Dinamani - வர்த்தகம் - http://www.dinamani.com/business/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2869046 வர்த்தகம் புதிய வகை பழரச பான அறிமுகத்தில் கோக-கோலா தீவிரம் DIN DIN Saturday, February 24, 2018 12:50 AM +0530 புதிய வகை பழரச பானங்களை அறிமுகப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருவதாக கோக-கோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் (இந்தியா-தென்மேற்கு ஆசியா) டி. கிருஷ்ணகுமார் கூறியதாவது:
இந்தியாவில் எங்களது தயாரிப்புகளை பரவலாக்கும் எண்ணத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு மாநிலத்துக்கும் சிறப்பு வாய்ந்த புதிய வகை பழரச பானங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். மாம்பழத்தை வைத்து மாஸா பானங்களை விற்பனை செய்து வருவதைப் போல இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இவ்வாண்டில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு பிரத்யேகமான மாம்பழ தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக உள்ளோம்.
குறிப்பாக, குஜராத்தில் கேசர் வகை மாம்பழத்தினால் ஆன பழரசத்தையும், தமிழகத்தில் நீலம் வகை மாம்பழத்தினால் ஆன பழரசத்தையும் அறிமுகம் செய்யவுள்ளோம். அதேபோன்று ஒவ்வொரு மாநிலத்துக்கும் அங்கு பரிச்சயமான மாம்பழ வகைகளைக் கொண்டு தயாரிப்புகளை வெளியிடவுள்ளோம்.
பழரச பானங்கள் தயாரிப்பு சந்தை இந்தியாவில் மிகப்பெரியதாக உள்ளது. நாங்கள் மாம்பழ பழரச பானங்கள் தயாரிப்பில் களமிறங்கும்போது இப்பிரிவில் மூன்று நிறுவனங்கள் மட்டுமே களத்தில் இருந்தன. ஆனால், தற்போது 30 முதல் 40 நிறுவனங்கள் மாம்பழ பழரச பான விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த வர்த்தகத்தின் வளர்ச்சி ஆண்டுதோறும் நிலையான அளவில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பால்பண்ணை வர்த்தகத்தை பொருத்தமட்டில், நடப்பு ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/24/w600X390/cocacola.jpg http://www.dinamani.com/business/2018/feb/24/புதிய-வகை-பழரச-பான-அறிமுகத்தில்-கோக-கோலா-தீவிரம்-2869046.html
2869045 வர்த்தகம் பங்குச் சந்தையில் திடீர் விறுவிறுப்பு சென்செக்ஸ் 322 புள்ளிகள் அதிகரிப்பு DIN DIN Saturday, February 24, 2018 12:50 AM +0530 சர்வதேச சந்தை நிலவரங்கள் சாதகமாக இருந்ததையடுத்து பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. இதையடுத்து, சென்செக்ஸ் 322 புள்ளிகள் அதிகரித்தது.
மார்ச் மாதத்துக்கான முன்பேர பங்கு வர்த்தக தொடக்கம் சந்தைக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரிப்பும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ஊக்குவித்தது. இதன் எதிரொலியாக, உள்நாட்டு நிதி நிறுவனங்கள், பங்குகளில் தங்களது முதலீட்டை கணிசமாக அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின்போது அனைத்து துறைகளைச் சேர்ந்த குறியீட்டெண்களும் ஏற்றமுடன் காணப்பட்டன. குறிப்பாக, உலோகம், மருந்து, உள்கட்டமைப்பு, மின்சாரம், வங்கி மற்றும் பொதுத் துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை 3.16 சதவீதம் வரை உயர்ந்தன.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், டாடா ஸ்டீல், ஸன் பார்மா, யெஸ் வங்கி, பார்தி ஏர்டெல், ஓஎன்ஜிசி, டாக்டர் ரெட்டீஸ், என்டிபிசி, எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி, டிசிஎஸ், பவர் கிரிட், இன்டஸ்இண்ட் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எல் அண்டு டி, பஜாஜ் ஆட்டோ, மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் விலை 6.26 சதவீதம் வரை அதிகரித்தன.
அதேசமயம், மோசடி புகாரில் சிக்கியுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி பங்கின் விலை 1.09 சதவீதம் சரிந்தது. கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவன பங்கின் விலை 5 சதவீதம் வீழ்ச்சியடைந்து ரூ.24.80-ஆனது. மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 322 புள்ளிகள் (0.95%) அதிகரித்து 34,142 புள்ளிகளில் நிலைத்தது. பிப்ரவரி 15க்குப் பிறகு காணப்படும் அதிகபட்ச அளவாகும் இது. தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 108 புள்ளிகள் (1.04%) உயர்ந்து 10,491 புள்ளிகளில் நிலைத்தது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/24/w600X390/market-up.jpg http://www.dinamani.com/business/2018/feb/24/பங்குச்-சந்தையில்-திடீர்-விறுவிறுப்பு-சென்செக்ஸ்-322-புள்ளிகள்-அதிகரிப்பு-2869045.html
2869044 வர்த்தகம் கழிப்பறை கட்ட புதிய கடன் திட்டம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிமுகம் DIN DIN Saturday, February 24, 2018 12:49 AM +0530 கழிப்பறை கட்ட புதிய கடன் திட்டத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஆர்.சுப்ரமணியகுமார்  தெரிவித்ததாவது:
சமூக நல திட்டங்களை செயல்படுத்துதலின் ஓர் அங்கமாக, கழிப்பறை கட்டுவதற்காக குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. மத்திய அரசு, வரும் 2019-ஆம் ஆண்டுக்குள் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லா இந்தியாவை உருவாக்க உறுதிபூண்டுள்ளது. இதற்காக, தூய்மை இந்தியா திட்டத்தை மத்திய அரசு நாடெங்கும் வேகமாக முன்னெடுத்து வருகிறது.
அதற்கு ஆதரவளிக்கும் விதமாக, 'ஐஓபி ஸ்வச்தா' திட்டத்தை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. நாடு முழுவதிலுமுள்ள இரண்டாம் நிலை நகரங்கள் முதல் நான்காம் நிலை நகரங்கள் வரை வசிக்கும் குடும்பங்கள் இந்தப் புதிய கடன் திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.
இந்த திட்டத்தின் கீழ், தனிநபர், சுய உதவி குழுக்கள், கழிப்பறைகள் கட்ட அல்லது புதுப்பிக்க ரூ.20,000 வரை கடன் பெறலாம். இதற்கு, குறைந்த வட்டியே வசூலிக்கப்படும். இக்கடனை மூன்று ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தலாம் என்றார் அவர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/24/w600X390/iob-ceo.jpg http://www.dinamani.com/business/2018/feb/24/கழிப்பறை-கட்ட-புதிய-கடன்-திட்டம்-இந்தியன்-ஓவர்சீஸ்-வங்கி-அறிமுகம்-2869044.html
2869043 வர்த்தகம் ஏர்டெல்-ஹுவே நிறுவனங்கள் இந்தியாவில் முதல் 5ஜி சோதனை DIN DIN Saturday, February 24, 2018 12:49 AM +0530 தொலைத்தொடர்பு துறையைச் சேர்ந்த பார்தி ஏர்டெல் மற்றும் கைபேசி கருவிகளை தயாரித்து வரும் ஹுவே ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் முதல் 5ஜி சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளன.
இதுகுறித்து அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாவது:
சிறியதுதான் என்றாலும் 5ஜி அனுபவத்தை நோக்கிய நமது பயணத்துக்கு இந்த சோதனை மிகவும் முக்கியமானதாகும். ஹரியாணா மாநிலம் மானேசரில் உள்ள ஏர்டெல் நெட்வொர்க் மையத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது, விநாடிக்கு டேட்டா வேகத்தின் அளவு 3 ஜிகாபைட் வரை எட்டப்பட்டது. தற்போதுள்ள 3.5 ஜிகாஹெர்ட்ஸ் பேண்ட்-100 மெகாஹெர்ட்ஸ் மொபைல் நெட்வொர்க்கில் இது அதிகபட்ச அளவாக கருதப்படுகிறது என்று அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/24/w600X390/huwae.jpg http://www.dinamani.com/business/2018/feb/24/ஏர்டெல்-ஹுவே-நிறுவனங்கள்-இந்தியாவில்-முதல்-5ஜி-சோதனை-2869043.html
2868367 வர்த்தகம் பிஎஸ்என்எல்-எம்டிஎன்எல் நிறுவனங்களை இணைக்கும் திட்டமில்லை DIN DIN Friday, February 23, 2018 12:51 AM +0530 பிஎஸ்என்எல்-எம்டிஎன்எல் நிறுவனங்களை இணைக்கும் திட்டமில்லை என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
பொதுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல்-எம்டிஎன்எல் நிறுவனங்களை இணைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு தற்போதைக்கு இல்லை. அதேசமயம், ஒருசேர ஒத்துழைப்புடன் இந்த இரு நிறுவனங்களையும் வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், இந்த இரு நிறுவனங்களும் பயன்பெறும்.
பொதுத் துறை நிறுவனங்களில் இருக்கும் மனித வளங்கள், நிலங்கள், கட்டடங்கள் உள்ளிட்டவைகளை திறம்பட கையாண்டு அவற்றுக்கிடையே வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புது வியூக திட்டங்களை தொலைத்தொடர்புத் துறை வெளியிட்டுள்ளது என்றார் அவர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/23/w600X390/manoj-sinha.jpg http://www.dinamani.com/business/2018/feb/23/பிஎஸ்என்எல்-எம்டிஎன்எல்-நிறுவனங்களை-இணைக்கும்-திட்டமில்லை-2868367.html
2868365 வர்த்தகம் கியா மோட்டார்ஸ்: 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு DIN DIN Friday, February 23, 2018 12:50 AM +0530 தென் கொரியாவைச் சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கியா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய ஆலை அமைப்பதற்காக இந்தியாவில் 100 கோடி டாலரை (சுமார் ரூ.6,500 கோடி) முதலீடு செய்கிறது. அந்த வகையில், ஆந்திராவில் நிறுவனம் முதல் ஆலையை தொடங்குகிறது. இந்த ஆலை 230 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது. இதிலிருந்து ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆலையை முழு அளவில் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக, நிறுவனம் விரைவில் 3,000 பேரை பணிக்கு தேர்ந்தெடுக்கவுள்ளது. அவர்களுக்கு பயிற்சிகளை வழங்குவது சம்பந்தமாக ஆந்திர அரசுடன் நிறுவனம் ஆலோசனை நடத்தி வருகிறது. இப்புதிய ஆலை கட்டமைப்பு பணிகளை விரைந்து முடித்து 2019-ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து வாகன உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என கியா மோட்டார்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/23/w600X390/KIAMOTORS.jpg http://www.dinamani.com/business/2018/feb/23/கியா-மோட்டார்ஸ்-3000-பேருக்கு-வேலைவாய்ப்பு-2868365.html
2868363 வர்த்தகம் சிறப்பு பொருளாதார மண்டலங்கள்: 6 நிறுவனங்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு DIN DIN Friday, February 23, 2018 12:50 AM +0530 சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க, டிசிஎஸ், மஹிந்திரா வேர்ல்டு சிட்டி (ஜெய்ப்பூர்) உள்ளிட்ட ஆறு நிறுவனங்களுக்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக செயலர் ரீட்டா தியோதியா தலைமையில் ஒப்புதல் வாரியம் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில், சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்காத நிறுவனங்களுக்கு கூடுதல் காலக்கெடு வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, டிசிஎஸ் கேட்டுக் கொண்டதன் பேரில் அந்த நிறுவனம் மத்திய பிரதேசத்தில் அமைக்கவுள்ள சிறப்பு பொருளாதார மண்டல தொழில்நுட்ப பூங்காவுக்கான காலக்கெடு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, மஹிந்திரா வேர்ல்டு சிட்டி ஜெய்ப்பூரில் அமைக்கவுள்ள தகவல் தொழில்நுட்ப மற்றும் வன்பொருள் தாயாரிப்புக்கான சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான காலக்கெடு மூன்று மாதம் நீட்டிக்கப்பட்டு வரும் ஏப்ரல் 30 வரையில் வழங்கப்பட்டுள்ளது.
இவை தவிர, ஜிபி ரியலேட்டார்ஸ், எஸ்இஇசட் பயோடெக் சர்வீசஸ் மற்றும் ப்ரூக்பீல்ட்ஸ் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 16 சதவீத பங்களிப்பை சிறப்பு பொருளாதார மண்டலங்கள் வழங்கி வருகின்றன. இந்த மண்டலங்களில் உள்ள ஏற்றுமதியாளர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய வர்த்தக அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் 
ஒரு பகுதியாக, இம்மண்டலங்களில் விதிக்கப்படும் குறைந்தபட்ச மாற்று வரியை நீக்க அல்லது குறைக்க நிதி அமைச்சகத்துக்கு, வர்த்தக அமைச்சகம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.
2017-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி நிலவரப்படி மத்திய அரசு 423 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், அதில் 222 மண்டலங்கள் மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளன. 
2017-18 நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான கால அளவில் இம்மண்டலங்களின் ஏற்றுமதி 13 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.2.67 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/23/w600X390/sez.jpg http://www.dinamani.com/business/2018/feb/23/சிறப்பு-பொருளாதார-மண்டலங்கள்-6-நிறுவனங்களுக்கு-காலக்கெடு-நீட்டிப்பு-2868363.html
2868362 வர்த்தகம் பங்குச் சந்தையில் மந்த நிலை: சென்செக்ஸ் 25 புள்ளிகள் சரிவு DIN DIN Friday, February 23, 2018 12:49 AM +0530 இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் மந்த நிலை நிலவியதையடுத்து, சென்செக்ஸ் 25 புள்ளிகள் சரிவைக் கண்டது.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு, பணவீக்க அதிகரிப்பு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு ஆகியவை பங்கு வர்த்தகத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தின. பிப்ரவரி மாதத்துக்கான பங்கு முன்பேர கணக்கு முடிப்பையொட்டியும் பங்கு சந்தைகளில் வர்த்தகம் மந்த கதியாகவே இருந்தது. 
உலக நிலவரங்களைப் பொருத்த வரையில் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் காணப்பட தொய்வு நிலை மற்றும் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்த அதிக வாய்ப்புள்ளதாக வெளியான தகவல் ஆகியவை இந்திய பங்குச் சந்தைகளுக்கு ஊக்கமளிப்பதாக இல்லை. பல்வேறு சிக்கலான நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர். லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்யப்பட்டதையடுத்து, எண்ணெய்-எரிவாயு துறை குறியீட்டெண் 1.46 சதவீதமும், மின்சாரம் 1.11 சதவீதமும் சரிந்தன.
அதேசமயம், வங்கி துறை குறியீட்டெண் சரிவிலிருந்து தப்பி 0.13 சதவீதம் ஏற்றமடைந்தது. நிறுவனங்களைப் பொருத்தவரையில், டாக்டர் ரெட்டீஸ் பங்கின் விலை அதிகபட்சமாக 2.19 சதவீதமும், அதனைத் தொடர்ந்து ஓஎன்ஜிசி பங்கின் விலை 2.05 சதவீதமும் குறைந்தன.
மோசடி புகாரில் சிக்கியுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி பங்கின் விலை 2.09 சதவீதமும், கீதாஞ்சலி ஜெம்ஸ் 5 சதவீதமும் வீழ்ச்சி கண்டன.
அதேசமயம், ஸன் பார்மா, அதானி போர்ட்ஸ், கோட்டக் வங்கி, இன்டஸ்இண்ட் வங்கி, மஹிந்திரா, யெஸ் வங்கி, இன்ஃபோசிஸ், எல் அண்டு டி, கோல் இந்தியா ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்ததால், பங்குச் சந்தை பெரும் சரிவிலிருந்து தப்பியது.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 25 புள்ளிகள் சரிந்து 33,819 புள்ளிகளில் நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 14 புள்ளிகள் குறைந்து 10,382 புள்ளிகளில் நிலைத்தது.
 

]]>
http://www.dinamani.com/business/2018/feb/23/பங்குச்-சந்தையில்-மந்த-நிலை-சென்செக்ஸ்-25-புள்ளிகள்-சரிவு-2868362.html
2865304 வர்த்தகம் 2018-ல் பிரபலமாக விற்பனையாகும் ஏழு சிறந்த ஸ்னீக்கர்கள் (காலணிகள்) DIN DIN Thursday, February 22, 2018 05:46 PM +0530 தங்கள் நாளை உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் தொடங்க விரும்பும் மக்கள்  ஸ்னீக்கர்களை (காலணிகள்) விரும்புவார்கள். தற்பொழுது மாறும் பருவநிலைக்கு ஏற்றாற்போல் நமது உடைகளையும், காலணிகளையும் மாற்றவேண்டும். வரும் கோடைகாலத்தில் இவை மற்ற காலணிகளை விட நமக்கு சுகத்தையும், இன்பத்தையும் மிகுதியாக தரும். 

இவற்றை வாங்கும்பொழுது  அனைவரும் செய்யும்  பிழை பொருந்தாத காலணிகளை வாங்குவது. சில சமையங்களில் நமக்கு வேண்டியதை  விட்டு அழகை பார்த்து  வேறு  ஒன்றை வாங்கிவிடுவோம். அதை  தவிர்த்து  நமது  பயன்பாட்டிற்கேற்ப  வாங்க வேண்டும். நாம் பன்படுத்த,  பயன்படுத்த  அதன் திறன்  அதிகரிக்கும். எனினும்  சில வருடம்  நன்றாக  பயன்படுத்தியவுடன்  அதை  மாற்றுவதே நல்லது. 

2018-ல்  அனைவரும்  விரும்பும்  சில ஸ்னீக்கர்களை (காலணிகள்) காண்போம்.

நைக் ஏர் ஜோர்டன் 1

இவை முதன் முதலில் விற்பனைக்கு  வந்த  காலமான  1985 முதல்  தற்பொழுது  வரை  மற்ற காலணிகளை விட  அதிக காலம் உழைத்து முதல் நிலையில் உள்ளது.  முதலில் வந்த  காலணிகளின் பாரம்பரியத்தை  இன்றும் பேணி வருகிறது.  அனைவரும் விரும்பும் இவை அணிபவரின் அழகை அதிகரிக்கும் என்பதில்  எவ்வித சந்தேகமும் இல்லை. 

அணிபவரின் அழகை அதிகரிக்கும் திறன் கொண்ட இவற்றின் விலை 9000-15000  என்ற அளவில் உள்ளது.  தாம் விரும்பும் வடிவமைப்பிற்கேற்ப  விலை மாறுபடும்.  டி-ஷர்ட் மற்றும்  ஜீன்ஸ்ஸுடன்  இதை அணிவது மிகச் சிறந்த தோற்றத்தை அளிக்கும்.  இவை நைக் இணையதளத்தில்  கிடைக்கும்.  சில சமயங்களில் தள்ளுபடியும் உண்டு.

Vans Old Skool

வான்ஸ் ஓல்டு ஸ்கூல் காலணிகள் GQHQ என்ற அமைப்பால் மிகச்சிறந்த காலணிகள் என்று சென்ற ஆண்டு கூறப்பட்டன.  அதிலிருந்து அவற்றை விரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

To Find Discounts Check Myntra Coupons

சறுக்குமரம்  விளையாட்டு  விளையாட  சிறப்பானதாக கருதப்படும் இவை 1970 களிலிருந்தே  அனைவரையும் கவர்ந்து வந்துள்ளன. 

சரியான காலணிகளை  வாங்குவது என்பது ஒரு கடிணமான செயல் என்று பார்க்கப்பட்ட காலத்தில் அதை மிகவும் எளிதாக்கியது இவர்களின்  தந்திரம்.  இவற்றின் விலை 2400-4600 என்ற அளவில் நிறத்திற்கேற்ப மாறுபடும்.  தங்களின்  உடைக்கேற்ப  இவற்றை அணிந்து கொள்ளளாம்.  

Adidas Originals ADI-EASE

70 மற்றும் 80களில் மிகப் பிரபலமாக இருந்த இவை தற்பொழுது அதிகம் விற்பனையாகும் காலணிகளில் ஒன்றாக வலம் வருகின்றன. 

மற்ற அனைத்து காலணிகளையும் விட முதன்மையாக விளங்கும் இவை பல நிறங்களில் இருந்தாலும், கருப்பு-வெள்ளை நிறம் கொண்டவற்றை அணிந்தால் தங்களின் தோற்றத்தை மேலும் மெருகேற்றும்.  தங்களை ஒரு விளையாட்டு வீரரைப்போல் காண்பிக்கும் இவை சாதாரண வேலைகளிலும் அணியச் சிறந்தவை. 

இவைதான் இக்கால இளைஞர்களின் முதல் தேர்வாக விளங்குகின்றன. வெள்ளை நிற காலணிகளை அணியும்பொழுது அவ்விடத்திற்கே ஒலி சேர்ப்பதைப்போல் தோன்றும்.

இவற்றை அடிடாஸின்  இணையதளத்திலும்  மற்ற முன்னணி மின்-வணிக இணையதளத்திலும் 6000-9000  என்ற விலையில் வாங்கலாம்.  அவ்வப்பொழுது ஏற்படும் வானிலை மாற்றங்களைப்  போன்று இதன் விலையும் ஏறி-இறங்கும்.  மின்தரா (myntra)  இணையதளத்தில் கூப்பன் குறியீடு கொண்டு  பல தள்ளுபடிகளை பெறலாம்.  இதன்மூலம் அதிக மதிப்புள்ள இவற்றை குறைந்த விளைகொடுத்து வாங்கி மகிழலாம். அடிடாஸ் நியோ என்ற மற்றொரு காலணியும் அதிகமாக விற்பனையாகிறது.

நைக் வேப்பர்கள் மேக்ஸ் (Nike Vapor Max)

நைக் வேப்பர்கள் மேக்ஸ் லணி இந்த தசாப்தத்தின் மிகப் புதுமையான காலணி என்ற பெயரைப் பெற்றுள்ளது. ஒரு குழந்தை தொட்டிலில் தூங்குவதைப் போன்ற மென்மையான சுகம் இக்காலணிகளை அணியும்பொழுது உங்களுக்கு கிடைக்கும். ஆண்கள், பெண்கள் என அனைவரும் அணியக்கூடிய இக்காலணிகள், எதிர்கால சந்ததிகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவற்றை அணிந்தால் உங்களின் தனித்தன்மை வெளிப்படும். இவற்றின் விலை 11000-13000 என்ற வரம்பில் உள்ளது. நைக் இணைய தளத்தில் இவை விற்கப்படுகின்றன. Nike Craft Mars Yard  என்ற வடிவமைப்பின் மூலம் கடினமான மலைப்பாதைகளிலும் இவற்றை பயன்படுத்தலாம்.

Converse All Star

நீண்ட காலமாக விற்பனையில் உள்ள  இவை, சென்ற நூற்றாண்டில்அனைவரின் முதல் தேர்வாக விளங்கி தற்பொழுதும் விற்பனையில் உள்ளன. கூடைப்பந்து போட்டி தொடங்கி மளிகை கடைக்குச் செல்லும் வரை அனைத்திற்கும் இதை பயன்படுத்தலாம்.

இதன் வடிவமைப்பே இதன் தரத்தை உயர்த்தி அனைவரும் அணியும் வண்ணம் அழகுபடுத்தியுள்ளது. இதன் விலை 2000-6000 என்ற வரம்பில் அனைத்து இணையதள அங்காடி விற்பனையரங்குகளிலும் கிடைக்கும். ஒருமுறை இவற்றை வாங்கி விட்டால் காலா காலத்திற்கும் உழைக்கும் தன்மை கொண்டவை இவை.

Adidas Stan Smith

சில காலங்களுக்கு பிறகு மறுபடியும் விற்பனையில் வந்துள்ளன இவை. டென்னிஸ் வீரர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இவை அனைவராலும் அணியப்படுகின்றன. தினமும் வெளியில் செல்லும் பொழுது ஒருவரேனும் இதை அணிந்து  செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது.

உயர்தர டென்னிஸ் வீரர்கள் மற்றும் ராக்ஸ்டார்கள் அணிந்து வந்த இவற்றை அனைவரும் அணிய வேண்டும் என்று எண்ணிய நிறுவனம், 4500-8000 என்ற விலையில் காலணிகளை விற்பனை செய்கின்றனர். கருப்பு - வெள்ளை நிற காலணிகள், சட்டை மற்றும் ஜீன்ஸ் பேண்ட்களுடன் அணியும்பொழுது பார்ட்டிகளில் உங்களை தனியாக காட்டும்.அடிடாஸின் இணையதளத்திலும் மற்ற பிரபலமான இணைய தளங்களிலும் இவை கிடைக்கும். குறைந்த விலையில் வாங்க நினைக்கும் மக்கள் அடிதாஸ் நியோ என்ற மாடலை உபயோகிக்கலாம்.

Nike Lunar Epic Low Flyknit

உங்களது பாணியை காண்பிக்க இதை விட வேறு நல்ல காலணிகளை கண்டுபிடிப்பது சிரமம். காம்படிட்டர் பத்திரிக்கையின் 2017க்கான 'சிறந்த ஆசிரியரின் தேர்வு'என்ற விருதைப்பெற்றுள்ளது. தமது காலணிகளை மிகவும் ரசிக்கும் மக்களுக்காக படைக்கப்பட்டவை இவை.

அணிவதற்கு மிகவும் வசதியாக விளங்கும் இவற்றை கடின பாதைகளிலும் செல்ல பயன்படுத்தலாம். இவை 9000-12000 என்ற வரம்பில் விற்கப்படுகின்றன. இவற்றை இணைய தளத்திலும் வாங்கலாம், கடைகளிலும் விற்கப்படுகின்றன. இவற்றை பார்டிகளுக்கும் பயன்படுத்தலாம், விளையாட்டு போட்டிகளுக்கும் அணிந்து செல்லலாம்.

