Dinamani - மகளிர்மணி - http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3031374 வார இதழ்கள் மகளிர்மணி பெண்கள் உரிமைக்காக இறுதிவரை போராடுவேன்! DIN DIN Thursday, November 1, 2018 10:30 AM +0530 ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு காங்கோ நாட்டைச் சேர்ந்த டெனிஸ் மக்வெஜ் மற்றும் ஈராக் நாட்டின் யாசிடி இனத்தைச் சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் நாடியா முராட் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிரியா எல்லையை ஒட்டியுள்ள ஈராக் நாட்டின் சின்ஜார் நகரத்தை சேர்ந்த நாடியாமுராட், கடந்த 2014-இல் ஐஎஸ் தீவிரவாதிகள் சின்ஜார் நகரத்தை தாக்கியபோது பாலியல் அடிமையாக மொசூலுக்கு கடத்தப்பட்டார். அங்கு தீவிரவாதிகளின் கூட்டு பலாத்கார பாலியில் வன்முறைக்கு ஆளாகி மூன்று மாதங்களுக்குப் பின் தப்பிச் சென்று ஜெர்மனியில் அவரது சகோதரியிடம் அடைக்கலமானார். போரில் ஆண்களைக் கொன்று பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கும் அவலத்தை நாடியா வெளிப்படுத்தியதோடு, தன்னுடைய யாசிடி இன மக்களுக்காகவும், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளுக்காகவும் தொடர்ந்து எதிர்ப்பு குரல் கொடுத்து வருகிறார். 2016-ஆம் ஆண்டு முதல் பாலியல் அடிமைகளுக்காக ஐ.நா.வின் நல்லெண்ண தூதராக உள்ள நாடியா முராட் தன்அனுபவத்தை கூறுகிறார்:
"2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதியன்று இரவு வடக்கு ஈராக் எல்லைப்பகுதியில் உள்ள சின்ஜார் நகரத்திற்குள் நுழைந்த ஐ. எஸ். தீவிரவாதிகள் சிறிய கிராமத்தில் இருந்த எங்களை சிறைப்பிடித்தபோது, என்னுடைய தாயார் மற்றும் ஆறு சகோதரர்களை சுட்டுக் கொன்றனர். 
என்னையும், மற்ற இளம் பெண்களையும் மொசூலுக்கு கடத்திச் சென்றனர். எங்களை சிறை வைத்த இடத்தில் ஏராளமான பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். தீவிரவாதிகள் முதலில் அழகான பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களது தலைமுடியையும், வாயையும் பரிசோதித்து, பின்னர் நீ கன்னித்தன்மை உடையவளா? என்று கேட்பார்கள். ஆம் என்று சொன்னால்போதும், பெண்களை கண்ட இடத்தில் தொடுவார்கள். எங்களை விலங்குகள் போல் உடல் முழுக்க கைகளால் தடவுவார்கள். அங்கிருந்த தீவிரவாதிகளில் தலைவன் என்று கருதப்பட்ட சல்லான், என்னை நெருங்கும்போது, அவனது அகன்ற முகம் முழுவதும் தலைமுடியால் மூடியிருப்பதால் மிருகம் போல் தோன்றுவான். உடம்பின் மீது அழுகிய முட்டை நாற்றம் அடிக்கும். அவர்கள் அனைவருமே எங்களை பாலியல் அடிமைகளாகவே நடத்தினர். 
ஆனால் அவர்கள் நடத்தும் பத்திரிகையில், மேலும் பல புதிய பெண்களை கவர்வதற்காக பெண்களைப் பற்றி உயர்வாக எழுதுவார்கள். நாங்கள் சிறைவைக்கப்பட்ட இடம் திறந்த வெளியாக இருந்ததால் சுலபமாக என்னால் தப்பிக்க முடிந்தது. சிலரது உதவியால் ஜெர்மனியில் உள்ள என் சகோதரியிடம் தஞ்சமடைந்தேன்.
என்னுடைய மிகப்பெரிய மூன்று தவறுகளில் முதலாவது நான் குர்து இனத்தைச் சேர்ந்தவள், துருக்கி, ஈரான், ஈராக், சிரியா போன்ற நாடுகளில் வசிக்கும் குர்து இன மக்கள், பல நூற்றாண்டுகளாக தங்களுக்குரிய உரிமைகளுக்காக போராடி வருகிறார்கள். இரண்டாவது நான் உலகிலேயே மிக பழமையான யாசிடி பிரிவை சேர்ந்தவள். நாங்கள் சாத்தானை வணங்குபவர்கள் என்பது சன்னி பிரிவினர் நம்பிக்கையாகும். மூன்றாவது நான் ஒரு பெண்ணாக பிறந்தது. எந்த ஆண் வேண்டுமானாலும் என்னை சுலபமாக அடையமுடியும்.
குர்து பிரிவினரோ, சன்னி பிரிவினரோ அவர்களில் ஒரு அங்கமாக யாசிடி பிரிவினரை அங்கீகரிப்பதில்லை. எங்களை சிறை பிடித்த தீவிரவாதிகள் அன்றிரவு கிராமங்களையும், வழிபாட்டு தலங்களையும் அடித்து நொறுக்கி கொளுத்தியதோடு, கல்லறைகளை கூட சேதப்படுத்தினர். ஆண்களை வரிசையாக நிற்க வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இவர்களை எதிர்த்து போராட வேண்டிய குர்து ராணுவப் படையினர் சந்தடியில்லாமல் இருட்டில் மறைந்தனர். தப்பிவந்த நான் பெண்களை வணிக பொருளாக கருதுவதை எதிர்த்தும், என் இன மக்களை காப்பாற்றுவதற்காகவும் போராடத் தொடங்கினேன். இது குறித்து அதிகம் பேசினேன். நான் பட்ட துயரங்கள் என்னோடு முடியட்டும் என்ற நினைப்பில் "கடைசி பெண்' என்ற தலைப்பில் என் சுயசரிதையை எழுதி வெளியிட்டேன். 
என்னைப்போன்று பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்களை இந்த சமூகம் குற்றவாளிகள் போல் பார்ப்பதை எதிர்த்தேன். 
நாஜிக்களை போல் இந்த ஐ.எஸ். தீவிரவாதிகளையும் போர் குற்றவாளிகளாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டுமென்று குரல் எழுப்பினேன். இதற்கு மனித உரிமை ஆர்வலர்களும், வழக்குரைஞர்களும் ஆதரவளிக்க முன்வந்தனர்.
இன்று எனக்கு உலகின் மிகப்பெரிய விருதான "நோபல் பரிசு' கிடைத்தது குறித்து பெருமைப்படுகிறேன். பெரும்பாலான உலக நாடுகளில் சரிசமமான அளவில் பெண்கள் எண்ணிக்கை உள்ளது. அவர்களில் பாலின வன்முறையால் பாதிக்கப்படுபவர்களுக்கு எதிராக போராடுவதோடு, விழிப்புணர்வை ஏற்படுத்த பெண்கள் அனைவரும் முன்வர வேண்டும். அதற்கு வழிகாட்டியாக நான் இருப்பேன். பெண்கள் உரிமைக்காக இறுதிவரை போராடுவேன்'' என்று கூறும் நாடியா முராட், இம்மாத இறுதியில் மும்பை வரவுள்ளார். அப்போது அவருக்கு இங்குள்ள ஹார்மனி பவுண்டேஷன் பெருமைக்குரிய "மதர்தெரசா நினைவு விருது' வழங்கி கவுரவிக்கவுள்ளது. 
-அ. குமார்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/1/w600X390/NADIA_MURAD.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/nov/01/பெண்கள்-உரிமைக்காக-இறுதிவரை-போராடுவேன்-3031374.html
3031368 வார இதழ்கள் மகளிர்மணி கூட்டாக இணைந்தால் எதையும் சாதிக்கலாம்! DIN DIN Thursday, November 1, 2018 10:26 AM +0530 ஜெர்மனியில் உள்ள சர்வதேச ரைஃபீஸின் கூட்டுறவு சங்கத்தின் (ஐதம) 50 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக தமிழ் பெண்மணியான நந்தினி ஆசாத் நிர்வாக குழு உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார். மேலும் இவர், ஆசிய பசிபிக் பெண்கள் குழுவின் சர்வதேச உறுப்பினரும் மகளிர், இந்திய அரசு மற்றும் அதன் மறுவாழ்வு குழுவின் தலைவரும் ஆவார். சென்னை மயிலாப்பூரில் உள்ள உழைக்கும் மகளிர் சங்கம் மற்றும் இந்திய மகளிர் கூட்டுறவு இணைப்பு மையத்தின் இயக்குநரும் ஆவார். தான் கடந்து வந்த பாதைக் குறித்து இவர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:
சர்வதேச ரைஃபீஸின் கூட்டுறவு சங்கத்தில் முதல் தென்னிந்திய பெண்மணியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த தருணங்கள் எப்படி இருக்கிறது?
சர்வதேச கூட்டுறவு யூனியனில் இரண்டு வகை உண்டு. அதில் ஒன்று இன்டர்நேஷனல் கோஆப்ரேட்டிவ் அலையன்ஸ். மற்றொன்று, இண்டர்நேஷனல் ரைஃபீஸின் யூனியன். இதில் இரண்டாவது வகையான ரைஃபீஸின் யூனியன் என்பது கடன் உதவி செய்யும் பணக்கார வங்கி. இதன் சங்கத்தில் 33 நாடுகளிலிருந்து 52 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். அதன் வரலாற்றில், தென்னிந்தியாவில் இருந்து முதன்முறையாக ஒரு பெண், அதுவும் ஏழை கூட்டுறவு நிதியத்தில் இருந்து தேர்தெடுக்கப்பட்டிருக்கிறேன். அவர்கள் எல்லாம் மிகப் பெரிய அளவிலான கூட்டுறவு வங்கிகள். பணக்கார வங்கிகள். ஆனால், ஒரு சமுதாய கண்ணோட்டத்துடன் செயல்படும் வங்கிகள். அவர்களை போன்று எங்களிடம் பணத்தொகை கிடையாது. ஆனால் பெண்கள் தொகை உண்டு. இதனை வைத்துக் கொண்டு அத்தனை பெரிய பேங்கர்ஸோடு நாமும் இருக்கிறோம் என்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் கருதுகிறேன். 
உழைக்கும் மகளிர் வளர்ச்சிக்காக உங்களின் பங்கு என்ன?
1978-இல் உழைக்கும் மகளிர் சங்கம் தொடங்கினோம். அதையடுத்து, பெண்களுக்கான இந்திய கூட்டுறவு நெட்வொர்க்கை 1981 -இல் தொடங்கினோம். 78 காலகட்டங்களில் காய்கறி விற்பவர், பூ விற்பவர் போன்று சிறு தொழில் செய்யும் பெண்கள் தங்கள் அன்றாட வியாபாரத்திற்கான முதலீட்டுக்காக வட்டிகாரனிடமும், ஈட்டிகாரனிடமும் கடன் பெற்று நடத்தும் வியாபாரத்தில் முதல் எடுக்கவே சிரமப்பட்டனர். இதை அறிந்து அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவி செய்ய வேண்டும் என்று அம்மா ஜெயா அருணாச்சலம் யோசித்தபோது, 100 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் ரைஃபீஸின் என்பவர் இதுபோன்ற சிறுதொழில் செய்பவர்களை ஒன்றிணைத்து சுய உதவி, சுயாட்சி, சுய நிர்ணய உரிமை போன்றவற்றை உருவாக்கி அதன்மூலம் கூட்டுறவு வங்கி ஒன்றினை தொடங்கி அவர்களின் நிலையை உயர்த்தினார். இதனை அறிந்த அம்மா அது போன்று நமது தென்னிந்தியாவில் தொடங்க வேண்டும் என்று நினைத்து உழைக்கும் மகளிர் வளர்ச்சிக்காக இந்த கூட்டுறவு வங்கியினை தொடங்கினார். 
இதன் மூலம் ஏழைப் பெண்களுக்கு தொழில் வளர்ச்சி ஏற்படுத்தி இன்று கார்ப்பரேட் வங்கிகளைவிட இவர்களுக்கு பவர் அதிகம் உள்ளது என்பதனை நிரூபித்துள்ளோம். ஆரம்பத்தில் சிறிய அளவில் தொடங்கிய இந்த வங்கியில் இன்று 6 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும், ஒரு குழுவாக சேரும்போது பெண்களுக்கு ஒரு பவர் கிடைக்கிறது. ஒரு எனர்ஜி கிடைக்கிறது. இதனால் இவர்கள், தாங்கள் வசிக்கும் பகுதியில் எந்த பிரச்னை என்றாலும் எந்தவித பயமும் இல்லாமல், யாருக்கும் பயப்படாமல் சம்பந்தப்பட்ட நபர்களை நேரில் சந்தித்து பேசும் அளவிற்கு உயர்த்தியிருக்கிறோம். இவைதான் உழைக்கும் மகளிர் வளர்ச்சியில் எங்களுக்கான வெற்றி. 
பெண்கள் அமைப்போடு உங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று எப்படி தோன்றியது?
எனது தாயார் மற்றும் தந்தையைப் பார்த்து வளர்ந்தவள் நான். அவர்கள் இருவருமே எப்போதுமே சமூக நோக்கத்தோடு வாழ்பவர்கள். அதனால் நானும் அப்படித்தானே இருப்பேன். ஐ.நாவில் நிறைய பணி செய்துள்ளேன். ஏசியன் டெவலப்மெண்ட் வங்கியில் பணி புரிந்துள்ளேன். ஆனால், பணத்தை சம்பாதிப்பதைவிட , இங்குள்ள பெண்களின் முன்னேற்றத்துக்கு துணையாக இருக்கவே பெரிதும் ஆசைப்பட்டேன். அதுபோன்று ஏழைப் பெண்களின் பிரச்னைகளுக்காகவும், பெண்களை வீடுகளில் அடிமைப்படுத்தும் ஆண் ஆதிக்கத்திற்கு எதிராகவும் அன்றிலிருந்தே குரல் கொடுத்து வருகிறோம். இதனால் நாங்கள் ஓர் இன்டர்நேஷனல் கோ-ஆப்ரேட்டிவ் பவராக வளர்ந்துவிட்டோம். இதன் காரணமாக அப்போது ஹிலாரி கிளிண்டன் வந்து எங்கள் அமைப்பை பார்த்துவிட்டு சென்றார். 
பெண்களுக்கு நீங்கள் கொடுக்கும் தன்னம்பிக்கை என்ன ?
பெண்களுக்கு அவர்கள் யார் என்பதை அவர்களுக்கே உணர வைக்கிறோம். பெண்களுக்கு லோன் கொடுத்தோம். அவர்களின் திறமையை மேம்படுத்தினோம். கூடவே அவர்களுக்கு விழிப்புணர்வும் கொடுத்து வருகிறோம். 
பொதுவாக பெண்கள் காலை 5.30 மணிக்கு எழுந்து கொள்கிறார்கள் வீட்டில் உள்ள வேலைகள் அனைத்தையும் தனியாளாக நாள் முழுவதும் செய்கிறார்கள். ஆனால், அவர்கள் மன நிலையில் "நாங்கள் வேலைக்கு எல்லாம் செல்வதில்லை. வீட்டில் சும்மாதான் இருக்கிறோம்' என்பார்கள். இந்த நிலை மாறவும். அதுபோன்று தனியொரு பெண்ணாக இருந்தால் எதுவுமே செய்யமுடியாது. அதுவே பெண்கள் குழுவாக, கூட்டாக இணைந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற விழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தி வருகிறோம். சரியான வழிகாட்டி கிடைத்தால் பெண்கள் நிச்சயம் வெற்றியாளர்களாக மாறுவார்கள் என்ற நம்பிக்கையை விதைக்கிறோம். 

உங்களது தாயாரைப் பற்றி?
அம்மா ஜெயா அருணாச்சலம்தான் இந்த உழைக்கும் மகளிர் சங்கத்தைத் தோற்றுவித்தவர். அம்மா ஒரு தனித்துவமான பெண்மணி. தனித்துவமான தலைவர். அரசியல் அனுபவம் இருந்தும் அரசியலை விட சமூதாய இயக்கத்தைதான் விரும்பினார். அதற்கு காரணம் நமது பெண்களின் நிலையை உயர்த்த வேண்டும். பெண்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும். வெளியிடங்களில் மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். அந்த எண்ணத்தில்தான் இந்த அமைப்பை தொடங்கினார். ஆனால், இன்று அவர் எதிர்பார்த்ததைவிட அபார வளர்ச்சி அடைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். 
பெண்களுக்கு உங்களின் ஆலோசனை...
WHAT TO THE MUSIC THAT YOUR HERE என்று ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு. அதுபோன்று உங்களுக்கு என்ன கணிக்கிறதோ அதை நோக்கி பயணப்படுங்கள் அப்போது வெற்றி உங்கள் காலடியில் இருக்கும்.
-ஸ்ரீதேவி குமரேசன்


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/1/w600X390/AZAD.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/nov/01/கூட்டாக-இணைந்தால்-எதையும்-சாதிக்கலாம்-3031368.html
3031367 வார இதழ்கள் மகளிர்மணி வெடியினால் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்க சில யோசனைகள்... DIN DIN Thursday, November 1, 2018 10:19 AM +0530 • தீபாவளி பண்டிகையின் முந்தைய இரவும், அன்றும் தவிர்க்க முடியாத காரணங்களை தவிர குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் கூட்டி செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, கைக்குழந்தைகள் அறவே வேண்டாம். 

• பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகளை காலனி அணிந்துகொள்ள செய்யவேண்டும். அதுபோன்று மத்தாப்பு கம்பிகளை கொள்ளுத்தியதும். ஒரு பாத்திரத்தின் நீரில் கம்பிகளை போட பழக்கிவிட வேண்டும்.

• வெடிகள் வெடிக்கும்போது காட்டன் ஆடைகளையே உடுத்திக் கொள்வது நல்லது. தப்பி தவறி பட்டாசு வெடித்து தீப்பொறிகள் மேல் விழுந்தாலும் சட்டையோடு போகும். பாலியஸ்டர் உள்ளிட்ட ஆடைகளில் தீப்பொறி விழுந்தால் உருகி உடம்புடன் ஒட்டிக்கொள்ளும் ஆபத்து இருக்கிறது.

• இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அல்லது கண்களை முழுவதும் கவர் செய்யும் வகையிலான கண்ணாடிகளை அணிந்து செல்வது அவசியம். ராக்கெட் போன்ற பட்டாசுகள் சில சமயம் குறி தவறி நம் மீது பாயும் வாய்ப்பு உண்டு. அதுபோன்று கார் அல்லது இருசக்கர வாகனத்தை ஓட்டும்போது மிகுந்த கவனமாகவும், மிதமான வேகத்திலும் செல்ல வேண்டும். குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் ஆர்வத்தில் வண்டியின் குறுக்கே ஓடி வந்துவிடலாம்.

• மகிழ்ச்சியான தீபாவளியாக கொண்டாடுவது நம் கையில்தான் இருக்கிறது.
- என்.சண்முகம்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/1/w600X390/mm6.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/nov/01/வெடியினால்-ஏற்படும்-அசம்பாவிதங்களை-தவிர்க்க-சில-யோசனைகள்-3031367.html
3031366 வார இதழ்கள் மகளிர்மணி பட்ச்சண டிப்ஸ் DIN DIN Thursday, November 1, 2018 10:17 AM +0530 • பலகாரம் செய்ய எண்ணெய்யைக் காய வைக்கும் போது, முதலில் கொய்யா இலையைப் போட்டு எடுத்துவிட்டு, பிறகு முறுக்கு, வடை, அதிரசம் போன்ற பலகாரங்களைச் செய்தால் எண்ணெய் பொங்கி வழியாது.

• தீபாவளி லேகியம் செய்யத் தெரியவில்லையென்றால், ஒரு கைப்பிடி டைமன் கற்கண்டுடன் மூன்று சுக்கு, ஒரு டீஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம், இரண்டு ஏலக்காய்ச் சேர்த்து மிக்ஸியில் போட்டுப் பொடித்து வைத்துக் கொள்ளவும். இந்தப் பவுடரை டீயில் போட்டுக் கொதிக்க வைத்தும் குடிக்கலாம்.

• பட்ச்சணங்களுக்கு பெருங்காயப் பொடி போடுவதற்கு பதில், வேலை ஆரம்பிப்பதற்கு மூன்று மணி நேரம் முன், பெருங்காயத்தை வெந்நீரில் ஊறப் போட்டு, அந்த நீரை உபயோகிக்கலாம். தவிர, அனைத்து பட்சணங்களையும் ஒரே நாளில் செய்து விட முடியாது. அதனால், இந்த பெருங்காயத் தண்ணீர் மீந்து போய்விட்டாலும், பிரிஜ்ஜில் வைத்து, மறுநாளும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

• அதிரசம் செய்ய, காலையில் பாகெடுத்து, மாலையில் அதிரசம் தட்டிப் போட்டால், மென்மையாக இருக்கும். இரவு பாகெடுத்து, காலையிலும் தட்டிப் போடலாம். அதிரசத்தின் சுவைக்கு இது தான் ரகசியம். பாகெடுத்த உடனே தட்டினால், கரகரவென்று இருக்கும்.

• உளுந்து வடைக்கு மாவை கிரைண்டரில் இருந்து எடுக்கும் போதுதான் உப்பு போட்டு, ஒரு அரைப்பு அரைத்து எடுக்க வேண்டும். முன்னதாக உப்பு சேர்த்தால், மாவு தண்ணீர் விட்டு போகும்.
- என். கலைச்செல்வி
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/1/w600X390/SUKKU.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/nov/01/பட்ச்சண-டிப்ஸ்-3031366.html
3031365 வார இதழ்கள் மகளிர்மணி ஷாப்பிங் டிப்ஸ்... DIN DIN Thursday, November 1, 2018 10:15 AM +0530 • வீட்டில் உள்ளவர்களுக்கு, உறவினர்களுக்கு டிரஸ் வாங்குவதற்கு முன்பு லிஸ்ட் எழுதி எடுத்துச் செல்லுங்கள். கடையில் பில் போடுவதற்கு முன், லிஸ்டை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இதனால் யாரையும் மறந்துவிடாமல் இருக்கும். 

• பண்டிகை கால ஷாப்பிங் என்பது, கூட்ட நெரிசல் மிகுந்ததாக இருக்கும். எனவே, கிராண்டான ஆடைகளையோ, விலையுயர்ந்த நகைகளையோ அணிந்து செல்லாமல் கேஷுவல் உடையில் செல்லுங்கள். அதற்காக கசங்கிய அழுக்கு ஆடையுடன் செல்ல வேண்டாம். உங்களின் பளிச் தோற்றம்தான் சேல்ஸ் நபர்களை அழகழகான ஆடைகளை உங்களுக்கு எடுத்துக் காட்டத் தூண்டும். 

• அவசரமோ, நெருக்கடியோ இல்லாத நேரத்தை ஷாப்பிங் செய்ய ஒதுக்குங்கள். அப்போதுதான் நிம்மதியாக ஷாப்பிங் செய்ய முடியும்.

• சேல்ஸ் நபர்களின் வேலை, அன்று, அந்த ஆடையை எப்படியாவது உங்களிடம் விற்று விடுவது. எனவே, உங்களுக்கு அந்த ஆடை பிடித்திருந்தால் மட்டுமே எடுங்கள். அதேபோன்று ஆடைகளை தேர்வு செய்யும்போது அது சரியான அளவில் உள்ளதா? என்பதையும் சரிபார்த்து வாங்கவும். ஒருவேளை வீட்டில் உள்ளவர்களின் ஆடை சைஸில் சந்தேகம் எனில், அந்தக் கடையின் ரிட்டர்ன் பாலிசியைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். பில்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். 

• வீட்டில் கிளம்பும்போதே ஷாப்பிங் செய்வதற்கான பட்ஜெட்டை தீர்மானம் செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு ஆடையை தேர்வு செய்யும்போது மனக்கணக்காகவோ, மொபைல் கால்குலேட்டரிலோ உங்களின் பட்ஜெட் லிமிட்டை நெருங்கி விட்டீர்களா என்று கணக்குப் பார்த்துக் கொள்ளுங்கள் இதனால் தேவையில்லாமல் வாங்குவதை தவிர்க்கலாம். அப்படியில்லாமல், பட்ஜெட்டுக்கு மேல் வாங்கினால், வீடு திரும்பும்போது ஷாப்பிங் செய்த சந்தோஷத்தை விட, உறுத்தலே அதிகமாக இருக்கும். 

• கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளில் பில் செலுத்தும்போது, மிக கவனமாக இருக்க வேண்டும். கார்டை தவறவிட வாய்ப்புகள் அதிகம். மேலும், இதுபோன்று கார்டு மூலமாக வாங்கும்போது டாக்ஸ், இன்ட்ரஸ்ட் என நம் பணம் விரயமாவதும் உண்டு. எனவே, கையில் பணமாக வைத்துக் கொண்டு வாங்குவது நலம். மேலும், தேவையற்ற பொருள்களை வாங்குவதையும் தவிர்க்கலாம். 

- எஸ்.சரோஜா 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/1/w600X390/mm5.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/nov/01/ஷாப்பிங்-டிப்ஸ்-3031365.html
3031364 வார இதழ்கள் மகளிர்மணி தீபாவளி ஸ்பெஷல் சமையல்! DIN DIN Thursday, November 1, 2018 10:12 AM +0530 பிரெட் குலாப் ஜாமுன்

தேவையானவை:
ப்ரெட் - 3 துண்டுகள்
சர்க்கரை - முக்கால் கிண்ணம்
தண்ணீர் - அரை கிண்ணம்
பால் பவுடர் - 3 தேக்கரண்டி
கன்டன்ஸ்டு மில்க் - 3 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை: ப்ரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக்கி எடுத்துக் கொள்ளவும். சர்க்கரையுடன் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி கொள்ளவும். ப்ரெட்டை நன்கு உதிர்த்துவிட்டு கன்டன்ஸ்டு மில்க், பால் பவுடர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள ப்ரெட் கலவையை உருண்டைகளாக உருட்டி குறைந்த தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். பொரித்த உருண்டைகளை சர்க்கரைப் பாகில் போட்டு ஊற வைத்தால் சுவையான பிரெட் குலாப் ஜாமுன் ரெடி. 

பட்டர் முறுக்கு

தேவையானவை: 
கடலை மாவு - ஒரு கிண்ணம் 
அரிசி மாவு - ஒரு கிண்ணம்
வெள்ளை எள் - ஒரு தேக்கரண்டி 
வெண்ணெய் -கால் கிண்ணம்
உப்பு -தேவையான அளவு 
எண்ணெய் -பொரிக்கத் தேவையான அளவு. 
செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெண்ணெய்யையும் உப்பையும் போட்டு, நன்றாகக் பிசைந்து கொள்ளவும். பிறகு, கடலை மாவையும் அரிசி மாவையும் போட்டு, எள்ளையும் சேர்த்து, நீர்விட்டுப் பிசையவும். முறுக்கு அச்சில் மாவைப் போட்டு, காயும் எண்ணெய்யில் பிழிந்து, வேக வைத்து எடுக்கவும்.

ரிப்பன் பகோடா

தேவையானவை:
புழுங்கல் அரிசி- 1 கிண்ணம் 
கடலை மாவு- அரை கிண்ணம்
பொட்டுக்கடலை மாவு- அரை கிண்ணம் 
மிளகாய்த்தூள்- 1 தேக்கரண்டி
பெருங்காயப்பொடி- அரை தேக்கரண்டி 
டால்டா- 3 மேசைக்கரண்டி 
தேவையான - உப்பு 
செய்முறை: புழுங்கலரிசியை போதுமான நீரில் 6 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு கெட்டியாக அரைக்கவும். அதில் மற்ற எல்லா பொருள்களையும் கலந்து பிசையவும். ரிப்பன் பகோடா அச்சுள்ள குழாயில் மாவை நிரப்பி சூடான எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும்.

ரசகுல்லா

தேவையானவை: 
பால் - 1 லிட்டர் 
பொடித்த சர்க்கரை - 150 கிராம்
பாகு காய்ச்ச சர்க்கரை - அரை கிலோ
செய்முறை: சூடான பாலில் சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து, பாலைத் திரிய வைக்கவும். அதை, சுத்தமான, மெல்லிய துணியில் கட்டி, தண்ணீரை வடிய விடவும். திரிந்த பகுதியைத் திரட்டி வேறு பாத்திரத்தில் போட்டு, பொடித்த சர்க்கரை கலந்து, கையால் நன்கு பிசையவும். 
இந்தக் கலவை நன்கு மிருதுவாகும் வரை பிசைய வேண்டும். பிறகு, சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். வேறு ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, பாகு காய்ச்சவும். 
சர்க்கரை நன்கு கரைந்து, ஐந்து நிமிடம் கொதித்ததும் அதில் இந்த உருண்டைகளைப் போட்டு மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். சூடான ரசகுல்லா ரெடி! 

பனீர் பர்ஃபி 

தேவையானவை: 
பனீர் - கால் கிலோ, சர்க்கரை - 150 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - 50 கிராம், குங்குமப்பூ - 1 சிட்டிகை, நட்ஸ் கலவை - ஒரு கிண்ணம், சர்க்கரை சேர்த்த கோவா - 100 கிராம், பால் - கால் லிட்டர், வெள்ளித்தாள் - அலங்கரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: நட்ஸில் இருந்து அலங்கரிக்க சிறிதளவு தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள நட்ஸை 3 தேக்கரண்டி நெய் ஊற்றி வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பனீர் மற்றும் கோவா தனித்தனியாக துருவி வைத்து கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றிக் கொதிக்கவிடவும். இதில் துருவிய பனீரை சேர்த்து, கைவிடாமல் கிளறி அதனுடன் சர்க்கரை சேர்த்துக் கெட்டியாகும் வரை கிளறவும். இதனுடன் துருவிய கோவா, பொடித்த நட்ஸ், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்துக் கையெடுக்காமல், அடுப்பை மிதமான தீயில் வைத்து, நன்கு கிளறவும். இப்போது மீதி உள்ள நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்துக் கிளறி, கையில் ஒட்டாத பதம் வந்ததும் கலவையை நெய் தடவிய டிரேயில் ஊற்றிச் சமப்படுத்தவும். நட்ஸ், வெள்ளித்தாள் கொண்டு அலங்கரித்து துண்டுகள் போடவும். சுவையான பனீர் பர்ஃபி ரெடி.

பாம்பே காஜா

தேவையானவை: மைதா மாவு - 150 கிராம், சர்க்கரை - 200 கிராம்
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, கொப்பரைத் துருவல் - 2 தேக்கரண்டி, உப்பு - ஒரு சிட்டிகை, கேசரி கலர் - சிறிதளவு
செய்முறை: மைதாவுடன் உப்பு, நீர் சேர்த்து கெட்டியாகப் பூரி மாவு பதத்திற்கு பிசைந்து மெல்லியதாக சிறிய அப்பளம் போல் திரட்டவும். பின்னர், அதைப் பாதியாக மடித்து, மீண்டும் அதை பாதியாக மடித்து எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். சர்க்கரையில் சிறிதளவு நீர் விட்டு, கம்பிப் பதத்தில் பாகு காய்ச்சி, கேசரி கலர், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பொரித்த காஜாவை இதில் தோய்த்து எடுத்து தட்டில் வைத்து, கொப்பரையைத் தூவவும். சுûயான பாம்பே காஜா ரெடி.

தீபாவளி லேகியம்

 தேவையானவை:
ஓமவல்லி இலை - 10, துளசி இலை - 10, இஞ்சி - 1 துண்டு, லவங்கம் - 3, நெய் - 2 தேக்கரண்டி, மிளகு - 10, தேன் - சிறிதளவு
செய்முறை: மிளகு, லவங்கத்தை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். ஓமவல்லி, துளசி, இஞ்சியை விழுதாக அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, நெய்யை விடவும். அரைத்த விழுது, பொடித்து வைத்துள்ள பொடி சேர்த்து நன்கு வதக்கவும். லேகியம் போல் ஆனதும் இறக்கி ஆறவைத்து, தேன் சேர்க்கவும். இந்த லேகியம் ஜீரணத்துக்கு நல்லது.
- தவநிதி

]]>
http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/nov/01/தீபாவளி-ஸ்பெஷல்-சமையல்-3031364.html
3031337 வார இதழ்கள் மகளிர்மணி 1 லட்சம் மாணவிகளை சந்திப்பதே இலக்கு! DIN DIN Thursday, November 1, 2018 09:55 AM +0530 சென்னை, திருவான்மியூரில் வசித்து வரும் டாக்டர் அனிதா பரமசிவன் கதிரியக்க சிகிச்சை நிபுணர் (SONOLOGIST) டாஸில் ஈவன்ட்ஸ் நடத்திய போட்டிகளில் "மிஸர்ஸ் இந்தியா வேர்ல்டு 2018' என்ற அழகுப் போட்டியில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், "மிஸர்ஸ் டேலண்டட் இந்தியா வேர்ல்டு 2018'}க்கான போட்டியிலும் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். இதை தவிர, தமிழகத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரத்துக்கான தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை: 
"மார்பக புற்றுநோய் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் "பிங்க்த்தான்' அமைப்பினர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு 10 பேரை பிரசாரத்துக்கான தூதுவராக தேர்ந்தெடுத்தனர். அதில் கதிரியக்க மருத்துவர் என்ற வகையில் நானும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அது முதல் இன்று வரை பெண்கள் பயிலும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.
ஆனால், நான் அறிந்த வரை பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, இந்த விழிப்புணர்வு நிகழச்சிகளை வித்தியாசமான முறையில் நடத்த ஆர்வமாக உள்ளேன். குறிப்பாக, மாநாடு, கருத்தரங்கம், பிரத்யேக நிகழ்வுகளின் மூலம் இதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். இதற்கு, ரோட்டரி கிளப் ஆப் சென்னை கே.கே. நகர் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெரிய அளவில் ஆதரவு அளித்து வருகின்றன.
மேலும், சென்னை, அரக்கோணம், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள முக்கியமான பல நகரங்களுக்கும் சென்று அங்குள்ள பல அரசு மற்றும் தனியார் பெண்கள் கல்லூரிகளிலும், மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை எங்கள் குழு நடத்தவுள்ளது.
பொதுவாக, மார்பக புற்றுநோயை பொருத்தவரையில் பெரியளவில் உயிருக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. அதிலும் ஆரம்பநிலையில் இந்நோயினை கண்டறிந்துவிட்டால் மிக எளிதாக குணப்படுத்திவிடலாம். எனவே, இந்த கல்வியாண்டுக்குள் 1 லட்சம் மாணவிகளை சந்தித்து மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எங்களது இலக்கு. 
மார்பக புற்றுநோயை பொருத்தவரை, 35 வயதை கடந்துவிட்ட ஒவ்வொரு பெண்ணும் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுக்கு ஒரு முறையேனும் தங்களை பரிசோதித்து கொள்ள வேண்டும். அதை தவிர அவ்வபோது தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 
அதுபோன்று அவர்களது குடும்பத்தில் யாராவது மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் கட்டாயமாக அவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதுவே வருமுன் காப்பதற்கான ஒரே வழி'' என்றார் டாக்டர் அனிதா பரமசிவன்.
- ஸ்ரீதேவி

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/1/w600X390/mm4.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/nov/01/1-லட்சம்-மாணவிகளை-சந்திப்பதே-இலக்கு-3031337.html
3031336 வார இதழ்கள் மகளிர்மணி இல்லத்தரசியும் தொழில்முனைவோர் ஆகலாம் - 29 DIN DIN Thursday, November 1, 2018 09:52 AM +0530 சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண்மணியை சந்தித்தேன். அவர் என்னிடம் மிகவும் சகஜமாக பேசுவதை கேட்டதும், அவர் நம்மிடம் ஏதேனும் பயிற்சி பெற்றவராக இருப்பார் என நினைத்து பேச ஆரம்பித்தேன். அவர் , ""என்னிடம் எனது பிஸினஸ் நன்றாக போகுது. ரொம்ப நன்றி'' என்றார். 
நான் எதுவும் புரியாமல் விழித்தேன். அவரே தொடர்ந்தார், நீங்கள் சொன்னபடி "கட்லட்' வியாபாரம் செய்கிறேன். இதனால் எனக்கு ஒரளவு வருமானம் கிடைக்கிறது. என் ஓய்வு நேரமும் பயன் உள்ளதாக மாறியுள்ளது'' என்றார். பிறகுதான் ஞாபகம் வந்தது. அவர் சில நாட்களுக்கு முன் என்னிடம் வந்தார். "நான் வீட்டில் இருந்தபடியே ஏதேனும் தொழில் செய்ய வேண்டும். நிறைய பணம் பண்ணனும் என்று இல்லை. குழந்தைகள் உள்ளதால் என்னுடைய ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ள விரும்புகிறேன்'' என்றார். 
இதனால் அவரை, எங்கள் தொண்டு நிறுவனம் மூலம் வாரா வாரம் மத்திய அரசால் நடத்தப்படும் இலவச ஆறு நாள் கேட்டரிங் பயிற்சிக்கு அனுப்பி வைக்கும் பெண்களுடன் அவரையும் அனுப்பி வைத்தேன். (இந்த பயிற்சியை பெறும் பெண்களுக்கு சான்றிதழுடன் ரூ. 18,00 ஊக்க தொகையாக மத்திய அரசே வழங்குகிறது.)
இதையடுத்து அவர் கேட்டரிங் பயிற்சியில் கற்றுக் கொண்ட கட்லட் தயாரிப்பை செய்து பார்த்துள்ளார். நன்றாக வந்திருக்கிறது. மேலும், அவரது வீட்டிற்கு அருகில் தனியாரி பள்ளி ஒன்றும் உள்ளது. 
எனவே, நமது ஆலோசனைப்படியே அவரும் மாலை நேரத்தில் வெஜிடெபிள் கட்லட், உருளைக்கிழங்கு கட்லட், பீட்ரூட் கட்லட் என விதவிதமாக தயார் செய்து அதை வெளியே டேபிள் போட்டு, ஸ்டவ் வைத்து தோசைக்கல்லில் சுட்டு விற்பனை செய்துள்ளார். நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு நாளைக்கு அவருக்கு குறைந்தது 2 மணி நேரம்தான் வியாபாரம். நல்ல லாபம் கூட. 
மேலும் இங்கே எங்களால் என்ன விதமான பயிற்சி அளிக்க முடியுமோ அதைத்தான் உங்களுக்கு அதிகமாக சொல்கிறோம். அந்த வகையில், இந்த வாரம் என்ன தொழில் செய்யலாம் என்பதை பார்க்கலாம்:
செயற்கை பூக்கள்: நாம் திருமண மேடை அலங்காரம் பார்த்திருப்போம். விதவிதமாக மனதிற்கு பிடித்தாற் போல் அலங்கரித்திருப்பார்கள். அதுபோன்ற ஒரு தொழிலுக்கு முன்னோட்டம்தான் இது. செயற்கை பூக்கள் மொத்த விலை கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி வந்து நமக்கு பிடித்தமான வடிவில் மாலையாகவும் செய்யலாம். அதையே விதவிதமாக தோரணங்கள், பூங்கொத்துக்கள் போன்றும் செய்யலாம். இதை உங்கள் பகுதியில் உள்ள பேன்சி கடைகளில் விற்பனை செய்யலாம். வீடு, கடை, அலுவலகம் என அனைத்து இடங்களிலும் உபயோகப் படக் கூடியது. 
பூங்கொத்து , பொக்கே தயாரிப்பு: இதே செயற்கை பூக்களை கொண்டு பொக்கே தயார் செய்யலாம். அல்லது அதில் சாகலெட் வைத்து சாக்லெட் பொக்கேவாக தயாரித்து விற்பனை செய்யலாம். நன்கு பழகிய பின், வியாபாரம் நன்கு நடக்கையில் அதையே மாற்றி இயற்கை பூக்கள் கொண்டு தயார் செய்யலாம். நீங்கள் இருக்கும் பகுதி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக இருந்தால் உங்கள் வீட்டின் முன் டேபிள் வைத்து விற்பனை செய்யலாம். இதையே பூக்கூடை வைத்தும் பொக்கே தயார் செய்யலாம். விதவிதமான பூச்சாடி வாங்கி அதிலே பூக்கள் வைத்தும் விற்பனை செய்யலாம்.
தாய் க்ளே பூக்கள் தயாரிப்பு: தாய் க்ளே பார்ப்பதற்கு வெண்ணெய் போன்று இருக்கும். இதன் விலையும் சற்று அதிகம். இதை முதலில் பாஸ்தா தயாரிக்கும் மிஷினில் ( சாப்பாத்தி மாவு பிசையும் மிஷின் போன்று சிறியதாக இருக்கும். விலையும் குறைவுதான். பாத்திரக் கடைகளில் கிடைக்கும்) போட்டு எடுத்து பின்னர் தேவையான வடிவில், டிசைனில் பூக்கள் செய்யலாம். இந்த தாய் க்ளே பூக்கள் நிஜ பூக்கள் போலவே நீண்ட நாட்களுக்கு இருக்கும் என்பதே இதன் சிறப்பு. ஒற்றை பூக்களாக விற்பனை செய்யலாம். சாதாரணமாக கார்ப்பரேட் அலுவலகம், ஸ்டார் ஓட்டல்களில் இயற்கை பூக்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இவர்களிடம் கூட ஆர்டர் எடுத்து விற்பனை செய்யலாம். மேலும், இயற்கையான பூ அலங்காரம் தேவைப்படுகின்ற விசேஷங்கள், திருமண வரவேற்பு என அனைத்திற்கும் இதை பயன்படுத்தலாம். இதில் பொக்கே செய்து விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும். இது எல்லாமே நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக செய்ய ஆரம்பித்தால்தான் சற்று அனுபவம் கிடைக்கும். இந்த அனுபவத்தைக் கொண்டு சிறிது காலத்திற்கு பின் மேடை அலங்காரம், திருமண நிகழ்ச்சி, மஞ்சள் நீராட்டு விழா, பிறந்த நாள் விழா, 60 -ஆம் கல்யாணம் என அனைத்திற்கும் தேவையான மேடை அலங்காரத்தை பெரிய அளவில் செய்ய முடியும்.
- ஸ்ரீ

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/1/w600X390/umaraj.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/nov/01/இல்லத்தரசியும்-தொழில்முனைவோர்-ஆகலாம்---29-3031336.html
3031329 வார இதழ்கள் மகளிர்மணி வளரிளம் பெண்களுக்கான ஊட்டச்சத்தும் உணவுமுறையும் DIN DIN Thursday, November 1, 2018 09:49 AM +0530 ஒரு குழந்தை பிறந்தது முதல் இரண்டு வருடங்கள் வரை மழலைப் பருவம் என்றழைக்கப்படுகிறது. இந்த வளர்ச்சி நிலையில் பெரும்பாலும் ஆண்குழந்தை, பெண்குழந்தை என்ற பாலியல் வேறுபாடு மட்டும்தான் காணப்படுகிறதே தவிர, மிகப்பெரிய அளவில் உடலியல் மாற்றங்கள் ஏதும் ஏற்படுவதில்லை. இருபாலரும் சிறு குழந்தைகளாகவும், மழலைமொழி பேசும் மலர்களாகவும் மட்டுமே வளாக்கப்படுகிறார்கள். அதனைத் தொடர்ந்து வரும் எட்டு முதல் பத்து ஆண்டுகள்தான் உடலளவிலும், மனதளவிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி, அதற்குரிய பாதுகாப்பையும் வளர்ப்பு முறைகளையும் உணர்த்தி, ஆண் குழந்தைக்கும் பெண்குழந்தைக்கும் உள்ள வேறுபாட்டை குறிப்பிட்டுக் காட்டுகிறது. மழலைப் பருவத்தைத் தொடர்ந்துவரும் குழந்தைப் பருவமானது பெண் குழந்தையைப் பொருத்தவரை 2 முதல் 10 வருடங்களாகவும், ஆண்குழந்தைகளுக்கு 2 முதல் 12 வருடங்களாகவும் பகுக்கப்பட்டுள்ளது.
வளரிளம் பருவம்
குழந்தைப் பருவத்திலிருந்து நடுத்தர வயதிற்கு மாறும் இடைப்பட்ட காலத்தில் உள்ள வளர்ச்சி நிலையே வளரிளம்பருவம் எனப்படுகிறது. பின்பள்ளிப் பருவத்தைத் தொடர்ந்து 10 முதல் 20 வயது வரை வளரிளம் பருவமாகக் கருதப்பட்டு மூன்று வித நிலைகளில் பிரிக்கப்பட்டுள்ளது. அவை 10 முதல் 14 வருடங்கள் முன் வளரிளம் பருவம், 12 முதல் 16 வருடங்கள் வளரிளம் பருவம், 16 முதல் 20 வருடங்கள் பின் வளரிளம் பருவம் என்பதாகும். 
வளரிளம்பருவம் என்பது பெரும்பாலும் "வாய்ப்புகளின் வயது' என்று அழகாகக் கூறப்படுகிறது. பெற்றோர்களால் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட்டு, அதீத பொறுப்புடன் தங்கள் பருவவயது பிள்ளைகளுக்கு உறுதியான, தெளிவான, எதையும் ஆராய்ந்து பார்த்து பிரச்னைகளை எதிர்கொள்கின்ற பக்குவத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டிய காலம். இவ்வாறான செயல்பாடுகளே, வளரிளம் பருவ தலைமுறைகளின் எதிர்காலத்தை சிறப்பானதாக்கிக் கொடுக்கவல்லது. 
வளரிளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து
ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று எப்போது கூறமுடியும்? ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், குழந்தையாக இருந்தாலும், வயதிற்கேற்ற உடல் எடையும் உயரமும் கொண்டு, வளர்சிதை மாற்றங்கள், உடலியல் நிகழ்வுகள், இயன்முறை செயல்பாடுகள் ஆகியவை முறையாக உடலில் நிகழ்வதற்கான தகுதியும், ஆத்மார்த்தமான, உள்ளார்ந்த மகிழ்ச்சியும் ஒருங்கே இணைந்திருக்கும்போதுதான் ஆரோக்கியமாக இருப்பதாகக் கூறமுடியும். 
மனித வளர்ச்சியில் ஒரு பெண்ணுக்கு திருமணமாகி, தாய்மையடைந்து, பாலூட்டும் தாயென்ற நிலையை அடைவதற்கு முழுமையான உடல் தகுதியையும், மனப்பக்குவத்தையும், சேர்த்துக்கொடுக்கக்கூடிய வயதுதான் வளரிளம்பருவ வயது என்பதால், இந்த வயதில் ஒவ்வொரு பெண்ணும், பரிபூரண ஆரோக்கியத்தைப் பெற்றிருக்க வேண்டும். இதற்கு, ஊட்டம் நிறைந்த சரிவிகித உணவு மிக முக்கியமான ஒன்றாகும். 
வளரிளம் பருவத்திற்கான சரிவிகித உணவானது, அந்த வயதில் ஏற்படும் உடற்கூறு சார்ந்த மாற்றங்கள், உடலுறுப்பின் இயக்கங்கள், உயிர் வேதியியல் வினைகள், மனம் மற்றும் சமூகம் சாட்ந்த வளர்ச்சி, அந்த வயதிற்கேற்ற முதிர்ச்சியும், பக்குவமும் சரியான முறையில் நிகழ்வதற்கு முழுமுதலாக துணைபுரிகிறது. ஏதோ ஒரு குறிப்பிட்ட சத்து அல்லது இரண்டு மூன்று சத்துக்கள் தொடர்ச்சியாக உடலுக்கு அளிக்கப்படவில்லை என்றால், இப்பருவப்பெண்ணின் உடலில் சுரக்கும் (IGF1) என்ற சராசரி வளாச்சிக்குரிய ஹார்மோனின் செயல்பாடு குறைவு ஏற்பட்டு வளர்ச்சியிலும் குறைபாடு ஏற்படுகிறது. 

தொடர்ச்சியான ஊட்டச்சத்து குறைவினால் ஏற்படும் உடல்ரீதியான மாற்றங்கள்
திருமணத்திற்குப் பிறகு, இனப்பெருக்கம் அல்லது பாலுணர்வு சார்ந்த செயல்பாடுகளில் குறைபாடு
பெண் பூப்பெய்தும் வயது நீடித்தல் அல்லது பூப்பெய்தாமலே இருப்பது
பருவம் அடைந்த பிறகு, சீரான மாதவிடாய் இல்லாதிருத்தல்
வயதிற்கேற்ற சரியான மார்பக வளர்ச்சியின்மை
எலும்புகள் வலுவிழந்து, போதிய உயரமின்மை
ஒழுங்கற்ற உடல் அமைப்பும், இடுப்புப் பகுதியும் மன அழுத்தத்தையும் மனக்குறையையும் ஏற்படுத்திவிடும்
தோல் பொலிவிழந்தும், காயங்களுடனும் காணப்படுதல்
அடிக்கடி தலைவலி மற்றும் பசியின்மை ஏற்படுதல்
எந்த வேலையிலும் சோர்வடைதல், எதிலும் விருப்பமில்லாமல் இருத்தல்
படிப்பில் கவனமின்மை, குறைவான உட்கிரகிக்கும் திறன், கற்றல் குறைபாடுகள் 
அன்றாட நடைமுறைப் பழக்க வழக்கங்களில் குறைபாடுகள் ஒவ்வொன்றாக தொடங்குதல்
மேற்கூறிய ஊட்டச்சத்து குறைபாடுகள் பொதுவானவையாகவும், உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டாலும், சத்துணவு சார்ந்த ஆரோக்கியக் குறைபாடுகள் மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்தி, உடலும் மனமும் சரிவர செயல்பட முடியாமல் அதிகப்படியான பிரச்சினைகளை வளரிளம்பருவ வயதில் ஏற்படுத்துகின்றன. 

