்லியிருந்தால் உங்களை யாரென்றே தெரியாது என அவர்கள் நிராகரித்துவிடுவார்கள். 

திறமைகள் வேறு

உங்களுக்குத் அந்த வேலைக்கான தகுதி மற்றும் திறமை இருந்தால் அது நிச்சயம் கிடைத்துவிடும். ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன்பு அது குறித்து ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து முடிவெடுங்கள். பல வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. வேலை வேண்டுவோரும் நிறைய பேர் உள்ளனர். இவை இரண்டு மேட்ச் ஆகவேண்டும். இவை பொருந்தாதபட்சத்தில் நீங்கள் நிராகரிக்கப்படலாம். 

பொருத்தமற்ற வேலை

சில நேரங்களில், வேலை அல்லது நிறுவனம் உங்களுக்குப் பொருத்தமாக இல்லாமல் போகலாம். உங்களுடைய எதிர்ப்பார்ப்புகளை அந்த நிறுவனம் பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம். வருத்தப்படாமல் அடுத்த வேலைக்கான முயற்சியை தொடங்குங்கள். 

நீங்கள் நினைத்த வேலை கிடைக்கவில்லை என்று தேங்கிவிடாதீர்கள். முயற்சி செய்து கொண்டேயிருந்தால் நிச்சயம் அதைவிட சிறந்த வேலை கிடைக்கும். திறமைகள் ஒருபோதும் தோற்றுப் போகாது. உங்களை நீங்கள் இழக்காத வரையிலும் நீங்கள் எதையும் இழப்பதில்லை. நம்புங்கள். வெற்றியாளராக இருக்க ஒரு இப்போது இருப்பதைவிட ஒரு செண்டிமீட்டர் அதிகமாக புன்னகைக்க கற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கையும் சரி வேலையும் சரி சுலபம்தான்!

]]>
job, job wanted, job offers, வேலை, வேலை வாய்ப்பு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/20/w600X390/sad.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/mar/20/5-reasons-why-you-are-getting-rejected-for-jobs-2884299.html
2884297 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் தமிழ் சினிமாவில் ஹிட் அடித்த  ‘சிட்டுக்குருவி’ பாடல்கள்... கார்த்திகா வாசுதேவன் Tuesday, March 20, 2018 05:03 PM +0530  

‘சிட்டுக்குருவியை’ சுறுசுறுப்பு, காதல், தனிமை, தன்னம்பிக்கை, நட்பு எனப் பல விஷயங்களுக்கு நாம் உதாரணப்படுத்தலாம். பறவைகளில் சிட்டுக்குருவியைப் போல சுறுசுறுப்பான பறவையைக் காண்பது அரிது. ஆயினும் இன்று சிட்டுக்குருவிகள் அரிதான பறவையினங்களில் ஒன்றாகி வருகின்றன. காரணம் நாம் பயன்படுத்தும் செல்லிடப்பேசிகள்.

இந்த செல்லிடப் பேசிகளில் இருந்து வெளிப்படும் அதிர்வுகளைத் தாங்கும் சக்தி சிட்டுக்குருவிகளின் இதயத்துக்கு இல்லாத காரணத்தாலேயே முன்பெல்லாம் வீடுகளின் முற்றங்களில் நமக்குக் காணக்கிடைத்த ஏராளமான சிட்டுக்குருவிகள் மடிந்து போய் இன்று எங்கேனும் ஒன்றிரண்டு சிட்டுக்குருவிகளை மட்டுமே ஏதோ புறநகர்ப் பகுதிகளில் மட்டுமேனும் காண முடிகிறது. சிட்டுக்குருவிகளின் அழிவு இயற்கைச் சமநிலையின்மையின் உதாரணமெனக் கொள்ள வேண்டியது அவசியம். ஆனால், மனிதர்களான நாம் அதை உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. முன்பெல்லாம் கிராமங்களில் காகங்களுக்கு இணையாக சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கும். இப்போது அங்கும் கூட சிட்டுக்குருவிகளைத் தேடித்தான் அடையாளம் காண வேண்டியதாக இருக்கிறது.

இனி வரும் தலைமுறையினருக்கு சிட்டுக்குருவிகளை நாம் இணையத்திலோ அல்லது புகைப்படங்களிலோ தான் அடையாளம் காட்ட வேண்டியதாக இருக்குமோ என்னவோ?!

இப்படி நம் வாழ்வோடும், மனதோடும் ஒன்றி இருந்த சிட்டுக்குருவிகளை தமிழ் சினிமாப்பாடல்களின் துணையுடன் இன்று நினைவு கூரலாமா?

60 களில் அஞ்சலி தேவி, கண்ணப்பா நடிப்பில் வெளிவந்த ‘டவுன்பஸ்’ என்ற தமிழ்த்திரைப்படத்தில் இடம்பெற்ற சிட்டுக்குருவி பாடல் இன்றளவும் தமிழ் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த பாடல்களில் ஒன்று;

‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? 
என்னை விட்டுப் பிரிந்து போன கணவன் வீடு திரும்பல...’

 

புதிய பறவை திரைப்படத்தில் சிவாஜி, சரோஜாதேவி நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த சிட்டுக்குருவி பாடல்...

‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே
செவ்வானம் கடலலை மேல் கலந்திடக் கண்டேனே’

 

1971 ஆம் ஆண்டில் வெளிவந்த சவாலே சமாளி திரைப்படத்தில் ஜெயலலிதாவுக்காக கவியரசர் கண்ணதாசன் எழுதிய சிட்டுக்குருவிப் பாடல்;

“சம் சம் சம் சம்சம் சம் சம் சம் சம்சம் 
சம் சம் சம் சம்சம் லல்லல்லா 

சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு
தென்றலே உனக்கேது சொந்த வீடு
உலகம் முழுதும் பறந்து பறந்து
ஊர்வலம் வந்து விளையாடு 

சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு…  
கட்டுப்பாடு….. ஓஹோ...”

 

சிவாஜி நடிப்பில் பாரதிராஜாவின் இயக்கத்தில் முதல் மரியாதை திரைப்படத்தில் சிட்டுக்குருவி பாடல்...

‘ஏ குருவி சிட்டுக்குருவி... குருவி...குருவி 
உன் சோடியெங்கே அதக் கூட்டிக்கிட்டு 
எங்க விட்டத்துல வந்து கூடு கட்டு
பொல்லாத வீடு கட்டு பொன்னான கூடு...
பொண்டாட்டி இல்லை வந்து என்னோட பாடு’

 

கமல், சிவக்குமார், ஜெயசுதா நடிப்பில் ‘மேல்நாட்டு மருமகள்’ திரைப்படத்தில் இடம்பெறும் சிட்டுக்குருவி பாடல்...

‘சிட்டுக்குருவி பட்டுச் சிறகை விரிக்கும்
தென்றல் பட்டு முல்லை மொட்டு சிரிக்கும்’

 

 

கே. பாக்யராஜின் ‘சின்னவீடு’ திரைப்படத்தில் இசையரசி S.ஜானகியின் குரலில் சிட்டுக்குருவி பாடல்...

‘சிட்டுக்குருவி... வெட்கப்படுது... பெட்டைக்குருவி கற்றுத்தருது’

 

விஜயகாந்த், ராதிகா நடிப்பில் வெளிவந்த ‘வீரபாண்டியன்’ திரைப்படத்தில் ஒரு டூயட் பாடலில் சிட்டுக்குருவி...

‘சிட்டுக்குருவி தொட்டுத் தழுவி முத்தம் கொடுக்க 
 பித்தம் புடிக்க உள்ளூர வெள்ளம் பாயாதோ...’

 

பாரதிராஜா இயக்கத்தில் நெப்போலியன், சுகன்யா நடிப்பில் ‘புதுநெல்லு புதுநாத்து’ திரைப்படத்தில் இடம்பெறும் சிட்டுக்குருவி பாடல்...

‘சிட்டான் சிட்டாங் குருவி உனக்குத் தானே
ஆஹா... ஆமாம்...அப்படிப் போடு
ஒரு பட்டாம் பட்டாம்பூச்சி பழகத்தானே’

 

அர்ஜூன் நடிப்பில் பரசுராம் திரைப்படத்தில் இடம்பெறும் சிட்டுக்குருவி பாடல்...

‘சிட்டுக்குருவி அருவியைக் குடிக்கப் பார்க்குது
பட்டாம்பூச்சி வானத்தை விலைக்குக் கேட்குது’
 

இவை தவிர, தமிழில் ‘சிட்டுக்குருவி’ என்ற பெயரில் ஒரு திரைப்படமே கூட உண்டு. சிவகுமார், சுமித்ரா நடிப்பில் வெளிவந்த சிட்டுக்குருவி திரைப்படத்தின் பல பாடல்கள் இன்றும் கூட தமிழ் ரசிகர்களின் இதயம் கவர்ந்த பாடல்களில் சிலவாக இருக்கின்றன. அவற்றில் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் ‘அடடா மாமரக் கிளியே’ பாடலைச் சொல்லலாம்.

ம்ஹும்... என்ன செய்ய வருங்காலத்தில் நாம் இப்படித்தான் சிட்டுக்குருவியை நினைவுகூரப் போகிறோமோ என்னவோ? அதற்கொரு முன்னோட்டம் தான் இந்தக் கட்டுரை.

Concept Courtesy: UmaParvathy

]]>
தமிழ் சினிமா, world sparrow day, tamil cinima, sittukuruvi special songs, சிட்டுக்குருவி ஸ்பெஷல் சாங்ஸ், உலக சிட்டுக்குருவி தினம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/20/w600X390/sittukuruvi_article.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/mar/20/தமிழ்-சினிமாஸ்-எவர்-கிரீன்-சிட்டுக்குருவி-பாடல்கள்-2884297.html
2884258 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்... சிட்டுக்குருவிகளுக்காக ஸ்பெஷல் சிட்டுக்குருவி சிறுகதை! கார்த்திகா வாசுதேவன் Tuesday, March 20, 2018 12:45 PM +0530  

சிட்டுக்குருவி

திடீரென்று தான் இப்படி ஆகிவிட்டது; கதை பேச மாமா இல்லை, கேலி செய்ய அத்தை இல்லை, கொஞ்சிக் கொண்டே உருட்டி உருட்டி உள்ளங்கையில் சாதம் வைக்க அம்மா இல்லை. சித்தி கூட எங்கேயோ தூரத்தில் இருந்து கொண்டு எப்போதோ தொலை பேசுகிறாள், சித்தப்பா வீடு தங்குவது அரிதாகிப்போய் நெடுநாளாகிறது,

பாட்டிக்கு இந்த பட்டணம் பிடிக்காமல் ஊரோடு போய் விட்டாள், தாத்தாவோ ரேஷன் கடை, மளிகைக் கடை, மார்கெட் என்று ஓய்ந்து பின்மாலையில்அவர் வயது மனிதர்களைத் தேடி கோயில், பார்க் என்று போய் விடுகிறார், என்னை யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை!

வேப்பமரமும், புளியமரமும் இல்லாத இந்த ஒண்டுக்குடித்தன நகரத்து நரக வீடு கொஞ்சம் கொஞ்சமாய் என்னைக் கொன்று கொண்டிருக்க, தினமும் கெட்ட கெட்ட  கனவுகளில் தூங்கவே முடியாத சோகத்தில் தான் இன்று இந்த பின் மத்தியானநேரத்தில் கால் காசு பெறாத இந்த "சிட்டுகுருவியுடன்" விருதாவாய் பேசிக்கொண்டு இருக்கிறேன் .

சிட்டு குருவி "விசுக் விசுக்கென்று" பறந்து கொண்டிருந்தது முன்புறப் பொதுத்தாழ்வாரத்தில், யாரோ காய வைத்த வடகத்தைக் கொத்திக் கொத்தி குட்டி மண்டையை 'விலுக் விலுக்கென்று' ஆட்டியவாறு சிறிது வாயிலும், சிறிது வாசல் படியிலுமாக சிந்திச்சிதறி விழுங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ஏதோ ஒரு நொடியில் அதன் பார்வையில் நான் பட்டிருக்க வேண்டும், அதுவாகத் தான் என்னிடம் பேச ஆரம்பித்தது;

முதலில் பேச்சு எப்படி தொடங்கியது என்று யோசித்தேன் நான்!. அதற்கு என் பெயரெல்லாம் தெரிய சாத்தியமே இல்லை, ஒருமையில் தான் பேசிக்கொண்டிருந்தது. இனுக்கி இனுக்கியாய்ப் பிய்த்த வடகத்தை அலகில் சிக்க வைக்க முயன்று தோற்றுப் போன வெறுப்போ என்னவோ? சும்மா ஏன் என்னையே பார்கிறாய்? என்று காட்டமாய்க் கேட்டு விட்டு வெளிப்புற கேட் வரைபறந்து காட்டி விட்டு திரும்ப வந்து ஜன்னல் கம்பியில் அமர்ந்து கொண்டு "பதிலைச் சொல்லித் தொலை என்பதைப் போல "என்னையே இலக்கு மாற்றி மாற்றிப் பார்த்துக்கொண்டே இருந்தது.

ஒரு சிட்டுக்குருவி பேசுமா? என்பதையே நம்ப முடியாமலிருந்த நான் அதன் கேள்வியில் திடுக்கிட்டுப் போனேன். பேசும் குருவியா இது? என்ற உற்சாகத்தில் சந்தோசம் பீறிட்டுக் கொண்டு வர 

“என்ன கேட்டாய் குருவி?” என்றேன் நான்; 

குருவி இளக்காரமாய் சிரித்துக்கொண்டது, மறுபடி பேச முயலவேயில்லை; பார்த்துக் கொண்டிருக்கும் போதே குருவி ஜன்னலில் இருந்து எம்பிப் பறக்கப்போவதை போல போக்கு காட்டியது, பிறகு மறுபடி என்னை “நீயும் வருகிறாயா என்னோடு?” என்பதைப் போல சும்மா பார்த்துக்கொண்டு உட்கார்ந்து விட்டது, “ அடுத்து என்ன செய்யப் போகிறாய் நீ?” என்று நானும் விடாமல் அதையே கவனிக்கத் தொடங்கினேன்.

குருவி கொஞ்ச நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்த பின் நான் எதிர்பாரத நொடியொன்றில் "எனக்கு ஒரு தோசை தாயேன்" என்றது. இல்லை... கெஞ்சுதலாய் எல்லாம் இல்லை. சட்டமாய்க் கேட்டது; “நீ எனக்குக் கொடுத்துத் தான் ஆகவேண்டும்” என்ற தொனியில் கேட்டதோடு "விருட்டென்று" சமையல்கட்டுக்குள்ளும் பறந்துபோய் விட்டது.  “என்ன திமிர் இந்தக் குஞ்சு குருவிக்கு?!” என்று செல்லக் கோபத்தோடு நானும் பின்தொடாந்தேன். வேறு என்ன செய்ய வீட்டில் அப்போது யாரும் இல்லை!

அம்மா குவைத்திற்கு வீட்டு நர்சாக காண்டிராக்டில் போய் மாதம் ஆறு ஆகிறது. ஊரிலிருந்தால் கடன் கொடுத்தவர்களின் தொல்லை கழுத்தை நெரிக்கும் என்று சென்னைக்கு வந்து ஒரு மில் முதலாளிக்கு கார் டிரைவர் ஆகிவிட்டார் அப்பா.

பாட்டி மட்டுமே ஊருக்குள் எதையோ சொல்லிச் சமாளித்து கொண்டு வீட்டோடு இருக்கிறாள், ஊரை விட மனமில்லை என்பதெல்லாம் வெறும் நகாசுப்பேச்சு, அவளும் வந்து விட்டால், வீட்டை பண்ணை வீட்டு ராமசாமி அடிமாட்டு விலைக்கு எடுத்துக் கொண்டு வாங்கிய கடனுக்கு நெடுநாளாய் கட்டாமலிருந்த வட்டிக்கு கழித்து விடுவாரோ என்ற அதீத பயம் தான் காரணம் !

குருவி சாவதானமாய் சமையல் உள்ளில் புகுந்து தோசை மூடி வைத்த தட்டத்தை அலகால் இடறித் தள்ளி விட்டு "சீனி போடு கொஞ்சம் என்றது", என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. சிரிக்கும் என்னை ஒரு தூசி போல பார்த்து விட்டு, அதுவே பறந்து போய் நல்லெண்ணெய் இருந்த வால்கிண்ணத்தை தூக்க முடியாமல் தூக்க முயன்று எண்ணையைக் கொட்டிக் கவிழ்த்து கொண்டது தோசை இருந்த தட்டில். 

“ஐயோ! ஏய் குருவி என்னிடம் கேட்டால் நான் எடுத்துத் தந்திருக்க மாட்டேனா? இப்படி எண்ணெய் முழுசும் கொட்டித் தீர்த்து விட்டாயே! மறுபடி எண்ணெய் வாங்க காசுக்குநின்றால் அப்பா ஆயிரம் கேள்வி கேட்பாரே! உன்னால் எனக்கு நேரம் சரியில்லை இன்று என்றேன் நான் எண்ணெய் இழந்துவிட்ட ஆற்றாமையில்”

குருவி அதையெல்லாம் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை, அதுபாட்டுக்கு ஒரு தோசையை அறையும் குறையுமாய் சிந்திச் சிதறி குதறிப் போட்டுவிட்டு... அப்புறம் என்ன? என்று தண்ணி தொட்டியின் விளிம்பில் போய் உட்கார்ந்தது.

தொட்டி தளும்ப நீர் பிடித்து ஊற்றி வைத்திருந்தேன் நான்; “விழுந்து விடாதே... பார்த்து உட்காரேன்”  நான் தான் பதறினேனே தவிர அது என்னவோ தேர்ந்த நீச்சல் வீராங்கனை போல விளிம்பில் இதன் அசைவில் தளும்பி மேலெழுந்த சின்னத் தண்ணீர் துள்ளலில் தலையை விட்டு ஆட்டிப் புரட்டி ஒரு மினி தலைக்குளியல் செய்து கொண்டது, பார்க்கப் பார்க்க அதிசயமாய் இருந்தது;

அதோடு முடியவில்லை கதை, குளிர்ந்த தண்ணீர் பட்டதும் ஒட்டிக்கொண்ட சிறகுகளை சடசடவென அடித்து தூசிப்படலம் போல நீர்ப்படலத்தை தெறிக்கவிட்டுப் புகைபோக்கி ஓட்டை வழியே அடுப்படி மேல் விழுந்த வட்டச் சூரிய ஒளியில் போய் நின்று கொண்டு இப்படியும் அப்படியும் திரும்பி வெப்பம் வாங்கி கதகதப்பாகிக்கொண்டது, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு "அது
குருவியாய்த் தெரியவில்லை, ஏதோ விருந்துக்கு வந்த அத்தை மகளை கூட நின்று பார்ப்பதைப்போல ஒரு தோழமை உணர்வு சட்டென மேலெழுந்து அந்த அறை முழுதும் நிரம்பி வழிந்து கசிந்தது.

நான் இங்கே இப்படிக் குருவியோடு குருவியாய் லயித்து நிற்பது பால்காரஅண்ணாமலைக்கு தெரியுமா என்ன?

எப்போதும் நேரம் தப்பி பால் கொண்டு வந்து வசவுகளை அழுக்கு வெள்ளை வேஷ்டி நிறைய வாங்கி கட்டிக்கொண்டு போகும் அவர் அன்று சரியான நேரத்துக்கு பாலுக்கு மணியடித்தார். போய் வாங்கி வைத்துவிட்டு திரும்ப வரும் முன் கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாத சென்னை மாநகரத்து வானிலை மிக மோசமாகி மழைத் தூரலிட்டது.

"ஐயோ அப்பாவின் யூனிபார்ம் சட்டை!" காலையில் துவைத்துப் போட்டது ஞாபகம் வர, வேக வேகமாய் மூச்சு வாங்க மொட்டை மாடிக்கு ஓடினேன். நல்ல வேலை ரொம்பவும் நனையத் தொடங்கும் முன் கொடியிலிருந்து பிடுங்கி கொண்டு வந்து விட்ட திருப்தியில் உட்புறக் கொடிக்கயிற்றில் காயப்போட்டு விட்டு குருவியை தேடிக்கொண்டு மீண்டும் உள்ளே போனேன். 

காணோம்... குருவி அங்கே இல்லை, “ஏய் குருவி அதற்குள்ளே எங்கே போய் விட்டாய்? மழை வேறு பலமாய் வரும் போலத் தெரிகிறது... நனைந்து விட்டால் என்ன செய்வாய் குட்டிப் பறவையே? நான் எனக்குள் பேசிக்கொண்டே குருவியை வீட்டுக்கு உள்ளே... வெளியே என்று கொஞ்ச நேரம் தேடினேன். காணோம்!

எங்கும் குருவி இல்லை .

ஐந்து மணிக்கு அப்பா வந்து விட்டார். ஆறு மணிக்குத் தாத்தா வந்தார். குருவி மட்டும் வரவேயில்லை. நான் குருவியை நினைத்துக் கொண்டே இருவருக்கும் காப்பி போட்டுக் கொடுத்தேன், வாசல் தெளித்து கோலம் போட்டேன். இரவுக்கு மாவு பிசைந்து கோதுமைச் சப்பாத்தி போட்டு, தக்காளித் தொக்கு செய்து தொட்டுக் கொள்ள இருவருக்கும் வைத்து விட்டு நானும் சாப்பிட்டு முடித்தேன்.

