Dinamani - சிறுவர்மணி - http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2881811 வார இதழ்கள் சிறுவர்மணி கருவூலம்: தஞ்சாவூர் மாவட்டம்! Saturday, March 17, 2018 12:15 PM +0530 சென்ற வாரத் தொடர்ச்சி....
சரஸ்வதி மஹால் நூலகம்! 

ஆசியாவின் மிகப் பெரிய சுவடி நூலகம் இதுதான்! உலகின் மிகப் பழமையாôன நூலகங்களில் ஒன்று! உலகப் புகழ் பெற்ற தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் "சரஸ்வதி பண்டாரகம்' என்ற பெயரில் சுவடிகள் காப்பகமாகத் தொடங்கப்பட்டது! (பண்டாரகம் = கருவூலம் (அல்லது) பொக்கிஷம்.) 

எல்லா அரச வம்சத்தினரும் இதைப் பாதுகாத்து வந்தனர். மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி ஆட்சிக் காலத்தில் "சரஸ்வதி மஹால் நூலகம்' எனப் பெயர் பெற்று பெரும் வளர்ச்சி அடைந்தது. 

இங்கு தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இலத்தீன், கிரேக்கம் உள்ளிட்ட பல மொழி ஓலைச் சுவடிகள், கையெழுத்து பிரதிகள், அச்சுப் பிரதிகள் உள்ளன. இப்போது நூலகத்தில் வரலாறு, மருத்துவம், இசை, நாட்டியம், அறிவியல், தத்துவம் என பல துறைகளைச் சார்ந்த, சுமார் 50,000 நூல்கள் இருக்கின்றன.

இங்கு ஓலைச் சுவடிகளைப் படிக்கவும், நகல் எடுக்கவும் குறுகிய காலப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. மேலும் உலகின் பல பகுதிகளிலிருந்து ஆராய்ச்சி மாணவர்கள் வந்து செல்கின்றனர். இந்நூலகத்தைச் சார்ந்த நடமாடும் நூலகமும் தற்போது செயல்படுகிறது!

பெருமைக்குரிய மன்னர் சரபோஜி! 
தஞ்சைப் பகுதியை ஆட்சி செய்த மன்னர்களில் மாமன்னர் ராஜராஜனுக்கு அடுத்து அழியாத புகழ்பெற்றவர் மன்னர் இரண்டாம் சரபோஜிதான்! 

மன்னரும், அவருக்கு குருவாக இருந்த ஸ்வார்ட்ஸ் பாதிரியாரும் சேர்ந்தே சரஸ்வதி மஹால் நூலகத்தை செம்மைப் படுத்தி வளர்ச்சி அடையச் செய்தனர். இருவரும் பலமொழி நூல்களையும், ஓலைச் சுவடிகளையும் தேடிக் கொண்டு வந்தனர். 

மன்னர் சரபோஜி சிறந்த தமிழ் நூல்களை பிற மொழிகளிலும், பிற மொழி நூல்களைத் தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிட்டார். இதற்காக ஒரு அச்சுக்கூடத்தையும் நிறுவினார். உலகின் புகழ்பெற்ற இடங்களை ஓவியங்களாகத் தீட்டி, மக்கள் பார்வைக்கு வைத்தார். 

சரபோஜி மன்னரை கவுரவிக்கும் வகையில் ஆங்கிலேயர்கள் அவருக்கு பளிங்கு கல்லில் வடிக்கப்பட்ட முழு உருவச் சிலை அமைத்தனர். தத்ரூபமாக வடிக்கப்பட்ட இச்சிலையின் உடைவாளை உறையில் இருந்து எடுத்து மீண்டும் செருக முடியும்! அதேபோல் மன்னரின் தலைப்பாகையையும் தனியாகக் கழற்றி மாட்டலாம்! 

மன்னர் சரபோஜி, பாதிரியார் ஸ்வார்ட்ஸ் மீது கொண்ட அன்பின் அடையாளமாக "சிவகங்கை பூங்கா' அருகே 1779 இல் தேவாலயம் ஒன்றைக் கட்டினார். இது "ஸ்வார்ட்ஸ் சர்ச்' என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள சுவற்றில் மன்னர் பாதிரியாரைச் சந்திக்கும் காட்சி புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. 

தென்னகப் பண்பாட்டு மையம்!
தஞ்சாவூரில் உள்ள இம்மையம் கலை மற்றும் பண்பாட்டினை வளர்ப்பதற்காகவும், பாதுகாப்பதற்காகவும் மத்திய அரசால் அமைக்கப்பட்டது! இது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மற்றும் கர்நாடகம் ஆகிய நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய தென்னிந்திய தலைமை மையமாகும்! 

கும்பகோணம் மகாமக விழா!
கும்பகோணம் ஊர் வடக்கே காவிரியும், தெற்கே அரசலாறும், பாயும் வளமான பூமி! கோயில்கள் நிறைந்த நகரம். சோழ மற்றும் நாயக்க மன்னர்களின் காலத்தில் கட்டப்பட்ட பல ஆலயங்கள் இங்குள்ளன. 

பழம் பெருமை மிக்க நகரம். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு தங்க நாணயம் அச்சிடும் தொழிலகம் இருந்ததாக அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது! 

ஆண்டுதோறும் நடக்கும் மாசிமக விழாவும், பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமக விழாவும் பிரசித்தி பெற்றது! இங்குள்ள மகாமகக் குளம் புனிதமாகப் போற்றப்படுகிறது. 

ஜோதிட சாஸ்திரத்தின் கிரக நிலைகளை ஆதாரமாகக் கொணடு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மாதத்தில் மகாமகம் கொண்டாடப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு இவ்விழா கொண்டாடப்பட்டது. அதில் சுமார் 35 லட்சம் பேர் இக்குளத்தில் நீராடியுள்ளனர். மகாமக நாளில் 12 சிவன் கோயில்களில் இருந்து தெய்வத் திருமேனிகள் இக்குளத்திற்குக் கொண்டு வரப்பட்டு தீர்த்தாவாரி நடைபெறும்! 

இக்குளம் 6.2 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தஞ்சை மன்னர் அச்சுதப்ப நாயக்கரின் அமைச்சரான கோவிந்த தீட்சிதர் என்பவரால் சுற்றிலுமுள்ள படித்துறைகளும், மண்டபங்களும் கட்டப்பட்டன! அரசலாற்றிலிருந்து இக்குளத்திற்குத் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. இக்குளத்திற்குள் 21 உட்கிணறுகள் உள்ளன. சுற்றிலும் படித்துறையுடன் 16 மண்டபங்களும் உள்ளன. 

கும்பகோணத்தில் கிடைக்கும் வெற்றிலையும், டிகிரி காபியும் மிகப் பிரசித்தமானவை! 

திருவையாறு ஆராதனை விழா!
காவிரியின் கரையில் தஞ்சைக்கு 13 கி.மீ. தூரத்தில் திருவையாறு உள்ளது. தஞ்சாவூர் செல்லும் சாலையில் 5 பாலங்களைக் (வெட்டாறு, வடலாறு, வெண்ணாறு, குடமுருட்டி, காவேரி) கடந்து செல்ல வேண்டும். இந்த ஐந்து நதிகளும் இவ்வூரின் வழி செல்வதால் திருவையாறு எனப் பெயர் வந்தது. 

இங்குள்ள சிவன் கோயில் அருகில் கர்நாடக இசை மேதை தியாகராஜர் வாழ்ந்த வீடும், ஆற்றங்கரையில் அவரது சமாதியும் உள்ளன. 

ஜனவரி மாதம் தியாகராஜரை போற்றி வணங்கும் வகையில் இவ்வூரில் தியாகராஜர் ஆராதனை விழா 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. பல கர்நாடக சங்கீத பாடகர்களும், இசை ரசிகர்களும் நாடு முழுவதிலும் இருந்து வந்து கலந்து கொண்டு தங்கள் இசையால் தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். 

பழமையான புகழ் பெற்ற ஆலயங்கள்!
கி.பி. 985 முதல் 1070 வரை இடைக்கால சோழர்களின் ஆட்சி தமிழகம் முழுவதும் மற்றும் தமிழக எல்லைக்கப்பாலும் பரந்து விரிந்து இருந்தது. இக்காலத்தில் சோழர்கள் தங்கள் நாட்டில் பல கோயில்களைக் கட்டினார்கள். 
இவர்களால் கட்டப்பட்ட ஆலயங்களில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், தாராசுரம் ஐராவதேஸ்வரர் ஆலயம், கங்கை கொண்ட சோழபுரம் ஆலயம், மற்றும் திருபுவனம் சரபேஸ்வரர் (கம்பஹரேஸ்வரர் என்றும் கூறுவர்)ஆலயம் ஆகியவை மிகப் பெரியவை. 

இவற்றில் தஞ்சாவூர், தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம் ஆலயங்கள் அழியாத சோழர் பெருங்கோயில்கள் என போற்றப்படுகிறது. இம்மூன்று ஆலயங்களும் யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இவை வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல், உலக அளவில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களாகவும் திகழ்கின்றன. 

தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்! 
இந்தியாவின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்று. சோழப் பேரரசன் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டது. பல சிறப்புகளைக் கொண்ட இந்த கோயில் கி.பி. 1003 இல் தொடங்கப்பட்டு 1010 இல் கட்டி முடிக்கப்பட்டது. இந்தக் கோயிலில் 216 அடிகள் (66 மீட்டர்) உயரமும், 13 நிலைகளும் கொண்ட கோபுரம் உள்ளது. இதன் உச்சியில் 26 அடி பக்க அளவு கொண்ட சதுர வடிவிலான சமதளம் இருக்கிறது. இதன் உச்சியில் பாறை போன்ற அமைப்பில் 80 டன் எடை கொண்ட ஒரு பெரிய கல் உள்ளது. 
முன்பு இக்கல்லை 6 கி.மீ. நீளத்திற்கு சறுக்குப் பாதை அமைக்கப்பட்டு மேலே ஏற்றப்பட்டது என்று கருதப்பட்டது. 
ஆனால் இப்பொழுது செய்த ஆய்வு முடிவில் இது பாறை வடிவில் பல கற்களை மிக நுட்பமாக தொகுத்து இணைத்து உருவாக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த உயர்ந்த கம்பீரமான கோபுரத்தின் உட்பகுதி வெற்றிடமாக உள்ளது. இதுவே கர்ப்பக்கிரகத்தில் உள்ள பெரிய சிவலிங்கத்தின் கருவறையாக அமைக்கப்பட்டுள்ளது. 
கருவறையில் 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையாரும், 23 ணீ அடி உயர லிங்க திருமேனியும் கொண்ட உலகிலேயே பெரிய சிவலிங்கம் உள்ளது. இது பல தனித்தனிக் கற்களினால் செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள பெரிய நந்தியும், நந்தி மண்டபமும் பிற்காலத்தில் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டவை. ஒரே கல்லினால் செய்யப்பட்ட இந்த நந்தி 14 மீ உயரமும், 7 மீட்டர் நீளமும், 3 மீ. அகலமும் கொண்டது. 
இக்கோயிலின் நுழைவாயிலில் 90 அடி உயரத்தில் 5 நிலைகள் கொண்ட கோபுரமும் 18 அடி உயரத்தில் ஒரே கல்லில் ஆன துவாரபாலகர்கள் சிலையும் உள்ளன. 
இங்கு பிரம்மாண்டமான பெரிய தெய்வ வடிவங்களுடன் 1000 ஆண்டுகள் பழமையான சோழர்கால ஓவியங்கள் முதல் நாயக்கர் கால ஓவியங்கள் வரை ஒரே இடத்தில் கண்டு மகிழலாம். 
உலகப் புகழ் பெற்ற இந்த ஆலயத்தின் வடிவம் 1954 இல் வெளியிடப்பட்ட ஆயிரம் ரூபாய் கரன்ஸியில் பொறிக்கப்பட்டிருந்தது! 2010 ஆம் ஆண்டு ஆலயத்தின் ஆயிரமாவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டபோது தபால் தலையும், நாணயமும் வெளியிடப்பட்டது. 

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்
இரண்டாம் ராஜராஜ சோழன் காலத்தில் தாராசுரம் தலைநகராக்கப்பட்டு, இந்தக் கோயிலும் கட்டப்பட்டது. இந்த ஆலயம் சிறியதும் பெரியதுமாய் எண்ணற்ற சிற்பங்கள் நிறைந்த கருவூலம் எனலாம். ஏராளமான கல்வெட்டுகளும் கோயிலைச் சுற்றி உள்ளன. 
இங்குள்ள கோபுரம் 5 நிலை மாடங்களுடன் 85 அடிஉயரம் கொண்டது. நுழைவாயிலில் நந்தியின் அருகே இசையொலி எழுப்பும் நாதப்படிகள் உள்ளன. இங்குள்ள மகா மண்டபம், தேர் போன்ற வடிவில் வடிக்கப்பட்டுள்ளது. மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படியில் யானைகள் ஒரு பக்கமும், குதிரைகள் ஒரு பக்கமும் தேரை இழுத்துச் செல்வதுபோல் உள்ளன. 
இத்தேரின் சக்கரங்கள் மிக நேர்த்தியாக அழகுடன் செதுக்கப்பட்டுள்ளன. இவை இந்திய சிற்பக்கலையின் பெருமிதத்திற்கு உரிய அடையாளமாகக் கருதப்படுகின்றன. 
இம்மண்டபத்தில் நுணுக்கமான பல சிற்பங்களுடன் கூடிய தூண்கள் நிறைந்துள்ளன. உள்ளங்கை அளவினாலான நர்த்தன கணபதி, பல புராண கதை நிகழ்வுகள், நாட்டியப் பெண்கள் என பிரமிப்பூட்டும் வகையில் இச்சிற்பங்கள் உள்ளன. 
மேலும் இங்கு சதுர, செவ்வக மற்றும் வட்டப் பூக்கள் குடைந்து உருவாக்கப்பட்ட சாளரங்கள் கொண்ட காற்றோட்டமான மண்டபங்களை அமைத்துள்ளனர். இச்சாளரங்கள் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட வை! இவ்வாலயம் கற்பனைக்கெட்டாத கண் கொட்டாமல் பார்த்து மகிழ வேண்டிய அற்புதமான சிற்பங்களைக் கொண்டது! 
தொடரும்....

தொகுப்பு: கே.பார்வதி, திருநெல்வேலி டவுன். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/16/w600X390/sm6.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/17/கருவூலம்-தஞ்சாவூர்-மாவட்டம்-2881811.html
2881805 வார இதழ்கள் சிறுவர்மணி அன்பு வழி! Saturday, March 17, 2018 12:00 AM +0530 மதிய நேர உணவு இடைவேளைக்கான மணி ஒலித்தது. வழக்கம்போல் மெயின் கேட் அருகே மாணவர்கள் கூட்டம்.
 அந்தக் கதவு எப்போதும் பூட்டப்பட்டிருக்கும். இருந்தும் அவர்கள் அங்கே கூடினார்கள்! காரணம், கதவின் மறுபுறத்தில் நின்ற தாத்தாவின் தள்ளுவண்டிக் கடையில் தின்பண்டம் வாங்குவதற்குத்தான். இரும்புக் கம்பிகளின் வழியே கைகளை நீட்டி மாங்காய்த் துண்டு, காரநெல்லி, அன்னாச்சிக் கீற்று என தங்களுக்குப் பிடித்தவற்றில் ஏதேனும் வாங்கிக் கொள்வார்கள்.
 அப்படிக் கூடும் மாணவர்களின் இடையே செல்வன் என்று ஒரு மாணவன். செல்வன் ஒரு நாளும் காசு கொடுத்துத் தின்பண்டம் வாங்கியதில்லை. கூட்டத்தினருடன் சேர்ந்து கையை நீட்டி ஏதாவது வாங்கிக் கொண்டு அப்படியே பின் நகர்ந்து சென்று விடுவான். இது அவனது வழக்கம்.நண்பர்கள் இதைக் கண்டித்தனர். ஆனால் அவன் கேட்கவில்லை.
 அந்த மாதம் களாக்காய் சீசன் தொடங்கியது. செல்வத்திற்கு களாக்காய் என்றால் ரொம்பப் பிடிக்கும்.
 அன்று மதியம் ஏனோ சில காரணத்தினால் சற்று தாமதமாக மெயின் கேட் அருகே வந்து சேர்ந்தான் செல்வன். மாணவர்கள் யாரும் அங்கு இல்லை. மெயின் கேட் முழுவது ம் வெறிச்சோடிப் போயிருந்தது. திருமபிப் போக மனமில்லை. மெதுவாக நடந்து வந்து பார்த்தான். தள்ளு வண்டித் தாத்தா புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தார்.
 செல்வன் அவரிடம், "தாத்தா!....இன்னிக்கு களாக்காய் கொண்டு வந்தீங்களாமே....இன்னும் இருக்கா?'' என்று கேட்டான்.
 தாத்தா பெட்டியைச் சோதித்துப் பார்த்துவிட்டு, "ஆமா தம்பி....கொஞ்சம் இருக்கு...'' என்றார்.
 இன்று தன்னால் வழக்கமான முறையில் அவற்றை வாங்க முடியாது என்பதால் அவரிடம், ""தாத்தா,.....இப்போ என் கிட்டே காசில்லை!.....களாக்காய் கடனாத் தர்றீங்களா?....நாளைக்கு சில்லறை தரேன்...'' என்றான்.
 தாத்தா அவனைச் சிறிது நேரம் அமைதியாகப் பார்த்தார். பிறகு சில காய்களை சிறு பொட்டலங்களாகக் கட்டி கொடுத்தார்.
 கொடுக்கும்போது அவனிடம், "கடனா எல்லாம் வேணாம் தம்பி!.....நான் தினமும் ஒரு பையனுக்கு அன்பளிப்பா ஏதாச்சும் தின்பண்டம் கொடுப்பேன். இன்னிக்கு அவன் வரலை. அதனால் அதை உனக்குக் கொடுக்கிறேன்!....வெச்சுக்கோ!...'' என்றார்.
 செல்வன் திகைத்துப் போனான்!
 தாத்தா தன்னைத்தான் குறிப்பிடுகிறார் என்பதையும்,....இத்தனை நாட்களாக அதையும் தெரிந்தேதான் செய்திருக்கிறார் என்பதையும் உணர்ந்தான். மறு நொடியே கண்களில் நீர் வழிய அவரிடம் மன்னிப்புக் கேட்டான். தாத்தாவும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.
 அதன் பிறகு தன் தவறை அன்பால் திருந்திய தள்ளுவண்டித் தாத்தாவை ஒருபோதும் மறவாமல் என்றென்றும் நேர்மையுடன் வாழ்ந்து வந்தான் செல்வன்!
 -க. சங்கர்
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/16/w600X390/sm1.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/17/அன்பு-வழி-2881805.html
2881806 வார இதழ்கள் சிறுவர்மணி தகவல்கள் 3 DIN DIN Saturday, March 17, 2018 12:00 AM +0530 "பிசி' கதாசிரியர்!
கதாசிரியர் ஆர்.எல்.ஸ்டீபன்ஸன்சிறுவயதில் குறும்புகள் அதிகம் செய்வார். ஒருமுறை அவர் வீட்டு தாதிப்பெண், அவரிடம், ""துஷ்டத்தனமா செய்கிறாய்? ...நான் வரச் சொல்லும் வரை அந்த மூலையில் போய் உட்கார்'' என்றார். 
அப்படியே சென்று மூலையில் உட்கார்ந்தான் சிறுவன். சிறிது நேரம் சென்றது. போனால் போகிறது பாவம் என நினைத்து அந்தத் தாதிப்பெண், "நல்ல பிள்ளை!....சரி, போதும்! அங்கிருந்து எழுந்து வா!" என்றாள். அதற்கு ராபின்சன், "சும்மா தொந்தரவு செய்யாதே!...எனக்கே நான் ஒரு கதை சொல்லிக்கொண்டிருக்கிறேன்!...'' என்றான்.
அ.ராஜாரகுமான், கம்பம்.

சரியானதை கவனி!
சீடர் விவேகானந்தரை ராமகிருஷ்ணருக்கு மிகவும் பிடிக்கும்! சில சீடர்களுக்கு விவேகானந்தர் மேல் சிறிது பொறாமை ஏற்பட்டது. அவர்கள் பரமஹம்சரிடம் சென்று, "விவேகானந்தர் வெற்றிலை பாக்கு போடுகிறார்'' என்று சொன்னார்கள். அதற்கு ராமகிருஷ்ண பரமஹம்சர், "அவன் வாய்க்குள் என்ன போகிறது என்று பார்க்காதீர்கள்!....அவன் வாயிலிருந்து என்ன வருகிறது என்று பாருங்கள்!'' என்றார்.
சு.ஆறுமுகம், கழுகுமலை.

நேர்மை!
அம்மாவுக்கு மருந்து வாங்க 37 லிரா (இத்தாலியப் பணம்) பணம் தேவை என்று போப்பாண்டவர் ஜான் பாலிடம் கேட்டான் ஒரு சிறுவன். பையில் கையை விட்ட போப் 40 லிராவை எடுத்து அந்தப் பையனின் கையில் கொடுத்தார். 
நன்றி கூறிவிட்டு விடை பெற்றான் சிறுவன். மறுநாள் வந்து போப்பாண்டவரிடம், 3 லிராவைக் கொடுத்தான் சிறுவன். "என்ன இது?'' என்றார் போப். "ஐயா நான் உங்களிடம் கேட்டது 37 லிராதான்!....நீங்கள் வழங்கியது 40 லிரா!....அதான்மீதி சில்லறை 3 லிராவைக் கொடுக்க வந்தேன். என்றான். அந்தச் சிறுவன். 
அந்தச் சிறுவனின் நேர்மையைப் பாராட்டி போப் சிறுவனைப் படிக்க வைத்தார். 
ந.பரதன், ஏரல் 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/16/w600X390/sm2.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/17/தகவல்கள்-3-2881806.html
2881807 வார இதழ்கள் சிறுவர்மணி குறள் பாட்டு   DIN DIN Saturday, March 17, 2018 12:00 AM +0530 சொல்வன்மை!
சொல்லுக சொல்லை பிறிதோர் சொல் அச்சொல்லை 
வெல்லும் சொல் இன்மை அறிந்து.
                               - திருக்குறள்
சொல்ல வேண்டும் சொல்லவேண்டும் 
நல்ல சொல்லைச் சொல்ல வேண்டும்
தேர்ந்தெடுத்துச் சொல்ல வேண்டும்
தீமையின்றிச் சொல்ல வேண்டும்

சொல்லும் சொல்லை வெல்வதற்கு 
வேறு சொல்லே இல்லையென்று 
சொல்லும் அளவில் இனிமையான 
சொல்லை விரும்பிச் சொல்ல வேண்டும்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/16/w600X390/sm3.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/17/குறள்-பாட்டு-2881807.html
2881809 வார இதழ்கள் சிறுவர்மணி பொன்மொழிகள்!   DIN DIN Saturday, March 17, 2018 12:00 AM +0530 * நீ ஏழையாகப் பிறந்தது உன் தவறன்று! ஏழையாகவே இறந்தால் நிச்சயம் உன் தவறுதான்! 
- பில் கேட்ஸ்

* தன்னம்பிக்கை இளைமையைத் தரும். பயம் குடுகுடு கிழவனாக்கிவிடும்! 
- ஜேம்ஸ் டாக்கில்

* அடக்கத்திலிருந்து அறமும், அறத்திலிருந்து பல நற்பயன்களும் ஏற்படும்! 
- மகாவீரர்

* சொந்தக் கஷ்டங்களுக்கு இடையில் சமூக சேவை செய்தால் சொந்தக் கஷ்டம் மறந்து போகும்! 
- காஞ்சிப் பெரியவர்.

* கவலையுடன் மாளிகையில் வாழ்வதைவிட கவலையின்றி குடிசையில் வாழ்வதே மேல்! 
- கோல்டுஸ்மித்

* உழைப்பாளியின் வீட்டிற்குள் பசி எட்டிப் பார்க்கக் கூடும். ஆனால் நுழையாது! 
- சாணக்கியன்

* தன்னை ஆளத்தெரியாதவனுக்கு பிறரை ஆளத் தெரியாது! 
- விவேகானந்தர்

* பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற வித்தைகள் வீணாகும்! 
- சாணக்கியர்

* பெருந்தன்மை, நன்னடத்தை, இன்சொல் பேசுதல் போன்ற குணங்களை பழக்கத்தினால் அடைய முடியாது. அது பிறவியிலேயே அமைவதாகும்! 
- சாணக்கியர்

* நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரைப் போன்றவன்! 
- சாணக்கியர்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/16/w600X390/sm4.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/17/பொன்மொழிகள்-2881809.html
2881810 வார இதழ்கள் சிறுவர்மணி முத்துக் கதை: சந்தோஷம்!   DIN DIN Saturday, March 17, 2018 12:00 AM +0530 தெருவில் கோவில் யானை வந்தது. அது தெருமுனையில் நின்று கொண்டிருந்தது. சிறுவர்கள் குதூகலத்துடன் ஓடினார்கள். சில சிறுவர்களின் பெற்றோர்கள் காசு கொடுத்து யானையிடம் ஆசி பெற்றார்கள். கந்தனும் நண்பர்களுடன் யானையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
 பிறகு வீட்டிற்குள் வேகமாக நுழைந்து ""யானை வந்திருக்கு!...ஆசீர்வாதம் வாங்கக் காசு கொடுங்க!'' என்று தன் அப்பாவிடம் கேட்டான்.
 ஆனால் அப்பா உள் அறையில் ஏதோ வேலையாய் இருந்தார். கந்தனைக் கண்டு கொள்ளவில்லை. வெகு நேரமாயிற்று. கந்தன் சோர்ந்து போனான். கந்தனின் அம்மா இதைக் கவனித்துக் கொண்டிருந்தான். யானை தெருமுனையில் இருக்குமா போய்விடுமா என்று கந்தனுக்கு சந்தேகமாக இருந்தது.
 வாசல் வழியாக எட்டிப் பார்த்தான். யானை அங்கேயேதான் இருந்தது. கூட்டமும் அங்கே நிறைந்திருந்தது. இன்னும சிறிது நேரம் இருக்கும் என்று நினைத்துக் கொண்டான். மறுபடி வீட்டிற்குள் வேகமாகச் சென்றான். அம்மாவிற்கு கந்தனைப் பார்க்க பாவமாயிருந்தது. "கந்தா இங்கே வா!...'' என்று கூப்பிட்டு கொஞ்சம் காசைக் கொடுத்து அனுப்பினாள்.
 கந்தன் திரும்பி வந்தான்.
 அம்மா கந்தனிடம், "கந்தா!....என்ன ஆச்சு?.... யானையிடம் ஆசீர்வாதம் வாங்கினியா?'' என்று விசாரித்தாள்.
 கந்தன் அமைதியாக, " காசும் ஆசீர்வாதமும் எனக்கில்லேம்மா!......என் ஃபிரெண்டு பூபதிக்கு!....அவன் கிட்டே காசு இல்லே.....யானைகிட்டே ஆசீர்வாதம் வாங்க ஆசைப்பட்டான்!.....அவன் ஆசீர்வாதம் வாங்கறதைப் பார்த்து நான் சந்தோஷப்பட்டேன்!...''
 இந்த பதிலைக் கேட்ட அம்மாவும் அப்பாவும் திகைப்பும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.
 "உன் செயல் எங்களுக்கும் சந்தோஷத்தைக் கொடுக்குது கண்ணா!'' என்று அவனைப் பாராட்டினார்கள்.
 -என்.பர்வதவர்த்தினி
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/16/w600X390/sm5.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/17/முத்துக்-கதை-சந்தோஷம்-2881810.html
2881812 வார இதழ்கள் சிறுவர்மணி தாமரைப் பூவும் தவளையும்!   DIN DIN Saturday, March 17, 2018 12:00 AM +0530  பூவிலே சிறந்த தென்று
 போற்றுவார் கமலப்பூவை
 புண்ணிய பரத மண்ணின்
 தேசிய மலராம்!...அந்த
 
 தாமரை மலர்கள் பூத்து
 தண்ணீரின் மேலே நிற்கும்!
 தவளையும் அந்தக் குளத்து
 தண்ணீரில் வசிப்பதாகும்!
 
 தேனொடு மலர்ந்து நிற்கும்
 தாமரை மலரைச் சுற்றி
 தானங்கே வந்த போதும்
 தவளைக்கோ மலரில் உள்ள
 
 தேனினை எடுத்து உண்ணத்
 தெரியாது! ஆனால் எங்கோ
 கானிலே இருந்து வந்து
 கனிவாக வட்டம் போடும்
 
 வண்டுகள் தேனை உண்ணும்
 வானிலே பறந்து செல்லும்!
 அண்டையில் இருந்த போதும்
 அறியாது தவளை வாழும்! - அதுபோல்
 
 நற்குணம் கொண்ட நல்லோர்
 நட்புடன் அதிக நாட்கள்
 பொற்புடன் பழகினாலும்
 புரிந்திடார் அறிவில் லாதார்!
 
 சிறப்பினை உடைய நல்லோர்
 சீரினை அறிந்து நாளும்
 முறைப்படி பயனைக் காண
 முயன்றிட மாட்டார் மூடர்!
 
 ஒருநாளே பழகினாலும்
 உத்தம அறிவுள்ளோர்கள்
 திருநாளாய் நட்பே கொண்டு
 சிறந்திட முயன்று நிற்பார்!
 
 அறிவிலே சிறந்தோர் நட்பை
 அற்புதப் புதையல் போலே
 பெரிதென நாளும் போற்றி
 பெறுவரே பயனை எல்லாம்!
 
 அருகிலே இருந்தும் தேனை
 அறியாத தவளை போலே
 உறவென நல்லோர் நட்பை
 ஓம்பாதோர் பயனில்லாதார்!
 
 
 
 -செ. சு. மலரடியான்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/16/w600X390/sm7.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/17/தாமரைப்-பூவும்-தவளையும்-2881812.html
2881813 வார இதழ்கள் சிறுவர்மணி உலகம் உனதே!   DIN DIN Saturday, March 17, 2018 12:00 AM +0530 காலம் போனால் வருமோ - மீண்டும்
 கனவிலும் வாராது!
 காற்றை மறந்தால் சுவாசம் - வருமோ
 உடலைச் சேராது!
 
 தாளம் போனால் வருமோ - பாட்டு
 தவறியும் வாராது!
 தவறை செய்தால் வருமோ - நன்மை
 நம்மைச் சேராது!
 
 நீச்சல் போட்டால் எளிதில் - நாமும்
 கரையைச் சேர்ந்திடலாம்!
 ஆற்றல் மிகுந்தால் எத்தனை - இடர்களும்
 நம்மைச் சேராது!
 
 உறவுப் பாலங்கள் போட்டால் - நமக்குப்
 பிரிவுகள் நேராது!
 பாசம் கொண்டால் உலகம் - உனதே
 அறிவது வேறேது!
 -வி.தமிழழகன்
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/16/w600X390/sm8.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/17/உலகம்-உனதே-2881813.html
2881815 வார இதழ்கள் சிறுவர்மணி முத்திரை பதித்த முன்னோடிகள்! சலீம் அலி!   DIN DIN Saturday, March 17, 2018 12:00 AM +0530 உலகில் எத்தனை பறவை இனங்கள் உள்ளன? அவை ஏன் ஒரு நாட்டிலிருந்து மற்றோர் நாட்டிற்கு இடம் பெயர்கின்றன? என்பன போன்ற கேள்விகள் மனிதனுக்குத் தோன்ற ஆரம்பித்தன. எனவே பறவைகள் பற்றிய ஆராய்ச்சியை மனிதன் மேற்கொள்ள ஆரம்பித்தான். இத்தகைய பறவை ஆராய்ச்சி பற்றிய துறைக்கு "ஆர்னித்தாலஜி' (0RNITHOLOGY) என்று பெயர். 
ஆங்கிலேயர்கள் மட்டுமே ஈடுபட்டிருந்த இத்துறையில் இந்தியர் ஒருவரும் ஈடுபட்டு சாதனை புரிந்துள்ளார்! அவர்தான் "சலீம் அலி' என்று அழைக்கப்பட்ட "சலீம் மொய்சுதீன் அப்துல் அலி' (SALEEM
MOIZUDIN ABDUL ALI) ஆவார்.
முதன் முதலாகப் பறவைகள் பற்றிய கணக்கெடுப்பை இந்தியாவில் நிகழ்த்தியவர் இவரே. பறவைகள் பற்றி இவர் எழுதிய நூல்கள் விலங்கியல் பாடத்தின் வழிகாட்டியாக விளங்குகின்றன. "சலீம் அலி' 12.11.1876 அன்று மும்பையில் பிறந்தார். அந்நாட்களில் பறவைகளை வேட்டையாடுவது மிகப் பிரபலமான பொழுது போக்காக இருந்தது. அப்படி வேட்டையாடிய பறவைகளை பதப்படுத்தி வீடுகளில் வைத்திருப்பது கெளரவமாகக் கருதப்பட்டது. 
"பம்பாய்' என்று அழைக்கப்பட்ட "மும்பை' யில் "இயற்கை வரலாற்றுக் கழகம்' (BOMBAY NATURAL HISTORY SOCIETY) என்ற அமைப்பு இருந்தது. அங்கிருந்த அருங்காட்சியகத்தில் ஏராளமான பறவைகள் மற்றும் விலங்குகளின் பதப்படுத்தப்பட்ட மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சிறுவனாய் இருந்த சலீம் தான் சுட்டு வீழ்த்திய பறவை ஒன்றை இயற்கை வரலாற்றுக் கழகத்தின் உறுப்பினராய் இருந்த "மில்லர்ட்' (W.S.MILLARD) என்பவரிடம் காட்டினார். இதைப் பதப்படுத்தலாம் என்று அவர் கூறினார். 
இவ்வாறு இறந்த பறவைகளை பதப்படுத்த வேண்டியதன் அவசியம் என்ன? என்று சிறுவன் சலீம் வினவினான். இவை பின்னாளில் அழியும் நிலையில் இருக்கும் உயிரினங்களின் மாதிரியாகப் பயன்படும் என்று மில்லர்ட் கூறினார். மேலும் பறவைகளைப் பதப்படுத்தும் தொழில் நுட்பத்தையும் சலீமுக்குக் கற்றுக் கொடுத்தார். 
அன்று முதல் சிறுவன் சலீம் பறவைகளை உற்று நோக்கிக் குறிப்பெடுக்கத் துவங்கினான். 
தற்பொழுது மாநகரமாய் இருக்கும் மும்பை அந்நாட்களில் மிகப் பெரிய வளமாக இருந்தது. அப்பகுதிகளில் பறவைகள் வேட்டைப் போட்டிகள் பலமுறை நடத்தப்பட்டன. அவ்வாறு வேட்டாயாடுபவர்கள் எந்த இடத்தில், காலத்தில் எந்த இனப் பறவைகள் அதிகம் இருக்கும் என்பதை முழுமையாக அறிந்து இருப்பர். சலீமின் உறவினர் "இஸ்கந்தர் மிர்சா' (ISKANDAR MIRZA) -(பின்னாளில் பாகிஸ்தானின் முதல் குடியரசுத் தலைவர்)-- பறவைகள் பற்றி 
அதிகம் அறிந்திருந்தார். அவர் சலீமுக்கு பறவைகள் பற்றிய ஆர்வத்தை அதிகம் ஏற்படுத்தினார். 
1913 ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்த சலீம் பர்மாவில் இருந்த தம் குடும்பச் சொத்துக்களை நிர்வகிக்கச் சென்றார். அங்கு காடுகளில் இருந்த பறவைகளைப் பற்றிக் குறிப்பெடுத்துக் கொண்டார். 
1917 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர் தன் கல்வியைத் தொடர விரும்பினார். விலங்கியல் படிப்பை மேற்கொண்டார். 1926 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள "வேல்ஸ் இளவரசர் அருங்காட்சியகத்தில்' (PRINCE OF WALES MUSEUM) வழிகாட்டியாகச் சேர்ந்தார். ஐரோப்பா கண்டத்தில் உள்ள பறவைகள் பற்றி ஆய்வு செய்ய விரும்பிய அவர் தமது பணியிலிருந்து விலகி 1928 ஆம் ஆண்டு ஜெர்மனி சென்றார். அங்கு பல பறவை ஆராய்ச்சியாளர்களை சந்தித்த அவர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் "ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை' அவர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பினால் இந்தியா விடுதலை பெற வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் ஆழமாகத் தோன்றியது.
அதுவரை தாம் எழுதி வந்த குறிப்புகளை ஆங்கிலேயர்களிடம் சமர்ப்பித்து வந்த சலீம் தாமே அவற்றை ஒரு தொகுப்பாக வெளியிட முடிவு செய்தார். 1930 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய சலீம் இந்தியா முழுவதிலும் உள்ள பறவைகள் பற்றிய தொகுப்பைத் தயாரிக்க ஆரம்பித்தார். சுதந்திரத்திற்கு முன் நம் நாடு பல சமஸ்தானங்களாய்ப் பிரிந்து இருந்தது. ஹைதராபாத், கொச்சின், திருவிதாங்கூர், குவாலியர், இந்தூர் மற்றும் போபால் போன்ற சமஸ்தானங்களுக்குச் சென்று அங்கு ஆட்சி புரிந்த இந்திய மன்னர்களின் அனுமதியும், நிதி உதவியும் பெற்றுத் தமது பறவை ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். 
அந்நாளில் "ஹக் விஸ்ட்லர்' (HUGH WHISTLER) என்ற ஆங்கிலேயர் இந்தியாவின் பல பகுதிகளுக்குச் சென்று பறவைகைள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டு ஒரு தொகுப்பை உருவாக்கி இருந்தார். சலீம் அவரது துணையுடன் இந்தியப் பறவைகள் பற்றிய தொகுப்பை முழுமையாக உருவாக்கினார். 
விஸ்ட்லர் தமது நண்பர் ரிச்சர்ட் என்பவரை சலீமுக்கு அறிமுகம் செய்து வைத்தார். ரிச்சர்ட் ஆப்கனிஸ்தானில் உள்ள பறவைகளைப் பற்றி ஆய்வு செய்ய விரும்புவதாகக் கூறினார். சலீம் அவருடன் செல்ல விரும்பினார். இருவரும் சேர்ந்து ஆப்கனில் இருக்கும் பறவைகள் பற்றிய முதல் தொகுப்பு நூலை உருவாக்கினர். 
இவருக்கு மோட்டார் சைக்கிள் மிகவும் பிடிக்கும்! இந்தியாவின்பல பகுதிகளுக்கு மோட்டார் சைக்கிளிலிலேயே பயணம் செய்துள்ளார். 
1942 ஆம் ஆண்டு டேஹ்ராடூன் சிறையில் இருந்த நேரு, "நைனி' சிறையில் அடைபட்டிருந்த தன் மகள் இந்திரா காந்திக்கு ஒரு நூலை அனுப்பி வைத்தார். அது சலீம் அலி எழுதிய "இந்தியப் பறவைகள்' (THE BOOK OF INDIAN BIRDS) என்ற புத்தகம்! அதுவரை பறவைகள் பற்றிய ஆராய்ச்சி தேவையற்றது என எண்ணியிருந்த இந்திரா தமது எண்ணத்தை மாற்றிக் கொண்டார். 
ராஜஸ்தான் சமஸ்தான மன்னருக்கு ஒரு குறிப்பிட்ட பகுதியை பறவைகளுக்காக ஒதுக்க விண்ணப்பித்தார். அதுவே பின்னாளில் "பரத்பூர் பறவைகள் சரணாலயம்' ஆக அறிவிக்கப்பட்டது. அது போலவே மைசூர் மன்னர சாமராஜ உடையாருக்கும் "மாண்டியா' வில் ஒரு பகுதியை பறவைகளுக்காக ஒதுக்கும்படி விண்ணப்பித்தார். அதுவே பின்னாளில் " "ரங்கண்ணத்திட்டு பறவைகள் சரணாலயம்' ஆக மாறியது! 
கோயம்புத்தூர், பாண்டிச்சேரி, கேரளத்தில் உள்ள தட்டக் காடு சரணாலயங்களுக்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளன. 
1953 ஆம் ஆண்டு "வங்காள அறிவியல் கழகம்' இவருக்கு "ஜாய் கோபிந்தா தங்கப் பதக்கம்' வழங்கியது. அலிகார் முஸ்லீம் கழகம், டெல்லி பல்கலைக் கழகம் மற்றும் ஆந்திரா பல்கலைக் கழகம் இவருக்கு "கெளரவ டாக்டர் பட்டம்' வழங்கிச் சிறப்பித்தன. 
பிரிட்டிஷ் பறவை ஆராய்ச்சியாளர்கள் ஒருங்கிணைப்பு (BRITTISH ORNITHOLOGISTS UNION) என்ற அமைப்பின் மூலம் "தங்கப் பதக்கம்' பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். இவருக்கு இந்திய அரசு 1958 ஆண்டு "பத்ம பூஷண்' விருதும், 1976 ஆம் ஆண்டு "பத்ம விபூஷண்' விருதும் வழங்கி கெüரவித்தது! 1985 ஆம் ஆண்டு இவர் ராஜ்ய சபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியா, பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், பங்களா தேஷ் உள்ளிட்ட நாடுகளுக்கு இவர் எழுதிய நூலே பறவைகள் பற்றிய முதல் நூலாகும்!
இவர் எழுதிய " இந்தியப் பறவைகள்' என்ற நூல் தொகுப்பு பல்வேறு உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது!
1987 ஆம் ஆண்டு இச்சாதனையாளர் காலமானார்.

தொகுப்பு: என்.லக்ஷ்மி பாலசுப்ரமணியன், கடுவெளி. 


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/16/w600X390/sm9.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/17/முத்திரை-பதித்த-முன்னோடிகள்-சலீம்-அலி-2881815.html
2881816 வார இதழ்கள் சிறுவர்மணி போணி!   DIN DIN Saturday, March 17, 2018 12:00 AM +0530 அரங்கம்
காட்சி - 1

இடம் - பெருநகரத்தின் ஒரு மின்சார ரயில்வே ஸ்டேஷன் நுழைவு 
பிள்ளையார் கோவில் வாசல்
மாந்தர் - கீரை விற்கும் பாட்டி 
லோகாம்பாள், இளைஞன் விஷ்ணு.

(விஷ்ணு மோட்டார் சைக்கிளை அது நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு ரயிலைப் பிடிக்க வேகமாகச் செல்ல...)

(கீரை விற்கும் பாட்டி) லோகாம்பாள்: "தம்பி, சித்தே இந்தக் கீரை கூடையை இறக்கி விடேன்....''

(விஷ்ணு லேப் டாப் கறுப்பு தோள் பையை முதுகில் போட்டபடி கீரைக் கூடையை ஒரு கை பிடித்து இறக்குகிறான்)

லோகாம்பாள்: "நல்லா இருப்பா!....''

(விஷ்ணு வேகமாக நடை பாலத்தின் படிகளில் இரண்டு இரண்டு படிகளாகத் தாவிச் செல்கிறான்.. பிளாட்பாரத்தை அடைந்தால் பெரும் கூட்டம் காத்திருக்கிறது)

கூட்டத்தில் ஒருவர்: "தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடக்குது முதல் ஸ்டேஷனில். செல் போனில் நண்பர் சொன்னார்.....வேலைக்கு ஆகாது....பஸ்ஸில் போயிடலாம்!''

(பலர் பஸ்ûஸ பிடிக்க விரைகிறார்கள். விஷ்ணுவும் பஸ் பிடிக்கச் செல்கிறான்.)

காட்சி 2
இடம் - விஷ்ணு வேலை பார்க்கும் 
இன்ஃபோ எஸ் மென்பொருள் அலுவலகம்
மாந்தர் - விஷ்ணு, அதிகாரி, கணக்காளர்

அதிகாரி: "என்ன விஷ்ணு,... எப்படி சரியான நேரத்துக்கு வந்தீங்க?.... ரயில் ஓடலை தெரியுமா?..... முக்கால் வாசி ஊழியர்கள் வரலே!..... இன்னிக்கு எல்லோருக்கும் விடுப்பு தரலாம்னு உயர் அதிகாரிகள் தீர்மானிச்சிருக்காங்க....சரி நீங்க மட்டும் தனியா உங்க செக்ஷனில் என்ன பண்ணப் போறீங்க?....''
விஷ்ணு: முக்கியமான வெளி நாட்டு வாடிக்கையாளருக்கு அனுப்ப வேண்டிய பதில் தயார் பண்ணி இருக்கேன். அங்கே நமது மென்பொருளில் ஒரு சிக்கல் இருக்குதாம்.... அதை சரி செய்ய அலோசனை கேட்டிருக்காங்க. சரி பண்ண என்ன செய்ய வேண்டும் என ஒரு மின் அஞ்சல் அனுப்பணும்.... அனுப்பிடறேன்.. அதுக்கு உங்க அனுமதியும் கடவுச் சொல்லும் வேணுமே!....
அதிகாரி: சரி, அனுப்புங்க.... என் அறைக்குப் போறேன்.

(விஷ்ணு அஞ்சலை அனுப்ப அதிகாரி அதை சரி பார்த்துவிட்டு தன் கடவுச் சொல் மூலம் அங்கீகரித்து அனுப்புகிறார்.)

அதிகாரி (ஃபோனில்) : ""விஷ்ணு நீங்க செய்த வேலை அபாரம்!.... சரி, கணக்காளர் உங்களிடம் ஏதோ செய்தி சொல்ல காத்திருக்கார். நீங்க போய் பாருங்க. ரயில் இல்லாததால் வேலை முடிஞ்சிடிச்சு..... நீங்க வீட்டுக்கு போறதுன்னா போகலாம். எப்பவும் இரவு பதினோரு மணி வாக்கில் தான் கடைசியா போவீங்க. இன்னிக்கு சீக்கிரம் போங்க....''
விஷ்ணு: மிக்க நன்றி சார்.

காட்சி 3
இடம் இன்ஃபோஎஸ் அலுவலகம்
மாந்தர் - கணக்காளர், விஷ்ணு

(விஷ்ணு கணக்காளரைப் போய்ப் பார்க்க)

கணக்காளர்:"வாழ்த்துக்கள் மிஸ்டர் விஷ்ணு. உங்களுக்கு ரொம்ப நாளா வர வேண்டிய சம்பள உயர்வு வந்திடுச்சி. அதன் வித்தியாச நிலுவைத் தொகை ஆகஸ்டில் இருந்து மொத்தம் அறுபதாயிரத்து முன்னூறு இந்தக் கவரில் ரொக்கமா இருக்கு. இனி உங்க கணக்கில் புதிய சம்பளம் உயர்ந்து, அதன் அடிப்படை படிகள் சேர்ந்து வரவாகும். கையெழுத்து போட்டு வாங்கிக்குங்க.''
விஷ்ணு: (கையொப்பமிட்டபடி) ""மிக்க நன்றி சார். வாங்க கேண்டீனில் இனிப்பு சாப்பிடலாம்.''
கணக்காளர்: நீரிழிவு நோயாளிப்பா நான். இனிப்பு வேண்டாம். உண்மையான ஊழியனான உனக்கு பணம் தர்றதே எனக்கு மகா திருப்தி!

(கவரைப் பெற்றுக் கொள்ள)

கணக்காளர்: எண்ணிக்கோப்பா!....
விஷ்ணு: சரியா இருக்கும். உங்க கணக்கு எப்படிப் பட்டது!..... வர்றேன்.

காட்சி 4
இடம் - ரயில்வே ஸ்டேஷன்
மாந்தர் - விஷ்ணு, பாட்டி லோகாம்பாள்

(பஸ் பிடித்து மின்சார ரயில்வே ஸ்டேஷனுக்கு வண்டியை எடுக்கச் செல்கிறான் விஷ்ணு. வண்டி நிறுத்துமிடத்தில் இருந்து தள்ளியபடி பிள்ளையார் கோவில் வாசலுக்கு வர வாசலில் பாட்டி லோகாம்பாள்.... கவலை தோய்ந்த முகத்துடன்.....)

விஷ்ணு: என்ன பாட்டி முக வாட்டம்?... 
லோகாம்பாள்: "என்னப்பா செய்வேன்?.... ரயில் ஓடலையாம். ஜனங்க வரலே.. கீரை அப்படியே தங்கிட்டுது. போணியே ஆகலே. நூறு ரூபா நஷ்டமப்பா.....என்ன பண்ணுவேன் இதை?.... வாட ஆரம்பிச்சிட்டுது. மாத்திரை வாங்க நூறு 
வேணுமே..உடம்பு முடியலே. என்ன பண்றது?.....''
விஷ்ணு: சரி, எனக்கு எல்லாத்தையும் கொடுங்க வாங்கிக்கறேன்!
பாட்டி லோகாம்பள்: "எதுக்கப்பா அத்தனையும்?....''
விஷ்ணு: "நண்பர் ஒருத்தர் மெஸ் வச்சிருக்கார்.... அவரிடம் விலைக்குத் தந்திடலாம்.''
பாட்டி: "இந்தாப்பா எடுத்துக்க. மகாராஜனா...''