காலணிகளை பருவத்திற்கேற்றாற்போல் மாற்றுவதைப் போன்று நமது உடைகளையும் மாற்றி தோற்றத்தை மெருகேற்ற வேண்டும். நமக்கு பிடித்ததை அணிந்து கொண்டு தன்னம்பிக்கையுடன் செயல்படுவதே நம்மை உயர்த்தும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/17/w600X390/nike_7.jpg http://www.dinamani.com/business/2018/feb/17/உங்கள்-நாளை-உற்சாகமானதாக-மாற்றுவதில்-காலணிகளுக்கும்-இடமுண்டு-2865304.html
2867186 வர்த்தகம் கச்சா வைரம் இறக்குமதி 11% அதிகரிப்பு DIN DIN Wednesday, February 21, 2018 01:04 AM +0530 நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான கால அளவில் கச்சா வைரம் இறக்குமதி 11.11 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளதாவது: நடப்பு 2017-18 நிதி ஆண்டில் ஏப்ரல்-ஜனவரி வரையிலான முதல் பத்து மாதங்களில் 1,553 கோடி டாலர் (சுமார் ரூ.1 லட்சம் கோடி) மதிப்பிற்கு பட்டை தீட்டப்படாத மற்றும் பட்டைத் தீட்டிய கச்சா வைரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த 2016-17 நிதி ஆண்டில் இதே கால அளவில் கச்சா வைரம் இறக்குமதியான 1,397 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் இது 11.11 சதவீதம் அதிகமாகும்.
கச்சா வைரம் இறக்குமதி அதிகரித்துள்ள அதே வேளையில், பட்டை தீட்டப்பட்ட மற்றும் பட்டைத் தீட்டிய வைரங்கள் இறக்குமதி 216 கோடி டாலரிலிருந்து 12.91 சதவீதம் சரிவடைந்து 188 கோடி டாலராக காணப்பட்டது. 
அதேசமயம், தங்க கட்டிகள் இறக்குமதியும் 18.2 சதவீதம் அதிகரித்து 437 கோடி டாலரை எட்டியது. அமெரிக்கா உள்ளிட்ட பல முக்கிய வெளிநாடுகளின் சந்தைகளில் தேவை குறைந்ததையடுத்து, நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 4.71 சதவீதம் குறைந்து 2,750 கோடி டாலராகியுள்ளது என்று அந்தக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
உள்நாட்டில் அதிக அளவில் வேலைவாய்ப்புகளை வழங்கி வரும் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் தயாரிப்பு துறை நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 14 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/21/w600X390/domont.JPG http://www.dinamani.com/business/2018/feb/21/கச்சா-வைரம்-இறக்குமதி-11-அதிகரிப்பு-2867186.html
2867184 வர்த்தகம் வட்டி மானியத்தை 5 சதவீதமாக அதிகரிக்க கைவினைப் பொருள் ஏற்றுமதி கவுன்சில் கோரிக்கை DIN DIN Wednesday, February 21, 2018 01:03 AM +0530 வட்டி மானியத்தை 5 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இபிசிஹெச்) கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த கவுன்சிலின் தலைவர் கூறியுள்ளதாவது:
கைவினைப் பொருள் உற்பத்தியாளர்கள் கடும் நிதி நெருக்கடியிலில் சிக்கி தவித்து வருகின்றனர். மத்திய அரசு, அவர்களுக்கு ரூ.3,500 கோடி வரையில் வரி பாக்கியை திருப்பித் தர வேண்டியுள்ளது. உற்பத்தியாளர்களின் நெருக்கடி நிலையை உணர்ந்து வழங்கப்பட வேண்டிய வரி பாக்கியை உடனடியாக திரும்பத் தர மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வரி பாக்கியை திரும்பத்தர கால நிர்ணயம் செய்யாதது இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை வெகுவாக பாதித்துள்ளது.
கைவினைப் பொருள் ஏற்றுமதியாளர்கள் சிறிய முதலீட்டில் தங்களது வர்த்தகத்தை நடத்தி வருகின்றனர். வட்டி விகிதங்கள் அதிகமாக உள்ளதால், அவர்கள் வங்கிகளிடமிருந்தும் கடன்பெற இயலாத நிலை உள்ளது. அரசு இதனை உணர்ந்து, வட்டி மானியத்தை 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
வரிபாக்கி திரும்பக் கிடைக்காத இந்த இக்கட்டான சூழ்நிலை நடப்பு நிதி ஆண்டில் கைவினைப் பொருள்களின் ஏற்றுமதியில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதியில் இது தாக்கத்தை உண்டாக்கும். மேலும், உலக அளவில் தேவை குறைந்து காணப்படுவதால் நடப்பு 2017-18 நிதி ஆண்டில் கைவினைப் பொருள்களின் ஏற்றுமதி 3.5 சதவீதம் குறையும் என்றார் அவர்.
கடந்த 2016-17 நிதி ஆண்டில் கைவினைப் பொருள்களின் ஏற்றுமதி ரூ.24,500 கோடியாக இருந்தது. இத்துறையின் மூலம், உள்நாட்டில் 70 லட்சம் பேர் நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.
ஒட்டுமொத்த கைவினைப் பொருள்கள் ஏற்றுமதியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு 60 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/21/w600X390/toy.jpg http://www.dinamani.com/business/2018/feb/21/வட்டி-மானியத்தை-5-சதவீதமாக-அதிகரிக்க-கைவினைப்-பொருள்-ஏற்றுமதி-கவுன்சில்-கோரிக்கை-2867184.html
2867183 வர்த்தகம் தனியார் வங்கிகளின் தடுமாற்றத்தால் சென்செக்ஸ் 71 புள்ளிகள் சரிவு DIN DIN Wednesday, February 21, 2018 01:02 AM +0530 பங்குச் சந்தைகளில் தனியார் வங்கிகளின் செயல்பாடு மோசமாக இருந்ததால் தொடர்ந்து மூன்றாவது நாளாக சென்செக்ஸ் 71 புள்ளிகள் இழப்பை சந்தித்தது.
சமீபத்திய சரிவுகளால் பங்குகளின் விலை குறைந்திருந்ததை சாதகமாக பயன்படுத்தி முதலீட்டாளர்கள் அவற்றை வாங்கியதால் பங்குச் சந்தைகளில் தொடக்கத்தில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கும் மேல் அதிகரித்திருந்தது.
இந்த சூழ்நிலையில், வர்த்தகத்தின் இறுதிப் பகுதியில் தனியார் வங்கிகளின் பங்குகளை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி விற்பனை செய்தனர். இதனால், பங்குச் சந்தைகள் சரிவுப் பாதைக்கு சென்றன.
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 68 காசுகள் குறைந்து வர்த்தகத்தின் இடையே மூன்று மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவாக ரூ.64.88-க்கு சென்றது. இதுவும், பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ரியல் எஸ்டேட், வங்கி, பொறியியல் சாதனங்கள், மோட்டார் வாகனம், உள்கட்டமைப்பு, மருந்து ஆகிய துறைகளைச் சேர்ந்த குறியீட்டெண்கள் வீழ்ச்சி கண்டன. அதேசமயம், நுகர்வோர் சாதனங்கள், உலோகம், தொழில்நுட்பம், பொதுத் துறை, மின்சாரம், தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த குறியீட்டெண்கள் ஏற்றம் கண்டன.
தனியார் துறை வங்கிகளான ஆக்ஸிஸ் வங்கி, கோட்டக் வங்கி, யெஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி பங்குகளின் விலை 1.44 சதவீதம் வரை சரிவடைந்தன.
அதேசமயம், ஓஎன்ஜிசி, ஹீரோ மோட்டோகார்ப், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், விப்ரோ, பவர் கிரிட், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் விலை 1.70 சதவீதம் வரை உயர்ந்தன. 
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 71 புள்ளிகள் குறைந்து 33,703 புள்ளிகளாக நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 18 புள்ளிகள் சரிந்து 10,360 புள்ளிகளாக நிலைத்தது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/21/w600X390/sensex-down.jpg http://www.dinamani.com/business/2018/feb/21/தனியார்-வங்கிகளின்-தடுமாற்றத்தால்-சென்செக்ஸ்-71-புள்ளிகள்-சரிவு-2867183.html
2867182 வர்த்தகம் அம்புஜா சிமெண்ட் லாபம் ரூ.478 கோடியாக அதிகரிப்பு DIN DIN Wednesday, February 21, 2018 01:01 AM +0530 அம்புஜா சிமெண்ட் மூன்றாம் காலாண்டில் ரூ.478 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நடப்பு நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் சிமெண்ட் விற்பனை கணிசமான அளவில் உயர்ந்தது. அத்துடன், கிளிங்கர் உற்பத்தியும் சூடுபிடித்தது.
கடந்த நிதி ஆண்டில் 50 லட்சம் டன்னாக காணப்பட்ட சிமெண்ட் விற்பனை நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 17.4 சதவீதம் அதிகரித்து 58.70 லட்சம் டன்னை எட்டியது.
இதன் காரணமாக, நிறுவனத்தின் வருவாய் ரூ.5,645.84 கோடியிலிருந்து 10.96 சதவீதம் உயர்ந்து ரூ.6,264.81 கோடியாகியது. அதேபோன்று, மொத்த செலவினமும் ரூ.5,309.59 கோடியிலிருந்து 4.36 சதவீதம் அதிகரித்து ரூ.5,541.24 கோடியாக இருந்தது.
நிகர லாபம் ரூ.270.08 கோடியிலிருந்து 77.12 சதவீதம் உயர்ந்து ரூ.478 கோடியைத் தொட்டுள்ளது.
முதலீட்டாளர்களுக்கு 100 சதவீத ஈவுத்தொகை அதாவது பங்கு ஒன்றுக்கு ரூ.2 வழங்க நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுபரிந்துரைத்துள்ளது. இடைக்கால ஈவுத்தொகை ரூ.1.60-ஐயும் சேர்த்தால் சென்ற ஆண்டுக்கு பங்கு ஒன்றுக்கு மொத்தம் ரூ.3.60 (180 சதவீதம்) ஈவுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது என அம்புஜா சிமெண்ட் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/21/w600X390/ambuja.jpg http://www.dinamani.com/business/2018/feb/21/அம்புஜா-சிமெண்ட்-லாபம்-ரூ478-கோடியாக-அதிகரிப்பு-2867182.html
2866501 வர்த்தகம் பங்குச் சந்தைகளில் தொடரும் மந்த நிலை DIN DIN Tuesday, February 20, 2018 12:55 AM +0530 பஞ்சாப் நேஷனல் வங்கி விவகாரத்தால் தொடர்ந்து இரண்டாவது வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தைகளில் நடைபெற்ற வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தன.
பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.11,400 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டது சமீபத்தில் அம்பலமானது. இந்த விவகாரம் வங்கித் துறையை ஆட்டம் காணச் செய்யும் அளவுக்கு விஸ்வரூபமெடுத்துள்ளது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளையும் விட்டுவைக்கவில்லை.
இந்த மோசடி விவகாரம் பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெகுவாக குலைத்துள்ளது. இதன் காரணமாக, அவர்கள் வங்கித் துறை பங்குகளை லாப நோக்கம் கருதி அதிக அளவில் விற்பனை செய்தனர். இந்த விவகாரரத்தில், அடுத்த கட்ட நகர்வை எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டனர்.இதையடுத்து, பங்குச் சந்தைகளில் வர்த்தகம் வீழ்ச்சியடைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் உலோகத் துறை குறியீட்டெண் 1.60 சதவீதமும், பொறியியல் சாதனங்கள் 1.56 சதவீதமும், பொதுத் துறை நிறுவனங்கள் 1.38 சதவீதமும், ரியல் எஸ்டேட் 1.12 சதவீதமும் வீழ்ச்சி கண்டன. இவை தவிர, உள் கட்டமைப்பு துறை (1.12%), மோட்டார் வாகனம் (1.11%), மருந்து (1.10%), எண்ணெய்-எரிவாயு (1.01%), மின்சாரம் (0.99%), வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் (0.91%), வங்கி (0.57%) ஆகிய துறைகளைச் சேர்ந்த குறியீட்டெண்களும் கணிசமான அளவுக்கு குறைந்தன.
மோசடியில் ஈடுபட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி பங்கின் விலை தொடர்ந்து நான்காவது வர்த்தக தினமாக 8 சதவீதம் சரிவடைந்தது.
கடன் சுமை நிறைந்த பூஷன் ஸ்டீல் நிறுவனத்தை டாடா ஸ்டீல் வாங்க உள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து டாடா ஸ்டீல் பங்கின் விலை 5.82 சதவீதம் அளவுக்கு குறைந்து போனது.
வர்த்தகத்தின் இடையே, யூகோ வங்கி பங்கின் விலை 4.58 சதவீதமும், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 7.19 சதவீதமும், அலகாபாத் வங்கி 6.30 சதவீதமும், பேங்க் ஆஃப் பரோடா 5.48 சதவீதமும், சிண்டிகேட் வங்கி 6.45 சதவீதமும், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 6.79 சதவீதமும், கார்ப்பரேஷன் வங்கி பங்கின் விலை 3.17 சதவீதமும் சரிந்தன. இவை தவிர, பாரத ஸ்டேட் வங்கி 1.51 சதவீதமும், பெடரல் வங்கி 2.61 சதவீதமும், இண்டஸ்இன்ட் வங்கி 1.68 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 0.39 சதவீதமும், ஹெச்டிஎஃப்சி வங்கி 0.27 சதவீதமும் இழப்பை சந்தித்தன.
வங்கி துறை சாராத, டாக்டர் ரெட்டீஸ், அதானி போர்ட்ஸ், ஸன் பார்மா, பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், விப்ரோ உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் விலையும் 2.75 சதவீதம் அளவுக்கு குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 236 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 33,774 புள்ளிகளில் நிலைத்தது. டிசம்பர் 21-க்குப் பிறகு சென்செக்ஸ் இந்த அளவுக்கு சரிவடைந்தது இதுவே முதல்முறை.
தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 73 புள்ளிகள் குறைந்து 10,378 புள்ளிகளில் நிலைத்தது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/21/w600X390/BSE.jpg http://www.dinamani.com/business/2018/feb/20/பங்குச்-சந்தைகளில்-தொடரும்-மந்த-நிலை-2866501.html
2866500 வர்த்தகம் மின் வாகன உற்பத்திக்காக ரூ.900 கோடி கூடுதல் முதலீடு செய்கிறது மஹிந்திரா DIN DIN Tuesday, February 20, 2018 12:55 AM +0530 இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான எதிர்காலம் குறித்த நிச்சயத்தன்மை நிலவி வரும் நிலையிலும், அந்தப் பிரிவு வாகனத் தயாரிப்புகாக ரூ.900 கோடியை கூடுதலாக முதலீடு செய்ய மஹிந்திரா குழுமம் முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே இந்தப் பிரிவுக்காக ரூ.600 கோடி முதலீடு செய்துள்ள மஹிந்திரா, மாதத்துக்கு 5,000 மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டிருந்தது.
தற்போது அடுத்த நான்கு ஆண்டுகளில் கூடுதலாக ரூ.900 கோடி முதலீடு செய்யப்படுவதன் மூலம், மஹிந்திரா எலக்ட்ரிக் நிறுவனத்தின் உற்பத்தித் திறனை மேலும் அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/20/w600X390/mahindra-car.jpg http://www.dinamani.com/business/2018/feb/20/மின்-வாகன-உற்பத்திக்காக-ரூ900-கோடி-கூடுதல்-முதலீடு-செய்கிறது-மஹிந்திரா-2866500.html
2866499 வர்த்தகம் தேசிய வங்கிகளை தனியார்மயமாக்க வேண்டும்: "ஃபிக்கி' வலியுறுத்தல் DIN DIN Tuesday, February 20, 2018 12:54 AM +0530 மத்திய அரசு, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை கூட்டமைப்பான "ஃபிக்கி' தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த கூட்டமைப்பின் தலைவர் ராஷேஸ் ஷா(படம்) கூறியுள்ளதாவது:
பொதுத் துறை வங்கிகளுக்கு மத்திய அரசு, கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் ரூ.2.6 லட்சம் கோடி மூலதன உதவியை அளித்துள்ளது. இருப்பினும், அதன் தாக்கம் வங்கிகளின் செயல்பாடுகளில் குறிப்பிட்ட அளவுக்கே உள்ளது. வங்கிகளின் மிக மோசமான செயல்பாடு அரசு நிதியினத்தை வீணடிப்பதுடன் அவற்றின் மீது தொடர்ந்து மிகப்பெரிய அழுத்தத்தை கொடுத்து வருகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இதனால், மத்திய அரசுக்கு பாரம் குறைவதுடன், நிதியும் வீணாவது வெகுவாக கட்டுப்படுத்தப்படும். மிச்சமாகும் அந்த நிதியை அரசின் திட்டங்களுக்கும், பொருளாதார வளர்ச்சி திட்டங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் அவர்.
பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.11,400 கோடி மோசடிப் புகாரில் சிக்கித் தவித்து வரும் நிலையில், "ஃபிக்கி' இந்த கருத்தை வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/20/w600X390/bikki.jpg http://www.dinamani.com/business/2018/feb/20/தேசிய-வங்கிகளை-தனியார்மயமாக்க-வேண்டும்-ஃபிக்கி-வலியுறுத்தல்-2866499.html
2866498 வர்த்தகம் சென்னை சில்க்ஸின் 24-ஆவது கிளை திறப்பு DIN DIN Tuesday, February 20, 2018 12:54 AM +0530 சென்னை, குரோம்பேட்டையில் உள்ள ஜி.எஸ்.டி. சாலையில் சென்னை சில்க்ஸின் 24-ஆவது கிளை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திறப்பு விழா குறித்து சென்னை சில்க்ஸ் இயக்குநர்கள் கூறியது:
ஒரு சாதாரண காதி விற்பனை நிலையமாகத் தொடங்கி இன்று தமிழகத்தின் மிக முக்கிய ஜவுளி நிறுவனங்களில் ஒன்றாக தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் வளர்ச்சி பெற்றுள்ளது.
குரோம்பேட்டையில் அமைந்துள்ள புதிய கிளை 8 தளங்களைக் கொண்ட சுமார் 1 லட்சத்து 34 ஆயிரம் சதுரடி பரப்பில் அமைந்துள்ளது. இக்கிளையில் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை நகைக் கடையும் அடங்கும். அறிமுக சலுகையாக முதல் 7 நாள்களுக்கு பிப்.25-ஆம் தேதி வரை ஜவுளி மற்றும் வைர நகைகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடியும், தங்க நகைகளுக்கு சவரனுக்கு ரூ. 1000 தள்ளுபடியும், வெள்ளி நகைகளுக்கு, செய்கூலி, சேதாரம் இல்லாமலும் சலுகைகள் வழங்குகிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
கிளை திறப்பு விழாவில், நிர்வாக இயக்குநர்கள் டி.கே. சந்திரன், கே. மாணிக்கம், கே. சிவலிங்கம், கே.பி. ஆறுமுகம், கே. விநாயகம், என்.கே. நந்தகோபால், என்.கே. பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/20/w600X390/chennai-silk.jpg குரோம்பேட்டையில் தி சென்னை சில்க்ஸ் 24}ஆவது கிளையை திங்கள்கிழமை திறந்து வைத்து விற்பனையைத் தொடங்கி வைத்த நிர்வாக இயக்குநர் டி.கே. சந்திரன் உள்ளிட்டோர். http://www.dinamani.com/business/2018/feb/20/சென்னை-சில்க்ஸின்-24-ஆவது-கிளை-திறப்பு-2866498.html
2866489 வர்த்தகம் தங்கம் பவுனுக்கு ரூ. 104 குறைவு DIN DIN Tuesday, February 20, 2018 12:29 AM +0530 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.13 குறைந்து, ரூ. 23,488}க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கியக் காரணமாக உள்ளன.
சென்னையில் திங்கள்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 13 குறைந்து , ரூ.2,936} க்கு விற்பனையானது. வெள்ளி 1 கிராமுக்கு 10 பைசா குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 41.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ. 41,600 }ஆகவும் இருந்தது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/15/w600X390/gold.jpg http://www.dinamani.com/business/2018/feb/20/தங்கம்-பவுனுக்கு-ரூ-104-குறைவு-2866489.html
2866166 வர்த்தகம் பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு யார் காரணம்?  - நாகா DIN Monday, February 19, 2018 11:16 AM +0530 இந்திய வங்கித் துறையில் விஜய் மல்லையா விவகாரம் ஏற்படுத்திய அதிர்ச்சியே இன்னும் அடங்கவில்லை.

அதற்குள் பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு என்ற மற்றொரு பூகம்பம் வெடித்திருக்கிறது.

மும்பையைச் சேர்ந்த அந்த வங்கியின் ஒரு கிளை அளித்த வங்கி உத்தரவாதத்தின் அடிப்படையில், வைரத் தொழிலதிபர் நீரவ் மோடியின் கீதாஞ்சலி குழுமம் தொடர்புடைய நிறுவனங்களுக்காக, வெளிநாடுகளிலுள்ள இந்திய பொதுத் துறை வங்கிகள் தாராளமாக வாரி வழங்கியிருக்கின்றன.
ரூ.11,300 கோடிக்கும் மேல் வழங்கப்பட்டுள்ள இந்தக் கடன்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ளதால், அந்தக் கடன்களை திருப்பித் தருவதற்கான பொறுப்பு பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலையில் விழுந்துள்ளது.    
இதற்கான உத்தரவாதக் கடிதங்களை, வங்கிக் கிளையில் பணி புரிந்த இரு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு அளித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.
கிளைக்குப் புதிதாக வந்த அதிகாரி ஒருவர் அந்தக் கடிதங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்து நிர்வாகத்துக்கு தகவல் தந்ததாகவும், பதறிப் போன வங்கி நிர்வாகம் மத்திய புலனாய்வு அமைப்பிடம் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இருந்தாலும், சொல்லி வைத்தது போல அந்தப் புகார் மனு சிபிஐ-யின் கைகளுக்குச் சேர்வதற்கு முன்னரே தொழிலதிபர் நீரவ் மோடி தனது குடும்பத்தினருடன் இந்தியாவைவிட்டு மிக பத்திரமாக தப்பிச் சென்றார்.
ஆளில்லாத கடையில் ஆற்றும் டீயாக, அவர் நாட்டைவிட்டே போன பிறகு இந்த முறைகேடு குறித்து புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நீரவ் மீதும், அவரது மனைவி, சகோதரர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஊடகங்களில் இந்த செய்தி வெளியாகி பரபரப்பாகியிருக்கிறது. 
விஷயம் அரசியல்மயமாகி, இந்த முறைகேடு தொடர்பாக ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் ஒருவர் மீது ஒருவர் பழி போடும் கோதாவில் இறங்கிவிட்டனர்.
கீதாஞ்சலி குழுமம் மற்றும் தொடர்புடைய மற்ற நிறுவன அலுவலகங்கள், இல்லங்களில் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முறைகேடு தொடர்பாக 2 வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், இந்த முறைகேட்டுக்கு சூத்திரதாரி என்று கூறப்படும் நீரவோ, யாரும் தொட முடியாத இடத்தில் பாதுகாப்பாக அமர்ந்து இதுதொடர்பான செய்திகளை அமைதியாக பார்வையிட்டுக் கொண்டிருக்கலாம்.
பொதுத் துறை வங்கிகளிலிருந்து பல ஆயிரம் கடன் மோசடி செய்வதும், சம்பந்தப்பட்டவர் விஷயம் வெளிவருவதற்கு முன்னரே பத்திரமாக நாட்டை விட்டு வெளியேறுவதும் இது முதல்முறை இல்லை என்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்.
ஏற்கெனவே மல்லையாவும் இப்படித்தான் தப்பிச் சென்றார் என்பதை கூறவே தேவையில்லை.
இதில் இன்னொரு விஷயம், பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு என்று அழைக்கப்படாலும், இந்த முறைகேட்டின் நீள அகலங்கள் இன்னும் அதிகம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
இந்த விவகாரத்தில் மேலும் பல பொதுத் துறை வங்கிகளில், இப்போது கூறப்படும் ரூ.11,300 கோடி மட்டுமல்லாமல் அதைவிட அதிகமாக - ரூ.17,000 கோடிக்கும் மேல் - மோசடி நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த முறைகேடு குறித்து தோண்டத் தோண்ட மேலும் பல பூதங்கள் கிளம்பலாம் என்று எச்சரிக்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
இத்தனை பெரிய மோசடி நடந்தது எப்படி. இந்த விவகாரத்துக்கு யார் காரணம்?
எல்லோரும் மிக வசதியாக "நீரவ் மோடி" என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்து விடலாம்.
ஆனால், சினிமாவில் வருவது போல் நீரவ் மோடி முகத்தில் மீசை, மரு வைத்து, கத்தி, கன்னக்கோலுடன் பஞ்சாப் நேஷனல் வங்கிக்குள் நுழைந்து அந்த ரூ.11,300 கோடிகளை கொள்ளையடித்துச் சென்றுவிடவில்லை.
அல்லது காவல்துறை எச்சரிக்கை அறிவிப்புகளில் வருகிற மாதிரி வங்கி அதிகாரிகளின் சட்டையில் மை ஊற்றி, அவர்களது கவனத்தைத் திருப்பிவிட்டு கோடிகளைக் கொள்ளையடித்துச் சென்றுவிடவில்லை.
அப்படியெல்லாம் செய்திருந்தால் அவர் ஒருவரை மட்டும் குற்றவாளி என்று சொல்லி விடலாம்.
ஒருவேளை வங்கிக் கடன் வழங்குவதில் முறைகேடு நடப்பது இதுதான் முதல் முறை என்றால் கைது செய்யப்பட்ட இரு வங்கி ஊழியர்கள் மட்டுமே காரணம் என்று சொல்லி விடலாம்.
ஆனால், இதுபோன்ற முறைகேடுகள் சிறிய அளவிலும், பெரிய அளவிலும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.
பொதுத் துறை வங்கிகளில் வாராக்கடன் பிரச்னை தலைவிரித்தாடுவதும், அந்த வங்கிகளுக்குக் கைகொடுத்த மத்திய அரசு பல ஆயிரம் கோடிகளை கூடுதல் மூலதனமாக அளிப்பதும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது.
இவையெல்லாம், பொதுத் துறை வங்கிக் கட்டமைப்பை கேள்விக்குறியாக்கியிருக்கின்றன.
இந்தியாவின் வங்கித் துறையைக் கட்டியாளும் பொதுத் துறை வங்கிகள் இன்னும் அரசுப் பிடியில் இருப்பதுதான் பல பிரச்னைக்குக் காரணம் என்று சிலர் கூறுகின்றனர். வங்கிகளின் பெரும்பான்மை பங்கு முதலீட்டாளராக மத்திய அரசு இருப்பதால், அவற்றின் மீது மத்திய ரிசர்வ் வங்கி சுதந்திரமான நடவடிக்கைகளை எடுக்க முடிவதில்லை என்று அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
மேலும், பொதுமக்களும் பாதுகாப்பான முதலீட்டுக்கு பொதுத் துறை வங்கிகளையே நம்புவதால், வங்கிகளை தனியார்மயமாக்க அவர்களும் விரும்ப மாட்டார்கள். இது, மத்திய அரசுகளுக்கு அரசியல் நெருக்கடியைக் கொடுக்கும்.
தற்போது சேமிப்புகளுக்கான உத்தரவாதத்தை ஒரு லட்சம் ரூபாயாகக் குறைக்கும் யோசனையை - அதாவது வங்கி இழப்பைச் சந்திக்கும்பட்சத்தில் சேமிப்பாளர்கள் எவ்வளவு பெரிய தொகை முதலீடு செய்திருந்தாலும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கி பொறுப்பேற்காது - பொதுமக்கள் கடுமையாக எதிர்த்து இதற்கு ஒரு உதாரணம்.
இதன் காரணமாகத்தான், சிறப்பாகச் செயல்படாத வங்கிகளும், நல்ல முறையில் இயங்கும் வங்கிகளுக்கும் வித்தியாசம் இல்லாத நிலை ஏற்படுகிறது.
காரணம், வங்கிகள் அரசின் குழந்தைகளாக இருப்பதுதான்.
இப்போது பஞ்சாப் நேஷனல் வங்கியின் இழப்பை ஈடுகட்ட, மத்திய அரசு மக்கள் வரிப்பணத்தில் இருந்து கூடுதல் மூலதனம் அளிக்கும். வங்கிக்கும், வங்கியில் முதலீடு செய்திருப்பவர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது.
ஆனால், கடன் அளிப்பது, வசூலிப்பது உள்ளிட்ட விஷயங்களில் ஊழியர்கள் முழுத் திறனுடன் செயல்படுவதற்கான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.
கடனளிப்பு விஷயத்தில் பொதுத் துறை வங்கிகளின் இடர்பாடுகளைக் குறைக்கும் வகையில், அவற்றின் பணிகளைச் சுருக்குவது மிகுந்த பலனளிக்கும் என்கிறார்கள் அவர்கள்.
மேலும், வங்கிகளில் சேமிப்பது மட்டுமன்றி, பாதுகாப்பான முறையில் அரசிடம் முதலீடு செய்வதற்கான வேறு வழிமுறைகளையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தித் தந்தால், பொதுத் துறை வங்கிகளை அவர்கள் சார்ந்திருக்க வேண்டிய அவசியமிருக்காது என்று சிலர் யோசனை கூறுகின்றனர்.
1990-களில் பொருளாதாரச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட போது, தொழில்துறை மட்டும் தாராளமயமாக்கப்பட்டது. அதாவது, அரசின் லைசன்ஸ் கட்டுப்பாடு இல்லாமல் தொழில்துறை சுதந்திரமாகச் செயல்பட முடிந்தது. 
ஆனால், அந்தத் தொழில்துறை வளர்ச்சிக்குத் தேவையான நிதியளிக்கும் வங்கித் துறை இன்னும் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருப்பது, வளர்ச்சிக்கு கால்கட்டுப் போட்டதைப் போன்றது என்பது சிலரது வாதமாக உள்ளது.
எப்படி இருந்தாலும், பொதுமக்களுக்கோ, பொதுத் துறை வங்கிகளுக்கோ, தொழில்துறைக்கோ பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் வங்கிக் கட்டமைப்பில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதன் அவசியத்தையே இத்தகைய முறைகேடுகள் அழுத்தம் திருத்தமாக உணர்த்துகின்றன.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/19/w600X390/niravmodi.jpg http://www.dinamani.com/business/2018/feb/19/பஞ்சாப்-நேஷனல்-வங்கி-முறைகேடு-யார்-காரணம்-2866166.html
2866174 வர்த்தகம் பழைய வாகனங்கள் வாங்குவோர் கவனத்துக்கு... DIN DIN Monday, February 19, 2018 11:13 AM +0530 இருசக்கர, நான்கு சக்கர பழைய வாகனங்களை வாங்க, விற்க என நகரங்கள் முதல் கிராமங்கள் வரை சந்தைகள் பெருகி வருகின்றன. ஆன்லைன் மூலமாகவும் பழைய வாகனங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, நிதி நிறுவனங்களில் பணம் திருப்பிச் செலுத்தாதவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஏராளமான வாகனங்கள் ஆன்லைன் மூலமாக சந்தையில் விற்கப்படுகின்றன.

புதிய வாகனங்களை வாங்கும் போது ஏற்படும் அதிகப்படியான செலவுகளை (பதிவு செலவு, வரி, காப்பீடு கட்டணம்) தவிர்க்கும் வகையில், பழைய வாகனங்களை வாங்குவதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமன்றி, அனைத்து ரக வாகனங்களையும் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன.

ஆர்.சி. புத்தகத்தில் உள்ளவாறு, அதன் உரிமையாளரால் கையொப்பம் இடப்பட்ட படிவம் எண் 29இல் 2, படிவம் எண் 30இல் ஒன்றை கேட்டுப் பெற வேண்டும். மேலும், ஆர்.சி.புத்தகத்தில் உள்ளபடி அந்த வாகனத்தின் என்ஜின் எண், ஃபிரேம் எண் ஒரே மாதிரியாக உள்ளதா என்பது குறித்து உறுதி செய்துகொள்ள வேண்டும். இதன் மூலம் திருட்டு வண்டிகளை தெரியாமல் வாங்குவதில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

வாகனத்துக்கு காப்பீடு செய்யப்பட்டிருந்தால் அதற்கான பாலிசி பத்திரத்தையும், ஏற்கெனவே நிதி நிறுவனம் மூலம் அந்த வாகனம் வாங்கப்பட்டிருந்தால் அந்த நிறுவனத்தில் இருந்து பணம் திருப்பிச் செலுத்தியதற்கான என்ஓசி கடிதம் வழங்கப்பட்டுள்ளதையும் கேட்டுப் பெற வேண்டும். அந்த என்ஓசி கடிதம் மூலம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆர்.சி. புத்தகத்தில் ஃபைனான்ஸ் கேன்சல் செய்யப்பட்டிருந்தால் மிக நல்லது.

இருசக்கர வாகனங்கள், சொந்த உபயோக வாகனங்கள் என்றால், 15 ஆண்டுகளுக்கு சாலை வரி செலுத்தப்பட்டிருக்கும். அதற்கு மேல் என்றால் பசுமை வரி உள்ளிட்ட வரிகள் செலுத்தப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

பிற வகை வாகனங்கள் என்றால் வாகனத்தை பயன்படுத்த எத்தனை ஆண்டுகள் வரை பெர்மிட் (அனுமதி) உள்ளது, பசுமை வரி, சாலை வரி போன்றவை முறையாக செலுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும்.

கார் போன்ற வாகனங்களை வாங்கும்போது, அது சொந்த உபயோகத்திற்கானதா, வாடகை உபயோகத்துக்கானதா, சரக்கு ஏற்றுவதற்கான அனுமதி உள்ளதா? பயணிகளை ஏற்ற அனுமதி என்றால் எத்தனை பயணிகளை ஏற்ற அனுமதி, சரக்கு ஏற்ற என்றால் எத்தனை டன் சரக்குகளை ஏற்ற அனுமதி என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

அந்தந்த வகை வாகனங்களுக்கு ஏற்றவாறு முறையாக வரி செலுத்தப்பட்டுள்ளதா? ஆண்டுக்கொருமுறை எப்.சி. காட்டப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். வரி முறையாக செலுத்தாமல் இருந்தால், மொத்த வரியையும் சேர்த்து செலுத்த வேண்டிய சூழல் வரும். அப்போதுதான் பெயர் மாற்றம் போன்றவற்றை செய்ய முடியும்.

பழைய வாகனங்களை வாங்குவோர், உடனடியாக ஆர்.சி.புத்தகம் மற்றும் காப்பீட்டில் பெயர் மாற்றம் செய்து விடுவது நல்லது. இதன் மூலம் வாகனத்தால் ஏற்படும் சட்ட சிக்கல்களை எதிர்கொள்வது எளிதாகும்.

எனவே, ஒரு வாகனத்தை வாங்கும்போது இதுபோன்ற தேவையான ஆவணங்கள் அனைத்தும் சரியாக இல்லாதபட்சத்தில், அந்த வாகனத்தை வாங்குவதை தவிர்ப்பதே நல்லது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/19/w600X390/used-carsa.jpg http://www.dinamani.com/business/2018/feb/19/பழைய-வாகனங்கள்-வாங்குவோர்-கவனத்துக்கு-2866174.html
2866172 வர்த்தகம் சந்தைக்கு வரும் பொதுத் துறை நிறுவனப் பங்குகள் DIN DIN Monday, February 19, 2018 03:31 AM +0530 மத்திய அரசுக்குச் சொந்தமான 8 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகள், அடுத்த நிதியாண்டில் பங்குச் சந்தைகளில் விற்பனைக்கு வரவிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில், ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளின் ஒரு பகுதி பங்குச் சந்தைகளுக்கு வரவிருக்கின்றன.
இந்தப் பங்குகள், பொது வெளியீட்டுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் பங்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப படிப்படியாக பங்குச் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்கிறார் முதலீடு மற்றும் பொதுமக்கள் சொத்து நிர்வாகத் துறைச் செயலர் நீரஜ் குப்தா.
பொது வெளியீட்டுக்கு வரும் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் பொது பங்கு வெளியீட்டுக்கான அனுமதியை, பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியிடமிருந்து ஏற்கெனவே பெற்றுவிட்டது.
இது தவிர, மத்திய அரசுக்குச் சொந்தமான கட்டமைப்புத் துறை நிறுவனம் ஆர்ஐடிஇஎஸ், இந்தியன் ரினிவபில் எனர்ஜி டெவலப்மென்ட் ஏஜென்சி, பாரத் டைனமிக்ஸ், மிஸ்ரா தாடு நிகாம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் பங்கு வெளியீடு தொடர்பான ஆவணங்களை செபியிடம் தற்போதுதான் சமர்ப்பித்துள்ளன.
ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடட்டின் 10 சதவீதப் பங்குகளையும், ஆர்ஐடிஇஎஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி மதிப்பிலான 12 சதவீத பங்குகளையும் சந்தையில் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பொதுத் துறை நிறுவனங்களின் உண்மையான பங்கு மதிப்புகளை வெளிக் கொணரவும், அத்தகைய நிறுவனங்களின் பொறுப்புணர்வை மேம்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/19/w600X390/ipo.jpg http://www.dinamani.com/business/2018/feb/19/சந்தைக்கு-வரும்-பொதுத்-துறை-நிறுவனப்-பங்குகள்-2866172.html
2866167 வர்த்தகம் சமூக பொறுப்புணர்வுக்கு நிறுவனங்களின் செலவு ரூ.28,112 கோடி DIN DIN Monday, February 19, 2018 03:30 AM +0530 நிறுவனங்கள் தாங்கள் ஈட்டும் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சமூக நல காரியங்களுக்கு செலவிட வேண்டும் என்ற விதிமுறை கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து, கணிசமாக லாபம் ஈட்டும் நிறுவனங்கள் தங்கள் வசதிக்கேற்ப பல்வேறு சமூக நல திட்டங்களை தேர்ந்தெடுத்து அவற்றை நிறைவேற்றுவதில் அதிக அக்கறை காட்டி வருகின்றன. 
அந்த வகையில், விதிமுறை அமலுக்கு வந்த கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்திய நிறுவனங்கள் மொத்தம் ரூ.28,112 கோடியை சமூக நல பொறுப்புணர்வு திட்டங்களுக்காக செலவிட்டுள்ளன. குறிப்பாக, கடந்த 2015-16 நிதி ஆண்டில் இத்தகைய திட்டங்களுக்காக நிறுவனங்கள் மிகவும் அதிகபட்சமாக ரூ.13,828 கோடியை செலவிட்டுள்ளன. 
நடப்பு நிதி ஆண்டில் 2017 நவம்பர் 30-ஆம் தேதி நிலவரப்படி நிறுவனங்கள் சமூக நல திட்ட பணிகளுக்கு ரூ.4,719 கோடியை செலவழித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் 
தெரிவிக்கின்றன.