எங்கே போயிருக்கும் இந்த மழையில் குருவி! என்று யோசித்துக் கொண்டே சமைத்துச் சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி கவிழ்த்தேன். குருவியைக் காணவே காணோம்! இனிமேலா வரப்போகிறது... மணி ஒன்பது ஆகி விட்டது. அப்பா நைட் சிஃப்டுக்குப் புறப்பட்டுவிட்டார், தாத்தா வெளித்திண்ணையில் எம்ஜிஆர் சேலை விரித்துப் படுத்துவிட்டார்.

மழை அது பாட்டுக்குப் பெய்து கொண்டிருந்தது. இரவு வானத்தை மழை முகமூடிக் கொள்ளைக்காரன் போல கருப்புத் துணி போர்த்தி கண்ணுக்குத் தெரியாமல் மறைத்து, சாகசம் செய்து விட்ட திருப்தியில் ஆர்பாட்டமின்றி சிறு ஓசையுடன் இறங்கி பூமியுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தது. கல்யாணமாகி வருடம் சில கடந்து நிதானமாகி விட்ட தம்பதியர் போல பூமிக்கும் மழைக்குமான சங்கமம் சிறு ரகஷிய சம்பாசனையுடன் விடியும் வரை தொடர்ந்தது!

குருவி எங்கே போயிருக்குமோ?

மழைக்கு எங்கே ஒதுங்கியிருக்குமோ ?

அதன் கூடு எந்த மரத்தில், எவ்வளவு உயரத்தில் இருக்குமோ?

இந்நேரம் என்ன செய்து கொண்டிருக்குமோ குருவி?

குருவி... குருவி... குருவி...

ஏய்க் குருவி... சிட்டுக்குருவி... சிட்டுக்குருவி...
எங்கே போய்விட்டாய் என் செல்லக் குருவி?

குருவியை நினைத்துக் கொண்டே தூங்கினாலும் கனவில் என்னவோ குருவி எல்லாம் வரவில்லை, ஒருவேளை கனவே வரவில்லையோ என்னவோ?! காலை டிஃபன் தயாரிக்கும் அவசரத்திலும் அதென்னவோ அந்த காணமல் போன குருவியை மட்டும் மறக்கவே முடியவில்லை...

இன்றைக்கு மறுபடி குருவி வருமோ? என்ற எதிர்பார்ப்போடு தான் சாதம் வைத்து, சாம்பார் வைத்து... உருளைக்கிழங்கு வறுவல் செய்து, அப்பளம் பொரித்தேன். குருவிக்கு இதெல்லாம் பிடிக்குமா? என்ற யோசனையோடு தான் ஒவ்வொன்றையும் செய்து மூடி வைத்தேன்.

மழை நின்று போன விடிகாலையும் வழக்கம் போலத்தான் விடிந்திருந்தது, ஆனாலும் காற்றில் ஒரு ஈரவாடை பரவி மொட்டைமாடியில் துணி காயப்போட்டு விட்டு, கட்டைச்சுவற்றில் கைவைத்து கீழே விரையும் வாகனங்களைப் பார்த்தவாறு ஆழமாய் மூச்சை உள்ளே இழுத்து மெதுவாய் வெளியேபரவ விடும் போது ஈரத்தோடு ஈரமாய் ஒரு குளிரான சந்தோசம் தேகமெங்கும் சந்தனம் போல அப்பிக்கொள்ளத்தான் செய்கிறது ஒவ்வொருமுறையும்!

குருவிக்கு குளிராதா?

பார்த்தால் கேட்க வேண்டும்...

வருமா? வந்தால் கேட்க வேண்டும்...

என்று கேள்வியை ஓரமாய் மனதில் போட்டு வைத்தேன்.

நேற்றுப் போல இல்லாமல் பால்கார அண்ணாமலை இன்று பழக்கதோசமாய் லேட்டாகத்தான் வந்தார்... ஒன்றும் சொல்வதற்கின்றி பேசாமல் பாலை வாங்கி மூடி வைத்தேன். அம்மாவிடமிருந்து தொலை பேசி அழைப்பு வந்தது; மாதம் ஒருமுறை அரைமணிநேரம் பேசுவாள் அம்மா, ஏதோ திருவிழா போல துள்ளிக்கொண்டு பேசுவதற்கு ஓடுவேன் நான்.

இன்று அப்படி இல்லை, வெகு நிதானமாய்ப் போய் விட்டு திரும்பிய என்னை தாத்தா அதிசயம் போல பார்த்துவிட்டு குனிந்து மறுபடி பேப்பர் படிக்க ஆரம்பித்தார். அப்பா வந்தார், மறுபடி காபி போட்டேன், இரவு சமைத்தேன், எல்லோரும் சாப்பிட்டோம். இரவு ஷிப்ட் வந்தது. அப்பா கிளம்பிப் போய் விட்டார். தாத்தா திண்ணையில் யாரோ நண்பரோடு பேசிச்கொண்டிருந்தார், அவர் அப்படியே தூங்கி விடுவார், இனி உள்ளே வரமாட்டார், தண்ணீர் முதலிலேயே சொம்பில் பக்கத்தில் எடுத்து வைத்துக் கொள்வார். 

சின்னஞ்சிறிய வீடு தான்... ஆனாலும் தனிமை ...ருசியானதா?!

எப்போதும் தனிமை... ருசியானதா?!

பெரிய பங்களா வீடெல்லாம் கழுத்து வரை கடனோடு ஊரில் இருக்கிறது... கோயில் கோபுரத்தில் அரக்கி போன்ற தோற்றத்துடன் கத்தி பிடித்து நிற்கும் காவற்காரி பொம்மை போல பாட்டி அங்கே இந்நேரம் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு தான் இருப்பாள் என்று நினைக்கையில் நெஞ்சுக்குள் பிசைகிறது,

தாத்தா... பாவம்?

அப்பா... பாவம் தான்?

அம்மா... அவளும் கூட பாவம் தானே?!

அப்படியானால் நான்?!

அந்தக் குருவி?!

தூரத்தில் எங்கேயோ பாட்டு சத்தம்...

"சிட்டுக்குருவி... சிட்டுக்குருவி... சேதிதெரியுமா?

என்னை விட்டுப் பிரிந்து போன கணவன் வீடு திரும்பலை..."

"ஏய்க் குருவி... சிட்டுக்குருவி
உன் ஜோடியத்தான் கூட்டிக்கிட்டு நீ
இங்கே வந்து கூடு கட்டு...

இன்றைக்கு சிட்டுக் குருவி ஸ்பெஷல் போல ரேடியோவில்...

கடைசியில் எப்போதும் போல்... ஒற்றையாய்த் தெளிவான சிந்தனைகள் ஏதுமின்றி தூங்கத்தொடங்கினேன் நா....னு...ம்.

]]>
உலக சிட்டுக்குருவிகள் தினம், சிட்டுக்குருவி ஸ்பெஷல் சிறுகதை, world sparrow day, sparrow special short story, karthiga vasudevan stories, கார்த்திகா வாசுதேவன் சிறுகதைகள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/20/w600X390/sittukuruvi_short_story.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/mar/20/sittukkuruvi-short-story-2884258.html
2883069 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் உங்கள் மொபைல் போனுக்கு சார்ஜ் போடப் போகிறீர்களா? ஒரு நிமிடம் இதைப் படித்துவிடுங்கள்! சினேகா Monday, March 19, 2018 10:55 AM +0530  

நமது அன்றாட வாழ்க்கையில் எதைவிடவும் முக்கியமானது செல்போன்கள்தான். வீட்டில் செல்போனை விட்டுவிட்டு வந்துவிட்டால் ஆபிஸில் வேலை செய்யவே மனம் ஓடாது எனும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோர் பலர். செல்போனுடன் இலவச இணைப்பாக ஒரு பிரச்னை ஆண்டாண்டு காலமாக இருந்தே வருகிறது. அதுதான் சார்ஜ் நிக்கமாட்டேங்குது மச்சி என்ற குறைபாடு. அதிலும் விலையுயர்ந்த போன்களுக்குத் தான் இந்த பரிதாப நிலை. உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் போடும் போது தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் இவை.

விலை குறைவாகக் கிடைக்கிறது என்று மலிவு விலை சார்ஜரை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். அது உங்கள் ஃபோனின் பேட்டரியை பதம் பார்த்துவிடும். போலவே ஒரிஜினல் ப்ராண்ட் சார்ஜரை மட்டும் பயன்படுத்துங்கள். யூஎஸ்பி கேபிள் வழியாக லேப்டாப் அல்லது டெஸ்ட்டாப்பில் சார்ஜ் செய்தால் அது போதிய அளவில் மின் அழுத்தம் கிடைக்காமல் போகும். முழுவதும் சார்ஜ் ஆகாத நிலையில் அதிலிருந்து நாம் அடிக்கடி உருவி தேவைப்படும் போது மறுபடியும் போட்டு என கேம் விளையாடிக் கொண்டிருந்தால் கதை கந்தல்தான். வெகு விரைவில் உங்கள் பேட்டரி பல்லிளித்துவிடும். அதன் பின் புது ஃபோன் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே உங்கள் செல்போனின் ஸ்பெசிஃபிகேஷனுக்குத் தகுந்த மின் அழுத்தத்தை ஏற்கும் சக்தியுள்ள ஒரிஜனல் சார்ஜரையே பயன்படுத்துவது சாலச் சிறந்தது. உங்கள் ஒரிஜினல் தொலைந்துவிட்டால் மார்கெட்டில் கிடைக்கும் இன்னொரு ஒரிஜினல் சார்ஜரை வாங்கி பயன்படுத்துங்கள். இரவல் கேட்டு மற்ற ப்ராண்ட் சார்ஜரை போடாதீர்கள்.

சிலர் சார்ஜர் தேடி அலையாமல் பவர் பேங்கை கைவசம் வைத்திருப்பார்கள். தரமான கம்பெனி ப்ராண்டையே பயன்படுத்துவது நல்லது. இல்லையென்றால் அந்த பவர் பேங்க் அதிக  மின் அழுத்தம் அல்லது குறைவான மின் அழுத்தப் பிரச்னையை ஏற்படுத்திவிடலாம். பவர் பேங்க் பயன்படுத்துகையில் ஹெட்போனை பயன்படுத்தக் கூடாது. இதனால் ஓவர் ஹீட்டாகி போனின் பேட்டரி அதிவிரைவில் பழுதடையும்.

சிலர் சார்ஜ் போடும்போதும் பேனல் கவரை கழற்ற மாட்டார்கள். அது தவறு. ஓவர் ஹீட்டாக இருக்கும் போனை சற்று கூலிங்காக வைக்கவும் கீழே விழுந்தாலும் உடைந்து நொறுங்காமலும் இருக்க உதவுகிறது பேனல். ஆனால் சார்ஜ் செய்யும் போது அதையும் சேர்த்து சார்ஜில் போட்டால் சூடு அதிகரித்து போன் சீக்கிரம் ரிப்பேர் ஆகிவிடும். எனவே காட்டன் துணியில் கீழ் வைத்து சார்ஜ் போடுங்கள்.

சிலர் இரவில் தூங்கப் போகும் முன் லைட்டை அணைக்கிறார்களோ இல்லையோ, மறக்காமல் போனை சார்ஜரில் போட்டுவிட்டு ஆழ்நிலை உறக்கத்திற்குள் சென்றுவிடுவார்கள். விடிய விடிய போன் ப்ளக் பாயிண்டில் இருந்தால் அதன் பேட்டரி மிக விரைவில் செயல்படும் திறன் குறைந்து ஆயுள் முடிந்துவிடும். இரவு முழுவதும் சார்ஜ் போடாதீர்கள் ஒரு மணி நேரம் அல்லது சார்ஜ் நூறு சதவிகிதகம் வரும்வரையில் போட்டுக் கொள்ளுங்கள்.

மேலும் அனாவசியமான ஆப்களை பின்னணியில் வைத்திருக்க வேண்டாம். அவை சார்ஜ் போடும் போது தாக்குப் பிடிக்க அதிக நேரம் சார்ஜ் செய்யும்படி நேரும். அத்தனை ஆப்களையும் அணைத்துவிட்டு, சார்ஜ் போடுவது உங்கள் ஸ்மார்ட்போனுக்கு நன்மை தரும்.

சிலர் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனதும்தான் சார்ஜ் போடுவார்கள். குறைந்தது 15 சதவிகிதம் இருக்கும்போதே சார்ஜ் போட்டுவிடுங்கள். இன்னும் சிலர் கொஞ்சூண்டு சார்ஜ் போட்டுக்கறேன் என அவசரத் தேவைக்கு 20 அல்லது 30 சதவிகிதம் போட்டு எடுத்துவிடுவர்கள். அது தவறு. போனில் குறைந்தபட்சம் 80 சதவிகிதம் அளவுக்காவது சார்ஜ் ஏறவேண்டும். அப்போதுதான் உங்கள் பேட்டரியின் செயல்திறன் சரியாக இருக்கும்.

]]>
Smart phone, mobile phone, cell phone, மொபைல், செல்போன், Charger, சார்ஜர் பிரச்னைகள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/18/w600X390/woman.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/mar/18/hints-for-using-charger-for-smartphones-2883069.html
2881872 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் காதல், கலப்புத் திருமண விவகாரங்களில் பெற்றோர்கள் சார்பாக ஒரு வார்த்தை பேசினாலும் அது சாதி துவேஷமா? கார்த்திகா வாசுதேவன் Friday, March 16, 2018 05:30 PM +0530  

'பெற்றோர் அனுமதியின்றி திருமணப் பதிவு இல்லை' என்ற இந்து திருமணப் பதிவுத்துறையின் அறிவிப்பு குறித்து நேற்று கனிமொழி ஒரு கருத்து தெரிவித்திருந்தார்! அதை தினமணி இணையதளத்தில் செய்தியாக்கியிருந்தோம். செய்தியை சமூக ஊடகங்களில் பகிரும் போது பகிர்பவர் அந்தச் செய்தி தொடர்பாக தமது கருத்தையும் ஒரு சிறு குறிப்புடன் பகிர்வது வழக்கம். அப்படிப் பகிர்ந்த போது அதற்கு கணிசமாகக் கண்டனங்கள் குவிந்திருந்தன. இதில் அதிர்ச்சியடைய ஏதுமில்லை, இன்று சமூக ஊடகங்களில் கருத்துரைக்கிறோம் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் சாடலாம் என்ற வசதி இருக்கிறதே. அதனால் இம்மாதிரியான வசைச்சொற்களுக்கெல்லாம் கட்டுப்பாடென்பதே இல்லாமலாகி விட்டது. அதில் சிலர், எது ஊடக தர்மம் என்று வகுப்பெடுக்காத குறை. 

சரி இப்போது நேற்று அந்தப் பதிவில் சாடியவர்கள், (சாடல் என்பதெல்லாம் நாகரீகமான வார்த்தை) சாடல் என்ற பெயரில் மிகக்கேவலமான சாக்கடைக் கருத்துக்களை அள்ளித்தெளித்தவர்களை என்ன செய்யலாம்? ஊடக தர்மத்தைப் பற்றிப் பேசுபவர்களுக்கு வாசக தர்மத்தைப் பற்றியும் கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டுமில்லையா? மிகச்சாதாரண வார்த்தைகளுக்கு அத்தனை மோசமான எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயமென்ன? எது உங்களை அப்படிச் செய்யவைக்கிறது?

இத்தனைக்கும் அதில் சொந்தக் கருத்தாகப் பகிர்ந்திருந்தது;

//பெற்றோரை அனுசரித்துப் புரிந்து கொள்ளச் செய்ய முடியாத காதலுக்கு திருமணத்தில் முடிய மட்டும் தகுதி உண்டா? இதனாலெல்லாம் சாதிமறுப்புத் திருமணங்கள் தடைபடுமென்பது அரசியல் ஆதாயத்திற்காகப் பேசுவதாகாதா?//  - என்ற கருத்து மட்டுமே,

இந்த வார்த்தைகளில் எங்கே மறைந்திருக்கிறது சாதி துவேஷம்? எங்கே துருத்திக் கொண்டிருக்கிறது மேதகு ட்விட்டர் புரட்சியாளர்கள் கர்ம சிரத்தையுடன் சுட்டிக்காட்டிய பார்ப்பானின் கொண்டையும், பூணூலும்?!

அந்த வாக்கியத்தில் தொனிப்பது பெற்றோர் மீதான பரிதாப உணர்வு மட்டுமே தவிர சாதீய துவேஷமல்ல. இதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் ஒவ்வொருவருக்கும் அவரவர் பெற்றோரின் மீது கொஞ்சமாவது அக்கறையும், நேசமும் இருக்க வேண்டுமே?! அவர்கள் எக்கேடு கெட்டால் என்ன? நான் திருமண விஷயத்தில் என் இஷ்டப்படி மட்டுமே முடிவு செய்வேன். அதனால் பெற்றோரது மனமுடைந்தால் என்ன? மார்பு வெடித்துச் செத்தால் என்ன? என்று தன்னலமே பிரதானமாக சுயநலத்தில் உழல்பவர்களுக்கு எப்படிப் புரியும்?!

இந்த உலகம் பிள்ளைகளின் காதலை எதிர்ப்பதை வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட பெற்றோர்களால் மட்டுமே நிரம்பியதல்ல.

தங்களது வாழ்நாள் முழுமையையும் பிள்ளைகளின் நல்வாழ்வுக்காகவும், எதிர்கால முன்னேற்றங்களுக்காகவும் அர்ப்பணித்து விட்டு அவர்களது வளர்ச்சியைக் கண்டு இன்புறும், நிம்மதியடையும் பெற்றோர்களாலும் நிரம்பியது தான். அவர்களின் சார்பாக ஒரு வார்த்தை பேசினால் அதை சாதி துவேஷம் என்பீர்களா? அப்படிச் சொன்னால் தானே அவர்கள் மேலே பேச மாட்டார்கள், சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் தம் மீது விழும் சாக்கடை விமர்சனங்களுக்குப் பயந்து கொண்டு ஒதுங்கிச் செல்வார்கள் என்ற விஷமத்தனமான குயுக்தி தானே இது. 

உண்மையைச் சொல்லுங்கள், உங்களில் எத்தனை பெற்றோர், உங்களது பிள்ளைகள் காதல் என்ற பெயரில் வேற்று மதத்தினரை, அயல் ஜாதியினரை மட்டுமல்ல சொந்த ஜாதியினரையே கூட திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வந்து நிற்கும் போது உடனே எந்தக் கேள்வியுமின்றி கை தட்டி வரவேற்று அதை அப்படியே ஏற்றுக் கொண்டவர்களாக இருப்பீர்கள்? இருந்தீர்கள்? என மனசாட்சியுடன் நேர்மையாகப் பதிலளியுங்கள்.

இந்தக் கேள்விக்கு, இந்தியப் பெற்றோரில் பலர் எடுத்ததுமே; நிர்தாட்சண்யமாக ‘இல்லை... ஒருக்காலும் இல்லை’ என்று பதிலளிக்கலாம். உடனே அதற்குக் காரணம் சாதி வெறி, மத வெறி என்று முடிவு கட்டாதீர்கள் அவசரக் குடுக்கைகளே! பயம், இதுவரை தாங்கள் அனுசரித்து வந்த பழக்க வழக்கங்களுக்கு முற்றிலும் வேறான பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள், சடங்குகளைக் கொண்ட மற்றொரு சாதியை, மதத்தைச் சேர்ந்த மணமகனையோ, மணமகளையோ எப்படி ஏற்றுக் கொள்வது? காதலால் இணைந்தவர்கள் திருமண வாழ்வின் பின் சேர்ந்து வாழும் போது ஒருவரையொருவர் அனுசரித்து சண்டை சச்சரவின்றி மனக்கசப்பின்றி வாழ முடியுமா? என்ற பயமும், சந்தேகமும், தயக்கங்களும் தான் எடுத்த எடுப்பில் பெரும்பாலான பெற்றோரை காதல் திருமணம் என்றதுமே அதற்கு மறுப்புத் தெரிவிக்க வைக்கிறது.

இதை ட்விட்டர் புரட்சியாளர்கள் மறுக்கிறீர்களா?

ஜாதி, மதம் எல்லாம் ரெண்டாம் பட்சம்; 

காதல் என்றாலே பெற்றோர் மனதில் முதற்கட்டமாக எழுவது தயக்கமும் எதிர்ப்பும் தான். காரணம் தங்களது பிள்ளைகள் அவர்களுக்குப் பொருத்தமான இணைகளைத் தாங்களாகத் தேடிக் கொள்ளும் அளவுக்கு பக்குவம் வாய்ந்தவர்களா? மனமுதிர்ச்சி கொண்டவர்களா? அல்லது நாளை மணவாழ்வில் ஏதேனும் பிரச்னை வரும் போது எடுத்தேன், கவிழ்த்தேன் என்று ஏடாகூடமாகச் செய்து வைத்து விட்டு மனமுறிவென்று தங்களது வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்வார்களோ என்ற அச்சமும், சஞ்சலமும் தான். திருமண விஷயத்தில் மட்டுமல்ல படிப்பு, வேலை, சொந்தங்கள் மற்றும் நட்புகளுக்குள் உறவுகளை மேம்படுத்திக் கொள்வது என வாழ்வின் பிற விஷயங்களிலும் கூட வயதுக்கேற்ற பக்குவத்துடனும், மன முதிர்ச்சியுடனும் முடிவெடுத்து தாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக நிற்கும் பிள்ளைகளின் முடிவுகளை பெற்றோர் எப்போதும் எதிர்க்க நினைப்பதில்லை. சில குடும்பங்களில் பெற்றோர் ஆரம்பத்தில் குடும்பப் பெருமை, அந்தஸ்து, சாதி என்று அடம்பிடித்தாலும் தங்களது காதலைப் போலவே பெற்றோரது அப்பழுக்கற்ற அன்பையும் புறக்கணிக்க விரும்பாத பிள்ளைகளின் பிடிவாதத்தையும், காத்திருப்பையும் அவர்கள் புரிந்து கொள்ளத்தான முயல்கிறார்கள். இல்லாவிட்டால் பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும் கலப்பு மணங்களின் விகிதம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்ல வாய்ப்பில்லையே.

