Dinamani - இளைஞர்மணி - http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3021597 வார இதழ்கள் இளைஞர்மணி முகநூலின் புதிய வீடியோ காலிங் கருவி! -அ.சர்ஃப்ராஸ் DIN Tuesday, October 16, 2018 04:00 PM +0530 ஸ்மார்ட் போன் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே இன்டர்நெட் மூலமாக வாய்ஸ் காலிங், வீடியோ காலிங் ஆகியவற்றை அனைவரும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

சமூக வலைத்தளத்தின் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், வாட்ஸ்  அப், கூகுள் மெசன்ஜர் ஆகியவற்றில் வீடியோ கால்களின் உபயோகமும் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு சமூக வலைத்தள நிறுவனங்களான கூகுள், அமேசான் ஆகியவை செயற்கை நுண்ணறிவை (ஏ.ஐ.) பயன்படுத்தி மக்களின் அன்றாட வாழ்வில் அங்கம் வகிக்கும் வகையில் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களைத் தயாரித்து சந்தைப்படுத்தியுள்ளன.

வீட்டின் மூலையில் இருந்து  கொண்டு, காலையில் "குட்மார்னிங்' சொல்லி நம்மை எழுப்புவது முதல் நாட்டு நடப்புகளை வாசித்து, அலுவலகத்துக்கு வழியனுப்பி வைத்து, இரவு தூங்கப் போகும் வரை நம்மை வழிநடத்துவதுதான் இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்களின் பணி.

இதற்குப் போட்டியாக முகநூல் நிறுவனம் ஏ.ஐ. வீடியோ காலிங் கருவி "போர்ட்டல்'-ஐ அறிமுகம் செய்துள்ளது. வீட்டில் போட்டோ பிரேம் போல் எங்கேயாவது இந்த கருவியை வைத்து விட்டால் போதும். வீடியோ காலிங் வந்துவிட்டால் "ஹே போர்ட்டல்' என்று சொன்னால் போதும், நாம் எங்கே இருக்கிறோமோ அந்தப் பகுதியை தானாகவே காண்பித்து வீடியோ காலிங்கைத் தொடங்கிவிடும்.

நடந்து கொண்டே பேசினாலும் நம்மைப் பின்தொடர்ந்து வந்து  நமது பேச்சை இடையூறு இல்லாமல் வீடியோ காலில் பதிவு செய்கிறது இந்த "போர்ட்டல்'. இரண்டாவதாக புதிய நபர் வீடியோ காலிங்கில் இணைந்தாலும் அவரையும் 
ZOOM செய்து அவருடைய பேச்சையும் இணைக்கிறது இந்த கருவி. 

இளையதள வீடியோக்களைப் பார்க்கவும், குழந்தைகளுக்கு குட்டிக் கதைகள் சொல்வதும் என பல அம்சங்கள் நிறைந்துள்ள இந்தக் கருவியில் உள்ள கேமராவை மூடியும் வைக்கலாம்.

பொதுவாக வீடியோ காலிங்கில் பேச வேண்டும் என்றால் நாமே ஸ்மார்ட்போனை கையில் பிடித்துக் கொண்டு, அதற்கு முன் வந்துதான் பேச வேண்டும். ஆனால் இந்த புதிய கருவி போர்ட்டல் அந்தத் தடைகளை எல்லாம் தவிடுபொடியாக்கியுள்ளது.

அமெரிக்காவில் இந்த கருவி விற்பனைக்கு வந்துள்ளது. 10 அங்குலம் திரை கொண்ட போர்ட்டல் கருவி ரூ. 15 ஆயிரமாகவும், 15 அங்குலம் திரை கொண்ட கருவியின் விலை ரூ. 26 ஆயிரமாகவும் விற்கப்படுகிறது.

என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தை எட்டினாலும், அது தனிமனித சுதந்திரத்தை பாதிக்காமல் இருந்தால்தான் அனைவரின் வரவேற்பைப் பெறும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/16/w600X390/im14.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/16/முகநூலின்-புதிய-வீடியோ-காலிங்-கருவி-3021597.html
3021595 வார இதழ்கள் இளைஞர்மணி சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! - 16 தா.நெடுஞ்செழியன் DIN Tuesday, October 16, 2018 03:57 PM +0530 சென்னையிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள பெரியபாளையம் என்ற கிராமத்தில் 1754 இல்   பச்சையப்ப முதலியார் பிறந்தார். இவர் பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே அவருடைய தந்தை இறந்துவிட்டார். மிகுந்த திறமையும் நேர்மையும் உள்ள பச்சையப்ப முதலியார் நிறையப் பணம் சம்பாதித்தார். 1794 இல் தனது  40 ஆவது வயதில்  பச்சையப்ப  முதலியார் இறந்துவிட்டார். அவர் அரும்பாடுபட்டுச்  சேர்த்த  செல்வத்தால் ஒரு கல்லூரி சென்னையில் உருவாக்கப்பட்டது. அதுதான் இந்தியாவிலேயே  முதன் முதலாகத் தோன்றிய கல்லூரி. 

1841ஆம் ஆண்டு முதல் போர்டு ஆஃப் டிரஸ்ட் தொடங்கப்பட்டது.  ஏழை மாணவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் படிப்பதற்காக  மாதம் ரூ.20  வாடகை  கட்டடத்தில்  1842 இல் ஓர் ஆரம்பப் பள்ளி சென்னையில் தொடங்கப்பட்டது.    இதுதான் பச்சையப்பா கல்லூரியின் தொடக்கம். 

1846 இல் ஜார்ஜ் நார்ட்டன் பச்சையப்பா அறக்கட்டளைக்கு வந்து தனது கல்விப் பணியைத் தொடங்கினார். அவர் பச்சையப்பா அறக்கட்டளையின் இரண்டாவது நிறுவுநராவார். 

ஜார்ஜ் நார்ட்டனின்  நினைவாக மிகப் பெரிய ஹால் ஜார்ஜ் டவுன் பகுதியில் உருவாக்கப்பட்டது.  1850 இல் பெரிய விழா நடத்தி  இந்த புதிய கட்டடத்தில் "பச்சையப்பா சென்ட்ரல் இன்ஸ்ட்டிடியூஷன்'  தொடங்கப்பட்டது. இங்கே 600 மாணவர்கள் படிக்கக் கூடிய  12 வகுப்புகள் நடத்தப்பட்டன.  

பச்சையப்பா அறக்கட்டளை மூலமாக  பச்சையப்பா கல்லூரி மட்டும் அல்லாமல், 1967}இல் சி.கந்தசாமி நாயுடு  கல்லூரியும்  1971}இல் செல்லம்மாள் மகளிர் கல்லூரியும்  தொடங்கப்பட்டன. 

1971 ஆம் ஆண்டு முதல்  பச்சையப்பன் டிரஸ்ட்டின் இடத்தின் ஒரு பகுதியையும்,  செல்லம்மாளின் இடம் அடையாறு ஜமீன் வில்லேஜ், பல்லாவரம், கிண்டி எஸ்டேட் 3 இடங்களிலும் சேர்த்து, செல்லம்மாள் மகளிர் கல்லூரி இயங்கி வருகிறது.  பச்சையப்பா ஆண்கள் கல்லூரி காஞ்சிபுரத்தில் இந்த டிரஸ்டின் கீழ் உருவாக்கப்பட்டது.  காஞ்சிபுரத்தில் பச்சையப்பா பெண்கள் கல்லூரியும், கடலூரில் சி.கந்தசாமிநாயுடு மகளிர்  கல்லூரியும்   பச்சையப்பா அறக்கட்டளையின் கீழ்  தொடங்கப்பட்டது.  பச்சையப்ப முதலியாரின் நிலங்கள் பெரும்பான்மையாக கல்விப் பணிக்காகவே சென்னையிலும் காஞ்சிபுரத்திலும்  அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. 

இதேபோன்று, பி.ஏ.சி. ராமசாமி ராஜா மற்றும் அவருடைய குடும்பத்தார் இணைந்து  மக்களுக்காக பல சேவைகள் செய்துள்ளனர்.  1941} 47 வரை ராஜபாளையம் முனிசிபாலிட்டியில் சேர்மனாக இருந்து எண்ணற்ற நிறுவனங்களை உருவாக்கினார்.  ராம்கோ குரூப் மூலமாக எண்ணற்ற நிறுவனங்களை உருவாக்கினார். நிறுவனங்களில் பணிபுரியக் கூடிய ஊழியர்களின் குடும்பத்தின் அடுத்த தலைமுறை நன்றாக வரவேண்டும் என்பதற்காக, வாழ்வாதாரம் மேன்மேலும் சிறப்படைவதற்காக பள்ளிகளையும், பாலிடெக்னிக்குகளையும் மருத்துவவசதிகளையும் ராஜபாளையத்தில் உருவாக்கினார். இந்த பள்ளிகளின் வாயிலாக ராஜபாளையம் மற்றும் அதன் அருகாமையில் உள்ள எண்ணற்ற  ஊர்களில் இருந்து வந்து இங்கு பயின்று இன்று வாழ்க்கையில் ஓர் உச்சநிலையை அடைந்துள்ளார்கள்.  1963 ஆம் ஆண்டு பி.ஏ.சி.ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரி  ராஜபாளையத்தில் தொடங்கப்பட்டது.  இந்தப் பாலிடெக்னிக்  இந்தியாவிலேயே டெக்ஸ்டைல் துறை  கல்வியில்   தனிமுத்திரையைப் பதித்து வருகிறது.  இன்றைக்கும்   குமாரசாமி ராஜா டிரஸ்ட் நிறைய ஏழை மாணவர்கள் படிக்க  அவர்களுக்கு கல்வி உதவித்தொகையை  வழங்கி வருகிறது. 


 திருநெல்வேலியில் திருக்குறுங்குடி என்ற ஊரில்  1877 இல் பிறந்த டி.வி.சுந்தரம் அய்யங்கார், வக்கீலாகவும், ரயில்வேயிலும், வங்கியிலும் பணிபுரிந்து, பின்பு அதிலிருந்து விலகி மதுரையில் டி.வி.சுந்தரம் அய்யங்கார் அன்ட் சன்ஸ் நிறுவனத்தை 1911 இல் தொடங்கினார். அதே ஆண்டு மதுரையில் தனியார் பஸ் சேவையையும் தொடங்கினார்.  

அனுபவம் வாயிலாக நிறைய தொழில்நுட்பத் திறமைகளைப் பெற்றார்.  அவர் தொடங்கி வைத்ததுதான் டி.வி.எஸ். சதர்ன் ரோடு வேஸ் லிமிடெட் மற்றும் டிவிஎஸ்  க்ரூப் கம்பெனிகள். இவரும் தொழிலாளர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவர்களுடைய குடும்பங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மதுரையில்   டி.வி.  சுந்தரம் ஐயங்கார் மேல்நிலைப் பள்ளி, சுந்தரம் மேல்நிலைப் பள்ளி என இரண்டு மேல்நிலைப் பள்ளிகளை உருவாக்கினார். 

அதுமட்டுமல்லாது, தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மதுரையில் டிவிஎஸ் மருத்துவமனை ஒன்றை உருவாக்கினார்.  தனது ஊழியர்களை தனது குடும்பத்தின் ஓர் அங்கமாகக் கருதி, அவர்களின் சந்ததிகளின் எதிர்காலம் கல்வியின் வாயிலாக நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக உருவாக்கினார்.  மதுரையைச் சுற்றியுள்ள ஊர்களில் உள்ள மாணவர்கள் இங்கு வந்து பயின்று, மேற்படிப்புக்காக  இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படித்து,  நல்லநிலைமையை அடைய டி.வி.எஸ்.சுந்தரம் ஐயங்கார் குடும்பத்தினர் 1920 களில் வித்திட்ட விதைகள் இன்றும் நல்ல ஓர் ஆலமரமாக வளர்ந்து எண்ணற்ற குடும்பங்களின் தரத்தினை கல்வியின் வாயிலாக உயர்த்தியிருக்கின்றன. 

இதேபோன்று,  கல்விச் சேவை செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர், கருமுத்து தியாகராச செட்டியார். அவர் நெசவாலைத் தொழிலில் ஈடுபட்டிருந்தார்.   சிவகங்கையில் 1893 இல்  பிறந்து,  ஸ்ரீ லங்காவில் படித்து, பின்னர் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து 14 ஆண்டுகளுக்கும் மேலாக  இந்தத் துறையில் சிறப்புடன் விளங்கி வந்தார். இவரும் இவருடைய தொழில் கிடைத்த வருமானத்தில் ஒரு பகுதியை எடுத்து மதுரையில் தியாகராஜர் கல்லூரி, தியாகராஜர் பொறியியல் கல்லூரி, தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி, தியாகராஜர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, தியாகராஜர் மாடல் ஸ்கூல் தியாகராஜர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் என பல்வேறு கல்விக்கூடங்களைக் நிறுவினார். தான் சம்பாதித்த பணத்தில் பெரும்பகுதியை நாட்டுமக்களின் நலன் கருதி   அவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும்  நாட்டின்  தொழில்நுட்ப வளர்ச்சிக்காகவும்  செலவிட்டார்.  

கோயம்புத்தூர் அருகில் கலங்கல் என்றஇடத்தில் 1893 இல் பிறந்த ஜி.டி.நாயுடு மிகச்சிறந்த பொறியியலாளராக விளங்கினார். எலக்டிரிக்கல், மெக்கானிக்ஸ், அக்ரிகல்சர், ஆட்டோமொபைல்  துறைகளில் சிறந்து விளங்கினார். இளம் வயதில் இருந்தே ஒரு மோட்டார்தொழிற்சாலையில் பணியில் சேர்ந்து  பல தொழில்நுட்பங்களை நன்கு தெரிந்து கொண்டார். இளம் வயதிலேயே 
எண்ணற்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு பல புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்ந்தார்.  இவருடைய கண்டுபிடிப்புகள் அனைத்தும் காட்சிக்கு வைக்கப்பட்டு   கோயம்புத்தூரில் அவிநாசி சாலையில் ஒரு மியூசியமாகவே இயங்கி வருகிறது. 1938 இல் இருந்து தமிழ்நாட்டு இளைஞர்கள் தொழில்நுட்ப நிபுணர்களாக உருவாக வேண்டும் அவர்களுடய தொழில்நுட்ப அறிவினால் நமது நாடு முன்னேறவேண்டும் என்பதற்காக இந்தியாவுக்கு தொழில்நுட்பக் கல்லூரி மிக தேவை என்பதை அறிந்து தன்னுடைய சுயமுயற்சியினால் ஜிசிடி பாலிடெக்னிக் மற்றும் அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியைக் கோயம்புத்தூரில் உருவாக்கினார். இவருடைய மகனையும் தொழிற்கல்வி படிக்கச் செய்தார்.இவருடைய அறிவாற்றலால் உருவான கண்டுபிடிப்புகளைப் பற்றி  அந்த காலகட்டத்தில் கண்டுபிடிப்பதைப் பற்றி யாருமே நினைத்துப் பார்க்க முடியாது.  இன்டர்நெட் இல்லாத, இவ்வளவு தகவல் தொடர்புகள் இல்லாத அந்தக் காலத்திலேயே  அவர் கண்டுபிடித்தவை மிகப் பெரிய சாதனைகளாகும். கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி.நாயுடு கண்டுபிடிப்புகளின் கண்காட்சியை  இன்றைய இளம் தலைமுறை அவசியம் பார்க்க வேண்டும். புதியனவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அது நிச்சயம் ஏற்படுத்தும்.

திருப்பூரில் டாக்டர் டி.எஸ்.அவினாசி லிங்கம் 1903}இல்  பிறந்தார். திருப்பூர் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் கோயம்புத்தூரில் லண்டன் மிஷினரி ஸ்கூலில் படித்து 1923 இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலைக் கல்வியை முடித்தார். 1926 இல் மெட்ராஸ் லா காலேஜில் சட்டம் பயின்று பட்டம் பெற்றார்.  அப்போது  "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் ஈடுபட்டார்.  இவர் மெட்ராஸ் ராஜதானியில் கல்வி அமைச்சராகப் பணியாற்றினார். மாணவர்களின் இளம் உள்ளங்கள் இளமையிலேயே செம்மைப்பட வேண்டும் என்பதற்காக,  இவர்தான் முதன்முதலாக சுப்பிரமணிய பாரதியின் கவிதைகளையும் , திருக்குறளையும் 6 ஆம் வகுப்பில் பாடமாகக் கொண்டுவந்தார்.  

பெண்கல்வி மற்றும்  வயோதிகர்கள் நலம் ஆகியவற்றில் மிக அக்கறை கொண்டு நிறைய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 1958 முதல்  64 வரை ராஜ்ய சபை உறுப்பினராகவும்  சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டு ராமகிருஷ்ண மிஷனுடன் இணைந்து ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா என்ற மிகப் பெரிய பள்ளியை 1930 இல் கோயம்புத்தூரில் பெரிய நாயக்கன் பாளையத்தில் 300 ஏக்கர் நிலத்தில் தொடங்கினார்.  இது ரேஸ்கோர்ஸில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் பெரியநாயக்கன் பாளையத்துக்கு மாற்றப்பட்டது,

இவர் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உயர்ஜாதியினர் கீழ் சாதியினர் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லாரும் படிப்பதற்கான வழிமுறைகளை  அந்த காலத்திலேயே  உருவாக்கினார். அவினாசிலிங்கம் ஹோம் சயின்ஸ் கல்லூரியை கோயம்புத்தூரில் உருவாக்கினார்.  இவர்  காந்தியின் தத்துவங்களைப் பின்பற்றினார்.  விவசாயம், தொழில், கலாசாரம் மேம்பட வழிவகுத்தார். பெண்கள் முன்னேற்றத்துக்காக ஏற்படுத்திய கல்லூரி அவினாசிலிங்கம் பல்கலைக்கழகமாக உருவாகியது.  

(தொடரும்)

கட்டுரையாசிரியர்: சமூக கல்வி ஆர்வலர் 

www.indiacollegefinder.org

]]>
http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/16/சரியான-பார்வை-சரியான-வழி-சரியான-செயல்---16-3021595.html
3021593 வார இதழ்கள் இளைஞர்மணி இணைய வெளியினிலே... DIN DIN Tuesday, October 16, 2018 03:45 PM +0530 முக நூலிலிருந்து....


மனைவி அதிகாரம் செலுத்தும்போது, கோபப்படுவதும்...
அதுவே மகள் அதிகாரம் செய்யும்போது...
பெருமைக் கொள்வதும்தான் ஆணின் குணம்!

- கிரிதரன்

"எக்ஸ்க்யூஸ் மீ' என்ற  வார்த்தை...
"நகருடா சனியனே...' 
என்ற அர்த்தத்திலேயே பல பெண்களால் சொல்லப்படுகிறது.

- சந்திரன் ஏரியா


ஒரு மணி நேரம் தாலாட்டிட்டு தூங்கிட்டானான்னு  எட்டிப் பார்த்தா...
ஏன் நிப்பாட்டிட்டான்னு  அவன் எட்டிப் பாக்குறான்.
இதெல்லாம் பாவம் மை சன்!

- அ.ப. இராசா

யோசிக்காமல் எடுத்த முடிவுகள் அனைத்தும்,
யோசிக்க வைத்துக் கொண்டே இருக்கின்றன...
நீண்ட நாட்களாக.

- நட்பென்றால் நாம் என்போம்


சுட்டுரையிலிருந்து...


குற்றவாளியாக்கப்பட்டவனிடம் 
தூக்குமேடையில் கேட்கப்பட்டது.... உன்னுடைய 
"கடைசி ஆசை என்ன?' என்று.அவன் சொன்னான்:
"எப்படியாவது குற்றவாளியைக்
கண்டுபிடித்து விடுங்கள்' என்று.

- கனகசிங்கம்

ஓராயிரம் குடிசை வீடு...
அண்ணார்ந்து பார்த்தேன்,
பனை மரத்தில்!

- விதுண்


நான் பேருந்தை விட்டு இறங்கிய பின்னும் பயணம் செய்து கொண்டிருக்கிறது...
எனது மீதிச் சில்லறை!

- பழைய சோறு

சொந்த ஊரில் இருக்கும் புளியமரமும், மாமரமும் தந்து விடாத 
ஞானத்தையா...
போதிமரம் தந்துவிடப் போகிறது?

- ஓகே கண்மணி

வலைதளத்திலிருந்து...

போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை விடுவிக்க எப்படி மறுவாழ்வு மையங்கள் இருக்கின்றனவோ,  அப்படி இந்த ஃபேஸ்புக் அடிமைகளையும் மீட்பதற்கு ஏதாவது செய்தாக வேண்டிய  நிலையில் இருக்கிறோம். 

முப்பதாண்டுகளாகப்  பார்க்காத நண்பனை நேரில் பார்த்தாலும்... ஃபேஸ்புக் நண்பனுக்கு கமெண்ட் போட்டுக்  கொண்டிருக்கிறோம் நாம். அல்லது நாளைக்குக் காலை நாலே முக்காலுக்கே புரட்சி வந்துவிடுவதைப் போல மல்யுத்தக் களமாக ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டிருக்கிறோம்... இப்போது இது கைகலப்பில் தொடங்கி  கொலை வரை சென்று கொண்டிருக்கிறது.

இனி வரும் காலங்கள் ஃபேஸ்புக் ரேப்... ஃபேஸ்புக் மர்டர்...  ஃபேஸ்புக் கிட்நாப் எனப் போகும் போலிருக்கிறது... நாம் கணினி முன் அமரும்போதே  முகம் தெரியாத மாய உலகினில்  பயணிக்கப் போகிறோம் என்கிற உண்மை வெகு சிலருக்கே புரிந்திருக்கிறது.

யாரும் யார் பெயராலும் மோதலை உருவாக்கலாம் என்கிற எதார்த்தம் புரிந்தால்  தேவையற்ற மன உளைச்சல்களில் இருந்து விடுபடலாம்.

https://pamaran.wordpress.com

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/16/w600X390/im12.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/16/இணைய-வெளியினிலே-3021593.html
3021591 வார இதழ்கள் இளைஞர்மணி தன்னிலை உயர்த்து! - 14 ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ். DIN Tuesday, October 16, 2018 03:34 PM +0530 கி.மு.490 ஆம்  ஆண்டு, அழகாக கட்டமைக்கப்பட்ட  நகரத்து வீதிகளைக் கொண்ட  பாடலிபுத்திரத்தின் ஒரு  வீதியில் வறுமையின் பிடியில் ஒரு சகோதரனும், சகோதரியும் இருந்தனர். சகோதரியின் கையில் ஒரு கைக்குழந்தை. அந்த சகோதரர், சகோதரியிடம், ""சகோதரி, நமது பசிப்பிணிக்கு ஒரு தீர்வு சொல்கிறேன். உனது கைக் குழந்தையை வசதியாக வாழும் ஒரு செல்வந்தரின் வீட்டில், அவர்களுக்கு தெரியாமல் வைத்துவிட்டு வந்துவிடு. இந்த அழகிய குழந்தையை வளர்ப்பதற்கு யாரும் தயங்க மாட்டார்கள். இதனால், உனது குழந்தையும் நல்ல இடத்தில் பசியின்றி வளரும். உன் பாரமும் குறையும்'' என்று யோசனை கூறினார். அதன்படி தனது குழந்தையை ஒரு செல்வந்தரின் பசு மாட்டுத் தொழுவத்தில் அழுகையுடன்  வைத்துவிட்டு வந்தார் அப்பெண். பசுக்களின் சொந்தக்காரர் அவ்வழகிய ஆண் குழந்தையை மகிழ்ச்சியோடு எடுத்து வளர்த்தார். பின்னர், சற்று பெரியவனானதும் ஒரு வேட்டுவனுக்கு அச்சிறுவனை விற்றார். அங்கு அச்சிறுவன் கால்நடைகளை மேய்த்து வந்தான். மாலை நேரத்தில் அச்சிறுவன், மற்ற சிறுவர்களுடன் விளையாடும் போது, தன்னை ஒரு மன்னனாகவும், மற்றவர்களை படைவீரர்களாகவும் பாவித்து விளையாடினான். ஒரு மணல் மேட்டை சிம்மாசனமாக மாற்றினான். செடி, கொடிகளால் தனது உடம்பில் அரச வேடம் பூண்டான்.  பிரச்னைகளோடு வருபவருக்கு நியாயம் வழங்கினான்.

" அலகிலா விளையாட்டுடையான் அவர்
தலைவர்;   அன்னவர்க்கே சரண் நாங்களே' 

என்று இராமனிடம் மற்ற குழந்தைகள் எல்லாம் சரண் அடைந்தது போல் அச்சிறுவனோடு விளையாடியவர்கள் அனைவரும் மெய்மறந்து அவனிடம் சரணடைந்திருந்தனர். 

ஒருநாள் அவ்வழியாக  ஓர் அந்தணர் வந்தார். அவர் தட்சசீலத்தைச் சேர்ந்தவர். விஷ்ணுகுப்தர் அவரது இயற்பெயர். சிறுவர்கள் விளையாடும் விளையாட்டினை ரசித்தார். அதில் மன்னர் வேடமிட்ட இளைஞனின் தலைமைப் பண்பினைக் கண்டு அதிசயித்தார். இவனுக்கு கற்றுக்கொடுத்தால் தலைமையின்றி தவிக்கின்ற பாஞ்சால மக்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் என்று நம்பினார். அவ்விளைஞனுக்கு, ஏழு ஆண்டுகள் கல்வியும், போர்க்கலையும் கற்பித்தார். பின்னர் பாஞ்சால வீரர்களுக்கு படைத்தலைவனாக்கினார். ஒரு சிறந்த படைத் தலைவன் கிடைக்கவே, வீர பாஞ்சாலகாரர்களுக்கு உற்சாகம் பீறிட்டது.  திறமை வாய்ந்த அந்தப் போர்ப்படை,  நந்த மன்னரை வென்று, மகத சாம்ராஜ்யத்தையும் கைப்பற்றி, மெளரிய சாம்ராஜ்யத்தை நிறுவியது. மக்கள் அனைவரும் அத்தலைவனை விரும்பினர். இந்திய வரலாற்றில் கிழக்கே வங்கத்தில் இருந்து மேற்கே இந்துகுஷ் மலை வரையிலும், வடக்கே  இமயத்தில் இருந்து தெற்கே நர்மதை நதி வரையிலும் உள்ள பரந்த நிலப்பரப்பை ஆண்ட அந்த இளைஞன்தான் சந்திரகுப்த மெளரியர். திறமைகளைப் பாய்ச்சி, அவ்விளைஞனைத் தலைவனாக்கியவர் கெளடில்யர் என்ற சாணக்கியர். 

தலைமைப் பண்பு என்பது மண்ணிற்குள்ளே பொதிந்துள்ள நிலக்கரி போன்றது. அது சந்திரகுப்தனிடமிருந்தது போல் எல்லோரிடமும் பொதிந்துள்ளது. கெளடில்யரைப் போல், அறிவினாலும், ஆற்றலினாலும் பட்டை தீட்டும்போது  சாதாரண மனிதன் சாதிக்கும்  தலைவனாக உருவெடுகின்றார்.  

தலைமைப் பண்பு மனிதனின் தலையாய பண்பு. இது உண்மையினால் உருபெற்றெழுந்தால் உலகம் அழகு பெறும். ஓர் அரசனுக்கு வாரிசு இல்லை. அதனால், அவர் தனது நாட்டிற்கு ஒரு சிறந்த இளவரசனை தேர்ந்தெடுக்க திட்டமிட்டார். அந்த வாய்ப்பினை அந்த நாட்டு இளைஞர்களுக்கு முரசு கொட்டி அறிவித்தார். ஒரு குறிப்பிட்ட நாளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அரண்மனை முன் திரண்டனர். அவர்களிடம், போட்டி ஒன்றினை மன்னர் அறிவித்தார். அனைவருக்கும் விதை ஒன்று வழங்கப்படும்.  அந்த விதையை யாரொருவர் மூன்று மாதத்தில் நன்கு வளர்த்து செடியாக்குகிறார்களோ அவர்தான் இந்த நாட்டின் இளவரசன் என்று அறிவித்தார். மூன்று மாதம் நிறைவடைந்தது. ஆயிரக்கணக்கான இளைஞர்களும்  கைகளில் தொட்டிகளோடு வந்திருந்தனர். எல்லாருடைய தொட்டியிலும் வளர்ந்த செடிகள் இருந்தன. ஒரே ஓர் இளைஞனின் தொட்டியில் மட்டும் செடியே இல்லை. அவர்  நட்ட விதை முளைக்கவில்லை என்று கூறினார். அவரை மன்னர் மேடைக்கு அழைத்தார். எல்லோரும் அவரைப் பார்த்து ஏளனமாய்ச் சிரித்தார்கள். ஒரு விதையை வளர்க்கத் தெரியவில்லை என்பதை விட, அவனுக்கு பிழைக்கத் தெரியவில்லை என்ற அர்த்தம் அந்த சிரிப்பில் தெரிந்தது. மன்னர் அவரை அரியாசனத்தின் அருகே வரவழைத்து, ""இளைஞர்களே! இவர்தான் இந்த நாட்டின் எதிர்கால அரசன், இன்று நம் இளவரசர். ஏனென்றால், நான் உங்களிடம் கொடுத்தவை அவித்த விதைகள். அது எதுவுமே முளைக்காது. ஆனால் நீங்கள் எல்லாரும் விதை முளைக்கவில்லை என்று தெரிந்ததும், பதவிக்கு ஆசைப்பட்டு நேர்மையற்ற விதையினை நட்டு, அழகற்ற எண்ணங்களை செடியாக வளர்ந்து வந்துள்ளீர்கள். மனதில் உண்மையான, செயலில் நேர்மையான இவ்விளைஞனே நாட்டுக்கு தலைமை ஏற்க தகுதியானவர்'' என்றார்.

உண்மையான தலைமை என்றும் உயர்ந்து நிற்கும். தலைமை உண்மையின் உருவாய் இருக்கவேண்டும் என்கிறது மகாபாரதம்.

உண்மையில், தலைமை வேறு. தலைமைப் பண்பு வேறு. பொறுப்பிலும், நிர்வாகத்திலும் உயர்ந்த நிலையிலிருந்தால் அது தலைமை. ஒரு நல்ல பொது நோக்கத்திற்காக ஒரு குழுவை வழி நடத்தினால் அது தலைமைப் பண்பு. தலைமை தனது குழுவினை நிர்வகிக்கும். தலைமைப் பண்பு, குழுவினை நிர்வகிப்பதோடு, வழி நடத்தும். தலைமை தனது பணியினைச் செய்யும். தலைமைப் பண்பு தனித்தன்மையை வெளிக்காட்டும். ஓர் உயர்ந்த இலட்சியத்தை நோக்கி பயணிக்க வைக்கும். புதுமை செய்யும்.

"ஜெனரல் ஸ்ட்ராங்' என்பவர், சிப்பாய் கலகத்தின் போது இந்தியாவில் இருந்தவர் ஒரு முறை சுவாமி, விவேகானந்தரை சந்தித்தார். சுவாமிஜி அவரிடம், ""சிப்பாய்களுடைய கட்டுப்பாட்டுக்குள்தான் ஆயுதங்கள், வெடிமருந்துகள் எல்லாம் இருக்கின்றன. அப்படியிருந்தும், இந்தியாவில் சிப்பாய் கலகம் ஏன் வெற்றியடையவில்லை?'' என்று கேட்டார். அதற்கு ஜெனரல்  ஸ்ட்ராங்,  ""சிப்பாய்கள் பலம் வாய்ந்தவர்கள். பயிற்சி பெற்றவர்கள். ஆனால் அவர்களின் பழக்கம் உத்தரவுக்கு கீழ்படிவது. அதனால், அவர்கள் போரினை முன்னெடுத்தபோது, அதன் தலைவர்கள் ஒரு பாதுகாப்பான இடத்தில் இருந்துகொண்டு, "வீரர்களே!  போரிடுங்கள்; முன்னேறுங்கள்' என கத்தினார்களே தவிர, அவர்களை முன் நடத்திச் செல்லவில்லை. போர் எனில் அதில் முன்னிற்பவர் போர்ப்படைத் தளபதி. அவர் இறப்பையும் எதிர்கொள்ளத் தயங்கமாட்டார். விழுப்புண் பெறுவதையே வீரமென்பார்.  அத்தகைய தலைமையில்லாததால் தான் சிப்பாய் கலகம் வெற்றிப் பெறவில்லை'' என்றார் ஜெனரல் ஸ்ட்ராங்.  தலைவர் என்பவர் ஆயிரம் வீரர்களோடு அவரும் ஒருவராக இருப்பினும், அவர்களுக்கு முன் நிற்பவர். முதன்மையானவர். அவரது சிந்தனையும், செயலும், வீரர்களிடமிருந்து வித்தியாசப்படும். அந்த வித்தியாசம்தான்  சுவாமி விவேகானந்தரிடம் ஒருவர், ""ஏன் நீங்கள் வித்தியாசமான மனிதராக தெரிகிறீர்கள்?'' என்ற கேள்விக்கு ""நீங்கள் எல்லோரும் ஏன் ஒரே மாதிரியாக காணப்படுகிறீர்கள்?'' என பதிலளிக்க வைத்தது.  தலைவர் வித்தியாசமாய் இருப்பவரல்லர். வியக்க வைப்பவர்.

1979-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் நாள் விண்ணில் ஏவப்பட்ட எஸ்.எல்.வி 3 என்னும் செயற்கைக்கோள் கடலில் விழுந்த போது சுக்கு நூறாகிப் போனது அதன் திட்ட இயக்குநர் அப்துல்கலாமின் இதயம். திட்ட இயக்குநரின் பதவி பறிக்கப்பட்டுவிடுமோ என்று கவலையோடு அனைவரும் இருந்தபோது, "கலாம், செயற்கைக்கோள் சுற்றுவட்ட பாதையில் தொடர்ந்து இருப்பார்' என்று அறிவித்தார் அதன் தலைவர். அடுத்த ஒரு வருடத்திற்குள்ளாகவே 1980ஆம் ஆண்டு ஜூலை மாதம், 18ஆம் நாள்,  ரோகிணி செயற்கைக்கோளை விண்ணிலே பிரகாசிக்க செய்தார் அப்துல் கலாம். அவ்வெற்றிக்காக அன்றைய பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தியிடம் அழைத்துச்சென்று, அவர் அவையில் பேச வைத்தார் அதே தலைவர்.  ஜான் மெக்ஸ்வெல்லின் கூற்றுப்படி ஒரு சிறந்த தலைவர், கிடைக்கின்ற அழகான வெற்றியில் தனது பங்கிற்கும், குறைவான வெகுமதியைப் பெற்று, தோல்வி  வருகின்றபோது தனக்கு அதிக பங்கினை எடுத்துக்கொள்வார்கள் என்ற வரிகளுக்கு உயிராய் இருந்தார் பேராசிரியர் சதீஷ் தவான். அத்தகைய தலைமைதான் ஆற்றல் மிகு அப்துல் கலாம் என்னும் தலைமையை உருவாக்கியது. 

தனது ஞான அனுபவத்தின் மூலம் ஒரு சிறந்த தலைவனுக்கான ஒன்பது பண்புகளை பட்டியலிடுகிறார் டாக்டர் கலாம். ஒரு மாபெரும் இலட்சிய இலக்கோடும், இலட்சியத்தினை அடைவதே தனது வேட்கையாகவும், அதற்காக எவரும் பயணிக்காத பாதையில் பயணிக்கும் துணிவோடும், அதில் வெற்றியையும் தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவமும், துணிச்சலான முடிவுகள் எடுத்து, தலைமையின் புனிதத்தினை அறிந்து, வெளிப்படைத் தன்மையான செயல்பாடுகளோடு, பிரச்னைகளைத் தகர்த்தெறிந்து, நேர்மையாய்ப் பணி செய்து, உண்மையாய் வெற்றி பெறுபவரே ஒரு சிறந்த தலைவர் என்பதை தனது வாழ்வின் அக்னிச் சிறகுப் பயணத்தின் மூலம் அறிவிக்கிறார்.

ஒரு சிறந்த தலைமை சிதறுண்ட ஊழியர்களையெல்லாம் ஒன்று சேர்க்கும். புத்தம்புது சிந்தனைகளை அறிமுகப்படுத்தும். ஒரு புதிய கண்ணோட்டத்தோடு பிரச்சினைகளை அணுகும். அன்னையைக் கண்டதும் ஆவலாய் ஓடிவரும் குழந்தையின் ஆர்வத்தை பணியில் உருவாக்கும். ஒரு விளையாட்டு வீரரின் உற்சாகத்தை அனைவரின் உள்ளத்திலே பொங்கி எழச் செய்யும். முடியுமா என்ற கேள்வி இல்லாமல் "நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை ஒவ்வொரு மனதிலும் விதைக்கும். மொத்தத்தில், ஒரு சீரிய இலக்கினை செம்மையான வழியில் அடையச் செய்யும். 

தலைமைப் பொறுப்பை ஏற்கக்கூடிய தகுதி வாய்ந்தவர்கள் கீழ்கண்ட பழமையான வாசகத்தை வழிமுறையாக்கிக் கொள்ள வேண்டும். "தலைவர்களே! மக்களிடம் செல்லுங்கள், அவர்களுடன் வாழுங்கள், அவர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள், அவர்களை நேசியுங்கள், அவர்களுக்குத் தெரிந்தவற்றிலிருந்து தொடங்குங்கள், அவர்களிடம் இருப்பதை அடித்தளமாகக் கொண்டு கட்டி எழுப்புங்கள்.இதன் மூலம் தலைவர்களின் வழிகாட்டுதலில் மக்களால் அப்பணி நிறைவேற்றப்பட்டதும், பெருமையுடன் மக்கள் சொல்வார்கள் இதை நாங்கள் தான்  செய்தோமென்று. இவ்வரிகளை நிஜமாக்கிய அண்ணல் காந்தி, தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா போன்றவர்களின்  உயரிய தலைமை பண்பு, இச்சமூகத்தில் நமக்கு முன்னின்று, நமக்கு பாடம் புகட்டும் ஆல விருட்சங்கள்.

"இனிய சொல்லினன்; ஈகையன்; எண்ணினன்
 வினையன்; தூயன்; விழுமியன்; வென்றியன்
 நினையும் நீதி நெறி கடவான்' 

என்ற இராமாயணத்து வரிகளைப்போல்  ஒரு தலைவன் இனிமையாய்ப் பேசுபவராக,  கொடையாளியாக,  ஆராய்ந்து அறிந்து செயலில் இறங்குபவராக,  உடலோடு உள்ளமும் தூய்மையானவராக இலட்சியம் நிறைந்தவராக, எடுத்த காரியங்கள் யாவினும் வெற்றியடைபவராக நீதி நெறி வழுவாதவராக இருந்தால் அத்தலைவனுக்கு எவ்வித தீங்கும், அழிவும் என்றும் நேராது என்றார் கவிசக்கரவர்த்தி கம்பர்.

தலைமை தன்னிகரற்றது!

உண்மையான தலைமையே,  உன்னதமானது!

(தொடரும்)

கட்டுரையாசிரியர்: காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/16/w600X390/im8.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/16/தன்னிலை-உயர்த்து---14-3021591.html
3021589 வார இதழ்கள் இளைஞர்மணி மெக்கட்ரானிக்ஸ் என்ஜினியரிங் படிக்கலாம்!  - எம்.அருண்குமார் DIN Tuesday, October 16, 2018 03:32 PM +0530 ஐந்து முக்கிய துறைகளை உள்ளடக்கிய படிப்பாக மெக்கட்ரானிக்ஸ் படிப்பு உள்ளது.  மெக்கானிக்ஸ், இன்பர்மேடிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமேஷன், ரோபோடிக்ஸ் ஆகிய முக்கிய 5 துறைகளை உள்ளடக்கியுள்ளது. மெக்கானிக்கல் என்ஜினியரிங் துறையில் உயர்படிப்பாக மெக்கட்ரானிக்ஸ் துறை உள்ளது.

மெக்கானிக்கல் என்ஜினியரிங் துறையின் முதுகலை படிப்பில் மெக்கட்ரானிக்ஸ் துறை முக்கியத்துவம் பெற்றுள்ளது.   

மெக்கட்ரானிக்ஸ் படித்தவர்களுக்கு எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், மைனிங், டிரான்ஸ்போர்ட், கேஸ் அன்ட் ஆயில், டிஃபன்ஸ், ரோபோடிக்ஸ், ஏரோஸ்பேஸ், ஏவியேஷன், ஆர்மி, நேவி, ஏர்போர்ஸ் ஆகிய துறைகளில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

மெக்கட்ரானிக்ஸ் சம்பந்தமான படிப்புகள் :
Master of Engineering in Mechatronics Engineering
Master of Technology in Mechatronics Engineering

மெக்கட்ரானிக்ஸ் சம்பந்தமான படிப்பு நடத்தும் சில கல்வி நிறுவனங்கள்: 

VIT University (Vellore), 
Karpagam College of Engineering (Coimbatore),
Rajalakshmi Engineering College (Thandalam, Chennai)
Madras Institute of Technology (Chennai)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/16/w600X390/im10.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/16/மெக்கட்ரானிக்ஸ்-என்ஜினியரிங்-படிக்கலாம்-3021589.html
3021588 வார இதழ்கள் இளைஞர்மணி வேலை... வேலை... வேலை... இரா.வெங்கடேசன் DIN Tuesday, October 16, 2018 03:31 PM +0530 பரோடா வங்கியில்   வேலை

பதவி:  Chief Executive Officer, Technology Architect Lead, Program Manager, Quality Assurance Lead, Business Analyst Lead, Infrastructure Lead, Business Analyst, Quality Assurance Engineer,  Database Architect, Mobile Application Developer

வயது வரம்பு:  Chief Executive Officer பதவிக்கு 40 முதல் 50 வயதிற்குள்ளும்,  Business Analyst, Quality Assurance Engineer,  Database Architect, Mobile Application Developer பதவிக்கு 25 வயது முதல் 35 வயதிற்குள்ளும் பிற பதவிகளுக்கு 30  வயது முதல் 45 வயதிற்குள்ளும்  இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. பிற பிரிவு விண்ணப்பதாரர்களும் ரூ.100. 
விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.com என்ற வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய:  https://www.bankofbaroda.com/writereaddata/Images/pdf/Detailed_Advertisement.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.10.2018


உரத் தொழிற்சாலையில் (FACT)  அப்ரன்டீஸ் பயிற்சி

மொத்த காலியிடங்கள்: 24
பிரிவுகள்:   Computer Engineering,  Computer Science & Engineering,   Civil Engineering,  Chemical Engineering,  Mechanical Engineering, Electrical & Electronics Engineering, Electronics & Instrumentation,  Instrumentation & Control Engineering, Instrumentation Engineering 
தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட துறையில் கணினி அறிவியல், மெக்கானிக்கல், சிவில், கெமிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவுகளில் முதல்வகுப்பில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
வயது வரம்பு: பொதுப்பிரிவினர் 1993 அக்.2க்கு பின்னரும், ஓபிசி பிரிவினர் 1990 அக்.2க்கு பின்னரும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 1988 அக்.2க்கு பின்னரும் பிறந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.fact.co.in  என்ற  வலைதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்பத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்து, தேவையான   சான்றிதழ்களை ஸ்கேன் செய்யப்பட்ட இணைப்புகளாக ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்ஃச்ஹஸ்ரீற்ப்ற்க்.ஸ்ரீர்ம் என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய:  ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ச்ஹஸ்ரீற்.ஸ்ரீர்.ண்ய்/நங்ஸ்ரீன்ழ்ங்/ஹக்ம்ண்ய்/ஜ்ழ்ண்ற்ங்ழ்ங்ஹக்க்ஹற்ஹ/ஈர்ஸ்ரீன்ம்ங்ய்ற்ள்/அக்ஸ்ற்-உய்ஞ்ப்ண்ள்ட்ஜ4ர்ஸ்ரீற்018.ல்க்ச் என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.10.2018


மத்திய அரசு துறைகளில்  பொறியாளர்  
பணிகளுக்கான தேர்வு 
 (UPSC - Engineering Service Exam-2
019)


மொத்த காலியிடங்கள்: 581
தகுதி:   பிஇ அல்லது பி.டெக்  (சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன்) படித்திருக்க வேண்டும்.  முதுகலை பட்டம் (Radio Physics, Radio Engineering, Electronics & Telecommunication, Wireless Communication Electronics)ஆகிய துறைகளில்  பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: யுபிஎஸ்சி நடத்தும் முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.200.    எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு  விண்ணப்பக் கட்டணம் இல்லை.  
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற வலைதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.  
மேலும் விவரங்கள் அறிய: http://www.upsc.gov.in/sites/default/files/Notification}ESE}2019}Engl_correctlinks.pdf  என்ற வலைதள லிங்கில் சென்று பாருங்கள். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.10.2018


தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் வேலை

மொத்த காலியிடங்கள்: 178 
பதவி: District Coordinator 
 
தகுதி: கணினி அறிவியல் துறையில் பட்டம் அல்லது டிப்ளமோ முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  
பதவி: District Project Assistants 
தகுதி: மேலாண்மை, சமூக அறிவியல், ஊட்டச்சத்தியல் துறையில் பட்டம் அல்லது முதுகலை டிப்ளமோ முடித்து 2 ஆண்டு பணி அனுபம் பெற்றிருக்க வேண்டும்.
பதவி: Block Coordinator (Technical)  
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
பதவி: Block Project Assistants   
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: அனைத்து பணியிடங்களுக்கும் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம், கணினியை கையாளும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: www.icds.tn.nic.in என்ற வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும்  முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
  முகவரி: இயக்குநர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள், எண்: 6, பம்மல் நல்லதம்பி தெரு, எம்.ஜி.ஆர். சாலை, தரமணி, சென்னை - 600 113.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 24.10.2018
மேலும்  விவரங்கள் அறிய: http://icds.tn.nic.in/Notification.pdf என்ற  வலைதள லிங்கில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/16/w600X390/im9.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/16/வேலை-வேலை-வேலை-3021588.html
3021585 வார இதழ்கள் இளைஞர்மணி பிரிண்டிங் டெக்னாலஜி படிப்புகள்! - எம்.அருண்குமார் DIN Tuesday, October 16, 2018 03:20 PM +0530 பிரிண்டிங் டெக்னாலஜி படித்தவர்களுக்கு அச்சுத் துறையில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.  அச்சுத் துறையும் மிகப்பெரிய துறையாகும். கதைகள், கவிதைகள், பாட புத்தகங்கள், ஆராய்ச்சி நூல்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆராய்ச்சி இதழ்கள், அறிவியல் நூல்கள், வரலாற்று நூல்கள், வார இதழ்கள், நாளிதழ்கள், கையேடுகள் என அனைத்தும் அச்சுத்துறையையே நம்பி இருக்கின்றன.  அரசு,  தனியார் நிறுவனங்களுக்குத் தேவையான தகவல்கள் புத்தகங்களாகவும், கையேடுகளாகவும் அச்சடிக்கப்படுகின்றன.  இவ்வாறு அச்சுத்துறை அனைத்து துறைகளுடனும்  பின்னிப்பிணைந்துள்ளது.  அதனால் பிரிண்டிங் டெக்னாலஜி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.   சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. 
சாதாரண பட்டயப் படிப்பு முதல் இளநிலை, முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புகள் என பிரிண்டிங் டெக்னாலஜி  படிப்புகள் உள்ளன. 

பிரிண்டிங் டெக்னாலஜி பொறியியல் படிப்பு நடத்தும் கல்வி நிறுவனங்கள்:

Anna University, College of Engineering Guindy, Chennai.
Jadavpur University, Faculty Of Engineering and Technology, Kolkata.
Manipal Institute of Technology, Manipal.
JNTU College Of Engineering, Hyderabad.
Calicut University : Institute of Engineering and Technology, 
Malappuram.
Institute of Printing Technology, Kerala.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/16/w600X390/im7.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/16/பிரிண்டிங்-டெக்னாலஜி-படிப்புகள்-3021585.html
3021584 வார இதழ்கள் இளைஞர்மணி வாங்க இங்கிலீஷ் பேசலாம் -  161 ஆர்.அபிலாஷ் DIN Tuesday, October 16, 2018 03:18 PM +0530 புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் மருத்துவருக்கான காத்திருப்போர் அறையில் இருக்கிறார்கள். அப்போது புரொபஸர் லூயிஸ் கேரல் எனும் பிரசித்தி பெற்ற எழுத்தாளர் தனது Jabberwocky கவிதையில் புதிதாய் உருவாக்கி ஆங்கிலத்துக்கு அறிமுகப்படுத்தின neologism எனப்படும் இருவேறு சொற்களை ஒட்டுப்போட்டு உருவாக்கின புதுச்சொற்களைப் பற்றி பேசுகிறார். கேரல் அறிமுகப்படுத்தின Frumious, galumph போன்ற சொற்களை அவர் விளக்குகிறார். அப்போது நடாஷா ஸ்ரீட்ர்ழ்ற்ப்ங் எனும் சொல்லைப் பற்றி கேட்கிறாள். 

புரொபஸர்: ஆமாம் chortle என்பது ஒரு சுவாரஸ்யமான ஒட்டுச் சொல். இது chuckle மற்றும் snort ஆகிய சொற்களின் இணைவு. Chortle என்றால் சத்தமாய் குதூகலமாய் சிரிப்பது. இதன் மூலச் சொற்களைப் பார்ப்போம். Chuckle என்றால் அமைதியாய் தனக்குளாகவே சிரித்துக் கொள்வது. அதாவது சிலரைப் பார்த்து கேலி பண்ணும்போது நக்கலாய் வாய்க்குள்ளாகவே சிரித்துக் கொள்வார்களே அது. Snort என்பது ஒரு சுவாரஸ்யமான சொல். ஆங்கிலத்தில் பலவகையான சிரிப்புகள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் தனித்தனிச் சொல் வைத்திருக்கிறார்கள். Snort என்பது மூக்கால் ஒரு வகையாய் சிரிப்பது. 

கணேஷ்: வெண்ணிற ஆடை மூர்த்தி ஸ்டைலில்...

புரொபஸர்: யெஸ்... கிட்டத்தட்ட. திடீரென நம்மை மறந்து சத்தமாய் வேகமாய் சிரிக்கையில் மூக்கு வழி மூச்சு விடுவோமே அது தான் இது. Chuckle மற்றும் chortle ரெண்டையும் சேர்த்தால் என்னவாகும் யோசி?

கணேஷ் குறட்டை ஒலியுடன் சிரித்துப் பார்க்கிறான்: க்ர்ர்ர்... கிளக்... ஹா ஹா
புரொபஸர்: உண்மையில் chortle என்பது அதுவல்ல. chortle எனும் சொல்லின் ஆங்கில விளக்கம் இது: laugh in a noisy, gleeful manner.
கணேஷ்: Gleeful என்றால்?
புரொபஸர்: Glee என்றால் உவகை, பேருவகை. பெரிய அதிர்ஷ்டம் அடிக்கும் போதோ அல்லது நம் எதிரிகளுக்கு பிரச்னை வரும் போதே நாம் அடையும் மிகையான உற்சாகமே ஞ்ப்ங்ங். ஒருவித 
elation, euphoria, exhilaration.
கணேஷ்: ஓ... இப்போது விளங்கியது. பிக்பாஸில் ஒவ்வொரு சின்ன சின்ன விசயத்துக்கு ஐஷ்வர்யா கத்துவாங்களே அதானே?
புரொபஸர்: ம்ம்ம்... கிட்டத்தட்ட.  ஐ.பி.எல் போட்டி அரங்குகளில் நம் அணி வெல்லும் போது, ஒரு திரையரங்கில் ஹீலோ வில்லனை அடித்துத் துவைக்கும் போது நாம் மனம் திளைத்து கூவுவோமே அந்த screaming with delight அது ஒருவித chortle தான்.  
நடாஷா சத்தமெழுப்பாமல் சிரிக்கிறாள்.
புரொபஸர்: She is sniggering? 

(நடாஷாவை நோக்கி) சரியா?
நடாஷா வேடிக்கையாய்: சேச்சே...
புரொபஸர்: Yes you are. Snigger என்றால் வாயை மூடி சத்தமெழுப்பாமல் ஏளனமாய் சிரிப்பது. அது ள்ய்ண்ஸ்ரீந்ங்ழ் என்றால் வாயைப் பொத்தி சிரிப்பது. A smothered laugh.
.
கணேஷ்: நமுட்டுச் சிரிப்பு
புரொபஸர்: Bingo
கணேஷ்: Bingo என்றால்?
புரொபஸர்: அது ஒரு வியப்பொலி அல்லது கூவிளி. ஒரு விசயத்தை சரியாக வெற்றிகரமாய் நிகழ்த்தினால் அந்த திகைப்பை வெளிப்படுத்துவதற்கான 
exclamation தான் bingo.
கணேஷ்: சூப்பர் மாதிரி
புரொபஸர்: ஆமாம். இந்த பிங்கோ என்பது ஒரு சீட்டு விளையாட்டு. அதில் சரியான வரிசைக் குறிகளை ஒருவர் சரியாய் கணித்துச் சொன்னால் அவர் வெற்றி பெறுவார். ஆகையால் அவர் வென்றதும் bingo என கத்துவார். அப்படித் தான் ஒருவர் சரியான ஒன்றை செய்து காட்டியதும் bingo எனக் கூவும் வழக்கம் உண்டானது. நான் சீட்டே விளையாடுவதில்லை, நாம் யாரும் இங்கே சீட்டாடவும் இல்லை, ஆனால் நான் இப்போது bingo சொன்னேன் பார்த்தாயா!
கணேஷ்: சார் smothered laugh என்று சொன்னீங்க. ஸ்மாதர் என்றால் என்ன?
புரொபஸர்: நல்ல கேள்வி. Stifle, suffocate
 என அதற்கு அர்த்தம். மூச்சுத் திணறடிப்பது, அப்படி செய்து கொல்வது. கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் ஸ்பின் பந்தை இறங்கி வந்து தடுத்தாடும் போது he smothered the spin என்று வர்ணனையாளர் கூறுவார். அதன் பொருள் சுழற்றி வீசப்பட்ட பந்து பிட்சில் பட்டதும் அது துள்ளி எழுந்து மேலும் சுழலாத வகையில் பேட்ஸ்மேன் அதன் அருகே போய் அதை "மூச்சுத் திணறடித்து' படுக்க வைத்து விட்டார் என்பது.
Smothered என்பது ஒரு கொடூரமான சொல். ஆனால் இங்கே அது கவித்துவமாய் பயன்படுகிறது பார்த்தாயா?
கணேஷ்: அடப்பாவமே

(இனியும் பேசுவோம்)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/16/w600X390/im6.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/16/வாங்க-இங்கிலீஷ்-பேசலாம்----161-3021584.html
3021581 வார இதழ்கள் இளைஞர்மணி நீ... நான்... நிஜம்! -40: அடிமையின்... அடிமையா...  நீ? சுகி. சிவம் DIN Tuesday, October 16, 2018 03:09 PM +0530 நான் ஏற்கெனவே பலமுறை எழுதியும், பேசியும் வருகிற விஷயம் பற்றி இப்போதும் சொல்கிறேன். உலகத்தின் சிந்தனைப் போக்கை உலுக்கிய இருபெரும் மனிதர்கள் கார்ல் மார்க்ஸ் மற்றும் சிக்மன்ட் ஃபராய்டு. ஆனால் இருவரும் ஒரே உண்மையின் இருவேறு பக்கங்களைப் பார்த்து விட்டு அதுமட்டுமே உண்மை என்று கருதிவிட்டார்கள். உலகையும் நம்ப வைத்துவிட்டார்கள். இருவரும் உண்மைதான் சொன்னார்கள். ஆனால் முழு உண்மையைச் சொல்லவில்லை அல்லது உண்மையின் அடி ஆழத்தைத் தொடவில்லை. 

இந்த உலகில் பிறக்கும் கோடிக்கணக்கான மனிதர்களும் கோடிக்கணக்கான தவறுகள் செய்கிறார்கள். காரணம் என்ன என்று ஆராய்ந்த கார்ல் மார்க்ஸ் சமூக அமைப்புதான் காரணம் என்றார். அது பொய்யல்ல. சமூகம் தான் தனி மனிதனை வடிவமைக்கிறது, செதுக்குகிறது, அடக்குகிறது. கொப்பளிக்க வைக்கிறது. எனவே சமுதாயம் பொதுவுடமைச் சமுதாயமாக வடிவமைக்கப்பட்டால் தனிமனித ஒழுங்கீனங்கள் மறைந்து விடும் என்று மார்க்ஸ் சிந்திக்கிறார். இது உண்மை. ஆனால் முழு உண்மையல்ல. சுதந்திரச் சமுதாயத்தில் அடிமை மனிதர்களும் அடிமைச் சமூகத்தில் சுதந்திர மனிதர்களும் தோன்றியது உண்டு. சமூகம் எப்படி இருந்தாலும் வீர்யமான வித்துக்களாக விழுந்து முளைத்த தனிமனித இயல்புள்ளவர்கள் இருக்கிறார்கள். 

மார்க்ஸýக்கு நேர்மாறாக ஃபராய்டு சிந்திக்கிறார். "ஒவ்வொரு மனிதனும் அவனது ஆழ்மனத்தால் மட்டுமே இயக்கப்படுகிறான். தன்னுணர்வற்ற அவனது ஆழ்மனம் அவனது நடத்தைகளைத் தீர்மானிக்கிறது. ஆழ்மனத்தை எதிர்த்து இயங்கும் ஆற்றல் மனிதர்களுக்கு இல்லை' என்கிறார் சிக்மண்ட் ஃபராய்டு. 

இருவரும் சேர்ந்து உலகிற்கு ஒரு நல்ல காரியம் செய்துவிட்டார்கள். எவனும் அவனவன் தவறுக்கு அவன் பொறுப்பல்ல என்று பிரகடனப்படுத்திவிட்டார்கள். கூட்டம் கூட்டமாகச் சிந்திப்பவர்களுக்கும், வெறும் தகவல் அறிவு மட்டுமே உள்ளவர்களுக்கும், கட்சி கட்டிக்கொண்டு பேசுபவர்களுக்கும் நான் சொல்வது பிடிக்காது. காரணம் அவனவன் தவறுகளுக்கு அவனவன் தான் பொறுப்பாளி. மார்க்ஸின் மனிதன் கூட்டத்தை, சமூகத்தைக் கைகாட்டி விட்டு நழுவி ஓடுகிறான். ஃப்ராயிடின் மனிதன் தன்னுணர்வற்ற ஆழ்மனத்தின் இருண்ட பகுதியைக் கைகாட்டி விட்டு தப்பித்து ஒளிந்து கொள்கிறான். யாருடைய தவறுக்கும் அவரவர் பொறுப்பில்லை என்பது மேலோட்டமான உண்மை. ஆனால் நான்தான் என் சகல குழப்பங்களுக்கும் தோல்விகளுக்கும் பிழைகளுக்கும் பொறுப்பு என்பதை உணர்வதே விழிப்புணர்வு. 

பொறுப்பான மனிதனின் முதல் பிறப்பு. முதலில் சிக்கலைப் பேசுகிறேன். பின்னர் தீர்வைப் பேசுகிறேன். ஒரு கதை சொல்லுகிறேன். ஓர் அருமையான அரசர். அவருக்கு நெருக்கமான ஓர் அடிமை. அப்படி ஒரு பணிவு. அப்படி ஒரு தொண்டு. அவன் ஊழியம் அரசரை உருக்கிவிட்டது. இவனுக்கு ஏதாவது ஒரு நன்மை செய்துவிட வேண்டும். தனக்குச் செய்த பணிவிடைகளுக்குப் பரிசாக அவன் விரும்பியதைத் தரவேண்டும் என்று தீர்மானித்தார். 

""உனக்கு என்ன பரிசு வேண்டும்.. தயங்காமல் கேள். நீ எனக்குச் செய்த பணிவிடைகளுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்'' என்று அடிமையிடம் கேட்டார். 

அவனோ ""எதுவும் வேண்டாம்.. அரசர் அண்மையே போதுமானது. பரிசு பெற்றால் என் ஊழியமே வணிகமாகி விடும்.. அன்பைக் கொச்சைப்படுத்தாதீர்கள்'' என்று மன்றாடினான். 

அரசர் நெகிழ்ந்து போனார். பிடிவாதமாகப் பரிசு பெற்றே தீரவேண்டும் என்று வற்புறுத்திப் போராடி ""உனக்கு என்ன ஆசை.. ? வாழ்நாள் ஆசை? கேள்... கேள்'' என்று கட்டாயப்படுத்தினார். 

கண்ணீருடன் மறுத்த அடிமை ""சரி.. நீங்கள் இவ்வளவு சொல்வதால் சொல்கிறேன்.. ஒரு நாள்.. ஒரே ஒரு நாள்.. நான் இந்தப் பேரரசின் அரசனாக அமர ஆசைப்படுவதுண்டு. அப்போதும் உங்களைப் பிரியமாட்டேன். நீங்கள் தான் என் இடத்தில் என் அடிமையாய் மெய்க்காப்பாளனாக இருக்க வேண்டும்''  என்று உருகி உருகி கண்ணீர் விட்டான். 

""ப்பூ.. இவ்வளவுதானா? இதென்ன ப்ரமாதம்..'' என்றவர் நேரே கொலு மண்டபம் வந்து அடிமைக்கு பட்டாபிஷேகம் செய்தார். சிம்மாசனத்தில் அமர்த்தி தானே சாமரம் வீசினார். கூனிக்குறுகி அமர்ந்திருந்தவனை கம்பீரமாக உட்காரச் சொல்லி சேனாபதி, அமைச்சர்களை நோக்கி கர்ஜித்தார். ""இவர் இன்று உங்கள் அரசர். வணங்குங்கள். இவரது எல்லா உத்தரவுகளையும் மதிக்க அதன்படி நடக்க நீங்கள் கடமை உடையவர்கள். மீறுவது ராஜ துரோகம்'' என்றார். 

மதிய விருந்து, நாட்டியம், என்று ஒரு நாள் ராஜா கொண்டாடப்பட்டார். மாலை புது அரசர் சேனாபதியை அழைத்தார். ""இந்த அடிமையைக் கைதுசெய்யுங்கள்'' என்று முன்னாளை இன்னாள் கை காட்டினார். பேச வாய் திறந்த மாஜி மன்னரைப் பார்த்து ""அடிமையே மூடு வாயை'' என்று உறுமிவிட்டு ""இரவுக்குள் இந்த அடிமையைத் தூக்கிலிடுங்கள்'' என்று ஆணையிட்டார். ராஜ உத்தரவுக்கு எப்போதும் கட்டுப்பட்டுப் பழகிய சேனாபதி, அமைச்சர்கள் எல்லோருமே வாய்மூடி அரச ஆணையை நிறைவேற்றினர். 

இப்போது அடிமை நிரந்தர அரசராகி விட்டார். எல்லா அடிமைகளும் எப்படியாவது எஜமானன் ஆவதற்கு அவரவர் சக்திக்கேற்ற குறுக்கு வழிகளை எப்போதும் வைத்திருக்கிறார்கள். இது ஏதோ அரசியல் கதை என்று எண்ணினால் நீங்கள் ஏமாந்து போவீர்கள். நம் கதை... சொந்தக்கதை.. சோகக்கதை. மனம் தான் நமது விசுவாசமான அடிமை. அதை அடிமையாக வைத்து வேலை வாங்கத் தெரிய வேண்டும். எப்போதும் அது எஜமானராகக் காத்துக்கொண்டே இருக்கும். என்றாவது எப்போதாவது ஒருமுறை மனம் என்ற அடிமையை நீங்கள் அரசராக்கிவிட்டால் அது உங்களைக் கொன்றொழித்து விடும். நீங்கள் மீண்டும் பிழைக்கவே முடியாது. மனத்தை நீங்கள் வேலை வாங்க வேண்டும். அது உங்களை ஆட்டி வைக்க எப்படி அனுமதிக்கலாம்? 

""நான் மனமல்ல.. மனம் என் அடிமை''  என்கிற ஞான மந்திரத்தை உங்களுக்குத் தருகிறேன். இதை ஜபிக்காதீர்கள். உணருங்கள். மனதுக்கு உத்தரவு போடுங்கள். மனதின் உத்தரவுகளை நிறைவேற்றும் மடத்தனமான அரசராக ஆகிவிடாதீர்கள். மார்க்ஸýம் ஃப்ராய்டும் உங்கள் எஜமானப் பதவியைப் பிடுங்கிவிட்டார்கள். சமூகம்  உங்களை ஆட்டிப் படைக்கிறது. ஆழ்மனம் உங்களை இயக்குகிறது.. என்றால் நீங்கள் யார்? அடிமைகளா? நீங்கள் அடிமைகளல்ல... எஜமானர் என்று அறியுங்கள். 

என் பெறா மகள் ரேகா அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்று குறித்துச் சொல்லுகிறேன். இளைஞர்களை மனம் புகைபிடிக்கச் சொல்லும்... சினிமா பார்க்கச் சொல்லும்... காமம் ஒருபுறம் கண்ணடித்து அழைக்கும்... அரட்டை அடிக்க விரட்டும்... நேரம் கொல்ல, உழைக்க மறுக்க சோம்பல் செய்ய தூண்டும்... நண்பர்களே மனதிடம் சொல்லுங்கள். கம்பீரமாக கர்ஜியுங்கள் "முட்டாள் மனமே... நீ என் அடிமை. நான் உன் எஜமானன்' என்று உறுதி சொல்லுங்கள். அது கேட்காது... முரண்டு பிடிக்கும்... தாஜா செய்யும்.. தடுமாறத் தூண்டும். தவறுகள் செய்ய மனம் தூண்டும் போதெல்லாம் உரக்கச் சொல்லுங்கள்... "முடியாது.. முடியாது... முடியவே முடியாது' என்று. இவை ஒலித்தொகுப்போ.. வார்த்தையோ அல்ல. மனதை ஒடுக்கும் மகாமந்திரம், யோகானந்த பரமஹம்சர் சொன்னது. ""முடியாது... முடியாது... முடியவே முடியாது''  என்பதைத் தவறு செய்யத் தூண்டும் மனதிடம் சொல்லச் சொல்ல புலியாக உறுமிய மனம் பூனையாகி மீண்டும் எலியாகி கரப்பானாகி கொசுவாகி கரைந்து கரைந்து காணாமல் போய்விடும். விளையாட்டில்லை. நண்பர்களே... நச்சரிக்கும் மனதைப் பார்த்து உத்தரவிடப் பழகுங்கள். உங்கள் வாழ்க்கை மாபெரும் உயரம் தொடும். 

இளம் வயதில் ஆண் பெண் கவர்ச்சி தவிர்க்க முடியாதது தான். ஆனால் அதுவே முழுநேர வாழ்வாகாதே. சினிமாக்களில் பக்கத்துப் பக்கத்து பெஞ்சுகளில் இருக்கும் பையனும் பெண்ணும் புத்தகத்தை ஒரே நேரத்தில் கீழே போட்டு, ஒரே நேரத்தில் குனிந்து எடுக்க முற்பட்டு, ஒரே நேரத்தில் மண்டையை முட்டிக் கொள்வதும் உடனே நூறு காதல் பிசாசுகள் (தேவதைகள் என்ன தேவதைகள்) ஆடிப்பாடி ஏ.ஆர். ரஹ்மான் குழுவினர் இன்னிசையோடு பாடி ஆடத் தயாராகிற கோமாளித்தனங்கள் சமூக அவலங்கள். எத்தனைப் பள்ளியில் இப்படி நடக்கமுடியும்? நம் சினிமா டைரக்டர்களுக்குக் கல்லூரி ஆசிரியர்கள் எல்லாம் அசட்டுக் காமெடியன்களாகத் தெரிவது கேவலம் இல்லையா? காமெடியன்களையே கல்லூரிப் பேராசிரியர்களாகக் காட்டி கல்வியை ஏன் சினிமாக்காரர்கள் கீழ்மைப்படுத்துகிறார்கள்?,

தெருவில் ஒரு பெண் நாய் போனால்... ஏழெட்டு ஆண் நாய்கள் பயங்கரமாகக் குரைத்தபடி கூட்டமாகப் பின் தொடரும்...இதேபோல் ஒரு பெண் பின்னாலும் ஆறேழு ஆண்கள் அலைவது அருவருப்பாக இல்லையா? ஒரு பெண்ணை ஏன் பல ஆண்கள் துரத்துகிறார்கள் என்ற கேள்விக்கு  இறையன்பு அருமையான பதில் சொல்லி இருந்தார். உயிர்க்குல படைப்பிலேயே பெண்ணுள் இருக்கும் ஒற்றை கருமுட்டையை நோக்கி ஆயிரக்கணக்கான உயிரணுக்குள் பாய்வது தானே வழக்கம். பெண் இருப்பில் இருக்க ஆண் துரத்துவது படைப்பின் பெருநியதிதான். ஆனாலும் இதை வெல்ல வேண்டாவோ? தவறான ஆசைகள் வந்தால் ""முடியாது... முடியாது... முடியவே முடியாது'' என்று சொல்ல வேண்டாவோ?

(தொடரும்)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/16/w600X390/im5.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/16/நீ-நான்-நிஜம்--40-அடிமையின்-அடிமையா--நீ-3021581.html
3021580 வார இதழ்கள் இளைஞர்மணி பொறியியல் படிப்பு... தேவை... புதிய பார்வை! - வி.குமாரமுருகன் DIN Tuesday, October 16, 2018 03:05 PM +0530 உற்பத்தி சார்ந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கும் கல்வி முறையாக இல்லாமல் வேலை தேடி அலையும் வகையில் சில பொறியியல் பாடத்திட்டங்கள் இருப்பதால்,  அப்படிப்பட்ட  பொறியியல் கல்வி மேல் இருந்து வந்த மோகம் படிப்படியாக குறைந்து வருகிறது.     

பொறியியலில் மாற்று கல்வி முறைகளை புகுத்தா விட்டால் இன்னும் சில ஆண்டுகளில் பொறியியல் பாடப்பிரிவுகள் என்பது வீணான கல்வி முறையாகக் கூட மாறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  

அன்று ஊருக்கு ஒருவரோ, இருவரோ மட்டுமே பொறியியல் படித்து வந்தனர். அன்றைய காலத்தில் தேவைக்கேற்ற பொறியியல் பட்டதாரிகள் இல்லாத நிலையில் படித்த பெரும்பாலானோருக்கு நல்ல ஊதியத்தில் உடனடியாக வேலை கிடைத்து வந்தது. 

ஆனால், இன்றோ நிலை வேறு. சிறிய கிராமத்தில் கூட பொறியியல் படித்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்காக உயர்ந்து விட்டது. தடுக்கி விழுந்தால் பொறியியல் பட்டதாரியின் வீட்டு முன்தான் விழ முடியும் என்ற வகையில் தெருக்கள்தோறும் பொறியியல் பட்டதாரிகள் நிறைந்து வழிகின்றனர். நிகழாண்டில் கூட தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் சுமார் 1 லட்சம் பொறியியல் இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தமிழகம் முழுவதும் சுமார் 509 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள 1,72,581 இடங்களுக்கான கலந்தாய்வு அண்ணா பல்கலை கழகம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டில் சுமார் 74,601 மாணவர்கள் மட்டுமே பொறியியல் படிப்புகளைத் தேர்வு செய்துள்ளனர்.

இதையடுத்து நிகழாண்டில் 97,980 இடங்கள் காலியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இத்தகைய போக்கினால் பல கோடி ரூபாய் முதலீட்டில் பொறியியல் கல்லூரிகள் தொடங்கியவர்கள் கல்லூரிகளை நடத்த முடியாமல் தவித்து வரும் நிலையும் உருவாகி வருகிறது. 

முன்பெல்லாம் பொறியியல் பட்டம் பெற்றால் மட்டுமே சாஃப்ட்வேர் நிறுவனங்களில் வேலை பெற முடியும் என்ற நிலை இருந்து வந்தது. மேலும், பெரிய நிறுவனங்களிலும் அத்தகைய பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போதோ அந்நிலை இல்லை. கலை அறிவியல் கல்லூரிகளில் கணினி சார்ந்த பட்டப் படிப்பு   முடித்தவர்களையும் பல நிறுவனங்கள் விரும்பி வேலைக்கு அமர்த்தி வருகின்றன.   

இதன் காரணமாக பொறியியல் படித்தவர்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொறியியல் படிப்புக்கு தொடர்ந்து மவுசு குறைந்து வருகிறது. 

பொதுவாக மற்ற கலை, அறிவியல் கல்லூரிகளில் இருப்பது போல் வெறும் ஏட்டளவு விஷயங்களே பொறியியலிலும் இருப்பதால் அதனால் பலன் எதுவும் இல்லை. பொறியியல் பிரிவு மாணவர்களுக்கு தியரியை விட செயல்முறைக்கு கூடுதல் கவனம் செலுத்தி பாடத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.  நேரடிப் பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும். அப்படி செய்தால் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் எளிதாக வேலை பெறவோ அல்லது புதிய நிறுவனங்களை உருவாக்கவோ முடியும். 

பொதுவாகவே புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி, அதன் மூலம் புதிய கண்டுபிடிப்புக்களை கண்டுபிடித்து சந்தைப்படுத்தும் தொழில்நுட்பங்களைப் பொறியியல் பாடத்திட்டத்தில் சேர்த்தால் மட்டுமே பொறியியல் படிப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். மேலும், பொறியியல் படித்தவர்கள் சுயதொழில்கள் தொடங்குவதற்கு ஏற்ற வகையில் போதிய அடிப்படையான விஷயங்களை பாடத்திட்டத்தில் கொண்டு வந்தால் மட்டுமே பொறியியல் பட்டதாரிகள் சுயமாக தொழில் தொடங்கவும், பல நூறு பேருக்கு வேலை வாய்ப்பும் வழங்க முடியும். வேலை வாய்ப்புக்களையும், புதிய தொழில்நுட்பங்களையும் உருவாக்கும் கல்வி முறையை உள்ளடக்கியதாக பொறியியல் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டால் மட்டுமே எதிர்காலத்தில் பொறியியல் பட்டம் கெளரவக்குறியீடாக மாறும். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/16/w600X390/im3.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/16/பொறியியல்-படிப்பு-தேவை-புதிய-பார்வை-3021580.html
3021579 வார இதழ்கள் இளைஞர்மணி நம் வாழ்க்கை... நம் கையில்! - க. நந்தினி ரவிச்சந்திரன் DIN Tuesday, October 16, 2018 03:03 PM +0530 நம் வாழ்வின் பெரும்பான்மையான பகுதியை நாம் பிறருக்காகவே வாழ்கிறோம். நமக்காக வாழ மறந்து, நாம் விரும்பியதை செய்யத் தவறி, நம் சொந்தங்களுக்காகவும், நம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்துக்காகவும் மட்டும் வாழ பழகிவிட்டோம். அதனால்தான் நம்மில் பலருக்கு வாழ்க்கை சுவாரசியமாக இல்லை என்று அடிக்கடி தோன்றும்.  ஏன் நம் வாழ்க்கை சுவாரசியமாக இல்லை? என்பதை யோசிக்கக் கூட முடியாத அளவுக்கு நாம் இந்த வாழ்க்கையில் ஓடிக் கொண்டிருக்கிறோம். அதுமட்டுமன்றி,  இந்த பரபரப்பான உலகில் நம் வாழ்க்கை நம் கையில்தான் உள்ளது என்பதை நாம் ஏனோ மறந்து விட்டோம். 