(நூறு ரூபாய் தந்து தன் மோட்டார் சைக்கிள் பின்புறம் வைத்துக் கட்டுகிறான்)

காட்சி 5
இடம் - தெரு
மாந்தர் - விஷ்ணு, நண்பர்கள், பசுக்கள்

(தெரு முனையில் திரியும் மாடுகள் வாயில் விஷ்ணு கீரைகளைத் தர அவை ஆவலுடன் வாங்கித் தின்னுகின்றன. கொஞ்சம் மீதிஇருக்கிறது. விஷ்ணுவின், நண்பரின் மனைவி வர்றாங்க)

விஷ்ணு: மேடம், கீரை இந்தாங்க வச்சுக்குங்க!
நண்பர் மனைவி: "நன்றிப்பா விஷ்ணு!..... ஏது இத்தனை கட்டுக் கீரை உனக்கு ?''

(இப்படியாக எல்லா கட்டுகளையும் தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கு வழங்கி விட்டு ஒரு கட்டுடன் நுழைகிறான் வீட்டுக்குள்.)

காட்சி 6
இடம் - விஷ்ணுவின் வீடு
மாந்தர் - விஷ்ணு, அம்மா

விஷ்ணு: அம்மா இந்தாங்க கீரை.
அம்மா: பரவாயில்லியே..பொறுப்பு வந்திடிச்சே..... எங்கே வாங்கினே..? கொஞ்சம் வாடி இருக்கே?.... எப்படிப்பா இதெல்லாம் வாங்கணும்ன்னு தோணிச்சு. 
விஷ்ணு:"என்னமோ தோணிச்சு.... வாட்ஸப்பில் ஒருத்தர் முளைக்கீரை சாப்பிட்டால் மூளை வளரும்ன்னு அனுப்பி இருந்தார்...... தேடி வாங்கியாந்தேன்......இந்தாங்க அம்மா அறுபதாயிரத்து முன்னூறு. அதில் நூறை தர்மம் பண்ணிட்டேன்.... பாக்கி இருக்கு.. அரியர்ஸ் தந்தாங்க அலுவலகத்தில்.''
அம்மா: "அட.. சம்பள உயர்வு போட்டுட்டாங்களா. பசுமாட்டுக்கு ஒரு கட்டு கீரை வாங்கிப் போடு நாளைக்கு மறக்காம''
விஷ்ணு: ""போட்டு விட்டுத்தான் அம்மா வர்றேன்.''

(திரை)
என். எஸ். வி. குருமூர்த்தி


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/16/w600X390/sm11.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/17/போணி-2881816.html
2881817 வார இதழ்கள் சிறுவர்மணி விடுகதைகள்   DIN DIN Saturday, March 17, 2018 12:00 AM +0530  1. பாயைச் சுருட்டவும் முடியாது, அதில் சிதறிக் கிடக்கும் மணிகளை எண்ணவும் முடியாது....
 2. காட்டில் உள்ள குடை வீட்டில் இல்லாத குடை...
 3. கிண்ணம் நிறையத் தண்ணீர் இருக்கு, குருவி குடிக்க வழியில்லை...
 4. இரத்தத்தில் வளர்வது, ஆனால் இரத்தம் இல்லாதது.
 5. பற்கள் பல உண்டு, ஆனால் கடிக்கத் தெரியாது...
 6. தண்ணீரில் நீந்தி வரும், தரையில் தாண்டி வரும்....
 7. ஆடையோ கருப்பு, சுழன்று சுழன்று ஆடுவதோ நாட்டியம், ஆனால் வருவதோ பாட்டு....
 8. வெட்டிக் கூறுபடுத்தி வைக்கிறார்களே தவிர எவரும் தின்பதில்லை...
 9. மூன்று நிறக் கிளிகளாம், கூண்டுக்குள் போனால் ஒரே நிறமாம்...
 - ரொசிட்டா
 விடைகள்:
 1.வானம், நட்சத்திரங்கள்
 2. நாய்க்குடை (காளான்)
 3. இளநீர்
 4. நகம்
 5. சீப்பு
 6. தவளை
 7. இசைத்தட்டு
 8. சீட்டுக்கட்டு
 9. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/16/w600X390/sm12.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/17/விடுகதைகள்-2881817.html
2881818 வார இதழ்கள் சிறுவர்மணி கடி   DIN DIN Saturday, March 17, 2018 12:00 AM +0530 • "எதுக்கு ரேங்க் கார்டை அலமாரி மேல் தட்டிலே வைக்கிறே??''
"டீச்சர்தான் "கீப் இட் அப்' னு எழுதியிருக்காங்களே!''
எம்.சங்கீதா, பட்டுக்கோட்டை.

• "சகாரா பாலைவனம் எங்கே இருக்கு?''
"பூமியிலேதான்!''
நெ.இராமன், சென்னை.

• "எதுக்கு கோழிக்கு வாத்தியார்னு பேர் வெச்சிருக்கே?''
"இதுவும் முட்டை போடுதில்லே!''
எஸ்.கார்த்திக் ஆனந்த், 
திண்டுக்கல்- 624005.

• ஆசிரியர்: நீங்க எல்லாம் வைரம் மாதிரி!
மாணவன்: அப்படீன்னா நீங்களும் வைரம்தான் சார்!
ஆசிரியர்: எப்படி? 
மாணவன்: வைரத்தை வைரத்தால்தான் அறுக்க முடியும்!
பொருநை பாலு, திருநெல்வேலி.

• "மூணு சக்கர சைக்கிள் விடணும்னு ஒரே அடம்!! ''
"அதனால என்ன விடச்சொல்லேன்!...''
"நான் விடணுமாம்!''
என்.பர்வதவர்த்தினி, 
5, வீரராகவன் தெரு, 
அண்ணாநகர், பம்மல், 
சென்னை - 600075.

• "தம்பி ஏ..பி..சி..டி..சொல்லு!''
"சின்ன ஏ..பி..சி..டி.. யா....பெரிய ஏ..பி..சி..டி.. யா?
ஜோ.ஜெயக்குமார், 

3/6 அன்னை இல்லம், அன்னை நகர், நாட்டரசன்கோட்டை - 630556.
வாரம் 2 டி-சர்ட் பரிசு
நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும் பட்டுக்கோட்டை ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும் 
தலா ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/16/w600X390/sm13.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/17/கடி-2881818.html
2881821 வார இதழ்கள் சிறுவர்மணி அங்கிள் ஆன்டெனா   DIN DIN Saturday, March 17, 2018 12:00 AM +0530 கேள்வி:
சதாகாலமும் பனி சூழ்ந்த இடத்திலேயே வசிக்கும் துருவக்கரடிகளுக்குக் குளிராதா? கடுங்குளிரில் அவை என்ன சாப்பிடும்?

பதில்:
சுவாசிப்பதற்குக் காற்று, பசிக்கு உணவு என்று இயற்கை நமக்குத் தந்திருக்கும் வரங்கள் ஏராளம். இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் சக்தி படைத்த உயிரினங்கள் மட்டுமே நிலைத்து வாழ்கின்றன. அமீபாவில் ஆரம்பித்து வரை மனிதன் வரை, சூழலுக்கேற்ற தகவமைப்புகளை எல்லா உயிரினங்களுக்கும் இறைவன் தந்திருக்கிறார்.
பாலைவன வெப்பத்தை ஒட்டகம் தாக்குப் பிடிப்பதற்கும் சதாகாலமும் நீருக்குள்ளேயே இருக்கும் மீனுக்கு சளி பிடிக்காததற்கும் இதுதான் காரணம். அப்படித்தான் குளுகுளு துருவப் பிரதேசத்தில் பனிக்கரடியும் ஜாலியாக வாழ்ந்து வருகிறது. உடலின் வெப்பத்தை வெளியே விட்டு விடாத மயிர்க்கால்கள், குளிரைத் தாங்கக்கூடியக முரட்டுத் தோல் ஆகியவை கரடிக்கு எக்ஸ்ட்ராவாகக் கிடைத்திருக்கின்றன. இதனால் ரத்தத்தை உறைய வைக்கும் கடுங்குளிரையும் இக்கரடிகளால் தாங்க முடியும்.
பனிக்கரடிகளுக்கு மோப்ப சக்திக அதிகம். பனிக் கட்டிகளுக்கும் அடியில் இருக்கும் நீரில் வசிக்கும் மீன்களை மிகத் துல்லியமாக மோப்பம் பிடித்து, சட்டென்று பனிக்குள் வாயை நுழைத்து மீனைக் கவ்வி விடும். இப்படிக் கிடைக்கும் மீன்களை தனது கூட்டாளிகளுடன் பங்கு போட்டுச் சாப்பிடும் நல்ல பழக்கமும் இவைகளுக்கு உண்டு. மற்றொரு ஆச்சரியமான விஷயம், இக் கரடிகள் வெதுவெதுப்பான வெயிலைக்கூட விரும்புவதில்லை. அப்போதும் பனிக்குகைகளுக்குள் அடைந்து கிடக்கவே விரும்புகின்றன.
அடுத்த வாரக் கேள்வி
கல்லுக்குள் வசிப்பதாகக் கூறப்படும் தேரை எல்லா நாடுகளிலும் இருக்கின்றதா? இவை எப்படி முட்டை போட்டு அடைகாக்கும்?
பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/16/w600X390/sm14.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/17/அங்கிள்-ஆன்டெனா-2881821.html
2881823 வார இதழ்கள் சிறுவர்மணி அதிருப்தி!   Friday, March 16, 2018 11:04 AM +0530 எதிலும் திருப்தி அடையாத "அஜிதன்' என்பவன் தெருவில் வருத்தமாய் நின்று கொண்டிருந்தான். திடீரென்று அவன் முன் தேவதை ஒன்று தோன்றியது.
 "ஏன் உன் முகம் வாட்டமாயிருக்கிறது?.....என்ன வேண்டும் உனக்கு?'' என்று கேட்டது தேவதை.
 "நான் ஒரு பையில் பத்து பொற்காசுகளை வைத்திருந்தேன்.... அந்தப் பை காணாமல் போய்விட்டது!...''
 "அப்படியா!....சரி போனால் போகிறது!....நான் உனக்கு அழகிய பையில் பத்து பொற்காசுகள் தருகிறேன்!.....வருத்தப்படாதே!....'' என்று கூறி அவனிடம் மிக அழகிய பையை பத்து பொற்காசுகளுடன் வழங்கியது தேவதை!
 அதைப் பெற்றுக் கொண்ட அஜிதன் மீண்டும் மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டான். அவன் முகம் மிகவும் வாடியிருந்தது!
 தேவதைக்கு ஆச்சரியமாய் இருந்தது. அது அவனிடம், "ஏன் மறுபடி வாட்டமாயிருக்கிறாய்?....உன் முகம் வருத்தமாய் இருக்கிறதே!'' என்று கேட்டது.
 ""நான் முதல்லே தொலைச்ச பையும் காசும் இருந்தா இப்போ என் கிட்டே இருபது பொற்காசுகள் இருந்திருக்குமே!....அதை நெனைச்சேன்! ரொம்ப வருத்தமாயிருக்குது!'' என்றான் அஜிதன்!
 தேவதை திகைத்தது! "இந்த மனுஷனுக்கு துக்கப்படறதுதான் வேலை!....அதிருப்தி கொண்ட மனிதர்களைத் திருப்தி படுத்துவது வேண்டாத வேலை...' என்று நினைத்துக் கொண்டது!
 
 -மயிலை மாதவன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/16/w600X390/sm15.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/17/அதிருப்தி-2881823.html
2877478 வார இதழ்கள் சிறுவர்மணி தகவல்கள் 3 Saturday, March 10, 2018 12:00 AM +0530 நானி!
"நானி' என்றொரு ஏழைச் சிறுவன் பாவம்! அவனிடம் காசு இல்லாத காரணத்தினால் விளையாடுவதற்கு பந்து வாங்க முடியாமல் கஜூர் மரத்தின் பூக்களைப் பறித்து பந்தாகக் கட்டி விளையாடி திருப்தி அடைந்தான்! பல ஆண்டுகளுக்குப் பிறகு குறைவான காலம் பதவியில் இருந்தாலும் எல்லாக் கட்சியினரும் மிகவும் திருப்தி அடையும்படி நாட்டை ஆண்டு காட்டினார் அதே "நானி'. பிரதமர் "லால் பகதூர் சாஸ்திரி' என்ற பெயரில்!
ஏ.விக்டர் ஜான், திருமுல்லைவாயில்.

இசை ஞானம்!
குமரி அனந்தன் அவர்கள் சிறந்த கர்நாடக ரசிகர். அவரது நண்பர் அவரிடம், "உங்களுக்கு இசை ஞானம் உண்டா? யாரிடமிருந்து இந்த இசை ஞானத்தைப் பெற்றீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு குமரி அனந்தன், "என் மனைவியிடமிருந்துதான் பெற்றேன்....எனக்கு இரு பெண்கள்...., ஒருவர் பெயர் தமிழிசை!....இன்னொரு பெண் பெயர் ஞானம்!....எனவே எனக்கு இசை ஞானம் உண்டுதானே!'' என்று கூறி நண்பரை அசர வைத்தார்.
கிழவை சத்யன், நெல்லை. 

நேர்மறைச் சிந்தனை!
ஒரு முறை அப்துல் கலாம் அவர்களிடம் ஒரு மாணவி, "நல்ல நாள் எது? கெட்டா நாள் எது?'' என்று கேட்டிருக்கிறார். அதற்கு கலாம், ""பூமி மீது சூரிய ஒளி பட்டால் அது பகல்!...படாவிட்டால் அது இரவு!....இதில் கெட்டது என்று எதுவும் இல்லை! பகலைப்போல் இரவும் மிக அவசியமே!'' என்றாராம். கலாம் அவர்கள் அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கக் காரணம் அவரின் இத்தகைய நேர்மறையான சிந்தனையே!
எம்.சங்கீதா, பட்டுக்கோட்டை.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/9/w600X390/sm1.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/10/தகவல்கள்-3-2877478.html
2877479 வார இதழ்கள் சிறுவர்மணி நினைவாற்றலுக்குக் காரணம்!   DIN DIN Saturday, March 10, 2018 12:00 AM +0530 கவான் கிருஷ்ணனிடம் ஒரு நாள் அருச்சுனன் உரையாடிக்கொண்டிருந்தான். கிருஷ்ணர் தன் சிறு வயதில் நடந்தவைகள் அனைத்தையும் நினைவு கூர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அர்ச்சுனனுக்கு ஆச்சரியமாய் இருந்தது!
 "பத்து வருடங்களுக்கு முன்னால் இதே நாளில் நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?'' என்று கேட்டான் அருச்சுனன்.
 ஆச்சரியப்படும் வகையில் அருச்சுனன் குறிப்பிட்ட அந்த தேதியில் என்ன நடந்தது என்பதை கிருஷ்ணர் மிகத் துல்லியமாகச் சொன்னார்! அன்று எழுந்தது முதல் என்னனென்ன செய்தார், என்ன சாப்பிட்டார், யாருடன் உரையாடினார்....அனைத்தையும் மிகச் சரியாகச் சொன்னார் கிருஷ்ணர்!
 அருச்சுனன் திகைத்தான்! ""கிருஷ்ணா! உனக்கு எப்படி இவ்வளவு நினைவாற்றல் இருக்கிறது?....ஆச்சரியமாய் இருக்கிறது! பத்து வருடங்களுக்கு முன் நடந்ததை அப்படியே கூறுகிறாயே! எனக்கு அன்று என்ன நடந்தது என்பது சற்றும் ஞாபகமில்லை....அது மட்டுமல்ல....போனமாதம் இதே தேதியில் நடந்த நிகழ்ச்சிகளைக் கூட உன் போல் துல்லியமாக கோர்வையாக என்னால் சொல்ல இயலாது! உன்னால் மட்டும் எப்படி இது சாத்தியமாயிற்று!.... நினைவாற்றலின் ரகசியம் என்ன?'' என்று கேட்டான்
 "அது சரி....நீ சுபத்திரையைக் கல்யாணம் செய்து கொண்ட போது நடந்தவற்றை உன்னால் கூற முடியுமா?'' என்று கேட்டார் கிருஷ்ணர்!''
 "ஓ!....அந்த நாளை என்னால் மறக்க முடியுமா?.......'' என்று ஆரம்பித்து அன்று நடந்த எல்லா விஷயங்களையும் கூறினான் அருச்சுனன்!
 ""துரோணர் உன்னிடம் பரீட்சை வைத்த நிகழ்ச்சி?...அது ஞாபகமிருக்கிறதா?''
 அன்று நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான் அருச்சுனன்.
 கிருஷ்ணர் சிரித்தார். "பத்து வருடங்களுக்கு முன்.....ஏன்?.....ஒரு மாதத்திற்கு முன் நடந்தவற்றைக்கூட மறந்து விடும் நீ உன் திருமண தினம், மற்றும் பரீட்சையில் வெற்றி பெற்ற தினம், அனைத்தையும் நினைவில் வைத்திருக்கிறாய்! நீ உனக்கு நேர்ந்த நிகழ்வுகளில் ஆர்வமுடன், மகிழ்ச்சியுடன் இருந்த தருணங்களை நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறாய்! ...நானோ, எல்லா விஷயங்களிலும், எல்லா நிகழ்வுகளிலும், எல்லா கடமைகளிலும், எல்லா தருணங்களிலும் ஆர்வமாக இருக்கிறேன். அதுவே என் நினைவாற்றலுக்குக் காரணம்!'' என்றதும் கிருஷ்ணரை விழுந்து வணங்கினான்.
 -உ.இராஜமாணிக்கம்.
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/9/w600X390/sm2.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/10/நினைவாற்றலுக்குக்-காரணம்-2877479.html
2877480 வார இதழ்கள் சிறுவர்மணி குறள் பாட்டு: அமைச்சு! DIN DIN Saturday, March 10, 2018 12:00 AM +0530 அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும்
 திறன் அறிந்தான் தேர்ச்சித் துணை.
                                                                          - திருக்குறள்
 அறத்தை நெஞ்சில் சேர்ப்பவன்
 அறிவான சொற்களைச் சொல்பவன்
 எந்தச் செயலைச் செய்தாலும்
 திறமையாகச் செயல்படுவான்
 
 அறமும் அறிவும் திறமையும்
 கொண்டு அணுகும் நல்லவனே
 கலந்து பேசி முடிவெடுக்க
 ஏற்ற துணையாய் விளங்குவான்
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/9/w600X390/sm3.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/10/குறள்-பாட்டு-அமைச்சு-2877480.html
2877481 வார இதழ்கள் சிறுவர்மணி பொன்மொழிகள்! DIN DIN Saturday, March 10, 2018 12:00 AM +0530 * முயற்சி என்பது தேயும் நிலவு அல்ல. மேன்மேலும் வளர்வது. 
- ஹெச்.ஜி.வெல்ஸ்

* உழைக்கும் கரங்கள் வழிபடும் கரங்களைவிட வலிமையானவை!
- சாக்ரடீஸ்

* உயர்ந்த உள்ளங்களுக்கு இடையில்தான் தூய்மையான தோழமை மலர முடியும் 
- கிங்ஸ்லி

* ஒரு நல்ல நண்பனை பெறுவதற்கு ஒரே வழி, நீயும் ஒரு நல்ல நண்பனாக இருப்பதுதான். 
- எமர்சன்

* உடலுக்கு உணவு போன்றது, உள்ளத்திற்கு உண்மை! 
- எட்மண்ட பர்க்

* நம்பிக்கைதான் எதிர்காலத்தை உருவாக்குகிறது! 
- எட்மண்ட் பர்க்

* பகைவனை அடக்குபவனைவிட ஆசைகளை அடக்குபவனே மாவீரன்! 
- அரிஸ்டாட்டில்

* நம் நாடு நம்மை நேசிக்கும் அளவுக்கு சிறந்த குடிமகனாக இருக்கவேண்டும். 
- பிளேட்டோ

* அளவில்லாத ஆசை நமது நல்ல குணங்களையெல்லாம் அழித்து விடும். 
- மகாவீர்
தொகுப்பு: சஜி பிரபு மாறச்சன்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/9/w600X390/sm4.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/10/பொன்மொழிகள்-2877481.html
2877482 வார இதழ்கள் சிறுவர்மணி முத்துக் கதை: பரிவு! DIN DIN Saturday, March 10, 2018 12:00 AM +0530 வேலுச்சாமியின் வீட்டின் அருகே ஒரு மளிகைக் கடை இருந்தது. மளிகைக் கடையின் சொந்தக்காரர் வேலுச்சாமிக்கு தூரத்து உறவு. தன் வீட்டுக்கு வாங்க வேண்டிய மளிகைச் சாமான்களை அந்தக் கடையிலேயே வாங்கிக் கொள்வார்.
 வேலுச்சாமிக்கு ஒரு மகன். ஆறாவது படிக்கிறான். பெயர் ராஜா.
 ராஜாவிடம் பொருள் வாங்கி வரச் சொன்னால் அருகிலுள்ள அந்தக் கடையில் வாங்காமல் தெருவைத் தாண்டி எதிர்த் தெருவிலுள்ள ஒரு சிறிய கடைக்குப் போய் சரக்குகளை வாங்கி வருவான். பக்கத்திலுள்ள கடைக்குச் செல்லாமல் அடுத்த தெருவிலுள்ள கடைக்குச் சென்று வாங்கி வருவதால் கால தாமதம் ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும் இப்படிக் காலதாமதவாதைக் கவனித்தார் ராஜாவின் அப்பா வேலுச்சாமி.
 ஒரு நாள் ராஜாவிடம், "ஏண்டா ராஜா!....கடைக்கு அனுப்பினால் ஏன் உனக்குத் திரும்பி வரத் தாமதமாகிறது?'' என்று கேட்டார்.
 ராஜாவும் தான் அடுத்த தெருவிலுள்ள கடைவரை செல்வதை விவரித்துக் கூறினான்.
 "அவ்வளவு தூரம் சென்று பொருட்களை வாங்கிவரணுமா?....அதுவும் பக்கத்துக் கடைக்காரர் நமக்கு தூரத்துச் சொந்தம்!'' எனக் கேட்டார்.
 அதற்கு ராஜா, "அப்பா!....இங்கிருக்கிற கடையில் நல்ல வியாபாரம் நடக்குது. நான் சரக்கு வாங்கி வருகிற கடைக்காரர் மாற்றுத் திறனாளி. இரு கால்களும் பாதிக்கப்பட்டவர். சக்கர நாற்காலியில் இருந்து வியாபாரம் பார்க்கிறார். வியாபாரமும் சுமாராத்தான் நடக்குது. அங்கு சென்று வாங்கறதனாலே அவருக்கு உதவுகிறாமாதிரி இருக்கும்!...இதில் சொந்தம் எல்லாம் அப்புறம்தான். ‘' என்றான்.
 மகனின் கருணையுள்ளம் அறிந்து மகிழ்ந்தார் வேலுச்சாமி.
 
 -இரா.சிவானந்தம்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/9/w600X390/sm5.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/10/முத்துக்-கதை-பரிவு-2877482.html
2877483 வார இதழ்கள் சிறுவர்மணி கருவூலம்: தஞ்சாவூர் மாவட்டம்! DIN DIN Saturday, March 10, 2018 12:00 AM +0530 தஞ்சாவூர் மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் வளமான மாவட்டம்! அன்றைய சோழநாட்டின் பிரதானமான மையப் பகுதி. தமிழகத்தின் தென்கிழக்கு பகுதியில் காவிரி ஆற்றின் டெல்டா பிரிதேசத்தில் அமைந்துள்ளது. 
1798 இல் தனி மாவட்டமாக ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்பின் பல மாற்றங்களைச் சந்தித்து பரப்பளவும் எல்லையும் மாறிவிட்டன. 
3356.57 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் தென்பகுதியில் பாக்ஜலசந்தியும், பிற பகுதிகளில் திருச்சிராப்பள்ளி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களும் சூழ்ந்துள்ளன. கொள்ளிடம் ஆறு, வடக்கு எல்லைக் கோடாக, தஞ்சாவூர் மாவட்டத்திற்கும், திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களுக்கும் இடையில் ஓடுகிறது. 
இம்மாவட்டம் நிர்வாக வசதிக்காக பூதலூர், கும்பகோணம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பாபநாசம், பேராவூரணி, திருவையாறு, தஞ்சாவூர், திருவிடைமருதூர் என ஒன்பது வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் எல்லைக்குள் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. தஞ்சாவூர் மாநகராட்சியே மாவட்டத் தலைநகரமாகவும், பெரிய நகரமாகவும் உள்ளது. இம்மாவட்டத்திற்கென பல புகழ் பெற்ற பெருமைக்குரிய அடையாளங்கள் உள்ளன. 

தஞ்சாவூரின் வரலாறு!
இன்றைய தஞ்சாவூரைச் சுற்றிலுமுள்ள பகுதிகளை கி.பி. 655 முதல் 850 வரையிலான காலத்தில்முத்தரையர்கள் என்ற குறுநில மன்னர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். அவர்களில் ஒருவரான தனஞ்சய முத்தரையர் என்பவர் பெயரில் உருவான புதிய ஊர் தனஞ்சய ஊர் என்பதாகும். அதுவே பிற்காலத்தில் தஞ்சாவூர் எனப்பட்டது. இவ்வாறாக கி.பி. 8ஆம் நூற்றாண்டில்தான் தஞ்சாவூர் உருவானது. 
கி.பி. 850 களில் விஜயாலய சோழன் என்ற மன்னன் இப்பகுதியைக் கைப்பற்றி, சோழர் (இடைக்கால) ஆட்சியைத் தோற்றுவித்தான். இவ்வூர் ராஜராஜ சோழன் காலத்தில் (கி.பி. 985 - 1014) மிக்க புகழ் பெற்றது. சோழப்பேரரசின் தலைநகரமாகவும் தஞ்சை மாநகரம் சிறப்புடன் திகழ்ந்தது. கி.பி. 1025 இல் ராஜேந்திர சோழனால் தலைநகரம், கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றப்பட்டது. 
கி.பி. 13ஆம் நூற்றாண்டில் மதுரை பாண்டிய மன்னர்களின் கட்டுப்பாட்டிலும், அதன்பின் விஜயநகர பேரரசுக்குட்பட்ட பகுதியாகவும் ஆனது. கி.பி. 1532 லிருந்து தஞ்சை நாயக்க மன்னர்களும் இப்பகுதியை ஆட்சி செய்தனர். 
கி.பி. 1676 இல் மராட்டிய மன்னர் வீரசிவாஜியின் சகோதரர் வெங்காஜி தஞ்சையை வென்று மராட்டியர்களின் ஆட்சியை நிறுவினார். மராட்டிய மன்னர்களில் ஒருவரான இரண்டாம் சரபோஜி (1798 - 1832 ) ஆங்கிலேய கவர்னர் வெல்லெஸ்லி பிரபுவுடன் கி.பி. 1799 இல் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி தஞ்சைக் கோட்டையைத் தவிர பிற பகுதிகள் ஆங்கிலேயர்களிடம் கொடுக்கப்பட்டன. 
அதன்பின் ஆட்சிக்கு வந்த மராட்டிய மன்னர் இரண்டாம் சிவாஜிக்கு (1832 - 1855) ஆண் வாரிசு இல்லாததால், ஆங்கிலேயர் வசம் கோட்டையும் வந்தது. நாடு சுதந்திரம் அடையும் வரை அவர்களே நிர்வாகம் செய்தனர். 

நீர்வளம்! 
தமிழகத்தின் பெரிய நதியான காவிரி ஆறு தஞ்சை மாவட்டத்திற்குள் நுழையும் பொழுது பல சிறு கிளைகளாகப் பிரிந்து இம்மாவட்டத்தின் வழியாக திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களையும், காரைக்கால் பகுதியையும் கடந்து வங்கக் கடலில் கலக்கிறது. காவிரியின் கிளை ஆறுகளால் வளம் பெறும் இப்பிரதேசமே "காவிரி டெல்டா பிரதேசம்' எனப்படுகிறது. 
இக்கிளை ஆறுகள் காவிரி, அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, புது ஆறு, மன்னியாறு, குடமுருட்டி ஆறு என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இக்கிளை ஆறுகளால் தஞ்சை மாவட்டம் வளமான பிரதேசமாக உள்ளது.

விவசாயமும் பிற தொழில்களும்!
வேளாண்மையும், அதைச் சார்ந்த தொழில் மற்றும் வணிகமும், மாவட்டத்தின் பிரதான தொழில்களாகும். 58 சதவீத நிலப்பகுதிகள் வேளாண் நிலமாக உள்ளன. நெல், உளுந்து, வாழை, தேங்காய், எள், கேழ்வரகு, துவரை, சிறுபயறு, கரும்பு, மக்காச்சோளம் முதலியவை முக்கிய விளைபொருட்களாகும். தமிழகத்தில் தேங்காய் அதிகம் விளைவது இங்குதான். 
அரிசி ஆலை, எண்ணை ஆலை, போன்ற விவசாயம் சார்ந்த தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ளன. 
தஞ்சை மற்றும் சுற்றுப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான பட்டு நெசவுக் கூடங்கள் செயல்படுகின்றன. 
வீணை, மிருதங்கம், தம்பூரா, வயலின், தபேலா, கஞ்சிரா போன்ற இசைக் கருவிகள் செய்வது முக்கிய தொழிலாக உள்ளது. 
இவற்றைத் தவிர குடிசை தொழிலாக கலைப்பொருட்கள் செய்வது, உலோக சிலைகள் செய்வது, சுற்றுலா, போன்றவையும் குறிப்பிடத் தக்க அளவு நடைபெறுகின்றன. 

மாவட்டத்தின் புகழ்பெற்ற அடையாளங்கள்!
தமிழகத்தின் கலை, மற்றும் கலாச்சாரப் பெருமையை பறைசாற்றும் வகையில் பல சிறப்பான அடையாளங்கள் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளன. 

தஞ்சாவூர் வீணை!
17 ஆம் நூற்றாண்டில் ரகுநாத மன்னர் காலத்திலிருந்து இங்கு வீணைகள் செய்யப்படுகின்றன. குடம், தண்டி, யாளியின் தலை ஆகிய பாகங்கள் ஒரே மரத்துண்டில் செதுக்கி செய்யப்படும் ஏகாந்த வீணை, மற்றும் பாகங்களைத் தனித்தனியாகச் செய்து, பின் இணைக்கும் ஒட்டு வீணை என இருவகை வீணைகள் செய்கின்றனர். 
இங்கு செய்யப்படும் வீணைகளுக்கு புவிசார் குறியீடும் பெறப்பட்டுள்ளது!

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை!
இந்த பொம்மைகளின் அடிப்பகுதி பெரியதாகவும், எடை அதிகமாகவும், உருண்டும் இருக்கும். மேல்பகுதி குறுகியும், எடை குறைந்தும் இருக்கும். மேல் பகுதி குறுகியும், எடை குறைந்தும் இருக்கும். இவற்றை தள்ளி விட்டாலோ, சாய்த்து தள்ளினாலோ கீழே விழாமல், ஆடி ஆடி செங்குத்தாக நின்றுவிடும் என்பதுதான் இதன் தனித்தன்மை. நடன பொம்மைகளும், இங்கு செய்யப்படுகின்றன, இவை தலை, இடுப்பு, முதலியலை தனித்தனியாக ஆடும் அழகு யாவரையும் கவர்ந்திழுக்கும். 
இப்பொம்மைகள், ஊரின் கலை மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாக உள்ளன.

தஞ்சாவூர் தட்டு! 
அன்பளிப்பாகவும், நினைவுப் பரிசுப் பொருளாகவும் வழங்கப்படும் அலங்காரக் கலைப்படைப்புதான் இந்த வட்ட வடிவ அழகிய தட்டு! இது வெள்ளி, பித்தளை, செம்பு போன்ற உலோகங்கள் கலந்து செய்யப்படுகின்றது. இதில் மத்தியில் தெய்வ உருவங்கள், அல்லது புடைப்புச் சிற்பங்கள் சித்திர வேலைப்பாடுடன் செதுக்கப்பட்டிருக்கும்! 
தட்டையும், உருவங்களையும் தனித்தனியாக செய்தபின் மெழுகு கொண்டு அவற்றை ஒட்டி பின் மெருகேற்றுகின்றனர். புவிசார் குறியீடு (எஉஞஎதஅடஏஐஇஅக ஐசஈஐஇஅபஐஞச) பெற்ற இத்தட்டுகளை குடிசைத் தொழிலாக செய்கின்றனர். 

தஞ்சாவூர் ஓவியங்கள்!
இந்தியாவின் புகழ்பெற்ற பலவிதமான ஓவிய வகைகளில் "தஞ்சாவூர் ஓவியங்களும்' அடங்கும். சோழர் காலத்தில் தோற்றம் பெற்று, அதன் பின் வந்த பல ஆட்சியாளர்களின் ஆதரவு பெற்று வளர்ச்சியடைந்தது. 
இதனால் இவ்வகை ஓவியத்தில் முகலாயர், மராட்டியர், ஆங்கிலேயர் என பலவித கலைகளின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஓவியத்துடன் கை வேலைப்பாடுகளும் இணைந்து ஒரு புதிய பாணியாகப் புகழ்பெற்று திகழ்கிறது. 

தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்!
இப்பல்கலைக்கழகம் தமிழ் மொழி, பண்பாடு போன்ற துறைகளில் உள்ள ஆய்வை நோக்கமாகக் கொண்டு 1981 இல் தொடங்கப்பட்டது. இதன் கட்டிடங்கள் "தமிழ்நாடு' என்ற சொல்லில் உள்ள எழுத்துக்கள் வடிவத்தில் 5 கட்டிடங்களாக வடிவமைத்து கட்டப்பட்டுள்ளன. 
தொடரும்....

தொகுப்பு: கே.பார்வதி, திருநெல்வேலி டவுன்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/9/w600X390/sm6.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/10/கருவூலம்-தஞ்சாவூர்-மாவட்டம்-2877483.html
2877485 வார இதழ்கள் சிறுவர்மணி பாராட்டுப் பாமாலை - 3 DIN DIN Saturday, March 10, 2018 12:00 AM +0530 (காஷ்மீர் ஸ்ரீநகரில் "தால்' ஏரியைத் தூய்மை செய்யும் சிறுமி "ஜானட்' பற்றிய
 உண்மைச் செய்தியை அடிப்படையாகக் கொண்டது)
 பாரதத் தாயின் மணிமுடி தன்னில்
 பச்சை மரகதம் காஷ்மீர் மாநிலம்!
 எவர் வந்தாலும் ஈர்க்கும் இயற்கை!
 எங்கு நோக்கினும் பனிமலைக் காட்சி!
 
 அழகே வடிவாய் தால் எனும் ஏரி!
 அருகே வெள்ளைப் பனயின் தூறல்!
 அன்னப் படகில் செல்லும் மகிழ்ச்சி!
 அள்ளக் குறையா இன்பம் குளிர்ச்சி!
 
 பார்வை செல்லும் தூரம் வரைக்கும் - ஏரி
 பரந்து விரிந்தது...கண்ணுக்கு விருந்து!
 மிதக்கும் படகில் வீடுகள்....கடைகள்!
 மீன்கள் மின்னும் சூரிய ஒளியில்!
 
 காஷ்மீர் மக்கள் இயற்கையின் காவலர்!
 கண்ணைப் போல நீர் நிலை காப்பவர்!
 கருத்தாய் தூய்மை காக்கும் உணர்வினர்!
 குப்பையை நெகிழியைத் தொட்டியில் போடுவர்!
 
 சுற்றுலா வருபவர் அழகினை ரசிப்பார் - ஆனால்
 சூழலைக் காக்கும் எண்ணம் மறப்பார்!
 பற்பல குப்பையை ஏரியில் வீசுவார்! - பார்க்கும்
 "ஜானட்' சிறுமியோ உள்ளம் கலங்குவாள்!
 ஸ்ரீநகர் லின்டன் பள்ளியில் படிப்பவள்.....
 பாசம் மிகுந்தவள் ஏரியின் மீது!
 துடிப்புடன் வந்தாள் தூய்மையைக் காக்க....
 துணையாய் நின்றார் அவளது தந்தை!
 
 இருவரும் சேர்ந்து இறங்கினர் களத்தில் - ஏரியில்
 இங்கும் அங்கும் மிதந்தன பொருட்கள்....
 இன்னல் தருபவை....கண்டார்....எடுத்தார்! - ஜானட்
 இயற்கையைக் காக்கப் புறப்பட்ட ஜான்சி!
 
 குப்பையை நெகிழியைத் தொட்டியில் போட்டால்
 குறையாது நீர்வளம் உயிர்களும் பிழைக்கும்!
 குன்றா அழகை ஏரியும் அளிக்கும்! }ஜானட்
 குரலை எழுப்பினாள் உணர்வை ஊட்டினாள்!
 
 தளிராம் இவளின் தளரா முயற்சி - வளரும்
 தலைமுறைக்கு ஒளிதரும் நல் வழிகாட்டி!
 அளிப்போம் இவளது தொண்டைப் போற்றி!
 அன்போடு வாழ்த்துப் பாமாலை ஒன்று!
 
 - பூதலூர் முத்து
 
 
 
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/9/w600X390/sm7.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/10/பாராட்டுப்-பாமாலை---3-2877485.html
2877486 வார இதழ்கள் சிறுவர்மணி கல்வி கற்க வா! வா! வா! DIN DIN Saturday, March 10, 2018 12:00 AM +0530 கல்வியைக் கற்றிட வா! வா! - உன்
 கவலைகள் போக்கிட வா! வா!
 நல்லிதழ் தாமரை போலே - இந்த
 நாட்டினில் சிரித்திட வா! வா!
 
 இன்பம் தந்திடும் கல்வி - உன்
 இடரைப் போக்கிடும் கல்வி!
 கன்னல் சுவையினைப் போலே - நம்
 கருத்தைக் கவர்வது கல்வி!
 
 நாளும் வளர்ந்திடும் செல்வம் - இங்கு
 நன்மை தரும் கல்விச் செல்வம்!
 தோளை உயர்த்திச் சொல்வாய் - உன்
 திறமை அறிந்திட வெல்வாய்!
 
 கல்வியைத் தேனென ருசிப்பாய் - வரும்
 காலத்தை வெற்றியால் சுவைப்பாய்!
 மல்லிகை மணம்போல் வீச - இந்த
 மண்ணில் உன்புகழ் பேச!
 
 கல்வியைக் கற்றிட வா! வா! - உன்
 கவலைகள் போக்கிட வா! வா!
 
 -மா.ந.சொக்கலிங்கம்
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/9/w600X390/sm8.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/10/கல்வி-கற்க-வா-வா-வா-2877486.html
2877488 வார இதழ்கள் சிறுவர்மணி முத்திரை பதித்த முன்னோடிகள்: வாலெண்டினா தெரஸ்கோவா DIN DIN Saturday, March 10, 2018 12:00 AM +0530 கம்பளித் துணிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பணி புரிந்து கொண்டிருந்த இளம்பெண், "விளாடிமிரோவ்னா' அன்று மிகவும் உற்சாகமாக இருந்தார். காரணம் சோவியத் விண்வெளிப் பயிற்சியகத்தின் தலைமை செயல் அலுவலர் அவளை விண்வெளிப்பயணத்திற்கெனப் பயிற்சி அளிக்கத் தேர்ந்தெடுத்திருப்பதாகத் தகவல் வந்தது. 
அந்நாளில் ரஷ்யாவில், ஆர்வமுள்ள பல இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் பாராசூட்டில் குதிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் பல பெண்கள் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், துப்பாக்கித் தொழிற்சாலைகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ஆயுதங்களை உற்பத்தி செய்வதில் பயிற்சி, இயக்குவதில் பயிற்சி அளிக்கப்பட்டது. போர் ஏற்படும் காலங்களில் சமாளிக்க வேண்டி இத்தகைய பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 
துணித் தொழிற்சாலையில் வேலை நேரம் போக மீதி நேரங்களில் விளாடிமிரோவ்னா பாராசூட் பயிற்சி பெறுவதிலேயே குறியாய் இருந்தார். முறையான கல்வி அறிவு பெறாத போதும் பலவகை விமானங்கள் பற்றியும் அவை செயல்படும் முறை பற்றியும் அவர் முழுமையாக அறிந்திருந்தார். முதன் முறையாக 1959 ஆம் ஆண்டு மே 21 ஆம் நாள் பாராசூட் மூலமாகத் தரை இறங்கியபோது அவருக்கு வயது 22 மட்டுமே! 
"செர்ஜி கோரல்யோவ்' என்ற விண்வெளிப் பயிற்சி அதிகாரி பெண்களுள் யாராவது ஒருவரை விண்வெளிக்கு அனுப்பலாம் என்ற யோசனையை அந்நாளைய ரஷ்ய அதிபர் குருஷ்சேவ் அவர்களிடம் முன்வைத்தார். குருஷ்சேவ் இதனை ஏற்றுக் கொண்டார். காரணம் வல்லரசான அமெரிக்கா, ரஷ்ய வீரர் "யூரி ககாரின்' 1961 ஆம் ஆண்டு முதன் முதலில் விண்வெளியில் பறந்த தகவலை அறிந்து வியந்து போயிருந்தது. 
அமெரிக்கர்களை மேலும் வியப்பூட்டவும், ரஷ்யாவின் திறமையை உலகம் அறியச் செய்யவும் இந்த வாய்ப்பு பயன்படும் என நினைத்தார். சரி!....பயிற்சி அளிக்க அரசு தயார்! விண்வெளியில் பறக்க எந்தப் பெண் முன்வருவார்?...யாரை அழைப்பது?....அப்படியே முன்வந்தாலும் கடுமையான பயிற்சிகளை ஒரு பெண்ணால் மேற்கொள்ள முடியுமா? எனப் பல்வேறு கேள்விகள் அவர் மனதில் எழுந்த வண்ணம் இருந்தன. இத்தனைக்கும் இந்த முயற்சி படு ரகசியமாக மேற்கொள்ளப்பட்டது!
கோரல் யோவ் பாராசூட்டில் குதித்துப் பயிற்சி பெறும் பெண்களை விண்வெளிப் பயணத்திற்குத் தேர்ந்தெடுக்கலாம் என்று யோசனை கூறினார். 
அதன்படி 5 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுள் ஒருவர்தான் பின்னாளில் "வாலெண்டினா தெரஸ்கோவா' என்று அழைக்கப்பட்ட "விளாமிடிரோவ்னா' ஆவார். 
தெரஸ்கோவா மத்திய ரஷ்யாவில் பிறந்தவர். தந்தை ராணுவத்தில் பீரங்கி ஓட்டுனர். தாயார் தொழிற்சாலை ஒன்றில் பணி புரிந்தார். அவர்கள் பெலாரஸிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள். அவரது தந்தை ஃபின்லாந்திற்கும், ரஷ்யாவிற்கும் இடையே நடைபெற்ற போரில் வீரமரணமடைந்தார். தன் தந்தையின் அஞ்சா நெஞசமும், உடல் வலிமையும் தெரஸ்கோவாவிடம் இயற்கையாகவே காணப்பட்டன. சுட்டிப்பெண்ணாய் இருந்த தெரஸ்கோவா தனது 8 ஆவது வயதில்தான் பள்ளியில் சேர்ந்தார். குடும்ப வறுமையின் காரணமாக 16 ஆவது வயதில் பள்ளிப் படிப்பைக் கை விட்டுத் தொழிற்சாலை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். பாராசூட்டிலிருந்து தரை இறங்கும் பயிற்சியிலும் ஈடுபட்டார். 
பாராசூட்டில் இருந்து குதிப்பது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது! அதிக வேகம், அளவு கடந்த உயரம், இருள் என எது குறித்தும் அவருக்கு அச்சமே இல்லை! 
பாராசூட் பயிற்சி பெறும் ஆண்கள் இரவிலும் பயிற்சி பெறுவர். பெண்களுக்குப் பகலில் மட்டுமே பயிற்சி அளிக்கப்படும். இதை மாற்ற முடிவு செய்த தெரஸ்கோவா இரவில் பயிற்சி செய்யச் சென்றார். அவரது பயிற்சியாளர் முதலில் இதை அனுமதிக்கவில்லை. அவரது தொடர் வற்புறுத்தல் காரணமாக பயிற்சி அளிக்கச் சம்மதித்தார். பாராசூட்டின் மூலம் தரை இறங்கிய தெரஸ்கோவா நேரே "வோல்கா' 
(VOLGA) நதியில் குதித்து விட்டார். எதற்குமே அஞ்சாத அவர் "கடுங்குளிர் என் உயிரைப் பறித்துவிடுமோ என்று அஞ்சினேன்!' என்றார் தன் பயிற்சியாளரிடம்!
1963 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் நாள் ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சியில் ஒகு புதிய வரலாறு படைக்கப்பட்டது. உலகில் உள்ள அத்தனை பெண்களும் பெருமைப்படத்தக்கதொரு நிகழ்வை சாத்தியமாக்கினார். தெரஸ்கோவா! ஆம்! விண்வெளியை வாஸ்டாக்-6 என்ற விண்கலம் மூலம் அடைந்தார்! ரஷ்யா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் அவரது வெற்றியைக் கொண்டாடின! 
வாஸ்டாக் - 6 விண்கலம் ரஷ்யாவின் தெற்கு சைபீரியப் பகுதியில் உள்ள "அட்லாய்' என்ற இடத்தில் தரை இறங்கியது! விண்வெளியில் உடல் எடை குறைவாக இருக்கும் . ஆனால் காற்று மண்டலத்தை அடைந்தவுடன் புவி ஈர்ப்பு விசை காரணமாக உடல் எடை அதிகரிக்கத் தொடங்கும். இதன் காரணமாக பாராசூட்டை கட்டுப்படுத்தவும், இயக்கவும் அவர் மிகச் சிரமப்பட்டார். 
ஆச்சரியம் அடைந்த அமெரிக்காவோ ஒரு பார்வையாளர் நிலையில் கவனித்துக் கொணடிருந்தது. விண்வெளியில் அவர் மூன்று நாட்கள் பயணம் செய்து பூமியை 48 முறை சுற்றி வந்தார். இந்தச் சாதனையைச் செய்தபொழுது அவருக்கு 26 வயது மட்டுமே! அது மட்டுமல்ல! மிக இளம் வயதில் விண்வெளிக்குச் சென்று வந்த வீராங்கனை என்ற பெருமை கிடைத்தது!
அவரை கெளரவிக்க நினைத்த ரஷ்ய அரசு, "தங்களுக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டது. பின்லாந்து போரில் தன் தந்தை இறந்த இடத்தில் ஒரு நினைவுச் சின்னம் எழுப்ப விரும்புவதாகக் கூறினார். ஃபின்லாந்து மற்றும் ரஷ்ய எல்லையில் "லெமட்டி' (LEMETTI) என்ற இடத்தில் அவரது நினைவிடத்தை அமைத்தது ரஷ்ய அரசு!
பின்னாளில் விண்வெளி வீரர்களுக்கும் பயிற்சி அளிக்கத் தேவையான கல்வித் தகுதியை அவர் பெற வேண்டியிருந்தது. ஆகவே விண்வெளிக்குச் சென்று வந்த பிறகே தன் உயர்கல்வியத் தொடர்ந்தார். விண்வெளிப் பொறியியல் வல்லுனர் (COSMONAUT ENGINEER) பட்டப் படிப்பை முதல் வகுப்பில் தேறினார். 1996 ஆம் ஆண்டு வரை ரஷ்ய விண்வெளிப் பயிற்சியகத்தில் பயிற்றுனராகப் பணியாற்றினார். 1997 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். 
1966 முதல் 1974 வரை ரஷ்ய அரசியலில் முக்கிய பங்காற்றினார். ரஷ்ய அரசால் "உலக அமைதிக் கழகத்தின்' (WORLD PEACE COUNCIL) உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 
"ரஷ்யக் கதாநாயகர்' (HERO OF THE UNION) என்ற பெருமை மிகு உயரிய விருது இவருக்கு அளிக்கப்பட்டது. 
தெரஸ்கோவா விண்வெளியில் பயணித்த 50 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்யாவின் மிக உயரிய விருதாகிய "ஆர்டர் ஆஃப் அலெக்ஸாண்டர் நெவ்ஸ்கி' (ORDER OF ALEXANDER NEVSKY) என்ற விருதை வழங்கி கெளரவித்தார்.
தொழில் நுட்ப வசதிகள் ஏதுமற்ற அந்தக் காலத்திலேயே பெண்களால் சாதிக்க முடியும் என்று காட்டிய இந்த சாதனையாளருக்குத் தலை வணங்குவோம்!

தொகுப்பு: 
லக்ஷ்மி பாலசுப்ரமணியன், கடுவெளி.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/9/w600X390/sm9.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/10/முத்திரை-பதித்த-முன்னோடிகள்-வாலெண்டினா-தெரஸ்கோவா-2877488.html
2877489 வார இதழ்கள் சிறுவர்மணி எல்லோரும் ஓர் நிறை! DIN DIN Saturday, March 10, 2018 12:00 AM +0530 அரங்கம்
 காட்சி - 1
 இடம்- வீடுகளுக்கு நடுவிலான
 காலியிடப் பொட்டல் மைதானம்
 மாந்தர் - சீனு, ராமு, விஷ்ணு, கிட்டு, நந்து,
 சுப்பு மற்றும் சற்றுத் தள்ளி பக்கத்துக்
 குடிசைப் பகுதிச் சிறுவர்கள்.
 