பிள்ளைகள் காதலிப்பதில் தவறே இல்லை. காதல் அழகான விஷயம். அது காதலாக இருக்கும் வரை. எப்போது அதில் சாதி உணர்வு நுழையத் தொடங்குகிறதோ அப்போதே அது தனது அழகியல் உணர்வை இழந்து வன்முறையின் பக்கம் சாயத் தொடங்கி விடுகிறது. 

சாதி மாறியோ, மதம் மாறியோ திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் தத்தமது பெற்றோரின் அனுமதிக்கு காத்திருந்தால் என்ன தவறு? காத்திருந்து கண்ணியமாகத் திருமணம் செய்து கொள்வது காதலுக்கு அழகில்லை என்று சொல்ல முடியுமா? பிள்ளைகளின் மீது அக்கறை கொண்ட, தமது பிள்ளைகளின் நல்வாழ்வின் மீது அக்கறை கொண்ட பெற்றோர் பிள்ளைகளின் காதலில் உண்மையும், நேசமும் நிஜமாகவே இருந்தால் நிச்சயம் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளத்தான் செய்வார்கள், செய்கிறார்கள். இதற்கு சிறந்த வாழ்வியல் உதாரணங்களாகப் பலர் இருக்கின்றனர். எல்லாப் பெற்றோர்களுமே ஆணவக் கொலை செய்ய நினைப்பவர்கள் அல்ல. தங்களது பிள்ளைகள் காதலில் விழுந்திருப்பின் எப்பாடுபட்டாவது அதை உடைத்து உருக்குலைந்து போகச் செய்ய வேண்டும் என நினைப்பவர்களும் அல்ல. காதலுக்கு உரிய மரியாதை செய்து அதை ஏற்றுக் கொள்ள நினைப்பவர்களும் நம்மிடையே கணிசமாக இருக்கிறார்கள்.

பிள்ளைகள் காதல் என்று வந்து நின்றவுடன் உடனே எந்தக் கேள்வியும் கேட்காமல் பெற்றோரால் அந்தக் காதல் ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று நினைப்பது சுயநலமானதில்லையா? உங்களது காதல் தெய்வீகக் காதல் என்றால், அந்தக் காதலை பெற்றோர் உணர்ந்து கொள்ள அவர்களுக்கு அவகாசம் தர வேண்டும், அதற்காக பிள்ளைகள் காத்திருக்க வேண்டும். தங்களது காதலின் மீதான நியாயத்தைப் பெற்றோருக்குப் புரிய வைக்க வேண்டும். அதற்காக பெற்றோரை அனுசரித்து பொறுமை காக்க வேண்டும் என்று சொன்ன கருத்தில் பிழை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

தங்களது பிள்ளைகளுக்குப் பொருத்தமான மனைவியையோ, கணவனையோ தேடித்தருவது அவர்களைப் பெற்றெடுத்து இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர்களான தாங்களாகவே இருக்க வேண்டும் என்ற பெற்றோர்கள் நினைப்பதொன்றும் பேராசை இல்லையே. காலம்காலமாக நமது இந்து திருமணமுறைகளில் பின்பற்றப்பட்டு வரும் முறை தானே இது. இதில் சில திருமணங்கள் ஆஹா, ஓஹோவென்ற வெற்றியடைந்திருக்கலாம். சில திருமணங்கள் மிக மோசமாகத் தோல்வியிம் அடைந்திருக்கலாம். அதற்காக பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணங்கள் இன்றைய காலகட்டத்துக்கு ஒத்து வராதவை என்று முற்றாகக் ஒதுக்கி விட முடியாதே. அது மட்டுமல்ல, பல குடும்பங்களில் இன்று காதல் திருமணங்களுக்கும் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. தங்கள் மகனோ, மகளோ விரும்பக் கூடிய நபர்கள் நல்லவர்கள், தங்களது குடும்பத்தோடு பொருந்திப் போகக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை ஏற்படுமாயின் அத்தகைய திருமணங்களை பெற்றோரே ஏற்றுக் கொண்டு சிறப்பாக நடத்தி வைக்கக் கூடிய காட்சிகளையும் நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்.

இங்கே பிரச்னை காதலிலோ, கலப்பு மணங்களிலோ இல்லை. மனிதர்களின் மனங்களில் தான்.

காதல், கலப்புத் திருமணங்களில் மட்டுமல்ல பெற்றோர்கள் பார்த்துச் செய்து வைக்கும் திருமணங்களிலும் கூட... திருமணம் என்பது இரு வீட்டார் உறவை பலப்படுத்துவதாக, திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கப்போகும் ஜோடிகளுக்கு இரண்டு தரப்பிலுமாகச் சேர்த்து மேலும் பல உறவினர்களையும், நட்புகளையும் ஏற்படுத்தித் தரக்கூடிய ஒன்றாக அமைய வேண்டும். அப்படியின்றி எடுத்த எடுப்பில் கொடும் பகையையும், வன்மத்தையும், நீ பெரிதா? நான் பெரிதா? உன் ஜாதி, மதம் பெரிதா? என் ஜாதி, மதம் பெரிதா? என்று பலப்பரீட்சை செய்து கொள்ள உதவும் ஒன்றாக அமைந்து விடக்கூடாது. அத்தகைய வன்மத்தில் அமையும் திருமணங்களில் கடைசி வரை மணமக்களுக்கு நிம்மதி என்பதே இல்லாமலாகி விடும். திருமணம் வெற்றிகரமாக முடிந்த போதிலும் கூட இருவீட்டார் சம்மதமின்றி இணையும் மணமக்கள் இருவரில் எவரோ ஒருவர் நிச்சயம் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.

இத்தகைய சிக்கல்கள் இருப்பதை சுட்டிக் காட்டும் விதமாக காதலர்கள் காத்திருந்து தங்களது காதலைப் பெற்றோர்களுக்குப் புரிய வைத்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற பொருளில் பெற்றோர் சார்பாகப் பேசியதை தவறெனப் பொங்குவது சுயநலமானது மட்டுமல்ல தவறான புரிதலும் கூட!
 

]]>
காதல் கலப்புத் திருமணங்கள், பெற்றோர் அனுமதி, சட்டம், love intercaste marriages, parents permission, law, legal support http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/16/w600X390/marriage.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/mar/16/inter-caste-marriages-if-i-talk-on-behalf-of-parent-side-is-it-a-caste-religious-hysteria-2881872.html
2881218 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ‘நோ’ சொல்லும் பெண்களை கழுத்தறுத்துக் கொன்று விடும் கலாச்சாரம்! அஸ்வினி கொலைக்கான நீதி என்ன? RKV DIN Thursday, March 15, 2018 05:23 PM +0530  

சுவாதி கொலையைப் போலவே அஸ்வினி கொலை எழுப்பிய திகிலும் பரபரப்பும் அவ்வளவு தானா?

கடந்த வாரம் சென்னை மீனாட்சி கல்லூரி வாயிலில் வைத்து அழகேசன் என்பவனால் குத்திக் கொல்லப்பட்ட மாணவி அஸ்வினி குறித்துப் பேசுவதை ஊடகங்கள் நிறுத்திக் கொண்டன. ஊடகங்களுக்கு அடுத்த பரபரப்புச் செய்தியாக தேனி குரங்கணி காட்டுத்தீ சிக்கிவிட்டது. இன்று புரட்சித் தலைவர் டிடிவியார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கி அடுத்த பரபரப்பை கிளப்பியிருக்கிறார். ஊடகங்கள் இப்படி பரபரப்புச் செய்திகளின் பின்னால் ஓடுவதில் தவறில்லை. ஆனால், முக்கியத்துவம் அளிக்க வேண்டிய செய்திகளை மறக்கடிக்கும் அளவுக்கு அடுத்தடுத்த செய்திகளைக் கடைபரப்பி சாதாரண பொது ஜனங்களின் மூளையை மழுங்கடிக்க முயற்சிக்கக் கூடாது. 

ஒரு இளம்பெண், தான் பயின்று கல்லூரி வாயிலில் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார். குத்திய இளைஞனுக்கும் அவளுக்கும் முன்பு காதல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் ஒருவரையொருவர் விரும்பிய நிலையில் அந்த இளைஞனின் போக்கு அஸ்வினிக்குப் பிடிக்காமல் போனதால், அவரை விட்டுப் பிரிய நினைக்கிறார். அதற்குள், அந்த இளைஞன் கட்டாயத்தாலி கட்டியதால் அதை வீசி எறிந்த அஸ்வினி விஷயத்தை தனது அம்மா மற்றும் உறவினர் கவனத்துக்கு எடுத்துச் செல்கிறார். அவர்கள் அழகேசனைக் கூப்பிட்டுக் கண்டிக்க காவல்துறையை நாடுகிறார்கள். காவல்துறை பஞ்சாயத்தில் அழகேசன் எச்சரிக்கப்பட்டு அஸ்வினியின் வாழ்வில் தலையிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் வெளியில் விடப்படுகிறான். இத்தனையும் ஐந்தாறு மாத இடைவெளியில் நடந்து முடிகிறது. 

காவல்துறை எச்சரிக்கைக்குப் பிறகும் கூட அஸ்வினிக்கு அழகேசனால் தொல்லை இருந்திருக்கிறது. அதனால் தான், தனது வீடு இருந்த மதுரவாயல் பகுதியில் இருந்து நுங்கப் பாக்கத்தில் இருக்கும் பெரியப்பா வீட்டுக்கு அனுப்பி வைக்கப் பட்டிருக்கிறார் அஸ்வினி. சம்பவ தினத்தன்று கூட அங்கிருந்து தான் கல்லூரிக்கு வந்திருக்கிறார். ஆனால் மீண்டும் வீடு திரும்ப வகையின்றி விதி அழகேசன் ரூபத்தில் அவரது வாழ்வை முடித்து விட்டது.

மக்கள் நடமாட்டம் நிறைந்த கேகே நகர்ப் பகுதியில், பிரபலமான ஒரு பெண்கள் கல்லூரி வாயிலில் வைத்து நிகழ்த்தப்பட்ட இந்தக் கொலைக்கான பரபரப்பு இன்று ஓய்ந்து விட்டிருக்கலாம்.ஆனால் அது பெண்கள் மத்தியில் எழுப்பிய அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதில் இந்தச் செய்தியை சமூக ஊடகங்களில் பகிர்ந்த போது அதற்கு வந்த கருத்துக்களில் சில மேலும் அதிர வைக்கின்றன.

பெண் பெயரிலான ஒரு முகநூல் கணக்கிலிருந்து வந்திருந்த கருத்துரை இது;

அஸ்வினியைக் கொன்றால் தப்பில்லை என்று பொங்கியிருக்கிறார் இவர். 

காதலித்திருந்தாலும் கூட ஒரு பெண் தனக்குப் பிடிக்காத ஆணை சகித்துக் கொள்ளத்தான் வேண்டுமா? அந்த உறவிலிருந்து வெளிவர அவளுக்கு உரிமையில்லையா? அஸ்வினி செய்தது அதைத்தானே? சொல்லப்போனால், இந்த உலகில் லட்சோப லட்சம் ஆண்கள் தங்களது வாழ்வில் முன்பும், இப்போதும் செய்து கொண்டிருக்கும் அதே புறக்கணிப்பை அல்லது விருப்பமின்மை உணர்வைத்தானே அஸ்வினியும் காட்டினார். பிறகு அவர் மட்டும் ஏன் கொல்லப்பட வேண்டும்?! இதிலிருந்து அழகேசனையொத்த ஆண்களின் உலகம் நிறுவ நினைப்பது எதை?!

உனக்குப் பிடித்திருக்கிறதோ, இல்லையோ ஒருமுறை ஒருவனைக் காதலிக்கத் தொடங்கி விட்டால் அவன் நல்லவனோ, கெட்டவனோ அவனுடன் தான் வாழ்ந்தாக வேண்டும், இல்லாவிட்டால் கொலை செய்யப்படுவீர்கள் என்ற வன்முறையையையா? மறுக்கும் உரிமை ஒரு பெண்ணுக்கு இல்லையா? பிறகு ஏன் அவனைக் காதலித்தாள் அஸ்வினி என்று கேட்டு விடாதீர்கள்? அந்தப் பெண்ணுக்கு முதிர்ச்சியான வயதில்லை. 17 வயதில் தனக்குப் பொருத்தமான வாழ்க்கைத் துணையை தேடிக் கொள்ளும் அளவுக்கு அவருக்கு மனமுதிர்ச்சி இல்லை.

எல்லா இளம்பெண்களையும் போலவே அஸ்வினியும் தான் வாசித்த ரொமாண்டிக் நாவல்களில் இருந்தும், பார்த்த சின்னத்திரை நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் இருந்தும் கூட தனக்கான காதலின் இலக்கணத்தை தவறாகப் புரிந்து கொண்டிருந்திருக்கலாம். அப்படியான நிலையில் அவர் வீட்டு வேலை செய்யும் தனது தாயாரின் விருப்பத்தின் பேரில் தனக்கென பிறிதொரு நல்ல வாழ்க்கையைத் தேடிக் கொள்ள விரும்பியதை எப்படித் தவறெனக் கூற முடியும்? இந்த உலகில் காதல் மட்டுமே மொத்த வாழ்க்கையுமாக ஆகி விட முடியாது. அதைத் தாண்டியும் ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. 

காதல் வெற்றிகரமாகக் கல்யாணத்தில் முடிய வேண்டும்.

பிறகு இணைந்து வாழ வேண்டும். இந்த இணைந்து வாழ்தல் எனும் நிலை வரும் போது தான் இருவரது சுயரூபங்களும் வெளியில் வரும். நீ எனக்குப் பொருத்தமில்லை, போயும் போயும் உன்னைப் போய்த் திருமணம் செய்தேன் பார்?! எனக்குப் பொருத்தமானவனா நீ? என்று சாஃப்டாகத் தொடங்கி பாலாவின் நாச்சியார் படத்தில் பயன்படுத்தப்பட்ட கண்டனத்திற்குரிய வசைச் சொல் வரை எல்லாமும் இருவருக்குள்ளும் பரிமாறப்பட்டு சில ஜோடிகளில் சண்டை தூள் பறக்கலாம். இந்த புருஷன், பெண்டாட்டி சண்டை சச்சரவுகள் எல்லாம் காதல் திருமணத்தில் மட்டுமா? ஏன் பெற்றோர்கள் பார்த்துச் செய்து வைக்கும் திருமணங்களில் இல்லையா? என்று கேட்கலாம். இருக்கிறது... அங்கும் சண்டை, சச்சரவுகள் நிறையவே இருக்கத்தான் செய்கிறது. அதனால் தான் குடும்ப நல நீதிமன்றங்கள் நாள் தோறும் நிரம்பி வழிகின்றன. 

மொத்தத்தில் காதலித்த பெண்ணோ அல்லது கட்டிய மனைவியோ ஒரு ஆணை ஏன் வெறுக்கத் தொடங்குகிறாள்? என்று ஆராய்ந்தாலே போதும் இப்படியான கொலைகளுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டி விடலாம். ஆனால், ஆண்கள் யோசிக்க மறுக்கிறார்கள். காதலிக்கும் போதும் சரி, அந்தக் காதல் கல்யாணத்தில் முடிந்து இல்லறத்தின் போதும் சரி ஆணின் தவறுகளை எல்லாம் அனுசரித்து விட்டுக் கொடுத்து அவனது கோபதாபங்களுக்கு இலக்காகி சாப்பாடு முதல் படுக்கை வரை சகல விஷயங்களிலும் அவனது விருப்பங்களுக்கு ‘நோ’ சொல்லாமல் காலம் தள்ளும் பெண்களை மட்டுமே அவர்கள் பெண்மையின் இலக்கணமாகக் கருதுகிறார்கள். அப்படியில்லாமல் ஒரு பெண், காதலியாக இருக்கும் போதும் சரி, கல்யாணத்திற்குப் பின் மனைவியாக இருக்கும் போதும் சரி, காதலனது, கணவனது குறைகளை அடையாளம் கண்டு அவனோடு வாழ மறுத்தால் கழுத்தறுத்தோ, அரிவாளால் வெட்டியோ, மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தோ கொலை செய்து விட வேண்டியது தானா?

காதலிக்கும் பெண்ணோ அல்லது மனைவியோ நம்பிக்கைத் துரோகம் செய்வதாக ஆண்களுக்குத் தோன்றினால் இடையில் வேறு பேச்சுக்கே இடமின்றி அந்தப் பெண்ணை கொல்வது தான் நீதியா?

காதலித்த பெண் காதலை மறுத்தால் கொலை என்பது இங்கு முதல்முறையல்ல. பலமுறை தமிழ்நாட்டில் இந்தக் கொடூரங்கள் அரங்கேறி இருக்கின்றன. 

அஸ்வினியின் கல்விச் செலவுக்காக சுமார் 2.50 வரை அழகேசன் செலவளித்ததாக ஒரு வீடியோ பதிவில் கூறப்பட்டிருக்கிறது. அந்தப் பெண் இப்போது தான் கல்லூரி முதல் வருடம் படிக்கிறார். பி.காம் பொருளாதாரம் பயில 27,000 தான் கல்லூரிக் கட்டணம் அதை நானோ அவளது பெரியப்பாக்களோ கட்டியிருக்க மாட்டோமா? எப்படி இப்படியெல்லாம் பொய் சொல்கிறார்கள்? என் மகளுக்கு நான் தான் கல்லூரிக் கட்டணம் செலுத்தினேன் என்று அழுது புரள்கிறார் அஸ்வினியின் தாய். அப்படியே அஸ்வினி அழகேசனை காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றி இருந்தாலும் பதிலுக்கு அவரது உயிரைப் பறிப்பது எந்த விதத்தில் காதலில் சேர்த்தி? குறைந்த பட்ச மனிதத் தனம் கூட இல்லையே அவரது செயலில், இப்படி ஒரு மனிதனைத் திருமணம் செய்து கொள்ள மறுத்ததில் என்ன தவறிருக்க முடியும்?

இனி என்ன கேள்வி கேட்டு என்ன? பரிதாபமாக கல்லூரி வாயிலில் வைத்து துள்ளத் துடிக்கப் பறிபோன உயிர் பறிபோனது தான்.

முடிவாக தமிழகத்தில் காதலை மறுக்கும் பெண்களை இப்படித்தான் தண்டிக்க வேண்டும் என்றொரு கலாச்சாரம் பரவ இது ஒரு முன்னுதாரணமாகி விடக் கூடாது என்ற அச்சம் மட்டுமே மிஞ்சுகிறது.

]]>
aswini murder, The culture of killing women who say no!, அஸ்வினி கொலை, காதல் மறுப்புக் கொலைகள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/15/w600X390/Aswini-Chennai-Stalking.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/mar/15/the-culture-of-killing-women-who-say-no-2881218.html
2881210 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் நூறு ரூபாய் கள்ளன் என்றொரு வீடியோ! கார்த்திகா வாசுதேவன் Thursday, March 15, 2018 04:14 PM +0530  

யூ டியூபில் இப்படி ஒரு வீடியோ காண நேர்ந்தது. இது போன்ற சின்னச் சின்னத் திருட்டுக்களை விவரிக்கும் வீடியோக்கள் பல அதில் உண்டு. ஒவ்வொன்றும் பார்க்க நேர்கையில் ஒரு நொடி துணுக்குறச் செய்வதாகத் தான் இருக்கின்றன இந்த வீடியோக்கள். இப்படியெல்லாமா ஏமாற்றத் தோன்றுகிறது மனிதர்களுக்கு? அந்த 100 ரூபாயை வைத்துக் கொண்டு அவரென்ன அம்பானி மாளிகையா கட்டி விடப்போகிறார்? ஆனாலும் ஏமாற்றத் தோன்றுகிறதே அந்த உணர்வை என்னவென்று சொல்ல? மனசாட்சி என்ற ஒரு வஸ்துவை மொத்தமாக குரல்வளையை நெரித்துக் கொன்று விடுவார்கள் போல.

 

கூடையில் வைத்து தலைச்சுமையாக மீன் விற்று வரும் நடுத்தர வயதுப் பெண்மணி, தள்ளுவண்டியில் காய்கறி விற்பவர்கள், மளிகைக் கடைக்காரர்கள் எல்லாம் சிக்கனத்துக்குப் பேர் போனவர்களே தவிர அவரவர் வாடிக்கையாளர்களிடம் கூடுமான வரை நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற உணர்விருப்பவர்கள் தான்.