ஊட்டச்சத்து குறைபாடால் ஏற்படும் உடல் மற்றும் மனம் சார்ந்த சிக்கல்கள்
பருவ காலத்தில், ஆண்பிள்ளைகள் எப்பொழுதும் உறுதியான, எடுப்பான உடற்கட்டுடன் இருப்பதற்கும், பெண்பிள்ளைகள் அழகுடன், தோற்றப்பொலிவுடன் ஒல்லியான உடல்வாகுடன் இருப்பதற்கும் முக்கியத்துவம் அளிப்பார்கள். அந்தந்த பாலினத்திற்குரிய இயல்பான வளர்ச்சியில் சிக்கல் ஏற்படும்போதுதான் மனக்குழப்பத்திற்குள்ளாகி எதிலும் ஆர்வமின்மை ஏற்படுகிறது. இவற்றிற்கு, ஊட்டச்சத்து குறைபாடும், அளவிற்கு அதிகமான உணவுப்பழக்கமும் காரணமாகின்றன. அவற்றை சரி செய்துவிட்டால், ஆரோக்கியம் சீராகிவிடும் என்பதை உறுதியாக எண்ணவேண்டும். இந்த வகையான குறைபாடுகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். 
பசியற்ற உளநோய் (ANOREXIA NERVOSA)
இந்நிலை குறிப்பாக முன்பருவத்திலிருந்து பின்பருவத்திற்கு முன்புவரை (13 முதல் 16 வயது) அதிகமாகக் காணப்படுகிறது. சரியான உணவுகளை உண்ணாமல், பசியுடன் தனக்குத்தானே வருத்திக்கொண்டும், 85 சதவிகிதத்திற்கும் குறைவான உடல் எடையுடன், மெலிந்த தோற்றத்தில்ல் இருப்பார்கள். அவர்கள் தானாக முன்வந்து திருத்திக்கொள்ளாமலும், பெற்றோர்களால் சரிசெய்யப்படாமலும் விட்டுவிடும் தருணத்தில், உடல்நிலை மிகவும் மோசமாகிவிடும். பிறகு ஒழுங்கற்ற மாதவிடாய், கை கால்களில் பொலிவற்ற தன்மை, பூனை முடி (downy Hair) என்று கூறப்படும் வலுவிழந்த காவிநிற அல்லது சாம்பல் நிற முடிவளர்தல் ஆகியவை ஏற்பட்டு அழகற்றதன்மை நிரந்தரமாகிவிடும். சிறிதளவு உணவே உண்டாலும், குமட்டல், வயிற்று உப்புசம், ஏப்பம், மலச்சிக்கல் போன்ற சிறுசிறு உபாதைகளுக்கு ஆளாகிவிடுவார்கள். 

பசியற்ற உளநோய் உள்ள வளரிளம் பருவத்தினரின் உணவுமுறை மற்றும் மனப்பாங்கு
பசியை மறந்தும், மறைத்தும், குறைவான உணவான இருந்தாலும், அதிக நேர இடைவெளியில் உண்பார்கள். 
உணவு, அதிலுள்ள சத்துக்கள், பயன்கள் ஆகியவற்றைத் துல்லியமாக தெரிந்து வைத்திருப்பதுபோல் பாவனை செய்வார்கள்.
குறிப்பாக, கொழுப்பு உணவுகள், வாசனைப்பொருட்கள், அசைவம், பால் மற்றும் அவை சார்ந்த உணவுகளைத் தவிர்த்துவிடுவார்கள்.
சத்துக்கள் குறைந்த உணவானாலும், ஆடம்பரத்திற்காக உண்ணும் உணவும், சரியான சேர்க்கை இல்லாத உணவுகளுமே சரியான உணவுகள் என்று தர்க்கம் பேசுவார்கள்.
உணவு பரிமாறப்பட்டால், உண்ண வேண்டும் என்ற கட்டாயத்திற்காகவே பொது விழாக்களையும், குடும்ப விழாக்களையும் தவிர்த்துவிடுவார்கள்.
அதிக கோபத்தை வெளிப்படுத்தாமல் எதிலும் மிகச்சரியாக இருப்பதுபோல் தம்மை வெளிப்படுத்திக்கொள்வார்கள்.
மனச்சோர்வுடனும், எதையோ இழந்ததுபோன்ற ஒரு மனநிலையிலும், தன்னைக் குறைத்து மதிப்பிட்டுக்கொள்ளும் தாழ்வு மனப்பான்மையுடனும் காணப்படுவார்கள்.
உண்ணவில்லை என்றாலும், உடல் குண்டாகி விட்டதாக எண்ணும் உள்ளுணர்வால், தேவையற்ற அச்சத்துடன் அவசியமில்லாத உணவுக்கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்ற நினைப்பார்கள்.
எந்தவிதமான சமுதாய விழாக்களிலும், உறவினர்கள் மற்றும் பள்ளி அல்லது கல்லூரி விழாக்களிலும் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளமாட்டார்கள். 
இயற்கையை மீறிய பெரும்பசி (Bulimia Nervosa)
குறுகிய நேரத்தில் அளவிற்கு அதிகமான உணவை உண்ணுவதால் ஏற்படும் செரிமானக்கோளாறும், அதனைத் தொடர்ந்து அதிக உணவால் உடல் எடை ஏறிவிடும் என்ற மன உளைச்சலில் உண்ட உணவை வாந்தியாக எடுத்துவிடும் நிலைக்கு என்று ஆங்கிலத்தில் பெயர். இதைச் சரியான பொருளில் கூறும்போது, இயற்கையை மீறிய பெரும் பசி என்றும் கொள்ளலாம். 

இயற்கையை மீறிய பெரும் பசி உள்ள வளரிளம்பருவத்தினரின் உணவுமுறை மற்றும் உளவியல் வெளிப்பாடுகள்
வாந்தி எடுக்கும் நிலையானது, தானாக தொண்டையில் கைவிட்டு வாந்தி எடுத்தல், வாந்தி வருவதுபோல் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டும், பிறரிடம் கூறிக்கொண்டும், அதே சிந்தைனையில், குமட்டலுடன் வாந்தி எடுத்தல் என்று வெவ்வேறு நிலைகளில் நிகழ்த்துவார்கள்.
உண்ட உணவானது எளிதில் செரித்து, மலம் வெளியேற வேண்டும் என்பதற்காக மலமிலக்கிகள் மற்றும் சிறுநீர் பிரியும் மருந்துகளை உட்கொள்ளுதல் போன்றவைகளையும் இந்தப் பருவ வயதினருக்கு ஏற்படும் புளிமியா நெர்வோஸா (Bulimia Nervosa) நிலையின் இயல்பாகும். 
தன்னைத்தானே குறைத்து மதிப்பிட்டுக்கொள்ளுதல், தன் உடலைப் பற்றிய முரண்பாடான கருத்து, புற அழகையோ அல்லது உடல் தகுதியையோ முக்கியமாகக் காண்பிக்கும் பணியை விரும்பும் நிலை ஏற்படுதல்
குழந்தைப் பருவத்திலிருந்து, நடுத்தர வயதுப்பருவத்திற்கு மாறும்போது ஏற்படும் மன உளைச்சல், இயற்கையை மீறிய பெரும்பசி நிலையை மேலும் அதிகரிக்கிறது.
செயற்கையாக வாந்தி எடுக்கும் இந்நிலையால், அடிக்கடி உடல்எடையில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன.
உடலில் உள்ள தாது உப்புக்களில் குறைபாடு ஏற்படுவதால் உண்டாகும் இதயம் மற்றும் சிறுநீரகம் சார்ந்த தொல்லைகளால் ஆரோக்கிய சீர்கேடு
நாளமில்லாச் சுரப்பிகளில் அழற்சி மற்றும் வீக்கம் ஏற்படுதல், கண்ணில் உள்ள இரத்த நாளங்களில் பிளவுகள், நாட்பட்ட நீரிழப்பு, வயிற்றுப்புண் ஏற்படும் நிலை
தொடர்ச்சியாக வாந்தி எடுப்பதால், உணவுக்குழாய், தொண்டை, வாய்ப்பகுதியில் புண் மற்றும் இரத்தக்கசிவு ஏற்படுதல்
அடிக்கடி வாந்தி எடுத்துக்கொண்டும், மலம் கழித்துக்கொண்டும் இருப்பதால் ஏற்படும் உடல் நாற்றத்தால் அவர்களுக்கே அவர்கள்மேல் வெறுப்பும், மனஉளைச்சலும் உண்டாகிறது. 
ஊட்டச்சத்து சார்ந்த கல்வி
பருவ வயதில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள்தான் மிக அதிகமாக உணவு மற்றும் ஊட்டம் சார்ந்த புத்தகங்களை அதிகம் படிப்பவராக இருப்பார்கள். தறபோதைய தொழில்நுட்ப உலகில், இணையதளம் மற்றும் சமூக வளைத்தளங்களில் உலா வரும் உணவு தொடர்பான செய்திகளை அதிகம் படித்தும் பகிர்ந்தும், தங்களுடைய உடல்நிலையுடன் பொருத்திப் பார்க்கும் நிலை அதிகரித்திருப்பது வருத்தமளிக்கும் ஒன்றாகும். 
ஏனெனில், சுய மருத்துவம் எவ்வளவு ஆபத்தானதோ, அதேபோன்றுதான் நிலையற்ற, நம்பகத்தன்மையற்ற, முறையான அனுபவமிக்க உணவியல் வல்லுநர் மற்றும் மருத்துவரிடமிருந்து நேரடியாக கிடைக்கப்பெறாத ஆலோசனைகளும் ஆபத்தானவையே. அப்படியான விஷயங்கள் அவர்களுடைய உடல்நிலையை மேலும் சிக்கலாகிவிடும். 
வளரிளம்பருவ வயதில் ஊட்டச்சத்து குறைபாடு நோயுள்ளவர்களுக்கு, குழு ஆலோசனையைவிட தனிநபர் ஆலோசனை மிகச் சிறந்த வழியாகும். ஒவ்வொரு கட்ட ஆலோசனையின்போதும், சிறிது சிறிதாக உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான நன்மையளிக்கும் செய்திகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் எடுத்துரைக்கவேண்டும். 
வளரிளம்பருவப் பெண்களுக்கு என்னென்ன ஊட்டச்சத்துக்கள் எந்த அளவில் தேவை என்பதையும் அவற்றைப் பெறுவதற்கான உணவுமுறைகளையும் அடுத்தவாரத் தொடர்ச்சியில் பார்க்கலாம். 
- வண்டார்குழலி இராஜசேகர்
உணவியல் நிபுணர், 
அரசு பொது மருத்துவமனை, காரைக்கால்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/1/w600X390/mm3.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/nov/01/வளரிளம்-பெண்களுக்கான-ஊட்டச்சத்தும்-உணவுமுறையும்-3031329.html
3031286 வார இதழ்கள் மகளிர்மணி கல்லூரி பெண்களின் கைத்தறி கண்காட்சி DIN DIN Thursday, November 1, 2018 09:34 AM +0530 நலிந்து கிடக்கும் கைத்தறிக்கு கை கொடுக்கும் விதமாக சென்னை எத்திராஜ் கல்லூரியில் "கைத்தறி தொழில் முனைவும் கண்காட்சியும்' என்ற நிகழ்ச்சியினை சமீபத்தில், "பாரம்பரிய இந்தியா' அமைப்புடன் இணைந்து நடத்தியது. விழாவின் ஹை லைட் கைத்தறி கண்காட்சியும், "கைத்தறி ஆடை பவனி' யும்தான்.
 விழாவை நடத்தியவர்களும், பங்கேற்றவர்களும், பார்வையாளர்களும் கைத்தறி ஆடைகளையே அணிந்து வந்தனர். வித்தியாசமான வேலைப்பாடுள்ள புடவைகளை உடுத்தி எத்திராஜ் கல்லூரி மாணவிகளே மேடையில் பவனி வந்த னர்.
 - சுதந்திரன்
 
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/1/w600X390/ETHTHIRAAJ.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/nov/01/கல்லூரி-பெண்களின்-கைத்தறி-கண்காட்சி-3031286.html
3031280 வார இதழ்கள் மகளிர்மணி இசை ஆல்பம்! DIN DIN Thursday, November 1, 2018 09:33 AM +0530 திரைப்படங்களில் நடிப்பதை விட தற்போது பாடுவதிலும், இசையமைப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார் ஸ்ருதிஹாசன். விரைவில் நுக்கியா என்ற மேடை பெயரைக் கொண்ட உத்யான் சாகர் என்ற இசையமைப்பாளருடன் இணைந்து எலக்ட்ரானிக் நடன இசை ஆல்பமொன்றை இந்த ஆண்டுக்குள் வெளியிட உள்ளார். ""பாடகியாக மட்டுமின்றி இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பல திறமைகளை கொண்ட ஸ்ருதியுடன் இணைந்து இசை ஆல்பத்தை வெளியிடுவது குறித்து பெருமைப்படுவதாக'' கூறியிருக்கிறார் உத்யான் சாகர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/1/w600X390/SHRUTHI-HAASAN.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/nov/01/இசை-ஆல்பம்-3031280.html
3031275 வார இதழ்கள் மகளிர்மணி அப்பாவுடன் சேர்ந்து நடிக்க விருப்பம்! DIN DIN Thursday, November 1, 2018 09:32 AM +0530 "2010-ஆம் ஆண்டு முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானபோது "தீன்பத்தி' என்ற படத்தில் என்னுடைய தந்தை சக்தி கபூருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும், ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் வெற்றி தோல்விகளை நான் சிறுவயதிலேயே சந்திக்க உதவியது. மீண்டும் என் தந்தையுடன் சேர்ந்து நடிக்க வேண்டுமென்ற ஆசையும் எனக்கிருக்கிறது'' என்று கூறும் சிராத்தா கபூர், தற்போது இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவாலாக நடித்து வருகிறார்.
 
 
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/1/w600X390/SHRADDHA-KAPOORS.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/nov/01/அப்பாவுடன்-சேர்ந்து-நடிக்க-விருப்பம்-3031275.html
3031270 வார இதழ்கள் மகளிர்மணி 8 மில்லியன் கையெழுத்து! DIN DIN Thursday, November 1, 2018 09:31 AM +0530 அழகு சாதனங்கள் தயாரிக்கவும், புதிய மருந்துகளை கண்டு பிடிப்பதற்காகவும் விலங்குகளை பரிசோதனைக்கு உட்படுத்துவது, அதன் உறுப்புகளை பயன்படுத்தும் முறை மாறி வருகிறது. இருப்பினும் தேவையில்லாமல் விலங்குகளை கொல்வது முற்றிலும் தடை செய்ய வேண்டும் இதுபோன்ற பரிசோதனைகளை உலகம் அனுமதிக்கக் கூடாது என்ற முடிவெடுக்கும் காலம் நெருங்கிவிட்டது என்பதை வலியுறுத்தி பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், உலக விலங்குகள் தினத்தன்று 8 மில்லியன் நபர்களின் கையெழுத்தை சேகரித்து ஐக்கிய நாட்டு தலைமை அலுவலகத்தில் நடந்த சிறப்பு கூட்டத்தில் கலந்து கொண்டபோது சமர்ப்பித்துள்ளார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/1/w600X390/mm2.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/nov/01/8-மில்லியன்-கையெழுத்து-3031270.html
3031260 வார இதழ்கள் மகளிர்மணி சுற்றுப் பயணத்தால் கிடைத்த அனுபவம்! DIN DIN Thursday, November 1, 2018 09:28 AM +0530 "இதுவரை என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் எல்லாமே எதிர்பாராதவை. இதில் சினிமாவில் நடிப்பது பற்றி எந்த திட்டமும் இல்லை. 2017-ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டபின், 11 மாதங்களாக உலகின் பல நாடுகளுக்கு செல்லவும். அங்குள்ள மக்களை சந்திக்கவும் நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. 11 ஆண்டுகளில் கிடைக்காத அனுபவம் இந்த 11 மாதங்களில் உலக நாடுகளை சுற்றியதில் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்கிறார் உலக அழகி மானுஷி சில்லர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/1/w600X390/mm1.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/nov/01/சுற்றுப்-பயணத்தால்-கிடைத்த-அனுபவம்-3031260.html
3031254 வார இதழ்கள் மகளிர்மணி உளவாளியாக நடிக்கும் பிபாஷா பாசு DIN DIN Thursday, November 1, 2018 09:27 AM +0530 மூன்றாண்டு இடைவெளிக்குப் பின் இயக்குநர் பூஷன் பட்டேலின் த்ரில்லர் படமான "அதாத்' என்ற படத்தில் நடிக்க வந்துள்ளார் பிபாஷா பாசு. "நடிகை என்ற முறையில் கதாபாத்திரமும், கதையும்தான் முக்கியமே தவிர படம் முழுக்க என்னுடைய கதாபாத்திரம் இருக்க வேண்டுமென்பது எனக்கு முக்கியமல்ல. "அதாத்' படத்தில் லண்டன் காவல்துறையில் பணிபுரியும் உளவாளி நேஹாசிங் என்ற பாத்திரத்தில் நடிப்பதோடு, இப்படத்தில் என்னுடைய கணவர் கரண் சிங் குரோவரும் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவலாகும்'' என்கிறார் பிபாஷா பாசு.
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/1/w600X390/busu.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/nov/01/உளவாளியாக-நடிக்கும்-பிபாஷா-பாசு-3031254.html
3031243 வார இதழ்கள் மகளிர்மணி அமில வீச்சில் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலைப் பற்றிய திரைப்படம்! Thursday, November 1, 2018 08:53 AM +0530 ஒரு தலையாக காதலித்தவனின் காதலை ஏற்க மறுத்ததால் தனது 15-ஆவது வயதில் அமிலம் வீச்சுக்கு ஆளான லட்சுமி அகர்வால், தன்னம்பிக்கையுடன் போராடி அவனுக்கு சட்டத்தின் மூலம் தண்டனை வாங்கி தந்தார். இதற்காக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பாராட்டுதலைப் பெற்ற லட்சுமி அகர்வால், சில ஆண்டுகள் கழித்து அலோக் தீட்சித் என்பவரை திருமணம் செய்து கொண்டு, ஒரு குழந்தைக்கு தாய்ஆனார்.
 தன்னைப் போன்று அமிலம் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சில மாதங்களுக்கு முன் சண்டிகரில் சமூக அமைப்பொன்றை லட்சுமி அகர்வால் துவங்கியுள்ளார். இப்போது இவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து பிரபல இயக்குநர் கவிஞருமான குல்சாரின் மகள் மேக்னா குல்சார் திரைப்படமொன்றை தயாரிக்கிறார்.
 இதில் அமிலம் வீச்சில் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலாக நடிக்க தீபிகா படுகோன் ஒப்புக் கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்கள் நலனுக்காக சமூக அமைப்பை துவங்கியது ஏன் என்று லட்சுமி அகர்வால் கூறுகிறார்:
 "அமிலம் வீச்சுக்கு எதிராக நான் துவங்கியுள்ள இந்த அமைப்பினால் குற்றங்கள் குறைந்துள்ளதா என்று கேட்கிறார்கள். 2013 -ஆம் ஆண்டுக்கு முன் ஆசிட்வீச்சு சம்பவங்கள் தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் நியூசாக இடம் பெற்றன. இந்த அமைப்பை துவங்கிய பின்னரே அமிலம் வீச்சுக்கு எதிரான சட்டம் இயற்றப்பட்டன. இதனால் குற்றங்கள் குறைந்து வருவதாக கூற முடியாது. முன்பு இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லை. காவல்துறை முதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாது. பாதிக்கப்பட்டவருக்கு எப்படி சிகிச்சை அளிப்பது போன்ற பல பிரச்னைகள் இருந்தன. இப்போது நிலைமை மாறிவிட்டது. முன்பு அமிலம் வீச்சினால் பாதிக்கப்பட்டு பிழைத்தவர்கள் கூட இப்போது வழக்கு பதிவு செய்ய முன்வந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் பழைய தோற்றத்தைப் பெற குறைந்தது 70-80 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர் உடலின் பிற பகுதியிலிருந்து தோலை எடுத்து கிராப்டிங் செய்ய வேண்டும். தோலை எடுத்த இடத்தில் பழையபடி தோல் வளர்வதும் கடினம். இப்போது டாக்டர்கள் கூட பாதிக்கப்பட்டவரின் உயிரை காப்பாற்ற முயற்சிப்பதோடு முதல் காரியமாக கண்களை காப்பாற்ற போராடுகின்றனர்.
 தற்போது நிறைவேற்றப்பட்ட சட்டம் மூலம் காவல்துறையும், நீதி மன்றமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து, வழக்குகளை துரிதமாக முடிக்க முன்வந்துள்ளன. பெண்களும் முன்பு போல் பணிந்து போகாமல் துணிந்து போராடுகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 3 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்ததோடு, ஏற்கெனவே ஐந்துபேர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
 ஆனாலும், சட்டம் இன்னும் துரிதமாக செயல்பட வேண்டும். குற்றவாளிகள் சிறை தண்டனையிலிருந்து தப்பித்து சுதந்திரமாக உலாவுவதோடு திருமணமும் செய்து கொள்கின்றனர்.
 இன்றைய சமூகத்தில் மாற்றம் என்பது உடனடியாக ஏற்படுவதில்லை. முக்கியமாக பெண்களே இந்த மாற்றத்திற்கு எதிராக உள்ளனர். மாமியார், தாய், இளம்பெண்கள் அனைவருமே தாங்கள் விரும்பும் மாற்றத்தைதான் எதிர்பார்க்கிறார்கள். அநியாயத்தை எதிர்த்து ஒருநாள் கூக்குரல் எழுப்புவதோடு சரி. பின்னர் மறந்து விடுகின்றனர். என்னைப் போல் பாதிக்கப்பட்ட பெண்களால் தான் மாற்றத்தைக் கொண்டு வரமுடியும். ஒரு பெண்ணின் மீது ஒருவன் அமிலம் வீசுவதால் அந்தப் பெண் வாழ்நாள் முழுக்க உடல் ஊனமுற்றவளாகிறார்.
 மன உளைச்சலால் பாதிக்கப்படுகிறார். பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் அமல்படுத்தப்படுவதில்லை. உண்மையை கூற வேண்டுமானால் இங்கு என் ஒருத்தியால் மட்டும் இந்த உலகத்தை மாற்ற இயலாது. என்னை நான் மாற்றிக் கொள்ள முடியும். இந்த அமைப்பின் மூலம் பின் தொடர்பவர்களால் மாற்றத்தை கொண்டு வர முடியுமென்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
 இரண்டாண்டுகளுக்கு முன்பே என் கதையை மேக்னா குல்சார் தயாரிக்கப் போவதாக கூறியிருந்தார். அப்போது என்னுடைய பாத்திரத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. நானே நடிக்க ஆசைப்படுவதும் நியாயமல்ல.
 இப்போது தீபிகா படுகோன் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சமூக மாற்றத்தை ஏற்படுத்த திரைப்படங்களுக்கு பெரும் பங்குள்ளது'' என்கிறார் லட்சுமி அகர்வால்.
 - பூர்ணிமா
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/11/1/w600X390/LAXMI-ACID.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/nov/01/அமில-வீச்சில்-பாதிக்கப்பட்ட-லட்சுமி-அகர்வாலைப்-பற்றிய-திரைப்படம்-3031243.html
3026232 வார இதழ்கள் மகளிர்மணி இல்லத்தரசியும் தொழில் முனைவோர் ஆகலாம்-28  - ஸ்ரீ DIN Wednesday, October 24, 2018 02:23 PM +0530 ""வீட்டில்  இருக்கும்  பெண்கள்  ஓய்வு   நேரத்தில்  என்ன  செய்யலாம்  என யோசித்து, அவரவர் வசிக்கும் இடத்தைச்  சுற்றி என்னதேவை இருக்கிறது என்பதை புரிந்து கொண்டாலே,  நேர்மையாகவும், சுயமாகவும் சிறு தொழில்கள் தொடங்க  நிறைய வாய்ப்பு இருக்கிறது. அதனால்,  தோழிகளே! வீட்டில் உள்ள வேலைகளை சீக்கிரம் செய்து விட்டு உங்களுக்காக நேரத்தை ஒதுக்குங்கள். ஏதேனும் ஒரு கைத்தொழில் செய்து வருமானம் ஈட்டலாம்.  இவ்வாறு செய்வதால் நம்மை தனித் தன்மையுடன் பிரதிபலிக்கவும், நமக்கென்று ஒரு மரியாதையை உருவாக்கிக் கொள்ளவும் நல்லதொரு வாய்ப்பாக இருக்கும்'' என்கிறார் சுயதொழில் ஆலோசகர் உமாராஜ். தொடர்கிறார்:

""இந்த வாரம்  நாம் பார்க்கபோவது  பழைய பட்டுப் புடவை பாலிஷ். சாதாரணமாக, நம் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு பட்டுப்புடவை  விஷயத்தில் எப்போதும்  ஒரு  செண்டிமென்ட்  இருக்கும்.  அதனால்,   நாம்  வைத்திருக்கும் பட்டுப்புடவை என்னதான்   பழசாகி  போனாலும்  கூட  அதை தூக்கி  எறிய  மனம் வராது. அதனால் பழைய பட்டுப்புடவைகளுக்கு பாலிஷ்  செய்து கொடுக்கலாம். இதனால், புடவை புத்தம் புதிய பொலிவுடன் தோற்றமளிக்கும். நமக்கு வருமானமும் கிடைக்கும்.  இதற்கு  ரூபாய் 40,000 முதலீடு  தேவை.  10க்கு 10 இடமும் வேண்டும்.  வீட்டில்  மொட்டை மாடி இருந்தால் மேற்கூரை அமைத்தாலே போதும். இதற்கு  மின்சாரம் தேவையில்லை. காலை 7மணி முதல்  வெயில் இருக்கும் வரைதான் வேலை இருக்கும். மேலும், கிழிந்த பட்டுப் புடவைக்கு டார்னிங்  செய்து  கிழிசல்  தெரியாமல்  செய்யலாம்.   ஸ்டோன் ஒட்டி தரலாம். புதுப்புடவை  எப்படி  மொட மொடப்பாக  இருக்குமோ அதே போன்று புத்தம்புது பொலிவுடன்  புடவை காட்சியளிக்கும்.

அதுபோன்று அலுவலகத்திற்கு செல்லும் பெண்களுக்கு  காட்டன் புடவைகளுக்கு கஞ்சி போடுவதற்கு எல்லாம் நேரம் இருக்காது. அதனால், காட்டன் புடவைகளுக்கு  கஞ்சிப்  போட்டு  தரலாம்.   இவற்றை  கெமிக்கல்  ஏதுமில்லாமல் ஆர்கானிக்   பொருள்கள்  கொண்டே  செய்யலாம். 

சென்னையை  சேர்ந்த  கனகவள்ளி  என்பவர்  இதனை  பெரிய  பிசினஸôகவே வீட்டில் இருந்தபடியே செய்து  மாதம் ரூபாய் 30,000 வரை சம்பாதிக்கிறார் என்பது மகிழ்ச்சியாக தெரிவித்து கொள்கிறேன்'' என்றார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/24/w600X390/mn14.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/24/இல்லத்தரசியும்-தொழில்-முனைவோர்-ஆகலாம்-28-3026232.html
3026230 வார இதழ்கள் மகளிர்மணி இறைப்பணியில் பெண்கள்!  - கி.ஸ்ரீதரன் DIN Wednesday, October 24, 2018 02:18 PM +0530
இன்றைய சமூதாயத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் விளங்குகின்றனர். அரசாங்கம் மற்றும் தனியார் அலுவலகங்களிலும் பெண்கள் பலர் பணியாற்றுகின்றனர். பல நிறுவனங்களில் உயர் பதவி வகிக்கின்றனர். லாரி, பஸ் ஆட்டோ, ரயில்  போன்றவைகள் மட்டுமல்லாமல் ஆகாய விமானங்களையும் ஓட்டுகின்றனர். காவல் துறையிலும், ராணுவத்திலும் சிறப்பாகப் பணியாற்றுவதைக் கண்டு பெருமை அடைகிறோம். ஆண்களுக்கு  சமமாக  அனைத்துத் துறைகளிலும்  பணிபுரிந்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி  அடைகிறோம்.

பண்டைய நாளிலும் அரசர்களுக்கு  இணையாக  தேவியர்களும் அமர்ந்து தானங்களை அளித்ததாகச் செப்பேடுகளும், கல்வெட்டுகளும்  எடுத்துக் கூறுகின்றன. ஆண்களைப் போன்று பெண்களும் அதிகாரிகளாக பணியாற்றியுள்ளனர் என்பதைக் கல்வெட்டுகளினால் அறியமுடிகிறது. அரசர்களைப் போல அரசிகளும் திருக்கோயில்களை எடுப்பித்து தானங்களை அளித்துள்ளனர். திருக்கோயில் பணிகளை மேற்கொள்ளவும், திருமுறைகளை ஓதுவதற்கும் பெண்கள் நியமிக்கப்பட்டனர் என்பதை கல்வெட்டுகளினால்  அறியமுடிகிறது. 

சென்னைக்கு அருகாமையில் செங்கற்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் 3.கி.மீ. தொலைவில்   வல்லம் என்ற ஊரில்  உள்ள  சிறிய குன்றில்  பல்லவர் கால குடைவரைக் கோயில்கள் மூன்று  உள்ளன.  இதில் வசந்தீசுவரம் எனப்படும் குடைவரைக் கோயில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில்  மகள் லக்கசோமாதிரியார்   (தேவ குலம்) இதனை எடுப்பித்தாள் என்று இங்கு காணும்  கல்வெட்டினால்  அறிய முடிந்தது. இக்கோயில் "தேவகுலம்' என அழைக்கப்படுகிறது.  மற்றொரு கோயில் திருமாலுக்காக  எடுக்கப்பட்டதாகும்.  இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டில் பல்லவ  பேரரசர் மகள்  "கொம்மை தேவகுலம்'  எனக் குறிப்பிடப்படுகிறது.

இரண்டு கோயில்களும் பல்லவர் காலத்தில் இரண்டு பெண்களால்   தோற்றுவிக்கப்பட்டதை  அறிகிறோம்.

காஞ்சிபுரத்தில் அழகிய  சிற்பங்கள் அடங்கிய  கைலாசநாதர்  கோயில் உள்ளது.  இதனை  பல்லவ மன்னன்  ராஜசிம்மன்  என்பவன்  தோற்றுவித்தான். இம்மன்னனுடைய அரசி ரங்க பதாகை என்பவள்  அழகின் சிகரம் போன்றவள். கொடி போன்றவள். ராஜசிம்மன்  தோற்றுவித்த  கைலாசநாதர் கோயில் முன்பாக  சிறு ஆலயம் கட்டினாள்.

"நிர்மாபிதம் இதம் தர்ம தயா  சந்திர சிகாமனே
பதாகயேவ  நாரீணாம் ரம்யம்  ரங்க பதாகயா'
எனக் கல்வெட்டு  குறிப்பிடுகிறது.

இரண்டாம்  விக்ரமாதித்தன்  என்ற சாளுக்கிய மன்னன்  காஞ்சிபுரத்தின் மீது படையெடுத்தபோது இக்கோயிலின்  அழகினைக் கண்டு வியந்து  கர்நாடக மாநிலத்தில் பட்டடக்கல் என்ற இடத்தில்  இதேபோன்று  கோயில் எடுப்பித்தான். அக்கோயில் லோகமகாதேவீச்சுரம்  எனப்பட்டது.  இன்று விருபாஷர்  கோயில் என அழைக்கப்படுகிறது. இருமாநில  கலை, பண்பாட்டு ஒற்றுமைக்கு சிறந்த  எடுத்துக்காட்டாக  விளங்குகிறது.

சோழர்  காலம் கோயிற் கலையின் பொற்காலம்  எனக்குறிப்பிடலாம். இக்காலத்தில்  முத்தரையர்கள்,  இருக்கு வேளிர்,  பழுவேட்டரையர்  போன்ற குறுநில மன்னர்கள்  பல திருக்கோயில்களைக் கட்டியுள்ளனர்.  அரசிகளும் கோயில்களைக் கட்டியுள்ளனர்.  திருச்சிக்கு  அருகே உள்ள திருச்செந்துறை திருக்கோயிலை  "பூதி ஆதிச்ச பிடாரி'  என்ற  பெண் எடுப்பித்தாள் என்பதை அறிய முடிகிறது. 

சோழ  மாமன்னன் ராஜராஜ சோழனுடைய  ( அக்காள்) தமக்கை  குந்தவை பிராட்டியார்.  ராஜராஜசோழன்  தன்னுடைய  தமக்கை  மீது அளவற்ற  அன்பும் பாசமும் மதிப்பும் வைத்திருந்த காரணத்தால்  தன் மகளுக்கும்  குந்தவை எனப் பெயரிட்டு மகிழ்ந்தான் அவள் பல திருக்கோயில்களுக்குத் தானம் வழங்கினாலும், திண்டிவனம் அருகே உள்ள  தாதாபுரத்தில்  சிவன், பெருமாள், சமணக் கோயில்களை  எடுப்பித்தாள்.  தனது  தந்தையின் பெயரால்  "சுந்தர சோழ   விண்ணகர்  ஆதுலர் சாலை'  என்ற   மருத்துவமனை எடுத்துள்ளதை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.  இதே  போன்று  சோழ பேரரசி செம்பியன் மாதேவியாரும்  முக்கிய இடம்  பெற்று விளங்குகிறார். 

ராஜராஜசோழன்  தஞ்சை  பெரிய கோயிலில்  பணிகளை மேற்கொள்ள,  ஆடல் மகளிர் 400 பேரை  "தளிச்சேரி பெண்டுகளாக'  நியமித்தார்  என்பதை  அறிய முடிகிறது.

சோழர்  காலத்தில் பெண்கள்  சம உரிமை  பெற்றிருந்ததோடு  அதிகாரிகளாக பணியாற்றியிருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. அவர்களும் கோயில்களுக்கு தானம் அளிக்கும்  உரிமை பெற்று விளங்கியிருக்கின்றனர். ராஜராஜசோழனின் தேவியான லோகமகாதேவி இட்ட  ஆணையை  எருதன் குஞ்சரமல்லி  என்ற  "அதிகாரிச்சி'  நிறைவேற்றியுள்ளார் என   திருவையாறு கோயில்  கல்வெட்டு குறிப்பிடுகிறது.  

முதலாம் ராஜேந்திர  சோழனின்  மைந்தனான  ராஜாதிராஜன்  காலத்தில் சோமயன் அமித்திரவல்லி என்ற அதிகாரிச்சியும்,  இரண்டாம்  ராஜேந்திரனின் தேவி திரைலோக்கியமுடையாளுக்கு முத்தான  பொன் நங்கை என்ற அதிகாரிச்சியும் பணியில்  இருந்ததை அறியமுடிகிறது.   சோழ அரசில் அதிகாரிகளின் மனைவியர்களும் தானம்  அளித்துள்ளனர் என்று திருமழப்பாடி  கோயில்  கல்வெட்டு  குறிப்பிடுகிறது.

முதலாம் குலோத்துங்க சோழனின்  தேவியாரின் அதிகாரிச்சி  பற்றி திருப்புகலூர் கோயில்  கல்வெட்டு  குறிப்பிடுகிறது. எனவே,  சோழர்  காலத்தில் பெண்கள் அதிகாரிச்சிகளாக  பணியாற்றியுள்ளனர்  என்பதை அறியும் பொழுது  அக்கால நிர்வாக  வரலாற்றின்  சிறப்பை உணர முடிகிறது.

திருச்சி  அருகே உள்ள குமார வயலூர் அக்னீசுவரசுவாமி  கோயிலில் காணப்படும் பராந்தக சோழன்  காலக் கல்வெட்டில்  அக்கோயிலில் திருப்பதிகங்கள் ( தேவாரத் திருமுறைகள்)  ஓதுவதற்கு  மூன்று பெண்கள் நியமிக்கப்பட்டனர் எனக் குறிப்பிடுகிறது.  பொதுவாக  திருக்கோயில்களில் ஆண்கள்தான் திருமுறைகள் ஓதுவதற்கு  நியமிக்கப்படுவார்கள். இக்கோயிலில் பெண்கள்  திருமுறைகளை ஓதுவதற்கு  நியமிக்கப்பட்ட  செய்தி  மிகவும்  சிறப்பானது.

விஜய நகர,  நாயக்க  மன்னர்கள் காலத்திலும்  பெண்களுக்கு முக்கிய இடம் அளித்திருப்பதை  அக்கால  சிற்பங்களில்  காணலாம்.  அரசனோடு, அரசியும் உடன் இருப்பதை  சிற்பங்களில் காணலாம்.

மதுரை  நாயக்க  மன்னர்களும்,  சேதுபதி மன்னர்களும்  மதுரை மீனாட்சி அம்மன், இராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி அம்மன் பிரதிநிதியாக  ஆட்சி செய்து வந்தனர் என்பதை  மதுரைக் கோயில் ஓவியங்கள்,  திருவிழாக்கள், சேதுபதி மன்னர் அரண்மனையில்  காணப்படும்  ஓவியங்களின் மூலம் அறிகிறோம்.

பெண்களுக்கு சிறப்பான இடத்தை அளித்திருக்கிறார்கள் என்பதை கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள் வாயிலாக அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/24/w600X390/mn13.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/24/இறைப்பணியில்-பெண்கள்-3026230.html
3026229 வார இதழ்கள் மகளிர்மணி வளர்ந்து வரும் இந்திய அழகு சந்தை! தமிழில்: நந்தினி. DIN Wednesday, October 24, 2018 02:09 PM +0530 இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் முக்கியத்துவம் கொடுப்பது அழகுக்கு தான். இந்த அழகுக்கே அழகு சேர்க்கும் வகையில் இன்றைய தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டன. இளம் வயதில் மிருதுவாகவும், பொலிவுடனும், பளபளப்புடனும் தோன்றும் சருமம் வயது ஏற ஏற சுருக்கமுற்று, பொலிவிழந்து, உண்மையான நிறமிழந்து காணப்படும். இதனை தடுக்கவும், சரிசெய்யவும் உலக சந்தையில் முக அறுவை சிகிச்சை மற்றும் அழகு சந்தைகளுக்கான தொழில்நுட்பங்கள் பெருக்கி வருகின்றன. சர்வதேச அளவில் இந்த சந்தையின் வளர்ச்சி பெருகி வரும் நிலையில்,

இந்தியாவில் இதன் வளர்ச்சி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சியைக் காட்டிலும் இரட்டிப்பு வேகத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது. என்பது ஆச்சர்யமளித்துள்ளது.  சமீபத்திய ஆய்வின்படி, 2017-18-ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் அழகு சந்தை மதிப்பு ரூ.80,370 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதன் வளர்ச்சி 7% முதல் 17% வரை உயரலாம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.   இது குறித்து  அழகுக்கலை நிபுணர்கள் சிலரின் கருத்துக்களை பார்ப்போம்:

""அழகு மற்றும் தோல் தொடர்பான சிகிச்சைகள் 30, 40 வயது சார்ந்தோரை மட்டுமல்லாது 50 வயதிற்கு மேற்பட்டவர்களிடமும் பிரபலமடைய காரணம், தொழில்நுட்ப வளர்ச்சி, மிகக்குறைந்த பக்க விளைவுகளுடன் கூடிய சிறந்த பலன், குறைந்த செலவு மற்றும் விழிப்புணர்வு ஆகியவைதான்'' என்று சர் கங்கா ராம் மருத்துவமனையைச் சேர்ந்த தோல் சிகிச்சை நிபுணரான டாக்டர். ரோகித் பத்ரா தெரிவித்துள்ளார்.

""ஜுவடர்ம்  (ஒமயஉஈஉதங), வால்யுமைசர்ஸ் (யஞகமஙஐநஉதந) மற்றும் போடாக்ஸ் (ஆஞபஞல)  ஆகியவை அழகுக்கலையில் துளையிட்டு உட்செலுத்தும் ஃபில்லர்ஸ் எனப்படும் ஒருவகை அழகுக்கலை. அதேசமயம் லேசர் சாதனங்களின் முறையில் துளையின்றி ஏற்படுத்தும் ஃபில்லர்ஸ்கள் மூலமும் சரும சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், இதுபோன்ற சிகிச்சைகளை தகுதியான தோல் சிகிச்சை நிபுணர், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார்''  அப்போலோ மருத்துவமனையின் தோல் சிகிச்சை மூத்த மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஜி. ரவிச்சந்திரன்.  

இதுஒருபுறமிருக்க, மற்றொரு புறம், பெண்களிடையே சமீபத்தில் பிரபலமாகிவருவது, மாசு, மருவற்ற, கண்ணாடி போன்ற சரும அழகை(கிளாஸ் ஸ்கின் காம்ப்ளக்ஷன் ) பெறுவது. இத்தகைய கண்ணாடி போன்ற சருமத்தை பெறுவதற்கு சந்தையில் நிறைய மாய்சுரைஸர்கள், முகப்பூச்சுகள், பளிச்சிடும் சீரம் ஆகியவை உள்ளன.

அதுபோன்று  முகத்தில் உள்ள சிதைந்த செல்களை நீக்கி ஆரோக்யமான, இளமையான தோற்றத்தை பெற "கெமிகல் பீல்' என்ற முறை உள்ளது. இந்த முறையில், முகத்தில் சிதைந்த செல்களின்  மீது ரசாயனத்தைப் பூசி மெதுவாக மசாஜ் செய்து வர சிதைந்த செல்கள் நீங்கி சருமம் புத்துணர்ச்சி பெறும்.

நமது முக வடிவமைப்பை எவ்வித அறுவை சிகிச்சையும் இன்றி அழகாக மாற்றும் முறை தற்போது பிரபலமடைந்து வருகிறது. இந்த முறை மிகவும் பாதுகாப்பானதும் கூட .  ùத்ரட் லிப்டிங்க், நூலை வைத்து முகத் தாடையின் மேலும் கீழும் தொடர்ந்து மசாஜ் செய்யும்  இந்த முறையில்  உடனடியாக பலன் கிடைக்குமாம். மேலும், இந்த முறையில் ஓர் ஆண்டுக்கும் மேல் சிகிச்சையின் பலன்  நீடிக்கும்.

அல்ட்ரா கதிர்கள் மற்றும் ரேடியோ கதிர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி நமது தோலில் உள்ள கொலாஜென், ஃபைபர்ஸ், டெர்மிஸ் ஆகியவற்றை பலப்படுத்தினால் இளமையான, மிருதுவான பளப்பான சருமத்தை பெறலாம்.
தெர்மா ஃபில்லர்ஸ்: முக சுருக்கம் நீங்க, மிருதுவான சருமத்தை பெறுவதற்காக மெல்லிய திசுக்கள் அடங்கிய ஊசிகள் முகத்தினுள் செலுத்தப்படும். இதன் மூலம் நாம் விரும்பியவாறு நமது முக அமைப்பை பெறலாம். அழகான சதுர வடிவிலான சிலை போன்ற முக வடிவமைப்பையும் பெறலாம். உதடுகளை மேலும் அழகாக காட்ட, கண்ணைச் சுற்றியுள்ள கருவளையங்களை போக்க இம்முறை பயனாக இருக்கும்.

தோல் மெருகேற்றும் ஊசிகள்: தோல் பளபளப்பாக இருக்க இயற்கையாகவே உடலில் பல புரதங்கள் சுரக்கும். அத்தகைய புரதங்களை ஊசிகள் மூலமாக செயற்கையாக  செலுத்தும்போது  முகம் இழந்த அழகைப் பெற்று பொலிவுடன் காணப்படும்.  

லேசர் டோனிங்: சருமம் வயது கூடும்போது பொலிவை இழந்து காணப்படும். கருமை நிற புள்ளிகள் ஆங்காங்கே தோன்றி இருக்கும். லேசர் டோனிங் சிகிச்சை மூலமாக சருமத்தின் இழந்த பொலிவை மீண்டும் பெறலாம். இந்த முறை சருமத்தில் உடனடி மாற்றத்தைத் தரும்.

தெர்மா ரோலிங்: வயது ஏற ஏற சிலருக்கு கன்னத்தில் குழிகள், தழும்புகள், ஆங்காங்கே கருமை நிற படலங்கள் தோன்ற ஆரம்பிக்கும். இந்த தெர்மா ரோலிங் முறையில், அக்குபஞ்சர் அளவிலான ஊசிகள் கொண்ட  ஒரு கருவி முகத்தில் தேய்த்து உருட்டப்படும். அதன் மூலம்  சருமத்தில் உள்ள இறந்து போன செல்கள், மூடிய சருமத் துளைகள் ஆகியவை மறைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும். அதன் பின்னர் மற்ற சிகிச்சையை மேற்கொள்ளும் போது அதன் முடிவுகள் பிரகாசமானதாக இருக்கும்.

லேசர் லிப்ட்: இந்த முறையில் லேசர் கதிர்கள் முகத்தில் செலுத்தப்படும்.  அந்த கதிர்கள் முகத்தில் ஊடுருவி முகத்தில் உள்ள கொழுப்புகளை கரைத்து சருமத்தை இறுக்கமடைய செய்யும். இது அழகான முக வடிவமைப்பை பெற்று தரும்.

கொழுப்பு மாற்று சிகிச்சை: பெண்களின் முகத்தை மேலும் அழகாக்குவது அவர்களின் கன்னங்கள். அது அழகாக இருந்தால் முகத்துக்கே தனிஅழகுதான். ஆனால் சிலருக்கு கன்னம் ஒட்டிப் போயிருக்கும். அவ்வாறு ஒட்டிய கன்னம் கொண்டவர்களுக்கு கொழுப்பு  மாற்று சிகிச்சை பயனுள்ளதாக அமையும். இந்த சிகிச்சையில் உடலின் வேறு பாகங்களில் இருந்து கொழுப்பு திசுக்கள் எடுக்கப்பட்டு முகத்தினுள் ஊசி மூலமாக செலுத்தப்படும். இதன் மூலம் அழகான கன்னங்களைப் பெற முடியும்.  

என்னதான் நாம் விதவிதமான சிகிச்சைகளை மேற்கொண்டாலும் நமது முக அழகை உணவே தீர்மானிக்கும். நாம் உண்ணும் உணவே உடல் ஆரோக்கியத்தையும், சரும ஆரோக்கியத்தையும் தரும். 

இயற்கையின் வரம் தேங்காய் எண்ணெய்: தோலின் உள்ளே இருக்கும் எபிடெர்மல் திசுவை பலப்படுத்த தேங்காய் எண்ணெய் உதவியாக இருக்கும். சருமத்தில் உள்ள இறந்து போன செல்களை நீக்கும். மேலும் வெயிலினால் சருமத்தில் ஏற்பட்ட மாறுபாட்டை நீக்கும் இயற்கை மாய்சுரைஸர் ஆக இருக்கும்.

தேன்: சருமத்தில் ஏற்பட்ட  பிளவுகள், தழும்புகள், முகப்பருவினால் உண்டான காயங்கள், அலர்ஜி, ஆகியவற்றை குணப்படுத்துவதற்கு இது உதவியாக இருக்கும்.

வெண்ணெய்: வயதானவர்களுக்கு ஏற்படும் கரும்புள்ளிகள், சரும எரிச்சல், சூரிய ஒளியினால் பாதிக்கப்பட்ட தோல் ஆகியவற்றை குணப்படுத்தும் அதீத மாய்சுரைஸராக வெண்ணெய் உள்ளது.

கற்றாழை: உலர்ந்த சருமம், தோல் உரிதல், சொரியாசீஸ், முகப்பரு ஆகியவற்றை குணப்படுத்த கற்றாழை உதவுகிறது.

தண்ணீர்: ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 8-10 டம்ளர் தண்ணீர் பருகுவது மிகவும் முக்கியம்.  டீ, காபி அதிகமாக பருகுவதை தவிர்க்க வேண்டும்.  இவையெல்லாம் அழகை இயற்கையாகவே பாதுகாத்திடும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/24/w600X390/mn12.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/24/வளர்ந்து-வரும்-இந்திய-அழகு-சந்தை-3026229.html
3026227 வார இதழ்கள் மகளிர்மணி நகைகளை இப்படி பராமரிக்க வேண்டும்!  - தொண்டி முத்தூஸ் DIN Wednesday, October 24, 2018 02:01 PM +0530  

வெள்ளி நகைகள்

 

* அரை டம்ளர் தண்ணீரில் ஷாம்பூ போட்டுக் குலுக்கி அரைமணி நேரம் கழித்த பிறகு அதில் வெள்ளி கொலுசுகளைப் போட்டுக் ஊறவைத்து தேய்த்துவிட்டு, சுத்தமான  தண்ணீரில் தேய்த்துக் கழுவி ஈரம் போகத் துடைத்தால் பளபளவென்று இருக்கும்.

* வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைத்தால் அவை கறுப்பாவதைத் தவிர்க்கலாம்.

* குத்துவிளக்கு, காமாட்சி விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.

* புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரைமணி நேரம் ஊறப்போட்டு பின்  எடுத்து துலக்கினால் அவை புதியவை போல்  இருக்கும்.

 

முத்து நகைகள்

 

* முத்துப் பதித்த நகைகளை மற்ற நகைகளோடு சேர்த்து வைக்கும் போது முத்துகள் சேதமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே முத்துகள்  பதித்த நகைகளை தனியாக ஒரு பெட்டியில் வைப்பதே நல்லது.

* முத்துகள் பதித்த நகைகளை நீரில் அமிழ்த்திக் கழுவக்கூடாது. அப்படிக் கழுவினால் முத்துகள் ஒளியிழக்கும்.  அதுபோன்று,  வாசனைத் திரவியங்கள் பட்டால், முத்துகளின் பொலிவு நாளடைவில் மங்கி விடும். எனவே, ஒப்பனைகள் முடிந்த பின் முத்து நகைகளை அணிவதே நல்லது.