 சீனு: டேய்! நந்து! ஒண்ணு செய்வோமா? நாம ஆறு பேர்தான் இருக்கோம்! அந்தப் பசங்க நாலு பேரைச் சேர்த்துக்கிடுவோம்! பத்தாச்சு! அஞ்சு அஞ்சா ரெண்டு டீம் ஃபார்ம் பண்ணி விளையாடுவோம். கூப்பிடட்டுமா? (கையிலிருந்த கிரிக்கெட் மட்டையை வீசியவாறே) டேய் சண்முகம்! பாண்டி! வாங்க விளையாடுவோம்!
 நந்து : வேண்டாம்! கூப்பிடாதே! அவங்களோட சேர்றதுன்னா நான் ஆட்டத்துக்கு வரல! பந்தைத் தூக்கிப் போட்டுப் பிடித்தபடியே நந்து முகத்தைச் சுளித்தான்.
 ராமு: ஏண்டா? அவங்களும் நம்மள மாதிரிதாண்டா! சண்முகம் சூப்பரா விளையாடுவான்!அவன் ஸ்கூல்ல அவன்தான் டீம் லீடர்! பாண்டி பெஸ்ட் பெüலராக்கும்!
 விஷ்ணு: நாம விளையாடலாம்னு சொல்லிட்டுதானே வந்தோம்! இப்போ அவங்களையும் எதுக்குக் கூப்பிடறே? அந்தப் பசங்களோடல்லாம் சேர்ந்தா அம்மா திட்டுவாங்க! நா மாட்டேன்!
 கிட்டு: எதுக்காகத் திட்டுறாங்க? அவங்களும் நம்மள மாதிரிப் படிக்கிற பசங்கதானே? நாம பிரைவேட் ஸ்கூல்! அவுங்க கவர்ன்மென்ட் ஸ்கூல்!அதுதானே வித்தியாசம்?... நல்ல ப்ரென்ட்ஸ்டா!
 சுப்பு: உனக்கு வேணும்னா அப்படி!...எங்களுக்கு வேணாம்! அவுங்களோடெல்லாம் பழகக்கூடாதுன்னு எங்கம்மாவும் சொல்லியிருக்காங்க!
 சீனு: அதான் ஏன்னு சொல்லு? வெறுமே சேர்ந்து விளையாடப் போறோம்! வீட்டுக்குப் போகப் போறோம் அது ஒரு தப்பா? என்னடா உளர்றீங்க?
 நந்து: வேண்டாம். எனக்குப் பிடிக்கலை..நா வீட்டுக்குப் போறேன்! இந்தா பந்தைப் பிடி..! - சீனுவை நோக்கி விட்டெறிந்தான். சக்கென்று பிடித்தான் சீனு. பந்தின் வேகம் நந்துவின் கோபத்தை உணர்த்தியது.
 சீனு: ஏண்டா, அம்மா அப்டிச் சொன்னாங்கன்னா எதுக்குன்னு கேட்க மாட்டீங்களா? வெறுமே தலையாட்டுவீங்களா? கையை உதறியவாறே கேட்டான்.
 ராமு: அவங்களும் நல்ல பசங்கதானே!...சண்முகத்தோட
 அப்பாதான் எனக்கு சைக்கிள் கத்துக் கொடுத்தாரு!...
 "நானும் ஓட்டுறண்ணே'....ன்னு கேட்டு சண்முகமும் என்னோட சைக்கிள் விட்டான்! அவன்தான் நல்லா ஓட்டினான்...என்னடா தப்பு அதுல? வீணா எதாச்சும் சொல்லாதீங்கடா!...
 விஷ்ணு: எனக்கெல்லாம் எங்கப்பாதான் கத்துக் கொடுப்பாரு! நா வேறே யார்ட்டயும் பழக மாட்டேன்! அதெல்லாம் தப்பு!
 சீனு: என்ன தப்பு?... உளறாதடா....எல்லார் கூடவும் அன்பாப் பழகணும்னு எங்கப்பா சொல்லியிருக்காரு...அது ஒண்ணுதான் எனக்குத் தெரியும்!.....
 நந்து: உனக்கு இஷ்டம்னா நீ பழகு!...யாரு வேண்டாம்னாங்க!.... சரிடா!... அவங்களச் சேர்த்துக்கிட்டு அவன் விளையாடட்டும்!.... நாம போவோம்!.... இந்தா!....பிடி!... இந்த பேட்டையும், பந்தையும்!
 
 (திரும்பிப் பார்க்காமல் கிளம்பினர் நால்வரும். சீனுவோடு ராமு மட்டும் நின்று கொண்டிருந்தான். கிட்டுவும் போனது அவனுக்கும் இஷ்டமில்லையோ என்று தோன்றியது. )
 
 காட்சி - 2
 இடம் - வீடு
 மாந்தர் - சீனு,ராமநாதன் மற்றும் லட்சுமி.
 
 லட்சுமி: ஏண்டா அதுக்குள்ளேயும் வந்திட்டே? விளையாடலியா?
 சீனு: இல்லம்மா!....டீம் சேரலை!.... எல்லாரும் கிளம்பிப் போயிட்டாங்க!....
 ராமநாதன்: அப்டீன்னா?..... உன் ஃப்ரென்ட்ஸ் வரல்லியா?....
 சீனு: வந்தாங்கப்பா! பத்துப் பேராவது இருந்தாத்தானே ரெண்டாப் பிரிஞ்சிக்கலாம்..... மீதி நாலு பேருக்கு அந்தக் குடிசைப் பசங்களைக் கூப்பிடலாம்னு சொன்னேன்! யாருமே ஒத்துக்கலை...அவங்களச் சேர்த்திட்டா, விளையாட மாட்டாங்களாம்! பிடிக்கலையாம்!
 ராமநாதன்: அதத்தான் நான் அப்பவே சொன்னேன்... உன் ஃப்ரென்ட்ஸ் சரியில்லைன்னு!... உன்னையும் கவர்ன்மென்ட் ஸ்கூல்லயே சேர்த்திருக்கணும்!....தப்புப் பண்ணிட்டேன்…நான் கவர்ன்மென்ட் சர்வென்ட். உன்னை அங்க சேர்க்கிறதுதானே நியாயம்!...திமிர் பிடிச்ச பசங்க!.... கோபமாய்த் திட்டினார்.
 லட்சுமி: உடனே நீங்க இதைப் பிடிச்சிக்கிட்டீங்களா? அவங்க வீட்டுல அப்டிச் சொல்லியிருப்பாங்க....சேர்ந்தா கெட்டுப் போயிடுவாங்களோன்னு பயமாயிருக்கும்....
 ராமநாதன்: நீயும் ஒத்துப் பாடாதே!....இந்தப் பசங்களோட சேர்ந்தாத்தான் திமிரும், கர்வமும் வளரும்!... கூடி விளையாடு பாப்பான்னு பாரதியார் சொல்லியிருக்கார்!...தெரியுமில்ல.. ஒரு குழந்தையை வையாதேன்னும் பாடியிருக்கார்!...வையறதுன்னா ஏளனமாப் பேசறது மட்டுமில்ல....இப்பிடி மனசுல வேற்றுமையை உண்டாக்குறதும்தான்!....எல்லாரும் சமம்ங்கிற உணர்வை குழந்தைகளுக்கு ஊட்டணும்!...சிறு வயசுலயே பிரிவினையை, பகைமையை வளர்க்கக் கூடாது!....அப்புறம் சமத்துவம், சகோதரத்துவம்ங்கிறதெல்லாம் வெறும் பேச்சாப் போயிடும்! அஞ்சுல விதைக்கிறதுதான் ஐம்பதுலயும் நிக்கும்! அன்புதான் பிரதானம் இந்த உலகத்துல! அன்புக்கு வசப்படாதது எதுவுமில்லே!
 லட்சுமி: இதுக்கு ஏன் நீங்க இவ்வளவு டென்ஷனாகுறீங்க? விடுங்க! பசங்க இன்னிக்கு முறிச்சிப்பாங்க, நாளைக்கு சேர்ந்துக்குவாங்க....
 ராமநாதன்: எல்லாரோடயும் கலந்துதான் வாழப் பழகணும்!அதிலென்ன ஏற்ற இறக்கம்? நமக்கு அவங்க வேணும்!அவங்களுக்கு நாம வேணும்! ஒற்றுமைதான் முக்கியம்! இந்த உலகம் எல்லோருக்குமானதாக்கும்! பின்னிப் பிணைஞ்சுதான் இருந்தாகணும்!....
 சீனு: கிட்டு கூட நல்ல பையங்கதானேன்னு சொன்னான்!....ஆனா அவனும் அவங்களோட சேர்ந்து புறப்பட்டுட்டான்!...பயந்துட்டான் போலிருக்கு! ராமநாதன்: அதுதான் தப்பு!.... குடிசைங்கள்ல இருக்கிறது கேவலமா?...அவங்கவுங்க வருவாய் வசதிக்கேத்தபடி இருக்காங்க....அங்கேயிருந்தா தப்பானவங்களா? என்ன அபத்தம்? ஏழைகள்னா கேவலமில்லே!.... தெரிஞ்சுதா? அங்கே எத்தனை நல்லாப் படிக்கிற பசங்க இருக்காங்க..தெரியுமா? இந்த நாட்டுல, ஏழையா இருந்து கஷ்டப்பட்டுப் படிச்சு உயர்ந்த நிலைக்கு வந்தவங்கதான் அதிகம்! ஒழுக்கம் முக்கியம்! அது எல்லாருக்கும் பொது! தெரிஞ்சிதா?அவசரத்துக்கு அவுங்கதான் ஓடி வந்து உதவுவாங்க!.....மனசுல இரக்கமுள்ளவங்க!...அன்புள்ளவங்க!.....ஒரு ஆபத்துன்னாத்தான் தெரியும் அவுங்க அருமை!
 சீனு: ஏன்ப்பா இவ்வளவு புகழ்ந்து சொல்றே?
 ராமநாதன்: ஏன்னா, வறுமைல அடிபட்டவங்க,....வாழ்க்கைல கஷ்டப்பட்டவங்களுக்குத்தான் அடுத்தவங்க கஷ்டம் புரியும்! உதவணும்ங்கிற மனசு வரும்!....உன்னை ஏன் பஸ்ஸýல ஸ்கூலுக்கு அனுப்புறேன்?.....வண்டில கொண்டு விடத் தெரியாதா? ஸ்கூல் வேன்ல அனுப்ப மாட்டேனா?.... கூடாதுன்னுட்டுதான்!....பஸ்ல போய் வந்தாத்தான் எல்லாரோடையும் நீ சுதந்திரமாப் பழகுவே!....பேசுவே!....அவுங்க கஷ்ட நஷ்டம் புரியும்!....நம்ம வீட்டோட நிலைமையும் தெரிய வரும்!... அனுபவம் கிடைக்கும்!....பொறுப்புணர்ச்சி வரும்!....தெரிஞ்சிதா? சீனு: எனக்கு எப்பவுமே பஸ்ல ஸ்கூல் போறதுதாம்ப்பா பிடிக்கும். டிரைவர் சாரோட பேசிட்டே போவோம் நாங்கஅவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன்னு நிறைய மனப்பாடமாச் சொல்லுவாருப்பா!...சாமி பாட்டெல்லாம் பாடுவாரு!...
 ராமநாதன்: பாடிட்டே ஓட்டி எங்கயானும் மோதிடப் போறாரு! வண்டி ஓட்டுற போது அவர் கிட்டே பேச்சுக் கொடுக்கக் கூடாது!...தெரிஞ்சிதா? சீனு: ஓ.கே.ப்பா!..அவர் பதினஞ்சு வயசுலயே கார் ஓட்டக் கத்துக்கிட்டாராம்!.... அவர் பையன் பேரு ரகுநந்தன்!... ப்ளஸ் டூவுல ஸ்கூல் ஃபஸ்டாம்..!
 ராமநாதன்: அதாண்டா கண்ணு!...அக்கறையிருந்தா எல்லாரும் நல்லாப் படிக்கலாம். இதுல வீட்டுக் கஷ்டம் உணர்ந்த பையன்களெல்லாம் நிச்சயம் நல்லாப் படிப்பாங்க!....எந்த ஸ்கூலானா என்ன? கடவுள் எல்லாரையும் அறிவுல ஒண்ணாத்தான் படைச்சிருக்கார்!....ஏற்ற இரக்கம் மனுசங்க மனசுலதான்!....அதுனால யாரையும் ஏளனமா நினைக்கக் கூடாது!...எல்லாரும் சமம்!....எல்லாரும் நல்லவங்கதான் தெரிஞ்சிதா? சீனு: சரிப்பா!...கிட்டு கூடச் சொன்னான்!...அவங்கப்பா அங்கதான் அவனை அடுத்த வருஷம் சேர்க்கப் போறாராம்! நானும் அவனோட ஸ்கூல் மாறிக்கிறேம்ப்பா!....
 ராமநாதன்: கண்டிப்பா!...அப்பா கவர்ன்மென்ட் ஸ்கூல்லதான் படிச்சேன். ...உங்க அம்மாவும் அப்டித்தான்!....நாங்க நல்ல வேலைக்குப் போகலியா? நல்லாப் படிக்கணும்!....நல்ல பிள்ளையா வளரணும்!.... அது ஒண்ணுதான் முக்கியம்!....
 சீனு: ஓ.கே.ப்பா! அம்மா,எனக்குப் பசிக்குது!....நாம மூணு பேரும் சேர்ந்து சாப்பிடுவோம்மா!.....தட்டு அலம்பி வைக்கட்டுமா?
 லட்சுமி: சரிடா கண்ணு,....போய் கை கால் கழுவிட்டு வா...இன்னைக்கு உனக்குப் பிடிச்ச கொழாப்புட்டும் மோர்க் குழம்பும் பண்ணியிருக்கேன்! ஓடியா! ஓடியா!
 திரை
 உஷா தீபன்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/9/w600X390/sm11.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/10/எல்லோரும்-ஓர்-நிறை-2877489.html
2877492 வார இதழ்கள் சிறுவர்மணி கடி   DIN DIN Saturday, March 10, 2018 12:00 AM +0530 * "எங்க அம்மா நிறைய்ய பிளாக் மணி வெச்சிருக்காங்க!''
"என்னடா சொல்றே....பயமாயிருக்காதா'' 
"அங்கே பார்! கையிலே எவ்வளவு பிளாக் மணி வெச்சுக்கிட்டு நூல்லே கோர்க்கிறாங்க...''
எம்.அசோக் ராஜா, அசூர். 

* "நீரில் வாழும் நான்கு உயிரினம் சொல்லு!''
"மீன்குட்டி, அதோட அம்மா, அப்பா, தம்பி, தங்கச்சி!''
சு.ஆறுமுகம், கழுகுமலை.

* "எனக்கு மேலே ரெண்டு பல் விழுந்திடிச்சி!''
"பொய் சொல்லாதே....,எல்லோருக்கும் பல் கீழேதானே விழும்?''
எஸ்.சிவஞானம், வாணியம்பாடி.

* "எதுக்கு அவனை பயங்கரமா இப்பிடி திட்டறே?''
"பின்னே?...."அ' க்கு என்ன ஸ்பெல்லிங்னு கேட்கிறான்!...''
அலிமா, 
63, கல்வத்து நாயகம் தெரு, 
கடையநல்லூர் - 627751 .

* "டேய் சீனு!....ஆவி இருக்குதுங்கறதை நீ நம்பறியா?''
"கண்டிப்பா!....பின்னே?.... இட்லியெல்லாம் எப்படி வேகும்?''
எஸ்.பொருநை பாலு, 
திருநெல்வேலி.

* "நான் தூக்கத்திலே பெனாத்தறேனாம்!.....என் தங்கச்சி சொல்றா!''
"என்னது?....தூக்கத்திலியுமா?''
எம்.ஏ.நிவேதிதா, 
அரவக்குறிச்சிப்பட்டி, 
அசூர், 
திருச்சிராப்பள்ளி - 620015.
வாரம் 2 டி-சர்ட் பரிசு
நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும் பட்டுக்கோட்டை ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும் 
தலா ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/9/w600X390/sm12.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/10/கடி-2877492.html
2877493 வார இதழ்கள் சிறுவர்மணி அங்கிள் ஆன்டெனா DIN DIN Saturday, March 10, 2018 12:00 AM +0530 கேள்வி:
தூங்கும் விஷயத்தில் விலங்குகள் எப்படி? நம்மைப் போல குறட்டை விடும் விலங்குகள் உள்ளனவா?

பதில்:
தூங்குவதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி. நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகள் உடலைக் கதகதப்பாக வைத்துக் கொள்வதற்காகத்தான் அடுப்பங்கரைப் பகுதியில் அடிக்கடி உலா வருகின்றன.
நாம் படுக்கும் இடத்தின் அருகில் சாக்கு ஒன்றைப் போட்டுப் பாருங்கள். அதில் வந்து இவை படுத்துக் கொள்ளும். நமது உடலிலிருந்து வரும் உஷ்ணத்தைக் கிரகித்துக் கொள்வதற்குத்தான் இப்படிச் செய்கின்றன.
குட்டிகள் ஹாயாகத் தூங்கும்போது அவற்றை அரவணைத்தபடி தாய்ப் பூனை அருகேயே படுத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். குட்டிகள் கவலையில்லாமல் தூங்கும். அலர்ட்டாக இருப்பவை தாய்ப் பூனைகளே.
ஆடு, மாடுகள் நான்கு கால்களையும் மடித்து, அதன் மீது தலையைக் கவிழ்த்துக் கொண்டு படுக்கும். பாம்புகள் எல்லாம் ஸ்பிரிங் போல உடலைச் சுற்றிக்கொண்டு உறங்கும். ஐரோப்பாவில், சில வகைக் கிளிகள், வவ்வால் போலத் தலைகீழாகத் தொங்கிக் கொண்டே தூங்குகின்றன.
வாத்து மற்றும் பல பறவைகள் நின்றபடியே தூங்கும். ஆஸ்திரேலிய போலார் கரடிகள் மரத்தைக் கட்டிப்பிடித்தபடி தூங்கும். எறும்புகள் பாதுகாப்பான இடத்தில் மணற்பரப்பை திண்டு போல ஆக்கிக் கொண்டு, அதில் தலையைப் பதித்தபடி தூங்கும்.
இவற்றில் கீரி போல இருக்கும் ராக்கூன் என்ற விலங்கு தூங்கும்போது கர்புர் என்று பலமாகக் குறட்டை விட்டபடி தூங்கும்.
இப்படிப் பல வகைகளில் உறங்கும் விலங்குகளை ஆராய்ந்தவர்கள், அவைகளுக்குக் கனவுகள் வருவதற்குக்கூட சாத்தியங்கள் உள்ளன என்கிறார்கள்.
அடுத்த வாரக் கேள்வி
சதாகாலமும் பனி சூழ்ந்த இடத்திலேயே வசிக்கும் துருவக்கரடிகளுக்குக் குளிராதா? கடுங்குளிரில் அவை என்ன சாப்பிடும்?
பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/9/w600X390/sm13.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/10/அங்கிள்-ஆன்டெனா-2877493.html
2877494 வார இதழ்கள் சிறுவர்மணி அணிலும் நாயும்! DIN DIN Saturday, March 10, 2018 12:00 AM +0530 ஆற்றங்கரையின் ஓரத்திலிருந்த வீட்டில் ஒரு நாய் இருந்தது. ஆற்றின் கரையோரம் நாவல், அத்தி, புங்கை, கொய்யா, போன்ற பல மரங்கள் இருந்தன. அவற்றில் அணில் ஒன்று துறுதுறுவென்று விளையாடிக்கொண்டிருந்தது! நாயும் தோட்டத்தில் விளையாடும். சில நாட்களில் நாயும், அணிலும் நண்பர்களாகிவிட்டன.
அணில் இங்கும்மங்கும் தரையிலும், மரத்தின் மேலும் ஏறி பழங்களை கடித்துச் சுவைக்கும். நாய் அதை விளையாட்டாகத் துரத்தும்! சடால் என்று மரத்தின் மீது ஏறிவிடும்! நாய் திகைக்கும்! நாயால் மரம் ஏற முடியாது. ஒவ்வொரு முறையும் இந்தமாதிரி நடக்கும். நாய் அடிக்கடி விளையாட்டில் தோற்கும்!
ஒரு நாள் நாய்க்கு மிகவும் சோகமாகிவிட்டது! ச்சே! இந்த அணில் ஒவ்வொரு முறையும் நம்மை ஜெயித்து விடுகிறது. நமக்கு எப்போதும் தோல்விதான்! என்று சொல்லிக்கொண்டது. தான் எதற்கும் பிரயோஜனம் இல்லை என்று வருத்தப்பட்டது.
திடீரென்று ஒரு நாள் பலத்த மழை! காற்றும் பலமாக வீசிக்கொண்டிருந்தது. அணில் ஒரு மரக்கிளையில் உடல் நனைந்து நடுங்கிக் கொண்டிருந்தது! சட்டென்று தன் வளைக்குத் திரும்பிவிட எண்ணி கீழே இருந்த கிளைக்குத் தாவியது! பலத்த காற்றால் அசைந்த அந்தக் கிளையில் சரியாக அதனால் குதிக்க முடியவில்லை. அது நிலை தடுமாறி ஆற்றில் விழுந்தது! ஓடிக்கொண்டிருந்த ஆற்றில் அதனால் நீந்த முடியவில்லை! தடுமாறியது.
அணில் தவிப்பை நாய் கவனித்து விட்டது! சடேரென்று ஆற்றில் குதித்தது நாய்! விரைந்து தவித்துக் கொண்டிருந்த அணிலின் அருகே சென்றது! அணில் உடனே நாயின் முதுகில் ஏறிக்கொண்டது! அணிலை முதுகில் ஏற்றிக் கொண்ட நாய் வேகமாக நீந்திக் கரையை அடைந்தது.
தன் உயிரைக் காப்பாற்றிய நண்பனுக்கு நன்றி சொன்னது அணில்!
அதன் பிறகு நண்பர்கள் இருவரும் நன்றாக விளையாடினார்கள்! இப்போதெல்லாம் நாய் தன் தோல்விக்காக வருத்தபடுவதில்லை! தன் நண்பனின் துறுதுறுப்பைக் கண்டு அது ரசிக்கிறது!
-ஆ.குமார்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/9/w600X390/sm14.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/10/அணிலும்-நாயும்-2877494.html
2877491 வார இதழ்கள் சிறுவர்மணி விடுகதைகள்   Friday, March 9, 2018 10:49 AM +0530 1. விழுந்தால் படுக்காது, எழுந்தால் நிற்காது...
2. மாவில் பழுத்த பழம், மக்கள் யாவரும் விரும்பும் பழம்... "ழ'தான் வித்தியாசம்...
3. முதுகு மேல் கூடு... முத்தம்மாளுக்கு அது வீடு...
4. மட்டையுண்டு,கட்டையில்லை.பூவுண்டு,மண மில்லை...
5. பெயருக்குத்தான் புலி, உருவுமில்லை, செயலுமில்லை..
6. ஏழு மலைக்கு அந்தப் பக்கம், எருமைக்கடா கத்துது...
7. விடிய விடிய பூந்தோட்டம், விடிந்து பார்த்தால் வெறுந் தோட்டம்...
8. அத்துவானக் காட்டுக்குள்ளே குடை பிடிக்கும் அய்யா...
விடைகள்:
1. தஞ்சாவூர் பொம்மை
2. அப்பளம்
3. நத்தை
4. வாழை
5. அம்புலி
6. இடியோசை
7. நட்சத்திரங்கள்
8. காளான்
- ரொசிட்டா

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/9/w600X390/sm15.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/10/விடுகதைகள்-2877491.html
2869541 வார இதழ்கள் சிறுவர்மணி கருவூலம்: அந்தமான் நிகோபார் தீவுகள் ஆர்.வி. பதி, கல்பாக்கம் Tuesday, March 6, 2018 11:27 AM +0530 அந்தமான் நிகோபார் தீவுகள் இந்தியாவைச் சேர்ந்த ஏழு யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். சென்னையிலிருந்து 1,450 கிலோமீட்டர் தொலையில் வங்காள விரிகுடா கடலில் அமைந்துள்ளது. மொத்தம் 572 தீவுகளை தன்னகத்தே கொண்டு திகழ்கிறது. இதில் அந்தமானில் 550 தீவுகள் அமைந்துள்ளன. இதில் 28 தீவுகளில் மனிதர்கள் வாழ்கிறார்கள். நிகோபாரில் 22 தீவுகள் அமைந்துள்ளன. இதில் 10 தீவுகளில் மனிதர்கள் வாழ்கிறார்கள். 

அந்தமான் என்ற வார்த்தையானது மலாய் மொழியில் அனுமனைக் குறிக்கும் வார்த்தையாகும். நிகோபார் என்றால் நிர்வாண மக்கள் வாழும் இடம் (The Land of Naked People) என்ற பொருளைக் குறிக்கும். அந்தமான் தீவுகளின் தலைநகரம் போர்ட் பிளேயர். நிகோபார் தீவுகளின் தலைநகரம் கார் நிகோபார் தீவு. 

அந்தமானின் மொத்த நிலப்பரப்பு 8,249 சதுரகிலோமீட்டராகும். அந்தமானில் ஆண்களும் பெண்களுமாக மொத்தம் 3,79,944 மக்கள் வசிக்கிறார்கள். அந்தமானில் வங்காளம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன. இங்கு ஒரு மக்களவைத் தொகுதி உள்ளது. துணைநிலை ஆளுநர் அந்தமான் தீவுகளை ஆட்சி செய்கிறார்.
அந்தமான் தீவுகளில் ரயில் போக்குவரத்து ஏதும் இல்லை. 

ஒவ்வொரு வருடமும் அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதம் ஆகியவை சிறந்த சீசனாகும். இந்த மாதங்களில் அந்தமானைச் சுற்றிப் பார்க்கச் செல்லலாம். மழைக்காலமானது ஜூன் முதல் செப்டம்பர் வரை இருக்கும். மழைக்காலத்தில் அதிக அளவு மழை பொழியும். அந்தமானில் மழைக்காலத்தில் 200 முதல் 300 மில்லிமீட்டர் வரை மழை பொழியும்! இத்தகைய சமயங்களில் கடல் அலைகளின் சீற்றமும் அதிகமாக இருக்கும்! 

அந்தமான் தீவுகள் 22.மார்ச்.1942 முதல் 07.அக்டோபர்.1945 வரை ஜப்பானியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

மின் உற்பத்தி

தெற்கு அந்தமான் தீவில் 15 மெகாவாட் திறனுள்ள டீசல் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தியின் மூலமாகவும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த இரண்டு முறைகளில் மட்டுமே பிரதானமாக மின்உற்பத்தி நடைபெறுகிறது.

செல்லுலர் ஜெயில்

இந்திய சுதந்திர போராட்ட வீரர்களை கடுமையாக தண்டிக்க அந்தமானில் உருவாக்கப்பட்ட இடமே இந்த செல்லுலர் ஜெயில் ஆகும். இந்த செல்லுலர் ஜெயில் 1896 ஆம் ஆண்டில் கட்டத் தொடங்கி 1906 ஆம் ஆண்டில் அதாவது சுமார் பத்து ஆண்டுகளில் முற்று பெற்றது. சுதந்திரத்திற்காக போராடும் வீரர்களை தனிமைச் சிறையில் அடைத்து வைத்து மிகக் கடுமையாக வேலை வாங்கி அவ்வாறு வேலை செய்ய இயலாதவர்களை தூக்கில் போட்டு தண்டித்த இடம். 
இந்த ஜெயிலில் தான் இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய வீர சாவர்க்கர் பல வருடங்கள் தனிமைச் சிறையில் வாடினார். நுழைவு வாயில் ஒட்டி அமைந்த வடகிழக்கு மூலைப் பகுதியில் மூன்றாவது மாடியின் கடைசி அறையில் அவர் இத்துன்பத்தை அனுபவித்துள்ளார். தற்போது இந்த அறையில் அவருடைய புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஜெயிலில் சுதந்திர ஜோதி ஒரு மண்டபத்தில் அமைக்கபட்டு தொடர்ந்து சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. 
மாலைநேரத்தில் இந்த ஜெயிலில் சவுண்ட் அண்டு லைட் ஷோ ஒன்றை நடத்துகிறார்கள். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இந்த காட்சி அமைக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் இந்திய சுதந்திரத்திற்காக போராடிய நம் தியாகிகளின் வாழ்க்கையை உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்துகிறார்கள். 

கார்பியன் கோவ் கடற்கரை (Corbyn's Cove BeachCorbyn's Cove Beach) 

போர்ட்பிளேயர் தலைநகரில் சுற்றுலா பயணிகள் ரசித்து மகிழ ஒரு அழகிய கடற்கரை இது. இந்த கடற்கரை பிறை வடிவத்தில் அமைந்துள்ளதும் சிறப்பு. மேலும் இங்கே மோட்டார் படகுகளும் ஜெட்ஸ்கி (ஒங்ற் நந்ண்) எனும் ஸ்பீட் போட்டுகள் இயக்கப்படுகின்றன. இந்த பீச்சிலிருந்து பார்த்தால் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் ஒரு சிறிய தீவு காட்சியளிக்கிறது. இந்த தீவிற்கு வைப்பர் ஐலண்ட் என்று பெயர். போர்ட்பிளேயரிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் இந்த கடற்கரை அமைந்துள்ளது. இவ்வழியில் இரண்டாம் உலகப்போரின் போது எதிரிகளை சுட்டுக் கொல்லுவதற்காக வழியெங்கும் ஜப்பானியர்கள் அமைத்துள்ள பங்கர்களையும் (Japanese Bunkers) காணலாம். 

ஹேவ்லாக் தீவு (Havelock Island)

அந்தமான் தீவுகளில் மிக முக்கியமான சுற்றுலாத் தீவாக ஹேவ்லாக் தீவு கருதப்படுகிறது. போர்ட்பிளேயரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலையில் அமைந்துள்ளது. கடலில் இரண்டு மணி நேரம் பயணிக்க வேண்டும். ஹேவ்லாக் தீவில் அதிக அளவில் மக்கள் வசிக்கிறார்கள். பவழப்பாறைகள் அதிகமுள்ள கடல்பகுதியாகும். இங்கே தங்குவதற்கு சிறப்பான விடுதிகள் அமைந்துள்ளன. ஹேவ்லாக் தீவில் சுற்றுலா பயணிகள் ரசிப்பதற்கேற்ப ராதாநகர் கடற்கரை, எலிபெண்ட் கடற்கரை, விஜயநகர் கடற்கரை மற்றும் காலாபத்தர் கடற்கரை என நான்கு முக்கியமான கடற்கரைகள் அமைந்துள்ளன. ராதாநகர் கடற்கரை ஆசிய கண்டத்தில் உள்ள கடற்கரைகளில் மிகவும் சுத்தமான அழகான ஒரு கடற்கரை என்று டைம் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அழகிய கடற்கரையாகும்.

பாரடாங் தீவு

போர்ட்பிளேயரிலிருந்து சுமார் 125 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பாரடாங் தீவில் இரண்டு முக்கியமான சுற்றுலா மையங்கள் உள்ளன. ஒன்று சுண்ணாம்புப்பாறை குகை (Limestone Cave). மற்றொன்று மண் எரிமலை (Mud Volcano). மேலும் போர்ட்பிளேயரிலிருந்து இந்த தீவிற்குச் செல்லும் வழியில் ஒரு காட்டுப் பகுதியில் "ஜாரவா' பழங்குடியினர் வசிக்கிறார்கள். 

ஜராவா பழங்குடியினர் (Jarawas)

அந்தமான் தீவைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் ஜராவாக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தெற்கு அந்தமான் மற்றும் மத்திய அந்தமான் காடுகளில் வசிக்கிறார்கள். தற்போது சுமார் 250 முதல் 400 பழங்குடிகள் மட்டுமே வசிப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் தங்களுக்கென பிரத்யோகமாக ஒரு மொழியில் பேசிக்கொள்ளுகிறார்கள். இவர்கள் தங்களைத் தவிர மற்ற மனிதர்களோடு பேசுவதில்லை. காட்டுப் பன்றிகளை வேட்டையாடி முக்கிய உணவாகக் உட்கொள்ளுகிறார்கள். மேலும் ஆமைகள் மற்றும் அவற்றின் முட்டைகள், நண்டுகள், பழங்கள் மற்றும் தேன் இவற்றையே உட்கொள்ளுகிறார்கள். மேலும் ஆற்றில் மீன்களை வில் அம்பு கொண்டு பிடித்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். பெண் ஜராவாக்கள் கூடைகளின் உதவியோடு மீன்களைப் பிடிக்கிறார்கள். இவர்கள் மிகச்சிறிய குடிசைகளில் வசிக்கிறார்கள். 

சுண்ணாம்புக் குகை (Lime Stone Cave)

பாராடங் தீவிலிருந்து மோட்டார் படகு மூலம் சுமார் அரைமணி நேரம் பயணித்து சுண்ணாம்புக் குகைப் பகுதியை அடையலாம். பல மில்லியன் வருடங்களுக்கு முன்னால் உருவானதாக கருதப்படும் இந்த சுண்ணாம்புப்பாறைக் குகைகள் கடல்வாழ் உயிரினங்கள், பவழப்பாறைகள் மற்றும் பல இயற்கைப் பொருட்களால் உருவானவை. இத்தகைய பாறைகள் எளிதில் கரையக்கூடியவை என்று கூறுகிறார்கள். இந்த குகையில் மேலே உள்ள ஓட்டைகள் மூலமை சூரிய ஒளியானது உள்ளே நுழைகிறது. மழைநீர் மற்றும் வேறு பல காரணங்களினால் இவை கரைந்து பல்வேறு விநோதமான வடிவங்களில் காட்சியளிக்கின்றன. சுமார் ஒரு கிலோமீட்டர் நீளமுள்ளது இந்த குகை. 

மண்எரிமலை (Mud Volcano)

பாரடாங் தீவின் படகுத்துறையிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலையில் இந்த எரிமலை அமைந்துள்ளது. 1983 ஆம் ஆண்டில் ஒருமூறை தன் சீற்றத்தைக் காண்பித்தது. பின்னர் 18 பிப்ரவரி 2003 அன்று மீண்டும் சீற்றத்தைக் காண்பித்தது. 

மாங்குரோவ் காடுகள் (Mangrove Forest)

தரைக்கு மேல் வேர்கள் அடர்ந்திருக்கும் இவ்வகைத் தாவரங்கள்அடர்ந்த இக்காடுகள் கடல் அரிப்பைத் தடுப்பதில் முக்கியமானவை. மேலும் இவை பவளப்பாறைகள், மீன்கள், இறால்கள், நண்டுகள் போன்றவை நன்கு வளர துணை நிற்கின்றன.

ராஸ் மற்றும் நார்த்பே தீவுகள்

அந்தமானுக்கு மிக அருகில் இரண்டு தீவுகள் உள்ளன. முதலாவது ராஸ் தீவு. இது முழுக்க முழுக்க கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சிறிய தீவு. இதற்கு அருகில் உள்ள ஒரு தீவு நார்த்பே தீவு. இங்குதான் பவழப்பாறைகள் மிகுதியாக உள்ளன.

ராஸ் தீவு

போர்ட் பிளேயரின் ஒரு பகுதிக்கு இந்த தீவு ஒரு இயற்கைப் பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறது. 

பிரிட்டிஷ் கடல் சர்வேயர் சர் டேனியல் ராஸ் என்பவரின் பெயர் இத்தீவிற்கு சூட்டப்பட்டுள்ளது. இத்தீவு பிரிட்டிஷாரின் தலைமையகமாக செயல்பட்டுள்ளது. இத்தீவில் அச்சகம், மருத்துவமனை, தபால் நிலையம், டென்னிஸ் கோர்ட், தண்ணீர் சுத்திகரிக்கும் நிலையம், பேக்கரி, நூலகம், பொழுதுபோக்கு கிளப் என அனைத்து வசதிகளும் உருவாக்கப்பட்டன. இத்தீவில் பிரிட்டிஷ் அதிகாரிகளாஸ் அழகிய தோட்டங்கள் புல்வெளிகள் அமைக்கப்பட்டன. பல நவீன வசதிகள் நிறைந்த இந்த தீவு "கிழக்கு பாரீஸ்' என்று அழைக்கப்பட்டது. 
26 ஜூன் 1941 அன்று ஒரு மிக கடுமையான பூகம்பம் ஏற்பட்டு இத்தீவு பிளவுபட்டது. இதனால் இத்தீவில் இருந்த பல கட்டங்கள் சேதமடைந்தன. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் நாட்டின் ஆதிக்கம் இங்கே அதிகரித்தது. 23 மார்ச் 1942 அன்று ஜப்பான் நாட்டுப் படையினர் போர்ட்பிளேயரில் வந்து இறங்கினார்கள். ஜப்பான் நாட்டுப் படையினர் பல இடங்களில் பங்கர்களை அமைத்து காவல் காத்தார்கள். ஜப்பானியரின் ஆதிக்கத்தினால் 1942 }இல் பிரிட்டிஷார் இத்தீவிலிருந்து வெளியேறினார்கள். நாளடைவில் போர்ட் பிளேயர் ஜப்பானின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. பின்னர் இந்த ராஸ் தீவு 18 ஏப்ரல் 1979 அன்று இந்திய கடற்படையின் கட்டுப்பாட்டில் வந்தது. இருபது ரூபாய் நோட்டின் பின்புறம் காணப்படும் கலங்கரை விளக்கம் இந்த தீவில் தான் உள்ளது என்பது இத்தீவின் சிறப்பம்சமாகும். 

நார்த்பே தீவு

ராஸ் நார்த்பே தீவும் அளவில் மிகச்சிறியது. இந்த பகுதியில் உள்ள கடற்கரை முழுவதும் பவளப்பாறைகளால் நிறைந்தது. இந்த பகுதியில் ஸ்கூபா டைவிங், சீ வாக்கிங், கிளாஸ் போட் என பல ஆச்சரியமான விஷயங்கள் உள்ளன. ஸ்கூபா டைவிங் என்பது பிரத்யோக உடைகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டரை அணிந்து கடலுக்குள் சென்று பவளப்பாறைகளை நேரிடையாக கண்டு மகிழலாம். கிளாஸ் போட் என்பது பத்து பேர்கள் அமரக்கூடிய ஒரு படகின் தரைப்பகுதியில் சக்தி வாய்ந்த உருப்பெருக்கியை பொருத்தியுள்ளார்கள். படகில் அமர்ந்து கொண்ட பின்னர் படகுக்காரர் படகை கடலில் இயக்குகிறார். சக்தி வாய்ந்த உருப்பெருக்கியானது சுமார் முப்பது அடி ஆழத்தில் உள்ள பவளப்பாறைகளை நம் அருகில் கொண்டு வந்தது காட்டுகிறது. சுமார் அரை மணிநேரம் நாம் படகில் பயணித்தபடியே இப்பவளப் பாறைகளையும் கடல் பாம்புகளையும் பலவிதமான வண்ண மீன்களையும் கண்டு ரசிக்கலாம். 

சீ வாக் (Sea Walk)

ஏழு முதல் எழுபது வயது வரை உள்ளவர்கள் இந்த சீ வாக்கை மேற்கொண்டு மகிழ்ச்சி அடையலாம். இதற்கென பிரத்யோகமாக கடற்கரையில் ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு உங்களை அழைத்துச் சென்று தலையில் ஹெல்மெட் போன்ற ஒரு கருவியை பொருத்தி அங்கிருந்து ஏணியின் மூலம் கடலுக்குள் இறக்கி விடுகிறார்கள். தலையில் பொறுத்தப்பட்டுள்ள கருவியின் மூலம் நீங்கள் சிரமமின்றி சுவாசித்து இதில் பொறுத்தப்பட்டுள்ள கண்ணாடி மூலம் கடலுக்குள் உள்ள பவளப்பாறைகள் மற்றும் மீன்களை பார்த்து, தொட்டு இரசிக்கலாம். சுமார் இருபது நிமிடங்கள் உங்களை கடலுக்குள் நடக்க வைக்கிறார்கள். கடலுக்குள் நடக்க உங்களுக்கு நீச்சல் தெரிய வேண்டியதில்லை!

ஸ்கூபா டைவிங்

ஸ்கூபா டைவிங் என்பது கடல் நீருக்குள் பிரத்தியோக உபகரணங்களை அணிந்து பயணம் செய்து கடலுக்குள் உள்ள உயிரினங்களை நேரிடையாக கண்டுகளிக்கும் ஒரு விளையாட்டு. தற்போது உலகத்தின் பல பகுதிகளிலும் ஸ்கூபா டைவிங் நடைபெறுகிறது. கடல் நீருக்குள் சுவாசிக்க சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீருக்குள் நீந்த காலில் தவளைக்கால் போன்ற ஒரு அமைப்பு மாட்டப்படுகிறது. இதைப் பயன்படுத்தி நீங்கள் தண்ணீருக்குள் நகரலாம். கண்களைப் பாதுகாக்க பிரத்யோகமான கண்ணாடி வழங்கப்படுகிறது. இதை அணிந்து கொண்டால் நீருக்குள் நன்றாகப் பார்க்க முடியும். கடல்நீருக்குள் முப்பது நிமிடங்கள் வரை நீங்கள் நீந்தி புதிய அனுபவத்தைப் பெறலாம். அதிகபட்சமாக கடலுக்குள் 25 அடி ஆழம் வரை நீங்கள் செல்ல முடியும். அந்தமானில் நார்த்பே தீவு மற்றும் ஹேவ்லாக் தீவில் எலிபெண்ட் பீச் ஆகிய இடங்களில ஸ்கூபா டைவிங் மேற்கொள்ள முடியும். 

நெய்ல் தீவு (Neil Island)

நெய்ல் தீவானது அளவில் சற்றே சிறியது. போர்ட்பிளேயரிலிருந்து தெற்காக 37 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்தீவில் ஏராளமான பழங்களும் காய்கறிகளும் விளைவிக்கப்படுவதால் இத்தீவானது அந்தமான் தீவுகளின் காய்கறிக் கிண்ணம் (Vegetable Bowl of Andaman Islands) என்று அழைக்கப்படுகிறது. போர்ட்பிளேயரிலிருந்து ஒன்றரை மணிநேரத்தில் படகுகளின் மூலம் பயணித்து நெய்ல் தீவை அடையலாம். சுமார் ஐந்து கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையைக் கொண்டது. இரண்டு மணி நேரத்தில் ஒருவர் நெய்ல் கடற்கரை முழுவதையும் நடந்தே சுற்றி வந்து விடலாம். இந்த சிறிய தீவில் சுமார் 2675 மக்கள் வசிக்கிறார்கள். இப்பகுதியில் உள்ள கடற்கரை மணலானது வெண்மையான நிறத்தில் மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கிறது. இங்குள்ள கடற்கரைப் பகுதிகளுக்கு ராம்நகர், சீதாபூர், லக்ஷ்மண்பூர் மற்றும் பரத்பூர் என பல இராமாயண கதாபாத்திரங்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

மீதி அடுத்த இதழில்...

தொகுப்பு ஆர்.வி. பதி, கல்பாக்கம். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/24/w600X390/sm13.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/24/கருவூலம்-அந்தமான்-நிகோபார்-தீவுகள்-2869541.html
2873178 வார இதழ்கள் சிறுவர்மணி கருவூலம்: அந்தமான் நிகோபார் தீவுகள் தொகுப்பு ஆர்.வி. பதி, கல்பாக்கம்.  Tuesday, March 6, 2018 11:27 AM +0530 சென்ற இதழ் தொடர்ச்சி...


அந்தமான் அருங்காட்சியகங்கள்

அந்தமான் தலைநகரான போர்ட்பிளேயரில் பல அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு பலவிதமாக அற்புதமான தகவல்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் மிகவும் சுத்தமாகவும் சிறப்பாகவும் பராமரிக்கப்படுகின்றன. அவை...

மானிடவியல் அருங்காட்சியகம்: (Anthropological Museum)

போர்ட்பிளேயர் நகரத்தின் சார்பில் ஒரு அருங்காட்சியகம் நடத்தப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தில் பழங்குடியினர் சார்ந்த பல்வேறு புகைப்படங்கள், பழங்குடியினர் வேட்டையாட அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், பழங்குடியினரின் குடியிருப்பு மாதிரிகள் என பல பொருட்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க கண்டிப்பாக அனுமதியில்லை. திங்கட்கிழமை விடுமுறை நாளாகும். 

சமுத்ரிகா கடல் அருங்காட்சியகம்: (Samudrika Naval Marine Museum))

போர்ட்பிளேயரில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்திய கடற்படையினரால் இந்த அருங்காட்சியகம் நடத்தப்படுகிறது. இந்த அருங்காட்சியகம் ஐந்து அறைகளை உள்ளடக்கியது. முதல் அறையில் அந்தமானில் உள்ள எரிமலைகள் பற்றிய தகவல்கள், அந்தமானில் வாழும் பழங்குடிகளைப் பற்றிய தகவல்கள், அந்தமானில் காணக்கிடைக்கும் பல்வேறு மரங்கள் பற்றிய தகவல்கள் மற்றும் அதன் மாதிரி வடிவங்கள் என அந்தமானைப் பற்றிய பல விஷயங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது அறையில் கடல்வாழ் மீன்கள் மற்றும் பிற அரிய உயிரினங்கள் வைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது அறையில் பவழப்பாறைகள் பற்றிய பல்வேறு தகவல்கள் மற்றும் பல்வேறு அரிய பவழப்பாறைகளின் சேகரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நான்காவது அறையில் கடல் பகுதிகளில் காணக்கிடைக்கும் பல்வேறு கிளிஞ்சல்கள் சங்குகள் போன்ற அரிய வகையான பொருட்கள் மற்றும் அதைப் பற்றி விரிவாக பல தகவல்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஐந்தாவது அறை பழங்குடிகள் அறையாகும். அந்தமானில் வாழும் பழங்குடியினத்தவரின் வாழ்க்கை முறைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த அறையில் பலவகையான பட்டாம்பூச்சிகள் மற்றும் பாம்புகளின் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

மீன் அருங்காட்சியகம் (Fisheries Museum)

இராஜீவ்காந்தி வாட்டர் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் (Rajivgandhi Water Sports Complex) அருகில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் இந்திய பசிபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பகுதிகளில் காணப்படும் பல்வேறு கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள் இந்த அருங்காட்சிகயத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இது சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் காண வேண்டிய ஒரு அருங்காட்சியம். திங்கள்கிழமை அருங்காட்சியகத்திற்கு விடுமுறை நாளாகும். மேலும் இரண்டாவது சனிக்கிழமைகளில் இந்த அருங்காட்சியகம் இயங்குவதில்லை. மற்ற நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.45 மணி வரையிலும் இந்த அருங்காட்சியகம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களின் பார்வைக்கு திறக்கப்படுகிறது. 

சத்தம் சா மில் (Chatham Saw Mill)

ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் மிகப்பழமையான "மர அறுவை நிலையம்' போர்ட்பிளேயருக்கு அருகில் அமைந்திருக்கும் சிறிய தீவான சத்தம் தீவில் அமைந்துள்ளது. சத்தம் சா மில் 1883 ஆம் ஆண்டில் தனது பணியினைத் துவக்கியது. அந்தமான் தீவுகளில் பல்வேறு கட்டுமானப் பணிகளில் பயன்படுத்துவதற்காக தீவுகளில் கிடைக்கும் பல்வேறு மரங்களை இங்கு கொண்டு வந்து பல்வேறு நீளங்களில் கட்டைகள் பலகைகள் என அறுக்கப்பட்டன. 

இரண்டாவது உலகப் போர் நடைபெற்ற காலகட்டத்தில் 10 மார்ச் 1942 அன்று ஜப்பான் படையினர் இந்த சா மில் மீது சக்தி வாய்ந்த குண்டுகளை தொடர்ச்சியாக பிரயோகித்தனர். இதனால் இந்த சா மில் பெரும் சேதத்தை சந்தித்தது. பின்னர் சரிசெய்யப்பட்டு 1946 ல் மீண்டும் தனது இயக்கத்தைத் தொடர்ந்தது. 1942 ஆம் ஆண்டில் ஜப்பான் நாட்டு படையினர் போட்ட ஒரு குண்டு விழுந்தது. குண்டு விழுந்த காரணத்தினால் உருவான பள்ளம் மூடப்படாமல் காட்சிக்காக அப்படியே வைக்கப்பட்டுள்ளது. இந்த சா மில்லை காலை எட்டு மணி முதல் மதியம் இரண்டரை மணி வரை பார்வையிடலாம். திங்கட்கிழமை விடுமுறை.

சயின்ஸ் சென்டர் (Science Centre) 

அந்தமான் தலைநகரான போர்ட்பிளேயரில் 2003 ஆம் ஆண்டில் இந்த சென்டர் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் பல அறிவியல் மாதிரிகள் மற்றும் சோதனைகள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கடலைப் பற்றிய பல அறிவியல் பூர்வமான தகவல்களை இங்கே நாம் அறியலாம். காலை 10.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை திறந்திருக்கும். திங்கட்கிழமையும் வார விடுமுறை நாளாகும். 

காந்தி பூங்கா (Gandhi Park)

போர்ட்பிளேயரில் உள்ள இந்த பூங்காவின் மையப்பகுதியில் மகாத்மா காந்திக்கு பெரிய சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர் சிறுமியர் விளையாடி மகிழ உஞ்சல் போன்ற விளையாட்டு சாதனங்கள் பல ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. ஜப்பான் நாட்டு படையினர் இரண்டாம் உலகப்போரின் போது அமைத்த பங்கர்கள் மற்றும் ஜப்பானியக் கோயில் போன்றவை வரலாற்றுச் சின்னங்களாக இந்த பூங்காவில் காணப்படுகின்றன. இங்குள்ள ஏரியில் படகு சவாரி வசதி உள்ளது.