வாங்கிச் சென்ற தேங்காயை வீட்டுக்குச் சென்ற பின் உடைத்துப் பார்க்கையில் அழுகி இருந்தால் அப்படியே எடுத்துச் சென்று காண்பித்தால் வேறு தேங்காய் மாற்றிக் கொள்ளலாம். தேங்காய் என்றில்லை, வீட்டருகில் இருக்கும் சிறு, குறு மளிகைக் கடையில் வாங்கிய எந்தப் பொருளையும் உங்களால் இப்படி எக்சேஞ்ச் செய்து கொள்ள முடியும். அதே பெரிய டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்களை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அவர்களது ரெகுலர் வாடிக்கையாளராக இருந்த போதிலும் கூட வாங்கிய பொருட்களில் சேதாரம் என்றால் மனம் பிடியாத மங்கம்மாக்களாகத் தான் பொருட்களை ரிட்டர்ன் எடுத்துக் கொள்வார்கள். கேட்டால் ‘ ஒரு முறை வாங்கிய பொருட்களை ரிட்டர்ன் எடுப்பதில்லை’ என ரூல்ஸ் பேசுவார்கள். அப்படியானவர்களிடம் கடைக்காரர்களை விட வாடிக்கையாளர்களான நாம் தான் பெரும்பாலும் ஏமாற்றப்படுகிறோம். அங்கெல்லாம் நாம் வாயைத் திறப்பதில்லை.

ஆனால், தள்ளுவண்டிக்காரர்கள் எடை இழுக்க இழுக்க ஒன்றிரண்டு தக்காளிகளை கூடுதலாக தட்டில் போட்டாலும் திருப்தி அடையாது பேரம் பேசி மேலுமொரு தக்காளியையோ, வெங்காயத்தையோ, கேரட்டையோ வாரிக் கூடைக்குள் போட்டுக் கொள்ள முடியாவிட்டால் பிறகு அந்த எளிய வியாபாரியைப் புறக்கணித்து விடுவோம். அவரிடம் அல்லது அவளிடம் மறுநாளில் இருந்து வாடிக்கையாளர் உறவை ரத்து செய்து விட்டு நமது எளிய திருட்டைக் கண்டு கொள்ளாத வேறொரு வியாபாரியைத் தேடிக் கண்டு பிடித்து விடுவோம். அத்தனை சாமர்த்தியம் நம்மில் பலருக்கு உண்டு.

வியாபாரம் படிய பேரம் பேசுவது முக்கியம் தான். சில சமயங்களில் ஆரோக்யமானதும் கூட. ஆனால் அந்த பேரம் பேசும் மனநிலை நியாயமான வர்த்தகங்களில் இருக்க வேண்டும். இப்படி சிறு வியாபாரிகளை ஏமாற்றுவதாக இருக்கக்கூடாது. பேரம் பேசுவதிலேயே இப்படி நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற விதி இருக்கையில் பொருளை வாங்கி விட்டு அதற்கான விலையைத் தராமல் அதிலும் 100 ரூபாயை ஒளித்து வைத்துக் கொண்டு கடைக்காரப் பையனை மறுபடியும் எண்ணிப் பார்க்கச் சொல்லும் இந்த குள்ளநரித்தனமான ஏமாற்று வேலையை அந்தக் கடைக்காரர்கள் கண்டுபிடித்திருந்தால் ஏமாற்றிய அந்த நபர் கையும் களவுமாகப் பிடிபட்டு கேவலப்பட்டிருப்பார். ஆனால், தனது ஏமாற்றுத் தனத்தை, திருட்டை யாரும் பார்க்கவில்லை என்ற மனநிலை தான் அவரை மேலும் மேலும் இப்படி நடந்து கொள்ளச் செய்கிறது.

இந்த மனநிலை தான் மேற்கண்ட கள்ளத்தனத்துக்கு மூல காரணமாகிறது. அதைத் தவிர்த்து விட்டால் எல்லா மனிதர்களும் நல்லவர்கள் தான். அப்புறம் நாடு சுபிட்சமாகி விடும்.
 

]]>
சிறு திருடர்கள், கள்ளன், வாடிக்கையாளர், கடைக்காரர், 100 rs kallan, customer shop owner relationship, theft http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/15/w600X390/100_rs_kallannn.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/mar/15/peoples-theft-mentality-100-rs-kallan-video-2881210.html
2880498 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் ‘ரங்கம்மா பாட்டி’ வாய்ப்புக் கிடைக்கவில்லை எனத் தற்கொலைக்கு முயலும் நடிகர், நடிகைகளுக்குச் சிறந்த பாடம்! சரோஜினி Thursday, March 15, 2018 11:17 AM +0530  

வடிவேலுவின் டிரேட் மார்க் காமெடிகளில் ‘ந்தா அந்த நாயக் கொஞ்சம் சூன்னு வெரட்டிட்டுப் போ’ என்று மாவாட்டிக் கொண்டே சொல்லும் பாட்டியை நினைவிருக்கிறதா?

அவரை நீங்கள் பல திரைப்படங்களில் கண்டிருக்கலாம், ஆனால் எத்தனை பேருக்கு அவரது பெயர் தெரிந்திருக்கக் கூடுமெனத் தெரியவில்லை. இப்படித்தான் சில ஜீவன்களைப் பல திரைப்படங்களில் நாம் காண நேர்ந்திருந்த போதும் அவர்களைப் பற்றிய அடையாளமெதுவும் நமக்கு நினைவிருப்பதே இல்லை. இப்படித் தமிழ் சினிமாவில் பெயரற்றுப் போய் வெறும் காட்சிப் பதிவாக நமது நினைவில் நிற்பவர்கள் அனேகம் பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரே இந்த ரங்கம்மா பாட்டி. 

ராகவா லாரன்ஸுடன் காஞ்சனா 3, சரத் குமாருடன் ஏய், ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் என மூத்த ஸ்டார் நடிகர்களுடன் எல்லாம் சில படங்களில் நடித்திருந்த போதும் இந்தப் பாட்டியை நாம் நிறைவாக அடையாளம் கண்டு கொண்டது வடிவேலு காமெடிக் காட்சிகளில் தான் அதிகம் எனலாம். ரஜினி, கமல் மட்டுமல்ல எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதாவுடன் கூட இந்தப் பாட்டி நடித்திருக்கிறாராம்.

தற்போது 86 வயதாகும் இந்த ரங்கம்மா பாட்டிக்கு நடிப்பு தான் உயிர்மூச்சு. ஆனால் நடிப்பை மட்டுமே நம்பியிருந்திருந்தால், சமயங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைக்காத நேரங்களில் எல்லாம் தனது 12 பிள்ளைகளை எப்படி வளர்த்திருக்க முடியும்?! எனவே கையோடு ஒரு பையை வைத்துக் கொண்டு சோப்பு, சீப்பு, கவரிங் நகைகள், மினி பேட்டரி, என்று சிறு, சிறு பொருட்களையும் தேவைப்படுவோருக்கு விற்பனை செய்து வருகிறார். இது ஆரம்பம் முதலே இவருக்கிருந்த வழக்கமாம். நடிப்பதற்காக படப்பிடிப்புக்குச் செல்வதாக இருந்தாலும் இந்தப் பை பாட்டியோடு தான் இருக்கும். சமயம் கிடைக்கும் போதெல்லாம் தனது மினி ஸ்டோரைக் கடைபரப்பி தேவைப்படுவோருக்கு விற்பனை செய்வது இவரது வாடிக்கை. படப்பிடிப்புத் தளங்களில் மட்டுமல்ல, மெரினா பீச்சிலும் இந்தப் பாட்டி வியாபாரம் செய்து வருகிறார். வாடிக்கையாளர்கள் எவரேனும் இவரை அடையாளம் கண்டுகொண்டு விசாரிப்பது சர்வசாதாரணம். அப்படி ஒருமுறை பாட்டி பீச்சில் இப்படி துண்டு, துக்கடா பொருட்களை விற்றுக் கொண்டிருந்ததைக் கண்டவர்களில் எவரோ ஒருவர்;

வடிவேலுவுடன் காமெடிக் காட்சிகளில் இணைந்து நடித்த பாட்டியை குடும்பத்தினர் கைவிட்டுவிட்டதால், பாட்டி மெரீனாவில் பிச்சையெடுத்து வருகிறார் என சமூக ஊடகங்களில் கொளுத்திப் போட அதில் பாட்டிக்கு ரொம்பவே மன வருத்தம்.

இந்த 86 வயதிலும், ‘உழைத்து வாழ வேண்டும்’ என்று மன உறுதியோடு நான் எனது நடிப்போடு சேர்த்து இந்த வேலையையும் கைவிடாமல் இருந்தால், இப்படியா புரிந்து கொள்ளாமல் வதந்தி பரப்புவது?! என்று வருந்துகிறார். எம்ஜிஅர் திரைப்படங்களில் சிறு, சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கையில் அவரது வீட்டுக்கு அடிக்கடி செல்லும் வாய்ப்பு ரங்கம்மாவுக்கு கிடைத்ததால் எம்ஜிஆரும், ஜானகியும் இவருக்குப் பொருளுதவு செய்ததுண்டாம். ரஜினியுடன் நடிக்கையில் அவரும், சரத்குமாருடன் நடிக்கையில் அவரும் கூட சிறிதளவு பொருளுதவி செய்திருக்கிறார்கள் என்று கூறும் ரங்கம்மா பாட்டி, தான் யாரிடமும் இதுவரை எனக்கு உதவி செய்யுங்கள் என்று போய் நின்றதில்லை என்கிறார். அவர்களாக என்னை அழைத்து; என் வயதை உத்தேசித்து ஏதாவது உதவி செய்திருக்கிறார்கள். அவ்வளவு தான். நான் எம்ஜிஆரிடம் வளர்ந்த பெண் என்பதால், அவரது ‘உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே’ எனும் கொள்கையில் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்கிறார்.

தொடர்ந்து இப்போதும் திரைப்படங்களில் நடித்து வரும் ரங்கம்மா பாட்டிக்கு, திரைப்படங்களில் தனக்கு எந்த விதமான காட்சிகள் கிடைத்தாலும் சரி. தான் நடித்துக் கொண்டே இருந்தால் போதும் என்ற மனநிலை தான் எப்போதும் வாய்த்திருக்கிறதாம். வசனமே இல்லாமல் சும்மா தெருவைக் கடக்கும் ரோல் என்றாலும் கூட தனக்கு ஆட்சேபணையோ, மனவருத்தமோ இருந்ததில்லை என்கிறார். இந்தப் பாட்டியைப் பார்க்கையில், தற்போது தொடர்ந்து திரைப்படங்களிலும், சின்னத்திரையிலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் சரிவரக் கிடைக்காத காரணத்தால்  மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளும் இளம்தலைமுறை நடிகர்கள் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. 

நடிப்பு மட்டுமே தொழில் இல்லை. நடிக்க வாய்ப்புக் கிடைக்காத நேரங்களில் நமது செலவுகளைச் சமாளிக்க வேறு ஏதேனும் தொழிலைக் கற்றுக் கொள்வதை விட்டுவிட்டு மன உளைச்சலால் உயிரையே மாய்த்துக் கொள்வதைக் காட்டிலும் இந்தப் பாட்டி போல பீச்சில் பொருட்கள் விற்பது எந்தவிதத்திலும் தரக்குறைவு அல்ல!

வாய்ப்புக் கிடைக்கவில்லை எனத் தற்கொலை செய்வதானால் தமிழ்த்திரையுலகில் முதலில் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டியவர் நடிகை சச்சு தான் என்று சிவகுமார் தனது சுயசரிதையான ‘ராஜ பாட்டையில்’ குறிப்பிட்டிருப்பார். அதாவது ஆரம்ப காலப் படங்களில் நடிகை ‘சச்சு’ அறிமுகமானது கதாநாயகியாகத்தான். ரோஜா மலரே, ராஜகுமாரி, மலரென்ற முகமின்று சிரிக்கட்டும், மனமென்ற கருவண்டு பறக்கட்டும்’ பாடல்களை மறக்க முடியுமா?

ஆனால்... என்ன செய்ய? காலம் மாறியதில் சச்சு காமெடி நடிகையாகி விட்டார். அதற்காக அவர் மனமொடிந்து போகவில்லை. தனது திரைவாழ்வில் கிட்டத்தட்ட எதிர்நீச்சலிட்டு காமெடியிலும் தனக்கென ஓரிடத்தை தக்க வைத்துக் கொண்டார். சினிமா வாழ்வைப் பொறுத்தவரை கதாநாயகிகளை விட காமெடி நாயகிகளுக்கு திரைவாழ்வில் ஆயுள் அதிகம். இதோ, சச்சுவுடன் நடித்தவர்கள் எல்லாம் காலாவதியாகி விட அவர் இப்போதும் பிஸியாக நடித்துக் கொண்டு தான் இருக்கிறார். இவரைப் போன்றவர்களுக்கு வெட்டியாக இல்லாமல், செய்வதற்கு வேலை இருந்தால் போதும். அந்த வேலையில் தங்களுக்கான கெளரவத்தை மிகத் திறமையாகத் தேடிக் கொண்டு மிளிர்கிறார்கள்.

தங்களுக்கு நடிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை என இவர்கள் எப்போதும்  தற்கொலை செய்து கொள்ள நினைக்கவேயில்லை என்பதை இன்றைய தலைமுறையின் இளம் நடிகர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

தாங்கள் விரும்பிய வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில், தங்களுக்கு கிடைத்த வாய்ப்பையே தங்களுக்கான வெற்றி வாய்ப்புகளாக இவர்கள் மாற்றிக் கொண்டார்கள் என்பது தான் இங்கே கவனிக்கத்தக்கது!

]]>
வடிவேலு காமெடி, ரங்கம்மா பாட்டி, உழைத்து வாழ வேண்டும், rangamma patti, vadivelu comedy jodi, work is god http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/14/w600X390/rangamma_patti.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/mar/14/vadivelu-comedy-jodi--rangamma-patti-2880498.html
2880515 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல்  ஃப்ராடு அனலிஸ்ட்! இப்படி ஒரு வேலை வாய்ப்பிருக்கு... தெரியுமா? கார்த்திகா வாசுதேவன் DIN Wednesday, March 14, 2018 03:36 PM +0530  

ஃப்ராடு அனலிஸ்ட் (மோசடி ஆய்வாளர்) என்பது எத்தகைய வேலை?

ஃப்ராடு அனலிஸ்ட் அலைஸ் மோசடி ஆய்வாளர் வேலையின் சாராம்சம் என்ன தெரியுமா?  வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் இருக்கும் வாடிக்கையாளர்களின் பணத்தை தொழில்நுட்பத்தின் துணை கொண்டு ஆட்டையாம் போடுவதற்கென்றே சில வில்லங்கத் திருடர்கள் உலவிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை அடையாளம் காண்பதோடு, திருட்டுப் போயிருந்தால் அந்தத் திருட்டு குறித்து வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் சார்பாக விசாரித்து அந்தப் பிரச்னைகளைக் கையாளக்கூடிய வேலையைச் செய்யக்கூடியவர்களை ஃப்ராடு அனலிஸ்ட் என்கிறார்கள். இவர்களது வேலை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு எண்ணில் நடைபெறும் பணப் பரிவர்த்தனைகளைத் தொடர்ந்து கண்காணித்து சந்தேகத்துக்குரிய பணப்பரிவர்த்தனைகள் நடந்தால் உடனுக்குடன் கண்டறிந்து வங்கிக்கும், வாடிக்கையாளர்களுக்கும் நஷ்டமின்றி அந்த விவகாரத்தை முடித்து வைப்பதும் பணப்பரிவர்த்தனை விவகாரங்களில் தற்போது அதிகமாகி வரும் தொழில்நுட்பத்தின் துணை கொண்ட பணத் திருட்டுகளை கட்டுப்படுத்துவதுமே இவர்களது வேலை.

ஒரு ஃப்ராடு அனலிஸ்ட் என்ன செய்வார்?

ஒரு மோசடி ஆய்வாளர் பல்வேறு வாடிக்கையாளர்களின் பணப் பரிவர்த்தனைகளைக் கவனிப்பதற்கான பொறுப்புள்ள வேலையில் இருப்பார். எனவே சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை அவரால் எளிதில்அடையாளம் காட்ட முடியும். பெரும்பாலான வங்கிக்கணக்குகள் மற்றும் அதன் வாடிக்கையாளர்கள் நீண்ட கால அடிப்படையில் மாறாத வங்கி நடைமுறைகளைக் கையாள்வார்கள். அப்படி இருக்கையில் எதிர்பார்த்த நடவடிக்கைகளுக்கு பொருந்தாத ஏதேனும் பணப் பரிவர்த்தனைகள் அல்லது பாஸ் வேர்டு பரிமாற்றங்கள் தென்பட்டால் அவற்றை ஃபிராடு அனலிஸ்டால் கண்டறிய முடியும்.

சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் கண்டுபிடிக்கப்பட்டால், மோசடி ஆய்வாளர் அந்தக் குறிப்பிட்ட வங்கிக் கணக்கு எண்களைக் கட்டம் கட்டி அதை சரிபார்க்கத் தொடங்குவார். சரிபார்த்து முடிக்கும் வரை அந்தக் குறிப்பிட்ட வங்கிக் கணக்கு எண்ணின் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். பரிவர்த்தனைகள் சந்தேகத்திற்குரிய எந்தவொரு காரணத்திற்காகவும் சோதனைக்கு உட்படுத்தப்படலாம். வங்கியின் நற்பெயருக்கும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் பணப்பரிவர்த்தனை வகை, பரிவர்த்தனை அளவு, கூட்டுக்கணக்கு இருக்கும் பட்சத்தில் சாத்தியமான பங்காளர்களிடம் திடீரெனக் கண்டறியப்படும் அசாதாரண மாற்றங்கள், பரிவர்த்தனைகள் உருவான இடங்களில் அல்லது கணக்கில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிக்கு அப்பால் செயல்படத் தூண்டுதல் போன்ற உறுதியான காரணங்களுக்காக வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்குகள் ஃப்ராடு அனலிஸ்டுகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஆராயப் படலாம்.

ஃப்ராடு அனலிஸ்ட் எங்கே பணியமர்த்தப்படுவார்?

வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களின்  தலைமை அலுவலகங்கள் அல்லது பிராந்திய தலைமை அலுவலகங்களில் இவர்கள் இருப்பார்கள். அப்படியான இடங்களில் இவர்களைப் பணியமர்த்தினால் தான் சாமர்த்திய மோசடிகளை ஒரே இடத்தில் கிடைக்கக் கூடிய பல்வேறு தரவுகளின் அடிப்படையில் அவர்களால் எளிதில் கண்டறிய முடியும். தலைமை அலுவலகங்களில் மட்டுமே வாடிக்கையாளர்களின் மொத்தச் சான்றுகளும் பாதுகாக்கப்படும் என்பதால் தேவையான தகவல்களை உடனுக்குடன் பெற இம்மாதிரியான தலைமை அலுவலகங்களில் தான் இவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
 

]]>
ஃப்ராடு அனலிஸ்ட், Fraud analyst, job oppertunity, வேலை வாய்ப்பு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/14/w600X390/fraud_analyst.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/mar/14/fraud-analyst--a-type-of-job-oppertunity-2880515.html
2879887 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் காலம் உருக்குலைத்தாலும் எங்கள் காதல் மாறாது என்கிறதா இந்த மனித எலும்புக் கூடுகள்? சினேகா DIN Tuesday, March 13, 2018 05:40 PM +0530  

1972-ம் ஆண்டு மேற்கு அஸர்பைஜன் மாகாணத்தில் சொல்டுஸ் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள டெபெ ஹஸனுலூ தொல்பொருள் தளத்தில், ராபர்ட் டைசன் என்பவரின் தலைமையில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் ஒரு குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்த ஹஸன்லூ காதலர்களின் எலும்பு கூடு. 

இப்படத்தில் இரண்டு மனித எலும்புக்கூடுகள் கட்டியணைத்தபடி உள்ளன, இவர்கள் ஹஸனுலூ காலகட்டத்தைச் சேர்ந்த காதலர்களின். 2800 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தம் என்ற சிறப்பை இப்புகைப்படம் பெற்றுள்ளது. வலது பக்கத்தில் உள்ள எலும்புக்கூடு ஒரு ஆண் என்று தெளிவாக உள்ளது. இருபதாம் நூற்றாண்டில், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் டேவிட் ரீச் மேற்கொண்ட மரபணு பகுப்பாய்வு இதனை ஆண் எலும்புக்கூடு என உறுதியாகக் கூறுகின்றனர். குறிக்கிறது. ராபர்ட் டைசன் மற்றும் எம். ஏ. டாண்டமவ் ஆகியோர் செய்த ஆய்வில் மற்ற எலும்புகூடு பெண் என்றும் உறுதிப்படுத்தப்பட்டது. 

எலும்புக்கூடுகள் இரண்டின் தலையின் கீழ் ஒரு கல்லால் ஆன சதுர வடிவத்தில் அடிப்பாகமாக காணப்பட்டது. இந்தக் காதலர்கள் தெபே ஹஸனலூ சிட்டாடலின் வீழ்ச்சியின் போது சுமார் கி.மு 800 ஆண்டில் இறந்திருக்கலாம் என்கிறது அந்த ஆய்வு.

ஹஸன்லூவில் வசித்தவர்கள் பெரும்பாலும் கோதுமை மற்றும் பார்லி, செம்மறியாடு மற்றும் ஆடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு உணவை உண்டு வாழ்ந்தனர். மேலும், அப்பகுதியில் பிறந்து வளர்ந்து அங்கேயே மடிந்தனர் என ஆய்வில் கிடைத்த சில கையெழுத்து லிபிகள் குறிப்பிடுகின்றன.

