Dinamani - தினமணி கதிர் - http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2869507 வார இதழ்கள் தினமணி கதிர் வீழ்வேன் என்று நினைத்தாயோ?: சிங்கப்பூரில் பஸ் ஸ்டிரைக்! மாலன் Saturday, February 24, 2018 05:41 PM +0530 வீட்டுக் கடனுக்கு வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணம் எடுத்துக் கொள்வதற்கு ஏதுவாகச் சட்டம் திருத்தப்பட்டதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையா என்பது இந்தியர்களாகிய நமக்கு இயல்பாக எழக்கூடிய கேள்வி. அதுவும் அண்மையில் நடந்த பஸ் ஸ்டிரைக்கை எதிர் கொண்டவர்கள் மனதில் தொழிற்சங்கங்கள் பற்றிய பல்வேறு பிம்பங்களும் எண்ணங்களும் ஏற்பட்டிருக்கக் கூடும்.
இந்தியத் தொழிற்சங்கங்களுக்கும் சிங்கப்பூர் தொழிற்சங்கங்களுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் மகத்தான பங்களித்தன. ரஷ்யப் புரட்சிக்கு முன்பே, 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி 23 முதல், மார்ச் 3 வரை ஒன்பது நாள்கள் வ.உ.சி, தூத்துக்குடி கோரல் நூற்பாலையின் ஆங்கிலேய நிர்வாகத்திற்கு எதிராக நடத்தி காட்டிய வேலை நிறுத்தமே அந்தப் பகுதியில் பிரிட்டிஷாருக்கு எதிரான உணர்வுகள் கிளர்ந்தெழுவதற்கான விதைகளாயின என்பது வரலாறு. சுதேசிக் கப்பலுக்காக மட்டுமல்ல, இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்காகவும்தான் அதே 1908-ஆம் ஆண்டு மார்ச் மாதம்
12-ஆம் தேதி, வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த 10-ஆவது நாள்களுக்குள், வ.உ.சியைக் கைது செய்தது.
கோரல் நூற்பாலைப் போராட்டத்தின் முக்கியமான கோரிக்கைகளாக கூலி உயர்வு, வேலை நேரம் குறைப்பு, கூடுதலாக விடுமுறை நாள்கள் என்பவை இருந்தன. சிங்கப்பூரிலும், பிரிட்டிஷாரின் ஆட்சியின் போது, இதே பிரச்னைகளை தொழிலாளர்கள் எதிர்கொண்டார்கள். 12 முதல் 14 மணி நேர வேலை, ஆண்டுக்கு இரு விடுமுறை தினங்கள் (சீனப் புத்தாண்டு, மற்றும் இன்னுமொரு நாள்) என்ற நிலை இருந்தது. பிரிட்டிஷ் அரசு தனக்கு ஆதரவான வணிகர்களை சட்டமன்றம், நகராட்சி, ஆலோசனைக்குழு ஆகியவற்றில் நியமித்து நிர்வாகத்தைத் தன் கட்டுக்குள் வைத்திருந்தது. அதனால் ஆரம்ப காலப் போராட்டங்கள் பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டமாகவே பார்க்கப்பட்டன.
சுருக்கமாகச் சொன்னால் அரசியலும் பொருளாதாரமும் பின்னிப் பிணைந்தவை. தொழிலாளிகளின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் ,அவர்கள் அரசியலில் முக்கியப் பங்கேற்க வேண்டும். எனவே தொழிலாளர் இயக்கங்களிலிருந்து அரசியல் போராட்டங்களைப் பிரிக்க முடியாது என்பது தொழிற்சங்கவாதிகளின் வாதம். 
சிங்கப்பூரில் வலிமை வாய்ந்த தொழிற்சங்கமாகத் திகழ்ந்தது சிங்கப்பூர் ஆலை மற்றும் கடைப் பணியாளர்கள் தொழிற்சங்கம் (Singapore Factory and Shop Workers Union - SFSWU). அதன் முன்னணித் தலைவர்களில் ஒருவரான ஜேம்ஸ் புதுச்சேரி இந்த அணுகுமுறை குறித்து விரிவாக எழுதியுள்ளார்.
1955-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்களின் பொற்காலம். அந்த ஆண்டு வெறும் 372ஆக இருந்த SFSWUவின் உறுப்பினர் எண்ணிக்கை 30 ஆயிரமாக உயர்ந்தது (காண்க: Paths Not Taken: Political Pluralism in Post-war Singapore, edited by Michael D. Barr, Carl A. Trocki TdLm 212) சிங்கப்பூர் வரலாற்றிலேயே மிக அதிகமாக வேலை நிறுத்தம் நடைபெற்ற ஆண்டும் அதுதான். அந்த ஓராண்டில் மட்டும் 275 வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 
அவற்றில் முக்கியமானது ஹாக் லீ பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக். சிங்கப்பூரில் இயங்கிக் கொண்டிருந்த பதினோரு பஸ் கம்பெனிகளில் ஒன்று ஹாக் லீ அமால்கமேட்டட் பஸ் கம்பெனி. 1955-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அங்கு தொழிற்சங்கம் தொடங்கப்பட்டதையடுத்து, நிர்வாகம் போட்டித் தொழிற்சங்கத்தைத் தொடங்கியது. புதிதாக 200 ஊழியர்களை வேலைக்கு எடுத்து அவர்களை அந்தச் சங்கத்தில் சேர்த்தது. இடதுசாரி சங்கத்தினர் வேலை நிறுத்தம் செய்ய நோட்டீஸ் கொடுத்தனர். அந்தத் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 229 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்தது. அதனால் அந்த ஆண்டு (1955) ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி வேலை நிறுத்தம் தொடங்கியது.
இன்று நமக்குப் பழகிப் போனக் காட்சிகள் அன்று அங்கும் அரங்கேறின. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பணிமனை முன் மறியல் செய்தார்கள். பஸ்களை வெளியே எடுக்க விடாமல் தடுத்து நின்றார்கள். சிங்கப்பூரில் அப்போது 11 தனியார் பஸ் கம்பெனிகள் இருந்தன. அவற்றில் ஆறு கம்பெனி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுக்கு அனுதாபம் தெரிவித்து வேலை நிறுத்தத்தில் இறங்கினார்கள். ஊழியர்களுக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் குதித்தார்கள். நிலைமை மோசமடைந்தது. ஒருபுறம் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் பஸ்களை வெளியில் எடுக்க விடாமல் மறித்து நிற்க, மறுபுறம் அவர்களை "அள்ளிப் போடுவதில்' காவல்துறை கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. தண்ணீர் பீரங்கிகள் கொண்டுவரப்பட்டு போராட்டக்காரர்கள் மீது நீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.
மாணவர்கள் களமிறங்கிய பின்னர் போராட்டம் உக்கிரமடைந்தது. வேலை நிறுத்தம் தொடங்கி 19 நாள்களுக்குப் பிறகு மே 12-ஆம் நாள் அலெக்ஸாண்ட்ரா ரோடு என்கிற இடத்தில் மாணவர்களுக்கும் காவல்துறைக்கும் கைகலப்பு நடந்தது. கைகலப்பாகத் தொடங்கியது வன்முறையாக வெடித்தது. அப்போது அந்த இடத்தில் 2000 மாணவர்கள் இருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் எழுதியிருக்கிறார்கள். அதில் நான்கு பேர் இறந்து போனார்கள். (அவர்களில் ஒருவர் பத்திரிகையாளர்!) 
அந்த நால்வரில் இருவர் காவல்துறையைச் சேர்ந்தவர்கள். ஒரு காவல்துறை அதிகாரி காரில் வைத்து உயிரோடு எரிக்கப்பட்டார்.
மற்ற ஒருவர் மாணவர். சிங்கப்பூரின் ஆங்கில நாளிதழான "ஸ்ரெயிட் டைம்ஸ்' மாணவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார் என்றும், சம்பவம் மருத்துவமனைக்கு ஒரு மைல் தொலைவில் நடந்த போதும் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், மாணவர்கள் அவரை ஊர்வலமாகத் தூக்கிச் சென்று கூடியிருந்தவர்களை வெறி கொள்ளத் தூண்டினார்கள் என்றும் எழுதியது. (பின்னர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அப்படிச் செய்தவர்கள் மாணவர்கள் அல்ல, சமூக விரோதிகள் என்று முடிவாயிற்று) 
இந்தக் காட்சிகளையெல்லாம் நாம் இந்தியாவிலும் பார்த்திருக்கிறோம். இவையெல்லாம் நமக்கும் பரிச்சயமானவை.1965-இல், இந்தித் திணிப்பு எதிர்ப்புக் கிளர்ச்சியின் போது, திருப்பூரில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் வண்டிச் சக்கரத்தில் கட்டி வைக்கப்பட்டு இதே போல எரிக்கப்பட்டார். 
இந்த பஸ் தொழிலாளர்கள் போராட்டத்தை காலனியவாதிகளுக்கும் கம்யூனிஸ்ட்களுக்குமான போராட்டம் என வரலாற்றாசிரியர்கள் வர்ணிக்கிறார்கள். ஆனால் சிங்கப்பூர் குடியரசு நாடாக ஆகும் முன்பே தொழிற்சங்கங்களின் நிலையில் தலைகீழ் மாற்றங்கள் நேர்ந்தன. தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகள் மீது செல்வாக்குச் செலுத்த வேண்டுமா அல்லது அரசியல் கட்சிகளின் பிடியில் தொழிற்சங்கங்கள் இருக்க வேண்டுமா என்று கம்யூனிஸ்ட்களுக்கும் கம்யூனிஸ்ட் அல்லாதவர்களுக்குமிடையே விவாதம் எழுந்தது. அந்த விவாதம் தொழிற்சங்கங்கள் பிளவுபடுவதில் வந்து முடிந்தது.
1961-ஆம் ஆண்டு சிங்கப்பூரின் முதன்மைத் தொழிற்சங்கமான STUC (Singapore Trade Union Congress) கம்யூனிஸ்ட்களின் சார்பு கொண்ட SATU (Singapore Association of Trade Unions), கம்யூனிஸ்ட்கள் அல்லாத NTUC (National Trades Union Congress)  என இரண்டாகப் பிரிந்தது. இந்தப் பிளவிற்கு முக்கிய காரணம், சிங்கப்பூரின் முதன்மையான அரசியல் கட்சியான மக்கள் செயல் கட்சியில் (PAP - People's Action Party) ஏற்பட்ட பிளவு.1961-ஆம் ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி டஅடயில் இருந்த கம்யூனிஸ்ட்கள் வெளியேறி பாரிசான் நேஷனல் என்ற கட்சியைத் தொடங்கினர். நான்கு நாட்களுக்குப் பிறகு, ஜூலை 25ஆம் தேதி, தொழிற்சங்கத்தில் பிளவு ஏற்பட்டது, அரசியல் கட்சிகளின் பிடியில்தான் தொழிற்சங்கங்கள் இயங்குகின்றன என மௌனமாகப் பதில் சொல்லி காலம் புன்னகைத்து நின்றது.
கம்யூனிஸ்ட்களின் பிடியில் இருந்த SATU ஸ்டிரைக் கலாசாரத்தைக் கைவிட்டுவிடவில்லை. PAP பிளவுண்ட ஜுலை21-ஆம் தேதிக்கும் அந்த ஆண்டு (1961) இறுதி நாளான டிசம்பர் 31-க்கும் இடைப்பட்ட ஆறுமாத காலத்தில் சிங்கப்பூரில் நடந்த வேலை நிறுத்தங்கள் 84. அவற்றில் 77 SATUவால் ஏற்பாடு செய்யப்பட்டவை. 1963- ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது SATU. பல்கலைக்கழக மாணவர்களையும், பள்ளி மாணவர்களையும் ஆர்ப்பாட்டம் நடத்துமாறு அறைகூவல்
விடுத்தது. இதனைக் காரணமாகக் காட்டி, ஒரு மாதத்தில், 1963 நவம்பரில் SATUவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. சிங்கப்பூர் குடியரசாக மலர்ந்த போது அங்கு ஒரே ஒரு தொழிற்சங்கம்தான் இருந்தது. அது PAPயின் ஆதரவு பெற்ற NTUC.
இன்று சிங்கப்பூரில் ஊழியர்களின் வேலை நீக்கம், பணியிடமாற்றம், பதவி உயர்வு ஆகியவை குறித்து தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அவற்றிற்கான அதிகாரம் முதலாளிகளின் கையில். குடியரசான மூன்றாண்டுகளுக்குள், 1968-இல் அதற்கான சட்டம் இயற்றப்பட்டு விட்டது (Employment Act) அதே போல ஊதிய உயர்வு எவ்வளவு என்பதை நாட்டின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, அரசு, முதலாளிகள், தொழிலாளர்கள் ஆகிய மூன்று தரப்பினரது பிரதிநிதிகளும் கொண்ட தேசிய ஊதியக் குழு (National Wages Council) தீர்மானிக்கும். அதைப் பின்பற்ற வேண்டியது சட்டப்படி கட்டாயமில்லை என்றாலும் அதுதான் நடைமுறையில் இருக்கிறது.
இவற்றையெல்லாம் செய்யாமல் தொழிற்சங்கம் வேறு என்னதான் செய்யும்? அது இன்ஷூரன்ஸ் கம்பெனி நடத்துகிறது. டாக்சி சர்வீஸ் நடத்துகிறது. காய்கறிகள், பலசரக்கு விற்கும் அங்காடிகள் நடத்துகிறது! அதுதான் சிங்கப்பூர்! 
(தொடரும்)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/24/w600X390/kadhir1.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/25/வீழ்வேன்-என்று-நினைத்தாயோ-சிங்கப்பூரில்-பஸ்-ஸ்டிரைக்-2869507.html
2869516 வார இதழ்கள் தினமணி கதிர் புள்ளிகள் க.ரவீந்திரன், வி.ந.ஸ்ரீதரன். Saturday, February 24, 2018 05:40 PM +0530 ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எப்போதும் அவரது கட்சியின் நிறமான மஞ்சள் நிற சட்டைகளையே அணிவார். அவர் பயணிக்கும்போது தன்னுடன் மூன்று மஞ்சள் நிற சட்டைகளை எடுத்துச் செல்வார். பிகார் முதல்வர் நிதிஷ்குமார் 7 என்ற எண்ணை அவரது ராசி எண்ணாகக் கருதுகிறார். அதனால் அவரது புதிய அலுவலக முகவரி எண் 1 என்பதற்குப் பதிலாக, பழைய 7 சர்டுலர் தெரு என்ற முகவரியையே பயன்படுத்துகிறார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஸ்கூபா டைவிங்கில் உரிமம் பெற்ற பயிற்சியாளராகவும், தற்காப்பு கலை வுகிடோவில் பிளாக் பெல்ட் பெற்றவராகவும், ஸ்குவாஷ் விளையாட்டை தொடர்ந்து விளையாடுபவராகவும் திகழ்கிறார்.

உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மைசூரில் உள்ள ஸ்ரீ ஜெயசாம ராஜேந்திரா கல்லூரியில் குடிமை சுற்றுச்சூழல் பொறியியல் கல்வி பயின்றவர்.

மத்திய அமைச்சரவையில் பல வழக்குரைஞர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால் இரண்டு சார்ட்டட் அகெüண்ட்டன்டுகள் (கணக்குத் தணிக்கையாளர்) மட்டுமே உள்ளனர். ஒருவர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு மற்றவர் ரயில்வே மற்றும் நிலக்கரித் துறை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். பியூஷ் கோயல் அகில இந்திய சார்ட்டட் அகெüண்ட்டன்ட் தேர்வில் இரண்டாவதாக வந்தவர்.

மைக் மோகார்மேக்ட் என்பவர் எழுதிய "சோலார் போன்ஸ்' என்ற நாவல் 2016-இல் "கோல்ட்ஸ்மித்' விருதைப் பெற்றது. 224 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தில் முற்றுப்புள்ளியும் இல்லை. முழு வாசகங்களும் இல்லை. புத்தகம் முழுவதும் ஒரே ஒரு வாக்கியத்தைக் கொண்டது.

1887-ஆம் ஆண்டு கேரளத்தில் பிறந்த ஜானகி அம்மாள் மிகச்சிறந்த தாவரவியல் நிபுணர். இவரைச் சிறப்பிக்கும் வகையில் இங்கிலாந்தில் உள்ள ஒரு மலருக்கு இவரது பெயரைச் சூட்டியுள்ளனர்.

"குட்நைட்' என்ற கொசு விரட்டியை தற்சமயம் காத்ரேஜ் நிறுவனம் தயாரிக்கிறது. ஆரம்பத்தில் ஆர்.மோகன் என்கிற தமிழரின் பழ்ஹய்ள்ப்ங்ந்ழ்ஹ என்ற நிறுவனமே கொசு விரட்டியைத் தயாரித்தது.

2006-இல் பார்க்லேஸ் என்ற வங்கி ஏடிஎம் மையங்களுக்கு "சுவரில் உள்ள குழி' எனப் பெயரை மாற்ற முயற்சித்தது. ஆனால் அது வெற்றியடையவில்லை.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/27/w600X390/venkaiaya_naidu.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/25/புள்ளிகள்-2869516.html
2869519 வார இதழ்கள் தினமணி கதிர் திரைக் கதிர் - ஜி.அசோக் Saturday, February 24, 2018 05:40 PM +0530 விவேகம் படத்தைத் தொடர்ந்து அஜித் - சிவா கூட்டணி மீண்டும் இணையவுள்ள படம் "விசுவாசம்'. "விவேகம்' படத்தைத் தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கிறது. 

அஜித்துக்கு ஜோடியாக நடிப்பது யார் என்ற போட்டியில் நயன்தாரா வெற்றிப் பெற்றுள்ளார். இப்படத்தின் மூலம் நான்காவது முறையாக அஜித்துக்கு ஜோடியாகிறார் நயன்தாரா. 

இதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் யார் என்பதிலும் குழப்பம் நிலவி வந்தது. 
தற்போது டி.இமான் ஒப்பந்தமாகியுள்ளார். ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட படக்குழு முடிவு எடுத்துள்ளது. மார்ச் 2-ஆம் வாரத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்க தற்போது படக்குழு முடிவு செய்துள்ளது. வரும் தீபாவளிக்கு படத்தை வெளிக் கொண்டு வர பணிகள் தொடங்கியுள்ளன. 


நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஹிந்தியில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஏற்கெனவே ராதா மகள்கள் கார்த்திகா, துளசி, நடிகை மேனகா மகள் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். அடுத்து மற்றொரு நடிகையின் மகள் கதாநாயகி ஆகியிருக்கிறார். கமலுடன் "விக்ரம்' படத்தில் நடித்தவர் லிசி. இயக்குநர் பிரியதர்ஷனை மணந்து பின்னர் விவகாரத்து பெற்றார். லிசி - பிரியதர்ஷன் மகள் கல்யாணிதான் தற்போது கதாநாயகியாகியுள்ளார். தமிழ் சினிமாவில் ஓரிரு வாய்ப்புகள் வந்த போதிலும், தெலுங்கில் வந்த வாய்ப்பை தற்போது ஏற்றுக் கொண்டுள்ளார். விக்ரம் கே.குமார் இயக்கிய "ஹலோ' படத்தில் அகில் அகினேனி ஜோடியாக நடிக்கிறார் கல்யாணி. அடுத்து சர்வானந்த் நடிக்கும் புதிய படத்துக்கு பேச்சுவார்தை நடந்து வருகிறது. இப்படத்தை சுதீர் வர்மா இயக்குகிறார். இதில் கதாநாயகியாக காஜல் அகர்வாலும் நடிக்கிறார். 

சுரேஷ் திரிவேணி இயக்கத்தில் கடந்த ஆண்டு ஹிந்தியில் வெளியான படம் "தும்ஹாரி சுலு'. வித்யாபாலனுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. அதில், சுலோச்சனா என்ற குடும்பத் தலைவியான வித்யா பாலன், பிரபல ரேடியோ சேனலில் தொகுப்பாளராகிறார். இதனால் பல பிரச்னைகளைச் சந்திக்கிறார். இதைப் பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இப்படம் ஹிந்தியில் பரவலான வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. அதில் ஜோதிகா நடிக்க உள்ளார். இப்படத்தை ராதா மோகன் இயக்குகிறார். "மொழி' வெற்றிப் படம் கொடுத்த ராதாமோகன் - ஜோதிகா கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது. "நாச்சியார்' படத்தைத் தொடர்ந்து "செக்க சிவந்த வானம்' படத்தில் கவனம் செலுத்திவரும் ஜோதிகா, அந்தப் படத்தின் வேலைகள் முடிந்ததும் ஏப்ரல் இறுதியில் ஹிந்தி ரீமேக் படத்தின் படப்பிடிப்புக்கு புறப்படுவார் என்று தெரிகிறது. இதனிடையே பாலாவின் இயக்கத்தில் "நாச்சியார்' படத்தில் நடித்துள்ள ஜோதிகாவுக்கு பரவலான பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. படத்தின் கதையம்சம் சுமார் என்றாலும், ஜோதிகாவின் நடிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் ஜோதிகாவுக்கு தங்களது சுட்டுரைப் பக்கங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகையாக வாழ்ந்து மறைந்தவர் சாவித்ரி. வறுமை, செழுமை, ஏற்றத் தாழ்வுகள் என பல பின்னணிகள் இவரது வாழ்வில் உண்டு. அவருடைய வாழ்க்கையின் முழுத் தழுவலாக உருவாகி வரும் படம் "நடிகையர் திலகம்'. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சாவித்ரியாக நடிக்கிறார். தெலுங்கில் இப்படத்துக்கு "மகாநதி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் சென்னை போன்ற அரங்குகள் அமைக்கப்பட்டு இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. சாவித்ரி வாழ்ந்த காலத்தில் உள்ள சூழ்நிலையை பிரதிபலிக்கும் விதமாக காட்சிகள் உருவாக்கப்பட்டதால், படப்பிடிப்பு நீண்ட நாள்களாக நடைபெற்று வந்தது. தற்போது படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில வார காலத்தில் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாவித்ரியின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்த ஜெமினிகணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். பத்திரிகையாளராக சமந்தா நடிக்கிறார். சாவித்ரியுடன் நெருங்கிப் பழகிய அக்காலத்து நடிகர்கள், நடிகைகள் என பல வேடங்கள் இதில் உண்டு. "யவடு சுப்பிரமணியம்' படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் இப்படத்தை எழுதி இயக்குகிறார். விஜயந்தி மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் படம் திரைக்கு வருகிறது.

வேலைக்காரன்' படத்தைத் தொடர்ந்து பொன்ராம் எழுதி இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். திருநெல்வேலியை கதைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்துக்கு பெயரிடப்படாத நிலையில், கடந்த வாரம் "சீமராஜா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதையடுத்து "நேற்று இன்று நாளை' ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இதற்கான முதற்கட்டப் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. 24 ஏ.எம் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார். இதற்கான கதாநாயகி தேர்வு சமீபமாக நடந்து வந்தது. முன்னணி கதாநாயகிகள் பலரின் பெயர் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், ரகுல் ப்ரீத் சிங் தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மார்ச் மாதத்துக்கு பின் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. தற்போது பொன்.ராம் இயக்கத்தில் உருவாகும் "சீமராஜா' படத்தில் சிவகார்த்திகேயனுடன் சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். விநாயகர் சதுர்த்திக்கு படம் வெளியாகும் என அறிவித்திருக்கிறது படக்குழு.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/24/w600X390/kadhir4.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/25/திரைக்-கதிர்-2869519.html
2869511 வார இதழ்கள் தினமணி கதிர் கானல் நீர் காட்சிகள் Saturday, February 24, 2018 05:39 PM +0530 வாட்ஸ்அப் பதிவு : 1 

எங்கே இரண்டு நாளா ஆளையே காணோம்'' 7.35 PM
""டூர் போயிருந்தேன்'' 7.36 PM
""டூரா ! எந்த ஊருக்கு ?'' 7.37 PM
""மூணாறு, கேரளா'' 7.39 PM
""சொல்லவே இல்லை'' 7.40 PM
""சாரி.. திடீர்னு முடிவாயிடுச்சு'' 7.42 PM
""பரவாயில்லை, குடும்பம் எல்லாரும் போனீங்களா'' 7.44 PM
""இல்ல... ப்ரெண்úஸாட போனேன்'' 7.46 PM
""பயங்கர ஜாலிதான், ட்ரிங்க்ஸ்'' 7.38 PM
""கொஞ்சம், ரொம்ப கொஞ்சம்'' 7.48 PM
""ஏன் குடும்பத்தை கூட்டிப் போகல'' 7.51 PM
""அடுத்த வாரம் கூட்டிப் போகணும்'' 7.52 PM
""எதுல கூட்டிப் போவீங்க'' 7.55 PM
""வீட்ல இனோவா இருக்கு, ஒரு சுவிப்ட் டிசையர் இருக்கு, ரெண்டுலேயும் தான்'' 7.57 PM
""நீங்க நான்கு பேரு தானே ?'' 7.57 PM
""அண்ணன் குடும்பம் வரும், ஆமா நீங்க எங்கேயும் போகலையா'' 7.57 PM
""ம்... நாங்களா ? கூட்டிட்டு போயிட்டுதான் அடுத்த வேலை'' 8.00 PM
""அப்படி சொல்லாதீங்க, சார்ட்ட சொல்லுங்க, மே மாத லீவுல குழந்தைங்க என்ஜாய் செய்யுங்க'' 8.02 PM
""அட... ஏன் சார்? சரி. பாப்பா டியூசன் முடிச்சிட்டு வந்துட்டா அப்புறமா லைன்ல வர்றேன்'' 8.03 PM
""ஓகேம்மா'' 8.02 PM

வாட்ஸ் அப் பதிவு : 2 

""குட்மார்னிங், குட்மார்னிங் பிக்சர், சூப்பர்'' 9.10 AM
""எங்க மேனேஜர் அனுப்பிச்சான், அதான் பார்வர்ட் செய்தேன்'' 9.11 AM
""ப்ரொபைல் பிக்சர் மாத்திட்டீங்க போல, சூப்பரா இருக்கீங்க'' 9.13 AM
""நேர்ல இன்னும் நல்லாயிருப்பேங்க, ஆனா உங்க அளவு வரமாட்டேன்'' 9.13 AM
""ச்சே.. நான் ஒண்ணும் அவ்வளவு அழகில்லை'' 9.15 AM
""சும்மா சொல்றீங்க, நீங்க சராசரி அழகில்லை'' 9.17 AM
""சொல்லாடல் சூப்பர்'' 9.18 AM
""உங்கள் ப்ரொபைல் பிக்சர்ல மயங்கிதானே முகநூல் நண்பரானேன்''. 9.18 AM
""ரொம்ப புகழ்றீங்க சார்'' 9.19 AM
""உண்மையச் சொல்றேன்'' 9.20 AM
""உண்மையைச் சொன்னா உங்க முகத்துல தெரிஞ்ச கம்பீரம்தான் என்னை வலிய வந்து ரெக்வஸ்ட் செய்ய வைத்தது.'' 9.22 AM
""பெரிய பதிவு, கூடுதலான புகழ்ச்சி'' 9.23 AM
""உண்மைதான் சார்'' 9.24 AM
""தயவு செய்து பதிவுகளை அன்றாடம் அழிச்சிடுங்க'' 9.25 AM
""நான் ஒரு பெண். நான் சொல்ல வேண்டியது, யு ஆர் எ ஜென்டில்மேன்.'' 9.26 AM
""ஆபிஸ் கிளம்பியாச்சா ?'' 9.27 AM
""ஆன் த வே... பஸ்'' 9.28 AM
""ஓகே... மதியம் கூப்பிடுறேன்'' 9.29 AM
""ஓகே,பை'' 9.30 AM

வாட்ஸ் அப் பதிவு : 3 

""கவிதை சூப்பர்'' 8.45 PM
""சார் நான் எழுதினதில்லை, படித்தது'' 8.46 PM
""இருந்தாலும் அழகா பதிவிட்டிருந்தீங்க'' 8.48 PM
""எல்லாத்துக்கும் பாராட்டுவீங்களா ?'' 8.49 PM
""எல்லாரையும் பாராட்டலாமே . ஒண்ணும் தப்பில்லம்மா'' 8.49 PM
""வெறும் வார்த்தைதானே'' 8.50 PM
""அதில்லைம்மா, நான் அருகிலில்லை, இல்லைன்னா தினந்தோறும் பரிசளிப்பேன்'' 8.51 PM
""ம்... பெரிய கம்பெனி ஓனர். செய்ய வேண்டியதுதான்'' 8.52 PM
""பெரிய பணக்காரன் இல்லைன்னாலும் செய்வேன்'' 8.53 PM
""என்ன கம்பெனி ?'' 8.53 PM
"" கிரைண்டர் கம்பெனி'' 8.54 PM
""ஒரு நூறுபேர் வேலைப் பார்ப்பாங்களா ?'' 8.56 PM
""இருநூற்றி ஐம்பது பேர்'' 8.56 PM
""அடேயப்பா, பெரிய கம்பெனிதான்.'' 8.57 PM
""அதை விடுங்க, நைட் என்ன டிபன் ?'' 8.57 PM
""பூரியும், கிழங்கும். இரண்டும் சாப்பிட்டு அதுங்க ரூமுக்கு போயிடுச்சுங்க..'' 8.59 PM
""சார் ?'' 8.59 PM
""பேங்க் மேனேஜர், கேம்ப் போயிருக்கார். சேலம்.'' 9.01 PM
""எத்தனை நாள் ?'' 9.03 PM
""இரண்டு நாள்'' 9.04 PM
""ரொம்ப கஷ்டமில்லை உங்களுக்கு ?'' 9.04 PM
""அதொண்ணுமில்லை அவங்க இருந்தாலும், இல்லாட்டியும் ஒண்ணுதான்.'' 9.06 PM
""ஏன் ?'' 9.06 PM
""இங்கே இருந்தா போதையில பத்து மணிக்கு வருவார். ஷூ கூட கழட்டாம பெட்ல விழுந்துடுவார்.'' 9.08 PM
""சாரி, உங்கள் சோகங்களை கிளறுறேன்'' . 9.08 PM
""இல்லை சார், யார்கிட்டயும் பகிர்ந்துக்கவே முடியல, கடவுள் புண்ணியத்துல நீங்க கிடைச்சீங்க'' 9.11 PM
""ஓகே'' 9.11 PM
""உங்களுக்கு ஒண்ணும் டிஸ்டர்ப் இல்லையே சார்'' 9.13 PM
""நோ.நோ. ஒரேயொரு டிஸ்டர்ப்தான்'' 9.14 PM
""என்ன ?'' 9.15 PM
""சார் வேணாமே ராஜ்ன்னே கூப்பிடலாமே ?'' 9.15 PM
""நீங்க சுதான்னு கூப்பிடறதா இருந்தா. நானும் ராஜ்னு கூப்பிடறேன்.'' 9.16PM
""சுதா, சொல்லச் சொல்ல இனிக்குது.'' 9.17 PM
""ராஜ், என்னைய இந்த மாதிரி மகிழ்வூட்டியது யாருமே இல்லிங்க'' 9.19PM
""ம்... வாழ்க்கையில ஒரே ரசனையுள்ள இரண்டு பேரை ஆண்டவன் இப்படித்தான் பிரிச்சுப் போடறான்.'' 9.20 PM
""உங்க மனைவியும் படத்துல அழகாய்த்தானே இருக்காங்க.'' 9.21 PM
""அவளும் சுமாரான அழகுதான். ஆனா என்னை மாதிரி பிஸினஸ்ல இருக்கறவங்களுக்கு வீட்டுக்குப் போனா ரிலாக்ஸ் வேணும். ஆனா கிடைக்காது. புகார் பட்டியல்தான் நீளும். சாரி, நீளமான பதிவு'' 9.24 PM
""அது ஒண்ணும் பிரச்சனையில்லை. ஆனா ரொம்ப வேகமா பதிவிடுறீங்க'' 9.26 PM
""நன்றி, சாப்பீட்டிங்களா ?'' 9.27 PM
""இன்னும் இல்லை ராஜ். சாப்பிடவே பிடிக்கல'' 9.29 PM
""சார் இல்லாம கஷ்டமா இருக்கா ?'' 9.30 PM
""நீங்க வேறங்க. அவரு இல்லைன்னாதான் ஃபுல்லா சாப்பிடுவேன். நல்லா தூங்குவேன்.'' 9.32 PM
""அப்புறமென்ன'' 9.32 PM
""என்னமோ தெரியல. ஆபீஸ்லயும் நிம்மதியில்லை.'' 9.33 PM
""...........................'' 9.34 PM
""பதிவுல இருக்கீங்களா ?'' 9.36 PM
""இருக்கேன்மா, உங்க சோகங்களை கிளறிவிட்டு வேதனைப்படுத்தறேனோன்னு வருத்தப்படறேன்.'' 9.38 PM
""அட நீங்க வேற ராஜ்... உங்கள்கிட்ட பரிமாறிக்கிட்ட பின்னாலதான் ஓரளவு ரிலாக்ஸா இருக்கேன். என் சோகம் சொல்லி உங்களைத்தான் ரொம்ப டிஸ்டர்ப் பண்றேன்.'' 9.41 PM
""ச்சே அதெல்லாம்மில்லை. நீங்க வாங்கற சம்பளத்துல என்கிட்ட பத்து பேரு வேலை பார்க்கிறான். நீங்க எனக்கு பக்கத்து ஊரா இருந்தா இதைவிட நல்ல போஸ்ட்ல உங்கள அமர்த்தி எங்கூடவே வச்சிருப்பேன்'' 9.45 PM
""அதாவது வச்சிப்பீங்க அப்படித்தானே ?'' 9.47 PM
""ஐய்யையோ, நான் அந்த அர்த்தத்திலே சொல்லலீங்க. மன்னிச்சுடுங்க.'' 9.48PM
""ச்சே, சும்மா தமாஷ், இந்த பதறு பதறுறீங்க''
9.50 PM
""பயந்துட்டேங்க சுதா'' 9.51 PM
""அப்படி வச்சுகிட்டாலும் சந்தோஷம்தாங்க'' 9.52 PM
""என்னங்க சுதா இப்படியெல்லாம் பேசறீங்க ?''
9.53 PM
""ஏன் ராஜ்... நான் விரும்பக்கூடதா'' 9.54 PM
""இல்லை, சார் பிள்ளைங்க'' 9.54 PM
""இப்படி பார்த்துதான் நடை பிணமாக வாழ்ந்துட்டுருக்கேன் ராஜ்'' 9.55 PM
""இரவு, தனியாருக்கீங்க, நாளைக்கு பேசலாம், குட்நைட் பை.'' 9.57 PM
""இல்ல ராஜ் பேசுங்க, நான் அப்படி விரும்பக் கூடாதா'' 9.57 PM
""வேணாம், சுதா நானும் மனசுல இருக்கிறதக் கொட்டிருவேன்'' 9.59 PM
""அப்ப ஏதோ மறைக்கிறீங்க'' 10.02 PM
""சரி நாம் சாட் செய்து எத்தனை நாள்
ஆகியிருக்கும் ?'' 10.04 PM
""அதாவது பார்க்காமலேயே பழகுறோமே எத்தனை நாள் ஆச்சுன்னு கேட்கறீங்க'' 10.06 PM
""ஆமா'' 10.06 PM
""என்ன ஒரு பத்து நாள் இருக்குமா ?'' 10.07 PM
""இன்னையோட பதினொரு நாள்'' 10.08 PM
""ரைட் அதுக்கும் நீங்க எதையோ மறைக்கறதுக்கும் என்ன சம்பந்தம் ?'' 10.09PM
""ஒண்ணுமில்லை என் மனைவி என் கனவுகளுக்கு ஏற்ற உருவமில்லை. நான் இளமையில் கற்பனை பண்ணியிருந்த, வாழ விரும்பிய உருவம் அவ இல்லை. அது அத்தனையும் உங்கள்ட்டதான் பார்த்தேன்.'' 10.12 PM
""எங்கிட்டயா ?'' 10.13 PM
""ஆமா. என் கற்பனை மனைவியோட கண், காது, அந்த உதடுகள், நெற்றிமேடு எல்லாமே உங்கள்கிட்டதான் பார்த்தேன்.'' 10.15 PM
""ஏன் ராஜ் உங்கள் வயதென்ன'' 10.16 PM
""எதுக்கு சுதா திடீர்னு ?'' 10.17 PM
""சும்மா சொல்லுங்க'' 10.18 PM
""முப்பத்தியெட்டு'' 10.19 PM
""பரவாயில்லை. என்னை விட ஒன்றரை வயது தான் மூத்தவர்தான்.'' 10.21PM
""புரியல. இதெல்லாம் ஏன் சொல்றீங்க ?'' 10.24 PM
""பயப்படாதீங்க ராஜ்... உங்களை என்னைக் கட்டிக்க சொல்லல'' 10.24 PM
""இன்னும் புரியல'' 10.25 PM
""பெரிய பணக்காரர். அழகானவர். கம்பீரமானவர். இன்னொரு பெண்ணா பிடித்த மாதிரி கட்டிக்க வேண்டியதுதானே ?'' 10.27 PM
""என்னை நேர்லே பார்க்காமலேயே இவ்வளவு புகழ்றீங்க. பரவயில்லை. நீங்க சொன்னதுல ஒரு எண்பது சதவீதமாவது உண்மைதான்.'' 10.28 PM
""அப்பறம் என்ன பொண்ணுப் பார்ப்போமா ?'' 10.28 PM
""சுதா மாதிரி அழகாக் கூடப் பிடிக்கலாம். ஆனால் இந்த அன்பு பண்பு இருக்குமா ?'' 10.29 PM
""என்னைப் பண்பானவள்னு சொல்றீங்களா ? இன்னொருத்தர் மனைவி இன்னொருத்தர்கிட்ட இவ்வளவு அந்தரங்கமா பேசறேன்.'' 10.31 PM
""அதனாலென்ன நாம எந்த தப்பும் பண்ணலேயே ?'' 10.32 PM
""நான் தப்பானவ இல்லையே ராஜ் ?'' 10.33 PM
""நிச்சயமா இல்லம்மா, சாப்பிடு'' 10.34 PM
""என்னைய வெறுத்துட மாட்டீங்களே'' 10.34 PM
""நிச்சயமாடா. உன்னை வெறுப்பேனா ?'' 10.36 PM
""ராஜ் 10.37'' PM
""ம் 10.38'' PM
""ராஜ் 10.39'' PM
""என்ன 10.40'' PM
""ராஜ் 10.41'' PM
"" என்னடி 10.42'' PM
""தனியாவே படுக்க முடியலப்பா'' 10.43 PM
""சாப்பிட்டுத் தூங்கும்மா'' 10.44 PM
""கனவுல வர்றியா'' 10.45 PM
""வர்றேன்'' 10.46 PM
""வந்து கட்டிக்கறியா ?'' 10.47 PM
"" ம் கட்டிக்கிறேன்.'' 10.48 PM
""தப்பாப் பேசுறேனா ?'' 10.49 PM
""இல்லை சுதா'' 10.50 PM
""என்னை தப்பானவளா நினைப்பியா?'' 10.51 PM
""இல்ல சுதா'' 10.52 PM
""இறுக்கிக் கட்டிப்பியா ?'' 10.53 PM
"" ம்'' 10.54 PM
""அப்புறம்'' 10.55 PM
""தோள்ல சாய்ச்சுப்பேன்'' 10.56 PM
""ம் அப்புறம்'' 10.57 PM
""கூந்தலைக் கோதிவிடுவேன்'' 10.58 PM
""எனக்கு அவ்வளவு முடியில்லை ராஜ்'' 10.59 PM
""கன்னத்தில் முத்தமிடுவேன்'' 11.00 PM
""அப்புறம்'' 11.01 PM
""அவ்வளவுதான நம்ம எல்லை'' 11.02PM
""ஏன்?'' 11.03PM
""போதும்மா உடல்ரீதியான உறவு தவறாப் போகும் சுதா'' 11.03 PM
""நீங்க ஒரு ஜெம் ராஜ்... உங்களப் பார்க்கணுமே ?'' 11.04 PM
""அது ஒண்ணும் பிரச்சனையில்லை. ஆனா நேர்ல பார்த்தா சுவாரஸ்யம் கெட்டிருமோன்னு பயப்படறேன்.'' 11.04 PM
""இல்ல, ஒரு தடவை ஒரே ஒரு தடவை பார்த்தாப் போதும்பா'' 11.03PM
""ம்.. ஓகே சீக்கீரம் உங்க ஊருக்கு வர்றேன், பொது இடத்தில பார்ப்போம். ஓ.கே.'' 11.05 PM
""தாங்க்ஸ் ராஜ்'' 11.05 PM
""இப்பவாவாது சாப்பிடுங்க மணி 11 ஆகுது.'' 11PM
""குட்நைட்'' 11.06 PM
""குட்நைட் ராஜ்'' 11.06 PM

வாட்ஸ் அப் பதிவு : 4

""ஹலோ இருக்கீங்களா ?'' 8.10 PM
""ம். இருக்கேன்'' 9.15 PM
""என்னாச்சு ?'' 9.16 PM
""சண்டை. எனக்கும் அவருக்கும்'' 9.17 PM
""ஏம்மா ?'' 9.17 PM
""ஊர் சுத்தறது. குடிக்கிறது. இப்ப சந்தேகம் வேற'' 9.17 PM
""சந்தேகமா ?'' 9.18 PM
""ஆமாம் ராஜ் காரணமேயில்லாமல் சந்தேகப்படறார். அவன வச்சுருக்கேன். இவன வச்சுருக்கேன்கிறார்'' 9.19 PM
""பெரிய சண்டையா ?'' 9.20PM
""அடிச்சார். போனை பிடுங்கி உடைச்சிட்டார். அதான் உங்களோட சாட் கூட பண்ண முடியல.'' 9.21 PM
""இப்ப போன் வாங்கீட்டிங்களா'' 9.21 PM
""ம்.. வாங்கிட்டேன். அவர்தான் வாங்கி தந்தார்.'' 9.22 PM
""ஓகே. நாளைப் பேசவா ?'' 9.23 PM
""ஆமாம் ராஜ். எனக்கும் ஒரே தலைவலி'' 9.25 PM
""குட்நைட்'' 9.27 PM
""குட்நைட் ராஜ்'' 9.28 PM

வாட்ஸ் அப் பதிவு - 5

""ஹலோ'' 8.44 PM
""ஹலோ சுதா ஆன்லைன்ல இருக்கீங்களா ?''
9.10 PM
""சுதா'' 9.12 PM
""சுதா'' 9.12 PM
""ம்... இருக்கேன்.'' 9.15 PM
""தொந்தரவு பண்ணிட்டேனா'' 9.16 PM
""ம்..'' 9.16 PM
""என்னப் பண்ணிட்டு இருக்கீங்க ?'' 9.17 PM
""அழுதுட்டு இருக்கேன்.'' 9.19 PM
""அழுகுறீங்களா ஐயோ ஏன் ?'' 9.20 PM
""பின்னே அடிக்கிறார். போதை... என்ன பண்றது ?'' 9.31 PM
""வெரி சாரி சுதா. நான் நாளைக்கு பேசவா?'' 9.32 PM
""வேண்டாம் ராஜ். தாலியக் கூட கழட்டி எறிஞ்சிட்டேன்'' 9.33 PM
""ச்சே. அதெல்லாம் தப்பு'' 9.34 PM
""முடியல ராஜ். உங்கள மாதிரி பண்புள்ளவர் எனக்கு அமையக்கூடாது ?'' 9.35 PM
""அப்படியெல்லாம் யோசிக்காதீங்க'' 9.36 PM
""இல்ல. ராஜ் உங்களோட சாட் பண்ணதுக்கு அப்புறம்தான் நான் எவ்வளவு இழந்துருக்கேன்று தெரியுது.'' 9.37 PM
""அமைதியாயிருங்க. பை தி பை நாளை மறுநாள் நான் உங்க ஊருக்கு வர்றேன்.'' 9.38 PM
""மை காட், வாட் எ சர்பைரஸ் எங்கே வரட்டும் ?'' 9.40 PM
""உங்க ஊருக்கு பக்கத்துல முருகமலைன்னு ஒரு கோயில் இருக்காம்ல?'' 9.42PM
""ஆமாம் என்னோட பேவரைட் கோயில்தான் அது'' 9.43 PM
""அங்கேதான் வர்றேன்'' 9.45PM
""பேமிலி ?'' 9.47 PM
""நான் மட்டும்தான். ஒரு தோஷம் கழிக்கணும்.'' 9.48 PM
""ரொம்ப நன்றி, எனக்கு ஒரு பத்து நிமிம் ஒதுக்குவீங்களா ?'' 9.49 PM
""அரை நாள் உங்க கூட தான்.'' 9.50 PM
""தாங்க் காட், அந்த கோயில்ல குருக்கள்ல இருந்தது. தேங்காய் கடைக்காரன் வரை நல்லா தெரிஞ்சவங்கதான்.'' 9.51''PM
""ரொம்ப நல்லதாப் போச்சு. ஆமா யாருன்னு சொல்வீங்க ?'' 9.52 PM
""என்னோட மாமான்னு.'' 9.53 PM
""தாய் மாமனா ? முறை மாமனா ?'' 9.53 PM
""எனக்கே எனக்கான மாமான்னு'' 9.54 PM
""அப்புறம் சுதா ரெண்டு நாள் சாட் பண்ண முடியாது.'' 9.55 PM
""ஏன் ராஜ் ?'' 9.57 PM
""கம்பெனி ஆடிட்டிங் நகர முடியாது.'' 9.57 PM
""ஓகே ராஜ் கோயிலுக்கு வர்ற அன்னிக்கு காலையில சாட் பண்ணுவீங்கள்ல ?'' 9.58 PM
""நிச்சயமா'' 9.59 PM
""எதுல வருவீங்க ?'' 10.00 PM
""சாரி, உங்ககிட்ட சொல்லல, ஆடிகார் ஒண்ணு 
எடுத்துருக்கேன். அதுல நான் மட்டும்தான் வர்றேன்.'' 10.02 PM
""சூப்பர் ராஜ் ஆடிகார தொட்டுப் பார்த்தது கூட இல்லீங்க'' 10.02 PM
""மகாராணி மாதிரி முன் சீட்டுல உட்காரவெச்சு ஊரு சுத்தப் போறேன்.'' 10.03PM
""ராஜ்'' 10.04 PM
""சொல்லுங்க'' 10.05 PM
""ராஜ்'' 10.06 PM
""ம்ம்ம்...'' 10.07 PM
""ஐ லவ் யூ'' 10.08 PM
""லவ் யூ... புதன்கிழமைப் பார்ப்போம்'' 10.09 PM
""காதலோடு காத்திருக்கேன்'' 10.11 PM
""சரி மனநிலை மாறிடுச்சா ?'' 10.13 PM
""மாத்திட்டீங்க, தாங்க்ஸ்'' 10.15 PM
""அழக்கூடாது, குட் நைட்'' 10.17 PM
""அழமாட்டேன், கனவுல வாங்க. குட்நைட்''
10.17 PM

புதன்கிழமையும் ராஜ் வாட்ஸ் அப் சாட்டில் வரவில்லை சுதா குழம்பினாள்.
ஆபிஸ் போவதா ? கோயிலுக்குப் போவதா ? ராஜ் ஏறக்குறைய முன்னூறு கிலோ மீட்டர் வரணும். புதுக்கார். வழியில டவர் இருக்கிறதோ, இல்லையோ கோயிலுக்கே போவோம் என முடிவெடுத்தாள். 
சற்று கூடுதலாகவே அலங்கரித்துக் கொண்டாள்.
எப்போதும் ஏறெடுத்துப் பார்க்காத அவள் கணவனே சற்று நின்று அவளைப் பார்த்துவிட்டு வங்கிக்கு கிளம்பிப் போனான்.
தன் ஸ்கூட்டியில் சரியாக ஒன்பதரைக்கெல்லாம் அந்த சிறுகுன்றில் முருகன் குடியிருக்கும் முருகமலையின் அடிவாரத்தை அடைந்தாள்.
""வாங்கம்மா என்ன இன்னைக்கு ஆபீஸ் போகலையா ?'' அடிவாரத்தில் தேங்காய் கடைக்காரன் சற்று இளிப்போடு வரவேற்றான்.
இவன் வேற எப்பப் பார்த்ததாலும் ஈய்ய்ன்னு இளிப்பான்.
""இல்லீங்க எங்க மாமா கோயிலுக்கு வர்றேன்னார் அதான்'' சற்றும் முற்றும் பார்த்தாள். ஒரு சில இருசக்கர வாகனங்கள்தான் நின்றன. 
""உட்காருறீங்களாம்மா ?'' - என்றபடி கடை உள்ளிருந்து சிறு ஸ்டூலை எடுக்க,
""வேண்டாம் மேலே வெயிட் பண்றேன்'' என்றபடி படி ஏறினாள். 
ஆச்சு. முருகனை மூன்று முறை வணங்கியாச்சு. கடிகாரத்தில் முட்கள் முனகியபடியே மணி பதினொன்றை நெருங்க, சலித்துப் போனாள்.
நூறு தடவையாவது அலைபேசியை எடுத்துப் பார்த்திருப்பாள். அந்த பக்கம் அழைக்கவே இல்லை. 
போன் செய்து பார்த்தால் என்ன என மனதில் 
உதிக்க, தயக்கம் திரை போட்டது. 
""எக்காரணம் கொண்டும் போன் செய்யாதீங்க, போன் அவ கையிலோ பிள்ளைங்க கையிலோ இருந்தா தொலைஞ்சேன்'' என்ற ராஜின் வேண்டுகோள் நினைவூட்டி எச்சரிக்க, இனி காத்திருந்தால் குருக்களே தவறாய் எண்ணிவிடுவார் என்றெண்ணி, படிகளில் இறங்கத் தொடங்கினாள். 
""என்னம்மா, மாமா வரலையா?'' - தேங்காய் கடைக்காரன் குரல் கூடுதலாய் ஒலித்தது. 
"சனியன் இவன் முகத்துல முழிச்சா என்ன நடக்கும். இவனும் இவன் ட்ரெஸ்ஸýம்' என்றெண்ணியபடி வண்டியை நெருங்கியவாறே,
""இல்லங்க. வீட்ல இருக்காராம். சாயந்திரம் கூட்டிட்டு வர்றேன்'' 
""பெரிய மாலையா கட்டி வைக்கவா ?'' 
""ம்'' என்றவள் வண்டியை கிளப்பினாள். 
பாதிதூரம் சென்றிருப்பாள், அலைபேசி ஏதோ இரைய லாகவமாய் வண்டியை நிறுத்தி அலைபேசியை உயிர்ப்பித்தாள்.
ராஜின் பதிவு பளிச்சிட்டது.
""சாரி டியர்'' 11.32 AM
""என்னாச்சு, எவ்வளவு நேரம் காத்திருப்பது ?''
11.33 AM
""சாரி, சாரி வர்ற வழியில ஒரு ஆக்ஸிடெண்ட்'' 
11.34 AM
""ஐயோ, என்னாச்சு ?'' 11.34 AM
""எனக் கொண்ணுமில்லை வண்டிதான் மரத்துல மோதி கொஞ்சம் அடிப்பட்டிருச்சு'' 11.35 AM
""ரொம்ப அடியா'' 11.36 AM
""அதொண்ணுமில்லை இன்சூரன்ஸ் கிளைம் பண்ணிக்கலாம். உங்களைக் காக்க வெச்சதுதான் உறுத்துது.'' 11.38 AM
""பரவாயில்லைங்க நீங்க சேஃப்டியா வீட்டுக்குப் போங்க.'' 11.39 AM
""சாரி... சுதா கோபமில்லையே ?'' 11.40 AM
""ச்சே, அதொண்ணுமில்ல நீங்க ரெஸ்ட் எடுங்க, நைட் சாட் பண்ட்றேன்.'' 11.41 AM
""ஓக்கேம்மா'' 11.41 AM
என்றபடி துண்டிக்கப்பட, சுதா வீட்டிற்கு
விரைந்தாள்.
கோவிந்தராஜ் என்ற ராஜ் என அழைக்கப்படும் அந்த தேங்காய்க் கடைக்காரன் அலைபேசியை அணைத்து அவனது கால்சட்டைப் பையில் போட்டு கொண்டு கடையில் அமர்ந்தான்.
இரவிற்காய் காத்திருக்கத் தொடங்கினான்.

 

தினமணி - எழுத்தாளர் சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு ரூ.50,000 பெறும் சிறுகதை.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/24/w600X390/kadhir2.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/25/கானல்-நீர்-காட்சிகள்-2869511.html
2869513 வார இதழ்கள் தினமணி கதிர் கச்சேரியை நிறுத்திவிட்டு பேசலாமே! Saturday, February 24, 2018 05:39 PM +0530 பிரபல சங்கீத விமர்சகர் சுப்புடுவுக்கு செம்மங்குடிக்கும் இடையே பச்சைப்புல்லை தண்ணீர் தெளித்துப் போட்டால் கூட பற்றிக் கொள்ளும். அப்படி ஆகவே ஆகாது. செம்மங்குடியைத் தொடர்ந்து தாக்குவதைக் கோட்பாடாகக் கொண்டவர் சுப்புடு. சுப்புடுவுக்கு ஒரு பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார் ஆசிரியர் சாவி. மயிலை ஆர்.ஆர்.சபாவில் நிகழ்ச்சி. பேச்சாளர்களில் செம்மங்குடியும் ஒருவர்; எக்கச்சக்க கூட்டம்.
சிலர் பேசிய பின் செம்மங்குடியின் முறை வந்தது. எழுந்து மைக்கைப் பிடித்தார். ""சுப்புடு என்னைத் தொடர்ந்து கண்டனம் பண்ண வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். அவர் கண்டனம் பண்ணினால் தான் எனக்கு நிறைய கச்சேரி "புக்' ஆகிறது. அப்படி ஒரு ராசி சுப்புடுவுக்கு'' என்று வெகு விஸ்தாரமாகப் பேசினார்.
உடனே சுப்புடு எழுந்து ""அடடா! செம்மங்குடி என்ன அழகாய் மேடையில் பேசுகிறார், பேசாமல் அவர் கச்சேரி செய்வதை நிறுத்திவிட்டு பேச்சாளராக இயங்கலாமே'' என்று பரிந்துரைத்தார்.

"சுவடுகள்' என்ற புத்தகத்திலிருந்து -பே.சண்முகம்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/24/w600X390/kadhir3.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/25/கச்சேரியை-நிறுத்திவிட்டு-பேசலாமே-2869513.html
2869520 வார இதழ்கள் தினமணி கதிர் வேறு இடம் பாருங்கள்! -வி.ந.ஸ்ரீதரன் Saturday, February 24, 2018 05:39 PM +0530 அவர் பிரபலமான நகைச்சுவை எழுத்தாளர். வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டு வெளியூர் சென்று கோயில் ஒன்றில் படுக்கச் சென்றார். அப்போது அங்கே ஒரு துறவி அவரைத் தடுத்து, ""இது என் இடம், வேறு இடம் பாருங்கள்'' என்றார்.
பக்கத்தில் இருந்த மரத்தடியில் படுக்கப் போனார். அங்கே இருந்த துறவி, ""இது என் இடம், வேறு இடம் பாருங்கள்'' என்றார்.
எல்லாம் துறந்த துறவிகளுக்கே இப்படி இட ஆசை இருப்பதைப் பார்த்த அவர் மனம் மாறி, தாம் வேலை பார்த்த வாரப் பத்திரிகையில் மீண்டும் சென்று சேர்ந்தார்.
அந்த எழுத்தாளர் தான் சமீபத்தில் காலமான பாக்கியம் ராமசாமி எனும் புனைப்பெயரில் நகைச்சுவைத் தொகுப்பு எழுதிய ஜ.ரா.சுந்தரேசன்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/24/w600X390/kadhir5.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/25/வேறு-இடம்-பாருங்கள்-2869520.html
2869521 வார இதழ்கள் தினமணி கதிர் தள்ளுபடி விற்பனை! -ராஜேஸ்வரி Saturday, February 24, 2018 05:38 PM +0530 அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் விழா முடிந்ததும், அடுத்து வரும் வெள்ளிக்கிழமையை "கருப்பு வெள்ளி' என அழைக்கின்றனர். அன்றிலிருந்து நான்கு நாள்களுக்கு திங்கள்கிழமை வரை பல துணிக்கடைகளில் 50 சதவீதம் தள்ளுபடி தருகின்றனர். ஏன் என்றால் நன்றி தெரிவிக்கும் விழா சமயம் துணிகளை வாங்கும் மக்கள் பிறகு சில மாதங்களுக்கு கடை பக்கமே செல்வதில்லை. இதனால் மீந்த துணிகளை தள்ளுபடியில் விற்றால் மீண்டும் வந்து வாங்குகிறார்கள். நன்றி தெரிவிக்கும் விழாவின்போது வாங்காதவர்கள் கூட இது சமயம் வாங்குகிறார்களாம்!

]]>
http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/25/தள்ளுபடி-விற்பனை-2869521.html
2869523 வார இதழ்கள் தினமணி கதிர் பேல்பூரி Saturday, February 24, 2018 05:38 PM +0530 கண்டது

(சுங்குவார் சத்திரம் அருகே உள்ள சந்தவேலூர் என்ற ஊரில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)

என்னப்பா இருக்கு

ஒய்.ராபர்ட், ஓச்சேரி.


(நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே ஒரு வாய்க்காலின் பெயர்)

நரி தின்ன வாய்க்கால் 

ந.ரகுநாதன், ரிஷியூர்.



(இராமநாதபுரம் வடக்குத் தெருவில் ஒருவரின் பெயர்)

பி.ஆர்.நவசக்தி

எம்.சுகாரா, ராமநாதபுரம்.


(சென்னை வில்லிவாக்கத்தில் ஓர் ஆட்டோவின் பின்புறத்தில்)

தேவையை உணராமல் போராட முடியாது; போராடத் தெரியாமல் வாழ முடியாது.

எஸ்.செந்தில்குமார், திருமுல்லைவாயில்.


 

கேட்டது

(எரகுடியில் நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தபோது)

""ரொம்பநாள் கழிச்சி உன் வீட்டுக்கு வந்திருக்கேன். வெறும் டீ மட்டும்தானா மச்சி?''
""பின்னே என்ன வேணும்?''
""கடிக்க... ஏதாவது?''
""நாய் இருக்கு... அவிழ்த்து
விடவா?''
துரை.இராமகிருஷ்ணன், எரகுடி.


(விருதுநகர் திருமண மண்டபத்தில் இருவர்)

""உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே''
""எங்கேயும் பார்க்கல... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் முதல் பந்தியிலே ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட்டோம்''
ஏ.எஸ்.ராஜேந்திரன், வெள்ளூர்.

மைக்ரோ கதை

""அன்பை வெளிப்படுத்துகிற மாதிரி எந்தப் பொருளையாவது கொண்டு வாருங்கள்'' என்றார் ஆசிரியர். 
மூன்று மாணவிகள் வெளியே சென்று சிறிது நேரம் கழித்துத் திரும்பி வந்தனர்.
ஒரு மாணவியின் கையில் ஒரு மலர் இருந்தது. இன்னொரு மாணவியின் கையில் வண்ணத்துப் பூச்சி இருந்தது. மூன்றாவது மாணவியின் கையில் எதுவுமில்லை.
""நீ எதுவும் கொண்டு வரவில்லையா?'' என்று கேட்டார் ஆசிரியர். 
அதற்கு அந்த மாணவி, ""பூவைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. பறிக்க மனம் வரவில்லை. வண்ணத்துப் பூச்சியைப் பிடித்தால் அது துன்பப்படுமே என்று நினைத்தேன். அதைப் பிடிக்க மனம் வரவில்லை. ஒரு பறவைக் குஞ்சைப் பார்த்தேன். அதைப் பிடித்துக் கொண்டு நான் வந்துவிட்டால் தாய்ப் பறவை அதைத் தேடுமே என்று நினைத்தேன். அதையும் என்னால் பிடிக்க முடியவில்லை. எனவே வெறும் கையுடன் வந்துவிட்டேன்'' என்றாள். 
""நீ தான் உண்மையிலேயே அன்பு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்ட பெண்'' என்று பாராட்டினார் ஆசிரியர்.
ஆர்.அஜிதா, கம்பம்.
சிலரிடம் சில விஷயங்களைப் புரிய வைக்க 
கஷ்டப்படுவதை விட...
சிரித்துவிட்டு கடந்து செல்வதே மேல்.
எல்.மோகனசுந்தரி, கிருஷ்ணகிரி.


எஸ்.எம்.எஸ்.

கோபம் என்பது ஒரு நிமிடப் பைத்தியம்.

எஸ்.செந்தில்குமார், ஆத்தூர்.

அப்படீங்களா!

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மாரடைப்பு என நோய்கள் சூழ் உலகில் வாழும் ஒருவர், உணவுக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியுள்ளது. நாக்கைக் கட்டுப்படுத்த முடியாத பலர், உணவுக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க முடிவதில்லை. நம் உடலுக்கு எவ்வளவு உணவு தேவை... எந்த உணவை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் தெரிந்து கொண்டால்... அதுவும் துல்லியமாகத் தெரிந்து கொண்டால்... ஓரளவுக்கு இந்தப் பிரச்னையைச் சமாளிக்கலாம். 
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பேனாசோனிக் நிறுவனம் ஒரு மைக்ரே வேவ் அடுப்பின் அளவே உள்ள ஒரு "டேபிள்டாப் கலோரி கவுன்ட்டர்' கருவியை உருவாக்கியுள்ளது. இந்தக் கருவிக்குள் நாம் உண்ணும் உணவை வைத்துவிட்டால், பத்து நொடிகளுக்குள் அந்த உணவில் எவ்வளவு கலோரிகள் அடங்கியுள்ளன என்பதைத் தெரிவித்துவிடும். அதுமட்டுமல்ல, உணவில் எவ்வளவு கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து, புரதச் சத்து அடங்கியுள்ளது என்பதையும் தெரிவித்துவிடும். 
இந்தக் கருவி எப்படி வேலை செய்கிறது? என்று அந்த நிறுவனம் வெளிப்படையாகச் சொல்லவில்லை. எவ்வளவு விலை? எப்போது, எங்கே கிடைக்கும்? ஆகிய தகவல்களையும் இதுவரை வெளியிடவில்லை. 

என்.ஜே., சென்னை-69.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/24/w600X390/kadhir6.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/25/பேல்பூரி-2869523.html
2869526 வார இதழ்கள் தினமணி கதிர் பாடலும் பகாடியும்! -கவிஞர் வெங்கடேசபாரதி Saturday, February 24, 2018 05:38 PM +0530 இசையுணர்வு இதயத்தை இனிமையாக்கும்; துன்பத்தைத் துரத்திவிடும்; சோகத்தைக் கூட சுகமாக்கும். பிள்ளைகளுக்குக் குழந்தை பருவத்திலேயே தாலாட்டுப் பாடலால் இசையுணர்வைத் தாய்மார்கள் தந்தார்கள். இது லோலாக்கு தொங்க மேலாக்கு பறிபோன காலம்! தாலாட்டும் தமிழும் தள்ளப்பட்டு விட்டன!
இசையைப் பள்ளிப் பாடத்திட்டத்திலேயே சேர்த்துப் பயிற்றுவித்தல் வேண்டும். எல்லாரும் இசையை எளிதாகக் கற்றுக் கொள்ளலாம். திரைப்பட இசை மேதைகள் தாங்கள் அமைத்த வர்ணமெட்டுகளால் அதற்கு வழிவகுத்திருக்கிறார்கள்.
ஒரு நல்ல பாடலைப் பாடும்போது, அப்பாடல் எந்த ராகத்தில் அமைந்தது என்று அறிந்து கொள்ளும்போது இதயம் மகிழ்கிறது; இசையறிவும் ஏற்படுகிறது.
"பகாடி' என்னும் ராகத்தைப் பார்க்கலாம். "பகாடி' வடநாட்டு ராகம் என்றாலும் நெஞ்சைத் தாலாட்டக்கூடிய நேர்த்தியானது. பழைய "பாமாவிஜயம்' திரைப்படத்துக்கு எஸ்.வி.வெங்கட்ராமன், சி.ஆர்.சுப்பராமன் ஆகிய இருவரும் இசையமைத்திருந்தனர். திரைப்படங்களில் வடநாட்டு ராகங்களை முதலில் அதிகம் மெட்டமைத்தவர் எஸ்.வி.வெங்கட்ராமன்.
"பாமாவிஜய'த்தில் 

"இன்பம் பொங்கும் நன்னாளிலே
உன்தன் ஜன்ம பொன்னாளிலே
மணிவண்ணனா கண்ணா வா'

எனும் கம்பதாசன் பாடலுக்கு வெங்கட்ராமன் பகாடி ராகத்தில் மெட்டமைத்துள்ளார். 

"அழகு நிலா' என்ற படத்தில் சித்தூர் வி.நாகையா வாயசைத்து நடிக்கிறார். குட்டி பத்மினியும் குழந்தையாகி துறுதுறுவென நடக்கிறார். மெல்லிசைவாணர் பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடுகிறார்.

அந்தப் பாடல்:

"சின்ன சின்ன ரோஜா
சிங்கார ரோஜா
அன்னநடை நடந்து - அழகாய்
ஆடிவரும் ரோஜா'

இந்தப் பாடலுக்கு திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் பகாடி ராகத்தில் மிக அற்புதமாக மெட்டமைத்துள்ளார்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பகாடி ராகத்தில் காலத்தை வெல்லும் பலவர்ண மெட்டுகளைப் போட்டுள்ளார். அதில் "கர்ணன்' திரைப்படத்தில் அமைத்த பகாடி ராக மெட்டும், கவியரசர் கண்ணதாசனின் பாடலும் சுசீலாவின் குரலும் சேர்ந்து வரும் நேரெமல்லாம் செவியில் தேன் பாய்கிறது. சிந்தையில் சுகம் தோய்கிறது, விழியில் நீரூறுகிறது.

"கண்ணுக்குக் குலமேது - கண்ணா!
கருணைக்கு இனமேது
விண்ணுக்குள் பிரிவேது - கண்ணா
விளக்குக்கு இருளேது'

எனும் பல்லவி, இரண்டாவது சரணத்தில் வரும் 

"தருபவனில்லையோ கண்ணா நீ
தருமத்தின் தாயே கலங்காதே' 

எனும் வரிகளை சுசீலாவின் குரலில் கேட்கும்போது, நிலவூறித் ததும்பும் வழிகளும் நீரூறித் ததும்புமல்லவா?

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/24/w600X390/kadhir7.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/25/பாடலும்-பகாடியும்-2869526.html
2869527 வார இதழ்கள் தினமணி கதிர் சிரி... சிரி... சிரி... சிரி... Saturday, February 24, 2018 05:37 PM +0530 வந்தவர்: சார்... எங்க வீட்டு வால் கிளாக்கை காணலை.
போலீஸ்: இதுக்கு போய் ஏன் ரொம்ப வருத்தப்படுறீங்க?
வந்தவர்: வாலோட காணாமப் போயிடுச்சு சார்.


""எங்க வீட்ல கேபிள் டிவியை கட் பண்ணிட போறேன்''
""ஏன் பசங்க படிக்கலையா?''
""இல்லை... என் மனைவி வீட்டுல சமைக்காம சீரியல் பார்த்துனே இருக்கா''


""உங்க பையனுக்கு எங்க நீச்சல் சொல்லித்தர்றீங்க?''
""தண்ணீலதான்''.


""டாக்டர்... ஞாபகமறதி வியாதிக்கு நீங்க கொடுத்த மாத்திரையைச் சாப்பிட்டா ஒரே தூக்கமா வருது''
""ஸôரி... நான் ஞாபகமறதியா தூக்க மாத்திரையைக் கொடுத்துட்டேன்''

வி.சாரதி டேச்சு, சென்னை-5.

 

""நான் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி "பிச்சை'ன்னு ஒரு படம் எடுத்தேன்''
""இப்ப என்ன செய்றீங்க?''
""அதையே மறுபடியும் ரோட்டுல எடுத்துட்டுருக்கேன்''


""எங்கப்பா கல்யாணத்துக்கு முன்னாடி விட்டில் பூச்சியா பறந்துட்டு இருந்தாராம்''
""இப்ப?''
""வீட்டில் பூச்சியாயிருக்கார்''

லட்சுமி ஆவுடைநாயகம், சென்னை-91.

 

""எங்கப்பா கல்யாணத்துக்கு முன்னாடி விட்டில் பூச்சியா பறந்துட்டு இருந்தாராம்''
""இப்ப?''
""வீட்டில் பூச்சியாயிருக்கார்''

லட்சுமி ஆவுடைநாயகம், சென்னை-91.

 

 

""சிங்கப்பூர் சுத்தி பார்த்தையாடா? எப்படி இருக்கு?''
""எல்லாம் நம் ஊர் சுத்தி மாதிரி இரும்புலதான் இருக்கு''

அ.காயத்திரி தேவி, சென்னை-19.

 

""காஞ்சிபுரத்தில இருந்து பொண்ணைக் கட்டிக்கிட்டு வந்தது தப்பா போச்சு''
""ஏம்ப்பா''
""எதுக்கெடுத்தாலும் "பட்டுபட்டு'ன்னு பேசுறா''
 

தீ.அசோகன், சென்னை-19.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/24/w600X390/kadhir8.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/25/சிரி-சிரி-சிரி-சிரி-2869527.html
2869528 வார இதழ்கள் தினமணி கதிர் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வயோதிகத்தில் ஏற்படும் வாயு உபாதை! Saturday, February 24, 2018 05:37 PM +0530 என் வயது 82. சென்ற 5 வருடங்களாக என் கால் பாதங்கள் இரண்டும் இறுக்கமாக இருக்கின்றன. சிறிது சிறிதாகக் கூடி, தற்சமயம் 4 மாதங்களாக அதிக இறுக்கமாகவும் பாதத்தின் அடிப்பகுதி தோல் மென்மையாகவும், சிறு அரிசி கிடந்தால் கூட, அதன் மீது நடந்தால் வலி கூடுகிறது. எழுந்து உடனடியாக நடக்க முடியவில்லை. இது எதனால்? குணப்படுத்த ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா?

அ.சந்திரகுருசாமி, மதுரை. 

