Dinamani - வெள்ளிமணி - http://www.dinamani.com/weekly-supplements/vellimani/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2822650 வார இதழ்கள் வெள்ளிமணி அபயம் அளித்து தைரியம் கொடுக்கும் மஹாபைரவர்! Saturday, December 9, 2017 03:23 PM +0530 ஸ்ரீ ராமர், ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் பொருட்டு ரிஷிகளின் ஆலோசனைப்படி ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்ய விரும்பினார். அதற்கு அனுமனிடம் காசிக்குச் சென்று ஒரு சுயம்பு லிங்கத்தை எடுத்து வரும்படியாகக் கூறினார். 

அனுமனும் காசிக்குச் சென்றார். எங்கு பார்த்தாலும் லிங்கங்களாகத் தெரிய, ஒன்றும் புரியாமல் திகைத்தார். பின்னர், ஒரு கருடன், ஒரு பல்லியின் துணையுடன் சுயம்பு லிங்கத்தை எடுக்க முயன்றார். 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பைரவருக்கு கோபம் கொப்பளித்தது. தன் ஆளுகைக்கு உட்பட்ட இடத்தில் தன் அனுமதி பெறாமல் செயலாற்றிய அனுமனிடம் சண்டை இட்டார். 

சண்டை வெகுநாள் நீடித்தது. பிறகு தேவர்களெல்லாம் இருவரையும் சமாதானப் படுத்தினர். அனுமன் ஒரு நல்ல நோக்கத்திற்காகவே இவ்வாறு செய்தார் என்பதறிந்து சிவலிங்கத்தை அனுமன் எடுத்துச் செல்ல சம்மதித்து லிங்கத்திற்குக் காவலாக தானும் உடன்சென்றார். பல்லிக்கும் கருடனுக்கும் சாபம் கொடுத்தது தனிக்கதை!

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், தகட்டூர் என்ற ஊரைக் கண்டதும் பைரவர், அங்கேயே தங்க விரும்பி அமைந்ததாக ஆலய வரலாறு தெரிவிக்கிறது. 

தகட்டூருக்கு யந்திரபுரி என்ற பெயரும் உண்டு. இங்கு ஸ்ரீ பைரவ யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு (தகடு+ ஊர்) அதன் மகிமையாலும் ஸ்ரீ பைரவரின் கடாட்சத்தாலும் மக்களின் எண்ணங்கள் ஈடேறி நல்வாழ்வு பெறுகின்றனர். 
கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ பைரவர் உக்கிர தெய்வமானானும் புன்சிரிப்புடன் நின்ற கோலத்தில் சிறு குழந்தையாக அருள்பாலிக்கிறார். 
கோயிலின் பிரகாரத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பைரவர், ஸ்ரீ விஸ்வநாதர், ஸ்ரீ விசாலாட்சி, ஸ்ரீ முருகப்பெருமான் மற்றும் துர்க்கையம்மன் எழுந்தருளி அருள்செய்கின்றனர். கோயிலின் எதிரில் தீர்த்தக்குளம் உள்ளது.

பைரவரின் ஜன்ம தினமான கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியில் முன்னும் பின்னுமாக 8 நாள்களுக்கு விசேஷ ஆராதனைகள், ஹோமங்கள் நடைபெறும். இந்த தினங்களில் கோயிலில் கூட்டம் அலைமோதும்! 

மேலும் திங்கள், வெள்ளிக்கிழமைகள் இங்கு வெகு விசேஷம். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியின் போதும் மாலை 5.00 மணி அளவில் மிகச் சிறப்பாக பைரவ யாகம் நடைபெறுகின்றது. 

இங்கு ராவுத்தர் என்ற கோயில் இருக்கின்றது. பைரவரை வணங்கும் பக்தர்கள் ராவுத்தருக்கு பானகம் வைத்து வழிபட்டுச் செல்கின்றனர். மற்றுமொரு சிறப்பாக, கோயிலைச் சுற்றி நவக்கிரக மரங்களான, அத்தி, அரசு, புரசு, கருங்காலி, வன்னியும் நவக்கிரக செடிகளான வெள்ளெருக்கு, அருகு, தர்ப்பை, செந்நாயுருவியும் பைரவ பக்தர் ஒருவரால் வளர்க்கப்பட்டு வருகின்றது. 

மேலும் ஆலயத்தைச் சுற்றி மஞ்சள் கடம்பு, வன்னி, வேம்பு, பலா, வில்வம், மகிழமரம், ஆகிய மரங்கள் உள்ளன. அந்தந்த கிரகங்களின் கெடுபலன்களால் ஏற்படும் தீமைகளை மேற்கண்ட விருட்சங்களைச் சுற்றி வந்து தீர்த்துக் கொள்ளலாம் என்று பல முனிவர்களால் இயற்றப்பட்ட மிகப் பழைமையான நூலான "விருட்ச சாஸ்திரம்' கூறுகின்றது. பைரவரைத் தரிசிக்க வரும் பக்தர்கள் இந்த நட்சத்திர மரங்களையும் சுற்றி வந்து நன்மை பெறுகின்றனர்.
இவ்வாண்டு, பைரவர் ஜன்ம தின 8 நாள் உற்சவம் தற்போது நடைபெற்று வருகின்றது. வரும், 10.12.2017 அன்று இவ்வைபவம் பூர்த்தியாகின்றது.
வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி சாலை வழியாக வாய்மேடு சென்று தகட்டூர் பைரவர் கோயிலை சென்றடையலாம். 

தொடர்புக்கு: 97885 18226.
- நா. ராதாகிருஷ்ணன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2015/6/10/13/w600X390/bairavar.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/dec/08/அபயம்-அளித்து-தைரியம்-கொடுக்கும்-மஹாபைரவர்-2822650.html
2822681 வார இதழ்கள் வெள்ளிமணி விருப்பத்தை நிறைவேற்றும் ஸ்ரீஆதிமூலேஸ்வரர்! DIN DIN Friday, December 8, 2017 11:14 AM +0530 திருச்சி மாநகரத்தின் கிழக்கே அமைந்துள்ள திருத்தலங்களில் திருஞானசம்பந்தமூர்த்தியால் 59 ஆவது தலமாக தேவாரப்பதிகம் பெற்று விளங்குவது திருப்பாற்றுறை என்னும் சிற்றூராகும். 
சோழமன்னன் ஒருவன் கொள்ளிட ஆற்றின் தென்கரையில் வரும்போது, காடாக இருந்த இவ்வூரில், புதர் ஒன்றிலிருந்து வெண்மையான பறவை ஒன்று பறந்து சென்றதைப் பார்த்தான். அப்பறவை பார்ப்பதற்கு மிக அழகாகவும், வினோதமாகவும், வசீகரமாகவும் இருந்தது. பறவை வெளிப்பட்ட இடத்தில் அவன் மனம் ஈர்க்கப்பட்டு அதன் அருகில் சென்றான். 
நறுமணம் கமழ்ந்தது. 
காவல்காரர்களை விட்டு அவ்விடத்தைத் தோண்டச் செய்தான். புதையுண்டிருந்த சுவாமியின் சிரசில் மண்வெட்டி பட்டு, அதிலிருந்து பால்பெருகி ஒடுவதைக் கண்ட மன்னவன் மனம் பதைத்து, அச்சிவலிங்க மூர்த்திக்கு அங்கேயே திருக்கோயில் கட்டி வழிபாடுகள் பல சிறப்புறச் செய்தான். 
இவ்வாலயம் முதற்பராந்தகச் சோழனால் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளதாக இத்திருக்கோயிலின் கல்வெட்டுக்களிலிருந்து தெரியவருகிறது. ஈசனை தனி வில்வம் கொண்டு ஆயிரத்தது எட்டு நாமங்களால் அர்ச்சித்தும் திருஞானசம்பந்தரின் பாடல்களைப் பாடி பூஜிப்பதால் அவரவர் தம் மனோபீஷ்டம் சித்தியடையும் என்பதில் ஐயமில்லை எனவும் கூறப்படுகிறது. 
சூரிய பகவான், தட்சிணாய, உத்தராயணக் காலத்தில் புரட்டாசி 3 ஆம் தேதியும், பங்குனி மாதம் 3 ஆம் தேதியும் சூரிய ஒளிக்கதிர் ஆதிமூலேஸ்வரர் சிரசின் மேல் தம் ஒளிக்கதிர்களை மேலிருந்து கீழாகப் படரவிட்டு வணங்கியுள்ளார். (தற்போது ஒளிக்கதிர் படுவதில்லை) இத்தலத்தில் எழுந்தருளிய மார்க்கண்டேயர் பூஜைக்குப் பால் இல்லாமல் வருந்தியபோது இம்மூர்த்தியின் சிரசில் பால்பெருகி ஒடியது கண்டு மனம் நெகிழ்ந்து இவ்விறைவனை வழிபட்டுச் சென்றுள்ளார்கள். 
ஸ்ரீசண்முக சுவாமிகள் என்ற சித்தர் ஒருவர் இத்தலத்தில் பல ஆண்டுகளாக தங்கி வழிபட்டு இறைவனருளால் பல அன்பர்களுக்கு ஏற்பட்ட நோய்கள், பிள்ளைப்பேறின்மை, இழந்த பொருளை மீண்டும் அடையவும் என பல நன்மைகள் செய்து பரிபாலித்துள்ளார்கள்.
இவ்வாலயத்தின் அம்பாள் சந்நிதியின் மஹா மண்டபத்தின் வடமேற்குத்திசையில் உள்ள சுவரில் எழுந்தருளியுள்ள "அனுக்ஞை விநாயகர்' என்னும் "நர்த்தன விநாயகரை' விசேஷ பூஜைகள் செய்து பிரார்த்தித்து வணங்கியவர்களுக்கு அவரவர் நினைத்த காரியங்கள் நிறைவு பெற்று பேரானந்தமடைகின்றனர் என்பது 
சிறப்பாகும்.
முதற்பராந்தகன் பரகேசரி வர்மனான விக்ரம சோழன், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் காலத்தனவாகும். அதன்படி, இறைவன் "திருப்பால்துறை மகாதேவர்', "திருப்பால்துறை நாயனார்', "திருப்பால்துறை உடையார்' என்றும் வழங்கப்படுகிறார். கல்வெட்டு குறிப்பாளர் ஆதிமூலேஸ்வரர் என்றும் அழைக்கின்றனர். 
நந்தி, பலிபீடங்கள் மதில்சுவருக்கு வெளியே அமைந்துள்ளன. மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் கோயிலுக்கு அழகுபட அமைக்கப் பட்டுள்ளது. 
கோபுரவாயிலில், தென்புறம் காவல் தெய்வம் கருப்பரும், ஸ்ரீவிநாகயரும் வடபுறம் ஸ்ரீபாலதண்டாயுபாணியும் உள்ளனர். கோபுர வாயிலைக் கடந்தவுடன் முன்மண்டபம், தொடர்ந்து மேற்கு பிரகாரத்தில் ஸ்ரீவிநாகயர், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத முருகர், ஸ்ரீகஜலெட்சுமி கோயிலும், வடக்கு பிரகாரத்தில் ஸ்ரீசண்டேசர் கோயிலும், கிழக்கே பைரவர், நவக்கிரக மண்டபங்களும் உள்ளன. 
கர்ப்பகிரகக் கோஷ்டத்தின் வெளிப்புறம் தெற்கே பிட்சாடனரும், வீணா தட்சிணாமூர்த்தியும், மேற்கே சங்கரநாராயணரும் வடக்கே பிரம்மா, விஷ்ணு துர்க்கை சிற்பங்களும் அழகுபட காட்சியளிக்கின்றன. 
பொதுவாக, மேற்கே லிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர் சிலை தான் இருக்கும். இக்கோயிலில் சங்கரநாராயணர் சிற்பம் இருப்பது சிறப்பான அமைப்பாகும். ஆலய மூலலிங்கம், ஆதிமூலநாதர் என வழங்கப்படுகிறார். அம்பாள் நித்யகல்யாணி என்றும் பாடலில் மேலாம்பிகை, மோகநாயகி என்றும் அழைக்கப்படுகிறார். 
வழித்தடம்: திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவானைக்காவல் வழியாக கல்லணை போகும் பேருந்தில் ஏறி பனையபுரம் நிறுத்தத்தில் இறங்கி கோயிலுக்கு நடந்து செல்லவேண்டும். 
தொடர்புக்கு-98431 72233.
- பொ.ஜெயச்சந்திரன்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/8/w600X390/v6.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/dec/08/விருப்பத்தை-நிறைவேற்றும்-ஸ்ரீஆதிமூலேஸ்வரர்-2822681.html
2822680 வார இதழ்கள் வெள்ளிமணி நலம் தரும் நந்த சப்தமி!   Friday, December 8, 2017 11:13 AM +0530 கார்த்திகை மாதம் 23 ஆம் தேதி (9.12.2017) நந்த சப்தமி! இந்நாளில் கோமாதாவான பசுவைப் பூஜிப்பது சகல பாக்கியங்களைத் தரும் என்று சாஸ்திரம் கூறுகிறது. கோமாதாவான பசுவை வழிபடுவது குறித்து உள்ள சுலோகம்: 
" காம் சத்ருஷ்டவா நமஸ்க்ருத்ய க்ருத்வா சைவ பிரதக்ஷிணம்
ப்ரதக்ஷிணீக்ருதா தேன ஸப்தத்வீபாவஸுந்தரா
ஸர்வ காமதுகே தேவி ஸர்வதீர்த்தா பிஷேசினீ
பாவனே ஸுரபிஸ் ரேஷ்டே தேவிதுப்யம் நமோஸ்துதே'
- கோ ஸ்துதி
பொருள்: தெய்வப்பிறவியான பசுவை வணங்கி, அதனை வலம் வந்து துதித்தால் ஏழு தீவுகளுடன் கூடிய பூமியை வலம் வந்த புண்ணியம் கிட்டும். நற்குணங்கள் நிரம்பிய அமுதம் போன்ற பாலை நல்கும் பசுவை வழிபட்டால் நம் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும். இந்த வழிபாடு அனைத்து புண்ணிய நதிகளில் நீராடிய பலனைத் தரவல்லது. நம்மை பரிசுத்தம் செய்யக் கூடியவள் இந்தப் பசு. கேட்டதையெல்லாம் அருளும் காமதேனுவாகத் துலங்கும் கோமாதாவே உன்னை வணங்குகிறேன்.
கோ பூஜையை முறையாக செய்ய இயலாதவர்கள், பசுவின் கழுத்திலும் தலையிலும் தடவிவிட்டு, பின்புறம் தொட்டு நமஸ்காரம் செய்தால் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கும். 
காரணம்: பசுவின் கழுத்திலும் தலையிலும் அனைத்துப் புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகள் வாசம் செய்கின்றன. மேலும், பசுவின் உடலில் முக்கோடி தேவர்களும் தெய்வங்களும் வாசம் செய்வதுடன் கோமயம் வெளிவரும் பகுதியில் ஸ்ரீ லட்சுமி தேவி வாசம் செய்வதாகவும் சாஸ்திரம் கூறுகிறது. எனவே, பசுவை வழிபட்டு புல்லும் நீரும் வாழைப்பழங்களும் அளித்தால் யாகம் செய்த பலன்கள் கிட்டும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.
- டி.ஆர். பரிமளரங்கன்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/8/w600X390/v5.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/dec/08/நலம்-தரும்-நந்த-சப்தமி-2822680.html
2822649 வார இதழ்கள் வெள்ளிமணி மக்கள் சேவை செய்ய அழைக்கும் இயேசு! DIN DIN Friday, December 8, 2017 10:31 AM +0530 "இதோ சீக்கிரமாய் வருவேன்'' என்று வேதாகமம் இயேசுவின் இரண்டாம் வருகைப் பற்றி கூறுகிறது. இயேசு இரண்டாம் வருகையில் நீதிபதியாக, ராஜாவாக வானத்திலிருந்து இறங்கி வருவார். அப்போது நியாயத் தீர்ப்பு நடக்கும். இயேசுவின் பக்தர்கள் அனைவரும் பரலோகம் செல்வர். தண்டிக்கப் பட்டவர்கள் நரகம் செல்வர். 
இவ்வருகைப் பற்றிய விவரத்தை இயேசு (மத்தேயு 25:31-46) விவரித்து கூறுகின்றார். வானத்திலிருந்து வரும் நாளில் இப்பூமியில் உள்ள யாவரும் வலது இடது பக்கமாக பிரிந்து நிற்பார்கள். 
அப்போது மேய்ப்பனானவன் செம்மறியாடு தளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிறிக்கிறது போல அவர்களை அவர் பிரிப்பார்.
அப்போது ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, ""வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப் பட்டவர்களே.. உலகம் உண்டானது முதல் உங்களுக்குக்காக, ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ளுங்கள். பசியாயிருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள். தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள். அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக் கொண்டீர்கள். உடையில்லாமல் இருந்தேன், எனக்கு உடை கொடுத்தீர்கள். காவலில் இருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்'' என்பார். 
"ஆண்டவரே, நீர் பசியாயிருந்தீர் நாங்கள் உணவு கொடுத்தோம். எப்போது உடையில்லாமல் இருந்தீர், நாங்கள் உமக்கு உடை கொடுத்தோம்? எப்போது தாகமாக இருந்தீர், தாகம் தீர்த்தோம்? எப்போது நீர் நோயாளியாக மருத்துவமனையில் இருந்தீர், நாங்கள் விசாரிக்க வந்தோம்?'' என்றார்கள்.
இயேசுவோ ""பிரதியுத்தரமாக மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள்!'' என்றார்.
அப்படியே இடது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, "சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு போங்கள் பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்
பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். பசியாயிருந்தேன், எனக்கு உணவு கொடுக்கவில்லை. தாகமாயிருந்தேன் என் தாகத்தைத் தீர்க்கவில்லை. அந்நியனாயிருந்தேன் என்னை சேர்த்துக் கொள்ளவில்லை. உடையில்லாமல் இருந்தேன், உடை கொடுக்கவில்லை. வியாதியுள்ளவனாயிருந்தேன், காவலில் இருந்தேன், என்னைப் பார்க்கவில்லை'' என்றார். 
இடது பக்கமுள்ளவர்கள் "ஆண்டவரே, எப்போது நீர் பசியாய், தாகமுள்ளவராய், அந்நியராய், உடையில்லாதவராய் நோயாளியாய் சிறையில் இருந்தீர். அப்படி நாங்கள் உம்மைப் பார்த்திருந்தால் நிச்சயம் உதவியிருப்போமே'' என்றார்கள். ராஜா அவர்களிடம் ""மிகவும் சிறியவரான இவர்களுக்கு எதைச் செய்யவில்லையோ அதை நீங்கள் எனக்கு செய்யவில்லை'' என்றார்.
மனிதரின் உலக வாழ்வின் முதன்மையான நோக்கம் பிறருக்கு நலம் பாராட்டி, உதவி செய்து அன்பு செலுத்தி வாழ்வதே இறைவனை தொழுவதற்குச் சமம். 
மனிதநேயமும் உலகில் உள்ள அனைத்து இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களிடம் அன்பு பாராட்டி வாழ்வதே இறைவனின் விருப்பம். அவ்வாறு ஏழை எளியவர்களுக்குச் செய்யப்படும் உதவி இறைவனுக்கே செய்யப்பட்டதாக இயேசு கூறுகின்றார். 
- தே. பால் பிரேம்குமார்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/8/w600X390/v4.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/dec/08/மக்கள்-சேவை-செய்ய-அழைக்கும்-இயேசு-2822649.html
2822648 வார இதழ்கள் வெள்ளிமணி நிகழ்வுகள் DIN DIN Friday, December 8, 2017 10:24 AM +0530 மஹா கும்பாபிஷேகம்
வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, கீழ்புதுப்பேட்டை சாலை, அல்லிகுளம் கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீ மஹா பைரவர் பீடத்தில் ஸ்ரீ மஹா பைரவர், லிங்கேஸ்வரர், கணபதி, ராகு- கேதுக்களுக்கும் மஹாகும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறுகின்றது. 
நாள்: 10.12.2017, நேரம்: காலை 7.30 - 9.00 மணி.
திருப்பணி
திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் அமைந்து பக்தர்களின் அச்சத்தைப் போக்கி அருள்பாலிக்கும் தச்சங்குளம் மாரியம்மன் கோயிலில் திருப்பணி நடைபெற்று வருகின்றது. இவ்வாலயம் முற்றிலும் புதுப்பிக்கப்பட வேண்டிய நிலையில் இருப்பதாலும் கிராம சமுதாய கமிட்டியினர் நன்னிலம் சோத்தக்குடி, மாதாகோயில் தெரு கிராமவாசிகள், விழாகுழுவினர் உதவியுடன் திருப்பணி வேலைகள் உடனடியாக துவங்கப்பட்டுள்ளன. இத்திருக்கோயில் திருப்பணிகளில் பக்தர்கள் பங்குகொண்டு நல்லறருள் பெறலாம்.
தொடர்புக்கு: 94451 59851.
- எம். பார்த்தசாரதி
திருப்புகழ்த் திருப்படி விழா
அருணகிரிநாதரால் பாடல்பெற்ற ஞானமலை முருகன் கோயிலில் 17 ஆவது ஆண்டு திருப்புகழ்த் திருப்படி விழா நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு லட்சார்ச்சனை, அருணகிரிநாதருக்கு காட்சிவிழா, பாற்குட ஊர்வலம், வெற்றி வேல் பூஜை, திருப்படி பூஜை போன்ற வைபவங்கள் நடைபெறுகின்றன. இத்திருத்தலம், காவேரிப்பாக்கத்திலிருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் 14 கி. மீ. தொலைவில் மங்கலம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது. 
தொடர்புக்கு : 94444 18526 / 90032 32722.
நாள்: 9.12.2017, 10.12.2017.