இதனைப் பார்க்கையில் ஓருயிர் ஈருடல் என்பதும், காலங்கள் கடந்தும் காதல் வாழும் எலும்ப்புக் கூடாகவும் கூட என்று நினைக்கத் தோன்றுகிறது.

நன்றி - விக்கிபீடியா

]]>
Hasanlu Lovers, ஹஸனுலூ , ஆய்வு, எலும்புக் கூடு, காதல் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/13/w600X390/skeleton.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/mar/13/the-hasanlu-lovers-are-human-remains-found-by-a-team-from-the-university-of-pennsylvania-2879887.html
2879881 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் எது சிறந்தது? காதலா காமமா? காதலின் மூன்று படிநிலைகளை முன்வைக்கிறது இந்த ஆராய்ச்சி! ராக்கி Tuesday, March 13, 2018 04:40 PM +0530  

மனிதர்களின் அடிப்படை உணர்வுகளில் ஒன்றுதான் காமம். பாலியல் வன்முறை, பாலியல் குற்றம் என உலகம் தோன்றிய நாள் முதல் இன்றுவரை அது சார்ந்து பல குற்றச் செயல்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்த அடிப்படை உணர்வினை வென்றெடுக்க மனிதன் கண்டுபிடித்த ஒரு வழிதான் அதனை உன்னதமாக்குதல். தன்னுள் ஏற்படும் வேட்கையை உன்னதமாக்கிக் கொள்ள மனிதனுக்கு கலை, மற்றும் கலாசாரத்தின் தேவை ஏற்படுகிறது. அவ்வகையில் காமத்திற்கு அழகான ஒரு பெயர் தேவைப்பட காதல் என்று மறுமொழியில் கூறத் தொடங்கினான். காதலற்ற காமமும், காமம் அற்ற காதலும் சுவைக்காமல் போவதும் இதனால்தான். சரி தலைப்புக்கு வரலாம். காதலா காமமா? எது சிறந்தது?

பன்னெடுங்காலமாக காமம் தவறென்றே சித்தரிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய கற்பிதங்கள் முறையற்ற என்ற வார்த்தையை உடன் சேர்த்திருந்தால் கூடப் பரவாயில்லை. காமத்தைத் தாண்டும் அதனை வென்றெடுக்கும் சக்தி காதலுக்கு மட்டும் உண்டு என்பது காதலிப்பவர்களின் நம்பிக்கை. மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல... அதையும் தாண்டி புனிதமானது... என்று சொல்ல வைக்கக் கூடிய காவியக் காதல்களை வரலாறு உண்மையிலேயே கடந்து வந்துள்ளது.

கடவுளரின் நாமங்களை விட அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தை காதல். ப்ரேமம். ப்யார். உலக மொழிகளில் இந்த வார்த்தைக்கு மட்டும் சற்று மென்மையும் மேன்மையும் அதிகம்தான். காதல் மனிதர்களை அழகாக்குகிறது. அது இயற்கையின் பெரும் எழிலை உள்ளடக்கியது. காதல் ஒரு அதியற்புதமான உணர்வு என்றே நம் கவிதைகள் உணர்த்தி வருகிறது. கண்டதும் காதல் ஏற்படாது. கண்டதும் ஏற்படுவது உண்மையில் காமம்தான். பழகியபின் மனம் ஒருமித்து ஒருவரை மற்றவர் ஆழமாக விரும்பிய பின்னர் தான் காதல் மலர்கிறது. நேசமும் அக்கறையும் காதலை மெருகூட்டுகிறது. உணர்ச்சிகளின் உன்மத்தம் காதல் எனலாம்.

ஒவ்வொரு மனித உயிரும் இன்புற்று இருக்கவே விரும்புகின்றது. காமம் என்பது எப்போதும் இனிமையானது மட்டுமல்ல. இனிப்பும் கசப்பும் துவர்ப்பும் உவர்ப்பும் கொண்டது தான் காமம். உளரீதியாக ஒருவரை பெரும் அலைக்கழிப்புக்குள்ளாக்க வல்லது அது. அது ஆதியுணர்வு. பெரும்பாலும் இது உடல்ரீதியானது. காமம் ஒரு கட்டத்துக்கு மேல் ஆழமான காதலாக மாறலாம். ஆனால் அதற்கு நீண்ட காலமாகும்.

இரண்டு தனி நபர்கள் காமத்திலிருந்து காதலுக்கு திரும்ப, ஒருவர் மற்றவரின் பலம் மற்றும் பலவீனங்களை நன்கு தெரிந்த கொண்ட பின்னரே காதலிக்கத் தொடங்குவார்கள். காமம் ஒவ்வொருவரின் மனத்தின் மிக அந்தரங்கமான ஓர் இடத்தை மென்மையாக தட்டி எழுப்புவது.  

காதலைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் டாக்டர் ஹெலன் ஃபிஷர் என்பவர் காதலின் படிநிலைகளாக மூன்று நிலையைக் குறிப்பிடுகிறார். நீங்கள் எந்த நிலையில் உள்ளீர்கள் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

முதல் நிலை - காமம்

காமம் தான் காதலில் விழுவதற்கான முதல் நிலை. ஒருவர் மீது ஏற்படும் இச்சையே காமத்தின் அடிப்படை. பின்னாட்களில் இதுவே காதலாக மாறுகிறது. உடலிலுள்ள ஹார்மோன்கள் எதிர்பாலினரைக் காணும்போது தூண்டப்படும். ஒருவரை பார்த்தவுடன் சிலருக்கு லஸ்ட் என்று கூறப்படும் காம உணர்வு தோன்றலாம். சிலருக்கு இவ்வுணர்வு தோன்றுவதற்கு இரண்டு வருடங்கள் கூட ஆகலாம். நீங்கள் காம வயப்பட்டிருக்கிறீர்கள் என்பதை எப்படி தெரிந்து கொள்வது? நீங்கள் விரும்பும் நபர் மீது உங்களுக்கு இச்சை தாண்டி வேறெந்த நோக்கமும் இருக்காது, உணர்வுநிலைகளிலும் எவ்வித பிடிப்பும் இருக்காது. காம உணர்வு மெள்ள மாறி அது காதலா அல்லது வெறும் ஆசையா என்பதை தெரிந்து கொள்ள நீங்கள் விரும்பும் நபரிடம் தொடர்ந்து பழகும் போதுதான் விளங்கும்.

இரண்டாம் நிலை - ஈர்ப்பு

இது காதலுக்கும் காமத்திற்கும் இடைப்பட்ட நிலை. உங்கள் மனம் விரும்பியவரைப் பற்றியே மணிக்கணக்கில் நினைத்துக் கொண்டிருக்கத் தோன்றும். தூக்கம் பிடிக்காது. உணவு ருசிக்காது. காதலாகி கண்ணீர் மல்கி கசிந்திருகிக் கொண்டிருப்பீர்கள். டொபமைன், செராடனின் போன்ற காதலுணர்வு ஹார்மோன்களின் அட்டூழியம் வேறு உங்களை தலைக்கிறுக்காக்கிக் கொண்டிருக்கும். இதயம் படபடப்பும். 

மூன்றாம் நிலை - ஆழமான மெய்க் காதல்

இதற்கு மேல் தாங்காது எனும் நிலையில்தான் காதலை எப்பாடுபட்டாவது நீங்கள் நேசிக்கும் ஒருவரிடம் மனம் திறந்து சொல்லி விடுவீர்கள். உங்கள் மனம் கவர்ந்த அவர்தான் உங்களுடைய ஒட்டுமொத்த காதல் வாழ்க்கையின் தலைவி / தலைவன். அவருக்கு மட்டும்தான் உங்களைப் பற்றிய அத்தனை விஷயங்களும் தெரிந்திருக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும், ஆழமாக நேசிக்கவும் நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இதுதான் உங்கள் காதலை ஒரு நிரந்தர பந்தத்துக்கு இட்டுச் செல்லும். ஆனால் அவசரப் பட வேண்டாம். அது இயல்பாக இயற்கையாக மலர்வதே நல்லது. உண்மை, நேர்மை, நேசம், விருப்பு போன்ற உணர்வுகள் ஒன்றின் பின் ஒன்றாக உருவாகி ஒருவர் மற்றவரை பார்க்காமல் பேசாமல் இருக்க முடியாது எனும் நிலை வந்த பின்னர் தான் அது ஆழமான காதல் எனக் கொள்ளலாம்.

அதன் பின் திருமணம் அல்லது லிவ்விங் டுகெதர் முறையில் வாழும் போது உடல்ரீதியான பரிமாற்றமும் நடைபெறும். தாம்பத்ய உறவினால் காதலிக்கும் இருவரிடையே பற்று உருவாகும். ஒருவரை மற்றவர் பிரிய முடியாத அளவுக்கு நெருக்கம் ஏற்படும். பேரறிஞர் சாக்ரடீஸ் கூறுவது போல, காதல் ஒருவரை பித்து நிலைக்கு இட்டுச் செல்லும்’ என்பது உண்மைதான். காதலுணர்வு உங்களை அடிமைப்படுத்திவிடும், அது நல்லதுதான், ஆதலினால் காதல் செய்வீர் என இது போன்ற பல விஷயங்களை உள்ளடக்கி தனது ஆய்வு முடிவினை ஒரு புத்தகமாகவே வெளியிட்டுள்ளார் டாக்டர் ஃபிஷர். 

]]>
காதல், love, Lust, காமம், love or lust http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/13/w600X390/lovers.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/mar/13/love-or-lust-which-is-best-2879881.html
2879856 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் புளியமரத்துப் பேய்கள் - பேய் பயம் குறித்து ஒரு சிறுமியின் பார்வையில் விரியும் உளவியல் சிறுகதை! கார்த்திகா வாசுதேவன் Tuesday, March 13, 2018 01:43 PM +0530  

 ‘பால்யத்தில் எல்லோருக்குமே பேய்கள் குறித்த பயமிருக்கும். பிறகு அது நாட்பட, நாட்பட தானே உடைந்து பேய்கள் எனப்படுபவை ஏதோ பாதாள லோகத்திலோ அல்லது எம லோகத்திலோ இருப்பவை அல்ல, அவையும் நம்முடன் நிஜமனிதர்களாக உலவிக் கொண்டிருப்பவை தான். என்ன ஒரு கஷ்டமெனில் இந்த நிஜப்பேய்களை நம்மால் சரியாக கணிக்க முடியாமல் போய் அவர்களைத் தாண்டிய அமானுஷ்ய கற்பனை வடிவங்களை சிருஷ்டித்துக் கொண்டு தினம் தினம் பயந்து செத்துக் கொண்டிருப்போம். அந்த நோக்கில் ஒரு சிறுமியின் பார்வையில் விரியும் உளவியல் சிறுகதை இது!’

புளியமரத்துப் பேய்கள்...

அது ஒரு பட்டரைப் பழைய புளிய மரம் தான். பெருத்த விசேஷம் ஒன்றும் இல்லை அதில்... இற்றுப் போன அந்தப் புளிய மரத்தின் நடுத் தண்டில் எக்கச்சக்கமான ஆணிகளை திசைக் கணக்கின்றி அடித்து இறக்கியிருந்தார்கள். பாரதி அக்கா, சியாமளா, சௌம்யா, ஹேமா சகிதம் பள்ளிக்கு நடந்து போகையில் பாரதி அக்கா சொல்லச் சொல்ல பலமுறை இந்தப் புளிய மரத்தை பற்றி வித விதமான கதைகளை ஜானா காதுகுளிர கேட்டிருக்கிறாள். பகலில் காது குளிரும், இரவிலோ மனம் குளிரும், போர்வையை தலை முதல் கால் வரை இழுத்து இறுக்க மூடிப் போதாக் குறைக்கு பாட்டியின் இடுப்பைக் கட்டிக் கொண்டு தூங்கினாலுமே பலநாட்கள் பயத்தில் உடம்பும் மனமும் உதறிக் கொண்டே தான் இருக்கும். அந்த மரத்தின் ஐவேஜு அப்படி!

இப்படிப்பட்ட புளிய மரத்தை நண்பர்கள் புடை சூழ கடப்பதில் ஜானாவுக்கு பிரச்சினை எதுவும் இருந்ததில்லை. 

இன்றைக்குப் பார்த்தா இவளுக்கே இவளுக்கென்று இந்த ‘மெட்ராஸ் ஐ’ வந்து தொலைக்க வேண்டும்?

பள்ளியில் இருந்து இன்று காலைக்காட்சியாக "திக்குத் தெரியாத காட்டில்" திரைப்படத்திற்கு கூட்டிப் போயிருந்தார்கள்... படம் பார்க்கப் போகாமல் லீவுலெட்டர் எழுதிக் கொடுத்து விட்டு வீட்டில் இருந்திருக்கலாம், படம் பார்த்துவிட்டு வந்தது தான் தாமதம், இந்தக் கூட்டாளிக் கழுதைகள் ‘டீச்சர்... டீச்சர் ஜானகிக்கு கண் வலி டீச்சர்’ என்று போட்டுக் கொடுத்து எட்டப்பியானார்கள். அந்தக் கழுதைகளை விடுங்கள் இந்த டீச்சரை படத்தில் பார்த்த முதுமலை காட்டுக்குள் தனியே அனுப்பி தொலைந்து போக வைக்க வேண்டும் அந்தக் கடவுள்.

கண் வலி எல்லோருக்கும் ஒட்டிக் கொள்ளும் என்று இந்த மிளகாய் மூக்கு பியூலா டீச்சர் கிளாசுக்குள் கால் வைக்கும் முன்னே ‘அடி பொண்ணே.... லீவுலெட்டர்லாம் கண் வலி சரியானப்புறம் தந்தா போதும்டி, கெளம்பு... கெளம்பு, எடத்தக் காலி பண்ணு’ என்று துரத்தாத குறையாக வெளியில் அனுப்பி விட்டாள்.

அந்த டீச்சருக்கு என்ன தெரியும் இந்தப் பாடாவதி புளிய மரத்தின் கதையைப்பற்றி! ஒற்றையாய் அதைக் கடப்பதை நினைத்தாலே ஜூரம் வரும் போலிருந்தது ஜானாவுக்கு. ஜானாவின் வீட்டுக்கு வலப்பக்கம் சின்னதாய் ஒரு சோற்றுக்கடை இருக்கிறது. முன்பக்கம் சோற்றுக்கடை, பின்பக்கம் வீடு என்று புழங்கிக் கொண்டிருந்தார்கள் அந்த கடைக்காரர்கள்.

கடைக்காரப் பெண் நல்ல சிவப்பி, புருஷனோ நல்ல கருப்பன். ஆண்வாரிசுகளாகப் பிறந்த ரெண்டும் ரெண்டு விதமான ஜாடையில் அம்மையையும் அப்பனையும் உரித்துக் கொண்டிருந்தன. ஜாடை ஒழிகிறது குணத்தில் அப்பனின் அச்சுக்கள். லேசுபாசாக அந்த வீட்டு ஆண்களின் குரல் காதில் விழும் போதெல்லாமும் ஒரே அதட்டல் மயமாகத் தான் இருக்கும். ஒத்தை ஆளாய் அந்தப் பெண் புருஷ அதிகாரம், பிள்ளைகள் அதிகாரம் ரெண்டுக்கும் எப்படியோ ஈடு கொடுத்துக் கொண்டு வாய்மூடி ஊமைச்சி போல இருந்து வந்தாள்.

கேளுங்கள்... அந்தச் சிவப்பியம்மாள் ஒவ்வொரு அமாவாசைக்கும் கழுத்துச் சுளுக்குமட்டும் கனத்த கல்லைச் சுமந்து கொண்டு இந்தப் புளிய மரத்துக்கு கொண்டு வரப்படுவாள். கூட கோடாங்கி மாத்திரம் உடுக்கை அடித்துக் கொண்டு அந்தம்மாவைச் செலுத்திக் கொண்டு போய் உச்சந்தலை முடியில் சிலதைப் புளியமரத்து நடுத்திண்டில் ஆணி அடித்து அறைந்து விட்டு வருவான். அதற்கப்புறம் ஓரிரு நாள் அந்தம்மாள் தன் சோற்றுக்கடைக்கு பக்கவாட்டில் ஒதுக்கமாய் இருக்கும் சிமென்ட் திண்ணையில் அசந்து போய் முடங்கி பார்க்கும் நேரமெல்லாம் படுத்தே கிடப்பாள்.

பள்ளிக்கு போகையில் ஒருநாள் பாரதி அக்கா தான் சொன்னாள், இந்தம்மாளுக்குப் பேய் பிடித்திருக்கிறதென்று, தொத்திக் கொண்ட நாட்களில் இருந்தே பிடித்தபிடியில் போவேனா என்கிறதாம், அந்த ரயில் தண்டவாளத்துப் பேய். ஒவ்வொரு அமாவாசைக்கும் ஆணி அடித்து மாளவில்லையாம். பேய் பிடித்து ஆட்டும் நாட்களில் புருஷனைக் கிட்டக் கண்டால் சங்கைப் பிடித்து கடித்து ரத்தம் உறிஞ்சாக் குறையாக ஆத்திரப் படுவாள் அந்த சிவத்தம்மாள்.

பாரதி அக்காவுக்கு மட்டும் எப்படியோ எல்லாமும் தெரிந்து விடுகிறது. அவளுடன் பள்ளிக்கு மட்டுமல்ல சாயந்திர தெரு முக்கு விளையாட்டுகளிலும் கூட்டு சேர பிள்ளைகளிடையே போட்டா போட்டி நடக்கும். அத்தனை பிரபலஸ்தியாக இருந்தாள் ஜானாவின் பாரதி அக்கா.

பியூலா டீச்சர் ‘வீட்டுக்குப் போடி’ என்றதும் ஜானா ஒன்பதாம் வகுப்பு ‘பி’ செக்சனில் இருக்கும் பாரதி அக்காவை தான் துணைக்குத் தேடிப்போனாள், கூப்பிட்டால் பாரதி அக்கா மறுக்கமாட்டாள் தான் ...ஆனால்அன்றைக்கென்று அவளுக்கு மத்தியானப் பீரியடில் கிராஃப் பரீட்சை வந்து தொலைக்க கணக்கு டீச்சர் எசக்கி கூப்பிடப் போன ஜானாவை வயிற்றைப்பிடித்துக் கிள்ளி;

‘ஏண்டி இந்தப் பட்டப் பகல்ல மெயின் ரோட்டோரமா நடந்து போக உனக்கு துணைக்கு ஆளு வேணுமாக்கும், தோலை உரிச்சுப் போடுவேன், உன்னோட சேர்த்து அவளும் கிளாஸுக்கு மட்டம் போடணுமோ... தனியாவே போய்க்கோ, உன்ன ஒன்னும் பிசாசு பிடிக்காது... போ..போ’

என்று துரத்தி விட்டாள்.

சியாமளா, சௌம்யாவைக் கூப்பிடலாம்; யாராவது ஒருத்தர் கூட வந்திருப்பார்கள். 

ஜானாவுக்கு நாக்கில் சனி... சியாமளா, சௌம்யா, ஹேமா, ஜானா எல்லோருமே ஒரே செக்சனில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கையில். முழுப் பரீட்சை வந்தது, வழக்கப்படி கடைசிப் பரீட்சை முடிந்து அடுத்து ரெண்டு மாசம் லீவுலே... என்று சந்தோசம் பீரிட்டுப் பாய வீட்டுக்கு நடக்கையில் கேலி போல ஏதோ பேச்சு வாக்கில் சியாமளாவைப் பார்த்து; ‘சியாமி நீ அடுத்த வருசமும் கோட்டடிச்சு ஏழாப்புல தான் உட்காரப் போற’ என்று சொல்லி விட்டு நாக்கைக்கடித்து அழகு காட்டினாள்.

இது சியாமிக்குப் பிடிக்கவில்லை. போதாக் குறைக்கு அவள் ஏற்கனவே ஒரு வருஷம் கோட் அடித்து தான் ஏழாப்பில் உட்கார்ந்திருந்தவளும் கூட, அதே வகுப்பில், அடுத்த வருஷன் அவளுக்கு அடுத்த வகுப்பிலிருந்த தங்கை சௌமி; அக்காவுடன் உட்கார ஒரே வகுப்பில் வந்து சேர அதுவே அவளுக்கு பெரிய இழிமானமாய் இருந்து வந்தது. ஜானா வேறு இப்படிச் சொல்லி விட்டாளா! ரொம்பக் கொதித்துப் போனாள் சியாமி.

சொல்லி வைத்தார் போல அவள் அந்த வருசமும் ஏழாப்பில் கோட் அடித்து அங்கேயே இருக்க வேண்டியதானது. சௌமியும், ஜானாவும் எட்டாப்பு போனார்கள். ‘கருநாக்கு ஜானா நீ சொல்லித் தாண்டி எங்கக்கா பெயிலாப் போனா என்று சௌமியும் ஜானாவுடன் ‘கா’ விட்டு இந்த வருடம் முழுக்க பேசாமலே இருந்து வந்தாள்.

