Dinamani - தமிழ்மணி - http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2923202 வார இதழ்கள் தமிழ்மணி இந்த வார கலாரசிகன் DIN DIN Sunday, May 20, 2018 02:18 AM +0530 எழுத்தாளர் பாலகுமாரனின் மறைவு எனக்கு ஏற்படுத்திய அதிர்ச்சியை எழுத்தில் வடிக்க முடியாது. எண்பதுகளின் தொடக்கத்தில் "சாவி' வார இதழில் நான் உதவி ஆசிரியராகச் சேர்ந்த நேரத்தில்தான், பாலகுமாரன் அதில் "மெர்க்குரிப் பூக்கள்' என்கிற தனது முதல் தொடர்கதையை எழுதத் தொடங்கி இருந்தார். அச்சுக்குப் போவதற்கு முன்பு அதை நான் உட்பட ஆசிரியர் குழுவினர் அனைவரும் ஒருவர் மாற்றி ஒருவர் ஆர்வத்துடன் படித்தபோதே தெரியும், மிகப்பெரிய "கதை சொல்லி' ஒருவர் உருவாகிறார் என்பது.
அப்போது அவர் "டாஃபே' நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஸ்கூட்டரில் அவர் வந்து இறங்கியது, ஸ்டைலாக "சிகரெட்' பற்ற வைத்துப் புகையை விடுவது, இதையெல்லாம் கூட நாங்கள் ரசித்ததுண்டு. வானத்துக்கும் பூமிக்கும் இடையேயுள்ள எதைப் பற்றி வேண்டுமானாலும், எத்தனை நேரம் வேண்டுமானாலும் அவரால் விமர்சிக்கவும், விவரிக்கவும் முடியும் என்பது அந்த ஆளுமை ஏற்படுத்திய பிரமிப்பு.

எல்லோருக்கும் அவர் "எழுத்துச் சித்தர்' எழுத்தாளர் பாலகுமாரன். ஆனால், அவரது ஆரம்பகால நண்பர்களுக்கு அவர் எப்போதுமே "பாலா'தான். "சாவி' அலுவலகத்தில் மாலன், சுப்பிரமணிய ராஜூ, பாலகுமாரன் ஆகிய மூவரும் மும்மூர்த்திகளாகவே வலம் வந்தனர். அவர்களுடைய எழுத்தைப் படிப்பதற்காகவே "சாவி'க்கு நிறைய வாசகர்கள் உருவானார்கள். பாலகுமாரனின் "மெர்க்குரிப் பூக்கள்', "அகல்யா', "இரும்புக் குதிரைகள்' தொடர்களுக்கு வந்த வாசகர்கள் கடிதங்களைப் பத்திரப்படுத்தாமல் போனது நான் செய்த தவறு. அவை ஓர் அற்புதமான தொகுப்பாக மட்டுமல்ல, வாசகனின் பார்வையில் அந்த எழுத்து ஆளுமை குறித்த பதிவாகவும் இருந்திருக்கும்.

ஏறத்தாழ 35 ஆண்டுகள் எங்களுக்குள் பரிச்சயம் என்றாலும் அதை நெருக்கம் என்று சொல்லிவிட முடியாது. நாங்கள் அடிக்கடி சந்திப்பதில்லை, தொலைபேசி உரையாடலும் குறைவு. ஆனால், என் மீது அவரும், அவர் மீது நானும் வைத்திருந்த அன்பு அளப்பரியது. "தினமணி' சென்னையில் நடத்தும் எந்த நிகழ்ச்சியானாலும், தவறாமல் வந்து முதல் வரிசையில் அமர்ந்துவிடுவார். அழைப்புக்காகக் கூட அவர் காத்திருப்பதில்லை என்றால், என் மீது எந்த அளவுக்கு அன்பு வைத்திருந்தார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

ஜெயகாந்தனுக்குப் பிறகு தமிழ் எழுத்துலகத்தில் மிகப்பெரிய ஆளுமையாக வலம் வந்தவர் பாலகுமாரன் மட்டுமே. கல்கி, ஜெயகாந்தன், சுஜாதா ஆகியோர் தன்னிகரில்லாத எழுத்தாளர்களாக வலம் வந்தாலும், பாலாவுக்கு இருந்த அளவுக்கு அவர்களது எழுத்துக்குப் பன்முகத்தன்மை இருக்கவில்லை என்பது எனது கணிப்பு. சரித்திர நாவல்களைக்கூட விட்டு வைக்கவில்லை என்பதல்ல, அதிலும்கூட வெற்றிக்கொடி நாட்ட அவரால் முடிந்தது என்பதுதான் பாலாவின் தனிச்சிறப்பு.

எழுதிக் குவித்திருக்கிறார். எழுதி எழுதிக் கையில் தழும்பு விழுந்துவிட்ட அளவுக்கு எழுதிக் குவித்திருக்கிறார் பாலகுமாரன். அதற்காக அவர் தன்னையறியாமல் உடலை வருத்திக் கொண்டதும், மூளையைக் கசக்கிக் கொண்டதும்தான் அவரது ஆயுளைப் பறித்துக்கொண்டது போலும். 71 எல்லாம் ஒரு வயதா, மனிதன் மண்ணைவிட்டு மறைவதற்கு?

கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே, "நான் தினமணிக்கு எழுதப் போகிறேன். இதுவரை வெளிவராத ஒன்றை எழுதப் போகிறேன்' என்று பல முறை என்னிடம் "பாலா' தெரிவித்திருக்கிறார். நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் இதைத் திரும்பத் திரும்பச் சொன்னார். நான் மட்டும் சற்று அழுத்தம் கொடுத்து, எழுதச் சொல்லியிருந்தால், வித்தியாசமான பாலகுமாரனின் வித்தியாசமான படைப்பு கிடைத்திருக்கக்கூடும். தவற விட்டுவிட்டேன். இனி அதைச் சொல்லி என்ன பயன்? அழுதென்ன பயன்? "பாலா' திரும்ப வரமாட்டார். ஆனால், இந்தக் குற்ற உணர்வு எனது வாழ்நாள் எல்லாம் என்னைத் துரத்தும்... தூங்கவிடாது!

நமது "தினமணி' இணைப்பான "இளைஞர்மணி'யில் தொடராக வந்தது சிபி குமரன் எழுதிய "நாளை நான் ஐஏஎஸ்' என்கிற கட்டுரைத் தொடர். அது தொடராக வந்தபோது படித்திருந்தாலும்கூட, இப்போது அதுவே புத்தகமாக வெளிவந்து படிக்கும்போதுதான் புரிகிறது, சிபி குமரன் எத்தகைய அரிய பதிவைச் செய்திருக்கிறார் என்பது.

மாணவர்கள் மட்டுமல்ல, பெரும்பாலான பெற்றோரும் தன்னுடைய மகனோ மகளோ, மாவட்ட ஆட்சியராக, அரசுத்துறை அதிகாரியாகப் பதவி வகிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்குத் தயாராவது எப்படி என்பது அவர்களுக்குத் தெரியாததால்தான், பலரும் பொறியியல் படிப்பை நாடுகின்றனர். அப்படிப்பட்ட இளைஞர்களுக்கும், பெற்றோருக்கும் என்ன செய்தால், எப்படிப் படித்தால் இந்தியக் குடிமைப்பணி தேர்வுக்குத் தயாராக முடியும், வெற்றிபெற முடியும், தமிழ் பள்ளியில் படிக்கும் மாணவர்களையும் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு ஆற்றுப்படுத்துவது எப்படி என்பதையெல்லாம் உணர்த்த முற்பட்டிருப்பதுதான் இந்தப் புத்தகத்தின் சிறப்பு.

மு.சிபி குமரனின் "நாளை நான் ஐ.ஏ.எஸ்' என்கிற இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தபோது, எனக்கு ஒரு சிறிய வருத்தம் உண்டாயிற்று. இந்தப் புத்தகம் 40 ஆண்டுகளுக்கு முன்பு சிபி குமரனால் எழுதப்பட்டு, அதை நான் படித்திருந்தால், ஒருவேளை நானும் ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகி, இப்போது ஓய்வு பெற்றிருப்பேனோ என்னவோ?

கவிஞர் அறிவுமதியை ஆசிரியராகவும், கவிஞர் பழநி பாரதியைப் பொறுப்பாசிரியராகவும் கொண்டு வெளிவரும்
"தை' கவிதை இதழ் குறித்து இதற்கு முன்பு ஒரு முறை எழுதி இருக்கிறேன். தமிழகத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர்கள் அனைவரின் படைப்புகளும் "தை' கவிதை இதழில் வெளிவருகின்றன. எனக்கு அனுப்பித் தரப்பட்டிருந்த, இந்த அற்புதமான முயற்சியின் சமீபத்திய இதழில் வெளிவந்திருந்தது கவிஞர் நை.மு.இக்பாலின் "கடைசிக் கேள்வி' என்கிற கவிதை.

பல்லாக்கை அலங்கரித்துப் 
பச்சை போர்த்தி
மல்லிகைச் சரமிட்டுத்
தோள் வலிக்கக்
குழி நோக்கிச் சுமந்து செல்லும்
தோழர்களே சொல்லுங்கள்
நான் 
மட்கும் குப்பையா?
மட்காக் குப்பையா?

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/20/w600X390/tm2.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/may/20/இந்த-வார-கலாரசிகன்-2923202.html
2923201 வார இதழ்கள் தமிழ்மணி திருவோடு -புலவர் இராம. வேதநாயகம் DIN Sunday, May 20, 2018 02:16 AM +0530 முனிவர்கள், துறவிகளின் கரங்களில் "திருவோடு' காணப்படும். திருவோட்டின் மூலம் தன் பசித் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள பிச்சை எடுப்பர். பரதேசிகளின் திருவோட்டிற்குப் "பிச்சைப் பாத்திரம்' என்ற பெயருண்டு. மேலும் கபாலம், அட்சய பாத்திரம் (மணிமேகலை)போன்ற பெயர்களாலும் வழங்குவர்.
சிவபெருமான் கரத்தில் திருவோடு (பிட்சாடனர்) இருந்ததையும், திருநீலகண்ட நாயனார் அடியார்களுக்குத் திருவோடு செய்து கொடுத்ததையும் புராணங்கள் கூறும்.
இந்தியப் பெருங்கடலில் உள்ள "சீசெல்ஸ்' தீவுகளில் வளரும் ஒருவகைப் பனை மரத்திலிருந்து இது உற்பத்தியாகிறது. இம்மரத்தில் "திருவோடு' என்பது ஒரு பெரிய விதையாகவே காணப்படுகிறது. இதற்குக் கடல் தேங்காய் என்றும், "கோக்கோ-டி-மெர்' என்றும் பெயர்கள் உண்டு. இதுவே உலகின் பெரிய விதையாகும். இது ஒரு மரத்தின் காய். இவ்விதைகள் கொண்ட மரத்திற்கு "மெக்கிகன் காலாபேடி' என்று பெயர். இவ்வகை மரவிதைகள் மாலத்தீவு என்ற இடத்தில் கரை ஒதுங்கும். இவ்விதையைப் பயன்படுத்தி எவரும் சுலபமாகப் பயிர்செய்ய இயலாது. இது அரிதான மரமாகவும், 
மாறுபட்ட குணாதிசயங்கள் கொண்டதாகவும் விளங்குகிறது.
திருவோடு பிச்சைப் பாத்திரம் மட்டுமல்ல சிறந்த மூலிகை விருட்சத்திலிருந்து பெறப்படுவதால் ஒப்பற்ற வேத சாத்திரங்களைத் தாங்கி மிளிரும் ஓடு. தரிசிப்பவர்க்கும், உஞ்சவிருத்தி (பிச்சை) எடுப்பவர்க்கும், பிச்சை இடுபவர்க்கும் வேத சக்திகளைத் தரும் முப்பத்திரண்டு வகையான தான-தர்ம தேவதைகளும் திருவோட்டில் வாசம் செய்கிறார்களாம். தூய சந்நியாசிகளுக்குத் திருவோட்டை தானமாக அளிப்பது சிறப்பு. இவ்வோட்டை வேள்வியிலும் இடுவர்.
இந்தியாவில் திருவோட்டு மரத்தை அறிமுகம் செய்தவர் இங்கல்ஹலிகார் முக்தா கிர்லோஸ்கர் என்பவர். சீசெல்ஸ் தீவிலிருந்து இவ்விதையைக் கொண்டு வந்து நட்டு, பராமரித்து தம் வீட்டுத் தோட்டத்தில் அலங்கார அழகு மரமாக்கினார். பின்பு இந்தியாவில் அரிதான சில இடங்களில் இது உற்பத்தியாகியுள்ளது. "புணே'வில் "ஆந்த்' என்ற இடத்திலும் பல்வேறு மடங்களிலும் திருவோட்டு மரங்கள் காணப்படுகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் அருகே திருவோட்டு மரம் உள்ளது. தமிழ்நாட்டில் "கோதை' (கன்னியாகுமரி) என்ற ஊரில் காசி விசுவநாதர் கோயிலில் திருவோட்டு மரம் காணப்படுகிறது. நாகர்கோவில் அருகே ஒரு சிவன் கோயிலில், ஒழுகினசேரி ஊரில் - திருவோட்டு மரம் உள்ளது.
திருவோட்டு மரம் திருச்சி தென்னூர் உக்கிரமா காளியம்மன் கோயிலிலும், சென்னை அருகே "ஞாயிறு' என்ற ஊரில் புஷ்பரதேஸ்வரர் கோயிலிலும் தலவிருட்சமாக விளங்குகிறது.
திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் திருவோட்டு மரங்கள் வளர்க்கப்படுவதாகத் தெரியவருகிறது. அழகிய ஆம்பலாப்பட்டு என்ற ஊரில் உள்ள சிவன் கோயிலில் திருவோட்டு மரம் காணப்படுறது.
தனக்கென வாழாது சமூக நலத்திற்காகத் தன்னலம் துறந்த தியாக நங்கை, தவநங்கையான மணிமேகலை பசிப்பிணியைப் போக்க திருவோட்டை(அமுதசுரபி) ஏந்திய நிகழ்வு யாவரும் அறிந்ததே.
சித்தர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர் யாவரும் திருவோட்டைத் துறந்தவர்களே.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/20/w600X390/tm4.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/may/20/திருவோடு-2923201.html
2923200 வார இதழ்கள் தமிழ்மணி உளன் கண்டாய் நல்நெஞ்சே! -புலவர் வெ. இராமமூர்த்தி DIN Sunday, May 20, 2018 02:15 AM +0530 உலகத்தைக் காக்கும் திருநாராயணன் மீது, ஆரா அன்பினில் ஆடி ஆடி அகம் கரைந்து, இசைப் பாடி பாடிக் கண்ணீர் மல்கி நாலாயிரத்தை மங்களா சாசனம் செய்து, அன்பில் ஆழங்கால்பட்டவர்களே ஆழ்வார்கள். திருமால் வைகுந்தம், பாற்கடல், இராம, கிருஷ்ண அவதாரங்கள் எடுத்தாலும், நம் மனத்தில் கோயிலாய் குடிகொள்வதைத்தான் பெரிதும் விரும்புகிறார்.
நம் மனமே குடியிருக்கும் கோயில்! மாசற்ற மனமே அறம்; மனசாட்சியே கடவுளின் சாடி; அதன் வழிப்படி நடப்பதே மாட்சி; மனத்தை அவித்து வாழ்வாங்கு வாழ்வதே வீடு; நல் மனமே வல்வினையைப் போக்கி, அறம், பொருள், இன்பத்தை அடைவிக்கும் வரம்.
வையம் தகளியாய் விளக்கேற்றிய பொய்கையாழ்வார், 

"உளன் கண்டாய் நல்நெஞ்சே! உத்தமன் என்றும் உளன் கண்டாய்;
உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்; வெள்ளத்து உள்ளானும்,
வேங்கடத்து மேயானும், உள்ளத்தின் உள்ளான் என்று ஓர்'

நெஞ்சமே! இதை நீ அறிவாய். நம் உள்ளத்தில் உறைவதற்காகவே கடவுள் திருப்பாற்கடலிலும், திருவேங்கடத்திலும் உளன். தன்னை நினைப்பவர் உள்ளத்தில் அவன் உளன். ஆதலால் நெஞ்சமே அவனை நினை. அவனைக் காண்பது எளிது. அரிய புலன் ஐந்தடக்கி, ஆய்மலர் கொண்டு அன்பால் தொழு என்கிறார்!
அதேபோல் இறைவன் இணையடிகட்கு இருந்தமிழ் மாலை சூட்டிய பெருந் தமிழனாகிய பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில்,

"மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் - மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கத்துள்ளான்' 

என்று நம் மனத்தையே முதன்மைப்படுத்தி, மாதவனை அன்பினில் வழிபட்டு, மனத்தை நல்நெறியில் நிறுத்தி, மலர்த் திருவடிகளைக் கடல்போல் பீடுடைய மனமே! உவந்து போற்று என்கிறார்.

மயிலைப் பேயாழ்வாரும் ஒளிவெள்ளத்தில் மூழ்கி திருமகள் உடனாய திருக்கோவிலூர் பெருமானை "திருக்கண்டேன்' என்று கண்டு களித்து, 

"உளன் கண்டாய் நல் நெஞ்சே! உத்தமன்; என்றும் உளன் கண்டாய்' என்று திருவேங்கடத்தான், உலகளந்த திரிவிக்ரமன், வைகுந்தம், பாற்கடலை விட்டு, பக்தர்கள் உள்ளத்தில் குடிகொள்ள மகிழ்ச்சியுடன் காப்பதற்காக வந்தான் என்கிறார். 

திருமழிசைப்பிரான், "தேருங்கால் தேவன் ஒருவனே; அவனை அன்பிலன்றி ஆழியானை யாவர் காண வல்லரே?' என்று அன்பே திருமால் என்று போற்றி, உளன் கண்டாய் என்ற முதலாழ்வார்கள் கருத்தையே வலியுறுத்துகின்றார். அன்று நான் பிறந்திலேன்; பிறந்த பின் மறந்திலேன் என்று நான் பிறப்பதற்கு முன்பு காஞ்சியில் திருவூரகத்தில் நின்றும் திருப்பாடகத்தில் வீற்றிருந்தும், திருவெஃகாவில் அறிதுயில் கொண்டனை. ஆனால் நான் பிறந்த பின்பு, நின்றதும், இருந்ததும், கிடந்ததும் என் நெஞ்சுளே என்கிறார். 

அவர் நெஞ்சே திருமலை, பரமபதம், பாற்கடல்! "அகம்படி வந்து புகுந்தது'! ஈசன், எனக்கு அத்தனாகி, அன்னையாகி, ஆளும் எம்பிரானுமாய் அருளி, முத்தனார், முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார். எத்தினால் இடர் கடற் கிடத்தி ஏழை நெஞ்சமே! என்று நெஞ்சுக்கு உபதேசம் செய்கின்றார்.

செந்தமிழில் நான்மறையை அருளிய நம்மாழ்வாரும், "பெருமான் என் நெஞ்சில் உறைகின்றான் ஆனால் நான் காணாமல் ஒளித்திருக்கின்றான்' என்று வேதனை, சோரனைப்பட்டு பத்துடையார்க்கு (பக்தி) எளியவன் என்று கண்டேன் கமல மலர்ப்பாதம் என்று மனத்தூய்மை போற்றுகின்றார்.

பெரியாழ்வாரும், "பனிக்கடலில் பள்ளிகோளை விடுத்து என் மனக்கடலில் வாழவல்ல மாயா! உனக்கு இடமாய் இருக்க என்னை ஆக்கினையே' என்று உள்ளத்தைக் கோயிலாக்கி மாதவன் என்ற தெய்வத்தை நாட்டி, ஆர்வ மலரால் துதித்தால் எம பயம் நீங்கி, தண்டனைகளிலிருந்து உய்யலாம் என்று வழியையும் காட்டுகிறார். நம்முடைய ஆன்மாவை - மெய்ப்பொருளை அறிவதே முக்தியாகும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/20/w600X390/tm1.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/may/20/உளன்-கண்டாய்-நல்நெஞ்சே-2923200.html
2923199 வார இதழ்கள் தமிழ்மணி இலக்கியத்தில் பொருளியல் சமூகம் -இ. கலைக்கோவன் DIN Sunday, May 20, 2018 02:13 AM +0530 அகமும் அறமும்:

சங்க காலம் கட்டமைக்கப்பட்ட அமைப்பின் முதல் பொருளே நிலமும், பொழுதும்தான். சொத்து என்பதை உருவாக்கும் முனைப்பில் மனித சமூகம் வேகமாக நடைபோட்டுக் கொண்டிருந்த ஆரம்ப காலகட்டத்தில் சங்க காலம் என்பதால் நிலப் பாகுபாடும் அதன் கூறாக அமைந்த முதல், கரு, உரிப்பொருள்களும் கட்டமைக்கப்பட்டன எனலாம். இது அந்தந்த நிலத்தின் உரிமையையும், உரிமை சார்ந்த ஆளுமையைத் தக்கவைக்கவும் உலகுக்குப் பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டது. அதன்படியே இலக்கியங்களும் படைக்கப்பட்டன. இது அக்காலகட்ட அடையாளத் தேவையாகக்கூட அமைந்தது. அதற்குச் சான்றாக "பிறைகிழான்நல்வேட்டனார்' இயற்றிய நற்றிணைப் பாடல் (நற்.மருதம்.210) அமைகிறது.
தோழி தலைவனிடம் தன் உள்ளக் கருத்தைக் கூற முற்படும்போது முதலில் தலைவனின் நிலம் அவன் நாட்டின் செல்வவளம் இவற்றையே கூறுகிறாள். பின்னரே, தன் அடிமனக் கருத்தைக் கூறுகிறாள். இங்கே தலைவனின் நாட்டுவளம், செல்வச்செழிப்பின் தன்மையைப் படமாக்கிக் காட்ட வேண்டிய தேவை புலவருக்கு ஏன்? வெறும் அழகூட்டுவதுதான் அதன் நோக்கமா? இல்லை. இது பொருளியல் கட்டமைப்பு. ஆனால், அதில் ஒரு நுட்பமானஅறம் சுட்டப்படுகிறது. இன்றைய தனியுடைமைப் பொருளியல் சமூகம் தவறவிட்ட அறம், சங்க இலக்கியத்தில் பேணப்படுகிறது. தனியுடைமை ஏற்படும்போது நிகழும் சமூக மாற்றம், செல்வ வளங்கள் ஓர் இடத்தில் குவிக்கப்படும்போது, அது ஒருவேளை அறவாழ்வைசிதைக்கக்கூடும் என்ற சிந்தனையின் வெளிப்பாடு.

புறமும் அறமும்:

சொத்தை உருவாக்கவும், தக்க வைக்கவும் பெருக்கவும் முற்பட்ட சங்க காலம், அகத்தில் அறம் வைத்தது போலவே புறத்திலும் அறம் வைக்கத் தவறவில்லை. புறப் பொருளுக்கான திணைகள்அதை நமக்கு நன்கு விளக்குகின்றன. அதிலும் குறிப்பாக, பாடாண் திணையைச் சுட்டலாம். தக்கவைத்த, பெருக்கிய செல்வத்துப் பயனே ஈதல் என்பதைத் தன் ஒரு கூற்றாகக் கொண்டிலங்குவது இத்திணை. மற்ற அனைத்துத் திணையின் பயன்படுபொருள் பாடாண்திணை.
இருபத்து நான்கு வரிகளைக்கொண்ட புறநானூற்றுப் (பா.158) பாடல் ஒன்றில், பெருஞ்சித்தனார் குமணனிடம் கடை ஏழு வள்ளல்களின் கொடைச் சிறப்பைக் கூறி, "தீ ஏந்திய வேல், புகழ் மேம்பட கொடையுடனே பகைவரிடத்து உயர்வதாக' என்கிறார். இது வெறும் வாழ்த்தியல், பரிசில் கடாநிலைத்துறை என்று மட்டும் உணர்ந்து கொள்வது அல்ல. இருப்பவன் இல்லாதவனிடம் கொடுத்தல், பெற்றவன் பெற வருபவனுக்கு வழங்குதல். ஓர் இடத்தில் குவிந்த செல்வம் பரவலாக்கப்படல். தனியுடைமை பொதுவுடைமை ஆக்கும் முயற்சி. பெற்றவன் வாழ்த்துவது கொடுத்தவனுக்கு மட்டுமல்ல, கொடுக்கத் தூண்டும் சமிக்ஞை. ஆனாலும், அந்தப் பங்கீட்டை மன்னர்கள் அங்கீகரித்தே வந்தனர். இது பொருளியல் அறம். அகம் மட்டுமல்லாது புறத்திலும் கடைப்பிடிக்கப்பட்ட பொருளியல் அறம்.

பொருள்களும் பொருளியலும்:

அகத்திணையில் முதல் மற்றும் உரிப்பொருள்களை உற்று நோக்குங்கால் எளிமையானதொரு புரிதல் ஏற்படும். நிலமும் நிலம்சார்ந்த பொருளும் என்பது பொருளியலின் குறியீடு. பொருளாதார நிறைவைப் பொருத்து சமூகத்தின் கட்டமைவு உருவாகிறது. அவ்வளவும் முறையாகப் பங்கிடப்படும்போது சமத்துவ சமுதாயம் உருவாகிறது. மறுக்கப்படும்போது அறம் பிறழ்ந்த சமூகம் உருவாகிறது. இதற்குப் பாலை நிலத்தின் கருப்பொருளில் ஒன்றான தொழிலைக் கூறலாம். அது வழிப்பறியைத் தொழிலாகக் காட்டுகிறது.

மாண்பும் மகத்துவமும் நிறைந்த காலம்:

அன்றைய காலகட்டத்தில் "தேவை' என்பது தவிர்க்க முடியாததாக அமைந்தது. பொருளீட்டுவதும் பாதுகாப்பதும் பெருக்குவதும் புறம் என்று கூறப்படினும் அது இன்றைய தாராளமய, உலகமய, பொருளாதார உலகிற்கு விட்டுச்சென்ற பாடம் ஏராளம். அது பொருளீட்டலின் நோக்கமே கொடுத்துதவுதல் என்றது. தன் எல்லையை விரிவுபடுத்துவது அதிகாரத்தைச் செலுத்த மட்டுமல்ல. அறத்தின் வழி நிற்கவும் என்றது.

தனியுடைமைச் சமூகத்தில் வர்க்க முரண்பாடுகள் தவிர்க்க முடியாது என்றாலும், குறைந்தபட்ச பொருளியல் அறத்தைப் பேண வேண்டிய தேவையை 12 திணைகளும் உணர்த்தின. அவை தவறும் பட்சத்தில் அற இலக்கியங்கள் நம் சமூகத்தின் தேவையாக உணரப்பட்டன. அற வாழ்விற்கான அச்சுறுத்தல், காப்புப்பொருள் ஒன்று தேவையானபோது பக்தி இலக்கியங்கள் உயர்வு பெற்றன. அதில் ஏற்பட்ட சமூக முரண்பாடுகளையும் சமூக நீதிக் கொந்தளிப்புகளையும் எதிர்கொள்ள மறுமலர்ச்சி இயக்கங்கள் அவசியப்பட்டது. மீண்டும் சமத்துவ சமூகம் நோக்கிய ஒரு பயணம் தேவைப்பட்டது. அதற்கு இலக்கியம் கை திருப்பிக் காட்டியது சங்க காலம். வாழ்வியல் கோட்பாடுகளை உள்ளது உள்ளபடியே வழங்குவதாக அவை அமைந்தன.

நமது மகத்தான காலகட்டம் அநேகமாக சங்க காலமாகவே அடையாளம் காட்டப்பட்டிருக்கின்றது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/20/w600X390/tm3.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/may/20/இலக்கியத்தில்-பொருளியல்-சமூகம்-2923199.html
2923198 வார இதழ்கள் தமிழ்மணி கவி பாடலாம் வாங்க - 25: தரவு கொச்சகக் கலிப்பா "வாகீச கலாநிதி' கி.வா. ஜகந்நாதன் DIN Sunday, May 20, 2018 02:08 AM +0530 கம்பராமாயணம் முதலிய காப்பியங்களில் வரும் நான்கடிச் செய்யுள் ஒன்று உண்டு. அது தரவு கொச்சகக் கலிப்பா என்று பேர் பெறும். கலிப்பாவின் இலக்கணத்தை இன்னும் நாம் பார்க்கவில்லை. இலக்கியங்களில் பெருக வழங்கும் செய்யுட்களையே ஒன்றன் பின் ஒன்றாகப் பார்த்து வருகிறோம். யாப்பிலக்கணத்தில் உள்ள முறைப்படி எழுத்து, அசை, சீர், தளை, தொடை, அடி, பா, பாவினம் என்று நாம் இப்போது பார்க்கவில்லை. ஆகவே, கலிப்பா வகை எல்லாவற்றின் இலக்கணத்தையும் தெரிந்து கொள்வதற்கு முன் தரவு கொச்சகக் கலிப்பாவைப் பற்றி மட்டும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
கலிப்பாவுக்குப் பல உறுப்புக்கள் உண்டு. அதன் முதல் உறுப்புத் தரவு; கடைசி உறுப்பு, சுரிதகம். ஒரு தரவு மாத்திரம் தனியே வருவது தரவு கொச்சகக் கலிப்பாவில் ஒரு வகை. அதுவே விருத்தம் பயின்று வரும் நூல்களில் வரும்.
இந்தத் தரவு கொச்சகக் கலிப்பா நான்கு அடிகளால் ஆனது. ஈரசைச் சீர்களாகிய மாச்சீரும் விளச்சீரும் மூவகைச் சீர்களுள் காய்ச்சீரும் உடையதாகி வரும். முழுதும் காய்ச்சீர்களால் வருவதும் உண்டு. ஈரசைச் சீர் வரும்போது மாச்சீருக்கு முன் நிரை வரும். மற்றவை எப்படி வேண்டுமானாலும் வரும்.

"எந்நாளும் மங்காத இளமையெழில் உறுகுமரன்
மின்னாளும் வடிவேற்கை வித்தகன்சே வற்கொடியோன்
முந்நான்கு திருக்கரத்தோன் மோகைநகர்க் காந்தமலை
மன்னாவான் தனைமறவா மாண்பினர்துன் படையாரே'

இந்தப் பாடலில் எல்லாம் வெண்சீராக - காய்ச்சீராக வந்திருப்பதைக் காண்க. காய்முன் நேரும், காய்முன் நிரையும் இதில் விரவி வந்துள்ளன.

"கண்ணன் திருவடியே கைதொழுது பூப்புனைந்து
நண்ணும் அவன்புகழை நாடொறும் கேட்டுவந்தோர்
திண்ண முடையநெஞ்சம் சீரும் சிறப்புமடைந்
தெண்ணில் பெருமைக் கிருப்பிடமா யிலகுவரே'

இந்தப் பாடலில் காய்ச்சீரும் மாச்சீரும் விளச்சீரும் விரவி வந்துள்ளன. காய்முன் நேரும், காய்முன் நிரையும் வந்துள்ளன. இருப்பிடமா - யிலகுவரே; இங்கே காய்முன் நிரை வந்தது காண்க. நாடொறும் என்னும் விளச்சீர் முன் நேர் வந்தது. விளமுன் நிரை வருவதும் உண்டு. ஆனால், இதில் உள்ள மாச்சீர்கள் எல்லாவற்றுக்கும் முன் நிரை வந்திருப்பது காண்க. கண்ணன் திருவடியே - நண்ணும் அவன் புகழை - திண்ண முடையநெஞ்சம் - சீரும் சிறப்பு மடைந் தெண்ணில் பெருமைக் கிருப்பிடமா என்பவற்றைக் காண்க.

"தோலுந் துகிலும் குழையும் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையு முடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ'

என்னும் திருவாசகப் பாடலும் தரவு கொச்சகக் கலிப்பாவே. இதில் காய்ச்சீரும் மாச்சீரும் விளச்சீரும் வந்தன. மாச்சீர் வந்த இடங்களிலெல்லாம் அதன் முன் நிரையே வந்திருப்பதைக் கவனிக்க வேண்டும். தோலுந் துகிலும் குழையும் சுருள்தோடும் - நீறும் பசுஞ்சாந்தும் - தொக்க வளையு முடைத் தொன்மை - நோக்கிக் குளிர்ந்தூதாய் என்பவற்றைக் காண்க.

தரவு கொச்சகக் கலிப்பா நான்கு அடிகளுக்கு அதிகமாக வருவதையும், வேறு வகையில் வருவதையும் பின்பு பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு நாலடியால் வரும் தரவு கொச்சகக் கலிப்பாவைப் பற்றி மாத்திரம் தெரிந்து கொண்டால் போதும். இது பா வகையில் ஒன்றாக இருந்தாலும் விருத்தங்களால் ஆன காப்பியங்களிடையே மிகுதியாக வருகிறது.

(தொடர்ந்து பாடுவோம்...)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/21/w600X390/tm1.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/may/20/கவி-பாடலாம்-வாங்க---25-தரவு-கொச்சகக்-கலிப்பா-2923198.html
2923197 வார இதழ்கள் தமிழ்மணி பழமொழி நானூறு: முன்றுறையரையனார் Sunday, May 20, 2018 02:05 AM +0530 முகம்புறத்துக் கண்டால் பொறுக்கலா தாரை
அகம்புகுது மென்றிரக்கும் ஆசை இருங்கடத்துத்
தக்க நெறியிடைப் பின்னும் செலப்பெறார்
ஒக்கலை வேண்டி அழல். (பாடல்-46)


தம் முகத்தைப் புறத்தே கண்டாலும், மனம் பொறாதவர்களை அவர் மனத்தின்கண் புகுவோம் என்று தாழ்மையாக நினைக்கும் விருப்பம், நல்ல வழியின்கண்ணேயே தொடர்ந்து செல்லப்பெறாத குழந்தைகள், பெரிய சுரத்தின்கண் பெற்றோர் தம் புறம் பற்றிச்செல்ல விரும்பி அழுதலை ஒக்கும். (க-து.) பகைவரது மனத்தை வேறுபாடின்றி ஒழியுமாறு திருத்துதல் இயலாத தொன்றாம். "தக்க நெறியிடைப் பின்னும்செலப் பெறார் ஒக்கலை வேண்டி அழல்' என்பது பழமொழி.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/24/w600X390/tm1.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/may/20/பழமொழி-நானூறு-முன்றுறையரையனார்-2923197.html
2918735 வார இதழ்கள் தமிழ்மணி இந்த வார கலாரசிகன் DIN DIN Sunday, May 13, 2018 02:39 AM +0530 தினமணி'யின் "மகளிர்மணி' இணைப்பில் கடந்த 28 வாரங்களாகத் தொடர்ந்து வெளியாகிவந்த "அம்மா' பற்றிய பிரபலங்களின் பதிவுகள் புத்தகமாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்தை நடிகர் சிவகுமார் வெளியிட, மருத்துவக் கல்லூரி பேராசிரியையும், பிரபல இலக்கிய, ஆன்மிகச் சொற்பொழிவாளருமான டாக்டர் சுதா சேஷய்யன் பெற்றுக் கொள்கிறார். இன்று மாலை சென்னை, ஆழ்வார்பேட்டை "நாரதகான சபா' அரங்கில் "அம்மா' நூல் வெளியீட்டு விழா.

இந்த நிகழ்ச்சியில் "அம்மா' குறித்து நடிகர் சிவகுமார் பேச வேண்டும் என்று நாங்கள் ஆசைப்பட்டதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. நடிகர் சிவகுமார் பல ஆண்டுகளுக்கு முன்பு "ஜூனியர் விகடன்' இதழில் தொடர்ந்து பத்து மாதங்கள் எழுதிய "இது ராஜபாட்டை அல்ல' தொடரையோ அல்லது அல்லையன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் "இது ராஜபாட்டை அல்ல' புத்தகத்தையோ படித்திருப்பவர்களுக்கு ஏன் சிவகுமார் அம்மா குறித்து பேசவேண்டும் என்று நாங்கள் விரும்பினோம் என்பது தெரிந்திருக்கும்.

அந்தப் புத்தகத்தில் அவரது முதல் கட்டுரையே தன் அம்மா பற்றியதுதான். "அம்மா' குறித்து, "அன்னையர் தின'த்தன்று பேசுவதற்கு நடிகர் சிவகுமாரை விடச் சிறந்தவர்கள் யாரும் இருக்க முடியாது என்பதால்தான், அந்தப் புத்தகத்தை அவரை வெளியிட்டு, அம்மா குறித்துப் பேசும்படிக் கேட்டுக் கொண்டோம்.

அன்னையர் தினத்தைக் கொண்டாட சென்னையில் வாழும் "தினமணி' வாசகர்களையும், அன்பர்களையும் ஆழ்வார்பேட்டை நாரதகான சபாவில் மாலை ஆறு மணிக்கு எதிர்பார்க்கிறேன். 

உங்கள் அன்னையருடன் கலந்து கொள்ள முடிந்தால், குழந்தைகளை அழைத்து வந்தால் அதைவிட மகிழ்வேன். 


ஸ்டாலின் குணசேகரன் வாராவாரம் "தினமணி'யின் இணைப்பான "இளைஞர்
மணி'யில், "இளைய பாரதமே எழுக!' என்கிற தொடரை எழுதி வருகிறார். அவர் தாயார் மரணத்துடன் போராடிக் கொண்டிருக்கும் கடைசி சிலமணி நேரங்கள். அதற்கு நடுவிலும், இரவில் அவர் அவசர அவசரமாக அறைக்குப் போய் அடுத்த வாரம் "இளைஞர்மணி' தொடருக்குக்கான தனது கட்டுரையை எழுதி, "தினமணி' நிருபரிடம் கொடுத்துவிட்டு, மீண்டும் தாயாரின் அருகில் அமர்ந்து கொண்டார் என்கின்ற செய்தியைக் கேட்டபோது, நான் நெகிழ்ந்துவிட்டேன்.
ஸ்டாலின் குணசேகரனைப் போன்ற கொள்கைப்பிடிப்பும், கடமை உணர்வும், வாக்குத் தவறாமையும் உள்ள மகனைப் பெற்றெடுத்த அந்தத் தாய்க்கு அஞ்சலி செலுத்த முடியாமல், துக்கம் கேட்க மட்டும்தான் போக முடிந்தது என்பதுதான் எனது வருத்தம்.

எப்போதோ விமர்சனத்துக்கு அனுப்பப்பட்டிருந்த புத்தகம் டாக்டர் ம.லெனின் எழுதிய "கணினி பயன்படுத்துவோருக்கு வரும் உடல், மனநலப் பாதிப்புகளும் தீர்வுகளும்'. அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்று எடுத்து மேஜையில் தனியாக வைத்திருந்தேன். கடந்த ஞாயிற்றுக்கிழமை ரயிலில் ஈரோடு சென்றபோது மறக்காமல் அந்தப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டேன்.
கணினி பயன்பாடு என்பது அநேகமாக நம் அனைவருடைய வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. மாணவர்களானாலும், அலுவலக ஊழியர்களானாலும் கணினியைப் பயன்படுத்தாமல் வேலை பார்க்க முடியாது என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

கணினியைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் ஆதாயங்கள் ஏராளம் ஏராளம் என்றாலும், கூடவே கணினி பயன்பாடு உடல்நல பாதிப்புகளையும், மனநல பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது என்பது அதைவிட உண்மை. குறிப்பாக, உடலுக்கு எந்தவிதமான வேலையும் தராமல் உட்கார்ந்த இடத்திலிருந்து விரல் அசைவுகள் மூலமும், கண்பார்வையின் மூலமும் மூளையைக் கணினித் திரையிலேயே முழுமையாகக் குவிப்பதன் மூலமும் செயல்படும் நிலையில் எத்தனையோ உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டுவிடுகின்றன. குறிப்பாக, நரம்பு மண்டலத்துக்கும், முதுகுத் தண்டுக்கும், கண் பார்வைக்கும் கணினிப் பயன்பாடு ஏற்படுத்தும் பாதிப்புகள் மிகமிக அதிகம்.

இந்தப் பாதிப்புகளை எதிர்கொள்வதற்குக் கணினியில் பணி புரிவோர் கட்டாயமாக சில உடற்பயிற்சிகளையும் உணவு முறைகளையும் மேற்கொண்டாக வேண்டும். கணினி பயன்பாட்டால் என்னவெல்லாம் பாதிப்புகள் ஏற்படும் என்பதை மட்டும் எடுத்துரைக்காமல், அந்தப் பாதிப்புகள் வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும், வந்தால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் டாக்டர் ம.லெனின் குழந்தைகளுக்குக் கற்றுத்தருவது போல மிகவும் எளிமையாகவும், புரியும்படியாகவும் எடுத்துரைத்திருப்பதுதான் இந்தப் புத்தகத்தின் தனிச்சிறப்பு. கணினி பணி தொடர்பான சட்ட திட்டங்கள் வரை ஒன்றுவிடாமல் அனைத்தையும் மிகவும் நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறார் அவர். இந்தப் புத்தகத்தை கணினி பயன்படுத்துவோர் அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன்.


"ஹைக்கூ' கவிதைகளின் எளிமையைக் கண்டு இவ்வளவுதானா என எண்ணிவிடுகிறோம். உண்மையில் விதைக்குள் விருட்சம் ஒளிந்திருப்பது போன்ற விந்தை அது' என்று "லிங்கூ -அய்க்கூ' புத்தகத்துக்கான தனது அணிந்துரையில் எஸ்.இராமகிருஷ்ணன் எழுதியிருப்பது உண்மையிலும் உண்மை.

தமிழகத்திலுள்ள இன்றைய ஹைக்கூ கவிஞர்களில் கவிஞர், இயக்குநர் லிங்குசாமிக்கு ஒரு தனியிடம் உண்டு. லிங்குசாமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹைக்கூ கவிதைகளை எடுத்துக்கொண்டு, அவர் மூன்று வரிகளுக்குள் அடக்கியிருக்கும் அற்புத தத்துவங்களையும், கற்பனைகளையும் தனது பாணியில் எழுதித் தொகுத்திருக்கிறார் கவிஞர் அய்யப்பமாதவன். 

அய்யப்பமாதவன் தேர்ந்தெடுத்து முத்துக்கோத்தாற்போல தொகுத்தளித்திருக்கும் கவிதைகள் ஒவ்வொன்றும் ஒன்றை ஒன்று விஞ்சுவதாக இருக்கிறது. கவிஞர் புவியரசு இந்நூலின் பதிப்பாசிரியர் எனும்போது, இந்தக் கவிதைத் தொகுப்பின் தரத்துக்கும், சிறப்புக்கும் வேறு சான்றென்ன வேண்டும்? ஒவ்வொரு கவிதைக்கும் கோபி பிரசன்னா வரைந்திருக்கும் ஓவியங்களும், கவிஞர் அய்யப்பமாதவனின் விளக்கங்களும் கவிச் சிம்மாசனத்துக்கு லிங்குசாமியைக் கரம் பற்றி அழைத்துச் செல்கின்றன. இந்தத் தொகுப்பிலிருந்து இரண்டே இரண்டு ஹைக்கூ...

சுமைதாங்கிக் கல்லை
கடந்து செல்கிறாள்
கர்ப்பிணிப் பெண்!

எப்போதும் குடையோடு செல்லும்
தாத்தாவின் இறுதி ஊர்வலத்தில்
நல்ல மழை!

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/12/w600X390/sivakumar.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/may/13/இந்த-வார-கலாரசிகன்-2918735.html
2918725 வார இதழ்கள் தமிழ்மணி புகழுடையார் அடையும் மேன்மை -முனைவர் இரா.வ. கமலக்கண்ணன் DIN Sunday, May 13, 2018 02:37 AM +0530 அறம் இருவகைப்படும். அவை: இல்லறம்; துறவறம். வள்ளுவர் இல்லறம் பற்றித் திருக்குறளின் 5-ஆவது அதிகாரம் தொடங்கி (இல்வாழ்க்கை) 23-ஆவது அதிகாரம் ஈகை முடிய 19 அதிகாரங்களில் கூறினார். அவ்வில்லற ஒழுக்கத்தில் தவறாமல் நடந்தோர் இப்பிறப்பில் அடையும் பயன் - அழியாது நிற்கும் புகழ் ஆகும். இவ்வதிகாரத்தில் 3, 4 குறட்பாக்களில் புகழ் உடையார் அடையும் மேன்மையைக் கூறுகிறார்.

"நிலவரை நீர் புகழாற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு' - (குறள்-3)

"ஒருவர் இவ்வுலகில் அழியாது நிற்கும் புகழைச் செய்தால், தேவ உலகம் அவரையன்றித் தன்னை அடைந்து நின்ற ஞானிகளை நன்கு மதியாது' - என்பது இதன் பொருள். இம்மையில் புகழைத் தேடாமல், அறிவை மட்டும் பெற்று யோக முதிர்ச்சியால் மறுமையில் தேவ உடலைப் பெற்றவர்களினும், இம்மையில் புகழையும் ஈட்டி, தானம் முதலியவற்றின் பயனால் மறுமையில் தேவ உடலையும் பெற்றவர்களுக்குத் தேவ உலகில் மிக்க சிறப்பு நடக்கும் என்பதாம். 

"நத்தம் போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது' (4)

நிலையில்லாத செல்வத்தையும் உடம்பையும் கொண்டு, நிலையான புகழைப் பெறுவது மிக்க சாமர்த்தியம் என்பது இதன் திரண்ட பொருள். ÷நத்தம் (ஆகும்) கேடும் - புகழுடம்பிற்கு ஆக்கமாகும் கேடும், உளது ஆகும் சாக்காடும் - (புகழுடம்பு) உளதாகும் சாக்காடும், வித்தகர்க்கு அல்லால் - சதுரப்பாடு உடையார்க்கு அல்லது, அரிது - இல்லை.
நந்து என்னும் தொழிற்பெயர், விகாரத்தால் "நத்து' என்று ஆகி, பின், "அம்' என்னும் பகுதிப் பொருள் விகுதி பெற்று, "நத்தம்' என்றாயிற்று. அதாவது, பொருந்து, திருந்து - என்னும் பகுதிகள், பொருத்தம், திருத்தம் - என நிற்றல் போல, நந்து - என்னும் பகுதி நத்தம் என நின்றது. பகுதியே தொழிற்பெயர் பொருளாதலால், அம் - பகுதிப் பொருள் விகுதி என்றார். (இருமை வகை தெரிந்து - (பிறப்பு வீடு என்னும்) இரண்டினது (துன்ப இன்பக்) கூறுபாடுகளை (குறள் 23). இங்கு இருமை என்பதில் மை - விகுதி தன்மையை உணர்த்தாமல், தன்னமையை உடைய பொருளையே உணர்த்தியதும் பகுதிப் பொருள் விகுதியே. 
போல் - என்பது இங்கு உரையசையாகும். ஒப்பில் போலி. உவமைப் பொருள் உணர்த்தாத "போல்' - என்னும் சொல், "ஒப்பில் போலியும் அப்பொருட்டாகும்' - என்னும் தொல்காப்பியத்தால் இது உரையசையாயிற்று. அதாவது - சிறிது பொருளுணர்த்தி வாக்கியத்தை அலங்கரித்து நிற்பது.
÷நத்தம் போல் கேடு - வளர்தல் போலக் கெடுதல்; புகழ் வளரச் செல்வம் குறைதல்; உளதாகும் சாக்காடாவது - புகழுடம்பு நிற்க பூத உடம்பு இறத்தல். நிலையாத செல்வத்தை - ஈதல் இசைபட வாழ்தல் - என்னும் முறைமையில் கொடுத்து, நிலையான புகழுடம்பு பெற வித்தகராலேயே இயலும் வித் - வித்து - ஞானம்; அதை மனத்தில் உடையவர் வித்தகர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/13/w600X390/sm6.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/may/13/புகழுடையார்-அடையும்-மேன்மை-2918725.html
2918719 வார இதழ்கள் தமிழ்மணி கண்வழி மனமும் செல்ல... -கோதை DIN Sunday, May 13, 2018 02:36 AM +0530 கம்பரின் செய்யுள்களில் ராமகாதையின் நிகழ்ச்சிகளை கதை மாந்தரின் பண்பு நலன்களை விளக்கும் செய்யுட்களை அனைவரும் விரும்பி மனனம் செய்து சொல்லி மகிழ்வர். அதற்கு இணையாக வர்ணனையாக அமையும் பாக்களும் ஒருவித தனி அழகோடு மிளிர்வன. கம்பரின் கற்பனைத் திறனைப் பறைசாற்றுவன.

பாலகாண்டத்தில் மிதிலை காட்சிப் படலத்திலே விசுவாமித்திரரோடு ராமனும் இலக்குவனும் மிதிலையில் நடக்கும் காட்சி. அப்பொழுது அவர்கள் ஒரு நடன அரங்கைக் கடந்து செல்கின்றனர்.இதற்கென கம்பர் அமைத்திருக்கும் செய்யுள் நம் கண் முன் ஒரு நடன அரங்கை, நாட்டிய நிகழ்வை விரித்துக் காட்டுகிறது.

"நெய்திரள் நரம்பின் தந்த
மழலையின் இயன்ற பாடல்
தைவரு மகர வீணை
தண்ணுமை தழுவித் தூங்க
கை வழி நயனம் செல்ல
கண்வழி மனமும் செல்ல
ஐய நுண் இடையார் ஆடும்
ஆடக அரங்கு கண்டார்'

நரம்புக் கருவியான யாழின் இசை போல இனிமையான பாட்டும், மகர வீணையின் இசையும், மத்தளத்தின் ஓசையும் இணைந்து இயைபுடன் நன்கு இசைக்க, கை வழி நயனம் செல்லவும், கண் வழி மனம் செல்லவும் நுண் இடை மகளிர் ஆடும் நாட்டியக் கூடங்களைக் கண்டனர். இதில் கம்பரின் கற்பனை மட்டுமல்ல அவரது நுட்பமான கலை அறிவும் வெளிப்படுகின்றது. நாட்டியம் கற்போருக்கு பால பாடமாக ஒரு சுலோகம் கற்பிக்கப்படுவது வழக்கம். அந்த சுலோகம்,

"யதோ ஹஸ்த ஸ்ததோ திருஷ்டி 
யதோ திருஷ்டி ஸ்ததோ மனஹ 
யதோ மனஸ் ஸ்ததோ பாவ 
யதோ பாவோ ஸ்ததோ ரஸ'

நாட்டியக்கலையின் அடிப்படை எனக் கருதும் இந்தக் கருத்தை அப்படியே தனது பாவில் கையாள்கிறார் கம்பர். "ஐய நுண் இடையார்' - இடை உளதோ இலதோ என ஐயம் உண்டாகும்படியான நுண் இடை கொண்ட பெண்கள் நடனம் ஆடுகிறார்களாம். தொடர்ந்து தீவிரப் பயிற்சி மேற்கொள்வோருக்கே இந்த நுண்ணிடை சாத்தியம் என்பதால் ஆடுவோர் நல்ல பயிற்சியும் அனுபவமும் மிக்க கலைஞர்கள் எனப் புரிய வைக்கிறார்.

மேலும், வாய்ப் பாட்டும் இசைக் கருவிகளின் இசையும் ஒன்றாக நடனத்திற்கு அழகு சேர்க்கின்றனவாம். அத்தகைய நடனம் கை வழி நயனம் செல்ல கண்வழி மனமும் செல்ல, நடனத்தில் இலக்கணத்தைத் தெளிவாகப் பின்பற்றுகிறார்களாம். இப்படி ஒரு நேர்த்தியான நடன நிகழ்ச்சியை நம் மனத்தில் அரங்கேற்றிவிடுகிறது கம்பரின் ஒற்றைக் கவிதை.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/13/w600X390/sm5.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/may/13/கண்வழி-மனமும்-செல்ல-2918719.html
2918713 வார இதழ்கள் தமிழ்மணி அன்னையைப் போற்றிய அருளாளர்கள்! -குடந்தை பாலு DIN Sunday, May 13, 2018 02:34 AM +0530 தாயுள்ளம் வேண்டும், தாயுள்ளம் வேண்டும்' என்னும் குரலை அடிக்கடி கேட்கிறோம். அது என்ன தாயுள்ளம்? பக்தி இலக்கியங்களில் அது எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் காண்போம். அருளாளர்கள் பலர் தம்முடைய பாக்களில் பல இடங்களில் தாய்மையைப் போற்றிப் புகழ்ந்துள்ளனர். இறைவனை அம்மையப்பராகவே கண்டு களித்துள்ளனர். இறைவனின் பெருங்கருணையாகிய திருவருளே தாயாக (அம்மை) நம்மைத் தாங்குகிறது என்பது தோத்திர, சாத்திரக் கருத்துகள் கூறும் உண்மை.
முனிவர்கள், துறவிகள், ஞானிகள், சித்தர்கள் எனப் பலரும் முற்றும் துறந்த முனிவர்களாகத் திகழ்ந்தாலும், அவர்களால் தாய்ப் பாசத்தை மட்டும் துறக்க முடியாமல் தவித்திருக்கின்றனர் என்பதைப் பாடல்கள் பல எடுத்துரைக்கின்றன. 
தாய் என்றால் "முதன்மை', தாயகம் என்றால் "அடைக்கலம்', தாயம் என்றால் "மேன்மை' எனப் பொருள்கள் உண்டு.

"தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே!
தாயவன் உலகுக்குத்தன் ஒப்பில்லாத தூயவன்'

என்கிறார் திருஞானசம்பந்தர்.

"தாயுமாய் எனக்கே தலை கண்ணுமாய்ப்
பேயேனையும் ஆண்ட பெருந்தகை'

என்று பெருமிதத்துடன் கூறுகிறார் திருநாவுக்கரசர். 

"தாயவனாய்த் தந்தையாகிச் சாதல் 
பிறத்தல் இன்றிப்
போயகலா மைந்தன் பொன்னடிக்கு 
என்னைப் பொருந்தவைத்த
வேயவனார் வெண்ணெய்நல்லூர் வைத்து 
என்னை ஆளுங்கொண்ட
நாயகனார்க் கிடமாவது நம் திருநாவலூரே!'

என்று, திருவெண்ணெய் நல்லூரில் தம்மை ஆட்கொண்ட இறைவனின் திருவருளை (அம்மை) எண்ணியபோது, சுந்தரரின் மனம் இப்படிப் பாடுகிறது.
உயிரும் இறைவனும் தம்மை மறந்த நிலையில், தாயும் சேயுமாகக் கலந்து கூடிச் சிறக்கின்றன என்பதை நெஞ்சம் நெகிழ்ந்து பாடியுள்ளார் மாணிக்கவாசகர். ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் அவர் அம்மையின் திருவருளைப் போற்றிப் பாடியுள்ளார்.

"தாயிற் சிறந்த தயாவான தத்துவனே' 
"தாதாய் மூவேழ் உலகுக்கும் தாயே'
"அம்மையே அப்பா ஒப்பிலா மணியே'
"அம்மை எனக்கருளியவாறு யார்பெறுவார் அச்சோவே!'

பட்டினத்தார், தாயுமானவர் போன்ற அருளாளர்களும் தாய்மையைப் போற்றியுள்ளனர்.
"தாமரைக்கண் கொண்டவனே.. தளிர் நடை பயின்று, மண்ணில் செம்பொடி ஆடி விளையாடி என் மார்பில் தவழும் பேறு எனக்குக் கிட்டிலை அந்தோ!' என்று உருகும் தாயுள்ளத்தைக் குலசேகர ஆழ்வார் பாசுரத்தில் காணலாம்.

"தண்ணந் தாமரைக் கண்ணனே கண்ணா
தவழ்ந்தெழுந்து தளர்ந்ததோர் நடையால்
மண்ணில் செம்பொடியாடி வந்து என்றன்
மார்பில் மன்றிடப் பெற்றிலேன் அந்தோ!'

"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்'
"தாயிற் சிறந்த கோயிலும் இல்லை'
"தேரோடு போச்சுது திருநாள்
தாயோடு போச்சுது பிறந்த வீடு'

என்பன போன்ற பழமொழிகள் அனைத்தும் தாயின் பெருமை பேசும் மொழிகளாகும்.
தாம் பட்டினி கிடந்தாலும் தம் குழந்தைகளின் பசியை ஆற்றும் தாய்மையின் ஒளிக்கீற்றைத் திருக்குறளில் பல அதிகாரிங்களில் காணலாம்.
உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் இந்தத் "தாய்மை உணர்வு' மேலோங்கினால், தரணியில் நன்மையே விளையும்! 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/13/w600X390/sm4.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/may/13/அன்னையைப்-போற்றிய-அருளாளர்கள்-2918713.html
2918707 வார இதழ்கள் தமிழ்மணி அன்னதோர் புன்மை -முனைவர்.ப.பாண்டியராஜா DIN Sunday, May 13, 2018 02:33 AM +0530 ஒரு மாப்பிள்ளை வீட்டார் பெண்பார்க்கச் செல்கிறார்கள். பெண் மிக அழகாக இருக்கிறாள். அவர்களுக்குப் பிடித்துபோய் உடனே உறுதி செய்துவிட்டுத் திரும்புகிறார்கள். ஊரிலுள்ளவர்கள் பெண்ணைப் பற்றி விசாரிக்கிறார்கள். அப்போது மாப்பிள்ளையின் அம்மா சொல்கிறாள், "அழகுன்னாலும் அழகு, அப்படியொரு அழகு'. அதென்ன "அப்படியொரு அழகு'? "விவரிக்க முடியாத அழகு', "மிக மிக அழகு' என்பதையெல்லாம் குறிக்கக்கூடிய அற்புதமான சொல்வழக்கு இது.
இந்த அருமையான சொல் வழக்குக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டைக் காண்போம். மிகவும் வறுமைக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு குடும்பம் திடீரென்று செல்வ நிலையை அடைகிறது. இதைப் பார்த்துப் பொறாமைப்பட்ட ஒருவர் சொல்வார், "போன மாசம் இந்நேரம் அப்படி ஒரு தரித்திரம், இன்றைக்கு வந்த வாழ்வைப் பாரு'. "அப்படி ஒரு' என்ற இந்த சொல்வழக்கு, இங்கும் "மிக மிக', "சொல்ல முடியாத' என்ற பொருளைத் தருவதைக் காணலாம்.
இன்றைக்குச் சாதாரணமாகப் பொது மக்களிடையே வழக்கிலிருக்கும் இந்தச் சொல்வழக்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் இலக்கிய வழக்காகவும் இருந்திருக்கிறது என்பது விந்தையான செய்தியே!
வறுமையில் வாடிய பொருநன் ஒருவன் தன் குடும்பத்துடன் ஒரு மன்னனைப் பார்க்கச் செல்கிறான். பொருநன் என்பவன் கூத்துப் போடுபவன். பொதுவாக இந்தப் பொருநர்கள் பலவித இன்னிசைக் கருவிகளை வைத்திருப்பார்கள். அவற்றை எடுத்துக்கொண்டு நீண்ட பயணம் மேற்கொண்ட பொருநன் குடும்பம், இறுதியில் மன்னனின் அரண்மனையை அடைகிறது. மன்னன் ஒரு பெரிய வள்ளல். அதிலும் இசைக் கலைஞர்களைப் பெரிதும் போற்றுபவன். பொருநர்களின் இசையைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்த மன்னன், அவர்களின் கிழிந்த ஆடைகளைக் களைந்து பட்டாடைகளை உடுத்துவிக்கிறான். பசியால் வாடிப்போன வயிறுகளைப் பலவித உயர்ந்த உணவு வகைகளால் நிரப்புகிறான். இறுதியில் கள்ளினையும் வேண்டிய அளவு கொடுத்து அரண்மனையில் ஒரு பக்கத்தில் தூங்க வைக்கிறான்.
மறுநாள் காலையில் அரைத் தூக்கத்தில், மயக்கம் முழுக்கத் தீராத நிலையில் எழுந்த பொருநன், சுற்றுமுற்றும் பார்த்துத் திகைத்துப் போகிறான். முதலில் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனது பழைய தரித்திர நிலையே இன்னமும் அவனுக்குள் நிழலாடிக் கொண்டிருக்கிறது. பின்பு தன் பட்டாடைகளைப் பார்த்துப் பரவசமடைகிறான். கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு நடந்தவையெல்லாம் நினைவுக்கு வருகின்றன. அவன் கூறுகிறான்,

"மாலை அன்னதோர் புன்மையும், காலை
கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும்
கனவு என மருண்ட என் நெஞ்சு'
(பொருந. 96-98)

(முந்திய)மாலையில் (என்னிடத்தில் நின்ற) அப்படி ஒரு சிறுமையும், காலையில் கண்டோர் மருளுதற்குக் காரணமான வண்டுகள் மொய்க்கின்ற (புதிய)நிலையும், கனவோ என்று கலங்கின என்னுடைய நெஞ்சு பார்த்தீர்களா! என்பது இப்பாடலின் பொருள். இங்கு வரும் "அன்னதோர் புன்மை' என்ற இந்த அன்றைய இலக்கிய வழக்கு இன்றைக்கும் நாம் பயன்படுத்தி வரும் "அப்படி ஒரு வறுமை' என்ற அன்றாட வழக்குக்கு இணையாக இருக்கிறதல்லவா!

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/13/w600X390/sm3.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/may/13/அன்னதோர்-புன்மை-2918707.html
2918702 வார இதழ்கள் தமிழ்மணி கவி பாடலாம் வாங்க - 24: விருத்த வகை - 2 "வாகீச கலாநிதி' கி.வா. ஜகந்நாதன் DIN Sunday, May 13, 2018 02:32 AM +0530 வஞ்சி விருத்தமும் 
வஞ்சித் துறையும்:

வஞ்சி விருத்தம் மூன்று சீரடிகள் நான்கினால் வரும்.

"சோலை யார்ந்த சுரத்திடைக்
காலை யார்கழ லார்ப்பவும்
மாலை மார்பன் வருமெனின்
நீல வுண்கண் இவள்வாழும்'

இது வஞ்சி விருத்தம்.

"பாதம் பரவிப் பணியின்
ஏதம் எதுவும் இல்லாப்
போதம் அருளிப் புகுவான்
கோதில் கருணைக் குமரன்'

இதுவும் வஞ்சி விருத்தம். இதனோடு தொடர்ந்து வேறு ஒன்றையும் தெரிந்து கொண்டால் நினைவில் நன்றாகப் பதியும். இரண்டு சீரடிகள் நான்கு வந்தால் அதற்கு வஞ்சித்துறை என்று பெயர்.

"கண்ணன் கழலிணை
நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே'

இது நம்மாழ்வார் பாடல்; வஞ்சித்துறை. இப்போது அளவொத்து வரும் அடிகளைக் கொண்ட பாடல்கள் இன்னவை என்பதை நினைவுக்குக் கொண்டு வருவோம்.


இரு சீரால் வரும் அடி நான்கை உடையது 
வஞ்சித் துறை.

மூன்று சீரால் வரும் அடி நான்கை உடையது 
வஞ்சி விருத்தம்.

நான்கு சீரால் வரும் அடி நான்கை உடையது 
கலி விருத்தம்.

ஐந்து சீரால் வந்து ஒரு சொல்லே ஈற்றில் வருவது 
வெளிவிருத்தம்.

ஐந்து சீரால் வரும் அடி நான்கை உடையது 
கலித்துறை.

ஆறுசீர் எத்தனை சீராலும் வரும் அடி நான்கை உடையது ஆசிரிய விருத்தம்.

சீர்க் கணக்கை வரிசையாக எண்ணிப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டியவை இவை. விருத்த வகையை மட்டும் கவனித்தால் பின் வருவனவற்றை நினைவிற் கொள்ள வேண்டும்.

1. வெளி விருத்தம்: 5 சீர், ஒரே சொல் ஈற்றுச் சீர்; மூன்று அல்லது நான்கடி.
2. ஆசிரிய விருத்தம்: 6 சீர் முதல் எத்தனை சீரும் வரலாம்; நான்கடி.
3. கலிவிருத்தம்: 4 சீர்; 4 அடி.
4. வஞ்சி விருத்தம்: 3 சீர்; 4 அடி.

(தொடர்ந்து பாடுவோம்...)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/13/w600X390/sm2.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/may/13/கவி-பாடலாம்-வாங்க---24-விருத்த-வகை---2-2918702.html
2918673 வார இதழ்கள் தமிழ்மணி பழமொழி நானூறு: முன்றுறையரையனார் Sunday, May 13, 2018 02:14 AM +0530 நோவ உரைத்தாரைத் தாம்பொறுக்க லாகாதார்
நாவின் ஒருவரை வைதால் வயவுரை
பூவின் பொலிந்தகன்ற கண்ணாய்! அதுஅன்றோ
தீஇல்லை ஊட்டும் திறம். (பாடல்-45)

பூப்போல விளங்குகின்ற விசாலமான கண்ணையுடையாய்! மனம் வருந்துமாறு அடாத சொற்களைச் சொல்லியவர்களை அவர் கூறிய சொற்களைப் பொறுக்கும் ஆற்றல் இல்லாதவர்கள், தமது நாவினைக் கொண்டு தம்மை வைதாரைத் தாம் இகழ்ந்து கூறினால், (அங்ஙனம் இகழ்ந்து கூறுதல்) தீயினால் வீட்டினைக் கொளுத்தும் திறம்போல் அது ஆகும் அல்லவா? (க-து.) தம்மை இகழ்ந்தாரைத் தாமும் இகழ்தல் தமக்குத் துன்பத்தை விளைவித்துக் கொள்வதாக முடியும். "தீ இல்லை ஊட்டும் திறம்' என்பது இச்செய்யுளில் வந்த பழமொழி.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/13/w600X390/sm4.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/may/13/பழமொழி-நானூறு-முன்றுறையரையனார்-2918673.html
2913929 வார இதழ்கள் தமிழ்மணி  வருந்த வேண்டா  முன்றுறையரையனார் Sunday, May 6, 2018 12:00 AM +0530 பழமொழி நானூறு
கையார உண்டமையால் காய்வார் பொருட்டாகப்
 பொய்யாகத் தம்மைப் பொருளல்லார் கூறுபவேல்
 மையார உண்டகண் மாணிழாய்! என்பரிவ
 செய்யாத எய்தா வெனில். (பாடல்-44)
 மையினை மிகுதியும் உண்ட கண்களையும் மாட்சிமைப்பட்ட கலன்களையும் உடையாய்! (தம் பகைவர் கொடுத்த பொருளை) கைநிறைய வாரி வாரி உண்டமையால், (அவர் கூறியதைச் செய்யாதவழி) சினப்பர் என்பது காரணமாக, மனிதனாகவன்றி ஒரு பொருளாகவும் கருதப்படாத அற்பர்கள், தம்மீது உண்மை இல்லாத சில பழிச் சொற்களைக் கூறினரேல், தாம் செய்யாத பழிச்சொற்கள் தம்மை வந்து அடையாவாகலான், எது கருதி வருந்துவது? (வருந்துதல் வேண்டா). "செய்யாத எய்தா' என்பது பழமொழி.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/21/w600X390/LOTUS.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/may/06/வருந்த-வேண்டா-2913929.html
2913930 வார இதழ்கள் தமிழ்மணி  விருத்த வகை - 1 "வாகீச கலாநிதி' கி.வா. ஜகந்நாதன் DIN Sunday, May 6, 2018 12:00 AM +0530 கவி பாடலாம் வாங்க - 23

ஒவ்வொரு வகைப் பாவுக்கும் தாழிசை, துறை, விருத்தம் என்று மூன்று இனங்கள் உண்டு என்பதை முன்பே தெரிந்து கொண்டோம். அவற்றில் கலித்துறையைப் பற்றியும் ஆசிரிய விருத்தத்தைப் பற்றியும் அறிந்தோம். இனி மற்ற விருத்தங்களின் இலக்கணத்தையும் கவனிக்கலாம்.
 
 வெளி விருத்தம்:
 வெண்பாவின் இனமாகிய விருத்தத்தை வெண்பா விருத்தம் என்று சொல்வதில்லை; வெளி விருத்தம் என்பார்கள். மற்றவை அவ்வப்பாவின் பெயர்களோடு இணைந்திருக்கும்; ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், வஞ்சி விருத்தம் என்று அவை பெயர் பெறும்.
 வெளி விருத்தம் ஐந்து சீர்களை உடைய அடிகள் மூன்றோ நான்கோ பெற்று வரும். இதில் முக்கியமான இலக்கணம், ஒவ்வோர் அடியிலும் ஒரே சொல்லோ, தொடரோ ஐந்தாவது சீராக இருக்கும். நான்கு அடிகளும் ஓரெதுகையாக வரும்; இது எல்லா விருத்தங்களுக்கும் பொது இயல்பு.
 
 "வீரம் இல்லார் வீரம் பெற்றார் காந்தியினால்
 சீரொன் றில்லாத் தேயம் இலங்கும் காந்தியினால்
 போரென் றாலும் உயிர்க்கோள் இல்லை காந்தியினால்'
 
 இந்த வெளிவிருத்தம் மூன்றடிகளால் வந்து, காந்தியினால் என்ற ஒரே சொல்லே அடிதோறும் ஐந்தாம் சீராகப் பெற்றிருப்பது காண்க.
 
 "ஆவொ வென்றே அஞ்சின ராழ்ந்தார் ஒருசாரார்
 கூகூ வென்றே கூவிளி கொண்டார் ஒருசாரார்
 மாமா வென்றே மாய்ந்தனர் நீத்தார் ஒருசாரார்
 ஏகீர் நாய்கீர் என்செய்து மென்றார் ஒரு சாரார்'
 
 இது நான்கடியால் வந்த வெளிவிருத்தம். ஈற்றில் ஒரு தொடரே வராவிட்டால் இது கலித்துறை ஆகிவிடும். ஆசிரிய விருத்தத்தின் இலக்கணத்தை முன்பே விரிவாகப் பார்த்து விட்டோம்.
 
 கலி விருத்தம்:
 அளவொத்து வரும் நான்கு சீர் அடிகள் நான்காக வருவது கலிவிருத்தம்.
 
 "உலகம் யாவையும் தாமுள வாக்கிலும்
 நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
 அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
 தலைவ ரன்னவர்க் கேசர ணாங்களே'
 
 கம்பராமாயணத்தில் வரும் இது கலி விருத்தம். இந்த விருத்தத்தில் அடிதோறும் பன்னிரண்டு எழுத்துக்களே இருப்பதைக் காணலாம். யாப்பிலக்கணத்தில் வரும் எழுத்துக் கணக்கில் ஒற்றுச் சேராது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த விருத்தத்தில், ""புளிமா கூவிளம் கூவிளம் கூவிளம்'' என்ற வாய்பாட்டில் ஒவ்வோரடியும் வந்திருக்கிறது. புளிமாவுக்குப் பதில் தேமா இருந்தால் அடிதோறும் பதினோரெழுத்துக்கள் இருக்கும்.
 
 "சாந்த மாமுனி வோர்தொழும் தற்பரன்
 சேந்தன் வேலவன் சேவலெ டுத்தவன்
 போந்த கொங்கிற் பொலிதரு மோகனூர்க்
 காந்த மாமலை காதல்செய் தானரோ'
 
 இந்தப் பாட்டில் அடிதோறும் பதினோரெழுத்து வந்ததைக் காணலாம். கொங்கிற் - பொலிதரு என்னும் இடத்தில் கூவிளஞ் சீர் வராவிட்டாலும் மா வந்தபொழுது அடுத்து நிரை வந்தமையால் ஓசை கெடாமலும் எழுத்துக் கணக்கும் கெடாமல் நின்றன.
 
 "பலபல கலையுணர் பருணிதர் குலவினர்
 கலைநல மிகுசுவை கருதினர் பருகினர்
 அலைபடு கடலென அளவறு பனுவல்கள்
 குலவுறு அவைநனி குவியுற நிறுவினர்'
 
 இதுவும் ஒரு வகைக் கலிவிருத்தம். ஒவ்வொரு சீரும் கருவிளமாகவே வந்தது. பனுவல்கள் என்பதில் லகர ஒற்று அலகிடப்படாது. கந்தர் அநுபூதியில் வருவன கலிவிருத்தங்களே!
 
 "ஆடும் பரிவே லணிசே வலெனப்
 பாடும் பணியே பணியா யருள்வாய்
 தேடும் கயமா முகனைச் செருவில்
 சாடுந் தனியா னைசகோ தரனே'
 
 கலிவிருத்தங்களில் இன்னும் பல வகை உண்டு.
 