முதுகுத் தண்டுவடத்தின் கீழ்ப்பகுதியிலிருந்து புறப்படும் நரம்புகள், கிளைகளாக மாறி கால்களின் வழியே, பாதம் வரை செல்கின்றன. இந்த நரம்புகளின் ஊட்டத்தைப் பெறச் செய்வதற்கும், அவற்றின் செயல் திறனை மழுங்கடிக்கச் செய்யும் செயலையும் வாயுவே செய்வதாக ஆயுர்வேதம் எடுத்துரைக்கிறது. நிலம் மற்றும் நீரின் தன்மையே ஊட்டத்தைத் தரும், வாயுவும், ஆகாயமும் அவற்றை வற்றச் செய்யும். நெருப்பானது இவற்றை உணவு மற்றும் செயல் வடிவங்களின் வழியாகப் பெறும் போது, அவற்றைப் பக்குவப்படுத்தி, சேர வேண்டிய பகுதிகளுக்கு, பிரித்து எடுத்துக் கொடுக்கும் பணியை ஆற்றுகிறது. ஆக, பஞ்ச பௌதிக சித்தாந்தத்தின் அடிப்படையின் மூலமாகத்தான் மனிதர்கள் ஊட்டத்தைப் பெறுவதையும் அவற்றை இழுப்பதையும் அடைகிறார்கள். உடல் எனும் இந்த வாகனத்தின் எஜமானனாகவும், ஓட்டியாகவும் ஆன்மா இருந்து கொண்டு, செயல் மூலம் பெரும் கர்ம வாசனைகளை சூட்சுமமான மனதின் வழியாகச் சம்பாதித்து, உடலை விட்டுப் பிரியும் போது, செயலுக்கு ஏற்ப, அடுத்த புதிய உடலைத் தேடிச் செல்கிறது.
மேற்குறிப்பிட்ட நரம்புக் கூட்டங்களின் செயல்
திறனை மேம்படுத்தும் வகையில், தலை மற்றும் முதுகுத்தண்டுவடப் பகுதிகளை வலுவூட்டும், நிலம் மற்றும் நீரின் சேர்க்கையை நீங்கள் பெற வேண்டிய அவசியம் இருக்கிறது. பிரச்னையானது பாதத்தில் தென்பட்டாலும், அங்கு மட்டுமே சிகிச்சை செய்தால் போதாதா? என்று கேட்டால், போதாது என்றே சொல்ல வேண்டும். இருந்தாலும் அப்பகுதிக்கான உணர்வுகளைத் தரும் நரம்புக் கிளைகளையும் நாம் உதாசீனப்படுத்தக் கூடாது. அதனால் இப்பிரச்னையானது ஒரு பகுதியில் தென்பட்டாலும், அதன் ஆளுமையைக் கொண்ட பிற பகுதிகளுக்கும் சேர்த்தே சிகிச்சை செய்தால் தான், பலனைப் பெறலாம்.
அந்த வகையில், தலைக்கு க்ஷீரபலாதைலம் எனும் மூலிகைத் தைலத்தை, வெது வெதுப்பாகத் தலையில் 1/2 - 3/4 மணி நேரம் ஊறவிடுவதையும், முதுகுத்தண்டு
வடப் பகுதி முழுவதையும் பிரபஞ்சன விமர்தனம் குழம்பு எனும் மூலிகைத் தைலத்தால், வெது வெதுப்பாக இதமாகத் தேய்த்து அதே தைலத்தை பஞ்சில் முக்கி தண்டுவடப் பகுதி முழுவதும் இளஞ்சூடாக 1/2 - 3/4 மணி நேரம் ஊற வைப்பதாலும் வாயுவினுடைய வாயு - ஆகாசம் எனும் ஆதிக்கத்தின் அளவைக் குறைக்கலாம். வெளிப்புற சிகிச்சையின் வெளிப்பாடாக, நரம்புகளிலுள்ள வாயு அகன்றாலும், ஊட்டத்திற்கு இவை போதுமானதாக இருப்பதில்லை. அதனால், உட்புற ஊட்டத்தை நீங்கள் நிலம் மற்றும் நீரின் வாயிலாக, பசித்தீயின் செரிமான சக்தியினால் குடல் வழியாக உட்செலுத்தி, பாத நரம்புகளை வலுப்படுத்த வேண்டிய அவசியமும் இருக்கிறது. அந்த வகையில், விதார்யாதி எனும் நெய் மருந்தை, நீராவியில் உருக்கி, காலை மாலை சுமார் 15 மிலி அளவில் தொடர்ந்து சாப்பிட்டு வர, பாத நரம்புகள் வலுப்பட ஏதுவாகயிருக்கும். செரிமானத்தில் கனமான இந்த நெய் மருந்தால், பசித்தீயானது சற்றே தடுமாறக் கூடும் என்பதால், இந்த நெய் மருந்தை சாப்பிட்ட பிறகு, அதை எளிதாக செரிக்கச் செய்வதற்கு சிறிது சூடான தண்ணீர் பருகவும்.
ஹிங்குவசாதி எனும் சூரண மருந்தை 1/2 - 1 ஸ்பூன் அளவில், சூடான சாதத்துடன் கலந்து, 5 மிலி இந்துகாந்தம் எனும் நெய் மருந்தை உருக்கிச் சேர்த்து காலையில் முதல் உருளையாக சாப்பிட்டு வர, எதையும் செரிக்கும் சக்தியை பசித்தீ பெற்றுவிடும். மேலும் குடலில் வாயு சேராமல் தடுக்கவும் செய்யும்.
பாத நரம்புகளை நேரடியாக வலுப்படுத்த, க்ஷீரபலா 101 எனும் சொட்டு மருந்தை, 10 - 15 சொட்டுகள் 100 மி.லி. சூடான பாலுடன், காலை இரவு உணவிற்கு 1/2 மணி முன் சுமார் 3 மாத காலம் சாப்பிடலாம். வாத மர்த்தனம் குழம்பு எனும் தைல மருந்தை கால் பாதங்களில் இதமாகத் தடவித் தேய்த்து சிறிது நேரம் ஊறிய பிறகு, உப்பு கலந்த வெந்நீரில் பாதங்களை 10 - 15 நிமிடங்கள் வைத்திருந்து, துடைத்து விடுவதும் நல்லதே.
உணவில் வாயுவை அதிகரிக்கச் செய்யும் பருப்பு, கொண்டைக் கடலை, பச்சைப்பயறு, வேர்க்கடலை, கடலை எண்ணெய், உருளை, வாழை, மொச்சை, கொத்தவரை, காராமணி, சேப்பங்கிழங்கு போன்றவற்றைத் தவிர்க்கவும். இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவைகளை மிதமாகச் சேர்க்கலாம். மேற்குறிப்பிட்ட வாயுப்பொருட்களைச் சாப்பிட நேர்ந்தால், வெது வெதுப்பான நிலையில் சாப்பிடலாம். மறுபடியும் சூடாக்கி சாப்பிடக் கூடாது. குளிர்ந்த நீரில் குளிப்பதை விட, ஆயுர்வேத மூலிகைத் தைலங்களை உடலில் தடவி, நீவிவிட்ட பிறகு, இதமான வெந்நீரில் குளிப்பதே நல்லது. குஷன் போன்ற பாத அணிகளை அணிவதே நல்லது.
ஆயுர்வேத மருந்துவமனைகளில் சில நாட்கள் தங்கியிருந்து, உடலுக்கும் தலைக்கும் மசாஜ் செய்து, நீராவிக் குளியல் செய்வதால் வயோதிகத்தில் ஏற்படும் பல வாயு உபாதைகளைக் குறைக்க முடியும். 
(தொடரும்)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/24/w600X390/kadhir9.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/25/ஆயுள்-காக்கும்-ஆயுர்வேதம்-வயோதிகத்தில்-ஏற்படும்-வாயு-உபாதை-2869528.html
2865292 வார இதழ்கள் தினமணி கதிர் "பேட்மேன்' முருகானந்தம்   Tuesday, February 20, 2018 12:10 PM +0530 பெண்கள் மாதவிலக்கு காலத்தில் பயன்படுத்தும் சானிடரி நாப்கினை குறைந்த விலையில் சுகாதாரமான முறையில் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்று முயற்சித்து வெற்றி பெற்ற தமிழர் அருணாசலம் முருகானந்தம் கதை தான், தற்போது பாலிவுட் இயக்குநர் பால்கி இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்து வெளியாகியுள்ள ஹிந்தித் திரைப்படம் "பேட்மேன்'.
 கோவையைச் சேர்ந்த முருகானந்தம் 1998-ஆம் ஆண்டு திருமணம் செய்த பின் தன் மனைவி சாந்தி, மாதவிலக்கு காலங்களில் கடைகளில் விற்கும் நாப்கினை வாங்கினால் செலவு அதிகமாகுமென்று கருதி, பழைய துணிகளைப் பயன்படுத்துவதைப் பார்த்தார். நாமே சொந்தமாக நாப்கின் தயாரித்தால் என்ன என்று நினைத்த முருகானந்தம், சில மருத்துவ மாணவர்களின் ஆலோசனைகளைக் கேட்டார். அவர்களும் ஒத்துழைப்பு தர மறுத்தனர்.
 சில பெண் ஊழியர்கள் உதவ முன்வந்தாலும், மாதவிலக்கு பிரச்னையை வெளிப்படையாக முருகானந்தத்துடன் விவாதிக்கத் தயங்கினர். பின்னர் இவரே ஆட்டு ரத்தம் நிரம்பிய செயற்கை கர்ப்பப்பை ஒன்றை உருவாக்கி, தன் அடிவயிற்றுப் பகுதியில் இறுக்கமாகக் கட்டி, வெளியேறும் ரத்தத்தை நாப்கின்கள் எந்த அளவுக்கு உறிஞ்சுகிறது என்பதைக் கணக்கிட்டார். கிராமப்பகுதிகளில் உள்ள பெண்கள் தான் இப்பிரச்னையில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றறிந்த முருகானந்தம், தன் ஆராய்ச்சி மூலம் தயாரித்த நாப்கின்களை மருத்துவ மாணவர்கள் மூலம் இலவசமாக விநியோகித்தார்.
 இரண்டாண்டு ஆராய்ச்சிக்குப் பின் குறைந்த விலையில் சுகாதாரமான நாப்கின்களைத் தயாரிக்க வெளிநாட்டு இயந்திரங்களைத் தருவிக்க பணம் அதிகம் தேவைப்படுமென கருதிய முருகானந்தம், தானே சொந்தமாக தயாரிப்பு இயந்திரம் ஒன்றை வடிவமைத்தார். இதற்கான செலவு ரூ.65 ஆயிரம் மட்டுமே.
 2006-ஆம் ஆண்டு சென்னை ஐஐடிக்கு சென்று தன்னுடைய கண்டுபிடிப்பை நேஷனல் இனோவேஷன் பவுண்டேஷனின் "கிராஸ்ரூட்ஸ் டெக்னலாஜிகல் இனோவேஷன்' விருதுக்கு பதிவுக்கு செய்தார். இவரது முயற்சி வெற்றி பெற்றது.
 ஜெயஸ்ரீ இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் இவரது ஆலோசனைப்படி நாப்கின்களைத் தயாரித்து விற்பனை செய்ய முன்வந்தது. நாடு முழுவதும் பல்வேறு கிராமங்களில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் இவரது கண்டுபிடிப்பை அடிப்படையாக வைத்து நாப்கின்களை தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் வருவாய் ஈட்டினர்.
 இவரது அயராத முயற்சியைப் பாராட்டி அமித்விர்மணி, எடுத்த ஆவணப்படம் இந்தியா முழுவதும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அவருக்கு பல்வேறு விருதுகளும் பாராட்டுகளும் குவிந்தன. மத்திய அரசும் முருகானந்தத்துக்கு "பத்மஸ்ரீ விருது' வழங்கி கெüரவித்துள்ளது. பாலிவுட் இயக்குநர் பால்கியும், அக்ஷய்குமாரை வைத்து "பேட்மேன்' என்ற தலைப்பில் திரைப்படம் எடுத்து இவரது புகழைப் பரப்பியுள்ளார்.
 இதுகுறித்து முருகானந்தம் கூறுகையில், ""மாதவிலக்கு என்பது இயற்கையானது. ஒதுக்கப்பட வேண்டிய விஷயமல்ல. இது குறித்து பெண்களிடையே சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் சுகாதாரத்தையும் அறிவுறுத்த வேண்டியது அவசியம். கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் தாங்களாகவே முன்வந்து இப்பிரச்னை குறித்து விவாதிப்பது நல்ல மாற்றமாகும். சமூகத்தில் மேலும் மாற்றம் செய்ய விரும்பினால் நீங்கள் விவசாயிகளுக்கு உதவ முன் வாருங்கள். சில ஆண்டுகளுக்குப்பின் நம் தேவைக்கான பொருள்கள் அனைத்தும் கிடைக்கலாம். ஆனால் உணவு கிடைக்காது. உணவு உற்பத்தியை அதிகரிக்க என்னிடம் சில ஆலோசனைகள் உள்ளன. அதன் மூலம் விவசாயத் துறையில் விரைவில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்'

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/17/w600X390/kd125.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/18/பேட்மேன்-முருகானந்தம்-2865292.html
2865265 வார இதழ்கள் தினமணி கதிர் குடிசையலிருந்து கூடுகளுக்கு... மாலன் Sunday, February 18, 2018 12:00 AM +0530 வீழ்வேன் என்று நினைத்தாயோ? 8 

லீகுவான் யூவின் கனவுதான் என்ன?
ஒரு தேசம் உறுதியாக நிற்க (Stable) வேண்டுமானால் அதில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் உறுதியாக நிற்கும் வலிமை கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் உறுதியாக இருக்க வேண்டுமானால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்தமாக வீடு இருக்க வேண்டும். இது லீ யின் சிந்தனைகளில் ஒன்று.
சிந்தனை சரிதான். ஆனால் நடைமுறையில் சாத்தியமா?
நடைமுறையில் சாத்தியமில்லை என்றுதான் மற்ற நாடுகள் நினைத்திருக்கும். ஆனால் ஏன் சாத்தியமாக்கக் கூடாது என்று லீ நினைத்தார். சிங்கப்பூரின் வெற்றி மந்திரங்களில் ஒன்று இந்த Why not?, அதாவது "ஏன் கூடாது?'. ஏன் என்ற கேள்வி சில நேரங்களில் சோர்வளிக்கும். ஏன் கூடாது என்ற கேள்வி ஊக்கமளிக்கும் என்பது உளவியல்.
ஒவ்வொரு நாடும் வீட்டுப் பிரச்னையை ஒவ்வொரு விதத்தில் அணுகி வந்திருக்கின்றன. சோஷலிச நாடுகள், நாடு ஒட்டுமொத்தமாகப் பொருளாதார வளர்ச்சி காணும் போது வீட்டுப் பிரச்னை தானாகத் தீரும் எனக் கருதின. முதலாண்மை (Capitalistic) நாடுகள் தனிமனிதனின் பொருளாதாரம் மேம்படும்போது அவரவர்களே வீட்டுப் பிரச்னையைத் தீர்த்துக் கொள்வார்கள் என்று கருதின.
சோஷலிஸ்ட்டாகவோ, முதலாண்மைவாதியாகவோ இல்லாத நடைமுறை வாதியான லீ, வீடுகளைக் கட்டுவது மூலம் நாட்டைக் கட்ட முடியும் என நம்பினார். அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே அவரது சிந்தனை "வீட்டுடமைச் சமூகம்தான்' (Home owning society).
குடியரசாக மலர்வதற்கு முன்பு, சுய ஆட்சி அரசு (பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டின் கீழ், குடிமைப் பணிகளை நிறைவேற்றிக் கொள்ளும் அதிகாரம் கொண்ட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு) உருவான காலத்திலேயே அதற்கான வேலைகளைத் துவக்கினார் லீ. 1959-இல் சுய ஆட்சி அரசுக்காக நடந்தத் தேர்தலில் லீயின் கட்சி பிரம்மாண்ட வெற்றி பெற்றிருந்தது (மொத்தமுள்ள 51 இடங்களில் 43 இடங்கள்); லீ பிரதமானார்.
அப்போது, 1960-இல், அவரது அரசு வீட்டு வசதிக் கழகத்தை உருவாக்கியது. தெளிவான இலக்கு, எளிதான நடைமுறை என்ற இரு அம்சங்கள் அதன் ஆணி வேர்.
ஆண்டுக்கு 10 ஆயிரம் வீடுகள் என்ற அடிப்படையில், 10 ஆண்டில் லட்சம் வீடுகள் அரசு கட்டும். அவை தவிர, ஆண்டுக்கு 2,500 வீடுகள் கட்டும் பொறுப்பு தனியார் துறைக்கு வழங்கப்படும். இது இலக்கு. வீடு கட்டுவதற்கான நிலத்தை கையகப்படுத்துவது, அனுமதி அளிப்பது, கட்டப்பட்ட வீடுகளை ஒதுக்கீடு செய்வது என அமைக்கப்பட்ட 35 கமிட்டிகளைக் கலைத்துவிட்டு ஓர் அமைப்பின் கீழ் அவற்றைக் கையாள்வது. இது எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறை.
திட்டம் காகிதத்தில் பிரமாதமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஆண்டுக்குப் பத்தாயிரம் வீதம் பத்தாண்டில் லட்சம் வீடுகள் கட்டுவது என்றால் நிலத்திற்கு எங்கே போவது? டைமண்ட் வடிவத்தில் உள்ள சிங்கப்பூரில் மிக விலகிய இரு இடங்களுக்கிடையே தூரமே 52 கிலோ மீட்டர்கள்தான்.
நிலமில்லாவிட்டால் என்ன? வானம் இருக்கிறதே! அகலமாக வளர்வதற்கு பதிலாக உயரமாக வளரலாம் என முடிவெடுக்கப்பட்டது. 12 மாடி, 16 மாடி என அடுக்குமாடி வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டது. 
பிரமிக்கத்தக்க விதத்தில் வீ.வ.க. செயல்பட்டது. உருவாக்கப்பட்ட இரண்டாண்டுகளில் 26,168 வீடுகளை அது கட்டி முடித்தது. வீ.வ.க. உருவாவதற்கு முன் வீடுகள் கட்ட "சிங்கப்பூர் வளர்ச்சி அறக்கட்டளை (Singapore Improvement Trust - SIT) என்ற அரசு ஆதரவு பெற்ற நிறுவனம் ஒன்றிருந்தது. 32 ஆண்டுகளில் SIT கட்டிய வீடுகளின் எண்ணிக்கையை வீ.வ.க. இரண்டாண்டுகளில் கட்டி முடித்தது! ஐந்தாண்டுகளில், அதாவது சிங்கப்பூர் குடியரசாக மலர்ந்த 1965-இல், அதன் இலக்கான 50 ஆயிரம் வீடுகள் என்பதைத் தாண்டி, 53 ஆயிரம் வீடுகளை கட்டி முடித்திருந்தது.
1965-ஆம் ஆண்டு உலக அளவில், சோவியத் யூனியன், ஜெர்மனிக்கு அடுத்தபடியாக வீட்டுவசதி விஷயத்தில் முன்னணியில் நின்றது சிங்கப்பூர். அமெரிக்காவைவிடவும் மேலான நிலையில். பிரான்ஸ், நெதர்லாந்து, மற்ற ஐரோப்பிய நாடுகளைவிடவும் சிறப்பான நிலையில் அது இருந்தது.
சரி, வேக வேகமாகக் கட்டப்பட்ட வீடுகளின் தரம் எப்படி இருந்தது? கம்பத்திலிருந்து அடுக்குமாடி வீடுகளுக்கு குடிபெயர்வதில் இருந்த உளச்சிக்கல்களைப் பின்னணியாகக் கொண்ட, "நினைவுகளின் கோலங்கள்' நாவலை எழுதிய சிங்கை இளங்கண்ணன் அந்த அடுக்குமாடி வீடுகள் பற்றியும் எழுதியிருக்கிறார்:
"வானோங்கி வளர்ந்திருந்த கட்டடங்களை நெருங்கியதும் ஊர்தி நின்றது'.
வேலுவும் எழிலரசியும் இறங்கிக் கட்டடத்தை அண்ணாந்து பார்த்தனர். முத்தம்மாள் "அதோ புடவை காயுதே பத்தாவது மாடி, அதுதான் நம்ப வீடு. அடுத்தாப் போலவே நம்ப மரகதத்திற்கும் வீடு கிடைச்சிருக்கு'' என்றவாறு நடந்தாள். சொல்லி வைத்தாற்போல் மின்தூக்கியும் வந்து நின்றது. மின்தூக்கி வழி எல்லோரும் வீட்டை அடைந்தனர். 
வீடு அழகாக இருந்தது. சலவைக்கல் பதிக்கப்பட்டிருந்தது. புதிய தொலைக்காட்சிப்பெட்டியும் வாங்கிப் போட்டிருந்தனர். சாமான் சட்டு முட்டுகள் அது இது என்றிருந்தன. 
சமையல் கட்டு தூய்மையாகவும் அது இருக்க வேண்டிய இடத்திலும் இருந்தது. வேலு சமையலறையைப் பார்த்துவிட்டு, "என்ன இது நம்ம சமையலறைதானா?'' என்று பகடி மேலிடக் கேட்டான். 
அரசு கைப்பணத்தைப் போட்டோ, கடன் வாங்கியோ, மூலதனம் திரட்டியோ ஆயிரக்கணக்கில் வீடுகளைக் கட்டிவிடலாம். ஆனால் அவற்றை இலவசமாகக் கொடுக்க முடியாது. அப்படிக் கொடுத்தால் மக்களுக்கு அதன் அருமை புரியாது என்பது மட்டுமல்ல, தொடர்ந்து அரசால் வீடுகள் கட்ட முடியாது. பொருளாதாரம் முடங்கி ஓர் இடத்தில் மொத்தத் திட்டமும் தடைப்பட்டு நிற்கும். ஆண்டுக்குப் பத்தாயிரம் வீடுகள் என்ற இலக்கை அடைய முடியாது. 
இதற்குத் தீர்வு, கட்டப்பட்ட வீடுகளை விற்பதுதான். விற்கலாம்தான். ஆனால் யார் வாங்குவார்கள்? குடிசைகளில் வாழுகிற மக்களிடம் வாங்கும் சக்தியிருக்குமா?
அங்குதான் ஒரு புரட்சிகரமான அணுகுமுறையை அரசு மேற்கொண்டது. அதுதான் மற்ற பல நாடுகளில் வெற்றி காணாத வீட்டு வசதித் திட்டம், சிங்கப்பூரில் வெற்றி கண்டதற்குக் காரணம். 
அது - வீடுகளுக்குக் குடிபெயர்வோர், வீட்டின் விலையில் 20 சதவீதம் முதல் தவணையாகக் கொடுக்க வேண்டும். வீட்டின் மதிப்பு 4000 வெள்ளி (சிங்கப்பூர் டாலர்) என்றால் 800 வெள்ளி முதலில் கட்ட வேண்டும். மீதமுள்ள தொகையை வீ.வ.க. மிகக் குறைந்த வட்டியில் கடனாகக் கொடுக்கும். அந்தக் கடனுக்கு மாதா மாதம் தவணை கட்டி வர வேண்டும், வாடகை செலுத்துவதைப் போல. 
சரி, கையில் ரொக்கம் இருந்தால்தானே கொடுக்க முடியும்? கையிலிருந்து கொடுக்க வேண்டாம். சேமிப்பாக இருக்கும் வருங்கால வைப்புத் தொகையிலிருந்து (பிராவிடண்ட் பண்டிலிருந்து) அந்த 20 சதவீதத்தை எடுத்துக் கொள்ளச் சொல்லலாம். மாதத் தவணையைக் கூட அதில் பிடித்துக்கொள்ளச் சொல்லலாம். இதற்கு வகை செய்யும் விதமாக பிராவிடண்ட் பண்ட் சட்டம் 1968-இல் திருத்தப்பட்டது. 1970-இல் நாற்பதாயிரம் குடும்பங்கள் சொந்த வீடு வாங்கியிருந்தன!
அப்படியானால் தவணை சுலபமானதாக இருந்ததா?
சிங்கப்பூர் வானொலியில் தொடர்ந்து 52 வாரங்கள் ஒலிப்பரப்பான நாடகம், "அடுக்கு வீட்டு அய்யாசாமி'. அதை எழுதியவர் சிங்கப்பூரின் முன்னணி எழுத்தாளரான புதுமைதாசன் என்ற பி.ஏ. கிருஷ்ணன். அதிலிருந்து ஒரு சிறிய துண்டு உங்களுக்கு இதற்கான விடையைச் சொல்லும்:
சாந்தம்மாள்: இந்த வீடு எவ்வளவு வசதியா இருக்கு பாத்தீங்களா? ஹாலு சமையலறை பாத்ரூமு எல்லாம் இருக்கு. நம்ப பழைய எடம் கம்பம். அந்தக் கம்பத்து வீட்டிலதான் இருப்பேன்னு பிடிவாதம் பிடிச்சீங்களே, இப்ப இந்த இடம் எப்படி இருக்கு? 
ஆரோக்கியசாமி: (இருமல்) அங்கே எவ்வளவு வாடகை கொடுத்த? பதினைஞ்சி வெள்ளி. இங்கே எவ்வளவு? நாற்பத்தி ஆறரை. தண்ணிக் காசு, விளக்குக் காசையெல்லாம் சேர்த்து அம்பத்தி அஞ்சைத் தாண்டிடும். 
சாந்தம்மாள்: இது அடுக்குமாடி வீடுன்னதால வாடகை நாற்பத்தி ஆறரையோட போச்சி. இந்த மாதிரி வீடுங்களுக்குத் தனிப்பட்டவங்க என்ன வாடகை சொல்றாங்கனு கேட்டுப் பாருங்க. எம்பது நூறுனு சொல்லுவாங்க. 
ஆரோக்கியசாமி: வசதினா எம்பது நூறுதான் கொடுக்கணுமா? அதைப் பதினஞ்சோட வைச்சுக்கப்படாதா? 

நடுத்தர வர்க்கத்து மக்களுக்கு எத்தனை சலுகைகள் கொடுத்தாலும் பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கும் என்பதுதான் உலகம் முழுதும் நாம் காணும் காட்சி.
சரி, ஒரு முக்கியமான கேள்வி. பிஎஃப்பிலிருந்து வீட்டுக் கடனுக்குப் பணத்தை எடுத்துக் கொள்ளும் விதமாக சட்டம் திருத்தப்பட்டது என்று சொல்கிறீர்களே, தொழிற்சங்கங்கள் சண்டைக்கு வரவில்லையா?
அங்குள்ள தொழிற்சங்கங்களின் அணுகுமுறையே தனி. 
அது- அடுத்த வாரம் 


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/17/w600X390/kd1.jpg குடியிருப்புகளுக்கு மத்தியில் லீ http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/18/குடிசையலிருந்து-கூடுகளுக்கு-2865265.html
2865267 வார இதழ்கள் தினமணி கதிர் சிரி... சிரி... சிரி... சிரி...  DIN DIN Sunday, February 18, 2018 12:00 AM +0530 • "எதுக்கு உங்க பையனுக்கு ரோடு மேப் வாங்கித் தர்றீங்க?''
"அவன் தப்பான வழில போயிட கூடாதே... அதான்''
வி.பார்த்தசாரதி, சென்னை-5.

• "எந்த அடியும் படாம எப்படி கட்சி விட்டு கட்சி தாவுறீங்க?''
"அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடி நான் சர்க்கஸ் கம்பெனியில் இருந்தேன்''
கி.திலகர், ஈரோடு.

• "என் மனைவி இப்போல்லாம் என் மானத்தைக் காப்பாத்திடுறா''
"எப்படி?''
"நேரா திட்டாமல் வாட்ஸ் அப்ல திட்டி அனுப்பிடுவா''
பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.

• "அது எப்படி மன்னா ஆயுத ஊழல் தங்கள் ஆட்சியில் நடந்திருக்கவே வாய்ப்பில்லை என்கிறீர்கள்?''
"போர் தளவாட பொருள்களை இதுவரை வாங்கியதே இல்லையே''
சி.கார்த்திகேயன், சாத்தூர்.

• "எங்க மேனேஜர் டேபிள்ல இருக்கிற கம்ப்யூட்டர் மவுஸ் ரொம்ப பெரிசா இருக்கு''
"நல்லா பாரு... ஒருவேளை பெருச்சாளியா இருக்கும்''
வி.பார்த்தசாரதி, சென்னை-5.

• "வினாத்தாள் அவுட் ஆகியும் உன்னால பாஸ் பண்ண முடியலையே... ஏன்?''
"வினாத்தாள் தானே அவுட் ஆச்சு... விடை அவுட் ஆகலையே''
கி.திலகர், ஈரோடு.

• "கல்யாணத்துக்கு முன்னாடி இளவரசிங்கிற பெண்ணை காதலிச்சதை என்கிட்ட ஏன் மறைச்சீங்க?''
"உன் கிட்டத்தான் சொன்னேனே?''
"எப்ப?''
"நீ இளவரசி மாதிரி இருக்கேன்னு சொல்லல?''
கே.பிரசன்னா, கும்பகோணம்.

• "ஏன்டா லேட்டு?''
"நான் வர்றதுக்குள்ளே நீங்கதான் சார் பெல் அடிச்சிடுறீங்க?''
எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/17/w600X390/kd2.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/18/சிரி-சிரி-சிரி-சிரி-2865267.html
2865268 வார இதழ்கள் தினமணி கதிர் வயிறுதாரி DIN DIN Sunday, February 18, 2018 12:00 AM +0530 பேரன் சோமேஸ்வரனுக்குப் பூணூல் கல்யாணம் அமோகமா நடந்துண்டிருக்கு.
எங்கள் வீட்டுப் பெரிய ஹால். எத்தனையோ கல்யாணம் காட்சிகளெல்லாம் கண்ட விஸ்தாரமான ஹால் இது.
 இருநூறு பேர்வரை உட்காரலாம். இதுதவிர, பின்கட்டுல நூறு பேருக்கு மேலே ஒரே நேரத்துல இலை போட வசதியா இன்னொரு ஹால் இருக்கு. போறாததுக்கு மாடியில பெரிய ரூம். அதுக்கும் மேல மைதானம் மாதிரி ஒரு மொட்டை மாடி. பந்தல் போட்டால் ஒரு பட்டாளத்தையே தங்க வைக்கலாம். ஜமீன் கிட்டப்பா வீடுன்னா சும்மாவா?
 வீட்டு விசேஷம் எதுவானாலும் இதே எடத்துலதான். என் நாத்தனார்கள் கல்யாணம், எங்களோட அறுவது கூட இங்கேதான். எண்பது பண்ணிக்கிறதுக்குத்தான் அவர் இல்லை.
 பொண்ணு சுகுணாவோட கல்யாணமும் இங்கேதான் பண்றதா இருந்து, சம்பந்திகள் கேட்டுண்டதால மாயவரத்துல ஒரு கல்யாண மண்டபத்துல வெச்சிண்டோம். பொண்ணைக் கொடுத்திருக்கிறது என்னவோ இதே ஊர் பக்கத்துத் தெருவுல இருக்கிற எல்.ஐ.சி. ஆபீசர் பையன் விசுவுக்குத்தான். அவாளுக்கு டவுண் கல்யாண மண்டபத்துல வெச்சுக்கணும்னு ஆசை வந்துடுத்து. பொண்ணைப் பெத்தவாளுக்கு ஏதாவது அதிகப்படி செலவு வெக்கறதிலே ஒரு சந்தோஷம். பொண்ணுக்குக் கல்யாணம் ஆகி, அந்தப் பொண்ணோட வயத்துல என் பேரன் பொறந்து அதைத் தொட்டிலில் போட்டுப் பேர் வைச்சதும் இங்கேதான்.
 இந்த சோமேஸ்வரன் அவன் அம்மா வயத்துலே இருக்கச்சே, என் பையன் சங்கரசுப்புவையும், மாட்டுப்பொண்ணு சுசீலாவையும் மணையில உட்கார்த்திவெச்சு "ஜே ஜே'ன்னு ஊரும் உறவும் கூடியிருக்க சீமந்தம் நடத்தியதும் இதே வீட்லதான்.
 எல்லாம் சரி.
 என்னோட வீடு, என்னோட வீடுன்னு நான் இப்போ ஒரேயடியா பெருமை பேசிண்டு என்ன பிரயோஜனம்.
 ஊர் உலகமெல்லாம் திரண்டிருக்கிற இந்த உபநயனத்துல என் ஒரே பொண்ணும் மாப்பிள்ளையும் வரக் கொடுத்து வைக்கலியே இந்தக் கிழவி.
 அது கூடப் பரவாயில்லை. என் பொண்ணு பெத்த ரெண்டுங்கெட்டான் பிள்ளைப்பூச்சி, பதினஞ்சு வயசிலயும் சதா வாயில விரலைச் சூப்பிண்டு திரியற அந்த வயிறுதாரி வந்து, ஒருவாய் ரசம் சாதம் சாப்பிடாததுதான் என் ஹிருதயத்தைப் போட்டு அப்பிடியே பிசையறது. வகை வகையாய் சாப்பிடணும்னு அது ஆலாய்ப்பறக்கும், பாவம்.
 உறவுக்காராள் நிறைய பேர் நேத்தே வந்து சேர்ந்துட்டா. வேத பாராயணம் ஒரு பக்கம், நாதஸ்வரம் ஒரு பக்கம்னு கொட்டி முழக்கிண்டிருக்கா.
 "ஏன் மாமி! பொண்ணு மாப்பிள்ளை வரலியா?'' ன்னு அக்கறையாகவும், வம்புக்காகவும் கேட்கிறவாளுக்கு பதில் சொல்ல முடியாமத் திண்டாடறேன்.
 என்னதான் வாய்த் தகராறுன்னாலும், கூடப் பிறந்தவளோட குடும்பத்தையே பகிஷ்காரம் பண்ணிட்டு தன் பிள்ளைக்குப் பூணூல் கல்யாணம் பண்ணூவானோ ஒருத்தன்.
 
 போன மாசம்தான் இது நடந்தது.
 எங்களோட நஞ்சையை ஒட்டியே சுகுணாவோட மாமனாருக்கும் கொஞ்சம் நிலபுலம் இருக்கு. ரெண்டு பேரும் குத்தகைக்குத் தான் விட்டிருக்கோம், நேரடியா பயிரிடறதில்லே. வாய்க்கால் பாசனம். நிலத்துக்கு மடைமாத்தித் தண்ணி விடறதுலே குத்தகைக்காராள் ரெண்டு பேருக்கும் ஏதோ மனஸ்தாபம்.
 அவாளே இதைத் தீர்த்துக்கட்டும்னு விடாமே, இவன் போய் நேரா சம்பந்தியிடமே சண்டை பிடிச்சிருக்கான்.
 அவர் என்ன கேட்டாரோ தெரியாது, "இனி என் மூஞ்சியிலே நீங்க யாரும் முழிக்கப்படாது, என் அக்கா உட்பட''ன்னு சொல்லிட்டு வந்திருக்கான்.
 பையனோட பூணூல் கல்யாணத்துக்கும் அவாளை அழைக்க மாட்டேன்னுட்டான். என்னையும் போய் அழைக்கக் கூடாதுன்னுட்டான். சுகுணாவுக்கும் ரோஷம், இருக்காதா பின்னே. இங்கே வர்றதை நிறுத்திட்டாள். அது மட்டுமா, அந்த வயிறுதாரியையும் இப்பல்லாம் இந்தாத்துக்கு அனுப்பறதில்லை. இந்தப் பகை என்னிக்குத் தீருமோ, இவனுக்கு எப்பிடித்தான் இந்த ஆங்காரமும் குரோதமும் வந்ததோ புரிபடவே மாட்டேங்கிறது.
 கிட்டப்பாவையர் உசிரோட இருந்தாலும் ஏதாவது பண்ணியிருப்பார். நான் வயசான பொம்மனாட்டி, நினைச்சு நினைச்சு மருகுவதைத் தவிர வேறென்ன செய்யறது?
 உபநயன ஹோமப்புகையிலே சோமேஸ்வரன் கண்ணுல தண்ணி வந்துதோ இல்லையோ, என் கண்ணு ரெண்டும் தளும்புறது. அப்பப்போ புடவைத் தலைப்பிலே துடைச்சுக்கறேன்.
 "எனக்கும் மனசு கஷ்டமாத்தாம்மா இருக்கு, உங்க பிள்ளைய எதுத்துப் பேசறதுக்கும் பயமா இருக்கேம்மா!''
 எனக்கே ஆறுதல் சொல்ற என் மாட்டுப்பொண்ணு, என் முழங்கையை இதமா பிடிச்சு விடுறா.
 "எல்லாம் அவன் சித்தம். நீ போய் விருந்தாளிகளை கவனிம்மா, சுசீலா!''
 வந்த ஜனம் வந்தபடி, பந்தி விசாரணை நடந்தபடி இருக்கு.
 "சங்கரசுப்புவாத்து விசேஷம்னா சும்மாவா?'' ன்னு வந்த ஜனங்கள் பேசறது காதுல விழறது. சங்கரசுப்புவாம் சங்கரசுப்பு.
 கூடப்பிறந்தவள்னும், கூடப்பிறந்தவளைக் கல்யாணம் பண்ணிண்ட அத்திம்பேர்ன்னும் கொஞ்சம் நினைச்சுப் பார்த்திருந்தான்னா இப்படி ஒரு நெலமை வந்திருக்குமா.
 அந்த ரெண்டுங்கெட்டான் வயிறுதாரிப் பிள்ளை ""மாமா மாமா''ன்னு இவன் காலையே சுத்திச் சுத்தி வருமே. அது மேலேயாவது கொஞ்சம் பாசம் வெச்சானா. கூடப்பிறந்தவளையும், வீட்டு மாப்பிள்ளையையும், அஜாதசத்ருவான தன் மருமானையும் விட்டுட்டுதான் தன் பிள்ளைக்குப் பூணூல் போடறான், பெரிய பூணூல்.
 
 இந்த சங்கரசுப்பு எப்படியும் பெரிய படிப்புப் படிச்சு ஆபீஸர் உத்யோகம் போகப்போறது இல்லைன்னு தீர்மானம் ஆய்டுத்து. கிட்டப்பாவையர் சேர்த்து வெச்ச சொத்தை செலவழிக்கிறதுக்குன்னு அவதாரம் எடுத்தவனாச்சே.
 எஸ்.எஸ்.எல்.சி. தேறலை. விட்டுப்போன பேப்பரையும் எழுதமாட்டேன்னுட்டான். ஊர் சுத்தல் பிரதான காரியம் ஆச்சு. அதுக்கப்புறம் இந்தப் பாழாப்போன சினிமா. இந்தப் பரம்பரையிலேயே இல்லாத
 படிக்கு மீசை வெச்சுக்க ஆரம்பிச்சான். கேட்டால் ரஜினி ஸ்டைல்னான். ஆத்தங்கரை, கல்மண்டபம் இங்கெல்லாம் கூட்டளிகளோடு சேர்ந்துண்டு பீடி சிகரெட்டு பிடிக்கறான்னு தகவல் வர ஆரம்பிச்சுது.
 இவனை இப்பிடியே விடக்கூடாதுன்னு இவனுக்கோசரமே ஒரு ரைஸ் மில் ஆரம்பிச்சு அதில அவனை உக்கார வெச்சார் கிட்டப்பாவையர், எங்காத்துக்காரர்.
 கொஞ்சமே கொஞ்சம் பொறுப்பு வந்தாப்புல தெரிஞ்சுது. கொஞ்ச நாள்லேயே, ரைஸ் மில்லைக் கூட்டிப் பெருக்கறதுக்கு வேலைக்கு வெச்ச ஒரு எளவட்டப் பொண்ணு கூட சகவாசம் வெச்சிண்டிருக்கான்னு புகைஞ்சுது. பயலுக்கு வயசு இருபதுதான்.
 அக்கா இருக்கச்சே தம்பிக்குப் பண்ண முடியாதே. பெரிய படிப்பெல்லாம் படிக்கப் போறேன்னு பிடிவாதம் பிடிச்ச சுகுணாவை சமாதானம் செய்து, டிகிரியோட முடிச்சுக்கச் சொல்லி உடனடியா அந்த எல்.ஐ.சி ஆபீஸரோட பையனுக்கு நிச்சயம் பண்ணிக் கல்யாணம் கட்டி வெச்சோம்.
 மில்லைக் கூட்டிப் பெருக்கற பொண்ணைத் துரத்தி விட்டுட்டு, ஒரு காத்திரமான கிழவியைப் போட்டோம்.
 ஒழுங்கா இருந்திருந்தால் அந்தஸ்துக்கேத்த ஒரு பொண்ணு கிடைச்சிருக்கும். சீர்காழி பக்கத்துல ஒரு பதினெட்டு வயசுப் பொண்ணை சங்கரசுப்புவுக்குப் பேசி முடிச்சோம். அமோகமான கல்யாணம், எங்க செலவிலே. மாட்டுப் பொண்ணு சுசீலாவைக் குறை சொன்னா நாக்குலே புத்து வெச்சிடும். தங்கமான பொண்ணு, தங்க விக்ரஹமாட்டம் இருப்பாள். அவள் வந்தப்புறம்தான் இவன் ஆட்டமெல்லாம் அடங்கி ஒரு வழிக்கு வந்து ரைஸ் மில்லைப் பொறுப்பா கவனிச்சுக்க ஆரம்பிச்சான்.
 மாப்பிள்ளை விசு மாயவரத்துல ஒரு தனியார் பார்சல் கம்பெனியில மேனேஜர். பஸ்ல மாயவரம் போய் வந்துண்டிருந்த விசுவுக்கு, ஒரு ஸ்கூட்டர் வாங்கிக் கொடுத்தோம். விசுவும் சுகுணாவும் செüஜன்யமா ஸ்கூட்டர்லே கோயில் குளம், சினிமா தியேட்டர்னு அவ்வப்போது போய்ட்டு வர்றதைப் பார்க்கும் போது மனசு சந்தோஷத்துல திம்முன்னு ஆயிடும். மாமியார்க்காரியும் நல்லவதான்.
 முதல்ல சுகுணாவுக்கு ஒரு பிள்ளை பிறந்தது. ராஜ குமாரனாட்டம் இருந்துது. ராஜமெüலின்னு பேர்வெச்சோம். தன்னோட நாத்தனார் பிரசவத்துக்கு ஓடி ஓடி உழைச்ச என் மாட்டுப்பொண்ணு சுசீலாவுக்கு அடுத்த வருஷமே இந்த சோமேஸ்வரன் பொறந்தான்.
 பேரன்களைப் பார்த்துவிட்ட சந்தோஷத்துல கிட்டப்பாவையரும் சடார்னு மாரைப் பிடிச்சுண்டு ஒரு நாள் போய்ச் சேர்ந்துட்டார்.
 
 சுகுணாவோட குழந்தைக்கு ராஜமெüலின்னு வெச்ச பேர்ல யார் கூப்ட்டா. சம்பந்தியோட குலதெய்வம் மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி பேரும் எங்க குலதெய்வம் சந்த்ரமெüலீஸ்வரர் பேரும் சேர்ந்து வர்றாப்புல வெச்ச வெகு லட்சணமான பேர் அது.
 ஜுக்குலு, பப்புலு, மெüலு, ஜம்புன்னு வாய்க்கு வந்த பேர்தான். கொழுக்கு மொழுக்குன்னு இருந்த குழந்தை வளர வளரத்தான் தெரிஞ்சது... உடம்பு வளர வளர அந்த அளவுக்கு ஈடு கொடுத்து மூளை வளரமாட்டேங்கிறதுன்னு.
 நாதஸ்வர வித்வான் சீவாளியைச் சொருகிண்டாப்புல வாயில வெச்ச விரலை எடுக்கிறதில்லை. குற்றால அருவியாட்டம் சதா வழியற ஜொள்ளு. அம்மா, அப்பான்னு வாயைத் திறந்து கூப்பிடவே அஞ்சு வயசுக்கு மேலே ஆச்சு.
 பையன் வயித்துப் பேரன் சோமேஸ்வரன் டிப் டாப்பா யூனிபாம், டை எல்லாம் போட்டுண்டு, ஸ்கூல் பஸ் ஏறி மாயவரத்துக்குப் போய் படிக்க ஆரம்பிக்கச்சே, இந்த ராஜமெüலி அம்மா புடவையைப் பிடிச்சுண்டு "ங்கா' ங்கிறது.
 சுகுணா மருகி மருகி உடம்பு துரும்பா எளைச்சுப் போனதுதான் மிச்சம். மாப்பிள்ளை விசுவும், சுகுணாவும் மெட்ராஸ் வரைக்கும் போய் எப்பேர்ப்பட்ட டாக்டரையெல்லாம் பார்த்துட்டு வந்தாச்சு. உடனடியாய்ப் பையன் குணமாறதாகத் தெரியல்லே.
 நானும் என் பங்குக்கு சமயபுரம் , குணசீலம்னு குழந்தையைக் கூட்டிண்டு போனேன். குணமாவதாகத் தெரியலை.
 குழந்தைக்கு நாலு வயசாகும்போது வடதேசத்திலேருந்து இந்த ஊர் வழியா ராமேஸ்வரம் போன சன்யாசி ஒருத்தர் கால்லே குழந்தையைப் போட்டுட்டு நானும் சுகுணாவும் கதறினோம்.
 "பதினஞ்சு வயசுலேருந்து கொஞ்சம் கொஞ்சமா குணம் ஆகும். இருவத்தஞ்சு வயசுலே கல்யாணமே பண்ணி வெக்கலாம்''ன்னு அந்த வடக்கத்தி சன்யாசி ஹிந்தியில் சொன்னதாக என் பொண்ணு புரிஞ்சுண்டாள். குழந்தை உடம்பு முழுக்க விபூதி பூசி ஆசீர்வாதம் செஞ்சார்.
 
 ஏழெட்டு வயசுக் குழந்தைக்கு மூளை வளரலியே தவிர வாய் நன்னா வளர்ந்தது. நாக்கு ருசி அமோகமா இருந்தது. ரெண்டு வீட்டுக்கும் செல்லம். ஐயோ பாவம்ங்கிற நெனைப்பு வேறே. குழந்தை ராஜமெüலி அம்மா -அப்பாவுக்கு அப்புறம் சாதம், பலகாரம் ரெண்டு வார்த்தையையும் வேகமாக் கத்துண்டான். சுகுணாவாத்திலேயும் சரி, எங்காத்துலேயும் சரி குழந்தை எதை சாப்பிடக் கேட்டாலும் அப்படியே தூக்கிக் கொடுத்துடுவோம். சாப்பாடு, சாப்பிட்டதும் விரலைச் சூப்பிண்டு தூக்கம். இதுவே பிரதானமாச்சு. கொஞ்சம் கொஞ்சமாக வயிறு பெருத்துப் போய் ராஜ கணபதியாட்டம் தொப்பை போட்டது.
 தூங்குற நேரம் போக மற்ற நேரமெல்லாம் சதா தின்றுகொண்டே இருந்த குழந்தையைப் பார்த்து சுகுணாவோட மாமியார், "இதென்னடி இது இப்படி வயிறுதாரியா இருக்கு?'' ன்னு கேட்டாளாம்.
 அதிலேருந்து ராஜமெüலி, ஜுக்குலி, பப்பிளி எல்லாப் பேரும் மறந்து போய், வயிறுதாரிங்கிற பேர் நிலைச்சுடுத்து.
 "டே சங்கரசுப்பு, அந்த கிருஷ்ணஜெயந்தி பட்சணத்தை எடுத்துண்டு போய் கொடுடா, வயிறுதாரி ஆசையாச் சாப்பிடும்...''
 "அம்மாடி சுசீலா, நான் கொஞ்சம் தூங்கப்போறேன். அந்த வயிறுதாரிப்பிள்ளை இந்தப் பக்கம் வந்தா மறக்காமல் ஜவ்வரிசிப் பாயசம் கொடுத்துச் சாப்பிடச் சொல்லு...''
 இதெல்லாம் அடிக்கடி கேட்கும் வசனமாகிவிட்டது.
 அந்தக் காலத்து "மகாகவி காளிதாஸ்' படத்தில் சிவாஜி பண்ணுவது போல பட்சணங்களைக் கண்டால் ஏகத்திற்கும் குஷியாகிவிடுவான் வயிறுதாரி. முழு தேன்குழல் முறுக்கை வாயில் அடைத்துக்கொண்டு, டிராயரின் ரெண்டு பக்கப் பைகளிலும் நாலு முறுக்கைத் திணித்துக் கொண்டு குதியாட்டம் போட்டுக் கொண்டு போவான்.
 வீட்டில் எதைச் செய்தாலும் வயிறுதாரிக்கென்று தனியாக எடுத்து வைப்பது வழக்கமாச்சு. சுகுணாவும் மாப்பிள்ளையும் வயிறுதாரியோடு எங்காவது கோயில் குளம் டாக்டர் என்று வெளியூர் போனாலும், அவர்களெல்லாம் திரும்பிவரும் வரை பட்சணத்தை அடைகாத்து வெச்சிருப்பேன். சுசீலாவும் தன் மருமகன் வயிறுதாரியிடம் பாசமாகத்தான் இருப்பாள். அவனுக்கும் தன் பையன் சோமேஸ்வரனுக்கும் தின்பண்டங்கள் பங்கிடுவதில் சண்டை கிளம்பினால், வயிறுதாரிக்கு ஆதரவாகத் தன் பையன் முதுகில் இரண்டு வைத்துப் பிரச்னைக்கு முடிவு கட்டுவாள்.
 
 முகூர்த்தம் களை கட்டறது.
 ஹால் மூலையில ஒரு நாற்காலியில உக்காந்திருக்கேன். விசேஷத்துக்கு வந்திருக்கிறவா யாரோடும் பேசப்பிடிக்கலை. பேச ஆரம்பிச்சுடுவாளோன்னு அடிவயத்துல ஒரு பயம் வேற.
 ""சுகுணா வரல்லியா...''ங்கிறது தவிர வேறு எதையும் பேச மாட்டேங்கிறா.
 காலமே ஆறு ஆறரைக்கெல்லாம் டிபனுக்கு இலை போட்டாச்சு. என்ன ஐட்டம்னு தெரிஞ்சுக்கக் கூடத் தோணல்லே. கூப்பிட்டவாளுக்கெல்லாம், வயிறு சரியில்லை, சாதம் சாப்பிடறேன் அப்பிடின்னு சொல்லிச் சமாளிச்சேன்.
 எங்கேர்ந்தோ வந்த சுசீலா,"இங்கே வாங்கம்மா''ன்னு டி.வி.ரூமுக்குக் கூட்டிண்டு போய் ரெண்டு இட்டிலியும் வடையும் கேசரியும் தட்டிலே கொண்டுவந்து,"சாப்பிடுங்கோம்மா'' அப்பிடின்னதும் தட்ட முடியலே.
 "இன்னும் ரவாப்பொங்கல், கிச்சடி கூட பண்ணியிருக்கும்மா, கொண்டு வரட்டுமா?''
 ""வேணாம்டி கண்ணு, பாவம் அந்த வயிறுதாரி இருந்தால் ஆசை ஆசையாச் சாப்பிடும். அதை விட்டுட்டு சாப்பிடப் பிடிக்கவேயில்லேம்மா...''
 "அதுக்காக நீங்க பட்டினி கிடந்து உடம்பைக் கெடுத்துக்கதீங்கோம்மா. காலம் இப்பிடியே போயிடாது. உங்க பிள்ளையோட மனசு மாறும். இதைவிட பெரிசா ஏதாவது விசேஷம் நம்மாத்துல வரும். அப்போ சுகுணா அக்காவை மாப்பிள்ளை குழந்தையோட வரவழைச்சு உபசரிக்கலாம்மா. நான் கேரண்டி. இப்போ சாப்பிடுங்கோம்மா''
 தங்கமான பொண்ணு. சுசீலாவோட முகவாய்க்கட்டையைத் தடவி முழங்கையிலே முத்தமிட்டு, "நீ இது சொன்னதே போறும்டா கண்ணு, நீ மேற்கொண்டு நடக்க வேண்டியதைப் பாரு'' ன்னு சொல்லி டிபனைச் சாப்பிட்டேன்.
 மறுபடியும் ஹால் மூலையில் ஒரு நாற்காலி.
 பவதி பிக்ஷôம் தேஹி....
 பூணூல் போட்ட பிரம்மச்சாரிப் பையனுக்கு யார் யாரெல்லாமோ அரிசியிடறா. ஒரே அத்தை சுகுணா அரிசியிடக் குடுப்பினையில்லே. இவ்ளோ ஏன் அந்தப் பிள்ளை வயிறுதாரிக்கு சோமேஸ்வரனை விட ஒரு வயசு அதிகம். எல்லாப் பிள்ளைகள் போலவும் இருந்தால், அதுக்கும் இந்நேரம் பூணூல் போடலாம். அதன் கலருக்கும், தேஜஸ்ஸýக்கும் சாக்ஷôத் ஆதிசங்கரர் மாதிரியே இருக்கும்.
 ஏன்தான், மனசு திரும்பத் திரும்ப இப்பிடியே நினைக்கிறதோ. மனசு நினைச்சுட்டுப் போகட்டும். ஒவ்வொரு நினைப்புக்கும் கண்ணுல ஜலம் தளும்பறதைக் கட்டுப் படுத்த முடியல்லியே....
 ""பையனோட பாட்டி எங்கே, ஆத்துப் பெரிய மனுஷி முதல் ஆளா வந்து ஆசீர்வாதம் பண்ண வேண்டாமா?''
 புரோஹிதர் சொன்னது ஸ்பஷ்டமாகக் காதிலே விழறது. நாற்காலியிலேர்ந்து எழுந்து முன்னே போறேன்.
 ""வாங்கோ, வாங்கோ, உங்களைத்தான் எல்லாரும் கேக்கிறாள். வந்து பேரனை ஆசீர்வாதம் பண்ணுங்கோ''
 யார் யாரோ என்னை வரவேற்க, சுசீலா மணையிலிருந்து எழுந்து வந்து என் கையைப் பிடிச்சு அழைத்துப் போகிறாள்.
 புடவைத் தலைப்பில் முடிந்து வைத்திருக்கும் ஆயிரத்தொரு ரூபாயைக் கொடுத்து பேரன் சோமேஸ்வரன் தலையை உச்சிமோந்து, ""தீர்க்காயுசா இருடாப்பா....!'' ன்னு மனசார ஆசீர்வாதம் பண்ணினேன். ""நீயாவது உன் அப்பனைப் போல மூர்க்கமா இருக்காதேடாப்பா'' அப்பிடின்னு மனசுக்குள்ளே சொல்லிண்டேன்.
 வந்திருக்கிறவாள் எல்லாரும் பையனுக்கு ஆசீர்வாதம் பண்ணியாகிறது. சோமேஸ்வரனோடு ஸ்கூல் படிக்கிற பையன்கள் ஒன்றிரண்டு கூட கையில பிரஸண்டேஷன் கொடுத்துட்டுப் போட்டோ எடுத்துக்க நிக்கறதைப் பார்க்கிறேன். அந்த வயிறுதாரியும் ஒழுங்கா வளர்ந்திருந்தால் இந்த மாதிரி விசேஷத்துலே எப்பிடியெல்லாம் ஜாலியாகக் குறுக்கும் நெடுக்குமா அலைஞ்சிண்டிருக்கும்னு தோணித்து.
 ""சாப்பிட வாங்கோம்மா''ன்னு இன்னொரு சம்பந்தியம்மா, சுசீலாவோட அம்மா மரியாதையா கூப்பிடறா.
 ""காலமே சுசீலா நிறைய டிபன் கொடுத்துட்டா. இப்போ பசியில்லைம்மா, நீங்களும் சம்பந்தி மாமாவும் சாப்பிடுங்கோ''ன்னு அவாளை அனுப்பிச்சிட்டு மெதுவா எழுந்தேன்.
 வீட்டுப் பின்கட்டிலே பந்தல் போட்டு சமையல் நடக்கிற எடத்துக்கு மெதுவா நடக்கிறேன்.
 ""வாங்கோம்மா, காலையிலே டிபன்லாம் நன்னா இருந்துதா?''ன்னு ஓடி வந்தார் ஹெட் குக் ராஜவையர்.
 "எல்லாம் பிரமாதமாக இருந்தது ராஜா மாமா. நீங்க இப்போ என்ன செய்யறேள்னா, ஒரு டிபன் கேரியர்லே எல்லா ஐட்டங்களையும், முக்கியமா பட்சணங்களைப் போட்டு, ஒரு பையனை என் கூட அனுப்புங்கோ, அவசரம்''னேன்.
 பின்கட்டுக் காம்பவுண்டு கேட்டு வழியாக அந்தப் பையனையும் அழைச்சுண்டு, பின்பக்கத் தெருவைப் பிடிச்சு சுகுணா வாக்கப்பட்ட வீட்டைப் பார்த்து நடந்தேன்.
 சம்பந்தி மாமி இல்ல சுகுணா யார் காலையாவது பிடிச்சு கெஞ்சிக் கூத்தாடி அந்த வயிறுதாரி மட்டுமாவது இதையெல்லாம் சாப்பிடவைக்கும்படி சொல்லணும்.
 ராஜவையர் அனுப்பிச்ச இளவயசுப் பையன் என் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினது தெரிஞ்சது.
 ""கொஞ்சம் வேகமா வாடாப்பா, அம்பி''.
 சுகுணா வீட்டு வாசல்லே யாரோ பொம்மனாட்டி நிக்கிறது தெரியறது.
 "என்ன மாமி, உங்க சம்பந்தியாத்து விசேஷத்துக்கு உங்களை அழைக்கலியாமே?''ன்னு மூட்டி விடறதுக்கு யாராவது ஒரு உள்ளூர்க்காரி வந்திருப்பாளாக்கும்.
 கிட்டப்போனாத் தான் தெரியறது, ஒரு எவர்சில்வர் தூக்கைத் தூக்க முடியாமல் தூக்கிண்டு, சுகுணாவாத்துக் கதவைத் தட்டிண்டு நிக்கிறது சுசீலான்னு.
 ஸ்ரீதுரை
 
 
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/17/w600X390/kd3.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/18/வயிறுதாரி-2865268.html
2865269 வார இதழ்கள் தினமணி கதிர் ராகவேந்திராவும் ஆட்டோகிராபும் DIN DIN Sunday, February 18, 2018 12:00 AM +0530 ராகவேந்திர ராவுக்கு கடந்த 67 ஆண்டுகளாக கிரிக்கெட் வீரர்களிடமிருந்து புகைப்படத்தில் ஆட்டோகிராப் பெறுவது ஒரு பொழுதுபோக்கு. ஆனால் இவர் எந்த வீரரையும் நேரில் சந்தித்தது கிடையாது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சார்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பல நூறு கடிதங்களை எழுதி ஆட்டோகிராப் பெற்றுவிடுவார்.
 இவரிடம் டான் பிராட்மேன், கீத் மில்லர், ஹரோல்ட் லார்வுட், டெனிஸ் காம்டன், சி.கே.நாயுடு, முஸ்டாக் அலி, ஹசாரே, கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், அஜித்வாடேகர் மற்றும் இன்றைய கிரிக்கெட் வீரர்கள் பலரிடமும் ஆட்டோகிராப் பெற்றுள்ளார்.
 ஆட்டோகிராப் கிடைக்க இவர் கூறும் ஐடியா இதுதான்:
 "இந்திய வீரர்களிடம் சுய தபால்தலைகளை ஒட்டிய கவரை அனுப்பி, ஆட்டோகிராப் கேட்பேன். வெளிநாட்டு வீரர்களிடம் சர்வதேச ரிப்ளை கூப்பன்களை அனுப்பிக் கேட்பேன். சிறிது தாமதம் ஆனாலும் அநேகமாக அனைவரிடம் இருந்து ம் ஆட்டோகிராப் வந்துவிடும்'' என்கிறார் ராகவேந்திர ராவ்.
 ஆர்வமுள்ளவர்கள் முயற்சிக்கலாம்!
 -ராஜிராதா
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/17/w600X390/kd4.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/18/ராகவேந்திராவும்-ஆட்டோகிராபும்-2865269.html
2865270 வார இதழ்கள் தினமணி கதிர் அ.ச.ஞானசம்பந்தனின் பேராசிரியர் DIN DIN Sunday, February 18, 2018 12:00 AM +0530 சுப்பிரமணியம் ஒரு கணிதப் பேராசிரியர். அ.ச.ஞானசம்பந்தன் கல்லூரியில் படிக்கும்போது அவருக்கு கணிதப் பேராசிரியராக இருந்தவர் அவர். வகுப்பில் எளிய சமன்பாடு ஒன்றைக் கரும்பலகையில் போட்டு,"இது எல்லாருக்கும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்'' என்றார். அ.ச.ஞானசம்பந்தம் எழுந்து, "எனக்குப் புரியவில்லை. நான் உயர்நிலைப்பள்ளியில் இயற்பியல் தான் படித்தேன்'' என்றபோது, மாணவர்கள் அவரைக் கேலி செய்து சிரித்தனர். அ.ச.வை தினமும் வீட்டுக்கு வரச்சொல்லி அவருக்கு கணக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார்; சிற்றுண்டியும் கொடுத்தார். "ஆறுமாதம் கணிதம் படித்து, நல்ல மதிப்பெண் பெறச் செய்த பெருமை பேராசிரியர் சுப்பிரமணியத்தையே சேரும்'' என்று நன்றி உணர்வுடன் கூறியுள்ளார் அ.ச.ஞானசம்பந்தம். அந்த கணிதப் பேராசிரியரின் மகன்தான் பாஜக பிரமுகர் சுப்பிரமணியன் சுவாமி.
 
 சண்முகசுப்பிரமணியன்
 
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/17/w600X390/kd5.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/18/அசஞானசம்பந்தனின்-பேராசிரியர்-2865270.html
2865271 வார இதழ்கள் தினமணி கதிர் காஞ்சி மகானின் குரல்...   DIN DIN Sunday, February 18, 2018 12:00 AM +0530 பொன்னியின் செல்வன் மற்றும் நண்பர்கள் வெளியிட இருக்கும் "கலியுகத்தின் கண்கண்ட தெய்வம்' என்ற ஒலிப்புத்தகத்தைத் தயாரித்து முடித்துவிட்டார் நாடகாசிரியரும், நாடக இயக்குநருமான பாம்பே கண்ணன். 101 நிகழ்வுகள் கொண்ட இந்த டிவிடி-யில் சுமார் 40 நடிகர்கள் பங்குகொண்டு குரல் வழங்கியிருக்கிறார்கள். ஆன்மிகப் பேச்சாளர் பி.சுவாமிநாதன் எழுதித் தொகுத்திருக்கும் இந்த டிவிடி-யில் காஞ்சி மகா பெரியவர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை இவர்கள் பாத்திரங்களாக மாறி, தங்கள் குரலில் வழங்குவார்கள்.
 மகானின் குரலும் ஓரிடத்தில் இடம் பெற்றிருக்கிறது. அபூர்வமான, சில நிமிடங்களே வரும் இந்தக் குரல் அவரது பக்தர்களை நெகிழ வைக்கும். "கடவுள் நம்மைக் காப்பாற்றுவாரா?' என்ற கேள்விக்கு பரமாச்சாரியார் அளிக்கும் பதில் பிரமிப்பையும், அமைதியையும் தரும். பிற இடங்களில் எல்லாம் நாடக நடிகர் - இயக்குநர் எம்.பி. மூர்த்தி பெரியவருக்காகக் குரல் கொடுத்திருக்கிறார்.
 ஒரு நிகழ்ச்சி தம்மை வெகுவாக நெகிழ வைத்ததாக தயாரிப்பாளர் கண்ணன் சொன்னார்:
 "ஒரு கிராமத்தில் மழை வெகு நாள்களாகப் பெய்யாமல், மக்கள் அவதிப்பட்டார்கள். அங்கே வந்திருந்த மகா பெரியவரிடம் தங்கள் வேண்டுகோளைச் சொன்னார்கள். பெரியவர் சொன்னார், "உங்கள் ஊர் கோயிலில் இருக்கும் சிவனுக்கு 1008 குடம் தண்ணீர் அபிஷேகம் செய்யுங்கள். மழை வரும்' என்றார்.
 மக்கள் அதைக்கேட்டு, இருக்கிற தண்ணீரை எல்லாம் சேகரித்து, சிவன் கோயிலில் சிவனுக்கு அபிஷேகம் செய்தார்கள்.
 மழை வரவில்லை! அனைத்து மக்களும் கோபத்துடன் பெரியவரைக் காணச் சென்றார்கள்.
 "இருக்கிற தண்ணீரை எல்லாம் சேமித்துக் கொட்டினோம். நீங்க சொன்னபடி மழை வரலியே, சாமி!' என்றார்கள், கோபமும் ஆத்திரமுமாக.
 "எனக்குப் பின்னால் மேகத்தைப் பாருங்கள்!' என்றார் பெரியவர். வானம் கறுத்துப் போய், மழை மேகம் சூழ்ந்திருந்தது.
 அவர்கள் புன்னகையுடன் கலைந்து செல்லுவதற்குள், மழை கொட்டத் தொடங்கிவிட்டது. ஏராளமான இது போன்ற நிகழ்ச்சிகள் அதில் இருக்கின்றன'' என்றார்.
 இந்த டிவிடி தயாரிப்பில் எப்போதும் போல, பாம்பே கண்ணனின் நண்பர் சி.கே.வெங்கட்ராமன் உடன் இருந்து உற்ற துணை வழங்கியிருக்கிறாராம். சுமார் 25 மணி நேரம் ஓடக்கூடிய இந்த டிவிடி சென்னை நாரத கான சபா அரங்கில் இம்மாதம் வெளியிடப்பட உள்ளது.
 
 -சாருகேசி
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/17/w600X390/kd6.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/18/காஞ்சி-மகானின்-குரல்-2865271.html
2865272 வார இதழ்கள் தினமணி கதிர் திரைக் கதிர்   DIN DIN Sunday, February 18, 2018 12:00 AM +0530 • நயன்தாரா, அனுஷ்கா உள்ளிட்டோர் வழக்கமான நடிப்பிலிருந்து வித்தியாசமான முயற்சிகளில் கவனம் ஈர்க்கின்றனர். இதையடுத்து த்ரிஷாவும் இந்த பாணியில் நடிப்பதற்கு விரும்புவதாகத் தெரிகிறது. இந்நிலையில் இந்தியாவின் முதல் பெண் துப்பறியும் நிபுணர் ரஜனி பண்டிட் விசாரித்த ஒரு வழக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் "குற்றப்பயிற்சி'. இந்தப் படத்தில் ரஜினி பண்டிட் வேடத்தில் நடிக்கவுள்ளார் த்ரிஷா. "தாரை தப்பட்டை' படத்தில் பாலாவிடம் பணிபுரிந்த வெர்னிக் இயக்குநராக அறிமுகமாகிறார்.1980 காலகட்டத்தின் பின்னணியைக் கொண்டு படமாக்கப்படுகிறது. சுரபி, சூப்பர் சுப்பராயன் ஆகியோர் பிரதான பாத்திரங்களை ஏற்கின்றனர். ஒரு கொலையும், அதன் பின்னணியையும் துப்புதுலக்கும் விதமாக விறுவிறுப்பான திரைக்கதையுடன் படம் உருவாகவுள்ளது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள த்ரிஷா, மிகுந்த நம்பிக்கையுடன் படப்பிடிப்புக்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

• இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் "விசுவாசம்' படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தில் நான்காவது முறையாக அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இந்நிலையில் சில சிக்கல்களால் இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் விலகினார். மீண்டும் அனிருத் தான் என்றும், "விக்ரம் வேதா' இசையமைப்பாளர் சாமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இமான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 100 படங்களுக்கு மேல் இசையமைத்திருந்தாலும் அஜித் படத்திற்கு இமான் இசையமைப்பது இதுவே முதல்முறை. படப்பிடிப்பு இம்மாதம் தொடங்குகிறது. தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

• "காற்று வெளியிடை' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் மணிரத்னம். தமிழ் சினிமாவின் முன்னணி கலைஞர்கள் பலர் இந்தப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு இருந்ததால், அனைவரையும் நடிக்க வைப்பதற்காக பலகட்டப் பேச்சுவார்த்தை நடந்தது. அரவிந்த்சாமி, சிலம்பரசன், விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாúஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பல கலைஞர்கள் இப்படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டனர். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளது. படத்துக்கு "செக்கச்சிவந்த வானம்' என தலைப்பு வைக்கப்பட்டு முதல் பார்வை போஸ்டர்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன், இசை ஏ.ஆர்.ரஹ்மான், படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத். கடந்த 12-ஆம் தேதி முதல் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தீபாவளி வெளியீடாக படம் திரைக்கும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

• பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் "காலா' படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடந்து வரும் வேளையில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் "2.0' படத்தின் இறுதிகட்டப் பணிகளும் நடந்து வருகின்றன. இந்த இரண்டு படங்களில் எது முதலில் திரைக்கு வரும் என்பதில் குழப்பம் நிலவி வந்தது. "2.0' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் மீதம் இருப்பதால், "காலா' அதற்கு முன்பு வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 27-ஆம் தேதி படம் திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தனுஷ் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

• வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் விஜய் ஆண்டனியின் அடுத்த படம் "திமிரு புடிச்சவன்'. எஸ்.எஸ்.ராஜமௌலியிடம் உதவியாளராகப் பணிபுரிந்த கணேஷா திரைக்கதை எழுதி இயக்குகிறார். ஆக்ஷன் பின்னணி கொண்ட இப்படத்துக்காக பிரத்யேகமாக சிலம்பம் கற்று வருகிறார் விஜய் ஆண்டனி. காவல்துறை அதிகாரியாக விஜய் ஆண்டனி நடிக்கும் முதல் படமாக இது உருவாகிறது. படம் குறித்து இயக்குநர் கணேஷா கூறுகையில், "இதுவரை பார்த்திராத ஒரு போலீஸ் அதிகாரியின் கதையை திரையில் கொண்டு வரப்போகிறேன். ஒரு காவல் நிலையத்தில் நடக்கும் அன்றாட சம்பவங்களே மிகவும் சுவாரசியமாக இருக்கும். அவர்கள் இடையே இருக்கும் பரஸ்பர உறவு இந்தப் படத்தில் பிரதிபலிக்கும். கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவர் மோட்டார் சைக்கிள் ஓட்ட வேண்டிய காட்சிகள் ஏராளம் உள்ளன, அதற்காக பிரத்தியேகப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்'' என்றார். விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கவுள்ளது. 
- ஜி.அசோக்


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/17/w600X390/kd7.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/18/திரைக்-கதிர்-2865272.html
2865273 வார இதழ்கள் தினமணி கதிர் பித்த வெடிப்புக்கு தீர்வு! ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் DIN DIN Sunday, February 18, 2018 12:00 AM +0530 எனது குதிகாலின் விளிம்புப் பகுதிகளில் பாளம் பாளமாக பித்த வெடிப்பு உள்ளது. மேல் தோல் உரிந்து பயங்கர வலி, இதைக் குணப்படுத்த என்ன வழி?
 - ஸ்ரீராம் பராசரன்,
 விருகம்பாக்கம், சென்னை- 92.
 
 பனி வறட்சியும், உடல் உட்புற வறட்சியும் இதற்குக் காரணமாகலாம். நாம் முகத்தை அடிக்கடிப் பார்த்து அழகுறச் செய்துகொள்வது போல, பாதத்தைச் செய்து கொள்வதில்லை.
 குதிகால், பாதம், பாத விரல் இடுக்கு, விரல் நக இடுக்கு ஆகிய பகுதிகளில் சிறிதும் அழுக்கு சேராதவாறு பார்த்துக் கொள்வது நல்லது என்பது ஆயுர்வேத உபதேசம். அப்பகுதிகளில் தோல் மென்மையை அதிகப்படுத்தி, வறட்சியாகாமல் பார்த்துக் கொள்வது நலம். கால் பாதத்தை இதமாகப் பிடித்து விடுவதால், ரத்த ஓட்டமானது சுறுசுறுப்படைகிறது.
 வறட்சியாகக் காண்பதற்குக் காரணம், வாயுவின் குணங்களாகிய வறட்சி, லேசான தன்மை, குளிர்ச்சி, சொர சொரப்பு போன்றவற்றின் ஆதிக்க இருப்பிடமாகப் பாதம் இருப்பதால் தான். மென்மையையும், வறட்சியைப் போக்கும் ஆயுர்வேத களிம்பு மருந்துகள், இந்தப் பிரச்னைக்குத் தீர்வைத் தரலாம். உங்கள் உடல்தன்மையை மருந்துவரிடம் கண்டறிந்து, ஜீவந்தியாதி யமகம், சததௌதகிருதம், சிந்தூராதிலேபம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
 அதிக உடல் எடையினால் குதிகால்களில் ஏற்படும் அழுத்தம் காரணமாகவும் வெடிப்பு ஏற்படும். அதுபோன்ற நிலைகளில் மேற்குறிப்பிட்ட களிம்புகளின் பயன்பாடு மட்டும் போதாது. உடல்பருமனையும் குறைக்க வேண்டும். வெடிப்பு, வலி, உடல்பருமன் ஆகியவற்றைக் குணப்படுத்தும் வகையில் சிறிது குக்குலுதிக்தகம் எனும் நெய்மருந்தை, 48 முதல் 60 நாள்கள் வரை பயன்படுத்தலாம். கால்களுக்கு காலணி மட்டும் உபயோகப்படுத்துவது போதாது. காலுறை அணிந்து அதன் மேல் கேன்வாஸ் ஷூ அணிவதால், பாதங்களிலுள்ள மென்மையைப் பாதுகாக்கலாம்.
 உடல் சூட்டினுடைய அதிகப்படியான சீற்றத்தாலும், பித்தத்தினுடைய சீற்றத்தாலும் சிலருக்கு பித்தவெடிப்பும், குதிகால் வலியும் ஏற்படலாம். அப்போது பித்தசூட்டைக் குறைக்கும் வகையில், இனிப்பு, கசப்பு, துவர்ப்புச் சுவையை முக்கிய உணவாகக் கொள்வதாலும், பித்தத்தை வெளியேற்றும் பேதி மருந்துகளாகிய அவிபத்தி சூரணம், திருவருத்லேஹ்யம், மாணிபத்ரம் எனும் லேஹிய மருந்துகளை மருந்துவர் ஆலோசனைப்படி சாப்பிடுவதாலும் நிவாரணம் பெறலாம்.
 கால் பகுதிகளில் ரத்தக்குழாய் சுருட்டல்களால் ரத்த ஓட்டத் தடையின் காரணமாக, சிலருக்குப் பித்த வெடிப்பு ஏற்படலாம். நீண்ட நேரம் நிற்பதும், கால்களை அதிக நேரம் தொங்கவிட்டபடி அமர்ந்திருப்பதாலும், கால் பாதங்களுக்கு வந்து சேர வேண்டிய ஊட்டத் தடையின் விளைவாக, பாளம் பாளமாக வெடிக்கக் கூடும். பிண்டதைலம், முரிவெண்ணெய் போன்ற தைலங்களைக் கலந்து முட்டியிலிருந்து பாதம் வரை வெது வெதுப்பாகத் தடவி, சுமார் 20 முதல் 30 நிமிஷங்கள் பாதங்களைப் பிடித்து விட்டு, வெது வெதுப்பான தண்ணீரால் கழுவுவதால், ரத்த ஓட்டத் தடை நீங்கி, பாதங்கள் வலும்பெறும்; வெடிப்புகளும் மறையும்.
 தரையிலுள்ள சில்லிப்பான தன்மையால் குதிகால் பகுதிகளில் தோல் வறண்டு வெடித்து விடக்கூடும். வெடிப்பினுடைய உட்பகுதிகளில் அழுக்கும் அண்டக்கூடும். அதனால், கால் பாதங்களுக்குக்கு மென்மை தரும் காலணிகளை வீட்டினுள் ஒன்றும், வெளியே செல்லும்போது ஒன்றுமாகப் பயன்படுத்தினால் பித்த வெடிப்பைத் தவிர்க்கலாம்.
 ஒரு சில பயிற்சிகள் மூலமாக கால் பாதங்களில் உள்ள நரம்புகளையும் தசைகளுக்கான ஊட்டத்தையும் பெற இயலும். கீழே படுத்த நிலையில் பாதங்களை உயரத் தூக்கி மேலும் கீழுமாகவும் குறுக்குவாட்டிலும் உருட்டி உருட்டி அசைத்து சுமார் 5 முதல் 10 நிமிஷங்கள் செய்து வந்தால் ரத்தத்தின் வழியாக ஊட்டச்சத்து சென்று தசைகள் வலுப்பெறும். அதன் பிறகு சிறிது விளக்கெண்ணெய்யைத் தடவி வெதுவெதுப்பான உப்பு கரைத்த வெந்நீரில் கால் பாதங்களை முக்கி சிறிது நேரம் வைத்திருந்து இதமாகப் பிடித்து விடுவதால் பாதம் வளவளப்பாகும்.
 (தொடரும்)
 
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/17/w600X390/kd8.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/18/பித்த-வெடிப்புக்கு-தீர்வு-ஆயுள்-காக்கும்-ஆயுர்வேதம்-2865273.html
2865275 வார இதழ்கள் தினமணி கதிர் பேல்பூரி DIN DIN Sunday, February 18, 2018 12:00 AM +0530 கண்டது
• (நன்னிலத்தில் ஒரு திருமண வாழ்த்து போஸ்டரில்)
சிகார்பாளையம் - சீறும் சிங்கங்கள்
சி.முருகேசன், மாப்பிள்ளைக்குப்பம்.

• (பேரளம் திருமண மண்டபம் ஒன்றில்)
இங்கு நாற்காலியில் தலை வைத்து உறங்கினால் ரூ.300 அபராதம் விதிக்கப்படும்.
சாந்தி, திருவாரூர்.

• (வாழப்பாடி நெடுஞ்சாலை அருகே உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)
தமிழச்சி அடுப்பங்கரை
வரத.சண்முகவடிவேலு, வாழப்பாடி.

• (சென்னை திருவொற்றியூர் கம்ப்யூட்டர் சென்டரில்)
அமைதியாய் இருப்பதும் ஒரு வகையில் அமைதியை இழக்கச் செய்துவிடும்.
தீ.அசோகன், சென்னை-19.

கேட்டது
(நாகர்கோயில் பேருந்து நிலையத்தில் புறப்படத் தயாராக இருந்த பேருந்தில் நடத்துநரும் இளைஞரும்)
"என்ன சார்... இதுவரை மூணு சீட் மாறி உட்காரச் சொல்லியாச்சு?''
"நான் என்னப்பா பண்றது? ஜோடி ஜோடியா
வர்றாங்க''
"அப்ப ஜோடியா வந்தால்தான் ஒரே சீட்டுல உட்கார வைப்பீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க...ஜோடிக்கு ஏதாவது ஃபிகரை செட் பண்ணிட்டு வந்துடுறேன்''
மகேஷ் அப்பாசுவாமி, 
பனங்கொட்டான்விளை.

• (ராமநாதபுரம் ரயிலில் இரு பெண்கள்)
"என் மாமியாருக்கும் எனக்கும் சண்டையே வராது!''
"அவ்வளவு ஒற்றுமையா?''
"அப்படியெல்லாம் இல்ல...
அவங்கே வேற ஊர்ல 
இருக்காங்க, நான் வேற ஊர்ல இருக்கேன்''
வாசு.ஜெயந்தன், நம்புதாளை.

எஸ்எம்எஸ்
நீ சிரித்தால் RINGTONE
கோபப்பட்டால் VIBRATION
பார்த்தால் MISSED CALL
கண்கலங்கினால் BATTERY DOWN
நீ என்னை மறந்தால் SWITCH OFF
ச.விஜயசங்கர், அருப்புக்கோட்டை.

யோசிக்கிறாங்கப்பா!
எண்ணங்களில் கவனம் வையுங்கள்
அவையே சொற்களாகின்றன.
சொற்களில் கவனம் வையுங்கள்...
அவையே செயல்களாகின்றன.
செயல்களில் கவனம் வையுங்கள்...
அவையை பழக்கங்களாகின்றன.
பழக்கங்களில் கவனம் வையுங்கள்.
அவையை உங்கள் வாழ்க்கையாகின்றன.
கிழவை சத்யன், நெல்லை.

அப்படீங்களா!
உலகிலேயே மிக நீளமான கார் இது. 100 அடி நீளம் உடையது. 26 சக்கரங்கள் உள்ளன. குறுகிய சாலைகளில் இந்தக் காரை எப்படித் திருப்ப முடியும் என்று கவலைப்படத் தேவையில்லை. திருப்புவதற்கு ஏற்ப காரின் நடுப்பகுதியை அமைத்திருக்கிறார்கள். 
அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவில் உள்ள "ஜே ஒ பெர்க்' என்ற நிறுவனம் இந்தக் காரை தயாரித்துள்ளது. 
இவ்வளவு பெரிய நீளமான காரில் நிறையப் பேர் பயணம் செய்யலாம்; வேறு என்ன பயன்? என்று கேட்கிறீர்களா? இந்தக் காரை முன்புறமிருந்தும் பின்புறமிருந்தும் இயக்கலாம். காரில் நீச்சல் குளம் உள்ளது. சிறிய ஹெலிகாப்டரை இந்தக் காரின் மேல்தளத்தில் இறக்கலாம். 
வருங்காலத்தில் நிறைய திரைப்படங்களில் இந்தக் கார் இடம்பெறும் என்று எதிர்பார்க்கலாம். 
என்.ஜே., சென்னை-69.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/17/w600X390/kd9.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/18/பேல்பூரி-2865275.html
2865276 வார இதழ்கள் தினமணி கதிர் மைக்ரோ கதை DIN DIN Sunday, February 18, 2018 12:00 AM +0530 மனநல மருத்துவமனையின் முதல் அறையிலிருந்த இளைஞன் ஒருவன் "உமா... உமா'' என்று அழுது புலம்பிக் கொண்டிருந்தான். பார்வையாளர் ஒருவர் டாக்டரிடம் விவரம் கேட்டார். 
"இவன் உமா என்கிற பெண்ணை உயிருக்கு உயிராகக் காதலித்தான். ஆனால் கல்யாணம் பண்ணிக்க முடியலை. அதுதான் சோகம் தாங்காமல் இப்படி ஆயிட்டான்'' என்றார் டாக்டர்.
ஏழாம் அறையிலிருந்த இளைஞன் தலையைச் சுவரின் மீது மோதிக்கொண்டு "உமா... உமா...'' என்று கத்திக் கொண்டிருந்தான்.
"அடடா... இவனும் அந்த உமாவைக் காதலித்தானா?'' என்று கேட்டார் பார்வையாளர்.
"இல்லை... இல்லை...'' அவசரமாக மறுத்த மருத்துவர் சொன்னார்:
"இவன் அந்த உமாவைக் கல்யாணம் செய்து கொண்டவன்''.
ஆதினமிளகி, வீரசிகாமணி.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/17/w600X390/kd11.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/18/மைக்ர-2865276.html
2865280 வார இதழ்கள் தினமணி கதிர் இதுதான் காதல் என்பதா? DIN DIN Sunday, February 18, 2018 12:00 AM +0530 செகந்த்ராபாத் ரயில்வே ஸ்டேஷன். ஆட்டோ வந்து நிற்க, அருணும், கோபியும் இறங்கிக் கொண்டார்கள். மீட்டர் பார்த்து பணம் கொடுத்து விட்டு, உள்ளே வந்து, ஐந்தாம் நம்பர் பிளாட்ஃபாமிற்கு வந்து சேர்ந்தார்கள். சென்னை செல்லும் சார்மினார் எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்கு தயாராக நின்று கொண்டிருந்தது. எஸ் - 7 கோச்சைத் தேடி ஏறி, தங்களது சீட் நம்பரை பார்த்து இருவரும் உட்கார்ந்து கொண்டார்கள். ரயில் புறப்படுவதற்கு பத்து நிமிஷங்கள் இருந்தது. அங்கும் இங்குமாக தமிழும் தெலுங்கும் கலந்த குரல் கேட்டுக் கொண்டிருந்தது. அருண், அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். 
அப்போது, ஒரு பெண், இடுப்பில் அமர்ந்திருக்கும் குழந்தையை, தனது இடது கையால் அணைத்துப் பிடித்தபடி, வலது கையில் ஒரு சூட்கேûஸ சுமந்தபடியும், அவர்கள் உட்கார்ந்திருக்கும் அதே கோச்சில் வேக வேகமாக வந்து ஏறினாள். சீட் நம்பரைப் பார்த்து, இவர்களுக்கு எதிரே உட்கார்ந்தாள். அவளைப் பார்த்ததும் அருண் ஆச்சரியம் அடைந்தான். அவள் வினோதினிதானே? அவளும் அவனைப் பார்த்து, ஆச்சரியம் அடைந்தாள். அவன் அருண்தானே? இருவருக்கும், சிறிது நேரம் பேச்சு வரவில்லை. கோபி அவர்களைப் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அருண்தான் முதலில் பேச ஆரம்பித்தான்.
""வாட் ஏ சர்ப்ரைஸ்! உன்னை நான் இங்க எதிர்ப்பார்க்கல வினோதினி''
""நான் கூட உங்களை எதிர்ப்பார்க்கல... இது நிஜமான்னு இன்னும் எனக்கு சந்தேகமா இருக்கு''
""நிஜம்தான்...நோ டவுட்... எப்படியிருக்க?...உன் குழந்தையா?''
"ம்... நல்லாருக்கேன்... என் குழந்தைதான்...''
அருண், குழந்தையின் கன்னத்தை லேசாகக் கிள்ளி முத்தமிட்டு விட்டு "என்ன பேர் வச்சுருக்க?'' எனக் கேட்டான்.
"அருணகிரி...ஷார்ட்டா அருண்னு கூப்பிடுறோம்''
அதைக்கேட்டதும், அருண் ஷாக்கடித்தவன் போல், அவளை நிமிர்ந்து பார்த்தான்.
"என்ன அப்படி பாக்குறீங்க''
"என்னை, நீ இன்னும் மறக்கல, இல்ல...''
"எப்படி மறக்க முடியும்... மறந்துட்டா, நடந்ததெல்லாம் உண்மையில்லன்னு ஆயிடுமா...''
ரயில் புறப்பட்டது. பிளாட்ஃபாமில் நின்று கையசைத்தவர்கள், பின்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள். சிலரது கண்களில் கண்ணீர் தெரிந்தது. பிரிவு எத்தனை துயரமானது. அருணும், வினோதினியும் கூட, ஒருநாள் இப்படி பிரிந்து சென்றவர்கள்தானே.

சென்னையிலுள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில், அருண் சாஃப்ட்வேர் இஞ்ஜினியராக வேலைப் பார்த்தான். அதே கம்பெனியில் வினோதினியும் வேலைக்கு வந்து சேர்ந்தாள். ஒரு பெரிய மருத்துவமனைக்கு தேவையான சாஃப்ட்வேரை தயாரிக்கும் பொருப்பை, நிர்வாகம் அருண், வினோதினி இருவரிடமும் ஒப்படைத்தது. இருவரும், நேரம் காலம் பாராமல், பசி, தூக்கம் பாராமல், சேர்ந்து உழைத்தார்கள். அந்த உழைப்பில், ஒருவரின் ஆற்றலை மற்றொருவர் வியந்து பார்த்தார்கள். எப்போதாவது ஓய்வு கிடைக்கும் போது, ஒருவரைப்பற்றி ஒருவர், பர்சனலாகவும் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். 
அருண் அவனது பெற்றோருக்கு ஒரே பையன். அதனால் செல்லமாக வளர்க்கப்பட்டவன். அவன் கேட்டது எல்லாமே கிடைத்திருக்கிறது. இப்போதும், இரவில் அவன் வீட்டிற்கு வருவதற்கு தாமதமானால், அவனது அப்பா, வீட்டிலிருந்து டின்னர் எடுத்துக் கொண்டு, ஆபிஸýக்கு வந்துவிடுவார். எப்போதுமே, அதில் இரண்டு பேர் சாப்பிடும் அளவிற்கு டிபன் வைக்கப்பட்டிருக்கும். முன்பெல்லாம் கோபிதான் அவனுடன் ஷேர் பண்ணி சாப்பிடுவான். வினோதினி வந்ததற்கு பிறகு, அவள்தான் அவனுடன் ஷேர் பண்ணுகிறாள். ஒவ்வொரு முறையும், அருண் அம்மாவின் கைப்பக்குவத்தை மனம் விட்டு பாராட்டுவாள். அதுபோல் சாப்பிட்டு முடித்ததும், அந்தக் கேரியரை அவளே கழுவி வைக்கவும் செய்வாள். அவளுக்கு அப்பா கிடையாது. ஒரு விபத்தில் இறந்துவிட்டார். அம்மா மட்டும்தான். மற்றும் இரண்டு தங்கைகள். அவள், படித்து முடித்து வேலைக்கு வருவதற்கு முன்பு வரை, அவளது மாமா ராஜேஷ்தான் அந்தக் குடும்பத்திற்கு தேவையான எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டான். 
ஒருநாள் அருண், வினோதினியிடம் "இந்த உலகத்திலேயே உனக்கு ரொம்ப புடிச்ச விஷயம் எது வினோ...?'' எனக் கேட்டான்.
""நீதான்...'' அவள் கொஞ்சமும் யோசிக்காமல் பதில் சொன்னாள்.
அருண், ஒரு நிமிடம் தடுமாறிப் போனான்.
"இப்படி ஒரு பதிலை நான் எதிர்பாக்கல...''
"நானும் எதிர்பார்க்கலதான்... என்னமோ பட்டுன்னு வந்துடுச்சு...''
"அது எப்படி பட்டுன்னு வரும்... மனசுல ஏற்கனவே விதை விழுந்துருதாதான் அப்படி வரும்''
"சரி.. விழுந்ததாதான் வச்சுக்கங்களேன்''
அவன், மேலும் தடுமாறிப் போனான்.
"ஏய்.. என்னப்பா சொல்ற? நீ சொல்ற வார்த்தைக்கு, மீனிங் புரிஞ்சுதான் பேசுறியா...''
"எஸ்.. புரிஞ்சுதான் பேசுறேன்''
"அப்ப... யூ ஆர் இன் லவ் வித் மீ''
"எஸ்''
அருண் வாயடைத்துப் போய் நின்றான். அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. மனதில் நூறு தடவை யோசித்து, ஆயிரம் தடவை ஒத்திகைப் பார்த்து, சொல்லக்கூடிய ஒரு விஷயத்தை, கொஞ்சமும் தயக்கமில்லாமல், ஒரு விநாடியில் போட்டு உடைக்கிறாளே?
"என்ன சைலன்ட் ஆயிட்டிங்க...உங்களுக்கு விருப்பம் இல்லையா?'' அடுத்த கேள்வியையும் அதிரடியாகக் கேட்டாள்.
"விருப்பம் இல்லன்னு சொன்னேன்னா என்ன பண்ணுவ?''
"சூசைட் பண்ணிக்குவேன்னு மட்டும் எதிர்ப்பாக்காதீங்க... அப்பவும் உங்களைதான் லவ் பண்ணுவேன். நீங்க அக்சப்ட் பண்ணிக்குற வரை லவ் பண்ணிகிட்டே இருப்பேன்''
அவளது ஆழமான நேசிப்பு, அவனுக்குப் புரிந்தது. "அவ்வளவு தூரமெல்லாம் போக வேண்டாம்... இப்பவே பண்ணிக்க...'' என்றான். அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் இல்லை. ""தாங்ஸ்...'' என்று கூறி அவனது கன்னத்தில் முத்தமிட்டாள். அதுவும் அவன் எதிர்பாராததுதான். எல்லாவற்றிலும் வேகமாக இருக்கிறாள். 
அன்று முதல், இருவரும், தனித் தனி அல்ல, ஒன்று என நினைக்க ஆரம்பித்தார்கள். அவன், அவளை தனது வீட்டிற்கு அழைத்து வந்து, அப்பா அம்மா இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான். அவள் அவனது அம்மாவின் கையைப் பிடித்து "அருமையா சமைக்கிறீங்க ஆன்ட்டி'' என்று கூறி, முத்தமிட்டாள். அப்பா ""நான்தான் பாராட்டிகிட்டு இருப்பேன்... இப்ப நீயும் வந்து சேர்ந்துகிட்டியா... இனிமே புரவிஷன் பில்தான் எகிறப்போவுது. உங்க ஆன்ட்டி நெய்யும், முந்திரி பருப்பும் இல்லாம எந்தப் பலகாரமும் பண்ண மாட்டா...'' என்று சொல்லி சிரித்தார். பதிலுக்கு வினோதினி ""ஹோட்டலுக்கு போற செலவு மிச்சமாகுதுல்ல அங்கிள். அதோட வயித்துக்கும் கெடுதல் இல்லாம இருக்குல்ல'' என்றாள். அவள் அப்படி பேசியது, அவர்கள் இருவருக்கும் பிடித்துப் போனது. அடிக்கடி அவனது வீட்டிற்கு வர ஆரம்பித்தாள். ஒரு சில நாள்களில் அவர்களுக்குள் எந்த இடைவெளியும் இல்லாமல் போனது. அருண் எங்கேயாவது வெளியூர் போக நேர்ந்தால் அவள் அங்கு வந்து படுத்துக்கொள்வாள். அவன், சுவரில் அவளது போட்டோவை மாட்டி வைத்து, அதில் "ஐ லவ் யூ வினோ' என எழுதி வைத்திருப்பதை பார்த்துப் பார்த்து சந்தோஷமடைந்து கொள்வாள். யாருக்கு கிடைக்கும் இப்படியொரு லைஃப்?