]]>
http://www.dinamani.com/business/2018/feb/19/சமூக-பொறுப்புணர்வுக்கு-நிறுவனங்களின்-செலவு-ரூ28112-கோடி-2866167.html
2865600 வர்த்தகம் தங்கம் பவுனுக்கு ரூ.72 உயர்வு DIN DIN Sunday, February 18, 2018 04:24 AM +0530 ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் சனிக்கிழமை பவுனுக்கு ரூ.72 உயர்ந்து, ரூ.23,592-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதார சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கத்துக்கு முக்கியக் காரணிகளாக இருக்கின்றன. 
சனிக்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.9 உயர்ந்து, ரூ.2,949-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே நேரத்தில் வெள்ளியின் விலை சற்று குறைந்துள்ளது. 
வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து, ரூ.41.70-ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.41,700 ஆகவும் இருந்தது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/5/w600X390/gold2.jpg http://www.dinamani.com/business/2018/feb/18/தங்கம்-பவுனுக்கு-ரூ72-உயர்வு-2865600.html
2865502 வர்த்தகம் இந்திய நிறுவனங்களின் இணைத்தல்-கையகப்படுத்தல் நடவடிக்கைகளின் மதிப்பு ரூ.97,500 கோடி DIN DIN Sunday, February 18, 2018 02:24 AM +0530 இந்திய நிறுவனங்கள் சென்ற ஜனவரி மாதத்தில் ரூ.97,500 கோடி மதிப்புக்கு இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இதுகுறித்து கிராண்ட் தோர்ன்டன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 45 இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.14,750 கோடியாகும். இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதையடுத்து, நடப்பு ஆண்டு ஜனவரியில் இணைத்தல்-கையகப்படுத்தல் ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 47-ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண்டில் இந்த ஒப்பந்தங்களின் மதிப்பு ஆறு மடங்கு அதிகரித்து ரூ.97,500 கோடியை எட்டியுள்ளது. அதில், மூன்று ஒப்பந்தங்களின் மதிப்பு மட்டும் ரூ.6,500 கோடியை தொட்டுள்ளது.
குறிப்பாக, எரிசக்தி மற்றும் இயற்கை வளங்கள் துறையில் நிறுவனங்கள் அதிக அளவில் இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக கிராண்ட் தோர்ன்டன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/4/22/7/w600X390/handsake.jpg http://www.dinamani.com/business/2018/feb/18/இந்திய-நிறுவனங்களின்-இணைத்தல்-கையகப்படுத்தல்-நடவடிக்கைகளின்-மதிப்பு-ரூ97500-கோடி-2865502.html
2865499 வர்த்தகம் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி எதிரொலி! பங்குச் சந்தைகளில் ஏற்ற - இறக்க வாரம் DIN DIN Sunday, February 18, 2018 02:23 AM +0530 இரண்டு வாரங்களாக தொடர் சரிவை சந்தித்த பங்குச் சந்தைகள் கடந்த வாரம் அதிலிருந்து மீண்டு வந்தது. இந்த நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி புகாரால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. 
சர்வதேச அளவில் காணப்பட்ட சாதகமான சூழ்நிலைகளால் கடந்த வாரத்தில் பங்குச் சந்தைகளில் நடைபெற்ற வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
இந்திய தொழிலக உற்பத்தி சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டது, சில்லறைப் பணவீக்கம், பொதுப் பணவீக்கம் ஆகியவை கணிசமான அளவில் குறைந்துள்ளது உள்ளிட்ட மத்திய அரசின் புள்ளிவிவர வெளியீடுகளும் சந்தையின் ஏற்றத்துக்கு மேலும் பக்கபலமாக அமைந்தது.
இருப்பினும் வார இறுதியில் வெளியான நிறுவனங்களின் பல்லாயிரம் கோடி மோசடி புகாரால் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன. குறிப்பாக, வங்கித் துறை பங்குகள் அதிக இழப்பை சந்தித்தது.
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத் துறை வங்கியாக திகழும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது சந்தையின் போக்கையே தடம் மாறச் செய்தது.
இந்த மாபெரும் முறைகேடு கண்டறியப்பட்டதன் எதிரொலியாக, பொதுத் துறை வங்கிப் பங்குகளின் விலை 3 சதவீத அளவுக்கு சரிவைக் கண்டன.
பங்குச் சந்தையில் காணப்பட்ட அசாதாரண சூழலையடுத்து, அந்நிய முதலீட்டாளர்களும் தங்கள் கைவசம் இருந்த பங்குகளை விற்று விறுவிறுவென வெளியேறத் தொடங்கினர்.
இதன் காரணமாக, கடந்த வாரத்தில் மட்டும், அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.2,678.87 கோடி மதிப்பிலான நிறுவனப் பங்குகளை விற்று பங்குச் சந்தைகளை விட்டு வெளியேறியுள்ளதாக செபி தெரிவித்துள்ளது.
பொதுத் துறை வங்கியில் நடைபெற்ற மெகா முறைகேடு வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, பங்குச் சந்தைகளில் அத்துறை சார்ந்த குறியீட்டெண் 1.68 சதவீத அளவுக்கு வீழ்ச்சி கண்டது. இதைத் தொடர்ந்து, நுகர்வோர் சாதனங்கள் 1.21 சதவீதமும், மோட்டார் வாகனம் 1.08 சதவீதமும், தொழில்நுட்பம் 0.56 சதவீதமும், மருந்து 0.56 சதவீதமும், ஐபிஓ 0.50 சதவீதமும், ரியல் எஸ்டேட் 0.39 சதவீதமும், பொறியியல் சாதனங்கள் 0.21 சதவீதமும், தகவல் தொழில்நுட்பம் 0.15 சதவீதமும், மின்சாரம் 0.13 சதவீதமும் சரிந்தன.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், முதலிடத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி பங்கின் விலை 8.32 சதவீதம் வீழ்ச்சியடைந்து ரூ.271.75 ஆனது. இந்த வங்கி 2016 டிசம்பர் காலாண்டில் ரூ.2,610 கோடி நிகர லாபம் ஈட்டிய நிலையில், 2017 டிசம்பர் காலாண்டில் ரூ.2,416.37 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளது. அதேசமயம், மொத்த வருவாய் 17.4 சதவீதம் அதிகரித்து ரூ.62,887.06 கோடியாக இருந்தது.
இதைத் தொடர்ந்து, யெஸ் வங்கி பங்கின் விலை 4.19 சதவீதமும், ஆக்ஸிஸ் வங்கி 3.54 சதவீதமும், ஐடிசி 1.82 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 1.76 சதவீதமும், ஹீரோ மோட்டோகார்ப் 1.44 சதவீதமும், டிசிஎஸ் 1.39 சதவீதமும், ஸன் பார்மா 1.28 சதவீதமும், மாருதி சுஸூகி பங்கின் விலை 1.19 சதவீதமும் குறைந்தது.
அதேசமயம், முதலீட்டாளர்களிடம் கிடைத்த வரவேற்பையடுத்து, ஹெச்டிஎஃப்சி பங்கின் விலை 2.84 சதவீதமும், ரிலையன்ஸ் 2.64 சதவீதமும், கோட்டக் வங்கி 2.11 சதவீதமும், விப்ரோ 1.82 சதவீதமும், ஹெச்டிஎஃப்சி வங்கி 1.56 சதவீதமும், பவர் கிரிட் 1.27 சதவீதமும், அதானி போர்ட்ஸ் 1.21 சதவீதமும், ஏஷியன் பெயிண்ட் பங்கின் விலை 1.19 சதவீதமும் அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 5 புள்ளிகள் மட்டுமே அதிகரித்து 34,010 புள்ளிகளில் நிலைத்தது. கடந்த இருவாரங்களில் சென்செக்ஸ் 2,044 புள்ளிகளை இழந்த நிலையில் இந்த சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரத்தில் ரூ.17,444.72 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.
தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 2.65 புள்ளிகள் குறைந்து 10,452 புள்ளிகளில் நிலைத்தது. இப்பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ.1,27,267.45 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/16/w600X390/pnb.jpg http://www.dinamani.com/business/2018/feb/18/பஞ்சாப்-நேஷனல்-வங்கி-மோசடி-எதிரொலி-பங்குச்-சந்தைகளில்-ஏற்ற---இறக்க-வாரம்-2865499.html
2865497 வர்த்தகம் நெஸ்லே இந்தியா லாபம் ரூ.311 கோடி DIN DIN Sunday, February 18, 2018 02:22 AM +0530 வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் தயாரிப்பில் (எஃப்எம்சிஜி) ஈடுபட்டு வரும் நெஸ்லே இந்தியா நிறுவனம் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ.311.83 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நெஸ்லே இந்தியா நடப்பு நிதி ஆண்டின் டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் விற்பனனையின் மூலம் ரூ.2,589.64 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.2,334.78 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 10.91 சதவீதம் அதிகமாகும். நிகர லாபம் 59.57 சதவீதம் உயர்ந்து ரூ.311.83 கோடியை எட்டியுள்ளது. நிறுவனத்தின் விற்பனை கடந்த 2017-ஆம் ஆண்டில், ரூ.10,000 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது என நெஸ்லே இந்தியா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/6/21/0/w600X390/nestle1.jpg http://www.dinamani.com/business/2018/feb/18/நெஸ்லே-இந்தியா-லாபம்-ரூ311-கோடி-2865497.html
2864822 வர்த்தகம் விமான நிலைய விரிவாக்கத் திட்டங்களுக்கு ரூ.15,000 கோடி முதலீடு: ஏஏஐ DIN DIN Saturday, February 17, 2018 12:54 AM +0530 உள்நாட்டில் புதிய விமான நிலையத்தை கட்டமைக்கவும், விரிவாக்கத் திட்டங்களை மேற்கொள்ளவும் வரும் நிதி ஆண்டில் ரூ.15,000 கோடியை முதலீடு செய்யவுள்ளதாக ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (ஏஏஐ) தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து ஏஏஐ தலைவர் குருபிரசாத் மஹபத்ரா வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதிலும் உள்ள விமான முனையங்களின் கட்டடங்களில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்காக, வரும் 2018-19-ஆம் நிதி ஆண்டில் ரூ.15,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. 
குறிப்பாக, அடுத்த நிதி ஆண்டில் 15 விமான முனைய கட்டடங்களை கூடுதல் வசதிகளுடன் புதிதாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிக்கிம் மாநிலத்தில் பக்யோங் என்ற இடத்தில் ரூ.650 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த புதிய விமான நிலையப் பணிகள் முடிவடைந்துள்ளன. அதனுடன், அருணாசல பிரதேசத்தின் டெஸý விமானநிலைய பணிகளும் நிறைவுபெற்றுள்ளன. இந்த இரு விமான நிலையங்களும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
மேற்கு ஒடிஸாவில் ரூ.200 கோடி செலவில் கட்டமைக்கப்பட்டு வந்த ஜர்சுகுடா விமான நிலையத்தின் பணிகள் முழுமையடைந்துள்ளன.அதனை வரும் ஏப்ரல் மாதத்தில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே போன்று, நவி மும்பை விமான நிலையத்துக்கும் அடிக்கல் நாட்டும் பணி விரைவில் நடைபெறவுள்ளது. கிரேட்டர் நொய்டாவில் ஜீவர் என்ற இடத்தில் மற்றொரு விமான நிலையத்தை கட்டமைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. 
கோவாவில் மோபா என்ற இடத்தில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோன்று, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலும் புதிய விமான நிலையத்தை அமைக்கும் திட்டமும் உள்ளது. 
மேலும், மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவிலும் மற்றும் தமிழகத்தில் சென்னையிலும் இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/21/w600X390/aai.jpg http://www.dinamani.com/business/2018/feb/17/விமான-நிலைய-விரிவாக்கத்-திட்டங்களுக்கு-ரூ15000-கோடி-முதலீடு-ஏஏஐ-2864822.html
2864821 வர்த்தகம் பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி: சென்செக்ஸ் 286 புள்ளிகள் இழப்பு DIN DIN Saturday, February 17, 2018 12:53 AM +0530 இந்திய பங்குச் சந்தைகளில் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 286 புள்ளிகள் சரிவைக் கண்டது.
சர்வதேச சந்தை நிலவரங்கள் சாதகமாக இருந்ததன் எதிரொலியால், இந்திய பங்குச் சந்தைகளில் தொடக்கத்தில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இருப்பினும், கச்சா எண்ணெய் அதிகரிப்பால், சென்ற ஜனவரியில் வர்த்தக பற்றாக்குறை 1,630 கோடி டாலர் அளவுக்கு அதிகரித்ததாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்தது முதலீட்டாளர்கள் மத்தியில் சுணக்கத்தை ஏற்படுத்தியது.
மேலும், பொதுத் துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற ரூ.11,400 கோடி மோசடி புகார் பங்குச் சந்தைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இன்னும் பிற வங்கிகளிலும் இந்த மோசடி நடைபெற்றிருக்கக்கூடும் என்ற நிலைப்பாட்டால் முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.
கடன் மோசடியில் சிக்கித் தவித்து வரும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு கடந்த மூன்று நாள்களில் மட்டும் ரூ.8,700 கோடி அளவுக்கு சந்தை மூலதன இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிஃப்டியில் இடம்பெற்றுள்ள பொதுத் துறை வங்கிகளின் குறியீட்டெண் 2.49 சதவீதம் சரிந்தது. குறிப்பாக, பேங்க் ஆஃப் இந்தியா பங்கின் விலை 1.84 சதவீதமும், பேங்க் ஆஃப் பரோடா 3.55 சதவீதமும் இழப்பை சந்தித்தன. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா பங்கின் விலை 1.25 சதவீதமும், பஞ்சாப் நேஷனல் வங்கி 2.10 சதவீதமும் குறைந்தன. கடன் மோசடி புகாரில் சிக்கியுள்ள கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவன பங்கின் விலை 20 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.
சென்செக்ஸில் இடம்பெற்றுள்ள எஸ்பிஐ பங்கின் விலை 2.55 சதவீதமும், யெஸ் வங்கி பங்கின் விலை 2.52 சதவீதமும் சரிந்தன. இவை தவிர, ஐசிஐசிஐ வங்கி, மாருதி சுஸýகி, பார்தி ஏர்டெல், அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், எல்&டி, இன்டஸ்இண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் விலையும் 2.31 சதவீதம் வரை இழப்பைச் சந்தித்தன.
அதேசமயம், இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ் பங்குகளின் விலை 0.96 சதவீதம் வரை உயர்ந்தன.
துறைகளைப் பொருத்தவரையில், மோட்டார் வாகன துறை குறியீட்டெண் 1.65 சதவீதமும், உலோகம் 1.58 சதவீதமும், பொதுத் துறை நிறுவனங்கள் 1.57 சதவீதமும், ரியல் எஸ்டேட் 1.44 சதவீதமும், பொறியியல் சாதனங்கள் 1.33 சதவீதமும், எண்ணெய்-எரிவாயு 1.19 சதவீதமும், வங்கி 1.17 சதவீதமும் சரிவைக் கண்டன.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 286 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 33,957 புள்ளிகளில் நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 93 புள்ளிகள் சரிந்து 10,452 புள்ளிகளில் நிலைத்தது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/31/w600X390/BSE.jpg http://www.dinamani.com/business/2018/feb/17/பங்குச்-சந்தைகளில்-வீழ்ச்சி-சென்செக்ஸ்-286-புள்ளிகள்-இழப்பு-2864821.html
2864820 வர்த்தகம் ஜெர்மனி நிறுவனத்துடன் எக்கி பம்ப் கூட்டு வர்த்தக ஒப்பந்தம் DIN DIN Saturday, February 17, 2018 12:52 AM +0530 கோவையை தலைமையிடமாகக் கொண்ட எக்கி பம்ப் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த ஹோமா நிறுவனத்துடன் கூட்டு வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இதுகுறித்து ஹோமா நிறுவனத்தின் தலைமை அதிகாரி க்ளாஸ் ஹாப்மேன் தெரிவித்ததாவது:
ஜெர்மன், அமெரிக்கா, பிரான்ஸ், போலந்து, நெதர்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளில் ஹோமா நிறுவனத்துக்கு நவீன பம்ப் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. 120 நாடுகளில் விற்பனை மையங்களையும் கொண்டுள்ளோம்.
உற்பத்தியின் தரம், உற்பத்தி திறன், கட்டமைப்பு வசதி ஆகியவைகளுக்காக இந்தியாவில் எக்கி பம்ப்ஸ் நிறுவனத்துடன் கைகோத்துள்ளோம். விற்பனை விரிவாக்கத் திட்டங்களுக்காக ரூ.150 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
கூட்டு வர்த்தக ஒப்பந்தம் குறித்து எக்கி பம்ப் நிறுவனர் ஆறுமுகம் கூறியதாவது: இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நிறுவனங்களும், இந்தியாவில் புதிய ஆலையைத் தொடங்கி, ஜெர்மன் நாட்டின் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கழிவு நீர் பம்புகளை தயாரிக்கவுள்ளோம் என்றார் அவர்.

]]>
http://www.dinamani.com/business/2018/feb/17/ஜெர்மனி-நிறுவனத்துடன்-எக்கி-பம்ப்-கூட்டு-வர்த்தக-ஒப்பந்தம்-2864820.html
2864819 வர்த்தகம் எல்ஐசி பிரீமியம் வருவாய் 11% வளர்ச்சி DIN DIN Saturday, February 17, 2018 12:52 AM +0530 ஆயுள் காப்பீட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் எல்ஐசி நிறுவனத்தின் பிரீமியம் வருவாய் ஒன்பது மாதங்களில் 11.47 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் வி.கே.சர்மா வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எல்ஐசி நிறுவனத்தின் பிரீமியம் வருவாய் கடந்த ஆண்டு டிசம்பருடன் முடிவடைந்த ஒன்பது மாத கால அளவில் ரூ.2,23,854 கோடியை எட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவு பிரீமியம் வசூலான ரூ.2,00,818 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 11.47 சதவீதம் அதிகமாகும். புதிய வர்த்தகத்தின் மூலம் கிடைத்த பிரீமியம் வருவாய் 19.47 சதவீதம் உயர்ந்து 99,783.33 கோடியாக இருந்தது. நிறுவனம் நிர்வகிக்கும் மொத்த சொத்து மதிப்பு 16.75 சதவீதம் அதிகரித்து ரூ.28,51,190 கோடியானது என்றார் அவர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/8/w600X390/lic.jpg http://www.dinamani.com/business/2018/feb/17/எல்ஐசி-பிரீமியம்-வருவாய்-11-வளர்ச்சி-2864819.html
2864791 வர்த்தகம் தங்கம் பவுனுக்கு ரூ. 120 அதிகரிப்பு DIN DIN Saturday, February 17, 2018 12:40 AM +0530 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.120 அதிகரித்து, ரூ. 23,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கியக் காரணமாக இருக்கின்றன. 
சென்னையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.15 அதிகரித்து, ரூ.2,940- க்கு விற்பனையானது. வெள்ளி ஒரு கிராமுக்கு 10 பைசா அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.41.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ. 41,900 -ஆகவும் இருந்தது.
வெள்ளிக்கிழமை விலை நிலவரம் 
( ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம் ரூ. 2, 940
1 பவுன் தங்கம் ரூ. 23, 520
1 கிராம் வெள்ளி ரூ. 41.90
1 கிலோ வெள்ளி ரூ. 41, 900

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/5/w600X390/gold2.jpg http://www.dinamani.com/business/2018/feb/17/தங்கம்-பவுனுக்கு-ரூ-120-அதிகரிப்பு-2864791.html
2864052 வர்த்தகம் என்எல்சி இந்தியா ரூ.957 கோடி நிகர லாபம்  DIN DIN Friday, February 16, 2018 12:41 AM +0530 என்எல்சி இந்தியா நிறுவனம் நிகழ் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் ரூ. 957.78 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. 
நிகழ் நிதியாண்டின் (2017-18) முதல் 9 மாதங்கள் மற்றும் 3-ஆம் காலாண்டுக்கான என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகள் சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் வெளியிடப்பட்டன. அதன்படி, நிகழ் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் மொத்த வருவாயாக ரூ. 6,256.29 கோடி ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் முதல் 9 மாதங்களின் மொத்த வருவாயான ரூ. 6,074.43 கோடியை விட 2.99 சதவீதம் அதிகமாகும். நிகழ் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் ரூ. 956.78 கோடி நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது 2016-17-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் பெற்ற நிகர லாபத் தொகை ரூ. 867.34 கோடியைவிட 10.31 சதவீதம் அதிகமாகும். 
மூன்றாவது காலாண்டில் வளர்ச்சி: நிகழ் நிதியாண்டில் 1.10.2017 முதல் 31.12.2017 வரையிலான 3-ஆவது காலாண்டில் ரூ.332.46 கோடி நிகர லாபமாகப் பெற்றுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே கால அளவில் ஈட்டப்பட்ட ரூ.321.95 கோடியோடு ஒப்பிடுகையில் 3.26 சதவீதம் அதிகமாகும். இருப்பினும், மின் வாரியங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின் சக்தியை, மின் வாரியங்கள் முழுவதும் பயன்படுத்தாமல் குறிப்பிட்ட அளவு திரும்ப ஒப்படைத்ததால், நிறுவனம் தனது மின் உற்பத்தி அளவைக் குறைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதால், நிகர லாபத்தில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது, நிகழ் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் மின் வாரியங்கள் சுமார் 173.80 கோடி யூனிட் குறைவாகப் பயன்படுத்தியுள்ளன. அந்த வகையில் மட்டும், நிறுவனத்துக்கு ரூ. 499 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 
கடந்த நிதியாண்டை பொருத்தவரை முதல் 9 மாதங்களில் மொத்தம் 102.20 கோடி யூனிட் மட்டுமே மின் வாரியங்களால் பயன்படுத்தப்படாமல் திரும்ப ஒப்படைக்கப்பட்டன. இத்தகைய இடர்பாடுகளுக்கிடையிலும் என்எல்சி இந்தியா நிறுவனம் தனது நிகர லாபத்தில் 10.30 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/16/w600X390/NLC_India_Limited.jpg http://www.dinamani.com/business/2018/feb/16/என்எல்சி-இந்தியா-ரூ957-கோடி-நிகர-லாபம்-2864052.html
2864051 வர்த்தகம் பங்குச் சந்தை சென்செக்ஸ் 141 புள்ளிகள் உயர்வு DIN DIN Friday, February 16, 2018 12:41 AM +0530 சர்வதேச பங்குச் சந்தையின் சாதக சூழல், பணவீக்கம் குறித்த நேர்மறையான கருத்து ஆகிய காரணங்களால் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் வியாழக்கிழமை 141 புள்ளிகள் உயர்ந்தது.
எனினும், ரூ.11,400 கோடி மோசடியில் சிக்கிய பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகளின் மதிப்பு 12 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.
மற்ற வங்கிகளின் பங்குகள் ஸ்திரமான நிலையிலேயே காணப்பட்டன.
கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த ஜனவரி மாத மொத்த விலை பணவீக்கம் மிகக் குறைவாக 2.84 சதவீதமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியப் பங்குச் சந்தை வியாழக்கிழமை உற்சாகம் பெற்றது.
உலக அளவிலான சந்தையின் ஆரோக்கியமான போக்கால் முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்து, வியாழக்கிழமை பங்குச் சந்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.
மும்பைப் பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 141புள்ளிகள் (0.41 சதவீதம்) அதிகரித்து 34,297 புள்ளிகளாக நிறைவடைந்தது.
தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டியைப் பொருத்தவரை, வியாழக்கிழமை இடையே 10,618 புள்ளிகள் வரை உயர்வடைந்து, இறுதியில் 10,548 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இது 44 புள்ளிகள் (0.42 சதவீதம்) வளர்ச்சியாகும்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/21/w600X390/BSE.jpg http://www.dinamani.com/business/2018/feb/16/பங்குச்-சந்தை-சென்செக்ஸ்-141-புள்ளிகள்-உயர்வு-2864051.html
2864050 வர்த்தகம் ஐடிபிஐ-யிடம் இருந்த என்இஜிஎல் பங்குகள் முழுவதும் விற்பனை DIN DIN Friday, February 16, 2018 12:40 AM +0530 பொதுத் துறை வங்கியான ஐடிபிஐ, தன்னிடமிருந்த எஸ்எஸ்டிஎல் ஈ-கவர்மென்ட் இஃப்ரா நிறுவனத்தின் 30 சதவீத பங்குகள் அனைத்தையும் விற்பனை செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி தெரிவித்துள்ளதாவது:
எஸ்எஸ்டிஎல் ஈ-கவர்மென்ட் இஃப்ரா(என்இஜிஎல்) நிறுவனத்தின் 1.2 கோடி பங்குகள் எங்களிடம் இருந்தன. இது அந்த நிறுவனத்தின் 30 சதவீத பங்குகள் ஆகும்.
அவை முழுவதும் வியாழக்கிழமை விற்பனை செய்யப்பட்டன என்று ஐடிபிஐ வங்கி தெரிவித்துள்ளது.
ஐடிபிஐ வங்கி, என்எஸ்இ ஸ்ட்ரேடஜிக் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன், யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவின் ஒரு பிரிவு ஆகியவை இணைந்து, என்இஜிஎல் நிறுவனம் நிறுவப்பட்டதாக அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/16/w600X390/ndsl.jpg http://www.dinamani.com/business/2018/feb/16/ஐடிபிஐ-யிடம்-இருந்த-என்இஜிஎல்-பங்குகள்-முழுவதும்-விற்பனை-2864050.html
2864049 வர்த்தகம் முருகப்பா குழுமத்தின் கார்போரண்டம் யுனிவர்சல் நிகர லாபம் 15% உயர்வு DIN DIN Friday, February 16, 2018 12:40 AM +0530 சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த கார்போரண்டம் யுனிவர்சல் நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு நிகர லாபம் 15 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள நிதியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆண்டின் அக்டோபர் 1-ஆம் தேதி முதல், டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான நிகழ் நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில், கார்போரண்டம் யுனிவர்சல் நிறுவனத்தின் எக்ஸைஸ் வரி அல்லாத தொகுப்பு நிகர லாபம் ரூ.600 கோடியாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே 3 மாதங்களில் நிறுவனம் ஈட்டிய தொகுப்பு நிகர லாபமான ரூ.520 கோடியைவிட 15 சதவீதம் அதிகமாகும்.
வரிக்குப் பிந்தைய தொகுப்பு லாபத்தைப் பொருத்தவரை, இந்த காலகட்டத்தில் கடந்த நிதியாண்டில் நிறுவனம் ரூ.44 கோடி ஈட்டியிருந்தது. இது, இந்த நிதியாண்டில் 24 சதவீதம் அதிகரித்து ரூ.54 கோடியாக உயர்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டியூப் இன்வெஸ்ட்மென்ஸ் நிகர லாபம் 28% உயர்வு: முன்னதாக, முருகப்பா குழுமத்தின் டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் வெளியிட்ட நிதியறிக்கையில், நிறுவனத்தின் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடையும் 3-ஆவது காலாண்டு வரிக்குப் பிந்தைய லாபம் முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 28 சதவீதம் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.27 கோடியாக இருந்த வரிக்குப் பிந்தைய லாபம், இந்த நிதியாண்டில் ரூ.35 கோடியாக உயர்ந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/16/w600X390/murugappa-group.jpg http://www.dinamani.com/business/2018/feb/16/முருகப்பா-குழுமத்தின்-கார்போரண்டம்-யுனிவர்சல்-நிகர-லாபம்-15-உயர்வு-2864049.html
2862860 வர்த்தகம் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தொடும் வாய்ப்பு: அதிகாரிகள் நம்பிக்கை DIN DIN Wednesday, February 14, 2018 01:30 AM +0530 மத்திய அரசின் வரி ஏய்ப்புத் தடுப்பு நடவடிக்கைகள் அமலுக்கு வந்தால் மாதாந்திர சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டும் என்று நிதியமைச்சக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அமைச்சரவை வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ஜிஎஸ்டி கணக்குத் தாக்கல் முறையில் உள்ள குழப்பங்கள் நீங்கி, நிலைமை ஸ்திரமடைந்தால், பகுப்பாய்வு மற்றும் இடர் மேலாண்மை இயக்குநரகம் முழு வீச்சில் செயல்படத் தொடங்கும்.
ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் விவரங்களையும், வருமான வரிக் கணக்குத் தாக்கல் விவரங்களையும் அந்த இயக்குநரகம் முழுமையாக ஒப்பீட்டு ஆய்வு செய்யும்.
அதற்குப் பிறகு, வரி ஏய்ப்புகள் பெரும்பாலும் தடுக்கப்படும். இதன் விளைவாக மாதத்துக்கு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வருவாய் இருக்கக் கூடும்.
ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும் 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.7.44 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் ஈட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஜூலை மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலான எட்டு மாதங்களில் மட்டும் ரூ.4.44 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகும் என்று எதிர்பர்க்கப்படுகிறது என்று நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/14/w600X390/gst.jpg http://www.dinamani.com/business/2018/feb/14/ஜிஎஸ்டி-வருவாய்-ரூ1-லட்சம்-கோடியை-தொடும்-வாய்ப்பு-அதிகாரிகள்-நம்பிக்கை-2862860.html
2862859 வர்த்தகம் பிட்காயின் வர்த்தகம்: சிட்டி பேங்க் தடை DIN DIN Wednesday, February 14, 2018 01:29 AM +0530 பிட்காயின் மற்றும் பிற மெய்நிகர் நாணயங்களை வாங்குவதற்காக, தனது வங்கி மட்டும் கடன் அட்டைகளைப் பயன்படுத்துவதற்கு சிட்டி இந்தியா வங்கி தடை விதித்துள்ளது.
மெய்நிகர் நாணயங்கள் குறித்து மத்திய ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிட்டி இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பிட்காயின் மற்றும் பிற மெய்நிகர் நாணயங்களை வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் சிட்டி இந்தியாவின் கடன் அட்டைகள் மற்றும் வங்கி அட்டைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுளது.
மெய்நிகர் நாணயங்கள்குறித்து உலக அளவிலும், இந்திய அளவிலும் சந்தகம் இருந்து வருகிறது.
பிட்காயின்கள் போன்ற மெய்நிகர் நாணயங்கள் பொருளாதார மற்றும் சட்ட ரீதியிலும், நடைமுறை சாத்தியம், வாடிக்கையாளர் பாதுகாப்பு ஆகிய வகையிலும் எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை என்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கியே அச்சம் தெரிவித்துள்ளது.
இந்தக் காரணங்களால், அத்தகைய மெய்நிகர் நாணயப் பரிவர்த்தனைக்கு சிட்டி பேங்க் அட்டைகளைப் பயன்படுத்தத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/14/w600X390/bitcoin-ban.jpg http://www.dinamani.com/business/2018/feb/14/பிட்காயின்-வர்த்தகம்-சிட்டி-பேங்க்-தடை-2862859.html
2862858 வர்த்தகம் வேளாண்மை, எம்எஸ்எம்இ-க்கு கடன் கொடுப்பதில் சிறப்பு கவனம்: ஐஓபி அதிகாரி தகவல் DIN DIN Wednesday, February 14, 2018 01:29 AM +0530 சிறு வணிகம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்(எம்.எஸ்.எம்.இ), வேளாண்மைத் துறை ஆகியவற்றுக்கு கடன் கொடுப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஆர்.சுப்பிரமணியகுமார் தெரிவித்தார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 2017-ஆம் ஆண்டு டிசம்பருடன் நிறைவடைந்த 3-ஆம் காலாண்டு நிதிநிலை அறிக்கை சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இதை வங்கியின் மேலாண்மை இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான ஆர்.சுப்பிரமணியகுமார் வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது: 
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாராக் கடனை குறைப்பதில் கவனம் செலுத்தியது. அதன் விளைவாக வாராக் கடன் 21.95 சதவீதமாக குறைந்துள்ளது. 2017- டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் மொத்த வாராக்கடன் ரூ.33,266.88 கோடியாக உள்ளது. முன்பு இது ரூ.34,502.13 கோடிக்கு மேல் இருந்தது. நிகர வாராக்கடன் இப்போது 14.32 சதவீதத்தில் இருந்து தற்போது 13.08 சதவீதமாக குறைந்துள்ளது. 2017-டிசம்பருடன் முடிந்த காலாண்டில் நிகர வாராக்கடன் ரூ.17,761.22 கோடியாக உள்ளது. 2016-ஆம் ஆண்டு டிசம்பருடன் முடிந்த காலாண்டில் ரூ.19,900.75 கோடியாக இது இருந்தது. 
சிறப்பு கவனம்: சிறுவணிகம், வேளாண்மை, குறு, சிறு, நடுத்தர தொழில் ஆகியவற்றுக்கு கடன் கொடுப்பதில் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு பாதகமான சூழல் இருந்தது. இப்போது, 14.5 சதவீதத்துக்கு மேல் வளர்ச்சியை எட்டியுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழிலுக்கு கடன் கொடுப்பதை ஒவ்வொரு வங்கி கிளையிலும் இலக்கு வைத்து, எல்லோரும் பங்கேற்க வேண்டும் என்பது குறிக்கோள். ஒவ்வொரு வங்கியிலும் மாதத்துக்கு 8 சிறு, குறு தொழில் நடத்துவோருக்கு கடன் கொடுப்பர்.
வாகனக் கடன்: சில்லறை கடனைப் பொருத்தவரை, வீட்டுக்கடன், வாகனக்கடன் கொடுப்பதில் 30 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. வீட்டுக் கடன் மட்டும் 32 சதவீதத்துக்கு மேலாக கொடுத்துள்ளோம். வாகனக் கடன் 33 சதவீதத்துக்கு மேலாக கொடுத்து உள்ளோம். எஸ்.எம்.இ. '300' திட்டத்தை கடந்த காலாண்டில் அறிமுகப்படுத்தினோம். ஒரு நபருக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கடன் கொடுக்கிறோம். விவசாயத்தில் 18 சதவீதம் வரை கடன் கொடுக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 21 சதவீதம் கொடுத்துள்ளது. முன்னுரிமை துறைக்கு 40 சதவீதம் வரை கடன் கொடுக்க வேண்டும். எங்கள் வங்கி 48 சதவீதம் வரை கொடுத்துள்ளது.
சிறுதொழில் முனைவோருக்கு கடன்: பெரு நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பது 58 சதவீதமாக இருந்தது. கடந்த இரண்டு காலாண்டுகளில் பெரு நிறுவனங்களின் கடன் வழங்குவது குறைந்துள்ளது. சில்லறை வணிகம், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், வேளாண்மை தொழில் ஆகியவற்றுக்கு கடன் கொடுப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு முன்பு இந்த மூன்றும் சேர்ந்து 52 சதவீதமாக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து 64 சதவீதமாக இருக்கிறது. எங்கள் நிறுவனத்தின் மொத்த கடனில் 19.6 சதவீதம் சில்லறை கடன். முன்பு 14 சதவீதம் தான் இருந்தது. இப்போது சிறு தொழில் செய்வோருக்கு கடன் கொடுப்பதில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது என்றார் அவர்.
செயல் இயக்குநர்கள் கே.சுவாமிநாதன், அஜய் குமார் ஸ்ரீவஸ்தா ஆகியோர் உடன் இருந்தனர். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/14/w600X390/iob.JPG காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு பேசுகிறார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஆர்.சுப்பிரமணியகுமார். உடன் செயல் இயக்குநர்கள் கே.சுவாமிநாதன், அஜய் குமார் ஸ்ரீவஸ்தா. http://www.dinamani.com/business/2018/feb/14/வேளாண்மை-எம்எஸ்எம்இ-க்கு-கடன்-கொடுப்பதில்-சிறப்பு-கவனம்-ஐஓபி-அதிகாரி-தகவல்-2862858.html
2862161 வர்த்தகம் பங்குச் சந்தைகளில் மீண்டும் உற்சாகம்: புதிய உச்சம் தொட்டது சென்செக்ஸ் DIN DIN Tuesday, February 13, 2018 01:13 AM +0530 கடந்த வாரம் மந்த நிலை காணப்பட்ட இந்தியப் பங்குச் சந்தை திங்கள்கிழமை புதிய உற்சாகம் பெற்றது.
உலக அளவிலான சந்தையின் ஆரோக்கியமான போக்கு, மற்றும் நிறுவனங்களின் வருவாய் பெருக்கங்கள் ஆகியவற்றால் முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்ததால், திங்கள்கிழமை பங்குச் சந்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.
அண்மைக் காலத்தின் மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான எரிசக்தித் துறை நிறுவனங்களின் பங்குகளையும், மனை வர்த்தகம், மூலதனப் பொருள்கள் ஆகியத் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றின் பங்குகளையும் முதலீட்டாளர்கள் வாங்கிக் குவித்தனர். டாடா ஸ்டீல் போன்ற பெரு நிறுவனங்கள் தங்களது காலாண்டு அறிக்கையில் நல்ல வருவாயைக் காட்டியிருந்தன. இந்தப் போக்கு, நிறுவனங்களில் அதிக மூதலீடு செய்வதற்கான தைரியத்தை முதலீட்டாளர்களுக்கு அளித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், அமெரிக்கப் பங்குச் சந்தை கடந்த வெள்ளிக்கிழமை அமோக வர்த்தகத்தைக் கண்டதன் எதிரொலியாக, ஐரோப்பிய மற்றும் ஆசியப் பங்குச் சந்தைகளும் அமோக வர்த்தகத்தில் ஈடுபட்டன.
இந்த சர்வதேச நிலவரமும், முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
மும்பைப் பங்குச் சந்தையில் திங்கள்கிழமை 
சுறுசுறுப்பாகத் தொடங்கிய வர்த்தகம், இதுவரை 
இல்லாத 34,351 சென்செக்ஸ் புள்ளிகளைத் தொட்டது. எனினும், பிறகு அந்த வர்த்தகம் லேசாக மந்தமடைந்து 34,115 புள்ளிகள் வரை குறைந்தது.
இறுதியில், சென்செக்ஸ் 34,300 புள்ளிகளை அடைந்து, 294 புள்ளிகள் (0.87 சதவீதம்) வளர்ச்சியுடன் நிறைவடைந்தது.
தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டியைப் பொருத்தவரை, திங்கள்கிழமை இடையில் 10,555 புள்ளிகள் வரை உயர்வடைந்து, இறுதியில் 10,340 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இது 84 புள்ளிகள் (0.81 சதவீதம்) வளர்ச்சியாகும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/18/w600X390/sensex.jpg http://www.dinamani.com/business/2018/feb/13/பங்குச்-சந்தைகளில்-மீண்டும்-உற்சாகம்-புதிய-உச்சம்-தொட்டது-சென்செக்ஸ்-2862161.html
2862159 வர்த்தகம் பணவீக்கம் 5.07%-ஆக குறைந்தது DIN DIN Tuesday, February 13, 2018 01:12 AM +0530 நாட்டின் நுகர்வோர் பணவீக்க விகிதம் கடந்த ஜனவரி மாதம் 5.07 சதவீதமாகக் குறைந்துள்ளது. காய்கறிகள், பழங்கள், சில வகை உதிரி பாகங்களின் விலைகள் குறைந்ததையடுத்து, நுகர்வோரர் விலைக் குறியீட்டு எண்ணை (சிபிஐ) அடிப்படையாகக் கொண்டு பணவீக்க விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாத பணவீக்க விகிதம் 5.21 சதவீதமாக இருந்தது. அது, முந்தைய 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிக அதிக பணவீக்க விகிதமாகும். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் அது 5.07-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், கடந்த ஆண்டின் ஜனவரி மாதத்தோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் ஜனவரி மாத பண வீக்க விகிதம் 2.04 சதவீதம் அதிகமாகும். 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாத பணவீக்க விகிதம் 3.17-ஆக இருந்தது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/18/w600X390/money.jpg http://www.dinamani.com/business/2018/feb/13/பணவீக்கம்-507-ஆக-குறைந்தது-2862159.html
2862156 வர்த்தகம் இந்தியன் வங்கியின் நிகர வருவாய் ரூ.2,171 கோடி DIN DIN Tuesday, February 13, 2018 01:12 AM +0530 இந்தியன் வங்கியின் நிகர வருவாய் (டிசம்பருடன் முடிவடைந்த 3-ஆவது காலாண்டில்) 17.62 சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ.2,171 கோடியை பெற்றுள்ளது என்று இந்தியன் வங்கியின் முதன்மை செயல் அலுவலர் கிஷோர் காரத் தெரிவித்தார்.
இதுகுறித்து, மூன்றாவது காலாண்டுக்கான அந்த வங்கியின் நிதிநிலை மற்றும் லாப நஷ்ட கணக்கு அறிக்கையை சென்னையில் திங்கள்கிழமை வெளியிட்டு, வங்கி முதன்மை செயல் அலுவலர் கிஷோர் காரத் செய்தியாளர்களிடம் கூறியது: இந்தியன் வங்கியின் 2017-ஆம் ஆண்டு டிசம்பருடன் முடிவடைந்த 3-ஆவது காலாண்டில், இயக்க லாபம் 18.42 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது, ரூ.1,209.22 கோடியை அடைந்தது. 2016-ஆம் ஆண்டு இதே காலத்தில் இது ரூ.1,021.16 கோடியாக இருந்தது. 2017-ஆம் ஆண்டு டிசம்பரில் நிறைவுற்ற 9 மாதத்தில் அதன் செயல்பாட்டு லாபம் 30.94 சதவீதம் வளர்ச்சியடைந்ததை அடுத்து ரூ.3,837.23 கோடியை எட்டியது . 2016-ஆம் ஆண்டு இதே காலக் கட்டத்தில் ரூ.2,930.56 கோடியாக இருந்தது.
வங்கியின் நிகரலாபம் (2017-ஆம் ஆண்டு டிசம்பர்) காலாண்டு முடிவில், ரூ.303.06 கோடியாக இருந்தது.
இது 2016-ஆம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.373.47 கோடியாக இருந்தது. இந்த லாபத்தில் ஏற்பட்ட குறைவுக்கு மூலதனங்கள் மீதான சந்தை மதிப்பு சரிவு, பத்திர வருவாய் மற்றும் இதர ஒதுக்கீடுகள் காரணமாகும். 2017-ஆம் ஆண்டு டிசம்பருடன் முடிந்த 9 மாத காலத்தில் நிகர லாபமானது 3.78 சதவீதம் வளர்ச்சி கண்டு, ரூ.1,127.01 கோடியைத் தொட்டது. இது 2016-ஆம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.1,085.98 கோடியாக இருந்தது.
2017 ஆம் ஆண்டு டிசம்பருடன் முடிந்த காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.4,903.08 கோடியை அடைந்தது. 2016-ஆண்டு இதே காலக்கட்டத்தில் இருந்ததை விட 7.59 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது 2016-ஆம் ஆண்டு இதே காலத்தில் இது ரூ.4,557.26 கோடியாக இருந்தது. 2017-ஆம் ஆண்டின் ஒன்பது மாத காலத்தில் ரூ.14,565.29 கோடியாக இருந்தது. இது 2016-ஆம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.13,649.24 கோடியாக இருந்தது.
இந்தியன் வங்கியின் நிகரவட்டி வருவாய் ( 2017-ஆம் ஆண்டில்) டிசம்பருடன் முடிந்த காலாண்டில் 30.17 சதவீதம் அதிகரித்து, ரூ.1,622.70 கோடியை அடைந்தது. 2016-ஆம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் இது ரூ.1,246.57 கோடியாக இருந்தது. 2017-ஆம் ஆண்டு டிசம்பருடன் முடிந்த 9 மாத காலத்தில் நிகர வட்டி வருவாய் 23 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. இது ரூ.4,625.86 கோடியை எட்டியுள்ளது. வங்கியின் நிகர வருவாய்(டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில்) 17.62 சதவீதம் வளர்ச்சி அடைந்து, ரூ.2,171 கோடியை தொட்டது. 2016-ஆம் ஆண்டு இதே காலத்தில் ரூ.1,846.27 கோடியாக இருந்தது. வங்கியின் உலகளாவிய வர்த்தகத்தின் அளவு 16.20 சதவீதம் வளர்ச்சி கண்டு, ரூ.3,59,653 கோடியாக இருக்கிறது. இதுபோல, மொத்த வைப்புத் தொகை அளவு 12.46 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது ரூ.2,06,533 கோடியாக இருக்கிறது என்றார் அவர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2014/9/12/12/w600X390/indianbank.jpg http://www.dinamani.com/business/2018/feb/13/இந்தியன்-வங்கியின்-நிகர-வருவாய்-ரூ2171-கோடி-2862156.html
2862116 வர்த்தகம் தங்கம் பவுனுக்கு ரூ. 16 குறைவு DIN DIN Tuesday, February 13, 2018 12:57 AM +0530 சென்னையில் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.16 குறைந்து, ரூ. 23,016-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கியக் காரணமாக இருக்கின்றன. சென்னையில் திங்கள்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.2 குறைந்து, ரூ.2,877-க்கு விற்பனையானது. வெள்ளி ஒரு கிராமுக்கு 40 பைசா அதிகரித்து ரூ. 41.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ. 41,000 -ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை நிலவரம் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ரூ. 2,877
1 பவுன் தங்கம் ரூ. 23,016
1 கிராம் வெள்ளி ரூ. 41.00
1 கிலோ வெள்ளி ரூ. 41,000