அந்தமான் ஆலயங்கள்

போர்ட்பிளேயரில் அமைந்துள்ள ஸ்ரீ வெற்றிமலை முருகன் ஆலயம் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. தெற்கு அந்தமானில் அமைந்த ஜிர்கட்டாங் செக்போஸ்ட் அருகில் ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு ஒரு சிறிய குன்றில் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு ஒரு முறை இங்கு தமிழர்கள் ஒன்று கூடி பெரிய அளவில் அம்மனுக்கு விழா எடுக்கிறார்கள். போர்ட்பிளேயரில் ஸ்ரீவீர அனுமான் ஆலயம் அமைந்துள்ளது. போர்ட்பிளேயர் விமான நிலையத்திற்கு அருகில் மஹாகாளி கோயில் அமைந்துள்ளது. இதுபோல அந்தமானின் தலைநகரான போர்ட்பிளேயரில் பல கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்தமான் மாநிலத்தின் பறவை, விலங்கு, மரம், பூ

பறவை

வுட் பீஜியன் (Wood Pigeon) அதாவது மரப்புறா அந்தமானின் மாநிலப் பறவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விலங்கு

டகாங் (Dugong) எனும் கடல்பசு ஒரு கடல்வாழ் பாலூட்டியாகும். இது கடலில் காணப்படும் புற்களைத் தின்று வாழும். இந்த பாலூட்டி மூன்று மீட்டர் நீளமும் 400 கிலோ எடையும் கொண்ட அரியவகை பாலூட்டியாகும். மிகவும் அரிய வகையான இந்த கடல் பாலூட்டி அந்தமானின் மாநில விலங்காகும். 

மரம்

அந்தமானின் மாநில மரம் அந்தமான் படாக் (Andaman Padauk) வகை மரமாகும். 120 அடி உயரம் வளரும் இத்தகைய மரங்கள் அந்தமான் தீவுகளில் மட்டுமே காணப்படுகின்றன. 

பூ

அந்தமான் தீவுகளின் மாநிலப்பூ பின்மா பூ (Pyinma Flower) ஆகும். இந்த பூவானது செப்டம்பர் 2014 ல் அந்தமான் தீவுகளின் மாநில மலராக அறிவிக்கப்பட்டது. பெமா மரம் (Pema Tree) என்று அழைக்கப்படும் இந்த மரம் அந்தமான் நிகோபார் தீவுகளில் அதிக அளவில் பரவலாகக் காணப்படுகிறது. 

அந்தமான் மரங்கள்

அந்தமானில் தென்னையும் பாக்கும் அந்தமானுக்கு செல்வ வளத்தைச் சேர்க்கின்றன. இது தவிர தேக்கு மற்றும் ஓக் மரங்கள் மிக அதிக அளவில் காடுகளில் காணப்படுகின்றன. ஓங்கி உயர்ந்து விண்ணைத் தொடுமளவிற்கு வளர்ந்து காணப்படும் மரங்கள் இங்கே சர்வசாதாரணம். அண்ணாந்து பார்த்தால் நமது கழுத்து நிச்சயம் வலிக்கும். அந்த அளவிற்கு உயரமான மரங்கள் இங்கு காடுகளில் காணப்படுகின்றன. இதைத் தவிர வெள்ளை சுக்லாம் (White Chuglam), லால் போம்வே (Lal Bomwe), சூய் (Chooi), மார்பிள் வுட் (Marble wood), சிவப்பு தூப் (Red Dhup), டிடு (Didu), கறுப்பு சுக்லம் (Block Chuglam), திங்கம் (Thngam), லால்ச் (Laluch), துங்பியிங் (Tungpeing), யென்கி (Yengi), தேக்கு (Teak), லம்பாபட்டி (Lambapatti), கோகோ (Koko), பியின்மா (Pyinma), படாக் (Padauk), குர்ஜன் (Gurjan), சில்வர்கிரே (Silver grey), பகோடா (Bakota), மாவா (Mohwa), லால்சினி (Lalchini), உங்லியாம் (Uingliaam) என பல்வேறு வகையான மரங்கள் அந்தமான் தீவுகளில் காணப்படுகின்றன. 

அந்தமான் பவளப்பாறைகள்

அந்தமான், ஹேவ்லாக் தீவில் எலிபெண்டா கடற்கரை மற்றும் நார்த்பே தீவில் அமைந்துள்ள கடற்கரை பகுதிகளில் பவளப்பாறைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இத்தீவுகளில் நீலக்கோரல் (Blue Coral), ப்ரைன் கோரல் (Brain Coral), காளான் கோரல் (Mushroom Coralப்), சிவப்புக் கோரல் (Red Coral), மான்கொம்பு கோரல் (Staghorn Coral), பயர் கோரல் (Fire Coral), ஹெல்மெட் கோரல் (Helmet Coral), மார்பிள் கோரல் (Marble Coral), பிளேட் கோரல் (Plate Coral), டேபிள் கோரல் (Table Coral), சப்மேசிவ் கோரல் (Submassive Coral) போல்டர் கோரல் (Bolder Coral) என பல பவளப்பாறைகள் நிறைந்துள்ளன. இதுதவிர இன்னும் ஏராளமான வகையான பவளப்பாறைகள் அந்தமான் நிகோபார் தீவுகளில் பரவலாகக் காணப்படுகின்றன.

அந்தமான் சங்குகள் சிப்பிகள்

அந்தமான் தீவுகளில் அரிய சங்கு வகைகளும் காணப்படுகின்றன. இங்கு டர்போ ஷெல் (Turbo Shell), ட்ரோச்சஸ் ஷெல் (Trochus Shell), நெளடிலஸ் ஷெல் (Trochus Shell), கோனஸ் ஷெல் (Conus Shell), சீஅர்ச்சின்ஸ் (Sea Urchins), குயில் ஷெல் (Queen Shell), காம் ஷெல் (Calm Shell), ஹார்ன் ஷெல் (Horn Shell), ட்ரைடான் ஷெல் (Triton Shell) என பல்வேறு வகையான சங்குகள் சிப்பிகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் நிறைந்துள்ளன. இதைத்தவிர இன்னும் ஏராளமான பல்வேறு அதிசய சங்குகளும் சிப்பிகளும் காணப்படுகின்றன.

அந்தமான் தீவுகளில் காணப்படும் அரிய உயிரினங்கள்

அந்தமான் தீவுகளில் லெதர் பேக் டர்டில் (Leather Back Turtle) எனும் ஆமை, கிரீன் சீ டர்டில் (Green Sea Turtle) ரெடிகுலேட் பைதான் (Reticulate Python) எனும் பெரிய வகை மலைப்பாம்பு, ஆலிவ் ரிட்லே ஆமை (Olive Ridley Turtle) சால்ட் வாட்டர் க்ரோக்கடைல் (Salt Water Crocodile) வாட்டர் மானிட்டர் லிசார்ட் (Water Monitor Lizard) போன்ற ஊர்வன இனங்கள் பரவலாக காணப்படுகின்றன. மெல்ல மெல்ல அழிந்து வரும் இத்தகைய இனங்கள் அந்தமான் நிகோபார் தீவுகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பல் வேறு விதமான பறவைகளும், உயிரினங்களும் நிறைந்த தீவுகள் இவை! 

சுற்றுலாப்பயணிகளுக்கு இந்திய தியாக சரித்திரச் சுவடுகளும், கண்களுக்கு இனிய இயற்கைக் காட்சிகளும், கடல்சார் உயிரினங்களின் அரிய தகவல்களும் நிறைந்த இடம்அந்தமான் நிகோபார் தீவுகள் என்பதில் ஐயமில்லை! 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/2/w600X390/sm8.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/03/கருவூலம்-அந்தமான்-நிகோபார்-தீவுகள்-2873178.html
2873169 வார இதழ்கள் சிறுவர்மணி கடி Saturday, March 3, 2018 12:00 AM +0530 ""நீ அம்மா செல்லமா? அப்பா செல்லமா?''
""அம்மா, அப்பா செல்லம்!''
""அம்மா யார் செல்லம்னு நான் கேக்கலே....நீ, யாரோட செல்லம்னுதான் கேட்டேன்!''

வி.ரேவதி, 58, ராம் நகர், 4ஆவது தெரு, தஞ்சாவூர்-613007.

 

""ஏண்டா மாவு பாத்திரத்தை கையிலே வெச்சுக்கிட்டு ஒளிஞ்சு ஒளிஞ்சு போறே''
""அம்மாதான் மாவை "நைசா' அரைச்சுக்கிட்டு வரச்சொன்னாங்க!''


எஸ்.பொருநை பாலு, திருநெல்வேலி - 627006.

 

""எதுக்கு முதல் சொம்புத் தண்ணியை கீழே ஊத்தறே?''
""முதல் சொம்பை எடுத்து ஊத்திக்கும்போது குளிரும்னு அம்மா சொன்னாங்க!''

மு.முத்துராம் சுந்தர், செங்கோட்டை -627809.

 

இன்டர்வ்யூவில்...
""உங்க பேர் என்ன?''
""பூமணி''
""இதுக்கு முன்னாலே என்னவா இருந்தீங்க?''
""பூமணியாவேதான்!''

க.சங்கர், 48, ஜவஹர் வீதி, நாகர்பாளையம், ஈரோடு- 638452.""அட!....ட்ரெஸ் இவ்வளவு பளிச்சுன்னு இருக்கே...... நீ என்ன சோப்பு உபயோகிக்கிறே?''
""மணி சோப்புதான் யூஸ் பண்றேன்!''
""மணி சோப்பா? அப்படி ஒரு சோப்பு இருக்கா? நான் கேள்விப்பட்டதே இல்லியே!''
""அதில்லே....எங்கண்ணன் "மணி' போட்டு வைக்கிற மீதி சோப்பைத்தான் உபயோகிக்கிறேன்!''

வி.சரவணன், சிவகங்கை. 

 

""பாட்டி!....அப்பா "சோனி' டி.வி. வாங்கப்போறதா சொன்னாரு''
""எதுக்குடா அது? நல்லா தெம்பா, திடமா, இருக்கறதை வாங்கச் சொல்லுடா!''

ஆர்.யோகமித்ரா, சென்னை-600078.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/2/w600X390/sm1.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/03/கடி-2873169.html
2873170 வார இதழ்கள் சிறுவர்மணி அடையாளம்! ஆர்.அஜிதா, கம்பம். DIN Saturday, March 3, 2018 12:00 AM +0530 பிரபல நாவலாசிரியர் ஹார்டிங் டேவிஸின் மனைவி ஒரு நாள் ரயிலில் சென்று கொண்டிருந்தார். அவர் எதிரில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி நட்போடு, ""மிஸஸ் டேவிட், எனது அருகில் அமர மாட்டீர்களா?'' என அழைத்தார். மிஸஸ் டேவிட்டிற்கு அந்தப் பெண்மணி யாரென்று தெரியவில்லை. இருந்தாலும் அவர் அருகில் சென்று அமர்ந்தார். இருவரும் பொதுவாக பேசிக்கொண்டிருந்தனர். பேச்சு வாக்கில் அந்தப் பெண்மணி தன் சகோதரரைப் பற்றி குறிப்பிட்டார். ஒரு வேளை சகோதரரைப் பற்றி தெரிந்தால் அந்தப் பெண்மணியை அடையாளம் காணலாம் என நினைத்த மிஸஸ் டேவிட், ""உங்கள் சகோதரர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?'' என்று கேட்டார். ""ஓ!....அவர் இன்னும் அதே அமெரிக்க ஜனாதிபதி வேலையைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்!'' என்றார் அதிபர் ரூஸ்வெல்டின் சகோதரி டக்லஸ் ராபின்சன்!

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/2/w600X390/sm2.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/03/அடையாளம்-2873170.html
2873172 வார இதழ்கள் சிறுவர்மணி புத்தகத்தில் கண்ட குறிப்பு! ஜோ.ஜெயக்குமார்,  நாட்டரசன்கோட்டை. DIN Saturday, March 3, 2018 12:00 AM +0530 ஒருமுறை விருதுநகர் சங்கரலிங்க நாடார் வீட்டில் காந்தி தங்கியிருந்தார். விடைபெற்றுக் கொண்டு ஊருக்குப் புறப்படும்பொழுது காந்தியின் கண்ணில் ஒரு புத்தகம் தென்பட்டது. படிப்பதற்காக அந்தப் புத்தகத்தை எடுத்துச் சென்றார் காந்தி! நான்கு மாதங்கள் கழிந்தன. அந்தப் புத்தகம் திரும்பி வந்தது. கூடவே ஒரு கடிதத்தில், ""அன்புள்ள சங்கரலிங்கம், தங்கள் புத்தகத்தை இத்துடன் அனுப்பியுள்ளேன். "இந்தப் புத்தகத்தை யார் எடுத்துச் சென்றாலும் திருப்பி கொடுத்துவிடவும்' என்று முன் பக்கத்தில் தாங்கள் எழுதியுள்ள குறிப்பைக் கவனித்தேன்'' என்று காந்தி எழுதியிருந்தார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/2/w600X390/sm4.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/03/புத்தகத்தில்-கண்ட-குறிப்பு-2873172.html
2873173 வார இதழ்கள் சிறுவர்மணி குறள் பாட்டு: இடுக்கண் அழியாமை! -ஆசி.கண்ணம்பிரத்தினம் DIN Saturday, March 3, 2018 12:00 AM +0530 அடுக்கி வரினும் அழிவு இலான் உற்ற 
இடுக்கண் இடுக்கண் படும்
.

-திருக்குறள்

துன்பம் தொடர்ந்து வந்தாலும் 
மனம் தளர்ந்து போகாதவன் 
எது வந்தாலும் ஏற்றுக் கொள்வான் 
எதையும் தாங்கி வென்றிடுவான்

எத்தனை துன்பங்கள் வந்தாலும் 
தாங்கும் சக்தி உள்ளவனைத் 
தாக்கும் சக்தி இல்லாமல் 
தளர்ந்து சோர்ந்து போய்விடும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/2/w600X390/sm5.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/03/குறள்-பாட்டு-இடுக்கண்-அழியாமை-2873173.html
2873174 வார இதழ்கள் சிறுவர்மணி பொன்மொழிகள்! DIN DIN Saturday, March 3, 2018 12:00 AM +0530 எல்லா உணர்ச்சிகளைக் காட்டிலும் கொடியது பயம். 
- பென்னட்

சோதனைகள்தான் ஒரு மனிதனை அவனுக்கே அறிமுகப்படுத்துகின்றன. 
- யாரோ

வாழ்க்கையின் குறிக்கோள் உழைப்பும், அனுபவமும், மகிழ்ச்சியும் ஆகும். 
- ஹென்றி ஃபோர்டு

ஞானம் இல்லாமல் நீதி செலுத்துவது இயலாது. 
- புரூட்

"வாழ்க வளமுடன்' என்று வாழ்த்துவது மிக உயர்ந்த பலனை அளிக்கும். 
- வேதாத்திரி மகரிஷி

சந்தர்ப்பம் வரும் என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். தங்களுக்குத் தேவையான சந்தர்ப்பங்களைத் தேடிப் பெறுபவர்கள்தான் வாழ்வில் முன்னேற்றம் காண்பார்கள். 
- பெர்னார்ட் ஷா

நல்ல செயல்களுக்கு உரிய பலன்கள் வந்தே தீரும்! சிறிது தாமதமாகலாம்...ஆனால் அது நிச்சயம் வந்தே தீரும்! 
- க்ரீவ்ஸ்

தவறான வழியில் எவ்வளவு தூரம் போயிருக்கிறாய் என்பது பொருட்டல்ல!.....திரும்பி விடு! 
- டுர் கிஷ்

எந்தக் காரியத்திலும் வெற்றியின் முதல் படி என்பது அந்தக் காரியத்தில் ஆர்வம் கொண்டிருப்பதுதான்! 
- வில்லியம் ஆஸ்லர்

ஒருவன் தன்னைப் பற்றி அதிக உயர்வாக எண்ணுவதும், அதிகத் தாழ்வாக எண்ணுவதும் இரண்டுமே தவறுதான்! 
- கதே
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/2/w600X390/sm6.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/03/பொன்மொழிகள்-2873174.html
2873175 வார இதழ்கள் சிறுவர்மணி முத்துக் கதை: ஓய்வும் ஊக்கமும்! -எம். பார்த்தசாரதி DIN Saturday, March 3, 2018 12:00 AM +0530 வசந்த சேனர் கட்டிடக்கலையில் நிபுணர்! சுவர்ணபுரியில் அவர் எழுப்பிய கட்டிடங்கள் அனைத்தும் அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும்! பற்பல அணைகள், பாலங்கள், அரண்மனைகள், கோட்டைகள் அனைத்தும் அவரது திறமைக்குச் சான்றாக இருந்தன. அரசரின் நெருங்கிய பந்துக்கள், அவர்களது இல்லங்கள் அனைத்தும் வசந்த சேனரின் கைத்திறமையால் மிளிர்ந்தன. அரசர் அமரேந்திரருக்கு வசந்தசேனரிடம் பிரியம் அதிகம். ஆனால் வசந்த சேனருக்கு வயதாகிவிட்டது. மன்னரிடம் வேலைக்குச் சேர்ந்து 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. சற்றுத் தளர்ந்து போயிருந்தார் அவர். 

இனி நம்மால் உழைக்க முடியாது என உணர்ந்த அவர் அரசரிடம், ""எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது! என்னை பணியிலிருந்து விடுவித்தால் மகிழ்ச்சியுறுவேன், மேலும் நல்ல முறையில் சீடர்களைத் தயார் செய்துள்ளேன். அவர்களில் யாரேனும் உங்களுக்கு கட்டிட வேலைகளில் உதவுவர். இது என் தாழ்மையான கோரிக்கை'' என்றார். 

அரசரும், ""சரி,....நானும் அதை உணர்கிறேன்....கடைசியாக ஒரே ஒரு பணி! மிக முக்கியமான ஒரு நண்பருக்கு ஊருக்கு அருகிலேயே ஒரு புதிய கட்டிடம் கட்ட திட்டமிட்டுள்ளேன். இதுதான் உங்களால் எழுப்பப்படும் கடைசிக் கட்டிடமாக இருக்கும். அதற்கான வரைபடத்தை தயார் செய்யுங்கள். இந்த வேலையை முடித்தவுடன் உங்களை விடுவித்து விடுகிறேன்.'' என்று கூறி அந்தக் கட்டிடத்திற்கான விளக்கத்தையும் கொடுத்து குறிப்பையும் வசந்த சேனரிடம் வழங்கினார். 

அற்புதமான விளக்கக் குறிப்புகள் இருந்தன. பெரிய திண்ணைகள், ரேழி, தாழ்வாரம், சாளரம், தேக்கில் தூண்கள், மிக அற்புத வேலைப்பாடுகள் நிறைந்த ஊஞ்சல் , சமையல் அறை, சாப்பாட்டு அறை, வரவேற்பு அறை, சயன அறை, மற்றும் நந்தவனம் என்று மிகப் பாரம்பரிய கட்டிடத்திற்கான விளக்கக் குறிப்புகள் அதில் இருந்தன. பெரும் பொருட்செலவு ஆகும்போல் இருந்தது அது! அரசரோ எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை என்று கூறிவிட்டார். 

தன் கடைசி வேலையாக இருந்ததால் வசந்த சேனர் அந்தக் கட்டிடத்திற்கான வரைபடத்தை ஆர்வத்தோடு வரைந்தார். பணியாட்களைத் தேர்ந்தெடுத்தார்! மிகச் சிறப்பாக கட்டிடம் அமைந்து விட்டது! அரசர் அமரேந்திரருக்கு மிகவும் மகிழ்ச்சி! 

ராணி, தளபதி, மந்திரி பரிவாரங்களுடன், புதிய கட்டிடத்தைப் பார்வையிட்டார். அனைவரையும் அந்தக் கட்டிடம் வசீகரித்தது! அமரேந்திரரும் வசந்த சேனரை மனமாறப் பாராட்டினார். 

""வசந்த சேனரே!....உங்களுக்கு இதோ என் சன்மானம்!'' என்று 50000 பொற்காசுகளை வழங்கினார் அரசர். 

""நன்றி அரசே!....ஆனாலும் இது எனக்குப் பெரிய தொகைதான்! ‘'

""அது மட்டுமல்ல....இந்தாருங்கள்! இந்த கட்டிடத்தின் சாவி! இந்தக் கட்டிடமே உமது சேவைக்கு நான் அளிக்கும் அன்புப் பரிசு! மறுக்காமல் ஏற்றுக் கொள்வீர்! மேலும் பராமரிப்புக்கு அரசு ஊதியத்தில் பணியாளர்களையும் அனுப்புகிறேன்! நீங்கள் உங்கள் குடும்ப சகிதம் பேரன் பேத்திகளோடு இங்கு குடி பெயர்வீர்! எத்தனை திட்டங்களை செவ்வனே நிறைவேற்றிக் கொடுத்தீர்! உங்கள் ஓய்வுக் காலத்தை மகிழ்ச்சியாகக் கழிப்பீர் நண்பரே!''

தன்னை முக்கியமான நண்பர் என அரசர் குறிப்பிட்டதும், புதிய கட்டிடத்தின் சாவியை அரசர் தந்ததும் வசந்த சேனரின் கண்களில் நன்றிப் பெருக்கால் நீரை வரவழைத்தது!

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/2/w600X390/sm7.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/03/முத்துக்-கதை-ஓய்வும்-ஊக்கமும்-2873175.html
2873179 வார இதழ்கள் சிறுவர்மணி கதைப் பாடல்: கிளி! மிளகாய்! -வளர்கவி DIN Saturday, March 3, 2018 12:00 AM +0530 கிளியே நானும் உன்னைப்போல்
பார்க்கப் பச்சை நிறம்தானே!
அழகிய மூக்கும் எனக்குண்டு
அத்தனை அழகும் உன்னைப்போல்!

பழுத்தால் உந்தன் அலகைப்போல்
பவளச் சிவப்பு எனக்கும் வரும்!
கொழுந்த எந்தன் குடும்பத்தை
குடைமிளகாய் எனக் குறிப்பார்கள்!

மிளகாய் என்று என்னை நீ
மெத்தனமாக எண்ணாதே!
கிளியே நானும் உன்னைப்போல் 
அழகில் சிறந்தவள் அறியாயோ?

உன்சோ திடத்தை விரும்பிடுவோர்
முழுவதுமாக உனை நம்பி 
பாடாய்ப் படுத்தி பலன் சொல்ல
பணிந்து உன்முன் அமர்வார்கள்!

என்னை நம்பிக் கண்ணேறு 
கழிக்க விரும்பும் மானிடர்கள் 
மண்ணில் எறிவர் தலைசுற்றி!
மதிப்பில் இருவரும் ஒன்றன்றோ!

இருப்பினும் நீயோ அன்பின்றி 
என்னைக் கொத்தித் தின்கின்றாய்!
வெறுப்பினைக் காட்டி என்னை நீ 
விரோதியாக எண்ணாதே!

நம்மால் முடிந்த உதவிகளை 
நாட்டில் செய்து உயராமல் 
சும்மா ஏற்றத் தாழ்வுகளை 
சுமத்த வேண்டாம் கிளியண்ணா!

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/2/w600X390/sm9.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/03/கதைப்-பாடல்-கிளி-மிளகாய்-2873179.html
2873180 வார இதழ்கள் சிறுவர்மணி கதைப் பாடல்: பயம் எதற்கு? -கடலூர் நா.இராதாகிருட்டிணன் DIN Saturday, March 3, 2018 12:00 AM +0530 தெள்ளத் தெளிந்த அறிவிருக்கு
தேர்வைக் கண்டு பயமெதற்கு? 
துள்ளித் திரிந்து விளையாடு
துணிவாய்ப் பாடம் படித்துவிடு!

நிறைய இருக்கு படிப்பதற்கு 
நீண்ட உறக்கம் உனக்கெதற்கு?
மறதியை நீயும் நீக்கிவிடு
மனதில் பயத்தைப் போக்கிவிடு!

ஆழ்ந்த அறிவு உனக்கிருக்கு
ஐயம் அதிலே உனக்கெதற்கு? 
வாழ்வில் வெற்றியை உனதாக்கு
வென்றிட உழைப்பை உரமாக்கு!

உள்ளம் தெளிந்த நீரோட்டம்
உனக்குள் எதற்குப் போராட்டம்!
முள்ளைக் கண்டு அஞ்சாதே! 
மலரைப் பறிக்கத் தயங்காதே!

ஆற்றல் உனக்குள் மிகுந்திருக்கு
ஆசான் சொல்லும் துணையிருக்கு
காற்றை வேலி தடுத்திடுமா? 
கடின உழைப்பு தோற்றிடுமா? 

வியர்வைத் துளிக்கோர் விலையில்லை!
வெற்றியும், தோல்வியும் நிலையில்லை!
உயர்வு என்பது மனத்தளவு
உரைத்த வள்ளுவன் குறள் கேளு!

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/2/w600X390/sm10.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/03/கதைப்-பாடல்-பயம்-எதற்கு-2873180.html
2873181 வார இதழ்கள் சிறுவர்மணி முத்திரை பதித்த முன்னோடிகள்: கங்காதரன் மேனன் என்.லக்ஷ்மி பாலசுப்ரமணியன், கடுவெளி.  DIN Saturday, March 3, 2018 12:00 AM +0530 ஒரு ஆவணப்படம் என்ன செய்துவிட முடியும்? ஒரு தனி மனிதரால் மாநில அரசின் திட்டத்தை தடுத்து நிறுத்த முடியுமா? இவ்விரு கேள்விகளுக்கும் விடை தருகிறது ஒரு ஆவணப்படம். சரி அது என்ன படம்? "ஹல்லா போல்!' .... ஹல்லா போல் என்றால் "உரக்கப் பேசு' என்று அர்த்தம்! ஆம்! "அமைதிப் பள்ளத்தாக்கு' என்ற பசுமை மாறாக் காட்டைப் பற்றி உரக்கப் பேசினார் ஒரு மனிதர்! தன் ஆவணப் படத்தின் மூலம்! இதனால் ஒரு மாநில அரசே தனது திட்டத்தைக் கை விட்டது! நமது அண்டை மாநிலமான கேரளாவில் 33 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற நிகழ்வு இது! 
அந்த ஆவணப்படத்தை எடுத்தவர்தான் திரு. கங்காதரன் மேனன்! இவர் ஒரு ஆசிரியர். பயணக் கட்டுரை எழுத்தாளர்! புகைப்படக் கலைஞர்! மேடை நாடக நடிகர்! இப்படி பன்முகத் திறன் கொண்ட ஆளுமை கொண்டவர். 
இவர் 1962 முதல் மும்பையில் வசித்து வந்தார். பல ஆண்டுகள் விளம்பரத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 
தனது ஆவணப்படம் நீங்கலாக "அமைதிப் பள்ளத்தாக்கு - இனிமேல் அமைதியில்லை!'
(SILENT VALLEY IS NOT SILENT ANY MORE) என்ற தலைப்பில் தான் ஆற்றிய பெரும்பணியை ஒரு நூலாக வடித்துள்ளார். 
தற்பொழுது இந்தியாவின் தேசியப் பூங்காக்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள "அமைதிப் பள்ளத்தாக்கு' நீலகிரி மலைத் தொடரின் எல்லைப் பகுதியாகிய பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஒரு பசுமை மாறாக் காட்டுப் பகுதியாகும். சிங்கவால் குரங்கு, தவளைவாய்ப் பறவை, மற்றும் அரிய வகை நாரைகள் போன்ற எண்ணிலடங்கா விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழிடமாகத் திகழ்கிறது இப்பகுதி. 
இக்காட்டின் ஊடே "குந்திப்புழா' என்ற ஆறு ஒன்று பாய்ந்து செல்கிறது. இந்நதியின் மேல் ஓர் அணை கட்டி நீர்மின் சக்தியை உற்பத்தி செய்ய கேரள அரசு முடிவெடுத்தது. அதன்படி 1978 ஆம் ஆண்டு அணை கட்டும் பணிகளைத் துவக்கியது. இதனால் இக்காட்டின் முக்கால் பகுதி நீரில் மூழ்கிவிடும் அபாயம் இருந்தது. 
சூழலியல் ஆர்வலர்களால் இத்திட்டம் எதிர்க்கப்பட்டு மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இறுதியா உச்ச நீதி மன்றத்தில் தடை ஆணை பெறப்பட்டது. 
1980 ஆம் ஆண்டு மேடை நாடக நடிகராக இருந்த கங்காதரனை மும்பையில் கே.கே.சந்திரன் என்ற கேரள ஆவணப்பட இயக்குனர் சந்தித்தார். அவர் சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட ஆவணப் படங்களை இயக்குபவராக இருந்தார். அமைதிப் பள்ளத்தாக்கு பற்றி விவரித்த சந்திரன் தாம் ஒரு ஆவணப்படம் எடுக்க விரும்புவதாகவும், காடுகளைப் பற்றிய தகவல்களைத் திரட்டுமாறும் தனக்கு உதவியாளராக இருக்குமாறும் வேண்டினார். 22 வயதே ஆன கங்காதரன் இந்த சாகசப் பயணத்திற்கு உடனே சம்மதித்தார். தான் பணி புரிந்த நிறுவனத்தில் ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு சந்திரனுடன் பாலக்காட்டுக்குப் பயணமானார் கங்காதரன்!
நிதி உதவி செய்து தயாரிக்க ஒருவரும் முன் வராததால் யாரெல்லாம் 15.000 ரூ அளித்தனரோ அத்தனை பேரும் தயாரிப்பாளர்களாகக் கருதப்பட்டனர்.அவர்களையும் தம்முடன் அழைத்துச் சென்றனர். கையில் ஒரு 16 எம்.எம். கேமரா, உணவுப் பொருட்கள், குடிதண்ணீர், மருந்துகள், தீப்பெட்டி, மண்ணெண்ணை போன்ற பொருட்களை எடுத்துச் சென்றனர். 
"அமைதிப் பள்ளத்தாக்கு' எல்லைக்கு 24 கி.மீ. முன்னால் இருந்த "முக்காலி' என்ற கிராமம் வரை மட்டுமே வாகனப் போக்குவரத்து இருந்தது! அதன் பின்னர் நடைப்பயணம் மட்டுமே! இக்கானகத்தின் ஒவ்வொரு மூலையையும் நன்கு அறிந்து வைத்திருந்த "தெக்கின் காட்டின் ஹம்ஸா' என்ற 62 வயது ஆதிவாசி முதியவரையும் தம்முடன் அழைத்துச் சென்றனர்.
அவர்கள் அக்காட்டில் அடியெடுத்து வைத்த பொழுது அணைகட்டும் அதிகாரிகள் ஏறத்தாழ 2 நூற்றாணடுகளாக ஜீவித்திருந்த மிகப் பெரிய மரம் ஒன்றை இயந்திரங்களின் உதவியால் சில மணித்துளிக்குள் வீழ்த்தினர். அவர்கள் அறியாதவாறு கங்காதரனும், அவரது குழுவினரும் மிகுந்த மனவேதனையுடன் இக்காட்சியைத் தமது கேமராவில் படம் பிடித்துக் கொண்டனர். மரம் வீழ்ந்த பிறகும் அரைமணி நேரத்திற்குக் கானகத்தின் பறவைகள் ஓலமிட்டுக் கொண்டே இருந்தன. அதையும் பதிவு செய்துகொண்டனர். 
அணைக்கட்டின் ஆரம்பப் பணிகள் அங்கு ஏற்கனவே முடிவடைந்திருந்தன. மிக அடர்த்தியான மரங்கள் சூழ்ந்திருந்தன. எனவே சீரான பாதை இல்லை! சில இடங்களில் 6 அடி நீளத்திற்கும் 3 அடி அகலத்திற்கும் பச்சை நிற தரை விரிப்புகள் போல் காணப்பட்டன. இவர்கள் அழைத்துச் சென்ற ஆதிவாசி வழிகாட்டி இவர்களைத் தடுத்து நிறுத்தி அங்குள்ள ஏராளமான பூச்சிகளைச் சுட்டிக் காட்டினார். பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். காரணம், அவை அனைத்தும் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைப் பூச்சிகள்! 
இவை எல்லாவற்றையும்விட காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மட்டுமே சூரிய வெளிச்சம் இருக்கும்! 
அதற்குள் தான் கண்ட அத்தனை காட்சிகளையும் படம் பிடித்தனர். இதனால் திட்டமிட்டதை விட படப்பிடிப்பு நாட்கள் அதிகரித்தன. உணவுப் பொருட்களும், மருந்துகளும் மிகக் குறைந்த அளவே இருந்தன. மீண்டும் முக்காலி கிராமத்திற்குச் சென்று அவற்றைக் கொண்டுவர வேண்டும். ஒருவரும் முன் வராததால் கங்காதரனே அந்தப் பொறுப்பையும் மேற்கொண்டார். திரும்பி வரும் வழியில் பெரிய கொம்பன் யானையைக் கண்ட பொழுதுதான் தன் வாழ்நாளிலேயே முதன் முதலாக மரணம் பற்றிய அச்சம் அவருக்குத் தோன்றியது. நல்ல வேளையாக அது இவரை கவனிக்கவில்லை! 
இப்படியாகப் பெரும் போராட்டங்களுக்கிடையே சிறிது சிறிதாக ஆவணப்படம் வளர்ந்து கொண்டிருந்தது. மும்பை திரும்பிய பின்னர் நிதி உதவி கிடைக்காததால் எடிட்டிங் செய்ய முடியவில்லை. மும்பையில் இருந்த "ஃபிலிம்ஸ் டிவிஷன்' என்ற அமைப்புதான் அந்நாட்களில் ஆவணப் படங்களைத் திரையிட்டது. அதன் அதிகாரிகளுடன் சந்திரனுக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அவர் இந்த ஆவணப்படக் குழுவிலிருந்து விலகிக் கொண்டார். 
ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருடம் காட்டில் அலைந்து திரிந்த கங்காதரனுக்கு இதை அப்படியே விட்டுவிட மனம் வரவில்லை. ஃபிலிம் எடிட்டிங் என்பதையே அறிந்திராத கங்காதரன் இதற்காக எடிட்டிங் கற்றுக் கொண்டார். தாம் எடுத்த காட்சிகளை தமக்குத் தெரிந்த வகையில் 18 நிமிடப் படமாக எடிட் செய்து முடித்தார். எடிட் செய்யாத பகுதிகள் 12 நிமிடத்திற்கு இருந்தன. 
இப்படச் சுருளைக் கையில் எடுத்துக் கொண்டு "அமைதிப் பள்ளத்தாக்கு பாதுகாப்பு' இயக்கத்தின் தலைவர் திருமதி. தில்நவாஸ் வரியேவா (ஈஐக சஅயஅழ யஅதஐஅயஅ) அவர்களைச் சந்தித்தார். ஆவணப்படம் முழுமையையும் கண்ட அவர் சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக தமது பங்களிப்பாக பத்தாயிரம் ரூபாய் அளித்தார். ஏனெனில் சென்சார் சான்றிதழ் பெற்றால் மட்டுமே ஆவணப்படத்தைத் திரையிட முடியும். இப்படத்தைக் கண்ட தணிக்கைக் குழுவோ "இப்படம் ஒருதலைப் பட்சமாக எடுக்கப்பட்டுள்ளது!' என்று கூறி சான்றிதழ் தர மறுத்துவிட்டது!
இப்படம் எடுக்க நிதி உதவி செய்தவர்கள் கங்காதரனிடம், "தனி ஒரு ஆளாக ஒரு மாநில அரசை உன்னால் எதிர்த்து என்ன செய்ய முடியும்? இப்படச் சுருளை எரித்துவிடு!' என்றனர். 
மனமுடைந்த கங்காதரன் மீண்டும் திருமதி தில்நவாஸ் அவர்களிடமே வந்தார். கங்காதரனின் உண்மையான அக்கறையை உணர்ந்துகொண்ட அவர் வேறுவழியில் இப்பிரச்னையைத் தீர்க்க முடிவு செய்தார். அவர் கோத்ரெஜ் நிறுவனத் தலைவர் "எஸ்.பி.கோத்ரெஜ்' அவர்களை சந்தித்து பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களை எப்படியாவது சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தருமாறு வேண்டினார். சில மாதங்களுக்குப் பிறகு பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் கிடைத்தது. அதுவும் சந்திப்பு நேரம் 10 நிமிடங்கள் மட்டுமே என்ற அனுமதியுடன்!
தனது படத்தின் ஒரு சில காட்சிகளையாவது அவர் பார்க்க வேண்டும் என கங்காதரன் விரும்பினார். இவர்களது பிரச்னையின் முக்கியத்தினை உணர்ந்து கொண்ட பிரதமர் தனது பிற சந்திப்புகளை ஒத்தி வைத்தார். 
ஆவணப்படம் முழுவதையும் (எடிட் செய்த....மற்றும் எடிட் செய்யப்படாத பகுதிகள்) கண்டார். 
அமைதிப் பள்ளத்தாக்கின் அழகிலும், வளத்திலும் மனதைப் பறிகொடுத்த இந்திராகாந்தி 236.74 கி.மீ. பரப்பளவுள்ள அக்கானகத்தை இந்தியாவின் தேசியப் பூங்காக்களுள் ஒன்றாக அறிவித்தார். 
15-11-1983 ஆம் ஆண்டு முதல் இந்த ஆணை நடைமுறைப் படுத்தப் பட்டது. 
கிட்டத்தட்ட தனது 18 மாத கடின உழைப்பிற்குப் பலன் கிடைத்ததைவிட காட்டின் ஒவ்வொரு ஜீவராசியும் காப்பாற்றப்பட்டதே தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகக் கூறுகிறார் இந்த சமூக ஆர்வலர்! 

தொகுப்பு: என்.லக்ஷ்மி பாலசுப்ரமணியன், கடுவெளி. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/2/w600X390/sm11.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/03/முத்திரை-பதித்த-முன்னோடிகள்-கங்காதரன்-மேனன்-2873181.html
2873182 வார இதழ்கள் சிறுவர்மணி அரங்கம்: மனசு திரை DIN Saturday, March 3, 2018 12:00 AM +0530 காட்சி - 1

இடம் - வீடு
மாந்தர் - பாபு, பாபுவின் தாய் லட்சுமி.

(பாபு பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவன். மாலை பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்தவன். அவனின் தாய் லட்சுமியிடம் சொல்கிறான்.)

பாபு: அம்மா!....எனக்கு அடுத்த வாரம் பிறந்த நாள் வருது. எனக்கு புது ஜீன்ஸ் பேண்டும், சட்டையும் வேணும்.....அதைப் போட்டுக்கிட்டுப் போய் என் நண்பர்களுக்கு ஸ்வீட் கொடுக்கணும்!
லட்சுமி: டேய், தீபாவளிக்கு எடுத்த பேண்ட சட்டையையே இன்னும் போடாம அப்படியே வெச்சிருக்கே!... அதை போட்டுக்கடா!... 
புதுசா வேறே ட்ரெஸ் எதுக்கு?....பணத்தை வேஸ்ட் பண்ணக்கூடாது!.....எத்தனையோ வீட்டுலே ஏழை பிள்ளைங்க ரெண்டு ட்ரெஸ்ûஸ மட்டும் வெச்சுக்கிட்டு மாத்தி, மாத்தி துவைச்சுப் போட்டுக்கறாங்க.....பணத்தோட மதிப்பு உனக்குத் தெரியலேடா....
பாபு: ஏழைகளைப் பத்தியெல்லாம் எனக்குக் கவலையில்லை.....என் பிறந்த நாளை நான் மகிழ்ச்சியா கொண்டாடணும்.....அதனால எனக்கு கண்டிப்பா நீ புது ஜீன்ஸ் பேண்ட், சட்டை வாங்கித் தரணும்! நான் அதைப் போட்டுக்கிட்டுப் போய் என் நண்பர்கள் மத்தியிலே பெருமையா காண்பிப்பேன்!....
லட்சுமி: சரிடா!.....உனக்கு நான் சொல்றது எல்லாம் புரியாது.....நீங்க படிச்சு, சம்பாதிக்கும் போதுதான் உனக்குப் புரியும்!.....நீ இப்ப டியூஷனுக்கு கிளம்பு....நாளைக்கு கடைக்குப் போய் வாங்கலாம்.


காட்சி - 2

இடம் - கடைவீதி
மாந்தர்கள் - லட்சுமி, பாபு, வேலைக்காரி, அஞ்சலை, அவளின் பேரன் ராஜா. 

லட்சுமி: அட, அஞ்சலை எங்கே கடைவீதிக்கு வந்திருக்கே.....ஆமா, இந்தப் பையன் யாரு?
அஞ்சலை: இவன் என் பேரன் ராஜா. நாலாம் வகுப்பு படிக்கிறான். இவன் கிழிந்து போன யூனிஃபார்மோடு ஸ்கூலுக்குப் போயிருக்கான்!....அவன் வகுப்பு ஆசிரியர், "இப்படி கிழிந்த யூனிஃபார்மோடு ஸ்கூலுக்கு வராதே....புதுசா தெச்சு போட்டுட்டு வா'ன்னு சொல்லி இவனை விரட்டிட்டாரு!....
லட்சுமி: ஐயய்யோ!....அப்புறம் என்னாச்சு? 
அஞ்சலை: புது யூனிஃபார்ம் எடுத்து தைக்க ஐந்நூறு ரூபாய் ஆகும். அதான்.....மனசு ரொம்ப கஷ்டமாயிடுச்சு.....என்ன செய்யறதுன்னு தெரியாம, பேரனை கூட்டுக்கிட்டு கோயிலுக்குப் போகலாம்னு கிளம்பிட்டேன்....
லட்சுமி: ஏன் அஞ்சலை, .....ராஜாவோட அப்பாகிட்டே சொல்ல வேண்டியதுதானே? 
அஞ்சலை: ராஜா அப்பா ஆட்டோ ஓட்டுறாரு.....இரண்டு வாரமா காய்ச்சல்லே அவர் படுத்திருக்காரு....அதனால அவர் கையிலே காசு இல்லேம்மா......அதான் அவருகிட்டே கேட்க முடியலே....

(அப்போது பாபு, தன் அம்மாவிடம்)

பாபு: அம்மா, ஒரு நிமிஷம் இங்கே வா....
லட்சுமி: என்னடா?
பாபு: அம்மா, ராஜாவையும் அவனோட பாட்டியையும் கோயிலுக்குப் போயிட்டு நாம போற ஜவுளி கடைக்கு வரச் சொல்லு....
லட்சுமி: என்னடா சொல்றே? 
பாபு: அம்மா நான் சொன்னதை அவங்ககிட்டே சொல்லும்மா....
லட்சுமி: சரி, சரி சொல்றேன்.....அஞ்சலை நீங்க கோயிலுக்கு போயிட்டு சீக்கிரம் வாங்க,....கொஞ்சம் வேலை இருக்கு.....நாங்க ரெண்டு பேரும் இங்கேயே, இந்த ஜவுளிக்கடை வாசலிலேயே நிக்கிறோம்!....
அஞ்சலை: சரிம்மா...


காட்சி - 3

இடம் - கடை வீதி
மாந்தர் - லட்சுமி, பாபு. 

லட்சுமி: ஏண்டா,.....அவங்களை ஜவுளிக்கடைக்கு வரச்சொன்னே?.....உன்னோட பிறந்த நாளைக்குத்தானே புது ஜீன்ஸ் பேண்ட்,.... சட்டை வாங்கப்போறோம்?.....இப்போ அவங்களை எதுக்கு கூப்பிடுறே?
பாபு: அம்மா,.....நீங்க என் பிறந்த நாளுக்காக எடுக்கப்போற பேண்ட், சட்டைக்கு ஆகும் பணத்தை அஞ்சலையோட பேரன் ராஜாவுக்கு புது யூனிஃபார்ம் வாங்கிக் கொடுத்திடும்மா!.....
லட்சுமி: (ஆச்சரியத்துடன்) என்னடா சொல்றே?......என்ன ஆச்சு உனக்கு?
பாபு: அம்மா எனக்கு போட்டுக்க ஏகப்பட்ட ட்ரெஸ் இருக்கு.... ஆனா, ராஜா படிக்கிற வயசுலே யூனிஃபார்ம் இல்லாம ஸ்கூலுக்குப் போக முடியாம தவிக்கிறான். நேற்றுக்கூட நீங்க சொன்னீங்க....பணத்தை வேஸ்ட் பண்ணாம ஏழைக்கு உதவலாம்னு......அதான் இந்த முடிவுக்கு வந்தேன். கோயிலுக்குப் போயிட்டு அவுங்க ரெண்டு பேரும் வந்தவுடன் ஜவுளிக்கடைக்கு கூட்டிட்டு போய் ராஜாவுக்கு புது யூனிஃபார்ம் வாங்கிக் கொடுத்திடலாம். இதை என்னோட பிறந்த நாள் பரிசா அவன் போட்டுக்கட்டும்!.....என்ன, சரியா அம்மா?.....
லட்சுமி: (மகிழ்ச்சியுடன்) பாபு, அடுத்தவங்களுக்கு உதவி செய்யணுங்கிற உன் முடிவிலே நீ உயர்ந்து நிக்கறே....உன்னைப் பார்க்க எனக்கு பெருமையா இருக்குடா!......

(கோயிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய அஞ்சலையையும், ராஜாவையும் அழைத்துக் கொண்டு கடைக்குள் நுழைகின்றனர். திரும்ப வரும்போது ராஜாவின் கையில் யூனிஃபார்ம் துணிகளுடன் கூடிய பை. ராஜாவின் முகத்தில் மகிழ்ச்சி. அஞ்சலை நன்றியுடன் பாபுவையும், லட்சுமியையும் பார்த்து கைகூப்புகிறாள். பாபு நிம்மதியும், சந்தோஷமும் அடைகிறான். லட்சுமி தன் மகன் பாபுவை கட்டிப்பிடித்து மகிழ்ச்சி அடைகிறாள்!)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/2/w600X390/sm17.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/03/அரங்கம்-மனசு-2873182.html
2873184 வார இதழ்கள் சிறுவர்மணி கண்டுபிடி கண்ணே! DIN DIN Saturday, March 3, 2018 12:00 AM +0530  

ஆறல்ல... பத்து வித்தியாசங்களைக் கண்டு பிடியுங்கள். 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/2/w600X390/sm16.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/03/கண்டுபிடி-கண்ணே-2873184.html
2873185 வார இதழ்கள் சிறுவர்மணி விடுகதைகள் DIN DIN Saturday, March 3, 2018 12:00 AM +0530 1. இடி இடிக்கும், மின்னல் மின்னும் ஆனாலும் மழை பெய்யாது...
2. பறந்தபடி பாடுவான்... உட்கார்ந்தால் உதிரம் குடிப் பான்...
3. வெய்யிலுக்குக் காய்வான், தண்ணீருக்குப் பொங்கு வான்..
4. ஊரிலிருந்து வாங்கி வந்த உருண்டை, உரிக்க உரிக்க வெறுந்தோல்...
5. தோப்பில் ஒரு கறுப்புப் பாடகி
6. திரி இல்லாத விளக்கு, என்ன விளக்கு?
7. ஓடுகிற குதிரைக்கு விலாவெல்லாம் ஓட்டை...
8. வெள்ளை மாளிகைக்கு வாசலும் இல்லை, வழியும் இல்லை...
9. வரிசைக்கு வரும் முந்தி, வெளியே போகும் பிந்தி...

விடைகள்:


1. பட்டாசு
2. கொசு
3. சுண்ணாம்பு
4. வெங்காயம்
5. குயில்
6. சூரியன்
7. ரயில்வண்டி
8. கோழி முட்டை
9. சாப்பாட்டு வாழை இலை

]]>
http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/03/விடுகதைகள்-2873185.html
2873186 வார இதழ்கள் சிறுவர்மணி பணி நிறைவு விழா -பாவலர் மலரடியான் DIN Saturday, March 3, 2018 12:00 AM +0530 ஆசிரியர் கோவிந்தசுவாமி அந்த வட்டாரத்தில் உள்ள படித்தவர்களுக்கும், பாமரர்களுக்கும் நன்கு அறிமுகமானவர். 
மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதிலும், அவர்களுக்கு நல்லொழுக்கங்களைச் சொல்லிக் கொடுத்து நல்வழிப்படுத்துவதிலும் முன் நிற்பவர். அதை தன் லட்சியமாகவே கொண்டிருந்த பண்பாளர்.
அந்த ஊரில் நல்லது, கெட்டது எது நடந்தாலும் சாதி, மத வேறுபாடு பார்க்காது முன் நின்று செயல்படுவார். அதனால்தான் அவருக்கு அரசே நல்லாசிரியர் விருது அளித்துச் சிறப்பித்திருந்தது. 
அந்த சிறந்த ஆசிரியரின் பணி நிறைவு விழாவினை ஆசிரியர்களும், ஊர் மக்களும் கூடி நடத்த எண்ணினார்கள்.
அந்த எண்ணத்தை ஆசிரியர் கோவிந்தசாமியிடமும் சொன்னார்கள்.
அதற்கு அவர், ""நன்றி!....மகிழ்ச்சி,....இந்த விழா குறித்து என் எண்ணம் ஒன்றைக் கூறலாமா?'' என்று கேட்டார். 
""தாராளமாகக் கூறுங்கள்!....செய்யக் காத்திருக்கிறோம்....'' என்றார்கள் ஊர் மக்கள். 
அவர் தன் எண்ணத்தைச் சொன்னார். 
அவர் கூறியதைக் கேட்டவர்கள் மகிழ்ச்சியோடு "" அப்படியே செய்கிறோம்...'' என்றார்கள்.