ஒருநாள், அந்த லைஃபிற்கும் இடையூறு வந்தது. ராஜேஷ் தனது அக்காவிடம் வினோதினியைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள விரும்புவதாகச் சொன்னான். அதைக் கேட்டு, வினோதினி அதிர்ந்து போனாள். ஆனால், அவளது அம்மா "பண்ணிக்கடா...நா என்ன மாட்டேன்னா சொல்லப் போறேன். அவர் இறந்ததுக்கப்புறம் இந்த குடும்பத்தோட நல்லது கெட்டதையெல்லாம் நீதான எடுத்துப் பண்ண... நீ மட்டும் இல்லன்னா, மூணு பொம்பளைப் புள்ளைகளை வச்சுகிட்டு, நான் நடுத்தெருவுக்குதான் வந்திருக்கணும்...'' என்று சொன்னாள். அவளது கண்களில் நன்றி பெருக்கு தெரிந்தது. ராஜேஷ் "நீ சொல்லிட்ட... வினோதினி என்ன சொல்லுவான்னு தெரியலையே...'' என்றான். அதற்கும் அவள் "அவ என்ன சொல்லப் போறா... நடந்ததெல்லாம்தான் அவளுக்கும் தெரியுமே... நீ கல்யாணத்துக்கு ஆக வேண்டிய வேலையப் பாரு...'' என அதிகாரப்பூர்வமாகச் சொன்னாள். வினோதினி அப்படியே உறைந்து போனாள். அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. 
ராஜேஷ் நல்லவன்தான். அவளது அப்பா இறந்ததற்கு பிறகு, அந்த குடும்பத்தை தாங்கிப் பிடித்தவன். வயதுக்கு வந்ததற்கு பிறகு ஒரு தடவை கூட அவளை அவன் நிமிர்ந்து பார்த்ததில்லை. அத்தனை நாகரீகமானவன். அப்படிப்பட்டவனை வேண்டாம் என எப்படி நிராகரிக்க முடியும். அதை அம்மாதான் தாங்கிக் கொள்வாளா? மாமா மனதில் இப்படியொரு ஆசை இருக்கிறது என்பது முன்பே தெரிந்திருந்தால், அருணை காதலிக்கலாமாவது இருந்திருக்கலாம். இப்போது அவருக்கு என்ன பதில் சொல்வது. அவரே சரி என ஏற்றுக் கொண்டாலும், அவரை பிரிந்து, தன்னால் நிம்மதியாக வாழ முடியுமா? கடவுளே இது என்ன சோதனை... இதை நானும் அருணும் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்.
அதிகம் தள்ளிப் போடாமல் அன்று மாலையே அருணிடம் விஷயத்தைச் சொன்னாள். அவன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பின் "எல்லாத்துலயும் உனக்கு அவசரம்... அதுதான் இப்ப உன்னை இந்த இடத்துல கொண்டு வந்து நிறுத்தியிருக்கு... நாம ரெண்டு பேரும் சின்னப் பசங்க இல்ல... வீட்டுல இருக்குறவங்களோட உணர்வுகளை மதிக்காம நடந்துக்குறதுக்கு... நீ உன் மாமவையே கல்யாணம்
பண்ணிக்க...அதுதான் நல்லது... என்னடா இப்படி சொல்றானேன்னு நினைக்காத... அவங்களை காயப்படுத்திட்டு நாம ஒண்ணு சேரணும்ன்னு நினைச்சோம்ன்னா, சத்தியமா நம்மளால நிம்மதியா வாழ முடியாது...சரி பிரியிறது மட்டும் சாத்தியமான்னு கேட்டின்னா, அதுவும் வலிக்கும்தான்... ஆனா, அவங்க வலியோட கம்பேர் பண்ணும்போது நம்ம வலி கம்மிதான்... போ... போய் வீட்டுல ஒத்துக்க...'' எனத் தெளிவாகக் கூறினான். அவள் அவனை கட்டிக் கொண்டு அழுதாள். சிறிது நேரம் அழவிட்டு, பின் தன்னிடமிருந்து அவளைப் பிரித்தெடுத்தான்.
"ஆல் த பெஸ்ட் வினோ...'' என்றான்.

இது நடந்து இரண்டு வருடமாகிறது. அவள் கல்யாணத்திற்கு கூட அவன் போகவில்லை. அதன் பிறகு, அவளை, இதோ, இப்போதுதான் பார்க்கிறான்.
"உன் மாமா வரலியா?''
"என் முதல் தங்கைக்கு நிச்சயதார்த்தம்... அதுக்காகத்தான் சென்னைக்கு போயிட்டு இருக்கேன்... அவருக்கு ஆபிஸ்ல டைட் ஒர்க்... ரெண்டு நாள் கழிச்சு ஃபிளைட்ல வந்துடுவாரு''
"ஓ! அப்படியா''
"நீங்க எப்படி இருக்கீங்க அருண்... கல்யாணம் ஆயிடுச்சா?'
"ம்...' 
அவள் முகத்தில் நிம்மதி படர்வது தெரிந்தது.
"அவங்க பேரு.. என்ன பண்றாங்க?''
"கெளசல்யா... ஹவுஸ் ஒய்ஃப்தான்...''
"குட்.. என்னை விட நல்லா இருப்பாங்களா?''
அவன் சற்று யோசித்து விட்டு "ம்... நல்லா இருப்பாங்க...'' என்றான்.
அவள் மேலும் நிம்மதி அடைவது தெரிந்தது.
""குழந்தைங்க''
"ஒரு குழந்தை... பொண்ணு...''
"என்ன பேரு வச்சுருக்கீங்க...'' அவசரமாகக் கேட்டாள்.
""வினோதினி...''
கோபி திரும்பி அருணைப் பார்த்தான். 
வினோதினியின் முகத்தில் மகிழ்ச்சி பரவியது.
""தாங்ஸ் அருண்... இந்த நினைவுகள் போதும், மீதி நாள்களை சந்தோஷமா வாழ...'
அப்போது அவளது குழந்தை அழ ஆரம்பித்தது. அவள் அதை அருணிடம் கொடுத்து வைத்துக் கொள்ளச் சொல்லி விட்டு, ஃபிளாஸ்க்கிலிருந்து ஒரு டம்ளரில் பால் ஊற்றி, அதில் சர்க்கரையை போட்டு கலக்கினாள். பின், அவனிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு, அதற்கு பாலை ஊட்ட ஆரம்பித்தாள்.

சென்னை சென்ட்ரல். ரயில் வந்து நின்றது. மூவரும் இறங்கி வெளியில் வந்தார்கள். அருண் ஆட்டோ பிடித்து அதில் வினோதினியையும், குழந்தையையும் ஏற்றி அனுப்பி வைத்தான். பின், வேறொரு ஆட்டோ பிடித்து அதில் அவனும் கோபியும் ஏறிக் கொண்டார்கள். 
ஆட்டோ புறப்பட்டதும், கோபி, முதல் வேலையாக, அருணிடம், "எதுக்குடா இத்தனை பொய்...?'' எனக் கேட்டான்.
அருண் அமைதியாக இருந்தான்.
"கல்யாணமாயிடுச்சு... குழந்தை இருக்கு... அது இதுன்னு... நீ பாட்டுக்கு அள்ளி விட்டுட்டு வர்ற...''
அவன், அதற்கும் அமைதியாக இருந்தான்.
"என்னடா... சைலன்ட்டா இருக்க...? எதுக்காக அப்படிச் சொன்ன?''
"வேணும்ன்னுதான்டா சொன்னேன்... அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு... ஹஸ்பென்ட் குழந்தைங்கன்னு சந்தோஷமா இருக்கா... நான் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கேன்னு தெரிஞ்சுது... நம்பளாலதான இவர் இப்படி இருக்கார்ன்னு நெனைச்சு ரொம்ப வருத்தப்படுவா... காரணம், அவதான முதல்ல லவ் பண்ணா... அவதான பிரிஞ்சு போனா... அந்தக் குற்றஉணர்ச்சி அவ மனசுல என்னிக்குமே இருந்துட்டு காயப்படுத்திட்டு இருக்கும். அதனாலதான் அப்படியெல்லாம் பொய் சொன்னேன். எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு நான் சொன்னதும் அவ முகத்துல ஒரு நிம்மதி தெரிஞ்சுதே... அதைப் பாத்தியா? அந்த நிம்மதி அவகிட்ட நிரந்தரமா இருக்கணும்... அதுதான் எனக்கும் நிம்மதி...'' என்று சொல்லி கண் கலங்கினான். 
கோபி, அவனைத் தனது தோளில் ஆதரவாக சாய்த்துக் கொண்டான்.
மணிபாரதி


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/17/w600X390/kd13.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/18/இதுதான்-காதல்-என்பதா-2865280.html
2860963 வார இதழ்கள் தினமணி கதிர் அம்....மா! மாலன் Sunday, February 11, 2018 12:00 AM +0530 வீழ்வேன் என்று நினைத்தாயோ? - 7

குடிசைகள் நிறைந்த கம்பங்களில் வீட்டுக்குள்ளே இட நெருக்கடி இருந்தது. தண்ணீர் வசதியோ, கழிவறை வசதியோ திருப்தியாக இல்லை. சில இடங்களில் மட்டுமே மின்சாரம் இருந்தது என்பதெல்லாம் உண்மைதான். 
ஆனால் வீட்டுக்குள்தான் இட நெருக்கடியே தவிர, வீடுகளுக்கு வெளியே ஏராளமான திறந்த வெளி இருந்தது. கிராமப்புறங்களைப் போலவே ஆங்காங்கே மரங்கள் இருந்தன. சில வீடுகளில், அனேகமாக வீட்டுக்கு வீடு, பழ, மரங்கள் வளர்ந்து நின்றன. சிங்கப்பூருக்கே உரிய "ரெம்புட்டான்' பழங்கள் அவற்றில் கனிந்து தொங்கின. பலாப் பழத்தைப் போன்று வெளித்தோற்றம் கொண்ட ஆனால் அதை விட மிக இனிப்பான "ட்டுரியன்' பழங்களும் காய்த்துக் கிடந்தன. இந்த மரங்களில் ஏறிக் குதித்து விளையாடுவது என்றால் குழந்தைகளுக்கு குஷி. அதிலும் அடுத்த வீட்டில் காய்த்துத் தொங்கும் ரெம்புட்டான் பழங்களை ஓசைப்படாமல் பறித்துக் கொண்டு ஓடுவதில் அலாதி மகிழ்ச்சி. அகப்பட்டுக் கொண்டு அடிபட்டாலும் கவலை இல்லை. திருட்டுக் கனிகளின் தித்திப்பே தனி அல்லவா?
கம்பங்களில் தமிழர்கள் பசுக்கள் வளர்த்து வந்தார்கள். சிலர் கோழிகளும், வாத்துக்களும் வளர்த்து வந்தார்கள். சீனர்கள் பன்றிகள் வளர்த்து வந்தார்கள். பசுக்கள் பால் தந்தன என்பதோடு உபரி வருமானத்திற்கும் வழி செய்தன. ஆனால் அதைத் தாண்டி உணர்வு ரீதியான ஒரு பாசப் பிணைப்பு அவற்றின் மேல் வளர்த்து வந்தவர்களுக்கு இருந்தது.
அடுக்கு மாடி வீடுகளுக்கு இடம் பெயர்ந்தால் மரங்களுக்கு எங்கு போவது? மாடுகளை எங்கு கட்டுவது? பன்னிரண்டாம் மாடியில் வாசல் வராண்டாவில் அவற்றைக் கட்டி வைக்க முடியுமா? அவை அத்தனை படி ஏறி வருமா?
கம்பங்களிலிருந்து அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு இடம் பெயரும்போது எற்படும் மன உணர்வுகளை சிறந்ததொரு சொற்சித்திரமாகத் தீட்டியிருக்கிறார் சிங்கப்பூரின் முன்னணி எழுத்தாளரான சிங்கை மா.இளங்கண்ணன். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களில் முதன் முதல் ஆசியான் விருது பெற்ற எழுத்தாளர் இவர்தான். இவரை "சிங்கப்பூரின் ஜெயகாந்தன்' என்றுதான் சொல்ல வேண்டும். அங்கு வாழ்ந்த அடித்தள மக்களின் வாழ்க்கையைப் பல கதைகளில் பதிவு செய்தவர். கம்பங்களிலிருந்து அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு மாறிய சூழலைப் பின்னணியாகக் கொண்டு "நினைவுகளின் கோலங்கள்' என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறார். குடிபெயர்வின் காரணமாக மாடுகளை விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. வாங்கியவர்கள் மாடுகளை அழைத்துப் போகும் காட்சியை அவர் விவரித்திருக்கும் விதத்தை வாசித்தபோது என் மனது கலங்கி விட்டது: 
"சிறிது பள்ளமாக இருந்த இடத்தில் சுமையுந்து வந்து நின்றது. அதில் இருந்த பலகைகளை எடுத்துச் சரிந்த வாட்டத்தில் போட்டனர். முதலில் பெரிய மாடுகள் கொண்டு வரப்பட்டன.
மூக்கணாங் கயிற்றைப் பிடித்துச் சுமையுந்தில் இருந்தவர்கள் இழுத்தனர். மாடு பலகையில் நடந்து செல்ல அஞ்சிப் பின்னுக்கு இழுத்தது. பின்னால் இருந்து ஒருவர் வாலைப் பிடித்து முறுக்கினார். மாடு தட்டுத்தடுமாறி ஏறிச் சென்றது. வண்டிக்குள் சென்றதும் முதலில் சென்ற அந்த மாட்டுக்கு ஒரே நடுக்கம். சாணத்தைக் கழிந்தது. பலகைத் தடுப்புக்கு மேலே எட்டிப் பார்த்து,..ம்மா! என அடிவயிறு ஒட்டக் கத்தியது.
பார்த்துக் கொண்டே நின்ற மரகதத்தின் கண்களிலும் கண்ணீர் அரும்பியது. பணத்தை எண்ணிப் பெட்டிக்குள் வைத்துவிட்டு வரும்போது இருந்த மகிழ்ச்சி மறைந்து விட்டது. தன்னையே "அம்மா' என்று அழைப்பதாக எண்ணிக் கொண்டு பார்வையை வேறு பக்கம் திருப்பினாள். கருப்புப் புள்ளிப் பசு மீது அவள் பார்வை விழுந்தது. அது தொத்தப் பசு "அந்தப் பசுவால்தான் நாம் முன்னேறியிருக்கிறோம். ராசியான மாடு. அதை விற்கவே கூடாது. நம்ம வீட்டிலேயே நின்னு சாகட்டும்!' என்று அவள் கணவர் முருகையா பலதடவை பலரிடம் சொல்லியதும் அவள் நினைவுக்கு வந்தது. அழுகையும் பொங்கிக் கொண்டு வந்தது.
மாடுகளை மனிதர்கள் பிரிந்த துயரத்தை விட மனிதர்கள் மனிதர்களைப் பிரிந்த துயரம் மிகப் பெரியது. கம்பங்களில் தமிழர்கள் அடுத்தடுத்த குடிசைகளில் வசித்தார்கள். பலர் ஒன்றாய்க் கூடி ஒரே வீட்டில் வசித்ததும் உண்டு. தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும் அப்படித்தான். அதுதான் மனித இயல்பு. இன்றும் கூட அமெரிக்காவிற்குப் போனாலும், மும்பைக்குப் போனாலும் அப்படித்தான் வாழ்கிறார்கள். கனடாவின் டொராண்டோ நகரின் பார்லிமெண்ட் தெரு, இங்கிலாந்தின் ஈஸ்ட் ஹாம் பகுதி, தில்லியின் ஆர்.கே.புரம், மும்பையின் தாராவி, மாட்டுங்கா எல்லாம் தமிழ் மணம் கமழும் பகுதிகள்தான். அம்மாவின் புடவையைக் கைக்குள் சுருட்டிக் கொண்டு தூங்குகிற குழந்தைக்குக் கிடைப்பதைப் போல ஒரு பாதுகாப்பு உணர்வை அவர்களுக்குக் கொடுக்கிறது போலும்! பாதுகாப்பு உணர்வு மட்டுமல்ல, கலாசாரக் காரணங்களும் அதற்குப் பின் இருக்கின்றன. பக்கத்து வீட்டுக்காரனோடு தாய்மொழியில் எதிர் வீட்டுக்காரனைப் பற்றி வம்பளக்க முடியாமல் போனால் அது என்ன வாழ்க்கை ?
ஆனால் இடப்பெயர்வின் போது அது சிதைந்து போனது. காரணம் சிங்கப்பூரில் நடைபெற்ற இனக்கலவரங்களை மனதில் கொண்டு, அடுக்கு மாடி வீடுகளை ஒதுக்குவதில் லீ ஒரு கொள்கையைக் கடைப் பிடித்தார். மொத்த மக்கள் தொகையில் இனங்கள் என்ன விகிதத்தில் இருக்கின்றனவோ அந்த விகிதத்தில்தான் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்படும். மக்கள் தொகையில் எழுபது சதவீதம் சீனர்கள், இருபது சதவீதம் மலாய் மொழிக்காரர்கள், 10 சதவீதம் இந்தியர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தளத்தில் 10 வீடுகள் இருக்கின்றன என்றால் 7 வீடுகள் சீனர்களுக்கு, 2 வீடுகள் மலாய்க்காரர்களுக்கு, ஒரு வீடு இந்தியருக்கு என்று ஒதுக்கப்படும் என்பதுதான் அந்தக் கொள்கை. அதாவது உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் உங்கள் மொழி பேசுபவராக இருப்பார் என்பது உறுதியில்லை. உங்கள் மதத்தை, உங்கள் கலாசாரத்தைப் பின்பற்றுபவராக இருப்பார் என்று சொல்வதற்கில்லை!
காலம் காலமாக ஒரு குடும்பம் போல் நெருங்கிப் பழகியவர்களைத் திடீரென விடைபெற்றுக் கொண்டு முற்றிலுமாகப் பிரிந்து போவது என்பது பலருக்குத் துன்பம் தரும் அனுபவமாக இருந்தது. 
இதுபோன்ற சூழல் தந்த மன உளைச்சல்களை நன்கு அறியப்பட்ட சிங்கப்பூர் எழுத்தாளரான லதா தனது "வீடு' என்ற சிறுகதையில் ("நான் கொலை செய்யும் பெண்கள்' - தொகுதி) குறிப்பிடுகிறார்: 
"நகர சீரமைப்பில் அந்த கூட்டு வாழ்க்கை சிதறிப் போச்சு. அந்தக் கம்பம் சிதைஞ்ச கத இருக்கே . அது ஒரு தனிக் கதை. ஒண்ணுக்குள்ள ஒண்ணா அக்கா தங்கச்சியா பழகின எல்லோரும் மூலைக்கு ஒரு பக்கமா சிதறிப் போயிட்டாங்க...
...மண்ணோடயும் மரங்களோடயும் வாழ்ந்து பழகின என்னால ஆரம்பத்தில மாடி வீட்டை ஏத்துக்க முடியல. ஜெயிலுக்குள்ள அடைச்சு வைச்ச மாதிரி மூச்ச அடைச்சுக்கிட்டு இருந்தது... 
மாடி வீடுகளுக்குப் போவதில் சிலருக்கு வேறு சில சிக்கல்களும் இருந்தன. அறுபதுகளில் "லிஃப்ட்' என்றழைக்கப்படும் மின் தூக்கிகள் இப்போது இருப்பது போல பரவலாகப் பயன்பாட்டில் இல்லை. தமிழ்ச் சமுகம் அதில் அதிகம் புழங்கியது இல்லை. எனவே லிஃப்ட்டில் செல்வதற்கு பயந்து கொண்டு 10}ஆவது மாடி, பன்னிரண்டாவது மாடியில் இருப்பவர்கள் கூட அத்தனை படிகளையும் ஏறிச் சென்றார்கள் என்கிறது அரசு வெளியிட்டுள்ள ஒரு நூல். 
இந்தப் பிரச்னைகள் எல்லாம் சிறு சிறு பிரச்னைகள் போலத் தோன்றலாம். உற்று நோக்கினால் இவை யாவும் உளவியல் ரீதியான பிரச்னைகள் என்பதை உணரலாம். இவற்றைத் தீர்க்காமல் போனால் லீயின் கனவு முளையிலேயே கருகிப் போகிற ஆபத்து இருந்தது. 
(தொடரும்)
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/10/w600X390/k1.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/11/அம்மா-மாலன்-2860963.html
2860964 வார இதழ்கள் தினமணி கதிர் துரோணர்-அசுவத்தாமன்-கிருபி DIN DIN Sunday, February 11, 2018 12:00 AM +0530 "வென் திங்க்ஸ் ஃபால் அபார்ட்' என்ற ஆங்கில நாடகம் பார்த்துவிட்டுப் படியிறங்கியபோது, ஓர் இளைஞர் "ஆங்கில நாடகம் பார்த்த மாதிரியே இல்லை. தமிழ் நாடகம் பார்த்த மாதிரிதான் இருந்தது!'' என்றார்.
 அவர் அப்படிச் சொல்வதற்குக் காரணம் இருந்தது. புரிந்துகொள்ளக்கூடிய ஆங்கிலம். அழுத்தமான, மனதைத் துளைக்கிற வசனங்கள். இவர்கள் நடிக்கிறார்களா அல்லது அந்தப் பாத்திரங்களாகவே மேடையில் இருக்கிறார்களா என்ற ஐயத்தை எழுப்பக்கூடிய அளவுக்கு உணர்ச்சி வெளிப்பாடு.
 மத்திய கலாசாரத் துறையின் ஆதரவோடு ஆர்.ஆர். சபாவில் நடந்த இந்த நாடகத்துக்கு நிறைய இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தது அவர்களின் ஆர்வத்துக்கு அறிகுறியாக இருந்தது.
 கௌரி ராம்நாராயண் மகாபாரத பாத்திரங்களைப் பார்க்கும் கோணமே வேறாக இருந்ததுதான் நாடகத்தின் சுவாரசியம். கௌரவர்களின் ராஜகுருவான துரோணர். அவர் மனைவி கிருபி. மகன் அசுவத்தாமன் என மூன்றே பாத்திரங்கள். தந்தை துரோணர் மீது மரியாதை இல்லாத அசுவத்தாமா. ("அர்ஜுனன் மீது காண்பிக்கும் அக்கறையில் ஒரு துளிகூட அவர் என்னிடம் காண்பிப்பதில்லை!') பெண்மைக்கு வாதாடும் கிருபி. தன் விருப்பமும் முடிவுமே சரி என்று நினைக்கும் துரோணர். வசனம் கூர்மையாக இல்லை என்றால் இத்தனை பாத்திரப் படைப்பும் வீணாகிவிடும். நாடகாசிரியரும் இயக்குநரும் ஆன கௌரி ராம்நாராயண் இங்கேதான் முழு வெற்றி அடைந்திருக்கிறார்.
 "துரோபதியை சபைக்கு இழுத்து வந்தபோது நீங்கள் வாயை மூடிக்கொண்டிருந்தால் உங்களுக்கு கனகாபிஷேகம் செய்வார்கள் என்று நினைத்தீர்களா? திருதிராஷ்டிரனுக்கும் அவரது நூறு பிள்ளைகளுக்கும் நீங்கள் ஊழியன் என்று நீங்கள் நிரூபிக்கவில்லையா? ஆசாரியன் என்ற முறையில் உங்கள் அங்கீகார முத்திரையைக் குத்தவில்லையா?'' என்று சினந்து போய் கிருபி கேட்கிறாள்.
 "மதிப்புக்குரிய பீஷ்மர் அதைத் தடுப்பார் என்று எண்ணினேன்!'' என்று சொல்லிவிட்டு, "எனக்கு செல்வம், கௌரவம், மாரியாதை, பாதுகாப்பு, ஏன் - அணியும் உடைகள்கூட அரசரிடமிருந்துதான் வருகிறது. நான் அரசனின் உப்பைத் தின்றவன்'' என்று பதிலளிக்கிறார் துரோணர்.
 "அதனால் என்ன? அவர் உப்பைத் தின்னாதீர்கள்!''
 துரோணராக வி. பாலகிருஷ்ணனும், மகன் அசுவத்தாமாவாக அகிலா ராம்நாராயணும் உக்கிரமான பாத்திரப் படைப்பை வெளிக்கொண்டு வந்தார்கள் என்றால், கிருபியாக வினோதினி வைத்தியநாதனும் அமைதியாக இருந்து அக்னி போல் கொதித்தார்.
 ஸ்ரீஜித் கிருஷ்ணாவின் பின்னணி இசையில் மிருதங்கத்தின் அழுத்தமும் ஆவேசமும் மிருதுவாகக் கேட்டுக்கொண்டே இருந்தன. வாத்திய ஓசைக்கு பதிலாக அவர் செய்த "ஹம்மிங்' கூட புதுமையாக இருந்தது.
 மேடையின் ஒளியமைப்பும், நடிகர்களின் மார்ஷியல் ஆர்ட் பிரயோகங்களும் வெகு இயல்பாக, வசனங்களுடன் இழைந்து வந்தன. எந்த இடத்திலும் செயற்கைத்தன்மை இல்லை.
 "உங்களுக்கு எத்தனை காலம் ஆகும் ஒரு நாடகத்தை மேடை ஏற்ற?'' என்று கௌரி ராம்நாராயணிடம் கேட்ட போது, "சுமார் ஒரு வருடம் ஆகும். இதில் ரிகர்சலுக்கு மட்டும் கடைசியில் நான்கு மாதங்கள் ஆகும்!'' என்றார். அந்த உழைப்பும், எடுத்துக்கொள்ளும் காலமும்தான் நாடகத்தை இந்த உயர் நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கின்றன என்பது புரிந்தது. நாடகத்துக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த டாக்டர் இந்திரா பார்த்தசாரதி, "அருமையான நாடகம்'' எனப் பாராட்டினார். தமிழ் நாடக மேடையில் இந்தத் தரம் கொண்டு வர முடியுமா என்று தமிழ் நாடகத் தயாரிப்பாளர்கள் சற்று யோசித்தால் நல்லது.
 
 -சாருகேசி
 வண்ணப்படங்கள்: மோகன் தாஸ் வடகரா
 
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/10/w600X390/k2.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/11/துரோணர்-அசுவத்தாமன்-கிருபி-2860964.html
2860965 வார இதழ்கள் தினமணி கதிர் நன்னயம் செய்துவிடேல்! DIN DIN Sunday, February 11, 2018 12:00 AM +0530 "வரப் போறாளாமா? வரட்டும்... வரட்டும்... நாக்கைப் புடுங்கற மாதிரி நாலு கேள்வி கேக்காம உட மாட்டேன் நான். இப்பதான் ஒடம்பொறப்பு தெரிஞ்சுதாமா? அம்மா செத்துப் போயி இந்தச் சித்திரை வந்தா பதினாலு மாசம் ஆகுது. மொத வருசம் திதி குடுக்கும்போது பாத்ததுதான்... அப்பறம் ஒரு கடிதாசி கூடப் போடலியே? இப்ப கூட வரப்போறோம்னு எதுக்காகப் போட்டிருக்கா தெரியுமா? தேவியம்மா வரப் போறங்கள்ல... நாங்க எங்கியாவது வேற ஊருக்குப் போயிட்டா என்ன செய்யறது? அவ வர்றது வேஸ்டாப் பூடுமில்ல... அதுக்காகத்தான். எல்லாம் ஒரே காரியவாதிதான்.
 ஆமாம்... இப்ப அவளுக்கு எல்லாக் காரியமும் முடிஞ்சு போச்சு... பசங்க எல்லாம் படிச்சு வேலக்கிப் போயிட்டாங்க. கட்டினவனோ பேங்கில ஆபீசரு. பணமோ கூரையைப் பிரிச்சுக் கொட்டுது... கொட்டட்டுமே எனக்கென்னா? ஒன் பணம் பெரிசுன்னா ஒன்னோட... என் காசு என்னோட... என் புள்ளைங்களும்தான் நல்லாப் படிச்சாங்க... இப்ப கல்யாணம் செஞ்சுகிட்டு மாரியாத்தா புண்ணியத்துல நல்லா இருக்காங்க... ஒன்னை மாதிரி லட்சம் லட்சமா சேத்து வைக்கலதான்... ஆனாலும் ஏதோ ஆயிரம் ஆயிரமா வச்சிருக்கோம்ல... நாங்களும் ஒண்ணும் கொறைஞ்சு போயிடல...
 இப்பகூட எதுக்கு வராளாம்? பொண்ணுக்குக் கல்யாணமாம்... பத்திரிகை வைக்க வராங்களாம்... வரட்டும், வரட்டும்... நான் சும்மா மட்டும் இருக்கமாட்டேன்... நல்லா சத்தமா கேக்காம உட மாட்டேன். அவ ஊட்டுக்குப் போனா ஒரு தடவையாவது சண்டை போடாம அனுப்பி வச்சிருக்காளா? கடைசியா எப்ப பாத்தேன்னு சொன்னேன்? ஆமா... அம்மாவுக்கு மொத வருசம் திதி குடுக்கப் போன போதுதான். அதைக் கூட இங்கியே வச்சுக்கலாம்னு சொன்னேன்... அவ கேக்கலயே... அங்க போனா எல்லாம் அவ நாட்டாமைதான். எல்லாத்துக்கும் அவளைக் கேட்டுக்கிட்டுதான் செய்யணும்... அதுக்குதான் அங்கியே வரச் சொல்றா... கேட்டா லீவு கெடைக்காதாம்.
 உசிரு உட்ட எடத்துல காரியம் செஞ்சாப் போதும்டி... வருசத் திதி இங்கியே வச்சுக்கலாம்னு படிச்சுப் படிச்சுச் சொன்னேன்... அவ கேக்கலயே... வாணாம்டி... இங்க மாடுகன்னு இருக்கு, வயலுக்குக் களையெடுக்கணும்... கரும்பு வெட்டணும்... மல்லாட்டையைப் புடுங்கியாந்து போட்டா காவலுக்கு ஆளு வேணும்னு சொன்னேன்... அவ பாட்டைத்தான் அவ படிக்கறா...''
 "எல்லாம் மாமன் பாத்துப்பாரு... நீ வந்திருக்கா'' அப்படி இவரைத் தனியா உட்டுட்டுப் போயி நான்தான் வழிகாட்டிட்டுட்டேன். இல்லன்னா கத்துவா... அவ கடுதாசி போட்ட ஒடனே நாம போயிடணும்... அதுவும் ரெண்டு நாளு நெருக்கத்துலதான் போடுவா... எனக்குப் பேப்பர் திருத்த திருச்சிக்குப் போகணும்... நீ ஒடனே கௌம்பி வர்றது''
 அங்க போன ஒடனேயே பேச்சுல வெஷம்தான் இருக்கும்... ""நான் என்னைப் பாக்கவா வரச் சொன்னேன்... நீ ஒங்கம்மாவைப் பாத்துக்கணும்ல... அதுக்காகத்தான்.''
 அம்மா கீழே ஒண்ணும் படுக்கையில கெடக்கல... ஆனா ஒரு கையி வராது. காலுகூட இழுத்துதான் நடப்பா... ஆனா அதை ஒரு கையை வச்சுக்கிட்டு அவ எம்மா வேலை செஞ்சா தெரியுமா? அவ இல்லாட்டி இந்த ரெண்டு கொழந்தைகளும் அவ வளத்திருப்பாளா?
 வேலையெல்லாம் முடிஞ்சு போயி பசங்க எல்லாம் பெரிய படிப்பு படிக்க வந்தபோதுதான் ஆரம்பிச்சா... அவ கேட்டா கூடப் பரவாயில்ல... அவ புருசன் அதான் நானும் என் ஊட்டுக்காரும் பாத்துக் கட்டிவச்சவருதான், "ஏன் நீங்க கொண்டுபோயி ஒங்க அம்மாவை வச்சுக்கக்கூடாதா? நாங்களேதாம் வச்சுக்கணுமா? நாங்கதாம் ரெண்டு பேரும் வேலக்குப் போறோம்ல... அம்மா இங்க ஊட்ல பகல்ல பூரா தனியாதான இருக்கா... பாவம்தான.''
 அவளாவது ஏங்க இப்படிப் பேசறீங்கன்னு கேக்கல... ""மாட்டாங்க... அவங்கள கூப்பிட்டுக்குட்டுப் போவ மாட்டாங்க... இங்க நம்ம தலையில கட்டிட்டு அவங்க ரெண்டு பேரும் நிம்மதியா இருக்காங்க. நாமதான் ஒடம்புக்கு வந்தா ராக்கண்ணு முழிக்கணும்... வேலக்கும் போயிட்டு வரணும்... அவங்களுக்கு என்னா கெடக்குது?''ன்னுசொல்றா அவ.
 நானும் கேட்டேன்... "ஏன்டி நீதான கல்யாணம் ஆன ஒடனேயே அம்மா என் கூடவே இருக்கணும்னு சொன்னே... இப்ப புள்ளங்க எல்லாம் பெரிசாப் போயிடுச்சேன்னு இப்படிப் பேசறியே''ன்னு கேட்டேன். "அதுக்காக என் தலையிலேயெ கட்டிடணுமா?''ன்னு கேக்கறா.
 என்ன விட பத்து வருசம் பின்னாடி பொறந்தவ மாதிரியா அவ பேசறா... அவளை நான்தான் எங்க போனாலும் அப்பல்லாம் இடுப்புல தூக்கி வச்சுச் சொமந்துட்டு போவேன். அப்பாவும் செத்துப்போயி அம்மாவுக்கும் பக்க வாதம் வந்த ஒடனேயே எந்த ஒறவுக்காரங்களும் வந்து என்னான்னு கூடப் பாக்கல... வந்தா எங்க புடிச்சுக்குமோன்னு எல்லாருக்கும் ஒரே பயம்... அப்ப இவளுக்கு வேற டீச்சரு வேலக்குப் படிக்கறதுக்கு ஆர்டரு வந்திருச்சு... எல்லாரும் போகக் கூடாதுன்னு ஒரே புடிவாதம் புடிச்சாங்க... நானும் எங்க ஊட்டுக்காரரும்தா ஒரு கால்ல நின்னு அவளச் சேத்தோம்... அவ படிப்புல கெட்டி... நல்லாப் படிச்சு வேலைக்கும் போயிட்டா. அவளை மேல மேல படிக்கச் சொன்னவரே எங்க ஊட்டுக்காருதான்... எதோ ஒரு நல்ல எடமா பாத்துக் கல்யாணமும் செஞ்சு வச்சோம்...
 கல்யாணத்துக்கு எங்கப்பாரு பணம் நகையெல்லாம் வச்சிருந்துதான் போனாரு... நாங்க ஒடலுழைப்பைதான் குடுத்தோம். அதுக்கே அவளுக்கு சரியா வரன் ரொம்ப நாளு அமையல... எல்லாரும் அவளுக்குக் கல்யாணம் செய்யவாபோறா அக்காக்காரி... பாத்துடுவோம்னு பேசினாங்க. இப்படி எல்லாம் பேச்சுக் கேட்டுக்கிட்டுதான் நாங்க எல்லாம் செஞ்சோம்...
 மனத்தின் உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. "சரி, அவ உனக்கு எதுவுமே செய்யவில்லையா?''
 "ஐயோ, ஐயோ... அது மாதிரி சொன்னா என் நாக்கு அழுகிப் பூடும்... என் ரெண்டு பசங்களையும் அவதான் டவுன் படிப்பு நல்லா இருக்கும்னு கூட்டிட்டுப் போயி நல்லாப் படிக்கவச்சா... அதுங்களும் அவ பேச்சுக்கு இன்னிக்கும் வேற பதில் சொல்லாது. ஆமாம். எங்க உட்டேன். கூட்டிட்டுப் போயிடுன்னு சொன்னாங்க... நான் ஒண்ணும் பதில் சொல்லல... நாங்களே கிராமத்துல இருக்கோம். இங்க குளிக்க, கக்கூசு போவல்லாம் வசதி கம்மி... டாக்டருகிட்ட போகணும்னா கடலூருக்குதான் போவணும்... இதெல்லாம் நான் சொல்லல... ஒடனே இவருக்குக் கடுதாசி போட்டேன்... காரு ஒண்ணு எடுத்துட்டு வரச்சொல்லி... அவரும் காரோட ரெண்டாம் நாளு வர்றதா பதில் போட்டுட்டு காரோடேயெ வந்துட்டாரு... அவ அம்மாவப் போக உட்டாளா? அப்பறம் அவ பிடிப்பு போயிடும்ல... அனுப்பலங்க... பேச்சு மட்டும்தான் கூப்பிட்டுப்போ கூப்பிட்டுப்போன்னு சொல்றது.
 உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. "சரி, விடு... உன் கூடப் பிறந்தவள்தானே?''
 "அப்படித்தான் நான்தான் எல்லாத்துக்கும் பொறுத்துக்குனு போயிட்டிருக்கேன். அதுக்காக என் மொதப்புள்ளயும் மருமவளும் அங்க பாட்டியைப் பாக்க வந்தவங்கள வச்சுக்கினு என்னா பேச்சுப் பேசினா தெரியுமா?''
 உள்குரல் கேட்டது. ""சொன்னால்தானே தெரியும்?''
 ""நாங்க அவளுக்கு ஒண்ணுமே செய்யலயாம்... அவதான் எங்களுக்கு எல்லாம் செஞ்சாளாம். இதைக் கேட்டு எனக்குக் கோபமே வந்திடுச்சு... ஆனா, "சரிடிம்மா... இத்தோட உட்டுடு. நீயே எல்லாம் செஞ்ச... நாங்க ஒண்ணுமே செய்யல... எனக்குன்னு ஒரு மனச்சாட்சி இருக்கு... அதுக்கு எல்லாம் தெரியும்' னு சொல்லிட்டு நான் அதுக்கப்பறம் ஒண்ணும் பேசல. நான் ஒடனே ஒடனே ஓடினதுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்னு நெனச்சுகிட்டேன். வருசப்பொறப்புக்குக் கூட ஒரு தடவ அவ "மாமன் அங்க தனியாதான இருக்காரு. இங்க வரச்சொல்லேன் அக்கா'ன்னு சொல்ல மாட்டாங்க. கல்யாணத்துக்கப்பறம் யாரும் தனக்கு வாணாம், பணம் போதும்னு நெனச்சுக்கிட்டா போலிருக்கு
 உள் குரல் கேட்டது. "சரி, இப்பொழுது உன் வீடு தேடி வருகிறவர்களிடம் நீ என்ன கேட்கப்போகிறாய்?''
 "என்னா கேக்கப்போறானா? என் மொத மவன் கல்யாணத்துல என்னா ஆட்டம் ஆடினாங்க தெரியுமா? ஆறு மாசத்துல நோயில கெடந்து பொழைச்ச புள்ள அது. பொண்ணு பாக்க அவளையும்தான் கூப்பிட்டுகிட்டுப் போனேன். எல்லாம் சரியாத்தான் இருந்தது. பாக்கு வெத்தல மாத்தி நிச்சயம் செய்யறதுக்கு நாளு வச்சிட்டோம்... அப்ப பாத்து அவளோட நாத்தனாரு ஒருத்தி செத்துப் போயிட்டா... இத்தனைக்கும் அவளோட அவ்வளவா பேச்சு வார்த்தை கூட இல்ல. ஒடனேயே என் தங்கச்சிக்காரியும் அவ புருசனும் நிச்சயம் செய்யற தேதியை மாத்துன்னு சொன்னாங்க... "ஏன்டி செத்துப் போனவங்களுக்குக் காரியம்தான் முடிஞ்சு போயிடுதேன்னு சொன்னேன்... அத்தோட நிச்சயம் நின்னா பொண்ணு ஊட்ல என்னா நெனப்பாங்க... பாவம்''னு சொன்னேன். அதுக்கு, ""நாங்க இன்னும் நாலு பொண்ணு பாத்துச் செய்வோம்... கவலைப்பட்டாதே''ன்னு சொல்றாரு அவரு. எனக்கு ரொம்பக் கோவம்... ஆனா வெளியே காட்டிக்கல...
 நிச்சயம் தேதியை நான் மாத்தாதது அவங்களுக்குக் கஷ்டம்தான். அதுக்காக அதுலேந்து ரெண்டு பேரும் கருவம் கட்டிக்கிட்டு ஆரம்பிச்சுட்டாங்க போலிருக்கு... நிச்சயம் செஞ்சுட்டு புள்ளய ஆசிர்வாதம் செய்ய அவ ஊட்டுக்கு கூப்பிட்டுப் போறோம் நானும் இவருமா... எங்கள வாங்கன்னு கூப்பிடலைங்க... அன்னிக்கு ராவு பூரா நான் தூங்கலிங்க... ஒரே அழுகையாதான் வருது. கூட இருக்கற ஒரே ஒடம்பொறப்பு இவ ஒருத்திதான? இப்படி செய்யறாளேன்னு ரொம்ப வருத்தம். கல்யாணத்துல ஒரே மனசு கஷ்டம்தான். துக்கத்தை அடக்கிக்கொண்டுதான் கல்யாணம் செஞ்சு வச்சோம்.
 அவரு எதுலயும் பட்டுக்கல... எங்க ஊட்டுக்காரருதான் மானம் கெட்டுப்போயி ஒரே சகலருதான இருக்காருன்னு எல்லாத்துக்கும் போயிக் கூப்பிட்டா பெரிய மனுசன் மாதிரி "நடக்கட்டும் நடக்கட்டும்'னு சொல்லிட்டு ஒதுங்கிப் போயிட்டாரு. பொண்ணழைப்பு நடக்குது... யாரோ முன்ன பெரியாதவங்க ஊட்டுல நடக்கற மாதிரி ரெண்டு பேரும் வேடிக்கை பாக்கறாங்க, எங்க மனசு எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கும் சொல்லுங்க? அம்மா அப்பல்லாம் நல்லா நடந்துகிட்டுதான் இருந்துச்சு... ஆனா அம்மாவ அவ்ளோ சுலபமா அவ அழைச்சுக்கிட்டு வந்தாளா? என்னை அழ அழ வச்சா: அம்மாவும் மனசில நூறு ஆசை இருந்தாலும் அவகிட்டதானெ இருக்கணும்னு அடக்கிக்கிட்டா...
 கல்யாணத்துக்கு அன்னிக்கு சாயந்தரம் மவனையும் மருவளையும் கோயிலுக்கு என் அம்மா கூட அழைச்சுக்கிட்டுப் போகலாம்னு சொன்னா அதுக்கு அவ, "அம்மாவால நடக்க முடியாது... ஆட்டோ கோயில் வாசல் வரைதான் வரும்... கோயில் உள்ள நடந்துதான போவணும்''னு மறுத்துட்டா...
 நானும் மனசை அடக்கிக்கிட்டேன் அதையெல்லாம் இப்ப கேக்கணும்தான? கல்யாணம் முடிஞ்சு அவ புருசங்காரன் தாம்பூலம் கூட எடுத்துக்கல... எப்ப ரெண்டு பேரும் போனாங்களோ? யார் ஊட்டுக் கல்யாணத்துக்கோ வந்துட்டுப் போன மாதிரி நடந்துக்கிட்டாங்களே... எம்மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்... வேதனைப்பட்டிருக்கும்? அதை அவங்களும் படணும்ல...
 உள்ளிருந்து குரல் கேட்டது. "அதற்காக என்ன செய்யப்போகிறாய்?''
 "ஒண்ணுமில்ல... பத்திரிகை எடுத்துக்கிட்டு நீங்க ரெண்டு பேரும் என் புள்ள கல்யாணத்தை நல்ல்லா நடத்திக் குடுத்தீங்களே? அதைப்போல நாங்களும் நடத்தறோம்னு சொல்லப்போறேன்... போதும்ல...''
 உள்ளிருந்து குரல் கேட்டது. "அதாவது உன் மகன் திருமணத்தில் நீ அடைந்த மன வேதனையை அவர்கள் வீட்டுத் திருமணத்தில் அவர்கள் அடைய வேண்டும் இல்லையா?''
 "ஆமா... ஆமா...''
 உள்குரல் இப்போதும் கோபமாகப் பேசியது போல் இருந்தது. "அவள் யார்? உன் தங்கை... உன்னைவிட வெளி அனுபவம் குறைவானவள்... அவளுக்குப் பேசத்தான் தெரியும்... நீ தூக்கி வளர்த்தவள் மனம் வேதனைப்பட்டல் அது உன் வேதனை அல்லவா? அவள் வேதனைப்படலாமா?''
 "அதுக்காக அவ என்னைத் துன்பப்படுத்தியது மறந்து போயிடுமா?''
 "அவள் உன்னை விடச் சிறியவள்... அவளுக்காக நீ கேட்ட பேச்சுகள் எல்லாவற்றையும் அவள் பொருட்டுப் பொறுத்துக்கொண்டுதானே இருந்தாய்? அப்பாவும் இறந்துபோய் அம்மாவிற்கும் உடல் நலம் கெட்டுவிட உன் உறவெல்லாம் எப்படிப் பேசினார்கள்... வந்த வரன் எல்லாம் தட்டிப்போய்விட உன் தங்கைக்குத் திருமணம் செய்யும் எண்ணமே இல்லாமல்தான் நீங்கள் இருவரும் இருக்கிறீர்கள் என்றெல்லாம் பேசினார்களே?''
 "ஆமாம் எல்லாம் நெனவுல இருக்கு... என்னை என்னா செய்யச் சொல்றே?''
 "ஒண்ணும் பேசாமல் மகிழ்ச்சியாகப் பத்திரிக்கையை வாங்கிக்கொள்... அவள் குழந்தைகளும் உன் குழந்தைகள் போல்தானே? நீதானே தங்கையை அழைத்துக்கொண்டு வந்து பிரசவம் பார்த்தாய்? அவர்களைவிடச் சிறப்பாக முன்நின்று நீ திருமணத்தை நடத்திக் கொடுத்துக் கடைசிவரை இருந்து மண்டபத்தைக் காலி செய்து வா.''
 "அப்ப என்னை தோத்துப் போடின்னு சொல்ற?''
 "இல்லை... இதுதான் வெற்றி... நீ செய்வதைப் பார்த்து அவர்கள் தாங்கள் முன்பு செய்தது தவறு என்று வருந்த வேண்டும்... நீர் அடித்துத் நீர் விலகிவிடாது. நாம் பெற்ற இன்பத்தைத்தான் பிறர் பெற வேண்டும் என நாமெண்ண வேண்டும். நாம் துன்பம் அடைந்திருந்த சூழலை அவர்களுக்கு நாம் தரக்கூடாது.''
 "அப்படியா செய்யச் சொல்ற?''
 "ஆமாம். அவள் செய்தவற்றால் நீ ஒன்றும் குறைந்து போய்விடவில்லை... நான் சொல்வதுபோல் செய்... உறவும் உள்ளமும் தெளிவாகும்''
 "சரி... செஞ்சுதான் பாப்போம்'' எனச் சந்தேகத்துடனும் சந்தோஷத்துடனும் சொன்னேன்.
 வளவ. துரையன்
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/10/w600X390/k3.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/11/நன்னயம்-செய்துவிடேல்-2860965.html
2860966 வார இதழ்கள் தினமணி கதிர் ஆந்திரப் பெண்!   DIN DIN Sunday, February 11, 2018 12:00 AM +0530 ராஜாஜி சென்னை மாகாணத்தின் பிரதமராக இருந்த காலத்தில் ஆந்திர மாகாண பிரிவினையைப் பற்றிப் பேசியது:
 "ஆந்திரர்கள் உடனே தனி மாகாணம் வேண்டும் என்று கேட்கிறார்கள். அதை நான் எப்படி கொடுக்க முடியும்? இப்போதுதான் பிரிவினைக்காக பூர்வாங்க வேலைகள் ஆரம்பமாகியிருக்கின்றன. துரதிருஷ்டவசமாக நான் ஒரு தமிழனாக இருக்கிறேன். உங்களில் சிலர் ஆந்திர மாகாணத்தைப் பிரிப்பதில் எனக்கு இஷ்டமில்லை என்று நினைக்கிறீர்கள். இது சுத்தத் தவறு. உண்மையில் எனக்குத்தான் உங்களைக் காட்டிலும் அதிக ஆர்வம் இருக்கிறது. ஆனாலும் ஒரு தகப்பனார் தன் பெண்ணை கணவன் வீட்டுக்கு முதன்முதலாக அனுப்பும்போது கண்ணீர் விடுவது இயற்கை. பெண் கணவன் வீட்டுக்குப் போவது அவசியமாக இருந்தபோதிலும், பெற்றோர் அதற்காக சந்தோஷமாக அனுப்பிவிட மாட்டார்கள். அதைப் போலவே ஆந்திர மாகாணமாகிய பெண்ணைப் பிரித்து அனுப்புவதிலும் எங்களுக்கு சந்தோஷமில்லை'' என்று பேசியிருக்கிறார்.
 த.நாகராஜன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/10/w600X390/k4.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/11/ஆந்திரப்-பெண்-2860966.html
2860967 வார இதழ்கள் தினமணி கதிர் நவரச பாவங்கள்! DIN DIN Sunday, February 11, 2018 12:00 AM +0530 சென்னை பிலிம் இன்ஸ்டிடியூட்டில் பாடப் புத்தகங்களில் ஒன்று "ஸ்டேனிஸ்லாவோஸ்கி தியரி'. நடிப்பு குறித்து விவரிக்கப்படும் இந்தப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் உலகிலேயே நவரச பாவங்கள் முகத்தில் பிரதிபலிக்கக் கூடிய இரு படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் ஒரு படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மற்றவர் ஹாலிவுட்டின் மார்லன் பிராண்டோ.
 
 ஆர்.கே.லிங்கேசன்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/10/w600X390/k5.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/11/நவரச-பாவங்கள்-2860967.html
2860968 வார இதழ்கள் தினமணி கதிர் திரைக் கதிர்   DIN DIN Sunday, February 11, 2018 12:00 AM +0530 • 2010-ஆம் ஆண்டு சற்குணம் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் "களவாணி'. நசீர் தயாரித்திருந்த இப்படத்தில் விமல், ஓவியா, சூரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். முழுக்க முழுக்க புதுமுகங்களின் கூட்டணியில் உருவான இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குநர் சற்குணம் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து முதல் பாகத்தை தயாரித்த நசீர் தரப்பு இப்படத்துக்கு உரிமை கோரியுள்ளது. இதனால் இரு தரப்புக்கும் இடையே படத் தலைப்பு தொடர்பாக கடும் போட்டு நிலவி வருகிறது. 
இப்படத்தை பலரும் "களவாணி 2' என்றே குறிப்பிட்டு வருகிறார்கள். இந்நிலையில், "களவாணி' தயாரிப்பாளரான நசீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "களவாணி 2' படத்திற்கான கதை விவாதம் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். "களவாணி 2' படத்தை தயாரிப்பதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. படத்திற்கான படத் தலைப்பின் உரிமையை ஷெராலி பிலிம்ஸ், தயாரிப்பாளர் சங்கத்தில் முறையாகப் பெற்றுள்ளது. இப்படத்தின் நடிக்கவுள்ள நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால் இப்படத் தலைப்பு தொடர்பாக சர்ச்சை வெடித்துள்ளது. 

• 'விவேகம்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பது உறுதியாகியுள்ளது. "விவேகம்' படத்தைத் தயாரித்த சத்யஜோதி நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கவுள்ளது. படத்துக்கு "விசுவாசம்' எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடந்து வருகிறது. அஜித்துக்கு ஜோடியாக "விக்ரம் வேதா' படத்தில் நடித்த ஷேரத்தா பெயர் பரவலாக பேசப்பட்டு வந்த இந்நிலையில் நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாகியுள்ளார். இதன் மூலம் "பில்லா', "ஏகன்', "ஆரம்பம்' ஆகிய படங்களுக்குப் பிறகு "விசுவாசம்' படத்தின் மூலம் நான்காவது முறையாக அஜித்துடன் நயன்தாரா இணைந்து நடிக்கவுள்ளார். இப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், படத்தின் பாடல் பதிவு பணிகள் தொடங்கியுள்ளன. இம்மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்குகிறது. வரும் தீபாவளி பண்டிகை வெளியீடாக படம் திரைக்கு வருகிறது. இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.

• 'குக்கூ', "ஜோக்கர்' படங்களின் மூலம் ரசிகர்களிடம் பரவலான வரவேற்பை பெற்றவர் இயக்குநர் ராஜுமுருகன். தற்கால தமிழ் சமூகச் சூழலை மிகத் தீவிரமாக பேசிய "ஜோக்கர்' தேசிய விருது வென்றது. கழிவறை கட்டுவதில் நிகழும் ஊழல் குறித்து பேசிய அந்த படத்தின் கதைக் களம், அரசியல் அமைப்பை நையாண்டியும் உணர்ச்சியும் கலந்து சொல்லியிருந்தது. இந்நிலையில் ராஜுமுருகனின் அடுத்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பரவலாக எழுந்திருந்தது. இதையடுத்து திரைக்கதை உருவாக்கத்தில் இருந்த ராஜுமுருகன், தற்போது அடுத்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். படத்துக்கு "ஜிப்ஸி' என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் கதாநாயகனாக ஜீவா நடிக்கிறார். ஒலிம்பியா மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.அம்பேத்குமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். "தேசிங்கு ராஜா', "மனம்கொத்திப் பறவை' ஆகிய படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது பாலாவின் வர்மா படத்திற்கு வசனம் எழுதி வரும் ராஜுமுருகன், அந்தப் பணிகள் முடிந்ததும் இதன் முதற்கட்டப் பணிகளைத் தொடங்குகிறார். 

• 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்', "படை வீரன்', "மதுர வீரன்' மற்றும் "ஏமாலி' ஆகிய படங்களோடு வெளியான படம் "விசிறி'. "வெண்ணிலா வீடு' படத்தை இயக்கிய வெற்றி மகாலிங்கம் இப்படத்தின் கதை எழுதி இயக்கியிருந்தார். முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியிருந்த இப்படம், விஜய் ரசிகர் மற்றும் அஜித் ரசிகர் இருவருக்குமான மோதல், நட்பு பற்றிய திரைக்கதையைக் கொண்டது. போதிய திரையரங்குகள் இப்படத்துக்கு கிடைக்காமல் போனதால், ரசிகர்களிடம் சென்று இப்படம் சேரவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார் இயக்குநர்... ""பிப்ரவரி 2-ஆம் தேதி வெளியிடுகிறோம் என முன்பே திட்டமிட்டு, அதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டோம். ஆனால், கடைசி நேரத்தில் பல படங்கள் வெளியானதால், எங்களுக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை. சில படங்களுக்கு திரையரங்குகளில் கூட்டம் குறைவு என்றாலும், எங்களுடைய படத்திற்கு திரையரங்குகள் தர மறுக்கிறார்கள். கதாநாயகி கூட சம்பளம் வாங்காமலேயே நடித்துக் கொடுத்தார். ஆனால், போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை. இதுவரை போட்ட பட்ஜட்டை கூட எடுக்க முடியுமா என்று தெரியவில்லை. இனி சின்னப் படங்களை யாரையும் நம்பி எடுக்க வேண்டாம். இது என் மனக்குமுறல்'' என்று தெரிவித்துள்ளார் வெற்றி மகாலிங்கம். 

• தொடர்ந்து தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களுக்கே முன்னுரிமை கொடுத்து வருகிறார் அனுஷ்கா. இந்நிலையில் "பாகமதி' படத்தில் அனுஷ்காவின் நடிப்பை மனம் திறந்து பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த். இது குறித்து பேசியுள்ள அனுஷ்கா... "ரஜினிகாந்தின் பாராட்டை என்னுடைய வாழ்நாளில் என்றும் மறக்க முடியாது. பலர் அப்படம் பற்றி பேசியிருந்தாலும், ரஜினிகாந்த் பேசியது முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் படத்துக்காக இருட்டறையில் நடித்தது மறக்க முடியாதது'' என்று தெரிவித்துள்ளார் அனுஷ்கா. சமீபத்தில் வெளியான "பாகமதி' திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக வசூலைப் பெற்றுள்ளது. ஆந்திரா, தெலங்கானா, தமிழகம் மட்டுமின்றி இத்திரைப்படம் உலகமெங்கும் திரையிடப்பட்டுள்ளது. 
- ஜி.அசோக்


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/10/w600X390/k6.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/11/திரைக்-கதிர்-2860968.html
2860969 வார இதழ்கள் தினமணி கதிர் சிரி... சிரி...  DIN DIN Sunday, February 11, 2018 12:00 AM +0530 • "வீட்டோட மாப்பிள்ளை வேணும்ன்னு வந்த விளம்பரத்தைப் பார்த்துட்டு ஆர்வமா போனியே... என்னாச்சு?''
"அவங்க கேட்குறது சொந்தமா வீடு வச்சிருக்கிற மாப்பிள்ளையை ''
சி.ரகுபதி, போளூர்.

• "வாஸ்து நிபுணரா அவர்?''
"எப்படிக் கண்டுபிடிச்சே?''
"எதைச் சொன்னாலும் வாஸ்துவம்... வாஸ்துவம்ங்கிறாரே''
வி.ரேவதி, தஞ்சாவூர்.

• "தொகுதியில பிச்சைக்காரனோடு என்ன சண்டை தலைவரே?''
"அவன் பக்கத்திலே நான் உட்கார்ந்து ஓட்டுப் பிச்சை எடுக்கணுமாம்''
வெ.ராம்குமார், வேலூர்-1.

• ஆசிரியர்: ஏன்டா பள்ளிக்கூடத்துக்கு அடிக்கடி லீவு போடுறே? 
மாணவன்: ஒரே இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதை இருக்காதுன்னு எங்கப்பா சொன்னார் சார்..
எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/10/w600X390/k7.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/11/சிரி-சிரி-2860969.html
2860972 வார இதழ்கள் தினமணி கதிர் பேல்பூரி Sunday, February 11, 2018 12:00 AM +0530 கண்டது
• (கோவை குனியமுத்தூர் அருகில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
புட்டுவிக்கி
டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

* (திருவாடானையில் ஓர் இருசக்கர வாகனத்தில்)
N.நண்பா
கே.முத்தூஸ், திருவாடானை.

* (சென்னை மந்தைவெளியில் உள்ள ஆடையகத்தின் பெயர்)
மொக்க கடை
எம்.ராகவன், சென்னை-41

* (கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகில் உள்ள ஊரின் பெயர்)
கப்பல் வாடி
கா.சீனிவாசன், மாடரஅள்ளி.

கேட்டது
• (நாகர்கோவிலில் உள்ள ஒரு பேன்சி கடையில் கடைக்காரரும் அவருடைய நண்பரும்)
"என்னடா கணேசா... கடைக்கு சாம்பிராணி புகையெல்லாம் போட்டு அமர்க்களப்படுத்துற?''
"ஆமான்டா... பொழுது போக்க சில கெட்ட சக்திகள் நம்ம கடைக்கு வந்து வாயைப் புடுங்குறதே பொழப்பா வச்சிருக்கு. அந்த கெட்ட சக்தியால் கடைக்குத் தொந்தரவு வராமல் இருக்கத்தான் சாம்பிராணி புகை போடுறேன்''
மகேஷ் அப்பாசுவாமி, 
பனங்கொட்டான்விளை.

• (சத்தியமங்கலம் கோட்டை முனீஸ்வரன் கோயில் தெருவில் ஒரு வீட்டில் 
மகனும் அம்மாவும்)
"ஏம்மா என்னை எப்ப திட்டினாலும் நாயே... பேயேன்னு திட்டுறீங்க?''
"ஏன்டா?''
"ஆடு, மாடு, குரங்கு எல்லாம் கோவிச்சுக்காதா?''
ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

எஸ்எம்எஸ்
தினமும் காலையில் எழுந்து...
உலகப் பணக்காரர்கள் பட்டியலை 
இணையத்தில் தேடிப் பார்....
உன் பெயர் அதில் இல்லையென்றால்...
உடனே வேலைக்குக் கிளம்பத் தயாராகு.
பி.கோபி, கிருஷ்ணகிரி. 

யோசிக்கிறாங்கப்பா!
எந்த மதத்தைச் சார்ந்தவர்
என்பதல்ல முக்கியம்...
மனிதனாக இருக்கிறாரா 
என்பதே முக்கியம்.
சிவானந்தம், கோவில்பட்டி.

அப்படீங்களா!
மனிதர்கள் பேசுவதைப் போல ஒன்றிரண்டு சொற்களை - ஒலிகளை கிளிகள் பேசுவதைக் கேட்டிருப்பீர்கள்! இப்போது திமிங்கலங்கள் கூட பேசத் தொடங்கிவிட்டன. பிரான்சு நாட்டின் ஆன்டிபெஸ் நகரில் உள்ள மேரிலாண்ட் கடல்வாழ் உயிரினப் பூங்காவில் உள்ள பெண் கில்லர் திமிங்கலம் ஒன்று, மனிதர்கள் பேசுவதைப் போல "ஹலோ', " பை - பை' போன்ற சொற்களைப் பேசுகிறது. இது மிகவும் சக்தி வாய்ந்த வேட்டையாடும் உயிரினம் ஆகும்.
என்.ஜே., சென்னை-69.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/10/w600X390/k8.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/11/பேல்பூரி-2860972.html
2860973 வார இதழ்கள் தினமணி கதிர் மைக்ரோ கதை   DIN DIN Sunday, February 11, 2018 12:00 AM +0530 தானம் வாங்க வந்த புலவரிடம் ஓர் அரசன், "என் கண்களில் ஒன்று செயற்கையானது. அது எதுவென்று கூறினால் பரிசு தருகிறேன்'' என்று நிபந்தனை விதித்தான்.
உற்றுப் பார்த்த புலவர், "உங்களுடைய இடது கண்தான் செயற்கையானது'' என்றார்.
அரசன் வியப்புடன்," எப்படி கண்டுபிடித்தீர்கள்?'' என்று கேட்டான்.
"அந்த கண்ணில்தான் சிறிது கனிவு தெரிகிறது'' என்றார் புலவர்.
நெ.இராமன், 
சென்னை-74.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/10/w600X390/k9.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/11/மைக்ரோ-கதை-2860973.html
2860975 வார இதழ்கள் தினமணி கதிர் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வறுத்து பயன்படுத்தினால் வாயு இல்லை! Sunday, February 11, 2018 12:00 AM +0530 பருப்பு வகைகள் பலதும் வாயுவை அதிகபடுத்தும் என்று பல கட்டுரைகளில் நீங்கள் தெரிவித்து வருகிறீர்கள். எப்படி சாப்பிட்டால் வாயுவைக் குறைக்க முடியும்? ஒரு சில மருத்துவ குணங்களை விவரிக்க முடியுமா?
- சிவகாமி, திருச்சி.

பருப்பு வகைகள் அனைத்துமே ஜீரணமாகத் தாமதமாகுபவை. புளிப்பையும் எரிச்சலையும் அதிகப்படுத்துபவை. வயிற்றில் வாயு அழுத்தத்தை அதிகமாக்குபவை. இவற்றைத் தண்ணீரில் ஊற வைத்துத் துணியில் இறுகக் கட்டி முளைக்க வைத்துப் பின் குத்திப் புடைத்து வைத்துக் கொள்வதுண்டு. முளை நீங்குவதால் இவை எளிதில் செரிக்கும். வறுத்து உபயோகிக்க மேலும் லேசான தன்மையை அடைகிறது. நெய்யில் சேர்த்துச் சாப்பிட வறட்சி தராது. இவற்றில் உளுந்து நல்லது. காய்ச்சல் உள்ள நிலையில் பச்சைப் பயறு நல்லது. களைப்பு சோர்வுள்ள நிலையில் பச்சைப் பயறும் , துவரம் பருப்பும் நல்லது. மாதவிடாய் சிக்கல், இரவில் அதிகம் சிறுநீர் போகுதல் இவற்றிற்கு எள்ளு நல்லது. வாயில் பற்களிடுக்கில், தொண்டையில், மலத்தில் ரத்தக் கசிவிருந்தால் துவரம் பருப்பு நல்லது. மூலம் சிறுநீர்த் தாரையில் கல்லடைப்பு, விக்கல், மூச்சுத்திணறல் முதலியவற்றுக்கு கொள்ளு நல்லது.
துவரை- நல்ல வலிமை தரும் பொருள். படுக்கையிலேயே வெகு நாட்கள் நோய் வாய்ப்பட்டிருந்தவர், மிக மெலிந்தவர் திரும்பவும் வலுவடைய ஏற்றது. பட்டினி முடிவிற் சேர்க்கத்தக்க பத்திய உணவு. உடலுரம் கூடச்செய்யும். உள் அழற்சி ஆற்றும். அதனால் உணவு வரிசையில் இதற்கு முதல் இடம். தோல் நீக்கிய பருப்பு உணவாகிறது. மிக பலவீனமானவர், வயிற்றில் வாயு சேர்பவர் இதனை லேசாக வறுத்துச் சேர்ப்பர். காரம், புளிப்பு, உப்பு இவை இரைப்பையைப் புண்படுத்தாமலிருக்க துவரம் பருப்பு அவற்றிற்கு நடுவே நின்று உதவுகின்றது.
துவரம் பருப்பை வேக வைத்து அதன் தண்ணீரை இறுத்து அதில் மிளகு, பூண்டு சேர்த்து ரசம் வைத்துச் சாப்பிடலாம். இப்படிச் சாப்பிடும் போதும், பருப்பை வறுத்து அரைத்து துவையலாகச் சாப்பிடும் போதும், வாயு அழுத்தம் குறையும். 
காராமணி- இனிப்பும் குளிர்ச்சியும் உள்ளது. சிறுநீர் பெருக்கி. உப்பும் வெல்லமும் சேர்த்து வேகவைத்து உண்பதுண்டு. வாயுத் தொந்தரவு, பேதி உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல. 
உளுந்து- நல்ல புஷ்டி தரும் புரதசத்து நிறைந்தது. செரிப்பதற்குத் தாமதமாகும். உடல் மூட்டுகளுக்கு எண்ணெய்ப் பசையை உருவாக்கித் தரும். இதில் பெரும் பகுதி மலமாக மாறுவதால் அதிக அளவில் உபயோகித்தால் சிறுநீரும் மலமும் அதிகமாகி அடிக்கடி வெளியாகும். 
நரம்புகளிலும் தசைகளிலும் வலியும் எரிச்சலும் உள்ள நிலையில் உளுந்தை வேக வைத்துச் சூட்டுடன் தேய்க்க வலி நீங்கும். உளுந்து சேர்த்து தயாரிக்கப்படும் மஹாமாஷ தைலம், தசைகளிலும் மூட்டுகளிலும் ரத்தக் குழாய்களிலும் வறட்சி அதிகமாகி எண்ணெய் பசையில்லாமல் அசைக்கக் கூட முடியாத நிலையில், இது எண்ணெய்ப் பசையை அளித்து வறட்சியைப் போக்கி, உட்புற பூச்சையும் பிசுபிசுப்பையும் அளித்து தசைகளைத் தளர்த்தி வேதனையை குறைக்கும். உளுந்தையும் கொள்ளையும் வேக வைத்து அதன் கஷாயத்தால் வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுப்பது வலியை குறைக்க உதவும்.
கொள்ளும், அரிசியும் சேர்த்துக் காய்ச்சிய கஞ்சி நல்ல பசி, உடல் பலம், விந்தணு வீர்ய வளர்ச்சி, சுறுசுறுப்பு தரக்கூடியது. பச்சைக் கொள்ளை நீர் சேர்த்து இடித்துப் பிழிந்த சாற்றைத் தினம் பருகிவர வற்றிய உடல் பருக்கும். தூண்போல் உரத்து நிற்கும், வறட்சி, சளியுடன் இருமல், சளியால் மூச்சுத்திணறல், ஜலதோஷம் இவற்றை நீக்கும். ஒரு பங்கு கொள்ளை பத்து பங்கு தண்ணீரில் நீர்த்த கஞ்சியாக்கி இந்துப்பு சேர்த்துச் சாப்பிட சிறுநீரகம், பித்தப்பை முதலான இடங்களில் ஏற்படும் கற்கள் கரைந்து வெளியாகும். பிரசவ அழுக்கு வெளியேற இந்த நீர்த்தக் கஞ்சி உதவும். 
கடலை - நல்ல புஷ்டி தரும் பருப்பு. அதிக அளவில் வயிற்று உப்புசம், பெருங்குடலின் கடைசிப் பகுதியில் அழுத்தம், ஜீரணமில்லாத பெருமலப் போக்கு, தலைசுற்றுதல் இவற்றையும் ஏற்படுத்தும். 
பச்சைக்கடலை - நல்ல வாளிப்பைத் தரும். உடலை ஊட்டப்படுத்தி தசைகளை நிறைவுறச் செய்யும். நுரையீரலுக்குப் பலம் தரும். கடலையைச் சற்றுக் கருக வறுத்து பொடித்துச் சாப்பிட வயிற்றுப் பொருமல், மூத்திரத்தடை நீங்கும். கடலையை லேசாக வேக வைத்து மென்று சாப்பிட்டு மேல் பால் சாப்பிட நீர்க்கோர்வையும் இருமலும் விலகும்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/10/w600X390/k11.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/11/ஆயுள்-காக்கும்-ஆயுர்வேதம்-வறுத்து-பயன்படுத்தினால்-வாயு-இல்லை-2860975.html
2860976 வார இதழ்கள் தினமணி கதிர் உயிரின் நிழல்!   DIN DIN Sunday, February 11, 2018 12:00 AM +0530 "யாரு'' என்றபடி வீட்டுக்குள் இருந்து கதவைத் திறந்தபடி வயதொத்த பெண்.
"வா தர்மு என்ன? பத்திரிகையெல்லாம்'' அவளுக்கு ஆச்சரியம்.
"நாளைக்கு அம்மாவுக்கு பெயர் சூட்டு விழா... வந்துருங்க'' என்றவனின் வார்த்தையை ஒன்றும் புரியாமல் வாங்கி கொண்டவளாய்.
"என்னப்பா புரியலையே''
"நாளைக்கு புரிஞ்சு போயிரும்'' சொல்லிவிட்டு விறுவிறுவென்று அந்த தெருவின் அடுத்த வீடு நோக்கி நகர்ந்தான்.
யாருக்கும் புரியாத புதிராக இருப்பது உண்மைதான். அவன் அம்மா இறந்து பதினாறாம் நாள். காரியத்துக்காகத்தான் கூப்பிடுவான் என்றிருந்தாள். காரணம் தர்முவின் அம்மா மேகலை, எழுபத்தி ஐந்து வயதில் தடுமாற்ற நிலை ஏற்பட்டபோது தான் இறந்திருந்தார். இறப்பிற்கு வந்த மேகலையின் உறவினர்கள் மூன்றாம் நாள் எண்ணெய் தொட்டு வைத்து முடித்து சென்றுவிட்டார்கள். நல்ல குணம் கொண்டவள் மேகலை அம்மாள். தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே, மகளை நன்றாகப் படிக்க வைத்து அவளை இன்ஜினியர் படித்த பையனுக்கு கரம் பிடித்து கொடுத்ததோடல்லாமல் மகன் தர்மனையும் லேப் டெக்னிஷியன் படிக்க வைத்ததோடு, சொந்தமாக ஒரு லேப் சென்டரையும் வைத்து கொடுத்திருந்தாள். மேலும் தர்முவுக்கு நன்கு படித்த நர்ஸ் பெண்ணைத் திருமணம் செய்து வைத்திருந்தாள். மகளுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், தர்மனுக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு பையன் என்று பேரன் பேத்தி ஐந்து பத்தாகிவிட்டது. மேகலையம்மாள் ஐம்பது வயதைக் கடந்த போதே பிபி, சுகர் என்று எல்லாமே ஒத்துழையாமை நடத்த தர்மு கெஞ்சி கூத்தாடி, வேலைக்குப் போவதைத் தவிர்க்க வைத்து நன்றாக கவனித்துக் கொண்டான். புரிதல் உள்ள குடும்பமாயிருந்தது. மேகலையின் கணவர் இரு குழந்தைகள் பிறந்து பள்ளிக்கு செல்ல துவங்கிய ஓரிரு வருடங்களில் தவறிவிட்டார். தனி மனுஷியாய் விசாலமான ஆலமரமான இந்த குடும்பத்தை உருவாக்கிவிட்டுதான் இறந்திருக்கிறார்.
மேகலையின் அசைவின்றி எதுவும் நடக்காது. நல்ல காரியம் கெட்ட காரியம் எதுவென்றாலும் வீட்டுக்கு வரும் பத்திரிகைகள் அவள் பெயரையே முகப்பில் தாங்கி வரும். வீடு தேடி வரும் யாரும் அடையாளத்துக்குக்கூட "மேகலையம்மாள் வீடெது?'' என்றே வருவர்.
மேகலை இறந்த நாளிலிருந்து எந்த சலனமும் இல்லை. வீட்டில் தர்முவாலும் எதார்த்தமாய் இயங்க முடியவில்லை. அன்றாடம் அவன் எழுந்தரித்து, ""வேணுமாம்மா'' என்று கேட்டு, மனைவியை டீ போட வைத்து தன் கையால் கொடுப்பதுதென்று பழக்கப்பட்டிருந்ததையும் வெளியில் கிளம்பும்போது மறந்தவனைப்போல் ""வாரேம்மா...'' என்பதெல்லாம் அவனுக்குள் ஏமாற்றத்தை உண்டு பண்ணியிருந்தது. லேப் வேலை முடிந்து வீடு திரும்பும்போது வண்டிக்குள் வாங்கி போடும் நொறுக்கு தீனிகளுக்கு மத்தியில், தவறாமல் போய் பழம் வாங்கும் பழக்கடையில் வண்டியை நிறுத்தியதுமே அவனுக்கென்று எடுத்து வைத்திருக்கும் பழக்கூடை அவன் கைக்கு வரும். பழக்கடை ஆயா கூட நினைத்துக் கொள்ளும். "அடுத்த பிறவி ஒன்று இருந்தா இந்த மாதிரி ஒரு மகனை பெத்து வளர்த்து சத்த அசந்தெந்திருக்கணும்'' என்று. பாவம் ஒரு வகையில் மேகலையின் இறப்பு இந்த பழக்கடை ஆயாவுக்கு கூட இழப்புதான். அங்கிருந்து வண்டியை கிளப்பினால் அடுத்து அம்மாவுக்கு வழக்கமாய் வாங்கும் மருந்துகடை, மார்க்கெட்டை கடக்கையில் தென்படும். அம்மாவுக்கு பிடித்த கீரை தேடலென்று முடித்து, வீட்டிற்குள் நுழையும் போதே மனைவியை அழைத்தபடி, "அம்மா சாப்புட்டாங்களா? தண்ணி வச்சி குடுத்தியா? மாத்திரை போட்டாச்சா? சாப்பாட்டுக்கு முன்னாடி மாத்திரை போட்டாச்சா?'' என்று கேள்வி நீண்டு கொண்டே போகும்.
அவள் தரும் பதிலில் தர்மு சந்தோசப்படுவதை கூட பார்க்க ஒரு சந்தோசமிருக்கிறதேவென்று இன்னும் அவன் கேட்காத கேள்விகளை கூட பதிலால் தவிர்த்து வைப்பாள். அத்தை துணியெல்லாம் துவைத்து போட்டத்திலிருந்து, எழுத முடியாத விஷயங்களை செயல்களால் சொல்லும் போது என ஏற்பட்டவையெல்லாம் மேகலையின் இறப்பு என்ற வெற்றிடத்தை உருவாக்கியிருந்தது.
ஒரு வாரம் இது தொடர்ந்தது. தர்முவுக்கு லேப்பிற்கு செல்லாமல் மனம் முடக்கி போட்டிருந்தது. அவனை படர்ந்திருந்த நிலைமை எல்லோரையுமே படர்ந்திருந்தது. திருமணமானதோடு வேலையை விட்டிருந்த அவன் மனைவியும் அவனின்று என்ன செய்வதென்பதை வருந்தி, எப்போது வீடு இயல்பு நிலைக்கு திரும்புமென்ற ஏக்கம் தொடர்ந்தது.
அன்று தர்முவின் லேப்பிற்கு சப்ளை செய்யும் கெமிக்கல் மேனேஜர் வந்திருந்தார். தான் வெளியூர் சென்றுவிட்டதாகவும் அன்று துக்கத்தில் கலந்துகொள்ள இயலாததையும், ஊரிலிருந்து வந்ததும் வராததுமாக வந்ததாக செல்லிக் கொண்டிருக்கும் போதே தர்முவின் கண்கள் கலங்கிய வண்ணமிருந்தது.
"தர்மு வாழ்க்கையில் ஏதாவது ஒரு தருணத்தில் இழப்பு வந்து கொண்டே தானிருக்கும். அதை நிரப்புவதெங்கிறது கொஞ்சம் கஷ்டம்தான் தர்மு. எனக்கொரு யோசனை'' என்ற நண்பரை நிமிர்ந்து பார்த்தான் தர்மு.
"அனாதை பிள்ளைகளுக்கு இரண்டு நாளைக்கு அன்னதானமோ இல்லை அதற்கிணையானதாகவோ செஞ்சிட்டு பழகிட்டு வா. அவுங்க சூழ்நிலை உன் நிலை உணர்த்துவதோட ஏதோ ஒண்ணு உனக்கு பிடிபடும்'' என சொல்லிவிட்டு கிளம்பியிருந்தார்.
அவர் போனதிலிருந்து, அந்த வார்த்தைகள் அவனில் உருண்டு கொண்டேயிருந்தது. தடாலென முடிவெடுத்தவன் மனைவி பிள்ளைகளை கூட்டிக்கொண்டு ராகவேந்திரா ஆசிரமத்திற்கு போனான். அங்கிருந்தவர்களை விசாரித்து, பிள்ளைகளுக்கு தினம் ஆகும் உணவு செலவுக்கான லிஸ்ட் தயார் செய்து, அம்மாவின் பதினாறாம் நாளுக்கு ஒருநாள் முன்னர் வரை உணவு செலவுகளை தாம் ஏற்பதாக சொல்லிவிட்டு சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு போனார்கள். நிர்வாகத்தினர் தேதியை குறித்து கொண்டனர். தர்மு மனைவிக்கும் அது மகிழ்ச்சியாகப் பட்டது. முகத்தில் தெரிந்ததை தர்மு அறிந்து கொண்டான்.
தினமும் காலை அவன் மறக்காமல் சென்று, தொகை கொடுத்து முதல் பிரேயரில் மேகலையம்மாள் பெயரைச் சொல்லி, சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாக பிள்ளைகள் சொல்வதை கேட்டு வருவது வழக்கமாகி, பதினைந்தாம் நாள் முடித்துக்கொண்டு வந்த கையோடுதான் இந்த பத்திரிகைகளை கொடுத்து வருகிறான்.