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/5/w600X390/gold2.jpg http://www.dinamani.com/business/2018/feb/13/தங்கம்-பவுனுக்கு-ரூ-16-குறைவு-2862116.html
2861706 வர்த்தகம் மின்சார வாகனங்கள் தயாரிப்பு: கைகோக்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் - நாகா DIN Monday, February 12, 2018 10:29 AM +0530 இன்னும் சில ஆண்டுகளில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இந்தியச் சாலைகள் முழுவதும் ஓடச் செய்யும் இமாலயப் பொறுப்பை மத்திய அரசு ஆட்டோமொபைல் நிறுவனங்களின் தலையில் சுமத்தியிருக்கிறது.

இப்போது நாம் சாலைகளில் சர்வசாதாரணமாகக் காணும் பெட்ரோல், டீசல் கார்களை, வரும் 2030-ஆம் ஆண்டுக்குப் பிறகு விற்பனை செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

காற்று மாசுபாட்டைக் குறைக்கவும், அதன் மூலம் உலக வெப்பமயமாதலைத் தவிர்க்கவும் இந்தியா எடுத்து வரும் முன்முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்தக் கொள்கை வரையறுக்கப்பட்டுள்ளது.

எனினும், நாட்டின் தற்போதைய சந்தைச் சூழலில், மின்சாரக் கார்களை அறிமுகப்படுத்துவதும், அதனை வியாபார ரீதியில் வெற்றிகரமாக்குவதும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு குதிரைக் கொம்பாகத்தான் இருக்கும்.

பெட்ரோல் - டீசல் வாகனங்களுக்கு நன்குப் பழகிப் போன இந்தியர்களிடையே மின்சார வாகனங்களைக் கொண்டு சேர்ப்பது நிறுவனங்களுக்கு மிகச் சவாலாக இருப்பதுதான் இதற்குக் காரணம்.

ஏற்கெனவே, பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியச் சந்தைகளில் அறிமுகமான "ரேவா' போன்ற மின்சாரத்தில் இயங்கும் கார்கள் படுதோல்வி அடைந்தது, தற்போது கூட சந்தையில் அறிமுகமாகியுள்ள பல மின்சார பைக்குகள் சரியாக விற்பனையாகாதது போன்ற காரணங்கள் அரசின் கொள்கையை அமல்படுத்த நிறுவனங்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

இருந்தாலும், இத்தகைய சவால்களையெல்லாம் எதிர்கொள்வதற்காகவும், இந்தியச் சாலைகளை சுற்றுச் சூழலுக்கு உகந்த மின்சார வாகனங்களால் நிரப்புவதற்காகவும் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களுக்கிடையேயான போட்டியை மறந்து ஒன்றுக்கொன்று கைகோக்கத் தொடங்கியுள்ளன.

சுஸூகி-டொயோட்டா

ஜப்பானைச் சேர்ந்த ஆட்டோமொபைல் ஜாம்பவான்களான சுஸூகியும், டொயோட்டாவும் மேற்கொண்டுள்ள கூட்டணி, இத்தகைய கூட்டு முயற்சிகளில் ஒன்று.

இந்த இரு நிறுவனங்களும் இணைந்து, வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் இந்தியச் சந்தையில் ஒரு மின்சாரக் கார் ரகத்தை அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வருகின்றன.

இந்தக் கார், குஜராத் மாநிலத்திலுள்ள சுஸூகி நிறுவனத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் என்று நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆயத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகத்தான், சுஸூகியின் இந்தியத் துணை நிறுவனமான மாருதி சுஸூகி, "ஈ-சர்வைவர்' என்ற உத்தேச மாதிரிக் காரை உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது.

பெட்ரோலிய எரிபொருள் கார்களுக்கான இந்தியச் சந்தையில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து வரும் மாருதி, மின்சாரக் கார்களுக்கான சந்தையிலும் கோலோச்ச வேண்டும் என்பதில் உறுதியுடன் இருக்கிறது.

இதற்காக, டென்úஸா, தோஷிபா ஆகிய நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து, குஜராத்தில் ஒரு லித்தியம்-ஐயான் பேட்டரித் தொழிற்சாலையை அமைக்கவும் மாருதி திட்டமிட்டு வருகிறது.

""எந்தவொரு காரியமும் கூட்டணி அமைத்துச் செயல்பட்டால் அது எளிதாக அமையும். நிறுவனங்களிடையே இத்தகைய கூட்டணி அமையும்போது, அது ஒரு நிறுவனத்திடமிருந்து மற்ற நிறுவனம் கற்றுக் கொள்வதற்கு வழி வகுக்கும்'' என்கிறார் மாருதி சுஸூகி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயலதிகாரியுமான கெனிச்சி அயுகவா.

டொயோட்டா நிறுவனத்தைப் பொருத்தவரை, வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் விற்பனையாகும் தனது வாகனங்களில் 80 சதவீதத்தை மின்சாரத்தில் இயங்குபவையாக மாற்ற கங்கணம் கட்டியுள்ளது.

இதற்காக, பல்வேறு வகையான எதிர்காலத் தொழில்நுட்பத் தீர்வுகளையும் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகக் கூறுகிறார் டோயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அகிடோ டாசிபனா. 

மின்சார வாகனங்கள் விவகாரத்தில் இந்த நிறுவனம் உலக அளவில் மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் சர்வதேசச் சந்தையில் 15.2 லட்சம் மின்சார வாகனங்களை விற்பனை செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால், கடந்த ஆண்டிலேயே அந்த இலக்கை டொயோட்டா கடந்து விட்டது. அந்த வகையில் இந்தியச் சந்தையில் டொயோட்டாவும், அதனுடன் கூட்டு வைத்துள்ள சுஸூகியும் தனது இலக்கை அடைவதற்கான முயற்சியில் நம்பிக்கையுடன் இறங்கியுள்ளன.

மஹிந்திரா - ஃபோர்டு

சுஸூகியையும், டொயோட்டாவையும் போலவே, இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா அண்டு மஹிந்திரா, அமெரிக்க ஆட்டோமொபைல் ஜாம்பவனான ஃபோர்டு ஆகிய இரு நிறுவனங்களும், இந்தியச் சந்தைக்கான மின்சார வாகனங்களை உருவாக்குவதில் கூட்டாகச் செயல்பட முடிவு செய்துள்ளன.

இதுதொடர்பான பேச்சுவார்த்தை கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் தொடங்கியதாகவும், மின்சார வாகன அறிமுகத்தால் இந்திய வாகனச் சந்தையில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண, பரபஸ்பர அனுபவங்கள், தொழில்நுட்பங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்வது குறித்து இரு நிறுவனங்களும் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தக் கூட்டணியின் விளைவாக, தனது பெரிய வகை மின்சாரக் காருக்கான மென்பொருளை ஃபோர்டிடமிருந்து மஹிந்திரா பெற்றது. ஃபோர்டு நிறுவனமும், மஹிந்திரா நிறுவனத்தின் மின்சார வாகனத் தொழில்நுட்பங்களைப் பெற்றுக் கொண்டது.

மின்சார வாகனங்களை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தும்போது ஏற்படக் கூடிய பிரச்னைகளை இரு நிறுவனங்களும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள நினைப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் கோயங்கா கூறுகையில், ""இந்தியச் சந்தையில் மின்சார வாகனங்களுக்கு எந்த அளவு வரவேற்பு இருக்கும் என்பதை யாராலும் உறுதியாககச் சொல்ல முடியவில்லை. இந்தத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதைவிட, செய்த முதலீட்டுக்கு நியாயம் கற்பிப்பதுதான் தற்போது முக்கியமான தேவையாக உள்ளது'' என்கிறார்.

ஃபோர்டு நிறுவனம் மட்டுமன்றி, மின்சாரத் தொழில்நுட்பங்களைப் பெறுவதற்காக தென் கொரியாவைச் சேர்ந்த ஸாங்யோங் மோட்டார் நிறுவனத்துடனும் மஹிந்திரா நிறுவனம் இணைந்து பணியாற்றி வருகிறது.

இதுமட்டுமின்றி, ரெனால்ட்-நிஸான்-மிட்சுபிஷி ஆகிய மூன்று நிறுவனங்களின் கூட்டணியும் இந்தியச் சந்தையில் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தவதில் தங்களது கவனத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக இந்த நிறுவனங்கள் இணைந்து, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக 100 கோடி டாலர் (சுமார் ரூ.6,400 கோடி) நிதி ஒதுக்கீட்டுத் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளன.

சென்னையில் தலைமையகத்தைக் கொண்டுள்ள முன்னணி வர்த்தக வாகன நிறுவனமான அசோக் லேலண்டும், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை மேம்படுத்துவதற்காக இஸ்ரேலிய நிறுவனமான பினர்ஜியுடன் கைகோத்துள்ளது. ஏற்கெனவே, சன் மொபிலிட்டி நிறுவனத்தின் தொழில்நுட்பக் கூட்டுறவுடன்தான் அசோக் லேண்டு நிறுவனம் தனது முதல் மின்சார பேருந்தான "சர்க்யூட் எஸ்'ஐ வெளியிட்டது.

உலக நாடுகளின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிக்கு இந்தியா அளிக்கும் ஒத்துழைப்பாக பெட்ரோலிய வாகனத் தடைக் கொள்கை வகுக்கப்பட்டது.
அந்தக் கொள்கையைச் செயல்படுத்துவதில் இந்த தயக்கத்தை உடைத்தெறிந்து, தங்களுக்கிடையிலான கூட்டுறவின் மூலம் தடைகளைத் தாண்ட ஆட்டோமொபைல் நிறுவனங்கள் காட்டி வரும் உற்சாகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை ஆட்டோமொபைல் எக்ஸ்போ கண்காட்சியில் கண்கூடாகக் காண முடிகிறது.


""எந்தவொரு காரியமும் கூட்டணி அமைத்து செயல்பட்டால் அது எளிதாக அமையும். நிறுவனங்களிடையே இத்தகைய கூட்டணி அமையும்போது, அது ஒரு நிறுவனத்திடமிருந்து மற்ற நிறுவனம் கற்றுக் கொள்வதற்கு வழி வகுக்கும்'' 

- கெனிச்சி அயுகவா, சிஇஓ, மாருதி சுஸூகி

""வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் எங்களது வாகனங்களில் 80 சதவீதத்தை மின்சாரத்தில் இயங்குபவையாக மாற்ற, பல்வேறு வகையான
எதிர்காலத் தொழில்நுட்பத் தீர்வுகளையும் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம்''  

- அகிடோ டாசிபனா, நிர்வாக இயக்குநர்,
டொயோட்டா கிர்லோஸ்கர்


""இந்தியச் சந்தையில் மின்சார வாகனங்களுக்கு எந்த அளவு வரவேற்பு இருக்கும் என்பதை யாராலும் உறுதியாககச் சொல்ல முடியவில்லை. இந்தத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதைவிட, செய்த முதலீட்டுக்கு நியாயம் கற்பிப்பதுதான் தற்போது முக்கியமான தேவையாக உள்ளது'' 

- பவன் கோயங்கா, நிர்வாக இயக்குநர்,
மஹிந்திரா அண்டு மஹிந்திரா

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/12/w600X390/electric-car.jpg http://www.dinamani.com/business/2018/feb/12/மின்சார-வாகனங்கள்-தயாரிப்பு-கைகோக்கும்-ஆட்டோமொபைல்-நிறுவனங்கள்-2861706.html
2861707 வர்த்தகம் வசீகரிக்கும் வளர்ச்சியில் அழகு சாதன பொருள்கள் துறை - அ. ராஜன் பழனிக்குமார் DIN Monday, February 12, 2018 10:28 AM +0530 சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரையும் வசீகரிக்கும் துறை எது என கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு சொல்லிவிடலாம் அது தான் அழகு சாதன பொருள்கள் துறை என்று. அழகை விரும்பாதோர் அதனை நேசிக்காதோர் இவ்வுலகில் யாரும் இருக்க முடியாது? மனிதரின் இந்த அடிப்படை குணாதிசயம் தான் இத்துறையின் அசுர வளர்ச்சிக்கு பக்கபலமாக அமைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையில்லை.

சருமப் பராமரிப்பு, கூந்தல் பராமரிப்பு, நிறத்துக்கான ஒப்பனைப் பொருள்கள், நறுமணம் மற்றும் வாய்ப் பாரமரிப்பு ஆகிய அனைத்துமே அழகு சாதன பொருள் துறையின் முக்கிய அங்கங்கள். 

கடந்த 2006-08-ஆம் ஆண்டுகளுக்கிடையில் இத்துறையின் ஒட்டுமொத்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதம்தான். ஆனால், தற்போதைய நிலையில் இதன் வளர்ச்சி விகிதம் விண்ணை முட்டும் அளவுக்கு விறுவிறுப்பைக் கண்டு வருகிறது. 

1991-ஆம் ஆண்டுக்கு முந்தைய காலக்கட்டங்களில் அதாவது தாராளமயமாக்கலுக்கு முன்பு அழகியல் குறித்த விழிப்புணர்வு மற்றும் அதற்கான தேவைகள் மக்களிடம் அதிகளவில் காணப்பட்டதா என்று சொன்னால்... அந்த அளவுக்கு இல்லை என்றுதான் பதில் கூற வேண்டி வரும்...
ஆனால், உலகமயமாக்கலுக்குப் பிறகு அதுவும், இந்திய பெண்கள் உலக அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு கிரீடங்கள் சூடிக் கொண்ட பிறகுதான் அழகியல் குறித்த விழிப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமாக பொது வெளியில் தலைகாட்டத் தொடங்கியது. அடுத்தடுத்த ஆண்டுகளில், அழகு சாதன பொருள்கள் துறையின் வளர்ச்சி என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கு வெளிப்பட்டது. 

உலகமயமாக்கல் என்னும் சொர்க்கவாசல் திறக்கப்பட்ட பிறகுதான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய சந்தைகளை மொய்க்கத் தொடங்கின. அதற்கும் காரணங்கள் இல்லாமல் இல்லை. மக்கள் தொகை பெருக்கம் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளின் கைகளில்தான் தங்களின் நாளைய வளர்ச்சி உள்ளது என்பதை நிறுவனங்கள் அப்போதே தீர்க தரிசனமாக உணரத் தொடங்கி விட்டதுதான்.

பன்னாட்டு வருகைக்கு ஏற்றாற் போல இந்திய சூழலும் சிறிது சிறிதாக மாறியது. பொருளாதார வளர்ச்சி வேகத்தால் மக்களின் வாங்கும் திறன் அதிகரிப்பு, தாரளமயமாக்கலால் ஏற்பட்ட மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம் ஆகியவை இந்தத் துறையின் அசுர வளர்ச்சிக்கும், அதன் ஆக்டோபஸ் கரங்கள் மூலை முடுக்கெல்லாம் நீளுவதற்கும் அடிப்படை காரணங்களாகி விட்டன. 

இதற்கு, விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியும் ஆதரவு கரம் நீட்டியுள்ளன. குறிப்பாக, பல்வேறு ஊடகங்களில் கொடுக்கப்படும் பெரிய அளவிலான விளம்பரங்கள் அழகு சாதனப் பொருள்களை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்து வருகின்றன. 

தற்போது, தனிநபர் பராமரிப்பு என்பது அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. மாறி வரும் வாழ்க்கை முறைக்கு ஏற்ப தங்களை நவீனமாக்கி அழகுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. இதற்காக, ஊதியத்தின் கணிசமான தொகையை செலவிடவும் அவர்கள் தயங்குவதில்லை. 

ஊடக விளம்பரங்களின் தாக்கம் அழகியல் குறித்த விழிப்புணர்வை பெண்களைத் தாண்டி தற்போது ஆண்களையும் அதன்பால் ஈர்க்கச் செய்துள்ளது. இதன் காரணமாக, இத்துறையின் வளர்ச்சி தற்போது இரட்டிப்பு வேகம் எடுத்துள்ள நிலையில் எதிர்காலத்தில் இது ஜெட் வேகத்தில் பயணிக்கும் என இத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு சான்றாக, கடந்த 2009-ஆம் ஆண்டில் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்த நிலையின் போதும் இந்தியர்கள் அழகு சாதனப் பொருள்களுக்கு ரூ.35,660 கோடியை செலவிட்டதை அவர்கள் சுட்டிக் காட்டத் தவறவில்லை. 

இந்தியாவில் அழகு சாதனப் பொருள்கள் துறை தற்போது ஆண்டுக்கு 13-18 சதவீதம் என்ற அளவில் மிக துரித வளர்ச்சியை பெற்று வருகிறது. இதில் கவனிக்கத்தக்க அம்சம் என்னவெனில், வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளுடன் ஒப்பிடுகையில் நம்நாட்டில் இத்துறையின் வளர்ச்சி விகிதம் அதிகம் என்பதை குறிப்பிட்டே வேண்டும்.

சர்வதேச நாடுகளின் அழகு சாதனப் பொருள்கள் துறையின் சந்தை மதிப்பு ரூ. 18 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், இந்தியாவின் சந்தை மதிப்பு மட்டும் ரூ.42,250 கோடி. நகர்ப்புற விரிவாக்கம், பொருளாதார வளர்ச்சியின் வேகம் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு இத்துறை ஆண்டுக்கு ஒட்டு மொத்த அளவில் 25 சதவீத வளர்ச்சி விகிதத்தைப் பெற்று வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் ரூ.1.30 லட்சம் கோடியையும், 2035-இல் ரூ.2.27 லட்சம் கோடியையும் எட்டும் என்பது நிபுணர்களின் கணிப்பு. 

நாகரீக மாற்றத்தால் பொதுமக்களிடையே இயற்கை அழகு சாதனப் பொருள்கள் மீதான ஈர்ப்பு அதிகமாகி வருகிறது. இதையடுத்து, நிறத்துக்கான ஒப்பனை பொருள்கள், நறுமணம், சருமப் பாதுகாப்பு, அலங்கார ஒப்பனைகளுக்காக, இயற்கை மூலிகை மற்றும் ஆயுர்வேதத்தால் ஆன அழகு சாதன பொருள்களை உள்ளூர் நிறுவனங்கள் மட்டுமின்றி பன்னாட்டு நிறுவனங்களும் போட்டி போட்டு வெளியிடுவதுடன் அதனை பல்லாயிரம் கோடி செலவழித்து விளம்பரங்கள் மூலம் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் வேலையை சீரும் சிறப்புமாக செய்து வருகின்றன. இதனால், அத்தகைய பொருள்களுக்கு எதிர்காலத்தில் தேவை பெருமளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, இத்துறையின் நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சிக்கு அடித்தளமிடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இவ்வளவு வரியா?

இந்தியாவில் தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருள்களுக்கு செலவிடும் தொகையை விட அவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்குதான் அதிகம் செலவிடப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து அவற்றை இறக்குமதி செய்வதற்கு இந்தியா எந்தவித கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. ஆனால், ஜி.எஸ்.டி. அமலுக்குப் பிறகு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அழகு சாதன பொருள்களுக்கு மிக அதிகபட்சமாக 40.8% சுங்க வரி விதிக்கப்படுகிறது.