ஆகக் கூடி இப்போது ஜானா கூப்பிட்டால் ரெண்டு கழுதைகளுமே மூஞ்சியைக் கூடத் திருப்பப் போவதில்லை. கேளாமல் இருப்பதே நல்லது, என்றெண்ணிய மாத்திரத்தில் ஜானாவுக்கு மறுபடியும் புளிய மரத்துப் பேய்களின் ஞாபகம் வந்து மருட்டியது. கூடவே அங்கே நித்ய கடமையாக ஆணி அடித்துக் கொண்டிருக்கும் சிவத்தம்மாள் ஞாபகமும் வந்து தொண்டை வறண்டது. எண்ணெய் கேனில் கொண்டு போயிருந்த தண்ணீரைக் கொஞ்சம் குடித்து விட்டு மூடிக் கூடையில் வைத்துக்கொண்டாள் .

இதொண்ணும் உச்சிக் காலமில்லை; அதனால் பேய்கள் உக்கிரமாய் ஒன்றும் இருக்கப்போவதில்லை. அதனால் தனியே போனாலும் பரவாயில்லை என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொள்ளப் பார்த்தாள்.

அதற்குள் ரெண்டாம் மணி அடித்து கிளாசுக்குள் வந்த பியூலா டீச்சர்... முகத்தைச் சுளுக்கிக் கொண்டு;

‘ஏண்டி இன்னுமா நீ போகல? கிளாஸ்ல எல்லாத்துக்கும் கண்ணு வலிய ஓட்டவச்சுப்பிடுவ போல இருக்கே. என்னடி அக்கப்போரு உன்கூட... இப்போ நீ போகப்போறியா இல்லா பெரம்புல ரெண்டு சாத்து சாத்தனுமா?’

என்று கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் சொல்லவே ஜானாவுக்கு அவமானத்தில் லேசாகக் கண் கலங்கியது. 

இந்த டீச்சர் எப்பவுமே இப்படித் தான். வகுப்புப்பிள்ளைகள் மாட்டிக்கொண்டால் அவர்களை வார்த்தையாலேயே ஊசி போலக் குத்திக் கிண்டிக் கிழங்கெடுக்காமல் விடவே மாட்டாள்... என்று மனசுக்குள் வைது கொண்டே தன் புத்தகப்பை, மதியச் சாப்பாட்டுக் கூடை சகிதம் பள்ளியில் இருந்து வெளியில் வந்து வீட்டை நோக்கிப் போகும் மெயின்ரோடில் நடக்க ஆரம்பித்தாள்.

ஈசன் நோட்ஸ் கடை கடந்து போனது... அம்பாள் மெடிகல்ஸ், அய்யனார் லாரி செட், குருவி குளம் ஸ்பீக்கர் செட் கடை. ரோகிணி பாத்திரக் கடை எல்லாம் ஒவ்வொன்றாய் தாண்டிப் போய்க் கொண்டிருந்தன. 
மெயின் ரோட்டில் வாகனங்கள் விரைந்தபடி இருந்தன.

அப்பா... இந்நேரம் இந்தப்பக்கம் டி. வி.எஸ் பிஃப்டியில் வந்தால் தப்பித்தோம் பிழைத்தோம் என்று எத்தனை சந்தோசமாய் இருக்கும், ஒரு நிமிஷம் இப்படி நினைத்து விட்டுப் பிறகு அவர் எப்படி இந்நேரம் இந்தப் பக்கம் வரமுடியும்? என்ற ஏமாற்றத்தில் முகம் கசங்கினாள் ஜானா.

பக்கத்து வீட்டு செக்யூரிட்டி அங்கிள் கூட சாயந்திரமாகத் தான் இந்தப்பக்கமாக வண்டியில் போவார். இப்போது தெரிந்தவர்கள் யாரும் போக வாய்ப்பே இல்லையே, ஜானா யோசித்தவாறு போய்க் கொண்டிருந்தாள் .

ஜெருசலேம் சபை... என்று போர்டு போட்ட சின்னக் குடில் ஒன்றுவந்தது. அங்கிருக்கும் ஒரு ஊழியக்காரப் பெண்ணை ஜானாவுக்கு தெரியும் என்பதால் பயத்தில் இருந்து தப்பிக்க கொஞ்ச நேரம் அங்கே நுழையலாமா என்று யோசனை வந்தது .

குடிலுக்கு நேராகப் போய் எட்டிப் பார்த்தால், அங்கே சின்னப் பூட்டு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. கண்களில் ஏமாற்றத்துடன் ஜானா மேலே நடந்தாள்.

அடுத்து பத்தெட்டில் முத்து மாரியம்மன் கோயில் வரும். இந்நேரம் கோயில் பூட்டி இருக்கும்.

அடுத்து சி.எஸ்.ஐ நடுநிலைப் பள்ளிக்கூடம் ஒன்று வரும், அதைத் தாண்டினால் வெறும் பொட்டல் தான் கொஞ்ச தூரத்துக்கு வீடுகளே இருக்காது ...

அப்புறம் புளிய மரம் தான்.

அதைக் கடந்தால் போதும் பதினைந்து நிமிசத்தில் வீட்டுக்குப் போய் விடலாம்.

சி.எஸ்.ஐ பள்ளிக்கு நேராக வருகையில் ஒரு ஈக்குஞ்சைக் காணோம் பள்ளிமைதானத்தில், மட்ட மத்தியானத்தில் பிள்ளைகள் பாடம் கவனிப்பது போல புத்தக மறைப்பில் கண்ணைத் திறந்த வாக்கில் தூங்குகிறார்களாக்கும் தன்னைப்போலவே என்று நினைத்துக் கொண்டே அடுத்த எட்டை எடுத்து வைக்க பலக்க யோசித்துக் கொண்டு அவள் சாலையின் வலமும் இடமுமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள் .

தூரத்தே ஒரு லாரி தவிர்த்து வேறு எந்த அரவத்தையும் காணோம் சாலை நெடுக...

கூப்பிடு தூரத்தில் புளியமரம், சுற்றுப்புறம் பெருத்த அமைதியில் உறைந்து, வெயிலில் உறங்கும் பாவனையில் மரங்களின் இலைகள் கூட அசையக் காணோம்.

புளிய மரம் நெருங்க நெருங்க கிளைகளில் காய்ந்து சருகாகிப் போன செவ்வந்தி மாலைகள் கண்ணுக்குப் புலனாகின. இசக்கிக்கு படைத்திருக்க கூடும் யாரோ! உடைந்த பாட்டில்கள் ஒரு பக்கம் ஓரமாகக் கிடந்தன. இன்னும் கொஞ்சம் நெருங்க... தண்டில் அடிக்கப் பட்டிருந்த ஆணிகள் கண்ணில் அறைந்தன. ஆணிகளைக் கண்டால் உள்ளபடிக்கு பயம் இருக்குமிடத்தை விட்டு பெருங்கொண்டதாய் எழுந்து ஆட ஆரம்பித்து விடுகிறது. என்னவோ ஆணி தன் உச்சந்தலையிலேயே அடித்தார் போல.

சாலை விதிக்கொப்ப இடப்பக்கமாகவே சென்று கொண்டிருந்த ஜானா, என்னவோ புளிய மரத்தின் கண்ணில் மண்ணைத்தூவிய பாவனையில் வலப்புறத்திற்கு மாறிக் கொண்டால் பதுங்கிப் பதுங்கி. எல்லாமொரு ‘ஜாலக்’ தான். பேய் தொற்றிக் கொள்ள நினைத்தால் எப்படிவேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் தொற்றிக்கொள்ளும் என்று சித்தி சொல்லி இருக்கிறாள் முன்பே.

வலப்புறத்து ரோட்டோரோம் ஒரு வற்றிப் போன ஓடை உண்டு, இப்போது வெறும் வெள்ளை மணல் பரப்பு தான் கண்ணைக் கூச வைத்துக் கொண்டிருந்தது, மழைக்காலங்களில் மட்டும் ஏதோ கொஞ்சம் நீரோடும். பாதாளச்சாக்கடைக்கு எனக் குழி தோண்டுகையில் பதிக்காமல் மீந்த பெரிய பெரிய குழாய்கள் நாலைந்து அந்த ஓடையில் தான் நிறுத்தப்பட்டிருந்தன. வெயிலுக்கு அணைவாகச் சில நேரங்களில் ஆடு மாடுகள் நாய்கள் அங்கு ஒதுங்கும் .

பேய் பயத்திலும் பெரிய பயமாக இப்போது நாய் பயம் வேறு. தெரு நாய்கள் பெருத்துப் போன நாட்கள் அவை.

ஜானா அந்த ஓடை விளிம்பு வரை போகாமல் அதை ஓட்டிக்கொண்டே தன் வீட்டைப் பார்த்து சலனத்தோடு நடக்கையில்; சலனமே இல்லாமல் ரோடும், வெயிலும் காய்ந்து கொண்டிருந்தன.

வியர்த்து வழிந்த முகத்தை புறங்கையால் துடைத்துக் கொண்டு, எட்டு குயர், பத்து குயர் நோட்டுகளும், புத்தகங்களும் திமிறிய தன் பையை திணறலுடன் தோள்மாற்றிப் போட ஒரு நிமிடம் நின்றவள் தனக்குப் பின்புறமிருந்து முன்னோக்கி நீண்ட பெரிய நிழலைக் கண்டு சன்ன விதிர்ப்புடன் திடுக்கிட்டுப் போனாள்.

ஐயோ பேய் தான் வந்துடுச்சா! கழுத்தின் ஓம் சக்தி டாலரை கை இறுக்கப் பற்றிக் கொள்ள கண்களை இறுக்கி மூடிக் கொண்டு

‘ஓம் சக்தி... பரா சக்தி... ஓம் சக்தி பரா சக்தி’

என்று முணு முணுத்துக் கொண்டே அழாக்குறையாக ஆணி அடித்தார் போல அசையாது நின்றவள்... இமைகளின் மேல் நிழல் நீங்கி வெள்ளை வெயில் சுடவும் மீண்டும் கண்ணைத் திறந்தாள்
பேயும் முனியும் தான் உள்ளே சதா எட்டி எட்டிப் பார்த்து அரட்டிக்கொண்டிருக்கின்றனவே.

ஆனால் அந்த நிழல் பேயுமில்லை... முனியுமில்லை

பக்கத்து சோற்றுக்கடையின் சொந்தக்காரி, அந்த சிவத்தம்மாவின் கருத்த புருஷன் தான் ஜானாவை தாண்டிக் கொண்டு ரோட்டில் போய்க் கொண்டிருந்தான் .

போன மூச்சு திரும்பி வந்தது.

வீட்டுக்குத்தான் போகிறான் போலும். இந்த ஆளைத் தொடர்ந்து போனால் போதும் வீடு வரை.

அப்பாடா என நிம்மதி பெருமூச்சுடன் அவன் பின்னே நடையை எட்டிப் போடப்போகையில் பின்னால் மறுபடி கொலுசுச் சத்தம்.

‘ஏதடா துன்பம்’ என்றெண்ணும் முன் ஓடைப்புறத்து குழாய் ஒன்றில் இருந்து நைலக்ஸ் சேலையை இழுத்து விட்டுக் கொண்டவளாய் பெட்டிக் கடை மீனாட்சி ஜானாவுக்குப் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தாள். அப்பாடி! இனி பயமே இல்லை. ஒற்றைக்கு ரெண்டு பேர் துணை கிடைத்த பின் என்ன பயம்?

முன்னால் போய்க்கொண்டிருந்த கருப்பன் ஒரு நிமிஷம் திரும்பி ஜானாவைப் பார்த்து சிரித்தான்.

பதிலுக்கு ஜானாவும் சிரித்து வைத்தாள்.

ஒரு வழியாய் வீடு வந்தது .

புத்தகப் பையை மூலையில் கடாசி விட்டு ஓட்டமாய் போய் அம்மாவிடம் தான் புளிய மரத்தைக் கடக்கப் பட்ட கஷ்டத்தை எல்லாம் சொன்னால் தான் மனசாறும் போலிருந்தது அவளுக்கு.

துவைக்கும் கல் மேடையில் சாய்ந்து நின்று கொண்டு அம்மா துணிகளுக்கு சோப்பு போடப் போட நுரைக்குமிழிகளை கிள்ளிக் கிள்ளி உடைத்துக் கொண்டே இவள் சொன்ன கதையைச் சன்னப் புன்னகையோடு கேட்டுக் கொண்டே வந்த அம்மா கடைசியில் கருப்பனையும், மீனாட்சியையும் பற்றிச் சொல்லும் போதுமட்டும் களுக்கென சிரித்து; 

‘ம்ம்...அப்போ நிஜப்பேய்க கூட பயமில்லாம நடந்து வந்தன்னு சொல்லு’ என்றவாறு பிழிந்த துணிகளை உலர்த்த கொடிப் பக்கமாக நகர்ந்தாள் .

‘நிஜப் பேய்களா... ஏம்மா! ஜானாவின் முதிராத குழந்தை முகம் கேள்வியில் விரியக் கண்டு அம்மா யோசனையுடன்; ‘அதொண்ணுமில்லை பாட்டி கேப்பமாவுச்சீடை பண்ணிருக்கா, போய்த் தின்னுட்டு கண்ணுக்கு மருந்து வாங்கிட்டு வரச்சொல்லி அப்பாக்கு ஃபோனப் போடு போ’ என்று பிளாஸ்டிக் வாளியுடன் கிணற்றுப்பக்கம் தண்ணீர் இறைக்கப் போய் விட்டாள் .

பாட்டி தந்த கேப்பச் சீடையை மென்று விழுங்கும் போது ஜானாவுக்கு குழப்பமாக இருந்தது;

அந்த சோற்றுக்கடை சிவத்தம்மா புருஷன் தன்னைப் பார்த்து சிரித்தானா, இல்லை பெட்டிக் கடை மீனாட்சியைப் பார்த்து சிரித்தானா? குழப்பத்துடன் அம்மாவைப் போலவே ‘களுக்’கென்று சிரித்துக் கொண்டு ‘நிஜப் பேய்கள்’ என்று ஒருமுறை மெல்லச் சொல்லிப் பார்க்கையில் திடீரென்று தான் பெரிய மனுஷியானார் போல் ஒருபிரமை வந்தது ஜானாவுக்கு.

அன்றைக்கு அமாவாசை சிவத்தம்மாள் வழக்கம் போல் புளிய மரத்தில் ஆணி அடிக்கக் கிளம்பிக் கொண்டிருக்கிறாளென உடுக்கை சத்தம் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தது ஊருக்கும் ஜனாவுக்கும்.

Image courtesy: Google

]]>
Tamarind tree ghosts short story by karthiga vasudevan, புளியமரத்துப் பேய்கள் உளவியல் சிறுகதை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/13/w600X390/storm-kevin-crossley-holland-5.png http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/mar/13/tamarind-tree-ghosts-short-story-by-karthiga-vasudevan-2879856.html
2879203 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் மனைவி / கணவரிடம் ஏற்படும் பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வு வேண்டுமா? இதைப் படியுங்கள் முதலில் சினேகா Monday, March 12, 2018 01:14 PM +0530  

ஒரு கூரையின் கீழ் வாழும் தம்பதியரிடையே அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படுவதும் பின்னர் சமாதானம் அடைவதும் சகஜம்தான். ஆனால் பிரச்னைகள் தொடர்கதையாகும் போதும், எப்போதும் மன நிம்மதியற்ற நிலையும் இருந்தால் அது சம்மந்தப்பட்ட இருவருக்கும் மன உளைச்சலைத் தான் ஏற்படுத்தும். இனி ஒரு போதும் சண்டை போடக் கூடாது உன்னை நான் நல்லா புரிஞ்சிக்கிட்டேன் என்று தலையில் அடித்து சத்தியம் செய்து கொண்ட மறுநாளே கூட மனக் கசப்பு ஏற்படுவதுண்டு.

நீ தான் இதுக்கு காரணம் என்பார் ஒருவர்....இல்லவே இல்லை எல்லாத்துக்கும் நீதான் காரணம் என்று ஒரே போடாக போடுவார் மற்றவர். இதில் குடும்பத்திலுள்ள மற்றவர்கள் யாரும் பஞ்சாயத்துக்கு வந்துவிட்டால் அவர்கள் பாடு திண்டாட்டம்தான். மூன்றாம் மனிதரிடம் செல்லாமல், கோர்ட் படிக்கட்டுகளில் ஏறாமல் நம்முடைய வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிணக்குகளை நாமே சரி செய்து கொள்ள முடியும். அதுதான் ஆரோக்கியமான உறவுக்கான நிரந்தர தீர்வும் கூட. 

எல்லா நாளும் இனிக்க என்ன செய்யலாம்?

ஒரு காலைக் காட்சி. அன்று எல்லாமே தாமதமாகிவிடுகிறது. திங்கள்கிழமை காலைகள் எப்போதுமே அசுர பரபரப்பானவை. ஞாயிற்றுக் கிழமை சாவகாசத்துக்குப் பிறகு திங்களன்று குழந்தைகளை எழுப்புவதும் கிளப்புவதும் தாய்மார்களுக்கு பெரும்பாடு. இதில் பெரும்பாலும் அப்பாக்கள் உறங்கிக் கொண்டிருப்பார்கள். அல்லது அந்தக் கலவரத்திலும் கூச்சமே படாமல் காபி கேட்பதுடன் அந்தக் காபியில் சர்க்கரை அதிகம் அல்லது குறைவு என்று குற்றம் சுமத்துவார்கள்.

குழந்தைகள் லேட்டாக கிளம்பி, ஸ்கூல் வேனை விட்டுவிட்டால் அப்பா பைக்கில் பள்ளி வரை கொண்டுவிட நேரும் சமயங்களில் இன்ஜினை விட சூடாகிவிடுவார்கள். டைமுக்கு எதையாவது செய்யத் தெரியுதா உனக்கு என்று ஆரம்பிக்கும் சண்டை மூதாதையர் வரை நீண்டு, அதன் பின் காலை டிபன் சாப்பிடாமல் அவரவர் அலுவலம் போய், இரவு உணவு சாப்பிடும் போதும் முகம் கொடுத்து பேசாமல் சின்ன விஷயம் அப்படியே வாய் வார்த்தையில் நீண்டு மனக் குறையில் கொண்டு போய்விட்டுவிடும். 

இது பல குடும்பங்களில் நடப்பது தான். எங்கோ ஆரம்பித்து எதிலோ கொண்டு போய்விட்டுவிடும். நம் நாட்டைப் பொருத்தவரை மனைவி என்பவள் கட்டுப்படுத்தப்பட வேண்டியவள் என்ற பொதுப்புத்தி ஆண்களின் தலைக்குள், உடலுக்குள், ஜீனுக்குள் உறைந்து போன ஒன்று. சமத்துவமற்ற நிலையில் ஒருவரின் தலையில் மட்டும் சுமத்தப்படும் வேலைச் சுமை, பொறுப்பு, கடமைகள் பல சமயம் அவர்கள் எனர்ஜி முழுவதையும் உறிஞ்சியெடுத்து, சோர்வுறச் செய்துவிடும்.

இதை சரி செய்ய பொறுமையும் அன்பும், விடாப்பிடியான முயற்சியும் தேவை. காலை வேளைகளில் கணவரை சிற்சில வேலைகள் செய்யப் பழக்கி வைக்க வேண்டும். பிள்ளைகளையும் அவரவர் தட்டுக்களை, சின்ன சின்ன கைக் காரியங்களை செய்ய ஊக்குவிக்க வேண்டும். அனைவரும் சேர்ந்து வேலைகளைச் செய்யும் போது அது ஒரு வேலையாகவே தோன்றாது. எளிதாக செய்து முடிப்பதுடன் நேரத்தை மிச்சப்படுத்தலாம். இதெல்லாம் ஆகற விஷயமா இதுங்க கிட்ட சொல்றதுக்கு நானே செய்து முடிச்சிடுவேன் என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தால் உங்களை ஆண்டவன் ஆண்ட்ராய்ட் மூலம் வந்தால் கூட காப்பாற்ற முடியாது. முக்கியமாக ஸ்ட்ரெஸ் குறையும். அதன் பின் திங்கட்கிழமைகளைக் கூட எளிதாக கடந்துவிடலாம்.

தினமும் ஒரு முறை ஐ லவ் யூ சொல்லுங்கள்

இது கேட்பதற்கு மிகவும் அபத்தமாகவும் நாடகத்தனமாகவும் தோன்றலாம். ஆனால் அந்த வார்த்தையின் மந்திரம் உங்களை நிச்சயம் காப்பாற்றிக் கொண்டே இருக்கும். உங்கள் உறவை உங்களுக்கே தெரியாமல் காபந்து பண்ணிக் கொண்டிருக்கும். ஒரு அரணாக உங்களைச் சுற்றி பூவேலி அமைத்திருக்கும் வார்த்தைகள் அவை. வார்த்தையில் சொல்லாவிட்டாலும் குறுஞ்செய்தியில், ஒரு சிறு தொடுகையில், ஏன் ஒரு ஈரப்பார்வையில் கூட தினந்தோறும் உங்கள் அன்பை வெளிப்படுத்தலாம். உடல்களைப் பகிர்ந்து கொள்ளும் கணவன் மனைவி பலர் உணர்வுகளை பகிர்ந்து கொள்வதில்லை. அதனால்தான் பாதிக்கும் மேற்பட்ட பிரச்னைகள் உருவாகிறது.

உங்களுடைய கணவருக்கு அன்று மூட் சரியில்லை என்றால் அவரை சரிப் படுத்த முயலுங்கள். உங்கள் மனைவிக்கு தனிமை தேவைப்பட்டால் அவரை சிறிது நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். தானாக சரியாகிவிடுவார். இதை விட்டுவிட்டு என்னை அப்படி பேசினே இல்லையா உன்னை எப்படி அழ வைக்கறேன் பாரு என்றோ, நீங்க சொன்னதை நான் மறக்கவே மாட்டேன், டைம் வரட்டும் வைச்சிக்கிறேன் என்று மனத்தில் கறுவிக் கொண்டிருந்தால் அது சரியாக இருக்காது. அந்தந்த பிரச்னைகளுக்கான தீர்வுகள் உடனடியாக இருக்க வேண்டும்.