]]>
http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/dec/08/நிகழ்வுகள்-2822648.html
2822646 வார இதழ்கள் வெள்ளிமணி திருமணத்தின் பெரும் பயன்கள்! DIN DIN Friday, December 8, 2017 10:23 AM +0530 உலகம் படைக்கப்பட்டது மனிதன் வாழ்வதற்கே. மனித உற்பத்தி இல்லையேல் உலகம் படைக்கப்பட்டதின் நோக்கம் ஆக்க வழியில் அமையவே இஸ்லாம் திருமணத்தைத் திருந்திய பொருந்திய வாழ்வை வலியுறுத்துகிறது. தனித்து இருப்பதற்குத் தகுதி உடையவன் இறைவன் மட்டுமே. அல்லாஹ்வின் படைப்புகள் சேர்ந்து வாழ்வதற்காகவே படைக்கப்பட்டவை. திருமணம் புரிவது இறைவனின் கட்டளையை கடைப்பிடிப்பது; நபி வழியில் நடப்பது,. திருமணத்தைக் குறிக்கும் நிக்காஹ் குர்ஆனில் 23 இடங்களில் குறிப்பிடப் படுகிறது. உயிரினங்களை இணை இணையாகப் படைத்து இனப்பெருக்கத்திற்கு ஏற்பாடுகள் செய்பவன் அல்லாஹ். இதனை அறிந்து மனிதர்கள் திருமணம் புரிய வேண்டும். 
திருமணத்தால் உறவு பரந்து பரவி விரிவடையும்; சந்ததிகள் பெருகி பரம்பரைபாங்குறும். "திருமணம் தவறு இழைக்காமல் உங்களைத் தடுக்கிறது'' என்றுரைக்கிறது குர்ஆனின் 4-3 ஆவது வசனம்.பெண்களைப் பேதுற பார்க்கும் தவறைத் திருமணம் தடுப்பதைத் தாஹா நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததை அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) தெரிவிப்பதைத் தப்ரானி, ஹாக்கிம் நூல்களில் காணலாம். பார்வையை தாழ்த்தி பாவத்திற்குத் தூண்டும் வெட்கத் தலங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற குர்ஆனின் 24- 30 ஆவது வசனம், காம பார்வை நுண்ணசைவு இச்சையில் இசைவை உண்டாக்கி கசப்பான விபச்சாரத்திற்கு வழி வகுக்கும் என்பதாலேயே பார்வையைத் தாழ்த்தி வெட்க தலங்கள் என்னும் பாலியல் உறுப்புகளைப் பாதுகாக்க எச்சரிக்கிறது, திருமணத்தால் பல தீமைகள் தடுக்கப்படுகின்றன. மனித வாழ்வு செம்மையாகிறது.
அநாதைகளைத் திருமணம் செய்து ஒரு பெண்ணிற்கு வாழ்வு கொடுத்த நன்மையோடு அநாதைகளை ஆதரித்து நன்மையும் கிடைக்கும். விதவைகளை திருமணம் செய்தால் விதவைகளுக்கு வாழ்வு கொடுத்த நன்மையையும் பெறலாம். நபிகள் (ஸல்) அவர்களின் நற்றோழர் ஜாபிர்பின் அப்தில்லாஹ் திருமணம் புரிந்த இளைஞரான அவர்கள் விதவையைத் திருமணம் செய்த காரணத்தைக் கேட்டார்கள்.
உஹது போரில் கொல்லப்பட்ட ஜாபிர் (ரலி) அவர்களின் தந்தை அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் ஒன்பது சகோதரிகளை விட்டு இறந்தார்கள். பருவம் எய்தா அச்சிறுமிகளைப் பராமரிக்க அவர்களைப் போன்ற பக்குவம் இல்லா பருவப் பெண்ணை மணப்பதைவிட விதவையை மணப்பது சிறப்பென்று நிறப்பமான விதவையைத் தேர்ந்து எடுத்ததாய் பதில் கூறியதும் அவரின் செயலைச் செம்மல் நபி (ஸல்) அவர்கள் பாராட்டியதை ஹாபிர் (ரலி) அவர்கள் அறிவிப்பது புகாரியில் உள்ளது. வளரும் பருவத்தில் குழந்தைகள் உள்ளோர் விதவையைத் திருமணம் செய்வதில் உள்ள நன்மையை நவில்கிறது ஜாபிர் (ரலி) அவர்களி ன் நல்லுரை.
திருமண வயதை அடைந்த பெண்ணிற்குப் பொருத்தமான மணமகன் அமைந்தால் தாமதிக்காது திருமணம் முடித்திட முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தியதை அறிவிக்கிறார் அலி (ரலி) நூல்- திர்மிதீ. உரிய வயதில் திருமணம் செய்வதும் விரைவில் பிள்ளை பெறுவதும் குறைந்த மஹரைப் பெற்று கொள்வதும் பெண்களுக்கு வளத்தை உண்டாக்கும் என்று உத்தம நபி ( ஸல்) அவர்கள் உரைத்ததை அன்னை ஆயிஷா (ரலி) அறிவிப்பதை பைஹகீ நூலில் காணலாம். கன்னிபெண்ணை அவளின் பொறுப்புதாரியான தந்தை திருமணம் புரிந்து மணமகனோடு மனம் ஒன்றி வாழ வற்புறுத்தலாம். ஆனால் விதவையை அவ்வாறு வற்புறுத்த கூடாது. விதவை விரும்பினால் விரும்பியவரும் சம்மதித்தால் நிம்மதியாய் வாழ திருமணம் நடத்த நந் நபி (ஸல்) அவர்கள் நவின்றதை அன்னை ஆயிஷா (ரலி) அறிவிப்பதை மிஷ்காத்தில் காணலாம்.
பலரறிய நடக்கும் பகிரங்க திருமணம் ஊருக்கு ஊர் சென்று பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து தில்லுமுல்லு நடத்தும் கில்லாடிகளின் தொல்லைகளிலிருந்து பெண்களைக் காப்பாற்றும். 
உங்களுடைய " மனைவிகளை உங்களிலிருந்தே உருவாக்கி உங்களுக்கு இடையில் அன்பையும் நேசத்தையும் உண்டாக்கி இருப்பது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஒன்று'' என்று உரைக்கிறது உத்தம குர்ஆனின் 30-21 ஆவது வசனம். ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல் மூடி மறைக்காமல் வெளிப்படையாகப் பேசுதல், எச்செயலையும் செய்யுமுன் திட்டமிட்டு செய்தல், மனம் ஏற்காதவற்றை மறத்தல், சிறுகுறைகளைப் பெரிதுபடுத்தாது விட்டு விடுதல், திருமண வாழ்வை வளமாக்கும்.
திட்டமாக பல தூதர்களை நாம் அனுப்பியுள்ளோம். அவர்களுக்கு மனைவி மக்களைக் கொடுத்தோம் என்ற குர்ஆனின் 13-38 ஆவது வசனம் இறைதூதர்கள் இல்லற வாழ்வில் ஈடுபட்டு மக்களைப் பெற்று மகிழ்வோடு வாழ்ந்ததை அகிலத்திற்கு அறிவிக்கிறது. அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருமை மனைவி அன்னை கதிஜா (ரலி) காத்தமுன் நபி (ஸல்) அவர்களின் பால்குடி தாயார் ஹலீமா வீட்டிற்கு வந்ததொழுது மாமியாருக்குரிய மரியாதை செய்து ஓர் ஒட்டகம் சுமக்கும் அளவிற்கு அன்பளிப்பு வழங்கினார்கள். 
ஏழ்மைக்கு அஞ்சி திருமணம் செய்யாதவர் என் வழியிலிருந்து வழுவியவர் என்ற வள்ளல் நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பைத் தாரிமி என்னும் நூலில் காணலாம். திருமணம் செய்தவர்கள் வறுமையில் இருந்தால் அல்லாஹ்வின் கருணையால் செல்வம் பெறுவர். அனைத்தையும் அறிந்த அல்லாஹ் விசால கொடையாளி என்று விளம்புகிறது விழுமிய குர்ஆனின் 24-32 ஆவது வசனம். வறுமைக்குப் பயந்து வாலிப வயதில் திருமணம் செய்யாதிருப்பது கூடாது. திருமணம் பொருள் தேட தூண்டும். தூண்டலினால் துலங்காது ஓங்கும் உழைப்பு வறுமையை விரட்டிவிடும். வளம் வந்து சேரும் வாழ்வில்.
இறைமறை இயம்புகிறபடி இறைத்தூதர் நடந்து காட்டிய நந்நெறியில் திருமணம் புரிந்து பெரும் பயன்களைப் 
பெறுவோம்.
- மு.அ. அபுல் அமீன்


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/8/w600X390/v3.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/dec/08/திருமணத்தின்-பெரும்-பயன்கள்-2822646.html
2822645 வார இதழ்கள் வெள்ளிமணி பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர் DIN DIN Friday, December 8, 2017 10:20 AM +0530 * மனதில் கவலை குடிகொள்ளும்படி எப்பொழுதும் விடக்கூடாது. கவலைப்படுவதால் பல கெடுதல்கள் ஏற்படும். நாகப்பாம்பை ஓர் அறியாத குழந்தைக் கோபமூட்டினால் எப்படி அது அந்தக் குழந்தையைக் கடித்துக்கொல்லுமோ, அப்படியே கவலையும் சீக்கிரத்தில் மனிதனை அழிக்கும்.

* நாம் ஒரு செயலை உற்சாகத்துடன் தொடங்கிச் செய்யும்போது கவலைக்கு இடம் கொடுத்தால், அது நம்மை மேற்கொண்டு நமது முயற்சிகளைச் செய்யவிடாமல் அழித்துவிடும்.