இந்தியாவில் விற்பனையாகும் டாப் 10 காஸ்மெட்டிக் (அழகு சாதன) பிராண்ட்


1 லாக்மி
2 லோட்டஸ்
3 விஎல்சிசி
4 லோரியல் பாரிஸ்
5 மேபெல்லின்
6 ரெவ்லான்
7 ஹிமாலாயா 
ஹெர்பல்ஸ்
8 கலர் பார்
9 எல்லி 18
10 எம்.ஏ.சி.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/12/w600X390/makeup.jpg http://www.dinamani.com/business/2018/feb/12/வசீகரிக்கும்-வளர்ச்சியில்-அழகு-சாதன-பொருள்கள்-துறை-2861707.html
2861708 வர்த்தகம் விறுவிறுப்படையும் தங்கத்துக்கான தேவை... DIN DIN Monday, February 12, 2018 02:36 AM +0530 பொருள்களின் விலை அதிகரித்து விட்டதே என பல்வேறு கூக்குரல்கள் கேட்டாலும், பொதுமக்களிடையே தங்கம் வாங்கும் போக்கு மட்டும் எப்போதுமே மட்டுப்பட்டதாகத் தெரியவில்லை. அந்தவகையில், அதன் இறக்குமதி மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. 
கிராமப்புறங்களில் தேவை அதிகரித்தது மற்றும் சிறப்பான பொருளாதர வளர்ச்சி ஆகியவையே இந்தியாவில் தங்கம் இறக்குமதி சூடுபிடித்ததற்கு முக்கிய காரணம் என்கிறார் உலகத் தங்க கவுன்சிலின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குநர் பி.ஆர். சோமசுந்தரம். 
கடந்த 2016-ஆம் ஆண்டின் தேவையான 666.1 டன்னுடன் ஒப்பிடும்போது சென்ற ஆண்டில் தங்கத்துக்கான தேவை 9.1 சதவீதம் அதிகரித்து 727 டன்னாகியுள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் தங்க நாணயங்களுக்கான தேவை இன்னும் மிகச் சிறப்பான அளவில் அதிகரிக்கும் என்கிறார் அவர். 
மத்திய பட்ஜெட்டில் பல நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக தங்கம் பரிமாற்று முனையம் அமைப்பது உள்ளிட்ட பல முக்கிய செயல்திட்டங்களை செயல்படுத்த அரசு முனைப்பு காட்டியுள்ளது.
இதுபோன்ற சாதகமான நிகழ்வுகளால், நடப்பு ஆண்டில் தங்கத்துக்கான தேவை 700-800 டன்னாக எகிறும் என்கிறார் சோமசுந்தரம். 
இந்தியாவில் தங்கத்துக்கான தேவை அதிகரித்துள்ள அதேசமயத்தில், உலக அளவில் இதற்கான வரவேற்பு குறைந்து போயுள்ளது. அதன்படி, 2016-இல் 4,362 டன்னாக காணப்பட்ட உலகளாவிய தங்கத்துக்கான தேவை கடந்த ஆண்டில் 7 சதவீதம் குறைந்து 4,071.7 டன்னாகியுள்ளது. 
ஈடிஎஃப் போன்ற தங்க முதலீட்டு திட்டங்களுக்கு போதிய அளவு வரவேற்பு இல்லாமல் போனதே உலகளவில் தங்கத்துக்கான தேவை சரிவடைந்ததற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/15/w600X390/gold.jpg http://www.dinamani.com/business/2018/feb/12/விறுவிறுப்படையும்-தங்கத்துக்கான-தேவை-2861708.html
2861096 வர்த்தகம் ஹெச்பிசிஎல் லாபம் ரூ.1,950 கோடியாக உயர்வு DIN DIN Sunday, February 11, 2018 12:50 AM +0530 ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (ஹெச்பிசிஎல்) மூன்றாவது காலாண்டில் ரூ.1,950 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முகேஷ் கே. சுரானா தெரிவித்துள்ளதாவது: ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர லாபம் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ.1,950 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய லாபம் ரூ.1,590 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 22 சதவீதம் அதிகம்.
ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின் மூலம் கிடைக்கும் லாபம் 6.38 டாலரிலிருந்து அதிகரித்து 9.04 டாலரானது. இதன் காரணமாகவே, நிறுவனத்தின் நிகர லாபம் சிறப்பான அளவில் உயர்ந்தது. மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் விற்றுமுதல் ரூ.55,471 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.62,832 கோடியானது.
உள்நாட்டில் பெட்ரோலிய பொருள்கள் விற்பனை டிசம்பர் காலாண்டில் 3.4 சதவீதம் உயர்ந்து 2.68 கோடி டன்னாக இருந்தது. இதில், பெட்ரோல் விற்பனை 7.1 சதவீத வளர்ச்சியையும், டீசல் 2.3 சதவீத வளர்ச்சியையும், எல்பிஜி 9.2 சதவீத வளர்ச்சியையும், விமானங்களுக்கான பெட்ரோல் 7.7 சதவீத வளர்ச்சியையும் பெற்றிருந்தன என்றார் அவர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/11/w600X390/HPCL.jpg http://www.dinamani.com/business/2018/feb/11/ஹெச்பிசிஎல்-லாபம்-ரூ1950-கோடியாக-உயர்வு-2861096.html
2861082 வர்த்தகம் கரடியின் பிடியில் பங்குச் சந்தைகள் சிக்கித் தவித்த வாரம் DIN DIN Sunday, February 11, 2018 12:48 AM +0530 மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் கரடியின் பிடியில் இரண்டாவது வாரமாக சிக்கித் தவித்தன.
அமெரிக்காவில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதால் பணவீக்கம் உயரக்கூடும் என பொருளியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதனால், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற நிலைப்பாடு முதலீட்டாளர்களிடையே எழுந்துள்ளது. இதன் தாக்கம் உலக நாடுகளின் பங்குச் சந்தைகளில் கடந்த சில நாள்களாக எதிரொலித்து வருகிறது. அமெரிக்க பங்குச் சந்தைகளில் வார அளவிலான வர்த்தகம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மிக மோசமான சரிவைச் சந்தித்தது.
இந்தியாவைப் பொருத்தவரையில், மத்திய பட்ஜெட்டில் நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிப்பு அறிவிக்கப்பட்டதில் இருந்து பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாகவே இருந்து வருகிறது. உலக நாடுகளின் சந்தைகளில் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலையை கண்ட முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வெளியேறுவதையே பாதுகாப்பானது என கருதியதால் இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளின் பங்கு வர்த்தகம் கடந்த வாரத்தில் பெரும் சரிவை சந்தித்தன. 
கடந்த வார வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.7,380.26 கோடி மதிப்பிலான பங்குகளை விற்று சந்தைகளை விட்டு வெளியேறியதாக செபி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட நிதிக் கொள்கை ஆய்வறிக்கையில், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை. அதேசமயம், அதிகரித்து வரும் நிதிப் பற்றாக்குறை குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, வங்கி மற்றும் நிதித் துறை சார்ந்த நிறுவனப் பங்குகளின் விலை அதிகபட்சமாக 35.67 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தது. இதைத் தொடர்ந்து, பொறியியல் சாதனங்கள் 3.51 சதவீதமும், தகவல் தொழில்நுட்பம் 3.02 சதவீதமும், தொழில்நுட்பம் 2.73 சதவீதமும், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் 1.48 சதவீதமும் சரிந்தன.
அதேசமயம், தேவை அதிகரித்ததையடுத்து ரியல் எஸ்டேட் 2.13 சதவீதமும், மருந்து, 1.99 சதவீதமும், ஐபிஓ துறை நிறுவனப் பங்குகளின் விலை 1.22 சதவீதமும் உயர்ந்தன.
சென்செக்ஸில் இடம்பெற்றுள்ள 31 நிறுவனங்களில், கடந்த வாரத்தில் 25 பங்குகளின் விலை சரிந்தும், 6 பங்குகளின் விலை அதிகரித்தும் காணப்பட்டன.
யெஸ் வங்கி பங்கின் விலை 6.99 சதவீதமும், ஹெச்.டி.எஃப்.சி. 6.84 சதவீதமும், லார்சன் 6.01 சதவீதமும், டிசிஎஸ் 5.62 சதவீதமும், விப்ரோ 5.44 சதவீதமும், இன்டஸ்இண்ட் வங்கி 5.74 சதவீதமும், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி 4.94 சதவீதமும், அதானிபோர்ட் 4.29 சதவீதமும் இழப்பைக் கண்டன.
அதேசமயம், முதலீட்டாளர்களின் வரவேற்பையடுத்து, ஸன் பார்மா பங்கின் விலை 5.72 சதவீதமும், டாக்டர் ரெட்டீஸ் 3.43 சதவீதமும், கோல் இந்தியா 2.84 சதவீதமும், டாடா ஸ்டீல் பங்கின் விலை 2.08 சதவீதமும் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,060 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 34,005 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 305 புள்ளிகள் சரிந்து 10,454 புள்ளிகளில் நிலைத்தது.
கடந்த இரு வாரங்களில் மட்டும் சென்செக்ஸ் 2,044 புள்ளிகளையும் (5.76%), நிஃப்டி 614 புள்ளிகளையும் (5.63%) இழந்துள்ளன.
கடந்த வாரம், மும்பை பங்குச் சந்தையில் ரூ.24,106.99 கோடி மதிப்புக்கும், தேசிய பங்குச் சந்தையில் ரூ.1,76,449.69 கோடி மதிப்புக்கும் வர்த்தகம் நடைபெற்றது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2013/4/7/1/w600X390/bsebear.png http://www.dinamani.com/business/2018/feb/11/கரடியின்-பிடியில்-பங்குச்-சந்தைகள்-சிக்கித்-தவித்த-வாரம்-2861082.html
2861066 வர்த்தகம் இந்திய அஞ்சல் பேமென்ட் வங்கிச் சேவை: நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் தொடக்கம் DIN DIN Sunday, February 11, 2018 12:44 AM +0530 இந்திய அஞ்சல் பேமென்ட் வங்கிச் சேவை வரும் ஏப்ரல் மாதம் முதல் நாடு முழுவதும் தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அஞ்சலகத் துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்திய அஞ்சல் பேமென்ட் வங்கிச் சேவை ஏப்ரல் மாதம் முதல் தொடங்கவுள்ளது. நாடு முழுவதும் உள்ள 1.55 லட்சம் அஞ்சல் அலுவலக கிளைகளை வங்கி சேவை கிடைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 
650 பேமென்ட் வங்கி கிளைகள் அதற்கு தேவையான அனைத்து ஆதரவுகளையும் வழங்கும். பேமென்ட் பேங்க் விரிவாக்க திட்டம் தொடர்ந்து சீரிய முறையில் முன்னேற்றம் கண்டு வருகிறது. 
இது முடிவுக்கு வரும் நிலையில், ஊரக மற்றும் நகர்புறப் பகுதிகள் இரண்டிலும் நிதி சேவை அளிக்கும் மிகப்பெரிய அமைப்பாக இந்திய அஞ்சலக பேமண்ட்ஸ் வங்கி உருவெடுக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி, அஞ்சல் துறை உள்ளிட்ட 11 நிறுவனங்கள் பேமென்ட் வங்கிகளை அமைத்துக் கொள்ள கொள்கை அளவில் ஒப்புதலளித்தது.
பேமென்ட் வங்கிகள் பாரம்பரிய வங்கிகளைப் போல், வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க முடியாது. ஆனால், ரூ.1 லட்சம் வரையிலான டெபாசிட்டுகளைப் பெறுவதுடன், பிற வங்கிகளைப் போல அனைத்து சேவைகளையும் வழங்க முடியும். 
பேடிஎம், ஏர்டெல்லுக்குப் பிறகு பேமென்ட் வங்கிச் சேவையை முழு அளவில் வழங்கும் மூன்றாவது நிறுவனமாக இந்திய அஞ்சல் பேமென்ட் வங்கி உருவெடுக்கவுள்ளது. இதற்கு, அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு மூலம் ஏற்கெனவே, 17 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017- ஜனவரியில் ராய்ப்பூர், மற்றும் ராஞ்சி நகரங்களில் இந்திய அஞ்சல் பேமண்ட்ஸ் வங்கி சோதனை அடிப்படையில் இந்த சேவையை ஏற்கெனவே அறிமுகப்படுத்தியுள்ளது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/14/w600X390/indiapost.jpg http://www.dinamani.com/business/2018/feb/11/இந்திய-அஞ்சல்-பேமென்ட்-வங்கிச்-சேவை-நாடு-முழுவதும்-ஏப்ரல்-மாதம்-தொடக்கம்-2861066.html
2860547 வர்த்தகம் சாந்தி கியர்ஸ் விற்றுமுதல் ரூ.53 கோடியாக உயர்வு DIN DIN Saturday, February 10, 2018 01:21 AM +0530 முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் துணை நிறுவனமான சாந்தி கியர்ஸ் டிசம்பர் காலாண்டில் விற்றுமுதல் வாயிலாக ரூ.53.95 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் நிறுவனத்தின் விற்றுமுதல் ரூ.53.95 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் இது ரூ.51.15 கோடியாக காணப்பட்டது.
வரிக்கு முந்தைய லாபம் ரூ.6.58 கோடியிலிருந்து 43 சதவீதம் அதிகரித்து ரூ.9.41 கோடியானது. ஒன்பது மாத கால அளவில் வரிக்கு முந்தைய லாபம் லாபம் ரூ.22.40 கோடியிலிருந்து 16 சதவீதம் உயர்ந்து ரூ.25.92 கோடியானது.
மூன்றாவது காலாண்டில் ஆர்டர்களின் மதிப்பு 13 சதவீதம் உயர்ந்து ரூ.59 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி நிறுவனத்தின் மொத்த ஆர்டர் மதிப்பு ரூ.116 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.125 கோடியாகி உள்ளது.
நடப்பு 2017-18 நிதி ஆண்டுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக பங்கு ஒன்றுக்கு ரூ.1 வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சாந்தி கியர்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2015/2/6/0/w600X390/murugappa.jpg http://www.dinamani.com/business/2018/feb/10/சாந்தி-கியர்ஸ்-விற்றுமுதல்-ரூ53-கோடியாக-உயர்வு-2860547.html
2860546 வர்த்தகம் இந்தியா சிமெண்ட்ஸ் நிகர லாபம் ரூ.15 கோடி DIN DIN Saturday, February 10, 2018 01:19 AM +0530 இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மூன்றாம் காலாண்டில் ரூ.15.24 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய லாபம் ரூ.35.34 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 56.87 சதவீதம் சரிவாகும்.
வருவாய் ரூ.1,270.95 கோடியிலிருந்து 4.26 சதவீதம் குறைந்து ரூ.1,216.75 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ.1,216.71 கோடியிலிருந்து 1.24 சதவீதம் குறைந்து ரூ.1,201.51 கோடியாக காணப்பட்டது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

]]>
http://www.dinamani.com/business/2018/feb/10/இந்தியா-சிமெண்ட்ஸ்-நிகர-லாபம்-ரூ15-கோடி-2860546.html
2860545 வர்த்தகம் சாதகமற்ற உலக நிலவரங்களால் சென்செக்ஸ் 407 புள்ளிகள் வீழ்ச்சி DIN DIN Saturday, February 10, 2018 01:18 AM +0530 சாதகமற்ற உலக நிலவரங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், இறுதியில் சென்செக்ஸ் 407 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது.
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. இதனால், பணவீக்கம் ஏற்பட்டு அதன் காரணமாக, பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற நிலைப்பாடு முதலீட்டாளர்களிடையே பரவலாக எழுந்துள்ளது. இது, அமெரிக்கா மட்டுமின்றி இதர உலக நாடுகளின் பங்கு வர்த்தகத்தையும் தலைகீழாக புரட்டிப் போட்டு வருகிறது.
முதலீட்டாளர்கள் வங்கித் துறை பங்குகளை லாப நோக்கம் கருதி விற்பனை செய்ததையடுத்து அத்துறையின் குறியீட்டெண் 1.75 சதவீதமும், நிதி 1.54 சதவீதமும், தொலைத் தொடர்பு 1.15 சதவீதமும் சரிந்தது.
அதேசமயம், உலோகம், ரியல் எஸ்டேட், மின்சாரம் மற்றும் நுகர்வோர் சாதன துறை குறியீட்டெண்கள் ஏற்றம் பெற்றன.
யெஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி பங்குகளின் விலை முறையே 2.84 சதவீதம் மற்றும் 2.33 சதவீதம் சரிந்தன. இவை தவிர, ஹெச்டிஎஃப்சி நிறுவனம், இன்ஃபோசிஸ், ஆக்ஸிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், எஸ்பிஐ, விப்ரோ, மாருதி சுஸூகி, என்டிபிசி உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் விலையும் 2.13 சதவீதம் வரை சரிவைக் கண்டன.
அதேசமயம், டாடா ஸ்டீல், ஏஷியன் பெயின்ட், டாக்டர் ரெட்டீஸ், டிசிஎஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர் மற்றும் கோல் இந்தியா பங்குகளின் விலை 1.83 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.
மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 407 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 34,005 புள்ளிகளில் நிலைத்தது. ஜனவரி 4 க்குப் பிறகு சென்செக்ஸ் இந்த அளவுக்கு சரிந்தது இது முதல் முறை.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி 121 புள்ளிகள் குறைந்து 10,454 புள்ளிகளில் நிலைத்தது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/10/w600X390/sensex.jpg http://www.dinamani.com/business/2018/feb/10/சாதகமற்ற-உலக-நிலவரங்களால்-சென்செக்ஸ்-407-புள்ளிகள்-வீழ்ச்சி-2860545.html
2860544 வர்த்தகம் பாரத ஸ்டேட் வங்கி இழப்பு ரூ.1,886 கோடி DIN DIN Saturday, February 10, 2018 01:17 AM +0530 பாரத ஸ்டேட் வங்கி குழுமத்தின் இழப்பு மூன்றாம் காலாண்டில் ரூ.1,886.57 கோடியாகி உள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு வெள்ளிக்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கடந்த 2016-17 நிதி ஆண்டின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் பாரத ஸ்டேட் வங்கி, நிகர லாபமாக ரூ.2,152.14 கோடியை ஈட்டியிருந்தது. ஆனால் வாராக் கடன் அதிகரிப்பால் நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வங்கிக்கு ரூ.1,886.57 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 7.23 சதவீதத்திலிருந்து இரட்டை இலக்கமான 10.35 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது. ரூபாய் மதிப்பில் இது ரூ.1,08,172.32 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,99,141.43 கோடியாகியுள்ளது. நிகர வாராக் கடன் விகிதம் 4.24 சதவீதத்திலிருந்து உயர்ந்து 5.61 சதவீதமாகியுள்ளது. ரூபாய் மதிப்பில் இது ரூ.61,430.45 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.1,02,370.12 கோடியானது.
வங்கியின் வட்டி சாரா வருவாய் ரூ.11,057 கோடியிலிருந்து 29.75 சதவீதம் சரிவடைந்து ரூ.8,084 கோடியாகவும், கட்டணம் சாரா வருவாய் 18.38 சதவீதம் குறைந்து ரூ.11,755 கோடியாகவும் இருந்தது. அதேசமயம், கட்டணம் சார்ந்த வருவாய் ரூ.4,710 கோடியிலிருந்து 5.71 சதவீதம் அதிகரித்து ரூ.4,979 கோடியானது என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/6/w600X390/sbi.jpg http://www.dinamani.com/business/2018/feb/10/பாரத-ஸ்டேட்-வங்கி-இழப்பு-ரூ1886-கோடி-2860544.html
2859844 வர்த்தகம் பி.ஹெச்.இ.எல். நிறுவனம் 40% ஈவுத்தொகை அறிவிப்பு DIN DIN Friday, February 9, 2018 12:50 AM +0530 பொதுத் துறையைச் சேர்ந்த மின் உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான பி.ஹெச்.இ.எல். (பெல்) அதன் முதலீட்டாளர்களுக்கு 40% இடைக்கால ஈவுத்தொகையை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அதுல் சோப்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திட்டங்களை வேகமாக நிறைவேற்றுவதற்காக வகுக்கப்பட்ட விவேகமான வியூகங்கள், சிக்கன நடவடிக்கை, முடங்கிக் கிடந்த திட்டங்களை புதுப்பிப்பதற்காக மேற்கொண்ட ஒருங்கிணைந்த முயற்சிகள் ஆகியவற்றின் பலன் டிசம்பர் காலாண்டில் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் விற்றுமுதல் 6,494.44 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவு விற்றுமுதலான ரூ.6,187.48 கோடியுடன் ஒப்பிடுகையில் இது கணிசமான அதிகரிப்பாகும். 
தனிப்பட்ட நிகர லாபம் ரூ.93.54 கோடியிலிருந்து 64 சதவீதம் உயர்ந்து ரூ.153.19 கோடியானது.
நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத கால அளவில் நிறுவனத்தின் விற்றுமுதல் ரூ.18,017.62 கோடியாக இருந்தது. தனிப்பட்ட நிகர லாபம் ரூ.349.43 கோடியாக காணப்பட்டது.
நடப்பு 2017-18-ஆம் நிதி ஆண்டுக்கு 40 சதவீத இடைக்கால ஈவுத்தொகை வழங்க நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி பங்கு ஒன்றுக்கு இடைக்கால ஈவுத்தொகையான ரூ.0.80 பிப்ரவரி 28-இல் வழங்கப்படும்.
வரும் மாதங்களில் பல்வேறு பிரிவுகளில் புதிய ஆர்டர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/9/w600X390/bhel.jpg http://www.dinamani.com/business/2018/feb/09/பிஹெச்இஎல்-நிறுவனம்-40-ஈவுத்தொகை-அறிவிப்பு-2859844.html
2859840 வர்த்தகம் சிட்டி யூனியன் வங்கியின் வட்டி வருமானம் ரூ.365 கோடியாக உயர்வு DIN DIN Friday, February 9, 2018 12:49 AM +0530 சிட்டி யூனியன் வங்கியின் நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் நிகர வட்டி வருமானம் 19 சதவீதம் உயர்ந்து ரூ.365 கோடியாக உள்ளதாக வங்கியின் நிர்வாக இயக்குநர் என்.காமகோடி (படம்) தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் கடந்தாண்டின் காலாண்டைவிட நிகர வட்டி வருமானம் 19 சதவீதம் உயர்ந்து ரூ. 365.14 கோடியாகவும், நிகர லாபம் 22 சதவீதம் உயர்ந்து ரூ. 154.80 கோடியாகவும் இருந்தது. 
நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் வங்கியின் மொத்த வணிகம் கடந்தாண்டைவிட 11 சதவீதம் உயர்ந்து ரூ. 57,428 கோடியாகி உள்ளது. மேலும் வங்கியின் வைப்புத் தொகை மற்றும் கடன்கள் கடந்தாண்டைவிட முறையே 5 சதவீதம், 20 சதவீதம் உயர்ந்து ரூ. 31,339 கோடியாகவும், ரூ. 26,089 கோடியாகவும் இருந்தது. 561 கிளைகள் மற்றும் 1,584 தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திரங்களுடன் வங்கி செயல்பட்டு வருகிறது என்றார் அவர்.

]]>
http://www.dinamani.com/business/2018/feb/09/சிட்டி-யூனியன்-வங்கியின்-வட்டி-வருமானம்-ரூ365-கோடியாக-உயர்வு-2859840.html
2859839 வர்த்தகம் கிரேட்டர் நொய்டாவில் தொடங்கியது ஆட்டோ எக்ஸ்போ 2018 DIN DIN Friday, February 9, 2018 12:48 AM +0530 இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் "ஆட்டோ எக்ஸ்போ' வாகனக் கண்காண்ட்சி உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் வியாழக்கிழமை தொடங்கியது.
வரும் புதன்கிழமை வரை நடைபெறவிருக்கும் இந்தக் கண்காட்சியில், டிவிஎஸ், மாருதி சுஸýகி, அசோக் லேலண்டு உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்களது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துகின்றன.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியைவிட இந்த முறை அதிக நிறுவனங்கள், அதிக தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோலிய எரிபொருள்களில் இயங்கும் வாகனங்கள் எதிர்காலத்தில் அரசால் தடை செய்யப்படும் என்று கூறப்படும் நிலையில், மின்சாரம் மற்றும் மாற்று எரிபொருள் வாகனங்களுக்கு இந்தக் கண்காட்சியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கருதப்படுகிறது.
இந்தக் கண்காட்சியில் சுமார் 24 புதிய வாகனங்கள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படும் எனவும், புதிதாக உருவாக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/9/w600X390/autoexpo.jpg http://www.dinamani.com/business/2018/feb/09/கிரேட்டர்-நொய்டாவில்-தொடங்கியது-ஆட்டோ-எக்ஸ்போ-2018-2859839.html
2859838 வர்த்தகம் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறனை 77% அதிகரிக்க திட்டம் DIN DIN Friday, February 9, 2018 12:47 AM +0530 நாட்டின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புத் திறனை 77 சதவீதம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
அடுத்த பத்து ஆண்டுகளில் கச்சா எண்ணெய்க்கான தேவை இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேவையை ஈடு செய்யும் வகையில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புத் திறனை 77 சதவீதம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், உள்நாட்டில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புத் திறன் ஆண்டுக்கு 24.76 கோடி டன் என்ற அளவில் உள்ளது. இதனை வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 41.43 கோடி டன்னாகவும், 2030-ஆம் ஆண்டுக்குள் 43.86 கோடி டன்னாகவும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 2016-17-ஆம் நிதி ஆண்டில் கச்சா எண்ணெய்க்கான தேவை 19.37 கோடி டன்னாக இருந்தது. அதேசமயம், சுத்திகரிப்புத் திறன் அதைவிட அதிகமாகவே காணப்பட்டது. 
இருப்பினும், தற்போது கச்சா எண்ணெய்க்கான தேவை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து, வரும் 2030-ஆம் ஆண்டில் அதற்கான தேவை 33.50 கோடி டன்னாகவும், 2040-இல் 47.20 கோடி டன்னாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை ஈடு செய்ய வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. 
தற்போது இருக்கும் ஆலைகளில் விரிவாக்கத் திட்டங்களை மேற்கொள்வதன் மூலமாக சுத்திகரிப்பு திறனை 12 கோடி டன் கூடுதலாக்கவும், பொதுத் துறையில் அமைக்கும் புதிய ஆலைகளின் மூலமாக சுத்தகரிப்பு திறனை 6.9 கோடி டன் உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளன என்றார் அவர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/25/w600X390/Dharmendra-Pradhan.jpg http://www.dinamani.com/business/2018/feb/09/கச்சா-எண்ணெய்-சுத்திகரிப்பு-திறனை-77-அதிகரிக்க-திட்டம்-2859838.html
2859837 வர்த்தகம் ஏர்இந்தியா செயல்பாட்டு லாபம் இருமடங்கு உயர்வு DIN DIN Friday, February 9, 2018 12:46 AM +0530 ஏர்இந்தியாவின் செயல்பாட்டு லாபம் கடந்த நிதி ஆண்டில் இருமடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மக்களவையில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
ஏர்இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிதி நிலைமை மற்றும் செயல்பாடு நிலையான அளவில் மேம்பட்டு வருகிறது. இதற்கு, மத்திய அரசு செயல்படுத்திய சிறப்பு திட்டங்களே முக்கிய காரணம். கடந்த 2015-16-ஆம் நிதி ஆண்டில் அந்த நிறுவனம் செயல்பாட்டு லாபமாக ரூ.105 கோடியை மட்டுமே ஈட்டியிருந்த நிலையில், 2016-17-இல் அவ்வகையிலான லாபம் ரூ.298 கோடியாக இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
அதேசமயம், 2015-16-இல் ரூ.3,836.77 கோடியாக காணப்பட்ட இழப்பு 2016-17-இல் ரூ.5,765.16 கோடியாக உயர்ந்தது என்றார் அவர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/16/w600X390/airindia.jpg http://www.dinamani.com/business/2018/feb/09/ஏர்இந்தியா-செயல்பாட்டு-லாபம்-இருமடங்கு-உயர்வு-2859837.html
2859789 வர்த்தகம் தங்கம் பவுனுக்கு ரூ.248 குறைந்தது DIN DIN Friday, February 9, 2018 12:27 AM +0530 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 248 குறைந்து ரூ.22,864}க்கு விற்பனை செய்யப்பட்டது. 
சென்னையில் வியாழக்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.31 குறைந்து ரூ.2,858} க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 80 பைசா குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 40.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.40,700 }ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை நிலவரம் ( ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம் ரூ. 2,858
1 பவுன் தங்கம் ரூ. 22,864
1 கிராம் வெள்ளி ரூ. 40.70
1 கிலோ வெள்ளி ரூ. 40,700

புதன்கிழமை விலை நிலவரம் ( ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம் ரூ. 2,889
1 பவுன் தங்கம் ரூ. 23,112
1 கிராம் வெள்ளி ரூ. 41.50
1 கிலோ வெள்ளி ரூ. 41,500
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/5/w600X390/gold2.jpg http://www.dinamani.com/business/2018/feb/09/தங்கம்-பவுனுக்கு-ரூ248-குறைந்தது-2859789.html
2859296 வர்த்தகம் தங்கம் பவுனுக்கு ரூ. 176 குறைவு DIN DIN Thursday, February 8, 2018 01:15 AM +0530 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ. 176 குறைந்து ரூ.23, 112-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
சென்னையில் புதன்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.22 குறைந்து ரூ.2,889- க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 41.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.41,500 -ஆகவும் இருந்தது.
புதன்கிழமை விலை நிலவரம் ( ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ரூ. 2,889
1 பவுன் தங்கம் ரூ. 23,112
1 கிராம் வெள்ளி ரூ. 41.50
1 கிலோ வெள்ளி ரூ. 41, 500

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/5/w600X390/gold2.jpg http://www.dinamani.com/business/2018/feb/08/தங்கம்-பவுனுக்கு-ரூ-176-குறைவு-2859296.html
2858594 வர்த்தகம் எவரெடி இண்டஸ்ட்ரீஸ் லாபம் 40% சரிவு DIN DIN Wednesday, February 7, 2018 01:01 AM +0530 பேட்டரிகள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் எவரெடி இண்டஸ்ட்ரீஸ் இந்தியா நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் 40 சதவீதம் சரிவைக் கண்டது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு திங்கள்கிழமை அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
எவரெடி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் ரூ.373.80 கோடி வருவாய் ஈட்டியது. 
கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய ரூ.346.90 கோடியுடன் ஒப்பிடுகையில் இது அதிகம். செலவினம் ரூ.318.34 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.347.06 கோடியானது. 
செலவினம் அதிகரித்ததால் மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் லாபம் ரூ.20.94 கோடியாக குறைந்தது. கடந்த நிதி ஆண்டில் ஈட்டிய லாபம் ரூ.35.19 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 40.49 சதவீதம் குறைவாகும்.
கடந்த ஆண்டு ஜூலை முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் நிறுவனத்தின் வருவாயை ஒப்பிட முடியாது என எவரெடி நிறுவனம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