வாழ்வின் சுவாரசியத்தைப் பற்றி "ஆப்பிள்' நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஒருமுறை கூறும் போது, "" மரணப் படுக்கைக்கு செல்லும் போது, நான் தான் உலகின் மிகப்பெரும் செல்வந்தன் என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்காது. நான் ஒவ்வொரு நாளும் இரவு படுக்கைக்கு செல்லும் போதும் இன்று நான் விரும்பிய ஓர் அற்புதமான செயலை செய்து முடித்தேன் என்பதே எனக்கு உண்மையான மகிழ்ச்சியை அளிக்கும்'' என்று கூறினார். அவரது கூற்றில் உள்ள உண்மையை மறந்து, நம்மில் பலர்  பணத்தை தேடும் நோக்கில், தமது திறமையை தொலைத்தது மட்டுமின்றி, தம் வாழ்விற்கு சிறிதும் பயனற்ற வேலைகளை செய்து வாழ்க்கையையே தொலைத்து விடுகின்றனர். 

இந்த  வாழ்க்கை நமக்கு ஒவ்வொரு நாளும் அற்புதமான 24 மணி நேரத்தை அதாவது 86,400 விலைமதிப்பற்ற நொடிகளை கொடையாக அளிக்கிறது. ஆனால் அதை சரியாகப் பயன்படுத்தத் தெரியாத நாம் அவற்றில் பெரும்பாலான பொழுதுகளை வீணாய்க் கழித்து விடுகிறோம். இதில் இன்னும் வருத்தமானது என்னவென்றால், அந்த அற்புதமான நொடிகளில் நம்மைச் சுற்றி இருந்த பல அற்புதமான வாய்ப்புகளை நாம் காணக்கூட தவறி விடுவது தான். 

இதில் கவனித்தக்கது என்னவென்றால் நம்மில் பலர் நாம் ஏன் நம் வாழ்விற்கு சிறிதும் பலனளிக்காத விஷயங்களில் நேரத்தையும், உழைப்பையும் செலவிடுகிறோம் என்பதை அறியாமலேயே வாழ்வது தான். நமது விருப்பம் என்ன? நமது விருப்பத்தை பூர்த்தி செய்ய நமக்கு என்ன தேவை? நம் வாழ்வின் பயன் என்ன?  என்ற கேள்விகளுக்கு  விடையை யோசிக்க கூட நாம் நேரத்தை 
செலவிடுவதில்லை! 

நமது வாழ்க்கையை அழகாக்க, பிள்ளைப் பருவத்தில்  நாம் கண்ட கனவுகளை எல்லாம் பட்டப்படிப்பு முடித்ததும் நாம் ஏனோ மறந்து விடுகிறோம். நாம் பயணிக்க வேண்டிய பாதை எது என்பதை தீர்மானிக்க தவறி விடுகிறோம். உலகம் போகும் போக்கில் நமது திறமைக்கும், கனவுக்கும் பொருத்தமில்லாத வேலைகளைச் செய்து கொண்டு நமது வாழ்வை நாமே சமாதானப்படுத்திக் கொண்டு வாழ்கிறோம்.

சந்தையில் காய்கறி வாங்கும் போது அதை பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கும் நாம், வாழ்க்கையை அலங்கரிக்கப் போகும் அரிய வாய்ப்புகளை தேர்ந்தெடுப்பதில் அத்தகைய அக்கறையைச் செலுத்துவதில்லை. 

ஆனால் தனது பாதையை சரியாக தீர்மானித்து, தனது விருப்பத்தை நிறைவேற்றும் பணியை ஏற்று தனது இலக்கை நோக்கி நடந்தவர்களே சாதனையாளர்களாகவும், வாழ்க்கையை நன்கு படித்தவர்களாகவும் உலகத்தாரால் புகழப்படுகின்றனர். 

முடிவு உன் கையில்: வாழ்வில் வெற்றி கண்டு மகிழ்ச்சியாக இருக்கும் சிலரை பார்க்கும்போது நம்மில் பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். அவர்களின் மகிழ்ச்சிக்குக் காரணம் தங்களுக்கு என்ன தேவை என்பதை அவர்கள் சரியாகத் திட்டமிட்டு செயல்படுத்தியது தான். நாமும் அவ்வாறு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டுமெனில் நமக்கான வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

பயனுள்ள வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை நாம் சரியாக திட்டமிடும் போது தான் நமக்கான வாய்ப்புகள் என்ன என்பது நம் கண்ணில் புலப்படும்.

நமது திட்டங்கள் செயலாக்கம் பெற பொறுமையும், முயற்சியும் அதைவிட முக்கியமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நம்மில் பலர் பொறுமையின்மை, பதற்றம், தம்முள் இருக்கும் அவநம்பிக்கை, சரியான முடிவு எடுக்க தெரியாதது ஆகிய  காரணங்களால், அவர்களது எண்ணங்கள் செயலாக்கம் பெறும் முன்னரே முயற்சியைக் கைவிட்டுவிடுகின்றனர். 

காலம் முழுவதும் கடினமாக உழைத்தால் மட்டும் நமது இலக்கை விரும்பியவாறு அடைய முடியாது. சாதுர்யத்துடன் கூடிய கடின உழைப்பே நம் எண்ணத்தை ஈடேற்றும் என்பதை நினைவில் வைத்து செயல்பட வேண்டியது 
அவசியம். 

உதாரணமாக, ஒரு நிறுவனம் தொடங்கி நீண்ட கால பயனை அதிலிருந்து பெற வேண்டுமென்றால் அதற்கு ஒரு நாள் உழைப்பு போதாது. தொடர்ந்து லாபம் பெறுவதற்குரிய முயற்சிகளை தொடர்ச்சியாக செய்துவருவதன் மூலமே நிலையான உயர்வைப் பெற முடியும். அது போலவே நமது வாழ்வை இனிமையாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற ஒரு குறுகிய கால முயற்சி பலனளிக்காது. தொடர்ந்து நிலையான பலனளிக்கக்கூடிய முயற்சிகளைச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் நம் வாழ்க்கை...நம் கையில்...

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/16/w600X390/im2.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/16/நம்-வாழ்க்கை-நம்-கையில்-3021579.html
3021578 வார இதழ்கள் இளைஞர்மணி ட்ரோன் கல்வி: அதிக வேலைவாய்ப்பு! - இரா.மகாதேவன் Tuesday, October 16, 2018 03:01 PM +0530 ராணுவ கண்டுபிடிப்பான ட்ரோன்கள் இப்போது பெரும்பான்மையான மக்களிடம் அறிமுகமாகி, அவர்களின் அன்றாட தொழில்களில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கட்டுமானம், விவசாயம், காப்பீடு, சுரங்கம், ஊடகம், காவல் ஆகிய துறைகளின் பயன்பாட்டில் அதீத வளர்ச்சி பெற்றுள்ளதோடு, பல புதுமைகளுக்குக் காரணமாகவும் இருந்துவருகிறது.

இந்தத் துறையில் ஏற்கெனவே ரூ. 2 ஆயிரம் கோடி சந்தை மதிப்பில் பல தொழில்முனைவுகள் (ஸ்டார்ட்அப்) தொடங்கிவிட்டன. இந்தியாவில் மட்டும் சுமார் 37 நிறுவனங்கள் ஆளில்லா வான்வெளி ஊர்திகள் (UAV) மற்றும் ட்ரோன்கள் தொடர்பான தீர்வுகளை அளித்து வருகின்றன. நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு சர்வதேச அளவில் இயங்கி வரும் எர்ப்க்ம்ஹய் நஹஸ்ரீட்ள் என்ற முதலீட்டு வங்கி கடந்த ஆகஸ்ட் 31-இல் அளித்த ஆய்வு மதிப்பின்படி வரும் 2020 ஆம் ஆண்டு ட்ரோன் நிறுவனங்களுக்கான சர்வதேச சந்தை ரூ. 7.4 லட்சம் கோடியாக (100 பில்லியன் டாலர்) இருக்கும். 

இன்றைய நிலையில், இந்தியாவில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் ட்ரோன்கள் பயன்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதோடு, ட்ரோன்கள் இறக்குமதியில் 22 சதவீதத்துடன் நம் நாடு முன்னணியில் உள்ளது. அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவின் ட்ரோன் சந்தை ரூ. 3.7 லட்சம் கோடியாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு, நிர்வாகம், உற்பத்தி மேம்பாடு என்பதோடு மட்டுமல்லாமல், புவியியல்வரைபடம், வேளாண் ஆய்வு, பேரழிவு மேலாண்மை, தேடுதல் மற்றும் மீட்பு, சரக்குப் போக்குவரத்து, வெள்ள மேலாண்மை, எல்லை ரோந்து, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், கடல் கண்காணிப்பு, முக்கிய உள்கட்டமைப்பு கண்காணிப்பு, உளவு சேகரிப்பு போன்றவற்றிலும் ட்ரோன் தொழில்நுட்பம் சக்திவாய்ந்த ஆயுதம் என்ற வகையில், அதன் முழுத்திறனையும் நாம் உணரவேண்டிய தருணம் இது. Association for Unmanned Vehicle Systems International (AUVSI) அமெரிக்காவில் மட்டும் ட்ரோன் துறையில் 70 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், இந்தியாவில் ட்ரோன் தொழில்நுட்பம், செயல்பாடு, இயக்குவது, உரிமம் பெறுவது குறித்த கல்வியை பல தனியார் நிறுவனங்கள் அளிக்கத் தொடங்கியுள்ளன. 

நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு ஆந்திரம், கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, குஜராத், நாக்பூர் உள்ளிட்ட 9 இடங்களில் செயல்பட்டு வருகிறது Indian Institute of Drones (IID). இங்கு ட்ரோன் குறித்த முழு அறிவு, சந்தை, கட்டுப்பாடுகள் குறித்த ஒருநாள் பயிற்சி (ரூ. 4900), கட்டுப்பாடு உருவகப்படுத்துதல் மற்றும் ட்ரோன் பைலட் குறித்த 5 நாள் பயிற்சி (ரூ. 19,500), ட்ரோனை உருவாக்குவது உள்ளிட்ட 7 நாள் பயிற்சி (ரூ. 28,500), ட்ரோன் குறித்த 10 நாள் விரிவான பயிற்சி (ரூ. 49 ஆயிரம்) அளிக்கப்படுகிறது. கட்டணத்துடன் 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

பெங்களூருவைச் சேர்ந்த Avian Aerospace நிறுவனம் UAV குறித்து பயிற்சி அளிக்கிறது. இங்கு 7 நாள் பயிற்சிக்கு ரூ. 4250, ஒரு மாதப் பயிற்சிக்கு ரூ. 9,500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

லக்ணோவில் இருந்து செயல்படும் ஸ்டார்ட்அப் நிறுவனம் TechEagle. கான்பூர், இந்திய தொழில்நுட்பக் கழக முன்னாள் மாணவர்களால் நடத்தப்படும் இந்நிறுவனத்தின் பெங்களூரு பிரிவில், வரும் நவம்பர் 17 முதல் 26 வரை 10 நாள்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், ரோட்டரி விங் பயிற்சிக்கு ரூ. 20 ஆயிரம், Fixed Wing பயிற்சிக்கு ரூ. 25 ஆயிரம், இரண்டுக்கும் சேர்த்து ரூ. 40 ஆயிரம் மற்றும் ஜிஎஸ்டி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் இருந்து இயங்கும் Aerizone நிறுவனம் பல துறைகளில் ட்ரோன் சேவையை வழங்கி வருவதோடு, யுஏவி பைலட் பயிற்சியையும் வழங்குகிறது.


கடந்த 2014 முதல் சென்னையை தளமாகக் கொண்டு பெங்களூரு, மும்பை, புணே, ஹைதராபாத், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது Maavan Drone Academy. CÕ Multirotor Pilot Training, Fixed Wing Pilot Training, Aerial Cinematography, Aerial Mapping and Imagery, Thermal Inspection, UAV Engineering உள்ளிட்ட 6 டிப்ளமா, 2 முதுநிலை டிப்ளமா கோர்ஸ்களை நடத்துகிறது. இதில் ட்ரோன் பைலட் பயிற்சிக்கு ரூ. 45 ஆயிரம், ட்ரோன் இன்டஸ்ட்ரியல் ஏரியல் டிப்ளமா பயிற்சிக்கு ரூ. 81 ஆயிரம், மஅய பொறியியல், ஏரியல் மேப்பிங் ஆகிய முதுநிலை டிப்ளமா கோர்ஸ்களுக்கு தலா ரூ. 60 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/16/w600X390/im1.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/16/ட்ரோன்-கல்வி-அதிக-வேலைவாய்ப்பு-3021578.html
3019059 வார இதழ்கள் இளைஞர்மணி ஈசூர் கிராமத்தில் அம்மா திட்ட முகாம்  மதுராந்தகம் DIN Saturday, October 13, 2018 12:45 AM +0530 செய்யூர் வட்ட வருவாய்த் துறை சார்பாக, ஈசூர் கிராமச் சேவை மையத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 செய்யூர் வட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம், ஈசூர் கிராம மக்களின் பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை கோருவது, ஸ்மார்ட் கார்டு கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும் நோக்கத்தில் செய்யூர் வட்டாட்சியர் ரமா ஏற்பாட்டின்படி, வருவாய்த்துறையினர் அம்மா திட்டமுகாமை நடத்த ஏற்பாடு செய்தனர்.
 இந்த நிகழ்ச்சிக்கு தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) செல்வசீலன்தலைமை வகித்தார். முதுநிலை வருவாய் ஆய்வாளர் சரவணன், ராமலிங்கம், கிராம வருவாய் ஆய்வாளர் ரேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 கிராம நிர்வாக அதிகாரி வெங்கடேசன் வரவேற்றார். ஈசூர் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 39 மனுக்களை தனி வட்டாட்சியர் செல்வசீலனிடம் அளித்தனர். அவற்றில் 25 மனுக்கள் ஏற்கப்பட்டன. 9 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 5 மனுக்கள் நிலுவையில் வைக்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்யூர் வருவாய்த் துறையினர் செய்திருந்தனர்.
 

]]>
http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/13/ஈசூர்-கிராமத்தில்-அம்மா-திட்ட-முகாம்-3019059.html
3019058 வார இதழ்கள் இளைஞர்மணி உலக பெண் குழந்தைகள் தினம்  செங்கல்பட்டு, DIN Saturday, October 13, 2018 12:44 AM +0530 திருப்போரூர் காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் அகில உலக பெண் குழந்தைகள் தினம் (அக்டோபர் 11), திருப்போரூர் எவர் கிரீன் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
 இந்த நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியை உஷாராணி தலைமை வகித்தார். நீடு அறக்கட்டளை இயக்குநரான ஆசிரியர் ராமச்சந்திரன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவர், பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் சமூகக் கொடுமைகள், அவற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான வழிமுறைகள், பல்வேறு தாக்குதல்களில் இருந்து பெண் குழந்தைகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டிய அவசியம் ஆகியவற்றை எடுத்துக் கூறினார்.
 மேலும், பெண் குழந்தைகளுக்கு எதிராக அனைத்து இடங்களிலும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், வன்கொடுமைகளை ஒழித்திட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கிப் பேசினார். நிகழ்ச்சியின் இறுதியில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதிசெய்யவும், பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் தீமைகளை எதிர்த்துப் போராடவும் வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் உறுதி எடுத்துக் கொண்டனர்.
 
 
 

]]>
http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/13/உலக-பெண்-குழந்தைகள்-தினம்-3019058.html
3019057 வார இதழ்கள் இளைஞர்மணி உடைந்த பாதாளத் தொட்டியின் மூடி சீரமைப்பு: தினமணி செய்தி எதிரொலி  ஸ்ரீபெரும்புதூர், DIN Saturday, October 13, 2018 12:44 AM +0530 தினமணி செய்தி எதிரொலியாக, ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே ஸ்ரீபெரும்புதூர் }திருவள்ளூர் சாலையில் உடைந்த நிலையில் இருந்த பாதாளத் தொட்டியின் மூடி சீரமைக்கப்பட்டுள்ளது.
 காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில், நகர்ப்புற உள்ளாட்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.123.75 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் ஆகியவை அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் பாதாள சாக்கடைத் திட்டம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டங்களுக்கான பணிகள் சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், பாதாள சாக்கடைத் திட்டத்திற்காக சுமார் 20 அடி ஆழத்தில் குழாய்கள் பதிக்கும் பணிகள் 85 சதவிகிதம் வரை முடிவடைந்துள்ளன.
 பாதாள சாக்கடைக் குழாய்களுக்கு குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வரும் குழாய்களுடன் இணைப்பு கொடுக்கவும், பாதாள சாக்கடைத் திட்ட குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் அவற்றை சரிசெய்யவும் குறிப்பிட்ட தூரத்திற்கு பாதாளத் தொட்டிகள் (மேனுவல்) அமைக்கப்பட்டு வருகின்றன.
 ஸ்ரீபெரும்புதூர்-திருவள்ளூர் சாலையில், ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்ட பாதாளத் தொட்டியின் (மேனுவல்) மூடி கடந்த 20 நாள்களுக்கு முன்பு உடைந்தது. இத்தொட்டியை சீரமைக்க வேண்டும் என தினமணி நாளிதழில் கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிடப்பட்டது.
 அச்செய்தியின் எதிரொலியாக, உடைந்த பாதாளத் தொட்டியின் மூடியை சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் வாரியத்தினர் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சீரமைத்தனர்.
 

]]>
http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/13/உடைந்த-பாதாளத்-தொட்டியின்-மூடி-சீரமைப்பு-தினமணி-செய்தி-எதிரொலி-3019057.html
3019056 வார இதழ்கள் இளைஞர்மணி சாக்கடை கழிவால் அவதிக்குள்ளாகும் வெள்ளைக்குளம்வாசிகள்..!  காஞ்சிபுரம், DIN Saturday, October 13, 2018 12:43 AM +0530 சாக்கடைக் கழிவுநீரால் வெள்ளைக்குளம் பகுதியினர் கடந்த 6 மாதங்களாக அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
 காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குட்பட்ட 12-ஆவது வார்டு பிள்ளையார்பாளையம் பகுதியில் வெள்ளைக்குளம் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இப்பகுதி கங்கையம்மன் கோயில் தெருவில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அரக்கோணம், தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வகையில் சாலைத் தெருவுக்கு இணையாக இத்தெரு அமைந்துள்ளது. இத்தெருவின் வழியாக, காசி விஸ்வநாதர் கோயில், சந்தவெளி அம்மன் கோயில்களுக்கும், கிருஷ்ணன் தெரு, பிள்ளையார் பாளையம் மற்றும் நகர்ப்பகுதிகளுக்கு அதிகமானோர் சென்று வருகின்றனர்.
 இத்தெருவையொட்டி சாக்கடைக் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவு நீர் குளம் போல் தேங்கியும், மழைக்காலங்களில் ஆறாக ஓடியும் வருகிறது. இதனால், இத்தெரு முழுவதும் சுகாதாரச் சீர்கேடு அடைந்துள்ளதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.
 நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?:
 இதுகுறித்து வெள்ளைக்குளம் குடியிருப்புப் பகுதியினர் கூறியதாவது:
 கடந்த 6 மாதங்களாக கங்கையம்மன் தெருவில் சாக்கடைக் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீரானது தெருக்களில் ஓடுகிறது. மேலும், ஆங்காங்கே கழிவுநீரானது குளம் போல் தேங்கியுள்ளது. இதனால், இத்தெருவில் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. அதோடு, தேங்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதன்காரணமாக, பள்ளிக் குழந்தைகள், பெண்கள், முதியோர் என பலருக்கும் அவ்வப்போது உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்று வருகிறோம். இதுதொடர்பாக, நகராட்சிக்கு பல முறை புகார் தெரிவித்துள்ளோம். நகராட்சி அலுவலர்கள் ஒருமுறை நேரில் வந்து பார்த்துவிட்டு கால்வாயை மூடியிருக்கும் கான்கிரீட் பலகைகளை அப்புறப்படுத்த வேண்டும். அதற்காக, பொக்லைன் வாகனத்தைக் கொண்டுவர வேண்டும் எனக் கூறிவிட்டுச் சென்றனர். அதன்பிறகு, கடந்த 3 மாதங்களாகியும் வரவில்லை. எனவே, மழைக்காலத்துக்கு முன்பே விரைந்து இக்கால்வாயின் அடைப்பை நீக்கி, கழிவுநீர் செல்லும் வகையில் சீர்செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/13/சாக்கடை-கழிவால்-அவதிக்குள்ளாகும்-வெள்ளைக்குளம்வாசிகள்-3019056.html
3019055 வார இதழ்கள் இளைஞர்மணி பேச்சுவார்த்தைக்குப் பின் இயக்கப்பட்ட தசரா விழா பொழுதுபோக்கு அம்சங்கள்  செங்கல்பட்டு, DIN Saturday, October 13, 2018 12:43 AM +0530 செங்கல்பட்டில் வருடாந்திர தசரா விழா தொடங்கியும் பல்வேறு ராட்டிணங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் கடந்த 3 நாள்களாக அரசியல்வாதிகள் தலையீட்டினால் இயக்கப்படவில்லை. எனினும், காவல்துறையுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை மாலை முதல் இந்தப் பொழுதுபோக்கு அம்சங்கள் இயக்கப்பட்டன.
 பிரம்மாண்டமாக நடைபெறும் இத்திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள், அசுரதாலாட்டி, ராட்சத குடை ராட்டினங்கள் ஆகியவற்றை அமைப்பர். பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் உற்சாகம் அளிக்கும் நோக்கில் பல்வேறு ராட்டினங்கள் ரயில் வண்டி, ஸ்னோபால்ஸ் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக லாரிகள் மூலம் பொருள்களை 20 நாள்களுக்கு முன்பே செங்கல்பட்டிற்கு கொண்டுவருவர்.
 தசரா விழா நடைபெறும் ஹைரோட்டில் சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு சாலையின் இருபுறத்திலும் கடைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டு 12 நாள்களுக்கு விமர்சையாக தசரா திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவிழாவில் ஃபேன்சி, வீட்டு உபயோகப் பொருள்களான இரும்பு, அலுமினியம், பித்தளை, பிளாஸ்டிக், பீங்கான் பொருள்கள், செயற்கை மலர்கள், கொலு பொம்மைகள், உணவுப் பண்டங்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் ஏராளமான கடைகளை அமைத்து, கோலாகலமாக தசரா விழா நடைபெறும்.
 இந்தக் கடைகளை ஆண்டுதோறும் நகராட்சி நிர்வாகம் ஏலம் விடும். விழா வசூல் செய்து நடத்துபவர்கள் இந்தக் கடைகளை ஏலம் எடுப்பார்கள். அனைவரின் ஒத்துழைப்புடன் விழா நடைபெறும். முதல் நாளில் இருந்தே மக்கள் திருவிழாவைக் காண்பது போல் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்து பங்கேற்று, மகிழ்வார்கள். ஆண்டிற்கு ஒருமுறை நடக்கும் இத்திருவிழாவால் நகராட்சிக்கு கணிசமான தொகை வருமானமாக கிடைக்கும். இந்த ஆண்டு இளங்கோ என்பவர் ரூ.12.5 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜிஎஸ்டி வரியுடன் அவர் ரூ.14.5 லட்சம் செலுத்தி ஏலம் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
 இந்நிலையில், திமுக நகர செயலாளர் நரேந்திரன், இவ்விழா தொடங்கும் நாளன்று நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி, ஆர்டிஓ முத்துவடிவேல் ஆகியோரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் "விழாவுக்கு முறையான முன்னேற்பாடுகள் செய்யப்படல்லை. இதனால், விழாவில் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது' என்று குறிப்பிட்டிருந்தார். இதனால், தசரா விழாவை நிறுத்தி வைத்திருந்தனர். இது தொடர்பாக தினமணி நாளிதழில் வெள்ளிக்கிழமை செய்தி வெளியானது.
 இதையடுத்து விழாக் குழுவினர், ஏலம் எடுத்தவர் என பல்வேறு தரப்பினரும் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் வியாழக்கிழமை மாலை குவிந்தனர். அங்கு டிஎஸ்பி கந்தன், ஆய்வாளர் செüந்தரராஜன், தேமுதிக முன்னாள்எம்எல்ஏ அனகை முருகேசன், திமுகவினர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, "ஏலம் எடுத்தவர் முறையாக கோட்டாட்சியர் உள்பட வருவாய்த்துறை, தீயணைப்புத் துறை, காவல்துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகளில் விழா நடத்துவதற்கான அனுமதியைப் பெற்றுள்ளார். விழா நடத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அதனால் விழாவை நடத்தலாம்' என பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வெவள்ளிக்கிழமை மாலை முதல் குடை ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இயங்கத் தொடங்கின.

]]>
http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/13/பேச்சுவார்த்தைக்குப்-பின்-இயக்கப்பட்ட-தசரா-விழா-பொழுதுபோக்கு-அம்சங்கள்-3019055.html
3019054 வார இதழ்கள் இளைஞர்மணி கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை  செங்கல்பட்டு, DIN Saturday, October 13, 2018 12:42 AM +0530 திருப்போரூரை அடுத்த காலவாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் தங்கிப் படித்து வந்த 4ஆம் ஆண்டு மாணவர் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். போலீஸார் அறைக்கதவை உடைத்து திறந்து அவரது சடலத்தை மீட்டனர்.
 திருச்சி துறையூர் பகுதியைச் சேர்ந்த வீரபத்திரன் என்பவரின் மகன் கோகுல்(22). அவர் திருப்போரூரை அடுத்த காலவாக்கத்தில் உள்ள எஸ்.எஸ்.என். தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். சிவில் பிரிவில் 4ஆம் ஆண்டு படித்து வந்த அவர் கல்லூரியில் உள்ள மாணவர் விடுதியில் தங்கியிருந்தார்.
 இந்நிலையில், வீரபத்திரன் தனது மகன் கோகுலை வியாழக்கிழமை செல்லிடப்பேசியில் அழைத்தார். எனினும், கோகுல் அந்த அழைப்பை எடுக்காததால் அது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திற்கு வீரபத்திரன் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, கல்லூரி விடுதியின் காப்பாளர் மற்றும் கோகுலின் நண்பர்கள் அவரது அறைக்குச் சென்று பார்த்தனர். அப்போது அவரது அறை உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. ஜன்னல் கதவை உடைத்துப் பார்த்தபோது கோகுல் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
 போலீஸார் விரைந்து வந்து அறைக்கதவை உடைத்துத் திறந்து, கோகுலின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 இது தொடர்பாக போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட கோகுல் கேம்பஸ் இண்டர்வியூவில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டது தெரிய வந்தது. அவர் படிப்பின் இறுதியாண்டில் முடிக்க வேண்டிய புராஜக்ட் மற்றும் சிறு தேர்வுகளை புதன்கிழமை முடித்திருந்தார். இந்நிலையில் விரைவில் விடுதி அறையை காலி செய்து விட்டு வீட்டிற்கு வருவதாக செல்லிடப்பேசி மூலம் தன் தந்தையிடம் அவர் அண்மையில் கூறியிருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கோகுலின் தற்கொலை குறித்து திருப்போரூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
 

]]>
http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/13/கல்லூரி-மாணவர்-தூக்கிட்டுத்-தற்கொலை-3019054.html
3019053 வார இதழ்கள் இளைஞர்மணி வெடித்த மின்மாற்றி: மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதி  ஸ்ரீபெரும்புதூர், DIN Saturday, October 13, 2018 12:42 AM +0530 ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் திருவள்ளூர் செல்லும் சாலையில் உள்ள மின்மாற்றி வெடித்து பழுதடைந்ததால் வியாழக்கிழமை இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
 ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் , திருவள்ளூர் செல்லும் சாலையில் அரசு தொடக்கப்பள்ளி அருகே 440 கிலோவாட் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியின் மூலம் டி.கே.நாயுடு நகர், சின்னக்கடை தெரு, காந்தி சாலையில் ஒரு பகுதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் கடைகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.
 இந்நிலையில், இந்த மின்மாற்றி கடந்த வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் பயங்கர சத்தத்துடன் வெடித்து பழுதடைந்தது. இதனால் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபட்டது. இதனால் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இதையடுத்து, பழுதடைந்த மின்மாற்றியை மாற்றும் பணியில் ஸ்ரீபெரும்புதூர் மின்சார வாரிய ஊழியர்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். அதன் பிறகே, மின்விநியோகம் சீரானது.
 
 

]]>
http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/13/வெடித்த-மின்மாற்றி-மின்சாரம்-இல்லாமல்-பொதுமக்கள்-அவதி-3019053.html
3019052 வார இதழ்கள் இளைஞர்மணி மனுநீதி நாள் முகாமில் 276 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்  காஞ்சிபுரம், Saturday, October 13, 2018 12:42 AM +0530 காவாம்பயிர் ஊராட்சியில் 276 பேருக்கு ஆட்சியர் பா.பொன்னையா நலத்திட்ட உதவிகளை வெள்ளிக்கிழமை வழங்கினார்.
 காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் வட்டத்துக்குட்பட்ட காவாம்பயிர் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு, ஆட்சியர் பா.பொன்னையா தலைமை வகித்து, 7 பேருக்கு தேசிய முதியோர் உதவித்தொகை, 9 பேருக்கு விதவை உதவித்தொகை, 3 மாற்றுத்திறனாளிக்கு உதவித்தொகை, 24 பேருக்கு பட்டா மாற்றம், 28 பேருக்கு கல்வி உதவித்தொகை, 11 பேருக்கு திருமண உதவித்தொகை, 12 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா என மொத்தம் 276 பேருக்கு ரூ.24 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 எம்.பி. - எம்எல்ஏ வாக்குவாதம்: அப்போது, அங்கு வந்த எம்.பி. மரகதம் குமரவேல், முன்னாள் அதிமுக எம்எல்ஏ-க்கள் வாலாஜாபாத் பா.கணேசன், சோமசுந்தரம் ஆகியோரை ஆட்சியர் மேடைக்கு அழைத்தார். எனினும், மேடையில் நின்றிருந்த திமுகவைச் சேர்ந்தவரான உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், திமுக, அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அனைவரும் கலைந்து சென்றனர். அதோடு, நலத்திட்ட உதவிகளும் தொடர்ந்து வழங்கப்பட்டன. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நெகிழியின் தீமை குறித்து சிறப்பாக பேசி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர் குணசேகரனைப் பாராட்டி ஆட்சியர் பரிசளித்தார். இதைத் தொடர்ந்து, ஆட்சியர் பேசியது:
 மாவட்டத்தில் வாரந்தோறும் வரும் திங்கள்கிழமையன்று கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்படுகிறது. இருப்பினும், மாவட்டத்தின் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் வட்டங்களில் குறை தீர் முகாம் நடத்தப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இதன்மூலம், அரசு அலுவலர்கள் பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுத் தீர்வு காணப்படுகிறது. அதன்படி, உத்தரமேரூர் வட்டத்துக்குட்பட்ட காவாம்பயிர், இருமரம், ஆதவப்பாக்கம், செம்புலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு கடந்த 15 நாள்களுக்கு முன்னதாக, பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதன் பிறகு, பெறப்பட்ட மனுக்களுக்கு அடுத்த ஒரு வாரத்துக்குள் தீர்வு காணப்படும் என்று அவர் தெரிவித்தார்.
 இம்முகாமில், முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம், வருவாய் கோட்டாட்சியர் ராஜு, தனித்துணை ஆட்சியர் சக்திவேல், வட்டாட்சியர் அகிலாதேவி, தனி வட்டாட்சியர் கீதாலட்சுமி உள்ளிட்ட அரசுத் துறையினர், கட்சியினர், பொதுமக்கள் என திரளானோர் கலந்துகொண்டனர்.
 

]]>
http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/13/மனுநீதி-நாள்-முகாமில்-276-பேருக்கு-நலத்திட்ட-உதவிகள்-ஆட்சியர்-வழங்கினார்-3019052.html
3016945 வார இதழ்கள் இளைஞர்மணி வாட்ஸ் அப்பில் புதிய வசதிகள்! Tuesday, October 9, 2018 01:03 PM +0530 மக்களின் தேவைக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களைச் செய்துவரும் வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது மேலும் பல புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.
வழக்கமாக வாட்ஸ் அப்பில் வரும் தகவல்களுக்குப் பதிலளிக்க நாம் அந்தத் தகவலை சிறிது நேரம் கிளிக் செய்து பதிலளிக்க வேண்டியிருக்கும். தற்போது இந்த புதிய வசதியின் மூலம் அந்தத் தகவலை வலது
புறம் ஸ்வைப் செய்தாலே போதும். அதற்குரிய பதிலை நாம் அனுப்பலாம். இதன் மூலம் நேரம் மிச்சமாகும் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேபோல், இருளில் வாட்ஸ் அப் பயன்படுத்துவதால் அதிக வெளிச்சம் கண்களைப் பாதிப்பதாகக் கூறப்படுகிறது.
இதைத் தடுக்க வாட்ஸ் அப் திரையில் "டார்க் மோட்' எனும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறைவான வெளிச்சம், இருள் சூழ்ந்த பகுதிகளில் இந்தத் திரையை தேர்வு செய்து கண்களைப் பாதுகாத்து கொள்ளலாம்.
மேலும், வாட்ஸ் அப் சாட்டில் வெளியில் இருந்து ஸ்டிக்கர்களைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வசதியும் அறிமுகமாகி உள்ளது. இதேபோல், வாட்ஸ் அப்பில் பகிரப்பட்ட யூ டியூப், ஃபேஸ் புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் வீடியோ லிங்குகளை வாட்ஸ் அப் பக்கத்தில் இருந்து வெளியே செல்லாமல் அங்கேயே பார்க்கும் புதிய வசதியும் அறிமுகமாகி உள்ளது.
வீடியோ லிங்குகள் உள்ள பக்கத்தில் இருந்து வேறு பக்கத்துக்குச் சென்றுவிட்டால், விடியோ நின்றுவிடும். இந்த சேவைகள் அனைத்தையும் பெற வாட்ஸ் அப் பீட்டா 2:18:301 வெர்ஷனுக்கு அப்கிரேட் செய்து கொள்ள வேண்டும்.
- அ.சர்ஃப்ராஸ்
 

]]>
whatsapp, whatsapp update, whatsapp app, latest whatsapp, whatsapp update 2018, whatsapp update latest version http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/9/w600X390/im5.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/09/வாட்ஸ்-அப்பில்-புதிய-வசதிகள்-3016945.html
3016962 வார இதழ்கள் இளைஞர்மணி கற்றது எதுவும் வீணாகாது! DIN DIN Tuesday, October 9, 2018 11:17 AM +0530 இன்றைய இளைஞர்கள் படிக்கும்போதே செயல் திறனுள்ள (ACTIVITIES) பிற தன்மைகளில் ஈடுபடுகிறார்கள். ஆட்டம், ஓட்டம், கராத்தே தவிர நடனம், சொற்பொழிவு போன்ற சில. ஏன் சிலர் தாய்மொழி, ஆங்கிலம் தவிர வேறு மொழிகளையும் கற்கிறார்கள்.
" எல்லாம் வேஸ்ட். பாடம் மட்டும் போதாதோ?'' என்று வயதானவர்கள் ஆதங்கப்படுகிறார்கள். ஆனால் தற்போதைய கல்வியில், இத்தகைய செயல்திறனுக்கும் மதிப்பெண் வழங்குகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. 
இருந்தாலும் படிப்பது எதுவும் வீணாவதில்லை என்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன். பட்டப்படிப்பு முடித்தவுடன் திக்குத் திசை தெரியாமல் தவித்தபோது, அக்காவின் கணவர் யோசனைப்படி தட்டெழுத்து, சுருக்கெழுத்து பயிலத் தொடங்கினேன். என் தமையனின் நண்பர், COSTING படி, இதைத் தபால் மூலம் படிக்கலாம்'' என்று அறிவுறுத்தி அந்த பம்பாய் நிறுவனத்தின் பெயர், விலாசம் ஆகியவற்றைத் தந்தார். 
அந்த சமயத்தில் நான் தமிழக அரசு (லோகல் ஃபண்ட்) இலாகா ஒன்றில் வேலை பார்த்தாலும், மனம் அலை பாய்ந்தது. அதே சமயம் ஆபிசில் வேலை அதிகமில்லாததால், தட்டெழுத்தும் சுருக்கெழுத்தும் கற்க நேரம் கிடைத்தது. பம்பாய் நிறுவனமான - BRITISH INSTITUTE
 - மூலம் COSTING சம்பந்தமான தாள்களை (CYCLOSTYLED) வரவழைத்தேன். வணிகச் சட்டம், பொருளாதாரம், வரவு செலவுகணக்கியல் (BOOK KEEPING) அப்புறம் காஸ்டிங் - என்று அனைத்துமே நான் பாஸ் செய்த பி.எஸ்சி படிப்பு சம்பந்தமே இல்லாதது. 
இருந்தாலும் ஓர் உந்துதலில் படிக்கத் தொடங்கினேன். டைப் ரைட்டிங், ஷார்ட் ஹேண்ட் இரண்டிலுமே முதல் வகுப்பில் தேறினேன்(LOWER). COSTING பாடம் தவிர, மற்றவற்றில் தேர்வு பெற்றேன். திடீரென்று அப்போது என்னைத் திருத்தணிக்கு மாற்றினார்கள். மேலதிகாரியிடம் வேண்டுகோள் விடுத்தும் பலனில்லை. தனியாக இருந்த (தமையன் அயல்நாட்டில்) தாயாரைப் பார்க்க மாதமிருமுறை சென்னை வந்து போவேன். அப்போது அதே நுங்கம்பாக்கத்தில் கூட்டுக் குடும்பத்தில் வசித்து வந்த தமக்கை ஓர் ஆறுதலாக இருந்தாள். 
இப்படியே நான்கு வருடங்கள் ஓடிவிட்டன. 1963 வரை படித்தவை யாவும் அரைகுறை. அந்த வருடம் விடுமுறைக்குத் தாயாரும் நானும் நாகர்கோயில் சென்றோம். அதைச் சாக்கிட்டு அப்படியே திருவனந்தபுரம் சென்று ஒன்றுவிட்ட தமையனைப் பார்த்தேன். அப்போது அவன் தனியார் வங்கியொன்றில் கோட்ட மேலாளர். " இப்போது எங்கள் வங்கியில் பட்டதாரிகளைக் கிளார்க்காகத்தான் எடுத்துக் கொள்கிறார்கள்'' என்று கூறி அதே வேலை பெற்றுத் தர உதவினான். அப்போது அரசு வேலையில் கிடைத்த சம்பளத்தை விட ரூ.20 குறைவு. 
வங்கியின் மண்டல அலுவலகத்தில் டைப்பிஸ்டாகச் சேர்ந்தேன். தனியார் நிறுவனத்துக்கேயுரிய உவப்பான சூழல். புத்தம்புது HALOLA மெஷின். டைப் அடிப்பதும் கோப்பில் கடிதங்களைப் போடுவது மட்டுமே என் வேலை. 
CAIIB என்ற வங்கிப் படிப்பு பாஸ் செய்தால் ஊதிய உயர்வு கிடைக்குமென்ற நியதி இருந்தது. அதற்கான படிவங்களை, குறிப்பிட்ட மையத்திலிருந்து கேட்டு வாங்கினேன். இனிய ஆச்சரியம்! எல்லாம் நான் ஏற்கெனவே படித்த படிப்புகள். பூகோளம் ஒன்றுதான் புதியது (OMMERCIAL GEOGRAPHY). பிறகு CAIIB இரண்டு பாகத்திலும் தேறி, வங்கி அதிகாரி பரீட்சையிலும் தேறி, படிப்படியாக மேலாளர் வரை ஆனது எல்லாம் தனிக்கதை. 
அந்த நாளிலேயே இதுபோலென்றால் நிறைய வாசல்கள் திறந்திருக்கும் இந்தக் காலத்தில் கற்ற எந்த அறிவும் வீண் போகாது என்பது வெளிப்படை. நடனம், நாடகம் போன்றவை மேடைக் கூச்சத்தைப் போக்குகிறதென்றால், கராத்தே சங்கடமான வேளையில் துணிச்சலைத் தருகிறது. வேறு மாநிலத்துக்கோ அயல்நாட்டுக்கோ செல்ல மொழிகள் துணை புரிகின்றன. 
ஆக, எந்தப் படிப்பையும் கலையையும் இளைஞர்கள் ஈடுபாட்டுடன் கற்பது நல்லதே. அவை எப்போது எந்த ரூபத்தில் உதவும் என்பதை இப்போதே ஊகிக்க இயலாது.
- வாதூலன்


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/9/w600X390/im15.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/09/கற்றது-எதுவும்-வீணாகாது-3016962.html
3016961 வார இதழ்கள் இளைஞர்மணி பேசிப் பழகு! DIN DIN Tuesday, October 9, 2018 11:11 AM +0530 "வாயுள்ள பிள்ளை பிழைக்கும்' என்பார்கள். அப்படியிருக்க, தான் பேச நினைப்பவற்றை பேசத் தயங்கி வாயை மூடி அமைதியாக இருக்கும் சில வாயில்லாப் பூச்சிகளும் இந்த சமூகத்தில் உள்ளனர். பேசுவதற்கு சிலர் கூச்சப்பட்டு அமைதியாக இருப்பார்கள். சிலர் ஒரு புதிய இடத்திற்கு செல்ல நேர்கையில் அங்கு சந்திக்கும் அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசிப் பழக மிகவும் சிரமப்படுவார்கள்.
 பேச கூச்சப்படுவதால் நாம் வாழ்வில் எத்தனையோ நல்ல வாய்ப்புகளையும், சிறந்த தருணங்களையும் தவற விட்டிருக்கலாம். இனியும் இது தொடர நாம் அனுமதிக்கக்கூடாது. நமது தகவல் தொடர்புத் திறனை, கருத்துப் பரிமாற்றம் செய்யும் திறனை நாம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
 சமூகம் என்பது தனிமரம் இல்லை. அது காடு. நாம் சமூகத்தில் வாழ வேண்டும் என்றால் நாம் என்ன நினைக்கிறோம் என்பதைப் பிறர் தெரிந்து கொள்ள வேண்டும். பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த கருத்துப் பரிமாற்றம்தான் சமூகத்தை இயங்கச் செய்கிறது. சமூகத்தில் நம் இடத்தை நாம் தக்க வைத்தக் கொள்ளவும் உதவுகிறது. எனவே பேச வேண்டும். நாம் நினைத்ததை எந்தவிதமான விலகல்களோ, பிழையாகப் பிறர் புரிந்து கொள்ளும் வகையிலோ பேசாமல், மிகவும் சரியாகப் பேச வேண்டும். அதற்குப் பயிற்சி அவசியம்.
 பேசிப் பழகு!: பேசத் தயக்கம் உடையவர்கள் பொது இடங்களில் பேச கூச்சப்படுவார்கள். இந்த கூச்சத்தைப் போக்கி சமூகத்துடன் ஒன்றி பழக விரும்பினால் முதலில் அவர்கள் பேசிப் பழக வேண்டும். நமக்கு அறிமுகமே இல்லாதவர்களுடனும் பேச முயற்சிக்க வேண்டும். நமது புன்னகையை முதல் வார்த்தையாக உதிர்க்க வேண்டும். அவர்களிடம் இருந்து பதில் வரும் வரை காத்திருக்காமல் , "ஹாய், ஹலோ' என்று பேச்சை வளர்க்க வேண்டும். இது எதுவுமே முடியாத பட்சத்தில் மனதிற்குள்ளேயாவது தனக்கு தானே பேசிப் பழக வேண்டும்.
 (பின்குறிப்பு: தனக்கு தானே பேசிக் கொள்வதை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அறியாதவாறு செய்வது மிக நல்லது)
 பேசுபவருடன் பழகு: சரளமாகப் பேசுவதற்கு தேவையான அடுத்த பயிற்சி, அவ்வாறு பேசுபவருடன் பழகுவதுதான். இதற்குத் தனியாகப் பயிற்சி எதுவும் தேவையில்லை. நாம் குழந்தையாக இருக்கும் போது நமது அம்மா, அப்பா செய்வதை கவனித்து விட்டு அப்படியே செய்து காட்டுவோம்.
 எனவே, நாம் பிறவியிலேயே பெற்ற இந்த கலையைப் பயன்படுத்தி நன்கு பேசுபவர்களைப் பார்த்துப் பார்த்து அவர்கள் பேசுவது போல பேச பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதற்காக தவறானவர்கள் பேசுவதைப் பார்த்து பேசிப் பழக கூடாது.
 இணையத்திலும் பழகு: மாறிவரும் தகவல் தொடர்பு வளர்ச்சிக்கு ஏற்ப நமது தகவல் தொடர்புத்திறனை மேம்படுத்திக் கொள்ள இணையத்தைப் பயன்படுத்தலாம். கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்), முகநூல் (பேஸ்புக்) முதலான இணைய சேவைகள் வழியாக கருத்துப் பரிமாற்றம் செய்து பழகலாம். இணையத்தில் கருத்துப் பரிமாற்றம் செய்து பழகுவது நமக்கு ஒரு பயிற்சி மட்டுமே. வெளி உலகில் நம்மைச் சிறப்பாக பேச வைக்க அதுவே ஒரே வழி என்று தவறாக எண்ணிவிடக்கூடாது.
 -க. நந்தினி ரவிச்சந்திரன்
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/9/w600X390/im14.JPG http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/09/பேசிப்-பழகு-3016961.html
3016959 வார இதழ்கள் இளைஞர்மணி மாற்று சர்வதேச விருது! DIN DIN Tuesday, October 9, 2018 11:10 AM +0530 ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் கடந்த 1980 முதல் சிறந்த சமுதாயப் பணிகளுக்கான Right Livelihood Award விருது வழங்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் விருதுடன் 50 ஆயிரம் டாலர் ரொக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்த விருது தொகை கடந்த 2017-இல் 30 லட்சம் ஸ்விஸ் க்ரோனாவாக (ரூ. 2.45 கோடி) உயர்ந்துள்ளது. தற்போது விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் அனைவருக்கும் விருது தொகை வழங்கப்படுவதில்லை. நடுவர்களால் அங்கீகரிக்கப்படும் தனிநபர் அல்லது குழுவினரின் பணிகளில், பண உதவி தேவைப்படாதவர்களுக்கு கெüரவ விருது மட்டுமே வழங்கப்படுகிறது. குறிப்பாக, விருது பெறுவோரின் தனிப் பயன்பாட்டுக்காக அல்லாமல், அவர்களின் தொடர்ச்சியான சமுதாயப் பணிகளுக்காகவே விருது தொகை வழங்கப்படுகிறது.
நோபல் பரிசு மற்றும் பிற சர்வதேச விருதுகளைப் போல Right Livelihood 
Award-இல் பிரிவுகள் கிடையாது. நிகழ்கால உலகின் மனிதச் சவால்களை எதிர்கொள்ளும் எழுச்சியூட்டும் குறிப்பிடத்தக்க பணிகளை அங்கீகரித்து இந்த விருது வழங்கப்படுவதால், இது எந்தவொரு வகைப்பாட்டிலும் பொருந்துவதில்லை. 
அரசியல், அறிவியல், பொருளாதார சாதனையாளர்களுக்கு இந்த விருது அளிக்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக மக்கள் நலன் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு சாதனை செய்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. விவசாயிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் அல்லது சாதாரண குடிமகன் என அனைத்து தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது. விருது அமைப்பின் திறந்த நிலை செயல்பாட்டின் வழியாக இதற்கான முன்மொழிவுகள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. 
கடந்த 1980-இல் பத்திரிகையாளராக இருந்த Jakob von Uexkull என்பவர், " நோபல் பரிசு போன்றவை தொழில்வளர்ச்சியடைந்த நாடுகளின் நலன் என்கிற அடிப்படையில் அதற்கான சாதனை புரிந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதற்கு மாறாக மனிதகுலம் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்க உதவும் வகையிலான செயல்பாடுகளில் சாதனை புரிபவர்களுக்கு விருது வழங்கப்பட வேண்டும்' என்று நினைத்தார். சுற்றுச்சூழல் மாசு, அணு ஆயுதப் போர், மனித உரிமைகள் மறுப்பு, வறுமை மற்றும் மிகை நுகர்வு போன்றவற்றுக்கு எதிராக எடுக்கப்படும் முயற்சிகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும்; அதற்கு விருது அளிக்கப்பட வேண்டும் என அவர் விரும்பினார்.
அதற்காக சூழலியல் சார்ந்தும், ஏழைகளின் வாழ்க்கை முன்னேற்றம் சார்ந்தும் தலா ஒரு விருது என 2 புதிய விருதுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் அவரால் தொடங்கப்பட்டதுதான் Right Livelihood Award அமைப்பு. இந்த அமைப்பு வழங்கும் இந்த விருது, மாற்று நோபல் பரிசு (Alternative Nobel Prize) என்றும் அழைக்கப்படுகிறது. 
நிகழாண்டுக்கான Right Livelihood Award கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஊழல் எதிர்ப்பு சாம்பியன்களாகக் கருதப்படும் Guatemala நாட்டின் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி Thelma Aldana, கொலம்பியாவைச் சேர்ந்த சட்ட வல்லுநர் Ivan Velasquez ஆகியோருக்கு கெüரவ விருது வழங்கப்படுகிறது. சிவில் மற்றும் மனித உரிமைகளின் பாதுகாவலர்கள் என கருதப்படும் சவூதி அரேபியாவின் Abdullah al-Hamid, 
Mohammad Fahad al-Qahtani, Waleed Abu al 
-Khair ஆகியோருக்கும் வழங்கப்பட உள்ளது. இவர்கள் மூவரும் தங்களின் செயல்பாடுகளுக்காக தற்போது சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தரிசு நிலங்களை காடுகளாகவும், உள்நாடு மற்றும் உள்ளூர் மூலதாரங்களைக் கொண்டு புதுமைகளைப் புகுத்தி மண் வளத்தை பெருக்கியதற்காக மேற்கு ஆப்பிரிக்காவின் Burkina Faso நாட்டைச் சேர்ந்த Yacouba Sawadogo என்ற விவசாயம் செய்பவருக்கும், வறண்ட நிலங்களை எவ்வாறு குறைந்த செலவில் பசுமைமிக்க நிலங்களாக மாற்றுவது என்பதை செய்து காட்டிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நாட்டுப்புற பொருளியல் மற்றும் வேளாண் அறிஞர் Tony Rinaudo  என்பவருக்கும் நிகழாண்டுக்கான Right  Livelihood Award மற்றும் தலா ரூ. 80.16 லட்சம்பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. 50 நாடுகளில் இருந்து வந்திருந்த 107 முன் மொழிவுகளில் இருந்து சர்வதேச நடுவர்கள் குழு இந்த விருதாளர்களை தேர்ந்தெடுத்துள்ளது.
வரும் நவம்பர் 23-ஆம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில், Right Livelihood Award-க்கு தேர்வான அனைவருக்கும் விருது மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது. 
- இரா.மகாதேவன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/9/w600X390/im13.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/09/மாற்று-சர்வதேச-விருது-3016959.html
3016956 வார இதழ்கள் இளைஞர்மணி எல்லாவற்றிற்கும் தேவை புராஜெக்ட் மேனேஜ்மென்ட்! DIN DIN Tuesday, October 9, 2018 10:57 AM +0530 பெரும் தொழில் நிறுவனங்களில் அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும் திட்டமிடுதல் மூலம் மேற்கொள்வார்கள். அந்த திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக ஒரு குழுவை ஏற்படுத்தி அதன் மூலம் அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவார்கள். அந்த திட்டத்தை மேலாண்மை செய்வதற்காக திட்ட மேலாளரை தொழில் நிறுவனத்தின் நிர்வாகம் நியமிக்கும். அந்த திட்ட மேலாளர் அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு அந்த திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி முடிக்க வேண்டும். அது தான் அவரின் முக்கிய பணியாகும். 
இத்தகைய திட்ட மேலாண்மைப் பணிக்கான வேலை வாய்ப்பை பெறுவதற்காக புராஜெக்ட் மேனேஜ்மென்ட் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் புராஜெக்ட் கன்சல்டன்ட் எனப்படும் திட்ட ஆலோசகராகவும் பணி புரிவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. 
Software projects, Construction projects, Manufacturing / New product Development projects and Entertainment projects என பலதுறைகளுக்கும் தேவைப்படும் ஒன்றாகும். 
புராஜெக்ட் மேனேஜ்மென்ட் சம்பந்தமான கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்கள் :
International Institute Of Project Management - http://www.iipmchennai.com/
Skillogic PMP Training - https://in.skillogic.com/pmp-training/pmp-certification-chennai/
project management institute - https://www.pmi.org.in/
L&T Institute of Project Management - http://www.lntipm.org/
- எம்.அருண்குமார்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/9/w600X390/PROJECT.JPG http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/09/எல்லாவற்றிற்கும்-தேவை-புராஜெக்ட்-மேனேஜ்மென்ட்-3016956.html
3016955 வார இதழ்கள் இளைஞர்மணி வேலை...வேலை...வேலை... DIN DIN Tuesday, October 9, 2018 10:55 AM +0530 தமிழக அரசில் வேலை
பதவி: Assistant Surgeon (General) (ஒப்பந்தகால அடிப்படையிலானது)
காலியிடங்கள்: 1884
வயது வரம்பு: பொது பிரிவினர் 35 வயதிற்குள்ளும், முன்னாள் படைவீரரான பொதுப்பிரிவினர் 48 வயதிற்குள்ளும், இதர பிரிவினர் 57 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். 
கல்வித்தகுதி: எம்.பி.பி.எஸ். படித்து தமிழ்நாடு மருத்துவகவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். ஓர் ஆண்டு House Surgeon- ஆக பணிபுரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினரு ரூ.750, எஸ்.சி., எஸ்.சி.ஏ. எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.375 கட்டணமாகச் செலுத்த வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற வலைதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 
வங்கி வழியாக விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி: 17.10.2018
மேலும் விவரங்கள் அறிய: http://www.mrb.tn.gov.in/pdf/2018/07_MRB_Assistant_Surgeon_2018_Notification.pdf என்ற வலைதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.10.2018 

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் வேலை 
பதவி: General Manager, Deputy Chief Medical Officer, Medical Officer, Manager (Legal),  Deputy General Manager (Finance),   Additional Chief Manager (Finance), Deputy Chief Manager (Finance),  Deputy General Manager (HR),  Chief Manager (HR), Additional Chief Manager (HR), Deputy Manager (HR), Deputy Chief Manager (HR) - (Community Development),   Deputy Chief Manager (HR) - (Training and Skill Development),  Deputy Chief Manager (Secretarial),  Manager (Secretarial),  Deputy Manager (R&D) Soil, Deputy Manager (R&D) Material Science,  Deputy Manager (R&D), Non Conventional Renewable Energy,  Deputy Manager (R&D) Micro Biology,  General Manager (Mining).
மொத்த காலியிடங்கள்: 67
தகுதி: பொறியியல் துறையில் இளங்கலை, முதுகலை, அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள், மருத்துவத்துறையில் MBBS, MS, DNB  முடித்தவர்கள், Law, CA, CMA, MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.300 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.com என்ற வலைதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்வரும் முகவரிக்கு தபால், கூரியர் மூலம் அனுப்ப வேண்டும்.
முகவரி: THE CHIEF GENERAL MANAGER (HR),
RECRUITMENT CELL, HUMAN RESOURCE DEPARTMENT, CORPORATE OFFICE, NLC INDIA LIMITED, BLOCK-1, NEYVELI - 607801, TAMILNADU
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.nlcindia.com/new_website/careers/adtv_no_05_2018_new.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 09.10.2018
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசித் தேதி: 16.10.2018