பதினாறாம் நாள் பெயர் சூட்டு விழாவிற்காக வீடு பரபரப்பாகி கொண்டிருந்தது. அக்கம் பக்கத்தினர் ஒவ்வொருவராக வந்த வண்ணமிருந்தனர். தர்முவின் தங்கையும், மச்சானும் குழந்தைகளும் வந்தாகிவிட்டது. தர்மு மனைவியின் வீட்டாரும் வந்துவிட்டிருந்தனர். சாப்பாட்டுக்கு ஆனந்த விலாஸ் ஓட்டலில் புக் செய்திருந்தான். அவர்களும் பகல் பன்னிரெண்டு மணிக்கு வந்துவிடுமென்றும், நிகழ்ச்சி முடிந்ததும் தாங்களே பாத்திரங்களை எடுத்து சென்றுவிடுவதாகவும் சொல்லியிருந்தார்கள்.
வீட்டின் முகப்பில் சாமியானா பந்தலினுள் போடப்பட்டிருந்த சேர்கள் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டது. காரிய சமாச்சாரமென்றதால் கூட்டம் குறைவாய் தானிருந்தாலும், தர்முவின் அம்மா பெயர்; பெயர் சூட்டு விழா என்ற புதுமை புரியாமலே நிறைய பேர் வந்திருந்தனர். ஆரம்பிப்பதற்கு ஒருவர் அடிகோலிட்டார்.
"தர்மு, வந்தவங்க பல வேலைகளை விட்டுட்டு வந்திருப்பாங்க. ஆரம்பிச்சுட வேண்டியதுதானே?''.
தர்மு மனைவியை அழைத்து "அம்மாவை கூட்டி வா'' என்றான்.
மேகலையம்மாவின் வயதுடைய ஓர் அம்மாவினை அவள் அழைத்து வந்தாள். எல்லோரின் முகத்திலும் புரியாத "என்னப்பா தர்மு?'' என்ற கேள்விக்குறி கோடு விழுந்திருந்தது.
பந்தலில் இருந்த சேர்களின் முன்னால் போடப்பட்டிருந்த தனி சேரில் அமர வைக்கப்பட்டார் அந்த அம்மா. தர்மு பேசலானான்.
"என் அழைப்பை ஏற்று வந்தவங்களுக்கு ரொம்ப நன்றி. எங்கம்மா இல்லாத இடத்தை நினைச்சு கூட பார்க்க முடியல. இதுவரைக்கும் அம்மாவுக்கு செய்ய வேண்டிய கடமையிலிருந்தும் மீள முடியல. அதனால நானே ஒரு முடிவெடுத்து என் உறவுக்காரங்ககிட்டயும் சொல்லி ஒரு ஏற்பாடு பண்ணியிருக்கேன். இன்றையிலிருந்து இந்தம்மா பேரு மேகலை. எங்கம்மாவை எந்த மாதிரி நெனைச்சீங்களோ, அதே மாதிரி இவங்களை நினைக்கணும் நன்றி'' என்றான்.
"இந்தம்மா யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?''.
கூட்டத்தின் நடுவிலிருந்து ஒரு குரல்.
தர்மு தொடர்ந்தான்.
"அனாதை குழந்தைகளோட வலியை புரிஞ்சிக்கிட்ட நாம ஏன் முதியோர் இல்லத்துல விடப்பட்டவுங்களோட வலியை மறக்கணும். அதான் முதியோர் இல்லம் போய் முறைப்படி இவுங்களை அழைச்சுக்கிட்டு வந்துட்டேன்'' என்று முடித்தான் தர்மு.
வந்திருந்த எல்லோரிடமிருந்தும் ஒரு வெற்றிடமிருப்பதாக உணரப்பட்டது.
அந்த வீட்டில் மேகலை என்ற பெயர் உயிரோடிருக்கும்.
தீபம் முத்து







 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/10/w600X390/k12.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/11/உயிரின்-நிழல்-2860976.html
2856677 வார இதழ்கள் தினமணி கதிர் வீடு பேறு! மாலன் Sunday, February 4, 2018 12:00 AM +0530 வீழ்வேன் என்று நினைத்தாயோ? 6

"இந்த வானுயர்ந்த கட்டடங்கள் என்னைக் கவர்ந்துவிட்டன. நான் உடனே இந்தக் கட்டடங்களின் புகைப்படங்கள் கொண்ட "பிக்சர் கார்டை' வாங்கி எங்கள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்''. 
சிங்கப்பூரில் உள்ள அயல்நாட்டுப் பத்திரிகையாளர்கள் உட்பட அனைத்துப் பத்திரிகையாளர்களும் கூடியிருந்த கூட்டத்தில் இப்படிச் சொன்னவர் துரைமுருகன். ஆண்டு 1974 . அப்போது சட்ட மன்ற உறுப்பினராக இருந்த துரைமுருகன், சிங்கப்பூர் செல்கிறார் சட்டமன்ற உறுப்பினராக அல்ல. "ரைசிங் சன்' என்ற வாரப்பத்திரிகையின் நிர்வாக இயக்குநராக. மலேசியன் ஏர்லைன்ஸ், கோலாலம்பூருக்கும் சென்னைக்கும் இடையே விமான சேவையைத் துவக்கியதை அடுத்து, சில பத்திரிகையாளர்களை சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் அழைத்துச் செல்கிறது. அப்படி அழைத்துச் செல்லப்பட்டவர்களில் ஒருவராக துரைமுருகன் அந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். அவருடன் சென்ற மற்ற பத்திரிகையாளர்கள், முரசொலி செல்வம், தமிழ் முரசு ஜி.தினகரன், மக்கள் குரல் காமராஜுலு.
இந்தப் பத்திரிகையாளர்களுக்கு சிங்கப்பூரில் உள்ள தமிழ் நாளேடான "தமிழ் மலர்', ஹோட்டல் நியூ ஹாங்காங் என்ற நட்சத்திர விடுதியில் வரவேற்பு ஒன்று அளிக்கிறது. அந்த நிகழ்ச்சியில்தான் துரைமுருகன் இதைச் சொன்னார். 
துரைமுருகனுக்கு மட்டுமல்ல, சிங்கப்பூர் செல்கிற பலரும் அண்ணாந்து பார்த்து பிரமிப்பது இந்த வானளாவிய குடியிருப்புகளைத்தான். அன்று மட்டுமல்ல, இன்றும் கூட இந்த பிரமிப்பு நீங்கிவிடவில்லை.
உள்ளூர் கவிஞர்களுக்கோ இந்தக் கட்டடங்களைக் காணும் போது கற்பனைகள் பீறிட்டு எழுகின்றன. ஆசியான் நாடுகளில் உள்ள படைப்பாளிகளுக்கு வழங்கப்படுகிற ஒரு மிக உயர்ந்த விருது "தென்கிழக்காசிய எழுத்தாளர் விருது (SEA Write Award) ஆசியான் நாடுகளில் அதிகாரப்பூர்வ மொழிகளில் எழுதப்படும் படைப்புகளுக்கு இந்த விருது, தாய்லாந்து அரசர் முன்னிலையில் வழங்கப்படுகிறது.ஆசியான் நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் தமிழும் அதிகாரப்பூர்வ மொழியாக இருப்பதால் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் சிலர் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள்.
இந்த விருது பெற்ற சிங்கப்பூர் கவிஞர்களில் ஒருவரான க.து.மு.இக்பால், இந்தக் கட்டடங்களை ""முகிலைத் தழுவிக் கட்டடங்கள் முத்தம் கொள்ளும் நாடு'' என்று கொண்டாடுகிறார். இதே விருது பெற்ற இன்னொரு கவிஞரான பரணன், "கட்டிய வீடுகள் வெயில் மறைக்கும், காண்பவர் உள்ளங்கள் திறன் வியக்கும்'' என்று சிலிர்க்கிறார்.
இந்தக் கட்டடங்களுக்குப் பின் உள்ள வரலாறு உண்மையில் வியக்க வைப்பதுதான்.
1960-க்கு முன்னால் சிங்கப்பூரில் நூற்றுக்கணக்கில் காம்போங் என்றழைக்கப்படும் குடிசைப் பகுதிகள் இருந்தன. அவற்றைத் தமிழில் கம்பம் என்பார்கள். காம்போங் என்ற மலாய்ச் சொல்லில் இருந்துதான் "காம்பௌண்ட்' என்ற ஆங்கிலச் சொல் பிறந்தது. காம்போங் என்றால் பலவற்றின் கூட்டு. ஆங்கிலத்தில் அதை slum என்று மொழிபெயர்க்கிறார்கள். குடிசைகள் நிறைந்த பகுதி.
ஓலைக் கூரைகள் வேய்ந்த குடிசைகள். உள்ளே ஒன்று அல்லது இரண்டு அறைகள். அதில்தான் சமையல், சாப்பாடு, உறக்கம் எல்லாம். கழிப்பறை வசதிகள் கிடையாது. திறந்த வெளியில், அல்லது வீட்டிற்குப் பின்புறம் உள்ள மலக் குழிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அந்தச் சிறிய இடத்தில் பலர் குழுமி வாழ்ந்தார்கள். அந்த கம்போங் குடிசைகளில் மக்கள் நெருக்கமாக வாழ்ந்தார்கள் . அந்தக் குடிசைகளில் பெரும்பாலும் ஓர் அறை மட்டும் இருக்கும். சமைப்பதற்குக் கூட இடம் இருக்காது. அதில்தான் சமைக்க வேண்டும். சாப்பிட வேண்டும். படுக்க வேண்டும். படுப்பதற்கு ஒரு கட்டில் கூட இருக்காது. ஒவ்வொரு குடும்பத்திலும் நாலைந்து பிள்ளைகள் இருப்பார்கள். எல்லோரும் அந்தக் குடிசையில் பயிற்றங்காய் அடுக்கி வைப்பது போல் அடுக்கிக் கிடப்பார்கள். 
இப்படியாக வாழ்க்கையை அனுபவித்தார்கள் நம் குடியரசு மக்கள் ஒரு காலத்தில்.
சில வசதியுடையவர்கள் கம்போங் நில உரிமையாளரிடம் நிலத்தை வாடகைக்கு எடுத்து அங்கு ஒரு வீட்டைப் பெரிதாக 4, 5, அறை கொண்ட வீட்டைக் கட்டுவார். பின் தன் குடும்பத்திற்குப் போதுமான ஓர் அறையையும் வராண்டாவையும் வைத்துக் கொண்டு, மற்ற அறைகளில் ஓர் அறையை மூன்றாகத் தடுத்து வாடகைக்கு விட்டுப் பணம் சம்பாதிப்பார். அந்த அறை 6 அடிதான் இருக்கும். சமையல்கட்டும் பொதுவாகவிருக்கும். குளியல் அறை, கழிவறை இவை எல்லாம் பொதுவாகவே இருக்கும். அதனால் தினமும் சண்டைச் சச்சரவுடன் வாழ்க்கை நடத்த வேண்டியிருக்கும். படுத்திருக்கும் போது ஒருவர் மூச்சு மற்றவருக்கு ஏகபோகமாக இருக்கும் என்று "பாசிர் பாஞ்சாங் வட்டாரத்தில் வாழ்க்கை' என்ற கட்டுரையில் கம்பங்களின் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறார் சி.குமாரசாமி என்ற சிங்கை எழுத்தாளர்.
சிங்கப்பூரில் கொளம் ஆயர் என்ற பகுதி இருக்கிறது. கொளம் என்ற மலாய்ச் சொல்லுக்கு குளம் என்று பொருள் (மலாய் மொழியில் பல தமிழ்ச் சொற்கள் கலந்திருக்கின்றன. கடை என்பது அங்கு கடா) ஆயர் என்றால் தண்ணீர். (அதுவும் தமிழ்ச் சொல்லே என்று சிலர் ஆயக்கட்டு என்ற சொல்லைச் சுட்டி வாதிடுகிறார்கள்) கொளம் ஆயர் என்றால் தண்ணீர்க் குளம். இந்தக் கொளம் ஆயர் பகுதியில் இருந்த கம்பங்கள் பற்றி சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் முன்னாள் செயலாளரும், "தமிழ் அமுதம்' என்ற இதழின் ஆசிரியருமாகச் செயல்பட்ட பி.சிவசாமி ""நேற்றிருந்தோம்'" என்ற நூலில் எழுதியுள்ள கட்டுரையில், "கம்பத்து வீடுகளில் எடுத்துச் செல்லக்கூடிய கழிவறைகள்தான் பெரும்பாலும் இருந்தன. சில வீடுகளில் அதுவும் இல்லை. குளிப்பதற்கும் சிறுநீர் கழிப்பதற்கும் வீட்டின் அருகில் கட்டியிருந்த மறைவிடத்தைப் பயன்படுத்தினார்கள்....எங்கு பார்த்தாலும் குப்பைகள், வேண்டாத பொருட்கள் ஆகியவற்றைப் பார்க்க முடிந்தது. எலிகளையும் சில வேளைகளில் பாம்புகளையும் கூடப் பார்க்க முடிந்தது ஒரு சில கம்பத்து வீடுகளில் தண்ணீர், மின்சார வசதிகள் இருந்தன. ஆனால் பல வீடுகளில் அவ்வசதிகள் இல்லை. இதனால் பொது இடத்தில் உள்ள குழாய்களில் தண்ணீர் எடுத்து வந்து சேமித்துக் கொண்டார்கள். இரவில் மண்ணெண்ணெய் விளக்குகளைத்தான் பயன்படுத்தினார்கள்'' என்று எழுதுகிறார். 
"கம்பங்களில் பாதுகாப்பு என்பதும் பிரச்னையாகத்தான் இருந்தது. தெருவுக்குத்தெரு குண்டர்கள் கும்பல் இருந்தது' என்று கம்பங்களின் வாழ்க்கையைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட "வேர்கள்' என்ற நாவலில் நூர்ஜஹான் சுலைமான் என்ற இன்னொரு எழுத்தாளர் எழுதுகிறார்.
இந்தப் பேட்டை ரௌடிகள், வாடகைக்குக் குடியிருப்போர் வீட்டைக் காலி செய்ய மறுப்போரை வன்முறையைப் பயன்படுத்திக் காலி செய்ய வைக்கப் பயன்படுத்தப்பட்டார்கள். அவர்களுக்கு அரசியல்கட்சிகளின் மறைமுக ஆதரவும் இருந்தது.
"என்னைச் சிலர் வந்து சந்தித்தார்கள். பாரிசான் சோஷியல்ஸ் கட்சியைச் சேர்ந்தவர்களை அகற்ற நாங்கள் உதவுகிறோம் (பாரிசான் சோஷியல்ஸ் கட்சி, மக்கள் செயல் கட்சியிலிருந்து பிரிந்து அதற்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருந்த கட்சி) அங்கே 
"ஆக்கிரமித்திருப்பவர்கள்' எல்லோரும் பாரிசான் சோஷியல்ஸ் ஆட்கள்தான். நீங்கள் சரி என்று சொன்னால், குண்டர்களை அனுப்பி அவர்களைத் தூக்கி எறிந்து விடுகிறோம் என்று வந்தவர்கள் என்னிடம் சொன்னார்கள். அவர்களிடம் நான் சொன்னேன்: "இந்த பாருங்க. இப்ப நாங்க ஆளும் கட்சியா இருக்கோம். நீங்க சொல்ற மாதிரியெல்லாம் நாங்க பின்பற்ற முடியாது. நியாயமான இழப்பீட்டைப் பேசி முடித்தால் நாங்கள் உதவுகிறோம்'' என்று பத்மநாபன் செல்வதுரை என்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு நூலில் எழுதுகிறார்.
இப்படிப் பாதுகாப்பற்ற, சுகாதாரமற்ற, இட நெருக்கடி நிறைந்த, ஓலைக் குடிசைகளில் இருந்த கம்பங்கள் அன்று நூற்றுக்கணக்கில் இருந்தன. இன்று ஒன்று கூடக் கிடையாது. அங்கிருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக, நவீனமான வானுயர்ந்த கட்டடங்களில் குடி அமர்த்தப்பட்டார்கள். ஆம், மக்கள் மகிழ்ச்சியுடன் குடிபெயரவில்லை, வலுக்கட்டாயமாகக் குடியமர்த்தப்பட்டார்கள்.
ஏன்?
(தொடரும்)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/3/w600X390/k1.jpg 'காம்போங்' குடியிருப்பு http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/04/வீடு-பேறு-மாலன்-2856677.html
2856681 வார இதழ்கள் தினமணி கதிர் உணர மறுத்த உண்மைகள் DIN DIN Sunday, February 4, 2018 12:00 AM +0530 காலிங் பெல் ஓசை ஒலிக்க, உஷா சென்று கதவைத் திறக்க, முகத்தைச் சுளிக்க வேண்டிய சூழ்நிலை. எதிரே மாமி. இவள் எதற்கு வந்து தொலைத்தாள் இந்த வேளையில்? 
"வாங்க'' என்று சொல்வதற்குள் படாத பாடு பட்டுத் தொலைத்து விட்டாள். விருப்பமே இல்லாமல் சொல்வதென்றால் எப்படி? அந்த மாமி எங்கே வரவேற்பை எல்லாம் எதிர்பார்க்கின்றது. வந்து சோபாவில் அமர்ந்து விட்டது பட்டென்று. முகத்தில் என்னவோ வருடக் கணக்கில் பழகிய பாவம். 
"இதோ வரேன்'' என்று சொல்லி விட்டு 
வெடுக்கென்று சமையற் கட்டுக்குள் சென்று வேண்டுமென்றே நின்று கொண்டிருந்தவள் மனம் நடந்ததை அசை போடத் தொடங்கியது. பத்து நாள் முன்னால் நடந்ததுதான். பழைய காலக் கதை அல்ல.
அப்பொழுதும் இதே காலிங் பெல் ஓசைதான் ஒலித்தது. சென்று திறந்தாள் உஷா. இதே லூஸ் மாமிதான் நின்றிருந்தது. அப்பொழுது இவள் பார்ப்பது முதல் தடவை. யாரென்றே இவளுக்குத் தெரியாது அப்பொழுது. இப்பொழுது மட்டும் என்ன அதன் முழு சரித்திரமா தெரியும். யாருக்கு வேண்டும் அதெல்லாம்.. ..
"நீங்க?'' இவள் கேள்வி எழுப்பிக் கொண்டே இருக்கையில் "உள்ளே வரலாமா?'' என கேட்டுக் கொண்டே இவள் பதிலுக்குக் காத்திராமல் உள்ளே வந்து இதே சோபாவில் உட்கார்ந்தது இதே லூஸ் மாமி.
முதல் கேள்விக்கு பதில் வராததால் அதே கேள்வியைத் திரும்பவும் கேட்கும் கட்டாயம் இவளுக்கு. "நீங்க யாருன்னு?''
எழுந்தாள் மாமி. "நாங்க பக்கத்து "சுகுணா கார்டன்' அப்பார்ட்மெண்டுல புதுசா குடித்தனம் வந்திருக்கோம். இருபது நாள்தான் ஆகறது. என் பெயர் பார்வதி. வீட்டுல கொலு வைச்சிருக்கோம். அதான் எங்காத்து கொலு பார்க்க அழைச்சுட்டுப் போகலாம்னு வந்தேன்.. .. ..'' முகத்தில் ஒரே பரவசத்தோடு சொன்னாள் இதே மாமி. சொன்னதோடு நின்று விடாமல் குங்குமச் சிமிழை இவள் முன்னால் நீட்ட எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டாள். பழகாமல் எப்படி ஒருவர் வீட்டுக்குப் போவது என்று மனதில் எண்ணம் வந்தாலும் முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு சொன்னாள் "வரேன்''.
"உங்காத்துல கொலு வைச்சிருக்கேளா?'' உடனே கேட்டு விட்டது இந்த மாமி. எங்கே விடுகின்றது. உள்ளே அழைத்துச் சென்றாள்.
"சிம்பிளா வைச்சிருந்தாலும், பிரமாதமா இருக்கு. நன்னா வைச்சிருக்கேள். பொம்மைகள் எல்லாம் புதுசா இருக்கே. இந்த வருஷம் வாங்கினதா? பார்க்கும் கட்டியிருக்கேள். அருமையா இருக்கு'' வர்ணனை கிரிக்கெட் விமர்சகர் அளவுக்கு நீண்டு கொண்டே போனது கொடுமை என்றால் அடுத்து இந்த மாமி செய்தது.. . படக்கென்று உட்கார்ந்து விட்டது "கொலு பார்க்க வந்தா பாடத் தெரிஞ்சா பாடிட்டுப் போகணும்னு சொல்லுவா. இல்லேன்னா தப்பு.. ..''
மாமி பாடிய பாட்டை பொறுத்துக் கொண்டு கேட்டு விட்டு அனிச்சைச் செயலாக வெற்றிலை பாக்கு குங்குமம் கொடுத்து விட, ஹாலுக்கு லூஸ் மாமி வந்ததும் கிளம்பி விடுவாள் என்ற நம்பிக்கை பிறக்க, அடுத்த விநாடி அது அழிந்து மடிந்தது. மறுபடியும் சோபாவில் உட்கார்ந்து புன்னகைக்க, இவள் அழுதே விடுவாள் போல இருந்தது. "இன்னும் என்ன வேணும் மாமி. கிளம்பித் தொலைய வேண்டியதுதானே' என்று கேட்க வேண்டும் போல இருந்தது. கேட்டுத் தொலைய முடியவில்லையே. 
"உங்க பெயர் சொல்லவே இல்லையே?'' ஆரம்பித்தது லூசு.
"உஷா'' ஒரே வார்த்தையில் பதில் அளித்தாள். பட்டென்று கிளப்பி விட வேண்டும். கிளம்புமா மாமி. ம்...ம்... தெரியவில்லை. 
"என் பெயர்தான் சொன்னேனே... பார்வதி. இதுக்கு முன்னாடி கண்ணகி நகர்ல குடித்தனம் இருந்தோம். ரெண்டு வருஷம். திடீர்னு தண்ணி ப்ராப்ளம். என்ன பண்ணறது. தண்ணி இல்லாம என்ன செய்யறது. அதான் இங்கே மாத்தி வந்துட்டோம். என் ஹஸ்பண்ட் பேரு சுந்தரேசன். பேங்குல இருக்கார். ரெண்டு பசங்க. பெரியவன் டென்த் படிக்கறான். அடுத்தது பெண். ஏழாவது படிக்கறா. நான் ஹவுஸ் 
ஒய்ப்தான் ...''
"நான் கேட்டேனா?'' கேட்க நினைத்தாள். கேட்க முடியவில்லையே. சொல்லி விட்டுக் கிளம்பி விடுவாள் என்று நினைத்தால்.. .. ..
"உங்க பேமிலி பற்றிச் சொல்லுங்கோ?'' கேள்வி கேட்டுத் தொலைத்து விட்டது லூசு. பதில் சொன்னாள் சுருக்கமாக. மாமி விட்டால்தானே? கிளைக்கேள்விகள் கேட்டு இவர்கள் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி அக்கு வேர் ஆணி வேராகக் கேட்டுத் தெரிந்து கொண்டுதான் கிளம்பியது. தெரிந்து கொண்டதில் என்ன சந்தோஷம் வேண்டிக் கிடக்கிறது. கர்மம்டா சாமி. கடிகாரத்தைப் பார்க்க, அரை மணி நேரத்தை முழுசாக சாப்பிட்டுச் சென்று விட்டிருந்தது, இந்த மாமி! கோபத்தில் கத்த வேண்டும் என்று இருந்தது. "சுகுணா கார்டன்' பார்க்க இவளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த லூûஸப் பார்த்ததில் இருந்து அந்த அபார்ட்மெண்ட் என்றாலே இவளுக்கு ஏனோ வெறுப்பு தோன்ற ஆரம்பித்தது.

"யார் வந்துட்டுப் போறா உஷா. நம்ம வீட்டுக்குத்தான் வந்துட்டுப் போற மாதிரி இருக்கு?'' கேட்டுக் கொண்டே இவள் கணவர் வர, உள்ளக் குமுறலை வெளிக் கொட்ட இவளுக்கு உடனே ஒரு சந்தர்ப்பம் கிடைத்து விட்டது "ஐயோ எனக்கு தலையே வெடிச்சுடும் போல ஆயிடுச்சு. பரம லூசு எங்கே இருந்த வந்ததோ தெரியலைங்க. சுகுணா கார்டன்ல புதுசா குடித்தனம் வந்திருக்காங்களாம். கொலுவுக்குக் கூப்பிட வந்தாளாம். அழைச்சுட்டு உடனே கிளம்பும்னு பார்த்தா, நம்ம வீட்டு கொலுவுக்கு முன்னாடி உட்கார்ந்து பாட வேற ஆரம்பிச்சிடுச்சு. கர்மம்டா சாமி. கொலு பார்க்க வந்தா பாடணும்னு சாஸ்திரமாம். கர்ண கொடூர குரல். சரி அப்படித்தான் பாடிட்டு உடனே கிளம்பும்னு பார்த்தா... அதோட வீட்டுல யார் யாரெல்லாம் இருக்கா, நம்ம வீட்டுல யார் யார், என்ன பண்ணறாங்கன்னு கேட்டு தொளைச்சு எடுத்துடுத்து... தெரியாத வீட்டுக்கெல்லாம் கொலு பார்க்க ஏன் வரணும். ஏன் கொலுவுக்குக் கூப்பிடணும். இது வரலைன்னு யார் அழுதா. ..'' இவள் அழத் தொடங்கினாள்... வார்த்தைகள் வடிவில்.
"உனக்குப் பிடிக்கலைன்னா வேலை இருக்குன்னு சொல்லிட வேண்டியதுதானே...'' ஷூவைக் கழற்றியவாறே கேட்டார் ரமேஷ்.
"நீங்க வேற. நீங்க என் ஹஸ்பண்டுன்னு தெரிஞ்சிருந்தா உங்களைப் பார்த்ததும் இன்னும் பேச ஆரம்பிச்சிருக்கும். நல்ல வேளை அரை நிமிஷம் கழிச்சு வந்தீங்க. இல்லே தொலைஞ்சோம்...''
"நீ அவங்க வீட்டு கொலுக்கு...''
"ஏங்க என்னைப் பார்த்தா எப்படி தெரியறது. அது கிட்ட போய் இன்னொரு தடவை மாட்டிக்கணுமா. நம்ம வீட்டுக்கு வந்தே இந்த ப்ளேடு போட்டுட்டுப்
போயிருக்கு. இன்னும்
அது வீட்டுக்குப் போனா... பட்டாக்
கத்தியே போடும். ஆளை விடுங்கடா சாமி...'' கையெடுத்துக் கும்பிட்டாள்.

அதற்கு அடுத்து ஒரு தடவை தெருவில் இவள் எதிரே அந்த மாமி. கண்டு கொள்ளாமல் போய் விடலாம் என முகத்தைத் திருப்புவதற்குள் "உஷா மாமி...'' முகத்தில் புன்னகையோடு குரல். வேறு வழி... வழிந்து வைத்தாள். "நீங்களா...?''
"கொலுவுக்குக் கூப்பிட்டேனே வரவே இல்லையே. கட்டாயம் வரணும் என்ன? வரலேன்னா சண்டை போடுவேன்...''
"இன்னிக்கே வரேன்...'' சொல்லி விட்டு வீட்டை நோக்கி ஒரே தாவலில் பாய்ந்தாள். எங்கேயாவது தன் பின்னாலேயே வந்து கொலுவுக்கு அழைக்க வீட்டுக்கே வருமோ என திரும்பிப் பார்க்க... நல்ல வேளையாக அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. தப்பித்தோம்டா சாமி. 

இன்றைக்கு வீட்டுக்கே வந்து விட்டதே. ஐயையோ நான் என்ன செய்வேன். இதனிடம் இருந்து எப்படித் தப்பிப்பேன். இதையெல்லாம் யார் அழைத்துத் தொலைத்தார்கள் அட ஆண்டவா... வெளியே கிளம்புகிறேன் என்று சொல்லி விடலாமா. எங்கே சொல்ல விடும். இதோ சோபாவில் உட்கார்ந்து விட்டதே ஹாயாக. இன்று பார்த்து கணவர், பையன், பெண் எல்லாரும் வேறு இருக்கின்றார்களே. ப்ளேடுகள் போடாமல் போகாதே. இவள் கண்கள் இருண்டு வந்தன. தலை சுற்றத் தொடங்கியது. ஒரு நாற்காலியில் உட்கார்ந்து விட்டாள். தொடங்கடியம்மா உன் தாக்குதலை... 
"நான் அவ்வளவு கூப்பிட்டும் எங்காத்து கொலுவுக்கு நீங்க வரவே இல்லை. எனக்கு ரொம்ப வருத்தம் உஷா மாமி. ஏன் அப்படிப் பண்ணிட்டேள்? எவ்வளவு ஆசையா கூப்பிட்டேன். நீங்க வராதது எனக்கு ரொம்ப கஷ்டமா போயிடுத்து. உங்களுக்காக ஒரு ரவிக்கைத் துண்டு கூட வாங்கி வைச்சிருக்கேன். இன்னொரு நாள் வந்தாவது வாங்கிக்குங்கோ''
"இன்னும் விடவில்லையா மாமி? கொலு முடிந்து தான் நாள் ஆகி விட்டதே? நான் என்ன பண்ணுவேன்...' ஓவென அழ வேண்டும் போல் இருக்கிறதே. பல்லைக் கடித்துக் கொள்ளவும் முடியாதே.
ஏற்கெனவே பல் வலி. 
"சரி நான் வந்த விஷயத்தைச் சொல்லிடறேன். நீங்க உங்க பிள்ளை பி.இ. படிச்சுட்டு வேலை தேடிண்டு இருக்கான்னு சொன்னேளே. என் ஹஸ்பண்டோட ப்ரண்ட் சந்துருன்னு ஒருத்தர் ஒரு கம்பனியில பெரிய போஸ்டுல இருக்கார். இஞ்ஜினியர் போஸ்டுக்கு ஆள் எடுக்கறதா சொன்னாராம். முதல்ல ஏதோ ட்ரெயினியாமே. அதுவாம். அப்புறம் பர்மனன்டா இஞ்ஜினியர் ஆக்குவாளாம். தெரிஞ்சவா இருந்தா சொல்லுன்னு இவர் கிட்டே சொல்லியிருக்கார். சாயங்காலம் எங்க வீட்டுக்கு அந்த சந்துரு வர்றாராம். நான் உடனே அவர் கிட்டயிருந்து போனை வாங்கி சந்துரு சார் கிட்ட சொல்லிட்டேன். பக்கத்து அபார்ட்மெண்டுல என் ப்ரண்ட் உஷான்னு இருக்கா. அவ பையன் இஞ்ஜினியரிங் படிச்சுட்டு வேலை தேடிண்டு இருக்கான். அவனை வந்து பார்க்கச் சொல்றேன். திறமை இருந்தா நிச்சயம் வேலை கொடுங்கோன்னு சொல்லி இருக்கேன். உங்க பையன் இருக்கான் போல இருக்கே... பாஸ்கர் இங்கே வாப்பா. நான் சொன்னதைக் கேட்டுண்டுதான் இருந்தியா. உனக்கு சம்மதமா? உனக்கு ஆட்சேபணை இல்லேன்னா சாயங்காலம் எங்காத்துக்கு வந்து அந்த சந்துரு சாரைப் பாரு. அவர் அப்ளிகேஷன் அனுப்பச் சொன்னா உடனே அனுப்பிடு... என்னப்பா பதிலே பேச மாட்டேங்கறே... உனக்கு இஷ்டம் இல்லையா...'' பேசிக் கொண்டே போனாள் பார்வதி மாமி.
"என்ன சொன்னீங்க ஆண்ட்டி. எனக்கு இஷ்டம் இல்லையா. அவருக்கு ஓகேன்னா நான் நாளைக்கே ஜாயின் பண்ண ரெடி. காத்துண்டு இருக்கேன் ஒரு வேலை கிடைக்காதான்னு. ரொம்ப தாங்க்ஸ் ஆண்ட்டி... அப்ளிகேஷன் போட்டுட்டு காத்துண்டு இருக்கேனே. ஒரு சான்ஸ் வந்தா விடுவேனா. சாயங்காலம் கட்டாயம் அவரை வந்து பார்க்கறேன்'' சொன்னவன் கண்களில் ஆனந்தம் பெருகெடுக்க ஆரம்பித்தது.
உஷாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அந்த நேரத்தில் ரமேஷ் வீட்டிற்குள்ளிருந்து வர, பார்வதி மாமிக்கு பரம சந்தோஷம். "நீங்கதான் உஷாவோட ஹஸ்பண்டா. அன்னிக்கு நான் வந்திருந்த போது நீங்க வேலைக்குப் போயிருந்தேள் போல இருக்கு. நான் தான் பார்வதி. சுகுணா கார்டன்...''
"உஷா சொன்னா. உட்காருங்கோ. செüக்கியமா இருக்கேளா. நீங்க பேசினதை எல்லாம் கேட்டேன். ரொம்ப சந்தோஷம் மாமி. ஒரே தடவை பார்த்துட்டு உடனே ஒரு வேலை வாய்ப்பையும் கொடுக்கறேளே... என்ன சொல்றதுன்னே தெரியலை மாமி... உஷாவை உங்க ப்ரண்டுன்னு சொன்னேளே. ஒரு தடவைதான் பார்த்திருக்கேள்... ஆச்சரியம் மாமி'' 
"பின்ன. பத்து வருஷம் பழகினாதான் ப்ரண்டா... பாஸ்கரும் என் குழந்தை மாதிரி. அவனுக்கு ஒரு வேலை கிடைக்கறதுன்னா எனக்கு சந்தோஷம் இல்லையா...'' உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொண்டே போனாள் மாமி.
"உஷா, மாமிக்கு ஒரு காபி கொடேன். எனக்கும்...'' ரமேஷ் சொல்ல, உஷா அடுக்களைக்குச் சென்றாள்.
"காப்பி குடிக்கறேளான்னு கேட்டா வேண்டாம்னு சொல்ல மாட்டேன் பரவாயில்லையா'' சிரித்தாள் மாமி.
"ரொம்ப சந்தோஷம் மாமி'' சந்துரு சொல்ல, உஷா நொடியில் காப்பிக் கோப்பைகளோடு வந்தாள். மாமி காப்பியைக் குடித்து முடித்தாள். "நான் அப்ப கிளம்பறேன். கொஞ்சம் அவசர வேலை இருக்கு. சாவகாசமா வந்து பேசறேன். சாயங்காலம் பாஸ்கரை எங்காத்துக்கு வரச் சொல்லுங்கோ. சந்துரு சாரைப் பார்க்கறத்துக்கு...'' வாயிற் படியைத் தொட்டாள் மாமி.
"ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் மாமி...'' உஷாவால் மனதார பார்வதி மாமிக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை.
"அட இதுக்கு எதுக்கு மாமி தாங்க்ஸ்... மனுஷாளுக்கு மனுஷா செய்யறதுக்கெல்லாம் தாங்க்ஸô. நான் அன்னிக்கு உங்க வீட்டு கொலு பார்க்க வந்தேன். பாஸ்கர் வேலை தேடிண்டு இருக்கான்னு தெரிய வந்தது. எதேச்சையா ஒரு சந்தர்ப்பமும் வந்திருக்கு. அதான் தெரியப்படுத்த வந்தேன். அவ்வளவுதானே. வேற என்ன பெரிசா செஞ்சுட்டேன். ஆனா ஒண்ணு. எங்காத்துக்கு பாஸ்கர் வேலை விஷயமா வருவான். அது வேற. நீங்க கட்டாயம் வரணும் என்ன. இல்லேன்னா வருத்தப்படுவேன். அப்புறம் பயங்கர சண்டை போடுவேன் என்ன...''
பார்வதி மாமி சொல்லி விட்டுப் போனதும் சோபாவில் அமர்ந்த உஷாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 
"என்ன உஷா யோசிக்கறே...'' கேட்டுக் கொண்டே வந்து அமர்ந்தார் ரமேஷ்.
"முன்னே பின்ன தெரியாதவங்க வீட்டுக்கு கொலுவுக்கு அழைக்க வருவாங்களான்னு கேட்டேனே. வந்ததனாலதான் இன்னிக்கு பாஸ்கருக்கு ஒரு வேலை கிடைக்கற மாதிரி சூழ்நிலை உருவாகி இருக்கு... மாமி சொன்னது... மாமி செஞ்சது எல்லாம்...''
"அந்தக் காலத்துல பண்டிகைகளை எல்லாம் முன்னோர்கள் ஏற்படுத்தினது மனுஷா ஒருத்தரை ஒருத்தர் பார்த்து உறவை, நட்பை வளர்த்துக்கறதுக்காகத்தான்னு பெரியவங்க சொல்றதைக் கேள்விப்பட்டிருக்கேன். இப்ப நாம அதையெல்லாம் மறந்துட்டோமோ. பண்டிகைகளின் உண்மையான காரணங்களை மறந்துட்டோமோ. பக்கத்து வீட்டுல யார் இருக்காங்கன்னு தெரியாமலேயே ஒரு மாதிரி அடைஞ்ச வாழ்க்கை வாழறோம்னு நினைக்கறேன் உஷா. நீ என்ன நினைக்கறே?'' கேட்டார்.
"பார்வதி மாமியை லூசு லூசுன்னு நிறைய தடவை சொல்லிட்டேனே. இப்ப நினைச்சா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க'' வருந்தினாள்.
"நீ நினைச்சது, சொன்னது சரிதான் உஷா. பார்வதி மாமி லூசுதான்''
"என்ன சொல்றீங்க நீங்க?'' திடுக்கிட்டாள் உஷா.
"ஆமாம் உஷா. நம்ம வீடு, நம்ம குழந்தைகள், என் கணவர்னு மனசை இறுக்கமா வைச்சுக்காம, அன்பா எல்லாரோடயும் பழகி உதவியும் செய்யற விதத்துல மனசை லூஸா வைச்சிருக்கா இல்லையா'' கணவர் சொல்ல, மாமிக்கு நன்றி சொல்லியபடி அமர்ந்திருந்தாள் உஷா.
ய் சாயம் வெ. ராஜாராமன்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/3/w600X390/k2.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/04/உணர-மறுத்த-உண்மைகள்-2856681.html
2856682 வார இதழ்கள் தினமணி கதிர் ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் வீரர்கள் DIN DIN Sunday, February 4, 2018 12:00 AM +0530 கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி முதலில் ரயில்வே துறையில் டிக்கெட் கலெக்டராக இருந்தார். பின்னர் ஏர் இந்தியாவில் சில காலம் வேலை பார்த்தார். தற்போது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர். இது பிசிசிஐ மற்றும் ஐசிசியின் முன்னாள் தலைவரான என்.சீனிவாசனின் நிறுவனம்! இதில் வேலையில் சேர்ந்தபோது அவருக்கு அளிக்கப்பட்ட சம்பள விவரம்:
அடிப்படை சம்பளம் - ரூ.43 ஆயிரம்
டி.ஏ. - ரூ.21,970
ஸ்பெஷல் அலவன்ஸ் - ரூ.20 ஆயிரம்
இந்தத் தகவல்களை ஊடகங்களுக்கு அளித்தவர் யார் தெரியுமா? ஐபிஎல் போட்டிகளின் முன்னாள் தலைவர் லலித் மோடி. 
ராகுல் டிராவிட் 1994-ஆம் ஆண்டில் இருந்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ஊழியர். இவரைத் தவிர வி.பி.சந்திரசேகர், தினேஷ் கார்த்திக், லட்சுமிபதி பாலாஜி மற்றும் ஆர்.அஸ்வின் ஆகிய கிரிக்கெட் வீரர்களும் இதே நிறுவனத்தின் ஊழியர்கள் தான்!
ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/3/w600X390/k3.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/04/ஒரே-நிறுவனத்தில்-பணியாற்றும்-வீரர்கள்-2856682.html
2856683 வார இதழ்கள் தினமணி கதிர் சிரி... சிரி...  DIN DIN Sunday, February 4, 2018 12:00 AM +0530 • ஆசிரியர்: 100 கிராம் ஒரு கிலோ. அப்ப 300 கிராம் எத்தனை கிலோ? 
மாணவன்: கிலோ... கிலோ... கிலோ...

• " உன் பையன் சரியான மண்டுப் பையனா இருக்கான்னு புலம்புவியே? எப்படி இன்ஜினியரிங் காலேஜிலே இடம் கெடைச்சது?''
"எல்லாம் பே "மண்டு' சீட்டுதான்.
எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.

• "எதுக்கு அந்த நடிகையோட கையில சாவிக் கொத்து இருக்கு?''
"இந்த படத்துல அவங்க ஓஉவ ரோல்ல நடிக்கிறாங்களாம்''
ஆர்.பிரபா, நெல்லை..

• "எப்படி அவரு திடீர்னு புதுசா ஹோட்டல் ஆரம்பிச்சாரு?''
""ரொம்ப நாளா பிச்சை எடுத்த அனுபவம்தான்''
ஆர்.அருண்குமார், திருநெல்வேலி-3.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/3/w600X390/k4.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/04/சிரி-சிரி-2856683.html
2856686 வார இதழ்கள் தினமணி கதிர் பேல்பூரி DIN DIN Sunday, February 4, 2018 12:00 AM +0530 கண்டது
• (சென்னை தாம்பரத்தில் ஒரு முடித்திருத்தகம் முன்பு உள்ள போர்டில் ) 
முடி இருப்பவர்கள், முடி வளர்ந்தவர்கள்
எங்கள் எஜமானர்கள்.
டி.ஜெய்சிங், நஞ்சுண்டாபுரம்.

• (சென்னை தி.நகரில் சிசிடிவி கேமராக்கள் விற்கும் கடை ஒன்றில்)
மேலே இருக்கிறவர் எல்லாத்தையும் 
பார்த்துக்கிட்டுதான் இருக்கிறார்.
இரா.சிவானந்தம், கோவில்பட்டி. 

• (காயல்பட்டினத்தில் உள்ள ஒரு வீட்டின் பெயர்)
கொம்புடையார்
"குலசை' நஜ்முத்தீன், காயல்பட்டினம்.

• (திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடியில் உள்ள ஒரு பள்ளியில் கண்ட வாசகம்)
ENTER - ENRICH - EXCEL
டி.யாழினி, 
திருவண்ணாமலை.

கேட்டது
• (வேலூர் கோட்டைப் பூங்காவில் இரு நடுத்தர வயதுள்ள ஆண்கள்)
"என் மனைவி எனக்குத் தெய்வம் மாதிரி''
"பரவாயில்லையே... நீங்க கொடுத்து வச்சவர் சார்''
"நீங்க வேற... தெய்வம் போல, அடிக்கடி ஏதாவது புதுசு, புதுசா பிரச்னைகளை உண்டு பண்ணி என்னைச் சோதிப்பதே அவள்தான்!''
வெ.ராம்குமார், சின்ன அல்லாபுரம், வேலூர்.

• (சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயிலில் இரு மாணவர்கள்)
"மச்சான் வழி நெடுக என்கிட்டே "புராஜக்ட்' பத்தி நீ 
பேசிக்கிட்டே வந்தே. காதிலே ஹெட் செட் இருந்ததால சரியாக் கேட்கலை''
"நான் எங்கே பேசினேன்? வாயிலே சூயிங்கம் போட்டு அதையில்ல மென்னுகிட்டு வந்தேன்''
நெ.இராமன், சென்னை-74.

எஸ்எம்எஸ்
அப்பாவுக்குப் பிடிச்ச மாதிரி
முடிவெட்டுறதும்
முடிவெடுக்குறதும்
ரொம்ப கஷ்டம்.
அ.ப.ஜெயபால், 
கொள்ளிடம்.

யோசிக்கிறாங்கப்பா!
இரண்டாயிரம் ரூபாய் கையில் இருந்தால்
எதை வாங்கலாம் என்று தோன்றும்...
அதே நோட்டு கிழிந்திருந்தால்
இதை எவன் வாங்குவான் என்று தோன்றும்.
எல்.மோகனசுந்தரி, 
புதுப்பேட்டை, கிருஷ்ணகிரி.

அப்படீங்களா!
எல்லாரும் மேக் அப் போட்டுக் கொள்கிறார்கள். டிவி விளம்பரத்தைப் பார்த்து இந்த அழகு சாதனப் பொருளை நாம் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று முடிவெடுக்கிறார்கள். டிவி, சினிமாவில் வரும் தங்களுக்குப் பிடித்த நடிகர், நடிகைகளின் தோற்றத்தைப் போலவே தாங்களும் காட்சியளிக்க விரும்புகிறார்கள். ஆனால் இதற்கு மாறாக, ஒவ்வொருவரின் நிறம், உடல், முக அமைப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பொருத்தமான மேக் அப் போட்டால்தான் அழகாகக் காட்சியளிக்க முடியும்.
வடகொரியாவில் எந்தவிதமான மேக் அப் ஒருவருக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதைச் சொல்லும் ஆஞஙஏவஅசஎஎஐ 1.0 (நடதஐசஎ நஇஉசப) என்ற மொபைல் பியூட்டி ஆப் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
இந்த மொபைல் ஆப் மூலம் நீங்கள் விரும்புகிற மேக் அப்பில் நீங்கள் எப்படிக் காட்சி அளிப்பீர்கள் என்பதை ஒரு நொடியில் தெரிந்து கொள்ளலாம். பலவிதமான மேக் அப் யுக்திகளை நீங்கள் சோதனை செய்து பார்த்து, உங்களுக்குப் பொருத்தமான மேக் அப் எது என்று கண்டுபிடிக்கலாம். இது வடகொரியப் பெண்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 
என்.ஜே., சென்னை-69.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/3/w600X390/k5.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/04/பேல்பூரி-2856686.html
2856687 வார இதழ்கள் தினமணி கதிர் மைக்ரோ கதை DIN DIN Sunday, February 4, 2018 12:00 AM +0530 ஒருவன் உருக்கமாக வேண்டினான். கடவுள் அவன் முன் தோன்றினார். 
"எனக்கு நல்ல மனைவியைக் கொடுத்ததற்கு நன்றி கடவுளே! ஏன் அவளை இவ்வளவு கருணை உள்ளத்தோடு படைத்தாய்?'' என்று கேட்டான் அவன்.
கடவுள் சொன்னார்: "அப்போதுதானே நீ அவளைக் காதலிப்பாய்?''
"ஆமாம், ஏன் இவ்வளவு அழகியாகப் படைத்தாய்?''
"அப்போதுதானே நீ அவளைக் காதலிப்பாய்?''
"இருக்கட்டும்... ஏன் அவளை இவ்வளவு நல்ல சமையல் நிபுணராகப் படைத்தாய்?''
"அப்போதுதானே நீ அவளைக் காதலிப்பாய்?''
கடைசியாக அவன் கேட்டான்: 
"எல்லாம் சரி கடவுளே... ஆனால் அவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய்''
கடவுள் நிதானமாகச் சொன்னார்:
"அப்போதுதானே நீ அவளைக் காதலிப்பாய்?''
சி.ரகுபதி, 
போளூர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/3/w600X390/k6.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/04/மைக்ரோ-கதை-2856687.html
2856690 வார இதழ்கள் தினமணி கதிர் திரைக் கதிர்   DIN DIN Sunday, February 4, 2018 12:00 AM +0530 விஜய் சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள படம் "மாமனிதன்'. இப்படத்துக்காக இளையராஜா - வைரமுத்து கூட்டணியை இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் சீனுராமசாமி. இப்படத்துக்கு தனது மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன்ஷங்கர் ராஜா இருவருடனும் இணைந்து இளையராஜா இசையமைக்கவுள்ளார். "தென்மேற்கு பருவக்காற்று', "நீர்ப்பறவை', "தர்மதுரை' என தனது படங்களுக்கு வைரமுத்து தொடர்ந்து பாடல்கள் எழுதி வருவதால், இப்படத்துக்காக வைரமுத்து - இளையராஜா கூட்டணி 31 வருடங்களுக்குப் பின் இணைந்து பணியாற்றும் சூழல் உருவாகியுள்ளது. சீனுராமசாமி பேசும் போது... "மனித வாழ்வின் முக்கியத்துவத்தை பேசும் படமாக "மாமனிதன்' உருவாகவுள்ளது. யுவன் சங்கர் ராஜா இப்படத்தை இணைந்து தயாரிக்கிறார்'' என்றார். 

ஏர்டெல் நிறுவனத்தின் வின்க் மியூசிக் செயலியை 7.5 கோடி பயனாளிகள் பயன்படுத்தி வருகின்றனர். 12 இந்திய பிராந்திய மொழிகளில் மிகப் பிரபலமான இசைப்பாடல்கள் உட்பட 30 லட்சத்துக்கும் அதிகமான இசைப்பாடல்களின் தொகுப்பை வின்க் மியூசிக் கொண்டுள்ளது. இத்தொழில்துறையில், ஏறக்குறைய அனைத்து இசை நிறுவனங்களோடும் பதிவேற்றம் செய்வதற்கான உரிமையை ஏர்டெல் செயலி கொண்டுள்ளது. ஹிந்தி பாடல்களே அதிக ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், முதன்முறையாக தமிழ் பாடல்கள் முக்கிய இடங்களைப் பிடித்துள்ளன. "ஆளப்போறான் தமிழன்', "எனை நோக்கி பாயும் தோட்டா' படத்திலிருந்து "மறுவார்த்தை....', "காற்று வெளியிடை' படத்திலிருந்து "அழகியே...' ஆகிய பாடல்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. அது போல் கடந்த 12 மாதங்களில் வின் மியூசிக் -இல் முதன்மையான பத்து தமிழ் ஹிட் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அடுத்தடுத்த இடங்களை "சர்வைவா...', "யாஞ்சி...', "தள்ளிப்போகாதே...', "சாரட்டு வண்டியில', "செந்தூரா', "மாச்சோ', "நீதானே' ஆகிய பாடல்கள் பத்து இடங்களுக்குள் வந்து சேர்ந்துள்ளது, குறிப்பிடத்தக்கது. 

'சத்ரு' படத்தைத் தொடர்ந்து கதிர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. எம். புரொடக்ஷன்ஸ் சார்பில் பாரிவள்ளல் இப்படத்தைத் தயாரிக்கிறார். பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பாண்டி அருணாச்சலம், சரவணன் ஜெகதீசன் இருவரும் இணைந்து ஒளிப்பதிவு இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர். நவீன் சங்கர் இசையமைக்கிறார். கலை இயக்குநராக தியாகராஜன் பணியாற்றுகிறார். படம் குறித்து இயக்குநர் பேசும்போது... " கிராமத்திலிருந்து சென்னைக்கு வருகிற கதிருக்கு ஓர் இலக்கு. இதுதான் கதையின் பின்னணி. அந்த இலக்கை அடைய அவர் எதிர்கொள்ளும் பிரச்னைகளை சினிமா பாணியில் சொல்லுவதே கதை. சமீபத்தில் இந்திய தேசத்தையே நடுங்க வைத்த ஒரு வலுவான சம்பவத்தின் பின்னணியை கதையின் மையமாக வைத்துள்ளோம். தஞ்சை, கடம்பூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. "பென்ஹர்' , "உழவன் மகன்' படங்களுக்குப் பிறகு இப்படத்தில் வரும் ரேக்ளா வண்டி ரேஸ் பேசப்படும் என்றார் இயக்குநர்.

ரசிகர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை உண்டாக்கிய "பத்மாவத்' திரைப்படம் கடந்த 25-ஆம் தேதி திரைக்கு வந்தது. வெளியான 3 நாட்களில் ரூ.50 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது. இந்தப் படத்தில் நடித்ததற்காக தலையை வெட்டப்போவதாக தீபிகா படுகோனுக்கு மிரட்டல்கள் வந்தன. இந்நிலையில் படத்தின் வெற்றி குறித்து தீபிகா படுகோன் பேசியுள்ளார்... "பத்மாவத்' படத்தின் வெற்றி வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத அளவு சந்தோஷத்தையும் பெருமிதத்தையும் தந்துள்ளது. படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றி. பல வெற்றிப் படங்களைத் தந்துள்ள போதிலும், எனக்கு வெற்றி களிப்பு ஏற்பட்டதில்லை. "பத்மாவத்' படத்தின் மூலம் தற்போது வெற்றிக் களிப்பு ஏற்படுகிறது. பூமியில் சிறகடிப்பதாக உணர்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார். 
- ஜி.அசோக்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/3/w600X390/k7.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/04/திரைக்-கதிர்-2856690.html
2856691 வார இதழ்கள் தினமணி கதிர் பெரும் பொறுப்பு! DIN DIN Sunday, February 4, 2018 12:00 AM +0530 ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் சென்று வழிபடும் சபரிமலைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தர்மசாஸ்த்தா ஐயப்பனின் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்யும் பெரும் பொறுப்பு வகித்தவர் தமிழ்வேள் பி.டி.ராஜன் ஆவார். பிரதிஷ்டை செய்யும் முன்பு விக்கிரகத்தை ஊர்வலகமாக நூற்றுக்கணக்கான ஊர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இதனைக் "கரிக்கோலம்' என்று கூறுவர். சபரிமலையில் ஐயப்பன் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்ய உடனிருந்து உதவியவர் பி.டி.ராஜன். இவர் முன்னாள் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் மதுரை பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனின் தந்தை.
 ஆதாரம்:
 அ.ச.ஞானசம்பந்தம் எழுதிய
 "நான் கண்ட பெரியார்கள்'
 
 சண்முகசுப்பிரமணியன்
 
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/3/w600X390/k8.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/04/பெரும்-பொறுப்பு-2856691.html
2856693 வார இதழ்கள் தினமணி கதிர் ஏப்பம்... தும்மல்... கொட்டாவி! ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் DIN DIN Sunday, February 4, 2018 12:00 AM +0530 இயற்கை உந்துதல்களாகிய ஏப்பம், தும்மல், கொட்டாவி போன்றவை அலுவலக நேரத்தில் பலபேர் முன்னிலையில், வந்துவிட்டால் மரியாதைக் குறைவும் பிறர் கேலி செய்வாரோ என்றும் எண்ணி நான் வலுக்கட்டாயமாக அடக்கிவிடுகிறேன். இதனால் எனக்கு பிரச்னைகள் ஏற்படுமா?
-மணிசேகரன், சென்னை.

வயிற்றில் உள்ள உணவு ஜீரணமாகி அவ்விடம் காலியாக இருக்கும்பொழுது அங்குள்ள வாயுவின் ஓர் அம்சம் உணவு உண்டவுடன் வெளிப்படுகிறது. நல்ல பசி வந்துள்ளதையும் சிறு ஏப்பம் அறிவிக்கும். மேல்வாய் வழியாக சிறு சப்தத்துடன் வெளியாகும் இவ்வித ஏப்பம் இயற்கை வேகம். இதை வாயு வெளிவராத படிக்கு வாயையும் தொண்டையையும் இறுக்கி மூடிக்கொண்டு அடக்கவே கூடாது. அடக்கினால் உள்ளே தங்கிய பெரிய வாயுவினால் வயிறு முழுவதும் கெட்டுவிடும். வயிற்றையே தூக்கிப்போடும் விக்கல்களும், வயிறு உப்புசம், மாரடைப்பு, உடல் நடுக்கம், மூச்சிறைப்பு, இருமல், ருசியின்மை போன்றவை ஏற்படும்.
ஏப்ப வேகத்திற்கான உபாதைகளை சிகிச்சை மூலம் சரி செய்வது என்பது சுலபமல்ல. ஏப்பத்தை அடக்கியதால் வயிற்றில் ஏற்பட்டுள்ள விக்கல் குணமாக ஆயுர்வேத மருந்துகளாகிய ஹிங்குவசாதி சூரண மருந்தை சிறிது சூடான தண்ணீருடன் கரைத்து உணவிற்கு முன்பும் , உப்புசம் முதலிய வாயு தோஷங்களைக் குணப்படுத்துவதற்கு தான்வந்திரம் குளிகை எனும் மாத்திரையை காலை, இரவு உணவிற்குப் பிறகு வெந்நீருடன் பருகுவது நல்லது.
இந்த இயற்கை ஏப்ப வேகம் தவிர வயிற்றில் வாயுவின் கெடுதியினால் அடிக்கடி, சிலநேரத்தில் தூங்கும் பொழுதுகூட, மிகப்பெரிய சப்தத்துடன் வாய்வழியே தொடர்ந்து 10 - 12 ஏப்பங்கள் வரும். இது தனி வியாதி, சிகிச்சைக்கு எளிதில் வசமாவதில்லை. வரும் ஏப்பத்தை அடக்கவே முடியாது. 10 - 12 ஏப்பங்கள் வந்த பிறகு தானே நிற்கும்.
சுவாசக் காற்று நாசியின் உள்ளே சென்று அது திரும்ப வெளிவருவதில் சுவாசக் குழாயின் மேல்புறத்தில் ஏதாவது அலுவலக தூள் தூசி நெடி உண்டாக்கும் வஸ்து கலந்த காற்று சம்பந்தத்தினால் தடங்கல் ஏற்பட்டபொழுது, அந்த நெடி காரத்தை உதறி வெளிப்படுத்துவதற்காக சுவாசக்குழலைச் சுத்தம் செய்வதற்காக உள்ளே இருக்கும் சுவாசக் காற்று மூக்கு முகத்தை எல்லாம் சட்டென குலுக்கி, சுண்டி, விசை வேகத்துடன் வெளியாகிறது. இயற்கை வாயு மூலம் உடலுக்குச் செய்யும் உதவி தும்மல் வேகம். இதை அடக்குவது மிகக் கெடுதல். சுவாச வாயுவில் தானே பிராணன் நிற்கிறது?
தும்மல் வேகத்தை அடக்கினால் கழுத்துப் பிடரிப்பக்கம் அசைவுகளில் வலி, தலை பூராவும் வலி, ஒற்றைத் தலைவலி, அர்திதம் எனப்படும் கோணவாய் நோய், கண் முதலிய கழுத்துக்குமேல் இருக்கும் புலன்களுக்கு பலமின்மை முதலிய தொந்தரவுகள் வரும்.
இதில் அடக்கப்பட்ட தும்மலைத் திருப்பி உண்டாக்க வேண்டியது முக்கியம். சுவாசக்குழல், தும்மலினால் சுத்தம் செய்யப்படும். சூரிய கிரணங்கள் மூக்குத் துவாரத்தில் படும்படியாக சூரியனைப் பார்த்தால் உடனே தும்மல் உண்டாகும். மிளகைக் கொளுத்தி அணைத்து அதிலிருந்து கிளம்பும் புகையை மூக்கில் நுழையும்படிச் செய்தல், புகையிலைப் பொடியையும் சுண்ணாம்பையும் நவச்சாரத்தையும் கரைத்த நீரின் வாயு இவற்றை முகர்தல், சூடான வீரியமுள்ள மூக்கிலிடும் முறை இவை எல்லாம் தும்மலை உடனே கிளப்பும். சில தும்மல்கள் வெளிவந்து அடங்கிய பிறகு தலைவலி தொடர்ந்தால் நல்லெண்ணெய் சுட வைத்து கழுத்து மென்னி தலை பூராவும் தேய்த்து வெந்நீரில் நனைத்துப் பிழிந்து துணியினால் ஒத்தடம் கொடுக்கவும். நாராயண தைலம் போன்ற வாயுவை சமனம் செய்யும் தைலம் வெறும் நல்லெண்ணெய்யை விட மிகவும் தரம். இந்த உஷ்ணம் உடலைத் தாக்காமலிருக்க பிறகு 2 - 3 நாட்கள் இருவேளையும் உணவிற்குப் பிறகு நெய் தனியே ஜீரணசக்திக்குத் தகுந்தபடி குடிக்கவும்.
வேலை செய்து ஓய்வு எடுக்க, உடலில் ஏற்படும் உணர்ச்சி வேளையில் அசதி சோம்பல் தூக்கம் வரும். வாயுவினால் உண்டாக்கப்படும் இயற்கை வேகம் கொட்டாவி, எல்லாப் புலன்களும் தளர்ந்துள்ள தருணத்தில் சுவாசம் மூக்கின் வழியாக உள்ளும் வெளியும் போய்வருவதில் சிறிது அதிக அளவிலும் நீண்டதாகவும் திறந்த வாய் வழியாக உள்ளே சென்று வெளியாவது இயல்பு. இந்த இயற்கை வேகத்தை உதடுகளைச் சேர்த்து இறுக்கி மூடிக்கொண்டு அடக்கினால் விளையும் கெடுதல்கள் - தும்மல் வேகத்தை அடக்குவதில் வரும் நடுக்கம் முதலிய தொந்தரவுகளே. ஆனால் சிகிச்சை தும்மலைக் கிளப்புவதுபோல் கொட்டாவியைக் கிளப்புவதல்ல; உடனே ஓய்வு எடுத்துக் கொண்டு பிறகு வாயு சமனம் செய்து கொள்ள வேண்டியது.
கொட்டாவி ஏற்படும்பொழுது வாய் வழியே மூச்சு போய்வருவதற்காக வாய் திறந்திருப்பதால் வாய் வழியே தூசி, சிறு கொசு, பூச்சி காற்றுடன் நுழைய ஏதுவுண்டு. இதைத் தடுக்க கொட்டாவி வரும்பொழுது பிறர் அறியாவண்ணம் ஒரு கைக் குட்டையால் வாயை மறைத்து விடுவது நல்லது.
தலைக்கு க்ஷீரபலா தைலம், வாயினுள் அரிமேதஸ் தைலம், மூக்கினுள் அனுதைலம் விடுதல், கண்களில் இளநீர்குழம்பு விடுதல் போன்ற சிகிச்சை முறைகளால் தங்களுக்கு ஏற்படக் கூடிய பல உபாதைகளையும் நீக்கிக் கொள்ளலாம்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771



 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/3/w600X390/k9.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/04/ஏப்பம்-தும்மல்-கொட்டாவி-ஆயுள்-காக்கும்-ஆயுர்வேதம்-2856693.html
2856694 வார இதழ்கள் தினமணி கதிர் மேஜை இல்லாத எழுத்தாளர்! DIN DIN Sunday, February 4, 2018 12:00 AM +0530 குடந்தையைச் சேர்ந்தவர் பிரபல எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம். நூற்றுக்கணக்கான நூல்கள், நாவல்கள் எழுதியவர். இவருடைய புகழ்பெற்ற நாவல் "வேள்வித் தீ'. இவர் வீட்டில் உட்கார்ந்தபடியேதான் எழுதுவார். எதிரே குட்டி சாய்வு பலகைதான் அவருக்கு மேஜை. கடைசி வரை பெரிய மேஜை, நாற்காலி இல்லாமலேயே பல நூல்களை எழுதினார். நான் அவரைப் பார்க்கும்போதெல்லாம்,"ஒரு மேசை வாங்கித் தருகிறேன்' என்பேன். "இதுபோதும்..இதில் எழுதினால் போதும். இதிலே சாதிக்கலாம்!'' என்பார். அவர் பெருந்தன்மையை என்னால் போற்றாமல் இருக்க முடியவில்லை.
 வீ.பி.கே.மூர்த்தி, திருப்பாலைத்துறை.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/3/w600X390/k11.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/04/மேஜை-இல்லாத-எழுத்தாளர்-2856694.html
2856695 வார இதழ்கள் தினமணி கதிர் ஜன்னல் திட்டில் சில காக்கைகள் DIN DIN Sunday, February 4, 2018 12:00 AM +0530 சமையலறையில் அம்மா யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள். காலை நேரத்தில் யார் வந்திருப்பார்கள்? அனு யோசித்தாள்.
 அவள் கணவன் அரவிந்த் வேலை விஷயமாக தில்லி போயிருந்தான்.
 அஞ்சு, ஆதித்யா இருவரையும் பள்ளிப் பேருந்தில் ஏற்றி அனுப்பிவிட்டு, தெருக்கோடியிலிருந்த தன் சிநேகிதி சுபஸ்ஸ்ரீயின் வீட்டில் நடந்த யோகா வகுப்புக்குப் போய்விட்டுத் திரும்பிய அனு, தன் தாயைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் உடன் கொண்டு வந்திருந்த வீட்டுச்சாவியால் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்ததும் தான் அம்மாவின் குரல் சமையலறையிலிருந்து கேட்டது.
 அனு சப்தம் செய்யாமல் எட்டிப் பார்த்தாள். அம்மாவின் கையில் கரண்டிதான் இருந்தது. அலைபேசி இல்லை. சற்று தூரத்தில் இடதுபுறமாக இருந்த ஜன்னல் திட்டின்மீது காக்கை ஒன்று உட்கார்ந்து கழுத்தை நாசூக்காக ஜன்னல் கம்பிக்குள் நுழைந்து அம்மாவையே உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தது.
 ""நேத்து ஏன் வரல்லே?'' அம்மா கேட்டுக் கொண்டிருந்தாள்.
 "ஓ... அம்மா காக்கையுடனா பேசுகிறாள்? தான் இத்தனை நாள் கவனித்ததே இல்லையே' அனு நினைத்தவாறு தொடர்ந்து அங்கு நின்று பார்த்தாள்.
 ""கேக்குறேனில்ல... எத்தனை தடவை கேட்கணும்?'' இது அம்மா.
 ""காகா'' என்றது அது.
 "என்ன சொல்றே? ஊர் சுத்தப் போயிட்டியா? இன்னிக்குதான் இந்த மகேஸ்வரியின் சாப்பாடு நினைவுக்கு வந்ததா?''
 அதற்கும் அதன் பதில் ""காகா'' தான்.
 "சரி வெயிட் பண்ணு. குக்கர் இப்பதான் இறக்கினேன். சாதம் ரொம்பச் சுடும். ஆற வெச்சுப் போடறேன்.''
 "கா... கா...'' அது சரி என்றதோ?
 அம்மா சொன்னது. புரிந்த மாதிரி ஜன்னல் திட்டில் ஒதுங்கி நின்று மேலும் கீழும் பார்த்துக் கொண்டிருந்தது.
 அம்மா குக்கரைத் திறந்து ஒரு கரண்டி அன்னத்தை எடுத்து தட்டில் போட்டு ஆறவைத்து கொஞ்சம் பருப்பு, நெய், உப்பு எல்லாவற்றையும் சேர்த்துப் பிசைந்து சின்ன உருண்டையாக்கி கனுப்பிடி வைப்பதுபோல் ஜன்னல் திட்டில் வைக்கப் போனபோது காக்கை ஒதுங்கி நின்றது.
 அவள் திரும்பி வந்து வாஷிங்பேசின் குழாயில் கையைக் கழுவிக்கொண்டு அலமாரியிலிருந்த துவாலையை எடுத்துத் துடைத்துக் கொள்ளும்போதுதான் அனுவைப் பார்த்தாள்.
 ஜன்னல் திட்டில் அம்மா வைத்திருந்த சோற்றுருண்டையைக் கொத்திவிட்டு அது திரும்பி ""காகா'' என்றது.
 அம்மாவுக்கு நன்றி சொல்லுகிறதோ?
 "அம்மா உன் விருந்தாளி என்ன சொல்றார்?'' அனு குறும்பாகக் கேட்டாள்.
 "உஷ்... சத்தமாய் பேசாதே. காக்கா பயந்துண்டு முழுக்க சாப்பிடாமல் பறந்து போயிடும்''. அவள் சொன்னதற்கு மாறாக, இன்னொரு காக்கா வந்து உட்கார்ந்து சோற்றைப் பகிர்ந்துண்டது.
 ""காக்காய்க்கு அன்னமிடுகிறதன் தாத்பர்யம் என்ன? நம் முன்னோர்கள் அதாவது பித்ருக்கள் காக்கா ரூபத்தில் வந்து உன் படையலை ஏத்துக்கறதா ஐதீகமா?''
 "அப்படியும் சொல்லலாம். உன்னை மாதிரி சிறிசுகள் ஏற்றுக் கொள்ளுகிற மாதிரி விளக்கமும் என்னால் கொடுக்க முடியும். இயற்கையை மனுஷன் ஏகத்துக்கு ஆக்கிரமிச்சுட்டான். பறவை இனங்கள் வாழுகிற மரங்களை எல்லாம் வெட்டித் தள்ளிட்டு நெடுஞ்சாலையும் நாலுவழிப்பாதையும் போடறான். குடியிருப்புகளை அடுத்தடுத்து கட்டி உலகத்தையே சிமெண்ட் காடுகளாக்கிக்கிட்டிருக்கான். நெல், கோதுமை, பருப்பு வகை எல்லாமே மனுஷனுடைய பசியை ஆற்றத்தான் உபயோகப்படுது. காய்கறி வகைகள், பழங்கள் எல்லாமே மனுஷன் சாப்பிட்டு மிஞ்சினால்தான் மத்த ஜீவன்களுக்குக் கிடைக்கும். இயற்கையால் நமக்கு கிடைக்கிற அனுகூலங்களை நாம் மட்டும் அனுபவிச்சா போதுமா? பறவைகளோடும், பிற உயிரினங்களோடும் அதைப் பகிர்ந்து கொள்வது அவசியம்னு நினைக்க வேண்டாமா? அஞ்சுவித யக்ஞங்களில் இதை பூத யக்ஞம்னு சொல்லுவாங்க. ஏதாவது ஒரு திருநாளின் பெயரைச்சொல்லி பறவைகளுக்கும், பசுமாடு மற்றும் கால்நடைகளுக்கும், பாம்புக்கும், மற்ற ஜீவராசிகளுக்கும் உணவு படைப்பதை ஒரு கடமையாக நடைமுறையில் வந்துவிட்ட பழக்கம் நினைக்க வைக்கிறது''.
 நாள் முழுவதும் சமையலறையில் உழன்று கொண்டிருந்தாலும் அம்மா எவ்வளவு அறிவு
 பூர்வமாக விஷயங்களைப் பற்றி யோசிக்கிறாள் என்பதை அனு நினைத்தபோது அனுவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
 அம்மாவுக்கு பதினோரு வயதில் திருமணமாகிவிட்டதாம். பிறகு புகுந்த வீட்டில் நுழைந்து நாத்தனார், மைத்துனன் என்று அனுசரித்து வாழ்ந்து மாமியார் இல்லாததால் அவளது கடமைகளைச் சுமந்து நிறைவேற்றி, அனு பிறந்ததும் நல்ல முறையில் அவளை வளர்த்து படிக்க வைத்து, அரவிந்துக்கு மணமுடித்து வைத்து பேரன் பேத்திகளைப் பார்த்த திருப்தியில் அப்பா உடனே போய்ச் சேர்ந்துவிட அம்மாவைப் பார்த்துக் கொள்ளுகிற பொறுப்பை அனு ஏற்றுக்கொண்டாள். அவள் சமூகவியலில் எம்.ஏ. படித்திருந்தாலும் அலுவலகம், வீடு என்கிற ஒரே விதமான வாழ்க்கையின் சுழற்சியில் மாட்டிக்கொள்ள விரும்பாமல் யோகா, மெல்லிசை, ஓவியம் என்று தனக்கு ஈடுபாடு இருந்த விஷயங்களுக்காக நேரத்தைச் செலவிட அம்மா உடன் இருந்தது பெரும் உதவியாக இருந்தது.
 அம்மா மகேஸ்வரிக்கும் மகள் குடும்பத்துடன் இருந்தது பேராதரவாக இருந்தது.
 அனு ஜன்னல் திட்டை நிமிர்ந்து பார்த்தபோது இன்னும் இரண்டு காக்கைகள் வந்து உட்கார்ந்திருந்தன.
 அம்மா வைத்திருந்த அன்ன உருண்டையை காலி செய்துவிட்டு ""காகா'' என்றன.
 அம்மா ""தேங்க்ஸ்'' என்றாள்.
 "எதுக்கு தேங்க்ஸ் சொல்றே?''
 "உனக்கு ஒண்ணு தெரியுமா அனு? காக்கா தானே வந்து சாப்பிடாது. சாப்பாட்டை வைத்துவிட்டு "காகா' என்று சத்தமாக கூப்பிட்டு, தாம்பாளத்தையோ, தட்டின்மீதோ தட்டி ஒலியெழுப்பி அழைத்தால்தான் வரும். நம்ம வீட்டிலே காக்கா வந்து ஜன்னல் திட்டில் உட்கார்ந்து சாப்பாட்டைக் கேட்டு வாங்கி சாப்பிடறது பாரு. அதுக்கு நாம் ரொம்ப புண்ணியம் செய்திருக்கணும்''.
 முதலில் வந்த காக்கை மீண்டும் "காகா' என்று கரைந்தது.
 "சரி போயிட்டு வா''
 "என்னம்மா நீ... மனுஷாகிட்ட பேசற மாதிரி காக்காவிடம் பேசறே?''
 ""நான் பேசினால் அதுக்குப் புரியுது. உனக்கென்ன ப்ராப்ளம்?'' அம்மா சிரித்துக்கொண்டே கேட்டாள்.
 அதன் பிறகுதான் தினமும் நேரம் தவறாமல் காக்கை காலை பதினோரு மணிக்கு அம்மா வைக்கிற அன்னத்தை உண்பதற்காக ஜன்னல் திட்டுக்கு வருவதை அனு கவனித்தாள்.
 
 விடுமுறை நாட்களில் அஞ்சுவுக்கும், ஆதித்யாவுக்கும் அதைப் பார்ப்பது பொழுகுபோக்காகிவிட்டது. சில நேரங்களில் இரண்டு மூன்று காக்கைகளும் ஒரே நேரத்தில் வந்துவிடும். சில நாட்களில் ஜன்னல் திட்டில் காக்காவின் உணவைப் பகிர்ந்து கொள்ள புறா, மைனா, அணில் என்று எல்லாமே வந்துவிடும். அப்போது காக்கை பறந்து சென்று மரத்தின்மீது அமர்ந்துவிடும். நடுவில் குறுக்கிட்டுக் குழப்பத்தை விளைவிக்காது.
 ஒதுங்கிப்போய் அதன் விட்டுக் கொடுக்கிற தன்மை அனுவை ஆச்சரியப்பட வைத்தது.
 ""காக்கை கரைந்துண்ணும்'' என்பதை அவள் அறிவாள். கரைதலும் பகிர்தலும் அதன் இயல்பான பண்போ?
 சில தினங்களில் குறிப்பிட்ட நேரத்தில் காக்கை வராவிட்டால் அவள் தாய் மகேஸ்வரி தவிப்பாள்.
 ""காக்கா இன்னும் வரக் காணோமே?'' என்று அவள் அலப்பல் தொடரும்.
 "எதுக்கு நீ இப்படி அலட்டிக்கிறே? அதுக்குக் கலியாண மண்டபத்திலோ, அஞ்சு நட்சத்திர ஹோட்டலிலோ சாப்பாடு கிடைச்சிருக்கும்.அதுதான் வரல்லே. இதுக்கெல்லாம் கவலைப்படுவியா?'' அனு வேடிக்கையாகக் கேட்பாள்.
 "இது கவலை இல்லே அனு. நான் வைக்கிற சாதத்தை காக்கா வந்து உடனே சாப்பிட்டால் என் மனசுக்கு நிம்மதியா இருக்கு. அவ்வளவுதான்''என்பாள் அவள் தாய்.
 மனித உறவுகளிலேயே வலிமையும் நெருக்கமும் குறைந்து வரும் இந்த யுகத்தில், ஜன்னல் திட்டில் வந்து உட்காரும் காக்கையிடம் அம்மா காட்டிய அன்பும் பரிவும் அவளுக்கு வியப்பூட்டுவதாக இருந்தது.
 
 நன்றாகப் போய்கொண்டிருந்த வாழ்க்கை, அனுவின் அம்மா குளியலறையில் வழுக்கி விழுந்து இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, தடம் புரண்ட மாதிரியாயிற்று.
 அறுவை சிகிச்சை ஃபிஸியோதெரப்பி என்று அவளது மருத்துவமனை வாசம் தொடர வேண்டி வந்தபோது காக்கைக்கு அன்னமிடும் பழக்கம் நின்று போயிற்று.
 இரவு நேரங்களில் தன் தாயைப் பார்த்துக்கொள்ள நர்ûஸ ஏற்பாடு செய்துவிட்டு அனு அதிகாலையில் எழுந்து சமையல், டிபன் எல்லாவற்றையும் முடித்து, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிய பின்தான் மருத்துவமனைக்குப் போக முடிந்தது. அரவிந்த் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தாலும் தடுமாற்றமும் திண்டாட்டமும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
 ""பாவம். என்னால் உங்களுக்கெல்லாம் தொந்தரவு, அலைச்சல். இப்படி தொல்லை கொடுக்கிறேனே... ஸôரி அரவிந்த்''
 "அப்படி சொல்லாதீங்க ஆன்ட்டி. இந்தப்
 பிரச்னை அனுவுக்கே ஏற்பட்டிருந்தால் நீங்க சும்மா விட்டுடுவீங்களா?'' என்றான் அவன்.
 "அச்சச்சோ... இதுமாதிரி யாருக்கும் நடக்க வேண்டாம். நீங்க ரெண்டு பேரும் குழந்தைகளும் ஆரோக்யமா இருக்கணும்'' என்ற மகேஸ்வரி கண்களில் பனித்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
 இரண்டு வாரங்கள் போன வேகம் தெரியவில்லை.
 ஒருநாள் அவளைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்த வேலைக்காரி வள்ளி, "அம்மா! ஜன்னல் திட்டில் காக்காய்கள் வந்து உட்கார்ந்து தினமும் உன்னைத் தேடிட்டுப் போகுது'' என்றாள்.
 உடனே அம்மாவின் கண்களில் நீர்ப்பிரவாகம்.
 "அனு! எனக்கு ஏதாவது ஆயிடுத்துன்னாலும் காக்காவுக்கு சாதம் போடுகிற வழக்கத்தை நீ தொடரணும்''
 "கண்டிப்பாகச் செய்வேன். ஆனால் அதற்கு அவசியம் வராது. நீ சரியாகி வீட்டுக்கு வந்து உன் கையாலேயே காக்காவுக்கு சாதம் வைக்கப்போறே. நீ வேணும்னா பாரு'' என்று அனு உறுதியாகச் சொன்னாள்.
 அவள் நம்பிக்கை வீண் போகவில்லை.
 மருத்துவமனையிலிருந்து அனுவின் அம்மா மகேஸ்வரி வீடு திரும்பிய அன்று பிற்பகலில், ஜன்னல் திட்டில் "காகா' என்ற சப்தம்.
 அனு சமையலறையை எட்டிப் பார்த்தாள்.
 இரண்டு மூன்று காக்கைகள் பறந்து பறந்து "காகா' என்று கத்திவிட்டு மீண்டும் ஜன்னல் திட்டில் வந்து உட்கார்ந்து உள்ளே பார்த்தன.
 "அம்மா வந்துட்டா என்கிற சந்தோஷத்தை கொண்டாடறீங்களா?''
 அனு தன் அம்மாவைப் போலவே அவற்றிடம் கேள்வியை எழுப்பிவிட்டு பார்த்தாள்.
 "கா கா!''
 அவை ஆமாம் என்கிறதோ? தானும் தன் தாயைப் போலவே காக்கையுடன் பேசத் துவங்கிவிட்டது அவளுக்குச் சிரிப்பை வரவைத்தது.
 அன்பையும் ஆனந்தத்தையும் வெளிப்படுத்த மொழி அவசியமே இல்லை. ஆர்வத்துடன் எழுப்பப்படும் சப்தங்களே போதுமோ?
 தன்னையும் அறியாமல் ஏற்பட்டுவிட்ட அந்தப் பிணைப்பு திருப்தியை அளிக்கும் என்று அனு நினைத்துக் கொண்டாள்.
 லக்ஷ்மி ரமணன்
 
 
 
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/3/w600X390/k12.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/feb/04/ஜன்னல்-திட்டில்-சில-காக்கைகள்-2856695.html
2852299 வார இதழ்கள் தினமணி கதிர் நூற்றாண்டை நோக்கி சி.எம்.சி. -வி.ந.ஸ்ரீதரன் Sunday, January 28, 2018 12:00 AM +0530 வேலூர் சி.எம்.சி. (கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ்) மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகஸ்ட் மாதம் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட உள்ளது.