* முத்து நகைகளை பயன்படுத்தாத போது,  அவற்றை தூய்மையான வெள்ளை நிற காட்டன் துணியினுள் வைக்க வேண்டும்.  பேப்பர் அல்லது மற்ற துணிகளுக்குள் வைத்தால், முத்துக்களின் நிறம் நாளடைவில் மங்கிவிடும்.

 

கற்கள் பதித்த நகைகள்

 

* கற்கள் பதித்த நகைகளை தினசரி அணிந்தால்,  ஒளி மங்கிவிடும்.  இதற்கு சிறிது நீலக் கலர் பற்பசையை கற்கள் மீது பூசி, அழுத்தம் கொடுக்காமல் பிரஷ்ஷால் மெதுவாக தேய்க்க வேண்டும்.  பின்பு தூய நீரில் கழுவி, நீராவியில் காண்பித்தால், அவற்றிலுள்ள எண்ணெய்ப்  பிசுக்கு போன்றவை வெளியேறிவிடும்.

* கற்களில் கீறல் விழுவதைத்  தவிர்க்க,  டிஷ்யூ பேப்பர் அல்லது மென்மையான பனியன் துணி ஆகியவற்றையே கற்கள் பதித்த நகைகளை சுத்தம்  செய்ய பயன்படுத்த வேண்டும்.

 

தங்க நகைகள்

 

* தங்க நகைகளை அதற்கென இருக்கும் பெட்டியில் வைக்க வேண்டும். அப்போதுதான், அதில் கல் மற்றும் முத்து போன்றவை பதிக்கப்பட்டிருந்தால் அவை விழாமல் இருக்கும்.  தங்க நகைகளுடன் பிற கவரிங் நகைகளைச் சேர்த்து அணியக் கூடாது.  அவ்வாறு அணிந்தால், தங்க நகைகள் சீக்கிரம் தேய்ந்து விடும்.

* பூந்திக் கொட்டையை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரால் தங்க நகைகளைக் கழுவலாம். இப்படிச் செய்தால், அழுக்கு நீங்கி நகைகள் பளபளப்பாக இருக்கும்.

* நாம் அன்றாடம் அணியும் செயின், தோடு, மூக்குத்தி ஆகியவற்றில் அதிகமாக அழுக்குகள் சேர்ந்துவிடும்.  எனவே இவற்றை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தரமான ஷாம்பூ  அல்லது சோப்புத் தூளால் தேய்த்து தூய நீரில் கழுவ வேண்டும்.  பின் இவற்றை நீராவியில் காண்பித்தால், அழுக்குகள் நீங்கி, பளபளவென்று ஜொலிக்கும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/13/w600X390/gold-powder.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/24/நகைகளை-இப்படி-பராமரிக்க-வேண்டும்-3026227.html
3026226 வார இதழ்கள் மகளிர்மணி நன்மைகளை வாரி வழங்கும் கிழங்கு! - ஏ.எஸ்.கோவிந்தராஜன் DIN Wednesday, October 24, 2018 01:55 PM +0530
மரவள்ளிக் கிழங்கு என்பது நாம் அனைவரும் அறிந்த கிழங்கு வகையில் ஓன்று. அதன் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இதில் பார்ப்போம்.  மரவள்ளிக் கிழங்கு உடலில் ஏற்படும் தொற்று மற்றும் ஜீரண பிரச்னை போன்றவைகளை எளிதில் குணப்படுத்த வல்லது. மேலும் கண் ஆரோக்கியம், காய்ச்சலை குணப்படுத்துதல், காயங்களை ஆற்றுதல், பூச்சிகளை அகற்றுதல் போன்ற உடலுக்கு நன்மையான பல காரியங்களை செய்கிறது. இதை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதால் வயிற்றுப்போக்கு, தலைவலி, செரிமானம், முடி வளர்ச்சி, எடை குறைப்பு போன்ற உடல் சார்ந்த பல்வேறு கோளாறுகளை நீக்குகிறது. 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/24/w600X390/mn11.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/24/நன்மைகளை-வாரி-வழங்கும்-கிழங்கு-3026226.html
3026225 வார இதழ்கள் மகளிர்மணி டிப்ஸ்... டிப்ஸ்...  - சி.பன்னீர்செல்வம் DIN Wednesday, October 24, 2018 01:54 PM +0530 * டைனிங் ரூமில் கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி புதினா இலைகளைப் போட்டு வைத்தால் ஈ தொல்லை இருக்காது.

* உருளைக்கிழங்கை வெங்காயத்துடன் கலந்து கூடையில் வைத்தால் பத்து நாட்களுக்கு மேல் கெடாமல் இருக்கும்.


* காய்ச்சின பாலோடு சிறிது பச்சைப் பாலை சேர்த்து உறை ஊற்றி வைத்தால் தயிர் கெட்டியாக கிடைக்கும்.


* வெள்ளைத்துணிகள் பளிச்சிட வெள்ளைத்துணிகளை துவைக்கும்போது தண்ணீரில் சிறிது டேபிள் சால்ட் சேர்த்துக்கொண்டால் துணிகள் வெள்ளை வெளேர் என்று இருக்கும்.


* மிதியடிக்கு அடியில் அதே சைசில் பழைய நியூஸ் பேப்பரை வெட்டி வைத்து விட்டால் மிதியடிகள் அழுக்கு எல்லாம் பேப்பரில் சேர்ந்திருக்கும்.


* கொஞ்சம் நீரில் கடுகு எண்ணெய் கலந்து மிருதுவான துணியில் நனைத்து மரச் சாமான்களை துடைத்தால் வார்னிஷ் செய்தது போல இருக்கும்.


* பழைய புத்தகங்களை பூச்சி அரிப்பில் இருந்து பாதுகாக்க புத்தக அலமாரியில் சிறிதளவு புகையிலை தூவினால் பூச்சி அரிப்பு இருக்காது.


* பூரி மாவை அப்பளமிட்டு பிரிட்ஜில் வைத்து பிறகு பொரித்தால் போட்டவுடன் பொரியும். எண்ணெய் குடிக்காது.


* தயிரைக் கடைந்து சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்து மறுபடி கடைந்தால் வெண்ணெய் சீக்கிரமாக திரண்டு வரும்.


* கண்ணாடிப் பாத்திரங்களில் சிறு கீறல் விழுந்தால் அந்த இடத்தில் டூத் பேஸ்ட்டைத் தேய்த்தால் கீறல் மறைந்து விடும்.


* ஆடையில் சுவிங்கம் ஒட்டிக்கொண்டால் ஐஸ் கட்டியை அந்த இடத்தில் சற்று தேய்த்துப் பார்த்தால் எளிதில் வந்துவிடும்


* பட்டுப்புடவை, பட்டுச் சட்டை முதலியவற்றை வாசனை சோப்பு போட்டுத்தான் துவைக்க வேண்டும். ஏனெனில் அதில்தான் காரத் தன்மை குறைவு. பட்டுத்துணிகளுக்கு சேதம் வராது.

(முத்துக் குவியல் -என்ற நூலிலிருந்து)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/24/w600X390/mn10.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/24/டிப்ஸ்-டிப்ஸ்-3026225.html
3026224 வார இதழ்கள் மகளிர்மணி சமையல்... சமையல்!  - ஆர்.ராதிகா DIN Wednesday, October 24, 2018 01:52 PM +0530 பால் கொழுக்கட்டை!

தேவையானவை:
அரிசி மாவு - 300  கிராம்
பசும்பால்  - 150 மி.கி.
தேங்காய்த் துருவல்  -  அரை கிண்ணம்
உப்பு -  தேவைக்கேற்ப
ஏலக்காய்த் தூள் - 1 சிட்டிகை
நெய் - 2 தேக்கரண்டி


செய்முறை:  பாலை நன்கு காய்ச்சி வைக்கவும்.  அரிசி  மாவுடன்   தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், உப்பும் சேர்த்து நன்கு  பிசைந்து  ஒரு மணி நேரம் வைக்கவும். பின்னர், அதில்  நெய்விட்டு  பிசைந்து கொள்ளவும். கலவையை எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளாக உருட்டி, இட்லி பாத்திரத்தில் வேகவைத்து எடுக்கவும். பின்னர் காய்ச்சியப் பாலில் கொழுக்கட்டைகளை சேர்க்கவும் கமகம நெய் வாசனையுடன் பால் கொழுக்கட்டை தயார். சூப்பர் சுவையுடன்  இருக்கும்.  குழந்தைகள்  முதல் பெரியவர்  வரை விரும்பி சாப்பிடுவர்,  பால் சேருவதால்  சத்துள்ள  கொழுக்கட்டை இது.


சிறுதானிய கொழுக்கட்டை

தேவையானவை:  
தினைமாவு  - கால் கிலோ
கேழ்வரகு மாவு -  50 கிராம்
சாமை மாவு -  50 கிராம்
தேங்காய்த் துருவல்  -  அரை கிண்ணம்
உப்பு -  தேவையான அளவு


செய்முறை:  மூன்று  மாவுகளையும் வெறும் வாணலியில்  இட்டு லேசாக வறுக்கவும். நன்கு ஆறினதும் தேங்காய்த் துருவல்,  உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இத்துடன் தேவையான அளவு தண்ணீர் தெளித்து நன்கு பிசைந்து, ஒருமணி நேரம் வைக்கவும். பின்னர், நடுத்தர அளவு உருண்டைகளாகப் பிடித்து,  இட்லித் தட்டில்  வைத்து நன்கு வேக  வைத்து எடுக்கவும்.  சிறுதானிய கொழுக்கட்டை தயார். மிகவும் சுவையாக இருக்கும். சிறுதானியங்களில் தாதுப் பொருள்களும்,  வைட்டமின்களும் உள்ளதால், உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.


வெஜிடபிள் கொழுக்கட்டை

தேவையானவை:
அரிசி மாவு  - கால் கிலோ
கேரட் - 200 கிராம்
பீன்ஸ் -25 கிராம்
தேங்காய்த் துருவல்  - கால் கிண்ணம்
மிளகுத்தூள் -  கால் தேக்கரண்டி
உப்பு -  தேவைக்கேற்ப 


செய்முறை: கேரட்டை  மெல்லிதாக துருவிக் கொள்ளவும்.  பீன்ûஸப் பொடியாக நறுக்கவும். இரண்டையும்  சேர்த்து பாதி பதத்திற்கு வேக வைத்து எடுக்கவும். அரிசி மாவுடன் காய்கறி கலவை, தேங்காய்த்துருவல், மிளகுத்தூள், உப்பு ஆகியவைகளைச் சேர்த்து, போதிய அளவு நீர் தெளித்து, நன்கு பிசைந்து கொள்ளவும். கலவையை  எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளாகப்  பிடித்து வைக்கவும். பின்னர், இவைகளை இட்லிப் பாத்திரத்தில் வேகவைத்து எடுக்கவும். வெஜிடபிள் கொழுக்கட்டை தயார்.  சுவையும்  சத்தும் மிக்கது இந்த கொழுக்கட்டை. குழந்தைகள்  மிகவும் விரும்பி தின்பர்.


கோதுமை கொழுக்கட்டை

தேவையானவை
கோதுமை மாவு -  200 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
தேங்காய்த் துருவல்  - அரை கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப 
வெல்லம் - அரைகிண்ணம்


செய்முறை:  கோதுமை மாவு,  அரிசி மாவு இரண்டையும்  நன்கு கலந்து கொள்ளவும்.  இத்துடன் உப்பு சேர்த்து, போதிய  அளவு  தண்ணீர் தெளித்து  ஒரு மணி நேரம் வைக்கவும். பின்னர், மாவு கலவையை நடுத்தர அளவு உருண்டைகளாகப் பிடித்து, அதன் உள்ளே பொடித்த வெல்லம் கலந்து தேங்காய்த் துருவலை வைத்து மூடி இட்லி தட்டில்வைத்து நன்கு வெந்ததும் எடுக்கவும். கோதுமை கொழுக்கட்டை  தயார். மிதமான  மணத்துடன்  மிகவும் சுவையானது  இந்த கொழுக்கட்டை  ஆரோக்கியத்திற்கு  ஏற்றது.


மசாலா  கொழுக்கட்டை

தேவையானவை
அரிசி மாவு - அரை  கிலோ
சீரகம் - அரை தேக்கரண்டி
மிளகு -  கால் தேக்கரண்டி
வெந்தயம் -  1 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல்  - அரை டம்ளர்
உப்பு -  தேவைக்கு


செய்முறை:  சீரகம், மிளகு, வெந்தயம் மூன்றையும் ஒன்றாக  கலந்து வெறும் வாணலியில் இட்டு லேசாக  வறுத்து  எடுத்து,  ஆறினதும் மிக்ஸியில்  இட்டு கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.  அரிசி மாவுடன்,  தேங்காய்த் துருவல், மசாலா  பொடி கலவை,  உப்பு இவைகளைச்  சேர்த்து தண்ணீர்  தெளித்துப் பிசைந்து,  இரண்டு மணி நேரம்  வைக்கவும்.  பின்னர், எலுமிச்சம் பழம்  அளவு உருண்டைகளாக  உருட்டி, இட்லி பாத்திரத்தில்  வேக வைத்து எடுக்கவும். மசாலா கொழுக்கட்டைத் தயார்.சூடாகச் சாப்பிட சுவையாக  இருக்கும். சீரகம், மிளகு, வெந்தயம் ஆகியன சேருவதால் இதை மூலிகைக் கொழுக்கட்டை என்றும் சொல்லலாம்.  அக உறுப்புகளை சீராக இயங்கச் செய்யும் தன்மை இதற்கு உண்டு.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/24/w600X390/mn9.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/24/சமையல்-சமையல்-3026224.html
3026222 வார இதழ்கள் மகளிர்மணி எண்பத்தேழு வயதிலும் பதக்க அறுவடை! - முல்லை DIN Wednesday, October 24, 2018 01:37 PM +0530 சென்னையைச் சேர்ந்த டெய்சி  விக்டர்  இதுவரை இருபது சர்வதேச விளையாட்டுப் போட்டிகள், முப்பத்தாறு தேசிய விளையாட்டுப் போட்டிகள், ஐம்பத்தொன்பது மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் "மூத்தவர்' பிரிவில்  கலந்து கொண்டு சுமார் 414 பதக்கங்களை பெற்றிருக்கிறார்.  அதில்  முன்னூற்றி நாற்பத்தைந்து  தங்கப் பதக்கங்கள். டெய்சிக்கு வயது எண்பத்தேழு. தினமும்  சென்னை  ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் காலை  ஏழரை மணிக்கு  ஆஜராகிறார்.  ஸ்டேடியத்தில் ஓடுவதுடன்  தட்டு (க்ண்ள்ஸ்ரீன்ள் )  குண்டு (ள்ட்ர்ற் ல்ன்ற்) எறியவும்   பயிற்சி செய்கிறார். சமீபத்தில்  உலக அளவில்  நடந்த தட்டு, குண்டு எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.  பதக்கங்களை அறுவடை செய்துவரும்  டெய்சி  தனது பயணம் குறித்து மனம் திறக்கிறார்:

""நான் பிறந்தது  திருநெல்வேலிக்குப் பக்கத்தில் இருக்கும் நாசரேத் என்னும் ஊரில். அப்பா போஸ்ட்மாஸ்டராக வேலை பார்த்தார். ஆனால் தமிழ்நாட்டில் அல்ல. ஆந்திராவின் பெல்லாரியில்.  அதனால் நான் பெல்லாரியில் வளர்ந்தேன். அப்பாதான் விளையாட்டுகளில் பங்கெடுக்கும்படி உற்சாகப்படுத்தினார். எட்டு வயதில் ஓடத்  தொடங்கி,   இப்போது  எண்பத்தேழு வயதிலும் ஓடிக்கொண்டிருக்கிறேன். 

நான் தடகள  ஓட்டத்தில்  பல வெற்றிகளை பெற்றேன்.  அதன் அடிப்படையில் 1951-இல் சென்னை தொலைபேசி  அலுவலகத்தில் வேலை கிடைத்தது. ஓட்டத்தில் எனது வெற்றிகளை கணக்கில் எடுத்து, தினமும் இரண்டு மணி நேரம் பயிற்சிக்காக அலுவலகத்தில் அனுமதி தந்தார்கள். அலுவலகத்தின் சார்பில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பல வெற்றிகளை .. பதக்கங்களைக் குவித்தேன். 1956-இல் திருமணம்.  ஆறு குழந்தைகள். கர்ப்ப காலத்திலும் ஓடி பயிற்சி பெறுவேன். பிரசவம் ஆன ஒரே மாதத்திலேயே ஓடுவதற்காக மைதானம் வந்துவிடுவேன்.  பயிற்சிக்கு   நான் நீண்ட விடுமுறை தந்ததே கிடையாது. 

இந்தியாவின்  மின்னல் வேக  ஓட்டக்காரர்  மில்க்காசிங் 1980-இல்  சென்னை வந்தார்.  அப்போது  "மூத்தோருக்காக  விளையாட்டு சங்கத்தை  ஆரம்பித்தார். முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுக்க என்னையும் ஊக்குவித்தார். அதன் காரணமாக 1981-இல் மூத்தோருக்கான தட கள போட்டியில் கலந்து கொண்டேன்.  நியூசிலாந்து சென்று  போட்டியில் கலந்து கொண்டு ஏழாவது  இடத்தில்  வந்தேன்.  அது எனக்கு உற்சாகம் தந்தது. தொடர்ந்து விக்டர் வில்சன் என்பவரிடம்  நான் பயிற்சி பெற்றேன். சர்வதேச போட்டிகளில் அவர் எனக்கு பயிற்சியளித்தார். இன்றைக்கும் நான் அதிகாலையில்  எழுந்துவிடுவேன்.  ஏழுமணிக்கெல்லாம்  மைதானம் நோக்கிப் புறப்படுவேன். ஏழரை முதல் ஒன்பதரை மணி வரை பயிற்சி நடக்கும்.  உடன் காபியும், காலை உணவையும் கொண்டு போவேன். வரும் வழியில்  அவசியம் ஏற்பட்டால் வங்கி, அஞ்சல் அலுவலகம் சென்று  வேலைகளை முடித்து விட்டு பதினோரு மணிவாக்கில் வீடு திரும்புவேன்.  முன்பெல்லாம்  எனக்கு பிடித்த விளையாட்டுகள் ட்ரிப்பிள்  ஜம்ப்  மற்றும்  தூரம்  தாண்டுதல்.

மூன்றாண்டுகளுக்கு  முன் என் கணவர் காலமானார். அவர் போனதும் தனிமை எனக்கு பெரிய பாரமாக இருந்தது.   பிறகு  எனது  கவனம்   துள்ளி குதிப்பது, தூரம் தாண்டுவதிலிருந்தும் விலகி, ஓட்டம், தட்டு, குண்டு எறிதலுக்குத் திரும்பியது. 

இத்தனை ஆண்டு காலமாக நான் சுகவீனப்பட்டதே இல்லை.  எந்த வகையிலும் உடல் வலியை உணர்ந்ததில்லை ஆனால், தற்சமயம் மாடிப்படிகள் ஏறி இறங்குவதில்  சிரமத்தை உணருகிறேன்.  என்னைத் தெரிந்தவர்கள் ""எதற்காக இந்த வயதில் தினமும்  ஓடி பயிற்சி எடுக்கிறீர்கள்.. கீழே விழுந்து அடி பட்டால்.. உங்களுக்கும் சிரமம். உங்களை கவனிப்பதில் உங்கள் பிள்ளைகளுக்கும் சிரமம்.  வீட்டில்  இருங்கள்.. பேரன் பேத்திகளுடன் பேசி நேரத்தைப் போக்க வேண்டியதுதானே''  என்று  சொல்லாமல் இல்லை.

""எனக்கு சக்தி  இருக்கிறது. நான் சம்பாதித்ததை  போட்டிகளில் பங்கெடுக்கப் போய் வர செலவு செய்கிறேன்'' என்று சமாதானப்படுத்துவேன். நான் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் போது ஏதாவது மருத்துவ செலவு ஏற்பட்டால் அதனை  டாக்டர் புகழேந்தி  ஏற்றுக்கொள்கிறார். மில்க்கா சிங்குடன்  என்னையும்  1981-இல்  பாராட்டி  மறைந்த பிரதமர் இந்திரா காந்தி பெருமைப்படுத்தினார். டெய்சி  தற்சமயம் லூதியானா சென்றுள்ளார்.  "அங்கு நடக்கும் ட்ரிப்பிள் ஜம்ப் பிரிவில் பயிற்சி எடுத்து.. எனது சாதனையை முறியடிக்க வேண்டும்  என்பதற்காகச் செல்கிறேன்'  என்கிறார் டெய்சி.   

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/24/w600X390/mn3.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/24/எண்பத்தேழு-வயதிலும்-பதக்க-அறுவடை-3026222.html
3026221 வார இதழ்கள் மகளிர்மணி பாடி பில்டிங்கில் இந்திய அழகி ரூபி! - பிஸ்மி பரிணாமன் DIN Wednesday, October 24, 2018 01:29 PM +0530 ராசிபுரத்தில் அக்டோபர்  ஏழாம் நாள்  நடந்த  உடல்  கட்டமைப்புப்  போட்டியில் அகில இந்திய பெண் அழகியாகத்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்  சென்னை ஆலம்பாக்கம் அஷ்டலக்ஷ்மி  நகரைச் சேர்ந்த ரூபி.   உடல் கட்டமைப்பு (Body building)  பிரிவில் தங்கப்பதக்கம்  மற்றும் கோப்பையைப் பெற்றிருக்கும்  ரூபி, ஆறு வயதாகும் மகனுக்குத் தாய். இந்த ஆண்டு  தொடக்கத்தில் அஸ்ஸாமில் நடந்த அகில இந்திய போட்டியிலும் உடல் கட்டமைப்புப் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றவர் இவர். அடுத்த ஆண்டு ஆசிய அளவில் நடைபெறவுள்ள போட்டியில் இந்தியாவின்  சார்பில்   கலந்து கொள்ளப் போகிறவர்.  

ஆசிரியையாக  இருந்த  ரூபி எப்படி  "பாடி 
பில்டிங்'   பக்கம் வந்தார்..? ரூபி   விளக்குகிறார்:

""எட்டு   ஆண்டுகளுக்கு முன்  திருமணம். ஓர் ஆண்டில்  மகன் பிறந்தான். பிரசவத்திற்குப் பிறகு பருமனாகிப் போனேன். இதனால், கணவரின் கோபத்திற்கு ஆளானேன்.  சில மாதங்களில்  கணவர்  என்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். பருமனைக்  குறைக்க,   நடக்க ஆரம்பித்தேன்.  மூன்று மாதம் நடந்ததினால்  உடல் பருமன்  கொஞ்சம்தான் குறைந்தது.  பிறகு  "டோனிங்' செய்து கொள்ள உடல் பயிற்சி நிலையத்திற்குப் போக ஆரம்பித்தேன். அங்குதான் உடல் பயிற்சியில் ஒரு பிரிவான "பாடி பில்டிங்'  பற்றி  அறிந்தேன். அதில் எனக்கு ஈடுபாடு ஏற்பட,   அதற்கான பயிற்சியில் இறங்கினேன். உடல் பயிற்சி செய்வதில் கூந்தல்  இடையூறாக இருக்க, முதல்படியாக ஆசையாக வளர்த்த கூந்தலைக்  கிராப்பாக  மாற்றினேன்.

"ஆரம்பக் காலத்தில்  உடல் பயிற்சி  நிலையத்தில்  என்னை விசித்திரமாகப் பார்த்தார்கள். என்னை யாரும் சட்டை செய்ய மாட்டார்கள். உதவிக்கு அழைத்தாலும்  கேட்காதது மாதிரி  இருந்து விடுவார்கள்.  உடல் பயிற்சிக்கே இத்தனை ஏளனங்கள். "பாடி பில்டிங்' செய்யணும் என்றதும் "நீயா பாடி பில்டிங்கா'  என்று கேலியாக சிரித்தார்கள். பயிற்சியாளர் ஸ்ரீதர்தான்  என்னை ஊக்குவித்தார். உடல் பயிற்சி செய்து உடல் தசைகளை கட்டமைப்பு செய்வதில் கொஞ்சம்  கொஞ்சமாக முன்னேறினேன். ஆனால் பிறர் கண்ணுக்கு  நான் ஆணாக  மாறிவருகிறேன் என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது.

வீட்டிலும் அதே கதைதான். ""பாடி பில்டிங்  ஆண்களுக்கானது.   பெண்ணான  நீ  "பாடி பில்டிங்'   செய்து  என்ன சாதிக்கப்போறே.  அப்படி செய்தால், நீ நீயாக இல்லாமல்  உடல் ரீதியாக  மாறப்போறே'' என்று என் அம்மாவே  கேள்விகளை  எழுப்பினார்.  

"பாடி பில்டிங்'  செய்வதால் பெண்களுக்கான   அழகு,  நளினம்   போய் ஆண் போன்ற தோற்றம் ஏற்பட்டுவிடும் என்று சொல்லப்படுவதில் உண்மையில்லாமல் இல்லை. இந்த "பாடி பில்டிங்'கை சுமார் இரண்டரை ஆண்டுகளாகச் செய்து வருகிறேன். ஜிம்மிற்கு புதிதாக வருபவர்கள்  "ப்ரோ (BRO) கொஞ்சம்  தள்ளுங்க..' என்று  கை வைத்து தள்ளுவார்கள்.  நான் பெண்  என்று தெரிந்தவுடன்  "ஸாரி.. சிஸ்டர்'  என்பார்கள்.   

உடை மாற்ற  பெண்களுக்கான அறைக்கு சென்றால் பையன் என்று நினைத்து ஒதுங்குவார்கள்.  இப்போது போட்டிகளில் வெற்றி பெற்று வருவதால்  ஆண் போல  ஆகிவிட்டேன் என்ற விமர்சனங்கள் குறைந்து வருகின்றன.

"திருமணமாகி  குழந்தைப்  பிறந்ததும்  பெண்கள் உடலைப் பேணுவதே இல்லை. "குழந்தை  பிறந்த பிறகு  அழகு போயிருச்சு...  அசிங்கமா  தொப்பை வந்திருச்சு..  சதை போட்டிருச்சு..'   என்று புலம்புவாங்க. ஆனால்  எதுவும் எங்கேயும்  போகல.  நாம தொலைச்சிட்டோம் அவ்வளவுதான்.  இந்தத்   தப்பை நானும் செய்தேன்,  பிறகு திருத்திக் கொண்டிருக்கிறேன். அதற்காக எல்லா பெண்களும்    "பாடி பில்டிங்'   செய்யுங்க  என்று சொல்லவில்லை.  உடலை கட்டாக வைக்கவில்லை என்றாலும்  சீராக வைத்திருக்க தேவையான உடல் பயிற்சிகளை செய்ய வேண்டும். எடை தூக்கினால்  கர்ப்பப்பை இறங்கிவிடும். முதுகு வலி வரும்  என்று சொல்வதெல்லாம்  ஆதாரமற்றவை. கர்ப்ப காலத்தில் கூட உடல் பயிற்சி செய்யலாம். ஆனால் முறையான பயிற்சியாளர்கள் அறிவுறுத்தலோடு செய்ய வேண்டும். 

உடல் பயிற்சி செய்ய அதிகாலையில் எழுந்திருக்க முடியாதே என்று நினைத்தால் எந்த வேலையையும் செய்ய முடியாது. தொடர்ந்து ஒரு வாரம் அதிகாலையில்  எழுந்துவிட்டால்,  பிறகு தானாக  விழிப்பு வந்துவிடும்.  

மேலும், உடலை சீராக வைத்துக் கொள்ள "ஸýம்பா' நடனப் பயிற்சியாளராகவும் இருக்கிறேன்.  எப்படியும்  ஒரு நாளைக்கு   ஏழு மணி நேரம்  உடல் ரீதியாக உழைக்கிறேன். 

சர்வதேச அளவில் பெண் அழகியாக நான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அந்த திசையில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன். போட்டி நாட்களில் மகனையும் அழைத்துப் போவதால் அவனுக்கும் பாடி பில்டிங்கில்  ஆர்வம் வந்துள்ளது. வீட்டில்  உடல் பயிற்சி செய்து வருகிறான்.  பெரியவன் ஆனதும் அவனையும் ஆண் அழகனாக்கிப் பார்க்க வேண்டும்'' என்கிறார் ரூபி.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/24/w600X390/mn2.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/24/பாடி-பில்டிங்கில்-இந்திய-அழகி-ரூபி-3026221.html
3026220 வார இதழ்கள் மகளிர்மணி வெற்றி எங்கள் லட்சியமாக இருந்தது! - அங்கவை Wednesday, October 24, 2018 01:19 PM +0530  

இறகுப் பந்தாட்டத்தில் நட்சத்திர  ஆட்டக்காரரான  சாய்னா நேவால்   தனது காதலை பத்தாண்டு காலம் மட்டுமே ரகசியமாக வைக்க  முடிந்தது.  சக ஆட்டக்காரர்  பாருப்பள்ளி கஷ்யப்  என்பவரை  வரும் டிசம்பர் 16 -இல் திருமணம் செய்து கொள்ளப் போகிறார். நெருங்கிய சொந்தபந்தங்கள் மட்டுமே திருமணத்திற்கு அழைக்கப்படுவார்கள் என்றும்   வரவேற்பு தடபுடலாக   டிசம்பர் 21-இல் நடைபெறும் என்றும்  தெரிய வந்துள்ளது.

கஷ்யப் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் சாய்னாவின் படங்களை பதிவேற்றம் செய்யும் போதெல்லாம் " ஓ.. காதல் பறவைகள்' என்று ரசிகர்களிடம் கமெண்ட்டுகள் பதிவானாலும்,  கஷ்யப் - சாய்னா காதலை வெளிப்படையாக மறுக்கவோ ஒத்துக் கொள்ளவோ இல்லை.  சாய்னாவிற்கு  வயது  இருபத்தெட்டு ஆகிறது. "இதுதான் சரியான தருணம்.. இனியும் தள்ளிப் போட வேண்டாம்' என்று இரு வீட்டாரும் கலந்து பேசி  டிசம்பர் 16 - ஐ  திருமண நாளாக குறித்துள்ளனர்.

""எனக்கு அடுத்தடுத்து  போட்டிகள்  உள்ளன. அதனால் இந்த தேதியை விட்டால் வேறு தேதி கிடைப்பது சிரமம். அதனால்  டிசம்பர் 16-இல் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தோம்.  2007- இல் இருந்து கஷ்யப்பை எனக்குத் தெரியும். போட்டிகள் நிமித்தம் ஒன்றாக பயணம் செய்திருக்கிறோம். ஒன்றாக விளையாடியும்  உள்ளோம். இறகுப் பந்தாட்டம் பற்றி  விலாவாரியாகப் பேசுவோம்.  அலசுவோம். அதன் காரணமாக  பரஸ்பரம்  கவரப்பட்டோம். ஆனால் திருமணம் பற்றி ஆலோசிக்கவில்லை. எங்களின் கவனம் விளையாட்டில் லயித்திருந்தது. போட்டிகளில் வெற்றி  எங்கள் லட்சியமாக  இருந்தது. அதனால் திருமணம் பற்றிய தீர்மானம் எடுக்க முடியவில்லை. இப்போது வீட்டில்  எனக்கு  வேண்டியதெல்லாம்  எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும்.  

திருமணமானதும்  அந்த நிலைமை தொடரும் என்று சொல்ல முடியாது.  எனது காரியங்களை நானே செய்ய வேண்டிவரும்.  அப்படி செய்யமுடியும் என்ற தைரியம் எனக்கு வந்திருப்பதால் திருமணம் பற்றி முடிவெடுத்தேன். 

எங்கள் காதல் குறித்து வீட்டில்  சொல்ல வேண்டிய  அவசியம் வரவில்லை. எங்களின்   அருகாமையைப் பார்த்து வீட்டில் புரிந்து  கொண்டார்கள்.  எனது பெற்றோர்  போட்டிகளின்போது  என்னுடன்  வருவார்கள்.  அப்போது கஷ்யப்புடன் நான் பழகுவதை பார்த்திருக்கிறார்கள்'' என்கிறார் சாய்னா.

கஷ்யப் ஆந்திராவைச் சேர்ந்தவர். சாய்னா  ஹரியானாவைச்  சேர்ந்தவர். ஆனால் கிட்டத்தட்ட  ஹைதராபாத் வாசியாகிவிட்டார்.  பிளஸ்  டூ தொடங்கி இறகுப் பந்தாட்டத்தில் பயிற்சி உட்பட எல்லா முக்கிய நிகழ்வுகளும் ஹைதராபாத்திலேயே நிகழ்ந்துள்ளன. கஷ்யப்-சாய்னா பயிற்சியாளர் கோபிசந்த்தின் அகாடமியில் பயிற்சி பெறுகிறவர்கள். 2015 -இல் இறகுப் பந்தாட்டத்தில்  உலகின்  நம்பர் ஒன்  ஆட்டக்காரராக  சாய்னா உயர்ந்தார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/24/w600X390/mn1.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/24/வெற்றி-எங்கள்-லட்சியமாக-இருந்தது-3026220.html
3026005 வார இதழ்கள் மகளிர்மணி சீரியலாகும் நடிகையின் வாழ்க்கை! Wednesday, October 24, 2018 10:00 AM +0530 ஆறாண்டுகளுக்கு முன் "ஜிஸிம் -2' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான சன்னி லியோன் வாழ்க்கை, "கரண்ஜித் கவுர்', "தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன்' என்ற பெயரில் வெப் சீரியலாக தயாரிக்கப்பட்டு ஜீ-5-இல் ஒளிப்பரப்பாகிவருகிறது.
 திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி "எம். டிவி' யில் கடந்த மூன்றாண்டுகளாக "ஸ்பிளிட்ஸ் வில்லா' என்ற நிகழ்ச்சியையும் நடத்தி வரும் சன்னி லியோன், தன் கணவரும், இசைக் கலைஞருமான டேனியல் வெப்பருடன் இணைந்து மகாராஷ்டிராவை சேர்ந்த பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து நிஷா என்று பெயரிட்டு வளர்த்து வருகிறார்.
 கடந்த ஆண்டு வாடகை தாய் மூலம் இரட்டைப் பெண் குழந்தைகளுக்கு தாயான இவர், ஒரு குழந்தைக்கு தேவா என்றும், மற்றொரு குழந்தைக்கு ஆஷாகவுர் வெப்பர் என்றும் பெயரிட்டு வளர்த்து வருவதை தன் குடும்ப புகைப்படமாக, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் பெரிதும் பாராட்டினர். இந்த நிலையில் இவரது வாழ்க்கையை "மோஸ்ட்லி சன்னி' என்ற பெயரில் ஆவணப்படமாக தயாரித்தபோது, முதலில் தன்னிடம் கூறியபடி கதையமைப்பு இல்லை, தன் வாழ்க்கையை வேறு விதமாக சித்தரிப்பதாக கூறினார். மீண்டும் தன்னைப் பற்றி வெப்சீரியல் தயாரிக்க முதலில் மறுத்தவர், எப்படி ஒப்புக் கொண்டார்? இதுவரை ஒளிப்பரப்பான முதல் பகுதி குறித்து தன் கருத்து என்ன என்பதை சன்னிலியோன் இங்கு கூறுகிறார்:
 ""முதல் பகுதியில் என்னுடைய குழந்தைப் பருவத்தை பற்றியும், என் வாழ்க்கையில் இடம் பெற்ற பாத்திரங்கள் பற்றியும் தெரிந்துகொள்ளும் வகையில் எடுத்திருந்தார்கள். பொதுவாக வரலாற்றுப் படங்களில் வேறொருவர்தான் நடிப்பதுண்டு. என்னைப் பற்றிய வரலாற்று படத்தில் நான் நானாகவே விரும்பி நடித்துள்ளேன். முதல் பகுதிக்கு ரசிகர்கள் இடையே, குறிப்பாக தென்னிந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை ஒளிபரப்பானதை நான் பார்க்கவில்லை. பிறர் சொல்வதை கேட்கும்போது சிறப்பாக எடுத்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது. இரண்டாவது பகுதியில் என் வாழ்க்கையில் நடந்த சில உணர்ச்சிமிக்க சம்பவங்கள் இடம் பெறவுள்ளது. இதை படமாக்குவது அத்தனை சுலபமல்ல, மனப்பூர்வமாக உணர்ந்து நடித்திருப்பதால் ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்களென்று எதிர்பார்க்கிறேன்.
 முதலில் என் வரலாற்றை திரைப்படமாக எடுக்க வேண்டுமென்றுதான் நினைத்தார்கள். அது மிகைப் படுத்தப்பட்டிருந்ததால், திரைப்படமாக எடுக்க மறுத்துவிட்டேன். ஆனால், ஏற்கெனவே என்னைப் பற்றி எடுத்த ஆவணப்படத்தைப் போலவே இருந்ததால் வெப் சீரியலுக்கு திரைக்கதை அமைக்கும் சுதந்திரத்தை தயாரிப்பாளர் எனக்களித்தார்.
 அதே நேரத்தில் என் வரலாற்றை வெப்சீரியலாக எடுக்க வேண்டுமென்பது என்னுடைய விருப்பம் அல்ல. தயாரிப்பாளர் தரப்பில் முதலில் என் கணவரை அணுகிய பின்னரே என்னிடம் வந்தனர். உடனே நான் மறுத்துவிட்டேன். என்னை ஓர் இக்கட்டான நிலையில் நிறுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை. ஆனால் எப்படி என் வாழ்க்கையை வெளிப்படுத்த வேண்டுமென்று நான் நினைத்தேனோ, அதேபோல் என்னுடன் கலந்தாலோசித்து திரைக்கதையை எழுதியிருந்ததால் ஒப்புதல் அளித்தேன்.
 இதுவரை ஒளிபரப்பானவை அணைத்தும் உண்மை. சில வசனங்கள் கூட என் தந்தை கூறியதுதான். "மகளே, உன்னை இந்த உலகம் எப்படி அழைத்தாலும் நான் கவலைப்படமாட்டேன். என்னைப் பொருத்தவரை நீ என் மகள்' என்று என் தந்தை கூறிய வசனங்களை கேட்கும் போதெல்லாம் என்னை கொலை செய்வது போல் தோன்றும்.
 ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்தவுடன் நான் அழுவதைப் பார்த்து, படக்குழுவினர் என்னை சமாதானப் படுத்துவார்கள். என் கணவர் என்னை அணைத்து ஆறுதல் சொல்வார். இது திரைப்படத்திற்காக என்றாலும், மீண்டும் என் பெற்றோரை பார்க்கும்போது, அவர்களை இழந்து விட்டோமே என்ற உணர்வு தோன்றும், அந்த அனுபவங்களை மறப்பது சுலபமல்ல.
 இதுவரை ஒளிபரப்பான பகுதியை பொருத்தவரை என்னுடைய வாழ்க்கை சம்பவங்கள் மிகைப்படுத்தப்படவில்லை. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இரண்டாவது பகுதியில்தான் நான் இந்தியா வந்தது உள்பட பல முக்கிய சம்பவங்கள் இடம் பெறவுள்ளன. இந்த வெப்சீரியலுக்கு பிறகு நானும் என் கணவரும் சேர்ந்து தயாரிப்பு நிறுவனமொன்றை துவங்கவுள்ளோம். சொந்த தயாரிப்பில் நானே கூட நடிக்கலாம். அனைத்தையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்'' என்றார் சன்னி லியோன்.
 - பூர்ணிமா
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/24/w600X390/mm1.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/24/சீரியலாகும்-நடிகையின்-வாழ்க்கை-3026005.html
3026013 வார இதழ்கள் மகளிர்மணி விளம்பர தூதராகும் ராதிகா ஆப்தே! DIN DIN Wednesday, October 24, 2018 10:00 AM +0530 இளநரையை தடுப்பதற்காக விஞ்ஞான முறைப்படி மாரிகோ நிறுவனம் தயாரித்துள்ள "ட்ரூ ரூட்ஸ்' என்ற புதிய தலைமுடி தைலத்தின் விளம்பர தூதராக பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே நியமிக்கப்பட்டுள்ளார். ""இந்த தைலத்தைத் தொடர்ந்து 90 நாட்கள் பயன்படுத்தினால் மேற்கொண்டு நரைமுடி தோன்றாது என்று உறுதியளித்துள்ளதால், இளவயதிலேயே நரைமுடி நரைப்பதால் மன உளைச்சலில் பாதிக்கப்படுபவர்களுக்கு இது பயன்படும்'' என்று ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/24/w600X390/mm2.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/24/விளம்பர-தூதராகும்-ராதிகா-ஆப்தே-3026013.html
3026026 வார இதழ்கள் மகளிர்மணி "பே வாட்ச்' படத்தில் நடித்ததற்காக வருத்தமில்லை! DIN DIN Wednesday, October 24, 2018 10:00 AM +0530 "என்னுடைய முதல் ஆலிவுட் படமாக "பே வாட்ச்'சில் நடித்ததற்காக நான் வருத்தப்படவில்லை, அதில் நடிக்க பல நடிகைகள் ஆர்வமுடன் இருந்தது எனக்கு தெரியாது. அதில் என் நடிப்பை பற்றி நல்ல விமர்சனங்கள் வெளியாயின. அதில் நடிக்க நான் முடிவெடுத்தது தவறு என்று நினைக்கவில்லை. என்னுடைய தந்தை ஆலிவுட்டில் அமர்ந்து கொண்டு நான் நல்ல படங்களில்தான் நடிக்க வேண்டுமென்பதற்காக படம் தயாரிப்பதில்லை. ஆலிவுட்டை பொருத்தவரை நான் புதியவள். அதனால் நானே தான் நல்ல வாய்ப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார் பிரியங்கா சோப்ரா.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/24/w600X390/PRIYANAKA_CHOPRA.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/24/பே-வாட்ச்-படத்தில்-நடித்ததற்காக-வருத்தமில்லை-3026026.html
3026034 வார இதழ்கள் மகளிர்மணி உங்கள் குழந்தைகளை சமமாக நடத்துங்கள்! DIN DIN Wednesday, October 24, 2018 10:00 AM +0530 "இன்றைய குழந்தைகள் தங்களை பெரியவர்கள் போல் நடத்துவதையே விரும்புகின்றனர். என்னுடைய பெண்ணும், பிள்ளையும் கேட்கும் கேள்விகளுக்கு சில சமயம் என்னால் பதில் சொல்ல முடியாவிட்டால் அவர்களே பதிலை கூறுவதுண்டு. அந்த அளவுக்கு நிறைய விஷயங்களை தெரிந்து வைத்துள்ளனர். நாம் அவர்களை குழந்தைகளாக நினைக்காமல் நம்முடன் விவாதிக்க அனுமதிக்க வேண்டும். நாம் அவர்களது எதிர்காலத்தை முடிவு செய்யும் காலம்மாறி, அவர்களே தேர்வு செய்யுமளவுக்கு புத்திசாலிகளாக உள்ளனர். இதை பிரதிபலிக்கும் வகையில் "ஹெலிகாப்டர் இலா' என்ற படத்தில் என்னுடைய தனிமை தாய் பாத்திரமாக அமைந்தது என்று மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார் கஜோல்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/24/w600X390/mm4.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/24/உங்கள்-குழந்தைகளை-சமமாக-நடத்துங்கள்-3026034.html
3026040 வார இதழ்கள் மகளிர்மணி ஸ்ரீதேவி பாத்திரத்தில் ரகுல்ப்ரீத்! DIN DIN Wednesday, October 24, 2018 10:00 AM +0530 தயாரிப்பில் உள்ள மறைந்த நடிகரும், முன்னாள் ஆந்திரா முதல்வருமான என்.டி.ஆர் வரலாற்று படத்தில் ஸ்ரீதேவி பாத்திரத்தில் நடிகை ரகுல் ப்ரீத் நடிக்கவுள்ளார். ஸ்ரீதேவி ஒரு வரலாறு. அவரை நேசிக்கும் ரசிகர்கள் லட்சக் கணக்கில் உள்ளனர். நானும் அவரது ரசிகைதான். அவரது பாத்திரத்தை ஏற்று நடிப்பது சவாலான விஷயமாகும். அவரை நான் நேரில் சந்தித்ததில்லை என்றாலும், அவர் நடித்த பல படங்களை பார்த்துள்ளேன். முதன் முறையாக ஸ்ரீதேவி பாத்திரத்தை நான் ஏற்றிருப்பதால், நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. அதனால் ஸ்ரீதேவியுடன் பழகியவர்களை சந்தித்து அவரை பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறேன் என்கிறார் ரகுல் ப்ரீத்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/24/w600X390/RAKUL-PREET-SINGH.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/24/ஸ்ரீதேவி-பாத்திரத்தில்-ரகுல்ப்ரீத்-3026040.html
3026044 வார இதழ்கள் மகளிர்மணி ரசிகர்கள் பாராட்டில் மகிழ்ச்சியடைகிறேன்! DIN DIN Wednesday, October 24, 2018 10:00 AM +0530 ஜான்சிராணி லட்சுமிபாய் வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் மணி கர்னிகா படத்தில் ராணி லட்சுமிபாயாக கங்கனா ரணாவத் நடிக்கிறார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானபோது, ஒரே நாளில் 12 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். ஏற்கெனவே இரண்டு தோல்வி படங்களை கொடுத்த என்னை ஏராளமான பொருட் செலவில் எடுக்கப்படும் லட்சுமிபாய் பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அடுத்த ஆண்டு ஜனவர் 25-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள மணிகர்னிகா வின் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்னும் நடந்து வரும் நிலையில் டீசரை பார்த்த ரசிகர்கள் பெரிதும் என்னை பாராட்டி வருவது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறுகிறார் கங்கனா ரணாவத்.
 - அருண்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/24/w600X390/KANGNA_RANUT.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/24/ரசிகர்கள்-பாராட்டில்-மகிழ்ச்சியடைகிறேன்-3026044.html
3026142 வார இதழ்கள் மகளிர்மணி நினைவுகளை மீட்டெடுத்தது! DIN DIN Wednesday, October 24, 2018 09:43 AM +0530 தினமணி மகளிர்மணியில் (17.10.2018) "பிரமுகர்கள் வீட்டில் கொலு' படித்தேன். ஒவ்வொருவரின் வீட்டு கொலுவும் முத்துமுத்தாக இருந்தன. அவர்களுக்கு இருக்கும் பல வேலைப் பளுவிற்கிடையில் கொலுவை வைத்து வழிபடுவதும், வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை உபசரிக்கும் முறையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
டி.கலா, பண்ரூட்டி.
"நலம் தரும் காய்கறிச் சாறுகள்' பற்றி படித்தேன். ஒவ்வொரு சாறும் ஒவ்வொரு வகையில் உடலுக்கு நன்மையைத் தருகிறது என்பதை அறிந்து கொண்டேன். நன்றி!
அ.கல்பனா, திருவான்மியூர்.
"பாரம்பரியத்தை நினைவு கூர்ந்த கல்லூரி மாணவிகள்' பற்றி படித்தேன். பாரம்பரிய வாழ்வியல் முறைகள் சிறப்பானது என சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் அன்றைய பெண்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்பதனை அறிந்து கொள்ள தூத்துக்குடியில் உள்ள மகளிர் கல்லூரி மாணவிகள் மூன்று நாள்கள் வாழ்ந்து காட்டியுள்ளது வெகு சிறப்பு! எனது இளம் வயது நினைவுகளை மீட்டெடுத்தது போன்ற மகிழ்ச்சியைத் தந்தது.
ஆர். லட்சுமி, காயல்பட்டினம்.
"அன்புக்கு ஈடு இணை உண்டோ' என்ற செய்தியைப் படித்தேன். காய்கறி வியாபாரி சோபிரன் தான் வழியில் கண்டெடுத்த குழந்தைக்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்திருப்பது என்பது அத்தனை எளிதானதல்ல. சோபிரன் மலையளவு உயர்ந்துவிட்டார் என் மனதில்.
இரா. ராஜசேகரன், திருமுல்லைவாயல்.
"மழைக்காலத்தில் பெண்கள் ஜீன்ஸ் அணியக்கூடாது' என்ற செய்தி கட்டாயம் இன்றைய இளம் தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி.
தூ. கார்குழலி, கோவில்பட்டி.
தினமணி மகளிர்மணி வாசகர் கடிதங்கள்
அனுப்ப வேண்டிய முகவரி:
ஆசிரியர்,
தினமணி மகளிர்மணி
எக்ஸ்பிரஸ் கார்டன் , 29- 2-ஆவது பிரதான சாலை,
அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை - 600 058.