 (தொடர்ந்து பாடுவோம்...)
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/3/w600X390/tm1.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/may/06/விருத்த-வகை---1-2913930.html
2913931 வார இதழ்கள் தமிழ்மணி கல்விப் பெரு வள்ளல் புதுக்கோட்டை அண்ணல்!   DIN DIN Sunday, May 6, 2018 12:00 AM +0530 "கல்விப் பெருவள்ளல்', "புதுக்கோட்டை அண்ணல்' என்றெல்லாம் புகழப்படும் பு.அ. சுப்பிரமணியனார், அய்யாக்கண்ணு - மாணிக்கத்தம்மாள் இணையருக்கு 22.10.1898-ஆம் ஆண்டு பிறந்தவர்.
 தந்தையார் மறைவினால் கல்லூரியில் படித்து வந்த அண்ணலாரின் படிப்பு பாதியில் தடைபட்டது. அதனால் இவர் கல்விச் செல்வத்தை அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கிலும், கல்விச் செல்வம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கிடைக்க வேண்டும் எனும் பேரவாவிலும், 1924-ஆம் ஆண்டு "கல்வி வளர்ச்சிக் கழகம்' ஒன்றைத் தொடங்கினார். அண்ணலார் தம் ஆங்கிலப் படிப்பால் புதுக்கோட்டை தனியரசில் வனத்துறை அலுவலராகவும், கல்வித் துறை அலுவலராகவும், இறுதியில் கணக்குத் தணிக்கைப் பிரிவிலும் பணியாற்றி, 1948-ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்றார்.
 1953-ஆம் ஆண்டில் பேராசிரியர் சி. இலக்குவனார் புதுக்கோட்டைக்கு வந்தார். அந்தத் தமிழறிஞரை தக்க சமயத்தில் தாங்கிப் பிடித்துத் தளர்ச்சியின்றி உயர்த்திய பெருமை அண்ணலாரையே சாரும்.
 1954-ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் திருக்குறள் கழகம் ஒன்றைத் தொடங்கினார். பேராசிரியர் சி. இலக்குவனார் வாரந்தோறும் இங்கு திருக்குறள் வகுப்புகளை நடத்தினார். ÷அண்ணலாரின் தொண்டு கல்விப் பணியாக மட்டுமின்றி, தமிழ்ப் பணியாகவும் தழைத்து வளர இலக்குவனாரின் வருகையே காரணமாயிற்று எனலாம். அண்ணலாரின் துணையால் இலக்குவனாரின் ஆராய்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. திருக்குறள் கழகத்தில் திருக்குறள் வகுப்புகளோடு தொல்காப்பியமும், சங்க இலக்கியமும் நடத்தப்பட்டன. ஏறத்தாழ 223 கூட்டங்களை அண்ணலார் நடத்தியுள்ளார்.
 அக்காலத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த கவிஞர் முடியரசனின் மனச்சோர்வை அகற்றி, மருத்துவப் பேரறிஞர் வி.கே. இராமச்சந்திரனார் மூலம் இதய நோயைஅகற்றி, தமிழகத்துக்கு ஒரு கவிஞரை மீட்டுத்தந்து தமிழின் இனிமையையும் காப்பாற்றிய பெருமை இவரையே சேரும்.
 வள்ளுவர் பதிப்பகத்தைத் தொடங்கி இலக்குவனாரின் திருக்குறள் எளிய பொழிப்புரை, பழந்தமிழ், இலக்கியம் கூறும் தமிழர் ஆகிய நூல்களையும், க.த. திருநாவுக்கரசின் "சிந்துவெளி தரும் ஒளி' என்னும் நூலையும் வெளியிட்டார். அண்ணலாரின் "வாழ்வு நெறி' நூலும் "அண்ணல் சுப்பிரமணியனார் மணிமலர்' நூலும் இப்பதிப்பகத்திலேயே வெளியிடப்பட்டன.
 ஒரு நல்ல சமுதாயத்தைச் சார்ந்த மக்களிடையே தன்னல மிகுதிகூடாது என்றும், பிறரொடு கூடிவாழும் கூட்டுறவு மனப்பான்மையே வேண்டுமென்றும் அதற்குக் குழு மனப்பான்மையே வேண்டும் என்றும் சமூக அறிவியலார் கூறுவர். இத்தகைய அரிய பண்பாம் குழு மனப்பான்மை அண்ணலாரிடம் இயல்பாகவே இருந்தது. அவர் சாரணராகப் பயின்றதும் இளமை முதலே மாணவர்களைப் பழக்கி, நல்வழிப்படுத்த பாடுபட்டதும் இம் மனப்பான்மையை அவரிடம் வளர்த்தன.
 எங்கு சென்றாலும் சிலருடன் சேர்ந்தே காணப்படுவதும், உண்ணும்போதும், உலாவச் செல்லும்போதும், களித்திருக்கும்போதும், காட்சிகட்குச் செல்லும்போதும் தனித்துக் காணப்படாமல் நண்பர்களோடு அல்லது மாணவர்களோடு அவர் காணப்படுவது இதனை வலியுறுத்தும்.
 காலம் போற்றுதலில் அவர் மிகவும் கண்டிப்பானவராக இருந்தார். வெளி ஆரவாரம் அவருக்குப் பிடிக்காது. எளிமை, நாணம், பழியஞ்சுதல், பொறுப்புணர்ச்சி, பிறரைப் போற்றுதல் என அவருடைய நற்பண்புகளைக் கூறிச் செல்வதைவிட, அண்ணலாரின் மாணவர்களைச் சுட்டிக்காட்டினாலே இப்பண்புகளின் அமைவும், அவற்றின் சிறப்பும் தெற்றெனப் புலனாகும். இக்கால இளைஞர்கள் போற்றுதலுக்கு மட்டுமல்ல, பின்பற்றுவதற்கும் உரியவை இப்பண்புகள்.
 ஞா. தேவநேய பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் முன்னிலையில் அண்ணலாருக்கு "அண்ணல்' பட்டம் வழங்கப்பட்டது. மதுரை திருவள்ளுவர் கழகம் இவருக்குத்
 "திருக்குறள் தொண்டர்' என்னும் பட்டத்தை வழங்கியது.
 1980-ஆம் ஆண்டில் குளித்தலை "தமிழ்க் காசு' விழாவில் இவருக்கு "சான்றாண்மை சால்புச் செம்மல்' என்னும் பட்டம் வழங்கப்பட்டது. 1983-ஆம் ஆண்டில் திருச்சி புலவர் குழு இவருக்குத் "தமிழ்ச் சான்றோர்' பட்டத்தை வழங்கியது. 1984-ஆம் ஆண்டில் "புதுகை கம்பன் கழகம்' இவருக்குச் "சான்றோர் திலகம்' என்னும் பட்டத்தை வழங்கி சிறப்பித்தது.
 இத்தகைய அரிய பண்புகள் வாய்க்கப்பெற்ற கல்விப் பெருவள்ளலான சுப்பிரமணியனார் 11.5.1991-ஆம் ஆண்டு காலமானார். அவரை நினைவுகூர வேண்டிய நேரமிது.
 இவரிடம் அன்பு வைத்து மணி விழா நடத்திய குழுவினரால் இவருக்கு வழங்கப்பட்ட ரூ.5001 பெருமானமுள்ள பணமுடிப்பை மணிவிழா நிதிக்கே இவர் கொடுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 ÷
 - புலவர் தங்க. சங்கரபாண்டியன்
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/5/w600X390/sm.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/may/06/கல்விப்-பெரு-வள்ளல்-புதுக்கோட்டை-அண்ணல்-2913931.html
2913932 வார இதழ்கள் தமிழ்மணி மாறன் பாப் பாவினம்   DIN DIN Sunday, May 6, 2018 12:00 AM +0530 தமிழ் மொழி இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐம்பெரும் பகுதியினை உடையது. இவ்வைத்தும் "ஐந்திலக்கம்' என்று வழங்கப்படுகின்றன. இவற்றுள் யாப்பிலக்கணத் தொடர்புடைய நூல் "மாறன் பாப் பாவினம்' என்பதாகும். எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை முதலிய யாப்பின் உறுப்பிலக்கணங்களையும், பாக்களுக்கும், பாவினங்களுக்கும் உரிய இலக்கணங்களையும் கூறாமல், எடுத்துக்காட்டுச் செய்யுள்களை மட்டும் நிரல்படக் கோவையாகத் தரும் நூலாகத் திகழ்கிறது.
 ஆழ்வார் திருநகரி என்று அழைக்கப்படும் திருக்குருகூர் நம்மாழ்வார் சந்நிதியில் ஆஸ்தானக் கவிஞராக இருந்த, திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவர், இந்த "மாறன் பாப் பாவினம்' என்கிற நூலை இயற்றியுள்ளார். இளமையிலேயே இலக்கண - இலக்கியப் புலமையைப் பெற்றவரான திருக்குருகைப் பெருமாள் இயற்றிய இந்நூலில் இலக்கணக் கூறுகளுக்கு எடுத்துக்காட்டாகத் தரும் பாக்கள், சொல்லழகும், பொருளழகும் கொண்டதாகத் திகழ்கின்றன.
 
 "காவலர்பொற் காவலர்போல் காதம் கமழ் அநந்தை
 காவலனைக் காவலர்தூய்க் காவல்எனக் கற்றுணர்ந்தோர்
 காவலனே காவலனே காத்திஎனக் கண்டுற்றும்
 காவலகா என்னார் கலர்'
 
 சோலையில் உள்ள கற்பக மலர்கள் போல, நீண்ட தூரம் மணம் பரப்பும் திருவனந்தபுரத்தில் வீற்றிருக்கும் திருமாலைக் கற்றவர்கள், சோலை மலர்களைத் தூவி ""நீயே எமக்குக் காவல்'' என்றும், "" காவலனே காப்பாற்று'' என்றும் போற்றுகிறார்கள். இதனைக் கண்டும் கீழானவர்கள், "காவலனே காப்பாற்று' என்று கூறமாட்டார்கள் என்பது இப்பாடலின் பொருளாகும்.
 "காவல்' என்ற சொல், கா அலர் என்றும் கொண்டு, சோலை மலர் என்ற பொருள்களைக் கொடுக்கும்.
 தமிழரின் இல்லறவாழ்வில் களவு, கற்பு என இருவகைப்பட்ட வாழ்க்கை உண்டு. இவற்றை களவொழுக்கம் என்றும், கற்பொழுக்கம் என்றும் இல்லற ஒழுக்கமாகவே பண்டைய தமிழர்கள் கொண்டிருந்தனர். களவொழுக்கத்தில் தலைவியை அடைய தோழியிடம் தனது விருப்பத்தைத் தலைவன் தெரிவிக்கிறான். விருப்பம் நிறைவேறாததால், வருந்திய தலைவன் மடலேறத் துணிகிறான். அத்தலைவனிடம், "நீ மடல் ஏறுவதற்குத் தலைவியின் ஓவியம் தீட்ட வேண்டுமா? அவளின் அவயங்களைத் தீட்டுவது எளிதல்லவே!' என்று கூறுவதாக அமைகிறது இப்பாடல்.
 
 "திருத்திய எண்ணெண் கலைகளும் தெற்றெனத்
 தரும்பனு வலின்துறை சார்ந்துணர் கேள்வி
 பொருந்திய பழிபிறங் காஅருட் புரவல!
 
 நெய்த்தும் இருண்டும் சுருண்டும் நெறித்தனவாய்
 மொய்த்தகுழல் கோதி முடிமுச்சி
 வைத்தமுகை விண்டு மதுத்தூய்ச் சுவல்புரள்வது
 உய்த்துஇங் கெழுதுவதொன் றோ!
 
 இருட்பான்மை இன்றி இருதிணைஐம் பாலுட்
 பொருட்பான்மை முற்றப் பொறிப்பவர்என் றாலும்
 மருட்பார்வை மையுண் மதரரிக்கண் செப்பும்
 அருட்பார்வை தீட்டுவ திங் கார்!
 
 காந்தள்இஃ தெனும்இணைக் கரங்களை எழுதினும்
 ஆய்ந்தணி வரிவளை அவைஉராய் ஒலிப்பதும்
 தோய்ந்திட எழுதவும் துணிபவர் யாரே!
 
 வண்ண மணிக்கச்சின் வன்கட்டு அறவிம்மித்
 தண்ணென்றும் வெச்சென்றும் தன்மை புரிவனவாய்
 வெண்ணித் திலவடங்கள் மீவாவும் பூண்முலைமேல்
 பண்ணப் படுமோ பகர்!
 
 உண்டுஇலை என்று ஐயம் உறுநுண் ணிடைஉருவம்
 கண்டெழுது வார்எவர்மென் கால்உறினும் - தெண்டமதுஉட்
 கொண்டுஒசிதல் கூடும் படிக்கும் குறித்தெழுதும்
 பண் டிதர்இங் காருளர்நண் பா
 
 பலவாய்
 மறித்தினி உரைப்பதென்! மடவால் அவயவம்
 நெறிப்பட நிகழ்த்திய படிநீ கிழியினில்
 செறித்துள தென்னிற் சீறூர்
 குறிக்கொளக் குழுவொடும் கொடுபோ துகவே!'
 
 "அறுபத்து நான்கு கலைகளும் உணர்ந்த பழியற்ற புரவலனே! தலைவியின் கூந்தல் உச்சியில் வைத்த மொட்டுக்களிலிருந்து சொரியும் மதுத்துளிகள் அவளின் பிடரியில் புரளும் அழகை எழுத இயலுமா? அவளின் கூந்தலின் அழகை எழுதினாலும், அவள் கண்களில் உள்ள அருட்பார்வையைத் தீட்ட முடியுமா? காந்தள் மலர் போன்ற கைகளை எழுதினாலும் அக்கைகளில் உள்ள வளைகள் உராய்ந்து எழுப்பும் ஒலியை எழுத இயலுமா? ரவிக்கைக் கட்டுத்தெறிக்கப் பருத்து, முத்துமாலை புரளுகின்ற பூண்முலையின் அழகை எழுத இயலுமா? உண்டோ இல்லையோ என்று ஐயந்தரும் இடையையே எழுதுபவர் யார்? மெல்லிய காற்று வீசினாலும் வளைந்து ஒடிந்து போகும் இடையின் தன்மையை எழுதவல்லார் யார்? பலவாறு மீண்டும் மீண்டும் கூறுவது ஏன்? தலைவியின் உறுப்புகளை, நான் கூறியபடி கிழியில் எழுதியுள்ளாய் என்றால், இவ்வூரில் மடலூர்வாயாக' என்று இப்பாடலில் தலைவியின் அழகை தோழி மூலமாக எடுத்தியம்பும் பான்மைப் போற்றுதற்குரியதன்றோ!
 - புலவர் பு.சீ. கிருஷ்ணமூர்த்தி
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/5/w600X390/tm1.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/may/06/மாறன்-பாப்-பாவினம்-2913932.html
2913933 வார இதழ்கள் தமிழ்மணி இந்த வாரம் கலாரசிகன்   DIN DIN Sunday, May 6, 2018 12:00 AM +0530 சங்க இலக்கியத்திற்கு எப்படி ஒரு "தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையரோ அதேபோல, பாரதி இலக்கியத்துக்கு சீனி.விசுவநாதன் என்று கவியரசு கண்ணதாசனால் பாராட்டப்பட்டவர் சீனி. விசுவநாதன். மகாகவி பாரதியாரைப் பணிவதையே வாழ்க்கைப் பயனாகக் கொண்டுள்ள பாரதி அன்பரான சீனி.விசுவநாதன் இப்போது மிகுந்த மன உளைச்சலுக்கும், மனக்குமுறலுக்கும் ஆளாகியிருக்கிறார் என்பது வேதனை அளிக்கிறது.
 இன்று நமக்கு மகாகவி பாரதியாரின் படைப்புகள் பெரும்பாலானவை கிடைத்திருக்கின்றன என்று சொன்னால், அதற்கு சீனி. விசுவநாதன்தான் மிக முக்கியமான காரணம் என்பதைத் தமிழுலகம் அறியும். கடந்த பல ஆண்டுகளாக மகாகவி பாரதியாரின் படைப்புகளைத் தேடிப் பிடித்துப் பதிப்பிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் சீனி.விசுவநாதன் பாரதியாரின் படைப்புகளைக் கால வரிசைப்படுத்தி, 12 தொகுதிகளாக வெளிக்கொணர்ந்திருக்கிறார்.
 சந்தியா பதிப்பகம் "பாரதி விஜயம்' என்னும் தொகுப்பு நூலை வெளியிட்டிருக்கிறது. இந்த "பாரதி விஜயம்' தொகுப்பில் வெளிவந்திருக்கும் பல செய்திகள் சீனி.விசுவநாதன் தன்னுடைய "கால வரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகளின் 12 தொகுதிகள்', மகாகவி பாரதி வரலாறு, பாரதி ஆய்வுகள் சில சிக்கல்கள், மகாகவி நூற்பெயர் கோவை, கவிபிறந்த கதை ஆகிய நூல்களில் வெளிவந்தவை. கடந்த பல ஆண்டுகளாக சீனி. விசுவநாதன் தன்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் செலவிட்டு, தேடிப்படித்துப் பதிப்பித்த பல தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன என்பதுதான் பெரியவரின் ஆதங்கத்துக்குக் காரணம்.
 விமர்சனங்களுக்கு அல்லாமல் வேறு வகையில் தனது தொகுதிகளில் உள்ள தகவல்களைப் பயன்படுத்த விரும்புவோர் அவசியம் அனுமதி பெறவேண்டும் என்று சீனி.விசுவநாதன் விழைவதில் தவறொன்றும் இல்லை. அரைநூற்றாண்டு கால உழைப்பை, பெரும் செலவு செய்து வாழ்நாள் பணியாக அவர் கண்டறிந்த அரிய உண்மைகளை தானே கண்டறிந்ததுபோல இன்னொருவர் பயன்படுத்திக் கொள்வதை யாரால்தான் சகித்துக்கொள்ள முடியும்?
 சீனி.விசுவநாதன் அந்தக் குறிப்புகளுக்குக் காப்புரிமை கேட்கவில்லை, தனக்குப் பணம் தர வேண்டும் என்று கேட்கவில்லை. தன்னிடம் முன்அனுமதி பெற வேண்டும் என்றுதான் கேட்கிறார். குறைந்தபட்சம் தன்னுடைய புத்தகங்களிலிருந்து, தன்னுடைய தேடல்களிலிருந்து, தன்னுடைய கண்டுபிடிப்புகளிலிருந்து கையாளப்படும் தகவல்களுக்கு "நன்றி' தெரிவிக்க வேண்டும் என்கின்ற அடிப்படை சாமானிய மரியாதையைத்தான் எதிர்பார்க்கிறார்.
 இதுகுறித்து சந்தியா பதிப்பகத்திற்கும் அதன் உரிமையாளர் நடராஜனுக்கும் சீனி. விசுவநாதன் எழுதிய கடிதத்திற்கு அந்தப் பதிப்பகத்திடமிருந்து வழக்குரைஞர் மூலமாக பதில் அனுப்பப்பட்டிருக்கிறது. நிச்சயமாக ஒரு பதிப்பகத்துடன் போராட, வழக்காட சீனி.விசுவநாதனுக்கு வயதுமில்லை, வசதியுமில்லை, சீனி.விசுவநாதனுக்குப் பொய் உரைக்க வேண்டிய அவசியமும் இல்லை. தன்னுடைய பதிப்புகளிலிருந்து எவையெல்லாம் கையாளப்பட்டிருக்கின்றன என்பதை அவர் விரிவாகவும், விளக்கமாகவும் பட்டியலிட்டு வெளியிட்டிருக்கிறார். சீனி.விசுவநாதன் வெளியிட்டிருக்கும் அந்த விளக்கத்தைப் படித்துப் பார்க்கும்போது, அவருடைய தேடல்களின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்கள் சந்தியா பதிப்பகத்தின் "பாரதி விஜயம்' நூலில் இடம்பெற்றிருக்கின்றன என்பது மட்டுமல்லாமல், அந்தப் புத்தகத்தில் பல தவறான, பிழையான செய்திகளும் காணப்படுகின்றன என்பதும் தெரியவருகிறது.
 மிகப்பெரிய தமிழ்ச் சேவை செய்து வரும் பிரபலமான ஒரு பதிப்பகம் பல்லாண்டு உழைப்பில் பெரியவர் சீனி.விசுவநாதன் சேகரித்த தகவல்களை அவருக்கு "நன்றி' கூறாமல் கையாண்டிருப்பதை மனிதாபிமானம் உள்ள யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. குறைந்தபட்சம் அவருக்கு அந்தத் தகவல்களைத் திரட்டித் தந்ததற்கு நன்றி தெரிவிப்பதுதான் நியாயமாக இருக்குமே தவிர, வழக்காடு மன்றத்திற்கு சீனி.விசுவநாதனை இழுத்து, அலைக்கழிக்க முற்படுவது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்றது. பாரதி அன்பருக்கு இப்படியொரு சோதனை வரக்கூடாது, ஏற்படுத்தக்கூடாது.
 
 முனைவர் பா. இறையரசனால் எழுதப்பட்டிருக்கும் புத்தகம் "தமிழ் நாட்டு வரலாறு'. தமிழ் நாட்டு வரலாறு மட்டுமல்லாமல், தமிழ் இலக்கிய வரலாறு, தமிழர் நாகரிக வரலாறு, இதழாளர் பாரதியார் என்று பல்வேறு புத்தகங்களை எழுதியிருக்கும் முனைவர் பா.இறையரசன் தமிழின் மீது தாளாப் பற்றும், ஆழங்காற்பட்ட புலமையும் கொண்டவர்.
 இவரது "தமிழ் நாட்டு வரலாறு' புத்தகத்தில் பண்டைத் தமிழ் வரலாறு குறித்த பல்வேறு ஆய்வுகள் மிகவும் தெளிவாகவும், எளிமையாகவும் தரப்பட்டிருக்கின்றன. உலக நாகரிகங்கள் எல்லாம் ஆற்றங்கரைகளிலேயே தோன்றின. ஆயின், தமிழர் நாகரிகம் மலையில் தோன்றியது என்கிற தமிழர்களின் தனித்துவத்தைக் குறிப்பிட்டுக்காட்டும் பா.இறையரசன், தமிழ் இனம் உலகெங்கும் பரவியிருந்ததற்கு பல சான்றுகளையும் முன்வைக்கிறார். ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகளில் ஒன்று ஆஸ்திரிய பழங்குடி மக்களின் மண்டை ஓட்டை ஒத்திருப்பதாக எலியட் ஸ்மித் கூறியதையும், ஆதிச்சநல்லூர் தாழிகள் பாலஸ்த்தீனம், சைப்பிரஸ் தாழிகளை ஒத்துள்ளன என்றும் பதிவு செய்கிறார்.
 "தமிழ் நாட்டு வரலாறு' புத்தகத்தின் முதல் 135 பக்கங்கள் தமிழின் தொன்மையையும், தமிழர் நாகரிகத்தையும் குறித்த பதிவுகளையும், சான்றுகளையும் பதிவு செய்கிறது என்றால், அதற்குப் பிறகு சங்ககால பாண்டியர் காலத்தில் தொடங்கி தமிழகத்தின் சரித்திரத்தைப் பதிவு செய்ய முற்படுகிறது. வரலாற்றுக்கு முற்பட்ட பாண்டியர்களிலிருந்து தமிழ் நாட்டின் இன்றைய வரலாறு வரை ஒன்றன் பின் ஒன்றாக முனைவர் பா.இறையரசன் பதிவு செய்தபடி செல்லும்போது, நாம் தமிழகத்தின் வரலாற்று நிகழ்வுகளோடு அன்று முதல் இன்று வரை பயணிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
 முனைவர் பா.இறையரசனின் "தமிழ் நாட்டு வரலாறு' என்கிற இந்தப் புத்தகத்தை இன்றைய இளைஞர்கள் படிக்க முற்பட்டால், அவர்களைத் தன்னுள் ஈர்த்து நமது வரலாற்றுப் பெருமைகளை அவர்களை உணர வைக்கும் என்பது நிச்சயம். மிகவும் எளிமையாகவும், தெளிவாகவும் "தமிழ் நாட்டு வரலாறு' முனைவர் பா.இறையரசனால் எழுதப்பட்டிருப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
 
 புத்தக விமர்சனத்திற்கு வந்திருந்தது கவிஞர் நவஜீவன் எழுதிய "தொப்புள்கொடி பூத்த காடு' என்கிற கவிதைத் தொகுப்பு. அரசு ஊழியராக இருந்து பணி ஓய்வு பெற்றவர் என்பது அவரது முன்னுரையிலிருந்து தெரிந்தது. அந்தத் தொகுப்பிலிருந்து பல கவிதைகளை மேற்கோள் காட்ட முடியும் என்றாலும், நான் படித்ததும் வாய்விட்டுச் சிரித்த ஐந்துவரிக் கவிதை இதுதான்.
 
 ஒன்றாம் வகுப்பிலேயே சொல்லிக் கொடுத்தார்கள் இன்னும் கடன் வாங்கித்தான் கழிகிறது வாழ்க்கை!

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/5/w600X390/tm2.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/may/06/இந்த-வாரம்-கலாரசிகன்-2913933.html
2913934 வார இதழ்கள் தமிழ்மணி சங்ககால "உள்நோயாளி'   DIN DIN Sunday, May 6, 2018 12:00 AM +0530 சங்க காலத்தில் தற்காலம் போன்று பொது மருத்துவமனைகள் கிடையாது. போரில் புண்பட்டு வீழ்ந்த மறவர்கள் பாசறையில் வைத்து உடனடி மருத்துவம் பார்க்கப்பட்டனர். உடலில் பெரும் புண்பட்டு வீழ்ந்த வீரர்கள், அவரவர் வீடுகளில் வைத்து "உள்நோயாளி'யாக மருத்துவம் பார்க்கப்பட்டனர்.
 நல்ல சூழலும், நல்ல மனநிலையும் இருந்தால்தான் நோயாளி விரைவில் குணமடைய வாய்ப்பாக இருக்கும் என்பதை முன்னோர் அறிந்திருந்தனர். இதனைப்புறநானூற்றுப் பாடல் ஒன்று தெரிவிக்கிறது.
 எதிரிப்படையுடன் நடந்த போரில் விழுப்புண்பட்டான் ஒரு வீரன். பின்னர் அவனது வீட்டிற்கு அவன் கொண்டு செல்லப்பட்டான். வீட்டில் "உள்நோயாளி' யாக இருந்து ஓய்வெடுத்து மருத்துவம் பார்த்துக் கொள்கிறான். அவனது இல்லத்திலிருந்த மகளிர், அந்நோயாளிக்கு ஏதுவான பல செயல்கள் செய்து அப்புண்ணை ஆற்றும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அவ்வீரனைக் கண்டுவருவதற்காக "அரசில் கிழார்' என்ற புலவர் அவனது வீட்டிற்குச் செல்கின்றார். அப்பொழுது, வீரனின் மனைவி தன் தோழியுடன், நோயாளி இருக்கும் வீடு எந்தச் சூழ்நிலையில் இருக்க வேண்டும் என்பது பற்றி உரையாடுகின்றாள். இதனைக் கேட்ட அப்புலவர், அப்பெண்ணின் அறிவு மாண்பினை அறிந்து மகிழ்கின்றார். அதனை, தனது பாடலொன்றில் (பா.281) ஏற்றிப் பாடுகின்றார்.
 புண்பட்ட உடலை பேய்கள் தீண்டி வருத்தும் என்பதால், அவை நம் வீட்டருகிலும் அணுகாதவாறு இருப மரத்தின் தழையையும் வேம்பின் தழையையும் பறித்துவந்து மனையிறையில் செருக வேண்டும். இனிய இசை எழுமாறு யாழ் முதலிய இசைக் கருவிகளை இயக்க வேண்டும். கையால் தரையை நன்கு மெழுகித் தூய்மை செய்வதுடன், வெண்சிறு கடுகைத் தூவ வேண்டும். குழல், மணி இவற்றின் ஓசை எழுப்பப்பட வேண்டும்.
 நிலையாமையை வெளிப்படுத்தும் "காஞ்சிப்பண்' இசைத்து நோயாளியின் மனத்துயரைப் போக்குவதுடன், நறுமணம் வீசக்கூடிய அகில் முதலியவற்றைப் புகைத்து நறும்புகை உண்டாக்கி, நறுமணம் கமழும் சூழலை வீட்டினுள் உண்டாக்க வேண்டும். இவ்வாறெல்லாம் செய்து, வேந்தனைக் காக்கும் பொருட்டுத் தான் புண்பட்ட, வீரக்கழலணிந்த நம் தலைவனின் புண்களை, அவை விரைவில் ஆற்றப்படுமாறு செய்வோம் என்பதுதான் அம்மறவன் மனைவியின் உரையாடற் கூற்று.
 "தொடாக்காஞ்சி' என்னும் புறத்துறையில் வைத்துப் பாடப்பெற்றது இப்பாடல். மருத்துவத்துறை வளர்ச்சியில்லாத முற்காலத்தில், தம்மால் இன்றளவு மருத்துவம் பார்த்தும், நோயைக் குணமடையச் செய்வதற்கான சூழலை உருவாக்கியும் பல உயிர்களைக் காக்க முனைந்து செயல்பட்ட பண்டையத் தமிழரின் கூர்த்த அறிவு பாராட்டத்தக்கது.
 -முனைவர் ச. சுப்புரெத்தினம்
 
 
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/5/w600X390/tm3.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/may/06/சங்ககால-உள்நோயாளி-2913934.html
2909372 வார இதழ்கள் தமிழ்மணி  தம் பொருளை தாமே பாதுகாக்க வேண்டும்  முன்றுறையரையனார் Sunday, April 29, 2018 12:00 AM +0530 பழமொழி நானூறு
மறந்தானும் தாமுடைய தாம்போற்றி னல்லால்
 சிறந்தார் தமரென்று தேற்றார்கை வையார்
 கறங்குநீர்க் காலலைக்கும் கானலஞ் சேர்ப்ப!
 இறந்தது பேர்த்தறிவார் இல். (பாடல்-43)
 ஒலிக்கின்ற நீரை உடைய உப்பங்கழிகள், அலை வீசுதற் கிடனாய, கடற்கரைச் சோலையை உடைய அழகிய கடல் நாடனே! தமது கையினின்றும் போன பொருளை, மீட்டுத்தர அறிவாரில்லையாதலால், தம்மிடத்துள்ள பொருளை, தாம் காவல் செய்யின் அல்லது தமக்குச் சிறந்தார் எனவும், உறவினர் எனவும் கருதி, நம்பலாகாதார் கையின்கண், ஒருகால் மறந்தும் வைத்தல் இலர் அறிவுடையார். (க-து.) ஒவ்வொருவரும் தந்தம் பொருளைத் தாமே பாதுகாத்தல் வேண்டும். "இறந்தது பேர்த்தறிவார் இல்' என்பது பழமொழி.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/28/w600X390/LOTUS.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/apr/29/தம்-பொருளை-தாமே-பாதுகாக்க-வேண்டும்-2909372.html
2909373 வார இதழ்கள் தமிழ்மணி கவி பாடலாம் வாங்க - 22  "வாகீச கலாநிதி' கி.வா. ஜகந்நாதன் DIN Sunday, April 29, 2018 12:00 AM +0530 கலித்துறை வகை-2
கட்டளைக் கலித்துறை என்பது ஒரு வகை. கட்டளை என்பது கணக்கு என்ற பொருளையுடையது. எழுத்துக் கணக்கை உடைய பாடல்களுக்கு கட்டளை என்ற அடை இருக்கும். கட்டளைக் கலிப்பா அத்தகையது.
 கட்டளைக் கலித்துறையும் நான்கு அடிகளும் அடிக்கு ஐந்து சீரும் உடையது. ஆனால், அளவு ஒத்து வருவதன்று. அளவொத்து வருவதாவது, மாச்சீர் ஓரடியில் வந்தால் மற்ற அடிகளில் அவ்விடத்தில் மாச்சீரே வருவது. இப்படியே மற்றச் சீர்களும் வரும். கட்டளைத் கலித்துறையில் இந்த வரையறை இல்லை.
 இதற்கு எழுத்துக் கணக்கு உண்டு. நேரை முதலாக உடைய அடியில் ஒற்றை நீக்கிப் பதினாறு எழுத்துக்களும், நிரையை முதலாக உடைய அடியில் பதினேழு எழுத்துக்களும் அமைய வேண்டும்.
 ஆசிரியச் சீர், வெண்சீர் என்னும் இரு வகைச் சீர்களே இந்தப் பாடலில் வரும். அதாவது, மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர் என்பனவே வரும். ஒவ்வோரடியிலும் கடைசீச் சீர் மாத்திரம் விளங்காய்ச் சீராக இருக்கும்; மற்றவற்றில் காய்ச்சீர் வந்தால் மாங்காய்ச் சீர்களாகவே இருக்கும். ஒவ்வோர் அடியிலுமுள்ள ஐந்து சீர்களிடையிலும் வெண்டளை அமைய வேண்டும். இது மிகவும் முக்கியமானது. ஆனால், முதலடியின் ஈற்றுச் சீருக்கும், அடுத்த அடியின் முதற் சீருக்கும் இடையே வெண்டளை இருக்க வேண்டியதில்லை. நேரை முதலாக உடைய பாட்டில் இங்கும் வெண்டளை இருக்கும்.
 வெண்டளை மேலே சொன்ன வகையில் வந்து, ஐந்து சீர்களில் ஈற்றுச் சீரில் மட்டும் விளங்காய்ச் சீர் வந்து அமைந்தால் எழுத்துக் கணக்குச் சரியாக இருக்கும். எழுத்தை எண்ணிப் பாட வேண்டாம். முன் சொன்ன இலக்கணம் இருந்தால் நிச்சயமாக எழுத்துக் கணக்குத் தவறாமல் இருக்கும்.
 
 "நாளென் செயும்வினை தானென்
 செயுமெனை நாடிவந்த
 கோளென் செயுங்கொடுங் கூற்றென்
 செயுங்கும ரேசரிரு
 தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந்
 தண்டையுஞ் சண்முகமும்
 தோளுங் கடம்பு மெனக்குமுன்
 னேவந்து தோன்றிடினே'
 
 இந்தப் பாட்டில் நாளன், தாளென், கோளென், கூற்றென், தாளுந், தோளுங் - என்பவை தேமாச் சீர்கள். சிலம்புஞ், கடம்பு -என்பன புளிமாச்சீர்கள். இவற்றின் முன் நிரை வந்துள்ளது. செயும்வினை, செயுமெனை, செயுங் கொடுங், செயுங்கும, சதங்கையுந், மெனக்குமுன் என்பன கருவிளச் சீர்கள். தண்டையும் என்பது கூவிளச்சீர். இவற்றின் முன் நேர் வந்தது. இவ்வாறு வெண்டளை அமைந்தது காண்க. ஒவ்வோரடியின் ஈற்றுச் சீரும் விளங்காய்ச் சீராக வந்திருக்கிறது. நாடிவந்த (கூவிளங் காய்), ரேசரிரு (கூவிளங்காய்), சண்முகமும் (கூவிளங்காய்), தோன்றிடினே (கூவிளங்காய்) என்பவற்றைக் காண்க. கருவிளங்காயும் வரலாம். இறுதியில் ஏயில் முடியும்.
 கந்தர் அலங்காரம் முழுவதும் கட்டளைக் கலித்துறையால் ஆனது. கோவை நூல்கள் யாவுமே கட்டளைக் கலித்துறையால் அமைந்தவை. அவற்றைப் படித்துக் கட்டளைக் கலித்துறை பாடக் கற்றுக்கொள்ளலாம்.
 கலித்துறைகளில் ஐந்தாம் சீரில் மோனை அமைவது சிறப்பு.
 (தொடர்ந்து பொடுவோம்...)
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/28/w600X390/kivaja.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/apr/29/கவி-பாடலாம்-வாங்க---22-2909373.html
2909374 வார இதழ்கள் தமிழ்மணி நிழல்காண் மண்டிலம் DIN DIN Sunday, April 29, 2018 12:00 AM +0530 கண்ணாடி, மக்களின் வாழ்வில் இன்றியமையாத ஒரு பொருள். கண்ணாடி எந்த ஆண்டு மக்களின் புழக்கத்திற்கு வந்தது என அறுதியிட்டுக்கூற முடியாது. ஆனால், தமிழர் தம் வாழ்க்கையில் சங்க காலம் முதலே கண்ணாடி புழக்கத்திலிருந்தது என்பது தெரிய வருகிறது.
 தன்னை அடுத்த பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல் ஒருவனுடைய நெஞ்சத்தில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும் என்னும் பொருளில் திருவள்ளுவர் (குறிப்பறிதல்) கூறியிருக்கிறார்.
 எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பரிபாடலிலும் கண்ணாடி பற்றிய குறிப்பு காணப்படுகிறது. முகம் பார்க்கும் கண்ணாடி சங்க காலத்தில் "நிழல்காண் மண்டிலம்' என வழங்கப்பட்டுள்ளது. பெரும்புலவர் நல்லச்சுதனார், மதுரைக்கு அருகிலுள்ள திருப்பரங்குன்றத்தில் அருள் பாலிக்கும் செவ்வேள் பற்றிப் பாடியுள்ளார்.
 
 "ஆடும் மகளிரும் அரிவையர் நிலையும்
 சுடுபொன் ஞெகிழத்து முத்தரிசென்று ஆர்ப்பத்
 துடியின் அடிபெயர்த்துத் தோளசைத்துத் தூக்கி
 அடுநறா மகிழ்தட்ப ஆடுவாள் தகைமையின்
 நுனைஇலங்கு எஃகெனச் சிவந்தநோக்கமொடு
 துணையணை கேள்வனைத் துனிப்பவள் நிலையும்
 நிழல்காண் மண்டிலம் நோக்கி
 அழல்புனை அவிர் இழை திருத்துவாள்' (பா.21)
 
 சூர்மாத் தடிந்தோய் நின் திருப்பரங்குன்றின்மேல் பொற்சிலம்பிலுள்ள முத்துப்பரல் ஒலிக்கத் துடியின் ஓசைக்கு இயைய அடியைப் பெயர்த்துத் தோளை அசைத்துத் தூக்கி, கள்ளுண்ட மகிழ்ச்சி தடுக்க ஒருத்தி ஆடினாள். அவ்வாடலைத் தன் தலைவன் அருகிலிருப்பப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு தலைவி ஆடுவாளது அழகு கண்டு இஃது இவன் மனத்தை வேறுபடுத்து மென்றெண்ணி வெகுளிமிக்க பார்வையோடு அவனைச் சினந்தாள். வேறொருத்தி, தன் அழகைக் கண்ணாடியிற் பார்த்துத் தன் அணிகலன்களைத் திருத்தினாள் என்கிறார் நல்லச்சுதனார். மணிமேகலையில்,
 
 "பகவனது ஆணையின் பல்மரம் பூக்கும்
 உவவனம் என்பது ஒன்றுஉண்டு அதன்உள்ளது
 விளிப்பு அறைபோகாது மெய்புறத்து இடுஉம்
 பளிக்கறை மண்டபம் உண்டு அதன் உள்ளது'
 
 எனக் கூறியுள்ளார் சீத்தலைசாத்தனார். கண்ணாடி அறைக்குள் காப்பிய நாயகி மணிமேகலை உள்புகுந்து கொண்டாள். அறைக்குள் அவள் இயங்குவது வெளியில் நன்கு வெளிப்புறத்துத் தெரிவதாகவும், அவளது பேச்சு மட்டும் வெளியே மற்றவர்களுக்குக் கேட்கவில்லை என்கிறார் ஆசிரியர். கண்ணாடியினூடே ஒளி ஊடுருவிச் செல்லும்; ஒலி செல்லாது என்னும் அறிவியல் கருத்து தமிழர்களுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தெரிந்திருக்கிறது.
 }புலவர் ப.சோமசுந்தர வேலாயுதம்
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/28/w600X390/tm1.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/apr/29/நிழல்காண்-மண்டிலம்-2909374.html
2909375 வார இதழ்கள் தமிழ்மணி மலரும் பருந்தும்! DIN DIN Sunday, April 29, 2018 12:00 AM +0530 சங்க காலப் புலவர்கள் பலர் வறுமையில் வாழ்ந்திருந்தாலும் வளமான கற்பனைக்குச் சொந்தக்காரர்களாக இருந்தார்கள் என்பதற்கு "மலைபடுகடாம்' எனும் இலக்கியம் சாட்சியாக உள்ளது. இந்நூலின் பாட்டுடைத் தலைவன் பல்குன்றக் கோட்டத்துச் செங்கன் மாத்துவேள் நன்னன் எனும் குறுநில மன்னன்.
 வறுமையுற்ற புலவர்கள், பாணர்கள், விறலியர் போன்றோருக்கு வாரி வழங்கி, அவர்களின் சிரிப்பில் களிப்புற்றான் நன்னன். அவனது மலையிலிருந்து விழும் அருவிகள் அவனது வெற்றியைப் பறைசாற்றியதுடன் கைம்மாறு கருதாது வான்மழை பொழிவது போல நன்னன் வாரி வழங்கினான் (561-583) என்கிறார் பெருங்கெüசிகனார் எனும் புலவர். பரிசில் பெறச் செல்லும் புலவர்கள், கூத்தர்கள் செல்ல வேண்டிய வழியின் புவியியலையும் இயற்கைக் காட்சிகளையும் வளத்தையும் மனத்தை ஈர்க்கும் வகையில் விளக்குகிறார் புலவர்.
 சிறுகுடி எனும் ஊரில் தீயைப் போன்ற செங்காந்தள் மலர்கள் மொட்டும் மலருமாக இதழ் விரிந்தும் விரியாத நிலையிலும் இருந்ததைக் கண்ணுற்று வானில் பறந்த பருந்து ஒன்று, அதை "இறைச்சி' எனக்கருதி உண்ணும் எண்ணத்துடன் அதைத் தன் அலகில் கொத்தி எடுத்துக்கொண்டு மீண்டும் வானில் பறக்கிறது. பின், அதை இறைச்சியன்று என உணர்ந்த அப்பருந்து அதை மண்ணில் போடுகிறது. பருந்து காலின் பிடிப்பில் மலர்களின் இதழ்கள் தனித்தனியாகப் பிரிந்து பூமியின் மேற்பரப்பில் பரவலாகக் காணப்பட்டு, மலர் தூவிய நிலமாக -செந்நிறமாக - வெறியாடும் களமாகக் காணப்படுவதை கெüசிகனார் பரவசத்துடன் பதிவு செய்துள்ளார்.
 
 "தீயின் அன்னஒண் செங்காந்தள்
 தூவல் கலித்த புதுமுகை ஊன் செத்து
 அறியாது எடுத்த புன்புறச் சேவல்
 ஊஉன் அன்மையின் உண்ணாது உகுத்தன
 நெருப்பின் அன்ன பல் இதழ்தாஅய்
 வெறிக்களம் கடுக்கும் வியல் அறை'
 
 தசையைப் போல் தோற்றமளித்த செங்காந்தள் மலரைக் கண்டு ஏமாந்த வான் பருந்து போல், பல மனிதர்களின் தோற்றத்தைக் கண்டு ஏமாந்து நிற்கும் அப்பாவிகளை இப்பாடல் நினைவுட்டுகிறது.
 -உ. இராசமாணிக்கம்
 
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/28/w600X390/tm2.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/apr/29/மலரும்-பருந்தும்-2909375.html
2909376 வார இதழ்கள் தமிழ்மணி காப்பியங்களில் அறிவியல் ஆளுமை   DIN DIN Sunday, April 29, 2018 12:00 AM +0530 பழந்தமிழர் காதலையும், வீரத்தையும் அன்றி அறிவியலையும் சிந்தித்தனர் என்பதை இலக்கியங்கள் வழி அறிய முடிகிறது. அறிவின் நுண்மையே அறிவியலாகும். இது காப்பியங்களிலும் ஆளுமை பெற்றுத் திகழ்கின்றது.
 
 வேதியியல்:
 சிலப்பதிகாரத்தில் வேதியியல் கூறுகளைக் காண முடிகின்றது. மணிகள் ஒளிவிடும் தன்மையினாலும் வேறு வேறு பெயர்களைப் பெற்றுள்ளன. மணிகளின் மூலப் பொருள் ஒன்றுதான் என்பதை இளங்கோவடிகள் ஊர்காண் காதையில்
 கூறுகின்றார்.
 
 "ஒருமை தோற்றத்து ஐவேறு வனப்பின்
 இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும்' (191-192)
 
 இன்றைய வேதியியல் அறிஞர்கள் மணிகள் அனைத்துமே பீனால், பார்மால்டிஹைடு பொருள்களால் ஆனது என்கின்றனர். ஆனால், மணிகள் அனைத்திற்கும் மூலப்பொருள் ஒன்றுதான் என்பதை இளங்கோவடிகள் கூறியுள்ளார். அந்த மூலப்பொருள் எது என்பதைதான் இன்றைய அறிவியல் உலகம் கண்டறிந்துள்ளது.
 
 வானியல்:
 வானத்தில் காற்றில்லாப் பகுதியும் உண்டு என்பதை "வறிது நிலைஇய காயமும்' (பா.20) என்று புறநானூறும், வானம் கடலில் இருந்து முகந்த நீரை மழையாகப் பெய்கின்றது என்பதை, "வான்முகந்தநீர் மலை பொழியவும்' (125) எனப் பட்டினப்பாலையும் கூறுகின்றன. வானத்தில் உலவும் கோள்களையும் தமிழர்கள் ஆராய்ந்துள்ளனர். சீவகசிந்தாமணியில் கோள்கள் பற்றி திருத்தக்கதேவர் குறிப்பிட்டுள்ளார்.
 காந்தருவ தத்தையின் முகமானது நிலவைப் போன்று இருந்தது என்றும், அவள் தன் காதில் அணிந்திருந்த குண்டலம் நிலவுக்கு அருகே இருக்கும் வியாழன் கோள் போல் இருந்தது (618) என்றும் கூறுகின்றார். அறிவியல் வளர்ச்சி அடைந்த காலத்தில்தான் நிலவுக்கு அருகே உள்ள கோள் வியாழன் என்பதைக் கண்டறிந்தனர். இதனை 9-ஆம் நூற்றாண்டிலேயே திருத்தக்கதேவர் கூறியிருக்கிறார்.
 
 பொறியியல்:
 பழந்தமிழர் பொறியியல் அறிவையும் பெற்றிருந்தனர் என்பதற்கு எடுத்துக்காட்டு, கரும்பினைப் பிழிவதற்கு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை (புறநா.322) கூறும் புறநானூற்று வரிகள்தாம். சீவகசிந்தாமணி எந்திரத்தால் இயக்கப்பட்ட திரைச்சீலை பற்றிப் பேசுகின்றது. காந்தருவதத்தை சீவகனிடத்தில் இசைப் போரில் தோற்ற பின்னர், அவள் அமர்ந்திருந்த மண்டபத்தின் திரைச்சீலை எந்திரத்தால் மூடப்பட்டிருந்தது (740) என்கிறார் திருத்தக்கதேவர்.
 
 தொலைத் தொடர்பும், நேரலையும்:
 அறிவியல் கண்டுபிடிப்புகளால் உலகம் இன்று சுருங்கிவிட்டது. ஓரிடத்தில் நிகழும் விளையாட்டையோ, நிகழ்ச்சிகளையோ தொலைக்காட்சி வழியாக நேரலையாகக் காண முடிகிறது. இத்தகு கருவிகள் இல்லாத காலத்திலேயே நேரடி ஒளிபரப்பு பற்றி சீவகசிந்தாமணி கூறியிருக்கிறது.
 நந்தட்டன் சீவகனை காண வேண்டும் என்று விரும்புகிறான். காந்தருவதத்தை ஒரு மந்திரம் கூறுகிறாள். அம்மந்திரம் சீவகன் இருக்குமிடத்தை விளக்கமாகக் காட்டுகிறது (பா.709). அவ்வேளையில் சீவகன் கனக மாலையோடு மலர்ப் படுக்கையின் மேல் கற்பக மாலை புனைந்து, கனக மாலைக்குச் சூடியதை எதிரில் காணுகின்றான் (1710) நந்தட்டன். இந்நிகழ்வு, இன்றைய நேரலையை ஒத்திருக்கிறது.
 
 மருத்துவம்:
 பன்னெடுங் காலத்திற்கு முன்னரே தமிழர் மருத்துவயியலையும், அறிந்திருந்தனர். காப்பியங்களும் மருத்துவம் பற்றி எடுத்துரைக்கின்றன. பெரியபுராணம், கண்ணப்ப நாயனார் புராணம் இதற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது. காளத்திநாதரின் கண்களில் குருதி வழிவதைக் கண்ட கண்ணப்பர், குருதி வடிவது நிற்பதற்காகப் பச்சிலையைப் பிழிந்து ஊற்றுகிறார். ஊற்றிய பின்னரும் குருதி வடிவதைக்கண்ட கண்ணப்பர் ஓர் உறுப்பிற்கு வரும் நோயைத் தீர்ப்பது இன்னொரு உறுப்பாகும் என்று உணர்வதாக, "உற்ற நோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன் எனும் உரைமுன் கண்டார்' (பா.177) என்கிறார் சேக்கிழார்.
 ஊனுக்கு ஊன் என்பதை "பழிக்குப் பழி' என்று சிலர் மாற்றிப் பொருள் கொண்டுள்ளனர். ஆனால், ஓர் உறுப்பு பழுதுற்றால் மற்றொரு உறுப்பை மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்பதையே மேற்காணும் வரிகள் உணர்த்துகின்றன. பின்னர், கண்ணப்பர் தமது வலக்கண்ணை கூர்மையான அம்பினால் தோண்டி, ஈசனின் வலக்கண்ணில் அப்பினார் என்பதை (பா.177) கூறுகின்றார். இன்றைய மருத்துவ உலகில் சாத்தியமாகும் உறுப்பு மாற்று சிகிச்சையினை பெரியபுராணம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே உலகிற்கு அறிவுறுத்தியுள்ளது.
 கம்பராமாயணமும் அறுவை மருத்துவம் (கும்பகர்ணன் வதைப்படலம், பா.62) பற்றிப் பேசுகின்றது. அணுக்கரு பிளப்பு, சேர்ப்பு பற்றிய கொள்கைகள் புதியன அல்ல, 12-ஆம் நூற்றாண்டிலேயே கம்பர் இதனை, "சாணினும் உளன் ஓர் தன்மை அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்' (இரணிய வதைப்படலம், 37) என்று அணுக்கொள்கையைக் கூறியுள்ளார்.
 
 வானூர்தி பறத்தல் தத்துவம்:
 தமிழர்கள் விண்ணில் உலவும் கோள்களை மட்டும் ஆராயாமல், அதில் பறப்பதற்கான வழிகளையும் ஆராய்ந்துள்ளனர். "வலவன் ஏவா வானூர்தி'
 (புறநா.27) என்று புறநானூறு கூறுகிறது. சீவகசிந்தாமணி, மயிற்பொறியில் பறந்து சென்ற விசையைப் பற்றியும் கூறுகின்றது. மணிமேகலை காப்பியம் விண்ணில் பறந்து பல நாடுகளுக்கும் மணிமேகலை சென்றதாகக் கூறுகின்றது. கம்பரோ, வானூர்தி பறத்தல் தத்துவத்தையே கூறியிருக்கிறார்.
 இராமனும் இலக்குவனும் சீதையைத் தேடிச் செல்கின்றனர். அப்போது மண்ணின் மேல் தேர்க்காலின் சுவடுகள் தெரிகின்றன. இருவரும் அச்சுவடுகளைப் பின் தொடர்ந்து செல்கின்றனர். சிறிது தூரம் சென்ற பின்னர் அச்சுவடுகள் மறைந்து போகின்றன. அந்த விமானம் வான்நோக்கி பறந்திருக்கக்கூடும் என்று இருவரும் வருந்தினர் (சடாயு உயிர்நீத்த படலம், 23) என்கிறார் கம்பர். விமானம் தரையில் சிறிது தூரம் ஓடிய பின்னரே வானத்தில் பறக்கிறது எனும் உண்மையை முதலில் சொன்னவர் கம்பராகவே இருப்பார்.
 தமிழ் இலக்கியங்களும், காப்பியங்களும் எடுத்துரைத்த கோட்பாடுகளே இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் பலவற்றிற்கு ஆதாரமாய் விளங்குகின்றன. பழந்தமிழர்களின் செயல்பாடுகள் அனைத்திலும் அறிவியல் அமைந்துள்ளது.
 -சு. செந்தில்குமார்
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/28/w600X390/tm3.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/apr/29/காப்பியங்களில்-அறிவியல்-ஆளுமை-2909376.html
2909377 வார இதழ்கள் தமிழ்மணி இந்த வாரம் கலாரசிகன் DIN DIN Sunday, April 29, 2018 12:00 AM +0530 வாரந்தோறும் "ஆனந்த விகடன்' இதழில், கவிஞர் சுரதாவின் கவிதை ஒன்று அப்போது வெளிவரும். கல்லூரி நாள்களில் அந்தக் கவிதைக்காகவே "ஆனந்த விகடன்' எப்போது வரும் என்று நான் காத்திருந்ததுண்டு. சென்னைக்கு எப்போதாவது போனால், கவிஞர் சுரதாவை நேரில் சந்திக்க வேண்டும் என்ற பேராவலை அந்தக் கவிதைகள் என்னுள் எழுப்பியிருந்தன.
மூன்று, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் சென்னை அண்ணா சாலையில் உள்ள தபால் நிலையத்துக்கு முன்னால் நடைமேடையில் இருக்கும் பழைய புத்தகக் கடைகளில் உள்ள புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சட்டென்று திரும்பிப் பார்த்தால், தோளில் சிவப்பு சால்வை அணிந்து கொண்டு கவிஞர் சுரதா வந்து கொண்டிருந்தார். நீண்ட நாள் கனவு இப்படி சுலபமாக நனவாகும் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை. இளைஞனான நான் வலியப்போய் அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.
கவிஞர் சுரதாவுக்கு சில விசித்திரமான பழக்கங்கள் உண்டு. நெற்றியில் முத்தமிட்டுப் பாராட்டுவது அதில் ஒன்று. கவிஞரிடம் முத்த ஆசி பெற்ற நூற்றுக்கணக்கானவர்களில் நானும் ஒருவன் என்பதில் இப்போதும்கூட பெருமைப்படுகிறேன்.
அதேபோல, கவிஞர் சுரதா எந்த ஊருக்குப் போனாலும் அங்கிருந்து கொஞ்சம் மண்ணை எடுத்து ஒரு காகிதத்தில் பொதிந்து கொண்டு சென்னை திரும்புவார். "எதற்காக இப்படிச் செய்கிறீர்கள்?'' என்று கேட்டால், ""நான் மரித்தால் தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் உள்ள மண்ணால் நான் மூடப்பட வேண்டும்'' என்று விளக்கம் கூறுவார்.
ஓவியக் கவிஞர் அமுத பாரதி அளவுக்குக் கவிஞர் சுரதாவிடம் நெருக்கம் பாராட்டும் வாய்ப்பு எனக்குக் கிட்டாமல் போனாலும், பலமுறை அவரைச் சந்திக்கவும், அவருடன் கலந்துரையாடவும் வாய்ப்பு பெற்றிருக்கிறேன்.
கவிஞர் சுரதாவை, "மற்றொரு பாரதி பிறந்துவிட்டான்'' என்று மனமாரப் பாராட்டியவர் பாரதியுடன் நெருங்கிப் பழகிய அறிஞர் வ.ரா. பாரதிதாசன் கவிதைகளால் கவரப்பட்டு, தனது பெயரை "சுப்புரத்தினதாசன்' என்று மாற்றிக்கொண்ட கவிஞர் சுரதா, பாரதிதாசனாலேயே ""சுரதாவின் எழுத்துக்கு சுரதா எழுத்தே நிகர்'' என்று பாராட்டுப் பெற்றவர்.
இருபதுக்கும் மேற்பட்ட கதை, கவிதை, கட்டுரை நூல்களும், நூற்றுக்கணக்கான திரைப்படப் பாடல்களும் எழுதியுள்ள உவமைக் கவிஞர் சுரதா, திரையுலக வரலாற்றில் மிகக்குறைந்த வயதிலேயே திரைப்படத்துக்கு உரையாடல் எழுதியவர். அவர் அறிமுகமான படம் 1944-இல் வெளிவந்த "மங்கையர்கரசி'. "காவியம்', "இலக்கியம்', "ஊர்வலம்', "விண்மீன்', "சுரதா' என்று பல இதழ்களை அவர் தொடங்கியும் இருக்கிறார்; நடத்த முடியாமல் நிறுத்தியும் இருக்கிறார்.
சுரதாவின் படைப்புகளில் மிக அதிகமாகச் சிலாகிக்கப்பட்டு, அனைவராலும் போற்றப்படும் கவிதைத் தொகுப்பு "தேன் மழை'. இதில் வெளிவந்திருக்கும் ஒவ்வொரு கவிதையும் கவிஞர் சுரதா "உவமைக் கவிஞர்' என்று அழைக்கப்படுவதற்கான காரணத்தைக் கூறும். "கவிதைத் தமிழின் மகுடம்' என்று வர்ணிக்கப்படும் "தேன் மழை', இப்போது நூறாவது பதிப்பைக் கண்டிருக்கிறது.

கடந்த புதன்கிழமை "தினமணி'யின் சென்னை பதிப்பில் நிருபராகப் பணியாற்றும் வேல்சங்கரின் திருமண வரவேற்புக்காக நெல்லை சென்றிருந்தேன். நெல்லையில் எனது கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் எஸ்.தோதாத்ரியை வழக்கம் போல மரியாதை நிமித்தம் சந்தித்து, ஆசி பெறச் சென்றேன். சாகித்ய அகாதெமியின் "இந்திய இலக்கியச் சிற்பி'யின் வரிசையில் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் குறித்து அவர் எழுதியிருக்கும் புத்தகத்தை அன்பளிப்பாகத் தந்தார்.
தமிழகத்தின் தலைசிறந்த நாவலாசிரியர்களைப் பட்டியலிட்டால் அதில் தவிர்க்க முடியாத பெயர் ராஜம் கிருஷ்ணன். ஏறத்தாழ நாற்பது நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், மொழிபெயர்ப்பு நூல்கள், வானொலி நாடகங்கள், கட்டுரைகள் என்று ஒரு பரந்த படைப்புலகத்தின் சொந்தக்காரர் அவர்.
1948-ஆம் ஆண்டு "சுதந்திர ஜோதி' என்கிற நாவலை எழுதிய ராஜம் கிருஷ்ணனின் முதல் சிறுகதையான "வெள்ளி டம்ளர்',
ஆசிரியர் சாவி அப்போது நடத்தி வந்த "வெள்ளிமணி'யில் வெளிவந்தது. ராஜம் கிருஷ்ணனின் "பெண் குரல்' என்ற நாவல், கலைமகள் இதழ் நடத்தும் நாராயணசாமி ஐயர் பரிசுப் போட்டியில் முதல் பரிசைப் பெற்றது முதல், தமிழ்ப் படைப்பாளிகள் மத்தியில் ராஜம் கிருஷ்ணன் தனித்துவத்துடன் வலம்வரத் தொடங்கினார்.
"ஒரு நாவல் என்பது நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து வெறும் கற்பனையில் புனையப்படும் எழுத்துக் கோவைதான் என்பதில் எனக்கு முழுமையான உடன்பாடு கிடையாது. நாவல் புனை கதைதான். ஆனால், மனித வாழ்க்கையின் பல்வேறு பிரச்சனைகளிலும், நிலைகளிலும் பிரத்தியட்சங்கள் எனப்படும் உண்மை வடிவங்களைத் தரிசித்த பின்னர் அந்த அனுபவங்கள் எனது இதய வீணையில் மீட்டிவிட்ட சுரங்களைக் கொண்டு நான் இசைக்கப்புகும் புதிய வடிவையே நாவல் என்று கருதுகிறேன்'' என்பது நாவல் குறித்த ராஜம் கிருஷ்ணனின் பதிவு.
""ராஜம் கிருஷ்ணன் சிறுகதைகள் நிறையவே எழுதியிருக்கிறார். தொகுக்கப்படாத அவருடைய சிறுகதைகள் நிறையவே உள்ளன. தொகுக்கப்பட்ட சிறுகதைகள் சுமார் 120 இருக்கலாம். நாவலில் காணப்படும் ராஜம் கிருஷ்ணனின் சிந்தனைச் செறிவு சிறுகதைகளில் அந்த அளவுக்குக் காணப்படவில்லை என்கிற விமர்சனமும் உண்டு. நாவலில் ஏராளமான பின்புலத் தகவல்களை அளிக்க முடிவது போல, சிறுகதைகளில் அளிக்க இடமில்லை என்பது காரணமாக இருக்கலாம். அதனால்தானோ என்னவோ ராஜம் கிருஷ்ணனால் நாவலில் சாதித்தது போன்று சிறுகதைகளில் செயலாற்ற முடியவில்லை. இருப்பினும் அவருடைய சிறுகதைகளுக்கும் தனி இடம் உண்டு'' என்கிறார் பேராசிரியர் எஸ்.தோதாத்ரி.
தமிழ் எழுத்தாளர்களிலேயே அதிகமாகப் பெண்ணியம் பற்றி சிந்தித்தவர் ராஜம் கிருஷ்ணன். அவர் படைத்துள்ள பெண் கதாபாத்திரங்கள் அனைத்துமே பெண் விடுதலைக்காகக் குரல் கொடுப்பவை. பெண்ணியம் பற்றிய அவரது கருத்துகள் தெளிவானவை, துணிச்சல் மிகுந்தவை. அதே நேரத்தில் பெண்ணியம் என்ற பெயரால் கட்டுப்பாடற்று நடந்து கொள்வதையும் ராஜம் கிருஷ்ணன் கண்டிக்கிறார். அவர் மேலை நாட்டுப் பெண்ணியக் கருத்துகளை அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. பல இடங்களில் அவர் அதனை விமர்சனமும் செய்கிறார். பெண் விடுதலை என்பதை அவர் பாரம்பரியம் கலந்த விடுதலை என்பதாகத்தான் காண்கிறார்.
ராஜன் கிருஷ்ணன் குறித்து பேராசிரியர் எஸ். தோதாத்ரி எழுதியிருக்கும் இந்தப் புத்தகம் ராஜம் கிருஷ்ணனின் அனைத்து பரிமாணங்களையும் மிகவும் ஆழமாக ஆய்வு செய்வதுடன் நின்றுவிடவில்லை. தமிழ் நாவல்கள் குறித்தும், சிறுகதைகள் குறித்தும், அவற்றின் போக்கு குறித்தும், எழுத்தாளர்களுடைய பார்வை குறித்தும் ஆழமான ஆய்வை மேற்கொண்டிருக்கிறார் அவர்.

இரா.பூபாலனின், "ஆதிமுகத்தின் காலப் பிரதி' என்பது விமர்சனத்துக்கு வந்திருந்த கவிதைத் தொகுப்பு. அதில் படித்த, ரசித்த, சிந்திக்க வைத்த கவிதை இது:

வேலியோர
முட்புதருக்குள் வீறிட்டழும்
சிசுவிற்கு
யாரிடத்தும் யாதொரு
புகாரும் இல்லை
அதன் அழுகையெல்லாம்
முலை அமிழ்ந்து
கிடைக்கும்
ஒரு மிடறு
பாலுக்காகத் தான்!

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/28/w600X390/tm4.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/apr/29/இந்த-வாரம்-கலாரசிகன்-2909377.html
2904804 வார இதழ்கள் தமிழ்மணி பிறரை நம்ப வேண்டாம்   முன்றுறையரையனார் Sunday, April 22, 2018 12:00 AM +0530 பழமொழி நானூறு
விளிந்தாரே போலப் பிறராகி நிற்கும்
முளிந்தாரைத் தஞ்சம் மொழியலோ வேண்டா
அளிந்தார்கண் ஆயினும் ஆராயா னாகித்
தெளிந்தான் விளிந்து விடும். (பாடல்-42)
தம்மாட்டு அன்புடையாரிடத்தாயினும், ஆராய்தல் இலனாகித் தெளிந்தவன், அழிந்து விடுவான். எப்பொழுதும் வெகுண்டாரே போல இருந்து, அன்பின்மையின் வேறாகி நிற்கும் ஈரமற்றாரை, (தேறவேண்டாம் என்று) உறுதியாகச் சொல்ல வேண்டுவதில்லை. (க-து.) தம்மாட்டு அன்புடையாரிடத்தே ஆராயாது தம் மறையை வெளியிட்டார் கெடுவர் என்றால், பிறரை நம்பலாகாது என்பது சொல்ல வேண்டா. "அளிந்தார்கண் ஆயினும்ஆராயானாகித் தெளிந்தான் விளிந்துவிடும்' என்பது பழமொழி.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/21/w600X390/LOTUS.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/apr/22/பிறரை-நம்ப-வேண்டாம்-2904804.html
2904805 வார இதழ்கள் தமிழ்மணி கலித்துறை வகை-1   "வாகீச கலாநிதி' கி.வா. ஜகந்நாதன் DIN Sunday, April 22, 2018 12:00 AM +0530 கவி பாடலாம் வாங்க - 21
இதுவரையில் ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா, வெண்பா ஆகியவற்றைப் பற்றிய இலக்கணங்களைத் தெரிந்து கொண்டோம். வெண்பா, ஆசிரியப்பா என்ற இரண்டு பாக்களே இலக்கியங்களில் பெரும்பாலும் வழங்குகின்றன. கலிப்பா வகையில் தரவு கொச்சகக் கலிப்பா என்பதும், அதன் இனத்தில் கலித்துறை, கலிவிருத்தம் என்பனவும் இன்றும் புலவர்களால் பாடப் பெறுகின்றன. விருத்தங்களாலான காப்பியங்களில் ஆசிரிய விருத்தங்களோடு மேலே சொன்ன மூவகைப் பாடல்களையும் காணலாம். கம்பனுடைய இராமாயணம் முழுவதும் விருத்தங்களாலானது என்று பொதுவாகச் சொல்வார்கள். 
"கம்பன் விருத்தக் கவித்திறமும்'', ""விருத்தமென்னும் ஒண்பாவுக் குயர் கண்பன்'' என்று விருத்தத் திறத்தைப் பாராட்டிப் பழம் புலவர்கள் பாடியிருக்கிறார்கள். அதில் தரவு கொச்சகக் கலிப்பாவும் கலித்துறையும் இருக்கின்றன.
பாக்கள் நான்கு: பாவினங்கள் மூன்று. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பவை நான்கு பாக்கள். இவற்றில் ஒவ்வொன்றுக்கும் தாழிசை, துறை, விருத்தம் என்று மும்மூன்று இனங்கள் உண்டு. ஆசிரியப்பாவின் இனங்களில் ஒன்றாகிய ஆசிரிய விருத்தத்தின் இலக்கணத்தை விரிவாகப் பார்த்தோம். வெண்பாவின் இனமான விருத்தத்துக்கு வெளிவிருத்தம் என்று பெயர். கலியினங்களில் ஒன்று கலிவிருத்தம். அப்படியே வஞ்சியினங்களில் ஒன்று வஞ்சி விருத்தம். இந்த விருத்தங்கள் யாவுமே அளவொத்த நான்கு அடிகளை உடையன. கலித்துறையென்பது அடிக்கு ஐந்து சீர்களாய் நான்கு அடியும் அடிவொத்து வருவது.

"வேதம் யாவையும் அறிந்துயர் வித்தகன் விமல
போதம் மேவிய புங்கவன் எங்கணும் புகழ்கொள்
நாதன் நான்முக னும்பொரு வில்லனாம் நம்பன்
கோத மில்லவன் திருவடி பணிந்துகை குவிப்பாம்'

இது கலித்துறை. இதைக் கலிநிலைத்துறை என்றும் சொல்வதுண்டு. இந்தச் செய்யுளில் ஓரடிக்கு ஐந்து சீர்கள் வந்துள்ளன. முதற் சீரும் ஐந்தாம் சீரும் மாச்சீராகவும் மற்ற மூன்று சீர்களும் விளச்சீர்களாகவும் வந்திருக்கின்றன.

வேதம்- யாவையும் - அறிந்துயர் - வித்தகன் - விமல
தேமா - கூவிளம்- கருவிளம் - கூவிளம் - புளிமா

முதற்சீரும் ஐந்தாம் சீரும் புளிமாவாகவும் வரலாம். தேமாவாகவும் வரலாம். முதற்சீர் ஓரடியில் தேமாவாக வந்தால் நான்கடிகளிலும் தேமாவாகவே வர வேண்டும். ஐந்தாம் சீரில் இந்த நியதி இல்லை. இந்தப் பாட்டிலே விமல (புளிமா), புகழ்கொள் (புளிமா), நம்பன் (தேமா), குவிப்பாம் (புளிமா) என்று இரு வகை மாச்சீர்களும் ஐந்தாம் சீராக வந்திருப்பதைக் காண்க.
ஐந்து சீர்களையுடைய அடி நெடிலடி என்று பெயர் பெறுமென்று முன்பே தெரிந்து கொண்டிருக்கிறோம். "கலித்துறையே நெடிலடி நான்கா நிகழ்வது'' என்று யாப்பருங்கலக்காரிகை கூறும். விருத்தக் கலித்துறை என்பது ஒரு வகை.

"வென்றான் வினையின் தொகையாயவி ரிந்து தன்கண்
ஒன்றாய்ப் பரந்த உணர்வின்னொழி யாது முற்றும்
சென்றான் திகழும் சுடர்சூழொளி மூர்த்தி யாகி
நின்றா னடிக்கீழ்ப் பணிந்தார்வினை நீங்கி நின்றார்'

இதில் அடிதோறும் ஐந்து சீர்கள் உள்ளன. முன் மூன்று சீர்களிடையே வெண்டளை வந்தது. மூன்றாவது சீர் கனிச்சீராகவும் நான்காவது ஐந்தாவது சீர்கள் மாச்சீராகவும் உள்ளன. 
குண்டலகேசி, சீவக சிந்தாமணி முதலியவற்றில் இத்தகைய கலித்துறைகள் வந்துள்ளன. காப்பியங்களில் வந்தமையால் இவற்றைக் காப்பியக் கலித்துறையென்றும் சொல்வார்கள்.

"செம்பொன் வரைமேற் பசும்பொன்னெழுத் திட்ட தேபோல்
அம்பொன் பிதிர்வின் மறுவாயிரத் தெட்ட ணிந்து
வெம்புஞ் சுடரிற் சுடருந்திரு மூர்த்தி விண்ணோர் 
அம்பொன் முடிமே லடித்தாமரை சென்னி வைப்பாம்'

இந்த சீவக சிந்தாமணிப் பாட்டிலும் மேலே சொன்ன வகையில் சீர்கள் அமைந்திருக்கின்றன. பிற்கால நூல்களில் இந்த விருத்தக் கலித்துறையை புலவர்கள் மிகுதியாக எடுத்தாளவில்லை.
(தொடர்ந்து பாடுவோம்...)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/21/w600X390/tm1.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/apr/22/கலித்துறை-வகை-1-2904805.html
2904806 வார இதழ்கள் தமிழ்மணி சங்க இலக்கியத்தில் பயனுற வாழ்தல்!   DIN DIN Sunday, April 22, 2018 12:00 AM +0530 இலக்கியத்தின் குறிக்கோளே "பயனுற வாழ்தல்' என்பதே! மனிதனைப் பற்றிய வரலாறு, பிறந்தான், உண்டான், உறங்கினான், இறந்தான் எனத் தொடங்கி முடிவதன்று. "வாழ்க்கை என்பது, வாழ்பவனுக்கு மட்டுமன்றி அவனைச் சார்ந்த பிறர்க்கும் பயனுள்ளதாக இருப்பதையே' சங்க இலக்கியம் அறிவுறுத்துகின்றது.
 அரசர்களுக்கு அறிவுரை கூறும் புலவர்கள் எல்லாம் "மேகம் போலப் பயனுள்ளவனாக இரு', "நிலவைப் போலப் பேதமின்றி எல்லார்க்கும் ஒளி கொடு', "சூரியனைப் போல் உணவும் துய்க்கும் பிறவும் உதவு' என்றே கூறினர்.
 சங்க காலத்தில் ஒவ்வொரு மனிதனும், தன்னை நாடி வந்தவர்க்கு ஏதாவது உதவ வேண்டும் என்ற குறிக்கோளோடு வாழ்ந்தான். வீட்டில் தலைவி அறம் வளர்க்கும் பண்புடையவளாகவே இருந்தாள். தலைவன் பொருள் நிறைய ஈட்ட வேண்டும் என்பதே இல்லாதவர்க்குக் கொடுத்து உதவும் செயலுக்காகவே எனக் கருதினர்.
 நம்பி நெடுஞ்செழியன் என்று ஓர் அரசன் இறந்து கிடக்கும்போது அவனது உடலை எரிப்பதா, புதைப்பதா என்ற கேள்வி எழுந்தது. அப்போது அங்குவந்த பேரெயின் முறுவலார் என்ற புலவர், அங்கிருந்தோரைப் பார்த்துக் கீழ்வருமாறு கூறுகின்றார்:
 "அன்பு கொண்டோரே! நம்பி நெடுஞ்செழியன், மகளிர் தோளோடு தோளுற்றுத் தழுவினான்; சோலைகளின் பூக்களைச் சூடினான்; குளிர்ந்த சந்தனம் பூசி மகிழ்ந்தான்; பகைவரைப் போரிட்டு அழித்தான்; நண்பர்களை வாழ்த்தினான்; யாரையும் வலியர் என அவன் வழிபட்டுப் போற்றவில்லை; யாரையும் இவர் மெலியர் என இகழவுமில்லை; யாரிடத்தும் இரந்து நின்று கேட்டதில்லை; இரந்து வந்தவர்க்கு அவன் மறுத்து மொழிந்ததில்லை; வேந்தர்கள் வீற்றிருக்கும் அவைகளில் அவன் புகழோடு தலைமை வகித்தான்; போர்க்களத்தில் தனக்கு எதிராக வந்த படையைத் தடுத்து நிறுத்தினான்; தோற்று ஓடியவரைத் துரத்தாமல் நின்றான்; விரைந்து செல்லும் குதிரையைத் தன் மனத்தைவிட விரைந்து செல்லச் செலுத்தினான்; பெரிய தெருக்களில் தன் தேரைச் செலுத்தினான்; உயர்ந்த யானையின் மீது உலா வந்தான்; இனிய கள்ளை எல்லார்க்கும் பகிர்ந்து வழங்கினான்; பாணர்களின் பசி நீங்க விருந்து செய்தான்; நடுவுநிலை பிறழாது தெளிவு தோன்ற தீர்ப்பு வழங்கினான்; இவ்வாறாக செய்யத்தக்கன எல்லாம் பயனுறச் செய்தான்; புகழை ஈட்டிய அவனது தலையை வெட்டிப்போடுங்கள் அல்லது நெருப்பிட்டுச் சுடுக. அவனுடைய புகழ் இறவாது'' என்றார்.
 வாழ்க்கையின் எல்லாச் செயல்களையும் பயனுள்ளதாக வாழ்ந்தவரை எரித்தால் என்ன? புதைத்தால் என்ன? இதனாலெல்லாம் அவரது பெருமை குன்றாது எனக் கூறக் காண்கிறோம்.
 நெல் அதனுள் பால் முற்றிய அரிசியைப் பெற்றிருந்தால்தான் அதனைப் பயனுடையது என்போம்; இல்லாவிடின் அதனைப் "பதர்' என்போம். திருவள்ளுவர் இவ்வாறு பயனற்று வாழ்பவரை "மக்களுள் பதடி' என்கிறார். உண்டு உறங்கிக் கிடப்பவர் வாழ்நாளை வீணே கழிப்பர். அப்படிக் கழியும் நாளைப் "பதடிவைகல்' என்று குறிக்கிறது அகநானூறு.
 
 சங்க இலக்கியத்தில் முயற்சியும் ஊக்கமும் கொண்டு வாழ்வின் வெறுமையை அகற்றிப் பயனுற வாழ்ந்த ஒரு தலைவி இடம்பெறுகிறாள். இத்தலைவியின் கணவன் பொறுப்பற்றவன். தன்வீட்டை மறந்து அவ்வப்போது வெளியே சென்று பிறரோடு கூடித்திரிபவன். ஒருநாள் அவன் மலர் மாலைகளைச் சூடியவனாக, மணம் கமழ வருகிறான். அவனைப் பார்த்துத் தலைவியின் தோழி சொல்கிறாள்.
 "என் தலைவி சிறிய வயதினள்; அழகு நலம் கனிந்தவள். அவள் உன்னை மணம் செய்து கொண்டு இந்த வீட்டில் நுழைந்தபோது, இந்த வீடு எப்படி இருந்தது? ஒரே ஒரு மாடு மட்டும் இங்கு இருந்தது. வீட்டில் பொருள் இல்லை; பொலிவும் இல்லை. அவள் உனக்கு வாழ்க்கைப்பட்டு வந்த பிறகு இந்த வீட்டின் நிலையையே மாற்றிவிட்டாள். ஊரார் எல்லாம் இந்த வீட்டில் எவ்வளவு வசதி பெருகிவிட்டது என வியக்கின்றனர். அவள் உழைப்பு அவ்வாறு அமைந்தது. நீயோ வெளியே சென்று இன்பமாகப் பொழுதுபோக்கி வருகிறாய்'' என்று தூங்கலோரியார் என்ற புலவர் குறுந்தொகையில் தோழி கூறுவதை எடுத்துரைக்கின்றார். இந்தப் பாட்டின் கருத்தே "ஏர் பிடித்தவன் என்ன செய்வான் பானை பிடித்தவள் பாக்கியசாலி' என்ற பழமொழியாகி உள்ளது.
 
 உலகம் முழுவதும் உழுதொழிலால் வாழ்கிறது. அதனைச் செய்யும் வேளாண்மைத் தொழிலாளிகள் வாழ்ந்த வாழ்க்கை பேரரசர்களின் ஆட்சி தழைக்க அடித்தளம் சமைத்தது. உழத்தல் என்றால் வருந்துதல் என்பது பொருள். "உழந்தும் உழவே தலை' என்பார் திருவள்ளுவர். உடல் வருந்தச் செய்வதே உழவு. பிறதொழில்களில் உள்ள ஆக்கம், செல்வம் பெறும் வாய்ப்பு உழவுத் தொழிலில் இல்லை. பிறகு ஏன் இதைத் தலைமுறை தலைமுறையாகச் செய்ய வேண்டும்? இது தொழில் இல்லை; தொண்டு. சமுதாயத்தைக் காக்கும் தொண்டு. இதனைச் செய்வோர் தவம் செய்பவரை விட மேலானவர். அரசர் குடியினரைவிடவும் உயர்ந்தவர். இவர்களே பயனுற வாழும் வாழ்க்கையைப் பேணுபவர். உழவர்களை மிகுதியான வரியால் வருத்துதல் ஆகாது என்று வெள்ளைக்குடி நாகனார் என்ற புலவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனுக்கு அறம் கூறுகின்றார்.
 "அரசே நீ போரில் பெறும் வெற்றி உன் வலிமையால் விளைந்ததன்று. உன் நாட்டு உழவர்கள் வாழும் பயன்மிகுந்த வாழ்வின் உழைப்பால் விளைந்தது. அதனால் அத்தகு உழைப்பை மேற்கொள்ளும் வாழ்வினரின் சுமையை நீ தாங்க வேண்டும்'' என்று அரசனை வேண்டிக் கொள்கிறார். அவருடைய வேண்டுகோளை ஏற்று உழவர்களின் பழைய வரித்தொகையை அறவே நீக்குகின்றான் அரசன்.
 உழவன் நீரிறைக்கும் கருவிக்குப் பெயர் "சால்' என்பதாகும். சால் என்பதிலிருந்தே சால்பு, சான்றாண்மை என்னும் சொற்கள் தோன்றின. எனவே, உழவர் சான்றோராவர்; பயனுற வாழ்ந்த - வாழும் பெருமக்களாவர்.
 