வேலூரில் இருந்து காட்பாடி செல்லும் வழியில் மருத்துவ உதவியின்றி பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த ஒரு கர்ப்பிணியைப் பார்த்தபின், ஐடா ஸ்கேடர் என்ற அம்மையாரால் இந்த மருத்துவமனை நிறுவப்பட்டது.

மருத்துவமனை தொடங்கிய 1918}ஆம் ஆண்டு முதல் 1947}ஆம் ஆண்டு வரை பெண் மருத்துவர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். 1948}ஆம் ஆண்டிலிருந்துதான் ஆண் மருத்துவர்கள், அதுவும் ஐம்பது சதவீதம் மட்டுமே நியமிக்கப்பட்டனர். இந்தியாவில் முதன்முதலில் மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு வைத்ததும், நேர்முகத் தேர்வு வைத்ததும் இந்த மருத்துவமனை தான்.

மருத்துவப் படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்கள் படிப்பை முடித்தவுடன் இரண்டு ஆண்டுகள் கட்டாயமாக கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டே தேர்ந்தெடுக்கப்படுவர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/27/w600X390/cmc.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/28/நூற்றாண்டை-நோக்கி-சிஎம்சி-2852299.html
2852300 வார இதழ்கள் தினமணி கதிர் சிரி... சிரி... DIN DIN Sunday, January 28, 2018 12:00 AM +0530 ""தூக்கத்திலே கனவு வர்றது சகஜம்தானே?''
""அதில்லை    டாக்டர்... இந்தக் கனவை 
உங்களுக்கு வழங்குபவர்ன்னு விளம்பரமும் வருது டாக்டர்''
எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.


""ஏங்க எல்லை தாண்டிய பயங்கரவாதம்ன்னா என்ன?''
""நீ அடிக்கிற பூரி கட்டை எம்மேல படாமல் தெருவுல போறவங்க மேல படுதே... அதுதான் எல்லை தாண்டிய பயங்கரவாதம்''
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.


""புடவைக்கும் புருஷனுக்கும் என்ன வித்தியாசம்?''
""புடவையை துவைச்சிட்டு கட்டணும்.
புருஷனைக் கட்டிக்கிட்டு துவைக்கணும்''

கு.செந்தில்குமார், வலங்கைமான்.


கண்டக்டர்:  என்னம்மா, பையன் இவ்வளவு வளர்ந்திருக்கான். அரை டிக்கெட் கேட்குறீயே?
பெண்: சரி... பக்கத்துல குள்ளமா நிக்கிறாரே என் புருஷன்... அவருக்காவது  அரை டிக்கெட் குடுங்க.

மு.ரியானா, கம்பம்.

""ஏய்... ஆபிஸ்ல யாராவது தூங்கினா எங்கிட்ட வந்து சொல்லு''
""சரிங்க சார்''
""நான் தூங்கினாக் கூட எழுப்பிச் சொல்லு''
க.நாகமுத்து, திண்டுக்கல்.

கணவன்: டார்லிங்... உடம்பை எப்பாடு பட்டாவது குறைச்சிடு!
மனைவி: ஏன் மாமா?
கணவன்:  என் நண்பர்கள் எல்லாரும் என்னை யானைப் பாகன்னு கிண்டல் பண்றாங்க.
எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.

""என் புருஷன் தூங்கி எழுந்ததும் ஆபிஸ் போயிடுவார்''
""ஆபிஸ்ல எப்படி?''
""அங்க தூங்கி எழுந்ததும்  வீட்டுக்கு வந்திடுவார்''
 எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.

""டேய் மச்சி! எல்லாத்திலும் கலப்படம்டா. எதையும் நம்பி வாயில வைக்க முடியலை''
""கலப்படம் இல்லாத பொருள் மின்சாரம்தான்டா... சந்தேகம் இருந்தா வாயில வச்சுப் பாரு''
பி. பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/27/w600X390/srippu.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/28/சிரி-சிரி-2852300.html
2852305 வார இதழ்கள் தினமணி கதிர் காணவில்லை -சரசுராம் DIN Sunday, January 28, 2018 12:00 AM +0530
""அந்த முப்பது ரூபாயை கந்தசாமிகிட்ட கொடுத்திட்டயா...?'' என்று  கேட்ட போதுதான் சோபனா சொன்னாள். ""கந்தசாமியை பத்து நாளா பார்க்கவேயில்லீங்க..''

""அட... ஆமாம்''  என்று அந்த  உண்மை அப்போதுதான்  எனக்குள் உறைத்தது. எப்படி மறந்து போனேன்? அடிக்கடி சந்திக்கிற  மனிதர்களில்  அவனும் ஒருவன். வீதியில் கடந்து போகிற கணங்களில்  கை தூக்கி அவன் வணக்கம் சொல்லாமல் இருந்ததேயில்லை. அவனை எப்படி மறந்து போனேன்? என் மீதே எனக்கு கோபம் வந்தது. 

""கந்தசாமியைப் பற்றி நீயாவது ஞாபகப்படுத்தியிருக்கக் கூடாதா?'' என மனைவியிடம் சம்பந்தம் இல்லாமல்  கோபித்துக் கொண்டேன். அவன் என்ன ஆனான்? என்ற கேள்வி மனதில் சட்டென பெரிய சுமையாய் வந்து நின்றது.
கந்தசாமி எங்க வீதியின் டெய்லர்தான். நடமாடும் தையல்காரர். அந்த தையல் மிஷினை தள்ளியபடி கண்களில் நம்பிக்கையோடு எங்கள் வீதிக்குள் நுழைந்து ஏழெட்டு வருடங்கள் இருக்கலாம். பங்கஜா மாமி வீட்டு மரத்தடிதான் அவனது இருப்பிடம். வேப்பமரத்தின் இதமான காற்று. அவனுக்கு குடை பிடித்தபடி இருக்கும் அந்த மரத்தின் நிழல். தைக்கிற போது வண்டியைச் சுற்றி வட்டம் போட்டு உதிர்கிற இலைகள். ஆட்கள் வந்து போவது தவிர துணைக்கு பேசும் பறவைகள் என அழகிய சூழலுக்குள் அவனது தொழில் வளாகம். வாரத்தில் இரண்டு முறையாவது அவனது கடையை அங்கே பார்க்கலாம். அவனுக்கு வயது கிட்டதட்ட நாற்பத்தைந்து இருக்கலாம். கருத்த நிறம். மிக ஒல்லியான உருவம். அளவான உயரம். ஆங்காங்கே வெள்ளை ஊடுருவிய தலைமுடி. நெற்றியில் எப்போதும் தெரியும் சந்தனம். இதுதான் கந்தசாமி. நான்தான் அடிக்கடி கேட்பேன்.

""என்ன கந்தசாமி... நல்லா சாப்பிட்டு உடம்ப தேத்தக்கூடாதா..? இந்த வண்டியை எப்படிதான் தள்றயோ..?''

""சாப்பிடறதே பெரிய விஷயம்...  இதில எங்க சார் நல்லா சாப்பிடறது...? சர்க்கரை வியாதி.. ஒரு தடவ நெஞ்சுவலி வேற வந்திருச்சு... வண்டி ஓடற வரைக்கும் ஓடட்டும் சார்...'' 

நான் கொடுத்த என் பேண்ட்டின் இடுப்பளவைச் சரி செய்தபடியே கந்தசாமி பேசிக் கொண்டிருந்தான். 

""குழந்தைகள் எத்தன கந்தசாமி...?'' 
""ரெண்டு பசங்க சார்... ஒருத்தன் ஏழாவது படிக்கிறான்... இன்னொருத்தன் நாலாவது படிக்கிறான்...''

""வீட்டுக்காரம்மா வேலைக்கு போறாங்களா ?''
""எங்க சார்...  பசங்களப் பார்த்துக்கறதே அவளுக்கு நேரம் சரியா இருக்கு.  அதுவுமில்லாம ஆஸ்துமா தொல்லை இருக்கறதால அவளுக்கும் அப்பப்ப முடியறதில்ல... சார்''

""அப்புறம் இவ்வளவு பிரச்னைய வச்சுட்டு உடம்ப கவனிக்க மாட்டேன்னா எப்படி கந்தசாமி?''

""ஓகே  சார்.. பார்த்துக்கறேன் சார்.. இந்தாங்க வீட்டில போய் இந்த பேண்ட்டை போட்டு பார்த்துட்டு சரியா இருக்கான்னு சொல்லுங்க''

இப்படி நிறைய முறை அவனுடன் நான் உரையாடி இருக்கிறேன். தனது தனிப்பட்ட விஷயங்களை மனசு விட்டு அவ்வப்போது அவன் என்னிடம் சொல்வதுண்டு. நான் ஆறுதலாய் சொல்லும் வார்த்தைகளைக் கேட்பது அவனுக்கு அவ்வளவு சந்தோசமாய் இருக்கும். அது தவிர,  காலையில் நான் வேலைக்கு போகும்போது  அருகில் குவிந்திருக்கும்  துணிகளுக்கு இடையில் இருந்து, ""வணக்கம் சார்'' என்பான். வேலையில்லாத சமயங்களில் படித்துக் கொண்டிருக்கும் தினசரியை விலக்கியபடி அந்த வணக்கம் வரும். அவ்வவ்போது அருகில் இருக்கும் டீக்கடையிலும் அவனைப் பார்ப்பதுண்டு. கையில் டீயும் வாயில் பீடியும் இருக்கும்.  என்னைப் பார்த்ததும் பீடியை மறைத்தபடி அவன், ""சார் வாங்க  டீ சாப்பிடலாம்..'' என்பான். வார்த்தைகளுக்கிடையே புகை நழுவும். 

நான் ""பரவாயில்ல கந்தசாமி'' என்றபடி வேகமாய் நகர்வேன். 

 மழைக்காலம் மட்டுமே அவனுக்கு எப்போதும் எதிரி. எந்த  வேலையையும் எடுக்கவிடாமல் அது அவனை பட்டினி போடும். அந்த சமயங்களில்  குடும்பத்தை எப்படிச் சமாளிக்கிறான் என்ற கேள்வியை ஒருநாள் அவனிடமே கேட்டேன்.

""தெரிஞ்சவங்க கடையில நானா வேலை கேட்டு போய் செய்வேன் சார்.. என்னை நம்பி மூணு ஜீவன் இருக்கே சார்''  என்பான்.

 அவனது குடும்பத்தின் மீது அவனுக்கு இருக்கும் அன்பு அபரிதமானது. குழந்தைகளை எப்படியாவது நன்றாகப் படிக்க வைத்து விட வேண்டும் என்பது அவனது கனவாய் இருந்தது. அவன் அடிக்கடி பேசுவது அதைப் பற்றித்தான். 
சாயந்திரம் வேலை முடிந்ததும் அவனது தையல் மெஷினை பங்கஜா மாமி வீட்டு மாடிப்படியின் பின்புற இடத்தில் நிறுத்திவிடுவான். பாதுகாப்பான இடம்தான் அது. மூடியெல்லாம் போட்டு மெஷினை மேலும் பத்திரப்படுத்தியிருந்தான். மாமி வண்டியை நிறுத்த வாடகையெல்லாம் வாங்கிக் கொள்வதில்லை. மாமியின் துணிகளை தைக்கிற போது அவன் காசு வாங்கிக் கொள்வதில்லை என்று மட்டும் கேள்விப்பட்டேன். 

கடைசியாய் கந்தசாமியிடம் பேசும் போதுதான் அவன் கேட்டான்.

""சார் நீங்க வேலை பார்க்கற இடத்தில லோனெல்லாம் தர மாட்டாங்களா?''
""நான் வேலைப் பார்க்கறது பைக் விக்கிற கம்பெனி.. லோன்ல வண்டி வேணா தருவாங்க. லோனெல்லாம் தரமாட்டாங்க கந்தசாமி.  ஆமா எதுக்கு கேட்கறே..?''
""இல்ல... இந்த மழையிலும் வெய்யிலிலும் வேலைப் பார்த்து பார்த்து வெறுத்துப் போச்சு சார்.. பெரிய வருமானமும் இங்க இல்ல... அதான் ஏதாவது லோன் கிடைச்சா சின்னதா கடை போட்டு பொழைச்சுக்கலாம்னு பார்க்கறேன்  சார்''

அவன் கேட்டது எனக்கு பரிதாபமாய் இருந்தது. நியாயமாகவும் பட்டது.
""எங்க சித்தப்பா பையன் ஸ்டேட் பேங்க்லதான் வேலை  பார்க்கிறான். ஏதாவது லோன் கொடுப்பாங்கலான்னு கேட்டுப் பார்க்கிறேன்''

""கேட்டு சீக்கிரம் சொல்லுங்க சார்''  என்றபடி தைத்த எனது லுங்கியை என்னிடம் தந்தான். நான் நூறு ரூபாயை நீட்டினேன். ""சில்லரை இல்லை'' என்றான்.

""எவ்வளவு ஆச்சு கந்தசாமி ?'' என்றேன்.
""முப்பது ரூபாய் சார்''  என்றான்.
""சரி.. அப்புறம் தர்றேன்'' என்றேன்.

அதுதான் நான் கந்தசாமியிடம் கடைசியாய் பேசியது. அப்புறம் எனது சித்தப்பா பையனிடம் கந்தசாமி கேட்ட லோன் சம்பந்தமாய் போன் பண்ணிக் கேட்டுப் பார்த்தேன். அவனும் கேட்டு சொல்வதாய் சொன்னான். அதற்கு பிறகு எனது வேலையில் நானும் கொஞ்சம் பிஸியாக கந்தசாமியை மறந்தே போனேன். இடையில் என்  தம்பி லோன் விஷயமாய் கந்தசாமியை வரச் சொல்லியிருந்தான். அதையும் அவனிடம் சொல்ல மறந்துவிட்டேன். அதை விட கந்தசாமிக்கு தர வேண்டிய அந்த முப்பது ரூபாய்தான் அவனை எனக்கு ஞாபகப்படுத்தியது. அதற்கு பிறகுதான் ஷோபனாவிடம் கேட்டுப் பார்த்தேன். எப்படி கந்தசாமியை மறந்து போனேன்? எனக்கு கஷ்டமாக இருந்தது. மனசு கேட்காமல் வாசலில் வந்து அவனது வண்டி வழக்கமாய் நிற்கும் மரத்தடியைப் பார்த்தேன். வீதி விளக்கின் மஞ்சள் வெளிச்சம் மரத்தை போர்த்தியிருக்க இடம் வெறுமையாய்த் தெரிந்தது. நான் அதையே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். ஷோபனா ""வாங்க வந்து தூங்குங்க. காலையில என்னன்னு விசாரிச்சுக்கலாம்'' என்றாள். நான் வீட்டிற்குள் வந்தேன். கந்தசாமியின் போன் நம்பர் என்று எதுவுமில்லை. இருந்தால் கேட்டுப் பார்க்கலாம். படுக்கையில் வந்து படுத்தேன். என் பொண்ணுதான் ""அப்பாவுக்கு என்னாச்சும்மா?'' என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

அடுத்த நாள் காலையில் முதல் வேலையாய் பங்கஜா மாமி வீட்டுக்குத்தான் போனேன். கந்தசாமி பற்றி கேட்ட போது மாமிக்கும் அப்போதுதான் உறைத்தது. ""ஆமாம் என்னானான்?'' என்றார்கள்.

""வண்டி இருக்குதே'' என்றார்கள். இருவரும் போய் மாடி படிக்கு பின்புறம் இருந்த இடத்தில் அவனது வண்டியைப் பார்த்தோம். அது அப்படியேதான் இருந்தது. தூசி படிந்திருந்தது. அதன் மீதிருந்த ஒரு பல்லி குதித்தோடியது. நான் அந்த வண்டியையே பார்த்தேன். மனசு என்னவோ செய்தது.

""கந்தசாமி ஏதாவது சொல்லிட்டு போனானா மாமி..?''
""ஒண்ணும் சொல்லலயேப்பா.. ஏதாவது உடம்பு சரியில்லாம ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்களோ என்னவோ...?''

""என்னன்னு தெரியலயே மாமி... அவனோட நம்பர் ஏதாவது இருக்குங்களா?''
""அப்படி எதுவும் அவன் தந்ததில்லையே.  அவனோட வீடு தி.நகர் பஸ் ஸ்டாண்டுக்கு பின்னாடி ஹவுசிங் யூனிட் பக்கத்தில இருக்கறதா ஒரு தடவ  சொல்லியிருக்கான்.  அங்க விசாரிச்சு பார்த்தா ஏதாவது தகவல் கிடைக்கலாம்ப்பா''

""நான் போய் விசாரிக்கறேன் மாமி''

வீட்டிற்கு வந்தேன். பைக்கை எடுத்துக் கொண்டேன். ஷோபனாவையும் கூட்டிக் கொண்டு கிளம்பினேன். வழியில் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஆழ்ந்த யோசனையில் ஒரு சின்ன பயணம். தி.நகர் ஹவுசிங் யூனிட்டிற்கு பின்புறம் சின்ன சந்தாய் அந்த வீதி இருந்தது. அதில் இன்னும் குடிசைகளாய் நிறைய வீடுகள் தெரிந்தன. வெறும் ஜட்டியோடு விளையாடும் குழந்தைகள். வாசலில் கட்டியிருந்த ஆடுகள் வண்டியைத் திரும்பி பார்த்தன. ஒரு வீட்டுக்கு வெளியே படுத்திருந்த ஒரு வயதான அம்மா, "யாரு வேணும்?' என்கிற மாதிரி பார்க்க, வண்டியிலிருந்து இறங்கி அந்த அம்மாவிடமே கந்தசாமியை விசாரித்தேன்.

""யாரு டெய்லர் கந்தசாமியா ?''
""ஆமாங்க அவருதான்''

""அவன் செத்து ஒரு வாரமாச்சேய்யா'' என்று அந்தம்மா சொன்னதைக் கேட்டதும் அதிர்ந்து போனேன். சட்டென கண் கலங்கியது. ஷோபனாவும் அதிர்ச்சியோடு என் கைகளை பிடித்துக் கொண்டாள். அந்தம்மாவே தொடர்ந்து பேசினார்கள்.

""திடீர்ன்னு நெஞ்சு வலி வந்து, ஆம்புலென்ஸில கூட்டிட்டு போனாங்க.  ஆஸ்பத்திரிக்கு போற வழியிலயே உசுறு போயிடுச்சுப்பா.. நீங்க யாரு.. துக்கம் விசாரிக்க வந்தீங்களா ?''

""ஆ.. ஆமாங்க.. அவங்க வீடு எங்கேன்னு சொல்றீங்களா..?''
""அதோ அந்த முக்கு திரும்பினதுமே ஒரு முருங்க
மரம் தெரியும். அதாங்க அவன் வீடு''

வண்டியைத் தள்ளிக் கொண்டு நடக்க ஆரம்பித்தோம். கந்தசாமியின் நினைவுகள் நிழலாய்ப் பின் தொடர்ந்தது. அவனது வாழ்க்கை அதற்குள் முடிந்துவிட்டதா? இனி அவனைப் பார்க்கவே முடியாதா? அவனது அன்பான வணக்கம் இனி எனக்கு கிடைக்காதா? என்ன வாழ்க்கை இது? எனக்கு கண்கள் கலங்கின.

முருங்கை மரம் வைத்த கந்தசாமியின் வீடு தெரிந்தது. ஆஸ்பெஸ்டாஸ் வீடுதான். வாசலிலேயே அவனது மனைவி நிற்பது தெரிந்தது. பக்கத்தில் கதவைப் பிடித்தபடி சிறுவர்கள் நின்றிருந்தார்கள். அந்த பெண்ணிடம் ஒருவன் பேசிக் கொண்டிருந்தான். அவனது குரல் சத்தமாய் ஒலித்துக் கொண்டிருந்தது.  நான் பக்கத்தில் போய் வண்டியை நிறுத்தினேன். கொஞ்சம் தடியாய் இருந்த அவன் மேலும் கத்தினான்.

""இங்க பாரும்மா.. இந்த சாக்கு போக்கெல்லாம் வேண்டாம். நாளைக்கு வருவேன். பணம் வந்தாகணும்... இல்லைன்னா என்ன நடக்கும்னு நாளைக்கு பாரு...'' என்றான்.
""சார்.. என்ன பிரச்னைன்னு தெரிஞ்சுக்கலாமா?'' என்று அவன் அருகில் போய் கேட்டேன்.

""ஆமா...  நீங்க யாரு ?'' என்றான் அதே கோபக்குரலில்.
""நான் கந்தசாமியோட பிரண்ட்''

""உடம்பு சரியில்ல டாக்டர்கிட்ட போகணும் ரெண்டாயிரம் ரூபா கேட்டான்... தந்தேன்... இப்ப செத்துப் போயிட்டான். பணம் எங்கிருந்து தர்றதுன்னு சொன்னா எப்படி ஒத்துக்க முடியும்... சொல்லுங்க...''

""ராஜண்ணா... பணத்தை தரமாட்டேன்னு சொல்லல... இப்ப முடியாதுன்னு சொன்னேன். சரி... அவரு விட்டுட்டு போன அந்த தையல் மிஷின வச்சுதான் எங்க  வாழ்க்கைய ஓட்டணும்னு நினைச்சோம். அது முடியாதுன்னு தெரியுது... எனக்கு ஒரு வாரம் டயம் கொடுங்க... அதை வித்து பணம் தந்தர்றேன்... போதுமா?''

""அதெல்லாம் முடியாதும்மா...  நாளைக்கு இதே நேரத்துக்கு வருவேன்... பணத்த தந்தே ஆகணும்''

""சார் ஒரு நிமிஷம்... கந்தசாமி உங்களுக்கு எவ்வளவு தரணும்?'' என்றேன்.
""ரெண்டாயிரம் ரூபா... வட்டியோட சேர்த்து ரெண்டாயிரத்து முன்னூறு ரூபா... எதுக்கு சார் கேட்கறீங்க ?''

நான் என் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து எண்ணினேன். என் மனைவி என்னைப் புரியாமல் பார்த்தாள். பணத்தை அவனிடம் தந்து, ""சரியா இருக்கா?'' என்று பார்க்கச் சொன்னேன். அவன் பணத்தை எண்ணிப் பார்த்தான். 

""ம்.. சரியா இருக்குது... தேங்க்ஸ் சார்...'' என்றபடி நகர,
கந்தசாமியின் மனைவி பதட்டமாகி என்னைப் பார்த்து கேட்டாள்.
""அண்ணா... எதுக்குண்ணா அவரு வாங்கின கடன நீங்க அடைக்கறீங்க..? எப்படியாவது நான் தந்துருவேன்''

""இல்லம்மா.  இதுவும் கடன்தான்.  நான் கந்தசாமிகிட்ட வாங்கின கடன். வட்டியோட திருப்பி தந்திருக்கேன். அவ்வளவுதான்'' என்றேன். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/27/w600X390/28kd1.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/28/காணவில்லை-2852305.html
2852313 வார இதழ்கள் தினமணி கதிர் வீழ்வேன் என்று நினைத்தாயோ? - 5: ராஜரத்தினத்தின் ராஜதந்திரம்! -மாலன் DIN Sunday, January 28, 2018 12:00 AM +0530 உள்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது, ராணுவம் ஆகிய பொறுப்புகளை முனைவர் கோ கெங் ஸ்வீ ஏற்றுக் கொண்டார். அவர் அதற்கு முன் ராணுவத்தில் பணி புரிந்தவர் அல்ல. காவல்துறையில் கூட பணியாற்றியவரல்ல. அவர் பொருளாதார நிபுணர். லண்டனில் உள்ள "ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்' என்ற சர்வதேசப் புகழ் பெற்ற கல்வி நிலையத்தில் பி.எச்டி பட்டம் பெற்றவர். படிக்கும் போதே அங்கு அளிக்கப்படும் மிக உயர்ந்த பரிசான "வில்லியம் ஃபார்' பரிசையும் பெற்றிருந்தார். அவர் கேட்டு வாங்கிக் கொண்ட துறை இது.

ஒரு நாட்டின் பாதுகாப்பை துப்பாக்கிகள் மட்டும் தீர்மானித்துவிட முடியாது. இன்னும் சொல்லப் போனால் துப்பாக்கிக்கு வேலை  கொடுக்காமல் நாட்டைப் பாதுகாக்க முடியுமானால் அதை விடச் சிறந்தது வேறெதுவும் இல்லை. அதுவும் சிங்கப்பூருக்கு அதுதான் சிறந்த வழி. ஏனெனில் அதன் ராணுவம் சிறியது.
பாதுகாப்புக்குப் பெரும்பாலும் அச்சுறுத்தல் அண்டை வீட்டிலிருந்துதான் வரும். ஒரு சர்வதேச மாநாட்டில் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஒருவர்,  அங்கிருந்த மீடியா சென்டரில் எங்களோடு வந்து அமர்ந்து கொண்டார். எங்களோடு என்று சொல்லக் காரணம் என்னோடு இன்னொருவரும் இருந்தார். அவர் பாகிஸ்தான் பத்திரிகையாளர்.

""இங்கே பாருங்க நீங்க இரண்டு பேரும் எதிரிகளாக இருக்கலாம்'' என்று ஆரம்பித்தார்.  எங்களுக்கோ சிரிப்பு . ஏனெனில் நாங்கள் இருவரும் சண்டை எதுவும் போட்டுக் கொள்ளவில்லை. நேற்றைய நிகழ்வின் குறிப்புகளை பாகிஸ்தானியர் என்னிடம் வாங்கிக் கொண்டு போய்தான் அவர் அலுவலகத்திற்கு செய்தி அனுப்பினார். அதன் பின் மீடியா சென்டரில் ஆளுக்கொரு காபியை எடுத்துக் கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். "சரி, பெரியண்ணன் பேசட்டும், என்னதான் பேசுகிறார்' என்று பார்ப்போம் என்று புன்னகையை ஒளித்துக் கொண்டு காதுகளைத் திறந்தோம்.

""இங்க பாருங்க, நீங்க இரண்டு பேரும் எதிரியாக இருக்கலாம். ஆனால் புவியல் ரீதியில் பக்கத்து வீட்டுக்காரர்கள். வரலாற்றின் வழி தோழர்கள். பொருளாதாரத்தில் பங்குதாரர்கள். தலையெழுத்தோ அல்லது அதிர்ஷ்டமோ, தோழர்களாகவும், சிநேகிதர்களாகவும், ஏன் குடும்பமாகவும் கூட நேசம் பாராட்ட வேண்டும். ஏனெனில் உங்கள் இருவருக்கும் தலையெழுத்து பொதுவானது''  என்றார்  அவர். ""போய்யா, சண்டை கிண்டை போடாம, போய்ப் பிள்ளைங்களைப் படிக்க வை'' என்ற தொனியில் இருந்தது அவர் பேச்சு. ""அப்படீங்களாண்ணா, சரி அப்படியே செய்துருவோம்'' என்று நானும் நண்பரும் மறுபடியும் கை குலுக்கிக் கொண்டு கிளம்பி விட்டோம்.

ஆனால் அவர் சொன்னதில் அர்த்தம் இருந்தது. அண்டை வீட்டாரோடு ஒட்டுறவு இல்லை என்றால் தலைவலிதான். அது பொறுமையாகவும் புத்திசாலித்தனமாகவும் கையாளப்பட வேண்டிய விஷயம். அது வேறெவரையும் விட லீக்கு நன்றாகத் தெரியும். அதனால் அயலுறவுத் துறையை நிர்வகிக்கத் தமிழரான ராஜரத்தினத்தைத் தேர்ந்தெடுத்தார். ராஜரத்தினம் அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர்.

அவருக்குக் கொடுக்கப்பட்ட முதல் வேலை சிங்கப்பூரை ஒரு தனி நாடாக உலகம் ஏற்கச் செய்வது. குடியரசாக அறிவிக்கப்பட்ட இரண்டாம் நாள்  ஆகஸ்ட் 11}ஆம் தேதி அவர் இங்கிலாந்திற்குப் புறப்பட்டார். சிங்கப்பூர் ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனி. அவர்களது படைகள் சிங்கப்பூரில் இருந்தன.

மலேசியாவிலிருந்து சிங்கப்பூரும் பிரிவதை அரசியல் காரணங்களுக்காக பிரிட்டன் விரும்பவில்லை. கடைசி நிமிடத்தில் கூட தனது தூதரை அனுப்பி பிரிவினையை நிறுத்தப் பார்த்தது. அதனால் அதை முதலில் "கன்வின்ஸ்' செய்ய வேண்டும். 

அதில் சில சாதகங்களும் இருந்தன. பிரிட்டன் அங்கீகரித்து விட்டால் பல காமென்வெல்த் நாடுகள் அங்கீகரித்து விடும். முக்கியமாக ஆஸ்திரேலியா. அது சற்றுத் தொலைவில் உள்ள அண்டை நாடு. பிரிட்டனும் ஆஸ்திரேலியாவும் அங்கீகரித்து விட்டால் அமெரிக்காவும் அங்கீகரித்துவிடும். பொருளாதாரத்தை வலுப்படுத்த அது மிகவும் அவசியம்.

ராஜரத்தினத்தின் அணுகுமுறை பலன் தந்தது. பிரிட்டன் சிங்கப்பூரைத் தனி இறையாண்மை கொண்ட குடியரசாக அங்கீகரித்தது.  அது பல கதவுகளைத் திறந்தன. குடியரசான மூன்று மாதங்களில் சிங்கப்பூர் காமென்வெல்த்தில் இணைந்தது. அதற்கு ஒரு மாதம் முன் ஐக்கிய நாடுகள் சபையில்.
 அப்போது உலகம் இரு கோளங்களாகப் பிளவுண்டு கிடந்தது. கம்யூனிசத்தை ஏற்காத அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான "நாட்டோ' (வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள்) ஒரு புறம். சோவியத்தின் தலைமையில் கம்யூனிசக் கொள்கைகளை ஏற்ற கிழக்கு, மத்திய, ஐரோப்பிய நாடுகளை கொண்ட "வார்சா' ஒப்பந்த நாடுகள் மறுபுறம்.

யாரோடு சேர்ந்து கொண்டாலும் ராணுவ உதவியும் பொருளாதார உதவியும் கிடைக்கும். ஆனால் வேறு சில நிர்பந்தங்களில் சிக்கிக் கொள்ள நேரிடும். எந்தப் பக்கம் சாய்ந்தாலும் அது தங்களது சுதந்திரத்தையும் வளர்ச்சியையும் பாதிக்கும் என ராஜரத்தினம் நினைத்தார்.

அதனால் சிங்கப்பூர் ஐம்பெரும் தலைவர்கள் (யுகோஸ்லோவியாவின் டிட்டோ, இந்தியாவின் நேரு, எகிப்தின் நாசர், இந்தோனேசியாவின் சுகர்ணோ, கானாவின் நெக்ரூமா) உருவாக்கிய அணி சேரா நாடுகளின் கூட்டமைப்பில் சேர முடிவு செய்தது. அன்றைய நாளில் அது வல்லரசுகள் எதிர்பார்க்காத ஓர் ஆச்சரியம். ஏனெனில் சுகர்ணோ சிங்கப்பூருக்குத் தலைவலி கொடுத்து வந்தவர். டிட்டோ கம்யூனிஸ்ட்.  ஏன் ஐம்பெரும் தலைவர்களுமே இடதுசாரிச் சிந்தனையாளர்கள். சிங்கப்பூர் கம்யூனிசத்தை எதிர்க்கும் நாடு!

இதுதான் சிங்கப்பூரின் அடிப்படையான அணுகுமுறை. நாட்டுக்கு எது நல்லதோ அதுதான் நம் கொள்கை. புத்தகங்களில் உள்ள தத்துவங்கள் அல்ல.
ராஜரத்தினம் இதைக் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கினார்:  இரண்டு வகையான அணுகுமுறைகள் உள்ளன. கொள்கைகளின் அடிப்படையில் அமைந்த அயலுறவு (Foreign policy of principles) என்பது ஒன்று. செயல்களின் அடிப்படையில் அமைந்த அயலுறவு என்பது ஒன்று (Foreign policy of deeds) மற்ற நாடுகளுடனான தனது உறவைச் சில கொள்கைகள் சார்ந்து அமைத்துக் கொள்ள ஒரு நாடு விரும்பலாம். ஆனால் நடைமுறையில் அது செயல்கள், நடத்தைகள் சார்ந்தே செயல்பட முடியும் என்பதே யதார்த்தம் என்பது அவர் வாதம்.

யதார்த்தங்களின் அடிப்படையில் கொள்கைகளை மதிப்பிட பயன்படுத்திக் கொள்கிற இந்த அணுகுமுறை நடைமுறைவாதம் (Pragmatism)
 ஒரு காலத்தில் இந்தியா தனது அயலுறவுக் கொள்கைகளில் Foreign policy of principles என்ற அணுகுமுறையைப் பின்பற்றியது. பாலஸ்தீனப் போராட்டங்களின் அடிப்படையில் நாம் இஸ்ரேலைப் புறக்கணித்தது ஒரு காலம். அண்மைக் காலமாக நாமும் இந்த நடைமுறைவாதத்திற்கு மாறியிருக்கிறோம். இஸ்ரேல் பிரதமருக்கு நாம் அளித்த வரவேற்பு ஓர் அடையாளம்.

வல்லரசுகளைக் கையாள்வதை விட அண்டை நாட்டாரைக் கையாள்வதற்கு அதிக சாமர்த்தியமும் மதிநுட்பமும் வேண்டும். இந்தியாவிற்குப் பாகிஸ்தானைப் போல சிங்கப்பூருக்கு மலேசியா. தனிக் குடியரசாக மலர்ந்து விட்ட போதிலும் வேர்களில் சில அங்கு பரவிக் கிடந்தன. பல சிங்கப்பூரர்களின் உறவுகள் அங்கே வசித்தார்கள். வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்கள் இருந்தன. இரு தரப்பு இலக்கியமும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல் சாயல் கொண்டிருந்தன. சிங்கப்பூரில் மலாய் மொழியினர் சிறுபான்மை. மலேசியாவில் சீன மொழியினர் சிறுபான்மை. சிறு உரசலும் தீப்பொறியாகும் தீப்பெட்டிச் சூழல்.

1969-இல் நடைபெற்ற மலேசியத் தேர்தல்களையொட்டிய பிரசாரத்தின் போது கோலாலம்பூரில் கலவரம் வெடித்தது. அதன் விளைவாக சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் பதற்றம் பரவியது. அதனை அடுத்து இரு நாடுகளிலும் கலவரம் மூண்டது. இரு நாட்டரசுகளும் விழிப்போடு செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தன. ஆனால் அது ஒரு செய்தியைச் சிங்கப்பூருக்குச் சொல்லாமல் சொல்லியது. அது: சிங்கப்பூர் மலேசிய உறவை வெறும் அயலக உறவுக் கொள்கை அடிப்படையில் கையாள முடியாது. அதற்கு தனித்த அணுகுமுறை வேண்டும்.

மலேசியாவைப் பொருத்தவரை அயலக உறவுக் கொள்கையோடு, ஒரு தேசியக் கொள்கையும் வேண்டும் என ராஜரத்தினம் கருதினார்.

சிங்கப்பூர் இந்தச் சூழ்நிலையைக் கெட்டிக்காரத்தனமாகக் கையாண்டது. மலாய் மொழி தேசிய மொழியாகத் தொடரும் என அறிவித்தது. சிங்கப்பூரின் தேசிய கீதமாக மலாய் மொழியில் அமைந்த பாடலை ஏற்றது. யூசஃப் பின் இஷாக் என்ற இஸ்லாமியரை அரசின் தலைவராக (ஜனாதிபதியைப் போல அலங்காரப் பதவி, Head of the State) அறிவித்தது. அதே சமயம் இரு நாட்டிற்கும் பொதுவாக இருந்த விமான நிறுவனம், பங்குச் சந்தை, ரப்பர், வங்கி வணிக அமைப்புக்கள் இவற்றிலிருந்து விலகித் தனக்கெனத் தனி அமைப்புக்களை உருவாக்கிக் கொண்டது.

இந்தோனேசிய உறவை "விலை கொடுத்து' வாங்கியது. இந்தோனேசிய வர்த்தகர்களுக்கு 15 கோடி டாலர்கள் கடனுதவி செய்தது. ஆனால் உறவுகள் மேம்பட்டு வருகிற நேரம் சறுக்கல்களும் நேர்ந்தன. 1964-இல் நடந்த குண்டு வெடிப்பை நிகழ்த்திய இரு இந்தோனேசிய படைவீரர்களுக்கு 1968-ஆம் ஆண்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதை அடுத்து இந்தோனேசியத் தலைநகர் ஜாகர்த்தாவில் இருந்த சிங்கப்பூர் தூதரகமும், தூதர் வீடும் தாக்குதலுக்குள்ளானது. பின்னர், 1973-இல், லீ குவான் யூ  இந்தோனேசியா சென்ற போது அந்த வீரர்களது கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்தும் வரை இரு தரப்பிலும் இறுக்கம் இருந்தது.

சிங்கப்பூரை ஆயுத்தத்தால் பாதுக்காத்தவர்களுக்கு சற்றும் குறைவில்லாதது அறிவால் பாதுகாத்த ராஜரத்தினத்தின் பணி. ஆனால்  பின்னர் வந்த தலைமுறை அவரது பெயரால் அமைந்த S.Rajaratnam School of International Studies என்ற உயர்கல்வி நிலையத்தை RSIS என்று சுருக்கிவிட்டார்கள்.
ரத்தினச் சுருக்கம்!         
(தொடரும்)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/27/w600X390/28dk5a.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/28/வீழ்வேன்-என்று-நினைத்தாயோ---5-ராஜரத்தினத்தின்-ராஜதந்திரம்-2852313.html
2852311 வார இதழ்கள் தினமணி கதிர் ஐ.நா. சபை நிறுவனத்தில் பணிபுரியும் தமிழர்!  -பெரியார்மன்னன் Saturday, January 27, 2018 02:22 PM +0530 சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே  குக்கிராமத்தில் பிறந்த பொறியியல் பட்டதாரி ஒருவர், தனது முயற்சியால்  ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட "குளோபல் ஈ - ஸ்கூல்ஸ்  அண்ட் கம்யூனிட்டி இனிஷியேட்டிவ்' நிறுவனத்தின் திட்ட மேலாளர்களில்  ஒருவராக உயர்ந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக, 16 ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் நோக்கில்,  நவீன தொழில்நுட்ப கல்வி, அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் திட்ட ஆலோசகராகப் பணிபுரிந்து  வருகிறார். 

வாழப்பாடியை அடுத்த பழனியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக்கழக ஆய்வாளர் கூத்தன் - சரோஜா தம்பதியரின் மகன் செந்தில்குமார் . வாழப்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வரை படித்த அவர்,  கடந்த 1991}இல் ஈரோடு அரசு சாலை போக்குவரத்துக்கழக பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார்.   
       
அதனைத் தொடர்ந்து, இந்திராகாந்தி பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார். 1991-இல் இருந்து 1994 வரை கோவையிலும், 1996 வரை ஹைதராபாதிலும், 2000 ஆண்டு வரை "கிர்லோஸ்கர்'  இயந்திர நிறுவனத்திலும் பணிபுரிந்த அவருக்கு, கிராமப்புற மாணவர்கள், இளைஞர்களுக்கு,  நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் இணைய வழிக் கல்வியை எளிய முறையில் கற்பித்து,  சமுதாய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

அவரது எண்ணத்துக்கு ஏற்றாற் போல, கம்ப்யூட்டர் மற்றும் இணைய வழிக் கல்வி கற்பிக்கும் "ஸ்கூல் நெட் இண்டியா' நிறுவனத்தில் 2000 முதல் 2002 வரை தென்னிந்திய அதிகாரியாகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.  அச் சமயத்தில், இந்தியாவில் கம்ப்யூட்டர் புரட்சியை உருவாக்கிய "விப்ரோ' நிறுவனத்தின் தலைவர்  "ஆசீம் பிரேம்ஜி'  துவக்கிய அறக்கட்டளையின் தொழில்நுட்பக் கல்வி  பிரிவில் 2003}இல்  தன்னை இணைத்து கொண்டார். 

தொடர்ந்து 6 ஆண்டுகள் அந்நிறுவனத்தில் பணிபுரிந்த அவர், நாடு முழுவதும் 14 மொழிகளில், 21 ஆயிரம் பள்ளிகளுக்கு,  மாணவர்கள்  இளைஞர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான, கம்ப்யூட்டர் இணைய வழிக்கல்வி,  திறன் மேம்பாட்டிற்கான பயிற்சித்  திட்டங்களை உருவாக்கிக் கொடுத்து, அந் நிறுவனத்தின் தலைவர் பிரேம்ஜி மற்றும் மத்திய,  மாநில அரசுகளின் பாராட்டுகளைப் பெற்றார். மறைந்த ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது , 387 ஒன்றியங்களில் கணினி வழிக் கற்றல் பயிற்சிக்கு வழிவகுத்து, அவரது பாராட்டுதலையும் பெற்றார்.

அவரது திறமையைக் கண்ட மத்திய அரசு, அண்டை நாடுகளான  வங்க தேசம், இலங்கை மற்றும் அல்ஜீரியா நாடுகளின் இணைய வழிக் கல்வி  மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான திட்டங்களை வகுத்துக் கொடுக்கும் ஆலோசனைக் குழுவில் ஒருவராக நியமித்தது. 

அந்தந்த நாடுகளுக்கேற்ப பல நவீன மேம்பாட்டுத் திட்டங்களைத் தந்த செந்தில்குமாரின் திறமை வெளி உலகுக்கு தெரிய வந்தது.  ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட கென்யா நாட்டின் நைரோபியில் இயங்கும், வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளுக்கு உதவிடும்  "குளோபல் ஈ - ஸ்கூல்ஸ்  அண்ட் கம்யூனிட்டி இனிஷியேட்டிவ்'  நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை 2008 }இல் அந் நிறுவனம் அவருக்கு வழங்கியது. 

ஆப்பிரிக்க நாடுகளின் ஒன்றான ருவாண்டாவில் 2 ஆண்டுகள் பணிபுரிந்து, அந் நாட்டின் நவீன தொழில்நுட்பக் கல்வி வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை தந்த செந்தில்குமாரை, 2010-இல்  கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான தான்சானியா, கென்யா, உகாண்டா, புரூண்டி உள்ளிட்ட  5 நாடுகளுக்கும் மேம்பாட்டு ஆலோசகராக அந் நிறுவனம் நியமித்தது.  

இரண்டு ஆண்டுகளில் செந்தில்குமார்  ருவாண்டா நாட்டில் உருவாக்கி கொடுத்த கணினி இணைய வழி அறிவுசார் கல்வித் திட்டங்கள்,  அந்த நாட்டை மேம்படுத்தியதோடு மற்ற நாடுகளுக்கும் முன்மாதிரி திட்டமாக விளங்கியதால்,  ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள 16  நாடுகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்,   நவீன தொழில்நுட்ப கல்வி, அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் திட்ட ஆலோசகராக, ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட நிறுவனம் நியமித்தது.  கடந்த 4 ஆண்டுகளாக அத் திட்டத்தின் தலைமைப் பொறுப்பில் பணிபுரிந்து  வருகிறார். 

தற்போது, ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள 54 நாடுகளுக்கான கூட்டமைப்பின் கீழ் இயங்கும், 2016 முதல் 2025 வரையிலான இணையவழிக் கல்வி, தொழில்நுட்ப மேம்பாடு திறன் வளர்ப்பு மையத்தின் தொலைநோக்குத் திட்டத்திற்கான ஆலோசனைக் குழுவிலும் ஒருவராக அங்கம் வகித்து வருகிறார்.  
அதுகுறித்து அவர் கூறியதாவது:

""தமிழகத்தில் வாழப்பாடி அருகிலுள்ள குக்கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தேன். அரசுப்பள்ளி கல்லுôரிகளில் படித்த எனக்கு, அடித்தட்டு மக்களுக்களின் மேம்பாட்டுக்கு வழிவகுக்கும், கணினி இணைய வழிக் கல்வி, தொழில்நுட்ப அறிவை எளிமைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதற்கு விப்ரோ நிறுவனத்தின் தலைவர் பிரேம்ஜி வாய்ப்பு வழங்கினார்.     

பெங்களூருவில் அவரது நிறுவனத்தில் பணிபுரியும் போது,  தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு கணினி வழிக்கல்வி வழங்கவும், பிரேம்ஜியுடன் நேரடியாக கலந்துரையாடும் வாய்ப்பும் கிடைத்தது மறக்க முடியாத நிகழ்வாகும். கட்டடக் கலை பொறியாளரான எனது மனைவி அமுதா, மகள் ஹர்சினி, மகன் ஸ்ரீஸ் ஆகியோர், தற்போது பெங்களூருவில் வசித்து  வருகின்றனர். 

ஐ.நா. சபையால் உருவாக்கப்பட்ட "குளோபல் ஈ - ஸ்கூல்ஸ்  அண்ட் கம்யூனிட்டி இனிஷியேட்டிவ்'  நிறுவனத்தில் ஆப்பிரிக்க நாடுகளின் மேம்பாட்டுக்காக கல்வி வளர்ச்சித் திட்டங்களை பரிந்துரைக்கும் ஆலோசனைக் குழுவில்,  திட்ட மேலாளர்களில் ஒருவராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது.  கல்வி, தொழில்நுட்ப மேம்பாடு குறித்தத் திட்டங்களை நவீன முறையில் செயல்படுத்த, நிறையப் படிக்கவும், ஆய்வு மேற்கொள்ளவும், புள்ளி விவரங்களைத் திரட்டவும்,  நிதிஆதாரத்தைப் பெறுவதும் அவசியம் என்பதால், தினந்தோறும் 18 மணி நேரம் உழைக்க வேண்டியுள்ளது.  இருப்பினும், பல்வேறு நாட்டு உயரதிகாரிகள்,  தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பும்,  எதிர்காலத்தில் அறிவு சார்ந்த சமுதாயத்தை ஏற்படுத்த முடியும் என்ற எண்ணமும், நம்பிக்கையும்,  எனக்கு ஊக்கம் கொடுத்து வருவதால்,  ஆப்பிரிக்க நாட்டு மக்களின் மேம்பாட்டுக்காகப் பணியாற்றி வருகிறேன்''என்றார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/27/w600X390/28dk4b.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/28/ஐநா-சபை-நிறுவனத்தில்-பணிபுரியும்-தமிழர்-2852311.html
2852308 வார இதழ்கள் தினமணி கதிர் பேல்பூரி Saturday, January 27, 2018 01:25 PM +0530 கண்டது
(சென்னை அம்பத்தூர் வழியே சென்ற மினி லாரியில் எழுதப்பட்டிருந்த வாசகம்)

அடிக்கடி வருகிற கோபம்
மதிக்கப்படுவதில்லை.
வி.சீனிவாசன்,  சென்னை-62.

(நெல்லை மாவட்டம் பத்மநேரியில் உள்ள மாலை நேர உணவகம் ஒன்றில்)
உலகில் மிகப் பெரிய குற்றம்...
உழைக்காமல் உண்பது.
எஸ்.கிருஷ்ணன், கருவேலன்குளம்.

(புதுக்கோட்டை -காரைக்குடி பேருந்து வழித்தடத்தில் உள்ள பள்ளத்தூரில் 
ஒரு கடையின் பெயர்)

நரிவிழி அம்மன் அரிசி மண்டி
அ.கருப்பையா, பொன்னமராவதி.

(ஊட்டி அருகேயுள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
ஆறு குச்சி
எல்.மூர்த்தி,  டிஆர்எஸ் விஐபி சிட்டி.

கேட்டது
(சேலம் செல்லும் பஸ்ஸில் ஊசி விற்பவரும், பயணியும்)
""சார்... 16 ஊசி பத்து ரூபா சார்... நோட் புக் தைக்கலாம்... துணி தைக்கலாம்... செருப்பு தைக்கலாம் சார்...''
""ஏம்ப்பா எவ்வளவு  ரூபாயாயிருந்தாலும் பரவாயில்லை... என் பொண்டாட்டி வாயைத் தைக்கிற மாதிரி ஊசி  இருக்கா?''
உ.அரசு, புதுச்சேரி.

(சென்னை மயிலாப்பூர் குளக்கரை பேருந்து நிறுத்தத்தில் ஒரு தம்பதியர்)
மனைவி:  நீங்க வைரத் தோடு வாங்கித் தர்றது மாதிரி கனவு கண்டேன்
கணவன்: அதை காதுல போடுற மாதிரி இன்னிக்கு கனவு கண்டுக்கோ.
நெ.இராமன், சென்னை-74.

எஸ்எம்எஸ்


வால்க்கை என்பது அடுத்தவன் என்ன தப்பு 
பண்ணுறான்னு பார்க்கறதுலயே போயிடும்...
இப்ப கூட பாருங்க வாழ்க்கைக்கு ஸ்பெல்லிங் 
தப்புனு சொல்ல வருவீங்க.
டி.பச்சமுத்து, புதுப்பேட்டை.

யோசிக்கிறாங்கப்பா!
எங்கேயும் எப்போதும் எதையேனும் 
தேடிக்  கொண்டே இரு.
தேடல் மட்டுமே நம்மைத் 
தொலைத்துவிடாமல் இருக்கும்.
தேடுவதை நிறுத்தியவரை யாரும் 
தேடமாட்டார்கள்...
கல்லறையில் தவிர.
ஜி.சுந்தரராஜன், திருத்தங்கல்.

மைக்ரோ கதை
பாட்டியும் பேத்தியும் வாக்கிங் போய்க் கொண்டிருந்தனர். பாட்டியின் கையைப் பிடித்துக் கொண்டே பேத்தி சென்றாள். 

பேத்தி பாட்டியிடம் சொன்னாள்: ""நீங்க எதைப் பத்தியும் கவலைப்படாதீங்க பாட்டி. கடைசி வரைக்கும் நான் உங்களைக் கைவிட மாட்டேன்''

அதற்கு பாட்டி, ""அதுதான் எனக்குக் கவலையாயிருக்கு... உனக்குப் பின்னால் எனக்கு யார் துணையிருப்பார்?'' என்றாள்.
சு.ஆறுமுகம், கழுகுமலை.

அப்படீங்களா!
கைபேசி என்றால் பேசுவதற்கு மட்டும் என்றில்லாமல், வீடியோ, புகைப்படம் எடுக்க, மணி பார்க்க, பாட்டு  கேட்க,  படம் பார்க்க, டிவி பார்க்க, இ மெயில் அனுப்ப என கேமரா, வாட்ச், ரேடியோ, டிவி, கணினி என எல்லாவற்றின் வேலைகளையும் செய்யும் ஒன்றாக மாறிவிட்டது.   இப்போது ஸ்மார்ட் பல்பும் அதே போல கிளம்பியிருக்கிறது. 

ஸ்மார்ட் பல்ப் ஒன்றை நீங்கள் வாங்கி வீட்டில் மாட்டிவிட்டால்... என்னவெல்லாம் செய்யலாம் பாருங்கள்....

இந்த பல்பை  நீங்கள் கைபேசியில் உள்ள ஆப் - உடன் இணைத்துக் கொள்ளலாம்.  அதன் பிறகு, எவ்வளவு வெளிச்சம் உங்களுக்கு வேண்டுமோ அந்த அளவுக்கு கூட்டி குறைத்து  வைத்துக் கொள்ளலாம். 

பல்பில் இருந்து வெளிவரும் ஒளியின் நிறத்தை மாற்றிக் கொள்ளலாம்.  "பளிச்' வெள்ளையில் ஒளிரும் பல்பை, தூங்கப் போவதற்கு முன்பு நீலநிற ஒளியைச் சிந்துவதாக நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.  நீல நிறம் மட்டுமில்லை, வேண்டிய நிறத்தை (16 மில்லியன் நிறங்களில் ஏதாவது ஒன்றை) மாற்றிக் கொள்ளலாம்.
இந்த ஸ்மார்ட் பல்பில் ஸ்பீக்கர் உள்ளது. வேண்டிய இசையைக் கேட்டுக் கொள்ளலாம்.

மிக முக்கியமானது, தொலைதூரத்திலிருந்தும் இந்த பல்புகளை நீங்கள் எரிய வைக்கலாம் அல்லது எரியும் பல்பை அணைக்கலாம். வெளியூருக்குச் செல்லும்போது, தேவையான போது பல்புகளை எரிய வைக்கலாம். தேவையில்லாதபோது நிறுத்திவிடலாம். திருடர்கள் வீட்டில் ஆள் இருக்கிறார்கள் என்று நினைத்து ஒதுங்கிப் போய்விடுவார்கள்.  இப்போது நிறைய ஸ்மார்ட் பல்புகள் தயாரிக்கப்படுகின்றன.  ஆன்லைனில் தேடி வாங்கிக் கொள்ளலாம்.
என்.ஜே., சென்னை -69.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/27/w600X390/28dk.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/28/பேல்பூரி-2852308.html
2852306 வார இதழ்கள் தினமணி கதிர் தகவல்கள்... Saturday, January 27, 2018 01:00 PM +0530 தெருவையே வித்திருக்கணும்!
நடிகர் வி.கே.ராமசாமி சில படங்களைத் தயாரித்து நஷ்டமாகி நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை உருவாகியது. எதிர்ப்புற வழக்குரைஞர், ""பிரச்னையில் இருக்கும் வீட்டை ஏன் விற்றீர்கள்?''  என்று கேட்டார்.

அதற்கு வி.கே.ராமசாமி ரொம்ப எதார்த்தமாக, ""எனக்கு இருக்கிற தொல்லைக்கும், பிரச்னைக்கும் நான் தெருவையே  வித்திருக்கணும். என்னால் முடிஞ்சது அந்த வீட்டை மட்டும்தான்'' என்று சொல்ல, நீதிபதி உட்பட நீதிமன்றத்தில் இருந்த  அனைவருமே வாய்விட்டு சிரித்தனராம்!
-ஆர்.கே.லிங்கேசன்

***
மானியக் குழுவின் உத்தரவு
ஒரு கல்லூரியில் சேர்ந்த மாணவர் விலகி வேறு கல்லூரியில் சேர விரும்பினால் அவருடைய மாற்றுச்  சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் சான்றிதழ்களையும் முதல் பருவ கல்விக் கட்டணத்தையும் திருப்பித் தர வேண்டும்  என்பது பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவு.
வை.பஞ்சாபகேசன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/27/w600X390/vs.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/28/தகவல்கள்-2852306.html
2852303 வார இதழ்கள் தினமணி கதிர் திரைக் கதிர் - ஜி.அசோக் Saturday, January 27, 2018 12:52 PM +0530 ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. 
இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.  
ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன் மற்றும் படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தங்களுடைய  சுட்டுரைப் பக்கத்தில் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்தது. 
இந்நிலையில், கடந்த 19-ஆம் தேதி  சென்னையில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. 
தற்போது கிழக்கு கடற்கரைச் சாலையில் 100-க்கும் மேற்பட்ட படகுகளைக் கொண்டு முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. 
இப்படத்துக்கு ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். 
தமிழக விவசாயத்தை மையப்படுத்தும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

"கபாலி' படத்துக்குப் பின் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் "காலா'.  படப்பிடிப்பு முடிந்து படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. முதற்கட்டமாக படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. ரஜினிகாந்த் தனது காட்சிகளுக்கான டப்பிங்கை பேசி வருகிறார். சுமார் மூன்று வார காலம் ரஜினிகாந்த் இதற்காக டப்பிங் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மயிலாப்பூரில் உள்ள நாக் ஸ்டுடியோவில் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.  ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இப்படம் திரைக்கு  வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறவுள்ளது.  
 

இயக்குநர் மகேந்திரன், அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான "தெறி' படத்தில் வில்லனாக நடித்தார். இதைத் தொடர்ந்து "நிமிர்', "புகழேந்தி எனும் நான்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். கரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் "புகழேந்தி எனும் நான்' திரைப்படத்தில் மகேந்திரன் நடித்து வந்தார். புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.   படப்பிடிப்பின்போது இயக்குநர் மகேந்திரன் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்த படக்குழுவினர், அவரை  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மகேந்திரனைப் பரிசோதித்த மருத்துவர்கள், உணவு ஒவ்வாமையால் மயங்கி விழுந்துள்ளதாகவும் தற்போது நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் மகேந்திரன் நலமுடன் இருப்பதாக இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார். 
  
வாசகர்களின் மனம் கவர்ந்த நாவல்களை மையமாகக் கொண்டு திரைக்கதைகள் அமைக்கப்படுவது தமிழ் சினிமாவில் அவ்வப்போது நடந்து வருகின்றன. இந்த வரிசையில் உருவாகி வரும் படம் "சங்கத் தலைவன்'. "தறி' எனும் நாவலை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கபப்படவுள்ளது. பாரதிநாதன் எழுதிய "தறி' நாவல் - ஜவுளித்துறையில் நடக்கும் அவல நிலையையும், அத்தொழிலை நம்பி உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையையும் தழுவி எழுதப்பட்டதாகும். சேலம், கோவை மற்றும் ஈரோடு உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள ஜவுளித் தொழிலை களமாகக்  கொண்டு அந்த நாவல் படைக்கப்பட்டிருந்தது.  "உதயம் என் எச் 4' படத்தை இயக்கிய மணிமாறன் திரைக்கதை எழுதி இயக்குகிறார். இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. சமுத்திரக்கனி, கருணாஸ், ரம்யா ஆகியோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.   கடந்த 22-ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரே கட்டப் படப்பிடிப்பில் முழு படத்தையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  

தமிழில்  பெரும் வரவேற்பைப் பெற்ற படம் "விக்ரம் வேதா'. படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின்  தெலுங்கு மற்றும் ஹிந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்ற பெரும் போட்டி நிலவி வந்தது. பல தயாரிப்பு நிறுவனங்கள் முட்டி மோதிய நிலையில் அனைத்து மொழி ரீமேக்குகளையும் தானே தயாரிக்க உள்ளதாக அறிவித்தார் சஷிகாந்த். இந்நிலையில் அமேசான் வெப் சீரிஸில் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள "ப்ரீத்' ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  அப்போது மாதவனிடம் "விக்ரம் வேதா' ஹிந்தி ரீமேக் குறித்து பலரும் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்து மாதவன் பேசுகையில்... ""இந்த ஆண்டு கண்டிப்பாக "விக்ரம் வேதா' ஹிந்தி ரீமேக் தொடங்கப்படும். எனது கதாபாத்திரத்தில் நானே நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. விஜய் சேதுபதி கதாபாத்திரத்துக்கு பெரிய வியாபார மார்க்கெட் உள்ள நடிகர்கள் தேதிகள் அளிக்கக் காத்திருக்கிறோம்''  என்று தெரிவித்தார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/27/w600X390/rajinikanth.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/28/திரைக்-கதிர்-2852303.html
2852304 வார இதழ்கள் தினமணி கதிர் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தோலுக்கு வலுவூட்ட... பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன் Saturday, January 27, 2018 12:52 PM +0530 ஓய்வூதியரான எனது வயது 72. மணிக்கட்டுகள், புறங்கைகள் மற்றும் தலைமுடி ஆகியவற்றில் ஓயாத அரிப்பு உள்ளது. சொறிந்தால் வெள்ளை நிற செதில்கள் உதிர்கின்றன. இதற்கு ஆயுர்வேத மருத்துவம் பற்றி விளக்கக் கோருகிறேன். 
- த. நாகராஜன் - சிவகாசி.

தோலில் ஏற்படக்கூடிய புதிய அணுக்களின் உற்பத்தியானது வயோதிகத்தில் குறைந்துவிடும். தோலைச் சார்ந்த ப்ராஜதம் எனும் பித்தத்தினுடைய ஊட்டச்சத்தானது வயிற்றிலிருந்து செயல்படக்கூடிய பாசகம் எனும் பித்தத்தினுடைய சீரான செயல்பாட்டின் மூலமே பெற முடியும் என்பதால், தங்களுடைய அடிப்படை ஆரோக்கியமானது உட்புற வயிற்றிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டியிருப்பதால் நீங்கள் பசியை சீராக வைத்திருக்கக் கூடிய பாசகபித்தத்தினுடைய சிறப்பான அம்சங்களை வயோதிகத்தில் இழக்காதிருக்க வேண்டும். அதற்கு உணவில் நெய்ப்பு தரக் கூடிய நெய், உளுந்து, எள்ளு, தேங்காய்ப்பால் போன்றவையும், ஊடுருவும் தன்மையைக் கொண்ட இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை போன்றவையும், பித்தத்தினுடைய சூட்டைப் பாதுகாக்கக் கூடிய மசாலாப் பொருட்கள், நார்த்தங்காய் வற்றல் ஆகியவையும், எளிதில் செரிக்கக் கூடிய உணவு வகைகளாகிய கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளை முறையான அளவில் சேர்த்துக் கொள்வதும், திரவப்பொருட்களாகிய மோர், பழரசங்கள் போன்றவையும் மிகுந்த கவனத்துடன் குடலில் சேர்க்கப்படுமேயானால், தங்களுடைய பாசகபித்தத்தினுடைய சிறப்பான செயல்களைப் பாதுகாப்பதுடன், அதன் வழியே கிடைக்கக் கூடிய ஊட்டச் சத்தும் தோலுக்கு வந்து சேர்வதால், முன் குறிப்பிட்ட ப்ராஜகம் எனும் பித்தம் நன்கு செயல்படத் தொடங்குவதால் ஏற்பட்டிருக்கக் கூடிய ஓயாத அரிப்பும், சொறிந்தால் வெள்ளை நிறச் செதில்கள் உதிர்வதும் குறைந்துவிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

பாசகபித்தத்தினுடைய கெடுதல்களை நீக்கக் கூடிய ஆயுர்வேத மருந்தாகிய மாணிபத்ரம் எனும் லேகிய மருந்தை மதியவேளைகளில் உணவிற்கு சுமார் ஒருமணிநேரம் முன்பாக பத்து முதல் பதினைந்து கிராம் வரை வாரம் இருமுறை நக்கிச் சாப்பிடுவதால், இரண்டு மூன்று முறை கழிச்சல் ஏற்பட்டு பித்தமானது சுத்தமடைந்துவிடும். கசப்புச் சுவையுடைய திக்தகம் எனும் நெய்மருந்தை காலை, மாலை இருவேளைகளிலும் சுமார் பத்து முதல் பதினைந்து மில்லி லிட்டர் வரை நீராவியில் உருக்கி வெறும் வயிற்றில் 48 நாட்கள் வரை சாப்பிடலாம். இதன் மூலமாகவும் தோலில் ஏற்பட்டிருக்கக் கூடிய கெடுதல்கள் நீங்குவதுடன் பித்தமும் சீராகச் செயல்படும். இவை இரண்டு மருந்துகளும் தோல்களில் உள்ள அணுக்களின் கெடுதிகளைப் போக்கி நெய்ப்பு தரக்கூடியவை. உட்புற சுத்தத்தை மேம்படுத்தக்கூடிய இந்த லேகிய மருந்தும் குடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றக் கூடிய இந்த நெய் மருந்தினுடைய உபயோகமும் மட்டுமே போதுமானவையல்ல. 

தோல்களுக்கு வலுவூட்டி அங்குள்ள கெடுதிகளை அகற்றக் கூடிய நால்பாமராதி எனும் தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சக் கூடிய மூலிகைத் தைலமும், தலைக்கு அருகம்புல் கொண்டு தயாரிக்கப்படும் தூர்வாதி எனும் தேங்காய்எண்ணெய் மருந்தும் உபயோகிக்கச் சிறந்தவை. காலையில் இவ்விரு எண்ணெய்களையும் வெதுவெதுப்பாகத் தேய்த்து சுமார் அரை மணி முதல் முக்கால் மணி வரை ஊறிய பிறகு வெதுவெதுப்பான மூலிகைத் தண்ணீராகிய வேப்பம்பட்டை, சரக்கொன்றைப்பட்டை, கருங்காலிக்கட்டை, புங்கம்பட்டை, நால்பாமரப்பட்டை எனப்படும் ஆலம்பட்டை, அரசம்பட்டை, அத்திப்பட்டை, இத்திப்பட்டை ஆகியவற்றில் கிடைத்த மட்டில் சேர்த்து குளித்த பிறகு முன்குறிப்பிட்ட மூலிகை நெய் மருந்தைச் சாப்பிட்டு அதன்மேல் கருங்காலிக்கட்டை சுமார் பதினைந்து கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் காய்ச்சி அரை லிட்டராகக் குறுக்கிய மூலிகைத் தண்ணீரை நூறு மில்லி லிட்டர் வரை வெதுவெதுப்பாக அருந்தவும். இதேபோல மாலையிலும் நெய்மருந்தை அருந்திய பிறகு மூலிகைத் தண்ணீரை வெதுவெதுப்பாகக் குடிக்கவும். 
தவிர்க்கக் கூடிய உணவு வகைகளாகிய புளித்த தயிர், நல்லெண்ணெய், கடுகு, புலால் உணவு, கத்திரிக்காய் போன்றவற்றைச் சேர்க்க வேண்டாம். பகல் தூக்கத்தைத் தவிர்க்கவும். இரவில் எந்தக் காரணம் கொண்டும் புளிப்புப் பொருட்களாகிய புளியோதரை, புளித்த தயிர், புளிப்பான ஊறுகாய் வகைகள், பழைய சாதம் போன்றவற்றை சாப்பிட வேண்டாம். பருத்தி ஆடைகளை அணிவதே நல்லது. அவற்றையும் சோப்புத்துகள் நன்றாக அகலுமாறு தண்ணீரில் அலசி வெயிலில் உலர்த்திய பிறகே பயன்படுத்துவது என்ற விஷயத்தில் நீங்கள் கவனமாக இருத்தலும் நலமாகும். காலில் அணியக் கூடிய பாதஅணிகள் அதிகமான அளவில் தடிமனாகவும், தோல்பொருட்களால் தயாரிக்கப்பட்டதாகவும் அல்லாமல், மிருதுவான காலணிகளையே அணியவும். வெயிலில் செல்லும்பொழுது கருப்பு அல்லாத மற்ற நிறங்களில் குடையைப் பயன்படுத்தவும். குளிர் கண்ணாடிகளை கண்களில் அணிவதால் உடல் சூடு அதிகரிக்காமல் பாதுகாக்கும். தங்கம் அல்லாத பிற ஆபரணங்களை அணிய வேண்டாம்.  
(தொடரும்)


பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/27/w600X390/medical.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/28/ஆயுள்-காக்கும்-ஆயுர்வேதம்-தோலுக்கு-வலுவூட்ட-2852304.html
2852301 வார இதழ்கள் தினமணி கதிர் அணில், ஆடு, இரக்கம்!  -வைகறை கண்ணன் DIN Saturday, January 27, 2018 12:23 PM +0530 அணிலுக்கு மனது சரியாயில்லை!
விடிந்தால் பக்ரீத் பண்டிகை. பண்டிகை தின சந்தோஷம் சிறிதுமின்றி காணப்பட்டான்.

அவனது மனது முழுவதும் அந்த ஆடு பற்றிய சிந்தனை தான்!
அணில் முகமதுவை எல்லோரும் அணில் என்று தான் அழைப்பார்கள்.
அணிலின் வாப்பா கரீம் பாய் இராமநாதபுரத்திலிருந்து தேடிப்பிடிச்சு பக்ரீத் பண்டிகைக்காக வாங்கிவரப்பட்ட செம்மறி ஆடு தான், அந்த ஆடு! 
கொம்புகள் இரண்டும் நன்கு வளர்ந்து சுருண்டு சுருள் வடிவில் பக்க வாட்டில் நீண்டிருந்தது.

குறுகிய வால்!
அடர்த்தியான அதிக சுருள்களைக் கொண்ட வெள்ளை நிற உரோமம் கொண்டிருந்தது. பக்ரீத் பண்டிகைக்கு ஆடு வெட்டிய பிறகு வெள்ளை நிறம் உரோமம் கொண்ட ஆட்டுத்தோலுக்கு தான் சந்தைகளில் அதிக மதிப்பு இருப்பதால் வியாபார நோக்கோடும் கரீம் பாய் தனது மொத்த அனுபவ அறிவோடு அந்த செம்மறி ஆட்டை தேர்ந்தெடுத்து வாங்கிவந்திருந்தார்.
அந்த ஆடு வீட்டுக்கு வந்ததிலிருந்தே அணில் வீட்டில் சந்தோஷம் எங்கும் நிரம்பியிருந்தது. அனைவருக்கும் கொண்டாட்டம். அனைவருமே ஆட்டை நன்றாகக் கவனித்துக் கொண்டனர்.

ஆட்டுக்கு குடிக்க தினமும் குடம் குடமாக தண்ணீர் வைப்பாள் அணிலின் தங்கை ஜரீனா. விலையுயர்ந்த ஷாம்பு போட்டு குளிப்பாட்டி துவட்டிவிடுவாள் அணிலின் அம்மா மெக்கருன்னிஷா. அந்த ஆடு படுத்திருக்கும் இடத்தை கூட்டி பெருக்கி சுத்தம் செய்திடுவார் அணிலின் நன்னி பாத்திமா.

தினமும் பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பியதும் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் இருக்கும் இரயில்வே புறம்போக்கு நிலத்தில் உள்ள புல்வெளியில் அந்த ஆட்டை மேய்ச்சிட்டு வருவான் அணில்.

அப்படியான முதல் நாளில், இரயில்வே புறம்போக்கு நிலத்திற்கு ஆட்டை மேய்ப்பதற்காக அந்த ஆட்டை அழைத்துச் செல்ல பெரும் பாடுபட்டுப் போனார்கள் அணிலும், அவனது வகுப்புத் தோழன் சிவாவும்.

""வரமாட்டேன்'' என்று அடம்பிடிக்கும் அந்த ஆட்டை பின்புறமிருந்து தள்ளிக் கொண்டு சென்றான் சிவா. முன்புறமிருந்து கழுத்தில் கயிறு கட்டி இழுத்துச் செல்ல படாத பாடுபட்டுப் போனார்கள்.

ஆடு தனது முன்னங்கால்களை முன்னோக்கி தரையில் பலம் கொண்ட மட்டும்  நன்றாக ஊன்றி நகர மறுத்தது.

அணிலுக்கு திடீர் யோசனை வந்தது!
ஆட்டின் கழுத்து கயிற்றை விட்டு விட்டு தரையில் ஊன்றிய ஆட்டின் கால்களை தன் கரங்களில் பிடித்து பின்னோக்கி இழுத்துக் கொண்டே சென்றான், அணில்.

ஒரு வழியாக மேய்ச்சல் இடத்திற்கு ஆடு வந்தாகிவிட்டது.
கழுத்தை தொங்கப்போட்டுக் கொண்டு எதையோ இழந்து தவிப்பது போன்று ஆடு புற்களை மேய மறுத்து அடம்பிடிக்கத் தொடங்கிவிட்டது.
அணிலின் தோழன் சிவா கை நிறையா நல்ல பசுமையான புல்லை பிடுங்கி வந்து ஆட்டின் வாயருகே தின்னக் கொடுத்தான். ஆடு முகத்தை திருப்பிக்கொண்டது.

சிவாவுக்கு தன் நண்பனின் முன்பு கெளரவ குறைச்சலாகி விட்டது.   
அணிலும் சிவாவும் எவ்வளவு போராடியும் அவர்கள் தோற்றது தான் மிச்சம் என்றாகிவிட்டது.

அந்திச் சூரியன் மறையத் தொடங்கியதும் இருவரும் சேர்ந்து ஆட்டை தள்ளிக் கொண்டும், இழுத்துக் கொண்டும் வீடு வந்து சேர்ந்தனர்.

சிறிது நாட்களில் அணிலின் மகுடிக்கு அந்த ஆடு மயங்கி விட்டது போலும்!
அணிலுக்கு பின்னாடியே பின்தொடர்ந்து செல்கிறது!

ஆட்டின் கழுத்தில் கயிறு கட்டப்படவில்லை. ஆட்டின் முன்னங்கால்களை பிடித்து அணில் தூக்கிச் செல்வதில்லை. அணிலின் பேச்சை ஆடு கேட்கத் தொடங்கி விட்டது.

அணிலின் நடைக்கு பின் தொடர்ந்து ஆடு நடக்கும். அணில் நின்றால் ஆடு நின்றுவிடும்.

சில நேரங்களில் தேவையில்லாமல் அணில் வேண்டுமென்றே நிற்பான். ஆடு தப்பாமல் அப்படியே நின்றுவிடும்.

வாகனங்கள் செல்லும் சாலைகளைக் கடந்து தான் மேய்ச்சல் இடத்திற்கு செல்லவேண்டும். அவ்வாறு மேய்ச்சல் இடத்திற்கு செல்லும் போது சாலைகளை கடக்கும்போது வாகனங்கள் தன்னை கடக்கும் வரை அணில் சற்று நின்று காத்திருப்பான். அப்போது ஆடு நின்று காத்திருக்கும். வாகனங்களில் செல்வோர் பார்க்கும் போது ஆடு அணிலின் கைப்பிடித்து சாலையை கடக்க காத்திருப்பது போல் தெரியும். அது அவர்களுக்கு ஓர் அதிசயமாக தெரியும்.
இது அணிலுக்கும். அவனது வகுப்புத்தோழன் சிவாவுக்கும் மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

சிறிது நாட்களாகவே தொடர்ந்து பெய்து வரும் தென்மேற்குப் பருவமழை காரணமாக மேய்ச்சல் இடத்தில் ஒரு பகுதியில் குளம் போல் தண்ணீர் தேங்கியிருந்தது. அதில் சிறுவர்கள் நீச்சல் அடித்து தண்ணீரில் குதித்து நீந்தி விளையாடிக் கொண்டிருந்தனர்.

சிவாவுக்கும் குளத்தில் குதித்து விளையாட ஆர்வம் மனதில் பொங்கி வழியவும் தனது துணிமணிகளை கழற்றி கரைமேல் போட்டுவிட்டு தண்ணீருக்குள் குதித்ததும், மறு கணமே ஆடு தண்ணீருக்குள் குதித்தது. சிவாவும், ஆடும் தண்ணீருக்குள் நீந்தி வருவதை கண்டதும் அணிலும் தண்ணீருக்குள் குதித்து விளையாடத் தொடங்கினான்.

ஆடு தண்ணீருக்குள் குதித்து குதித்து நீந்தி கரையேறி மீண்டும் குதிப்பதை பார்க்கும் போது மற்ற சிறுவர்களுக்கு வேடிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

சிறுவர்கள் அனைவரும் அந்த ஆட்டுக்கு பின்னாடியே அணில் வீடுவரை வந்தார்கள். அவர்கள் அனைவரும் ஆடுக்கும் அணிலுக்கும், சிவாவுக்கும் புதிய நண்பர்களாயினர்.

ஒரு ஞாயிற்றுக்கிழமையில்....
மாலை நேரம்.   பூங்காவில் உள்ள ஊஞ்சலில் அணில் அமர்ந்து கொண்டதும், சிவா ஊஞ்சலைப் பிடித்து சிறிது தூரம் முன்னோக்கித் தள்ளிக் கொண்டுபோய் ஊஞ்சலை விட்டு விட்டு பக்கவாட்டில் சிவா ஒதுங்கிக் கொண்டதும் ஊஞ்சல் பலமுறை ஆடி நிற்கத் தொடங்கும் போது நொடிப் பொழுதில் ஊஞ்சலை ஆடு தன் தலையில் முட்டிக்கொண்டு சிறிது தூரம் வரை தள்ளிக்கொண்டு போய் விட்டு விட்டு பக்க வாட்டில் ஒதுங்கிக் கொண்டதும் வேடிக்கை பார்த்த சிறுவர்கள் புதிய நண்பர்கள் என எல்லோரும் கை கொட்டி ஆரவாரம் செய்தனர்.
சறுக்கு விளையாட்டு கூடாரத்தில் உள்ள இரும்புப் படிகட்டுகளில் ஏறி உயரத்துக்குச் சென்றதும் மறு முனையில் சறுக்கி கீழே வந்தார்கள் சில சிறுவர்கள். அவ்வாறே ஆடு படிகட்டுகளில் ஏறிச் உயரத்துக்குச் சென்று தன் முன்னங் கால்கள் இரண்டையும் மடக்கிக் கொண்டும், பின்னங் கால்களை தோதாக மடக்கி அமர்ந்து கொண்டு சறுக்கி மெதுவாக தரையை வந்தடைந்தது. இதைக் கண்ட பூங்காச் சிறுவர்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தனர்.

அன்று-மேய்ச்சல் இடத்துக்கு அருகே சிலர் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

மேய்ந்து கொண்டிருந்த ஆட்டின் அருகே கால்பந்து வந்து விழுந்தது. உடனே அந்த கால்பந்தை லாவகமாக தன் தலையால் சற்று மேலே தூக்கி போட்டு ஓங்கி ஒரு முட்டு முட்டியதும் அந்த கால்பந்து விளையாடுபவர்களின் காலுக்கு தோதாகச் சென்று சேர்ந்தது.

அதிலிருந்து கால்பந்து விளையாடும் போதெல்லாம் விளையாட்டுக் களத்துக்கு வெளியே போய் விழும் கால்பந்தை  ஆடுதான் தன் தலையால் முட்டி விளையாட்டுக் களத்துக்கு கால்பந்தை திருப்பிவிடும்! அப்போது திடீரென்று ஆடு வழக்கத்துக்கு மாறாக தொடர்ந்து ஈனஸ்வர குரலில் கத்தியது. ஆடுக்கு ஏதோ விபரீதம் என்று உணர்ந்தவனாக ஆட்டின் அருகே சென்றான் அணில்.
ஆடு தன் முன்னங்கால்களை மாறிமாறி தரையில் வாரிக்கொண்டு இன்னமும் ""ம்மே...'' என்று இடைவெளியேயில்லாமல் கத்தியது. அப்போது ஆட்டின் அருகே பாம்பு ஒன்று ஊர்ந்து சென்று புல்வெளிக்குள் மறைந்ததை அணில் பார்த்து விட்டான். நல்லவேளை ஆட்டுக்கு வந்திருந்த விபரீதம் விலகியது.
ஆழ்ந்த யோசனையில் இருந்த அணிலை அவன் கண்ணில் பட்ட அந்தக் காட்சி  சுயநினைவுக்கு கொண்டுவந்தது.

இரயில்வே ஒப்பந்த ராட்சத டிப்பர் லாரியிலிருந்து மலை போல் மண் சரிந்து உயர்ந்து கொண்டிருந்தது.

அருகில் தான் ஆடு மேய்ந்து கொண்டிருந்தது. அவன் எழுந்து சென்று ஆட்டின் கொம்பை பிடித்து இழுத்துக் கொண்டு டிப்பர் லாரி அருகே சென்றான்.
டிப்பர் லாரியிலிருந்து பின்புறமுள்ள கதவு கீழ்பகுதி அகலத் திறந்திருந்தது. அதன் வழியாகத்தான் மண் சரிந்து தரையில் விழுந்தது. மண் முழுவதுமாக கொட்டி முடித்ததும் டிப்பரின் பின் பகுதி மெல்ல மேல் நோக்கி சென்றுகொண்டிருந்தது. பின் கதவு திறப்பின் இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது.

அவன் காத்திருந்த தருணம் வந்ததும் ஆட்டை லாரியின் பின் கதவு இடைவெளியில் தள்ளி விட்டதும் கதவு தானாக மூடிக்கொள்ளவும் சரியாக இருந்தது.

டிப்பர் லாரி மெல்ல மெல்ல நகர்ந்து சிறிது தூரத்தில் சென்று மறைந்ததும் ஒரு தீர்மானத்தோடு வீடு திரும்பினான், அணில். அம்மா தான் முதலில் பார்த்தாள். 
""என்னடா அணிலு நீ மட்டும் தனியா வறீயே? ஆடு எங்கே?'' பதில் ஏதும் சொல்லாமல் அவனது அறையை நோக்கிச் சென்றான்.

""என்னங்க... விடிஞ்சா பெருநாள். ஆடு மேய்க்கப் போன அணிலு வெறுங்கையோடு வாரான். கேட்டாக்க அவன்கிட்ட இருந்து பதிலக் காணொம். அணில வந்து என்னன்னு கேளுங்க''  கரீம் பாயிடம் கத்திக்கொண்டிருந்தாள்.
""நீ போயி பேசாம உன் வேலையைப் பாக்கப் போறீயா இல்லையா?'' என்று அதட்டினார் கரீம்பாய்.