ஆசிரியர் கோவிந்தசாமியின் பணி நிறைவு விழா கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. அவ்வூர் எம்.எல்.ஏ. வும், மாவட்ட ஆட்சியாளரும், தொழிலதிபர்களும், அந்த ஊர் கோயில் தர்மகர்த்தா அவரிடம் படித்து வெளியூர்களில் பெரிய பணிகளில் இருந்த மாணவர்களும் வந்திருந்தார்கள்! ஊரின் பல முக்கிய பிரமுகர்களும் வந்திருந்தனர். பொது மக்களில் பலரும் அவரிடம் நல்ல மதிப்பு வைத்திருந்ததால் விழாவில் பங்கேற்க வந்திருந்தனர். ஊரே கூடியிருந்தது. 
விழா மேடையின் முன்னே ஒரு பெரிய பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பெட்டியில் "இது எங்கள் அன்பளிப்பு' என்று எழுதப்பட்டிருந்தது. 
சிலர் வியப்போடு அந்தப் பெட்டியை பார்த்தார்கள்! என்றாலும், அந்தப் பெட்டியில் அவர்கள் தங்களின் அன்பளிப்பை செலுத்தாமல் இல்லை. 
விழாவிற்கு வந்திருந்த அனைவருமே தங்கள் கையில் இருந்ததை அன்பளிப்பாக செலுத்திக் கொண்டு இருந்தார்கள். 
விழாவில் பலர் ஆசிரியரின் பண்புகளைப் பற்றியும், அவரது தொண்டுள்ளத்தைப் பற்றியும் போற்றிப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தனர். 
விழாவிற்கு வந்திருந்த எல்லோருமே அன்பளிப்பு வழங்கி முடித்த நிலை வந்ததும், இருவர் அந்தப் பெட்டியை மேடைக்குப் பின்னே தூக்கிச் சென்றார்கள். 
விழாத் தலைவராக இருந்த மாவட்ட ஆட்சியாளர், ""இப்போது விழாவின் நாயகர், நல்லாசிரியர் அவர்கள் தமது நன்றி உரையை நிகழ்த்துவதோடு ஓர் அரிய செயலையும் செய்ய இருக்கிறார். அவருக்கு முதற்கண் என் நெஞ்சார்ந்த மகிழ்ச்சியையும், பாராட்டினையும் தெரிவித்து அன்னாரைப் பேச அழைக்கிறேன்'' என்று கூறி அமர்ந்தார்.
நன்றியுரை நல்க வந்த நல்லாசிரியர் கோவிந்தசாமி, ""எனக்கு இப்படி ஒரு சிறப்பு மிக்க விழா எடுத்த நல்லுள்ளங்களுக்கு முதற்கண் என் நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்து மகிழ்வதோடு, என்னிடம் பயின்று, தற்போது வெளியூர்களில் பணியில் இருக்கும் மாணவர்கள் எல்லோரையும் இவ்விழாவிற்கு அழைத்த விழாக்குழுவினருக்கும், அந்த அழைப்பே ஏற்று இங்கு வந்துள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் என் நன்றியினைத் தெரிவித்து மகிழ்கிறேன். 
எனக்கு இப்படி ஒரு விழா நடத்த வேண்டும் என்று விரும்பிய ஆசிரியப் பெருமக்களும், பெரியோர்களும் என்னிடம் வந்து கேட்டபோது நான் அவர்களிடம் ஒன்றே ஒன்றை என் சார்பாகக் கூறினேன்....
......அதாவது, "பரிசுப் பொருள்கள் எதுவும் யாரும் எனக்கு வாங்கி வரக்கூடாது,....பரிசுப் பொருள் வாங்கும் பணத்தை பணமாகவே எனக்கு நீங்கள் கொடுப்பதாக இருந்தால், இந்த விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே.'....என்று கூறினேன்......
......அதன்படியே மேடையின் முன்னே வைக்கப்பட்ட பரிசுப் பெட்டியில் பணமாகவே கொடுத்திருக்கிறார்கள். அப்படி அன்பு உள்ளத்தோடு அவர்கள் கொடுத்த அன்பளிப்புத் தொகை எவ்வளவு தெரியுமா?.....
......இரண்டு இலட்சத்து இரு நூற்று ஐம்பது ரூபாய்! நீங்கள் எல்லாம் எனக்காக அன்பளிப்பாக அளித்த இந்தப் பணம் முழுவதையும் சமீபத்தில் நேபாள நாட்டில் நிகழ்ந்த நில நடுக்கத்தில் அனாதைகளாக, ஆதரவற்றவர்களாக, உடல் ஊனமுற்றவர்களாக அவதிப்படும் சகோதர, சகோதரிகளுக்கு உங்கள் அனைவரின் சார்பாக இந்த நிதியை மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் வழங்குகிறேன்'' என்று கூறி பணத்தை அவரிடம் வழங்கியபோது, விழாவிற்கு வந்திருந்த அனைவரும் மகிழ்ச்சியோடு கர ஒலி எழுப்பியதோடு ஆசிரியரின் மனித நேயத்திற்கும் வாழ்த்தினை தெரிவித்தார்கள் என்பதைக் கூறவும் வேண்டுமோ?

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/2/w600X390/sm14.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/03/பணி-நிறைவு-விழா-2873186.html
2873187 வார இதழ்கள் சிறுவர்மணி அங்கிள் ஆன்டெனா DIN DIN Saturday, March 3, 2018 12:00 AM +0530 கேள்வி: சிறிய டூர் போவது என்றாலே நாம் பல முன்னேற் பாடுகளைச் செய்து கொள்கிறோம். நாடு விட்டு நாடு செல்லும் பறவைகள் இது போல முன்னேற்பாடு விஷயங்களைச் செய்து கொள்ளுமா?

பதில்: மாலை வேளைகளில் மரங்களின் அருகிள் சென்றிருக்கிறீர்களா? பறவைகள் அங்குமிங்குமாகப் பறந்து கொண்டு, காச் மூச் என்று கத்திக் கொண்டிருக்கும். சமயங்களில் இந்தச் சத்தம் காதைப் பிளக்கும். பகலில் இரை தேடிப் பல இடங்களுக்குச் செல்லும் பறவைகள் மாலையில் வீடு திரும்பியதும் இப்படிக் கத்துவது வாடிக்கை.
இந்தக் காச் மூச்சில் அப்படியென்ன ரகசியம் இருக்கிறது என்கிறீர்களா? தாங்கள் போன இடத்தில் கிடைத்த இரை, சந்தித்த எதிரிகள் ஆகியன பற்றிய விசாரிப்புகள்தான் இந்தக் கத்தல்களுக்குக் காரணம். இது அன்றாடம் நடக்கும்.
நாடு விட்டு நாடு செல்லும் பறவைகளுக்கு இந்தப் பேச்சு மட்டும் போதாது. வேறு சில உபாயங்களும் இருக்கின்றன.
தலைமுறை தலைமுறையாக வலசை (மைக்ரேஷன்) போன உள்ளுணர்வுதான் அந்த உபாயம். புதிதாக வலசை போகும் பறவைகளும் சரியான நேரத்தில் டூர் செல்லத் தயாராவதற்கும் இதுதான் காரணம். அவற்றின் ஜீனிலேயே இந்த உள்ளுணர்வு பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்து வரும்.
மேலும் சில ஹார்மோன்கள் புதிதாக உற்பத்தியாவதும் டூர் போக இதுவே சரியான தருணம் என்பதை உணர்த்தி விடுகிறது. இது போக குளிர் பிரதேச நாடுகளில் மரங்களைப் பனி வந்து மூடிக் கொள்வதால் பறவைகளுக்கு எளிதில் உணவு கிடைக்காது. இந்தப் பஞ்ச காலத்தில் அங்கேயே கிடந்து பட்டினி கிடப்பதற்குப் பதிலாக, உல்லாசமாக டூர் கிளம்பி விடுகின்றன.

]]>
http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/03/அங்கிள்-ஆன்டெனா-2873187.html
2873189 வார இதழ்கள் சிறுவர்மணி பிஞ்சுக் கை வண்ணம் - II DIN DIN Saturday, March 3, 2018 12:00 AM +0530 பிஞ்சுக் கை வண்ணம் - II

]]>
http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/03/பிஞ்சுக்-கை-வண்ணம்---ii-2873189.html
2873188 வார இதழ்கள் சிறுவர்மணி பிஞ்சுக் கை வண்ணம் - I   Friday, March 2, 2018 04:27 PM +0530 பிஞ்சுக் கை வண்ணம் - I

]]>
http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/03/பிஞ்சுக்-கை-வண்ணம்---i-2873188.html
2873171 வார இதழ்கள் சிறுவர்மணி அந்த நாலு பேர்! க.அருச்சுனன், செங்கல்பட்டு. Friday, March 2, 2018 03:30 PM +0530 கிருபானந்தவாரியார் தன் பிரசங்கம் ஒன்றில், ""நாலு பேர் மெச்ச வாழணும்...'' எனக் குறிப்பிட்டார். உடனே ஒருவர், ""அந்த நாலு பேர் யார்? ‘' எனக் கேட்டார். அதற்கு வாரியார், ""மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நாலுபேர்தான் அது! இந்த நாலு பேர் மனம் மகிழ வாழ வேண்டும்..அதுவே சிறந்த வாழ்க்கை!'' எனறதும் பிரசங்கத்தில் கரவொலி வானைப் பிளந்தது!

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/2/w600X390/sm3.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/mar/03/அந்த-நாலு-பேர்-2873171.html
2869558 வார இதழ்கள் சிறுவர்மணி அரங்கம்: காடு என். எஸ். வி. குருமூர்த்தி DIN Saturday, February 24, 2018 09:48 PM +0530 காட்சி - 1

இடம் - குடிசை மாந்தர் - விறகு வெட்டி செல்லப்பனின் மகன் கந்தன் (விளையாட்டுப்பிள்ளை), அவன் அம்மா. 

(குடிசையின் பின்புறத்தில் இருந்து அம்மா குரல் கொடுக்கிறாள்)

அம்மா: ""கந்தா.. போயி விறகு சுள்ளி குச்சி பொறுக்கி வா. பட்ட மரத்தின் கிளைகளை வெட்டி வா. சோம்பலா இருக்காதே!... வயசு பதினைஞ்சாவுது..''

(சிணுங்கிக் கொண்டே எழுகிறான் கந்தன். )

அம்மா: உன் அப்பா உயிரோடு இருந்தால் உன்னை போகச் சொல்வேனா..எனக்கு என்னவோ இன்னிக்கு தலை சுத்தற மாதிரி இருக்கு. இல்லாட்டி நான் உன்னைத் தொந்தரவு பண்ண மாட்டேன். போப்பா.. ம். உன் அப்பா உன்னைப் படிக்க வைக்கணும்ன்னு ஆசைப்பட்டார்.. பாழுங்காய்ச்சல் பலி வாங்கிடுச்சி. சரியான வைத்தியம் பண்ண முடியலே..ம்..அரிவாளை எடுத்துப் போ'
கந்தன்: "சரிம்மா..'


காட்சி - 2

இடம் - காடு மாந்தர் - கந்தன், ஒரு சிறு புழு.

(காட்டுக்குள் விசிலடித்தபடி தெம்மாங்கு பாடி துள்ளி நடக்கிறான் கந்தன்) 
(காய்ந்த சுள்ளிகளை சேகரிக்கிறான். ஒரு பட்ட மரத்தில் ஏறிக் கிளையை வெட்ட அரிவாளை ஓங்க, அப்போது கிளையில் ஒரு புழு நெளிந்து சென்று கொண்டிருக்கிறது. வெட்டாமல் அந்தப் புழுவையே பார்க்கிறான். ஒரு பெரிய வாதாமர இலையில் அந்தப் புழுவை மெல்ல எடுத்து வைத்து இறங்குகிறான்)
கந்தன்: "புழு நண்பா. நீயும் ஒரு உயிர் தானே... வெயில் சுடுதா?....'

(தூரத்தில் ஆற்றுப் படுகை அருகில் அதை ஓரமாக வைக்கிறான். பின் மரத்தில் ஏறிக் கிளையை வெட்டுகிறான். அங்கிருந்த வலுவான ஒரு கொடியை இழுத்துப் பிடித்து அறுக்கிறான். சுள்ளிகளை கட்டாகக் கட்டி தலையில் தூக்கி சுமந்தபடி இடுப்பில் அரிவாளைச் செருகி நடக்கிறான்)

குரல்: "கந்தா!... நண்பனே!' 
கந்தன்: யார் கூப்பிடறது..? (தனக்குள்)... "யாருமில்லை. மனப் பிரமை தான்.'
புழு:"உன்னைத்தான் கந்தா!' 
கந்தன்: குரல் தரையில் இருந்து வருகிறதே?.....( குனிந்து பார்த்தால் புழு!) "நான் ஒரு தேவதை!.... விண்ணுலகில் இருந்து வந்திருக்கிறேன்!'

(அங்கு ஒரு வெண் புகை போல மூட்டம் எழுகிறது. நடுவே ஒரு தேவதை இறக்கைகளுடன்.) 

தேவதை: "மிக்க நன்றி!.... தாகமாக இருந்தது...., என்னை நதி அருகில் வைத்தாயல்லவா?.... தாகம் தீர்ந்து விட்டது!'
கந்தன்: அடடே!... உனக்கு சாப்பிட ஏதாவது பழம் பறிச்சுத் தரவா?...
தேவதை: வேண்டாம் நண்பா!.... என் பசி, களைப்பு அத்தனையும் ஒரு துளி நீரில் போய்விட்டது! இனி எனக்குப் பல நாட்களுக்கு உணவு தேவையில்லை. உனக்கு என்ன பரிசு வேண்டும் கேள்!...
கந்தன்: "ஒண்ணும் வேண்டாம்.. அம்மா தேடுவாங்க.. நான் போறேன். நாளைக்கு வர்றேன்..'
தேவதை: சரி!

(தலையில் சுள்ளிக் கட்டுடன் விரைகிறான் குடிசை நோக்கி. தேவதை அவனைப் பார்த்துச் சிரித்து விட்டு புழுவாக மாறி நகரத் தொடங்குகிறது.)


காட்சி - 3

இடம் - குடிசை மாந்தர் - கந்தன், கந்தனின் அம்மா.

(குடிசையில் சுள்ளிக் கட்டை இறக்கி விட்டு அரிவாளை கூரையில் செருக எடுக்கிறான். என்ன இது கனமாக இருக்கு. மஞ்சள் நிறத்தில் மின்னுது.)

கந்தன்: "அம்மா ஓடி வாயேன்!..' 
அம்மா : "என்னப்பா கந்தா?....'
கந்தன்: "இதைப் பாரேன்!'
அம்மா: "என்னப்பா இது அதிசயம் அரிவாள் மஞ்சளா மாறி இருக்கு.. தங்கம் போலத் தோணுதே'

(காட்டில் நடந்ததை விவரிக்கிறான்.) 

அம்மா: (ஆச்சரியத்துடன்) "சரி, சமைக்கிறேன் சாப்பிடு.' (அடுப்பை எரிக்க அரிவாளால் காய்ந்த கிளையை அவள் வெட்ட தங்கக் கூர் முனை நசுங்குகிறது.) கந்தா.. என்ன இது அரிவாள் வெட்டலியே.. நமக்கு வெட்டற அரிவாள் தான் வேலைக்கு ஆகும்.. போய் அந்த தேவதையிடம் இதை மாற்றி வா! இத்தனை தங்கத்தை எனக்கு என்ன பண்றதுன்னும் தெரியாது!...விற்கப் போனால் எங்கேயாவது திருடினியான்னு தண்டிச்சுடுவாங்க!... வேணாம்!... அபாயம்!


காட்சி - 4

இடம் - காடு மாந்தர் - தேவதை, கந்தன்.

(காட்டுக்குள் ஓடுகிறான்)

கந்தன்:"தேவதையே எங்கே இருக்கே?...இந்த தங்க அரிவாள் எங்களுக்கு வெட்ட உதவாது!.... பழைய இரும்பு அரிவாளே போதும்!'

( தேவதை தோன்றுகிறது) 

கந்தன்:"எங்களுக்கு இது வேணாம்!' (அம்மா கூறினவற்றைச் சொல்லி) தங்கத்தைப் பார்த்தா பயமா இருக்கு அம்மாவுக்கு! 

(சிரித்த தேவதை அரிவாளை பழையபடி இரும்பாக்கித் தருகிறது)

தேவதை: சரி, வேறே ஏதாவது கேள்! 
கந்தன்: "எனக்கு வைத்தியம் படிச்சு வைத்தியர் ஆகணும்ன்னு ரொம்ப ஆசை! ஆனா வசதி இல்லை எங்களுக்கு! இலக்கியங்கள், இலக்கணங்கள், சொல்லிக் கொடு...., கணிதம் நிகண்டு சாத்திரங்களைச் சொல்லித்தா! வருங்காலத்தைக் கணிக்கும் சோதிட அறிவைத் தா!.....முக்கியமாக நோய் போக்கும் வைத்திய சாத்திரம் சொல்லித் தா!....நான் அதை வைத்து பிழைத்து அம்மாவைக் காப்பாற்றுவேன்!.....உன்னால் முடியுமா ?'
தேவதை : (சிரித்தபடி) "அப்படியே செய்கிறேன்!' 

(அவன் தலையில் கை வைத்து ஆசீர்வதிக்கிறது. கந்தனைச் சுற்றி ஒரு புகை வளையம் சூழ்கிறது. அது அடங்கிய பின் கந்தன் தன்னை ஒரு புது மனிதனாக உணர்கிறான். அவன் எதிரில் ஒரு பெட்டி. அதில் நூற்றுக்கணக்கில் ஓலைச் சுவடிகள். அதை எடுத்துப் படித்த போது படிக்க முடிகிறது! --- காலச் சக்கரம் விரைவாகச் சுழல்கிறது!---)


காட்சி - 5

இடம் - அரண்மனை மாந்தர் - மன்னர், அமைச்சர், தளபதி

அமைச்சர்: ம்... .. வைத்தியர் கந்தன் என்றால் சோழ நாட்டில் அத்தனை செல்வாக்கு வந்திடுச்சி!....இப்போவெல்லாம் அரசருக்கு அரண்மனைக்குள் புதுசா வந்திருக்கும் கந்த வைத்தியர் சொல்றது தான் வேத வாக்கு. 
தளபதி: அவர் கை பட்டால் தீராத நோயும் தீர்ந்து விடுகிறது! மக்களுக்கு வைத்தியர் மேல் அளவு கடந்த பிரியம். ஏனெனில் யாரிடமும் பணம் வாங்குவதில்லை. இலவச வைத்தியம். பரம ஏழைகளுக்கு செலவுக்குப் பணம்கூடத் தர்றார்!
அமைச்சர்: பெரிய குடும்பத்துப் பிள்ளைகள், மந்திரி பிரதானிகள், குழந்தைகள் அனைவரும் வைத்தியத்துக்கு இங்கே வர்றாங்க. கந்தபண்டிதரின் கை பட்டால் குணமாயிடுதாம்!
தளபதி: காட்டை ஒட்டிய தன் இல்லத்தில் மூலிகை தோட்டம் அமைத்து இருக்கார் பார்த்தீங்களா!....
கந்த வைத்தியர்.. வயதான அவர் அம்மா, மருமகள் வள்ளி நீர் ஊற்றிப் பராமரிக்கிறாங்க. அரசர் நூறு காணி மூலிகை வளர்க்கவே தந்திருக்கார் தெரியுமா?...

(இதையெல்லாம் மன்னர் காதில் வாங்கியபடி வருகிறார்) 

மன்னர்: உண்மை தான் தளபதியாரே நான் கந்த வைத்தியரைப் பொக்கிஷம் போல பாதுகாக்கிறேன்.ஏன் தெரியுமா ? அவர் வைத்தியத்துக்காக அண்டை நாட்டு மன்னர்களும் நம் நாட்டுடன் நட்பு பாராட்டி வருவதால்..! வாருங்கள்! அவரிடம் முக்கிய வேலை ஒன்று இருக்கு.. போகலாம்!

(மன்னர் அவ்வப்போது மகாராணியுடன் வந்து தன் ஜாதகத்தைப் பார்க்கச் சொல்லி முக்கிய ராஜாங்க முடிவுகள் எடுக்க வருவார். கந்த வைத்தியர் சோதிடத்திலும் வல்லவர் ஆயிற்றே!)


காட்சி - 6

இடம் - காடு மாந்தர் - விறகு வெட்டிகள், சுள்ளி பொறுக்கும் பெண்.

ஒருவன்: நம்ம கூட விறகு வெட்டின செல்லப்பன் மகன் கந்தன் நிலை எப்படி மாறிடுச்சி பார்த்தியா!...என்ன படிப்பு!..... என்னா வைத்தியம்!..... ஒரே வேளை சூரணம் தான் தந்தாரு.. காய்ச்சலா கிடந்த என் பெண்டாட்டி எழுந்து சமைக்கக் கிளம்பிட்டா. காசு வாங்கிக்கலே தெரியுமா ..?
மற்றவன்: எல்லாம் கடவுள் செயலப்பா.. அசலூர் பட்டணம், ராஜாக்கள் எல்லாம் வியாதிக்கு மருந்து வாங்கிப் போறாங்க. கந்தன் சொல்லு என்னா சொல்லு.. சொன்னா அப்படியே பலிக்குது அப்பா..

சுள்ளி பொறுக்கும் பெண்: அவர் நாக்கில் சரஸ்வதி குடி இருக்கணும்.

திரை 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/24/w600X390/sm22.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/24/அரங்கம்-காடு-2869558.html
2869557 வார இதழ்கள் சிறுவர்மணி பிஞ்சுக் கை வண்ணம் - II DIN DIN Saturday, February 24, 2018 09:44 PM +0530 பிஞ்சுக் கை வண்ணம் - II

]]>
http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/24/பிஞ்சுக்-கை-வண்ணம்---ii-2869557.html
2869556 வார இதழ்கள் சிறுவர்மணி பிஞ்சுக் கை வண்ணம் - I DIN DIN Saturday, February 24, 2018 09:44 PM +0530 பிஞ்சுக் கை வண்ணம் - I

]]>
http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/24/பிஞ்சுக்-கை-வண்ணம்---i-2869556.html
2869555 வார இதழ்கள் சிறுவர்மணி பிஞ்சுக் கை வண்ணம் - I DIN DIN Saturday, February 24, 2018 09:06 PM +0530 பிஞ்சுக் கை வண்ணம் - I

]]>
http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/24/பிஞ்சுக்-கை-வண்ணம்---i-2869555.html
2869554 வார இதழ்கள் சிறுவர்மணி அங்கிள் ஆன்டெனா DIN DIN Saturday, February 24, 2018 08:58 PM +0530 கேள்வி: கொக்குகள் ஏன் ஒற்றைக் காலில் நிற்கின்றன? இதற்கு ஏதாவது தனிப்பட்ட காரணம் இருக்கிறதா?

பதில்: கொக்கு, நாரை போன்ற நீர்ப்பகுதிகளில் வசிக்கும் பறவைகளுக்குப் பிரதான ஆகாரம் மீன்கள்தான். இவை சாதாரணமாக வேறு உணவு வகைகளைச் சாப்பிடுவதில்லை. அதிலும் நீர் வாழ் உயிரினங்களை மட்டுமே உண்பது என்று சில வகை கொக்கு இனங்கள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றன. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது போல... 
இந்த வகை கொக்குகள் நின்று கொண்டிருக்கும் ஏரியாக்களில் புஷ்டியான மீன்கள் அடிக்கடி கிடைப்பதில்லை. எனவே இவை, "ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரை' கால் வலிக்கக் காத்திருந்துதான் ஆக வேண்டும்.
கொக்கின் கால்களைப் பார்த்திருப்பீர்கள். மிக மெல்லிய நீண்ட கால்கள். அவ்வளவாக தசைப்பிடிப்பு இல்லாதவை. இந்த மெல்லிய கால்கள்தான் ஒட்டுமொத்த கொக்கின் எடையையும் தாங்கி நிற்க வேண்டுமல்லவா? இதனால் கொக்கிற்கு கடுமையான கால் வலி ஏற்பட்டுவிடும்.
இதனால் அவ்வப்போது ஒரு காலை மடக்கி அடுத்த காலுக்கு ஓய்வு கொடுத்துக் கொள்ளும். இந்தச் சமயம் பார்த்து, அதைப் பார்த்த ஓவியர் ஒருவர் கொக்கை இந்தப் போஸிலேயே வரைந்து விட, அதையே பார்த்துப் பார்த்து நமக்கும் ஏதோ கொக்கு ஒற்றைக்காலில் தவம் இருப்பது போலத் தோன்றுகிறது.
கொக்கிற்கு ஒற்றைக்காலில் நிற்க வேண்டும் என்ற வேண்டுதல் எதுவும் கிடையாது.

]]>
http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/24/அங்கிள்-ஆன்டெனா-2869554.html
2869553 வார இதழ்கள் சிறுவர்மணி கடி DIN DIN Saturday, February 24, 2018 08:57 PM +0530 ""ஏ.பி.சி.டி....தலைகீழா சொல்லு!''
""டி.சி.பி.ஏ!''
""ஏ...டு...இசட்....தலைகீழா சொல்லு!''
""இசட் டு ஏ!''

சி.சடையப்பன், திண்டுக்கல்.

 

""கிளாஸ்லே நீ முதல் ரேங்கா வரணும்டா!''
""அதுக்கு நான் ஒருத்தன்தான் இருக்கணும்ப்பா!''

தீ.அசோகன், சென்னை.

 

 

""உங்க அப்பாவுக்கும் உனக்கும் ஒரே வயசா?....என்னடா உளர்றே?''
""நான் பொறந்தப்புறம்தானே அவரு அப்பா ஆனாரு!''

எம்.அசோக்ராஜா, அசூர்.

 

 

""எதுக்கு "ஆ' ன்னு பேப்பர்லே எழுதிக்கிட்டு பல் டாக்டர் கிட்டே போறே?''
""டாக்டர் "ஆ' காட்ட சொல்லுவாரே!''

சி.பழனிசாமி, காந்திநகர், கிழக்கு தாம்பரம், 600059.

 

 

""ஒரு ரகசியம் சொல்றேன் கேட்கறியா?''
""இரு....காதுல பஞ்சை அடைச்சிக்கிட்டு வந்துடறேன்!''

பர்வதவர்த்தினி, சென்னை.

 

""நான் படிச்சதை அவரு கரெக்டா எடை போடுவாரு''
""யாரு?''
""பழைய பேப்பர் கடைக்காரரு!''

தீ.அசோகன், திருவொற்றியூர், சென்னை-600019.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/24/w600X390/sm21.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/24/கடி-2869553.html
2869552 வார இதழ்கள் சிறுவர்மணி விடுகதைகள் DIN DIN Saturday, February 24, 2018 08:53 PM +0530 1. தண்ணீர் இல்லாத தடாகத்தில் தாவிப் பாயுது ஒரு கப்பல்...
2. விரித்த பாயை சுருட்ட முடியாது...
3. சத்தம் போடுவான்... வீட்டை விட்டு நகர மாட்டான்...
4. பூ இருந்தும் பறிப்பதில்லை...
5. கிழித்த கோட்டுக்குள் ஓடுகிறவன்...
6. வளைப்பார் வளைத்தால் வாயு வேகம்...
7. நோயுமில்லை நொடியுமில்லை, மெலிகிறார் தினமும்...
8. ஒட்டியது இங்கே... வெட்டியது அங்கே...
9. தலையைச் சீவினால் தாகம் தீர்ப்பான்...

விடைகள்

1. ஒட்டகம்
2. கோலம்
3. நாக்கு
4. சேவல் கொண்டை
5. ரயில்
6. வில், அம்பு
7. தினசரி காலண்டர்
8. கடிதம்
9. இளநீர், நொங்கு

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/24/w600X390/sm20.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/24/விடுகதைகள்-2869552.html
2869551 வார இதழ்கள் சிறுவர்மணி கண்டுபிடி கண்ணே! DIN DIN Saturday, February 24, 2018 08:50 PM +0530 கண்டுபிடி கண்ணே!

 

 

]]>
http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/24/கண்டுபிடி-கண்ணே-2869551.html
2869550 வார இதழ்கள் சிறுவர்மணி என் கடமை! -அ. ராஜா ரஹ்மான் DIN Saturday, February 24, 2018 08:46 PM +0530 மிக நல்ல இளம் துறவி ஒருவர் இருந்தார். அருள் வடிவம் கொண்ட முகம். அன்பும் கருணையும் தவழும் வடிவம் கொண்டவர் அவர். ஒரு நாள் ஒரு வனத்தில் நடந்து சென்றார். வனத்தில் நெடிது உயர்ந்த மரங்களும், பல்வேறு விதமான புஷ்பச் செடிகளும், கொடிகளும் இருந்சன. அந்த இடம் ரம்மியமாக இகுந்தது. 
அதில் ஒரு செடியில் சகலரையும் வசீகரிக்கும் மணம் மிகுந்த மலர்கள் பூத்திருந்தன. அந்த நல்ல வாசனை துறவியை எட்டியது. அவருக்கு ஆச்சரியமாய் இருந்தது. ""எத்தகைய தெய்வீக மணம் இது!'' மனதை மயக்குகிறதே என்று எண்ணிக்கொண்டே மணம் வந்த திசையை நோக்கி நடக்கலானார். அங்கு திவ்யமான அந்தச் செடியைக் கண்டார். அதில் மலர்கள் புதிதாய்ப் பூத்துக் குலுங்கியிருந்தன. 
துறவி செடியின் அருகில் சென்றார். மலர்களைப் பறிக்காமல் அதைக் கிளையுடன் இழுத்து முகர்ந்து பார்த்தார். அதன் வாசனையை அனுபவித்தார். பிறகு கிளையை அதன் போக்கில் விட்டுவிட்டார். 
திடீரென்று ஒரு தேவதை தோன்றியது. ""வாசனையைத் திருடுகின்றாயே இது சரியா?'' என்று கேட்டது.
இதைக் கேட்ட துறவி திடுக்கிட்டார். ""நான் மலரைப் பறிக்கவில்லையே....மணத்தை மட்டுமே முகர்ந்தேன்....என்னை திருடன் என்று குற்றம் சாட்டுகிறாயே இது நியாயமா?'' என்று கேட்டார். 
தேவதை பதில் ஏதும் சொல்லவில்லை. துறவிக்கு வருத்தமாகப் போய்விட்டது! அருகில் இருந்த ஒரு கல்மீது அமர்ந்தார். 
தேவதையும் துறவியும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே பூக்களைத் தொடுத்து விற்பவன் ஒருவன் அங்கு வந்தான். மணம் மிகுந்த அந்த மலர்களை பறித்துக் கூடையில் போட்டுக்கொண்டான். பிறகு சந்தோஷமாகப் பாடிக்கொண்டே புறப்பட்டான். 
இதைப் பார்த்துக்கொண்டிருந்த துறவியால் தாங்க முடியவில்லை. அவர் தேவதையிடம் வாய்விட்டுக் கேட்டுவிட்டார். 
""நான் அந்த மணம் நிறைந்த மலர்களை பறிக்காமல் முகர்ந்தேன்....அதை நீ திருட்டு என்றாய்!....இப்போது இவனோ எல்லாவற்றையும் பறித்துச் செல்கிறான்!.....நீயோ பேசாமலிருக்கிறாய் ! என்னிடம் குற்றம் கண்ட நீ இப்போது ஏன் எதுவும் பேசவில்லை?'' என்று கேட்டார் அந்த இளம் துறவி.
அதற்கு தேவதை, ""அருளே வடிவான துறவி சிறு தவறும் செய்யக்கூடாது!. அப்படித் தவறு நிகழுமாயின் அவர்களைத் தடுத்து நல்வழிப் படுத்துவதுதான் என் கடமை!....மற்றவர்களைப் பற்றி நான் எதுவும் பேசுவதில்லை!'' என்று கூறியது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/24/w600X390/sm19.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/24/என்-கடமை-2869550.html
2869549 வார இதழ்கள் சிறுவர்மணி தோல்வி என்பது நிரந்தரமல்ல! -பொன்மணிதாசன் DIN Saturday, February 24, 2018 08:44 PM +0530 தோல்வி என்பது நிரந்தரமல்ல
தொடர்ந்தால் வெற்றி கை கூடும்---அந்த
தோல்விதானே வெற்றிக்குரிய
தொடங்கும் படியின் முதலாகும்!

கற்று சிறக்க தோல்வியென்பது
கடைசியில் வைக்கும் முற்று அல்ல----நீ
உற்று படித்தால் உலகே கையில்!
உனக்கு எதுவும் தடையல்ல!


இழந்த பலத்தை இருமடங்காக்கும்
ஈட்டிய தோல்வியும் ஒரு வெளிச்சம்! --நீ
விழுந்த இடத்தை விலக்கி நடக்க
விழையுமந்த பெரு வெளிச்சம்!

மனதில் பதிந்த தோல்வியின் பதிவை
ஊக்கத்தாலே கரைத்திடுவாய்---ஊக்கம்
வெற்றியினோடு உடனிருந்தென்றும்
உயர உனக்கே கை கொடுக்கும்!

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/24/w600X390/sm18.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/24/தோல்வி-என்பது-நிரந்தரமல்ல-2869549.html
2869546 வார இதழ்கள் சிறுவர்மணி கதைப் பாடல்: பலூன் பாடம்! -தளவை இளங்குமரன். DIN Saturday, February 24, 2018 08:30 PM +0530 வெள்ளரிக்காய் பலூன் ஒன்று 
விரும்பி நானும் வாங்கினேன்!
உள்ளிழுத்து ஊதும் காற்றில் 
உடைந்து சோகம் தாங்கினேன்!

பூசணிக்காய் பலூன் ஒன்று 
பொறுத்து நானும் வாங்கினேன்!
ஆசையோடு ஊதும்போது 
அதுவும் உடைந்து ஏங்கினேன்!

முடிவில் முயல் பலூன் ஒன்று 
முயன்று நானும் வாங்கினேன்!
கடிதில் அதுவும் உடைந்து போகக்
கடையை விட்டு நீங்கினேன்!

சேர்த்தகாசு தீர்ந்த தென்று
தேம்பிக் கண்கள் வீங்கினேன்!
பார்த்துச் செலவு செய்வதென்ற 
பாடம் கற்றுத் தூங்கினேன்!

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/24/w600X390/sm17.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/24/கதைப்-பாடல்-பலூன்-பாடம்-2869546.html
2869545 வார இதழ்கள் சிறுவர்மணி முத்திரை பதித்த முன்னோடிகள்: மீனாட்சி அம்மா லக்ஷ்மி பாலசுப்ரமணியன், கடுவெளி.  DIN Saturday, February 24, 2018 08:25 PM +0530 சங்க இலக்கியங்கள் போர் முறைகள் மற்றும் அவற்றிற்கான பயிற்சி முறைகள் பற்றியும் விளக்குகின்றன. பயன்படுத்தாத எந்த ஆயுதமும் நாளடைவில் துருப்பிடித்து பயனற்றதாகிவிடும். ஆகவே அவ்வப்பொழுது அவற்றை பட்டை தீட்டி கொண்டே இருப்பர். அதுபோல படைவீரர்கள் போரில்லாத காலங்களில் பயிற்சி செய்யாமலே இருந்தால் அவர்களின் போர்த்திறன் மழுங்கிவிடும். எனவே இதுபோன்ற காலங்களில் அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
அப்பயிற்சியை "களரி' என்று அழைத்தனர். இதன்மூலம் களத்தில் செய்யும் பயிற்சிகளை ஒவ்வொரு போர்வீரனும் முழுமையாக அறிந்து கொள்கிறான். மேலும் வீரர்களின் உடல் மற்றும் மன வளம் இதனால் வலுப்பெறுகிறது. தமிழகத்தில் "களரிப் பயிற்சி' என்றழைக்கப்படும் இத் தற்காப்புக் கலை கேரளத்தில் "களரிப் பையாட்டு' என்று அழைக்கப்படுகிறது. கேரளமும் தமிழகத்துடன் இணைந்து அந்நாட்களில் "தென் தமிழகம்' என்று அழைக்கப்பட்டது.
அகஸ்திய முனிவரே, பரசுராமருடன் இணைந்து தென் தமிழகத்தில் களரிப் பயிற்சியை தோற்றுவித்தவர் ஆக கருதப்படுகிறார். இத் தற்காப்புக் கலை பின்னாளில் புத்த பிட்சுக்கள் மூலம் சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளுக்கு பரவி புதுப்புது உத்திகளும் இணைக்கப்பட்டு குங்பூ ,
கராத்தே, கோபுடோ என பல்வேறு பெயர்களைப் பெற்ற புதிய கலைகளாக உருவெடுத்தன!
இத்தற்காப்புக் கலையை கற்றுக்கொடுப்பவரை "ஆசான்' என்று கேரளத்தில் அழைக்கின்றனர். ஆண்களே பங்குபெற்ற இந்தத் துறையில் பெண்ணொருவரும் முத்திரைப் பதித்து தற்காப்பு கலையை கற்றுக் கொடுக்கும் ஆசானாக விளங்கி வருகிறார். 
அவர்தான் திருமதி மீனாட்சி அம்மா!

கேரளத்தின் "கண்ணூர்' என்ற இடத்திற்கு 45 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள "வடகரா' என்ற இடத்தில் இவர் தனது பயிற்சிப் பள்ளியை நிறுவியுள்ளார்.
மீனாட்சி அம்மா 7 வயது சிறுமியாக இருந்தபொழுது கண்காட்சி ஒன்றில் களரி தற்காப்பு கலையை செய்து காட்டியது கண்டு பெரிதும் ஈர்க்கப்பட்டார். வீட்டிற்கு வந்த பின்பும் அவருக்கு அதே நினைவாக இருந்தது. தன் வீட்டின் பின்புறம் அந்த பயிற்சிகளை செய்ய முயற்சி செய்தார். ஆனால் மிகவும் பழமைவாதிகளாக இருந்த வீட்டு முதியவர்கள் அவரை தடுத்தனர்.
இதனால் திடீர் திடீரென்று மதிய வேளைகளில் வீட்டிலிருந்து சிறுமி மீனாட்சி காணாமல் போய்விடுவாள். மாலை வீடு திரும்புவார். முதல் ஒரு வாரம் யாருக்கும் சந்தேகம் எழவில்லை. ஆனால் அடுத்த வாரம் இவரை பல்வேறு இடங்களிலும் தேடத் தொடங்கினர். இறுதியாக மயானத்திற்கு அருகே இருந்த தென்னந்தோப்பு ஒன்றில் சிறுமி மீனாட்சி வியர்க்க விறுவிறுக்க களரி பயிற்சிகளை செய்து கொண்டிருப்பதை கண்டனர்! தன் மகளுக்கு களரிப்பயிற்சிகளின் மேலிருந்த அதீத ஆர்வத்தை கண்ட அவரது தந்தை, "ராகவன் ஆசான்' என்பவரிடம் மீனாட்சியையும் அவரது சகோதரியையும் பயிற்சிக்கு அனுப்பினார்!
கேரளத்தில் பெரும்பாலானவர்கள் இதை எதிர்த்தனர்! கேலி செய்தனர்! மேலும் பெண்களை இத்தகைய பயிற்சிகளில் ஈடுபடுத்துவது தெய்வ குற்றமாகி விடும் என்று பயமுறுத்தினர்! "பெண்களுக்கு பயிற்சியளிக்கும் உன்னிடம் எங்கள் வீட்டு ஆண்களை பயிற்சிக்கு அனுப்ப மாட்டோம்' என ராகவன் ஆசானை மிரட்டினர்.
களரிக்கு ஆண் பெண் என்ற பேதமில்லை என்று கூறி அனைவரையும் திகைப்படைய செய்தார் அவர்! இறுதியாக ராகவன் ஆசானுக்கு மீனாட்சியை திருமணம் செய்து கொடுத்தார் அவரது தந்தை! இதன்மூலம் பெண்களுக்கு அவர் தனியாக களரிப் பயிற்சி தொடங்கினார். பெண் பயிற்சியாளர் என்பதால் பல பெண்களும் ஆர்வத்தோடு கற்க முன் வந்தனர்.
களரி பயிற்சியில் பெண்கள் பயிற்சி பெறும் இடத்தில் ஆண்களுக்கு அனுமதி இல்லை! எனவே மூடிய கதவுகளுக்கு பின்னால் இவர் தன் மாணவிகளுக்கு பயிற்சியளித்தார்! அதுவும் புடவையை கட்டிக்கொண்டு! 50 ஆண்டுகள் தொடர்ந்த இந்த திரைமறைவு பயிற்சி 2008 ஆம் ஆண்டு ராகவன் ஆசானின் மறைவுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது! 
ஆதி நாட்களில் இப்பயிற்சியை ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே கற்க அனுமதிக்கப்பட்டது. சிறுவனாய் இருந்த ராகவன் ஆசானுக்கு இப்பயிற்சியை கற்றுக்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.
ஆனாலும் களரிப் பயிற்சியை கற்றுக்கொண்ட மாணவர் ஒருவர் அவருக்கு இலவசமாக கற்றுக்கொடுத்தார். தான் கற்று கொண்ட பயிற்சியை ஜாதி, மத பேதமின்றி அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என விரும்பினார் அவர். எனவே அவரது விருப்பத்தை நிறைவேற்ற மீனாட்சி அம்மா அனைவருக்கும் பயிற்சியளித்து வருகிறார்.

அறிந்து கொள்வோம் வாருங்கள்.

(1) ராகவன் ஆசானால் 1949 ஆம் ஆண்டு கடத்த நாடு களரி சங்கம்' தோற்றுவிக்கப்பட்டது.
(2) களரி பயிற்சிகளின் முக்கிய நோக்கமே ஆயுதங்கள் ஏதும் அற்ற ஒருவன் தன்னை தற்காத்து கொள்வது ஆகும். பிற்காலங்களில் குச்சிகள் , கத்திகள் போன்ற பல ஆயுதங்களும் இப்பயிற்சியில் இணைக்கப்பட்டன.
(3) களரிப்பயிற்சியை கற்றுக்கொள்ள உகந்த காலம் ஜூன் முதல் செப்டம்பர் வரை ஆகும். ஒரு நாளில் காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. வானில் சூரியனின் அமைப்பை பொ ருத்து பயிற்சியின் தீவிரமும் கடினத்தன்மையும் வேறுபடுகின்றன.
(4) களரிப்பயிற்சியின் போது காயம் ஏற்பட்டால் மருத்துவ குணம் நிரம்பிய எண்ணெய்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
(5) களரிப் பயிற்சி அளிக்கும் முதல் பெண்மணி என்ற சிறப்பை கருத்தில் கொண்டு இவருக்கு இந்திய அரசு 2017 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தது.
(6) தற்காப்புக்காக மட்டுமே களரியை பயன்படுத்த வேண்டும் என்றும் பிறரை தாக்குவதற்காக பயன்படுத்த கூடாது என்றும் மாணவர்களிடம் உறுதி பெற்ற பின்பே இக்கலை பயிற்றுவிக்க படுகிறது.
(7) மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்காத நாட்களில் கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் திருவிழாக்களில் இவர் தனது பயிற்சியை செய்து காட்டுகிறார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/24/w600X390/sm16.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/24/முத்திரை-பதித்த-முன்னோடிகள்-மீனாட்சி-அம்மா-2869545.html
2869543 வார இதழ்கள் சிறுவர்மணி குரு பக்தி! -எல். நஞ்சன் DIN Saturday, February 24, 2018 08:20 PM +0530 ஒரு காட்டில் ரிஷி ஒருவர் குடில் அமைத்துக் கொண்டு ஜபத்திலும், யாகத்திலும், பூஜைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். குடிலின் அருகே ஒரு ஆறு ஓடிக்கொண்டிருந்தது. குடிலுக்கு மறுகரையிலிருந்த ஒரு பெண்மணி ரிஷியிடம் மிகுந்த பக்தி பூண்டிருந்தாள். பூஜை முடிவில் நிவேதனம் செய்வதற்காக தினமும் அவருக்கு பசும்பாலை எடுத்துக்கொண்டு வருவாள். ஆற்றோரம் இருக்கும் மலர்களையும் அவள் ஒரு கூடையில் பறித்து வருவாள். ஆற்றில் சிறிதளவே தண்ணீர் இருந்ததால் அவளால் எளிதாக ஆற்றைக் கடக்க முடிந்தது. தினமும் இதை ஒரு பாக்கியமாகக் கருதி அவள் பக்தியுடன் செய்துவந்தாள். இந்தக் காரியத்தால் அவளுக்கு மனநிறைவும், நிம்மதியும் ஏற்பட்டது. 
ஒரு நாள் கனத்த மழை பெய்தது!....ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. பசுவிடமிருந்து கறந்த பாலையும், பக்தியுடன் பறித்த புஷ்பங்களையும் எவ்வாறு ரிஷியிடம் சேர்ப்பது என்று அவளுக்குப் புரியவில்லை. மிகுந்த பக்தியுடன் ரிஷியை நினைத்தாள். கண்களை மூடி ரிஷியின் உருவத்தைத் தியானம் செய்தாள். அவரிடம் சரணடைந்தாள். தனக்கு ஆற்றைக் கடந்து வர உதவி செய்யும்படி ரிஷியிடம் வேண்டிக் கொண்டாள். 
ஆற்றின் அக்கரையிலிருந்த ரிஷி தனக்குள், "இந்தப் பெண் எப்படி இன்று வருவாள்?...ஆற்றில் இப்படி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறதே....பூஜைக்கு பஷ்பங்களும், பாலும் இன்று வருமா?' என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தார். 
அப்போது அந்தப்பெண் மெல்ல பால்குவளையுடன் ஆற்றில் இறங்கினாள்! என்ன ஆச்சரியம்! ஆறு வழிவிட்டது! சரியான நேரத்திற்கு பாலும் புஷ்பங்களும் ரிஷியைச் சென்று அடைந்தன. 
ரிஷிக்கு ஆச்சரியம்..... 
""எப்படி இது சாத்தியமாயிற்று? ஆற்றில் இவ்வளவு நீர் பெருக்கு இருக்கிறதே?''
""உங்களை பக்தியோட நினைச்சேன்....பாலும், புஷ்பமும் உங்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்க வழி செய்ய உங்ககிட்டேயே வேண்டிக்கிட்டேன்....எல்லாம் உங்க அருள்தான் சாமி'' 
தனக்கு இவ்வளவு சக்தியிருக்கிறதா என்று ரிஷி யோசனை செய்தார். இத்தனை நாள் பூஜை புனஸ்காரங்கள், ஜப, ஹோமங்கள் செய்த பலனாயிருக்கும் என்று நினைத்துக் கொண்டார். சற்றே கர்வம் தலைக்கேறியது. தன் சக்தியைப் பரிசோதிக்க ஆற்றுக்குச் சென்றார். 
ஆற்றில் வெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது. ரிஷி காலை ஆற்றில் வைத்தார். கால் தண்ணீருக்குள் சென்றது. இரண்டாவது அடியில் வெள்ளம் அவரை இழுத்தது. விழுந்துவிட்டார். பக்கத்தில் சாய்ந்திருந்த ஒரு மரக்கிளையைப் பிடித்துக் கொண்டு கரையேறினார். உடலும் உடையும் ஈரமாகித் தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது.
கடவுளிடம், ""இதென்ன ஆச்சரியமாயிருக்கிறது?....என்னை பக்தியுடன் நினைத்த பெண்மணிக்கு வழிவிட்ட ஆறு எனக்கு வழிவிட ஏன் மறுக்கிறது?'' என்று சத்தமாகக் கேட்டார். 
அப்போது ஒரு தேவதை, "" உனக்கு இது கூடப் புரியவில்லையா? அவள் அவளது குருவான உன் மீது அளவு கடந்த பக்தி வைத்திருந்தாள். அது அவளுக்குப் பயனளித்தது. நீ உன் குருவை மறந்து விட்டாய்!....உனக்கே சக்தியிருப்பதாய் நினைத்துக் கொண்டாய்...அதன் விளைவுதான் இது!'' என்று கூறியது.