* கவலையால் நமது தேஜஸ் அடங்கினால் எந்தக் காரியம்தான் கைகூடும்?
- ராமாயணத்தில் அங்கதன்

* இறைவனை வணங்கி வழிபட்டாலன்றிப் பொய், பொறாமை முதலிய தீய குணங்களை அகற்ற முடியாது. 
- இராமலிங்க அடிகளார்

* நா தழுதழுக்க உள்ளம் கசிந்து நாணமின்றிச் சில சமயம் மிகுதியாக அழவோ சிரிக்கவோ, உரக்கப் பாடவோ ஆடவோ செய்யும் என் பக்தன் உலகத்தையே தூய்மையாக்குகிறான்.
- ஸ்ரீ கிருஷ்ண பகவான்

* பிறரை நிந்தனை செய்வதன் மூலமாக ஒருவன் தனது மதிப்பைத் தேடக் கூடாது. தன்னுடைய நல்ல குணங்களினாலேயே ஒருவன் மேன்மையைத் தேடிக்கொள்ள வேண்டும்.
- மகாபாரதத்தில் பீஷ்மர் 

* கர்மவசத்தால் ஜீவனுக்கு துக்கம் ஏற்படுவது இயற்கை. ஆனால் அது விலகுவதற்கு மகான்களுடைய அனுக்கிரகமே முக்கிய காரணமாகும். மகான்களுக்கு அத்தகைய சக்தியானது ஸ்ரீ பகவானை இதயத்தில் தியானம் செய்வது, நாமசங்கீர்த்தனம் செய்வது முதலியவற்றால் உண்டாகிறது. 
- பாகவதம்

* நல்ல தேன் நாவிற்கு மட்டும் இனிக்கும். ஆனால் சர்வேஸ்வரன் இணையடி மலரில் பொங்கியெழும் அருள்தேனோ, நினைக்கும் மாத்திரத்தில் மனதில் இனிக்கும். கண்ணுறும் கண்களில் இனிக்கும், உடம்பினுள்ளே உள்ள எலும்புகளும் நெக்குருகும்படி இனிக்கும். ஆகையால், இந்த ஒப்பிலா நறுந்தேனை அருந்த விருப்பம் கொள்ளுங்கள். தினையளவு தேனிருக்கும் பூவில் நாட்டம் மிகக்கொள்ளாதீர்கள். ஈசனின் பாதமலர்களில் சென்று இன்னிசை பாடுங்கள். அங்கு பொங்கித் ததும்பும் ஆனந்த அருட்தேனை அள்ளி அள்ளி அருந்துங்கள். உருவமற்ற அருவத்தால் ஆனந்தமயமாவீர்கள். 
- மாணிக்கவாசகர்

* ரகசியமாக வாய்க்குள் சிரித்துக்கொள்வது, செய்த உதவிக்கு மாத்திரம் நல்லது செய்வது, நாம் ஏதாவது நம்மையறியாமல் கெட்ட காரியம் செய்திருந்தால் அதை மறக்காமல் மனதில் வைத்துக்கொண்டிருப்பது இந்த மூன்றும் கெட்ட நண்பர்களுக்கு உரிய அடையாளங்களாகும்.
- கவி சுந்தரபாண்டியன்

* ஓர் உண்மையான பக்தன் சித்தி அடைவானாகில், அவனுடைய பதினான்கு தலைமுறைகள் சித்தி அடையும். யார் வண்டிச்சக்கரம் போன்று தொடர்ந்து வரும் தன் பிறவிக்கு முடிவு கட்டி இறைவனுடன் ஐக்கியம் அடைகிறானோ, அவனே உண்மையான பக்தன்.
- மும்முடிவரம் பாலயோகி 

* காட்டில் வானளாவி நிற்கும் மூங்கில் தீப்பிடித்து காடு முழுவதும் அழிப்பதைப்போல், ஒருவனிடம் தோன்றும் பேராசை அவனை முழுவதும் அழித்துவிடும்.
- கம்பர் தரும் உவமை

* என்னை கண்டித்துத் திருத்துகிறவர்கள், என்னுடைய பாதுகாவலர்களாக இருக்கட்டும்! என்னை இகழ்கிறவர்கள், என்னுடைய சுற்றத்தாரர்களாக இருக்கட்டும்! 
என்னைச் சுடுசொல்கொண்டு தாக்குகிறவர்கள், என்னுடைய பெற்றோர்களாக இருக்கட்டும்! என்னை கேலியும், ஏளனமும் செய்கிறவர்கள் என்னுடைய உடன்பிறந்தவர்களாக இருக்கட்டும்! ஆனால், என்னைப் பொய்யானப் புகழுரையால் போற்றி முகஸ்துதி செய்கிறவர்கள், என்னைத் தங்கத்தால் செய்த கழுமரத்திற்குக் கொண்டு சென்று ஏற்றுபவர்களாக இருக்கட்டும்! 
- பசவேசர் (வீர சைவம்)
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/8/w600X390/v2.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/dec/08/பொன்மொழிகள்-தொகுப்பு-சுவாமி-கமலாத்மானந்தர்-2822645.html
2822643 வார இதழ்கள் வெள்ளிமணி மணக்கோலத்தில் அருளும் மங்கள சனீஸ்வரர்! Friday, December 8, 2017 10:17 AM +0530 தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இருந்து 25 கி. மீ. தொலைவில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது விளாங்குளம் கிராமம். இவ்வூரில் அமைந்துள்ள அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில் சனிபகவான் தனி சந்நிதியில் தம் தேவியரோடு ஆதிபிருஹத் சனீஸ்வரர் எனும் மங்களசனீஸ்வரர் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். வரும், 19-12-17 அன்று சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசிக்க இருப்பதை முன்னிட்டு சனிப்பெயர்ச்சி விழா இவ்வாலயத்தில் சிறப்புற நடைபெறுகின்றது. 
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியெங்கும் மகாபிரளயம் உண்டாகும். பூமியில் உள்ள உயிரினங்கள் மறைந்து மீண்டும் தோன்றும். அப்படி ஒரு பிரளய கால முடிவில் பூமியில் மீண்டும் உயிரினங்கள் தோன்றவும், மனித குலம் தழைக்கவும் ஒரு வைகாசி மாத திருதியை நன்னாளில் பூவுலகில் விளங்கும் கிராமத்தில் இறைவன் அட்சயபுரீஸ்வரராக தோன்றினார். அவருக்கு துணையாக இறைவி அபிவிருத்தி நாயகியாக வந்தமர்ந்தார். அது முதல் கொண்டு இத்தலம், அனைத்தையும், பெருக்கும் அபிவிருத்தி செய்யும் தலமாகவும், அட்சய திரிதியை தலமாகவும் விளங்கி வருகிறது.
நவக்கிரகங்களில் சனிபகவான் பெயரைக் கேட்டாலே அனைவரும் அச்சப்படுவார்கள். ஆனால் சனிபகவான் ஒரு நீதிமான். தவறு செய்பவர்களுக்குத் தண்டனை அளிப்பதில் நீதி நெறி தவறாதவர். சூரியன் - சாயாதேவி தம்பதியருக்கு மகனாக சனிபகவான் தோன்றினார். பிள்ளைகள் வளர்ந்து வரும்போது யமனுக்கும் சனிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு ஒரு கட்டத்தில் யமன் சனிபகவானின் ஒரு காலைத் துண்டித்துவிட்டார். அதனால் வருத்தமடைந்த சனி பகவான், தன் கால் ஊனம் நீங்க வேண்டி மனித உருவில் பூமியெங்கும் சுற்றித்திரிந்தார்,
அப்படி திரிந்த போது விளாமரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் நுழைந்தார். அங்கிருந்த விளாமரத்தின் வேர் தடுக்கி கீழே பள்ளத்தில் விழுந்தார். அந்நாள் ஒரு பொன்னாள். சித்திரைத் திங்கள் பூசம் நட்சத்திரம். வளர்பிறை திருதியை திதியுடன் கூடிய சனிக்கிழமை சனிபகவான் விழுந்த இடத்தில் பல யுகங்களாக மறைந்திருந்த பூசஞானிவாவி என்ற தீர்த்தம் பீரிட்டுக் கிளம்பியது. அட்சயபுரீஸ்வரர் அருளால் சனி பகவானின் ஊனம் நீங்கி, சனிபகவானை தீர்த்தம் மேலே எழுப்பிக்கொண்டு வந்தது. அட்சயபுரீஸ்வரர் அருளால் தன் ஊனம் நீங்கிவிட்டதை உணர்ந்து சனிபகவான் அவரை வழிபட்டார். சிவபெருமான் அவருக்கு திருமண வரம் வழங்கி மந்தா, ஜேஷ்டா தேவியரை திருமணம் செய்து கொள்ள அருள் வழங்கினார். அது முதல் கொண்டு இத்தலத்தில் தம் இரு மனைவியருடன் திருமணக்கோலத்தில் அமர்ந்து சனிபகவான் அருள் வழங்கி வருகிறார். 
விளாமரங்கள் அதிகம் இருந்ததால் அவ்வூர் விளாங்குளம் எனப் பெயர் பெற்றது. பிரளயம் முடிந்து மனித இனங்கள் தோன்றுவதற்கு முன் பூவுலகில் பகவான் முதன் முதல் அமர்ந்த தலம் இது. பிருஹத் என்றால் பெரிய என்று பொருள். எனவே, ஆதியில் தோன்றிய பெரிய சனீஸ்வரர் என்று பொருள்படும்படி ஆதிபிருஹத் சனீஸ்வரர் (மங்கள சனீஸ்வரர்) என்று இவர் அழைக்கப்படுகிறார்.
சனிபகவான் கால் ஊனம் நீங்கவும் திருமணம் நடைபெறவும் இறைவன் அருளியதால் இத்தலத்தில் தம் தேவியரான மந்தா, ஜேஷ்டாவுடன் மணக் கோலத்தில் எழுந்தருளியுள்ளார். சனி பகவான் பரிகார நாயகராக, சனி தோஷம் தீர்த்து சங்கடங்கள் போக்குபவராக தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
27 நட்சத்திரங்களில் பூச நட்சத்திரத்திற்கு உரிய தலமாக இது விளங்குகிறது. பூச மருங்கர் எனும் சித்தர்பிரான் வழிபட்ட தலம் இது. மேலும் சனிப்பரணிசித்தர் என்பவர் முன் யுகத்தில் இத்தலத்தில் தோன்றி பிரபஞ்சத்தில் அனைத்து பித்ரு, சாபங்களும் நீங்க அருள்புரிந்த தலம். இன்றளவும் சனிப்பரணி சித்தரும், பூச மருங்க சித்தரும் ஸ்தூல சூக்கும வடிவில் இத்தலத்தில் வழிபடுவதாக தல வரலாறு சொல்கிறது. 
எனவே, பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், சனிக்கிழமையில் பிறந்தவர்களும் தம் வாழ்நாளில் ஒருமுறையாவது வந்து வழிபட வேண்டிய தலம் இது. அருள்மிகு ஆதி பிருஹத் சனீஸ்வரனின் நட்சத்திரம் பூசம். எனவே, இங்கு வந்து வழிபடுவதால் பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எல்லா நலன்களும் உண்டாகும் என்பதில் ஐயமில்லை.
இவ்வாலயத்தில் 19-12-2017 அன்று சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசிப்பதை முன்னிட்டு சனிப்பெயர்ச்சி விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. காலை முதல் மாலை வரை சனிபகவானுக்கு சிறப்பு அர்ச்சனை நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து, 24.12.2017 அன்று லட்சார்ச்சனையும் 30.12.2017 மற்றும் 31.12.2017 தேதிகளில் பரிகார ஹோமங்கள் நடைபெறுகின்றன.
தொடர்புக்கு : 94437 53808 / 089404 06877.
- பி.எஸ். கவியரசு