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷனில் வேலை
பதவி: Manager(Electrical), Manager(Mechanical),  Deputy Manager(Process &Quality Assurance),  Deputy Manager (Instrumentation), Deputy Manager(Finance), Assistant Manager(Materials), Assistant Manager(Personnel &Administration), Executive(Mechanical)Lime Stone Crusher,  Executive(Mechanical) Raw mill,  Executive (Mechanical) Kiln, Executive(Personnel &Administration), Accountant, CCR Operators-Plant/Lime Stone Crusher,  Shift Chemist,  X- Ray Analyst,   Electrician, Instrument Mechanic, Personal Assistant,  Junior Assistant (Materials),  Junior Assistant (EDP),  Time Keeper, Driver.
மொத்த காலியிடங்கள்: 46 
தகுதி: கலை, பொறியியல் துறையில் இளங்கலை பட்டம், எம்பிஏ, சிஏ, ஐடிஐ முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் .
விண்ணப்பிக்கும் முறை: www.tancem.com என்ற வலைதளத்தில் உள்ள விண்ணப்பபடிவத்தைப் பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: 
The Senior Manager/Dy.Collector
Tamil Nadu Cements Corporation Limited,
LLA Buildings, 2nd Floor,
No.735, Anna Saalai, Chennai- 600 002. 
மேலும் பணி அனுபவம், வயதுவரம்பு உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய: http://tancem.com/wp-content/uploads/2018/09/TANCEM-HRMS-50-16-9-2018.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.10.2018
தொகுப்பு: இரா.வெங்கடேசன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/9/w600X390/VELAI.JPG http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/09/வேலைவேலைவேலை-3016955.html
3016953 வார இதழ்கள் இளைஞர்மணி பொறுமையே வலிமை! 13 ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ். DIN DIN Tuesday, October 9, 2018 10:48 AM +0530 செல்வந்தர் ஒருவர் ரயிலில் பயணித்தார். அவர் வெற்றிலையை வாயில் மென்று அந்த இரயில் பெட்டியிலேயே எச்சிலை உமிழ்ந்தார். அருகில் அமர்ந்திருந்த பயணி அந்த எச்சிலைத் தாள் கொண்டு துடைத்தார். மீண்டும் அந்த செல்வந்தர் அதேபோல் துப்பினார். இவரும் மீண்டும் துடைத்தார். அந்த செல்வந்தருக்கு கர்வம் கூடிவிட்டது. தான் தவறு செய்கிறோம் என்று தெரிந்தும் ஒருவர் அதைத் துடைத்துக் கொண்டு இருக்கிறார் எனஅறிந்தும், வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் எச்சிலைத் துப்பினார். அருகிலிருந்தவரும் முகம் சுளிக்காமல் துடைத்து வந்தார். இருவரும் ஒரு ரயில் நிலையத்தில் இறங்கினர். வெளியே நின்ற மக்கள் கூட்டம் அந்த உன்னத மனிதருக்கு மாலை மரியாதைகள் செய்து "மகாத்மா காந்திக்கு ஜே' என்று மகிழ்ச்சியாய் ஆரவாரம் செய்தனர். எல்லாரும் அவரை அன்பாய் சூழ்ந்து கொண்டார்கள். ரயிலில் துப்பிக்கொண்டே வந்தவருக்கு அப்போதுதான் தனது இழிவான செயலைப் பொறுத்துக் கொண்டவர் மகாத்மா காந்தி என்பதைத் தெரிந்து கொண்டார். 
அருகில் வந்து "ஐயா! என்னை மன்னித்து விடுங்கள். இனி பிறருக்குத் தீங்கிழைக்கக்கூடாது என்று பாடம் கற்றுக் கொண்டேன்'' என்றார். அதற்கு காந்தி, " நான் தான் உங்களிடமிருந்து ஒரு பாடம் கற்றுக்கொண்டேன்'' என்றார். "என்னிடமிருந்து நீங்கள் என்ன பாடம் கற்க முடியும்?'' என்றார். "ஒருவர் எவ்வளவு கெடுதல் செய்தாலும், ஒருபோதும் பொறுமையை மட்டும் இழக்கக்கூடாது என்பதே அந்த பாடம்'' என்றார் காந்திஜி. பொறுமை என்னும் குணத்தைக் கற்றுக் கொள்ளும் பொழுது மனிதன் வலிமை பெறுகிறான். பொறுமை "கோழைத்தனம் அல்ல, அது மிகச்சிறந்த வலிமை'. 
அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக் 
கடக்கக் கருதவும் வேண்டா} மடைத்தலையில்
ஓடு மீன் ஓட உறுமீன் வரும் அளவும்
வாடி இருக்குமாம் கொக்கு. 
என்கிறது தமிழ்ப்பாட்டி ஒளவையாரின் மூதுரை. தண்ணீருக்கு நடுவே நிற்கின்ற கொக்கு வாட்டத்துடன் இருக்கும். அதன் காலைச் சுற்றிப் பல சிறிய மீன்கள் ஓடிக்கொண்டிருந்தாலும் அதனைக் கவ்வித் தின்னாது. பொறுமையாகக் காத்திருக்கும். தனது பசியைத் தீர்க்கக் கூடிய பெரிய மீன் வந்தவுடன் விரைந்து கவ்விப் பிடித்துவிடும். பொறுமையால் கொக்கு வெற்றி பெறுவதைப்போல் பொறுமையுடையவர் வெற்றியடைவார். 
பள்ளிப் பருவத்திலே வாத்துக்காரர் கதை கேட்டதுண்டு. அதில் அதிசயமாய் தினமும் பொன் முட்டையிடும் ஒரு வாத்து. தினம், தினம் காத்திருப்பதற்கு பொறுமை இல்லாததால், பொன் முட்டைகளை மொத்தமாக எடுத்துவிட ஆசைப்பட்டார் வாத்துக்காரர். வாத்தின் வயிற்றை அறுத்தார். அதில் அன்று இடும் ஒரு முட்டை மட்டுமே இருந்தது. பொறுமையின்மையால் தினம் ஒரு பொன்முட்டை பெரும் வாய்ப்பை இழந்தார். பொறுமை உண்மையில் கடினமானதுதான். பழக்கப்படுத்திக் கொண்டால் அது மிகவும் இயல்பாகிவிடும்.
"பொறுமை கசப்பானது. ஆனால் தருகின்ற கனியோ மிகவும் இனிப்பானது' என்கிறார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில். நம் செயல்பாட்டின் விளைவுகள் உடனே பலன் தராமல் இருக்கலாம். அதற்காக மனம் தளர்ந்து விடக்கூடாது. செயலின் விளைவுகளை ஒவ்வொரு நாளும் எதிர்பார்க்கவும் கூடாது என்பதற்கு சீன மூங்கில் ஓர் உதாரணம். மூங்கில் செடியை நட்டு, நீர் பாய்ச்சி, உரமிடுவார்கள். முதல் வருடத்தில் ஒரு வளர்ச்சியும் இருக்காது. இரண்டு, மூன்று, வருடங்கள் கடந்தும் செடி வளராது. அதே மூங்கில் நான்கு வருடங்கள் கடந்த பின்பு ஐந்தாம் வருடத்தில் ஒரே ஆண்டில் 80 அடி உயரம் வரை வளரும். அந்த அசுர வளர்ச்சியில் சூறாவளிக் காற்றாலோ, மழையாலோ அதனை நிலைகுலையச் செய்ய முடியாது. ஏனெனில், நான்காண்டுகள் அது மண்ணிலே தனது வேரினைப் பாய்ச்சி மிகச்சிறந்த பிடிமானத்தை உருவாக்கிக் கொள்கிறது. மண்ணிலே அதன் பலம் கூடும்பொழுது விண்ணை நோக்கி அதன் பயணம் எளிதாகிறது. கனவுகளோடும், இலட்சியத்தோடும் பயணிப்பவர்கள் மூங்கில்களைப் போலவே தடைகளைப் பொறுமையாகவே கையாளுகிறார்கள். அதில் வலிமை அடைகின்றனர். பொறுமை, இலக்கினை அடைய தகுதியானவனாக்குகிறது. தகுதியானவர்களின் முன்னேற்றத்தை யாராலும் கட்டுப்படுத்த முடிவதில்லை. 
பொறுமை இழப்பவர் தனது ஆற்றலையும் அதிகமாகவே வீணடிக்கின்றார். பொறுமையானவர் தனது ஆற்றலை ஒரு தவயோகியைப் போல் தேக்கி வைக்கிறார். "பிரார்த்தனைகளை விட மிக உயர்ந்தது பொறுமை' என்று புத்தரின் பொன்மொழியில் பொறுமை புகழ்மொழி பெறுகிறது. ஜென் தத்துவத்தில் தவம் என்பதன் விளக்கம் பொறுமையுடன் காத்திருத்தல் என்பதாகும். தவத்தின் முடிவில் கிடைக்கும் வரத்தை விட, அந்த வரத்திற்காக காத்திருந்த பொறுமைதான் பெரிதாக போற்றப்படும். ஏனென்றால் பொறுமை, இலக்கினை அடைய தகுதியுள்ளவனாக்குகிறது. பொறுமையான சிப்பியே முத்தைத் தருகிறது. பொறுமை என்பது வெறுமனே காத்திருப்பது அல்ல, விடாமுயற்சியுடன் உழைத்து, தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருப்பது. 
புத்தரின் சீடர்களில் முக்கியமானவர் பூர்ணா. அவர் தர்மப் பிரசாரம் செய்ய புத்தரிடம் அனுமதியைக் கேட்டார். அதற்கு புத்தர்,"பூர்ணா, எங்கே போய் தர்மப் பிரசாரம் செய்யப் போகிறாய்?'' என்றார். ""குருவே! சூனப்ராந்தம்'' என்ற இடத்தில் என்றார் சீடர். "அதுவா? அங்குள்ளவர்கள் கல்வியறிவு இல்லாதவர்களாயிற்றே; உன் அறிவுரைகளை ஏற்காமல் உன்னை இகழ்ந்து பேசினால் என்ன செய்வாய்?'' என புத்தர் கேட்க, "அதனால் என்ன? கையால் அடிக்காமல் விட்டார்களே என்று மகிழ்ச்சியுடன் பிரசாரம் செய்வேன்'' என்றார் பூர்ணா. "சரி, அப்படி கைகளால் அடித்தால் என்ன செய்வாய்?'' என்ற புத்தரின் கேள்விக்கு, "அதனால் என்ன, ஆயுதங்களைக் கொண்டு தாக்கவில்லையே என்று எண்ணி மகிழ்ந்து எனது தர்மப் பிரசாரத்தைத் தொடருவேன்'' என்றார். "ஒரு வேளை அவர்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்கினால் என்ன செய்வாய்?'' என்றார் புத்தர். "அதனால் என்ன, என்னைக் கொல்லவில்லையே, அந்த அளவுக்கு நல்லவர்கள்தான் என்றெண்ணி என் பணியைத் தொடருவேன்; என் கடன் பணி செய்துகிடப்பதுவே'' என்றார் பூர்ணா. "சரி, கடைசியாக ஒரு கேள்வி. உன்னைக் கொன்று போட்டுவிட்டால்... என்ன செய்வாய்?'' என்றார் புத்தர்.
""மிகவும் மகிழ்ச்சியுடன் இறப்பேன்; அட இவ்வளவு சீக்கிரம் முக்தி அடைய உதவினார்களே! என்று அகம் மகிழ்வேன்; உள்ளம் குளிர்வேன்'' என்று பூர்ணா பதிலுரைத்தார். அந்த பதிலால் பூர்ணாவின் பொறுமையும், பக்குவமும் தெரிந்தது. உடனே புத்தர், ""பூர்ணா, நீ தர்ம பிரசாரம் செய்; நீ பரிபூரண பக்குவம் பெற்றுவிட்டாய்'' என்று சொல்லி பொறுமையின் சின்னமான பூர்ணாவுக்கு ஆசி வழங்கினார்.பொறுமை அறிவின் துணைவன். பொறுமையை கைக்கொண்டால் வாழ்வின் உன்னதங்கள் நம்மைத் தேடி வரும். 
மனித வாழ்க்கை ஒரு பயணம். அப்பயணத்தில், வேகமாக பயணிப்பவர்கள் பலரை முந்திச் செல்வார்கள். வேகத்தால் திருப்பங்களிலும், வளைவுகளிலும், திடீரென்று வேகத்தை குறைக்க வேண்டியிருக்கும். அதனால் பயணிகள் சில நேரங்களில் பதட்டமாகவும், பயமாகவும் பயணிப்பதுண்டு. மிதமான வேகத்தில் பயணிக்கும்போது நிறைய நிகழ்வுகள் கண்ணில் படும். அவை வாழ்வை ரசிக்க வைக்கும். மனதை மகிழ வைக்கும். மொத்தத்தில் பயணம் இனிமையாகவே அமையும்.
ஓர் ஓட்டுநர் பொறுமை இழந்தால் ஒட்டுமொத்த பயணிகளும் நிம்மதி இழப்பது போல், ஒரு குடும்பத்தலைவர் பொறுமை இழந்தால் அக்குடும்பமே துன்புறும். ஒரு நிர்வாகத்தின் தலைமை பொறுமை இழந்தால் அந்த நிர்வாகமே துன்புறும். உண்மையில் மகிழ்ச்சியின் சாவியான பொறுமை, நிறைய போதிக்கும். வாழ்வை எளிமையாக்கும், முடிவில் சாதிக்கவும் வைக்கும். 
சுவாமி விவேகானந்தர், "நம்பிக்கையும் பொறுமையும் இருந்தால் அவமானங்கள் கூட வெற்றிக்கான பாதை அமைக்கும்'' என்றார். ஓர் இளம் வயதுப் பெண் கல்கத்தா நகரத்து வீதிகளிலே உள்ள கடைகளில் கையேந்தினாள். அப்பெண்மணிக்கு அது வழக்கமாகவே இருந்தது. ஒரு நாள் அவர் ஒரு கடைக்காரரிடம் கையேந்தினார். அவர் கண்டும் காணாமல் இருந்தார். மீண்டும் அப்பெண் கையேந்தினார். பொறுமையிழந்த கடைக்காரர், வாயில் மென்று கொண்டிருந்த வெற்றிலை எச்சிலை அப்பெண்ணின் கையில் துப்பினார். சற்றும் பொறுமை இழக்காத அப்பெண்மணி, "இது நீங்கள் எனக்குக் கொடுத்தது. இதோ! பசியால் வாடும் குழந்தைகளுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்'' என்றார். தான் செய்த தவறை எண்ணி மனம் வருந்தினார். பின்னர் அப்பெண்மணியை அழைத்து ஒரு பணமுடிப்பைத் தந்தார். கடுஞ்சொல்லையும் செயலையும் பொறுத்து கொள்ளும் தன்மையுடையவர் துறவியை விடச் சிறந்தவர் என்கிற பொருளில், 
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின் 
என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். அவரின் வரிகளை நம்மனதில் அசைபோட வைத்த அப்பெண்மணி, அன்னை தெரேசா. 
வாழ்க்கைப் பயணம் ஒரு நேர்கோட்டுப் பாதைப் பயணம் அல்ல. அது பல திருப்பங்கள் நிறைந்தவை. சிறு களைப்பில் பயணத்தை கைவிடுபவர்களுக்கு அவர்களில் வெற்றி அடுத்த திருப்பத்தில் அழகாய் காத்திருப்பது தெரிவதில்லை. பொறுமையாளர்களுக்கு மட்டுமே லட்சியத்தின் புதிர்கள் மறைந்திருந்தாலும் தெரியும். அவர்களே லட்சியத்தை அடையும்வரை ஓய்வுக்கு விடை கொடுத்துவிட்டு உழைப்பிற்கு வழிகொடுப்பர். நடப்பது நடக்கட்டும் என காத்திருந்தால் அவர் சோம்பேறி. நடப்பவையோடு நாமும் நகர்ந்து கொண்டிருப்பவர் சாதாரணமானவர். கடினமாக இருந்தாலும் பொறுமையோடு முயற்சிப்பவரே சாதனையாளர். 
"பொறுமையுடையவன் எதைச் சாதிக்க வேண்டும் என நினைக்கிறானோ அதனைச் சாதிப்பான்' என்ற பெஞ்சமின் பிராங்கிளின் வரிகளுக்கேற்ப நினைத்ததை முடிக்கும் வல்லமை கொண்டது பொறுமை. டாக்டர். தாமஸ் கூப்பர் எட்டு ஆண்டு காலம் உழைத்து 30,000 ஆயிரம் புதிய சொற்களை ஆங்கில அகராதிகளில் சேர்க்க காகிதங்களில் எழுதி வந்திருந்தார். அவரது மனைவி அத்தனை காகிதங்களையும் குவித்து சொக்கப்பனை கொளுத்தி மகிழ்ந்தார். மனைவியிடம் கோபப்படவில்லை. மீண்டும் எட்டு ஆண்டுகள் பொறுமையாய் உழைத்து ஆங்கில அகராதிக்கு ஆயுள் கூட்டினார். ஐசக் நியூட்டன் மாலை நேரத்தில் உலவச் சென்றபோது அவரது நாய் மேஜையில் ஏறியது. மேஜையில் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தி விழுந்து அவர் எழுதி வைத்திருந்த சூத்திரங்களெல்லாம் கருகின. நியூட்டன் மனம் வெதும்பவில்லை. ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர் வினையை நாயின் மீது செய்ய மறுத்தார். பொறுமையாய் மீண்டும் எழுதத் தொடங்கினார். பொறுமை நம்பிக்கையை வளர்க்கும் என்பதற்கு சான்றுகள் இவை. 
பைபிளில் கூறப்பட்ட ஒரு நிகழ்வு. யோபு, ஒரு பெரிய செல்வந்தர். அவருக்கு எல்லா செல்வங்களும், பத்துக் குழந்தைகளும் இருந்தனர். அவர் கடவுள் மீது மிகவும் அன்பு கொண்டிருந்தார். சாத்தான், கடவுளிடம் ஒரு சவால் விட்டார். ""யோபுவிடமிருக்கின்ற செல்வத்தையெல்லாம் எடுத்து விட்டால், யோபு உன்னை சபிப்பான்'' என்றார். "இல்லை, யோபு குற்றமற்றவர், நேர்மையானவர், நல்லவர், அப்படிச் செய்ய மாட்டார்'' என்றார் கடவுள். ""சோதிக்கலாமா?'' என்றது சாத்தான். "சரி'' என்றார் கடவுள்.
யோபுவிற்கு ஒரே நாளில் நான்கு செய்திகள் வந்தடைந்தது. யோபுவின் பத்து குழந்தைகளும், ஊழியர்களும், கால்நடைகளும் இயற்கைப் பேரழிவினாலும் அன்னியப் படையெடுப்பாலும் அழிந்தனர். அதனைக் கண்ணீரோடும் துக்கத்தோடும் ஏற்றுக் கொண்டார் யோபு. ஆனால், இறைவனை அதே அன்போடு பிரார்த்தித்தார். சாத்தான் மேலும் சோதிக்க வேண்டும் என்றது. "சரி' என்றார் கடவுள். யோபுவின் உடலெங்கும் தோல் நோய் பரவியது. தொழு நோயாளியாக்கப்பட்டார் யோபு. மனைவி நண்பர்களெல்லாம் இறைவன் மீதிருந்த நம்பிக்கையைக் கைவிட்டார்கள். அதே நம்பிக்கையோடும், பொறுமையோடும் இறைவனைத் துதித்தார் யோபு. கடவுளின் அளவற்ற வல்லமை மீது அசையாத நம்பிக்கை கொள்கிறார். கடவுள் அவருக்கு முன்பு தந்ததைவிட இரண்டு மடங்கு அதிக சொத்தையும், புதிய பிள்ளைகளையும், மிக நீண்ட வாழ்நாட்களையும்அளித்தார். பொறுமை இறைமையின் அடையாளம். பொறுமையுடையவரிடம் இறைவன் குடிகொண்டுள்ளார்.
பொறுமையே வலிமை!
பொறுமையே வாழ்வின் பெருமை!!
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: 
காவல்துறை துணை ஆணையர், 
நுண்ணறிவுப் பிரிவு.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/9/w600X390/im9.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/09/பொறுமையே-வலிமை-13-ஆர்திருநாவுக்கரசு-ஐபிஎஸ்-3016953.html
3016950 வார இதழ்கள் இளைஞர்மணி எண்ணங்களே பேய்கள்... விழிப்பே இறைவன்! சுகி. சிவம் DIN DIN Tuesday, October 9, 2018 10:42 AM +0530 நீ... நான்... நிஜம்! -39
"இந்தக் காரியத்தை நான் செய்திருக்கக் கூடாது' என்று நீங்கள் பின்னால் வருந்தியது உண்டா? என்று கல்லூரியில் பள்ளியில் நான் கேட்பதுண்டு. பல மாணவர்கள் கைகளைத் தயக்கமின்றி உயர்த்துவார்கள். மாணவர்கள், இளைஞர்கள் என்றில்லை. வயதான பிறகும் நாம் பலமுறை "நான் ஏன் இப்படி நடந்து கொள்கிறேன்' என்று வருத்தப் பட்டிருப்போம். வேறு மாதிரி நடந்திருக்கலாமே என்று அறிவுப்பூர்வமாக யோசிப்போம். ஆனால் அப்படி நடக்கமாட்டோம். "நமக்கு ஏன் இப்படி ஆகிறது... "நாம் ஏன் இப்படி மிருகமாக நடந்து கொள்கிறோம்?' என்று நீங்கள் யோசித்தது உண்டா?
உதாரணங்கள் சில தருகிறேன். காலையில் சீக்கிரம் எழ வேண்டும் என்று முடிவெடுத்து அலாரம் வைப்போம். அலாரம் சரியாகத் தன் கடமையைச் செய்யும்போது நாம் கடமை தவறி அலாரத்தைத் திருப்பி அடிப்போம். எழ மாட்டோம். சிகரெட், மது, இத்யாதிகளை "இன்றுடன் விட்டு விட்டேன்' என்று சபதம் செய்த பலரும் விட முடியாமல் மீண்டும் மீண்டும் அதில் விழுந்து விடுவார்கள். "ஏன் நம்மால் முடியவில்லை' என்று யோசித்தது உண்டா?
"கோபப்படக் கூடாது, கடுஞ்சொல் பேசக்கூடாது, வயதுக்குப் பொருந்தாத வாலிப சேட்டைகள் விடக் கூடாது' என்று முடிவெடுத்த பின்பு, முடிவு முடிந்து போவதை, முடிவற்ற சோகத்துடன் வேடிக்கை பார்ப்போம். இவை எல்லாம் ஏன் நடக்கிறது என்று ஓஷோ அருமையாக விளக்குகிறார். 
ஓஷோ என்றதுமே அவர் செக்ஸ்சாமியார் என்று சிலர் (பலர்) முகம் சுளிக்கிறார்கள். ஆனால் அவர் விழிப்பு நிலை (Awarness) பற்றி துல்லியமாக தீர்க்கமாக விளக்கியதைப் பலரும் படிப்பதே இல்லை. அவர் சொன்ன ஒரு சம்பவம் சொல்கிறேன். 
சிக்மண்ட் ஃப்ராய்டு உலகப் புகழ் பெற்ற மனோதத்துவ ஆய்வாளர். அவர் தமது ஐம்பது வயது பிராயத்தில் இருக்கும் போது மக்கள் கூட்டத்தில் நடந்து போகிற போது ஓர் அழகான இளம் பெண்ணைக் கண்டார். மனம் பரபரப்பு அடைந்தது. அவளைத் தொட்டு விட வேண்டும் என்று மனதில் ஓர் அவசர அழுத்தம் ஏற்பட்டது. ஃப்ராய்டு ஆச்சரியப்பட்டார். "எனக்கா இப்படி? என் வயது என்ன? நான் ஒரு மனஇயல் மருத்துவன்... அப்படி இருக்க என் மனம் ஏன் இப்படி ஓடுகிறது... கூடாது... கூடாது... இந்த எண்ணம் தவறு' என்று யோசிக்கும்போதே அவர் நடையில் வேகம் கூடி அந்தப் பெண்ணைத் தொட்டும் விட்டார். இது குறித்து அவரே பெரிய ஆய்வில் இறங்கினார். 
விழிப்புநிலையில் உள்ள நமது Conscious Mind, சரி, தவறுகளைப் பிரித்துச் சொன்னாலும் நமது Sub Conscious Mind என்னும் மறைமனம், தான் என்ன நினைக்கிறதோ அதைச் செய்ய உடலை இயக்கிவிடுகிறது. நமது Sub Conscious Mind- இல் என்ன என்ன உள்ளது என்பதை நாம் அறியோம். உண்மையில் புற மனத்தை விட ஒன்பது மடங்கு பலம் அதிகம் உடையது அந்த அக மனம். நமது புற மனம் பலம் குன்றியது. நம் அகமனத்தில் உள்ள மனோவசியமான எண்ணங்கள் உடம்பை ஒரு தானியங்கியாக இயக்கி விடுகின்றன. இதனை வென்றால் ஒழிய, நம்மால் உலகை வெற்றி பெற முடியாது. மேலோட்டமாகச் சிந்திப்பவர்களுக்கு நான் சொல்கிற இந்த விஷயம் முற்றிலும் புரியாது.
மனிதன் மேற்கொள்ளும் தீய பழக்கங்கள் யாவுமே மனோவசியத்தின் விளைவே. சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, காமத்தில் பித்துப் பிடித்து அலைவது, அதிகமாகச் சாப்பிடுவது, ஓயாமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்பது இப்படிப்பட்ட செயல்கள் எல்லாமே அகமனத்தின் வசியத்திலிருந்தே நடக்கின்றன. நம்மை அறியாமலேயே நாம் அதில் வசியப்பட்டிருக்கிறோம். தூக்கத்திலிருந்து நாம் விழித்த பிறகும் மனம் விழிப்படையாமல் சில செயல்களைச் செய்து பழக்கப்பட்டிருக்கிறோம். முற்றிலும் அறிவார்ந்த விழிப்படைந்த ஒருவனால் சிகரெட்டின் துர்நாற்றத்தையும் அது நுரையீரலை எரிப்பதையும் சகிக்கவே முடியாது. சிகரெட் பிடிப்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் பரபரப்புடன் ஒரு மெல்லிய நடுக்கத்துடன் அல்லது பதட்டத்துடன் தான் பெட்டியை எடுப்பார்கள். நல்ல விழிப்பு நிலையுடன் ஒருவனால் சிகரெட் பிடிக்கவே முடியாது. மது அருந்தவும் முடியாது. 
இன்றைய இளம் தலைமுறையை வெகுவாகச் சீரழிக்கும் கொடுமை மது... சாராயம்... மகிழ்ச்சி என்றாலும் குடிக்கிறான்; துக்கம் என்றாலும் குடிக்கிறான். பள்ளிப் பருவத்திலேயே பார்ட்டி வைக்கிறான். குடித்துவிட்டு பள்ளிக்கூடம் வருகிறான். குடித்தவன் எப்படித் தெளிவுடன் சிந்திக்க முடியும்? ஒரு நகைச்சுவை படித்தேன். மொடாக் குடியன் ஒருவன் வயிறு முட்டக் குடித்துவிட்டு தட்டுத்தடுமாறி நடந்து தன் வீடு தேடி வந்து சேர்ந்து விட்டான். ஆனால் பூட்டினுள் சாவியை நுழைக்க முடியவில்லை. தடுமாறியது... கைநடுங்கியது."பூகம்பம் வந்துவிட்டது... அதனால்தான் எல்லாமே ஆடுகிறது' என்று புலம்பினான். அவன்படும் துயரம் பார்த்து ஒருவர் அருகே வந்து "உதவட்டுமா?'' என்றார். குடிகாரன் "ம்... பிடித்துக் கொள்ளுங்கள்'' என்றான். ஆடாதபடி பூட்டைப்பிடிக்கப் போனார். குடிகாரன் அவரை முறைத்தபடி, "முட்டாள்... பூகம்பத்தில் வீடு ஆடுவது தெரியவில்லையா, கொஞ்சநேரம் வீட்டைப் பிடி... நான் பூட்டைத் திறந்து விடுவேன்'' என்றான்.
குடித்தால் தான் ஒருவன் குழப்பமடைகிறான் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் உண்மை என்ன தெரியுமா? குழப்பமடைந்தவன் தான் குடிக்க வருகிறான். ஆம்... மனம் குழம்பிய நிலையில் அவன் தன்னை மறைக்க, மறுக்க குடி தேவைப்படுகிறது. மனோவசியமாகாதவன், தெளிவானவன், விழிப்படைந்தவன் ஒருபோதும் குடிக்கமாட்டான். பொய், திருட்டு, கற்பழிப்பு எல்லாவற்றையுமே நீங்கள் தனித்தனி பாவமாகப் பார்க்கிறீர்கள். ஆனால் உண்மையில் இவை யாவுமே மனக்குழப்பங்கள்... மாயையின் லீலைகள்.
ஒரு மனஇயல் ஆய்வாளர் சொன்ன செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். ஒரு மனநல மருத்துவர் ஒரு சோதனை முயற்சியாக ஓர் இளைஞனை ஆழ்துயிலில் ஆழ்த்தினார். வரிசையாகச் சில கட்டளைகளை அவனுக்குச் சொன்னார். அவன் மனம்முழுதும் மருத்துவர் வசமானது. அவர் ஒரு தலையணையை அவனிடம் கொடுத்து "இது உன் ஆருயிர்க்காதலி இவளை முத்தமிடு'' என்று கட்டளை பிறப்பித்தார். அவன் அதுபடியே செய்தான். பிறகு "இன்னும் இரண்டுமணி நேரம் கழித்து இவளை நீ மறுபடி முத்தமிடவேண்டும்'' என்று அவனது ஆழ்மனதுக்குக் கட்டளையிட்டார். எங்கு முத்தமிட வேண்டும் என்று தலையணையில் ஓர் சிவப்பு அடையாளமும் வரைந்தார். பின்னர் அவனை ஆழ்துயிலில் இருந்து எழுப்பிவிட்டார். அவன் சிறிது நேரம் இயல்பாக இருந்தான். பின்னர் எதையோ தேடத் தொடங்கினான். மருத்துவர் தலையணையை எடுத்து பீரோவில் வைத்துப் பூட்டினார். 
இரண்டுமணி நேரம் ஆகும் சமயம் அவன் மிகவும் பரபரப்படைந்தான். மருத்துவரிடமிருந்த சாவியை வலுக்கட்டாயமாகப் பிடுங்கி பீரோவைத் திறந்தான். சடக்கென்று தலையணையை உருவி அடையாளம் இருந்த இடத்தை வெறித்துப் பார்த்தான். வெறிகொண்டவன் போல் முத்தமிட்டான்." ஏன் இந்தத் தலையணையை முத்தமிடுகிறாய்?'' என்று மருத்துவர் கேட்டபோது "தெரியவில்லை... இதைச் செய்யாமல் என்னால் உயிர்வாழ முடியாது. இப்போது என் சுமை நீங்கியதை உணருகிறேன்'' என்றான். இதுவே மனோவசியமான நிலை.
அறிவுப்பூர்வமான காரணங்களுக்கு அப்பாற்பட்டு இதைச் செய்தே ஆகவேண்டும் என்று மனம் தூண்டுவதற்குக் காரணம் மனோவசியமே. பலரும் பலப்பல விஷயங்களில் வசியமாகி இருக்கிறார்கள். ஆழ்மனத்தின் துரத்தலால் வாழ்நாள் முழுதும் அவஸ்தைப்படுகிறார்கள். கோடானு கோடி பணம் சேர்த்து ஒரு நாளில் திடீரென்று ஒருவர் செத்துப் போக அவரது பணத்தை யார் யாரோ சுருட்டிக் கொண்டு ஓடியதைப் பார்த்த பின்னும் அவருக்குப் பின்வந்தவரும் அதேபோல் கோடிகோடியாகக் குவித்து அர்த்தமில்லாமல் செத்துப் போவதும் அவர் பணத்தை யார் யாரோ அனுபவிப்பதும் இந்த உலகில் நடந்ததில்லையா? அறிவும் விழிப்பும் இருப்பவர்கள் இப்படிச் செய்வார்களா? சிகரெட், மது, காமவெறி, பணவெறி, அதிகாரவெறி எல்லாமே மனத்தின் குழப்பமே. இதை வெல்லும் வழியை மதங்கள் போதிப்பதில்லை. மாறாக இத்தனை தவறுகளுடன் மனதைப் பலப்படுத்தும் வழிமுறைகளையே குருமார்கள் கற்றுத் தருகிறார்கள். அதனால் வழிபாடு செய்கிறவர்களின் ஆழ்மனத்தில் குவிந்து கிடக்கும் தவறுகள் தீமைகள் பலப்பட்டுவிடுகின்றன. மத வன்முறை வெடிக்கிறது. 
எதைக்குறித்தும் மனதைக் குவிக்காது, மனதின் சேட்டைகளை வெறும் சாட்சி மாத்திரமாகக் கவனிக்கும் போது நீர் கொதித்து ஆவியாவது போல மனதின் தீய எண்ணங்கள் மெல்ல மெல்ல வெளியே வருகின்றன. அதையும் சாட்சி மாத்திரமாகக் கவனிக்க வேண்டும். மெல்ல மெல்ல அவை பலவீனமடையும். வலுவிழந்த புயல் மையம் போல எண்ண மையம் கரைந்து செயல் ஒடுங்கிவிடும். இந்த தியானமுயற்சியை மேற்கொண்டால் மட்டும்தான் ஓர் இளைஞன் தீய பழக்கங்களிலிருந்து விடுதலை அடையமுடியும். மதங்கள் பிரார்த்தனை, ஜபம், தவம், தொழுகை இவற்றை வற்புறுத்துவதைக் குறைத்துக் கொண்டு தியானம் செய்ய இளைஞரைப் பழக்கினால் வாழ்க்கை இன்னும் சுகமாய் ஒளியாய், மகிழ்ச்சியாய் நகரத்தொடங்கும். 
நமக்கு ஆழ்மனம் என்றொரு "மாநகராட்சி குப்பைத் தொட்டி' இருப்பதைப் பலரும் அறியாமல் போனது தான் துக்கமே. குப்பைத்தொட்டியிலிருந்து அழுகிய துர்நாற்றம் வீசும் பொருட்களைத் தேடித் தேடி வெளியில் எடுத்து இரைக்கும் தெருநாய்கள் போன்றே நாமும் நடந்து கொள்கிறோம். அழுக்குப் பிடித்த மனத்திலிருந்து அசிங்கமான அருவருப்பான எண்ணங்களை மேலே எடுத்து அவற்றைச் செயல்படுத்த வெகுவாகப் பரபரக்கிறோம். 
நான் படித்த ஒரு சிறுகதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு தாயும் மகளும் ஒரு வீட்டில் சேர்ந்து வாழ்ந்தனர். இருவருக்குமே தூக்கத்தில் நடக்கும் வியாதி இருந்தது. ஒரு நாள் நள்ளிரவில் மகள் தூக்கத்தில் எழுந்து கதவைத் திறந்து தெருவுக்குப் போய் விட்டாள். தூக்க மயக்கத்திலேயே நடந்து தெருக் கோடியில் உள்ள பூங்காவிற்குள் நுழைந்து அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டாள். சிறிது நேரத்தில் அம்மாவும் அதேபோல் தூக்கம் மாறாது எழுந்து நடந்து பூங்கா வந்து சேர்ந்தாள். 
எதிர்பாராத விதமாகப் பூங்காவில் சந்தித்துக் கொண்ட மகள், தாயைக் கண்டபடி ஏசினாள். "என் பிரச்சனைகளுக்கெல்லாம் நீயே காரணம்'' என்று பழி தூற்றினாள். 
வாய்க்கு வந்தபடி ஏசினாள். தாயோ மகள் என்றும் பாராது "என் அழகுக்கு நீதான் எமனாக வந்தாய்... நீ என் மகளே அல்ல. எதிரி... பரம எதிரி'' என்று ஏசினாள். தூக்கக் கலக்கத்திலேயே தாயும் மகளும் சண்டையிட்டுக் கொண்டனர். "நீ இறந்தால் தான் எனக்கு நிம்மதி'' என்று வேறு சபித்துக் கொண்டார்கள். அதற்குள் பொழுது விடிந்து நடைப்பயிற்சிக்கு வந்தவர்கள் இருவரையும் பார்த்து பெயர் சொல்லி அழைத்ததும் அவர்களது உறக்கம் கலைந்து விட்டது. விழித்துக் கொண்டனர். 
விழிப்பு நிலையில் ஒருவரை ஒருவர் பார்த்து தாயும் மகளும் கட்டித்தழுவினர், பாசத்தில் உருகினர். "ஐயோ பனியில் பூங்காவுக்கு ஏன் வந்தீர்கள்'' என்று மகள் உருகினாள். "என் வாழ்வின் ஆதாரமே நீதானே'' என்று தாய் மகளைக் கட்டி அணைத்தாள்; கண்ணீர் விட்டாள்.
இந்தக்கதை புரிந்துவிட்டால் நம் சகல குழப்பங்களும் தீர்ந்து விடும். தாயும் மகளும் தூக்கம் கலைந்த மாதிரி நமது மனத் தூக்கமும் கலையத் தொடங்கும். நாம் ஏன் ஒருவரோடு ஒருவர் சண்டையிடுகிறோம் என்கிற காரணம் தெரிய வரும். நம் ஆழ்மனத்தில் நமக்கே தெரியாமல் புதைந்திருக்கும் கோபம், காமம், வஞ்சனை, பகை, முன்விரோதம் இவையெல்லாம் நம்மை வாழ விடுவதே இல்லை என்ற உண்மை புரிய வரும். எஜமானர் ஆஜராகாத வீட்டில் வேலைக்காரர்கள் கட்டுப்பாடு இல்லாமல் கொட்ட மடிப்பது போல (இது இயேசு சொன்ன உவமை) எண்ணங்கள் பேயாய்த் தலை விரித்தாடுகின்றன. விழிப்புநிலை (அஜ்ஹழ்ங்ய்ங்ள்ள்) என்ற எஜமானர், வந்து விட்டால்?!...
(தொடரும்)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/9/w600X390/im8.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/09/எண்ணங்களே-பேய்கள்-விழிப்பே-இறைவன்-சுகி-சிவம்-3016950.html
3016948 வார இதழ்கள் இளைஞர்மணி பைப்பிங் டிசைனிங் இன்ஜினியரிங் படிப்பு! DIN DIN Tuesday, October 9, 2018 10:36 AM +0530 அனைத்துவிதமான இயந்திரங்களைக் கையாள்வது சம்பந்தமான படிப்பை கற்றுத் தருவது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையாகும். அதில் பைப்பிங் டிசைனிங் இன்ஜினியரிங் தனித்துவம் பெற்றுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள், எரிவாயு நிறுவனங்கள், இரசாயன நிறுவனங்கள் பைப் லைன் மூலம் தங்களுடைய பொருட்களைக் கொண்டு செல்கின்றன. அத்தகைய பைப் லைன்களின் வடிவமைப்புப் பணிகளைச் செய்வதற்கு பைப்பிங் டிசைனிங் இன்ஜினியரிங் படித்தவர்களைத் தான் அந்த நிறுவனங்கள் பணியமர்த்துகின்றன. அதனால் பைப்பிங் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு அந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. 
பைப்பிங் டிசைனிங் இன்ஜினியரிங் படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:
http://www.vit.edu/index.php/admissions/piping}engineering}course
https://pwinstitute.in/
http://www.ipebs.in/
http://astsglobal.com/piping-process-engineering.php
http://www.pipeindia.com/
- எம்.அருண்குமார்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/9/w600X390/im7.JPG http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/09/பைப்பிங்-டிசைனிங்-இன்ஜினியரிங்-படிப்பு-3016948.html
3016947 வார இதழ்கள் இளைஞர்மணி வாங்க இங்கிலீஷ் பேசலாம் 160 ஆர்.அபிலாஷ் DIN Tuesday, October 9, 2018 10:35 AM +0530 புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் மருத்துவருக்கான காத்திருப்போர் அறையில் இருக்கிறார்கள். அப்போது புரொபஸர் ஆங்கிலத்தில் குழப்படியான பேச்சுபாணியை amphibology எனச் சொல்வார்கள் என்கிறார். புரொபஸர் amphibologyக்கான வேறு உதாரணங்களை வழங்குகிறார். அப்போது அவர் frumious எனும் சொல்லைப் பயன்படுத்த அதன் பொருளை கணேஷ் வினவுகிறான். அப்போது குறுக்கிடும் நடாஷா தனக்கு அதன் பொருள் தெரியும் என்கிறாள். அச்சொல் முதலில் பயன்படுத்தப்பட்ட கவிதையில் இருந்து ஒரு வரியை மேற்கோள் காட்டுகிறாள்: Beware the Jubjub bird, and shun the frumious Bandersnatch!
இது கணேஷை மேலும் குழப்புகிறது. அதென்ன ஜுப் ஜுப்? அதென்ன பாண்டெர்ஸ்நாட்ச்? புரொபஸர் விளக்குகிறார்.

புரொபஸர்: இச்சொற்கள் Through the Looking Glass and What Alice Found There எனும் நாவலில் இடம்பெற்ற Jabberwocky எனும் கவிதையில் உள்ளவை. நடாஷா மேற்கோள் காட்டியது அக்கவிதையில் உள்ள ஒரு வரியைத் தான். 
கணேஷ்: ஆலிஸ் என்றால் "அதிசய உலகில் ஆலிஸ்' நாவலில் வரும் ஆலிஸா?
புரொபஸர்: ஆமாம். லூயிஸ் கேரல் அந்நாவலுக்கு ஒரு இரண்டாம் பாகம் எழுதினார். ஒரு sequel. அது தான் மேற்குறிப்பிட்ட நாவல். அதில் ஆலிஸ் ஒரு புத்தகத்தை கண்டடைகிறாள். அதை வாசித்தால் ஒன்றுமே புரியவில்லை. அது எழுதப்பட்டுள்ளது mirror writing பாணியில் என அவளுக்கு பின்னர் விளங்குகிறது.
கணேஷ்: அதென்ன mirror writing?
புரொபஸர்: பின்னிருந்து முன்பாக எழுதுவது. கணேஷ் என்பதை ஷ்ணேக என எழுதினால் புரியாது. ஆனால் அதையே கண்ணாடியில் காட்டினால் அந்த பிரதிபிம்பத்தில் தெளிவாக "கணேஷ்' எனத் தெரியும். இதுவே மிரர் ரைட்டிங். ஆலிஸ் கண்டடைந்த புத்தகம் இவ்வாறு குழப்படியாய் எழுதப்பட்டிருக்க அவள் அதை கண்ணாடி முன் காட்டி படிக்கிறாள். அப்போது அவர் ஒரு nonsense verse என அவளுக்குப் புரிகிறது.
கணேஷ்: அதென்ன நான்சென்ஸ் பாடல்?
புரொபஸர்: ஒரு குறிப்பிட்ட அர்த்தம் புரியும்படி எழுதப்படுவது வழக்கமான பாடல். அர்த்தமின்றி அபத்தமாய் வேடிக்கைக்காக எழுதப்படுவது நான்சென்ஸ் பாடல். Hickory Dickory Dock கேட்டிருக்கே இல்ல?
கணேஷ்: ஆமா சார். நர்சரி பாடல்.
புரொபஸர்: ஆமாம். அது ஒரு நான்சென்ஸ் பாடல். பெரும்பாலான நான்சென்ஸ் பாடல்கள் வேடிக்கையானவை:
I see said the blind man
 to his deaf and dumb daughter
as he picked up
his hammer and saw.
இதைக் கேட்க நமக்கு, " ஐயோ பாவம் அந்த காது கேட்காத, ஊமைப் பெண்ணை இவர் வெட்டி விடுவாரோ' என பரிதாபம் தோன்றும். ஆனால் படிக்க வேடிக்கையாகவும் இருக்கும். நான்சென்ஸ் பாடல்களின் சிறப்பே அவை அர்த்தங்களின் தளைகளை உடைத்து வாசிப்பை மிக சுதந்திரமாய் ஜாலியாய் மாற்றுகின்றன என்பதுதான்.
ஜேபர்வாக்கி கவிதையில் ஆங்கிலத்தின் பல புதிய சொற்கள் அறிமுகமாயின. அதில் ஒன்று frumious. அது furious மற்றும் fuming எனும் சொற்களை இணைத்து உருவான ஒரு புதுச் சொல். Furious என்றால் கடும் கோபம். Fuming என்றால் கோபத்தில் புகைவது. Frumious என்றால் கடுங்கோபத்தில் புகைவது. சிலர் கோபத்தில் பொருமிக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் நிலைமை மிக அவலமாய் இருக்கும். அதுவே frumious. Jubjub bird, Bandersnatch எல்லாம் லூயிஸ் கேரெலே கற்பனையில் உருவாக்கின ராட்சத மிருகங்களின் பெயர்கள். Bandersnatch என்பதில் உள்ள snatchக்கு பறிப்பது எனப் பொருள். தன் பெரிய அலகால் இரையைப் பறித்தெடுத்து தின்னும் மிருகமே Bandersnatch. Jabberwockக்கும் அப்படியான ஒரு மிருகமே. அதைப் பற்றின பாடல் என்பதால் Jabberwocky. 
நடாஷா: புரொபஸர், galumph என்பதும் லூயிஸ் கேரல் உருவாக்கின புதுச் சொல் தானே?
புரொபஸர்: ஆமாம். Galumph என்பது gallop மற்றும் triumph என்பது இணைந்து உருவான சொல். Gallop என்றால் குதிரை வேகமாய் ஓடுவது. Triumph என்றால் வெற்றி. ஆக இவையிரண்டையும் சேர்த்து ஒருவர் வெற்றிவாகை சூடி குதிரையில் கம்பீரமாய் பறந்து வருவதை குறிக்க கேரல் ஒரு புதுச்சொல்லை உருவாக்கினார்: galumph. 
நடாஷா: Chortle மறந்து விட்டீர்களே?
(இனியும் பேசுவோம்)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/9/w600X390/im6.JPG http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/09/வாங்க-இங்கிலீஷ்-பேசலாம்-160-3016947.html
3016943 வார இதழ்கள் இளைஞர்மணி இணைய வெளியினிலே... DIN DIN Tuesday, October 9, 2018 10:08 AM +0530 முக நூலிலிருந்து....
* வழி நடையில்
வலை பின்னியிருக்கிறது சிலந்தி.
பின்னால் வந்த
குருட்டு ஈ கூட...
எச்சரிக்கையாய் 
இடைவெளியூடே 
தப்பித்துப் போகிறது.
கவனக் குறைவில்
சிக்கிக் கிடப்பது-
நான் தான்.
- கண்மணி குணசேகரன்

* எனக்குத் துளியும் 
விருப்பம் இல்லைதான்...
எனக்கு சிறிதும் 
சம்மதம் இல்லைதான்...
எனக்கு இனியும் 
பொறுமை இல்லைதான்...
எனக்கு முழுதாய் 
வேண்டும் என்கிறேன்...
கவலைக்கான தீர்வு!
- கனகா பாலன்

* இருக்க முடியாதவங்க 
இலையோட போறாங்க...
பொறுக்க முடியாதவங்க
பூவோட போறாங்க...
காக்க முடியாதவங்க
காயோட போறாங்க...
கடைசி வரை 
பணிவோட இருப்பவங்களுக்கு மட்டும்
கனிகளை தருகின்றது...
வாழ்க்கை. 
- வெட்டி ராசா

* கண் திறந்து ஒருமுறை
பார்த்துவிட்டுச் 
சொல் சித்தார்த்தா...
ஆசையை ஒழிப்பது
அவ்வளவு எளிதா என்று !
- நர்மதா நர்மதா

* மடியில் கனம் இல்லாவிட்டாலும், வழியில் பயம் இருக்கிறது
- வாழ்க்கை.
- கணேச குமாரன்

சுட்டுரையிலிருந்து...
* மழைக்கால பொழுதை விட,
வேறென்ன பெரிய சொர்க்கம்
இருந்துவிடப் போகிறது...
இந்த மண்ணில்?
- கவி

* பிறரைப் பற்றி உன்னிடம் 
குறை கூறுபவனிடம், 
நீ எச்சரிக்கையாக இரு...
இனி ஒரு நாள் உன்னைப் பற்றி 
பிறரிடமும்
குறை கூறுவான். 
- அன்புத் தோழி..

* மற்றவற்றின் 
ஆயுளை அதிகரித்து...
மனிதனின் 
ஆயுளைக் குறைக்கிறது
ஃப்ரிட்ஜ்.
- சப்பாணி

* பணம்லாம் "இன்னைக்கு வரும் 
நாளைக்கு போகும்'ன்னு
பெரியவங்க பழமொழி சொல்லுவாங்க... 
நமக்கு இன்னைக்கு வர்ற சம்பளப் பணம் 
EMI, கிரடிட் கார்டுன்னு 
இன்னைக்கே போய்டுதேடா...
- சண்டியர்

வலைதளத்திலிருந்து...
என் மனைவியின் ஆடை ஆபரண விசயங்களில் நான் பெரும்பாலும் குறுக்கிடுவதில்லை. "இதை அணி, இதை அணியாதே' என்று நான் தடை விதிக்க மாட்டேன். நான் அந்த அளவுக்குப் பிற்போக்கானவன் அல்ல. வேறு அளவுக்கு இருக்கலாம், தெரியாது. பெண்கள் விசயத்தில் எந்த ஆணும் முழு முற்போக்காளனாக இருக்க முடியாது. 
ஆனால் நகை விசயம் வேறு. நகைகள் விலையுயர்ந்தவை. எந்த நேரத்திலும் நடுத்தெருவில் டூவீலர் ஓட்டுநர்களாலும், வீட்டில் தனியாக இருக்கும்போது அந்நியர்கள் வீட்டுக்குள் புகுந்தும் பறிக்கத் தக்கவை. எனவே "இவ்வளவு நகை அணிந்து வெளியே போகாதே' என்பேன். அவர் அணிவதே கால்காசு பெறாத மெலிதான இரண்டு சங்கிலிகள். அதுவே எனக்கு கவலை தரும். ஏதாவது விசேசம், வைகுந்தம் என்று போகும்போது கண்ணைப் பறிக்கும் நெக்லஸ் கழுத்தில் ஏறி முகபடாம் போல் தெரியும். நான் வேண்டாம் என்று ஒருமுறை சொல்லி, எதற்கு இந்தத் தரித்திரக் கோலம் என்று பெரும் சண்டையாகி யார் கல்யாணமோ நிற்கும்படி ஆயிற்று. அதன் பிறகு நான் எதுவும் சொல்வதில்லை. 
ஆடைகள் சமரச பூமி. இந்தப் புடவை நன்றாக இருக்கிறதா? "முறுக்கு கலர்' என்பார் மனைவி. நான் அவரது தேர்வைப் பாராட்டும் விதமாகக் கட்டைவிரலைக் காட்டுவேன். அதாவது கட்டைவிரலை உயர்த்த மாட்டேன்; இடது கை ஆள்காட்டி விரலால் வலதுகையில் கட்டைவிரல் இருக்கும் இடத்தைக் காட்டுவேன். கருத்துச் சொல்ல மாட்டேன். அதிகபட்சம் "முறுக்கு என்ன கலர்?' என்று கேட்பேன். ஆட்சேபிக்க மாட்டேன். இருந்தாலும் சமீப காலமாக ஒன்றை மட்டும் சொல்கிறேன்: 
"அருமையாக இருக்கிறது. என் எதிரில் வராதே''
https://www.writerpayon.com 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/9/w600X390/im4.JPG http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/09/இணைய-வெளியினிலே-3016943.html
3016942 வார இதழ்கள் இளைஞர்மணி சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 15 - தா.நெடுஞ்செழியன் Tuesday, October 9, 2018 10:04 AM +0530 டாட்டாவைப் போன்றே பிர்லா குடும்பத்தினரும் ராஜஸ்தானில் பிலானியில் உயர்கல்விக்கான பயணத்தை 1901 ஆம் ஆண்டு தொடங்கினர். 
சேத் ஷிவ் நாராயண்ஜி பிர்லா முதன்முதலாக தனது பேரன்களான ஜி.டி. பிர்லா, ஆர்.டி. பிர்லா ஆகியோர் படிப்பதற்காக "பாடசாலா' என்ற பள்ளியை நிறுவினார். இந்த பாடசாலா 1925 -29 ஆண்டுக்குள்ளாக மாணவர்கள் அதிகமாகச் சேர்ந்ததால், உயர்நிலைப் பள்ளியாக மாறியது. பின்னர் இடைநிலைக் கல்லூரியாக ஆனது. 
1947- க்குப் பிறகு அது கல்லூரியாக மாற்றப்பட்டது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மருந்தியல், ஆர்ட்ஸ், காமர்ஸ் எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 1964 - இல் ஜி.டி. பிர்லா, Birla Institute of Technology and Science (BITS) - ஐ உருவாக்கி அவரே அதற்கு சேர்மனாகவும் பதவி வகித்தார். 
1964 - 70 காலகட்டத்தில் இது போர்ட் பவுண்டேஷனின் நிதியுதவியோடு பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. அமெரிக்காவில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகமான எம்ஐடியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. மேலை நாடுகளில் உள்ளகல்விமுறைகளில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள், வளர்ச்சிகளை கணக்கில் எடுத்துக் கொண்டு அவை இந்தக் கல்லூரியிலும் பின்பற்றப்படுகிறது. அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் தரமான பொறியாளர்களின் தேவை நம் நாட்டில் அதிகரித்ததால், 1999 இல் மாணவர்களின் எண்ணிக்கை 2,500 -இலிருந்து 4 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டு இந்த பல்கலைக்கழகத்தின் கிளை துபாயில் தொடங்கப்பட்டது. 2004- இல் கோவாவிலும், 2008- இல் ஹைதராபாத்திலும் பிட்ஸ் - பிலானி கல்லூரிகள் தொடங்கப்பட்டன. பிட்ஸ் - பிலானி எனப்படும் இந்தப் பல்கலைக்கழகம் உலக அளவில் பெரும்பங்கை ஆற்றி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் சேர பிட்சாட் BITSAT என்று சொல்லக் கூடிய நுழைவுத் தேர்வு மட்டுமே இதற்கு அடிப்படையாகும். இந்தத் தேர்வில் தேர்ச்சிக்கு உரிய மதிப்பெண்கள் வாங்கிய யாராக இருந்தாலும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இங்கு இடஒதுக்கீடு கிடையாது. மாணவர்களின் திறமையின் அடிப்படையில் சேர்த்துக் கொள்கிறார்கள். மாநில அரசின் பாடத்திட்டத்திலோ, மத்திய அரசின் பாடத்திட்டத்திலோ பள்ளி இறுதித் தேர்வில் பயின்று, மாநில அளவில் முதல் மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வை எழுதாமலேயே சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். 
பிட்ஸ் பிலானியில் மாணவர்களுக்காக வருகைப்பதிவு எதுவும் எடுப்பது இல்லை. ஆனால் ஒரு மாணவர் கூட ஒரு வகுப்பைக் கூட இழக்கமாட்டார்கள். காரணம், மாணவர்கள் ஒரு வகுப்பை மிஸ் பண்ணினால், அதை ஈடுகட்ட அவர்கள் அதற்காக ஐந்து மணி நேரங்களுக்கும் மேலாகச் செலவழிக்க நேரிடும். இதனால் வருகைப் பதிவு இல்லையென்றாலும் மாணவர்கள் வகுப்புகளைத் தவிர்ப்பதென்பது இல்லவே இல்லை. 
பிட்ஸ் பிலானியில் மற்றுமொரு புது முயற்சி உள்ளது. பிளஸ் டூவிற்குப் பிறகு இங்கு சேரும் மாணவர்கள் ஓராண்டில் இத்தனை செமஸ்டர் தேர்வுகள்தான் எழுத வேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவுமில்லை. ஓராண்டில் இரண்டு செமஸ்டர்களுக்குப் பதிலாக, ஐந்து செமஸ்டர் தேர்வுகளைக் கூட எழுதலாம். மிக குறுகிய காலத்திலேயே - அதாவது, ஐந்தாண்டுகளிலேயே ஒருவர் ஆராய்ச்சிப் படிப்பை படித்து முடித்துவிடலாம். இம்மாதிரியான கல்வி கற்கும் காலம் குறித்த நெகிழ்வுத்தன்மை -அகாடமிக் ஃபிலக்ஸிபிலிட்டி (Acadamic flexibility) இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. 
பிட்ஸ் பிலானியில் கல்வி கற்றுத் தரப்படும் முறையில் புதுமைகள் உள்ளன. குறிப்பாக, இங்குள்ள ஆசிரியர்களின் கல்வி கற்றுத்தரும் முறை வித்தியாசமானது. வேறு எங்கும் இல்லாதது. இந்தப் பல்கலைக்கழகத்தில் ஒரே பாடத்தை மூன்று ஆசிரியர்கள் மூன்று வெவ்வேறு வகுப்பறைகளில் நடத்துவார்கள். மாணவர்கள் எந்த வகுப்பறையை வேண்டுமானாலும் தேர்ந்து எடுத்து படித்துக் கொள்ளலாம். எந்த ஆசிரியர் நன்றாகச் சொல்லித் தருகிறாரோ, அவர் சொல்லித் தரும் வகுப்பில் மாணவர்களின் கூட்டம் நிரம்பி வழியும். எந்த ஆசிரியர் நன்றாகச் சொல்லித் தரவில்லையோ, அங்கே மாணவர்கள் இருக்க மாட்டார்கள். இதனால் ஆசிரியர்களிடையே மாணவர்களுக்கு நன்றாகச் சொல்லித் தருவதில் கடும்போட்டி நிலவுகிறது. இதனால் கற்றுக் கொடுப்பதின் தரம் உயர்கிறது. நன்றாகச் சொல்லித் தரும் திறமையில்லாத ஆசிரியர்கள் வேறு வழியின்றி குறுகிய காலத்திலேயே பிட்ûஸ விட்டு வெளியே சென்றுவிடுவார்கள். 
இது தனியார் பல்கலைக்கழகமாதலால், இங்கு படிப்பதற்கு கல்வித்தொகை ஓர் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் ஆகும். 
"நான் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவன், எனக்குப் பண வசதியில்லை. பிட்ஸ் பிலானி போன்ற பெரிய பல்கலைக்கழகத்தில் எல்லாம் அதிகக் கட்டணம் செலுத்தி என்னால் எப்படிப் படிக்க முடியும்?' என்று யாரும் தவறாக எண்ண வேண்டியதில்லை. நீங்கள் இந்த பிட்சாட் நுழைவுத்தேர்வில் வெற்றிகரமாக பாஸ் செய்துவிட்டீர்கள் என்றால், 100 சதவீதம் ஸ்காலர்ஷிப் பெற்று படிக்கவும் வாய்ப்புண்டு. இந்த ஸ்காலர்ஷிப் மாணவர்களின் பொருளாதாரநிலைக்கு ஏற்ப தரப்படுகிறது. அதனால் பிட் சாட் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற, பணவசதியில்லாத மாணவர்களும் இங்கு படிக்க முடியும். அவர்களுக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்த பிட்ஸ் பிலானியில் படித்த முன்னாள் மாணவர்களும், பிர்லா டிரஸ்ட்டும் உதவுகிறார்கள். 
இந்த பிட்சாட் நுழைவுத் தேர்வானது இங்கு படித்த முன்னாள் மாணவர்களின் பெரும் பங்குடன் நடத்தப்படுகிறது. முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவரும் சில கேள்விகளைத் தயார் செய்து பிட்சாட் தேர்வுக்குக் கொடுத்துவருகிறார்கள். இது ஆன்லைன் தேர்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு உதவியாக இருக்கிறது. 
இந்தியாவிலேயே முதன்முறையாக ஆன்லைன் தேர்வை அறிமுகப்படுத்திய பெருமை பிட்ஸ்பிலானியையே சேரும். 
இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். நாங்கள் டெல்லியிலிருந்து கார்த்திக் ஸ்ரீனிவாஸ் என்ற 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவரை, இங்கே எம்.எஸ்ஸி பயாலஜிகல் சயின்ஸஸ் என்ற படிப்பில் 2012 -13 ஆண்டில் சேர்த்துவிட்டோம். அந்த மாணவர் 11 ஆம் வகுப்பிலும், 12 ஆம் வகுப்பிலும் பயாலஜி படிக்கவில்லை. இருந்தாலும் தைரியமாக எம்.எஸ்ஸி பயாலஜிகல் சயின்ஸ் எடுத்துப் படித்தார். அதுமட்டுமல்ல, எம்.எஸ்ஸி பயாலஜிகல் சயின்ஸ் படிக்கும்போதே, டியூயல் டிகிரியாக மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பையும் படித்தார். ஆறாவது செமஸ்டருக்குப் பிறகு அவருக்கு யுனிவர்சிட்டி ஆஃப் கலிபோர்னியா பெர்க்லே The University of California, Berkeley - இல் ஆறுமாதம் எக்சேஞ்ச் புரோகிராம் செய்தார். தற்போது Purdue University -இல் அவருக்கு நேரடியாக பிஎச்டி ஆராய்ச்சி படிப்பு படிக்க வாய்ப்புக் கிடைத்தது (150 வருடங்களுக்கு மேலாக அமெரிக்காவில் புகழ்வாய்ந்த பல்கலைக்கழகமாக இது திகழ்கிறது) 
இங்குள்ள நமது மாணவர்களைப் போல, நான் 11, 12 ஆம் வகுப்புகளில் பயாலஜி படிக்கவில்லை; எனவே எம்.எஸ்ஸி பயாலஜியெல்லாம் என்னால் படிக்க முடியாது என்று என்ற மனப்பான்மையுடன் கார்த்திக் ஸ்ரீனிவாஸ் இருந்திருந்தால், அவருக்கு Purdue University -இல் நேரடியாக பிஎச்டி ஆராய்ச்சி படிப்பு படிக்க வாய்ப்புக் கிடைத்திருக்குமா? நமது மாணவர்களின் இம்மாதிரியான மனப்பான்மைகளே இந்த மாதிரியான பல்வேறு வாய்ப்புகள் நழுவிப் போக காரணமாகிவிடுகிறது. 
BITS பல்கலைக்கழகம் பொறியியல், மருத்துவம், பார்மஸி, மேனேஜ்மென்ட், மானுடவியல், சோசியல் சயின்ஸ் போன்ற பல்வேறு துறைகளில் உலகப்புகழ் பெற்று வருகிறது. மேலும் இவர்கள் பிற தனியார் பல்கலைக்கழகங்களைப் போல இல்லாமல், அதிக அளவில் மாணவர்களைச் சேர்ப்பது இல்லை. ஆதித்ய பிர்லா, பிட்ஸ் பல்கலைக்கழகத்தை நடத்துவதன் மூலமாக - கல்வியை வியாபாரமாகக் கருதி பணம் சேர்க்க வேண்டும் என்று நினைத்திருந்தால் - பிலானியில் மட்டும் அவரால் பத்தாயிரம் பேரைச் சேர்த்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்வதில்லை. 
இந்திய அரசமைப்புச் சட்டத்தை மதித்து எந்தவொரு விதிகளையும் மீறாமல், நல்ல நெறிமுறைகளைப் பின்பற்றி இந்த உயர்கல்வி நிறுவனத்தை உலகப் புகழ் பெறும் வகையில் நடத்துகிறார்கள். 
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: சமூக கல்வி ஆர்வலர் 
www.indiacollegefinder.org

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/9/w600X390/im3.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/09/சரியான-பார்வை-சரியான-வழி-சரியான-செயல்-15---தாநெடுஞ்செழியன்-3016942.html
3012572 வார இதழ்கள் இளைஞர்மணி போலி புகைப்படங்கள்... கண்டுபிடிக்கிறது முகநூல்! - அ.சர்ஃப்ராஸ் DIN Wednesday, October 3, 2018 01:57 AM +0530
சமூக வலைத்தளங்களில் உண்மையான தகவல்களை விட பொய்த் தகவல்கள்தாம் வேகமாகப் பரவுகின்றன. அதுவும் பொய்த் தகவல்களைக் கண்டுபிடிப்பது என்பது முகநூல் (ஃபேஸ் புக்), சுட்டுரை (டிவிட்டர்) போன்ற பெரிய நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது.

அரசியல்வாதிகள், சமூகத்தில் பெரும் அந்தஸ்தில் உள்ளவர்கள் ஆகியோரை மையப்படுத்தியே இந்தப் பொய்த் தகவல்கள் பரப்பப்படுகின்றன. அதுவும் தேர்தல் நேரங்களில் கேட்கவே வேண்டாம். ஊடகங்களின் பெயர்களைக் குறிப்பிட்டே பொய்த் தகவல்கள் வெளியாகின்றன.  அரசியல் ஆதாயம் பெற வேண்டும் என்பதற்காகவும், நிறைய லைக்குகள் பெற வேண்டும் என்பதற்காகவும் இதுபோன்ற பொய்த் தகவல்களை சிலர் வெளியிடுகின்றனர்.

பொய்த் தகவல்களை வெளியிடுபவர்களைப் பிடிக்க முடியவில்லை என்றாலும் அவர்கள் வெளியிடும் பொய்த் தகவல்களின் உண்மைத் தன்மையைக் கண்டுபிடிக்க முகநூல் நிறுவனம் புதிய முயற்சியைக் கையாண்டுள்ளது.

முகநூலில் பரவும் புகைப்படம், விடியோக்களின் உண்மைத் தன்மையைக் கண்டுபிடிப்பதுதான் அந்த புதிய திட்டம். இதற்காக உலகம் முழுவதும் 17 நாடுகளில் 27 மையங்களை அந்த நிறுவனம் அமைத்துள்ளது. 

முகநூலில் வேகமாகப் பரவும் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றின் உண்மைத்தன்மையை  இந்த மையங்களில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள்

ஆராய்வார்கள். அவர்கள் அந்த புகைப்படம், வீடியோ உண்மையில் எங்கு எப்போது யாருடன் எடுக்கப்பட்டது என்பதை நவீன தொழில்நுட்பத்தின் துணைகொண்டு கண்டுபிடிப்பார்கள். 

இந்தப் பொய்த் தகவல்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. அமெரிக்காவில் பெரும்பாலும் செய்திகளின் வடிவிலும், இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் புகைப்பட வடிவங்களிலும் பொய்த் தகவல்கள் பரப்படுகின்றன. இவற்றை நவீன தொழில்நுட்ப உதவியுடன்  கண்டுபிடிக்கும் முகநூல் நிறுவனம், அவற்றை பரவச் செய்வதையும் தடுக்கிறது. இதுதொடர்பாக மக்களிடம் கருத்துகளையும் முகநூல் நிறுவனம் கேட்டறிகிறது.

சமூக வலைத்தளங்களில் பொய்த் தகவல்கள் வேகமாக பரவுவதற்கு அதில் உறுப்பினர்களாக உள்ள ஒவ்வொருவரும் காரணமாகிறோம். இதுபோன்ற பொய்த் தகவல்களுக்கு நாம் பலியாவதைத் தடுக்க புகைப்படங்களின் உண்மைத் தன்மையை தெரிந்து கொள்ள கூகுளில் "ரிவேர்ஸ் இமேஜ்' என்று டைப் செய்து அந்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்து உண்மையைக் கண்டுபிடித்து விடலாம்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/3/w600X390/im11.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/03/போலி-புகைப்படங்கள்-கண்டுபிடிக்கிறது-முகநூல்-3012572.html
3012571 வார இதழ்கள் இளைஞர்மணி சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! - 14  - தா.நெடுஞ்செழியன் DIN Wednesday, October 3, 2018 01:49 AM +0530 உலக அளவில் வெளிநாடுகளில் உள்ள பெரிய நிறுவனங்கள் சமூக நலன் கருதி செயல்படுவதைப் போன்று,  இந்தியாவில் டாட்டா டிரஸ்ட்  மருத்துவம், கல்வி, குடிநீர்,  கிராம மேம்பாட்டுத்திட்டம், நகர்ப்புற வறுமை ஒழிப்பு, ஆற்றல், ஆர்ட்ஸ் கிராப்ட்ஸ், புதிய கண்டுபிடிப்புகள், நிறுவனங்கள் என பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள்

இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் - ஜாம்ஷெட்ஜி டாட்டாவால் 1909 இல் ஆரம்பிக்கப்பட்டது.  அறிவியல், பொறியியல்துறைகளின் அடிப்படைகள் மற்றும் அவற்றின்  ஆராய்ச்சிகள் தொடர்பான உலகத்தரம் வாய்ந்த கல்வியை இந்திய மாணவர்களுக்கு அளிப்பது, அதிக அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஆராய்ச்சிகளை மாணவர்களை மேற்கொள்ளச் செய்து, அதன் மூலம்  அவர்களின் அறிவியல்  அறிவினை  மேம்படுத்துவது, அறிவியல், பொறியியல்துறைகளில் திறமை மிக்கவர்களைக் கொண்டு

மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பது, தொழில்துறை மற்றும் சமூகத்தின் வளர்ச்சிக்கான  அறிவை வளர்த்தெடுப்பது ஆகியவை  இந்த நிறுவனத்தின் நோக்கமாகும். 

உயர்கல்விஆராய்ச்சியில் ஈடுபட்டு  உயர்ந்த நிலையில் உள்ள  உலகின் முதல் பத்து உயர்கல்வி நிறுவனங்களில்  ஒன்றாக இது  இருக்கிறது.  ஆசியாவிலேயே உயர்ந்த கல்வி அளிப்பதில் முதல் இடம் இவர்களுக்குத்தான்.   நானோ சயின்ஸிலிருந்து, ப்ரெய்ன் ரிசர்ச், சூப்பர் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், ஜெனிட்டிக்ஸ் என பல்வேறு துறைகளில் உலக அளவில் ஆராய்சி செய்து முத்திரை பதித்து வருகிறார்கள். உதாரணமாக "நேச்சர்   சயின்ஸ்' போன்ற ஆராய்ச்சி இதழ்களில் இவர்களுடைய கட்டுரைகள் உலக அளவில் பெரும் பங்களிப்புகளைச் செய்து வருகிறது.

1936 இல்   டொரப்ஜி டாட்டா  கிராஜுவேட் ஸ்கூல் ஆப் சோசியல் வொர்க் (Graduate School of Social Work)  என்பதை நிறுவினார். 1944 இல் Tata Institute of Social Sciences (TISS)  என்று  பெயர் மாற்றம் பெற்றது. இந்தியாவிலேயே முதன்முதலாக நிறுவப்பட்ட  சமூக விஞ்ஞான கல்வி நிறுவனமாகும் இது.   இந்த நிறுவனம் இப்போது  உலக அளவில் சோசியல் வொர்க் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் உலகப் புகழ் பெற்று வருகிறது. இங்கு கல்வி கற்ற  மாணவர்கள் இன்று உலக அளவில்,  இந்திய அளவில் பல்வேறு  சமூகப்  பணிகளை ஆற்றி வருகிறார்கள். உதாரணமாக மேதா பட்கர்   இங்குதான் படித்தார்.  இந்தியாவின் எட்டாவது பணக்காரப் பெண்மணியும் ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகப் பணியாற்றி  வருபவருமான அனு ஆகா இங்குதான் படித்தார்.  

டாடா டிரஸ்ட்  - இன் இன்னுமொரு  கல்விநிறுவனம்,  டாட்டா இன்ஸ்ட்டியூட் ஆப் ஃபண்டமென்டல் ரிசர்ச்.   இது உலகத் தரம் வாய்ந்த் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.  இதுவும் டொரப்ஜி டாட்டாவால்  ஜுன் 1, 1945 இல் பெங்களூருவில் ஆரம்பித்து பின்னர் 1962இல் மும்பைக்குச் சென்றது.  

இந்தியாவின் முதல் கணினி மற்றும்  அணுசக்திக்கான ஆராய்ச்சிகள் இங்குதான் செய்யப்பட்டன.   அணுவியல் துறையில் நாம் சிறப்பாக இருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் இந்த நிறுவனம்தான். சயின்ஸ், மேத்ஸ், பிசிக்ஸ்  இல் நிறைய ஆராய்ச்சிகளைச் செய்துவருகிறது. 

நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆஃப் அட்வான்ஸ்டு  ஸ்டடிஸ்  என்ஐஏஎஸ் The National Institute of Advanced Studies (NIAS) என்பது  ஜே.ஆர்.டி. டாட்டாவினுடைய எண்ணத்தில் இருந்து உதித்தது. குறிப்பாக இந்த கல்விநிறுவனம் உயர்கல்வியில் பல்வேறுதுறைகளில் ஆராய்ச்சிகளைச்  செய்வது  வருகிறது. மானுடவியல், இயற்கை அறிவியல் மற்றும் பொறியியல்,  சமூக விஞ்ஞானம் போன்ற துறைகளின் ஒருங்கிணைவான தன்மைகளைக் கண்டறிவது இதன் நோக்கமாகும்.   சமூக, அரசியல் பிரச்னைகள், கல்வி, பாலின பிரச்னைகள், தத்துவம், உளவியல், சமூகத்துக்கும் அறிவியலுக்கும் ஆன தொடர்புகள், சுற்றுச்சூழல், வேளாண்மை,  அகல்வாராய்ச்சி,  நானோ  தொழில்நுட்பம், வரலாறு, சமூக மானிட இனவரைவியல், பொருளாதாரம், மரபியல் என பலதுறைசார்ந்த ஆராய்ச்சிகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன.  இது  1988 இல் உருவாக்கப்பட்டது.  இதை டாட்டா டிரஸ்ட்  நிர்வகிக்கிறது.   

2011 இல் "டாட்டா மெடிகல் சென்டர்' என்ற மருத்துவமனையை  கொல்கத்தாவில்  ரத்தன் டாட்டா தொடங்கி வைத்தார்.   நேபாளம்,  வடகிழக்கு இந்திய மாநிலங்கள், பங்களாதேஷ் ஆகிய பகுதிகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  சேவை செய்வதற்காக  இந்த மையம் தொடங்கப்பட்டது.  இதே மையம் மும்பையிலும் உள்ளது. புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கிறார்கள்.    வசதியற்ற ஏழைக்குடும்பங்களுக்கு இலவசமாக  புற்றுநோய்  சிகிச்சை  கொடுத்து வருகிறார்கள். குடும்ப வருமானத்துக்கு  ஏற்றவாறு சிகிச்சை,  தங்குமிடம், சத்துணவும்  இலவசமாகத் தருகிறார்கள்.

தாஜ் குரூப் ஆப் ஓட்டல்ஸ்  இங்கே அமைத்து பைவ் ஸ்டார் ஓட்டல் தரத்தில் குறைந்த விலையில்  உணவு தரப்படுகிறது. புற்றுநோய் சிகிச்சைக்காக  இங்கு அமைக்கப்பட்டுள்ள மருத்துவ வசதிகள், பிற வசதிகள் பலரை வியப்படையச் செய்கிறது. ஒரு கார்ப்பரேட் நிறுவனம் இவ்வாறு செய்ய முடியுமா என்ற ஆச்சரியம் எழுகிறது.  இங்கு வரும்  50 சதவீதம் மக்கள் - ஏழைகள் - இலவசமாக சிகிச்சை பெறுகிறார்கள்.  பிற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகும் செலவை விட 50 சதவீதம் இங்கே குறைவாக இருக்கிறது.  உலகின் தலைசிறந்த கேன்சர் ஆராய்ச்சி  நிறுவனங்கள்,  இந்த மருத்துவமனைக்கு எண்ணற்ற கதிரியக்க கருவிகள்,  மானிய விலையில் தருகிறார்கள்.  கொல்கத்தா, மும்பையில் இப்போது இந்த  மருத்துவமனைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

இதே போன்று   டாட்டா டிரஸ்ட்  விலங்குகளின் நலத்துக்காக  பீப்பிள்ல் ஃபார் அனிமல்ஸ் என்ற அமைப்புடன் சேர்ந்து மும்பையில் state-of-the-art animal care hospital என்ற விலங்கு மருத்துவமனையை உருவாக்க உள்ளது.  இந்தியாவிலேயே முதன்முதலாக பறவைகள், விலங்கினங்களுக்காக  2019 இல் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. இதை அமைக்க ரூ.100 கோடி  செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 9 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமையவுள்ள இந்த மருத்துவமனையில் அவசரச் சிகிச்சை பிரிவும் செயல்பட உள்ளது. வெளிநோயாளிகள் பிரிவு, உள்நோய்கள் பிரிவு,  அறுவைச் சிகிச்சைப் பிரிவு  ஆகியவை இந்த மருத்துவமனையில்  இருக்கும். 

டாட்டா நிறுவனம் கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும்  செய்த சேவைகள் அளப்பரியது. பாராட்டுக்குரியது. அந்த முயற்சிகள்  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்கள் ஆரம்பிக்கும்போது இதனால் நமக்குப் பெயர் புகழ் கிடைக்கும் என்று கருதாமல் மக்களின் வாழ்க்கைத்தரம் கல்வி மற்றும் மருத்துவம் வாயிலாக உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தரமான சிந்தனையுடன் எந்த ஓர் எதிர்பார்ப்பும் இல்லாமல் இத்தனை கல்வி, ஆராய்ச்சி நிறுவனங்களை உருவாக்கியிருக்கிறார்கள். விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி ஆராய்ச்சி, மருத்துவ ஆராய்ச்சி, சமூக விஞ்ஞான ஆராய்ச்சி, உயர்கல்வியில் பல்வேறு ஆராய்ச்சித்துறைகள் என இந்தியாவின் அடிப்படை ஆராய்ச்சிகளின் முன்னேற்றத்தில் இந்தக்  குழுமம் முக்கியமான பங்கேற்றியிருக்கிறது. 

டொரப்ஜி, சம்ஜெட்ஜி, ஜேஆர்டி டாட்டா ஆகியோர் தாங்கள் சம்பாதித்ததை மக்களுக்காக எந்தவித  எதிர்ப்பார்ப்பும் இல்லாமல்  சேவை செய்திருக்கிறார்கள். 

இந்தியா சுதந்திரமடைந்த பின் இதுபோன்ற நிகழ்வுகள்,  இன்னும் அதிகமாக நிகழவில்லை.  இதுபோன்ற நிகழ்வுகள் நிறைய உருவானால் நமது நாடு   வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.   இன்று தனியார் நிறுவனங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களைப் பற்றி  நிறைய குறைகள் கூறப்படுகின்றன.    

ஆனால் டாட்டா குடும்பத்தினரைப் போல  தன்னலமற்று - எதையும் எதிர்பாராமல் இலாபநோக்கமற்று  கல்விநிறுவனங்களை எவ்வளவு பேர் தொடங்குகிறார்கள்?  மனிதநேயத்தோடு எவ்வளவு பேர்கள் செயல்படுகிறார்கள்? இதனால் எண்ணற்ற மாணவர்களின் திறமைகளை ஆக்கப்பூர்வமாகச் செயல்படுத்த முடியவில்லை.

தனிப்பட்ட நபர்கள் இலாப நோக்கத்துக்காக கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படுவதால்,  அவர்கள் கல்வியை  நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதற்குத்  திட்டமிடுவதில்லை.  

பெரிய  தொழில்நிறுவனங்கள் தாங்கள் ஈட்டும்  அதிகப்படியான இலாபத்தை வருமான வரியிலிருந்து விலக்கு பெறுவதற்காக  அறக்கட்டளைகள் நிறுவி, அதன் வாயிலாகக் கல்வி நிறுவனங்களைத் தொடங்கி, இலாப நோக்கத்துடன் நடத்துவதே இன்றைய கல்வியின் சீர் கேட்டுக்கான காரணமாக இருக்கிறது. 

டாட்டா நிறுவனத்தினரைப் போல உண்மையான கல்வி வளர்ச்சிக்காக -  சமூக நலனுக்காகப்  பாடுபடுபவர்கள் எவ்வளவு பேர்  இப்போது உள்ளனர்? 

(தொடரும்)
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/3/w600X390/im10.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/03/சரியான-பார்வை-சரியான-வழி-சரியான-செயல்---14-3012571.html
3012554 வார இதழ்கள் இளைஞர்மணி இணைய வெளியினிலே... Wednesday, October 3, 2018 01:40 AM +0530
முக நூலிலிருந்து....


வைப்பர் வேகத்தினும் வேகமாய்...
சலிக்கவே சலிக்காமல்...
எழுதிக் கொண்டிருக்கிறது  மழை, எனக்கான கடிதத்தை.

- இரா எட்வின்

 

மிக மிக மென்மையாய் தடவிப் பார்த்து... 
நாசிக்கு சற்று தூரத்திலேயே 
கவனமாய்  தள்ளி வைத்து... 
மூச்சுக்காற்றால் மெதுவாய் 
முத்தமிட்டு ஆனந்தித்து...
பின் புன்னகையில் மென்மை தடவியபடி சொல்கிறார்:
""இந்த ரோசா எவ்வளவு அழகாயிருக்கு''   என அந்த  பார்வையிழந்தவர்.

- வணவை தூரிகா

 


சொந்த பந்தங்களுடன் இணக்கமாக இருக்க முடியாதவர்கள்...
சமுதாயத்துடன் ஒருபோதும் இணக்கமாக இருக்க முடியாது.


- பாலகுருசாமி மருதா

 


இந்த உலகில் பல பேரின் தோல்விக்குக் காரணம்,
அவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களால் முதுகில் குத்தப்பட்டதே .

- துரை பாரதி

பொத்த வேண்டிய வாயை...
 பொத்த வேண்டிய நேரத்தில்...
பொத்திக்கிட்டு 
இருக்கணும்ங்கிறதுதான்... 
புல்லாங்குழலின் 
தத்துவம்

- டிகே கலாப்ரியா

 

சுட்டுரையிலிருந்து...

நம்ம ஆளுங்க பைக்குக்கு பதில் சைக்கிள்ல கூட போயிடுவாங்க. 
ஆனா... மொபைலுக்குப் பதில் லேண்ட் லைனை யூஸ் பண்ணுன்னு சொன்னா
செத்தே போயிடுவாங்க.

- பர்வீன் யூனுஸ்

 

எப்பவாச்சும் யாராச்சும்  இப்படி நல்லது போதிப்பாங்க...
கவனிக்கவும் மக்களே...

- லதா   


பல  அவமானங்களைக் கண்டவனுக்கு பழி சொற்கள் பெரிதான  பாதிப்பை 
ஏற்படுத்தியதில்லை.

- விதுண்


அமாவாசை இருள்தான் பூரண சந்திரனுக்கு முழு விளம்பரமாயிருக்கும்!

- ச. திவாகரன் 

 

வலைதளத்திலிருந்து...


செயற்கைக்கோள், செயற்கைப் பட்டு, செயற்கை முடி, செயற்கைப் பூக்கள் என வாழ்வில் பல செயற்கையாகிவிட்டன. ஆக, செயற்கையான விஷயங்கள் நமக்குப் புதிதில்லை. 

ஆனால், செயற்கை குளிர்பானங்களை அவ்வாறு எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் இது உடம்பு மற்றும் உயிர்  சம்பந்தப்பட்டது. செயற்கைக் குளிர்பானங்களுக்கும், உயிருக்கும் என்ன தொடர்பு?   

சிலமாதங்களுக்கு முன், இந்த வகை குளிர்பானங்களில் அங்கீகரிக்கப்பட்ட (?!) அளவுக்கு மேல் பூச்சிமருந்து கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் குளிர்பான அழிப்பு, எதிர்ப்பு, கழுதைக்கு குளிர்பானம் புகட்டுதல், சாக்கடையில் வீசுதல் போன்ற போராட்டங்கள் நடந்தன. கொஞ்ச நாட்களில் அவை அனைத்தும் காணாமல் போய்விட்டன. மக்கள் வழக்கம்போல் அடுத்த பரபரப்புக்குத் தாவி விட்டனர்.  

இந்த மாதிரி விஷ(ய)ங்களை உலகத்திற்கு "அர்ப்பணிப்பு' செய்த அமெரிக்காவோ இப்போது, குளிர்பானங்களை பள்ளிகளில் விற்கக் கூடாது என்று மாநிலத்திற்கு மாநிலம் சட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. காரணம், பள்ளி மாணவ, மாணவியர் அதிக அளவு குளிர்பானங்களைக் குடித்துவிட்டு  பருமனாகிவிட்டனராம்...

உள்ளூர் நெருக்கடி மற்றும் உலகமயமாக்கல் காரணமாக இந்த குளிர்பான நிறுவனங்கள் இந்தியா போன்ற ஏமாளி நாடுகள் பக்கம் வருகின்றன. பய சாதத்தை அழகாக பொட்டலம் போட்டு அதில் அமெரிக்க கொடி மற்றும் ‘ஙஹக்ங் ண்ய் ற்ட்ங் மநஅ’ என்று பொறித்தால், போட்டி போட்டுக்கொண்டு பெருமையுடன் வாங்கும் நமது இந்தியர்கள்தான் அவர்களின் இலக்கு.  

http://thanjavuraan.blogspot.com
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/3/w600X390/im9.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/03/இணைய-வெளியினிலே-3012554.html
3012463 வார இதழ்கள் இளைஞர்மணி வேலை... வேலை... வேலை... இரா.வெங்கடேசன் Wednesday, October 3, 2018 01:26 AM +0530
இந்திய கப்பல் படையில் வேலை

மொத்தம் காலியிடங்கள்: 37 
1. SSC (Logistics)  - 20
2. SSC ( IT) - 15
3. SSC (Law) - 02 
வயது வரம்பு: லாஜிஸ்டிக்ஸ் மற்றும் ஐ.டி பிரிவுகளுக்கு  விண்ணப்பிப்பவர்கள் 02.07.1994 - 01.01.2000 க்குள் பிறந்திருக்க வேண்டும். சட்டப் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 02.07.1992 -  01.07.1997க்குள் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: லாஜிஸ்டிக்ஸ் பிரிவுக்கு 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ., எம்.பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.எஸ்சி.,(ஐ.டி.,)யுடன் நிதியியல், லாஜிஸ்டிக்ஸ், சப்ளை செயின் மேனேஜ்மெண்ட், மெட்டீரியல் மேனேஜ்மெண்ட் பிரிவு ஏதாவது ஒன்றில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். எம்.சி.ஏ., எம்.எஸ்சி., (ஐ.டி.,) பி.ஆர்க்., போன்ற படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஐ.டி., பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.இ., பி.டெக்., போன்ற ஏதாவதொன்றில் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., பி.எஸ்சி., ஐ.டி., எம்.எஸ்சி., ஐ.டி, எம்.டெக்., பி.சி.ஏ., எம்.சி.ஏ., போன்ற படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சட்டப் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 55 சதவீத மதிப்பெண்களுடன் சட்ட படிப்பு முடித்துவிட்டு வழக்கறிஞர் சட்டம் 1961 கீழ் வழக்கறிஞராகப் பதிவு செய்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எஸ்எஸ்பி மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in  என்ற வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_23_1819b.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.10.2018

 

எம்ப்ளாயிஸ் ஸ்டேட் இன்ஸ்யூரன்ஸ்
கார்ப்பரேஷனில் வேலை

மொத்த காலியிடங்கள்: 539 
பதவி: Social Security Officer/ Manager Gr-II/ Superintendent

வயது வரம்பு:  21 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு  உச்சபட்ச வயது வரம்பில் விலக்கு உண்டு.
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவதொரு பிரிவில் பட்டம் (வணிகவியல், மேலாண்மை,சட்டம்) பெற்றிருப்பதுடன் கூடுதலாக கணினி தொடர்புடைய தகவல்கள் கூடுதலாக பெற்றிருக்க வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.esic.nic.in என்ற வலைதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.250.  
தேர்வு செய்யப்படும் முறை: அப்ஜெக்டிவ் வகையிலான முதல் கட்டத் தேர்வு, இறுதித் தேர்வு, டெஸ்கிரிப்டிவ் வகையிலான கம்ப்யூட்டர் திறனறியும் தேர்வு, ஆங்கிலத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
மேலும் விவரங்கள் அறிய: https://www.esic.nic.in/attachments/recruitmentfile/8f87c0233b19a3cd64cb2165efdd8bb8.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.10.2018

 

பொதுத்துறை வங்கிகளில் வேலை

பதவி: Clerical (பொதுத்துறை வங்கிகள்) 
காலியிடங்கள்: 7,275 (தமிழகத்தில் மட்டும் 792 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன)
வயது வரம்பு:  20 வயது முதல்  28 வயதிற்குள் இருக்க வேண்டும்.  
தகுதி: ஏதாவதொரு துறையில்   இளங்கலைப் பட்டம் மற்றும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: ஐபிபிஎஸ் நடத்தும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர்  அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்து  வைத்துக்கொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். 
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, கோவை, சேலம், ஈரோடு, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், நாகர்கோவில்,  திருநெல்வேலி, விருதுநகர், வேலூர், புதுச்சேரி.
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 08.12.2018 முதல் 16.12.2018 வரை நடைபெறும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.ibps.in/wp-content/uploads/Detailed_Advt_CRP_Clerks_8_1.pdf என்ற வலைதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.10.2018


தமிழக அரசின் வழக்காடல் துறையில் வேலை


பதவி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 28
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: அரசு தலைமை வழக்குரைஞர், அரசு தலைமை வழக்குரைஞர் அலுவலகம், உயர்நீதிமன்றம், சென்னை - 600 104  
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 22.10.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: www.tn.gov.in என்ற வலைதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/3/w600X390/im4.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/03/வேலை-வேலை-வேலை-3012463.html
3012531 வார இதழ்கள் இளைஞர்மணி தன்னிலை உயர்த்து! - 12: முடிவு எடுத்தல்... ஒரு துணிவு! ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ். DIN Wednesday, October 3, 2018 01:25 AM +0530  

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் மாசிடோனியாவை ஆண்ட மன்னர் பிலிப். அவர் ஒரு நாள் குதிரையேற்றம் பார்க்கப் புறப்பட்டார்.  ""அப்பா, குதிரையேற்றம் என்றால் என்ன?'' என்றார் மகன். ""தெஸ்ஸாலி நாட்டை சேர்ந்த பியூசிபேலஸ் என்ற குதிரையை நம் வீரர்கள் அடக்கப் போகிறார்கள். அதுதான் குதிரையேற்றம்'' என்றார் தந்தை. ""நானும் தங்களுடன் கண்டிப்பாக வருவேன்'' என்று அடம்பிடித்த மகனை அழைத்துச் சென்றார் தந்தை. 

குதிரையை அடக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. எவராலும் அந்தக் குதிரையை அடக்க முடியவில்லை. நிகழ்சியை அந்தச் சிறுவன்  கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். மாசிடோனியாவில் துணிச்சலும், வீரமும் கொண்ட வீரர்கள் ஒருவர் கூட இல்லையா? என்று ஏளனம் பேசினான் குதிரைக்குச் சொந்தக்காரன். இதைக் கேட்டதும், சிறுவனின் வீர மனதில் ஓர் உறுத்தல். மன்னரின் மகனாயிருந்ததால், குதிரையில் ஏறிய அனுபவம் அவனை தூண்டியது. ""அப்பா, இந்த குதிரையை நான் அடக்குகிறேன். அதற்கு தங்களின் அனுமதி வேண்டும்'' என்றான். ""நீ சிறுவன், உன்னால் இந்தக் குதிரையை அடக்க முடியுமா?'' என்றார் தந்தை. ""என்னால் நிச்சயமாக முடியும்'' என்று சொல்லிவிட்டு இருக்கையில் இருந்து எழுந்தான் சிறுவன். மகனின் துணிச்சலைக் கண்டு உள்ளூர மகிழ்ந்த தந்தை, ""சரி, களத்தில் இறங்கி குதிரையை அடக்கு. நீ இந்த குதிரையை அடக்கிவிட்டால், அதையே உனக்கு பரிசாக வாங்கித் தருகிறேன்'' என்று மகனை உற்சாகப்படுத்தி அனுப்பினார்.  

களமிறங்கியதும், குதிரையின் முகத்தை மெதுவாக தடவிக் கொடுத்தான். குதிரையை ஒருமுறை வலம் வந்தான். குதிரையை அது நின்று கொண்டிருந்த திசைக்கு எதிர்திசையில் திருப்பினான். குதிரை அமைதியாகவே நின்று கொண்டிருந்தது. இதையெல்லாம் மக்கள் கூட்டம் அமைதியாகவே பார்த்துக் கொண்டிருந்தது. குதிரையை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தபோதே, தடாலடியாக ஒரே தாவலில் குதிரையின் மீது ஏறி அமர்ந்தான். குதிரையின் சேணைக்கயிற்றை லாவகமாகப் பிடித்து, அதை விரட்டினான். சிறுவனுக்கு கட்டுப்பட்டு குதிரையும்  குதூகலமாக ஓடியது. கம்பீரமாக மைதானத்தை ஒரு முறை வலம் வந்தான். இதைப் பார்த்து மாசிடோனிய மக்கள் ஆரவாரத்தில் துள்ளிக் குதித்தனர். துணிச்சலான அந்த சிறுவனை தூக்கி வைத்துப் பாராட்டினர். தன் மகனின் துணிச்சலுக்கு பரிசாக "பியூசிபேலஸ்' என்ற அந்த குதிரையை  உடனே பரிசாக வாங்கிக் கொடுத்தார். 

""இந்தக் குதிரையை எப்படி அடக்கினாய்?'' என்று வியப்படைந்து கேட்டார் தந்தை. ""சூரிய ஒளியால் குதிரையின் கண்கள் கூசிக் கொண்டிருந்தன. அதனால்தான் குதிரை கோபத்தில் துள்ளிக் குதித்தது. அப்போது ஒரு முடிவெடுத்தேன். அதன்படி குதிரை நின்று கொண்டிருந்த திசையை மாற்றி நிற்க வைத்தேன். பின்னர் அதன் மீது ஏறினேன்'' என்றான் சிறுவன்.  இந்த துணிச்சலான முடிவை எடுத்த சிறுவன்தான் "எப்பொழுது நீங்கள் புதிய, தீர்க்கமான, உறுதியான முடிவெடுக்கிறீர்களோ, அப்பொழுது உங்கள் வாழ்க்கை மாற்றமடையும்' என்ற டோனி ராபின்ஸ் என்னும் அமெரிக்க எழுத்தாளரின் வரிகளுக்கேற்ப பின்னாளில் உலகம் போற்றும் மாவீரன் அலெக்ஸாண்டரானார்.

"வாழ்க்கை என்பது நிறைய வாய்ப்புகளைக் கொண்டது. அதில் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு முடிவும் அவரது வாழ்வை நிர்ணயிக்கும்' என்ற ஜான் சி. மேக்ஸ்வெல் என்பவரின் வரிகளுக்கேற்ப  வாய்ப்பினை நழுவவிடுதலும், பிறருக்கு வழங்கிவிடுதலும் குரங்கு கையில் ரொட்டியைத் தந்த பூனைகள் போலாகிவிடும்.