(நம்பிக்கையின் சக்தி அளவிடமுடியாதது.)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/24/w600X390/sm15.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/24/குரு-பக்தி-2869543.html
2869542 வார இதழ்கள் சிறுவர்மணி தந்திரத்தின் பலன்! -தங்க. சங்கரபாண்டியன் DIN Saturday, February 24, 2018 08:18 PM +0530 ஒரு வியாபாரி உப்பு மூட்டையை வாங்கினான். அதைத் தன் கழுதையின் மீது ஏற்றி வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தான். வழியில் ஒரு ஓடை. அதில் கழுதை இறங்கியது. அப்போது கழுதையின் கால் தடுமாறி ஒடையில் விழுந்தது. தண்ணீரில் உப்பு கரைந்து போனது. கழுதை எழுந்தபோது உப்பு மூட்டையின் கனம் மிகவும் குறைந்திருந்தது. தண்ணீரில் விழுந்த உப்பு கரைந்ததால்தான் எடை குறைந்தது என்பதை கழுதை அறிந்து கொண்டது. 
மற்றொரு நாள் இதே போன்று உப்பு மூட்டையை கழுதை மீது ஏற்றினான் வியாபாரி. அதை ஏற்றிக்கொண்டு வியாபாரியுடன் திரும்பியது. வழக்கம்போல் ஓடை எதிர்பட்டது. ஓடையில் இறங்கிய கழுதை வேண்மென்றே தண்ணீரில் விழுந்தது. உப்பும் தண்ணீரில் கரைந்தது. கழுதையின் பாரம் வெகுவாகக் குறைந்தது. 
வியாபாரிக்கு கழுதையின் தந்திரம் புரிந்தது. இம்முறை உப்புக்கு பதிலாக கடற்பஞ்சு மூட்டைகளை வாங்கினான். அதை கழுதையின் மீது ஏற்றினான். வியாபாரி கழுதையின் முதுகில் சுமையை ஏற்றினான். ஊர் திரும்பும் பாதையில் ஓடையைக் கண்ட கழுதைக்கு குஷி! கடகடவென்று நடந்து வேண்டுமென்றே ஓடையில் விழுந்தது. ஆனால் கடற்பஞ்சு கரையவில்லை! மாறாக, கடல்நுரை ஏராளமான தண்ணீரை உறிஞ்சிக் கொண்டது. கழுதைக்கு சுமை மிகவும் கனமாகிவிட்டது. 
தான் செய்த தந்திரம் தனக்கே இடைஞ்சலாகிவிட்டது கண்டு நொந்துகொண்டது கழுதை. 
நீதி: உழைப்பிலிருந்து பின் வாங்க நினைத்தல் சரியல்ல.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/24/w600X390/sm14.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/24/தந்திரத்தின்-பலன்-2869542.html
2869539 வார இதழ்கள் சிறுவர்மணி முத்துக் கதை: உழைப்பின் ஆனந்தம்! -மயிலை மாதவன் DIN Saturday, February 24, 2018 06:19 PM +0530 ஒரு ஜமீன்தார் ஒரு நாள் பக்கத்து ஊருக்கு ஏதோ ஒரு வேலையாக குதிரை வண்டியில் ஏறிச் சென்றார். திரும்பி வரும்போது வண்டியின் சக்கரம் ஒன்று பழுதாகி விட்டது. பக்கத்திலிருந்த கருமானிடம் சென்றார். வண்டியை பழுது பார்த்துத் தரும்படி சொன்னார். 
அது பொழுது சாய்ந்த வேளை. கருமானின் உதவி ஆட்கள் வீடு திரும்பிவிட்டனர். கருமானுக்கு துருத்தி போட உதவிக்கு ஆள் இல்லை. ""துருத்தி போட ஒரு ஆள் இருந்தால் பழுது பார்க்க முடியும்'' என்றார் கருமான். 
அவசரமாக வீடு திரும்ப வேண்டியிருந்ததால் வேறு வழியில்லாமல் தானே துருத்தி போடுவதாகச் சொன்னார் ஜமீன்தார். 
உடனை கருமான் வேலையைத் தொடங்கினான். ஜமீன்தார் துருத்தி போட ஆரம்பித்தார். 
ஜமீந்தாருக்கு இதற்கு முன் உழைத்துப் பழக்கம் இல்லாததால் உடலிலிருந்து வியர்வை பெருகி ஓடியது. வலது கை வலித்தால் இடது கையாலும், இடது கை வலித்தால் வலது கையாலும் மாற்றி மாற்றி துருத்தி போட்டார். இருந்தாலும் அவர் முகத்தில் ஒரு ஆனந்தம் ஏற்பட்டது. உடம்பில் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது போல் இருந்தது. மேல் துண்டால் அடிக்கடி உடலையும், முகத்தையும் துடைத்துக் கொண்டார்!
சக்கரம் பழுது பார்க்கப்பட்டு வண்டியில் பூட்டப்பட்டது. 
ஜமீன்தார் கருமானிடம், ""நான் உனக்கு எவ்வளவு கூலி கொடுக்க வேண்டும்?'' என்று கேட்டார். 
""வழக்கமாக நான் இதற்கு ஆறு வெள்ளிக் காசுகள் வாங்குவேன்....நீங்க துருத்தி போட்டதால் நான்கு வெள்ளிக் காசுகள் கொடுங்க....போதும்!'' என்றார் கருமான்.
ஜமீன்தார் சட்டைப் பைக்குள் கையை விட்டு ஆறு பொற்காசுகளை எடுத்து அவனிடம் நீட்டினார். 
"" நான் வெள்ளிக்காசுகள்தானே கேட்டேன்!.....நீங்க பொற்காசுகள் ததருகிறீர்களே?....''
ஜமீன்தார் கருமானை நோக்கிக் கை கூப்பி, ""இது உன்னுடைய கூலி அல்ல!....நான் உனக்குக் கொடுக்கும் குருதட்சிணை!....உடல் உழைப்பில் இத்தனை ஆனந்தம் இருக்கிறதென்று நீதான் எனக்கு முதன்முறையாகச் சொல்லிக் கொடுத்தாய்!....இனி உழைப்பதற்காக சில மணி நேரங்களாவது நான் தினமும் செலவிடுவேன்!'' என்று மகிழ்ச்சியாகக் கூறினார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/24/w600X390/sm5.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/24/முத்துக்-கதை-உழைப்பின்-ஆனந்தம்-2869539.html
2869538 வார இதழ்கள் சிறுவர்மணி பொன்மொழிகள்! DIN DIN Saturday, February 24, 2018 06:17 PM +0530 எப்பொழுதும் இனிமையாகவும், சிரித்த முகத்துடனும் இருங்கள்! அது ஒருவித வழிபாடுதான்! கடவுளுக்கு அருகில் உங்களைக் கொண்டு சேர்க்கும்! 
- விவேகானந்தர்.
 
மற்ற உயிரினங்களிடமிருந்து மனிதனைப் பிரித்துக் காட்டுவது சிரிப்பு ஒன்றே! 
- ஜோஸப் அடிகள்.

எல்லா மொழிகளிலும் சிரிப்பு ஒன்றுதான்! 
- ஆர்தர் லாங்

மகிழ்ச்சி வரும்போது வரட்டும்!... நீங்கள் சிரிக்க ஆரம்பித்து விடுங்கள்! 
- ஜீன் டி லா புருவாரி

அறிவு காட்டும் வழியைவிட ஆன்மா காட்டும் வழி சிறந்தது! 
- டால்ஸ்டாய்

அறிவுள்ள குழந்தை மகிழ்ச்சியுள்ள பெற்றோரை உருவாக்குகிறது. 
- சியாபி

கஞ்சத்தனமாக வாழ்ந்து பணம் சேர்ப்பவன் அதிக காலம் அதை அனுபவிக்க மாட்டான். 
- யுவாங்சுவாங்

சொற்கள் வெறும் நீர்க்குமிழிகள்! செயல்கள் தங்கத் துளிகள்! 
- கன்பூஷியஸ்

உள்ளத்தில் வெளிச்சத்தை ஏற்றிக்கொள்! உலகே ஒளிரும்! 
-இந்தியா

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/24/w600X390/sm4.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/24/பொன்மொழிகள்-2869538.html
2869536 வார இதழ்கள் சிறுவர்மணி குறள் பாட்டு: ஆள்வினை உடைமை DIN DIN Saturday, February 24, 2018 06:13 PM +0530 (பொருட்பால் - அதிகாரம் 62 - பாடல் 5 )

இன்பம் விழையான் வினை விழைவான் தன் கேளிர் 
துன்பம் துடைத்து ஊன்றும் தூண்.

-திருக்குறள்

இன்பம் ஒன்றே பெரிதென்று
ஆசை கொண்டு வாழாமல்
செய்ய நினைக்கும் செயலிலே
கவனம் கொள்பவன் வென்றிடுவான்

செயலில் வெல்ல நினைப்பவன்
முழுமையாக உழைத்திடுவான்
குடும்பத் துன்பம் போக்கிடுவான்
தூண்போல் தாங்கி வாழவைப்பான்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2013/12/28/1/w600X390/thiruvalluvar.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/24/குறள்-பாட்டு-ஆள்வினை-உடைமை-2869536.html
2869535 வார இதழ்கள் சிறுவர்மணி தேடுவதற்கு ஒன்று! DIN DIN Saturday, February 24, 2018 06:12 PM +0530 விஞ்ஞானி ஐன்ஸ்டீன் மூன்று கண்ணாடிகள் வைத்திருப்பார். ""ஏன் மூன்று கண்ணாடிகள்?'' என்று ஒருவர் கேட்டார். 
""படிப்பதற்கு ஒன்று...மற்றொன்று தூரப்பார்வைக்கு!....''
""அது சரி,....மூன்றாவது எதற்கு?''
""சில சமயம் இரண்டும் காணாமல் போய்விடுகின்றன....அவற்றைத் தேட மூன்றாவது கண்ணாடியை உபயோகப்படுத்துகிறேன்!'' என்றார்.

புகழேந்தி, ஆறுபாதி.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/24/w600X390/sm3.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/24/தேடுவதற்கு-ஒன்று-2869535.html
2869534 வார இதழ்கள் சிறுவர்மணி ஊக்கப்படுத்துங்கள்! DIN DIN Saturday, February 24, 2018 06:11 PM +0530 ஜான் மாக்ஸ்வெல் என்ற அறிஞரிடம் ஒருவன், ""துணிவுடனும், நேர்த்தியாகவும் ஒரு செயலைச் செய்து முடிக்க என்ன செய்யவேண்டும்?'' என்று கேட்டான். அதற்கு ஜான் மாக்ஸ்வெல், ""ஊக்கம்!...ஊக்கமளிக்க வேண்டும்! ரொட்டியைத் தின்று பசியாற முடியும்! ஆனால் அதில் சிறிது வெண்ணையைச் சேர்த்துக் கொடுத்தால் சாப்பிடுபவருக்கு அதில் சிறிது உற்சாகம் ஏற்படும்! ஊக்கப்படுத்துங்கள் அது ஒன்றே வழி!'' என்றார்.

அ.கருப்பையா, பொன்னமராவதி. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/24/w600X390/sm2.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/24/ஊக்கப்படுத்துங்கள்-2869534.html
2869533 வார இதழ்கள் சிறுவர்மணி மனோதிடம்! Saturday, February 24, 2018 06:11 PM +0530 சுதாசந்திரனுக்கு ஒரு விபத்தில் கால் அகற்றப்பட்டது. செயற்கைக்கால் பொருத்தப்பட்டது. அந்த நிலையிலும் நாட்டியமாட முயற்சித்து வெற்றி பெற்றார். அப்போது ஒருவர் அவரிடம் ""காலிழந்த உங்களால் எப்படி நாட்டியமாட முடிந்தது?'' என்று கேட்டார். ""நாட்டியமாட கால்கள் மட்டும் முக்கியமல்ல....மனத் திண்மைதான் முக்கியம்!'' என்றார் சுதாசந்திரன்.

நெ.இராமன், சென்னை - 600074

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/24/w600X390/sm1.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/24/மனோதிடம்-2869533.html
2864692 வார இதழ்கள் சிறுவர்மணி தகவல்கள் 3 Saturday, February 17, 2018 12:00 AM +0530 இசையின் மகிமை!
ஒரு பிச்சைக்காரன் மொர்ட்டிடம் யாசகம் கேட்டான். அப்போது அவரிடம் பணமில்லை. அங்கேயே ஓர் இசை அமைத்து, அதைக் காகிதத்தில் எழுதி அவனிடம் தந்தார். ஓர் இசைக்கூடத்தின் பெயரைச் சொல்லி, ""அங்கே கொண்டு போய்க் கொடு. பணம் தருவார்கள்'' என்றார். பிச்சைக்காரன் அவ்வாறே செய்ய கை நிறையப் பணம் தந்தார்கள். 
ந.பரதன், ஏரல். 

பயம்!
ஐசன்ஹோவர் அமெரிக்க ஜனாதிபதியாக ஆவதற்கு முன் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தார். அப்போது ஒரு பேராசிரியர் ஐசன்ஹோவரிடம், ""நீங்கள் இங்கே வருவதற்கு முன் நாங்கள் எவ்வளவு பயந்து கொண்டிருந்தோம் தெரியுமா?'' என வெட்கத்தோடு சொன்னார். 
ஐசன்ஹோவர் சிரித்துக் கொண்டே, ""அப்படியா?....இங்கே வருவதற்கு முன் உங்களைப் பற்றி நான் எவ்வளவு பயந்து கொண்டிருந்தேன் தெரியுமா?'' என்றார். 
ஆர்.அஜிதா, கம்பம். 

நன்கொடை!
அயர்லாந்தில் ஒரு புதிய அனாதை இல்லத்திற்கு நன்கொடையாக 2000 டாலரை ஹென்றி போர்டு கொடுத்தார். இச்செய்தி மறுநாள் நாளிதழ்களில் 20,000 டாலர் என வெளியாகி இருந்தது. ""தவறுதலாக ஒரு பூஜ்யம் சேர்க்கப்பட்டு செய்தி வெளியாகிவிட்டது'' என்று அனாதை இல்ல இயக்குனர் ஃபோர்டிடம் மன்னிப்புக் கேட்டார். 
"எதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்?...மீதி 18000 டாலருக்கான காசோலை இந்தாருங்கள்'' என அளித்தார் ஃபோர்டு!
மு.ரியானா, கம்பம்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/16/w600X390/sm1.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/17/தகவல்கள்-3-2864692.html
2864693 வார இதழ்கள் சிறுவர்மணி குறள் பாட்டு DIN DIN Saturday, February 17, 2018 12:00 AM +0530 ஊக்கம் உடைமை
வெள்ளத்து அனையது மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.
                                             - திருக்குறள்
குளத்திலுள்ள நீர்மட்டம்
எவ்வளவு உயர்ந்து உள்ளதோ
அந்த அளவில் குளத்திலே
மலர்ந்த மலர்கள் உயர்ந்திடும்

வெள்ளம் உயரும் அளவிலே
மலர்கள் மேலே உயர்ந்திடும்
உள்ளம் நிறையும் அளவிலே
உயர்வு வந்து சேர்ந்திடும்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/16/w600X390/sm2.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/17/குறள்-பாட்டு-2864693.html
2864694 வார இதழ்கள் சிறுவர்மணி ஆதி சங்கரர் - பொன்மொழிகள்! DIN DIN Saturday, February 17, 2018 12:00 AM +0530 * இறைவனிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். நன்றி உணர்வை வளர்க்கும் மனப்பாங்கை பயிற்றுவித்துக் கொள்ளுங்கள். 

* ஆற்றலுடன் பணிவையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

* பலன்களை எதிர்பார்க்காது பணிபுரியுங்கள். இதனால் தீய ஊழ்வினைப் பலன்களை ஒழித்து மகிழ்ச்சி பெறலாம்.

* தியானம் செய்யுங்கள்!....சாந்தம் மிகுந்த கடவுளின் அம்சம் உங்களிடம் உள்ளது என்று தியானத்தின் மூலம் உணருங்கள்.

* பிறர் பேசுவதை உற்றுக் கேளுங்கள். கவனிக்கும் திறனை வளருங்கள்.

* உங்கள் சிந்தனைகள் மனப்போக்கு ஆகியவற்றில் கவனமாயிருங்கள்.

* நல்லறிஞர் துணை நாடுங்கள்.

* உங்கள் நேரத்தை வம்பிலும் குறை கூறுவதிலும் வீணாக்காதீர்கள்.

* தற்போதைய செயலிலும் காலத்திலும் ஒன்றியிருங்கள்.

* உங்கள் செயல்களை ஆன்மீகமாக்கி விடுங்கள்!

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/16/w600X390/sm3.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/17/ஆதி-சங்கரர்---பொன்மொழிகள்-2864694.html
2864695 வார இதழ்கள் சிறுவர்மணி முத்துக் கதை: பழைய சோறு! DIN DIN Saturday, February 17, 2018 12:00 AM +0530 தரும காரியங்களோ, நற்செயல்களுக்கு உதவி செய்தோ அறியாத ஒரு கனவான் இருந்தார். ஒரு நாள் அவர் தன் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சூடான அறுசுவையுடன் கூடிய உணவு அது! அவரது மருமகள் அவருக்கு உணவு பறிமாறிக் கொண்டிருந்தார். அப்போது வாசலில் வாசலில் பசியுடன் ஒருவர், "தாயே ஏதேனும் சாப்பிடக் கொடுங்கள்!'' என்று சத்தமிட்டுக் கேட்டார். இதைக் காதில் வாங்கிய மருமகள் வாசலுக்குச் சென்று சத்தமாக தன் மாமனாரின் காதில் விழும்படி, "என் மாமனாரே பழையதைத்தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்!....ஆகவே நீங்கள் வேறு வீடு சென்று கேளுங்கள்!'' என்றாள் மருமகள்.
 ஆனால் மாமனாருக்கு கோபம் வந்துவிட்டது! "நான் புதிதாக செய்த சுடுசோறு சுவையுடன் சாப்பிடும்பொழுது பழையதைத்தான் சாப்பிடுகிறேன் என்று பொய் சொல்லி நீ எப்படி என்னை அவமானப்படுத்துவாய்?....ஆகவே இப்பொழுதே இந்த நிமிடமே வீட்டை விட்டு வெளியேறு!'' என்று சீறினார்!
 ""மாமா!....கோபப்படாமல் நான் சொல்வதைக் கேளுங்கள்!...சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு நான் வீட்டை விட்டுச் செல்கிறேன்!.....மனிதர்களுக்கு பூர்வ ஜென்ம புண்ணியத்தினால்தான் பொருள், செல்வம் கிடைக்கிறது!.....இப்போது உங்களிடம் உள்ள பொருள் எல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியத்தினால் கிடைத்தவை. இந்தப் பிறவியில் ஒரு புண்ணியமும், ஒரு நல்ல காரியமும் நீங்கள் செய்யவில்லை....அதனால்தான் நீங்கள் சாப்பிடுவதை பழையது என்று சொன்னேன். இப்போது சொல்லுங்கள்!....நான் சொன்னது தவறு என்றால் நான் இப்பொழுதே இந்த வீட்டை விட்டுப் பிறந்த வீடு செல்கிறேன்'' என்றாள் மருமகள்.
 "மகளே!....நீதான் என் கண்ணைத் திறந்தாய்!....நீ சொன்னது நூற்றுக்கு நூறு சரியே!....இனி நான் தான தருமங்கள் செய்து மறுபிறவிக்கு செல்வம் சேர்ப்பேன்!'' என்றார் கனவான்.
 
 தீபம். எஸ்.திருமலை
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/16/w600X390/sm4.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/17/முத்துக்-கதை-பழைய-சோறு-2864695.html
2864697 வார இதழ்கள் சிறுவர்மணி காடுகள்!   DIN DIN Saturday, February 17, 2018 12:00 AM +0530 கருவூலம்
இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 22.8 % காடுகளே! தற்போதைய நிலவரப்படி சுமார் 3,775 சதுர கிலோ மீட்டர்கள்! சில வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட சுமார் 1,309 சதுர கி.மீ. பரப்பளவு அதிகமாகியிருக்கிறது. இது உலகின் மொத்த வனப்பரப்பில் இரண்டு சதவிகிதம். இயற்கையான, ஆரோக்கியமான உயிர் வாழ்க்கைக்கு வனங்கள் மிக அவசியம். மேலும் நீர் வளம் பெருகவும், சூழல் பாதுகாப்புக்கும் வனங்கள் மிக முக்கியம்! கதைகள் மூலமும், கவிதைகள் மூலமும், கட்டுரைகள் மூலமும் இயற்கையை நேசிக்கும் வல்லுனர்கள் வனங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய வண்ணம் இருக்கின்றனர்.
காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப இந்தியக் காடுகள் வெப்பப்பகுதி, மித வெப்பப்பகுதி, சமவெப்பப் பகுதி, ஆல்ப்பைன் பகுதி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. 
கிடைக்கும் மழைப்பொழிவு, மண்ணின் தன்மை, பொதுத் தோற்றம், உயிரிகள் போன்றவற்றின் அடிப்படையில் ஆறு விரிந்த பகுதிகளாக பதிமூன்று முக்கிய இனக்காடுகள் இந்தியாவில் இருப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர். 

வெப்பப் பகுதி ஈரக் காடுகள்: (TROPICAL WET FORESTS)
இப்பிரிவின் கீழ் குறிப்பிடும் நான்கு வகைக் காடுகள் இடம் பெறுகின்றன. அவை....

* பசுமை மாறாக் காடுகள் (மழைக் காடுகள்)
மேற்குப் பகுதியின் மேற்கு மலைத் தொடர்கள், கர்நாடகத்தின் வடக்குப் பகுதி, குடகு, ஆனை மலைக் குன்றுகள், மைசூர், அந்தமான் நிக்கோபார் தீவுகள், அசாமின் பிரம்மபுத்திரா நதிக்கரை போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இங்கு வருடம் 250 செ.மீ. க்கும் அதிக மழை பெய்யும்! சராசரி 27 டிகிரி செல்ஷியஸ் கால நிலையில் இருக்கும். இங்கே 50-60 மீட்டர் உயரம் வரை வளரும் மரங்கள் பெரும்பான்மையாக உள்ளன. முக்கியமாக பரந்த இலைத் தாவரங்கள் வளரும் இந்தப் பகுதியில் நீண்ட நாள் வாழும் எபிபைடெஸ் (EPIPHYTES), மற்றும் பல காட்டுக் கொடிகளும் நிறையவே காணப்படுகின்றன. புதர்கள் பொதுவாக உலர்ந்தவை. பெரிய மரங்களின் அடிப்பாகம் பரந்து தாங்கலாக அமைந்திருக்கும். 

* பகுதி பசுமை மாறாக் காடுகள்: (SEMI EVERGREEN FORESTS) 
மேற்கு மலைத்தொடர், அசாமின் சில பகுதிகள், வங்காளம், பீகார், ஒரிசா, அந்தமான் தீவுகள் என்ற இடங்களில் காணப்படுகின்றன. 
வருடம் 200-250 செ.மீ. மழையும், 26 டிகிரி செல்ஷியஸ் சராசரி உஷ்ணமும் உள்ள பகுதிகளில் இவ்வனங்கள் காணப்படும்.
இத்தகைய வனங்கள் என்றும் பசுமையுள்ள காடுகளுக்கும் இலையுதிர் காடுகளுக்கும் இடைப்பட்ட தன்மை கொண்டவை. 20 முதல் 40 மீட்டர் உயரம் வரை வளரும் மரங்கள் ஏராளமாய் இருக்கும். பனி விழத்தொடங்கும்போது இலைகளை உதிர்த்துவிடும். இவ்வாறு நேரும் இடங்கள் வழியே சூரிய ஒளி காட்டினுள்ளே நுழைவதால் மரங்களின் அடிப்பகுதிகளில் புதர்களி மண்டுகின்றன. 

* இலை உதிர் ஈரக்காடுகள்: (MOIST DECIDUOUS FORESTS) 
ஒன்றிரண்டு மாதங்கள் தொடரும் வறட்சியில் , சராசரி 150 - 200 செ.மீ. மழையும் கொண்ட பிரதேசங்களான மேற்கு மலைத் தொடரின் கிழக்கு பாகங்களில் "இலை உதிர் ஈரக்காடுகள்' காணப்படுகின்றன, மேலும் சோட்டா நாக்பூர், காசிக் குன்றுகள், அந்தமானின் வறண்ட பகுதிகள், இமாலயத்தின் அடிவாரத்தின் சில பகுதிகள் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. மேல் தட்டிலுள்ள பெரிய மரங்கள் வருடத்தின் பெரும்பகுதியும் இலைகள் இன்றி காணப்படுகின்றன. கீழ் மட்டத்தில் செடிகள் வளர்வதன் காரணமாக காடுகள் பொதுவாக பசுமையாகக் காணப்படுகின்றன. 

* கரையோர சதுப்புக்காடுகள்: (LITTORAL 
SWAMP FORESTS) 
கடல், காயல், நதி, ஓடை போன்றவற்றின் கரைகளில் காணப்படும் காடுகள் (உதாரணமாக- மாங்குரோவ் காடுகள், காற்றாடிக் காடுகள்)

* வெப்பப் பகுதியின் வறண்ட காடுகள்: (TROPICAL DRY FORESTS)

* வறண்ட இலையுதிர்க் காடுகள்: (DRY DECIDUOUS FORESTS)
75 - 125 செ.மீ. மழையும், ஆறு மாதம் வறட்சியும் கொண்ட பிரதேசங்களில் தோன்றுபவை. 10 - 25 மீட்டர் உயரம் வளரும் மேல்தட்டு மரங்கள் வருடத்தில் 2 - 4 மாதம் இலைகள் உதிர்க்கும். அதனால் மேல் பகுதி திறந்தும் சமமில்லாமலும் காணப்படும். சிறிய செடிகளும் தாவரங்களும் ஏராளமாக வளரும். இப்பகுதியில் படரும் கொடிகள் குறைவாகக் காணப்படும். இந்திய துணைக் கண்டத்தில் நாற்பது சதவிகிதமும் இத்தகை வனங்களே உள்ளன. இமய மலையின் அடிவாரம் முதல் தென்முனை வரை (மேற்குத் தொடர்ச்சி தவிர) பரந்து காணப்படும் இவை ராஜஸ்தான், காஷ்மீர், வங்காளம், கேரளம், தமிழ்நாடு, ஒடிசா என்ற இடங்களிலும் அமைந்துள்ளது. 

* முட்காடுகள்! (THORN FORESTS)
மிகக் குறைந்த அளவு (25 - 75 செ.மீ.) மழை பெய்யும். பாறைகள் நிறைந்த, முள் செடிகள் அதிகமுள்ள காடுகள் இவை. (உதாரணமாக - யுபோர்பியா, அக்கேஷியா போன்றவற்றின் இனங்கள்) 
அபூர்வமாக காணப்படும் மரங்கள் உயரம் குன்றி இருக்கும். சிறு செடிகள் மிகுந்த இப்பகுதியில் மழைக் காலத்தின் புற்களும், குட்டைச் செடிகளும் வளரும். பஞ்சாப், ஹரியானா, குஜராத், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற இடங்களில் சில பகுதிகள், மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு போன்ற இடங்களில் முட்காடுகள் காணப்படுகின்றன. 

* மித வெப்ப மலைக்காடுகள்: (MONTANE SUB TROPICAL 
FORESTS) 
உஷ்ணப்பகுதி, மித காலநிலைப்பகுதி வனங்களுக்கு இடையே இடம்பெற்றுள்ள இத்தகைய காடுகளில் இவை இரண்டிலும் காணப்படுகின்றன. தாவர இனங்கள் இடையே கலந்து காணப்படும் மரங்கள் பொதுவாக உயரம் குறைந்தும், அடிப்பாகம் வடிவம் குறைந்தும் இருக்கும். நிறைய தாவரங்கள் வளர்கிற இத்தகைய காடுகள் உயரம் குறைந்த மலைகளிலும் அடிவாரங்களிலும் 700 - 1700 மீட்டர் உயரத்தில் காணப்படுகின்றன. 
இப்பகுதியில் மூன்று வகைக் காடுகள் காணப்படுகின்றன. அவை

* பரந்த இலைக்காடுகள்
நீலகிரி மலைகள், பழனிமலை, மகாபலேஸ்வர், ராஜஸ்தானின் மவுண்ட் அபு, வங்காளத்தில் கலிம் பேக், டார்ஜிலிங், திரிபுரா, மணிப்பூர், அஸ்ஸôம் பகுதிகளில் காணப்படுகின்றன. 

* பைன் மரக்காடுகள்
பைன் மரத்தின் பல்வேறு வகைகள் வளரும் காடுகள் இவை. இமயத்தின் அடிவாரங்களிலும், காசி, நாகாலாந்து, மணிப்பூர் மலைப்பகுதிகளிலும், பெருமளவில் காணப்படுகின்றன. 

* வறண்ட பசுமைக் காடுகள்
நீண்ட வறட்சியும், பனி உறையும் குளிரும் கொண்ட ஹரியானா, ஹிமாசலப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாபின் சிவாலிக் மலைத்தொடர் ஆகிய இடங்களில் காணப்படும்.

* மித காலநிலை மலைக்காடுகள்: (MONTANE TEMPERATE FORESTS)
மலைப்பகுதிகளில் 1700 மீ. உயரத்தில் இதமான உஷ்ணப் பகுதியில் காணப்படும். பெய்யும் மழையின் நிலையைப் பொறுத்து இவை மூன்று இனங்களாகப் பிரிக்கப் படுகின்றன. 

* ஈரமுள்ள காடுகள்: (MONTANE WET TEMPERATE FORESTS) 
மழை அதிகமாகப் பெய்யும் இடங்களில் நீண்ட நாள் வாழும் தாவரங்கள் மிகுந்த என்றும் பசுமை கொண்ட காடுகள் உருக்கொள்கின்றன! 

* ஈரமுள்ள இமாலயக் காடுகள்: (HIMALAYAN MOIST FORESTS)
மேற்கு - மத்திய இமாசலப் பிரதேசங்களில் 1500 - 3000 மீ. உயரத்தில் வளர்கின்றன. ஓக் மரங்களும், பைன் மரங்களும் தனியாகவோ, செறிந்தோ காணப்படுகின்றன. 

* வறண்ட இமாலயக் காடுகள்: (HIMALAYAN 
DRY TEMPERATE FORESTS)
இமாலயத்தின் செங்குத்தான சரிவுகளிலும், பாறைகளும், கிரானைட் கற்களும் குவிந்துள்ள இடங்களில் காணப்படுகின்றன. சிறிய பெரிய தாவர இனங்களும் இடையிடையே கலந்து காணப்படும். 100 செ.மீ. குறைவாக மழை பெய்யும் பிரதேசங்களிலும் காணப்படும். இவை திறந்தவெளியில் அமைந்திருக்கும். 

* சப் ஆல்பைன் காடுகள்: (SUB ALPINE FORESTS)
இமாலயன் சரிவுகளில் 2800 - 3000 மீ. உயரத்திற்கு மேல் இத்தகைய வனங்கள் காணப்படுகின்றன. வருடத்திற்கு 65 செ.மீ. க்குக் குறைந்த மழையும், வாரக்கணக்கில் குளிர்ந்த காற்றும் உள்ள இடத்தில் பனி உருகி வரும் நீரை மட்டும் எதிர் நோக்கி வளரும் மரங்களைப் பார்க்கலாம்! பல்வேறு வகைப் பாசிகளும் இந்த மரங்களில் காணப்படுகிறது. 

* ஆல்பைன் காடுகள்: (ALPINE FORESTS)
சப் ஆன்பைன் பகுதிகளில் நிலங்கள் சற்று கடினமாக உள்ள இப்பகுதியில் மழையே இல்லை என்று கூறலாம். குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே காணப்படும். செடிகள் மிகக் குட்டையாக தரையின் மேல் படர்ந்து காணப்படும். இது இரண்டு வகைப்படும். 
H ஆல்பைன் பகுதிகளில் ஈரமுள்ள இடங்களில் காணப்படும் உயரம் குறைந்த குத்துச் செடிகள் இங்கே வளர்கின்றன.
H வறண்ட ஆல்பைன் புதர்கள் சில பகுதிகளில் காணப்படுகின்றன. 

சில தகவல்கள்!
மலைக்காடுகள்!

பூமத்திய ரேகையில் இருபுறமிருக்கும் இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் மழை நன்கு பெய்யும் இடங்களில் ஆயிரக் கணக்கான வருடங்களாக வளர்ந்து அடர்ந்து செழித்திருக்கும் முதுபெரும் கானகங்கள்! இங்குள்ள நெடிதுயர்ந்திருக்கும் மரங்கள் இலைகளை உதிர்ப்பதில்லை. கதிரவன் ஒளி படாததால் இருள் கவிந்திருக்கும் இக்காடுகள் மூன்றடுக்கு மாடி வீடுபோல் காணப்படுகின்றன. 
உச்சாணிக் கிளைகளிலும், மத்தியிலுள்ள கொடிகளிலும், கிளைகளிலும், கீழே உள்ள புதர்களிலும், தரையிலும் வெவ்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன. 
"சோலை மந்தி' (சிங்கவால் குரங்கு) மரத்தின் உச்சியிலேயே இருக்கும்! புதர்களில் காட்டுக்கோழி வசிக்கும்! கருநாகம் போன்ற ஊர்வன தரையில் நடமாடும். பறவைகள், பாலூட்டிகள், பூச்சிகள், புழுக்கள், நீரிலும், நிலத்திலும் வாழ்பவை, போன்ற பல்வேறு உயிரினங்களுக்கு சொர்க்கம் என்பது இம்மழைக்காடுகள்தாம்!

மாங்குரோவ் காடுகள்! (அலையாத்திக் காடுகள்)
சுனாமியின் பாதிப்பு பற்றி நாம் சில வருடங்களுக்கு முன்பு அறிந்தோம்! அத்தகைய பேராபத்திலிருந்து நம்மைக் காக்கும் காடுகள் இவை! இவை பெரும்பாலும் கடற்கரையை ஒட்டியிருக்கும். இந்த அலையாத்தி மரங்களின் வேர்கள் பூமியிலிருந்து ஒன்றை ஒன்று பின்னிக்கொண்டு தரைக்கு மேலேயும் காணப்படும். இவ்வகை மரங்கள் கடல் அலைகளின் சீற்றத்தை ஆற்றி சமநிலைக்குக் கொண்டு வருகின்றன. எவ்வளவு பொருத்தமான பெயர்! அதனால் கடலோரஙகளில் குடியிருக்கும் உயிரினங்கள் மற்றும் பயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன. கடல் சீற்றத்த்தை எதிர்கொள்ளும் இவ்வகை மரங்கள் இறைவனின் வரம் எனலாம்! இவ்வகைக்காடுகள் குறைந்ததாலேயே சுனாமியின் தாக்குதல் தீவிரமானதாக நிபுணர்கள் கருதுகின்றனர். தற்போது இக்காடுகளின் அவசியத்தை உணர்ந்து விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி வருகிறது. 
தமிழ்நாட்டில் கோடியக்கரை, பிச்சாவரம் போன்ற பகுதிகளில் இக்காடுகள் இருக்கின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இக்காடுகள் நிறைந்திருக்கின்றன. ஒடிசாவின் கோதாவரி டெல்டா, பிதார் கனிகா, மகாநதி டெல்டா பகுதிகள், மேற்கு வங்கத்தின் "சுந்தரவனம்', குஜராத்தின் கட்ச் வளைகுடா, மகாராஷ்டிரத்தின் "அச்ரா' , ஆந்திரப் பிரதேசத்தில் கிருஷ்ணா கழிமுகம், "லோரிங்கா' போன்ற பகுதிகள் சிறப்பானவை. 
தொகுப்பு : கோட்டாறு ஆ.கோலப்பன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/16/w600X390/sm46.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/17/காடுகள்-2864697.html
2864698 வார இதழ்கள் சிறுவர்மணி சீப்பு!   DIN DIN Saturday, February 17, 2018 12:00 AM +0530 மன்னர் மணிமாறன் இளவரசன் சிகையை மகாராணி சீப்பால் சீவி வகிடு எடுப்பதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். இளவலின் அடர்த்தியான் கேசம் பளபளவென பலகணியில் இருந்து வந்த சூரிய ஒளி பட்டு மின்னியது. வாசனாதி தைலங்களை ராணி தடவி நீவி விட்டாள். இளவரசன் தலையை அண்ணாந்து பார்த்தபடி சீப்பால் முடியை வாரிய போது, ""மெல்ல அம்மா ...'' என்று சிணுங்கினான். முடிச் சிக்கில் சீப்பின் பல் மாட்டி இழுத்திருக்க வேண்டும்.
 அப்போது தான் மன்னர் கவனித்தார். என்ன இது... சீப்பு சாதாரண மரக் கட்டையால் செய்து இருக்கிறது. நாடாளும் மன்னனின் மகன் தலை வார மரக்கட்டை சீப்பா...! அன்றே அமைச்சரைக் கூப்பிட்டு பொற்கொல்லரை வரவழைத்தார்.
 பொற்கொல்லர் வந்து வணங்கி நின்றார். அவரிடம் அரசர், "ம்.... ஆசாரியாரே.. இளவரசன் தலை வாரிக்கொள்ள தங்க சீப்பு ஒன்று செய்ய வேண்டும்''
 "அப்படியே மன்னா.. பிடியில் வைரக் கற்களைப் பதித்து அழகுறச் செய்து விடலாம்!''
 "அமைச்சரே, கஜானாவில் இருந்து அவருக்கு வேண்டிய தங்கக் கட்டி, வைரக் கற்களைத் தந்து எடையை கணக்கில் குறியுங்கள்''.
 "அப்படியே ஆகட்டும் மன்னா..'' அமைச்சர் வணங்கிச்சென்றார். பொற்கொல்லர் பின் தொடர்ந்தார்.
 ஒருவாரம் கழித்து அரசியார் புதிதாக வந்த தங்கச் சீப்பை எடுத்துப் பார்த்தார். ஒரு பெட்டிக்குள் பட்டுத்துணி சுற்றி பளபளப்பாக இருந்தது. கைப் பிடியில் வைரக் கற்கள் ஜொலித்தன!
 இளவரசன் குளித்து விட்டு வந்திருந்தான். "வா.. மகனே. உனக்கு தங்கத்தால் சீப்பு செய்திருக்கிறார் அப்பா. வந்து பார்..' இளவரசன் ஓடிவந்து அதைத் தூக்கிப் பார்த்தான். மின்னியது!
 "அழகாயிருக்கம்மா.. ஜோர்!''
 "இப்படி உட்கார்.. தலையை இந்தப் புதுச் சீப்பால் சீவிவிடுகிறேன்...வா!''
 சீப்பைத் தூக்கினால் மிகக் கனமாக இருந்தது.. நாலு தரம் சிக்கு முடியில் இழுக்க கூரான தங்கப் பற்கள் இளவரசனின் தலையைப் பிராண்ட ....
 "அம்மா வலிக்குதும்மா!''
 சீப்பின் கனத்தால் அரசியின் கையும் வலிகண்டது.
 ""யாரங்கே.. மரச் சீப்பை கொண்டு வாருங்கள்'' என்றார் அரசி.
 அரசியிடம் பழைய மரச்சீப்பு தரப்பட்டது. இளவரசனின் தலையைச் சீவ சுலபமாக சிக்கு நீங்கியது. இளவல் சுகமாக தலையைக் காட்டினான்.
 "இது தாம்மா நல்லா இருக்கு.. தங்க சீப்பு வேணாம்! கீறுது!''
 அப்போது தற்செயலாக அந்தப் பக்கம் வந்த மன்னர் அந்த பக்கம் வந்தவர் இந்தக் காட்சியைப் பார்த்தார்.
 "என்ன இது பழையபடி மரச்சீப்பு?.... ஏன் தங்க சீப்பு தரையில் கிடக்கிறது?''
 "அந்த தங்கச் சீப்பால் சீவினால் பிராண்டுதாம்!.... கை வேறே எனக்கு வலிக்குது!.....பழகிய சீப்புதான் நல்லா சீவுது!..... சிக்கெடுக்குது!''
 "சரி.. நான் அந்தத் தங்கச் சீப்பை எடுத்துச் செல்கிறேன்...உபயோகப்படுத்திக் கொள்கிறேன்.. மன்னர் எடுத்துச் சென்றார்.
 மறுநாள் மன்னர் தங்கச் சீப்பால் சீவிப்பார்த்தார். அத மன்னரின் தலையைக் கீறுகிறது.
 "உண்மைதான்!.... கீறுகிறதே! இழுத்தால் மண்டை புண்ணாகி விடும் போலிருக்கிறதே! ம்ஹூம்.... சரிவரவில்லை!''
 அப்படியே பெட்டியில் வைத்து அமைச்சரை அழைத்தார்.
 "இந்த தங்க சீப்பு பெட்டியை கஜானாவில் வைத்து விடுங்கள். உபயோகமில்லை!''
 அமைச்சர், "மன்னா.. சில பொருட்கள் எளிமையாக இருந்தாலும் அதன் பயன்பாடு இலகுவாக இருக்கும்.. அந்த வகையில் சீப்பு, செருப்பு, குடை, துடைப்பம் முதலியவை அடங்கும்....ஏன்? வெள்ளிக் குடை சிம்மாசனத்திற்கோ, பல்லக்கிலோ, அம்பாரியிலோ சரியாக இருக்கலாம்....ஆனால் வயல்வெளியிலோ, மைதானத்திலோ மிகக் கனமான அதை மழைக்குத் தூக்கிக்கொண்டு போக
 முடியுமா?''
 "உண்மை அமைச்சரே!....எளிமையே சிறப்பு! பகட்டு பயன் தராது என்பதை உணர்ந்தேன்!''
 
 -என்.எஸ்.வி.குருமூர்த்தி
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/16/w600X390/sm5.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/17/சீப்பு-2864698.html
2864699 வார இதழ்கள் சிறுவர்மணி முத்திரை பதித்த முன்னோடிகள்! இயற்கை வேளாண் விஞ்ஞானி டாக்டர் நம்மாழ்வார்   DIN DIN Saturday, February 17, 2018 12:00 AM +0530 எல்லாத் தொழில்களுக்கும் ஆதாரமாய் விளங்கும் ஒரே தொழில்! எல்லா நாடுகளும் ஈடுபடும் ஒரே தொழில்! அதுவே உழவுத்தொழில் எனப்படும் வேளாண் தொழிலாகும். 2000 ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் "சுழன்றும் ஏர் பின்னது உலகம்!' என்றார். "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்!' என்றார் பாரதியும்!
 பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதும் உற்பத்தியை பெருக்குவதும் எல்லா நாடுகளுக்கும் அவசியமான ஒன்றுஆகும்! எனவே 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அறிவியல் கண்டுபிடிப்புகள் அதிகம் தோன்றின. இதன் காரணமாக நிறைய வேதியியல் ரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தமது ஆராய்ச்சிக்கு பயன்பட்டது போக மீதமிருந்தவற்றை விஞ்ஞானிகள் வயல் பகுதிகளில் கொட்டினர். சில நாட்கள் கழித்து பார்த்த போது அங்கு ஒரு அதிசயம் நிகழ்ந்திருப்பது தெரியவந்தது. அதன் அருகே வளர்ந்திருந்த செடிகள் பூச்சி தாக்குதல் ஏதுமின்றி செழிப்பாக வளர்ந்திருந்தன. இதன்மூலம் இந்த ரசாயனங்கள் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை அழிக்கவும் பயன்படும் என்பதையும் அறிந்து கொண்டனர். எனவே உணவுப் பொருள் விளையும் வயல்களில் அவற்றைத் தெளித்து பார்த்தனர்.
 இப்படித்தான் இரசாயன உரங்களும் பூச்சிகொல்லிகளும் மனிதனுக்கு அறிமுகமாயின. "பசுமை புரட்சி' என்ற பெயரில் உலக நாடுகள் அனைத்தும் இவற்றின் பயன்பாட்டை ஆதரித்தன.
 ஆனால் இரண்டே இரண்டு பேர் மட்டும் இந்த செயற்கை உர பயன்பாட்டை தீவிரமாக எதிர்த்தனர். ஒருவர் ஜப்பானை சேர்ந்த வேளாண் விஞ்ஞான "மாசனோபு ஃபுக்குவாக்கா'. மற்றொருவர் நம் தமிழகத்தை சேர்ந்தவர். அவர்தான் "இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்' ஆவார்.
 இவர் தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகிலுள்ள "இளங்காடு' என்னும் சிற்றூரில் 6.4.1938 அன்று பிறந்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலை படிப்பை கற்றார். 1960 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் உள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்தார். பிறகு அங்கிருந்து விலகி மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் பணிக்குச் சேர்ந்தார். அங்கு 1969ஆம் ஆண்டு வரை பணி புரிந்தார். இச்சமயத்தில் ஜப்பானிய இயற்கை விஞ்ஞானி "மசனோபு' அவர்களில் ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டு உத்திகள் இவரை வெகுவாக கவர்ந்தன.
 ஒருமுறை பாண்டிச்சேரியில் உள்ள ஆரோவில்லுக்குச் சென்றார் இவர். அங்கிருந்த "பெர்னார்டு'என்ற ஆங்கிலேயர் இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்து இவரிடம் உரையாடினார். மேலும் தம்மிடம் இருந்த இயற்கை விவசாயம் குறித்த பல நூல்களை இவருக்கு பரிசளித்தார். அதன் மூலம் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களிடம் பரப்புவதே தமது நோக்கம் என முடிவு செய்தார்.
 உணவுப் பொருள் உற்பத்திக்கு இயற்கை விவசாய முறைகளாகிய மாற்று பயிர் சுழற்சி மற்றும் இயற்கை உரப் பயன்பாடு போன்றவையே சிறந்தது என்பதை தான் செல்லும் இடம்தோறும் பரப்பி வந்தார்.
 பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு, மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நெல் மற்றும் காய்கறி விதைகளின் பயன்பாடு, வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்தல் ,விவசாய நிலங்களை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துதல், நகர மயமாக்கல், தொழில் மயமாக்கல் மற்றும் மீதேன் வாயு எடுத்தல் போன்ற பல திட்டங்களை எதிர்த்தார். இவையாவும் "கண்ணை விற்று சித்திரம் வாங்குதற்கு சமம்!' என்று கூறினார்.
 மக்களிடம் இவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பலமுறை நடை பயணங்களை மேற்கொண்டார்.
 1998 இல் கன்னியாகுமரி முதல் சென்னை வரை பாரம்பரிய நெல் மற்றும் பிற பயிர் வளர்ப்பின் நன்மைகள் குறித்தும், இயற்கை வேளாண்மையின் அவசியத்தையும் வலியுறுத்தி 2002ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணை முதல் கொடுமுடி வரை 25 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டார்.
 2003 ஆம் ஆண்டு டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக பூம்புகார் முதல் கல்லணை வரை 25 நாட்களுக்கு நடைபயணம் மேற்கொண்டார். இவர் விவசாயிகளிடம் எளிய மொழியில் அவர்களுக்கு புரியும் வண்ணம் விளக்குவார். விவசாயத்தில் இயந்திரங்களின் பயன்பாடு பற்றி இவரிடம் சில விவசாயிகள் விவாதித்தனர்.
 "நான் நவீன தொழில்நுட்பத் திற்கு எதிரானவன் அல்ல. டிராக்டர் நல்லாத்தான் உழும். ஆனால் சாணி போடுமா ?' என்று அவர்களிடம் கேட்டார். இயற்கை விவசாயத்தை மக்களிடம் பரப்ப வேண்டும் என்பதற்காக தான் பார்த்து வந்த அரசுப் பணியை ராஜிநாமா செய்தார். மரபணு மாற்றுப் பயிர்கள் அதிக விளைச்சலை கொடுத்தாலும் அவை மனிதனுக்கு கேட்டை விளைவிக்கும் என்பதை நிரூபித்தவர் இவரே ஆவார். பாரம்பரிய பயிர்கள் அந்தந்த பகுதி மக்களுக்காகவே இயற்கை வழங்கிய வரம் எனக் கூறினார்.
 இன்றைக்கு இயற்கை விவசாயம் குறித்து மக்களுக்கு சிறிதளவேனும் விழிப்புணர்வு உள்ளதென்றால் அதற்கு காரணம் நம்மாழ்வாரே ஆவார். உழவர் ஈட்டும் ஒவ்வொரு பொருளும் பயன்படும் என்பதை குறிக்க "நுனி வீட்டுக்கு! நடு மாட்டுக்கு! அடி மண்ணுக்கு!' என்று தாம் செல்லும் இடங்களில் எல்லாம் கூறி வந்தார்.
 கரூர் மாவட்டத்தில் "வானகம்' என்னும் பண்ணையை ஆரம்பித்தார் .அதில் சுமார் 6000 இளைஞர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி அளித்தார்.
 இம்மாமனிதர் பட்டுக்கோட்டை அருகே "அத்தி வெட்டி' என்ற இடத்தில் மீதேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்தபோது உடல்நலக் குறைவு காரணமாக 30.12.2013 அன்று காலமானார்.
 
 அறிந்து கொள்வோம் வாருங்கள்.
 