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/8/w600X390/v1.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/dec/08/மணக்கோலத்தில்-அருளும்-மங்கள-சனீஸ்வரர்-2822643.html
2818493 வார இதழ்கள் வெள்ளிமணி தீபம் ஏற்றுவோம்..!   DIN DIN Friday, December 1, 2017 10:58 AM +0530 கார்த்திகை மாதம் முழுவதும் வீடுகளில் விளக்கேற்றும் முறை நமது தமிழகத்தில் இருந்து வருகின்றது. தீபம் ஏற்றுவதன் மூலம் இல்லத்தில் நல்ல அதிர்வலைகள் உருவாகின்றன. தினசரி நாம் இல்லங்களில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
"இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமசிவாயவே ''
- என்பது அப்பர் பெருமான் வீடுகளில் ஏற்றும் விளக்குகள் புற இருளை மட்டுமல்ல; அக இருளையும் போக்க வல்லது, விளக்கு ஏற்றிய வீடு வீணாய் போகாது எனத் தமிழில் ஒரு பழமொழி உண்டு. 
தீபத்தின் சுடருக்குத் தன்னைச் சுற்றியுள்ள தேவையற்ற எதிர்மறை சக்திகளை ஈர்த்து, அழிக்கும் ஆற்றல் உண்டு அவ்வாறு தேவையற்ற எதிர்மறை சக்திகள் ஈர்த்து எரிக்கப்படும் பொழுது, இல்லத்தில் நேர்மறை சக்திகள் அதிகமாகின்றன.
நம் உடலில் உள்ள ஆதாரச் சக்கரங்களைத் தூண்டும் ஆற்றல் விளக்கொளிக்கு உண்டு, மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகின்றது. மணிபூரகம், அநாஹதமும் நெய்விளக்கு ஏற்றுவதால் தூய்மை அடைகின்றது. நம் உடலில் உள்ள சூரிய நாடி நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகின்றது. சந்திரநாடி குளுமையைத் தருகின்றது. சுழுமுனை நாடி ஆன்மீகத் தொடர்பை அதிகரிக்கச் செய்கின்றது. நல்லெண்ணெய் விளக்கினால் சூரியநாடி சுறுசுறுப்படைகிறது. நெய்விளக்கினால் சுழுமுனை நாடி முன்னேற்றம் காண்கிறது.
காலையில் எழுந்தவுடன் வீட்டின் புறக்கதவை, பின்பக்க கதவைத் திறந்து வைத்துவிட்டுப் பின்னர் வாசற் கதவைத் திறந்து வாசல் தெளித்துக் கோலமிட்டு தீபமேற்றவேண்டும். அபார்ட்மெண்ட் வீடுகளில் பின் கதவு கிடையாது என்றால் வீட்டின் வலது பக்க கடைசி ஜன்னலைத் திறந்து விட்டு வாசற் கதவினைத் திறக்க வேண்டும். இரவு முழுவதும் இருந்த சோம்பல், தூக்கம், அசதி ஆகியவற்றைப் புறம் தள்ளி விட்டு, அதிகாலையில் வாசற்கதவினைத் திறந்து உற்சாகம், சுறுசுறுப்பு தெய்வீக ஆற்றலை வரவேற்று அவை நிலைப்பதற்காகத் தீபம் ஏற்றவேண்டும். 
மாலை நேரத்தில் பின்பக்கக் கதவினைச் சார்த்தி விட்டு வாசல் கதவினைத் திறந்து வைத்து விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். தெற்கு திசை தவிர மற்ற மூன்று திசைகளிலும் அவரவர் வீட்டு வசதிக்கேற்ப விளக்கேற்றிக் கொள்ளலாம். 
திருமறைக்காடு என்னும் வேதாரண்யத்தில் சிவபெருமான் சந்நிதியில் இருந்த நெய்விளக்கு ஒன்று அணையும் தருவாயில் இருந்தது. அந்த விளக்கில் இருந்த நெய்யை அருந்த வந்த எலியானது நெய்யை அருந்தும் போது அதனை அறியாமல் விளக்கினைத் தூண்டிவிட்டது. இறைவன் சந்நிதியில் விளக்கு பிரகாசமாக எரியத் தொடங்கியது. இதனால் மகிழ்வடைந்த சிவபெருமான், அந்த எலியை மறுபிறப்பில் அனைத்துச் செல்வங்களையும் வழங்கி மகாபலிச் சக்ரவர்த்தியாக்கினார். என்பது தல வரலாறாகும்.
கார்த்திகை மாதம் தீபத்திருநாள் மாதமாகும். பருவச் சூழல் மாறும் காலமாகும். இந்த மாதத்தில் தினசரி மாலை நேரத்தில் வீட்டின் முன்புறமுள்ள வாசல்படிகளின் இருபுறத்திலும் விளக்குகளை ஏற்றி வழிபடுவதன் மூலம் பதினாறு பேறுகளும் கிடைத்திடும் என்பது உறுதியாகும். 
- மீனாட்சி ஸ்ரீநிவாஸன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/1/w600X390/v9.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/dec/01/தீபம்-ஏற்றுவோம்-2818493.html
2818491 வார இதழ்கள் வெள்ளிமணி ஆதிபுரீசனின் அருட்காட்சி! DIN DIN Friday, December 1, 2017 10:56 AM +0530 தொண்டைநாட்டு பாடல் பெற்ற சிவாலயங்களில் முதன்மையாகவும் மூன்றுலகிலும் உள்ளவர்கள் வேண்டிய பொருளை எல்லாம் தரும் தலம் திருவொற்றியூர். சிவபெருமான் புற்றுருவில் வீற்றிருக்கின்ற திருத்தலம் திருவொற்றியூர்.
உலகம் முழுவதும் நெருப்பாலும் காற்றாலும் பகுதி பகுதியாய் அழிந்து போனது. அதுபோக நீரும் ஜலப்பிரளயத்தை உண்டாக்கி முற்றிலும் அழித்தது. ஒரு பகுதி மட்டுமே எஞ்சி நின்றது. கடல் அதனையும் தன்னுள்ளே அடக்கிக் கொள்ளத் துடித்தது . அந்நிலையில் அங்கிருந்த அரன் அதனை "சற்று ஒத்தியிரும்' எனக் கட்டளையிட கடலும் பின்வாங்கியது. அதனால் அரன் இருந்த அந்த இடம் "திரு ஒத்தியூர்' என இருந்து திருவொற்றியூர் என வழங்கத்தொடங்கியது. உலகம் முழுவதும் உற்பத்தியாவதற்கு முன்பே உருவான இடமாதலால் இப்பகுதி ஆதிபுரி இறைவன், ஆதிபுரீஸ்வரர் எனவும் அழைக்கப்பட்டார்.
நான்முகனுக்கு காட்சி தருவதற்காக அக்கினி சொரூபமான இறைவன் அவ்வக்கினியின் மத்தியில் சதுர வடிவமாகிய சித்திரப் பலகை வடிவில் வன்னிமரத்தடியில் எழுந்தருளினார். அவ்வாறு தோன்றிய இறைவன் யாராலும் உருவாக்கப் படாத தானே சுயம்புவாய் உருவானதால் "தீண்டாத் திருமேனியன்' என அழைக்கப்பட்டார். சுயம்புலிங்கமான ஆதிபுரீசுவரர் தானே புற்றுமண் வடிவிலே தோன்றியவர் என்பதனால் "புற்றிடங்கொண்டார்' எனப்படுகின்றார். பிரளயத்திற்குப்பின் புதியதாக மீண்டும் உலகை அரன் சொற்படி பிரம்மன் படைத்தார். 
வாசுகி என்னும் பாம்பு அஷ்ட நாகங்களில் ஒருவன். நாகலோகத்தில் நல்லபடியாய் அரசு நடத்திக் கொண்டிருந்தான். சிவன் பால் அதீத பக்தி கொண்டிருந்தவன்.வான்மீகி முனிவர் ஒற்றியூர் இறைவனால் நித்தியம் பெற்றதை அறிந்து பூலோகம் அடைந்தான். திருவொற்றியூருக்குப் போய் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி வன்னி மரத்தடியில் எழுந்தருளியுள்ள இறைவனை துதித்தான். 
அவ்வாறே செய்த வாசுகி நாகம், இறைவன் மகிழ்ந்து இருக்கும் நேரத்தில் உங்களை விட்டு விலகாத தன்மையை எனக்கருள வேண்டுமென வேண்டினான். இறைவன் கட்டளைப்படி திருப்பாலைவனம் சென்று இறைவனை தரிசித்து மீண்டும் ஒற்றியூர் வந்து தரிசனம் செய்து வணங்கி உங்கள் திருவடி சேர்த்து அருளவேண்டுமென வேண்டினான். அந்த வாசுகிப்பாம்பைத் தம்முடைய திருவடியில் பொருந்தும்படிச் செய்தார். அதுவும் சிவபெருமானிடத்தில் ஐயக்கியமானது. 
வாசுகி சிவன் பாதம் சேர்ந்த தகவலறிந்த ஆதிசேஷன் தினமும் தன் நந்தவனத்தில் மலர்ந்த மலர்களை பறித்துவந்து புஷ்பாஞ்சலி செய்து, அவன் பிறவித் துயரறுக்க வழி வேண்டினான். மறுநாள் காலை வரும்போது தான் சூட்டிய மலர்கள் அகற்றப்பட்டு புதியதாக பூஜை செய்யப்பட்டிருப்பதை அறிந்து மன வருத்தம் அடைந்தான். ஒரு விருச்சிகப் (கார்த்திகை) பெüர்ணமி நாள் இரவில் ஒளிந்திருந்து பார்த்தபோது நள்ளிரவில் சந்திரன் வந்து ஏற்கெனவே இருந்த மலர்களை அகற்றி பூஜை செய்வதைக் கண்டு அவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டான். அப்போது அக்கினிஸ்தம்பம் போல் இருவர் மத்தியிலும் சிவபெருமான் தோன்றினார். இருவரும் போரிடுதலை விட்டு போற்றித் துதித்தனர். அவர்களின் பக்தியைப் போற்றி அவர்களுக்கும் நித்தியத்துவத்தை அருளினார். 
இத்தனைச் சிறப்பு வாய்ந்த மூலவர் படம்பக்கநாதர், புற்று வடிவ சுயம்பு லிங்கத் திருமேனியை எப்போதும் கவசத்துடன் மட்டுமே தரிசிக்க முடியும். வருடத்தில் 3 நாள்களைத் தவிர மற்ற நாள்களில் பெட்டி போன்ற அமைப்பில் கவசம் சார்த்தப்பட்டு மூடியே இருக்கும். விருச்சிக முழுநிலவு நாளன்று கவசம் திறக்கப்பட்டு பௌர்ணமியன்று மாலையில் இறைவனுக்கு புனுகு மற்றும் சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்யப்படும். தொடர்ந்து 3 நாள்களுக்கு இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 
இந்த தைலம் சார்த்தும் பூசைச் சடங்கு காலம் காலமாக தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றது. இம்மூன்று நாள்களிலும் பிரம்மா, வாசுகி ஆதிசேஷன் சந்திரன் ஆகியோர் வந்திருந்து சிவனை பூசிப்பதாக நம்பப்படுகிறது. திருவொற்றியூர் தலபுராணமும் இவர்கள் வந்து வழிபாடு செய்ததைக் குறிப்பிட்டுள்ளது. மூன்றாம் நாள் இரவில் மீண்டும் சுவாமிக்கு கவசம் சார்த்தப்படும். இங்குள்ள லிங்கத் திருமேனி தீண்டா திருமேனியனாக இருப்பதால் , இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. சாதாரண நாள்களில் ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் செய்கின்றனர். 
இவ்வாண்டு, 03.12.2017 ஞாயிறன்று மாலை 6.00 மணிக்கு புற்றிடம் கொண்டாரான படம்பக்கநாதர் ஆகிய ஆதிபுரீஸ்வரர் மீதுள்ள கவசம் களையப்பட்டு தைலம் சார்த்தப்பட்டு பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும். 04.12.2017 திங்கள்கிழமை முழுநாளும்; 05.12.2017 செவ்வாய்க் கிழமை இரவு 8.00 மணிவரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும். 
- இரா.இரகுநாதன்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/1/w600X390/v8.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/dec/01/ஆதிபுரீசனின்-அருட்காட்சி-2818491.html
2818490 வார இதழ்கள் வெள்ளிமணி பாவத்தை போக்கும் துல்ஜாபூர் பவானியம்மன்! DIN DIN Friday, December 1, 2017 10:53 AM +0530 ஒரு சமயம் மகிஷன் என்ற அசுரன் அசுரர்களுக்கெல்லாம் அரசனாக இருந்தான். அவன் தேவர்கள் யாவரையும் வெல்ல வேண்டுமென்று மும்மூர்த்திகளையும் வேண்டித் தவம் செய்து யாரும் அடையமுடியாத அளவு பலமும் வரமும் பெற்றான். தேவலோகத்தை வென்று இந்திரனையும் அவனுடன் சேர்ந்த மற்ற தேவர்களையும் அடித்துத் துரத்திவிட்டு தாமே அவர்களின் வேலையைச் செய்ய ஆரம்பித்து விட்டான். 
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நூறு ஆண்டுகள் போர் நடந்தது. தேவர்கன் மகிஷனுடைய தபோபலத்தின் முன் நிற்க முடியாமல் தோற்று ஓடிவிட்டனர். எனவே தோற்று ஒடிய தேவர்கள் எல்லோரும் தேவேந்திரன் தலைமையில் ஒன்றுகூடி மும்மூர்த்திகளிடம் சென்று முறையிட்டனர். அம்மூவரும் அன்னை ஆதிபராசக்தியை வேண்டவே அவர் அவர்கள் முன்பு தோன்றி சிவபெருமானின் உடலிலுள்ள மாயா சக்தியைப் பிரித்து ஓரிடத்தில் ஜோதியாகத் திகழச்செய்தார். எல்லா தேவர்களுடைய சக்தியும் தேஜோ மயமாக மாறி அந்தத் ஜோதியில் கலக்கவே புதிய பவானி தேவி துர்கா தேவியாகப் பல ஆயிரம் கைகளுடன், அளவற்ற பலமிக்க சிங்க வாகனத்தில் தோன்றினார். 
தேவர்கள் யாவரும் அத்தேவிக்கு அவரவர் ஆயுதங்களையும், நகைகளையும் கொடுத்து வணங்கி நின்றனர். அத்தேவி சண்டி முதலான ஒன்பது தேவிகளை உண்டாக்கி பெரும் முழக்கத்துடன் போருக்குச் சென்றார். தேவி, அசுரர்கள் போடும் சப்தத்தையும் விட பெரியதான சப்தமிட்டு முழக்கம் செய்தார். அன்னையின் இடிபோன்ற ஒலியைக் கேட்ட மகிஷன் அந்த ஒலிக்கேட்ட திசையை நோக்கித் தன்பெரும் படையுடன் வந்தான். தேவியைப் பார்த்து ஏளனமாகக் கூறி போர் செய்தான். 
சகல உலகிற்கும் அதிபதியான மகிஷன் கணக்கிட்டுக் கூறமுடியாத அளவு நால்வகைப் படைகளுடன் வந்து அன்னை பவானியுடன் போர் செய்தான். அன்னை படையை நோக்கிச் சென்றார். புயல் காற்றில் சிக்கிய தூசிபோல் அவ்வளவு படைகளும் அழிந்தன. மகிஷனும் பல வடிவம் எடுத்து அன்னையிடம் போரிட்டான். 
இறுதியில் அன்னை, சண்டி சாமுண்டி தேவிகளுக்கு கீழே விழும் மகிஷன் ரத்தத்தைக் குடித்து செயல் இழக்கச் செய்யும்படிக் கூறி மகிஷனை வெட்டினார். அன்னை கூறியபடியே மகிஷனின் ரத்தம் முழுவதும் இருதேவிகளும் பருகிடவே, மகிஷன் இறந்து விழுந்தான். சகல அண்டங்களும் வெற்றியின் கோஷமிட்டு அன்னைக்கு வாழ்த்தொலி செய்தன. இந்த கோலத்தையே துல்ஜாபூரில் தரிசிக்கலாம்.
பவானி அம்மன் திருமாலின் சகோதரி மாயை ஆவார். அவரே பார்வதி தேவியும், சக்தி தேவியும் ஆவார். திருமால் பல அவதாரங்கள் எடுத்தது போல் அன்னை பார்வதிதேவியின் அவதாரங்களில் ஒன்றே பவானி அம்மன். அவரே துர்க்காதேவியும் ஆவார். மதுராவில் கம்சன் தன் சகோதரி தேவகியின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தையினால் கொல்லப்படுவான் என அறிந்து தேவகியையும் அவரது கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்து விடுகிறான். பிறந்த ஏழு குழந்தைகளையும் கம்சன் கொன்றுவிடுகிறான். எட்டாவது குழந்தையைக் காப்பாற்ற வசுதேவர் கோகுலத்தில் யசோதைக்குப் பிறந்த பெண் குழந்தையை மாற்றிச் சிறைச்சாலைக்கு எடுத்து வந்து விடுகிறார். அப் பெண்குழந்தையை கம்சன் கொல்லப் போகுமுன் அவன் கைகளிலிருந்து நழுவி, மேலே சென்று துர்காத் தேவியாகத் காட்சி தந்து மறைந்து விடுகிறார். அந்த துர்காதேவியே பவானி அம்மன் என்று கூறுகின்றனர். 
பெரிய பாளையம் என்னும் ஊரில் உள்ள அம்மனும் இந்த பவானி அம்மனே என இதே வரலாறு கூறுகின்றனர். துல்ஜாபூர் பெரியபாளையம் ஆகிய ஊர்களிலுள்ள இரு பவானி அம்மன்களுக்கும் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. 
இத்தலம் சிவாஜியால் கட்டப்பட்ட மலைக்கோட்டை என்கின்றனர். சிவாஜி மகாராஜாவின் குலதெய்வம்தான் இந்த பவானி அம்மன்! இத்தலம், சக்திதலம், இந்துக்களின் புனிதயாத்திரை தலம். கோயிலின் சிம்மதுவார் சர்தார் நிம்பால்கர் துவார் என்றழைக்கப்படுகிறது. மற்ற இரண்டு வாயில்களும் சிவாஜி மகாராஜாவின் தாய், தந்தையர் பெயரால் ராஜா சாஹாஜி துவார் மற்றும் ராஜமாதா ஜிஜாபாய் துவார் என்றழைக்கப்படுகின்றன. 
கோயிலைச் சுற்றி சித்திவிநாயகர் , மகாதேவர், நரசிம்மர், தத்தாத்ரேயர், சித்ரேசுவரர் லிங்கம், நாராயணர், லட்சுமி ஆகியோர்க்கு தனி சந்நிதிகள் உள்ளன. அன்னை பவானியின் உருவச்சிலை 3 அடி உயரம், எட்டுக் கைகளையுடைதாக வலது பாதத்திற்கு அடியில் மகிஷாசூரனை மிதித்தப்படி உள்ளார். பெண்கள் மிகவும் விரும்பி வேண்டுதல் நேர்த்திக்கடன் செய்யும் தலம். மலைச்சிகரங்களுக்கு இடையே மலைப்பகுதியில் உள்ள தலம். மிகவும் சக்திவாய்ந்தவராக துர்காதேவி விளங்குகிறார். பாவத்தையும், நோயையும் போக்கக் கூடிய சிறந்த தீர்த்தங்கள் இங்கே உள்ளன. மராட்டிய மக்கள் மிகவும் விரும்பி வழிபடும் தலம் இது. 
வழித்தடம்: இக்கோயில் மகாராஷ்டிரா மாநிலம், உஸ்மானாபாத் மாவட்டத்தின் தென் பகுதியில் உள்ளது. தெற்கே சோலப்பூரில் இருந்து சாலை வழியாக துல்ஜாபூரை அடையலாம். அருகே உள்ள ரயில் நிலையம் சோலாப்பூர். 
- பொ.ஜெயச்சந்திரன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/1/w600X390/v7.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/dec/01/பாவத்தை-போக்கும்-துல்ஜாபூர்-பவானியம்மன்-2818490.html
2818487 வார இதழ்கள் வெள்ளிமணி காசினி போற்றும் கார்த்திகை விளக்கு! DIN DIN Friday, December 1, 2017 10:43 AM +0530 கார்த்திகையின் போது வீடுகளிலும் தெருக்களிலும் விளக்குகளை ஏற்றுவதோடு உயரமான மலை முகடுகளிலும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாவாகக் கொண்டாடுவது தமிழ்நாட்டின் தொன்றுதொட்ட வழக்கமாக உள்ளது.
தெருக்களிலும் வீடுகளிலும் விளக்குகளை ஏற்றுவதோடு மலைமுகடுகளில் விளக்குகளை ஏற்றுவானேன்? என்பது சிந்தனைக்குரியதன்றோ! அதிலும் ஏனைய எந்த மாதங்களிலும் இல்லாமல் கார்த்திகையில் மட்டும் அப்படி ஒரு சிறப்பு வருவானேன்? எனச் சிந்திப்பதும் தேவையாகிறது.
நாட்டில் தொடர்மழை அமைந்தால் நாடு வெள்ளக்காடாய் மாறிவிடும். ஆதலால் கனமழையை பெய்விக்கும் மேகங்களின் மழைக்கூறுகளை மாற்றியமைக்கும் விதமாகவே மேகம் வந்து தவழும் மலை முகடுகளில் பெரிய அகண்ட விளக்குகள் ஏற்றப்பட்டனவோ என எண்ண வேண்டியுள்ளது.
மலைமுகடுகளில் ஏற்றப்பட்ட விளக்கின் குறிப்பு சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. அதன் சாயலாக ஒட்டுமொத்த தமிழகத்தின் விளக்கு வழிபாட்டின் மகுடமாகத் திகழ்வது திருவண்ணாமலையின் கார்த்திகைத் தீபமாகும்.
திருவண்ணாமலையில் விளக்கு ஏற்றப்படுவதன் சிறப்பைக் கற்பனைக் களஞ்சியம் நல்லாற்றூர் சிவப்பிரகாசர் பலவகையாகச் சோணாசைல மாலை என்னும் நூலில் பாடியுள்ளார். உலக விளக்குகளெல்லாம் புறஇருளை மட்டுமே நீக்க, இக்கார்த்திகை விளக்கு ஞானமாகிய அக இருளையும் நீக்கும் என்கிறார்.
கடலில் செல்லும் கப்பலுக்கு இரவில் கரையேற வழிகாட்டியாகக் கலங்கரை விளக்கு உள்ளது போன்று இக்கார்த்திகை விளக்கானது ஆன்மாக்கள் முக்தி என்னும் கரை சேரத் தவமாய் படகில் பயணிக்கும்போது கார்த்திகை விளக்கைச் சுமந்ததாகத் திருவண்ணாமலை உயர்ந்து காணப்படுகிறதாம்.
இந்தக் கார்த்திகை விளக்கானது குடத்துள் இட்ட விளக்குபோல் இல்லாமல் உலகியலார் கூறுகின்ற குன்றிட்ட விளக்குபோல் எனக் கூறுவதற்குப் பொருத்தமான மலை உச்சியில் ஏற்றப்படுகிறதாம்.
மேலும் செழுமையான செந்தாமரை மலர் மலை உச்சியில் பூத்துள்ளது போலக் கார்த்திகை விளக்கானது சோணாசைல மலையுச்சியில் ஒளிர்கிறதாகச் சிவப்பிரகாசர் போற்றிப் பாடுகிறார்.
சிவபெருமான் தன் முடியில் பிறைச்சந்திரனைச் சூடியதால் அவரைக் குறைமதியன் எனக் கூறுவதுண்டு. இத்தொடர் பிறையை உணர்த்துவதோடு சிவனைக் குறைந்த மதியுடையவன் (அறிவுடையவன்) எனக் கூறுவது போலவும் உள்ளது. இந்த இரட்டுற மொழிதலான பழியைப் போக்கிக் கொள்ளுமாறு சிவபெருமானின் வடிவிலான மலை, கார்த்திகைத் தீபத்தின் நாளில் முழு நிலவைச் சூடிக்கொண்டு காட்சியளிக்கிறதாம் என்கிறார் சிவப்பிரகாசர்,
ஆங்குறை மதியே தாங்கி என்றுலகம்
அறைகுறை அற, நிறை மதியும்
தாங்கிய முடியோ டோங்கிய சோணசைலனே!
இதில், கார்த்திகைத் தீயநாள் என வெளிப்படையாகக் கூறவில்லையாயினும் நிறைமதியம் தாங்கிய முடியோடு ஓங்கிய மலை என்றதால் வேறு எந்த மாதத்திலும் இல்லாமல் கார்த்திகை மாதத்தில் மட்டுமே இங்ஙனம் அமைவதால் கார்த்திகைத் தீபக்குறிப்பு உணரப்பட்டது எனலாம்.
இந்தக் கார்த்திகைத் தீப நாளை நக்கீரர் அகநானூற்றில் (141) "" மதி நிறைந்து அறுமீன் சேரும் அகல் இருள் நடுநாள் விழா'' என்றார். இதில், அறுமீன் நாள் என்றது கார்த்திகை நட்சத்திர நாளைக் குறிப்பதாகும். அன்றுதான் நிறைநிலா அமையும்.
மேலும் "களவழி நாற்பது' என்ற நூலில் பொய்கையார், "" கார்த்திகைச்சாற்றில் கழி விளக்கு போன்றவே'' என்று போர்க்களத்தில் குருதியாற்றில் மிதக்கும் பிணக்குவியலின் ஓட்டத்தை வரிசையான கார்த்திகை விளக்காக உள்ளதாய்க் கூறினார். இப்படியாக, காசினி போற்றும் கார்த்திகை விளக்கு உள்ளதாக இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.
- தெ. முருகசாமி 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/1/w600X390/v6.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/dec/01/காசினி-போற்றும்-கார்த்திகை-விளக்கு-2818487.html
2818486 வார இதழ்கள் வெள்ளிமணி நிகழ்வுகள் DIN DIN Friday, December 1, 2017 10:39 AM +0530 ஸ்ரீ சக்ரபூஜை
 பம்மல், சங்கரா நகர், ஸ்ரீ தர்மசாஸ்தா குருவாயூரப்பன் திருக்கோயிலில் உள்ள ஸ்ரீ நாகராஜா சந்நிதியில் சர்ப்ப ஹோமம், சர்ப்ப சாந்தி பூஜை மற்றும் மாலையில் பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ சக்ரபூஜையும் நடைபெறுகின்றன. இந்த பூஜையினால் குடும்பங்களில் ஏழு தலைமுறைகளில் தொடர்ந்து வரும் சர்ப்ப தோஷமும் குடும்பத்தில் ஏற்படும் அனைத்து தடைகளும் நீங்குவதற்காகச் செய்யப்படுகிறது.
 தொடர்புக்கு: 94444 44238.
 நாள்: 3.12.2017.
 