 - முனைவர் அரங்க. பாரி
 
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/21/w600X390/tm2.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/apr/22/சங்க-இலக்கியத்தில்-பயனுற-வாழ்தல்-2904806.html
2904807 வார இதழ்கள் தமிழ்மணி மகாகவி பாரதியாரின் ஆங்கிலப் படைப்புகள்!   DIN DIN Sunday, April 22, 2018 12:00 AM +0530 மகாகவி பாரதியார் தமிழில் கவிதை, கட்டுரைகள் எழுதியுள்ளது எல்லோரும் அறிந்தது. ஆனால், அவர் ஆங்கிலத்திலும் கவிதை, கட்டுரைகள் எழுதினார் என்பது பலருக்கும் தெரியாது. "அக்னி முதலிய பாடல்கள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள்' என்ற தலைப்பில் பாரதியின் ஆங்கிலப் படைப்புகள் தொகுக்கப்பெற்று, 1937-ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. நூறு பக்கங்களே கொண்ட அந்நூலைப் படிப்போர், "பாரதி இன்னும் நிறைய ஆங்கிலத்தில் எழுதவில்லையே' என்று வருந்துவர்.
பாரதியார், ரவீந்திரநாத் தாகூரைத் தமக்கு முன்மாதிரியாகக் கொண்டார். தாகூர் தமது தாய்மொழியில் - வங்காளத்தில் கதை, கவிதை, கட்டுரைகளை முதலில் எழுதினார். பிறகு, அவற்றில் பலவற்றைத் தாமே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அவ்வாறு செய்ய வேண்டும் என்ற ஆசை பாரதிக்கும் எழுந்திருக்கிறது. எனவே, அவர் இயற்றிய தமிழ்ப் பாடல்கள் சிலவற்றை ஆங்கிலப் பாடல்களாக மொழிபெயர்த்தார்.
அவருடைய ஆங்கிலப் படைப்புகளை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம்.
1. அவர் பாடிய தமிழ்க் கவிதைகளின் மொழிபெயர்ப்பு.
2. வேதங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஸ்தோத்திரங்கள், ஆழ்வார்களின் சில பாடல்கள் ஆகியவற்றின் மொழிபெயர்ப்பு.
3. அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் அவருடைய கருத்துகளை வெளியிடும் கட்டுரைகள்.
4. அவருடைய குறிப்பேட்டிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகள்.
5. தமிழ்ச் சொற்களைப் பற்றி ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை.
வேதங்களிலுள்ள சில ஸ்தோத்திரங்களை ஆங்கிலப் பாடல்களாகப் பெயர்த்திருக்கிறார். அதேபோன்று ஆழ்வார்களின் பாடல்கள் சிலவற்றையும் ஆங்கிலத்தில் வசனக் கவிதைகளாக ஆக்கித் தந்துள்ளார். அவர்கள் கருத்துகளுடன் ஒன்றி, அவற்றைத் தமதாக்கிக் கொண்டு, பின்னர் அவற்றைத் தமக்கே உரிய நடையில் அவர் வெளியிடும்போது, அவை புதுப் பாடல்களாகவே தோன்றுகின்றன. இதுதானே நல்ல மொழிபெயர்ப்பாளன் செய்யும் ரசவாதம்!
பாரதி எழுதியுள்ள ஆங்கிலக் கட்டுரைகள் அவ்வப்போது இருந்த அவருடைய மனநிலைகளைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. தேசியம், அரசியல், சமூகம், தத்துவம், சமயம் முதலிய பல துறைகளில் அந்த நாளில் நிலவி வந்த கருத்துகளில் பாரதி எதை ஏற்று ஆதரித்தார் என்பதையும் இந்தக் கட்டுரைகளிலிருந்து நாம் அறியலாம்.
பாரதியாரின் குறிப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கருத்துகளை ஒரு தனிப் பகுதியில் காண முடிகிறது. சுருக்கமாகச் சொல்லி ஆழ்ந்த கருத்துகளைப் புலப்படுத்துவதால், பாரதி அரிய ஆற்றல் பெற்றிருந்தார் என்பதற்கு இப்பகுதி நல்ல சான்றாகும். அதில் சில வரிகள்:
He is slave Who receiver favours.
He sells himself who asks.
If you want to die soon talk about yourself.
முரண்பாடு போலத் தோன்றும் வகையில் சொல்லி, கருத்துகளை எளிதில் விளக்கும் முறையை மேற்கொள்கிறார், பாரதி. "மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. ஆனால், இறைவா! மனம் உண்டாவதற்கு என்ன வழி?'' என்று கேட்கிறார், தெளிவான ஆங்கில நடையில்!
கடைசிக் கட்டுரை தமிழ்ச் சொற்களைப் பற்றிய ஆராய்ச்சி. ஒவ்வொரு தமிழ்ச் சொல்லுக்கும் மேம்போக்கான, நேரடியான பொருள் ஒன்று இருக்கும். அதோடு, மறைபொருளாக அல்லது உள்ளுறைப் பொருளாக ஒன்றோ பலவோ இருக்கும் என்பது பாரதியாரின் அபிப்பிராயம். அதற்கென சில சொற்களைச் சான்றாகத் தந்து, தம் கருத்தை விளக்க முற்படுகிறார். ஆனால், எல்லாத் தமிழ்ச் சொற்களுக்கும் பொருந்தும் வகையில் விதி ஒன்றையும் அவர் உருவாக்கவில்லை.
பாரதியின் ஆங்கில நடை எளிமையாகவும் அழகாகவும் இருக்கிறது. என்றாலும் அவரது கொள்கையை சில தமிழறிஞர்கள் ஏற்க மறுக்கின்றனர். "இலக்கியம் படைத்த மொழிகள் எல்லாவற்றிலும் சொற்கள் பலதரப்பட்ட பொருளை அடுக்கடுக்காகப் பெற்றுள்ளன. இதற்கு, பாரதி மேற்கொண்ட ஆங்கிலச் சொற்களே சான்று. எனவே, இதைத் தமிழின் தனிச்சிறப்பு என்று கொள்ள முடியாது'. இது பற்றிக் தமது கருத்துகளை விளக்கி பல கட்டுரைகளை எழுதப் போவதாக பாரதியே அறிவித்திருக்கிறார். ஆனால், நமது துரதிருஷ்டம், அந்தக் கட்டுரைகள் வெளிவராமலேயே போயின.
மொத்தத்தில் இந்த ஆங்கில நூல் பாரதியாரின் ஆங்கிலப் புலமையை நன்கு புலப்படுத்துகிறது. அவருடைய ஆங்கில எழுத்துக்கு உயிரூட்டுவது நகைச்சுவைதான். உயர்ந்த இலக்கியங்களை பாரதி ஆங்கிலத்தில் படைத்தார் என்பதில் வியப்பொன்றுமில்லை.
"கண்ணம்மா என் காதலி' என்னும் தலைப்பில் "பாயுமொளி நீ எனக்கு' என்று தொடங்கும் பாடலை கீழ்வருமாறு பாரதி மொழிபெயர்த்திருக்கிறார்:
Thou to me the flowing light
And I to thee discerning Sight ;
Honied blossom thou to me,
Bee enchanted I to thee ;
O Heavenly Lamp with Shining ray,
O krishna, Love, O nectar-Spray
With falt'ring tongue and words that pant
Thy glories here, I strive to Chant.
- ஆர். சி. சம்பத்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/21/w600X390/tm3.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/apr/22/மகாகவி-பாரதியாரின்-ஆங்கிலப்-படைப்புகள்-2904807.html
2904808 வார இதழ்கள் தமிழ்மணி இந்த வாரம் கலாரசிகன்   DIN DIN Sunday, April 22, 2018 12:00 AM +0530 தோழர் தங்கப்பனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ஏப்ரல் 24-ஆம் தேதி எழுத்தாளர் ஜெயகாந்தனின் பிறந்த நாளையொட்டி சென்னையிலுள்ள ரஷ்ய கலாசார மையத்தில் விழா ஏற்பாடு செய்திருப்பதாகச் சொன்னார். அதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற எனக்கு அழைப்பு விடுத்தார். 
ஜெயகாந்தன் குறித்த தரவுகளுக்காக புத்தக அலமாரியில் தேட முற்பட்டபோது, கிருங்கை சேதுபதி தொகுத்த "ஜெயகாந்தனின் இருபதாம் நூற்றாண்டு இலக்கிய சாசனங்கள்' என்கிற புத்தகம் கண்ணில் பட்டது. ஜெயகாந்தன் குறித்து அவரிடம் நெருங்கிப் பழகிய பலரும் செய்திருக்கும் பதிவுகளுடன், மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எழுதிய ஜெயகாந்தன் குறித்த "சமுதாயத்தின் மனசாட்சிக் காவலர்' என்கின்ற கட்டுரையும் இதில் இடம்பெற்றிருக்கிறது. ஜெயகாந்தன் குறித்த மேலெழுந்த பார்வையாக இல்லாமல், அவர் குறித்த ஆழமான பல செய்திகளும், அவரின் தனித்துவங்களும் பதிவு செய்யப்பட்டிருப்பதுதான் இந்தத் தொகுப்பின் சிறப்பு.
ஜெயகாந்தனின் சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள், கதைகள், கட்டுரைகள், பேட்டிகள், கவிதைகள் ஆகியவற்றின் வெளியீட்டு விழா உரைகள் அவரது பன்முக ஆளுமையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. 
""நான் உங்களிடம் விடைபெற்றுக்கொள்ளும்போது, நான் எழுதாத எவ்வளவோ பாத்திரங்கள் என்னோடு சேர்ந்து உங்களுடன் விடைபெற்றுக் கொள்வார்கள். இதை நீங்கள் அறிய மாட்டீர்கள் என்பதால் உங்களுக்கு வருத்தமில்லை. இதை அறிந்திருக்கிற நான் இதன் பொருட்டு, சில சமயம் வருந்துவதுண்டு. இவர்களை நான் உருவாக்கிவிட்டுவிடுவேனேயானால் இவர்கள் உங்களுடன் நிரந்தரம் கொண்டு விடுவார்கள். அப்படி இல்லையென்றால், அது அவர்களின் பொறுப்பே ஆகும்'' என்று சிறுகதைகளின் தொகுப்பு நூலின் நிறைவு பக்க ஜெ.கே.யின் வாசகம் என்னை அடிக்கடி இம்சிக்கும். ஜெ.கே. விடைபெற்றுக் கொண்டாலும்கூட, அவருடைய பாத்திரங்கள் நம்மிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளவில்லை என்பது நிதர்சன உண்மை.
ஜெ.கே.யின் மிக நெருங்கிய நண்பராகத் தொடர்ந்தவர் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன். "ஜெயகாந்தன் பிரமிப்பூட்டும் நிறப்பிரிகை' என்கிற அவரது கட்டுரையில், ஜெயகாந்தனின் சொல்லாட்சி குறித்து இந்தப் பதிவை அவர் செய்கிறார். ""கூடுவிட்டுக் கூடு பாயும் ஆற்றலின் வேறொரு பரிமாணம் அவரது உயிர்த்துடிப்புள்ள சொல்லாட்சி. தமிழின் பல்வேறு கிளைமொழிகள், பரிபாஷைகள்-பிராமணக் கிளைமொழி, சென்னைச் சேரி கிளைமொழி என்று பல கிளைமொழிகள் அவருக்குக் கைக்கட்டி சேவகம் புரிகின்றன. கூர்மையான பார்வையும், நுண்ணிய செவிப்புலமையும் இயைந்து, அலைவரிசையில் இயங்கும் பாங்கும் இச்சொல்லாட்சி லாவகத்தின் அடிப்படை.'' இதுவும் நிஜம்!
ஜெயகாந்தனின் படைப்புகளைப் படிக்கத் தொடங்குவதற்கு முன்பும், படித்து முடித்த பின்பும், இரண்டு முறை "ஜெயகாந்தனின் இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய சாசனங்கள்' என்கிற இந்தத் தொகுப்பைப் படிக்க வேண்டும். படிப்பதற்கு முன்னால், படிக்கும்போது ஜெயகாந்தன் என்கிற ஆளுமையின் மீது ஏற்படும் பிரமிப்பு, அவருடைய படைப்புகளைப் படித்த பிறகு, மீண்டும் படிக்கும்போது பன்மடங்கு அதிகரித்திருக்கும்! 

சுயமுன்னேற்றம், ஆளுமைத்திறன், தன்னம்பிக்கைக் கட்டுரைகள் ஆகியவை குறித்து எழுதப்படும் அளவுக்கு முதுமை குறித்து புத்தகங்களும், கட்டுரைகளும் அதிகம் வெளிவருவதில்லை என்பது வேதனைக்குரியது.
இந்தியாவில் ஏறத்தாழ எட்டு கோடிக்கும் அதிகமான முதியோர் இருக்கிறார்கள். அவர்களில் ஏறத்தாழ 40 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் மிகுந்த மன உளைச்சலுடன்தான் தத்தம் குடும்பங்களில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்குப் போதிய மரியாதையோ, கவனிப்போ இல்லாமல் இருந்தும்கூட, தங்களது வயோதிகம் கருதியும், தனித்தியங்க முடியாமை கருதியும், குழந்தைகள், பெயரக் குழந்தைகள் மீதான பாசத்தினாலும், தங்களுக்கு இழைக்கப்படும் அவமானங்களையும், புறக்கணிப்புகளையும் சகித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். 
"முதுமையே உன்னை ஆராதிக்கிறேன்' என்பது, 94 வயது வரை வாழ்ந்த வேதாத்ரி மகஷிரியால் "அருள் நிதி' என பட்டம் அளித்துப் போற்றப்பட்ட, அகவை 85 ஐ கடந்த எஸ்.சதானந்தம் என்பவரால் எழுதப்பட்டிருக்கும் புத்தகம். இந்தப் புத்தகம் முதியோரைப் பேணும்படி இளைஞர்களுக்கு அறிவுரை கூறுவதைத் தவிர்த்து, முதுமையை எப்படி எதிர்கொள்வது என்கிற வழிமுறைகளை முதியோருக்கு எடுத்துரைக்கிறது. வயோதிகத்தை இளமைப்படுத்தும் உடற்பயிற்சிகளில் தொடங்கி, வயோதிகத்தைத் தாங்கும் முத்திரைப் பயிற்சிகள், முதியோர் கடைப்பிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்கள் என்று முதுமையை வித்தியாசமாக அணுகியிருக்கிறது. 
முதுமையிலும் சாதனை படைத்த பலரை அடையாளம் காட்டி, அவர்களை முன்னுதாரணங்களாக சித்திரித்திருக்கிறார் எஸ்.சதானந்தம். உலகப் புகழ்பெற்ற ஓவியர் பிகாசோ தன் 90-ஆவது வயதில்தான் பிரபலமான ஓவியங்களை வரைந்தார்; பெட்ரான்ட் ரஸ்ùஸல், தாமஸ் ஹாப்ஸ் இருவரும் தங்களது 90-ஆவது வயதில்தான் தத்துவப் புத்தகங்களை எழுதித் தள்ளினார்கள்; உலக அதிசயமான ஈஃபில் கோபுரம் கட்டிய கஸ்டேவ் ஈஃபில், நாவலாசிரியர் சாமர்செட் மாம், நாடகாசிரியர் பெர்னாட்ஷா என 90 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கிய சாதனையாளர்களை அவர் பட்டியலிடும்போது, எஸ்.சதானந்தம் கூறுவதுபோல முதுமையை நிஜமாகவே ஆராதிக்கத் தோன்றுகிறது.

கடந்த வாரம் "முதியோர் இல்லம்' என்கிற தலைப்பில் வெளியான கவிதை, கவிஞர் நெல்லை ஜெயந்தாவின் "திணை மயக்கம்' என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற "கண்ணீர்த் தீவுகள்' என்கிற கவிதையிலுள்ள வரிகள் என்று தெரிவிக்கிறார் எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணன். நன்றி!

முன்பெல்லாம் நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது சாலையின் இருபுறங்களிலும் புளிய மரங்களும், மாமரங்களும், வேப்ப மரங்களும் தார்ச் சாலையில் வெயில் படாமல் நிழல் கொடுத்துக் கொண்டிருக்கும். இப்போது நான்குவழிச் சாலைகள், ஆறுவழிச் சாலைகள் என்று மாறிவிட்ட நிலையில், கண்ணுக்கெட்டிய தூரம் வரை பொட்டல் காடாகத்தான் இருக்கிறது. இருபுறங்களிலும் இருந்த மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டுவிட்டன. 
இதை, கவிஞர் செங்கவின் தனது "களையெடுப்பின் இசைக்குறிப்பு' என்கிற கவிதை நூலில், "வளர்ச்சியின் பெயரால்' என்கிற கவிதையில் அற்புதமாக வெளிப்படுத்துகிறார்.
நிறைமாத பிள்ளைத்தாய்ச்சியைக்
காவு கொடுப்பார்கள்
எனும் பழங்கதையை
நான் நம்பவேயில்லை
சூல்கொண்ட அப்பெருமரத்தை
அவர்கள் வெட்டிச் சாய்க்கும்
வரையிலும்...!
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/21/w600X390/tm4.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/apr/22/இந்த-வாரம்-கலாரசிகன்-2904808.html
2900436 வார இதழ்கள் தமிழ்மணி இந்த வார கலாரசிகன் DIN DIN Sunday, April 15, 2018 02:23 AM +0530 சிலருடைய மறைவு நமக்குள் வெறுமையை ஏற்படுத்திவிடுகிறது. நேற்று முன்தினம் இரவு காலமான முன்னாள் மேயரும் தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சா.கணேசனின் மறைவு, அப்படியொரு வெறுமையை எனக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் தூய்மையான பொதுவாழ்க்கையை விரும்புகிற அனைவருக்கும் ஏற்படுத்தி இருக்கிறது.
1980-களின் தொடக்கத்தில் எனக்கு அவர் முன்னாள் மேயராக அறிமுகமானார். தோளில் சிவப்பு சால்வையுடன் மிகவும் எளிமையாக சென்னை தி.நகர் பனகல் பார்க்கில் அவரை முதன்முதலில் சந்தித்தது இப்போதும் பசுமையாக நினைவிலிருக்கிறது. 1989-இல் அவர் தி.நகர் சட்டப்பேரவை உறுப்பினரானபோதும் சரி, அதற்குப் பிறகும் சரி, பழகும் அணுகுமுறையிலோ, வாழ்க்கை முறையிலோ எந்தவித மாற்றங்களும் இல்லாமல் தனது இறுதிக் காலம் வரை தூய்மையான அரசியலுக்கு எடுத்துக்காட்டாக அவரால் வாழ முடிந்தது என்பதுதான் சா.கணேசனின் தனிச்சிறப்பு.
அன்பு, பாசம், மரியாதை என்று எந்தவொரு உறவுக்குள்ளும் அடக்கிவிட முடியாத பரஸ்பர நெருக்கம் எங்கள் இருவருக்கிடையேயும் ஏறத்தாழ 40 ஆண்டுகள் தொடர்ந்தது. பெரியார், அண்ணாவின் திராவிடப் பாசறையில் இருந்து உருவானாலும்கூட சா.கணேசனின் செயல்பாடுகளும் அணுகுமுறையும் அண்ணல் காந்தியடிகளின் உண்மையான தொண்டர்களிடம் மட்டுமே காணப்படும் குணாதிசயங்களுடன் இருந்தது என்னை ஆச்சரியப்படுத்தியது. தி.மு.க.வில் இருந்த காந்தியவாதி அவர். பொதுவுடைமை சித்தாந்தத்தில் பற்று கொண்டிருந்ததால்தான் சிவப்பு சால்வையுடன் வலம் வந்தவர்.
வயோதிகம்தான் அவரை நம்மிடமிருந்து பிரித்தது என்றாலும்கூட, நல்ல நண்பராக, நல்ல ஆலோசகராக, நல்ல விமர்சகராக எனக்குத் துணைநின்ற ஒருவர் இனி இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள சற்று சிரமமாகத்தான் இருக்கிறது.
அரசியலில் நேர்மை, கொண்ட கொள்கையில் பிடிப்பு, பொதுவாழ்வில் தூய்மை என்றெல்லாம் நாம் படித்திருக்கிறோம். ஆனால், நேரில் வாழ்ந்து காட்டியவர் சென்னை மாநகரத்தின் முன்னாள் மேயர் சா.கணேசன். கடைசிவரை தான் தலைவனாக ஏற்றுக்கொண்ட, அண்ணாவின் "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்பதைத் தனது வாழ்வியல் கோட்பாடாக நடத்திக்காட்டிய அந்த மாமனிதர் குறித்து நான் பதிவு செய்வதன் மூலம் என் இதயத்தின் பாரத்தை சற்று இறக்கி வைக்கிறேன்.

கா. பாலமுருகன் எழுதிய "நெடுஞ்சாலை வாழ்க்கை' என்கிற புத்தகம் 2016 ஆகஸ்ட் மாதம் விமர்சனத்துக்கு வந்தபோதே அதைப் படிக்க வேண்டும் என்று நான் தனியாக எடுத்து வைத்துவிட்டேன். அதற்குக் காரணம், நெடுஞ்சாலை வாழ்க்கை குறித்து எனக்கும் கொஞ்சம் அனுபவம் இருக்கிறது என்பதுதான். கடந்த வாரம் தினமணி கல்விக் கண்காட்சியில் கலந்துகொள்ள ரயிலில் திருச்சி செல்லும்போதுதான் அந்தப் புத்தகத்தைப் படிக்க முடிந்தது.
நெடுஞ்சாலை வாழ்க்கை என்பது ஒருபுறம் சுவாரசியமானது, இன்னொருபுறம் ஆபத்தானது. நெடுஞ்சாலைகளில் மாநிலத்துக்கு மாநிலம் பலநூறு கிலோ மீட்டர்கள் சரக்குகளை ஏற்றிக்கொண்டு பயணிக்கும் வாகன ஓட்டிகளும், அவர்களின் உதவியாளர்களும் (க்ளீனர்கள்) எதிர்கொள்ளும் பிரச்னைகள் கொஞ்ச நஞ்சமல்ல. 
ஒருபுறம் வழிப்பறிக் கொள்ளையர்கள்; ஊருக்கு ஊர், மாவட்டத்துக்கு மாவட்டம், மாநிலத்துக்கு மாநிலம் மாமூல் வாங்க நெடுஞ்சாலையில் காத்திருக்கும் காவல் துறையினர்; எல்லாவற்றுக்கும் மேலாக ஆங்காங்கே விபத்தில் சிக்கினாலோ, வாகனங்கள் பழுதுபட்டாலோ வனாந்திரத்தில் தவிக்க வேண்டிய நிர்ப்பந்தம். இவற்றுக்கிடையேதான் சரக்கு வாகன ஓட்டிகளின் நெடுஞ்சாலைப் பயணங்கள் தொடர்கின்றன. 
கா.பாலமுருகன் கூறியிருப்பதுபோல, ""நம் நாட்டில் நெடுஞ்சாலையில் கொள்ளைகள் நடப்பது சகஜமான ஒன்றுதான். ஆனால், பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் கொள்ளை அடிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் கும்பல்களைத் தடுக்க முடியாத காரணம் என்ன என்பது போலீஸýக்கே வெளிச்சம்.''
"நெடுஞ்சாலை வாழ்க்கை' புத்தகத்தில் இந்தியாவின் முக்கியமான நெடுஞ்சாலைகளில் எல்லாம் சரக்கு வாகனங்களில் பயணித்து அந்த அனுபவங்களைப் புதினம் போல சுவாரசியமாகப் பதிவு செய்திருக்கிறார் கா.பாலமுருகன். ""சொகுசு பஸ்ஸின் இருக்கை, லாரியின் மரப்பலகை அளித்த அந்நியோன்யத்தை அளிக்கவில்லை'' என்கிற பாலமுருகனின் பதிவை நான் மிகவும் ரசித்தேன். புத்தகத்தை அந்த வரிகளுடன் அவர் முடித்திருந்தால் இன்னமும்கூட நன்றாக இருந்திருக்குமோ என்று எனக்குத் தோன்றுகிறது.
""உயிருக்கு எந்தவித உத்திரவாதமும் இல்லாமல், மொழி தெரியாமல், பிற மாநில நெடுஞ்சாலைகளில் அரை வயிற்றோடு இஞ்சின் மீது அமர்ந்திருக்கும் வெப்ப மனிதர்கள் மீது இருக்கும் வெறுப்பைக் களைவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம்'' என்கிறார் கா.பாலமுருகன். அவருடைய நோக்கம் நிச்சயமாக நிறைவேறி இருக்கிறது. 
தேனி மாவட்டம் வட புதுப்பட்டியைச் சேர்ந்த கா.பாலமுருகன் "தீம்தரிகிட', "கணையாழி' ஆகிய பத்திரிகைகளில் பணிபுரிந்து இப்போது மோட்டார் விகடன் இதழில் உதவிப் பொறுப்பாசிரியராக இருக்கிறார் என்று அவரது தன் விவரக்குறிப்பு தெரிவிக்கிறது. அவருடைய எழுத்து நடையும், நேர்த்தியாக சம்பவங்களை முத்துக்கள் கோத்ததுபோல எடுத்துச் செல்லும் உத்தியும், கவனிக்கப்பட வேண்டிய தமிழ் பத்திரிகையாளர்களில் இவரும் ஒருவர் என்பதைச் சொல்லாமல் சொல்கின்றன.
இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியையும், இந்தியாவின் எல்லா மாநில முதல்வர்கள், தலைமைச் செயலர்கள், காவல்துறை தலைவர்கள் ஆகியோரையும் படிக்க வைக்க வேண்டும். இது வெறும் நெடுஞ்சாலை வாழ்க்கை குறித்த புத்தகம் அல்ல. இந்திய அரசு நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து செய்யப்பட்டிருக்கும் நேரிடைப் பதிவும்கூட!

கிருஷ்ணகிரியில் இருந்து நமது வாசகர் ராஜசிம்மன் என்கிற ராஜகணேசன், "முதியோர் இல்லம்' என்கிற தலைப்பிலான ஒரு கவிதையை அனுப்பித் தந்திருக்கிறார். கடந்த வாரம் கூறியதுபோல, இதுபோன்ற நல்ல கவிதைகளை அனுப்பும்போது அது இன்னாருடைய கவிதை என்பதையும் குறிப்பிட்டு அனுப்பாமல் போவது அந்த எழுத்தாளருக்கு செய்யப்படும் அநீதி. 
இந்தக் கவிதைக்குச் சொந்தக்காரர் இன்னார் என்பதை அவர்கள் கவிதை வெளிவந்த கவிதைத் தொகுப்புடன் அனுப்பித் தந்தால் அதைப் பதிவு செய்து ஆறுதல் அடைவேன். அந்தக் கவிதை இதுதான்:
அது ஒரு மனிதக் காட்சி சாலை
பால் குடித்த மிருகங்கள் வந்து
பார்த்துவிட்டுப் போகின்றன!

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/15/w600X390/tm4.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/apr/15/இந்த-வார-கலாரசிகன்-2900436.html
2900432 வார இதழ்கள் தமிழ்மணி கவி பாடலாம் வாங்க - 20: பஃறொடை வெண்பாவும் கலி வெண்பாவும் "வாகீச கலாநிதி' கி.வா. ஜகந்நாதன் DIN Sunday, April 15, 2018 02:22 AM +0530 குறள் வெண்பா இரண்டு அடிகளாலும், சிந்தியல் வெண்பா மூன்று அடிகளாலும், நேரிசை இன்னிசை வெண்பாக்கள் நான்கு அடிகளாலும் வரும் என்று அறிந்தோம். நாலடிக்கு மேற்பட்டு வரும் வெண்பாக்களைப் பற்றி இனிப் பார்ப்போம்.

நான்கு அடிக்கு மேல் பன்னிரண்டு அடி வரைக்கும் வரும் வெண்பா பஃறொடை வெண்பாவாகும். இரண்டு அடிக்கு ஒரு தனிச்சொல் பெற்று வந்தாலும், அடிதோறும் தனிச்சொல் பெற்று வந்தாலும், தனிச்சொல்லே இன்றி வந்தாலும் வெண்டளை பிறழாமல் ஈற்றடி முச்சீராய், இறுதிச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் நான்கு வாய்பாடுகளில் ஒன்றுடையதாய் அமைய வேண்டும்.


"வையக மெல்லாங் கழனியா வையகத்துச்
செய்யகமே நாற்றிசையில் தேசங்கள் செய்யகத்து
வான்கரும்பே தொண்டை வளநாடு வான் கரும்பின்
சாறேயந் நாட்டுத் தலையூர்கள் சாறட்ட
கட்டியே கச்சிப் புறமெல்லாம் கட்டியுட்
டானேற்ற மாய சருக்கரை மாமணியே
ஆனேற்றான் கச்சியகம்'


இது ஏழடியினால் வந்த பஃறொடை வெண்பா. பன்னிரண்டு அடிக்கு மேல் வருவன கலிவெண்பா. முன்பெல்லாம் கலிப்பாவின் வகையான வெண் கலிப்பாவையே கலிவெண்பா என்று சொல்லி வந்தார்கள். வெண்டளையே வந்தாலும், அதோடு கலித்தளை விரவி வந்தாலும் வெண்கலிப்பா என்னும் பெயரால் வழங்கியது. பிற்காலத்தில் பல அடிகளால் வெண்டளை பிறழாது அமைந்த பாட்டையே கலிவெண்பா என்று சொல்லலானார்கள். கந்தர் கலிவெண்பா, திருவிளையாடற் போற்றிக் கலிவண்பா என்ற பிரபந்தங்கள் கலிவெண்பாவினால் அமைந்தவை. தூது, உலா, மடல் என்பவையும் கலி வெண்பாக்களால் அமைந்தவையே. பலபல உலாக்களும் தூதுகளும் தமிழில் உள்ளன.

கலிவெண்பாவில் இரண்டடிகளை ஒரு கண்ணி என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. ""மூதுலாக் கண்ணி தொறும்'' என்று குறிப்பிட்டிருப்பதைக் காண்க. கண்ணிகளைக் கொண்டு கணக்கிடும் வழக்கமும் உண்டாயிற்று. ஏழு கண்ணி முதல் எத்தனை கண்ணிகளாலும் கலிவெண்பா வரும். கண்ணி என்ற கணக்கு வந்துவிட்டபடியால் கலிவெண்பாவின் அடிகள் இரட்டைப் படையாகவே இருக்க வேண்டிய அவசியம் உண்டாயிற்று.


சங்க காலத்து நூலாகிய கலித்தொகையில் பல கலி வெண்பாக்கள் உள்ளன. அவற்றில் ஒற்றைப் படையான அடிகளை உடைய பாடல்களும் உண்டு. திருவாசகத்தில் முதலில் உள்ள சிவபுராணம் கலிவெண்பாவால் அமைந்தது. சேரமான் பெருமாள் நாயனார் இயற்றிய ஆதி உலா என்பதுதான் இப்போது தெரியும் உலாக்களில் பழையது. அது கண்ணிகளாகப் பிரித்துக் கணக்கிடும் வகையில் அமைந்திருக்கிறது.

வெண்பாவின் பொதுவிலக்கணம் யாவும் அமைந்து அடி மிகுதி ஒன்றே தனக்குரிய வேறுபாடாகக் கொண்டதனால் வெண்பாவைக் கலிப்பா வகையில் சேர்ப்பதை விட வெண்பா வகையில் சேர்ப்பதே பொருத்தமானது; கலித்தளை விரவிவரும் வெண்கலிப்பாவைக் கலிப்பா வகையில் சேர்க்கலாம்.

(தொடர்ந்து பாடுவோம்...)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/31/w600X390/tm1.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/apr/15/கவி-பாடலாம்-வாங்க---20-பஃறொடை-வெண்பாவும்-கலி-வெண்பாவும்-2900432.html
2900417 வார இதழ்கள் தமிழ்மணி சேம அச்சு - முகிலை இராசபாண்டியன் DIN Sunday, April 15, 2018 02:17 AM +0530 சேம அச்சு' என்னும் சொல்லை ஒளவையார் பயன்படுத்தியுள்ளார். இச்சொல் ஆங்கிலத்தில் "ஸ்டெப்னி' என்னும் சொல்லுக்கு இணையான சொல். மோட்டார் வாகனங்களில் உள்ள சக்கரம் பழுதாகிவிட்டால் அதனை உடனே மாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது ஸ்டெப்னி வீல் (Stepney Wheel). இதனைத் தமிழில் மாற்றுச் சக்கரம் என்று குறிப்பிடுகிறோம்.
1904-இல் ஸ்டெப்னி ஐயர்ன் மாங்கர்ஸ் (நற்ங்ல்ய்ங்ஹ் ஐழ்ர்ய் ஙர்ய்ஞ்ங்ழ்ள்) என்னும் நிறுவனம் முதன்முதலில் இந்த மாற்றுச் சக்கரத்தைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தியது. 
இந்நிறுவனத்தின் பெயரில் முதலில் இடம்பெற்றுள்ள ஸ்டெப்னி என்னும் சொல்லே இந்த மாற்றுச் சக்கரத்தின் பெயராக வழங்கி வருகிறது. ஸ்டெப்னி என்னும் சொல் ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த இந்தியா, பாகிஸ்தான் முதலான நாடுகளில்தான் பேச்சு வழக்கில் உள்ளது. பிற நாடுகளில் இதனை ஸ்பேர் டயர் (Spare Tyre) என்றுதான் குறிப்பிடுகிறார்கள். 
பேருந்து, சுமையுந்து (லாரி) முதலான பெரிய வாகனங்களின் அடிப்பாகத்தில் பொருத்தி வைத்திருப்பார்கள். எப்படி இருந்தாலும் இந்த மாற்றுச் சக்கரம் என்னும் ஸ்டெப்னி வீல் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் உலகத்திற்கு அறிமுகமாகி உள்ளது. ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே "சேம அச்சு' என்னும் சொல் தமிழ் நாட்டில் பழக்கத்தில் இருந்திருக்கிறது. அந்தச் சொல்லை ஒளவையார் பயன்படுத்தியுள்ளார்.

"எருதே இளைய நுகம் உணராவே
சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே
அவல் இழியினும் மிசை ஏறினும் 
அவண் அது அறியுநர் யார் என உமணர்
கீழ் மரத்து யாத்த சேம அச்சு அன்ன
இசை விளங்கு கவி கை நெடியோய் திங்கள்
நாள் நிறை மதியத்து அனையை இருள்
யாவணதோ நின் நிழல் வாழ்வோர்க்கே!' 
(புறநா-102)
அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டு எழினியின் வள்ளல் தன்மையைப் பாடும்பொழுது, ஒளவையார் இந்தச் "சேம அச்சு' பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 
தமிழ் நாட்டில் பழைமையான வணிகத்தில் ஒன்றாக உப்பு வணிகம் நடந்துள்ளது. உப்பினைத் தலையில் சுமந்தும் வண்டிகளில் ஏற்றியும் பல இடங்களுக்குக் கொண்டு சென்று விற்றுள்ளனர். 
உப்பு எடை மிகுந்தது. அதனை வண்டியில் ஏற்றிச் சென்றால் பாரம் முழுவதும் வண்டியின் அச்சில் இறங்கும். போகும் தூரமோ தொலைவானது. வண்டியில் பாரம் மிகுதியாக ஏற்றப்பட்டுள்ளது. வண்டியை இழுத்துச் செல்லும் காளையோ மிகவும் இளமையானது. அது நுகத்தில் மாட்டப்பட்டிருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் வேகமாக இழுத்துச் செல்லும் வேகம் கொண்டது. 
பயணம் செல்லும் சாலைகளோ மேடு-பள்ளம் நிறைந்தவை. அதில் போகும்போது வண்டியின் அச்சு ஒடிந்துவிட்டால் என்ன செய்வது என்று கவலைப்பட்ட உப்பு வணிகர்கள், வண்டியின் அடிமரத்தின் அருகில் இன்னொரு மாற்று அச்சினைப் பொருத்தி வைத்துள்ளார்கள். 
"வண்டியின் அச்சு ஒடிந்துவிட்டால் இந்தச் சேம அச்சு எவ்வாறு பயன்படுகிறதோ அதைப்போல, பொகுட்டு எழினி, பொருள் கேட்டு வருகிற இரவலர்கள் முதலில் பெற்றுச் சென்ற பொருள் தீர்ந்து போய்விட்டால் மீண்டும் மீண்டும் வந்து கேட்டு நின்றாலும் தனது கவிழ்ந்த கையை எடுக்காமல் வழங்கிக்கொண்டே இருக்கும் வள்ளல் தன்மை வாய்ந்தவன்' என்று ஒளவையார் புகழ்ந்துள்ளார். 
சேம அச்சு என்பது உவமையில் வரும் அளவிற்கு அந்தக் காலத்தில் பெரிதும் பயன்பாட்டில் இருந்துள்ள தன்மையையும், உப்பு வணிகம் சிறந்திருந்த தன்மையையும், போக்குவரத்து வசதி சிறப்பாக இருந்த தன்மையையும் இப்பாடல் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/15/w600X390/tm3.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/apr/15/சேம-அச்சு-2900417.html
2900407 வார இதழ்கள் தமிழ்மணி நூற்றாண்டு விழா கண்ட பேரறிஞர் திருக்குறள்வேள்! - இரா. இராஜசேகரன் DIN Sunday, April 15, 2018 02:15 AM +0530 திருக்குறள், திருமந்திரம், திருவாசகம் ஆகிய முப்பெரும் நூல்களுக்கு உரை கண்டவர் லால்குடி ஜி.வரதராஜன். "திருக்குறள்வேள்' என்று போற்றப்படும் இவர், லால்குடி கூகூரில், எல்.என்.குருநமசிவாயம் பிள்ளை- ருக்மணி அம்மாள் இணையருக்கு 19.1.1911-ஆம் ஆண்டு பிறந்தவர். 

வள்ளலார் கண்ட பிரஸ்தானத் திரயம்

""உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிய மூன்றும் "பிரஸ்தானத் திரயம்' என்று வேதாந்த உலகில் வழங்கப்பெறும். தமிழில், சைவத்தில் இதுபோன்ற அமைப்பு இல்லை. எனினும் வள்ளலார் ஓர் அமைப்பை ஏற்படுத்தியுள்ளார். திருக்குறள், திருமந்திரம், திருவாசகம் ஆகிய மூன்றையும் வள்ளலார் பிரஸ்தான நூல்களாக, பிரமாண நூல்களாக எடுத்துக் கொண்டுள்ளார். இம்மூன்று நூல்களுக்குமே உரைகண்ட பெருமைக்குரியவர், சிறப்புக்குரியவர் லால்குடி பெரியவர் குரு வரதராஜப்பிள்ளை அவர்கள்'' என்கிறார் ஊரன் அடிகள்.

நடுநிலை நின்று எழுதப்பட்ட திருக்குறள் உரை

திருக்குறளுக்குத்தான் நிரம்ப உரைகள் வந்துள்ளனவே? இந்த உரைக்கு அப்படி என்ன தனிச்சிறப்பு என்று கேட்கலாம். ""அச்சு வாகன சுகம் கண்ட இருபதாம் நூற்றாண்டில் நான் அறிந்தவரை ஒரு நூறு பேர் உரை எழுதிக் குவித்தனர். அவற்றில் பல வெற்றுக் காகிதக் குவியல்களாகவே நின்று தேய்ந்தன. சில, அறிஞர்களின் கேலிக்குரியனவாய் எழுதியவருக்குத் தலைக்குனிவைத் தந்தன. சில, கடவுள் மறுப்புக் கண்ணோட்டத்தோடு வலிந்து எழுதப்பட்டன. சிலர் அதிகாரங்களையே வேண்டியவாறு இடமாற்றம் செய்தனர். செல்வாக்கு மிக்க சிலர் தமக்குத் தோன்றியவாறு அதிகாரத்திற்கு கேலிக்குரிய புதிய தலைப்புகளைத் தந்து பலரின் வெறுப்புக்கு ஆளாயினர். சிலர், காமத்துப் பாலை முன்வைத்து அறத்தைப் பின்னுக்குத் தள்ளினர். வேறு சிலர், முதல் நான்கு இயல்கள் வள்ளுவர் பாடியனவே அன்று என்று சாதித்தனர். சமயவாதிகள் குறளைச் சமண நூலாகக் காட்ட முயன்றனர். சிலர் திருமால் நெறிவந்தவர் வள்ளுவர் என்று சாதிக்க முயன்றனர். சைவ சித்தாந்தமே குறளின் உள்ளீடு என்ற தர்க்க வாதத்தை முன்வைத்துப் பார்த்தனர். ஜி.வரதராஜப் பிள்ளை சிறந்த சைவ அறிஞரும் கூட. இருந்தும் மேற்குறித்த தன் விருப்பம் கலவாத சான்றாண்மையோடு நடுநிலை நின்று எழுதப்பெற்ற நான்கு அல்லது ஐந்து உரைகளில் ஒன்றாக அமரர் ஜி.வரதராஜப் பிள்ளை அவர்கள் உரை நிற்கிறது என்பதே இந்த உரையின் தலைமைப் பண்புக்கு ஒரு சான்றாகும்'' என்கிறார் முனைவர் இரா.செல்வகணபதி.

எளிமையும் தெளிவும் கொண்ட திருவாசக உரை

""திருக்குறளைப் போலவே திருவாசகத்திற்கும் நிரம்ப உரைகள் வந்துள்ளன. இவ்வுரைகளிலிருந்து ஜி.வரதராஜப் பிள்ளை அவர்களின் உரையை வேறுபடுத்திக் காட்டுவன அதில் காணப்படும் எளிமையும், தெளிவுமே ஆகும்'' என்கிறார் முனைவர் தெ.ஞானசுந்தரம்.

நூலறிவும், அனுபவமும் கலந்த திருமந்திர உரை

திருமந்திரத்துக்கு அதிகம் உரைகள் வரவில்லை. திருமந்திர உரை எழுத வெறும் படிப்பறிவு மட்டுமே போதாது. யோக அனுபவமும் வேண்டும். ஏனைய உரைகள் எல்லாம் சைவ சித்தாந்த அடிப்படையில் வெளிவந்தன. திருக்குறள்வேள் சைவ சித்தாந்திதான். அவர் சைவ சித்தாந்த அடிப்படையிலேயே உரை எழுதியிருக்கலாம். ஆனால், அவர் அப்படி எழுதவில்லை. 
பின் எப்படி எழுதினார்? ""உரையாசிரியர் பலர் தம் சொந்த அறிவை நம்பியும், தம்முடைய நூலறிவின் துணை கொண்டும் திருமந்திரத்துக்கு உரை காண முனைகிறார்கள். அனுபூதிமான்களுக்கே திருமந்திரத்தின் பொருளை உணர முடியும் என்று தெளிந்த நூலாசிரியர் ஜி.வரதராஜப் பிளளை அவர்கள் ஒரு புது முறையைக் கையாண்டிருக்கிறார்கள்; தம்முடைய ஆர்வத்தாலும், நிகரற்ற அடக்கத்தாலும் ஸ்வாபானுபவச் செல்வரும் சமய இலக்கியக் கடலுமான சிவயோகி மா.இரத்தின சபாபதி பிள்ளையவர்களின் பரிவையும், அருளையும் பெற்று, சிவயோகி கொடுத்த விளக்கத்தைக் கொண்டு, தம்முடைய திருமந்திர உரையை எழுதி முடித்திருக்கிறார்கள். ஆகவேதான் இவ்வாசிரியர் வெளியிட்டிருக்கும் திருமந்திர உரை தனிச்சிறப்போடு மிளர்கிறது. மற்ற சில உரைகளைப் படித்துவிட்டு இவ்வாசிரியர் எழுதிய உரையைப் படிக்கும்போது, இருட்டுக்குள்ளிருந்து வெளிச்சத்துக்கு வந்தது போன்ற தெளிவும், நன்றியுணர்வும் நமக்கு ஏற்படுகின்றன'' என்கிறார் நீதியரசர் எஸ். மகராஜன்.

நூல்கள் வெளியீடு

1954-இல் திருக்குறள் உரை விளக்கமும், 1971-இல் திருவாசகம் விரிவுரையும், 1971-இல் திருமந்திரம் முதல் மூன்று தந்திரங்கள், 1972-இல் திருமந்திரம் - 4,5,6 தந்திரங்கள், 1974-இல் திருமந்திரம் - 7,8,9 தந்திரங்கள் வெளியாயின. திருக்குறள்வேள் எழுதிய பிற நூல்கள்: சிவஞான போதம் உரை, திருமந்திர நெறி.
இத்துணை அரிய பெரிய உரைகளை எழுதியுள்ள இவர், தமிழில் முனைவர் பட்டம் பெற்றவரில்லை, பி.ஏ. பொருளாதாரம்தான் படித்தவர். பின் எப்படி இத்தனை நூல்கள் எழுதினார் என்றால், தேடல்தான். ஆம், வாழ்நாள் முழுதும் தேடலில் ஈடுபட்டவர். அ.நடேச முதலியார், ஆர்.பஞ்சநதம் பிள்ளை, முத்து சு.மாணிக்கவாசக முதலியார், சி.அருணைவடிவேல் முதலியார், சிவயோகி மா.இரத்தின சபாபதி பிள்ளை போன்ற சைவப் பேரறிஞர்களை வீட்டுக்கு வரவழைத்தும், தாமே நேரில் சென்றும் பன்னிரு திருமுறைகளையும், பதினான்கு சாத்திரங்களையும் கற்றார்.

"திருவள்ளுவர்' இதழ்

திருக்குறள்வேளின் பணிகள் நூல்கள் வெளியீட்டோடு நின்றுவிடவில்லை. திருக்குறளைப் பற்றி மட்டுமே கட்டுரைகள் வெளியிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் "திருவள்ளுவர்' என்ற மாத இதழை 1950-இல் வெளியிட்டு இரண்டாண்டுகள் நடத்தினார். பிறகு அது நின்று போய்விட்டது. அதுமட்டுமல்ல, திருச்சி மாவட்டத் திருக்குறள் கழகம் நிறுவி மாவட்டம் தோறும் திருக்குறள் பரவ ஏற்பாடு செய்தார்.

சைவ சித்தாந்த வளர்ச்சிப் பணிகள்

சைவ சித்தாந்த வளர்ச்சிக்கு திருக்குறள்வேள் செய்த பணிகள் மாணப்பெரியன. 1966-இல் திருச்சியில் சைவ சித்தாந்த மகா சமாஜ ஆண்டு விழாவைச் சிறப்பாக நடத்தினார். 1970-களில் பத்தாண்டுகள், லால்குடியில் ஆண்டுதோறும் 15 நாள் சைவ சித்தாந்த வகுப்புகள் நடத்தி வந்தார். தான் படித்த தேசியக் கல்லூரியில் சைவ சித்தாந்தத் துறை நிறுவ பத்தாயிரம் ரூபாயும், தன் நூலகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான சைவ நூல்களையும் வழங்கினார். 

திருக்குறள்வேளின் இக்கொடை இல்லாது போயிருந்தால், தேசியக் கல்லூரியில் சைவ சித்தாந்தமே பாடத்திட்டத்தில் வந்திருக்காது. மேலும், பெண்ணாகடத்தில் உள்ள மெய்கண்டார் கோயில் திருப்பணி செய்யவும், ஆண்டு முழுவதும் பூஜை நடத்தவும் இவர் பெருநிதி வழங்கினார்.

திருவானைக்கா அறங்காவலர் குழுத் தலைவராக ஐந்து ஐந்தாண்டுகள் பணியாற்றி, 5.7.1970 அன்று குடமுழுக்கு நடத்தினார். அதனையொட்டி "திருவானைக்கா புராணத்திற்கு' உரையும் எழுதி வெளியிட்டார்.

மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்

இத்துணை பணிகளைச் செய்தவர் ஆரம்ப காலத்தல் ஓர் அரசியல்வாதி (காங்கிரஸ்காரர்) என்று சொன்னால் வியப்பாக இருக்கும். காங்கிரஸ் பேரியக்கத்தில் இலக்கியவாதிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். பெருந்தலைவர் காமராஜரை இவர் தன் தலைவராக ஏற்றார். அவர் கட்டளைக்கேற்ப திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராகி, 1946 முதல் 1952 வரை பணியாற்றினார். நாட்டு விடுதலை இயக்கத்தில் பெரும்பங்கு கொண்ட திருக்குறள்வேள், 1945-இல் காந்தியடிகள் தென்னாட்டுக்குச் சுற்றுப்பயணம் செய்தபோது, லால்குடி புகைவண்டி நிலையத்தில் காந்தியடிகளைக் காணும் பேற்றினை அங்குள்ள மக்களுக்கு உருவாக்கித் தந்தார். 

கூட்டுறவு இயக்க வழிகாட்டி

தன் சொந்த வாழ்க்கையில் திருச்சி மாவட்ட கூட்டுறவு வங்கிச் செயலாளராக நாற்பது ஆண்டுகள் பணியாற்றினார். வங்கிப் பணியில் மிகச் சிறப்பாக ஒளிவீசி கூட்டுறவு இயக்கத்திற்கும், பணியாற்றிய வங்கிக்கும் மங்காப்புகழ் பெற்றுத் தந்தார். வங்கியில் பயன்படுத்தப்பட்டு வரும் ஆங்கிலச் சொற்கள் பலவற்றுக்குத் தக்க தமிழ் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டார்.

விருது

இவருடைய பணிகளைப் பாராட்டி தருமை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ 25-ஆவது குருமகா சந்நிதானம் 24.1.1960-இல் "திருக்குறள்வேள்' என்ற விருதினை வழங்கினார். லால்குடி பெரும்புலவர் ப.அரங்கசாமி "திருக்குறள்வேள் வரதராசன் தமிழ்விடு தூது' என்ற தனியொரு நூலே இயற்றியுள்ளார்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த திருக்குறள்வேள் 1976-ஆம் ஆண்டு, ஏப்ரல் 19-ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார். இவரது நூற்றாண்டு விழா 15.8.2011 -ஆம் ஆண்டு சென்னை, வீனஸ்காலனியில் உள்ள ஆஸ்திக சமாஜத்தில் சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பன்முக வித்தகரான திருக்குறள்வேள் ஜி.வரதராஜனை அனைவரும் நினைவுகூரவேண்டிய தருணம் இது.

ஏப்ரல் 19, "திருக்குறள்வேள்' ஜி.வரதராஜனின் நினைவு நாள்!

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/15/w600X390/tm2.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/apr/15/நூற்றாண்டு-விழா-கண்ட-பேரறிஞர்-திருக்குறள்வேள்-2900407.html
2900383 வார இதழ்கள் தமிழ்மணி பழமொழி நானூறு: முன்றுறையரையனார் Sunday, April 15, 2018 02:08 AM +0530 வெள்ளம் வருங்காலை ஈரம்பட் டஃதேபோல்
கள்ள முடையாரைக் கண்டே அறியலாம்
ஒள்ளமர் கண்ணாய்! ஒளிப்பினும் உள்ளம்
படர்ந்ததே கூறும், முகம். (பாடல்-41)
 

ஒளி பொருந்திய கண்ணை உடையாய்!  வெள்ளம் வருகின்ற காலத்தில் ஈரம் பொருந்திய மணலைப் போல,  வஞ்சனையான எண்ணம் உடையாரை,  மனத்தை முகங் காட்டுதலின் அதனைக்கொண்டே அறிந்து கொள்ளலாம்.  தங்கருத்தை வெளித்தோன்றாமல் ஒருவர் மறைப்பினும், முகமானது அவர் மனத்தில் உள்ளதையே வெளிப்படுக்குமாகலான். (க}து.)மறைப்பினும் உள்ளத்தில் உள்ளவாறே முகம்காட்டு மென்பதாம். "உள்ளம் படர்ந்ததே கூறும்முகம்' என்பது பழமொழி.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/24/w600X390/tm1.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/apr/15/பழமொழி-நானூறு-முன்றுறையரையனார்-2900383.html
2896096 வார இதழ்கள் தமிழ்மணி இந்த வார கலாரசிகன் DIN DIN Sunday, April 8, 2018 05:48 AM +0530 வெகுஜன ஊடகங்களில் அதிகம் கவனம் பெறாத எழுத்தாளர்களில் ஒருவர் மா. அரங்கநாதன். "ஊடகங்களின் கவனம் குறைவாக இருந்தாலும் மா. அரங்கநாதன் படைப்புகளின் மீது வாசகர்களின் கவனம் நிறையவே இருந்தது' என்பது அசோகமித்திரனின் பதிவு.
க.நா.சு., அசோகமித்திரன், நகுலன், கோணங்கி முதலியோர் மட்டுமல்லாமல், பிரபஞ்சன் உள்ளிட்ட இளைய தலைமுறை படைப்பாளிகளாலும் இவருடைய படைப்புகள் சிலாகிக்கப்படுகின்றன. புதுமைப்பித்தனின் நீட்சியாக எண்ணத்தக்கவை மா. அரங்கநாதனின் கதைகள் என்று கருதுவார் உண்டு.
"முன்றில்' என்கிற இலக்கியச் சிற்றிதழை நடத்தி வந்தவர் என்பது மட்டுமல்ல இவரது பெருமை. இவரது சிறுகதைத் தொகுப்புகளும், நாவல்களும், கட்டுரைகளும் மிகப்பெரிய சமுதாயக் கண்ணோட்டத்துடன் எழுதப்பட்டவை என்பதுதான் மா.அரங்கநாதனின் தனிச்சிறப்பு. 
"வீடுபேறு', "ஞானக்கூத்து', "காடன் மலை', "சிராப்பள்ளி', "முத்துக்கள் பத்து', "முத்துக் கறுப்பன் எண்பது' உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகள்; "பறலியாற்றுமாந்தர்', "காளியூட்டு' என்று இரண்டு நாவல்கள்; 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என்று இவருடைய படைப்புகள் அனைத்துமே படைப்புலகத்தின் கவனத்தை ஈர்த்தவை.
பழந்தமிழின் வீரியமும், நவீனத்துவமும் இயைந்த தனித்துவம் கொண்ட எழுத்து மா.அரங்கநாதனுடையது. அவரது நினைவையொட்டி இந்த ஆண்டு முதல், ஆண்டுதோறும் ஏப்ரல் 16-ஆம் தேதி மா.அரங்கநாதன் நினைவு இலக்கிய விருதுகள், "முன்றில்' இலக்கிய அமைப்பின் சார்பில் வழங்கப்பட இருக்கின்றன. நீதியரசர் அரங்க. மகாதேவன் தன் தந்தையாரின் நினைவைப் போற்றும் வகையில் இந்த விருதுகளை ஏற்படுத்தி இருக்கிறார்.
இலக்கியப் பங்களிப்புக்காக கவிஞர் ரவி சுப்பிரமணியத்துக்கும், ஆராய்ச்சி, கவின்கலை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றுக்காக எஸ். சண்முகத்துக்கும் இந்த ஆண்டுக்கான "மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள்' வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி, சென்னை மியூசிக் அகாதெமியில், மாலை 5.30 மணிக்கு வழங்கப்பட இருக்கின்றன. விருது பெறும் இருவருக்கும் வாழ்த்துகள்! இப்படியொரு விருதை ஏற்படுத்தி வழங்க முன்வந்திருக்கும் நீதியரசர் அரங்க.மகாதேவனுக்கு பாராட்டுகள்!

தலைநகர் சென்னையில் வாழாமல், தஞ்சையைத் தலைநகராக்கிக் கொண்டு தனக்கென ஓர் இலக்கிய சாம்ராஜ்ஜியத்தை அவரால் சிருஷ்டிக்க முடிந்திருக்கிறது என்பதும், அவருக்கென்று ஒரு வாசகர் வட்டத்தையும், நண்பர்கள் கூட்டத்தையும் பெறமுடிந்திருக்கிறது என்பதும் தஞ்சை ப்ரகாஷின் ஆளுமைக்கான அடையாளங்கள்.
தஞ்சை ப்ரகாஷின் படைப்புகளை ஜெயமோகன் போல "சரோஜா தேவி நாவல்களை வாசிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் ஆன்ம தைரியம் இல்லாதவர்களுக்குரிய பாவனை எழுத்துக்கள்' என்று நிராகரிப்பவர்களும் உண்டு. "தமிழில் எழுதிய எல்லாப் படைப்பாளர்களுக்கும் மேலான, உச்சபட்சப் படைப்பாளி' என்று சாரு நிவேதிதா போன்று பாராட்டுபவர்களும் உண்டு. ஒரு படைப்பாளி விமர்சிக்கவும் பாராட்டப்படவும் செய்கிறான் என்று சொன்னால், அவன் படைப்புகள் வீரியமான படைப்புகள் என்று பொருள். அந்த வகையில் தஞ்சை ப்ரகாஷின் படைப்புகளை 
நிராகரித்துவிட முடியாது. 
சமீபத்தில் நான் படித்த தஞ்சை ப்ரகாஷின் "மிஷன் தெரு' நாவலை எடுத்துக் கொண்டால், அதில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பகுதியில் வாழ்ந்த கிறிஸ்துவத்துக்கு மதம் மாறிய கள்ளர் இன மக்களின் அன்றைய வாழ்க்கை முறையைப் படம் பிடித்துக் காட்டும் சமூகக் கண்ணோட்டம் காணப்படுகிறது. ப்ரகாஷின் எல்லாப் படைப்புகளிலுமே பெண்களின் வாழ்க்கை, பெண்களின் மீதான அடக்கு முறை உள்ளிட்ட பல்வேறு பெண்ணியப் பார்வை மேலோங்கி நிற்கும் என்பது அனைவருக்குமே தெரியும். "மிஷன் தெரு'வும் அந்த வகையைச் சேர்ந்ததுதான். 
நான் சாதாரணமாக எந்தப் புத்தகத்தைப் படித்தாலும், அந்தப் புத்தகத்தை படித்த முடித்த பிறகுதான் முன்னுரை, அணிந்துரைகளைப் படிப்பது வழக்கம். அதேபோன்று, "மிஷன் தெரு' நாவலைப் படித்து முடித்த பிறகு அந்நாவலுக்கு, கவிஞரும், திரைப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை எழுதியிருந்த முன்னுரையைப் படித்தேன். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதற்கும் மேலாக, இந்தப் புத்தகம் குறித்த விமர்சனத்தை யாரும் முன்வைத்துவிட முடியாது என்பதால், அவரது பதிவையே நான் எனது மீள் பதிவாக முன்வைக்கிறேன்.
"பெண்ணின் அழகு துய்க்கப்படுவதும், அறிவு தண்டிக்கப்படுவதும்தான் உலக நியதி என்று வீடும், பள்ளிக்கூடமும், தேவாலயமும், தெருவும், ஊரும் எஸ்தரை மீண்டும் மீண்டும் ரணமாக்கி நிரூபிப்பதே மிஷன் தெரு. இதில் தஞ்சை ப்ரகாஷின் பங்களிப்பு, தன்னைத்தானே கேள்விக்குள்ளாக்கிக் கொள்ளும் பாத்திரமாக எஸ்தரை உருவாக்கியதுதான். அதிகாரத்தின் முன், நூறு நூறு ஆண்டுகளாகப் பெண்களை மண்டியிட வைக்கும் மிகச் சிக்கலான புள்ளியை ப்ரகாஷ் தொடுகிறார். பெண்ணைக் கொண்டே அதை விசாரணைக்கும் உட்படுத்துகிறார். 
ஒரு சாதாரண கள்ளர் சமூக கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்த அழகான எஸ்தர், கான்வென்ட்டில் படித்து மிகப்பெரிய சாதனை செய்யப் போகிறோம் என்று கனவுகளை வளர்த்துக் கொள்கிறார். பருவம் வந்ததும் தாய் மாமனுக்குத் திருமணம் செய்து கொடுக்கப்பட்டு, அவர் தன்னை முழுமையாக இழந்த கதை மட்டுமல்ல மிஷன் தெரு; தன்னைப் போலவே தன் மகள் ரூபியையும் அவள் அடிமைப்பட வைத்ததுதான் இந்தக் கதையின் மிகப்
பெரிய சோகம்'. 
நான் முன்பே சொன்னது போல தஞ்சை ப்ரகாஷ் மிக அதிகமாகப் பாராட்டப்படுபவர் அல்லது மிக மோசமாக விமர்சிக்கப்படுபவர். எப்படி இருந்தாலும் தமிழ் இலக்கிய ஆளுமைகளில் ஒருவராக வலம் வந்தவர்.

கட்செவி அஞ்சலில் சில நல்ல கவிதைகள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. ஆனால், அப்படிப் பகிர்ந்து கொள்ளப்படும் கவிதைகள் இன்னாருடையது என்பதைக் குறிப்பிடாமலேயே பகிர்ந்து கொள்ளப்படுவது மிகவும் வேதனைக்குரியது. நல்ல கவிதைகளைப் படிக்கும்போது, அதனால் ஈர்க்கப்பட்டு, ஆர்வம் மிகுதியால் அந்தக் கவிதையைப் பகிர்ந்து கொள்ளும் ரசிகர்கள், அது இன்னாரால் எழுதப்பட்ட கவிதை என்பதையும் தெரிந்துகொண்டோ, தேடிப் பிடித்தோ அவரது பெயருடன் பகிர்ந்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஒரு படைப்பாளிக்கு, பெயர் இல்லாமல் தன்னுடைய படைப்பு அநாதைப் படைப்பாக உலா வருவது எவ்வளவு வேதனை தரும் 
விஷயம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அப்படி, எனக்கு சமீபத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட "விதை' என்கிற தலைப்பில் வந்திருக்கும் கவிதை.

புள்ளினங்கள் 
எங்களை எச்சமிடுகின்றன!
நாங்கள் அவைகளுக்கு
உச்சம் தருகின்றோம்!

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/8/w600X390/tm4.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/apr/08/இந்த-வார-கலாரசிகன்-2896096.html
2896091 வார இதழ்கள் தமிழ்மணி சொல்லும் மலரும் -ஜோதிலட்சுமி DIN Sunday, April 8, 2018 05:47 AM +0530 கவிதையின் நோக்கம் உணர்வுகளுக்கும் கற்பனைக்கும் அழகான வடிவம் தருவதே. அதற்குத் துணை செய்வதை அணி என்கிறது இலக்கணம். எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐவகைகளாகப் பகுக்கப்பட்டுள்ள இலக்கணத்தில் அணி இலக்கணத்தை அழகுறச் சொல்லும் நூல், தண்டி கவி தந்த தண்டியலங்காரம். தண்டியலங்காரத்தை உரைதரு நூல் என்பர். அதாவது , இலக்கணத்தை இயற்றிய ஆசிரியரே அதற்கென உதாரணச் செய்யுளையும் இயற்றி உரையுடன் தருவது. தண்டி கவி இயற்றிய உதாரண செய்யுள்கள் பலவும் நேரிசை வெண்பாக்களாக அமைந்திருப்பதே அதன் தனிச்சிறப்பு.

"அவிழ்ந்தன தோன்றி அலர்ந்தன காயா
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை - மகிழ்ந்திதழ்
விண்டன கொன்றை விரிந்த கருவிளை
கொண்டன காந்தள் குலை'

"தோன்றி' மலர்கள் மலர்ந்தன. "காயா' செடிகள் மலர்ந்தன. அழகிய அரும்புகளை உடைய முல்லைப் பூக்கள் மலர்ந்தன. கொன்றை மலர்கள் குளிர்ச்சியுற்று அதன் இதழ்கள் மலர்ந்தன. கருவிளைகள் மலர்ந்தன. காந்தள் குலைகள் மலர்ந்தன.
பருவ காலம் வந்தவுடன் மலர்கள் மலர்கின்றன. மலர்தல் எனும் அழகைச் சொல்ல, அவிழ்ந்தன, அலர்ந்தன, நெகிழ்ந்தன, இதழ் விண்டன, விரிந்தன என்று அடுக்கடுக்காகப் பல சொற்களால் சொல்லி பல்வகையான மலர்களும் மொட்ட 
விழும் வண்ணமயமான அற்புதக் காட்சியைக் கண்முன் கொண்டுவந்து, மலர்வனத்திடையே நம்மை நிறுத்தி வசந்தத்தை உணரச் செய்கிறது இந்த நேரிசை வெண்பா. அடுத்தொரு நாலடியாரின் நேரிசை வெண்பா,

வைகலும் வைகல் வரக்கண்டும், அஃது உணரார்,
வைகலும், வைகலை வைகும் என்று இன்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்து உணராதார்'

ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நாள் புலர்வதன் மூலம், நம் வாழ்நாள் ஒவ்வொன்றாகக் குறைந்துகொண்டே வருகிறது என்பதை எண்ணாமல், நாள்தோறும் வாழ்நாள் வளர்ந்துகொண்டே வருகிறது என்றெண்ணி மகிழும் இயல்புடையவர்கள் அறியாமையினால் வாழ்வை இழப்பவர்கள் ஆவர். 
வைகல் என்பது நாள். ஒவ்வொரு நாளும் நம் வாழ்நாளை நகர்த்திக்கொண்டே இருக்கிறது எனும் நிலையாமை உண்மையையும் நாள்களின் ஓட்டத்தையும் இந்த ஒரே சொல்லை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் உணரச்செய்து நம் மனத்தில் தெளிவை ஏற்படுத்துகிறது இந்த வெண்பா. 
இப்படி, ஒரு சொல்லோ அல்லது பொருளோ மீண்டும் மீண்டும் வந்து அழகுறப் பொருளை விரியச் செய்வதை பின்வருநிலையணி என்பர்.

 

]]>
http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/apr/08/சொல்லும்-மலரும்-2896091.html
2896087 வார இதழ்கள் தமிழ்மணி புலமைக்கேற்ப பொருளை விரும்பும் பெருஞ்சித்திரனார்! -முனைவர் ந.செ.கி. சங்கீத்ராதா DIN Sunday, April 8, 2018 05:47 AM +0530 இன்றைய காலகட்டத்தில் யாரொருவர் செய்கின்ற வேலையும் அவரவரது தகுதிக்கேற்றவையா என்பது சற்று உற்று நோக்கத்தக்கது. தகுதிக்குரிய வேலையை ஒவ்வொரும் பெற்றால் எவ்வித சீர்கேடுமின்றி சமூகம் சீராகச் செல்லும் என்பதற்கு இச்சங்கத் தமிழ்ப் புலவரின் பாடலே நற்சான்றாகும்.
தம் சிந்தனையில் தோன்றிய கருத்துகளை சித்திரமாகப் பாடலில் வடித்தவர் பெருஞ்சித்திரனார் எனும் புலவர். அவர் தமது வறுமை நீங்க மன்னனைப் பார்த்துப் பாடி பரிசில் பெற விழைந்து, அதியமான் ஆண்ட தகடூரைச் சென்றடைந்தார். புலவர் சென்ற வேளையில் அதியமான முக்கியமான பணியில் இருந்ததால் அமைச்சரிடம், "புலவரை வரவேற்று உபசரித்து, பொன், பொருள் கொடுத்து அனுப்புக' என்றான்.
அமைச்சரும் அவ்வாறே செய்ய, இதனை அறிந்த புலவர், "மன்னனைக் கண்டு பரிசில் பெறக் குன்றும் மலையும் கடந்து வந்தேன். மன்னன் என்னை நேரில் காண விரும்பாது, எனது புலமையை அறியாது தரும் பரிசுப் பொருள்களை நான் ஏற்கமாட்டேன்' என்றார்.
இவ்விடத்தில், வேலை செய்யாமலேயே யாராவது ஊதியம் கொடுக்க மாட்டார்களா? என்று அலைபவர்கள், பெருஞ்சித்திரனார் தமது புலமை மேல் கொண்ட பெருமையையும், அப்பெருமையில் கொண்ட நெஞ்சுரத்தையும் எண்ணிப்பார்க்க வேண்டும். தமது புலமையை சோதிக்காமல் கொடுத்த பொருளை அவர் வாங்கினாரில்லை. "என்னைக் கண்டு முகமன் கூறி, என் கல்வித்தகுதி அறிந்து கொடுக்கும் பொருள் இதைவிட அளவில் மிகச் சிறியதென இருந்தாலும் அதுவே எனக்கு இனிமை தருவதாகும்' (புறம்.208) என்றார்.
பின்னர், வெளிமான் என்ற சிற்றரசன், வந்தோர்க்கெல்லாம் வாரிவழங்கும் வள்ளல் என்பதைப் புலவர் கேள்வியுற்று அவனைக் காணச் சென்றார். புலவர் சென்ற வேளையில் வெளிமான் இல்லை. அவனுடைய தம்பி இளவெளிமான் ஆட்சி புரிந்திருந்தான். வெளிமான் இறந்துபட்டான் என்பதைக் கேள்வியுற்ற புலவர் மிகவும் வருந்தினார். பின்னர் இளவெளிமானிடம் சென்று தமது வறுமையை எடுத்துரைத்தார். கொடைக்குணம் சிறிதும் இல்லாத இளவெளிமான், புலவரின் புலமை அறியாது ஏதோ சிறிது பொருளைக் கொடுத்தான். 
இதனைக் கண்ட புலவர் தனது நெஞ்சினை நோக்கி, "மனமே! வெளிமான் சிறந்த வள்ளல், புலவர்களுக்குக் கோடைகாலத்து நிழல் போன்றவன், பொய் அறியாதவன், கேள்விஞானம் கொண்டவன் எனக் கேள்வியுற்று அவனைக் காணும் வேட்கையில், பசியுடன் அவனது வாயிலை அடைந்தோம். ஆனால், சோற்றுப் பானையைத் திறந்து பார்த்தால் உள்ளே சோறு இல்லை; அனல் வீசுகிறது; வீரன் மாய்ந்துவிட்டான்; மலையில் திரியும் புலியின் குறியிலிருந்து யானை தப்பிவிட்டது. அதற்காக அப்புலியானது தன் பசிபோக்க எலியை அடித்து உண்ணாது' என தனது நிலைப்பாட்டை எடுத்துரைத்து, மேலும் இங்கிருந்து விரைந்து செல்வோம். கடலில் சென்று கலக்கும் ஆற்று நீரைப்போன்ற நிறைந்த செல்வத்தைப் பரிசிலாகக் கொண்டு வருவோம் மனமே உறுதிகொள்! (புறம்.237) என்றார். 
பின்னர், அங்கிருந்து புறப்பட்டு வள்ளலாகிய குமணன் தங்கியிருந்த முதிரமலை நோக்கிச் சென்றார். குமணன் முகமலர்ந்து வரவேற்று, புலவரின் தகுதியறிந்து உபசரித்தான். அவனது அன்பில் திளைத்த புலவர் குமணனை வாழ்த்தினார். பின் புலவருக்குப் பல பரிசுப் பொருள்களும் ஏராளமாக வழங்கி, அப்பரிசுப் பொருள்களையெல்லாம் யானைமேல் ஏற்றி அனுப்பிவைத்தான்.
இங்ஙனம் தம் மனை நோக்கி களிறுமேல் வந்த புலவருக்கு இடையில் இளவெளிமான் நினைவு வந்தது. அவனது செய்கை இவரது மனத்தை உறுத்தியது. தம்முடைய தகுதியையும் அதற்கேற்ப தான் பெற்ற பொருளையும் அவனுக்குக் காட்ட நினைத்து, யானையை அவனிருந்த நாடு நோக்கி செலுத்தினார். 
இளவெளிமான் அரண்மனை வாயிலை அடைந்து, யானையை வேண்டுமென்றே அங்கிருந்த கவண் மரத்தில் கட்டினார். (முரசு, கொடி போன்று கவண் மரமும் தூய்மையானதாக தெய்வத்தன்மை பொருந்தியதாகக் கருதப்படுவது) பின்னர், இளவெளிமானைப் பார்த்து, ""இரவலரை அளித்துக் காப்பவன் நீ ஒருவனே அல்லன். இரவலரைக் காப்பவர் இந்த உலகத்தில் இல்லாமற் போகவும் இல்லை. இரப்போர்க்கு உள்ள பெருந்தன்மையை என்னைப் பார்த்து அறிந்து கொள். அதேபோல் அவர் தகுதியும் திறமையும் அறிந்து கொடுக்கும் வள்ளல்கள் இவ்வுலகில் உள்ளனர் என்பதையும் நீ அறிந்து கொள். இங்கு உன்னுடைய கவண்மரம் வருந்துமாறு, கட்டியுள்ள களிறு நான் கொண்டுவந்த பரிசிலாகும், நான் வருகிறேன்'' என்று பெருமிதத்துடன் கூறிச் சென்றார்.
தமது தகுதிக்கேற்ற பொருளையும், புலமைக்கேற்ற மரியாதையையும் பெறுவதிலிருந்த உறுதிப்பாட்டினையும் தமிழ் தம்மைக் காக்கும் என்ற நெஞ்சுரத்தையும் சங்கத் தமிழ்ப் புலவர்கள் வாயிலாக அறிய முடிகின்றது.
தகுதிக்கு மீறியதும் வேண்டாம்; தகுதிக்குக் கீழானதும் வேண்டாம். தகுதிக்கேற்ற பொருளைப் பெறுவதே ஒருவனை ஆற்றுப்படுத்தும் என்பதை புறநானூற்றுப் பாடல் வாயிலாக எடுத்துரைத்த பெருஞ்சித்திரனார் இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஆகச் சிறந்த முன்னோடி ஆவார்.

"இரவலர் புரவலை நீயும் அல்லை
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்
இரவல உண்மையும் காண்இனி; இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண் இனி; நின் ஊர்க்
கடிமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த
நெடுநல் யானை எம் பரிசில்
கடுமான் தோன்றல்! செல்வல் யானே!' (புறம்.162) 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/8/w600X390/tm3.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/apr/08/புலமைக்கேற்ப-பொருளை-விரும்பும்-பெருஞ்சித்திரனார்-2896087.html
2896086 வார இதழ்கள் தமிழ்மணி கவி பாடலாம் வாங்க - 19: இன்னிசை வெண்பாவும் சிந்தியல் வெண்பாவும் - 2 "வாகீச கலாநிதி' கி.வா. ஜகந்நாதன் DIN Sunday, April 8, 2018 05:45 AM +0530 சிந்தியல் வெண்பா:

நேரிசை வெண்பாவைப் போலவும் இன்னிசை வெண்பாவைப் போலவும் மூன்று அடிகளால் வரும் வெண்பா, சிந்தியல் வெண்பாவாகும். சீரானாலும் அடியானாலும் மூன்றாக வந்தால் சிந்து என்ற அடையைப் பெறும். நான்கு அடி சரியான அளவு; மூன்று அடி சிந்து; இரண்டடி குறள். இவற்றை முன்பும் பார்த்தோம். இரண்டடியுள்ள வெண்பாவைக் குறள் வெண்பா என்பர். மூன்றடியுள்ள வெண்பாவைச் சிந்தியல் வெண்பா என்பர்.
நேரிசை வெண்பாவைப் போல இரண்டாம் அடியில் தனிச்சொல் வர, ஒரு விகற்பத்தாலோ இரண்டு விகற்பத்தாலோ வருவது நேரிசைச் சிந்தியல் வெண்பா.

பாடிப் படித்துப் பயின்று பொருள்தெளிந்து
நாடி யுணர்ந்தொழுகும் நல்லவரைத் - தேடியே
கூடி வணங்குமுல கு.

இது ஒரு விகற்பத்தால் வந்த நேரிசைச் சிந்தியல் வெண்பா.

படைக்கலம் ஏந்தாமற் பாரித்துப் போரை
நடத்தியவன் காந்தியெனும் நல்லான் - அடற்கெதிரே
ஆரேநின் றாற்றுகிற் பார்.

இது இரு விகற்பத்தால் வந்த நேரிசைச் சிந்தியல் வெண்பா.
தனிச்சொல் இன்றி ஒரு விகற்பத்தாலும் இரு விகற்பத்தாலும் பல விகற்பத்தாலும் வருவது இன்னிசைச் சிந்தியல் வெண்பா.

கண்ணன் அடியே கருதி வணங்குபவர்
எண்ணமெலாம் எண்ணியவா றீடேறும் என்பதனைத்
திண்ணமாய் நெஞ்சே தெளி.

இது ஒரு விகற்பத்தால் வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பா.

சொல்லிற்குள் ளேபொருளில் தோய்ந்துணர்வி லேயூறி
நல்லசுவை கண்டுவகை நாட்டமுடை யோர்பாவின்
இன்பமெலாம் காண்பர் இனிது.

இது இரு விகற்பத்தால் வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பா.

தெய்வந் தெளிந்தோர் சிறிதும் பிறர்க்கின்னல்
சூழாது நன்மைசெய்யும் தூயோர் அறமொன்றே
ஆற்றுவார் நல்லோர் அறி.

இது மூன்று விகற்பத்தால் வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பா. முதல் அடியில் தனிச்சொல் வந்தாலும் இன்னிசைச் சிந்தியல் வெண்பாவே ஆகும்.