 (1) நம்மாழ்வார் மிகவும் நேசித்த இந்தியர் திரு ராதேலால் ஹெர்லால் ரிச்சார்யா ஆவார். இவர் மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனராக இருந்தார். இவரே இந்தியாவின் 22,972 பாரம்பரிய நெல் ரகங்களை வெளிநாடுகளில் கைகளுக்கு செல்லாமல் பாதுகாத்தவர் ஆவார்.
 (2) ஒற்றை நாற்று நடவு முறை என்ற சாகுபடி முறையை ஆப்பிரிக்காவின் மடகாஸ்கரில் பயன்படுத்துகின்றனர். இம்முறை 1960ஆம் ஆண்டு தான் உலக மக்களின் கவனத்துக்கு வந்தது. இதை பல நாடுகளும் பாராட்டின. ஆனால் இம்முறை 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது என்ற செய்தியை உலகுக்கு வெளிப்படுத்தியவர் இவரே ஆவார்.
 (3) இவர் காந்தியைப் போலவே மேலாடையை துறந்தவர். கடும் குளிரிலும் இவர் மேல்சட்டை அணிந்ததில்லை.
 (4) குடும்பம், இந்திய அங்கக வேளாண்மை சங்கம், நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம், வானகம்,தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம் போன்ற பல அமைப்புகளை இவர் நிறுவியுள்ளார்.
 (5) இவர் "தாய் மண்', "உழவுக்கும் உண்டு வரலாறு', "தாய் மண்ணே வணக்கம்', "நெல்லை காப்போம்', "இனி விதைகளே பேராயுதம்', "என் நாடுடைய இயற்கையே போற்றி', 'களை எடு'... போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.
 (6) தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் இவருக்கு "சுற்றுச்சூழல் சுடரொளி' என்ற பட்டத்தையும், திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகம "மதிப்புறு முனைவர்' பட்டமும் வழங்கியுள்ளன.
 தொகுப்பு: என்.லக்ஷ்மி பாலசுப்ரமணியன்,
 கடுவெளி.
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/16/w600X390/sm6.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/17/முத்திரை-பதித்த-முன்னோடிகள்-இயற்கை-வேளாண்-விஞ்ஞானி-டாக்டர்-நம்மாழ்வார்-2864699.html
2864701 வார இதழ்கள் சிறுவர்மணி மாதிரிப் பள்ளி!   DIN DIN Saturday, February 17, 2018 12:00 AM +0530  அக்கா நான்தான் குருநாதர்!
 தம்பி நீதான் என் சீடன்!
 சொல்வதை நல்லாக் கேட்டுக்கணும்!
 நல்லதை மனசில் போட்டுக்கணும்!
 
 வணக்கம் சொல்லப் பழகிக்கொள்!
 வம்பு தும்பை விலக்கிக்கொள்!
 தூய்மை ஆடை உடுத்திக்கொள்!
 வாய்மையே பேசிட உறுதி கொள்!
 
 குட்டி நாய்க்குப் பாலூற்று!
 தொட்டிச் செடிக்கு நீரூற்று!
 சிட்டாய் வானில் பறந்திடுவாய்!
 பட்டம் போலே உயர்ந்திடுவாய்!
 
 உதிக்கும் பரிதி பார்த்து மகிழ்!
 உலவும் நிலவை அழைத்து மகிழ்!
 பறவை பாடல் கேட்டு மகிழ்!
 பனிமலர் குளிரைத் தொட்டு மகிழ்!
 
 அன்புச் செல்வம் நீதாண்டா!
 அழகாய்ப் பாடம் படித்துக் கொள்!
 கனிவாய் பாடம் போதிப்பேன்!
 கண்ணா! நாளையும் வந்திடடா!
 
 -செழியரசு

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/16/w600X390/sm8.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/17/மாதிரிப்-பள்ளி-2864701.html
2864702 வார இதழ்கள் சிறுவர்மணி நம் நிழல்! DIN DIN Saturday, February 17, 2018 12:00 AM +0530 கருமித்தனம் மிகுந்த செல்வன் ஒருவன் இருந்தான். அவன் ஞானி ஒருவரிடம் அறிவுரை பெறுவதற்காக வந்தான். அவனது கஞ்சத்தனத்தை அறிந்த அவர், ""நாம் ஈட்டுகின்ற செல்வம் பிறருக்கு பயன்பட வேண்டும். ஏழை, எளியவர்களுக்கு வாரி வழங்க வேண்டும். அதுதான் செல்வத்தின் பயன். செல்வத்தைச் சேர்த்து வைப்பதோ நமக்கு மட்டும் பயன் படுத்துவதோ தகாது'' என்றார்.
"அரும்பாடு பட்டுச் சேர்த்த செல்வத்தை பிறர்க்கு வழங்க உள்ளம் வருமா?...செய்ய இயலாததைச் செய்யச் சொல்கிறீர்களே?'' என்று கேட்டான் செல்வன். 
உடனே அவர், ""நாளை நண்பகல் நேரத்தில் வா!'' என்றார். 
அவனும் அப்படியே வந்தான். சிறிது நேரம் அவனிடம் பேசிக்கொண்டிருந்த அவர், ""சிறிது நேரம் வெளியில் வெயிலில் நில்!'' என்றார். பருத்த உடலைக் கொண்டிருந்த அவன் வெயிலில் நின்றான். சூடு தாங்க முடியவில்லை! கால்களை மேலும் கீழும் மாற்றி மாற்றி வைத்துத் தவித்துக் கொண்டிருந்தான். 
""கால்களை மாற்றி மாற்றி வைக்காதே! இரண்டு கால்களையும் ஊன்றி நில்!'' என்றார் ஞானி. 
"இதென்ன அநியாயமாய் இருக்கிறதே!...என்னால் சூடு தாங்க முடியவில்லை! நான் அந்த மரநிழலுக்குச் செல்லப் போகிறேன்!'' 
"உன் நிழல்தான் கீழே விழுந்துகொண்டிருக்கிறதே....அதில் நின்று கால் சூட்டைத் தணித்துக் கொள்ளலாமே!''
"என் நிழலில் பிறர் நிற்கலாமே தவிர நானே எப்படி நிற்க முடியும்??''
""செல்வமும் அப்படித்தான்!... நாமே அனுபவிப்பதால் எந்தப் பயனும் இல்லை... பிறர்க்குத் தந்தால் நல்லறம் செய்ததாக ஆகும்!'' என்றார் ஞானி.
அவரை வணங்கிய செல்வன், "உங்கள் அறிவுரைப்படி இனி நடப்பேன்!'' என்று அங்கிருந்து புறப்பட்டான். 
அ.ராஜா ரகுமான்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/16/w600X390/sm9.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/17/நம்-நிழல்-2864702.html
2864703 வார இதழ்கள் சிறுவர்மணி விடுகதைகள் DIN DIN Saturday, February 17, 2018 12:00 AM +0530 1. வயிறு புடைக்கத் தின்றால்தான் நிமிர்ந்து நிற்பான்...
2. பூரண சந்திர வடிவக்காரன், இவனைப் புரட்டிப் போட்டு எடுத்தால் சுவையாகி விடுவான்...
3. பக்கத்தில் இருப்பான், படுத்தால் மறைவான்...
4. தலையைச் சீவினால் தாளில் நடப்பான்...
5. அடிக்கடி தாவுவான், தவளையல்ல...
6. ஓடியாடிக் கத்துவான், உடலைத் தேடிக் குத்துவான்...
7. ஒரு துரைக்கு இரண்டு தொப்பி...
8. ஓட்டை வாயனுக்கு பல் விழுந்தால் முளைக்காது...
9. மூடாத பெரிய தொட்டி, எடுக்க எடுக்க நீர் இழுக்கும்...
- ரொசிட்டா
விடைகள்:
1. சாக்குப்பை
2. தோசை
3. நிழல்
4. பென்சில்
5. குரங்கு
6. கொசு
7. வறுத்த பட்டாணி
8. சீப்பு
9. கடல்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/16/w600X390/sm11.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/17/விடுகதைகள்-2864703.html
2864704 வார இதழ்கள் சிறுவர்மணி கடி DIN DIN Saturday, February 17, 2018 12:00 AM +0530 * "உன் பாட்டி ஒரு கரும்பை அப்படியே முழுங்கிட்டாங்கன்னு சொல்றியே, எப்படி?''
"கரும்பை ஜூஸôக்கித்தான்!''
கே.ஆர். உதயகுமார், 
பழைய எண் 38, புதிய எண் 75, முதல் மாடி, 
பின்கட்டு, பிடாரியார் கோயில் தெரு, சென்னை-600001.

* "நீ கணக்குல புலியாமே?...அப்படியா?''
"ஆமாமா!....புலிக்கும் கணக்கு தெரியாது....
எனக்கும் தெரியாது!''
எம்.அசோக்ராஜா, 
அரவக்குறிச்சிப்பட்டி.

* "பசிக்கு கை இருக்கும் போலிருக்கு!''
"என்ன உளர்றே?''
"பின்னே?....பசி வயித்தைக் கிள்ளுதே!''
செந்தில், பொறையார்.

* "இது என் தாத்தாவின் ஃபோட்டோ!''
"ரொம்ப "யங்' கா இருக்காரே!''
"கி.மு. விலே எடுத்தது!''
"அப்படீன்னா?''
"கிழவரா ஆகறதுக்கு முன்!''
எம்.ஏ.நிவேதா, 
3/14ஏ, அரவக்குறிச்சிப்பட்டி, திருச்சி-620015.

* "அந்தக்காலத்துக்கும், இந்தக் காலத்துக்கும் என்ன வித்தியாசம்?''
"இ!''
ஆர்.ரெங்கரத்தினம், காவல்காரபாளையம்.
வாரம் 2 டி-சர்ட் பரிசு
நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும் பட்டுக்கோட்டை ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும் 
தலா ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன. 
பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/16/w600X390/sm12.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/17/கடி-2864704.html
2864705 வார இதழ்கள் சிறுவர்மணி அங்கிள் ஆன்டெனா DIN DIN Saturday, February 17, 2018 12:00 AM +0530 கேள்வி
கடல் ஆமை என்பது தனி வகையா? நிலத்தில் வாழும் ஆமைக்கும் கடல் ஆமைக்கும் வித்தியாசங்கள் உண்டா?
பதில்: 
ஆமையில் மூன்று வகை உள்ளன. "மெரைன் டர்டில்' என அழைக்கப்படுவது கடல் ஆமை. இது வாழ்நாள் முழுவதும் கடலில்தான் இருக்கும். முட்டையிடுவதற்குக மட்டும் கரையோர மணல் வெளிக்கு வரும். கடல் ஆமையில் பச்சை ஆமை, ஆலிவ் ரிட்லி போன்ற இனங்கள் இந்தியக் கடல்களில் அதிகமாகக் காணப்படும். 
அடுத்தது நில ஆமை. நம்மைப் போல "வீடு' கட்டிக் கொண்டு நிலத்தில் வாழும் இனம். தீபாவளிக்குத் தீபாவளி குளிப்பவர்களைப் போல, எப்போதாவது ஆறு, குளங்களைத் தேடிப் போகும். இதுகூடத் தேவைப்பட்டால் மட்டுமே. இல்லையென்றால் தண்ணீர் இருக்கும் திசையில் கூட படுக்காது. ராமநாதபுரம், சித்தூர், கோலார் பகுதிகளில் இந்த வகை ஆமைகள் குடியிருக்கின்றன.
மற்றொரு வகை நீரிலும் நிலத்திலுமாகத் தங்கள் காலத்தைக் கழிக்கின்றன. குளத்து ஆமை, கூரை, வனத்து ஆமை என பத்துக்கும் மேற்பட்ட வகைகள் நம் நாட்டில் வாழ்கின்றன.
இந்த மூன்று வகை ஆமைகளும் எந்தக் காலத்திலும், எக்காரணம் கொண்டு தங்கள் இருப்பிடங்களை மாற்றிக் கொள்வதில்லை.

அடுத்த வாரக் கேள்வி
கொக்குகள் ஏன் ஒற்றைக் காலில் நிற்கின்றன? இதற்கு ஏதாவது தனிப்பட்ட காரணம் இருக்கிறதா?
பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/16/w600X390/sm13.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/17/அங்கிள்-ஆன்டெனா-2864705.html
2864707 வார இதழ்கள் சிறுவர்மணி விளையும் பயிர்!   DIN DIN Saturday, February 17, 2018 12:00 AM +0530 அரங்கம்
காட்சி - 1
இடம் - வீடு
மாந்தர் - நாகராஜன், நளினி, சுந்தர். 

நளினி: சுந்தர்! எங்கேயிருக்கே?.... 
சுந்தர்: டாய்லெட்லம்மா!.
நளினி: அப்புறம் எதுக்கு ரூம்ல லைட் எரியுது?.....ஃபேன் சுத்துது?.....
சுந்தர்: இப்ப வந்திருவேன்ல!......
நளினி: தப்பு!...ஒரு நிமிஷம்னாலும் அணைச்சிட்டுத்தான் போகணும்!. இப்படி ஒவ்வொரு தடவையும் செய்தேன்னா? கரண்ட் செலவுதானே!...வேஸ்டாத்தானே போகுது!...கூடாது!...தெரிஞ்சிதா? 
சுந்தர்: இதோ வந்துட்டேம்மா! (கதவைத் திறந்துகொண்டு வெளிப்படுகிறான்) அதான் வந்தாச்சில்லம்மா?.. (அலுத்துக் கொள்கிறான்). 
நளினி: இந்த பார்! நான் சொல்றதை நல்லாக் கேட்டுக்கோ! ஐநூறு யூனிட் வரைக்கும்தான் காசு கம்மி! அதுக்குள்ள செலவழிக்கப் பார்க்கணும்!...அப்பத்தான் இ.பி. சார்ஜ் கம்மியா வரும்!...தெரிஞ்சுதா? வீணா சுத்தக் கூடாதுன்னு சொல்றேன்? புரிஞ்சிண்டியா?

(தலையாட்டியவாறே சுந்தர் மெதுவாக அப்பாவின் அறையை எட்டிப் பார்த்தான். ஜன்னலைத் திறந்து விட்டுக் கொண்டு மெல்லிய வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருந்தார் நாகராஜன்) 

சுந்தர்: அப்பா ரூம்ல வெளிச்சமே இல்லம்மா! எப்டிம்மா படிக்கிறார்?
நளினி: ஜன்னல் திறந்திருந்தா போதுமான வெளிச்சம், காற்று ரெண்டும் கிடைக்கிறதில்லியா?.... எதுக்கு அநாவசியமா லைட்டும் ஃபேனும்? நீயும் அப்பா மாதிரி சிக்கனமா இருக்கப் பழகணும்!...நம்ம அப்பாவே அப்படி இருக்கும்போது நாம வீணா செலவு பண்ணலாமா? 
சுந்தர்: சரிம்மா! இனிமே நானும் அப்டியே செய்றேன்!.....இத்தனை நாள் வேஸ்ட் பண்ணிட்டேன்!......ஸôரிம்மா!.....
நளினி: பரவால்லே....குழாயை சரியா மூடாம வந்திருக்க பார்!.....தண்ணீர் ஓழுகுது போய் மூடு!.....

(டாய்லெட்டுக்குள் நுழைந்து சரியாய் மூடுகிறான் சுந்தர்)

நளினி: தண்ணீர் நிக்கிற அளவு மூடினாப் போதும். இறுக்காதே! வாஷர் போயிடும்! குழாய் ரிப்பேர் ஆச்சுன்னா அப்பாதானே ப்ளம்பரைத் தேடி அலையணும்?.....பாவமில்லியா?.... அடிக்கடி ரிப்பேர் வந்தா வெட்டிச் செலவுதானே?....
சுந்தர்: சரிம்மா!...... 

(கருத்தோடு அம்மா முகத்தைப் பார்த்தான். கொஞ்சம் கவலை வந்துவிட்டது அவனுக்கு.)

காட்சி - 2
இடம் - பள்ளிக் கூடம். 4-ம் வகுப்பு, ஏ- பிரிவு அறை
மாந்தர்- சுந்தர், ரமணி, ரவி, 
வகுப்பாசிரியர் கிருஷ்ணன்.

கிருஷ்ணன்: எல்லாரும் மரத்தடிக்குக் கிளம்புங்க....பி.டி. மாஸ்டர் வெயிட்டிங்...(சுந்தர் தயங்கி நிற்கிறான்) உனக்குத் தனியாச் சொல்லணுமா?....சீக்கிரம் போ!....மாஸ்டர் அட்டெண்டன்ஸ் எடுப்பார்!.....
சுந்தர்: லைட்டு, ஃபேனெல்லாம் அணைச்சிட்டுப் போறேன் சார்! அதுபாட்டுக்கு வெட்டியா சுத்திட்டு இருக்கும்!....

(கிருஷ்ணன் திரும்பிப் பார்க்கிறார்.....ரமணி வந்து கொண்டிருக்கிறான்.)

ரமணி: சார்! பி செக்ஷனுக்கும் இப்போ பி.டி. பீரியட்தான்! எல்லாரும் போயிட்டாங்க!..... அங்க போயி லைட்டு, ஃபேனெல்லாம் அணைச்சிட்டு வர்றேன்.
கிருஷ்ணன்: அப்டியா?....ஓ.கே., அது சரி, ரவி எங்கே? 
ரவி: இதோ வந்திட்டேன்! லைப்ரரிக்குப் போயிருந்தேன் சார்!.....
கிருஷ்ணன்: அங்க எதுக்குடா போனே ? 
ரவி: இங்கிலீஷ் காமிக்ஸ் புக்ஸ் படிக்கப் பிடிக்கும் சார் எனக்கு!.....அதை வாங்கப் போனேன்!....
கிருஷ்ணன்: (ஆச்சரியத்தோடு) யார்ரா உங்களுக்கு இதெல்லாம் சொல்லிக் கொடுத்தது? 
ரமணி, ரவி : சுந்தர்தான் சார்!.....நாங்க மூணு பேருமே ஃப்ரென்ட்ஸ் சார்!....சேர்ந்துதான் படிப்போம்!.... விளையாடுவோம்!......சேர்ந்தே கோயிலுக்கெல்லாம் போவோம்!.....நேத்துக் கூட லோக்கல் லைப்ரரிக்குப் போனோம் சார்! ஒரே தெரு சார் நாங்க!....
கிருஷ்ணன்: வெரி குட்!......படு சுட்டியா இருக்கீங்களே!.... எங்கூட வாங்க!......

காட்சி - 3
இடம் - தலைமையாசிரியர் அறை
மாந்தர் - ரமணி, ரவி, மற்றும் ஆசிரியர் கிருஷ்ணன்.

கிருஷ்ணன்: எங்கே சுந்தர்?....அவனை விட்டுட்டு வந்திட்டீங்களா?
ரமணி: கூடத்தான் சார் வந்தான்! திடீர்னு காணலை!.....
ரவி: இல்ல சார்....பாத்ரூமுக்குப் போயிருப்பான் போலிருக்கு.
சுந்தர்: இதோ வந்துட்டேன் சார்!....(சுந்தர் ஓடிவருகிறான்) மாடியிலேர்ந்து பார்த்தப்போ தோட்டத்துல தண்ணி வீணாப் போயிட்டிருந்தது!....குழாயை நிறுத்தப் போனேன் சார்!....
கிருஷ்ணன்: டேய்!......வாட்ச்மேன் செடிகளுக்குத் தண்ணி பாய்ச்சிட்டிருப்பார்டா!......அதைப் போய் நிறுத்திட்டு வந்திட்டியா?.... 
சுந்தர்: செடிகள் பூராவும் நிரம்பி, வெளில வேஸ்டாப் போயிட்டிருந்தது!.....அதான் போய் நிப்பாட்டினேன்! யாராவது வழுக்கி விழுந்திட்டா?....
(ஆச்சரியத்தோடு அவனையே பார்த்தார் ஆசிரியர். "விளையும் பயிர் முளையிலே!" என நினைத்தவாறே தலைமையாசிரியரோடு என்னவோ பேசினார். மூவரையும் அழைத்தார் தலைமையாசிரியர் ராமசுப்பு. -பளபளப்பாய் உறையிட்ட புதிய பேனாக்களை ஆளுக்கொன்றாக நீட்டினார்.)
ராமசுப்பு: இந்தாங்க! இந்தச் சாக்லெட்டையும் வாங்கிக்கிங்க!.... என்றவர், அடிக்கடி சாக்லெட் சாப்பிடக் கூடாது!... ..பல்லுக் கெட்டுடும், தெரிஞ்சிதா! கெட்டிக்காரப் புள்ளைங்க!.... இப்டித்தான் இருக்கணும்! இது போலவே படிப்புலயும் கவனம் செலுத்தணும்...நல்லாப் படிக்கணும்!.....புரிஞ்சிதா!அதுதான் முக்கியம்!.... 
சுந்தர், ரமணி, ரவி: சரி, சார்!.. - ஒரு சேரக் கூறினர் மூவரும். சந்தோஷமாகத் துள்ளி ஓடும் அவர்களைப் பார்த்து 
கிருஷ்ணன்: நேரே பி.டி. கிளாசுக்குப் போங்கடா!..... விளையாட்டும் முக்கியமாக்கும்!

திரை
உஷாதீபன்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/16/w600X390/sm14.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/17/விளையும்-பயிர்-2864707.html
2864708 வார இதழ்கள் சிறுவர்மணி படி! படி! DIN DIN Saturday, February 17, 2018 12:00 AM +0530 விடியலில் விழித்துப் படி!
விதியினை மாற்றப் படி!
துடிப்புடன் உவந்து படி!
துணை வரும் கல்வி! படி!

குடியது உயரப் படி!
குணமுடன் திகழப் படி!
மிடிமைகள் அகலப் படி!
மேன்மைகள் அடையப் படி!

நொடியும் வீண் ஆகாதபடி
நூல்தனைத் தேடிப் படி!
பண்புகள் சிறக்கப் படி!
பாரில் புகழ் சேரப் படி!

அடிக்கடி குறளைப் படி!
அதன் பொருள் உணர்ந்து படி!
பிடித்திடும் வண்ணம் படி!
பரவசம் பெருகும்! படி!

பிடிப்புடன் வாழப் படி!
பிறர் உன்னை வாழ்த்தப் படி!
அறிவுச்சுட ரொளிரப் படி!
அன்போடு ஒழுகப் படி!

- செங்கை இரயிலடியான்

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/16/w600X390/sm15.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/17/படி-படி-2864708.html
2864700 வார இதழ்கள் சிறுவர்மணி பண்பே வெல்லும்! Friday, February 16, 2018 02:20 PM +0530 கதைப் பாடல்
 அறமே விரும்பும் பாண்டவரும்
 அதர்ம நெறிசேர் கெளரவரும்
 திறமாய்க் கல்வி கற்றிடவே
 சேர்ந்தார் குருவாம் துரோணரிடம்!
 
 வேதம் முதலா நூல்களுடன்
 வில், வாள், வேல் சார் வித்தைகளைப்
 பேதம் இன்றி இருபேர்க்கும்
 பேரன்புடனே கற்பித்தார்!
 
 குருகுலப் பருவம் முடிந்ததுவே!
 குழுவாய் நிற்கும் இருபேர்க்கும்
 பொருந்தும் அறிவின் திறனறியப்
 பொதுவாய் வைத்தார் தேர்வொன்று!
 
 குழுவுக் கொன்றாய் மாளிகையும்
 கூடவே நூறு பொற்காசும்
 வழங்கித் தத்தம் மனையிடத்தை
 வழாது நிறைக்க ஆணையிட்டார்.
 
 நுட்பம் தேறாக் கெüரவர்கள்
 நூறு வண்டி வைக்கோலைக்
 கட்டிக் கொணர்ந்து மாளிகைக்குள்
 காற்றுப் புகாமல் நிறைத்திட்டார்!...
 
 பாண்டவர் மாளிகை விளக்குகளால்
 பிரகாசமாக ஒளிர்ந்ததுவே!
 ஆர்த்தெழும் இனிய இசை முழக்கம்
 அனைவர் செவிக்கும் ஆனந்தம்!
 
 வாசப் புகையும் சந்தனமும்
 வந்தோர் மூக்கை நிறைத்தனவாம்!
 பாச விருந்தின் பல்சுவையால்
 வயிறு நிரம்பி வழிந்ததுவாம்!
 
 கெüரவர் மனையைக் கண்ணுற்றோர்
 கண்கள் சுழித்து இகழ்ந்திட்டார்!
 செவ்விய பாண்டவர் மனை கண்டு
 சிந்தை மகிழ்ந்து புகழ்ந்திட்டார்!
 
 -குரு. சீனிவாசன்
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/16/w600X390/sm7.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/17/பண்பே-வெல்லும்-2864700.html
2848640 வார இதழ்கள் சிறுவர்மணி அங்கிள் ஆன்டெனா Saturday, February 10, 2018 02:12 PM +0530 கேள்வி : உலகில் எத்தனை வகையான எறும்புகள் உள்ளன? அவை எல்லாமே சுறுசுறுப்பானவைதானா?

பதில் : எறும்புகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இனங்கள் இருக்கின்றன. இவற்றில் தொண்ணூறு சதவீதம் வரை கருப்பு, பழுப்பு மற்றும் சிவப்பு நிறங்களில்தான் இருக்கின்றன. சில வகை இங்கிலீஷ் (ஐரோப்பிய மற்றும் பிரிட்டிஷ்) எறும்புகள் பச்சை நிறத்தில் கூட இருக்கின்றன.
நிற பேதங்கள் இல்லாமல் அநேகமாக எல்லா எறும்புகளும், நம்ம ஊர் பிள்ளையார் எறும்பு ரேஞ்சுக்கு படு சுறுசுறுப்பான பேர்வழிகள்தான். 
வாசல் பக்கமாக வீட்டுக்குள் நுழைந்து, தரை, சுவர் நடந்து, ஏறி, கிச்சனுக்குள் புகுந்து அலமாரி மேல்தட்டில் இருக்கும் சர்க்கரையைச் சாப்பிட எவ்வளவு சிரமப்படுகிறது? 
இவ்வளவு கஷ்டப்படாமல் அடுத்தவன் உழைப்பில் வாழும், ஒருவகை சோம்பேறி எறும்பும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வகை எறும்புகள், சில நோஞ்சான் எறும்புகளைத் தங்களின் கைப்பாவைகளாக
வைத்துக் கொண்டு, அவற்றை தேனைக் குடித்து வரச் செய்யுமாம். அளவுக்கு மீறி குடித்துவிட்டு வரும் இந்த நோஞ்சான்கள், நடக்க முடியாமல் வந்து தேனைக் கக்கி விடுமாம். 
அந்தத் தேனை தலைவன் எறும்பு குடித்து தனது பசியைத் தீர்த்துக் கொள்ளுமாம். 
இப்படி ஒரு வகை இருப்பதாகச் 
சொல்கிறார்கள். இதெல்லாம் ஒரு பிழைப்பா என்று தோன்றுகிறதல்லவா?

]]>
http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/jan/20/அங்கிள்-ஆன்டெனா-2848640.html
2860377 வார இதழ்கள் சிறுவர்மணி கருவூலம்: நீலகிரி மாவட்டம்!   Saturday, February 10, 2018 02:07 PM +0530 சென்ற இதழ் தொடர்ச்சி....

ஊட்டி மலை ரயில்!

ரயில் பயணங்கள் இனிமையானவை. அதிலும் இந்த மலை ரயில் பயணம் மறக்க முடியாத இனிமையானது. இந்தியாவின் சிறப்பு வாய்ந்த நான்கு ரயில் மலை ரயில் பாதைகளில் நீலகிரி மலை ரயில் பாதையும் ஒன்று. கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையத்திற்கும், ஊட்டிக்கும் இடையே 46 கி.மீ. தூரம் செல்லும் இப்பாதைதான் இந்தியாவின் ஒரே பற்சட்ட இருப்புப் பாதை. 
இப்பணி 1845-இல் தொடங்கப்பட்டு 1899-இல் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது! மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான பாதை மிகவும் சரிவானது. என்பதால் தண்டவாளத்திற்கு இடையே பற்சக்கரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ரயிலில் உள்ள பற்சக்கரங்கள் கீழுள்ள பற்சட்டங்கள் மீது பதிந்து அதனை பற்றியபடி ரயில் இயங்குகிறது. 

இந்த 46 கி.மீ. பாதையில் 12 நிறுத்தங்கள், 16 குகைகள், 250 பாலங்கள், 208 வளைவுகளும் உள்ளன. இந்த 5 மணி நேர பயணமானது நம்மை கண்கொட்டாமல் பார்க்க வைக்கும்! மலைகளின் பேரழகு, ஆர்ப்பரிக்கும் சிற்றருவிகள், மெதுவாக தவழ்ந்து செல்லும் நீரோடைகள், காட்டு மிருகங்கள் என நீலகிரி மாவட்டத்தின் இயற்கை எழிலை ஊட்டிக்கு செல்வதற்கு முன்பே சொல்லாமல் சொல்லிவிடும். 

பழமையும் பெருமையும் கொண்ட நீலகிரி மலை ரயில் 2005 இல் யுனெஸ்கோவினால் உலகப் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்ட சுற்றுலாத் தலங்கள்!
கையில் கேமராவுடன் நிதானமாக ரசித்துப் பார்க்க வேண்டிய அழகிய பூங்காக்களும், ஏரிகளும், அருவிகளும், காட்சி முனைகளும் (VIEW POINT) கொண்ட தமிழகத்தின் பெருமைக்குரிய மாவட்டம் இது! இங்குள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் பார்த்து ரசிக்க வேண்டிய இயற்கையான எழில் ஓவியங்கள். 

காட்சி முனைகள் 
கம்பீரமான உயர்ந்த மலைசிகரங்களையும், அதன் சரிவுகளையும், இடையில் உள்ள நீரோடைகளையும், மற்றும் ஏரிகள், நீர்த்தேக்கங்களையும், மேலே மேகம் சூழ்ந்த பரந்த வானத்தையும், ஒருங்கே பல கோணங்களில் பார்த்து ரசிக்கும் வகையில் அமைந்த இடங்கள் காட்சி முனை எனப்படுகிறது. 

தொட்டபேட்டா!
நீலகிரி மாலைத்தொடரில் உயரமான சிகரம். இதன் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு தொலைநோக்கிகள் வழியாக சுற்றுலாப் பயணிகள் முழு மாவட்டத்தையும், சூழ்ந்துள்ள வனப்பகுதிகளையும், அருகருகே அமைந்துள்ள மூன்று சிகரங்களையும் கண்டு ரசிக்கலாம்.

மேற்கு நீர்பிடிப்புப் பகுதிகள்!
ஊட்டியிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு அனுமதியின்றி செல்ல முடியாது. செழுமையான புல்வெளிகளும், நீரோடைகளும், பரந்த நீர்த்தேக்கங்களும், சோலைக்காடுகளும், இயற்கையின் தெய்வீகக் காட்சிகள்!

கெட்டி வெள்ளி காட்சி முனை!
மைசூர் பீடபூமி முதல் கோவை சமவெளி பகுதி வரை நீண்டிருக்கும் இந்த பள்ளத்தாக்கு, உலகின் நீளமான பள்ளத்தாக்குகளில் ஒன்றாகும்! இந்த இடம் தமிழகத்தின் சுவிட்சர்லாந்து என வர்ணிக்கப்படுகிறது. 

டால்பின் மூக்கு! 
குன்னூரிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள கண்கவரும் இடம். இங்கிருந்த பல மீட்டர் உயரத்தில் இருந்து விழும் "கேத்தரின் அருவி' யைப் பார்த்து ரசிக்கலாம்! வளைந்த சாலைகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களையும் பார்ப்பதற்குச் சிறந்த இடம்!

லாம்ப் பாறை!
இதுவும் குன்னூர் பகுதியில்தான் உள்ளது. இங்கிருந்து காபி, தேயிலை எஸ்டேட்டுகளுடன் கோவையின் சமவெளி பகுதிகளையும் பார்த்து ரசிக்கலாம். 
இவை தவிர, தவளைக் குன்று காட்சி முனை, ஊசிப்பாறை, லேடி கேனிங் சீட், கோடநாடு, ரங்கசாமி ராக் அண்டு பில்லர், போன்ற காட்சிமுனைகளும் இங்குள்ளன. 

ஊட்டி ஏரி!
புகழ்பெற்ற சுற்றுலாத்தலம். 65 ஏக்கர் பரப்பில் 2 கி.மீ. நீளத்திற்கு வளைந்து காணப்படும் இந்த ஏரி 1824இல் ஜான் சல்லிவனால் உருவாக்கப்பட்டது. பள்ளத்தாக்கிற்கு இறங்கும் நீரோடைகளை தடுத்து தண்ணீர் இந்த ஏரியில் தேக்கப்படுகிறது. அருகே சிறு தோட்டமும் பூங்காவும் உள்ளன. ஏரியில் படகு சவாரி வசதியும் உண்டு. மே மாதம் நடத்தப்படும் படகுப்போட்டி பிரசித்தி பெற்றது. 

அவிலாஞ்சி ஏரி!
ஊட்டியிலிருந்த 28 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த ஏரியும் வண்ண மலர்த்தோட்டங்களுடன் எழில் மிகுந்த தோற்றம் உடையது. 
மலையேற்றம் செல்லலாம். பாதைகளை வனத்துறையினரே ஏற்படுத்தியுள்ளனர். சூரிய ஒளியே உட்புகாத அளவுக்கு அடர்த்தியாக வளர்ந்த மரங்கள் வளர்ந்த வனப்பகுதியும், பவானி அம்மன் கோயிலும், வனத்துறைக்கு சொந்தமான ஓய்வு இல்லமும் உள்ளன. 
குன்னூரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள கட்டேரி அருவி, கோத்தகிரி அருகிலுள்ள கேத்தரின் அருவி, எமரால்ட் அருவி, கல்ஹொத்தி அருவி, காமராஜர் சாகர் அணை, லாஸ் அருவி, பைக்காரா ஏரி மற்றும் அருவி, மேல் பவானி ஏரி என பல அருவிகளும், ஏரிகளும் காணப்பட வேண்டிய இடங்களாகும்! 

ஊட்டி தாவர இயல் பூங்கா!
விதவிதமான தாவரங்களும், பல வடிவில் பூத்துக் குலுங்கும் பூக்களும் பார்த்து களிக்கத்தக்கவை. 1847-இல் 22 ஹெக்டேர் பரப்பளவில் நிறுவப்பட்ட இப்பூங்கா, கீழ்தள தோட்டம், நீரூற்றுப் பகுதி, புதிய தோட்டம், இத்தாலியன் தோட்டம், கண்ணாடி வீடு, செடி வளர்ப்பகம் என ஆறு பிரிவுகளாக அமைந்துள்ளது. இங்கு மே மாதம் நடக்கும் கோடை விழா விசேஷமானது. 

சிம்ஸ் பூங்கா!
இது குன்னூரில் உள்ளது. 12 ஹெக்டேர் பரப்பில் அமைக்கப்பட்ட அழகிய பூங்கா. ருத்திராட்ச மரம், தாளிச பத்திரி மரம் உள்ளிட்ட பல அபூர்வமான மரவகைகள் நிறைந்த பூங்கா இது. 

நேரு பூங்கா!
கோத்தகிரி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பூங்கா இது. இங்கு கோடைக்காலத்தில் நடக்கும் காய்கனி காட்சி சிறப்பானது. 

துருக்கோட்டை!
லாஸ் அருவிக்கு அருகேயுள்ள 6000 அடி உயர துருக் மலையின் மீது இக்கோட்டை அமைந்துள்ளது. திப்பு சுல்தான் காலத்தில் கட்டப்பட்டது. 

செயின்ட் ஸ்டீபன் சர்ச்!
1830-இல் ஊட்டியில் கட்டப்பட்ட முதல் தேவாலயம் இது. 

மெழுகு உலகம்!
ஊட்டி-குன்னூர் சாலையில் இந்த அருங்காட்சியகம் உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த பல பிரமுகர்களின் மெழுகு சிலைகள் இங்குள்ளன. 

பழங்குடி இன மக்களின் அருங்காட்சியகம்!
பழங்குடி இன மக்கள் ஆய்வு மையத்தில் இந்த அருங்காட்சியகம் இருக்கிறது. இங்கு பழங்குடிகளின் புகைப்படங்கள்., கைவினைப் பொருட்கள், தொல்லியல் துறையின் புராதனப் பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 
குன்னூரில் வெலிங்டன் முப்படை அதிகாரிகளின் பயிற்சிக் கல்லூரிஉள்ளது. 
இவற்றைத் தவிர ஊட்டி கோல்ப் மைதானம், கல்கத்தி பகுதியில் "ஹாங் கிளைடிங்', ஊட்டி மாரியம்மன் கோயில், பல ஐரோப்பியக் கட்டிடங்கள் பார்த்து ரசிக்கத் தகுந்தவை. 
மார்ச், ஏப்ரல், மே, ஜூன் போன்ற கோடைக்காலத்தில் இங்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாயிருக்கும். 
நீலகிரி இயற்கை எழில் வாய்ந்த சுற்றுலாப்பயணிகளுக்கு நல்ல காட்சிகளை விருந்தாகப் படைக்கும் அருமையான இடமாகும்!
தொகுப்பு: கே.பார்வதி, 
திருநெல்வேலி டவுன். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/9/w600X390/sm7.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/10/கருவூலம்-நீலகிரி-மாவட்டம்-2860377.html
2860372 வார இதழ்கள் சிறுவர்மணி அன்பினால் எல்லாம் நடக்கும்!   Saturday, February 10, 2018 12:00 AM +0530 செல்வந்தர் ஒருவர் விலை உயர்ந்த குதிரை ஒன்றை வாங்கினார். அழகாக இருந்த அதன் மீது சவாரி செய்ய விரும்பினார்.
 ஒவ்வொரு முறை அவர் அந்தக் குதிரையில் அமரும்போதும் அது மேலும் கீழும் துள்ளிப் பாய்ந்தது. அதனால் அவர் அடிக்கடி கீழே விழுந்தார். இப்படியே பல நாட்கள் தொடர்ந்து நடந்தது. அவரும் பலவித முயற்சிகள் செய்து பார்த்தார். ஏதும் பன் விளையவில்லை.
 ஏராளமான பொருள் கொடுத்து வாங்கிய அழகிய குதிரை இது. இதில் சவாரி செய்ய முடியவில்லையே என்று வருந்தினார் அவர்.
 அந்த ஊருக்கு ஞானி ஒருவர் வந்தார். அவரைச் சந்தித்த செல்வந்தர் தன் சிக்கலை அவரிடம் எடுத்துச் சொன்னார்.
 எல்லாவற்றையும் கேட்டார் அந்த ஞானி. செல்வந்தனிடம், ""நீர் குதிரையுடன் எவ்வளவு நேரத்தைச் செலவிடுகிறீர்?...அதற்குத் தீனி வைக்கிறீரா....குடிக்கத் தண்ணீர் காட்டுகிறீரா?...அதன் உடலைத் தேய்த்துக் குளிப்பாட்டுகிறீரா?''என்று கேட்டார்.
 "அதைக் குளிப்பாட்டுவதும், அதற்குத் தீனி வைப்பதும், தண்ணீர் காட்டுவதும், பராமரிப்பதும் என் வேலையாட்களின் வேலை. அதற்குத்தான் ஆள் வைத்திருக்கிறேனே!...
 சவாரி செய்ய மட்டும்தான் நான் அதை அழைத்துக்கொண்டு வெளியே செல்வேன். எதற்காகக் கேட்கிறீர்கள்?'' என்று கேட்டார் செல்வந்தர்.
 ""நாளை முதல் குதிரையுடன் நீர் அதிக நேரத்தைச் செலவு செய்யுங்கள். உங்கள் கைகளாலேயே அதற்கு உணவையும், தண்ணீரையும் கொடுங்கள். அதன் உடலைத் தேய்த்துக் குளிப்பாட்டுங்கள்!....உங்கள் அன்பை அதனிடம் காட்டுங்கள்.அன்பினால் எல்லாம் நடக்கும்!'' என்று சொல்லி செல்வந்தனை அனுப்பி வைத்தார் ஞானி.
 அவர் சொன்னபடியே செய்தார் செல்வந்தர். அவர் அன்பில் திளைத்தது குதிரை.
 அதன் பிறகு அந்தக் குதிரை அவர் சவாரி செய்யும்போது எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. அவரை மகிழ்ச்சியுடன் சுமந்து சென்றது.
 இப்போது அவர் அந்த ஞானிக்கு நன்றி செலுத்த குதிரையில்தான் சென்று கொண்டிருக்கிறார்.
 
 -ஆர். மகாதேவன்
 
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/9/w600X390/sm1.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/10/அன்பினால்-எல்லாம்-நடக்கும்-2860372.html
2860373 வார இதழ்கள் சிறுவர்மணி தகவல்கள் 3 DIN DIN Saturday, February 10, 2018 12:00 AM +0530 கடமைக்கு விருது!
சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்தில் பெண்களுக்கென "ஜான்ஸி ராணி பிரிவு' என்ற பிரிவைத் தொடங்கினார். ஒருமுறை அந்தப் படை கூடாரத்திற்குள் சுபாஷ் நுழைந்தார். வேறு யாரோ என்று எண்ணி அங்கிருந்த "கோவிந்தம்மாள்' என்ற பெண்மணி சுபாஷை தடுத்து நிறுத்தினாள்! வந்தது சுபாஷ் என்று அறிந்த பலரும் பதட்டமாயினர். கோவிந்தம்மாளோ உரிய அனுமதியின்றி வந்த சுபாஷை கூடாரத்திற்குள் அனுமதிக்கவில்லை! 
புன்னகைத்த சுபாஷ், அவருக்கு அப்படையின் உயரிய விருதை அளித்தார்!
ஜோ.ஜெயக்குமார்,
நாட்டரசன்கோட்டை. 

கவிஞரின் குறும்பு!
புகழ்பெற்ற கவிஞர் ஜாமி, ஆண்டவனை நோக்கி, "என் நினைவெல்லாம் நீயே நிறைந்துள்ளாய்!....என் பார்வையில் படுகின்ற பொருள் யாவும் நீயாகவே எனக்குத் தெரியும்!'' என்றார். உடனே ஒரு குறும்புக்கார இளைஞன் அவரிடம், "உங்கள் முன் ஒரு கழுதை வந்தால்?'' என்று கேட்டான். 
உடனே ஜாமி அவனிடம், "அப்போதும் நீயாகவே எனக்குத் தெரியும்!'' என்று அவனைக் கை நீட்டிக் குறிப்பிட்டார்!
ஆர்.அஜிதா, 
கம்பம்.

தன்னை மறந்த ஆராய்ச்சி!
ஸ்ட்ராஸ் பெர்க் நகரத்து சர்வகலாசாலையின் ரசாயன ஆசிரியர் லூயி பாஸ்டர். வெறி நாய்க்கடிக்கு மருந்து கண்டுபிடித்தவுரும் இவரே. தனது ஆராய்ச்சிக் கூடத்தில் தன்னை மறந்து மிகத் தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சிலர் ஆராய்ச்சிக் கூடத்திற்கு பரபரப்புடன் விரைந்து வந்தனர். அவர்களது பரபரப்பைக் கண்ட லூயி பாஸ்டர், "என்ன விஷயம்?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், "இன்று உங்களுக்குத் திருமணம்!....சர்ச்சில் எல்லோரும் உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்....சீக்கிரம் கிளம்புங்கள்!'' என்றனர். 
ராஜாரகுமான், கம்பம்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/9/w600X390/sm2.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/10/தகவல்கள்-3-2860373.html
2860374 வார இதழ்கள் சிறுவர்மணி குறள் பாட்டு: கண்ணோட்டம்   DIN DIN Saturday, February 10, 2018 12:00 AM +0530 கண்ணிற்கு அணிகலன் கண்ணோட்டம் அஃதின்றேல்
 புண்ணென்று உணரப்படும்.
                                                                          - திருக்குறள்
 கண்ணுக்கு அழகு என்பது
 கருணை கொண்ட பார்வையே
 கனிவில்லாத கண்களைப்
 புண்கள் என்று சொல்லலாம்
 
 அருளைக் கண்களில் கனியச்செய்து
 அன்பால் பார்க்கும் பார்வையே
 கண்ணோட்டம் என்று சொல்வது
 அதுவே கண்ணுக்கு அணிகலன்.
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/9/w600X390/sm3.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/10/குறள்-பாட்டு-கண்ணோட்டம்-2860374.html
2860375 வார இதழ்கள் சிறுவர்மணி பொன்மொழிகள்! DIN DIN Saturday, February 10, 2018 12:00 AM +0530 * வாழ்க்கையின் நோக்கம் அறவு அல்ல. செயல்தான்! 
அதிலிருந்துதான் அறிவு கிடைக்கிறது! 
- தாமஸ் ஹக்ஸ்லி

* பணம் உங்களுடைய கஷ்டத்தை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பம் தருகிறது. 
- டெனிஸ் வீவர்

* உலகம் ரொம்ப வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது! ஒரு காரியத்தை முடியாது என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, வேறொருவர் அதைச் செய்து கொண்டிருப்பர். 

* உனக்குத் தெரிந்த விஷயம் பற்றிக் குறைவாகப் பேசு!....
தெரியாத விஷயம் பற்றி எதுவுமே பேசாதே! 
- சடி நிக்கோலஸ் கார்னோட்

* சட்டங்களை ஒருமுறை வகுத்து எழுதி வைத்தாகி விட்டதென்றால், அவற்றை மாற்றவே கூடாது என்று பொருளல்ல. 
- அரிஸ்டாட்டில்

* கவலை என்பது ஒரு மாதிரியான அச்சம்! எல்லாவிதமான அச்சமும் சோர்வை உண்டாக்கும். 
- பெர்ட்ராண்டு ரஸ்ஸல்

* உண்மை என்பது வீட்டை விட்டுத் தலை நீட்டுவதற்குள்ளாகவே, பொய் உலகத்தைச் சுற்றி வந்துவிடுகிறது. ஆனால் உண்மை மட்டுமே அடையாளம் கண்டுகொள்ளப்படும்! 
- யாரோ

* துன்பங்களை பிறரிடம் சொன்னால் மனதுக்கு ஆறுதல் கிடைக்கிறது என்றாலும், கேட்பவர்களில் கேலி செய்பவர்கள்தான் அதிகமாக 
இருக்கிறார்கள். 
- கண்ணதாசன். 

* குற்றங்களை மன்னித்து விடுவாய்! 
அது தவறல்ல.... ஆனால் மறந்து விடாதே! கற்றுக்கொண்ட பாடங்களை இழந்து விடுவாய்!
- வரிஜீனியா உல்ஃப்.
தொகுப்பு: எல். நஞ்சன், முக்கிமலை.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/9/w600X390/sm4.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/10/பொன்மொழிகள்-2860375.html
2860376 வார இதழ்கள் சிறுவர்மணி முத்துக் கதை: உறுதி! DIN DIN Saturday, February 10, 2018 12:00 AM +0530 முனிவர் ஒருவரிடம் சீடர்களாகச் சேர் மூவர் வந்தனர். மூவரும் நண்பர்கள். அவர்களை மறுநாள் வரச் சொன்னார் முனிவர். தன் மனைவியிடம் மறுநாள் அவர்கள் வரும்போது, தமது காதில் ஒரு பெரிய ஓணான் புகுந்து தாம் இறந்து விட்டதாகச் சொல்லச் சொன்னார். மறுநாள் அவர்கள் வந்தனர். முனிவர் கூறியபடியே அவர்களிடம் சொன்னாள் முனிவரின் மனைவி.
 மூவரில் ஒருவன், "அடடா இப்படி ஆகிவிட்டதே....அவரது ஜாதகத்தில் திசை சரியாயில்லை போலிருக்கிறது...அதனால்தான் இப்படி ஆகியிருக்கும்'' என்று கூறினான்.
 மற்றொருவன், "ஒருவேளை, முன்வினைப் பயனால்தான் இப்படி ஆகியிருக்கும்... என்ன செய்வது?'' என்றான்.
 மூன்றாமாவன் முனிவரின் மனைவியின் முகத்தை உற்றுப் பார்த்தான். பின்னர் அவளிடம், ""முனிவர் உயிருடன்தான் இருக்கிறார்!'' என்று உறுதியாக, ஆணித்தரமாகச் சொன்னான்!
 அதுவரை உள்ளே ஒளிந்து கொண்டிருந்த முனிவர் வெளியே வந்தார்!
 அவர் அந்த மூன்றாமாவனைப் பார்த்து, "எப்படிக் கண்டுபிடித்தாய்?'' என்று கேட்டார்.
 "உமது மறைவினால் வரக்கூடிய துக்கம் உங்கள் மனைவியின் முகத்தில் கொஞ்சமும் இல்லை. அடுத்தது ஒரு பெரிய ஓணான் காதில் நுழைவது என்பது நடக்காத காரியம். இதுவரை யாரும் ஒணான் காதில் நுழைந்து இறந்ததாக நான் கேள்விப்பட்டது கூட இல்லை.... எனவேதான் அப்படி உறுதியாகச் சொன்னேன்!'' என்றான் அந்த மூன்றாவது சீடன்.
 முனிவர் புன்னகைத்து, "சரி நாளையிலிருந்து நீ என்னடம் கற்க வரலாம்!'' என்றார்.
 "என் நண்பர்களுடன்தானே?''
 "சரி, மூவருமே கற்க வாருங்கள்'' என்றார் முனிவர் புன்னகைத்தபடி!
 -மாலோலன்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/9/w600X390/sm5.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/10/முத்துக்-கதை-உறுதி-2860376.html
2860379 வார இதழ்கள் சிறுவர்மணி இயற்கை பாதுகாப்பு! DIN DIN Saturday, February 10, 2018 12:00 AM +0530  அம்மா அம்மா இங்கே பார்!
 அழகு ரயில்போல் புழுவைப்பார்!
 சும்மா நானும் தொட்டவுடன்
 சுருண்டு வளையும் புழுவைப்பார்!
 
 தம்பி அதுதான் மரவட்டை!
 தானே ஊர்ந்து சென்றுவிடும்!
 துன் புறுத்த வேண்டாம் நீ
 தொட்டால் உடனே சுருண்டு விடும்!
 
 தொட்டால் சுருள்வதேனம்மா?
 தொடர்ந்து பிறகு நீண்டிடுமா?
 தொட்டால் சுருங்கி இலை கூட
 தொட்டால் இது மாதிரிதான்!
 