 

]]>
http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/24/நினைவுகளை-மீட்டெடுத்தது-3026142.html
3026135 வார இதழ்கள் மகளிர்மணி சென்னையின் முகம்! DIN DIN Wednesday, October 24, 2018 09:42 AM +0530 ஐஆர்ஐஎஸ் எனும் ஈவன்ட் மேனேஜ்மண்ட், நேச்சுரல்ஸ் மற்றும் எப்ஐடிஏ டிசைன் பள்ளி ஆகியவை இணைந்து கடந்த ஆறு ஆண்டுகளாக புகைப்படத்துக்கு ஏற்ற முகங்களை தேடும் முயற்சியை தொடங்கியுள்ளது. இதில் வெற்றி பெறுபவர் "என்டர்டெய்ன்மெண்ட்' உலகில் எளிதாக நுழையவும் வாய்ப்பாக அமைகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் இப்போது மாடல்களாகவும், நடிகர், நடிகைகளாக திரையுலகில் வலம் வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் சென்னையின் முகம் (FACE OF CHENNAI) போட்டி நடைபெற்றது . 
இதில் பல மாநிலங்களிலிருந்தும் 5000-த்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இவர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு கட்ட தேர்வுகளின் முடிவில் பெண்கள் பிரிவில் "மிஸ் ஃபேஸ் ஆப் சென்னை 2018' விருதை ஸ்ருதி பெற்றார். 2-வது இடத்தை தாரிணியும், 3-வது இடத்தை பிரீத்தியும் பெற்றனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/24/w600X390/FACE_OF_CHENNAI.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/24/சென்னையின்-முகம்-3026135.html
3026129 வார இதழ்கள் மகளிர்மணி புற்று நோய்க்கு அடிகோலும் உதட்டு சாயம்! Wednesday, October 24, 2018 09:42 AM +0530 "லிப் ஸ்டிக்' என்று கூறப்படும் உதட்டு சாயத்தை நடிகர் நடிகைகள் மட்டும் தான் உபயோகிப்பார்கள் என்கிற காலம் போய், வீட்டுப் பெண்களும் உபயோகப்படுத்துகின்ற நிலைமை அதாவது நாகரிக வளர்ச்சி இன்று உருவாகி இருக்கிறது.
 இந்த வளர்ச்சி நல்லதா? என்று சற்றே சிந்தித்துப் பார்த்தால், நல்லதல்ல என்கிற பதில் தான் கிடைக்கும். ஏன் உதட்டு சாயம் நல்லதல்ல தெரியுமா? லிப்ஸ்டிக்கின் பின்னணியையும் அதனால் ஏற்படும் பாதிப்பையும் அறிந்து கொண்டால் இதற்கான விடை கிடைத்துவிடும்.
 லிப்ஸ்டிக் என்கிற ஒப்பனை வஸ்து என்பது இன்று நேற்று அல்ல. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உபயோகத்தில் இருந்து வருகிறது. ஆரம்ப நாட்களில் கள்ளிச் செடியின் நிறமி, வண்ணத்துப் பூச்சி, மயில் தோகை , வண்டுகள், மீனின் செதில்கள் , பாம்பின் உடலில் உள்ள நிறமி ஆகியவற்றை உதட்டு சாயத்திற்காக உபயோகப்படுத்தினார்கள் என்று வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. ஆனால் இவையெல்லாம் திரவ நிலையில் இருந்ததாம். 1912 - ஆம் ஆண்டு முதல்தான் திட நிலையில் உள்ள லிப்ஸ்டிக் குழாய்களில் அல்லது குப்பிகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்ததாம்..
 சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் கூட திருமண நாட்களில் மட்டுமே பெண்களை ஒப்பனை செய்யும் பொருட்டு உதட்டு சாயம் உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. அதுவும் குறிப்பிட்ட சிகப்பு நிற சாயம் மட்டுமே பரவலாக அறியப்பட்டு இருந்தது. ஆனால், இப்பொழுது, உடைக்கு ஏற்றவாறு பல வண்ணங்களில் உதட்டு சாயங்கள் வந்து விட்டன. அழகு என்னும் மோகம் பெண்களை அதிக அளவில் ஆட்டிவைப்பது வருத்தத்திற்கு உரியதாகத்தான் இருக்கிறது.
 ஒப்பனை என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம் . அடுத்தவரின் தலையீடு இருப்பது நல்லதல்ல. ஆனால், லிப்ஸ்டிக்கினை உபயோகப்படுத்துவதால், எத்தனை கெடுதல்கள் நேருகின்றன தெரியுமா? வண்ணத்தினைப் பெறுவதற்காகவும் , நறுமணத்திற்காகவும் சல்பர், துத்தநாகம், கார்மியம் ஆகிய ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. மேலும் ஈயத்தின் வண்ணம் கிடைப்பதற்காக ஈயம் சேர்க்கப்படுகிறது. ஒட்டும் தன்மைக்காக பாரஃபின் மெழுகு சேர்க்கப்படுகிறது. பாரஃபின் மெழுகானது சிறுநீரகம், நரம்பு , எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களை உண்டாக்கும் அரக்கனாகிறது.
 உதட்டு சாயத்தை உபயோகப்படுத்தும் பெண்களிடையே ஆய்வுகள் மேற்கொண்ட பொழுது, காட்மியம், அலுமினியம், குரோமியம் மெக்னீசியம் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும் ரசாயனக் கலவைகள் இருப்பது கண்டறியப்பட்டது. உதட்டு சாயத்தில் இருக்கும் குரோமியத்திலிருந்து எழும் வாசனையை முகர்வதாலேயே நுரையீரல் பாதிப்பு வரும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இந்த ரசாயனங்கள் எச்சில் மூலம் உடலுக்குள்ளும் செல்கின்றன. அதனால் புற்று நோய் உண்டாக வாய்ப்புக்கள் உள்ளன என்று மேலும் குண்டைத் தூக்கிப் போடுகிறார்கள்.
 தினமும் உதட்டு சாயம் உபயோகிக்கும் ஒரு பெண்ணானவள், தன்னுடைய வாழ்நாளில், சுமார் ஐநூறு லிப்ஸ்டிக் குழல்களை உண்ணுவதாக ஆய்வுக் கணக்குகள் தெரிவிக்கின்றன. படித்தவர்களே, பக்க விளைவுகள் தெரிந்திருந்தும் லிப்ஸ்டிக் உபயோகத்தை நிறுத்துவதில்லை. காரணம் ஒப்பனையின் மேல் உள்ள மோகம் தான். பெண்களே, எப்பொழுதாவது ஆசைக்கு உதட்டு சாயம் பூசிக் கொள்ளுங்கள். தினமுமே உபயோகிக்க வேண்டாம். வருமுன் காத்துக்கொள்ளுங்கள்.
 - மாலதி சந்திரசேகரன்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/24/w600X390/mm5.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/24/புற்று-நோய்க்கு-அடிகோலும்-உதட்டு-சாயம்-3026129.html
3026020 வார இதழ்கள் மகளிர்மணி பெண்கள் கருத்து பதிவுக்கு ஆதரவு! Wednesday, October 24, 2018 08:49 AM +0530 அண்மையில் இந்தியாவின் கானக்குயில் என்றழைக்கப்படும் லதா மங்கேஷ்கரின் 89-ஆவது பிறந்த நாளின்போது, அவரைவிட நான்கு வயது இளையவரான அவரது சகோதரி ஆஷா போன்ஸ்லே குடும்பத்தினருடன் ஒன்று கூடி வாழ்த்து பெற்றபோது கூறியதாவது, "அண்மை காலமாக உலக அளவில் மட்டுமின்றி, இந்தியாவிலும் "மீ..டூ' என்ற கருத்து பதிவின் கீழ் பாலியல் வன்முறைக்கு ஆளாவது குறித்து பெண்கள் தங்கள் பிரச்னைகளை துணிந்து பதிவு செய்வது வரவேற்க தக்கது. உண்மைகள் வெளிவருவதால் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. பெண்களும் விழிப்புடன் இருப்பார்கள்'' என்றார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/24/w600X390/mm3.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/24/பெண்கள்-கருத்து-பதிவுக்கு-ஆதரவு-3026020.html
3022265 வார இதழ்கள் மகளிர்மணி பிரமுகர்கள் வீட்டில் கொலு! Wednesday, October 17, 2018 10:50 AM +0530 ராஜேஸ்வரி வைத்தியநாதன்

கடந்த 20 ஆண்டுகளாக எங்கள் வீட்டில் கொலு வைத்து வருகிறேன். நான் எப்போதும் காலங்காலமாக வைத்து வரும் பாரம்பரிய கொலு மட்டுமே வைத்து வருகிறேன். தற்போது டிரண்டில் உள்ளது போன்று ஏதாவது ஒரு தீமில் கொலு வைக்க வேண்டும் என்று எனக்கும் ஆசை உண்டு. ஆனால், எனது பணியின் காரணமாக நேரம் கிடைப்பதில்லை. ஆனால், இருக்கும் பொம்மைகளையே ஒவ்வொரு ஆண்டும் செட் செட்டாக பிரித்து வித்தியாசமாக வைப்பேன்.
பொதுவாக கொலுவை முழுவதுமாக வைக்க எனக்கு குறைந்தது மூன்று நாள்களாவது ஆகும். கடந்த ஆண்டுகள் வரை எனது மகன் உதவிக்கு இருந்தார். இந்த ஆண்டு அவர் டெல்லியில் இருப்பதால் வீட்டில் உள்ளவர்களை வைத்து கொலுவை வைத்துள்ளேன்.
ஒவ்வொரு ஆண்டு கொலுவையும் நான் எப்போதும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பேன். காரணம், எனது பள்ளி தோழிகளையும், கல்லூரி தோழிகளையும் தவறாமல் அழைத்து வெற்றிலைப் பாக்கு கொடுப்பேன். இதன் மூலம் ஆண்டுக்கு ஒருமுறையேனும் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைப்பதால் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்.
அது போன்று நானும் தோழிகள், உறவினர்கள், தெரிந்தவர்கள் என மற்றவர் வீட்டுக்குச் சென்று வெற்றிலைப் பாக்கு வாங்கிக் கொள்வதும் ஒரு கெட் டூ கெதர் போன்று அமைந்துவிடுவதால் மனதிற்கு நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்'' என்கிறார்.
நீதிபதி வைத்தியநாதன் மனைவி

காயத்ரி கிரிஷ்

என்னுடைய சிறு வயதில் அம்மா கொலு வைக்கும்போதே மிக ஆர்வமாக இருப்பேன். 9 நாளும் அம்மா காலையும், மாலையும் பூஜை செய்வதும், முடிவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை சுண்டலும், பலகாரமும் செய்து கொடுப்பதும், விருந்தினர் வருகையும் என சிறுவயதில் இதையெல்லாம் மிகவும் ரசித்துள்ளேன். இதனால் திருமணத்திற்கு பிறகு எனது வீட்டிலும் கொலு வைக்கத் தொடங்கிவிட்டேன். சிறுவயதில் இருந்த அதே உற்சாகம் இன்றுவரை தொடர்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நான் என்ன கான்சஃப்ட் எடுக்கிறேனோ, அதை முழுமையாக கொண்டு வந்துவிடுவேன். காரணம், இன்றைய தலைமுறையினருக்கு பெரும்பாலும் நமது பாரம்பரியங்களை தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போனதால், இதுபோன்று தீமின் மூலம் அதை அவர்களது மனதில் பதிய வைக்க வேண்டும் என்ற எண்ணம்தான். உதாரணமாக, ஒருவருடம், திருப்பதி பிரம்மோற்சவத்தை தீமாக வைத்தேன். இதற்காக திருப்பதி சென்று லட்டு வாங்கி வந்து பிரம்மோற்சவம் காணவருபவர்கள் அனைவருக்கும் திருப்பதி லட்டை பிரசாதமாக கொடுத்தேன். கடந்த ஆண்டு கிராமம் என்ற தீமில் கொலு வைத்திருந்தேன். அதற்காக கிராமத்து வீடுகள், விவசாயத்தில் நாத்து நடுவதிலிருந்து ஆறுவடை வரை தத்ரூபமாக கொண்டு வந்தேன். இதன் மூலம் கிராமங்களையே பார்த்தறியாத நகரத்து குழந்தைகள் "கிராமம் இப்படித்தான் இருக்குமா?' என்று கேட்டு அறிந்தனர்.
இந்த ஆண்டு, பஞ்ச பூதங்கள் என்ற தீமில் கொலு வைத்துள்ளேன். இதற்காக பஞ்ச பூதங்களுக்குரிய 5 ஸ்தலங்களையும் வைத்துள்ளேன். அதாவது, ஆகாயத்திற்கு - சிதம்பரம், வாயுவிற்கு- காளஸ்தி, அக்னிக்கு- திருவண்ணாமலை, நீருக்கு- திருவானைக்கா, நிலத்திற்கு- காஞ்சிபுரம், திருவாரூர் (ப்ரித்வி தலம்) என இந்த பஞ்சு பூதங்களுக்குரிய ஸ்தல வரலாறுகளை பொம்மைகளாக வைத்துள்ளேன். காஞ்சிபுரத்தை குறிக்கும் காமாட்சி அம்மன் தேர், திருவாரூர் தேர் இரண்டையும் வைத்துள்ளேன். இவற்றிற்கு தேவையான அனைத்து பொம்மைகளையும் பல இடங்களில் தேடிப்படித்தும், சிலவற்றை பொம்மை செய்பவர்களிடம் ஆர்டர் கொடுத்தும் செய்து வாங்கிக் கொள்வேன். மேலும், எனது மகளும், மகனும் கலைப் பொருள்கள் நன்றாக செய்வார்கள், அவர்களும் தேவையானவற்றை செய்து கொடுப்பார்கள், எனது மகள் 9 நாளும் அழகாக கோலம் போட்டு அசத்துவாள், பிள்ளைகள் இருவரும் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை உபசரித்து கவனித்துக் கொள்வார்கள்.
இதனால் எங்கள் வீட்டில் 9 நாளும் விருந்தனர்கள் வருவதும் போவதுமாக கொண்டாட்டமாகத்தான் இருக்கும். மேலும், தோழியர்களையும், உறவினர்களையும் சந்தித்துக் கொள்ளவும், கருத்துகளை பரிமாறிக் கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் ஒரு பாஸிட்டிவ் எனர்ஜி எங்கள் வீட்டில் குடிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது'' என்கிறார் காயத்ரி கிரீஷ்.
கர்நாடக இசைப் பாடகி

டாக்டர் கமலா செல்வராஜ்

நவராத்திரி கொலு வைப்பது எங்கள் வீட்டில் பரம்பரையாக நடைபெற்றுவரும் ஒரு சந்தோஷமான தருணம். அதுவும் குறிப்பாக எங்களைப் போன்ற பெண் பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் விமரிசையாக கொண்டாடுவார்கள். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வீட்டை சுற்றி ஒரு அரை டஜன் வீடுகள் தான் இருக்கும். நவராத்திரி சமயத்தில் எங்களை பல்வேறு விதமாக அலங்கரித்து ஒவ்வொரு வீடாகச் சென்று அழைக்கச் சொல்வார்கள்.
எங்கள் வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி உள்ள ஒரு மாமி தான் எங்களை அலங்கரித்து அனுப்புவார். அவர்கள் கொடுக்கும் வெற்றிலைப் பாக்கு பூ, பழம், மஞ்சள், குங்குமம், வளையல் போன்ற பல்வேறு பொருள்களை வீட்டிற்கு வந்ததும் எங்கள் பாட்டியிடம் கொடுத்து விடுவோம். அவர், அதை எல்லாம் தனித்தனியாக பிரித்து எங்கள் வீட்டிற்கு வரும் பெண்மணிகளுக்கு மறுசுழற்சி செய்து விடுவார். அதெல்லாம் ஒரு இனிமையான காலம் என்றுதான் சொல்லவேண்டும். அப்பா ஜெமினிகணேஷ் எதை செய்தாலும் புதுமையாக செய்யவேண்டும். யாரையும் பார்த்து பின் பற்ற கூடாது என்று நினைப்பவர். அதே எண்ணம் எனக்கும் உள்ளது. ஒவ்வொரு வருடமும் எங்கள் வீட்டு கொலு வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுவேன். இந்த வருடம் எங்கள் கொலுவை வாசலில் இருந்தே நீங்கள் பார்க்கலாம்.
நெல் பயிரிலிருந்து ஆரம்பித்து நடுவில் பெங்களூரு தக்காளி வைத்து பின்னர் எலுமிச்சை பழம், பெரிய நெல்லிக்காய் என்று பசுமை கோலம் போட்டிருக்கிறேன். பின்னர் இருபுறமும் கிராமிய மணம் வீசும் பொம்மைகள். அதற்கு பிறகுதான் எங்கள் வரவேற்பறையில் கொலு இருக்கும். துர்கா, லட்சுமி சரஸ்வதி பொம்மைகளுக்கு பிறகு எங்கள் கொலு கம்பீரமாக காட்சி கொடுக்கும். எங்கள் வீட்டிற்கு வந்தால் கைநிறைய பரிசும் உண்டு. அத்துடன் மதுரை மீனாட்சி அம்மன் குங்குமம், மஞ்சள் மற்றும் மதுரை மல்லியும் உண்டு'' என்கிறார் கமலா செல்வராஜ்.
யிமகப்பேறு மருத்துவர்

நித்யஸ்ரீ மகாதேவன்

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து, நவராத்திரி கொலு என்றால் இன்றும் பல்வேறு நினைவுகளில் முழ்கிடுவேன். அன்று பட்டுப் பாவாடை சலசலக்க, அம்மா கையில் கொடுத்த குங்குமசிமிழ் எடுத்துக் கொண்டு சுற்றிலும் உள்ள வீடுகளுக்கு சென்று எங்கள் வீட்டில் கொலு வைத்துள்ளோம். வெற்றிலைப் பாக்கு வாங்கிக் கொள்ள வாருங்கள் என்று பல்வேறு வீட்டில் உள்ள பெண்களை எல்லாம் அழைப்போம். ஒவ்வொரு நாளும் எனக்கு ஜடை வைத்து பின்னல் பின்னி நான் பார்க்கவே அழகாக இருப்பேன் என்று பலரும் கூறக் கேட்டிருக்கிறேன். இது மட்டும் அல்லாமல் குரத்தி போலவும் சிலநேரம் போட்டு விடுவார்கள். போகும் இடமெல்லாம் பாட்டுப் பாட சொல்வார்கள். ஒவ்வொரு வீட்டிலும் என்ன பாட்டு பாடலாம் என்று முன்பே தீர்மானித்து வைத்துக் கொண்டாலும், ஒவ்வொரு வீடாக போய் பாடிவிட்டு வரும்போது வேறு வேறு பாடல்களை பாடி இருப்போம். இப்படி குதூகலித்த நாட்கள் பல உண்டு. சமீப காலமாக ஒவ்வொரு வருடமும் ஒரு தீம் வைத்து கொண்டு கொலு வைக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சென்ற வருடம் "கிருஷ்ணலீலா' . இந்த வருடம் தீம் என்ன தெரியுமா? தமிழர் திங்கள் திருநாள். வருடம் முழுவதும் உள்ள பண்டிகைகளை பொம்மைகளாக வைத்துள்ளோம். என் இரு செல்ல மகள்கள் தனுஸ்ரீ, தேஜஸ்ரீ சில பண்டிகைகளுக்கு ஓவியங்களாக வரைந்து அதை பொம்மைகளாக செய்து வைத்துள்ளோம். உதாரணமாக சித்திரை- பங்குனி வரையிலான பண்டிகைகளை இந்த வருட கொலுவில் பொம்மைகளாக நீங்கள் பார்க்கலாம். சித்திரை- புத்தாண்டு, சித்ரா பெüர்ணமி, அக்ஷய த்ரிதியை, வைகாசி-வாகசி விசாகம், ஆனி-திருமஞ்சனம். ஆடி - ஆடி கிருத்திகை, ஆடிப் பூரம், ஆடிப் பெருக்கு. ஆவானி-விநாயக சதுர்த்தி, கோகுலாஷ்டமி, புரட்டாசி-நவராத்திரி, சனிக்கிழமை, ஐப்பசி-தீபாவளி, கார்த்திகை- தீபம், மார்கழி- இசை விழா, வைகுண்ட ஏகாதசி, தை-பொங்கல், மாசி-மகம், சிவராத்திரி, பங்குனி-ஸ்ரீராம நவமி இப்படி ஒவ்வொரு பண்டிகையையும் பொம்மைகளாக வைதுள்ளோம். பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டினார்கள்'' என்கிறார் நித்யஸ்ரீ.
கர்நாடக இசைப் பாடகி

மதுவந்தி அருண்

சுமார் 20 ஆண்டுகளாக நான் நவராத்திரி கொலு வைத்து வருகிறேன். எனக்கு முன் எனது அம்மா சுதா மஹேந்திரா இந்த கொலுவை வைத்தார். அதற்கு முன் எனது பாட்டி ஒய்.ஜி.ராஜலக்ஷ்மி (திருமதி ஒய்.ஜி.பி.) வைத்தார்கள். இன்றும் எங்கள் வீட்டில் உள்ள அனைத்து பெண்களும் இந்த கொலுவை வைத்து நவராத்திரியை கொண்டாடுவோம்.
ஒவ்வொரு வருடமும் எங்கள் வீட்டில் கொலுவுக்கு ஒரு புது பொம்மை வாங்குவோம். அது யோசித்து வாங்கும் பொம்மை அல்ல. என் வாழ்கையில் நடக்கும் ஒரு விஷயத்தை வைத்தே அந்த பொம்மை வாங்கப்படும். இந்த வருடம் நான் முதன் முறையாக சுவாமி ராகவேந்திரரை தரிசிக்க மந்த்ராலயம் சென்றேன். இந்த வருடம் என்ன பொம்மை வாங்கலாம் என்று சிந்தித்த வண்ணம் மயிலாப்பூர் சென்றேன். சில கடைகளை பார்த்துக் கொண்டு வரும் போது திடீரென்று ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள், பிருந்தாவனத்துடன் இருக்கும் பொம்மை என் கண்ணில் பட்டது. பார்த்தவுடன் பிடித்துப் போக இந்த வருட புது பொம்மை இவர்தான் என்று முடிவு செய்து வாங்கினேன்.
நான் எப்போதுமே வீட்டில் ஒரு கொலு, அலுவலகத்தில் ஒரு கொலு வைப்பேன். அதற்காக இரண்டு பொம்மைகள் வாங்கினேன். ஒன்றைப் போலவே அடுத்ததும் கிடைத்தது ஸ்ரீ ராகவேந்திரர் கருணைதான் என்று அவரை மானசீகமாக வணங்கி இரண்டையும் வாங்கிவந்து இந்த வருட கொலுவில் வைத்துள்ளேன். சுமார் பத்து வருடங்களாக என்னிடத்தில் உள்ள துர்கா, லட்சுமி, சரஸ்வதி பொம்மைகளை இந்த வருடம் எங்கள் வீட்டில் ஒருவராக இருக்கும் தனம் அவர்கள் அழகாக துடைத்து, வண்ணம் பூசி மேருகேற்றி தந்தார். அதுவும் கொலுவில் இடம் பெற்றுள்ளது'' என்கிறார் மதுவந்தி.
திரைப்பட நடிகை


தொகுப்பு: சலன்,
ஸ்ரீதேவி குமரேசன்
படங்கள்: பி.ராதாகிருஷ்ணன்

]]>
http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/17/பிரமுகர்கள்-வீட்டில்-கொலு-3022265.html
3022248 வார இதழ்கள் மகளிர்மணி நவராத்திரி ஸ்பெஷல் சமையல்! DIN DIN Wednesday, October 17, 2018 10:16 AM +0530 பருப்பு பாயசம்

தேவையானவை:
பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை கிண்ணம்
பொடித்த வெல்லம் - அரை கிண்ணம்
நெய் - 2 தேக்கரண்டி
பால் - 2 டம்ளர்
முந்திரி - 8
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் வேகவைத்து, மசித்துக்கொள்ளவும். நீரில் வெல்லத்தைக் கரைத்து அடுப்பில் வைத்து கொதித்ததும் வடிகட்டவும். பாலை நன்கு காய்ச்சி, அதில் மசித்த பருப்பு விழுது, வெல்லக் கரைசல் சேர்த்துக் கொதிக்கவிட்டு, நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கிப் பரிமாறவும். சுவையான பருப்பு பாயசம் தயார்.

மொச்சை சுண்டல்

தேவையானவை:
மொச்சை - ஒரு கிண்ணம்
(ஊறவைத்து, அரை உப்பு போட்டு வேகவைத்தது)
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைகேற்ப
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - அரை தேக்கரண்டி
பொடி செய்ய:
புதினா - ஒரு கைப் பிடி
ஓமம் - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
(ஓமம் மற்றும் மிளகாய் வற்றலை லேசாக வறுத்து, பின், புதினா சேர்த்து லேசாக வதக்கி பொடி செய்து கொள்ளவும்.)
தாளிக்க:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு, வேகவைத்த மொச்சை, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய்த் துருவல் போட்டு மூன்று நிமிடம் கிளறவும். பின், பொடி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து எலுமிச்சைச் சாறு சேர்த்து கிளறி இறக்கவும். மொச்சை சுண்டல் தயார்.

கடலைப் பருப்பு சுண்டல்

தேவையானவை:
கடலைப் பருப்பு - ஒரு கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள் - தலா அரை தேக்கரண்டி
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2
நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு தேக்கரண்டி
உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை: கடலைப்பருப்பை உப்பு சேர்த்து மலர வேகவைத்துக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் வெந்த கடலைப்பருப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கி, நறுக்கிய வெங்காயத்தாளினை மேலே தூவவும்.

நவதானிய சுண்டல்

தேவையானவை:
வெள்ளை கொண்டைக்கடலை,
கறுப்பு கொண்டைக்கடலை, காராமணி,
பச்சை பயறு, கொள்ளு, மொச்சை,
சிவப்பு சோயா, ராஜ்மா, காய்ந்த பட்டாணி - தலா 1 கைப்பிடி அளவு
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
சோம்பு - கால் தேக்கரண்டி
பட்டை - சிறிய துண்டு
இஞ்சி - சிறிய துண்டு
செய்முறை: பயறுகளை முதல்நாள் இரவே ஊற வைத்து காலையில் தண்ணீர் வடித்து ஈரத்துணியில் சுற்றி வைத்தால் மாலை அதில் இருந்து லேசாக முளைவிட்டிருக்கும். அதனை வேக வைத்துக் கொள்ளவும். அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்யைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்புடன் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். வெந்த பயறுடன், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு, அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறவும். பச்சை வாசனைப் போனதும், (விருப்பப்பட்டால்) தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கினால், நவதானிய சுண்டல் தயார்.
- தவநிதி

 

]]>
http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/17/நவராத்திரி-ஸ்பெஷல்-சமையல்-3022248.html
3022247 வார இதழ்கள் மகளிர்மணி டிப்ஸ்..டிப்ஸ்..டிப்ஸ்.. DIN DIN Wednesday, October 17, 2018 10:12 AM +0530 • மிளகாய் வற்றலை வறுக்கும் போது சிறிது உப்பு சேர்த்து வறுத்தால் நெடியினால் தும்மல் ஏற்பட்டு பாடாய்படுத்தாது.

• வடகத்தை வெறும் வாணலியில் வறுத்த பின் எண்ணெயில் வறுத்தால் நன்றாக பொறிந்து மொறு, மொறுப்பாக இருக்கும்.

• வேப்பம் பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து பயன்படுத்தினால் ஜுரம், வரவே வராது. வேப்பம்பூவிற்கு எங்கே போவது என நினைக்க வேண்டாம். கடைகளில் கிடைக்கிறது.

• அருகம்புல் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடுவது நல்லது. தாது உப்புக்களும், வைட்டமின்களும் அருகம்புல்லில் அதிகம்.

• ஓமப்பொடி செய்யும் போது கடலை மாவு, மூன்று பங்கு, அரிசி மாவு ஒரு பங்கு சிறிது மைதா கலந்து செய்தால் எண்ணெய் குடிக்காமலும், தூள் அதிகமாகாமலும், நன்றாக எடுக்க வரும். 

• மைசூர் பாகு செய்வதற்குக் கடலை மாவை டால்டாவில் கரைத்து பின் சர்க்கரைப் பாகில் கிளறினால் கட்டியில்லாமல் மென்மையாக வரும்.

• ஜாடியில் ஊறுகாயைப் போடும் முன் கொதிக்கும் எண்ணெய்யில் நனைக்கப்பட்ட துணியால் ஜாடியின் உட்புறத்தை துடைத்த பின் ஊறுகாயைப் போட்டு மூடி வைத்தால் பூசனம் பிடிக்காமல் இருக்கும்.

• பாயசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

• வெங்காயப் பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையைப் பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

• சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.

• சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய்ப் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.

• தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

• உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால், வடை எண்ணெய்க் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

• கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான் ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம்.

• ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.

• தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.

• பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து, கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு காணாமல் போய்விடும்.

• இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.

• தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி செய்தால் பர்பி நன்றாக இருப்பதோடு, வில்லை போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்.

• தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொரு மொருவென இருக்கும்.

• எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாளத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.

• உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும்.

• தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அரைத்து ஊற்றவும், குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.

• துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன், வரமிளகாய், பூண்டு, கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால், பொடி மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.
- ஏ.எஸ்.கோவிந்தராஜன்


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/17/w600X390/POTATO.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/17/டிப்ஸ்டிப்ஸ்டிப்ஸ்-3022247.html
3022246 வார இதழ்கள் மகளிர்மணி நலம் தரும் காய்கறிச் சாறுகள்! DIN DIN Wednesday, October 17, 2018 10:08 AM +0530 இஞ்சிச் சாறு: எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடிய இஞ்சியைச் சாறு பிழிந்து தேன் கலந்து அதிகாலையில் அருந்தினால் பித்த வியாதிகள் விரட்டி அடிக்கப்படும். தீராத வியாதிகளும் தீர்க்கப்படும். சளி, இருமல், புளியேப்பம், வாயுத் தொல்லைகள் அகலும். வயிற்று வலி, வயிறு உப்புசம், தொண்டை வலி, தலைவலி ஜீரணக் கோளாறுகள் குணமாகும்.

தக்காளிச் சாறு: உடலுக்கு குளிர்ச்சியை அளித்து மூலச்சூடு, மலச்சிக்கல், வாயுத் தொல்லைகளைப் போக்குகிறது. ஜீரணத்தை எளிதாக்குகிறது. முகப் பொலிவுக்கும், உடல் இளமைக்கும் உத்தரவாதம் அளிக்கிறது. நீரிழிவு நோயாளிகளும் அச்சமின்றி பருகக் கூடிய தக்காளிச்சாறு உடல் பருமனைக் குறைக்கும்.

வெள்ளரிச் சாறு: வெயில் காலங்களில் அதிகமாகக் கிடைக்கும் நீர்ச் சத்தும் குளிர்ச்சியும் நிறைந்தது. வெள்ளரிச்சாறில் அனைத்துச் சத்துகளுடன் வைட்டமின் "பி' அதிகமாகவும் உள்ளது. உடல் சூடு தணியும். உடல் பருமன், உடல் தொப்பை குறையும். சிறுநீரக எரிச்சல், குடல் எரிச்சல் கல் அடைப்பு குணமாகும். ரத்த அழுத்த நோயாளிகளும், நீரிழிவு நோயாளிகளும் அவசியம் அருந்த வேண்டிய சாறு.

சுரைக்காய்ச் சாறு: நீர்ச்சத்து மிகுந்த சுரைக்காய் குளிர்ச்சியைத் தரக் கூடியது. மாவுச் சத்து குறைவானது. காயைச் சிறு துண்டுகளாக்கி நீர் சேர்த்து அரைத்து வடிகட்டி தேன் சேர்க்கலாம். சுரைக்காய்ச் சாறு மலச்சிக்கல், வயிற்று வலி, வயிற்றுப் புண், மூல வியாதி முதலியவற்றைக் குணமாக்கும். உடல் சூடு தணியும். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி கட்டுப்படும்.

பீட்ரூட் சாறு: புற்று நோய் ஆராய்ச்சியில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. பீட்ரூட் சாற்றில் சிவப்பு, கருஞ்சிவப்பு என்று இரு நிறங்கள் உள்ளன. பீட்ரூட் சாறு உடலுக்கு குளிர்ச்சியையும், சக்தியையும் அளித்து சிறுநீரக எரிச்சலைத் தணிக்கிறது. வயிற்றுக் கோளாறுகளைக் குணமாக்கி முகப் பொலிவை உண்டாக்குகிறது. உடலில் ரத்தத்தைச் சுத்தப்படுத்தி ரத்தவிருத்தியை உண்டாக்குகிறது. மலச்சிக்கலை அகற்றுகிறது. உடல் பருமனையும் சரியான எடைக்குச் சமன் செய்கிறது.

கேரட் சாறு: கேரட்டைத் துருவி அரைத்து வடிகட்டி நீருடன், தேன், வெல்லம் அல்லது பேரீச்சை கலந்து சாறு தயாரிக்கலாம். கேரட் சாறு கண்களைப் பாதுகாத்து கண் நோய்களைத் தீர்ப்பதில் முதல் இடத்தைப் பெறுகிறது. பற்களின் உறுதியையும் முகப்பொலிவையும் கேரட் சாறால் அடையலாம். பெப்டிக் அல்சர், கேன்சர் போன்ற நோய்களின் வீரியத்தை வெகுவாகக் குறைக்கும். கேரட் சாறு உடலில் அழிந்த திசுக்களையும் விரைவில் புதுப்பிக்கிறது.

பாகற்காய்ச் சாறு: பாகற்காய்ச் சாறு கசப்பு நிறைந்தது என்றாலும், அமிர்தத்தை விட மேலானது என்பர். பாகற்காயைச் சாறு பிழிந்து இனிப்பு வேண்டுமென்றால் சேர்த்து அருந்தலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு அற்புத மருந்து. நரம்புகள் பலம் பெறும், வயிற்றிலுள்ள புழுக்கள், பூச்சிகள் முதலியவை அழியும். விஷம் முறிவடையும். கல் அடைப்பு, மூலவியாதி, கல்லீரல் வீக்கம் போன்றவையும் குணமாகும்.
- ஆர். ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/17/w600X390/GINJER_JUICE.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/17/நலம்-தரும்-காய்கறிச்-சாறுகள்-3022246.html
3022240 வார இதழ்கள் மகளிர்மணி அன்புக்கு ஈடு இணை உண்டோ! DIN DIN Wednesday, October 17, 2018 10:03 AM +0530 உண்மை நிகழ்வு இது, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த காய்கறி வியாபாரி சோபிரன் என்பவர் ஒருநாள் வியாபாரத்தை முடித்துவிட்டு, வண்டியை தள்ளிக் கொண்டு வீட்டிற்கு வரும் வழியில் ஒரு புதரில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. சென்று பார்த்தபோது அழகான பெண் குழந்தை. வாஞ்சையுடன் அக்குழந்தையை வீட்டிற்கு கொண்டு வந்து வளர்க்க ஆரம்பித்தார்.
அக்குழந்தையின் மேல் உள்ள அன்பினால் தான் கல்யாணம் செய்யும் எண்ணத்தை துறந்து மகிழ்ச்சியுடன் அக்குழந்தையை வளர்த்து படிக்கவும் வைத்தார். அக்குழந்தைக்கு ஜோதி என்று பெயர் வைத்து ஆளாக்கினார். ஜோதி நன்கு படித்து ஐ.ஏ.எஸ்.க்கு நிகரான ஐ.ஆர்.எஸ். படித்து வருமான வரித்துறை உதவி கமிஷனராக பதவி ஏற்றுள்ளார். பதவி ஏற்றபோது சோபிரன் கண்களில் நீர் வழிய ஜோதியும் அழுதாள்.
இன்றும் ஜோதி எவ்வளவோ சொல்லியும் காய்கறி வியாபாரத்தை சோபிரன் விடவில்லை. தற்போது ஜோதிக்கு வரன் பார்த்துக் கொண்டு உள்ளராம் சோபிரன். இந்த அன்புக்கு ஈடு இணை இவ்வுலகில் உண்டோ!
- விசாலாட்சி


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/17/w600X390/mm12.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/17/அன்புக்கு-ஈடு-இணை-உண்டோ-3022240.html
3022235 வார இதழ்கள் மகளிர்மணி பாரம்பரியத்தை நினைவு கூர்ந்த கல்லூரி மாணவிகள்! DIN DIN Wednesday, October 17, 2018 10:01 AM +0530 பாரம்பரிய வாழ்வியல் முறைகள் சிறப்பானது என பேச்சளவில் இருந்து வரும் நிலையில், அந்த வாழ்வியல் முறைக்கு மாற முடியாமல் ஒவ்வொருவரும் இயந்திரத்தனமாக ஓடி உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை.
 கையில் ஒரு செல்லிடைப்பேசி இருந்தால் போதும் அதை தடவிக் கொடுத்துக் கொண்டே உறவுகளையும், தனது அடையாளத்தையும் இழந்துக் கொண்டிருக்கிறது இன்றைய இளைய தலைமுறை.

 பாரம்பரிய உணவு முறைகள், பாரம்பரிய வாழ்வியல் முறைகளை வெறும் பேச்சளவில் இல்லாமல் அதை எப்படி வாழ்வது என்பதை தூத்துக்குடியில் ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரி மாணவிகள் மூன்று நாள்கள் வாழ்ந்து காட்டியுள்ளது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
 தூத்துக்குடியில் உள்ள ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில், "அன்றைய வாழ்வும் அறிவியலும்' என்ற தலைப்பில், "களம் காண வா ராணி வா' என பெண்களுக்கான நிகழ்ச்சி அண்மையில் மூன்று நாள்கள் நடைபெற்றது. உள் அரங்க விளையாட்டுகள், வெளி அரங்க விளையாட்டுகள் என இரண்டு பிரிவுகளில் நடத்தப்பட்ட அனைத்து விளையாட்டுகளும் மறந்து போனவற்றை நினைவுப்படுத்தின.
 தாயம், பல்லாங்குழி, சுழற்சிக்காய், கிச்சு கிச்சு தாம்பளம், பாம்பு கட்டம், கோலி ஆகியவை உள் விளையாட்டரங்கில் நடத்தப்பட்டது. கிராமப் புற கல்லூரி மாணவிகள் இந்த விளையாட்டுகளில் ஆர்வம் காட்டியபோதிலும் நகர்புற மாணவிகள் தெரியாத ஒன்று போல வியப்புடன் விலகிச் சென்றனர். இதேபோன்று, வெளி அரங்க விளையாட்டுகளான பாண்டி, பம்பரம், கயிறு தாண்டுதல், பூப்பந்து, ஒரு குடம் தண்ணீர், சைக்கிள் டயரை சிறிய கம்பு கொண்டு ஓட்டுதல், உறியடி, கயிறு இழுத்தல் என அனைத்து விளையாட்டுகளிலும் கல்லூரி மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

விளையாட்டுகள் ஒருபுறமிருக்க பாரம்பரிய மருத்துவ முறைகளின் விளக்கம், மண்பாண்ட பொருள்களின் கண்காட்சி மற்றும் விற்பனை, சணல் பொருள்கள், கைவினைப் பொருள்கள், பாரம்பரிய மிட்டாய் கடை, குச்சி ஐஸ் விற்பனை, மாட்டு வண்டியில் இனிமையான பயணம், பாரம்பரிய உணவுத் திருவிழா என மூன்று நாள்களும் கல்லூரி களை கட்டியது.
 மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டியில் அமர்ந்து பயணம் செய்த மாணவிகள் பலர் அதை சுயபடம் எடுத்து பாதுகாத்துக் கொண்டனர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்களும், பெண் குழந்தைகளும் இந்த பாரம்பரிய திருவிழாவில் கலந்து கொண்டு தங்களை புத்துணர்ச்சிபடுத்திக் கொண்டனர்.
 மரங்களின் மேலே அமைக்கப்பட்டிருந்த குடில்களில் மாணவிகள் ஆர்வமுடன் ஏறி அமர்ந்தனர். குடிசைகளில் வாழ்வது, கைக்குத்தல் அரிசி தயாரிப்பது என மாணவிகள் போட்டிப் போட்டுக் கொண்டு தங்களை பாரம்பரிய வாழ்வியல் முறையோடு இணைத்துக் கொண்டனர்.


 இதுகுறித்து ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரி முதல்வர் சத்தியபாமா கூறியது: "மாணவிகளுக்கு நமது பாரம்பரியத்தை பற்றி நினைவு கூற விரும்பினோம். அதை சிறப்பாக செய்து முடித்துள்ளோம். ஒரே நேரத்தில் 400 மாணவிகள் கலந்து கொண்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சி அனைவரும் வியக்கும் வண்ணம் இருந்தது.
 கரகம், கோலாட்டம், கும்மியாட்டம், மயிலாட்டம், பொய்கால்குதிரை, தப்பாட்டம், ஒயிலாட்டம் ஆகியவை ஒரே நேரத்தில் நடந்ததை அனைவரும் ரசித்துச் சென்றனர். இதுதவிர, கருப்பட்டி காபி, பணியாரம், கீரை வடை, உளுந்தங் கஞ்சி என்ற பாரம்பரிய உணவுகளை மாணவிகள் ருசித்துச் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

மேலும், பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த நிலைக்காட்சிகளைப் பார்வையிட்ட மாணவிகள் அந்த பொருள்களுடன் தங்களை சுயபடம் எடுத்துக் கொண்டனர். பழங்கால பொருள்களின் கண்காட்சியையும் மாணவிகள் ரசித்து பார்த்துச் சென்றனர். மாணவிகளை மூன்று நாள்கள் நமது முன்னோர்களின் வாழ்க்கை முறைக்கு அழைத்துச் சென்றது எங்களுக்கு மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது'' என்றார்.


 - தி. இன்பராஜ்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/17/w600X390/TUTY6041807.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/17/பாரம்பரியத்தை-நினைவு-கூர்ந்த-கல்லூரி-மாணவிகள்-3022235.html
3022088 வார இதழ்கள் மகளிர்மணி ரிமாதாஸின் மூன்றாவது படைப்பு! DIN DIN Wednesday, October 17, 2018 10:00 AM +0530 ஆஸ்கார் தேர்வு செய்யும் சிறந்த வெளிநாட்டு மொழி படங்களுக்காக இந்தியாவின் சார்பில் சிறந்த மாநில மொழி படமாக தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்ட அசாம் மொழி படமான "வில்லேஜ் ராக் ஸ்டார்' படத்தை இயக்கிய ரிமாதாஸ், அந்த படத்தை தனி ஒருவராகவே தயாரித்தது சிறப்புக்குரிய தகவலாகும். திரைக்கதை, தயாரிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்தையும் தனியாகவே செய்த ரிமாதாஸ், தன்னுடைய மூன்றாவது தயாரிப்பான "புல் புல் கேன் சிங்' படத்தை டொரான்டோ சர்வதேச திரைப்பட விழாவுக்கு அனுப்பியுள்ளார். தொடர்ந்து மும்பையில் நடைபெறவுள்ள திரைப்பட விழாவிலும் அப்படம் திரையிடப்படவுள்ளது.
- அருண்

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/17/w600X390/mm8.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/17/ரிமாதாஸின்-மூன்றாவது-படைப்பு-3022088.html
3022017 வார இதழ்கள் மகளிர்மணி ஓவியத்தின் மாடல்! Wednesday, October 17, 2018 10:00 AM +0530 மைசூர் ஜெகன் மோகன் அரண்மனையில் ஜெயசாம ராஜேந்திரா ஆர்ட் காலரியில் உள்ள "நம்பிக்கையின் ஒளி' என்ற ஓவியம், இந்தியாவில் உள்ள பிரசித்திப் பெற்ற ஓவியங்களில் ஒன்றாகும். திடீரென பார்க்கும்போது ஒரு பெண் நம் எதிரே விளக்கை ஏந்தி நிற்பது போல் தத்ரூபமாக இருக்கும் இந்த ஓவியம் அந்த ஆர்ட் காலரியில் பிரமிக்க வைக்கும் ஓவியமாக இருந்து வருகிறது. இந்த ஓவியத்தை ராஜா ரவிவர்மா வரைந்ததாக கூட ஒரு தவறான தகவல் உண்டு.
 உண்மையில் இந்த நீர்வண்ண ஓவியம், மகாராஷ்ட்டிரா மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்த ஹல்தான்கர் என்ற ஓவியரின் கைவண்ணமாகும்.
 இதில் மாடலாக இருந்தவர் அவரது மகள் கீதா உப்லேகர் ஆவர். கோலாப்பூரில் நகை வியாபாரி கிருஷ்ணகாந்த உப்லேகரை 1940} ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, இரண்டு மகள், ஒரு மகனுக்கு தாயாகி வாழ்க்கை நடத்திவந்த கீதா உப்லேகர், அண்மையில் அக்}2 ஆம் தேதி தனது 102}ஆவது வயதில் காலமானார்.
 "என்னுடைய 12}ஆவது வயதில் தீபாவளி பண்டிகையின்போது விளக்கு ஒன்றை ஏற்றி கையில் ஏந்திவந்தபோது, என்னை பார்த்த என் தந்தை ஹல்தான்கர், சிறிது நேரம் என்னை அப்படியே நிற்கும்படி கூறி ஸ்கெட்ச் எடுத்தார். மூன்றே நாள்களில் அதை ஓவியமாக வரைந்தார்'' என்று தனது 100}ஆவது பிறந்த நாளன்று கீதா உப்லேகர் கூறியதை, அவரது உறவினர் ராஜா உப்லேகர் அப்போது பத்திரிகையில் தெரிவித்தார். ஜெய சாம ராஜேந்திரா ஆர்ட் காலரி, இந்த ஓவியத்தை ஹல்தான்கரிடமிருந்து 300 ரூபாய்க்கு வாங்கி பொதுமக்கள் பார்வைக்கு வைத்தது.
 இதே ஓவியத்தை பிரான்ஸை சேர்ந்த, ஒருவர் 8 கோடி ரூபாய்க்கு விலை பேசினார். ஆனார் ஆர்ட் கேலரி விற்பனை செய்ய மறுத்துவிட்டது.
 - அ.குமார்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/17/w600X390/GITA-UPLEKAR.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/17/ஓவியத்தின்-மாடல்-3022017.html
3022023 வார இதழ்கள் மகளிர்மணி லட்சங்களில் சம்பளம் வாங்கும் "ஆஹா' ஆயா..! DIN DIN Wednesday, October 17, 2018 10:00 AM +0530 பிரபல ஜோடிகளான கரீனா கபூர் - சைஃப் அலிகானின் மகன் தைமூர் அலிகான் சமூக வலைதளத்தில் வெகு பிரபலம்.
 காரணம் குழந்தையின் அழகு மட்டுமல்ல ... . தைமூரின் பெற்றோரின் பிரபலமும் இன்னொரு காரணம்.
 தைமூர் நின்றால், தவழ்ந்தால், உறங்கினால் எல்லாம் சமூக வலைதளத்தில் பதிவாகிவிடுகிறது. இப்போது தைமூரை வீட்டில் கவனித்துக்கொள்ளும் ஆயாவும் சமூக வலைதளத்தில் வெகு பிரபலம் .
 ஆயா "ஆஹா..'வாகப் பிரபலமாகக் காரணம் அவர் வாங்கும் சம்பளம்தான்.
 ஆம்..! கரீனா இந்த ஆயாவுக்கு மாதம் ஒண்ணே முக்கால் லட்சம் சம்பளம் தருகிறார்.
 தைமூர் வெளிநாடு செல்லும் போது கூடவே தைமூரை நிழலாகத் தொடர்கிறார் இந்த ஆயா...! தைமூரை மும்பையின் பாந்த்ரா பகுதியில் மாலை வேளைகளில் சுற்றிவர ஒரு காரும் தரப்பட்டுள்ளது.
 - ஏ. எ. வல்லபி
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/17/w600X390/mm1.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/17/லட்சங்களில்-சம்பளம்-வாங்கும்-ஆஹா-ஆயா-3022023.html
3022035 வார இதழ்கள் மகளிர்மணி அறிந்தேன் வியந்தேன்! DIN DIN Wednesday, October 17, 2018 10:00 AM +0530 தினமணி மகளிர்மணியில் 10.10.18 "எதற்காகவும் விட்டுக் கொடுத்து விடாதீர்கள்' என்ற தலைப்பில் வந்த பேட்டியைப் படித்தேன். இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனின் சிறுவயது நினைவுகளும், தற்கால பொறுப்புகளை பற்றியும் பகிர்ந்து கொண்டவை அருமை. அதிலும், எதற்காகவும் விட்டுக் கொடுத்து விடாதீர்கள் என்று முன்னேறத் துடிக்கும் பெண்களுக்கு வழங்கிய அறிவுரை நிச்சயம் அனைத்து பெண்களும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று!
 எஸ். சாந்தி, ஆதம்பாக்கம்.
 இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்று கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது சரியல்ல. இவருக்கு முன்பு இந்திராகாந்தியும் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பில் இருந்துள்ளார்.
 அதிலா சிவசு, ஸ்ரீரங்கம்.
 கவிதா பாலாஜி எழுதிய "கொலு யோசனைகள்' என்ற தலைப்பில் துணுக்கு அனைத்தும் பயனுள்ளவை. நன்றி!
 கலைச்செல்வி, சென்னை.
 "எனக்கு நான் அழகிதான்' என்ற கட்டுரையில் தவறான சிகிச்சையினால் விடில்கோ நோயினால் பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த ரம்யாவுக்கு நேர்ந்த கொடுமையும், அவமானங்களையும் அவர் எப்படி வெற்றிபடிகளாக மாற்றிக் கொண்டு நம்பிக்கைத் தரும் பேச்சாளராக மாறியதையும். சமூகம் என்னை வெறுக்கட்டும், விலக்கட்டும், பதிலுக்கு நான் சமூகத்தை நேசிப்பேன் என்ற வார்த்தையில் அவர் உயர்ந்து நிற்கிறார்.
 ஜி. பாலசுந்தரம், திருத்துறைபூண்டி.
 மாலதி சந்திரசேகரன் எழுதிய "பாடி ஸ்பிரேயினால் ஆபத்தா?' கட்டுரை படித்தேன். மேனியிலிருந்து நறுமணம் வீசுவதற்காக அதிகமாக பெண்களால் பயன்படுத்தப்படும் பாடி ஸ்பிரே, டியோடரண்ட் போன்றவற்றை உபயோகப்படுத்துவதால் ஏற்படும் ஆபத்தை அறிந்து அதிர்ந்தேன்.
 கார்குழலி, திருச்சி.
 "பெங்களூருவிலிருந்து சிட்னி வரை 120 நாட்களில்... 10 நாடுகள்' கட்டுரையைப் படித்தேன். ஹுப்ளியைச் சேர்ந்த கேன்டிடா லூயிஸ் தன்னுடைய பைக்கில் தன்னந்தனியாக பெங்களூருவிலிருந்து சிட்னி வரை செல்லும் பயணத்தை அறிந்தேன் வியந்தேன்!
 தேவேந்திரன், ராணிப்பேட்டை.
 தினமணி மகளிர்மணி வாசகர் கடிதங்கள்
 அனுப்ப வேண்டிய முகவரி:
 ஆசிரியர்,
 தினமணி மகளிர்மணி
 எக்ஸ்பிரஸ் கார்டன் , 29-2-ஆவது பிரதான சாலை,
 அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை -600 058.
 