 

]]>
http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/dec/01/நிகழ்வுகள்-2818486.html
2818485 வார இதழ்கள் வெள்ளிமணி ஆண்டவர் விரைவில் வருவார்! DIN DIN Friday, December 1, 2017 10:39 AM +0530 ஆண்டவர் இயேசு இவ்வுலகத்தை விட்டு வானலோகம் செல்லும்போது நான் திரும்ப வருவேன். அந்த நாள் "நியாய தீர்ப்பு நாள்' என்று சொல்லிச் சென்றார். வேதாகமம் சொல்லுகிறது, " இதோ, சீக்கிரமாய் வருகிறேன். அவரவருடைய கிரியைகளின்படி அவரவருக்கு நான் அளிக்கும் பலன் என்னோடுகூட வருகிறது'' (வெளி:22: 12) இவ்வாறு இயேசு வருகையை பற்றி கூறியுள்ளார்.
ஆண்டவராகிய இயேசு இவ்வுலகில் வாழும்போது நல்ல உவமை கதையை கூறினார். " ஒரு மனுஷன் தன் ஊழியக்காரனை அழைத்து தன் ஆஸ்திகளை அவரவர்களுடைய திறமைக்குத் தக்கதாக ஒருவரிடத்தில் ஐந்து தாலந்தும் ஒருவரிடத்தில் இரண்டு தாலந்தும் ஒருவரிடத்தில் ஒரு தாலந்துமாக கொடுத்து உடனே பிரயாணப்பட்டுப் போனான். 
ஐந்து தாலந்து வாங்கியவன், அவைகளைக் கொண்டு வியாபாரம் பண்ணி வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான். அப்படியே இரண்டு தாலந்தை வாங்கியவன், வேறு இரண்டு தாலந்தை சம்பாதித்தான். 
ஒரு தாலந்து வாங்கியவனோ நிலத்தைத் தோண்டி தன் எஜமானனுடைய பணத்தைப் புதைத்து வைத்தான். வெகு காலமான பின்பு, அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பி வந்து அவர்களிடத்தில் கணக்குக் கேட்டார். 
தன் எஜமான் வந்துள்ளார் என அறிந்து தான் சம்பாதித்த ஐந்து தாலந்தையும் தன் எஜமான்தந்த ஐந்து தாலந்தையும் கொண்டு வந்து, தன் எஜமானை வாழ்த்திப் பேசினான். ""நீர் மிகவும் நல்லவர், நீர் ஆசீர்வசதிக்கப்பட்டவர், உம் கைகள் ஆசீர்வதிக்கப் பட்டவை. நீர் தந்த ஐந்து தாலந்தை வைத்து வேறு ஐந்து தாலந்து சம்பாதித்தேன். உம் கைராசி! என் வியாபாரம் மிகச் சிறப்பாக வளர்ந்தது. இதோ பத்து தாலந்து என எஜமானிடம் கொடுத்தான். எஜமான் மிகவும் மகிழ்ந்து அந்த பத்து தாலந்தை அவனுக்கே கொடுத்தான்.
அப்படியே இரண்டு தாலந்து வாங்கியவன் வந்து எஜமானனை வாழ்த்தி, ""நீர் நல்லவர், உதவி செய்கிறவர், அன்புள்ளவர், நீர் தந்த இரண்டு தாலந்தைக்கொண்டு வேறு இரண்டு தாலந்தை சம்பாதித்தேன். வியாபாரம் சிறப்பாக நடந்தது. என் குடும்பம் மகிழ்வுடன் இருந்தது'' என வாழ்த்தினான். எஜமான் மிகவும் மகிழ்ந்து இந்த நான்கு தாலந்தும் உனக்கே'' என மகிழ்வுடன் கொடுத்தான். 
ஒரு தாலந்து வாங்கின ஊழியக்காரன், மிகவும் மெலிந்து அழுக்கான ஆடையுடன் மிக வறுமையில் வாடி, தன் எஜமானை நாள்தோறும் திட்டிக்கொண்டு, "ஏன் என்னிடம் ஒரு தாலந்து தந்தீர்? நானோ முட்டாள் வியாபாரம் செய்யவும் தெரியவில்லை, மற்ற ஊழியக்காரனைப் போலவும் நான் இல்லை. நீர் திரும்ப வருவீர், கணக்கு கேட்பீர் என எனக்குத் தெரியும். நீர் விதைக்காத இடத்தில் அறுவடை செய்கிறவர். தெளிக்காத இடத்தில் சேர்கிறவர். இதோ, நீர் கொடுத்த தாலந்தை பூமியில் புதைத்து வைத்தேன் எடுத்துக் கொள்ளும்'' என கோபத்துடன் தந்தான். எஜமான், மிகவும் கோபம் கொண்டு அவனிடம் இருந்த தாலந்தை வாங்கி ஐந்து தாலந்து வாங்கின ஊழியக்காரனிடம் தந்து, "உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும். இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்'' என்றான்.
எஜமான் வேறு யாரும் அல்லர் இயேசுவே. தாலந்து என்ற வாழ்வின் ஆசீர்வாதத்தை தருபவர் இயேசு. தாலந்தைப் பெற்றவர் நாம்தான். பெற்ற வாழ்வை வளப்படுத்தி வாழ்வைத் தந்த இயேசு வரப்போகிறார்.. அப்போது நாம் பத்து தாலந்து சம்பாதித்தவராகவும் ஆண்டவரை போற்றுபவராவோம்.
- தே. பால்பிரேம்குமார்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/1/w600X390/v5.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/dec/01/ஆண்டவர்-விரைவில்-வருவார்-2818485.html
2818484 வார இதழ்கள் வெள்ளிமணி நாராயண நாமம் நவின்றவன்! DIN DIN Friday, December 1, 2017 10:37 AM +0530 ஆழ்வார்கள் பன்னிருவர் வரிசையில் இறுதியாகச் சொல்லப்படுபவர் திருமங்கையாழ்வார் (இவரது காலம் கி.பி. 776 - 881). சோழ நாட்டிலுள்ள திருவாலி திருநகரி (சீர்காழி பூம்புகார் வழி) திவ்ய தேசத்திற்கருகில் உள்ள திருக்குறையலூரில் திருமாலின் சாரங்கம் என்னும் வில்லின் அம்சமாய் ஒரு கார்த்திகை பௌர்ணமியில் கிருத்திகை நட்சத்திரம் கூடிய நன்னாளில் அவதரித்தார்.
 குமுதவல்லி என்ற உத்தம மங்கையை மணக்கும் பொருட்டு திருநறையூர் திருத்தலம் சென்று நம்பி பெருமாள் சந்நிதியில் பஞ்ச சமஸ்காரங்களைப் பெற்று, அம்மங்கைக்கு கொடுத்த வாக்கின் படி ஓராண்டுகாலம் நாள்தோறும் ஆயிரத்தெட்டு அடியார்களுக்கு அமுது செய்வித்தார். இந்த கைங்கர்யத்திற்காக வரிப்பணத்தை செலவழித்து நாட்டை ஆண்ட மன்னனின் கோபத்திற்கு ஆளாகி சிறை சென்றார்.
 தொடர்ந்து இப்பணி நடத்திவற பொருள் தேவைப்பட்டதால் வழிப்பறியிலும் ஈடுபட்டார். மணக்கோலத்தில் வந்த அந்த திவ்ய தம்பதிகளிடமே தன் கை வரிசையை திருமங்கைமன்னன் காட்ட, பெருமாள் அவருக்கு சங்கு சக்ரதாரியாகக் காட்சியளித்து அவரது செவியில் "ஓம் நமோ நாராயணா' என்ற எட்டெழுத்து மந்திரத்தை ஓதி மறைந்தார். உடனே ஞானம் கைவரப்பெற்று "வாடினேன் வாடி' என்று தொடங்கி "நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்' என பாசுரங்கள் பிரளயமாக அவரது நாவிலிருந்து வர ஆரம்பித்தன. இன்றும் பங்குனிமாதத்தில் "வேடுபறி உற்சவம்' என்ற பெயரில் இந்நிகழ்வு நடத்தப்படுகின்றது.
 இவர் மொத்தம் 1361 பாசுரங்கள் அடங்கிய ஆறு பிரபந்தங்களை அருளிச் செய்துள்ளார். பெருமைக்குரிய இந்த ஆழ்வாரின் அவதார உற்சவம் அவரது அவதார ஸ்தலமான திருநகரியில் தற்போது நடைபெற்று வருகின்றது. டிசம்பர் 2 ஆம் தேதி (கார்த்திகை கிருத்திகை) அவரது அவதார நன்னாள். அன்று திருக்குறையலூரில் சிறப்பு திருமஞ்சனம் பூஜை, ஹோமம், பாராயணம் முதலிய வைபவங்கள் நடைபெறுகின்றன.
 - ப.ஓ.தேவநாதன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/1/w600X390/v4.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/dec/01/நாராயண-நாமம்-நவின்றவன்-2818484.html
2818483 வார இதழ்கள் வெள்ளிமணி அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) DIN DIN Friday, December 1, 2017 10:34 AM +0530 இப்ராஹீம் நபியை மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் தலைவராக அல்லாஹ் அருளிய பொழுது அவர்களின் சந்ததியினரையும் தலைவர் ஆக அருள்புரிய இறைஞ்சியதை இயம்புகிறது இறைமறை குர்ஆனின் 2-124 ஆவது வசனம்: என் சந்ததிகளிலிருந்து உன் வசனங்களை மக்களுக்கு ஓதி காண்பித்து வேதத்தின் ஆழ்ந்த கருத்துகளைக் கற்றுக் கொடுத்து பரிசுத்தமாக்கும் ஒரு தூதரை அனுப்புவாயாக! என்று இப்ராஹீம் நபி இறைஞ்சியதை விளக்கி கூறுகிறது குர்ஆனின் 2-129 ஆவது வசனம். இப்ராஹீம் நபியின் இந்த வேண்டுகோளை ஏற்று பல தலைமுறைகளுக்குப்பின் தோன்றினார்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள். 
அரபி மொழி பேசும் அரபியர் பல கோத்திரத்தினர். ஒவ்வொரு கோத்திரமும் பல கிளைகளை உடையது. அக்கோத்திரங்களில் ஹாஷிம் கோத்திரம் சிறப்பும் புகழும் உடையது. நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களின் தந்தை ஹாஷிம் என்பவரில் இருந்து உருவானதே ஹாஷிம் கிளை. மக்காவில் பஞ்சம் ஏற்பட்ட பொழுது அனுதினமும் அனைவருக்கும் உணவு சமைத்து பரிமாறி பசி தீர்த்தவர் ஹாசிம். இதுபோன்ற நற்செயல்களைத் தேவையான காலத்தில் தேவை உடையோருக்குத் தொடர்ந்து செய்தவர் ஹாஷிம். அந்த ஹாஷிம் கிளையில் பிறந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களை " நாம் உங்களை உலகத்தாருக்கு அருளாக அனுப்பி இருக்கிறோம்'' என்று குர்ஆனின் 21-107 ஆவது வசனத்தில் அறிவிக்கிறான் அல்லாஹ். அந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளான மீலாது நபி 2-12-2017 இல் கொண்டாடப்படுகிறது.
மக்காவுக்கு அருகிலிருந்த தாயிப் நகருக்கு ஜைத் பின் ஹாரிஸ் (ரலி) அவர்களுடன் சென்று மூன்று முக்கிய தலைவர்களிடம் ஏக இறைகொள்கையை எடுத்துரைத்த ஏந்தல் நபி (ஸல்) அவர்களை எகத்தாளமாக ஏசி பேசி விரட்டினர். திரும்பிய திருநபி (ஸல்) அவர்களின் மீது கற்களை வீசி காயப்படுத்தினர் தாயிப் மக்கள். உத்தம நபி (ஸல்) அவர்களுடன் சென்ற தோழர் தாயிப் மக்களைச் சபிக்குமாறு சொன்னபொழுது குர்ஆனின் 21-107 ஆவது வசனத்தை ஓதி " நான் அல்லாஹ்வால் அருள்கொடையாய் அனுப்பப் பட்டவன் அறியாமையை அல்லாஹ் அகற்றுவானாக!'' என்று இறைவனிடம் வேண்டினார்கள்.
உதவி கேட்டவருக்கு உத்தம நபி (ஸல்) அவர்கள் இல்லை என்று சொன்னதே இல்லை என்று இயம்புகிறார் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி). பெருமானார் நபி (ஸல்) அவர்கள் பெருங் கொடை வள்ளல் என்று எடுத்துரைக்கிறார் இப்னு அப்பாஸ் (ரலி). நபி (ஸல்) அவர்கள் நாளைக்கு வேண்டும் என்று எதையும் அவர்களுக்காக வைத்துக் கொண்டது இல்லை என்று விண்டுரைக்கிறார் அனஸ் (ரலி).
"நிச்சயமாக நீங்கள் மகத்தான நற்குணங்கள் உள்ளவராக இருக்கிறீர்கள்'' என்று குர்ஆனின் 68-4 ஆவது வசனத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஆக அழகை அல்லாஹ் கூறுகிறான். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தன்மை குறித்து அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் வினவினர். " திருநபி (ஸல்) அவர்களின் குணம் திருக்குர்ஆனாகவே இருந்தது'' என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் பதில், இனிய நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் கூறும் நற்குணங்கள் குடிகொண்ட கோமான் என்பதைத் தெளிவாக தெரிவிக்கிறது. "நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும் தெளிவும் உள்ள ஒரு வேதம் உங்களிடம் வந்துள்ளது'' என்ற குர்ஆனின் 5-15 ஆவது வசனம் அல்லாஹ்வின் தூதர் அவ்வேதத்தைக்கொண்டு மக்களை இருளில் இருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வருவார் என்பதைத் தெளிவு படுத்துகிறது. 
"நிச்சயமாக அவர்கள் உங்களைப் பொய்யாக்கவில்லை அந்த அக்கிரமக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தனர்'' என்று நீதியை ஏற்காதவர்களைக் குர்ஆனின் 6-33 ஆவது வசனம் குறிப்பிட, 68-4 ஆவது வசனம் " நிச்சயமாக நீங்கள் மகத்தான நற்குணங்கள் உடையவர்'' என்று உத்தம நபி (ஸல்) அவர்களுக்கு நற்சான்று பகர, நன்மையை பற்றி நற்செய்தி கூறி தீமையின் தீங்கை எச்சரிக்கவே தூதர்களை அல்லாஹ் அனுப்பியதாக 6-48 ஆவது வசனம் விவரிக்க, 35-24, 18-56 ஆவது வசனங்கள் உறுதி செய்கின்றன. 
"அல்லாஹ்தான் அவனுடைய தூதரை நேரான வழியைக்கொண்டும் சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான். இணை வைத்து வணங்குவோர் வெறுத்தாலும் எல்லா மார்க்கங்களையும் அந்த சத்தியமார்க்கம் வென்றிடும்'' என்று குர்ஆனின் 9-33 ஆவது வசனம் உறுதியாய் உரைக்க 48-28 ஆவது வசனத்தில் இறைவன் இதற்கு சாட்சியாக இருப்பதாக அறிவிக்கிறான். இவ்வசனம் மக்களைத் தவறான வழிகளை விட்டு விலகி உண்மையான வழியை உணர்ந்து நன்மைகள் செய்து நல்வாழ்வு வாழ வைப்பதற்காகவே உத்தம நபி (ஸல்) அவர்கள் உலகில் தோன்றினார்கள் என்பதை எடுத்துரைக்கிறது.
" அல்லாஹ்வையும் இறுதி நாளையும் உறுதியாக நம்புவோருக்கு அழகிய முன்மாதிரி நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் இருக்கிறது'' என்று 33-21 ஆவது வசனம் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் பிறர் பின்பற்றத்தக்க அழகிய முன்மாதிரி இருக்கிறது என்றும் இறைத்தூதர் இயம்புவதை ஏற்று அவர்களின் வழியைப் பின்பற்றி வாகை சூடவேண்டும் என்பதையும் வாகாய் தெரிவிப்பதாய் விளக்கம் அளிக்கிறார்கள் அல்ஹக்கீமுத் திர்மிதீ (ரஹ்).
அல்லாஹ்வால் அகிலத்திற்கு அருள்கொடையாய் அனுப்பப்பட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின்பற்றி இம்மை மறுமை இரண்டிலும் மொழியும் நன்மையை முழுமையாய் பெறுவோம்.
- மு.அ. அபுல்அமீன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/1/w600X390/v3.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/dec/01/அகிலத்தின்-அருட்கொடை-அண்ணல்-நபி-ஸல்-2818483.html
2818481 வார இதழ்கள் வெள்ளிமணி பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர் DIN DIN Friday, December 1, 2017 10:31 AM +0530 • "மனிதப்பிறவியின் வாழ்நாள்கள் எவ்வளவு குறுகியவை?' என்பதையும், "எத்தனை வேகமாக அவை ஓடி மறைந்துவிடுகின்றன' என்பதையும் பற்றி மக்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை.
பறவைகள் மரக்கிளைகளில் வந்து அமர்ந்து, அடுத்த சில விநாடிகளிலேயே பறந்து சென்றுவிடும். எந்த மரத்திலும் அவை நீண்ட நேரம் அமர்ந்திருக்காது. அது பறவைகளின் இயற்கை குணம்.
இவ்விதம், பறவைகள் வந்து அமர்ந்து, மீண்டும் பறந்துவிடுவதற்கு உள்ள இடைவெளி போன்றதே மனிதனின் ஆயுட்காலமும்! ஆதலால், "நாளை' என்று தள்ளிப்போடாமல், இன்றே, இப்போதே தானம், தர்மம் போன்ற புண்ணிய காரியங்களைச் செய்ய வேண்டும். பகவான் ஹரியின் நாமத்தைத் தினமும் உச்சரித்து வர வேண்டும். ஏனெனில், நாளை என்பது நமக்கு நிச்சயமில்லை.
- மகான் ஸ்ரீ புரந்தரதாசர்