விடிந்ததும் வீட்டுக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவைத் திறந்த அணிலுக்கு அதிர்ச்சியாய் இருந்தது!

சிநேகமாய் சிரித்தபடி ஆடு நின்றிருந்தது!
காணாமல் போயிருந்த ஆடு கிடைத்த சந்தோஷத்தில் எல்லோருக்கும் கேட்கும் விதத்தில், ""ஆடு வந்திருச்சு! எல்லாரும் வாங்க, காணாமல்போன ஆடு வந்திருச்சு'' கத்தினாள்,அணிலின் அம்மா.

அணிலின் முகவாட்டத்தைத் தெரிந்து கொண்ட அணிலின் அப்பா கரீம்பாய் சொன்னார்: ""அணிலு என்ன இருந்தாலும் நான் உன்னப் பெத்தவன். உன்னப் பத்தி எனக்குத் தெரியாதா? இவ்வளவு நாளா ஆட்டைப் பிரியாதவன் விடிஞ்சா பெருநாள் ஆடு காணாமப் போயிருமா? உனது ஆட்டின் சிநேகத்தை நான் புரியாமலில்லை! கவலையை விடு! புதுத் துணி உடுத்தி வா!
நமாஸ்க்கு நேரமாச்சு'' என்றதும், சந்தோஷத்தில் ஒரு குதி குதித்தான் அணில்.  ஏதோ புரிந்து கொண்டது போல் ஆடும் ஒரு குதி குதித்தது! 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/27/w600X390/28kdr.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/27/அணில்-ஆடு-இரக்கம்-2852301.html
2848593 வார இதழ்கள் தினமணி கதிர் டோல் கேட் ... எரிச்சலடையத் தேவையில்லை! -வி.குமாரமுருகன் Monday, January 22, 2018 11:41 AM +0530 தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் செல்லும் போது ஏகப்பட்ட டோல் கேட்டுகள் வரிசையாக வருவதைப் பார்த்து எரிச்சலடையும் நிலை நம் எல்லாருக்குமே ஏற்படுவதுண்டு. ஏனென்றால் டோல்கேட்டுகளில் வரிசையில் நின்று பணத்தை கொடுத்து ரசீதைப் பெற்று செல்வதற்குள் போதும்,போதும் என்றாகிவிடும்.

மேலும் இரு வழிக்கான ரசீதைப் பெற்றால் அதை பாதுகாப்பாக வேறு வைத்திருக்க வேண்டும்.

அந்த சிரமங்களைப் போக்க ndian Highways Management Company Limited (IHMCL)  Utßm National Payment Corporation of India (NPCI) ஆகியவை இணைந்து புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளன. Radio frequency Identification (RFID) technology என்ற நவீன தொழில்நுட்பத்தில் இது செயல்படுகிறது. இதன் மூலம் நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் கேட்டுகளில் நாம் நேரத்தை விரயம் செய்யாமல் விரைவாக சென்று இலக்கை அடைய முடியும். மேலும் டோல் கேட்டுகளில் காத்திருக்கும் காலத்தில் ஏற்படும் எரிபொருள் விரயமும் தவிர்க்கப்படும். தற்போது 180 - க்கும் மேற்பட்ட டோல்கேட்டுகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெறுவது எப்படி?
டோல்கேட்டுகளில் உள்ள Point of Sale (POS) மையங்களிலோ, அல்லது அதற்கென உள்ள ஏஜென்சிகள் மூலமாகவோ நாம் பாஸ்டேக் அட்டைகளைப் பெற முடியும். இந்த மையங்கள் குறித்த பட்டியல் இணைய தளத்தில் உள்ளது (http://www.fastag.org/). மேலும் வங்கிகள் மூலமும், ஆன்-லைன் மூலமும் 
FASTag அட்டைகளைப் பெற முடியும்.

இந்த FASTag கணக்கை தொடங்குவதற்கு ரூ.200 பெறப்படுகிறது. அதன் பின் நாம் பயன்படுத்தும் அளவுக்கு ஏற்ப கைபேசிகளுக்கு ரீசார்ஜ் செய்வது போல் தேவைக்கேற்றவாறு நாம் டாப்-அப் செய்து தொள்ளலாம்.

வாகனத்தின் Registration Certificate (RC), வாகன உரிமையாளரின் மார்பளவு புகைப்படம் மற்றும் வாகன உரிமையாளரின் KYC விவரங்கள் தேவை. தனி நபரின் சொந்த வாகனம் என்றால் அவரின் அடையாளம் மற்றும் முகவரி தொடர்பான விபரங்கள் அடங்கிய ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றின் நகல் தேவை. FASTag பெற்ற பின்னர் வாகனம் ஓட்டும் பொழுது டோல்கேட்டுகளில் சரிபார்த்தலுக்காக கேட்கப்படக்கூடும் என்பதால் அசலையும் வைத்திருக்க வேண்டியது அவசியம். வாகனம் கார்ப்பரேட் நிறுவனத்துக்குரியது என்றால் FASTag பெறுவது தொடர்பாக இணையத்தை பார்வையிடலாம். 

உரிய முறைகளை பயன்படுத்தி FASTag கணக்கைத் தொடங்கியவுடன், நிறுவன பிரதிநிதி FASTag வில்லையை நமது வாகனத்தின் கண்ணாடியில் பொருத்தி விடுவார். இனி நாம் எந்தவொரு டோல்கேட்டிலும் வரிசையில் நிற்காமல் அதற்கென்று உள்ள எலக்ட்ரானிக் தானியங்கி டோல்கேட்டுகள் வழியாக விரைவாக சென்று விடலாம். அந்த டோல் கேட்டில் செலுத்த வேண்டிய பணம் நமது பாஸ்டேக் கணக்கிலிருந்து உடனடியாக கழிக்கப்பட்டு அது தொடர்பான விபரம் நமது கைபேசிக்கு வந்துவிடும். அதே சாலையில் நாம் 24 மணி நேரத்துக்குள் திரும்ப வந்தால் தானாகவே 2 வழித்தொகை (2 Way) கழிக்கப்படும். மேலும், இது தொடர்பான ஸ்டேட்மென்ட்டும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நமக்கு அனுப்பப்படும். அல்லது இணையதளத்துக்குள் சென்று நமது கணக்கை திறந்து பார்த்தால் முழு விவரத்தையும் அறிய முடியும். 

காசோலை, ஆன்-லைன்(through Credit Card/ Debit Card/ NEFT/ RTGS or through Net Banking.) மூலம் ரீசார்ஜ் செய்ய முடியும். குறைந்த பட்சம் ரூ. 100 முதல் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை ரீ-சார்ஜ் செய்து கொள்ளலாம். மாதம் முழுவதும் பயன்படுத்துவோருக்கு என சில சலுகைகள் உள்ளன. அதை வாடிக்கையாளர் சேவை மையம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் வைத்திருப்போர் ஒவ்வொரு வாகனத்துக்கும் தனித்தனியான FASTag கணக்கை தொடங்க வேண்டும். ஒரு வாகனத்துக்கு இரண்டு FASTag கணக்கு வைக்கக் கூடாது. டோல் கேட்டில் சரியாகத்தான் பணம் கழிக்கப்பட்டுள்ளதா என்பதை www.nhtis.org என்ற இணையத்தில் சரி பார்த்துக் கொள்ளலாம்.

இது போன்ற நவீன வசதிகளுடன் கூடிய FASTag  டோல்கேட்களை மாநில சாலைகளிலும் விரிவுபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/11/23/w600X390/tollgate.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/21/டோல்-கேட்--எரிச்சலடையத்-தேவையில்லை-2848593.html
2848598 வார இதழ்கள் தினமணி கதிர் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மழை... குளிர்... பாதிப்புகள்! பேராசிரியர் எஸ். சுவாமிநாதன் DIN Sunday, January 21, 2018 11:04 AM +0530 கார்த்திகை - மார்கழி - தை மாதங்களில் ஏற்படும் மழை - பனி நாட்களில் தசைப்பிடிப்பு - முழங்கால் மூட்டுப்பிடிப்பு, இடுப்பு, கழுத்து விலாபிடிப்பு ஏற்பட்டு அவதியுறுகிறேன். ஏன் இம்மாதங்களில் இப்படி ஏற்படுகிறது? இவை வராதிருக்க என்ன செய்வது?

-சிவகுருநாதன், தஞ்சாவூர்.

ஆண்டு முழுவதும் நடைபெறும் பிறப்பு இறப்புக்களின் விகிதம் கார்த்திகை மார்கழி மாதங்களில் அதிகமாகக் காணப்படும். கார்த்திகையை பிறப்பு மாதம் எனவும் மார்கழியைச் சூனிய மாதம் எனவும் குறிப்பிடுவதுண்டு. அதிக அளவு மரண விகிதத்தைக் கொண்ட மாதம் என்பதால் மார்கழி சூனியமாகும். திருமணங்கள் நடைபெறாததால் விருந்துகள் கிடைக்க வாய்ப்பில்லாததாலும் சூனியமாகலாம். கேளிக்கை விருந்துகளுக்கேற்ற மாதம் இவையல்ல. உணவுக் கட்டுப்பாடு மிக அதிகமாகத் தேவையான மாதங்கள் இவை. குடல் அழற்சி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, வயிற்றுக்கடுப்பு போன்ற குடல் கோளாறுகள் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் இயற்கை மாறுதலால் ஏற்படும் வாய்ப்புள்ள காலம் இவை.

சாரங்கதரர் என்ற வைத்தியத் தொகுப்பு நூலாசிரியர் குறிப்பிடுவதாவது:

கார்த்திகையின் கடைசி எட்டு நாட்களும் மார்கழியின் முதல் எட்டு நாட்களும் யமனின் தெற்றுப்பற்கள். இதில் மிதமான உணவை ஏற்பவன் வாழ்வான் என்கிறார். அதாவது யமனின் பிடியில் அகப்படாதிருக்க உணவை மிதமாகக் கொள்க என்று கூறுகிறார்.

மழை நின்றதும் ஏற்படும் பனி கடுமையாவதற்கு முன்பே பருவ மாற்றத்திற்கேற்ப ஜீரண உறுப்புகள் தம்மைச் சீரமைத்துக் கொள்ள சிறிது இடைவெளிதேவை. அப்போது இரைப்பையிலும் குடலிலும் அழற்சி ஏற்படாமல், அடைசல் ஏற்படாமல் பாதுகாப்பது அவசியம். இந்தப் பாதுகாப்பு மார்கழியைப் பின் தொடரும் தையிலும் கடைபிடிப்பது அவசியமாகிறது.

பனி வாடை காரணமாக உள்ளுறுப்புகளும் வெளியுறுப்புகளும் மந்தமாக இயங்கும் என்பதால் நீங்கள் குறிப்பிடும் உபாதைகள் தோன்றக் கூடும். நம் விருப்பப்படி தசைகளை இயக்க முடியாதபடி பிடிப்பும் இறுக்கமும் இந்த மாதத்தின் கோளாறு. இந்த மந்தத்தைப் போக்க, சுறுசுறுப்பை ஊட்ட, மூட்டுகளுக்குத் தேவையான சூட்டையும் நெகிழ்வையும் தர, கற்பூராதி தைலம், நாராயண தைலம், ஸஹசராதி தைலம் போன்றவற்றில் ஒன்றை வெதுவெதுப்பாக, தசை இறுக்கம், மூட்டுப் பிடிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் நன்றாக நீவிவிட்டுப்பிடித்து, வெந்நீரில் குளிப்பது நல்லது.

பனிக்காலத்தில் இரவு நீண்டு பகல் குறைவதால், குறுகிய பகலை நீட்ட விடியற் காலையிலேயே எழுந்து கொள்வது நல்லது. குளிரைத் தாங்க பயன்படுத்தப்படும் கனத்த உடைகளாலும், பனியாலும் ஏற்படும் தோல் வறட்சியால் உடலின் உட்சூடானது அதிகரிக்கிறது. வயிற்றின் உட்புறங்களில் இந்தச் சூடு சூழ்ந்து பசியை அதிகமாகத் தூண்டும். ஆனால் தசை இயக்கம் மந்தமாவதால் ஜீரணப்பணி தாமதமாகும். இப்படி எதிரிடையான இரு இயக்கங்கள் ஜீரண கோசங்களின் அழற்சிக்குக் காரணமாகலாம். அதனால் நீங்கள் எளிதில் செரிக்கும் உணவை மிதமாக காலமறிந்து உட்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். கிழங்கு, அதிகம் எண்ணெய் கலந்த உணவுப்பண்டம், கனமான உணவு இவற்றை அளவில் மிகக் குறைவாகக் கொள்வதே மிக நல்லது.

பனிக்காலத்தில் காலை இளம் வெயிலில் காய்வது சிலருக்கு இதமாக இருப்பது போலத் தோன்றும். ஆனால் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் - தலையில் பித்தவேகம் ஏறி தலைவலி, பின் மண்டையில் இறுக்கம், தலை கனம், தோல் வறட்சி, அரிப்பு, சொறி சிரங்கு, உணவில் வெறுப்பு, உட்குளிர் என்றெல்லாம் ஏற்படக்கூடும். அதனால் அதைத் தவிர்ப்பதே நலம்.

பெருங்குடல், இடுப்பு, தொடைப்பகுதி, காது, எலும்புகள் மற்றும் தோல் ஆகிய பகுதிகள் இயற்கையாகவே வாயுவினுடைய இருப்பிடங்களாகும். அதிலும் முக்கியமாக பெருங்குடல் பகுதி வாயுவின் ஆதிக்கம் அதிகமுள்ள இடமாகும். வாயுவினுடைய குணங்களாகிய வறட்சி, லேசு, குளிர்ச்சி, முறமுறப்பு, நுண்ணியது, அசையும் தன்மை ஆகியவற்றால் மழை பனி நாட்களில் அவற்றின் அளவு உடலில் கூடுவதால், தசைப்பிடிப்பும் மூட்டுப்பிடிப்பு போன்றவையும் ஏற்படுகின்றன. வாயுவின் குணாதிசயங்களை மட்டுப்படுத்தும் இந்துகாந்தம் நெய் மருந்து, தசமூலாரிஷ்டம், வாயுகுளிகை, மூலிகைத் தைலங்கள் போன்றவற்றின் பயன்பாடு, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் நன்மை தரும். 

நீங்கள் ஈரக்கசிவற்ற கல் தரை, சிமெண்டுத்தரை, கருங்கல் தரை, இரும்பு முதலியவற்றாலான நாற்காலி முதலியவற்றில் மேல் விரிப்பின்றி உட்காருதல், படுத்தல் முதலியவற்றைத் தவிர்த்தல் நலம். தசை இறுக்கம், ஜீரண உறுப்புக்களின் மந்தம் இவற்றைக் கண்ணோட்டத்தில் கொண்டு, நடை, உடை, உணவுகளை அமைத்துக் கொள்வது நலம். 

(தொடரும்)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/21/w600X390/kadhir8.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/21/ஆயுள்-காக்கும்-ஆயுர்வேதம்-மழை-குளிர்-பாதிப்புகள்-2848598.html
2848597 வார இதழ்கள் தினமணி கதிர் கடி... கடி... கடி... DIN DIN Sunday, January 21, 2018 11:01 AM +0530 அப்பா: என்னிடம் இருக்கும் பணத்தை அனாதைகளுக்குக் கொடுத்தாலும் கொடுப்பேனே தவிர... உங்களுக்குக் கொடுக்க மாட்டேன். 
மகன்: அப்ப... நாங்க அனாதை ஆயிடுறோம்ப்பா. 

கோ.தயாள்சரண், தேனி.

 

 

""உங்க வீட்டுக்கு வர்ற விருந்தாளிங்க... ஒரே நாள்ல கிளம்பிப் போயிடுறாங்களே... எப்படி?''
""என் மனைவி சங்கீதம் கத்துக்குறா... என் மகள் சமையல் கத்துக்குறா''
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
""ஓசி டிபன் சாப்பிட வர்றியா?''
""இன்னைக்கு இன்னொருத்தர் புக் பண்ணிட்டார்... நாளைக்குப் பார்க்கலாம்''

பர்வதவர்த்தினி, சென்னை.

 

 

""உங்க வீட்டுக்கு வர்ற விருந்தாளிங்க... ஒரே நாள்ல கிளம்பிப் போயிடுறாங்களே... எப்படி?''
""என் மனைவி சங்கீதம் கத்துக்குறா... என் மகள் சமையல் கத்துக்குறா''

ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

 

""ஓசி டிபன் சாப்பிட வர்றியா?''
""இன்னைக்கு இன்னொருத்தர் புக் பண்ணிட்டார்... நாளைக்குப் பார்க்கலாம்''

பர்வதவர்த்தினி, சென்னை.

""முதியோர் இல்லத்தில் என்ன ஒரே பாட்டுச்
சத்தம்?''
"" பாட்டிகள் ஜிமிக்கி கம்மல் டான்ஸ் பிராக்டீஸ் நடக்குதாம்''

ஆர்.யோகமித்ரா, சென்னை-73.

 

""உங்க மனைவியைச் செல்லமா எப்படிக் கூப்பிடுவீங்க?''
""கூகுள்ன்னு....''
""ஏன்?''
"" நான் எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சுடுவா''

 

""தலைவர் எதையும் ரூல்ஸ் படிதான் செய்வார்''
""எப்படிச் சொல்றே?''
""தனக்குத்தானே ஸ்மைல் ப்ளீஸ்ன்னு சொல்லிட்டுத்தான் செல்ஃபியே எடுப்பார்ன்னா பார்த்துகோயேன்''

 

""தலைவருக்குப் பிடிச்ச விளையாட்டு எது?''
"" உள்ளே... வெளியே... தான்''


""டாக்டர் சீரியஸா ஆபரேஷன் பண்ணிட்டு இருக்கறதா சொல்றீங்க.... ஆனா உள்ளேயிருந்து ஓ...போடுன்னு ஏதோ ஜாலியா சொல்ற மாதிரி கேட்குதே?''
""யோவ்... புரியாமப் பேசாதே... அது "ஓ' க்ரூப் ரத்தத்தை போடுன்னு டாக்டர் டென்ஷனா சொல்ற சத்தம்''

டி.என்.ரங்கநாதன், திருச்சி.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/21/w600X390/kadhir7.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/21/கடி-கடி-கடி-2848597.html
2848596 வார இதழ்கள் தினமணி கதிர் ஆசிரியருக்கே பாடம்! -ராஜி ராதா DIN Sunday, January 21, 2018 10:59 AM +0530 இன்றைய பிரபல பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் பயிற்சியாளர் புலிலா கோபிசந்த். அவரை ஆசிரியர் என்று கூட சொல்லலாம்.
ஆசிரியரும் சில சமயம் பாடம் கற்பது உண்டு. அப்படி கோபிசந்தும் கற்றாராம்! எப்படி? 
இவருடைய பயிற்சியில் உள்ள தொடக்கநிலை வீரர், வீராங்கனைகளுக்கு பந்து பிடிக்க பயிற்சி அளிப்பதுண்டு. இதற்காக கோபிசந்த் பந்தை தூக்கி எறிய, அவர்கள் பிடிக்க வேண்டும். இப்படி ஓர் இளம் பெண் பேட்மிண்டன் வீராங்கனைக்கு தூக்கி எறிந்தபோது, அவர் பந்துகளைப் பிடிக்கவே இல்லையாம்!
அந்த வீராங்கனையிடம், ""ஏன் பந்தைப் பிடிக்கவில்லை?'' என்று கேட்க, அதற்கு அந்தப் பெண், ""நீங்க எப்படி பந்தைப் பிடிக்கணும்னு சொல்லியே தரலியே'' என்றாராம்!
அன்றுதான் சிலருக்கு எல்லாவற்றையும் அடிப்படையிலிருந்தே கற்றுத்தர வேண்டும் என்று கோபிசந்த் பாடம் கற்றாராம்.
- மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் அவரே பகிர்ந்து கொண்ட தகவல்! 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/21/w600X390/kadhir6.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/21/ஆசிரியருக்கே-பாடம்-2848596.html
2848595 வார இதழ்கள் தினமணி கதிர் திரைக் கதிர் - ஜி.அசோக்  DIN Sunday, January 21, 2018 10:57 AM +0530 வேலைக்காரன்' படத்தைத் தொடர்ந்து பொன்.ராம் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். 24 ஏ.எம் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சிவகார்த்திகேயன் பிறந்த தினத்தை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் பெயரையும் அறிவிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. பொன்.ராம் படத்தைத் தொடர்ந்து "இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தையும் 24 ஏ.எம் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இதன் மூலம் சிவகார்த்திக்கேயன் படத்துக்கு முதன்முறையாக இசையமைக்கவுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். 2019-ஆம் ஆண்டில் இப்படம் வெளியாகும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். முழுக்க அறிவியல் சம்பந்தப்பட்ட படம் என்பதால், இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் நீண்டகாலமாகவே நடைபெற்று வருகின்றன.

தர்மதுரை' படத்துக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்குகிறார் சீனுராமசாமி. திரைக்கதை முழுமையான நிலையில், இப்படத்தின் ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. "நிமிர்' படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் முடிவடைந்தவுடன், சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இதன் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமன்னா, ராமு, சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் இப்படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஜனவரி 19-ஆம் தேதி முதல் மதுரையில் படப்பிடிப்பு தொடங்குகிறது. படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் படத்துக்கு பெயர் சூட்டப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் தற்போது படத்துக்கு "கண்ணே கலைமானே' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. வைரமுத்து பாடல்கள் எழுத, யுவன் இசையமைக்கவுள்ளார். ஒரே கட்டமாக மொத்த படத்தையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் படம் திரைக்கு வருவதற்கான வேலைகள் தொடங்கியுள்ளன.


அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் "மெர்சல்'. இப்படம் வெளியானபோது, அதில் இடம்பெற்றிருந்த டிஜிட்டல் இந்தியா மற்றும் ஜிஎஸ்டி வரி தொடர்பான வசனங்கள் குறித்து பெரும் சர்ச்சை உருவானது. இப்படத்தின் வசனங்களுக்கு பாஜகவினர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். பல்வேறு தரப்பினர் "மெர்சல்' படக்குழுவிற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், விருது வழங்கும் விழா ஒன்றில் சிறந்த நடிகருக்கான விருதை விஜய்க்கு கமல்ஹாசன் வழங்கினார். இதில் விஜய் பேசும்போது... ""சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்றதால் "மெர்சல்' திரைப்படம் பிரச்னைகளைச் சந்தித்தது. அப்போது ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி'' என்றார் விஜய். மேடையிலிருந்து கீழே இறங்கும் போது விஜயிடம் புகைப்படம் எடுக்க ரசிகர் ஒருவர் பாதுகாவலர்களைத் தாண்டி முன்வந்தார். அப்போது பலரும் அவரைத் தடுத்தனர். அந்த ரசிகரை விடுவித்து, அவரோடு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் விஜய்.


காற்று வெளியிடை' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் மணிரத்னம். திரைக்கதை இறுதியான நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியது. பல்வேறு ஆலோசனைகளுக்குப் பின் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டது. மணிரத்னம் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக இச்செய்தி வெளியிடப்பட்ட நிலையில், கதாபாத்திர வடிவமைப்பில் சிறு சிறு மாற்றங்களைக் கொண்டு வர மணிரத்னம் முடிவு செய்தார். முன்னதாக விஜய் சேதுபதிக்கு முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டிருந்தாலும், அது கதையில் சிறிய அளவிலேயே இருக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், தற்போது படம் முழுக்க விஜய் சேதுபதி வரும் அளவுக்கு கதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. "விக்ரம் வேதா' படத்துக்குப் பின் விஜய் சேதுபதிக்கான வரவேற்பு அதிகரித்திருக்கும் நிலையில், அவரது கதாபாத்திரத்தை விரிவாக்கம் செய்திருக்கிறார் மணிரத்னம். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். 17-ஆவது தயாரிப்பாக மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் பணிகளை முடிந்துவிட்டு, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் கார்த்தி. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க முன்வந்த நிலையில், தற்போது படத்தின் ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. முதற்கட்ட படப்பிடிப்பு தென்காசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. சாயிஷா சைகல், சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், ப்ரியா பவானி சங்கர், பானுப்ரியா, மெளனிகா உள்ளிட்ட பலர் இதில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். படத்தின் தலைப்பு என்ன என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி "கடைக்குட்டி சிங்கம்' என்ற பெயர் அடங்கிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டார். இப்போஸ்டரில் இடம்பெற்றுள்ள "பயிர் செய்ய விரும்பு' என்ற வாசகம் சமூகவலைத்தளத்தில் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த விவசாயிகளின் தற்கொலையும், காவிரி பிரச்னையும்தான் கதை என்கிறது படக்குழு. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/21/w600X390/kadhir5.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/21/திரைக்-கதிர்-2848595.html
2848594 வார இதழ்கள் தினமணி கதிர் பேல்பூரி Sunday, January 21, 2018 10:53 AM +0530 கண்டது

(செங்குன்றம் அருகில் உள்ள சோத்துபாக்கத்தில் உள்ள ஓர் உணவு விடுதியில் கண்ட வாசகம்)

சோம்பலை சாம்பல் ஆக்கு

செல்.பச்சமுத்து, சென்னை-52.


(சென்னை மாத்தூரில் ஓடிக் கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில்)

தூண்டிலில் சிக்கிய மீனும்
காதலில் சிக்கிய ஆணும்
துடிப்பது நிச்சயம்.

எம்.எஸ்.வி.அருண், பம்மதுகுளம்.

 

(பெரியகுளம் அருகில் உள்ள கைலாசப்பட்டியில் அமைந்துள்ள ஒரு மலைக்குன்றின் பெயர்)

சொர்க்கம்


ச.ஜான்ரவி, கோவில்பட்டி.


(வேலாயுதம்பாளையம் - கொடுமுடி சாலையில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)

பாட்டிவீட்டு மண் அடுப்பு சமையல் உணவகம்

ஜி.ராகவன், காகிதபுரம்.


கேட்டது


(நாகர்கோவில் வடசேரி சந்தையில் உள்ள ஒரு தேநீர் கடையில் பெரியவரும் இளைஞரும்)

""என்னடா ஸ்பீக்கர் மணி, காலங்காத்தால இந்தப் பக்கம்?''
""என்ன பெருசு... தொழிலையும் பெயரோடு சேர்த்துத்தான் கூப்பிடுவீரோ? சரி... உம்மளை ஊருக்குள்ள "கோழி கோவிந்தன்'னு கூப்பிடுறாங்களே ஏன்?''
""சின்ன வயசுல நிறைய கோழி வளர்த்தேன்டா... அதான் அப்படி கூப்பிடுறாங்க''
""நான் அப்படி கேள்விப்படலையே... சின்ன வயசுல நிறைய கோழி திருடுனதாலே... "கோழி கோவிந்தன்'னு பெயர் வச்சாங்களாமே''
மகேஷ் அப்பாசாமி, பனங்கொட்டான்விளை.


(பாளையங்கோட்டை பேருந்துநிலையத்தில் ஆசிரியரும் முன்னாள் மாணவரும்)

""சார் எப்படி இருக்கீங்க''
""நல்லா இருக்கேன்ப்பா... நீ எப்படி இருக்கே? இது யாரு?''
""என் பையன் சார்...''
"" ஓ... பையனா?
தம்பி... என்னிடம் 12 சாக்லேட் இருக்கு. அதுல மூன்று சாக்லேட் ஓவியாவுக்கு... மூன்று சாக்லேட் நயன்தாராவுக்கு... மூன்று ஐஸ்வர்யாவுக்கு... மிச்சம் எத்தனை கிடைக்கும்?''
""மூன்று கேர்ள் ஃபிரண்ட் கிடைப்பாங்க சார்''
""சரியான சுட்டிப் பயலா இருக்கியே... உன் அப்பனை மிஞ்சிட்டே...''
ஜெ.என்.ஜெயக்குமார்,  பாளையங்கோட்டை. 


மைக்ரோ கதை

ஓர் ஆற்றங்கரையில் இரண்டு பெரிய மரங்கள் இருந்தன. அந்த வழியாக வந்த ஒரு சிட்டுக்குருவி முதல் மரத்திடம் மழைக்காலம் தொடங்க இருப்பதால், நானும் என் குஞ்சுகளும் வசிக்க, கூடு கட்ட அனுமதிக்க வேண்டும் என்று கேட்டது. முதல் மரம் முடியாது என்று மறுத்துவிட்டது. இரண்டாவதாக இருந்த மரம் அனுமதி கொடுத்தது. குருவி கூடு கட்டி குஞ்சுகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது. 
சில மாதங்கள் கழித்து, கடும் மழை பெய்தது. ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது. முதல் மரம் ஆற்றில் அடித்துக் கொண்டு போனது.
குருவி கேட்டது: 
""என்னை கூடு கட்ட அனுமதிக்கவில்லை. இப்போது உங்கள் வாழ்க்கை எப்படியாச்சு பார்த்தீங்களா?'' என்று இகழ்ச்சியாகக் கேட்டது.
அதற்கு முதல் மரம் சொன்னது: "" எனது வேர்கள் எல்லாம் இற்றுவிட்டன. இந்த முறை வெள்ளம் வந்தால், ஆற்றில் அடித்துச் செல்லப்படுவேன் என்று எனக்கு முதலிலேயே தெரியும். அதனால்தான் உன்னைக் கூடு கட்ட அனுமதிக்கவில்லை''

ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன் கோட்டை.

 

யோசிக்கிறாங்கப்பா!

நூறு பேரின் வாயை மூட முயற்சிப்பதை விட...
நம் காதுகளை மூடிக் கொள்வது சிறந்தது.

ப.சரவணன், திருச்சி-6.

 

லவ் என்பது இன்கம்மிங் கால் போல.
வரும்போது அட்டென்ட் பண்ணணும். 
இல்லேன்னா மிஸ்டு கால் ஆயிடும். 
நட்பு என்பது எஸ்எம்எஸ் போல.
அட்டென்ட் பண்ணலேன்னாலும் இன்பாக்ஸில் வெயிட் பண்ணும்.
யோகநாதன் விசாகன், 

கிழக்கு தாம்பரம், சென்னை-59.

அப்படீங்களா!

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் காடுகளின் காட்சிகளை virtualforest.io என்ற இணையதளத்தில் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யும் வாய்ப்பு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரியும் ஹஃப்கென்ஸýக்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட அவர், அந்த காட்சிகள் அனைத்தும் 360 டிகிரி கோணத்தில், முப்பரிமாண வடிவத்தில் காணும்படி செய்திருக்கிறார். 

முப்பரிமாண வடிவத்தில் ஒரு காட்சியை உருவாக்க பல கேமராக்களைப் பயன்படுத்த வேண்டும். பின்பு அதில் எடுக்கப்பட்ட காட்சிகளை வெட்டி ஒட்டி வெளியிட வேண்டும். இதற்கு நிறைய செலவு ஆகும். அதிக நேரமும் தேவை. 
இதைக் குறைப்பதற்காக முப்பரிமாண படங்களை எடுக்கும் அககண்ங் ALLie CAMERAவைப் பயன்படுத்தியிருக்கிறார்.

virtualforest.io என்ற இணையதளத்தில் காடுகளைப் பார்க்க விரும்பும் ஒருவர் கணினியில் மவுஸ் கர்சரை மேலும் கீழும் பக்கவாட்டிலும் கொண்டு செல்லும்போது, காடுகளுக்குள் நேரில் சென்ற அனுபவத்தைப் பெற முடிகிறது.

என்.ஜே., சென்னை-69.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/21/w600X390/kadhir4.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/21/பேல்பூரி-2848594.html
2848592 வார இதழ்கள் தினமணி கதிர் ரசகுல்லா யாருக்குச் சொந்தம்? -ராஜி DIN Sunday, January 21, 2018 10:42 AM +0530 ரசகுல்லாவுக்கு "பெங்கால் ஸ்வீட்' என்ற அந்தஸ்து கிடைத்துவிட்டது. உண்மையில் ரசகுல்லா வங்காளத்துக்கு சொந்தம் தானா? 
""இல்லை. உண்மையில் ரசகுல்லா எங்கள் உணவு'' என்று ஒடிசாக்காரர்கள் கூறுகிறார்கள். இதன் காரணம் புதிரானது.
ஒரு காலத்தில் ஒடிசா வங்காளத்துடன் இணைந்திருந்தது. அப்போது ஒடிசாவின் முதன்மொழியே பெங்காலிதான். ஆனால் ஒடிசா பிரிந்த பிறகு இந்த நிலை மாறியது. மாநிலத்தின் முதன்மை மொழியாக ஒடிசா மாற்றப்பட்டது. இருந்தாலும் வங்காளம் - ஒடிசா உறவு தொடர்கிறது. புரியில் ஜகந்நாதரை தரிசிக்கச் சென்றால் அங்கு ஒடிசாக்காரர்களை விட கூடுதலாக வங்காளியரைத்தான் காண முடியும்.
அது மட்டுமல்ல...கொல்கத்தா மற்றும் வங்காளத்தில் மிகப்பெரிய மனிதர்கள் வீடுகளில் சமையலுக்கு ஒடிசா பிராமண சமையல்காரர்கள் தான் நியமிக்கப்பட்டனர். அவர்கள் அறிமுகப்படுத்திய ரசகுல்லா தான் இன்று பெங்கால் இனிப்பு என பெருமைப் பேசப்படுகிறது. ஆக, உண்மையில் ரசகுல்லா ஒடிசாவுக்கே சொந்தம் என்று கூறி வருகிறது ஒடிசா.
ஒடிசா தனி மாநிலம் ஆகிவிட்டாலும் இன்றும் ஒடிசாவின் கட்டக் நகர் செல்லும் வங்காளத்தவர்கள், அங்கு தன்னை ஒடியாக்காரர் போலவும், வங்காளத்தின் மித்னாபூரில் நுழைந்து விட்டால், வங்காளிகளாகவும் காட்டிக் கொள்வது உண்டு. மித்னாவூர் என்ற இடம் வங்காள - ஒடிசா எல்லையில் அமைந்துள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/21/w600X390/rasagula.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/21/ரசகுல்லா-யாருக்குச்-சொந்தம்-2848592.html
2848590 வார இதழ்கள் தினமணி கதிர் அப்பாவின் குடை சத்யா DIN Sunday, January 21, 2018 10:30 AM +0530 எனது பள்ளி நாட்களில் குடை என்பது ஓர் அந்தஸ்து. அது எல்லாருக்கும் அமைவதில்லை. நான் படித்த ஏற்காட்டில் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான மழைக்காலத்தில் மழை பெய்யாத மாலைகள் இருந்ததில்லை. நான் ஏற்காட்டிலிருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவிலுள்ள கொட்டச்சேடு கிராமத்தைச் சேர்ந்தவன். கொட்டச்சேடு மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு படித்தால் போதுமென்று அரசாங்கம் நினைத்ததால் அதற்கு மேல் படிக்க அங்கே பள்ளி கட்டவில்லை. செந்திட்டு, அரங்கம், பலாக்காடு என பல்வேறு ஊர்களுக்கு கொட்டச்சேடுதான் ஒரே பஸ் ஸ்டாப். அந்த காலத்தில் அங்கே மற்ற ஊர்களுக்கு சாலை போடப்படவில்லை. இருபுறமும் இருந்த செடிகளை வெட்டி உருவாக்கப்பட்ட சாலையில் சில லாரிகளும் டெம்போக்களும் போவதுண்டு. அதுவும் எப்போதாவதுதான். ரேஷன் கடைக்கு மாதம் ஒருமுறை லாரி வருவதுண்டு. அதில் ஆட்கள் ஏறி அரிசி மூட்டைகளின் மீதமர்ந்து ஆத்துப்பாலத்திலிருந்து கொம்புத்தூக்கி வரை செல்வார்கள். சட்டப்படி ரேஷன் பொருட்கள் ஏற்றி வரும் லாரிகளில் யாரையும் ஏற்றக் கூடாது. அப்படித்தான் முதன்முறை ஏற்றாமல் போனார்கள்.
""பாரய்யா.. பரதேசிப்பய ஏத்தாம போறான். கிரித்தரம் புடுச்சவன்..'' என்றபடி கோபமாக லாரி போகும் வழியெல்லாம் ரோட்டில் கருங்கற்களை உருட்டிவிட்டுப் போய்விட்டனர். பதினைந்து கிலோமீட்டர் தொலைவை ஐம்பதடிக்கு ஒருமுறை நிறுத்தி கற்களைத் தூக்கிப்போட்டு ஐந்து மணி நேரமாகக் கடந்தவர்கள், அதன் பிறகு யார் கை காட்டினாலும் ஏற்றப் பழகிவிட்டனர். சட்டமாவது ஒண்ணாவது.
பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தில்தான் வரும். ஆறு மணி பஸ், எட்டரை பஸ், பத்துமணி பஸ், பதினோரு மணி பஸ், ரெண்டு மணி பஸ், (சாயங்காலம்) ஆறு மணி பஸ் என்று ஏற்காடு போக ஆறு பஸ்கள்தான். புவியியல் அமைப்புப்படி, ஏற்காட்டின் புடனிக்குப் பின்னால் கொட்டச்சேடு அமைந்திருந்ததால் ஏற்காட்டின் மற்ற கிராமங்களுக்கு இல்லாத பெருமை கொட்டச்சேட்டுக்கு உண்டு. பேருந்தைப் பிடித்து ஏற்காடு டவுனைத் தொடாமலேயே சேலத்துக்குப் போய்விட முடியும். அப்படி சேலத்துக்குப் போக ஆறு மணி பஸ், பத்துமணி பஸ், ரெண்டு மணி பஸ், (சாயங்காலம்) ஆறுமணி பஸ். இந்த நாலு நேரங்களில் வருவது ஒரே பேருந்துதான் கொட்டச்சேட்டிலிருந்து சேலம், ஏற்காடு அப்படியே திரும்ப கொட்டச்சேடு. இதற்கு எதிர் திசையில் கொட்டச்சேட்டிலிருந்து ஏற்காடு, சேலம் திரும்ப கொட்டச்சேடு என்று இன்னொரு பேருந்து செயல்படும். இரண்டு பஸ்களும் காதலர்களைப்போல சரியாக கொட்டச்சேட்டில் சந்தித்துக்கொள்ளும். சில சமயங்களில் ஏதாவது பஸ் முந்தி வந்தாலோ அல்லது பிந்தி வந்தாலோ வழியில் நேராக வந்து முத்தமிடும் காதலர்களைப் போல முகத்தோடும் முகம் நெருங்கி வந்து டிரைவர்களின் "பாம்.. பாம்' என்ற சங்கேத பாஷைகளால் அர்த்தம் கொண்டு, ஏதோ ஒன்று ரிவர்ஸ் எடுத்து கொஞ்சம் தாராளமான இடத்தில் ஒதுங்கி நின்று இன்னொன்றுக்கு வழிவிடும். ஏனென்றால் மொத்த பாதையிலேயே ஒரு பஸ்தான் போக வழி இருக்கும். இப்போதுகூட ஏற்காடு போகும்போது நீங்கள் கவனித்தால் தெரியும், பஸ்களுக்கு ஒரே படிகட்டுதான் இருக்கும். நிறைய கொண்டை ஊசி வளைவுகள் இருப்பதால் இரண்டு பக்கமும் படிக்கட்டு வைத்த பேருந்துகள் ஏற்காட்டின் பயணத்துக்கு உகந்ததல்ல. அவ்வாறு சுற்றி வரும் பேருந்துகளை, "சுத்து வண்டி' என்று மக்கள் அன்பாக அழைப்பதுண்டு. 
ஏற்காட்டிலிருந்த 62 கிராமங்களில் ஏற்காட்டைத் தவிர வேறெங்கும் ஐந்தாம் வகுப்புவரையுள்ள ஒற்றை ஆசிரியர் பள்ளிகளையும், நாலைந்து கிராமங்களில் இருந்த நடுநிலைப்பள்ளிகளையும் தவிர, வேறெதுவும் இல்லை என்பதாலும், ஏற்காட்டில் கூட உள்ள ஒரேயோர் அரசு பள்ளியிலும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததாலும், எங்களைப் போன்ற கிராமப்புற மாணவர்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு செயின்ட் ஜோசப் பள்ளிதான். மேலே சொன்ன வண்டிகளில் காலை ஆறு மணி வண்டியில் கொட்டச்சேட்டிலிருந்து ஏற்காடு கிளம்பி, பள்ளி முடித்து திரும்ப மாலை ஆறு மணிக்கு ஏற்காட்டிலிருந்து கொட்டச்சேடு வருவதுதான் என் பள்ளி செல்லும் வாடிக்கை. எனக்கு மட்டுமல்ல அரங்கம், செந்திட்டு, பலாத்தூர், பலாக்காடு, கொம்புத்தூக்கி, மாரமங்கலம், வாழவந்தி, சேட்டுக்காடு, கீரைக்காடு, கே.புத்தூர், செங்காடு, தலைச்சோலை போன்ற ஊர்களின் மாணவர்களுக்கும் இதுதான் வழி. இதில் செங்காடு, தலைச்சோலை மாணவர்கள் மட்டும் சிலர் சைக்கிள் வைத்துக்கொண்டோ அல்லது நடந்தோ போய்விடுவார்கள். மற்றவர்களுக்கு அந்த வசதியில்லை. தூரமும், பாதையின் மேடு பள்ளங்களும் காரணம். வெறும் பதினேழு கிலோமீட்டர் இருக்கும் ஏற்காடு - கொட்டச்சேடு தொலைவை எந்த போக்குவரத்து நெரிசலும் இல்லாமல், போக்குவரத்து நெரிசல் என்ன? போக்குவரத்தே இல்லாமல் ஒற்றைப் பேருந்தாய்க் கடக்க ஒரு மணி நேரம் ஆகுமென்றால் பாதையின் போக்கை அறிந்துகொள்ளுங்கள். அதே மழைக் காலமென்றால் இந்தப் பேருந்துகள் வருவது உறுதியில்லை. பாறை உருண்டோ, மண் சரிந்தோ ஏதேனும் இடர்பாடுகள் ஏற்படலாம். அது போன்ற நேரங்களில் ஒரே வழி நடைதான். ஆனால் பேருந்து போகும் சாலையைத் தொடாமல், ஏற்காட்டிலிருந்து போட்டுக்காடு, பலாத்தூர் வழியாக கொட்டச்சேடு வந்துவிடலாம்.
ஏற்கனவே சொன்னதுபோல் என் பள்ளி காலங்களில் குடை என்பது ஓர் அந்தஸ்து. எனக்கு அது வாய்த்தது. என்னைப் போன்ற வெகுசிலருக்கே அது வாய்த்தது. மற்றபடி எல்லாரும் மழைப்பைதான். மழைப்பை எனப்படுவது யாதெனில், பெரிய மொத்தமான பாலித்தீன் பையைக் குறிக்கும். கிட்டத்தட்ட ஐந்தடி உயரத்தில் இருக்கும் அது ஏற்காட்டின் அத்தியாவசியம். அங்கிருந்த ஒரே வேலை வாய்ப்பான காபி எஸ்டேட்டுகளில் வேலை செய்பவர்கள் மறக்காமல் எடுத்து வருவது கொடுவாளும், மழைப்பையும்தான். மழைப்பையை எட்டாக, பதினாறாக, முப்பத்திரண்டாக மடித்து ஒரு ஜான் அளவுக்கு குறுக்கி அதில் ஒரு கொடுவாளையும் வைத்து கிடைத்த சிறிய தாம்புக் கயிறால் கட்டிக் கொண்டு வேலைக்கு வருவார்கள். எஸ்டேட்டுகளில் வேலை செய்ய கொடுவாளும் மழைக்கு தப்ப மழைப்பையும் அவசியம். மழைக்காலங்கள் மட்டுமல்ல, எந்த காலத்திலும் எந்த நொடியிலும் மழை வரலாம் என்பதே ஏற்காட்டின் சிறப்பு. மழையைக் காரணம் காட்டி வேலையிலிருந்து ஒதுங்கி நிற்க முடியாது. காபி எஸ்டேட்டுகளின் வேலைகளில் மிகவும் முக்கியமானவற்றில் ஒன்று, காபி செடிகளை பதியம் அமைத்துப் பராமரிப்பது. நர்சரியில் ரோஜாச்செடிகளைப் பராமரிப்பது போன்ற பணி அது. வரிசையாக சின்னச்சின்ன பாலிதீன் பைகளில் மண்ணை நிரப்பி காபிக் கொட்டைகளைப் போட்டு அவை துளிர்க்கும் வரை பராமரிக்க வேண்டும். அதுவரை இளவெயில் வேண்டும் என்பதால் மேலே சல்லடை போன்ற நீளமான கூரை அமைக்கப்பட்டிருக்கும். பைப் கொண்டு சீராக சாரல் போல நீர் தெளிக்கப்படும். வரிசையாக சாரிசாரியாக காபி செடிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். என்ன ரக காபி எங்கே அடுக்கப்பட்டுள்ளது என்பதெல்லாம் அப்பாவுக்கு அத்துப்படி. பின்பு நன்கு வளர்ந்து தயாரான செடிகளை மலையில் சென்று நடுவது. நீங்கள் பத்தாம் வகுப்பு வரை நன்றாகப் படித்திருந்தால் உங்களுக்கு நினைவிருக்கும் காபி, டீ போன்ற பயிர்கள் மலைப்பாங்கான பகுதிகளில்தான் வளரும் என்று. ஏனென்றால், இதுபோன்ற பயிர்கள் நெல் போல நீர் தேங்கும் பகுதிகளில் இருந்தால் அழுகிவிடும். எனவே ஈரம் இருக்கக் கூடிய ஆனால் நீர் தேங்காத இடங்களில், வளர்ந்த செடிகளைக் கொண்டு சென்று நட வேண்டும். பின்பு அவற்றிற்கு எண்டாசோம் பூச்சி மருந்து அடிக்க வேண்டும். பெரிய பேரல்களில் மொத்தமாக பூச்சி மருந்து பவுடர்கள் கொட்டப்பட்டு நீர் கலந்து பிறகு அவை குட்டி டப்பாக்களில் அடைக்கப்படும். அந்த டப்பாக்களை பள்ளிப்பைகள் போலவே முதுகில் போட்டுக்கொள்ள ஸ்ட்ராப்புகள் உண்டு. அவ்வாறு போட்டுகொண்டு வலது கையில் பைப்பைப் பிடித்தபடி ஆர்மோனியப் பெட்டியை இழுத்து வாசிக்கும் லாவகத்துடன் இடது கையால் இன்னொரு புறம் நீட்டியிருக்கும் விசையை ஆட்டினால் போதும். மழைச்சாரல் போல காபி இலைகளில் மருந்து தெளிக்கப்படும். அப்படி தெளித்தாலும் நூறில் ஒரு செடியின் இலைகளை பூச்சி கடித்து வைக்கும்.
வசந்த காலத்தில் வெயில் படுவதற்காக காபி செடிகளின் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள "சில்வர் ஓக்' என்று ஆங்கிலத்திலும் சவுக்கு மரம் என்று தமிழிலும் அன்போது அழைக்கப்படும் மரத்தின் இலைகளை வெட்டிவிட்டு "ஷாடோ கிராப்பிங்' செய்யப்படுவதுண்டு. அதற்கு மரத்தின் இரண்டு பக்கமும் கால்களை அகட்டி வைத்து சரசரவென்று ஏறி, நல்ல கிளை இருக்குமிடத்தில் அமர்ந்துகொண்டு அதன் இலைகளை வெட்டிவிடுவார்கள். வெட்டிவிடப்பட்ட இலைகள் அப்படியே கீழே விழுந்து காபிக்கு உரமாகும். அல்லது வழுக்கி விட்டு தலைகுப்புற விழவைக்கும். பின்பு அறுவடை காலத்தில், இடுப்பில் பிளாஸ்டிக் பையைக் கட்டிக்கொண்டு காபிப் பழங்களைப் பறித்து அந்தப் பைக்குள் போடவேண்டும். பை நிரம்பியதும் ஒரு பக்கமாக வைக்கப்பட்ட அவர்களுடைய மூட்டையில் கொட்டிவிட்டு பின்பு வந்து மீண்டும் பறிக்கவேண்டும். கடைசியில் நிரம்பிய மூட்டையை தூக்கிக்கொண்டு வந்து எடைபோட வேண்டும். எடுத்த பழங்களின் எடையைப் பொறுத்து படிக்காசு கிடைக்கும். பின்பு பெரிய மெஷினில் போட்டு அரைக்கப்பட்டு தோல் நீக்கப்படும். ஒருபுறம் அரைக்கப்பட்ட கொட்டைகள் வெளிவர இன்னொரு பக்கம் அவற்றின் தோல் துப்பப்படும். அரைக்கப்பட்ட கொட்டைகள் காய வைக்கப்பட்டு பின்பு மூட்டைகளில் அடைத்து விற்பனைக்காக லாரிகளில் ஏற்றிக்கொண்டு செல்லப்படும். இன்னொரு முக்கிய விளைபொருள் மிளகு. முன்னே சொன்ன சவுக்கு மரங்களில் வெற்றிலை இலைகளைப் போலவே இலைகள் கொண்ட கொடி ஒன்று பரவிக்கிடக்கும். புதிதாக ஏற்காட்டுக்கு வரும் எல்லோரும் அவற்றைப் பார்த்து ""ஏ.. வெத்தல..'' என்று ஆச்சரியப்படுவதுண்டு. அப்போதெல்லாம், ""அது வெத்தலை இல்ல மௌகு..'' என்று சொல்லி அவர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடிப்போம். அந்தக் கொடிகளில் கொத்துக் கொத்தாக ஒரு கொத்துக்கு இருபது முப்பது மிளகுக்காய்கள் என பச்சை நிறத்தில் காய்த்துக்கிடக்கும் காய்களை பெரிய மூங்கிலை வெட்டி சாய்த்து வைத்த ஏணியில் ஏறி பறிப்பார்கள். ஒரு பெரிய மூங்கிலை இரண்டாகப் பிளந்து அவற்றில் இயற்கையாக கிளைத்திருக்கும் கிளைகளையே ஏணிப்படிகளாக்கி கீழும் மேலும் இறுக்கிக் கட்டப்பட்ட ஏணிகள் அவை. அந்த மிளகினைப் பறித்துவந்து பெரிய இரும்பு டிரம்களில் தண்ணீரைக் கொட்டி அதனுடன் மிளகைப் போட்டு கொதிக்க வைத்து, காபி காய வைக்கும் சிமெண்ட் கலத்தில் கொட்டி நன்றாக மிதித்து, அவற்றின் காம்புகளும் மிளகுக்காயின் மேல் தோலும் பிரிக்கப்படும். காட்டம் தாங்காமல் மிதிப்பவர்களின் கால்களில் புண் வரக்கூடும் என்பதால் காலில் சாக்கைக் கட்டிக்கொண்டு மிதிப்பார்கள். பின்பு நன்கு காய வைத்த பின் மிளகு கொஞ்சம் கொஞ்சமாக கறுத்து நாம் வீட்டில் சமைக்கும் பதத்துக்கு வந்துவிடும். பின்பு அவைகளும் மூட்டைகளாக எடை போடப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படும். காபிக் கொட்டையை வாயில் போட்டு தோலைத் துப்பிவிட்டு கொட்டையை மட்டும் கொஞ்ச நேரம் சப்பினால் இனிப்புச் சுவையாக இருக்கும். ஆனால் மிளகை வாயில் போட்டால் அவ்வளவுதான். 
அந்த காபி எஸ்டேட்டுகளில் ஒன்றில் என் அப்பா அசிஸ்டென்ட் சூப்பரிண்டென்டாக வேலை செய்தார். ஆனால் அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு "ரைட்டரைய்யா' என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது.
இதை மறுபடி சொல்வதில் நீங்கள் எரிச்சலடையலாம், ஆனால் கடைசியாக ஒருமுறை சொல்லிக் கொள்கிறேன். என் பள்ளிக்காலங்களில் குடை கொண்டு செல்லும் அதிசயமானவர்களில் நானும் ஒருவன். செயின்ட் ஜோசப் பள்ளி கிறிஸ்தவ மிஷனரிகளால் நடத்தப்பட்ட பள்ளி. ஏற்காட்டில் வேறு பல பள்ளிகள் இருந்தாலும் ஏழை மாணவர்களுக்கேற்ற வகையில் குறைந்த கட்டணத்தில் நடத்தப்பட்ட பள்ளிகள் இரண்டு, ஆண்கள் பள்ளி செயின்ட் ஜோசப், பெண்கள் பள்ளி நாசரேத். மற்ற பள்ளிகளிலெல்லாம் சேலம், கோயம்புத்தூர் சென்னை என பல்வேறு பகுதிகளிலிருந்து பணக்கார மாணவர்கள் வந்து காசைக் கொட்டிப் படித்தார்கள். அவைகள் கான்வென்ட்கள். கடைசியாக சொன்ன இரண்டு பள்ளிகளில்தான் ஏற்காட்டின் அறுபத்திரண்டு கிராம மக்களின் குழந்தைகள் படித்தார்கள். அவர்களைப் பொருத்தவரை தனியார் பள்ளியில் படிப்பதே ஆடம்பரம் என்பதால் குடை போன்ற ஆடம்பரங்கள் பெரும்பாலானோரிடம் இல்லை. நான் முன்பே சொன்ன மழைப்பையை முப்பதிரண்டாக மடித்து சுருட்டி கட்டிக் கொண்டு வருவார்கள். மழை வரும்போது அதை எடுத்து போர்த்திக் கொண்டால் மழையிலிருந்து தப்பிவிடலாம். பைக்குள் இருக்கும் புத்தகங்கள் நனையாது. ஆனால் என் போன்ற குடைவாசிக்கு அந்த வசதியெல்லாம் இல்லை. அடிக்கும் காற்றைப் பொறுத்து எல்லாப் பக்கமும் வீசும் காற்றில் பட்டு தெறிக்கும். மழையிலிருந்து பையைக் காப்பாற்ற முடியாது. அதைப்பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை. ஆனால் "ரோமாபுரியில் ரோமானியனாய் இரு' என்ற மாபெரும் சிந்தனை என் உள்ளத்தில் அப்போதே உதித்ததால், நானும் எனக்கு மழைப்பை வேண்டும் என்று அம்மாவிடத்தில் அடம் பிடிக்க எனக்கு ஒரு மழைப்பை வாங்கி வந்தார். அப்போதுதான் எனக்கு ஒரு மாபெரும் உண்மை தெரியவந்தது. மழைப்பை என்பது இரண்டு புறம் மட்டும் சீல் செய்யப்பட்ட பையல்ல, அது மூன்று புறமும் சீல் செய்யப்பட்டது. புதியதாக வாங்கப்பட்ட மழைப்பையைத் தண்ணீர் பிடிக்க உபயோகிக்கலாம் என்ற அறிய உண்மையை அன்று அறிந்துகொண்டேன். பின்பு அதை ஒரு பக்கம் வெட்டித்தான் உபயோகிக்கவேண்டும் என்ற கொள்கை விளக்கத்தை அம்மாவிடம் பெற்றுக் கொண்டேன். அப்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. ஒரு பக்கம் முழுதாக கிழிக்காமல் முகத்துக்கு மட்டும் கிழித்துத் தரச் சொன்னேன். அம்மா பாராட்டினாலும் அது வெற்றிகரமான திட்டமாக இல்லை. இரண்டே நாளில் கீழே வெட்டாத மழைப்பையில் கால் தடுக்கி விழுந்து வைத்தேன்.
பின்பு கொஞ்ச நாளில் மழைப்பை போரடிக்க என் குடைக்கே திரும்பினேன். என் குடைக்கு பள்ளியில் எப்போதும் விசிறிகள் உண்டு. பைக்குள் ஒரு மூலையில் கிடக்கும் அதை எடுத்து எதிரில் நிற்பவனிடம் ""ஹான்ட்ஸப்'' என்றபடி நீட்டி, பின்பு பட்டனை அமுக்கி "ஸ்வைங்...' என்ற சத்தத்துடன் தாக்கப்பட்டவன், ""ஆ..'' வென வயிற்றைப் பிடித்துக்கொண்டு கண்கள் சொருக விழுவதுபோல் நடித்து விளையாடுவோம். அம்மாவிடமும் என் போன்ற குடைதான் ஆனால் பழையதாக இருக்கும். எப்போதும் நான் உபயோகித்து பட்டன் போனதோ அல்லது கைப்பிடியில் கொடுக்கப்பட்ட டேக் அறுந்ததோ அம்மாவிடம் போகும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் எது புதியதாய் வாங்கினாலும் அது என்னிடம் வந்து என்னிடம் இருந்த பழைய குடை அம்மாவிடம் போகும். அப்பாவின் குடை வித்தியாசமானது. அது பட்டன் கொண்டதில்லை. நீண்ட குடை. என் புத்தக பைக்குள் அடங்காதது. கைப்பிடி வளைந்து கைத்தடி போன்ற தோற்றம் தருவது. சில சமயம் அப்பா அதை கைத்தடி போலவும் உபயோகிப்பதுண்டு. மாலை ஆறு மணி பஸ்ஸில் வரும் என்னையும் அம்மாவையும் அழைத்துச் செல்ல ஒருநாளும் தவறாமல் அப்பா வந்துவிடுவார். மழை நாட்களில் அவர் கையில் மடக்கிப் பிடித்த குடையுடன் பஸ்ஸில் இறங்கும் எங்களை எட்டிப் பார்த்தபடி செட்டியார் கடை வாசலில் நிற்பார். மழையோ இல்லையோ அருகில் உள்ள குமார் அண்ணன் டீக்கடையில் முறுக்கோ, மிக்சரோ இல்லை தேங்காய் பர்பியோ கிடைக்கும். எவ்வளவு வேலைகளிலும் சிரமங்களிலும் அப்பா என்னையும் அம்மாவையும் கூப்பிட வராமல் இருந்ததில்லை. 
ஒருநாள் வழியில் ஒரு மரம் சாய்ந்துவிட பேருந்துகள் எதுவும் வர வாய்ப்பில்லாமல் போனது. நாங்கள் சிறுவர்களெல்லாம் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த பிறகு, வெகுநேரம் கழித்து எங்கள் ஊரைச் சேர்ந்த சலீம் அண்ணன் போனில் பேசி ஓர் அம்பாசடர் காரில் நாங்கள் பத்துபேர் போக ஏற்பாடு செய்திருந்தார். நாங்கள் கொட்டச்சேடு வந்து சேர எட்டரை மணிக்குமேல் ஆகிவிட்டது. அப்போதும் தன் குடையுடன் காத்திருந்தார் அப்பா. 
அந்தக் குடையும், நிக்கரும் ஷூவும் அவரது ட்ரேட் மார்க். வீட்டில் பார்த்த எங்களுக்கு மட்டும் தெரியும் இன்னொரு ட்ரேட் மார்க்காக அவர் ஒரு பெல்டும் வைத்திருந்தார். இவற்றையெல்லாம் அப்பா மாற்றியதேயில்லை. குடை பழசானாலும் அதே போன்ற இன்னொரு குடை வாங்கி வந்துவிடுவார், பெல்ட்டுக்கும் அதேதான். எஸ்டேட்டுகளில் வேலை செய்ய கண்டிப்பான உடை நிக்கர். மற்ற உடைகள் காட்டுக்குள் நடந்து செல்ல சவுகரியமாக இருக்காது என்ற காரணத்தால் அது நிலைத்துப் போனது.
அப்பா கொட்டச்சேட்டுக்குள் எங்கே போனாலும் நிக்கரோடுதான் செல்வார். மாறாக ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்டி கட்டிக் கொண்டு கையில் பையோடு வந்து காய்கறிகளை வாங்கிக் கொண்டு அப்படியே செட்டியார் கடையில் அரிசி மூட்டையில் அமர்ந்து கதை பேசிக்கொண்டு பேப்பர் படித்துவிட்டுப் போவார். அப்போது உடன் செல்லும் நான் மிக்சரோ முறுக்கோ இல்லை குடல் பாக்கெட்டோ வாங்கிக்கொண்டு ""அப்பா.. விளையாடிட்டு வரேன்...'' என்றபடி விளையாடப்போவேன். ஏதாவது வேலையாக ஏற்காடு போகும்போதோ இல்லை மணிரத்னம் படம் பார்க்க சேலம் வரும்போதோ அப்பா பேண்ட் அணிந்திருப்பார். அப்போதும் அந்த குடையும் பெல்ட்டும் மாறாது. அப்பாவுடன் படம் பார்க்கப் போனால் இன்டர்வெல்லில் ஐஸ் கிரீம் நிச்சயம். பிறகு படம் முடிந்ததும் மதிய சாப்பாடு சாரதி ஹோட்டலில். பதினெட்டு ரூபாய் சாப்பாடு ரெண்டு ரூபாய் தயிர் என ஆளுக்கு இருபது ரூபாய். முதலில் பருப்புபொடியும் நெய்யும் ஊற்றிவிட்டு அடுத்து சாம்பார், பிறகு ரசம், மோர் என்று வாங்கி சாப்பிட்டுவிட்டு தயிரை அப்படியே குடித்துவிடுவேன். 
நான் பத்தாவது முடித்து சேலத்தில் பதினொன்றாவது சேர்ந்தபின் சேலத்தின் அனைத்து சந்துபொந்துகளும் பழகிப் போனது. வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்து வராமல் கடையில் சாப்பிடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு ஐந்து ரூபாய்க்கு தள்ளுவண்டிக் கடையில் தக்காளி சாதமோ லெமன் சாதமோ சாப்பிட்டுவிடுவேன். இருந்தாலும் மூட் இருந்தால் சாரதி ஹோட்டல்தான்.
நான் பெரியவனாகி சேலத்துக்குப் படிக்கப் போனாலும் அதேபோல ஆறு மணிக்கு சேலத்திலிருந்து வரும் பஸ்ஸில் வரும் என்னைப் பார்க்க கையில் குடையோடு காத்திருப்பார் அப்பா. பின்பு நான் டிப்ளமோ படித்தபோதும் அப்பாவின் இந்தப் பழக்கம் நிற்கவில்லை. பின்பு நான் படித்துக்கொண்டிருக்கும்போதே அப்பா ரிடையர் ஆகி வந்துவிட்டார். ரிடையர் ஆன பிறகு அப்பா ரொம்ப நாள் உயிர் வாழவில்லை. 
எது அப்பாவின் உயிரை எடுத்தது? முதன்முறையாக தமிழகத்தில் பரவிய சிக்குன்குனியாவா? அல்லது அவருக்கு இருந்த ஷுகரா? அல்லது எதோ ஒரு போலி டாக்டர் கொடுத்த ஓவர் டோஸ் மருந்தா? இல்லை அவரது வயது முதுமையா? இல்லை ரிடையர் ஆகி வீட்டில் அமர்ந்திருந்த அவரை நிரப்பிய வெறுமையா? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலில்லை. ஆனால் எதையும் எதிர்பாராத எதோ ஒருநாளில் அப்பா எங்களோடு இல்லை. பின்பு இரண்டு மூன்று முறை வீடு மாற்றும்போது அப்பாவின் குடையும் காணாமல் போனது. 
பின்பு அது போன்ற குடைகள் தேவையேயில்லாமல் போனது. காலப்போக்கில் அரையடி அளவில் மடக்கி வைத்துக் கொள்ளக் கூடிய குடைகள் வந்துவிட்டதால் அந்தக் குடையின் நினைவே அற்றுப்போனது. அது போன்ற குடைகளை அலங்காரத்துக்குக்கூட பார்க்க முடிவதில்லை. பின்பு ரொம்ப நாள் கழித்து என் திருமணத்தில் அந்தக் குடை கிடைத்தது. ஜானவாசத்துக்கு குடை பிடிக்க அந்தக் குடை வாங்கியிருந்தார்கள். அப்பா அடிக்கடி சொல்வதுபோல் "குடை வடி (கைத்தடி)' இரண்டும் கிடைத்தது. அந்தக் குடை பெறுவதற்கு ஒரு தகுதி வேண்டும் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். அப்பா குடை போலில்லாமல் இந்தக் குடையில் பட்டன் பொருத்தப் பட்டிருந்தது என்றாலும் வடிவம் அதுபோல்தான் இருந்தது. ஒருமுறை வேறு குடையில்லாமல் மழைக்கு இந்தக் குடையை எடுத்துச் சென்றாலும் இப்போது மிகவும் பிடித்துப் போனது.
""என்னண்ணே.. தாத்தா குடைய எடுத்துட்டு வரீங்க'' என்று ஆபீசில் அடிக்கும் கிண்டல்களைத் தாண்டி அந்தக் குடை மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது. அப்பாவின் கை பிடித்து நடப்பதுபோல்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/21/w600X390/kadhir3.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/21/அப்பாவின்-குடை-2848590.html
2848588 வார இதழ்கள் தினமணி கதிர் வீழ்வேன் என்று நினைத்தாயோ? அண்டை வீட்டாரும் சண்டைக் குரல்களும் - 4 மாலன் Sunday, January 21, 2018 10:21 AM +0530 ஜேம்ஸ்க்கு நியூ ஜெர்சிக்குச் செல்ல வேண்டியிருந்தது. இந்த ஜேம்ஸ்- முழுப் பெயர் ஜேம்ஸ் ஏ காரிஃபீல்ட்- அமெரிக்க ஜனாதிபதி. தன் பரிவாரம் புடை சூழ ரயில் ஏறுவதற்காக வாஷிங்டனில் உள்ள பொட்டாமக்-பால்டிமோர் ரயில் நிலையத்திற்குள் நுழைந்தார். தன்னை வழி அனுப்புவதற்காக வந்த அமைச்சருடன் மும்முரமாகப் பேசிக் கொண்டு வந்த அவரை, பெண்கள் கழிப்பறைக்குள்ளிருந்து வெளிப்பட்ட ஒருவர் கைத்துப்பாக்கியால் சுட்டார். முதுகில் ஒரு குண்டு பாய்ந்து விலா எலும்பைப் பெயர்த்துக் கொண்டு வயிற்றில் போய் உட்கார்ந்து கொண்டது.. மற்றொன்று கையில் பாய்ந்தது. பக்கத்தில் இருந்தவர் மீது ஜனாதிபதி சரிந்தார். அவரை அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு போனார்கள். காப்பாற்றி விட்டார்கள். அப்படித்தான் பலரும் நினைத்தார்கள். ஆனால் மருத்துவமனையில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக மூன்று மாதத்தில் இறந்து போனார்.

அவரை சுட்டவர் ஓர் எழுத்தாளர். துணை ஜனதிபதியாக இருந்த ஆர்தருக்குத் தேர்தல் வேலை பார்த்தவர். ஜேம்ஸ் இறந்து போனால், துணை ஜனாதிபதி ஆர்தர் பதவிக்கு வருவார். வந்தால் தனக்குப் பதவி தருவார் என்பது அவரது திட்டம். பாரீஸில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வேலைக்குப் போக வேண்டும் என்பது அவரது கனவு. ஆனால் அவருக்கு ஃபிரஞ்ச் மொழியில் ஒரு வார்த்தை கூடத் தெரியாது!

ஜனாதிபதி ஜேம்ஸின் படுகொலை அமெரிக்காவில் கடும் விவாதத்தை எழுப்பியது. பதவிக்கு வரும் அரசியல்வாதிகள் சற்றும் தகுதி இல்லாத தங்கள் "செல்லப்பிள்ளைகளுக்கு'ப் பதவி தருவது நியாயமா? என்ற கேள்வி எழுந்தது. செல்லப்பிள்ளைகளுக்குப் பதவி தரும் spoils system - த்திற்கு பதிலாக திறமைக்கு முக்கியத்துவம் தரும் திறன் நாயகம் எனும் "மெரிட்டோக்ரசி' (Meritocracy) முறை வர வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இதெல்லாம் நடந்தது 1883-இல்.
நம் நாட்டிலும் "செல்லப்பிள்ளை' முறை இருக்கிறதா என நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

ஆனால் எல்லா ஜனநாயக நாடுகளும் இந்தத் தகுதியைப் பின் தள்ளி செல்லப்பிள்ளைகளை முன்னிறுத்தும் பிரச்னையை எதிர்கொண்டு வந்திருக்கின்றன.

"திறமையற்ற பலருக்குப் பதிலாக ஊழல்வாதிகள் சிலரைத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்து நிர்வாகத்தை ஒப்படைக்கும் முறைதான் ஜனநாயகம்.' இதைப் படிக்கும் போது நம் ஊரை மனதில் வைத்துக் கொண்டு எழுதப்பட்ட வாசகம் போலத் தோன்றலாம். ஆனால் இதைச் சொன்னவர் வின்ஸ்டன் சர்ச்சில். ஆம்! ஜனநாயகத்தின் தொட்டில் எனச் சொல்லப்படும் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் சர்ச்சில்தான்.

ஜனநாயகத்தின் சிறப்புகள் சில. ஆனால் அதன் பலவீனங்கள் பல. எந்த நாட்டிலும் எல்லோரும் விரும்புவது நல்லாட்சி. ஆனால் அதை உருவாக்கும் தேர்தலில் களம் காணத் தகுதியுள்ள பலருக்கும் விருப்பமில்லை. அவர்களது திறமை வேறு எங்கோ அங்கீகரிக்கப்படுகிறது. அதில் ஊதியமும் கிடைக்கிறது. அதன் மூலம் சமூக அந்தஸ்தும், பாதுகாப்பும் கூடக் கிடைக்கிறது. "நம்ம வேலையை நாம பார்த்துக்கிட்டு போவோம், நமக்கெதற்கு வம்பு?' என்று அவர்கள் ஒதுங்கி விடுகிறார்கள். இதனால் "வேறு வேலை வெட்டி இல்லாத, திறமை எங்கும் நிரூபிக்கப்படாதவர்கள் தேர்தல் களத்தில் இறங்கி அதிகாரத்தில் அமர்ந்து விடுவதுண்டு. 

எந்தச் சமூகத்திலுமே அரசியல் அதிகாரத்திற்கு ஆசைப்படுபவர்கள் மக்கள் தொகையில் சிலர்தான். அதிகாரத்திற்கு ஆசையில்லாத பலரை ஆள்வதும் இந்தச் சிலர்தான்.

அதே போல நிர்வாகத் திறமை கொண்டவர்களும் சிலர்தான். ஆனால் நாட்டின் நிர்வாகம் அவர்கள் கையில் இருப்பதில்லை. இழப்பு நாட்டுக்குத்தான்.
எனவே ஜனநாயகத்திற்கு மாற்று, "திறன் நாயகம்' (meritocracy) என சிலர் நினைத்தார்கள். சிங்கப்பூர் முன்னணித் தலைவர்கள் பலரும் அப்படித்தான் நினைத்தார்கள். ஏற்கனவே கடந்த அத்தியாயத்தில் சொன்னது போல அவர்களில் பலரும் எளிய குடும்பங்களில் பிறந்து, கல்வி உதவித் தொகை பெற்று, அயல் நாட்டில் படித்து, நல்ல வேலைகளில் இருந்தவர்கள் என்பதால் திறமைதான் நமது செல்வம், நாட்டினுடைய செல்வமும் அதுதான் என்று நம்பினார்கள்.

 

 

அந்தத் திறமைக்குக் காத்திருந்த சவால்களில் முக்கியமானது நாட்டின் பாதுகாப்பு.

குடியரசாக மலர்ந்த சிங்கப்பூர் இரண்டு பெரிய நாடுகளிடையே "சிக்கி'க் கொண்ட குட்டித் தீவாக இருந்தது. ஒரு பக்கம் மலேசியா. கருத்து வேறுபாடுகள் காரணமாகப் பிரிந்து வந்தாயிற்று.இன்னொரு புறம் இந்தோனேசியா.. மலேயாவும் சிங்கப்பூரும் இணைந்து மலேசியாவாக ஆனதிலிருந்தே அது கறுவிக் கொண்டிருந்தது. 

அப்போது இந்தோனேசியா சுகர்னோ ஆட்சியில் இருந்தது. அவர் சீனத்தோடும் வேறு சில கம்யூனிச நாடுகளோடும் இணைந்து "ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அணி' ஒன்றை உருவாக்குவதில் முனைந்திருந்தார். மலேயாவையும் சிங்கப்பூரையும் இணைத்து ஒரே நாடாக்கியது, அந்த வட்டாரத்தில் கம்யூனிசத்தை ஒழிக்க பிரிட்டீஷ் செய்யும் முயற்சி என அவர் கருதினார். அதை "நொறுக்குவேன்' என பகிரங்கமாகச் சபதமும் செய்திருந்தார். அதற்காக "எதிர் கொள்' (ஆங்கிலத்தில் "Confrontation', இந்தோனேசிய மொழியில் Konfrontasi) என்றொரு கொள்கைத் திட்டமும் வகுத்திருந்தார். அதனடிப்படையில் மிக அருகில் இருந்த சிங்கப்பூரில் சிவிலியன்களைப் போல ஊடுருவித் தாக்குதல் செய்ய முயற்சித்து வந்தார். ஒரு குண்டு வெடிப்பை 1964-இல் வெற்றிகரமாகச் செய்தும் காட்டியிருந்தார். 

சிங்கப்பூரும் மலேசியாவும் பிரிந்ததில் அவருக்கு மகிழ்ச்சி. ஆனால் சிங்கப்பூரைத் தனிநாடாக அங்கீகரிக்க வேண்டுமானால் அது மலேசியாவைச் சீண்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார் . அதற்கு சிங்கப்பூர் குடியரசு தயாரில்லை. அந்தக் கோபம் இந்தோனேசியாவிற்கு இருந்தது.

மற்றொருபுறம் அருகில் உள்ள இன்னொரு நாடான வியட்நாமில் அமெரிக்கா போர் நடத்திக் கொண்டிருந்தது. அப்போது வியட்நாம் இரண்டாகப் பிரிந்திருந்தது. தெற்கு வியட்நாம் கம்யூனிசத்திற்கு எதிராக அமெரிக்கர்கள் ஆதரவில் இருந்தது. கம்யூனிச நாடான வட வியட்நாம் சீன, ரஷ்ய உதவியோடு அமெரிக்காவை எதிர்த்து தீரமாகப் போரிட்டுக் கொண்டிருந்தது.


சிறிய நாடுகள் பெரிய ஏகாதிபத்தியத்தின் பிடியில் சிக்கிக்ண்டுவிடும் அபாயம் நிலவிய காலம் அது.

இன்னொரு நெருக்கடியும் சிங்கப்பூருக்கு இருந்தது. இந்தோனேசியாவின் அச்சுறுத்தலைச் சமாளிக்க, பிரிட்டீஷ் படைகள் சிங்கப்பூரில் முகாமிட்டிருந்தன. அந்தப் படைகளை மெல்ல மெல்ல 1970களுக்குப் பின் விலக்கிக் கொள்வதாக பிரிட்டன் உறுதியளித்திருந்தது. 

ஆனால் சற்றும் எதிர்பாராதவிதமாக பிரிட்டனின் செலாவணியான பவுண்ட் செலாவணி விகிதம் குறைந்ததால் பலவீனமடைந்து பிரிட்டன் நிதி நெருக்கடியில் சிக்கியது. அதற்கு செலவைக் குறைக்க வேண்டிய கட்டாயம். அது 1970க்குள்ளாகவே தனது படைகளை விலக்கிக் கொள்ளப் போவதாகச் சொன்னது. "பிரிட்டன் தனது துருப்புக்களை விலக்கிக் கொண்டால் சிங்கப்பூரில் இருள் சூழும்" என பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருந்தன.

பிரிட்டன் படைகளைக் கழித்து விட்டுப் பார்த்தால் அன்று சிங்கப்பூரிடம் இருந்தது 1000 படைவீரர்கள் 50 அதிகாரிகள்தான்! இரண்டு கப்பல்கள் மட்டும் கொண்ட தன்னார்வத் தொண்டர்களால் இயக்கப்பட்ட "கப்பல் படை' ஒன்றிருந்தது. விமானப் படை ஏதும் கிடையாது! படைவீரர்களில் பலர் மலாய் இனத்தவர். அவர்கள் மலேசியாவிற்குத் திரும்பிப் போக விரும்பி விலகல் கடிதம் கொடுத்துக் கொண்டிருந்தனர். சிலர் விலகியும் சென்று விட்டிருந்தனர் 
அண்டை நாடுகளோடு இறுக்கமான உறவு. சர்வதேச அழுத்தங்கள். மிக மிக மெலிந்த படை.

இவற்றைக் கொண்டு எப்படி நாட்டைப் பாதுகாப்பது? அந்தப் பெரும் பொறுப்பு இருவர் தலையில் விழுந்தது.

அவர்களில் ஒருவர் தமிழர்.