பூனைகள் இரண்டு, ஒரு வீட்டிலிருந்து ரொட்டித் துண்டை எடுத்து வந்தன. அதை இரண்டாகப் பிரித்த போது ஒரு துண்டு பெரியதாகவும், மற்றொன்று சிறியதாகவும் இருந்தது. இதில் பெரிய துண்டினை யார் வைத்துக்கொள்வது? என முடிவில்லாமல் இரண்டு பூனைகளும் சண்டையிட்டன. இப்பிரச்னைக்கு முடிவு காண, ஒரு குரங்கிடம் சென்றன. குரங்கு தீர்வு காண, முதலில் சற்று பெரிதான துண்டைக் கடித்து சாப்பிட்டது. இரண்டும் சரிசமமாக இல்லை. இப்போது  கடிபட்ட ரொட்டித்  துண்டு மற்ற ரொட்டித் துண்டை விட சிறியதாகி போனது. இதைச் சமப்படுத்த இரண்டாவது ரொட்டித் துண்டைக் கடித்தது. அது இப்போது முதல் ரொட்டித் துண்டை விட சிறியதாகி போனது.  மாறி மாறி சாப்பிட்டு கடைசியில் முழு ரொட்டியையும் குரங்கு சாப்பிட்டு  முடித்தது. இப்பொழுது இரண்டு பூனைகளும் ஏமாற்றத்துடன் சென்றன. முடிவுகள் நமக்கு கிடைத்த வாய்ப்பு. தான் எடுக்க வேண்டிய முடிவினை மற்றவர் இடத்தில் விட்டுவிடுபவர் வாழ்க்கை முழுவதும் ஏமாற்றத்தோடு வாழ்ந்து கொண்டிருப்பார். 

"நமது எதிர்காலம் ஆச்சரியங்கள் நிறைந்தது. எனவே, நடக்க இருக்கும் நிகழ்வுகளை சரி வர உள்வாங்கி பொருத்தமான முடிவுகளை எடுக்கத் தெரியாதவர்கள், விழி இழந்தவர்கள் யானையை அடையாளங் கண்டதற்கு ஒப்பானதாகும்' என்கிறார் மேலாண்மையியல் பேராசிரியர் ஆலன் ரோவ். 

முடிவெடுப்பது ஒரு கலை. அது ஓர் அசாத்தியமான பண்பு. முடிவெடுக்காத வாழ்க்கை இயங்குவதில்லை. முடிவெடுப்பதில் மட்டுமே வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும்  அழகாகவும், வேகமாகவும் இயங்குகிறது. அதிகாலை எழுவது முதல் அன்றிரவு தூங்கும் வரை, ஒருவர் எடுக்கும் முடிவு தான் அவரை நிர்ணயிக்கிறது. விரைவாக முடிவெடுத்து பழகுகின்றவருக்கு, இந்த உலகம் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளத் தயாராக இருக்கிறது. தோல்வியாளர்கள் அன்றைய சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்கிறார்கள். வெற்றியாளர்கள் தாங்கள் அடைய வேண்டிய இலட்சியத்திற்காக முடிவெடுக்கிறார்கள்.

1893ஆம் ஆண்டு மே மாதம், ஒரு வழக்கு தொடர்பாக, தென்ஆப்பிரிக்காவில் உள்ள டர்பனிலிருந்து  பிரிட்டோரியாவுக்கு புறப்பட்டார் காந்தி. இரயிலில் முதல் வகுப்பில் பயணிப்பதற்கான பயணச் சீட்டை வைத்திருந்தார். இரவு ஒன்பது மணியளவில் அவர் சென்ற இரயில்  மாரிட்ஸ்பர்க் என்னு நகரினை அடைந்தது. அப்போது இரயிலில் வந்த பரிசோதனை அதிகாரி, காந்தியை பொருட்கள் ஏற்றி வரும் இரயில் பெட்டிக்கு போகச் சொன்னார். அதற்கு காந்தி ""என்னிடம் முதல் வகுப்பு பயணச் சீட்டு உள்ளதே'' என்றார். ஆனாலும் நிறவெறியில் ஊறிப்போன ஒரு வெள்ளையன் அவரை தன்னுடன் பயணிக்கக் கூடாது எனக் கூறியதால் அதிகாரி மிகவும் பிடிவாதமாய் இருந்தார். காந்தி மறுக்கவே, ஒரு போலீஸ்காரரை அழைத்து காந்தியை அவரது  பெட்டிகளோடு இரயில் பெட்டியிலிருந்து தூக்கி எறிந்தார். தூக்கியெறியப்பட்ட வேதனை ஒரு பக்கம். கடுங்குளிர் மறுபக்கம். இரயிலும் புறப்பட்டுப் போனது. ஊர் புதிது. நள்ளிரவு. துணையென்று எவருமில்லை. அடுத்து என்ன செய்வது? என சிந்தித்தார். வெள்ளையனிடம் பெற்ற அவமானத்தோடு இந்தியாவிற்கு திரும்புவதா? அல்லது நிறவெறிக்கு எதிராக போராடுவதா? என நெடுநேரம் யோசித்தார்.அதே இரவில் விடியலாக துணிந்து ஒரு முடிவெடுத்தார். ஆம்! போராடுவது என முடிவு எடுத்தார். அடுத்த தொடர் வண்டியில் பிரிட்டோரியாவுக்கு முன்னேறினார்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு

என்ற வள்ளுவரின் வரிகளுக்கேற்ப அன்று துணிவாக எடுத்த முடிவினால்தான் இரயில் பெட்டியிலிருந்து தூக்கி எறிந்த வெள்ளையரை, நம் மகாத்மாவால்  இந்திய மண்ணிலிருந்து  தூக்கி எறிய முடிந்தது.

ஒவ்வொரு செயலுக்கும் கிரிக்கெட் பந்தினைப் போல இரண்டு விளைவுகள் இருக்கும். ஒன்று ஆட்டக்காரரை தோற்கச் செய்யும் , அல்லது ரன் எடுக்க உதவும். பந்து வீச்சாளரின் கையிலிருந்து ஆட்டக்காரர் அதை தடுத்தாட எடுக்கும் நேரம் தோராயமாக ஒரு விநாடிக்கும் குறைந்த நேரம் ஆகும். இக்குறுகிய  நேரத்தில் அப்பந்தினை  சரியாக கணித்து ஆடினால், ஒரு ரன் முதல் ஆறு ரன் வரை எடுக்க முடியும். கணிக்கத் தவறினால் ஆவுட் ஆவதைத் தவிர வேறு வழியில்லை. கிரிக்கெட் விளையாட்டினை உலகம் ஆர்வத்தோடு பார்க்கின்றது.  காரணம், பிரச்னை என்னும் ஒரு பந்து ஒரு மனிதனை நோக்கி வருகின்றது. அந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாத அளவிற்கு பதினோரு பேர் சுற்றி இருக்கிறார்கள். இவ்வளவு நெருக்கடியான சூழ்நிலையில் ஒருவர் அதை எப்படி கையாள்கிறார்? என்பதையும், ஒவ்வொரு, பந்துக்கும் அவர் எடுக்கின்ற முடிவுகளால் ஏற்படும் விளைவை  அறிந்து கொள்வதற்குத்தான் அவ்வரங்கத்தில் பத்தாயிரம் பேர்களும், பெரிய திரைகளில் லட்சக்கணக்கிலும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, ஒவ்வொரு பந்தினைப்போல், ஒவ்வொரு செயலுக்கும் சரியாக முடிவெடுப்பவரே ஆட்ட நாயகனாவதைப் போல் உலக நாயகனாகின்றார்.  

1917இல் ரஷ்யப் புரட்சியின் வெற்றியடைந்தது. தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு, தொழிற்சாலையையே நிர்வாகம் செய்யும் பொறுப்பு தரப்பட்டது. தொழிலாளர்களே முதலாளிகளானார்கள். ஆனால் அவர்கள் மாமேதை லெனினிடம் எங்களுக்கு நிர்வாகம் செய்வதில் முன் அனுபவம் இல்லை என முறையிட்டனர்.  அப்போது லெனின், "நல்ல முடிவுகள் அனுபவத்தால் வரும்; அனுபவங்கள் சரியில்லாத  முடிவுகளால் கிடைக்கும்' என்பதை அறிந்து  ""தெரியாததை தெரிந்து கொள்வோம்; தவறுகளைத் திருத்திக் கொள்வோம்'' என்று அவர்களுக்கு கூறினார். அதன்படி தொழிலாளிகள் முடிவெடுக்கத் தொடங்கினர். சிறந்த முதலாளிகளானார்கள். ஒரு மலைப்பாங்கான கிராமம். தவத்தில் சிறந்த ஞானி ஒருவர் வருகை தந்தார். ஞான திருஷ்டியின் மகிமையால் அவரைக் காண வந்த ஒவ்வொருவருக்கும், பின்னாளில் நடக்கவிருப்பதைத் தெரிவித்தார். அனைவரும் அதைக் கேட்டு மகிழ்ந்தனர். இதனையறிந்த அந்த கிராமத்து சிறுவன் ஒருவன் முனிவர் முன் வந்து நின்றான். அவனது வலது கை மட்டும் மூடி இருந்தது. ""சுவாமி! எனது  கையில் என்ன இருக்கிறது?'' என்று சிறுவன் கேட்டான். அச்சிறுவனிடம், ""குழந்தாய்!  உனது கையில் ஓர் உயிர் இருக்கிறது'' என்று கண்ணை மூடியவாரே கூறினார் முனிவர். சிறுவனுக்கு ஒரே ஆச்சரியம், அவன் கைக்குள் இருந்த சிறு புழுவினை எப்படி முனிவர் கண்டுபிடித்தார்? என ஆச்சரியப்பட்டான். மீண்டும் முனிவரிடம், ""அந்த புழு உயிருடன் இருக்கிறதா? இறந்துவிட்டதா?'' என கேட்டான். ஒரு கணம் யோசித்துவிட்டு "அது உன் கையில் தான் இருக்கிறது என்றார் முனிவர். கூடியிருந்தவர்கள் எல்லாம் குழப்பத்தோடு முனிவரைப் பார்த்தனர். ""ஏன் சுவாமி! ஒன்று உயிரோடு இருக்கிறது என்று சொல்லுங்கள், இல்லையெனில் உயிரில்லை என்று சொல்லுங்கள். ஏன் பொதுவான பதிலைச் சொல்கிறீர்கள்?'' என்றனர். அதற்கு முனிவர்,  ""ஐயன்மீர்! நான் அச்சிறுவனின் கையில் இருக்கின்ற புழுவினை, உயிரோடு இருக்கிறது என்று சொன்னால், அவன் அப்புழுவை தனது கைக்குள்ளே நசுக்கி உயிரற்றதாக்கிவிடுவான். அப்போது என் வாக்கு பொய்யாகிவிடும். அதே நேரத்தில் அது உயிரற்றதாக இருக்கிறது என்று சொன்னால், அப்புழுவினை நசுக்காமல் அப்படியே  உயிரோடு என்னிடம் காட்டியிருப்பான். அதனால் தான் அந்த புழுவின் வாழ்க்கை உன்னிடம் இருக்கிறது என கூறினேன்'' என்றார். கண்ணுக்கெதிரே உள்ள செயல்பாடு புதிராக இருந்தால், புத்திசாலித்தனமே சரியான முடிவெடுக்கும். முடிவெடுப்பதை தள்ளிப் போடுபவர்கள் தோல்விக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அவ்வப்போது முடிவெடுப்பவர்கள் வாழ்க்கையில் சாதாரணமாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அடிக்கடி முடிவெடுப்பவர்கள் சிறந்த மனிதர்கள். விரைவில் நல்ல முடிவுகளை எடுப்பவர்கள் வாழ்வின் இலட்சியவாதி. எல்லா முடிவுகளும் நல்ல சிந்தனையாலும் சமூகத்தினுடைய வளர்ச்சிக்காகவும் இருக்கின்றபோது அந்த முடிவு வரலாற்றில் தடம் பதிக்கின்றது.

மகாபாரத யுத்தம் தொடங்குவதற்கு முன்னர், பாண்டவர்களும் கெüரவர்களும் ஆயத்தமானர்கள். துரியோதனன் தனது நட்பு நாட்டு மன்னர்களுக்கெல்லாம் தூது அனுப்பி தனது படையை வலிமையாக்கினார். பாண்டவர்களும் தங்களது படையைப் பெருக்கினார்கள். இரு சாரரும் பகவான் கிருஷ்ணரின் துணையை நாடவேண்டும் என தீர்மானித்தனர். துரியோதனனும், அர்ச்சுனனும் துவாரகையிலிருந்த கண்ணனைப் பார்க்க வந்தனர். கண்ணன் கண்களை மூடி படுத்திருந்தார். துரியோதனன் கண்ணன் தலையருகே இருந்த ஆசனத்தில் அமர்ந்தார். அர்ச்சுனன் கண்ணன் காலருகே இருந்த ஆசனத்தில் அமர்ந்தார். கண்ணன் கண்விழித்ததும், இருவரிடமும் வந்த நோக்கத்தைக் கேட்டார். இருவரும் பாரதப் போரில் கண்ணனின் உதவி தேவை என்றனர். 

அதற்கு கண்ணன், ""நீங்கள் இருவருமே வேண்டியவர்கள்தான். ஆகையால் எனது படைவீரர்கள்  அனைவரையும் தரட்டுமா? அல்லது நான் ஒருவனே துணையாக வரட்டுமா? நான் போரில் ஆயுதத்தை கையில் தொடமாட்டேன். இந்த இரு துணையில் எது வேண்டும்?'' என்று முதல் வாய்ப்பாக துரியோதனிடம் கேட்டார்.  ""கண்ணா!  உன் படைவீரர்கள் அனைவரையும் தந்தால் போதுமானது'' என்றார் துரியோதனன்.  ""பரந்தாமா!  நீ எங்களுக்கு துணையாக இருந்தாலே போதும். உன் துணையிருந்தால்  நாங்கள் வெற்றிபெறுவது உறுதி. எங்கே துரியோதனன் தங்களை துணையாக கேட்டுவிடுவானோ என்று அஞ்சினேன். நல்லவேளை அவன் உன்னை கேட்காமல், உனது படையை மட்டும் கேட்டான்'' என்றார் அர்ச்சுனன். 

வெறும் எண்ணிக்கையை மட்டும் தேர்வு செய்ததால் துரியோதனன் மகாபாரத போரில் தோற்றான். சரியான தேர்வினைச் செய்யாவிட்டால் எத்தனை துணையிருந்தும் தோல்வியடைவார்கள் என்பதற்கு துரியோதனன் ஓர் எடுத்துக்காட்டு.      

முடிவெடுத்தல், ஒரு துணிவு!

சிறந்த முடிவே,  வரலாறு!

(தொடரும்)

கட்டுரையாசிரியர்: காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/3/w600X390/im7.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/03/தன்னிலை-உயர்த்து---12-முடிவு-எடுத்தல்-ஒரு-துணிவு-3012531.html
3012517 வார இதழ்கள் இளைஞர்மணி வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 159 ஆர்.அபிலாஷ் DIN Wednesday, October 3, 2018 01:17 AM +0530
புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் மருத்துவருக்கான காத்திருப்போர் அறையில் இருக்கிறார்கள். அவர்களுடன் அங்கு உள்ள நடாஷா எனும் பெண் போனில் பேசுவதை கேட்க நேரும் கணேஷ் அவள் பயன்படுத்திய ‘ப்ர்ள்ங் ய்ர் ற்ண்ம்ங்’ எனும் சொற்றொடரின் பொருள் என்னவென புரொபஸரிடம் கேட்கிறான். புரொபஸர் அது ஒரு குழப்படியான பேச்சுபாணி என்று சொல்லி, அத்தகைய பாணியிலான சொல்லாடல்கள் மற்றும் சொற்களை ஆங்கிலத்தில் amphibology என சொல்வார்கள் என்கிறார். 

புரொபஸர் amphibologyக்கான வேறு உதாரணங்களை வழங்குகிறார்.

புரொபஸர்: நானும் மீனுவும் போன வருடம் கர்நாடக மாநிலத்தில் ஒரு பெரிய கற்கோயிலுக்கு போயிருந்தோம். நீண்ட படிக்கட்டுகளில் ஏறி உச்சிக்கு போய் பார்க்க வேண்டும். ஆனால் மீனுவுக்கு அப்போது முட்டியில் அடிபட்டிருந்தது - விடுதியில் இருந்து கிளம்பும் போது அவள் வழுக்கி விழுந்ததில் முட்டி பிரண்டு விட்டது. கடும் வலி. ஆகையால் மருத்துவரிடம் சென்றோம். அவர் ஒரு பிரேஸ் மாட்டிக் கொள்ள சொன்னார். செருப்பை விட ஷூ அணிவது நல்ல கிரிப் தரும், அதுவே பாதுகாப்பானது என்றார். கோயில் வாயிலில் அவள் செருப்பை கழற்றி விட தயாரானாள். உள்ளே ஏறிப் போக முடியாதவர்களுக்கு என்று டிராலி வசதி உண்டு. ஆனால் மீனுவுக்கு தானாக ஏறி இறை தரிசனம் செய்ய வேண்டும். என் தோளைப் பிடித்துக் கொண்டு கைத்தாங்கலாய் அவள் உள்ளே வந்தாள். அப்போது ஓர் அர்ச்சகர் வந்து விசாரித்தார். டிராலி பயன்படுத்தலாமே என்றார். மீனு தன் நிலையை விளக்கி தானாக நடந்து செல்ல விரும்புவதாய் சொன்னாள். அப்போது தான் காலில் அணிந்துள்ள பிரேஸ் எனும் கருவியை எதேச்சையாய் காட்டினாள். அது வம்பாய் போனது. அர்ச்சகர் அக்கருவியை உள்ளே அனுமதிக்க முடியாது என்றார். அவள் அதை கழற்றியே உள்ளே செல்ல முடியும் என்றார். மீனுவோ அது தோலால் செய்தது அல்ல என்றாள். அவரோ அவளை நம்ப முடியாது என்றார். பெரிய சண்டை, ரகளை. கடைசியில் அவளை வாயிலில் அமர வைத்து விட்டு நான் மட்டும் உள்ளே போய் தரிசித்து விட்டு வந்தேன். நான் வந்த போது அவள் மிகுந்த கோபமாக இருந்தாள். நட்ங் ஜ்ஹள் ச்ழ்ன்ம்ண்ர்ன்ள். நான் என்ன தீண்டத்தகாதவளா? எனக்கு ஏன் உள்ளே போக அனுமதியில்லை என கொதிக்கிறாள். நான் அவளை அமைதிப்படுத்தினேன். அப்போது அவள் சொன்னாள், this is a visit I shall not soon forget.

கணேஷ்: அப்படியென்றால்? அதை விரைவில் மறந்து விட விரும்புவதாகவும் ஆனால் முடியவில்லை என்றா?

புரொபஸர்: இல்லை. அவள் என்ன சொல்ல வந்தாள் என்றால் this is a visit I will remember for a long time.

கணேஷ்: ஐயோ... பாவம். ஆனால் அதை ஏன் இப்படி குழப்பியடித்து சொல்ல வேண்டும்?

புரொபஸர்: ஆமாம் அது தான் amphibology. Ambiguous  என பொருள். Amphi என்றால் இரண்டு பக்கங்கள். Bology என்பது க்ஷஹப்ப்ங்ண்ய் என்ற கிரேக்க சொல்லில் இருந்து வருகிறது. இதன் பொருள் வீசுவது. ஆக ரெண்டு இலக்குகளிலாய் ஒரு பொருளை ஒரே சமயம் வீசுவது. அப்போது அது எங்கு போய் விழும்?

கணேஷ்: ரெண்டு இலக்குகளுக்கு போய் சேராது.

புரொபஸர்: ஆம். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால். இப்படி வாக்கியங்கள் சில நேரம் அமைவதே ambhibology. நேரடியாய் ஒன்றை சொல்ல தயக்கம் வரும் போதே நாம் வழக்கமாய் ambhibology பயன்படுத்துவோம். இதே ஹக்ஷட்ண்யுடன் வரும் மற்றொரு சொல்லே ஹம்க்ஷண்ஸ்ஹப்ங்ய்ற். பெண் பார்க்க போகிறாய். அப்பெண் பிடித்ததா இல்லையா என உனக்கு உறுதியாய் தெரியவில்லை. முழுக்க பிடிக்காமலும் இல்லை, ஆனால் ஏதோ ஒன்று குறைவதாயும் தோன்றுகிறது. So you have ambivalent feelings towards her.

கணேஷ்: சார் நான் furious கேள்விப்பட்டிருக்கேன். அதென்ன frumious? நான் இதுவரை கேட்டதே இல்லையே?

நடாஷா: நான் கேள்விப்பட்டிருக்கேனே - Beware the Jubjub bird, and shun the frumious Bandersnatch!

கணேஷ்: அதென்ன ஜுப்ஜுப்?
(இனியும் பேசுவோம்)  

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/3/w600X390/im8.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/03/வாங்க-இங்கிலீஷ்-பேசலாம்---159-3012517.html
3012513 வார இதழ்கள் இளைஞர்மணி ஜியோ டெக்னிக்கல் என்ஜினியரிங் - சிறப்பு படிப்பு - எம்.அருண்குமார் DIN Wednesday, October 3, 2018 01:15 AM +0530  

சிவில் என்ஜினியரிங் துறையில் ஜியோ டெக்னிக்கல் என்ஜினியரிங் சிறப்பு படிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கட்டுமானத்துறை சம்பந்தமான கல்வியை வழங்குவது சிவில் என்ஜினியரிங் துறையாகும்.  சிவில் என்ஜினியரிங் துறையிலும் முக்கியமான கல்வியாக ஜியோ டெக்னிக்கல் என்ஜினியரிங் துறை முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

கட்டுமானத் துறையில் கட்டடம் தாங்கும் வகையில் பூமிக்கு அடியில் பீம்கள் அமைத்து கான்கிரீட் போடுவது முக்கியமான பணியாகும்.  அவ்வாறு பூமிக்கு அடியில் செய்யக்கூடிய பணிகள் குறித்த கல்வியை "ஜியோ டெக்னிக்கல் என்ஜினியரிங்' படிப்பு வழங்குகிறது.  அதோடு இராணுவம், சுரங்கம், பெட்ரோலியம் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள துறைகளில் ஜியோ டெக்னிக்கல் படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு காத்திருக்கின்றது. பூமிக்கு அடியில் கிடைக்கும் மண், கல் போன்ற கனிமங்கள் குறித்த கல்வியையும் அது வழங்குகிறது. 

உயர்ந்த கட்டடங்கள், நீண்ட தொலைவிலான பாலங்கள் உள்ளிட்ட மிக முக்கிய கட்டுமானங்களில் ஜியோ டெக்னிக்கல் என்ஜினியரிங் படித்தவர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர்.    

மேலும் விவரங்களுக்கு :http://www.gct.ac.in/  என்ற வலைதளத்தைப் பாருங்கள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/3/w600X390/im6.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/03/ஜியோ-டெக்னிக்கல்-என்ஜினியரிங்---சிறப்பு-படிப்பு-3012513.html
3012471 வார இதழ்கள் இளைஞர்மணி ஹியூமன் - கம்ப்யூட்டர் இன்ட்ராக்ஷன் கோர்ஸ் ! - எம்.அருண்குமார் DIN Wednesday, October 3, 2018 01:04 AM +0530
ஹியூமன் - கம்ப்யூட்டர் இன்ட்ராக்ஷன் கோர்ஸ் தற்போதைய கால கட்டத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.  அதனால் அந்த படிப்பை படித்தால் கணினி துறையில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

கணினி என்பது தற்போது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கணினியை அனைவரும் பயன்படுத்துகின்றனர்.  எல்லாருக்கும் பொதுவாக உள்ள கணினிதான் இப்போது தயாரிக்கப்படுகிறது.  

ஆனால் ஒவ்வொரு தனிமனிதரின் தேவைகளும், விருப்பு, வெறுப்புகளும் வேறு வேறாக உள்ளன.  ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப  கணினியை   யூசர் பிரண்ட்லீ என்ற வகையில் தயாரிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.   

இத்தகைய சூழ்நிலையில் தான் ஹியூமன் - கம்ப்யூட்டர் இன்ட்ராக்ஷன் குறித்து தெரிந்தவர்கள் மக்கள் எளிதாக பயன்படுத்துவதற்கு ஏற்ற கணினி தயாரிப்பதற்கு உதவியாக இருக்கின்றனர்.  அவர்கள் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் வகையில் எவ்வாறு கணினியையும், கணினி மென்பொருட்களையும் தயாரிக்க வேண்டுமென ஆலோசனை வழங்குகின்றனர்.

அதனால் கணினி தயாரிப்பு நிறுவனங்களில் ஹியூமன் - கம்ப்யூட்டர் இன்ட்ராக்ஷன் குறித்த படிப்பை படித்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.  அத்தகைய நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் காத்திருக்கின்றன.   இந்த படிப்பு மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான கல்வி நிறுவனங்களில் மட்டுமே கற்பிக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு : http://www.idc.iitb.ac.in/~anirudha/HCI18_05/  என்ற வலைதளத்தைப் பாருங்கள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/3/w600X390/im5.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/03/ஹியூமன்---கம்ப்யூட்டர்-இன்ட்ராக்ஷன்-கோர்ஸ்--3012471.html
3012449 வார இதழ்கள் இளைஞர்மணி நீ... நான்... நிஜம்! -38: உறக்கம் விடு உள்ளே விழி! சுகி. சிவம் DIN Wednesday, October 3, 2018 12:57 AM +0530
தமிழாசிரியர் ஒவ்வொருவரும், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியின் வரலாறு பற்றி மாணவர்களுக்குச் சொல்லி இருப்பார்கள். ஒரு முல்லைக் கொடி பற்றிப் படர வழியின்றி தவித்த போது, பாரி என்ற குறுநில மன்னன் கொடியாகத் தான் மாறி தவித்தான். ஒரு கணம் கூட தயங்காது தான் ஓட்டிவந்த தேரை, கொடி படரும் பந்தலாக்கிவிட்டு நடந்து போனான் என்பது இலக்கியச் செய்தி. இதை மாணவர்களிடம் சொல்லிவிட்டு ""இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன? இந்தக் கொடை மடம் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்'' என்று ஆசிரியர் மாணவர்களைக் கேட்டார்.
""ஒரு கொடிபடர குச்சி போதும். நாலுகால் உள்ள பந்தல் போதும்... ஒரு மரம் போதும்... அப்படியிருக்க விலை மிகுந்த தேரைக் கொடுத்தது முட்டாள்தனம்'' என்றான் ஒருவன். ""அரசாங்கப் பணம் அநியாய விரயம்.. ஆடம்பர விளம்பரம்'' என்றான் மற்றவன். ""மரத்தை அழித்து தேர் செய்துவிட்டு, கொடிக்குக் கொடுப்பது, இயற்கையை மதிப்பதாகுமா? அறிவற்ற செயல்'' என்றான் ஒருவன். மற்றொரு மாணவன் மனம் பதறியபடி, ""தன் ஆட்சிக்குட்பட்ட மனிதர்கள் மட்டுமல்ல. செடிகொடி தாவரத்தின் தவிப்பைக் கூட மதிக்கும் மன்னன்.. மாமனிதன்... மிகச்சிறந்த மேன்மையான பெருமன்னன்'' என்று வியந்தான்.
""முல்லைக்குப் பந்தல் போட கான்ட்ராக்ட் விட்டு அதில் ஊழல் நிகழாமல் முந்திக் கொள்ளும் மன்னன்'' என்று நவீன அரசியலோடு முடிச்சுப் போட்டான் ஒருவன். ஒரே விஷயம் தான். ஒருவர் பார்வை மாதிரி மற்றவர், பார்வை இருப்பதில்லை. இதுதான் உலகம். இதில் யாருடைய பார்வை சரி? யாருடைய பார்வை தவறு? என்று ஆராய்வதைவிட, விதவிதமாக மக்கள் புரிந்து கொள்வார்கள்  என்பதைப் புரிந்து கொண்டு நகர்ந்து விட வேண்டும். ஆனால் இன்று பெருவாரியான மக்கள் பிறருடன் சண்டை போடுகிறார்கள். நான் எப்படி நினைக்கிறேனோ, அப்படியே நீயும் நினைக்க வேண்டும்.  நான் எப்படி புரிந்து கொள்கிறேனோ, அப்படியே நீயும் புரிந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். சண்டையிடுகிறார்கள்.
ஒவ்வொரு மதமும், கடவுளை ஒவ்வொரு கோணத்தில் புரிந்து வைத்திருக்கிறது. ஆனால், தான் மட்டுமே கடவுளைச் சரியாகப் புரிந்து கொண்டதாகவும், பிறர் தம் புரிதல் (ன்ய்க்ங்ழ்ள்ற்ஹய்க்ண்ய்ஞ்) தவறு என்றும் சாதிக்கிறார்கள். நம்மிலிருந்து மாறுபட்டு ஒருவர் நினைப்பதும் புரிந்து கொள்வதும் இயற்கை என்பதைப் புரிந்து கொள்வதே உண்மையான ஞானம். விழிப்படைதல். இதுதான் இன்றைய அவசர அவசியம். பெருவாரியான மதச் சண்டைகள், அரசியல் சித்தாந்தச் சண்டைகள் எல்லாவற்றுக்கும் இந்த முட்டாள்தனமே காரணம் இந்தியாவில் மதங்களை, தரிசனம் என்றே அழைத்தனர். தரிசனம் என்ற வடமொழிச் சொல்லுக்கு "பார்வை' என்றே பொருள். ஒரே பரம்பொருளை ஒவ்வொருவர் ஒவ்வொரு பார்வையில் உணர்கிறார்கள் என்ற பொருளில் தரிசனம் என்றனர்.
ஓர் ஆப்ரிக்கப் பழங்கதை ஒன்றைக் குறும்படமாக எடுத்திருந்தனர். இரண்டு விவசாயிகள் பக்கம்பக்கமான நிலத்தை உழுது பயிரிட, கருக்கிருட்டில் வயற்காடு போயினர். அவர்கள் தத்தம் நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது டிரம்ஸ் வாசித்தபடி தொப்பிக்காரன் ஒருவன், இவர்கள் வயலுக்கிடையில் இருந்த வரப்பில் நடந்து போனான். அன்று மாலை இருவரும் கள்ளுக்கடையில் குடித்தபடி பேசிக் கொண்டிருந்த போது, இருவருக்கும் சண்டை வந்துவிட்டது. கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டியபடி, அடிதடியில் இறங்கி, ஒருவர் துணியை ஒருவன் கிழித்தபடி, கட்டிப் புரண்டு சண்டையிட்டனர். காரணம் சின்னதுதான். காலைக் கருக்கிருட்டில் டிரம்ஸ் வாசித்தபடி வயல் வரப்பின் நடந்து போனவன் போட்டிருந்த சிவப்புத் தொப்பி பிரமாதம் என்றான் ஒருவன். மற்றவனோ உனக்குக் கண்ணவிஞ்சி போச்சா... அது பச்சைத் தொப்பி என்றான். இதில் தொடங்கிய சண்டை, இவன் மனைவி ஒழுக்கங் கெட்டவள் என்பது வரை வளர்ந்து, அடுத்தவன் அம்மா அவனை முறைகேடாகப் பெற்றாள் என்று பேச்சுவரை வீங்கி, தொப்பி மறக்கப்பட்டு, வேறுவேறு அசிங்கங்களாக வெடித்தது. இருவரும் குடிபோதையில் கோப வெறியில் சண்டையால் கீழே சாய்ந்த போது அந்த அதிசயம் நிகழ்ந்தது.
சாலையில், எவனுடைய தொப்பியைப் பார்த்து சண்டை பிறந்ததோ, அந்த மகானுபாவன் டிரம்ஸ் வாசித்தபடி கள்ளுக்கடையில் நுழைந்தான். அவன் தொப்பியைக் கழற்றி கீழே வைத்த போது இருவரும் பேயறைந்த மாதிரி விழித்தனர். அவன் தொப்பியில் பாதி பச்சைத்தொப்பி.. பாதி சிவப்புத்தொப்பி.. அவனவன் பார்த்த பக்கத்தை மட்டுமே வைத்து பச்சை, சிவப்பு என்று சண்டை போட்டதை  உணர்ந்து கூனிக் குறுகிப் போனார்கள். தாங்கள் முட்டாளக்கப் பட்டோம் என்று வெட்கினார்கள். ஆத்திரத்துடன் ஒருவன் பாய்ந்து, தன்னை முட்டாளாக்கிய அந்தத் தொப்பியை எடுத்து, காலில் போட்டு ஆத்திரத்துடன் மிதித்தான். அடுத்தவனோ ஆத்திரம் அடங்காமல் அதைத் தூக்கி வெளியில் இருந்த தண்ணீர் பீப்பாயில் எறிந்தான். பிறகு இருவரும் தங்கள் பழைய பகையை  மறந்து கட்டித் தழுவி கண்ணீர் விட்டார்கள். அடுத்து நடந்தது தான் இன்னும் முக்கியம். டிரம்ஸ்காரன் நிதானமாக நடந்து போய் தண்ணீர்ப் பீப்பாயில் நனைந்திருந்த தொப்பியை நன்கு கழுவிப் பிழிந்து  தலையில் அணிந்து கொண்டான். இப்போது அந்தத் தொப்பியில் பூசப்பட்டிருந்த  பச்சையும் சிவப்பும் போய் தொப்பி வெள்ளை வெளேர் என்று காட்சிதந்தது. உண்மையில் அது வெள்ளைத் தொப்பி... அதில் பூசப்பட்ட வண்ணம் சண்டையை விளைத்து விட்டது.
கடவுள் விஷயத்திலும் இன்று இதுதான் நடக்கிறது, அவனவன் மதம் பூசிய நிறமே உண்மை என்று, மனிதர்கள் மதபோதையில், கோபவெறியில் சண்டையிடுகிறார்கள். உண்மையில் அது நிறமற்றது. இந்தப்புரிதல் இன்று பலருக்கும் இல்லை. போதிக்கப்பட்ட மதம், திணிக்கப்பட்ட நம்பிக்கைகள், கருக்கிருட்டில் பார்த்த தொப்பியின் நிறம் போன்ற வெளிப்பூச்சுக்களில் கடவுளைப் பார்த்துவிட்டு, கொலை வெறியுடன் அலைகிறார்கள். உலகெங்கும் மதப்பகை இளைஞர்கள் மூலமே பரப்பப்படுகிறது. பகையாக்கப்படுகிறது. மதம் இல்லாத இடங்களில் ஜாதிப்பகை.. அல்லது மொழி, இன துவேஷங்கள்... இவையாவுமே அப்பட்டமான முட்டாள் தனங்கள். இளைஞர்கள் இதற்கு இரையாகாமல் விழித்துக் கொள்வார்களா என்பதே என் பெருங்கவலை. பெரிய பெரிய பட்டங்களை, விதவிதமான பல்கலைக் கழகங்களில் பெற்ற பலர் கூட, ஜாதி, மத இன மொழி எனும் வெறிநாய்க் கூட்டமாக அலைவது அதிக வேதனை தருகிறது.
வாழ்நாள் முழுவதும் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் ஓஷோ பேசிய பேச்சுகள் எழுநூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களாக வந்துள்ளன. ஆனால் இவை அனைத்தும் ஒரே விஷயத்தைத் தான் திரும்பத் திரும்ப சொல்லின என்றால் நம்புவீர்களா? ஒரு வார்த்தை கூட இல்லை... ஒரு சொல்... ஒரே ஒரு சொல் ஓஷோ  ஆயிரக்கணக்கான சொற்பொழிவுகளின் அடிநாதம். என்ன அது? விழிப்புணர்வு... அஜ்ஹழ்ங்ய்ங்ள்ள்... உயிர்க்குலத்தின் பெருவாரியான பிரச்னைகளுக்கு ஒரே காரணம், மனிதர்களின் தூக்கம். கண்விழித்தபடி நிகழும் அறிவுத் தூக்கம்.  தூக்கத்தில் உளறுவதற்கும் பெருவாரியான மத போதகர்களின் பேச்சுக்கும், துளியும் வித்தியாசம் இல்லை.. அஞ்ஞானத் தூக்கத்தில் ஆழ்ந்தபடி பலர் உளறுகிறார்கள்.  விழிப்பற்ற இவர்கள் ஆளுமையை வேரொடு பிடுங்கி எறியாதவரை, இளமை உண்மையான வளர்ச்சி காணமுடியாது. உலகின் புறவெளியில் தினந்தோறும் பொழுது விடிந்து பொழுது முடிந்தாலும் பலரது அக உலகில் விடியல், இன்னும் விரல் பிரிக்கவில்லை.. கருத்துக் குருடர்கள் கருக்கிருட்டில் தூங்குகிறார்கள். "உத்திஷ்ட உத்திஷ்ட' என்பதே கூட இவர்களுக்குத் தாலாட்டாக அல்லவா தலைக்குள் இனிக்கிறது! 
உலகில் ஏகப்பட்ட தலைவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு, ஒரு கூட்டத்தை அடிமையாக்கிக் கொண்டு உலா வருவதுபோல், அண்ட வெளியில் ஆயிரக்கணக்கான கடவுள்கள் தங்கள் தலைமையைத் தக்க   வைத்துக் கொள்ள எப்போதும் போரிட்டுக் கொண்டா இருப்பார்கள்? இந்தக் கேள்வி உனக்குள் பிறக்க வேண்டாமா? தகுதியுடைய மற்ற ஜாதிக்காரன் பெற வேண்டிய வெற்றியைப் பிடுங்கி, தகுதியற்ற தன் ஜாதிக்காரனுக்குத் தருவது மானுட துரோகமல்லவா? எல்லோரும் படிக்க, எல்லோரும் வேலை பெற, எல்லோரும் உண்ண உடுக்க என்ன செய்யலாம்? இப்படி யோசிக்க வேண்டாமா? எனக்கா உனக்கா என்று, அன்றும் இன்றும் பிறர் பங்கினைத் திருடுதல்தான் சமூக வளர்ச்சியா?
யாரோ சொன்னது.. எப்போதோ கேட்டது.. எங்கோ எவராலோ திணிக்கப்பட்ட ஏகப்பட்ட நம்பிக்கைகள் இவற்றை மூட்டையாகச் சுமந்து திரிகிற முட்டாள் தனமா வாழ்க்கை? உன் கடவுள் என் கடவுள் என்ற பேச்சே முட்டாள் தனம் என்கிற புரிதல் வேண்டாமா? எல்லோரும் சாப்பிட உலகில் வழியே இல்லையா? தாயின் வயிற்றில் கண்மூடி  உறங்கும் காலம் முடிந்து விட்டது. இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று பிறப்பதல்லவா ஞான விழிப்பு...  ஏதோ ஓர் அரசியல் கட்சியில் உறுப்பினராய் அலைதல்... எவரோ ஒரு தலைமையின் வெற்றிக்கு உயிர் கொடுத்தல்... எவன் வாழ்வையோ கெடுத்து தன் வாழ்வை வளப்படுத்தல்... யார் பணத்தையோ திருடி தன் வளத்தைப் பெருக்கல்... பிழையான உணவு.. முறையற்ற காமம்.. கொடூரமான துரோகம் இப்படி எத்தனை எத்தனை அறிவீனங்கள்.. கண் திறந்த தூக்கங்கள். உலகமே மனநோயாளிகளின் மைய மண்டபமாக அல்லவா இன்று ஆகிவிட்டது? எப்போது தெளிவு பெறல்? எப்போது கண்திறப்பு? எப்போது திருப்பள்ளி எழுச்சி? எப்போது விடியலின் விரல் பிரிப்பு?  ஒளிபடைத்த கண்ணினாய் வா..வா.. வா..
(தொடரும்)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/3/w600X390/im3.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/03/நீ-நான்-நிஜம்--38-உறக்கம்-விடு-உள்ளே-விழி-3012449.html
3012438 வார இதழ்கள் இளைஞர்மணி மாணவர் விடுதிகளுக்கும் ஸ்டார்ட் அப்! - இரா.மகாதேவன் DIN Wednesday, October 3, 2018 12:47 AM +0530 வெகுதொலைவில் உள்ள கல்வி நிலையங்களில் சென்று பயில விரும்புவோருக்கு  ஏற்படும் முதல் பிரச்னை பாதுகாப்பான விடுதி வசதிதான். பெண்களாக இருந்தாலும், ஆண்களாக இருந்தாலும் முதலில் அவர்கள் எதிர்பார்ப்பது பாதுகாப்பான இடமா என்பதுதான். விடுதி கல்வி நிலையத்துக்கு அருகே உள்ளதா?  தேவையான வசதிகள் உள்ளனவா? உணவுப் பிரச்னை உண்டா என்பன போன்ற பிற வசதிகள் குறித்தும் ஆராய்வார்கள். ஆனால், இவையெல்லாம் ஒருங்கே அமைந்த ஓர் இடத்தைத் தேடி அடைவது மிக எளிதான காரியமல்ல.  

இந்திய நகரங்களில் மாணவர்களுக்கான வீடுகள் என்பது ஒழுங்கமைக்கப்படாத சந்தையாகவே இருந்து வருவதாகக் கருதப்படுகிறது. நம் நாட்டில் மாணவர்களுக்கான தனியார் விடுதிகள், வளாகத்தினுள் அமைந்த வீடுகள், கட்டண விருந்தளிக்கும் வீடுகள் என சுமார் 61 லட்சம் மாணவர்கள் தங்குவதற்கான இடங்களே உள்ளன. அதேநேரத்தில், 3.4 கோடி இந்திய மாணவர்கள் உயர்கல்விக்காகப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 2.66 கோடி மாணவர்கள், அதாவது 76 சதவீதம் பேர் உயர்கல்விக்காக பல்வேறு நகரங்களுக்கு இடம்பெயர்வதாக ஜேஎல்எல் என்ற மனை வணிக ஆய்வு அமைப்பு தெரிவிக்கிறது. 

உயர்கல்வி நிறுவனங்களான கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தங்களிடம் சேரும் அனைத்து வெளியூர் மாணவர்களுக்கும் விடுதி வசதி செய்துகொடுக்க முடியாத நிலை உள்ளது. உயர்கல்விக்காக இடம்பெயரும் 76 சதவீத மாணவர்களில் 18 முதல் 20 சதவீத மாணவர்களுக்கே கல்வி நிறுவனங்களில் விடுதி வசதி உள்ளது. எஞ்சிய சுமார் 56 சதவீத மாணவர்கள் பாதுகாப்பானதும், படிப்பதற்கு ஏற்றதுமான இடங்களை நகரங்களில் தேடிவரும் சூழலே உள்ளது.

இந்த நிலையில், மாணவர்களுக்குப்  பாதுகாப்பான, கட்டுப்படியான கட்டணத்தில், அடிப்படை வசதிகளில் இருந்து, ஆடம்பர வசதிகள் கொண்டது வரையிலான வீடுகளை அமைத்து தருவதற்காக அண்மைக்காலமாக சில ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தோன்றியுள்ளன. குறிப்பாக, Nestaway, Grabhouse, YourOwnRoom போன்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வீடுகளை ஏற்பாடு செய்து தருகின்றன. மேலும், மாணவர்களுக்கான வீடுகளில் மட்டுமே கவனம் செலுத்தும் சில நிறுவனங்களும் உள்ளன.

அவற்றில் ஒன்று Stanza Living. தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2017-இல் தொடங்கப்பட்டது இந்த நிறுவனம். தற்போது, தில்லி, நொய்டா ஆகிய நகரங்களில் மட்டும் இயங்கிவரும் இந்த நிறுவனம், உரிமையாளர்களிடம் வீடுகளைக் குத்தகைக்குப் பெற்று, அவற்றை மாணவர்களுக்கு ஏற்ப மறுவடிவமைப்பு செய்து கொடுக்கிறது. இதில், உணவு, இணையம், சலவை, பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகள் உள்ளன. அறைகளுக்கான வாடகை மாதம் 5 ஆயிரம் ரூபாயில் தொடங்கி, மாணவர்கள் எதிர்பார்க்கும் வசதிகளுக்கு ஏற்ப அதிகரிக்கும்.

தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மற்றொரு ஸ்டார்ட்அப் நிறுவனம் Studentacco. இது தில்லி, நொய்டா, குர்கான், ஃபரிதாபாத் ஆகிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது. கடந்த 2015-இல்  தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில்  மாணவர்கள் தங்கும் அறைக்கு சராசரி மாதக் கட்டணம் 10 ஆயிரம் ரூபாயாக உள்ளது.

நொய்டாவை தளமாகக் கொண்டு செயல்படும் ஸ்டார்ட்அப் நிறுவனம் டப்ஹஸ்ரீண்ர். இங்கு மாணவர்கள் தனியாகவும், பங்கீட்டு முறையிலும் தங்கலாம்.   கடந்த 2016-இல் தொடங்கப்பட்ட இந்த நிறுவன வீடுகளில் அடிப்படை வசதிகளுடன் குறைந்த கட்டண அறைகளும், நீச்சல் குளம், மேஜை பந்து விளையாட்டு நிலையம், புத்தகப் பரிமாற்ற மையங்கள், உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட ஆடம்பர வசதிகள் கொண்ட அறைகளும் உள்ளன. இவற்றுக்கான மாதக் கட்டணம் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 24 ஆயிரம் வரை உள்ளது.

தில்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மற்றொரு நிறுவனம் வர்ன்ழ் நல்ஹஸ்ரீங்.   2016-இல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், தில்லி, மும்பை, சண்டீகர், ஜலந்தர், புணே, நொய்டா, கிரேட்டர் நொய்டா ஆகிய நகரங்களில் 11 விடுதிகளில் 1200 அறைகளுடன் செயல்பட்டு வருகிறது. இது குளிரூட்டப்பட்ட அறை, இணையம், மருத்துவம், உடற்பயிற்சிக்கூடம், பாதுகாவலர் வசதிகளுடன் கூடியது. இதற்கான அறை கட்டணம் ரூ. 12 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை வசதிகளுக்கு ஏற்ப உள்ளது.

தில்லியில் இருந்து செயல்படும் மற்றொரு ஸ்டார்ட்அப் நிறுவனம் CoHo. இது பல்வேறு நிறுவனங்களிலும் பணியாற்றும் இளம் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கான வீடுகளை தில்லி, குருகிராம், நொய்டா ஆகிய நகரங்களில் அமைத்து கொடுக்கிறது. கடந்த 2015-இல்   தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், அறை பராமரிப்பு, இணையம், டிடிஎச் கேபிள் உள்ளிட்ட பல வசதிகளைச் செய்துகொடுக்கிறது. இங்கு அறை கட்டணம் மாதம் ரூ. 9 ஆயிரம் முதல் ரூ. 13 ஆயிரம் வரை உள்ளது.

Zolo Stays-இது பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம்.   2015-இல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பெங்களூரு, சென்னை, தில்லி, புணே, ராஜஸ்தானில் உள்ள கோடா, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் அறை கட்டணம் இருவர் பகிர்ந்துகொள்ளும் அடிப்படையில் நபருக்கு மாதம் ரூ.6 ஆயிரம் முதல் ரூ. 8 ஆயிரமாக உள்ளது.

பொதுவாக, கடந்த 2015-இல் சர்வதேச அளவில் இருந்த மாணவர்களுக்கான வீட்டுச் சந்தையின் மதிப்பு ரூ. 84 ஆயிரம் கோடி. இது வரும் 2025-இல் ரூ. 3.5 லட்சம் கோடியாக உயரும் என கூறப்படுகிறது. இந்தத் துறையில் புதிதாக தோன்றி வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதோடு, மாணவர்களுக்குப்  பாதுகாப்பான சூழலையும் ஏற்படுத்தியுள்ளன. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/3/w600X390/im2.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/03/மாணவர்-விடுதிகளுக்கும்-ஸ்டார்ட்-அப்-3012438.html
3012425 வார இதழ்கள் இளைஞர்மணி 13.5 விநாடி... 100 மீட்டர் தூரம்!  - ஜே. லாசர் Wednesday, October 3, 2018 12:40 AM +0530  

வலிகளும், இழப்புகளும் வீழ்ந்து துவண்டுவிடுவதற்கல்ல எழுந்து ஓடுவதற்கு என்பதை நிரூபித்திருக்கிறார், பிளேடு ரன்னராக அவதாரம் எடுத்துள்ள நாகர்கோவில் இளைஞர்  விக்னேஷ்வர சுப்பையா. 

நாகர்கோவில் அருகே தேரூர் தண்டநாயகன்கோணம் புதுக்கிராமத்தைச் சேர்ந்த விக்னேஸ்வர சுப்பையாவின் கதை வித்தியாசமானது.  29 வயதே ஆகியிருந்த விக்னேஸ்வர சுப்பையாவுக்கு 2012-ஆம் ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி இரவில் ஏற்பட்ட ஒரு  விபத்து, அவரது வலது காலை உடைத்துப் போட்டுவிட்டது. இந்த விபத்து அவரை நிலைகுலையச் செய்தாலும், அதிலிருந்து மீண்டு ஒரு தன்னம்பிக்கை மிக்க சாதனையாளராக மாறிய அவர், அவர் போன்ற பலருக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார்.

விக்னேஸ்வர சுப்பையாவிடம் பேசியபோது...

""நான்,  பிளஸ் 2 படித்து விட்டு  எலக்ட்ரிக்கல் வேலை செய்து கொண்டிருந்தேன். என்னிடம்  பத்துக்கும் மேற்பட்டோர்  வேலை செய்து கொண்டிருந்தனர்.  மது, புகைபிடித்தல் என எந்தக் கெட்டப்பழக்கங்களும் எனக்குக் கிடையாது. உடற்பயிற்சிக் கூடத்திற்கு  தினம்தோறும் சென்று உடலைப் பேணி வந்தேன்.   திருமணத்திற்காக பெண் பார்த்து நிச்சயம் செய்து பத்திரிகையும் அடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்தான் கருங்கல் என்ற இடத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்று விட்டு இரவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த  என் மீது மீன்பாரம் ஏற்றிக் கொண்டு வந்த மினிலாரி மோதிவிட்டு  நிற்காமல் சென்றது.  இந்தச் சம்பவத்தில் எனது வலது கால் மூட்டிற்குக் கீழே முழுவதும் உடைந்து விட்டது. வாழ்வில் முக்கியமான கட்டத்தில் நடந்த இந்த விபத்து,  என் மனதையும் உடைத்துப் போட்டுவிட்டது. 

அதே வேளையில்   உடைந்த காலை அறுவை சிகிச்சை செய்து பொருத்திக் கொள்ள நான் தயாராக இல்லை.   ஏனெனில் அப்படிப் பொருத்திக் கொண்டு வலியால் துடித்தும், ஆறாத புண்களுடனும் நடமாடுபவர்களை  நான் பார்த்திருக்கிறேன்.   எனவே எனது வலது கால் மூட்டிற்கு கீழே அகற்றப்பட்டது. 

அதன் பிறகு கார்பன் ஃபைபர்   பாதம் கொண்ட செயற்கைக் காலை பொருத்திக் கொண்டு நடக்கத் தொடங்கினேன்.   நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணமும் இதனால்   நின்று போனது.  

மீண்டும் உடற்பயிற்சிக்கூடத்திற்கு செல்ல ஆரம்பித்தேன். கடுமையாகப் பயிற்சி செய்தேன். விபத்து நடந்த எட்டே மாதத்தில்,  ஹைதராபாத்தில் ஏர்டெல்  நிறுவனம் சார்பில், நடைபெற்ற ஒரு மாரத்தான் போட்டியில் பங்கேற்கச் சென்றேன். செயற்கைக்காலுடன்  ஓடினேன். அந்த ஓட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்களுடன் மாற்றுத் திறனாளிகள் 15 பேர் பங்கேற்றனர். இதில் நான் உள்பட மாற்றுத்திறனாளிகள்  4 பேர் தாம் மொத்தம்  தூரமான 5 கி.மீ தூரத்தை ஓடி நிறைவு செய்தோம். இதில் என்னைப் பாராட்டிய "தக்சின் ரிகாபிலிடேசன்' எனும்   நிறுவனம் ஓட்டத்திற்கென்றே வடிவமைக்கப்பட்ட  ரூ. 5 லட்சம் மதிப்பிலான   "ரன்னிங் பிளேடை' எனக்குப் பரிசளித்தது. பிளேடைக் காலில் பொருத்திக் கொண்டு ஓடுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. நிறையத் தடவை இடறி விழுந்தேன். வலியாலும், ரத்தக்கசிவாலும் துடித்தேன். இருந்தாலும் நம்பிக்கை இழக்கவில்லை.   மாரத்தான், தடகளம் என ஓடிக்கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் இயல்பான கால்களைக் கொண்டவர்களுக்கு இணையாக  ஓட ஆரம்பித்தேன். அதன் பின்னர் மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகளில் ஓடி பரிசுகளை வெல்வதில்  தயக்கம் ஏற்பட்டதால்,  இயல்பான கால்களையுடைவர்கள் பங்கேற்கும் போட்டிகளில் மட்டும் ஓட ஆரம்பித்தேன். அதனை இப்போதும் தொடர்கிறேன். என்னால் இப்போது 100 மீட்டர் தூரத்தை 13.5 விநாடியில் ஓடிக் கடக்க முடியும்.  தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பிரபல பிளேடு ரன்னனர்  ஆஸ்கர் பிஸ்டோரியஸ் தான் எனது ரோல் மாடல்.  எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக கொல்கத்தா முதல் டாக்கா வரை 360 கி.மீ. தொலைவு சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருக்கிறேன். டிரக்கிங் எனப்படும் மலையேற்றப் பயிற்சிக்கும் செல்கிறேன்.  

இதற்கிடையே நான்செய்துவந்த  எலக்ரிக்கல் பணியை தொடர முடியாது என்பதால் செல்லிடப் பேசி பழுது பார்க்கும் பயிற்சியை முடித்து நாகர்கோவிலில் செல்லிடப் பேசி பழுது பார்க்கும் கடையும் வைத்துக் கொண்டேன்.   

கடந்த 2014 ஆம் ஆண்டு  எனக்குத்  திருமணம் ஆனது.  இப்போது எங்களுக்கு மீரா (3), அஸ்வின் ராம் (1) என இரு குழந்தைச் செல்வங்கள். வாழ்க்கை அழகாய்ப் போய்க் கொண்டிருக்கிறது.  ஒரு பிளேடு ரன்னராக வலம் வந்தாலும், காலை இழந்த பின்னரும் இயல்பாய் இயங்குவதன் மூலம் பிறருக்கு நம்பிக்கை அளிக்கும் மனிதராகவே என்னை அடையாளப்படுத்த விரும்புகிறேன். கால்களை இழந்து வீடுகளில் முடங்கிக் கிடக்கும் ஒரு நபராவது எனது   செயல்பாட்டைப் பார்த்து வெளியே வந்து வெற்றி பெற்றாலும் எனக்கு மகிழ்ச்சி தான்'' என்றார். 


படங்கள்: பிரபு தர்மராஜ் 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/3/w600X390/im1.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/oct/03/135-விநாடி-100-மீட்டர்-தூரம்-3012425.html
3007588 வார இதழ்கள் இளைஞர்மணி வந்துவிட்டது இ-சிம்! DIN DIN Tuesday, September 25, 2018 11:00 AM +0530 செல்போனுக்கு சிம் கார்ட் என்பது உயிர்நாடியைப் போல் செயல்படுகிறது. பல சிம் கார்டுகளை வைத்துக் கொண்டு நேரத்துக்கு ஒரு நம்பரில் தொடர்பு கொள்வதை சிலர் பொழுது போக்காக வைத்து கொண்டுள்ளனர்.
இந்த சிம் கார்டுகள் வடிவத்தில் மைக்ரோ, மினி, நானோ சிம் கார்ட் என்று அளவில் குறைந்து கொண்டே வந்துள்ளன. 
இது தற்போது இ- சிம் என்ற கட்டத்துக்கு வந்துள்ளது. இந்த இ- சிம்மை யாரும் பார்க்கவும் முடியாது, தனியாக எடுக்கவும் முடியாது என்பதுதான் இதன் சிறப்பு. 
ஸ்மார்ட் போன்களுக்குள்ளே சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இ-சிம்களைப் பயன்படுத்தி நமக்கு தேவையான செல்போன் ஆப்ரேட்டர்களை உடனடியாக மாற்றிக் கொள்ளலாம். அதுவும் ஒரு தொலைபேசி அழைப்பின் மூலமே இதைச் செய்துவிடலாம் . ஒரு சிம்மை அலுவலக பயன்பாட்டுக்காக, வெறும் டேட்டாவுக்காக பயன்படுத்தவும், மற்றொரு சிம்மை தனிப்பயன்பாட்டுக்காகவும், எஸ்எம்எஸ், தொலைபேசி பயன்பாட்டுக்காகவும் என நமது தேவைக்கேற்ப பயன்படுத்தும் வசதி இந்த இ-சிம்களில் உண்டு.
வழக்கமாக வெளிநாடுகளுக்குச் சென்றால், அங்குள்ள சிம்கார்டுகளைப் பயன்படுத்த வேண்டும் அல்லது இங்குள்ள சிம்கார்டுக்கு இண்டர்நேஷனல் ரோமிங்கில் பயன்படுத்த வேண்டும். 
ஆனால் இந்த இ-சிம்களைப் பயன்படுத்தி எந்த நாட்டில் இருக்கிறோமோ அந்தப் பகுதி செல்போன் ஆப்ரேட்டரை உடனடியாகத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த முடியும். இதனால் வருங்காலங்களில் வெளிநாட்டு ரோமிங் கட்டணங்களும் இருக்காது என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். ஆகையால், அவ்வப்போது வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு இந்த இ-சிம் பெரும் உதவியாக இருக்கும். 
ஏற்கெனவே ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சுகளில் இந்த வகையான சிம்கள் உள்ளன. அண்மையில் அறிவிக்கப்பட்ட இரட்டை சிம்கள் கொண்ட ஐ போன்களில் இந்த இ-சிம் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் முதல்முறையாக பயன்பாட்டுக்கு வந்துள்ள இந்த இ-சிம்கள் விரைவில் இந்தியாவுக்கும் வந்துவிடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
- அ.சர்ஃப்ராஸ்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/25/w600X390/esim.JPG http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/25/வந்துவிட்டது-இ-சிம்-3007588.html
3007601 வார இதழ்கள் இளைஞர்மணி நாடகக் கலைக்கு உயிர் கொடுக்கும் இளைஞர்கள்! DIN DIN Tuesday, September 25, 2018 10:45 AM +0530 தமிழகத்தில் நாடகக் கலைக்கு தனி வரலாறும், தனி சிறப்பும் உண்டு.
வரலாற்று நிகழ்வுகளைச் சித்திரிப்பதாகவும், பொழுதுபோக்குக்காகவும், கலை திறன்களை வெளிப்படுத்துவதற்காகவும், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், சுதந்திர வேட்கை கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் நாடகக் கலை தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆடல் பாடல், உரையாடல், அபிநயம், இசை போன்றவற்றின் கூட்டுக் கலவையாக சிந்தைக்கும், கண்ணுக்கும் விருந்தளிப்பது நாடகக் கலையாகும்.
தமிழகத்தைப் பொருத்தவரை நாடகத்தின் நீட்சியாகத்தான் திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. நாடகத்தில் நடித்துப் புகழ்பெற்ற பலர் திரைக்கலைஞர்களாக மாறி புகழின் உச்சியைத் தொட்டனர். 
நவீன சினிமா, டிவி., கம்ப்யூட்டர் போன்றவற்றின் வரவால், சிறிது சிறிதாக நாடகக் கலை மக்களிடம் இருந்து மறையத் தொடங்கியது. மேடை நாடகத்திற்கு இந்த நலிவு ஏற்பட்ட போதிலும், வீதி நாடகங்கள் நடத்தப்படுகின்றன. பல்வேறு கருத்துகளைப் பிரசாரம் செய்ய, சுகாதாரம், சுற்றுச்சூழல் போன்ற சமூகப் பிரச்னைகள் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வீதி நாடகங்கள் பயன்படுகின்றன. மேடை நாடகங்கள் சென்னை போன்ற பெரிய நகரங்களில் பெரிய சபாக்களில் நடத்தப்படுகின்றன. எனினும் சினிமாவின் வருகைக்கு முன்பிருந்த நாடகத்தின் செல்வாக்கு இப்போது இல்லை என்றே சொல்லலாம். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம், ஆர். பட்டணம் கிராமத்தில் இளைஞர்களால் ஆண்டுதோறும் சமூக - சரித்திர நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. 
நிகழ் ஆண்டு சிவாஜி கண்ணன் என்பவரின் இயக்கத்தில் "நெல்லை சீமையின் எல்லைச்சாமி வீரபாண்டிய கட்டபொம்மன்' என்ற தலைப்பில் நவீன வரலாற்று நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டது. அலைகடலெனத் திரண்டிருந்த அனைவரின் வரவேற்பையும் அது பெற்றது. கிராமத்தில் படித்த இளைஞர்கள் சுமார் 20 பேர் இந் நாடகத்தில் கதாபாத்திரம் ஏற்று நடித்துக் காட்டியது நாடகக் கலையின் மீது இளைஞர்களிடம் உள்ள ஆர்வத்தைக் காட்டுகிறது. 
இதுகுறித்து இந்த நாடகத்தில் நடித்த ராஜகுமாரனிடம் பேசியதிலிருந்து...
"ஆண்டுதோறும் இக் கிராமத்தில் திருவிழா காலங்களில் சமூக நாடகம், வரலாற்று நாடகம் ஆகியவற்றை அரங்கேற்றுவது வழக்கம். இதில், கிராமத்து இளைஞர்களான நாங்களே பாத்திரம் ஏற்று நடிப்போம். வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்துக்கு மூன்று மாதங்களாக பயிற்சி எடுத்தோம். இது போன்ற நாடகங்களால் மக்களுக்கு நல்ல கருத்துகளைச் சொல்ல முடிகிறது.
நாடகத்தில் நடிக்க எங்களைப் போன்று ஏராளமான இளைஞர்கள் ஆர்வமாக உள்ளனர். இவர்களைத் தமிழகம் கண்டறிந்து ஊக்கப்படுத்திட வேண்டும்'' என்றார்.
- ஆர்.ரமேஷ்கிருஷ்ணன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/25/w600X390/DRAMA.JPG http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/25/நாடகக்-கலைக்கு-உயிர்-கொடுக்கும்-இளைஞர்கள்-3007601.html
3007600 வார இதழ்கள் இளைஞர்மணி நட்பிருக்க பயமேன்! DIN DIN Tuesday, September 25, 2018 10:43 AM +0530 "உன் நண்பன் யார் என்று சொல் நீ யாரென்று சொல்கிறேன்' என்பது சான்றோர் வாக்கு. பெறுதற்கு அரிய செல்வம் நட்புடைமையாகும். மற்ற உறவுகள் நாம் பிறக்கும் போதே இயற்கையாக உருவாகிவிடும். ஆனால் நாம் வாழும் காலத்தில் நம்மால் உருவாக்க முடிந்த உறவு நண்பர்களே. யாரை வேண்டுமானாலும் நாம் நண்பர்களாக ஆக்கிக்கொள்ளலாம். ஆனால் நல்ல மனிதர்களை நண்பர்களாக்கிக் கொள்வதன் மூலமே நம் வாழ்வை நல்ல முறையில் உருவாக்கிக் கொள்ள முடியும். கூடா நட்பு கேடாய் முடியும் என்பார்கள். எனவே நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். நம்முடன் பலர் நெருக்கமானவர்களாக இருக்கலாம். அவர்களில் நாம் யாரை நண்பர்களாக்கிக் கொள்ளலாம்?
 நேர்மையானவர்: எந்த ஓர் உறவுக்கும் உண்மையும், நேர்மையுமே அடித்தளம். நேர்மையானவர்களின் நட்பைப் பெற நாம் எப்படியேனும் முயற்சிக்க வேண்டும் . நமது நண்பர் நாம் தவறான வழியில் செல்லும் போது நம்மை திருத்தி வழிகாட்டுபவராகவும், நாம் சரியான வழியில் செல்லும் போது நமக்கு பக்கபலமாக தோள் கொடுப்பவராகவும் இருத்தல் வேண்டும். "டேய் உனக்கு பச்சை சட்டை செட் ஆகலடா' என்று சொல்வது முதல் "அந்த பொண்ணுக்கு உன்னை பிடிக்கல மச்சான்' என்று சொல்வது வரை மனதில் படும் உண்மையை நமக்காக நேர்மையாக எடுத்துக் கூறுபவரையே நமது நண்பராக தேர்ந்தெடுக்க வேண்டும்.
 எப்போதும் விட்டுக்கொடுக்காதவர்: நம்மை எங்கும் எப்போதும் விட்டுக் கொடுக்காதவர்களின் நட்பை நாம் எப்போதும் விட்டுவிடக் கூடாது. நாம் தேர்ந்தெடுக்கும் நண்பர்கள் நமது கருத்துகளுக்கு மதிப்பளிப்பவராகவும், நமது கருத்தறிந்து நடந்து கொள்பவராகவும், நம்முடன் ஒத்த கருத்துடையவராகவும் இருக்க வேண்டும். சிரிப்பு, கவலை, மகிழ்ச்சி, துக்கத்தில் பங்கு கொள்பவராக இருக்க வேண்டும். சமயத்தில் மற்றவர்கள் முன் நாம் சொல்லும் மொக்கை ஜோக்குகளையும் சகித்துக் கொண்டு, "நல்லா காமெடி பண்ற மச்சான்'' என்று நம்மை விட்டுக் கொடுக்காமல் பேசுபவர்களை நாம் நண்பர்களாக்கிக் கொள்வது மிக நல்லது!
 இடுக்கண் களைவதாம் நட்பு: ஆபத்தில் உதவுபவனே நல்ல நண்பன். நாம் சந்தோஷத்தில் இருக்கும் போது மட்டுமல்லாமல் நமது கஷ்ட காலங்களிலும் துணை நிற்பவரே உண்மையான நண்பர். நாம் தேர்ந்தெடுக்கும் நண்பர்கள், நமக்கு துன்பம் வரும் வேளைகளில் அதை சரிசெய்ய நமக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி, நம்முடன் பக்கபலமாக இருந்து "தோள் கொடுக்க தோழன் உண்டு' என்ற நம்பிக்கையைத் தர வேண்டும். அதற்காக நண்பன் தேர்வறையில் பதில் தெரியாமல் ஆபத்தில் இருக்கிறான் என்று விடைத்தாளை தூக்கிக்கொடுத்து நட்பை நிலை நாட்ட எண்ணிவிடக் கூடாது.
 உரிமையோடு பழகுதல்: சிலர் நம்மிடம் இருந்து அவர்களுக்கு தேவையான காரியங்களை சாதித்துக்கொள்ள மட்டும் நம்மை பயன்படுத்திக்கொள்வார்கள். ஆனால், நமக்கு தேவையான நேரத்தில் உதவி புரிய முன்வர மாட்டார்கள். அத்தகையோரிடமிருந்து விலகியே இருக்க வேண்டும். ஒருவர் மட்டுமே கொடுப்பதும், அதை மற்றொருவர் பெறுவதும் உதவியே தவிர, நட்பல்ல. கொடுத்து வாங்கும் உரிமை நண்பர்களிடம் மட்டுமே கொள்ள வேண்டும்.
 நம்பிக்கையானவர்: நாம் தேர்ந்தெடுக்கும் நண்பர் நமக்கு மிகுந்த நம்பிக்கையானவராக இருக்க வேண்டும். நாம் ஒரு பொறுப்பை நம்பி கொடுக்கும் போதும், ஒரு விஷயத்தை நம்பி சொல்லும் போதும் நமது நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பவரையே நண்பராக்கிக் கொள்ள வேண்டும். நமது செயல்கள் சிலவற்றில் தமக்கு விருப்பமில்லை என்றாலும் நமது உணர்வுகளுக்கு மதிப்பளித்து பழகுபவரை நமது நண்பராக்கிக் கொள்ள வேண்டும்.
 கருத்தொற்றுமை: நண்பர்களுக்கிடையே சில நேரங்களில் கருத்து வேறுபாடு ஏற்படுவதும் இயல்பே. எனினும் மற்றவரின் கருத்துகளுக்கு மதிப்பு அளித்து, நமது செயல்களை விரும்பி ஏற்றுக் கொண்டு, விட்டு கொடுத்து போவதே நட்புக்கு அழகு. அத்தகைய நபர்களிடம் நட்பு கொண்டால் வாழ்வும் அழகு பெறும்.
 - க. நந்தினி ரவிச்சந்திரன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/25/w600X390/im8.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/25/நட்பிருக்க-பயமேன்-3007600.html
3007598 வார இதழ்கள் இளைஞர்மணி நடமாடும் விசா சேவை! DIN DIN Tuesday, September 25, 2018 10:40 AM +0530 புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2005 முதல் செயல்பட்டு வருகிறது BLS International நிறுவனம். இதை தொடங்கியவர் திவாகர் அகர்வால். பாஸ்போர்ட், விசா, தூதரகம் சார்ந்த சேவைகளை வழங்கி வரும் இந்த நிறுவனம், இந்தியாவில் உள்ள அரசு வாடிக்கையாளர்கள் (Client Governments) மூலம் அதிக அளவிலான ஒப்படைப்புப் பணிகளையும், போர்ச்சுக்கல், கிரேக்கம், ஹங்கேரி ஆகிய நாடுகளில் இருந்து சிறிய அளவிலான வெளிப் பணிகளையும் பெற்று வந்தது.
இந்த நிலையில், கடந்த 2014-இல் இந்த நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குநராகப் பொறுப்பேற்றார் திவாகர் அகர்வாலின் 23 வயது மகன் சிகார் அகர்வால். இவர் தில்லி பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டம் பெற்று, Indian internship at Grant Thornton-இல் நிர்வாகப் பயிற்சி பெற்றவர். படிக்கும் போதே, தன் குடும்பத் தொழிலை சர்வதேச அளவில் உயர்த்த வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட, அவ்வாறே அதில் சேர்ந்தவுடன், நிறுவனத்தில் செயல்பாடுகளில் தொடர்ச்சியாகப் பல மாற்றங்களை கொண்டுவந்தார். 
குறிப்பாக, ஆவணங்களைப் பரிசீலிப்பதற்கான நேரத்தை குறைக்கும் வகையில், அவற்றில் பயோமெட்ரிக்ஸ் முறைகளை அறிமுகப்படுத்தியதோடு, இணையதளத்தையும் சீரமைத்தார். பல்வேறு நாடுகளில் இருந்தும் ஊழியர்களைத் தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்தினார். 
சிகார் அகர்வாலின் தேடல் காரணமாக, BLS நிறுவனத்தின் வருவாய் 4 ஆண்டுகளில் ரூ. 854 கோடியாக உயர்ந்தது. மேலும், இந்த நிறுவனம் 62 நாடுகளில் கால்பதித்துள்ளதோடு, இந்தியாவில் 36 அரசு நிறுவன வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளது. மேலும், 2014-2018-க்குள் நிறுவனத்தின் லாபம் ரூ. 105 கோடி என 4 மடங்காக உயர்ந்தது.
தற்போது, 27 வயதாகும் சிகார், முக்கியமான விசா சேவைகளைக் கடந்து, அரசு சேவைகளான குடிமக்களுக்கு பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ், அடையாள அட்டை, வாக்காளர் அட்டை வழங்கும் பணிகளைப் பெற்று செயல்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். 
இதன் ஒருபகுதியாக, வசதி படைத்தவர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வசதியை கருத்தில்கொண்டு, நடமாடும் பயோமெட்ரிக்ஸ் சேவையையும் அளித்து வருகிறார். இதன்மூலம், விண்ணப்பதாரர்கள் விசா மையத்திற்கு நேரில் வந்து நாள் கணக்கில் காத்திருக்கும் பிரச்னை தவிர்க்கப்பட்டிருக்கிறது. விசா பெற விரும்புபவர்கள் அவர்கள் வீட்டிலோ, அலுவலத்திலோ, எங்கே அவர்களுக்கு வசதியோ அங்கே சென்று, விசா விண்ணப்பப் படிவம், தேவையான சான்றுகள், பயோ மெட்ரிக் தகவல்கள் ஆகியவற்றை இந்த நிறுவனத்தினர் சேகரித்துக் கொண்டு வருவார்கள். பிறகு அந்த விசா விண்ணப்பத்தின் நிலையை ஒவ்வொரு ஸ்டேஜிலும் எஸ்எம்எஸ் மூலமாகவோ, இ மெயில் மூலமாகவோ தெரிவிப்பார்கள். எல்லாப் பணிகளும் முடிந்த பிறகு, விண்ணப்பதாரரிடம் இருந்து பெற்றுவந்த பாஸ்போர்ட் கூரியர் மூலமாக அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் ஒருவர் எங்கேயும் அலையாமல் வீட்டிலிருந்தே விசா பெற முடியும். ஏனென்றால் காத்துக் கிடக்க நேரமின்றி இயந்திரம்போல் ஓடிக் கொண்டிருக்கும் பலருக்கு இந்த நடமாடும் பயொமெட்ரிக்ஸ் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் அதிக அளவிலான தொழிலாளர்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைக் குழுக்களை இலக்காக வைத்து இந்தச் சேவையைத் தொடங்கியிருக்கிறார் சிகார்.
இந்தியாவிற்கு மட்டுமல்ல, பிற நாடுகளுக்கும் தனது விசா சேவையை விரிவுபடுத்தியிருக்கிறார் சிகார். கடந்த மே மாதத்தில் விசா புதுப்பித்தல் பணிகளுக்காக பிரிட்டன் அரசிடமிருந்து ரூ. 980 கோடிக்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது BLS. அதோடு, கடந்த 2016, டிசம்பர் மாதம் ஸ்பெயின் அரசுக்காக உலகம் முழுவதும் விசா சேவை மையங்களை அமைத்து கொடுப்பதற்காக ரூ. 1400 கோடியில் 5 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது இந்த நிறுவனம். ஐரோப்பா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் புதிய பணிகளைப் பெறும் பொருட்டு, அங்கும் ஊழியர்களை நியமித்துள்ளார் சிகார் அகர்வால். 
வெளிநாட்டுத் தூதர்களை சந்தித்துப் பேசுவதற்காகவும், தூதரக சேவைப் பணிகளுக்காகவும் இவர் கடந்த 3 ஆண்டுகளில் 25 நாடுகளுக்குப் பயணித்துள்ளார். இவரது கடுமையான உழைப்பால், சர்வதேச ஏலங்களில் பங்கேற்கவும், ஒப்பந்தங்களைப் பெறவும் BLS நிறுவனம் முன்தகுதி பெற்றுள்ளது. 
BLS நிறுவனம் தற்போது உலக அளவில் முதல் 3 நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. 62 நாடுகளில் 2,325 அலுவலகங்கள், 9 ஆயிரம் ஊழியர்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், இதுவரை 3.1 கோடி விண்ணப்பங்களைக் கையாண்டுள்ளது. 
கடினமான மற்றும் அதிநவீன உலக போட்டியை வரவேற்கும் சிகார் அகர்வால், அதை எதிர்கொள்ள விசா சேவை மற்றும் மின் ஆளுகையில் புதிய தொழில்நுட்பங்களைப் பெறுவதற்காக தனது நிறுவனத்தில் முடுக்கும் பிரிவையும் (accelerator division) ஏற்படுத்தியுள்ளார்.
- இரா.மகாதேவன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/25/w600X390/im7.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/25/நடமாடும்-விசா-சேவை-3007598.html
3007597 வார இதழ்கள் இளைஞர்மணி வாங்க இங்கிலீஷ் பேசலாம் 158 - ஆர்.அபிலாஷ் DIN DIN Tuesday, September 25, 2018 10:31 AM +0530 புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் மருத்துவருக்கான காத்திருப்போர் அறையில் இருக்கிறார்கள். அவர்களுடன் அங்கே வினி எனும் 12 வயதுச் சிறுமியும், அவளது பாட்டியும் இருக்கிறார்கள். அப்போது நடாஷா எனும் பெண் போனில் பேசுவதை கேட்க நேரும் கணேஷ், அவள் பயன்படுத்திய lose no time எனும் சொற்றொடரின் பொருள் என்னவென புரொபஸரிடம் கேட்கிறான். அப்போது குறுக்கிடும் நடாஷா, ஒருவரது தனிப்பட்ட உரையாடலில் மற்றவர் eavesdrop செய்வது, அதாவது ஒட்டுக்கேட்பது, நியாயமா என வினவுகிறாள். அதற்கு பதிலளிக்கும் கணேஷ் I didn't eavesdrop, I only overheard என்று நியாயப்படுத்துகிறான். தன் தரப்பு சரி தானே என புரொபஸரிடம் கேட்கிறான். 