(தொடர்ந்து பாடுவோம்...)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/3/w600X390/tm1.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/apr/08/கவி-பாடலாம்-வாங்க---19-இன்னிசை-வெண்பாவும்-சிந்தியல்-வெண்பாவும்---2-2896086.html
2896085 வார இதழ்கள் தமிழ்மணி இளங்கோவடிகளின் திருமாலியக் கோட்பாடு! -முனைவர் சீனிவாச கண்ணன் DIN Sunday, April 8, 2018 05:44 AM +0530 திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்டு அவர் மீது ஆழ்ந்த பக்தி கொண்டு, அவரைப் போற்றிப் பாராட்டுவது வைணவர் இயல்பு. அதில் வியப்பொன்றும் இல்லை. ஆனால், பெüத்தம், சமணம் ஆகிய இரு மதங்கள் பெரிதும் கொண்டாடப் பெற்ற காலச் சூழலில், இளங்கோவடிகள் (சமணத் துறவி) சிலப்பதிகாரத்தில் திருமாலியக் கோட்பாடுகளையும், திருமாலின் பெருமைகளையும் பெரிதும் பாராட்டியுள்ளதுதான் வியப்பு! 
30 காதைகளைக் கொண்ட சிலப்பதிகாரத்தில் 12 காதைகளில் இதிகாச புராணங்கள், பாகவதக் கதைகள் ஆகியவற்றை உள்ளடக்கி, திருமாலின் பெருமைகளை இளங்கோ வானளாவப் புகழ்ந்திருக்கிறார். புகார், மதுரை, வஞ்சி ஆகிய மூன்று காண்டங்களிலுமே திருமால் பற்றிய புராண, இதிகாச உண்மைகள் பல பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் சில:
புகார்க்காண்டம் அரங்கேற்று காதையில் மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களைப் பற்றி விளக்குகையில், நான்கு வகையான "திருமால் ஆடல்களைப்' பற்றிக் குறிக்கிறார். அவை: மாயவன் ஆடும் அல்லிக்கூத்து, குன்று எடுத்தோன் ஆடும் குடக்கூத்து, நெடியோன் ஆடும் மல்லாடல், திருமாலின் வல மார்பினில் உறைகின்ற திருமகள் ஆடிய பாவைக் கூத்து. இவற்றை கடலாடு காதையில், விரிவாக எழுதுகிறார்.
"மல்லன் மூதூர் மகிழ்விழாக் காண்போன் மாயோன் பாணியும்' (வரி-35 ) "கஞ்சன் வஞ்சம் கடத்தற்காக அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள் அல்லியத் தொகுதியும்' (46-49), "வாணன் பேர்ஊர் மறுகிடை நடந்து, நீள் நிலம் அளந்தோன் ஆடிய குடமும்' (54-55). மேலும், திருமகள் அவுணர்களைப் போரில் வென்று ஆடிய பாவைக் கூத்தினையும் மாதவி ஆடியதாக இளங்கோ குறிக்கிறார். 
இந்திரவிழவு ஊர் எடுத்த காதை: புகார் நகரில் அமைந்திருந்த பல்வேறு தெய்வீகக் கோயில்களை வரிசைப்படுத்தும் ஆசிரியர், "நீலமேனி நெடியோன் கோயிலும்' (வரி-172) என்று பெருமாள் கோயிலைச் சுட்டுகிறார். திருமால் எடுத்த அவதாரங்களுள், வாமனனாக வந்து, திரிவிக்ரமனாக விஸ்வரூபம் எடுத்த திருமாலின் மாயச் செயல்களை பல இடங்களில் குறிப்பிடுகிறார்.
வேனிற்காதையின் தொடக்கத்தில், தமிழ்நாட்டின் எல்லைகளைக் குறிக்கும் இளங்கோவடிகள், "நெடியோன் குன்றமும் தொடியோள் பெüவமும் தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல் நாட்டு' (வரி 1-2) என்று வடவேங்கடமலையை (திருமலை - திருப்பதி) "நெடியோன் குன்றம்' என்று வாமன - திரிவிக்கிரம அவதாரத்தை உள்ளடக்கியே வருணிக்கிறார்.
நாடுகாண் காதையில், ""ஆற்றுவீ அரங்கத்து வீற்று வீற்று ஆகி குரங்கமை உடுத்த மரம் பயில் அடுக்கத்து வானவர் உறையும் பூநாறு ஒரு சிறை' (வரி 156-158) என்று "மலர்களால் மூடப்பெற்ற காவிரி ஆறு இரண்டாகப் பிரிந்து இடையில் உள்ள அரங்கம்' என்று திருவரங்கத்தினை விவரிக்கிறார். 
"வளைந்த மூங்கில் முள்ளால் சூழ்ந்த மரங்கள் செறிந்த சோலைகள் நிறைந்த திருவரங்கம்' என்று வருணிக்குமிடத்து, இன்றைய திருவரங்கத்தினை விஞ்சக்கூடிய அளவில் இருந்த சூழலை நம் கண்முன் கொண்டு வந்து காட்டுகிறார். 
மதுரைக் காண்டம்: புறஞ்சேரி இறுத்த காதையில் கோவலன் பிரிவால் பூம்புகார் நகரமே களையிழந்துவிட்டது என்று குறிக்கும்போது, "அருந்திறல் பிரிந்த அயோத்தி போல பெரும் பெயர் மூதூர் பெரும்பேது உற்றதும்' (65-66) என்று இராமாயணக் கதைக் குறிப்பை இணைத்துள்ள பாங்கு மிகவும் சிறப்பு.
ஊர்காண் காதையில், கூடல் மாநகரில் அமைந்துள்ள கோயில்களைக் கூறுமிடத்து, "உவணச் சேவல் உயர்ந்தோன் நியமமும் மேழிவலன் உயர்த்த வெள்ளை நகரமும்' (8-9) என்று கருடச் சேவலை கொடியாக உயர்த்திய பெருமாள் கோயில்; வெற்றி தரும் கலப்பையினைப் படையாக உயர்த்திய பலராமனின் கோயில் என்று திருமாலின் இரண்டு அவதாரப் புருஷர்களையும் ஒருசேர நினைவுகூர்கிறார்.
கோவலன், கண்ணகி இருவரிடமும் ஆறுதலாக வார்த்தையாடும் (46-50) கவுந்தியடிகளின் மூலம், இராமபிரானின் வாழ்க்கைக் குறிப்பைச் சுட்டுவதோடு, பிரமனை தன் நாபிக் கமலத்தில் வைத்திருக்கும் திருமால் என்கிற திருமாலியக் கோட்பாட்டினையும் ஏற்றுக் கொண்டவராக இளங்கோவடிகளைக் காணமுடிகிறது. 
ஆய்ச்சியர் குரவையில் "வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி - கடல் வண்ணன்' (முன்னிலைப்பரவல்) எனும் பாடல் அடிகளில் கூர்மபுராணம், பாகவதக் கதைகள், விஷ்ணுபுராணம், திருமாலியக் கோட்பாடுகள், திருமாலின் பல்வேறு அவதாரங்கள் இடம்பெற்றுள்ளன.
வஞ்சிக்காண்டம்: காட்சிக் காதையில், திருமாலின் மார்பில் நீண்டு தொங்குகின்ற மாலை போல பேரியாறு ஓடியது (17-22) என்கிறார். இவ்வாறு, சிலப்பதிகாரத்தில் ஏராளமான இடங்களில், சமணத் துறவியான இளங்கோவடிகள் வைணவர்களின் திருமாலியக் கோட்பாட்டைப் போற்றியிருப்பது வியப்பினும் வியப்பன்றோ!

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/8/w600X390/shrilordperumal.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/apr/08/இளங்கோவடிகளின்-திருமாலியக்-கோட்பாடு-2896085.html
2896084 வார இதழ்கள் தமிழ்மணி பழமொழி நானூறு: முன்றுறையரையனார் Sunday, April 8, 2018 05:40 AM +0530 பயனோக்கா தாற்றவும் பார்த்தறிவொன் றின்றி
இசைநோக்கி ஈகின்றா ரீகை - வயமாப்போல்
ஆலித்துப் பாயும் அலைகடல் தண் சேர்ப்ப
கூலிக்குச் செய்துண்ணு மாறு. (பாடல்-40)

வெற்றியையுடைய குதிரையைப்போல் ஒலித்துத் தாவிச் செல்லும் அலைகடலையுடைய குளிர்ந்த நீர் நாடனே! மறுமையில் வரும் பயனை நோக்குதலின்றி, மிகவும் பகுத்தறியும் அறிவு என்பது ஒன்று இல்லாதவராகி, புகழொன்றனையே நோக்கி, கொடுக்கின்றவர்களது ஈகை, கூலிக்குத் தொழில் செய்து உண்ணும் நெறியோ டொக்கும். (க-து.) புகழொன்றனையே நோக்கிக் கொள்வோர் நிலையறியாது கொடுக்கும் கொடை சிறந்ததன்றாம். "கூலிக்குச் செய்துண்ணுமாறு' என்பது பழமொழி.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/10/w600X390/tm1.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/apr/08/பழமொழி-நானூறு-முன்றுறையரையனார்-2896084.html
2891084 வார இதழ்கள் தமிழ்மணி ஏமாற்றியவனுக்கு தண்டனை!   DIN DIN Sunday, April 1, 2018 12:25 AM +0530 தலைவன் ஒருவன், தன் தலைவியைக் கைவிட்டு கூடாவொழுக்கத்தால், பரத்தையை நாடினான். அதனால், தலைவி அவன்மீது ஊடல் கொண்டிருந்தாள். ஊரிலுள்ளோர் தலைவன் இல்லாமல் வாழ்ந்த தலைவியைப் பழிச்சொல்லால் தூற்றினர். இதனை அறிந்த தலைவன், மீண்டும் தலைவியை நாடி வருகிறான். அப்பொழுது தலைவியின் தோழி, "தலைவன் உறவை வேண்டாம்' எனக் கூறி பின்வருமாறு மறுத்துரைக்கிறாள். மருதத்திணையில் அமைந்த இப்பாடலை இயற்றியவர் மதுரைத் தமிழ்க் கூத்தனார்கடுவன் மள்ளனார்.
 
 "பிணங்குஅரில் வள்ளை நீடுஇலைப் பொதும்பில்
 மடிதுயில் முனைஇய வள்உகிர் யாமை
 ......... ......... .........
 ......... ......... .........
 தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனிக்
 கரும்பமல் படப்பைப் பெரும்பெயர்க் கள்ளூர்த்
 திருநுதற் குறுமகள் அணிநலம் வவ்விய
 அறனி லாளன் "அறியேன்' என்ற
 திறன்இல் வெஞ்சூள் அறிகரி கடாஅய்,
 முறிஆர் பெருங்கிளை செறியப் பற்றி
 நீறு தலைப்பெய்த ஞான்றை;
 வீறுசால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே!'
 (அகநா.256, வரி: 1-20)
 
 "வலிமையான நகத்தையுடைய ஆமையானது, வள்ளிக் கொடிகளால் பின்னிக் கிடக்கும் பகுதியில் இருப்பதை விடுத்து, ஒலி செய்யும் பரற்கற்களின் வழியாகச் சென்றது. அகன்ற நீர்த்துறைக்கு அருகில் பனங்கள்ளினை குடிப்பவர் சிந்திய கள்ளினைக் குடித்துவிட்டு மயங்கி, பெரிய வயல்களை உழப்பிக்கொண்டு சென்றது. அத்தகைய தன்மையுடைய ஊரினை உடையவனே! என்னிடம் பொய் கூறாதே. உன் வஞ்சனையான செய்கையை நான் அறிவேன். இந்த ஊரும் அறியும். நீ செய்த மாயச் செயல்கள் எனக்குத் தெளிவாகத் தெரியும். நேற்று புதுப்புனலில் பரத்தையுடன் நீர் விளையாட்டில் ஈடுபட்டு மகிழ்ந்திருந்தாய். அதனைப் பரத்தையின் தோழிமார் மறைக்க முயன்றும் ஊருக்குள் வெளிப்பட்டுப் பழியாகிவிட்டது.
 புகழ் நிறைந்த கள்ளூரிலே அழகிய நெற்றியையுடைய ஒரு பெண்ணின் நலத்தினை களவிலே ஒருவன் அனுபவித்தான். பின் அப்பெண்ணைக் கைவிட்டான். நியாயமில்லாத தன்மையுடையவனாகிய அவன், "இவளை நான் பார்த்ததில்லை' எனக் கூறி சான்றோர் முன் பொய் சத்தியம் செய்தான். சான்றோர் ஆராய்ந்து அவன் பொய்த்தனத்தை உணர்ந்தனர். தளிர்கள் நிறைந்த பெரிய மரத்தின் மூன்று கிளைகள் இணையும் இடத்தில் அவனைக் கட்டி வைத்து, அவன் தலைமீது சுண்ணாம்பைக் கொட்டி தண்டித்தனர். அவன் மானம் கெட்டுப் பழியடைந்தான். அப்போது அங்கு கூடியிருந்தோர் அவனை இகழ்ந்து பேரொலி செய்தனர். இப்போது உன்னைப் பற்றி இவ்வூரில் எழுந்த பழிச்சொல் ஆரவாரம் அந்தப் பேரொலியைவிடப் பெரியதாகும்' என்றாள்.
 நியாயமற்றவன் செய்கை போல் தலைவன் செய்கையும் அமைந்ததால், தோழியானவள் அவனுக்குக் கிடைத்த தண்டனையை எடுத்துக் கூறி எச்சரிப்பதை இப்பாடல் வழி உணரலாம். பெண்களை ஏமாற்றியவர்களுக்கு சங்க காலத்திலேயே கடும் தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இன்றைக்கு...?
 
 - முனைவர் கி. இராம்கணேஷ்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/1/w600X390/tm2.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/apr/01/ஏமாற்றியவனுக்கு-தண்டனை-2891084.html
2891078 வார இதழ்கள் தமிழ்மணி நீர் நிலை பெருகத் தட்டோர்... DIN DIN Sunday, April 1, 2018 12:24 AM +0530 சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானுற்றில் குடபுலவியனார் என்ற புலவர் பாடிய "முழங்கு முந்நீர்' எனத் தொடங்கும் பாடல் ஈண்டு எண்ணற்குரியது. அப்பாடலில், பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்கு அவர் கூறும் அறிவுரைகள், இன்றைய ஆட்சியாளர்களுக்கும் ஏற்புடையதாக அமைந்துள்ளன.
 தன்னையொத்த வேந்தர்களைப் போரில் வென்று ஒப்புயர்வற்றவனாக விளங்க விரும்பினாலும், இவ்வுலகத்தில் புகழை நிலைநிறுத்த வேண்டினாலும் அவற்றிற்கான தகுதிப்பாடு யாது என்பதை எடுத்துரைக்கிறார் புலவர். அவற்றிற்கான ஒரே வழி நீர்வளம் பெருக்குதலே ஆகும் என்கிறார்.
 "நீரின்றி அமையாது உலகு'' என்றார் திருவள்ளுவர். ""நீரின் றமையா யாக்கை'' என்கிறார் குடபுலவியனார். நீரின் இன்றியமையாமை உலகத்து மனிதர்கள் ஒவ்வொருவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், தமிழ்நாட்டில் இன்று நடப்பதென்ன? மரங்களை வரம்பின்றி அழித்து வருவதால் வான்மழை பொய்த்து வருகின்றது. கண்மாய்கள் காணாமல் போகின்றன. ஏரிகள் கட்டிடங்களாகி வருகின்றன. ஓடைகள் எங்கோ ஒடி ஒளிந்தன, ஆறுகள் மெலிந்துவிட்டன.
 
 "காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
 கண்டதோர் வையை பொருநை நதி - என
 மேவிய ஆறு பல ஓடத் - திரு
 மேனி செழித்த தமிழ்நாடு''
 
 என்ற மகாகவி பாரதி கூற்றுக்கேற்ப மேனி செழித்திருந்த தமிழ்நாடு இன்று மேனி மெலிந்துவிட்டது. ""வான் பொய்ப்பினும் தான் பொய்யாத காவிரி'' எங்கே?, ""வையை என்னும் பொய்யாக் குலக்கொடி'' எங்கே?, ஆறுகளில் இன்று புனலும் இல்லை; மணலும் இல்லை; இந்த அவலம் நீங்குவதற்கான ஒரே வழி நீர்நிலைகளை உருவாக்கி, நீர்வளம் பெருகச் செய்தலே ஆகும் என்னும் இந்த உயர்ந்த கருத்தினை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே புலவர் குடபுலவியனார் மன்னனுக்கு எடுத்துரைத்துள்ளார்.
 
 "அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே
 நிலனெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
 தட்டோ ரம்ம இவண்தட் டோரே
 தள்ளா தோரிவண் தள்ள தோரே''
 
 நிலம் குழிந்த இடத்தே நீர்நிலை மிகும்படி தளைத்தோர் தம் பெயரைத் தளைத்தோராவர். அதாவது, தம் பெயரையும் புகழையும் நிலை நிறுத்தியோராவர். அந்நீரைத் தளையாதவர் தம் பெயரைத் தளையாதோர் ஆவர்
 என்கிறார்.
 "நிலனெளி மருங்கில் நெடிய நீண்ட கரையெடுத்து நீரைத் தேக்கி வேண்டுமளவிற் பயன்படுமாறு கட்டி வைத்தலைத் தளைத்தல் என்கிறார்'' என்று ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை தரும் விளக்கம் இங்கு எண்ணத்
 தக்கது.
 நாம் உயிரோடு வாழ்வதற்கு ஓர் அர்த்தம் வேண்டும். நிலம் குழிந்த இடத்தில் நீர்வளம் பெருக வழிவகை செய்வோர் வாழ்க்கை அர்த்தமுள்ளது; அழகானது. இன்று எங்கும் விவசாயிகளின் வேதனைக் குரல்கள்தான் ஒலிக்கின்றது. "உழவினார் கம்மடங்கின் விழைவதூம் விட்டேம் என்பார்க்கும்'' வாழ்க்கை இல்லை. இதனை உணர்ந்தால் வாழ்வோம், இன்றேல்...?
 
 - முனைவர் பா. நாகலட்சுமி
 
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/1/w600X390/CAUVERY.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/apr/01/நீர்-நிலை-பெருகத்-தட்டோர்-2891078.html
2891072 வார இதழ்கள் தமிழ்மணி பழமொழி நானூறு  முன்றுறையரையனார் Sunday, April 1, 2018 12:00 AM +0530 சொல்லாமல் விலக வேண்டும்
 நாட்டிக் கொளப்பட்டார் நன்மை இலராயின்
 காட்டிக் களைது மெனவேண்டா - ஓட்டி
 இடம்பட்ட கண்ணாய்! இறக்குமை யாட்டை
 உடம்படுத்து வெüவுண்டா ரில். (பாடல்-39)
 குழையை அலைத்து (விளங்கும்) அகன்ற கண்களை உடையாய்! இறக்கும் நிலையிலுள்ள காராட்டை, உடன்பாடு பெறச்செய்து, அதன் சம்மதத்தின்பேரில் குருதி கொண்டார் உலகத்திலில்லை. (ஆகையால்), தம்மாலே தங்காரியத்தின் பொருட்டு நாட்டிக் கொள்ளப்பட்டவர்கள், நன்மையைச் செய்தல் இலராயின், அவரிடத்து அதனை எடுத்துக்காட்டி, அவர் உடன்பாடு பெற்றுச் செயலினின்றும் நீக்குவோம் என்று நினைக்க வேண்டா. "உடம்படுத்து வெüவுண்டா ரில்' என்பது பழமொழி.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/31/w600X390/lotus.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/apr/01/பழமொழி-நானூறு-2891072.html
2891073 வார இதழ்கள் தமிழ்மணி  இன்னிசை வெண்பாவும் சிந்தியல் வெண்பாவும்-1  "வாகீச கலாநிதி' கி.வா. ஜகந்நாதன் DIN Sunday, April 1, 2018 12:00 AM +0530 கவி பாடலாம் வாங்க - 18
நேரிசை வெண்பாவின் இலக்கணத்தைத் தெரிந்து கொண்டவர்களுக்கு இன்னிசை வெண்பாவின் இலக்கணம் தெரிந்து கொள்வது மிக எளிது. நான்கு அடிகளை உடைய வெண்பாக்களில் நேரிசை வெண்பாக்கள் அல்லாதன இன்னிசை வெண்பாக்களாம். இன்னிசை வெண்பாக்களில் வெண்பாவுக்குரிய பொது இலக்கணம் அமைந்திருக்க வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது.
 1. வெண்டளையே வருதல், 2. ஈற்றடி முச்சீரால் வருதல், 3. ஈற்றுச் சீர் காசு, பிறப்பு, நாள், மலர் என்ற வாய்பாட்டில் அமைதல் என்ற மூன்று அடிப்படையான இலக்கணங்கள் இன்னிசை வெண்பாவிலும் அமைய வேண்டும்.
 நேரிசை வெண்பாவில் இரண்டாவது அடியின் நான்காஞ் சீர் தனிச் சொல்லாக இருக்கும்; பாட்டு முழுவதும் ஓரெதுகையாகவேனும், முன் இரண்டடி ஓரெதுகை பின்னிரண்டடி மற்றோர் எதுகையாக இரண்டெதுகையாகவேனும் வரும். இந்த இலக்கணங்களில் எது வேறுபட்டாலும் அது இன்னிசை வெண்பா ஆகிவிடும். அப்படி வரும் இன்னிசை வெண்பாக்களை ஒருவாறு பின்கண்ட வண்ணம் வகுக்கலாம்.
 
 1. தனிச்சொல் இல்லாமல் ஓரெதுகையால் வருதல்.
 
 வண்ணத்தைத் தேடி மலியத் தொகுத்துவைத்துக்
 கிண்ணத்தி லூற்றிக் கிழியெடுத்துத் தூரிகையை
 நண்ணவைத்துத் தீட்டும் நயமில்லா ஓவியனே
 எண்ணமெங்கே வைத்தாய் இசை.
 
 இது ஒரு விகற்ப இன்னிசை வெண்பா. இந்தப் பாடலில் இரண்டாம் அடி இறுதியில் தனிச்சொல் வந்திருந்தால் அது ஒரு விகற்ப நேரிசை வெண்பா ஆகும்.
 2. தனிச் சொல்லே இன்றி இரண்டு, மூன்று, நான்கு விகற்பங்களால் வருதல்.
 
 தெள்ளுதமிழ் நூலுள் திருவள் ளுவர்தந்த
 ஒள்ளியநூ லாங்குறள்போல் உள்ளதுவேறுண்டோசொல்
 வையம் புகழ்ந்து மதிக்கும் கருத்துடைத்தால்
 செய்யதமிழ்ப் பாவும் சிறந்து.
 
 இது இரண்டு விகற்பத்தால் வந்தது.
 
 அருணகிரி நாதர் அயில்வேல் முருகன்
 தருணஇளந் தாமரைத்தாள் சார்ந்தின்பம் பெற்றதனை
 வண்ணத் திருப்புகழால் வாய்மலர்ந்தார் இவ்வுலகில்
 பாடிமகிழ் வுற்றார் பலர்.
 
 இந்த வெண்பா முன் இரண்டடியும் ஓரெதுகையாய், பின் இரண்டடியும் தனித்தனி எதுகையாய் வந்தமையின் மூன்று விகற்பமுடைய இன்னிசை வெண்பா ஆயிற்று.
 
 கன்னிக் குமரி கவின்சேரும் தென்னெல்லை
 வேங்கடமாம் குன்றம் விளங்கும் வடவெல்லை
 இவ்விரண்டி னூடே எழில்பெறவே ஓங்குதமிழ்
 சான்றோர் வழிபட்ட தாய்.
 
 இந்த இன்னிசை வெண்பா, நான்கு அடிகளும் வெவ்வேறு எதுகையாக வந்தமையின் நான்கு விகற்பம் உடையதாயிற்று. இங்கே காட்டிய மூன்றும் பலவிகற்பத்தால் வந்த இன்னிசை வெண்பா.
 
 3. தனிச்சொல் இரண்டாம் அடியிலன்றி மற்ற அடிகளில் வருதல்.
 
 குன்றம் கவினும் குறிஞ்சியிலே - நின்றபிரான்
 வென்றி வடிவேற்கை வீரன் மயிலேறும்
 அண்ணல் முருகன் அவனடியே தஞ்சமென
 நண்ணுவார்க் கெய்தும் நலம்.
 
 இதில் முதலடியில் தனிச்சொல் வந்தது.
 
 கொல்லிமலை வேளுக் குறிச்சியிலே கோழியினை
 மெல்லத் துடையிடுக்கி வேட்டுவக்கோ லங்கொண்டு
 வல்ல முருகன் வருமெழிலை - நல்லபடி
 பார்த்தார் உளம்போம் பறி.
 
 இதில் மூன்றாம் அடியில் தனிச்சொல் வந்தது.
 
 மழையின்றி மாநிலர்த்தார்க் கில்லை மழையும்
 தவமிலா ரில்வழி இல்லைத் - தவமும்
 அரசிலா ரில்வழி யில்லை - அரசனும்
 இவ்வாழ்வா ரில்வழி இல்.
 
 இதில் அடிதோறும் தனிச்சொல் வந்தது.
 
 4. இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்று மூன்று விகற்பத்தாலும் நான்கு விகற்பத்தாலும் வருதல்.
 
 காவிரிசூழ் மோகைநகர்க் காந்தமலை மேயபிரான்
 பூவிரிதாள் போற்றுகின்ற புண்ணியர்க்கு - நாவிரியும்
 பலபுகழும் நீளும் பரந்த பொருளடையும்
 ஏற்றமன்றித் துன்பம் இலை.
 
 இது இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்று, மூன்று விகற்பத்தால் வந்த இன்னிசை வெண்பா.
 
 நல்லன வெல்லாம் நனிசெய்வோம் என்றிருத்தல்
 பூவில் இயலும் பொருளன்றே - ஆவதனால்
 நாஞ்செய்த யாவையுமே நல்லனவென் றாக
 ஒழுகினால் மேன்மை யுறும்.
 
 இது இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்று நான்கு விகற்பத்தால் வந்த இன்னிசை வெண்பா.
 வெண்பாவின் பொது இலக்கணங்கள் அமைந்து நேரிசை வெண்பாவுக்கு வேறுபட்டு நிற்கும் நாலடியுள்ள எல்லா வெண்பாக்களும் இன்னிசை வெண்பாக்கள் ஆம். இந்த வேறுபாடு எதுகையாகப் பார்த்தால் தெரிய வரும்.
 
 (தொடர்ந்து பாடுவோம்...)
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/31/w600X390/tm1.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/apr/01/இன்னிசை-வெண்பாவும்-சிந்தியல்-வெண்பாவும்-1-2891073.html
2891074 வார இதழ்கள் தமிழ்மணி பிள்ளை விளையாட்டு! DIN DIN Sunday, April 1, 2018 12:00 AM +0530 ஒரு யானை மதம் பிடித்தது போலப் பிளிறிக்கொண்டு தேரடி வீதியில் ஓடிவந்து கொண்டிருந்தது. அரண்மனை மாடத்தில் அரசரும், புலவரும், பணியாளர்களும் நின்று திகைத்தவாறு இதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். மற்றொரு மாடத்திலிருந்த அரசியும் பணிப்பெண்களும் அச்சத்துடன் குரல் எழுப்பினர்.
 யானையின் பின்னே அரண்மனைக் காவலர்கள் ஓடி வந்து கொண்டிருந்தனர். யானைப்பாகன் அதன் கழுத்துப் பகுதியில் அமர்ந்து முக படாத்தையும் கழுத்து மணிகளையும் இணைத்திருந்த பட்டையை இறுகப் பற்றிக்கொண்டு கீழே விழாமல் இருக்க யானையின் தலைமேல் கவிழ்ந்துகொண்டான்.
 கடைத்தெருக்களில் கூடியிருந்த ஆண்களும் பெண்களும் நான்கு புறமும் சிதறி ஓடினர். யானையை அடக்க முடியாமல் பாகனும் வீரர்களும் மல்லர்களும் திகைத்து நின்றனர்.
 யானைப் பாகன் யானையின் காதில் "திரும்பு' என்று கூறிவுடன் அவன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு யானை அரண்மனைக்குத் திரும்பத் தொடங்கியதால் மக்களும் இயல்பு நிலைக்குத் திரும்பினர்.
 மறுநாள் காலைப்பொழுதில் யானைப் பாகன், ஆற்றில் குளிப்பாட்ட அந்தப் பட்டத்து யானையை அழைத்துச் சென்றான். கரையோரம் ஆற்றில் அதிக ஆழமில்லாத தண்ணீரிலே யானையை இறக்கிவிட்டு, அவன் ஆழமான இடத்தில் நீந்தப் போனான்.
 குளிக்க ஆற்றுக்கு வந்த பெண்கள் சிறிது தள்ளியிருந்த பக்கச் சுவர் உள்ள படித்துறையில் குளிக்க இறங்கினர். அவர்களுடன் வந்த சிறுவர்கள் யானையிடம் ஓடிவந்தனர். யானையின் அருகில் மெல்ல வந்து தொட்டுப் பார்த்தனர். அமர்ந்தவாறு இருந்த யானையின் மடக்கிய கால்களில் மெல்ல ஏறினர்.
 யானையின் முதுகைத் தேய்த்துக் குளிப்பாட்டப் பாகன் வைத்திருந்த தேங்காய் நார் மட்டைப் பந்தைக் கொண்டு சிறுவன் ஒருவன் ஒரு பக்கம் தேய்க்கத் தொடங்கினான். இன்னொருவன் மறுபக்கம் தேய்த்தான். மகிழ்ந்த யானை தன் தும்பிக்கையால் தண்ணீரை எடுத்து முதுகில் பீய்ச்சி அடித்தது. சிறுவர்கள் சிலர் யானையின் தந்தங்கள் இரண்டையும் கழுவினர். அப்போது வீரர் ஒருவர் இந்தக் காட்சியைப் பார்த்து வியந்தார். ""இந்த யானையின் தந்தங்களின் கூர்மையைப் பார்த்து எதிரிகள் அஞ்சி ஓடுவார்கள். ஆனால், இந்தக் குழந்தைகள் அன்போடு அந்த யானையைத் தழுவி விளையாடுகின்றனவே!'' என்றார்.
 அப்போது அங்கு வந்து நின்று, யானையுடன் குழந்தைகள் விளையாடுவதைக் கண்டுகளித்துக் கொண்டிருந்த ஒüவையார், ""ஆம்! எதிரிகளுக்கெல்லாம் அச்சம் ஏற்படுத்தும் ஆற்றல் வாய்ந்த மதம் கொண்ட யானையைப் போல் நம் மன்னர் அதியமான் நெடுமான் அஞ்சி, குழந்தைகளுக்கு எளிமையாகவும் (எளியன்), பழகுவதற்கு இனிமையாகவும் (இனிமையானவன்) உள்ள இந்த யானை போல் எனக்கு மிகவும் நெருக்கமாகவும் அன்பாகவும் பரிவுகாட்டி இனிமையான நட்புடன் விளங்குகிறார்'' என்று கூறி மகிழ்ந்தார்.
 அந்த மகிழ்ச்சி அப்படியே பாடலானது. பாடாண் திணையிலும், வாழ்த்தியல் துறையிலும் அமைந்த இப்பாடல் அதியமான் நெடுமான் அஞ்சியை ஒüவையார் புகழ்ந்து பாடிய பாடல்!
 
 "ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
 நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
 இனியை பெரும எமக்கே! மற்றதன்
 துன்அரும் கடாஅம் போல
 இன்னாய், பெரும!நின் ஒன்னா தோர்கே!' (புறநா.94)
 
- முனைவர் பா. இறையரசன்
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/31/w600X390/t2.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/apr/01/பிள்ளை-விளையாட்டு-2891074.html
2891075 வார இதழ்கள் தமிழ்மணி இந்த வாரம் கலாரசிகன் DIN DIN Sunday, April 1, 2018 12:00 AM +0530 தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த வாரம்தான் கிடைத்தது. இன்னும் அந்தப் பிரமிப்பில் இருந்து மீளவில்லை.
முள்ளிவாய்க்கால் முற்றம் உருவாகும் போதிலிருந்து என்னை நெடுமாறன் ஐயாவும், "புதிய பார்வை' ஆசிரியர் ம.நடராசனும், "தமிழ்மண்' பதிப்பகம் இளவழகனும் வந்து பார்க்கும்படி பலமுறை அழைப்பு விடுத்தனர். தஞ்சையில் கவிஞர் வைரமுத்துவின் இளங்கோவடிகள் நிகழ்ச்சிக்குப் போயிருந்தபோது, ஒரு நாள் இருந்து முள்ளிவாய்க்கால் முற்றத்தைப் பார்த்துவிட்டுப் போகும்படி ம.நடாரசன் வற்புறுத்தினார் என்றாலும், அவசர வேலையாக நான் சென்னை திரும்ப வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது.
அரசே நினைத்தாலும்கூட அமைக்க முடியாத ஒன்றை பழ.நெடுமாறன் ஐயாவும், சமீபத்தில் மறைந்த "புதிய பார்வை' ஆசிரியர் ம.நடராசனும் சாதித்திருக்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும். பிரம்மாண்டம் என்பது அளவில் அல்ல, உள்ளடக்கத்தில்தான் என்பதை முள்ளிவாய்க்கால் முற்றம் உணர்த்துகிறது.
நுழைந்தவுடன் இரண்டு பெரிய அரங்கங்கள். முதலாவது அரங்கில், தமிழுக்காகத் தங்களை அர்ப்பணித்த அத்தனை சான்றோர்களின் படங்களும் சுற்றியுள்ள சுவர்களை அலங்கரிக்கின்றன. திராவிடம்-ஆரியம், மாநிலம் - தேசியம், தமிழகம்-
அயலகம் உள்ளிட்ட தமிழனைப் பிரிக்கும் குறுகிய கண்ணோட்டம் இல்லாமல் யார் யாரெல்லாம் தமிழுக்குப் பெருமை சேர்த்துத் தமிழ் தலைநிமிர்ந்து நிற்கக் காரணமானவர்களோ அத்தனை பேர்களின் புகைப்படங்களும் அங்கே ஆவணப்படுத்தப் பட்டிருக்கின்றன."தினமணி' முன்னாள் ஆசிரியர் ஏ.என். சிவராமன் உள்பட!
அதுமட்டுமல்ல, துறைவாரியாகக் கவிஞர்கள், தமிழறிஞர்கள், இதழியலாளர்கள், கலைத்துறையினர், சமயத்துறையினர் என்று தனித்தனியாக அத்தனை தமிழ் ஆளுமைகளும் வரிசைப்படுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிரெதிர் சுவர்களில், நேருக்கு நேராக அருட்பிரகாச வள்ளலாரும், யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரும் அமைந்தது எதிர்பாராத நிகழ்வு என்று தெரிவித்தார் என்னுடன் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் உடன் வந்து விளக்கம் தந்த ஐயா நெடு
மாறன்.
இன்னோர் அரங்கில் தமிழினத்தின் வரலாறும், தமிழுக்காகத் தங்களை அர்ப்பணித்து உயிர்நீத்த தியாகிகளும் ஆவணப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் முற்றம் ஈழத்தமிழர் குறித்த கருவூலம் என்று யாராவது நினைத்தால் தவறு. ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் வரலாறு. அதற்காக ரத்தம் சிந்திய அத்தனை தியாகிகளும் அங்கே ஆவணப்படுத்தப்பட்டிருக்
கிறார்கள்.
அந்த அரங்கத்திற்கு வெளியே பூந்தோட்டத்தில் அமைந்திருக்கிறது, ஈழத்தமிழர் போராட்ட நிகழ்வுகள். ஓவியர் வீரசந்தானம் தனது உயிரை உருக்கி வடிவம் கொடுத்த சித்திரங்கள் அங்கே சிற்பங்களாக உருவம் தரப்பட்டிருக்கின்றன.
அந்தப் பகுதியைச் சுற்றி வந்தபோது, ஏதோ ஒரு துக்கம் தொண்டையை அடைத்தது. இனம் புரியாத துயரம் வயிற்றைப் பிசைந்தது. அங்கிருந்த பேராசிரியர் நெடுஞ்செழியனின் கவிதை இதயத்தைக் கண்ணீரில் நனைத்தது.
சேர, சோழ, பாண்டியர்களாலும், பல்லவர்களாலும் விட்டுச்செல்லப்பட்ட தமிழனின் வரலாற்றுச் சுவடுகளுக்கு நிகரான ஒரு கலைக்கூடம் இந்த முள்ளிவாய்க்கால் முற்றம் என்பது அங்கே போய் பார்த்தபோதுதான் தெரிந்தது. இதற்காக, ஐயா பழ.நெடுமாறனுக்கும், ம.நடராசனுக்கும், ஓவியர் வீரசந்தானத்துக்கும் தமிழினம் கடமைப்பட்டிருக்கிறது. தஞ்சையில் உருவாக்கப்பட்டிருப்பது முள்ளிவாய்க்கால் முற்றமல்ல; தமிழுணர்வுக்கு எழுப்பப்பட்டிருக்கும் கோட்டம்!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து எஸ்.எல்.எஸ்.பழனியப்பன், 1948-ஆம் ஆண்டு ஆலை அரசர் கருமுத்து தியாகராசரின் திருச்சி வானொலி நிலைய சொற்பொழிவின் பிரதி ஒன்றை அனுப்பித் தந்திருந்தார். "இலக்கிய வாசகம் திருக்குறள்' என்கிற தலைப்பில் ஆற்றிய உரை அது. அதைப் படித்தபோதுதான், நான் படிக்க வேண்டுமென்று நீண்ட நாள்களாக எடுத்து வைத்திருந்த கருமுத்து தியாகராசர் குறித்த புத்தகம் ஒன்று நினைவுக்கு வந்தது. அந்தப் புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன்.
"ஆலை அரசர் கருமுத்து தியாகராசரின் உரைக்கோவை' என்கிற அந்தப் புத்தகம் அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு. தொகுத்திருப்பவர் கருமுத்து தியாகராசனின் பெயரனும், மதுரை மீனாட்சியம்மன் கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணனின் மகனுமான க.ஹரி தியாகராசன்.
ஏறத்தாழ அரை நூற்றாண்டுகளுக்கு முன்பிலிருந்து பல்வேறு விழாக்களிலும், கூட்டங்களிலும் கருமுத்து தியாகராசன் ஆற்றிய உரைகள் எழுத்து வடிவில் பாதுகாப்பாக இருந்தது நமக்குக் கிடைத்த பேறு. இதுநாள் வரை குடும்பத்தினரின் பாதுகாப்பில் இருந்த அவரது சிந்தனை பொதிந்த சீரிய உரைகளைத் தொகுத்துப் புத்தகம் ஆக்கியதற்கு ஹரி தியாகராசனை பாராட்ட வேண்டும்.
தனிப்பட்ட முறையில் எனக்கும்கூட இந்தப் புத்தகத்துடன் ஒரு தொடர்பு இருப்பது நானே எதிர்பாராத வியப்பு. 1954-இல் மதுரை சின்ன சொக்கிகுளத்தில் தொடங்கப்பட்ட நடேசையர் வாசக சாலைக்கான கல் நாட்டும் விழாவில் தலைமை உரை ஆற்றியிருக்கிறார் கருமுத்து தியாகராசன். அந்த உரை இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது. அப்போது நடேசையர் வாசக சாலையில் செயலாளராக இருந்தவர் என் தந்தையார்.
வெறும் ஆலை அதிபராக மட்டுமல்லாமல், சமுதாயச் சிந்தனையும், தமிழ்ப் பற்றும் கொண்டவராக வலம் வந்தவர் அன்றைய மதுரை மீனாட்சி நூற்பாலை அதிபர் கருமுத்து தியாகராசன். தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகியவற்றின் முன்னேற்றத்தில் அக்கறையுடன் செயல்பட்ட அந்த மாமனிதர் தனித்தமிழ் இயக்க ஆதரவாளரும்கூட. அவர் நடத்திய "தமிழ்நாடு' நாளிதழ் பிறமொழிக் கலப்பில்லாமல் வெளிவந்த தமிழ்ப் பத்திரிகை.
கருமுத்து தியாகராசரின் உரைக் கோவையில் உள்ள திருமந்திர மாநாடு, இந்தி எதிர்ப்பு மாநாடு, நகரத்தார் சங்கம், வள்ளலார் குருகுலம் ஆகியவற்றில் ஆற்றிய உரைகள் உள்ளிட்டவை இன்றைக்கும்கூட நம்மை சிந்திக்கத் தூண்டுகின்றன.
இந்த அற்புதமான உரைகளைத் தொகுத்து வழங்கியதற்கு ஹரி தியாகராசனுக்கும், இவற்றை நான் படிப்பதற்குக் காரணமான திருப்பத்தூர் பழனியப்பனுக்கும் நன்றி.

கடந்த மாதம் "உரத்த சிந்தனை' நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றிருந்தபோது, திருவண்ணாமலையைச் சேர்ந்த தமிழறிஞர் ந.சண்முகம் அவரது "சிந்தனைத் துளிகள்' என்கிற தொகுப்பை என்னிடம் தந்தார். அதிலிருந்து சில வரிகள்:

நிம்மதி வேண்டுமெனில்,
ஞாபக மறதியும் வேண்டும்.
இல்லையெனில்,
சில நினைவுகள்
கொன்றுவிடும்!
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/31/w600X390/MULLIVAIKKAL_MUTTRAM.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/apr/01/இந்த-வாரம்-கலாரசிகன்-2891075.html
2886725 வார இதழ்கள் தமிழ்மணி  காளை உண்ட உப்பு முன்றுறையரையனார் Sunday, March 25, 2018 12:00 AM +0530 பழமொழி நானூறு

 உற்றான் உறாஅன் எனல்வேண்டா ஒண்பொருளைக்
 கற்றானை நோக்கியே கைவிடுக்க - கற்றான்
 கிழவனுரை கேட்கும் கேளா னெனினும்
 இழவன் றெருதுண்ட உப்பு. (பாடல்-38)
 தமக்கு உறவினன் உறவல்லாதவன் என்று ஆராய வேண்டுவதில்லை. காரியம் செய்யும் பொருட்டுக் கொடுக்கும் ஒள்ளிய பொருளைக் கல்வியறிவாற் சிறந்தானை ஆராய்ந்து அவனிடம் கொடுக்க. கல்வியறிவாற் சிறந்தான் தனக்குப் பொருள் கொடுத்து உதவியவன் சொற்களைக் கேட்டு நடப்பான். கேளா தொழிவா னாயினும், காளை உண்ட உப்பு நட்டமாகாமை போலப் பயன்கொடா தொழியான் என்பதாம். "இழவன்று எருதுண்ட உப்பு' என்பது பழமொழி.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/24/w600X390/tm1.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/mar/25/காளை-உண்ட-உப்பு-2886725.html
2886726 வார இதழ்கள் தமிழ்மணி கவி பாடலாம் வாங்க - 17 DIN DIN Sunday, March 25, 2018 12:00 AM +0530 வெண்பா வகை-2
 "வாகீச கலாநிதி' கி.வா. ஜகந்நாதன்
 வேறு ஒரு முறையில் நேரிசை வெண்பாவை இரண்டு வகையாகப் பிரிப்பதுண்டு. அவை இரு குறள் நேரிசை வெண்பா; ஆசிடையிட்ட நேரிசை வெண்பா என்ற பெயர் பெறும். இரண்டு குறள் வெண்பாக்களை வைத்து, முதல் குறள் வெண்பாவுக்குப் பின் தனிச்சொல்லை இணைத்து வைத்தாற் போன்ற அமைப்பை உடையது இரு குறள் நேரிசை வெண்பா.
 
 "நகைகொள் முகமுடைய நல்லோனாம் காந்தி
 பகைவனையும் அன்பிற் பரிந்து - மிகநலஞ்செய்
 பாங்கதனைக் காட்டியிந்தப் பாருலக முள்ளளவும்
 ஓங்கிநின்றான் நல்லோர் உளத்து'
 
 இந்த வெண்பாவில் இரண்டாம் அடியின் மூன்றாம் சீர் பரிந்து என்று குறள் வெண்பாவின் ஈற்றுச் சீருக்குரிய இலக்கணத்தோடு நிற்கிறது. மிக நலஞ்செய் என்ற தனிச் சொல்லை எடுத்துவிட்டால் இரண்டு குறளை அடுத்தடுத்து எழுதினது போலத் தோற்றும். இது இருகுறள் நேரிசை வெண்பா. இதில் எதுகை இரு வகையாக அமைந்தமையால் இரு விகற்ப நேரிசை வெண்பாவும் ஆகும்.
 
 "முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
 மருகனே ஈசன் மகனே - ஒருகைமுகன்
 தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
 நம்பியே கைதொழுவேன் நான்'
 
 இந்தப் பழம் பாட்டில் இரண்டாவது அடியின் மூன்றாம் சீர் மகனே என்பது. இது வெண்பாவின் ஈற்றுச் சீர் ஆகாது. மகன் என்றோ மக என்றோ முடிந்தால் மலர் என்ற வாய்பாடாகக் கொள்ளலாம். மக என்பதற்கு மேல் னே என்ற அசை ஒன்று கூடுதலாக இருக்கிறது. அந்த அசை இங்கே ஆசு ஆகும். உலோகங்களை ஒன்றோடொன்று இணைக்க உதவும் பொருளுக்கு ஆசு என்றும் பற்றா வென்றும் பெயர். அதுபோலத் தனிச் சொல்லுக்கும் குறள் வெண்பாவின் ஈற்றுச் சீராக இருக்க வேண்டியதற்கும் இடையே ஓரசையோ இரண்டசையோ வந்தால் அதை ஆசு என்று சொல்வார்கள்; அந்த ஆசிடையிட்ட நேரிசை வெண்பாவாகும். இங்கே னே என்ற நேரசை ஒன்று மட்டும் வந்தமையால் இது ஓராசு இடையிட்ட நேரிசை வெண்பா.
 
 "குன்ற மெறிந்தாய் குரைகடலிற் சூர்தடிந்தாய்
 புன்றலைய பூதப் பொருபடையாய் - என்றும்
 இளையா யழகியா யேறூர்ந்தா னேறே
 உளையாயென் னுள்ளத் துறை'
 
 இந்தப் பாட்டில் இரண்டாம் அடியின் மூன்றாம் சீர் பொருபடையாய் என்பது. அது பொரு என்று இருந்தால் மலர் என்ற வாய்பாட்டை யுடைய குறளின் இறுதிச்சீர் ஆகும். அதற்கு மேல் படை- யாய் (நிரை நேர்) என்று இரண்டு அசைகளோடு ஒட்டிப் பின்வரும் தனிச் சொல்லோடு தளையும் பொருளும் பொருந்த இணைவதால், இது ஈராசு இடையிட்ட நேரிசை வெண்பா. இரண்டாம் அடியின் மூன்றாம் சீரைக் கொண்டு இந்த வேறுபாட்டை உணர வேண்டும்.
 "கண்டு' என்று இருந்தால் அது இருகுறள் நேரிசை வெண்பாவாகும். அதுவே "கண்ட' என்று வந்தால் (கண்+ட) ஓராசிடையிட்ட நேரிசை வெண்பாவாகும். "பிறகு' என்று வந்தால இருகுறள் நேரிசை வெண்பா ஆகும். அதுவே "பிறகோ' என நின்றால், ஓராசிடையிட்ட நேரிசை வெண்பா ஆகிவிடும். வெண்பாவின் இடையில் வரும் சீர் இது; ஆகையால் குற்றியலுகர ஈறுடைய காசு, பிறப்பு என்ற இரண்டு வாய்பாடுகளுக்கு ஏற்ப வருவனவெல்லாம் இருகுறள் நேரிசை வெண்பா ஆகும். மற்றவை யாவும் ஆசிடையிட்டவையே.
 இரண்டாம் அடியின் மூன்றாஞ் சீர் காசு, பிறப்பு என்ற வாய்பாட்டுக்கு ஏற்றபடி வந்தால், தனிச் சொல் நிரையை முதலாக உடைய சீராகவே இருக்கும்; முன் இரண்டடிகளும் நிரையை முதலாக உடையனவாகவே இருக்கும். ஆதலால்,இருகுறள் நேரிசை வெண்பாக்கள் யாவுமே நிரையை முதலாக உடைய சீரில் தொடங்க வேண்டும்.
 (தொடர்ந்து பாடுவோம்...)
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/24/w600X390/tm2.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/mar/25/கவி-பாடலாம்-வாங்க---17-2886726.html
2886727 வார இதழ்கள் தமிழ்மணி பாவை விளையாட்டில் பரிணாம வளர்ச்சி! DIN DIN Sunday, March 25, 2018 12:00 AM +0530 சிற்றில் இழைத்து விளையாடும் ஐந்தாறு வயதே நிரம்பிய சிறுமி பலவிதமான பாவைகளை (பொம்மைகளை) வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறாள். அவளிடம் இல்லாத பாவைகளே இல்லை. இதில் உள்ள விந்தை என்னவென்றால், அத்தனை பாவைகளையும் அவளே தனது விளையாட்டிற்காக உண்டுபண்ணி வைத்துக்கொண்டு தன் மனம்போன போக்கில் அவற்றுடன் விளையாடுகிறாள்.
 தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத் தமிழினை இயற்றியவரும், சக்தி உபாசகருமான நல்லதுக்குடி கிருட்டிணையர் எனும் புலவர், அன்னை பராசக்தியின் அருளிலேயே ஆழ்ந்தவர். சிறு பெண்ணாய் அவள் விளையாடும் விளையாட்டுகள் அனைத்தினையுமே அகக்கண்ணில் அவளுடைய திருவிளையாடல்களாகக் கண்டு களித்து, போற்றி வாழ்த்துகிறார்.
 இவர் தாம் இயற்றிய இப்பிள்ளைத் தமிழ் நூலில் வழக்கமான பத்துப் பருவங்களுக்கு (10) மாறாகப் பதினைந்து (15) பருவங்களைப் பாடியுள்ளார். பிங்கலந்தை நிகண்டு பெண்பாற் பிள்ளைத் தமிழுக்குப் பத்தொன்பது (19) பருவங்களை குறிப்பிட்டுள்ளது. அவற்றுள் இதுவும் ஒன்று. மூன்று பாடல்களை மட்டுமே கொண்டமைந்த பாவை விளையாடல் எனும் இந்த இனிய பிள்ளைப்பருவம், சிவகாமியம்மை பிள்ளைத் தமிழில் மட்டுமே காணக்கிடைக்கின்றது.
 ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை உள்ள உயிர்களின் பாவைகளை எல்லாம் எண்பத்து நான்கு இலட்சம் வகைகளில், எண்ணற்ற வடிவங்களில் இவளே செய்கிறாளாம்.
 அன்னை பராசக்தி இவ்வுயிர்களை ஐம்பூதங்களால் (பஞ்ச
 பூதம்) விளையாட்டாகவே உண்டு பண்ணுகிறாள் எனும் கருத்து அழகுற விளக்கப்படுகின்றது. அது மட்டுமா? அவற்றைக் கனவு, நினைவு, விழிப்பு, உறக்கம் ஆகிய நிலைகளில் தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றபடி வைத்து அனுதினமும் விளையாடுகிறாளாம்.
 சண்டமுண்டர்கள், மகிடன் எனும் அரக்கர்கள் ஆகியோரைப் படைத்தும், அவர்கள் மற்றவர்களுக்குக் கொடுமை செய்தபோது அவர்களைக் கொன்றழித்தும் இவ்வுலகைத் தீமையிலிருந்து காத்தும் விளையாடுகிறாள். சிலபொழுது பூமியை நீர் வறட்சியால் வருந்தச் செய்கிறாள். சிலபொழுது பெரும்வெள்ளத்தால் சேதமும் அடையச் செய்கிறாள். பலபொழுதுகளில் அனைத்தையுமே இன்பமயமாக இயங்கச் செய்கிறாள். நம்மை, இசையையும் நடனத்தையும் நூல்களையும் பயிலச் செய்து பல கலைகளை வளர்க்கிறாள். அகிலத்தையே இவ்வாறு படைத்து நாள்தோறும் விளையாட்டாக அவள் விளையாடி ஆட்டுவிக்கிறாள்.
 எல்லா உயிர்களையும் பராசக்தி அன்னை திரும்பத் திரும்பப் படைத்து அளிக்கும் பலவிதமான வடிவங்கள் இப்பாடலில் நயம்படக் கூறப்படுகின்றன.
 
 "வல்ல தெய்வப் பாவை மானிடப்
 பாவையொடு வாழ்விலங்கின் பாவையும்
 மறிதிரைப் புனலிடை வழங்கிடும் பாவையும்
 மருவு பறவைப் பாவையும்
 ஒல்லையில் நெளிந்துதாம் ஊர்ந்திடும் (ஒல்லை- விரைவு)
 பாவையும் உறும் தாவரப் பாவையும்
 ஒரு பொறிப்பாவை முதல் ஐம்பொறிப் (ஒருபொறி- ஓரறிவு)
 பாவையும் உற்றிடும் பாவை எல்லாம்
 எல்லவே சாக்கிரம் கனவொடு (சாக்கிரம்- விழிப்புநிலை)
 சுழுத்தியுடன் எழும் பூதாசார வடிவாய்
 எண்பத்து நாலுலக்கத்தான கொள்கையினில்
 எண்ணிறந்திடும் கோலமும்
 பல்லுயிர்ப் பாவை விளையாடு நற்
 பூவையே பாவை விளையாடி அருளே!
 
 இதில் உட்கருத்தாகப் பரிணாம வளர்ச்சி பற்றிய சிந்தனைகள் பொதிந்துள்ளதனைக் காணலாம். ஓரறிவு உயிர்களான புல், மரம் ஆகிய தாவரப் பாவைகள், ஈரறிவுயிர்களான சிப்பி, கிளிஞ்சல் ஆகிய கடல்வாழ் உயிரினங்கள், மூவறிவு கொண்ட உயிர்களான ஊர்ந்து செல்லும் எறும்புகள் முதலியனவும், நான்கறிவு கொண்டவையான நெளிந்து ஊர்ந்து செல்லும் சிலவகைப் பூச்சியினங்களும், ஐந்தறிவு கொண்ட உயிர்களான பறவை இனங்களும் பஞ்சபூதங்களாலான உடல்களில் ஒன்றன்பின் ஒன்றாகப் படைக்கப் பட்டிருப்பதனை பாடல் விளக்குகிறது. மானிடர் ஆறறிவு உயிர்களாகக் கருதப்படுவர்.
 "இயற்கை நிகழ்வு' என நாம் பல காலங்களாகப் பயின்றுவரும் பரிணாம வளர்ச்சி எனும் அறிவியல் சிந்தனை, அவ்வியற்கையையும் இயக்கும் இறைத்தத்துவமாக அடியார்கள் சிந்தையில் பதிந்துள்ளது என்பது சிந்திக்கத்தக்கதாகும்.
 -மீனாட்சி பாலகணேஷ்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/24/w600X390/tm3.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/mar/25/பாவை-விளையாட்டில்-பரிணாம-வளர்ச்சி-2886727.html
2886728 வார இதழ்கள் தமிழ்மணி கவிதை உறவு DIN DIN Sunday, March 25, 2018 12:00 AM +0530 இலக்கியப் பரிசுகள் - 2017
 சிறந்த நூல்களுக்கான மொத்தப் பரிசுத் தொகை ரூ.1,00,000.
 முதல் பரிசு ரூ.5000, இரண்டாவது பரிசு ரூ.3000, மூன்றாவது பரிசு ரூ.2000.
 மரபுக் கவிதை, புதுக்கவிதை, மனித நேயம், வாழ்வியல், சிறுகதை, நாவல், குறுநாவல், செவ்வியல் இலக்கியக் கட்டுரைகள், பொதுக் கட்டுரைகள், குழந்தை இலக்கியங்கள், கல்வியியல், இளைஞர் நலம், ஆளுமை மேம்பாடு, ஆன்மிகம், மத நல்லிணக்கம் ஆகிய தலைப்புகளில் நூல்களைப் போட்டிக்கு அனுப்பலாம்.
 நூல்கள் 2017-ஆம் ஆண்டு வெளியானவையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தலைப்பிலும் நூலின் மூன்று படிகள் அனுப்ப வேண்டும். நூல்கள் கிடைத்த விவரம் அறிய, தன் முகவரியிட்ட அஞ்சல் அட்டை அனுப்ப வேண்டும். நூல்கள் வந்துசேர வேண்டிய கடைசி நாள்
 10. 4. 2018.
 நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
 கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்,
 எண்: 420 உ, மலர் காலனி,
 அண்ணாநகர்,
 சென்னை-600 040.
 

]]>
http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/mar/25/கவிதை-உறவு-2886728.html
2886729 வார இதழ்கள் தமிழ்மணி ஒன்று... இரண்டு... மூன்று...! DIN DIN Sunday, March 25, 2018 12:00 AM +0530 இராமச்சந்திர கவிராயர் பாடிய இலக்கியச் சுவை மிகுந்த தனிப்பாடல் இது. ÷ஆதி முதலானவன், ஆனை முகத்தானின் பெருமையை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு - ஆகிய எண்களில் சிலேடை நயம் அமையப் பாடப்பட்ட பாடல் ஒன்று "திருப்பரங்கிரிப் புராணத்தில்' இடம் பெற்றுள்ளது. எண் குணத்தானான இறைவனின் குணங்களையும், விநாயகப் பெருமானின் சிறப்பையும் இப்பாடலில் காணலாம்.
 
 "வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத்
 திரண்டானை வணங்கார் உள்ளே
 அஞ்சரண மூன்றானை மறை மொழி
 நால் வாயானை அத்தன் ஆகித்
 துஞ்ச உணர்க் கஞ்சானைச் சென்னி
 யணி யாருனை துகளெ ழானைச்
 செஞ்சொல் மறைக் கெட்டானைப் பரங்கிரிவாழ்
 கற்பகத்தைச் சிந்தை செய்வாம்!'
 
 இதன் பொருளாவது: வஞ்சகத்தில் ஒன்றானை - எந்தவொரு வஞ்சகத்திலும் ஈடுபடாதவன்; துதிக்கை மிகத் திரண்டானை - திரட்சியான பலம் மிகுந்த துதிக்கையை உடையவனை; வணங்காதவர் உள்ளத்துள் ஊன்றாதவனை - நான்கு வேதங்களையும் அருளிய தொங்கும் வாயை யுடையானை - தலைவனை - எந்தவொரு அவுணர்க்கும் அஞ்சாதவனை, எப்போதும் சிரசில் அணிமணிகளால் அமைந்த பொற்கிரீடம் தரித்தவனை - தூசு போன்ற குற்றங்களை நீக்கி, ரிக், யஜுர், சாம, அதர்வண ஆகிய நான்கு வேதங்களும் அறிய முடியாத திருப்பரங்குன்ற மலையில் வாழும் கற்பக விநாயகரை மனத்தில் இருத்தி வழிபடுவோமாக! ÷இப்பாடலில் 1 முதல் 8 வரை எண்கள் வந்துள்ளன. இதேபோல மற்றொரு பாடல் போரூர் முருகப்பெருமான் மீது சிலேடை நயம் அமையுமாறு ஒன்று முதல் பத்து எண்கள் வரை அமையப்பெற்ற பாடலை இயற்றியவர் யாரெனத் தெரியவில்லை.
 
 "போற்றும் அடியார் இனத் தொன்று
 போரூர் முருகா! மன மிரண்டு
 போகா வகை நின் பத மூன்று
 பொய்யேன் உய்ந்து போதற்கே.
 சீற்றங் கொண்டே நான்காயும்
 சிறியேன் அஞ்சு வினையெல்லாம்
 செற்றே பவத் தீ ஆறுதற்குச்
 சிறிதே கடைக்கண் பாராயோ!
 சாற்றும் எழுதா மரை தனக்குச்
 சற்றும் எட்டாத் தன்மையதாம்
 சாரும் நீரார் வினை ஏகும்
 செம் பொன்பது மப் பாதத்தே
 ஏற்றுன் பத்தன் ஆக்கி எனை
 எந்தாய்! இன்றும் ஆளாயோ!
 ஏற்றான் குமரா! உமை சிறுவா!
 எய்த்தேன், ஏற்றே அருளாயோ!''
 - டி.எம். இரத்தினவேல்
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/24/w600X390/tm4.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/mar/25/ஒன்று-இரண்டு-மூன்று-2886729.html
2886730 வார இதழ்கள் தமிழ்மணி இந்த வாரம் கலாரசிகன் DIN DIN Sunday, March 25, 2018 12:00 AM +0530 ஓர் உயர்நீதிமன்றத் தீர்ப்பு எந்த அளவுக்கு சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும் என்பதை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை நீதியராயம் 2016-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் நீதிபதி ஆர். மகாதேவன் அளித்தத் தீர்ப்பு உணர்த்துகிறது. அவரது அமர்விற்கு முன்னால் ஒரு வழக்கு வந்தது. அந்த வழக்கின் அடிப்படையில் நீதிபதி ஆர். மகாதேவன் வழங்கிய தீர்ப்பு இப்போது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாக உலகளாவிய தமிழ் ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது.
ஓய்வு பெற்ற அரசு அலுவலர் எஸ்.ராஜரத்தினம் என்பவர், இளைய சமுதாயத்திடம் குறைந்துவரும் ஒழுக்க சிந்தனைக்குத் தீர்வாக ஆறாம் வகுப்பிலிருந்து ப்ளஸ் டூ வரையில் மாணவர்களுக்குத் திருக்குறளை அறத்துப்பால் மற்றும் பொருட்பாலிலுள்ள அனைத்து குறட்பாக்களையும் பயிற்றுவிக்க வேண்டும் என்று ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். 2011-ஆம் ஆண்டில் வழக்குகளில் கைது செய்யப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை 2,083 என்றும், அவற்றுள் 1, 170 பேர் தொடக்கக் கல்வி பயின்றவர்கள், 617 பேர் இடைநிலை கல்வி பயின்றவர்கள், 56 பேர் 12-ஆம் வகுப்புக்கு மேலான உயர்கல்வி படித்தவர்கள், 240 பேர் படிக்காதவர்கள் என்கிற புள்ளிவிவரத்தையும் தனது மனுவில் இணைத்திருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ஆர். மகாதேவன், திருக்குறளிலுள்ள 108 அதிகாரங்களை அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிக்கூடங்களில் தனிப் பாடமாக வைக்க வேண்டும் என்றும், அதை அரசினால் நியமிக்கப்பட்ட குழு தயாரிக்க வேண்டும் என்றும், மாநில அரசு அமைக்கும் அந்தக் குழு இந்திய அரசியல் அமைப்புச் சட்ட அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, புதிய வரலாறு படைத்தார்.
வழக்கமாக உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் உடனயாக நடைமுறைப் படுத்தப்படாமல் கிடப்பில் போடப்படுவதுதான் வழக்கம். ஆனால், தமிழக வரலாற்றில் இன்னொரு மிகப்பெரிய திருப்புமுனையாகத் தமிழக அரசு உடனடியாக நீதிபதி ஆர்.மகாதேவனின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முற்பட்டது என்பது மனுதாரரின் அக்கறையும் கவலையும் ஒட்டுமொத்த சமுதாயத்திலும் காணப்படுகிறது என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.
உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவனின் தீர்ப்பு மொரீஷியஸ் நாட்டில் எதிரொலித்தது. மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த சர்வதேச திருக்குறள் அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் அந்தத் தீர்ப்பை அப்படியே ஒரு சிறிய புத்தகமாக வெளியிட்டார். இந்தக் கையேடு உலகிலுள்ள பல தமிழார்வலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தக் கையேடு இப்போது ஐ.நா. சபையின் யுனெஸ்கோவையே திருக்குறள் குறித்து சிந்திக்க வைத்திருக்கிறது.
நாடு, மொழி, இனம், மதம், ஜாதி எனும் அடையாளங்களைக் கடந்த நூலாக இருந்து, வாழும் ஒவ்வொருவருக்கும் உலக நன்மைக்கும் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டிய நூலாக உலக வரலாற்றில் நீதிமன்றத்தால் அடையாளம் காட்டப்பட்ட திருக்குறள், விரைவிலேயே உலக நூலாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட இருக்கிறது எனும்போது, உயர்நீதிமன்றத் தீர்ப்பின் வீச்சு எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நாம் உணரலாம்.
அடுத்த பத்தாண்டுகளில் கோடிக்கணக்கான தமிழ் இளைஞர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருக்குறளைப் படித்தவர்களாக, குறைந்தபட்சம் ஒருமுறையாவது படித்தவர்களாக, உருவாகப் போகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய சாதனை. இந்த சாதனைக்குக் காரணமான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அலுவலர் ராஜரத்தினம், நீதிபதி ஆர்.மகாதேவன், தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை, மொரீஷியஸ் சர்வதேச திருக்குறள் அமைப்பின் நிறுவனர் ஆறுமுகம் பரசுராமன் ஆகியோருக்குத் தமிழ்ச் சமூகம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கும். நீதிபதி ஆர்.மகாதேவனின் தீர்ப்பு "திருக்குறள் : தீர்ப்பு தரும் தீர்வு' என்கிற பெயரில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் அவர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலிருந்து திருக்குறளைப் பள்ளிக் கல்விப் பாடத்தில் சேர்க்க தமிழக அரசுக்கு ஆணையிட்டு அளித்த, தீர்ப்பும், தீர்ப்பின் மீதான புரிதல்களையும் உள்ளடக்கியது இந்நூல். இதன் பதிப்பாசிரியர் நல்லூர் சா.சரவணன்.

சங்கீத மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகிய மூவரைப் போலவே கர்நாடக சங்கீதத்துக்கு பெரும் பங்களித்தவர்கள், காலத்தால் அவர்களுக்கு முந்தைய, தமிழிசை மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் முத்துத்தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்தாப் பிள்ளை ஆகிய மூவரும். இவர்கள் இல்லாமல் போயிருந்தால், ஒருவேளை கர்நாடக சங்கீதம் தமிழுக்கு அந்நியப்பட்டதாக அகன்று போயிருக்கக்கூடும்.
பண்டைய காலத்தில் தமிழகத்தில் பாணர்களும், விறலியர்களும் தமிழசை பாடியதாகவும், தனிப் பெண்டிர் இசை பாடியதாகவும், நடனமாடியதாகவும், தமிழ் நூல்கள் செப்புகின்றன. இந்தியாவின் ஏனைய பகுதிகளில் கர்நாடக இசையோ, பரதநாட்டியக் கலையோ கிடையாது என்பதிலிருந்தே இது தமிழிசைதான் என்பதை நாம் உணர்ந்துகொள்ள முடியும்.
தமிழகத்தில் தமிழிசை குறித்து மிகப்பெரிய ஆராய்ச்சிகளைப் பலர் மேற்கொண்டாலும் கூட, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அகராதித் துறையின் தலைவராகப் பணியாற்றி, தமிழிசை குறித்து பல்வேறு ஆய்வுகள் செய்திருக்கும் மு.அருணாசலம் முதலிடம் பெறுகிறார். "மூனா, ஆனா' என்று போற்றப்படும் தமிழ்ப் பேராசான் தமிழிசை மும்மூர்த்திகள் குறித்து விவரமாக ஆய்வு செய்து படைத்திருக்கும் புத்தகம்தான் "கருநாடக சங்கீதம் - தமிழிசை ஆதி மும்மூர்த்திகள்' என்பது.
சங்கீத மும்மூர்த்திகளுக்கு காலத்தால் முன்னே வாழ்ந்த இசைவாணர்களான சீர்காழி முத்துத் தாண்டவர், சீர்காழி அருணாசலக் கவிராயர், தில்லை விடங்கன் மாரிமுத்தாப் பிள்ளை ஆகிய தமிழிசை மும்மூர்த்திகள் அதற்கு முன்பே தமிழில் பல கீர்த்தனைகளைச் செய்து, அவற்றுள் சில இன்றும் பாடப்பெற்று வருகின்றன. இவர்களைத் தமிழ் மும்மூர்த்திகள் என்று அழைப்பதைவிட கருநாடக சங்கீதத்தின் தமிழிசை ஆதி மும்மூர்த்திகள் என்று அழைப்பதுதான் பொருத்தம் என்கிற மு.அருணாசலத்தின் கூற்று ஏற்புடையதே.
1985-இல் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகத்துக்கு சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானமும், இசைப் பேரறிஞர் டாக்டர் எஸ்.இராமநாதனும் எழுதி இருக்கும் அணிந்துரைகள் அற்புதமானவை. இப்போது மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம். சங்கீதத்திலும், தமிழிசை ஆய்விலும் ஈடுபாடுள்ளவர்கள் இதை படிக்காமல் இருந்துவிடக் கூடாது.

"காணி நிலம்' இதழில் வெளிவந்திருக்கும் சகி என்பவர் எழுதிய "வேலைக்காரி' என்கிற கவிதை நெஞ்சை விட்டு அகல மறுக்கிறது.

நேற்றிரவு பட்டினியில் படுத்துறங்கிய
குழந்தைகளை எழுப்ப மனமில்லாமல்
பத்துப் பாத்திரம் கழுவச் சென்றவளின் மனம்,
ஆதங்கத்தின் உச்சத்தைத் தொட்டிருந்தது
கழுவப் போட்ட பாத்திரத்தில் மீதமிருந்த
சோற்றை அள்ளிப் போடும்போது!
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/24/w600X390/tm5.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/mar/25/இந்த-வாரம்-கலாரசிகன்-2886730.html
2886731 வார இதழ்கள் தமிழ்மணி சங்கப் பாடல் கவிதையா? சிறுகதையா? DIN DIN Sunday, March 25, 2018 12:00 AM +0530 கதைக்கு இடமான மையப்புள்ளி நம் முன்னோர்கள் வாழ்ந்த இலமூரியா என்றே கூறலாம். கதை என்னும் சொல்லுக்கு "சொல்லுதல்' என்றே பொருள். எதைச் சொல்லுதல்? தாம் கண்டுவந்த, கேட்ட நிகழ்வுகளை அழகுறவும் கற்பனை கலந்தும் பிறர் இன்புறும்படிக்கு எடுத்துக்கூற, அந்நிகழ்வுக்கேற்ப வேறொன்றைப் புனைந்து உரைப்பதாகும்.
 மனிதகுல வரலாற்றில் கதைகளுக்கென்று தனித்த இடம் உண்டு. அதிலும் குறிப்பாக, தமிழ்ச் சமூகம் பெருங்கதைகளின் பெட்டகம் என்றே கூறலாம். அதனால்தான் தமிழில் காப்பியங்கள் தோன்றின. பெருங்கதை என்றோர் தனித்த நூலும் உள்ளது.
 கதை சொல்வதிலே முனைப்புடன் திகழ்பவர்கள் தாத்தா-பாட்டிகள். அவர்கள் தாம் கண்ட, கேட்ட வரலாற்று நிகழ்வுகளைக் குழந்தைகளிடம் சொல்கிறார்கள். குழந்தைகளுக்கும் அவர்கள் சொல்கின்ற கதைகள், வரலாற்று நிகழ்வுகள் புதியனவாகவும், வியப்பாகவும் இருப்பதால்தான், கதை கேட்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். காலங்காலமாகக் கதைகள் பற்றிய பழமொழிகளும் சொலவடைகளும் தமிழில் உருவாகி வந்துள்ளன.
 அகநானூறு 309ஆவது கவிதைப் பாடல், ஒரு சிறுகதை அமைப்பில் அமைந்துள்ளது. இதனை இயற்றியவர் கருவூர் கந்தப்பிள்ளைச் சாத்தனார் ஆவார்.
 தலைவியைப் பிரிந்து தலைவன் வினைமேற் சென்றான். அவளுடைய துயரத்தைப் போக்கும்விதமாக தோழி கதை கூறுவது போலமைந்த கவிதைப் பாடல் இது. இப்பொழுது தோழி கதை கூறுவாள் போலக் கூறுகின்றாள்:
 "வெற்றிவாளினாலே வெட்டிக்கொன்றும், வில்லால் அடித்து வெருட்டியும் பசு மந்தைகளைக் கைக்கொண்ட அஞ்சாமையாளரான மறவர்கள், அம்புகளைச் செலுத்தி நிரை காவலரை ஓட்டிய பின், வன்மையான காட்டு நிலத்தை அடைந்தனர். அப்படி அடைந்தபோது, தெய்வம் குடிகொண்டிருக்கும் பருத்த அடியினையுடைய வேப்ப மரத்திற்கு ஒரு கொழுத்த பசுவைக் கொன்று பலியிட்டார்கள். அதன் குருதியைத் தூவி, தெய்வத்தைப் போற்றி வழிபட்டார்கள். வழிபட்டு, அப்பசுவின் புலாலினைப் புழுக்கி உண்டுவிட்டுச் சென்றனர். அவ்வாறு அவர்கள் உண்டுவிட்டுச் சென்ற அகன்ற பாறையிடத்தே, களிறு தன் முதுகினை உராய்ந்த கருத்த அடிமரத்தையுடைய கருங்காலி மரத்திற்கு அருகிலுள்ள இலவ மரத்தின் வெண்பஞ்சுடன் கூடிய விதைகள், பனிப்பெய்வது போல் வீழ்ந்து கொண்டிருக்கும்.
 அத்தகைய, காட்டுவழி மிகவும் நெடியதெனவும், அவர்கள் அஞ்சாமல் பெரியதான குதிரைப் படையினையுடைய, நல்ல போர்த்திறன் மிக்க (வானவனின்) அரசனின் கழல்கள் விளங்கும் திருத்தமான செவ்விய பாதங்களை அடையும் விருப்பத்தினாலே கூத்தர்கள் செல்லுகின்றார்கள். அவர்களைப் போலவே கதிரவன் சுட்டெரிக்கும் பகற்பொழுதிலே, மூங்கிலின் விளைந்த கழைகலும் உடைந்து போகுமளவிற்கு வேகத்துடனே வந்து தாக்கும் கவண் கற்களின் இடிக்கு அஞ்சிச் செல்லுதலின்றி, இரவு வேளையிலே சென்று, தினைப்புனத்தினை மேய்ந்த வலிமையும் சினமும் மிக்க வேழமானது (யானை) குளிர்ந்த, பெரிய தான்தூற்றினுக்கு அஞ்சிக் கலங்கி நிற்கும் தனிமையுடையதும் குன்றுகள் குறுக்கிடும் வழிகளை உடையதுமானது நம் தலைவரான அவர் சென்றுள்ள நாடு! அப்படிப்பட்ட வழிகளைக் கடந்து நாம் செல்ல முடியுமா? நீயே சொல்லு? அப்படிச் செல்வதாயின் வின்னவரின் (கடவுளின்) அருள் இருந்தால் மட்டுமே செல்ல முடியும்.
 இப்படியாக ஒரு சிறுகதை வடிவிலே அமைந்த அக்கவிதை வருமாறு:
 
 "வயவாள் எறிந்து வில்லின் நீக்கிப்
 பயம்நிரை தழீஇய கடுங்கண் மறவர்
 அம்புசேண் படுத்து வன்புலத்து உய்த்தெனத்
 தெய்வஞ் சேர்ந்த பராரை வேம்பிற்
 கொழுப்பா எறிந்து குருதி தூஉய்ப்
 புலவுப் புழுக்குண்ட வான்கண் அகலறைக்
 களிறு புறம் உரிஞ்சிய கருங்கால் இலவத்து
 அரலை வெண்காழ் ஆலியின் தாஅம்
 காடுமிக நெடிய என்னார் கோடியர்
 பெரும்படைக் குதிரை நற்போர் வானவன்
 திருந்துகழற் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு
 நாஞ்செலின் எவனோ தோழி! காம்பின்
 விளைகழை உடைந்த கவண்விசைக் கடிஇடிக்
 கனைசுடர் அமையத்து வழங்கல் செல்லாது
 இரவுப்புனம் மேய்ந்த உரவுச்சின வேழம்
 தண்பெரும் படாஅர் வெரூஉம்
 குன்று விலங் கியவினவர் சென்ற நாட்டே?'
 
 பாட்டன் பாட்டிகளெல்லாம் நம் தமிழ்ப் பண்பாட்டின் வழிகாட்டிகள்! பெட்டகங்கள்! அவர்களைத் தனிமைப்படுத்தலும் தூக்கி எறிதலும் நன்றாமோ? அவர்களை வாசியுங்கள்... யோசியுங்கள்...!
 