]]>
http://www.dinamani.com/business/2018/feb/07/எவரெடி-இண்டஸ்ட்ரீஸ்-லாபம்-40-சரிவு-2858594.html
2858593 வர்த்தகம் சென்ட்ரல் வங்கியில் அந்நியச் செலாவணி வைப்புநிதி வட்டி விகிதத்தில் மாற்றம் DIN DIN Wednesday, February 7, 2018 01:01 AM +0530 சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பிப்ரவரி 1-ஆம் தேதிமுதல் அந்நியச் செலாவணி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கியின் கோவை மண்டல முதன்மை மேலாளர் டி.சங்கரப்பா கூறியதாவது:
தற்போது 5 ஆண்டுகளுக்கான அமெரிக்க டாலர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 3.56 சதவீதமாகவும், 5 ஆண்டுகளுக்கான கிரேட் பிரிட்டன் பவுண்ட் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 1.78 சதவீதமாவும், 5 ஆண்டுகளுக்கான யூரோ வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 0.96 சதவீதமாகவும், 5 ஆண்டுகளுக்கான கெனடியன் டாலர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 2.95 சதவீதமாகவும், 5 ஆண்டுகளுக்கான ஆஸ்திரேலியன் டாலர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 3.12 சதவீதமாகவும் வழங்கப்படுகிறது.
இந்த வட்டி விகிதம் இந்தியாவுக்கான வெளிநாட்டு பணப் பரிமாற்ற முகவர்கள் சங்கம் சார்பில் ஜனவரி 31-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட வட்டி விகிதங்களின் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இவை பிப்ரவரி 28-ஆம் தேதி வரையில் நடைமுறையில் இருக்கும் என்றார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/7/w600X390/cbi.jpg http://www.dinamani.com/business/2018/feb/07/சென்ட்ரல்-வங்கியில்-அந்நியச்-செலாவணி-வைப்புநிதி-வட்டி-விகிதத்தில்-மாற்றம்-2858593.html
2858592 வர்த்தகம் டிஐ பைனான்ஸியல் ஹோல்டிங்ஸ் லாபம் 51% உயர்வு DIN DIN Wednesday, February 7, 2018 01:00 AM +0530 முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த டிஐ பைனான்ஸியல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் (முன்பு டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா) டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ஈட்டிய லாபம் 51 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
டிஐ பைனான்ஸியல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் (டிஐஎஃப்ஹெச்எல்) டிசம்பர் காலாண்டில் அனைத்துப் பிரிவு செயல்பாடு மூலம் ஈட்டிய வரிக்கு பிந்தைய லாபம் ரூ.157 கோடியாக இருந்தது.
கடந்த ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய லாபம் ரூ.104 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 51 சதவீதம் அதிகம். வரிக்கு பிந்தைய தனிப்பட்ட லாபம் ரூ.1.24 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டில் நிறுவனத்துக்கு 0.30 கோடி இழப்பு ஏற்பட்டிருந்தது.
டிஐஎஃப்ஹெச்எல்-ல் 46.2 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ள சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் & பைனான்ஸ் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ.6,761 கோடி மதிப்பிலான கடன்களை வழங்கியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் வழங்கப்பட்ட கடனான ரூ.4,373 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 55 சதவீதம் அதிகம். வரிக்கு பிந்தைய லாபம் ரூ.163 கோடியிலிருந்து 53 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.249 கோடியானது. நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 20 சதவீதம் அதிகரித்து ரூ.40,056 கோடியாக இருந்தது.
60 சதவீத பங்குகளைக் கொண்டுள்ள சோழமண்டலம் எம்எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் மொத்த பிரீமியம் வாயிலாக ரூ.995 கோடி ஈட்டியது. கடந்த ஆண்டில் ஈட்டிய பிரீமியமான ரூ.750 கோடியுடன் ஒப்பிடும்போது இது 33 சதவீதம் அதிகம். வரிக்கு பிந்தைய லாபம் ரூ.47 கோடியிலிருந்து 43 சதவீதம் அதிகரித்து ரூ.67 கோடியானது.
டிஐஎஃப்ஹெச்எல்-ல் 49.5 சதவீத பங்குகளை வைத்துள்ள கூட்டு நிறுவனமான சோழமண்டலம் எம்எஸ் ரிஸ்க் சர்வீசஸ் வருவாய் ரூ.10.73 கோடியிலிருந்து 52 சதவீதம் அதிகரித்து ரூ.16.33 கோடியானது. வரிக்கு பிந்தைய லாபம் ரூ.2.22 கோடியிலிருந்து குறைந்து ரூ.0.60 கோடியானது என டிஐஎஃப்ஹெச்எல் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/7/w600X390/ti.jpg http://www.dinamani.com/business/2018/feb/07/டிஐ-பைனான்ஸியல்-ஹோல்டிங்ஸ்-லாபம்-51-உயர்வு-2858592.html
2858591 வர்த்தகம் பஞ்சாப் நேஷனல் வங்கி வருவாய் ரூ.15,257 கோடி DIN DIN Wednesday, February 7, 2018 01:00 AM +0530 பொதுத் துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் வருவாய் மூன்றாவது காலாண்டில் ரூ.15,257.50 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.14,123.98 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 8.02 சதவீதம் அதிகமாகும். நிகர லாபம் ரூ.207.18 கோடியிலிருந்து 11.06 சதவீதம் அதிகரித்து ரூ.230.11 கோடியானது. 
கடந்த நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் 13.70 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடன் விகிதம் நடப்பு நிதி ஆண்டில் 12.11 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோன்று நிகர வாராக் கடன் விகிதமும் 9.09 சதவீதத்திலிருந்து சரிந்து 7.55 சதவீதமாகியுள்ளது. 
இடர்பாடுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் தொகை டிசம்பர் காலாண்டில் 74 சதவீதம் அதிகரித்து 4,466.68 கோடியானது. கடந்த நிதி ஆண்டில் இது ரூ.2,562.19 கோடியாக காணப்பட்டது என பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/7/w600X390/pnb.jpg http://www.dinamani.com/business/2018/feb/07/பஞ்சாப்-நேஷனல்-வங்கி-வருவாய்-ரூ15257-கோடி-2858591.html
2858590 வர்த்தகம் பங்குச் சந்தைகளில் தொடரும் சரிவு: சென்செக்ஸ் 561 புள்ளிகள் வீழ்ச்சி DIN DIN Wednesday, February 7, 2018 12:59 AM +0530 இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் தொடர்ந்து ஆறாவது நாளாக இறங்கு முகமாகவே காணப்பட்டது. மத்திய பட்ஜெட்டுக்குப் பிறகு பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி தொடர் கதையாகி வருவது முதலீட்டாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, ஐரோப்பா உள்ளிட்ட இதர உலக நாடுகளின் சந்தைகளிலும் பங்கு வர்த்தகம் மந்தமாகவே உள்ளது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தும் நிலையில், அது கடனுக்கான செலவினங்களை அதிகரிக்கச் செய்யும் என்ற நிலைப்பாடு முதலீட்டாளர்களின் கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது. அதன் காரணமாக, கடந்த இரண்டு நாள்களில் மட்டும் அமெரிக்க டவ்ஜோன்ஸ் பங்குச் சந்தை 2,200 புள்ளிகளை இழந்து தள்ளாட்டத்தில் உள்ளது. அதன் தாக்கம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது. 
மத்திய பட்ஜெட்டில் நீண்டகால மூலதன ஆதாய வரி விதிப்பு முதலீட்டாளர்களை வெகுவாக பாதித்துள்ளது. இதுதவிர, ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குறித்த எதிர்பார்ப்பும் பங்குச் சந்தை சரிவுக்கு வழிவகுத்தது. 
மும்பை பங்குச் சந்தையில் தகவல் தொழில்நுட்பத் துறை குறியீட்டெண் 2.80 சதவீதம் குறைந்தது. நுகர்வோர் சாதனங்கள், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், மின்சாரம், உலோக துறை குறியீட்டெண்களும் சரிந்தது.
டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை 5.45 சதவீதமும், டிசிஎஸ் பங்கின் விலை 3.58 சதவீதமும் குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 561 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 34,195 புள்ளிகளில் நிலைத்தது. கடந்த ஜனவரி 5-ஆம் தேதிக்கு பிறகு காணப்படும் குறைந்தபட்ச அளவு இது. 
தேசிய பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 168 புள்ளிகள் குறைந்து 10,498 புள்ளிகளில் நிலைத்தது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/7/w600X390/sensex1.jpg http://www.dinamani.com/business/2018/feb/07/பங்குச்-சந்தைகளில்-தொடரும்-சரிவு-சென்செக்ஸ்-561-புள்ளிகள்-வீழ்ச்சி-2858590.html
2857892 வர்த்தகம் முருகப்பா குழுமத்தின் செயல் தலைவராக எம்.எம். முருகப்பன் பொறுப்பேற்பு DIN DIN Tuesday, February 6, 2018 12:53 AM +0530 சென்னை முருகப்பா குழுமத்தின் புதிய செயல் தலைவராக எம்.எம்.முருகப்பன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
முருகப்பா குழுமத்தின் செயல் தலைவராக இருந்தவர் ஏ.வெள்ளையன். முருகப்பா குழுமத்தின் வழக்கப்படி 65 வயது பூர்த்தியானதை முன்னிட்டு அவர் ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து முருகப்பா குழுமத்தின் துணைத் தலைவரான எம்.எம்.முருகப்பன், குழுமத்தின் புதிய செயல் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
2009-ஆம் ஆண்டு முதல் முருகப்பா குழுமத்தின் துணைத் தலைவராக எம்.எம்.முருகப்பன் இருந்து வருகிறார். தற்போது நிறுவனத்தின் செயல் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/6/w600X390/M.jpg http://www.dinamani.com/business/2018/feb/06/முருகப்பா-குழுமத்தின்-செயல்-தலைவராக-எம்எம்-முருகப்பன்-பொறுப்பேற்பு-2857892.html
2857891 வர்த்தகம் மின்சார வாகனங்களுக்கு தெளிவான கொள்கை: ரெனோ நிறுவனம் எதிர்பார்ப்பு DIN DIN Tuesday, February 6, 2018 12:52 AM +0530 இந்தியாவில் மின்சார வாகனங்களின் அறிமுகத்துக்கு மத்திய அரசின் தெளிவான கொள்கைகளை எதிர்பார்த்து காத்திருப்பதாக ரெனோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரெனோ இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான சுமித் சாஹ்னி  திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
ரெனோ உலகளாவிய நிறுவனம். எனவே, மின்சார வாகனங்களை தயாரிப்பதற்கான நவீன தொழில்நுட்பம் மற்றும் அதற்கு தேவையான வசதிகள் அனைத்தும் எங்களிடம் ஏற்கெனவே உள்ளன. ஆனால், இந்தியாவில் அந்த வகையான வாகனங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன், மின்சார வாகனங்களுக்கான அரசின் கொள்கைகள் குறித்து தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகி உள்ளது.
அப்போதுதான் அதற்கேற்ற வகையில் நிறுவனம் முதலீடுகளை மேற்கொள்ள முடியும். மின்சார வாகன பிரிவில் இந்தியாவில் களமிறங்க முடிவெடுப்பதற்கு முன்னதாக, அதன் தயாரிப்புகளுக்கான உள்கட்டமைப்புகளில் மத்திய அரசின் உதவி மற்றும் மின்னேற்று நிலைய (சார்ஜிங் ஸ்டேஷன்) வசதிகள் உள்ளிட்டவை தொடர்பாக தெளிவாக அறிந்து கொள்ள வேண்டியுள்ளது என்றார் அவர்.
இந்தியாவில் பிப்ரவரி 9-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள மோட்டார் வாகன கண்காட்சியில் ரெனோ நிறுவனம் அதன் மின்சார வாகன தயாரிப்புகளை காட்சிப்படுத்தவுள்ளது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/6/w600X390/reno.jpg http://www.dinamani.com/business/2018/feb/06/மின்சார-வாகனங்களுக்கு-தெளிவான-கொள்கை-ரெனோ-நிறுவனம்-எதிர்பார்ப்பு-2857891.html
2857890 வர்த்தகம் என்டார்க் 125 புதிய ரக ஸ்கூட்டர்: டிவிஎஸ் அறிமுகம் DIN DIN Tuesday, February 6, 2018 12:52 AM +0530 புதிய ஸ்டைல், செயல்திறன் மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய டிவிஎஸ் என்டார்க் 125 என்ற முதல் 125 சிசி ஸ்கூட்டரை டிவிஎஸ் மோட்டார் அறிமுகம் செய்துள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி கே.என். ராதாகிருஷ்ணன் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்து வைத்துப் பேசியது: இந்தியாவில் ஸ்கூட்டர்களுக்கு கிடைத்திருக்கும் பிரம்மாண்டமான ஆதரவும், வரவேற்பும் புதிய மாடல்களை உருவாக்க எங்களை ஊக்குவிக்கிறது. முதல் முறையாக 125 சிசி திறனுள்ள இரு சக்கர வாகனத்தை டிவிஎஸ் உருவாக்கியுள்ளது. டிஸ்க் பிரேக், செயலி மூலம் இயக்கும் வசதி, டியூப் இல்லா டயர், புளூடூத் வசதி, என்ஜினை ஆஃப் செய்ய தனி சுவிட்ச் உள்ளிட்ட நவீன வசதிகள் இதில் உள்ளன. நான்கு வண்ணங்களில் அறிமுகமாகிறது. இளம் வாடிக்கையாளர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர் நல்ல வரவேற்பைப் பெறும் என நம்புகிறோம் என்றார் அவர். டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரின் விற்பனையக விலை ரூ. 58,750-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/6/w600X390/tvs.jpg http://www.dinamani.com/business/2018/feb/06/என்டார்க்-125-புதிய-ரக-ஸ்கூட்டர்-டிவிஎஸ்-அறிமுகம்-2857890.html
2857889 வர்த்தகம் பார்தி டெலிகாம் நிறுவனத்தில் சிங்டெல் ரூ.2,649 கோடி முதலீடு DIN DIN Tuesday, February 6, 2018 12:51 AM +0530 பார்தி டெலிகாம் நிறுவனத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த சிங்டெல் நிறுவனம் ரூ.2,649 கோடியை முதலீடு செய்யவுள்ளது.
இதுகுறித்து பார்தி ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஏர்டெல் நிறுவனத்தில் ரூ.2,649 கோடியை சிங்டெல் நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது. இதற்காக, அந்த நிறுவனத்துக்கு முன்னுரிமை அடிப்படையில் பங்குகள் ஒதுக்கி தரப்படவுள்ளன. பார்தி டெலிகாம் நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதலுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திரட்டிக் கொள்ளப்படும் இந்த தொகை நிறுவனத்தின் கடன் சுமையை குறைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளப்படும்.
பார்தி டெலிகாம் நிறுவனத்தில், சிங்டெல் நிறுவனம் தற்போது 47.17 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. அதேசமயம், பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு மூலதனம் 50 சதவீதமாக உள்ளது.
சிங்டெல் நிறுவனத்தின் இந்த புதிய முதலீட்டையடுத்து, பார்தி டெலிகாம் நிறுவனத்தில் அந்த நிறுவனத்தின் பங்கு மூலதனம் 48.90 சதவீதமாக அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் ஏர்டெல் தெரிவித்துள்ளது. 
கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பார்தி டெலிகாம் நிறுவனம் மேற்கொண்ட ரூ.2,500 கோடிக்கான உரிமை பங்கு வெளியீட்டில் சிங்டெல் நிறுவனம் பங்கேற்றது. இந்த நிலையில், 23 மாதங்களுக்குள் பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் சிங்டெல் மீண்டும் முதலீடு மேற்கொள்ளவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/6/w600X390/airtel.jpg http://www.dinamani.com/business/2018/feb/06/பார்தி-டெலிகாம்-நிறுவனத்தில்-சிங்டெல்-ரூ2649-கோடி-முதலீடு-2857889.html
2857888 வர்த்தகம் சர்க்கரை இறக்குமதிக்கு 100% வரி விதிக்க மத்திய உணவு அமைச்சகம் பரிந்துரை DIN DIN Tuesday, February 6, 2018 12:51 AM +0530 கரும்பு விவசாயிகளின் நலன் கருதி வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சர்க்கரைக்கு 100% வரி விதிக்க மத்திய உணவு அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
உற்பத்திக்கான செலவினத்தைக் காட்டிலும் சர்க்கரையின் விலை சந்தையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த நிலையில், 2017-18 சந்தைப் பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) 60 லட்சம் டன் சர்க்கரை கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சில்லறை சந்தைகளில் ஒரு கிலோ சர்க்கரை தற்போது ரூ.40-42-க்கு விற்பனையாகிறது. 
இவற்றைக் கருத்தில் கொண்டு, உள்ளூர் சந்தைகளில் சர்க்கரையின் விலை வீழ்ச்சியடைவதை தடுக்கவும், கரும்பு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணப்பலன்கள் வழங்குவதை உறுதி செய்யவும், இறக்குமதி சர்க்கரைக்கு தற்போது விதிக்கப்படும் 50 சதவீத வரியை இரட்டிப்பாக்கி 100 சதவீதமாக அதிகரிக்க மத்திய உணவு அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பான மத்திய அரசின் அறிவிக்கை விரைவில் வெளியாகும் என்று அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டில் சர்க்கரை உற்பத்தி 2017-18-ஆம் சந்தைப் பருவத்தில் 4சதவீதம் அதிகரித்து 2.61 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், இதன் பயன்பாடு 2.50 கோடி டன்னாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016-17-ஆம் சந்தைப் பருவத்தில் 2.03 கோடி டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
http://www.dinamani.com/business/2018/feb/06/சர்க்கரை-இறக்குமதிக்கு-100-வரி-விதிக்க-மத்திய-உணவு-அமைச்சகம்-பரிந்துரை-2857888.html
2857447 வர்த்தகம் "ஜீரோ டிஃபெக்ட், ஜீரோ எஃபெக்ட்' மத்திய அரசின் சான்றிதழ் திட்டம் DIN DIN Monday, February 5, 2018 10:38 AM +0530 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக மத்திய அரசின் ஜீரோ டிபெக்ட், ஜீரோ எபெக்ட் சான்றிதழ் திட்டத்தை ( zero defect, zero effect certification scheme) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

உலக சந்தையோடு போட்டி போடும் அளவுக்கு இந்தியாவில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தி பொருட்களை தரம் உயர்த்துவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்களுடைய உற்பத்தி பொருட்களை நல்ல தரத்தோடு உற்பத்தி செய்து சந்தைக்கு அனுப்புவது உறுதி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்பட்டு சந்தைக்கு அனுப்பப்படும் பொருட்கள் ஏதேனும் குறை என்று கூறி சந்தையிலிருந்து திரும்ப பெறாத அளவுக்கு அதனுடைய தரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அதோடு இதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாத்து கார்பன் வெளிப்பாட்டை குறைப்பது. அதோடு மட்டுமல்லாமல் திறமையான தொழிலாளர்களை உருவாக்குவது. இவ்வாறான முக்கிய நோக்கமாக ஜீரோ டிபெக்ட், ஜீரோ எபெக்ட் சான்றிதழ் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களுக்களை ஆய்வு மற்றும் மதிப்பீடு செய்து அந்த நிறுவனத்திற்கு இஜட்.இ.டி. மார்க் (ZED Mark) என்ற முத்திரையை மத்திய அரசு வழங்குகிறது. அந்த முத்திரையை பெற்ற நிறுவனம் உற்பத்தி செய்து சந்தைக்கு அனுப்பும் பொருட்கள் சந்தையிலிருந்து திரும்ப பெற முடியாத அளவுக்கு தரத்துடன் இருக்கும் என நம்பலாம். மேலும் பல்வேறு சலுகைகளையும் இத்திட்டத்தின் கீழ் வரும் காலங்களில் மத்திய அரசு வழங்க உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நிறுவனங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது.

இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அத்திட்டத்தின் கீழ் பயனடையை பதிவு செய்ய வேண்டியது அவசியமாகின்றது. www.zed.org.in என்ற இணைய தளத்தினை பார்வையிட்டு செல்போன் எண் மற்றும் இ-மெயில் முகவரியுடன் அதில் தங்களுடைய நிறுவனங்களை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு அதில் குறிப்பிட்டுள்ளவாறு தங்களுடைய நிறுவனம் இயங்குகிறதா என தாங்களாகவே தங்களுடைய நிறுவனத்தை மதிப்பீடு செய்ய வேண்டும். அதன் பிறகு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அதிகாரிகள் நேரடியாக சென்று மதிப்பீடு செய்வார்கள். அதன் பிறகு ஒரு ஆலோசகரை தேர்வு செய்து அந்த நிறுவனத்தை பகுப்பாய்வு செய்து கொள்ளலாம்.

மத்திய அரசின் இச்சான்றிதழை பெறுவதற்கு ஆகும் செலவில் குறு நிறுவனங்களுக்கு 80 சதவீதம், சிறு நிறுவனங்களுக்கு 60 சதவீதம், நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 50 சதவீத தொகையை மத்திய அரசு மானியமாக வழங்குகிறது. அதனால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் தகவல்களுக்கு: www.zed.org.in  இணைய தளத்தை பார்வையிடாலம்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/5/w600X390/engineering.jpg http://www.dinamani.com/business/2018/feb/05/ஜீரோ-டிஃபெக்ட்-ஜீரோ-எஃபெக்ட்-மத்திய-அரசின்-சான்றிதழ்-திட்டம்-2857447.html
2857448 வர்த்தகம் ஜெர்மனி ஆர்டர் கிடைத்தும் நிறைவேற்ற முடியாத கரூர் ஜவுளித் துறை - அ. அருள்ராஜ் DIN Monday, February 5, 2018 10:37 AM +0530 உலக வரைபடத்தில் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியில் கரூருக்குத் தனியிடம் உண்டு. இங்கிருந்து உற்பத்தியாகும் வீட்டு உபயோக ஜவுளி பொருட்களான திரைச்சீலைகள், மேஜை விரிப்பான்கள், தலையணை உறைகள், கால் மிதியடிகள், அலங்கார குஷன்கள், கையுறை ஆகியவை ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுக்கல், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியுசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. ஜவுளி உற்பத்தியில் கரூரில் 400 ஏற்றுமதியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 

ஆண்டுக்கு ரூ.2,000 கோடி முதல் ரூ.3,000 கோடி வரை நாட்டுக்கு அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் இத் தொழிலில் நேரடியாக சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோரும், இத் தொழிலின் சார்பு தொழில்களான சாயமேற்றுதல், சலவை செய்தல் உள்ளிட்ட தொழில்களில் சுமார் 75,000 பேரும் ஈடுபட்டுள்ளனர். இந்திய வர்த்தகத்தின் முதுகெலும்பாகச் செயல்படும் இத்தொழில் மத்திய அரசின் கெடுபிடியால் ஆண்டுதோறும் இறங்குமுகத்தில் செல்வதாகக் கூறப்படுகிறது. 
அண்மையில் ஜெர்மனியில் நடைபெற்ற உலக வர்த்தக ஜவுளி கண்காட்சியில் ஆர்டர் கிடைத்தும் அதை நிறைவேற்ற முடியாத நிலைக்கு கரூர் ஏற்றுமதியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக கரூர் வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதியாளர் சங்க உறுப்பினரும், மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித் துறை உறுப்பினருமான ஆர். ஸ்டீபன்பாபு கூறியதாவது: கடந்த ஜன. 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை ஜெர்மனி நாட்டில் பிராங்பட் நகரத்தில் உலக ஜவுளி கண்காட்சி நடைபெற்றது. இதில் கரூரில் இருந்து 61 ஏற்றுமதியாளர்கள் பங்கேற்று தங்களது ஜவுளி உற்பத்திப் பொருட்களை காட்சிக்கு வைத்தனர். அதிகளவில் ஆர்டர் கிடைத்தபோதிலும், நூல் விலை திடீர் உயர்வு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால், அவற்றை செய்துகொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

கடந்தாண்டு பத்தாம் நம்பர் நூல் 5 கிலோ எடை கொண்ட ஒரு கட்டு ரூ. 80 முதல் ரூ.100 வரைதான் விற்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ. 200 வரை உயர்ந்துவிட்டது. இதனால் ஏற்கனவே வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட ஆர்டர்களை செய்துகொடுக்கும்போது 10 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

அதேபோல கடந்தாண்டு ஜூன் 1-ம் தேதி நாடு முழுவதும் ஜிஎஸ்டியை மத்திய அரசு அமல்படுத்தியது. இதனால் ஜவுளிப்பொருட்களுக்கு 15 சதவீதம் வரை வரிப்பிடித்தம் செய்யப்பட்டது. பின்னர் ஜவுளி ஏற்றுமதியாளர்களின் போராட்டத்தால் வரி விகிதத்தை 5 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. பிடித்தம் செய்யப்பட்ட தொகை கரூர் ஏற்றுமதியாளர்களுக்கு மட்டும் சுமார் ரூ. 400 கோடி வரை மத்திய அரசு தர வேண்டியுள்ளது. அதுபற்றிய எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை இல்லை. 

பொதுவாக ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் டாலர் முறையில்தான் வர்த்தகம் நடக்கிறது. தற்போது டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 

முன்பு டாலருக்கு ரூ. 66 முதல் 70 வரை இருந்தது. இப்போது 63 எனக் குறைந்துவிட்டது. மேலும் இதுவரை மத்திய அரசு ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்கத்தொகை 7 சதவீதம் வழங்கி வந்தது. இந்த தொகையையும் தற்போது 5 சதவீதம் குறைக்கப்பட்டு 2 சதவீதம்தான் என்றாகி விட்டது. இதனால், ஜவுளி உற்பத்தியாளர்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். 

நூல் விலை உயர்வுக்கு காரணமான பருத்தி ஏற்றுமதியைத் தடை செய்து, பருத்தி விளைச்சலுக்கு தேவையான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஜிஎஸ்டி பிடித்தம் செய்த தொகையை ஏற்றுமதியாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். ஊக்கத்தொகையை பழையபடி உயர்த்த வேண்டும். டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு குறையும் போதெல்லாம் ஜவுளித் தொழிலுக்கு உரிய சலுகைகளை அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டால்தான் கரூர் ஜவுளி வர்த்தகத்தை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற முடியும் என்றார் அவர். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/16/w600X390/export.jpg http://www.dinamani.com/business/2018/feb/05/ஜெர்மனி-ஆர்டர்-கிடைத்தும்-நிறைவேற்ற-முடியாத-கரூர்-ஜவுளித்-துறை-2857448.html
2857449 வர்த்தகம் தனிநபர் விபத்து காப்பீடு! -வை.இராமச்சந்திரன் DIN Monday, February 5, 2018 10:36 AM +0530 ஒருவரது வாழும் காலத்தை, வாழ்க்கையின் மதிப்பை அளவிட முடியாது. இன்றைய நவீன உலகில் சாலை மற்றும் ரயில் விபத்து அன்றாட நிகழ்வாக உள்ளது. பணிபுரியும் தொழிற்கூடங்களில், தொழில்நிறுவனங்களில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தும் விபத்து நிகழ்வது தவிர்க்க முடியாததாகவே உள்ளது.

ஒருவர் திடீரென விபத்தில் சிக்கி உயிரிழக்கும் போது, அவரது குடும்பத்தினர் சந்திக்கும் பிரச்னைகள், குறிப்பாக பொருளாதார ரீதியாக எதிர்கொள்ளும் இன்னல்கள் ஏராளம். ஒரு விபத்து அந்த குடும்பத்தின் வாழ்க்கைச் சூழலையே புரட்டிப்போட்டு விடும். அவர்களது துணையின் நிலை, குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் எதிர்கால கல்வி, வாழ்க்கை முறை உள்பட எல்லாவற்றிலும் மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.

அதனால் ஒவ்வொரு மனிதனும் விபத்தில் சிக்காமல் இருக்க தங்களை தாங்களே தற்காத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. விபத்துகள் ஏற்படும் சூழலில் தங்கள் குடும்பத்தை காக்க ஒரே வழி, தாங்கள் ஏற்படுத்தி வைத்துச் செல்லும் பொருளாதாரம் தான். குடும்பத்துக்கு தேவையான பொருளாதார சூழலை ஏற்படுத்த தவறியவர்கள் பொதுக்காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் தனி நபர் விபத்துக் காப்பீடு எடுப்பது அவசியம். 

காப்பீட்டின் அவசியம்: விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை ஈடு செய்ய முடியாது என்றாலும், பின்னர் ஏற்படும் பொருளாதார பிரச்னைக்கு தீர்வு தரும் இத்திட்டம் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வரப்பிரசாதமாகும். 
வாகனக் காப்பீட்டில் வாகன உரிமையாளர் விபத்தில் இறந்தால், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ரூ.1லட்சம், நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ரூ. 2 லட்சம் தனி நபர் காப்பீடாக வழங்கப்பட்டு வருவதை, ரூ.15 லட்சமாக உயர்த்தி நிர்ணயிப்பது குறித்து ஆலோசிக்க காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதிலிருந்து தனிநபர் விபத்துக் காப்பீடு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் அறியலாம்.
விபத்தின் வகைகள்: பொதுவாக விபத்து என்றாலே சாலை, ரயில் விபத்து மட்டுமே விபத்து என்பது போல் நமக்கு தோன்றும். இயற்கைக்கு மாறாக எதிர்பாராமல் நிகழும் அனைத்தும் விபத்துகளே. பாம்புகடித்தல், மாடியிலிருந்து தவறி விழுதல், கட்டடங்கள் சரிந்து விழுதல், விலங்குகளால் தாக்கப்படுதல், மின்சாரம், மின்னல் பாய்தல், தீ விபத்து, புயல், சூறைக்காற்று, நிலச்சரிவு, வெள்ளம் போன்ற எதிர்பாராமல் நிகழும் அனைத்தும் விபத்துகளே. 

பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள்: இந்தியாவில் யுனைடெட் இந்தியா, நியூ இந்தியா, நேஷனல், ஓரியண்டல் என நான்கு அரசு பொதுக்காப்பீட்டு நிறுவனங்களும், 25-க்கும் மேற்பட்ட தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் தனி நபர் விபத்துக் காப்பீடுகளை வழங்கி வருகின்றன. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் காப்பீட்டின் பயன்கள் மற்றும் பிரீமியம் போன்றவற்றில் வேறுபாடு இருக்கும். 
உதாரணமாக, யுனைùட் இந்தியா நிறுவனம் அண்மையில் அறிவித்த தனி நபர் விபத்துக் காப்பீட்டு திட்டத்தில் குறைந்த பிரீமியத்தில் மிக அதிகளவிலான காப்பீட்டை பெற முடியும். விபத்தினால் ஏற்படும் இறப்பு, நிரந்தர ஊனம் ஆகியவற்றுக்கு தனி நபர் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை (ஓர் ஆண்டுக்கு, ஜிஎஸ்டியுடன் சேர்த்து) அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது:
காப்பீட்டுத் தொகை


பாலிசி எடுக்க தகுதி: 5 வயது முதல் 70 வயது வரை உள்ள அனைவரும் இந்த பாலிசியை எடுக்கலாம். வாகனம் ஓட்டத்தெரிந்தவர்கள் மட்டுமன்றி, வாகனம் ஓட்டத் தெரியாதவர்கள், பல தரப்பட்ட தொழிலாளர்கள், அரசு, தனியார் நிறுவன அலுவலர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த பாலிசியை எடுக்கலாம். நிறுவனங்கள் அவர்களது ஊழியர்களுக்கு பாலிசி எடுக்கலாம். ஆனால் முன்மொழிவு படிவத்தில் (புரபோசல் பாரம்) பாலிசிதாரரே கையொப்பம் இட வேண்டும். 

தேவையான ஆவணங்கள்: பாலிசி எடுக்க விரும்புவோர் அடையாள சான்றாக ஆதார் அட்டை நகலை இணைக்க வேண்டும். 5-8 வயதுக்குள்பட்டவர்கள், 65- 70 வயதுக்குள்பட்டவர்கள் பிறந்த தேதிக்காக பிறப்பு சான்றிதழ், பள்ளி மதிப்பெண் சான்றிதழ், பாஸ்போர்ட் போன்றவற்றின் நகலை இணைத்தால், இழப்பீடு கோரும் காலங்களில் வயது தொடர்பான பிரச்னைகள் எழுவதற்கான வாய்ப்பு இருக்காது. மேலும் ரூ.10 லட்சம் காப்பீடு பெற விரும்புவோர் மட்டும், வருமானத்துக்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். 

பொதுவாக காப்பீட்டு நிறுவனங்கள் மாதவருமானத்தில் 60-லிருந்து 72 மடங்குவரை பாலிசி வழங்குவது வழக்கம். அதன்படி பார்த்தால் ரூ.17 ஆயிரத்துக்கு மேல் மாத வருமானம் உள்ளவர்கள் ரூ.10 லட்சம் காப்பீடு பெற தகுதியானவராக கருதப்படுவர். அதற்கு உரிய ஆவணங்களை வழங்க வேண்டும்.

காப்பீட்டின் பலன்கள்: வாகன விபத்தில் இறக்க நேரிட்டால் முழுமையாக இழப்பீட்டுத் தொகை கிடை க்கும். விபத்தினால் பாலிசிதாரருக்கு நிரந்தர ஊனம் (பிடிடி) ஏற்பட்டாலும் முழுமையாக இழப்பீட்டுத் தொகை கிடை க்கும். 

இழப்பீடு பெற செய்ய வேண்டியவை: இழப்பீடு பெறுவதற்கான படிவத்துடன், காவல் துறையின் முதல் தகவல் அறிக்கை, பிரேத பரிசோதனை சான்றிதழ், பாலிசிதாரரின் இறப்பு சான்றிதழ், இழப்பீடு கோருவோரின் வாரிசு சான்றிதழ், சாலை விபத்தாக இருந்தால் ஓட்டுநர் உரிமம் நகல், பணி நிமித்த விபத்துகளுக்கு தொழிற்சாலை/நிறுவனத்திடமிருந்து தக்க மெய்ப்பிக்கும் சான்றுகள்,வங்கி கணக்கு புத்தகம் நகல் உள்பட தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். 

இதே போன்று மற்ற அரசு பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் செயல்படுத்தும் தனிநபர் விபத்து காப்பீட்டுக்கான பிரீமியம் குறித்து அட்டவணையில் காணலாம். 

தனிநபர் விபத்துக் காப்பீடு குறித்து அரசுப் பொதுக்காப்பீட்டு நிறுவன மேலாளர் ஒருவர் கூறியது: சாதாரணமாக ரூ.1000-க்கு வாங்கும் செல்லிடப்பேசிக்குகூட ரூ. 100 செலவழித்து உறை போட்டு பாதுகாக்க தயாராக இருக்கும் நாம், விலை மதிக்க முடியாத நமது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க தயக்கம் காட்டுகிறோம். 