புரொபஸர்: Eavesdrop என்றால் ஒட்டுக்கேட்பது. Overhearing என்பதும் அது தான். ஆயினும் இரண்டுக்கும் இடையில் ஒரு முக்கியமான வித்தியாசம் உள்ளது. அடுத்தவரின் சொற்களை எதேச்சையாய், அவர்களுக்குத் தெரியாமலே ஒட்டுக்கேட்பது overhearing. வேண்டுமென்றே கேட்பது eavesdropping.
முன்பு நாங்கள் ஓர் ஒண்டுக்குடித்தன வீட்டில் வாழ்ந்தோம். பக்கத்து வீட்டுக்கும் எங்கள் வீட்டுக்குள் நடுவே ஒற்றைச்சுவர். அங்கே முனகினால் எங்களுக்கு இங்கே ஸ்பெஷல் எபக்டோடு கேட்கும். ஒருநாள் அங்கே ஒரு குழந்தை சத்தமாய் வீறிட்டழுகுகிறது. அதன் அப்பா சொல்கிறார், "இந்த ராடை எடுத்து உன் மண்டையை பொளக்க போறேன்'.' அதைக் கேட்டு என் மனைவி மீனுவுக்கு பதறிப் போயிடுச்சு. குழந்தை சத்தமா அழுவுது. திடீர்னு ஒரு சத்தம் - பளீர்னு அறையற சத்தம். அடுத்து, அந்த குழந்தை ஒரேயடியாய் அமைதியாயிடுச்சு. ரொம்ப நேரமா சத்தமே இல்ல. மீனுவுக்கு ஒரே பதற்றம். ""வாங்க போய் பார்க்கலாம். அந்த பாப்பாவுக்கு என்னவோ ஆயிடுச்சு''' என என்னை கெஞ்சுகிறாள். எனக்கோ எப்படி பக்கத்து வீட்டுக்குப் போய் விசாரிக்கிறது, அதுவும் "நீங்க பேசுறது, குழந்தையை அறைஞ்சது எங்களது வீட்டுக்குள்ள இருந்தால் கேட்குது' என சொல்ல தயக்கம். ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் எங்க மேல தப்பில்ல. ஏன்னா இது eavesdropping இல்ல, overhearing, 
கணேஷ்: ரொம்ப தத்ரூபமா விளக்குனீங்க சார்.
நடாஷா: சரி, ஆனால் அந்த குழந்தைக்கு என்னாச்சு?
புரொபஸர்: இரவெல்லாம் நாங்க தூங்காம பிராத்தனை பண்ணிக்கிட்டு இருந்தோம். ஆனால் நாங்க அடுத்த நாள் அது தெருவில விளையாடுறதைப் பார்த்தோம். எந்த பிரச்னையும் இல்ல. 
கணேஷ்: சார் இந்த lose no time என்றால் என்ன?
புரொபஸர்: Didn't lose any time எனப் பொருள். இன்னும் சுருக்கமா சொல்றதுன்னா I will do it immediately. 
கணேஷ்: ஓ! ஆனா I will do it immediately இன்னும் சுலபமா புரியும்படியா இருக்கே? பிறகு ஏன் இந்த lose no time எல்லாம் பயன்படுத்தணும்?
புரொபஸர்: நல்ல கேள்வி. நடாஷா நீ என்ன சொல்றே?
நடாஷா: அது என்னோட ஸ்டைல். நான் அப்படி சொல்றதைத் தான் விரும்பறேன். குறிப்பா எந்த காரணமும் இல்ல. I have always said I shall lose no time in responding to you. ரொம்ப வருசமா இப்படித் தான் சொல்லி வரேன்.
புரொபஸர்: நான் அப்படி நினைக்கல. இதுக்குப் பின்னால் ஒரு காரணம் உண்டு. நீ ஒரு விசயத்தை நேரடியா சொல்ல விரும்பலைன்னா சுத்தி வளைச்சு மழுப்பலா பதில் சொல்லுவே. உதாரணமாக, உன் கிட்ட ரெண்டு சாக்லேட் பார் இருக்குது. உன் ஆத்ம தோழி ஒண்ணு கேட்கிறா. நீ அவளிடம் "இல்ல என்னால தர முடியாது. எனக்கு ரெண்டுமே வேணும்' என சொன்னால் அது முரட்டுத்தனமா, அநாகரிகமா இருக்கும். ஆனால் "எனக்கு தர விருப்பமே. ஆனால் எனக்கு ரொம்ப பசிக்குது. இன்னொரு சந்தர்ப்பத்தில் இது போல் நீ கேட்டால் உனக்கே ரெண்டு சாக்லேட்டையும் தந்திடுவேன்' என சொல்லலாம். ரெண்டுமே ஒரே விசயம் தாம், ஒன்று நேரடியாக "தர முடியாது' என சொல்வது, மற்றொன்று அதையே சுத்தி வந்து மூக்கைத் தொட்டு சொல்றது. இப்படி பேசுபவர்கள் தயங்குகிறார்கள் எனப் பொருள். இதை ஆங்கிலத்தில் amphibology என்பார்கள்.
(இனியும் பேசுவோம்)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/25/w600X390/eng.JPG http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/25/வாங்க-இங்கிலீஷ்-பேசலாம்-158---ஆர்அபிலாஷ்-3007597.html
3007594 வார இதழ்கள் இளைஞர்மணி ஜூஸ்... ஸ்குவாஸ்... மாக்டெய்ல் பயிற்சி! DIN DIN Tuesday, September 25, 2018 10:24 AM +0530 மக்களின் உணவுப் பழக்க, வழக்கங்கள் அவ்வப்போது மாறி வருகின்றன. பழங்களை நேரடியாகத் தின்றது போய் இப்போது பழச்சாறுகளை அருந்துவது பழக்கமாகிவிட்டது. 
வெளியிடங்களுக்குச் சென்றால் விரும்பி அருந்துபவையாகவும் அவை உள்ளன. திருமணம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளிலும் விருந்துக்கு முன்பும், பின்பும் பழச்சாறுகளைத் தருவது வழக்கமாகி வருகிறது. ஜூஸ், ஸ்குவாஸ், மாக்டெய்ல் என இந்த பானங்கள் பல வடிவங்களைப் பெற்றுள்ளன.
இவற்றைத் தயாரிப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அதற்கான பயிற்சி பெற விரும்புபவர்கள் கீழ்க்காணும் பயிற்சிநிறுவனங்களை அணுகலாம்: 
http://www.manjuscookingclass.com/squashes-cool-drinks-classes.html
http://mamtacreations.com/cooking.html
http://www.britishsoftdrinks.com/Training-course-programme
- எம்.அருண்குமார்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/25/w600X390/im6.JPG http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/25/ஜூஸ்-ஸ்குவாஸ்-மாக்டெய்ல்-பயிற்சி-3007594.html
3007593 வார இதழ்கள் இளைஞர்மணி கட்டுப்பாடு ஒரு கவசம்! 11 - ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ். DIN DIN Tuesday, September 25, 2018 10:23 AM +0530 விவேகானந்தரின் அமெரிக்க நாட்டு சொற்பொழிவுகள், அமெரிக்க மக்களின் மனதை வெகுவாக கொள்ளை கொண்டன. அதே வேளையில், ஓர் இருபது வயதுப் பெண்ணும் மயங்கினார். அவர் சுவாமி விவேகானந்தர் சென்ற அயோவா, டெட்ராய்ட், பாஸ்டன், கேம்பிரிட்ஜ், வாஷிங்டன், நியூயார்க் போன்ற இடங்களுக்குச் சென்று, சுவாமி விவேகானந்தரைப் பின்தொடர்ந்தார். கடைசியாக, ஒரு நாள் அவர் சுவாமிஜியை அவர் தங்கியிருந்த அறையில் சந்தித்தார்.
"விவேகானந்தரே! அமெரிக்க இளைஞர்கள் பலர் எனது அழகில் மயங்கி என் பின் சுற்றி வருகிறார்கள்; ஆனால் நான் உங்கள் அறிவில் மயங்கி உங்களைச் சுற்றி வருகிறேன். நாம் திருமணம் செய்துகொண்டால் எனது அழகோடும், உங்கள் அறிவோடும் ஒரு குழந்தை பிறக்கும். அக்குழந்தை இவ்வுலகையே ஆளும்'' என்றார், அப்பெண். 
அதற்கு சுவாமி விவேகானந்தர் புன்சிரிப்போடு, "தாயே! நான் பிரம்மச்சாரியம் கடைப்பிடிப்பவன், நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். மேலும், அழகான பெண்ணும், அறிவான ஆணும் திருமணம் செய்துகொண்டால், பிறக்கும் குழந்தை அறிவுமிக்கதாக இருக்கும் என்பதற்கு எவ்வித அறிவியல்பூர்வமான உத்திரவாதமும் இல்லை. உங்களுக்கு என்னைப் போன்ற குழந்தைதானே வேண்டும்? என்னையே உங்கள் குழந்தையாக ஏற்றுக் கொள்ளுங்கள், தாயே'' என்றார். "பறவைகள் உங்கள் தலைமேல் பறப்பதைத் தடுக்கமுடியாது. ஆனால் அவை உங்கள் தலையில் கூடுகட்டுவதைத் தடுக்க முடியும்' என்ற சீனப் பழமொழிக்கேற்ப, சுவாமிஜி தனக்கு வரவிருந்த இக்கட்டான சூழலைத் தவிர்த்தார். அப்பெண்ணும் தனது தவறை உணர்ந்து, சுவாமிஜியைக் கண்டு வியந்தார். 
"ஒருவர் கட்டுப்பாடின்றி இருப்பது, ஒரு நகரத்தின் கோட்டை மதிற்சுவர்கள் சிதிலம்அடைந்து இருப்பதைப் போன்றது' என கூறுகிறது பைபிள். உண்மையில் கட்டுப்பாடு, மனிதனின் கவசம். அது மனிதனைத் தீங்குகளிலிருந்து காப்பாற்றும். மனிதனின் ஆற்றல் அளப்பரியது. அது காட்டாற்று வெள்ளம்போல் ஒவ்வொரு மனிதனிடத்தும் தோன்றும். காட்டாற்றின் வேகத்தை வழிப்படுத்துபவை அணைகள். அணைகள், வேகத்தை மட்டும் கட்டுப்படுத்துவதில்லை; ஆற்றலைத் தேக்குகின்றன. தேக்கிய நீரால், வறண்ட நிலங்கள் வளம்பெறும்;
வறட்சிக் காலத்திலும் பயன்பெறும்; வற்றும் ஆறுகளை வற்றாத ஜீவநதியாக்கும்; மொத்தத்தில் நிலத்தை என்றென்றும் வளப்படுத்தும். அதைபோல, மனிதனிடமுள்ள ஆற்றலை வழிப்படுத்தவேண்டும்' என்கிறார் திருமூலர்.
"மனிதனிடத்தில் உள்ள மெய், வாய், கண், காது, மூக்கு என ஐம்புலன்களும், காட்டு மாடுகளைப்போல் யாருக்கும் கட்டுப்பட மறுக்கும். மாடுகளைச் சரியாய்க் கட்டுப்படுத்தினால் அவற்றிலிருந்து அதிகமான பாலைச் சுரக்க முடியும். அதுபோல மனிதனின் ஐம்புலன்களைக் கட்டுப்படுத்தினால் அளப்பரிய பலன்களைப் பெற முடியும்' என்கிறார்.
இந்த உலகில் வாழ்கின்ற உயிர்களில் தனக்கென்று சில கட்டுப்பாடுகளை விதித்து வாழ்கின்ற உயிர்கள் மட்டுமே இந்த மண்ணுலகில் நீண்ட நாள் வாழ்கின்றன. "ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல்' என்று திருவள்ளுவர் கூறியது போல், ஆமை தனது ஐந்து அவயங்களையும் அடக்கி வாழ்கிறது. ஆதலால், சுமார் 250 ஆண்டுகள் வரை அது உயிர் வாழ்கிறது.
சிறிய கட்டுப்பாடுகள் காலத்தினையும், ஆற்றலையும் சேமிக்கும். தவறுகளைத் தடுக்கும். சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்வு. திருமாளிகைத் தேவர் என்பவர், மண்ணில் பிறந்த நாள் முதல் தனது எழுபத்தைந்து வயது வரை எவ்வித மருந்தும் எடுத்துக் கொள்ளவில்லை. மன்னர் அவரை வரவழைத்தார். "எப்படி இவ்வாறு நோயின்றி வாழ்ந்து வருகின்றீர்?'' என்று கேட்டார். அதற்கு அவர்,
"ஓரடி நடவேன்
ஈரடி கடவேன்
இருந்து உண்ணேன் 
கிடந்துறங்கேன்! '' - என்றார். 
"அப்படியா! இதற்கு என்ன பொருள்?'' என்றார் மன்னர். 
"ஓரடி நடவேன் என்றால், எனது நிழல் என் காலடியில் இருக்கும் நேரம் அதாவது உச்சிப்பொழுதில் எப்பொழுதும் நடக்கவே மாட்டேன். "ஈரடி கடவேன்' என்றால் ஈரமுள்ள இடத்தில் படுத்து உறங்க மாட்டேன், இருந்து உண்ணேன் என்றால் முதலில் உண்ட உணவு செரிக்காமல் மேலும் உண்ண மாட்டேன், கடைசியாக "கிடந்துறங்கேன்' என்றால் உழைத்து அயராமல் வெறுமனே படுத்து உறங்க மாட்டேன்'' என்றார். இத்தகைய கட்டுப்பாடான ஒரு வாழ்க்கைதான் திருமாளிகைத் தேவரை மண்ணில் பிறந்தது முதல் விண்ணில் மறைந்தது வரை மருந்தே இல்லாமல் வாழச் செய்தது. 
மகாத்மா காந்திஜியின் மேசையை அலங்கரித்தது மூன்று குரங்கு பொம்மைகள். அவை, மனிதத்தின் மனதைப் பிரதிபலித்தவை. குரங்கு போலவே, தாவித் தாவி ஓடும் எண்ணத்தையும், அதனோடு பயணிக்கத் துடிக்கின்ற மூன்று புலன்களையும், உருவகப்படுத்திய பொம்மைகள். தீயதைப் பார்க்காமலும், தீயதைக் கேட்காமலும், தீயதைப் பேசாமலும் இருந்தால், தீயது ஒரு மனிதனுக்கு ஏற்படாது, அவரால் பிறருக்கும் தீயவை நடக்காது என்று புரிய வைத்தது. தீயவை அற்ற நிலையில் அங்கே நல்லவை மட்டுமே பூவாய் மலரும். அது நாற்புறமும் அற்புதமாய் நறுமணம் வீசும். 
"வெற்றிக்கு அடிப்படையான காரணி சுயகட்டுப்பாடு' என்கிறது ரிக்வேதம். 
2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரியோ ஒலிம்பிக் நடைபெற்றது. அதற்கு இந்தியாவில் இருந்து பேட்மிண்டன் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தவர் சிந்து. அதற்கு முந்தைய இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த ஆஸ்திரேலிய ஓப்பன் சூப்பர் சீனியர் போட்டியில், முதல் சுற்றிலேயே தோல்வியோடு வெளியேறினார். ஒலிம்பிக் கனவுகள் சிதைந்து விடுமோ என்று அச்சம். சிந்துவின் பயிற்சியாளர் ஆராய்ந்தார். சிந்துவின் கண்களிலும், கைகளிலும் விளையாடிய செல்போன்தான் கவனச்சிதைவுக்கு காரணம் என்று அறிந்தார். உணவுகட்டுப்பாடின்மை மற்றொரு காரணமாயிருந்தது. சிந்துவிடம், "ஒலிம்பிக்கில் பதக்கம் பெறவேண்டும் என்றால், இரண்டு கட்டுப்பாடுகள் அவசியம். ஒன்று செல்போனை மறந்துவிடு, மற்றொன்று உணவு முறையில் பிரியாணி, பீட்சா, ஐஸ்கிரீம் எதுவும் கூடாது'' என்றார் கோபிசந்த். அடுத்த வினாடியே சிந்து தனது செல்போனை பயிற்சியாளரிடம் கொடுத்தார். கட்டுப்பாடான உணவுமுறைக்குள் தன்னைக் கட்டுப்படுத்தினார். ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையை தேடிதந்தார். 
கட்டுப்பாடு என்பது அடக்குமுறை அல்ல. அக்கறையோடு கூடிய ஓர் அணுகுமுறை. தவறுகளைத் திருத்தும்போது குழந்தைகள் வருத்தப்படுவர். சில நேரங்களில் கண்ணீர் விடுவர். அதற்காக தவறுகளைக் கட்டுப்படுத்த மறுத்தால், பிற்காலத்தில் பெற்றோர் வருத்தப்படுவர், கண்ணீர்விடுவர். குழந்தையின் கதறல்களையும், உதறல்களையும், கட்டுப்படுத்தி, சங்கினில் இருக்கும் மருந்தினை குழந்தையின் வாயின் ஒரத்தில் மெதுவாய் நிறுத்தி, உட்செலுத்தும் அன்னையைப் போல் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். அதைவிடுத்து, பழுத்த கம்பியால் தொடையில் இடும் சூடெல்லாம் குழந்தைகளின் மீது வெறுப்பு கொண்டதின் அடையாளமாக அமைந்துவிடும்.
ஒரு மரத்தடியில் தியானம் செய்துகொண்டிருந்தார் ஒரு முனிவர். மரத்தின் மேலிருந்த சில பறவைகள், பயங்கரமாய் கூச்சலிட்டன. அமைதி காக்கச் சொன்னார் முனிவர். செவிசாய்க்க மறுத்தன பறவைகள். முனிவர் தனது மந்திரத்தால் எல்லா பறவைகளையும் பறக்கவிடாமல் முடிச்சுகளைப் போட்டு கட்டி வைத்தார். பறவைகள் செய்வதறியாமல் திகைத்தன. பின்னர் முனிவர், அங்கிருந்து கிளம்பி வேறு இடம் சென்றுவிட்டார். அவ்வழியே, வந்த மற்றொரு முனிவரைப் பார்த்த பறவைகள், "சுவாமி! முன் இருந்த முனிவர் போட்ட முடிச்சுகளை அவிழ்த்து விடுங்கள்'' என்று வேண்டின. முனிவர் தனது மந்திர சக்தியால் முன்னவர் போட்ட முடிச்சுகளின் அருகிலேயே வேறொரு இறுக்கமான முடிச்சைப் போட்டார். பறவைகள் எல்லாம் வலி தாங்காமல், "எங்களை காப்பாற்றிவிடுவீர்கள் என்று நினைத்தோம். ஆனால், இப்படி இறுக்கமாக கட்டி விட்டீர்களே'' என்றன. அதே, நேரத்தில் இறுக்கமான முடிச்சால், பழைய முடிச்சு மெதுவாக அவிழ்ந்தது. பின்னர், தான் போட்ட முடிச்சயையும் அவிழ்த்தார். பறவைகளெல்லாம் அவருக்கு நன்றி கூறின. "தாங்கள் ஏன் இப்படி செய்தீர்கள்?'' என்று கேட்டன பறவைகள். "என்னால் முனிவர் போட்ட முடிச்சுகளை அவிழ்க்க முடியவில்லை. அதனால் தான், அதை இலகுவாக்க, அதைவிட இறுக்கமாக உங்களைக் கட்டினேன். பின் நான் போட்ட முடிச்சுகளை அவிழ்த்து உங்களை விடுவித்தேன்'' என்றார்.
கட்டுப்பாடுகளை தகர்த்தெறிபவர், சமூகத்தின் எச்சரிக்கை. கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்பவர் சாதனையாளர். கட்டுப்பாடுகளோடு, கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்பவர் இவ்வுலகிற்கு எடுத்துக்காட்டு. 
"வாழ்வின் உயரங்களைத் தொட முக்கிய பத்து குணாதிசயங்களில் முக்கியமானது சுயகட்டுப்பாடு. நமக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளில் சுதந்திரமாக தேர்ந்தெடுத்து, அதன் மூலம் வாழ்வின் இலட்சியத்தை அடைவதற்கு தன்னைச் செதுக்கிக் கொள்வது' என்கிறார் The Psychology of Winning என்ற புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர் டென்னிஸ் வெயிட்லி.
குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தரிலிருந்த புத்திலிபாய் அம்மையார் தனக்கென்று சில கட்டுப்பாடுகளை வைத்திருந்தார். அதில் சூரியன் தெரிகின்ற நாட்களில் மட்டுமே உணவு உண்பார். இல்லையெனில், அன்றைய நாளை அவர் விரதமாகவே கணக்கிடுவார். அவரிடம் அவரது மகன் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் பாரிஸ்டர் பட்டம் பெற, லண்டன் செல்ல விருப்பம் தெரிவித்தார். தனது மகன் வெளிநாடு சென்றால் கெட்டுப்போய் விடுவான் என்று அவர் அஞ்சினார். அனுமதிக்க மறுத்தார். காந்திஜி, காரணம் கேட்டார். அதற்கு, "வெளிநாடு சென்று வந்தவர்கள் மாமிசம் உண்கிறார்கள், மது அருந்துகிறார்கள் என்றார். மேலும், உனக்கு இப்பொழுதுதான் திருமணம் ஆகி உள்ளது; உன்னை பிரிந்து வாழும் கஸ்தூரிபாய்க்கு என்ன பதில் சொல்வது?'' என்றார். உடனடியாக காந்தி, "அம்மா நான் மாமிசம் உண்ணமாட்டேன், மது அருந்தமாட்டேன், மாதுவைத் தொடமாட்டேன்'' என சத்தியம் செய்தார். 
"நாம் எதைச் செய்யமுடியும் என்கிற சக்தியும், நாம் எதைச் செய்யக்கூடாது என்கிற சக்தியும்தான் ஒரு மனிதனின் சுய கட்டுப்பாட்டினை நிர்ணயிக்கிறது' என்ற அரிஸ்டாட்டிலின் வரிகளுக்கேற்ப, தனது சுய கட்டுப்பாட்டினால் மகாத்மாவாக உருவானார். காந்தியின் கட்டுப்பாடுகள், அவரது அன்னையைப் போலவே விரதங்களாலானது.
ஆகவே, கட்டுப்படுத்தத் தொடங்கினாலே வாழ்க்கை அழகாகும். சிதறிய பூக்களைக் கட்டுப்படுத்தினால் அழகிய மாலை; சிதறிய வார்த்தைகளைக் கட்டுப்படுத்தினால் ரசிக்கும் கவிதை; கட்டுப்படுத்தப்பட்ட நடை, அணிவகுப்பு; சிதறும் மனதைக் கட்டுப்படுத்துவதே அழகிய வாழ்க்கை.
கட்டுப்பாடு ஒரு கவசம்!
சுயகட்டுப்பாடு ஓர் ஆயுதம்!!
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: 
காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/25/w600X390/im5.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/25/கட்டுப்பாடு-ஒரு-கவசம்-11---ஆர்திருநாவுக்கரசு-ஐபிஎஸ்-3007593.html
3007592 வார இதழ்கள் இளைஞர்மணி பிறரால் பாதிக்கப்படாதே...சுகி. சிவம் DIN DIN Tuesday, September 25, 2018 10:17 AM +0530 நீ... நான்... நிஜம்! -37
மழை பெய்கிறது. உருப்பளிங்கு (ஸ்படிகம்) போல் வெள்ளை வெளேர் என்று நிர்மலமாய்ப் பெய்கிறது. ஆனால் பெய்த சில மணித்துளிகளில் மண்ணின் நிறம் நீரின் நிறமாகி மாறி விடுகிறது. கரிசல் காட்டில் பெய்த மழை கறுப்பாகி விடுகிறது. செம்மண்ணில் விழுந்தால் சிவப்பாகிச் சிரிக்கிறது. மண்ணில் விழாமல் மணலில் விழுந்தால் மறைந்தே போகிறது. களிமண் பகுதியில் பெய்த மழை உள்புகாமல் தேங்கி நின்று உயிரினங்களுக்கு உதவுகிறது. எதற்கும் மழை பொறுப்பில்லை. மழைக்கு எந்த உள் நோக்கமும் இல்லை. இப்படித்தான் சில கருத்துக்களை எழுத்திலும் பேச்சிலும் முன் வைக்கிறோம். என்றாலும் படிக்கிறவர்கள், கேட்கிறவர்கள், தத்தம் வண்ணம் பூசி விமர்சனங்களை வீசி எறிகிறார்கள். படைப்பாளிக்கு உள்நோக்கம் கற்பிப்பதில் படுவேகமாகச் செயல் படுகிறார்கள்.
இந்த உண்மையை உள்வாங்கிய பிறகு பிறரது விமர்சனங்களை மதித்தாலும், பாதிக்கப்படுவதில்லை என்று தீர்மானித்துக் கொண்டேன். மேலும் புகழுக்கு ஏங்குபவர்கள் தான் பிறரது இகழுக்கு வருத்தம் அடைவார்கள் என்பது என் தீர்மானம். புகழ் பெற வேண்டும், பாராட்டுப் பெற வேண்டும் என்பதை (Motivational Speakers and writers) சுயமுன்னேற்றப் பேச்சாளர்கள் எழுத்தாளர்கள் அதிகம் வற்புறுத்துகிறார்கள். கோடிக்கண்கள் அழ அழப் பிறந்த நாம் கோடிக் கண்கள் அழ அழ இறப்பதே சரி என்று வசனம் சொல்கிறார்கள். ஆனால் எனக்கு இதில் உடன்பாடே இல்லை. பிறர் நம்மைப் புரிந்து கொள்வது, ஏற்பது, பாராட்டுவது போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என்பதே என் கருத்து. 
பிறருக்கு உதவி செய்த பலர், அதற்காக பிறர் நம்மை மதிக்கவில்லை.. புரிந்து பாராட்டவில்லை என்று வருந்துகிறார்கள். வின்ஸ்டன் சர்ச்சில் சொன்ன கதை ஒன்று: "கப்பலில் இருந்து கடலில் விழுந்து விட்ட சின்னஞ்சிறு குழந்தை ஒன்றை "தயவு செய்து யாராவது காப்பாற்றுங்கள்' என்று ஒரு தாய் கதறினார். இளைஞன் ஒருவன் உயிரைப் பொருட்படுத்தாது கடலில் குதித்து குழந்தையைக் காப்பாற்றி தாயிடம் கொடுத்தான். "நன்றி' என்ற தாய் அடுத்த கணம் கேட்டாள்... ""குழந்தை காலில் போட்டிருந்த விலை மதிப்பற்ற ஷூவைக் காணவில்லை. அதை நீ கவனிக்கவில்லையா? இன்னும் கொஞ்சம் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா?'' என்று கோபித்துக் கொண்டாளாம் இதுதான் உலகம். இன்னும் ஒருபடி மேலே போய், "மறுபடியும் கடலில் குதித்து ஷுவைத் தேடித்தர முடியுமா?'' என்று கேட்டாள்' என்று கதையை முடித்தார் சர்ச்சில். மக்கள் பலர் அவ்வளவு சுயநலம் உள்ளவர்கள். பேராசை மிக்கவர்கள். நன்றி இல்லாதவர்கள் அரைகுறை அறிவுமட்டுமே உடையவர்கள். இவர்களுக்கு உண்மையான நன்மை 
செய்வது அத்தனை சுலபமல்ல.
ஒரு வேடிக்கை கதை படித்தேன். ஐரோப்பாவின், ஒரு சிறுநகரில், இரவு எட்டுமணிக்குத் தம் கடையை மூடிக் கொண்டிருந்தார் ஒருவர். அவசர அவசரமாகக் கடைக்குள் நுழைந்த நாய் ஒன்று, ஒரு கூடையைக் கவ்வியபடி கொண்டு வந்து கடையின் உரிமையாளர் முன் வைத்து வாலாட்டியது. திகைத்து போன கடைக்காரர் கூடைக்குள் கிடந்த சீட்டை எடுத்துப்படித்தார். அதில் குறித்த பொருட்களைக் கடையில் இருந்து எடுத்து கூடையில் போட்டார். உடனே அறிவுள்ள அந்த நாய் கூடையின் வெளிப்பகுதி ஜிப்பைத் திறந்து பணத்தை எடுத்து கடைக்காரரிடம் நீட்டியது. திகைத்துப் போன கடைக்காரர் பாக்கி சில்லறையை நீட்டியதும் கூடையின் மறுபக்க ஜிப்பைத் திறந்து அதில் போடும்படி நாய் ஜாடை காட்டியது. பிறகு நன்றியுடன் வாலை ஆட்டியபடி வெளியேறியது. அதிக Curiosity (தேடல் ஆர்வம்) காரணமாக இந்த நாய் யாருடையது என்று கண்டறிய விரும்பிய கடைக்காரர் கடையைப் பூட்டிவிட்டு நாயைப் பின் தொடர்ந்தார். பஸ்டாண்டில் நின்ற நாய் சரியாக ஒரு பஸ்ஸில் ஏறி கண்டக்டரிடம் டிக்கட்டும் வாங்கிக் கொண்டது. இறங்க வேண்டிய இடத்தில் டிரைவர் பக்கம் போய் வாலை ஆட்ட, பஸ்ûஸ நிறுத்தினார். டிரைவர், கடைக்காரர் மயங்கி விழாத குறைதான். நாயுடன் இறங்கி அதன் வீடு வரை பின் தொடர்ந்தார். 
சிக்னல் பார்த்து, சாலையைக் கடந்து, வீட்டுமுன் சென்று மரியாதையுடன் நாய் காலிங் பெல்லை அழுத்தியதும் வீட்டுக்காரன் வந்து கதவைத் திறந்தார். எரிச்சலுடன் நாயிடமிருந்து கூடையைப் பறித்துக் கொண்டு, ஓங்கி அதன் தலைமேல் இரண்டு குட்டு வைத்தார். பதறிப் போன கடைக்காரர்,"இவ்வளவு புத்திசாலியான நாயை ஏன் அடிக்கிறீர்கள்?'' என்று கேட்டதும் வீட்டுக்காரர் கோபமாக, ""முட்டாள் நாய்.. எத்தனை முறை சொன்னாலும் இதற்கு உரைப்பதே இல்லை. போகும் போதே வீட்டு சாவியை எடுத்துப்போ... வந்து என்னைத் தொந்தரவு செய்யாமல் கதவைத் திறந்து கொண்டு வா என்று பலமுறை சொல்லி இருக்கிறேன். மண்டையில் ஏறுவதே இல்லை. நேரம் கெட்ட நேரத்தில் காலிங் பெல்லை அடித்து கழுத்தை அறுக்கிறது'' என்றபடி கதவை அறைந்து சாத்திக் கொண்டார். இதுதான் உலகம். நீங்கள் யாருக்கு என்ன உதவி செய்தாலும் நிறைவே கிடையாது; நன்றியே கிடையாது. உதவி செய்வதோடு நம்பணி முடிந்து விடுகிறது. அதற்கான அங்கீகாரத்திற்கு ஏங்கக் கூடாது. குறைந்த பட்சம் நாம் செய்த உதவியை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூட எதிர்பார்க்கக் கூடாது.
நம்முடைய சுக துக்கங்களின் கேந்திரமாகப் பிறரை நாம் ஆக்கிக் கொண்டு விடுவதன் மூலம், நிம்மதியற்ற ஒரு வாழ்வு வாழ வேண்டி இருக்கிறது. பிறரைச் சார்ந்தே நாம் இன்பம் அடைகிறோம். அல்லது துன்பம் அடைகிறோம். மெல்ல பிறருக்கு அஞ்சுகிறோம். அல்லது அடிமையாகிறோம். சுதந்திரம் இழக்கிறோம். பிறரால் ஆட்டி வைக்கப்படுகிறோம். 
பிறரால் பாதிக்கப்படாத சுதந்திர உணர்வுதான் இளையதலைமுறையைச் சரியாக வடிவமைக்கும் என்று கருதுகிறேன். இன்று பல இளைஞர்கள் பல கட்சிகளில் தீவிரமான தொண்டர்களாக உலா வருவதை நான் பார்க்கிறேன். ஒரு தலைவன் எங்கு போனாலும் அவன் முன்னும் பின்னும் காரில் பிதுங்கி வழிந்தபடி தெருவில் கூச்சல் போட்டுக் கொண்டு போகும் ஏமாளிகளை மந்தை மந்தையாகப் பார்க்கிற போது என் மனம் வேதனைப்படுகிறது. இந்த இளைஞர்கள் சுயவிழிப்புப் பெறாமல் அடிமைகளாகிறார்கள் என்று நான் அஞ்சுகிறேன். இன்று எந்த அரசியல் கட்சியிலாவது தலைமையைக் கண்டிக்க முடியுமா? கருத்துச் சுதந்திரம் எந்த இயக்கத்திலாவது அனுமதிக்கப்படுகிறதா? தலைமைக்கு விசுவாசம் என்ற அராஜக அடிமைத்தனம் கட்சிகளில், இயக்கங்களில் காலுன்றி விட்டது.
இளைஞர்கள் இதை நிராகரிக்க வேண்டும். தனிநபர்களைக் கொண்டாடும் மூடத்தனத்தை நிறுத்திவிட்டு சரியான கருத்தை ஏற்றல், பிழையான கருத்தை நிராகரித்தல் என்கிற சுதந்திர உணர்வுடன் வாழவேண்டும். நபர்கள் வருவார்கள்... போவார்கள்... கருத்துகள் தான் நிரந்தரம். தலைவனைவிட தத்துவமே தலைமையானது என்கிற சொந்த ஒளி உள்ளவனாக இளைஞர் வாழவேண்டும். எல்லா மதங்களில் இருந்தும் நல்ல விஷயங்களை உள்வாங்க வேண்டும். தன் மதப்புத்தகத்தில் உள்ள தவறுகளைத் தவறு என்று சொல்லும் தைரியம் வேண்டும். 
மொழி வெறி, இனவெறி, மதவெறி, யாவுமே பிழை என்ற தெளிவு இன்றைய அவசரத் தேவை. மிகைபட புகழ்தல், மிகைபட இகழ்தல் ஒரு வகை மனநோய் என்று புரிந்து கொள்ள வேண்டும். முன்னோரை மதித்தல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அவர்களது தவறுகளை. அறியாமைமிக்க செயல்முறைகளை அடையாளம் கண்டு உறுதியுடன் விலகி நிற்றல். சத்தியத்தைக் காக்க இராமன் காடும் போகும் போது, குலகுரு வசிட்டரே பாசத்தால் தடுமாறி, " நீ போகாதே.. குரு சொல்கிறேன்'' என்றதும், "நீங்களா இப்படிப் பேசுவது?'' என்று கண்டித்தபடி இராமன் குருவை மீறியதும் இராமாயணத்தில் தான் இருக்கிறது என்பது பல மதவாதிகளுக்குப் புரியாமல் போனது எனக்கு வேதனை தருகிறது. பழையனவற்றை மதிக்க வேண்டியது மட்டும் நம் வேலை அல்ல.. புதியனவற்றைத் தோற்றுவிப்பதும் நம்பணி தான் என்று சுதந்திர இளைஞன் உணர வேண்டும். மகாகவி பாரதி கேட்கிறார்: " எவ்வளவு காலம்தான் காலத்தின் பின்னாலேயே போவது? நமக்குப் பின்னாலேயே வந்து கொண்டிருக்கிற காலத்திற்குக் கதவு திறந்து வைக்கிற வேலையை யார் செய்வது?''
எவ்வளவு அறிவுபூர்வமான கேள்வி இது?
(தொடரும்)


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/25/w600X390/im4.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/25/பிறரால்-பாதிக்கப்படாதேசுகி-சிவம்-3007592.html
3007590 வார இதழ்கள் இளைஞர்மணி மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பயிற்சிகள்! DIN DIN Tuesday, September 25, 2018 10:13 AM +0530 எந்தத் துறையாக இருந்தாலும் அதில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் இவை மூன்றும் கூட்டாகவோ அல்லது தனித் தனியாகவோ முக்கியத்துவம் பெற்றிருக்கும். இதில் ஏதேனும் ஒரு பயிற்சி பெற்றிருந்தாலும், மூன்று பயிற்சிகளும் பெற்றிருந்தாலும் அந்த பயிற்சி பெற்றவருக்கு நல்ல வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
இந்த பயிற்சி பெற்றவர்களுக்கு தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு கிடைக்கும். ஒப்பந்த அடிப்படையில் இந்த வேலைகளைச் செய்து வருவாய் ஈட்டலாம். 
இவை தவிர, ஹீட்டிங், வென்டிலேஷன், ஏர் கண்டிஷனிங், பையர் ஃபைட்டிங் அன்ட் பிளம்பிங், எலக்ட்ரிக்கல் டிசைனிங் ஆகியவை சிறப்புப் பயிற்சிப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 
இத்தகைய பயிற்சிகளை வழங்கும் நிறுவனங்கள் :
http://theaceindia.com/about-us
http://unique-tec.com/
http://www.mepcentre.com
https://www.capsacademy.com/
http://www.jseacademy.com
- எம்.அருண்குமார்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/25/w600X390/im3.JPG http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/25/மெக்கானிக்கல்-எலக்ட்ரிக்கல்-பிளம்பிங்-பயிற்சிகள்-3007590.html
3007589 வார இதழ்கள் இளைஞர்மணி வேலை...வேலை...வேலை... DIN DIN Tuesday, September 25, 2018 10:12 AM +0530 விஜயா வங்கியில் வேலை
பதவி: Probationary Assistant Manager (Credit)
காலியிடங்கள்: 330
வயதுவரம்பு: 21 வயதிலிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்று நிதியியல் துறையில் எம்பிஏ, முதுகலைப் பட்டயம் பெற்றிருக்க வேண்டும் அல்லது வணிகவியல், பொருளாதாரம், அறிவியல், சட்டம் போன்ற துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Chartered Accountant, ICWA, Company Secretary தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.vijayabank.com என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.vijayabank.com/images/fckimg/file/HRD/PAM/English%20Detailed%20Advertisement_PAM_330%20vacancies_Final.pdf என்ற வலைதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளுங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.09.2018

தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் வேலை
பதவி: Office Assistants - 5
வயதுவரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். 
பதவி: Assistant - 1
பதவி: Junior Assistant cum Computer Operators - 6
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்று கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 
பதவி: Drivers - 3 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று முதல் உதவி சிகிச்சை சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும் 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிள் பிரிவினருக்கு ரூ.250. இதனை The Registrar, Tamil Nadu Teachers Education University என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnteu.ac.in என்ற வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து அதனுடன் இரு பரிந்துரை கடிதங்கள், டி.டி இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Registrar i/c, Tamil Nadu Teachers Education University, Chennai - 97
மேலும் விவரங்கள் அறிய http://www.tnteu.ac.in/admin/file_storage/cms/2382228.pdf லிங்கில் சென்று தெரிந்துகொள்ளுங்கள்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 27.09.2018

தமிழ்நாடு காவல் துறையில் வேலை
பதவி: உதவி ஆய்வாளர் (கைரேகை)
காலியிடங்கள்: 202 (இதில் 30 சதவீத பணியிடங்கள் பெண்களுக்கும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது)
வயதுவரம்பு: 01.07.2018 அன்று 20 வயது 
நிறைந்தவராகவும் 28 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். 
தகுதி: 10+2+3 என்ற அடிப்படையில் அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500 தேர்வுக் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, வாய்மொழித்தேர்வு மற்றும் உடற்கூறு தேர்வு மற்றும் அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: www.tnusrbonline.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: http://www.tnusrbonline.org/SI_Fingerprint_Notification.pdf என்ற வலைதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளுங்கள். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.9.2018 

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி
பயிற்சி: Trade Apprentices (Fitter, Turner, Machinist, Sheet Metal Worker, Electrician, Mechanic R & AC.  Motor Mechanic Vehicle, Electronics Mechanic / R & TV,  Copa,  Welder, Plumber, Carpenter, Diesel Mechanic)
மொத்த காலியிடங்கள்: 250
தகுதி: சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். ஏற்கெனவே, தொழில்பழகுநர் பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
வயதுவரம்பு: 01.10.2018 தேதியின்படி 14 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.apprenticeship.gov.in என்ற வலைதளத்தில் பதிவு செய்த பின்பு www.ecil.co.in என்ற வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
முகவரி: Deputy General Manager (CLDC), Nalanda Complex, Near TIFR Building, ECIL-Post, Hyderabad - 500 062. Telengana.
மேலும் விவரங்கள் அறிய: https://drive.google.com/file/d/1pn0wJGU0Xn0pK6RABcessmqzVODSNqAa/view என்ற வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 28.09.2018

மத்திய அரசில் வேலை
பதவி: Phase-VI Selection Posts   (Junior Physiotherapist, Junior Engineer, Scientific Assistant M&E, Junior Seed Analyst, Fertilizer Inspector,  Accountant , Planning Assistant, Technical Assistant (Economics), Assistant (Printing), Senior Translator...)
காலியிடங்கள்: 1136
வயதுவரம்பு: 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10, பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள், ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனளிகள் மற்றும் பெண்கள், முன்னாள் ராணுவத்தி
னர்களுக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
விண்ணப்பிக்கும் முறை: www.ssc.nic.in என்ற வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://govtjobsdrive.in/wp-content/uploads/2018/09/Click-Here-for-SSC-JE-Canteen-Attendant-Syllabus-PDF-Download.pdf என்ற வலைதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளுங்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.09.2018
தொகுப்பு: இரா.வெங்கடேசன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/25/w600X390/VELAI.JPG http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/25/வேலைவேலைவேலை-3007589.html
3007581 வார இதழ்கள் இளைஞர்மணி சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 13 - தா.நெடுஞ்செழியன் Tuesday, September 25, 2018 10:00 AM +0530 உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் கொல்கத்தாவைச் சேர்ந்த லிவர் பவுண்டேஷன் என்ற ஹெல்த் நிறுவனத்துக்கு ஏறத்தாழ 2 மில்லியன் டாலரை நன்கொடையாக அளித்திருக்கிறார்கள். இது நமது இந்திய ரூபாய் மதிப்பில் 14.5 கோடியாகும். கல்லீரல் நோய்களின் பாதிப்பு நமது நாட்டில் அதிகமாக உள்ளது. சாதாரண மனிதனுக்கு கல்லீரல் செயலிழக்கும்போது, அதைக் குணப்படுத்துவற்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அந்த மருத்துவச் செலவு காரணமாக அந்தக் குடும்பமே வீழ்ந்துவிடுகிறது. 
இந்தநிலையில் அந்த ஏழைக் குடும்பங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக லிவர் பவுண்டேஷன் பல செயல்களைச் செய்து வருகிறது. கல்லீரல் சார்ந்த நோய்கள் எவை எவை? பொது சுகாதார சீர்கேட்டினால் எப்படி கல்லீரல் நோய் வருகிறது? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்கிறது. உதாரணமாக, தூய்மையான நல்ல குடிநீரைக் குடிக்கவில்லையென்றாலும் கல்லீரல் பாதிக்கப்பட்டுவிடும். உணவுப் பொருள்களில் கிருமி இருந்து அதைச் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வந்து பின்னர் கல்லீரல் பாதிக்கப்படும். பலருக்கும் தெரியாத இவை போன்ற உண்மைகளை மக்களுக்கு எடுத்துக் கூறி கல்லீரல் நோய் வராமல் தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இந்த நிறுவனம் பங்காற்றி வருகிறது. இவர்கள் கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்காகப் பணியாற்றி வருகிறார்கள். கல்லீரல் நோய்களைப் பற்றிய புரிதலை மக்களிடம் ஏற்படுத்துவதுடன், உலக அளவில் வளர்ந்துவரும் மருத்துவ தொழில்நுட்பங்கள் இந்த ஏழை மக்களுக்குக் கிடைக்கும் வகையில் மருத்துவ சேவைகளையும் செய்கிறார்கள். குறைந்த செலவில் மருத்துவம் செய்து, பல உயிர்களைக் காப்பாற்றுகிறார்கள். இந்த நிறுவனத்தின் உலக அளவில் உள்ள ஆலோசனைக் குழுவுக்குத் தலைமை வகிப்பவர் அமர்த்தியா சென். ஒரு தனிப்பட்ட நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் உதவிகளால் இவ்வாறான அளப்பரிய சேவைகள் நடந்து வருகின்றன.
இதே போன்று, உலகப்புகழ்பெற்ற கோல்டு மேன் சாக்ஸ் (GOLDMAN SACHS) என்ற நிறுவனம் அதன் மொத்த வருமானத்தில் 3 சதவீதத்தை சமூகத்துக்காக நன்கொடையாக அளிக்கிறது. நமது நாட்டில் தேசிய அளவிலான பெண் தொழில்முனைவோருக்கான ஒரு திட்டத்தை 
Women Start-up Programme (WSP) உருவாக்கி அது செயல்படுத்தி வருகிறது. ஆன்லைன் மூலம் 12 ஆயிரம் பெண்களுக்கு 5 வாரங்களில் பெண் தொழில்முனைவோருக்கான பயிற்சிகளை அது அளித்து வருகிறது. ஒவ்வோராண்டும் உலக அளவில் பத்தாயிரம் பெண்களுக்கு தொழில்சார்ந்த பயிற்சிகளை நேரடியாக அளித்து வருகிறது. சுயதொழில் செய்வதற்காக கடனும், பயிற்சிகளும் அளித்து வருகிறார்கள். 2004-ஆம் ஆண்டு பெங்களூருவில் தனது முதல் அலுவலகத்தைத் தொடங்கிய கோல்டுமேன் சாக்ஸ் தொடங்கியது. 
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 2015-ஆம் ஆண்டு 135.2 மில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கி ஒரு புதுமையான திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனத்தில் முன்னாள் பணியாற்றிய உயர் அதிகாரி ஒருவரின் துணையுடன் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களை இணைத்து செயல்படும் வகையில் அந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தொழில்நுட்பத் திறன்களை சமூக முன்னேற்றத்துக்குப் பயன்படுத்தும் வகையில் அந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த தன்னார்வ நிறுவனத் தொண்டு நிறுவனங்களுடன் மைக்ரோ சாஃப்ட் பொறியாளர்கள் இணைந்து, சமுதாயத்தில் உள்ள பிரச்னைகள் எவை, அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் எவை? எனக் கண்டறிவார்கள். இதற்கு மைக்ரோ சாஃப்ட் பணியாளர் ஒரு மணி நேரம் செலவழித்தால் அதற்கு 25 டாலர் பணம் கொடுப்பார்கள். அவர்கள் உயர்நிலைப் பள்ளிகளுக்குச் சென்று அங்குள்ள மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் சொல்லித் தருவார்கள். திறமையான மைக்ரோசாஃப்ட் பணியாளர்களின் அறிவாற்றல் அடுத்த தலைமுறைக்கு இவ்வாறு இலவசமாக அளிக்கப்படுகிறது. அந்த மாணவர்களின் கல்விகற்கும் முறை இதனால் மாறிவிடுகிறது. எதிர்காலத்தில் மாணவர்கள் இதுபோன்று சமூக நலனுக்குப் பங்களிக்க இது தூண்டுகிறது. மாணவர்களுடைய தேடலை விரிவு படுத்துகிறது. அவர்களின் உச்சபட்ச இலக்கை மாற்றியமைக்கவும் இது உதவுகிறது. 
இதே போன்று AT&T என்ற உலகப் புகழ்வாய்ந்த டெலிகாம் நிறுவனம், பள்ளி மாணவர்கள் படிப்பில் ஆர்வமில்லாமல், படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடாமல் இருக்க உதவுகிறது. உடாசிட்டி என்ற ஆன்லைன் கல்விநிறுவனத்துடன் இணைந்து மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்துவருகிறது. நானோ டிகிரி என்ற ஆன்லைன் பயிற்சியைக் கொடுத்து வருகிறது. கல்லூரிகளில் பயின்று சரியான வேலை கிடைக்காமல் உள்ளவர்கள், தங்கள் பயின்ற துறை சார்ந்த கூடுதல் படிப்புகளைத் தேர்ந்தெடுத்து ஆன்லைன் மூலம் படிக்கலாம். ஒவ்வொருவரும் அவரவருக்கு வசதிப்பட்ட நேரத்தில் படிக்கலாம். வாரத்துக்கு 10 மணி நேரம் இதற்காகச் செலவழித்தால், 8 மாதங்களில் இந்தப் படிப்பை முடித்துவிடலாம். இந்த நானோ டிகிரி பெறுவதற்கு பல்வேறு துறைசார்ந்த படிப்புகள் சொல்லித் தரப்படுகின்றன. உயர் கல்விக்கு வாய்ப்பில்லாத நிறைய மாணவர்கள் இலவசமாக கல்வி பெறுவதற்கு இது உதவி வருகிறது. 
"டார்கெட்' என்ற நிறுவனமானது யுனிசெஃபுடன் சேர்ந்து குழந்தைகளுக்கு கிட் பவர் ஆப் உடன் இணைந்த உடல் தகுதியறியும் கைகளில் அணியும் வளையத்தை (Kid Power program revolves around the wearable fitness tracker) உருவாக்கியுள்ளது. இந்த கைகளில் அணியும் ஆக்டிவிட்டி பிரேஸ்லெட் செல்பேசி செயலிகளுடனும் இணைப்பைக் கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கு இந்த பிரேஸ்லெட்டைக் கையில் கட்டிவிட்டால் ஒரு நாளில் நடப்பதற்கோ, ஓடுவதற்கோ எவ்வளவு அடிகள் அவர்கள் எடுத்து வைத்திருக்கிறார்கள்? எவ்வளவு தூரம் நடந்திருக்கிறார்கள்? ஓடியிருக்கிறார்கள்? என்பன போன்ற தகவல்களையெல்லாம் காண்பிக்கும். இது மாணவர்களிடையே உடல் நலம் காக்க வேண்டியதன் ஆர்வத்தைத் தூண்டுவதற்குப் பயன்படுகிறது. பிற மாணவர்களின் உடல் செயல்பாட்டைத் தெரிந்து கொண்டு அதைவிட சிறப்பாக, அதிகமாக தான் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தை இது உருவாக்குகிறது. இந்த பிரேஸ்லெட் தரும் தகவல்களை வைத்து ஒரு நாளில் தான் எவ்வளவு கலோரியை எரிக்கிறோம் என்பதை பள்ளிக் குழந்தைகள் தெரிந்து கொள்கிறார்கள். இதன் அடிப்படையில் குழந்தைகள் தமது உடல்நலத்துக்குத் தேவையான அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த பிரேஸ்லெட் உதவுகிறது. மாணவர்களின் உடல் நலம் பற்றிய தகவல்களைத் தரும் இந்த பிரேஸ்லெட்களுக்காக, அமெரிக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இதற்காக 1 பில்லியன் டாலர் கொடுத்து வருகிறது. 
Morgan Stanley என்ற நிறுவனமானது ஃபீடிங் அமெரிக்கா என்ற தன்னார்வ நிறுவனத்துடன் சேர்ந்து அமெரிக்காவில் பசி நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. உலகின் பணக்கார நாடாகக் கருதப்படும் அமெரிக்காவின் மக்கள் தொகையில் 8 இல் 1 பங்கு பேர் பசியால் வாடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. செய்து கொண்டிருக்கும் வேலை இல்லாமல் போவது, உடல்நலமிழந்து மருத்துவத்துக்காக நிறையச் செலவு செய்துவிட்டு வறுமையில் வாடுவதே இதற்குக் காரணம். 
அமெரிக்க குழந்தைகள் பசியால் வாடாமல் இருக்கவும், நல்ல சத்துணவை அவர்கள் பெறவும் இந்த Morgan Stanley நிறுவனம் உதவுகிறது. இதற்காக 6000 மோர்கான் ஸ்டேன்லி பணியாளர்கள் தன்னார்வத்துடன் பணியாற்றுகின்றனர். பசியை ஒழிப்பதற்காக ஆங்காங்கே புட் பேங்க் அமைக்கிறார்கள். இதற்காக ஆண்டுக்கு 2 மில்லியன் டாலர்களை இந்த நிறுவனம் ஒதுக்குகிறது. அமெரிக்காவில் 200 உணவு வங்கிகளை (FOOD BANKS) இந்நிறுவனம் நடத்துகிறது. அங்கே நல்ல சத்துள்ள உணவு ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக விவசாயிகளிடம் இருந்து உணவு தயாரிப்பதற்கான விளை பொருள்களை வாங்குவது, அவற்றை 60 ஆயிரம் மையங்களில் பாதுகாப்பது உட்பட பல பணிகளைச் செய்கிறார்கள். 
இவ்வாறு பல்வேறு துறை சார்ந்த பெரிய நிறுவனங்கள், மக்களின் நலனுக்கான பல்வேறு பணிகளில் எந்த விதமான இலாப நோக்கமுமின்றி உலக அளவில் செயல்படுகின்றார்கள். நமது நாட்டிலும் அவ்வாறு செயல்படும் பெரிய நிறுவனங்கள் உள்ளன.
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: சமூக கல்வி ஆர்வலர் 
ஜ்ஜ்ஜ்.ண்ய்க்ண்ஹஸ்ரீர்ப்ப்ங்ஞ்ங்ச்ண்ய்க்ங்ழ்.ர்ழ்ஞ்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/25/w600X390/im1.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/25/சரியான-பார்வை-சரியான-வழி-சரியான-செயல்-13---தாநெடுஞ்செழியன்-3007581.html
3007587 வார இதழ்கள் இளைஞர்மணி இணைய வெளியினிலே... DIN DIN Tuesday, September 25, 2018 10:00 AM +0530 முக நூலிலிருந்து....
• நான் தோற்றால்...
உன்னாலும்,
நீ தோற்றால்...
என்னாலும்,
தாள முடியாதபோது...
விவாதங்கள் என்பது
வீண்தானே நம்மிடையே?
- ரதிராஜ்

• குழந்தைகள் விளையாடுவதை 
அவர்கள் அறியாமல்
கவனியுங்கள்...
தனியே தியானம் செய்யத் தேவையில்லை!
- நேசமிகு ராஜகுமாரன்

• உனக்கு கவிதைகள் 
எழுத வராதென்பது
எனக்குத் தெரியும்...
காலையில் கோலங்களாக 
வீட்டு வாசலில்
வரைந்து விடுவாய்.
- ராம் பெரியசாமி

• தானா போய் ஒக்காந்துக்கிட்டு...
ஒரு ரெண்டாவதும்..
ரெண்டு ஒன்னாவதும் 
கணக்கு போடுதுக!
ரெண்டாவது... டீச்சராயிட்டாக... 
ஒன்னாவதுக்கு... கூட்டல் போலருக்கு!
ரொம்ப பெரிய கணக்கா 
இருக்கும்னு நினைக்கிறேன்!
ஏன்னா? 
தன் கை, கால் பத்தாம....
பக்கத்தில இருக்கவனையும் 
விரல் நீட்டச் சொல்லி
எண்ணியாவுது...!
- வனநீலி

• மறதி மட்டுமா நோய்? நினைவும் தான்.
- சித்திரவீதிக்காரன்

சுட்டுரையிலிருந்து...
• சிரித்தால் பதிலுக்கு சிரிக்கும்
காலம் போய்... 
இவன் ஏன் 
என்னைப் பார்த்துச் சிரித்தான்? என்ற சந்தேகப்பார்வை
பார்க்கும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
- கெளரிசங்கர்

• பெரும்பாலும்
அப்பா நமக்காக வாங்கி வரும்
ஒவ்வொரு பொருளும்,
அவர் காலத்தில் 
அவருக்கு அது கிடைக்கப்
பெறாதவையாகவே
இருந்திருக்கும்.
- நிலா ரசிகன்

• பாத்ரூம்ல பாடும்போது 
குரல் நல்லாதான் இருக்கு. 
அதையே ரிக்கார்ட் பண்ணி கேட்டா 
கண்றாவியா இருக்கு. 
கண்ணாடில பாத்தா மூஞ்சி 
நல்லாத்தான் இருக்கு. 
அதையே செல்ஃபி எடுத்து பார்த்தா... 
பயங்கரமா இருக்கு. 
என்ன technology யோ...? 
போங்கப்பா. 
- வனிதா

"தினமும் ஏன் இந்த ஓட்டம்?' 
என்று சலிப்புடன் கடிகாரம் பார்த்தேன்...
அது என்னிடம் கேட்டது: 
"நான் ஓடா விட்டால் என்ன செய்வாய்?'' 
"தூக்கி எறிந்து விடுவேன்'' என்றேன் நான்...
அதற்கு அது கூறியது: "நீயும் ஓடா விட்டால் இந்த உலகம் உன்னை தூக்கி எறிந்து விடும்'' இதுதான் வாழ்க்கை
- குட்டிம்மா

வலைதளத்திலிருந்து...
முகநூல் எப்படிப்பட்டதாக இருக்கிறது? யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம். எல்லாருமே எழுதலாம். சுய பெருமைகளை, அக்கப்போர்களை எழுதலாம். யாரை வேண்டுமானாலும் உயர்த்தியோ, தாழ்த்தியோ பேசலாம். கேள்விமுறை கிடையாது. பிறந்தது, வளர்ந்தது, திருமணமானது, குழந்தைகள் இருப்பது, விவாகரத்து ஆனது, குடும்பச் சண்டைகள், மகிழ்ச்சிகள், மனக்கசப்புகள் என்று எல்லாமும் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. குடும்பத்தினருடைய எல்லா நிழற் படங்களும் நிரப்பப்பட்டுள்ளன. பிறந்த நாள், கல்யாண நாள், நிழற்படங்கள், வாழ்த்துக்கள் எல்லாம் பார்க்கக் கிடைக்கின்றன. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம்; பயன்படுத்திக் கொள்ளலாம். எது அசிங்கம் என்று தெரியாத விடலைப் பருவத்து செயல்கள் என்று இவற்றைச் சொல்ல முடியாது. ஓயாமல் பொய்களை, கட்டுக்கதைகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். பொய்களும் கட்டுக் கதைகளும்தான் இப்போது மனித வாழ்க்கைக்கு உயிர்ப்பைத் தருகின்றன. வலைதளங்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை? 
அரசியல்வாதிகளை மட்டுமே விளம்பரப் பிரியர்கள், விதவிதமாக போட்டோ போட்டு போஸ்டர் அடித்துக் கொள்கிறவர்கள் என்று யாரும் குற்றம் சாட்ட முடியாது. காரணம் முகநூலில், ப்ளாக்கில், வெப் சைட்டில் ஒவ்வொருவரும் போட்டு வைத்திருக்கிற நிழற்படங்களைப் பார்க்கும்போது வியப்பாக மட்டும் அல்ல, அரசியல்வாதிகள் தோற்றுப்போவார்கள் என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
http://rafifeathers.blogspot.com


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/25/w600X390/im2.JPG http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/25/இணைய-வெளியினிலே-3007587.html
3002833 வார இதழ்கள் இளைஞர்மணி காற்றில் இயங்கும் கார்! - அ.சர்ஃப்ராஸ் DIN Tuesday, September 18, 2018 09:52 AM +0530 தற்போது பலரின்  மனதில் இருக்கும் ஒரே கேள்வி,  எப்போது பெட்ரோல், டீசல் விலை பழைய நிலைக்குத் திரும்பும் என்பதுதான். அந்த அளவுக்கு வாகனப் பயன்பாட்டுக்கு நாம் அடிமையாகிவிட்டோம். பெட்ரோலிய பொருள்கள் இல்லை என்றால் துரும்பும்  நகராது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எரிவாயு, மின்சாரம் ஆகியவற்றில் வாகனங்கள் இயக்கப்பட்டாலும், பெட்ரோல், டீசலின்  தேவையும், விலையும்,  அதனால் சுற்றுச்சூழல் மாசும் அதிகரித்து கொண்டேதான் இருக்கின்றது.  தற்போதுதான் மின்சாரத்தில் இயங்கும் கார்களை அறிமுகப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. 

விஞ்ஞான   வளர்ச்சி அதிகரித்து வரும் காலத்தில் பெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்கவே முடியாதா என சாமானியன் முதல் சாதனை படைத்தவர்கள் வரை யோசித்துக் கொண்டேதான் இருக்கின்றனர்.

இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண அமெரிக்காவைச் சேர்ந்த "ஏர்பாட்' என்ற நிறுவனம் காற்றில் செல்லக்கூடிய காரைத் தயாரிக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.

பலுனில் காற்றை அடைத்து ஊசியால் உடைத்தால் எப்படி காற்று வேகமாக வெளியேறுகிறதோ, அதேபோல் உயர்அழுத்த காற்றை அடைத்து அதை வெளியேற்றி அதன் மூலம் கிடைக்கும் சக்தியைப் பயன்படுத்தி இந்தக் கார் இயக்கப்படுகிறது.

காற்றை  உயர் அழுத்த நிலையில் இந்த  ஏர்பாட் கார்களுக்கு நிரப்பினால் போதும், மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் செல்லும். ஒரு முறை காற்றை நிரப்பினால் 160 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம். இந்தக் கார்களுக்கு தனியாக ஏ.சி. தேவையில்லை. ஏனென்றால், உயர் அழுத்த காற்றின் மூலம் கார்களில் தானாக குளிச்சி ஏற்படும்.

ஏர்பாட் கார்களின் விலை சுமார் ரூ.7 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் காற்றில் இயங்கும் கார்களை அறிமுகப்படுத்த இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/18/w600X390/im12.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/18/காற்றில்-இயங்கும்-கார்-3002833.html
3002832 வார இதழ்கள் இளைஞர்மணி சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! - 12  - தா.நெடுஞ்செழியன் DIN Tuesday, September 18, 2018 09:51 AM +0530 மக்கள் தொகை அதிகமாக உள்ள இந்தியா போன்ற நாடுகளில் நாம் சில படிப்புகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறோம்.  சில படிப்புகளுக்கு வாய்ப்புகள் இல்லை என்று ஒதுக்கிவிடுகிறோம்.  இதைப் படித்தால் வேலை வாய்ப்புண்டு என்று  சில படிப்புகளை மட்டுமே  தேர்ந்தெடுத்துப் படிக்கிறோம். சில படிப்புகளை நாம் ஒதுக்கிவிடுகிறோம். 

சிலர் மட்டுமே தேர்ந்தெடுத்துப் படிக்கக் கூடிய ஒரு படிப்பு, மனித மூளை தொடர்பான படிப்பு. மனித மூளையைப் பற்றிய படிப்பும், ஆராய்ச்சிகளும் இந்தியாவில் மிகக்குறைந்த கல்வி நிறுவனங்களில்தான் உள்ளன. ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சி மிகுந்து உள்ள இக்காலத்தில் மனித மூளையைப் பற்றிய படிப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பலருக்கும் தெரியாது. 

செயற்கை நுண்ணறிவு (ARTIFICIAL INTELIGENCE), ரோபாட்டிக்ஸ், காக்னிட் நியூரோ சயின்ஸ்  போன்ற துறைகளின்  வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பது மனித மூளையின் செயல்பாடுதான். மனித மூளை எவ்வாறு செயல்படுகிறது? அதன் செயல்படும்முறையை அடிப்படையாகக் கொண்டு அதை வெவ்வேறு துறைகளில் எவ்வாறு பயன்படுத்துவது? என்பது குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு, மனித மூளையைப் பற்றிய ஆராய்ச்சிகள்  அவசியம். இந்த ஆராய்ச்சி பலதுறைகளின் வளர்ச்சிக்குத் தொடக்கப் புள்ளியாக இருக்கும். 

அது இப்போது உள்ள ரோபாட்டிக் தயாரிப்பாக இருக்கலாம்;  ரோபாட்டிக் சர்ஜரி, கன்ஸ்யூமர் ரோபாட்டிக்ஸ், விர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற துறைகளாக இருக்கலாம். மனிதமூளை எவ்வாறு சிந்தித்துச் செயல்படுகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு,  அந்த அடிப்படையில்  இந்த துறைகள் சார்ந்த அறிவை,  கருவிகளை மேம்படுத்த முடியும். மாற்றி அமைக்க முடியும். இதற்கு மனித மூளையைப் பற்றி விரிவாக  ஆராய்ச்சி செய்து பல உண்மைகளைக் கண்டறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் ஆக்கப்பூர்வமான பல மாற்றங்களை இத்துறைகளில் ஏற்படுத்த முடியும். 

ஆனால் இதற்கான ஆராய்ச்சி கல்விக்கூடங்கள்  மிகக் குறைவாக இருப்பதால் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான கிரிஷ்கோபாலகிருஷ்ணன், அவர் வாழ்நாள் முழுவதும்  சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியான  ரூ.225 கோடியை  "சென்டர் ஃபார் பிரெய்ன் ரிசர்ச்'  ஒன்றை அமைப்பதற்கு பெங்களூருவில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்க்கு நன்கொடையாக  அளித்தார்.  அவரும் அவருடைய மனைவியும் சேர்ந்து அமைத்த பிரக்திக்ஷா ட்ரஸ்ட் என்ற அறக்கட்டளை வாயிலாக  இந்த நன்கொடையை  அளித்தார். 

கிரிஷ்கோபாலகிருஷ்ணன் திருவனந்தபுரத்தில் பிறந்தவர்.  ஐஐடி சென்னையில் படித்தவர்.  எம்.எஸ்ஸி  பிஸிக்ஸ், எம்.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்தவர்.    இந்த நூற்றாண்டில் அதிக நன்கொடை அளித்த தனிநபர் அவராகத்தான் இருக்க முடியும். 

நாட்டில் பல கல்விநிறுவனங்கள் இருக்கும்போது  இந்த ஐஐஎஸ்சி - பெங்களூருவுக்கு ஏன் கிரிஷ்கோபாலகிருஷ்ணன் நன்கொடை அளிக்க வே ண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள ஐஐஎஸ்சி - பெங்களுருவின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். 

ஜம்ஷெட்ஜி டாட்டாவால் உருவாக்கப்பட்டது.    ஜம்ஷெட்ஜி டாட்டாவின் எண்ணத்தின்படி 1909 இல் ஐஐஎஸ்சி - பெங்களூரு (ஐஐநஸ்ரீ- ஆஹய்ஞ்ஹப்ர்ழ்ங்) உருவாக்கப்பட்டது  மைசூர் சமஸ்தானம் இதற்காக 371 ஏக்கர் நிலத்தை  நன்கொடையாக அளித்தது.  

ஜெனரல்  அண்ட் அப்ளைடு  கெமிஸ்ட்ரி, எலக்ட்ரிகல் டெக்னாலஜி ஆகிய இருதுறைகளுடன் தொடங்கப்பட்ட இந்த கல்விநிறுவனம் இன்று Biological Sciences, Chemical Sciences, Electrical Sciences, Interdisciplinary Research, Mechanical Sciences, and Physical and Mathematical Sciences ஆகிய பிரிவுகளைக் கொண்ட 40 துறைகளுக்கும் மேலாக -  உயர்கல்வியில் எண்ணற்ற ஆராய்ச்சிகளில்  ஈடுபடும் அளவுக்கு உயர்ந்துள்ளது.  உலக அளவில் பெயர் பெற்ற கல்விநிறுவனமாக இன்று அது வளர்ந்து நிற்கிறது.  

1933 ஆம் ஆண்டு சர் சி.வி.ராமன் இங்கு  இயக்குநராக பணியாற்றினார். அப்போது இயற்பியல்துறை தொடங்கப்பட்டது. 1935 இல்  சர் சி.வி.ராமன் மேக்ஸ் பார்ன் என்ற புகழ்பெற்ற இயற்பியல் பேராசிரியரைக் கொண்டு குவாண்டம் மெக்கானிக்ஸ் என்ற துறையை நிறுவினார்.  இந்தத் துறையின் வாயிலாக 1954 இல்  மேக்ஸ் பார்ன்   நோபல் பரிசு பெற்றார். 

ஹோமிபாபா  சிறப்பு பேராசிரியராக 1939 இல்  நியமிக்கப்பட்டார்.  அவர் காலத்தில் காஸ்மிக் ரே (அண்டக் கதிர்) சம்பந்தப்பட்ட  ஆராய்ச்சித்துறை நிறுவப்பட்டது.  1939   இல் இருந்து 1942 வரைக்கும் ஹோமிபாபா அண்டக்கதிர்  சம்பந்தமான ஏராளமான ஆராய்ச்சிகளுக்கு அப்போது வித்திட்டார். 

1945 க்குப் பின்னர்  அவர் டாட்டா இன்ஸ்டிடியூட் ஆஃப்  ஃபண்டமென்டல் ரிசர்ச் என்ற  துறையை நிறுவுவதற்காக,   இவருடன் இணைந்து   புகழ்பெற்ற கணித ஆராய்ச்சியாளர் ஹரிஷ் சந்திரா, எஸ்.வி.சந்திரசேகர அய்யா ஆகியோர் செயல்பட்டனர். எஸ்.வி.சந்திரசேகர அய்யா ஐஐஎஸ்சி- பெங்களூருவில் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் கம்யூனிகேஷன் துறைத் தலைவரானார். அப்போது இவருடன் இணைந்து விக்ரம் சாராபாய் பணியாற்றினார். 

பெங்களூருவுக்குச் சென்று  ஐஐஎஸ்சி - பெங்களூரு எங்கே இருக்கிறது? என்று கேட்டால் யாருக்கும் தெரியாது.  ஆனால் டாடா இன்ஸ்டிடியூட்  என்று கேட்டால் எல்லாரும் சொல்வார்கள்.  அந்த அளவுக்குக் கல்விநிறுவனம் உருவாக நன்கொடை அளித்தவர்களை மக்கள் மறக்காமல் இருக்கிறார்கள். 

இப்படிப்பட்ட புகழ்மிக்க கல்விநிறுவனத்துக்குத் தான், கிரிஷ் கோபாலகிருஷ்ணன் நன்கொடை அளித்திருக்கிறார்.  அவர்  கொடுத்த நன்கொடையைக் கொண்டு ஐஐஎஸ்சி - பெங்களூருவில்  சென்டர் ஃபார் நியூரோ சயின்ஸ் என்ற துறையை உருவாக்கியிருக்கிறார்கள். 2014இல் கொடுத்த இந்த நன்கொடையைப் பயன்படுத்தி இந்த ஆராய்ச்சிகளை மேன்மேலும் உலகத் தரத்தில் கொண்டு செல்வதற்காக   நோபல் பரிசு பெற்ற பேராசிரியர்  டார்ஸ்டன் வைசல் என்பவரைத் தலைமை வழிகாட்டியாகக் கொண்டு இந்த நிறுவனம் அமைக்கப்பட்டது. கொலம்பியா பல்கலைக்கழகம், சிகாகோ பல்கலைக்கழகம், வாஷிங்டன் யுனிவர்சிட்டி,  செயின்ட் லூயிஸ், யுனிவர்சிட்டி ஆஃப் ஜெனிவா என வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த உலக அளவில்   சிறந்த ஆராய்ச்சியாளர்கள் இதன் வளர்ச்சியில் முக்கியப் பங்களிக்கின்றனர். 

இந்த ஆராய்ச்சிகளில் மனித மூளை எவ்வாறு முதுமை அடைகிறது? மூளை நரம்புகள் எவ்வாறு  சேதமடைகின்றன?  சஉமதஞ ஈஉஎஉசஉதஅபஐஞச இஞசஈஐபஐஞசந, முதியவர்களுக்கு வரும் டிமென்ஷியா என்ற மறதிநோய் போன்ற நோய்களை எவ்வாறு முதலாவதாகவே கண்டுபிடித்து  சிகிச்சை கொடுத்து,  நோயால் பாதிக்கப்பட்டவர்களுடைய  வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்துவது என்பன போன்ற ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மூளைக்கும் கணினிக்கும் என்ன மாதிரியான உறவு இருக்கிறது?  மூளையின்   செயல்பாடு  எப்படி உள்ளது? என்பது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்கள். இதுதவிர கிளினிகல் ரிசர்ச் செய்கிறார்கள். 50 இலிருந்து 75 வருகை தரும் பேராசிரியர்கள் இங்கே கிளினிகல் ரிசர்ச் பிரிவில் பணிபுரிகிறார்கள். 

நியூரோ சயின்டிஸ்ட், நியூரோ பிசிஸியன்ஸ்,  (சைக்கியாட்டிரிஸ்ட், நியுராலஜிஸ்ட், இன்ஜினியர், கம்ப்யூட்டரைஸ்டு  சயின்டிஸ்ட் இவர்களெல்லாம் இணைந்து  டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்னைகளை எப்படி எல்லாம் குறைக்கலாம், கம்ப்யூட்டர் உதவியுடன் எப்படி இது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம் என்ற நோக்கத்துடன் தன்னாட்சி ஆராய்ச்சி மையமாக  இது   செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

இதுமட்டுமல்லாமல், கிரிஷ் கோபாலகிருஷ்ணன் அவர் படித்த ஐஐடி - மெட்ராஸýக்கு 30 கோடி ரூபாய்  நன்கொடை அளித்தார். அதன் மூலம் 3 ஆராய்ச்சி இருக்கைகள்  உருவாக்கப்பட்டுள்ளன. ஷிகாப் ஸம்மா என்ற பேராசிரியரின் வழிகாட்டுதலின் கீழ் கே.வைத்தியநாதன் இருக்கை உருவாக்கப்பட்டுள்ளது. நியூரோ மார்பிக் கம்ப்யூட்டிங், நியூரோ சிக்னல் புராஸசிங், ஸ்பீச் சிக்னல்ஸ் மூளையில் எப்படி பதிவாகிறது என்பதை எல்லாம் ஆராய்ச்சி செய்து, இவர் உலகப் புகழ்வாய்ந்த ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகத்தில்   பட்டம் பெற்றவர். 

நாராயணமூர்த்தி இருக்கை , புரபஸர் மகாபாலா இருக்கை என்ற இரண்டு இருக்கைகளை உருவாக்கியுள்ளார்கள். இவை இரண்டும் கம்ப்யூட்டேஷனல் ப்ரெய்ன் ரிசர்ச் (computational brain research) செய்வதற்கு உருவாக்கப்பட்டுள்ளது. மனித மூளை தொடர்பான ஆராய்ச்சியில்  இந்தியா அடுத்த இலக்கை நோக்கி நகர்வதற்கு ஏறத்தாழ 300 கோடி ரூபாயை  தனி நபர் ஒருவர்   நன்கொடையாக அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.   இந்திய மாணவர்களை உலக அளவில் தரமிக்கவர்களாக  உருவாக்க இவர் செய்த தொண்டு,  இந்திய கல்வி வரலாற்றில் என்றும் நிலை பெற்றிருக்கும்.  

பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பலர் கல்வி நிறுவனங்களை தங்களுடைய பெயர்களில் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கும் இன்றைய நாளில், ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருக்கிற  உலகப் புகழ் வாய்ந்த கல்விநிறுவனங்களுக்கு நன்கொடை அளித்து ஆராய்ச்சிகளை  கிரிஷ் கோபாலகிருஷ்ணன் ஊக்குவிப்பது பாராட்டத்தக்கது.

(தொடரும்)
கட்டுரையாசிரியர்: சமூக கல்வி ஆர்வலர் 
 http://www.athishaonline.com

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/18/w600X390/im13.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/18/சரியான-பார்வை-சரியான-வழி-சரியான-செயல்---12-3002832.html
3002831 வார இதழ்கள் இளைஞர்மணி இணைய வெளியினிலே... DIN DIN Tuesday, September 18, 2018 09:45 AM +0530 முக நூலிலிருந்து....