 -முனைவர் கா. காளிதாஸ்
 
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/24/w600X390/tm6.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/mar/25/சங்கப்-பாடல்-கவிதையா-சிறுகதையா-2886731.html
2882738 வார இதழ்கள் தமிழ்மணி இந்த வார கலாரசிகன் DIN DIN Sunday, March 18, 2018 02:06 AM +0530 தனக்கு ஏதாவது அரிய புத்தகம் கிடைத்தால் உடனடியாக அதை எனக்கு அனுப்பித் தந்துவிடுவார் முல்லைப் பதிப்பகம் மு. பழனியப்பன். அவர் தந்தையார் முல்லை முத்தையா, பூக்களிலிருந்து வண்டு தேன் சேகரிப்பது போல பல அரிய தகவல்களையும் படைப்புகளையும் தேடிப் பிடித்து பதிப்பித்தவர். தமிழ்ப் பதிப்புலக முன்னோடி.
முல்லை முத்தையா மகாகவி பாரதியார் குறித்த பல்வேறு பதிவுகளையும், பாரதியாரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும் தொகுத்து "பாரதியார் விருந்து' என்று ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். இந்தப் புத்தகம் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு வீர. சிவராமனால் காரைக்குடியில் செல்வி பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதை சமீபத்தில் அனுப்பி இருந்தார் முல்லை பதிப்பகம் மு. பழனியப்பன். 
பாரதியாரின் சமகாலத் தோழர் நாவலர் சோமசுந்தர பாரதியார் எழுதிய "சுப்பிரமணிய பாரதியார் வரலாறு' , "பாரதிதாசன் கண்ட பாரதியார்', பாரதியார் குறித்த திரு.வி.க.வின் கட்டுரை என்று அற்புதமான பல கட்டுரைகளை உள்ளடக்கிய இந்தப் புத்தகத்தில் பாரதியார் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள் சில தொகுத்து வழங்கப்பட்டிருக்கின்றன.
பாரதியாரின் நகைச்சுவை, பாரதியார் எழுதிய கடிதங்கள், பாரதியாரின் சமர்ப்பணங்களும் முகவுரைகளும், அவருடைய பதிப்புரைகள், முகவுரைகள், முன்னுரைகள் என்று 192 பக்கங்களில் அவரது அத்தனை பரிமாணங்களையும் உள்ளடக்கிய இந்தப் பொக்கிஷத்தை எனக்கு அனுப்பித்தந்திருக்கும் முல்லைப் பதிப்பகம் மு. பழனியப்பனுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. அந்தப் புத்தகத்தில் நான் மிகவும் ரசித்த பாரதியாரின் மூன்று கட்டுரைகள் - "தேச பக்தி', "கவிதை எப்படி இருக்க வேண்டும்?', "வசனநடை எப்படி அமைய வேண்டும்?'

சங்கர் என்று சொன்னால் பலருக்கும் தெரியாது. ஆனால், "சவுக்கு சங்கர்' என்று சொன்னால் காவல்துறை, அதிகாரவர்க்கம், அரசியல்வாதிகள், ஏன் நீதித்துறையினர் கூட சற்று இறுக்கமாகி விடுவார்கள். லஞ்ச ஒழிப்புத் துறையில் ஒரு சாதாரண ஊழியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய சங்கர், அத்துறையில் நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொணர எடுத்த முயற்சிகள், ஜனநாயகத்தின் மீது பற்றுக்கொண்ட சில நண்பர்களையும், எண்ணிலடங்காத அதிகாரவர்க்க எதிரிகளையும் அவருக்குத் தேடித் தந்தன.
இப்போது "சவுக்கு டாட் காம்' என்கிற இணையதளத்தை நடத்திவரும் சங்கர், தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் சிக்கியது, அதன் தொடர்பாகக் கைது செய்யப்பட்டது, பணியிடை நீக்கம், காவல்
துறையின் சித்திரவதை, தொடர்ந்து நடைபெற்ற வழக்குகள் என்று சங்கர் அடுத்தடுத்து எதிர்கொண்ட அத்தனை பிரச்னைகளுக்கும் சாட்சியாக நானும் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறேன். 
2008-இல் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருந்த எஸ்.கே. உபாத்தியாய் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி. அதனால், அவர் ஆட்சியாளர்களின் அதிருப்திக்கு உள்ளாக நேர்ந்தது. அவரின் உதவியாளராக இருந்த சங்கர், தமிழக அரசியலில் அன்றைய காலகட்டத்தில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல் குறித்தும், முறைகேடுகள் குறித்தும் தெரிந்து வைத்திருந்ததில் வியப்பொன்றுமில்லை. 
உளவுத் துறையின் சட்டவிரோத ஒட்டுக்கேட்பு குறித்து தினமணியின் சார்பில் தகவல்கள் சேகரித்து வந்தோம். அப்போது ஒரு நாள் "ரமேஷ்' என்ற போலிப் பெயரைப் பயன்படுத்தி என்னிடம் தொடர்பு கொண்டார் சங்கர். அவர் உளவுத்துறையில் பணியாற்றுபவர் என்பது அப்போது எனக்குத் தெரியாது. ஆனால், சட்டவிரோத தொலைபேசி ஒட்டுக்கேட்டல் எப்படி நடக்கிறது, யார் இதைச் செய்கிறார்கள், என்ன காரணத்துக்காகச் செய்கிறார்கள், இதில் முதல்வரின் பங்கு என்ன உள்ளிட்ட அத்தனை விவரங்களையும் அவரிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டேன். அடுத்த நாள் "ஒட்டுக் கேட்பில் தனியார் நிறுவனம்' என்ற செய்திக் கட்டுரை தினமணியின் முதல் பக்கத்தில் வெளியானபோது, அது மிகப்பெரிய பூகம்பமாக வெடித்தது.
சங்கர், ஊழலுக்கும் தவறுகளுக்கும் எதிராக நடத்திய, நடத்தும் போராட்டம் அசாதாரணமானது. இதற்காக அவர் காவல் துறையிடம் வாங்கியிருக்கும் அடிகளும் உதைகளும் சொல்லி மாளாது. மிருகத்தனமான தாக்குதல்களுக்கு அவர் ஆளானார் என்பது மட்டுமல்லாமல், காவல்துறை தொடங்கி சைபர் கிரைம் பிரிவு முதல் சி.பி.சி.ஐ.டி வரை ஒரு பெரிய பலம்மிக்க அதிகாரவர்க்கத்தை எதிர்த்து ஒரு சாமானியன் நடத்திய போராட்டம் சங்கருடையது. ஒரு தனி மனிதனுக்கு எதிராக அரசு இயந்திரம் தொடுத்த அசாதாரணமான போரை, சங்கரைத் தவிர இன்னொரு இளைஞரால் துணிவுடன் எதிர்கொண்டு இன்றுவரை தனது லட்சியப் பயணத்தைத் தொடர்ந்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.
"ஊழல் - உளவு -அரசியல்' என்கிற புத்தகம் அதிகாரவர்க்கத்துடனான சவுக்கு சங்கரின் போராட்டத்தை உள்ளது உள்ளபடியே பதிவு செய்திருக்கிறது. "கதையை விஞ்சும் நிஜம், கற்பனைக்கும் எட்டாத சாகசம், உயிரோட்டமுள்ள ஓர் அசாதாரணமான ஆவணம்' என்று அப்புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பது உண்மையிலும் உண்மை.
"பாம்பு சட்டை உரிப்பது போல ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின்போதும் ஆட்சியாளர்களின் கால்களில் விழுந்து மன்றாடி, நல்ல பதவிகளை வாங்கிக்கொண்டு, தாங்களும் கொள்ளையடித்து, தங்களைப் போன்ற சக கொள்ளைக்கார அதிகாரிகளையும் காப்பாற்றி, கூட்டுக்கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள் சில அதிகாரிகள். இந்த நிலை மாறவே இல்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்' என்று சவுக்கு சங்கர் தனது "ஊழல் - உளவு -அரசியல்' புத்தகத்தில் பதிவு செய்திருக்கும் ஒவ்வொரு சம்பவமும் உறுதிப்படுத்துகிறது. 
இந்தப் புத்தகத்தின் கடைசி மூன்று பத்திகளை ஊழலற்ற நல்லாட்சியிலும், ஜனநாயகத்திலும் பற்றுக்கொண்டவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும். இதை முழுவதும் படித்து முடித்தபோது, சங்கருக்கு அவ்வப்போது துணை நின்றது எனக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் தருகிறது. அதற்காகப் பெருமைப்படுகிறேன். 

சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த "தமிழ் நேசன்' முஸ்தபாவைச் சந்திக்க கவிக்கோ மன்றம் சென்றிருந்தபோது, கவிஞர் மு.மேத்தா வந்திருந்தார். அவருடைய "கனவுகளின் கையெழுத்து' என்கிற புத்தகத்தைத் தந்தார். அதில், ஒவ்வொரு கவிதையும், ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சத்தை அள்ளியது. அதிலிருந்த "அடையாளங்கள்' என்கிற கவிதை இது:

ஒரு காலத்தில் கோயில்கள் பின்னொரு காலத்தில் திரைப்படக் கொட்டகைகள்
இப்போதெல்லாம் அரசாங்க மதுக் கடைகள் -

ஊருக்குப் புதிதாய் வந்தவர்களுக்கு வழிசொல்லும்...

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/18/w600X390/sk4.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/mar/18/இந்த-வார-கலாரசிகன்-2882738.html
2882737 வார இதழ்கள் தமிழ்மணி "மாலை மாற்றும்' மரபு! -முனைவர் ச. சுப்புரெத்தினம் DIN Sunday, March 18, 2018 02:05 AM +0530 திருமண நிகழ்வில் தம்பதியர் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொள்ளுதல் தமிழர்தம் மரபாகும். இவ்வாறு செய்வது, அவ்விருவரின் அன்புப் பிணைப்பை உறுதிப்படுத்தவே ஆகும். ஆனால், இல்லற வாழ்வின்பொழுது தன் அன்பு மனைவியிடம் மாலை மாற்றிக்கொண்ட கணவனொருவன், பின்பு தன் வேந்தனாலும் மாலை மாற்றிக் கொள்ளப்பட்டான் என்பது சுவையானதொரு சங்கப்பாடற் செய்தியாகும்.
ஒருமுறை படைத்தலைவன் ஒருவன் பகைவர் கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்டுவரும் பொருட்டு, கரந்தைப் பூச்சூடிப் போருக்குப் புறப்பட்டான். அப்பொழுது, மறக்குடி மகளாகிய அவன் மனைவி, தன் கணவனிடம் கொண்டிருந்த ஆழ்ந்த அன்பினால், தான் கழுத்தில் அணிந்திருந்த மாலையைக் கழற்றி அவனுக்குச் சூட்டி, அவன் மார்பில் தொங்கிய மாலையைத் தான் அணிந்துகொண்டு அவனுக்கு விடைகொடுத்து அனுப்பினாள்.
தூய உடையணிந்து போருக்குப் புறப்பட்ட அவன், நேரே சென்று, தன் தலைவனான வேந்தனைக் கண்டான். இவ்வீரனிடம் மிகுந்த அன்பும் மதிப்புமுடைய அவ்வேந்தன், தான் அணிந்திருந்த மணிமாலையைக் கழற்றி வீரனின் கழுத்தில் அணிவித்து, அவ்வீரன் அணிந்திருந்த ஒற்றைவட மாலையைத் தான் அணிந்து மகிழ்ந்தான். மறவன் வேந்தனிடமிருந்து விடைபெற்றான். இந்நிகழ்வினைக் கண்டு மகிழ்ந்த சிலர், அவ்வீரனின் மனைவியிடம் சென்று அதனை உரைத்து, அவளை மகிழ்வித்தனர். 
போருக்குச் சென்றவன் கடும்போர் புரிகிறான். ஆநிரைகள் பகைவரிடமிருந்து மீட்கப்பட்டு, அவை ஊர் நோக்கி ஓட்டிவரப்படுகின்றன. எதிர்பாராத விதமாகப் பகைவர் எறிந்த வேலொன்று இவனது மார்பில் தைக்க, குருதி பெருகிக் கீழே வீழ்ந்து மாண்டு போகிறான் மறவன். அது காட்டுப்பகுதி. பிணங்களோடு பிணமாகிக் கிடக்கும் இவனைச் சுற்றிப் பருந்து முதலிய பறவைகள் ஒலியெழுப்பி வட்டமிடுகின்றன. போரில் கணவன் மாண்ட செய்தியறிந்து துடிதுடித்துப்போன மனைவியும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டாள். துடியரும் பாணரும் அங்கிருந்தனர். நரிகளோ ஊளையிட்டுக் கொண்டிருந்தன. அந்த நரிகளை வெருட்டி அனுப்பிவிட்டுத் தன் கணவன் பிணத்தருகே அவள் வந்தாள். 
வேலால் புண்பட்டிருந்த அவனது மார்பில், தான் ஏற்கெனவே கேள்விப்பட்டவாறே, பன்மணி விரவித் தொடுக்கப்பட்ட வேந்தனின் வடமாலை கிடப்பதைக் கண்டாள். "வேந்தன் சிறப்பு செய்தாலும் செய்யாவிட்டாலும், பயன் கருதாமல் போரிட்டு வீரமரணம் எய்த விரும்புபவன் என் கணவன். அத்தகைய மறவனுக்குத்தான் அன்பு மிகுதியால் வேந்தன் தனது மாலையை அணிந்து, இவனது மாலையைத் தனது கழுத்தில் அணிந்து கொண்டான்; என்னைப் போலவே வேந்தனும், என் கணவனாகிய இவ்வீரன் மீது பேரன்புடையவன். ஆதலால், இவனது இறப்புச் செய்தி கேட்ட வேந்தனும், என்னைப் போலவே மிகவும் துன்புறத்தான் போகிறான்' என்று வாய்விட்டு அரற்றினாள் அவ்வன்பு மனைவி. அச்செய்தியினைக் கூறும் நெடுங்களத்துப் பரணர் என்ற புலவரின் பாடல் இது:

"சிறாஅஅர் துடியர் பாடுவன் மகாஅஅர்
தூவெள் ளறுவை மாயோற் குறுகி 
இரும்புட் பூச லோம்புமின் யானும் 
விளரிக் கொட்பின் வெண்ணரி கடிகுவென்
என்போற் பெருவிதுப் புறுக வேந்தே
கொன்னுஞ் சாதல் வெய்யோற்குத் தன்றலை 
மணிமருண் மாலை சூட்டி யவன்றலை
ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே' (புறநா: 291)


இத்தகைய குறிப்புகளுள், வேப்பிலை செருகுதல், காஞ்சிப்பண் இசைத்தல், ஐயவி புகைத்தல் என்னும் குறிப்புகளைப் புறநானூறு இலக்கியத்தின் மற்றொரு பாடலிலும் (296) காணமுடிகிறது. 
மதிப்பு மற்றும் அன்பின் ஆழத்தை வெளிப்படுத்த ஒருவருக்கொருவர் மாலைமாற்றிக் கொள்ளும் சங்ககால மாந்தரின் மாண்பு படித்துச் சுவைத்து மகிழத்தக்கது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/18/w600X390/sk3.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/mar/18/மாலை-மாற்றும்-மரபு-2882737.html
2882736 வார இதழ்கள் தமிழ்மணி சகுந்தலையும் நற்றிணைத் தலைவியும்! -சக்திமுரளி DIN Sunday, March 18, 2018 02:04 AM +0530 மகாகவி காளிதாசர் எழுதிய சாகுந்தலத்தின் பிரகடனம் இது: செடிகள் கொடிகள் மரங்கள் எல்லாரும் நம் தேசத்தின் குடிகள். இந்த நாட்டின் குடிமக்கள் என்பதால், செடிகளும் கொடிகளும் மரங்களும் நமது சகோதர சகோதரிகள். இது சாகுந்தலத்தின் காவியப் பிரகடனம்; நம் தேசத்திற்கான சாத்திரப் பிரகடனம்; சாத்தியப் பிரகடனம். 
கானகத்தின் வளர்ந்த பூங்கொடிகளுக்கு நடுவில், நடந்து கொண்டிருக்கும் பூங்கொடிகளாய் சகுந்தலையும் அவளது தோழியரும். அது தவக் காடு; முனிவர்களின் தவக்கூடு; மோனப் பூக்களை வார்த்தை வண்டுகள் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. நந்தவனத்தின் கொடிகள் வேரைப் பெயர்த்துவிட்டு, நடந்து வருவதைப் போல, அசைந்து இசைந்து நடந்து செல்லும் காட்சி. சகுந்தலை தம் தோழியருடன் சேர்ந்து அங்கே செடி கொடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கிறாள். 
இலைகளின் சலசலப்பும், துளிர்களின் தலையசைப்பும், கை நீட்டி நம்மோடு பேசும் மெüன மொழி; அந்த மெüன ரீங்காரத்தில், நம் ஆன்ம லயம் பேசும் ! அந்த சகுந்தலை, மாமரத்துடன் ஒன்றி நிற்பது, காதலனை அண்டி நின்றதைப் போல இருக்கிறது. அப்போது, சகுந்தலை, "நம் தோட்டத்தின் செடி கொடிகள், வெறும் செடிகொடிகள் அல்ல, எல்லாரும் எனது சகோதரிகள்' என்கிறாள். இந்தச் சொற்கள் சகுந்தலையின் சொற்களாய் காளிதாசன் நமக்குச் 
சொல்வது.
தன்னழகால் தன்னைச் சேர்ந்ததையெல்லாம் அழகு செய்த சகுந்தலை, இந்தச் சொற்களைச் சொல்கிறபோது, எல்லாவற்றையும் விட மேம்பட்டதாய், அவளது உள்ளத்தின் அழகு, எண்ணத்தின் அழகு, சிந்தை செயலின் அழகு, எல்லாமாய் சகுந்தலை ஒரு பேரழகியாகி விடுகிறாள்.
இயற்கையுடன் இயைந்த (உறவு) வாழ்க்கை வாழ்பவளாய் சகுந்தலையைக் காளிதாசன் நம் கண்முன் உலவ விடுகிறான்; வீசும் காற்றினை, மூச்சுக்குள் உயிராய் சேர்க்கும்பொழுது, அதை நேசக்காற்றாய் உணர்வுக்குள் கலந்து மூச்சிழுக்கும் அற்புதத் தவ வாழ்க்கை!
இப்படி, சகுந்தலையின் சகோதரிகளாய் அந்தத் தவக்காட்டு வனச்செடி கொடிகளைக் காளிதாசன் நம் மனத்தில் இசைக்கும்பொழுது, சங்கத் தமிழின் நற்றிணைப் பாடல் காட்சி ஒன்று இதற்கு மேலும் மெருகூட்டுகிறது.

நற்றிணைக் காட்சி:

இந்த நற்றிணைக் காட்சி (விளையாடு ஆயமொடு வெண்மணல்-172) பலரும் படித்து ரசித்ததுதான். இது தோழி கூற்றாய் ஒலிக்கிறது. அதாவது, தலைவியைக் காண்பதற்குப் பகற்குறி வந்து செல்லும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது (விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு குறிப்பால் உணர்த்துவது).
"நாங்கள் விளையாடுகின்ற தோழியர் கூட்டத்தோடு கடற்கரையில் வெண்மையான மணலில் புன்னை விதையை வைத்து மணலில் அழுத்தி, விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது மழை வந்தது. விளையாட்டை முடித்து வீட்டிற்குச் சென்றுவிட்டோம். நான்கு நாள்கள் தொடர்ந்து மழை பெய்தது. ஐந்தாம் நாள் அதே இடத்திற்கு விளையாடச் சென்றபோது, அங்கு ஒரு செடி முளைத்திருந்தது. நாங்கள் மணலில் அழுத்தி விளையாடிய புன்னை விதை, புன்னைச் செடியாகிவிட்டது. அதனை எடுத்துக் கொணர்ந்து என் தாய் இனிதாக வளர்த்தாள். அது வளர்ந்து பெரிய மரமானது. என் தாய் அப்புன்னை மரத்தைத் தன் முதல் மகளாகக் கருதினாள். என்னிடமும் புன்னை மரம் உன் தமக்கை என்று கூறினாள். என்னுடைய காதலன் அப்புன்னை மரத்தின் அடியில் காதல் செய்ய முயன்றபோது, நான் "வேறு மரநிழலுக்குச் செல்வோம், இங்கு என் தமக்கை நிற்கின்றாள், அதனால் உம்மோடு பேசுவதற்கு எனக்கு வெட்கமாக இருக்கிறது' என்று தலைவி கூறுவதாகக் கூறி, பகற்குறி வருவதைத் தடுத்து வரைவு கடாவுகிறாள் தோழி.
உன்னிலும் சிறந்த தங்கை இவள் (நுன்னினும் சிறந்த நுவ்வை) என்று அன்னை அந்தப் புன்னை மரத்தைச் சொல்கிறாள். செடி கொடிகளை சகோதர சகோதரியாய் வாழ்வாதாரப் பிரகடனம் செய்யும் இந்தச் சொற்கள், காளிதாசரின் கற்பனை அல்ல; வாழ்க்கை வழி; வாழும் நெறி. வழிவழியாய் வரும் நம் தேசக் காவியத்தின் நேச நெறி.
பகவான் அரவிந்தர், "இந்தப் பாரத தேசம் என்பது, வெறும் இடம், மண், வெறும் நீள் அகலம் இல்லை. இந்த மரங்களையும் ஆறுகளையும் வனங்களையும் உள்ளடக்கிய உயிரோட்டம்' என்கிறார்.
மகாகவி பாரதி சொன்ன, "நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்' எனக் காலங்காலமாய்த் தொடரும் பிரகடனம்! அது நம் தமிழ் இலக்கியத்தின் சொல், செயல், வாக்கு சங்கமித்த சத்தியப் பிரகடனம்!

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/18/w600X390/sk2.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/mar/18/சகுந்தலையும்-நற்றிணைத்-தலைவியும்-2882736.html
2882735 வார இதழ்கள் தமிழ்மணி கவி பாடலாம் வாங்க - 16 "வாகீச கலாநிதி' கி.வா. ஜகந்நாதன் DIN Sunday, March 18, 2018 02:03 AM +0530 வெண்பா வகை-1

தமிழில் உள்ள பாக்கள் நான்கு வகை. ஆதலின் புலவர்கள் நாற்கவிராசர் என்று பாராட்டுவார்கள். நாற்கவிராச நம்பி என்ற புலவர் ஒருவர் அகப்பொருள் விளக்கம் என்ற நூலை இயற்றியிருக்கிறார். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற நான்கு பாக்களிலும் முதலில் நிற்பது வெண்பா. அதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது வெண்டளை.
பன்னிரண்டாவது கட்டுரையில் ("கவி பாடலாம்' மூல நூலில் 12ஆவது கட்டுரை. அது, இத்தொடரில் 13ஆவது கட்டுரை) நேரிசை வெண்பாவின் இலக்கணத்தைப் பார்த்தோம். இப்போது அதன் வகைகளையும் மற்ற வெண்பாக்களையும் கவனிப்போம்.

குறள் வெண்பா

இரண்டு அடிகளை உடையதாக வருவது குறள் வெண்பா. வெண்பாக்களுக்குரிய பொது இலக்கணங்களாகிய 1. வெண்டளை அமைதல், 2. ஈற்றடி முச்சீராக இருத்தல், 3. மற்ற அடிகள் நாற்சீராய் வருதல், 4. ஈற்றுச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளில் ஒன்றைப் பெற்று வருதல் என்பவை எல்லா வெண்பாக்களிலும் இருக்க வேண்டும். ஆகவே, குறள் வெண்பாக்களில் முதலடி நாற்சீராகவும் இரண்டாம் அடி முச்சீராகவும் வரும்.
இவ்வாறு வரும் குறட்பாக்களை எதுகையை நோக்கி இரண்டு வகையாகப் பிரிப்பார்கள். இரண்டு அடிகளும் ஓரெதுகையாக வரலாம்; அப்படி இல்லாமலும் வரலாம். எதுகை வேறுபாட்டை விகற்பம் என்று குறிப்பது மரபு. ஒரே எதுகையாக அமைந்தால் அது ஒரு விகற்பம் என்றும், ஒவ்வோரடியும் வெவ்வேறு வகையில் இருந்தால் இரு விகற்பம் என்றும் கூறுவர்.

"அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு'

என்ற குறளில் இரண்டடியும் ஒரே எதுகையாக வந்தன. அகர-பகவன் என்ற முதற் சீர்கள் ஓரெதுகையாக நிற்பதைக் காண்க. இது ஒரு விகற்பக் குறள் வெண்பா.

"உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள்
பெருந்தேர்க்கச்சாணி யன்னா ருடைத்து'

இந்தப் பாட்டின் இரண்டடியிலும் ஒரே எதுகை அமையவில்லை. இரண்டும் வேறு வேறாக உள்ளன. இது இருவிகற்பக் குறள் வெண்பா.
திருக்குறளில் இந்த இருவகைப் பாடல்களும் வருவதைக் காணலாம். குறள் வெண்பாவினால் அமைந்த நூல்களில் சிறந்ததாதலின் வேறு பெயர் அமையாமல் திருக்குறள் என்ற பெயரே, திருவள்ளுவர் இயற்றிய நூலுக்கு அமைந்தது. ஒüவையார் பாடிய ஒüவை குறள் என்ற நூலும், திருவருட் பயன் என்ற நூலும், வேறு சில நூல்களும் முழுவதும் குறட்பாக்களால் அமைந்தவையே. பொருள் செறிவு நிரம்பியதாக இருந்தால்தான் குறளுக்கு அழகு. இரண்டடி வெண்பாவாகக் கணக்குப் பார்த்து எழுதி விட்டால், இலக்கணப்படி அது குறளாக இருக்கலாம்; ஆனாலும் சிறந்த குறள் என்று சொல்ல இயலாது. எல்லா வகையாலும் சிறப்புடைய திருக்குறளைப் போலக் குறட்பாவிலும் நூல் அமைவது மிகவும் அரிது.

நேரிசை வெண்பா

நேரிசை வெண்பாவின் இலக்கணத்தை முன்பு கவனித்தோம். அந்தப் பாவில் எதுகையை நோக்கி இரண்டு வகை உண்டு. முதல் இரண்டடியும் தனிச் சொல்லும் பின் இரண்டடியும் யாவும் ஒரே எதுகையாக அமைந்தால் ஒரு விகற்ப நேரிசை வெண்பா என்று பெயர் பெறும்.

"முந்தையோர் பாடிவைத்த முத்தமிழ்நூல் தம்மையெல்லாம்
அந்துமுதற் பூச்சி அழிக்காமல் - வந்தெடுத்துத்
தந்தபெரு வள்ளல் தமிழ்ச்சாமி நாதகுரு
செந்தமிழ்த்தாய் பெற்றமணிச் சேய்'.

இந்தப் பாட்டில் எல்லாம் ஓரெதுகையாக அமைந்திருப்பதால் இது ஒரு விகற்ப நேரிசை வெண்பா ஆகும். முதல் இரண்டடியும் தனிச் சொல்லும் ஓரெதுகையாகவும், பின் இரண்டடிகள் ஓரெதுகையாகவும் வந்தால் அது இருவிகற்ப நேரிசை வெண்பா என்று பெயர் பெறும்.

"காமர் கயல்புரளக் காவி முகைநெகிழத்
தாமரையின் செந்தேன் தளையவிழப் - பூமடந்தை
தன்னாட்டம் போலுந் தகைமைத்தே சாகரஞ்சூழ்
நன்னாட்டின் முன்னாட்டும் நாடு'

இந்த நளவெண்பாப் பாட்டு இருவிகற்ப நேரிசை வெண்பா. இவ்வாறன்றி வேறு எப்படி எதுகை மாறி வந்தாலும் அது நேரிசை வெண்பா ஆகாது; இன்னிசை வெண்பா என்னும் பெயர் பெறும்.

(தொடர்ந்து பாடுவோம்...)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/18/w600X390/sk5.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/mar/18/கவி-பாடலாம்-வாங்க---16-2882735.html
2882734 வார இதழ்கள் தமிழ்மணி பழமொழி நானூறு: முன்றுறையரையனார் Sunday, March 18, 2018 02:02 AM +0530 வைத்ததனை வைப்பென் றுணரற்க தாமதனைத்
துய்த்து வழங்கி இருபாலும் - அத்தகத்
தக்குழி நோக்கி அறஞ்செய்யின் அஃதன்றோ
எய்ப்பினில் வைப்பென் பது. (பாடல்-37)

தான் தேடி வைத்த பொருளைப் பின்னர் வந்து பயன்படுவதாகக் கருதற்க. தாம் அப்பொருளை நுகர்ந்தும் பிறருக்குக் கொடுத்தும், இருமைக்கும் அழகுண்டாகுமாறு செய்யத்தகுந்த இடம் நோக்கி அறங்களைச் செய்யின், தளர்ந்த காலத்து உதவும் பொருள் என்பது அதுவன்றோ? (க-து.) அறமே எய்ப்பினில் வைப்பாம். "எய்ப்பினில் வைப் பென்பது' என்பது பழமொழி.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/18/w600X390/sk1.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/mar/18/பழமொழி-நானூறு-முன்றுறையரையனார்-2882734.html
2878287 வார இதழ்கள் தமிழ்மணி இந்த வார கலாரசிகன் DIN DIN Sunday, March 11, 2018 02:33 AM +0530 கடந்த வியாழக்கிழமை நெல்லையில், தினமணியின் "மகளிர் மணி' சார்பில் நடந்த "மகளிர் மணி பெண் சாதனையாளர் விருது' வழங்கும் விழாவிற்கு நெல்லையிலுள்ள குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களும் படைப்பாளிகளும் வந்திருந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. நிகழ்ச்சி முடிந்தபோது கவிஞர் இரா. நாறும்பூநாதன், நண்பர் எம்.எம்.தீன் உள்ளிட்டோர் வெளிக்கொணர்ந்திருக்கும் "காணிநிலம்' என்கிற காலாண்டு இலக்கிய இதழை எனக்குத் தந்தார்கள். தனிச்சுற்றுக்கு மட்டுமாக நெல்லையிலுள்ள பத்து பன்னிரண்டு படைப்பாளிகள் ஒன்று சேர்ந்து, மாதம்தோறும் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பங்களிப்பாக நல்கி, கூட்டுமுயற்சியில் வெளிக்கொணரும் காலாண்டு மாத இதழ்தான் "காணிநிலம்'. அந்தப் பத்திரிகையின் இலக்கு என்ன என்பதைத் தலைப்பிலேயே அவர்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இது குடியிருக்கும் காணிநிலமல்ல, பயிர் வளர்க்கும் காணி
நிலமல்ல, இவர்கள் கொண்டுவந்திருப்பது சொல் விளையும் காணிநிலம். 
முதல் இதழைப் புரட்டினால் அதில் முதலில் காணப்படுவது எம்.எம். தீன் எழுதிய "அபரஞ்சி' என்கிற சிறுகதை. மொழி
பெயர்ப்புக் கதைகள், ஏராளமான கவிதைகள், கட்டுரைகள் என்று ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகையின் அத்தனை அம்சங்களுடனும் ஓர் அற்புதமான இலக்கியக் காலாண்டிதழ் நெல்லைத் தரணியிலிருந்து வெளிவந்து கொண்டிருப்பதைப் பார்த்தபோது, எனக்கு ஒரே பரவசம்.
வெள்ளிக்கிழமை சென்னை திரும்புவதற்கு முன்பு நான் அவர்களைச் சந்திக்க வேண்டும் என்கிற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தேன். ஒரு சில நிமிடங்களில், அவர்களே என்னைத் தேடி நெல்லை அலுவலகம் வந்துவிட்டார்கள். அந்த இலக்கிய ஆர்வம் கொண்ட படைப்பாளிகளுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது அது ஏற்படுத்திய தாக்கம் சொல்லி மாளாது.
தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் இதுபோன்ற சிற்றிதழ்கள்தாம் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன என்கிற என்னுடைய நீண்ட நாள் கருத்துக்கு வலு சேர்க்கிறது "காணி நிலம்'. இதற்கு ஆயுள் சந்தா வெறும் 1000 ரூபாய்தான். நான் ஆயுள் சந்தாதாரராகிவிட்டேன், நீங்கள்?


ஒருவகையில் பார்த்தால் சர்க்கரை நோய் என்பது ஒரு வரம் என்றுதான் தோன்றுகிறது. சர்க்கரை நோய் வந்துவிட்டால் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, உடல் நலனில் அக்கறை என்று மிகவும் கவனமாக இருக்கத் தொடங்கிவிடுகிறோம். ஆண்டுக்கு இருமுறை இல்லாவிட்டாலும் ஒரு முறையாவது முழுமையான உடல் பரிசோதனை செய்து கொள்கிறோம். இது எனது தனிப்பட்ட அனுபவம்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு அருணா சர்க்கரை நோய் சிகிச்சை மையத்தின் மருத்துவரும் எனது சர்க்கரை நோய் ஆலோசகருமான ஏ.பன்னீர் செல்வத்திடம் பரிசோதனைக்காகச் சென்றிருந்தேன். அங்கே வரவேற்பறையில் என்னை எதிர்கொண்டது ஜெயமோகன் எழுதிய "அறம்' சிறுகதைத் தொகுப்பு. ஸ்ரீகலைமகள் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 18ஆவது ஆண்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராகச் சென்றிருந்த மருத்துவர் பன்னீர் செல்வத்துக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்த புத்தகம் அது. ஏறத்தாழ 6 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கதைகள், ஜெயமோகன் இணையதளத்தில் தொடர்ச்சியாக எழுதி வந்தவை. அவ்வப்போது அதில் ஒன்றிரண்டு கதைகளை நான் வாசித்திருக்கிறேனே தவிர, இந்தப் புத்தகத் தொகுப்பை முழுமையாகப் படிக்க எனக்கு இதுவரை நேரம் வாய்க்கவில்லை.
மருத்துவர் பன்னீர் செல்வத்திடம் விரும்பிக் கேட்டு "அறம்' புத்தகத்தை இரவல் வாங்கினேன். நெல்லைக்கு "மகளிர் மணி' விழாவுக்கு கன்னியாகுமரி விரைவு வண்டியில் சென்றுவந்ததில் உபயோகமாக நான் செலவழித்த பொழுது, இந்தப் புத்கத்தைப் படித்து முடித்தது. இந்தப் புத்தகத்தில் இடம்பெற்ற கதைகளில் பல உண்மை ஆளுமைகள் வலம் வருகிறார்கள். அவர்கள் குறித்த குறிப்பை ஜெயமோகன் இறுதியில் இணைத்திருக்கிறார்.
ஜெயமோகன் குறிப்பிட்டிருக்கும் ஆளுமைகளில் திருவட்டாறு சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் மறைந்த ஜெ.ஹேமசந்திரன், எழுத்தாளர் கோமல் சுவாமிநாதன், பூமேடை ராமையா ஆகிய மூவரும் எனக்குப் பரிச்சயமானவர்கள்.
நான் சாவியில் உதவி ஆசிரியராக இருந்தபோது சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஹேமசந்திரனுடன் நெருக்கமாகவே பழகி உரையாடியிருக்கிறேன். இன்றுவரை அவரைப் போல கொள்கைப்பிடிப்புள்ள, அப்பழுக்கில்லாத சட்டப்பேரவை உறுப்பினரை நான் பார்த்ததில்லை. ஹேமசந்திரனின் குணாதிசயங்களை, ஜெயமோகன் விவரித்திருப்பது என் நினைவுகளை மீண்டும் எண்பதுகளுக்குப் பின்னோக்கி இழுத்துச் சென்றது. கோமல் சுவாமிநாதனுடன் கவிஞர் இளையபாரதி, நண்பர் குடந்தை கீதப்பிரியன் ஆகியோர் போல நான் நெருங்கிப் பழகியவன் அல்ல. 
ஆனால், அவரது ரசிகனாக எட்டி நின்று பார்த்து வியந்தவன்.
நாகர்கோவில் பூமேடை ராமையாவைப் பற்றி குமரி மாவட்டத்துக்கு வெளியே யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் ஒரு தனிமனிதப் போராளி. ஜெயமோகன் குறிப்பிட்டிருப்பது போல வெள்ளைநிற கதர் காந்தி தொப்பி, கதர் ஜிப்பா வேட்டியுடன் ஜிப்பாவின் பையில் நான்கைந்து 
ஃபவுண்டன் பேனாக்கள், குறிப்பேடு, கண்ணாடிக் கூடு என்று பவனிவரும் பூமேடை ராமையா, ஜெயமோகனைப் போலவே என்னையும் கவர்ந்த ஆளுமை. 
அவர் பெரிய தலைவரல்ல, அரசியல் இயக்கம் சார்ந்தவர் அல்ல, தனிமனித இயக்கம். அதுதான் பூமேடை ராமையாவின் சிறப்பு. 
ஒரு துருப்பிடித்த சைக்கிள், சைக்கிளின் பின்பக்கம் அகலமான ஒரு மேஜை. சைக்கிளின் முன்பக்கம் வலது கைப்பிடியில் ஒரு பழங்கால ஒலிபெருக்கி, இடது கைப்பிடியில் ஒரு கேஸ் லைட். இதைத் தள்ளிக்கொண்டு வந்து ஸ்டாண்டு போட்டு நிறுத்தி, நாகர்கோவில் நகராட்சி மைதானத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பூமேடை ராமையா கூட்டம் போடுவார். அந்தக் கூட்டத்துக்கு மக்களை அழைக்க அவரே போஸ்டர் ஒட்டுவார். ஒலிபெருக்கி முன்னால் நின்று "வந்தே மாதரம் வந்தே மாதரம்' என்று பலமுறை உரக்கக் கூவுவார். அதற்குப் பிறகு நாட்டு நடப்பு குறித்து தனது கருத்துகளை ஆணித்தரமாகப் பேசுவார். அவரிடம் கேள்வி கேட்டால் பதில் கூறுவார்.
பல ஆண்டுகள் தொடர்ந்து இதுபோல அந்தத் தனிமனித இயக்கம் நாகர்கோவிலில் நடைபெற்று வந்தது. பலரும் அவரைக் கோமாளியாகப் பார்த்தார்கள். ஆனால், ஐந்தாறு முறை மட்டுமே அவரது கூட்டத்திற்கு 20 வயதில் சென்றிருந்த எனது மனதில் சமுதாயச் சிந்தனையை விதைத்ததில் பூமேடை ராமையாவுக்கு நிச்சயமாகப்
பங்குண்டு. பூமேடை ராமையா குறித்து ஜெயமோகன் எழுதியிருந்ததைப் படித்துவிட்டு நான் நெகிழ்ந்து போய் கண்மூடி அமர்ந்திருந்தேன். 
அடிக்கடி என் மனது பூமேடை ராமையா என்னவானார் என்று கேட்டவண்ணம் இருந்தது. அதற்கான பதிலை ஜெயமோகன் அளித்ததற்கு அவருக்கு நன்றி! 


அரியலூர் அரசுக் கலைக்கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுபவர் கவிஞர் ப. செல்வகுமார். இவரது கட்செவி அஞ்சல் பதிவு இந்தக் கவிதை. கவிதையின் தலைப்பு படித்துக் கிழித்ததல்ல, "கிழித்துப் படித்தது'!

படிப்பை நிறுத்தி
பொட்டலம் மடிக்கப் போன
மளிகைக் கடையில்
என் கைக்கு வந்தது
என் பெயர் எழுதப்பட்ட
போன வருடத்து புத்தகம்!

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/11/w600X390/tm5.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/mar/11/இந்த-வார-கலாரசிகன்-2878287.html
2878286 வார இதழ்கள் தமிழ்மணி பெயர் சுருங்கியது  -பனசை மு. சுவாமிநாதன் DIN Sunday, March 11, 2018 02:32 AM +0530 தமிழில் சிற்றிலக்கியங்கள் படைத்த கவிஞர்களுள் குமரகுருபர 
சுவாமிகள் குறிப்பிடத்தக்கவர். "நான் திருவாரூர் 
என்னும் ஊரை நெருங்கினேன்; என் பெயர் சுருங்கிவிட்டது' என்கிறார்.
மேலோட்டமாகப் பார்த்தால் இதன் மெய்ப்பொருள் விளங்காது.

தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிகரின் சீடர்தான் குமரகுருபரர். அவர் தன் குருநாதரைப் பார்க்க அவர் இருக்கும் திருவாரூர் செல்கிறார். ஊர் எல்லை வந்ததும் தன் பெயர் சுருங்கி விட்டது என்கிறார். "சீவன்' என்னும் நிலையில் உள்ள சீடன், குருநாதர் இருக்கும் ஊர் எல்லையை அடைந்ததும் "சிவன்' ஆகிய தன் தன்மையை அடைந்துவிட்டது என்பதையே அதாவது, சீவன் சிவனாகிவிட்டது என்பதையே இவ்வாறு சூட்சுமமாகக் குறிப்பிட்டுள்ளார்.

சீவன் என்பதில் "சீ' என்ற நெட்டெழுத்துக்கு 2 மாத்திரை அளவு. சிவன் என்பதில் "சி' என்ற குறிலுக்கு 1 மாத்திரை அளவு. இதையே சிலேடை நயம்பட,

"நற் கமலை ஊரில் குறுகினேன்
ஒரு மாத்திரை அளவு பேரில் குறுகினேன்' 

என்று, "சீவன்', "சிவன்' ஆனதையே "பேர் சுருங்கியது' என்று பாடியுள்ளார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/11/w600X390/tm3.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/mar/11/பெயர்-சுருங்கியது-2878286.html
2878285 வார இதழ்கள் தமிழ்மணி நூற்றெட்டுத் திருப்பதிப்ரபாவ கீர்த்தனைகள் -முனைவர் க. ரத்னம் DIN Sunday, March 11, 2018 02:31 AM +0530 'தமிழ்த் தாத்தா' உ.வே.சா. முதன்முதலாக வெளியிட்ட சங்கத்தொகை நூல் பத்துப்பாட்டு. அது வெளியானது 1889-இல். அதற்குப் பொருள் கொடுத்து உதவிய கனவான்களைப் பற்றி அதன் முன்றுரையில், "திருவாவடுதுறை யாதீனத்து அம்பலவாண தேசிகர், மதுரை டெப்டி கலெக்டர் தில்லை நாயகம் பிள்ளை, தஞ்சாவூர் வக்கீல் சீனிவாச பிள்ளை, சிறுவயல் ஜமீன்தார் முத்துராமலிங்கத் தேவர்' எனப் பட்டியலிட்டுள்ளார். முற்பதிப்பில் வெளியாகியுள்ள இத்தகவல் இன்றைய பதிப்புகளில் இடம்பெறவில்லை.

பத்துப்பாட்டு வெளியாவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் 1884-இல் ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்தருளிய "நூற்றெட்டுத் திருப்பதிப்ரபாவ கீர்த்தனைகள்' என்ற வேலூர் - அருகந்தம்பூண்டி கிருஷ்ணஸ்வாமிதாஸரால் பாடப்பெற்ற நூல் அச்சாகியுள்ளது. அதன் பின்னர் இணைப்பாக அந்த நூல் வெளியாக ஒரு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை பொருளுதவி செய்த 60 பேரின் பட்டியல் வெளியாகியுள்ளது. அவர்கள், உ.வே.சா.வுக்கு உதவியவர்களைப் போல செல்வவளம் படைத்தவர், கனவான்கள் அல்லர் என்பதன் மாதிரிக்கான சில பெயர்கள் வருமாறு:

1. காரை பென்ஷன் திரகர் எத்திராஜ் முதலியார் ரூ.3
2. 14ஆவது பட்டாளம் சுபேதார் சுப்பைய நாய்க்கர் ரூ.2
3. காட்பாடி உப்பு மண்டி கோவிந்து முதலியார் ரூ.1
4. திருப்பத்தூர் ஸ்டேசன் மாஸ்டர் நாராயணசாமி பிள்ளை ரூ.1
5. திருவல்லிக்கேணி பெரியாழ்வார் சபை பார்த்தசாரதி நாய்க்கர் ரூ.1
6. திரிசிரபுரம் உறையூர் பென்ஸன் சுபேதார் கபிஸிராய பிள்ளை ரூ.5
அந்தக் காலகட்டத்தில் பொதுமக்களிடம் சிறிய தொகையை நன்கொடையாகப் பெற்று இதுபோன்று சில நூல்கள் வெளியாகி உள்ளதை இது தெரிவிக்கிறது. தமிழ் நூல் பதிப்பு வரலாற்றில் இடம்பெற, ஆய்வாளர்கள் மேலும் முயற்சி மேற்கொண்டால், புதைந்து கிடக்கும் பல உண்மைகள் வெளிவரலாம்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/11/w600X390/tm2.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/mar/11/நூற்றெட்டுத்-திருப்பதிப்ரபாவ-கீர்த்தனைகள்-2878285.html
2878284 வார இதழ்கள் தமிழ்மணி வள்ளுவர் குறளும் ஒüவைக் குறளும்! -முனைவர். பெ. பகவத்கீதா DIN Sunday, March 11, 2018 02:30 AM +0530 ஒளவையும் திருவள்ளுவரும் துலாக்கோலில் எடையிட்டுக் காணமுடியாத குறள் ஞானியர். இருவரின் சிந்தனைகளும் ஊழி கடந்து நின்று மனித அறிவிற்கு இயற்கை உரமிடும் வளப்பம் கொண்டவை. அவ்விருவரின் சிந்தனைக் கடலில் ஒருசில துளிகளைப் பருகி மகிழ்வோம்.

ஒளவையின் குறள் மூலம்:

ஒளவையின் குறள் என்னும் நூல் வீட்டு நெறிப்பால், திருவருட்பால், தன்பால் ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டு ஒவ்வொரு பகுதியிலும் 10 அதிகாரங்களையும், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 குறட்பாக்களையும் கொண்டு மொத்தம் 300 குறட்பாக்களோடு ஒரு குறட்பாவையும் (கடவுள் வாழ்த்து) கொண்டு விளங்குவது.
திருவள்ளுவரின் திருக்குறளும் அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பகுதிகளைக் கொண்டு 133 அதிகாரங்களில் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் பத்து குறட்பாக்களாக 1330 குறட்பாக்களைக் கொண்டு விளங்குகிறது. திருவள்ளுவர் முழுமையாக எடுத்துரைக்காத ஒரு பகுதி ""அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயனே'' (பவணந்தி முனிவர்) என்பதற்கேற்ப வீட்டின்பத்தைக் கூறாது விட்டார். அந்த வீட்டின்பத்திற்கான திறவுகோல்களை ஒளவைக் குறள் என்னும் நூலின் வழி எடுத்துரைத்து, நூற்பயனுக்கு முழுமை தரும் ஓர் ஆக்க முயற்சி இது. 

எழுமை, எழுபிறப்பு:

அறத்துப்பாலில் அடக்கமுடைமை என்னும் அதிகாரத்திலும்(126) பொருட்பாலில் கல்வி என்னும் அதிகாரத்திலும்(398), பொருட்பாலில் பேதைமை என்னும் அதிகாரத்திலும்(835) குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு சொல் எழுமை என்பது. இது, ஏழுபிறவி - எழுபிறவி என்னும் பொருளில் அமைவது.
அறத்துப்பாலில் மக்கட்பேறு(62), செய்ந்நன்றி அறிதல்(107) அதிகாரங்களில் எழுபிறப்பு என்னும் சொல் இடம்பெற்றுள்ளது. இங்கு பிறப்பு என்னும் சொல்லை முதன்மைப்படுத்தவில்லை. எழுபிறப்பு, எழுமை ஆகிய சொற்களுக்கான உட்பொருளை "ஒளவைக் குறள் நூல் வழி ஒப்பிட்டுப் பார்க்கலாம்.


எழுமை, எழுபிறப்பு ஆகியன மனிதப் பிறவியின் முற்பிறவி, இப்பிறவி, வருபிறவி என்ற பொருளிலேயே குறிக்கப்பெற்றிருப்பது திருக்குறளுக்கு உரை எழுதிய உரையாசிரியர்களின் கூற்றாகும். மேலும், திருவள்ளுவர் "வீடு' என்னும் சொல்லையும் குறிப்பிடவில்லை. மாணாப்பிறப்பு, வேண்டா பிறப்பு, வானத்தவர்க்கு, தேவர்க்கு போன்ற சொற்களையே குறிப்பிட்டுள்ளார். 
திருக்குறளின் உரை விளக்கத்திலேயே வீடு என்னும் சொல் குறிக்கப் பெற்றுள்ளது. அவ்வாறிருப்பின் எழுமை, எழுபிறப்பு ஆகிய சொற்கள் எதனைக் குறிப்பிடுகின்றன என்னும் கேள்வியை முன்வைத்து அதற்கான பதிலை ஒளவைக் குறள் என்னும் நூலின் வழியும் உரை விளக்கத்தின் வழியும் எடுத்துரைப்பதிலிருந்து அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் நூலிற்கு இலக்கணமாகக் கொள்ளும் நிலையில், திருக்குறள் நூலின் முழுமைத்தன்மை ஒளவைக் குறள் என்னும் நூலோடு இணைத்தே பார்க்கும் நிலையில் முழுமை அடைவதாகக் கொள்ளலாம்.

எழுமையும் ஒளவைக் குறளும் :

மனித வாழ்க்கையின் மேம்பாடு அவன் உடல், மனம், அறிவு, உயிர் சார்ந்ததே. அதனைப் பிரித்தல் என்பது இயலாது. உயிர் என்று தன் கூட்டை விட்டுப் பிரிகின்றதோ அன்று உடம்பு வெறும் கூடு.

"குடம்பைத் தனித்தொழியப் புள்பறந்தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு' (338)

அக்கூட்டில் உறையும் உயிர்,

"சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்ற
வகைதெரிவான் கட்டே உலகு' (27)
என்னும் திருக்குறளின் வழி சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய ஐம்புலனின்பத்தைத் தரும் நாக்கு, கண், மெய், செவி, மூக்கு ஆகிய ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி, நெறிப்படுத்தும் பொழுதே அவன் உலகு என்ற ஒற்றை கூட்டுக்குள் அடக்க முடியும். ஒளவையின் குறளும்,

"ஓசை பரிசமுருவஞ் சுவை நாற்றம்
ஆசை படுத்து மளறு' (2)

என்று குறிப்பிட்டுள்ளார். ஐம்பூதத்தின் சூட்சும சக்திகளாக விளங்கும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவை மனத்தில் ஆசைகளோடு தொடர்புப்படுத்தும் பொழுது மனதானது சேறாகும் என்று கூறுவதில் ஐம்புலன் இன்பத்தைக் கூட்டுவிப்பதும் சேர்ப்பதும் பெருக்குவதும் மனத்தின் செயல்பாடுகளாகின்றன. அதனை வேரறுத்திடின் கட்டுப்படுவது உலகு மட்டுமன்று, அவன் உயிர் உலகும் கட்டுப்படும் என்னும் குறிப்பினைத் தந்துள்ளார்.

ஒளவை, உடம்பின் மூலமே உணர்வை அறிதல் இயலும்; உடம்பின்றி உணர்வை அறிதல் இயலாது (பா.15) என்றும், உடம்பின் பயனே ஈசனைத் தேடுவதுதான் (பா.19) என்கிறார். மேலும், ஓங்காரத்தின் உட்பொருளாக உள்ள குண்டலினி உந்திக் கமலமாம் மணிபூரகத்தைத் தன் முதன் நிலையாகக்கொண்டு விளங்குகிறது. அத்தகைய ஆறு ஆதாரங்களின் வழி (திருமந்திரம்: 568) மூச்சுப் பயிற்சியினால் ஆன்ம ஒளி வீடுபேற்றை அடையும் (37); அம்மூச்சுப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால் சிவபெருமானின் அருளும் கிட்டும் (42) என்கிறார். 

"பூரித் திருந்து புணர்ந்து சிவனுருவைப்
பாரித்தங்கு அர்ச்சிக்கு மாறு' (பா. 75)

என்பதின் வழி ரேசக, கும்ப, பூரக வினைகளினால் ஓங்கார உச்சியில் வெளிப்பட்ட சீவ உருவை வெளிப்பட்ட இடத்தில் அருச்சனை செய். இவ்வாறு செய்யப்படும் நிலையில் எழுபிறவியின் வித்தாலேயே தவம் முடியுமென்பது அதில் உள்ளதாகிய உணர்வு பெறுவதே என்றாகிறது. எழுபிறவி என்பதற்கு, 1. ஐம்பூதங்கள், 2. அவற்றின் கூட்டுறவால் உண்டான சக்திகள், 3. அச்சத்தினை பிருத்வி சத்தி உள்வாங்கி பழம், மருந்துப் பொருள்கள் முதலியன காய்க்கும். 4. மரங்களை (ஓலதிகளை) வெளிப்படுத்தல், 5. ஓலதிகளிலிருந்து (மரங்கள்) வித்தாகிய சீவ உணவுகளை உண்டாக்கல், 6. உணவை உண்டு நாத விந்துக்களை உண்டாக்கல், 7. நாதவிந்துக்களால் இனப்பெருக்கம் செய்தல், 8. மறுபடி மனித உருவாய் வெளிப்பட்டு நிற்றல் - என்று உரை விளக்கம் அமைகின்றது. 

மேற்கூறிய ஏழுபிறவி அல்லது எழுபிறவி என்பது உடம்பைக் கடந்த அறிவாகிய உணர்வு பெறுதலே ஆகும்.

மாணிக்கவாசகரின் ""எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்'' (திருவா. 26-31) என்பதில் குறிக்கப்பெறும் எல்லாப் பிறப்பும் என்பது பல பிறப்பு, முற்பிறவி, இப்பிறவி, வருபிறவி என்பதல்ல. உடல் கடந்த உயிரின் பிறப்பல்ல. உடலினுள்ளே நிகழும் உயிரின் பிறப்பு. அவ்வுயிரின் பிறப்பைக் கடந்தாலே "வீடு' என்னும் பேரின்ப நிலையை அடையலாம். 

எழுமையும், எழுபிறப்பும் உணர்த்தும் பொருள் அதுவே. திருவள்ளுவரின் திருக்குறளும் "வீடு' என்னும் கண்ணுக்குப் புலப்படா ஒன்றைக் குறிப்பிடவில்லை என்பதே இக்கட்டுரையின் உட்பொருளாகும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/11/w600X390/tm4.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/mar/11/வள்ளுவர்-குறளும்-ஒüவைக்-குறளும்-2878284.html
2878283 வார இதழ்கள் தமிழ்மணி கவி பாடலாம் வாங்க: வெண்பா இறுதிச் சீர்  - 15 "வாகீச கலாநிதி' கி.வா. ஜகந்நாதன் DIN Sunday, March 11, 2018 02:25 AM +0530 வெண்பாவின் ஈற்றுச் சீர் நாள், மலர், காசு பிறப்பு என்ற வாய்பாட்டில் வரவேண்டும். நேர் என்னும் ஓர் அசையே சீராக வருவதுண்டு; அப்படியே நிரை என்பதும் வரும். நேர் என்ற அசைச்சீரின் வாய்பாடு நாள்; நிரை என்ற அசைச்சீரின் வாய்பாடு மலர்.

""மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்''

என்ற குறளின் ஈற்றுச்சீர் வார் என்பது; அது நேர் என்னும் ஓரசைச்சீர்; ஆகவே, இந்தக் குறள் நாள் என்னும் வாய்பாட்டில் முடிந்தது.

""கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ
னற்றா டொழாஅ ரெனின்''

என்பதில் "ரெனின்' என்பது ஈற்றுச்சீர். இரண்டு குறிலும் ஓர் ஒற்றும் வந்த நிரையசையே சீராக நிற்கிறது; மலர் என்பது அதற்கு வாய்பாடு. ஆகவே இந்தக் குறள் மலர் என்ற வாய்பாட்டில் முடிந்திருக்கிறது.
வெண்பாவில் ஈரசைச் சீரும், மூவசைச் சீருள் காய்ச் சீரும், ஈற்றில் மட்டும் ஓரசைச் சீரும் வரும். ஈற்றில் ஈரசைச் சீரூம் வரும்; மூவசைச் சீர் வராது.
ஓரசைச் சீர்களுக்கு இயல்பாக உள்ள வாய்பாடுகளே நாள், மலர் என்பன. ஆனால், வெண்பாவில் ஈற்றில் வரும் ஈரசைச் சீர்களுக்கு, அவற்றின் இயல்பான வாய்பாடுகள் இருக்கவும் வேறு வாய்பாடுகளை வகுத்திருக்கிறார்கள். அதைக் கவனிக்கலாம்.
வெண்பாக்களின் இறுதியில் வரும் ஓரசைச் சீர்களின் வாய்பாட்டைப் பார்த்தோம். வெண்பா இறுதிச் சீராக ஈரசைச் சீர்கள் யாவும் வருவதில்லை. மாச்சீர் மட்டுமே வரும்; தேமா, புளிமா என்னும் இரண்டும் வரும். ஆனால் அவை இரண்டும் குற்றியலுகரத்தில் முடிவனவாக இருக்க வேண்டும்; அதனால்தான் தேமா, புளிமா என்ற வாய்பாடுகள் இருந்தாலும், தனியே குற்றியலுகரத்தில் முடியும் காசு, பிறப்பு என்ற வேறு வாய்பாடுகளை இலக்கணம் கூறுகிறது. முற்றுகரமும் சிறுபான்மை வரும். உகரம் அல்லாததை ஈறாக உடைய சொல் ஈரசைச் சீராக வெண்பா ஈற்றில் வராது.

""இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு''

இந்தக் குறளின் ஈற்றுச் சீர் மாட்டு என்பது; இது தேமா என்னும் வாய்பாடுடைய ஈரசைச்சீர்தான்; ஆனாலும் உகர இறுதியோடு வந்திருக்கிறதைக் கவனிக்க வேண்டும். ஆகையால் இது காசு என்னும் வாய்பாட்டைப் பெறும். இப்படியே,

""அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு''

என்னும் குறளில் உள்ள ஈற்றுச் சீர் "யுலகு' என்பது. அது புளிமா என்னும் வாய்பாட்டையுடைய ஈரசைச் சீரே ஆனாலும், உகர இறுதியை உடைமையால் பிறப்பு என்ற வாய்பாட்டை உடையதாயிற்று. காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளை ஈற்றுச் சீருக்கு மட்டும் கொள்ள வேண்டுமேயன்றி, இடையில் வரும் உகர இறுதி மாச்சீருக்குக் கொள்ளக்கூடாது.

""தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்ற லரிது''

இந்தக் குறளுக்கு வாய்பாடு சொல்லிப் பாருங்கள்

கருவிளங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமா
கருவிளங்காய் தேமா பிறப்பு.

இப்படி வாய்பாடு அமைக்கும்பொழுது இறுதிச் சீரைப் புளிமா என்று அமைக்கக் கூடாது. நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாடுகளை வெண்பா இறுதிச் சீருக்கு அமைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் யாவருக்கும் தெரிந்த சொற்களாக இருந்தால் வாய்பாடாக வழங்க எளிதாக இருக்கும். இந்தச் சொற்களும், இவற்றால் குறிக்கப்பெறும் பொருள்களும் தமிழ் மக்கள் நன்றாக அறிந்தவை.
நாள் - மலர் என்பவை ஓர் இனம்; காசு - பிறப்பு என்பவை ஓர் இனம். நாள் என்பது தினத்தைக் குறிக்கும் பெயர். காலைக்கும் பெயர். காலையில் மலரும் மலரை நாள் மலர் என்று சொல்கிறோம். ஆதலின், நாளுக்கும் மலருக்கும் தொடர்பு உண்டு. அது பற்றி அந்த இரண்டையும் வாய்பாடாக அமைத்தார்கள். அது மட்டும் அன்று; நாள் என்பதற்கே மலர் என்று ஒரு பொருள் உண்டு; தக்கயாகப்பரணி உரைகாரர் இந்தப் பொருளைச் சொல்கிறார். இதனாலும் நாளும் மலரும் இனமான சொற்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் காசு, பிறப்பு என்ற இரண்டுக்கும் என்ன தொடர்பு? இந்த இரண்டும் யாவருக்கும் தெரிந்த இனமான பொருள்களைக் குறிக்கும் பெயர்களாக இருக்க வேண்டும். அதனால்தான் இந்த இரண்டையும் ஒன்றாக வைத்து வாய்பாடாகக் கொண்டார்கள். பழங்காலத்தில் பெண்கள் அணியும் கலன்களில் காசு, பிறப்பு என்பவை இரண்டு. 
""கீசுகீசென்னும்'' (7) என வரும் திருப்பாவைப் பாசுரத்தில், ""காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து'' என்ற அடி வருகிறது. அங்கே காசு, பிறப்பு இரண்டும் ஒரு சேர வருகின்றன. காசு என்பதற்கு அச்சுத் தாலி என்றும், பிறப்பு என்பதற்கு ஆமைத் தாலி என்றும் பொருள் எழுதியிருக்கிறார்கள். 
தாலி என்பது கழுத்தில் தொங்கவிடும் அணிகலன். கழுத்தில் தொங்க அணிவதனால் திருமங்கலியத்துக்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலிகள் அந்த அந்த வகுப்புக்கு ஏற்றபடி வெவ்வேறு உருவம் உடையனவாக இருக்கும். தமிழ்நாட்டில் பெரும்பாலும் இரண்டு வகைத் தாலிகள் வழக்கில் இருக்கின்றன. ஒன்று புலிப்பல்லைப் போலவும் சீப்புப் போலவும் ஒரு பக்கம் பற்களை உடையதாய்த் தட்டையாய்ச் சில அடையாளங்களைப் பொறித்ததாய் இருக்கும். அதுதான் அச்சுத் தாலி. வேறு ஒரு வகைத் தாலி கரண்டி முட்டையைக் கவிழ்த்தாற் போல அரைக்குமிழாக இருக்கும்; ஆமையின் முதுகு ஓடு போலப் புடைத்திருக்கும்; அதைப் பொட்டு என்றும் சொல்வார்கள். அது ஆமைத் தாலி. கோயிலில் அம்பிகைக்கு அதை அணிந்திருப்பார்கள். பழங்காலத்தில் உருத்திரகணிகையருக்குப் பொட்டுக் கட்டும் வழக்கம் இருந்தது. அந்தப் பொட்டு ஆமைத் தாலியாகும்.
ஆகையால், இருவகைத் தாலிகளாகிய இனப் பொருளைக் குறிக்கும் சொற்களாகிய காசு, பிறப்பு என்னும் இரண்டையும் வெண்பா ஈற்றடியில் வரும் மார்ச்சீர்களுக்கு வாய்பாடாக வைத்தார்கள்.
(தொடர்ந்து பாடுவோம்...)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/3/w600X390/tm1.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/mar/11/கவி-பாடலாம்-வாங்க-வெண்பா-இறுதிச்-சீர்----15-2878283.html
2878282 வார இதழ்கள் தமிழ்மணி பழமொழி நானூறு: முன்றுறையரையனார் Sunday, March 11, 2018 02:23 AM +0530 மிக்குடையர் ஆகி மிகமதிக்கப் பட்டாரை
ஒற்கப் படமுயறும் என்றல் இழுக்காகும்
நற்(கு)எளி(து) ஆகி விடினும் நளிர்வரைமேல்
கற்கிள்ளிக் கையுய்ந்தார் இல். (பாடல்-36)

விளங்குகின்ற மலைமேல் உள்ள கல்லைக் கிள்ளுதலைச் செய்து கை வருந்துதலைத் தப்பினார் இல்லை. (ஆதலால்) செல்வம் மிக உடையவர்களாகி அறிவுடைமையால் மிகவும் மதிக்கப்பட்டாரை, அவர்கள் வருந்துமாறு தீய செயல்களைச் செய்வோம் என்று நினைத்தல் மிகவும் எளிமையானாலும், செயலிற் செய்தால் மிக்க துன்பமே உண்டாகும். (க-து.) அறிவுச்செல்வம் என்றிவை உடையாரைத் துன்புறுத்தலாகாது. "கல் கிள்ளிக் கைஉய்ந்தார் இல்' என்பது இச்செய்யுளில் வந்த பழமொழி.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/22/w600X390/tm1.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/mar/11/பழமொழி-நானூறு-முன்றுறையரையனார்-2878282.html
2873844 வார இதழ்கள் தமிழ்மணி  கொடுத்தவனை இகழாதே!  முன்றுறையரையனார் Sunday, March 4, 2018 12:00 AM +0530 பழமொழி நானூறு
தமனென் றிருநாழி ஈத்தவ னல்லால்
 நமனென்று காயினும் தான்காயான் மன்னே
 அவனிவ னென்றுரைத் தெள்ளிமற் றியாரே
 நமநெய்யை நக்கு பவர். (பாடல்-35)
 தம்முடைய சுற்றத்தானென்று கருதி இருநாழி அரிசியைக் கொடுத்தவன் வெகுளினும் வெகுள்வதன்றி, சுற்றத்தான் என்பது கருதி அவன் என்றும், இவன் என்றும் இகழ்ந்து கூறி நகையாடி, நன்றியறிதலுடையான் மனவெறுப்புக் கொள்ளான். மந்திரங் கூறிக் குண்டத்திலிட வைத்த ஆனெய்யை நக்கிச் சுவை பார்ப்பார் யாவர்? (ஒருவருமிலர்.) (க-து.) ஒருவன் தனக்கு உதவி செய்தவன் காய்வானாயினும் தான் காய்தலை யொழிக என்றது இது. "யாரே நமநெய்யை நக்குபவர்' என்பது பழமொழி.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/3/w600X390/LOTUS.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/mar/04/கொடுத்தவனை-இகழாதே-2873844.html
2873845 வார இதழ்கள் தமிழ்மணி வெண்டளையும் வெண்பாவும் -2 "வாகீச கலாநிதி' கி.வா. ஜகந்நாதன் DIN Sunday, March 4, 2018 12:00 AM +0530 கவி பாடலாம் வாங்க -14

வெண்பாவின் இலக்கணங்களுள் தலையானது வெண்டளை அமைதல். வெண்பாக்கள் குறள் வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, கலி வெண்பா என்று ஏழு வகை. கலி வெண்பாவைக் கலிப்பாவில் சேர்த்து இலக்கணம் கூறும்; ஆனால், இப்போதுள்ள கலிவெண்பாக்கள் யாவும் வெண்பா இலக்கணம் அமைந்தனவாக இருக்கின்றன. இவற்றை அடியளவைக் கொண்டு ஐந்து பிரிவாக வகுக்கலாம்.
1. இரண்டடி வெண்பா - குறள் வெண்பா.
2. மூன்றடி வெண்பா - சிந்தியல் வெண்பாக்கள்.
3. நான்கடி வெண்பா - நேரிசை வெண்பாவும் இன்னிசை வெண்பாவும்.
4. நான்கு முதல் பன்னிரண்டடி வரையில் - பஃறொடை வெண்பா.
5. பதின்மூன்று முதல் எத்தனை அடியானாலும் -கலிவெண்பா.
இந்த வெண்பா வகைகள் எல்லாவற்றிற்கும் பொதுவாகச் சில இலக்கணங்கள் உண்டு. அவை வருமாறு:
1. ஓரசைச் சீர், ஈரசைச் சீர், காய்ச்சீர் ஆகியவைகளே வரும்.
2. வெண்டளையே வரும்.
3. ஈற்றடி முச்சீரடியாகவும் மற்றவை யாவும் நாற்சீரடியாகவும் இருக்கும்.
4. ஈற்றுச் சீர் நாள், மலர் காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளில் ஒன்றை உடையதாக இருக்கும்.
இந்த வெண்பாக்களில் மிகுதியாக வழக்கில் உள்ளது, நேரிசை வெண்பா. அதைப்பற்றி முதலில் பார்த்துவிட்டு மற்றவற்றைப் பிறகு பார்க்கலாம்.
நேரிசை வெண்பா:
நேரிசை வெண்பாவின் இலக்கணத்தை எளிதிலே நினைவில் வைத்துக்கொள்ள நாடோடியாக ஒரு வாய்பாடு வழங்குகிறது. ""நாற்சீர் - முச்சீர் -நடுவே தனிச்சீர்'' என்பது அது.
நேரிசை வெண்பாக்களில் இரண்டாவது அடியில் உள்ள மூன்றாம் சீருக்குப் பின் ஒரு கோட்டையிட்டுப் பிறகு நான்காஞ் சீரை எழுதுவது வழக்கம். கோட்டுக்கு அப்புறம் இருப்பதைத் தனிச்சீர் என்று சொல்வர். இண்டாவதடியின் நாலாம் சீர் அது. அது அந்த அடியின் ஓர் உறுப்பாக இருந்தாலும் அந்த அடியின் முதற்சீருக்கும் அதற்கும் ஒரே எதுகை அமைத்திருப்பதனால், அதை தனிச் சீர் என்றார்கள்.

"ஆழ வமுக்கி முகக்கினு மாழ்கடனீர்
நாழி முவாது நானாழி - தோழி
நிதியுங் கணவனும் நேர்படினுந் தந்தம்
விதியின் பயனே பயன்''

இந்தப் பாட்டில் இரண்டாவதடியின் முதற்சீர் நாழி; நான்காவது சீர் அதனோடு எதுகையில் ஒன்றிய தோழி; தோழி என்பது தனிச்சீர்.
இந்த வெண்பாவில் முதல் இரண்டடியும் ஓரெதுகையாகவும் பின் இரண்டடியும் ஓரெதுகையாகவும் உள்ளன. இதுவும் நேரிசை வெண்பாவின் இலக்கணங்களில் ஒன்று. நான்கடியும் ஓரெதுகையாகவும் வரும்.
மேலே காட்டிய பாட்டில் வெண்டளை பிறழாமல் வந்திருப்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டும்.
1. ஆழ - தேமா; அமுக்கி - புளிமா = மாமுன் நிரை வந்த இயற்சீர் வெண்டளை.
2. அமுக்கி - புளிமா; முகக்கினு -கருவிளம் = மாமுன் நிரை வந்த இயற்சீர் வெண்டளை.
3. முகக்கினு -கருவிளம்; ஆழ்கடனீர் - கூவிளங்காய் = விளமுன் நேர் வந்த இயற்சீர் வெண்டளை.
4. ஆழ்கடனீர் - கூவிளங்காய்; நாழி- தேமா = காய்முன் நேர் வந்த வெண்சீர் வெண்டளை.
5. நாழி - தேமா; முகவாது - புளிமாங்காய் = மாமுன் நிரை வந்த இயற்சீர் வெண்டளை.
6. முகவாது - புளிமாங்காய்; நானாழி - தேமாங்காய் = காய்முன் நேர் வந்த வெண்சீர் வெண்டளை.
7. நானாழி - தேமாங்காய்; தோழி - தேமா = காய் முன் நேர் வந்த வெண்சீர் வெண்டளை.
8. தோழி - தேமா; நிதியுங் - புளிமா = மாமுன் நிரை வந்த இயற்சீர் வெண்டளை.
9. நிதியுங் - புளிமா; கணவனு -கருவிளம் = மாமுன் நிரை வந்த இயற்சீர் வெண்டளை.
10. கணவனு -கருவிளம்; நேர்படினுந் - கூவிளங்காய் = விளமுன் நேர் வந்த இயற்சீர் வெண்டளை.
11. நேர்படினுந் - கூவிளங்காய்; தந்தம் - தேமா = காய்முன் நேர் வந்த வெண்சீர் வெண்டளை.
12. தந்தம் - தேமா; விதியின் - புளிமா = மாமுன் நிரை வந்த இயற்சீர் வெண்டளை.
13. விதியின் - புளிமா; பயனே - புளிமா = மாமுன் நிரை வந்த இயற்சீர் வெண்டளை.
14. பயனே - புளிமா; பயன் -மலர் = மாமுன் நிரை வந்த இயற்சீர் வெண்டளை.
(தொடர்ந்து பாடுவோம்...)


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/3/w600X390/tm1.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/mar/04/வெண்டளையும்-வெண்பாவும்--2-2873845.html
2873846 வார இதழ்கள் தமிழ்மணி "பெண் மாட்சி ' எழுதிய பெண் கவிஞர்! DIN DIN Sunday, March 4, 2018 12:00 AM +0530 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் கவிஞர் சுந்தரத்தம்மையார் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், திருப்புகழ் சுவாமிகள், முருகதாச சுவாமிகள் என்று பல பெயர்கள் கொண்ட சுவாமிகளின் இயற்பெயர் சங்கரலிங்கம்; அவர்தம் துணைவியாரே சுந்தரத்தம்மையார். இவர் விழுப்புரம் வட்டாரம் திருவாமாத்தூர் என்ற ஊரிலுள்ள கெளமார மடத்து ஆலய வளாகத்தில் தம் கணவருடன் சேர்ந்தே வாழ்ந்தார். 1898-இல் தம் கணவர் இறந்த பின்னும் பல ஆண்டுகள் வாழ்ந்தார்.
 தண்டபாணி சுவாமிகளது வாழ்க்கைத் துணைவியாக வாழ்ந்த காலத்து, சுவாமிகளையே ஆசிரியராகவும், ஞான குருவாகவும் கொண்டிருந்தார். சுவாமிகளிடம் இலக்கிய இலக்கணங்களைப் பாடம் கேட்டார். கணவரின் கவிதைகளைப் படித்து உணர்ந்தார். தான் தளர்ந்திருந்த நிலையிலும் மடத்திற்கு வந்தோருக்கு அன்பு கனிய உணவூட்டினார். அம்மையார்தம் பிள்ளை சந்தப்புலவர் தி.மு. செந்தில்நாயக சுவாமிகளும், பெயரர் தி.செ. முருகதாசப்பிள்ளையும் கவிஞர்களே. தமிழ்ப் பற்றுள்ள நல்ல குடும்பம். தந்தை, தாய், பிள்ளைகள், பெயரர் எனக் குடும்பமே தமிழ்க் கவிஞராக அமைந்த பெருமை உடையது.
 அம்மையார் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள், "பெண் மாட்சி' என்ற நூல் மட்டுமே கிடைத்துள்ளது. பெண்ணின் மாண்புகளை எடுத்துரைக்கிறது இந்நூல். கணவரின் அன்பு ஆணைப்படியே இந்நூலை அம்மையார் இயற்றியுள்ளார். கணவரோடும், உடன் இருந்த புலவர்களோடும் நூலின் சிறப்பு எடுத்துரைக்கப்பெற்ற பின்னரே "பெண்மாட்சி' நூலாயிற்று என்பர். இந்நூலுக்குச் சாத்துக்கவி பாடியோர் தண்டபாணி சுவாமிகள், அவர் மாணாக்கர்கள், இராமானந்த சுவாமி போன்றோர் ஆவர். சரசுவதி தேவியோடும், ஒளவையாரோடும் அம்மையாரை ஒப்பிட்டுப் புகழாரம் சூட்டியுள்ளனர்.
 
 "..... ஞாலமுற்றும்
 மாதாவென்றென்றும் வழுத்து புகழ் ஒளவையைப்போல்
 மீதாம் புலமை பெற்றோர் வேறுண்டோ -ஏதாலோ
 அன்னவளும் பெண்கட்கு அடக்கம்பகர்ந்த தன்றித்
 துன்னும் அகங்கார முறச்சொல்ல வில்லை -மன்னும்'
 
 பெண் மாட்சி நூலின் கருத்துகள்:
 இந்நூல் 82 பாடல்களைக் கொண்டு கலிவெண்பா யாப்பில் எழுதப் பெற்றுள்ளது. ஆணைவிடப் பெண்ணே மேம்பட்டவள் எனும் கருத்துகள் 164 அடிகளிலும் வலியுறுத்தப் பெறுகின்றன. பெண்ணினத்தை இழிவுபடுத்தும் சிலருக்காகப் பெண்ணுயர்வைக் காட்ட எழுதப்பெற்ற நூலாகவும் இதைக் கொள்ளலாம். நூலின் முற்பகுதி ஆண்களின் லீலைகளும் பிற்பகுதியாகப் பெண்ணின் பெருமைகளும் விளக்கப் பெறுகின்றன.
 
 பெண்டிர் மேல் ஆடவர் நிகழ்த்திய கொடுமைகள்:
 பெண்களின் பெருமைகளைச் சற்றும் உணராதவர் ஏதேதோ பேசுகின்றனர். பெண்ணைப் பழித்துப் பெண் அங்குசம் என்று இழித்துக் கூறுகின்றனர். இராவணன் அன்று சீதையை இரந்து செய்தான் பொல்லாங்கு. துரியோதனாதியர் பெண் என்றும் பாராமல் பாஞ்சாலியின் துகிலை உரித்துப் பெண்ணுக்குத் தீங்கிழைத்தனர்.
 