(அது அடுத்த வாரம்) 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/21/w600X390/kadhir1.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/21/வீழ்வேன்-என்று-நினைத்தாயோ-அண்டை-வீட்டாரும்-சண்டைக்-குரல்களும்---4-2848588.html
2844232 வார இதழ்கள் தினமணி கதிர் ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிக ரத்த அழுத்தமும் பக்கவாதமும்! Sunday, January 14, 2018 12:00 AM +0530 நான் TRANSIENT ISCHEMIC ATTACK (TIA) எனும் உபாதையால் பாதிக்கப்பட்டு ECOSPRIN மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். இது எதனால் வருகிறது? ஆயுர்வேதத்தில் இதற்கான தீர்வு உள்ளதா?
அ.மகராஜன், 
கொட்டாரம்.
மூளையில் தற்காலிகமாக ஏற்படும் ரத்தத் தடையின் காரணமாக இந்த உபாதை ஏற்படக் கூடும். பக்கவாத நோயில் ஏற்படும் நரம்புகளின் இழுப்பைப் போல ஏற்படும் இந்த உபாதையானது, பக்கவாதத்தில் ஏற்படும் நிரந்தரச் செயலிழப்பைப் போன்று ஏற்படுத்துவதில்லை. சில மணித்துளிகளோ அல்லது சுமார் 24 மணி நேரம் வரை நீடித்து அதன் பின் சாதாரண நிலைக்குத் திரும்பி விடும். மூளையிலுள்ள திசுக்களை முழுவதுமாக அழித்துவிடுவதில்லை. என்றாலும், உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றேயாகும். ஏனென்றால், மூவரில் ஒருவர் மறுபடியும் TIAவினால் பக்கவாத நோய்க்கு இலக்காகக் கூடும்.
அதிகமான அளவில் ரத்த அழுத்த உபாதை உள்ளவர்களுக்கு, அதன் தாக்கத்தினால் சுத்த ரத்தத்தை ஏந்திச் செல்லும் ரத்த நாளங்களின் உட்புறச் சுவர்களில் கிழிசலை ஏற்படுத்தி, ரத்த உறைவுகளை உண்டாக்கி, முகம், கை,கால்களில் தற்காலிக நரம்பு இழப்பையோ, நிரந்தர பக்க உபாதையையோ தோற்றுவிக்கலாம். அதனால் அதிக ரத்த அழுத்த நோயாளிகள், அடிக்கடி தங்களுடைய ரத்த அழுத்த நிலையைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். வீட்டிலேயே அதற்கான கருவியை வைத்திருப்பதும், பயன்படுத்துவதும் அவசியமாகும். சிலருக்கு மருத்துவமனை சூழ்நிலை, மருத்துவர் என்ன சொல்வாரோ? என்ற பயம் காரணமாக, ரத்த அழுத்தம் உயரக் கூடும். அதனால் வீட்டில் அமைதியாக உள்ள சூழ்நிலையில், ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொண்டு, மருத்துவருக்குத் தெரிவிப்பதும் முக்கியமாகும். 
தலைசுற்றல், கிறுகிறுப்பு, செயல் தடுமாற்றம், இடறும் நடை போன்றவை தென்பட்டால், உடனடியாக ரத்த அழுத்தப் பரிசோதனையைச் செய்து கொள்ள வேண்டும். 
ரத்தத்தில் அதிக கொழுப்பு, சர்க்கரை உபாதை, புகைபிடிப்பவர், உடல் பருமன், இதயநோயாளி ஆகியோருக்கு, நீங்கள் குறிப்பிடும் TIA எனும் தாக்கம் சுலபமாக ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பார்வை மந்தமாகுதல், பேச்சுக் குளறுபடி, குழப்பம், நடை தடுமாற்றம், உணர்வுநிலை குறைதல், கிறுகிறுப்பு, தன்நினைவின்றி சிறுநீர் கழித்தல், நாக்கில் சுவையை விபரீதமாக அறிதல், அசாதாரண மணம் அறிதல், ஒருபக்கமாக உடல் வலுவிழத்தல் போன்றவை TIA உபாதை ஏற்பட்டுள்ளதைக் குறிக்கும் சில அறிகுறிகளாகும்.
ரத்தத்தை நீர்க்கச் செய்து , மூளையிலும் இதயத்திலும் ரத்தக் குழாய்களின் உட்புற வழியாக எளிதாக எடுத்துச் செல்லும் வகையில் தங்களுக்கு மாத்திரை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நிரந்தரமாகச் சாப்பிட வேண்டிய நிர்பந்தத்திற்கும் நீங்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறீர்கள். 
உடலில் இயற்கையினால் ஏற்படும் வேக உணர்ச்சிகள் இருவகை. உடலுக்குத் தேவைப்படாததும், உள்ளே அதிக நேரம் தங்கியிருந்தால் கெடுதியும் உண்டாக்கும் மலம், சிறுநீர், குடல் காற்று போன்றவற்றை ஏற்படுத்தும் உந்துதல்கள் ஒருவகை. இரண்டாவது வகை - உடலுக்குத் தேவையான பசி, தாகம், தூக்கம், போகம் போன்றவை தாமதிக்காமல் உடனே உடம்பில் சேர்ப்பிப்பதற்காக உண்டாகுபவை. இவற்றை அடக்கவே கூடாது. அடக்கினால் TIA உபாதை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
அவசியம் அடக்க வேண்டிய, அடக்காவிட்டால் கெடுதல் செய்யும் உந்துதல்களும் மனிதர்களுக்கு உண்டு. லோபம் எனும் அடையத்தகாத விரும்பத்தகாத வஸ்துகளைப் பிடிவாதமாய் அடைய ஆசைப்படுவது, எதையும் எவருக்கும் கொடுக்க இஷ்டமில்லாத கருமித்தனம், சோகம் எனும் தேவையில்லாதவற்றில் எல்லாம் வருத்தம்; எந்த சமயத்திலும் எந்தக் காரியத்திலும் பயம்; குரோதம் எனும் கோபம்; மானம் எனும் கர்வம்; நைர்லஜ்யம் எனும் சங்கோஜம், நாணம், கூச்சம் ஒன்றுமில்லாமல், பிறர் பார்க்கும்படி செய்யக்கூடாததைச் செய்தல், ஈர்ஷ்யா எனும் பொறாமைப்படுதல்; அதிராகம் எனும் பேராசை; அபித்யா எனும் தனக்கு எவ்வித தீங்கும் செய்யாதவருக்கு கெடுதல் செய்ய மனதில் எண்ணுவது ஆகியவை ரத்தக் கொதிப்புக்குக் காரணமாகி, மூளையில் ரத்தக் கசிவையும், நாளங்களில் அடைப்பையும் ஏற்படுத்தி, நீங்கள் குறிப்பிடும் TIA எனும் உபாதைக்குக் காரணமாகலாம். 
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/13/w600X390/kd1.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/14/ஆயுள்-காக்கும்-ஆயுர்வேதம்-அதிக-ரத்த-அழுத்தமும்-பக்கவாதமும்-2844232.html
2844233 வார இதழ்கள் தினமணி கதிர் யார் அந்தப் பத்துப் பேர்?: மாலன் DIN DIN Sunday, January 14, 2018 12:00 AM +0530 வீழ்வேன் என்று நினைத்தாயோ! 3

'ஒரு கதவு மூடும் போது இன்னொரு கதவு திறக்கிறது, நாம்தான் கவனிப்பதில்லை' என்பதை கிரஹாம் பெல் எந்த சந்தர்ப்பத்தில் சொன்னாரோ... தெரியவில்லை, ஆனால் அது பல நேரங்களில் சரித்திரத்தில் உண்மையாகவே நடந்திருக்கிறது.
காதல் திருமணத்தை அங்கீகரிக்காத தகப்பன், வீட்டை விட்டு வெளியே போ எனத் துரத்தியதைப் போல திடீரென்று மலேசியாவுடனான உறவு அறுந்து விட்டது. உறவு அறுந்த தம்பதிகள் முன் நிற்கும் பிரச்னைகள் போல தேசத்தின் முன்னும் பிரச்னைகள் நிற்கின்றன. "திகைப்பூட்டும், அச்சுறுத்தும் அளவில் பிரச்னைகள்' என்றெழுதுகிறார் சிங்கப்பூரின் பொருளாதார சிற்பி எனப் புகழப்படுபவரும், சிங்கப்பூரின் முன்னாள் நிதி அமைச்சருமான முனைவர் கோ கெங் ஸ்வீ. 
என்ன பிரச்னைகள்?
1.உள்நாட்டு, வெளிநாட்டுப் பாதுகாப்பு, 2.பொருளாதாரம் (முதலில் தாக்குப் பிடித்தல், பின் வளர்ச்சி) 3.சமூக நல்லிணக்கம் 
(இந்தியா விடுதலை அடைந்த போது நம் முன் நின்ற பிரச்னைகளும் இவைதாம். இவற்றை நாம் எப்படிக் கையாண்டோம் என்பது விவாதிக்கப்பட வேண்டும். விவாதிப்போம், தொடர் முடியும் போது)
இந்தப் பிரச்னைகளைச் சமாளிக்க கைவசம் இருந்தது எது? பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள சிங்கப்பூரிடம் ராணுவம் கிடையாது. சிறிய தேசம் ஆதலால் பெரிய அளவில் ஒரு ராணுவத்தை உருவாக்கிப் பராமரிக்க இயலாது. நாடோ இயற்கை அரண் ஏதுமில்லாத, நாற்புறமும் கடல் சூழ்ந்த தீவு.
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை அந்தச் சின்னஞ்சிறு தீவில் பெரிதாக இயற்கை வளம் ஏதும் கிடையாது. நெடிதுயர்ந்த மரங்களோ, பரந்து அடர்ந்த காடுகளோ, நீண்ட நதிகளோ கிடையாது. கனிமவளம் கிடையாது. பெட்ரோல் கிடையாது. மலேயாவிற்கு இந்த வளங்களை ஆசிர்வதித்திருந்த இயற்கை சிங்கப்பூருக்கு அதிகம் உதவியிருக்கவில்லை. மக்கள் தொகை அதிகம் இல்லை. சுமார் 18 லட்சம் பேர். (18,79,571) அவர்களில் பாதிப்பேருக்கு மேல் எழுத்தறிவு இல்லை. மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் சேரிகளில் வசித்தார்கள். வறுமை பரவலாக இருந்தது. வேலை இல்லாதவர்கள் சராசரியாக 14 சதவீதம்.
இத்தனை இல்லாமைகளுக்கு நடுவில் அவர்களிடமிருந்த ஒரு செல்வம், ஒரே ஒரு செல்வம் என்று கூடச் சொல்லுவேன், அவர்களது தலைவர்கள். எப்போதும் ஒரு கிரிக்கெட் டீமைப் போல வெள்ளைக் கால்சாராயும் சட்டையும் அணிந்து காணப்பட்ட அந்த பத்துப் பேர் - அவர்கள்தான் நாட்டின் முதல் அமைச்சரவை} அந்த நாட்டைத் தலைகீழாக மாற்றிக் காட்டினார்கள். 
இன்று சிங்கப்பூர் உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்று. சேரிகள் இல்லை. 99சதவீத மக்கள் சொந்த வீடுகளில் வாழ்கிறார்கள் (அங்கு "சொந்த வீடு' என்பது 99 ஆண்டுகளுக்கு அரசாங்கத்தால் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டது) வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை சராசரியாக 1சதவீதம். 
இந்த வெற்றிக்கான மகுடம் லீ குவான் யூவிற்குச் சூட்டப்படுகிறது. சந்தேகமில்லாமல் வெற்றியின் முகம் அவர்தான். ஆனால் கனிகள் ஆடும் மரத்தைக் கண்ணுக்குத் தெரியாத வேர்கள் தாங்கி நிற்பது போல், அவருக்கு உற்ற துணையாக சுற்றி நின்றவர்கள் 9 பேர்.
உலகில் வேறு எந்தத் தலைவருக்கும் வாய்க்காத ஒரு நல்வாய்ப்பு லீ குவான் யூவிற்குக் கிட்டியது. அவரோடு சேர்ந்து சிங்கப்பூரைக் கட்டி எழுப்பியவர்களில் பலர், பதவிக்கு வரும் முன்னேரே அவருடைய நெருங்கிய நண்பர்கள். சிலரை அவரது கல்லூரி நாள்களிலிருந்தே அவர் அறிவார். அநேகமாக எல்லோரும் மெத்தப் படித்தவர்கள். அயல் நாட்டில் சென்று கல்வி பெறும் வாய்ப்புக் கிட்டியவர்கள். அங்கு கல்வியில் முன்னணி மாணவர்களாகத் திகழ்ந்தவர்கள். ஒவ்வொருவருக்குமே நாட்டிற்குத் தலைமை ஏற்கும் தகுதியும் திறமையும் இருந்தது. ஆனால் அவர்கள் லீயைத் தங்கள் தலைவராக ஏற்றார்கள். அந்த விசுவாசத்திலிருந்து கடைசி வரை அவர்கள் மாறவே இல்லை. 
யார் அவர்கள்?
டாக்டர் தோ சின் சே: சிங்கப்பூர் குடியரசின் முதல் துணைப்பிரதமர். லீ யோடு சேர்ந்து மக்கள் செயல் கட்சியை நிறுவியவர்களில் ஒருவர். அந்தக் கட்சியின் அமைப்பையும் அதன் கொள்கைகளையும் உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியவர். லீயை விட இரண்டு வயது மூத்தவர். மருத்துவர். உடலியலில் பி.எச்டி பட்டம் பெற்றதால் முனைவரும் கூட. லண்டனில் படிக்கும் போது அங்கு இருந்த மலேயன் ஃபோரம் என்ற மாணவர் அமைப்பின் தலைவராக இருந்தவர் (பின்னாளில் மலேசியாவின் பிரதமரான துங்கு அப்துல் ரஹ்மான், சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ ஆகிய இருவரும் அப்போது அதில் உறுப்பினராக இருந்தார்கள்). லீயை சிங்கப்பூர் பிரதமராக ஆக்கியதில் மிக முக்கியப் பங்கு இவருடையது. 1959}இல் மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்ற போது யார் பிரதமராக ஆவது என்று கட்சியில் கடும் போட்டி நிலவியது. லீயும் அவரை எதிர்த்து ஆங் எங் குவானும் போட்டியிட்டனர். இருவரும் சமமான வாக்குகள் பெற்றனர். தலைவராக இருந்த தோ தன்னுடைய விருப்ப ஓட்டை லீக்கு அளித்தார். ஒரு வாக்கு வித்தியாசத்தில் லீ பிரதமரானார். லீயின் நம்பிக்கைக்குரிய நண்பர் என்ற போதிலும் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிவதை எதிர்த்தவர்களில் இவர் முக்கியமான ஒருவர்.
டாக்டர் கோ கெங் ஸ்வீ: எளிய குடும்பத்தில் பிறந்து கல்வி உதவித் தொகை கிடைத்ததால், நம் மன் மோகன் சிங்கைப் போல, லண்டன் ஸ்கூல் ஆஃப்
எகனாமிக்ஸில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். லீயை விட 5 வயது மூத்தவர். லண்டனில் மாணவராக இருக்கும் போதே, அங்கு படித்துக் கொண்டிருந்த லீ, தோ ஆகியோரின் நண்பராக ஆனவர். நிதி, பாதுகாப்பு, கல்வி ஆகிய முக்கிய துறைகளின் அமைச்சராக 20 ஆண்டுகாலம் பதவி வகித்தவர். சதுப்பு நிலமாகக் கிடந்த இடத்தில் தொழிற் பேட்டை அமைத்தது, கல்வியில் சீர்திருத்தங்கள் செய்தது ஆகியவற்றிற்காக நினைக்கப்படுபவர்.
சின்னத்தம்பி ராஜரத்தினம்: தமிழர் என்பதைப் பெயரே சொல்லிவிடும். யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். தந்தை மலேயாவில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அங்கு இவருக்கு முன் பிறந்த இரு குழந்தைகள் இறந்து போனாதால் இடம் ராசியில்லை என்பதால் பிரசவத்திற்காக இவரது தாய் இலங்கைக்கு அனுப்பப்பட்டார்.சட்டம் படிக்க இங்கிலாந்திற்குப் போனார். ஆனால் முதல் உலகப் போர் காரணமாக அவருக்கு கிடைத்துக் கொண்டிருந்த உதவித் தொகை தடைபட்டது. பத்திரிகையாளராக ஆனார். "ஸ்பெக்டேட்டர்' பத்திரிகையில் சிறுகதைகள் எழுதினார். புகழ் பெற்ற எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல்லின் அபிமானத்தைப் பெற்றதால் பிபிசியில் வேலை கிடைத்தது. லண்டனில் இருந்தபோது ஒரு ஹங்கேரியப் பெண்ணை மணந்து கொண்டார். ஆனால் இவரது தாயார் கடைசிவரை அவரை மருமகளாக ஏற்கத் தயாராக இல்லை. சிங்கப்பூரின் அயலகக் கொள்கைகளை வடிவமைத்ததில் முக்கியமானவர். ஆசியான் அமைப்புத் தோன்றக் காரணமானவர்.
எட்மண்ட் வில்லியம் பார்க்கர்: பள்ளி மாணவராக இருந்த போதே சிங்கப்பூர் நாட்டு ஹாக்கி அணியில் இடம் பெற்றவர். இங்கிலாந்து அரசியின் கல்வித் தொகை பெற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து பாரிஸ்டர் ஆனவர். லீயின் சட்ட நிறுவனத்தில் பங்குதாரராகப் பணியாற்றியவர். சிங்கப்பூரின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். இவர் அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால், வக்கீலாக பல கோடிகள் சம்பாதித்திருப்பார் என லீ ஒரு முறை கூறினார்.
இவர்களோடு ஆங் பாங் பூன், யாங் லின், லிம் கின்,ஜெக் யென் தாங், ஒத்மான் வோக் ஆகியோரும் சேர்ந்து லீயின் தலைமையில் நவீன சிங்கப்பூரை உருவாக்கினார்கள்.
இன்றைய சிங்கப்பூருக்கு அடித்தளமிட்ட இவர்கள் யாருக்கும் சிங்கப்பூரில் சிலை கிடையாது.அவர்கள் பெயரில் தெரு கூடக் கிடையாது! தனிமனித வழிபாட்டுக்கு சிங்கப்பூரில் இடம் இல்லை.
அது மட்டுமல்ல, முதுமை அடைந்த போது பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்கள். ஓய்வு பெற்றவர்களில் சிலர் பல்கலைக்கழகத்திலும் உயர்கல்வி நிலையங்களிலும் கல்விப் பணிக்குத் திரும்பினார்கள். அரசு நிறுவனங்களின் மதியுரைஞர்களாக (advisors) வழிகாட்டினார்கள்.
லீயும் அவரது அமைச்சர்கள் பலரும் அயல் நாட்டில் படித்தவர்கள் என்பது மட்டுமல்ல, படிக்கும் போது முதல் வகுப்பு, தங்க மெடல் என வாங்கி அசத்தியவர்கள். எளிய குடும்பங்களில் பிறந்து கல்வி உதவித் தொகை பெற்று முன்னேறியவர்கள். அதனால் சிங்கப்பூர் முன்னேற, "டெமாக்ரசி' (ஜனநாயகம்)யை விட "மெரிட்டோக்ரசி' அவசியம் என நினைத்தவர்கள்
அது என்ன "மெரிட்டோக்ரசி'?
(தொடரும்)


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/13/w600X390/kd2.jpg லீ குவான் யூ http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/14/யார்-அந்தப்-பத்துப்-பேர்-மாலன்-2844233.html
2844234 வார இதழ்கள் தினமணி கதிர் இலக்கியத்தில் அரசியல் DIN DIN Sunday, January 14, 2018 12:00 AM +0530 சிங்கப்பூர் கவிஞர்கள், எழுத்தாளர்கள் தமிழ்நாட்டுத் தலைவர்களைப் பற்றி ஏராளமாக எழுதியிருக்கிறார்கள். லீ குவான் யூவைப் பற்றி கணிசமான கவிதைகள் உண்டு. ஆனால் அதற்கு அடித்தளம் அமைத்த ஆரம்பகால அமைச்சர்கள் பற்றி எழுதப்பட்டவை அதிகம் எனக்குக் கிடைக்கவில்லை. மு.தங்கராசன் என்ற கவிஞர் தனது "இன்பத் திருநாடு' என்ற நூலை அமைச்சரவையில் இருந்த தமிழர் ராஜரத்தினத்திற்கு (அவர் மறைவுக்குப் பின்) சமர்ப்பித்துள்ளார்:
 
 சிந்தனைச் சிற்பி என்றே
 சீர்மிகும் சான்றோர் சொல்வார்
 பந்தம்சேர் எல்லோ ராலும்
 பாராட்டுப் பெற்ற ராஜா
 எந்திரம் போன்று ழைத்த
 இராஜரத் தினமே உம்மை
 வந்தனை புரிந்தே "இன்பத்
 திருநாடு' வழங்கு கின்றேன்
 மு.தங்கராசன் (2010)
 

]]>
http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/14/இலக்கியத்தில்-அரசியல்-2844234.html
2844235 வார இதழ்கள் தினமணி கதிர் உறவுகள் DIN DIN Sunday, January 14, 2018 12:00 AM +0530 "பார்த்தீங்களா...எங்கண்ணான்னா அண்ணாதான்...'' தேவகி அவள் கணவன் ஸ்ரீநிவாசனிடம் துள்ளலோடு சொன்னாள். கையில் அந்தச் சேலை பளபளத்துக் கொண்டிருந்தது. எவ்வளவு அற்புதமான டிசைன்...? புடவை தேர்வு செய்யவும் ஆழ்ந்த ரசனையுடன் கூடிய ஒரு கற்பனை வளம் வேண்டும்தான். நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் தேவகி. பெண்களுக்கு எத்தனை சேலை வாங்கினாலும் திருப்தியே வருவதில்லை. புதிது புதிதாய்க் கட்டிக் கொள்வதில் அப்படியொரு உற்சாகம். பீரோவைத் திறந்தால், காத்திருந்ததுபோல் ஒன்வொன்றாய் வழுக்கி வழுக்கிக் கீழே விழும் புடவைகளைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். ஸ்ரீநிவாசன், கண்ணாடி முன் நிற்கும் அவளைப் பார்த்தான். புடவையினால் அவளுக்கு அழகா? அவளால் புடவைக்கு அழகா? கண்கள் ஒரு கணம் மயங்கிப் போனது. என்னானாலும் தங்கையல்லவா? அவளுக்குப் பிடித்த நிறம், டிசைன் எது என்று அவள் அண்ணனுக்குத் தெரியாதா? என்று நினைத்துக் கொண்டான்.
 மாடியில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தான் சுந்தர். மனசுக்குள் இனம் புரியாத ஒரு
 துக்கம். சற்று முன் அதைக் கொட்டித் தீர்த்தது விட்டேற்றியாய் இருந்தது. கண்களில் கசிந்த கண்ணீர் இன்னும் நிற்கவில்லை.
 தங்கை வீட்டிற்கு வந்தாலே அந்த மாடியில் தங்குவதுதான் அவன் வழக்கம். அந்தத் தனிமையும் அமைதியும் அவன் வீட்டில் கிடைப்பதில்லை.
 "எப்பயும் போல நான் மேலே போயிடுறேன்'' என்றான் இடம் ரிசர்வ் செய்பவனைப் போல.
 "ஏன், எங்களோட கீழேயே இருக்கக் கூடாதா?'' இது ஸ்ரீநிவாசன்.
 "அய்யய்ய... என்னங்க நீங்க... அந்த வித்தியாசமெல்லாம் எனக்குக் கிடையாது... சோறு கண்ட எடம் சொர்க்கம்னு இருக்கிறவன் நான்... ராத்திரிப் படுக்கிறதுக்கு எனக்குப் பிடிச்ச இடம் அதுன்னு சொல்ல வந்தேன்... அவ்வளவுதான்... அத்தோட ஒரு பிரைவசி கிடைக்கும் அங்கே... அப்டியே மொட்டை மாடிக்குப் போய் வானத்தப் பார்த்துட்டுக் கொஞ்ச நேரம் இருக்கலாம். உங்க வீட்டச் சுத்தி இருக்கிற சூழல் பிடிக்கும் எனக்கு. அப்படி ஒரு சந்தோஷம் இங்கே உங்க வீட்லதான் கிடைக்குது. பகல்ல பூராவும் இங்கதானே கிடக்கப் போறேன்'' யதார்த்தமாய்ப் பதிலிறுத்தான் சுந்தர்.
 அவ்வப்போது நினைத்தால் வந்து விடுவது இவன் வழக்கம். அவனுக்கு மூன்று தங்கைகள். ஒவ்வொருவரும் ஒவ்வோர் ஊரில். ஒன்று நெல்லை. ஒன்று சென்னை, ஒன்று திருச்சி. எங்கு எப்போது இருப்பான் என்று யாராலும் கணிக்க முடியாது. நினைத்தால் அலுவலகத்திற்கு லீவு போட்டு விட்டுக் கிளம்பி விடுவான். தங்கைகள் யாரும் "வராதே!' என்று இன்றுவரை தடை போட்டதில்லை. சீர் கொண்டு வந்தால் சகோதரி என்ற நிலையெல்லாம் இல்லைதான். ஆனாலும் பெரிய தட்டு நிறைய பழங்களை நிரம்ப அடுக்கி, நடுவே ஒரு புதிய புடவையை வைத்து, அதற்கு மேட்ச்சாக ஒரு ப்ளவுஸ் பீûஸயும் வைத்து, அதன் மேலே கமகமக்கும் மல்லிகைப் பூப் பந்தோடு ஒரு ஐநூறு ரூபாயையும் கண்காண நுழைத்து, தங்கைகளை நமஸ்கரித்து வாங்கிக் கொள்ளச் சொல்வான். அப்போது அந்த முகத்தில் தவழும் மகிழ்ச்சியையும், நிறைவையும் பார்க்க வேண்டுமே... நிச்சயம் பத்து நாளைக்குத் தாங்கும் அது. ஆனால் நாலு நாளில் கிளம்பி விடுவான். மதிப்போடு போய் மதிப்போடு புறப்படும் லாவகம்.
 "நீ பாட்டுக்குத் தனியாப் புறப்பட்டு வந்துடுறியே... அண்ணியக் கூட்டிட்டு வரக் கூடாதா?'' தேவகியின் அக்கறையான கேள்வி.
 ""நானா வரவேண்டாம்னு சொன்னேன். அதெல்லாம் அவுங்கவுங்க இஷ்டம். ஒரு இடம் போகணும், வரணும்ங்கிற இன்ட்ரஸ்ட் அவுங்கவுங்களுக்கே வேணும்... ஒருத்தர் ஊட்ட முடியாது. நாலு பேரைப் பார்க்கணும் பழகணும்ங்கிறங்கிற எண்ணமெல்லாம் சின்ன வயசிலேர்ந்து வரணும். அவுங்கவுங்க வளர்ந்த சூழல்தான் எல்லாத்துக்கும் காரணம்னு நினைக்கிறேன்''
 "உடம்பு முடியாதவங்க... நீதான் சொல்லிக் கூட்டிட்டு வரணும்... நா பார்த்துக்கிறேன்னு சொன்னீன்னா உற்சாகமாக் கிளம்புவாங்க. உன் பொண்டாட்டிய நீதானேண்ணா கவனிக்கணும்''
 "உடம்பெல்லாம் நல்லாத்தான் இருக்கு... மனசுதான் சரியில்லை''
 "என்ன சொல்றேண்ணா'' - இவனைக் கூர்ந்து பார்த்தாள் தேவகி. ஸ்ரீநிவாசன் வேறு வேலையில் கவனமாய் இருந்தான். எதையாவது சாக்கு வைத்துப் பேச்சு ஆரம்பிக்க வேண்டுமே...! இந்த முறை இந்த சப்ஜெக்ட் போல்ருக்கு...நினைத்துக் கொண்டான்.
 "இங்க வா...அடுப்படிக்கு வந்து சொல்லு...அவர் காதுல விழப் போகுது'' என்பதாய் சைகை காண்பித்தாள் தேவகி.
 "உன் பெண்டாட்டியபத்தி நீயே வேறே எடத்துல இப்படிப் பேசலாமா?'' என்பதான தங்கையின் சைகையையும் புரிந்து கொண்டான் சுந்தர்.
 அவன் எப்பவும் வெட்ட வெளிச்சம். இந்த மறைப்புச் சோலியெல்லாம் ஆகாது. பிடிக்கவும் பிடிக்காது. எதுக்கு மனுஷங்க இப்டி இருக்காங்க? என்று அலுத்துக் கொள்வான். உறவுகளே இப்டி ஆரம்பிச்சிட்டாங்களே? கல்யாணம் ஆகி, குழந்தை குட்டிங்கன்னு வந்துட்டா எல்லாம் மாறிடும் போலிருக்கு... மெüன பாஷை பேசிக்கிறாங்க... சொந்த அண்ணன், தம்பிகளே மாறில்ல போயிடுறாங்க... நாம அப்பா, அம்மாட்ட வளர்றவரைக்கும் இதெல்லாம் எதாச்சும் இருந்ததா?
 "எனக்கு அந்த வித்தியாசமெல்லாம் கிடையாது... நா எல்லாத்தையும் பட்டவர்த்தனமாத்தான் பேசுவேன். எல்லாரும் ஒண்ணுதான் எனக்கு. பெண்டாட்டிக்காக மறைச்சுப் பேசத் தெரியாது. பூசி மெழுகத் தெரியாது. எது சரியோ அதுதான்''
 சுந்தர் இதைச் சொன்னபோது ஸ்ரீநிவாசனின் கவனம் திரும்பியது. என்ன கேள்விக்கு இந்த பதில்? அவனின் பார்வை தொடர்ந்து உள்ளே அடுப்படியை நோக்கிப் போனது.
 ""மாப்ள சார்... நீங்க ஒண்ணும் நினைச்சிக்காதீங்க... நாங்க அண்ணா, தங்கை பேசிக்கிறோம்''
 ""தாராளமாப் பேசுங்க...இப்டி வெளிப்படையாப் பேசுறவங்களைத்தான் எனக்கும் பிடிக்கும். யோசிச்சு, யோசிச்சுப் பேசுறவங்க, தொண்டைக்குழிக்குள்ள முழுங்குறவங்களை நல்லாத் தெரிஞ்சு போகும். கண் ஜாடையெல்லாம் பண்ணிக்கிறாங்க...நினைச்சா சிரிப்புத்தான் வருது...பலதையும் பேசிக்கலாம்தான்...ஆனா அப்டி அப்டியே விட்ரணும். பகையா எதையும் நினைச்சிறக் கூடாது...அப்புறம் உறவு நிலைக்காது.''
 " கரெக்ட் நீங்க சொல்றது....மனுஷங்க மாறுபட்டு வித்தியாசமாத்தான் இருக்காங்க... ஒரே குடும்பத்துல பத்துப்பேர்னா, அந்தப் பத்துப் பேருக்கும் பத்துவிதமான குணம்...ஒண்ணு ஆட்டுக்கிழுக்கும்...ஒண்ணு மாட்டுக்கிழுக்கும்...அதெல்லாம் பெரிசுபடுத்தக் கூடாதுங்கிறது சரிதான்...ஆனாலும் வீட்டுப் பொம்பளைங்கதான் அரவணைச்சுக் கொண்டு போகணும்...இல்லைன்னா குடும்பங்கள் பிரிஞ்சு போயிடும். குடும்ப உறவுகள் அப்பத்தான் நிலைக்கும்''
 ""நீங்க என்ன சொல்றீங்க...? புரியும்படியாச் சொல்லுங்க...'' இப்படிக் கேட்டதன் மூலம் அவரும் அந்த விவாத வளையத்துக்குள் வந்து விட்டதாய் சுந்தர் நினைத்தான். இருப்பது அவர் வீடு. அவரை ஒதுக்கிவிட்டுப் பேச முடியுமா? எப்பொழுது இந்தக் குடும்பத்தில் அவர் மாப்பிள்ளை ஆனாரோ, அப்பொழுதே அவரும் கூடிக் கலந்து விட்டார் என்றுதானே பொருள்?
 ஒவ்வொரு முறை இங்கு வரும்போதும் ஏதேனும் ஒரு பொருளில் விவாதம் தொடங்கி விடுகிறது. அவசியத்தின்பாற்பட்டோ, அல்லது மனத் தாக்கத்தினாலோ...! இப்போது இந்தப் பேச்சு துவங்கியிருப்பது எதனால்? நினைத்துப் பார்த்தான் சுந்தர். உள் மன வருத்தங்கள்தான் என்று விடை கிடைத்தது. அது
 தாக்கம்தானே...!
 "அதாவது, நான் என்ன சொல்ல வர்றேண்ணா, நம்ம அம்மா, அப்பா, பெரியப்பா, சித்தப்பா, தாத்தா, பாட்டி, அண்ணி, அக்கா, தங்கை இவங்களெல்லாம் கூட்டுக் குடும்பமா இருந்தாங்க... எல்லா சுக துக்கங்கள்லயும் பங்கு கொண்டாங்க. ஆம்பளைங்களுக்குள்ளே எப்பயாச்சும் பிரச்னை வந்ததுன்னா, பொம்பளைங்க தலையிட்டு, அவங்க அரவணைப்புல, பக்குவமான பேச்சுல அது பெரிசாகாமத் தடுத்து, ஒற்றுமையை நிலை நாட்டினாங்க... பெரியவங்க பேச்சை சின்னவங்க கேட்டாங்க...
 மதிச்சாங்க... இப்போ அப்டி இல்லைன்னு சொல்ல வர்றேன்... பெரியவங்க பேருக்குத்தான் பெரியவங்களா இருக்காங்க... சின்னவங்ககூடப் பரவால்லன்னு தோணுது... ஏன்னா அவுங்க இந்த மாதிரி சென்டிமென்ட் விஷயத்துக்குள்ளயே போகுறதில்லை... எல்லாருமே டேக் இட் ஈஸின்னு ஆயிட்டாங்க''
 ஸ்ரீநிவாசன் சுந்தரையே பார்த்தான். அதை தேவகி கவனித்தாள். என்னவோ சங்கடத்தில் அவன் இருக்கிறான் என்று தோன்றியது. அதன் அடையாளம்தான் இந்தப் பேச்சு.
 ""காலம் மாறிப் போச்சு... அவுங்கவுங்க இருக்கிற இடத்து வசதிப்படி இருந்துக்கிறாங்க... உடம்பும் முடியணும்ல... ஒண்ணா இருந்தா, இந்தக் காலத்துல யாருக்குப் பாடுபட முடியுது?'' என்றாள் பொதுவாக.
 "உடம்பு முடியுதோ இல்லையோ...மனசு முடியலை. அதத்தான் சொல்லியாகணும். வரப்போறது நம்ம ப்ரதர் தானே, சிஸ்டர்தானேங்கிற ஒட்டுதலான எண்ணம் இல்லை...எடுத்த எடுப்புல எப்போ வர்றே? எத்தனை நாள் இருப்பே? ன்னா ஒருத்தர்ட்டக் கேட்குறது? அப்டிக் கேட்டா அங்க போகத் தோணுமா? வர்றேன்றவங்களை முதல்ல, வாங்க...வாங்கன்னு மனசு நிறைஞ்சு கூப்பிடணும்...தாராளமா வாங்கங்கணும்...இங்கயே தங்கிக்கலாம்...வேறே எங்கயும் போக வேண்டாம்ங்கணும்... அதுதான் மனம் ஒப்பின வரவேற்பு... அதெல்லாம் போச்சு''
 ""யாரு உன்னை அப்படிச் சொன்னா? எதுக்கு இப்டிப் புலம்புறே? உனக்கு எப்பத் தோணுதோ அப்பல்லாம் நீ தாராளமா இங்க வரலாம். நாங்க ஒண்ணும் சொல்ல மாட்டோம். எத்தனை நாள் வேணாலும் நீ
 இருந்துட்டுப் போகலாம். போதுமா?''
 "உன் மனசு தெரிஞ்சுதானேம்மா வந்திருக்கேன்...எங்க போனா நமக்கு மதிப்பும், மரியாதையும் இருக்குமோ அங்கேதானே போக முடியும்? விருப்பமில்லாத இடத்துக்குப் போய் வலிய உட்கார்ந்துக்கிட்டு, ஒரு வாய்ச் சோறு சாப்பிட முடியுமா?''
 பெரிதாகச் சிரித்தான் ஸ்ரீநிவாசன். "வந்த விருந்தினரை யாராச்சும் அப்டிக் கேட்பாங்களா? அதிலயும் உறவுகளை யாரும் அப்டிக் கேட்க மாட்டாங்க. நீங்களா எதுக்கு இப்டி நீட்சியாக் கற்பனை பண்ணிக்கிறீங்க?''
 ""நீங்க சொல்றீங்க மாப்ள...கற்பனையெல்லாம் இல்லை. அத்தனையும் நிஜமாக்கும்..கேட்குறவங்க இருக்காங்கன்னு சொல்ல வர்றேன்...இன்னைக்குக் கிளம்பி வர்றேன்னு சொன்னீங்கன்னா...மதியச் சாப்பாடு ரெடி பண்ணனுமான்னு கேட்டா உங்களுக்கு எப்டியிருக்கும்? இங்க சாப்டுக்கலாம்...நேரா வீட்டுக்கு வந்திருங்கன்னுல்ல சொல்லணும்... அதுதான
 மரியாதை? விரும்பி அழைக்கிறதுங்கிறது என்ன? சோத்துக்கு வர்றீங்களான்னு கேட்குறது மூலமா ராத்திரி தூங்கிறதுக்கு வாங்களேன்னு சொல்றாப்புலல்ல இருக்கு. அபத்தமாயில்லே? அப்டிக் கேட்குறவங்களோட மனசைக் கொஞ்சம் நினைச்சுப் பாருங்களேன். அதுதான் இங்க முக்கியம். உள் மனசுல இருக்கிறதுதானே வாய்ல வரும். மனுஷாளுக்கு வயசு மட்டும் ஆனாப் போதாது சார். மனசும் விசாலமடையணும்.''
 விடாமல் சிரித்தான் ஸ்ரீநிவாசன். எங்கயோ ஆளு நல்லா மாட்டியிருக்கார் போலிருக்கு...குத்துப் பட்டுட்டு வந்திருக்கார்னு தெரியுது... - நினைத்துக் கொண்டான்.
 ""பார்த்தியாம்மா தேவகி...உன் வீட்டுக்காரர் சிரிக்கிறதை? அவருக்கு இதுல ஒப்புதல்னு நினைக்கிறதா, மறுப்புன்னு நினைக்கிறதா? நீதான் சொல்லணும்'' சொல்லிவிட்டு தேவகியைப் பார்த்தான் சுந்தர்.
 ""நான் சிரிக்கிறது, மனுஷாளைக் குறிப்பா நோட் பண்ணியிருக்கீங்களே அதை நினைச்சு''
 ""பின்னே என்னங்க...ஒரு வீட்டுக்கு உறவுகள், அதுவும் நெருங்கிய சொந்த பந்தங்கள் அப்பப்போ வந்திட்டும், போயிட்டும் இருந்தாத்தானே அது வீடாயிருக்கும்...புருஷனும் பெண்டாட்டியும் மூஞ்சிய, மூஞ்சியப் பார்த்திட்டு இஞ்சி தின்ன குரங்காட்டம் உட்கார்ந்திட்டிருந்தா... அது நல்லாயிருக்குமா? எல்லாம் அம்மா, அப்பாவோட போச்சுங்க....மருமகள்கன்னு ஒவ்வொருத்தரா எப்ப உள்ளே நுழைய ஆரம்பிச்சாங்களோ...அப்பவே இந்த வித்தியாசமெல்லாம் வர ஆரம்பிச்சிடுச்சுங்க''
 "அப்போ அதுல உங்க ஒய்ஃப்பையும் சேர்த்துக்கலாமா? அண்ணியத்தான் சொன்னேன்'' அடக்க முடியாமல் சிரித்தான் ஸ்ரீநிவாசன்.
 "அதுலென்னங்க சந்தேகம்... பெண்கள் பெரும்பாலும் அந்த மனநிலைலதான் புகுந்த வீட்டுக்கு வர்றாங்கன்னு சொல்றேன்...நாமதான் அதை மாத்தணும்...நீ இப்டி இருக்க முடியாது...என்னைத் தனியாப் பிரிக்க முடியாது உன்னால... இந்தக் குடும்பத்துல எல்லாரோடையும் நீ சேர்ந்துதான் வாழ்ந்தாகணும்... நாம இருக்கிற இந்த வீட்டுக்கு என் அண்ணன்மார், தம்பி தங்கைகள்ன்னு எல்லாரும் வரப் போகத்தான் இருப்பாங்க.
 அதை நீ தடுக்க முடியாது...சேர்ந்து, கலந்து, சுமுகமா இருக்கப் பழகிக்கோ...அதுதான் உனக்கு நல்லதுன்னு எடுத்துச் சொல்லணும்''
 அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான் ஸ்ரீநிவாசன். விஷயம் எதில்தான் போய் முடிகிறது பார்ப்போம் என்று காத்திருப்பது போலிருந்தது அவன் அமைதி.
 "இப்போ யாரு உன்னை என்ன சொன்னாங்க...? எதுக்கு இப்டிப் புலம்புறே...? வெளிப்படையாப் பேசணும்னுட்டு நீயே மறைமுகமால்ல பேசுற...யாரைச் சொல்றே நீ? அத முதல்ல பளிச்சின்னு சொல்லு'' கூறிவிட்டு ஓரக் கண்ணால் பார்த்தாள் தேவகி. அவன் வாயிலிருந்தே வரட்டும் என்று.
 ""யார்ன்னும்மா குறிப்பிட்டுச் சொல்லச் சொல்றே? எல்லா மனுஷங்களுக்கும் மனசு மாறிப் போச்சு...கல்யாணம் ஆயிட்டா, மாறிடணும்னு இருக்கா? பிள்ளை குட்டி பெத்து, பேரன் பேத்திகள் எடுத்திட்டா மத்த உறவுகளோட பந்தம் அறுந்து போகுமா? யாரும் யார் வீட்டுக்கும் போகக் கூடாதா, வரக்கூடாதா? பெரிய சம்சாரி ஆனவனும் சரி, சம்சாரம் மட்டும்தான்னு கதியா இருக்கிறவனும் சரி, எல்லாப் பயலுக மனசும் மாறித்தானே போய்க் கிடக்குது... அவனவனப் பார்த்தா பயங்கர சுயநலமா இருக்கானுங்க... எப்பயாச்சும் சந்திச்சா, என்ன நீ பேசறதேயில்ல?... அப்டிங்கிறது...எடுத்த எடுப்புல எதிராளியக் கேள்வி கேட்டுட்டா அவன் முழிச்சிப் போவான்ல...? இந்த டெக்னிக்கெல்லாம் எனக்குத் தெரியாதும்மா...! ஃபோன் எல்லார்ட்டயும்தானே இருக்கு...? ஏன், இவன் பேசறது? இன்கமிங், அவுட்கோயிங் ரெண்டும் உண்டு ஃபோன்ல... அப்டீன்னா... திமிரு பிடிச்சவன்ங்கிறது......பாசமுள்ளவன், ப்ரதர்ங்கிற பிடிப்பு இருந்தா யார் வேணாலும் பேசலாமுல்ல...ரெண்டு வார்த்தை பேசிட்டா எங்க வந்து ஒட்டிக்குவாங்களோன்னு நினைச்சா? ஆனா நா அப்டியில்லம்மா...என் பொண்டாட்டியும் அப்டியில்ல... என் வீட்டுக்கு யார் வேணாலும் எப்ப வேணாலும் வரலாம், போகலாம்... தி டோர்ஸ் ஆர் ஆல்வேஸ் ஓப்பன் ட்டு ஆல்...! இந்த விஷயத்துல என் மனைவியே என்னைத் தடுக்க முடியாது... ஜால்ரா போடுறவன்தான் தயங்கணும்... பயப்படணும்... நான் ஜால்ரா இல்லை... ஆனா என் வீட்டுக்குத்தான் யாரும் வர மாட்டேங்கிறாங்க...அது எங்களோட முகராசியோ என்னவோ? அதான் சொன்னனே...கட்டன்ரைட்டாப் பேசுறவன எவனும் விரும்ப மாட்டாங்கிறதை...! வேண்டி விரும்பி நின்னா, விலகிப் போகும்னுவாங்க... அது எங்க அளவுல ரொம்பச் சரியா இருக்குது''
 "இப்பச் சொன்னியே அது நூத்துக்கு நூறு உண்மை... உடம்பு முடியாதவங்கதான் அண்ணி... ஆனா எல்லாரும் வரணும் போகணும்னு இருக்கிறவங்க... யாராச்சும் வீட்டுக்கு வந்துட்டா, அவுங்க முகத்துல சிரிப்பப் பார்க்கணுமே... அடிக்கடி சிரிக்காதவங்க முகம் மலர்ந்து சிரிச்சா அம்புட்டு அழகா இருக்குமாக்கும்... சந்தோஷம் அப்டித் துள்ளும்...கெüரி அண்ணி மனசே மனசு...வடிச்சிக் கொட்டிடுவாங்களே...வித விதமாக் காய்கறி வைப்பாங்களே...போன தடவை வந்திருந்தப்ப வெஜிடபிள் பிரியாணி செய்து போட்டாங்களே...புட்டு, ஆப்பம், குழிப்பணியாரம், வற்றல், வறுவல்னு அமர்க்களப்படுத்திட்டாங்களே...!.என்னா பிரமாதம்...அவுங்க செய்ததை விட, நீ உட்கார்ந்து அத்தனை காய்கறியையும் பாங்கா, பொறுமையா நறுக்கிக் கொடுத்த பாரு...அத மறக்க முடியுமா? அண்ணி உனக்கு நல்லாத்தான் ட்ரெயினிங் கொடுத்து வச்சிருக்காங்க...சரியான பொண்டாட்டிதாசன் நீ...! இதுல கெத்து வேறெயாக்கும்'' சொல்லிவிட்டு வெடிச் சிரிப்புச் சிரித்தாள் தேவகி.
 "அவ சொல்ற நல்லதுக்கு தாசன்...ஒத்துக்கிறேன்...எல்லாத்துக்கும் பெருமாள் மாடுமாதிரித் தலையாட்டுற சோலி நம்மகிட்டக் கிடையாது... ஆனா ஒண்ணு...உடம்பு முடியுதோ இல்லையோ, வடிச்சிக் கொட்டிருவா...திருப்தியா போட்ருவா எல்லாருக்கும்...உடல் நோவுனால முக்கி முனகிட்டே செய்வா...அது நாம இருக்கிறது பிடிக்கலையோன்னு பார்க்குறவங்களுக்குத் தோணும்...பொதுவா, உடம்பு படுத்துறவங்களே அப்டித்தான்...சிடு சிடுன்னு இருக்கிற மாதிரி இருக்கும்... முகத்துல சிரிப்பு, சந்தோஷம் தெரியாது... பார்க்கிறவங்களுக்கு வித்தியாசமாத் தெரியும்...நாம வந்தது பிடிக்கலையோன்னு நினைக்கக் கூட வாய்ப்பிருக்கு... நானே நினைச்சு பயந்திருக்கேன்...இப்டிச் சில குறைகள் உண்டுதான்... எம் பொண்டாட்டியானாலும் சொல்றதைச் சொல்லித்தானே ஆகணும்...'' சிரித்தான் சுந்தர். வெளிப்படையாய்,
 மனசு விட்டு எல்லாவற்றையும் பேசிக் கொள்வது எத்தனை ஆரோக்கியம்? இதை மொத்தக் குடும்பமும் புரிந்து கொண்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்? ஒவ்வொருவரையும் ஒவ்வொருவர் சரிவரப் புரிந்து கொள்வது நீடித்த, நிலைத்த குடும்ப ஒற்றுமைக்கு அடித்தளமல்லவா? அவரவர் இருப்பை அப்படி அப்படியே ஏற்றுக் கொள்வது வம்பில்லாத பாடாயிற்றே...!
 நிலைமை சற்று லகுவாவதை உணர்ந்த ஸ்ரீநிவாசனும் அந்தச் சிரிப்பில் பங்கு கொண்டான்.
 "உண்மைதான்... நான் கூட இங்க அப்டியெல்லாம் செய்றதில்ல...எனக்குக் காலைல பேப்பர் முழுக்கப் படிச்சாகணும்... இவ காயை நறுக்குங்கன்னா எனக்குக் கோபம்தான் வரும்... அபூர்வமா என்னைக்காச்சும் செய்திருப்பேன்... அது பேப்பர் வராத நாளாயிருக்கும்''
 "வருஷங்கூடி பொங்கல், தீபாவளி, சுதந்திர தினம், குடியரசு தினம்னு லீவு விடுவாங்களே...அதுக்கு மறுநாள் பேப்பர் வராதே...அதச் சொல்றீங்களா?
 நல்லாக் கேளுண்ணா...கொஞ்சம் கூட இரக்கமே கிடையாது இவருக்கு... அடுப்படி வேலைல பக்கத்துலயே வரமாட்டாராக்கும்... எனக்கு உதவியா துரும்பை நகத்த மாட்டார்... ஒரு தேங்காய்த் துருவல்ன்னாக்கூட நானேதான் செய்தாகணும்.''
 "இது ரொம்ப அபாண்டம்டீ... எத்தனை நாள் வீடு சுத்தப் படுத்தியிருக்கேன்... பெருக்குமார் எடுத்துக் கூட்டியிருக்கேன்... தினசரி வாசல் தெளிச்சனே... அதெல்லாம் கணக்கில்லையா? எத்தனை நாள் வாஷிங் மெஷின் போட்டிருக்கேன்...எதையுமே சொல்ல மாட்டேங்கிறியே...?''
 சுந்தர் பேசாமலிருந்தான். அவன் இதில் கருத்துச் சொல்வது உகந்ததில்லை என்று தோன்றியது. வந்த இடத்தில் புருஷன் பெண்டாட்டிக்குள் சண்டை மூட்டி விடுவதா வேலை?
 "அதெல்லாம் செய்வார்ம்மா...மாப்பிள்ளை செய்யாம உனக்கு வேறே யார் செய்யப் போறா? அவர்தானே உனக்கு எல்லாம்'' -
 ""நானும் செய்வேன்... ஆனா உங்கள மாதிரி என்னால செய்ய முடியாது... நீங்க வீட்டையே தூக்கில்ல நிறுத்துறீங்க... நமக்கு அந்தளவுக்கு ஆகாது... நான் வீட்டு வேலைகளுக்கெல்லாம் சின்ன வயசிலேர்ந்து அவ்வளவாப் பழகலை... வெளி வேலை சொல்லுங்க... எல்லாம் செய்திடுவேன்... கேட்டுப் பாருங்க... வீட்டுக்குத் தேவையானது அத்தனையும் ஒண்ணு விடாம வாங்கிப் போட்டிடுவேன்... அவ எதுக்கும் வெளிலயே போனதில்லை. எதுவும் குறை வைக்க மாட்டேன்... என்ன ஒரு சங்கடம்னா, இவ நச்சு...நச்சுன்னு, ஒவ்வொண்ணா தினசரி சொல்லிட்டிருப்பா... அதுதான் எனக்குப் பிடிக்காது... மொத்தமா எல்லாத்தையும் குறிச்சு ஒரு லிஸ்ட் கொடு...ஒரே ஸ்ட்ரோக்குல வாங்கிப் போட்டுடறேன்... பிட்டு பிட்டாச் சொல்லாதேன்னுவேன்... அதுதான் எனக்கு இவள்ட்டப் பிடிக்காதது...''
 புன்னகையோடு அத்தனையையும் கேட்டுக் கொண்டிருந்தான் சுந்தர்.
 வந்த இடத்தில் எதையோ தொட, எதுவோ ஆரம்பித்து எங்கெங்கோ சென்றுவிட்டது தெரிந்தது. எல்லாமும் பலவாறாய்த்தான் இருக்கிறது உலகில். மனிதர்கள் பலவிதம் என்பதுபோல், மனசுகளும் பலவிதமாய் மாறி நிலைத்து விட்டது அங்கங்கே. அதனால் உறவுகள் தனித்து நிற்கின்றன. ஏதோ அவ்வப்போது சந்தித்துக் கொள்ளும்போது ரொம்பவும் இஷ்டம் போல் கை குலுக்கிக் கொள்கிறார்கள். கட்டிக் கொள்கிறார்கள். முத்தம் கூடக் கொடுத்துக் கொள்கிறார்கள். ஒன்றாய்ச் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். காரியம் முடிந்தது என்று பிரிந்து விடுகிறார்கள். அத்தனையும் வேஷம். வெளி வேஷம். உள்ளே புகுந்து புறப்பட்டால்தான் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறுவது தெரியும்.
 ஆனாலும் இந்த அளவுக்காவது உறவுகள் நிலைத்து நிற்கின்றனவே என்றுதான் சொல்ல வேண்டும். நீ யாரோ, நான் யாரோ என்ற நிலை இன்னும் வரவில்லை!....காலம் போகிற போக்கைப் பார்த்தால் அந்த நிலையும் எட்டுமோ என்னவோ? ஆனாலும் கூட்டுக் குடும்பங்களுக்கான மகிமையே தனிதான். எத்தனையோ ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், எல்லாரும் ஒன்று, ஒருத்தருக்கொருத்தர் உதவி, உனக்காக நான், எனக்காக நீ, நமக்காக நாம் என்ற நிலை இருந்தது. இன்று அது அழிந்து போனது பெரிய துரதிருஷ்டம்தான்... நினைத்துக் கொண்டே மாடியை நோக்கிப் போனான் சுந்தர்.
 "உங்க அண்ணா தம்பிகளுக்குள்ளயே அத்தனை சுமுகம் இல்லைன்னு சொன்னனே...இப்பத் தெரியுதா?'' மெல்ல தேவகியின் அருகே சென்று அவள் காதைக் கடித்தான் ஸ்ரீநிவாசன்.
 "எல்லாரும் வேணும்னு நினைக்கிறவர் சுந்தர் அண்ணா... தன்னோட உடலுழைப்பை வித்தியாசமில்லாம, கெüரவம் பார்க்காம, அத்தனை பேர் குடும்பத்துக்கும் கொடுத்திருக்கார்... பணம்னாலும் அஞ்சமாட்டார். தயங்க மாட்டார். இன்னும் கொடுக்கிற மனசும் அவருக்குண்டு...சாகுற வரைக்கும் மத்தவங்களுக்கு உதவியா இருக்கணும்னு நினைக்கிறவர் அவர். எந்தவொரு பதட்டமான நேரத்துலயும் அவரைக் கூப்பிட்டாப் போதும். ஆபத்பாந்தவன். அதுக்கு பங்கம் வந்ததுதான் அவர் மனசைப் பாதிச்சிருக்கு. பாவந்தான்...நாலு நாளோ, ஒரு வாரமோ, அவரிஷ்டம் போல சந்தோஷமா, இங்க இருந்திட்டுப் போகட்டும்...சரியா? திருப்தியாச் செய்து போட்டு அனுப்பி வைப்போம்... மனசுக்கு ஆறுதலாயிருக்கும்... என்னைக்கானாலும் அவர் நமக்கு அணுக்கம்... மலையே கவுந்தாலும் ஒரு வார்த்தை சொல்லிக் கூப்பிட்டு விட்டா, மறு நிமிஷம் வந்து நிற்பார்... அவ்வளவு சப்போர்ட்டு. அம்புட்டு நல்ல மனுஷன்''
 மாடிப்படி ஏறும்போது லேசாய்க் காதில் விழுந்த தங்கையின் இந்த ஆதரவான வார்த்தைகள் கேட்டு சுந்தரின் நெஞ்சு விம்ம, கண்களில் நீர் கசிந்தது.
 உஷாதீபன்
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/13/w600X390/kd3.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/14/உறவுகள்-2844235.html
2844236 வார இதழ்கள் தினமணி கதிர் முதல் கவிதை இதழ் DIN DIN Sunday, January 14, 2018 12:00 AM +0530 முதல் கவிதை இதழை நடத்தியவர் பாவேந்தர் பாரதிதாசன். 1935-இல் வெளியான அந்த இதழின் பெயர் "கவிதா மண்டலம்' என்பதாகும். முழுக்க முழுக்க கவிதையிலேயே வெளியான அந்த மாத ஏட்டில், விளம்பரங்கள் கூட கவிதை வடிவில்தான் வெளிவந்தன.
 நெ.இராமன்
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/13/w600X390/kd4.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/14/முதல்-கவிதை-இதழ்-2844236.html
2844237 வார இதழ்கள் தினமணி கதிர் திரைக் கதிர் DIN DIN Sunday, January 14, 2018 12:00 AM +0530 * "டிக் டிக் டிக்' படத்தின் மூலம் தனது 100-ஆவது படத்தை நிறைவு செய்திருக்கிறார் டி.இமான். இந்தியாவின் முதல் ஸ்பேஸ் த்ரில்லர் படமாக உருவாகி வரும் படம் "டிக் டிக் டிக்'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடந்தது. ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் டி.இமான் பேசும் போது... "பொதுவாக கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ள படங்களுக்கு பின்னணி இசை அமைக்கும் போது ஏராளமான மாற்றங்கள் இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் வருவதற்கு முன்னரே இயக்குநர் ஒவ்வொரு காட்சியின் நீளம் குறித்தும், அதில் இடம்பெறும் விஷயங்கள் குறித்தும் விவரித்ததால் பின்னணி இசையை விரைவாக முடிக்க முடிந்தது. அதேபோல் என்னுடைய இசைப் பயணத்தில் இணைந்து பணியாற்றிய அனைத்து இசைக்கலைஞர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

• தீவிர அரசியலுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்த், தனது கொள்கைளை முன்னிலைப்படுத்தும் விதமாக ஒரு படத்தில் நடிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. 
இதுகுறித்து விசாரித்தபோது.... "ஷங்கர் இயக்கத்தில் "2.0' படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. பா.இரஞ்சித் இயக்கியுள்ளா "காலா' திரைப்படப் பணிகளும் நிறைவு பெற உள்ளன. இந்நிலையில் தற்போதைய அரசியல் பிரவேசத்தை தொடர்ந்து அடுத்து நடிக்க உள்ள படம், அரசியல் பின்னணி படமாக அமைந்தால் மக்களை நெருங்குவதற்கு மேலும் உதவியாக இருக்கும் என்பது அவரது கணிப்பு. ஆகவே, "2.0', "காலா' படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக நடிக்கும் படம் அரசியல் பின்னணி களமாக இருக்கட்டும் என்ற முடிவில் இருக்கிறார். அதோடு இயக்குநர்கள் ஷங்கர், பா.இரஞ்சித் இருவரிடம் அதற்கு தகுந்தமாதிரி கதை இருக்கிறதா என்பதையும் அவர் கேட்டிருக்கிறார். விரைவில் சரியான அறிவிப்பு இருக்கும்'' என்கின்றனர் ரஜினியின் நெருங்கிய வட்டாரங்கள். 

• 'துருவ நட்சத்திரம்', "சாமி 2' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம். இந்தப் படங்களைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்திற்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார். ராஜேஷ் எம்.செல்வாவின் கதையை விக்ரம் ஏற்றுக் கொண்டுள்ளார். கமலிடம் நீண்ட நாட்களாக இணை இயக்குநராக பணிபுரிந்து வருபவர் ராஜேஷ் எம்.செல்வா. "விஸ்வரூபம்' மற்றும் "உத்தமவில்லன்' படத்தில் சிறுகதாபாத்திரத்தில் நடித்தது மட்டுமன்றி, "தூங்காவனம்' படத்தையும் இயக்கியுள்ளார். ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பது உறுதி என்றும், கமலின் ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் குறித்து ராஜேஷ் எம்.செல்வா மறுத்து கருத்து எதுவும் தெரிவிக்காததால், இச்செய்தி உண்மை என்றே கருதப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் இப்படம் தொடங்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. 

• 'விக்ரம் வேதா' படத்தைத் தொடர்ந்து "மகளிர் மட்டும்' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார் மாதவன். தமிழில் பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தாலும், எதிலுமே ஒப்பந்தமாகாமல் இருந்தார். நிறைவான கதைகளுக்காக காத்திருந்த நிலையில் இயக்குநர் சற்குணத்தின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இப்போது அந்தச் செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதை இயக்குநர் சற்குணத்தின் தரப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. முழுக்க முழுக்க வெளிநாடுகளிலும், அடர்ந்த வனப்பகுதிகளிலும் இப்படத்தை உருவாக்கவுள்ளார்கள். கணேஷ் தயாரிக்கவுள்ள இப்படத்தை இயக்குவது மட்டுமன்றி, இணை தயாரிப்பாளராகவும் சற்குணம் பொறுப்பேற்கிறார். இப்படம் காடுகளில் நடக்கும் கதையை மையப்படுத்தியது. தாய்லாந்து, மங்கோலியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தில் "ஹாரி பாட்டர் அண்ட் டெத்லி ஹாலோஸ் பார்ட் 2' மற்றும் "ட்ராகுலா அண்டோல்டு' படங்களில் பணியாற்றிய ஹாலிவுட் சண்டைக்கலைஞர் க்ரே பரிட்ஜ் பணியாற்றுகிறார். மற்ற கதாபாத்திரங்களின் தேர்வு நடந்து வருகிறது. சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து குழந்தைகள் ரசிக்கும் விதமாகவும் காட்சிகள் அமைக்கப்படவுள்ளன. ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. 

* 'மெர்சல்' படத்தையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்துக்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்று செய்திகள் பரவி வந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் இதை மறுத்துள்ளார். "இது குறித்து யாரும் என்னிடம் பேசவில்லை'' என்று தெரித்துள்ளார். இதனால் விஜய் ஜோடியாக நடிப்பது யார் என்பது சஸ்பென்ஸாக உள்ளது. ரகுல் ப்ரீத் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடிப்பவர்களின் தேர்வும் நடந்து வரும் நிலையில், படத்துக்கான இசையமைப்பாளர் யார் என்பது குறித்தும் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அனிருத் இசையமைப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், ஏ. ஆர். ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சுமார் 10 வருட இடைவெளிக்குப் பின் ஏ.ஆர்.ரஹ்மான் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைகிறது. 
- ஜி.அசோக்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/13/w600X390/kd5.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/14/திரைக்-கதிர்-2844237.html
2844238 வார இதழ்கள் தினமணி கதிர் பேல்பூரி DIN DIN Sunday, January 14, 2018 12:00 AM +0530 கண்டது
• (பர்கூர் - குப்பம் சாலையில் ஒரு கிராமத்தின் பெயர்)
9 பனைமரம்
ராஜசிம்மன், கிருஷ்ணகிரி.

• (ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள ஒரு தனியார் நூலகத்தின் பெயர்)
வளர்பிறை
கே.முத்துச்சாமி, 
தொண்டி.

• (அறந்தாங்கி - புதுக்கோட்டை சாலையில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
அழியா நிலை
ப.விஸ்வநாதன், கீரமங்கலம்.

• (சென்னை கிழக்கு தாம்பரத்தில் ஓர் உணவகத்தில்)
வீட்டுச் சமையலுக்கு ஒரு நாள்
விடுமுறை கொடுங்கள்.
சுகந்தா ராம், சென்னை-59.

கேட்டது
• (திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இளைஞர்களிருவர்)
"மச்சான் அவளுக்கு ரெண்டு மூணு முறை லவ் 
ப்ரபோஸ் பண்ணிட்டேன். பதிலே இல்லை''
"சரி விடு... மறுபடியும் ஏன் ஃபாலோ பண்றே''
"அட... என்னையக் காதலிக்காட்டியும் பரவாயில்லை. வேற யாரையும் காதலிக்கலைன்னு தெரிஞ்சா... அது போதும்... மனசு நிம்மதியடையும்''
எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.

• (செங்கோட்டை அம்மன் சன்னதித் தெருவில் ஒரு வீட்டில்)
கணவன்: நான்தான் சொன்னேன்ல... அவன் கிட்ட பேச்சு கொடுக்காதே... எதைக் கேட்டாலும் "வள்..வள்..'ன்னு விழுவான்னு.
மனைவி: நீங்க மட்டும் என்ன ரொம்ப அன்பாத்தான் பேசுறீங்களா? உங்களை மாதிரிதானே உங்க பிள்ளை இருப்பான்.
ச.லெட்சுமி, செங்கோட்டை.

எஸ்எம்எஸ்
பேய் படத்தை பார்க்கும்போது கூட 
வராத திகில்... 
திடீர்ன்னு பாக்கெட்ல போன் 
இல்லைன்னதும் வந்துருது.
ஜெ.சுவாமிநாதன், 
ஆனைக்காரன்சத்திரம்.

யோசிக்கிறாங்கப்பா!
நாலு பேர் நாலுவிதமாய்
நம்மைப் பற்றி பேசாவிடில்
நாம் வாழும் வாழ்க்கை
அர்த்தமற்றதாகிவிடும்.
ஜி.சுந்தரராஜன், திருத்தங்கல்.

அப்படீங்களா!
அழகுக்காக பச்சை குத்துவதைப் பார்த்திருக்கிறோம். இதயத்துடிப்பு, மூளையின் இயக்கம், நரம்பு- தசை செயல்பாடு ஆகியவற்றை அறிவதற்காக
Micro electronic tatoo என்ற பச்சை குத்தும் முறையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.
இந்த பச்சைக் குத்துவதற்கான மை-ரப்பர், பாலிமரின் மூலப் பொருள்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட மனிதத் தோலில் உள்ளதைப் போன்ற பொருள்களைக் கொண்டது இந்த மூலப்பொருள்கள். பச்சை குத்தும்போது தோலில் கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு மிகச் சிறிய டிரான்சிஸ்டர்கள், மின் கடத்திகள் எல்லாம் பொருத்தப்படுகின்றன. சூரிய ஒளியால் மின் ஆற்றல் பெற்று செயல்படும் இது, இதயத் துடிப்பு, மூளையின் இயக்கம், நரம்பு - தசை ஆகியவற்றின் செயல்பாடுகளைப் பற்றிய தகவல்களை தூரத்தில் உள்ள கணினிக்கு அனுப்புகிறது. உடலில் சுரக்கும் என்சைம்கள் பற்றியும் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். 
என்.ஜே., சென்னை-69.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/13/w600X390/kd6.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/14/பேல்பூரி-2844238.html
2844239 வார இதழ்கள் தினமணி கதிர் மைக்ரோ கதை DIN DIN Sunday, January 14, 2018 12:00 AM +0530 பேராசை மிக்க டாக்டர் ஒருவர் அதிகக் கட்டணம் கிடைக்கும் நோயாளிகளாகப் பார்த்துத்தான் வைத்தியம் பார்ப்பார். 
ஒரு ஏழைக் குடியானவன் தனது மனைவிக்கு உடல் நலம் சரியில்லை என்று டாக்டரிடம் அழைத்து வந்தான். டாக்டர் நோயாளியைப் பரிசோதிப்பதற்குப் பதிலாக குடியானவனின் பண நிலை பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினார். குடியானவன் அந்த அளவுக்கு வசதியில்லாதவன் என்று தெரிந்ததும், "வேறு டாக்டரிடம் உன் மனைவியை அழைச்சிட்டுப் போ'' என்று கூறிவிட்டார். குடியானவன் மிக அதிகமாகக் கெஞ்சவே, வேறு வழியின்றி வைத்தியம் பார்க்க டாக்டர் ஒத்துக் கொண்டார். எனினும் குடியானவனின் மனைவியைக் காப்பாற்ற முடியவில்லை. அவள் இறந்துவிட்டாள். குடியானவனிடம் டாக்டர் சிகிச்சைக்கான பணத்தைக் கேட்டார். குடியானவன் மறுத்துவிட்டான்.
டாக்டர் குடியானவன் மீது வழக்குத் தொடர்ந்தார். நீதிபதி டாக்டரைப் பார்த்துக் கேட்டார்:
"குடியானவன் மனைவியை நீங்கள்தான் கொன்றீர்களா?''
"இல்லை''
"நீங்கள்தான் அவன் மனைவியைப் பிழைக்க வைத்தீர்களா?''
"இல்லை''
"அப்படியானால் குடியானவன் மனைவிக்கு நீங்கள் எந்த வைத்தியமும் செய்யவில்லை. அதனால் குடியானவன் உங்களுக்கு ஒரு பைசா கூட தரத் தேவையில்லை''
ஆதினமிளகி, வீரசிகாமணி.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/13/w600X390/kd7.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/14/மைக்ரோ-கதை-2844239.html
2844240 வார இதழ்கள் தினமணி கதிர் சிரி... சிரி...  DIN DIN Sunday, January 14, 2018 12:00 AM +0530 • மனைவி: மரியாதையாச் சொல்லுங்க... நேத்து ராத்திரி உங்க கனவுல யார் வந்தா?
கணவன்: சத்தியமா நீதான் வந்த...
மனைவி: பொய் சொல்லாதீங்க... தூக்கத்துல சிரிச்சீங்களே...
சி.ரகுபதி, போளூர்.

• "வந்த திருடன் போயிட்டான்''
"பயத்தில ஒளிஞ்சிக்கிட்டிருக்கிற நம்ம டாமியை வெளிய வரச் சொல்லு''

• "மஞ்சள் கலர் மாத்திரை வச்சிருந்தேனே... எங்கே?''
"அடடா... மாத்திரையா அது? சந்தன வில்லைன்னு நெனைச்சு கரைச்சு வச்சிட்டேனே''
பர்வதவர்த்தினி, 
சென்னை-75.

• "உள்ளே யார் விசும்பறது?''
"என் மனைவிதான் சீரியல் பார்த்து அழுறாள்''
" இப்ப சத்தமா அழறாங்களே... ஏன்?''
"கரண்ட் கட்டாகியிருக்கும். அதான்''
எம்.ஏ.நிவேதா, 
அரவக்குறிச்சி.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/13/w600X390/kd8.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/14/சிரி-சிரி-2844240.html
2844241 வார இதழ்கள் தினமணி கதிர் கொடுக்கலும் வாங்கலும் DIN DIN Sunday, January 14, 2018 12:00 AM +0530 எவ்வளவு நேரம்தான் ரோட்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருப்பது. எப்பவும் மெயின்ரோட்டில் காணும் கலவையான மனிதர்களும் விதவிதமான மோட்டார் சைக்கிள்களும் கண்ணையும் மனதையும் கவரும். ஆனால் தற்போதய மனநிலையில் சலிப்புத்தட்டியது. நேர் எதிரே எட்வர்டு மேல்நிலைப்பள்ளி, சாத்தூர் என்று சுவரில் பெரிதாக எழுதப்பட்டிருந்தது. இடப்பக்கம் வரிசையாய் பெண்கள் கூடைகளில் வெள்ளரிப்பிஞ்சுகளை அடுக்கி வைத்திருந்தார்கள். பஸ் வந்தால் வேகமாய் ஓடிச்சென்று வியாபாரம் பார்ப்பதும் மற்ற நேரங்களில் உட்கார்ந்திருப்பதுமாய் பகலெல்லாம் தொடரும் வியாபாரம். ஒருசிலர் கூடைகளில் பூம்பிஞ்சுகளாய் இருந்தது. பூவிருக்க பிடுங்கிய பிஞ்சுகளில் ஓர் ஓரத்தில் ஒட்டியிருந்த வெள்ளை நிறத்திலான குட்டிப்பூ அடித்த வெயிலில் அவர்களின் முகங்களைப்போல் வாடிப்போய் இருந்தது. மாலை வேளை என்பதால் அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் எல்லாம் அக்கம் பக்கம் கூட திரும்பாமல் வேகவேகமாய் அவரவர் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். லட்சுமிகாந்தன் தன் பையனை ஒருகையில் பிடித்துக் கொண்டு இன்னொரு கையில் புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு ரோட்டுக்கு எதிர்ப்புறம் சென்று கொண்டிருந்தார். பையன் எதையோ கையைக் காட்டி கேட்க ஏறக்குறைய இழுத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார். ரோட்டில் "சர் சர்' என்று செல்லும் எல்லோரும் பெரும்பாலும் மோட்டார் சைக்கிள்தான். டிவிஎஸ் 50 மாதிரியான சின்ன வண்டிகளே அருகிப் போய்விட்டது. பெரிய பெரிய வண்டிகள்தான். பெரிய நகரங்களில் பழைய புல்லட் திரும்பும் இடமெல்லாம் "தட தட'வென ரோட்டை அதிர வைக்கிறது. கல்லூரி மாணவர்களுக்கு அதில் போகத்தான் பிடித்திருக்கிறது. "தடதட'வென்று வேகமாகப் போகும்போது பெற்றோர்களின் இதயங்களும் அப்படித்தானே அடித்துக் கொள்ளும். டீ சாப்பிடாதது தலை வலிப்பது போல் இருந்தது. எப்பவும் இந்நேரம் வீட்டில் டீ சாப்பிட்டுவிட்டு ஹாயாக டிவியில் பொழுது போய்க்கொண்டு இருக்கும்.
 முருகேசனை இன்னும் காணோம். கடையில் வேலை பார்க்கும் பையன் இன்னும் அந்த துருப்பிடித்த ரிம்மை விடாமல் துடைத்துக் கொண்டிருந்தான். சுற்றிலும் ஸ்பேனர்களும் பழைய வண்டியின் கழற்றிப் போட்ட பாகங்களும் ஒரே யுத்த களேபரமாய்க் கிடந்தது. இரண்டுமுறை கேட்டாகிவிட்டது மனப்பாடம் செய்து ஒப்புவிப்பவன் போல, ஒரே
 பதிலை சரியாகச் சொன்னான் சிறுவன்.
 "இப்ப வந்துடுவேன்னு சொல்லிட்டுப் போனார் சார்'' இனியும் கேட்க முடியாது அப்படிக் கேட்டால் நம்மை ஒருமாதிரி நினைத்துவிடுவான். கைபேசியில் தொடர்புகொண்டால் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாய்க் கூறிக்கொண்டு இருந்தது. எங்கே போயிருப்பான். ஒருவேளை நாம இருக்குறது தெரிஞ்சுதான் வராமல் இருக்கிறானோ... சந்தேகமாய் இருந்தது. ஒருத்தனை நம்பியது பாவமா? இத்தனை நாள் இப்படி நம்மகிட்ட அவன் நடக்கலியே. நடக்கலியே என்ன நாம அவனைப்பத்தி தெரிஞ்சுக்கலை... அவ்வளவுதான். கோவத்துல நல்லா திட்டிடலாமுன்னு வந்தா, பார்த்தவுடன் சிரிச்சிடுறான். உடனே கோபமெல்லாம் எங்க போகுதுன்னு தெரியலை. நம்மளுக்கும் மொகத்துல கெந்தலிப்பு வந்துடுது. வந்த சோலிய மறந்துட்டு பேச்சு எங்கெங்கோ போயி எதுலயோ முடியுது. பேச்செல்லாம் முடிந்து சரியாய்க் கிளம்பும்போது பார்ப்போமுன்னு சொல்லும்போது "பூம்பூம்' மாடு மாதிரி தலையாட்டிக்கிட்டு ஊமக்கொட்டானா திரும்பி வந்துடுறது. அடுத்த வாரம் பார்ப்போம் அல்லது ஒரு பத்து நாள் ஆகட்டும் இப்படி மறைமுகமாய் சிக்னல் கொடுத்து பேசினாக்கூட சரின்னு புரிஞ்சுக்கலாம். அவன் அந்த நினைப்பே இல்லாதது மாதிரி போயிட்டு வான்னுட்டு வேறு வேலைய பார்க்க ஆரம்பிச்சுடுறான். அந்த நேரத்துல கண்டிசனா ரெண்டு வார்த்தை பேச முடியலை. பேசுறதுக்கு மனசு வரமாட்டேங்குதே... கூடப்படித்தவன் மட்டுமல்லாமல், படிக்குற காலத்துல அவன்தான் லீடர். எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பில் உடன் படித்தவன்.
 பணிமாறுதலில் சாத்தூர் வந்து ஏறக்குறைய ஒருமாதமாகிவிட்டபின் ஒருநாள் மாலையில் இனிப்பு கடையில் சேவு வாங்கிவிட்டுத் திரும்பும் போது தோளில் ஒரு கை விழுந்தது. "என்னப்பா எப்படி இருக்கே'. யார் இவர் பார்த்த ஞாபகமே இல்லையே. நினைவு அடுக்குகளை கிளறிப் பார்த்தும் பலன் இல்லை. காக்கி பேன்ட் கலர்ச்சட்டையில் கையெல்லாம் கிரீஸ் கருப்பாய் ஒட்டியிருக்க சிரித்த முகம். தலையெல்லாம் நரைத்து கொஞ்சம் வயதான தோற்றம். நேத்து சாப்பிட்டதே ஞாபகம் இல்லை.
 ""நேரிடையாகவே "சார் நீங்க...?' "என்னப்பா மறந்திட்டியா? ஒங்கூட படிச்ச முருகேசன்'' கடைவாய்ப்பல் தெரிய வெள்ளந்தியாய்ச் சிரித்தான். படிக்கிற காலத்தில் இவன்தான் பெரிய பையன். லீடருங்குற கித்தாப்பு வேற. பயங்கர ஆட்டம்தான். ஃபுட்பால் டீமில் இவன்தான் புல்பேக். இந்தக் கடைசியில் இருந்து பந்தை அடித்தால் அந்தக் கடைசிக்குப் போகும். படிக்கிற காலத்தில் இவனுக்கென்று ஒரு செட் கூடவே திரிவார்கள். என்னையெல்லாம் அதில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். அந்தச் சமயத்தில் நான் நறுங்கிப் போய் பொடியானாய் இருப்பேன். ரொம்ப நாளைக்குப் பின் எதிர்பாராத சந்திப்பு. அப்போது மீண்டும் துளிர்விட ஆரம்பித்த பழக்கம். வண்டியில் சின்னச்சின்ன வேலைகளுக்காக வரும்போது பள்ளி நாட்களை சிலாகித்துக் கொண்டோம். போகும் போதெல்லாம் வம்படியாய் வேண்டாமென்றாலும் கேட்காமல் டீ வாங்கிவர பையனை அனுப்பிவிடுவான். டீ வாங்கி கொடுத்து நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டானே. சின்னப் பையனாய் இருக்கும் போது பழகியது. இத்தனை வருசத்துக்கு அப்புறம் எப்படியெல்லாம் மாறியிருப்பான் என்பது அந்தநேரத்தில் மரமண்டைக்கு ஏறவில்லை. ரொம்பத்தான் நம்பிட்டோம் போல... சின்ன வயசுல இருக்குற மாதிரியேவா இப்பவும் இருப்பாங்க.
 ""சார்... சார்..'' திரும்பினால் ப்ரியாகார்த்தி.
 "என்ன சார். ரொம்ப யோசனையா உட்கார்ந்திருக்கீங்க''
 "இல்லை முருகேசனைப் பார்த்துட்டு போகணும் அதான்...'' இழுத்தேன்.
 "என்ன சார் வண்டியில ஏதாவது பிரச்னையா? கோயிலுக்கு அந்தப் பக்கம் உள்ள மெக்கானிக் கடையில பார்த்துடலாமா?''
 "இல்ல சும்மாதான் பார்த்துட்டு போகலாமுன்னு இருக்கேன்''
 "ஓ... அப்படியா வாங்களேன் ஒரு டீ சாப்பிடலாம்''
 "இல்ல பரவாயில்லை இப்பதான் சாப்பிட்டேன்''
 "சரி சார் பார்ப்போம்'' கிளம்பிவிட்டார்.
 ஒருநாள் காலை ஏழு மணிக்கெல்லாம் வீடு தேடி வந்துவிட்டான் முருகேசன். எப்பவும் வந்ததில்லை. பார்த்தவுடன் திகைப்பாய் இருந்தது. வீடுகட்ட இடம் பார்க்க வேண்டும் என்று கூறிக்கொண்டு இருந்தான். அது சம்பந்தமாய் வந்திருப்பானோ? வீட்டுக்குள் வற்புறுத்தி அழைத்தும் வரவில்லை. பக்கத்துக்கடையில் டீ சாப்பிட்டுக்கொண்டே, ""பையனுக்கு பீஸ் கட்டணும். இன்னைக்கு கடைசிநாள் ஒரு ஐயாயிரம் ரூபாய் உடனே வேண்டும்'' அதே புன்னகை மாறாத முகம். பதிலே பேசவில்லை நான்.
 ""கொஞ்சம் இரு வாரேன்'' என்று வீட்டுக்குச்சென்று பணத்தை எடுத்துவந்து கொடுத்தேன். பையனுடைய படிப்பு விசயம் என்றவுடன் வேறு எதுவும் கேட்கத் தோன்றவில்லை. ""ரெண்டு நாளில் தருகிறேன்'' என்று சொல்லிச் சென்றான். அதன் பின் ஒரு மாதத்திற்கு அதைப்பற்றிய ஞாபகமேஇல்லை. எப்பவாவது அசந்து மறந்து வண்டியில் எதிர்படும்போது ஒரு வணக்கம் வைக்கிறதோட சரி. நானும் கேட்கவில்லை. அவனும் அதைப்பற்றி பேசவில்லை. பணம் வந்தவுடன் கொடுத்துவிடுவான் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு பணத்தைப் பற்றி கேட்கவே இல்லை. இரண்டு மாதமாயிடுச்சு. அவனும் தரவில்லை நானும் அதைப்பற்றி கேட்கவில்லை. முருகேசனின் மெக்கானிக் கடைப்பக்கம் பெரும்பாலும் போகவில்லை. அப்படியே போகவேண்டிய வேலை வந்தாலும் அவனைப் பார்க்காமல் போய்க் கொண்டிருந்தேன். ஏதோ பணமுடையில் இருப்பான் போல கிடைத்ததும் கொடுத்துவிடுவான் அதற்குள் அவனை ஏன் சங்கடப்படுத்த வேண்டும்? என்று அவன் முகத்தை பார்ப்பதைத் தவிர்த்தேன். பெரும்பாலும் அவன் கடைக்கு போகாமல் இருந்ததற்கு காரணம் நம்மைப் பார்த்தவுடன் பணத்தை கேட்கத்தான் வந்திருக்கிறானோ என்று நினைத்து அவன் மனது வேதனைப்படக் கூடாது என்பதற்குத்தான்.
 வண்டியில் ஏற்படும் சின்னச் சின்ன வேலைகளைக் கூட தூரமாய் இருந்தாலும் பரவாயில்லை என்று வேறு இடங்களில் பார்த்துக் கொண்டேன். எக்குத்தப்பாய் பார்க்கிற இடங்களில் மனசுக்குள் ஏதோ சஞ்சலம்... இயல்பாய் இருக்க முடியவில்லை. கடன் வாங்கியவர்கள்தானே இப்படியெல்லாம் மனசுக்குள் மறுகித் தவிப்பார்கள். நம்ம விசயத்துல எதிர்மறையாய் இருக்கிறதே. ஒருவேளை அவனும் அப்படித்தான் மறுகித்தவிப்பானோ. பார்த்தால் அப்படித் தெரியவில்லையே. எப்பவாவது பேசுற காலத்துல மனசுக்குள்ள அந்த தவிப்பும் சங்கோஜமும் நமக்குத்தான் இருக்குது. அவனைப் பார்த்தால் எப்பவும் போலத்தான் இயல்பாய் எதுவுமே நடக்காதது போல அல்லது கடன் வாங்கியதையே மறந்து விட்டது போலத்தான் பேசுகின்றான். நாலு மாதம் முடிந்துவிட்டது முருகேசன் பணம் வாங்கி. மெதுவாய் பணத்தை வாங்கிக் கொள்ளலாம் என்று மறந்து இருக்க முடியவில்லை. அவனைப் பார்க்கும்போது பணத்தைப்பற்றி பேசாமல் இயல்பாய் அவன் இருப்பதைப் பார்த்தால் மண்டைக்குடைச்சலாய் இருந்தது. வேலை செய்யும் இடத்தில் கூட இந்த நினைப்பே ஓடி இயல்பாய் இருக்க முடியாமல் தடங்கல் செய்தது. போற போக்கைப் பார்த்தால் அவனாகக் கொடுக்கமாட்டான் போல இருந்தது, அவன் நடவடிக்கை. பேச்சுவாக்கில் கூட கடன் வாங்கியதைப்பற்றி அசந்து மறந்துகூட பேசமாட்டேன்றானே. ஒருநாளைக்கு வீட்டுக்கு போய்க் கேட்டுவிடலாம் என்றால் அவன் வீடு இருக்கின்ற இடம் கூடத் தெரியாது. அந்த லட்சணத்துலதான் நம்ம பழக்கம் இருந்திருக்கு. கடன் கேக்குற அவன் வீட்டை தெரிந்து வைத்திருக்கிறான். கடன் கொடுத்தவன் வீடு எங்க இருக்குதுன்னு தெரியாமல் இருக்கிறேன்.
 "பொறுத்தது போதும் பொங்கி எழு' என்று உள்மனது தட்டி எழுப்பிக் கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் பணமுடை வேறு சேர்ந்துகொள்ள மனதைத் திடப்படுத்திக் கொண்டு, வீறுகொண்டு கிளம்பிப் போகும் போதுதான் அவ்வளவு எளிதில் முருகேசனைப் பார்க்க முடியவில்லை. போற நேரமெல்லாம் மதுரை கோவில்பட்டி சிவகாசி என்று ஏதாவது ஒரு வெளியூர் போயிருப்பதாய் கடைப்பையன் கூறுவான். செல்போன் பலநேரங்களில் தொலைதொடர்புக்கு அப்பால்தான். இதையெல்லாம் மீறி ஒருநாள் அலுவலகத்தில் வேலை இருப்பதாய் வீட்டில் கூறிவிட்டு மாலையில் முருகேசன் கடையில் வந்து உட்கார்ந்து கொண்டேன். கண்டிப்பாய் இன்று கேட்டு வாங்கி விடவேண்டும் என்று மனதில் திடசங்கல்பமெடுத்து காத்திருந்தேன். அன்று சீக்கிரமாகவே வந்து ஆச்சரியப்படுத்தினான். "டீ சாப்பிடுவோமா?' என்று கேட்டபோது சட்டடியாய் மறுத்துவிட்டேன். மனதை உசுப்பேத்தி உசுப்பேத்தி டெம்பராய் இருந்தால்தான் கறாராய்ப் பேசமுடியும். மனதையும் முகத்தையும் கடுமையாய் வைத்துக்கொள்ள நினைத்து தோற்றுக் கொண்டிருந்தேன். பேச்சை ஆரம்பிக்கும் நேரத்தில் பழைய வண்டி விசாரிக்க வந்த ஒருவருடன் பேசுறான் பேசுறான் பேசிக்கிட்டே இருக்கான். அந்த ஆளும் விடாமல் பேசிக்கொண்டே இருக்கிறார். மனுசனுக்கு
 எப்படி எல்லாம் சந்தேகம் வரக்கூடாதோ அப்படிப்பட்ட சந்தேகமெல்லாம் வந்து முத்தாய் உதிர்ந்து கொண்டிருந்தது. முருகேசன் சிரிச்சுக்கிட்டே பதில் சொல்லிக் கொண்டு இருந்தான். உட்கார்ந்து இருந்த எனக்கு பொறுமை இழந்துவிட்டது. இந்த நேரத்தில் எப்படிக் கேட்பது என்று கிளம்பிவிட்டேன்.
 வகைதொகை இல்லாம மாட்டுற மாதிரி ஒருநாள் முருகேசன் காய்கறிக் கடையில் எக்குத்தப்பாய் மாட்டிக்கொண்டான். மனசை ஒருமாதிரி தயார் செய்துகொண்டு முகம் பார்த்து இயல்பாய்ப் பேசுமுன் கேட்டுவிட்டேன்.
 ""முருகேசா ரொம்ப டைட்டா இருக்குது... பணம் வேணுமே'' கேட்டவுடன் எப்பவும் போன்ற முகமலர்ச்சியுடன், "மதுரைக்கார அண்ணாச்சி ரெண்டுலட்சத்துக்கு செக் கொடுத்திருக்கிறார். பணம் இன்னும் போடவில்லை. ரெண்டு நாளில் கொடுத்துடுறேன்''
 அன்றைக்கு சரியென்று உடனே திரும்பிவிட்டேன். வீட்டுக்கு வந்தபின்தான் யோசித்தேன். இவன் என்னடா லட்சக்கணக்கில் பேசுறான் ஐயாயிரம் கொடுத்து அஞ்சு மாசமாச்சு. உண்மையைத்தான் பேசுறானா இல்லை எல்லோரையும் போல நம்மையும் ஏமாத்துறானா? அன்று முழுவதும் மனக்குழப்பத்திலேயே தூக்கம் வராமல் சஞ்சலப்பட்டதுதான் மிச்சம்.
 ரெண்டு நாள் தவணைக்குப் பதிலாக ஒருவாரம் கழித்து விடக்கூடாது என்று திரும்பத் திரும்ப படையெடுத்து அலுத்துச் சலித்துவிட்டது. ஒரு நாளைக்கு ஒரு காரணம். புதிது புதிதாய் சிரித்துக்கொண்டே சொல்ல பதிலுக்கு எவ்வளவுதான் முயற்சித்தாலும் கடுமையாய் பேச முடியவில்லை. மீண்டும் மீண்டும் பழைய குருடி கதவைத் திறடிங்கற கதையாய் தலையை ஆட்டிவிட்டுத் திரும்புவதும் வளமையாகிவிட்டது. தினசரி காலையில் எழுந்ததும் இதே நினைப்பு நிம்மதி இழக்கச் செய்கிறது. காலை எழுந்ததும் இந்த நினைப்பு மண்டைக்குள் ஏறி உட்கார்ந்து கொள்கிறது. அதே யோசனையில் மெம்மறந்து பித்துப்
 பிடித்த மாதிரி உட்கார்ந்து நினைவோட்டம் சுற்றி சுற்றி வர நேரம் போவது தெரியாமல் இருந்த இடத்திலேயே இருப்பது தொடர்ந்தது. இயல்பான நடவடிக்கைகள் வேறுபட்டுப் போனது.
 "ஆபிசில் ஏதும் பிரச்னையா, யாராவது ஏதும் சொல்லிட்டாங்களா... பின்னே ஏன் ஒருமாதிரி இருக்கீங்க?வர வர உங்க நடவடிக்கையே சரியில்லையே.. இப்ப என்ன குடிமுழுகிப் போச்சுன்னு இப்படி மெகாலு மாதிரி இருக்கீங்க... என்ன கப்பலா கவுந்து போச்சு'' அசிங்கமாக் கனாக் கண்டவன் வெளியே சொல்ல மாட்டாங்குற மாதிரி ஆகிப்போச்சு என்னுடைய நிலைமை. என்னதான் இல்லையென்று சொன்னாலும் முகம் காட்டிக் கொடுத்து விடுகிறதே, மறைக்க முடியாமல் அல்லது மறைக்கத் தெரியாமல்.
 வெறும் ஐயாயிரம்தானே? இதற்கு போய் மனதை இப்படி அலட்டிக்குவானேன் என்று உள்மனது சொன்னாலும் அதன் குரல் மேலெழும்ப விடாமல் அமுங்கிப்போய் விடுகிறது. இவனிடம் எப்படித்தான் வாங்குவது மனம் ஒரு போராட்டமே நடத்திக் கொண்டு இருந்தது.
 மணி ஏழே முக்கால். ""டேய் தம்பி இதப் பஞ்சர் பாருடா...
 ""போங்க சார்! இத எத்தனை தடவைதான் பாக்குறது. வழு வழுன்னு டயர வச்சிக்கிட்டு வேற மாத்தச் சொன்னா மாத்துறீங்களா?'' சடைச்சுப் புளிச்சு பதில் கூறிக்கொண்டிருந்தான். திடீரென்று ஒரு ஐடியா... இப்படியும் செய்யலாமே.
 "என்ன சார் கிளம்பிட்டீங்க?''
 ""முருகேசன் வந்தா நான் வந்துட்டுப் போனேன்னு சொல்லு''
 "என்னப்பா வேலைக்குப் போகலியா?'' முருகேசன் ஆச்சரியமாய்க் கேட்டான்.
 "ஒரு சின்ன வேலை இருந்துச்சு... அதோட வண்டிக்கு டயர் டியூப் மாத்திடலாமுன்னு இருந்துட்டேன்''
 "இது இன்னும் ஆறுமாசத்துக்கு ஓடும்ப்பா... அதுக்குள்ள ஏன் மாத்தணுங்குறே?''
 "அடிக்கடி பஞ்சர் ஆகுதுப்பா... இருக்கட்டும் நீ மாத்தி விட்டுரு''
 "எந்த கம்பெனி டயர் வாங்க?''
 "நல்ல டயர் டியூபாய் வாங்கு. ரேட் கூட இருந்தாலும் பரவாயில்லை''
 என்ன நினைத்தானோ மளமளவென வேலை நடந்தது. அடுத்த அரைமணி நேரத்தில் வேலையை முடித்துவிட்டான். புதிய டயர் மாட்டியவுடன் வண்டி கொஞ்சம் பார்வையாய் இருப்பது போல் தோன்றியது. வண்டியை ஸ்டார்ட் செய்தேன். முருகேசன் ஒரு சீட்டை நீட்டினான். மொத்தம் நாலாயிரத்து முன்னூறு. "ஐயாயிரத்தில இத கழிச்சுக்க மிச்சத்தை அப்புறம் பாத்துக்கலாம்''
 முருகேசனால் ஒன்றும் பேச முடியவில்லை. எதுவும் பேச முடியாமல் நின்றான்.
 "வர்றேன் முருகேசா''
 வண்டியை கிளப்பி ரோட்டில் வேகமாய் ஓடவிட்டேன். அந்த வெயிலிலும் காற்று சில்லென்று முகத்தில் பட்டது. மனமும் உடலும் லேசாகி காற்றில் பறப்பதுபோல் இருந்தது.
 