புதுசா போன் வாங்குனவனையும்... 
புதுசா சமைக்கிறவனையும்...  
பக்கத்துல வச்சிக்கவே கூடாது. 
சும்மா சும்மா இது நல்லாருக்கான்னு
கேட்டே சாவடிக்கான்.

- வால்டர் வெற்றிவேல்

 

யோசித்து ஒரு செயலைத் தொடங்கும்போது செவிடனாய் மாறிவிடுங்கள்...
ஏனெனில், முதலில்  உற்சாகமான சொற்களை விட, கேலி சொற்கள்தான் 
அதிகம் இருக்கும்.


- அய்யாதுரை சாம்பசிவம்

 

முறைக்கிறவன் 
என்னைய மாதிரி 
உண்மையா இருப்பான்.
சிரிக்கிறவன் 
பொய்யா மட்டும் தான் இருப்பான்...
ப்ளீஸ்... புரிஞ்சிக்கோங்க...

- செல்வா வெங்கட்

 

நீங்க யாரை நம்புறீங்கன்னு கேட்டா...
ஆயிரம் பேரை யோசிச்சு 
அதுல ஒரு பேரைச் 
சொல்றானுகளே தவிர,
நான் என்னை நம்பறேன்னு 
எவனும் சொல்றதில்ல...
முதல்ல 
உங்களை நம்புங்க...
அப்புறம் பாருங்க...

- ஆத்தாடி இவனா

 

குடிக்கிறது நீ... ஆனால் உன் பொண்டாட்டி,
"குடிகார நாயே'ன்னு என்னையும் சேர்த்து திட்டுது.

- சிந்தனை சிற்பி செல்வ.ரமேஷ்


சுட்டுரையிலிருந்து...

ஜன்னலோர இருக்கையில்
யாரையும் அமரவிடாமல்... 
எனக்காக இடம் போட்டு
வைத்திருந்தது மழை.

- யாத்திரி

 

வயலும்
வயல்சார்ந்த இடம்
மருதம் அல்ல...
ப்ளாட்டுகள்.
கடலும்
கடல்சார்ந்த இடம்
நெய்தல் அல்ல...
அமிலக்கழிவுகள். 


- கோமாளி ராஜா

 

தடுமாறினாலும் 
தடம் மாறாமல் 
தற்காத்து கொள்ளுவோம்...
 வாழ்க்கையை.

- யுவராணி  

 

எல்லாரும் ஒருவிதத்தில் 
அன்னப்பறவை தான்...
சிலர் நல்லதை மட்டும் 
பிரித்துப் பார்க்கிறார்கள்!
சிலர் கெட்டதை மட்டும் 
பிரித்துப் பார்க்கிறார்கள்!

- திவாகரன்


வலைதளத்திலிருந்து...

கொடுக்காபுளியங்காவுக்கு கோணப்புளியங்கா, சீனிப்புளியங்கா, கொருக்கா புளி என ஊருக்கு ஒரு பெயர் உண்டு. ஒவ்வொரு ஊரிலும் இன்னும் நிறையபெயர்களால் கொடுக்காபுளி அழைக்கப்படுகிறது. "அண்ணா உங்கூர்ல அப்படியா சொல்வாங்க... எங்கூர்ல சீனிபுளிங்காம்போம்' என்கிற ஆச்சரியத்தை அடிக்கடி சந்திப்பதுண்டு. இந்தியில் இதற்கு பெயர் ஜங்கிள் ஜிலேபியாம்! (பேர் சூப்பரால்ல...) 

கிராமத்தில் வளர்ந்தவர்களோ நகரமோ இன்றைக்கு இருபது ப்ளஸ் வயதான யாருமே தங்களுடைய பள்ளிப்பருவத்தில் ஒருமுறையாவது கொடுக்காப்புளியை ருசிக்காமல் கடந்திருக்க முடியாது. என்னுடைய பள்ளிக்காலங்கள் முழுக்க இலவசமாக கிடைத்த ஒரே தின்பண்டம் இதுதான். ஊருக்குள் எங்கு பார்த்தாலும் கொடுக்காப்புளி மரங்கள் நிறைந்திருக்கும். ஒரு நாளும் அதை காசுகொடுத்து வாங்கித் தின்றதில்லை.

கொடுக்காப்புளியை காய்களாக இருக்கும்போதே பார்த்து வைத்து அது பழுக்கும் வரை காத்திருந்து பறித்து தின்றால், நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அதற்கெல்லாம் அவகாசம் இருக்காது. ஏரியாவில் கொடுக்காப்புளி பறிக்கவே நிறைய புளியங்கா கேங்ஸ் இருக்கும். அதில் ஒன்று நமக்கு முன்பே போய் காயாக இருந்தாலும் பறித்துவிடும். அதனால் கண்களில் சிக்கியதை பிஞ்சோ, காயோ, பழமோ அப்போதே பறித்து அப்போதே தின்றுவிடுவது நல்லது என்பது எங்கள் கேங்ஸின் எழுதப்படாத விதி. 

சிகப்பும் பச்சையுமாக சிலது அதிகமாக பழுத்தும் சிலது பச்சைபசேலென காயாகவும் இருக்கும். இதைப் பறிக்கவே ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு நீண்ட கழியும் அதன் உச்சியில் ஒரு கொடுக்குமாக வைத்திருப்பார்கள். அதனால்தான் கொடுக்கா புளி என்று பெயர் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு பயனும் தராத தானாக வளரக் கூடிய இவ்வகை மரங்களை யாரும் வெட்டுவதில்லை.

http://www.athishaonline.com

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/18/w600X390/im11.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/18/இணைய-வெளியினிலே-3002831.html
3002724 வார இதழ்கள் இளைஞர்மணி தன்னிலை உயர்த்து! - 10: நன்றி... ஓர் அழகான வீரம்! ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ். DIN Tuesday, September 18, 2018 08:57 AM +0530 ஒரு மன்னர் பத்து வெறி  நாய்களை வளர்த்து வந்தார். அவரது அமைச்சர்கள் யாராவது தவறு செய்தால் அந்நாய்களால் அவர்களைக் கடிக்கச் செய்து கொடுமைப்படுத்துவார். ஒருநாள் அரசவையில் அமைச்சர் ஒருவர் வெளிப்படுத்திய கருத்தினை மன்னரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மன்னருக்கு கடும் கோபம் ஏற்பட்டது. காவலாளியை அழைத்து, "'இவரை நாய்களுக்கு இரையாக்கு'' என்று கட்டளையிட்டார். ""மன்னரே! நான் தங்களிடம் பத்து வருடம் பணி செய்துள்ளேன்; என்னை ஒருமுறை மன்னித்து விடுங்கள்'' என்று வேண்டினார். மன்னர் மனம் இரங்கவில்லை. ""அப்படியானால், இத்தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன், பத்து நாட்கள் அவகாசம் வேண்டும்'' என்றார் அமைச்சர். மன்னரும் சம்மதித்தார்.

அமைச்சர் நாய்களின் காப்பாளரிடம் சென்று, அடுத்த பத்து நாட்களுக்கு அவரே நாய்களுக்கு உணவு அளிக்க விரும்புவதாகக் கூறினார். காப்பாளரும் சம்மதித்தார். அமைச்சர் நாய்களுக்கு உணவளித்ததோடு, அவற்றை  நன்கு பராமரித்தார். பத்து நாட்கள் கழிந்தன. அரசரின் ஆணைப்படி, அமைச்சர் நாய்களின் கூண்டுக்குள் இரையாக விடப்பட்டார். நாய்கள் அவரைக் கடித்து குதறுவதற்கு பதிலாக, அவரை அன்பாய் முத்தமிட்டன. மன்னர் ஆச்சரியமடைந்தார். 

அமைச்சர், ""மன்னா! நான் இந்நாய்களுக்காக வெறும் பத்து நாட்கள் மட்டுமே வேலை செய்தேன். அதற்கே ஆழ்ந்த நன்றி உணர்வை அவை வெளிப்படுத்துகின்றன. ஆனால், தங்களுக்கு பத்து வருடங்கள் சேவை செய்த போதிலும், ஒரு சிறு தவறுக்கு பெரிய தண்டனைக் கொடுக்கிறீர்களே?'' என்றார். மன்னர் தனது தவறை உணர்ந்து, அமைச்சரை விடுதலை செய்தார். நிறைகளைப் பார்க்கத் தெரியாமல், குறைகளை மட்டுமே பார்த்தால் தண்டிக்கத் தோன்றும். குறைகளைத் கடந்து, நிறைகளை பார்க்கும் போது மட்டும்தான் நன்றி உணர்வு வெளிப்படும். உண்மையில் நன்றி என்பது ஒரு மனப்பான்மை அல்ல, ஒரு செயலும் அல்ல, அது மனதில் இருந்து நிரம்பி வழிகின்ற ஒருவித உணர்வு.


எதிர்பார்த்தது கிடைத்தாலோ அல்லது தனக்குச் சாதகமாக அமைந்தாலோ மட்டுமே அன்பை வெளிப்படுத்துவது நன்றியாகாது. தனக்குக் கிடைக்கின்ற அனைத்திற்கும் நன்றியுடையவனாக இருப்பதுதான் உண்மையான நன்றியுணர்வு. 

ஒரு துறவி, தனது சீடர்களோடு பயணம் செய்தார். அன்றையப் பயணத்தின் முடிவில் தண்ணீரும் கிடைக்கவில்லை, உணவும் கிடைக்கவில்லை, இரவு தங்குவதற்கு ஒரு கிராமமும் தென்படவில்லை. கடைசியில் ஒரு வறண்ட பகுதியிலேயே தங்க நேர்ந்தது. சீடர்கள் அனைவரும் பசியோடும், தாகத்தோடும் மிகுந்த வருத்தத்தோடு உறங்கச் சென்றனர். துறவி மட்டும் எப்போதும்போல் இறைவனுக்கு ஆத்மார்த்தமாக நன்றி கூறினார். கோபத்துடன் எழுந்த ஒரு சீடர், ""குருவே! இன்று கடவுள் நமக்கு ஒரு உதவியும் செய்யவில்லை. துன்பத்தை மட்டுமே தந்தார். அவருக்கு ஏன் நன்றி செலுத்துகிறீர்கள்?'' என்றார். அதற்கு, புன்முறுவலோடு ""இன்று கடவுள் நமக்கு பசியையும், தாகத்தையும், நட்சத்திரங்கள் மின்னும் அழகிய கூடாரத்தையும் நமக்கு பரிசாகத் தந்துள்ளார். இதற்காக நான் நன்றி செலுத்துகிறேன்'' என்றார். இரவுகளின் உறக்கத்தின் முன்னால், இயல்பாய் அமர்ந்து இந்த நாளினைத் தந்திட்ட இயற்கைக்கு நன்றி சொல்லும் மனிதன், அன்பின் அடையாளம். அவர், இயற்கையின் பெரும் பரிசு. பிறப்பிலிருந்து துடிக்கின்ற இதயம் முதல், நம் இறப்பில் துடிக்கின்ற இதயங்களுக்கெல்லாம் நாம் நன்றிக் கடன்பட்டவர்கள்.  

இத்துறவி, ""ஒவ்வொரு நாளின் முடிவில் மிகுந்த விழிப்புணர்வோடு நன்றி செலுத்த வேண்டும். இன்று நம்மால் நிறைய கற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், குறைவாக கற்றுக் கொண்டதற்காக; குறைவாகக் கற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், உடல் நலக்குறைவு ஏற்படாமல் இருந்ததற்காக; உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும் இறந்து போகாமல் இருப்பதற்காக, நாம் அனைவரும் நன்றி செலுத்துவோம்'' என்ற புத்தரின்  வரிகளுக்கு இலக்கணமாகிறார். அப்படியென்றால், வாழ்கின்ற ஒவ்வொரு நிமிடத்திற்கும் நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

தமக்கு கிடைத்ததைவிட, கிடைக்காமலிருப்பதற்காகவும் நன்றி  சொல்கின்ற மனதே உன்னத மனமாகும்.  ஓர் அழகான ஆங்கிலப் பாடல் உண்டு.  

"என்னிடம் இல்லாதவற்றுக்காக நன்றி, அவை தான் என்னைப் முழுமையாக்க ஊக்குவிக்கின்றன.   எனது குறைவான அறிவுக்காக நன்றி. அது தான் என்னைக் கற்றுக்கொள்ள தூண்டுகிறது. எனது கடினமான நேரங்களுக்காக நன்றி. அவை தான் என்னை வலிமையானவனாக மாற்றுகின்றன.  எனது குறைகளுக்காக நன்றி. அவை தான் எனக்கு நிறைவைத் தேடும் தாகத்தைத் தருகின்றன.   எனது பிழைகளுக்கு நன்றி. அவை தான் எனக்கு அனுபவப் பாடத்தை அள்ளித் தருகின்றன.  எனது சோர்வுக்கு நன்றி. அது தான் எனது உழைப்பின் மேன்மையை எனக்கு உணர்த்துகின்றது. எனது சோதனைகளுக்கு நன்றி. அவைதான் சோதனைகளைச் சாதனையாய் மாற்றும் மனநிலையைத் தருகின்றன‘ என்ற அப்பாடல் வரிகளின் ஆழ்ந்த சிந்தனையானது, நன்றியடைய ஒரு மனிதனைச் சோதிப்பவையெல்லாம், அவரைச் சாதிக்க வைக்கும்; சரித்திரம் படைக்க வைக்கும் என்பதை நமக்கு விளக்குகிறது.

வடகரோலினா பல்கலைக் கழக உளவியல் அறிஞர் சாரா அல்கோ. அவர், "கண்டுபிடி,  ஞாபகப்படுத்து,  சேர்' என்ற கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு நன்றியுணர்வை ஆராய்ந்தார். முடிவில், நன்றியுணர்வு புதிய சமூக உறவுகளை உருவாக்கும், உறவினர்கள் உடனான  உறவை மேம்படுத்தும் மற்றும் உறவுகளைப் பராமரித்து பிற்காலத்தில் பயனுடையதாக்கும் என்று கண்டறிந்தார். நன்றியுணர்வு, உறவுகளைப் பலப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் ஆணித்தரமானது. அது மட்டுமல்லாது நன்றியுணர்வு மனதைச் சமநிலைப்படுத்துகிறது, தெளிவாக சிந்திக்கத் தூண்டுகிறது, இன்னல்களை நிதானமாய் அணுக வைக்கிறது, அன்பை வளர்க்கிறது, ஆற்றலைப் பன்மடங்காக்குகிறது. மொத்தத்தில் மனிதனைப் புனிதனாக்குகிறது. 

கி.மு. ஒன்றாம் நூற்றாண்டில் ரோம் நாட்டில் வாழ்ந்த தத்துவஞானி மார்க்கஸ் டுல்லியஸ் சீசரோ, ""நன்றி உணர்வு என்பது உயர்ந்த நற்குணம் மட்டுமல்ல, அது அனைத்து நற்குணங்களுக்கும் பெற்றோர்'' என்றார். மனித உணர்வுகளிலே உயரிய உணர்வு நன்றி உணர்வு. நன்றியினை செலுத்தும்பொழுது அது அன்பாக, பேரின்பமாக, அமைதியின் வடிவமாகப் பரிணமிக்கிறது. 

நன்றி ஓர் அழகிய வார்த்தை.  இதனைப் புன்முறுவலோடு சொல்கின்ற பொழுது மட்டுமே உள்ளம் பூப்பூக்கும். நன்றியைச் சொல்ல மறந்தால், அது மனிதத்தின் குறைபாடு. அளவாய்ச் சொன்னால் அனுசரிக்கப்படுவர். அதிகமாய் நன்றி சொல்பவரது வாழ்க்கை அலங்கரிக்கப்படும்.  

விளையாட்டு மைதானத்தில் காலடி எடுத்து வைக்கின்றபோது மண்ணைத் தொட்டு கும்பிடுவது மரியாதை கலந்த பக்தி. அதே மண்ணில் சதம் அடிக்கும் போது விண்ணைப் பார்த்து மனதால் வணங்கி நிற்பது பக்தி கலந்த நன்றியுணர்வு. தனது வெற்றியை தனது குழுவினருக்கு அர்ப்பணிப்பது நன்றியுணர்வின் உன்னதப் பாங்கு. தினையளவு உதவியையும் நன்றியுணர்வு உள்ளவர்கள் பனைமரம் போல் பெரிதாய்க் காண்பர். அதேபோல், தனது துன்பத்தைப் போக்கியவரை ஏழு பிறப்பிலும் மனதில் வைத்துப் போற்றுவர் என்கிறார் நம் திருவள்ளுவர். அவரே, 

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு 

என்ற வரிகள் மூலம் ஒருவர் செய்த நன்றியினை மறந்தவர்களுக்கு வாழ்வில் விமோச்சனமே இல்லை என்கிறார்.  

நன்றி சொல்வதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன.  அன்பின் செயல்களால் நன்றி சொல்வது, வார்த்தைகளால் நன்றி சொல்வதைவிட மிகவும் வலிமையானது.  ""நன்றி சொல்லாமலிருப்பது  ஒருவருக்கு அழகான ஒரு பரிசுப் பொருளை வாங்கி, அதை அருமையாகப் பெட்டகத்தில் பொதிந்து, அப்படியே வீட்டில் வைத்திருப்பது போன்றது''  என்கிறார் வில்லியம் ஆர்தர்  வேர்ட்.

"சிறு செயல்களுக்கு நன்றி சொல்லத் தெரியாதவர்களால் பெரிய செயல்களிலும் நன்றி சொல்ல முடியாது' என்கிறது எஸ்டோனியன் பழமொழி ஒன்று.  நன்றியைச் சொல்ல இந்த நவீனயுகத்தில் பல வழிகள் உண்டு.   ஒரு குறுஞ்செய்தி, ஒரு சின்ன மின்னஞ்சல் வரி, வணங்கிய கையினால் வாட்ஸ்ஆப்பில் பதிவு. நன்றி என்பது அலுவல் காரியங்களுக்கு மட்டுமானது அல்ல;   கணவன், மனைவி, தாய், தந்தை, உடன்பிறப்புகள் என உறவுகளுக்கெல்லாம் நன்றி சொல்வது உறவைப் பலப்படுத்தும்.  ""நன்றி தெரிவிக்கும் தம்பதியரின் குடும்ப வாழ்க்கை நிலையாகவும், வலிமையாகவும் இருக்கும், அதனுடன், நன்றி தெரிவித்து வாழ்பவர்கள் மிகவும் ஆனந்தமாய் இருப்பார்கள்'' என்கிறது அமெரிக்காவிலுள்ள மெக்சிகன் பல்கலைக்கழக ஆய்வு.  

நன்றியுணர்வு மேலோங்கும் போது, தாய் தெய்வமாய்த் தென்படுவார்; தந்தை சொல் மந்திரமாகும்; உறவுகள் உன்னதமாகும்; நட்புகள் பொக்கிஷமாகும்; நாடு கடந்த உறவுகள் நட்சத்திரமாய் மிளிரும்; முதியோர் இல்லங்களுக்கு மூடு விழா நடக்கும்.

நன்றியுணர்வு ஒரு வீரச் செயல். அது கோழைகளிடம் இருப்பதில்லை. வீர சிவாஜி ஒரு முறை வேட்டையாடச் சென்றார். அப்பொழுது சிங்கத்தோடு சண்டையிட்டதில் சிவாஜின் உடலில் காயம்பட்டதால் உடல்நலக் குறைவானார். சிவாஜியின் நண்பர்கள் அவரை மூர்ஷிதாபாத்  என்ற நகருக்கு அழைத்து வந்தனர். அதே நேரத்தில் முகலாயப் படையினர், சிவாஜியை தேடி அலைந்துகொண்டு இருந்தனர். சிவாஜியைக் கண்டுபிடித்துக் கொடுப்பவருக்கு, இரண்டாயிரம் பொற்காசுகள் என அறிவிப்புச் செய்தார்கள். சிவாஜி தங்குவதற்கு அந்நகரத்தில் இடம் கொடுத்தவர் விநாயக்தேவ் என்னும் பண்டிதர் ஆவார். சிவாஜி என்று தெரியாமலே, ஒரு வழிப்போக்கனாக கருதி சிறந்த வைத்தியத்தை தந்தார். சிறிது நாட்களில் சிவாஜி குணமடைந்தார். 

அவரிடமிருந்து விடைபெறும் முன் தன்னை நன்கு கவனித்த விநாயக்தேவிற்கு நன்றிக்கடனாக ஒரு கடிதத்தைக் கொடுத்தார். ""இக்கடிதத்தை எடுத்துக் கொண்டு சென்று, இந்த ஊரில் இருக்கும் முகலாய அதிகாரியிடம் கொடுங்கள், அவர் சன்மானம் தருவார், பெற்றுக் கொள்ளுங்கள்'' என்றார். அப்பாவியான விநாயக்தேவ் கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று அறியாமல், முகலாய அதிகாரியிடம் கொடுத்தார். அக்கடிதத்தில் தாம் தங்கியிருந்த இடத்தை தெரிவித்தும், தன்னை கைதுசெய்து, அதற்கான சன்மான தொகையை விநாயக்தேவிடம் கொடுக்கச் சொல்லியும் எழுதியிருந்தார் சிவாஜி. கடிதத்தைப் படித்த முகலாய அதிகாரி தனது ஆட்களோடு சிவாஜியை சிறைப்பிடித்தார். அப்பொழுதுதான் விநாயக்தேவுக்கு, இதுவரை தன் வீட்டில் தங்கியிருந்தவர் சிவாஜி என்று தெரிய வந்தது.  தனக்கு செய்த உதவிக்காக, தன்னையே நன்றிக்கடனாக்கியவர் மராட்டிய வீரர் சிவாஜி. அதனால்தான், விநாயக்தேவ் மனதில் மட்டுமல்ல, மண்ணின் மைந்தர்  எல்லோருடைய மனதிலும் வீரத்தோடும், ஈரத்தோடும் இன்றளவும் சிவாஜி நீங்காமல் நிறைந்து நிற்கிறார். 

நன்றி... ஓர்  அற்புதமான உணர்வு!
நன்றி... ஓர் அழகான வீரம்!

(தொடரும்)

கட்டுரையாசிரியர்:  காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/18/w600X390/im10.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/18/தன்னிலை-உயர்த்து---10-நன்றி-ஓர்-அழகான-வீரம்-3002724.html
3002717 வார இதழ்கள் இளைஞர்மணி வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 157  ஆர்.அபிலாஷ் DIN Tuesday, September 18, 2018 08:55 AM +0530 புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் மருத்துவருக்கான காத்திருப்போர் அறையில் இருக்கிறார்கள். அவர்களுடன் அங்கே வினி எனும் 12 வயது சிறுமியும், அவளது பாட்டியும் இருக்கிறார்கள். புரொபஸர் ஆங்கிலத்தில் உள்ள செக்ஸிஸ்ட் சொற்களைப் பற்றி பேசுகிறார்.

புரொபஸர்: திருமணமான தம்பதியினரை man and wife என அழைக்கும் போது ஆணை மட்டும் ம்ஹய் என்று விட்டு, பெண்ணை அவளது திருமண அடையாளத்தைக் குறிக்கும் வண்ணம் wife என்கிறார்கள். ஏன் கணவனுக்கு husband எனும் சொல் பயன்படுத்தப்படவில்லை என பெண்ணியவாதிகள் கேட்டார்கள். இந்த சமத்துவமின்மை பிரச்சனைக்குரியது. இப்படிச் சொல்லும் போது அப்பெண் அவள் கணவனின் உடைமை எனும் பொருள் வந்து விடுகிறது.
கணேஷ்: சார்... ஒரு மனைவி கணவனுக்கு உரியவள் அல்லாமல் பக்கத்து வீட்டுக்காரனுக்கு உரியவளா?

புரொபஸர்: நீ செருப்படி வாங்கித் தான் திருந்துவாய் போல. சரி, இன்னொரு செக்ஸிஸ்ட் பயன்பாடு to wear the trousers. ஓர் உறவில் ஆண் சற்று அடங்கிப் போனால் His girlfriend wears the trousers in the relationship என்பார்கள். ஆண்கள் மட்டுமே கால்சராய் அணிவார்கள். ஆகையால், ஆணை ஆதிக்கம் செலுத்தும் பெண் ஆணை பின்பற்றி கால்சராய் அணிபவள், ஆண் தன்மை கொண்டவள் எனும் பொருள் இங்கு வருகிறது. அதே போல, கொஞ்சம் தயங்கி பயந்து போகும் ஆண்களை don't be a sissy என்பது. Sissy என்றால் பெண்மை கொண்ட ஆண்.  அதே போலத் தான் man flu.

கணேஷ்: அதென்ன சார்?

புரொபஸர்: ஓர் ஆண் தனக்கு ஜுரமோ சளித்தொல்லையோ ஏற்பட்டால் அதைத் தாங்கிக் கொள்ள வேண்டும், தனக்கு உடல் முடியவில்லை என்பதைக் காட்டிக் கொள்ளவோ புலம்பவோ கூடாது என சமூகம் எதிர்பார்க்கிறது. ஆனால் அப்படி சகிப்புத்தன்மை இல்லாமல் அச்சுபிச்சு என்று தும்மியபடி அடிக்கடி விடுமுறை எடுத்து வீட்டில் உறங்கும் ஆணை ம்ஹய் ச்ப்ன்வால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பார்கள். 

கணேஷ்: இதில் என்ன சார் சிக்கல்? எனக்குப் புரியவில்லை. இதில் பெண்களை வம்புக்கே இழுக்கவில்லையே.

புரொபஸர்: ஆனால் இந்த சொல்லில் ஆணின் குணாதசியம் குறித்த ஒரு stereotype வருகிறதே. ஓர் ஆண் என்பவன் தன் வலியை பொறுத்துக் கொள்பவனாக, வேதனையை காட்டாதவனாக, அழாதவனாக இருக்க வேண்டும் எனும் தட்டையான எண்ணத்தை இது கொண்டுள்ளது. ஆக, பெண் என்பவள் சின்ன சின்ன வலியை கூட பொறுக்க முடியாதவள், பலவீனமானவள் எனும் பொருளும் மறைமுகமாய் வந்து விடுகிறது.

கணேஷ்: அடடா...

புரொபஸர்: ஆமாம். அதே போலத் தான் ஓர் ஆண் ஒரு மைனர் குஞ்சாக இருக்கிறார் என்றால் அதை சிலாகிக்கும் விதமாய் he sowed his wild oats when he was young and immature என்பார்கள். நம்மூரில் பலதார மணம் செய்தவர்களுக்கு இந்த சொற்றொடரை பயன்படுத்தலாம். ஆனால் இதுவும் செக்ஸிஸ்ட் தான்.
கணேஷ்: ஆனால் இது ஆணை அல்லவா பழிக்கிறது?
புரொபஸர்: இந்த பயன்பாடு ரொம்ப வில்லங்கமானது. இது பதினாறாம் நூற்றாண்டில் புழக்கத்துக்கு வருகிறது. Wild oats என்பவை பதரின் விதைகள். நல்ல பயிர் விதைகளுக்குப் பதில் பதரை விதைத்தால் வீண் அல்லவா? ஒருவர் திருமணம் செய்யாமல் பல பெண்களுடன் உறவு கொள்வது இப்படியானது என்கிறது இந்த சொற்றொடர்.
(நடாஷா அப்போது போனில் யாருடனோ பேசியபடி அங்கு வருகிறார்)
நடாஷா (போனில்): Yes, no worries. I shall lose no time in reading that. Yes... yes.
கணேஷ்: சார், lose no time in reading என்றால் அதைப் படித்து நேரம் வீணாக்க மாட்டேன் என்று பொருளா?
நடாஷா: You eavesdrop and then brashly ask for meaning, huh?

கணேஷ்: நான் இல்லீங்க. நான் அப்படி பண்ணல. ஈவ்ஸ்டிராப் என்றால் ஈவ்டீஸிங் மாதிரியா?
புரொபஸர்: நான் உனக்கு சொல்லித் தந்தேனே நினைவில்லையா? ஈவ்ஸ் டிராப்பிங் என்றால் ஒட்டுக் கேட்பது.
கணேஷ்: ஓ...  நினைவு வந்திடுச்சு சார். நான் இப்போ சொல்லி அசத்துறேன் பாருங்க. (நடாஷாவிடம்) ஹலோ மேடம், I didn't eavesdrop, I only overheard.

(புரொபஸரிடம்) இதெப்படி சார்?

(இனியும் பேசுவோம்)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/18/w600X390/im9.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/18/வாங்க-இங்கிலீஷ்-பேசலாம்---157-3002717.html
3002711 வார இதழ்கள் இளைஞர்மணி "நறுமணம்' வீசும் படிப்புகள்! - எம்.அருண்குமார் DIN Tuesday, September 18, 2018 08:53 AM +0530 வாசனை திரவியங்கள் சம்பந்தமான தொழில் செய்யவும், தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு பெறுவதற்கும் பெர்பியூமரி கோர்ஸ் படித்தால் முன்னுரிமை கிடைக்கும். 

உடலில் பூசுவதற்கு, ஆடைகளின் மேலே தேய்த்துக் கொள்வதற்கு, வீடுகளில் நல்ல மணம் கமழ்வதற்கும் வாசனை திரவியங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதே போல மக்கள் பயன்படுத்தும் சோப்பு, புவுடர் உள்ளிட்ட பலவகை பொருட்களிலும் வாசனை திரவியங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. 

அத்தகைய வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை துவக்கி தொழில் செய்யவும், அந்த தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்புப் பெறுவதற்கும் வாசனை திரவியம் குறித்த பெர்பியூமரி கோர்ஸ் படிப்பது முக்கியமானதாகும். 

நமது நாட்டில் இந்த  பெர்பியூமரி கோர்ஸ் நடத்தும் கல்வி நிறுவனங்கள் :

Institute of Chemical Technology - Mumbai - http://www.ictmumbai.edu.in/
Fragrance and Flavour Development Centre (FFDC) at Kannauj, Uttar Pradesh - http://www.ffdcindia.org/

வெளிநாட்டில் இந்த படிப்பை நடத்தும் கல்வி நிறுவனங்கள் :
The Grasse Institute of Perfumery,France - https://www.grasse-perfumery.com/
Mane Perfumery School,France - https://www.mane.com/fragrances/perfumery-school
Cinquieme Sens,paris and USA - https://www.cinquiemesens.com/?lang=en
IFF (International Flavors & Fragrances, Inc),USA - https://www.iff.com/
ISIPCA, versailles,France - https://www.isipca.fr/
Givaudan Perfumery School,France -https://www.givaudan.com/

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/18/w600X390/im8.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/18/நறுமணம்-வீசும்-படிப்புகள்-3002711.html
3002667 வார இதழ்கள் இளைஞர்மணி நீர் ஆதார திட்டங்கள் குறித்த பயிற்சி! -  எம்.அருண்குமார் DIN Tuesday, September 18, 2018 08:40 AM +0530 நீர் ஆதார  திட்டங்களைச் செயல்படுத்தும் நிறுவனங்களில் பணிபுரிய விரும்புகிறவர்கள் நேஷனல் வாட்டர் அகாடமி நடத்தும் பயிற்சிகளைப் பெறலாம்.


உலக மக்கள் அனைவருக்கும் நீர் என்பது மிகவும் முக்கியமான அடிப்படைத் தேவையாக உள்ளது.   நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கவும், புதிதாக உருவாக்குவதற்கும் பல்வேறு திட்டங்க ள் செயல்படுத்தப்படுகின்றன.


இத்தகைய சூழ்நிலையில் நீர் ஆதார திட்டங்களை செயல்படுத்தும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழில்நுட்ப பொறியாளர்கள், பணியாளர்களுக்கு தேவைப்படும் பயிற்சியை மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் "நேஷனல் வாட்டர் அகாடமி' நடத்தி வருகின்றது.   அரசு மற்றும் தனியார் நிறுவன பொறியாளர்கள், பணியாளர்கள் மட்டுமல்லாது தனி நபர்களுக்கும் பயிற்சியை வழங்கி வருகின்றது. 


நீர் ஆதார திட்டங்களை செயல்படுத்தும் தொழில் நிறுவனங்களில் பணிபுரிய விரும்புகிறவர்கள் தங்கள் கல்வித் தகுதியோடு நேஷனல் வாட்டர் அகாடமி நடத்தும் பயிற்சியைப் பெற்றால் அத்தகைய நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைப்பது எளிதாகும்.

மேலும் விவரங்களுக்கு :
National Water Academy
Pune-Sinhagad Road,
Khadakwasla,
Pune - 411 024,
Maharashtra (India)

மேலும் விவரங்களுக்கு:
http://nwa.mah.nic.in/index.htm 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/18/w600X390/im6.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/18/நீர்-ஆதார-திட்டங்கள்-குறித்த-பயிற்சி-3002667.html
3002663 வார இதழ்கள் இளைஞர்மணி வேலை... வேலை... வேலை...  இரா.வெங்கடேசன் DIN Tuesday, September 18, 2018 08:39 AM +0530  

சரக்கு விமானப்போக்குவரத்து நிறுவனத்தில் வேலை

பதவி: Security Personnel & X-ray Screeners

காலியிடங்கள்: 32
சம்பளம்: மாதம் ரூ.24,000
வயதுவரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். BCAS Basic AVSEC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும்முறை:  எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, கல்வித் தகுதி அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை:    www.aaiclas.org என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களோடு கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: The Deputy General Manager (Cargo), AAI Cargo Logistics & Allied Selices Company Limited, NSCBI Cargo Complex,  NSCBI Airport, Kolkata -700052.

மேலும் விவரங்கள் அறிய: https://aaiclas-ecom.org/images/career.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.09.2018

 

புதுச்சேரி காவல்துறையில்  வேலை

பதவி: Deck Handler

காலியிடங்கள்: 29
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 22.09.2018 தேதியின்படி 18  வயதிலிருந்து  30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் 3 ஆண்டு  நங்ங் ஊஹழ்ண்ய்ஞ் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: உடற்திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: www.police.pondicherry.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://police.puducherry.gov.in/Recruitment%20to%20the%20post%20of%20Deck%20Handler%20-%20dt.20.08.18.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.09.2018


ஐடிஐ முடித்தவர்களுக்கு ரேடியோ டெக்னீசியன் வேலை

பதவி: Radio Technician

காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
வயதுவரம்பு: 22.09.2018 தேதியின்படி 20  வயதிலிருந்து  27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ரேடியோ, எலக்ட்ரானிக் டெலிகம்யூனிகேசன் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.  புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் குறைந்தது 5 ஆண்டுகள் வாழ்பவர்களாக இருக்க  வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: உடற்திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: www.police.pondicherry.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://police.puducherry.gov.in/Recruitment%20to%20the%20post%20of%20Radio%20Technician%20-%20dt.20.08.18.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.09.2018


மகராஷ்டிரா வங்கியில் வேலை

பதவி: Chartered Accountant/ Cost & Management Accounts

காலியிடங்கள்: 50 
சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020
வயதுவரம்பு: 20  வயதிலிருந்து  30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: இளங்கலை பட்டம் பெற்று CA/ Coat & Management Accounts தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண், குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 
விண்ணப்பிக்கும் முறை: www.bankofmaharashtra.in  என்ற வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசித் தேதி: 03.10.2018
மேலும் விவரங்கள் அறிய: https://www.bankofmaharashtra.in/downdocs/CA%20AND%20Cost%20Management%202018.pdf என்ற வலைத்தளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.09.2018

 

தமிழகத்தில் அரசில் புள்ளியியல் ஆய்வாளர் வேலை


பதவி: புள்ளியியல் ஆய்வாளர்
காலியிடங்கள்: 13
தகுதி: புள்ளியியல், கணிதம் பாடம் அடங்கிய துறைகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.tnpsc.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: http://www.tnpsc.gov.in/notifications/2018_17_notyfn_statistical_Inspector.pdf  என்ற வலைதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.09.2018

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/18/w600X390/im7.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/18/வேலை-வேலை-வேலை-3002663.html
3002647 வார இதழ்கள் இளைஞர்மணி நீ... நான்... நிஜம்! - 36: உள்ளே போ... உண்மையைக் கொண்டாடு...! சுகி.சிவம் DIN Tuesday, September 18, 2018 08:36 AM +0530 ஒரு காலத்தில் பட்டிமன்றங்கள் என்றால் அறிவுபூர்வமான, ஆழமான, விவாதங்கள் நடைபெறும் இடம் என்று ஒரு மரியாதை இருந்தது. தவத்திரு. குன்றக்குடி அடிகளார் (பெரியவர்) தலைமையில் ஏழு எட்டு மணி நேரம் கூட விவாதம் நடக்கும். பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன், ந. ராமகிருஷ்ணன், தா. பாண்டியன். போன்ற ஜாம்பவான்கள் பொறி பறக்க விவாதம் செய்வார்கள். ஒவ்வொரு தலைப்பும் கம்பீரமாகக் கால்மேல் போட்டு, மூளையில் தர்பார் நடத்தும். வாழ்க்கைக்கு வழிகாட்டுவது, வள்ளுவமா? பகவத்கீதையா? மார்க்ஸியமா? என்றெல்லாம் தலைப்பிருக்கும். பட்டிமண்டபம் பாலுச்சாமி, பேராசிரியர் சாலமன் பாப்பைய்யா, புலவர் கீரன், பேராசிரியர் திருச்சி. இராதாகிருஷ்ணன் போன்றவர்கள் தங்கள் பத்து வருடப் படிப்பை, பதினைந்து நிமிடப் பேச்சில் ஙட3 ஊஞதஙஅப இல் குழைத்துத் தருவார்கள். நடுவர் திணற வேண்டி இருக்கும்.

ஆனால் அண்மைக் காலமாக எங்கு திரும்பினாலும் ஒரே பிரச்னை. ஒரே தலைப்பு ஆண்களா? பெண்களா? சந்தோஷமாக இருப்பவர்.. அறிவில் சிறந்தவர்... வீட்டையும் நாட்டையும் காப்பவர்... பக்தியுணர்வில் மேலோங்கியவர்... என்ன தலைப்பானாலும் ஆண்களா? பெண்களா? என்பதை ஆராய்வது தான் இன்று நடுவர்களின் தலை எழுத்து. முன்பெல்லாம் ஒரு சினிமாப்பாடல் வெகு பிரசித்தம்... "ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி மாமாவைப் பாரு... அவரு ஆம்பளையா... பொம்பளையா... என்னான்னு கேளு'' என்று பாடுவார்கள். எவ்வளவு அறிவான ஆட்டுக்குட்டி அது... மாமா... யாரு... ஆணா? பெண்ணா? என்று அறியும் அதீத ஆற்றல் மிக்க ஆட்டுக்குட்டி... நடுவராக இருந்து தீர்ப்பு சொல்லும் ஆட்டுக்குட்டி... இன்று பட்டிமன்ற நடுவர்களான நாங்களும் பரிதாபமான அந்த ஆட்டுக்குட்டிகயாகத்தான் மேடை என்கிற கசாப்புக் கடை நோக்கிப் போக வேண்டி உள்ளது.

ஆணோ? பெண்ணோ? திருநங்கைகள் பற்றி விவாதிக்க வேண்டாமா? இது முதல் கேள்வி. பொத்தம் பொதுவாக ஆண்கள் நல்லவர்கள், பெண்கள் முட்டாள்கள் என்று பேசுவது பயங்கரமான அபத்தம் இல்லையோ? மகிழ்ச்சியாக இருப்பவர்கள் யார் என்று கேட்டால் ஆண்கள், பெண்கள் என்று வகைப்படுத்துவது தர்ம நியாயம் ஆகாதே! துல்லியமாக ஒவ்வொரு தனிமனிதனையும் பிரித்துப் பிரித்துப் பார்த்தால் தானே தீர்ப்பு சொல்ல முடியும். பொத்தம் பொதுவாக ஒரு பகுதியை வியப்பது, விமர்சிப்பது, புகழ்வது, இகழ்வது இவை யாவுமே வெட்கமின்றி இன்று நடக்கிறது. தமிழர்கள் இப்படி... மலையாளிகள் அப்படி... என்றெல்லாம் பேசப்பலர் கூசுவதே இல்லை. "அந்த ஜாதிக்காரப் பயல்களே  அப்படித்தான்' என்று இந்தியாவில் இல்லை... சிங்கப்பூர், ஐரோப்பா, அமெரிக்கா போனாலும் நமது மக்களில் பலர் வெட்கமில்லாமல் பேசுகிறார்கள்.. ஜாதிச் செருக்கும், இனத்திமிரும், மதம் மீதான கர்வமும், மொழிவழி பெருமை, சிறுமை பேசும் பழக்கமும் நாம் இன்னும் வளர்ச்சி அடையவில்லை என்பதன் வெளிப்பாடு.

பட்டிமன்றங்களில் பெண்களை மிகவும் குறைத்துப் பேசுவது ஒரு வகை வெற்றி நோய். பெண்கள் எல்லாருமே ஒரே வகை இல்லை. ஓர் உதாரணம் சொல்கிறேன். அண்மைக் காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட வழக்கு அபிராமி என்ற பெண்மணியின் வழக்கு. தன் மனோதர்மப்படி வாழத் தடையாக இருக்கும் குழந்தைகளையும், கணவனையும் கொல்ல முயன்று பெரும் சோகம் அவரால் குடும்பத்தில் நிகழ்ந்து விட்டது. வழக்கின் உண்மை குறித்து ஆராய, தீர்ப்பளிக்க, நமக்கு உரிமை இல்லை. ஆனால் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில், சுயநலத்தால் விளைந்த கொடூரம் அது என்று உறுதியாகச் சொல்லலாம். மனமும் உடலும் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள, எத்தனை கொடூரமாக முடிவெடுக்கிறது என்பதன் வெளிப்பாடு இந்த வழக்கு. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு பெண் என்ற ஒரே காரணத்தால் பெண்களே இப்படித்தான் என்ற தொனியில் ஊடகங்களில் சிலர் கருத்துப் பதிவிடுகிறார்கள். இது எப்படி நியாயம் ஆகும். ஆண் இதே அநியாயம் செய்ததே இல்லையா? முறையற்ற காமம் தான் குற்றவாளியே ஒழிய, பெண் இனம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படக்கூடாது. மனைவிமார்கள் என்று பொத்தம் பொதுவாக நீட்டி முழக்கக் கூடாது.

இதற்கு நேர்மாறான ஒரு சம்பவம். ஊடகங்கள் இது போன்ற நல்லவிஷயங்களைப் பெரிதுபடுத்துவது இல்லை. லதா பகவன்காரே என்ற மராத்தியப் பெண்மணி. 67 வயதானவர் மிக ஏழ்மையான குடும்பப் பெண்மணி. தன் மூன்று பெண் பிள்ளைகளையும் படாதபாடு பட்டு படிக்க வைத்து, திருமணமும் செய்வித்து, வாழ வைத்து விட்டார். பிரச்னை கணவரின் உடல்நலக் குறைவாக வெளிப்பட்டது. உள்ளூர் அரசு மருத்துமனைகள் கைவிரித்துவிட்டன. பெரிய மருத்துவமனைகள் சொல்லும் சோதனைகள் செய்ய கையில் எந்தப் பணமும் இல்லை. மூன்று பெண்களின் திருமணத்தில் அவர்கள் கையிருப்பு முழுவதும் கரைந்து விட்டது. இருவரும் வயல்வரப்பிலும் அக்கம் பக்கத்திலும் செய்த கூலி வேலைகளால் கிடைத்த வருமானத்தில் தான் வாழ்க்கை வண்டி ஓடிக் கொண்டிருந்தது. அதில் இப்போது மண் விழுந்து விட்டது. லதாவின் கணவர் நோய் வாய்ப்பட்டதால் உழைக்க முடியாது. கூலி கிடைக்காது. கணவரது உடல் நலத்தைக் கவனிக்க மருத்துவ மனைகளுக்குப் போய் வருவதால் லதாஜிக்கும் கூலி வேலை செய்ய முடியாது. வைத்திய செலவுக்கும் காசு வேண்டும். பலரிடமும் கையேந்திப் பலனில்லை.

கையாலாகாத நிலையில் கணவரைச் சாகவிட அந்த அற்புதமான பெண்மணிக்கு மனம் வரவில்லை. பசியால் மருத்துவமனை வாசலில் இரண்டு சமோசக்களை வாங்கிச் சாப்பிட்டபோது கடைக்காரர் ஒரு மராத்தி செய்தித் தாளில் மடித்துத் தந்திருக்கிறார். காகிதத்தில் பாரமதி மராத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெறுவதாகக் கொட்டை எழுத்தில் செய்தி வெளியிட்டிருந்தார்கள். பரிசுத்தொகை லதாஜியின் இருதயத் துடிப்பை அதிகரித்துவிட்டது. வேகமாக முடிவெடுத்தார். போட்டி தொடங்கும் இடத்தில் பல பிரச்னைகள் ஏற்பட்டன. கிழிந்து போன புடவை.. கால்களில் செருப்பு கூட இல்லை.. விதவிதமான உடையலங்காரத்துடன் பந்தயத்தில் பங்கேற்க வந்தவர்கள் மத்தியில், லதா அற்பப் புழு போல, மதிக்கப்பட்டார். போட்டி நடத்துபவர்கள் முதலில் அனுமதி மறுத்தனர். வலுத்த போராட்டத்திற்குப் பிறகு லதா சேர்க்கப்பட்டார். பந்தயம் ஆரம்பமானதும், கிழிந்த புடவையை முழங்காலுக்கு மேல் தூக்கிச் செருகியபடி ஓடினார்... ஓடினார்... வெறிபிடித்தவர் போல் ஓடினார். மரணத்தின் பற்களுக்கிடையில் மாட்டிக் கொண்ட கணவனை மீட்க ஒரே வழி ஓட்டம் தான் என்று ஓடினார். வெற்றியும் பெற்றார். பெற்ற பரிசுத்தொகை கணவன் நலம்பெற  என்று அறிந்த பலரும் அவரைக் கையெடுத்துக் கும்பிட்டார்கள். இப்போது சொல்லுங்கள்... அபிராமியும் பெண். லதாவும் பெண். அவரும் மனைவி. இவரும் மனைவி. தனிமனிதர்கள் தனித்தனி குணஇயல்புடன் இருக்கிறார்கள். அப்படி இருக்க பொத்தம் பொதுவாகப் புகழ்வதும், இகழ்வதும் சரியல்லவே. இன்றைய இளைஞர்களில் பலர் தங்கள் ஜாதித் தலைவர்கள், கட்சித் தலைவர்கள், மதத் தலைவர்களை மொத்தமாக ஏற்கிறார்கள். மற்ற எதிர் நிலைத் தலைவர்களை மொத்தமாக நிராகரிக்கிறார்கள். தலைமையின் இந்தச் செயல் சரி. இந்தக் கருத்து சரி, இந்த முடிவு சரி என்று சிந்திக்காமல் தன் தலைமை எது செய்தாலும் சரி... மற்றவன் தலைமை எது செய்தாலும் தவறு என்ற நிலைப்பாட்டை மேற்கொள்கிறார்கள். தலைக்குள் எதுவும் இல்லாதவர்கள் தான் இப்படி முடிவெடுப்பார்கள். எந்த மனிதனும் முழுக்க முழுக்க நல்லவன், அறிவாளி என்று சொல்ல வாய்ப்பில்லை. அதே போல முழுக்க முழுக்கக் கெட்டவன், முட்டாள் என்று இருக்க வாய்ப்பில்லை. இந்த விஷயத்தில் இவர் சரி .. இந்த விஷயத்தில் இவர் தவறு என்று பிரித்துணர இளைஞர் பழக வேண்டும். ஒட்டுமொத்தமாகத் தன் ஜாதி, கட்சி, மதத் தலைமைக்குத் தன் தலையை அடிமை சாஸனம் எழுதிக் கொடுக்கும் அசட்டுத் தனத்தில் இருந்து வெளி வர வேண்டும். குறை நிறைகளோடு நம் குடும்ப உறுப்பினரை ஏற்கலாம். ஒரு தலைமையை ஏன் அப்படி குறைகளோடு ஏற்க வேண்டும்? இந்தத் தெளிவு இளைஞர்களுக்கு இன்று அவசியம் தேவை.

இதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்:

மகாகவி பாரதி மகாத்மா காந்தியை "வாழ்க நீ எம்மான்' என்று வாழ்த்தினார். "இந்த வையத்து நாட்டில் எல்லாம் தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, பாழ்பட்டு நின்ற தாமோர் பாரததேசம் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா நீ வாழ்க வாழ்கவே' என்று வாயாரப் புகழ்ந்தார். ஆனால் அதே காந்தியை அவர்திட்டியதில்லையா? திட்டி இருக்கிறார். இளம் வயதில் திருமணம் நடத்தி, பெண்களை விதவைகளாக்கி, இந்து சமூகம் அறிவுக் குறைவாக வாழ்ந்தது பாரதிக்குப் பிடிக்கவில்லை. விதவை மறுமணம் வேண்டும் என்று பாரதி விரும்பினார். அதற்குச் சம்மதம் கோரி சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி போன்றோருக்கும் கடிதம் எழுதினார். 

அன்றைய மதங்களின் இறுக்கம் காரணமாக விவேகானந்தரும் சரி, காந்தியும் சரி முழுமனதுடன் விதவை மறுமணத்தை ஆதரிக்கவில்லை. அவர்கள் போக்கு "வழவழ கொழகொழ' என்று பாரதி கண்டிக்கிறார். காந்தியடிகள், ""ஆண்களும் மனைவி இறந்து விட்டால் மறுமணம் செய்யக் கூடாது... மங்கல காரியங்களில் கணவனை இழந்த பெண் விலக்கப் படுவதுபோல ஆணும் விலக்கப்பட வேண்டியவர்'' என்று புது சித்தாந்தம் தந்தார்.  எரிச்சலடைந்த பாரதி, ""நான் ஸ்த்ரி விதவைகளைக் குறைக்க வழிகேட்டால் ஸ்ரீமான் காந்தி புருஷ விதவைகளை  உண்டு பண்ண யோசனை சொல்கிறார்'' என்று கடுமையாகக் காந்தியைக் கண்டித்தார். இந்த ஆண்மை இன்றைய தேவை!  

- தொடரும்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/18/w600X390/im5.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/18/நீ-நான்-நிஜம்---36-உள்ளே-போ-உண்மையைக்-கொண்டாடு-3002647.html
3002626 வார இதழ்கள் இளைஞர்மணி கற்றுக் கொள்ளுங்கள்... வெற்றியாளர்களிடம்! - க.நந்தினி ரவிச்சந்திரன் DIN Tuesday, September 18, 2018 08:25 AM +0530 நம்மில் பலர் தம்முள் பல திறமைகளைப் பெற்றிருந்தும், பேச தயங்குவதன் காரணமாக தன்னிடம் உள்ள தலைமைப் பண்பை வெளிப்படுத்த இயல்வதில்லை. எவர் ஒருவர் இந்த தயக்கத்திலிருந்து விடுபட்டு பேச முன்வருகிறாரோ அவரே தடைகளை உடைத்து தலைவனாகிறார். பின்னாளில் பெரிய வெற்றியாளனாகவும் ஆகிறார்.

வெற்றியாளர்கள் கடைப்பிடித்த பின்வரும்   ரகசியங்களை பின்பற்றினால் நீங்களும் தலைசிறந்த வெற்றியாளராகலாம்.

உற்று நோக்குதல்: "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. பிறருடன் பேசும்போது,  அவர்களது சிறு பாவனைகளையும் உற்று நோக்கி அவர்களது எண்ண ஓட்டங்களை அறிந்து அதற்கேற்றாற் போல் பேச வேண்டும். 

நேர்படப்  பேசுதல்: வெற்றியாளர்கள் தங்களுக்குத் தெரிந்த உண்மையை மட்டுமே பேச விரும்புவர். தனக்குத் தெரியாத விஷயங்களை தெரியாது என்று நேர்மையாக ஒப்புக்கொள்வார்கள். தனக்கு அரைகுறையாக தெரிந்த விஷயங்களைப் பேசமாட்டார்கள். அதே வேளையில் தனக்கு நன்றாக தெரிந்த விஷயங்களை எந்த வித தயக்கமுமின்றி கேட்போருக்கு நன்கு புரியும்படி பேசுவார்கள்.

நம்பிக்கையை விதைத்தல் : வெற்றியாளர்கள்  பொறுப்புகளை எப்போதும் தனது கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கமாட்டார்கள்.  தன்னுடன் இருப்பவர்களாலும் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை விதைத்து அவர்களை ஊக்கப்படுத்தி  இலக்குகளை எட்ட  பக்கபலமாக இருப்பர்.

நேரத்தின் அருமையை அறிந்திருத்தல்: வெற்றியாளர்கள்   தமது நேரத்தை பயன் உள்ளதாய் பயன்படுத்துவது மட்டுமன்றி பிறரது நேரத்தையும் வீணடித்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். பிறரைச் சந்திக்கும் போது அவர்களுடன் என்ன பேச இருக்கிறோம் என்பதை தெளிவாகத் தீர்மானித்து வீண் பேச்சுகளை மட்டுமல்ல, கால விரயத்தையும் தவிர்ப்பார்கள்.

பொறுப்புடைமை: ஒரு வெற்றியாளர்  தான் எப்போதும் தவறு செய்யப்போவதில்லை என்று மமதை கொள்ள மாட்டார். அதே வேளையில் தனது தவறை பிறர் சுட்டிக்காட்டும் நிலைமைக்கு தன்னை ஆளாக்கிக் கொள்ளவும் மாட்டார்.   தான் தலைமையேற்று மேற்கொண்ட பணியில் தோல்வியை சந்திக்கும் வேளையில் அதற்கான முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொள்வர்.

முயற்சிக்கு மதிப்பளித்தல்: சிறந்த வெற்றியாளர்கள் பிறரது முயற்சிகளுக்கு மதிப்பளிப்பார்கள்.   தமது வெற்றிகளுக்கு தன்னைச் சார்ந்தவர்களின் உழைப்புகளை முன் எடுத்து வைத்து பாராட்டுவதில் பெருமை கொள்வர். எங்கு ஒருவரது திறமைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கப்படவில்லையோ அங்கேயே அவருக்கு  அங்கீகாரம் கிடைக்க வழி வகுப்பார்கள். பிறரது முயற்சிகளை பாராட்டி மதிப்பளிப்பதின் முக்கியத்துவத்தை  நன்கு அறிந்து வைத்திருப்பர்.

தெளிவாக பேசுதல்: சிறந்த பேச்சாளர்கள் தான் பேச எண்ணியவற்றை எந்த வித சலனமும் இன்றி தெளிவாகப் பேசுவர். எந்த நேரத்தில் எந்த தொனியில் பேச வேண்டும் என்பதை நன்கு அறிந்திருப்பர். எந்த ஒரு சூழ்நிலையிலும் எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் தான் சொல்ல வேண்டிய கருத்தைத் தைரியமாகப் பதிவு செய்வார்கள்.

கேள்வி கேட்கத் தயங்காமை: வெற்றியாளர்கள்,  ஒருவர் கூறியதைப் புரிந்து கொள்ள இயலவில்லை எனில் அதை அப்படியே விட்டு விடாமல், அதை முழுவதுமாக புரிந்து கொள்ளும் பொருட்டு தயங்காது கேள்வி எழுப்புவார்கள். தனக்கு தெரியாத விஷயங்களை பிறரிடமிருந்து கற்றுக் கொள்ளத் தயங்கமாட்டார்கள். தனக்கு சில விஷயங்களில் வழிகாட்டுதல்கள் தேவைப்படும் போது அந்த துறைகளில் கைத்தேர்ந்தவர்களின் கருத்துகளை கேட்டு  அதைப் பற்றி அறிந்து கொள்ள கூச்சப்படமாட்டார்கள்.

இவ்வாறு வெற்றியாளர்கள் தங்களது சொல்லில் உண்மை வழுவாது, நேர்மையாகப் பேசும் கலையையே தங்களது வெற்றியின் சூத்திரமாகக் கொண்டு வென்று காட்டியுள்ளனர். பேச்சுத் திறமையின் முக்கியத்துவத்தை புரிந்து வைத்திருப்பதோடு அது வெற்றிக்கு இன்றியமையாதது என்பதையும் நன்கு அறிந்திருந்தனர். இந்த   ரகசியங்களைப் பின்பற்றினால் நீங்களும் சிறந்த வெற்றியாளராக  உருவாகலாம்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/18/w600X390/im3.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/18/கற்றுக்-கொள்ளுங்கள்-வெற்றியாளர்களிடம்-3002626.html
3002622 வார இதழ்கள் இளைஞர்மணி பறப்பதற்குத் தடையில்லை! -  ஜே. லாசர் DIN Tuesday, September 18, 2018 08:23 AM +0530 ஆர்வமும், விடாமுயற்சியும் இருந்தால் எத்தனை உயரங்களுக்கும் செல்லலாம் என்பதை நிரூபித்திருக்கிறார், கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உண்ணியூர்கோணத்தைச் சேர்ந்த சேர்ந்த இளைஞர்  ரவி ஆர்.சங்கர்.

பள்ளியில் படிக்கும் போது ஒரு சராசரி மாணவராய் இருந்த இவர், இப்போது அமெரிக்காவில் "பிளையிங் இன்ஸ்ரக்டர்' என்று சொல்லப்படும் விமான ஓட்டிகளுக்கான பயிற்றுநராக உள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இவர் தான்  விமான ஓட்டிகளுக்கான முதல் பயிற்றுநர்  என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.  ரவி ஆர். சங்கரிடமிருந்து உரையாடியதிலிருந்து....

""எனது தந்தை ரவீந்திரன்நாயர், தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளித் தலைமை ஆசிரியராக உள்ளார். தாய் நிர்மலா ரவீந்திரன். சகோதரி ரவீணா லக்ஷ்மி. நான் திருவட்டாறு  ஆற்றூர் என்.வி.கே.எஸ். மேல் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தேன். தொடர்ந்து குமாரகோயில் நூருல் இஸ்லாம் கல்லூரியில் ஏரோனாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்தேன். பள்ளியில் படிக்கும் போது நான் ஒரு சராசரி மாணவன் தான்.  

நான் 8 ஆம் வகுப்பு படிக்கும் போது  ஒருமுறை எனது தந்தையுடன் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு சென்ற போது அங்கு பறந்து வந்த விமானங்களைப்  பார்த்து   பிரமிப்பும், பரவசமும் அடைந்தேன். விமானங்களை ஓட்டும் பைலட்டுகள் அங்கு மிடுக்காக நடந்து வருவதைப் பார்த்த போது எனக்குள்ளும், கற்பனை சிறகுகள் விரிந்தன. நானும்

விமானங்களை ஓட்ட வேண்டும் என்ற ஒரு லட்சியத்தை ஏதோ ஒரு நம்பிக்கையில் மனத்திற்குள் விதைத்துக் கொண்டேன். பின்னர் விமானங்கள் எப்படி பறக்கின்றன என்பதைப் பற்றியெல்லாம் புத்தகங்களிலும், இணையத்திலும் படிக்கலானேன். கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்  சேர்ந்து படித்த  போது  விமான தொழில் நுட்பங்களை குறித்து அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தது.  

விமானம் ஓட்டி அல்லது விமானி ஆவதற்கு அடிப்படை கல்வித் தகுதி பிளஸ் 2 படிப்பாகும்.  

விமானம் ஓட்டுவதற்கான பயிற்சிப் பள்ளிகள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ளன. இதே போன்று வெளிநாடுகளிலும் உள்ளன. அமெரிக்கா போன்ற நாடுகளில் பயிற்சி பெறுவதற்கு சற்று கூடுதல் செலவாகும். இந்தியாவில் விமான பயிற்சிக்கு மத்திய அரசின்  உதவித் தொகை வழங்கும் திட்டங்களும் உள்ளன.   

ஒருவர் விமானம்  ஓட்டிக்கான பயிற்றுநராவதற்கு முன்பு,  முதலில் விமானம் ஓட்டுநராக அதாவது விமானியாக பயிற்சி பெற வேண்டும். இந்தப் பயிற்சியானது 3 கட்டங்களைக் கொண்டது. முதலில் எஸ்.பி.எல். எனப்படும் ஸ்டூடன்ட் பைலட் லைசென்ஸ் பெற வேண்டும். இதனைத் தொடர்ந்து பி.பி.எல். எனப்படும், பிரைவேட் பைலட் சைசென்ஸ் பெற வேண்டும். இவை இரண்டும் பெற்ற பின்னர்  சி.பி.எல். எனப்படும் கமர்சியல் பைலட் லைசென்ஸ் பெற வேண்டும். இதில் கமர்சியல் பைலட் லைசென்ஸ் என்பது முக்கியமானது. இந்த லைசென்ஸ் தான் விமானங்களை ஓட்டுவற்கு கற்றுத் தருகிறது.  இந்த

உரிமத்தை விரைவாகப் பெறுவது  ஒருவருடைய திறமையையும், ஆர்வத்தையும் பொறுத்தது. கமர்சியல் பைலட் லைசென்ஸ் பெற்றவர் விமானங்களைத் தனியாக  இயக்கலாம். விமான ஓட்டிகளாக பயிற்சி பெற்றவர்கள்,  விமான ஓட்டிகளுக்கான பயிற்றுநர் ஆக வேண்டுமென்றால், சி.எப்.ஐ.  எனப்படும் சர்டிபைடு பிளைட் இன்ஸ்ரக்டர் பயிற்சி பெற்று அதில் தேர்ச்சி பெற வேண்டும்.  

நான் இப்போது அமெரிக்காவில் புளோரிடா மகாணத்தில் டேட்டோனா  பீச் சர்வதேச விமான நிலையத்தில் பீனிக்ஸ் ஈஸ்ட் ஏவியேஷன் நிறுவனத்தில் விமான ஓட்டிகளுக்கான பயிற்றுநராக உள்ளேன். இதே நிறுவனத்தில் தான் விமான ஓட்டிக்கான பயிற்சியையும் முடித்து விமானி ஆனேன். 

விமான ஓட்டியாகவும், பயிற்றுநராகவும் பணி செய்ய முதலில்  ஒருவருக்கு ஆர்வம் ஏற்பட வேண்டும். மேலும் விடா முயற்சியும், சவால்களை எதிர் கொள்ளும் மனத்திடமும் உள்ளவராக இருக்க வேண்டும். நுண்ணறிவு முக்கியம். பிற படிப்புகளை விட இதற்கு பணத்தேவை சற்று அதிகம் தான். அதே வேளையில் இப்பயிற்சிகளுக்கு கல்விக் கடன்களும் கிடைக்கின்றன.  

கிராமப் பின்னணியில் வளர்ந்த நான்,  ஒரு விமானி ஆக வேண்டும். விமான ஓட்டிகளக்கான பயிற்றுநராக வேண்டும் என்ற ஆர்வமும், அதனைத் தொடர்ந்த தேடலும் தான் என்னை இந்த உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது.  எனவே கிராமம், நகரம் என்றில்லை. பள்ளியில் படிக்கும் போது குறைந்த மதிப்பெண்கள் பெற்று விட்டோம் என்று உடைந்து போக வேண்டிய அவசியமில்லை.  நமக்கான சிந்தனைகளை உயரத்தில், மிக உயரத்தில் வைக்கும் போது  எதுவும் சாத்தியம் தான்'' என்றார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/18/w600X390/im4.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/18/பறப்பதற்குத்-தடையில்லை-3002622.html
3002614 வார இதழ்கள் இளைஞர்மணி தேவ்ராய் கலை கிராமம்: ஒரு புதிய வழி! - இரா.மகாதேவன் Tuesday, September 18, 2018 08:19 AM +0530 மகாராஷ்டிர மாநிலத்தின் காடுகள் நிறைந்த மலைப்பகுதி பஞ்ச்கனி. இங்குள்ள பழங்குடியின மக்களில் திறன்மிக்க ஒரு குழுவினர் பழங்கால மரபு சார்ந்த கலைப் பொருள்களை உருவாக்கி அவற்றின் மூலம் தங்கள் சமூகத்தை முன்னேற்றிச் செல்ல கடந்த 10 ஆண்டுகளாக உழைத்து வருகின்றனர்.

ஆண்கள், பெண்கள் என இருபாலரும் அப்பகுதியில் உள்ள ஒரு பெரிய மரத்தின் அடியில் நாள்தோறும் ஒன்று கூடி, தொல்பொருள்களை ஒத்த உலோக கண்கவர் கலைப் பொருள்களை சமகால ரசனைக்கு ஏற்ப உருவாக்குகின்றனர். 

இங்குள்ள ஆதிவாசி மக்களின் மரபுசார்ந்த, காலம்கடந்த உலோக கலைத் திறன்களைப் பாதுகாக்கும் நோக்கில்  "தேவ்ராய் கலை கிராமம்' என அழைக்கப்படும் இந்த அமைப்பு,  பழங்குடியின கலைஞர் சுரேஷ் பங்குடி, புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குநர் மந்தாகிணி மாதுர் ஆகியோரால் கடந்த 2008- இல் தொடங்கப்பட்டது.

இந்த கலை கிராமத்தை தொடங்க வேண்டும் என நினைத்து   சுரேஷ் மந்தாகிணியைச் சந்தித்தபோது,  ஆதிவாசி கலைஞர்களின் மோசமான நிலை குறித்தும்,   தங்களின் கலைப் பணி பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும், தங்களின் கலையை மேம்படுத்துவதற்கான கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாதது குறித்தும்   பகிர்ந்துகொண்டார்.

இதைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து சுரேஷின் வழிகாட்டுதலோடு மதியா பழங்குடியைச் சேர்ந்த 4 கலைஞர்களை கொண்டு தேவ்ராய் கலை கிராமத்தை உருவாக்கினர். இன்று இந்த அமைப்பில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த தனிநபர், குடும்பம் என 35 ஆண், பெண் கலைஞர்கள் உள்ளனர். 

சுரேஷ், மகாராஷ்டிர மாநிலத்தில், சந்த்ரபூர் மாவட்டத்தின் வரோரா நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள ஆனந்த்வான் என அழைக்கப்படும் பாபா ஆம்தே ஆசிரமத்தில் பலவிதமான பழங்குடி கலைகளையும் கற்றவர். இவர், கட்சிரோலி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பழங்குடி சமூகத்தினரின் முன்னேற்றம், வளர்ச்சிக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் கடுமையாகப் பணியாற்றி, கடந்த 2002-ல் மாநில அரசின் ஆதிவாசி சேவக் புரஸ்கார் விருது பெற்றவர்.

 

தேவ்ராய் கலை கிராமத்தில் தயாரிக்கப்பட்ட கலைப் பொருள்களின் விற்பனை அதிகரித்ததைத்  தொடர்ந்து, சுரேஷின் ஊரான கட்சிரோலியிலும் கலைப் பொருள்களின் உற்பத்தி விரிவுபடுத்தப்பட்டது. இந்த இரு இடங்களிலும் இருந்து உருவாக்கப்படும் அழகிய கலைப் பொருள்கள் கண்காட்சிகள் மற்றும் நாடு முழுக்க  உள்ள சில்லறைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த பகுதியில் வாழும்  ஒருவர்,  தனது எண்ணத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கலைப் பொருள்களை தயாரிக்கவும் தேவ்ராய் கலை கிராமத்தை அணுகலாம் என கூறுகின்றனர். மேலும், இந்த அமைப்பின் கலைப் பொருள் தயாரிப்புப் பிரிவில் இளம் தொழில்பழகுநர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். அவ்வாறு சேர்பவர்களுக்கு 2 ஆண்டுகள் தொடர்ந்து தீவிரப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் தங்களிடம் உள்ள மிகச்சிறந்த ஆண், பெண் கலை நிபுணர்களைக் கொண்டு நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் பயிற்சி பட்டறைகளையும் நடத்தி வருகிறது.

நவீன அழகியலை எதிர்கொள்ளக்கூடிய வகையில், பண்டைய உலோக கலைத்துவத்தை எவ்வாறு புதுப்பிப்பது என்பதை அறிந்துகொள்வதற்காக தேசிய வடிவமைப்புக் கழகம் உள்ளிட்ட முக்கிய வடிவமைப்புப் பள்ளிகளில் இருந்து பயிற்சி பெற்ற மாணவர்களை இந்த அமைப்பு வரவழைத்து அறிந்துகொள்கிறது.

தேவ்ராய் கலை கிராம அமைப்பு பழங்குடி இன கைவினைஞர்களின் மரபார்ந்த கைவினை கலையான தோக்ராவுக்கு சமகால யோசனைகளை தருகிறது. குறிப்பாக, தர்ஸ்ரீந்-ஈட்ர்ந்ழ்ஹ என்பது இவர்களுடைய தனித்துவமிக்க முன்னோடி கைவினை வடிவமாகும்.   

ராக் தோக்ரா மட்டுமல்லாமல், இந்த கைவினைஞர்கள் மூங்கில் கலைப் பொருள்கள், கரிம அழகுப் பொருள்கள், ஆபரணங்கள், பழுப்பு சிவப்பு வண்ணம் கொண்ட களிமண்ணால் செய்யப்பட்ட கலைப் பொருள்கள், பித்தளை இழைகளால் பிணைக்கப்பட்ட பீங்கான் கலைப் பொருள்களை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், மற்றொரு மரபார்ந்த-சமகாலத்திய கலை வடிவமான உருகிய உலோக சுவரோவியங்களை உருவாக்குவது குறித்தும் இவர்கள் பெருமையாகக் குறிப்பிடுகின்றனர்.

தேவ்ராய் கலை கிராமம், கலை மற்றும் வடிவமைப்பு கல்வி பயிலும் மாணவர்களுக்கு 4 முதல் 6 வாரங்கள் வரை திட்டப் பயிற்சி அளிக்கிறது. பெங்களூரு சிருஷ்டி வடிவமைப்புப் பள்ளி, ஜெய்ப்பூரில் உள்ள இந்திய கைவினை மற்றும் வடிவமைப்பு கழகம்,  ஊழ்ஹய்ஸ்ரீங் - இல் உள்ள ஐயுடி மாணவர்கள் இந்த அமைப்பில் பயிற்சிப் பெற்றுள்ளனர். பயிற்சிக்கு வரும் மாணவர்கள் இங்குள்ள நிபுணத்துவம் மிக்க கைவினைஞர்களிடம் கற்றுக்கொள்ளவும், அவர்களுக்கு புதுமையான வடிவமைப்பு உத்திகளை வழங்கி, அவர்களோடு இணைந்து புதுமை படைக்கவும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

மேலும், பயிற்சி பெற வருவோர், சந்தைப் பிரிவு, திரைப்படம், தொழில்நுட்பம், சில்லறை மற்றும் பொருள்காட்சி வடிவமைப்பு ஆகிய தளங்களில் பங்களிக்கவும் வாய்ப்பு உள்ளது. தேவ்ராய் கலை கிராம அமைப்பு 7 முதல் 10 நாள்கள் கொண்ட உண்டு உறைவிடப் பயிற்சிப் பட்டறையை விரைவில் தொடங்கவுள்ளது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/18/w600X390/im1.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/18/தேவ்ராய்-கலை-கிராமம்-ஒரு-புதிய-வழி-3002614.html
2998351 வார இதழ்கள் இளைஞர்மணி இணைய வெளியினிலே.. DIN DIN Tuesday, September 11, 2018 08:25 PM +0530 முக நூலிலிருந்து....

நாம் எதைப் பிரதிபலிக்கிறோமோ அதையே 
திருப்பிக் காட்டுவது கண்ணாடி மட்டுமல்ல...
முகநூலும் தான்.

- தனுஜா ஜெயராமன்


"எனக்கு ஒரு பிரச்னை' என்று ஒரு போதும் சொல்லாதீர்கள்...
பிரச்னை என்று சொன்னாலே கவலையும் பயமும்  கட்டாயம் வரும்.
"எனக்கு ஒரு சவால்'  என்று சொல்லிப் பாருங்கள்.
தைரியமும் தன்னப்பிக்கையும் தானாகவே வரும்.  

- மாரியப்பன்

 

முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், முயற்சிக்கு முக்கியத்துவம் 
அளித்தால்...
முழுமையான வெற்றி நிச்சயம்.  

- பி.ஸ்ரீனிவாசன்

 

நீ  இழுக்கும்  கோடுகளை வைத்துதான், என்னால் முடிவு செய்ய இயலும்...
உன் கைகளின் நீளத்தை.

- மானா பாஸ்கரன்

 

கட்டி வைத்தாலும்...  பறக்க வேண்டுமென்பதே கொடிகளுக்கான விதி.

- யாழினி தமிழ்வாணி

 

சுட்டுரையிலிருந்து...


அவளை நினைத்துக்
கவிதை எழுத 
கண்களை மூடினேன்...
அய்யோ... 
அப்படியே உறங்கிவிட்டேன்.

- கோபி

பெண்கள் ஸ்கூட்டிய வீட்டில் இருந்து வாசலுக்கு கொண்டுவரும்...
அழகு இருக்கே ...
அட... அட... அட...
குடிகாரன் தோத்துருவான்.

- கனவுலகவாசி


எப்ப பார்த்தாலும் உன்னைப் பத்தி பெருமையா பேசுற மாதிரி...பேசியே 
உசுப்பேத்தி விடுவான். 
அவனை  மட்டும்  நம்பாதீங்க!

- சின்ன நண்பன்


வண்டி ஓட்டும்போது
போன் பேச கஷ்டமாருக்குன்னு
ஹெட்செட் வாங்குனேன்.
அது அடிக்கடி டேமேஜ் ஆகுதுன்னு
ப்ளூடூத் ஹெட்செட் வாங்குனேன்.
அது மொபைல் சார்ஜ க்ழ்ஹ் பண்ணுதுன்னு
பவர்பேங் வாங்குனேன்.
இப்ப அத பேண்ட் பாக்கெட்ல 
வைக்க முடியலைன்னு பேக் வாங்கிருக்கேன்.
- துக்ட்விட்ஸ்


வலைதளத்திலிருந்து...

தமிழ் இலக்கியங்களில் பார்த்தால், குரங்குகள் பற்றி நிறைய குறிப்புகள் இருக்கின்றன. குரங்குகளுக்கு அவற்றின் வகைகளுக்கு ஏற்ப நிறைய பெயர்களைச் சூடி "அழகு பார்க்கிறது' தமிழ். 

கவி, கோகிலம், நாகம், பிலவங்கம், யூகம், கோடாரம், அரி, மந்தி, வலிமுகம், கடுவன், வானரம் - இவையெல்லாம், அழகர்மலை பக்கம் செல்லும் போது, வழிமறித்து நம்மை டார்ச்சர் பண்ணக்கூடிய மங்க்கீஸ்களின் தமிழ்ப் பெயர்கள். அடுத்த முறை அவற்றைச் சந்திக்கிற சமயம்... இந்தப் பெயர்களைச் சொல்லிக் கூப்பிட்டுப் பாருங்கள். கண்களைச் சுருக்கி, தலையைச் சாய்த்து... லேசாக  அவை ஒரு பிளாஷ்பேக் போனாலும்  ஆச்சர்யப்படுவதற்கில்லை!  