• தானாகத் தேடி வரும் இன்பத்தை, தன் முயற்சியால் வந்தது என்று நினைத்துக் களிப்பதும், துன்பம் நேரிட்டால் அதற்குக் காரணத்தை ஆராய்ந்து இறைவனைப் பழிப்பதும் அறிவற்றவர்களின் செயலாகும்.
தூய உள்ளம் படைத்தவர்களுக்கு இன்பம் என்றுமுண்டு. உள்ளத்தில் தூய்மை பெறாதவனுடைய வாழ்நாள் வீணாளாகப் போய்விடும். 

• பண்டிதர்கள் தங்களுக்குள்ளேயே பரமாத்மா பள்ளிகொண்டிருக்க, அறிவிலிகளைப்போல் அவனுக்காக வெளியில் சென்று அலையமாட்டார்கள். நடுப்பகலில் சூரிய வெளிச்சத்தில் பொருளைத் தேடுவதற்குக் கைவிளக்கு எதற்காக வேண்டும்?
- யோகி வேமனா

• என்னை அடைவதற்குப் பல ஆன்மிக சாதனைகள் இருக்கின்றன. அவற்றில், "உலகிலுள்ள எல்லா உயிர்களிடமும், எல்லாப் பொருள்களிடமும் நானே இருக்கிறேன்' என்று மனதாலும் வாக்காலும் செயலாலும் உணர்வதே தலைசிறந்த வழியாகும்.
- பாகவதத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் கூறியது

• கைக்கு அழகு நன்கொடை, தலைக்கு அழகு பெரியோர் பாத சேவை, முகத்துக்கு அழகு உண்மையான சொல், தோள்களுக்கு அழகு ஒப்பற்ற பராக்கிரமம், மனதிற்கு அழகு நல்லொழுக்கம், செவிக்கு அழகு நல்ல சாஸ்திரங்களைக் கேட்டல்.
- பர்த்துருஹரி

• ஆத்மா அறிவுமயமானதும், பரிசுத்தமானதும் ஆகும். உடல் மாமிச மயமானது, அழுக்கடைந்தது. அப்படியிருக்கும்போது மனிதர்கள் இரண்டையும் ஒன்றாகக் காண்கிறார்கள். இதைக் காட்டிலும் வேறு எதை அக்ஞானம் என்று சொல்வது?
- ஸ்ரீ சங்கரர்

• ஓ மனமே! பரமாத்மாவாகிய ஆண்டவன் உன் அருகிலேயே இருக்கிறான். எழுந்திரு! எழுந்திரு! உன் ஆருயிர் அன்பனுடைய திருவடிகளை நோக்கி ஓடு! அவன் உன் தலைமாட்டிலேயே நிற்கிறான். நீ யுக யுக காலம் தூங்கிவிட்டாய். இன்று காலையிலாவது எழுந்திருக்கமாட்டாயா?
- கபீர்தாசர்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/1/w600X390/v2.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/dec/01/பொன்மொழிகள்-தொகுப்பு-சுவாமி-கமலாத்மானந்தர்-2818481.html
2818480 வார இதழ்கள் வெள்ளிமணி தரணி போற்றும் ஸ்ரீ தத்தாத்ரேயர்! DIN DIN Friday, December 1, 2017 10:27 AM +0530 சப்தரிஷிகளில் ஒருவரான அத்ரி மகரிஷிக்கும், அனுசூயாதேவிக்கும் மகனாக தோன்றிய தத்தாத்ரயேர், மும்மூர்த்திகளின் ஒருங்கிணைந்த வடிவாக, மூன்று முகங்களும், ஆறு கரங்கள் கொண்டு விளங்குகிறார். மும்மூர்த்திகளும் பரப்பிரம்மத்தின் மூன்று முகங்களே. இந்த கருத்தைச் சொல்ல வந்ததுதான் ஸ்ரீதத்தாத்ரேய அவதாரம்.

அத்திரி மகரிஷியும் அவரது மனைவி அனுசுயாவும் வனத்தில் இருந்து கொண்டு இறைவழிபாடு செய்து வந்தனர். அனுசூயா மும்மூர்த்திகளே தனக்குக் குழந்தைகளாக பிறக்க வேண்டுமென பிரார்த்தித்தார். அனுசூயாவின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டி, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் அவளைச் சோதித்தறிய விரும்பினர். அத்திரி மகரிஷி வெளியே சென்றிருந்தபோது, அவர்கள் துறவி வடிவில் அனுசுயாவின் குடிலுக்கு வந்து யாசித்தனர். அவர்களை வணங்கி வரவேற்று தகுந்தபடி உபசரித்து, விருந்துண்ண அழைத்தாள். ஆனால் அவர்கள் அனுசூயா நிர்வாணமான நிலையில் பரிமாறினால் மட்டுமே விருந்தை ஏற்போம் என்றனர். 

தன் பதிவிரதா தர்மத்திற்கு ஏற்பட்ட சோதனை என்பதை உணர்ந்த அவள், இறைவனைத் தியானித்து வந்திருப்பவர்கள் மும்மூர்த்திகள் என்பதை உணர்ந்து அவர்களை குழந்தைகளாக மாற்றினார். பின்னர் அந்த குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். 

அச்சமயம், வெளியே சென்றிருந்த அத்திரி முனிவர் வீடு திரும்பினார். அங்கு குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் தன் மனைவியைக் கண்டு, தன் ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்தார். முப்பெரும் தேவரும் தங்களுக்குக் குழந்தைகளாகக் கிடைத்ததை அறிந்து மகிழ்ந்தார். அத்தெய்வக் குழந்தைகளை, சீராட்டி, பாராட்டி, வளர்த்து வந்தார்.

இதற்கிடையில் சரஸ்வதியும், லக்ஷ்மியும், பார்வதியும் தமது கணவர்கள் அத்ரி மகரிஷியின்ஆசிரமத்தில் குழந்தைகளாக இருப்பதைக் கண்டறிந்து அவர்களைத் திருப்பித் தருமாறு அனுசூயாவிடம் வேண்டினர். 

அனுசூயாதேவி மும்மூர்த்திகளை மீண்டும் சுய ரூபம் அடையச் செய்தாள். பிரம்மா, விஷ்ணு, சிவன்ஆகிய மூவரும் தங்கள் அம்சமாக ஒரு குழந்தையை உருவாக்கி, அத்ரியிடம் தத்தம் (வழங்குவது) அளித்தனர். அவரே தத்தாத்ரேயர்! அத்ரி மஹரிஷியின் மகனானதால் அவர் ஆத்ரயேர். தத்தம் கொடுத்ததால் தத்தாத்ரேயர். அன்னையின் பாசத்தையும் தந்தையின் ஞானத்தையும் பெற்று, உலகில் உள்ள அனைத்துக் கலைகளையும் கற்று, பெரும் ஞானியானார்.

தத்த உபநிடதம் என்பது, தத்தரின் பெருமையைப் பறைசாற்றும் உபநிடதமாகும். தத்தாத்ரயேரைவிட சிறந்த அவதாரம் இல்லையென்பது வியாசர் வாக்கு. ஸ்ரீவித்யா உபாசனையை அறிமுகப்படுத்தியவர் ஸ்ரீ தத்தாத்ரேயர். ஸ்ரீ வித்யா தந்திரத்தை 18ஆயிரம் ஸ்லோகங்களில் மிக விரிவாக வடித்தார். அதுவே தத்த ஸம்ஹிதை எனப் போற்றப்பட்டது. தத்தாத்ரேயர் அருளிய ஜீவன் முக்த கீதையும் அவதூத கீதையும் ஒப்புயர்வற்றவை. 