விபத்துக் காப்பீட்டில் கட்டிய பிரீமியம் தொகை திரும்ப கிடைப்பதில்லையே, இறப்பு ஏற்பட்டால் மட்டும் தானே இழப்பீடு கிடைக்கிறது என்ற குறுகிய எண்ணம் தான் இதற்கு காரணம். நாம் இல்லாத நம் குடும்பத்தை நினைத்துப்பார்த்தால், ஒவ்வொரு மனிதரும் தனி நபர் விபத்துக் காப்பீடு எடுப்பதை தவிர்க்க மாட்டோம். தனி நபர் காப்பீடு எடுத்துக்கொள்வது மனிதர்களுக்கு ரிஸ்க்கான வேலைகளை கூட தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வழிவகுக்கும். 

தனிநபர் விபத்துக் காப்பீடு பாலிசியில் வாரிசுதாரர் நியமனம் உண்டு. இயற்கையான மரணம், சுயமாக தன்னைத் தானே காயப்படுத்தி கொள்வதன் மூலம் ஏற்படும் ஊனம், தற்கொலை போன்றவற்றுக்கு இழப்பீடு கோர முடியாது. அரசு காப்பீட்டு நிறுவனங்களை போன்று, தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் தனி நபர் விபத்துக் காப்பீட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அவை வெவ்வேறு பயன்களுடன், பிரீமியம் தொகை மாறுபாட்டுடன், வெவ்வேறு பெயர்களில் வழங்குகின்றன. எனவே, அரசு, தனியார் நிறுவனங்கள் ஏதாவது ஒன்றில் நமக்கு பிடித்த தனிநபர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து ஒருவரது குடும்பப் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம்.

மத்திய அரசின் நிநிநிலை அறிக்கையில் 10 கோடி ஏழைக்குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 50 கோடி பேருக்கு ரூ.5 லட்சத்துக்கான இலவச மருத்துவக் காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது ஏழை, நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். இதே போன்று ஆதார் அட்டை உடைய ஒவ்வொரு தனி நபருக்கும் ரூ.10 லட்சத்துக்கான தனி நபர் விபத்துக் காப்பீடு வழங்கினால் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் பயனுள்ளதாக அமையும் என்றார் அவர். 

ஓரியண்டல் நிறுவனத்தில் வழங்கப்படும் தனிநபர் விபத்து காப்பீடு பிரீமியம் அட்டவனை

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/5/w600X390/insrurance.jpg http://www.dinamani.com/business/2018/feb/05/தனிநபர்-விபத்து-காப்பீடு-2857449.html
2857074 வர்த்தகம் ரூ.40 கோடி முதலீட்டில் ஆலை: ஈஐடி பாரி-சிந்தைட் இண்டஸ்ட்ரீஸ் ஒப்பந்தம் DIN DIN Sunday, February 4, 2018 03:40 AM +0530 முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த ஈஐடி பாரி நிறுவனம், கொச்சியைச் சேர்ந்த சிந்தைட் இண்டஸ்ட்ரீஸூடன் இணைந்து ரூ.40 கோடி முதலீட்டில் புதிய ஆலையை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து ஈஐடி பாரி நிறுவனத்தின் ஒரு பிரிவான பாரி நியூட்ராசூட்டிக்கல்ஸ் வர்த்தகப் பிரிவு தலைவர் முத்து முருகப்பன் கூறியதாவது:
சுருள்பாசியிலிருந்து பைகோசியானின் தயாரிக்கும் வகையில் இப்புதிய ஆலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக, கொச்சியைச் சேர்ந்த சிந்தைட் இண்டஸ்ட்ரீஸூடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ரூ.40 கோடி முதலீட்டில் தமிழகத்தில் அமைக்கப்படவுள்ள இந்த ஆலையில் இரு நிறுவனங்களும் 50:50 என்ற விகிதத்தின் அடிப்படையில் முதலீடு மேற்கொள்ளும்.
நுண்பாசிகள் பிரிவில் இதர வாய்ப்புகளையும் பயன்படுத்தி பல்வேறுபட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பிலும் விரைவில் கவனம் செலுத்தவுள்ளோம் என்றார் அவர்.
சிந்தைட் இண்டஸ்ட்ரீஸ் இயக்குநர் அஜூ ஜேகப் கூறுகையில், " பைகோசியானின் என்பது இயற்கையான நீல நிறமி. இது, பல்வேறு வகையான உணவு மற்றும் பானங்களில் நிலைப்பு மற்றும் நெகிழ்வுத் தன்மைக்காக பயன்படுத்தப்படுகிறது. இதனை உணவுப் பொருள்களில் இயற்கை நிறத்துக்காக பயன்படுத்திக் கொள்ள, அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகளின் உணவு ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு அமைப்புகள் ஏற்கெனவே அனுமதியளித்துள்ளன' என்றார்.

]]>
http://www.dinamani.com/business/2018/feb/04/ரூ40-கோடி-முதலீட்டில்-ஆலை-ஈஐடி-பாரி-சிந்தைட்-இண்டஸ்ட்ரீஸ்-ஒப்பந்தம்-2857074.html
2857073 வர்த்தகம் இந்தியப் பங்குச் சந்தைகளுக்கு சோதனை வாரம் DIN DIN Sunday, February 4, 2018 03:34 AM +0530 பட்ஜெட்டில் ஆதாய வரி விதிக்கப்பட்டதன் எதிரொலியால் இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகம் சோதனை மிகுந்ததாக காணப்பட்டது.
மத்திய அரசு சமர்ப்பித்த பொருளாதார ஆய்வறிக்கையில் வரும் நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7-7.5% வளர்ச்சி காணும் எனவும், உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இது, முதலீட்டாளர்களுக்கு ஊக்கத்தை கொடுத்ததையடுத்து, திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. 
இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வியாழக்கிழமை தாக்கல் செய்த 2018-19-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் யாரும் எதிர்பாராத வகையில் பங்குச் சந்தையில் ஈட்டும் வருவாய்க்கு 10% நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. மேலும், நிதி பற்றாக்குறையும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புகள், முதலீட்டாளர்களை நம்பிக்கை இழக்கச் செய்தது. இதையடுத்து, பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி தொடங்கியது. ஒரே நாளில் சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சியடைந்தும், பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.5 லட்சம் கோடி சரிந்தும் முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மும்பை பங்குச் சந்தையில் ரியல் எஸ்டேட் துறை குறியீட்டெண் 8.53 சதவீதமும், நுகர்வோர் சாதனங்கள் 7.10 சதவீதமும், மருந்து 6.40 சதவீதமும் சரிந்தன.
டாக்டர் ரெட்டீஸ் பங்கின் விலை அதிகபட்சமாக 15.25 சதவீத வீழ்ச்சி கண்டது. இதையடுத்து, டாடா ஸ்டீல் 12.91 சதவீதமும், ஆக்ஸிஸ் வங்கி 7.95 சதவீதமும், பார்தி ஏர்டெல் 7.69 சதவீதமும் குறைந்தன. இந்த சூழ்நிலைக்கிடையிலும், மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனப் பங்கின் விலை 1.73% ஏற்றம் கண்டது.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 983 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 35,006 புள்ளிகளில் நிலைத்தது. கடந்த எட்டு வார வர்த்தகத்தில் சென்செக்ஸ் 3,578 புள்ளிகள் அதிகரித்திருந்த நிலையில் இந்த சரிவு ஏற்பட்டது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ.28,417.75 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.
தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 309 புள்ளிகள் குறைந்து 10,760 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரத்தில் ரூ.1,96,972.94 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/24/w600X390/SENSEX-1.jpg http://www.dinamani.com/business/2018/feb/04/இந்தியப்-பங்குச்-சந்தைகளுக்கு-சோதனை-வாரம்-2857073.html
2857072 வர்த்தகம் லக்ஷ்மி விலாஸ் வங்கி நிகர இழப்பு ரூ.39 கோடி DIN DIN Sunday, February 4, 2018 03:33 AM +0530 தனியார் துறையைச் சேர்ந்த லக்ஷ்மி விலாஸ் வங்கி மூன்றாவது காலாண்டில் ரூ..39.23 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பு நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் மொத்த வருவாய் ரூ.818 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.879 கோடியுடன் ஒப்பிடும்போது இது குறைவு.
செயல்பாட்டு லாபம் ரூ.171 கோடியிலிருந்து வீழ்ச்சியடைந்து ரூ.46 கோடியானது. இதர வருவாய் ரூ.150 கோடியிலிருந்து சரிந்து ரூ.27 கோடியானது. இதையடுத்து, கடந்த நிதி ஆண்டில் ரூ.78 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டில் வங்கிக்கு ரூ.39.23 கோடி நிகர இழப்பு ஏற்பட்டுள்ளது.
நிகர வாராக் கடன் விகிதம் 1.82 சதவீதத்திலிருந்து உயர்ந்து 4.27 சதவீதமாகியுள்ளது என லக்ஷ்மி விலாஸ் வங்கி அந்த செய்திக்குறிப்பில் தெரி
வித்துள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/20/w600X390/lvb-corporate.jpg http://www.dinamani.com/business/2018/feb/04/லக்ஷ்மி-விலாஸ்-வங்கி-நிகர-இழப்பு-ரூ39-கோடி-2857072.html
2856901 வர்த்தகம் தங்கம் பவுனுக்கு ரூ.104 குறைந்தது DIN DIN Sunday, February 4, 2018 02:13 AM +0530 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.104 குறைந்து ரூ.23, 240-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13 குறைந்து, ரூ.2,905- க்கு விற்பனையானது. வெள்ளி 1 கிராமுக்கு 80 பைசா குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 41.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.41,700 -ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை நிலவரம் (ஜி.எஸ்.டி. தனி)


1 கிராம் தங்கம் ரூ. 2,905
1 பவுன் தங்கம் ரூ. 23,240
1 கிராம் வெள்ளி ரூ. 41.70
1 கிலோ வெள்ளி ரூ. 41,700

வெள்ளிக்கிழமை விலை நிலவரம் ( ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம் ரூ. 2,918
1 பவுன் தங்கம் ரூ. 23,344
1 கிராம் வெள்ளி ரூ. 42.50
1 கிலோ வெள்ளி ரூ. 42, 500

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/5/w600X390/gold2.jpg http://www.dinamani.com/business/2018/feb/04/தங்கம்-பவுனுக்கு-ரூ104-குறைந்தது-2856901.html
2856194 வர்த்தகம் பட்ஜெட் எதிரொலி! பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 839 புள்ளிகள் சரிவு DIN DIN Saturday, February 3, 2018 01:24 AM +0530 பட்ஜெட் அறிவிப்புகள் சாதகமாக இல்லாததால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சி கண்டது. இதன் காரணமாக, சென்செக்ஸ் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக மோசமான சரிவைக் கண்டது.
நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் நிதி பற்றாக்குறை 3.2 சதவீதமாக இருக்கும் என முன்பு மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இது 3.5 சதவீதத்தை எட்டும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி, பங்குச் சந்தைகளில் ஈட்டும் வருவாய்க்கு வரி விதிக்கும் முடிவையும் அவர் வெளியிட்டார். இத்தகைய அறிவிப்புகள் முதலீட்டாளர்களுக்கு பேரிடியாக அமைந்தது. 
தரக் குறியீட்டு நிறுவனமான ஃபிட்ச், அதிகரித்து வரும் மத்திய அரசின் கடன் இந்தியாவின் தரக்குறியீடை உயர்த்துவதில் தடைகளை ஏற்படுத்தும் என தெரிவித்தது. மேலும், சர்வதேச சந்தை நிலவரங்களும் சாதகமாக இல்லாதது பங்கு வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்து விட்டு வெளியேறினர். இதையடுத்து, பங்குகளின் விலை பாதாளத்துக்கு சென்றதால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ. 4.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டது.
சென்செக்ஸில் இடம்பெற்றுள்ள அனைத்து துறைகளைச் சேர்ந்த குறியீட்டெண்களும் சரிவுடனேயே முடிவடைந்தன. குறிப்பாக, ரியல் எஸ்டேட் துறை குறியீட்டெண் 6.28 சதவீதமும், உள்கட்டமைப்பு 4.03 சதவீதமும், மின்சாரம் 3.94 சதவீதமும், பொறியியல் சாதனங்கள் 3.59 சதவீதமும் வீழ்ச்சியடைந்தன.
பஜாஜ் ஆட்டோ பங்கின் விலை 4.90 சதவீதமும், பார்தி ஏர்டெல் 4.62 சதவீதமும் சரிந்தன. இவைதவிர, மாருதி சுஸுகி, ஆக்ஸிஸ் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், இன்டஸ்இண்ட் வவங்கி, என்டிபிசி நிறுவனப் பங்குகளின் விலை 4.28 சதவீதம் வரை குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 839 புள்ளிகள் (2.34%) சரிந்து 35,066 புள்ளிகளில் நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 256 புள்ளிகள் (2.33%) வீழ்ச்சி கண்டு 10,760 புள்ளிகளில் நிலைத்தது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/3/w600X390/sensex.jpg http://www.dinamani.com/business/2018/feb/03/பட்ஜெட்-எதிரொலி-பங்குச்-சந்தைகளில்-கடும்-வீழ்ச்சி-சென்செக்ஸ்-839-புள்ளிகள்-சரிவு-2856194.html
2856193 வர்த்தகம் அசோக் லேலண்ட் லாபம் மும்மடங்கு உயர்வு DIN DIN Saturday, February 3, 2018 01:23 AM +0530 ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் மும்மடங்கு உயர்ந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினோத் கே தாசரி கூறியுள்ளதாவது:
நிறுவனம் மூன்றாம் காலாண்டில் சிறப்பான செயல்பாட்டை பதிவு செய்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான கால அளவில் மொத்த வருவாயாக ரூ.7,151.12 கோடி ஈட்டப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.4,854.03 கோடியாக இருந்தது. வருவாய் கணிசமாக உயர்ந்ததையடுத்து நிகர லாபம் ரூ.161.71 கோடியிலிருந்து மும்மடங்கு அதிகரித்து ரூ.449.7 கோடியாகி உள்ளது என்றார் அவர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/3/w600X390/ashok.jpg http://www.dinamani.com/business/2018/feb/03/அசோக்-லேலண்ட்-லாபம்-மும்மடங்கு-உயர்வு-2856193.html
2856190 வர்த்தகம் விப்ரோ: நவீன வகை மின் விளக்குகள் அறிமுகம் DIN DIN Saturday, February 3, 2018 01:22 AM +0530 இணையதளம் மூலம் செயல்படும் நவீன தொழில்நுட்பத்திலான மின் விளக்குகளை விப்ரோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 
இது குறித்து விப்ரோ நுகர்வோர் பாதுகாப்பு, ஒளியமைப்பு வணிகப் பிரிவின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மகரந்த் சைனிஸ் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: 'இன்டர்நெட் ஆஃப் லைட்டிங்' ('ஐஓஎல்') என்ற புதிய தொழில்நுட்பத்தை விப்ரோ லைட்டிங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்திலான விளக்குகளை அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், தெருக்கள் ஆகியவற்றில் பொருத்தலாம். 
மடிக் கணினி மூலம் இணையத்தின் உதவியோடு விளக்குகள் எரிவதைக் கட்டுப்படுத்த முடியும். இதற்கு 'வை-ஃபை' அல்லது வயர் மூலம் செயல்படும் இணைய வசதி தேவையில்லை. கண்ணுக்கு புலப்படும் ஒளிக்கற்றைகளைப் பயன்படுத்தி, இணையத்தை பயன்படுத்துவதற்கான புதிய தொழில்நுட்பமான லை-ஃபை (கண்-ஊண்) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் வைஃபை-ஐ காட்டிலும் 100 மடங்கு வேகமாக செயல்படக் கூடியது. வைஃபையில் பயன்படுத்தப்படும் ரேடியோ அலைவரிசைகளை விடவும், லைஃபை 10, 000 மடங்குகள் திறன்கொண்டது. இதன் மூலம் விநாடிக்கு 1 ஜிகாபைட் வேகத்தில் இணைய பயன்பாட்டைப் பெற முடியும்.
இந்த தொழில்நுட்பத்திலான விளக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் மின்சாரத்தை 50 சதவீதத்துக்கும் மேல் சேமிக்க முடியும்; எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் விளக்குகளை இயக்கலாம்; புத்தகம் படிக்க, வேலை செய்ய, உறங்குவதற்கு என பல விஷயங்களுக்கு நமது விருப்பத்துக்கேற்றவாறு ஒளியின் அளவைக் குறைத்துக் கொள்ளவோ கூட்டிக் கொள்ளவோ இயலும். இந்த விளக்குகள் 50,000 மணி நேரம் வரை எரியும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/3/w600X390/Makarand-Sainis.jpg http://www.dinamani.com/business/2018/feb/03/விப்ரோ-நவீன-வகை-மின்-விளக்குகள்-அறிமுகம்-2856190.html
2856189 வர்த்தகம் கரூர் வைஸ்யா வங்கியின் வணிகம் ரூ.1,01,955 கோடி DIN DIN Saturday, February 3, 2018 01:21 AM +0530 கரூர் வைஸ்யா வங்கியின் மொத்த வணிகம் கடந்த 9 மாதங்களில் ரூ. 1,01,955 கோடியை எட்டியுள்ளது. 
இதுதொடர்பாக வங்கியின் மேலாண்மை இயக்குநர் சேஷாத்திரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
கரூர் வைஸ்யா வங்கி ஸ்திரமான அடித்தளத்தோடு, கூடுதலான வணிகம் செய்து வளர்ச்சியோடு லாபத்தையும் ஈட்டியுள்ளது. வங்கியின் மொத்த வட்டி வருவாய் கடந்த 9 மாத இறுதியில் ரூ. 161 கோடி உயர்ந்து, 1,655 கோடியாகியுள்ளது. இது 10.78 சதவீத வளர்ச்சி. வங்கியின் இதர வருவாய் ரூ. 550 கோடியில் இருந்து ரூ.691 கோடியாக உயர்ந்துள்ளது. இது 25.64 சதவீத வளர்ச்சி. வங்கியின் நிகர லாபம் 9 மாதத்தில் ரூ. 295 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் செயல்பாட்டு லாபம் ரூ. 1,298 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கியின் மொத்த வணிகம் ரூ.1,01, 955 கோடியை எட்டியுள்ளது. 
வங்கியின் வைப்புத்தொகை ரூ. 57,119 கோடியாகவும், வழங்கிய கடன் ரூ. 44,836 கோடியாக உள்ளது என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/3/w600X390/kvb.jpg http://www.dinamani.com/business/2018/feb/03/கரூர்-வைஸ்யா-வங்கியின்-வணிகம்-ரூ101955-கோடி-2856189.html
2854106 வர்த்தகம் சுந்தரம் பைனான்ஸ் லாபம் ரூ.154 கோடி DIN DIN Wednesday, January 31, 2018 12:52 AM +0530 சென்னையைச் சேர்ந்த வங்கி சாரா நிதி நிறுவனமான சுந்தரம் பைனான்ஸ் மூன்றாவது காலாண்டில் ரூ.154 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி.டி.ஸ்ரீநிவாஸராகவன் தெரிவித்துள்ளதாவது:
நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்களின் விற்பனை சிறப்பான அளவில் அதிகரித்ததையடுத்து, கடன் வழங்கல் நடவடிக்கைகள் சூடுபிடித்தது. இதையடுத்து அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.710.28 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டில் இதே கால அளவில் வருவாய் ரூ.623.65 கோடியாக காணப்பட்டது. நிகர லாபம் ரூ.138 கோடியிலிருந்து 12 சதவீதம் உயர்ந்து ரூ.154 கோடியானது.
மொத்த வாராக் கடன் விகிதம் 2.16 சதவீதத்திலிருந்து சரிந்து 1.74 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 1.02 சதவீதத்திலிருந்து குறைந்து 0.81 சதவீதமாகவும் இருந்தது என்றார் அவர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/31/w600X390/SF-copy.jpg http://www.dinamani.com/business/2018/jan/31/சுந்தரம்-பைனான்ஸ்-லாபம்-ரூ154-கோடி-2854106.html
2854105 வர்த்தகம் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் லாபம் 21% அதிகரிப்பு DIN DIN Wednesday, January 31, 2018 12:51 AM +0530 எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 21 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:
எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் மொத்த வருவாயாக ரூ.9,720 கோடியை ஈட்டியுள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.6,060 கோடியாக காணப்பட்டது. நிகர பிரிமீய வருவாய் ரூ.5,240 கோடியிலிருந்து 30 சதவீதம் அதிகரித்து ரூ.6,780 கோடியானது.
சில்லறை வர்த்தகத்தில் புதுப்பித்தல் பிரிமீயம் கணிசமான அளவில் அதிகரித்ததன் காரணமாக நிகர பிரிமீய வருவாய் சிறப்பான அளவில் உயர்ந்தது. இதையடுத்து, நிகர லாபம் ரூ.190.43 கோடியிலிருந்து 21 சதவீதம் அதிகரித்து ரூ.230.28 கோடியாக இருந்தது. 
2017 டிசம்பர் 31 நிலவரப்படி நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 1,11,630 கோடியாக உள்ளது. கடந்த 2016 இதே கால அளவில் நிர்வகிக்கப்பட்ட சொத்து மதிப்பான ரூ.90,720 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 23 சதவீதம் அதிகமாகும் என எஸ்பிஐ லைஃப் தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ லைஃப் , பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மற்றும் பின்பி பரிபா கார்டிஃப் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாகும். இந்த நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 814 கிளைகள் உள்ளன.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/31/w600X390/SBI-Life-.jpg http://www.dinamani.com/business/2018/jan/31/எஸ்பிஐ-லைஃப்-இன்சூரன்ஸ்-லாபம்-21-அதிகரிப்பு-2854105.html
2854104 வர்த்தகம் சுந்தரம் ஃபாஸ்னர்ஸ் நிறுவனத்தின் லாபம் ரூ.91 கோடி DIN DIN Wednesday, January 31, 2018 12:51 AM +0530 டிவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த சுந்தரம் ஃபாஸ்னர்ஸ் நிறுவனம் மூன்றாவது காலாண்டில் ரூ.91.66 கோடி நிகர லாபம் ஈட்டியது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 
நடப்பு நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.848.13 கோடியாக இருந்தது. 
கடந்த நிதி ஆண்டில் இதே கால அளவில் இது ரூ.707.23 கோடியாக காணப்பட்டது.
நிகர லாபம் ரூ.75.34 கோடியிலிருந்து 21.6 சதவீதம் அதிகரித்து ரூ.91.66 கோடியானது.
ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில் செயல்பாடுகள் மூலமான வருவாய் ரூ.2,155.32 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.2,450.67 கோடியானது. நிகர லாபம் ரூ.227.82 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.272.26 கோடியானது.
ஒன்பது மாத காலத்தில் உள்நாட்டில் விற்பனை ரூ.1,352.86 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,536.62 கோடியாகவும், ஏற்றுமதி வாயிலாக கிடைத்த வருவாய் ரூ.766.57 கோடியிலிருந்து வளர்ச்சியடைந்து ரூ.842.56 கோடியாகவும் இருந்தது என சுந்தரம் ஃபாஸ்னர்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/31/w600X390/sundaramfastners.jpg http://www.dinamani.com/business/2018/jan/31/சுந்தரம்-ஃபாஸ்னர்ஸ்-நிறுவனத்தின்-லாபம்-ரூ91-கோடி-2854104.html
2854103 வர்த்தகம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிகர லாபம் இருமடங்கு அதிகரிப்பு DIN DIN Wednesday, January 31, 2018 12:50 AM +0530 பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் (ஐஓசி) நிகர லாபம் மூன்றாவது காலாண்டில் இருமடங்கு அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் சிங் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின் மூலம் கிடைக்கும் லாபம் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, வருவாய் 15 சதவீதம் உயர்ந்து ரூ.1,20,865 கோடியானது. நிகர லாபம் ரூ.3,994.91 கோடியிலிருந்து விறுவிறுவென இருமடங்கு அதிகரித்து ரூ.7,883.22 கோடியானது.
நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பான அளவில் மேம்பட்டதையடுத்து, முதலீட்டாளர்களுக்கு 1:1 போனஸ் பங்குகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பங்கு ஒன்றுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.19 வழங்க இயக்குநர்கள்குழு முடிவெடுத்துள்ளது என்றார் அவர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/31/w600X390/ioc.jpg http://www.dinamani.com/business/2018/jan/31/இந்தியன்-ஆயில்-கார்ப்பரேஷன்-நிகர-லாபம்-இருமடங்கு-அதிகரிப்பு-2854103.html
2854102 வர்த்தகம் டிவிஎஸ் மோட்டார் லாபம் ரூ.154 கோடியாக உயர்வு DIN DIN Wednesday, January 31, 2018 12:50 AM +0530 சென்னையைச் சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மூன்றாவது காலாண்டில் ரூ.154.25 கோடி நிகர லாபம் ஈட்டியது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு செவ்வாய்க்கிழமை அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ரூ.3,684.95 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.3,239.55 கோடியாக இருந்தது. 
நிகர லாபம் ரூ.132.67 கோடியிலிருந்து 16.34 சதவீதம் அதிகரித்து ரூ.154.25 கோடியானது. 
மூன்றாவது காலாண்டில் ஒட்டுமொத்த இருசக்கர வாகன விற்பனை (ஏற்றுமதி உள்பட) 13.8 சதவீதம் உயர்ந்து 7.99 லட்சமாக இருந்தது. 
ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததையடுத்து வருவாய் மதிப்பீடுகளை ஒப்பிட முடியாது என டிவிஎஸ் மோட்டார் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/31/w600X390/tvs1.jpg http://www.dinamani.com/business/2018/jan/31/டிவிஎஸ்-மோட்டார்-லாபம்-ரூ154-கோடியாக-உயர்வு-2854102.html
2854101 வர்த்தகம் பங்குச் சந்தையில் திடீர் வீழ்ச்சி DIN DIN Wednesday, January 31, 2018 12:49 AM +0530 இந்திய பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் திடீர் வீழ்ச்சி கண்டது.
மத்திய அரசின் பொது பட்ஜெட்டை எதிர்நோக்கி முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர். இதனால், பங்கு வர்த்தகம் மந்தமாகவே காணப்பட்டது. வர்த்தகத்தின் இறுதி கட்டத்தில் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததையடுத்து, பங்குச் சந்தைகள் சாதனை உச்சத்திலிருந்து சரிந்தது.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 249 புள்ளிகள் சரிந்து 36,033 புள்ளிகளில் நிலைத்தது. 
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 80 புள்ளிகள் குறைந்து 11,049 புள்ளிகளில் நிலைத்தது.
 

]]>
http://www.dinamani.com/business/2018/jan/31/பங்குச்-சந்தையில்-திடீர்-வீழ்ச்சி-2854101.html
2853618 வர்த்தகம் தங்கம் பவுனுக்கு ரூ. 216 குறைவு DIN DIN Tuesday, January 30, 2018 02:12 AM +0530 ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.216 குறைந்து, ரூ.23, 160-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் திங்கள்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.27 குறைந்து, ரூ.2,895- க்கு விற்பனையானது. வெள்ளி 1 கிராமுக்கு 50 பைசா குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 42.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.42,600 -ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை 

நிலவரம் ( ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம் ரூ. 2,895
1 பவுன் தங்கம் ரூ. 23,160
1 கிராம் வெள்ளி ரூ. 42.60
1 கிலோ வெள்ளி ரூ. 42,600

சனிக்கிழமை விலை 

நிலவரம் ( ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம் ரூ. 2,922
1 பவுன் தங்கம் ரூ. 23,376
1 கிராம் வெள்ளி ரூ. 43.10
1 கிலோ வெள்ளி ரூ. 43, 100

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/5/w600X390/gold2.jpg http://www.dinamani.com/business/2018/jan/30/தங்கம்-பவுனுக்கு-ரூ-216-குறைவு-2853618.html
2853537 வர்த்தகம் ஹெச்டிஎஃப்சி நிகர லாபம் இருமடங்கு அதிகரிப்பு DIN DIN Tuesday, January 30, 2018 12:46 AM +0530 வீட்டு வசதிக்கு கடனுதவிகளை அளித்து வரும் ஹெச்டிஎஃப்சி நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் இருமடங்கு அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் ஹெச்டிஎஃப்சி நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.16,846.77 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.14,988.87 கோடியாக காணப்பட்டது.
நிறுவனத்தின் செயல்பாடுகளிலிருந்து கிடைக்கக்கூடிய வருவாய் 7.8 சதவீதம் அதிகரித்து ரூ.9,673.05 கோடியாகவும், காப்பீடுகளிலிருந்து பெறக்கூடிய பிரிமீயம் வருவாய் 18.5 சதவீதம் உயர்ந்து ரூ.6,182.24 கோடியாகவும் இருந்தது.
இடர்பாடுகளை எதிர்கொள்வதற்கான ஒதுக்கீட்டுத் தொகை ரூ.153.13 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.164.54 கோடியானது. நிகர லாபம் ரூ.2,728.66 கோடியிலிருந்து இரண்டு மடங்கு உயர்ந்து ரூ.6,677.06 கோடியாக இருந்தது என ஹெச்டிஎஃப்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/18/w600X390/HDFCBank.jpg http://www.dinamani.com/business/2018/jan/30/ஹெச்டிஎஃப்சி-நிகர-லாபம்-இருமடங்கு-அதிகரிப்பு-2853537.html
2853532 வர்த்தகம் ஆர்காம் இழப்பு ரூ.130 கோடியாக குறைந்தது DIN DIN Tuesday, January 30, 2018 12:45 AM +0530 கடனில் சிக்கி தவித்து வரும் ஆர்காம் என்ற ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் இழப்பு மூன்றாம் காலாண்டில் ரூ.130 கோடியாக குறைந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் இது ரூ.531 கோடியாக இருந்தது.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை-செப்டம்பரில் காணப்பட்ட இழப்பான ரூ.2,712 கோடியுடன் ஒப்பிடும்போது தற்போது நிலைமை பெருமளவு மேம்பட்டுள்ளது. மூன்றாவது காலாண்டில் வருவாய் ரூ.1,698 கோடியிலிருந்து 30 சதவீதம் சரிந்து ரூ.1,176 கோடியானது.
நிறுவனத்தைப் பொருத்தவரையில் இழப்பு 95 சதவீதம் வரை குறைந்துள்ளது. வரும் காலாண்டுகளில் நிறுவனத்தின்செயல்பாடு சிறப்பான அளவில் இருக்கும் என்று ஆர்காம் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2015/2/15/0/w600X390/reliance_comunication.jpg http://www.dinamani.com/business/2018/jan/30/ஆர்காம்-இழப்பு-ரூ130-கோடியாக-குறைந்தது-2853532.html
2853529 வர்த்தகம் மீண்டும் சாதனை உச்சத்தில் இந்தியப் பங்குச் சந்தை DIN DIN Tuesday, January 30, 2018 12:44 AM +0530 பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த அம்சங்கள், முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமைந்திருந்ததால் இந்தியப் பங்குச் சந்தைகள் மீண்டும் சாதனை உச்சங்களை எட்டின.
மத்திய அரசு பொருளாதார ஆய்வறிக்கையை திங்கள்கிழமை வெளியிட்டது. அதில், உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரம் 2018-19 நிதி ஆண்டில் 7-7.5 சதவீத அளவுக்கு வளர்ச்சி காணும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது, முதலீட்டாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்தது. 
உலக நிலவரங்கள் சாதகமாக இருந்தது மற்றும் அந்நிய முதலீட்டு வரத்து அதிகமானது உள்ளிட்ட காரணங்களால் இந்தியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டன.
பொது பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு, நிறுவனங்களின் சிறப்பான காலாண்டு நிதி நிலை முடிவுகள் ஆகியவையும் பங்கு வர்த்தகத்தின் ஏற்றத்துக்கு வலு சேர்த்தன.
மும்பை பங்குச் சந்தையில் மோட்டார் வாகன துறை குறியீட்டெண் 1.60 சதவீதமும், தகவல் தொழில்நுட்பம் 1.16 சதவீதமும் அதிகரித்தன. இவைதவிர, தொழில்நுட்பம் (0.92%), நுகர்வோர் சாதனங்கள் (0.60%), உலோகம் (0.24%), பொறியியல் சாதனங்கள் (0.17%), வங்கி (0.14%) ஆகிய துறைகளைச் சேர்ந்த குறியீட்டெண்களும் ஓரளவுக்கு ஏற்றம் கண்டன.
இருப்பினும், பொதுத் துறை நிறுவனங்கள், உள்கட்டமைப்பு, எண்ணெய்-எரிவாயு, மின்சாரம், ரியல் எஸ்டேட், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் துறைகளைச் சேர்ந்த குறியீட்டெண் 1.22 சதவீதம் வரை சரிவைக் கண்டன.
மூன்றாவது காலாண்டில் நிகர லாபம் 2.96% அதிகரித்ததாக தெரிவித்ததையடுத்து, மாருதி சுஸூகி பங்கின் விலை 3.85% அதிகரித்தது.
லாபம் இருமடங்காக உயர்ந்துள்ளதாக அறிவித்ததையடுத்து ஹெச்டிஎஃப்சி நிறுவனப் பங்கின் விலை 2.66% ஏற்றம் கண்டது.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 232 புள்ளிகள் உயர்ந்து புதிய வரலாற்று உச்சமான 36,283 புள்ளிகளில் நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 60 புள்ளிகள் உயர்ந்து முன்னெப்போதும் இல்லாத வகையில் 11,130 புள்ளிகளைத் தொட்டது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/24/w600X390/bse.jpg http://www.dinamani.com/business/2018/jan/30/மீண்டும்-சாதனை-உச்சத்தில்-இந்தியப்-பங்குச்-சந்தை-2853529.html
2853510 வர்த்தகம் இமாமி வருவாய் ரூ.762 கோடியாக உயர்வு DIN DIN Monday, January 29, 2018 11:58 PM +0530 வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் துறையைச் சேர்ந்த இமாமி நிறுவனத்தின் வருவாய் மூன்றாவது காலாண்டில் ரூ.762.16 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.734.12 கோடியாக காணப்பட்டது.
செலவினம் ரூ.467.41 கோடியிலிருந்து 5.25 சதவீதம் அதிகரித்து ரூ.491.96 கோடியானது. நிகர லாபம் ரூ.134.34 கோடியிலிருந்து 9.56 சதவீதம் உயர்ந்து ரூ.147.08 கோடியானது என இமாமி நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு திங்கள்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