இதுவரைக்கும் பார்த்தது, வாழைப்பழத்துக்காகவும், இதர ஸ்நாக்ஸ் தேடியும் நம்மை அண்டும் லோக்கல் குரங்குகள். கரு மந்தி, கருங்குரங்கு என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதையும் தமிழ் விட்டு வைக்கவில்லை. காருகம், யூகம் - இது இரண்டும் கரு மந்திக்கான தமிழ் பெயர்கள். நீலகிரி, வால்பாறை வனப்பகுதிகளுக்குச் சென்றால், அங்கு ஒரு புது வித குரங்குகளை நாம் சந்திக்க முடியும். நிஜமாகவே மங்க்கி குல்லா போட்டது போல, முகமெல்லாம் பளபளவென இருக்க, தலைக்கு மேல் குபுகுபுவென முடி முளைத்திருக்கும். லங்கூர் குரங்குகள் என்று இதை கூப்பிடுகிறார்கள். 

இந்த லங்கூர்ஸ்களுக்கும் தமிழில் பெயர் இருக்கிறது, தெரிந்து கொள்ளுங்கள். அனுமன் குரங்குகள் என்று பேச்சுவழக்கில் அழைக்கப்படுகிற இந்த லங்கூர் குரங்குகளுக்கு கலை, மைம்முகன், கோலாங்கூலம், கள்வன், முசு, ஒரி என்று தமிழில் பெயர் இருக்கிறதாக்கும்.

http://poonaikutti.blogspot.com

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/11/w600X390/im11.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/11/இணைய-வெளியினிலே-2998351.html
2998349 வார இதழ்கள் இளைஞர்மணி சுருட்டி வைக்கும் "டேப்'! v DIN Tuesday, September 11, 2018 08:20 PM +0530 செல்போன் அறிமுகமாகியபோது சிறிய வடிவிலான போன்களுக்கே மவுசும், விலையும் அதிகமாக இருந்தது. ஆனால் ஸ்மார்ட்போன்கள் வந்தபிறகு பெரிய திரை கொண்ட போன்களுக்கு மவுசு அதிகரித்தது.

எனினும், செல்போன்கள் அறிமுகமாகி சுமார் 20 ஆண்டுகளாகியும், அதன் திரை சதுரமாகத் தான் உள்ளது. இதனால் பெரிய ஸ்மார்ட் போன்களை சட்டைப் பாக்கெட்டுகளில் வைத்து கொண்டு வெளியே செல்வது சிரமமாக உள்ளது. 

இந்தநிலையில்தான், கனடா நாட்டின் குயின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சுருட்டி வைக்கும் டேப்லெட்டைக் கண்டுபிடித்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர்.

பழங்காலத்தில் வரைபடங்கள், கடிதங்கள் ஆகியவற்றைச் சுருட்டி வைக்கும் உருளை வடிவம்போல், இந்த சுருட்டி வைக்கும் டேப்லெட் உருவாக்கப்பட்டுள்ளது. உருளையில் உள்ள தொடுதிரைக்கு இரு புறங்களிலும் மேலும், கீழும் சுழற்றும் பொத்தான் உள்ளது. இதை வைத்து நாம் எப்படி தொடுதிரையில் உள்ள விவரங்களைச் சாதாரண டேப்லேட்டில் மேலும், கீழும் விரலை வைத்து நகர்த்தி பார்ப்பதைப்போல் சுழற்றியே பார்த்து கொள்ளலாம்.

உருளை வடிவில் உள்ள  இந்த தொடுதிரையை, நீட்டமாக்கி சாதாரண டேப்லெட்டைப் போலவும் பயன்படுத்தலாம் என்பதுதான் இதன் சிறப்பம்சம். பின்னர் மீண்டும் உருளை வடிவத்தில் சுருட்டியும் வைத்துவிடலாம். 

அதுமட்டுமன்றி, சுழலும் வடிவிலேயே இதை ஸ்மார்ட்போனாகவும் பேசவும் பயன்படுத்தலாம். இதன் நடுவே உள்ள பகுதியில் உள்ள பேட்டரியும், வன்பொருளும்தான் இதை இயக்குகிறது. 7.5 அங்குலம் அளவும், "2கே' தெளிவும் இந்த சுருட்டி வைக்கும் டேப்லெட்டின் தொடுதிரையில் உள்ளது.

"இந்த சுருட்டி வைக்கும்  டேப்லெட்டை பேனா வைப்போல் சிறிதாக்கி சட்டைப் பையில் வைத்து கொள்ளும் அளவுக்கு சுருக்க வேண்டும் என்பதே எங்கள் அடுத்த குறிக்கோள்' என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் உலகின் முதல் சுருட்டி வைக்கும் டேப்லெட்டைக் கண்டுபிடித்த குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் வெர்ட்டிகேல்.

சிறிய வடிவில் இருந்து பெரிய வடிவுக்கு வந்த ஸ்மார்ட்போன், வருங்காலங்களில் மீண்டும் அதன் பழைய வடிவத்துக்கே திரும்புமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/11/w600X390/im12.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/11/சுருட்டி-வைக்கும்-டேப்-2998349.html
2998348 வார இதழ்கள் இளைஞர்மணி சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! - 11  - தா.நெடுஞ்செழியன் DIN Tuesday, September 11, 2018 08:18 PM +0530 மகாராஷ்டிராவில்  ஜல்கான் அருகிலுள்ள மாஸாவத் என்ற கிராமத்தில்   8,400 மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.  இந்தப் பகுதியில் கிர்னா நதி ஓடுகிறது. எனினும்  அந்தப் பகுதியில் உள்ள தண்ணீர் உப்புத் தண்ணீராக உள்ளது. இதனால்  இந்தப் பகுதியில் வாழும்  குழந்தைகளுக்கு  வயிற்றுவலி வந்தது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் சிறுநீரகக் கற்கள் ஏற்பட்டு சிறுநீரகம் பழதடையும் நிலை வந்துவிட்டது.  இதனால் மக்களுக்கு மருத்துவச் செலவுகள் அதிகமாகின.   அவர்கள்  சம்பாதித்தது  எல்லாம் மருத்துவச் செலவுக்கே போதுமானதாக இல்லை. தண்ணீரில் எவ்வளவு மாசு இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம்  வரையறை செய்துள்ளதோ அதைப் போல இரண்டு மடங்கு மாசு இந்தப் பகுதியில் கிடைக்கும் குடிநீரில்   உள்ளது.   சுத்தமான குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அளவுக்கு இந்தப் பகுதியில் வாழும்  மக்கள் வசதியானவர்கள் அல்ல.  

இதைக் கவனித்த  டாடா சென்டர் ஃபார் டெக்னாலஜி  அண்ட் டிசைன் ( Tata Center for Technology and Design) என்ற நிறுவனம், ஐஐடி- பாம்பே, எம்ஐடி இவர்களுடன் சேர்ந்து ஒரு மக்களுக்கு நன்மை பயக்கும் செயலைச் செய்திருக்கிறது. 

இந்தப் பகுதியில் உள்ள கிராம மக்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக தங்கள் வீடுகளில் வாட்டர் ஃபில்ட்டர்களை வாங்கி வைத்துக் கொள்ளும்  அளவுக்கு வசதியில்லாதவர்கள். எனவே    அந்த கிராமத்துக்குத் தேவையான குடிநீரை சூரிய ஒளி  சக்தியால் இயங்கக் கூடிய - குறைந்த செலவு பிடிக்கக்  கூடிய- முறையில் தயார் செய்து,  ஊருக்குப் பொதுவான இடத்தில்   ஒரு ரூபாய்க்கு ஒரு குடம் தண்ணீர்  கிடைக்கும்படி ஏற்பாடு செய்துள்ளார்கள்.    மாணவர்கள் தாங்கள் கற்கும் கல்வியின் வாயிலாக  மனித சமூகத்துக்கு எவ்வாறு உதவி செய்வது என்று ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்துச்  செயல்பட     டாடா சென்டர் ஃபார் டெக்னாலஜி  அண்ட் டிசைன்  நிறுவனம் மூலமாக,  ஐஐடி- பாம்பே, எம்ஐடி மாணவர்களுக்கு  ஊக்கமூட்டியிருக்கிறது. 

இதேபோன்று  ஐஐடி - கான்பூரைச் சேர்ந்த மாணவர்கள்,  எரிவாயு பயன்படுத்தக் கூடிய  இடங்களில்  அது  லீக் ஆகி காற்றில் கலந்துவிட்டால், அதைக் கண்டுபிடிக்கக் கூடிய  INTELLIGENT LP GAS DETECTOR  என்ற கருவியை உருவாக்கியிருக்கிறார்கள்.  எரிவாயு காற்றில் கலப்பதை அளப்பதற்கு  ஓர் அளவீடு வைத்திருக்கிறார்கள்.

PARTS PER MILLION  -  என்ற அந்த அளவீட்டின்படி, அனுமதிக்கப்பட்ட அளவை விட எரிவாயுவின் அளவு காற்றில் கலந்து, அதன் எண்ணிக்கை அதிகமாகும்போது உடனடியாக அலாரம்  அடித்து,  எரிவாயுவைப் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை செய்யும். அது மட்டுமல்ல, எரிவாயு வெளியேறும் அளவு ஒரே சீராக இல்லாமல்,  வேறுபட்ட பிபிஎம் லெவல்ஸ் வரக் கூடியதாக இருக்கும்போதும்  இந்த அலாரம் அடிக்கும்.  எரிவாயு வெளியேறும்போது ஏற்படும் அழுத்தம் அதிகமாகும்போதும்  அல்லது இயல்பைவிடக் குறையும்போதும்,   எரிவாயு வெளியேறுவதை இந்தக் கருவி நிறுத்திவிடும்.   ஒரே சீரான சமநிலையான அளவில் எரிவாயு  வெளிவரும் தன்மையை இந்தக் கருவி  ஏற்படுத்தும்.    அதேபோன்று  எரிவாயுவைப் பயன்படுத்தும் போது ஏற்படும் வெப்பநிலையையும் இந்தக் கருவி கண்காணிக்கும்.   மேலும் வெப்பநிலையைச்  சீராக அமைத்துக் கொடுக்கும்.

பாதுகாப்பு எச்சரிக்கையையும் தரும். எவ்வளவு எரிவாயு பயன்படுத்தப்பட்டிருக்கிறது... இன்னும் எவ்வளவு இருக்கிறது என்று    இந்தக் கருவி அளந்து சொல்லும்.   அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உள்ள எரிவாயு தொட்டிகளில்  இதைப் பொருத்திக் கொள்ளலாம்.  இவ்வாறு மக்களுக்குப் பயன்படும்வகையில்  இதைப் போன்ற எண்ணற்ற கண்டுபிடிப்புகள் ஆக்கப்பூர்வமாக நிகழ்ந்து வருகின்றன. அதற்கு கல்வி நிறுவனங்கள் உதவி வருகின்றன. 

சமூக நலன் சார்ந்த  மாறுதல்கள் கல்லூரிகளில் நிறைய நிகழ வேண்டும் என்பதற்கு ஓர் உதாரணமாக இதைச் சொல்லலாம்.   அருண்ஷோரி ராஜ்ய சபா எம்பியாக இருந்தபோது  நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதியின் வளர்ச்சிக்கென ஒதுக்கப்படும் பணத்தை -   23  கோடி ரூபாயை -  ஐஐடி கான்பூரில்  centre for environment sciences and engineering  துறையின் வளர்ச்சிக்குக் கொடுத்தார்.  அந்தத் துறைக்கெனவே தனியான கட்டடம்  ஒன்று அதை  வைத்துக் கட்டப்பட்டது.

இந்த கட்டடம் டெரி க்ரிஹா கிரீன் பில்டிங் சர்டிபிகேஷனில்  ஃபைவ் ஸ்டார் வாங்கியுள்ளது.  இந்த கட்டடம் கட்டும்போது, அந்தப் பகுதியில் இருந்த  மரங்கள்  எவற்றையும் வெட்டாமல்,  மரங்கள் இருக்கும் இடம் போக மீதி உள்ள

இடங்களில் மட்டுமே  கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவ்வாறு கட்டப்பட்டுள்ள முதல் கல்விநிறுவனம் இதுவாகும்.  

இந்த கட்டடம் எனர்ஜி எஃபிஷியன்சி கட்டடமாகும்.  நிறைய பசுமை வழிமுறைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். இன்சுலேட்டடு வால்ஸ் பண்ணியிருக்கிறார்கள். ஷீலிங் அண்ட் விண்டோ கிளாஸ் பண்ணியிருக்கிறார்கள். ரிஃப்ளைக்டிவ் டெரஸ்,  ரெயின் வாட்டர் ஹார்வெஸ்டிங், வாட்டர் எஃபிஸியன்ஸி முறைகளைக் கடைப்பிடித்து இருக்கிறார்கள். அந்த பில்டிங்கில் உள்ள டாய்லெட்டில் கூட தண்ணீரை எவ்வாறு சேமிப்பது என்று திட்டமிட்டிருக்கிறார்கள்.  ஈகோ ஃபிரண்ட்லி ரெப்ரிஜிரியேஷன் ஏர் கண்டிஷன் அமைத்துள்ளார்கள்.   சூரிய ஒளி ஆற்றலை வெப்ப ஆற்றலாகவும், ஒளி ஆற்றலாகவும் மாற்றி பயன்படுத்தியிருக்கிறார்கள்.    


ஆனால் இதற்கு மாறாக,  நிறைய மரங்களை வெட்டி,  மரங்கள் வெட்டப்பட்ட அந்த இடத்தில்தான்  பல்கலைக்கழகங்கள்,  கல்லூரிகளைக்     கட்டியிருக்கிறார்கள்.  விவசாயம்  செய்யும் இடங்களை அழித்துத்தான் அந்த இடத்தில் கல்லூரிகளைக் கட்டியிருக்கிறார்கள். 

ஆனால்,  இதற்கு  நேர் எதிராக ஐஐடி - கான்பூரில்  கிரீன் பில்டிங்கை அமைத்திருக்கிறார்கள்.  எது சரியானது என்பதை எண்ணற்ற மாணவர்களுக்குத் தெரியும்படி செய்திருக்கிறார்கள்.  

உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சிகள் கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து  இந்த கல்விநிறுவனத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.  சுற்றுச்சூழலியலில் உயர் கல்வி மாணவர்கள் ஆராய்ச்சி செய்வதற்கு இந்த கல்வி மையம் தொடங்கப்பட்டிருக்கிறது.  இங்கே பல வெற்றிகரமான ஆராய்ச்சிகள் செய்து வருகிறார்கள். என்விரான்மென்டல் ரெமெடியேஷன் டெக்னாலஜி,  பயாலஜி அண்ட் ஹெல்த், அட்மாஸ்பியரிக் பார்ட்டிக்கில் டெக்னாலஜி,  நானோ பயோ என்விரான்மென்டல் டெக்னாலஜி, க்ரீன் எனர்ஜி (புரடக்ஷன், ஸ்டோரேஜ், கன்வெர்ஷன் துறைகளில் ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறார்கள்.

இம்மாதிரியான ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொண்டால் அதனுடைய பலன்கள்,   சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் காரணியாக வருங்காலத்தில்   அமையும் என்பதில் சந்தேகமில்லை.

வேலைக்காக கல்வி என்ற நிலையில்  இருந்து மாறுபட்டு,  சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும் நோக்கில் மாணவர்களை ஆராய்ச்சியில் ஈடுபடுத்த ஒரு கல்விநிறுவனம் நினைப்பதும், அந்த கல்வி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது தொகுதி மேம்பாட்டு நிதி முழுவதையும் கொடுத்ததும்,  நமது நாட்டில்தான்  நடைபெறுகிறது என்பது  ஓர் ஆச்சரியமான உண்மை.

(தொடரும்)

கட்டுரையாசிரியர்: சமூக கல்வி ஆர்வலர் 

www.indiacollegefinder.org

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/11/w600X390/im10.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/11/சரியான-பார்வை-சரியான-வழி-சரியான-செயல்---11-2998348.html
2998347 வார இதழ்கள் இளைஞர்மணி நீ... நான்... நிஜம்! -35: எனக்காக... எல்லாம் எனக்காக! சுகி. சிவம் DIN Tuesday, September 11, 2018 08:03 PM +0530 "கடுகு சிறுத்தாலும் காரம் குறையவில்லை' என்றொரு பழமொழி. "கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி' என்றொரு பாராட்டுப் பா உள்ளது. இவையெல்லாம் அளவில் சிறுத்த கடுகை அடையாளப்படுத்துகின்றன. ஆனால் மனிதரிலும் கடுகு மனிதர் உண்டு என்று தாளித்து எடுத்தவர் பாவேந்தர் பாரதிதாசன். தன் பெண்டு, தன்பிள்ளை, தன் சம்பாத்யம் என்று வாழும் மனம் சிறுத்த மனிதரை "சின்னதொரு கடுகுபோல் உள்ளம் கொண்டோன்.. தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்' என்று பழித்துரைக்கிறார். குடும்பம் தாண்டி, தன் ஊர், தன் ஜாதி, தன் கூட்டம் மட்டும் சீராட்டி மற்ற ஜாதி, மக்களை மட்டம் தட்டி வைக்கும் மனோபாவம் உள்ள சிறுமனுசர், சிற்றதிகாரக் கேடர் சிலர் உண்டு. அவர்களை "கடுகுக்கு நேர் மூத்த துவரை உள்ளம்' என்று கண்டிக்கிறார் பாரதிதாசன். கொஞ்சம் பெரிய மனசுடன் இருக்கிறவரை, "தொன்னையுள்ளம்' என்று கிண்டல் செய்கிறார். 

அப்படியானால் யார் சிறந்த மனிதர்? சிறந்த தலைவர்? தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்வோர். இப்படிப்பட்டவர் உண்டா.. என்று கேள்வி எழுப்பினால் உண்டு என்பதே பதில். இந்தியப் பழங்கதைகளில் ஓர் அருமையான கதை.  ஒரு சிறு குடிசை... ஒரு தாய்  குழந்தை ஒன்றை இடுப்பில் சுமந்தபடி கொஞ்சம் வளர்ந்த பிள்ளை ஒன்றுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருக்கிறாள்.  சாலையில் பெருங்கூச்சல் கேட்கிறது. ஒரு கொடுங்கோல் மன்னன், தன் கொள்ளையர் படையுடன்  ஈவு இரக்கமின்றி, எதிர்ப்பட்ட எல்லாரையும் வெட்டிக் கொன்று, வெறிபிடித்தவனாய் வருகிறான்... இதைக் கேட்ட மக்கள் ஓடி ஒளிகிறார்கள். பதுங்கி ஒதுங்குகிறார்கள். அச்சமடைந்த தாய், ஒக்கலில் பிள்ளையை ஒடுக்கியபடி, உணவருந்திய பிள்ளையை இழுத்துக் கொண்டு ஓடினாள். ஓரெல்லைக்கு மேல், இரண்டையும் காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்து ஒக்கலில் இருந்த பிள்ளையை வீசிவிட்டு பக்கலில் வந்த பிள்ளையை எடுத்துக் கொண்டு, ஓடி ஒளிந்தாள்.

இரண்டு பிள்ளைகளுமே ஒரு தாய்க்குச் சமம் தானே.. அப்படியிருக்க ஒன்றை வீசி, ஒன்றைத் தேர்ந்தெடுக்க எப்படி ஒரு தாய்க்கு மனம் வரும் என்று திகைத்த கொடுங்கோலன், தாயைக் கைது செய்தான். ""இரண்டு பிள்ளைகளும் உன் பிள்ளைகளாய் இருக்க எந்த அடிப்படையில் ஒன்றை இழக்க முடிவெடுத்தாய்?'' என்று உறுமினான். தாயோ விழிநீரைத் துடைத்தபடி, ""ஐயா.. ஒன்றுதான் என் பிள்ளை.. மற்றொன்று பக்கத்து வீட்டுப் பெண்மணி பார்த்துக் கொள் என்று  அடைக்கலம் கொடுத்துப்போன பசுந்தளிர்'' என்றாள். ""ஓ.. உன் பிள்ளையைக் காப்பாற்றி ஊரான் பிள்ளையை வீசினாயா?'' என்று கொடூரன் உறும, தாயோ கதறியபடி ,""என் பிள்ளையைத் தான் வீசினேன். அது என்  உடைமை.  இழக்க எனக்கு உரிமை உண்டு. ஆனால் நம்பி அடைக்கலம் கொடுத்தவள் வந்து கேட்டால் தரவேண்டிய தர்மம் கருதி அடுத்தவள் பிள்ளையைத் தான் மீட்டேன்''  என்று அழுதாள். தர்மத்தில் நாட்டம் உடைய இந்த மக்களை நாம் அடக்கியாள முடியாது என்று புலம்பியபடி கொடுங்கோலன் படையெடுப்பை நிறுத்திக் கொண்டான் என்று கதை முடிகிறது. இவன் செங்கிஸ்கான் என்றும் தைமூர் என்றும் சொல்லுகிறார்கள்.. ஆனால் பெண் இந்தியத் தாய் என்று பேசுகிறார்கள். 

கற்பனைக் கதை என்பவரும் உண்டு. 

எனக்கு, நபர்களைப் பற்றியோ, நாட்டைப் பற்றியோ உயர்வு தாழ்வு கற்பிக்க விருப்பமில்லை. கருத்துதான் முக்கியம். "தான், தன் குடும்பம் என்பதைத் தொலைத்து, பிறர்க்கென வாழ்தலே தலையாய வாழ்வு' என்கிறேன். எந்த நாடு, எந்த மதம், எதுவாக இருந்தாலும், பிறர்க்கென வாழும் மாந்தரை, அன்னை தெரசா என்றே ஆராதிக்கிறேன். இராமாயணத்திலே மூன்று அன்னையர் வரையப்படுகின்றனர். தன்மகன் பரதன் அரசாள, கோசலை மகன் காடு போகட்டும் என்று சொல்லும், சுடுமனம் கொண்ட கைகேயி ஒருத்தி.. கைகேயி மகனைக் குறைவாகவே கருதாமல் தன் மகன் இராமனிடமே,""நிறை குணத்தவன். நின்னினும் நல்லன்'' என்று பாராட்டிக் கண்ணீர் விட்டவள் இராமன் தாய் கோசலை. ஆனால் எவளோ பெற்ற இராமனைக் காக்க, தான் பெற்ற இலக்குவனை ""இராமன் பின்னே போ.. தம்பி என்னும் படியன்று. அடியாரின் ஏவல் செய்தி'' என்று ""வேலைக்காரனாகப் போ'' என்கிற சுமத்திரை, பெண்மையின் உச்சாணி.. தாய்மையின் உன்னதம். ஒருபடி மேலே போய் ""மன்னும் நகர்க்கு அவன் வந்திடில் வா..  அப்படி நடக்காவிட்டால் நீ உயிரை முன்னம் முடி'' என்றாளே அவள்தான் தெரசாவின் தாய்! சுமத்திரைதான் அன்னை தெரசாவைச் சுமந்த அடி வயிறு என்று மதம் கடந்து புரிந்து கொள்ள வேண்டும்.
பிறர் பிள்ளைகளைத் தன் பிள்ளைகளாக நினைத்தல், அதனையும் விழுங்கி, தன் பிள்ளைகளைவிட உயர்வாக நினைத்தல்  என்கிற விழுமியங்களை விழுங்கி விட்ட கொடுங்காலம் இந்தக் கலிகாலம். கொடுமை சொல்லட்டுமா? தேசியக் குற்ற ஆவணக்காப்பகம் அளிக்கும் தகவலின்படி, நம்மைச் சுற்றி வாழும் குழந்தைகளில், எட்டு நிமிடத்திற்கு ஒரு குழந்தை, பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்படுகிறது என்பதைப் படித்தபோது பதறிப் போனேன். பிஞ்சுப் பிள்ளைகளைப் பாழாக்க, பலியாக்க எப்படி இந்தப் பாவிகளுக்கு மனம் வருகிறது? அது யார் பிள்ளையாக இருந்தால் என்ன? குழந்தை கடவுளின் மலிவுப் பதிப்பல்லவா?

இதைவிடக் கொடுமை "சைல்டு செக்ஸ்டூரிஸம்' என்கிற செய்தி, "பீடோ ஃபைலிக்' என்பது ஒருவகை மனநோய். குழந்தைகளை வன்புணர்ச்சிக்காட்படுத்தும் காமுகர்கள் இவர்கள். கோவாவில் இன்று இந்த சைல்டுசெக்ஸ் டூரிஸம் வளர்ந்து வருவதாகத் தகவல். பத்து தொடங்கி பதினைந்து நிறையாத பாலகர்களை "எஸ்கார்ட்' என்ற பெயரில் தங்களுடன் தங்க வைத்து, ஆசையைத் தீர்த்துக் கொள்ளும் அற்பர்கள் உலகெங்கும் பெருகி வருகிறார்கள். பிறர்க்கென வாழ்தல் என்ற தர்மம் சுருங்கி, பிறரைப் பாழாக்கி வாழ்தல் என்ற அதர்மம் பல வகையிலும் பெருகி வருகிறது.

"வாழ்க்கை என்பது  தனக்காக.. தனக்காக மட்டுமே...'  என்ற தத்துவம் இளைய மனங்களில் விதைக்கப்பட்டு விட்டது. ""உலகம் பிறந்தது எனக்காக.. ஓடும் நதிகளும் எனக்காக'' என்கிற கவிதையின் கற்பனை அழகு புரியாமல் எல்லாமே தனக்காக என்கிற கீழ்மையான எண்ணம் இன்று கொடிகட்டிப் பறக்கிறது. சுயநல, சுய குடும்ப, சுய ஜாதி,  சுய கும்பல் மட்டுமே இன்று பிரதானமாகி விட்டது. இருபத்தி நான்கு மணி நேரமும்  "உன்னை அழித்து ஊரை ஒழித்து என்னை வளர்ப்பது எப்படி' என்கிற வெறி அரசியல் வியாதிகளால் முன்னேற்றம் என்று அர்த்தப்படுத்தப்பட்டு விட்டது. "ஆற்றோரம் மணல் எடுத்து.. அழகழகா வீடுகட்டி.. தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராகக் குடியிருப்போம்' என்கிற சந்தோஷமான எளிய வாழ்க்கை, சிலரது சாம்ராஜ்ய வெறியால், நாசமாகி விட்டது. ஆற்றோரமாகவா மணல் எடுக்கிறார்கள். ஆற்றின் அடிவயிறு கிழித்து, ஆயிரம் ஆயிரம் லாரிகள் மணல் எடுத்து.. ஆற்றில் கட்டிய பாலங்களே இடிந்து போகும்படியல்லவா மணல் எடுக்கிறார்கள். மண்ணோடு மண்ணாய்ப் போகப் போகிற நாம், மற்றவரை வாழ வைக்காமல், நாம் மட்டுமே பெரிய மனிதனாகி, பெரிய பணக்காரனாகி, பூதாகரமாக வளர்ந்து என்ன செய்யப் போகிறோம். நம் ஒவ்வொரு செயலும் பிறர்க்கு நலன் செய்யுமா என்று இவர்கள் யோசித்துச் செய்ய வேண்டாமா? அப்படி வாழ்ந்த ஓர் அற்புதரைப் பற்றி. சிலம்புச் செல்வர். ம.பொ.சி அவர்கள் சொன்ன செய்தி சொல்கிறேன்.  ""ஒரு நாள் - (தேதி நினைவில்லை) இரவு எட்டு மணிக்கு வெளியில் எங்கோ சென்று விட்டு என் வீடு வந்து சேர்ந்தேன். அப்போது என் வீட்டில் மின்சார விளக்குகள் இல்லை. அதனால் கூடம் இருட்டாக இருந்தது. நான் வீட்டிற்குள் நுழைந்ததும், துருக்கிக் குல்லாயைத் தலையில் அணிந்து லுங்கி வேட்டியைக் கட்டிக் கொண்டிருந்த சாயபு ஒருவர் கூடத்தில் - சரியாக நடுவிடத்தில் - அமர்ந்திருக்கக் கண்டேன். இந்துக்கள் வீட்டில் நடுவீடு என்பது இலைபடைத்துச் சாமி கும்பிடும் இடமாகும். அந்த இடத்தில் ஒரு முஸ்லிம் உரிமையோடு போய்க் குந்திக் கொண்டிருந்தது எனக்கு வியப்பைத் தந்தது.

கொஞ்சம் அருவருப்புடன் அந்த முஸ்லிம் நபரைப் பார்த்து "யாரது?' என்றேன் மெல்லியகுரலில். "நான் தான் ஜீவானந்தம்' என்று பதில் வந்தது. அதைக் கேட்ட எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. காரணம், அரசினருக்கு விரோதியாகத் தலைமறைவாக இருக்கும் கம்யூனிஸ்ட் ஒருவர் என் வீட்டில் அடைக்கலமாக இருப்பது நான் விரும்பாததுதான். அப்போது நான் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர். சர்வபரித் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் ஜீவாவை, அவரது பண்பின்பால் ஈர்க்கப்பட்ட நான், என்னை நம்பி வீட்டில் அடைக்கலம் புகுந்தவரை வெளியே போகச் சொல்வதெப்படி?

என் வீட்டுப் புழக்கடைக்கு அழைத்துச் சென்றேன். வீட்டின் கூடத்திலேயே இருட்டென்றால் புழக்கடையில் இருட்டைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? இவ்வளவு அபாயகரமான நிலையில் ஜீவானந்தம் என்னைச் சந்திக்க வந்தது எதற்காகத் தெரியுமா? பொருள் உதவி கோரியோ, காங்கிரசில் எனக்கு உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, தான் விடுதலை செய்யப்பட வேண்டுமென்றோ என்னை நாடி வரவில்லை. திருவிதாங்கூர் தமிழர் விடுதலைக் கிளர்ச்சியை இன்னும் தீவிரமாக நடத்த வேண்டும். திராவிடர் கழகம், இன்னும் வெளியில் உள்ள கம்யூனிஸ்டுகள் ஆகியோருடைய உதவிகளையும் நான் பெற வேண்டும் என்று எனக்குச் சொல்லும் பொருட்டுத்தான் ஜீவானந்தம் என்னை நாடி வந்தார். அதனால் தான்  பத்துகாசு சொத்து சேர்க்காத ஜீவாவை "இந்தியாவின் சொத்து' என்றார் மகாத்மா காந்தி.  

(தொடரும்)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/11/w600X390/im7.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/11/நீ-நான்-நிஜம்--35-எனக்காக-எல்லாம்-எனக்காக-2998347.html
2998346 வார இதழ்கள் இளைஞர்மணி மரைன் பயாலஜி பல்கலைக்கழகங்கள்! - எம்.அருண்குமார் DIN Tuesday, September 11, 2018 08:00 PM +0530 பயாலஜி என்பது உயிரினங்கள் சம்பந்தமான படிப்பாகும்.  அதில் மரைன்  பயாலஜி என்பது கடல்வாழ் உயிரினங்கள் சம்பந்தமான படிப்பாகும்.    சிறிய செடிகள், மீன்கள் முதல் பெரிய திமிங்கலம் வரையில் கடலில் வாழும் உயிரினங்கள் குறித்து விரிவாக தெரிந்து கொள்வதற்கு மரைன்  பயாலஜி படிப்பு உதவியாக உள்ளது.  மரைன்  பயலாஜி படித்தவர் மரைன்  பயாலஜிஸ்ட் என்று அழைக்கப்படுகிறார்.  

இதில் பட்டயப்படிப்பு தொடங்கி இளங்கலை, முதுகலை, எம்.பில், பி.எச்டி ஆகிய படிப்புகள் உள்ளன.  இதைப் படித்தவர்கள் அந்த படிப்பு சம்பந்தமான கல்லூரி, பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர், பேராசிரியராகும் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.  அதோடு மட்டுமல்லாமல் ஆராய்ச்சியாளராகவும் பணிபுரியவும் வாய்ப்புகள் உள்ளன. 

மேலும் கடல் வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கும் அமைப்புகள், கடல் வாழ் உயிரினங்களைக் கொண்டு கண்காட்சி நடத்தும் நிறுவனங்களிலும்  வேலை வாய்ப்புகள் உள்ளன.

மரைன் பயாலஜி படிப்புகளை நடத்தும் பல்கலைக்கழகங்கள் :

Cochin University of Science and Technology - http://www.cusat.ac.in/research_activities.php
Andhra University  -http://andhrauniversity.edu.in/coursesoff.html
Annamalai University - http://annamalaiuniversity.ac.in/T00_info.php?fc=T00
Pondicherry University - http://www.pondiuni.edu.in/department/department-oceanstudies-and-marine-biology Veer Narmad South Gujarat University -  http://www.vnsgu.ac.in/

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/11/w600X390/im8.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/11/மரைன்-பயாலஜி-பல்கலைக்கழகங்கள்-2998346.html
2998345 வார இதழ்கள் இளைஞர்மணி வேலை... வேலை... வேலை... இரா.வெங்கடேசன் DIN Tuesday, September 11, 2018 07:58 PM +0530
திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை 

பதவி: Central Govt Apprentices Training

காலியிடங்கள்: 529

தகுதி: 8, 10 மற்றும் பிளஸ் டூ தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 13.10.2018 தேதியின்படி 18 முதல் 27வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி/ எஸ்டி/ஓபிசி பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு. 

தேர்வு செய்யப்படும் முறை:  நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.bheltry.co.in என்ற வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய: https://www.bheltry.co.in/tms/app_pro/AppCircular.pdf என்ற வலைதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 13.09.2018கேந்திரிய வித்யாலயா பள்ளியில்   வேலை


பதவி:  Principal (Group-A) - 76 

பதவி: Vice-Principal (Group-A) - 220 

பதவி: Post Graduate Teachers (PGTs) (Group-8) - 592 
 
பதவி: Trained Graduate Teachers (TGTs) (Group-8) - 1900 

பதவி: Primary Teacher (Group-8) - 5300 

வயது வரம்பு: 30.09.2018 தேதியின்படி கணக்கிடப்படும். Principal  பதவிக்கு  35 வயதிலிருந்து 50 வயதுக்குள்ளும்,  Vice-Principal பதவிக்கு  35 வயதிலிருந்து 45 வயதுக்குள்ளும்,  Post Graduate Teachers பதவிக்கு அதிக பட்சம் 40 வயதுக்குள்ளும்,   TRAINED GRADUATE  பதவிக்கு அதிக பட்சம் 35 வயதுக்குள்ளும், PRIMARY TEACHER  பதவிக்கு அதிக பட்சம் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

தகுதி: ஹிந்தி, ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், வரலாறு, புவியியல், வணிகவியல், பொருளாதாரம், கணினி அறிவியல், சமஸ்கிருதம், இசை போன்ற துறையில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்று பி.எட் முடித்தவர்கள், ஆசிரியர் பயிற்சி (டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: ww.kvsrochennai.tn.nic.in

என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: http://kvsrochennai.tn.nic.in/files/English%20Advertisement.pdf என்ற வலைதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 13.09.2018

 

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் வேலை

பதவி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 48 (மாறுதலுக்குட்பட்டது)

தகுதி: குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் போதுமான தமிழ் அறிவு பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் பிற வகையினருக்கு வயது உச்சவரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்கள் மெரிட் லிஸ்ட் தயாரிக்கப்பட்டு அதனடிப்படையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை சென்னையில் மாற்றத்தக்க வகையில் The Secretary, TNCWWB' என்ற பெயருக்கு வங்கி வரைவோலையாக எடுத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் அல்லது நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: http://www.labour.tn.gov.in வலை தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் புகைப்படம் ஒட்டி, தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: செயலாளர், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், 8, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600 034

மேலும் விவரங்கள் அறிய: http://www.labour.tn.gov.in/Labour/recruitment/notification.pdf  என்ற வலைதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.09.2018


புதுச்சேரி காவல்துறையில் வேலை 

பதவி: Police Constable

காலியிடங்கள்: 390

தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 22.09.2018 தேதியின்படி 18 வயதிலிருந்து  22 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எம்பிசி, ஓபிசி, இபிசி, பிசிம், பிடி பிரிவினருக்கு  உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு. 

தேர்வு நடைபெறும் இடம்: புதுச்சேரிதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.police.pondicherry.gov.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய:  www.police.pondicherry.gov.in என்ற வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.09.2018

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/11/w600X390/im9.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/11/வேலை-வேலை-வேலை-2998345.html
2998343 வார இதழ்கள் இளைஞர்மணி ஐந்து நாடுகளும் ஐந்து படிப்புகளும்! - எம்.அருண்குமார் DIN Tuesday, September 11, 2018 07:41 PM +0530
உலகில் உள்ள நாடுகளில் 5 நாடுகளில் 5 படிப்புகள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றன. குறிப்பிட்ட சில நாடுகளில் குறிப்பிட்ட சில படிப்புகள் பிரசித்தி பெற்று திகழ்கின்றன.  இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வெளிநாடுகளுக்கு மாணவர்கள் கல்வி கற்க செல்கின்றனர்.  அதே போல வெளிநாட்டினரும் கல்வி கற்க இந்தியாவிற்கு வருகின்றனர்.   

இத்தகைய சூழ்நிலையில் முக்கிய 5 வெளி நாடுகளில் 5 முக்கிய படிப்புகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.  போட்டோகிராஃபி படிப்புக்கு சிங்கப்பூர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.  போட்டோகிராஃபி படிக்க விரும்புகிறவர்கள் சிங்கப்பூர் செல்லலாம். 

ஜெர்மனியில் அர்பன் பிளானிங் (நகர்புற திட்டமிடல்) குறித்த படிப்பு சிறப்பு பெற்றுள்ளது.  அதாவது கட்டடக் கலை சம்பந்தமான படிப்புகள் இங்கு சிறந்த முறையில் கற்றுத் தருவதாக கூறப்படுகிறது. 

டான்ஸ் தெரஃபி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பிரசித்தி பெற்றுள்ளது.   அமெரிக்காவில் டான்ஸ் தெரபி முக்கிய தொழிலாக வளர்ந்து வருகிறது. அதனால் அங்கு டான்ஸ் தெரஃபி சம்பந்தமான படிப்புக்கு மாணவர்கள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். 

ஃபோரன்சிக் சயன்ஸ் டெக்னிஷியன் (தடய அறிவியல்) குறித்த படிப்பு ஆஸ்திரேலியாவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.   குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளைக் கண்டறிவதற்கு இத்துறை தொழில் நுட்பம் தெரிந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கின்றது.  அதனால் ஆஸ்திரேலியாவில் இந்த படிப்பு சம்பந்தமான கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்து படிக்கின்றனர். 

நிதி சம்பந்தமான ஆலோசனை வழங்கும் பைனான்சியல் கன்சல்டன்ட் (நிதி ஆலோசகர்) ஆக வேண்டுமானால் இங்கிலாந்து நாட்டில் நடத்தப்படும் பைனான்சியல் கன்சல்டன்ட் படிப்பில் சேர்ந்து பயிலலாம். இந்தப் படிப்பு அங்கு பிரசித்தி பெற்றுள்ளது. நிதி மேலாண்மை சம்பந்தமான அனைத்து தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டியது நிதி ஆலோசகரின் முக்கிய பணியாகும்.  தன்னை நாடி ஆலோசனை பெற வருபவர்களுக்கு நிதி ஆலோசகர்கள் சரியான தீர்வை வழங்க வேண்டியது. அனைவருக்கும் நிதி என்பது முக்கியம். அதனால் நிதி மேலாண்மை என்பது அனைவருக்கும் தேவைப்படும் ஒன்றாக உள்ளது.  அதனால் நிதி ஆலோசகராக வேண்டுமானால் இங்கிலாந்தில் நடத்தப்படும் நிதி ஆலோசகருக்கான படிப்பில் சேர்ந்து படிக்கலாம். 

இவ்வாறு 5 நாடுகளில் இத்தகைய 5 படிப்புகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதில் எந்த படிப்பு விருப்பமானதோ அதை அந்த நாட்டில் சென்று படிக்கலாம்.  

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/11/w600X390/im6.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/11/ஐந்து-நாடுகளும்-ஐந்து-படிப்புகளும்-2998343.html
2998342 வார இதழ்கள் இளைஞர்மணி வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 156 ஆர்.அபிலாஷ் DIN Tuesday, September 11, 2018 07:35 PM +0530 ஹஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் மருத்துவருக்கான காத்திருப்போர் அறையில் இருக்கிறார்கள். அவர்களுடன் அங்கே ஒரு மீசைக்காரர், நடாஷா எனும் பெண், வினி எனும் 12 வயது சிறுமி, அவளது பாட்டி இருக்கிறார்கள். மீசைக்காரர் புரொபஸரிடம் ஒரு கேள்வி கேட்கிறார்: மீசையை முறுக்குவதை ஆங்கிலத்தில் எப்படி சொல்வது?

புரொபஸர்: Twirl the moustache என்பது தான் மீசையை முறுக்குவது.

வினி: நான் கடந்த மாதம் ஒரு நடனப் பயிற்சிப் பள்ளிக்குப் போயிருந்தேன். அதன் பெயரே சற்று எரிச்சல் ஏற்படுத்தியது. Twirl The Girl Studios. 

கணேஷ்: இதிலென்ன பிரச்னை?

வினி: It is sexist, can't you see that?

புரொபஸர்: Twirl என்றால் சுழல்வது, சுழல விடுவது என்றும் பொருள் உண்டு. ஒரு பெண் ஓர் அழகான கவுன் அணிந்து கொண்டு தன்னை கண்ணாடியில் பார்த்து ரசிக்கிறாள். அப்போது தன் மொத்த உருவத்தையும் காணும் பொருட்டும், பிறருக்கு காட்டும் பொருட்டும் அவள் ஒரு சுற்று லேசாய் சுழன்று வந்து நிற்கிறாள். அது twirling. அதே போல, மேற்கத்திய நடனங்களில் பெண் ஜோடியை ஆண் சுழற்றி விடுவானே... பார்த்ததில்லை?

கணேஷ்: ஆமா சார்

புரொபஸர்: So if you dance with Vini, you might end the dance by twirling her around you. அதனால் தான் twirl the girl என நடனப் பள்ளிக்கு பெயர் வைத்திருக்கிறார்கள்.
கணேஷ்: அதில என்ன சார் sexist?

புரொபஸர்: Sexist என்றால் பெண்களை அவர்களது பால் அடையாளத்தைக் கொண்டு மட்டும் அடையாளப்படுத்தி, stereotype செய்வது. பெண்கள் எல்லாம் அப்படித் தான் என பேசுவது. இங்கே ஒரு நடனத்தில் பெண்ணை ஆண் தான் சுழற்றி விட வேண்டும், பெண் அவன் சொற்படி ஆட வேண்டும் எனும் தொனியை இப்பெயர் கொண்டுள்ளது. அதனால் அது செக்ஸிஸ்ட் ஆகிறது. ஆங்கிலத்தில் ஏகப்பட்ட செக்ஸிஸ்ட் சொற்கள், சொற்றொடர்கள் உள்ளன. இன்று நாம் அவற்றை தவிர்க்க முயன்று வருகிறோம்.
கணேஷ்: உதாரணமா?
புரொபஸர் (வின்னியிடம்): What is your maiden name?

வினி: What maiden name? what's that? Uhh... you mean my surname?

புரொபஸர்: Yes

வினி: அலெக்ஸாண்டர். வின்னி அலெக்ஸாண்டர்.
கணேஷ்: பாஷா மாணிக் பாஷா போல
புரொபஸர்: ஹா...ஹா... ஆமா. பாஷா ஒரு ள்ன்ழ்ய்ஹம்ங். அதாவது ரெண்டாவது பெயர். நம்மூரில் அப்பா பெயரை அப்படி வைத்துக் கொள்வோம். அப்பா பெயர் ராஜ் என்றால் மகன் பெயர் மோகன் ராஜ் என்றாகிறது. ராஜ் ள்ன்ழ்ய்ஹம்ங். அதே போல, குடும்பப் பெயர்களும் வரும். சச்சின் டெண்டுல்கரில் டெண்டுல்கர் குடும்பப் பெயர். அலுவலக ரீதியாய் யாரையாவது மரியாதையாய் அழைக்க நேரும் போது மிஸ்டர் போட்டு ள்ன்ழ்ய்ஹம்ங்ஐ தான் பயன்படுத்துவோம். அன்பையும் நெருக்கத்தையும் காட்டும் வண்ணம் மட்டுமே ஒருவரை அவரது முதல் பெயரால் அழைப்போம். உதாரணமாய், கோலியை பேட்டி எடுக்கையில் மிஸ்டர் கோலி என்பார்கள். ஆனால் அவரது உற்ற நண்பர்களுக்கு அவர் "விராத்'. 

கணேஷ்: இதில் எங்கே சார் செக்ஸிசம் வந்தது?

புரொபஸர்: Maiden என்றால் கன்னிப் பெண். திருமணத்துக்குப் பின் அவளது இரண்டாவது பெயர் கணவனின் பெயராக மாறி விடும். இப்படி மெயிடன் என்பதிலேயே கன்னி எனும் பொருளில் ஒரு பெண்ணை திருமணமானவளா இல்லையா எனும் வித்தியாசம் பார்த்து மதிப்பிடும் தொனி வந்து விடுகிறது. அதனால் தான் அது செக்ஸிசம். உனக்கு இதை விளக்கத் தான் வினியிடம் அவளது மெயிடன் பெயரைக் கேட்டேன். (வினியிடம்) மன்னிச்சுக்கோம்மா!
வினி: No problem!

புரொபஸர்: மேலும் சில செக்ஸிஸ்ட் பதங்களைச் சொல்கிறேன். கேட்டுக்கோ. முன்பு தேவாலயத்தில் கிறித்துவ முறைப்படி திருமணம் ஆன பின் பாதிரியார் அவர்களை I declare them man and wife என அறிவிப்பார். இதுவும் செக்ஸிஸ்ட் தான்.
கணேஷ்: எப்படி?
(இனியும் பேசுவோம்)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/11/w600X390/im4.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/11/வாங்க-இங்கிலீஷ்-பேசலாம்---156-2998342.html
2998341 வார இதழ்கள் இளைஞர்மணி தன்னிலை உயர்த்து! ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ். DIN Tuesday, September 11, 2018 07:28 PM +0530 ஒரு காட்டில் வாழ்ந்த கருவுற்ற ஒரு சிங்கம், தனது குட்டியை  ஈன்றதும், இறந்துபோனது. அவ்வழியே வந்த ஆட்டிடையன், அச்சிங்கக்குட்டியைத் தூக்கி வளர்த்தார். செம்மறியாட்டின் பாலும், பசும் புல்லும் சிங்கக்குட்டியின் உணவானது. ஒரு நாள், பாறையின் மீது அமர்ந்திருந்த சிங்கமொன்று, செம்மறியாட்டு மந்தையினைப் பார்த்தது. தனக்குத் தகுந்த இரையை அலசிப் பார்த்ததின் கண்களில் சிங்கக்குட்டியும் தென்பட்டது. 

சிங்கம், செம்மறியாட்டுக் கூட்டத்தினை நோக்கி துரத்தி வர, செம்மறியாடுகளோடு, சிங்கக்குட்டியும் ஓடியது. ஓடிவந்த சிங்கம், தனது இரையினை விட்டுவிட்டு அச்சிங்கக்குட்டியைப் பிடித்தது. தரதரவென இழுத்துக் கொண்டு சென்று, அருகிலிருந்த கிணற்றிற்கு கொண்டு சென்றது. சிங்கத்தைப் பார்த்து, பயந்து நடுங்கிய சிங்கக்குட்டியை கிணற்றின் நீரில், அதன் பிம்பத்தைப் பார்க்க வைத்தது. அப்பொழுதுதான் தான் ஒரு சிங்கம் என்று  அந்த சிங்கக்குட்டி உணர ஆரம்பித்தது.

""உன்னைக் கண்டால் ஓடி ஒளிய வேண்டிய செம்மறியாடுகளோடு, நீயும் செம்மறியாடாகிப் போனாயே!''  எனப் பாய்ந்து பிடித்த சிங்கம் கூற, தன்னை உணர்ந்தது சிங்கக்குட்டி. அதன் கர்ஜனையில் ஓடின செம்மறியாடுகள். இதனையே, ""இளைஞர்களே!  நீங்கள் சிங்கங்கள்! செம்மறியாடுகள் என்ற மயக்கத்தினை  உதறித் தள்ளுங்கள்'' என்றார்  சுவாமி விவேகானந்தர். 

அச்சிங்கக் குட்டியைப்போல் தன்னை யாரென அறியாமலேயே வாழ்கின்ற விலங்குகள் ஏராளமாக இருப்பது விலங்கினத்தின் அறிவீனம். ஆனால், மனிதர்களும் தன்னை அறியாமல் இவ்வுலகத்தில் வாழ்கிறார்கள் என்பதுதான் வேடிக்கையான உண்மை. மனிதனின் தேடலில் முதல் தேடல் தன்னைத் தேடுதலாகவும் மனிதனின் முதல் வெற்றி தன்னை வெற்றிகொள்வதாகவும் இருந்தால், அதுவே வாழ்வின் சிறப்பு.  

மனிதனாய்ப் பிறந்தவன் அறிய வேண்டியதில் முதன்மையானது தன்னை அறிவது என்பது சித்தர்கள் வாக்கு.  

தன்னை அறிய தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

என்ற திருமூலரின் வரிகள், மனிதன் தன்னை அறிவது அவசியம் என்பதை விட, அத்தியாவசியம் எனத் தெளிவுபடுத்துகிறது.

தன்னை அறிவது ஒரு கலை; தன்னை அறிவதுவே ஒழுக்கம்; அதில், எதையும்  ஏற்றுக் கொள்ளும் பக்குவம் மலரும்.  பிறர் குறை காணாது, தன் குறையைக் காணத் துடிக்கும்.  தன்னையறிந்தவனுக்கு நம்பிக்கை பிறக்கும்; முயற்சிக்க ஆற்றல் பீறிட்டெழும்; மகிழ்வாய்ச் செயல்படத் தோன்றும்; எடுக்கும் காரியங்களிலெல்லாம் வெற்றியாகும். மொத்தத்தில் தன்னையறிவதுவே பேரறிவின் தொடக்கம்.

இராமேசுவரக் கடற்கரையில் மொத்த வானரப் படைகளும் இலங்கைக்குச் செல்வதற்கு தகுதியானவர்கள் யார்? என்ற கேள்வியோடு நின்று கொண்டிருந்தனர். என்னால் முடியாது என்று எல்லோரும் சொன்னது போலவே, அனுமனும் சொல்ல, அதனை மறுத்தவர் ஜாம்பவான். ""அனுமா... நீ  வாயு குமாரன். குழந்தையாய் இருக்கும்போதே விண்ணில் பறந்து, சூரியனைப் பழமென்று பிடித்து, உண்ண ஆசைப்பட்டவன். ஒற்றைத் தாவலில் ஓராயிரம் மைல் கடந்தவன். உனது சக்திக்கு, இலங்கை ஒன்றும் அதிக தூரமல்ல'' என்றதும், தனது திறமையை உணர்ந்தார் அனுமன். தன்னை உணர்ந்த மறுகணம், இலங்கையில் அனுமன் இருந்தார்  என்கிறது இராமாயணம். 

அத்தகைய ஜாம்பவான்களைப்போல் தங்களது குழந்தைகளின் அறிவின் திறமையை உணர்ந்தவர்கள் பெற்றோர். இவர்களுக்கு பள்ளிக் கல்வியை எளிதில் புரிந்து கொள்ளும் திறமை இல்லை என்று  அனுபவப்பட்ட ஆசிரியர்கள் அந்தக்  குழந்தைகளிடம் கடிதம் கொடுத்தனுப்பினர் . அவர்களை உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளான தாமஸ் ஆல்வா எடிசனாகவும், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனாகவும் வெளிக் கொணர்ந்தவர்கள் அவர்களது பெற்றோர்.   

தன்னுடைய மற்ற பேரப்பிள்ளைகளெல்லாம் ஒரு தொழிலில் ஈடுபட்டு சம்பாதிக்கிறார்கள். ஆனால், இரவீந்திரநாத் தாகூர் மட்டும் சம்பாதிக்கின்ற தொழிலில் இல்லாமல், நிலையில்லாமல் இருக்கிறார் என வருத்தப்பட்டார் அவரது பாட்டி. தாகூர் அதற்குக் கவலை கொள்ளவில்லை. அவர், தன்னை ஒரு கவிஞன் என அறிந்ததால்தான் உலகம் போற்றும் நோபல் பரிசினை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்தார்.     தந்தை எதிர்பார்த்த மதிப்பெண்ணை விட, தன்னுள் எழுந்த கவியினை உணர்ந்ததால்தான் தமிழகம் ஒரு மகாகவி பாரதியை இவ்வுலகிற்குத் தந்தது.


எனவே, தன்னுள் மறைந்திருக்கின்ற உண்மையைக் கண்டுபிடிப்பது ஓர் உன்னதப் பணி. உயரிய பணி.  எழுச்சியும், முன்னேற்றமும் ஒவ்வொரு உயிருக்கும் பிறப்பிலே கிடைத்த உரிமை என்கிறது ரிக் வேதம். அவ்வுரிமையை சிறிய வயதிலேயே உணர்கின்றவர்கள், சான்றோர்; இளம் வயதில் உணர்ந்தால், ஞானி; முதுமையில் கற்றுக் கொண்டால், மனிதன்; உணராமலிருப்பவருக்கு  மீண்டும் பிறக்க வைத்து கற்றுக் கொடுக்கும் இவ்வுலகம். மொத்தத்தில், நம்மை யார் என்று முதலில் அடையாளம் காணும் போதுதான் வாழ்வே ஆரம்பமாகிறது.

இத்தாலிய பொருளாதார நிபுணர் வில்ப்ரெடோஃபாரேடோவின் 80/20 விதியின்படி, ஒரு மனிதனின் 20% செயல்கள் தான் அவருக்கு 80% திருப்தியைத் தரும். அதன்படி, ஒரு விளையாட்டின் 20% வீரர்கள்தான் 80%  வெற்றிக்குத் துணையாயிருப்பவர்கள் என்பதற்கு கிரிக்கெட்டில் ஓபனிங் பேட்ஸ்மேன் முதல்  கால்பந்தில் 10  ஆவது எண்கொண்ட "ஜெர்ஸி' அணியும் விளையாட்டு வீரர்கள் உதாரணம். 

அதேபோல் ஒரு மனிதனின் 80%  மகிழ்ச்சியான உழைப்பிற்கு அடிப்படை அவர்கள் செய்கின்ற 20%  செயல்பாடுகளேயாகும். யார் ஒருவர் அத்தகைய 20% செயல்பாட்டினை  தினமும் முதன்மைப்படுத்தி செய்கின்றாரோ,  அவரது வாழ்வு மகிழ்ச்சியோடும், வெற்றியோடும் அமையும். இப்பூவுலகில் வாழும் ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் அடிப்படையான ஆரோக்கியத்திற்கும், மன அமைதிக்கும் ஒரு மனிதன் ஒரு மணி நேரம் சரியாக செலவழித்தால், அம்மனிதனுக்கு வாழ்வெல்லாம் மகிழ்ச்சியேயாகும். நம் உடலையும், மனதையும் அறிந்து கொள்வதற்காக நாம் பயன்படுத்தும் நேரம், நாம்  நம்மோடு உறவாடும் நேரம். அது தான், ஒவ்வொரு நாளின் ஆதார நேரம்.

"ஒரு நாளில் ஒரு முறையாவது உங்களுடன் பேசிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் இவ்வுலகிலேயே மிகச்சிறந்த மனிதனைச் சந்திக்காமலே போய்விடுவீர்கள்'என்ற சுவாமி விவேகானந்தரின் வரிகள் ஒவ்வொரு  நாளும் மனிதன் சற்று நேரமாவது உலகத்திலிருந்து தனிமைப்பட்டு  தியானித்து, மனதைப் பண்படுத்தத்  தூண்டுகிறது. 

1953 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் நாள், உலகத்திலேயே முதன் முதலாக பனிபடர்ந்த எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வெற்றி கண்டவர்கள் டென்சிங் நார்கேயும், எட்மன் ஹிலாரியும் ஆவர். டென்சிங் நார்கே, டார்ஜிலிங்கைச் சேர்ந்தவர். அவரிடம், ""முதன் முதலாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி அதனை வெற்றிகொண்டுவிட்டீர்கள்.  வெற்றியின் மூலம், நீங்கள் என்ன தெரிந்துகொண்டீர்கள்?'' என்று கேள்வி கேட்டனர். புன்முறுவலோடு, ""நான் சிகரத்தை வெற்றி கொள்ளவில்லை. என்னை எவ்வாறு வெற்றி கொள்வது? என்று தெரிந்துகொண்டேன்'' என்பதிலிருந்து, மலையின் உயரத்தைவிட மனதின் உயரம் பெரிதென்கிறார் டென்சிங்.  ஒருமுறை ஏறுவதே சாதனை என்று உலகம் கைதட்டி ஆரவாரித்தபோது, டென்சிங் பன்னிரண்டு முறை ஏறி சரித்திரம் படைத்தார். காரணம், டென்சிங்கிற்கு மலையேற்றம் மட்டுமல்ல, தன் மன ஏற்றமும் தெரிந்தது. டென்சிங்கின் வார்த்தையில், "உலகை ஆள்பவனுக்கு முதலில் தன்னை ஆளும் சக்தியும், உலகை அறிவதற்கு முன் தன்னை அறியும் சக்தியும் அவசியம்' என்பது மிளிர்கிறது.  அதேபோல்தான், அரண்மனை வாசம் சித்தார்த்தனை உலகை வெல்ல கற்றுக்கொடுக்க முயற்சித்தது. ஆனால், போதி மரத்து நிழல்   " உலகத்தை விட தன்னை வெல்வதே சிறந்த வெற்றி' என்று போதித்து  புத்தர் ஆக்கியது. 

குழந்தை  முதல் முயற்சியாக தன்னைச் சுற்றியுள்ளதை அறிகிறது.  பின்னர், மாணவனாக உலகத்தின் இயல்புகளையும், புதுமைகளையும் அறிகிறது. படிப்படியாக தனது திறமையை வெளிப்படுத்தி தன்னை மேலோனாக்குகிறது. வளர்ச்சியின் முதிர்வில் இவ்வுலகிற்கும், தனக்குமுள்ள உறவினை அறிகிறது.

தான் பிறந்ததன் நோக்கத்தை அறிந்தவர் உயர்ந்த நிலையை அடைவர். அவர் அகண்ட வெளியிலிருந்து பறந்து வந்தாலும், சரியான ஓடுதளத்திலே விமானத்தை இறக்குகின்ற விமானிபோல் தன்னைச் செயல்படுத்துபவர். தன்னை மையமாக வைத்து பேசப்படுகின்ற பேச்சுகள் அவர் மனதைச் சென்று தாக்காத கருப்பு பெட்டி. மொத்தத்தில் எதைச் செய்தால் எது நடக்கும் என்பதையாவது அறிபவராய் இருப்பதால் அவரது செயல்பாடு வாழ்வினில் உயரத் துடிப்பவர்களுக்கு  வழிகாட்டியாய் அமையும். 

வாழ்வை எப்படியாவது  அறிய  வேண்டும்  என ஆசைப்பட்டார் ஒருசீடன். தனது குருவிடம், ""குருவே...  வாழ்க்கையின் அர்த்தம் என்ன?'' என்று கேள்வி கேட்டான்.  பதிலாக குரு, ""அதேதான்'' என்றார். ""குருவே...  வாழ்க்கையின் அர்த்தம் என்னவென்று கேட்டால் அதேதான்  என்று பதில் சொல்கிறீர்களே'' என்று கேட்டான். குருவும் பதிலாக, ""அதேதான்'' என்றார். சீடனுக்கு ஒன்றும் புரியவில்லை. குழம்பிப்போனான். ""சீடனே...  வாழ்வின் அர்த்தம் என்ன? என்று தெரியவேண்டுமென்றால் அதனைக் கேட்டுக்கொண்டே இரு! தொடர்ந்து கேட்டுக்கொண்டே இரு!  பதில் கிடைக்கும்; வாழ்விற்கும் விடை கிடைக்கும்'' என்றார். 

"என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ'  என்ற சிவவாக்கியாரின் ஏக்கத்திற்கேற்ப, உலகை அறிவது அறிவு!

தன்னையே அறிவது பேரறிவு!


(தொடரும்)


கட்டுரையாசிரியர்: காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/11/w600X390/im5.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/11/தன்னிலை-உயர்த்து-2998341.html
2998340 வார இதழ்கள் இளைஞர்மணி மாறிவரும் விவசாயத் தொழில்நுட்பம்! - ஆ.நங்கையார் மணி DIN Tuesday, September 11, 2018 07:16 PM +0530 ஒவ்வொரு நாளும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் எல்லாத்துறைகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.  அவற்றைப் பற்றி இளைஞர்களாகிய நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.  தெரிந்து கொள்ளவில்லை என்றால்,  அத்தொழில் நுட்பங்கள் சார்ந்த எதையும் நாம் பயன்படுத்த முடியாது என்பதோடு,  அது தொடர்பான வேலை வாய்ப்புகளையும் நாம் பெற முடியாது.   இளைஞர்களாகிய நாம் எதிலும் அப்டேட்  ஆக இருக்க வேண்டியது அவசியம்.  இதோ விவசாயத்துறையில் கலக்கியுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிகளைத் தெரிந்து கொள்வோம்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் பகுதியில் இந்தோ-இஸ்ரேல் தொழில்நுட்ப கூட்டு முயற்சியுடன் காய்கறி மகத்துவ மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பசுமைக் குடில், நிழல் வலைக்குடில், நிலப் போர்வை தொழில்நுட்பம் மூலம் காய்கறி சாகுபடி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல், வீரிய ஒட்டுரக நாற்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.

இந்நிலையில் 3ஆயிரம் சதுர மீட்டரில் உயர்தொழில்நுட்ப பசுமைக் குடில் ரூ.1.74 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தொழில்நுட்பம், ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் தான் தமிழகத்திலேயே முதன்முறையாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இத்தொழில்நுட்பத்தின் உதவியுடன், பசுமைக் குடிலின் தட்பவெப்ப நிலை குறிப்பிட்ட அளவில் பராமரிக்கப்படுகிறது. ஒரே சமயத்தில் 3 ஆயிரம் சதுர மீட்டரில் 12 லட்சம் நாற்றுகளை சீரான வளர்ச்சியுடன் உருவாக்க முடியும் என்பதோடு, தானியங்கி முறையில் நீர்த் தெளிப்பான் உள்ளிட்ட கருவிகள் செயல்படுவதும் இத்தொழில்நுட்பத்தின் சிறப்பு  அம்சம்.

இதுகுறித்து ரெட்டியார்சத்திரம்  காய்கறி மகத்துவ மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் கோ.ஸ்ரீநிவாசன் மற்றும் தனியார் நிறுவன தொழில்நுட்ப வல்லுநர் கோபாலகிருஷ்ண நாயர் ஆகியோர் கூறியதாவது: 

""தரமான விதைகளைப்  பயன்படுத்தினாலும், நிலத்தில் தூவி நாற்றுகள் உற்பத்தி செய்யும் போதும், அதனைப் பறித்து வேறு இடங்களில் நடவு செய்யும்போதும் பலவிதமான இழப்புகள் ஏற்படுகின்றன. விதைகள் சரியாக முளைக்காமல் போய்விடலாம்.  நாற்றுகளைப் பறிக்கும்போது   வீணாகலாம். ஆனால்  குழித்தட்டு முறையில், நாற்றுகள் உற்பத்தி  செய்வதன் மூலம்  அந்த இழப்புகளைத்  தவிர்க்க முடியும். அதோடு குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் நாற்றுகளைப் பராமரிக்கும்போது, அதன் வளர்ச்சி அதிகரிப்பதோடு, தரமானதாகவும் இருக்கும். அந்த வகையில், உயர்தொழில்நுட்ப பசுமைக் குடிலின் வெப்ப நிலை தக்காளி நாற்றுகளுக்கு 30  டிகிரி செல்சியசாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பசுமைக்குடிலின்  வெப்ப நிலை 30 டிகிரியைவிட உயரும்போது, இங்கு பொருத்தப்பட்டுள்ள மின் விசிறிகளும், செல்லுலோஸ் பேடுகளும் தானாகவே  இயங்கி, தட்பவெப்ப நிலையை நிர்ணயிக்கப்பட்ட அளவில் தொடர்ந்து பராமரிக்கும். அதேபோல் குழித்தட்டுகளில், இயந்திரம் மூலமே விதைகள் போடப்படும். அந்த குழித்தட்டுகளில் பூம் இரிகேஷன் முறையில், ரிமோட் மூலம் எளிதாக  நீர் தெளிக்கப்படுகிறது. அதே தண்ணீரில் நாற்றுக்கு தேவையான நுண்ணூட்டச் சத்துகளையும் கரைசலாக சேர்த்து பயன்படுத்தலாம்.

இத்தொழில்நுட்பத்தின் மூலம், 40ஆயிரம் குழித்தட்டு நாற்று களுக்கு, 78 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தி 3 நிமிடங்களில்  தண்ணீர்  ஊற்ற முடியும். அதேநேரத்தில், சரியான விகிதத்தில் அனைத்து நாற்றுகளுக்கும் தண்ணீர் கிடைப்பதையும் உறுதி செய்யலாம். 

இயந்திரம் மூலம் விதை ஊன்றும் போது, 10 பேர்  செய்ய வேண்டிய பணிகளை 3 பேரை மட்டும் வைத்து எளிதாக முடித்துவிடலாம். சமீப காலமாக, தோட்டக்கலை பயிர்களுக்கான காய்கறி, பழங்கள், மலர்ச் செடிகள், தோட்டங்களைக் கடந்து வீடுகளிலும் சிறிய அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதனால் நாற்று விற்பனை நிலையங்களும் அதிகரித்துள்ளன. 

தோட்டக்கலை  பட்டதாரிகள் மற்றும்  நாற்று உற்பத்தியாளர்களுக்கு இந்த தொழில்நுட்பம், எதிர்காலத்தில்  கட்டாயத் தேவையாக அமையும். தேவைக்கு ஏற்ப குறைந்த பரப்பளவிலும் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்'' என்றார்.

 

விரைவில் தோட்டக்கலை பட்டயப்  படிப்பு


ரெட்டியார்சத்திரம் மகத்துவ மையத்தில் தோட்டக்கலைத்துறையில் பட்டயப் படிப்பு விரைவில் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2ஆண்டு பட்டயப் படிப்புக்கு, 10ஆம்  வகுப்பு தகுதியின் அடிப்படையில் ஆண்டுதோறும் 50 மாணவர்களுக்கு சேர்க்கை  நடைபெறும். தோட்டக்கலையில் பட்டயம் பெறும் இளைஞர்கள், அரசு துறையில்  உதவித் தோட்டக்கலைத்துறை அலுவலராக பணிபுரியக் கூடிய வாய்ப்புள்ளது. அதேபோல் தனியார் நிறுவனங்களிலும்  அதிக வேலைவாய்ப்புள்ளதாக தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/11/w600X390/im3.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/11/மாறிவரும்-விவசாயத்-தொழில்நுட்பம்-2998340.html
2998339 வார இதழ்கள் இளைஞர்மணி விண்ணப்பியுங்கள்...  கேட் தேர்வுக்கு! -ஆர்.வி. DIN Tuesday, September 11, 2018 07:12 PM +0530 அகில இந்திய அளவில்   பொறியியல் பட்டதாரிகளுக்காக  நடத்தப்படும்  "கேட்'  (எஅபஉ-2019) தேர்வுக்கு ஆன்- லைன் மூலம் செப்டம்பர் 21 -ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

முதுநிலை பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக். மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு "கேட்' நுழைவுத் தேர்வு எழுதுவது அவசியம்.

தமிழகத்தைப் பொருத்தவரை "கேட்' நுழைவுத் தேர்வுடன், "டான்செட்' நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலும் சேர்க்கை நடத்தப்படுகிறது. 

அதுமட்டுமின்றி, பல பொதுத் துறை நிறுவனங்கள் இந்தத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணியாளர் தேர்வையும் நடத்துகின்றன.  பல தனியார் நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பளிப்பதில் முன்னுரிமை அளிக்கிறது. 2019- ஆம் ஆண்டுக்கான  "கேட்'   தேர்வை சென்னை ஐஐடி நடத்துகிறது. 

தகுதி: பொறியியல் பட்டதாரிகள், தொழில்நுட்ப படிப்புகளில் பட்டப்படிப்பு மற்றும் முதுகலை முடித்தவர்கள் இந்த தேர்வை எழுதலாம். 4 ஆண்டுகளைக் கொண்ட அறிவியல் படிப்புகள், முதுகலை அறிவியல் படிப்பை முடித்தவர்கள் எழுதலாம். 

தேர்வு முறை: இணையதளம் வழியான கணினித் தேர்வு அடிப்படையில் இந்தத் தேர்வு நடைபெறும்.

கட்டணம்:   எஸ்சி., எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் ரூ.750, மற்றவர்கள் ரூ.1500 கட்டணமாகச்  செலுத்த வேண்டும். 

தேர்வு நடைபெறும் நாள்:  கணினி வழியில் மட்டுமே நடத்தப்படும்  இந்தத் தேர்வானது 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 2,3 மற்றும் 9,10 ஆகிய நான்கு நாட்களில் நடத்தப்பட உள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை:  ஜ்ஜ்ஜ்.ஞ்ஹற்ங்.ண்ண்ற்ஞ்.ஹஸ்ரீ.ண்ய் வலை தளத்தில் ஆன்- லைன் மூலம்  விண்ணப்பிக்க வேண்டும்.  செப்டம்பர் 1 -ஆம் தேதி  முதல் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இந்தத் தேர்வை வெளிநாட்டினரும் எழுதலாம். இதில் தகுதி பெறும் வெளிநாட்டு மாணவர்கள், இந்திய கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்ந்து படிக்க முடியும்.  

மேலும் விவரங்களுக்கு: https://drive.google.com/file/d/18tF_LQc_48eIs5YimeGfWsKy8cYPRkeW/view  என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/11/w600X390/im2.gif http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/11/விண்ணப்பியுங்கள்--கேட்-தேர்வுக்கு-2998339.html
2998331 வார இதழ்கள் இளைஞர்மணி ட்ரோன்களை இயக்க விருப்பமா? - இரா.மகாதேவன் Tuesday, September 11, 2018 04:59 PM +0530 அண்மைக் காலமாக திருமண விழாக்கள், திருவிழாக்கள், பள்ளி, கல்லூரி ஆண்டு விழாக்கள் போன்றவற்றில் ட்ரோன் (Drone) எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் வீடியோ, புகைப்படங்கள் எடுப்பதை பார்த்திருப்போம். தரையில் இருந்து கை கட்டுப்பாட்டு கருவி மூலம் இயக்கப்படும் இந்த குட்டி விமானங்களின் பயன்பாடு இன்று பல்வேறு துறைகளிலும் இடம் பெறத் தொடங்கியுள்ளது.   

அனுமதி பெறாமலும், முன் அறிவிப்பு இல்லாமலும்   இதுபோன்ற குட்டி விமானங்கள் சிலரால் இயக்கப்படும்போது, அது  பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்துவதோடு,   அதை இயக்கியவர்கள் சட்டப் பிரச்னைகளுக்கு உள்ளாக நேரிடுவதையும் நாம் பார்த்திருக்கிறோம்.

இதற்கு முன்னதாக நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்திய ராணுவம் மட்டுமே இந்த ட்ரோன்களை பயன்படுத்தியது. என்றாலும், தொழில்நுட்ப வளர்ச்சி, சர்வதேச வர்த்தகம், இந்திய வர்த்தக}தொழில் முன்னேற்றம் கருதி, இதற்கான கொள்கை விதிகளை வகுத்து, சில கட்டுப்பாடுகளுடன் ட்ரோன்களை தனியார் நிறுவனங்கள் வணிகரீதியாக இயக்குவதற்கு இந்திய விமானப் போக்குவரத்துத் துறை தற்போது அனுமதி அளித்துள்ளது.

இந்த விதிமுறைகள் வரும் டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன. இந்த விதிமுறைகளை அனைவரும் அறிந்து வைத்திருப்பது, குறிப்பாக, ட்ரோன்கள் இயக்குவதில் ஆர்வமுள்ள இளைஞர்கள் அறிந்து வைத்திருப்பது அவர்கள் சட்டப் பிரச்னைகளில் சிக்காமல் இருப்பதற்கும், அவற்றை தங்களுடைய தொழில் சார்ந்து, வேலைவாய்ப்பு சார்ந்து பயன்படுத்திக் கொள்ளவும் உதவும்.

நில அளவை, கண்காணிப்பு, போக்குவரத்து மேற்பார்வை, தேடுதல் மற்றும் மீட்பு, தீயணைப்பு, தட்பவெப்ப கண்காணிப்பு போன்றவற்றில் ட்ரோன்கள் தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவையல்லாமல், வேளாண்மை, ஃபோட்டோ, வீடியோ, சரக்கு சேவைப் பணிகளிலும் இவற்றின் 
பயன்பாடு அதிக அளவில் உள்ளது.

விமானப் போக்குவரத்துத் துறையின் அனுமதிப்படி, ட்ரோன்கள் 5 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 250 கிராம் வரை எடையுள்ளவை நானோ (Nano) என்றும், 2 கிலோ வரை எடையுள்ளவை மைக்ரோ (Micro) என்றும், 25 கிலோ வரை எடையுள்ளவை ஸ்மால் (Small) எனவும், 150 கிலோ வரை எடையுள்ளவை மீடியம்  (Medium) என்றும், அதற்கு அதிகமான எடை உள்ளவை லார்ஜ் (Large) என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அரசின் விதிப்படி, 18 வயதுக்கு மேற்பட்ட, குறைந்தபட்சம் ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு 10}ஆம் வகுப்பு முடித்தவர்கள் மட்டுமே ட்ரோன்களை இயக்க வேண்டும். அவர்களும், விமானப் போக்குவரத்துத் துறையின் அங்கீகாரம் பெற்ற பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இவையல்லாமல், ட்ரோன் இயக்குவோர் குறிப்பிட்ட அந்தப் பகுதியில் உள்ள காவல் துறையின் அனுமதி, வான் போக்குவரத்து கட்டுப்பாட்டுப் பிரிவின் அனுமதி (Air Traffic Control } ATC))  விமானப்படையின் தடையில்லா சான்று (Air Defence Clearance}ADC), விமான தகவல் மையம் (Flight Information Centre}FIC) ஆகியவற்றின் அனுமதியைப் பெறவேண்டும்.

இந்த விதிகள் Remotely Piloted Aircraft Policy (RPA Policy) என அழைக்கப்படுகிறது. எனவே, இந்த ட்ரோன்களுக்கு அடையாள எண் (Unique Identification Number}UIN), ஆளில்லா குட்டி விமானங்களை இயக்குவதற்கான உரிமம் (Unmanned Aircraft Operator Permit}UAOP) ஆகியவற்றைப் பெறவேண்டும். மேலும், இது தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். எனினும், நானோ ட்ரோன்கள், மைக்ரோ ட்ரோன்களுக்கு உள்ளூர் காவல் நிலையத்தில் அனுமதி பெறவேண்டும்.

இந்த ட்ரோன்கள் அனைத்தும் பிரதமர் அலுவலகத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு அலுவலரின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப நுண்ணறிவு முகமையின், தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையம், மத்திய நுண்ணறிவு முகமை (CIA) ஆகியவற்றின் கண்காணிப்பில் இருக்கும். 

எனினும், ட்ரோன்களைத் தயாரிக்கவும், பயன்படுத்தவும் விண்ணப்பித்தால், அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ள நிலையில், விமானப் போக்குவரத்துத் துறை 7 வேலை நாள்களில் உரிமங்களை வழங்கும். இந்த 
உரிமம் 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். ஆனால், திருத்தவோ, மாற்றவோ முடியாது.