அனுமன், மார்க்கண்டேயர் போலவே, தத்தாத்ரேயரும் சிரஞ்சீவியாக இன்றும் வாழ்கிறார். குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் தத்தாத்ரேயரை விரதமிருந்து வழிபட்டு வேண்டிக்கொண்டால், அவர்களது கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும். இவருக்கு பாரத தேசத்தில் பல இடங்களில் வழிபாட்டிடங்கள் உள்ளன. 

தமிழகத்தில் ஸ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகளால் பல இடங்களில் ஸ்ரீ தத்தாத்ரேயரின் சிலா வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. சேலம், சேர்ந்தமங்கலம், தத்தகிரி குகாலயத்திலும், குடவாசல் எனும் புதுக்குடியில் தத்தகுடீரத்திலும், உடையார்பட்டியிலும் தத்தாத்ரேயரின் சிலா விக்ரகத்தைக் காணலாம். ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஸ்வாமிகளால் ஸ்ரீ தத்தாத்ரேயருக்கு மைசூரில் அவதூத தத்தபீடம் அமைக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம்- திருவாரூர் வழித்தடத்தில் உள்ள சேங்காலிபுரத்தில் அமைந்துள்ள தத்தகுடீரத்தில் ஆண்டுதோறும் ஸ்ரீ தத்தாத்ரேயர் ஜெயந்தி வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டும் ஜெயந்தி விழா 2.12.2017 வரையில் கொண்டாடப்படுகிறது. 
தொடர்புக்கு: 04366-260819 / 94872 92481.
- என். பாலசுப்ரமணியன்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/1/w600X390/v1.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/dec/01/தரணி-போற்றும்-ஸ்ரீ-தத்தாத்ரேயர்-2818480.html
2818478 வார இதழ்கள் வெள்ளிமணி மலைகளின் மத்தியில் மாருதி! Friday, December 1, 2017 10:23 AM +0530 காஞ்சி மாவட்டத்தில் திருப்போரூரிலிருந்து செங்கற்பட்டு செல்லும் சாலையில் 17 கி.மீ தூரத்தில் உள்ளது திருவடிசூலம் என்ற திரு இடைச்சுரம் (தாம்பரத்திலிருந்து சிங்கப்பெருமாள் கோயில் வழியாகச் சென்றால் 40 கி.மீ) ஞானசம்பந்தப் பெருமானின் தேவாரப்பதிகம் பெற்ற தொண்டை நாட்டுத் திருத்தலங்களில் ஒன்று. இங்குள்ள ஞானபுரீஸ்வார் திருக்கோயிலிருந்து சுமார் 1 கி.மீ தூரத்தில் ஸ்ரீ கோயில்புரம் என்று அழைக்கப்படும் இடத்தில் மலைகள் சூழ்ந்த ஆரண்ய பகுதிகளின் மத்தியில் அன்னை தேவி கருமாரியம்மனுக்கு சுமார் 52 அடி உயரத்தில் பிரம்மாண்டமான கல்திருமேனியும், மகாசூலமும், சற்று தள்ளி பின்புறம் சுமார் 11 அடி உயரத்தில் ஸ்ரீவாரு வேங்கடப்பெருமாள் சந்நிதியும் அமையப்பெற்று, மதுரைமுத்து சுவாமிகள் என்றதேவி உபாசகரின் வழிகாட்டுதலின்படி ஆலய வழிபாட்டு முறைகள் செவ்வனே நடைபெறுகின்றது. 

இந்த புனித வளாகத்தில் தற்போது உலகிலேயே வேறு எங்கும் காண முடியாது என்ற சிறப்புப்பெருமையுடன் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்ய தலங்களை நினைவு கூறும் வகையில் அத்தல பெருமாள் சந்நிதிகள் அதே சாந்நித்யத்துடன் திகழும்படி அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. இந்த மகத்தான திருப்பணி நிறைவுறும் தருவாயில் எதிர்வரும் 2018 ஏப்ரல் மாதம், மகா சம்ப்ரோக்ஷண வைபவம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுக்கு முன்னோடியாக, இங்கு சுமார் 18 அடி உயரத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஸ்ரீ பக்த அனுமான் (அஞ்சலி கோலம்) பிரதிஷ்டையாகியுள்ளது. இங்கு அமைய உள்ள திவ்ய தேச சந்நிதிகளில் ஸ்ரீ அயோத்தி ராமரை நோக்கியவாறு இந்த அனுமன் விக்ரகம் பிரதிஷ்டையாகியுள்ளது சிறப்பு. நூதன ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலின் மகாசம்ப்ரோக்ஷண வைபவம் டிசம்பர் 6 ஆம் தேதி புதனன்று ராம பிரானின் திரு நட்சத்திரமான புனர்பூசத்தில் காலை 6.00 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் நடைபெறுகின்றது. யாகசாலை பூஜைகள் டிசம்பர் 5 ஆம் தேதி துவங்குகின்றன. 
தொடர்புக்கு: 73387 76971 / 89390 74441.
- எஸ்.வெங்கட்ராமன்

]]>
http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/dec/01/மலைகளின்-மத்தியில்-மாருதி-2818478.html
2814137 வார இதழ்கள் வெள்ளிமணி திருவண்ணாமலை கிரிவலம் - புலவர் முத்துவேங்கடேசன் DIN Friday, November 24, 2017 01:21 PM +0530 திருவண்ணாமலை என்ற 2668 அடி உயர மலையே சிவன்! சிவனே மலை! சிவன் வேறு, மலை வேறு அன்று. இங்கு இரண்டும் ஒன்றுதான்.

புராண வரலாறு:

படைப்புக் கடவுள் பிரம்மா, "தான் தான் பெரிய கடவுள்!' என்றார். காத்தல் கடவுளாம் திருமாலோ, "தான் தான் பெரிய கடவுள்!' என்றார். இருவரும் சிவனிடம் சென்று முறையிட்டனர். அப்போது, அவர்களின் ஆணவத்தை அடக்க, மிகப் பெரிய ஜோதி மலையாக வடிவம் எடுத்தார் சிவன்! பிரம்மாவிடமும் திருமாலிடமும் யார், தன் அடி முடியை முதன் முதலில் காண்கிறார்களோ, அவரே பெரிய கடவுள் என்றார்.

பிரம்மா அன்னப்பறவை வடிவம் எடுத்து, சிவனின் திருமுடியைக் காணப் புறப்பட்டார். ஆனால் சிவனின் முடியைக் காணாமல் திண்டாடிய நேரத்தில் எதிரே ஒரு தாழம்பூவைப் பார்த்தார். தான் சிவனின் திருமுடியைக் கண்டதாகப் பொய் சாட்சி கூறுமாறு தாழம்பூவிடம் கேட்டுக்கொண்டார் பிரம்மா. தாழம்பூவும் சிவனின் திருமுடியை பிரம்மா கண்டதாகப் பொய் சாட்சி கூறியது. இதனால் கோபம் கொண்ட சிவன் "தாழம்பூ இனி என் பூஜைக்குரிய மலர் இல்லை!' என்று கட்டளையிட்டார்.

திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை குடைந்து கொண்டே போனது தான் மிச்சம்! ஆனால் சிவனின் அடி முடி காணாமல் திருமாலும் பிரம்மாவும் சிவனிடமே தஞ்சம் புகுந்து மன்னிப்புக் கேட்டனர். விழிகள் கூசும் படியாக மிகப் பெரிய ஜோதிவடிவம் தாங்கிய சிவன், பிரம்மாவும் திருமாலும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தன் ஜோதியைச் சற்றே சுருக்கி, உமாதேவியை இடப்பாக ஏற்று, அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி கொடுத்தார். அந்த நாளே திருவண்ணாமலை திருக்கார்த்திகை மகாதீப விழாவாகக் கொண்டாடப் பெறுகின்றது.

உமாதேவி சிவனின் இடப்பாகம் பெற்ற வரலாறு:

ஒருநாள், உமாதேவி, சிவனின் இரு விழிகளையும் வேடிக்கையாக மூட, இந்த பிரபஞ்சமே இருளில் மூழ்கியது. பல்லுயிர்களும் துன்புற்றன. இந்த பாவம் போக்கிட "" உமையே, காஞ்சியில் மண் லிங்கம் அமைத்துக் கடுந்தவம் புரிந்து, பின்னர் திருவண்ணாமலைக்கும் வந்து, கடும் தவம் மேற்கொண்டால் என் உடலில் இடப்பாகம் பெறுவாய்!'' எனப் பணித்தார் சிவபெருமான். அவ்வாறே காஞ்சியில் மண் லிங்கம் அமைத்து தவம் மேற்கொண்ட பின்னர், திருவண்ணாமலை, துர்க்கை அம்மன் ஆலயம் அருகே பர்ணசாலை அமைத்து, கவுதம முனிவரின் அருளாசியுடன் அருந்தவம் மேற்கொண்ட போது அட்டகாசம் செய்த அசுரத்தலைவன் மகிஷாசூரனை அழித்தாள் அன்னை பார்வதி.

திருக்கார்த்திகை பௌர்ணமி நாளில், கிருத்திகை பிரதோஷ நேரத்தில் மலைமேல் ஜோதி தரிசனம் கண்டு, வணங்கி சிவனின் இடப்பாகம் பெற்றாள் உமாதேவி. சிவனின் இடப்பாகம் பெற்ற பவழக்குன்றுப் பகுதி, திருவண்ணாமலை துர்க்கை அம்மன் ஆலயம் அருகே உள்ளது. எனவே, திருக்கார்த்திகை தீப விழா தொடங்கும் இடம் துர்க்கை அம்மன் கோயிலாகும்.
பதிமூன்று நாள்கள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் பெறும் திருவண்ணாமலை மகா தீப விழாவில் முதல் மூன்று நாள்கள் துர்க்கை அம்மனுக்கு விசேஷ வழிபாடு நடந்து வருகின்றது. தாம் சிவனின் இடப்பாகம் பெற்றதற்கு நன்றி கூறுமுகந்தான், உமாதேவியே திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்றி விழாவை முதன்முதல் தொடங்கி வைத்ததாகப் புராணம் கூறும்.

திருவண்ணாமலை கிரிவலம் பாதை 14 கி.மீ. சுற்றளவு கொண்டது. "கிரிவலம்' செல்பவர்களுக்கு அனைத்து யாகங்களும் செய்த புண்ணிய பலன் உண்டு
என்கிறது புராணம்.

கிழமையும் பலனும்: ஞாயிறு - கிரிவலம், சிவபதம். திங்கள்-கிரிவலம், வல்லமை தரும். செவ்வாய் - கிரிவலம், வறுமை நீங்கும். புதன்- கிரிவலம், கலைகளில் தேர்ச்சி. வியாழன்- கிரிவலம், ஞானியாவார். வெள்ளி- கிரிவலம், விஷ்ணு பதம். சனி- கிரிவலம், நவக்கிரகங்களை வழிபாடு செய்த பலன்.

ஒவ்வோர் பௌர்ணமி நாளிலும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 7 லட்சத்தைத் தாண்டும். திருக்கார்த்திகை, மகா தீப விழா, சித்திரை முழு நிலா விழா நாள்களில் கிரிவலம் பக்தர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தையும் தாண்டும்.

மன நலம் நல்கிடும் மலை வலம்:

"உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே!' - என்பார் திருமூலர். இந்த உடல் வளர்ந்தால் தான் உயிர் வாழும். உள்ளம் வாழும். உடல் நலமும் வளமும் பெற்றிட மனிதனுக்குத் தூய்மையான காற்று மிகவும் அவசியம். திருவண்ணாமலை கிரிவலம் பாதையில் ஏராளமான மூலிகைச் செடிகள் செழிப்பாக வளர்வதால் உடலுக்குரிய தூய்மையான மூலிகைக் காற்றை கிரிவலப் பாதையில் நுகர முடியும். மேலும் மலைவலம் வருவது மனநலம் காத்திடும் என்பது விஞ்ஞான ரீதியில் ஆய்வு முடிவாகும். சிவனே மலையாக, மலையே சிவனாக மலர்ந்த திருவண்ணாமலை திருத்தலத்தில் எண்ணற்ற சித்தர்கள் உள்ளனர்.

பகவான் ரமணர் பார்வையில் கிரிவல மகிமை: மகான் ரமண மகரிஷிகள், பௌர்ணமி நாளில் மட்டுமல்லாமல் நினைத்தபோதெல்லாம் கிரிவலம் செல்வார். கிரிவலம் செல்லும்போது எல்லாம்வல்ல அண்ணாமலையாரே உடன் வருவதாக ரமணர் குறிப்பிட்டுள்ளார். கிரிவலம் செல்லும் போது பக்தர்கள் வெற்றுப்பேச்சு பேசாமல், திருவாசகம், தேவாரம், திருப்புகழ் பாடல்களைப் பாடிக்கொண்டே நடைபயணம் மேற்கொள்வது நல்லது என்பார் ரமணர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/24/w600X390/vm5.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/24/திருவண்ணாமலை-கிரிவலம்-2814137.html
2814135 வார இதழ்கள் வெள்ளிமணி நிகழ்வுகள் DIN DIN Friday, November 24, 2017 01:18 PM +0530 காலாஷ்டமிப் பெருவிழா

திருவையாற்றுக்கு கிழக்கே உள்ளது வைரவன் கோயில். இங்குள்ள காலபைரவர் சந்நிதி மிகவும் விசேஷமானது. இந்த ஆலயத்தில் காலபைரவருக்கு 17 ஆவது ஆண்டு காலாஷ்டமிப் பெருவிழா டிசம்பர்-9, 10 ஆம் தேதிகளில் நடைபெறுகின்றது. இதனையொட்டி லட்சார்ச்சனை, சிறப்பு ஹோமங்கள் நடைபெறுகின்றன.

தொடர்புக்கு : 96774 88252.


திருப்பணி

மதுரை, வில்லாபுரம், மீனாட்சி நகர், எல்.கே. துளசிராம் தெருவில் பிரியும் கிருஷ்ணா தெருவில் இந்து சௌராஷ்ட்ரா சமூகம், ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் டிரஸ்டுக்கு பாத்தியப்பட்ட இடத்தில் அருள்மிகு அலர்மேல்மங்கை சமேத ஸ்ரீஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் பணிகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் இத்திருப்பணியில் பங்குகொண்டு பெருமாளின் பேரருளைப் பெறலாம்.

தொடர்புக்கு: 94438 11447.


சங்காபிஷேக தீர்த்தம் வழங்கும் விழா


கார்த்திகை மாத சோமவாரங்களில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ள திருக்கடவூர் மயானத்திலிருந்து கொண்டுவரப்படும் தீர்த்தத்துடன் மூலிகைகளைக் கலந்து 1008 சங்காபிஷேகம் சிறப்பாகச் செய்விக்கப்படுகின்றது. இந்த சங்காபிஷேக தீர்த்தம் மறுநாள் கொண்டு வரப்பட்டு தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலை (விவேக் அருகில்) தருமபுர ஆதீன சமயப் பிரசார நிலையத்தில் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றது. தீர்த்தம் வழங்கும் நாள்கள் : நவம்பர் -28, மற்றும் டிசம்பர் -5, 12.

தொடர்புக்கு : 96266 14594 /044-2814 2642.


மஹாகும்பாபிஷேகம்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், பட்டீஸ்வரம் அருகில் ஹரிச்சந்திரபுரம் கிராமத்தில் உள்ள பழைமையான கோயில், அருள்மிகு ஸ்ரீ செளந்தரவல்லி சமேத சந்திரமெளலீஸ்வரர் ஆலயம். இங்கு திருப்பணி நடைபெற்று மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகின்றது.

தொடர்புக்கு : 98400 53289.

நாள்: 24.11.2017.


திருக்கல்யாண உத்ஸவம்

குரோம்பேட்டை, கிருஷ்ணாநகர், ஸ்ரீ ராமபக்த சமாஜத்தின் ஆதரவில் ஸ்ரீ முருகன், வள்ளி, தேவúஸனா திருக்கல்யாண உத்ஸவம் பஜனை பத்ததியில் தொடர்ந்து 14-ஆம் ஆண்டு நிகழ்வாக சமாஜ வளாகத்தில் நடைபெற்று வருகின்றது. நிறைவாக, நவம்பர் 25 - திவ்யநாமம், முருகன் டோலோத்ஸவமும், நவம்பர் 26 - திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகின்றது.