]]>
http://www.dinamani.com/business/2018/jan/29/இமாமி-வருவாய்-ரூ762-கோடியாக-உயர்வு-2853510.html
2853509 வர்த்தகம் டெக் மஹிந்திரா நிகர லாபம் ரூ.943 கோடி DIN DIN Monday, January 29, 2018 11:58 PM +0530 தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த டெக் மஹிந்திரா நிறுவனம், டிசம்பர் காலாண்டில் ரூ.943.1 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் வினீத் நய்யார் கூறியதாவது:
அவ்வப்போது மாற்றங்களைக் கண்டு வரும் டிஜிட்டல் பிரிவு வர்த்தகத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். எதிர்கால சந்தை விருப்பங்களை நிறைவேற்ற தேவையான அனைத்துப் பயிற்சிகளையும் பணியாளர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். அதனை ஊக்குவிக்கும் வகையில், காலாண்டு முடிவுகள் 
அமைந்துள்ளன.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.7,776 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.7,557.5 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 2.9 சதவீதம் அதிகம். டிசம்பர் காலாண்டில் பங்கு ஒன்றின் மூலம் ஈட்டிய வருவாய் ரூ.10.73 என்ற அளவில் இருந்தது. நிகர லாபம் ரூ.856 கோடியிலிருந்து 10.2 சதவீதம் அதிகரித்து ரூ.943.1 கோடியானது. 
இரண்டாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் நிகர லாபம் 12.8 சதவீதமும், வருவாய் 2.2 சதவீதமும் அதிகரித்துள்ளன. நிறுவனத்தின் மொத்த பணியாளர் எண்ணிக்கை 1,15,241-ஆக உள்ளது என்றார் அவர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/31/w600X390/techmahindra.jpg http://www.dinamani.com/business/2018/jan/29/டெக்-மஹிந்திரா-நிகர-லாபம்-ரூ943-கோடி-2853509.html
2853508 வர்த்தகம் அடுத்த நிதி ஆண்டில் ரூ.4,000 கோடி முதலீடு: மாருதி சுஸூகி DIN DIN Monday, January 29, 2018 11:58 PM +0530 விரிவாக்க திட்டங்களுக்காக அடுத்த நிதி ஆண்டில் ரூ.4,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக மாருதி சுஸூகி இந்தியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கெனிச்சி அயூகவா  திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
நடப்பு நிதி ஆண்டைப் போலவே, வரும் 2018-19-ஆம் நிதி ஆண்டிலும் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம். புதிய ரக தயாரிப்புகள் மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலதன செலவினங்களுக்காக அடுத்த நிதி ஆண்டில் ரூ.4,000 கோடியை முதலீடு செய்யவுள்ளோம்.
நிறுவனம் அடுத்த 12-18 மாதங்களில் புதிய மாடல் ஸ்விஃப்ட் உள்ளிட்ட நான்கு புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த ஆயத்தமாகி வருகிறோம். வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் 5,000 விற்பனை மற்றும் சேவை மையங்களை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றார் அவர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/26/w600X390/maruthi.jpg http://www.dinamani.com/business/2018/jan/29/அடுத்த-நிதி-ஆண்டில்-ரூ4000-கோடி-முதலீடு-மாருதி-சுஸூகி-2853508.html
2853004 வர்த்தகம் வாராக் கடனால் திணறும் பொதுத் துறை வங்கிகள்: பலன் அளிக்குமா மத்திய அரசின் மூல "தானம்'? -நாகா DIN Monday, January 29, 2018 10:48 AM +0530 கழுத்தை நெறிக்கும் வாராக் கடன் பிரச்னையால் மூச்சுத் திணறி வரும் பொதுத் துறை வங்கிகளுக்கு, மத்திய அரசு மீண்டும் ஆபத்பாந்தவனாய் உதவிக் கரம் நீட்டியிருக்கிறது.
கொடுத்த கடனைத் திரும்ப வசூலிக்க முடியாமல் முதலுக்கே மோசம் என்ற நிலையில் உள்ள 20 பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.88,139 கோடியை மறுமூலதனாமாக மத்திய அரசு வாரி வழங்கியிருக்கிறது.
வாராக் கடன் பிரச்னையால் தொழில் துறைக்கு வங்கிகள் புதிய கடன்களை அளிப்பது வெகுவாகக் குறைந்தால், அது நாட்டின் பொருளதார வளர்ச்சியைப் பாதிக்கும். அந்த வகையில், தளர்வுற்ற பொதுத் துறை வங்கிகளைத் தூக்கி நிறுத்த மத்திய அரசு மூலதனத்தை தானமாக வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கதுதான்.
மத்திய அரசு வழங்கும் ரூ.88,139 கோடி, வெறும் நகரங்களிலும், பெருநகரங்களிலும் மட்டும் மேல்தட்டு வர்க்கத்தினருக்கு கடன் அளிக்கும் தனியார் வங்கிகளைப் போலின்றி, நாட்டின் கடைக் கோடியில் கூட இருக்கும் சாமானியனுக்குக் கடன் உதவி அளிக்கும் பொதுத் துறை வங்கிகளை சரிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இருக்க முடியாது.
மத்திய அரசு அறிவித்த ரூ.88,139 கோடி, பொருளாதாரத்தை மேம்படுத்தும் அதன் நெடுங்கால மறுமுதலீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதிதான்.
ஏற்கெனவே, இதுதொடர்பான அறிவிப்பை கடந்த அக்டோபர் மாதம் அறிவித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, இன்னும் இரண்டு ஆண்டுகளில் பொதுத் துறை வங்கிகளை ஊக்கப்படுத்த ரூ.2.11 லட்சம் கோடியை மறுமூலதனமாக அளிக்கப் போவதாக அறிவித்திருந்தார். அதில், நடப்பு நிதியாண்டுக்கான மறுமூலதனம்தான் இந்த ரூ.88,139 கோடி.
இன்னும் சொல்லப்போனால், பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு மறுமூதலீட்டு நிதியளிப்பது 1990-களிலிருந்தே தொடங்கிவிட்டது.
இருந்தாலும், 2010-11-ஆம் நிதியாண்டிலிருந்துதான் இத்தகைய நிதியளிப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மிகத் தீவிரமாக விரிவுபடுத்தத் தொடங்கியது. 2009-10-ஆம் நிதியாண்டில் ரூ.23,000 கோடியாக இருந்த மறுமூலதன உதவி, அடுத்த நிதியாண்டில் ரூ.1.08 லட்சம் கோடியாக கிடுகிடுவென உயர்ந்தது.
நலிவடையும் பொதுத்துறை வங்கிகளை மறுமூலதன அளிப்பு மூலம் காப்பாற்றியே ஆக வேண்டிய கடமை அரசுக்கு நிச்சயம் உள்ளது. காரணம், பொதுத் துறை வங்கிகளின் பெரும்பான்மை முதலாளி, மத்திய அரசுதான்.
இருந்தாலும், மக்களின் வரிப்பணத்தை இப்படி பொதுத் துறை வங்கிகளுக்கு வாரியளிப்பது முற்றிலும் பலன் தருமா?
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுவது போல, நாட்டின் தொழில்துறையை வங்கிக் கடன்கள் மூலம் ஊக்கப்படுத்தவும், அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை உற்சாகப்படுத்தவும் இந்த மறுமூலதன அளிப்பு நடவடிக்கை உதவிகரமாக இருக்கும் என்பதை பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
இருந்தாலும், வங்கிகளின் நிலைத்த, வளமான இயக்கத்துக்கு இந்த மறுமூலதனம் என்ற ஊக்க மருந்து போதுமா என்பது குறித்து சில வல்லுநர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.
வங்கிகளின் பிற அடிப்படைப் பிரச்னைகளையும் மத்திய அரசு களைந்தால்தான் மத்திய அரசின் நோக்கங்கள் முழுமையாக நிறைவேறும் என்கிறார்கள் அவர்கள்.
வங்கிச் சீர்திருத்தங்ள் இல்லாமல், மறுமூலதனம் அளிப்பது மட்டும் பலன் தராது என்பது அவர்களது வாதம். வெறும் மூலதன அளிப்பால் எதிர்விளைவுகளும் உண்டாகலாம் என்று கூட சிலர் கூறுகின்றனர்.
அதிக மூலதனம் கிடைப்பதால் வங்கிகள் சகட்டு மேனிக்கு கடன் அளித்துத் தள்ளும் எனவும், இருந்தாலும், அரசின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும் என்ற உணர்வில் அந்தக் கடனைத் திரும்பப் பெறுவதில் போதிய அக்கறை காட்டாது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இதில் நிபுணர்கள் சுட்டிக் காட்டும் இன்னொரு விஷயம், சிறப்பாகச் செயல்படும் பொதுத் துறை வங்கிகளுக்கும், மோசமாகச் செயல்படும் பொதுத் துறை வங்கிகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போவதைத்தான்.
இது, மிகச் சிறப்பாக செயல்பட்டு, கொடுத்த கடனை அருமையான முறையில் வசூலித்து, லாபத்தைக் காட்டும் வங்கிகளின் உற்சாகத்தையும் குலைத்துவிடும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர். மோசமாக செயல்பட்டால் எந்தக் குடியும் மூழ்கி விடாது. எல்லாம் அரசாங்கம் பார்த்துக் கொள்ளும்" என்று அலட்சியப் போக்கு வங்கிகளுக்கு வந்துவிடாமல் பார்த்துக் கொள்வதும் மத்திய அரசின் பொறுப்பு என்பதை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இதுமட்டுமின்றி, சிறிய வங்கியோ, பெரிய வங்கியோ, சிறப்பான வங்கியோ, செயல்திறனற்ற வங்கியோ.. எல்லா வங்கிகளின் ஊழியர்களுக்கும் ஒரே சம்பளம், ஒரே சலுகை என்ற நிலை வங்கிகளின் போட்டியிடும் திறனைக் குறைத்து இந்திய வங்கித் துறையையே சீரழித்து விடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே, வெறும் மூலதன அளிப்போடு நிறுத்திவிடாமல் வங்கிகளின் சிறப்பான செயல்பாட்டுக்கான சட்டதிட்டங்களையும் மத்திய அரசு கிடுக்குப்பிடியாக்க வேண்டும் என்கிறார்கள் அவர்கள்.
இந்தியாவின் வளர்ச்சிக்கு பொதுத் துறை வங்கிகள் மிகவும் இன்றியமையாதவை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இருந்தாலும், இத்தனை பொதுத் துறை வங்கிகள் தேவைதானா? என்பது நிபுணர்களின் கேள்வியாக உள்ளது.
வங்கிகள் குறித்த நரசிம்மன் குழு அறிக்கை கூறுவது இதுதான்:
இந்தியாவுக்குத் தேவை 3 அல்லது 4 சர்வதேச பொதுத் துறை வங்கிகள்; 8 முதல் 10 வரையிலான தேசிய வங்கிகள்; மண்டல வங்கிகள்; கிராமிய வங்கிகள்.
இதற்கு மேல் அதிக எண்ணிக்கையில் வங்கிகள் தேவையே இல்லை என்பதுதான் அந்தக் குழு கூறுகிறது.
இதன் அடிப்படையில், சிறப்பாகச் செயல்பட முடியாமல் நலிவடைந்து கிடக்கும் பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதோ, லாபகரமான வங்கிகளுடன் இணைப்பதோதான் மிகச் சிறந்த நடவடிக்கையாகும்.
இருந்தாலும், பொதுத் துறை வங்கி ஊழியர்களின் சீற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, பொதுத் துறை வங்கிகள் சுயமாகச் செயல்பட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
பொதுத் துறை வங்கிகளில் நிலவும் இரட்டை அதிகார முறை, அந்த வங்கிகளை முழுமையாகச் செயல்பட விடுவதில்லை என்ற புகார் நீண்ட காலமாக இருந்து வருகிறது.
மல்லையா போன்ற பெரு நிறுவன முதலாளிகளிடம் கூட வாராக் கடன் பிரச்னை ஏற்பட்டதற்குக் கூட இதுபோன்ற அரசியல் தலையீடு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில், கடனளிப்பு விவகாரத்தில் தலையிடாமல், கடனைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையின்போது வங்கிகளின் வலிமையான வாளாக இருந்து அரசு செயல்பட வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.
இத்தகைய வங்கித் துறை சீர்திருத்தங்களை முறையாகச் செயல்படுத்தினால், மறுமுதலீடு என்பது நிச்சயம் முழு பலனை அளிக்கும் என்பதே நிபுணர்களின் நிலைப்பாடு.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/30/w600X390/bank.jpg http://www.dinamani.com/business/2018/jan/29/வாராக்-கடனால்-திணறும்-பொதுத்-துறை-வங்கிகள்-பலன்-அளிக்குமா-மத்திய-அரசின்-மூல-தானம்-2853004.html
2853003 வர்த்தகம் மத்திய பட்ஜெட்: பல்வேறு துறைகளின் எதிர்பார்ப்புகள்... DIN DIN Monday, January 29, 2018 10:46 AM +0530 ஜிஎஸ்டி அமலுக்குப் பிறகு மத்திய அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சமர்ப்பிக்கவுள்ள 2018-19-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட். 2019-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் கடைசி முழு நீள பட்ஜெட்டும் இதுவே. இந்த பட்ஜெட்டின் மீதான எதிர்பார்ப்பு அனைவரிடமும் அதிகரிக்க இவையே முக்கிய காரணங்கள். எப்பொழுதும் போல் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தாங்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்தும், பட்ஜெட்டில் அதற்கு தீர்வு காணும் வகையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும் வலியுறுத்தியுள்ளன.

அரசின் வரி வருவாயை அதிகரிக்கும் வகையில் நீண்ட கால மூலதன ஆதாய வரியில் மாற்றம், தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு தளர்வு, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு சேவை கட்டணம் ரத்து, ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல் டீசல் என எண்ணற்ற எதிர்பார்ப்புகள் பொது மக்களிடமும், தொழில்துறையினரிடமும் எழுந்துள்ளது.வரும் 2019-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என்று நம்பப்பட்ட நிலையில், அத்தகைய அறிவிப்புகளுக்கு இடமிருக்காது என பிரதமர் மோடி அண்மையில் தெரிவித்துவிட்டார். இருப்பினும், வரவிருக்கும் 8 மாநிலங்களின் தேர்தல், பொதுத் தேர்தலை முற்றிலும் மனதில் கொள்ளாமல் இலவச அறிவிப்புகள் மற்றும் சலுகைகளற்ற ஒரு பட்ஜெட்டை மத்திய அரசு வழங்குமா என்பது கேள்விக்குறியே என்று கூறப்படுகிறது.

உள்கட்டமைப்புத் துறை

மத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்புத் துறைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கட்டமைப்புகளை உருவாக்கவும், கிராமப்புற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அதிக நிதி ஒதுக்கி அறிவிப்புகள் வெளியாகலாம் என்று தெரிகிறது. குறிப்பாக, ஊரகப்பகுதிகளில், வீட்டு வசதி, குடிநீர் வசதி, சுகாதார திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ரயில்வே பட்ஜெட் பொதுப் பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டு விட்டதால், ரயில்வே உள்கட்டமைப்பு துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில், ரயில் நிலையங்களை பராமரித்தல், புதிய ரயில்களை இயக்குதல், ரயில்வே துறையில் முதலீடுகளை ஈர்த்தல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று தெரிகிறது. 
பாரத்மாலா திட்டத்தின் கீழ், மிகப்பெரிய தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்கு மத்திய அரசு ஏற்கெனவே ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிறுவன வரி

நிறுவனங்களுக்கான வரி விகிதம் அதிகமாக உள்ளதால் இந்திய நிறுவனங்கள் உலக நாடுகளின் சந்தைகளில் போட்டியிட முடியாத சூழல் உள்ளதாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில், ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், பிற நாடுகளுடன் போட்டியிடும் சூழலை ஏற்படுத்தவும், நிறுவன வரியை பட்ஜெட்டில் குறைக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மொபைல் போன்

இந்தியாவில் மொபைல் போன் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் உதிரிபாகங்களுக்கான வரியை பட்ஜெட்டில் 12 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. மேலும், மொபைல் போன்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் அதிகமாக உள்ளதால், அதன் விலை உயர்ந்து விற்பனை பாதித்துள்ளது. இதன் எதிரொலியாக அவற்றின் உற்பத்தியிலும் சுணக்க நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பட்ஜெட்டில் அதற்கும் தீர்வு காண வேண்டும். இது தவிர, பவர் பேங்க், வெப்கேம் உள்ளிட்டவற்றுக்கான வரியையும் 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று தொழில் நிறுவனங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

டிவிடெண்ட் விநியோக வரி நீக்கம்?

பட்ஜெட்டில் டிவிடெண்ட் விநியோக வரியை மத்திய அரசு முழுமையாக நீக்கி கொள்ளஉள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது நல்ல முடிவாக கருதப்படுகிறது. தற்போதைய நிலையில் அதற்கான வரி விகிதம் 20 சதவீதமாக உள்ளது. இது முழுமையாக நீக்கப்படும் நிலையில், நிறுவனங்கள் அதிக டிவிடெண்ட் அறிவிப்புகளை வெளியிடும். அதன் மூலம் முதலீட்டாளர்கள் அதிக பயனடைவர். 

வரி சீர்திருத்தம்

பல்வேறு சிக்காலன மறைமுக வரிகளுக்கு மாற்றாக எளிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், வருமான வரி உள்ளிட்ட நேரடி வரிகளுக்கு மாற்றாக புதிய வரி விதிப்பை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வரி ஏய்ப்பை கட்டுப்படுத்தவும், வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மத்திய அரசு முக்கிய நோக்கமாக் கொண்டுள்ளது. எனவே, அதற்கேற்ற வகையில் பட்ஜெட்டில் வரி விகிதங்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுப்பப்பட்டுள்ளது. 


உணவு பதப்படுத்துதல் துறை

உணவுப் பதப்படுத்துதல் துறைக்கு பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் வேளாண் உற்பத்தி பொருள்களின் மதிப்பை அதிகரிக்க முடியும். அத்துடன் இது பல முக்கிய விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக, கிராமப்புறங்களில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும், விவசாயிகளின் வருமானம் பெருகும், வேளாண் பொருள் வீணாவதை தடுக்கும் என இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சேமிப்பு கிடங்குகளை அமைப்பதற்கும், பதப்படுத்துதல் வசதிகளை ஊக்குவிப்பதற்கும் இத்துறையில் அதிக அளவு அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்புத் துறை

மத்திய பட்ஜெட்டில் வரிகளை குறைத்து, ஊக்குவிப்பு சலுகைகளை அறிவிக்க வேண்டும் என்பது நுகர்வோர் சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள் உற்பத்தியாளர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. குறிப்பாக, மின் சேமிப்பு கொண்ட பொருள்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட்டில் திட்டங்களை அறிவிக்கவும், இறக்குமதிக்கு அதிக வரி விதிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி உள்ளிட்ட நுகர்வோர் சாதனங்களை நாம் இனியும் ஆடம்பர பொருள்களாக கருத இயலாது. எனவே, அந்த வகை பொருள்களுக்கான வரியை பட்ஜெட்டில் 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கவும் தொழில் அமைப்புகளிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.


தொலைத் தொடர்புத் துறை

கடந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.50,539 கோடியாக இருந்த இத்துறையின் வருவாய் நடப்பு நிதி ஆண்டில் ரூ.41,669 கோடியாக சரிந்துள்ளது. எனவே போட்டி அதிகரித்து வருவாய் குறைந்துள்ள இந்த சூழலில், வரும் பட்ஜெட்டில் ஜிஎஸ்டி அடிப்படையில் சில நிவாரணங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்கின்றனர் இத்துறையைச் சேர்ந்தவர்கள்.


சுற்றுலாத் துறை

வரும் பட்ஜெட்டில் சுற்றுலாத் துறைக்கான வரி விகிதங்களை குறைக்க வேண்டும். அப்போதுதான், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் போட்டியிட்டு சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் கவர முடியும். ரூ.2,500-7,500 அறை வாடகை கொண்ட ஹோட்டல்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. 

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் அதிகம். எனவே, உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை பெருமளவில் ஈர்க்க இந்த வரி விகிதங்களை குறைப்பது மிக அவசியம் என இத்துறையைச் சேர்ந்தவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/8/w600X390/ArunJaitley.jpg http://www.dinamani.com/business/2018/jan/29/மத்திய-பட்ஜெட்-பல்வேறு-துறைகளின்-எதிர்பார்ப்புகள்-2853003.html
2853007 வர்த்தகம் விமானப் பயணிகளின் எண்ணிக்கை விறுவிறு DIN DIN Monday, January 29, 2018 03:31 AM +0530 உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை சென்ற டிசம்பரில் 1.12 கோடியாக அதிகரித்துள்ளது என மத்திய அரசு புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 2016 டிசம்பரில் இது 95.5 லட்சமாக காணப்பட்டது. அதனுடன் ஒப்பிடும்போது சென்ற டிசம்பரில் விமான பயணிகள் எண்ணிக்கை 17.69 சதவீதம் அதிகரித்துள்ளது.அதிக அளவில் பயணிகளை ஏற்றிச் சென்றதில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 95.6 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. கோஏர், இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ், விஸ்டாரா, ஏர்இந்தியா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
 

]]>
http://www.dinamani.com/business/2018/jan/29/விமானப்-பயணிகளின்-எண்ணிக்கை-விறுவிறு-2853007.html
2853006 வர்த்தகம் ரூ.3.90 லட்சம் கோடிக்கு நிறுவன இணைப்பு நடவடிக்கை DIN DIN Monday, January 29, 2018 03:28 AM +0530 இந்தியாவில் சென்ற 2017-ஆம் ஆண்டில் 6,000 கோடி டாலர் (ரூ.3.90 லட்சம் கோடி) மதிப்புக்கு உள்நாட்டு நிறுவனங்கள் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கிராண்ட் தோர்ன்டன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, தொலைத் தொடர்பு துறை நிறுவனங்கள் 2,500 கோடி டாலர் அளவுக்கு இணைப்பு மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டன.
இதையடுத்து, வங்கி, மருந்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதுசார்ந்த துறைகளில் அதிக அளவில் இணைப்பு-கையகப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

]]>
http://www.dinamani.com/business/2018/jan/29/ரூ390-லட்சம்-கோடிக்கு-நிறுவன-இணைப்பு-நடவடிக்கை-2853006.html
2853005 வர்த்தகம் இந்தியாவிலிருந்து வாகன உதிரிபாக ஏற்றுமதியை அதிகரிக்க ஜி.எம். திட்டம் DIN DIN Monday, January 29, 2018 03:28 AM +0530 அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் (ஜி.எம்.), தனது இந்தியத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் வாகன உதிரி பாகங்களின் வெளிநாட்டு ஏற்றுமதியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் கார் விற்பனையை நிறுத்தியுள்ள இந்த நிறுவனம், தனது இந்தியத் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவிலிருந்து கார்கள் ஏற்றுமதி செய்வதற்கான அந்நியச் சந்தைகளையும் நிறுவனம் விரிவுபடுத்தி வருகிறது. அண்மையில், இந்தியாவில் தயாரான "பீட்' ரகக் கார்களை கோஸ்டரிகா நாட்டுக்கு ஜி.எம். நிறுவனம் ஏற்றுமதிச் செய்யத் தொடங்கியது.
இந்த நிலையில், தனது வாகன உதிரிபாகங்களின் ஏற்றுமதியையும் விரிவுபடுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

]]>
http://www.dinamani.com/business/2018/jan/29/இந்தியாவிலிருந்து-வாகன-உதிரிபாக-ஏற்றுமதியை-அதிகரிக்க-ஜிஎம்-திட்டம்-2853005.html
2852429 வர்த்தகம் 100% அந்நிய முதலீடு: அனுமதி கோரியது ஐடியா செல்லுலார் DIN DIN Sunday, January 28, 2018 02:05 AM +0530 தொலைத்தொடர்பு துறையைச் சேர்ந்த ஐடியா செல்லுலார் நிறுவனம், அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக அதிகரித்துக் கொள்வதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: ஐடியா நிறுவனத்தில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இது தொடர்பான விண்ணப்பம், தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறைக்கு அனுப்பட்டுள்ளது. 
பங்கு முதலீட்டு விதிமுறைகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதி நிலவரப்படி ஐடியா நிறுவனத்தில் அந்நிய முதலீட்டாளர்களின் பங்களிப்பு 27 சதவீதம் என்ற அளவில் உள்ளது என ஐடியா நிறுவனம் தெரிவித்துள்ளது. 
மத்திய அரசு தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்களில் 100 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிக்க முடிவெடுத்துள்ளது. அதில், மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முன் அனுமதியின்றி நிறுவனங்கள் 49 சதவீதம் அளவுக்கு அந்நிய முதலீட்டை திரட்டிக் கொள்ள முடியும். ஆனால், அந்நிய முதலீடு அந்த அளவை தாண்டும் போது பாதுகாப்பு காரணங்களைக் கருதி மத்திய அரசிடம் அனுமதி பெறுவது நிறுவனங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த வோடபோனின் இந்தியப் பிரிவுடன் தொலைத் தொடர்பு வர்த்தகத்தை இணைக்க ஐடியா செல்லுலார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தற்போதைய டிராய் தகவல்களின் அடிப்படையில், ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்களுக்கு 40 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த இரு நிறுவனங்களும் இணையும் பட்சத்தில் அது இந்திய தொலைத் தொடர்புத் துறையில் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுக்கும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/19/w600X390/idea.jpg http://www.dinamani.com/business/2018/jan/28/100-அந்நிய-முதலீடு-அனுமதி-கோரியது-ஐடியா-செல்லுலார்-2852429.html
2852428 வர்த்தகம் எட்டாவது வாரமாக உற்சாகத்தில் பங்குச் சந்தை DIN DIN Sunday, January 28, 2018 02:01 AM +0530 இந்தியப் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து எட்டாவது வாரமாக பரவச நிலை காணப்பட்டது. ஒவ்வொரு வாரமும் புதிய உச்சங்களுடன் முடிவடைந்து பங்குச் சந்தை முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
அந்த வகையில், கடந்த வார வர்த்தகமும் புதிய சாதனை ஏற்றத்துடன் நிறைவு பெற்றது. ஜனவரி மாதத்துக்கான பங்கு முன்பேர வணிக கணக்கு முடிப்பு தினத்தையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் மட்டும் சுணக்கத்துடன் காணப்பட்டது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் பங்குச் சந்தையில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும், சர்வதேச நிதியம் அதன் உலக பொருளாதார ஆய்வறிக்கையில், "மிக வேகமாக பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் நாடு என்ற அந்தஸ்தை இந்தியா தக்க வைத்துக் கொள்ளும், அதன் பொருளாதாரம் வரும் 2018-19 நிதி ஆண்டில் 7.4 சதவீதமாக வளர்ச்சி காணும்' என்று தெரிவித்திருந்தது. இது முதலீட்டாளர்களுக்கு மிகவும் உற்சாகம் அளிக்கக்கூடிய செய்தியாக அமைந்தது.
நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை முடிவுகள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது, அந்நிய முதலீட்டு வரத்து அதிகரிப்பு, பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு ஆகியவை பங்குச் சந்தையின் ஏற்றத்துக்கு மேலும் வலு சேர்க்கும் அம்சங்களாக அமைந்தன.
தகவல் தொழில்நுட்பத் துறை குறியீட்டெண் 3.63 சதவீதமும், உலோகம் 2.74 சதவீதமும், எண்ணெய்-எரிவாயு 2.25 சதவீதமும், பொறியியல் சாதனங்கள் 2.16 சதவீதமும் அதிகரித்தன. இவை தவிர, வங்கி 2 சதவீதமும், தொழில்நுட்பம் 1.65 சதவீதமும், பொதுத் துறை 1.23 சதவீதமும், மருந்து 1.08 சதவீதமும், ரியல் எஸ்டேட் 1.03 சதவீதமும் வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் தொழில்துறை குறியீட்டெண் 0.68 சதவீதமும் உயர்ந்தன.
இருப்பினும், முதலீட்டாளர்களின் வரவேற்பின்றி, நுகர்வோர் சாதனங்கள் தொழில்துறை குறியீட்டெண் 2.60 சதவீதமும், ஐபிஓ 1.51 சதவீதமும், மோட்டார் வாகனம் 1.32 சதவீதமும், மின்சாரம் 0.65 சதவீதமும் சரிந்தன.
சென்செக்ஸில் இடம்பெற்றுள்ள 31 நிறுவனங்களில், 21 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 10 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.
ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் 51.11 சதவீத பங்குகளை கையகப்படுத்துவதற்கு ஒப்புதல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து ஓஎன்ஜிசி பங்கின் விலை 7.57 சதவீதம் ஏற்றம் கண்டது.
இதையடுத்து, டிசிஎஸ் பங்கின் விலை 5.52 சதவீதமும், கோல் இந்தியா 5.34 சதவீதமும், யெஸ் வங்கி 4.06 சதவீதமும், ஆக்ஸிஸ் வங்கி 3.98 சதவீதமும், ரிலையன்ஸ் 3.79 சதவீதமும், எல்&டி பங்கின் விலை 2.99 சதவீதமும் அதிகரித்தன. கோட்டக் வங்கி (2.97%), இன்டஸ்இண்ட் வங்கி (2.79%), ஐடிசி (2.56%), இன்ஃபோசிஸ் (2.41%) மற்றும் பஜாஜ் ஆட்டோ (2.47%) நிறுவனப் பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின.
அதேசமயம், போதிய வரவேற்பில்லாத காரணத்தால் பார்தி ஏர்டெல் பங்கின் விலை 9.07 சதவீதமும், டாடா டிவிஆர் 6.56 சதவீதமும், விப்ரோ 5.02 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 4.48 சதவீதமும், ஏசியன் பெயிண்ட்ஸ் 3.71 சதவீதமும், மஹிந்திரா & மஹிந்திரா 1.11 சதவீதமும், பவர் கிரிட் 1.05 சதவீதமும் சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 538 புள்ளிகள் அதிகரித்து 36,050 புள்ளிகள் என்ற புதிய உயரத்தைத் தொட்டது. இதற்கு முந்தைய ஏழு வாரங்களில் மட்டும் சென்செக்ஸ் 3,039 புள்ளிகள் (9.26%) அதிகரித்தது குறிப்பிடத்தக்தது. 
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ.22,625.37 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 174 புள்ளிகள் உயர்ந்து முதல்முறையாக 11,069 புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரத்தில் ரூ.1,66,288.96 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.
வரும் வியாழக்கிழமை (பிப்.1) மத்திய பட்ஜெட் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதில் சாதகமான அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக அடுத்த வாரத்தில் பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடனேயே காணப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/28/w600X390/bse.jpg http://www.dinamani.com/business/2018/jan/28/எட்டாவது-வாரமாக-உற்சாகத்தில்-பங்குச்-சந்தை-2852428.html