 

]]>
http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/17/அறிந்தேன்-வியந்தேன்-3022035.html
3022045 வார இதழ்கள் மகளிர்மணி மழைக்காலத்தில் பெண்கள் ஜீன்ஸ் அணியக்கூடாது! DIN DIN Wednesday, October 17, 2018 10:00 AM +0530 மழைக்காலங்களில் பலவித தொற்றுநோய்கள் வந்து நம்மை பாடாய்ப்படுத்தும். பிடித்த உணவுகளை சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகாமல் வயிற்றுக் கோளாறுகள் ஏற்படும். சளி, இருமல், காய்ச்சல் இவற்றில் இருந்தெல்லாம் நாம் மழைக்காலத்தில் நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மழைக்காலத்தில் பெரும்பாலோரை பாதிப்பது சிறுநீர் தொற்று. இது, ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், பெண்கள் இறுக்கமான ஜீன்ஸ் உள்ளிட்ட உடைகளை அணியும்போது, சிறுநீர் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சிறுநீர் தொற்று குறித்து முக்கிய விஷயங்கள் இதோ:
• 5 பெண்களில் ஒருவருக்கு சிறுநீர் தொற்று ஒருமுறையாவது அவருடைய வாழ்நாளில் ஏற்படும்.

• குழந்தைகளுக்கு சிறுநீர் தொற்று ஏற்படாமல் பெற்றோர் கவனித்துக் கொள்ள வேண்டும்.

• உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளாமை, அசுத்தமான நீச்சல் குளத்தில் குளித்தல் உள்ளிட்டவை சிறுநீர் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

• ஜீன்ஸ் உள்ளிட்ட இறுக்கமான ஆடைகளை அணிந்தாலும் மழைக்காலத்தில் சிறுநீர் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். இறுக்கமான உடைகள் அணியும்போது காற்று உட்புகாமல், பாக்டீரியா தொற்று அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, கல்லூரி செல்லும் பெண்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

• மாதவிடாய் பிரச்சனைகள் இருக்கும் பெண்களுக்கும் சிறுநீர் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், அவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.

• நைலான் துணியாலான உள்ளாடைகளை தவிர்ப்பது நலம். திரவ உணவுகளை மழைக்காலங்களில் எடுத்துக் கொள்வதன் மூலமும், காய்கறிகள், பழங்களை உணவில் அன்றாடம் சேர்த்துக் கொள்வதன் மூலமும் சிறுநீர் தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும்.

• நறுமணம் ஊட்டப்பட்ட சோப்புகள் உள்ளிட்டவற்றை பெண்கள் தவிர்க்க வேண்டும். சில சமயங்களில் அவை சிறுநீர் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்.
- பா.கவிதா

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/17/w600X390/mm2.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/17/மழைக்காலத்தில்-பெண்கள்-ஜீன்ஸ்-அணியக்கூடாது-3022045.html
3022049 வார இதழ்கள் மகளிர்மணி தாய்மைக்கு பிறகே நல்ல வாய்ப்புகள்! DIN DIN Wednesday, October 17, 2018 10:00 AM +0530 "நான் தாய்மை அடைந்த பிறகே எனக்கு நல்ல விளம்பர படங்களிலும், திரைப்படங்களிலும் வாய்ப்புகள் கிடைத்தன. நிறைய பணிகளையும் செய்கிறேன். தாய்மை அடைந்தால் நடிக்க முடியாது என்று நினைக்கக் கூடாது. உங்கள் குடும்ப பொறுப்புகளையும், பணிகளையும் எப்படி பகிர்ந்து செய்ய வேண்டுமென்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். ஆனால் நான் தீர்மானிப்பது போல் உங்களாலோ, உங்கள் முடிவின்படி என்னாலோ செய்ய முடியாது. வாழ்க்கை என்பது அத்தனை சுலபமல்ல'' என்கிறார் பாலிவுட் நடிகை மந்த்ரா பேடி.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/17/w600X390/mm3.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/17/தாய்மைக்கு-பிறகே-நல்ல-வாய்ப்புகள்-3022049.html
3022056 வார இதழ்கள் மகளிர்மணி தீபா கர்மாகர் பற்றிய வரலாற்று படம்! DIN DIN Wednesday, October 17, 2018 10:00 AM +0530 கடந்த ஒலிம்பிக் போட்டிகளின்போது, ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்று நான்காவது இடத்தை பிடித்த திரிபுராவை சேர்ந்த தீபா கர்மாகர் (25) விருது பெறவில்லை என்றாலும், இந்தியாவிலிருந்து முதன்முறையாக சென்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றார். ஆறு வயது முதலே ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற்ற இவர், இதுவரை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று 77 பதக்கங்களை பெற்றுள்ளார். விளையாட்டு வீரர்களைப் பற்றிய வரலாற்று படங்கள் தயாரிக்கப்படுவதால், அடுத்த ஒலிம்பிக் போட்டிக்காக தீவிர பயிற்சிப் பெற்று வரும் தீபா கர்மாகர் வாழ்க்கையை திரைப்படமாக்க இவரை அணுகியுள்ளனர். ""என்னைப் பற்றி படம் எடுக்க வேண்டுமென்றால் என் பயிற்சியாளர்தான் முடிவெடுக்க வேண்டும். இதில் நான் ஏதும் சொல்வதற்கில்லை'' என்று தீபா கர்மாகர் மறுத்துள்ளார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/17/w600X390/mm4.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/17/தீபா-கர்மாகர்-பற்றிய-வரலாற்று-படம்-3022056.html
3022065 வார இதழ்கள் மகளிர்மணி மறுபிரவேசம் செய்யும் மதுபாலா! DIN DIN Wednesday, October 17, 2018 10:00 AM +0530 திருமணமாகி மும்பையில் குடியேறிய "ரோஜா' புகழ் மதுபாலா, மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வந்துள்ளார். கன்னடத்தில் "சீதாராமா கல்யாணா' மற்றும் பிரிமீயர் பத்மினி ஆகிய படங்களிலும், தமிழில் "அக்னிதேவ்' என்ற படத்திலும் நடிக்கிறார். ""நான் மீண்டும் படங்களில் நடிப்பதற்கு, என் சிநேகிதியும், நடிகையுமான நிரோஷாதான் காரணம். முதலில் நான் நடித்த படங்கள் பெரும் வெற்றியை பெற்றதோடு ரசிகர்களையும் தேடித் தந்தது. மறுபிரவேசம் செய்யும் எனக்கு ரசிகர்கள் ஆதரவு கிடைக்குமென நம்புகிறேன்'' என்கிறார் மதுபாலா.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/17/w600X390/mm5.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/17/மறுபிரவேசம்-செய்யும்-மதுபாலா-3022065.html
3022071 வார இதழ்கள் மகளிர்மணி ரசிகர்கள் மனதில் நம்முகம் பதிய வேண்டும்! DIN DIN Wednesday, October 17, 2018 10:00 AM +0530 "கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால், முதல் சில ஆண்டுகள் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதனால் நான் "யு டர்ன்' படத்தில் கடினமான பாத்திரத்தை ஏற்றபோது ரசிகர்களிடையே வரவேற்பை பெற முடிந்தது. இந்த வெற்றியை பெற பொறுமை தேவை. இரண்டாண்டுகளுக்கு முன் படம் ஏதுமில்லை என்றால் திரையுலகில் நீடிக்க முடியுமா என்ற கவலை எனக்கிருந்தது. இப்போது இல்லை'' என்று கூறியிருக்கிறார் சமந்தா அக்கினேனி.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/17/w600X390/mm6.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/17/ரசிகர்கள்-மனதில்-நம்முகம்-பதிய-வேண்டும்-3022071.html
3022079 வார இதழ்கள் மகளிர்மணி வாழ்நாள் சாதனையாளர் விருது! DIN DIN Wednesday, October 17, 2018 10:00 AM +0530 1965-ஆம் ஆண்டு "ஜீவனாம்சம்' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை லட்சுமி, அதே ஆண்டு கன்னடத்திலும் "சிஐடி 999' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், பெங்காலி, ஹிந்தியில் "ஜூலி' ( 1975) என 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள லட்சுமி கன்னடத்தில் "ஹூவு ஹன்னு' (1993) "வம்சி' (2008) ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகைக்கான மாநில விருது பெற்றார். இப்போது 2017-ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராஜ்குமார் நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருதை கர்நாடக அரசு அவருக்கு வழங்கி கௌரவிக்க உள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/17/w600X390/mm7.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/17/வாழ்நாள்-சாதனையாளர்-விருது-3022079.html
3022227 வார இதழ்கள் மகளிர்மணி இல்லத்தரசியும் தொழில் முனைவோர் ஆகலாம்-28 Wednesday, October 17, 2018 09:54 AM +0530 "சில ஆண்டுகளுக்கு முன்பு ஏதாவது சிறு தொழில் செய்தால், வீட்டில் உள்ள சூழ்நிலைக்கு உதவியாக இருக்குமே என்று ஏங்கும் பெண்களை தேடிப்பிடித்து தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் தொண்டு நிறுவனம் ஆரம்பித்த சமயத்தில், எந்த கைத்தொழிலை கற்று கொடுத்தாலும் அதற்கான விற்பனைக்கான வாய்ப்பை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அப்போது நாங்கள் விற்பனைக்கான பொருட்காட்சி ஏதும் நடத்தாத நேரம். அதனால், யுக்தியைக் கையாண்டோம்.
 அதாவது, மகளிர் குழுவில் 15 பேர் உள்ளார்கள் அல்லவா, நீங்கள் உங்கள் வீடுகளுக்கு மாதாமாதம் வாங்கும் மளிகை பொருட்களை 15 பேரும் சேர்ந்து கூட்டாக மொத்த விற்பனை கடையில் வாங்கி பகிர்ந்து கொள்ள சொன்னோம். மீதம் உள்ள பொருட்களை சில்லறை கடைகளை விட குறைவான விலைக்கு விற்பதற்கு ஆலோசனை கூறினோம். இதனால், பெண்கள் குழுவினர் இதை மிகவும் மகிழ்ச்சியாக செய்தனர். லாபமும் அடைந்தனர்.
 நாளடைவில் நிறைய கைத்தொழில் கற்றுத்தர தொடங்கியதும், அவரவர் தங்களுக்கு ஏற்ற வகையில் சொந்த தயாரிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினர். ஆனால், இதில் விசேஷம் என்னவென்றால் ஆரம்பத்தில் கொடுத்த மளிகை பொருள் ஐடியாவை, இன்றும் ஒரு சிலர் தொடர்ந்து செய்து வருகின்றனர் என்பதுதான். அதில் கண்ட லாபம் அவர்களை இதுவரை தொடரச் செய்துள்ளது. இதை ஏன் சொல்கிறேன் என்றால், வீட்டுக்கு தேவையான மளிகைப் பொருள்தானே என்று எண்ணாமல் அவர்கள் இதை செய்ததால்தான் இன்று அவர்களுக்கு கணிசமான லாபம் கிடைக்கிறது. அதுபோன்று நாம் செய்யும் தொழில் முக்கியமல்ல, நாம் அதனை எவ்வளவு செம்மையாகவும், நேர்மையாகவும் செய்கிறோம் என்பதை பொருத்ததுதான் வெற்றியும், தோல்வியும். இதே போன்று இந்த வாரம் நாம் பார்க்க இருப்பது கெமிக்கல் இல்லாத நமக்கு மிகவும் பயன்படும்படியான பொருட்களின் தயாரிப்பு பற்றி. இதனை தயாரிக்க பெண்களாகிய நாம் ஒன்று கூடினால் மட்டுமே கொஞ்சமாவது முறியடிக்க முடியும். முதலில் இதை விற்பனை செய்ய வேண்டாம். உங்கள் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தினாலே மாதம் ரூ.2000 வரை மிச்சம் பிடிக்கலாம்'' என்கிறார் சுயதொழில் ஆலோசகர் உமாராஜ்:
 பற்பொடி: கடுக்காய், கிராம்பு, ஏலக்காய் இன்னும் சில பொருள்களை கொண்டு தயார் செய்யலாம். இதை உபயோகித்தால் பல்வலி, பல் சொத்தை, ஈறு வலி என எந்த பிரச்னையும் ஏற்படாது.
 குளியல் பொடி: சோப்புக்கு பதிலாக ராஜ்புத் குளியல் பொடி தயார் செய்யலாம். இதில் 16 வகையான மூலிகை பொருள்களுடன் கற்றாழையும் சேர்த்து செய்வதால் இது மற்ற குளியல் பொடியில் இருந்து வேறுபடுகிறது. இதில் நாள்பட்ட படுக்கைப் புண் கூட ஆறுகிறது என்பது இதன் சிறப்பு. இதை 5 மாத குழந்தை முதல் உபயோகிக்கலாம். சருமம் பளபளப்பாவதுடன் எந்தவித சரும நோயும் அண்டாது.
 இயற்கை ஷாம்பு: இதை உபயோகப்படுத்தினால் இளவயது நரை, முடி உதிர்தல், பொடுகு என எந்த பிரச்னையும் இருக்காது. முடி நன்கு வளர்ந்து அடர்த்தியாக காணப்படும். இதில் பூந்திக் கொட்டை, சீயக்காய், செம்பருத்தி பூ, இலை, ஆளி விதை, அரப்பு என இயற்கை பொருள்கள் கொண்டு செய்வதால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.
 இயற்கை ஹேர் டை: இதையும் வீட்டிலேயே தயார் செய்யலாம். இதில் அவரி இலை, மருதாணி, நெல்லி முள்ளி பொடி, கரிசலாங்கண்ணி பொடி, கறிவேப்பிலை பொடி இவை அனைத்தையும் சேர்த்து தயார் செய்தால் இயற்கை ஹேர் டை கிடைக்கும். இது இயற்கை பொருள்களை கொண்டு செய்வதால் எந்தவித பக்க விளையும் இருக்காது. சுலபமாக விற்பனையும் செய்யலாம்.
 தேநீர் பொடி: டீ தூள் இல்லாத தேநீர் பொடி. இதை அருந்தினால் தலை முதல் வயிறு வரை உள்ள உடல் உபாதை பலவற்றை சரி செய்யும் என்பதே இதன் சிறப்பு. இதற்கு சுக்கு, தனியா, ஏலக்காய், ஆவாரம்பூ, துளசி என சேர்த்து செய்ய வேண்டும். இதில் பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி சேர்த்து குடித்து பழகினால் வேறு டீ, காபி பக்கமே போக மாட்டோம்.
 மேற்படி சொல்லியது எல்லாம் சுலபமாக செய்யக் கூடிய தொழில்கள். இவற்றிற்கு நல்ல வரவேற்பும் கிடைக்கும். கணிசமான வருமானமும் கிடைக்கும்.
 - ஸ்ரீ

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/17/w600X390/mm9.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/17/இல்லத்தரசியும்-தொழில்-முனைவோர்-ஆகலாம்-28-3022227.html
3017381 வார இதழ்கள் மகளிர்மணி பெங்களூருவிலிருந்து சிட்னி வரை! 120 நாட்களில்... 10 நாடுகள்! DIN DIN Thursday, October 11, 2018 10:00 AM +0530 ஹூப்ளியைச் சேர்ந்த கேன்டிடா லூயிஸ் (28) தன்னுடைய பைக்கில் தன்னந்தனியாக பெங்களுரிலிருந்து சிட்னி வரை செல்லும் பயணத்தை தொடங்கியுள்ளார். சுமார் 28 ஆயிரம் கி.மீ. தொலைவு 120 நாட்களில் 10 நாடுகள் வழியே சென்று இந்த பயணத்தை முடிக்க வேண்டுமென்பது அவரது விருப்பமாகும்.
 விவரம் தெரிந்த நாள் தொடங்கி தன் தந்தை மற்றும் சிநேகிதிகளுடன் ஹூப்ளியிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள கோவாவிற்கு பலமுறை பைக்கில் சென்று வந்த இவர், கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு நாடுகளில் பைக்கில் பயணம் செய்துள்ளார். ஒரே வித்தியாசம். அந்தந்த நாடுகளுக்கு விமானத்தில் சென்று இறங்கி, அங்கு பைக்கை வாடகைக்கு எடுத்து பயணம் செய்துள்ளார். இந்த முறை 10 நாடுகள் வழியே தன்னுடைய பைக்கிலேயே தனியாக பயணம் செய்ய தீர்மானித்திருக்கிறார். முதலில் பெங்களூரிலிருந்து லண்டன் வரை செல்ல முடிவு செய்தார். "சேஞ்ச் யுவர் வேர்ல்ட்' என்ற அமைப்பு நிதியுதவி அளிக்க முன்வரவே. சிட்னி வரை செல்ல தீர்மானித்துள்ளார். காரணம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பைக் வீரர் அலிஸ்டர் பார்லாண்ட் என்பவர் அலாஸ்காவிலிருந்து தென் அமெரிக்காவுக்கு பைக்கில் செல்ல மேற்கொண்ட பயணத்தின் போது விபத்தில் பலியானார். மீண்டும் அவர் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பவில்லை. அவர் நினைவாக அமைக்கப்பட்ட அமைப்புதான் சேஞ்ச் யுவர் வேர்ல்ட். அதனால் சிட்னி செல்ல தீர்மானித்தாராம் கேன்டிடா.
 பயணத்தின் முதற்கட்டமாக இந்தியாவின் கிழக்கு கடற்கரையிலிருந்து வட கிழக்காக செல்வது. இரண்டாவது கட்டத்தில் மணிப்பூரிலிருந்து மியான்மர், லாவோஸ், வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷியா செல்வது. இடையில் இரண்டு தீவுகளை கடப்பது. முதலாவது மலேசியாவிலிருந்து இந்தோனேஷியா. மற்றது டை மோரிலிருந்து டார்வின். இறுதி கட்டமாக டார்வின்லிருந்து சிட்னி.
 இந்தப் பயணத்தை ஏழுமாதங்களாக திட்டமிட்ட கேன்டிடா, ஆகஸ்ட் 25-ஆம் தேதி காலை 6 மணியளவில் பெங்களூரு விதான்சவுதா முன்பிருந்து கிளம்பியுள்ளார். ஏறக்குறைய 120 நாட்கள் ஆகுமென்பதோடு இந்த ஆண்டு இறுதியில்தான் மீண்டும் இந்தியா திரும்ப முடியும் என்பதால், தான் பயணம் செல்லவுள்ள நாடுகளின் தூதரகங்களிலிருந்து முன்கூட்டியே அனுமதி கடிதம் பெற்றுள்ளார்.
 தொடர்ந்தாற்போல் 120 நாட்கள் ஒரு பெண் தனியாக பைக்கில் பயணம் செய்வது சாத்தியமா?
 வாரந்தோறும் நான் நான்கைந்து முறை பைக்கில் பயணம் செல்வதுண்டு. அதனால் இந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடிக்க முடியுமென தோன்றியது என்று கூறும் கேன்டிடாவுக்கு ஜிம்மிற்கு போகும் பழக்கமும் இல்லை.
 ஒரு பெண் தனியாக பல நாடுகளுக்கு பைக்கில் செல்வது பாதுகாப்புதானா என்ற எண்ணம் கேன்டிடாவின்மனதில் தோன்றினாலும், ஏற்கெனவே நான் "பான் இந்தியா' பயணம் மேற்கொண்டபோது, நாடுவிட்டுநாடு தனியாக போவது பாதுகாப்பானது அல்ல. இந்த முயற்சியை கைவிடும்படி பலர் கூறினார்கள்.
 அந்த ஏழு மாத பயணத்தின்போது எங்கு சென்றாலும், என்ன செய்தாலும், எந்த சூழ்நிலையிலும் பெண்களை பொருத்தவரை இந்தியா பாதுகாப்பான நாடாகவே எனக்கு தோன்றியது. தற்போதைய பயணத்தையும் அதே நம்பிக்கையுடன் கடவுளை நினைத்து தொடங்கியுள்ளேன். பாதுகாப்புக்கு என்னுடைய பைக்கில் ஜிபிஎஸ் பொருத்தியிருப்பதால் நான் எங்கிருக்கிறேன் என்பதை என் பெற்றோர் தெரிந்து கொள்ள முடியும்'' என்கிறார். கேன்டிடா.
 இந்தப் பயணத்தின் நோக்கம் என்ன?
 இதன் மூலம் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களையும், கலாசாரத்தையும் அறிந்து கொள்ள முடியும். குறிப்பாக பெண்கள் சக்தி, கல்வி மற்றும் அவர்கள் சுதந்திரத்தை வலியுறுத்துவதே நோக்கமாகும். பெங்களூரில் பைக் கலாசாரத்தை மேம்படுத்த பல கிளப்கள் உள்ளன. இருப்பினும் 80-90 பைக் வீராங்கனைகள் மட்டுமே உள்ளனர்.
 உலகம் எல்லா துறையிலும் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தாலும், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பெண்கள் பின் தங்கிய நிலையில் உள்ளனர். என்னுடைய இந்தப் பயணம் பெண்களுக்கு தைரியத்தையும், அவர்களது கனவுகளை நனவாக்கவும் உதவலாம். என்னுடைய திட்டத்தை என் சமூக வலைதளத்தில் பதிவேற்றியபோது, நிறையபேர் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர். என் பயண அனுபவங்களை தினமும் என் சமூக வலைதளத்தில் பதிவேற்றுவேன்'' என்றார்.
 - அ.குமார்
 
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/10/w600X390/CANDIDA.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/11/பெங்களூருவிலிருந்து-சிட்னி-வரை-120-நாட்களில்-10-நாடுகள்-3017381.html
3017382 வார இதழ்கள் மகளிர்மணி கொலு யோசனைகள்! DIN DIN Wednesday, October 10, 2018 12:00 PM +0530 • கொலுப் படிகளை ஒற்றைப் படையில் 3,5,7 என்று அமைத்து பொம்மைகளை அழகாக அடுக்க வேண்டும். படிகளில் பொம்மைகள் வைத்தபிறகு அவற்றுக்கு தெய்வாம்சம் வந்துவிடும். அதனால் வைத்தபின் எடுப்பதோ, இடம் மாற்றி வைப்பதோ கூடாது.

• கொலு படிகளுக்கு வெள்ளை நிற துணியைவிட அடர் நிறமுள்ள துணிகளை விரித்தால் பீங்கான் கண்ணாடி பொம்மைகள் பளிச்சென்று தெரியும்.

• கொலுப் படிகளின் பின்புறமுள்ள சுவரில் அழகான பெரிய பளபளக்கும் சுவாமி படங்களை மாட்டினால் தெய்வீகம் கமழும்.

• கொலுப் படிகளின் அடியில் தினமும் அழகான வண்ணக்கோலங்கள் போட்டால் அழகும் தெய்வீகமும் இணைந்திருக்கும்.

• தரையில் ஒரு விரிப்பைப் போட்டு அதில் மணல் பரப்பினால் கொலு முடிந்ததும் சுத்தம் செய்வது சுலபம்.

• குழிவான தட்டுகள், கிண்ணங்களில் நீர் நிரப்பி சிறு குளங்களை உருவாக்கலாம். 

• கொலு முடிந்தபின் பொம்மைகளை உள்ளே எடுத்து வைக்கும்போது அவற்றை பருத்தித் துணி அல்லது செய்தித் தாள்களில் சுற்றி வைக்க வேண்டும்.

• பாலியெஸ்டர் உடைகள் அல்லது பாலிதீன் கவர்களில் வைத்தால் காற்றோட்டமின்றி பொம்மைகளின் நிறம் மங்கி விடும்.

• கொலு வைத்துள்ள அறையில் ஜிகினாத்தாள்களை மாலைகளாக தொங்கவிட்டால் அறையே பளபளக்கும்.
- ஆர். ராமலட்சுமி

• விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோயில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.

• ஈசனும், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்தபலன் கிடைக்கும்.

• விஜயதசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.

• நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும்.

• நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.

• நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.

• ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளை தேர்ந்தெடுப்பது கூடாது.

• தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல்,ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.

• தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவிகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பதே மிகமிக முக்கியம்.

• கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமாகும்.

• சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம்.

• நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.

• நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.

• நவராத்திரி விரதம் இருப்பவர்கள் தரையில் தான் படுத்து தூங்க வேண்டும்.

• அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட வேண்டும்.

• நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.

• நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.

• கொலு வைத்திருப்பவர்கள் அதன் முன் நவக்கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.

• நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

• நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையா? கவலை படாதீர்கள் "ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம' என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.
- கவிதாபாலாஜிகணேஷ்


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/10/w600X390/KOLU.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/10/கொலு-யோசனைகள்-3017382.html
3017622 வார இதழ்கள் மகளிர்மணி எதற்காகவும் விட்டுக் கொடுத்து விடாதீர்கள்! - பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் Wednesday, October 10, 2018 10:49 AM +0530 இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சர் என்கிற பெருமைக்கு உரியவர் நிர்மலா சீதாராமன். அப்பா சீதாராமன் திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர். அம்மாவின் பூர்விகம் திருவெண்காடு. தந்தை ரயில்வே ஊழியர் என்பதால், 1959-ஆகஸ்ட் 18 தேதி பிறந்த நிர்மலா சீதாராமனின் பள்ளிப் படிப்பு விழுப்புரம், திருச்சி என்று தொடங்கி கல்லூரி படிப்பு திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியிலும், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்தன.
பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் நிர்மலாவின் கணவர், பரக்கலா பிரபாகர். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 
பிரபாகரும், நிர்மலாவும் ஒன்றாகப் படித்தவர்கள். பிரபாகரின் தந்தையார் ஆந்திராவில் மிகவும் மதிக்கப்படும் சுதந்திர போராட்டத் தியாகி.
அரசியலுக்கு வருவதற்கு முன்னால் லண்டனில் வேலை பார்த்து வந்த நிர்மலா சீதாராமன், ஹைதராபாத்தில் குடியேறிய பிறகு "பிரணவா' என்கிற பள்ளிக்கூடத்தைத் தொடங்கி நடத்தி வந்தார். 2008 - இல் பா.ஜ.க.வில் இணைந்து அந்தக் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரானார். 2014-இல் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தபோது, அமைச்சரவையில் முக்கியமாக வர்த்தகத் துறை அவருக்கு தரப்பட்டது. இப்போது இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர். 
சென்னைக்கு வந்திருந்தார் அமைச்சர் நிர்மலா சீதாராமன். அமைச்சர், அரசியல்வாதி என்பதைத் தாண்டி, சாதனைப் பெண்மணியான அவருக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் சராசரிப் பெண்மணியுடன் சரளமாக ஒரு நேர்காணல் மேற்கொண்டோம். 
பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய அனுபவங்களையும், எண்ணங்களையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் :

அம்மா குறித்து மனதில் தோன்றும் பிம்பம்?
சின்ன வயதிலிருந்தே அம்மாவைப் பற்றிய ஓர் உருவம் மனதில் தோன்றுகிறது என்றால் அது, எப்போதும் ஏதாவது ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டு இருக்கும் அம்மா தான், நிறைய படிப்பார்கள். அவர்கள் படித்ததில் பத்தில் ஒன்று கூட நான் படித்ததில்லை. தமிழில்தான் படிப்பார்கள் ஆனால் நம் நாட்டில் எல்லா மொழி இலக்கியங்களின் மொழிபெயர்ப்பு நூல்களாக அவை இருக்கும். 
பல தேசத் தலைவர்களின் கதைகள், சரத்சந்திரர் போன்றவர்களின் படைப்புகள் என்று அம்மா இந்திய அளவில் எல்லா மொழி இலக்கியங்களையும் தமிழில் வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்தார்கள். அவர்கள் அறிமுகப்படுத்தித் தான் இந்தியாவின் அத்தனை மாநிலங்களில் உள்ள தலைவர்களைப் பற்றியும் இலக்கியங்களையும் பற்றி எனக்குத் தெரிந்தது. 

பள்ளி நாட்களும், சிறுவயது நினைவுகளும்?
சிறுவயது நினைவு என்றவுடன், விழுப்புரத்தில் நாங்கள் படித்த பள்ளிக்கூடம், ரெயில்வே காலனியில் நாங்கள் வசித்த போது அங்கே என்னுடைய நண்பர் நவநீதன் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்ததும், சைக்கிள் ஓட்டி விளையாடியதும் தான் நினைவுக்கு வருகின்றன. 
பள்ளிக்கூடத்தில் ஒருமுறை தடுக்கி விழுந்ததில் கை முறிந்து போய் கட்டுப்போட்டு இருந்தேன். அந்த நாட்களிலும் கையிலே கட்டோடு கூட அந்த ரயில்வே காலனியில் விடாமல் சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தது நினைவிருக்கிறது. 
என் தோழி அமுதாவின் வீட்டில் சென்று விளையாடியதும் பசுமையாக நினைவில் உள்ளது. 
என்னுடைய சகோதரி விழுப்புரத்தில்தான் படித்துக் கொண்டிருந்தார். நானும் அங்கேயே என்னுடைய பள்ளிப் படிப்பை ஆரம்பித்திருந்தேன். 
உடல்நலக் குறைபாடு உள்ள ஆரோக்கியமற்ற ஒரு குழந்தையாக நான் இருந்தேன். எப்போதும் மூக்கு வடிந்து கொண்டு, எதற்கெடுத்தாலும் தடுக்கி விழுந்து விடுவேன். 
டிப்தீரியா பாதிப்பினால் பிழைப்பதே கடினம் என்ற நிலையில் ரயில்வே மருத்துவமனைக்கு அம்மா தூக்கிக் கொண்டு போனதும் அங்கே படுக்கை வசதி கிடைக்காத நிலையில் மருத்துவமனை வராண்டாவில் அம்மா என்னை மடியில் வைத்துப் பார்த்துக் கொண்டதும் அப்படியே நினைவிருக்கிறது. 
அப்போது, அப்பா தன்னுடைய வேலை காரணமாக ராமேஸ்வரத்தில் வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்தார். அவருக்குத் தகவல் தெரிவிப்பதற்குக் கூட வழியில்லாமல் இருந்தது.

கல்லூரி கனவுகள்... லட்சியங்கள்...
திருச்சி ஏர்ப்ஹ் இழ்ர்ள்ள் பள்ளியில் நான் படித்துக் கொண்டிருந்த போது எனக்கு வக்கீலாக வேண்டும் என்பது மட்டும்தான் லட்சியமாக இருந்தது. அங்கே என்னுடைய பள்ளி முதல்வர் சிஸ்டர் இம்மாக்குலின், "நல்ல வாதம் செய்யும் திறமை உனக்கு இருக்கிறது அதனால் உன் வீட்டில் அம்மாவிடம் சொல்லி வக்கீலுக்குப் படிக்க வைக்கச் சொல்லு,' என்று என்னிடம் அடிக்கடி சொல்வார். எனக்கும் அது தவிர வேறு யோசனைகள் இருக்கவில்லை. 
கல்லூரி நாட்களில் அரசியல் ஆர்வம் எல்லாம் இல்லை. பின்னாளில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்த போது தான் இயக்கம் சார்ந்த செயல்பாடுகளில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. 
அங்கே அரசியல் கட்சி தொடர்புடைய பல அமைப்புகள் இருந்தன. அதே நேரத்தில் அரசியல் சாராத இயக்கமும் இருந்தது. அந்த இயக்கத்தில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். நடுநிலைச் சிந்தனையாளர்கள் என்ற நிலையில் எனக்கு அது பிடித்து இருந்தது. என்னையும் அறியாமல் அதுதான் என்னுடைய பொதுவாழ்க்கையின் சமூக செயல்பாட்டின் தொடக்கமாக அமைந்தது.

ரோல்மாடல் யார்?
எனக்கு முன்மாதிரி என்று ஒருவரும் இல்லை. ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு விஷயத்திலும் என பலர் இருக்கிறார்கள். குறிப்பிட்டு ஒருவரைச் சொல்வதற்கில்லை.

சமூக சிந்தனையில் குடும்பத்தின் பங்களிப்பு!
நிச்சயமாக 100 சதவிகிதம் எங்கள் குடும்பம்தான் இதற்குக் காரணம். எங்கள் அம்மா வழித் தாத்தா காலத்திலிருந்தே சுதந்திரப்போராட்டத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட குடும்பமாக எங்கள் குடும்பம் இருந்தது. எங்கள் தாத்தா என் தாய்மாமன்மார்களுக்கு தேசத்தலைவர்களின் பெயரையே வைத்திருந்தார். காந்தி மாமா, சத்தியமூர்த்தி, ராஜாஜி மாமா என்றுதான் பெயர். நாட்டு நலன், தேச சிந்தனை இவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக எங்கள் குடும்பத்தினர் இருந்த அந்தச் சூழல் எனக்கும் சமூகம் பற்றிய சிந்தனையை இயல்பிலேயே ஏற்படுத்தி இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். 

குடும்பப் பின்னணி...
எங்கள் தந்தைவழிப் பாட்டனார் பெரிய இறை சிந்தனை கொண்டவர் இல்லை என்றாலும் அவர் நல்ல ஆன்மிகவாதி. ரயில்வே பாதைகள் அமைக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். பணி நிமித்தமாக ரயில்வே தண்டவாளங்கள் அமைக்கும் போது அவருக்குக் கிடைத்த அனுமன் சிலையை வைத்து கல்லுக்குழி என்ற இடத்தில் ஓர் அனுமார் கோயிலை ஏற்படுத்தினார் அது இன்றளவும் பிரசித்தி பெற்றதாகவே இருந்து வருகிறது. எங்கள் அம்மா வழி தாத்தா குடும்பத்தில் எப்போதும் தேசம் பற்றிய சிந்தனை, அது பற்றிப் படிப்பது அதில் மிகுந்த ஈடுபாடு காட்டுவது இந்த சூழ்நிலை தான் நிலவியது.

அரசியலில் பெண்களின் பங்கு!
அரசியல் கட்சிகள் தான் இதற்கான முயற்சியை முன்னெடுக்க வேண்டும். பா.ஜ.கவைப் பொருத்தவரை பெண்களுக்கு கட்சிப் பொறுப்புகளிலும் சரி ஆட்சியிலும் சரி 33 சதவிகித இடம் தருகிறார்கள். அதன் பயனாளியாகத் தான் நானும் இருக்கிறேன். பஞ்சாயத்து முதல் எல்லா நிலைகளிலும் எங்கள் கட்சியில் பெண்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் அரசியலில் பெரும் அளவில் பங்கேற்பதற்கு இதுதான் ஒரு சிறந்த வழி என்று எனக்குத் தோன்றுகிறது.

உயர் பதவிகளின் டென்சன்...
புது விதமாக சிந்திக்கக் கூடிய செயல்படக் கூடிய ஒவ்வொரு வாய்ப்பையும் பெண்கள் பயன்படுத்துகிறார்கள். ஒரு புதிய வழிமுறையை சட்டத்திற்கு உட்பட்டு பெண்கள் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். எங்களுடைய அமைச்சரவையில் எல்லாப் பெண்களுமே நல்ல ஆரோக்கியமான வளர்ச்சி வேண்டுமென உத்வேகத்தோடு தன்னோடு இருப்பவர்களையும் அரவணைத்துக் கொண்டு அனைவரோடும் புதுமைக்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

பெண்கள் வளர்ச்சியும் கலாசார விழுமியங்களும்...
மதிப்பீடுகளை கட்டாயமாக முற்றிலும் மாற்றி அமைக்க வேண்டும் என்று சொல்ல முடியாது. கலாசாரம் விழுமியங்கள் தொடர்பான விவாதமே கூடாது என்றும் சொல்லிவிட முடியாது. எங்கு தேவை இருக்கிறதோ, அங்கு அது பற்றிய ஆரோக்கியமான விவாதம் தேவை.

முன்னேறத் துடிக்கும் பெண்களுக்கு...
எதற்காகவும் விட்டுக் கொடுத்து விடாதீர்கள். தாழ்வு மனப்பான்மையோ உயர்வு மனப்பான்மையோ வேண்டாம். எந்த விதத்திலும் நாம் யாரைவிடவும் குறைந்தவர்கள் இல்லை. அதற்காக நாம் எல்லோரையும் விடப் பெரியவர்களும் இல்லை. முயற்சி செய்து கொண்டே இருங்கள் உங்களுக்குள் இருக்கும் கனவு நிச்சயம் நனவாகும்.
- ஜோதிலட்சுமி
படங்கள்: பி.ராதாகிருஷ்ணன்