 பெண்டிர் பெருமை:
 ஆண்கள் பெண்களுக்குச் செய்த மேற்கண்ட தீமைகள் யாவற்றையும் தொகுத்து ஒரு பெண் மாலையாக அதாவது கவிதையாக வடித்துத் தந்ததுண்டோ? உலகம் மாதா எனப் போற்றும் ஒளவையைப் போலப் புலமை பெற்றோர் வேறுண்டோ? அவளும் பெண்களுக்கு அடக்கம் கூறினாரேயன்றி அகங்காரம் உறச் சொல்லவில்லை. வியாசர் மகனாம் சுகர் போன்றோர் அறிவில் சிறந்த பொறியடக்கம் பெற்ற ஆண் ஞானிகள் பலர் மெல்லியலாளரைத் தாயாய் நினைத்து வாழ்கின்றனர். கவிஞர்கள் சிலர் பெண்களைப் பொல்லாதவர் என்றே பழித்து உரைக்கின்றனர். இவர்களைப் போல, பெண்களும் ஆடவரைப் பழித்துரைக்கின்றனர்.
 ஆண், பெண் பிறப்பிற்கு ஈடு இணை இல்லை; இருவரும் சமம் என்று கூறுவதே உண்மை. அநுசூயை, நளாயினி, வாசுகி, கெளரி, மங்கையர்க்கரசி, இரத்தினாவதி, திரெளபதி, புனிதவதி முதலானோர் மேம்பட்ட பெண்களில் குறிப்பிடத்தக்கோர் என்கிறார் சுந்தரத்தம்மையார். புராணப் பெண்களின் பெருமைகளையும், தெய்வப் பெண்களின் சிறப்புகளையும், எடுத்து விளக்குகிறது பெண் மாட்சி நூல். போற்றுதலுக்குரிய பெண்களின் வரலாறுகளைப் பெருமையுடன் எடுத்துக்கூறி முடிவுரைக்கிறது இந்நூல்.
 
 சுந்தரத்தம்மையைப் பற்றிய சில செய்திகள்:
 1. புராணக் கதைகளைத் தெளிவாகத் தெரிந்துணர்ந்தவர். 2. ஆண்கள் பெண்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை உணர்ந்து கவிதை வடித்தவர். 3. ஆண்களின் இழிவையும் பெண்ணின் உயர்வையும் இலக்கியச் சான்றுகளைக் காட்டி வலியுறுத்தும் ஆற்றல் மிக்கவர். 4. கணவனிடம் கற்றுப் பெற்ற கவித்துவத்தை நன்றாகப் பயன்படுத்தியவர். 5. தமிழ்ப் பெண்ணினத்துக்கே தம்மை அர்ப்பணித்துள்ள மாண்புடைய கவிஞர்.
 
 - முனைவர் தாயம்மாள் அறவாணன்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/3/w600X390/tm4.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/mar/04/பெண்-மாட்சி--எழுதிய-பெண்-கவிஞர்-2873846.html
2873847 வார இதழ்கள் தமிழ்மணி இந்த வாரம் கலாரசிகன் DIN DIN Sunday, March 4, 2018 12:00 AM +0530 பத்தாண்டுகளுக்கு முன்பு கி.வா.ஜ. பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டுப் பல புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அப்படி வெளியிடப்பட்ட கி.வா.ஜ.நூற்றாண்டு வெளியீடுகளில் ஒன்று "கி.வா.ஜ.பேசுகிறார்'. சில புத்தகங்களை ஏற்கெனவே படித்திருந்தாலும் ஒவ்வொருமுறை படிக்கும்போதும் புதிதாகப் படிப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட புத்தகங்களில் "கி.வா.ஜ.பேசுகிறார்' கட்டுரைத் தொகுப்பும் ஒன்று.
 "தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையரின் தலைமாணாக்கராக விளங்கியவர் கி.வா.ஜ. இவர் புலவராகவும், இலக்கியவாதியாகவும், பத்திரிகை ஆசிரியராகவும் இருந்தது மட்டுமல்லாமல், அற்புதமான பேச்சாளராகவும் விளங்கியவர். இவரது பேச்சிலிருந்து பிறக்கும் ஒவ்வொரு வார்த்தையிலும் சிலேடை தன்னையறியாமலேயே வந்துவிழும். இவர் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று ஆற்றிய உரைகளை எல்லாம் முழுமையாகப் பதிவு செய்து வைக்காமல் போனது மிகப்பெரிய குறை.
 "கொச்சைத் தமிழ்' என்றொரு கட்டுரை. அதில் பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுவது குறித்து கி.வா.ஜ. தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். ""கொச்சைத் தமிழைக் கணக்கு வழக்கில்லாமல் எழுத்தில் உபயோகப்படுத்தி வந்தால், இலக்கியத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் உள்ள வித்தியாசம் அதிகமாகி, இரண்டும் வெவ்வேறு மொழியாகிப் போனாலும் போகலாம். அத்தகைய அபாயம் வராமல் காப்பாற்றுவதற்குப் பேசும் தமிழில் கொச்சை வார்த்தை பலவற்றுக்கு விடைகொடுத்துவிட்டு அதன் நடையைச் சிறிது உயர்த்த வேண்டும்'' என்பதுதான் இதற்கு கி.வா.ஜ. தரும் விடை.
 1937ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னையிலுள்ள இந்திப் பிரசார சபையில், பாரதிய சாகித்திய பரிஷத்தின் இரண்டாவது மாநாடு நடைபெற்றது. அதன் தலைவர் காந்தியடிகள். அந்த மாநாட்டில் வரவேற்புக் குழுவின் தலைவராக இருந்த "தமிழ்த் தாத்தா' உ.வே.சா., தனது வரவேற்புரையைத் தமிழில்தான் ஆற்றினார். அதை இந்தியில் மொழிபெயர்த்துத் தனியாக அச்சிட்டிருந்தார்கள்.
 விழா முடிவில் காந்தியடிகள் பேசும்போது, ""சாமிநாதையர் அவர்களைப் பார்க்கும்போதும், அவர் பிரசங்கத்தைக் கேட்கும்போதும், அவரது காலடியின் கீழிருந்து தமிழ் படிக்க வேண்டும் என்ற ஆசை உண்டாகிறது'' என்று குறிப்பிட்டபோது, அந்த மாநாட்டு அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.
 கி.வா.ஜ.வின் புத்தகங்களைப் படிக்கும் போதெல்லாம் அவரது காலடியின் கீழிருந்து தமிழ் படிக்கும் வாய்ப்பு கிட்டவில்லையே என்கிற ஏக்கம் உண்டாகிறது. கி.வா.ஜ. பாணியில் சொல்வதாக இருந்தால், இது உபசாரத்துக்காகச் சொன்ன வார்த்தை அல்ல.
 
 உதயை மு.வீரையன் தினமணி வாசகர்களுக்கு நன்றாகவே பரிச்சயமான பெயர். தினமணியில் தொடர்ந்து அவர் எழுதிவரும் நடுப்பக்க கட்டுரைகளுக்கென்றே ஒரு வாசகர் கூட்டம் உருவாகியிருக்கிறது. திருத்துறைப்பூண்டி வட்டம் உதய மார்த்தாண்டபுரத்தைச் சேர்ந்த மு.வீரையன் சென்னையில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து, பணி ஓய்வு பெற்றவர்.
 திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் பட்டம், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கல்வியியல் பட்டம், மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டம் என்று இவர் படிப்படியாகத் தனது கல்வித் தகுதியை வளர்த்துக் கொண்டவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் என 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் உதயை மு.வீரையனின் சமுதாயப் பார்வைதான் அவரது எழுத்துக்கு தனித்துவத்தை ஏற்படுத்துகிறது.
 தினமணியில் நடுப்பக்கக் கட்டுரை எழுதுவது மட்டுமல்லாமல், பல சிற்றிதழ்களிலும், இடதுசாரி இதழ்களிலும் இவருடைய கட்டுரைகள் வெளிவருகின்றன. அவ்வப்போது நாட்டில் நடந்துவரும்
 நிகழ்வுகள் குறித்த தன் கருத்துகளைக் கட்டுரைகளாக உதயை மு.வீரையன் பதிவு செய்திருக்கிறார். பல்வேறு தலைப்புகளில் இவர் எழுதியிருக்கும் 29 கட்டுரைகள் "உலகம் எங்கே போகிறது?' என்கிற தலைப்பில் இப்போது புத்தக வடிவம் பெற்றிருக்கிறது.
 இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் நான்காவது உலகப் போர், சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோமா?, முதுமை என்பது வரமா, சாபமா?, வரும் கடனும் வாராக் கடனும், கோபுரமா? குப்பை மேடா?, ஏறு தழுவுதல் என்னும் எழுச்சிப் போர் உள்ளிட்ட பல கட்டுரைகள் இவரது சமூக அக்கறையையும், சமுதாயத்தின் தவறுகளுக்கு எதிரான அறச் சீற்றத்தையும் வெளிப்படுத்துகின்றன.
 இந்தத் தொகுப்புக்கு அணிந்துரை எழுதியிருக்கும் "கவிக்கொண்டல்' இதழின் ஆசிரியர் மா.செங்குட்டுவன் கூறியிருப்பதுபோல, இன்றைய சமூகச் சூழலில் மக்கள் மன்றத்தில் எழுப்பப்பட வேண்டிய நியாயமான கேள்விகளை இந்தத் தொகுப்பில் காணப்படும் கட்டுரைகளின் வாயிலாக உதயை மு.வீரையன் பதிவு செய்திருக்கிறார்.
 
 கவிஞர் பழநி பாரதி எனக்கு அறிமுகமானவரே தவிர, நெருக்கமாகப் பழக்கமானவர் அல்ல. ஆனால், என்னுடைய நெருங்கிய நண்பர்கள் அனைவருக்குமே நெருக்கமானவர். அவரிடம் நான் பேசிப் பழகியதில்லையே தவிர, அவரது எழுத்தைப் படித்துப் பழகியிருக்கிறேன், அவருடைய பாடல்களைக் கேட்டு ரசித்திருக்கிறேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியிருக்கும் கவிஞர் பழநி பாரதியின் தனிக்கவிதைகளை ஒருமுறைக்குப் பலமுறை படித்து, நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் செய்திருக்கிறேன்.
 கடந்த வாரம் மதுரையிலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்துகொண்டிருந்தபோது, என்னுடன் பயணித்த ஒருவர், படித்துக் கொண்டிருந்த கவிதைத் தொகுப்பு கவிஞர் பழநி பாரதியின் "புறாக்கள் மறைந்த இரவு'. அவர் எப்போது படித்து முடிப்பார் என்று காத்திருந்து அவர் படித்து முடித்ததும் வாங்கி, அந்தக் கவிதைப் புத்தகத்தை நானும் படித்து முடித்தேன். அதிலிருந்த ஒரு கவிதை என்னை அடுத்த அரைமணி நேரத்துக்கு யோசிக்க வைத்தது.
 எங்கு பார்த்தாலும் நெகிழி (பிளாஸ்டிக்) கோபுரமாகக் குவிந்து கிடக்கும் அவலத்தை மிக அழகாகக் கவிதையாக்கி இருக்கிறார் கவிஞர். "பூஜையறை' என்கிற தலைப்பில் அந்தத் தொகுப்பில் இருக்கும் கவிதை இதுதான்:
 
 பிளாஸ்டிக் மாவிலைத் தோரணங்கள்
 ஸ்டிக்கர் கோலங்கள்
 டப்பர்வேர் டப்பாவிலிருந்து
 ஊற்றுகிறார்கள்
 விளக்குக்கு எண்ணெய்
 ஒலிநாடா ஒப்புவிக்கும்
 கந்தர் சஷ்டிக் கவசம்
 கடவுள் ஏன் கல்லானான்
 கேட்டான் கண்ணதாசன்
 கடவுள் ஏன் பிளாஸ்டிக்கானான்
 பார்த்துக் கொண்டிருக்கிறான்
 பழநி பாரதி!
 
 
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/3/w600X390/tm5.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/mar/04/இந்த-வாரம்-கலாரசிகன்-2873847.html
2873848 வார இதழ்கள் தமிழ்மணி தசாங்கமும் கொடிக்கவியும்! DIN DIN Sunday, March 4, 2018 12:00 AM +0530 தமிழ் இலக்கிய மரபில் "கொடிக்கவி' என்பது தனித்த ஓர் இலக்கிய வகையாகும். "தசாங்கம்' எனும் இலக்கிய வகையில் ஓர் உறுப்பாகக் கிளைத்த "கொடி', காலப் பெருவெளியில் கொடிக்கவியாகக் கனிந்தது.
 தசம்-பத்து; அங்கம்-உறுப்பு எனும் பொருளைக் குறிக்கும் தசாங்கம் எனும் தமிழ்ச் சொல் பத்துவிதமான வாசனைப் பொருட் கலவையைக் குறிக்கும். அரசுக்கு உரிய பத்து உறுப்புகளை உள்ளடக்கிய இந்த இலக்கிய வகைக்கு உரிய வித்து, தொல்காப்பிய மரபியலில் (1571) குறிப்பிடப்படும் படை, கொடி, குடை, முரசு, நடை, புரவி, களிறு, தேர், தார்(மாலை), முடி ஆகிய பத்தையும் ஒருங்கிணைத்துப் பாடும் மரபு தமிழ் இலக்கியப் பரப்பில் முளைவிட்டது.
 தசாங்கப்பத்து, தசாங்கத்தயல் என்றெல்லாம் இந்த இலக்கிய வகை அமைகின்றது. நேரிசை வெண்பா, ஆசிரிய விருத்தம் முதலிய யாப்பில் அமைகின்ற இந்த இலக்கிய வகை பற்றி முத்துவீரியம்,
 பிரபந்த தீபிகை முதலிய பின்னைய இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன.
 தசாங்க இலக்கிய வகையில் மணிவாசகரின் "திருத்தசாங்கம்' முதல் இலக்கியப் படைப்பாகிறது. தென்பாண்டி நாட்டையும், உத்தரகோசமங்கை ஊரையும் ஆனந்தமாகிய ஆற்றையும், சூலப்படையையும் உடைய தேவர்பிரானாகிய சிவனது கொடி "ஏறு' எனும் இடபம் என்பார் மணிவாசகர்.
 சொருபானந்தர் மீது தத்துவராயர் 15ஆம் நூற்றாண்டில் பாடிய தசாங்கம், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் திருச்செந்தில் பிரபந்த நூலுள் பாடிய "தசாங்க வகுப்பு' முதலியவற்றுள் "கொடி' பாடப்படுகின்றது.
 மகாகவி பாரதி, பாரத தேவியின் திருத்தசாங்கம் பற்றிப் பாடுகின்றார். பாரத தேவி எனும் நாமம் உடைய தேவியின் கொடியாக "குன்றா வயிரக் கொடி'யைப் பாடுகின்றார்.இவ்வாறு தசாங்கம் எனும் இலக்கிய வகையுள் இடம்பெறும் "கொடி'க்குத் தனித்ததோர் இலக்கிய வகை 13ஆம் நூற்றாண்டின் (1300-1325) தொடக்கத்தில் எழுந்தது.
 "கொடி' பற்றிய வித்து, தசாங்கத்துள் தழைத்து, "கொடிக்கவி' எனும் இலக்கிய வகையாகக் கனிந்தது. அக்கனியை நமக்கு தனித்த இலக்கியமாக அளித்தவர், உமாபதி சிவாச்சாரியார் ஆவார்.
 சிதம்பரத்தில், நடராசப் பெருமானை வழிபாடு செய்யும் தில்லை தீட்சிதர் மரபில் உதித்தவர் உமாபதி சிவம். இவர் தம் குருவான மறைஞான சம்பந்த சிவாச்சாரியார் கைவழி வழிந்த கூழை, குருப்பிரசாதமாக உண்டமையால், தீட்சிதர்களால் விலக்கி வைக்கப்பட்டார்.
 ஒரு முறை நடராசப் பெருமான் திருவிழாவில் கொடியேற்றம் தடைப்படுகிறது. எல்லோரும் தவித்து நிற்க, "உமாபதி வந்தால், கொடி ஏறும்' என்ற திருவாக்கு வானில் எழுந்தது. அங்கு வந்த உமாபதிசிவம் பாடிய நான்கு வெண்பாக்களால் கொடியும் ஏறியது; பிற்காலத்தில் "கொடிக்கவி' என்ற சிறு நூலாக -தனித்த இலக்கிய வகையாகவும் அது திகழ்கிறது.
 சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் பதினான்கினுள் ஒன்றான இந்நூல், தத்துவம் சார்புடையதாகும். ஊரில், கோயிலில் விழா தொடங்குவதை அறிவிக்கக் கொடி ஏற்றுதல் மரபு. மற்றொரு மரபு கொடி நாட்டி விவாதம் செய்வர். மணிமேகலைக் காப்பியத்தில் மணிமேகலை கொடிநாட்டி சமயவாதம் செய்தமையைச் சாத்தனார் எடுத்துரைத்துள்ளார்.
 உமாபதி சிவமோ, கொடிக்கவி பாடி தடைப்பட்ட விழா நிகழக் காரணமாகின்றார். அவர் பாடிய வெண்பாக்கள் நான்கே! ஆனால், அவை சைவ சித்தாந்தத்தின் பிழிவாகத் திகழ்கின்றன.
 கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்கடியில் புதைக்கப்பட்ட கொடிமரத்தின் பகுதி கேவலநிலை; வானளாவி உயர்ந்து நிற்கும் கொடிமரத்தின் பகுதி சகலநிலை; பாதாளத்தை ஊடுருவியும் வானளாவியும் உள்ள சிவனே கொடிமரம்; கொடிமரத்தில் கட்டப்பட்டுள்ள கொடிச்சீலை சிவனின் திருவருள். கொடியில் வரையப்பட்டுள்ள இடபம் உயிர்; அதாவது, அநாதி காலம் தொட்டு உயிர், திருவருளோடு தாங்கப்படுகிறது.
 கொடிமரத்தின் உச்சி சுத்த நிலை. கொடியேற்றுதலில் கொடியில் உள்ள இடபம் மேலேறுகிறது. அதாவது, கேவல நிலையிலிருந்து சகல நிலையில் கிடக்கும் உயிர், திருவருளின் துணையால் சுத்தநிலைக்கு மேலேறிச் செல்கிறது. அதாவது உயிரின் ஈடேற்றம் -ஆன்ம ஈடேற்றம் என்பதுதான் கொடியேறுதல் என்பதன் தத்துவார்த்தம் ஆகும். முதலிரு பாடல்களில், ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களில் கட்டுண்ட உயிர்கள் திருவருளில் கூடும்படி கொடி கட்டினேன்; இந்த உலகம் முழுவதும் அறியுமாறு கோபுர வாசலில் கொடி கட்டினேன் என்கிறார். மூன்றாவது வெண்பாவில் கொடியேற்றம் நிகழ்ந்தது என்கிறார்.
 
 "வாக்காலும் மிக்க மனத்தாலும் எக்காலும்
 தாக்காது உணர்வரிய தன்மையனை- நேக்கிப்
 பிறித்தறிவு தம்மிற் பிரியாமை தானே
 குறிக்கும் அருள் நல்கக் கொடி'
 
 என்ற செய்யுளில், சித்தாந்த அடிப்படையைச் சுட்டுகிறார். தான் பெற்ற அருள் அனுபவத்தை உலகத்தோர் பெறுதற்கு வழிகாட்டும் உமாபதிசிவத்தின் இந்த அனுபவ நூல், தமிழ் இலக்கிய மரபில் தனித்த இலக்கிய வகையைப் பெற்றது. இதன் நீட்சியாக, மகாகவி பாரதியின் "மாதாவின் துவஜம்' அமைகிறது. தாயுமானவரின் ஆனந்தக் களிப்பு, வர்ணமெட்டு எனும் சந்தத்தில் அமையும் கொடிப்பாட்டாகிறது.
 ஓங்கி வளர்ந்த கம்பத்தின் உச்சியில் வந்தே மாதரம் எனும் வாசகம் துலங்கும் கொடியின் கீழ் இந்தியர்கள் வேறுபாடின்றி சேர்ந்து நிற்பதனை பாரதி போற்றுகிறார். அரசர்க்கு உரிய உறுப்பு ஒன்று இறைவனுக்கு ஆகி, தேசத்திற்கு உரியதாக உயர்ந்தமை, விரிந்த தமிழ் இலக்கியப் பரப்பு மட்டுமன்று, தமிழ்ச் சமூகம் அடைந்த வளர்ச்சியும் அன்றோ?
 -முனைவர் யாழ்.சு.சந்திரா
 
 
 
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/3/w600X390/tm6.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/mar/04/தசாங்கமும்-கொடிக்கவியும்-2873848.html
2869559 வார இதழ்கள் தமிழ்மணி இந்த வாரம் கலாரசிகன் Sunday, February 25, 2018 12:00 AM +0530 அகவை 82 கடந்த போதிலும் சுறுசுறுப்பாக இயங்குவது எப்படி என்பதை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர் ஆறு.அழகப்பனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இவருடன் பணியாற்றிய வேறொரு பேராசிரியரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர், பேராசிரியர் ஆறு.அழகப்பன் குறித்துத் தெரிவித்த கருத்து - "அழகப்பன் ஐயாவுக்கு நட்பு வட்டம் மிகவும் பெரிது. அதே அளவிலான விமர்சகர்களும் இருக்கிறார்கள். அவரை வியந்து ரசிக்கலாம் அல்லது விமர்சிக்கலாம்; ஆனால் தவிர்க்க முடியாது.''
எனக்குத் தெரிந்து கடந்த 60 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிக் குவித்துக் கொண்டிருப்பவர் அவர். இப்போதும்கூட நாளொன்றுக்கு மூன்று, நான்கு மணிநேரம் இலக்கியம் குறித்து ஏதாவது எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். எழுதி எழுதி அவரது கட்டைவிரலில் கைரேகை அழிந்துவிட்டதால், ஆதார் அட்டைக்கு ஐந்தாறு முறை சென்றும், கைரேகை கிடைக்காமல் ஆறாவது முறை அரை மனதுடன் கைரேகை எடுக்கப்பட்டதாக அவரே என்னிடம் தெரிவித்தார்.
பேராசிரியர் ஆறு. அழகப்பனின் இன்னொரு தமிழ்ப்பணி, ரிஷிகேசத்தில், கங்கைக் கரையில் அமைந்திருக்கும் கோவிலூர் மடத்தில், திருவள்ளுவர் சிலை நிறுவியிருப்பது. அதேபோல, உலகத் தமிழ் மாநாட்டில் தமிழன்னை ஓவியம் உருவாக்கியதில் இவருக்கும் பங்குண்டு. அந்த ஓவியம் இப்போது தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ளது.
இப்போது பேராசிரியர் ஆறு. அழகப்பனின் அடுத்த முயற்சி தொடங்கி இருக்கிறது. திருவண்ணாமலை மலைவலப் பாதையில் தமிழ்த் தாய்க்குக் கோயில் ஒன்று கட்ட வேண்டும் என்கிற முயற்சியில் அவர் இறங்கியிருக்கிறார். அதற்கான தமிழன்னையின் திருவுருவச் சிலையின் அடையாளபடத்தை எனக்கு அனுப்பி இருக்கிறார். மாதந்தோறும் முழுநிலவு நாளில் மலைவலம் செல்லும் அன்பர்கள் தமிழன்னையின் திருவுருவத்தையும் தரிசித்துவிட்டு, தமிழ் உணர்வோடு வீடு திரும்ப வேண்டும் என்கிற பேராசிரியர் ஆறு. அழகப்பனின் உன்னத முயற்சி வெற்றி பெற வேண்டும்.
ஒரு மாதத்திற்கு முன்பு தமிழ் வளர்ச்சியில் நீதித்துறையின் பங்களிப்புக் குறித்து எழுதியிருந்தேன். அந்த வரிசையில், மதுரை மாவட்டத் தலைமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி இல.சொ. சத்தியமூர்த்தியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மதுரை இராமகிருஷ்ண மடத்தில் இளைஞர் தினம் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்ததின விழாவில் கலந்துகொள்ளச் சென்றபோது, 15 ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதி வெளியிட்ட "புதிய நோக்கில் புரட்சிக் கவிஞர்' என்கிற புத்தகத்தை அன்பளிப்பாகத் தந்திருந்தார்.
இதுதான் அவரது முதல் நூலும் கூட. இதற்குப் பிறகு பல நூல்களை அவர் எழுதினாலும்கூட, இந்த முதல் நூலிலேயே அவருடைய நீரோட்டம் போன்ற எழுத்து நடையும், ஆழ்ந்து உள்நோக்கி ஆராயும் பகுப்பு முறையும் வெளிப்படுகின்றன.
"சங்க இலக்கியங்களுக்குப் பிறகு இயற்கையை மிகுதியாகப் பாடியவர் பாரதிதாசன். அவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் சிறந்த இதழாசிரியர், திறன்மிக்க நாடகங்களைப் படைத்த கலைஞர், தமது படைப்புகளில் நகைச்சுவையை நடம்புரிய வைத்தவர், தமிழ் மொழியை எண்ணற்ற சொற்களால் புகழ்ந்துரைத்தவர். பெயர்ப் பலகைகளிலும் தமிழ் இடம்பெற வேண்டும் எனப் போராடியவர், தமிழ் இயக்கம் கண்டவர். இத்தகு பாவேந்தரின் பன்முகத் தோற்றத்தையும் அவரது பேராற்றலையும் இந்நூலில் இயன்ற அளவுக்கு எடுத்துரைத்துள்ளேன்'' என்று இல.சொ. சத்தியமூர்த்தி முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போலவே அமைந்திருக்கிறது அவரது "புதிய நோக்கில் புரட்சிக் கவிஞர்' தொகுப்பு.
இதில் காணப்படும் "சுவை புதிது பொருள் புதிது', "பழமையும் புதுமையும்', "பெண்ணுரிமை முழக்கம்', "பாரதியும் பாரதிதாசனும்' ஆகிய கட்டுரைகள் பள்ளிக்கூட தமிழ்ப் பாடப்புத்தகத்தில் இணைக்கப்பட வேண்டியவை.
"புரட்சிக் கவிஞர்' பாரதிதாசன் குறித்த பல அரிய செய்திகளை இந்தப் புத்தகத்தின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. முன்னாள் அமைச்சர் இரா.நெடுஞ்செழியன் எழுதிய "புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வாழ்க்கை வரலாறு' என்கிற புத்தகத்திலிருந்து சில முக்கியமான பகுதிகளை மேற்கோள் காட்டியிருப்பதற்காக இல.சொ. சத்தியமூர்த்திக்கு நன்றி. இந்த அளவுக்குப் பாவேந்தரில் ஆழங்காற்பட்டிருக்கும் நீதிபதி சத்தியமூர்த்தி, பாவேந்தர் குறித்து முனைவர்பட்ட ஆய்வுகூட மேற்கொள்ளலாமே என்று சொல்லத் தோன்றுகிறது.

"புத்தகப் புழு' என்று கேள்விப்பட்டிருக்கிறோம். "எழுத்தை சுவாசிப்பவர்' என்று கூறக் கேட்டிருக்கிறோம். அப்படி இருக்கும் ஒருவர், ஒரு பதிப்பகத்தில் மேலாளராகவும் புத்தக விற்பனை நிலையத்தை நடத்துபவராகவும் இருந்தால் எப்படி இருக்கும்? "தேனில் விழுந்த வண்டு' என்று அதை ஒப்பிடலாமா என்று தெரியவில்லை.
துபாயில் பணிபுரிந்து வந்த கவிஞர் உஸ்மான், தாயகம் திரும்பிய பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போயிருந்தார். தனக்கு முன் பின் அறிமுகமில்லாத ரஹ்மத் அறக்கட்டளை நடத்தும் சிங்கப்பூர் தமிழ்நேசன் முஸ்தபாவுக்கு, வேலை கோரி ஒரு கடிதம் எழுதினார் அவர். தான் தொடங்க இருக்கும் ரஹ்மத் பதிப்பகத்துக்கு சரியான மேலாளர் கிடைத்துவிட்டார் என்று அடையாளம் கண்டு, அவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டார் முஸ்தபா. இப்போது ரஹ்மத் பதிப்பகம் மார்க்க சிந்தனை படைப்புகளுக்கும், கலாம் பதிப்பகம் பொதுவான படைப்புகளுக்கும் என்று தமிழகத்தின் முன்னணி பதிப்பகங்களாகத் திகழ்வதன் பின்னணியில் கவிஞர் உஸ்மானின் பங்களிப்பு அதிகம்.
கலாம் பதிப்பக புத்தக விற்பனை நிலையத்துக்கு வரும் புத்தகங்களை ஒன்றுவிடாமல் படித்துவிடுபவர் கவிஞர் உஸ்மான். எந்தப் புத்தகம் குறித்தும், எந்தப் படைப்பாளி குறித்தும் விவரம் வேண்டுமானால் முதலில் நான் தொடர்பு கொள்வது அவரைத்தான். விரல் நுனியில் எல்லா விவரங்களையும் வைத்திருப்பவர்.
சமீபத்தில் தினமணி - சிவசங்கரி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா முடிந்த பிறகு, அரங்கத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். கவிஞர் உஸ்மானும் அருகில் இருந்தார்.
"பொதுவாகவே நேர்மையாளர்களும், நல்ல எண்ணம் கொண்டவர்களும் பாதிக்கப்படுகிறார்களே... தேவையில்லாமல் அவர்களை சர்ச்சைக்குள்ளாக்கி, விமர்சித்து சிலர் வேதனைப்படுத்துகிறார்களே... அது ஏன்?'' என்று நண்பர் ஒருவர் கேட்டவுடன், கவிஞர் உஸ்மானிடமிருந்து அதற்கான விடை கவிதையாகவே வெளிப்பட்டது.

நேராக வளரும்
மரங்கள்தான்
முதலில்
வெட்டப்படுகின்றன!
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/24/w600X390/tm1.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/feb/25/இந்த-வாரம்-கலாரசிகன்-2869559.html
2869560 வார இதழ்கள் தமிழ்மணி ஒட்டா! ஒரு மதி கெட்டாய்! DIN DIN Sunday, February 25, 2018 12:00 AM +0530 வெண்பாப் புலி புகழேந்தியையும், ஒட்டக்கூத்தரையும் ஒருங்கே சந்தித்த ஒüவையார், ஒரே பாடலில் மும்மதி (மூன்று முறை மதி) வருமாறு பாடும்படிக் கேட்டுக்கொண்டார். ஒட்டக்கூத்தர் உடனே,
 
 "வெள்ளத்து அடங்காச் சின வாளை
 வேலிக் கமுகின் மீதேறித்
 துள்ளி முகிலைக் கிழித்து மழைத்
 துளியோடு இறங்கும் சோணாடா!
 கள்ளக் குறும்பர் குலம் அறுத்த
 கண்டா! அண்டர் கோபாலா!
 பிள்ளை மதி கண்ட எம்பேதை
 பெரிய மதியும் இழந்தாளே!'
 
 என்று பாடினார். "வெள்ளத்துக்கு அடங்காமல் வாளை மீன்கள் மேலெழும்பித் துள்ளி, பாக்கு மரத்தில் தாவி, மேகத்தைப் பிளந்து ஊடுருவி, அம் மேகம் பொழியும் மழை நீருடன் பூமியை அடையும் தன்மையுடைய சோழ நாட்டரசனே! உன்னைப் பணியாத பகைவரின் கூட்டத்தை அழிக்கும் வாளுக்கு உரியவனே! ஆயர் குலத்து ஆநிரைகளைக் காத்த திருமால் போன்றவனே! என் பேதைப் பெண், பிள்ளை மதியைக்(இளம்பிறை) கண்டு, தன் பெரிய மதியை(பேரறிவையும்) இழந்து விட்டாளே!' என்று பாடினார்.
 ஒட்டக்கூத்தரின் இப்பாடலில் பிள்ளைமதி, பெரியமதி ஆகிய இரண்டு "மதிகள்' மட்டுமே இருக்கக்கண்டு "ஒட்டா! ஒரு மதி கெட்டாய்!' எனச் சிரித்தார் ஒüவையார். அடுத்து, புகழேந்திப் புலவர்
 பாடினார்.
 
 "பங்கப் பழனத்து உழும் உழவர்
 பலவின் கனியைப் பறித்தொன்று
 சங்கிட்டு எறியக் குரங் கிளநீர்
 தனைக் கொண்டு எறியும் தமிழ்நாடா!
 கொங்கார்க் கமரர் பதியளித்த
 கோவே! ராஜ குல திலகா!
 வெங்கட் பிறைக்கும் கரும் பிறைக்கும்
 மெலிந்த பிறைக்கும் விழிவேலே!'
 
 புகழேந்தியின் பாடலில், வெங்கண் பிறை, கரும்பிறை, மெலிந்த பிறை ஆகிய மூன்று பிறைகள் வந்துள்ளன.
 "வயலுழவர் மீது குரங்கு பலாப் பழத்தைப் பறித்து எறிய, குரங்கின் மீது உழவர்கள் சங்குகளை எடுத்து எறிய, மீண்டும் குரங்கு இளநீர்க் காய்களைப் பறித்து வீசும் இயல்புடைய தமிழ் நாட்டவனே; கொங்கு நாட்டை வென்று அந்நாட்டு மன்னனுக்கு வீரமரணம் ஏற்படுத்தி, விண்ணுலகைச் சேரவைத்த மறவனே! வெம்மையுடைய பிறைச்சந்திரன் ஒளியாலும் (வெங்கண் பிறை), கரும்பை வில்லாகக்கொண்ட மன்மதன்(கரும்பு+இறை=மன்மதன்) விட்ட அம்பினாலும், உடல் தளர்ச்சியுற்று, வேல் போன்று கண்களையுடைய இப்பெண் கண்ணீர் சிந்துகின்றாள்!' என்று புகழேந்தியார் பாடியதைக் கேட்ட ஒüவையார் மகிழ்ந்து, புகழ்ந்தார். அதனாலன்றோ அவர் "புகழேந்தி'யானார்.
 
 - புலவர் ம. அபிராமி
 
 
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/24/w600X390/tm2.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/feb/25/ஒட்டா-ஒரு-மதி-கெட்டாய்-2869560.html
2869561 வார இதழ்கள் தமிழ்மணி அறிவுடையார் புகழை மறைக்க முடியாது  முன்றுறையரையனார் DIN Sunday, February 25, 2018 12:00 AM +0530 பழமொழி நானூறு
 பரந்த திறலாரைப் பாசிமேல் இட்டுக்
 கரந்து மறைக்கலும் ஆமோ? - நிரந்(து) எழுந்து
 வேயின் திரண்டதோள் வேல்கண்ணாய் விண்இயங்கும்
 ஞாயிற்றைக் கைம்மறைப்பார் இல். (பாடல்-34)
 நிரல்பட உயர்ந்து, மூங்கில் போன்ற திரண்ட தோள்களையும், வேல்போன்ற கண்களையும் உடைய பெண்ணே! வானிற் செல்லும் சூரியனைக் கையால் மறைப்பவர்கள் இல்லை (மறைக்க முடியாது.) அதுபோல, மிகுந்த அறிவாற்றல் உடையவர்களை, பாசியைப் போன்ற அடாத சில சொற்களையும் செயல்களையும் அவர் மேலிட்டு, அவர் புகழை மறைத்து ஒளிக்கவும் முடியுமோ? (மறைக்க முடியாது.) (க-து.) அறிவுடையார் புகழை மறைப்பின் மறைபடாது என்பதாம். "ஞாயிற்றைக் கைம்மறைப்பார் இல்லை' என்பது இச்செய்யுளில் வந்த பழமொழி.
 
 

]]>
http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/feb/25/அறிவுடையார்-புகழை-மறைக்க-முடியாது-2869561.html
2869562 வார இதழ்கள் தமிழ்மணி கவி பாடலாம் வாங்க - 13 DIN DIN Sunday, February 25, 2018 12:00 AM +0530 வெண்டளையும் வெண்பாவும் - 1
 "வாகீச கலாநிதி' கி.வா. ஜகந்நாதன்
 "எல்லாப் புலவர்க்கும் வெண்பாப் புலி' என்று ஒரு பாட்டு முடிகிறது. வெண்பாப் பாடுவது அரிது என்ற கருத்தை அது சொல்கிறது. ஆனால் பாடம் பண்ணுவதற்கு வெண்பா எளிதாக இருப்பது. ""வெண்பா இருகாலில் கல்லானை வெள்ளோலை, கண் பார்க்கக் கையால் எழுதானைப் - பெண்பாவி, பெற்றாளே பெற்றாள் பிறர்நகைக்கப் பெற்றாளே, எற்றோமற் றெற்றோமற் றெற்று'' என்ற பாட்டில், இரண்டு முறை ஒரு வெண்பாவைச் சொன்னால் சராசரி அறிவுடையவன் ஒருவன், அதைப் பாடம் பண்ணிவிடலாம் என்ற கருத்து அமைந்திருக்கிறது.
 வெண்பாவில் மிகவும் முக்கியமாக அமைய வேண்டியது வெண்டளை. மற்ற பாடல்களை - கட்டளைக் கலித்துறையைத் தவிர - தளையைப் பற்றிக் கவலைப் படாமலே பாடலாம். தளை இலக்கணம் தெரிந்து கொள்ளாதவர்களும் வெண்பா, கட்டளைக் கலித்துறை ஆகியவற்றையன்றி மற்றவற்றைப் பாடவிடலாம். ஆனால், வெண்டளையின் இலக்கணம் தெரியாமல் வெண்பாவைப் பாடவே முடியாது.
 தமிழில் ஏழு தளைகள் உண்டு. வெண்பாவுக்குரிய தளையை வெண்டளை என்று சொல்வார்கள்; இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை என்று அது இரண்டு வகைப்படும். ஆசிரியர் தளை என்பது ஒன்று. அதுவும் நேரொன்றாசிரியத்தளை, நிரையொன்றாசிரியத்தளை என்று இருவகைப்படும். கலித்தளை என்பது ஒன்றே. வஞ்சித்தளையென்பது ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை என்று இரண்டு வகை. ஆக நாலு பாவுக்கு உரிய நான்கு தளைகள் விரிந்து ஏழு தளைகள் ஆகும்.
 "தளை' என்ற சொல்லுக்குக் கட்டு, விலங்கு என்ற பொருள்கள் உண்டு. இரண்டு ரெயில் பெட்டிகளைச் சேர்ப்பதற்கு இடையே கொக்கி இருப்பதுபோல இரண்டு சீர்கள் இணையும்போது உள்ள கொக்கி அல்லது சங்கிலி போன்ற அமைப்பையே தளை என்று சொல்வார்கள்.
 "தமிழ்விடு தூது' என்னும் நூலில் தமிழில் உள்ள தளையை எண்ணி வேடிக்கையாக ஒரு புலவர் பாடியிருக்கிறார். பொய்கையார் என்னும் புலவர் களவழி நாற்பது என்ற நூலைப் பாடிச் சேரமானைச் சிறைவிடும்படி செய்தார். "சேரமான் காலில் இருந்த தளையை விடும்படி செய்த உனக்கு ஏழு தளை உண்டென்று சொல்வது என்ன பைத்தியக்காரத்தனம்?' என்று அந்தப் புலவர் பாடுகிறார். தமிழைப் பார்த்துச் சொல்வதாக இருக்கிறது அது.
 
 "... ..... சேரமான்
 தன்னடிக் கண்டு தளைவிடுத்தாய் ஏழ்தளைஉன்
 பொன்னடிக்குண் டென்பதென்ன புத்தியோ?'
 
 மற்றத் தளைகளை யெல்லாம் இப்போது தெரிந்துகொள்ள வேண்டாம்; அவற்றைப் பற்றிப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். வெண்டளையைப் பற்றிய இலக்கணத்தைத் தெரிந்து
 கொண்டு வெண்பாவின் இலக்கணத்தையும் இப்போது கவனிக்கலாம்.
 வெண்டளையின் இலக்கணத்தை எளிதிலே தெரிந்து கொள்வதற்கு நாடோடியாக ஒரு வாய்பாடு வழங்குகிறது. ""மாமுன் நிரையும் விளமுன் நேரும்: காய்முன் நேரும்'' என்பதே அந்த வாய்பாடு. மூன்றே மூன்று விதிகள். மாமுன் நிரை என்பது ஒன்று; விளமுன் நேர் என்பது ஒன்று; காய்முன் நேர் என்பது ஒன்று. முன் இரண்டும் இயற்சீராகிய ஈரசைச்சீர் முன்னாலே நிற்க, அவற்றின்பின் வரவேண்டிய சீர்களைப் பற்றிச் சொல்வது; பின்னது வெண்சீராகிய காய்ச்சீர் நிற்க, பிறகு வருவதைப் பற்றிச் சொல்வது; நின்ற சீர் முழுவதையும் தெரிந்துகொள்ள வேண்டும்; வரும் சீரின் முதல் அசை இன்னதென்று தெரிந்தால் போதும்; இன்ன தளையென்று சொல்லி
 விடலாம்.
 
 (1) மாமுன் நிரை:
 மாச்சீர் என்பது நேரில் முடியும் ஈரசைச் சீர்; தேமா, புளிமா என்பவை (நேர்நேர், நிரைநேர்). இந்தச் சீரின் முன் நிரை வரவேண்டும். அது இயற்சீர் வெண்டளை.
 
 "அகர முதல எழுத்தெல்லாம்''
 
 இந்த அடியில் அகர என்பது புளிமா; அதன்முன் முத என்ற நிரை வந்தது; இது இயற்சீர் வெண்டளை. முதல என்பதும் புளிமா; இதன் முன் எழுத் என்ற நிரை வந்தது; ஆதலின் இதுவும் இயற்சீர் வெண்டளை.
 
 (2) விளமுன் நேர்:
 விளம் என்பது நிரையில் முடியும் ஈரசைச் சீர்; கூவிளம், கருவிளம் என்ற இரண்டும் விளச்சீர் என்பது நமக்குத் தெரியும். இந்த இரண்டு சீர்களுக்குப் பின் வரும் சீரின் ஆரம்பம் நேராக இருந்தால் வெண்டளை; இதுவும் இயற்சீர் வெண்டளையே.
 
 "மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்''
 
 என்ற குறளின் அடியில் மலர்மிசை என்றது கருவிளம்; அதன்முன் ஏ என்ற நேர் வந்தது. ஏகினான் என்பது கூவிளம்; அதன் முன் மா என்ற நேர் வந்தது. மாணடி என்பதும் கூவிளம்; அதன் முன் சேர்ந் என்று நேர் வந்தது. இவை யாவும் இயற்சீர் வெண்டளை.
 
 (3) காய்முன் நேர்:
 காய்ச்சீருக்கு வெண்சீர் என்றும் ஒரு பேர் உண்டு. பெரும்பாலும் வெண்பாவில் வருவதனால் அப்பெயர் வந்தது. நேரில் முடிகிற மூவகைச் சீர்கள் அவை. அவற்றிற்குமுன் நேர் வந்தால் அது வெண்டளை; நின்ற சீர்
 வெண்சீர் ஆதலின் இது வெண்சீர் வெண்டளையாகும்.
 
 "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு''
 
 என்ற அடியில் காய்முன் நேர் வந்ததைக் காணலாம்.
 தளை பார்க்கும் போது நின்ற சீர் இன்னதென்று பார்ப்பதுபோல, வருஞ் சீர் இன்னதென்று கவனிக்க வேண்டிய அவசியம் இல்லை. வருஞ்சீரின் முதல் அசையைக் கவனித்தால் போதும்.
 ஆகவே, மாமுன் நிரை என்றால், தேமா, புளிமா என்ற இரண்டில் ஒன்று நிற்க, புளிமா, கருவிளம், புளிமாங்காய், கருவிளங்காய், மலர் என்ற வாய்பாடுகளையுடைய சீர்கள் வரலாம். தனி நிரையசையே சீராக வந்தால் அதற்குரிய வாய்பாடு மலர் என்பது; வெண்பாவின் இறுதியில் அது வரும்.
 விளமுன் நேர் என்றால் கூவிளம், கருவிளம் என்ற இரண்டிலும் ஒன்று நிற்க, தேமா, கூவிளம், தேமாங்காய், கூவிளங்காய் நாள் என்ற வாய்பாடு உடைய சீர்கள் வரலாம். நாள் என்பது நேர் என்ற தனி அசையே
 ஓரசைச் சீராக வருவது; வெண்பாவின்
 ஈற்றில் அது வரும்.
 காய்முன் நேர் என்பது, தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய் என்ற நான்கில் ஏதேனும் ஒரு சீர் நிற்க, அதன் முன் தேமா, கூவிளம், தேமாங்காய், கூவிளங்காய், நாள் என்ற வாய்பாடுகளையுடைய சீர்கள் வருவது. இவை மூன்றும் வெண்டளை.
 வெண்பாவில் எதுகை மோனை இல்லாமல் இருக்கலாம்; ஆனால், வெண்டளை இல்லாமல் வராது. திருக்குறளில் சில பாக்களில் எதுகை, மோனை இல்லாமல் இருக்கலாம்; ஆனால் 1330 குறட்பாக்களிலும் வெண்டளை அமைந்தே இருக்கும்.
 (தொடர்ந்து பாடுவோம்...)
 
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/24/w600X390/tm3.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/feb/25/கவி-பாடலாம்-வாங்க---13-2869562.html
2869563 வார இதழ்கள் தமிழ்மணி சங்கப் பாடல்கள் சுட்டும் கூர்வாய் எறியுளி DIN DIN Sunday, February 25, 2018 12:00 AM +0530 உ.வே. சாமிநாதையர் போன்றோர் ஏடுகளிலிருந்து நூல்களைப் பதிப்பிக்கும்போது ஒரே தலைப்பில் அமைந்த பல ஊர்களிலிருந்து கிடைத்த பல சுவடிகளில் காணப்பெறும் ஒவ்வொரு பாட்டையும், ஒவ்வொரு சொல்லையும் ஒப்பிட்டுப் பார்த்து பாட வேறுபாடுகள் இருக்குமானால் எது சரியான பாடம் என்பதை உறுதிசெய்து, மூலப்பாடலை அச்சிடுவதோடு வேறுபட்டுக் காணும் சொற்களையோ, அடிகளையோ ஒவ்வொரு பாட்டிற்கும் கீழாக "பாடபேதம்' எனக் குறிப்பிட்டு அதனையும் அச்சிடுவர்.
பல பதிப்புகளைக் கண்ட அகநானூறு எனும் அருந்தமிழ் நூலின் நித்திலக்கோவையில் அமைந்த நெய்தல் திணைப்பாடல், "பன்னாளெவ்வந் தீரப் பகல்வந்து' (பா.340) எனத் தொடங்குகிறது. இருபத்து நான்கு அடிகளை உடையதாகிய இப்பாடலை நக்கீரர் பாடியுள்ளார். திரையன் என்பானுக்கு உரியதான பவத்திரி எனும் நெய்தல் நிலத்துத் தலைவன் ஒருவன் தான் காதல் கொண்ட தலைவி ஒருத்தியை குறிப்பிட்ட ஓரிடத்தே நாளும் சந்தித்து இன்புற்று வருகிறான். இதற்குத் தோழியும் உறுதுணையாக விளங்கினாள். பகற்பொழுதில் கானற் சோலையில் கூடியிருந்து இரவு நெருங்கவும் அவன் தன்னூர்க்குச் செல்லுதலை வழக்கமாகக் கொண்டிருந்தான். இந்நிலையில் அவர்களை மண உறவால் நிலையாக இணைக்க விரும்பிய தோழி, தலைவியின் தனிமையான இரவு
நேரத் துன்பத்தினை தலைவனுக்கு எடுத்துரைத்து, அன்று அவர்கள் பாக்கத்தில் தங்கிச் செல்லுமாறு கூறுகிறாள். குறியிடத்தில் மட்டுமே தலைவியைச் சந்தித்த தலைவனுக்கு, அவள் இல்லம் இருக்கும் ஊரின் சிறப்பினை இப்பாடலில் தோழி கூறியுள்ளாள்.
கடற்கரைப் பாக்கமான அவ்வூரில் அவள் இல்லம் இருக்குமிடத்தில் தாழை மரங்களில் மீனவர்தம் கிழிந்த வலைகள் தொங்கவிடப்பெற்று, அவை காற்றில் பறந்து கொண்டு இருக்கும் என்று கூறும் தோழி, அவ்வலைகள் யாது காரணத்தால் கிழிந்து திகழ்கின்றன என்பதையும் எடுத்துரைத்துள்ளாள். இது பற்றி கூறும் அகநானூற்று ஏட்டுச் சுவடிகள் இரு மாறுபட்ட கூற்றுக்களைக் கூறுகின்றன. சில பதிப்பாசிரியர்கள் ஒரு கூற்றையும் சிலர் மறுகூற்றையும் மூலப் பாடல்களில் ஏற்றுக்கொண்டு தாங்கள் ஏற்காத கூற்றை பாடலின் கீழ் பாடபேதமாக அச்சிட்டுள்ளனர். இராஜகோபாலார்யன், ந.மு. வேங்கடசாமி நாட்டார், கவியரசு வேங்கடாசலம் பிள்ளை போன்றோர் பதிப்புகளில்,

"கூர்வளிக் கடுவிசை மாண்டலிற் பாய்ந்துடன்
கோட்சுறா கிழித்த கொடுமுடி நெடுவலை'

எனக் குறிப்பிட்டுள்ளனர். இதன் பொருளாவது: பரதவர் (மீனவர்) மீன் வேட்டையாட தங்கள் படகுகளில் செல்லும்போது கடுமையான காற்று (சூறைக்காற்று) கடற் பரப்பெங்கும் பரவி அலைத்தபோது அதன் தாக்கம் தாங்க முடியாத சுறாமீன்கள் பாய்ந்ததால் அவர்கள் கடலில் பரப்பியிருந்த கொடுமுடி நெடுவலைகள் கிழிந்தன என்பதாம்.
சமாஜம், மர்ரே, உ.வே.சா. நூலகம் ஆகிய நிறுவனப் பதிப்புகளில்,

"கூர்உளிக் கடுவிசை மாட்டலின் பாய்புடன்
கோட்சுறா கிழித்த கொடுமுடி நெடுவலை'

என்றே காணப்பெறுகின்றன. இதன் பொருளாவது, பரதவர் மீன் வேட்டையாட படவுகளில் சென்று வலைகளை கடலில் பரப்பிய பின்பு அங்கு திகழ்ந்த சுறா மீன்களைத் தங்களின் கூர் உளி என்ற மீன்பிடி கருவியால் தாக்கும்போது
தாக்குண்ட சுறாமீன்கள் துள்ளிப் பாய்ந்ததால் அங்கிருந்த வலைகள் கிழிந்தன என்பதாகும்.
இங்கே நாம் முன்பு கண்ட "கூர்வளி' என்ற கூற்று அவ்வளவாக ஏற்புடையதாக இல்லை. கடுங்காற்று எனக் கூறலாமேயொழிய, கூர்மையான காற்று என்பது பொருத்தமாக இல்லை.
"கூர்உளி கடுவிசை மாட்டலின்' என்ற சொற்றொடரே பொருத்தமாக உள்ளது. இதனை வலியுறுத்தும் வண்ணம் சங்கத் தமிழ் நூல்களின் மூன்று பாடல்களின் கூற்றுகள் அமைந்துள்ளன. அகநானூற்று மணிமிடைபவளத்தின் 210-ஆவது பாடலில்,

"குறியிறைக் குரம்பை கொலைவெம்பரதவர்
எறியுளி பொருத ஏமுறுபெருமீன்
புண்ணுமிழ் குருதி புலவுக்கடல் மறுப்பட'

என்ற அடிகள் காணப்பெறுகின்றன. பரதவர் எனும் மீன் வேட்டையாடுவோர் கடலில் சென்று பெருமீன் ஒன்றினை "எறிஉளி' எனும் கருவியால் தாக்கியபோது அது அம்மீனின் உடலில் பாய்ந்ததால் கடல் பரப்பெங்கும் குருதியால் சிவந்தது என்பது இதன் பொருளாகும். நற்றிணையின் 388-ஆவது பாடலோ,

".. .. .. நோன்புரிக்
கயிறுகடையாத்த கடுநடை எறியுளித்
திண்டிமிற் பரதவர் ஒண்சுடர் கொளீஇ
நடுநாள் வேட்டம் போகி வைகறைக்
கடன்மீன் றந்து குவைஇ...

என்று குறிப்பிட்டுள்ளது. இதனால், முறுக்கிய கயிற்று நுனியிலே கட்டிய திமிங்கிலத்தின்மீது எறிகின்ற எறியுளியுடன் படகுகளில் இரவில் விளக்குகளுடன் சென்று மீன்வேட்டை செய்யும் மீனவர்கள் விடியற்காலை கடற்கரையில் வந்து மீன்களைக் குவிப்பர் என்பது அறிகிறோம். குறுந்தொகையின் 304-ஆவது பாடல்,

"கொல்வினைப் பொலிந்த கூர்வாய் எறியுளி
முகம்பட மடுத்த முனிவெதிர் நோன்காழ்
தாங்கரு நீர்சுரத் தெறிந்து வாங்குவிசைக்
கொடுந் திமிற் பரதவர் கோட்டுமீன் எறிய'

என்று குறிப்பிடுவதால், உலர்ந்த மூங்கில் கழியின் நுனியில் கூரிய வாயினையுடைய எறியுளி பொருத்தப்பெற்று அக்கருவியால் பரதவர் கொம்பையுடைய சுறாமீன்களை வேட்டையாடியதை அறிகிறோம். இம்மூன்று பாடல்களின் கூற்றுக்களையும் தொகுத்து நோக்கும்போது, படகில் செல்லும் மீனவர்கள் கூர்முனையுடைய எரியுளியை மூங்கில் கழியின் நுனியில் சொருகி, அக்கழியினை நீண்ட கயிறுகொண்டு படகுடன் இணைத்து, அக்கருவி கொண்டு சுறாமீன்களைத் தாக்கி மீன் பிடிக்கும் பழைமையான மரபு பற்றி அறிகிறோம்.
இம்மூன்று பாடல்களிலும் கையாளப்பெற்ற எறியுளி, கயிறு கடையாத்த கடுநடை எறியுளி, கூர்வாய் எறியுளி என்ற சொல்லாட்சிகளை முதலில் கண்ட பாடபேத கூற்றுக்களுடன் ஒப்பிட்டு நோக்கும்போது அகநானூற்று 340-ஆம் பாடலில், "கூர்உளிக் கடுவிசை மாட்டலின் பாய்புடன்' என்ற அடியே பாடலுக்குரிய ஏற்புடைய அடி என்பது விளங்கும்.
கூர்வாய் எரியுளி என்ற மீன்வேட்டையாடும் கருவியின் வடிவம் எவ்வாறு திகழும் என்பதை சோழநாட்டு பட்டீச்சரம் கோயிலிலுள்ள தஞ்சை நாயக்கர் கால ஓவியம் ஒன்று நமக்குக் காட்டி நிற்கின்றது. அக்காட்சி ஓவியத்தில் படகொன்றினை ஒருவன் துடுப்பு கொண்டு வலிக்க, மற்றொருவன் எறிஉளி ஏந்தி மீன் ஒன்றினைத் தாக்க முற்படுகிறான். அவனே முன்னர் படகுடன் கயிற்றால் இணைக்கப்பெற்ற எறிஉளி கொண்டு தாக்கிய மீன் ஒன்று அவ்வெறியுளியோடு நீரில் நீந்துகின்றது. அவ்வுளியானது மீனின் உடம்பைத் துளைத்து மறுபுறம் வெளிவந்துள்ளது. அந்த எறியுளி நீண்ட மூங்கில் கம்பில் சொருகப்பெற்று திகழ்கின்றது.
கூர்வாய் எறியுளி என்பது இரும்பினால் செய்யப்பெற்று மரக்கம்பில் சொருகப்பெற்ற சுளுக்கியாகும். அதன் வாய் கூராகவும், பிளவுபட்ட மற்றொரு கூர்முனையுடையதாகவும் இருக்கும். அதனை எறிவதற்காக கம்பில் இணைக்கப்பெறும்போது கூர்வாய் எறியுளி என பெயர் பெறுகின்றது. மீனைத் தாக்க எறியும் அந்த எறியுளி மீனோடு சென்றுவிடாமல் இருக்க அதில் கயிறு பிணைக்கப்பெற்று படகோடு இணைக்கப் பெற்றிருக்கும். சங்கப் பாடல்களுக்குக் காட்சி வடிவம் காட்டும் பட்டீச்சரம் சிவாலயத்து ஓவியம், பாடபேதத்தையும் நிர்ணயம் செய்ய உதவி நிற்கின்றது.
- முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/24/w600X390/tm4.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/feb/25/சங்கப்-பாடல்கள்-சுட்டும்-கூர்வாய்-எறியுளி-2869563.html
2865485 வார இதழ்கள் தமிழ்மணி இலக்கியங்களில் "கொச்சை' மொழி! - வாதூலன் Sunday, February 18, 2018 02:09 AM +0530 இலக்கியத்தில் கொச்சை மொழிகள் (பேச்சு வழக்கு) அனுமதிக்கப்படுகின்றன. "போடா' "வாடா' "சீச்சி!' போன்ற சொற்கள் நித்தாஸ்துதி போன்ற கவிதைகளில் காணக்கிடைக்கின்றன. பாஞ்சாலி சபதத்தில் பீமன் ஆவேசமும் ஆற்றாமையுமாகப் பேசுகிற இடத்தில் பல சொற்கள் வருகின்றன. ஆனால், அசலான கவிதையிலேயே மகாகவி பாரதி, உரையாடல் வார்த்தையை கவிதையின் தன்மைக்கேற்பப் பயன்படுத்தியிருக்கிறார்.

""ஓமென் றுரைத்தனர் தேவர் ஓம்
ஓமென்று சொல்லி உறுமிற்றுவானம்
பூமி யதிர்ச்சி உண்டாச்சு - விண்ணைப்
பூழிப் படுத்திய தாஞ்சுழற்காற்று. 

புதுச்சேரியில் பிரேஞ்சு அரசு ஆட்சி புரிந்தபோது ஆனந்தரங்கம் பிள்ளை என்கிற தமிழர் அங்கு வசித்து வந்தார். செந்தமிழை ஆதரித்து, வாடி வந்தடைந்த அறிஞர்களுக்குப் பரிசளித்து வந்தார். 
ஒருமுறை பசியால் வாடிய புலவர் ஒருவர் ஆனந்தரங்கம் பிள்ளையின் மாளிகையை அடைந்தார். அறுவடைக் காலமாதலால், பிள்ளையவர்கள் தம் நிலத்தைக் கண்காணிக்கச் சென்றிருந்தார். அங்கு வரப்பிலே சிதறிக்கிடந்த நெல்லை ஒவ்வொன்றாகப் பொறுக்கி, சேர்த்துக் கொண்டிருந்த வள்ளலை அந்தப் புலவர் பார்த்தார்.
புலவர் தாம் வந்த நோக்கத்தைத் தெரிவித்தும்கூட ஆனந்தரங்கம்பிள்ளை, நெல்லைப் பொறுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பொறுமையிழந்த புலவரைக் கண்டு பிள்ளையவர்கள், ""ஏன் பறக்கறீர்? சற்றுப் பொறும்'' என்றார். உடனே புலவர் வாயிலிருந்து பாசமும், பசியும் ஒருசேர பாட்டு ஒன்று பிறந்தது:

"கொக்குப் பறக்கும், புறாப் பறக்கும்
குருவி பறக்கும் குயில் பறக்கும்
நக்குப் பொறுக்கிகளும் பறப்பர்
நானேன் பறப்பேன் நராதிபனே!
திக்கு விசயம் செலுத்தி உயர்
செங்கோல் நடாத்தும் அரங்கா நின்
பக்கம் இருக்க ஒருநாளும்
பறவேன், பறவேன், பறவேனே...!'

இப்பாட்டைக் கேட்டு இன்புற்ற ஆனந்தரங்கம்பிள்ளை பரிசளித்தார் என்பது வரலாறு. மேலே குறிப்பிட்ட இரண்டும் சமீப காலத்தில் இயற்றப்பட்ட பாடல்கள். ஆனால், கம்பராமாயணத்திலேயே கொச்சையான ஒரு சொல் (சீச்சி!) வருவதைக் காண்கிறோம்.
சீதையைக் கவர பொன் மான் வேடம் (உருவம்) கொண்டு யோசனை கூறியபோது மாரீசன் அதை விரும்பவே இல்லை. அப்போது மாரிசன் அறிவுரை பகர்கிறான்; சினம் பொங்கும் உள்ளத்தோடு பலவாறு பேசுகிறான். 

"இச்சொல் அனைத்தும் சொல்லி
அரக்கன், எரிகின்ற
கிச்சின் உருக்கு இட்டு உய்த்தனன்
என்னக் கிளரா முன்
"சிச்சி' என, தன் மெய்ச் செவி
பொத்தி தெருமந்தான்;
அச்சம் அகற்றி, சென்ற 
மனத்தோடு அறைகின்றான்' (3243)

"பற்றி எரியும் தீயில் இரும்பைப் போட்டுக் காய்ச்சி, அதைச் செவியில் பாய்ச்சினாற் போன்ற சொற்களை எல்லாம் கூறி, தூண்ட முற்படுமுன் "சிச்சி' என்று தன் காதுகளை மூடுகிறான். 
பின்னர் இராவணனிடம் கொண்ட பயத்தை நீக்கி, சினம் பொங்கும் உள்ளத்தோடு சொல்லத் தொடங்கினான்' என்பது இப்பாட்டின் பொருள். கிச்சு - நெருப்பு, கிரிசானு என்ற வடசொல்லின் திரிபு) பழைய இலக்கியத்திலும் சரி, சென்ற நூற்றாண்டு இலக்கியத்திலும் சரி, உணர்ச்சி வேகத்தில் வந்து பாய்கின்ற சில சொற்கள் கவிதைக்கு வலிமை சேர்த்திருக்கின்றன.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/18/w600X390/tm4.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/feb/18/இலக்கியங்களில்-கொச்சை-மொழி-2865485.html
2865487 வார இதழ்கள் தமிழ்மணி இந்த வார கலாரசிகன் DIN DIN Sunday, February 18, 2018 02:08 AM +0530 உலகத் தாய்மொழி தினம் இருக்கிறதென்று இன்னும் கூட நம்மில் பலருக்கும் தெரியாமலிருப்பது மிகவும் வேதனைக்குரியது. உலக நாடுகள் பல தாய்மொழி தினத்தை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுகின்றன. அதன் மூலம் மக்களுக்கு தங்களது தாய்மொழியின் மீதான பற்றை உறுதிப்படுத்துகின்றன.
சிங்கப்பூரை எடுத்துக் கொண்டால், தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் ஏப்ரல் மாதத்தைத் தமிழர்களின் தாய்மொழி மாதம் என்று அரசே முனைப்புடன் கொண்டாடுகிறது. அந்த மாதத்தில் தாய்மொழி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை அரசின் உதவியுடன் தமிழ் அமைப்புகள் நடத்துகின்றன. குழந்தைகள் அந்த நிகழ்ச்சிகளில் பங்குபெறுவது ஊக்குவிக்கப்படுகிறது. தமிழுக்கு மட்டுமல்ல, சிங்கப்பூரின் ஏனைய இரண்டு மொழிகளான மாண்டரின் (சீனம்), மலாய் ஆகிய மொழிகளுக்காகவும் ஒரு மாதம் கொண்டாடப்படுகிறது.
ஐரோப்பா கண்டத்திலுள்ள 49 நாடுகளிலுமே அவரவர் நாட்டின் தாய்மொழி மூலமாகத்தான் கல்வி வழங்கப்படுகிறது என்பது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. இன்னும் சொல்லப்போனால், ஆங்கிலத்தின் தாயகமான இங்கிலாந்திலேயே கூட பல மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களின் தாய்மொழிகளான காடிஸ், ஐரிஷ், வேல்ஸ் உள்ளிட்ட மொழிகள்தான் கல்வியிலும் ஆட்சியிலும் கோலோச்சுகின்றன. 
பிப்ரவரி 21-ஐ உலகத் தாய்மொழி தினமாக அறிவித்ததற்கு ஒரு பின்னணிக் காரணமும் உண்டு.1947-இல் மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் இணைந்து பாகிஸ்தான் உருவானபோது, அதன் தேசிய மொழியாக பஞ்சாபியர்களின் ஆதிக்கத்தில் இருந்த பாகிஸ்தானிய அரசு, உருதுவை அறிவித்தது. இதை வங்காளத்தவர்கள் அதிகமாக வாழும் கிழக்கு பாகிஸ்தான் ஏற்கவில்லை. 1952-இல் வங்காள மொழியையும், பாகிஸ்தானின் இரு தேசிய மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என்று கூறி மிகப்பெரிய போராட்டம் நடந்தது. டாட்டா நகரில், நீதிமன்றத்துக்கு அருகில் நடந்த தாய்மொழிக்கான போராட்டத்தில் மாணவர்கள் பலர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான நாள், பிப்ரவரி 21.
ஆங்கிலத்தின் ஆதிக்கம் அதிகரிக்க அதிகரிக்க தங்களது மொழி பாதிக்கப்பட்டுவிடுமோ என்று உலக நாடுகள் பல அஞ்சத் தொடங்கியதன் பின்னணியில்தான் 1999-ஆம் ஆண்டில் யுனெஸ்கோ தாய்மொழியைக் காக்கவும், வளர்க்கவும், கொண்டாடவும் உலகத் தாய்மொழி தினம் என்று அந்த பிப்ரவரி 21-ஆம் தேதியை அறிவித்தது.
தாய்மொழி வழிக் கல்வி படிப்பதால் மாணவர்கள் பாடங்களை நன்கு உணர்ந்து, புரிந்து படித்து, வளர்ச்சி பெறுவர் என்பதுதான் தாய்மொழி தினத்தைக் கொண்டாடுவதன் நோக்கம். தொன்மையான நாகரிகமுள்ள தமிழர்கள் தங்களது மொழியையும் கலாசாரத்தையும் காக்க வேண்டிய அவசியம் குறித்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்வது அவசியம். சிங்கப்பூர் போல தமிழகத்திலும் தாய்மொழி மாதம் கொண்டாடாவிட்டாலும் கூட தாய்மொழி தினத்தையாவது அரசின் ஆதரவுடன் தமிழகமெங்கும் கொண்டாடுவதை உறுதிப்படுத்த வேண்டும். அன்று ஒரு நாளாவது "தமிழில் பேசுவோம்' என்பதைத் தாரக மந்திரமாக நம்மால் முன்னெடுத்துச் செல்ல முடியுமானால், தமிழ் தழைக்கும்.


கடந்த ஜனவரி 18-ஆம் தேதி, சென்னை புத்தகத் திருவிழாவில் பேராசிரியர் காவ்யா சண்முகசுந்தரம் தொகுத்துப் பதிப்பித்திருக்கும், அ.ச.ஞா.வின் "இலக்கியக் கலை' புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தும் நடக்காமல் போயிற்று. பேராசிரியர் அ.ச.ஞா.நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி சிறப்பு வெளியீடாக வெளிக்கொணரப்பட்டிருக்கிறது "இலக்கியக் கலை' என்கிற தொகுப்பின் முதல் பகுதி. 
1006 பக்கங்கள் கொண்ட அந்தப் புத்தகத்தை முழுமையாக என்னால் படிக்க முடியவில்லை. அதில் பல பகுதிகளைப் படிக்க வேண்டும் என்று குறித்து வைத்திருக்கிறேன். அந்தப் புத்தகத்தின் சில முக்கிய பகுதிகளைப் படித்துவிட்டேன்.
பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவர் என்பதில் யாருக்குமே இருவேறு கருத்து இருக்க வாய்ப்பில்லை. இளைஞர்களால் ஏற்கப்பட்ட அறிஞர். கற்றோரால் போற்றப்பட்ட பெருந்தகை. திறனாய்வாளர், படைப்பாளர், சொற்பொழிவாளர், மொழிபெயர்ப்பாளர் என திருச்சி மாவட்டம் அரசன்குடியில் பிறந்த அ.ச.ஞா.வின் பரிமாணங்கள் எத்தனை எத்தனையோ...
நாவலர் சோமசுந்தர பாரதியார், வேங்கடசாமி நாட்டார், பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார், இரா. இராகவையங்கார், சீனிவாச சாஸ்திரியார் உள்ளிட்டோர் இவருக்கு ஆசான்களாக இருந்தவர்கள். பன்மொழி வித்தகர் என்று அனைவராலும் போற்றப்படும் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் நிழலாகக் கடைசி வரை இருந்தவரும் அ.ச.ஞா.தான். 37க்கும் அதிகமான புத்தகங்களை எழுதியிருக்கும் அ.ச.ஞா., கலைமகள் இதழில் தொடர்ந்து எழுதிவந்த கட்டுரைகள் இன்றளவும் இலக்கிய வட்டாரங்களில் பேசவும், மேற்கோள் காட்டவும்படுகின்றன.
இந்தத் தொகுப்பில் நான் ரசித்துப் படித்தது, அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த பல்வேறு ஆளுமைகள் குறித்த அவருடைய பதிவுகள். "கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சி., நாவலர் வேங்கடசாமி நாட்டார், மகாவித்துவான் இரா.இராகவையங்கார், நாவலர் சோமசுந்தர பாரதியார், விபுலாந்த அடிகள், மகாகனம் சீனிவாச சாஸ்திரியார், பி.டி.ராஜன், "கம்பன் அடிப்பொடி' சா.கணேசன், "தினமணி' முன்னாள் ஆசிரியர் ஏ.என். சிவராமன், "ரசிகமணி' டி.கே.சி., மூதறிஞர் ராஜாஜி, "புரட்சிக் கவிஞர்' பாரதிதாசன் ஆகியோர் பற்றிய ஒவ்வொரு கட்டுரையும் தனித்தனி புத்தகங்கள்.
அ.ச.ஞா.வுக்கு "தமிழ்த் தென்றல்' திரு. வி.க. மீது இருந்த தாளாப் பற்றும் மரியாதையும் அவர் குறித்த பதிவுகளின் மூலம் தெரிகிறது. திரு.வி.க.வை பற்றிய அ.ச.ஞா.வின் பதிவுகளை மறுவாசிப்புக்கு உட்படுத்தியே தீரவேண்டும் என்று குறித்து வைத்திருக்கிறேன். நான் ஓய்வு பெற்ற பிறகு இன்னொரு முறை ஆழ்ந்து படிக்க வேண்டும் என்று சில புத்தகங்களைப் பட்டியலிட்டு வைத்திருக்கிறேன். அந்தப் பட்டியலில் அ.ச.ஞா.வின் "இலக்கியக் கலை'யையும் சேர்த்துவிட்டேன்.


கடந்த மாதம் மதுரையிலிருந்து கோவைக்குக் காரில் பயணித்துக் கொண்டிருந்தேன். "தினமணி' நிருபர் ரஹ்மான், கவிஞர் திருதாரை. தமிழ்மதி என்கிற புனைபெயரில் எழுதும் தனது நண்பர் சி.தண்டபாணி என்னைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தார். சிறுவர் மணியிலும், தினமணி கதிரிலும் அவருடைய படைப்புகள் ஏற்கெனவே வெளிவந்து, நான் அவற்றைப் படித்திருக்கிறேன். மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கும் அவரின் புதிய படைப்பு "உன்னைத் தோளில் வைத்து உலகைச் சுற்ற ஆசை!' என்கிற கவிதைத் தொகுப்பு. அதிலிருந்து ஒரு கவிதை, "யானையின் ஆசி மொழி!' 
குனி.. நன்றாகக் குனி..
தானே நிமிருவாய்
என்னிடம் மட்டுமல்ல
வாழ்க்கையிலும்!