 ஏதோ ஆபத்தென்றுணர
 இயற்கை தந்த உள்ளுணர்வால்
 பாது காப்புக் காகத்தான்
 "பட்' டென உடனே சுருள்கிறது!
 
 ஆமை கூட ஓட்டுக்குள்
 அனைத்து உடலை ஒடுக்கிவிடும்!
 தீமை உணர்ந்தால் பந்தாக
 முள்ளம் பன்றி உருண்டுவிடும்!
 
 இயற்கை எல்லா உயிர்களுக்கும்
 ஈந்த பாது காப்பிதுதான்!
 தயவு செய்து உயிர்களையே
 தம்பி துன்புறுத் தாதே நீ!
 -கே.பி.பத்மநாபன்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/9/w600X390/sm9.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/10/இயற்கை-பாதுகாப்பு-2860379.html
2860381 வார இதழ்கள் சிறுவர்மணி முத்திரை பதித்த முன்னோடிகள்! கல்கி கிருஷ்ணமூர்த்தி   DIN DIN Saturday, February 10, 2018 12:00 AM +0530 கடலைக் கடுகுக்குள் அடைக்க முடியுமா?அதைப் போன்றதுதான் கல்கி கிருஷ்ணமூர்த்தி என்ற இந்த சாதனையாளர் பற்றி இச் சிறு கட்டுரைப் பகுதியில் தெரிந்து கொள்வதும்!
எழுத விரும்பும் எவருக்கும் இவரது சிறுகதைகளையும் வரலாற்று நாவல்களையும் படிப்பது மிக உபயோகமாக இருக்கும்.
இந்திய சுதந்திர காலக்கட்டத்தில் இருந்த எழுத்தாளர்களின் முன்னோடி இவரே ஆவார். தமிழன்னைக்கு தமது நாவல்கள், சிறுகதைகள் என பலவற்றை அணிகலனாக அளித்தவர் இவர்! இவர் ஒரு எழுத்தாளர் மட்டும் அல்ல! பத்திரிகையாளர், நகைச்சுவையாளர், பயணக் கட்டுரை ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர், கவிஞர், கலை விமர்சகர் மற்றும் சுதந்திர போராட்ட வீரரும் ஆவார்.
தமிழ் இலக்கியத்தில் இவர் தொடாத பிரிவுகளே இல்லை எனலாம். தான் எழுதிய "பொன்னியின் செல்வன்' என்ற நாவலுக்காக மட்டுமே இவர் மூன்று முறை இலங்கைக்கு பயணம் செய்தார்.
மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள "புத்தமங்கலம்'என்ற மிகச்சிறிய கிராமத்தில் 9.9.1899 அன்று கிருஷ்ணமூர்த்தி பிறந்தார். இவரது பக்கத்து வீட்டில் இருந்த தபால்காரர் திரு. அய்யாசாமி என்பவர் ஏறக்குறைய நூறு புத்தகங்களை வைத்து இருந்தார். அவை அனைத்தையும் சிறுவனாக இருந்த கிருஷ்ணமூர்த்தி படித்து முடித்தார். கிருஷ்ணமூர்த்தி மிகவும் உயரம் குறைவாக இருப்பார். இதனால் அய்யாசாமி அவரை "அகத்தியர்' என்று அழைத்தார்.அதுவும் பின்னாளில் இவரது புனைபெயரில் ஒன்றாக விளங்கியது.
1921 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கினார்.அச்சமயத்தில் கிருஷ்ணமூர்த்தி 10-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இன்னும் 3 மாதங்கள் தொடர்ந்து படித்தால் அவர் தமது பள்ளியிறுதி சான்றிதழை பெற்றிருக்க முடியும் .ஆனால் காந்தியடிகள் மீது தீராத பற்றுக் கொண்டிருந்த அவர், தமது பள்ளிப்படிப்பை விட்டு சுதந்திரப்போராட்டத்தில் பங்கு கொண்டார். இதன் காரணமாக ஓர் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். 
சிறைவாசம் அவருக்கு இரு மாபெரும் அறிஞர்களின் நட்பை அளித்தது. ஒருவர் "இராஜாஜி'என அனைவராலும் அழைக்கப்பட்ட ஸ்ரீஇராஜகோபாலாச்சாரியார், மற்றொருவர் டி.சதாசிவம் ஆவார்! (சதாசிவம் அவர்களுடன் இணைந்தே திரு. கிருஷ்ணமூர்த்தி "கல்கி' பத்திரிகையை தொடங்கினார். அதன் மூலம் கல்கி கிருஷ்ணமூர்த்தி என்று அழைக்கப்பட்டார்)
1922-ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலை ஆனார். தமிழ் ஆர்வலரும் அறிஞருமான "திரு.வி.க.' என்று அழைக்கப்பட்ட "திரு.வி.கல்யாணசுந்தரம' அவர்கள் "நவசக்தி' என்ற பெயரில் பத்திரிகை ஒன்றை நடத்தி வந்தார். அப்பத்திரிக்கையில் 1923-ஆம் ஆண்டு கிருஷ்ணமூர்த்தி உதவி ஆசிரியராக சேர்ந்து கொண்டார்.
"சாரதையின் தந்திரம்' என்ற இவரது முதல் நூல் 1927-ஆம் ஆண்டு வெளிவந்தது. "பூக்கூடை க்கு விளம்பரம் தேவை இல்லை!' என்று இராஜாஜி அந்நூலுக்கு தாம் எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார்.
1928-ஆம் ஆண்டு நவசக்தி இதழிலிருந்து விலகி இராஜாஜி துவங்கி இருந்த "விமோசனம்' என்ற பத்திரிக்கையில் சேர்ந்து கொண்டார். இப்பத்திரிகை மதுவின் தீமைகளையும் மதுவிலக்கை அமல்படுத்துவதன் அவசியத்தையும் மக்களுக்கு விளக்கிக் கூறியது. மேலும் ஆங்கிலேயர்களை எதிர்த்து பலமுறை எழுதினார் இவர்! அதற்காக 1931-ஆம் ஆண்டு இவர் மீண்டும் ஆறு மாதங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டார்.
1932-ஆம் ஆண்டு இவர் தமிழின் மிக பிரபலமான வாரப்பத்திரிகையாகிய ஆனந்த விகடனில் சேர்ந்தார். தமது நகைச்சுவை நிரம்பிய எழுத்துக்களால் அரசியல், இலக்கியம், இசை என பல பிரிவுகளில் எழுதி வந்தார். 
இது வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. "கல்கி', "ரா.கி', தமிழ்த் தேனீ', "கர்நாடகம்' போன்ற பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார். இவரது பல சிறுகதைகள், புதினங்கள் ஆனந்த விகடன் இதழில் வெளிவந்தன. 1941-ஆம் ஆண்டு ஆனந்த விகடன் பத்திரிக்கையை விட்டு வெளிவந்த கிருஷ்ணமூர்த்தி மீண்டும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கு கொண்டார். இதன் காரணமாக மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலை அடைந்த பின்னர், தமது நண்பர் திரு. சதாசிவம் அவர்களுடன் இணைந்து "கல்கி' பத்திரிக்கையை துவக்கினார்.
1942-ஆம் ஆண்டு இவர் எழுதிய "அலை ஓசை' என்ற சமூக புதினம் கல்கியில் தொடராக வெளிவந்தது.1953 ஆம் ஆண்டு தனி நூலாக வெளியிடப்பட்டது. இந்நூல் இவருக்கு "சாஹித்ய அகாதெமி' விருதைப் பெற்றுத் தந்தது. இவரது மறைவுக்குப் பின்னர் 1956 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.
இம்மாமேதை 5.12.1954 அன்று காலமானார்.

அறிந்து கொள்வோம் வாருங்கள்.
(1) இவர் 120 சிறுகதைகள், 10 காப்பியங்கள், 5 புதினங்கள் மற்றும் 3 வரலாற்றுத் புதினங்கள் ஆகியவற்றை எழுதி உள்ளார்.
(2) இவர் எழுதிய முதல் புதினம் "கள்வனின் காதலி' ஆகும்.
(3) இவர் எழுதிய மற்றொரு சமூகப் புதினம் "தியாக பூமி' ஆகும். இது உப்பு சத்தியாகிரக பின்னணியில் பெண்களின் உரிமைகள் மற்றும் தீண்டாமையின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
(4) "தியாக பூமி' பின்னாளில் திரைப்படமாக்கப்பட்டது. வெற்றிகரமாக ஆறு மாதங்கள் தொடர்ந்து ஓடியது. இத்திரைப்படம் வெள்ளையர்களை எதிர்ப்பதாக கருதிய ஆங்கிலேய அரசு இதை திரையிட தடை விதித்தது.
(5) இவர் எழுதிய "பொன்னியின் செல்வன்' சோழர்களின் காலத்தையும் "பார்த்திபன் கனவு' மற்றும் "சிவகாமியின் சபதம்' ஆகிய இரு நாவல்களும் பல்லவர்களின் ஆட்சியைப் பற்றியும் நமக்கு விளக்குகின்றன.
(6) கர்நாடக சங்கீதத்தை பெரிதும் விரும்பிய இவர், தமிழ் கீர்த்தனைகளை அதிகம் பாடுமாறு வேண்டினார். தாமே பல கீர்த்தனைகளை எழுதினார்.
(7) இந்திய நுண்கலைக் கழகம் (லலித் கலா அகாடெமி) இவருக்கு 1953-ஆம் ஆண்டு "சங்கீத கலாசிகாமணி' என்ற விருதை வழங்கியது.
(8) காந்தியடிகளின் சுயசரிதையை "சத்திய சோதனை' என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தவர் இவரே ஆவார்.
(9) இவரது நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் இந்திய அஞ்சல் துறை சிறப்பு அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டது. 
தொகுப்பு: லக்ஷ்மி பாலசுப்ரமணியன், 
கடுவெளி. 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/9/w600X390/sm11.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/10/முத்திரை-பதித்த-முன்னோடிகள்-கல்கி-கிருஷ்ணமூர்த்தி-2860381.html
2860382 வார இதழ்கள் சிறுவர்மணி எது அழகு..?   DIN DIN Saturday, February 10, 2018 12:00 AM +0530 அரங்கம்
காட்சி 1
இடம் - சிவா இல்லம்
மாந்தர் - வேலை தேடும் பி ஏ பட்டதாரி சிவா, அவன் தாய் மங்களம், 

(சிவா டூவிலரின் கிக்கரை பலம் கொண்ட மட்டும் காலால் மிதித்து மிதித்து ஸ்டார்ட் செய்ய முயல்கிறான். கைலியை மடித்துக் கட்டியபடி)

அம்மா: (அடுப்படியில் இருந்து) ஏம்ப்பா தம்பி சிவா. பத்து மணிக்குத்தானே உனக்கு இண்டர்வியூ...., மணி எட்டரை தானே ஆவுது?
சிவா: இல்லேம்மா.. குளிர் நாளில் முன்னாலேயே ஸ்டார்ட் பண்ணி வக்கிறது தான் நல்லது. கொஞ்ச தூரம் பஸ் ஸ்டாப் வரை போயிட்டு வந்திடறேன்..இப்பவே டயம் ஆயிடுச்சு!...
அம்மா: வந்து குளி முதல்லே...டிபன் ரெடி பண்றேன்....காபிகூட சாப்பிடாம..மோட்டார் சைக்கிளோட மல்லுக்கு நிக்கறான் பாரு! 

( டர்......டட் டட்... என அந்தப் பழைய மோட்டார் சைக்கிளில் பஸ் ஸ்டாப்பை நோக்கி விரைகிறான் சிவா.)

காட்சி 2
இடம் - பஸ் ஸ்டாப்
மாந்தர்- ~ஒரு பள்ளி மாணவி, 
ஒரு பாட்டி(காலில் கட்டுடன்), 
ஒரு நடுத்தர வயதுப்பெண். 

(பஸ் ஸ்டாப்பில் மூன்று பேர் பஸ் வருதா என வழி மேல் விழி வைத்து நிற்பதைக் கவனிக்கிறான். ஒரு பள்ளி மாணவி சீருடையில். ஒரு பாட்டி காலில் கட்டு போட்டபடி. ஒரு நடுத்தர வயது பெண் அவள் அருகில் ஒரு கார் ரிப்பேராகி நிற்கிறது)

மாணவி - (சிவாவைப் பார்த்ததும் அருகில் ஓடி வந்து )சிவா அங்கிள்.... இன்னிக்கு எனக்கு பிராக்டிகல் பரிட்சை.... ஒன்பது மணிக்கு பள்ளியில் இருக்கணும்,... பஸ் வரலே... (கண்களில் தவிப்பைக் காண்கிறான் சிவா)
பாட்டி: "தம்பி சிவா, ஒன்பது மணிக்கு நான் ஆஸ்பத்திரியில் போய் டோக்கன் வாங்கணுமே.. இன்னிக்கு போட்டா பிடிச்சுப் பார்க்கறேன்னு டாக்டர் சொன்னார். எலும்பு உடைஞ்சிருக்கான்னு பார்க்கணுமாம்..ஒரு வாரமா காலில் வலி!''

(பாட்டி கோவில் வாசலில் பூ, பழம் விற்பவள்)

(நடுத்தர வயது பெண் அமைதியாக நிற்கிறார்..வாட்ச்சைப் பார்த்தபடி...)

சிவா: (அருகில் சென்று) மேடம் கார் பிரச்னையா?.....
பெண்: ஆமாம் தம்பி. முக்கியமான ஒரு வேலை.. குட் வில் கம்பெனிக்குப் போகணும்... கார் வழியில் நின்னுடிச்சி.. ஆள் வர லேட்டாகும்... இன்னும் அரை மணியில் நான் அங்கு இருக்கணும்.

( சிவாவுக்கு பொறி தட்ட மனதுக்குள்.. "குட் வில் கம்பெனியா. அதில் தானே இன்னிக்கு வேலைக்கு இண்டர்வியூ. இந்த பெண் வேலைக்கு இண்டர்வியூவுக்குப் போற வயசா தெரியலியே..... பஸ் எட்டேகாலுக்கு வர வேண்டியது.... வரலே..... டக்கென சிவா வண்டியை வீட்டை நோக்கித் திருப்புகிறான்...)....

...... (அந்தப் பெண்கள் மூவரும் மனதுக்குள்.... "சமயத்தில் உதவி கேட்டால் செய்ய மாட்டேங்கிறாங்களே. யாராவது ஒருத்தருக்கு ஹெல்ப் பண்ணினால் என்னவாம்...')

காட்சி 3
இடம் - பஸ் ஸ்டாப், சாலை
மாந்தர் - சிவா, ஆட்டோ டிரைவர் செல்வம், மாணவி, பாட்டி, நடுத்தர வயதுப்பெண்.

(ஒரு சில நிமிடங்களில் ஒரு ஆட்டோ வருகிறது. பின்னால் மோட்டார் சைக்கிளில் சிவா)

சிவா:( மாணவியிடம்) பாப்பா, ஆட்டோவில் ஏறு,... போற வழியில் பாட்டியை ஆஸ்பத்திரியில் இறக்கி விட்டுடு!..... இந்தாப்பா செல்வம், அம்பது ரூவா....இதை வாங்கிக்கோ!
ஆட்டோ டிரைவர் செல்வம்: "சரிண்ணே,... வந்து..., டவுன் சவாரிக்கு நூறு தான் ரேட்...' 
(தலையை ச் சொறிகிறான்)
சிவா: என் கிட்டே பணமில்லே. இதுவே பெட்ரோல் போட அம்மா தந்தது.... வச்சுக்கோ! போ!... அப்புறமா வாங்கிக்கலாம்..... 

(ஆட்டோ, மாணவி மற்றும் பாட்டியுடன் புறப்படுகிறது)

சிவா: மேடம், மெக்கானிக் பையனை எழுப்பி வரச்சொல்லிட்டேன்! அவன் வந்து காரை பார்த்துருவான்.
பெண்: அதுக்கு நேரமில்லே.....மணி ஒன்பது ஆகப் போவுது!... கொஞ்சம் குட்வில் கம்பெனி வரை வந்து என்னை விட்டுச் செல்ல முடியுமா உங்களால்?... நான் இன்னும் அரைமணிக்குள் அங்கே இருந்தாகணுமே!
சிவா: வந்து,.... நான் இன்னும் குளிக்கக் கூட இல்லே..... ஒரு இண்டர்வியூவுக்கு பத்து மணிக்குள் இருக்கணும்!...... நீங்க வேறே அவசரமா போகணும்ங்கறீங்க. சரி, வாங்க, உங்களை இறக்கி விடறேன். இண்டர்வியூவுக்கு போனா மட்டும் வேலை கிடைச்சிடவாப் போவுது?.......ஏறுங்க போகலாம்!

(டூவீலரில் பெண்ணுடன் குட் வில் கம்பெனியை நோக்கி விரைகிறான் சிவா.. வேகமாக.)

பெண்: கொஞ்சம் மெதுவா போங்க. ப்ளீஸ்.. ஆமா என்ன வேலைக்கு இண்டர்வியூ...?
சிவா: கிளார்க் வேலை மேடம். ஆமா நீங்க அங்கே வேலை பார்க்கறீங்களா?

(மவுனமாக இருக்கிறாள்)

சிவா: ஹூம்... நான் வெறும் பி.ஏ... எத்தனையோ எம்.பி.ஏ எல்லாம் வர்றாங்க.... சும்மா போயிட்டு வரலாம்ன்னு ஒரு நப்பாசை தான்....

காட்சி - 4
இடம் - குட்வில் கம்பெனி
மாந்தர் - சிவா, நடுத்தரவயதுப்பெண், கூர்க்கா.

(குட்வில் கம்பெனி கேட் அருகில் மோட்டார் சைக்கிள் நிற்கிறது)

கூர்க்கா: (அதிசயமாக இவர்களைப் பார்த்தபடி ஓடி வந்து கதவைத் திறந்து சல்யூட் அடித்தபடி) "குட்மார்னிங் மேடம்!....'

(அந்தப் பெண் உள்ளே வேகமாக செல்கிறார் கம்பெனிக்குள்)

பெண்: (சிவா பக்கம் திரும்பி)"கொஞ்சம் இந்த ஹாலில் உட்காருங்க!....'

(சுவர் கடிகாரத்தில் மணி 9.55)

காட்சி 5
இடம் - குட்வில் கம்பெனி உட்புறம்
மாந்தர் - சிவா, நடுத்தர வயதுப் பெண். 
இன்டர்வ்யூவுக்கு வந்திருப்போர், பியூன். 
உதவியாளர். 

(நிர்வாக இயக்குனர் அறைக்கு முன் உள்ள ஹாலில் பலர் தேர்வுக்கு டை கட்டி பளிச்சென உடை அணிந்து தலைவாரி சோபாவில் அமர்ந்திருக்கின்றனர்.....மணி பத்து. ஒவ்வொருவராக இண்டர்வியூவுக்கு மேனேஜிங் டைரக்டர் அறைக்குள் நுழைந்து சிறிது நேரம் கழித்து வெளியே வருகிறார்கள். சிலர் வித்தியாசமாக சிவாவைப் பார்க்கிறார்கள்)

ஒருவர்: ஏன் சார் இண்டர்வியூவுக்கு கைலிகட்டி, டி ஷர்ட் போட்டு வந்திருக்கீங்க?....டை கட்டாவிட்டாலும் ஒரு பேண்ட் ஷர்ட் போட்டு வரலாமில்லே?....
(வந்திருந்த ஆறுபேருக்கும் நேர்முகத் தேர்வு முடிந்துவிட்டது)
பியூன்: சார் சிவா யாரு ? எம்.டி உள்ளே கூப்பிடறாங்க.

(சிவா கதவைத் திறந்து உள்ளே செல்வதை பலரும் வியப்புடன் பார்க்கிறார்கள்.)

சிவா: (வியப்புடன்) ""மேடம் நீங்களா?....'' 

(சுழல் நாற்காலியில் அதிகாரத் தோரணையில் அந்தப் பெண்)

சிவா: (மனதுக்குள்).... நம்ம டூ வீலரில் வந்தவர் எம்.டி. யா..

(மேஜையில் ஆர் சாந்திகிருஷ்ணா, மேனேஜிங் டைரக்டர் என்கிற போர்டு )

பெண்: காபி சாப்பிடுங்க..... அப்புறம் இண்டர்வியூ பண்றேன்!

(மணி அடிக்க காபி வருகிறது)

சிவா: மேடம் இப்படி அழுக்கா...... சரியா டிரெஸ் கூட பண்ணிக்காம வந்திட்டேனே....
பெண்: அழகு என்பது செயலில் தான் இருக்கு மிஸ்டர் சிவா.. அப்படிப் பார்த்தால் நீங்க தான் இப்ப வந்தவர்களில் ரொம்ப ஸ்மார்ட். உங்களை எழுத்தர் பணிக்குத் தான் நாங்க வரச்சொல்லி இருந்தோம்.. அந்தப் பதவிக்கு இத்தனை மனித நேயம் உள்ள நீங்கள் லாயக்கில்லை.
சிவா: (திடுக்கிட்டு) வந்து மேடம்...
பெண்: ஆமாம்.. நீங்க பணியாளர்களை கண்காணிக்கும் மனித வள அதிகாரி ஹெச் ஆர் வேலைக்கு மிகவும் பொருத்தமானவர்.அதுக்கு நல்ல ஆள் தேடிக்கிட்டு இருக்கோம்...

(மணி அடிக்க ஒரு உதவியாளர் வந்து ஒரு கவரை நீட்டுகிறார்.)

பெண்: இந்தாங்க உங்க அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்... இப்பவே ஜாயின் பண்ணுங்க. செக்ரட்டரி இவரை காரில் இவர் வீட்டுக்கு அழைச்சுப் போயிட்டு அவரை திரும்ப அழைச்சிக்கிட்டு வாங்க..
சிவா: மேடம் உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலே.

(வார்த்தைகள் வர இயலாமல் சிவா தடுமாறுகிறான்.)

பெண்: உங்க மனித நேயமும், நல்ல சுபாவமும் எங்கள் கம்பெனிக்கு மிகவும் தேவை... மிஸ்டர் சிவா!

(சிவா எம்.டி சாந்திகிருஷ்ணாவைவணங்கிச் செல்கிறான்.....கையில் வேலை உத்தரவு கவரைத் தூக்கி வெற்றி எனக் காட்டியபடி.)
திரை

என்.எஸ்.வி. குருமூர்த்தி


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/9/w600X390/sm12.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/10/எது-அழகு-2860382.html
2860383 வார இதழ்கள் சிறுவர்மணி விடுகதைகள்   DIN DIN Saturday, February 10, 2018 12:00 AM +0530 1. போடாத சட்டையை கழற்றிப் போடுவான், மந்திரவாதி அல்ல....
2. அடித்தால் அழுது ஆனந்தம் தருவான்....
3. வேரில்லை முளைத்திருக்கு... இலையில்லை கிளையி ருக்கு...
4. கரும் வயலில் யானைகள் மேய்ச்சல்... இது என்ன?
5. ஒரு நெல் குத்தினால் வீடெல்லாம் உமி...
6. கண்டு பூ பூக்கும், காணாமல் காய் காய்க்கும்...
7. உயர்ந்த வீட்டில் இருக்கும் ஊரார் தாகம் தீர்க்கும்...
8. காட்டிற்குச் சென்றால் கலகலப்பாய் உழைப்பான்... வீட்டுக்கு வந்தால் படுத்து உறங்குவான்...
9. வரிக்குதிரை ஓடியது... வாய்ப்பாட்டு பாடியது...
-ரொசிட்டா
விடைகள்:
1. பாம்பு
2. மத்தளம்
3. மான்கொம்பு
4. தலையில் பேன்கள்..
5. விளக்கு
6. வேர்க்கடலை
7. மழை நீர்
8. கோடரி
9. இசைத்தட்டு


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/9/w600X390/sm13.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/10/விடுகதைகள்-2860383.html
2860384 வார இதழ்கள் சிறுவர்மணி அங்கிள் ஆன்டெனா   DIN DIN Saturday, February 10, 2018 12:00 AM +0530 கேள்வி: 
மனிதரைப் பற்றிய பயமே இல்லாமல் சிறுத்தைகள் மட்டும் ஊர் எல்லைக்குள் நுழைந்து மனிதரைத் தாக்கி விடுகிறதே, ஏன்?
பதில்: 
சிறுத்தைகள் மிகவும் வீரமானவை. எந்தச் சூழலையும் பயமே இல்லாமல் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் இயற்கை இவற்றுக்குக் கொடுத்த வரப்பிரசாதம்.
சிங்கம், புலியைப் போல அடர்ந்த காடுகளில் இவை வசிப்பதுமில்லை, மறைந்திருந்து, நேரம் பார்த்து தாக்கி வேட்டையாடுவதுமில்லை.
திறந்த வெளிகள், மலைப்பாங்கான இடங்கள், மனிதக் குடியிருப்பை ஒட்டியிருக்கும் தரிசு நிலங்கள் ஆகிய பகுதிகளில் சிறுத்தைகள் தைரியமாக உலா வரக்கூடியவை.
இரை வேட்டையாடுவதில் சிறுத்தைகளுக்குப் போட்டியே கிடையாது. எங்கும் எப்போதும் யாரையும் தைரியமாக நேருக்கு நேர் மோதக்கூடியவை.
திறந்த வெளியில் உலா வரும் சமயத்தில் தற்செயலாகத்தான் வீடுகள் நிறைந்த பகுதிகளுக்குள் வந்து விடுகின்றன.
மற்ற விலங்குகளைப் பற்றி சிறுத்தைக்குப் பயமில்லை என்றாலும் மனிதன் மீது மட்டும் சற்றே பயமும் சந்தேகமும் இவற்றுக்கு உண்டு. அதனால் எப்போதும் மனிதர்களைத் தவிர்த்து விடுவது இவற்றின் வழக்கம்.
இவற்றின் நடமாட்டத்துக்குக் காரணம் பசிதான். மனிதனின் உடைமைகளான மாடு, ஆடு, பன்றி, குதிரை ஆகியவற்றை எளிதில் தாக்கி வேட்டையாடும். இதனால் சிறுத்தையைத் தாக்க வரும் மனிதனையும் தாக்குவதற்கு இவை தயாராகி விடுகின்றன. அவ்வளவுதான்...
அடுத்த வாரக் கேள்வி
கடல் ஆமை என்பது தனி வகையா? நிலத்தில் வாழும் ஆமைக்கும் கடல் ஆமைக்கும் வித்தியாசங்கள் உண்டா?
பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/9/w600X390/sm14.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/10/அங்கிள்-ஆன்டெனா-2860384.html
2860386 வார இதழ்கள் சிறுவர்மணி கடி   DIN DIN Saturday, February 10, 2018 12:00 AM +0530 • "ஒரு செடியிலேர்ந்து பத்து இலை,....இன்னொரு செடியிலேர்ந்து எட்டு இலை... பழுத்து விழுந்தால் என்ன ஆகும்?''
"குப்பை ஆகும் சார்!''
எஸ்.தர்ஸினி, 
வாணியம்பாடி-635752.

• "வெள்ளை மாளிகை எங்கே இருக்கு தெரியுமா?''
"தரையிலேதான்!''
நா.ஆமினத்து ஜாக்ரினா, 3/60ஏ, புது கிழக்குத் தெரு, கீழக்கரை - 623517.

• "எதுக்கு கேஸைக் கட்டிப்பிடிச்சிக்கிட்டு இருக்கே?''
"சமையல்தான் முடிஞ்சிடுச்சே!''
"அதுக்கு?''
"சமையல் முடிஞ்ச உடனே கேஸை அணைக்கவும்னு ஒரு சமையல் புஸ்தகத்துலே படிச்சேன்!''
கோ.உதய்கிரண், பொன்சேதுபவனம், 36/61, என்.ஆர்.டி. மெயின் ரோடு, 
என்.ஆர்.டி. நகர், தேனி - 625531.

• "எங்கேடா "பிரெட்' டோட கிளம்பிட்டே?''
"அதுவா?....என் ஃபிரெண்ட் ஒருத்தன் பிறந்தநாளை ஜாம் ஜாம்னு கொண்டாடிக்கிட்டு இருக்கான்!''
எஸ்.அருள்மொழி சசிகுமார், 
கம்பைநல்லூர். 

• "பக்தா! உனக்கு என்ன வரம் வேணும்?''
"உங்களோட ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?....இல்லாட்டி நம்பமாட்டாங்க!''
எஸ்.மோகன், கோவில்பட்டி, 628501.

• "எல்லா பட்டனும் போயிடுச்சு....வழுக்கையா ஆயிடுச்சி''
"சட்டை பட்டனுக்கும் தலைக்கும் என்ன சம்பந்தம்??
"டூ வீலர் டயரைச் சொன்னேன்!''
யோகமித்ரா, செம்பாக்கம்-600073.

வாரம் 2 டி-சர்ட் பரிசு
நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும் பட்டுக்கோட்டை ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும் 
தலா ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/9/w600X390/sm15.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/10/கடி-2860386.html
2860387 வார இதழ்கள் சிறுவர்மணி புலி! DIN DIN Saturday, February 10, 2018 12:00 AM +0530 அது அய்யனார் மலை அடிவார வனம். பாதையில் வனத்துறை அலுவலகம். சிறிது தூரத்தில் ஆதிவாசிகளின் குடியிருப்புகள். மரம், செடி, கொடிகள், புல்புதர்கள் மற்றும் பற்பல வன உயிரினங்கள் வாழும் வனப்பகுதி அது. வனத்துறை அலுவலகம் ஒன்றும் அங்கு இருந்தது. அந்த அலுவலககத்தில் வனத்துறை அலுவலரோடு ஒரு இளைஞன் பேசிக்கொண்டிருந்தான். அவர் வாசலுக்கு வந்து வனப்பகுதிகளைக் காட்டி ஏதோ விளக்கிக் கொண்டிருந்தார்.
 அருகே காணப்பட்ட குடிசைப் பகுதியை நோக்கி, ""நீலா!....ஏய் நீலா!...'' என்று குரல் கொடுத்தார்.
 ஒரு ஆதிவாசி சிறுவன் ஓடி வந்தான். கருத்த உருவம்...., இடையில் ஒரு கோவணம்.... தலையில் துண்டு கட்டியிருந்தான்.
 "கும்பிடுதேன் சாமி!....சொல்லுங்க சாமி!'' என்றான் நீலன்.
 "நீலா!....இந்தத் தம்பி எனக்கு வேண்டியவரு...காலேஜிலே படிக்கிறாரு....புலியைப் பற்றி கட்டுரை எழுதணுமாம்...நீ கூட்டிக்கிட்டுப் போய் புலியைப் பத்தி விவரம் சொல்லி அது போற வர இடங்களைக் காட்டி, முடிஞ்சா புலியையும் காட்டணும்....நானும் கூட வர்றேன்... என்னப்பா''
 "சரி சாமி!....வாங்க போவோம்!''
 "உணவுப் பொட்டலங்கள், பாதுகாப்புத் துப்பாக்கியுடன் அவர்கள் வனத்தின் ஒற்றையடிப் பாதையில் நடந்தனர்.
 "தம்பி புலியைப் பார்த்தா பயம் வருமில்லே'' என்று மாணவர் கேட்டார்.
 தன்னைத் தம்பி என்று அழைத்ததில் அவனுக்கு மகிழ்ச்சி!
 "சாமி, வன உசுருகள்லே புலிதான் பலமான மிருகம்!...அது இன்னொரு புலிக்கும் மனுசங்களுக்கு மட்டும்தான் பயப்படும்!...தனக்கு ஒரு கெடுதல் செய்ய வராங்கன்னு தெரிஞ்சாத்தான் புலிக்குக் கோவம் வரும்! இல்லேன்னா நம்ம பாத்ததும் அது விலகிப் போயிரும்....பசிச்சா மட்டும்தான் மற்ற மிருகங்களை பாய்ஞ்சு கொல்லும். மேயுற மானைப் பார்த்தா பதுங்கி வரும். அதைக் குரங்கு பார்த்தா பதுங்கி மானைத் தப்பிக்க வைக்கும்!' என்றான் நீலன்.
 நீலன் சொல்லச் சொல்ல மாணவர் ஆர்வமுடன் நோட்டில் குறித்துக் கொண்டார். அவர்கள் ஒற்றையடி பாதை முள் கொடிகள் மேலே படாமல் ஒதுங்கிச் சென்றனர். பாதையில் உருட்டுக் கற்கள், மர வேர்கள். ""பார்த்து நடந்து வாங்க...'' என்று சொன்ன நீலன் முன்னால் நடந்து சென்றான்.
 "சாமி, புலி தன் குட்டிகளுக்கு எதிரியை எப்படி பாய்ஞ்சு கொல்லணும்...., நாம் எப்படித் தப்பிக்கணும்னு கத்துக் குடுக்கும்!....குட்டிகளின் கழுத்தைப் பிடிச்சு தூரப்போடும்!......பார்க்கறதுக்கு அதிசயமா இருக்கும்! மறைவுல நின்னுதான் பார்க்கணும்!''
 மாணவனுக்கு வியப்பாக இருந்தது. எல்லாவற்றையும் வியப்போடும் ஆர்வத்தோடும் குறித்துக் கொண்டான்.
 "ஏம்ப்பா நீலா, அதைக் காட்டுறியா?''
 ""பார்க்கலாம் சாமி!....எதிரியைப் பார்த்ததும் கீழ் உதட்டை சுளிச்சு பயங்கரமா உறுமும். காதுகளை பின்னால திருப்பி தலையைச் சாய்ச்சி ஒரே பாய்ச்சலா பாயும்!....அதப்பாத்த மிருகத்துக்கு அப்பவே பாதி உசுரு போயிரும்! தப்பிச்சு ஓடப் பார்க்கும்....எப்படியும் புலி அடிச்சுடும்!''
 "அட...அட...எத்தனை விஷயங்கள் தெரிஞ்சு வெச்சிருக்கே!...'' வியப்பும் மகிழ்ச்சியுமான குரலில் மாணவர் பேசினார். அவர்கள் சிறு குன்றுகளில் ஏறியும், இறங்கியும் சுற்றி வளைந்தும் நடந்து கொண்டிருந்தனர்.
 விலங்கு, பறவைகள் மற்றும் சில்வண்டுகளின் இசையும் கேட்டுக் கொண்டிருந்தன. தரையில் இலைச் சருகுகள் நிறைந்த பாதையில் அவர்கள் நடந்து கொண்டிருந்தனர்.
 ஓர் இடத்தில் நீலன் நின்றான். அவர்களையும் நிற்கக் கூறினான். மூச்சை நிறுத்தி உள்வாங்கினான்.
 ஓர் இடத்தில் நின்று அவர்களுக்கு ஓர் இடத்தைச் சுட்டிக் காட்டினான். அவர்கள் பார்த்தனர்.
 அங்கே சருகுகளின் மேல் ஒரு புலி படுத்திருந்தது. அதன் உடலில் முகம் கண்கள் காதுகள் கால்கள் எங்கும் சருகு இலைகள் ஒட்டி வைத்ததுபோல் இருந்தன.
 அதன் வயிறு ஏறி, இறங்கி அசைந்து கொண்டிருந்தது.
 "என்ன நீலா இது?'' அலுவலர் கேட்டார்.
 "சாமி, புலியைக் கொன்று தோலு நகங்களை எடுக்கறதுக்காக இந்த சருகுகள் ரெண்டு பக்கமும் ஆலம் பிசினைத் தடவிப் போட்டுருக்காங்க....புலி கால்ல ஒட்டின சருகுகளோட புலி காலோட முகத்துல தேய்க்கும்....சருகுக கண்கள்ளே, முகத்துலே...ஒட்டி அதுக்கு கண் தெரியாது....முடியாம அப்படியே படுத்துக்கும்......அப்ப பார்த்து வந்து அவங்க புலிய அடிச்சு கொன்னுடுவாங்க.....இங்க அதான் நடந்திருக்கு...''
 "சரி,...இப்ப நாம என்ன செய்யறது?'' என்று அலுவலர் கேட்டார்.
 "சாமி, துப்பாக்கியிலே மயக்க ஊசியப் போட்டுச் சுடுங்க....நான் போய் சருகுகளை எடுத்துடறேன்....நாம போயிடலாம். புலி மயக்கம் தெளிஞ்சி எழுந்து போயிடும்.
 நீலன் சொன்னபடி அவர் மயக்க ஊசியைச் செலுத்த, நீலன் சருகுகளை எடுத்ததும் அவர்கள் திரும்பிவிட்டனர்.
 ஒரு புலியைக் காப்பாற்றிய திருப்தி மூவருக்கும் இருந்தது.
 
 -கொ. மா. கோதண்டம்
 
 
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/9/w600X390/sm16.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/10/புலி-2860387.html
2860378 வார இதழ்கள் சிறுவர்மணி பாமாலை - 2   Friday, February 9, 2018 10:26 AM +0530 ( இது இரண்டாவது பாமாலை. மதுரையில் வாசுதேவன் என்பவரின் 
சேவை மனப்பான்மை பற்றிய உண்மை செய்தியை அடிப்படியாகக் கொண்டது)
கதைப் பாடல்

தூங்கா நகரம் மதுரையிலே - இரவில் 
தூக்கம் வராமல் பசியாலே
வாடும் முகங்கள் பல உண்டு!
வயிறுகள் காயும் துயருண்டு!

சாலையோரம் நடைபாதை
சந்தின் முனைகள் பலவற்றில் 
கண்ணீர் சிந்திய மனிதர்களைக்
கண்டார் "ஆட்டோ' தொழிலாளி!

வாசு தேவன் எனும் இளைஞர்
வாடிய பயிர்க்கும் வாடுகின்ற
வள்ளலார் வழியைப் போற்றுபவர்!
வந்தார் அவர்கள் துயர் தீர்க்க!

உணவகம், திருமண மண்டபங்கள்
ஒவ்வொன்றாக அவர் செல்வார்!
எஞ்சும் உணவை, காய்கறியை
ஏற்றுக் கொள்வார் நன்றியுடன்!
அவற்றை அன்னையின் துணையுடனே 
பொட்டலம் செய்வார் பலவாக!
"ஆட்டோ' விரையும் பசியாற்ற - அவர்கள் 
முகங்கள் மலரும் மனம் குளிரும்!

எஞ்சும் உணவைக் குப்பையிலே 
எறியா வண்ணம் சேகரித்து
அன்புப் பணியைத் தொடர்கின்றார்! - ஏழை
அவலம் துடைத்து மகிழ்கின்றார்!

இல்லார் துயரம் களைகின்ற
இனியவர் இவர்போல் சிலராலே
நாட்டில் நல்ல மழை பெய்யும்!
நாமும் இவரை வாழ்த்திடுவோம்!
-பூதலூர் முத்து

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/9/w600X390/sm8.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/10/பாமாலை---2-2860378.html
2856674 வார இதழ்கள் சிறுவர்மணி கடி DIN DIN Saturday, February 3, 2018 10:39 AM +0530 * "பூமி லட்டு மாதிரி ஒரு கோளம்!...எளிதில் புரிஞ்சுக்க இது ஒரு நல்ல உதாரணம்!''
"பூந்தி லட்டா?...ரவா லட்டா சார்?''
ஆர்.யோகமித்ரா, 
எஃப் 2, கிருஷ்ணா அபார்ட்மென்ட், பிளாட்-20, சுந்தர் அவின்யூ, 
மகாசக்தி காலனி, செம்பாக்கம், சென்னை-600073.

* "பல் ஒரே கறையா இருக்கு டாக்டர்!''
"ஒரு பேஸ்டு தரேன்....போடுங்க....சுத்தமா ஆயிடும்!''
"அப்புறம்?''
""வேறே வந்து வாங்கிட்டுப் போங்க...''
கே.அனுசூயா, சென்னை-600019.

* "விரலை விட்டு எண்ணினப்புறமும் அஞ்சை நாலுன்னு சொல்றியே?''
"ஒரு "விரலை விட்டு'ட்டேன்!''
ஏ.நாகராஜன், 
5, வீரராகவன் தெரு, அண்ணா நகர், 
பம்மல், சென்னை-600075.

* "உலகம் உருண்டைன்னு எதனாலே சொல்றோம்?''
"வாயாலதான் சார் சொல்றோம்!''
சி.சடையப்பன், திண்டுக்கல்.

* "..."அறம்' என்றால் என்ன?''
"நயன்தாரா நடித்து "ஓஹோ' ன்னு ஓடின படம் சார்!''
ச.ஆ.கேசவன், இனாம்மணியாச்சி. 

* "எதுக்குடா தாத்தா தூக்க மாத்திரையோட ஒரு சின்ன மாத்திரையும் போட்டுக்கறார்?''
"கொட்டாவி விடறதுக்காக இருக்கும்!''
டி.மோகன்தாஸ், 
நாகர்கோவில்.
வாரம் 2 டி-சர்ட் பரிசு
நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும் பட்டுக்கோட்டை ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும் 
தலா ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/3/w600X390/sm15.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/03/கடி-2856674.html
2856672 வார இதழ்கள் சிறுவர்மணி அங்கிள் ஆன்டெனா DIN DIN Saturday, February 3, 2018 10:33 AM +0530 கேள்வி : 
கலைமான்களின் கொம்புகள், ஆண்டுதோறும் விழுந்து, புதிதாக முளைக்கின்றன என்கிறார்களே, உண்மையா?
பதில்: 
கொம்புகள் மானின் உடல் பாகங்களிலேயே மிகவும் ஆச்சரியமான சமாச்சரம். சிறந்த ஆர்க்கிடெக்ட் ஒருவரால் உருவாக்கப்பட்டது போன்ற அமைப்பைக் கொண்டவை.
ஒவ்வொரு மான் இனத்துக்கும் குறிப்பிட்ட வகை கொம்புகள் (மாடல்கள்) உள்ளன. கொம்பின் அமைப்பை வைத்தே மான்களை இனம் பிரித்து விடலாம். ஒரு சாண் அளவுள்ள கொம்பிலிருந்து மிகவும் சிக்கலான வடிவைக் கொண்ட மிகப்பெரிய கொம்புகள் வரை விதவிதமான டிசைன்கள் உள்ளன.
இளமையில் சிறிதாக இருக்கும் கொம்பில் மானின் வயது கூடக் கூட கிளைகளும் கூடிக் கொண்டே இருக்கும். கலைமானிற்கு மட்டுமல்ல, எல்லா மான்களுக்குமே ஆண்டுக்கொருமுறை கொம்புகள் புதுப்பிக்கப்படுகின்றன.
கொம்பின் அடிப்பகுதியில் ஒரு வளையம் தோன்றி, அது மெதுவாக இறுக ஆரம்பிக்கும். இதனால் ரத்த ஓட்டம் தடைப்பட்டு கிளைகள் உணர்விழந்து போகும். பின் வெறுமனே ஒட்டிக்கொண்டிருக்கும் சுருங்கிய கிளைகளை ஏதோ ஒரு மரத்தில் தேய்த்து மான்கள் உதிர்த்து விடும். பிறகு அந்த இடத்தில் புதிய கொம்பு முளைத்து வளர்ச்சியடைய ஆரம்பிக்கும். 
உணவு தேடிச் செல்லும் மான்கள் எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்கு இந்தக் கொம்புதான் ஆயுதம்.
அடுத்த வாரக் கேள்வி
மனிதரைப் பற்றிய பயமே இல்லாமல் சிறுத்தைகள் மட்டும் ஊர் எல்லைக்குள் நுழைந்து மனிதரைத் தாக்கி விடுகிறதே, ஏன்? 
பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/3/w600X390/sm14.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/03/அங்கிள்-ஆன்டெனா-2856672.html
2856669 வார இதழ்கள் சிறுவர்மணி பாதை மறந்து போன சாலுவும் குட்டிக்கரடியும்! DIN DIN Saturday, February 3, 2018 10:31 AM +0530 ரஷிய சிறுகதை
சென்ற வார தொடர்ச்சி...
 
 "குட்டிக்கரடியே! பழங்கள் அனைத்தையும் நிதானமாக மென்று சாப்பிடு. எல்லாவற்றையும் கவனமாக விழுங்க வேண்டும்'' என்றது. அதைக் கேட்ட சாலு, பதில் எதுவும் பேசவில்லை. அவள், மேலும் மூன்று நெல்லிகளைப் பறித்தாள். தனது சின்ன வாளியில் போட்டு வைத்துக்கொண்டாள்.
 குட்டிக்கரடியின் அம்மா இந்த நிலத்தில் இப்படியொரு சத்தம் எங்கிருந்து வருகிறது என்று தெரிந்துகொள்ளத் திரும்பிப் பார்த்தது.
 ""ஹ்ஹிம்''... சிறுமி அழ ஆரம்பித்தாள். வாய் நிறைய நெல்லிப் பழங்களை வைத்திருந்தவள் திக்குமுக்காடிப் போனாள்.
 "இது என்னுடைய குழந்தை இல்லையே! எங்கே என் குட்டிக்கரடி?''
 சிறுமியை ஒருமுறை கவனித்துப் பார்த்துவிட்டு பின்வாங்கிச் சென்றது அம்மா கரடி. குட்டிக்கரடியைத் தேடி மிக வேகமாக நடந்து சென்றது.
 சாலுவின் அம்மா, குட்டிக்கரடி மிக அழுத்தமாகக் காலூன்றி நடந்து வரும் சத்தத்தைக் கேட்டு தனது மகள் சாலுதான் என்று நினைத்தார். அவர் தொடர்ந்து நெல்லிப் பழங்களைப் பறித்துக்கொண்டிருந்தார்.
 குட்டிக்கரடி சத்தம் எழுப்பாமல் அவருடைய வாளியில் உள்ள பழங்களைப் பார்த்தது. உண்மையிலேயே அது, வாளியில் உள்ள சிலவற்றை ருசிக்க நினைத்தது. ஆனால், அதில் அளவுக்கு அதிகமாக பழங்கள் இருந்தன. மேலும் அவை ஒன்றோடு ஒன்று கலந்திருந்தன. குட்டிக்கரடி, கைநிறைய அள்ளி வாயில் போட்டுக்கொண்டது.
 ""சாலு, என்ன செய்கிறாய்?'' என்று பின்பக்கம் திரும்பிப் பார்க்காமல் அம்மா சொன்னார்:
 "நீ என்னைத் தொடந்து ஓடிவா! உனக்குத் தேவையான பழங்களைப் பறித்துக்கொள். அம்மா இவற்றைப் பதப்படுத்தி அடுத்த குளிர்காலத்துக்காக சோமித்து வைக்கவேண்டும்!" என்றார்.
 மறுபடியும் குட்டிக்கரடி நெல்லிப் பழங்களை கைநிறைய அள்ளியெடுத்து வாயில் போட்டு நிரப்பிக்கொண்டது. வாளியில் சேகரித்திருந்த பழங்களை முழுவதுமாகக் கவிழ்த்து விட்டது.
 சாலுவின் அம்மா திரும்பிப் பார்த்து பெருமூச்சு விட்டார்.
 "அடக் கடவுளே! நீ சாலு இல்லையே? எங்கே?''
 எனது மகள் எங்கே?
 சாலுவின் அம்மா, மெதுவாகப் பின்பக்கம் நகர்ந்து சென்றார். மகளைத் தேடிக் கண்டுபிடிக்க மிகவும் வேகமாக நடந்து சென்றார்.
 அவர், நீண்டதூரம் சென்றிருக்கவில்லை. அதற்குள் அவர் "குப்ளிங்! குப்ளிங்! குப்ளிங்!' என்று சத்தம் வருவதைக் கேட்டார். அது மாதிரியானச் சத்தம் வருவதற்கான காரணத்தை உடனடியாகப் புரிந்துகொண்டார்.
 குட்டிக்கரடியின் அம்மாவும் குட்டியைத் தேடி நீண்டதூரம் சென்றிருக்கவில்லை. அதற்கு முன்பே அந்தக் கரடி அருகிலிருந்து வந்த வினோதமான சத்தத்தைக் கேட்டது. பழங்களை நிதானமாக மென்று விழுங்கும் சத்தம் விட்டுவிட்டுக் கேட்டது. அது மாதிரியான சத்தம் எழுவது எப்படி? என்பதை அம்மா கரடி புரிந்துகொண்டது.
 குட்டிக்கரடியும் அம்மா கரடியும் சேர்ந்து அவுரி நெல்லி மலையின் ஒரு பக்கத்தில் இறங்கி வீட்டுக்குச் சென்றன. குளிர்காலத்துக்குத் தேவையான உணவை வயிறு நிறைய சேமித்து வைத்திருந்தன.
 சாலுவும் அவளது அம்மாவும் மலையின் மறுபக்கத்தில் இறங்கிச் சென்றார்கள். பாதை முழுவதும் கிடைத்த பழங்களைப் வாளி நிறையப் பறித்துக்கொண்டார்கள். அடுத்த குளிர்காலத்துக்கான உணவைச் சேகரித்துக்கொண்டு வீடுபோய்ச் சேர்ந்தார்கள்.
 சாலுவின் கையிலிருந்த மூன்று நெல்லிப் பழங்களைச் சேர்த்து வாளி நிறையப் பழங்கள் நிரம்பியிருந்தன.
 
 ராபர்ட் மெக்குலோஸ்கி
 தமிழில்: கொ.மா.கோ. இளங்கோ
 
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/3/w600X390/sm13.jpg http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/03/பாதை-மறந்து-போன-சாலுவும்-குட்டிக்கரடியும்-2856669.html