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/10/w600X390/NIRMALA.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/10/எதற்காகவும்-விட்டுக்-கொடுத்து-விடாதீர்கள்---பாதுகாப்புத்துறை-அமைச்சர்-நிர்மலா-சீதாராமன்-3017622.html
3017292 வார இதழ்கள் மகளிர்மணி தடையை வென்று சாதித்தவர்! Wednesday, October 10, 2018 10:00 AM +0530 அண்மையில் ஜகர்தாவில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளி பதக்கங்களை பெற்ற ஓட்டப் பந்தய வீராங்கனை டூட்டி சந்த், நான்காண்டுகளுக்கு முன் பந்தயங்களில் கலந்து கொள்ளக்கூடாது என்று இன்டர்நேஷனல் அத்லடிக் பெடரேஷன் தடைவிதித்ததும், அதை எதிர்த்து அவர் போராடி வெற்றிப் பெற்றதும் பலருக்கு தெரியாது. இது குறித்து டூட்டி சந்த் சொல்வதை கேட்கலாம்:
 "உலக மேடையில் தங்கப்பதக்கம் பெறுவதற்காக நான் ஓட்ட பந்தயங்களில் கலந்து கொள்வேன் என்று சிறுவயதில் நினைத்து பார்த்ததே இல்லை. ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டம் கோபால்புரி கிராமத்தில் நெசவுத் தொழில் செய்து வரும் என் பெற்றோர் சக்ரதார் சந்த் மற்றும் அக்குஜிக்கு பிறந்த ஆறு குழந்தைகளில் ஒருவரான எனக்கு, சிறு வயதில் பள்ளியில் படிக்கும்போதே ஓட்ட பந்தயத்தில் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் அதற்கான அடிப்படை வசதிகளோ, விளையாட்டு மைதானமோ எங்கள் கிராமத்தில் இல்லை. ஆற்றங்கரை ஓரமாகவே ஓடிப் பழகுவேன். எடை பயிற்சிக்காக பெரிய பாறைகளை தூக்குவேன். நிலத்தடி தண்ணீர் குழாய் அடிப்பதை உடற்பயிற்சியாக செய்து வந்தேன்.
 ஓட்ட பந்தயங்களில் ஆர்வம் ஏற்பட்டது ஒரு புறமிருக்க, எனக்கு உடுத்துவதற்கு சரியான உடைகள் கூட கிடையாது. வீட்டில் அத்தனை வறுமை. நெசவு தொழிலில் கிடைக்கும் வருவாயில் எங்களால் முன்றுவேளை சாப்பிடுவதே சிரமமாக இருந்தது. பகலில் ஒருவேளை சாப்பாடுதான். பிற்காலத்தில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்காக ஆடம்பரமான ஓட்டல்களில் தங்கியபோது, அங்கு மேஜை முழுக்க வைத்திருந்த "பப்பே லஞ்ச்' மற்றும் சுத்தமான டாய்லெட்களை பார்த்தபோது இளமை காலத்தில் நான் மண் குடிசையில் வளர்ந்ததுதான் நினைவுக்கு வந்தது.
 2012- ஆம் ஆண்டு பாட்டியாலாவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ûஸ சேர்ந்த நாக்புரி ரமேஷ், என் பயிற்சிகளுக்கான செலவை ஏற்றுக் கொள்ள, தேசிய அளவிலான ஓட்ட பந்தயங்களில் கலந்து கொண்டு விருதுகளை வாங்கி குவித்தேன். இதன்காரணமாக, 2014- ஆம் ஆண்டு ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இந்திய குழுவில் தேர்வு செய்யப்பட்டேன். ஆனால் திடீரென இன்டர்நேஷனல் அத்லடிக் பெடரேஷன் எனக்கு தடை விதித்ததோடு, ஒரு பழியையும் சுமத்தியது.
 என்னுடைய உடலில் ஹைப்பரான்ட்ரோ ஜெனிசம் எனப்படும் ஆண்களுக்கு சுரக்கும் ஹார்மோன் அதிக அளவில் சுரப்பதால், பெண் விளையாட்டு வீராங்கனை பிரிவில் நான் பந்தயங்களில் பங்கேற்க அருகதை இல்லை என அறிவித்தது. இதை எதிர்த்து மத்திய அரசு வழங்கிய நிதியுதவியுடன், சமூக ஆர்வலர் பயோஷினி மித்ரா ஆதரவுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். நீண்ட கால சட்டப் போராட்டத்திற்கு பின், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இதே போன்ற ஒரு வழக்கில் சுவிட்சர்லாந்து விளையாட்டுத் துறை நடுவர் மன்றம், அதிகப்படியாக ஹார்மோன் சுரப்பது பெண்களுக்கு சகஜமானதுதான் என்று கூறி, போட்டிகளில் பெண்கள் பங்கேற்பதை தடை செய்யக் கூடாது என்று வழக்கை தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து இன்டர்நேஷனல் அத்லடிக் பெடரேஷனும் 400 மற்றும் 1000 மீட்டர் தொலைவு ஓடும் பெண் வீராங்கனைகளுக்கான டெஸ்டோட்ரோன் அளவு விகிதத்தை அறிமுகப்படுத்தியதால் 100 மற்றும் 200 மீட்டர் தொலைவு ஓட்ட பந்தயங்களில் நான் பங்கேற்க தடையில்லை என அறிவித்தது மகிழ்ச்சியை அளித்தது.
 "எதற்காக பெண்ணான நீ மெனக்கெட்டு ஓடி என்ன சாதிக்கப் போகிறாய்?'' என்று சிலர் கேட்க, ஒரு சிலரோ என்னை பையன் என்று சொல்லி கிண்டல் செய்தனர். ஆனால் ஹைதராபாத்தில் எனக்கு முழு நேர பயிற்சியளித்த ரமேஷ், " தேசிய அளவில் நீ ஒரு வீராங்கனையாக தேர்ச்சிப் பெற்றால், ஏதாவது ஓர் அரசு துறையில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் வேலை கிடைக்கும். உனக்கும் உன் குடும்பத்திற்கும் விடிவு காலம் பிறக்கும்'' என்று கூறுவார்.
 அவரது கனவை நனவாக்க வேண்டுமென்று ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றபோது தங்க பதக்கத்தை எதிர்பார்த்தே 100 மற்றும் 200 மீட்டர் தொலைவு ஓட்ட பந்தயங்களில் முழு வேகத்துடன் ஓடினேன். ஆனால் இரண்டு போட்டிகளிலுமே இரண்டாவதாக வந்து வெள்ளி பதக்கங்களையே பெற முடிந்தது. அடுத்து ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தங்கப்பதக்கம் பெறுவேன் என்று நம்பிக்கையுடன் கூறி முடித்தார் டூட்டி சந்த்.
 இவரது சாதனையை பாராட்டி ஒடிசா அரசு இவருக்கு 3 கோடி பரிசுத் தொகை வழங்கியுள்ளது. இந்த பணத்தை வைத்து குடும்பத்திற்காக வசதியான வீடு ஒன்றை கட்டி, என் சகோதரர்களுக்கு திருமணம் நடத்தி, பெற்றோர் நிம்மதியாக வாழ வேண்டுமென்பதுதான் என் விருப்பம்'' என்று கூறும் டூட்டி சந்த்தின், பெற்றோரோ தொடர்ந்து தங்கள் குடும்ப தொழிலான நெசவு தொழிலை செய்வதென தீர்மானித்துள்ளனர். இன்று வசதியான வாழ்க்கை கிடைக்கிறது என்பதற்காக எங்கள் பரம்பரை நெசவு தொழிலை விட்டுவிட முடியாது என்கிறார்கள்.
 டூட்டி சந்தின் சாதனை இத்துடன் முடிந்து விடவில்லை. ஏற்கெனவே ஹாக்கி விளையாட்டு வீரர் தன்ராஜ் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதிய பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளருமான சந்தீப் மிஸ்ரா, இப்போது டூட்டி சந்த்தின் வாழ்க்கை வரலாற்றை "ஸ்டோரி úஸô பார்' என்ற தலைப்பில் எழுதி வருகிறார். இந்தப் புத்தகம் அடுத்த ஆண்டு அமேசான் நிர்வாகத்தின் கீழ் உள்ள வெஸ்ட்லாண்ட் பதிப்பகம் மூலம் வெளியாக உள்ளது.
 - பூர்ணிமா
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/10/w600X390/DYUTHI-CHAND.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/10/தடையை-வென்று-சாதித்தவர்-3017292.html
3017297 வார இதழ்கள் மகளிர்மணி திரைப்படங்களில் வித்தியாசம் காட்டக் கூடாது! DIN DIN Wednesday, October 10, 2018 10:00 AM +0530 "என்னுடைய முந்தைய பல படங்கள் வெற்றியடைந்ததால் ஏற்பட்ட நம்பிக்கைதான், சுயமாக படங்களை தேர்ந்தெடுக்க உதவியது. சினிமாவை பொருத்தவரை கதாநாயகனையோ, கதாநாயகியையோ மையப்படுத்தி எடுத்திருப்பதாக சொல்ல முடியாது. சினிமா என்பது சினிமாதான். ஓர் ஆணையோ, பெண்ணையோ மையப்படுத்துவதில்லை. வரலாற்று படங்கள் இதில் விதிவிலக்கு. சினிமாவில் அனைவரது உழைப்பும் சேர்ந்திருப்பதால் அனைவருக்கும் பங்குண்டு. அதனால் வித்தியாசம் காட்டுவதை நான் விரும்புவதில்லை'' என்று கூறியிருக்கிறார் சோனாக்ஷி சின்கா.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/10/w600X390/ONAKSHI.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/10/திரைப்படங்களில்-வித்தியாசம்-காட்டக்-கூடாது-3017297.html
3017302 வார இதழ்கள் மகளிர்மணி தேசிய பூங்காவின் தூதர் DIN DIN Wednesday, October 10, 2018 10:00 AM +0530 மகாராஷ்டிரா மாநிலத்தில் போரி வாலியில் 103 சதுர கி.மீ. தொலைவுக்கு அமைந்துள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் அபூர்வமான மரங்கள், தாவரங்கள், பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள் உள்ளன. இந்த பூங்காவை சுற்றுலா தலமாக பாதுகாத்துவரும் வனத்துறையினர், சுற்றுலா பயணிகள் இங்கு வரும்போது எதை செய்யலாம், செய்யக் கூடாது என்பதோடு சுற்றுச் சூழலை பாதுகாக்கவும் அறிவுறுத்த பாலிவுட் நடிகை ரவீனா டாண்டனை சிறப்பு தூதுவராக நியமித்துள்ளார். இதன்மூலம் மேலும் சுற்றுலா பயணிகளை கவரவும் வனத்துறை திட்டமிட்டுள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/10/w600X390/RAVEENA.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/10/தேசிய-பூங்காவின்-தூதர்-3017302.html
3017308 வார இதழ்கள் மகளிர்மணி பரிநீதி சோப்ராவுக்கு கிடைத்த வாய்ப்பு DIN DIN Wednesday, October 10, 2018 10:00 AM +0530 அனுராக் பாசு இயக்கத்தில் 2007- ஆம் ஆண்டு வெளியான "லைப் இன் எ மெட்ரோ' படத்தின் தொடர்ச்சியில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற நடிகர் ராஜ்குமார் ராவுடன் நடிக்கும் வாய்ப்பு பரிநீதி சோப்ராவுக்கு (29) கிடைத்திருக்கிறது. "பல்வேறு பிரச்னைகள் கொண்ட ஒன்பது பேர், பொதுவான இடத்தில் சேரும்போது பகிர்ந்து கொள்ளும் ஆறு வித்தியாசமான கதைகளை கொண்ட "லைப் இன் எ மெட்ரோ'வின் இரண்டாவது பாகத்தில் நடிப்பதோடு, அனுராக் பாசு இயக்கத்தில் நடிக்க வேண்டுமென்ற என் ஆசையும் நிறைவேறியது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்கிறார் பரிநீதி சோப்ரா.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/10/w600X390/pac.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/10/பரிநீதி-சோப்ராவுக்கு-கிடைத்த-வாய்ப்பு-3017308.html
3017312 வார இதழ்கள் மகளிர்மணி கன்னட படத்தில் சுஹாசினி DIN DIN Wednesday, October 10, 2018 10:00 AM +0530 தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண், ரேவதி நடித்து வெளியான "ப.பாண்டி' படம் கன்னடத்தில் "அம்பி நிங்கே வயசாயித்தா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இதில் ராஜ்கிரண் பாத்திரத்தில் அம்பரீஷ் நடிக்க, ஏற்கெனவே பல கன்னட படங்ககளில் நடித்து பிரபலமாகியுள்ள சுஹாசினி மணிரத்னம், சிறிது இடைவெளிக்குப் பின் ரேவதி பாத்திரத்தில் நடித்துள்ளார். "80- ஆம் ஆண்டுகளில் பெங்களூரில் வளர்ந்த எனக்கு சிறு நகரங்களிலிருந்து இங்கு வரும் இளம் பெண்கள் நகர வாழ்க்கைக்கு ஏற்ப வாழ்வதோடு, அவர்கள் செய்யும் மானரிசம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது'' என்கிறார் சுஹாசினி
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/10/w600X390/suha.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/10/கன்னட-படத்தில்-சுஹாசினி-3017312.html
3017313 வார இதழ்கள் மகளிர்மணி திருமணத்தை அறிவித்தார் சாய்னா DIN DIN Wednesday, October 10, 2018 10:00 AM +0530 விளையாட்டுத் துறையில் பிரபலமான ஆண்களும், பெண்களும் அதே துறையில் உள்ளவர்களை திருமணம் செய்வது சகஜமாகிவிட்டது. இந்த வரிசையில் இந்திய பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் (26) பாட்மின்டன் வீரர் பாருபள்ளி காஷ்யப் (32) திருமணம் முடிவாகியிருக்கிறது. டிச.16-ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. "2005-ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் புல்லேலா கோபிசந்திடம் நான் பயிற்சி பெறும்போது காஷ்யப்பும் அவரிடம் பயிற்சி பெற வந்தார். 2012-ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகளின்போது இருவருமே தேர்வு செய்து அனுப்பப்பட்டோம். அப்போது எங்களுக்குள் மலர்ந்த காதல், இப்போது இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளும் முடிவை கண்டுள்ளது'' என்று சாய்னா தெரிவித்திருக்கிறார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/10/w600X390/saina.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/10/திருமணத்தை-அறிவித்தார்-சாய்னா-3017313.html
3017317 வார இதழ்கள் மகளிர்மணி நான் நடிகையாவேன் என்று நினைக்கவே இல்லை DIN DIN Wednesday, October 10, 2018 10:00 AM +0530 முதலில் என்னை மணிரத்னம் சார் அழைத்தபோது, "உனக்கு தமிழ் தெரியுமா?'' என்று கேட்டார். ""நான் குடகு மாவட்டத்தை சேர்ந்தவள் என்பதால் தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகள் தெரியும் என்றேன். என்னுடைய நிறமும், உயரமும் சினிமாவுக்கு பொருந்துமா என்று நினைத்தேன். ஆனால் சிம்புவுக்கு ஜோடியாக என்னை "செக்க சிவந்த வானம்' படத்தில் நடிக்க வைத்தபோது நான் நடிகை ஆவேன் என்று நினைக்கவே இல்லை. என்னுடன் நடித்த சிம்பு, தன்னை ஒரு சீனியர் என்று நினைக்காமல் எனக்கு நடிப்பை சொல்லி கொடுத்தார்'' என்று கூறும் டயானா ஈரப்பா, மணிரத்னம் சார் மூலம் அறிமுகமாவதை பெருமையாக கருதுகிறார்.
 - அருண்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/10/w600X390/de.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/10/நான்-நடிகையாவேன்-என்று-நினைக்கவே-இல்லை-3017317.html
3017356 வார இதழ்கள் மகளிர்மணி பாடி ஸ்பிரேயினால் ஆபத்தா? Wednesday, October 10, 2018 10:00 AM +0530 பெண்களுக்கு இயற்கையாகவே , தான் தனியாகத் தெரிய வேண்டும் என்கிற எண்ணம் உண்டு. அதனால், அவர்கள் உடுத்தும் உடையிலிருந்து பயன்படுத்தும் உதட்டு சாயம் வரை தனித்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்களின் அலங்கார வஸ்துக்களைத் தவிர இன்றைய நாட்களில் அதிமாக பெண்களால் உபயோகப் படுத்தப்படும் இன்னுமொரு வஸ்து பாடி ஸ்பிரே.
 நம் உடலில் இருந்து கழிவுகள் வியர்வை மூலமாகவும் வெளியேறுகிறது என்பதை நாம் எல்லோருமே அறிவோம். இது இயற்கை நமக்குத் தந்த ஒரு வரப்பிரசாதம். பொது இடங்களுக்குப் போகும் போது சுற்றி இருப்பவர்களுக்கு முகச் சுளிப்பை ஏற்படுத்தும் படி வியர்வை துர்நாற்றம் வீசுமோ என பயந்து பலரும், அக்குள் பகுதிகளில், டியோடரண்ட் மற்றும் பாடி ஸ்பிரேயைப் பயன்படுத்துகிறார்கள்.
 வியர்வையைக் கட்டுப்படுத்த டியோடரண்டும், மேனியிலிருந்து நறுமணம் வீசுவதற்காக பாடி ஸ்பிரேயையும் உபயோகப் படுத்துகிறார்கள். ஒரு பெண்ணானவள் சராசரியாக ஒருநாளைக்கு நூற்று அறுபத்து எட்டு வஸ்துக்களை மேனியில் உபயோகப் படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன (சோப்பு முதல் தலை டை வரை).
 ஆண்கள், டியோடரண்ட் மற்றும் பாடி ஸ்பிரே உபயோகப் படுத்துவதால் அதிக பாதிப்பிற்கு உள்ளாவது இல்லை. ஆனால் அவற்றையே பெண்கள் உபயோகப்படுத்தும் போது, அவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
 பெண்கள் பாடி ஸ்பிரேயை அக்குள் பகுதிகளில் பாய்ச்சிக்கொள்ளும்போது, அதில் இருக்கும் நஞ்சுப் பொருளான அலுமினியம் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவை, அக்குள் மூலமாக மார்பகங்களை எளிதில் அடைந்து விடுகின்றன. அலுமினியமானது மார்பகத் திசுக்களுடன் வினை புரிந்து சிஸ்டிக் என்னும் திரவத்தினை அதிகமாக்குகிறது. டியோடரண்ட்டில் உள்ள ட்ரிக்ளோசன் என்னும் பொருளும் நச்சுத்தன்மையை கூட்டுகிறது. ரசாயனங்களில் இருக்கும் "பாரபின்' என்னும் பொருளும் பெண்களின் ஈஸ்ட்ரோஜென்னில் சேர்ந்து மார்பகங்களில் கட்டியை உண்டாக்குகிறது.
 இவைகளைத் தொடர்ந்து உபயோகித்து வந்தால், பெண்களுக்கு,மார்பகப் புற்று நோய் விரைவில் வந்து விடும் என்று மருத்துவ ஆராய்ச்சியில் கூறப்படுகிறது. நம் உடலில் இருக்கும் உறுப்புகளிலேயே மிகப் பெரிய உறுப்பு தோல்தான். தோலில் தங்கும் நச்சுத் தன்மை வியர்வைத் துவாரங்கள் வழியே இருபத்தாறு செகண்டுகளில் நம்முடைய இரத்த ஓட்டத்தில் கலந்து விடுகிறது.
 சமீபமாக, டியோடரண்ட் உபயோகப் படுத்திக்கொண்டிருந்த பெண்கள், உபயோகித்து நிறுத்திய பெண்கள் இருவரிடமும் அக்குளில் ஆராய்ச்சி செய்யப்பட்டதாம். உபயோகப்படுத்திக்கொண்டிருந்த பெண்களிடம் மிகக் குறைந்த அளவே பாக்டீரியா காணப்பட்டதாம். உபயோகித்து நிறுத்திய பெண்களிடம் அதிக அளவு பாக்டீரியா காணப்பட்டதாம். சரி , குறைவாக இருந்தால் நல்லதா? அதிமாக இருந்தால் நல்லதா ? என்று யோசனை செய்ய வேண்டாம். நம் உடலுக்கு நன்மை செய்யும் அதாவது நச்சுத் தன்மையை தோலுக்கு உள்ளே விடாமல் அரணாக இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் அதிக அளவில் இருப்பதே உடலுக்கு ஆரோக்கியம். ஆகையால், பெண்களே! இயற்கையாக வெளியேறும் வியர்வையை தடை செய்யாதீர்கள். வம்பை விலை கொடுத்து வாங்கி ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். ஒரு வருடத்தில் சுமார் நாற்பத்து இரண்டாயிரம் பெண்கள் மார்பகப் புற்று நோயினால் தாக்கப்படுகிறார்களாம் எனவே உஷாராக இருங்கள்.
 - மாலதி சந்திரசேகரன்
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/10/w600X390/BODY-SPRAY.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/10/பாடி-ஸ்பிரேயினால்-ஆபத்தா-3017356.html
3017363 வார இதழ்கள் மகளிர்மணி இரும்புப் பெண்மணி DIN DIN Wednesday, October 10, 2018 10:00 AM +0530 மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து நான்கு படங்கள் தயாராகின்றன என்ற செய்திகள் வந்தாலும், யார் "ஜெ'யாக நடிப்பார்கள் என்ற செய்தி வெளிவரவில்லை. 
இயக்குநர் மிஸ்க்கினின் உதவியாளராக இருந்த பிரியதர்ஷினி "ஜெ' வாழ்க்கையை "இரும்புப் பெண்மணி' (THE IRON  LADY) என்ற பெயரில் இயக்குகிறார். பிரியதர்ஷினி நடிகை நித்யா மேனனை "ஜெ'யாக நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார். ஒப்பனை மூலம், "ஜெ'யின் சாயலை நித்யா மேனனிடம் கொண்டு வர முடியும் என்று நம்புகிறார். சசிகலாவாக சரத்குமார் மகள் வரலட்சுமியை ஒப்பந்தம் செய்யவும் பிரியதர்ஷினி முடிவு செய்துள்ளார். வரலக்ஷ்மி படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றிருப்பதால் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லையாம். எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பவர் குறித்து இன்னமும் தீர்மானமாகவில்லை.
- பனுஜா 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/10/w600X390/nm.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/10/இரும்புப்-பெண்மணி-3017363.html
3017377 வார இதழ்கள் மகளிர்மணி பன்னாட்டு நிதியத்தில் முதல் இந்திய பெண்மணி! DIN DIN Wednesday, October 10, 2018 10:00 AM +0530 "கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்று சொல்வதுண்டு. அது கீதா கோபிநாத்திற்கு அற்புதமாகப் பொருந்துகிறது. International  Monetary  Fund (IMF ) என்று அழைக்கப்படும் பன்னாட்டு நிதியத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இந்தியாவைச் சேர்ந்த கீதா கோபிநாத் நியமனம் பெற்றுள்ளார். ஆளுநர் ரகுராம் ராஜன் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராகக் நியமிக்கப்படும் வரை பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக பணி புரிந்துவந்தார். ரகுராம் ராஜனுக்குப் பிறகு, இந்த பதவியில் அமரும் இரண்டாவது இந்தியர் கீதா கோபிநாத். பன்னாட்டு நிதியத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக பணி புரிந்துவரும் மவுரீஸ் ஆப்ஸ்பீல்டின் பதவிக் காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. புதிய பொறுப்பினை, கீதா புத்தாண்டின் முதல் நாளில் ( 2019 ஜனவரி ஒன்று) பொறுப்பேற்க உள்ளார்.
பினராயி விஜயன் கேரளா முதல்வராக 2016 -இல் பொறுப்பேற்றுக் கொண்டதும் கீதா கோபிநாத்தை கேரள மாநிலத்தின் நிதி ஆலோசகராக நியமித்தார். தாராளமயமாக்கல் பொருளாதார கொள்கைகளை ஆதரிக்கும், கீதா கோபிநாத்தை "கம்யூனிச அரசின் நிதியாலோசகராக எப்படி நியமிக்கலாம்' என்ற சர்ச்சையும் உடன் கேரளத்தில் அரசுக்குள், கட்சிக்குள் , எழுந்தன. "இந்தப் பதவி கெüரவப் பதவி. கேரளத்தின் மகளான கீதாவின் பொருளாதார புலமைக்கு ஒரு அங்கீகாரம். இந்தப் பதவிக்கு சம்பளம் ஏதும் இல்லை. தவிர... கேரள அரசின் தினசரி நிதி நடவடிக்கைகளில் கீதாவின் ஆலோசனை ஏதும் கேட்டுப் பெறும் அவசியம் இருக்காது' என்று சமாதானங்கள் சொல்லப்பட்டதால் எதிர்ப்புகள் விலகிப் போயின. ஃபெடரல் ரிசர்வ் பேங்க் ஆப் பாஸ்டன், 
ஃபெடரல் ரிசர்வ் பேங்க் ஆப் நியூயார்க் வங்கிகளின் பொருளாதார ஆலோசனை குழுவிலும் கீதா உறுப்பினர். 
ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச கல்வி மற்றும் பொருளாதாரத் துறையில் பேராசிரியராக பணியாற்றி வரும் கீதா, சர்வதேச தரத்தில் வெளிவரும் பொருளாதார இதழ் ஒன்றின் இணை ஆசிரியராகவும் இருப்பதுடன், சுமார் நாற்பதிற்கும் மேற்பட்ட பொருளாதார ஆய்வு கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவைதான் கீதாவை சர்வதேச அரங்கில் பொருளாதார வல்லுநராக கட்டமைப்பு செய்துள்ளன.
வேளாண்மையில் ஈடுபட்டு, மைசூரில் "உழவர்களின் நண்பன்' என்ற அமைப்பிற்குப் பொறுப்பாளராக இருக்கும் டி.வி. கோபிநாத் தனது இரண்டாவது மகளான கீதா குறித்து மனம் திறக்கிறார்: 
""கீதாவுக்கு கிடைத்திருக்கும் பெருமைகள் அனைத்தும் கீதாவின் கடின உழைப்பிற்கு கிடைத்திருக்கும் அங்கீகாரங்கள். எங்களுக்கு பூர்வீகம் கேரளம் என்றாலும், கீதா பிறந்தது கொல்கத்தாவில். ஒன்பதாண்டு வாசத்திற்குப் பிறகு கொல்கத்தாவிலிருந்து மைசூருக்கு குடியேறினோம். பிறகு சில ஆண்டுகள் டில்லியில் வாசம். கீதாவின் பள்ளிப்படிப்பு மைசூரில்தான் நடந்தது. ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பதற்காக டில்லி ஸ்ரீராம் பெண்கள் கல்லூரியில் படிக்க வைத்தேன். புதுமுக வகுப்புவரை அறிவியல் பாடங்கள் படித்த கீதா, கல்லூரியில் பொருளாதாரம் படித்தார். பொருளாதாரத்தில் பிஏ ஹானர்ஸ் பட்டம் பெற்ற பிறகு. டில்லி ஸ்கூல் ஆஃப் எகானாமிக்ஸில் பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டம். பிறகு அமெரிக்காவில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம். டில்லியில் உடன் படித்த இக்பால் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இக்பால் 1996 -இல் இந்தியாவில் ஐஏஎஸ் தேர்வில் முதலாவதாக வந்தவர். தமிழ்நாடு கேடரைச் சேர்ந்தவர். சில ஆண்டுகளில் பதவியை ராஜினாமா செய்து விட்டு, அமெரிக்காவில் நிதியம் ஒன்றில் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். கீதா- இக்பால் தம்பதிக்கு ரோஹில் என்ற மகன். பதினைந்து வயதாகிறது.
பள்ளியில் ஓட்டத்தில் கீதாவுக்கு ஈடுபாடு இருந்தது. ஆனால், ஓட்டத்தில் சாதனை புரிவது தன்னால் முடியாத விஷயம் என்று சரியாகத் தீர்மானித்த கீதா படிப்பில் முழு கவனத்தை குவித்தவர். தான் இந்தியக் கல்வி
முறையின் தயாரிப்பு என்று கீதா பெருமை கொள்பவர்'' என்கிறார் கோபிநாத் . 
"இந்தியாவின் முதல் நிதி, நாணயம், பொருளாதார நெருக்கடி பெரிய அளவில் ஏற்பட்டது 1991-இல். அப்போது பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தேன். அந்தப் பிரச்னைதான் என்னைப் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற ஊக்குவித்தது. தொடர்ந்து முனைவர் பட்டத்திற்காக வெளிநாடு போகவும் வைத்தது'' என்கிறார் கீதா.
சர்வதேச அளவில் பிரபலமான கல்வி நிறுவனங்களில் பெண்கள் பேராசிரியர்களாகப் போதுமான அளவில் செயல்படுகிறார்களா என்ற கேள்விக்கு கீதாவின் பதில் என்ன தெரியுமா? 
"சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை. நான் பணி புரியும் ஹார்வர்ட் கல்வி நிறுவனத்தில் கூட சுமார் நாற்பது கல்வித் துறைகள் இருக்கின்றன. அதில் மூன்று பெண்கள்மட்டும்தான் உயர் பதவியில் உள்ளனர். அந்த மூன்று பேரில் நானும் ஒருத்தி. குடும்ப சுமை பெண்களைப் பலவகைகளில் தடுக்கிறது. அதனால்தான் பல முன்னணிப் பதவிகளுக்குப் பெண்கள் வர முடிவதில்லை. குடும்பம் பெண்களுக்கு ஒரு சவால்தான். நல்லவேளை, என்னைப் பலப்படுத்தவும், எனக்கு உதவி செய்யவும் கணவர் இருக்கிறார். 
"நோபல் விருதுபெற்ற அமர்த்யா சென்னுக்குப் பிறகு ஹார்வர்ட் பொருளாதாரத் துறையில் இரண்டாவதாகப் பணி புரியும் வாய்ப்பு உங்களுக்கு மட்டும்தானே கிடைத்திருக்கிறது' என்று பலர் பாராட்டுகிறார்கள். அதில் ஒரு திருத்தம் உள்ளது. அந்த வாய்ப்பினைப் பெற்றிருக்கும் முதல் இந்தியப் பெண் நான்தான். ஆனால் இரண்டாவது இந்தியர் அல்ல. ஏற்கெனவே இரண்டு இந்திய ஆண் பேராசிரியர்களுக்கு அது மாதிரியான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என்ன.. அவர்கள் இந்தியர்கள் என்றாலும் முழுக்க முழுக்க படித்தது அமெரிக்காவில். நான் அமர்த்யா சென்னைப் போல ஒரு இந்தியக் கல்விமுறையின் தயாரிப்பு.. இங்கு படித்துவிட்டு ஹார்வர்ட் சென்றவள். அது அத்தனை எளிதல்ல. இந்தியாவில் பொதுவாக ஒரு எண்ணம் உள்ளது. குழந்தைகள் வளரும்போது பெற்றோர், உறவினர் கண் முன் நிற்பது "பொறியியல் படிக்க அனுப்பலாமா... இல்லை .. டாக்டருக்கு படிக்க வைக்கலாமா..' என்றுதான். பொருளாதாரம் படிக்கச்சொல்லத் தோன்றுவதில்லை... ஆனால் என் அப்பா என்னை பொருளாதாரம் படிக்கச் சொன்னார். அப்பா என்னை ஐஏஎஸ் அதிகாரியாக்க விரும்பினார். நான் அரசு நிர்வாகத்தில் அக்கறை காட்டாமல், பொருளாதாரத் தத்துவங்களுடன் நெருங்கிய தோழமை கொண்டுவிட்டேன்' என்கிறார் கீதா. 
சர்வதேச அரங்கில் 45 வயதுக்கு கீழ் மிகச்சிறந்த இருபத்தைந்து பொருளாதார நிபுணர்களில் ஒருவராக 2014-இல் தேர்ந்தெடுக்கப்பட்ட கீதா, அந்த இருபத்திநான்கு பேரையும் முந்திக் கொண்டு நாற்பத்தாறாம் வயதில் பன்னாட்டு நிதியத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக உயர்ந்திருக்கிறார் என்பதே ஒரு இமாலய சாதனைதான்.
- பிஸ்மி பரிணாமன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/10/w600X390/GITAGOPINATH.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/10/பன்னாட்டு-நிதியத்தில்-முதல்-இந்திய-பெண்மணி-3017377.html
3017379 வார இதழ்கள் மகளிர்மணி இல்லத்தரசியும் தொழில் முனைவோர் ஆகலாம்-27 DIN DIN Wednesday, October 10, 2018 10:00 AM +0530 "இதுவரை நீங்கள் பிசினஸ் எதுவும் செய்ய வில்லையா? பரவாயில்லை, இதோ உங்களுக்காக ஒரு ஐடியா, தற்போது தீபாவளி நேரம் நெருங்கி வருவதால், தீபாவளி பலகாரங்கள் செய்வதற்கான ரெடிமிக்ஸ்களை தயாரித்து விற்பனை செய்யலாம். நல்ல வரவேற்பு கிடைக்கும்'' என்கிறார் சுய தொழில் ஆலோசகர் உமாராஜ்:
 ரெடிமேட் அதிரச மாவு: அதிரசத்திற்கு பாகு நன்றாக எடுக்க வருபவர்கள், ரெடிமேட் அதிரச மாவு தயார் செய்து விற்பனை செய்யலாம். வேண்டியவர்கள் அந்த மாவை வாங்கி அதிரசம் செய்து கொள்வார்கள். இந்த மாவு 3 மாதம் வரை கெட்டுப் போகாது. இதனால் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
 குலாப் ஜாமூன் மிக்ஸ்: இதற்கு பால் பவுடர் 500 கிராம் , ரவை 150 கிராம், மைதா250 கிராம், உப்பு 1 சிட்டிகை, சமையல் சோடா 15 கிராம் தேவை. முதலில் நன்றாக அரைத்த ரவையுடன் மற்ற பொருள்களைச் சேர்த்து கலந்தால் குலாப் ஜாமூன் மிக்ஸ் தயார். இதனை பேக் செய்து விற்பனை செய்யலாம்.
 முறுக்கு மாவு மிக்ஸ்: இதற்கு பச்சரிசி 3 கிண்ணம், புழுங்கல் அரிசி 1 கிண்ணம், உளுந்து 1 கிண்ணம் தேவை. பச்சரிசியை ஊற வைத்து பின் வடிகட்டி காயவிட்டு மிஷினில் அரைத்து கொள்ளவும். புழுங்கல் அரிசியை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். உளுந்தையும் லேசாக வறுத்துக் கொள்ளவும். பின் இவற்றையும் மிஷினில் தனித்தனியே அரைத்துக் கொள்ளவும். பின்னர், அனைத்து மாவையும் சலித்து ஆறவிட்டு ஒன்றாக கலந்து பேக் செய்யவும். இதில் அவரவர் தேவைக்கேற்றவாறு எள், வெண்ணெய் சேர்த்து தயார் செய்து கொள்ளலாம்.
 இது போன்ற ரெடிமிக்ஸ் பவுடர், மசாலா பொடி , மூலிகை மசாலா பொடிகள் தயாரிப்புகள் எங்கள் பயிற்சி மையங்களில் அவ்வப்போது நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
 - ஸ்ரீ
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/10/w600X390/umaraj.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/10/இல்லத்தரசியும்-தொழில்-முனைவோர்-ஆகலாம்-27-3017379.html
3017380 வார இதழ்கள் மகளிர்மணி எனக்கு நான் அழகிதான்! DIN DIN Wednesday, October 10, 2018 10:00 AM +0530 நிறம் பெண்களுக்கு மிக முக்கிய விஷயமாகக் கருதப்படும் இந்தியாவில், தமிழ்நாட்டில், சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ரம்யாவுக்கு நடந்தது என்ன... என்று தெரிந்தால் பதறிப்போவார்கள். "விடில்கோ' என்பது உடலின் நிறம் ஒரே மாதிரியாக அமையாமல் இருப்பது. அந்த நிற வேற்றுமை, பலரையும் அந்நியப்படுத்தும். ரம்யாவைக் கண்டதும் பெண்கள் உட்பட, பலர் விலகிச் சென்றதற்கு காரணம் இந்த நிற வேற்றுமையைப் பரிசாகத் தந்த "விடில்கோ'. ரம்யா பிறக்கும் போது அவரது நிறம் ஒன்றுபோலத்தான் இருந்தது. மருத்துவரின் தவறான சிகிச்சையால், ரம்யாவின் வாழ்க்கை பகடைக்காயாக மாறிவிட்டது. தோலின் நிறம் ஆங்காங்கே மாறி பயமுறுத்தியது. இது குறித்து ரம்யா ஜே கிரிஸ்டினா விளக்குகிறார்:
 
 "உணவில் ஒவ்வாமை எனக்கு உண்டு. அசைவ உணவு எனக்கு ஒத்துக் கொள்ளாது. முட்டையை சாப்பிட்டால் கூட உடலில் கொப்புளங்கள் வரும். இந்த ஒவ்வாமைப் பிரச்னையால் அவதிப்படும் என்னைப் பார்த்துப் பரிதவித்துப் போன அம்மா எனது மூன்றாவது வயதில் பிரபல மருத்துவர் ஒருவரிடம் கொண்டு சென்றார். அவர் மூத்த மருத்துவர். அவர் தந்த மருந்தினால் கொப்புளங்கள் வருவது நின்றுவிட்டது. ஆனால் பிரச்னையே அந்த மருந்து எடுத்துக் கொண்ட பிறகுதான் தொடங்கியது. தொடக்கத்தில் கண்களை சுற்றி வெண்ணிற படலங்கள் தோன்றின. டாக்டர் அளித்த மருந்தின் அளவு கூடிப் போனதால், தோலின் இயற்கையான நிறம் பாதிக்கப்பட்டு தோலின் நிறத்தில் மாற்றங்கள் தலை தூக்கின. சில ஆண்டுகளில் நிற மாற்றங்கள் உடல் முழுவதும் பரவிவிட்டன.
 இதனால் எனது குழந்தைப் பருவம் பள்ளி, கல்லூரி, காலங்கள் மிகவும் கசப்பாக அமைந்தன. எனக்கு தோழி என்றோ, நண்பன் என்றோ சொல்லிக் கொள்ள யாரும் அமையவில்லை. வகுப்பில் எனது அருகில் யாரும் அமரவே மாட்டார்கள். நரகத்தில் இருப்பதாகவே உணர்ந்தேன்.
 எனக்கு மட்டுமல்ல.. என்னுடன் பிறந்த இருவருக்கும் அம்மாதான் எல்லாம். அப்பா எனது சிறு வயதிலேயே பிரிந்து போய் விட்டார். ஒரு அம்மாவாக எனது தோல் பிரச்னைக்கு அனைத்து வகை மருத்துவமும் செலவைப் பார்க்காமல் செய்து பார்த்தார். கை மருந்து, நாட்டு மருந்து, களிம்பு இத்யாதி என்று உடலில் தேய்த்துக் கொண்டு மணிக்கணக்கில் நிற்க வேண்டும். இத்தனை மருந்துகள் உட்கொண்டும், எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை.
 எனக்கு இருபது வயதானபோது ஒரு முடிவெடுத்தேன். "இனி எந்த சிகிச்சையும் வேண்டாம்' என்று உறுதியாக அம்மாவிடம் சொன்னேன். பலவகை மருந்துகளை உட்கொண்டதால் பின்விளைவுகள் தோன்றி உடல் நலத்தைச் சிதைத்தன. உண்ட உணவை செரிக்கும் திறனை உள்ளுறுப்புகள் இழந்தன. வயிற்று வலியும் வர ஆரம்பித்தன. உணவு என்றாலே அச்சப்பட வேண்டிவந்தது. பசியென்று சாப்பிட்டு வைத்தால் அதற்குப் பின் வரும் அவஸ்தைகளையும் நான் அனுபவிக்க வேண்டிவந்தது.
 உறவினர்கள் கூட என்னை வர வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள். நானும் அம்மாவும் சோகத்தை துயரத்தை வேதனையை அழுது அழுது தீர்ப்போம்... பஸ்ஸில் பயணிக்கும் போதும், யாரும் அருகில் அமர மாட்டார்கள். இந்த உதாசீனங்கள் என்னை அணுஅணுவாக சித்திரவதை செய்தன. இவற்றை சகித்துக் கொண்டு, வாழத்தான் வேண்டுமா என்று கூட நினைத்திருக்கிறேன். திடீரென்று எண்ணத்தில் ஒரு திருப்பம் மின்னலாகத் தோன்றி வழி காட்டியது. அவர்கள் முன் வாழ்ந்து காட்டுவோம் என்று தீர்மானித்தேன். அதன்படி எனது பாதையை மாற்றிக்கொண்டேன். "நான் இப்படித்தான்' என்று நிச்சயித்துக் கொண்டேன். எனக்காகவும், என்னைப் போல் ஒதுக்கப்பட்டவர்களுக்காகவும் வாழ தீர்மானித்தேன். நம்பிக்கை தரும் பேச்சாளராக மாறியுள்ளேன். பலருக்கு உந்துதல் தரும், நம்பிக்கை தரும் சக்தியாக உருவெடுத்துள்ளேன். ஒப்பனை செய்து எனது நிற மாற்றத்தை மறைக்க விரும்பவில்லை. நிற வேறுபாடுகள் இருந்தாலும் எனக்கு நான் அழகிதான். விஷூவல் கம்யூனிகேஷனில் பட்டப்படிப்பினை முடித்து விட்டு அந்தத் துறையில் உதவி இயக்குநராக மாறியிருக்கிறேன். நிச்சயம் இயக்குநராகிக் காட்டுவேன். சமூகம் என்னை வெறுக்கட்டும்... விலக்கட்டும். பதிலுக்கு நான் சமூகத்தை நேசிக்கிறேன். எல்லாவற்றையும் விட என்னை நான் அதிகமாக நேசிக்கிறேன்'' என்கிறார் ரம்யா ஜே கிரிஸ்டினா.
 - கண்ணம்மா பாரதி
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/10/w600X390/RAMYAA.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/10/எனக்கு-நான்-அழகிதான்-3017380.html
3017383 வார இதழ்கள் மகளிர்மணி சுண்டல் டிப்ஸ்! DIN DIN Wednesday, October 10, 2018 10:00 AM +0530 • சுண்டலுக்கான கொண்டைக் கடலையை ஊற வைத்த பின்பு வெயிலில் ஒரு மணி நேரம் வைத்துவிட்டு பிறகு வேக வைத்தால் சுண்டல் சுருக்கமின்றி பெரிது பெரிதாக இருக்கும்.

• சுண்டலுக்கு தேங்காய்த் துருவலை சற்றுவறுத்துப் போட்டால் கெடாது. கொப்பரைத் துருவலையும் போடலாம். இட்லி மிளகாய்ப் பொடி தூவினாலும் சுவையாக இருக்கும்.

• சுண்டலில் கேரட், பீட்ரூட் துருவல் சேர்த்தால் நிறம் அழகாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.

• சுண்டலுக்கு கடலையை ஊற வைக்கும்போது சிறிது சமையல் சோடாவை சேர்த்து கழுவி விட்டு வேறுநீரில் ஊற வைத்தால் விரைவில் வெந்துவிடும்.

• கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு சுண்டல் செய்ய முன்பே ஊற வைக்க வேண்டாம்.

• அவலை வறுத்துப் பொடித்து சர்க்கரைப் பொடி ஏலக்காய்ப் பொடி கலந்து நெய் விட்டுப் பிசைந்து உருண்டைகள் பிடித்து நவராத்திரி தேவிகளுக்கு நைவேத்யம் செய்யலாம்.

• கடலைப் பருப்பை ஊற வைத்து சுண்டல் செய்து கீழே இறக்கும்போது சர்க்கரையை தூவி கலந்து இறக்கினால் ஜோராக இருக்கும்.

• முழு கடலையை சுண்டல் செய்யும் போது மேலே மசால் பொடியைத் தூவி கலந்து கிளறி இறக்கினால் சுவையாக இருக்கும்.

• பச்சைப் பயறை வேக வைத்து வெல்லப் பாகு வைத்து அதில் கலந்து இனிப்புச் சுண்டலும் செய்யலாம். காரச் சுண்டல் செய்தால் பெருங்காயம் தூவி செய்தால் வாய்வு வராது.

• வேர்க்கடலையைச் சுண்டல் செய்யும்போது மாங்காயையும், காரட்டையும் துருவி சேர்த்து குடமிளகாய் துருவி கலந்தால் சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.

• எல்லாச் சுண்டலுக்குமே பொடி உப்பு தூவி கலந்தால் ஒன்று போல உப்பு சேர்ந்திருக்கும்.

• பாசிப்பருப்பு சுண்டலில் வெல்லத்தை தட்டி மேலே தூவினால் நன்றாக இருக்கும்.
- ஆர். ஜெயலட்சுமி


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/10/w600X390/SUNDAL.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/10/சுண்டல்-டிப்ஸ்-3017383.html
3017384 வார இதழ்கள் மகளிர்மணி சமையல்... சமையல்! Wednesday, October 10, 2018 08:28 AM +0530 ஜவ்வரிசி சுண்டல்

தேவையானவை: 
ஜவ்வரிசி - 1 கிண்ணம்
கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - அரை கிண்ணம்
பாசிபருப்பு - 1 கிண்ணம்
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
எண்ணெய் - 1தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
செய்முறை: ஜவ்வரிசியை லேசாக வறுத்து இரண்டு பங்கு வெந்நீர் ஊற்றி ஊறவிடவும். ஒரு மணி நேரம் கழித்து நீரை வடித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பாசி பருப்பையும் நன்கு ஊற வைத்து எடுத்து கொள்ளவும். பின்னர், வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு தாளிக்கவும். பின்னர், பெருங்காயம், கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், மஞ்சள் தூள் சேர்க்கவும். அத்துடன் ஊற வைத்த பாசிப்பருப்பு, ஜவ்வரிசியை சேர்த்து கிளறவும். பின்னர், அத்துடன் உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறவும். பின்னர், எலுமிச்சைச் சாறு விட்டு கிளறி இறக்கவும். சுவையான ஜவ்வரிசி சுண்டல் தயார். 

பயறு சுண்டல் 

தேவையானவை :
பச்சைப் பயறு - கால் கிலோ
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
தேங்காய்த் துருவல் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சைச் சாறு (விரும்பினால்)
தாளிக்க:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
உளுத்தம் பருப்பு - 1தேக்கரண்டி
பெருங்காயம் - 1சிட்டிகை
கறிவேப்பிலை- சிறது
செய்முறை: பச்சைப் பயறை இரவில் ஊற வைத்து காலையில் காட்டன் துணியில் முடிந்து வைத்துவிட்டால் மாலை அதில் முளை வந்திருக்கும். அதனை குக்கரில் போட்டு 2 விசில் விட்டு எடுக்கவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து, அத்துடன் பச்சை மிளகாய், இஞ்சித் துண்டு சேர்த்து வதக்கவும். பின்னர், வேக வைத்த பயறு, உப்பு சேர்த்து கிளறவும். பின்னர், தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான சத்துமிகுந்த பயறு சுண்டல் தயார். 

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்

தேவையானவை:
காய்ந்த பட்டாணி - ஒரு கிண்ணம்
பொடியாக நறுக்கிய மாங்காய்த் துண்டுகள் - 1 கிண்ணம்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று 
தாளிக்க:
கடுகு- 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
இஞ்சித் துருவல் - சிறிது
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - அரை கிண்ணம்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பட்டாணியை ஊற வைத்து, வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய்யைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் , இஞ்சித் துருவல், மாங்காய்த் துண்டுகள் சேர்த்து தாளிக்கவும். வெந்த பட்டாணி, உப்பு சேர்த்து நன்கு கலந்து, தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் தயார். 

காராமணி இனிப்பு சுண்டல்

தேவையானவை:
காராமணி - ஒரு கிண்ணம்
வெல்லம் - அரை கிண்ணம்
நெய் - 2 தேக்கரண்டி
ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி
செய்முறை: காராமணியை 6 மணி நேரம் ஊறவிட்டு, வேகவிட்டு எடுக்கவும்.
வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி கெட்டிப்பாகு காய்ச்சவும். வாணலியில் நெய்யைச் சூடாக்கி, காராமணியைச் சேர்க்கவும். கூடவே, காய்ச்சிய வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். இறக்குவதற்கு முன் தேங்காய்த் துருவல் தூவி இறக்கவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சுண்டல் இது.

சோயாபீன்ஸ் மசாலா சுண்டல்

தேவையானவை:
வெள்ளை சோயா பீன்ஸ் - ஒரு கிண்ணம்
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
தனியாத்தூள் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை, புதினா - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி 
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: சோயா பீன்ûஸ முதல் நாளே ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய்யைச் சூடாக்கி, பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளித்து... கறிவேப்பிலை, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வேக வைத்த சோயா பீன்ஸ், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். மசாலா நன்கு கலந்தவுடன் புதினா, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறினால், சத்துமிக்க சோயா பீன்ஸ் மசாலா சுண்டல் ரெடி.
- தவநிதி


 

]]>
http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/10/சமையல்-சமையல்-3017384.html
3013137 வார இதழ்கள் மகளிர்மணி அரசியலுக்கு பெண்கள் அதிக அளவில் வரவேண்டும்! Wednesday, October 3, 2018 11:31 AM +0530 இந்திய தொழில் வர்த்தக சபை சம்மேளனத்தின் ( ஃபிக்கி) மகளிர் பிரிவு சார்பில் "அரசியலும் - கவிதையும்' என்ற தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தி.மு.க எம்.பி கனிமொழி பேசியது:
 "பெண்கள் அமைப்போடு, தமிழ்நாடு சேம்பர்ஸ் அமைப்பின் பெண்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர். இதில் கலந்து கொள்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன். பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சுயதொழில் தொடங்குவதற்காகவும் இந்த அமைப்பு நிறைய பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. நாடளவில் பெண்கள் முன்னேறுவதற்கும், தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும், சொந்த காலில் நிற்பவர்களாகவும் அவர்களை மாற்றுவதற்கு இந்த அமைப்பின் பங்கு அளப்பரியது'' என்றார். பார்வையாளர்களின் கேள்விகளில் சில...
 அரசியலும் - கவிதையும் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
 கவிதை என்பது நமக்குள்ளே இருக்கக் கூடிய அரசியலை வெளிப்படுத்தும் வாகனமாகத்தான் நான் பார்க்கிறேன். ஒவ்வொரு கவிதைக்கு பின்னாலயும் ஒ ரு அரசியல் இருக்கத்தான் செய்கிறது. காதல் கவிதைகளில் கூட அதற்கான ஒரு அரசியல் இருக்கத்தான் செய்கிறது. அதனால், அரசியலையும், கவிதைகளையும், கலையையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. அப்படி அரசியல் நீக்கப்பட்ட எந்தவொரு கலை வடிவத்திற்கும் அர்த்தம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
 அரசியலும் - பெண்களும் உங்கள் பார்வையில்?
 எல்லா பொறுப்புகளில் பெண்கள் நிறைய வர வேண்டும் என்பது எனது ஆசை. தற்போது, பெண்கள் ஓரளவு அனைத்து துறைகளிலும் பரவலாக இருக்கிறார்கள். உதாரணமாக பத்திரிகை துறையை எடுத்துக் கொள்ளுங்கள் ஒரு காலகட்டத்தில் பத்திரிகை துறையில் பெண்களே இல்லாத நிலையை நானே பார்த்திருக்கிறேன். அந்த நிலை தற்போது மாறி பத்திரிகை துறையில் பெண்கள் அதிகம் வந்திருப்பதையும் பார்க்கிறேன். ஆனால், அதே சமயம் ஒரு தொலைக்காட்சியின் தலைவராகவோ, எடிட்டராகவோ, பத்திரிகையின் எடிட்டராகவோ பெண்கள் அதிகம் இல்லை. அந்த இடத்திற்கும் பெண்கள் வரவேண்டும். அதுபோலத்தான் அரசியலிலும் பெண்கள் நிறைய வர வேண்டும். கட்சியின் தலைவராகவோ, மாவட்ட செயலாளராகவோ ஆணுக்கு சரிசமமாக பதவிகளிலும், பொறுப்புகளிலும் பெண்கள் வரவேண்டும்.
 இன்றைக்கு பாராளுமன்றங்களிலும், சட்டமன்றங்களிலும் எத்தனை பெண்கள் அரசியலில் பங்காற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். மத்திய காபினெட்டை எடுத்துக் கொள்ளுங்கள், ஒவ்வொரு மாநிலங்களிலும் இருக்கக் கூடிய காபினெட்டையும் எடுத்துக் கொள்ளுங்கள். மாநில முதலமைச்சர்களை எடுத்துக் கொள்ளுங்கள் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள். அரசியல் என்பது, ஒரு நிறுவனத்திற்கு சென்று 8 மணி நேரம் வேலை செய்துவிட்டு வருவதுபோன்ற வேலை இல்லை. அரசியல் என்பது 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டிய வேலை. அதனால் ஒரு பெண் தன்னுடைய நேரத்தையும், தன்னுடைய வாழ்க்கையையும் பல விஷயங்களில் பங்கு போட்டுக் கொள்ள வேண்டியுள்ளது. அந்த சூழல் ஆண்களுக்கு இருப்பதில்லை. அரசியல் என்று வந்துவிட்டால் அவர் முழுமையாக அரசியல்தான் வாழ்க்கை என்று இருப்பார்கள். ஆனால் பெண்கள் என்று எடுத்துக் கொண்டால் பல எதிர்பார்ப்புகள் இருக்கிறது இதையெல்லாம் கடந்து வரக் கூடிய பெண்கள் மிகச் சிலர்தான். அதனால் பெண்கள் அரசியலுக்கு வர தயக்கங்கள் இருக்கிறது. அதையெல்லாம் கடந்து, தடைகளை உடைத்துக் கொண்டுதான் வர வேண்டும்.
 அரசியல் பின்ணனி குடும்பத்தில் பிறந்ததை எப்படி பார்க்கிறீர்கள்?
 நான் பிறக்கும்போதே அரசியல் பின்னணியில் பிறந்ததால், அரசியல் சார்ந்தே வளர்ந்ததால் நார்மலான வாழ்க்கையைப் பற்றி தெரியவில்லை. இப்படி ஒரு குடும்பத்தில், பிரபலமான அப்பாவுக்கு மகளாக பிறந்ததை எண்ணி பெருமைப்படுகிறேன்.

அம்மா - அப்பாவுடனான சிறுவயது நாள்கள் பற்றி?
 அம்மா ரொம்ப கண்டிப்புடன் இருப்பார். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், பள்ளி பருவத்தில் ஸ்கூல் கேன்டீனில் ஏதாவது வாங்கி சாப்பிட வேண்டும் என்று அம்மாவிடம் 5 ரூபாய் கேட்பேன். அதற்கு 100 கேள்விகள் கேட்டுவிட்டு பின்புதான் பணத்தைக் கொடுப்பார். அப்பா ரொம்ப தாராளமானவர். ரொம்ப அன்பாக இருப்பார். எப்போதும் ஏதாவது சரித்திர புத்தகங்களையோ, நாவல்களையோ படித்துக் கொண்டிருப்பது எனது வழக்கமாக இருந்தது.
 பள்ளி, கல்லூரி நாட்களில் நடந்த மறக்க முடியாத நினைவு?
 எத்திராஜ் கல்லூரி படித்துக்கொண்டிருக்கும்போது கட்டுரை போட்டி ஒன்றில் கலந்து கொண்டேன். அதில் என் கட்டுரை பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது. பரிசு பெறுவதற்காக ஆடிட்டோரியத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அமர்ந்திருந்தபோது, திடீரென்று அப்பா ஆடிட்டோரியத்திற்குள் சிறப்பு விருந்தினராக வந்தார். பரிசை வழங்கப் போவது அப்பாதான் என்பது அப்போதுதான் எனக்கு தெரியும். அப்பாவுக்கும் நான் பரிசு பெறப் போகிறேன் என்பது அப்போதுதான் தெரியும். என் பெயரைச் சொல்லி அழைத்தார்கள். நான்மேடைக்குச் சென்றதும் அரங்கத்தில் இருந்தவர்கள் அத்தனை பேரும் சிரித்து ஆரவாரம் செய்ததையும், அப்பா கையில் பரிசு வாங்கியதையும் மறக்க முடியாது.
 உங்களது ரோல் மாடலாக யாரை நினைக்கிறீர்கள்?
 பெரியாரின் புத்தகங்கள்தான் எனது ரோல்மாடல். பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போதுதான் பெரியாரின் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். அவை எனக்குள் பெரிய தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தியது.
 - ஸ்ரீதேவி குமரேசன்
 படங்கள்: அண்ணாமலை
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/3/w600X390/KANI.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/03/அரசியலுக்கு-பெண்கள்-அதிக-அளவில்-வரவேண்டும்-3013137.html
3013139 வார இதழ்கள் மகளிர்மணி கைகள் இல்லாமல் கார் ஓட்டும் பெண்! DIN DIN Wednesday, October 3, 2018 11:29 AM +0530 சொந்தமாகக் கார் வாங்கி ஓட்ட யாருக்குத்தான் ஆசை இருக்காது ? அதுவும் படித்த, வேலை பார்க்கும் இளம் பெண்களுக்கு கார் வாங்கி ஓட்ட வேண்டும் என்ற விருப்பம் இருக்கத்தானே செய்யும். தவிர, கார் வாழ்க்கையின் அத்தியாவசியமாக எப்போதோ ஆகிவிட்டது. அப்படி கார் ஓட்ட விருப்பம் கொண்ட ஜிலு மோள் மரியேட் தாமஸ் பயிற்சிக்குப் பிறகு டிரைவிங் லைசென்ஸ் வாங்க தொடுபுழாவில் இருக்கும் "கேரள சாலை போக்குவரத்து' அலுவலகத்தை 2014-இல் அணுகியபோது "நீங்கள் கார் ஓட்ட லைசென்ஸ் வழங்க முடியாது'' என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
காரணம் ஜிலு மோளுக்கு கைகள் இரண்டும் இல்லாததுதான். ஆம்...பிறவியிலேயே ஜிலு மோளுக்கு இரண்டு கைகளும் இல்லை. தன் இரண்டு கால்களை கரங்களாக்கி தனது கேள்விக் குறியான எதிர்காலத்தை மாற்றி அமைத்திருக்கிறார் ஜிலு மோள். இது குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை:
"பிறவியில் இரண்டு கைகள் இல்லாமல் பிறந்தாலும் அந்த இல்லாமையைப் புரிந்து கொண்டது கொஞ்சம் விவரம் தெரிந்த போதுதான். சக வயது பிள்ளைகளுக்கு இருப்பது என்னிடத்தில் இல்லை என்பதை புரிந்து கொண்டேன். அந்த இல்லாமையை எப்படி வெல்வது என்பதில் பெற்றோர் உதவினார்கள். எல்லாரும் படிப்பது மாதிரி நானும் வழக்கமான பள்ளிக்கூடத்தில்தான் படித்தேன். வலது காலைக் கொண்டு எழுத ஆரம்பித்தேன். ஒவ்வொரு வேலையையும் கால்களால் நானே செய்யக் கற்றுக் கொண்டேன். காலால் ஓவியங்கள் வரைய ஆரம்பித்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. கால்களால் காமிராவைப் பிடித்து படம் பிடிப்பேன். எனக்கு ஓவியம் வரைய பிடிக்கும் என்பதால், பட்டப்படிப்பில் அனிமேஷன் , கிராபிக் டிசைன் படித்தேன். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களையும் பெற்றுள்ளேன். கணினியைக்கூட கால்களால் இயக்குவேன். கொச்சியில் தனியார் நிறுவனம் ஒன்றில் கிராபிக் டிசைனராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு இருபத்தேழு வயதாகிறது. தனியாகத்தான் பயணம் செய்து வருகிறேன். 
எனக்கும் கார் ஓட்ட விருப்பம் வந்தது. "நான் கார் ஓட்டப் பழக வேண்டும்'' என்று சொன்ன போது, சும்மா விளையாட்டுக்குச் சொல்கிறேன் என்று பலரும் நினைத்தார்கள். லைசென்ஸ் வழங்கும் அலுவலகத்தில், "உன்னைப் போல் வேறு யாருக்காவது கார் ஓட்டும் லைசென்ஸ் தரப்பட்டிருந்தால் அந்த விவரத்தைச் சான்றுடன் எங்களுக்குத் தெரிவித்தால்.. நாங்கள் லைசென்ஸ் தர முயலுகிறோம்'' என்றார்கள். இந்தியாவில் என்னைப் போல இரண்டு கைகள் இல்லாத யாருக்காவது கார் ஓட்டும் லைசென்ஸ் வழங்கியுள்ளார்களா என்று வலைதளத்தில் தேடினேன். இந்தோர் நகரில் விக்ரம் அக்னிஹோத்ரி என்பவர் கால்களால் கார் ஓட்டுகிறார் என்பதை அறிந்தேன். வலைத்தளம் மூலம், அவரைத் தொடர்பு கொண்டேன். 
ஆனால் அவரிடமிருந்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. செயற்கைக் கைகளைப் பொருத்திக் கொண்டு கார் ஓட்டலாம் என்று பலர் யோசனை சொன்னார்கள். அதற்கு செலவும் அதிகமாகும். செயற்கைக் கைகளை இயக்கவும் முறையான பயிற்சி பெற காலம் அதிகம் பிடிக்கும் என்பதால் அந்த யோசனையைக் கைவிட்டேன். 
இந்த ஆண்டின் துவக்கத்தில் குமுளியில் ஒரு பள்ளியில் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். அப்போது அந்தப் பள்ளியின் இயக்குநர், "உனது நிறைவேறாத விருப்பம் என்று ஏதாவது உண்டா'' என்று கேட்டார். நான் சட்டென்று " கார் ஓட்டணும்'' என்றேன். உடனே உள்ளூர் அரிமா சங்கத்தைச் சேர்ந்தவர்களிடம் என்னைப் பற்றிச் சொல்ல.. அவர்கள் தேவையான நடவடிக்கை எடுத்தார்கள். காரையும் அன்பளிப்பு செய்தார்கள். ஆனால் கார் ஓட்ட லைசென்ஸ் வேண்டுமே... 
எனது சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. என்னைப் போன்றவர்கள் கார் ஓட்ட சட்டத்தில் இடம் இல்லை. ஆனால், நான் கார் ஓட்டுவதையும், காலால் படம் வரைவதையும் நீதிமன்றத்தில் எடுத்துச் சொல்லி "ஜிலு மோள் சாதாரண பெண் இல்லை.. பலதரப்பட்ட திறமைகள் ஜிலு மோளிடம் உண்டு'' என்பதை விளக்கினார்கள். 
ஆனால் கேரள அரசு தரப்பு வழக்கறிஞர் "சாலையில் இதர பயணிகளின் பாதுகாப்பைக் கணக்கில் எடுத்து ஜிலு மோளுக்கு கார் ஓட்டும் லைசென்ஸ் வழங்கக் கூடாது'' என்று வாதம் செய்தார். பல சுற்று வாதத்திற்குப் பிறகு, ஜிலு கார் ஓட்ட தேவையான மாற்றங்களை காரில் செய்தால் லைசென்ஸ் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று இறங்கி வந்தார்கள். 
"நாங்களும் தேவையான மாற்றங்களை காரில் செய்து கொள்வதாக உறுதி அளித்ததுடன், என்னைப் போல மாற்றுத்திறனாளி பிச்சு எருமேலி என்பவருக்கு வழங்கப்பட்ட லைசென்ûஸயும் கோர்ட்டில் தாக்கல் செய்தோம். அதன் பிறகு எனக்கு லைசென்ஸ் வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 
"நான் ஆட்டோமேட்டிக் காரை கால்களால் ஓட்டிப் பார்த்திருக்கிறேன். ஸ்டீரிங்கை கால்களால் இயக்குவது சிரமமாகத் தெரியவில்லை. லைசென்ஸ் இல்லாததால் காரை சாலையில் ஒட்டவில்லை. எனக்காக பிரத்யேகமாக மாற்றம் செய்யப்படும் கார் தயாரானதும் சாலைகளில் கார் ஓட்ட ஆரம்பிப்பேன். எனது நீண்ட நாள் கனவும் நனவாகும்'' என்கிறார் ஜிலு மோள். லைசென்ஸ் கிடைத்தால், கைகள் இல்லாமல் கார் ஓட்டும் முதல் இந்திய பெண் ஜிலு மோள் என்ற பெருமையைப் பெறுவார்.
- பிஸ்மி பரிணாமன் 


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/3/w600X390/mm7.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/03/கைகள்-இல்லாமல்-கார்-ஓட்டும்-பெண்-3013139.html
3013135 வார இதழ்கள் மகளிர்மணி கை வைத்தியம்! DIN DIN Wednesday, October 3, 2018 11:22 AM +0530 • எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

• கொழு கொழுவென குண்டாக இருப்பவர்களுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு கொடுக்க வேண்டும்.

• எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைத்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

• கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

• தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

• வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.

• வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

• தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
- பா.பரத்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/16/w600X390/kadugu.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/03/கை-வைத்தியம்-3013135.html
3013134 வார இதழ்கள் மகளிர்மணி காய்கறிகளை இப்படி சுத்தப்படுத்தலாம்! DIN DIN Wednesday, October 3, 2018 11:19 AM +0530 நாம் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை விளைவிக்கும் தோட்டங்களில், அவைகளின் விளைச்சலுக்காகவும் அவைகளை பூச்சிகள், வண்டுகள் தாக்காமல் இருக்கவும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, காய்கறிகளை சமைப்பதற்கு முன்னால் எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்று பார்ப்போம்:

• முருங்கைகாய், பீட்ரூட், கேரட் போன்றவைகளை பிரிட்ஜில் வைப்பதற்கு முன்பு பலமுறை தண்ணீரில் கழுவ வேண்டும். பின்னர், ஈரத்தை துடைத்துவிட்டு, காட்டன் துணியில் சுற்றி பிரிட்ஜில் வைக்க வேண்டும். உபயோகிப்பதற்கு முன்பு அவைகளை வெளியே எடுத்து, மேல் தோலை நீக்கிவிட்டு மீண்டும் ஒருமுறை கழுவி பின்னர் பயன்படுத்த வேண்டும்.

• வெண்டைக்காய், கத்தரி, வெள்ளரி, பாகற்காய், சுரைக்காய் போன்றவைகளை மென்மையான பிரஷ் மூலம் லேசாக உரசி பின்னர், தண்ணீரில் கழுவ வேண்டும். சில தடவை தண்ணீரில் அலசிவிட்டு, வினிகர் அல்லது புளி தண்ணீரில் பத்து நிமிடங்கள் அமிழ்த்தி வைத்துவிட்டு பின்பு மீண்டும் கழுவி, துடைத்து பயன்படுத்தலாம். 

• காலிஃபிளவரில் இருக்கும் பூக்களை ஒவ்வொன்றாக பெயர்த்து எடுத்து. அவைகளை வினிகர் அல்லது உப்பு கலந்த நீரில் பத்து நிமிடம் அமிழ்த்தி வைத்து பின்னர் மீண்டும் கழுவி பயன்படுத்தவேண்டும்.

• மிளகாய், குடை மிளகாய், தக்காளி, பீன்ஸ், அவரைக்காய் போன்றவைகளை மேற்கண்ட கலவையில் ஏதாவது ஒன்றில் பத்து நிமிடங்கள் அமிழ்த்தி வைத்திருங்கள். பின்பு பலமுறை கழுவி, இரவு முழுவதும் தண்ணீர் வடியும் பாத்திரத்தில் வையுங்கள். பின்பு அதில் இருக்கும் தண்ணீரை துணியால் துடைத்துவிட்டு பயன்படுத்தலாம்.

• கொத்துமல்லி தழையில் வேர் பகுதியை நீக்கிவிட்டு, சமையலுக்கு பயன்படுத்தும் பகுதியை மட்டும் தனியாக கிள்ளி எடுங்கள். அதை டிஸ்யூ பேப்பரிலோ, காற்று புகத்தகுந்த காட்டன் துணியிலோ சுற்றி, பிளாஸ்டிக் பாத்திரத்தில் கொட்டி பிரிட்ஜில் வைக்கலாம்.
- என். சண்முகம்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/3/w600X390/CAULIFLOWER.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/03/காய்கறிகளை-இப்படி-சுத்தப்படுத்தலாம்-3013134.html
3013133 வார இதழ்கள் மகளிர்மணி உடல் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க! DIN DIN Wednesday, October 3, 2018 11:18 AM +0530 • அதிக உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு உடலில் சுரக்கும் வியர்வையினால் உடலில் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனைப் போக்க...

• அதிக சூடாகவோ, அதிகக் குளிர்ச்சியாகவோ இல்லாத வெதுவெதுப்பான தண்ணீரில், தினம் இரு வேளைகள் கட்டாயம் குளிக்க வேண்டும்.

• நிறமும், மணமும் சேர்க்கப்பட்ட "பாத் சால்ட்' கிடைக்கிறது. அதனை வாங்கிவந்து ஒரு பக்கெட் தண்ணீரில் 1 தேக்கரண்டி பாத் சால்ட் கலந்து குளிக்கலாம். அது முடியாதவர்கள், கொஞ்சம் வேப்பிலையைக் கசக்கிச் சேர்த்து, தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் குளிக்கலாம்.

• டீ ட்ரீ அல்லது லேவண்டர் - இந்த இரண்டில் ஏதேனும் ஓர் அரோமா ஆயிலில் சில துளிகளை பஞ்சில் நனைத்து, வியர்வை அதிகம் சுரக்கும் பகுதிகளில் தேய்த்துக் கொள்ளலாம்.

• அதிக வியர்வை இருந்தால் ஆன்ட்டி பாக்டீரியல் சோப் உபயோகிக்கலாம். குளித்து முடித்ததும், ஈரத்தை நன்கு துடைத்துவிட்டு, ஆன்ட்டி பாக்டீரியல் டஸ்ட்டிங் பவுடர் உபயோகிக்கலாம்.

• உடைகளை வைக்கும் பீரோ மற்றும் அலமாரிகளையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். ஒருமுறை உபயோகித்த உடையை, பின்னர் துவைத்துக் கொள்ளலாம் என்று மற்ற துணிகளோடு சேர்த்து வைக்கக் கூடாது. அதிலுள்ள கிருமிகளும் நாற்றமும் மற்ற உடைகளுக்கும் பரவும்.

• உணவுப் பழக்கம் கூட ஒருவரின் உடல் நாற்றத்துக்குக் காரணமாகலாம். பூண்டு, சில வகை அசைவ உணவுகள், அதிக மசாலா சேர்த்த உணவுகள் காரணமாகலாம். எனவே, பச்சைக் காய்கறிகள், கீரைகள் அதிகம் சாப்பிட வேண்டும். 

• வெட்டிவேரை குளிக்கும் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் குளித்தாலும் உடல் மணக்கும்.

• பட்டைத்தூள் 2 தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சைப் பழம் இரண்டையும் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்தால், நாற்றமும் உடல் வலியும் பறந்து போகும்.

• குளியலுக்கென்றே பாத் ஜெல், பாத் ஃபோம், சோப் கிரிஸ்டல்ஸ் என்று நிறைய கிடைக்கின்றன. நிதானமான குளியலுக்கு இவற்றையெல்லாம் பயன்படுத்தினால் நாற்றமும் மறையும். அழகும் மேம்படும்.

• வினிகர் அல்லது எலுமிச்சைச் சாற்றில் நனைத்த பஞ்சினை அக்குள் பகுதியில் தடவி விட்டு, சிறிது நேரம் கழித்துக் குளித்தால், வியர்வை நாற்றம் கட்டுப்படும். 

• வியர்வை அதிகம் சுரப்பவர்கள். பெரும்பாலும் காட்டன் உடைகள், உள்ளாடைகளையே பயன்படுத்த வேண்டும். 
- தவநிதி


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/3/w600X390/mm6.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/03/உடல்-ஏற்படும்-துர்நாற்றத்தைப்-போக்க-3013133.html
3013131 வார இதழ்கள் மகளிர்மணி சமையல்... சமையல்! Wednesday, October 3, 2018 11:15 AM +0530 முத்தானிய இனிப்பு தோசை

தேவையானவை: 
பச்சரிசி - 150 கிராம்
தினை - 150 கிராம்
உளுந்து - 100 கிராம்
வெல்லம் - அரை கிலோ
முந்திரி பருப்பு விழுது - 3 தேக்கரண்டி
ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி
நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: அரிசி, தினை, உளுந்து மூன்றையும் கலந்து ஐந்து மணி நேரம் ஊற வைத்து எடுத்து, தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். மூன்று மணி நேரத்திற்கு பின்னர், பொடித்த வெல்லம், முந்திரி பருப்பு விழுது, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும். தவாவை அடுப்பில் வைத்து, நன்கு காய்ந்ததும், மாவை ஊற்றி மெல்லிய தோசைகளாகச் சுட்டு எடுக்கவும். இரு பக்கமும் நன்கு வேகும்படி எண்ணெய்யைச் சுற்றி ஊற்றவும். முத்தானிய இனிப்பு தோசை தயார். சுவையும், சத்தும் மிக்கது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.

அவல் கேசரி

தேவையானவை: 
அவல் - 300 கிராம்
சர்க்கரை - 400 கிராம்
நெய் - 50 கிராம்
முந்திரி பருப்பு - 12
உலர் திராட்சை - மூன்று தேக்கரண்டி
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
ஏலக்காய்த் தூள் - அரை தேக்கரண்டி
செய்முறை: முந்திரி பருப்பை சிறு சிறு துண்டுகளாக ஒடித்துக் கொள்ளவும். வாணலியில் ஒன்றிரண்டாக பொடித்த அவலை லேசாக வறுத்துக் கொள்ளவும். முந்திரி பருப்பையும் உலர் திராட்சையையும் சிறிது நெய்யில் வறுத்து, அத்துடன் அவல், போதிய அளவு தண்ணீர் சேர்த்து, வேக வைக்கவும். கால் பதம் வெந்ததும், சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கிளறி கொடுக்க வேண்டும். கேசரிப் பவுடரை சிறிது நீரில் கரைத்து ஊற்றவும். நெய்யை இடையிடையே சேர்த்து வேகவிடவும். கலவை நன்கு வெந்து கேசரிப் பதம் வந்ததும், ஏலக்காய்த் தூள் சேர்த்து இறக்கவும். ஒரு தட்டில் பரவலாக வைத்து, ஆறினதும் விரும்பிய அளவில் துண்டுகளாக இடவும். அவல் கேசரி தயார். சூப்பர் சுவையும் சத்தும் மிக்கது இந்த கேசரி. 
- சி.பாலா, இராமவர்மபுரம். 

மீல்மேக்கர் மஞ்சூரியன்

தேவையான பொருள்கள் .
மீல் மேக்கர் - 1 கிண்ணம்
கார்ன் மாவு - 3 தேக்கரண்டி
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
தயிர் - 2 தேக்கரண்டி
நறுக்கிய குடை மிளகாய் - 1
நறுக்கிய வெங்காயம் - 1 
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 தேக்கரண்டி 
பொடியாக நறுக்கிய பூண்டு 
- 1 தேக்கரண்டி
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
சில்லி சாஸ் - 1 தேக்கரண்டி 
மிளகுத் தூள் 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு 
செய்முறை: முதலில் வெந்நீரில் மீல் மேக்கரை போட்டு உப்புச் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர், சாதாரண தண்ணீரில் நன்கு அலசி, பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பிழிந்த மீல் மேக்கர் அதனுடன் 2 தேக்கரண்டி சோள மாவு, அரிசி மாவு சிறிது உப்பு மற்றும் அரை தேக்கரண்டி மிளகுத் தூள், 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள், இஞ்சி பூண்டு விழுது, தயிர் சேர்த்து நன்கு கலந்து 15 நிமிடம் வைக்கவும். பின்னர், எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும். அடுத்து, 1 டம்ளர் தண்ணீரில் 1 தேக்கரண்டி சோளமாவு கலந்து நன்கு கரைத்து வைத்து கொள்ளவும். வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய்யை ஊற்றி, இஞ்சி பூண்டு சேர்த்து, வதக்கி அதனுடன் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கி அதனுடன் குடை மிளகாயை சேர்த்து வதக்கவும். அதில் சில்லி, சோயா சாஸ், மீதமுள்ள மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து அதில் பொரித்த மீல் மேக்கரை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். அதனுடன் தண்ணீரில் கரைத்த சோள மாவைக் ஊற்றி கலந்து விடவும். ஊற்றிய தண்ணீர் கெட்டியாக மாறி, பளபளப்பாக மாறும். அப்போது எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலக்கவும். கடைசியாக வெங்காயத்தாள் சேர்த்து கலந்து இறக்கவும். சூடாகப் பரிமாறவும். சுவையான மீல்மேக்கர் மஞ்சூரியன் ரெடி.

வாழைக்காய் கோஃப்தா

தேவையான பொருட்கள் :
வாழைக்காய் - 1
உருளைக் கிழங்கு - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சித் துருவல் - அரை தேக்கரண்டி 
தனியாத் தூள் - 1 தேக்கரண்டி 
ஆமெசூர்(மாங்காய்) பவுடர் - அரை தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
பிரெட் தூள் - கால் கிண்ணம் 
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
கொத்துமல்லி - சிறிதளவு
கிரேவிக்கு:
எண்ணெய் - 3 தேக்கரண்டி
பட்டை - 2 சிறிய துண்டு
நறுக்கிய வெங்காயம் - 2
தக்காளி - 2 
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
தனியாத் தூள் - 1 தேக்கரண்டி
சீரகத் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
முந்திரி - 10
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
கொத்துமல்லி - சிறிதளவு
செய்முறை: தக்காளி, வெங்காயம், கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாழைக்காயைத் தோலுடன் இரண்டாக அரிந்து உப்பு போட்டு வேகவைத்துக்கொள்ளுங்கள். உருளைக்கிழங்கையும் வேகவைத்துக்கொள்ள வேண்டும். வேகவைத்து எடுத்த வாழைக்காயையும், உருளைக்கிழங்கையும் தோல் உரித்துத் தேவையான அளவு உப்பு சேர்த்து மசித்து வைத்துக்கொள்ளவும். மசித்தவற்றுடன் பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், வெங்காயம், தனியாத் தூள், ஆமெசூர் பவுடர், பிரெட் தூள் ஆகியவற்றைச் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் பிசைந்து வைத்துள்ள கலவையை உருண்டைகளாகப் பிடித்து போட்டு பொன்னிறமாக பொரித்து கொள்ளவும். முந்திரியைப் பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவையுங்கள். அதனுடன் தக்காளியைச் சேர்த்து கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு பட்டை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் அனைத்து மசாலா தூள்களையும் சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் அரைத்த விழுதைச் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட வேண்டும். கிரேவி கெட்டியாக வந்ததும் அதன் மேல் வெண்ணெய், கொத்துமல்லி சேர்த்தால் கோஃப்தாவுக்கான கிரேவி தயார். அதில் பொரித்த கோஃப்தா உருண்டைகளை கிரேவியில் சேர்த்து நன்றாக ஊறியதும் பரிமாறவும். சூப்பரான வாழைக்காய் கோஃப்தா ரெடி. 
- எஸ்.சரோஜா, திருவண்ணாமலை.


 

]]>
http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/03/சமையல்-சமையல்-3013131.html
3013123 வார இதழ்கள் மகளிர்மணி கடிதம் செய்த மாற்றம்! DIN DIN Wednesday, October 3, 2018 10:31 AM +0530 இங்கிலாந்தைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு மாணவியான ஹானா மேரியை பற்றி அவளுடைய தாயார் அன்னி மேரியும், தந்தையான ஜேம்ஸýம் பெருமைக் கொள்கின்றனர். பெற்றோர் பெருமைப்படும்படி அக்குழந்தை என்ன செய்தாள் தெரியுமா?
"கெல்லோக்' நிறுவனத்தின் கோகோ பாப்ஸ் அவளுடைய தினசரி காலை உணவாகும். அவளுடைய தாயார் ஒரு விமான நிறுவனத்தில் பணியாற்றுவதால், அவளுக்கு காலை உணவினை தந்தைதான் தயாரிப்பது வழக்கம். காலை உணவினை உட்கொள்ளும்போது அந்த உணவுப் பொட்டலத்தின் அட்டையில் இருந்த "குழந்தைகளால் விரும்பப்படுவது, அம்மாக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது' என்ற வாசகங்கள் அவளை அதிகம் பாதித்துவிட்டன. 
உடனே தன் பெற்றோரிடம் அவள் இவ்வாறாக "அம்மாக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது' என்பது சரியல்ல என்றும், அதனைப் பற்றி அந்நிறுவனத்திற்குத் தெரிவிக்க விரும்புவதாகவும் கூறினாள். அவளுடைய விருப்பத்திற்கு இசைந்த பெற்றோர், அந்நிறுவனத்திற்கு அவள் கடிதம் எழுதுவதற்கு உரிய போஸ்டல் ஸ்டாம்பைத் தருகின்றனர். முகவரியை இணைய தளத்திலிருந்து அவள் பெற உதவினர்.
அவள் அந்நிறுவனத்திற்கு பின் வருமாறு கடிதம் எழுதினாள், "என் அப்பா எனக்காக அதிகம் உழைக்கிறார். அம்மா வெளியில் வேலை பார்க்கிறார். ஆதலால் காலை உணவு தயாரிப்பின்போது அவர் இருப்பதில்லை. ஆகவே அவ்வாசகத்தில் உள்ள அம்மாக்கள் என்பதை பெற்றோர் என்றோ பாதுகாவலர் என்றோ மாற்ற வேண்டும். சில குழந்தைகளுக்கு அம்மா இருக்க மாட்டார்கள். இதைப்படிக்கும்போது அவர்கள் சங்கடப்படுவார்கள்' என்று எழுதி அனுப்பியிருந்தார்.
விடுமுறைக்குப் பின் வீட்டிற்குத் திரும்பியபோது ஓர் இனிய அதிர்ச்சி காத்திருந்தது ஹானாவுக்கு. அந்நிறுவனம் அவளுக்கு மறுமொழி அனுப்பியிருந்தது.
எங்களுடைய கோகோ பாப்ஸ் உணவுப்பொட்டலத்தில் எழுதியிருந்த, அம்மாக்களால் ஏற்கப்பட்டது என்பதைப் பற்றிய உன் சிந்தனையை எங்களுடன் பகிர்ந்திருந்தாய். நாங்கள் அண்மையில் எங்களின் ஆய்வினை புதுப்பித்துள்ளோம். அதன்படி இனி வரவுள்ள புதிய வடிவமைப்பில் "அம்மாக்களாலும் அப்பாக்களாலும் ஏற்பளிக்கப்பட்டது' என்பதைச் சேர்க்கவுள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதுதொடர்பாக ஏற்பட்ட சங்கடங்களுக்குப் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறோம். எங்கள் முடிவில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர உன் கடிதம் பெரிதும் உதவியது. நன்றி!
கடிதத்தைப் படித்த அவளுடைய தாயார், "என் மகளைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன். இதுதொடர்பாக அந்நிறுவனம் அக்கறையோடு மறுமொழி கூறியது எனக்கு மகிழ்வைத் தருகிறது' என்றார்.
"நான் ஒரு விமான நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். பெரும்பாலான நேரத்தில் பணியின் காரணமாக வெளியில் இருக்கவேண்டிய சூழல். என் கணவர்தான் அவளுக்கு காலை உணவினை ஏற்பாடு செய்வார். "அம்மாக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது' என்பதில் அப்பாக்கள், தாத்தா பாட்டிகள், பாதுகாவலர்கள் என்பதும் இருக்கவேண்டும் என்று அவள் விரும்பினாள். அவ்வாறு நீ விரும்பினால் அந்த நிறுவனத்திற்குக் கடிதம் எழுதி அதனை மாற்றும்படி கேட்டுக்கொள்'' என்றேன். கடிதம் எழுதி அனுப்ப உரிய ஸ்டாம்பையும் தந்தேன். மறுமொழி கிடைத்ததும் அவள் அதிக மகிழ்ச்சியடைந்தாள்'' என்றார்.
நிறுவனத்திடமிருந்து பதில் வந்ததும் அவள் முகத்தைப் பார்க்கவேண்டுமே, அவ்வளவு மகிழ்ச்சி. அதிகம் உணர்ச்சிவசப்பட மாட்டாள். ஆனால் அவள் முகத்தில் பெரிய சிரிப்பை நாங்கள் கண்டோம். அது கெல்லோக் போன்ற பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி, நாம் நம் கருத்தினை வெளிப்படுத்தும்போது அதற்கான விளைவை உணரலாம் என்பதை என்னால் உணர முடிந்தது. என்னைப் பொறுத்தவரை நாம் நம் பிள்ளைகளை அந்த அளவிற்குப் பயிற்றுவிக்கவேண்டும்.
ஒரு சிறிய குரலால் உலகை மாற்றிவிட முடியும் என்பது படிப்பதற்கு எளிதாக இருக்கலாம். ஆனால் இதுபோன்ற சிறிய வெளிப்பாடு பெரிய சாதனையை நிகழ்த்தும் என்பதை உணர்த்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்துள்ளது. 
- பா.ஜம்புலிங்கம்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/3/w600X390/HANA.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/03/கடிதம்-செய்த-மாற்றம்-3013123.html
3013122 வார இதழ்கள் மகளிர்மணி கல்விக்காகவே வாழ்ந்தவர்! DIN DIN Wednesday, October 3, 2018 10:29 AM +0530 பள்ளியில் குறும்பு செய்தாலோ, பாடம் சரியாகப் படிக்கவில்லை என்றாலோ மாணவர்களைக் கண்மூடித்தனமாகத் தண்டிக்கும் சூழலில், "அப்படி தண்டிப்பது சிலுவையில் அறைவது போன்றது!' என்று தலைமை ஆசிரியராக இருந்த ஒரு பெண்மணி சொல்லியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? "குழந்தைகள் விஷமம் செய்யத்தான் செய்வார்கள். அது அவர்களுடைய வளர்ச்சியில் ஓர் அங்கம்தான்!' என்று சொன்னவர், சகோதரி சுப்புலட்சுமி தொடங்கிய சாரதா வித்யாலயாவில் தலைமை ஆசிரியையாகச் சேர்ந்து பின்னர் தாளாளராகவும், செயலராகவும் பணியாற்றிய மூதாட்டி கோகிலா காளஹஸ்தி என்பவர்தான் அவர்.
 பின்னர் சாரதா வித்யாலயா ராமகிருஷ்ணா மடத்தின் கீழ் வந்தது. இளம் விதவைகளும், ஆதரவற்ற பெண்களுக்கும் ஒரு புகலிடமாகக் கருதும் அளவுக்கு செயல்பட்டார் கோகிலா காளஹஸ்தி. காரணம் அந்தக் காலகட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் சர்வ சாதாரணமாக இருந்தன. சகோதரி சுப்புலட்சுமி, பெண்கள் மையம் தொடங்கியபோது அதை ஏற்று நடத்த கோகிலாவை அழைத்தார்.
 இவர் குறைந்தபட்சம் கண்டிப்பது என்பது "நீயா உண்மையில் இப்படிச் செய்தாய்? உன்னிடமிருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை'' என்பதுதான். அது போதும், மாணவனின் மனம் திருந்த, என்று சொல்லியிருக்கிறார். தவறு செய்யும் மாணவனின் பின்னணியை புரிந்துகொண்டு, அவனிடம் உள்ள குறைகளைக் களையும் உத்தியைத் தெரிந்து வைத்திருந்தார் கோகிலா.
 புகழ வேண்டுமானால் மாணவரை வெளிப்படையாக எல்லார் முன்னிலையிலும் புகழுவார். கண்டிப்பதாக இருந்தால், தனியே கூப்பிட்டுச் சொல்லுவார். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் அவர் மரணம் அடையும் வரை தம் மாணவர்களிடம் அவர் தொடர்பு வைத்திருந்தார். மேடம் மான்டிசோரி அம்மையாரிடமே குழந்தைகள் மனோதத்துவத்தைக் கற்றுக்கொண்டவர். பன்னிரண்டு வயதிலேயே பகவத் கீதையை முழுதும் படித்து அறிந்தவர். சமூக சேவையில் தங்கப்பதக்கம் பெற்றவர்.
 ஒரு நாள் இவரைக் காண இரண்டு மாணவர்கள் தயங்கித் தயங்கி இவர் வீட்டு வாசலில் நின்று கொண்டு இவரையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். "என்ன வேணும்?'' என்று விசாரித்தார். "உங்களைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம், அம்மா. நீங்கள் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம்!'' என்று வாழ்த்துச் சொல்லிவிட்டுப் போனார்களாம்.
 சென்னை கிறிஸ்தவக் கல்லூரி பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்த காளஹஸ்தியை தம் 30-ஆவது வயதில் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை என்றாலும், எல்லா மாணவர்களையும் தங்கள் குழந்தைகளாகவே மதித்தவர் கோகிலா. கோகிலா காளஹஸ்தியின் 118-ஆவது பிறந்தநாள் அக்.19-ஆம் நாள்.
 - சித்தார்த்
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/3/w600X390/mm5.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/03/கல்விக்காகவே-வாழ்ந்தவர்-3013122.html
3013121 வார இதழ்கள் மகளிர்மணி இல்லத்தரசியும் தொழில் முனைவோர் ஆகலாம்-26 DIN DIN Wednesday, October 3, 2018 10:28 AM +0530 தற்போது நவராத்திரி நேரம் என்பதால், கொலுவை பார்க்க வரும் விருந்தாளிகளுக்கு அன்பளிப்பு அளிப்பது வழக்கமாகி வருகிறது. அன்பளிப்பு பொருள்களை கடையில் வாங்கி அளிப்பதைவிட, நாமே செய்து கொடுத்தால் செலவு குறைவதுடன், மனதிற்கு நிறைவாகவும் இருக்கும். கொலு வைக்கும் வழக்கமில்லாதவர்கள், இந்த பரிசு பொருள்களை தயார் செய்து கொலு வைப்பவர்களிடம் விற்பனை செய்யலாம். கடைகளுக்கும் விற்பனை செய்யலாம். இதன்மூலம் கணிசமான வருமானம் கிடைக்கும். அந்த வகையில், இந்த வாரம் தஞ்சாவூர் ஓவியங்கள் தயாரிக்கும் முறையை ஒட்டிய கலைபொருள்கள் தயாரிப்பைப் பார்க்கலாம்'' என்கிறார் சுயதொழில் ஆலோசகர் உமாராஜ்:
"பொதுவாக தஞ்சாவூர் ஓவியங்கள் தயாரிக்க, சாக்பவுடர், தஞ்சாவூர் ஸ்டோன், கோல்டு ஃபாயில் பேப்பர்கள் போன்றவற்றை உபயோகித்து செய்வர். அதே முறையில், நாம் , பெண்கள் தலையில் அணிந்து கொள்ளும் க்ளிப், நகைப்பெட்டி, குங்கும சிமிழ், போட்டோ பிரேம், பூஜையறையில் வைக்கும் மனைகள், கீ செயின் போன்றவற்றை தயாரிக்கலாம். 
நகைப் பெட்டி: மரத்திலான நகைப் பெட்டிகளை ரெடிமேடாக கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். அல்லது கார்பென்டர்களிடம் ஆர்டர் கொடுத்து தேவையான அளவில் வாங்கிக் கொள்ளலாம். பின்னர், பெட்டியின் மேல்புறம் நமது கற்பனைக்கு ஏற்றவாறு டிசைன் செய்து கொடுக்கலாம்.
குங்கும சிமிழ்: சாதாரண குங்கும சிமிழை வாங்கி வந்து, டிசைன் செய்யலாம். பார்க்க மிக அழகாக இருக்கும். பெண்கள் இதனை விரும்பி வாங்கிக் கொள்வர்.
போட்டோ பிரேம்: போட்டோ பிரேம் செய்யத் தெரிந்தால் செய்து கொள்ளலாம். அல்லது கடைகளில் பிளைன் போட்டோ பிரேம்களை ரெடிமேடாக வாங்கி வந்து நமது விருப்பப்படி டிசைன் செய்து கொள்ளலாம். பார்க்க மிக நேரத்தியாகவும் அழகாகவும் இருக்கும். இதற்கு நல்ல வரவேற்பும் கிடைக்கும்.
பூஜையறை மனை: சாமி சிலைகளை வைக்கும் மனையை வாங்கி வந்து அதில் நமக்கு தேவையான டிசைன் செய்யலாம். பார்க்க மிகவும் அழகாக இருக்கும். இந்த தஞ்சாவூர் ஓவியத்தின் அடிப்படையில் செய்யப்படும் கோன் ஒர்க், ஸ்டோன் ஒர்க் போன்ற நுணுக்கங்களை கற்றுக் கொள்ள ஒரு நாள் பயிற்சி பெற்றால் போதுமானது. இதனை சென்னை, அடையாறை சேர்ந்த அனுராதா என்பவர் முழுநேர தொழிலாக செய்து வீட்டிலிருந்தபடியே மாதம் 20,000 வரை சம்பாதிக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்'' என்றார்.
தலையில் அணியும் க்ளிப்: இதற்கு ரெடிமேடாக மரத்தில் ஆன பிளைன் க்ளிப் கிடைக்கும். அதை வாங்கிக் கொள்ளவும். சாக்பவுடர், அராபிக் கம், இவற்றை கொஞ்சம் தண்ணீர் விட்டு மெகந்தி பதத்திற்கு கரைக்கவும். பிறகு, பிளாஸ்டிக் பேப்பரில் கோன் போல் செய்து அதில் சாக்பவுடர் கலைவை இட்டுக் கொள்ள வேண்டும். பிறகு, க்ளிப்பிற்கு டிசைன் செய்யலாம். அல்லது இரண்டு ஓரங்களில் பார்டர் மட்டும் கட்டவும். நடுவில் ஏதேனும் பூ டிசைன் செய்து காயவிடவேண்டும். இப்போது கோல்டன் பாயில் ஷீட் அதே அளவில் வெட்டி கம் போட்டு ஒட்டிவிடவும். பிறகு, மல் துணியில் ஒத்தி விடவும். இப்போது தகதகவென டிசைன் கிளிப் ரெடி. விருப்பப்படுபவர்கள் இதில் ஸ்டோன், பெயிண்டிங் செய்து கொள்ளலாம். பார்க்க மிக அழகாக இருக்கும். கணிசமான விலையும் கிடைக்கும். உயர்தரமான பரிசு கொடுத்த பெருமையும் கிடைக்கும்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/3/w600X390/mm4.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/03/இல்லத்தரசியும்-தொழில்-முனைவோர்-ஆகலாம்-26-3013121.html
3013120 வார இதழ்கள் மகளிர்மணி கிராமத்தை நிர்வகிக்கும் பெண்கள்! Wednesday, October 3, 2018 10:25 AM +0530 கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து "ஒரு பெண்மணி' பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் கூட பெண்கள் மட்டும்தான்... அதுவும் தேர்தல் ஏதும் நடத்தாமல் பஞ்சாயத்தை ஆள 33.33 சதவீதம் அல்ல ... நூறு சதவீதம் பெண்கள் மட்டும் நியமிக்கப்படுகிறார்கள் என்ற செய்தியையும் நம்பித்தான் ஆக வேண்டும்.
 எங்கு பார்த்தாலும் மரங்கள்.. ஊரே பச்சை போர்த்தியிருப்பதால் அப்படி ஒரு குளுமை. ஒவ்வொரு தெருவும் தினமும் கூட்டப்பட்டு படு சுத்தமாக இருக்கிறது. கிராமம் முழுக்க "வை-ஃபை' வசதி... எங்கு பார்த்தாலும் "சிசிடிவி' காமிராக்கள்.. பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை... தெருவில் குப்பை கொட்டினால் ஐநூறு ரூபாய் அபராதம்... ஒரு நகரத்தில் கூட இந்த ஏற்பாடுகள், வசதிகள், கட்டுப்பாடுகள் இருக்குமா என்று சொல்ல முடியாது. இப்படிக் கூட கிராமத்தை, அனைத்து கிராமங்களுக்கும் "ஒரு முன் மாதிரி கிராமமாக' நிர்வகிக்க முடியுமா என்று அதிசயிக்க வைக்கும் கிராமம்தான் குஜராத் கிர் சோம்நாத் மாவட்டத்தைச் சேர்ந்த "பாதல்பரா' கிராமம்.
 "எப்படி ... இது சாத்தியமானது..'' என்று ஆண்களைக் கேட்டால், "இந்தக் கிராமத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடப்பதில்லை. போட்டியின்றி பெண்கள் குழுவும் அதன் தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தப் பெண்கள் குழுதான் கிராமத்தை நிர்வகிக்கிறது. குழுவில் ஆண் உறுப்பினர் ஒருவர் கூட இல்லை. ஊழல் இல்லாத நிர்வாகம்... என்பதுதான் பாதல்பரா கிராமத்தின் சிறப்பு என்கிறார்கள். இந்த வார்த்தைகளில் பொறாமையோ, கிராமத்தை நிர்வகிக்கும் வாய்ப்பு ஆண்களுக்கு கிடைக்கவில்லையே என்ற தொனியோ இல்லவே இல்லை.
 பஞ்சாயத்து தலைவியாக 2003 - லிருந்து செயல்படுபவர், ரமா பெஹன். இது குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
 "எங்கள் கிராமத்தின் மக்கள் தொகை 1472. பெண்கள் ஐம்பது சதவீதத்தினர். பள்ளியில் படிக்கும் மொத்த மாணவர்களில், மாணவியர் ஐம்பது சதவீதம். இங்கு அனைத்து இன மக்களும் ஒன்று போலவே நடத்தப் படுகிறார்கள். எல்லா மக்களுக்கும் வசதிகள் செய்து தரப்படுகின்றன. கிராமத்தில் எந்த வசதியையும் புதிதாகச் செய்து தரும் போது முதலில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு செய்து விட்டுத்தான் பிறருக்கு இரண்டாவதாகச் செய்து கொடுக்கிறோம். அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும், கோயில்களிலும் அனைவரும் சரி நிகர் சமம் என்றே நடத்துகிறோம். அதனால் மக்களிடையே ஒற்றுமை நிலவுகிறது.
 இந்தக் கிராமத்தில் தண்ணீர், துப்புரவு, சாக்கடை, மின்சாரம் என்று எதிலுமே பிரச்னைகள் எழுவதில்லை. தேவைகள், புகார்கள் அனைத்தையும் பெண்கள் மட்டும் அடங்கிய பஞ்சாயத்து நிர்வாகம், ஊர் மக்கள் அனைவரும் திருப்தி அடையும்படி நிறைவேற்றி வைக்கிறது. எந்தப் பிரச்னையையும் உயர் மட்ட அதிகாரிகள் வரை கொண்டு செல்ல மாட்டோம். ஆரம்ப நிலையிலேயே நாங்களாகவே பேசி, ஆலோசித்து தீர்வுகளை உருவாக்கிக் கொள்கிறோம். எங்களைக் குறித்தும், எங்களது கிராம நிர்வாகம் குறித்தும் எந்தவிதப் புகாரும் இதுவரை எழுப்பப்படவில்லை.
 தெருக்களை சுத்தமாக வைத்திருக்க குப்பை கூளங்களை உரிய இடத்தில் போடாமல் தெருவில் கொட்டினால், ஐநூறு ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். இந்தக் கட்டுப்பாட்டால் எல்லா தெருக்களும் "பளிச்'சென்று சுத்தமாக இருக்கிறது. வெற்றிலை சுவைத்து கண்ட கண்ட இடத்தில் துப்பக் கூடாது என்ற கட்டுப்பாடும் உண்டு. கிராமத்தைப் பெண்களால் திறமையுடன் நிர்வகிக்க முடியும் என்பதை கடந்த பதினைந்து ஆண்டுகளாக நிரூபித்து வருகிறோம்'' என்கிறார் ரமா பெஹன்.
 - கண்ணம்மா பாரதி
 
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/3/w600X390/WOMENS_MEET.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/03/கிராமத்தை-நிர்வகிக்கும்-பெண்கள்-3013120.html
3012962 வார இதழ்கள் மகளிர்மணி கறுப்புதான் அழகு சொல்கிறார்: நந்திதா தாஸ்! Wednesday, October 3, 2018 10:00 AM +0530 "நான் கல்லூரியில் படிக்கும்போதே, எழுத்தாளராக மட்டுமின்றி சமூக ஆர்வலராக செயல்பட்ட சாதத் ஹாசன் மான்ட்டோ பற்றி படித்துள்ளேன். அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த அரசியல், மக்களைப் பற்றி எழுதியிருந்தவிதம் என்னை வெகுவாக கவர்ந்தது. விலைமாதர்களைப் பற்றி அவர் எழுதியிருந்தது ஆபாசமாக இருந்தது என்று பிரிட்டிஷ் அரசாங்கம் மூன்று முறையும், பாகிஸ்தான் அரசு மூன்று முறையும் அவர் மீது வழக்கு தொடர்ந்தது. ஆனால், அவர் தன்னுடைய எழுத்துகள் இலக்கியதரமானவை என்பதை நிரூபிக்க போராட வேண்டியதாயிற்று. அவரது வாழ்க்கையை இன்றைய முகநூல் தலைமுறையினருக்கு அர்ப்பணிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் "மான்ட்டோ' என்ற பெயரில் அவரது வரலாற்றை திரைப்படமாக இயக்கியுள்ளேன்'' என்று கூறும் நந்திதா தாஸ், இதுவரை 12-க்கும் மேற்பட்ட பிறமொழி படங்கள் உள்பட 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
 நடிப்பதோடு முதன்முதலாக "பைராக்' (2008) என்ற படத்தை இயக்கிய நந்திதா தாஸ் , தற்போது திரைக்கு வந்துள்ள "மான்ட்டோ'வை இயக்கியுள்ளார். இதில் மான்ட்டோவாக நவாசுதீன் சித்திக் என்பவரும், மான்ட்டோவின் மனைவி சபியாவாக ரசிகா தூகலும் நடித்துள்ளனர். நடிகை, இயக்குநர், சமூக ஆர்வலர் என்று அனைத்து துறையிலும் ஈடுபாடு காட்டிவரும் இவர், அண்மையில் உடலுறுப்பு தானம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரத்திலும் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது இவர் சார்ந்துள்ள கவிதா சாமுவேல் தலைமையிலான "டார்க் இஸ் பியூட்டி புல்' என்ற அமைப்பைப் பற்றி என்ன சொல்கிறார்:
 "டார்க் இஸ் பியூட்டி புல்' என்ற அமைப்பை நான் தொடங்கியிருப்பதாக தவறான தகவல்கள் பரவியுள்ளது. இந்த அமைப்புக்கு ஆதரவளிப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. சாதி, மதம், பாலினம் உள்பட கறுப்பு என்றால் பாரபட்சம் காட்டுவது குறித்து நான் பல கருத்தரங்களில் எதிர்த்து பேசியுள்ளேன். பேசி வருகிறேன். இது குறித்து மக்கள் மனதை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
 குழந்தைகளை வெயிலில் அலையாதே, கறுத்துவிடுவாய் என்று அச்சுறுத்துவதுண்டு. அழகு சாதன பொருள்கள் விற்பனை மையத்திற்குள் நுழைந்தால் சிவப்பழகை தரும் கிரீம்களை வாங்குங்கள் என்று விற்பனையாளர் கூறுவதுண்டு. சாதாரண தோற்றமுள்ள பெண்ணை அழகுள்ளவராக மாற்றும் ஒப்பனை கலைஞரிடம் கூட நான் கூறுவதுண்டு. என்னுடைய நிறத்தை மாற்ற வேண்டாம். நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே நடிக்கிறேன். ஒப்பனை வேண்டாம் என்று கூறுவேன். என்னுடைய நிறம் என்னவென்று மக்களுக்கேத் தெரியும்.
 என்னைப் பொருத்தவரை என் தோலின் நிறம் கறுப்பாக இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. வசதியாகவும் இருக்கிறது. என்னைப் பற்றி எழுதும்போது கறுப்பு மற்றும் அரையிருட்டு என்று எழுதுவார்கள். நான் அதை பொருட்படுத்துவதில்லை. என்னிடம் உள்ள திறமைகளைப் பாராட்டாமல் என் நிறத்தை மட்டும் ஏன் குறிப்பிட்டு எழுதுகிறார்கள் என்று நினைப்பதுண்டு. நடிகை என்றால் சிவப்பாக இருக்க வேண்டும் என்பது அவர்கள் கருத்தாக இருக்கலாம். அதற்காக கறுப்பாக இருப்பவர்கள் மீது வெறுப்பை காட்டுவது அழகல்ல.
 நீங்கள் அழகாக இல்லாவிட்டாலும் கறுப்பு நிறமாக இருந்தால் உங்களை நீங்களே தாழ்வாக நினைக்காதீர்கள் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் "டார்க் இஸ் பியூட்டி புல்' அமைப்பின் நோக்கமாகும். கறுப்பு நிறமுடைய இளம் பெண்கள் தங்கள் நிறத்தை கொண்டாட வேண்டும். அழகு என்பது தோலின் நிறத்தில் இல்லை. அகத்தின் அழகுதான் முக்கியம். மின்னும் கண்களும், ஒளிரும் கபடமற்ற சிரிப்பும்தான் உண்மையான அழகு என்பேன். உங்கள் நிறத்தை பற்றி யாராவது விமர்சனம் செய்தால் கவலைப் படாதீர்கள். உங்கள் திறமை மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் நன்னடத்தையும், செயலும்தான் முக்கியம். இயற்கையாக இருங்கள். அதுவே அழகாகும்'' என்கிறார் நந்திதா தாஸ்
 - பூர்ணிமா
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/3/w600X390/NANDITA_DAS.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/03/கறுப்புதான்-அழகு-சொல்கிறார்-நந்திதா-தாஸ்-3012962.html
3012963 வார இதழ்கள் மகளிர்மணி தமிழுக்கு வரும் சம்யுக்தா ஹெக்டே! DIN DIN Wednesday, October 3, 2018 10:00 AM +0530 கன்னடத்தில் "கிர்க் பார்ட்டி' படத்தின் மூலம் பிரபலமான நடிகை சம்யுக்தா ஹெக்டே, தமிழில் "பப்பி' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். "தமிழில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும், எனக்கு பிடித்தவாறு கதைகள் ஏதும் அமையவில்லை. "காக்கா முட்டை' படத்திற்கு உதவி இயக்குநராக பணியாற்றிய நட்டுதேவ், முதன்முறையாக இயக்கும் "பப்பி' படத்தின் கதை எனக்கு பிடித்திருந்தது. எனக்கு நாய்கள் என்றால் மிகவும் விருப்பம். இந்த கதையில் ஒரு நாய்க்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதோடு, நாய் ஒன்றும் என்னுடன் நடிக்கிறது'' என்று கூறியுள்ளார் சம்யுக்தா ஹெக்டே.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/3/w600X390/mm1.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/03/தமிழுக்கு-வரும்-சம்யுக்தா-ஹெக்டே-3012963.html
3012964 வார இதழ்கள் மகளிர்மணி பிரதான வேடத்தில் அலியா பட்டின் அம்மா DIN DIN Wednesday, October 3, 2018 10:00 AM +0530 பாலிவுட் நடிகை அலியாபட்டின் தாயும், நடிகையுமான சோனி ராஸ்தான், சமீபத்தில் நடித்துள்ள "யுவர்ஸ் ட்ரூலி' என்ற படம் பூசன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. "அபர்ணா சென்னின் "36', "சவுரங்கிலேன்', "மண்டி', "சரான்ஸ்' போன்ற பல படங்களில் நடித்திருந்தாலும், முதன் முறையாக "யுவர்ஸ் ட்ரூலி' படத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்திருப்பதும், அந்தப்படம் திரைப்பட விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும் மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்று கூறும் சோனி ராஸ்தான், கடைசியாக மேக்னா குல்சாரின் "ராஸி' படத்தில் அலியா பட்டின் அம்மாவாகவே நடித்தது குறிப்பிடத்தக்கது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/3/w600X390/ALIA-BHATT.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/03/பிரதான-வேடத்தில்-அலியா-பட்டின்-அம்மா-3012964.html
3012965 வார இதழ்கள் மகளிர்மணி சல்மான்கான் அறிமுகப்படுத்தும் நூதனின் பேத்தி பிரநூதன் DIN DIN Wednesday, October 3, 2018 10:00 AM +0530 நித்தின் காக்கர் இயக்கத்தில் சல்மான்கான் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்த இணையதளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட புதுமுகங்களை பரிசீலனை செய்தபோது, மறைந்த முன்னாள் நடிகை நூதனின் பேத்தியும், நடிகர் மோனிஷ் பெஹல் மகளுமான பிரநூதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சட்டம் பயின்று மும்பையில் பிரபல சட்ட நிறுவனமொன்றில் பணிபுரியும் பிரநூதனுக்கு, சினிமாவில் நடிக்க வேண்டுமென்பது முக்கிய கனவாக இருந்ததால், கதையை கேட்டதும் ஒப்புதல் அளித்துள்ளார். ஏற்கெனவே, சல்மான்கான், பிரநூதனின் தந்தை மோனிஷுடன் "மெய்னே பியார் க்யா' (1989) என்ற படத்தில் சேர்ந்து நடித்திருந்ததால், பிரநூதனை அறிமுகப்படுத்தும் பொறுப்பு சல்மானுக்கு சுலபமாக கிடைத்துள்ளது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/3/w600X390/PRANUTAN.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/03/சல்மான்கான்-அறிமுகப்படுத்தும்-நூதனின்-பேத்தி-பிரநூதன்-3012965.html
3012966 வார இதழ்கள் மகளிர்மணி ரசம் சாதத்தை விரும்பும் நடிகை DIN DIN Wednesday, October 3, 2018 10:00 AM +0530 "ஓய்வு கிடைக்கும்போது வீட்டை சுத்தப்படுவது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு பொருளையும் துடைத்து எடுத்து வைப்பது நல்ல உடற்பயிற்சியாகும். காலையில் சீக்கிரமாக விழித்தெழுவது அன்றைய தினம் முழுவதும் சுறுசுறுப்பையும், சக்தியையும் அளிக்கும். குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவது, உறங்குவது, ஓய்வெடுப்பதும் முக்கியமாகும். அதே சமயம் அளவுக்கதிகமாக உழைத்து உடலை வருத்திக் கொள்ள மாட்டேன்'' என்று கூறும் தீபிகா படுகோனுக்கு பிடித்த இடம் தென்னிந்தியா. பிடித்த உணவு எந்த நாளாக இருந்தாலும் "ரசம்' சாதம் தானாம்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/3/w600X390/DEEPIKA.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/03/ரசம்-சாதத்தை-விரும்பும்-நடிகை-3012966.html
3012967 வார இதழ்கள் மகளிர்மணி முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு உதவுபவர் DIN DIN Wednesday, October 3, 2018 10:00 AM +0530 "விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்று ஒரு நிலையான இடத்திற்கு வந்த பின்னர், பொருளாதாரம், நிதி நிலையில் பின் தங்கியுள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு உதவுவது கடமையாகும். பிரச்னைகள் நிறைந்த இன்றைய வாழ்க்கையில் மனிதாபிமானத்தை மறந்து வருகிறோம். என்னுடைய சாதனை, கிடைத்த புகழ் அனைத்தும் நான் ஈடுபட்ட விளையாட்டில் ஒரு பகுதியாகும். ஒவ்வொரு நாளின் முடிவிலும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும். அன்பு செலுத்த வேண்டும் என்று நினைப்பதோடு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்'' என்று கூறுகிறார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தலைவி மித்தாலி ராஜ்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/3/w600X390/mm2.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/03/முன்னாள்-விளையாட்டு-வீரர்களுக்கு-உதவுபவர்-3012967.html
3012968 வார இதழ்கள் மகளிர்மணி சரித்திர படங்களென்றால் மிகவும் விருப்பம் DIN DIN Wednesday, October 3, 2018 10:00 AM +0530 நிகில் அத்வானி இயக்கத்தில் உருவாகும் "மொகல்' என்ற சரித்திர படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சரித்திர கதாபாத்திரங்கள் மீது எப்போதுமே விருப்பம் அதிகம். திரையில் அந்த கதாபாத்திரங்களை பிரதிபலிக்கும்போது, நம்மையறியாமல் ஒரு ஈடுபாடு அதிகரிக்கிறது'' என்று சொல்லும் தியா மிர்ஸா. "மொகல்' படத்தில் முகலாய மன்னர் பாபரின் சகோதரியாக நடிக்கிறாராம்.
 - அருண்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/3/w600X390/mm3.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/03/சரித்திர-படங்களென்றால்-மிகவும்-விருப்பம்-3012968.html
3012969 வார இதழ்கள் மகளிர்மணி ஏழு வேடங்களில் ராதிகா சரத்குமார்! DIN DIN Wednesday, October 3, 2018 10:00 AM +0530 "சித்தி'யில் தொடங்கி "வாணி ராணி' வரை கடந்த 25 ஆண்டுகளாக சின்னத்திரையில் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகை ராதிகா சரத்குமார். தற்போது நடித்து வரும் "வாணிராணி' தொடர் அக்டோபர் இறுதியில் முடிவடைய உள்ள நிலையில், அடுத்தபடியாக ரடான் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமான புதிய மெகா தொடர் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது.
 இதற்கு "சந்திரகுமாரி' என்று பெயரிட்டுள்ளனர். இந்த தொடருக்காக ராதிகா சரத்குமார் ஏழுவிதமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் இந்தத் தொடர் தயாராகி வருகிறது. இந்தத் தொடருக்காக இசையமைப்பாளர் சிற்பி பின்னணி இசை அமைக்கிறார். பாலமுருகன், பிலிப் விஜயகுமார் இருவரும் ஒளிப்பதிவு செய்கிறார்கள்.
 சரித்திரமும், சமூகமும் கலந்து பயணிக்கப்போகும் இந்த தொடருக்காக, மும்பையிலும், சென்னையிலும் பிரம்மாண்டமான செட்டுகள் அமைத்து காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.
 அரச குடும்பத்தின் கதையை பிரபல திரைப்பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பரபரப்பாக படமாக்க, நிகழ்கால காட்சிகளை சி.ஜே.பாஸ்கர் இயக்கியுள்ளார். அக்டோபர் இறுதிவாக்கில் சின்னத்திரையில் இந்த தொடர் ஒளிப்பரப்பாக உள்ளது.
 இது குறித்து ராதிகா சரத்குமார் கூறியதாவது:
 "என் திரைப்பயணத்தில் இது ஒரு மைல் கல். இதுவரை நான் நடிக்காத மிகவும் சவாலான கேரக்டர் இது என்று சொல்லலாம். "சந்திரகுமாரி' தொடருக்காக இரவு பகல் பாராமல் உழைத்திருக்கிறேன். இந்த மெகா தொடர் மக்கள் மத்தியில் குறிப்பாக பெண்கள் மத்தியில் நிச்சயம் இடம் பிடிக்கும்.
 - ஸ்ரீதேவி
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/3/w600X390/radhika.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/03/ஏழு-வேடங்களில்-ராதிகா-சரத்குமார்-3012969.html
3012970 வார இதழ்கள் மகளிர்மணி இரட்டை குழந்தைகளுக்கு தாயான ஸாரே! DIN DIN Wednesday, October 3, 2018 10:00 AM +0530 விளம்பர உலகில் "பாம்பே டையிங்'-கின் சிறந்த மாடலாக வலம் வந்தவர் லிஸாரே. பின்னர், ஹிந்திப் படங்களிலும் தோன்றியவர். சில ஆண்டுகளுக்கு முன் அவர், ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினார். ஆனால் தாய்மை அடைவதன் மூலம் சில பிரச்னைகள் ஏற்படலாமென்று மருத்துவர்கள் கூறியதால், தன் கணவர் ஜேசன் டேனியுடன் சேர்ந்து குழந்தையை தத்தெடுக்க விரும்பினார். ஆனால் தங்களிருவரின் ரத்த சம்பந்தத்துடன் குழந்தை பெற விரும்பிய லிஸாரே, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற விரும்பினார்.
 இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு ஏகப்பட்ட சட்ட பிரச்னைகள் இருப்பதால், வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவதை அங்கீகரிக்கும் ஜியார்ஜியா நாட்டில் குடியேறினார். அங்கு கடந்த ஜூன் மாதம் வாடகைத் தாய் மூலம் இரட்டைப் பெண் குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். லிஸாரேவும் ஜேசனும் சேர்ந்து குழந்தைகளுக்கு சுஃபி என்றும் úஸாலியல் என்றும் பெயரிட்டுள்ளனர்.
 நான் நோயில் பாதிக்கப்பட்டிருந்தபோது, ஏராளமானவர்களிடமிருந்து நிபந்தனையற்ற ஆதரவு கிடைத்தது. இது எனக்கு நோயை எதிர்க்கும் மன வலிமையை அளித்தது. இப்போது என் வாழ்க்கையில் மலர்ந்துள்ள மகிழ்ச்சியை அனைவருடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்'' என்று கூறியுள்ளார் லிசாரே.
 - அ.குமார்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/3/w600X390/LISARE.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/oct/03/இரட்டை-குழந்தைகளுக்கு-தாயான-ஸாரே-3012970.html
3008035 வார இதழ்கள் மகளிர்மணி சுறுசுறுப்பாக்கும் சுருக்கு பைகள்! ஏ.எ.வல்லபி Thursday, September 27, 2018 10:47 AM +0530  