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/18/w600X390/shrilakshmi.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/feb/18/இந்த-வார-கலாரசிகன்-2865487.html
2865486 வார இதழ்கள் தமிழ்மணி கவி பாடலாம் வாங்க - 12: ஆசிரியப்பா "வாகீச கலாநிதி' கி.வா. ஜகந்நாதன் DIN Sunday, February 18, 2018 02:04 AM +0530 இதுவரையில் ஆசிரிய விருத்தத்தைப் பற்றியும், ஆசிரியப் பவைப் பற்றியும் சில இலக்கணங்களைத் தெரிந்து கொண்டோம். ஆசிரியப் பாவைப் பற்றி இன்னும் சில இலக்கணங்கைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆசிரியப்பாவில் பெரும்பாலும் ஈரசைச் சீர்களே வரும் என்பதை, அவ்வகைச் சீர்களுக்கு அகவற்சீர், ஆசிரிய உரிச்சீர் என்று பெயர் வழங்குவதால் தெரிந்து கொள்ளலாம். சங்க காலத்து நூல்களில் வரும் ஆசிரியப்பாக்களில் காய்ச்சீர் இடையே விரவி வரும். அதனால் அதன் ஓசையே கம்பீரமாக இருக்கும்.
"கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமஞ்செப் பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோநீ அறியும் பூவே!'
இந்தப் பாட்டு எழுந்ததற்குக் காரணமான கதையைப் பலர் அறிந்திருப்பார்கள். கதை உண்மையோ, இல்லையோ அதைப்பற்றி இங்கே கவலை வேண்டாம். ஒரு கதையைப் படரவிடுவதற்குக் காரணமான பாட்டு இது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டால் போதும். சங்க நூல்கள் மிகுதியாக வழங்காத இடைக்காலத்திலும் இந்தப் பாட்டு வழங்கி வந்தது. இதை ஆலவாய் இறைவன் பாடல் என்று அந்த வரலாறு கூறுகிறது.
இந்தப் பாடலில் ஈற்றயலடி மூன்று சீர்களால் அமைந்திருக்கிறது. ஆகவே, இது நேரிசை ஆசிரியப்பா. இதில் இரண்டாவது அடியின் முதற்சீரூம். மூன்றாம் அடியின் முதற்சீரும், ஐந்தாம் அடியின் இரண்டாவது சீரும் மூவசைச் சீர்களாக வந்திருக்கின்றன. அவை தேமாங்காய், கருவிளங்காய், புளிமாங்காயாக உள்ளன. எட்டுத்தொகையில் நற்றிணை, குறுத்தொகை, ஐந்குறுநூறு, பதிற்றுப்பத்து, அகநானூறு, புறநானூறு என்னும் நூல்கள் ஆறும் ஆசிரியப்பாக்களால் ஆனவை. அவற்றிற் பெரும்பாலன நேரிசை யாசிரியப்பாக்கள். அவற்றை ஆராய்ந்தால் காய்ச்சீர்கள் அங்கங்கே விரவி வந்திருப்பதைக் காணலாம்.
அகவல்களில் ஈறு ஏகாரமாக முடிவது பெரும்பான்மை மரபு. ஓ, ஈ, ஆய், என், ஐ என்று முடிவதும் உண்டென்று இலக்கணம் கூறுகிறது. ஆனால் ஏ என்று முடியும் அகவல்களும், என் என்று முடியும் அகவல்களுமே இப்போது கிடைக்கின்றன. "நிலைமண்டில ஆசிரியப்பா என் என்று முடிவது சிறப்பு' என்று ஓர் இலக்கண நூல் கூறுகிறது. இணைக்குறளாசிரியப்பாவில் முதல் அடியும், ஈற்றடியும் நாற்சீரடிகளாகவே இருக்க வேண்டும். இடையில் இரண்டு மூன்று நான்கு சீரடிகள் வரலாம். சிறுபான்மை ஐந்து சீர் அடியும் வருவதுண்டு.
இங்கே ஒரு பழங்கதை நினைவுக்கு வருகிறது. கம்பரிடம் யாரோ ஒரு விறகுதலையன் வந்து, ""எனக்கு அரசனிடம் பரிசு வாங்கித்தர வேண்டும்'' என்று சொன்னானாம். ""எதையாவது பாடிக்கொண்டு வா; பரிசு வாங்கித் தருகிறேன்'' என்று அந்தக் கவிச்சக்கரவர்த்தி சொன்னாராம். அவனுக்குத் தமிழிலே பயிற்சி இல்லை. எங்கோ நடந்துபோகும்போது, வீதியில் சிறு பிள்ளைகள் சிறு வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தனராம்.
ஒரு பெண் ஓர் ஆண்பிள்ளையை உட்கார்த்தி வைத்து, ""நீதான் மாப்பிள்ளை நான்தான் உன் மனைவி; இந்தா இதைச் சாப்பிடு'' என்று ஒரு சிறிய இலையில் மண்ணைப் படைத்தாள். அதைக் கண்ட விறகுதலையன், ""மண்ணுண்ணி மாப்பிள்ளையே'' என்று சொல்லிக் கொண்டான். பிறகு ஒரு காக்கை கத்தியது; ""காவிறையே'' என்பதைச் சேர்த்துக் கொண்டான். குயிலின் குரல் காதில் பட்டது. ""கூவிறையே'' என்று பாடினான். பிறகு அங்கே பெருச்சாளி ஒரு கோவிலில் ஓடியது. ""உங்களப்பன் கோவிலில் பெருச்சாளி'' என்று பாட்டை நீட்டினான். எதிரே ஒரு நண்பன் வந்தான். இந்தப் பாட்டை விறகுதலையன் கூறவே, ""என்னடா இது? கன்னா பின்னா என்று இருக்கிறது. அரசன் பெயர் வேண்டாமோ? என்று கேட்டான்.
அவன் சொன்னதையும் சோழன் பெயரையும் சேர்த்து, ""கன்னா பின்னா மன்னா தென்னா சோழங்கப் பெருமானே'' என்று பாட்டை முடித்தான். ""மண்ணுண்ணி மாப்பிள்ளையே காவிறையே கூவிறையே உங்களப்பன் கோவிலில் பெருச்சாளி - கன்னா பின்னா மன்னா தென்னா சோழங்கப் பெருமானே' என்று அந்த அருமையான கவிதையைக் கம்பரிடம் போய்ச் சொன்னானாம்!
அவர் அதைக்கேட்டுப் புன்முறுவல் பூத்தார். அவனை அரசவைக்கு அழைத்துச் சென்றார். அங்கே அவன் தன் பாடலைச் சொன்னான். கேட்டவர்கள் நகைத்தார்கள். கம்பர் எழுந்து உரை கூறினார்.
""இதற்குப் பொருள் இன்னதென்பதை ஆய்ந்து காண வேண்டும். நம்முடைய அரசரை முதலில் மன்மதனே என்று அழைத்திருக்கிறார் புலவர். மண்ணுண்ணி - உலகத்தை உண்ட திருமால்; மா - திருமகள். இந்த இருவருக்கும் புதல்வனாகிய மன்மதனே என்று பொருள்பட, "மண்ணுண்ணி மாப்பிள்ளையே' என்று தொடங்கியிருக்கிறார். கா என்பது கற்பகம்; அதற்கு இறைவன் இந்திரன்; ஆதலின், காவிறையே என்பதற்கு இந்திரனே என்று பொருள் கொள்ள வேண்டும். கூ என்பது பூமி; அதற்கு இறைவன் நம் பெருமான். உலகச் சக்கரவர்த்தி என்பதையே கூவிறையே என்று உணர்த்தினார். "உங்கள் தந்தையாரும் சக்கரவர்த்தி' என்பதை "உங்கள் அப்பன் கோ' என்றார். 
அவர் வில்லில் பெரிய சிங்கம் போன்ற திறமையுடையவர்; "வில்லில் பெரிசு ஆளி' என்று பிரிக்க வேண்டும். வில்லில் என்பது விலில் என்றும், பெரிது என்பது பெருசு என்றும் விகாரமாயின. கன்னா - கர்ணனே, பின்னா - அவனுடைய தம்பியாகிய தர்மபுத்திரனே, மன்னா - அரசனே, தென்னா - தென்னாட்டுக்குத் தலைவனே, சோழங்கப் பெருமானே - சோழர்களில் பெரியவனே. இப்படிப் பொருள் கொள்ளும்படி பாடிய இப்புலவர் புலமையை நாம் பாராட்ட வேண்டும்'' என்று உரை விரித்தார் கம்பர்.
அதோடு நிற்கவில்லை. அந்த உளறலை இன்ன வகைப் பாடல் என்று சொல்ல வேண்டுமே! ""இது இணைக் குறளாசிரியப் பா. ஏகாரத்தில் முடிந்திருக்கிறது'' என்று கூறிச் சீரும் பிரித்துக் காட்டினாராம்.
"மண்ணுண்ணி மாப்பிள்ளை யேகா விறையே
கூவிறை யேஉங்க ளப்பன்
கோவி லில்பெருச் சாளி
கன்னா பின்னா மன்னா
தென்னா சோழங் கப்பெரு மானே' 
இணைக் குறளாசிரியப் பா என்பதைப் பரிகாசம் பண்ணிய பாடலாக இதைக் கருதலாம். எதையும் ஆசிரியப்பாவில் அடக்கிவிடலாம் என்று சிலர் எண்ணுவதுண்டு. அதைப் பரிகாசம் செய்யவே இந்தக் கதை எழுந்திருக்க வேண்டும். இதோ நல்ல இணைக்குறளாசிரியப் பா ஒன்றைப் பாருங்கள்:
""நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
சாரச் சார்ந்து
தீரச் தீரும்
சாரல் நாடன் கேண்மை
சாரச் சாரச் சார்ந்து
தீரத் தீரத் தீர்பொல் லாதே''
இதில் உள்ள ஆறு அடிகளில் முதலடியும் ஈற்றடியும் நான்கு சீரடிகளால் வந்துள்ளன. மற்றவை முறையே இருசீரடி, இருசீரடி, முச்சீரடி, முச்சீரடியாக அமைந்திருக்கின்றன. இத்தகைய ஆசிரியப்பாக்கள் மிகவும் அருமையாகவே நூல்களில் வந்துள்ளன. அருமையாக வந்தாலும் அதற்கும் இலக்கணம் உண்டல்லவா? அதனால்தான் அதற்கும், அது போலவே அடிமறி மண்டில ஆசிரியப்பாவுக்கும் இலக்கணம் சொல்லியிருக்கிறார்கள்.
(தொடர்ந்து பாடுவோம்...)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/28/w600X390/tm3.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/feb/18/கவி-பாடலாம்-வாங்க---12-ஆசிரியப்பா-2865486.html
2865484 வார இதழ்கள் தமிழ்மணி பெம்மான் "பித்தன்' ஆனதேன்? - முனைவர் இரா.வ. கமலக்கண்ணன் DIN Sunday, February 18, 2018 02:01 AM +0530 'பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை. அவர் திருவானைக்காவில் தங்கி, சிவபெருமானையும், அகிலாண்ட நாயகியையும் வணங்கி வந்தார். 
ஒருநாள் மாலையில், தம் சீடங்களுடன் அந்தக் கோயிலை நோக்கி வழிபடச் சென்றார். அப்பொழுது சீடருள் ஒருவர், ""ஐயா! இம்மாலைப்பொழுதில் ஒரு மாலை பாடுங்கள்'' என்று கனிவுடன் வேண்டினார். அதுகேட்ட பிள்ளையும், ""நல்லது, சொல்லிக்கொண்டே வருகிறேன், ஏட்டில் எழுதி வாருங்கள்'' என்று கூறிப் பாடத் தொடங்கினார். கோயிலை அடையவும் நூறு பாடல்கள் நிறைவடைந்தன. அச்சிறு பிரபந்தமே "திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை' எனும் நூலானது. 
சிவபிரான் தம் கபர்த்தம் என்னும் சடையில் கங்கா தேவியை வைத்திருக்கிறார். கங்கை (கங்காதேவி) - நீச்சல் தெரியாதவர்கள் கிணற்றில் தவறி விழுந்தால் மூன்று முறை மேலே கொண்டு வருவாள். அதற்குள் அந்த நபர் கரை, கொடியைப் பற்றிக் கொண்டு பிழைக்கலாம். இல்லையெனில் தன்னுள் (கங்கையில்) அழுத்திக் கொன்றுவிடுவாள். ஆனால், உமையம்மையோ, நாம் பல பிழைகள் செய்தாலும் கருணையுடன் பொறுத்தருளுவாள். இவ்வகையில் கங்கா தேவி தாழ்ந்தும், பார்வதி தேவி உயர்ந்தும் இருக்கின்றனர். தாழ்ந்தவர்களுக்குத் தாழ்ந்த இடத்தையும், உயர்ந்தவர்களுக்கு உயர்ந்த இடத்தையும் அளிப்பதே முறையாகும். ஆனால், சிவபெருமானோ - தாழ்ந்த நிலையிலுள்ள கங்கைக்கு சிரசில் உயர்ந்த இடத்தையும், உயர்ந்த நிலையிலுள்ள உமையம்மைக்குத் தாழ்ந்த தம் இடபாகத்தையும் கொடுத்திருக்கிறார். இது பித்தரின் செயல் ஆதலின் அப்பெருமானுக்குப் "பித்தன்' என்று ஒரு திருப்பெயர் ஏற்பட்டது' என்று மீனாட்சிசுந்தரம் பிள்ளை பழிப்பது போல் புகழ்ந்து (நிந்தாஸ்துதி) இப்பாடலைப் பாடியுள்ளார்.

""அளவறு பிழைகள் பொறுத்தருள் நின்னை அணி உரு பாதியில் வைத்து
தளர் பிழை மூன்றே பொறுப்பவள் தன்னைச் சடைமுடி வைத்தனன் அதனால்
பிளவிய மதியம் சூடிய பெம்மான் பித்தன் என்று ஒரு பெயர் பெற்றான்,
களமா மொய்கழனிசூழி திருவானைக்கா அகிலாண்ட நாயகியே''

பித்து - முதிர்ந்த அன்பு என்று பொருள். "பெற்ற மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு' என்னும் பழமொழியையும் நோக்குக. சுந்தரமூர்த்தி சுவாமிகளும் திருவெண்ணெய் நல்லூர் அருள்துறையில் கோயில் கொண்டிருக்கும் சிவபரம்பொருளை "பித்தா! பிறை சூடி' என்றே தொழுது பாடத் தொடங்குகிறார் என்பதையும் இங்கு ஒப்பு நோக்கி இன்புறலாம்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/18/w600X390/tm3.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/feb/18/பெம்மான்-பித்தன்-ஆனதேன்-2865484.html
2865483 வார இதழ்கள் தமிழ்மணி உ.வே.சா.வின் இலக்கியப் படைப்புகள் DIN DIN Sunday, February 18, 2018 01:59 AM +0530 'தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையர் சங்க இலக்கியங்கள், இலக்கணங்கள் பலவற்றையும்; தலபுராணங்கள், சிற்றிலக்கியங்கள் எனப் பல்வேறு நூல்களை பதிப்பித்து தலைசிறந்த பதிப்பாசிரியராகத் திகழ்ந்தார்.
அதுமட்டுமின்றி, இறைவன் மீது பக்திப் பாடல்கள், ஏடு தேடிச் சென்ற அனுபவங்கள், இலக்கியக் கட்டுரைகள், வாழ்க்கை வரலாறுகள், பண்டைக் காலத்து பழக்க வழக்கங்கள், நகைச்சுவை உரையாடல்கள், திருக்கோயில்கள் என தாம் எழுதிய கட்டுரைகளை சுதேசமித்ரன், செந்தமிழ், கலைமகள், தினமணி, விவேகபோதினி முதலிய இதழ்களில் எழுதி படைப்பாசிரியராகவும் திகழ்கிறார். இக்கட்டுரைகள் அவரது காலத்திலேயே தொகுக்கப்பட்டு நான் கண்டதும் கேட்டதும், பழையதும் புதியதும், நினைவு மஞ்சரி, நல்லுரைக்கோவை ஆகிய நூல்களாக வெளிவந்துள்ளன.
மேலும், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம், வித்துவான் தியாகராச செட்டியார், என் சரித்திரம் ஆகிய வாழ்க்கை வரலாற்று நூல்களையும் படைத்துள்ளார்.
கி.பி.1891ஆம் ஆண்டு கொழும்புத்துறை ஸ்ரீமான் தி.குமாரசாமி செட்டியார் விருப்பத்தின்படி உ.வே.சா., யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இலந்தைநகர் முருகன் மீது தண்டபாணி விருத்தம், முத்துக்குமாரர் ஊசல், எச்சரிக்கை, கீர்த்தனங்கள் போன்றவற்றை இயற்றி, கும்பகோணத்தில் வெளியிட்டுள்ளார். பிறகு ஐயரவர்களின் குமாரர் எஸ்.கலியாணசுந்தரையர் எழுதிய குறிப்புரையுடன் 1944ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பு வெளிவந்துள்ளது. 
மதுரை மீனாட்சியம்மை மீது கயற்கண்ணி மாலை, அங்கயற்கண்ணி மாலை, கடம்பவனவல்லி பதிகம் ஆகியனவும்; மதுரை சுந்தரேசுவரர் மீது சுந்தரேசுவரர் துதி, அருளுறை நீலியம்மன் இரட்டைமணி மாலை, திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் பெரியநாயகி இரட்டைமணி மாலை ஆகியவற்றையும் இயற்றியுள்ளார். கயற்கண்ணிமாலை கட்டளைக் கலித்துறையால் அமைந்த 100 பாடல்களைக் கொண்டது. இதில் ஒரு செய்யுள் வருமாறு: 
"படித்தேன் படித்தவை சொல்லும்
திறமை படைத்தலின்றித்
துடித்தேனி னன்பர்கள் போலே
யெவரும்சொலும் பொருட்டு
நடித்தே னினிச்சகி யேனென்னைக்
காத்தரு ணாரணிபூங்
கடித்தே னுகுபொழிற் றென்கூடல்
வாழும் கயற்கண்ணியே' (5)

இந்நூல் கி.வா.ஜகந்நாதன் எழுதிய ஆராய்ச்சி உரை, குறிப்புரையுடன் 
1970-இல் நூல் நிலையம் வெளியிட்டுள்ளது. மேலும் பக்திப் பாடல்களாக உத்தமதானபுரம் ஆனந்தவல்லி முதல் சென்னை திருவேட்டீசுவரன்பேட்டை திருவேட்டீசுவரர் வரை பாடல்கள் இயற்றியுள்ளார். ஐயரவர்கள் இயற்றிய பாடல்களைத் தொகுத்த கி.வா.ஜகந்நாதன், இவற்றை தனிப்பாடல்கள், பதிப்புப் பாடல்கள், திருத்தொண்டர்கள், பழகிய பெரியோர், சிறப்புப் பாயிரங்கள் எனப் பகுத்து "தமிழ்ப்பா மஞ்சரி' என்கிற பெயரில் இரு தொகுதிகளாக (கி.பி.1961-62) வெளியிட்டுள்ளார். 
தம் வாழ்நாள் முழுவதும் ஓலைச்சுவடிகளைத் தேடி எடுத்துப் பதிப்பித்ததோடு, சிறந்த முகவுரையும் ஆராய்ச்சிவுரையும் எழுதி வெளியிட்டு, பதிப்புப் பணியில் சாதனை புரிந்த உ.வே.சா., தாம் படைத்த இலக்கியங்களை நூலாக வெளியிடாமைக்கான காரணத்தை கி.வா.ஜகந்நாதன், 
""தமிழ் பயின்ற காலத்தில் கவிபாடும் சந்தர்ப்பங்கள் பல ஐயரவர்களுக்குக் கிடைத்தன. இளமை தொடங்கி வந்த இந்தப் பழக்கம் கடைசி மூச்சு வரையில் ஐயரவர்களிடம் இருந்து வந்தது. ஆனால், அவற்றை உலகம் காண வெளியிட அவர்கள் விரும்பவில்லை. 
இடிந்த பழங்கோயில்களைப் போன்ற பழங்கவிகளைச் சிறப்படையச் செய்ய வேண்டுமென்று அவர்கள் எண்ணினார்களே யன்றி, தம்முடைய கவிகளை வெளியிடும் நாட்டம் அவர்கள்பால் எழவில்லை'' என்று தமிழ்ப்பா மஞ்சரியில் குறிப்பிட்டுள்ளார். 

- கோதனம். உத்திராடம்
(பிப்ரவரி 19, உ.வே.சாமிநாதையரின் 164ஆவது பிறந்தாள்)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/18/w600X390/tm2.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/feb/18/உவேசாவின்-இலக்கியப்-படைப்புகள்-2865483.html
2865482 வார இதழ்கள் தமிழ்மணி பழமொழி நானூறு: முன்றுறையரையனார் Sunday, February 18, 2018 01:57 AM +0530 வெஞ்சின மன்னவன் வேண்டாத வேசெயினும்
நெஞ்சத்துட் கொள்வ சிறிதும் செயல்வேண்டா
என்செய் தகப்பட்டக் கண்ணும் எழுப்புபவோ
துஞ்சு புலியைத் துயில். (பாடல்-33)

எல்லாத் துன்பங்களையும் தமக்குச் செய்து தம்மிடத்து அகப்பட்டவிடத்தும், உறங்குகின்ற புலியை அவ்வுறக்கத்தினின்றும் எழுப்புவார்களோ? (இல்லை). அதுபோல, கொடிய சினத்தையுடைய அரசன், தங்கீழ் வாழ்வார்க்குத் தீமையே செய்யினும், அவன் மனத்தில் கறுவு கொள்ளத்தக்கனவற்றை, அவன் கீழ் வாழ்வார் ஒருசிறிதும் இயற்றுதல் வேண்டா. (க-து) அரசன் தமக்குத் தீமை செய்யினும் அவற்குத் தீமைசெய்யாதொழிக. "எழுப்புபவோ துஞ்சு புலியைத் துயில்' என்பது பழமொழி.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/10/w600X390/tm1.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/feb/18/பழமொழி-நானூறு-முன்றுறையரையனார்-2865482.html
2861372 வார இதழ்கள் தமிழ்மணி இந்த வார கலாரசிகன் DIN DIN Sunday, February 11, 2018 03:28 AM +0530 எழுத்தாளர் சிவசங்கரியின் மனதைப் போல எத்தனை பேருக்கு வரும்? தனக்கு இத்தனை பெயரையும், புகழையும் தந்த எழுத்துலகத்திற்குத் தான் ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற முனைப்பு அவரிடம் இருக்கிறதே, அதுதான் பாராட்டுக்குரியது.
"தினமணி' நாளிதழுடன் இணைந்து சிறுகதைப் போட்டி நடத்தலாம். அதற்காகப் பரிசுத் தொகையை ஆண்டுதோறும் ஒதுக்கித் தந்துவிடுகிறேன்' என்று சொன்னபோது, அவரது விழிகளில் கொப்பளித்த ஆர்வமும், நம்பிக்கையும் என்னை பிரமிக்க வைத்தன. சிறுகதைப் போட்டிக்கான அறிவிப்பையும் வெளியிட்டாயிற்று. அப்போதும்கூட, மிக அதிக அளவில் சிறுகதைகள் வந்து குவிந்துவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
இன்றைய சிறுகதைகள் குறித்து எனக்கு சில குறைகளும் விமர்சனங்களும் உண்டு. சுமார் முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட பாணியிலான கதைக்கருக்களும், எழுத்து
நடையும்தான் பெரும்பாலான சிறுகதை
களில் காணப்படுகின்றன என்பது என்னை வேதனைப்படுத்தும். இன்னும் சொல்வதாக இருந்தால், பத்திரிகைகளுக்கு சிறுகதை எழுதுபவர்களில் பலரும் ஐம்பது வயதைக் கடந்தவர்களாக இருப்பார்கள் என்கிற தவறான கருத்தும் எனக்கு இருந்தது.
சிவசங்கரி சிறுகதைப் போட்டிக்கு வரும் கதைகள் அப்படிப்பட்டவையாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்த்த எனக்கு இன்ப அதிர்ச்சி. நூற்றுக்கணக்கில் சிறுகதைகள் வந்து குவிந்தன என்பது ஒருபுறம் இருக்கட்டும். அந்தக் கதைகளில் காணப்பட்ட எதார்த்தமும், நடைமுறை வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் போக்கும் சிறுகதை இலக்கணத்துக்கே உரித்தான இறுதிக்கட்ட எதிர்பாராத திருப்பங்களும்...
கோவை அஸ்வின் மருத்துவமனையில் எனது தாயார் உடல் நலமில்லாமல் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிறுகதைப் போட்டிக்கு வந்திருந்த சிறுகதைகளைப் படித்துத் தேர்வு செய்ய நிறையவே நேரம் கிடைத்தது. ஒவ்வொரு சிறுகதையும், முந்தையதை விஞ்சியதாக அமைந்திருப்பதைப் பார்த்தபோது, எந்த அளவுக்குத் தமிழகத்தில் கதை சொல்லிகள் திறமை பெற்றிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. கதை சொல்லப் புதுப்புது உத்திகளை அவர்கள் கையாண்டிருந்தது அதைவிட ஆச்சரியம். முதல் பரிசுக்கான கதையை நான் தேர்வு செய்திருந்ததையே எழுத்தாளர் சிவசங்கரியும், எழுத்தாளர் மாலனும் தேர்வு செய்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டபோது மகிழ்ச்சியாக இருந்தது.
வரும் பிப்ரவரி 18-ஆம் தேதி சென்னை மயிலாப்பூரிலுள்ள மியூசிக் அகாதெமி சிற்றரங்கத்தில் காலை 10 மணிக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி. தெலங்கானா, ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி 
வெ. ராமசுப்பிரமணியன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கி உரையாற்றுகிறார்.
எழுத்தாளர் சா. கந்தசாமி "சிறுகதைகள் அன்றும் இன்றும்' என்கிற தலைப்பில் உரையாற்றுகிறார். பரிசு பெற்ற கதைகள் குறித்தும், அவற்றைத் தேர்ந்தெடுத்தது குறித்தும் எழுத்தாளர் மாலனும், இப்படியொரு சிறுகதைப் போட்டியை ஏற்படுத்தியிருப்பதன் நோக்கம் குறித்து எழுத்தாளர் சிவசங்கரியும் பேச இருக்கிறார்கள்.
இந்த மகிழ்ச்சியான செய்திக்கிடையே ஒரு வருத்தமான செய்தியும் உண்டு.
எழுத்தாளர் சிவசங்கரியின் வாசகியாக அறிமுகமாகி, அவரது உதவியாளராக 40 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடனேயே பயணித்தவர் லலிதா. சிவசங்கரிக்கு மகளுக்கு மகளாக உடனிருந்த லலிதா, நேற்றைய முன்தினம் காலமாகிவிட்டதும், சிவசங்கரியின் பெயரால் நடத்தப்படும் பரிசு விழாவில் லலிதா இல்லாமல் இருப்பதும் நெஞ்சத்தைக் கவ்வும் சோகம்.

ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலான எனது இனிய நண்பர் "துக்ளக்' ரமேஷும் நானும் ஆசிரியர் சோ என்கிற ஆளுமையின் வழிகாட்டுதலில் எங்களது இதழியல் பயணத்தை அமைத்துக் கொண்டவர்கள் என்பதால், ஒரு மரத்துப் பறவைகள் என்று சொல்வதிலும்
கூடத் தவறில்லை.
"குமுதம்' ஆசிரியர் எஸ். ஏ.பி. அண்ணாமலைக்கு ஒரு "பால்யூ' போல, "துக்ளக்' ஆசிரியர் சோவுக்கு ஒரு ரமேஷ் என்று பலரும் குறிப்பிடக் கேட்டிருக்கிறேன். "பால்யூ'வை விட ரமேஷ் சற்று மேலே. காரணம், சோ சாரின் கண்களாகவும், காதுகளாகவும் மட்டும் ரமேஷ் இருக்கவில்லை, கடைசிவரை அவரது நிழலாகவும் தொடர்ந்தவர் என்பது எல்லோருக்குமே தெரியும்.
17 ஆண்டுகளுக்கு முன்பு "எனது அரசியல் பயணம்' என்கிற தலைப்பில் பேட்டித் தொடரொன்று வெளிவரத் தொடங்கியபோது, "துக்ளக்' இதழின் நிரந்தர வாசகன் என்ற முறையில் அதை எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தவர்களில் நானும் கூட ஒருவன். "துக்ளக் ரமேஷ்' பல்வேறு அரசியல் தலைவர்களைப் பேட்டி கண்டு, அவர்கள் தங்களது அரசியல் பயணம் குறித்துத் தெரிவித்திருக்கும் கருத்துகளைத் தொகுத்து கட்டுரைத் தொடராக "துக்ளக்' இதழில் அவை வெளிவந்தன.
தி.மு.க.வின் இன்றைய முதன்மைச் செயலாளர் துரைமுருகனில் தொடங்கி, தமிழகத்தின் குறிப்பிடத்தக்க 26 ஆளுமைகளின் அரசியல் பயணங்கள் அந்தத் தொடரில் பதிவு செய்யப்பட்டிருந்தன. தமிழகத்திற்கு வெளியே என்று கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும், இன்றைய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவும் இடம் பெற்றிருந்தனர்.
அந்தக் கட்டுரைத் தொடர் இப்போது புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. தொடராகப் படித்தபோது இருந்த சுவாரஸ்யத்தைவிடப் புத்தகமாகப் படிக்கும்போது ஏன் சுவாரஸ்யம் அதிகரிக்கிறது என்பதற்கு என்னால் காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை. அரை நூற்றாண்டு காலத் தமிழக வரலாற்றை மீள்பார்வை செய்து பார்ப்பது போல இருந்தது. ப.சிதம்பரம் எழுதிய கட்டுரையில், ஆசிரியர் "சோ' சாரின் பின்குறிப்பைக் கட்டாயம் படிக்க வேண்டும். ஏன் அப்படிச் சொல்கிறேன் என்பது படித்துப் பார்த்தால் புரியும்.
அரசியல்வாதிகள், அரசியல் விமர்சகர்கள், அரசியல் பிரமுகர்கள், அரசியல் ஆர்வலர்கள் என்று அனைத்துப் தரப்பினரும் கட்டாயம் படித்திருக்க வேண்டிய காலப் பெட்டகம், நண்பர் ரமேஷின் இந்த ஆவணப் பதிவு. "துக்ளக்' ரமேஷ் எழுதிய ஏனைய கட்டுரைகளும், பேட்டிகளும் கூட இதைத் தொடர்ந்து புத்தக வடிவம் பெறும் என்று எதிர்பார்க்கிறேன்.

பட்டுக்கோட்டையில் இருந்து ஷேக் தாவூத் என்பவர் அஞ்சல் அட்டையில் "பி.சிவக்குமார் என்பவரின் கவிதை இது, எப்படி இருக்கிறது பாருங்கள்' என்று எழுதியிருந்தார். இப்போதெல்லாம் பாலங்களைக் கடக்கும்போது நம்மை அறியாமலேயே அப்படியொரு அச்சம் தொற்றிக் கொள்கிறது என்பது உண்மையிலும் உண்மை.

புதுப்பாலம்
மெதுவாகச் செல்லவும்
"கமிஷன்' அதிகம்!

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/11/w600X390/tm5.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/feb/11/இந்த-வார-கலாரசிகன்-2861372.html
2861371 வார இதழ்கள் தமிழ்மணி கடுமழை காத்த "பனங்குடை' -முனைவர் ச. சுப்புரெத்தினம் DIN Sunday, February 11, 2018 03:26 AM +0530 'குடை' என்றால் கருமைநிறம்தான் என்ற நிலை மாறி தற்காலத்தில் வகைவகையான, பல வண்ணக் குடைகள் தயாரிக்கப்படுகின்றன. சங்க காலத்தில் பனை ஓலைகளால் பின்னப்பட்டுத் தயாரிக்கப்பட்ட குடைகளை மக்கள் பயன்படுத்தியுள்ளனர். பனையோலை மழைநீரை உள்வாங்காமல் எதிர்த்து வெளியேற்றும் தன்மையுடையது. இதனை நன்கு அறிந்து வைத்திருந்த சங்ககாலப் பறவைகள் கூட மழையில் நனையாமல் தம்மைப் பாதுகாத்துக் கொண்டு வாழ்வதற்காகப் பனை ஓலைகளாலான கூடுகளை மரங்களின் மேல் அமைத்துக்கொண்டு வாழ்ந்தன என்பதை இலக்கியங்கள் மெய்ப்பிக்கின்றன. பறவைகளின் இத்தகைய கூடுகள் "குடம்பை' என்று அழைக்கப்பட்டன. உயர்ந்த மணல் திடலில் நெடிது வளர்ந்திருந்த மரமொன்றின் உச்சியில், நெருங்கிய பனைமடலாற் கட்டிய கூட்டின்கண் இருக்கும் வெண்ணிற நாரை பற்றிக் கூறும் நற்றிணை (பா.199),

'ஓங்கு மணல் உடுத்த நெடுமாப் பெண்ணை
வீங்குமடற் குடம்பைப் பைதல் வெண்குருகு'

என்கிறது. அன்றில் பறவையும்கூட, இவ்வாறே மழைத்துளி நுழையாத பனைமடலால் "குடம்பை' யை உருவாக்கி, அதில்; வதிந்திருந்த செய்தியை மற்றொரு பாடலில் (நற்.303) விளக்குகின்றது.
"குடை' என்ற நிலையில் பனை ஓலைக் குடைகளினூடே, தென்னையோலை, தாழைமடல் என்பனவற்றால் பின்னப்பட்ட தென்னங் குடைகளும் தாழங்குடைகளும் பயன்பாட்டில் இருந்தன. என்றாலும், அவற்றிற்கு விறைப்புநிலை மாறிச் சுருங்கும் தன்மையுண்டு என்பதனால், மழைத்துளிகள் எளிதில் உட்புகாத பனங்குடைகளை மக்கள் பெரிதும் விரும்பியிருக்கக்கூடும்.
தற்கால துணிக்குடைகளைப் போலவே முற்காலத் தாழை, தெங்கு, பனங்குடைகள் மடக்கக்கூடியன அல்ல. இத்தகைய குடைகள் 20-ஆம் நூற்றாண்டுவரைத் தமிழகச் சிற்றூர்களில் ஆங்காங்கே புழக்கத்திலிருந்தன. இதே காலகட்டத்தில் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் கைவினைக் கலைஞர்களால் கலைநுணுக்கத்துடன் பல வண்ணங்கள் தோய்க்கப்பெற்றுப் புழங்கப்பட்டன.
மழையை மறைத்து மனிதனைக் காத்த பனைஓலைக் குடை குறித்து ஒளவையார் புறநானூறு இலக்கியத்தில் (பா.290) பாடியுள்ளார். தற்காலக் குடைகள் சாதாரண மழையை மட்டும் தாங்கவல்லன. ஆனால் முற்காலப் பனங்குடைகளோ, கடுமழையிலிருந்தும் காக்கவல்லன; இதனை நன்கு அறிந்திருந்த ஓளவையார், குடையின் சிறப்பினை ஓர் உவமையின் வாயிலாக எடுத்துக்காட்டியுள்ளார்.
ஓர் அரசன் இன்னொரு அரசனுடன் பகை கொண்டான். பகைவன் வெட்சிப் பூச்சூடி வந்து இவனது ஆனிரைகளைக் கவர்ந்து சென்றுவிட்டான். உடனே இவன், கரந்தை பூச்சூடி அவற்றை மீட்கப் புறப்பட்டான். போர்ப் பறை முழங்கிற்று. வீரர்கள் அனைவரும் போருக்காகத் திரண்டனர்.
அரசன் படைத் தலைவர்களைக் கூட்டி, "உண்டாட்டு' ஒன்றினை நிகழ்த்தினான். இதில் ஒவ்வொரு படைமறவரின் குடிச்சிறப்பையும் சான்றோர் ஒருவர் மன்னனிடம் எடுத்துரைப்பது வழக்கம். அதற்காக ஒளவையாரும் அங்கு வந்திருந்தார்.
படைவீரர் ஒவ்வொருவரின் குடிப்பிறப்பு, செயல்திறம் போன்றவற்றை எடுத்துரைத்த பின், அவற்றைக் கேட்கும் அரசன் மகிழ்ந்து பாராட்டி, தக்கன கூறிப் பொற்கிண்ணத்தில் இனிய கள்ளினை ஊற்றி அருந்தத் தருவான்.
ஒளவையார், வீரர்களின் குடிச்சிறப்பைத் தனித்தனியே எடுத்துரைக்கிறார். அவ்வரிசையில் வீரன் ஒருவன் எதிர்ப்படுகிறான். அவனது பெருமையைக் கூறுமுகத்தான் இனிய பாடலொன்றினை அவர் பாடுகின்றார்.
"வேந்தனே! இக்கள்ளை முதலில் இந்த வீரனுக்குத் தந்துவிட்டுப் பின்னர் நீ உண்பாயாக! அந்த அளவுக்குச் சிறப்புடையவன் இந்த வீரன். எப்படியென்றால், இவனது பாட்டனாகிய வீரன், உனது பாட்டனாராகிய வீரத்தலைவனைக் காக்கும் நோக்கில், பகைவர் எறிந்த வேல், வண்டிச் சக்கரத்துக் குடத்துள் பதிந்த ஆரக்கால் போலப் பதியுமாறு தனது மார்பில் ஏற்று மாண்டு போனான். அவனது பெயரனாகிய இவன் எப்படிப்பட்டவன் தெரியுமா?
எத்துணைக் கடுமையாகப் பொழியும் மழையையும் தடுத்துத் தன்னைப் பிடித்திருப்போரைக் காக்கும் பனையோலையால் மிடையப்பட்ட "பனங்குடை' போல, பகைவர் உன் மீது எறிய, விரைந்து வரும் வேலினைத் தான் இடைநின்று ஏற்று, உன்னைக்காக்கக் கூடியவன், பல போர் செய்து மறப்புகழ் பெற்றவன்' என்கிறார்.

"இவற்கீத் துண்மதி கள்ளே சினப்போர் 
இனக்களிற் றியானை யியறேர்க் குரிசில்
நுந்தை தந்தைக் கிவன்றந்தை தந்தை
எடுத்தெறி ஞாட்பி னிமையான் றச்சன்
அடுத்தெறி குறட்டி னின்றுமாய்ந் தனனே
மறப்புகழ் நிறைந்த மைந்தினோ னிவனும்
உறைப்புழி யோலை போல
மறைக்குவன் பெருமநிற் குறித்துவரு வேலே'

மேற்குறித்த பாடலில், பனங்குடை பற்றி வருணிக்காவிட்டாலும், இடைமறித்துக் காக்கும் சிறந்த மறவன் ஒருவனின் செயல் திறனுக்கு அதனை உவமையாக்கிக் கூறுவது பொருத்தமென்று கருதியே, ஒளவையார் இவ்வாறு "பனங்குடை' யை உவமித்துப் பாடியுள்ளார்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/11/w600X390/tm3.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/feb/11/கடுமழை-காத்த-பனங்குடை-2861371.html
2861370 வார இதழ்கள் தமிழ்மணி தொல்காப்பிய (ர்) ம் காட்டும் விழுமம்! ÷ -முனைவர் ப. பத்மநாபன் DIN Sunday, February 11, 2018 03:24 AM +0530 'விழுமியம்' எனும் சொல் இன்று தமிழ்மொழி வழக்கில் மிகுந்து காணப்படுகிறது. ஒரு மனிதனின் உயர்ந்த குணங்கள், பண்பு நலன்கள், அவன் மேற்கொள்ளும் அறங்கள் முதலானவற்றின் ஒட்டுமொத்தத் தொகுப்பே விழுமியம் என்ற பொருளில் வழங்கப்படுகிறது. ஆனால், இச்சொல்லின் பொருள் தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியம் ஆகியவற்றில் வேறு வகையில் இடம்பெற்றுள்ளது.
தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களில் விழு என்பதே - விழுமியம் என்ற சொல்லின் வேர்ச்சொல்லாக அமைந்துள்ளது. தொல்காப்பியத்தில் விழு எனும் சொல் சிறப்பான, உயர்வான, மேன்மையான, பெரிய முதலான ஒத்த பொருள்களைத் தரும் பெயரடையாகத்தான் பயன்படுத்தப்பட்டது.

விழு எனும் வேர்ச்சொல்:

தொல்காப்பிய நூற்பா, ""விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும்'' (தொல்.சொல்.உரி.55) என்பதாகும். இந்நூற்பாவிற்கு உரையெழுதும் இளம்பூரணர், ""விழுமம் சீர்மையும் இடும்பையும் செய்யும்'' என்கிறார். இதற்கு உரையெழுதும் இளம்பூரணர், ""விழுமியர் என்றக்கால் சீரியர் என்பதாம். விழுமமுற்றிருந்தார் என்றக்கால் இடும்பை யுற்றிருந்தார் என்பதாம்'' எனக் கூறுகிறார். விழுமம் என்ற சொல்லிலிருந்து விழுமியர் என்ற சொல்லை இளம்பூரணர் தருவித்துக் கொள்கிறார்.
இந்நூற்பாவிற்குச் சேனாவரையர், ""விழுமியோர் காண்டொறும் செய்வர் சிறப்பு'' (நாலடி 159) எனவும், ""வேற்றுமை இல்லா விழுத்திணை பிறந்து'' (புறம் 27) எனவும், ""நின்னுறு விழுமம் களைந்தோன்'' (அகம் 170) எனவும், ""விழுமம் முறையானே சீர்மையும் சிறப்பும் இடும்பையுமாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு'' எனவும் உரை வகுக்கிறார். ÷
சேனாவரையர் விழுமியோர், விழுத்திணை என்ற இரு சொற்களை விழுமம் என்ற சொல்லிலிருந்து தருவித்துக் கொள்கிறார். நச்சினார்க்கினியரும் சேனாவரையரையே பின்பற்றுகிறார். இவற்றை நோக்கும் போது "விழு' என்பதே இவற்றுக்கான அடிப்படை வேர்ச் சொல்லாகும் என்பது தெளிவாகிறது. சொல்லதிகாரத்தின் உரியியலில் விழுமம் என்ற உரிச்சொல்லின் மூவகைப் பொருள் நிலைகளைச் சுட்டிய தொல்காப்பியர், பொருளதிகாரத்தில் விழுமம் என்ற சொல்லை நான்கு இடங்களிலும், விழு எனும் சொல்லை ஓரிடத்திலும், விழுமியது என்ற சொல்லை மற்றோர் இடத்திலும் கையாள்கிறார். 

"தலைவரும் விழுமநிலை 
நீக்கலின் வந்த தம்முறு விழுமமும் 
வேற்றுநாட்டு அகல்வயின் விழுமத்தானும்
தம்முறு விழுமம் பரத்தையர் கூறினும்'

என வரும் நான்கு இடங்களிலும் தொல்காப்பியர் விழுமம் என்ற சொல்லைத் துன்பம் என்ற பொருளிலும், விழு எனும் சொல்லைச் சிறந்த எனும் பொருளிலில் பெயரடையாகக் கையாள்கிறார். விழுமியது எனும் சொல்லைச் சிறந்தது எனும் பொருளில் கையாள்கிறார்.
தொல்காப்பியத்தில் விழு என்ற சொல் பெயரடையாகவும் விழுமம் என்பது குறிப்புப்பொருள் உணர்த்தும் உரிச்சொல்லாகத் துன்பம் என்ற பொருளிலும் விழுமியது என்ற சொல் சிறப்பானது எனும் பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 
சீர்மை, இடும்பை ஆகிய இரண்டை மட்டுமே விழுமம் என்ற உரிச்சொல்லின் பொருள்களாக இளம்பூரணர் கொள்கிறார். ஆனால், சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் அவற்றோடு சிறப்பு என்ற பொருளை மூன்றாவதாகச் சேர்த்துக் கொள்கின்றனர். தொல்காப்பியர் விழுப்புகழ் என்ற ஒரு சொல்லைப் புறத்திணையியலில் (தாவா விழுப்புகழ்) சிறப்பான, மேன்மையான, உயர்வான, புகழ் எனும் பொருள்களில் பயன்படுத்துகிறார்.
ஆனால், விழுமம் என்ற உரிச்சொல்லைத் தனிச் சொல்லாகப் பயன்படுத்தும் தொல்காப்பியர் அதை இடும்பை, துன்பம் என்ற பொருளிலேயே பொருளதிகாரத்தில் பயன்படுத்துகிறார். மற்ற இரண்டு பொருள்களான சீர்மை, சிறப்பு என்ற பொருளில் எங்கும் இச்சொல் தொல்காப்பியரால் பயன்படுத்தப்படவில்லை.

சங்க இலக்கியத்தில் "விழுமியம்' எனும் சொல்லாட்சி:

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய நூல்களில் விழு என்ற என்ற வேர்ச்சொல்லை அடிப்படையாகக் கொண்ட விழு, விழும், விழுமம், விழுமிதின், விழுமிது, விழுமிய, விழுமியோர், விழுமியோன், விழுமியம் ஆகிய ஒன்பது சொற்கள் இடம்பெற்றுள்ளன. விழு எனும் சொல் சங்க இலக்கியப் பாடல்களில் மிகுந்த அளவில் இடம்பெற்றுள்ளது. இச்சொல் ஒரு சொல்லின் முன்னொட்டாக (Prefix) நின்று ஒரு சொல் நீர்மைத்ததாக அச்சொல்லின் மேன்மையைக் குறிக்கும் வகையில் சிறப்பான, உயர்வான, மேன்மையான, சீர்மையான, சீரிய, பெரிய, விழுமிய முதலான ஒத்த பொருள்களைப் பயந்தே நிற்கும் உயர்தகவுச் சொல்லாக அமைகிறது. 
அடுத்த நிலையில், "விழுமம்' என்ற சொல் அதிக அளவில் இடம்பெற்றுள்ளது. இச்சொல் இடும்பை, துன்பம், துயரம், வருத்தம் முதலான பொருள்களில்தாம் இடம்பெற்றுள்ளன. தொல்காப்பியர் கூறிய சீர்மை, சிறப்பு எனும் பொருள்களில் எங்கும் இடம்பெறவில்லை. மேலும், இச்சொல்லின் அடிப்படையில் விழுமியோர், விழுமியோன், விழுமியம் என வரும் சொற்கள் படர்க்கையிலும் தன்மையிலும் பெயர்ச் சொற்களாகப் பயின்று வந்துள்ளன.

விழுமியம் - இன்றைய பொருள் தகுதி:

விழுமியம் என்ற சொல்லுக்கான பொருளாக மதிப்பு என்பது இக்காலத்தில் வழங்கப்படுகிறது. மதிப்பு அல்லது விழுமியம் என்பதற்கான நேரடியான ஆங்கிலச் சொல்லாக Value என்பது அமைகிறது. அ.சிதம்பரநாதன் செட்டியார் பதிப்பித்த சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ்-அகராதியில் Value என்ற ஆங்கிலச் சொல்லுக்கு விழுமியம் என்ற சொல் இடம்பெறவில்லை. இந்த அகராதி 1965ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. 1957ஆம் ஆண்டு பாலூர் கண்ணப்ப முதலியார் தொகுத்து எழுதிய தமிழ் இலக்கிய அகராதியில் விழுமியம் என்ற சொல்லே இடம்பெறவில்லை. எனவே, தமிழ் இலக்கிய அகராதிகளில் 1957 வரை இப்போது வழங்கப்படும் பொருளில் விழுமியம் என்ற சொல் இடம்பெறவில்லை என்பதும், அதுபோல் 1965 வரை Value எனும் ஆங்கிலச் சொல்லுக்கு விழுமியம் எனும் தமிழ்ச்சொல் பொருளாகக் கூறப்படவில்லை என்பதும் தெளிவாகிறது.
"மதிப்புகள்' என்ற பொருளைத் தரும் "விழுமியம்' என்ற சொல் மிகப்பழைய சொல்லாக இருந்தாலும் அன்றைக்கு அதன் பொருள் நிலை வேறாக இருந்தது. ஆனால், இன்றைக்கு அதன் பொருள்நிலை அடிப்படையிலிருந்து விலகாத ஆனால், விரிவடைந்த வேறொரு பொருள் நிலையைக் கொண்டு விளங்குகிறது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/11/w600X390/tm4.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/feb/11/தொல்காப்பிய-ர்-ம்-காட்டும்-விழுமம்-2861370.html
2861369 வார இதழ்கள் தமிழ்மணி கவி பாடலாம் வாங்க - 11: அகவல் "வாகீச கலாநிதி' கி.வா. ஜகந்நாதன் DIN Sunday, February 11, 2018 03:18 AM +0530 ஒசையே பாட்டின் உருவத்தைச் செவ்வை ஆக்குகிறது. பழகிய காதுக்குப் பாட்டைக் கேட்ட மாத்திரத்தில், தவறு இருந்தால் உடனே புலப்படும். பாட்டுக்குச் சரியான உரைகல் பாட்டுக் கேட்டுப் பயின்ற காது. அதனால்தான் கவி பாடப் புகுகிறவர்கள் பல பாடல்களை வாயாரப் பாடிப் பழக வேண்டுமென்று சொல்கிறேன். பொருள், இலக்கணம் ஆகியவற்றைப் பின்பு கவனித்துக் கொள்ளலாம். ஓசை சரியாக இருந்தால் இலக்கணமும் சரியாக இருக்கும். கவியின் ஓசையை விருத்தத்தில் தெளிவாகக் காணலாம். அதனால்தான் ஆசிரிய விருத்தங்களைப் பற்றியே இதுவரையில் எழுதி வந்தேன்.
தமிழில் பாக்கள் நான்கு வகைப்படும். அவற்றை நாற்கவி யென்று சொல்வார்கள். வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பவை அவை. யாப்பிலக்கண நூல்களில் அந்த வரிசையில் இலக்கணத்தைச் சொல்லியிருப்பார்கள். பாவுக்கு இனமாகச் சில பாடல்கள் உண்டு. அவற்றைப் பாவினம் என்று புலவர் கூறுவர். அவை தாழிசை, துறை, விருத்தம் என்று மூன்று வகை. ஒவ்வொரு பாவுக்கும் இந்த மூன்று இனங்களும் உண்டு. இதுவரையில் நாம் கவனித்தவற்றின் பெயரே அவை இன்ன பாவின் இனம் என்பதை உணர்த்தும். 
ஆசிரியப்பாவின் இனமாதலின் ஆசிரிய விருத்தம் என்று பெயர் வந்தது. பிற்காலத்துக் காப்பியங்களிலும் பிற வகை நூல்களிலும் புலவர்கள் பெரும்பாலும் ஆசிரிய விருத்தங்களையே ஆண்டிருக்கிறார்கள். தேவார காலத்துக்குப் பிறகு காவிய காலம் தொடங்கியது. அது முதல் கவிதையுலகில் ஆசிரிய விருத்தமே அரசாட்சி செய்து வருகிறது.
பாரதியார் இயற்பாட்டைப் போலவே இசைப் பாட்டையும் எளிதில் ஆண்டார். இசைப் பாடல்களில் இசைக்குத் தலைமை இருக்கும்; கவிச்சுவை இரண்டாம் பட்சமாக இருக்கும். பாரதியார் செய்த பெரிய புரட்சி, இசைப் பாடல்களாகிய கண்ணிகளையும் சிந்துகளையும் இலக்கியச் சுவை உடையனவாகச் செய்தது. தேவாரம் எப்படிப் பண் அமைந்து இசைப்பாவாகவும், சிறந்த கவிச்சுவை அமைந்து இலக்கியப் பனுவலாகவும் இருக்கிறதோ அவ்வாறு பாரதியார் இசைப்பாட்டு வகைகளைக் கவிச்சுவை உடையனவாக அமைத்தார். அவர் பாடல்களிலும் ஆசிரிய விருத்தங்கள் பல உண்டு.
சங்க காலத்தல் ஆசிரியப்பாவே மிகுதியாக இருந்தது, இன்று கிடைக்கும் சங்க காலத்து நூல்களில் உள்ள பாடல்களைக் கணக்கிட்டுப் பார்த்தால் ஆசிரியப் பாக்களே முதலிடம் பெறுவதைக் காணலாம்.
ஆசிரியப்பாவை அகவல் என்றும் சொல்வார்கள். அகவல் என்பதற்கு அழைத்தல் என்று பொருள். ஒருவரை வரவேற்பதற்கும் அழைப்பதற்கும் ஏற்ற ஓசையமைப்பை உடையது அகவல். அகவலில் பெரும்பாலும் ஈரசைச் சீர்களே வரும். அதனால் அவற்றை ஆசிரியச்சீர், அகவற்சீர் என்று வழங்குவர்; இயற்சீர் என்றும் அதைக் கூறுவது உண்டு.
ஆசிரியப்பாவில் ஒவ்வோரடியும் நான்கு ஈரசைச் சீர்களால் அமைந்திருக்கும். இடையிலே காய்ச்சீர் - நேரில் முடியும் மூவகைச் சீர்கள் - வரலாம். அகவல் மூன்றடி முதல் பல அடிகளால் வரும்.

""வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க
நன்மைவந் தெய்துக தீதெலாம் நலிக...''

இந்தப் பாரதியார் பாட்டு அகவல் அல்லது ஆசிரியப்பா. அகவலில் ஒவ்வோரடியிலும் மூன்றாவது சீரில் மோனை அமைந்தால் அழகாக இருக்கும். எல்லா அடிகளும் நாற்சீரடிகளாக அமைவது நிலைமண்டில ஆசிரியப்பா என்று பெயர் பெறும். கடைசி அடிக்கு முன் அடி மாத்திரம் மூன்று சீர்களால் அமைய, மற்ற அடிகளெல்லாம் நாற்சீர் அடிகளாக இருப்பது நேரிசை யாசிரியப்பா. இந்த இரண்டுமே நூல்களில் அதிகமாக உள்ளவை நடு நடுவே இரண்டு சீரடி, மூன்று சீரடியாகச் சிலவற்றைப் பெற்று மற்றவை நாற்சீரடியாக இருப்பது இணைக்குறளாசிரியப்பா. எல்லா அடிகளும் நாற்சீரடிகளாக அமைய, எந்த அடியை எங்கே மாற்றி வைத்தாலும் பொருள் மாறாமல் இருப்பது அடிமறி மண்டில ஆசிரியப்பா. இந்த இரு வகைளும் இலக்கியத்தில் மிகுதியாக வருவதில்லை.

""நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று 
நீரினும் ஆரள வின்றே சாரல் 
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு 
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே''

இது குறுந்தொகையென்னும் சங்கநூற் பாட்டு. இதில் ஈற்றயலடியாகிய மூன்றாவது அடி முச்சீர் அமைந்தது. அதனால் இது நேரிசை ஆசிரியப்பா. சங்க காலத்து அகவலின் ஓசையே ஒரு தனிச்சிறப்புடையது. இந்தப் பாட்டின் அடிகளுக்கு ஓசை யூட்டிப் பார்க்கலாம்.

""நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று
கருவிளம் புளிமா கூவிளம் புளிமாங்காய் 
நீரினு மாரள வின்றே சாரல்
கூவிளம் கூவிளம் தேமா தேமா 
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
புளிமா புளிமா தேமாங்காய் 
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
புளிமா புளிமா கூவிளங்காய் தேமா'' 

இந்த ஆசிரியப்பாவில் கூவிளம், கருவிளம், தேமா, புளிமா என்ற நான்கு ஈரசைச் சீர்களும் வந்தன. மூன்று இடங்களில் காய்ச்சீர்கள் வந்தன. முதல் அடியில் நான்காம் சீரும், மூன்றாம் அடியிலும் கடைசி அடியிலும் மூன்றாம் சீரும் காய்ச்சீராக அமைந்ததைக் காண்க. இரண்டு இரண்டு அடிகளில் எதுகை அமைந்தால் ஆசிரியப்பா அழகாக அமையும்.

""அகவற் பாக்க ளவைநான் காகும்;
தகநாற் சீர்கள் சார்ந்து நடக்கும்;
இரண்டிரண் டடிகளில் எதுகை யமைந்தால்
திரண்டநல் ஓசை சிறந்தமை வுறுமே''

இதில் இரண்டடிகளில் ஓரெதுகையாக அமைந்திருப்பதைக் காண்க. இது நிலைமண்டில ஆசிரியப்பா.

""மாந்தர்கள் அன்பார் வாழ்வடை வாரே;
சாந்தியே பெரிய தாரகம் ஆமே;
ஆந்துயர் பொறுத்தல் அரும்பெருந் தவமே;
காந்திவாழ் வெடுத்துக் காட்டா மன்றே''

இதில் நான்கு அடிகளில் எதை எங்கே வைத்து எழுதினாலும் பொருள் மாறுவதில்லை. அடியை எப்படியும் மறித்துப் போடலாம். இது அடிமறி மண்டில ஆசிரியப்பா. அகவலில் மோனை இடத்தில் எதுகை வருவதுண்டு.

""வீரரும் வேந்தரும் போரினிற் புக்கார்;
மக்களெல் லோரும் தொக்குவாழ்த் தினரே;
வெற்றிமா மகள்கைப் பற்றினன் அரசன்;
சால்விற லின்றித் தோல்வியுற் றவர்கள்
புவியுடல் போட்டன ரவிந்தொழிந் தாரே''

இந்த ஆசிரியப்பாவில் ஒவ்வோரடியிலும் மூன்றாம் சீரில் எதுகை வந்தது; அதாவது முதற்சீரும் மூன்றாம் சீரும் எதுகையாக இணைந்து வந்தன. இதற்குப் பொழிப் பெதுகை என்று பெயர். எதுகை வந்தால் அங்கே மோனை இல்லையே என்ற குறை இராது.

(தொடர்ந்து பாடுவோம்...) 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/28/w600X390/tm3.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/feb/11/கவி-பாடலாம்-வாங்க---11-அகவல்-2861369.html
2861368 வார இதழ்கள் தமிழ்மணி பழமொழி நானூறு: முன்றுறையரையனார் Sunday, February 11, 2018 03:17 AM +0530 தெருளா தொழுகும் திறனிலா தாரைப்
பொருளா லறுத்தல் பொருளே - பொருள்கொடுப்பின்
பாணித்து நிற்கிற்பார் யாருளரோ? வேல்குத்தின்
காணியின் குத்தே வலிது. (பாடல்-32)

தன்னைத் தெளியாது செருக்கோடு ஒழுகுகின்ற திறப்பாடில்லாத பகைவரை, பொருள் கொண்டு கொல்லுதலே செய்யத்தக்க காரியம், (அப் பகைவரைக் கொல்லும் பொருட்டுச் சிலர்க்குப்) பொருளினைக் கொடுப்பின், அவரைக் கொல்லாது தாமதித்து நிற்பார் யாவர் உளர்? வேலாற் குத்துதலைவிட, காணிப்
பொருளால் குத்துவதே வலிமை யுடையதாம். (க-து) பகைவரைப் பொருளாற் கோறலே சிறந்ததாதலின் பொருளினை மிகுதியுஞ் செய்க. "வேல்குத்தின் காணியின் குத்தே வலிது' என்பது பழமொழி.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/10/w600X390/tm1.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/feb/11/பழமொழி-நானூறு-முன்றுறையரையனார்-2861368.html
2856897 வார இதழ்கள் தமிழ்மணி இந்த வார கலாரசிகன் DIN DIN Sunday, February 4, 2018 01:58 AM +0530 ஆட்டோ ஓட்டுநர் வள்ளிமுத்து குறித்து ஏற்கெனவே நான் பதிவு செய்திருக்கிறேன். சென்னையை அடுத்த போரூரில் இவர் நடத்தும் "திருக்குறள் வாழ்வியல் மன்றம்' பள்ளிச் சிறார்கள் மத்தியில் திருக்குறளை எடுத்துச் செல்வதில் மிகப்பெரிய முனைப்புக் காட்டுகிறது. சக ஆட்டோ ஓட்டுநர்களும் இவருக்கு உதவியாக இருக்கிறார்கள் என்பதுதான் அதை விடச் சிறப்பு. 
ஓட்டுநர் வள்ளிமுத்து என்னைச் சந்திக்க அலுவலகம் வந்திருந்தார். அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு தகவலைச் சொன்னார். சமீபத்தில், ராமாபுரத்திலுள்ள பிரபல ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பெண்மணி ஒருவர் இவரது ஆட்டோவில் சவாரி சென்றிருக்கிறார். நிச்சயமாக அவர் பொறியியல் பட்டதாரியாக இருக்க வேண்டும். அவரை இறக்கிவிட்டபோது 38 ரூபாய் ஆட்டோவுக்கான கட்டணம் என்று சொன்னபோது, அவர் 100 ரூபாய் நோட்டை எடுத்து நீட்டி
யிருக்கிறார்.
ஓட்டுநர் வள்ளிமுத்து அவருக்குத் தரவேண்டிய 62 ரூபாய் பாக்கித் தொகையைக் கொடுத்தபோது, அந்தப் பெண்மணியின் நடவடிக்கை அவரைச் சிரிப்பிலும் வியப்பிலும் ஆழ்த்தி இருக்கிறது. ரூ.100இல் இருந்து 38 ரூபாயைக் கழிப்பதற்கு தனது செல்லிடப்பேசியில் அவர் கணக்குப் போட்டபோது, பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த வள்ளிமுத்து, அவரிடம் கேட்டாராம்: "இதுக்கெல்லாமா மேடம் கணக்குப் போட்டுப் பாக்கணும். மனக்கணக்குப் போட முடியாதா?' 
இன்றைய கல்வியின் தரம் எப்படி இருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டு.


முதுமையின் காரணமாக உடல் நலம் குன்றியிருக்கும் ராஜ்கண்ணனின் தந்தையாரை நலம் விசாரிக்கச் சென்றிருந்தபோது, ராஜ்கண்ணன் "சமரன்' இதழ்களின் தொகுப்பை என்னிடம் தந்தார். இதற்கு முன்பே ஒருமுறை "சமரன்' இதழ் குறித்து நான் பதிவு செய்திருப்பது நினைவுக்கு வந்தது. சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு "சமரன்' பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இப்போது வ.விஜயபாஸ்கரனின் இளவல் வ.மோகனகிருஷ்ணனால் மீண்டும் தொகுத்து "சமரன் களஞ்சியம்' என்கிற பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
நின்றுபோயிருந்த சமரனின் பழைய இதழ்கள் சிலவற்றை நான் மதுரையில் பள்ளி மாணவனாக இருந்தபோது படித்திருக்கிறேன். மதுரையில், பெரியவர் எஸ்.ஆர்.கே. இன் வீட்டில் படித்ததாக நினைவு. 1962 முதல் 1964 வரையிலான இரண்டாண்டுகள் மட்டும்தான் "சமரன்' வெளிவந்தது. அதில் அன்றைய இடதுசாரி இயக்க முன்னோடிகள் பலருடைய கட்டுரைகள் வெளிவந்தன. குறிப்பாக, ஜெயகாந்தன் எழுதிய பல வீரியமான கட்டுரைகள் சமரனில்தான் காணக்கிடைக்கின்றன.
வ.விஜயபாஸ்கரன் ஒரு மிகப்பெரிய அரசியல், சமுதாய, இலக்கிய ஆளுமை. இவர் தொடங்கி நடத்திய தமிழ் இலக்கிய இதழ் "சரஸ்வதி'. மாத இதழாக வந்த "சரஸ்வதி' நின்ற பிறகு, வார இதழாக "சமரன்' அவரால் தொடங்கப்பட்டது. இதுகுறித்த வல்லிக்கண்ணனின் பதிவை "சமரன் களஞ்சியம்' தொகுப்பில் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
இந்தத் தொகுப்பிற்கு எழுத்தாளர் நாஞ்சில் நாடனும், இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனும் எழுதியிருக்கும் அணிந்துரைகள் அற்புதமானவை. இந்தப் புத்தகம் குறித்து நான் அதிகமாக எதுவும் எழுத விரும்பவில்லை. அவர்கள் இருவரும் தங்களது அணிந்துரையில் பதிவு செய்திருப்பதை அப்படியே வாசகர்களுக்குத் தந்து விடுகிறேன். முதலில் நாஞ்சில் நாடனின் பதிவு:
""எளிமையான தமிழில், நேரடியான துணிவில் அமைந்திருந்தன சமரனில் வெளியான அனைத்துக் கட்டுரைகளுமே! எழுதியவர்கள் எவருமே சாமானியமானவர் இல்லை. ஜெயகாந்தன், எஸ்.இராமகிருஷ்ணன், கே.பாலதண்டாயுதம், எம்.என். கோவிந்தன், தா.பாண்டியன், டி.செல்வராஜ், கே.சி.எஸ்.அருணாசலம், மோகன் குமாரமங்கலம், ஆர்.கே.பாண்டுரங்கன், வல்லிக்கண்ணன் எனும் ஆளுமைகள் மற்றும் பலர் எழுதிய 97 கட்டுரைகளைத் தொகுத்து 576 பக்கங்களில் வெளியாகின்றது விஜய பாஸ்கரனின் "சமரன் களஞ்சியம்.
எனதாச்சரியம், ஐம்பதாண்டுகளுக்கு முன்பு "சமரன்' எனும் அரசியல் இதழ் வெளியிட்ட பல கட்டுரைகள் இன்றும் பயனுள்ளதாகவும், பொருளுள்ளதாகவும் இருக்கின்றன என்பதே! அதுவே தான் இன்று"சமரன் களஞ்சியம்' வெளியாவதன் நியாயமும் தேவையும் ஆகும்.''
"ஆவணமாகிவிட்ட ஒரு அரசியல் இதழின் எளிய ஆரம்பங்கள்' என்று தலைப்பு கொடுத்து அணிந்துரை அளித்திருக்கிறார் இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன். அவரது பதிவு:
""சமரன் பத்திரிகை தொடங்கியது அந்நாளைய தமிழக அரசியலில் தன் குரலை எழுப்பத்தான் என்றாலும், கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடக்கும் கொள்கைப் போரிலும் தன் குரலைப் பதிய வேண்டியது முக்கியமாயிற்று. 
இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் சமரன் இதழ்களில் இவ்விரண்டு நிலைகளிலும் சமரனின் குரல் அழுத்தமாகப் பதிவாகியிருப்பதைப் பார்க்கலாம்.
எந்த சுதந்திரத்தை தலைமைகள் அன்றிலிருந்து இன்றுவரை, பத்திரிகைகள் சமீபகாலம் வரை இழந்திருக்கின்றன, அதன் பாதிப்புகள் என்ன என்பதை, சுமார் இரண்டே வருஷங்கள் வாழ்ந்த "சமரன்' கொண்டிருந்த சுதந்திரத்தின் பதிவுகளை, இத்தொகுப்பு சொல்லும். தன்னளவுக்கு, தன் காலத்தில் கண்ட அளவுக்குச் சுட்டிக் காட்டும்.
பேச வேண்டியதை, எழுத வேண்டியதைப் பேசுவதும், எழுதுவதும், பின் அவை காற்றோடு மறையாது பதிவு செய்வதும், அடுத்த தலைமுறைக்கு தருவதும் எவ்வளவு முக்கியமானது என்பது சமரன் தொகுப்பிலிருந்து தெரிய வரும்.''
சமரன் இதழ்களின் தொகுப்பை பதிப்பித்திருப்பதன் மூலம் வ.மோகனகிருஷ்ணன் தமிழினத்துக்கு மிகப்பெரிய தொண்டாற்றி இருக்கிறார். இந்தத் தொகுப்பில் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியிருப்பது "மெயின் ஸ்ட்ரீம்' என்ற ஆங்கில ஏட்டில் வெளிவந்த சுவாமி விவேகானந்தரின் வீரமுழக்கத்தின் ஒரு பகுதி, வல்லிக்கண்ணனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, சமரன் இதழில் வெளியிடப்பட்டிருப்பது. 
அரசியல், சமூகக் கண்ணோட்டமுடைய இன்றைய இளைய தலைமுறையினர் கட்டாயமாகப் படிக்க வேண்டிய அற்புதமான தொகுப்பு இது.

சில நாள்களுக்கு முன்பு வேலூரிலிருந்து சென்னைக்குக் காரில் பயணித்துக் கொண்டிருந்தேன். வழியில் ஒரு மரத்தடியில் வாகனத்தை நிறுத்தினோம். கண்ணுக்கெட்டும் தூரத்தில் "சமத்துவபுரம்' ஒன்று காணப்பட்டது. சாதியற்ற சமுதாயம் அமைய வேண்டும் என்கிற நோக்கில் சாதி ரீதியாக வீடுகள் ஒதுக்கப்பட்டு, சமத்துவபுரங்கள் உருவாக்கப்படுவதை நினைத்தபோது சிரிப்பு வந்தது. 
சமத்துவபுரம் குறித்து எப்போதோ படித்த மூன்றுவரிக் கவிதை நினைவுக்கு வந்தது. எழுதியவர் யாராக இருந்தாலும் அவருக்கு என் பாராட்டுகள்.
ஆயிரம் உண்டிங்கு ஜாதி...
உறுதி தந்தது அரசு
சமத்துவபுரம்!

]]>
http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/feb/04/இந்த-வார-கலாரசிகன்-2856897.html
2856896 வார இதழ்கள் தமிழ்மணி சோழன் நல்லுருத்திரன் கூடும் உயர்ந்த குறிக்கோளார்! - முனைவர் ந.செ.கி. சங்கீத்ராதா DIN Sunday, February 4, 2018 01:57 AM +0530 ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் ஒரு குறிக்கோள் வேண்டும். குறிக்கோள் இல்லா மனிதனின் வாழ்க்கை வீணே! அக்குறிக்கோள் உயர்வானதாக இருக்க வேண்டும். மலையளவு இருக்க வேண்டுமே தவிர மடுவளவு இருக்கக் கூடாது. அவ்வுயர்வுக்கு தேவை ஊக்கமும் உழைப்பும் ஆகும். அயராது உழைப்பவனுக்கு தெய்வம் உதவ முன்வரும். அத்தகைய உழைப்புக்கு ஊக்கம் தேவை. ஊக்கம் என்பது முயற்சி "முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்' என்பது வள்ளுவர் வாய்மொழி; அம்முயற்சிக்கு உயர்ந்த எண்ணம் வேண்டும்.
தாமரைத் தண்டினது உயர்வும் தாழ்வும் குளத்திலுள்ள நீர்மட்டத்தினைப் பொறுத்தது. அதுபோல மனிதர்கள் தம் வாழ்வில் பெறும் ஏற்றமும் இறக்கமும் அவர்களது எண்ணத்தைப் பொறுத்தே அமையும் (குறள்.595). எனவேதான், உள்ளுவதெல்லாம் உயர்ந்தனவாக இருத்தல் வேண்டும் (596) என்றார் வள்ளுவர். 
உயர்ந்த குறிக்கோளுடையார் நட்பே தமக்கு வேண்டும் என்றான் ஓர் அரசன். அவன்தான் சோழன் நல்லுருத்திரன். கலித்தொகையில் முல்லைக்கலி பாடிய மூதறிவாளன்! புலவர் வரிசையில் இடம்பெறும் புரவலன்! அவ்வரசன், உயர்ந்த குறிக்கோளினைக் கொண்ட முயற்சியுடையார் நட்பே தமக்குக் கூட வேண்டும் என்றும், உயர்ந்த குறிக்கோள் அற்றவர் நட்பு தம்மோடு கூட வேண்டாம் என்றும் கூறுகிறான்.
எளிய முயற்சி: நன்றாக விளைந்து அறுவடைக்குத் தயாராகவிருக்கும் நெல் வயலில் கதிர்களைக் கவர்ந்து சென்று தன் வளையில் நிறைத்து வைக்கும் இயல்பு எலிக்கு உண்டு. எலி பிறர் உழைப்பைக் கவர்ந்து மறைத்து வைக்கிறது. 
இது சிறு முயற்சி; தான் மட்டும் வாழ நினைக்கும் எண்ணம்! இவ்வெலி போன்ற முயற்சியுடைய மனிதர்கள் உலகில் உள்ளனர். அவர்கள் சிறு முயற்சி உடையவர்கள். ஆனால், எலி மறைத்து வைத்த பொருளோ அதற்குப் பயன்படவில்லை. வளையைத் தோண்டுபவர் எடுத்துச் சென்று விடுகின்றனர். இவ்வாறே பிறர் உழைப்பில் வாழ விரும்பி, பிறர் பொருளைக் கவருகின்ற சிறு மனிதர்களும் உலகில் உள்ளனர். கடைசியில் அவர்கள் தாமும் உண்ணாது பறிகொடுக்கின்றனர்; இது புன்மையானது; இழிவு தருவது. இவர்கள் உறவு எனக்குக் கூடாது போகட்டும்! என்கிறான்.
உயர்ந்த முயற்சி: உயர்ந்த நோக்கத்துடன் காட்டில் வேட்டைமேற்சென்ற வரிப்புலியானது தனது வலிமையால் திண்ணிய பன்றியை அடித்து வீழ்த்தியது. ஆனால், பன்றி அப்புலியின் இடப்பக்கம் வீழ்ந்தமையால், அதனை உண்ணாது வெறுத்து பசியுடன் தனது குகை சென்று தங்குகிறது (புலி தனது இரையை வலப்பக்கம் வீழ்த்தியே உண்ணும் இயல்புடையது). மறுநாள் மிகப்பசியுடனும், வீரத்துடனும் குகையிலிருந்து வெளியேறுகிறது.
முன்னிலும் பெரிய வலிய ஆண் யானையை அடித்து வலத்திலே வீழ்த்தியது; வயிறு நிறைய உண்டது; தன் வழிமேற் சென்றது. மீந்து கிடந்த யானையின் தசைகள் வேறு பல விலங்கு, பறவைகளுக்கு இரையாயின. 
அதாவது, புலியின் முயற்சியால் வீழ்த்திய பெரிய யானை காட்டிலுள்ள பல உயிர்களுக்கும் உணவாகிறது. இவ்வாறு தாளாற்றித்தந்த (தன் முயற்சியால்) பொருளைத் தானும் உண்டு, தக்கார்க்கும் அளிக்கும் வேளாண்மை மிகுந்தோரும் இவ்வுலகில் உள்ளனர். அதாவது, புலியின் உயர்ந்த குறிக்கோளுக்கு உழவனின் உயர்வு உவமையாகக் காட்டப்பட்டது. இது இன்றையளவில் நாம் நினைவுகூரத்தக்கது. இத்தகைய உயர்ந்த குறிக்கோளுடைய குன்றனைய முயற்சியுடையார் நட்பே கூடுவது உயர்வு தரும். இத்தகையோர் நட்பு எனக்கு நாளும் பெருக வேண்டும் என்கிறான் இவ்வரசன். 
எனவே, புறப்பட்ட இடமும் தெரியாமல், போகும் இடமும் தெரியாமல் "நீர் வழிபடூஉம் புணை போல' தடுமாறிக்கொண்டிருக்கும் இன்றைய இளைய தலைமுறைக்குத் தேவை உயர்ந்த குறிக்கோளுடையார் நட்பேயாகும்!
"விளைபதச் சீறிடம் நோக்கி வளைகதிர்
வல்சி கொண்டு அளை மல்க வைக்கும்
எலி முயன் றனையர் ஆகிஉள்ளதம்
வளன்வலி உறுக்கும் உளமி லாளரொடு
இயைந்த கேண்மை இல்லாகியரோ
கருங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென
அன்று அவண் உண்ணா தாகி வருநாள்
பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந்து
இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும் 
புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து 
உரனுடையாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உள ஆகியரோ' (புறம் 190.)