தேவையற்ற நெகட்டிவ் விஷயங்கள் வேண்டாம்

திருமண உறவுகளில் ஈகோ, பயம், வெறுப்பு போன்ற நெகட்டிவ் விஷயங்களை வளர்த்தெடுக்காதீர்கள். ஒருவர் மீது மற்றவருக்கு ஏராளமான எதிர்ப்பார்ப்புகள் இருக்கலாம். சில சமயம் ஒருவரின் பழக்க வழக்கங்கள் மற்றவருக்குப் பிடிக்காமல் போகலாம். பொறுமையாக கணவரின் குண நலன்களில் எது சரியில்லை எதை சரி செய்ய முடியும், எதை தலைகீழாக நின்றாலும் மாற்ற முடியாது என்பதை எல்லாம் அலசி ஆராய்ந்து அதற்கேற்றபடி உங்களை சிறிது பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும். போலவே மனைவியின் பயங்கள் தயக்கங்கள், அவளுடைய வாழ்நிலை சூழல்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு நடந்து கொள்ளுங்கள். அவர்கள் மீது எதையும் திடீரென்று திணிக்காதீர்கள்.

ஓரிரவில் எந்த மாற்றங்களையும் கொண்டு வர முடியாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எல்லாவற்றுக்கும் கால அவகாசம் தேவை. நீங்கள் கற்பனையில் உருவாக்கியிருக்கும் ஒருவராக உங்கள் கணவன் அல்லது மனைவி ஒருபோதும் இருக்க முடியாது. அவர்கள் ரத்தமும் சதையும் தனித்துவமும் மிக்க ஒரு உயிர். அவர்களுக்கு முதலில் மதிப்பு கொடுங்கள். இருவரில் ஒருவர் செலவாளியாக இருக்கலாம், அல்லது கஞ்சத்தனம் மிக்கவராக இருக்கலாம். அவரின் நியாயமான கோரிக்கைகளையும் கொள்கைகளையும் ஒத்துக் கொண்டு ஒத்துப் போவதுதான் சரி. மேலும் ஆரோக்கியமான திருமண உறவில் பரஸ்பரம் மரியாதை மிகவும் முக்கியம்.

ஒருவர் மீது மற்றவருக்கு வெறுப்பும், பயமும் இருந்தால் அது பிரச்னைகளை தீர்க்காது. எல்லா விஷயங்களிலும் இருவரும் கலந்து பேசி முடிவெடுத்தால் தாம்பத்திய ரயில் சீராக ஓடிக் கொண்டிருக்கும். பண விஷயங்கள், குடும்ப நிர்வாகம் என எல்லா விஷயங்களிலும் ஒருவரே முடிவெடுப்பவராக இருந்தால் அது சந்தோஷமான இல்லறமாக மலராது. நான் உசத்தி நீ தாழ்த்தி என்று தன்னை நிறுவ இருவரில் ஒருவர் நினைத்தாலும் அது போராட்டத்தில்தான் முடியும். நம்பிக்கையும் பரஸ்பர ஒற்றுமையும் சமத்துவமும் தான் மகிழ்ச்சியான குடும்பத்தின் அடிப்படை.

மன்னிப்பாயா...அன்பே  

திருமண உறவில் இருப்பவர்களுக்கிடையே சில அந்தரங்கங்கள் இருக்கலாம் ஆனால் ரகசியங்கள் தேவையற்றது. ஒருவருடைய பிரத்யேகம் என்பதை மற்றவர் மதிக்க வேண்டும், அதே சமயத்தில் அதிலேயே அவர்கள் மூழ்கிவிடக் கூடாது. மற்றவரின் இருப்பை அவர்கள் உணர்ந்து மதித்து நடக்க வேண்டும். ஏற்கனவே சண்டையில் பிரச்னையிலிருந்து விடுபட்டு மீண்டும் இணையும் போது முன்பு ஏற்பட்ட பிரச்னைகள் மீண்டும் தலைதூக்காமல் இருக்க இருவருமே முயற்சி எடுக்க வேண்டும். திருமண உறவில் நம்பிக்கையை மீண்டும் கட்டமைப்பது கடினம் தான். ஆனால் முயற்சியும் நீங்கா அன்பும் இருந்தால் நிச்சயம் ஒருவரை மற்றவர் புரிந்து கொள்வார்கள்.

என்னதான் பிரச்னைகள் தீர்ந்து தற்போது சுமுக நிலைக்கு இருவரும் வந்திருந்தாலும், மனத்துக்குள் ஒரு மூலையில் இவர் இன்னும் அப்படித்தான் செய்கிறாரோ, என்றும் இவள் எல்லாம் எங்க திருந்த போறா என்றும் நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். தவறு செய்த அவர் / அவளின் ஒவ்வொரு செயல்பாடும் சிறிது நாட்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியாது. ஆனாலும் அன்பும் நம்பிக்கையும் மட்டுமே இதற்குத் தீர்வு. 

செய்த தவறுக்கு மனதார மன்னிப்பு கேட்பதும் மனதார மன்னிப்பு வழங்குவதும் தான் மனிதத் தன்மை. குத்திக் காட்டுவதும், நீங்க அப்படித்தான்னு எனக்குத் தெரியும், நாய் வாலை நிமிர்த்த முடியுமா என்றெல்லாம் பேசாதீர்கள். மன்னிப்பது மட்டுமல்ல மறப்பதும் உங்கள் இல்லற வாழ்க்கையை சுகப்படுத்தும். உங்கள் மனதின் ஆழத்திலிருந்து அன்பை வெளிப்படுத்துங்கள். அதன் சக்தி மகத்தானது. 

புகைப்படங்கள் நன்றி - கூகுள்

]]>
Married life, Husband and wife, கணவன் மனைவி, திருமண உறவு, தம்பதி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/12/w600X390/love.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/mar/12/உங்கள்-மனைவி--கணவரிடம்-ஏற்படும்-பிரச்னைகளுக்கு-எல்லாம்-தீர்வு-வேண்டுமா-இதைப்-படியுங்கள்-முதலில்-2879203.html
2874940 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் மண்டை காயவைக்கும் பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட இதையெல்லாம் உடனடியாக செய்து பாருங்கள்! மாலதி சந்திரசேகரன் Monday, March 5, 2018 03:56 PM +0530  

வெயில் இப்பவே பட்டையைக் கிளப்ப ஆரம்பித்து விட்டது. கொட்டும் வியர்வைக்கு அளவே இல்லாமல் இருக்கிறது. முகம் வியர்த்தால் அப்பொழுதைக்கு அப்பொழுது கழுவிக்கொள்ளலாம். ஆனால் தலைமுடிக்குள் வியர்த்தால் அடிக்கடி தலைமுடியை அலசிக்கொள்ளவா முடியும்? 

அதுவும் பெண்களின் பாடு இருக்கிறதே, ரொம்பக் கஷ்டம். சரி. பொடுகு எப்படி வருகிறது? 

தலையின் மேற்புறத்தில் உள்ள சருமத்தில், இறந்து போன உயிரணுக்களின் வெளிப்பாட்டினையே பொடுகு என்கிறோம். வெயில் நாட்களில், அதிக வியர்வை ஏற்படும் பொழுது, வியர்வையில் உள்ள உப்பு. தலையில் தங்கி விடுவதாலும், பொடுகு உண்டாகும். இந்தப் பொடுகு வந்துவிட்டால், தலையில் ஏற்படும் அரிப்பை கட்டுப்படுத்தவே முடியாது.  வீடாக இருந்தால் ஒரு பெண், தன்  தலையை விரித்துப் போட்டுக்கொண்டு, இரண்டு கைகளையும் தலையில் வைத்து, பரக் பரக் என்று சௌகர்யமாக சொரிந்து கொள்வாள். அதுவே ஆபீசாகவோ, பொது இடமாகவோ இருந்தால் அவளால் என்ன செய்ய முடியும்? ஒரு விரலாலோ அல்லது பேனாவினாலோ லேசாக அதுவும் நாசூக்காக சொரிந்து கொள்வாள். ஆணாக இருந்தால், பாக்கெட்டிலிருந்து சீப்பை எடுத்து, லாவகமாக முடியை வாரிவிட்டுக் கொள்வான். 

இந்த உபாதையிலிருந்து விடுபட முடியுமா? என்றால் நிச்சயம் முடியும்? அதற்காக அதிகமாகப் பணமும் செலவழிக்கத் தேவை இல்லை. அன்றாடம் உபயோகிக்கும் வீட்டிலுள்ள பொருட்களின் உதவியோடு பொடுகுக்கு டாட்டா சொல்லி விடலாம். 

enlightened வீட்டில் நிச்சயம் பேக்கிங் சோடா இருக்கும். ஒரு கை பேக்கிங் சோடாவை எடுத்து, தலையில் தேய்த்து, முடியை வெறும் தண்ணீரில் அலசுங்கள். இரண்டு வாரம் தொடர்ந்து செய்தால் போதும். துப்புரவாகப் போய்விடும். 

enlightened நான்கு டீஸ்பூன் ஆலிவ் அல்லது ஆல்மெண்ட் எண்ணெய்யை எடுத்துக் கொள்ளவும். தலையில், மண்டையோட்டில் படும்படி பரபரவென்று தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு முடியை அலசவும். இம்முறையை மூன்று நாளைக்கொருமுறை செய்யவும். விரைவில் குணம் தெரியும். 

enlightened தரமான தூள் உப்பை எடுத்துக் கொண்டு, முடிக்கால்களில் படுகிறாற்போல் அழுந்தத் தேய்த்து விட்டு, ஷாம்பூ போட்டு குளிக்கவும். அப்புறம் பாருங்கள். பொல்லாப் பொடுகு பொடிப் பொடியாகிவிடும்.

enlightened வீட்டில் எலுமிச்சம்பழம் இருக்கிறதா? கவலையை விடுங்கள். இரண்டு ஸ்பூன் எலுமிச்சம்பழ சாற்றினை, தலையில் நன்றாகத் தடவிக் கொள்ளவும். தலையை வெறும் நீரில் அலசவும். மீண்டும் ஒரு ஸ்பூன் எலுமிச்சம்பழ சாற்றிற்கு ஒரு கப் தண்ணீர் என்கிற விகிதத்தில் தலையை தனியாக அலசவும். பொடுகு தலைதெறிக்க வாபஸாகி விடும். 

enlightenedஆஸ்பிரின் மாத்திரையில், சாலிசிலிக் ஆசிட் உள்ளது. இது பொடுகை ஒழிக்கும் ஷாம்பூவில் உள்ள மருத்துவப் பொருள் அதுதான். இரண்டு ஆஸ்பிரினை எடுத்துப் பொடித்து, வழக்கமாக உபயோகிக்கும் ஷாம்பூவுடன் கலந்து, தலையில் தேய்த்து, இரண்டு நிமிடங்கள் ஊறவும். தலையை அலசிய பின், வழக்கமாக உபயோகிக்கும் ஷாம்பூ போட்டு மீண்டும் தலையை அலசவும். ஆச்சர்யப்படும் படியான குணம் தெரியும். பொடுகுத் தொல்லை குறைந்தால், முடி உதிர்வதும் குறையும். 

மேற்படி கொடுத்துள்ளதில், எது உங்களுக்கு சௌகர்யமாக உள்ளதோ அம்முறையைப் பின்பற்றலாம். 

பிறகு என்ன? இரு பாலாருக்கும் குஷிதானே? ஆணாக இருந்தால் ரஜினி ஸ்டைலில் அலட்டிக் கொள்ளலாம். பெண்ணாக இருந்தால், பிடித்த ஹேர் ஸ்டைலில், தலையில் கை வைக்காமல் தூள் கிளப்பலாம். என்ஜாய் பண்ணுங்க. 

 

]]>
தலைமுடி பராமரிப்பு, hair care, oil massage, Dandruff, பொடுகு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/5/w600X390/south-indian-ponytail-samantha-ruth-prabhu.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/mar/05/how-to-get-rid-of-dandruff-few-home-remedies-2874940.html
2874937 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் வாசிப்பதற்காக மெனக்கெட்டு இந்த லைப்ரரிக்குப் போகனும்னா சொத்தை வித்து தான் எடுத்துக்கிட்டு போகனும்! கார்த்திகா வாசுதேவன் DIN Monday, March 5, 2018 03:38 PM +0530  

இங்கே பாருங்க அதிசயத்தை, கட்டில் இருக்காம் படிச்சிக்கிட்டே தூங்கலாமாம் இந்த லைப்ரரியில்!

இது பிரிட்டனின் ஒரே ஒரு ஸ்பெஷல்  ‘குடியிருப்பு நூலகம்’ என்று சொன்னால் அது மிகையில்லை. ஏனென்றால் இந்த நூலகத்துக்குச் சென்று விட்டீர்கள் என்றால் உங்களது வாசிப்புக்கு எந்த வித இடையூறும் கிடையாது. நடுவில் தூக்கம் வந்தாலும் சரி, இல்லையேல் இரவாகி விட்டதென்றாலும் சரி. உங்களை யாரும் வெளியேறச் சொல்லி தொல்லை செய்யப் போவதில்லை. இந்த நூலகத்தின் உள்ளே புத்தக அலமாரிகளுடன் சில படுக்கை அறைகளும் உள்ளன. நூலகத்தைப் பயன்படுத்தும் வாசகர்களின் வசதி கெடாமல் அவர்களது வாசிப்புக்கு எந்த விதத்திலும் பங்கம் வரக்கூடாது என்ற நோக்கில் உள்ளேயே சோபாக்கள், நாற்காலிகளுடன் படுக்கை அறைகளும் கொண்டு மிக நவீனமாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது இந்த நூலகம்.

 

பிரிட்டனின் வடக்கு வேல்ஸ் எல்லைப்புறமிருக்கும் சிறிய நகரமான ஹாவர்டெனில் இருக்கும் அழகான நூலகத்தின் பெயர் ‘கிளாட்ஸ்டோன்ஸ் லைப்ரரி’ இங்லீஷ் பார்டர் பகுதியிலிருந்து சுமார் 40 நிமிடப் பயணத்தொலைவில் இது அமைந்திருக்கிறது. பிரிட்டனின் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரே ஒரு குடியிருப்பு நூலகம் என்ற தனிச்சிறப்பும் இதற்கு உண்டு. இதன் சில அறைகள் படுக்கை வசதி, படிப்பதற்குத் தோதாக மேஜை, டேபிள், ரீடிங் லேம்ப் வசதிகள் உள்ளிட்ட அம்சங்களுடன் வசதியான லாட்ஜ் அறைகளைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளன.

விக்டோரியன் மாநில உறுப்பினராகவும், 4 முறை பிரிட்டன் பிரதமராகவும் பதவி வகித்த வில்லியம் எவார்ட் கிளாட்ஸ்டோன் என்பவரால் 1800 ஆம் ஆண்டு காலகட்டத்தில் சுமார் 32,000 புத்தகங்களுடன் இந்த நூலகம் துவக்கப்பட்டதாகத் தகவல்.

நம்மூர் நூலகங்களைப் போலவே இன்று இந்த நூலகத்தில் தொடர் நிகழ்வுகளாக தினமொரு இலக்கியக் கூட்டம், தியேட்டர் நாடகங்கள், சிறந்த பேச்சாளர்களின் உரையாடல்கள், பயிற்சிப் பட்டறைகள், உலக இலக்கிய விழாக்கள் எனப் பல முக்கியமான நிகழ்வுகள் அரங்கேறுகின்றனவாம்.

அதனால் கிளாட்ஸ்டோன் நூலகத்துக்கு வாருங்கள், இங்கே வந்து தங்கி, வாசித்து, உங்களைத் தளரச் செய்து ரிலாக்ஸாக வெளியேறுங்கள் என்று அழைப்பு விடுக்கின்றனர் இந்த நூலக நிர்வாகிகள்.

இந்தியாவில் இருப்பவர்கள் மெனக்கெட்டு வாசிப்பதற்காக இந்த நூலகத்தைச் தேடிச் செல்வதென்றால் சொத்தை விற்று எடுத்துக் கொண்டு போனால் தான் ஆயிற்று. இம்மாதிரியான நூலகங்களை விரும்புகிறவர்கள் பேசாமல் இப்படி ஒரு நூலகத்தை நம்மூரிலேயே வடிவமைத்து விடலாம். நம்மூரில் புத்தகங்களுக்கா பஞ்சம். இல்லை பழம்பெரும் படைப்பாளிகளுக்குத்தான் பஞ்சமா?

புத்தகப் புழுக்களுக்கு இம்மாதிரியான சிறப்பு வசதிகளுடன் கூடிய நூலகங்கள் இருந்தால் அவர்களுக்கு வீட்டு ஞாபகமே வராமல் போனாலும் ஆச்சர்யமில்லை.

பிரிட்டனில் இருக்கும் இந்த நூலகத்தை தனியார் ஒருவர் தான் நிறுவியிருக்கிறார்.

ஆனால் இந்தியாவில் தனியார் முயற்சியில் இப்படி ஒரு நூலகம் அமைந்தால் அதில் நுழைவதற்கு 5 நட்சத்திர விடுதிக்கு இணையாகக் கட்டணம் வசூலிக்கப்படும் அபாயமும் உண்டு. எனவே அரசு சார்பில் மாநிலத் தலைநகரங்களில் மட்டுமேனும் இப்படியான நூலகங்களை அறிமுகப்படுத்தலாம்.

இந்திய அரசின் நூலகத்துறை ஆவண செய்யுமா?!

]]>
Gladstone library, Britain's residential library, கிளாட்ஸ்டோன் நூலகம், பிரிட்டனின் ஒரே குடியிருப்பு நூலகம், வாசித்துக் கொண்டே தூங்கலாம், http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/5/w600X390/gladstones_library_guest_room.JPG http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/mar/05/wow-wonderful-gladstone-library-2874937.html
2874924 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல் உங்களுக்கு ருத்ராட்சம் அணிய விருப்பமா? இதையெல்லாம் முதலில் தெரிந்து கொள்ளுங்கள்! உமா பார்வதி Monday, March 5, 2018 03:09 PM +0530  

நான் சிவ பக்தை என்பதால் சிறு வயதிலிருந்து ஸ்படிகம், ருத்ராட்ஷம் அணிந்து பழக்கப்பட்டவள். வீட்டில் பொன் நகைகள் வாங்கிக் கொடுத்தும், எனக்கு தங்கத்தை விட ருத்ராட்ஷத்தின் மீதே ஈர்ப்பு அதிகமிருந்தது. வளர் இளம் பருவத்தில் பெண்கள் ருத்ராட்ஷம் அணியக் கூடாது என்று பெரியவர்கள் சொன்னதால், மனம் ஒப்பாமல் அணிவதை நிறுத்தினேன். உள் மனத்தில் சிவ சிந்தனையும், ருத்ராட்ஷத்தின் அணிவதற்கான விழைவும் இருந்து வந்தது. அதன் பின் குருவின் ஆசியுடன் ஜபம் செய்ய தொடங்கியபோது ருத்ராட்ஷம் மீண்டும் என் கரங்களில் வந்து சேர்ந்தது. அதன்பின் கடந்த பத்து ஆண்டுகளாக ருத்ராட்ஷத்தைத் தொடர்ந்து அணியத் தொடங்கினேன்.

தியானம் செய்யும் போது மனம் ஒருநிலைப்படவும், தியானமற்ற சமயங்களிலும் எதிர்மறை எண்ணங்கள் வந்துவிடாமலும் ருத்ராட்ஷம் ஒரு அரண் போல என்னைக் காப்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். இது மூடப் பழக்கம், உனக்கேற்பட்ட கற்பனை என்று பிறர் என்னிடம் சொல்வதுண்டு. ஆனால் நமக்கு எது சரியென்று படுகிறதோ அதைக் கடைபிடிக்கும் பழக்கம், அதுவும் அது நல்ல பழக்கமாக இருக்கும்போது எதிர் கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுக்கத் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தேன். என்னுடைய கணினியில் ஒரு ஃபோல்டரில் ருத்ராட்ஷத்தைப் பற்றிய பல குறிப்புக்கள் உள்ளன. அண்மையில் வாட்ஸப்பிலும் இது குறித்து ஒரு செய்தி வந்தது. அவற்றை எல்லாம் தொகுத்து ருத்ராட்ஷத்தைப் பற்றிய ஒரு பதிவை இங்கு பகிர்ந்துள்ளேன். படித்துப் பயன் பெறுக.

வடமொழியில் ருத்ராட்ஷம் என்பதற்கு ருத்திரனின் கண்கள் என்று அர்த்தம். ருத்ராட்சம் அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுமாம். எனவே அனைவரும் ஐந்து முக ருத்ராட்ஷத்தையாவது எப்போதும் கண்டிப்பாக அணிய வேண்டும்.

ருத்திரன் என்பது சிவனை குறிக்கிறது. ganitrus என்ற மரத்தின் பழத்தில் இருந்து பெறப்படும் கொட்டைதான் இந்த ருத்திராட்சம். இந்த மரங்கள் உலகின் சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. அவற்றுள் நேப்பாள நாட்டில் விளையும் உருத்திராட்ச மணிகளே தரத்தில் உயர்ந்தனவாக கருதப்படுகிறது.