அன்றைய பாட்டிமார்களிடம் பேரன் பேத்திகள் "மிட்டாய் வாங்கணும்.. காசு கொடு.." என்று கேட்கும் போது பாட்டி இடுப்பில் சொருகி வைத்திருக்கும் சுருக்குப் பையை எடுத்து விரித்து சில்லறைகளை "இந்தா கண்ணு' என்று சொல்லிக் கொண்டே எடுத்துத் தருவார். அந்தத் தலைமுறை பாட்டியுடன் சுருக்குப் பையும் புழக்கத்தில் இல்லாமல் போய்விட்டது. அந்த சுருக்குப் பைக்கு மறுவாழ்வு தந்து மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளார் லதிகா சக்கரவர்த்தி. இவரின் வயது எண்பத்தொன்பது. வெறும் சுருக்குப் பைதானே என்று தைத்துப் போடாமல் கலை அழகு மிளிர பல வண்ணங்களில் தயாரித்து அசத்தி வருகிறார் லதிகா. இந்த முதுமையிலும் தையல் வேலைகளை லதிகாவே செய்கிறார். "வயது வெறும் எண் மட்டுமே, உங்களுக்குத் பிடித்த வேலையை மன மகிழ்ச்சியுடன் செய்யும் போது முதுமை போய் இளமை வந்துவிடும்'' என்கிறார் லதிகா அவர் மேலும் கூறுவதாவது:
 "எல்லாம் முகநூல் செய்யும் அற்புதம்தான். "லதிகாஸ் பேக்ஸ்' என்று முகநூல் பக்கம் ஆரம்பித்து மூன்று மாதம்தான் ஆகிறது. ஓமன், ஜெர்மனி, நியூசிலாந்து போன்ற நாடுகளிலிருந்து "சுருக்குப் பைகள் தேவை' என்று ஆர்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளன. திகைத்துப் போய்விட்டேன். இத்தனை ஆர்டர்களை நிறைவேற்ற முடியுமா? என்ற சந்தேகம் இருந்தாலும் சுருக்குப் பைகளின் தயாரிப்பை ஆர்டர்களுக்குத் தக்கவாறு தயாரிக்கிறேன். உடலும் மனதும் ஒத்துழைக்கிறது. காரணம், எனது சுருக்குப் பைகள் தனித்துவத்துடன் மிக அழகாக இருக்கும். அதை வாடிக்கையாளர்கள் சரியாக அடையாளம் கண்டு கொண்டிருக்கிறார்கள். ஆன்லைனில் விற்பனையாகும் சுருக்குப் பைகளுக்கு விலை ஐநூறு முதல் ஆயிரத்தி ஐநூறு வரை வரும்.
 எனது சொந்த மாநிலம் அசாம். அங்கே துர்பியில் பிறந்தேன். படிப்பு நிறைவானதும் மத்திய அரசு அதிகாரியாக இருந்த கிருஷ்ணா லால் சக்கரவர்த்தி என்பவருக்கு மனைவியானேன். கணவருக்கு மாறுதல் அடிக்கடி கிடைக்கும். அதனால் அவருடன் இந்தியாவின் பல பாகங்களில் தங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. புதிய சூழலில் பல புதிய நட்புகள் பூத்தன. பலவகை கலாச்சாரங்கள் அறிமுகமாயின. பல்வேறு டிசைன்களில் உடைகள், துணிமணிகள், சேலைகள் பரிச்சயமாயின. அவற்றின் அழகு, நேர்த்தி என்னைத் தையலின் பக்கம் அழைத்துச் சென்றது. தையல் வேலையை வீட்டில் குழந்தைகளுக்காக ஆரம்பித்தேன். நாளடைவில் குழந்தைகளுக்கான பொம்மைகள் தயாரிக்கத் தொடங்கினேன். பொம்மைகளுக்கு ஆடைகள் தயாரிக்கணுமே, அவற்றையும் தைக்க ஆரம்பித்தேன். தையல் எனது மூச்சாக மாறியது.
 கணவர் இறந்ததும் மகனுடன் தங்கினேன். அங்கும் தையல் வேலையைத் தொடர்ந்தேன். சில ஆண்டுகள் இப்படியே ஓடியது. திடீரென்று சுருக்குப் பைகளைத் தயாரித்தால் என்ன என்று தோன்றியது. உடனே தொடங்கவும் செய்தேன். "இனி உடுக்க வேண்டாம்' என்று ஒதுக்கும் சேலைகள், குர்த்திகள் சுருக்குப் பைகளாக மாறின. தொடக்கத்தில் சுருக்குப் பைகளை நட்பு வட்டத்தில் விநியோகித்தேன். மறந்து போன சுருக்குப் பைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
 எனக்காக முகநூல் பக்கத்தைத் தொடங்கியது எனது பேரன்தான். சுருக்குப் பைகளை பேரன் படம் பிடித்து "லத்திகாஸ் பேக்ஸ்' என்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய, அவற்றைப் பார்த்தவர்கள் பைகளை விலைக்கு வாங்க ஆர்வம் காட்டினார்கள். அதைக் கண்டு என்னை உற்சாகம் பிடித்துக் கொண்டது. சுறுசுறுப்பானேன். சுருக்குப் பைகளை அதிக அளவில் தயாரித்து வருகிறேன்'' என்கிறார் லதிகா சக்கரவர்த்தி.

 

]]>
சுருக்குப்பை, சுறுசுறுப்பான பாட்டி லதிகா சக்ரவர்த்தி, ஃபைன் ஆர்ட்ஸ், surukupai, granny ladhika, fine arts http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/26/w600X390/LATHIKAA.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/sep/26/சுறுசுறுப்பாக்கும்-சுருக்கு-பைகள்-3008035.html
3008017 வார இதழ்கள் மகளிர்மணி தோல்வியே நல்ல படங்களை தேர்ந்தெடுக்க உதவியது! DIN DIN Wednesday, September 26, 2018 10:00 AM +0530 மிஸ்கின் இயக்கத்தில் "முகமூடி' படத்தில் ஜீவாவுடன் நடித்த பூஜாஹெக்டே தற்போது 3 தெலுங்கு படங்கள், 1 ஹிந்திப் படம் என நடித்து வருகிறார். ரண்பீர் கபூருடன் இணைந்து நடித்த விளம்பரப்படம் மூலம் திரைக்கு வந்த இவரது பல படங்கள் தோல்வியடைந்துள்ளன. "என்னுடைய குடும்பம் திரையுலகத்துடன் தொடர்பு கொண்டதல்ல. திரையுலகை பொருத்தவரை நான் இன்னும் மாணவிதான். தோல்விதான் நல்ல படங்களை தேர்வு செய்ய உதவுகிறது. "பாகுபலி' பிரபாஸþடன் இப்போது நான் நடித்து வரும் படத்தின் கதை என் ஆவலை பூர்த்தி செய்யும் விதத்தில் உள்ளது'' என்கிறார் பூஜாஹெக்டே

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/26/w600X390/POOJA-HEGDE.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/sep/26/தோல்வியே-நல்ல-படங்களை-தேர்ந்தெடுக்க-உதவியது-3008017.html
3008028 வார இதழ்கள் மகளிர்மணி அம்மாவுடன் நடிக்க ஆசை! DIN DIN Wednesday, September 26, 2018 10:00 AM +0530 "என் தந்தை கமல்ஹாசனுடன் இணைந்து பலமுறை பணியாற்றியுள்ளேன். அதேபோன்று என் அம்மா சரிகாவுடன் சேர்ந்து நடிக்க வேண்டுமென்பது என்னுடைய ஆசையாகும். இது என் வாழ்க்கை, என் பெற்றோர் பெருமைபடும்படி கடினமாக உழைப்பது அவசியமாகும். என் அம்மாவும், அப்பாவும் நான்கு வயதிலேயே நடிக்க தொடங்கியவர்கள். நான் அவர்களுடன் போட்டியிடவோ, ஒப்பிட்டு பார்க்கவோ விரும்பவில்லை. நடிப்பில் அவர்களை மிஞ்சவும் முடியாது. அவர்கள் இடத்தைப் பிடிப்பதும் கடினம். வாய்ப்பு கிடைத்தால் என்அம்மாவுடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறேன்'' என்று கூறியிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/26/w600X390/SHRUTI-HAASAN.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/sep/26/அம்மாவுடன்-நடிக்க-ஆசை-3008028.html
3008032 வார இதழ்கள் மகளிர்மணி தாப்ஸிக்கு பயிற்சியளித்த தமிழ் நடன இயக்குநர்கள்! DIN DIN Wednesday, September 26, 2018 10:00 AM +0530 "மன் மார்ஸியான்' என்ற படத்தில் உங்களுக்கு வித்தியாசமாக பாங்ரா நடனத்தை ஆடும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளோம். இதை உங்களுக்கு பயிற்சியளிக்கப் போகிறவர்கள் தமிழ் திரையுலகை சேர்ந்த நடன இயக்குநர்கள்'' என்று இப்படத்தின் இயக்குநர் அனுராக் காஷ்யப் கூறியபோது, வேடிக்கைக்காக சொல்கிறார் என்று நினைத்தேன். பின்னர், தமிழ் திரையுலக ஸ்டண்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமாரின் மகள்கள் நவதேவி மற்றும் நவலட்சுமி ஆகியோர் வந்து எனக்கு பாங்ரா நடன பயிற்சியளித்து ஆடவைத்தபோது ஆச்சரியமாக இருந்தது'' என்று கூறும் தாப்ஸி பன்னு நடித்த "மன்மார்ஸியான்' சமீபத்தில் திரைக்கு வந்துள்ளது.
 - அருண்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/26/w600X390/tap.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/sep/26/தாப்ஸிக்கு-பயிற்சியளித்த-தமிழ்-நடன-இயக்குநர்கள்-3008032.html
3008037 வார இதழ்கள் மகளிர்மணி டால்பினுடன் த்ரிஷா... DIN DIN Wednesday, September 26, 2018 10:00 AM +0530 டால்பினுடன் தொட்டு விளையாடி முத்தம் கொடுக்கும் படங்களை "கண்டதும் காதல் என்று சொல்வதை நம்புங்கள்' என்று தலைப்பிட்டு தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். ஆனால் டால்பினுடன் த்ரிஷா இருக்கும் படங்கள் பலத்த விமர்சனங்களுக்கு இலக்காகி சமூக வலைதளங்களில், பத்திரிகைகளில், சானல்களில் த்ரிஷா இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்.
 சமீபத்தில் த்ரிஷா துபாய் சென்றிருந்தார். அங்கே, நட்சத்திர ரிசார்ட் ஒன்றில் டால்பின் வசிக்கும் குளத்தில் குதித்து டால்பினுடன் விளையாடி மகிழ்ந்திருக்கிறார். அதை படம் பிடித்து வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய, த்ரிஷா பரபரப்பு செய்தியாகிவிட்டார்.
 டால்பின் - த்ரிஷா படங்களை பார்த்த விலங்கு நல ஆர்வலர்கள் பொங்கி எழுந்து விட்டார்கள். "இது டால்பினைக் கொடுமைப்படுத்தும் செயல். இத்தனைக்கும் த்ரிஷா விலங்குகள் கொடுமைப்படுத்துவதை எதிர்க்கும் ‘டஉபஅ’ அமைப்பின் தூதுவர்களில் ஒருவர். அவர் இப்படி நடந்து கொள்ளலாமா? டால்பின் நுட்பமான நுண்ணறிவுள்ள ஜீவி. கடலில் சுதந்திரமாகத் திரியும் டால்பினை செயற்கைக் குளத்தில் போட்டு வளர்ப்பதே கொடுமைப்படுத்துவதுதான். மனிதர்கள் விளையாட டால்பின் பொம்மை அல்ல. டால்பின்களை பல சர்க்கஸ் வேலைகள் செய்யப் பழக்க பல கொடிய முறைகளைக் கையாளுகிறார்கள். மனிதர்களுக்குப் பயந்து கொண்டுதான் டால்பின்கள் வித்தைகளை செய்கின்றன. வித்தைகளை டால்பின்கள் விரும்பிச் செய்வதில்லை.
 செயற்கைக் குளத்தின் தண்ணீர் கெட்டுவிடாமல் இருக்க குளோரின், காப்பர் சல்பேட் போன்ற ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. அந்தத் தண்ணீரில் வசிக்கும் டால்பின்களின் தோல் தானே உரிய ஆரம்பிக்கிறது. கண்களின் பார்வையும் பறி போய் விடுகிறது. பிரபலங்கள் இப்படி விலங்குகளுடன் விளையாடுவதை படம் எடுத்து வலை தளங்களில் பதிவேற்றம் செய்யக் கூடாது. அதை பார்த்து மற்றவர்களும் அப்படி செய்ய விரும்புவார்கள். அதனால், கஷ்டப்படப் போவது விலங்குகள் மட்டுமே'' என்று விலங்கு நல ஆர்வலர்கள் விமர்சித்துத் தள்ளியுள்ளார்கள்.
 த்ரிஷா 2015-இல் டால்பினுக்கு முத்தம் கொடுப்பதாக படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அப்போது இதுமாதிரி விமர்சனங்கள் ஏதும் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 - பனுஜா

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/26/w600X390/TRSIHA.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/sep/26/டால்பினுடன்-த்ரிஷா-3008037.html
3008043 வார இதழ்கள் மகளிர்மணி மீண்டும் நடிக்க வந்ததற்கு கணவரே காரணம்! DIN DIN Wednesday, September 26, 2018 10:00 AM +0530 "வயது என்பது எண்ணிக்கையே தவிர, வயதாகி வருகிறது என்று நீங்கள் நினைத்தால்தான் அது உங்களுக்கு பிரச்னையாக தெரியும்'' என்று கூறும் மாதுரி தீட்சித். நீண்ட இடைவெளிக்குப் பின் "பாக்கெட் லிஸ்ட்' என்ற மராத்தி படத்திலும், "டோட்டல் தமால்' மற்றும் "கலங்க்' ஆகிய இரு இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவர் முன்பு நடித்துக் கொண்டிருந்தபோது இருந்த திரையுலகம், இன்றைய மாறுதல் பற்றி தன் அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறார்:
 
 "80-களில் நான் சினிமாவில் நடிக்க தொடங்கியபோது சின்னசின்ன வேடங்களில் தான் நடித்து வந்தேன். கூடவே தொடர்ந்து நான் நடிப்பேனா என்ற சந்தேகமும் இருந்தது. என் வீட்டைப் பொறுத்த வரை அனைவருமே நன்கு படித்தவர்கள். நானும் அறிவியல் மாணவி என்பதால் மைக்ரோ பயாலஜி படிக்க விரும்பினேன். "அபோத்' என்ற படத்திற்குப் பின் தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. என்னுடைய குடும்பத்தில் யாருக்குமே திரையுலக தொடர்பு இல்லாததால், படங்களை எப்படி தேர்வு செய்வது என்பது எனக்கு தெரியவில்லை. ஆரம்பத்தில் நான் நடித்த படங்கள் பெரிதும் பேசப்படவில்லை என்றாலும், சினிமாவைப் பற்றி நிறைய கற்றுக் கொண்டேன்.
 நான் நன்றாக நடனமாடுவேன் என்பதால் எல்லா படங்களிலும் மாதுரி நடனமாடுவார் என்ற பொதுவான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. நடன காட்சி இல்லையென்றால் "ஏன் நடனமாடவில்லை?'' என்று கேட்பதும் உண்டு. கதைக்கு தேவை என்றால் மட்டுமே பாடலை வைக்க வேண்டுமே தவிர திணிக்கக் கூடாது. அப்போதுதான் இயற்கையாக இருக்கும் என்று நான் விரும்புகிறேன்.
 இந்த 53 வயதிலும், என்னை நான் வயதானவளாக நினைப்பதில்லை. என் உடல், மனம், ஆத்மா ஒரே சீராக இருப்பதற்கு தொடர்ந்து நடனமாடுவதும் காரணமாகும். உங்கள் உடலையும், மனதையும் கவனித்துக் கொண்டால் வயதாவது ஒரு பிரச்னையே இல்லை.
 நான் நடிக்க வந்தபோது இருந்த திரையுலகம் இன்றும் அப்படியே தான் இருக்கிறது. தொழில்நுட்பமும், இளம் கலைஞர்களும் வளர்ந்துள்ளனர். ஒரு வித்தியாசம் இப்போதெல்லாம் நாங்கள் நடிக்கும் காட்சிகள், வசனங்கள், எப்படி நடிக்க வேண்டும் என்ற விவரங்கள் முன்கூட்டியே தரப்படுகிறது. வரவேற்க தகுந்த மாற்றம். இது முன்பு இல்லை. பல விஷயங்களில் திரையுலகம் முன்னேறி வருகிறது.
 நான் நடிகை என்பதால் வீட்டில் எந்தவிதமான விசேஷ கவனிப்பும் கிடைக்காது. இப்போதும் கூட என்னுடைய அம்மா என்னை அதட்டுவதுண்டு. நடிகை என்ற மதிப்பு, மரியாதை எல்லாம் ஸ்டூடியோவில்தான். வீட்டில் எதிர்பார்க்க முடியாது. நான் நடித்த படங்களை வீட்டில் இப்போது பார்க்கும்போது எனக்கே வேடிக்கையாகவும், வெட்கமாகவும் இருக்கும். உடனே சேனலை மாற்றச் சொல்வேன். ஆனால் என் பிள்ளைகள் மிகவும் ரசித்து பார்ப்பதுண்டு.
 மீண்டும் நான் நடிக்க வந்ததற்கு என் கணவரின் ஆதரவுதான் காரணம். " நீ என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ அதை செய். நான் உனக்கு துணையாக இருக்கிறேன்'' என்பார். ஏதாவது தவறு நடக்குமோ என்று அவர் நினைப்பதும் இல்லை. எங்களுக்குள் ஒருவருக்குகொருவர் புரிதலும், பாதுகாப்பும் உள்ளது. அவர் ஓர் இதய மருத்துவர் என்பதால் பல மரணங்களை நேரில் பார்த்துள்ளார். வாழ்க்கை என்பது மிக குறுகிய காலம் என்பதால் அதை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க வேண்டும் என்பார்.
 எங்களுக்குள் பல விருப்பங்கள் இருப்பதால் பார்ட்டிகளுக்கு போகமாட்டோம். குழந்தைகளுடன் சேர்ந்திருப்பதையே விரும்புவோம். என் சுயசரிதையை எழுதுவதற்கு முன், வாழ்க்கையில் நான் இன்னும் செய்ய வேண்டியது நிறையவே இருப்பதாகவே கருதுகிறேன்'' என்கிறார் மாதுரி தீட்சித்.
 - பூர்ணிமா
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/26/w600X390/mat.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/sep/26/மீண்டும்-நடிக்க-வந்ததற்கு-கணவரே-காரணம்-3008043.html
3008049 வார இதழ்கள் மகளிர்மணி மூலிகை சாதங்களே பிரதானம்! DIN DIN Wednesday, September 26, 2018 10:00 AM +0530 கடந்த 12 ஆண்டுகளாக சென்னை, கீழ்கட்டளை பகுதியில் "உங்கள் அம்மாவின் சுவை' என்ற உணவகத்தை நடத்தி வருகிறார் நாகலட்சுமி. உணவகம் என்றதும் வழக்கமான சாம்பார், கூட்டு , பொரியல் போன்றவை தானே இருக்கும் இதிலென்ன ஸ்பெஷல் என நினைக்கிறீர்களா? இவர் வழக்கமான கூட்டு பொரியல் வகையறாக்களை முற்றிலும் தவிர்த்துவிட்டு முழுக்க முழுக்க இயற்கை சார்ந்த ஆரோக்ய உணவுகளை மட்டுமே தயார் செய்து வழங்கி வருகிறார். இதுகுறித்து நாகலட்சுமி நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
 "செவிலியர் படிப்பு முடித்ததும் திருமணம். பின்னர், ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணி புரிந்து வந்தேன். பின்னர், குழந்தைகள் பிறந்து வளர வளர கணவரின் வருமானமும், என்னுடைய வருமானம் போதவில்லை. எனவே, உபரியாக சிறு வருமானம் ஏதாவது வந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. இதனால் வீட்டிற்கு அருகிலேயே ஒரு மளிகைக் கடையை தொடங்கினேன். நர்ஸôக இருந்து கொண்டே மளிகைக் கடையும் பார்த்துவந்தேன். இதனால் கடைக்கும், நான் பணி செய்த மருத்துவமனைக்கும் தினமும் 12 கி.மீ. பயணம் செய்ய வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில் நர்ஸ் வேலையைத் தொடர முடியாமல் போக, கடையை மட்டுமே கவனித்து வந்தேன். ஆரம்பத்தில் ஓரளவு வருமான கிடைத்து வந்தது.
 பின்னர், எங்கள் கடை இருந்த பகுதியில் நிறைய ஹோல்சேல் கடைகள் வந்துவந்தன. இதனால் அந்தப் பகுதி மக்கள் அனைவரும் அங்கேயே மளிகைச் சாமான்கள் வாங்க தொடங்கினர். எங்களுக்கு நஷ்டம் ஏற்பட தொடங்கியது. இதனால் சுற்றி இருந்த எல்லாரும் கடையை முடிவிட்டு மீண்டும் நர்ஸ் வேலைக்கே செல் என்று ஆலோசனை வழங்கினர்.
 கொஞ்சம் காலம் சொந்த கடையில் சுதந்திரமாக வேலை செய்து பழகிவிட்டதால், மீண்டும் வேலைக்குச் செல்ல பிடிக்கவில்லை. அதுவுமில்லாமல் கடையில் இருந்தபோது குழந்தைகளை பக்கத்திலிருந்து கவனித்துக் கொள்ளும் வாய்ப்பும் அதிகம் இருந்ததால் அதை விட்டு விட மனம் வரவில்லை.
 இதனால் வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, எனக்கு சமையல் நன்றாக வரும். அதனால் சின்னதாக மெஸ் வைக்கலாம் என்ற எண்ணம் தோன்ற , வீட்டில் பெட் ரூம் இருந்த பகுதியை உடைத்து தெரு பக்கம் வாசல் வைத்து பெட்ரூம்மையே மெஸ்ஸôக மாற்றினேன். பின்னர், எனது மெஸ்ஸில் வழக்கமான சாம்பார், கூட்டு, பொரியல் வகைகளை வைக்காமல், மூலிகை சாதங்களான நெல்லிக்காய் சாதம், கொத்துமல்லி சாதம், கருவேப்பிலை சாதம், சீரக சாதம், தனியா சாதம், கொள்ளு சாதம், எள்ளு சாதம், இஞ்சி சாதம், பூண்டு சாதம் என என் அம்மா சொல்லிக் கொடுத்த மூலிகை சாதங்களை மட்டுமே செய்து கொடுத்தேன்.
 நானே எதிர்பாராத அளவு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிலிருந்து தொடர்ந்து 12 ஆண்டுகளாக மெஸ் நடத்தி வருகிறேன்.
 சமீப காலமாக மக்கள் ஆரோக்ய உணவுவகைகளை தேடிச் செல்ல தொடங்கியதால் தற்போது முடக்கத்தான் கீரை சாதம், கீழாநெல்லி சாதம், பசலைக்கீரை சாதம், அரைக்கீரை சாதம், சிறு கீரை சாதம், புளிச்சக் கீரை சாதம், மணத்தக்காளி சாதம், சுண்டைக்காய் சாதம், பாகற்காய் சாதம் என வழங்கி வருகிறேன்.
 ஆரம்பத்தில் கீரைசாதமா? நல்லா இருக்குமா? என்று கேட்டவர்கள் அதன் சுவையை அறிந்தவுடன் தொடர்ந்து வர ஆரம்பித்தார்கள். தற்போது கீரை சாதத்திற்காக தேடி வருபவர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. மேலும், 12 ஆண்டுகளாக எங்கள் மெஸ்ஸýக்கு தொடர்ந்து வரும் வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள். இதுவே எனக்கு கிடைத்த வெற்றியாக நினைக்கிறேன்'' என்றார் நாகலட்சுமி.
 - ஸ்ரீதேவி
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/26/w600X390/RICE.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/sep/26/மூலிகை-சாதங்களே-பிரதானம்-3008049.html
3008050 வார இதழ்கள் மகளிர்மணி அல்ஸைமர்ஸ்: மறதி ஒரு நோயா? - விளக்குகிறார் மன நல நிபுணர் வந்தனா DIN DIN Wednesday, September 26, 2018 10:00 AM +0530 இந்த தலைப்பை பார்க்கும் பொழுது பலரின் பதில் இல்லை என்றே தோன்றும். ஆனால் உண்மையில் மறதி ஒரு நோய். ஞாபக மறதி என்ற நோய் பலரையும் சிரமபடுத்துகின்றது. இதிலிருந்து விடுபட முடியாமல் பலரும் தவிக்கின்றனர். 
குழந்தைகளுக்கு மறதி வந்தால் அது அவர்களது படிப்பை பாதிக்கும், அந்த சமயத்தில் பெற்றோர் தீர்வை நோக்கி செயல் படுகிறார்கள், ஆனால் முதியவர்களுக்கான மறதியை யாரும் கண்டு கொள்வது இல்லை. வயது ஆனாலே மறதி வரும் என்று எண்ணுகிறார்கள். அல்ஸைமர் நோய் (நினைவாற்றல் பாதிப்பு ) முதுமையில் வரக்கூடிய நோய் என்பது பலருக்கும் தெரிவது இல்லை.
சாதாரண மறதி உள்ளவர்களுக்கு பொதுவாக பேனா, சாவி போன்ற பொருட்களை எங்கே வைத்தோம் என்று தேடுதல், தேதி நினைவுக்கு வராமல் இருப்பது, பாக்கெட்டில் கண்ணாடியை வைத்து கொண்டு வேறு இடத்தில் தேடுதல். மொபைல் ஃபோனில் பேசிக்கொண்டே ஃபோனை தேடுவது. சீப்பை தலையில் வைத்துக் கொண்டே அதை தேடுவது போன்ற சிரமங்கள் இருக்கும்.
அல்ஸைமர் மறதி நோய் உள்ளவர்களுக்கு பொதுவாக இப்படி சில அறிகுறிகள் ஆரம்ப காலத்தில் வரக்கூடியவை. 
இதை கவனிக்காமல் விட்டு விட்டால் அவர்களுக்கு, இந்த நோய் முற்றி போய் . தினசரி வாழ்க்கையில் நடத்தையில் தடுமாற்றம் உண்டாகும். அவர்களுக்கு அடிக்கடி குழப்பம் உண்டாகும், அன்றாட வேலைகளைச் செய்வதில் பிரச்னை, முடிவு எடுப்பதில் சிரமம், கவனிப்பதில், நேரம், தேதி, இடம் குழப்பம், சரியான வார்த்தைகள் தேர்வு செய்து பேசுவது.
செய்த வேலையை திரும்ப திரும்ப செய்வது, வீட்டில் உள்ளவர்களின் பெயர் மற்றும் அவர்கள் யார் என்று தெரியாமல் தடுமாறுவது. சாப்பாடு சாப்பிட்டுவிட்டு மீண்டும் சாப்பிடுவது, சிறு குழந்தைகள் போல நடந்து கொள்வது, வீட்டை விட்டு வெளியே சென்று விடுவது , திரும்பி வர முடியாமல் சிரமப்படுவது. 
இவை தொடரும் போது அவர்களாகவே தனக்கு ஏதோ பிரச்னை வந்துவிட்டது என்று நினைக்கின்றனர். அவை அதிகரிக்கும் போது உடல் மற்றும் மனதளவில் பாதிக்க படுகிறார்கள்.
முதியவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது ஆகையால் அல்ஸைமர்ஸ் நோயின் விகிதாச்சாரமும் அதிகரிக்க கூடும். ஆகையால், இதற்கான விழிப்புணர்வு அவசியமாகும். 
மறதி என்பது வெறும் முதியவர்களுக்கு மட்டும் வரக்கூடியவை அல்ல, சில சமயங்களில் 45 - 50வயது உடையவர்களுக்கும் வரும். இவை 65 வயது உள்ளவர்களுக்கு 5%, 80 வயது உடையவர்களுக்கு 20% முதல் 25% வரை இப்பிரச்னை வர வாய்ப்புள்ளது. இந்தியாவில் சுமார் 41லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2006- ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 26.6 மில்லியன் மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 2050 -ஆம் ஆண்டில் இது நான்கு மடங்காகக் கூடும் என அஞ்சப்படுகிறது.
மறதிநோய் Dementia என்பது "சிதைவடையும் மனம்' என்ற பொருள் கொண்டதாகும். ஏழு வகையான dementia stages உள்ளது (mild to severe dementia). Alzheimer's disease மிக தீவிர stage Dementia வின் நோய் தாக்குதலாகும். (Mild cognitive impairment) வயது முதிர்ச்சியினால் சாதாரண அறிவாற்றல் சரிவா அல்லது முதுமையினால் மோசமான அறிவாற்றல் சரிவா என்பதை மருத்துவருடன் கலந்தாலோசித்து அதற்கு ஏற்ப சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். 
மறதி காரணிகள்: இம்மறதி வருவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவை வயது, மரபியல், சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மாற்றங்கள், ஊட்டச் சத்து குறைபாடு, தைராய்டு மற்றும் சர்க்கரை நோயினால் கூட வரக்கூடும்.
நீங்கள் நேசிப்பவருக்கு இந்த மறதி நோய் வந்தால் அவர்களை தனிமைப்படுத்தி காப்பகத்தில் விட வேண்டாம். அவர்களை குடும்ப உரையாடலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 
சிகிச்சை முறை : உங்கள் வயது, ஒட்டுமொத்த சுகாதாரம், மருத்துவ வரலாறு மற்றும் உங்கள் நோய் எவ்வளவு கடுமையானது இப்படி பல விஷயங்களை அலசி ஆராய்ந்த பின்னர் மருத்துவர் உங்களுக்கு சிறந்த சிகிச்சையைத் தேர்வு செய்வார்.
நினைவாற்றல் அதிகரிக்கும் உத்திகள் : எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்க வேண்டும். தினம் செய்ய வேண்டிய நடவடிக்கைகளை ஒரு வெள்ளை போர்டில் எழுதி வைக்கலாம். முதலில் அன்றைய தேதியை எழுத வேண்டும். பிறகு அன்றைய நடவடிக்கைகளை எழுத வேண்டும். பின்னர், எந்த நடவடிக்கை முடிந்து விட்டதோ அதை அழித்து விட வேண்டும். இதனால் நீங்கள் உங்கள் சாப்பாடு, மருந்துகள், மற்றும் இதர சில நடவடிக்கையை திரும்பத்திரும்ப செய்யாமல் இருப்பதை தவிர்க்கலாம். அடுத்த நாள் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது என்பது தேதியை மாற்ற வேண்டும். மருந்துகளை தினசரி காலை, மதியம், இரவு என வகைப்படுத்தப்பட்ட டப்பாவில் போட்டு வைக்கலாம்.
தினசரி நாளிதழ் படிக்க பழக வேண்டும். தன் பேரக் குழந்தைகளுடன் அன்றைய செய்தி நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளலாம். அவர்களுடன் (Snake & Ladder) பரமபதம் விளையாடலாம். இதில், கூட்டல் கழித்தல் செய்வதன் மூலம் மூளை stimulate ஆகும். கல்லாங்காய் ஆடுவதன் மூலம் கண் மற்றும் கை மற்றும் (fine motor skills) விரல்கள் வலிமை பெறும். 
தனது குடும்ப நபர்களின் தொலைபேசி எண்களை மனப்பாடம் செய்து, திரும்ப திரும்ப சொல்லாம் அல்லது எழுதி பார்க்கலாம். 
வீட்டை விட்டு வெளியே போகும் போது கண்டிப்பாக பாக்கெட்டில் குடும்ப நபர்களின் ஃபோன் லிஸ்ட் வைத்துக் கொள்ள வேண்டும்.
குடும்ப விழாக்களுக்கு அழைத்துச் சென்று மற்றவர்களுடன் கலந்துரையாட செய்ய வேண்டும். திரும்ப திரும்ப சொன்னதையே சொன்னால் அவர்களை வேறு விதத்தில் திருப்ப (divert) வேண்டும். இப்படி சில உத்திகளை கையாளும் போது நாம் இந்த மறதி நோயை சுலபமாக கையாளலாம்.
அல்ஸைமர் நோய் ஒரு குடும்ப நோயாக அழைக்கப்படுகிறது, ஏனென்றால் நாம் நேசிப்பவர் நீண்ட காலமாக மன அழுத்தத்தால் வீழ்ச்சியடைவதைப் பார்க்கும் போது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
அல்ஸைமர் நோய் உள்ள முதியவர்களை பராமரிப்பவர்கள் (care takers) முதலில் தங்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்வது அவசியமாகும். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/26/w600X390/VANDHANA.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/sep/26/அல்ஸைமர்ஸ்-மறதி-ஒரு-நோயா---விளக்குகிறார்-மன-நல-நிபுணர்-வந்தனா-3008050.html
3008055 வார இதழ்கள் மகளிர்மணி இல்லத்தரசியும் தொழில் முனைவோர் ஆகலாம்-25 DIN DIN Wednesday, September 26, 2018 10:00 AM +0530 "கடந்த வாரம் நாம் சுப நிகழ்ச்சிகளுக்கு தேவையான வரிசைத்தட்டு, ஆரத்தித் தட்டு, காசியாத்திரை குடை, மாப்பிள்ளை தலைப்பாகை, ரெடிமேட் கூந்தல் போன்றவற்றை தொழிலாக எடுத்து செய்யலாம் என்று பார்த்தோமல்லவா, அதன் தொடர்ச்சியை இந்தவாரம் பார்ப்போம்'' என்கிறார் சுயதொழில் ஆலோசகர் உமாராஜ்:
 ஆரத்தி தட்டு: தற்போது பெரும்பாலான திருமணங்களில் ஆரத்தித் தட்டு தனி இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆரத்தித் தட்டை பல வடிவங்களில் தயார் செய்யலாம். நாம் சற்று வித்தியாசமாக பொம்மைகள் போன்றவற்றை நமது கற்பனை திறனுக்கு ஏற்றவாறு பல வடிவத்தில் செய்து வைத்து விற்பனையும் செய்யலாம், வாடகைக்கும் விடலாம். திருமண காலங்களில் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும். இதன் மூலம் நமக்கு நல்ல வருமானமும் கிடைக்கும்.
 காசியாத்திரை குடை: கடையில் விற்கும் குடையை வாங்கி அப்படியே கொடுப்பதை விட, சற்று வித்தியாசமாக அதில் கற்கள் பதித்து அல்லது 3 டி வைத்து அழகான வடிவங்கள் வரையலாம். குடையின் முனையில் உல்லன் நூல் அல்லது பட்டு நூல் கொண்டு குஞ்சலம் தொங்கவிடலாம். இதனால் குடை அலங்காரமாகவும், பார்க்க அழகான தோற்றத்துடனும் இருக்கும்.
 மாப்பிள்ளை தலைப்பாகை: பெரும்பாலான இந்து திருமணங்களில் அவரவர் வழக்கப்படி திருமணத்தன்று மாப்பிள்ளைக்கு தலைப்பாகை கட்டுவது வழக்கம். தற்போது சென்னைப் போன்ற நகர்புறங்களில் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் தலைப்பாகை கட்டத் தெரிவதில்லை. இதனால் திருமணத்தின்போது தலைப்பாகை கட்டிவிட ஆளில்லாமல் தவிக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு பிரிவினருக்கும் உள்ள வழக்கப்படி ரெடிமேட் தலைப்பாகை செய்து விற்பனை செய்யலாம். நல்ல வரவேற்பு இருக்கும்.
 ரெடிமேட் கூந்தல் அலங்காரம்: திருமணம் என்றதும் பெண்கள் தங்கள் அலங்காரத்திற்காக நிறைய செலவு செய்வார்கள். அதிலும் தற்போதுள்ள பெண்கள் தங்கள் அலங்காரம் தனித்துவமாக இருக்கும் வேண்டுமென்பதில் மிகவும் சிரத்தையுடன் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே தற்போது பிரத்யேகமான ரெடிமேட் ஜடைகள் நிறைய வந்துவிட்டன. அந்த ரெடிமேட் ஜடைகளை நாம் நமது கற்பனைக்கேற்றவாறு பல வடிவங்களில் செய்து விற்பனை செய்யலாம். உதாரணமாக, கடைகளில் கிடைக்கும் சவுரி மூடியை வாங்கி வந்து அதில் முத்துக்கள் வைத்து அலங்காரம் செய்யலாம் அல்லது ஏலக்காய், விதவிதமான பூக்கள், பழங்கள் என மணப்பெண்ணின் சேலை நிறத்திற்கு தகுந்தவாறு தயார் செய்து விற்பனை செய்யலாம்.
 இவற்றை விற்பனை செய்வது எப்படி என்று நீங்கள் கேட்பது புரிகிறது.. இதோ அதற்கான பதில், வீட்டு வாசலில், தெருமுனையில் போர்ட் வைப்பது, உறவினர், தோழிகள் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்கு உங்களது பரிசாக செய்து தாருங்கள். இதன் மூலம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களின் பார்வையில் பட்டு ஆர்டர்கள் கிடைக்கும். இணையதளம் மூலம் பரப்பலாம். மேலும், திருமண காண்ட்ராக்டர்களிடம் பேசி வைத்தும் ஆர்டர் பிடிக்கலாம். நல்ல வருமானம் தரும் தொழில் இது.
 - ஸ்ரீ

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/26/w600X390/mm1.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/sep/26/இல்லத்தரசியும்-தொழில்-முனைவோர்-ஆகலாம்-25-3008055.html
3008060 வார இதழ்கள் மகளிர்மணி அசத்தும் டிசைன்களில் "காதி' ஆடைகள்..! DIN DIN Wednesday, September 26, 2018 10:00 AM +0530 பொதுவாக ஆடைகள் விஷயத்தில் நேற்று இருக்கும் "ஸ்டைல்' இன்று இல்லை. இன்றைய ஸ்டைல் நாளை மாறிவிடும். இந்த நியதிக்கு "காதி' துணிமணிகள், ஆடைகள் மட்டும் விதிவிலக்காக இருக்குமா..?
 நேற்றுவரை, "காதி' ஆடைகளில் ஏற்பட்டு வந்த மாற்றங்கள் நத்தை வேகத்தில் இருந்து வந்தது. இப்போது அதிரடி மாற்றத்துக்கு "காதி'யும் தயாராகிவிட்டது. உள்நாட்டு சந்தை மட்டுமில்லாமல் வெளிநாட்டுச் சந்தையையும் "காதி' குறிவைத்திருக்கிறது. அதற்கேற்ற மாற்றங்களை துணிகளில் இருக்கும் டிசைன்களில், ஆடைகளின் வடிவமைப்புகளில் கொண்டு வந்துள்ளது.
 அதிலும் பெண்கள் ஆடைகளில், ஜனரஞ்சக வடிவமைப்பில் ஆயத்த ஆடைகள் இதர பிராண்டுகளின் ஆடைகளுக்கு சவால் விடுகின்றன. முன்னணி ஆடை டிசைனர்களான ராஜேஷ் பிரதாப் சிங், ரோஹித் பால், அஞ்சு மோடி, பாயல் ஜெயின், பூனம் பகத், மனிஷ் மல்ஹோத்ரா போன்றோரின் வடிவமைப்பில் உருவான பெண்களின் கதர் ஆடைகளை பிரபலப்படுத்த அழகிகளை "கேட் வாக்' வரச் செய்து "காதி' அசத்தியுள்ளது. அழகிகள் அணிந்து வந்த விதம் விதமான ஆடைகளைத்தான் பார்க்கிறீர்கள்..!
 - சுதந்திரன்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/26/w600X390/mm2.jpg http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/sep/26/அசத்தும்-டிசைன்களில்-காதி-ஆடைகள்-3008060.html
3008072 வார இதழ்கள் மகளிர்மணி டிப்ஸ்.. டிப்ஸ்... DIN DIN Wednesday, September 26, 2018 10:00 AM +0530 * மணத்தக்காளி கீரையை வதக்கி பருப்போடு மிளகாய், உப்பு, புளி சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.பெரியவர் முதல் சிறியவர் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

* தோசைமாவில் தேங்காய்ப்பாலை சேர்த்து தோசை வார்த்து பாருங்கள். தோசையின் மணம் ஊரையே கூட்டும். மிகவும் சுவையாக இருக்கும்.

* சிலர் அவல் உப்புமா என்றால் விரும்பி சாப்பிடமாட்டார்கள். அதனால் கொத்துமல்லி, இஞ்சி சேர்த்து அரைத்து தயிரில் கலந்து அவலையும் போட்டு கிளறினால் தயிர் அவல் ரெடியாகிவிடும். இது ஆரோக்கியமான சிற்றுண்டியாக இருக்கும். 

* ஒரு கரண்டி எண்ணெய் அல்லது நெய் அடுப்பில் வைத்து காய்ந்ததும் பஜ்ஜி மாவில் ஊற்றிப் பிறகு மாவைக் கரைத்து பஜ்ஜி செய்தால் வாசனையாக இருக்கும்.

* தோசை நன்றாக மெல்லியதாக வரவேண்டும் என்றால் சிறிதளவு அரிசியுடன் சிறிது ஜவ்வரிசி சேர்த்து அரைத்தால் பளபளவென்று சுவையான மெல்லியதான தோசை வரும்.

* உளுந்து வடை எண்ணெய் குடிக்காமல் இருக்க, வடைக்கு அரைத்து எடுத்ததும் அதில் இரண்டு ஸ்பூன் அரிசிமாவைக் கலந்து வடை தட்டினால் மொறு மொறுவவென்று சூப்பராய் வரும். எண்ணெய்யும் குடிக்காது.

* இரவு நேரங்களில் சப்பாத்தி போன்றவற்றை சாப்பிட்டால் சிலருக்கு எளிதில் ஜீரணமாகாது. இதை தடுக்க மாவு பிசையும்போது ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய்யைச் சேர்க்க வேண்டும்.

* புதிய பாத்திரங்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை பிய்த்து எடுத்தாலும் அந்த பசை பாத்திரத்தை விட்டு பல நாட்களுக்கு போகாது. இதை உடனடியாக நிவர்த்தி செய்ய, அந்த ஸ்டிக்கர்களின் மீது சமையலுக்கு உபயோகப்படுத்திய எண்ணெய்யின் இரண்டு சொட்டை விட்டு அதை விரலால் தேய்த்தால் ஸ்டிக்கரும் பசையும் பாத்திரத்தை விட்டு சுத்தமாக அகன்று விடும்.

* பன்னீர் பட்டர் மசாலா வீட்டில் செய்யும் போது இஞ்சி வெங்காய விழுதை நன்கு வதக்கி பின்னர் கெட்டியாக முந்திரி கசகசா ஒரு ஸ்பூன் தேங்காய் விழுது சேர்த்து அரைத்து விட்டால் சுவையும் மணமும் ஹோட்டலை தோற்கடிக்கும்.

* பால் வேண்டாம் என அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு அதே பாலில் இரண்டு ஸ்பூன் ப்ருட் ஜாமைப் போட்டுக்கலக்கி ப்ருட்டி மில்க் ஷேக்காகக் கொடுத்து ஜமாயுங்கள்.

* மோர்குழம்பு செய்யும்போது ஒரு மஞ்சள் வாழைப்பழத்தை நன்கு பிசைந்து சேர்த்துக் கொண்டால் சூப்பர் ருசிதான்.

* தோசைக்கல்லில் தோசை வார்க்க வராமல் இருந்தால் வெண்டைக்காயை தடவி தோசை வார்த்தால் தோசை நன்றாக வரும்.

* வெல்லம் சேர்த்து செய்யும் பொங்கல், பாயசம் போன்றவற்றிற்கு வெல்லத்தைக் கொஞ்சம் குறைத்துப் போட்டு கடைசியில் சர்க்கரையைக் கொஞ்சம் சேர்க்க சுவை கூடும்.

* வாழைத் தண்டை பொடிப் பொடியாய் நறுக்கி பக்கோடாவிற்கு கலந்து வைத்த மாவில் போட்டு பிசைந்து பக்கோடா செய்தால் வெங்காயத்திற்கும் வாழைத்தண்டிற்கும் வித்தியாசம் தெரியாமல் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். 
பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் - நூலிலிருந்து
- சி.பன்னீர்செல்வம்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/26/w600X390/LADY_FINGER.JPG http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/sep/26/டிப்ஸ்-டிப்ஸ்-3008072.html