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/4/w600X390/tm2.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/feb/04/சோழன்-நல்லுருத்திரன்-கூடும்-உயர்ந்த-குறிக்கோளார்-2856896.html
2856895 வார இதழ்கள் தமிழ்மணி கவி பாடலாம் வாங்க - 10: எண்சீர் விருத்தம் "வாகீச கலாநிதி' கி.வா. ஜகந்நாதன் DIN Sunday, February 4, 2018 01:56 AM +0530 தமிழில் சித்தர் பாடல்கள் என்று ஒரு வகையான நூல் உண்டு. போகர், அகத்தியர், ரோமரிஷி, புலிப்பாணி என்பன போன்ற பெயர்களையுடைய சித்தர்கள் உண்டு. பதினெண் சித்தர் ஞானக்கோவை என்ற நூலில் சித்தர் பாடல்கள் எனப் பல வகைப் பாடல்களைக் காணலாம். வைத்திய நூல்களில் பல, சித்தர்கள் பாடியவை.
சித்தர் பாடல்களில் பெரும்பாலானவை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாகவே இருக்கின்றன. பாடுவதற்கு எளியது இந்த விருத்தம் ""கேளப்பா, ஆளப்பா'' என்று எதுகையில் தொடர்கள் வரும் பாடலைப் பார்த்தால், சித்தர் பாட்டென்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். "பாரதி அறுபத்தாறு' என்பதில் உள்ள கவிகள் எல்லாம் இவ்வகையைச் சார்ந்தனவே. இந்த வகை விருத்தத்தில் ஓரடியில் முதல் பாதியும் மறு பாதியும் ஒத்து நிற்கும். ஆதலால், ஐந்தாவது சீரில் - அதாவது இரண்டாவது பாதி தொடங்கும் இடத்தில் மோனை அமையும்.
"காப்பியமும் தோத்திரமும் புலவர் பாடிக்
கவின்செய்யப் பேரழகு பூண்ட அன்னை
யாப்பியலும் அணிஇயலும் பொருளின் பாங்கும்
இனிமையுற அமைந்தசெல்வி, மன்னர் பல்லோர்
பாப்பயிலத் தொண்டுகொண்ட தெய்வப் பாவை,
பழம்புலவோர் குழுவருளைப் பெறவைத் தாண்டு
பூப்பயிலும் பெரும்புகழ்சேர் தமிழாம் தேவி
புதுமலர்த்தாள் சிரம்வைத்துப் போற்றி வாழ்வாம்.'
இந்தப் பாட்டில் ஒவ்வோரடியிலும் எட்டுச் சீர்கள் இருக்கின்றன. அரையடியில் முன் இரண்டு சீரும் காய்ச்சீர்கள்; நேரை இறுதியில் உடைய மூவகைச் சீர்கள். பின் இரண்டு சீரும் மாச்சீர்கள். நேரை இறுதியிலே உடைய ஈரசைச்சீர்கள். 
ஆனால் ஒவ்வோர் அரையடியிலும் உள்ள நான்காவது சீர் தேமாவாகவே - நேர் நேராகவே இருப்பதைக் கவனிக்க வேண்டும்; அங்கே நிரை நேர் அல்லது புளிமாச்சீர் வந்தால் ஓசை கெட்டுவிடும். பாட்டைப் படிக்கும்போது அங்கே புளிமா இருந்தால் வேறுபாடான ஓசை உண்டாதலைக் கவனிக்கலாம்.
தேவாரத்தில் அப்பர் சுவாமிகள் பாடிய திருத்தாண்டகப் பாக்களில் பெரும்பாலான எண் சீரடி விருத்தங்களாகவே இருக்கும். சில இடங்களில் ஓசை கூடியும் இருக்கும்; குறைந்தும் இருக்கும். தாண்டகம் என்ற பெயரொடு வரும் பாடல் அது. அதற்குரிய இலக்கணம் இப்போது வழக்கில் இல்லை.
"சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து
தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவா ரவர்செல்வம் மதிப்போ மல்லோம்
மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகின்;
அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந் தார்க்கன்ப ராகில்
அவர்கண்டீர் யாம்வணங்கும் கடவு ளாரே!'
இந்தப் பாடலில் மூன்றாம் அடியில் முதல் பாதயில் நான்காம் சீர் "யராய்' என்று இருக்கிறது. எழுத்துக் கணக்கைக் கொண்ட தாண்டகப் பாட்டின் தாண்டகப் பாட்டின் இலக்கணப்படி இந்த அடி சரி. ஆனால் இப்போதெல்லாம் இந்த முறைப்படி பாடுவதில்லை. ஆகவே, எண் சீர் விருத்தப்படி அதை அமைத்தால் ஒட்டி வராது. மற்ற அடிகளெல்லாம் ஒத்து வந்திருப்பதைக் காண்க.
எண்சீர் விருத்தத்தில் காய்சீர் வரும் சில இடங்களில் விளச்சீர் வரலாம். மேலே உள்ள தாண்டகத்தில் இரண்டாவது அடி ஆரம்பத்தில் மங்குவார் என்று விளச்சீர் வந்திருப்பதைக் காண்க.
இனி வேறு வகை எண்சீர் விருத்தமும் தமிழ் இலக்கியத்தில் மிகுதியாகப் பயின்று வருகிறது. இராமலிங்க சுவாமிகள் பாடல்களில் இந்த வகை விருத்தம் அதிகம்.
"வாழையடி வாழையென வந்ததிருக் கூட்ட
மரபினில்யா னொருவனன்றோ வகையறியே னிந்த 
ஏழைபடும் பாடுனக்குத் திருவுள்ளச்சம் மதமோ 
இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ 
மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு 
மகனலவோ நீயெனக்கு வாய்த்ததந்தை யலவோ
கோழையுல குயிர்த்துயர மினிப்பொறுக்க மாட்டேன் 
கொடுத்தருணின் னருளொளியைக் கொடுத்தருளிப் பொழுதே!' 
இது இராமலிங்க சுவாமிகள் பாடல். அரையடியில் முதல் மூன்றும் காய்ச்சீராகவும் நான்காவது மாச்சீராகவும் வந்துள்ளன. மாச்சீரில் தேமா, புளிமா என்னும் இரண்டும் வந்திருப்பதைக் கவனிக்க வேண்டும். கூட்ட, னிந்த, தானோ, மாட்டேன் என்பவை தேமாச் சீர்கள்; மதமோ, உனக்கு, யலவோ, பொழுதே என்பவை புளிமாச் சீர்கள். திருவருட்பாவில் உள்ள இத்தகைய பாடல்களைப் படித்துப் படித்துப் பழகினால் எளிதில் பாட வரும்.
இந்த எண்சீர் விருத்தத்திலும் ஐந்தாவது சீரில் மோனை அமையும். வேறு வகையான எண்சீர் விருத்தங்களும் உண்டு. அவை அருமையாகவே நூல்களில் வந்துள்ளன.
"அலையோ டியநெஞ் சினிலே துயரால்
அயர்வே னையரு ளருளிப் புவியில்
மலைவோ டொருசஞ் சலமும் பிறவா
வகையில் குலவும் படிவைத் தருள்வாய்
இலையோ டியசெவ் வயில்வே லவனே
இமையோர் நலவாழ் வடையச் சமரில்
குலையோ டசுரர் ஒழியப் பொருதாய்
குமரா அமரா பதிகா வலனே!' 
இது ஒருவகை எண்சீர் விருத்தம். இதில் எல்லாச் சீர்களும் புளிமாச்சீராகவே அமைந்திருக்கின்றன. பொதுவாகவே, ஆசிரிய விருத்தங்களில் புலவர்கள் தம்முடைய கற்பனைத் திறத்தால் பல வகையான உருவங்களைப் படைத்திருக்கிறார்கள்; இனியும் படைப்பார்கள். ஆசிரிய விருத்தங்களைப் பாடிப் பழக வேண்டுமானால், கம்பராமாயணத்தையும் வில்லிபாரதத்தையும் அடிக்கடி படித்து, வாயாரப் பாடிப் பழக வேண்டும்.
(தொடர்ந்து பாடுவோம்...)
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/10/w600X390/tm2.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/feb/04/கவி-பாடலாம்-வாங்க---10-எண்சீர்-விருத்தம்-2856895.html
2856894 வார இதழ்கள் தமிழ்மணி சினம் கொண்ட சேவல் என்ன செய்யும்? - முனைவர் வாணி அறிவாளன் DIN Sunday, February 4, 2018 01:55 AM +0530 விலங்குகளுள் பெரிய, வலிய, சாதுவான யானைகளுக்கு மதம் பிடிக்கும். ஆனால் யானைகளுள் ஆண் யானையான களிறுக்கு மட்டுமே மதம் பிடிக்கும். மேலும், காடுகளில், தன் கூட்டத்திலிருந்து தனித்து விடப்பெற்ற ஆண் யானைக்கே மதம் பிடிக்கும். மனிதர்களால் தனிப்பட்ட பணிகளுக்காகத் தனியாக வளர்க்கப்பெறும் ஆண் யானைகளுக்கும் மதம் பிடிக்கும். அவ்வாறு மதம் பிடித்த வேளைகளில், எதிர்ப்படுவோரைத் தூக்கி அடித்துக் கொன்றுவிடும். அந்த வேளையில், தன்னை வளர்க்கும் பாகனையும் கொல்ல முற்படும். மதம் பிடித்த யானைகளை அடக்குவது எளிதன்று. ஆனால் பழந்தமிழகத்தில், இத்தகைய மதம் பிடித்த யானைகளையும், சின்னஞ்சிறு சேவற் கோழிகள், தாக்கிக் கொன்றிருக்கின்றன. 
திருச்சி, உறையூரிலுள்ள பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில், யானையைச் சேவல் தாக்கிப் போரிடும் காட்சி, இரு புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பெற்றுள்ளன. (காண்க. படங்கள் 2&3, நன்றி:ஆர்.பாலகிருஷ்ணன், இ.ஆ.ப., சிந்துவெளி ஆய்வாளர்).
சோழர்களின் தலைநகரமாக விளங்கிய இவ் உறையூரிலிருந்து ஆண்டுவந்த கோப்பெருஞ்சோழனைப் பிசிராந்தையார் புறநானூற்றில், "கோழியோன்' என்றே குறிப்பிட்டுள்ளமை(புறம்.212:8) ஈண்டு எண்ணத்தக்கது. இளங்கோவடிகளோ 
உறையூரைக் கோழி எனக் குறிப்பிடாது, வாரணம் எனப் பதிவு செய்துள்ளதோடு, பெயர்க்காரணத்தையும் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். அக்காரணம் குறித்துச் செவிவழிக் கதைகள் சிற்சில மாறுபாடுகளுடன் வழங்கப்பெற்று வருகின்றன. அக்கதை வருமாறு:
திருச்சி உறையூர், முற்காலச் சோழ மன்னர்களின் தலைநகரமாக விளங்கியது. உறையூரைத் தலைநகரமாகக் கொண்டு கரிகாற்சோழன் ஆட்சி செய்த காலகட்டத்தில் மன்னன் பட்டத்து யானையில் வலம் வந்தபோது அந்த யானைக்குத் திடீர்ரென மதம் பிடிக்க, மன்னரும் பிறரும் செய்வதறியாது திகைத்து நின்றனராம். அந்நேரத்தில் எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு சேவல், யானையின் தலையில் கொத்தவே மதம் பிடித்த யானை தரையில் மலைபோல் சரிந்து உயிர் விட்டதாம். அன்றிலிருந்து உறையூரானது கோழிமாநகர் என வழங்கப்பெற்றதாம். மதம் பிடித்த யானையை வீழ்த்தியது சாதாரண சேவல் அல்ல, இறைவன்தான் சேவல் வடிவில் வந்து யானையைக் கொன்று மக்களையும் நாட்டையும் காத்ததாக நம்பிய மன்னன், அவ்விடத்தில் கோயில் எழுப்பினானாம். அக்கோயில்தான் உறையூர் பஞ்சவர்ணேஸ்வர சுவாமி கோயில். 
இந்த வரலாற்று நிகழ்வை, நினைவுகூரும் வகையில் கோயில் மதிலின் உட்புறச் சுவற்றில் யானையின் தலையில் சேவல் கொத்துவது போன்ற சிற்பங்கள் செதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறுவர். ஆனால், இவ்விரண்டு சிற்பங்களும், வெவ்வேறு காலத்தைச் சார்ந்தவை என்பர் தொல்லியல் அறிஞர். அவை வெவ்வேறு காலத்தையன மட்டுமல்ல; வெவ்வேறு நிகழ்வுகளையும் குறிப்பிடுவன என்பதை சிற்பக் காட்சிகள் தெளிவுபடுத்துகின்றன. 
அதாவது, அரசன் யானை மேல் அமர்ந்திருக்கும் முதல் சிற்பமானது மேற்கூறப்பெற்ற கரிகாற்சோழன் தொடர்பான நிகழ்வைக் காட்சிப்படுத்தியுள்ளது. அரசன் அமர்ந்து ஊர்ந்துவந்த அந்த யானைக்கும், இரண்டாவது சிற்பத்தில் உள்ள யானைக்கும் வேறுபாடு உள்ளது. இரண்டாவது சிற்பத்தில் உள்ள யானையின் தந்தங்கள் உடைபட்டவையாக உள்ளன. பொதுவாக, தந்தங்கள் உடைபட்ட களிறுகளைக் கோயில் பணிகளுக்கும், பிற பணிகளுக்கும் பயன்படுத்துவது வழக்கம். கட்டுரையின் தொடக்கத்தில் கூறியவாறு, கோயில் முதலான இடங்களில், பணிகளுக்காகத் தனியாக வளர்க்கப்பெறும் ஆண் யானைகளுக்குப் பெரும்பாலும் மதம் பிடிக்கும். அவ்வாறான தந்தங்கள் உடைபட்ட, மதம் பிடித்த யானை ஒன்றைச் சேவல் கொல்லும் நிகழ்வையே, இரண்டாவது சிற்பம் காட்டுகிறது. இவ்வாறு, மதம் பிடித்த யானைகளைச் சேவல் கொல்லும் இரு நிகழ்வுகளுக்கான சான்றுகளாக அச்சிற்பங்கள் காணப்பெறுகின்றன. 
சேவல் சண்டைக் குணம் மிக்கது. சேவல்களுக்கிடையேயான போரினை சங்க இலக்கியங்களும் காட்டியுள்ளன(குறுந்.305, அகம்.277). பழந்தமிழகத்தில் யானை-சேவற்போர் வழக்கத்திலிருந்ததை கி.மு.1ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சோழர்கால நாணயம் காட்சிப்படுத்தியுள்ளது(காண்க. படம்.3, நன்றி: ஐராவதம் மகாதேவன், சிந்துவெளி ஆய்வாளர்).
அம்மூன்று சான்றுகளிலும் சேவல் தாக்குவது, யானையின் தலையிலுள்ள நுதற்பகுதியை மட்டுமே. விலங்கியல் அறிஞர்கள், யானையின் தலையில் அந்நுதற்பகுதி, எலும்புகளற்ற மென்மையான பகுதி என்ற செய்தியைத் தெரிவித்துள்ளனர். அதாவது யானையின் அப்பெருத்த உடம்பின் பலவீனமான பகுதி அந்நுதற் பகுதியே ஆகும். அதனால் யானையின் நுதலைப் பூநுதல் என இலக்கியங்கள் குறித்துள்ளன. (அகநா. 268:2-4, நற்.36:1-3, நற்.333:4,5).
காட்டு விலங்குகளுள் யானையும் புலியும், "எலியும் பூனையும் போல' ஒன்றுக்கொன்று பகை உணர்வு கொண்டவை. ஒன்றையொன்று போரிட்டுத் தாக்கிக் கொல்லக் கூடியவை (அகம்.272:1,2, பதி.53:18, பரி.20:4-5). எனவே புலி, தன் பகையாகக் கருதும் யானையைக் கொல்லும் முறையை, அறிவை இயல்பாகவே பெற்றிருந்ததில் வியப்பில்லை. யானையின் நுதலைத் தாக்கியே கொன்றிருக்கிறது; வென்றிருக்கிறது. யானையின் பூநுதலே, ஒரே அடியில் அதனை வீழ்த்துவதற்குரிய பலமற்ற உடற்பகுதி என்பதைப் புலியும் அறிந்திருந்தது; மனிதனும் அறிந்திருந்தான். 
போரின்போது யானை தன்மீது எவ்வளவு அம்புகள் பாய்ந்தாலும் சற்றும் தளராது, சினத்துடன் மேலும் போர்க்குணமுடன் முன்னேறிச் செல்லும் தன்மையுடையது. ஆனால், அவற்றின் இரு கண்களுக்கு இடையே அமைந்துள்ள இந்நெற்றிப் பகுதியில்(நுதலில்), ஓரம்பு தைத்தாலும் அவை இறந்துவிடும். எனவே போர்க்களங்களில் மறவர், யானைகளை அவற்றின் நுதலில் படைக்கருவிகளைச் செலுத்தியே கொன்ற செய்தியை,
"கொல்யானை அணிநுதல் அழுத்திய ஆழிபோல்' (கலி.134:3) எனக் கலித்தொகை குறிப்பிட்டுள்ளது. பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்த புறநூலான களவழி நாற்பதிலும், 
"எற்றி வயவர் எறிய, நுதல் பிளந்து 
நெய்த்தோர் புனலுள் நிவந்த களிற்று உடம்பு
(களம்.23) 
"ஓடா மறவர் எறிய, நுதல் பிளந்த 
கோடு ஏந்து கொல் களிற்றின் கும்பத்து எழில்ஓடை' 
(களம்.31) 
எனப் போர்க் களிறுகளை மறவர், நெற்றியில் அம்பெய்திக் கொன்ற நிகழ்வுகள் காட்சிப்படுத்தப் பெற்றுள்ளன. அதனால்தான் போரில் ஈடுபட்ட களிறுகளின் அந்நுதற் பகுதியை இரும்பு, பொன் முதலிய உலோகங்களாலான கவசத்தால் மறையுமாறு பிணித்தனர். இக்கவசத்தை ஓடை எனக் குறிப்பிடும் இலக்கியங்கள், ஓடை அணிந்திருந்த போர்க்களிற்றின் தோற்றத்தினை,
"ஓடையொடு பொலிந்த வினைநவில் யானை'
(நெடுநல்.169)
"ஒண்ணுதல் யாத்த திலகவவிர் ஓடை' (கலி.97:11)
எனப் பல இடங்களில் காட்சிப்படுத்தியுள்ளன. இவ்வாறு யானையை எளிதில் தாக்கிக் கொல்வதற்குரிய உடற்பகுதியை அறிந்திருந்த பழந்தமிழர், போர்க்குணம் உடைய சேவலுக்கும் யானையின் அந்நுதற்பகுதியைத் தன் கூரிய அலகாலும், நகங்களாலும் தாக்கிக் கொல்லும் பயிற்சியை அளித்திருக்கின்றனர். அதனால்தான் சிறு சேவற் கோழிகளால், பெரிய வலிய மதம் கொண்ட யானைகளைத் தாக்கிக் கொல்ல முடிந்தது. அதனைத்தான் இச்சிற்பங்களும் நாணயமும் காட்சிப்படுத்தியுள்ளன. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/4/w600X390/tm1.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/feb/04/சினம்-கொண்ட-சேவல்-என்ன-செய்யும்-2856894.html
2856893 வார இதழ்கள் தமிழ்மணி பழமொழி நானூறு: முன்றுறையரையனார் Sunday, February 4, 2018 01:53 AM +0530 எமரிது செய்க எமக்கென்று வேந்தன்
தமரைத் தலைவைத்த காலைத் - தமரவற்கு
வேலின்வா யாயினும் வீழார்மறுத்துரைப்பின்
ஆலென்னிற் பூலென்னு மாறு.. (பாடல்-31)

எம்மவராதலான் எமக்கு இச்செயலை முடித்துத் தருக என்று அரசன், தன்கீழ் வாழ்வாரை ஒரு செயல் செய்யும் பொருட்டு நம்பி நியமித்த இடத்து, அவன் கீழ் வாழ்வார். அவர் பொருட்டாக வேலிடத்தாயினும் வீழாதவர்களாகி, இயலாது என்று மறுத்துக் கூறலின் (அஃது), அதோ தோன்றுவது (பெரிய) ஆலமரமென்று ஒருவன் கூறலுறின், (அதற்கு மாறாக) மற்றொருவன் அது சிறிய பூலாச் செடியே என்று கூறுதலை ஒக்கும். (க-து.) அரசன் ஏவலை மேற்கொண்டார் உயிர் கொடுத்தாயினும் அதனை முடித்தல் வேண்டும். "ஆலென்னிற் பூலென்னுமாறு' என்பது பழமொழி.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/10/w600X390/tm1.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/feb/04/பழமொழி-நானூறு-முன்றுறையரையனார்-2856893.html
2852434 வார இதழ்கள் தமிழ்மணி வள்ளலாரின் ஏக்கம்! - இடைமருதூர் கி. மஞ்சுளா Monday, January 29, 2018 05:20 PM +0530 அருட்பிரகாச வள்ளலாரின் பாடல்கள் "திரு அருட்பா' ஆனதால், அதில் திருவும் இருக்கிறது; அருளும் இருக்கிறது. இரண்டும் இணைந்து திருவருள் (அம்மை-அப்பர்) ஆனது. அவற்றைப் படிப்போர்க்கு அவ்விரண்டும் திருவாகிய இறைவனும், அருளாகிய இறைவியுமாகத் திருவருள் புரிகிறது' என்பர் சான்றோர்.
"அன்பெனும் பிடியுள் அகப்படும் மலை'யான சிவபரம்பொருளை தம் அன்பால் அரவணைத்து அவரோடு ஜோதியில் இரண்டறக் கலந்து, மரணமில்லாப் 
பெருவாழ்வு பெற்றவர் அருட்பிரகாச வள்ளலார். 
சைவ சமயம் தாசமார்க்கம் (தொண்டன்-அடிமை), சத்புத்திரமார்க்கம், (மகன்) சக மார்க்கம் (தோழன்), சன்மார்க்கம் (சீடன்) ஆகிய நான்கு நெறிகளில் இறைவனை வழிபடும் வழியைக் கூறியுள்ளது. 
உடலுக்குத் தாய்-தந்தையர் நம்மைப் பெற்றோர். ஆனால், உயிருக்கு (ஆன்மா) தாயும் தந்தையுமாக இருப்பவன் இறைவன் ஒருவனே! அவனே சிவபரம்பொருள். அவனே அம்மையப்பனாக - சிவசக்தி சொரூபனாக இருந்து உயிர்களை உய்விக்கிறான். 
வள்ளலாரும், இறை-உயிரின் உறவு நிலைகளை குரு, தாய், தந்தை, நட்பு, துணை, அம்மான், நாயகன், தலைவன், ஆருயிர்த் தலைவன் என்று பலவாறு பாடியுள்ளார். அவற்றுள் முக்கியமான உறவு இறைவனைத் தந்தையாகக் கருதும் முறை.
இறைவனைத் தந்தையாக நோக்கும் போக்கை சமயத்தின் தொடக்கமாகக் கருதுவர். 
""1. பெற்றெடுத்த தந்தையுடன் நாம் வைத்திருக்கும் உறவு எந்த அளவு தீவிரமாக உள்ளதோ அந்த அளவு கடவுட் தந்தையிடம் உண்டு.
2. கடவுள், தந்தையின் மறுவடிவம் என்பது "FATHER PROJECTION THEORY' என்னும் கொள்கையாகும்'' என்கிறார் மைக்கேல் ஆர்கரி. மேலும் அவர், 
பெற்றோர், கடவுள் (PARENTAL IMAGE AND DEITY (G0D) IMAGE) உருவாக்கத்துக்கு உளவியல் அடிப்படையில் இரண்டு காரணங்களை முன்வைத்துள்ளார். அவற்றுள் ஒன்று:
தாய்-தந்தை இருவரில் யாரேனும் ஒருவரிடம் மட்டுமே சலுகை கொள்வதைப் போலவே கடவுளையும் கருதும் நிலை என்கிறார். ( THE SOCIAL PSYCHOLOGY OF RELIGION, P.179, 180, 184,)  மைக்கேல் ஆர்கரியின் கருத்துக்கேற்ப அமைந்துள்ளது வள்ளலாரின் "தந்தை' குறித்த பாடல்கள். வள்ளல் பெருமானும் தம் தாய்-தந்தையை இளமையிலேயே இழந்துவிட்டவர் என்பதால், அவரும் தாய்-தந்தைப் பாசத்திற்காக ஏங்கித் தவித்திருக்கிறார் என்பதை அப்பாடல்கள் காட்டுகின்றன.
வள்ளல் பெருமான் தாய் - தந்தை இருவரையும் தனித்தனியாவும், இணைத்தும் குறிப்பிட்டுப் பாடும் பாடல்கள் பல உள்ளன. ஆனாலும், இறைவனை தந்தை நிலையில் வைத்து அவர் தம்மை மகனாகப் பாவித்துக் கொண்டு பாடும் இடங்கள் பற்பல.
"இங்கெனக்குப் பேசிய தந்தையும் தாயும்' (3386), என் அப்பா (605), தந்தையே (644,2660), எந்தையே (1105), என்றன் அப்பா (599, 602), எனை ஈன்றவனே (1207), என் அப்பனே (2587) என வருபவை தந்தையின் உறவைக் குறிப்பனவாகவே உள்ளன. "அப்பனெனத் திகழ்கின்றோனே' (3246-10-4) என்றவரியின் மூலம் தன் தந்தைபோல இறைவன் திகழ்கிறார் என்ற ஒப்புமைத் தன்மையும் அமைந்துள்ளது.
நீயே என் தந்தை (2203), என்னருமைத் தந்தையே (1962), என் உரிமைத் தந்தையே (1226), மன்றமர்ந்த தந்தையே (1228) என்று கூறுகின்றபோது தனக்குரிய பாதுகாப்புரிமையையும், தந்தையின் உயர்வையும் எடுத்துத்துரைக்கின்றார்.
""தந்தை நீ அலையோ? தனயன் நான் அலனோ?'' (3844) என்றும் ஏக்கமாகக் கேட்டு உறவை-உரிமையை நிலைநாட்டுகின்றார். மேலும், ""தந்தையர் வெறுப்ப மக்கள் தாம் பயனில்'' (3511-102), ""தடுத்தெனை ஆட்கொண்ட தந்தையரே'' (3793), ""தந்தை தம்மையே தனையன் தன் தன்மையென்று சாற்றுதல் சாத்தியம் கண்டீர்'' (5442), ""எந்தையைக் கண்டேன் இடரெல்லாம் நீக்கினேன் சிந்தை மகிழ்ந்தேன் சித்திகள் பெற்றேன்'' (4902), ""அறிவளித்து பிறிவிலாதமர்ந்த பேரருள் தந்தை'' (4615-1122) என்றும், "உணர்ந் துணர்ந்துணரினும் உணராப் பெருநிலை / அடைந்திட எனக்கே அருளிய தந்தை' (4615-1155) என்றும் தனக்கு மரணமிலாப் பெருவாழ்வு அளித்த அருட்திறத்தையும் அருளிச் செய்துள்ளார். மேலும், தந்தையாக பாவித்துப் பாடியுள்ள இன்னபிறபாடல்களும் குறிப்பிடத்தக்கவை.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/28/w600X390/tm1.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/jan/28/வள்ளலாரின்-ஏக்கம்-2852434.html
2852435 வார இதழ்கள் தமிழ்மணி இந்த வார கலாரசிகன் DIN DIN Sunday, January 28, 2018 02:38 AM +0530 மதுரை மணிமொழியாரின் நினைவேந்தல் கூட்டத்திற்குச் சென்றிருந்தபோது, சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் கோ.விசயராகவன் டாக்டர் கே.கே.பிள்ளை எழுதிய "தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்' என்கிற புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாகத் தந்தார். முன்பு எப்போதோ படித்திருந்த அந்தப் புத்தகத்தை மற்றொருமுறை படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
1972-ஆம் ஆண்டு தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்திற்காக வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் கே.கே.பிள்ளையால் எழுதப்பட்ட இந்தப் புத்தகம், இதுவரை 13 பதிப்புகள் கண்டிருக்கின்றன என்றால், அந்தப் புத்தகத்தின் அருமையைப் புரிந்து கொள்ளலாம். அகழாய்வுகள் மூலம் கிடைத்த வரலாற்றுச் சான்றுகளுடன், தமிழக வரலாற்றுக்கான அடிப்படைத் தரவுகளை ஒருங்கே திரட்டி, வரலாற்றுக்கு முந்தைய தமிழகம், சங்க காலத்திய வரலாறு, இடைக்காலத் தமிழக வரலாறு, அயலகத்தார் குறிப்புகள், அந்நியர் ஆட்சியில் தமிழக வரலாறு எனக் கால வரிசைப்படி வரையறுத்து, டாக்டர் கே.கே.பிள்ளை இந்நூலை எழுதியிருக்கிறார் என்பதுதான் தனிச்சிறப்பு.
தமிழக வரலாறு குறித்த இந்நூலைத் தொகுத்திருக்கும் டாக்டர் கே.கே.பிள்ளை சில அடிப்படை உண்மைகளைத் தனது முன்னுரையில் தெரிவிக்கிறார். பழந்தமிழரின் வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டையும் அறிந்து கொள்வதற்குச் சங்க இலக்கியம் நமக்குப் பெரிதும் பயன்படுகின்றது என்றும், 
சங்காலத் தமிழர் பண்பாடுகளே தமிழரின் வரலாறு முழுவதிலும் தொடர்ந்து வந்து அவர்களுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு அடிகோலி வந்துள்ளன என்பதும் அவரது கருத்து. அதேபோல, கல்வெட்டுச் செய்திகள் அனைத்தையும் நம்பிவிட முடியாது என்றும், கல்வெட்டில் கூறப்பட்டுள்ளவற்றை இலக்கியச் சான்றுகளுடனும் வேறு குறிப்புகளாலும் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.
தமிழக வரலாறு குறித்துத் தெரிந்துகொள்ள விழைபவர்களும், ஆராய்ச்சி மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய, தங்களது சேகரிப்பில் வைத்துப் பாதுகாக்க வேண்டிய அரிய தகவல் பெட்டகம் "தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்' என்கிற இந்தப் புத்தகம்.

நேற்று சென்னை அம்பத்தூர் மண்ணூர்பேட்டையில் நடந்த தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கத்தின் விழாவில் பெரியவர் கரு.பேச்சிமுத்துவை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. தமிழ் மீது தாளாப்பற்றுகொண்ட கரு.பேச்சிமுத்து "பிழை தவிர்' என்கிற புத்தகத்தைத் தொகுத்திருக்கிறார்.
தன்னுடைய ஓய்வூதியப் பணத்தில் இந்தப் புத்தகத்தை வெளியிட்டு பரப்புரை செய்கிறார் அவர். தமிழில் புழக்கத்தில் இருக்கும் பிழைகளை எல்லாம் சுட்டிக்காட்டி எப்படி அவை சரியாகக் கையாளப்பட வேண்டும் என்று தொகுத்துப் பட்டியலிட்டிருக்கிறார். மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கேகூட இந்தக் கையேடு தேவைப்படுகிறது என்று 
தோன்றுகிறது, பத்திரிகையாளர் உட்பட!

சில புத்தகங்கள் நம்மைத் தொடர்ந்து சிந்திக்கும்படி செய்துவிடுகின்றன. அப்படிப்பட்ட புத்தகம் அனுபம் மிசுரா என்பவர் எழுதியிருக்கும் "குளங்கள் இன்றும் உயிர் வாழ்கின்றன'. சரவணா இராசேந்திரனால் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் அற்புதமான ஆவணப்பதிவு. குளங்கள் குறித்த சில பதிவுகள், தகவல்கள் நமது கண்களைக் குளமாக்கி விடுகின்றன.
""உலகில் 1,234,000,000,000,000,000,000 லிட்டர் தண்ணீர் உள்ளது. இவ்வளவு நீர் இருந்தும்கூட இதில் 96.5 சதவீதம் கடல்நீர், உப்புநீர். ஏறத்தாழ இன்னுமொரு விழுக்காடு நிலத்தடி உப்புநீரும் உப்புநீரேரி முதலானவையும். ஆக வெறும் 2.5 சதவீதம் மட்டுமே நன்னீர், இந்த நன்னீரிலும் பெரும்பகுதி பனிக்கட்டியாய் உறைந்திருப்பது வெறும் 0.07 சதவீதம் தண்ணீர்தான் உலகில் வாழும் மனிதர்கள் உள்ளிட்ட அத்தனை உயிரினங்களுக்கும் பயன்படுகிறது'' - இந்தப் புள்ளிவிவரங்களைப் படிக்கும்போது "பகீர்' என்று இருக்கிறது.
இதை நமது மூதாதையர்கள் உணர்ந்திருந்தார்கள். அவர்களுக்குத் தண்ணீரின் அருமை தெரிந்திருந்தது. 17ஆம் நூற்றாண்டு வரை குளங்கள் வெட்டும் பணிகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தன. அசோகர் காலத்திலிருந்து வெட்டப்பட்டுக் கொண்டிருந்த குளத்துப் பணிகள் எல்லாம் 17ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு மெல்ல மெல்லக் குறையத் தொடங்கின. ஆனாலும்கூட, குளங்களைத் தூர்வாரும் பணி முறையாக நடந்து வந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகுதான் வளர்ச்சி என்கிற பெயரில் குளங்களும், ஏரிகளும் குடியிருப்புகளாக மாற்றப்படத் தொடங்கின.
குளங்கள் குறித்த நீண்டதொரு ஆய்வை மேற்கொண்டவர் அனுபம் மிசுரா. இவர் கலப்படமில்லாத காந்தியவாதி, எழுத்தாளர், சூழலியல் ஆர்வலர். காந்தியடிகளின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட அனுபம் மிசுரா, இந்தியா முழுவதும் பயணம் செய்து நடத்திய ஆய்வுதான் (ஆஜ்பி ரஹே ஹை தாலாப்) '"குளங்கள் இன்றும் உயிர் வாழ்கின்றன' என்கிற அமரத்துவமான புத்தமாக உருவாகி இருக்கிறது.
இதைத் தமிழில் மொழிபெயர்த்த சரவணா இராசேந்திரனை எத்துணை பாராட்டினாலும் தகும். ஏதோ மொழிபெயர்த்திருக்கிறோமே என்றில்லாமல், உணர்வுப்பூர்வமாக மொழிபெயர்ப்பு செய்திருக்கும் அவரது முயற்சிக்கு வாழ்த்துகள். நிறைய நிறைய செய்திகள், நல்ல நல்ல தகவல்கள், ஏராளமான புள்ளிவிவரங்கள்.

கட்செவி அஞ்சலில் எனக்கு அனுப்பித் தரப்பட்டிருந்தது கவிஞர் கந்தர்வன் எழுதிய "வர்க்கச் சண்டை' என்கிற கவிதை. பிடித்திருந்தது, அதனால் அதைப் பகிர்ந்து கொள்கிறேன்.

பழைய சோறும்
பாதாம் கீரும்
ஒரு வயிற்றுணவாய்
ஒரு நாளும் ஆவதில்லை.
அப்படியே போனாலும்
வர்க்கச் சண்டை
வயிற்றுக்குள்ளும் நடக்கும்!

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/28/w600X390/tm5.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/jan/28/இந்த-வார-கலாரசிகன்-2852435.html
2852433 வார இதழ்கள் தமிழ்மணி அங்கலிங்கம் -பொன். சுந்தர. வேலாயுதன் DIN Sunday, January 28, 2018 02:34 AM +0530 அருட்பிரகாச வள்ளலார்,

"பரிக்கிரக நிலைமுழுதுந் தொடர்ந்தோம் மேலைப்
பரவிந்து நிலையனைத்தும் பார்த்தோம், பாசம்
எரிக்கும்இயற் பரநாத நிலைக்கண் மெல்ல
எய்தினோம், அப்பாலும் எட்டிப்போனோம்
தெரிக்கரிய வெளிமூன்றும் தெரிந்தோம் எங்கும்
சிவமேநின் சின்மயம் ஓர் சிறிதும் தேறோம்
தரிக்கரிதென் றாகமங்கள் எல்லாம் போற்றத்
தனிநின்ற பரம்பொருளே சாந்தந் தேவே' 
(மகாதேவ மாலை)
எனத் திருவாய் மலர்ந்த பெருமான், "மந்திரம் அறிந்தோமா? பெருமானே! நம்மைச் சன்மார்க்க சாட்டையால் ஏதமுற நடிக்கின்ற பாதமறிவீரோ!' எனச் சாடுகின்றார். அன்றி,

"வழக்கறிவீர் சண்டையிட்டே வம்பளக்க வறிவீர்
வடிக்குமுன்னே சோறெடுத்து வயிற்றடைக்க வறிவீர்
குழைக்கறியே பழக்கறியே கூட்டுவர்க்கக் கறியோ
குழம்பேசா றேயெனவும் கூறிவறி வீரே!' 
"சுடுகாட்டுப் பிணங்கள் இச்சுகமனைத்தும்
கணச்சுகமே சொல்லிக் கேண்மின்!'
(தனிப்பாடல்)

உயிரோட்டமுள்ள மாந்தர்கள் நாம் சுடுகாடு செல்வது அழகல்ல என என் மனம் விரும்புகிறது. திருவருள் அடியேனுக்கு ஏது புரியுமோ! அருளுமோ! அறிந்திலேன், ஐயகோ!
மேலே குறிப்பிட்ட விளக்கம் ஒருசாரருக்கே புரியும். மனிதனது கண்ணுக்குப் புலப்படும் தோற்றங்கள் மனித
தேகம் ஒன்று. இத்தேகம் கிடைத்தற்கரியது. இது மீண்டும் பிறக்கும் நிலை அடைதலற்ற வண்ணம் அடைய முயற்சிப்போம். இம்மாபெரும் புண்ணியஞ் செய்த இம்மனிதப் பிறவி (ஆண், பெண்) இறைவனோடு அங்கலிங்க மானாலொழிய மீண்டும் பிறக்க வேண்டியதுதான். இறைவன் பேரொளிப் பிழம்பு. இப்பிழம்போடு சிற்றொளியுடைய இம்மனித தேகம் குழைந்துவிடல் வேண்டும்!
தக்க ஞான ஆசான் நமக்குக் காட்சி கொடுத்துவிடில் அவர்கள் மூலமாக மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞா (பரவிந்து) பரநாதம், பரவெளி, பரம்பரவெளி, பராபரவெளி (சும்மா இருக்கும் நிலை) ஆகிய ஞான ஊடகத்தில் திளைத்து இருக்கும் ஞான சாதகனுக்கு இறைவன் மனம் கனிந்து பொன்னுடம்பு அருளினால் ஒழிய மற்ற வகையில் முடியாது; முடியவே முடியாது. (காண்க படம்: வள்ளலார், அகத்தியர்)

"கருவியொடு கரணமெலாங் கடந்துகடந் தான்மேற்
காட்சியெலாங் கடந்ததன்மேற் காணாது கடந்து
ஒருநிலையி னனுபவமே யுருவாகி பழுத்த
உணர்ச்சியினுங் காணாம லோங்குமொரு வெளியில்
மருவிய தோர் மேடையிலே வயங்கியசே வடிகள்
மலர்த்திவந்தென் கருத்தனைத்தும் வாங்கினையின் புறவே
குருமணியே யென்னரசே யெனக்கிதுபோ தாதே
கடும்புலையோன் குடிசையிலுங் குலவிநுழைந்தனையே!' 

என்று ஞானத்தில் திளைத்து இத்தகைய பேற்றை அடைந்தவர் திருவருட்பிரகாசர். 

("சுத்த சன்மார்க்க முரசு' நூலிலிருந்து...)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/28/w600X390/tm6.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/jan/28/அங்கலிங்கம்-2852433.html
2852432 வார இதழ்கள் தமிழ்மணி திருவாசகம் - திருவருட்பா ஒப்புமைப் பகுதிகள் -தவத்திரு ஊரன் அடிகள் DIN Sunday, January 28, 2018 02:33 AM +0530 வள்ளலார் ஒன்பதாம் ஆண்டில் முருகப்பெருமானால் ஆட்கொள்ளப் பெற்றார். பன்னிரண்டாம் ஆண்டு முதல் முறையான ஞான வாழ்க்கையைத் தொடங்கினார். அவ்விளம்பருவத்திலியே, தனக்கென ஒரு வழிபடு கடவுள் (உபாசனா மூர்த்தி-முருகன்); தனக்கென ஒரு வழிபடு குரு (உபாசனா குரு- ஞானசம்பந்தர்); தனக்கென ஒரு வழிபடு நூல் (உபாசனா நூல்-திருவாசகம்) என்று ஓர் அருமையான அமைப்பை ஏற்படுத்திக் கொண்டார்.
இம்மூன்றும் வள்ளலாரை உருவாக்கின, ஆளாக்கின, பின்னாளில் வள்ளற்பெருமான் பெற்ற பெரும் பேறுகளுக்கெல்லாம் இம்மூன்றுமே அடிநாள் முயற்சிகளாய் அமைந்தன. தேவாரம்- திருவாசகம்-திருவருட்பா என்ற வரிசையில் இடையில் நிற்பது திருவாசகம். திருவருட்பாவுக்கு முன்னோடி திருவாசகம். ஆதலாற்றான் திருவாசகம் வள்ளற்பெருமானது வழிபடு நூலாக அமைந்தது. வள்ளலார் திருவாசகத்திற்கே வாழ்க்கைப்பட்டவர். 

திருவாசகம் - திருவருட்பா ஒப்புமைப் பகுதிகள்
திருவாசகம் - திருஅருட்பா ஒப்புமைப் பகுதிகள் பல உண்டு. அவ்வளவையும் எடுத்துக்காட்ட இங்கு இடமின்மையின் ஒருசிலவற்றை மட்டும் எடுத்துக் காட்டுவோம்.

"ஆமாறுஉன் திருவடிக்கே அகங்குழையேன் அன்புருகேன்
பூமாலை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன் புத்தேளிர்
கோமான்நின் திருக்கோயில் தூகேன்மெழுகேன் கூத்தாடேன்
சாமாறே விரைகின்றேன் சதுராலே சார்வானே' (5-2-8)

என்ற திருவாசகப் பாடலில் ஆமாறு சாமாறு என்ற சொல்லாட்சி வள்ளற் பெருமானது உள்ளத்தைக் காட்டுகிறது. ஆமாறு-ஆம்ஆறு-ஆகின்ற வழி; உருப்படியாகின்ற வழி; சாமாறு -சாம்ஆறு- சாகின்ற வழி; செத்துப்போகும் வழி. திருஅருட்பா அருட்பெருஞ்சோதி அகவலில் சாமாறு ஆமாறுகளை அப்படியே ஆள்கிறார்.

"சாமா றனைக்கும் தவிர்த்திங் கெனக்கே
ஆமா றருளிய அருட்பெருஞ் சோதி'

என்பது வள்ளற் பெருமானது அருட்பெருஞ்சோதி அகவல் (அடி.205-6)
""பாதாளம் ஏழினுங்கீழ்'' என்று தொடங்கும் திருவாசகத்தில் (104) ""ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்'' என்றொரு தொடர் வருகிறது. இத்தொடரை அப்படியே வைத்து வள்ளலார் ஒரு வெண்பாவைப் பாடுகிறார்.

"ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
சாதல் ஒழித்தென்னைத் தனதாக்கிப் - பூதலத்தில்
ஐந்தொழில்செய் என்றே அருட்சோதிக் கோலவித்தான்
வெந்தொழில் போய் நீங்க விரைந்து' (4828 )

என்பது வள்ளலார் திருஅருட்பா.

""வான நாடரும் அறியொ ணாதநீ
மறையில் ஈறும்முன் தொடரொ ணாதநீ
ஏனை நாடரும் தெரியொ ணாதநீ
என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா
ஊன நாடகம் ஆடு வித்தவா
உருகி நான்உனைப் பருக வைத்தவா
ஞான நாடகம் ஆடு வித்தவா
நைய வையகத் துடைய விச்சையே'' 

என்ற திருவாசகமும்,

"வான நாடரும் நாடரும் மன்றிலே வயங்கும்
ஞான நாடகக் காட்சியே நாம்பெறல் வேண்டும்
ஊன நாடகக் காட்சியால் காலத்தை ஒழிக்கும்
ஈன நாடகப் பெரியர்காள் வம்மினோ ஈண்டே' (5550)

என்ற திருவருட்பாவும் ஒப்பு நேக்கத்தக்கன.
"மத்தேறி அலை தயிர்போல்' என்ற திருவருட்பாவும் (2144), "மத்திடு தயிராகி'(4-4), "தயிரில் பொரு மத்துறவே' (133), "மத்துறு தன் தயிரில் புலன் தீக்கதுவக் கலங்கி' (134), "மத்திட உடைந்து தாழியைப் பாவு தயிர்போல்' (413) என்ற திருவாசகங்களும் ஒப்பு நோக்கத்தக்கன.
மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் திருப்பள்ளி எழுச்சி பாடுகிறார். வள்ளலாரும் திருவருட்பாவில் திருப்பள்ளி எழுச்சி பாடுகிறார். திருவுந்தியார் திருவாசகத்தில் ஒரு பதிகம். திருவருட்பாவிலும் திருவுந்தியார் என்ற ஒரு பதிகத்தை வள்ளலார் பாடியுள்ளார். இவையெல்லாம் திருவாசகத்தின் தாக்கங்கள். திருவாசகத்தின் முதல் நான்கு அகவல்களும் திருவாசகத்திற்குப் புகுமுகம் போன்று நுழைவாயில் போன்று அமைந்தவை. திருவாசக நான்கு அகவல்களின் தாக்கம் வள்ளலாரின் அருட்பெருஞ்சோதி அகவலில் உண்டு. வள்ளலாரின் அருட்பெருஞ்சோதி அகவலுக்குத் திருவாசக முதல் நான்கு அகவல்கள் ஒரு முன்னோடி.
தேவாரம் பாடிய மூவரும் கோயில் கட்டவில்லை. முன்னரே உள்ள கோயில்களைப் பாடினார்கள். மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் ஆவுடையார் கோயிலைக் கட்டினார். வள்ளலார் வடலூரில் சத்தியஞான சபையைக் கட்டினார். 
திருப்பெருந்துறைக் கோயிலில் லிங்கம் இல்லை. லிங்கத்தின் இடத்தில் ஆவுடையார்(பீடம்) மட்டுமே உண்டு. அதனால் ஆவுடையார் கோயில் என்றே அது பெயர் பெற்றது. கொடி மரம் இல்லை, பலிபீடம் இல்லை, நந்தி இல்லை - இப்படிப் பல மாற்றங்கள், புதுமைகள். திருப்பெருந்துறை ஆகம அடிப்படையில் அமைந்ததன்று; அனுபவ ஞான அடிப்படையில் அமைந்தது. வழிபாட்டு முறைகளிலும் மாற்றங்கள், புதுமைகள். இக்கோயில் முழுமையும் தத்துவ அமைப்பு; தத்துவ அனுபவம்.
வடலூரில் வள்ளலார் அமைத்தருளிய சத்திய
ஞான சபையும் அப்படியே. முழுவதும் தத்துவ அமைப்பு. அனுபவ ஞான அமைப்பு. வடலூர் சத்திய
ஞான சபைக்குத் திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில் முன்னோடி.
சைவத்தில் தாசமார்க்கம், சத்புத்திரமார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் என்ற நான்கு மார்க்கங்கள் உண்டு. நான்காவதான சன்மார்க்கத்தை விளக்கியருளியவர் மாணிக்கவாசகர் (ஞானத்தில் ஞானம்). மாணிக்கவாசகர் விளக்கியருளிய (சைவ) சன்மார்க்கத்தைச் சமரச சுத்த சன்மார்க்கமாக விளக்கியருளியவர், சைவ சமயக் குரவர் நால்வருக்குப் பின், ஐந்தாவதாக வந்த சமரச சுத்த சன்மார்க்கக் குரவராகிய வள்ளார்.

 


("வள்ளலார் நோக்கில் ஆளுடையடிகள்' என்ற கட்டுரையின் சிறு பகுதி...)
(தை 18 ( ஜன.31) - ஜோதி தரிசனம்)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/28/w600X390/tm2.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/jan/28/திருவாசகம்---திருவருட்பா-ஒப்புமைப்-பகுதிகள்-2852432.html
2852431 வார இதழ்கள் தமிழ்மணி கவி பாடலாம் வாங்க - 9: எழுசீர் விருத்தம் "வாகீச கலாநிதி' கி.வா. ஜகந்நாதன் DIN Sunday, January 28, 2018 02:30 AM +0530 ஆசிரிய விருத்தங்களின் பொது இலக்கணம் எல்லா அடிகளும் அளவொத்து வருவது. அளவு என்பது சீர்களின் எண்ணிக்கை மாத்திரம் அன்று. இன்ன இன்ன சீர் இந்த இடங்களில் வர வேண்டும் என்ற வரையறை உண்டு. காய்ச்சீர், மாச்சீர், விளச்சீர் என்ற மூன்று சீர்களே பெரும்பாலும் ஆசிரிய விருத்தங்களில் வருகின்றன. இவை ஓரடியில் வந்தது போலவே நான்கு அடிகளிலும் வர வேண்டும். சில இடங்களில் மா, விளம், காய் என்பன போல ஈற்றசை ஒன்றியிருப்பதன்றிச் சீர் முழுவதுமே ஒரே மாதிரி வரும். தேமாச் சீர்தான் வர வேண்டும் என்பது போன்ற வரையறை இது. 
""இதந்தரு மனையி னீங்கி'' என்ற என்ற அறுசீர் விருத்தத்தில் ஒவ்வோர் அடியிலும் மூன்று, ஆறாம் சீர்கள் தேமாவாகவே இருப்பதைக் காணலாம். அதை மாற்றினால் ஓசை வேறுபடுவதைப் பாட்டைச் சொல்லிப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இதுவரையில் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களின் இலக்கணத்தைப் பார்த்தோம். அதற்கு மேல் எழுசீர் முதலியன உண்டு.

"ஆறுசீர் விருத்தம் அறிந்தவர் பின்னர்
அழகிய ஏழுசீர் விருத்தம்
கூறுமெம் முறையில் வருமென அறிந்து
குலவுறு மமைதியின் படியே
வீறுறப் பாடி இன்புறல் கூடும்
விளம்பிய செய்யுளிங் கிதன்பால்
வேறிலா திரண்டே அசையுறு சீர்கள்
மேவுதல் கண்டுணர்ந் திடுக'

இது எழுசீர் ஆசிரிய விருத்தம். ஐந்து சீர்களுக்கு மேல் எத்தனை சீர்கள் வந்தாலும் அந்த அடிக்குக் கழிநெடிலடி என்பது பெயர் என்று முன்பே தெரிந்து கொண்டிருக்கிறோம். ஆதலால் இது எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
இந்த விருத்தத்தில் எல்லாச் சீர்களும் ஈரசைச் சீர்களாகவே வந்திருப்பதைக் காணலாம். ஓரடியைப் பன்முறை ஓதி ஓதி ஓசையை உணர்ந்து கவி எழுத வேண்டும். பிறகு சீர் பிரித்து வாய்பாடு அமைத்துப் பார்த்தால், என்ன என்ன சீர் எந்த எந்த இடத்தில் அமைந்திருக்கிறது என்பதை உணரலாம். இந்தப் பாட்டில் மோனை ஐந்தாவது சீரில் அமைவது அழகு. முதல் நாலு சீர் ஒரு பகுதி, பின் மூன்று சீர் ஒரு பகுதியாகப் பிரித்து அந்த மோனை காட்டுகிறது.

கூவிளம் புளிமா கருவிளம் தேமா
கருவிளம் கூவிளம் புளிமா
கூவிளம் புளிமா கருவிளம் புளிமா
கருவிளம் கருவிளம் புளிமா
கூவிளம் தேமா கூவிளம் தேமா
கருவிளம் கூவிளம் புளிமா
கூவிளம் புளிமா கருவிளம் தேமா
கூவிளம் கூவிளம் புளிமா.

இந்த வாய்பாடு ஊட்டிப் பார்த்தால் ஒவ்வோர் அடியிலும் நான்கு விளமும், மூன்று மாவும் வந்திருப்பது தெரிகிறது. முதல் நான்கு சீர்களில் விளச்சீரும் மாச்சீரும் மாறி மாறி வர, பின் மூன்று சீர்களில் இரண்டு விளமும் ஒரு மாவுமாக வந்திருக்கின்றன. இவற்றில் பொதுவாக விளச்சீர்களும் மாச்சீர்களும் வந்தன. குறிப்பிட்டுத் தேமாதான் வரவேண்டும் என்பது போன்ற வரையறையில்லை. அதாவது, கூவிளம் வந்த இடத்தில் கருவிளம் வரலாம்; தேமா வந்த இடத்தில் புளிமா வரலாம்.
பின்வரும் பாடல்களில் நிரப்ப வேண்டியவற்றை நிரப்பிப் பயிலுக.

வேதமும் வேத அங்கமும் உணர்ந்த
வித்தக ....... அடைந்து
போதமுற் றொளிரும் ...... ......
புகழுறப் ...... பெரியர்
ஆதரத் தோடு ...... ......
அறிந்தவர் ...... ......
...... தெளிவார் அவர்நனி முயல்வார்
திகழுறு நூல்பல கற்பார்.

(தொடர்ந்து பாடுவோம்...)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/28/w600X390/tm3.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/jan/28/கவி-பாடலாம்-வாங்க---9-எழுசீர்-விருத்தம்-2852431.html
2852430 வார இதழ்கள் தமிழ்மணி பழமொழி நானூறு Sunday, January 28, 2018 02:29 AM +0530 நிறையான் மிகுகல்லா நேரிழை யாரைச் 
சிறையான் அகப்படுத்தல் ஆகா - அறையோ! 
வருந்த வலிதினின் யாப்பினும் நாய்வால்
திருந்துதல் என்றுமோ இல். (பாடல்-30)


வருந்துமாறு வலிபெறக் கட்டினாலும், நாயின் வால் வளைவினின்றும் நீங்கித் திருந்துதல் என்றும் இல்லை; (அதுபோல) மனத்தை அடக்கும் வலிமை மிக்கிராத அழகினை உடைய கலனணிந்திருக்கும் மகளிரை, காவலால் தீய செயலினின்றும் நீக்கி அகப்படுத்தல் முடியாது. முடியும் என்பார் உளராயின் அவரைஅறைகூவி அழைக்கின்றேன். (க-து.) மகளிர்க்குச் சிறைகாப்பினும் நிறைகாப்பே சிறந்ததாம். "சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை' என்பது திருக்குறள். "நாய்வால் திருந்துதல் என்றுமோ இல்' என்பது பழமொழி. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/28/w600X390/tm4.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/jan/28/பழமொழி-நானூறு-2852430.html
2848464 வார இதழ்கள் தமிழ்மணி இந்த வாரம் கலாரசிகன் DIN DIN Sunday, January 21, 2018 03:26 AM +0530 சென்னை அம்பத்தூரை அடுத்த மண்ணூர்ப்பேட்டையில் கடந்த 1984-ஆம் ஆண்டு முதல் "தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்' என்கிற அமைப்பு செயல்பட்டு வருகிறது. "தெருவெங்கும் தமிழ் முழக்கம்' என்று குமரி
முனையில் இருந்து சென்னை வரை 51 நாள்கள் நெடும் பயணம் நடத்திய இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரி, வடலூர் வள்ளலார் சபையில் இருந்து சென்னை வள்ளுவர் கோட்டம் வரை ஏழு நாள் நடைப்பயணமும் மேற்கொண்டனர். திருக்குறள் தேசிய நூல் மாநாட்டை நான்கு முறை நடத்தி இருக்கிறார்கள்.
தொடர்ந்து மாதந்தோறும் இதுவரை 381 கவியரங்கங்கள் நடத்தி, இளைய தலைமுறை தமிழ்க் கவிஞர்களை ஊக்குவிப்பதை தங்களது வாழ்நாள் பணியாகக் கொண்டிருக்கின்றனர். கவிஞர் க.ச. கலையரசனால் தொடங்கப்பட்ட "தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்', "தமிழ்ப்பணி அறக்கட்டளை' என்கிற அறக்கட்டளையையும் நிறுவி, அதன் மூலமும் தமிழ்ச் சேவை செய்து வருகிறது.
பதினேழு ஆண்டுகளுக்கு முன்னால் மண்ணூர்ப்பேட்டையில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை, பள்ளிக்கூடம் மற்றும் சாலை விரிவாக்கத்தின் காரணமாக இடமாற்றம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியது. அந்தச் சிலையை புதுப்பொலிவுடன் இன்னொரு இடத்தில் நிறுவி, வரும் சனிக்கிழமை திறப்பு விழா செய்ய இருக்கிறார்கள். அந்த நிகழ்வின்போது திருக்குறளின் 133 அதிகாரங்களைப் போற்றும் வகையில் 133 கவிஞர்கள் பாராட்டப்பட இருக்கிறார்கள். கவிஞர் கலையரசன், "விழுதுகள்'
அய்யாப்பிள்ளை, கவிஞர் செங்கை சண்முகம், பேராசிரியர் அரச.வேல்முருகன், கவிஞர் எம்.சக்திவேல் உள்ளிட்ட பலருடைய ஆர்வமும் உழைப்பும் இதன் பின்னணியில் இருக்கிறது.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பங்களித்தவர்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு நல்கியவர்கள் நீதித்துறையினர். நீதிபதிகளும், வழக்குரைஞர்களும்தான் தமிழுக்கு ஏராளமான புதிய சொற்களை அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.
சிறுகதையின் முன்னோடியாகத் திகழ்ந்த வ.வே.சு.ஐயர், பழந்தமிழ் சுவடிகளைப் பதிப்பித்த சி.வை.தாமோதரம் பிள்ளை, அறிவியல் தமிழ் வளர்த்த பெ.நா. அப்புஸ்வாமி, நாடகத்தமிழ் வளர்த்த பம்மல் சம்பந்த முதலியார், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை, வ.உ.சி., நாவலர் சோமசுந்தர பாரதியார், மூதறிஞர் ராஜாஜி, கா.சு. பிள்ளை, ஆர்.கே.சண்முகம் செட்டி, வையாபுரிப் பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், "ரசிகமணி' டி.கே.சி., ஜஸ்டிஸ் மகராஜன், நீதிபதி மு.மு.இஸ்மாயில் போன்ற சட்ட வல்லுநர்கள் பலர் தமிழறிஞர்களாக வலம் வந்திருக்கிறார்கள்.
அந்த வரிசையில் இப்போது ஆந்திர, தெலங்கானா நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கும் நீதிபதி வெ.இராமசுப்பிரமணியனும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவனும், மதுரை கிளையின் ஜி.ஆர்.சுவாமிநாதனும் இலக்கியத்தில் ஆழங்காற்பட்ட புலமை மிக்கவர்களாக வலம் வருகின்றனர். இவர்கள் மட்டும்தான் இலக்கியப் புலமையுடையவர்கள் என்கிற தவறான புரிதல் எனக்கு இருப்பதை சமீபத்தில் உணர்ந்தேன்.
சென்னையில் மூத்த வழக்குரைஞர் பராசரனுக்கு அண்மையில் பாராட்டுவிழா நடந்தது. அகவை 90 கடந்த அந்தச் சட்டப் பேரறிஞருக்கு நடந்த பாராட்டு விழாவில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், பி.என்.பிரகாஷ், எம்.எம்.சுந்தரேஷ், டி.எஸ்.சிவஞானம் ஆகியோரும், முன்னாள் நீதிபதி பி.இராஜேந்திரனும் கலந்துகொண்டு உரையாற்றினர். அவர்களது உரையைக் கேட்ட நான் வியப்பில் சமைந்துவிட்டேன்.
சங்க இலக்கியம் தொடங்கி சமகால இலக்கியம் வரை தமிழில் ஆழங்காற்பட்ட புலமை அந்த நீதிபதிகளுக்கு இருப்பது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பரவலாக அறியப்படும் இலக்கியப் பேச்சாளர்கள்கூட இவர்கள் அளவுக்குப் புரிதலுடனும் ஈடுபாட்டுடனும் செவ்விலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். இலக்கிய மேடைகளில் உரையாற்ற இவர்கள் ஏன் அழைக்கப்படுவதில்லை?
அன்றைய நிகழ்ச்சி முடிந்து அலுவலகத்துக்குத் திரும்பியதும், புத்தக அலமாரியைத் திறந்து பின்னலூர் மு.விவேகானந்தன் எழுதிய "தமிழ் வளர்த்த வழக்கறிஞர்கள்' என்கிற நூலை மீண்டும் ஒருமுறை படித்தேன். அதேபோல "தமிழ் வளர்த்த நீதிபதிகள்' என்கிற புத்தகத்தையும் அவர் தொகுக்க வேண்டும் என்பது எனது பணிவான விண்ணப்பம்.

சினிமாவால் பாதிக்கப்படாதவர் யாரும் இருக்க முடியாது. நான் மட்டும் என்ன விதிவிலக்கா? சிறுகதைகள் படிப்பதில் எனக்கு எவ்வளவு ஆர்வமோ, அதேபோல நல்ல சினிமா பார்ப்பது என்பதும் எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. கடந்த 18ஆம் தேதி "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் சார்பில் "திங்க் எடு' என்கிற ஆங்கிலக் கருத்தரங்கம் நடந்தது. அதில் எனது தலைமையில் நடந்த அமர்வில் நடிகர் அரவிந்தசாமியும், இயக்குநர், தயாரிப்பாளர் மோகன் ராஜாவும் கலந்து கொண்டனர்.
"சினிமா என்பது பொழுதுபோக்குக்காகத்தானே தவிர, அதற்கு சமூக அக்கறையோ, மக்களை மேம்படுத்தும் கடமையோ கிடையாது' என்கிற நடிகர் அரவிந்தசாமியின் கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. சமூக அக்கறை இல்லாத எந்தவொரு கலையோ, இலக்கியமோ வீண் என்கிற கருத்தை உடையவன் நான்.
சமீபத்தில் நான் படித்த சினிமா குறித்த புத்தகம் எஸ். இராமகிருஷ்ணன் எழுதிய "குற்றத்தின் கண்கள்'. அந்தப் புத்தகத்தில் எஸ்.இராமகிருஷ்ணன் வித்தியாசமான 24 திரைப்படங்களை அறிமுகம் செய்திருக்கிறார். அவற்றில் ஐந்தாறு திரைப்படங்களைத் தவிர ஏனையவை நான் பார்க்காதவை. அந்தத் திரைப்படங்களைத் தேடிப் பார்க்க வைத்த எஸ்.இராமகிருஷ்ணனுக்கு நன்றி. இந்தப் புத்தகத்தைப் படிக்காமல் இருந்திருந்தால், அவற்றை நான் பார்க்காமலேயே இருந்திருப்பேன்.


புன்னகை பூ ஜெயக்குமார் என்கிற கவிஞரின் கவிதைத் தொகுப்பு "முதற்படி'. அதிலிருக்கும் ஒரு கவிதையின் தலைப்பு "மதிப்பு'!
மேலத் தெருவோ
கீழத் தெருவோ
எந்தத் தலைவர்களின்
பெயர் கொண்ட
தெருவாக இருந்தாலும்
முக்கியத்துவம்
முத்திரைத் தாளுக்குத்தான்...!
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/21/w600X390/tm4.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/jan/21/இந்த-வாரம்-கலாரசிகன்-2848464.html
2848463 வார இதழ்கள் தமிழ்மணி தடுமாறும் எண்ணத்திற்கு உடற்கூற்று வண்ணம் DIN DIN Sunday, January 21, 2018 03:24 AM +0530 பட்டினத்தார் என்ற பெயருடன் 10,14,17-ஆம் நூற்றாண்டுகளில் மூன்று புலவர்கள் வாழ்ந்தனர் என்று மு.அருணாசலம் (மு.ப.1972, "தமிழ் இலக்கிய வரலாறு பத்தாம் நூற்றாண்டு'-தி பார்க்கர், சென்னை) கூறியுள்ளார். 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருவெண்காடர். இவரது சிறப்புப் பெயர் பட்டினத்தார்.
 முற்காலப் பட்டினத்தார் நூல்கள் பல இயற்றினார். அவை பதினோராம் திருமுறையில் இடம்பெற்றன. பிற்காலப் பட்டினத்தாரும் நூல்கள் எழுதினார். அவை சித்தர் பாடல்களில் இணைக்கப்பட்டன. 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பட்டினத்தார் எழுதிய நூல்களுள் ஒன்று உடல்கூற்று வண்ணம். உடல் பற்றிக் கூறப்பட்ட வண்ணச் செய்யுள் வகை என்று இதற்குப் பொருள் கொள்ளலாம்.
 வண்ணம் பற்றித் தொல்காப்பியர், செய்யுளியலில் சொல்லியிருக்கிறார். அவருடைய வகைப்பாட்டில், உடற்கூற்று வண்ணம் என்பதை ஏந்தல் வண்ணத்தில் அடக்கலாம். ""ஏந்தல் வண்ணமாவது, சொல்லிய சொல்லினானே, சொல்லப்பட்டது சிறக்க வரும்'' என்றார் இளம்பூரணர். பட்டினத்தாரின் நூலுக்கு "ஜீவரத்தினம்' என்று சிலர் பெயர் சூட்டினர்.
 இந்நூல், ""தன்னைத்தான் உணராத தானொளித்த மானிடர்க்கு என்னதான் சொல்வேன் எங்கோவே'' என்று வேதனைப் பெருமூச்சு விட்டுக்கொண்டே தொடங்குகிறது. இதையடுத்து, "எவர் மனிதர்' என்பதை இரண்டு பாடல்கள் எடுத்துரைக்கின்றன. மேலும், அந்த மனிதரிடம் இருக்க வேண்டிய பண்புகளைப் பட்டியலிடுகிறது.
 மனிதனுக்கு யோக நிலை உறுதி, உபகாரம், பெருமை முதலிய முக்கிய பண்புகள் வேண்டும் என்று அவர் அடுக்கிச் சொல்கிறார். அடுத்த பாடலிலும் எவர் மனிதர் என்று தொடர்கிறார். கடவுள் என்ற பயம் உடையவன், பொய்மொழியை நீத்தவன், புண்ணியங்கள் பூத்தவன், வையமிசை அடக்கம் உடையவன் ஆகியோரே மனிதர். மற்றவர் மிருகம் என்று சாடுகின்றார். அவ்விரண்டு பாடல்கள் வருமாறு:
 "மனிதர் என்றால் திறமையுடன் பொறுமை வேண்டும்
 மனிதர் என்றால் மன்னுயிர்போல் கருணை வேண்டும்
 மனிதர் என்றால் யோக நிலை உறுதி வேண்டும்
 மனிதர் என்றால் மறை விதிகள் மனதில் வேண்டும்
 மனிதர் என்றால் குருவாணை செலுத்த வேண்டும்
 மனிதர் என்றால் உபகாரப் பெருமை வேண்டும்
 மனிதர் என்றால் இத்தகையோர் மனிதராகும்
 மற்றவரை மனிதரென்று மறை சொல்லாதே'
 "செய்த நன்றி மறவாதான் மனிதன் ஆகும்
 சொன்ன சொல் தவறாதான் மனிதன் ஆகும்
 கைதம் கர்றுள்ளவனே மனிதன் ஆகும்
 கடவுள் என்ற பயமுடையோன் மனிதன் ஆகும்
 பொய்ம் மொழியை நீத்தவனே மனிதன் ஆகும்
 புண்ணியங்கள் பூத்தவனே மனிதன் ஆகும்
 வைய மிசை அடக்கமுளான் மனிதன் ஆகும்
 வாய் மதத்தோர் மிருகமென வழுத்தலாமே'
 என்று பட்டினத்தார் விளக்கமாகப் பாடியுள்ளார். ÷அண்மைக் காலத்தில் சிற்றூர்களில் வாழ்ந்த எளிய மக்களின் வாயில் பழகிய தொடர்கள் இவை. கீழ்வரும் கண்ணியைப் பாடியவர் பட்டினத்தார்தான்.
 "காயமே இது பொய்யடா சீவகாற்றடைத்த பையடா,
 மாயனார் குயவன் செய்த மண்ணுபாண்டம் ஓடடா'
 "உப்பும் மண்ணும் ஓட்டை மூங்கில் ஒட்டிவைத்த கூடடா
 உளுத்த நரம்பும் வெளுத்த தோலும் இழுத்துக் கட்டிய
 - கூடடா'
 என்றும் அவர் சொன்னார். மேலும், நிலையாமையைப் பற்றி அவர் அழுத்தமாகப் பாடியுள்ளார்.
 "மானிடமென்ற வந்தோரே - மண் மேல்
 எத்தனை நாள் இருப்பீரோ, சொல்வீரே'
 என்றார். மேலும்,
 "ஏழையரை எரிக்காதே - கடவுள்
 இட்டதன் மேலே பேராசை கொள்ளாதே
 பாழும் பணத்தை நம்பாதே - நீ
 பாடையில் போகையில் கூட வராதே'
 என்றும் அறிவுறுத்தினார். எவையெவை இரவல் என்று நீண்ட பட்டியலைக் கூறி மனத்தில் ஊன்றுகிறார்.
 "தங்க நகையும் இரவல்
 தன்னில் புதைத்த புதையலும் இரவல்
 செங்கை வளையும் இரவல்
 சீப்பு சிக்காங்கோல் சவுரி இரவல்
 சோலையும் வாவியும் இரவல்
 சொகுசான கட்டட மாளிகை இரவல்
 மேலை வெகுபூச்சும் இரவல்
 மெத்த அதிகாரம் உத்யோகம் இரவல்'
 
 "உன்னையே நீ எண்ணிப் பாரு
 உலகத்தில் எது சொந்தம் யோசித்துக் கூறு'
 என்ற அவருடைய அறிவுரைகள் உடற்கூற்றுவண்ண நூலின் அடிநாதமாக அமைந்துள்ளன. தடுமாறும் எண்ணத்தை நிலை நிறுத்துகின்றன இப்பாடல்கள்.
 - முனைவர் மலையமான்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/21/w600X390/tm3.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/jan/21/தடுமாறும்-எண்ணத்திற்கு-உடற்கூற்று-வண்ணம்-2848463.html
2848462 வார இதழ்கள் தமிழ்மணி  அறுசீர் விருத்தங்கள்: "வாகீச கலாநிதி' கி.வா. ஜகந்நாதன் DIN DIN Sunday, January 21, 2018 03:23 AM +0530 கவி பாடலாம் வாங்க - 8
சீர்கள் நான்கு வகை என்பதையும் அவற்றிற்குரிய வாய்பாடுகள் இன்னவை என்பதையும் தெரிந்து கொண்டோம். வாய்பாட்டைச் சொன்ன மாத்திரத்தில் இன்ன சீர் என்று தெரியும்படி பழகிக்கொள்ள வேண்டும். கீர்த்தனைகளுக்குச் சுவரம் வகுத்தால் அந்தச் சுவரங்களைக் கொண்டே இராக பாவம் அமைந்துவிடுவது போல, இந்தச் சீர் அமைப்புக்களால் பாட்டின் அடிகளுக்கு உருவம் அமையும். ஆதலின் சங்கீத வித்துவான்கள் இராகத்தையும் கீர்த்தனங்களையும் சுவரம் அமைத்துக் காட்டுவது போல அடிகளையும் வாய்பாட்டினால் காட்டலாம். இது பழக்கத்தால் வர வேண்டும். மாச்சீர் என்று சொன்னால், முதலில் அது ஈரசைச்சீர் என்று நினைவுக்கு வர வேண்டும். பிறகு நேரை ஈற்றிலே உடைய ஈரசைச்சீர் என்றும் நினைவுக்கு வரவேண்டும். பூச்சீர் என்றவுடன் நாலசைச் சீர்களில் நேராக முடியும் சீர் என்று தெரிந்து கொள்ளும்படி பழக்கம் செய்துகொள்ள வேண்டும்.
 யாப்பருங்கலக்காரிகையில், ""மாச்சீர் கலியுட் புகா'' என்று வருகிறது. சீரின் வாய்பாடுகளைத் தெரிந்து கொண்டவர்கள் மாச்சீர் என்பது நேர் ஈற்று ஈரசைச் சீர் என்று தெரிந்து கொள்வார்கள். வாய்பாடு இல்லாவிட்டால் இவ்வளவு எளிதிலே சொல்ல இயலாது. நேர் ஈற்று ஈரசைச்சீர் என்று நீளமாகச் சொல்ல வேண்டும்.
 அறுசீர் விருத்தமாகிய, ""இதந்தரு மனையி னீங்கி'' என்று தொடங்கும் பாரதியார் பாடலையே பலவற்றிற்கும் உதாரணமாகக் காட்டி இலக்கணத்தை விளக்கி வந்தேன். அந்தப் பாட்டுக்கு வாய்பாடு இன்னது என்று தெரிந்து கொண்டோம். அறுசீரடி விருத்தங்களில் வேறு வகையும் உண்டு. இந்த விருத்தத்தின் முழுப் பெயர் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்பதை முன்பு தெரிவித்திருக்கிறேன். இது ஆசிரியப்பாவுக்கு இனமாகிய ஆசிரிய விருத்தம். இதில் உள்ள ஒவ்வோர் அடியிலும் ஆறு சீர்கள் உள்ளன. அறுசீர் ஆசிரிய விருத்தம். ஐந்து சீருக்கு மேற்பட்டு எத்தனை சீர்கள் வந்தாலும் அந்த அடிக்குக் கழிநெடிலடி என்று பெயர். அதனால் இது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்று பெயர் பெற்றது. அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களில் பல வகை உண்டு.
 "சுருதி யோசை முழவோசை
 சுகங்கள் பூவைக் கரும்பொருள்கள்
 உரைசெ யோசை யியலிசைநீ
 டோசை யுழவ ருழவோலை
 பொருவி லாலை பாயோசை
 பொழில்வா யலர்பாய் ஞிமிறோசை
 வரிசை மாதர் சிலம்போசை
 வளைநீ ரோசை தனின்மிகுமால்'
 இதுவும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தந்தான். ஆனாலும் இதன் ஓசையும், "இதந்தரு மனையி னீங்கி' என்று வரும் பாடலில் ஓசையும் வெவ்வேறு. இரண்டுக்கும் வேறுபாடு சீர் அமைப்பினால் அமைந்தது. "இதந்தரு மனையி னீங்கி' என்பதைப் போல வரும் விருத்தங்கள் அரையடிக்கு ஒரு விளச்சீரும் (அல்லது காய்ச் சீரும்) இரண்டு மாச்சீர்களும் அமைந்தவை. இந்தப் பாட்டைக் கவனித்துப் பாருங்கள். இதில் அரை அடிக்கு இரண்டு மாச்சீர்களும், ஒரு காய்ச்சீரும் வந்துள்ளன.
 "சுருதி யோசை முழவோசை
 புளிமா தேமா புளிமாங்காய்
 சுகங்கள் பூவைக் கரும்பொருள்கள்
 புளிமா தேமா கருவிளங்காய்
 உரைசெ யோசை யியலிசைநீ
 புளிமா தேமா கருவிளங்காய்
 டோசை யுழவ ருழவோசை
 தேமா புளிமா புளிமாங்காய்
 பொருவி லாலை பாயோசை
 புளிமா தேமா தேமாங்காய்
 பொழில்வா யலர்பாய் ஞிமிறோசை
 புளிமா புளிமா புளிமாங்காய்
 வரிசை மாதர் சிலம்போசை
 புளிமா தேமா புளிமாங்காய்
 வளைநீ ரோசை தனின்மிகுமால்
 புளிமா தேமா கருவிளங்காய்'
 இதில் 1, 2, 4, 5 ஆகிய நான்கு சீர்களும் மாச்சீர்களாகிய நேரீற்று ஈரசைச் சீர்கள். 3, 6 ஆகிய இரண்டும் காய்ச் சீர்களாகிய நேரீற்று மூவசைச் சீர்கள். மாச்சீர் வரும் இடங்களில் தேமா, புளிமா என்னும் இரண்டும் வந்துள்ளன. காய்ச்சீர் வரும் இடங்களில் தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய் என்னும் மூன்றும் வந்துள்ளன. கூவிளங்காயும் வரலாம். முன்னே சொன்ன அறுசீர் விருத்தத்தில் யாவும் ஈரசைச் சீர்கள். சிறுபான்மை முதற் சீரும், நான்காஞ் சீரும் மூவகைச் சீராக வரும். இந்தப் பாட்டிலோ ஈரசைச் சீர்களும், மூவகைச் சீர்களும் வருகின்றன. கண்டபடி வராமல் இன்ன இடத்தில் இன்ன சீர் வரும் என்ற வரையறை இருக்கிறது.
 "எந்நாட்டும் பெறற்கரிய பெருஞான பீடமென
 இருக்கும் நாடு
 முன்னாட்டும் நான்மறையும் உபநிடதப் பெருநூலும்
 முயன்று சுற்றுப்
 பின்னாட்டும் நூல்களெலாம் பயின்றறிவு பெற்றுணர்ந்து
 பீடு சான்ற
 நன்னாட்ட முடையவனு பவிகளுள நாடிதுபோல்
 நவில வுண்டோ?'
 இதுவும் ஒரு வகை அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். இதில் உள்ள அடியைப் பாதியிலே வெட்டி மடிக்க முடியாது. அதாவது முதல் மூன்று சீரைப் போலவே பின் மூன்று சீரும் இருக்கும் வகையைச் சார்ந்தது அன்று. இதில் முதல் நான்கு சீர்களும் காய்ச்சீர்கள்; பின் இரண்டும் மாச்சீர்கள்.
 "எந்நாட்டும் பெறற்கரிய பெருஞான பீடமென
 இருக்கும் நாடு'
 தேமாங்காய் கருவிளங்காய் புளிமாங்காய் கூவிளங்காய்
 புளிமா தேமா.
 இவ்வாறே மற்ற அடிகளுக்கும் வாய்பாடு ஊட்டிக் காண்க. முதல் நான்கு சீர்களும் நேரீற்று சீர்கள். அவை ஓரசையாக உள்ளன. பின் இரண்டும் நேரீற்று ஈரசைச் சீர்கள். அவை வேறு ஓசை. நான்காவது சீரில் ஓசை மாறும் இடத்தில் மோனை அமைந்ததைக் கவனிக்க வேண்டும்.
 இதில் முதல் நான்கு சீர்களிலும் காய்சீர்களில் எதுவும் வரலாம். அவை நான்கு என்பது உங்களுக்குத் தெரிந்ததுதானே? பின் இரண்டு சீர்களில் ஐந்தாம் சீரில் புளிமா, தேமா என்னும் இரண்டு வரலாம். ஆறாம் சீர் தேமா, நேர்நேர் ஆக வரும். "இதந்தரு மனையி னீங்கி' என்ற பாட்டில் 3, 6 ஆகிய இரண்டும் தேமாச் சீராகவே வரும் என்பதை முன்பு பார்த்தோம். இந்த விருத்தத்தை ஓரடிக்கு நான்கு காயும், இரண்டு மாவும் வரும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்று அடையாளம் கூறித் தெரிந்து கொள்ளலாம்.
 இது வரையில் நாம் தெரிந்துகொண்ட மூன்று வகை அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களாவன: 1. அரையடிக்கு ஒரு விளமும், இரு மாவும் வருவன. 2. அரையடிக்கு இரு மாவும், ஒரு காயும் வருவன. 3. ஓரடிக்கு நாலு காயும், இரு மாவும் வருவன. ஆறு சீர்களும் மாச்சீராகவே வரும் பாடல்களும் உண்டு.
 ஆறு சீரு மாவாய்
 அமையும் அடிகள் கொண்ட
 வேறு பாட்டு முண்டு
 விளம்பின் நான்காஞ் சீரில்
 கூறு மோனை வந்தால்
 குலவும் அழகு சாரும்
 தேறும் விளம்வா ராமல்
 சிந்தை கொள்ள வேண்டும்.
 இது அத்தகையது. இன்னும் பல வகையில் ஆறு சீர்களை அமைத்து விருத்தங்களைப் பாடியிருக்கிறார்கள் புலவர்கள். எல்லாவற்றிலும் ஓரடி எப்படி வருகிறதோ அவ்வண்ணமே மற்ற அடிகளும் அளவொத்து வரும்.
 "உருகாத நீச ராயினும்
 உணராத மூட ராயினும்
 கருதாத சீல ராயினும்
 கசியாத நேச ராயினும்
 வரையாத யாவ ராயினும்
 வலமாக நாக ராயர்சூழ்
 திருவால வாயுள் மேவுவார்
 சிவமாவ ராணை யாணையால்'
 இதுவும் அறுசீர் விருத்தம்; சந்தம் அமைந்தது. இதில் அரையடிக்கு ஒரு காயும் ஒரு மாவும் ஒரு விளமும் வந்தன. மூன்றாமடி ஆறாவது சீர் "ராயர்சூழ்' என்பதில் "ர்' என்பது ஒலி சிறக்காததனால் அதுவும் கூவிளம்போல் நின்றது. புலவர்களின் ஆற்றலுக்கு ஏற்றபடி அறுசீர் விருத்தங்கள் வெவ்வேறாக அமையும். ஆயினும் முதலிலே காட்டிய மூன்று வகைகளே பெரும்பான்மையாக நூல்களில் வருபவை.
 (தொடர்ந்து பாடுவோம்...)
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/21/w600X390/tm2.jpg http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/jan/21/அறுசீர்-விருத்தங்கள்-வாகீச-கலாநிதி-கிவா-ஜகந்நாதன்-2848462.html