இயற்கையில் ருத்ராட்ஷம் செம்மையும், கருமையும் கலந்தேறிய பழுப்பு நிறத்தில் இருக்கும். கடையில் விற்பனைக்கு கிடைக்கும் மணிகள் பெரும்பாலும் மெருகேற்றப்பட்டும், அல்லது சாயமேற்றப்பட்டிருக்கும். நல்ல ருத்ராட்சத்தை கண்டுபிடிக்க அதனை நீரில் போட்டுப் பார்த்தால் தெரிந்துவிடும். மூழ்கினால் அது நல்ல ருத்திராட்சம், மிதந்தால் அது போலி. அல்லது பழங்கள் அல்லது உணவுப் பொருட்களுக்கு சற்று மேலே உயரப் படித்தால் அது லேசாக ஒரு அதிர்வினை ஏற்படுத்தி கடிகார முகமாக சுழலும். அதுவே சிறந்த ருத்ராட்சம்.

ருத்ராட்ஷம் அணிவது நமது உடம்புகாக அல்ல. உயிரின் ஆத்மாவிற்காகவே சிவபெருமானால் அருளப்பட்டது எனும் நம்பிக்கையை அதை அணிபவர் வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும் போதும், தூங்கும் போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்ஷம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.

சிறுவர், சிறுமியர் ருத்ராட்ஷம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும். ருத்ராட்ஷத்தை பெண்கள் அணிந்தால் ஞானம் அடைவார்கள். வீட்டினில் லட்சுமி கடாட்சமும் நிறைந்திருக்கும். அவர்களுக்கு தெளிந்த சிந்தனையும், தீர்க்கமாக முடிவெடுக்கும் பக்குவத்தையும் தரும்.

பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்ஷம் அணிந்திருப்பதை, கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று விவரிக்கிறது (அருணாசலபுராணம் (பாடல் எண் 330) பழி, பாவம் முதலியவற்றை முழுவதுமாகத் தீர்த்துக் கட்டுகிற திருநீறையும், ருத்ராட்ஷத்தையும் தனது திருமேனி முழுவதிலும் அகிலாண்டேஸ்வரி அணிந்து கொண்டாளாம்.

பராசத்திக்கு ஏது பழியும், பாவமும்? நமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையே ருத்ராட்ஷம் அணிந்து கொள்கிறாள். எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்ஷம் அணிய வேண்டும். மேலும், சிவ மஹாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சிவபெருமானே வலியுறுத்தியுள்ளார்.

பெண்கள், தங்களுடைய தாலிக் கொடியில் அவரவர் மரபையொட்டி சைவ, வைணவச் சின்னங்களைக் கோர்த்துதான் அணிந்திருக்கின்றனர். அதை எல்லா
நாட்களிலும் தானே அணிகிறார்கள்? சில பெண்கள், யந்திரங்கள் வரையப்பட்ட தாயத்து போன்றவற்றையும் எப்போதும் அணிந்திருப்பதுண்டே? இவற்றைப் போல் ருத்ராட்ஷத்தையும் எல்லா நாட்களிலும் கழற்றாமல் அணிய வேண்டும்.

ருத்ராட்ஷம் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என யார் அணிந்தாலும் மனமும், உடலும் தூய்மை அடையும். ஆனால் அதை அணியும் போது சில விஷயங்களைக் கடைபிடிக்கத் தயாராக இருக்க வேண்டும். எப்படி மருந்துக்குப் பத்தியம் அவசியமோ அதுபோல ருத்ராட்ஷம் அணிபவர்களும் மது அருந்துதல்,
புகை பிடித்தல், அசைவம் உண்ணுதல் போன்றவற்றை விட்டு விட வேண்டும். அல்லது அசைவம் சாப்பிடும் நாட்களில் ருட்ராட்ஷத்தை கழட்டி வைத்துவிடுவது நல்லது.

திதி, பெண்கள் தீட்டு, தாம்பத்யம் நேரங்களில் ருத்ராட்ஷம் அணியலாமா என்ற சந்தேகம் சிலருக்கு எழுவதுண்டு. இந்த மூன்று விஷயங்களுமே இயற்கையானதே. இதில் எந்த நிகழ்ச்சியும் செயற்கையானதே கிடையாது. நீத்தார் கடன் போன்றவற்றை செய்யும்போது அதை செய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பது அவசியம். இதனால் பித்ருக்களின் ஆன்மாக்கள் மகிழும் என்று சிவபெருமானே உபதேசித்திருக்கிறார். ஆகையால் இம்மூன்று நிகழ்ச்சிகளின் போது ருத்ராட்ஷம் அணியலாம். அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.

யார், யார் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்ஷம் அணியலாம்?

ருத்ராட்ஷத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளைக் காணலாம், இதற்குத்தான் முகம் என்று பெயர். ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம். ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முகம் என்று இப்படியே கணக்கிட வேண்டியதுதான். எத்தனை முகம் என்பதைக் கண்டுபிடிக்க எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை. கண்ணால் சாதாரணமாகப் பார்த்தாலேயே தெரியும்.

எல்லா இடங்களிலும் எளிதில் கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்ஷம் அணிவதே போதுமானது. இறைவனின் திருமுகம் ஐந்து. நமச்சிவாய ஐந்தெழுத்து.பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்).நமது கை கால் விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து. ஆகையால் மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்ஷத்தையே படைக்கின்றார். ஆகையால் ஐந்து முக ருத்ராட்ஷங்கள் அணிவதே மிகச் சிறப்பு. இதை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என சகலமானவர்களும் அணியலாம். ஐந்து முக ருத்ராட்ஷத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்ஷங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.

ஒரு முகம் கொண்ட ருத்ராக்க்ஷம்
 
இதை அடைவது மிகவும் கடினம். இது இறைவன் திருப்பிறப்பாக கருதப்படுகிறது இதை ஒரு பார்வை பார்த்தாலும் அல்லது ஒரு முறை இதை தொட்டாலும், உங்களது பாவங்களை எல்லாம் நீங்கும். இதை அணிந்தால், சிவ தத்துவம் எங்கும் பரவியுள்ளதை ஒருவா் உணர முடியும் ஒருவா் அவரது விருப்பங்கள் பூா்த்தி அடைந்து முக்தியடைவார்.

இரண்டு முகங்கள்

இரண்டு முகம் கொண்ட மணிகள் மிகவும் அபூா்வமானவை இதுவும் அதிகம் கிடைக்காது அதனால் விலை அதிகமாக இருக்கும். இது சிவனும் சக்தியும் கூடிய அா்த்த நாரீஸ்வரரின் ஸ்வரூபமாகும். இதன் கிரகம் சந்திரன். இதனை அணிவதால் விலங்குகளைக் கொன்ற கொலை பாவம் போகும், கொடும் பாவமான பசுவைக் கொன்ற கோஹத்தி தோஷம் கூட விலகிவிடும். இதை அணிபவா்கள் செல்வம், மகிழ்ச்சி, மன அமைதி, மனதை ஒருமுகப்படுத்துதல், குண்டலினியை எழப்புதல் ஆகியவற்றைப் பெறுவர்.

மூன்று முகங்கள்:

மூன்று முகம் கொண்ட மணிகளும் அரிதானது, சாதாரணமாகக் கிடைப்பதில்லை, விலை அதிகமானதே. இது சோம சூரிய அக்கினி எனும் சிவனின் முக்கண் வடிவானவை. சூரியன், சந்திரன், அக்கினி தேவன் மூவருமே இதற்கு அதிபதிகளாவர். இதன் கிரகம் அங்காரகன் எனும் செவ்வாய் இதனை அணிவதால் பெண்களைக் கொன்ற பசு ஹத்தி தோஷம் கூட விலகும், பலவகை பாவங்கள் எரிந்து சாம்பலாகும். மேலும் இதனை அணிந்தவன் ஆன்மிகத்தில் மிக உயா்ந்த நிலைகளை எளிதாக அடைவான். சிவனின் பூரண அருள் கிடைக்கும்.

நான்கு முகங்கள்:

இது பிரும்மாவைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. இதை அணிந்தால் பக்தி, செல்வம், மகிழ்ச்சி, மோட்சம், ஆகியவற்றைப் பெறலாம். இருள் அழிக்கப்பட்டு.அறிவுக்கூா்மை என்னும் வெளிச்சம் பிரகாசிக்கும். பேரின்பத்தை அடையலாம். இதன் கிரகம் புதன், எனவே இதனை கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர் என அனைத்து துறைகளிலும் உள்ள படைப்பாளிகள் அணியலாம் கல்வி, கலைத்திறன், நுண்கலைகள் வளா்ச்சி பெறும்

ஐந்து முகம் கொண்ட மணிகள்

இவை சாதாரணமாக கிடைப்பவை, விலையும் குறைவு, இது காலாக்கினிருத்திர ஸ்வரூபம் உடையது. அகோரம், தத்புருஸ்ம், வாமதேவம், சத்யோஜாதம், ஈசானம் எனும் சிவனின் ஜந்து முகங்கள் இதற்கு அதிதேவதைகள். இதன் கிரகம் குரு இதனை அணிவதால் மாமிசம் முதலான உண்ணத்தகாத உணவுகளை உண்ட பாவம் தீரும். பலவகை பாவங்கள் நசிந்து, சிவ கடாட்ஷம் கிடைக்கும். உண்ணும் உணவில் உள்ள விஷக் குற்றங்கள் விலகும்.

ஆறுமுகம் :

ஆறுமுகம் கொண்ட மணிகள். அதே போல் ஆறு முகங்கள் கொண்ட ஷண்முகா் வடிவானவை. இதன் கிரகம் சுக்கிரன் இவ்வகை மணிகளை அணிந்து கொண்டால் தமிழ்க் கடவுளான முருகன் அருள் பெருகும். பிராம்மணா்களை கொன்ற பழி பாவங்கள் நிங்கி அனைத்திலும் வெற்றி கிட்டும் புகழ் பெருகும் புத்தி தெளிவும் மெய்ஞானமும் பரிசுத்தமும் வாய்க்கும்.

ஏழு முகம்:

ஏழ முகங்கள் கொண்ட மணிகளும் மிக அரிதானவை. பிரம்மதேவன் கட்டளையினால், கீழே உலகங்களை அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மஹாதலம் எனும் சப்பதலோகங்களைில் உள்ள நாகா்களின் தலைவனாக இருந்து ஆயிரம் தலைகளோடு கூடிய பூமியைத் தாங்கிய ஆதிசேஷன் அம்சமானவை. இ்வ்வகை மணிகளை அணிவதால் பசுக்கொலை செய்த கோஹத்தி பாவமும் போகும் .

பிறா் பொன் பொருளைத் திருடிய பாவங்கள் விலகும் சப்த்தமாதாக்களின் சப்த கன்னிகளின் பேரருள் கிட்டும்.நாதோஷங்கள் நிவா்த்தியாகும். கல்வி, நுண்கலைகள் மேம்படும் யோகசக்திகள் கைவரும். சிலா் சப்தமாதா்களும் சப்தகன்னிகளும் கூட இதற்கு பிரதிதேவதை என்பாா்கள்.

எட்டு முகம்:

எட்டு முகம் கொண்ட மணிகளும் அரிதானவை எளிதில் கிடைக்காதை இ்வ் வகை மணிகள், பல்லாளேச கணபதி, வரத கணபதி, சிந்தாமணி கணபதி, மயூரேச கணபதி, சத்தி கணபதி, மஹா கணபதி என்று அஷ்ட கணபதி ஸ்வரூபபானவை. இதன் கிரகம் ராகு. இதனை அணிந்து கொண்டுடால் அஷ்ட வசுக்களின் ஆசிகள் கி்ட்டும். குருவை கொன்று குருபத்தினியைத் தீண்டிய கொடும் பாவங்களும் விலகி புண்ணியம் ஏற்படும் பொன் திருடிய குற்றங்கள் நீங்கும் அஷ்டமா சித்திகளும் வாய்க்கும் அஷ்ட லஷ்மிகளின் அருள் கி்ட்டும் பல வகையில் வரும் காரியத் தடைகள் அகலும். கங்கை தேவி மகிழ்ந்து அருள் புரிவாள்.

ஒன்பது முகம்:

ஒன்பது முகம் கொண்ட மணிகள் மிக அரிது. கயிலை மலையின் எண் திசைகளிலும் காவல் புரியும் தேவதைகளான அசிதாங்க பைரா், ருபைரவா், சண்டபைரவா், குரோதபைரவா், உன்மத்தபைரவா், கபாலபைரவா், சம்ஹரபைரவா் என்ற அஷ்ட பைரா்களின் உற்பத்திக்கு மூலகாரணன் ஆன மஹா பைரவா் ஸ்வரூபமானவைகளே இந்த ஒன்பது முகம் கொண்ட ருத்திராக்க்ஷமணிகள். இதன் கிரகம் கேது இதனை அணிவதால் பில்லி சூனியம் விலகும் பலவகை கொலை பாவங்கள் பாம்புகளால் வரும் துன்பங்கள் நீங்கும் நவக்கிரஹ பீடைகள் விலகி, நவசக்திகளின் பேரருள் கிட்டும் சித்தி முக்தி எற்படும் (இடது கை மணிக்கட்டில் அணிய வேண்டும்).

பத்து முகம்:

பத்து முகம் கொண்ட மணிகள் அரிதானவை.இம் மணிகள் மத்ஸ்ய, கூா்ம, நிரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, கல்கி அதாரங்களின் நாயகனான ஸ்ரீவிஷ்ணுவின் ஸ்வரூபமானவை இவற்றை அணிவதால் பூத, பிரேத, பைசாச, பிரம்மராக்ஷசா்களால் ஏற்படும் ஆபத்துகள் விலகும். ஏவல் பில்லி சூனியங்கள் வலுவிழந்து போகும். பலவகையான பீடைகளிலிருந்து காப்பாற்றப்படுவீா்கள். மிருகங்களால் வரும் ஆபத்துகள் விலகும்

பதினொரு முகம்

பதினொரு முகம் கொண்ட மணிகளும் மிகவும் அபூா்மானவை எளிதில் கிடைக்காதவை இவ்வகை மணிகள், மஹாதேவன், அரன், ருத்திரன், சங்கரன், நீலோஹிதன், ஈசானன், கபாலி, சௌமியன் என்ற எகாதச ருத்திரா்களின் அம்சமானவை. இவற்றை அணிந்து கொண்டால், பலவகை உயிரினனங்கள், பறவைக் என பிராணிகளை கொன்ற பாவம் நீங்கும் வேதாகமங்களில் கூறப்பட்டுள்ள அஸ்வமேதாயகம் முதலான அனைத்து விதமான யாகங்களையும், விரதங்கள் பூஜை புண்ணியம் வரும், சிவஞானம் சித்திக்கும்.

ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்ட பலன்கள் இவைதான் :

நீராடும் போது ருத்ராட்ஷம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்கின்ற புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். பாவங்களினால் தான் நமக்குக் கஷ்டம் உண்டாகிறது. ருத்ராட்ஷம் அணிவதால் கொடிய பாவங்கள் தீரும். இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும். மேலும் ருத்ராட்ஷம் அணிபவருக்கு லஷ்மி கடாஷ்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், சகலவிதமான ஐஸ்வர்யங்களும் ஏற்பட்டு இறைவனின் பேரின்பமும், ஆனந்தமும் கிடைக்கும் என்று சிவ மஹா புராணம் கூறுகிறது

இது மட்டுமல்ல ருத்ராட்ஷம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாக வெளிநாட்டவர்களின் ஆய்வுகள் கூறுகின்றன. எனவே தூங்கும் போதும் கூட ருத்ராட்ஷத்தைக் கழற்றி வைக்க வேண்டாம். திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிந்து தினந்தோறும் 108 முறை எழுத்தாலோ மனதலோ பஞ்சாட்சரத்தை சொல்லி வந்தால் 18 மாதத்தில் மேற்கூறிய பிரார்த்தனைகள் நிறைவேறும்.

உலகில் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் அவர்களின் மத சின்னங்களை அணிய வெட்கப்படுவதில்லை. நாம் நமது மதச் சின்னங்களாகிய விபூதி, ருத்ராட்ஷம் மற்றும் நமசிவாய என்ற ஜபம் ஆகியனவற்றை ஏன் விடவேண்டும்? இதற்காக யாராவது நம்மைக் கேலி பேசினாலும் பொருட்படுத்தக் கூடாது. அப்படிப் பேசுகிறவர்களா நமக்குச் உணவளிக்கிறார்கள்? அவர்களா நம்மைக் காப்பாற்றுகிறார்கள்? ஆனால் ருத்ராட்சம் அணிந்து நமசிவாய என்று எல்லாக் காலத்திலும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள சிவபெருமான் நிச்சயம் காப்பாற்றுவார். அவரவர், தங்கள் வாழ்க்கையிலேயே இதை அனுபவபூர்வமாக உணரலாம்.

ருத்ராட்ஷம் அணிபவர்கள் கண்டிப்பாக எந்த சூழ்நிலையிலும், ருத்ராட்ஷதைக் கழற்றவே கூடாது. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி அவர் கருணை செய்தால்தான் ருத்ராட்சம் அணிந்து அவருடைய நாமத்தைக்கூட நாம் சொல்ல முடியும்.

ஓம் நமசிவாய வாழ்க !

]]>
rudraksha, ருத்ராட்ஷம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/5/w600X390/ENERGIZING-RUDRAKSHA.jpg http://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/mar/05/benefits-of-wearing-rudhraksha-2874924.html
2874914 லைஃப்ஸ்டைல் ஸ்பெஷல்  ‘ராக் ஸ்டார்’ ரமணியம்மாளைத் தெரியாதா உங்களுக்கு?! கார்த்திகா வாசுதேவன் Monday, March 5, 2018 02:13 PM +0530  

ஜீ தமிழ் சேனலின் ‘சரிகமப’ நிகழ்ச்சியில் ‘ராக் ஸ்டார்’ ரமணியம்மாள் என்றொரு பாட்டி சும்மா கலக்கு, கலக்கு என்று கலக்கிக் கொண்டிருக்கிறார்.

சன், ஸ்டார் விஜய் சேனல்களில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிற பாடல் போட்டிகளைப் போலத்தான் இதுவும் என்று நினைத்திருந்தேன். நேற்றைய நிகழ்ச்சியில் சிறப்பு நடுவர்களாக என்றும் இளமை பொங்கும் தேன் குரலுக்குச் சொந்தக்காரரான பி.சுசிலா, இசையரசி வாணி ஜெயராம் இருவரும் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களைத் தவிர வழக்கமான நடுவர்களாக ஸ்ரீனிவாஸ், கார்த்திக், விஜய பிரகாஷ் என மூன்று பிரபலப் பாடகர்களும் அங்கிருந்தனர். மூவரையுமே தன் பாடலால் மயக்கி வாரிச் சுருட்டி தன் முந்தானையில் சொருகிக் கொள்ளாத குறையாக அருமையான பாடலொன்றைப் பாடினார் ரமணியம்மாள். 

இந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரை உலகம் முழுதுமே ரமணியம்மாளுக்கென தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த இந்த ராக் ஸ்டார் ரமணியம்மாள் பிறந்தது 1954 ஆம் வருடம். தற்போது 64 வயதாகும் ரமணியம்மாள் படித்தது அந்தக் கால எஸ்.எஸ்.எல்.சி. சுமாராக ஆங்கிலம் பேச வரும். அவருக்குப் படிப்பில் ஆர்வம் இருந்தும், குடும்பச் சூழல் காரணமாக படிப்பைத் தொடரமுடியாமல் வீட்டு வேலை செய்து குடும்பம் நடத்த வேண்டியதாகி விட்டது. ரமணியம்மாளுக்குத் திருமணமான புதிதில் அவரது கணவர் பொறுப்புடன் இருந்திருக்கிறார். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல கணவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதில் வீட்டின் பொருளாதாரச் சுமை மொத்தமும் ரமணியம்மாளின் தோளில் இறக்கி வைக்கப்பட்டிருக்கிறது. நாள் முழுதும் உழைத்து விட்டு வீடு திரும்பும் ரமணியம்மாளிடம் இருந்து அவர் சம்பாதித்து வரும் தொகையை வாங்கிச் சென்று குடிப்பதற்காக அவரது கணவர் காத்திருப்பாராம். அப்படி இருந்தும் ரமணியம்மாளால் ஏனோ தனது கணவரை குறைத்து மதிப்பிட முடியவில்லை. இன்று அவர் உயிருடன் இல்லாவிட்டாலும் மேலிருந்து நான் பாடுவதைக் கண்டு ரசித்துக் கொண்டே தான் இருப்பார் என்று கணவரைப் பற்றி நல்லவிதமாகவே குறிப்பிட விரும்புகிறார். ஏனென்றால், மனைவி சம்பாத்தித்துக் கொண்டு வரும் காசில் குடித்து விட்டு வரும் பொறுப்பில்லாத கணவராக இருந்த போதும் இவர்கள் இருவருக்குமிடையிலான அன்பில் அணுவளவும் குறையிருந்ததாகத் தெரியவில்லை. குடும்ப வறுமை காரணமாக பல வீடுகளில் வீட்டு வேலை செய்து விட்டு நடந்தே வீடு திரும்பக் கூடியவரான ரமணியம்மாளுக்காக இரவுகளில் வீட்டு வாசலிலேயே காத்திருப