 மறுநாள் காலையில் எழுந்தபோது மீண்டும் மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டு இருந்தது.
 "கேவலம் பணத்துக்கு மதிப்புக் கொடுத்து நண்பனை இப்படிச் செஞ்சிட்டியே' என்று மனம் இடித்துரைத்தது. அவன் என்ன சூழ்நிலையில் இருந்தானோ? அந்தப் பணத்துக்கு அவன் எப்படி சிரமப்பட்டானோ? இப்போது மனம் மீண்டும் வேறு கோணத்தில் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தது.
 கா.சி.தமிழ்க்குமரன்
 
 
 
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/13/w600X390/kd9.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/14/கொடுக்கலும்-வாங்கலும்-2844241.html
2840021 வார இதழ்கள் தினமணி கதிர் இசைத்தமிழ் உலகின் நக்கீரர்! Sunday, January 7, 2018 12:00 AM +0530 இசைக்கும், இசைத்தமிழுக்கும் ஏற்றம் தந்த இசைப் பேராசிரியர், இசையாசிரியர், இசை நூலாசிரியர்கள் பலருள் குறிப்பிடத்தக்கவர் டி.ஏ. சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார் ஆவார்.
 ஆனால், பலரும் இவரைக் குறிப்பிடாததற்கு, நினைவுகூராததற்குக் காரணம் என்ன? என்கிற வினா எழக்கூடும். அதற்கு விடை: இசை தொடர்பான நூலிலோ, எழுத்திலோ, ராகத்திலோ, தாளத்திலோ, ஜதியிலோ, சுருதி பேதத்திலோ குற்றம் கண்டவிடத்து இவர் தமிழ்ப் புலவர் நக்கீரர் போல நேருக்கு நேராகக் "குற்றம் குற்றமே' என்று சாடியதனால்தான் என்பதை அறிய முடிகிறது. அதாவது, இசைத்தமிழ் உலகில் இவர் நக்கீரராக இருந்ததால்தான் இவரைப் பலரும் புறந்தள்ளிவிட்டனர் என்பதை உறுதிப்படுத்துகிறார் சம்பந்தமூர்த்தியின் இளைய மகன் டி.ஏ.எஸ்.சகஸ்ரநாமம்.
 இவருடைய கூற்றை மெய்ப்பிப்பது போல, "இசைத் தமிழ் உலகின் நக்கீரன்' என இன்னிசைக் கவிமணி இளங்கம்பனால் கவிபுனைந்து போற்றப்பட்டிருக்கிறார் டி.ஏ. சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார்.
 
 "உற்றவரே ஆனாலும் ஒன்றுக்கும் அஞ்சாமல்
 குற்றத்தைச் சொல்லும் குணமுடையான் - அன்றையநாள்
 நக்கீரன் போல நவிலும் இசையுலகின்
 இக்காலக் கீரன் இவன்''
 
 என்பது கவிஞர் இளங்கம்பனின் புகழ்மாலை. இசை உலகிலும், திரையுலகிலும் இவரால் உயர்ந்தவர்கள் ஏராளம். இவரை மறந்தவர்களும் ஏராளம்... ஏராளம்...!
 திருமுருக கிருபானந்த வாரியார், "உயர்திரு டி.ஏ.சம்பந்தமூர்த்தி ஆச்சாரியாரவர்கள் ஒப்பற்ற சங்கீத கலாவல்லுநர்'' என்று புகழ்ந்துள்ளார்.
 மேலும், ""டி.ஏ.சம்பந்தமூர்த்தி ஆச்சாரியாரவர்கள் சங்கீதத்தில் எந்தக் காரியத்தை எடுத்தாலும் யாரும் அதில் குற்றங் குறைகள் கூறவும் முடியாது; அவர் தனிச்சிறப்பு வாய்ந்தவர். தமிழ்நாடு செய்த பாபத்தின் காரணமாக அவரைப் பிரோயசனப்படுத்திக் கொள்ளவில்லை'' என்று நாகசுர மகாமேதை டி.என்.இராஜரத்தினம் பிள்ளையும்;
 ""டி.ஏ.சம்பந்த மூர்த்தி ஆச்சாரியாரவர்கள் சங்கீத உலகில் ஓர் பெரிய மேதை'' என்று சங்கீத பூபதி மகராஜபுரம் விஸ்வதநாத ஐயரும், "அசைக்கொணா இசைத்தமிழ் அறிஞர் சம்பந்தர்'' என்று புரட்சிக்கவி பாரதிதாசனும், மேலும் வீணை பாலசந்தர், இசைமேதை மதுரை மாரியப்ப சுவாமி போன்றோரும் இவரைப் பலவாறு புகழ்ந்துள்ளனர்.
 திருமுருக கிருபானந்த வாரியார், எஸ்.வி. சகஸ்ரநாமம், டி.கே. பட்டம்மாள், என்.எஸ். கிருஷ்ணன், டிகே.எஸ்.கலைவாணன், ஏ.எல்.இராகவன், வி.தாயன்பன், காஞ்சிபுரம் விநாயகம் முதலியார் டி.ஏ.சம்பந்தமூர்த்தி ஆச்சாரியாரின் சீடர்களுள் (மாணவர்கள்) குறிப்பிடத்தக்கவராவர்.
 இவர், தாள ஏரி, கர்த்தா ராகங்கள் எத்தனை?, சுருதிபேத இசை நூல், தமிழ் இசை நூல், திருப்புகழ் நூறு, எளியமுறை இசைப் பயிற்சி நூல், 32 மேள கர்த்தா, இன்னிசைப் பொழில், இராக மரபு, இசை வாரிதி முதலிய பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் 1974-இல் ஒரு ரூபாய் விலையில் வெளியான "தாள ஏரி' (1974) என்ற இசை நூலின் முன்னுரையில்,
 "108 தாளங்களை அக்ஷரக்காலமாகப் பாடுவது மிகத் தவறாகும். அவைகள் அங்க ஜாடைகள் மாத்திரைக்கால அளவுகள் கொண்டதாகும். இந்நூலில் மாதங்கள் பன்னிரண்டையும், வாரத்தின் ஏழு நாட்களையும் தாளங்களாக ஆக்கி, அங்கக்குறிகளும் அமைத்து ஐந்து ஜாதிகளால் விரியும் விளக்கத்தையும் தந்து வெளியிட்டுள்ளேன். இத்தாளங்களை 35-தாளங்களைப் போல அக்ஷரக் காலங்களோடு இசையுலகம் பயன்படுத்திக் கொள்ளலாம். 35, 108, 60 தாளங்களுக்கென சிறிய நூலேதும் இதுவரை வெளிவரவில்லை. "கடல்' போன்ற தாளங்களை "ஏரி' அளவில் சுருக்கமாகச் சொல்லும் இச்சிறிய நூலை இசைத்துறை வாணர்கள் கையாள மிகவும் பயன்படும் என்பதில் ஐயம் இல்லை'' என்று உறுதியாகக் கூறியுள்ளார்.
 இந்நூலில், திருப்புகழில் அங்க தாளங்கள், இசைக்கலைத்துறை விஷயங்கள், பட்டமாளும் சென்னை தமிழிசைச் சங்கமும், படிக்க வேண்டிய இசை நூல்கள், இசை அறிவு, கர்ண பரம்பரை, செம்மங்குடியும் ஹார்மோனியமும் முதலிய பல அரிய தகவல்களையும் தந்துள்ளார்.
 "தாள ஏரி' என்ற நூல் நாற்பது பக்கங்களே கொண்ட ஓர் ஒப்பற்ற இசை நூல். அதுமட்டுமா? இவ்வாசிரியர் தம் கைப்பட முத்து முத்துதாக எழுதிய கையெழுத்துப் பிரதியிலேயே பல பக்கங்கள் அச்சாகியுள்ளன என்பது கூடுதல் சிறப்பாகும்.
 "எனது காலத்து இசை உலகம்' எனும் இசை நூலையும் வெளியிட விரும்பிய இந்த இசையுலக நக்கீரர் அந்நூலில், "உண்மையான இசை வித்துவான்கள் யாரென்பதையும் நன்கு உணரலாம். மற்ற இசை இலக்கணங்களையும், சங்கீத உலக ஊழல்களையும் தெளிவாக அறிய மிகவும் பயன்படும்'' என்று தன் ஆதங்கத்தையும் "தாள ஏரி'யின் இறுதியில் பதிவு செய்துள்ளார்.
 ÷"தமிழில் இசை நுணுக்கம் இல்லை' என்று கூறும் சிலரது கூற்றை மறுத்து, அவ்வாறு கூறுவது மடத்தனம் என்றும் சாடியுள்ளார். "சுருதிபேத இசை நூல்' என்ற நூலில், சுருதி பேதம் பற்றிய உண்மைகள், சுருதிபேதம் பாடும் முறை, சுருதிபேதமும் சுரஞானமும், சுருதி பேதத்தில் வல்லவர், அபஸ்வரம் பாடுவதில் வல்லவர், இசைத்துறை சூழ்ச்சிகள் பற்றிய விளக்கம், சுருதிபேத இலக்கண முறைக்கு முரணாகும் எட்டு இராகங்கள் முதலிய இசை நுணுக்கங்கள் பலவும் இடம்பெற்றுள்ளன.
 "கர்த்தா ராகங்கள் எத்தனை...' என்ற நூலில், சங்கீத கலாநிதி செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயர் கூறிய 32 கர்த்தா ராகங்களின் உண்மை, ஸ்ரீபாலமுரளி எழுதிய அஸந்தர்ப்பம், 11.2.72 தினமணியில் வெளியான 72 மேளகர்த்தா ராகங்கள் பற்றிய விளக்கம், 11.2.72 தினமணியின் "கலை பகுதி'யில் சம்பந்தமூர்த்தி எழுதிய 32 மேளகர்த்தா சர்ச்சை பற்றி ஸ்ரீஜெயராமய்யர் சிலாகித்து எழுதிய கட்டுரை, நாகஸ்வர மகாமேதை மதுரை பொன்னுசாமிப்பிள்ளையின் "இசையில் பூர்விக சங்கீத உண்மைகள்' முதலிய பல இசைத் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. டி.என். ராஜரத்தினம் பிள்ளைக்கு வலக்கை போன்று இருந்தவர் இவர் என்பதை அன்றைய தினமணி கதிரில் (14.6.74) வெளியான செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
 தமிழில் அழிந்துபோன, மறைந்துபோன இசை மரபு நூல்கள் ஏராளம் உள்ளன. ஆனால், தற்போது இசை தொடர்பாகக் கிடைத்துள்ள சம்பந்தமூர்த்தி ஆச்சாரியாரின் நூல்கள் தமிழிசை உலகிற்குப் பெரும் பொக்கிஷமாகும். இவற்றைப் பாதுகாத்து, மறுபதிப்பு செய்வது வருங்கால இசைக் கலைஞர்களுக்கும் இசைத்தமிழுக்கும் ஏற்றம் தரும்! இசைக் கடலையே ஏரியாக்கித் தந்த இவரது இசைப்பணிக்குத் தமிழிசை உலகம் என்ன கைம்மாறு செய்யப் போகிறது?
 
 -இடைமருதூர் கி.மஞ்சுளா
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/6/w600X390/k1.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/07/இசைத்தமிழ்-உலகின்-நக்கீரர்-2840021.html
2840022 வார இதழ்கள் தினமணி கதிர் மன்னராசா DIN DIN Sunday, January 7, 2018 12:00 AM +0530 "ராஜா, இறங்கலாம், ஊர் வந்து விட்டது'' தூக்கத்திலிருந்த என்னைத் தட்டி எழுப்பினான் ராமு. பொருட்களை எடுத்துக்கொண்டு அவனுடன் நடந்தேன். குமரி மாவட்டத்துக்காரனான அவனுடைய ஊர் கோயில் கொடைவிழா பார்க்கவும், சுற்றுலாச் செல்லவும் அவனுடன் வந்திருந்தேன்.
 "ஏ...ராமு, எப்படிய்யா இருக்கே? கோயில் கொடைக்கு வந்தியாப்பா? அது யாரு உங்கூட...?'' என்று காண்பவரெல்லாம் அவனிடம் கேட்க, அவனும் "ஆமா பாட்டி, ஆமா சித்தி...''என்று அவர்கள் உறவைக் கூறி பதில் கூறியபடி என்னையும் அறிமுகப்படுத்திக் கொண்டு நடந்தான்.
 அதிக அகலமில்லாத தெருக்கள். வாசல் தெளித்துக் கோலம் போடப்பட்ட நெருங்கிய வீடுகள். ஊரே பசுமையாக இருந்தது. டீக்கடைகளில் ஆண்கள் கூட்டம் தெரிந்தது. பெண்கள் வீட்டு வேலைகளில் பரபரப்பாய் இருந்தனர்.
 "இதோ இதுதான் நம்ம வீடு'' என்றவன் "அம்மா'' என அழைத்தபடி உள்ளே நுழைந்தான். அவன் குரல் கேட்டு வீட்டிலுள்ளோர் அனைவரும் வந்து நிற்க, அதில் வயதான பெண்மணி கண்களைச் சுருக்கிப் பார்த்தவாறே, ""ராமுவாய்யா? வாய்யா வா...'' என்று வாயாற அழைத்தபடி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். அருகில் நின்ற என்னைப் பார்த்து "இதுதான் உன் ஃப்ரண்டு ராசாவாப்பா? எல்லாரும் நல்லாருக்கியளாப்பா?'' என்றபடி என் கையைப் பற்றி முத்தமிட்டாள்.
 "ஆமா பாட்டி, ராஜா தான்'' என்றவன் தன் குடும்பத்தாரிடம் என்னை அறிமுகப்படுத்தினான். அப்பா, பாட்டி, தங்கை என அழகான குடும்பம். எல்லோரிடமும் அன்பு நிறைந்திருந்தது. ""ராமு, குளிச்சிட்டு வாங்கப்பா. சாப்டுட்டு கோயிலுக்கு போகலாம்'' என்றார் ராமுவின் அம்மா.
 "சரிம்மா...'' என்றபடி ஒரு அறையில் பொருட்களை வைத்துவிட்டு சோப், டவலுடன் ராமுவுடன் நடந்தேன். அவன் வீடு சிறியதெனினும் சுத்தமாக இருந்தது.
 ""வாழைத்தோட்ட பம்ப்செட்டில் குளித்து வரலாம்'' என அழைத்துச் சென்றான். பெரும்பாலான வீடுகளில் ஆடு, மாடு, நாய், பூனை, கோழியெல்லாம் குடும்ப உறுப்பினர்களாய் வலம் வந்து கொண்டிருந்தன. எல்லா வீடுகளிலும் கோயில் செல்லும் பரபரப்பு தெரிந்தது. ராமுவைப் பார்த்ததும் ஒவ்வொருவரும் மாறி மாறி நலம் விசாரித்துக் கொண்டனர். குளித்து முடித்து வீட்டில் டிபன் சாப்பிட்டு விட்டு கோயிலுக்கு கிளம்பினோம்.
 நீண்ட நிறைந்த விழுதுகளுடன் பரந்து விரிந்து நின்ற ஆலமரத்தின் அடியில் இருந்தது அக்கோவில். மாவிலைத் தோரணங்களும், குலைவாழைகளும் நுழைவாயிலை அலங்கரித்தன. கோயிலின் ஒரு பகுதியில் நேர்ச்சை ஆடுகள் கட்டப்பட்டிருந்தன. அவற்றில் சில ஞானிகள் போல் அமைதியாகவும் சில நிலத்தைப் பிறாண்டி ஆர்ப்பரித்துக் கொண்டுமிருந்தன. சிறுவர் சிறுமிகள் சவ்வு மிட்டாய், ஐஸ்கிரீம் போன்றவற்றைச் சுவைத்தபடி பலூன் அடித்தும், பீப்பி ஊதியும் விளையாடிக் கொண்டிருந்தனர். இன்னொரு பக்கத்தில் பித்துப்பிடித்தவள் போல ஒரு பெண் - பதினாறு வயது இருக்கும்... அவளருகில் பெற்றோரும் சில உறவினரும் சோகமாக அமர்ந்திருந்தனர். ஊர்ப் பெரியவர்கள் வருபவர்களை வரவேற்பதும் கோயில் வேலைகளைப் பார்ப்பதுமாக மும்முரமாக இருந்தனர்.
 நடுவே ஒரு தனித்துக் கட்டப்பட்ட இடத்தில் உக்கிரமான தோற்றத்துடன் பல உருவங்கள் இருந்தன. உருட்டும் விழிகளும் அதட்டும் கோலத்துடனும் இருந்த அவை பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. சில இடங்களில் அறுங்கோணம் போன்ற வடிவில் பீடங்கள் இருந்தன. கோயில் உருவங்கள் போன்றே உயர்ந்த கருத்த உருவமும் முறுக்கு மீசையுமாகப் பூசாரி ஒருவர் பூசைக்கான ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தார். இளைஞர்களும் பெரியவர்களுமாகச் சிலர் வாயைத் துணியால் மூடியபடி அவருக்கு ஒத்தாசை செய்து கொண்டிருந்தனர். ராமுவைப் பார்த்த அவனின் நண்பர்கள் அருகில் வந்தனர். "இவங்கல்லாம் என்கூட ஸ்கூல்ல படிச்ச ஃப்ரண்ட்ஸ்'' என்று ஒவ்வொருவரையும் எனக்கும் என்னை அவர்களுக்கும் அறிமுகப்படுத்தினான். பேசிய சிறிது நேரத்தில் அவர்களில் ஒருவனாக நானும் மாறிப் போனேன். அப்போது புத்தி பேதலித்த அந்தச் சிறுபெண் திடீரென கத்திக்கொண்டு ஓடினாள். அவளைப் பிடிக்க உறவினர்கள் பின்னால் ஓடினர். ராமு நண்பர்களிடம் கேட்டான்... "இது அல்லி தானேடா? அவளுக்கு என்ன ஆச்சு?''
 "ஆமா அல்லிதான்டா! இப்ப ரெண்டு மாசமா இப்படித்தான்டா. நல்லா படிக்குற பொண்ணு. என்ன ஆச்சுனே தெரியல. பெரும்பாலும் மெüனமா வானத்தப் பாத்துட்டே இருப்பா. திடீர்னு இப்படிக் கத்திட்டே ஓடுவா...'' என்றான் ஒரு நண்பன்.
 ""முருகா, உன் சொந்தக்காரங்க தானேடா! எதாவது நல்ல ஆஸ்பத்திரில பார்க்க சொல்லக்கூடாதா? கோயில்ல கொண்டு வச்சிட்டு...'' நான் நினைத்த அதே கேள்வியைக் கேட்டான் ராமு.
 ""பார்க்காம இருப்பாங்களாடா? எல்லாம் பார்த்து முடியாமத்தான் இங்கே வந்திருக்காங்க'' என்றான் முருகன்.
 அதற்குள் வில்லுப் பாட்டு ஆரம்பித்திருந்தது. அதற்கென அமைத்த மேடையில் நல்ல அலங்காரத்துடன் பெண் ஒருவர் நடுநாயகியாக அமர்ந்து வில்கம்பால் மணிகள் கோர்த்த வில்லில் விதவிதமாக தட்டிப் பாட, இன்னொரு பெண் பக்கப் பாட்டு பாடினார். குடம் அடிப்பவரின் ஸ்டைலும் விஷயங்களை ஏற்றுப் பாடும் முறையும் உற்சாகம் தருவதாக இருந்தது. ஜால்ரா, உடுக்கை போன்ற இசைக்கருவிகள் பாட்டில் இனிமை சேர்த்தன. மேளதாளங்கள், நாதஸ்வரங்களுடன் இன்னொரு குழுவினர் தயாராக நின்றனர். கோவிலில் கூட்டம் நிறைந்திருந்தது. பன்னீர், இளநீர், மாலைகளை ஏந்திய படி பலர் ஆவலுடன் நின்றனர்.
 சிறிது நேரத்தில் வில்லுப் பாட்டு வேகம் பெற, மேளக்காரர்களும் வேகமாக மேளங்களை அடித்தனர். கூட்டத்திலிருந்த ஒருவர் திடீரெனப் பாய்ந்து வந்து கோயில் உருவத்தின் முன் விழுந்து உருண்டார். பூசாரியும் சிலருமாக அவரைப் பிடித்து சேலையைச் சுற்றி சூலத்தைக் கையில் கொடுத்தனர். மறுகையில் பந்தமாய் எரியும் கற்பூரத்தட்டு, கழுத்து நிறைந்த மாலைகளுடன் ஒரு பெண் போல அவர் ஆடினார். "இது இசக்கியம்மை. அதுதான் பொம்பள போல ஆடுது'' விளக்கினான் ராமு. வில்லுப் பாட்டுக் குழுவினர் முன் பலத்த ஊளையுடன் சென்ற அவர் எதையோ கூற, அவர்களும் ஏதோவொரு கதைப் பகுதியை வேகமாகப் பாடினர். மேளக்காரர்களிடம் வந்ததும் அவர்கள் அடித்த அடியில் ஆடாதவர்களும் ஆடுவார்கள் போன்றிருந்தது.
 இதற்கிடையில் அதே போல இன்னொருவர் ஓடிவர, அவருக்குச் சலங்கைகள் நிறைந்த கால்சட்டையையும் தலையில் கிரீடம் போன்ற தொப்பியையும் அணிவித்தனர். அவர் தலை வரை நிறைந்த மாலைகளுடன் வேகமாகவும் மூர்க்கமாகவும் ஆடினார். "இவர் தான் மன்னராசா...'' கிசுகிசுத்தான் ராமு. இப்படியே சிறிது நேரத்தில் செங்கிடாகாரன், கருங்கிடாகாரன், சப்பாணி வாதை என பல பெயரில் இருபதுக்கும் மேலே ஆடினார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வேறுபட்ட ஒலிகளை எழுப்பியபடி ஆடிக்கொண்டிருக்க, பன்னீர், இளநீர் வைத்திருந்தவர்கள் அவற்றை அவர்கள் தலையில் ஊற்றி மாலைகளை அணிவித்தனர். கொஞ்ச நேரம் ஆடியதும் ஆடியவர்கள் தங்கள் கழுத்தில் போட்டிருந்த மாலைகளைக் கழற்றி சிலரிடம் கொடுத்து ஏதோ கூறினர். சில மாலைகளைத் தூக்கி வீச, அதைப் பிடிக்க பெரும் போட்டியே நடந்தது. மாலை கிடைத்தவர்கள் முகத்தில் பெருமிதமும் மகிழ்வும்! எல்லா மாலைகளையும் கொடுத்து முடிந்ததும் ஆடியவர்கள் ஒவ்வொருவராகக் கீழே விழ அங்கிருந்தவர்கள் தாங்கி டவலால் விசிறி இயல்பு நிலைக்கு வர உதவினர்.
 "ஆட்டம் முடிந்தது. இனி ராத்திரி வரலாம்'' என்றான் ராமு.
 நண்பர்களுடன் வீடு திரும்பும் போது, ""ராமு, ராணியக்கா வீட்டு ஆட்டைத் திருடிட்டு "இல்லவே இல்ல'ன்னு இந்த கோயில்ல சத்தியம் செஞ்ச செல்லம் நாப்பத்தஞ்சு நாள்லயே செத்துப் போனானே... ஞாபகம் இருக்குதா?'' என்று கேட்டான் முத்து.
 "ஆமாடா... ஆனா இப்ப ஏன் திடீர்னு அவரப் பற்றி யோசனை?'' கேட்டான் ராமு.
 "இல்லடா... நம்ம கோயில் ரொம்ப விஷேசம்னு அப்பப்ப தோணுதுடா... அதான்'' பூரித்தான் முத்து.
 "அதுதான் எல்லோருக்குமே தெரியுமே! ஏன்... எங்கம்மா கதை எப்படி? இனி பிழைக்க மாட்டாங்கன்னு ஆஸ்பத்திரில கையை விரிச்சிட்டாங்க. ஆனா சின்னக்கா இந்தக் கோயில் திருநீறக் கொண்டு வந்து பூசி விட்டாங்க... என்ன அதிசயம்! சின்னக்கா சொன்ன மாதிரி அடுத்த வருஷம் கோயில் கொடைக்கே வந்துட்டாங்களே'' என ராமு கூற, மற்ற நண்பர்களும் அது போன்ற அதிசயங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
 என் மனதின் மூலையிலோ, "அப்படியானால் அந்தக் கோயிலில் இருக்கும் பொண்ணுக்கு இதற்கு முன்பே சரியாகியிருக்க வேண்டுமே?' என்ற எண்ணக் கீற்று ஓடிற்று.
 வீடு வந்தோம். போதும் போதும் என்றாலும் "இன்னும் கொஞ்சம் சாப்பிடப்பா, படிக்குற பிள்ளல்ல?'' என்றபடியே உணவு பரிமாற, எழும்பவே முடியாத அளவு சாப்பிட்டோம். கைகழுவி வரவும் பாட்டி கேட்டாள்...
 ""கோயில் கொடைய நல்லாப் பாத்தியாய்யா? இந்தக் கோயில் ரொம்ப விஷேசம்யா. எல்லாரும் தப்பு செய்ய பயப்படுவாங்க. கோயில்ல பிரதான தெய்வம் இசக்கியம்மைதான். அவ கீழ நூத்தெட்டு வாதைங்க உண்டு. அந்த வாதைங்க தலைவன் மன்னராசான்னு சொல்வாங்க. நம்பிக்கையொட கேட்டால் கேட்டது கிடைக்கும்யா!'' என்றாள்.
 "ஆமா பாட்டி... நீ சொல்றது சரிதான். ஆனா நாங்க இப்ப ரெஸ்ட் எடுக்கறோம். பத்து நாள் இங்க தான். இன்னொரு நாள் இவனுக்கு எல்லாம் சொல்லிக் குடுங்க'' என்றான் ராமு. இரவுப் பயணமும் உண்ட மயக்கமும் என்னை உடனேயே உறக்கத்தில் ஆழ்த்தி விட்டது.
 திடீரென தாடி, அரிவாள் மீசையுடன் வயதானவர் ஒருவர் வந்து, "என்னைத் தெரியாதுல்ல... இன்னைக்கு ராத்திரி வா தெரியும்... என்ன?" என்று அதட்டலாகக் கூறிவிட்டுச் சென்றார். "யாரிவர்? ஏன் இப்படிச் சொன்னார்?' என்று பதட்டமாக எழுந்தேன்... "ஓ! கனவா...?' ஆனால் ஏனோ பிறகு தூக்கமே வரவில்லை.
 இரவுக் கொடைக்கு சென்றோம். நிற்கக்கூட இடமில்லாத அளவு கூட்டம். எப்படியோ ஓர் உயரமான இடத்தில் ஏறி நின்றோம். மதியம் போலவே ஆட்டம் தொடங்கியது. இரவு விளக்குகளின் வெளிச்சத்தில் இன்னும் வேகமாகவும், உக்கிரமாகவும், பயமாகவும் தெரிந்தது. மாலைகளைக் கழற்றிக் கொடுக்கும் போது மன்னராசாவாக ஆடுபவர் ஏக்கமுடன் காத்திருந்த அல்லியின் பெற்றோரிடம் வந்தார். மாலையும் எலுமிச்சம் பழமும் கொடுத்து, "ஏழு நாள் காலை, மாலை இரண்டு நேரமும் குளிச்சிட்டு வந்து கும்பிட வை. எல்லாம் சரியாகும்'' என்றார். அவர்கள் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது.
 "இனி 12 மணிக்கு ஆடு, கோழி பலி கொடுப்பார்கள். எல்லாரும் பார்க்க மாட்டார்கள். உனக்கு எப்படி?'' என்றான் ராமு. "ஐயய்யோ... எனக்குப் பிடிக்காது. வீட்டிற்குப் போகலாம்'' என்றேன் வேகமாக.
 "எனக்கும் பிடிக்காது'' என்ற ராமு, "ஆனால் ஒருமுறை ஒரு கோயில்ல ஒரு அதிசயம்! நேர்ச்சை ஆடு கட்டு அறுந்து தானே பலி கொடுக்கும் இடத்தில் வந்து தலையை வைத்துக் கிடந்தது! மறக்க முடியாத மர்மம்'' என்றான்.
 
 மறுநாள் காலை குளிக்கப் போகும் போது அல்லி குடும்பம் குளித்துவிட்டுக் கோயில் போவது தெரிந்தது. ராமுவும் நண்பர்களும் நிறைய இடங்கள் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்திருந்தனர். கன்னியாகுமரி, காளிகேசம், திற்பரப்பு, பத்மநாபபுரம் அரண்மனை, உலக்கை அருவி, மாத்தூர் தொட்டிப் பாலம், நிறைய கோயில்கள் என ஒவ்வொரு நாளும் நன்றாகச் சுற்றிப் பார்த்தோம். "பச்சையாடை உடுத்தி நீண்ட நீலமலைக் கூந்தலுடன் குமரி பெயருக்கேற்ப பேரழகுதான்... இங்குள்ளவர்கள் கொடுத்து வைத்தவர்கள்' என நினைத்துக் கொண்டேன். அதற்குள் எட்டாவது நாளை எட்டியிருந்தது விடுமுறை. எட்டாம் நாள் கொடை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அல்லி நிலை அறிய நானும் ஆவலுடன் இருந்தேன். ஆட்டம் தொடங்கியது... மன்னராசாவாக ஆடியவர் அல்லியின் கையில் திருநீறு கொடுத்து நெற்றியிலும் பூசிவிட்டார். "எல்லாம் சரியாயாச்சு. உச்சிக் கொடை ஒண்ணு கொடு!'' என்றார்.
 மறுநாள் அவளுக்குச் சரியாகி விட்டது என எல்லாரும் அதிசயமாகப் பேசிக் கொண்டார்கள்.
 நாளை ஊர் கிளம்ப வேண்டும். சில பொருட்கள் வாங்க வெளியே சென்றோம். எதிரில் அல்லி! ஸ்கூல் யூனிபார்மில் தன் தோழிகளுடன் சிரித்துப் பேசியபடி பள்ளி சென்று கொண்டிருந்தாள்.
 "இவளா நாம் கோயிலில் பார்த்தது?' என நினைக்கும் அளவு விரிந்து மலர்ந்த மலராய்த் தெரிந்தாள். ஆச்சரியத்துடன் ராமுவிடம், "இது அந்த அல்லிதானே?!'' என்றேன். அப்போதுதான் பார்த்த அவன், "அல்லி தான். பரவாயில்லையே... ஸ்கூல் போக ஆரம்பித்து விட்டாளே!'' என்றான் மகிழ்வுடன்.
 நாளை கிளம்ப தயாராகிக் கொண்டிருந்த என் மனதில் அல்லிக் காட்சியே ஓடிக் கொண்டிருந்தது. பெரிய அளவில் கடவுள் நம்பிக்கை இல்லாத என்னில் பல கேள்விகள்...! மறைமுகமாக ஊரைக் கட்டிக் காக்கும் கடவுள் நம்பிக்கையும், அறிவியலுக்கே புதிரான நிகழ்வுகளும் நெஞ்சில் நின்றன. கடவுள் நம்பிக்கை நன்மை தானே செய்கிறது எனத் தோன்றியது. கனவில் வந்த தாடித் தாத்தா "இப்போது தெரிகிறதா நான் யாரென்று...?' என்று கேட்பது போலிருந்தது. ஆக்ரோஷமான மன்னராசா கம்பீரமாக மலர ஆரம்பித்திருந்தார்... என் நெஞ்சிலும்!
 உமா கண்ணன்
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/6/w600X390/k2.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/07/மன்னராசா-2840022.html
2840023 வார இதழ்கள் தினமணி கதிர் ரகசியம்...பரம ரகசியம்! மாலன் DIN DIN Sunday, January 7, 2018 12:00 AM +0530 வீழ்வேன் என்று நினைத்தாயோ! 2

தேசமே திகைத்துப் போகத் திடீரென்று அறிவிப்பு வந்தாலும், மலேசியா- சிங்கப்பூர் பிரிவினைக்கான வேலைகள் இரு தரப்பிலும் ரகசியமாக சிலகாலமாக நடந்து கொண்டுதான் இருந்தன. ரகசியமாக என்றால் சிங்கப்பூர் அமைச்சர்களுக்கே கூடத் தெரியாத அளவு பரம ரகசியமாக. 
இரண்டு நாடுகளும் ஒரே தேசமாய் இணைந்திருந்தது 23 மாதங்கள்தான். அந்த இரண்டு வருடங்களும் கூடப் புகைச்சல் நிறைந்த வருடங்கள்தாம்.. புகைக்குக் காரணம் வெறுப்பரசியல் மூட்டிய இனவாத நெருப்பு. 
1963-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9-ஆம் தேதி லீ குவான் யூ லண்டனில் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். மலேயா பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானுக்கும் அவருக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் நீட்சியாக ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டிருந்தது. அதன் முக்கியமான அம்சங்கள்:
கூட்டமைப்பின் நாடாளுமன்றத்தில் (House of Representatives) சிங்கப்பூருக்குப் பதினைந்து இடங்கள். செனட்டில் (மேலவை) இரண்டு இடங்கள். சிங்கப்பூரில் உள்ள பாராளுமன்றம், மாநிலச் சட்டமன்றமாகத் தொடரும். ஆனால் அதற்கு பாதுகாப்பு, அயலுறவு போன்ற கூட்டமைப்பின் நாடாளுமன்றத்திற்குட்பட்ட விஷயங்களில் சட்டம் இயற்றும் அதிகாரம் கிடையாது. ஆனால் அதற்கு கல்வி, தொழிலாளர்கள் ஆகிய விஷயங்களில் அதிகாரம் உண்டு. உள்ளூர் சட்டம் ஒழுங்கு மாநிலத்தின் பொறுப்பு. தேசப் பாதுகாப்பு கூட்டாட்சியின் பொறுப்பு. சிங்கப்பூர் வரியில்லா துறைமுகமாகத் தொடரும். சிங்கப்பூரின் வருவாயில் பெரும்பகுதி சிங்கப்பூரிடமே இருக்கும்.
கனவுகள் காகிதத்தில் நன்றாகவே பொலிந்தன. "பெருந்தன்மை மிகுந்த' "தாராளமான' உடன்பாடு என இருதரப்பிலும் வரவேற்பு அறிக்கைகள் வாசிக்கப்பட்டன. ஆனால் ரோஜாவின் கீழ் உள்ள முள் போல, கனவின் கீழ் ஓர் அனல் இருந்தது. முட்கள் ஒன்றல்ல இரண்டு. "கூட்டமைப்பின் மொத்த நன்மை கருதி' மலாய் இனத்தவருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது. அது சிங்கப்பூரில் பலருக்கு உவப்பானதாக இல்லை. சிங்கப்பூர் தயாரிப்புக்களை மலேயா பகுதியிலும் விற்க ஏதுவாகப் பொதுச் சந்தை உருவாக்கப்பட வேண்டும் என்பது மற்றொரு கருத்து. அது மலேயாவில் உற்சாகமாக வரவேற்கப்படவில்லை.
இந்தக் கதகதப்பிற்குக் காரணம், அரசியல் மலேசியாவின் இரு பெரும் அரசியல் கட்சிகள், சிங்கப்பூர் பகுதியில் பெரும் செல்வாக்குக் கொண்டது லீ குவான் யூவின் மக்கள் செயல் கட்சி (People's Action Party). மலேயாவின் மாநிலங்களில் அம்னோ (United Malays National organization) என்றழைக்கப்படும் துங்குவின் கட்சி. பெயரே உணர்த்துவது போல அம்னோ மலாய் இன மக்களின் கட்சி. 
தங்கள் கால்களைப் பிணைத்துக் கட்டிக் கொண்ட தவளையும் எலியும் போல இருகட்சிகளும் இணைந்தும் அதே நேரம் ஒருவரோடு ஒருவர் முரண்பட்டும் நாட்டை நடத்த வேண்டிய விசித்திரமான நிர்பந்தம் நேர்ந்தது. கூட்டமைப்பு என்று ஒன்று உருவாகிவிட்ட பின்னர் அதை எல்லா இனத்தவருக்கும் பொதுவான "மலேசியர்களின் மலேசியா' ("Malaysian Malaysia") என்றுதான் கருத வேண்டும் என்று லீ குவான் யூ பேசி வந்தார். இது அம்னோ தலைவர்களில் சிலருக்கு- தீவிர இனப் பற்றாளர்கள் என அவர்களைச் சொல்லலாம்- எரிச்சலைக் கிளப்பியது. இதன் மூலம் மலாய் இனத்தவரின் முக்கியத்துவம் போய்விடும் என்று அவர்கள் அஞ்சினார்கள். 
தேசியவாதம் Vs இனவாதம் என அரசியல் சூடேற, சிங்கப்பூரில் அடுத்தடுத்து இனக்கலவரங்கள் வெடித்தன ( 21 ஜூலை 1964, செப்டம்பர் 2 1964) 
1965-ஆம் ஆண்டு ஜூன் வரை பதற்றம் தணியவில்லை. அனல் அடங்கவில்லை. பிரதமர் துங்கு தலையிட்டு லீயைக் கட்டுப்படுத்த வேண்டும் என அவரது கட்சிக்காரர்கள் நெருக்க ஆரம்பித்தார்கள். இதற்கு நடுவில் ஜூன் மூன்றாம் வாரம் துங்கு அப்துல் ரஹ்மான் காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள லண்டன் புறப்பட்டுச் சென்றார். 
அதன் பின் ஆரம்பித்தது பரபரப்பு நாடகம். 
ஜூன் 23: மாநாடு முடிந்ததும் லண்டனில் இருந்த மருத்துவமனையில் சேர்கிறார் துங்கு. காரணம் முதுகுவலி. வழக்கமான பணிகள் இல்லை. பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. அயலகத்தில் இருப்பதால் அரசியலின் அனல் தெரியவில்லை. யோசிக்க நிறைய அவகாசம் கிடைக்கிறது, மருத்துவமனையின் படுக்கையில் கிடந்தபடி பார்வையை வெளியே செலுத்துகிறார். ஜன்னலுக்கு வெளியே மேகங்களின் ஊர்வலம். துங்குவின் பார்வைதான் மேகங்களில். மனமோ மலேசியாவில். கேள்விகள். நிறையக் கேள்விகள். எளிதில் விடைகாண முடியாத கேள்விகள். மனக் கோப்பை எண்ணங்களால் நிரம்பி வழிகிறது 
ஜூன் 27: உடல் சற்று தேறிவிட்டது. "எழுதக் காகிதம் கிடைக்குமா?' எனக் கேட்கிறார் துங்கு. நான்கு நாட்களாக மனதில் ஓடிக் கொண்டிருந்த எண்ணங்களைக் காகிதத்தில் இறக்கி வைக்கிறார். ஃபுல்ஸ்கேப் அளவில் பல பக்கங்களுக்கு நீளும் அதில் சிங்கப்பூர் பிரிவதால் விளையக் கூடிய லாப, நஷ்டங்கள் பட்டியலிடப்படுகின்றன. அந்த "பாலன்ஸ் ஷீட்'டை ஆராயும் போது பிரிந்து விடுவதுதான் இரு நாடுகளுக்குமே நல்லது என்று அவருக்குத் தோன்றுகிறது. என்றாலும் அவர் உடனே முடிவெடுக்கவில்லை. இரண்டு நாள் ஆறப் போடலாம் என்று நினைக்கிறார்.
ஜூன் 29: துங்குவின் மனதில் இந்த எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும் அதே வேளையில், கோலாலம்பூரில், மலேசிய துணைப் பிரதமர் துன் ரசாக்கும், லீ க்வான் யூவும் சந்திக்கிறார்கள். மனம் விட்டுப் பேசுகிறார்கள். ஆனால் பிரயோசனமில்லை. அதே நேரம் துங்கு லண்டனில் அவரது நம்பிக்கைக்குரிய நண்பரும் சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சருமான லிம் கிம் சானிடம் தனது முடிவை வெளிப்படுத்தி வெள்ளோட்டம் பார்க்கிறார்.
ஜூலை 1: துங்கு இன்னும் மருத்துவமனையில்தான் இருக்கிறார். அங்கிருந்தே துணைப்பிரதமர் துன் ரசாக்கிற்குத் தன் உணர்வுகளையெல்லாம் கொட்டி ஒரு கடிதம் எழுதுகிறார். மூத்த அமைச்சர்களோடு இதைக் குறித்து கலந்து பேசுங்கள் என்று கேட்டுக் கொள்கிறார். கடிதத்தை ரசாக்கிற்கு அனுப்புமாறு தன் செயலர் ஹாஜி நிக் ஹாசனிடம் கொடுக்கும் போது துங்குவின் விழியோரத்தில் துளிர்க்கிறது நீர்.
அடுத்த மூன்று வாரங்கள்: ரசாக், மூத்த அமைச்சர்கள் டாக்டர் இஸ்மாயில் (உள்துறை அமைச்சர்) டான் ஸ்யூ சின் (நிதி அமைச்சர்) வி.டி.சம்பந்தம் (பொதுப்பணித்துறை, தொலைத் தொடர்பு அமைச்சர்) ஆகியோருடன் நீண்ட விவாதங்கள் நடத்துகிறார். ஒரு கட்டத்தில் சிங்கப்பூர் நிதி அமைச்சர் டாக்டர் கோ கெங் ஸ்வீயுடனும் பேச்சு வார்த்தை நடக்கிறது. ஆனால் மூத்த அமைச்சர்கள் எவரும் இப்படி ஒரு பேச்சு நடந்து கொண்டிருக்கிறது என்று வெளியே மூச்சு கூட விடாமல் பரம ரகசியம் காக்கிறார்கள். 
ஜூலை 22: துங்கு மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார். ஆனால் மருத்துவர்கள் யோசனைப்படி பிரான்சில் ஒரு ரிசார்ட்டில் ஓய்வில் இருக்கிறார். ரசாக்கிடமிருந்து அவருக்கு ஒரு கடிதம் வருகிறது. கூட்டமைப்பிலிருந்து சிங்கப்பூரை வெளியேற்ற அனைவருக்கும் பூரண சம்மதம் என்கிறது கடிதம். 
ஜூலை 25 : "சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டிய வேலைகளைத் தொடங்குங்கள், அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யுங்கள்' என்று பதில் போடுகிறார் துங்கு. சற்றும் தாமதிக்காமல் பணிகளைத் தொடங்குகிறார் ரசாக். "ஆகஸ்ட் 9 அன்று நாடாளுமன்றத்தைக் கூட்டலாமா?' எனக் கேட்டு கடிதம் அனுப்புகிறார் ரசாக்.
"ஏற்பாடு செய்யுங்கள். நாடாளுமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பு நாடு திரும்பிவிடுவேன்' என்று தகவல் அனுப்புகிறார் துங்கு.
இரு தரப்பிலும் மூத்தவர்கள் ரகசியம் துளியும் வெளியே கசிந்து விடாமல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை அறியாத இடை நிலை, கீழ் நிலைத் தலைவர்கள் இரு தரப்பிலும் அறிக்கைப் போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகஸ்ட் 5: உடல் நலம் தேறிய துங்கு, வெளிநாட்டிலிருந்து நேரடியாக அதிகாலை 3:50 மணிக்கு சிங்கப்பூர் வந்து இறங்குகிறார். ஆனால் அன்று லீ குவான் யூ சிங்கப்பூரில் இல்லை. லண்டனில் துங்கு "ரகசியத்தை' பகிர்ந்து கொண்டு வெள்ளோட்டம் பார்த்த துங்குவின் நண்பரும் சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சருமான லிம் கிம் சான் துங்குவை விமான நிலையத்தில் சந்திக்கிறார். அன்று மதியமே துங்கு கோலாலம்பூர் கிளம்பிவிடுகிறார்
ஆகஸ்ட் 6: துங்கு மூத்த அமைச்சர்களை தனது இல்லத்தில் சந்திக்கிறார். "பேசிப் பார்த்தோம், பயனில்லை' என்று ரசாக் தெரிவிக்கிறார். அன்று மாலையே சிங்கப்பூரின் நிதி அமைச்சர் டாக்டர் கோ கெங் ஸ்வீ துங்குவைச் சந்திக்கிறார். அவரிடம் துங்கு, "பிரிவதைத் தவிர வேறு வழியில்லை, ஒப்பந்தங்கள், சட்டத் திருத்தங்கள் எல்லாம் தயார்' என்று சொல்கிறார். "சிங்கப்பூர் அமைச்சர்கள் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால் அறிவித்து விடலாம்' என்கிறார் துங்கு. 
வெளியூரிலிருந்த லீ குவான் யூவிற்குத் தகவல் கொடுக்கிறார் டாக்டர் கோ. அங்கிருந்து விரைந்து வரும் லீ, நள்ளிரவில், சிங்கப்பூரின் துணைப் பிரதமர் டாக்டர் தோ சின் சே வைத் தொலைபேசியில் அழைத்து, "உடனே கிளம்பி வாருங்கள். விமானத்திற்காகக் காத்திருக்க வேண்டாம். காரில் புறப்பட்டு வாருங்கள்' என்கிறார். மலேசியாவிலிருந்து பிரிவதைக் கடுமையாக எதிர்த்தவர் துணைப்பிரதமர் தோ.
அவரைப் போலவே கடுமையாக எதிர்த்த இன்னொரு அமைச்சர், தமிழரான ராஜரத்தினம். இரண்டு பேரும் ஒன்றாகச் சேர்ந்து வந்தால் எதிர்ப்பு வலிமையாகிவிடும் என்று உணர்ந்த லீ, டாக்டர். தோ கிளம்பிய பின் ராஜரத்தினத்திற்குப் புறப்பட்டு வரச் சொல்லி தகவல் கொடுக்கிறார்.
ஆனால் அந்தத் தந்திரம் பலனளிக்கவில்லை. ராஜரத்தினம், டாக்டர் தோ இருவருமே மலேசியாவிலிருந்து பிரிவதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஒருநாள் முழுதும் விவாதம் நடக்கிறது. பலனில்லை.
ஆகஸ்ட் 7: துங்குவைச் சந்திக்க அவரது செயலாளர் மூலம் நேரம் கேட்கிறார் லீ. பகல் 12.30க்கு வாருங்கள் என பதில் வருகிறது. அமைச்சர்கள் கையெழுத்திட மறுப்பதைத் தெரிவிக்கும் லீ, "ஆவணங்களை சிங்கப்பூர் எடுத்துச் செல்கிறேன், அங்கு அவர்களிடம் பேசி கையொப்பம் பெற்றுவிட முடியும் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கையொப்பம் பெற்ற பின்பு, என் செயலாளர் மூலம் விமானப்படையின் தனி விமானத்தில் அனுப்பி வைக்கிறேன்'' என்கிறார். அவரது வேண்டுகோள் ஏற்கப்படுகிறது
லீக்கும் அமைச்சர்களுக்கும் காரசாரமான கடும் விவாதம் நீண்ட நேரமாக நடக்கிறது. அப்போது ஒரு கடிதத்தை அவர்களுக்குக் காண்பிக்கிறார் லீ. அது துங்குவின் கடிதம். " பிரிவதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை' என்கிறது கடிதம். நடுநிசியை நெருங்கும் நேரத்தில் இரு அமைச்சர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்கள். "அதன் பின்னும் டாக்டர் தோ விடம் கசப்புணர்வும் கோபமும் காணப்பட்டது' என்றும், "என் கனவுகள் விழுந்து நொறுங்கி விட்டன' என்று ராஜரத்தினம் சொன்னதாகவும் பின்னாளில் லீ க்வான் யூ தனது சுயசரிதையில் எழுதுகிறார்.
ஆகஸ்ட் 8: ஆவணங்கள் விமானப்படை விமானம் மூலம் சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூர் வந்து சேர்கிறது. அமைச்சரவை கூட்டத்தில் ரகசியத்தை உடைக்கிறார் துங்கு. சபா மாநிலத்தின் முதல்வர் பீட்டர் லோவின் தகவல் வருகிறது. "வந்து கொண்டே இருக்கிறேன், விமான நிலையத்தில் ஒரு காரை தயாராக வைத்திருங்கள்'' என்று அவர் செய்தி அனுப்புகிறார். இரவு 11:50க்கு வந்து இறங்கும் அவர் நேரே துணைப் பிரதமர் துன் ரசாக்கை சந்திக்கிறார். 
"செய்தி கேள்விப்பட்டேன், திகைத்துப் போய்விட்டேன்' என்கிறார். "இனி ஒன்றும் செய்வதற்கில்லை' என்கிறார் ரசாக்.
ஆகஸ்ட் 9: 
காலை 8: 45: நாடாளுமன்றம் செல்லப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார் துங்கு. பிரிட்டன் தூதர், லார்ட் ஹெட் அவரைக் காண வந்திருப்பதாக அவருக்குச் சொல்லப்படுகிறது. லார்ட் ஹெட் சொல்கிறார்; "கேள்விப்பட்டேன். எங்கள் பிரதமர் ஹெரால்ட் வில்சன் "மிகுந்த ஏமாற்றம் அடைந்ததாக' சொல்லச் சொன்னார். இதை ஒரு நாள், ஒரே ஒரு நாள் தள்ளிப் போட முடியுமா?' எனக் கேட்கிறார். துங்கு சொல்கிறார்: "மன்னிக்கவும், ஒரு மணி நேரம் கூடத் தள்ளிப் போட முடியாது'. 
காலை 9: 15: இன்னொரு எதிர்பாராத விருந்தினர். அவர் ஆஸ்திரேலிய தூதர், டாம் கிரிட்ச்செஸ்லி. அவரும் இதைத் தவிர்க்கச் சொல்கிறார். "இனி எதுவும் இதை மாற்ற முடியாது' என்று கையை விரித்து விடுகிறார் துங்கு.
காலை 9:45: நாடாளுமன்றம் கூட 15 நிமிடங்களே இருக்கின்றன. நாடாளுமன்றத்தில் உள்ள ஒரு தனி அறையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூடுகிறார்கள். அவர்களிடத்தில் "வேறு வழியில்லை ஆதரியுங்கள்'என்கிறார் துங்கு.
காலை 10 மணி: "என் வாழ்நாளிலேயே இதைப் போன்ற ஒரு துயரமான நாளை நான் சந்தித்ததில்லை' என உருக்கமாகப் பேச்சை ஆரம்பித்தார் துங்கு. அது முடிவல்ல; ஒரு தொடக்கம்.
(தொடரும்)
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/6/w600X390/k5.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/07/ரகசியம்பரம-ரகசியம்-மாலன்-2840023.html
2840024 வார இதழ்கள் தினமணி கதிர் இலக்கியத்தில் அரசியல் DIN DIN Sunday, January 7, 2018 12:00 AM +0530 கூடியே இருந்தார் அன்று
 கொன்றிடும் வார்த்தை சொன்னார்
 "நாடிதை உடனே நீங்கு'
 நவின்றனர் நம்மைப் பார்த்து
 ஆடியே போன போதும்
 அன்றொரு சூளை ஏற்றோம்
 "தேடியே வெற்றி கொள்வோம்
 திசையெல்லாம் நம்மை மெச்ச'
 
 எம்மையே புகழ்ந்து ஞாலம்
 ஏத்திடும் நிலையை எய்தி
 இம்மையில் சொர்க்கம் தன்னை
 இங்கு எம் சிங்கை நாட்டில்
 செம்மையாம் நெறிகள் போற்றிச்
 சிறப்புறச் சமைக்க வென்றே
 அம்மையைப் பணிந்து போற்றி
 அன்று நாம் உறுதி பூண்டோம்
 
 "ஐம்பதுக்கு ஐம்பது' நூலில்
 சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராஜன்

]]>
http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/07/இலக்கியத்தில்-அரசியல்-2840024.html
2840025 வார இதழ்கள் தினமணி கதிர் பேல்பூரி DIN DIN Sunday, January 7, 2018 12:00 AM +0530 கண்டது
* (மன்னார்குடி அருகே செல்லும் ஒரு வாய்க்காலின் பெயர்)
சட்டி உருட்டி வாய்க்கால்
ந.ரகுநாதன், ரிஷியூர்.

* (சிவகங்கை நகரில் உள்ள ஒருவரின் பெயர்)
ந.கழகம்
மு.சுகாரா, திருவாடனை.

* (சென்னை திருவான்மியூரில் ஒரு சரக்கு லாரியின் பின்புறத்தில்)
WISE MEN WORK
WHILE OTHERS SLEEP
ஜி.லட்சுமி வாசுதேவன், சென்னை-41.

• (கால்டாக்ஸி ஒன்றின் முகப்பில்)
அகிம்சை
சி.பழனிசுவாமி, சென்னை-59

கேட்டது
• (மயிலாடுதுறையில் ஒரு வீட்டில் மனைவியும் கணவனும்)
"ஏங்க நம்ம வீட்டுக்கு விளக்கு ஏத்த ஒரு மருமகள் வரணுங்க''
"மருமகள் வரணும்ன்னு சொல்லு. விளக்கேத்தவெல்லாம் வேணாம். நீ ஏத்துன விளக்கே வீட்டை எரிச்சிடுச்சி. விளக்கேத்துனதெல்லாம் போதும்.''
க.பன்னீர்செல்வம், மாப்படுகை.

• (வேலூர் பேருந்து நிலையத்தில் இளம்பெண்கள் இருவர்)
"என் லவ்வர் டெங்கு கொசுவை விட, ரொம்ப பயங்கரமானவனா இருக்கான்டி''
"எப்படிச் சொல்றே?''
""பேசும்போது அநியாயத்துக்கு "கடி'க்கிறானே''
வெ.ராம்குமார், வேலூர்-1.

எஸ்எம்எஸ்
பொன்னைச் சோதிப்பது நெருப்பு
ஆûணைச் சோதிப்பது பெண்.
ஜான்ரவி, கோவில்பட்டி.

யோசிக்கிறாங்கப்பா!
பலபேர் தங்களுடைய அறிவாளித்தனத்தை
அடுத்தவரிடம்
குற்றம் காண்பதில்
மட்டும்தான் 
நிரூபிக்கிறார்கள்.
ஜி.மஞ்சரி, கிருஷ்ணகிரி.

அப்படீங்களா!
கூகுள் நிறுவனம் ஒரு வித்தியாசமான கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. தொப்பியை அணிந்து செல்லும் ஒருவர், தான் போகுமிடமெல்லாம் உள்ள காட்சிகளை நேரடியாக தொப்பியின் மூலம் சமூக வலைதளங்களுக்கு அனுப்ப முடியும். ஆம், தொப்பியில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அது புகைப்படங்களை, வீடியோக்களை எடுத்துத் தள்ளும். அதுமட்டுமல்ல, போகும் இடங்களில் ஏதேனும் ஆபத்து நேருமென்றாலும், தேவையானவர்களுக்கு - காவல்துறைக்கு - உடனே இந்த தொப்பி தகவலை அனுப்பிவிடும் வசதியையும் கொண்டது. 
என்.ஜே., சென்னை-69.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/6/w600X390/k6.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/07/பேல்பூரி-2840025.html
2840026 வார இதழ்கள் தினமணி கதிர் மைக்ரோ கதை DIN DIN Sunday, January 7, 2018 12:00 AM +0530 அந்த குடியிருப்பின் சொந்தக்காரர் அதில் குடியிருக்கும் பெண்களுக்கு ஒரு போட்டி வைத்தார். 
"நாளைக் காலை உங்கள் வீட்டைச் சுத்தம் பண்ணி, குப்பைகளை வாளிகளில் அள்ளி வாருங்கள். மிகவும் சுத்தமான வீட்டுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு'' என்று அறிவித்தார். 
மறுநாள் காலை எட்டுமணிக்கெல்லாம் எல்லா வீட்டுப் பெண்களும் தங்கள் வீட்டுக் குப்பைகளைக் கொண்டு வந்தனர். சிலர் முழு வாளி அளவுக்கு, சிலர் முக்கால் வாளி அளவுக்கு, சிலர் அதற்கும் அதிகமாக என்று நிறைய குப்பைகளைக் கொண்டு வந்தனர்.
அதிகக் குப்பை கொண்டு வந்திருக்கும் யாருக்காவதுதான் பரிசு கிடைக்கும் என்று நினைத்தனர். 
அப்போது ஒரு வீட்டுப் பெண் மட்டும் சிறிய பாலிதீன் பையில் குப்பையைக் கொண்டு வந்திருந்தாள்.
அவளுக்கே ஆயிரம் ரூபாய் பரிசை குடியிருப்பின் சொந்தக்காரர் கொடுத்தார்.
"இந்தப் பெண்ணின் வீடுதான் எப்போதும் சுத்தமாக இருந்திருக்கிறது. அதுதான் குப்பை குறைவாக இருக்கிறது'' என்றார் அவர்.
என்.கோமதி, 
பெருமாள்புரம். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/6/w600X390/k7.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/07/மைக்ர-2840026.html
2840028 வார இதழ்கள் தினமணி கதிர் வயிற்று நோய்களும்... உணவுக்கட்டுப்பாடும்! DIN DIN Sunday, January 7, 2018 12:00 AM +0530 ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
எனக்கு அடிக்கடி வயிற்றில் மப்பு நிலை ஏற்பட்டு கீழ் வாயுத் தடை, ஏப்பம், செரிமானக் குறைவு, நெஞ்செரிச்சல், நூலாக சளி வெளியேறுவது போன்ற பலவகை உபாதைகளால் அடிக்கடி கஷ்டப்படுகிறேன். இது எதனால் ஏற்படுகிறது? இதை எப்படிக் குணமாக்குவது?
சக்திவேல், காஞ்சிபுரம்.

உங்களுக்கு உணவைச் செரிக்கச் செய்யும் ஜீரண சக்தி குறைந்துள்ளதாகத் தோன்றுகிறது. ஜீரண சக்தி என்பது உட்செல்லும் உணவை உடலுக்கேற்றதாக மாற்றி அதை உடலின் பகுதியாக அமைப்பதே. உணவை அன்னச்சத்தாக மாற்றுவதுடன் நிற்காமல் அதனை ரத்தமாக , தசையாக, எலும்பாக, உடலிலுள்ள ஒவ்வொரு பகுதியாக மாற்றும் சக்தி இது. வெளிப் பொருளை -உணவை- உடலாக மாற்றும் திறமை இதற்கு உண்டு. இதை ஜாடராக்னி (ஜடாரம் - வயிறு), இரைப்பை முதல் பெருங்குடல் வரை உள்ள பகுதி, அதிலுள்ள சூடு என்று அழைக்கப்படுகிறது. மப்பு நிலை ஏற்பட உணவை அதிக அளவில் சாப்பிடுவது மட்டுமே காரணமாகாது. தனக்குப் பிடிக்காத வெறுப்பான உணவை பிறருடைய கட்டாயத்தினால் சாப்பிட நேர்வதாலும், குடலில் வாயுவையும் மலக்கட்டையும் ஏற்படுத்தக் கூடிய சூடு ஆறிய நிலையிலுள்ள கிழங்குகளைச் சாப்பிடுவதாலும், அதிகம் வெந்தததையும், வேகாததையும் சேர்த்துப் புசிப்பதாலும், எளிதில் செரிக்காத , வறட்சி மற்றும் குளிர்ச்சி நிறைந்த பொருளை உண்பதாலும், சுத்தமல்லாத பொருளை உணவாகச் சாப்பிடுவதாலும், குடல் உட்புறங்களில் வேக்காட்டை ஏற்படுத்தும் காரக்குழம்பு, ஊறுகாய் போன்றவற்றாலும், வறண்டு போனதும், அதிக நேரம் தண்ணீரில் ஊறிக் கிடப்பதையும் வருத்தம், கோபம், அதிகப்பசி போன்ற
நிலையில் சாப்பிடப்படும் உணவும் செரிக்காமல் ஜாடராக்னியைக் கெடுத்து மப்புநிலை ஏற்படக் காரணமாகிறது.
செரிமானத்துக்கு உதவும் வயிற்றிலுள்ள ஸமானன் எனும் வாயுவுடன் இந்த மப்புநிலை அடைந்த உணவு கலந்தால், வயிற்றுவலி, வயிற்று உப்புசம், வாயு அசைவற்று நின்றுவிடுதல் போன்ற உபாதைகளைத் தோற்றுவிக்கும். பித்தம் சீரணமாகாத உணவுடன் சேர்ந்தால் உணவில் கெட்ட நாற்றத்தை உண்டு பண்ணி, எரிச்சலுடன் கூடிய ஏப்பத்தை ஏற்படுத்தும். வயிற்றில் குழகுழப்பும், கனமும் உண்டாகும். "க்லேதகம்' எனும் கபத்துடன் செரிக்காத உணவு கலந்து விட்டால், உணவு அழுக்கடைந்ததும், நூல் போன்றும், கெட்டியாகவும், பிசுபிசுப்பாகவும் ஒட்டிக் கொள்ளும் தன்மையுடையதாகவுமிருக்கும்.
அதனால் ஜாடராக்னிக் குறைவினால் இரைப்பையில் உணவும், உணவின் முதல் சாரமான அன்னச்சத்து முழுவதும் சீரணமாகாமல், குடல் வழியாக உட்புறப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படும்போது, குழாய்களின் அடைப்பு, பலக்குறைவு, உடல் கனத்தல், கீழ் வாயுத்தடை, சோம்பல், தாதுக்களில் செரிக்காத நிலை, உமிழ்நீரைத் துப்புதல், மலம் வெளியேறாமல் தங்குதல், ருசியின்மை, ஆயாசம் போன்ற குறிகளை வெளிப்படுத்தும்.
உட்புறங்களில் பகைமை குணங்களைக் கொண்ட மப்புநிலையை ஜீரணிக்கச் செய்தல், ஜாடராக்னியை வளர்த்தல், சூடும், ஊடுருவும் தன்மையும் கொண்ட மருந்துகளால் தயாரித்த எண்ணெய் வகை, வியர்வை சிகிச்சை இவற்றால் மப்பான நிலையை ஜீரணிக்கச் செய்து, இளக்கி, குடலுக்குள் கொண்டு வந்து, வாந்தி மற்றும் பேதி மூலமாக வெளியேற்றுதல், தலைப்பகுதிக்கு வந்து சேர்ந்தால் மூக்கில் எண்ணெய் மருந்தைச் செலுத்தி வெளிக் கொணருதல் போன்ற சிகிச்சை முறைகளால் வெளியேற்ற வேண்டும்.
இத்தனை கஷ்டமான சிகிச்சை முறைகளுக்கு காரணமாக அமைவது, நாக்கின் சபலத்தால் வயிற்றிலுள்ள ஜாடராக்னியை கெடுத்துக் கொள்வதால்தான். அதனால் நீங்கள் உணவில் கட்டுப்பாடும், செரிமானக் கோளாறுகள் ஏற்படா வண்ணம் கவனத்துடன் இருத்தலும் அவசியமாகும்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/6/w600X390/k8.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/07/வயிற்று-நோய்களும்-உணவுக்கட்டுப்பாடும்-2840028.html
2840029 வார இதழ்கள் தினமணி கதிர் டாட்டாவின் பிரியம் DIN DIN Sunday, January 7, 2018 12:00 AM +0530 தெற்கு மும்பையில் "பாம்பே வீடு' என்ற பாரம்பரிய வீடு உள்ளது. இங்குதான் டாட்டா குழுமம் இயங்குகிறது. டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாட்டாவுக்கு நாய்கள் மீது பிரியம் அதிகம். வளர்ப்பு நாய்கள் மட்டுமல்ல, தெருநாய்களையும் பராமரிப்பார். இதனால் சாதாரண தெருநாய்கள் கூட டாட்டா குழுமத்தின் வரவேற்பு அறை வரை சகஜமாய் நடமாடும்.
 ஒருமுறை மழை பெய்தபோது தெருநாய்களுக்கு அந்த வளாகத்துக்குள் இடமளித்துள்ளார் ரத்தன் டாட்டா. அன்றிலிருந்து அந்த நாய்களும் அங்கு அங்கத்தினராகிவிட்டது.
 தற்போது பாம்பே வீட்டில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் தற்காலிகமாக அருகில் உள்ள ஒரு கட்டடத்துக்கு மாறிச் சென்றுள்ளனர். அவர்களுடன் எப்போதும் கட்டடத்தைச் சுற்றி வரும் நாய்
 களையும் அழைத்துச் சென்றுள்ளனர். அவற்றுக்கு தினசரி சாப்பாடு, குளுகோஸ் பிஸ்கட், தேவைப்பட்டால் லிஃப்ட் சவாரி என அனைத்து வசதிகளும் உண்டாம்.
 டாட்டா குழுமம் மீண்டும் பாம்பே வீட்டுக்குத் திரும்பும் போது மீண்டும் அந்த நாய்களும் கொண்டு வரப்படுமாம்.
 ராஜேஸ்வரி
 ராதாகிருஷ்ணன்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/6/w600X390/k9.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/07/டாட்டாவின்-பிரியம்-2840029.html
2840030 வார இதழ்கள் தினமணி கதிர் சிரி... சிரி...  DIN DIN Sunday, January 7, 2018 12:00 AM +0530 * "என்னை வீட்டுக்குக் காவலா வச்சிட்டு மத்தவங்கள்லாம் டூர் கிளம்பிட்டாங்க''
"அப்ப நீங்க "வீட்டுக் காவல்'ல இருக்கீங்கன்னு சொல்லுங்க''
வி.ரேவதி, தஞ்சை.

* "ஏம்ப்பா சர்வர்... உங்க ஹோட்டலில் எலித்தொல்லை ஜாஸ்தியா இருக்கே... காலடியில் குறுக்க நெடுக்க ஓடுதே''
"சார்... கவனமாச் சாப்பிடுங்க... வடை காணாமல் போயிடும்''
ஆர்.யோகமித்ரா, சென்னை-73.

*"டார்லிங்! நம்ம வீட்ல சினிமா செலவு அதிகமாயிட்டுது. அதை பாதியாக் குறைக்கணும்''
"சரி... இனி மேல் நான் மட்டும் சினிமாவுக்குப் போயிக்கிறேன்''
எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.

* மேனேஜர்: எந்த புகாரா இருந்தாலும் புகார் பெட்டியில போடுங்க!
ஒருவர்: பெட்டியைத் திறந்து புகார்களை நீங்க பார்க்கிறதில்லைங்கிறதுதான் சார் என்னோட புகாரே...
வி.ரேவதி, தஞ்சை.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/6/w600X390/k11.jpg http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2018/jan/07/சிரி-சிரி-2840030.html
2840032 வார இதழ்கள் தினமணி கதிர் திரைக் கதிர் DIN DIN Sunday, January 7, 2018 12:00 AM +0530 * "வனமகன்' படத்தைத் தொடர்ந்து ஏ.எல். விஜய் எழுதி இயக்கி வரும் "கரு'. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் சாய் பல்லவி, நாக ஷவுர்யா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நீரவ் ஷா ஒளிப்பதிவில் சாம் இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரை பிரபுதேவா சமீபத்தில் வெளியிட்டார். இதற்கு சமூகவலைத்தளத்தில் பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது. இம்மாத இறுதியில் படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. "கரு' படத்தின் பணிகள் முடிவுற்றுள்ள நிலையில் தனது அடுத்தப் படத்துக்கான பணிகளை துவங்கியுள்ளார் ஏ.எல்.விஜய். இதில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ட்ரைண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது. மதுரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் முதற்கட்டப் படப்பிடிப்பு துவங்குகிறது. சென்னை, புதுச்சேரி, கோவா உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்பு நடக்கவுள்ளது. பாடல் காட்சிகளை வெளிநாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

* 70-களின் தொடக்கத்திலிருந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாகி போட்டி போட்டன அதன் பிறகு ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகியோரின் படங்களும் ஒரே நாளில் வெளியானது. இது திரையுலகினர் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் யார் படம் பெஸ்ட் என்பது போன்ற எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆனால், கடந்த சில வருடங்களாவே நட்சத்திர நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகால் இருந்து வருகிறது. குறைந்தது 2 வாரங்கள் இடைவெளியில் அடுத்தடுத்த படங்கள் வெளிவருகின்றன. வசூல் கணக்கு நிலவரத்தை ஒட்டி இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டில் ரஜினி, கமல் நடித்த படங்கள் வெளியாகவில்லை. விஜய்க்கு "மெர்சல், அஜித்துக்கு "விவேகம்' என படங்கள் திரைக்கு வந்தன. இந்த ஆண்டில் ஒட்டு மொத்த நடிகர்களுக்கும் படங்கள் வெளிவரும் சூழல் உருவாகியுள்ளது. ரஜினிக்கு "2.0', "காலா' படங்கள் தயார் நிலையில் உள்ளன. கமல் நடித்துள்ள "விஸ்வரூபம் 2' தயாராகி கொண்டிருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படம், சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம், சூர்யா நடிக்கும் "தானா சேர்ந்த கூட்டம்', விக்ரம் நடிக்கும் "ஸ்கெட்ச்', தனுஷ் நடிக்கும் "வட சென்னை', "என்னை நோக்கி பாயும் தோட்டா', கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கவுள்ள படம், விஷால் நடிக்கும் "இரும்புதிரை', "சண்ட கோழி 2', மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம், ஜெயம் ரவி நடிக்கும் "டிக் டிக் டிக்', விஜய் சேதுபதியின் "ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்', சிவகார்த்திக்கேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கும் படங்கள் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

* கன்னடத்தில் பவண்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் "யு-டர்ன்'. விமர்சனரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது. 
இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, மற்ற மொழிகளுக்கான ரீமேக் உரிமைக்கு கடும் போட்டு நிலவி வருகிறது. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்குகளுக்கான உரிமை விற்பனையாகியுள்ளதாக தெரிகிறது. தெலுங்கு உரிமையை அங்குள்ள நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், தமிழ் ரீமேக் உரிமையைக் கன்னடத்தில் தயாரித்த அதே நிறுவனமே தயாரிக்கவுள்ளது. பவண்குமாரே தமிழிலும் எழுதி இயக்குகிறார். இதில் சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
இதனிடையே ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் நயன்தாரா நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுளது. ஆனால், இதனை ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி மறுத்துள்ளார். தமிழில் பவண்குமார் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ள நிலையில், சமந்தா நாயகியாக நடிப்பது உறுதியாகியுள்ளது. ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. சென்னை மற்றும் கேரளப் பகுதிகளில் முதற்கட்டப் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

* ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "கொரில்லா'. ஹாலிவுட் உலகில் தனித்துவம் வாய்ந்த பாணியாக விளங்கும் "ஹெய்ஸ்ட்' காமெடி த்ரில்லர் வகை படமாக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சிம்பன்சியுடன் நடிகர் ஜீவா நடிக்கிறார். இந்திய சினிமாவிலேயே முதல் முறையாக பயிற்சி அளிக்கப்பட்ட சிம்பன்சியை வைத்து இப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் நடிக்கவுள்ள சிம்பன்சிக்கு தாய்லாந்தில் உள்ள புகழ் பெற்ற விலங்குகள் பயிற்சி மையமான "சாமுட்'-இல் பயிற்சி அளிக்கப்பட்டு பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. 
இந்த பயிற்சி மையத்தில் இருந்து பயிற்சி அளிக்கப்பட்ட சிம்பன்சிகள்தான் "ஹேங்ஓவர்-2', "ப்ளேனட்ஸ் ஆஃப் தீ ஏப்ஸ்' ஆக