ட்ரோன்களை பகல் நேரத்தில் மட்டுமே இயக்க வேண்டும். ஒருவர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ட்ரோன்களை இயக்கக் கூடாது. 

மும்பை, தில்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய விமான நிலையங்களில் இருந்து 5 கி.மீ. சுற்றளவுக்குள்ளும், இதர விமான நிலையங்களில் இருந்து 3 கி.மீ. சுற்றளவுக்குள்ளும் ட்ரோன்களை 
இயக்கக் கூடாது.

நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக தடைசெய்யப்பட்ட இடம், கட்டுப்படுத்தப்பட்ட இடம், அபாயகரமான இடங்களிலும், சர்வதேச எல்லையில் இருந்து 25 கி.மீ. தொலைவுக்குள்ளும் ட்ரோன்களை இயக்கக் கூடாது. மேலும், கடற்கரையில் இருந்து கடல்பகுதியில் 500 மீ. தொலைவுக்கு மேலும், ராணுவ தள பகுதிகளில் 3 கி.மீ., முக்கியமான அரசு கட்டடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் 5 கி.மீ. சுற்றளவுக்குள்ளும் ட்ரோன்களைப் பறக்கவிடக் கூடாது.

அதோடு, ட்ரோன்களில் விலங்குகளையோ, மனிதர்களையோ அல்லது அபாயகரமான பொருள்களையோ வைத்து அனுப்பக்கூடாது. ட்ரோன்களால் எந்தவிதத்திலும் பொதுமக்களுக்கோ, அவர்களின் உடைமைகளுக்கோ சேதம் ஏற்படக்கூடாது. ட்ரோன்களுக்கு 3}வது நபர் காப்பீடு செய்யப்படுவது அவசியம். இந்த விதிகளில் எது மீறப்பட்டாலும், இந்திய தண்டனைச் சட்டம் பிரகாரமும் (ஐடஇ), அண்ழ்ஸ்ரீழ்ஹச்ற் அஸ்ரீற்}1934}இன் பிரகாரமும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/11/w600X390/im1.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/11/ட்ரோன்களை-இயக்க-விருப்பமா-2998331.html
2994016 வார இதழ்கள் இளைஞர்மணி நடமாடும் இலவசப் பள்ளி! DIN DIN Tuesday, September 4, 2018 01:47 PM +0530 உத்தரபிரதேச மாநிலம் லக்னெள நகரம். அதன் குடிசைப் பகுதிகளில் நிறைய புத்தகங்களுடன் ஒரு சைக்கிள் வருகிறது. சைக்கிளை ஓட்டி வந்தவர் ஓரிடத்தில் சைக்கிளை நிறுத்த குழந்தைகள் அவரைச் சூழ்ந்து கொள்கின்றனர். சிறிது நேரத்தில் அந்த இடத்தில் வகுப்பு ஆரம்பமாகிவிடுகிறது. அந்த இடத்தில் வகுப்பு முடிந்தவுடன் மீண்டும் சைக்கிள் பயணம். மீண்டும் புதிய இடத்தில் வகுப்பு. இந்த நடமாடும் பள்ளியை நடத்துபவர் ஆதித்யா குமார்.
 ஆதித்யா குமார் கான்பூரில் உள்ள டிஏவி கல்லூரியில் பட்டம் பெற்றவர். ஆனால் அந்தப் பட்டம் பெறுவதற்கு அவர் பட்டபாடு கொஞ்ச நஞ்மல்ல. ஒரு கூலித் தொழிலாளியின் மகனாகப் பிறந்த ஆதித்யா குமார், சிறுவயதில் ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. மாதத்தில் 12 நாட்கள் மட்டுமே பள்ளிக்குச் செல்ல முடிந்தது. மீதி நாட்களில் கட்டடம் கட்டும் இடங்களில் கூலி வேலை. இருந்தாலும் படிப்பின் மீதான அவருடைய ஆர்வத்தையும், படிக்க முடியாத அவருடைய வறுமையையும் அறிந்த ஆசிரியர்கள் அவருக்குச் செய்த உதவிகள் அதிகம். படிக்க வைக்காத அவருடைய தந்தையிடம் கோபித்துக் கொண்டு 26 வருடங்களுக்கு முன்பு கான்பூருக்கு ஓடி வந்துவிட்டார் குமார். தற்செயலாகச் சந்தித்த ஓர் ஆசிரியர் செய்த பண உதவியின் காரணமாக அவர் கல்லூரிப் படிப்பை முடிக்க முடிந்தது.
 கிராமத்திலிருந்து வந்த அவருக்கு ஆங்கிலம் ஒரு பெரும் சவாலாகவே இருந்திருக்கிறது. கணக்கும் கூட. எனவே அவற்றில் தேர்ச்சி பெறுவதற்காக பலவிதங்களில் முயற்சி செய்து வெற்றியும் கண்டிருக்கிறார். அப்போதுதான் தோன்றியிருக்கிறது... "நம்மைப் போல எத்தனை ஏழைக் குழந்தைகள் இந்தக் குடிசைப் பகுதிகளில் ஆங்கிலமும், கணக்கும் தெரியாமல் அவதிப்படுகிறார்களோ? அவர்களுக்கு ஆங்கிலமும், கணக்கும் கற்றுக் கொடுத்தால் என்ன?' என்று.
 1995 இல் இப்படித்தான் உருவானது அவருடைய நடமாடும் பள்ளி.
 காலை 10 மணியிலிருந்து இரவு 7 மணி வரை அவருடைய நடமாடும் பள்ளி செயல்படுகிறது. 10 வயதுக்கும் குறைந்த குழந்தைகளே அவருடைய மாணவர்கள். ஒரு நாளைக்கு 50 இலிருந்து 60 கிலோ மீட்டர்கள் வரை சைக்கிளில் அவர் பயணம் செய்கிறார். இதில் முக்கியமான விஷயம், அவர் கல்விக் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை.
 இவரிடம் படித்த ஒரு மாணவர், பெயர் ரிஷி செüத்ரி, தற்போது வங்கித் தேர்வுக்குத் தயாராகி வருகிறார்.
 "அவர் எங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க ஒரு நாளும் தவறியதில்லை. இந்தக் காலத்தில் ஒருவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றால் அவருக்கு வேலை கிடைக்காது. என்னைப் போன்றவர்களின் கனவை நிறைவேற்ற அவர் உதவி வருகிறார்'' என்கிறார் ரிஷி செüத்ரி.
 ஒவ்வொரு மாதமும் சுமார் 2 ஆயிரம் மாணவர்களுக்கு ஆதித்யா குமார் கற்றுத் தருகிறார். கடந்த 20 ஆண்டுகளில் 2 லட்சம் மாணவர்கள் இவரால் பயனடைந்திருக்கின்றனர்.
 இதைத் தான் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற பாடத்திட்டம் எதுவும் இவரிடம் இல்லை. ஒவ்வொரு மாணவருக்கும் எது தேவையோ அதை மட்டுமே அவருக்குச் சொல்லிக் கொடுக்கிறார். இவருடைய கல்விப் பணியைப் பாராட்டும் விதமாக லிம்கா சாதனைப் புத்தகத்தில் இவருடைய சாதனை இடம் பெற்றிருக்கிறது.
 - ந.ஜீவா
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/4/w600X390/im13.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/04/நடமாடும்-இலவசப்-பள்ளி-2994016.html
2994015 வார இதழ்கள் இளைஞர்மணி உயிரி தொழில்நுட்பம்: போட்டி... வெற்றி... வாய்ப்பு! DIN DIN Tuesday, September 4, 2018 01:34 PM +0530 இந்தியா எதிர்கொண்டுள்ள சுகாதாரம், வேளாண்மை, உணவு மற்றும் ஊட்டச்சத்து, சுற்றுச்சூழல் சவால்கள் குறித்து புதுமையான தீர்வுகளைக் காண, அதிக அளவிலான கண்டுபிடிப்பாளர்கள் முயன்று வருகின்றனர். முதல் தலைமுறை உயிரி தொழில்முனைவோர் இதற்காகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் கண்டுபிடிப்புகள் மக்களுக்குப் பயன்பட வேண்டும். அதற்கு அவை வணிகமயமாகி சந்தையைச் சென்றடைவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இதற்காக, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்பவியல் துறையின் கீழ் உள்ள உயிரி தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவி அமைப்பு (Bio Technology Industry Research Assistance Council-BIRAC) மற்றும் Centre for Cellular And Molecular Platforms (C-CAMP) ஆகிய இரண்டும் இணைந்து, உயிரி தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவி அமைப்பின் மண்டல தொழில் முனைவோர் மையத்தை (BIRAC Regional Entrepreneurship Centre - BREC) ஏற்படுத்தியுள்ளன. இது பெங்களூருவில் செயல்பட்டு வருகிறது. 
உயிரி தொழில்முனைவோரின் பணிகளுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில், தொடக்கநிலை தொழில் நிறுவனங்கள் உருவாக உதவுவது, அவற்றின் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்க வழிகாட்டுவது ஆகியவை இந்த அமைப்பின் நோக்கமாகும்.
இதன் ஒரு பகுதியாக 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய உயிரி தொழில்முனைவோர் போட்டியை (The National Bio-Entrepreneurship Competition-NBEC 2018) BREC அறிவித்துள்ளது. 
தேசிய அளவிலான இந்தப் போட்டியில் வாழ்க்கை அறிவியல் அல்லது உயிரி தொழில்நுட்பம் சார்ந்த புதிய மேம்பட்ட வணிக உத்திகள் வரவேற்கப்படுகின்றன. அதாவது, மருந்து கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாடு, தடுப்பூசிகள், மீளுருவாக்க மருந்துகள், நோய் கண்டறிதல், மருத்துவ உபகரணங்கள், டிஜிட்டல் ஹெல்த், சுகாதாரத்தில் தகவல் தொழில்நுட்பம், உணவு மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் அடங்கிய வேளாண் உயிரி தொழில்நுட்பம் ஆகியவை குறித்து இந்த உத்திகள் இருக்கலாம்.
இந்தப் போட்டியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர், உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள், தொடக்கநிலை தொழில் நிறுவனங்கள் (Start Ups) பங்கேற்கலாம். விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். நிறுவனத்தின் பெயரில் விண்ணப்பித்தால், அந்த நிறுவனம் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டதாகவும், அதன் உரிமையாளர்களில் பெரும்பாலானோர் இந்தியர்களாகவும் இருக்க வேண்டும். வணிக உத்திகள் ஆழ்ந்த அறிவியல் அடிப்படையிலான உயிரி தொழில்நுட்பக் கூறுகளைக் கொண்டிருக்க வேண்டும்.
நாடு முழுவதும் இருந்து வரும் விண்ணப்பங்களை தொழில்துறை நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் குழு ஆராய்ந்து அவற்றில் சிறந்த 100 அல்லது 150 வணிக உத்திகளைத் தேர்வு செய்யும். அவ்வாறு தேர்வுபெற்ற விண்ணப்பதாரர்கள் நேரில் அழைக்கப்பட்டு நீதிபதிகள் குழு முன் அவர்களின் உத்திகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கக் கோரப்படுவர். 
இந்த செயல் விளக்க நிகழ்ச்சி நாட்டின் 4 அல்லது 5 முக்கிய நகரங்களில் நடைபெறும். இந்த செயல் விளக்கங்களில் இருந்து சிறந்த 20-40 வரையிலான ஒப்படைப்புகளை நீதிபதிகள் தேர்ந்தெடுப்பர்.
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பெங்களூரு C-CAMP வளாகத்தில் 2 நாள்கள் நடைபெறும் உண்டு உறைவிட தொழில்முனைவோர் வளர்ச்சி மற்றும் தீவிர வழிகாட்டுதல் அமர்வு முகாமில் பங்கேற்க வேண்டும். முகாமின் முடிவில் இதில் பங்கேற்ற தொழில்முனைவோர் அனைவரும் தங்களின் இறுதி வணிகத் திட்டம் குறித்து தலைமை நீதிபதிகள் குழு முன் செயல்விளக்கம் அளிக்க வேண்டும். இதன் அடிப்படையில் போட்டியின் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இதில் வெற்றி பெறும் தொழில்முனைவோர், Start Up நிறுவனங்கள் ரூ. 1.4 கோடி முதலீட்டு வாய்ப்பைப் பெறுவர். அதோடு, ரூ. 38 லட்சம் ரொக்கப் பரிசுகளும் கிடைக்கும். மேலும், அமேசான் இணைய சேவை செயல்திட்டத்தில் ரூ. 14 லட்சம் (25 ஆயிரம் அமெரிக்க டாலர்) மதிப்பிலான Active Credits பெறுவதற்கு தகுதிபெறுவர். 
இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்கியுள்ளது. வரும் 16-ம் தேதி (செப்டம்பர் 16) வரை விண்ணப்பிக்கலாம். 
டிசம்பர் 15-ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெற்று, விருது பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும். போட்டியின் ஒவ்வொரு நிலையிலும் தேர்வு செய்யப்படுவோரின் விவரம், அவர்கள் பதிவுசெய்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே தெரிவிக்கப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் விருது அறிவிக்கப்படும் வரை தங்களின் மின்னஞ்சல் தளத்தை அவ்வப்போது ஆய்வுசெய்துகொள்ள வேண்டும்.
இதுகுறித்த மேலும் விவரங்களை www.nationalbioentrepreneurship.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
- இரா.மகாதேவன்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/4/w600X390/im11.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/04/உயிரி-தொழில்நுட்பம்-போட்டி-வெற்றி-வாய்ப்பு-2994015.html
2994013 வார இதழ்கள் இளைஞர்மணி பால் பண்ணை தொழில்நுட்பப் படிப்பு! DIN DIN Tuesday, September 4, 2018 01:25 PM +0530 பால் மிகவும் முக்கியமான உணவுப் பொருள். பாலை மூலப் பொருளாகக் கொண்டு பல்வேறு இனிப்புகள், பானங்கள், வெண்ணெய், நெய் போன்றவையும் செய்யப்படுகின்றன. பால் தொடர்பான தொழில்களுக்கான வாய்ப்பு எப்போதும் உள்ளது. 
பால் சம்பந்தமான தொழிலில் ஈடுபடவும், பால் மூலம் பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு பெறுவதற்கும் அதுகுறித்த படிப்பான பால்பண்ணை தொழில்நுட்ப (DIARY TECHNOLOGY) படிப்பை படிக்கலாம். பி.டெக் DIARY TECHNOLOGY படித்தால் நல்ல தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
DIARY TECHNOLOGY படிப்பை நடத்தும் கல்வி நிறுவனங்கள் :
Parul University, Vadodara  } http://www.paruluniversity.ac.in/
National Dairy Research Institute, Karnal  }  www.ndri.res.in/
Mewar University, Rajasthan  }  www.mewaruniversity.org/
RIMT University, Punjab  } http://rimt.ac.in/
Guru Angad Dev Veterinary and Animal Sciences University, Ludhiana  } www.gadvasu.in/
Dairy Science College, Bangalore  } http://www.kvafsu.kar.nic.in/Dairy%20College.htm
Kerala Veterinary and Animal Sciences University, Wayanad }  www.kvasu.ac.in
Dairy Science College,Gulbarga  }  http://kvafsu.edu.in/dairy_sciencecollege_gulbarga/dairy_science_college_gulbarga_home.html
- எம்.அருண்குமார்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/4/w600X390/im9.JPG http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/04/பால்-பண்ணை-தொழில்நுட்பப்-படிப்பு-2994013.html
2994012 வார இதழ்கள் இளைஞர்மணி வேலை...வேலை...வேலை... DIN DIN Tuesday, September 4, 2018 01:23 PM +0530 ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் 
(HAL) நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி 
பதவி: Apprenticeship Training (ஏரோனாடிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், ஏவியானிக்ஸ், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பிரிவுகள்)
தகுதி: ஏரோனாடிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், ஏவியானிக்ஸ், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப் படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: https://hal-india.co.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் விவரங்கள் அறிய: https://hal-india.co.in/Common/Uploads/Resumes/888_CareerPDF1_DIPLOMA%20NOTIFICATION%202018.pdf என்ற வலைதளத்தில் தெரிந்துகொள்ளவும். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.09.2018

ஆவின் நிறுவனத்தில் வேலை 
பதவி: Senior Factory Assistant (SFA) 
காலியிடங்கள்: 20
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி அல்லது ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 01.09.2018 தேதியின்படி 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். உச்சபட்ச வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பக் கட்டணம்: பொது, பிசி, எம்பிசி பிரிவினருக்கு ரூ.250. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான அட்டெஸ்ட் பெறப்பட்ட சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
முகவரி: The General Manager, Dindigul District Cooperative Milk Producers Union Limited, No.9, East Govindapuram, Dindigul - 624 001
மேலும் விவரங்கள் அறிய: http://aavinmilk.com/hrdgl250818.html என்ற வலைதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.09.2018

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு வங்கி)யில் வேலை 
பதவி: Development Assistant 
காலியிடங்கள்: 70 
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு உச்சபட்ச வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.450; எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.50. 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு அடிப்படையிலான முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: www.nabard.org என்ற வங்கியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/2708182729Final%20Advertisement%20-%20Development%20Assistant%20-%202018%20.pdf என்ற வலைதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 12.09.2018

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை
பதவி: Stipendiary Trainees, Technician 
காலியிடங்கள்: 103
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் Chemistry, Physics துறையில் இளங்கலை பட்டம், பொறியியல் துறையில் Chemical / Mechanical, Electronics & Communication  / Instrumentation/ Electrical / Civil போன்ற பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்தவர்கள், Fitter / Turner / Machinist / welder / Automobile Motor Mechanic / R&AC / Instrumentation / Electrical / Draughtsman-Civil or Mechanical / Carpenter / Plumber / Mason / Painter / Surveyor பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்கள், Pharmacy, ஆங்கிலத்தில் typewriting, stenography முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 18 வயதிலிருந்து 22 வயதுக்குள் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு உச்சபட்ச வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.150 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.recruit.barc.gov.in என்ற வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் விவரங்கள் அறிய: https://recruit.barc.gov.in/barcrecruit/main_page.jsp என்ற வலைதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 12.09.2018
தொகுப்பு: இரா.வெங்கடேசன்


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/4/w600X390/VELAI.JPG http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/04/வேலைவேலைவேலை-2994012.html
2994011 வார இதழ்கள் இளைஞர்மணி தாய் மண்ணே வணக்கம்! - சுகி. சிவம் DIN DIN Tuesday, September 4, 2018 01:12 PM +0530 நீ... நான்... நிஜம்! -34

பாரத ரத்னா APJ அப்துல் கலாம் ஜனாதிபதியாகத் தேர்வான பிறகு, பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார். ஒரு நிருபர், "தாங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?'' என்று கேட்டதும், "சொர்க்கத்திலிருந்து வருகிறேன்'' என்றார் கலாம். "சொர்க்கமா? இந்தியாவிலேயா?'' என்று நிருபர்கள் கலாய்க்க, "ஒவ்வொருவருக்கும் அவர் அவருடைய தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது'' என்கிறார் எங்கள் நபிகள் பெருமகனார். அது உண்மை என்றால் இந்தியாவைப் படம் வரைந்து பாரதத்தாயின் படம் வரைந்தால் ராமேஸ்வரம் அவளது காலடியில் தானே இருக்கிறது. அதனால் தான் ராமேஸ்வரம் மண்ணை நான் சொர்க்கம் என்கிறேன்'' என்றார். இப்படி ஒவ்வொரும் தாம் பிறந்த தாய்மண்ணை, அது கிராமம் ஆனாலும், நகரம் ஆனாலும், நேசிக்க வேண்டும். நேசித்தல் என்பது வெறும் உணர்ச்சிப்பூர்வமான வெளிப்பாடாக மட்டுமின்றி கனமான அர்த்தங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
கிராமத்திலிருந்து ஒருவன் வெளியேறி விட்டாலும் அவனுக்குள்ளிருக்கும் கிராமத்தை, அத்தனை சுலபத்தில் வெளியேற்றிவிட முடியாது. வளர்ந்து, உயர்ந்து பெரிய பெரிய பதவிகளை எட்டினாலும் அவரவர், அவரவர் சிற்றூர்களையும், கிராமங்களையும், அபிவிருத்தி செய்ய, தங்கள் செல்வம், செல்வாக்கு, இவற்றைப் பயன்படுத்தி தங்கள் எஞ்சிய வாழ்நாளைக் கழிக்கத் தொடங்கினால் இந்தியா வளர்ச்சியடையும். குறிப்பாக, வெளிநாடு வாழும் இந்தியர்கள், கோடி கோடியாகச் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாது, தாங்கள் பிறந்த, வளர்ந்த, விளையாடி மகிழ்ந்த, மண்ணைப் பொன்னாக்க முடிவு செய்தால் நாடு பெருவளர்ச்சி அடையும். உடனே கோயில் கும்பாபிஷேகத்திற்கு, வெளிநாட்டிலிருந்து, கோடிகோடியாக வசூலித்துக் கொட்டுவது என்று மட்டும் அர்த்தம் செய்யாதீர்கள். பள்ளிக்கூடம், கழிவறை, குடிநீர் வசதி, நூலகம், மருத்துவமனை, கணினிக் கல்விக்கூடம், தரமான சத்துள்ள உணவு வசதி மருத்துவப் பரிசோதனை என்று விசாலமாகப் புரிந்து கொள்ளுங்கள். 
சென்னையில் மிகச் செல்வாக்காக இருந்த சிறுநீரக மருத்துவர் டாக்டர் கோ. ஆத்மலிங்கம் தம் பணி ஓய்வுத் தொகை முழுவதையும் தம் கிராமத்தில் கொட்டி மருத்துவமனை ஒன்றைக் கட்டினார். பலரும் பைத்தியக்காரன் என்றார்கள். அவரோ, "நகரத்து மக்களுக்கு நற்பணி புரிய பலரும் தயாராக இருக்கிறார்கள். நான் பிறந்த, நான் வளர்ந்த, இல்லை இல்லை என்னை வளர்த்த மண்ணுக்கு நன்மை செய்வதல்லவா முக்கியம்?... எவ்வளவு காலம் தான் நான், என் வளர்ச்சி பற்றியே யோசிப்பது? என் கிராமத்து எளிய மக்களுக்கு என் அறிவும் உழைப்பும் செல்வமும் திறமையும் பயன்பட வேண்டாமா?'' என்கிறார். இதுவும் தாய் மண்ணை நேசித்தலில் ஓர் அங்கம் தான். 
கவிதா ஜவஹர் என்கிற பேச்சாளர் சொன்ன நல்ல செய்தி ஒன்று. சிவகங்கைக்குப் பக்கத்தில் அரியக்குறிச்சி, கொல்லங்குடி என்கிற கிராமம் உள்ளது. அங்கு வெட்டுடைக் காளி அம்மன் கோயில் என்று ஒன்று உள்ளது. அது ஒன்றும் பராசக்தியின் கோயில் அன்று. உடையாள் என்கிற கிராமத்துப் பெண் வெட்டப்பட்ட இடமே இன்று கோயிலாகி அருள்பாலிக்கிறது. அப்படி என்ன அற்புதசக்தி அந்தச் சின்னப் பெண்ணுக்கு...? கல்வியறிவில்லாத, ஆடுமாடு மேய்க்கிற சிறுபெண் உடையாள். அவள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது வெள்ளைக்காரர்களை எதிர்த்துப் போரிட்ட வேலுநாச்சியார் பதுங்கிக் கொள்ள, அந்தப் பகுதிக்கு வந்திருக்கிறார். பின்னாலேயே துரத்தி வந்த வெள்ளையர்படை, உடையாளை மிரட்டி, வேலுநாச்சியார் ஒளிந்திருக்கும் இடத்தைச் சொல்லச் சொன்னார்கள். சொல்ல முடியாது என்று சாதிக்கிறாள். கோபமடைந்த வெள்ளைப்படை தலை தனியாக, உடல் தனியாக வெட்டுவோம் என்று அச்சுறுத்தியும் அந்தச் சிறுமி அஞ்சவே இல்லை. ஆத்திரத்தில் அவள் தலை வெட்டப்பட்டது. பின்னர் இதனைக் கேள்விப்பட்ட வேலுநாச்சியார், அவளை வெட்டுடைக்காளி என்றே கும்பிட்டார். தம் படைப்பிரிவில் ஒரு பகுதிக்கு உடையாள் படை என்றே பெயரிட்டார். இந்த மரணம் தலைமைக்கு விசுவாசம் என்பதைப் போல தோன்றினாலும் தாய் மண்ணை நேசித்த ஒரு தமிழச்சி கடவுளான கதை என்றே நான் கருதுகிறேன்.
தாய் மண்ணை நேசித்தல் என்கிற தலைப்புக்கு அகல நீளங்கள் மிக அதிகம். இந்த ராகத்திற்குச் சங்கதிகள் நிறைய போட முடியும். மண்ணை நேசித்தலில் அதிக ஆர்வம் காரணமாக, சிவகங்கை, பாஞ்சாலங்குறிஞ்சி, நாட்டரசன் கோட்டை பக்கங்களில் ஒரு விசித்திர பழக்கம் நிலவுகிறது. பிறந்த குழந்தைக்குப் பாலூட்டும் முன்னர் சர்க்கரைத் தண்ணீர் தொட்டுவைக்கும் சடங்கில், மண்ணைச் சிறிது தொட்டுக் குழைத்து வைப்பது, மேற்குறித்த இடங்களில் பழக்கத்தில் உள்ளது. கிராமிய மொழியில் சேனை வைத்தல் (சீனி வைத்தல்?) என்று சொல்லி இச்சடங்கு பேசப்படுகிறது. சிவகங்கை மருதுசகோதரர்கள் வீரம் விளைந்த பூமி. பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் மண். நாட்டரசன் கோட்டையோ கம்பன் சமாதி உள்ள மண்.. எனவே வீரம் பெருக, கல்வி பெருக இப்படி ஒரு சடங்கு உருவாயிற்று என்கிறார்கள்.
வடக்கேயும் பகத்சிங் பிறந்த ஊரில் உள்ள மண்ணை, பிள்ளையுண்டான பெண்கள் வயிற்றில் பூசிக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது. தாய் மண்ணை நேசித்தல் என்பதற்கு இதைவிடவும் சிறந்த நிரூபணங்கள் இருக்கின்றன. அவை இன்னும் முக்கியமானவை. சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்தபோது அதன் செல்வச் செழிப்பையும் சுக போகங்களையும் கண்டு மலைக்கவும் இல்லை. களிக்கவும் இல்லை. இந்தச் செழிப்பு இந்தியருக்கில்லையே.. "இந்தியா வளம் பெறுதல் என்று?' என்றே வருந்தினார். கட்டிலில் உறங்க மறுத்து தரையில் படுத்துக் கொண்டார். அவரது தத்துவ உரைகளைக் கேட்டு பல்கலைக் கழகங்கள் இந்திய தத்துவத்துறை பேராசியராக அவரைப் பணியமர்த்த விழைந்தபோது, ஈர்க்கப் படாமல், இந்தியா திரும்புவதிலேயே குறியாக இருந்தார். விவேகானந்தர் போன்ற துறவி திரும்பி வந்ததில் வியப்பில்லைதான். பத்துப் பிள்ளைகள் பெற்ற குடும்பஸ்தர் அமெரிக்காவில் கிடைத்த வேலைகளை ஏற்காது இந்தியா திரும்பினார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? முத்தையால்பேட்டை பள்ளியில் கணக்கு ஆசிரியராகப் பணிபுரிந்த அமரர் 
P.K. ஸ்ரீனிவாசன் தான் அத்தகு ஆச்சர்யமான ஆச்சார்யர். கணித மேதை ராமானுஜம் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது வாழ்க்கை வரலாற்றைத் தேடித் தேடித் தொகுத்தவர். கணக்கையே கவிதையாக்கி, கணக்கைக் காதலித்து, கணக்கைக் கல்யாணம் செய்துகொண்டு, கணக்கற்ற சேவை செய்த காந்தியவாதி அமரர் P.K.S. கதர்க்குல்லாய், கதர் வேட்டி, காலில் செருப்பின்றி ஓடிஓடி மாணவர்க்குழைத்த ஒப்பற்ற ஆசிரியர் அவர். அவரது அபரிமித திறமை கண்டு அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் அமெரிக்காவில் அவரை, ஆசிரியராக்க ஆசைப்பட்டபோது, சைதாப்பேட்டையில் உள்ள திருக்குறள் ஆதிவாசி நடுநிலைப்பள்ளியில் உள்ள நரிக்குறவர் மாணவர்களைக் கடைத்தேற்றும் தம் கடமையை விடமுடியாது என்று காரணம் காட்டி இந்தியா திரும்பிய இதயம்... அவரது இதயம். "தாய் மண்ணே வணக்கம்' என்ற பாடல்வரிகளில் அந்த மனிதரின் மூச்சுமல்லவா சேர்த்துக் கேட்கிறது?
"தாய் மண்ணே வணக்கம்' என்பதற்கு அடையாளமாக வாழ்ந்து மடிந்த ஒருவரைச் சொல்லாமல் போனால் கட்டுரை கூரைவேயாத வீடாகி விடுமோ என்று கவலைப்படுகிறேன். இந்திய விடுதலை வரலாற்றில் காந்திஜிக்கும் அவரைச் சார்ந்த தியாகிகளுக்கும் கிடைத்த வெளிச்சம் நேதாஜிக்கும் அவரைச் சார்ந்த தியாகிகளுக்கும் கிடைக்காமல் போனது வருந்த வேண்டிய ஒன்று. காரணம் உலகறிந்த இரகசியம். காந்தியை மையப்படுத்தியே காங்கிரஸ்காரர்கள் வரலாற்றை வடித்தெடுத்தனர். காந்தி வெளிச்சத்தில் நாற்காலிகள் பிடிப்பது லாபகரமாக இருந்ததால் நேதாஜியை இருட்டிப்பு செய்தனர். தமது 43 வருட வாழ்க்கையில் 26 வருடங்களைத் தலைமறைவு வாழ்க்கையாகக் கழித்தவர் தீரன் செண்பகராமன். இந்தியர்களின் இரத்தத்தைச் சூடேற்றும் "ஜெய்ஹிந்த்' என்கிற கோஷத்தை முதலில் எழுப்பியவர். நேதாஜிக்கே உத்வேகமூட்டி "ஜெய்ஹிந்த்' என்று முழங்க வைத்தவர். பாரதமாதா வாலிபர் சங்கம் நிறுவி இளைஞர்களை ஈர்த்து அடிமைத்தளையை எதிர்த்துப் போராடியவர். இத்தாலியில் மொழிக் கல்வி பயின்று ஸ்விட்சர்லாந்தில் பொறியியல் படித்து ஜெர்மனியில் டாக்டர் பட்டம் பெற்ற உலகக் கல்வியாளர் செண்பகராமன். ஹிட்லரைச் சந்தித்தபோது சிறிதும் அஞ்சாமல் "இந்தியர்கள் விடுதலைக்குத் தகுதியற்றவர்கள் என்று நீங்கள் பேசியது தவறு'' என்று வாதிட்டு திருத்தியவர்.
இன்றைக்கும் தமிழ்நாட்டில் செய்ய முடியாத செயல் செய்தவரை "அவன் பெரிய எம்டன்' என்பார்கள். அந்த எம்டன் கப்பலைக் கொண்டு, இந்தியாவில் பிரிட்டிஷாரைக் கலங்கச் செய்து, மீண்டும் ஜெர்மனி திரும்பிய மாவீரர். ஜெர்மனியில் ராணுவ மரியாதையுடன் வரவேற்கப்பட்ட இந்தியத் தமிழர். சுதந்திரக் கொடி பறக்கும் கப்பலில் தான் இந்தியா திரும்ப வேண்டும் என்ற அவர் கனவு அவர் காலத்தில் நனவாகவில்லை. ஆனால் அவரது அஸ்தி இந்தியக் கொடிபறந்த கப்பலில் இந்தியா வந்தது. "இறந்துவிட்டால் என்னை ஜெர்மனியில் புதைக்க வேண்டாம். எரித்து என் சாம்பலை இந்தியாவில் கரையுங்கள்'' என்று அவர் மனைவியிடம் தெரிவித்த விருப்பத்தின்படி, தாய்மண்ணில், கரமனை ஆற்றிலும் குமரிக்கடலிலும் அவரது அஸ்தி கரைக்கப்பட்டது. இதனால் தான் "எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே' என்று காதலில் தொடங்கிய பாரதி பாட்டின் இறுதியில் "அங்கவர் மாய அவருடற் பூந்துகள் சூழ்ந்ததும் இந்நாடே' என்று கண்ணீரில் அஸ்தி கரைத்தான் போலும். பேராசிரியர் ராஜாராம் ஒரு சொற்பொழிவில் இதைக் கூறியபோது சபையில் இருந்த நான் அடக்கமுடியாமல் அழுதுவிட்டேன். "தாய் மண்ணே வணக்கம்' என்ற பாடலின் போது நமது தேசக் கொடி சும்மா அசையவில்லை நண்பர்களே... இத்தகு தியாகிகளிடமிருந்து வெளியேறும் உயிர் மூச்சால் அல்லவா அசைகிறது?
(தொடரும்)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/4/w600X390/im8.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/04/தாய்-மண்ணே-வணக்கம்---சுகி-சிவம்-2994011.html
2994006 வார இதழ்கள் இளைஞர்மணி காக்க... காக்க... காலம் காக்க! ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ். DIN DIN Tuesday, September 4, 2018 12:56 PM +0530 தன்னிலை உயர்த்து! 8

ஒரு கிராமத்தில் ஒரு ஜென் குரு சிலகாலம் தங்கினார். அவரை அக்கிராமத்தின் ஏழை மனிதன் ஒருவர் நன்கு உபசரித்தார். அவரது உபசரிப்பிற்கு பரிசாக ஒரு பூவைத் தந்தார். "இப்பூவானது மந்திர சக்தி வாய்ந்தது. யாருக்கும் தெரியாமல் இப்பூவால் எந்த இரும்பைத் தொட்டாலும் அது தங்கமாகிவிடும். இரண்டு நாட்கள் மட்டுமே இத்தகைய சக்தி அப்பூவிற்கு உண்டு. வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார் குரு.
அவர் சென்ற பிறகு "ஓ! இன்னும் இரண்டு நாள் இருக்கின்றன. அதனால், நாளை பார்த்துக் கொள்ளலாம்" என்று முதல் நாளை ஒத்தி வைத்தார். மறுநாள் அவருக்கு சில அத்தியாவசிய வேலைகள் இருந்ததினால் அதில் மூழ்கிப்போனார். அன்று மதியம் நகரில் உள்ள இரும்புக் கடைக்குச் சென்றபோது தான் அன்று கடைகள் விடுமுறை என்பதை உணர்ந்தார். 
வேகமாக, பக்கத்து நகரத்துக்கு பயணித்தார். ஒரு டன் இரும்பினை வாங்கினார். கூலிக்கு ஆட்கள் கிடைக்காததால் தனியாய்ச் சுமந்தார். வீடு வந்து சேரும்போது இருட்டியிருந்தது. அப்பூவும் வாடி செயலற்றிருந்தது. கோபத்தில் பூவினைப் பிய்த்தார். அதில் ஒரு காகிதம் இருந்தது. "நண்பனே, நீ குறித்த நேரத்தில் செயல்படுத்தியிருந்தால், உனது வீட்டின் வாயிற்படியில் உள்ள இரும்பையாவது தங்கமாக மாற்றியிருக்கலாமே?' என எழுதப்பட்டிருந்தது. 
இப்படித்தான், காலம் தனது வலிமையை அவ்வப்போது உணர்த்திக் கொண்டேயிருக்கிறது. காலம் பொன் போன்றது என்பதை விட காலம் வலிமையானது. இவ்வுலகில் எவருக்காகவும் தன்னை வளைத்துக் கொள்ளாதது. அது தனக்கென்ற ஒரு பயணத்தில் முன்னேறிக் கொண்டே இருக்கிறது. "காலத்தின் அருமையை உணருங்கள். கிடைக்கும் சந்தர்ப்பத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேரத்தை வீணாக்குவது, சோம்பேறியாகத் திரிவது, தள்ளிப்போடுவது போன்றவற்றைத் தவிர்க்க பழகுங்கள். இன்று செய்ய வேண்டியதை நாளைக்கு என்று தள்ளிப்போடாமல், இன்றே செய்து முடியுங்கள்'' என்ற இங்கிலாந்து நாட்டு அறிஞர் செஸ்டர்பீல்ட் பிரபுவின் வரிகள், ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் அசைபோட வேண்டிய வரிகள்.
உண்மையில், காலம் சோம்பேறியை ஓட வைக்கும். சாதாரண மனிதனோடு கைகுலுக்கும். உழைப்பவனுக்காக சேர்ந்தே உழைக்கும். வல்லவனுக்கு சற்று வழிகொடுக்கும். அதனால்தான் வெற்றியாளர்கள் காலத்தை வென்றவர்களாகின்றனர்.
ஞாலம் கருதினும் கைகூடும் காலம் 
கருதி இடத்தாற் செயின்
என்ற தெய்வப்புலவர் திருவள்ளுவரின் வரிகள்தான் இவ்வுலகினை தங்கள் உழைப்பால் வென்றவரின் அடிப்படை வரிகள்.
இறைவனின் படைப்பில், இயற்கையின் நியதியில் இருபத்தி நான்கு மணிநேரம் அனைவருக்கும் பொதுவானது. இதனை யார் ஒருவர் சரியாகப் பயன்படுத்துகிறார்களோ, அவர்களை இவ்வுலகம் வெற்றி மாலையிட்டு கைதட்டி அழகு பார்க்கிறது. ஆர்னால்ட் பென்னட் என்ற ஏழை எழுத்தாளர், தனது லட்சியத்தை தான் ஒரு சிறந்த எழுத்தாளராக வேண்டும் என்று உறுதியாக்கினார். தனது அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்யும் நேரம் தவிர, எஞ்சிய நேரத்தை எழுதுவற்கும், படிப்பதற்கும் பயன்படுத்தினார். இதனால், ஒவ்வொரு மணி நேரத்திலும் ஒரு புதிய சிந்தனை மலர்ந்தது. ஒவ்வொரு நாளிலும் ஒரு கதை அல்லது கட்டுரை அச்சில் வெளியாகியது. அதன் பின்னர் பென்னட்டைச் சந்தித்தவர்கள், "எப்படி உங்களால் இது சாத்தியமாகிறது? நேரம் எப்படி கிடைக்கிறது?'' என்று ஆச்சரியப்பட்டனர். அவர்களது கேள்விகளுக்கு தனது அனுபவத்தை 24 மணி நேரத்தை எவ்வாறு மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் பயன்படுத்துவது என்ற கட்டுரையாக்கினார்.
காலத்தை இரட்டிப்பது தான் காலத்திற்கு நாம் செய்யும் நன்றிக் கடன். காலம் என்பது அழகாய் வளர்ந்திட்ட ஒரு செடி. இதில் வெட்டுக்கிளி இலைகளைத் தின்று செடியை அழிக்கும். ஆனால், தேனீக்கள் தேனை உறிஞ்சினாலும், மகரந்த சேர்க்கைக்கு தூது செல்லும். தேனீக்களால் கனிகள் கருக்கொள்ளும். வெட்டிப் பேச்சுதான் வெட்டுக் கிளிகள். இவர்கள் நேரத்தைத் தின்பவர்கள். இவை வாழ்வின் அழிவுகள். ஆக்கப்பூர்வமே தேனீக்கள். தேனீக்கள் பலனை இரட்டிப்பாக்கும்.
காலம் தவறாமை என்பது இயற்கை என்னும் பள்ளிக்கூடம் நமக்கு அனுதினமும் கற்றுத் தரும் பாடம். அதிகாலைச் சூரியனும், மாலைச் சந்திரனும் ஒரு நாளும் காலதாமதத்திற்காக காரணம் தேடியதில்லை. சற்றே ஒய்வெடுத்துக் கொள்ள இவை எவரிடமும் கெஞ்சுவதில்லை. ஒன்று நிச்சயம். நாம் காலத்தை நிர்ணயிப்பதில்லை. காலத்தோடு நாம் பயணிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இயற்கை தன்னைத் தானே நிர்வகிப்பது போல், நாம் நம்மை நிர்வகித்துக் கொண்டால், காலத்தின் ஓட்டத்தில் நாம் மீன்கள் போல் எதிர் நீச்சலிடலாம்.
ஒரு மனிதனின் வாழ்க்கை என்பது அவரது ஒட்டு மொத்த நிமிடங்களின் வாழ்க்கை. நிமிடங்களைச் சரிபடுத்தினால் வாழ்வு சரியாகும். நேரத்தின் நிர்வாகம் என்பது ஒரு கிரிக்கெட் விளையாட்டைப் போன்றது. ஒவ்வொரு பந்தும், ஒவ்வொரு மணி நேரம். ஒரு ஓவரில் ஆறு பந்துகளுக்கு, அதிக ரன் எடுப்பவர் தான் "ஆட்ட நாயகனாக வாய்ப்பு அதிகம். அதுபோலத்தான் கிடைக்கின்ற நேரத்தை சிறப்பாகச் செயல்படுத்துவதன் மூலமே அதன் விளைவுகளும் அமைவதுண்டு.
மகாத்மா காந்தி அவர்கள் ஒருமுறை இரயிலில் பயணம் செய்யும் போது, அவரது உதவியாளிடம், "நேரம் என்ன ?'' என்று கேட்டார். "ஐந்து மணி'' என்றார் உதவியாளர். காந்தியின் கடிகாரத்தில் ஐந்து மணியாக இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. கிடைத்த ஐந்து நிமிடத்தில் ஒரு கடிதம் எழுதி முடித்தார் மகாத்மா காந்தி. பின்னர் உதவியாளரிடம், "ஒரு நிமிடத்தில் எத்தனையோ வெற்றி தோல்விகள் மாறியிருக்கின்றன. ஐந்து நிமிடம் என்பது எனது வாழ்வில் மட்டுமல்ல, இந்தியர்களின் வாழ்வில் மிக முக்கியமானது. சரியான நேரம் சொல்லத் தவறிய உங்களுக்கு கடிகாரம் எதற்கு?'' என்று கடிந்து கொண்டார். 
சாதாரண மனிதர்களுக்கு வாழ்க்கை பொழுதுவிடிவதிலும், மறைவதிலும் கழிந்து விடுகிறது. நடுத்தர மனிதர்களின் வாழ்க்கை மணிகளில் எண்ணப்படுகிறது. உயர்ந்தவர்களின் வாழ்க்கை நிமிடங்களில் கணக்கிடப்படுகிறது. சாதனையாளர்கள் கடிகாரத்தின் வினாடி முள்ளோடு போட்டி போட்டுக்கொண்டிருப்பவர்கள்.
அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளை அவசரமானது, அவசரமில்லாதது, முக்கியமானது மற்றும் முக்கியத்துவமில்லாதது என வகைப்படுத்தலாம். அவசரமானதையும், முக்கியமானதையும் அன்றே செய்தால் அந்தந்த நாளில் வெற்றி பெற முடியும். இது காட்டுத்தீயை அணைப்பதைப் போன்றது. புதிய சிந்தனைகள் அற்றது. அவசரமில்லாததையும், முக்கியமில்லாததையும் அந்த நாளில் செய்பவர் நேரத்தை விரயம் செய்பவராவார். இது பொழுதுபோக்குபவர்களின் பண்பு. முக்கியமில்லாதவற்றில் அவசரமாக ஈடுபடுபவர்கள் வெற்றிக்கோட்டினைத் தொட வெகுநேரமாகும். ஏனெனில், இவர்களின் பணிக்கிடையில் வாட்ஸ்அப்பும், பேஸ்புக்கும், டிவிட்டரும் காலத்தைச் சுரண்டிவிடும். கதே என்ற ஜெர்மன் நாட்டு அறிஞர், "அதிக முக்கியமான விசயங்கள், முக்கியத்துவமற்ற விசயங்களின் தயவில் ஒரு போதும் இருக்கக் கூடாது'' என்பார். அவசரமில்லாத ஆனால் முக்கியமானவற்றைச் செய்பவர்கள் தான் திட்டமிட்டு வாழ்வை நடத்துபவர்கள். அவர்களே வெற்றியாளர்கள். 
2002 ஆம் வருடம் தன்னை உருவாக்கிய "மெட்ராஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி' க்கு ஒரு பாடம் நடத்துவதற்காக சிறப்பு அழைப்பாளராக டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அழைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது ரயில்வே கேட் அருகில் கடுமையான போக்குவரத்து நெரிசல். அப்துல் கலாம் வர இன்னும் சற்று நேரம் ஆகும், போக்குவரத்து சீரடையவில்லை எனப் பேசி கொண்டிருந்தனர். வாகனத்திலிருந்து இறங்கி நடக்கத் தொடங்கினார். அவர்களின் கண்கள் விரிய அப்துல் கலாம் சரியான நேரத்தில் வகுப்பறைக்குள்ளே நுழைந்தார். காலம் கடந்து வந்தார் கலாம் என்பதை மாற்றி காலம் கடந்து நின்றார். "உனது எல்லா நாள்களிலும் தயாராக இரு' என்ற 19 ஆம் நூற்றாண்டில் பிறந்து வளர்ந்த ஒரு கவிஞனின் வரிகள் காலத்தால் எடுக்கப்பட வேண்டிய முடிவுகளின் அற்புதத்தை பறைசாற்றுகிறது. எனவே, நேர நிர்வாகம் ஒரு மனிதனை, ஒழுங்குபடுத்தும். அவரது செயல்பாட்டினை முன்னுரிமைப்படுத்திக் காட்டும். முன்யோசனையுடன் நடந்துகொள்ள வைக்கும். திட்டமிடத் துணை நிற்கும்.
காலத்தைத் திட்டமிடுதல் வாழ்க்கையை திட்டமிடுதலாகும். ஒவ்வொரு மாதமும் திட்டமிடுவதை விட, ஒவ்வொரு வாரத்திலும் திட்டமிடுவதே இலட்சியத்தை அடைய எளிய வழி. ஆனால், காலத்தைச் செலவழிக்கும் போது நாள் கணக்கிலோ, மாதக் கணக்கிலோ செலவழிக்காமல், மணிக்கணக்கிலோ, நிமிடக் கணக்கிலோ செலவழிக்க வேண்டும். அதனை அட்டவணைப்படுத்தி செலவிற்கான நேரத்தை பணத்தை செலவழிப்பதைபோல் எழுதி வர வேண்டும். நாம் காலத்தை கணக்கிட்டு வாழ்ந்திருந்தால் எதிர்கால சந்ததியினருக்கு நமது வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு. அட்டவணைப்படுத்தி வாழத் தவறியிருந்தால் நமது வாழ்க்கை ஓர் எச்சரிக்கை. பயனோடு கழிக்கின்ற காலங்கள் மனிதனை வெற்றி என்னும் நட்சத்திரம் நோக்கி நகர்த்துகிறது. 
செந்நிறச் சூரியோதமாய்ப் புலர்ந்து, மித வெயிலில் செடிகள் மலர, கடும் வெயிலில் நிழல்கள் மறைய, மாலை வெயிலில் நீளும் நிழல்கள் கடந்து, ஒளிந்திருக்கும் சந்திரனிடம் பளிச்சிடும் நட்சத்திரங்கள், முகம் மலர் நிலவிடம் பேசிடும் அல்லி போல், ஒரு நாளென்பது ஒரு கதம்பக் கவிதையாய் மலர்ந்திருக்க வேண்டும். அது "பணியின் நேரம், வெற்றியின் பரிசு; சிந்திக்கும் நேரம், சக்தியின் பிறப்பிடம்; விளையாடும் நேரம், நீங்கா இளமையின் ரகசியம்; வாசிப்பின் நேரம், அறிவின் ஊற்று; நட்பின் நேரம், மகிழ்ச்சியின் பாதை; அன்பின் நேரம், கடவுளின் வாய்ப்பு; சுற்றத்தோடு செலவிடும் நேரம், தன்னலத்தை குறைக்கும்; சிரித்து மகிழும் நேரம், ஆத்மாவின் ஓசை' என்ற அயர்லாந்து நாட்டு கவி வரிகள்போல் கலந்திருக்க வேண்டும்.
நமது வாழ்வு நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. குழந்தைப் பருவங்கள் அறியாமலே கழிந்து விடுகின்றது. முதுமைப் பருவங்கள் அனுபவப் பகிர்விலேயே அடங்கிப் போகிறது. இடைப்பட்ட காலங்களை நமது பாரதத்தின் முதல் பிரதமர் தனது மேசையில் வைத்திருந்த ராபர்ட் ப்ரோஸ்ட் என்னும் அமெரிக்க கவிஞரின் 
Woods are lovely dark and deep
But I  have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep 
என்ற சிற்றோடையின் ஓட்டம் போல் சில வரிகளால் உந்தினால், அரட்டைகள் குறையும், ஆற்றல் அதிகரிக்கும்.
எந்த நேரத்தில் எதைத் தொடங்கலாம் என்று தினமும் நாட்காட்டியின் பின்புலத்தைப் பார்ப்பவர்களுக்கு, வாழ்வதன் நன்புலத்தை "நாளும் கோளும் நலிந்தவர்க்கு இல்லை' என்பது தெளிவாக்கும். கிடைக்கின்ற நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்ற தெளிவு கொண்டவனுக்கு எல்லா நேரமும் நல்ல நேரமே. விண்ணில் செல்கின்ற ராக்கெட்டுக்கு பயணம் தொடங்கும் நேரத்தை வேண்டுமென்றால் நாம் தீர்மானிக்கலாம், அதன் பிறகு அது கடக்கும் லட்சக்கணக்கான மைல்களுக்கு எந்த நாட்காட்டியிலிருந்து நல்ல நேரம் பார்க்க முடியும்? 
இவ்வுலகில் இழந்த பணத்தைப் பெற்றுவிடலாம்; இழந்த நட்பைப் புதுப்பித்துவிடலாம். ஆனால் கடந்த காலத்தை எவராலும் திரும்பப் பெறமுடியாது. 
ஒரு வேட்டைக்காரன் கையில் கவணுடன் காட்டிற்குச் சென்றான். ஒரு மரத்தின் மேலிருந்த பறவையினை தனது கவணால் அடிக்க, கீழே கிடந்த அழகிய சிறு கற்களை எடுத்தான். ஒவ்வொன்றாய் கவணில் கட்டி வீசினான். பறவையின் மீது படவில்லை. சிறிது நேரத்தில் அப்பறவையும் பறந்தது. எறிந்த கற்களெல்லாம் அருகில் ஓடிய நதியில் விழுந்தது. எஞ்சியிருந்த ஒரு கல்லினைப் பார்த்தான். அழகாய் இருந்தது. ஆசையாய் விளையாடும் தன் குழந்தைக்கு அதைப் பரிசளிக்க வீட்டிற்கு எடுத்து வந்தான். வரும் வழியில் ஒரு வைர வியாபாரியைச் சந்தித்தான். அவர் அக்கல்லை வைரமென்று தெரிந்ததும், அதிக விலை கொடுத்து வாங்கினார். கை நிறையப் பணம் கிடைத்த பின்பும் சோகமாயிருந்தான். காரணம் கேட்டார், வைர வியாபாரி. "ஆற்றில் எறிந்த அத்தனை கற்களையும் வைரமென்று தெரியாமலே எறிந்துவிட்டேனே! இது எனக்கு முன்னமே தெரிந்திருந்தால் நான் பெரிய அதிர்ஷ்டசாலியாய் இருந்திருப்பேனே?'' என்றார். அது போலத்தான் ஒவ்வொரு நாளும் வைரக்கற்கள். மிகவும் கிடைத்தற்கரியது.
காலம் விலைமதிக்க முடியாத பரிசு!
காக்க... காக்க... காலம் காக்க!
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: 
காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/4/w600X390/im7.JPG http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/04/காக்க-காக்க-காலம்-காக்க-ஆர்திருநாவுக்கரசு-ஐபிஎஸ்-2994006.html
2994005 வார இதழ்கள் இளைஞர்மணி வாங்க இங்கிலீஷ் பேசலாம் 155  ஆர்.அபிலாஷ் DIN Tuesday, September 4, 2018 12:50 PM +0530 புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் மருத்துவருக்கான காத்திருப்போர் அறையில் இருக்கிறார்கள். அவர்களுடன் அங்கே ஒரு மீசைக்காரரும் நடாஷா எனும் பெண்ணும் இருக்கிறார்கள். நடாஷா டாக்டரைப் பார்ப்பதற்கு உள்ளே போகிறார். அங்கு காத்திருக்கும் மீசைக்காரர் புரொபஸரிடம் எதையோ கேட்க முயன்றபடி இருக்கிறார். ஆனால் கணேஷின் குறுக்கீடால் அது நடைபெறாமல் போக மீசைக்காரர் வருத்தமடைகிறார்.

மீசைக்காரர் (கணேஷை சுட்டி): சார் இந்த பையன் சரியான முந்திரிக்கொட்டையா இருக்கிறான். 
புரொபஸர்: ம்ம்ம்....
மீசைக்காரர்: நான் அரை மணியா ட்ரை பண்றேன், ஆனால் என்னை என் சந்தேகத்தைக் கேட்கவே அவன் விடல.
புரொபஸர்: சரி... இப்போ கேளுங்க
மீசைக்காரர்: இந்த முந்திரிக்கொட்டை மாதிரி இருக்கிறவங்களை ஆங்கிலத்தில் என்ன சொல்வாங்க?
புரொபஸர்: அதைத் தான் கேட்க வந்தீங்களா?
மீசைக்காரர்: இல்லீங்க. இது அதைக் கேட்க காத்திருந்த போது தோன்றியது.
புரொபஸர்: பாருங்க... உங்களுக்கே பொறுமை இல்லை. கேட்க வந்தது ஒண்ணு, கேட்டதோ இன்னொண்ணு.
மீசைக்காரர்: சாரி சார்... மன்னிச்சிடுங்க.
புரொபஸர்: சரி, பொதுவா சந்தேகம் கேட்கையில் எல்லாருக்குமே நடப்பது தான் இது. And it is infectious. ஒரு கூட்டத்தில் ஒருத்தர் கேள்வி கேட்டால் அதுவரை அமைதியாய் இருந்த அத்தனை பேருக்கும் மனதில் புதுப்புது கேள்விகள் முளைக்கும். முந்திரிக்கொட்டைகள் சூழ்நிலை சந்தர்ப்பத்தை பொருட்படுத்தாமல் தம்மை முன்னிலைப்படுத்தும் நோக்கில் கருத்து சொல்பவர்கள் அல்லது கேள்வி கேட்பவர்கள். 
மீசைக்காரர்: "கரகாட்டக்காரன்', "சின்ன கவுண்டர்' ஆகிய படங்களில் செந்திலின் பாத்திரம்?
புரொபஸர்: ஆமாம் செந்திலின் பாத்திரம் கிட்டத்தட்ட முந்திரிக்கொட்டை தான். ஆங்கிலத்தில் இந்த குணம் கொண்டோரை presumptuous என்பார்கள். Jumping the gun என்பதும் இதைத் தான் குறிக்கிறது. Cheeky, impudent, impertinent ஆகியவையும் இதற்கு இணையான சொற்கள். அரங்கில் வீற்றிருப்போருக்கு போதிய மரியாதை அளிக்காமல் பேசுவது mpertinent.
கணேஷ்: பிக்பாஸில் ஐஷ்வர்யா?
புரொபஸர்: ஆமாம் கிட்டத்தட்ட. Impudent, insolent என்றாலும் இதே தான். ஆனால் இதையே சற்றே சுட்டித்தனமாய் செய்தால் அது cheeky என சொல்லப்படும். முந்தின பிக்பாஸில் ரைஸாஇப்படி இருந்தார். She was cheeky. கிரிக்கெட்டில் நீங்கள் ஸ்லிப்புக்கு மேலாக ரேம்ப் ஷாட் அடித்தால் அதை cheeky என்பார்கள். இப்படி வீம்பாக பேசித் திரிந்தால் they call you a cheeky monkey.
கணேஷ்: அதென்ன monkey? குரங்கு மாதிரி விளையாட்டுத்தனமாய் இருக்கிறான் என்றா?
புரொபஸர்: ஆமா. 
அப்போது அங்கே வின்னி எனும் ஒரு பன்னிரெண்டு வயதுப் பெண் தன் பாட்டியுடன் வருகிறாள். இருவரும் அமர்கிறார்கள்.
பாட்டி: பளீஸ்... யாராவது ஏஸியைக் குறைக்க முடியுமா?
வின்னி: Yes it is cold enough to freeze the balls of a brass monkey.
கணேஷ்: but…
வின்னி: what?
கணேஷ்: அந்த idiom.... அதை ஒரு பெண் சொல்லக் கூடாதல்லவா? It doesn't make any sense.
வின்னி: Who said? It makes perfect sense. 
புரொபஸர்: அந்த சொற்றொடரைப் பொறுத்தமட்டில், அது குரங்கின் உடலுறுப்பைப் குறிக்கவில்லை.
கணேஷ்: பிறகு?
புரொபஸர்: பழைய கப்பல்களில் brass rack எனும் பித்தளை அலமாரிகள் உண்டு. இவற்றை monkey என சொல்வார்கள். இந்த கப்பல்களில் கடற்கொள்ளையரிடம் இருந்து பாதுகாப்புக்காக பீரங்கிகள் வைத்திருப்பார்கள். இந்த பீரங்கிகளின் குண்டுகளை cannon என சொல்வார்கள். இந்த குண்டுகளை ரேக்கில் அடுக்கி வைத்திருப்பார்கள். இவை தான் balls of a brass monkey. கடுங்குளிரில் இந்த பித்தளை அலமாரிகள் இறுகும். அவை இறுகும் போது குண்டுகள் தெறித்து வெளியே புறப்பட்டு ஓடும். அதாவது திடீரென பெரிய ஒலியுடன் பீரங்கியில் இருந்து புறப்பட்டது போல வெளிக்கிளம்பும். இந்த சம்பவத்தை சுட்டும் வகையில் கடுங்குளிரை it is cold enough to freeze the balls of a brass monkey என குறிப்பிடும் பழக்கம் ஏற்பட்டது.
வின்னி: That's interesting.
மீசைக்காரர்: என் ஒரிஜினல் கேள்வியைக் கேட்டு விடுகிறேன். இப்போது விட்டால் பிறகு வாய்ப்பு கிடைக்குமோ என்னவோ? மீசையை முறுக்குவதை ஆங்கிலத்தில் என்ன சொல்வார்கள்? என்னுடைய படம் ஒன்றை பேஸ்புக்கில் பதிவேற்றுகையில் caption எழுதத் தேவைப்படுகிறது.
(இனியும் பேசுவோம்)


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/4/w600X390/im5.JPG http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/04/வாங்க-இங்கிலீஷ்-பேசலாம்-155-2994005.html
2994003 வார இதழ்கள் இளைஞர்மணி திரைப்படத் தொழில்நுட்பம் கற்க...! Tuesday, September 4, 2018 12:41 PM +0530 பொதுமக்களின் பொழுது போக்கிற்கு அந்த காலத்தில் நாட்டுப்புறக் கலைகள், நாடகம் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தன. அதைத் தொடர்ந்து திரைப்படங்கள், தொலைகாட்சிகள், கணினி விளையாட்டு, செல்லிடப்பேசி விளையாட்டு என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் படிப்படியாக கண்டுபிடிக்கப்பட்டன. 
மக்கள் தங்களுடைய மன உளைச்சலையும், மன இறுக்கத்தையும் போக்கிக் கொள்வதற்கு இந்த பொழுதுபோக்கு அம்சங்கள் தேவைப்படுகின்றன. திரைப்படத்துறை மக்களைக் கட்டிப் போட்டிருக்கும் ஒரு பொழுதுபோக்குத்துறையாகும். அது நல்ல வருமானம் தரும் ஒரு துறையாகவும் மாறிவிட்டது. திரைப்படத்துறையில் நுழைந்து பணியாற்ற பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. படம் பிடிப்பது, எடிட் செய்வது, படத்திற்கான இசை, நடிப்பு, கதை என பலதுறைகள் சங்கமிக்கும் திரைப்படத்தின் தொழில்நுட்பங்களை பல கல்வி நிறுவனங்கள் கற்றுத் தருகின்றன. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:
http://www.prasadacademy.com/ 
http://www.ftiindia.com/
www.chennaifilmschool.org/
https://www.niffa.org/
www.zimainstitute.com/
http://srfti.ac.in/
http://www.nid.edu/
http://www.krnnivsa.edu.in/
http://www.dtetorissa.gov.in/ http://www.boseorissa.org/ 
http://as.ori.nic.in/
http://www.dte.kar.nic.in/#sthash.6Sk9wD4O.dpuf 
- எம்.அருண்குமார்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/4/w600X390/im4.JPG http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/04/திரைப்படத்-தொழில்நுட்பம்-கற்க-2994003.html
2993999 வார இதழ்கள் இளைஞர்மணி இணைய வெளியினிலே... DIN DIN Tuesday, September 4, 2018 12:24 PM +0530 முக நூலிலிருந்து....
வேலைக்கு ஆட்கள் தேவை!
* வாட்ஸ் அப் குரூப்களில் வரும் மெசேஜ்களை டெலிட் செய்ய ஆட்கள் தேவை. 
தினமும் அரை மணி நேரம் இதுக்கே தேவைப்படுது. குரூப்பை விட்டுப் போனாலும், "என்ன அண்ணே நீங்களே...'ன்னு இழுத்து, மறுபடியும் உள்ள இழுத்து விட்டுடறாங்க. முடியல.
- யோகு அருணகிரி

* ஆடுகளின் 
அப்பாவித்தனமும்
வேள்விகளில் 
வெட்டப்படுவதற்கு 
காரணமாகி விடுகின்றது.
****
* ஆமையை ரோட்டில் விட்டு அதன் வேகத்தைக் குறை கூறுவது பழக்கம்.
அதை நீரில் விட்டால் நம்மால்தான் பிடிக்க முடியுமா?
இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் எவனும் வல்லவனே!
- வாகை காட்டான்

* வாழ்க்கைன்றது...
சினிமா மாதிரி 
ஹிட்டா... ஃப்ளாப்பாங்கிறதை விட...
டிவி சீரியல் மாதிரி
மொக்கையாயிருந்தாலும்
ஓடிக்கிட்டேயிருந்தாலே போதும்.
- மோகன்தாஸ். எம்

* கல்வி அழியாத செல்வம்தான்... ஆனால் அது,
எல்லாச் செல்வத்தையும்  அழித்தால்தான் கிடைக்கிறது.
- கிருத்திகா ஹரிஹரன்

சுட்டுரையிலிருந்து...
* கயிற்றில் நடப்பவன் 
கவனம் எல்லாம்... 
காலி டப்பாவின் மேல்தான். 
- சித்ரா தேவி

* எதிர்பார்த்து வாழ்பவருக்கு 
கண்ணீரையும், 
எதையும் எதிர்பார்க்காமல்
வாழ்பவருக்கு சிரிப்பையும் 
தந்துவிட்டுச் செல்கிறது...
வாழ்க்கை.
- சுதா மீனு

* பேசிக் கொண்டே இருக்காதீர்கள்...
வெகு சீக்கிரமாக 
வேரறுக்கப்படுவீர்கள்...
மெüனமாகக் காத்திருங்கள்...
அதிகமாகத் தேடப்படுவீர்கள்.
- தூவானம்

* அலைகளில் கால்களை
நனைக்கும் சுகம்,
கப்பலில் கடல் நடுவில்
பயணப்படும்போது
கிடைப்பதில்லை...
பேரின்பம் வேண்டாம்...
சிறுசிறு சந்தோஷங்கள்
போதும்...
வாழ்வைக் கடப்பதற்கு.
- வெட்டியான்

வலைதளத்திலிருந்து...
நமது நாட்டுப் பெண்கள் அன்றாடம் செய்தித்தாள்களைப் படிக்கிறார்களா என்று ஒரு ஆய்வு செய்தால் மனதிற்கு மிகவும் சங்கடமான பதில்தான் கிடைக்கும். 
என்னோடு பணிபுரிபவர்கள், பக்கத்து வீட்டுப் பெண்கள், நெருங்கிய தோழிகள், உறவுக்காரப் பெண்கள் என்று பழகிய பெண்கள் கூறிய வகையில் பார்த்தால், செய்தித்தாள் வாசிப்பவர்கள் மிகவும் குறைவு. சிலர், "தலைப்பு'ச் செய்திகளை மட்டுமே வாசிக்கின்றனர். இன்னும் சிலர் சினிமாச் செய்திகள் படிப்பதிலே ஆர்வம் காட்டுகின்றனர். 
மழைக்காலங்களில் தொடர்மழை ஏற்பட்டால், மாவட்ட ஆட்சியர் தமது மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளாரா என்று ஆசிரியைகள் படபடப்புடன் பிரித்துப் பார்க்கின்றனர். 
பெரும்பாலும் பெண்கள் அவர்களுடைய குடும்பச் சூழல், வீட்டு வேலை, வேலைக்குப் போகிறவர்களாக இருந்தால் அதற்கும் சேர்த்து தயாராக வேண்டிய கடமை ஆகிய காரணங்களால் சாவகாசமாக செய்தித்தாள் படிக்க முடியாமல் போகிறது.
நமது நாட்டில் அரசியலே "ஆண்களுக்கு மட்டும்' என்பது போன்ற போக்குதான் பொதுவாக நிலவுகிறது. பெரும்பாலான பெண்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள் என்று கூறிவிட முடியாது. 
நேரடியான அரசியலுக்கு வருவது ஒரு புறம் இருக்கட்டும். நாட்டில் அன்றாடம் நடக்கும் அரசியல், பொருளாதார மாற்றங்களைக் கூர்ந்து கவனிக்கும் பார்வையாவது பெண்களுக்கு வரவேண்டுமே!
http://narumpunathan.blogspot.com

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/4/w600X390/im3.JPG http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/04/இணைய-வெளியினிலே-2993999.html
2993997 வார இதழ்கள் இளைஞர்மணி காற்றில் இருந்து நீர்! DIN DIN Tuesday, September 4, 2018 12:19 PM +0530 பூமியின் பெரும்பகுதி தண்ணீரால் சூழ்ந்து இருந்தாலும், குடிப்பதற்கு சுத்தமான தண்ணீர் அனைவருக்கும் கிடைப்பதில்லை. மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடினாலும், அதைச் சேமித்து வைக்கும் வசதியும் நம்மிடம் இல்லை.
 அடுத்த உலக போர் தண்ணீருக்காகத்தான் ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அந்த அளவுக்கு தண்ணீர் தட்டுப்பாடு வரும் காலங்களில் ஏற்பட உள்ளது.
 தற்போதைய சந்ததியினர் தண்ணீர் தேவைகளைப் போராடி பூர்த்தி செய்து கொண்டாலும், அடுத்த சந்ததியினருக்கு தேவையான நீர் ஆதாரம் மிச்சமிருக்குமா என்பது கேள்வியாகத்தான் உள்ளது. இந்தக் கேள்விக்கு விடைகாணும் வகையில், அமெரிக்காவின் அக்ரான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், காற்றில் இருந்து நீர் எடுக்கும் சிறிய இயந்திரத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பேட்டரியால் இயங்கும் இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு மணி நேரத்துக்கு சுமார் 38 லிட்டர் நீரை காற்றில் இருந்து எடுக்க திட்டமிட்டுள்ளனர். மெல்லிய நானோ ஃபைபர்களைப் பயன்படுத்தி காற்றை தண்ணீராய் மாற்றும் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் முயற்சியில் அக்ரான் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
 இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாலைவனப் பகுதியில் உள்ள காற்றில் இருந்தும்கூட தண்ணீரை எடுத்துவிடலாம் என்றும் இதற்கு சிறிது அளவே பேட்டரி மின்சாரம் தேவைப்படும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த முறையில் சேகரிக்கப்படும் நீர் தூய்மையானது என்பதால், உடனடியாக அதை அருந்தியும் விடலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். நிலத்தடி நீரை எடுக்க வீட்டிற்கு ஒரு மின் மோட்டார் வைத்திருக்கும் காலம்போய், காற்று நீர் மோட்டாரைப் பயன்படுத்தி அவரவர் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
 - அ.சர்ஃப்ராஸ்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/4/w600X390/im2.jpg http://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/04/காற்றில்-இருந்து-நீர்-2993997.html
2993996 வார இதழ்கள் இளைஞர்மணி சரியான பார்வை...சரியான வழி...சரியான செயல்! 10 - தா.நெடுஞ்செழியன் Tuesday, September 4, 2018 12:17 PM +0530 உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இன்றையச் சூழலில் உலக அளவில் மக்களுக்கு எவையெல்லாம் தேவைப்படுகின்றன? அந்தத் தேவையை நிறைவு செய்ய எத்தகைய புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட வேண்டும்? என்று சமூக நலனுக்காகச் சிந்தித்து, பல முயற்சிகளைச் செய்து வருகின்றன. அதற்காக அவை மாணவர்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை வளர்த்தெடுக்கின்றன. அவர்களின் தேடலை விரிவுபடுத்துகின்றன. 
சில உதாரணங்களைப் பார்ப்போம்.
லக்னெüவில் ஓர் ஏழை விவசாயி. வயது 30. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு உடல் நலமில்லாமல் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அப்போது அங்குள்ள மருத்துவர் ஒருவர் Bag-valve-mask (BVM) என்ற சிறிய பிளாஸ்டிக்கால் ஆன மருத்துவ கை பம்ப் ஒன்றின் மூலம் நோயாளியின் மூச்சுத் திணறலைக் குறைக்க முயற்சி செய்தார். நோயாளியின் நுரையீரலுக்குத் தேவையான காற்றை முறையாகச் செலுத்துவது அப்போது அவசரத் தேவையாக இருந்தது. 
நோயாளியின் தாயையும், சகோதரரையும் அந்த Bag-valve-mask- ஐ இடைவிடாமல் தொடர்ந்து இயக்கும்படி சொன்னார். இவ்வாறு 18 நாட்கள் இரவு, பகலாக இயக்கிய பிறகு, நோயாளி இயல்பு நிலைக்குத் திரும்பினார். ஒரு மாதத்தில் நலமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அவருடைய அன்றாட வாழ்க்கையை மீண்டும் தொடங்கினார். அந்த மருத்துவர் பயன்படுத்தச் சொன்ன அந்த Bag-valve-mask அதிக செலவு பிடிக்காத எளிய கருவி. 
இது அமெரிக்காவில் உள்ள எம்ஐடி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தெரிய வந்தது. அவர்கள் இந்த அடிப்படையில், இதைவிட மேம்பட்ட கருவி ஒன்றை உருவாக்க நினைத்தார்கள். அந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களை ஆராய்ச்சியில் இறக்கிவிட்டனர். மிகக் குறைந்த விலையில் - சுமார் 100 டாலர் (ரூ.7000)- ஒரு வென்டிலேட்டர் கருவியை அந்த மாணவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். தற்போது மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் அதேபோன்ற வென்டிலேட்டரின் விலை ரூ.21 லட்சம். இந்த குறைந்தவிலை வென்டிலேட்டர் அமெரிக்காவின் தொலைதூரப் பகுதிகளில் பயன்படுகிறது. அமெரிக்க படைவீரர்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. அப்துல் மொஹ்சன் அல் குசைனி என்கிற மெக்கானிகல்துறையில் முதுகலைப் படிக்கும் மாணவர் இந்த கண்டுபிடிப்பில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.
இவ்வாறு உலகில் எங்கோ ஒரு மூலையில் நடந்த ஒரு நிகழ்வைக் கண்டறிந்து, அது போன்று மக்களுக்குப் பயன்படும் பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. 
வாழ்க்கையில் நாம் எண்ணற்ற விஷயங்களைக் கற்றுக் கொண்டே இருக்கிறோம். கற்றுக் கொள்வதற்கு தேடல் அவசியம். நமது பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் தேடலுக்கான ஆர்வத்தை வளர்த்தெடுப்பதற்கு எந்த முயற்சியும் செய்வதில்லை என்பது வேதனையளிக்கிறது. இருந்தாலும் நமது நாட்டிலும் சில பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் அத்தகைய முயற்சிகள் செய்யப்படுகின்றன. 
இந்தியாவின் ஐஐடி - கான்பூர், ஐஐஎம் - கொல்கத்தா, ஐசி ஏஆர் (Indian Council of Agricultural Reasearch), வேளாண் விஞ்ஞானப் பல்கலைக்கழகம் - ராய்ச்சூர் ஆகிய இந்த நான்கும் இணைந்து மற்றும் சில அமைப்புகளும் சேர்ந்து விவசாயிகளுக்குத் தேவையான ஓர் இணையதளத்தை (http://agropedia.iitk.ac.in/) மாணவர்களைப் பயன்படுத்தி உருவாக்கியிருக்கிறார்கள். 
அதில் விவசாயிகளுக்குப் பயன்படும் ஒவ்வொரு விளைபொருளையும் விளைவிக்கத் தேவையான அனைத்துத் தகவல்களும் இடம் பெற்றுள்ளன. இந்த தகவல்கள் விவசாயம் செய்பவருக்கு மிகவும் தேவையான தகவல்கள். ஆனால் அவர்களுக்கு அவை எளிதில் கிடைப்பதில்லை. இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு விவசாயி தனக்குத் தேவையான தகவல்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ள இந்த இணையதளம் உதவுகிறது. 
வாழை, மிளகாய், பருத்தி, திராட்சை, வேர்க்கடலை, வெங்காயம், உருளைக் கிழங்கு, அரிசி, கரும்பு, தக்காளி, கோதுமை உள்ளிட்ட பல விளைபொருட்கள் பற்றிய தகவல்கள் இந்த இணையதளத்தில் இடம் பெற்று உள்ளன. 
உதாரணமாக Mango - வைப் பற்றிய தகவல்களை எடுத்துக் கொண்டால், மாங்கன்றை உருவாக்குவது எப்படி? அதை வளர்ப்பது எப்படி? அதற்குத் தேவையான சத்துகள் எவை? மாங்கன்று, மரங்களை வளர்ப்பதற்கு எந்த அளவுக்கு நீர் பாய்ச்ச வேண்டும்? என்ன மாதிரி தட்பவெப்பநிலை அதற்குத் தேவை? எம்மாதிரியான மண்ணில் மாமரம் செழிப்பாக வளரும்? மாங்காய்களை மரத்திலிருந்து எப்போது அறுவடை செய்ய வேண்டும்? மாமரத்தைத் தாக்கும் பூச்சிகள், அவற்றைத் தடுக்கும் முறைகள், விளைவிக்கப்பட்ட மாங்காய், மாம்பழத்தை விற்பனை செய்யும் முறைகள், வழிகள், மாங்காய், மாம்பழத்தில் இருந்து என்னவெல்லாம் தயார் செய்து விற்பனை செய்யலாம்? ஜூஸ், ஜாம், மிட்டாய், ஊறுகாய் போன்ற தயாரிப்புகளை எப்படி பேக்கிங் செய்வது? என Mango என்ற தலைப்பில் அது தொடர்பான எல்லாத் தகவல்களும் தரப்பட்டுள்ளன. இதேபோன்று பிற விவசாய விளைபொருட்கள் தொடர்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. 
இத்தனைக்கும் இந்த இணையதளத்தை நடத்துவதில் பங்கேற்றிருக்கும் ஐஐடி- கான்பூரில், ஐஐஎம் - கொல்கத்தாவில் விவசாயம் தொடர்பான கல்வி கற்றுத் தரப்படுவதில்லை. ஆனால் சமூகத்துக்கு என்ன தேவைப்படுகிறதோ, அ