தொடர்புக்கு: 98412 84637 / 98409 70419.

 

மகோத்ஸவம்

திருவாரூர் மாவட்டம், சேங்காலிபுரம், ஸ்ரீ தத்தஜெயந்தி மஹோத்ஸவம் நடைபெறுகின்றது. டிசம்பர் -4 ஆம் தேதி முக்கியமான ஸ்ரீ தொட்டில் உற்சவத்துடன் (தத்தருக்கு பாலூட்டும் வைபவம்) முடிவடைகின்றது.

தொடர்புக்கு: 94872 92481 / 94867 74298.

நாள்: 29.11.2017 - 4.12.2017.

 

ஜெயந்தி விழா

சென்னை, கொட்டிவாக்கத்தில் உள்ள ஸ்ரீ அப்பய்ய தீட்சதர் பவுண்டேஷன் சார்பில் ஸ்ரீ அப்பய்ய தீட்சதர் ஜெயந்தி முப்பெரும் விழாவாக அடையாறு, சாஸ்திரி நகரில் உள்ள எம்.என். கண் மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு, கணபதி பூஜை, ருத்ரபாராயணம், சாமவேத பாராயணம், வேத பண்டிதர்களை கெளரவித்தல், இலவச கண் மருத்துவ முகாம் நடைபெறுகின்றது.

தொடர்புக்கு: எஸ். ஸ்ரீநிவாஸன் - 97910 19450.

நாள்: 26.11.2017, நேரம்: காலை 6.00 மணி.


சம்பா சஷ்டி

அம்பத்தூர், மேனாம்பேடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மனோன்மணி சமேத ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் ஆலயத்தில் சிவபெருமானே மஹா பைரவராய் தோன்றி அந்தகாசூரனை சம்ஹாரம் செய்யும் சம்பா சஷ்டி எனப்படும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறுகின்றது.

நாள்: 24.11.2017.

]]>
http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/24/நிகழ்வுகள்-2814135.html
2814134 வார இதழ்கள் வெள்ளிமணி பொன்மொழிகள்! சுவாமி கமலாத்மானந்தர் DIN Friday, November 24, 2017 01:16 PM +0530 இறைவன் அருள் இல்லை என்றால், ஒரு சிறிய காரியத்தைச் செய்வதுகூட பெரும் கஷ்டமாகிவிடும்.

- சாணக்கியன்

கலியில் விஷ்ணு நாமாவைச் சொல்லி சித்தி பெறலாம். நீ எந்தக் கர்மாவைவிட்டாலும் ஜபத்தைக் கைவிடாதே.

மற்ற யுகங்களில் தவத்தாலும் யாகத்தாலும் தியானத்தாலும் எந்தப் பலனை அடைந்தார்களோ, அந்தப் பலனை பகவந்நாமாவை ஜபித்து கலியில் பெறலாம்.

எப்படிச் சொன்னாலும் பகவந்நாமா, யார் எப்படி எதைப் போட்டாலும் அக்கினி எரிப்பதுபோல் பாவத்தை அகற்றும்.

சந்நியாசிக்கு முக்கிய தர்மம் சமம் (பொறுமை). வானப்பிரஸ்தனுக்கு நியமம். கிருகஸ்தனுக்கு தானம். பிரம்மசாரிக்கு குரு சேவை.

விஷ்ணுவைப் பூஜிப்பவன் முதலில் தன்னை விஷ்ணுவாக நினைக்க வேண்டும். விஷ்ணு அல்லாதவன் விஷ்ணுவைப் பூஜிக்கலாகாது.

வேதம் உணர்ந்த சான்றோரின் உடலில் சகல தேவர்களும் வசிக்கிறார்கள். ஆதலின் அவர்களை நித்தியம் பூஜிக்காதவர்கள், சபிப்பவர்கள் என்னைச் சார்ந்தவர்களில்லை. அவர்கள் பாவிகள், தண்டிக்கத் தக்கவர்கள் என்று விஷ்ணு கூறுகிறார்.

- சங்கரரின் "விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம்'

பயப்பட வேண்டிய இடத்தில் பயப்படாமல் இருப்பது, பயந்தாங்கொள்ளியின் செயலைக் காட்டிலும் வெறுக்கத்தக்கது.

- கூடலூர் கிழார்

நமது இன்ப துன்பங்களுக்கு முக்கிய காரணமாக நமது மனமே இருக்கிறது. அது தூய்மையடைந்து விட்டால் எல்லாமே தூய்மையாகிவிடும்.

- ஜனகர் சுகபிரம்மத்திடம் கூறியது

தனக்குச் சொந்தமில்லாத சொத்து தனதாகும் வரையில்தான் அதைப் பற்றி ஓர் ஏக்கமும், ஓர் இன்பமும், ஒரு துடிதுடிப்பும் இருக்கும்.

- கபீர்தாசர்

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/24/w600X390/vm4.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/24/பொன்மொழிகள்-2814134.html
2814133 வார இதழ்கள் வெள்ளிமணி மணவாளனை வரவேற்கும் பத்து கன்னிகைகள்! - தே. பால் பிரம்குமார் DIN Friday, November 24, 2017 01:12 PM +0530 ஒலிவ மலையில் இயேசு அமர்ந்திருக்கையில் இயேசுவின் இரண்டாம் வருகை குறித்து சீடர்கள் இயேசுவிடம் கேட்டனர். அதற்கு அவர் ஓர் உவமை மூலமாக
விளக்கினார்.
"" பரலோக ராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர் கொண்டு போகப் புறப்பட்ட பத்து கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். (மத்தேயு 25:1) அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும் ஐந்து பேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள். புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக் கொண்டு போனார்கள். எண்ணெயையோ கூடக்கொண்டு போகவில்லை. புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடு கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டு போனார்கள். மணவாளன் வரத் தாமதித்தபோது அவர்கள் எல்லோரும் நித்திரை மயக்கமடைந்து
தூங்கிவிட்டார்கள்.
நடுராத்திரியிலே "இதோ.. மணவாளன் வருகிறார். அவருக்கு எதிர்கொண்டு போகப் புறப்படுங்கள்' என்கிற சத்தம் உண்டாயிற்று. அப்பொழுது அந்த கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள்.
புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி ""உங்கள் எண்ணெயில்
எங்களுக்கு கொஞ்சங்கொஞ்சம் கொடுங்கள். எங்கள் தீவட்டிகள் அணைந்து போகிறதே'' என்றார்கள். புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக, ""அப்படியல்ல, எங்களுக்குப் போதாமலிராதபடி நீங்கள் விற்கிறவர்களிடத்தில் போய் உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள்'' என்றார்கள்.
அப்படியே அவர்கள் வாங்கப் போனபோது மணவாளன் வந்து விட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடே கூடக் கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. கல்யாண வீடு மகிழ்வுடன் கொண்டாடப்பட்டது. விருந்தும் ஆட்டமும் பாட்டும் மணவாளனுடன் சென்றவர்கள் மிக சிறப்பாக வரவேற்றமைக்காக அன்பளிப்பும் பரிசும் கொடுக்கப்பட்டது.
புத்தியில்லாத ஐந்து கன்னிகைகள் எண்ணெய் கடைக்குச் சென்று தூங்கிக்கொண்டிருந்த கடைக்காரனை எழுப்பி எண்ணெய்யை வாங்கி தீவட்டிகளில் ஊற்றி எரிய வைத்து மணவாளனை வரவேற்க ஓடினார்கள். ஆனால் காலம் கடந்து விட்டது. மணவாளன் வீடு அடைக்கப்பட்டது. அவர்களுக்கு ஏமாற்றமும் வருத்தமும் கிடைத்தது. விருந்தும் கிடைக்காமல் போனது. இந்த உவமை கதையில் எப்போதும் புத்தியுள்ளவர்களாக விழித்திருக்க வேண்டும். இயேசுவின் இரண்டாம் வருகை எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்பதை கூறினார். இது நமக்கு ஒரு நல்ல பாடம்.
கடவுளின் பிள்ளைகளாகிய நாம் இவ்வுலக வாழ்வில் புத்தியுள்ளவராக இயேசுவை வரவேற்போம். இயேசுவின் போதனைகளை கைக்கொண்டு நேர்மையான பக்தியுள்ள வாழ்வு கொண்டு நல்லவர்களாக வாழ்தல் வேண்டும். இது வருகையின் காலம், ஆயத்த காலம்.
இவ்வுலக வாழ்வை மகிழ்வுள்ள மேன்மையான புத்தியுள்ள வாழ்வாக மாற்றி கொள்ள இயேசு அழைக்கிறார். வாருங்கள், புத்தியுள்ள ஐந்து கன்னிகைப் போல்
வாழ்வோம்!
 

]]>
http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/24/மணவாளனை-வரவேற்கும்-பத்து-கன்னிகைகள்-2814133.html
2814132 வார இதழ்கள் வெள்ளிமணி தொழுகையில் தொய்வில்லா ஈடுபாடு - மு.அ. அபுல் அமீன் DIN Friday, November 24, 2017 01:11 PM +0530 தொழுகை இஸ்லாமியர்களின் இரண்டாவது கடமை. அத்தொழுகையை குறித்த நேரத்தில் குறித்தவாறு நிறைவேற்றும் நிபந்தனையுடன் கடமையாக்கப் பட்டுள்ளதைத் திடமாக தெரிவிக்கிறது தெளிவான குர்ஆனின் 4-103 ஆவது வசனம். இவ்வாறு இறையச்சத்தோடு ஈடுபாட்டோடு ஐங்கால தொழுகையை தவறாது தொழுவதே தொய்வில்லாத தொழுகை. இது குறித்த இறைமறை குர்ஆனின் வசனங்கள், அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள் (2-3) தொழுகையை கடைபிடித்து கொள்ளுங்கள் (2-110) அனைத்து தொழுகைகளையும் நடு தொழுகையையும் நேரம் பேணி, தவறாமல் அல்லாஹ்விற்குப் பணிந்து தொழுங்கள் (2-238) தொழுகையின் நேரம் நெருங்கி எதிரிகளின் எதிர்ப்பால் பிற காரணங்களால் ஓரிடத்தில் நின்று தொழ இயலாவிடில் வாகனத்தில் இருந்தபடி தொழுங்கள் (2-239) எதிரிகளின் ஆபத்து உள்ள காலங்களில் தொழுகையை விட்டு விடாது (சுருக்கமாக ) தொழுங்கள் (4-101) போர் காலங்களில் இரு பிரிவாக பிரிந்து ஒரு குழு தொழ, மற்றொரு குழு காவல் காத்திடுங்கள். அடுத்து காவல் காத்தவர்கள் தொழுங்கள். தொழுதவர்கள் காவல் காத்திடுங்கள். (4-102) வெள்ளிக்கிழமை ஜும்ஆ (வார தொழுகை) பாங்கு சொல்லி தொழுகைக்கு அழைக்கப்பட்டால் வியாபாரங்களை விட்டு நீங்கள் தொழுகைக்கு விரைந்து செல்லுங்கள் (62- 9)
பகலில் இரு முனைகளாக காலை மாலையிலும் இரவில் ஒரு பாகத்திலும் நீங்கள் தவறாது தொழுங்கள். அதன் நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும் என்ற 11-114 ஆவது வசனம் தொய்வில்லா தொழுகையால் கிடைக்கும் நன்மைகள் தீமைகளைப் போக்கி விடுவதைப் புகல்கிறது. தொய்வில்லா தொழுகை தீமை நம்மைத் தொடாமலும் அணுகாமலும் காப்பதை அனுபவத்தில் அறியலாம். சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரையில் லுஹர், அசர், மஃரிப், இஷா ஆகிய நேர தொழுகைகளைத் தொழுங்கள். பஜ்ர் தொழுகையையும் தொழுங்கள் என்ற 17-78 ஆவது வசனம் ஐங்கால தொழுகைகளைத் தொய்வில்லாது தொழ உரைக்கிறது.
தொய்வில்லாது ஈடுபாட்டோடு தொழுபவர்கள் பெரும் நன்மைகளை நவிலும் நற்குர்ஆனின் பொற்புடை வசனங்கள். உள்ளச்சத்தோடு தொழும் நம்பிக்கை உடையோர் வெற்றி பெற்றவர்கள் (23-1,2) தொழுகைகளை நேரம் தவறாது நியமமாக தொழுபவர்கள் சொர்க்கத்தின் உண்மையான வாரிசுகள். உயர்ந்த பிர்தௌஸ் என்னும் சொர்க்கத்தில் நிலையாக தங்குவார்கள். (23-9 முதல் 11) மனிதனின் இலக்கு மறுமையில் சொர்க்கத்தில் சுகமாக வாழ்வது. அவ்விலக்கை அடைய தொய்வில்லா தொழுகையே துணை. "" தொழுகையை கடைபிடியுங்கள். நிச்சயமாக தொழுகை மானக்கேடான செயல்களிலிருந்தும் பாவத்தில் இருந்தும் மனிதனை விலக்கிவிடும்''. (29-45) "" நீங்கள் உங்கள் குடும்பத்தினரை, தொழ கூறுங்கள்.தொழுகையில் உறுதியாக இருங்கள். நீங்கள் தொழுவது உங்களின் நன்மைக்கும் உங்களைத் தூய்மைப் படுத்தவும்'' என்று கூறுகிறது தூய குர்ஆனின் 2-132 ஆவது வசனம்.
அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்கு அதாவது தொடர்ந்து தொடர்புடன் இருப்பதற்குத் தொழுகையை விட சிறந்த மேலான தொடர்பு சாதனம் வேறு இல்லை. உவப்புடனும் உள்ள அச்சத்துடனும் எள்ளளவும் எப்பிழையும் ஏற்படாது தப்பாது தொய்வில்லா ஈடுபாட்டோடு தொழும் தொழுகையே இறைவனால் ஏற்கப்படும். இமாம் புகாரி (ரஹ்) தொழுது முடித்ததும் பூச்சி ஒன்று கொட்டிய வலியை உணர்வதாக கூறினார். சட்டையை கழற்றி பார்த்ததும் அவரின் உடலில் ஒரு குழவி பதினேழு முறை கொட்டிய அடையாளம் இருந்தது.
மலை உச்சியில் ஆடுகளை மேய்க்கும் இடையன் ஆடுகளை மேய்த்து கொண்டிருக்கும் பொழுது தொழுகை நேரம் நெருங்கியதும் பாங்கு கூறி தொழுவதைப் பற்றி இறைவன் மகிழ்ச்சியுற்று என் இந்த அடியானை நோக்குங்கள்; இறை அச்சத்தோடு பாங்கு சொல்லி தொழுகிறார். நிச்சயமாக நான் அந்த அடியானின் பாவத்தை மன்னித்து விட்டேன். அந்த அடியானைச் சொர்க்கத்தில் சேர்ப்பேன் என்று அல்லாஹ் அறிவிப்பதாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் செப்பியதைச் செவியுற்றதாக உரைக்கிறார் உக்பதுப்னு ஆமிர் (ரலி) நூல்- அபூதாவூத், நஸஈ.
பெரியார் முஜத்தித் அல்பதானி (ரஹ்) அவர்களிடம் அவர்களின் சீடர்களில் ஒருவரான மௌலானா அப்துல் வாஹித் லாகூரி (ரஹ்) சொர்க்கத்தில் தொழுகை இருக்காதா? என்று கேட்டார். உலகில் தொழுத தொழுகைகள் பிற அற செயல்களின் நற்பரிசே சொர்க்கம். அங்கே தொழ வேண்டியதில்லை என்ற பதிலைக் கேட்டதும் தொழாமல் நான் எப்படி வாழ்வேன் என்று ஏங்கி அழ ஆரம்பித்தார்கள் மௌலானா அப்துல் வாஹித் லாகூரி (ரஹ்).
இறைவனைப் பார்ப்பது போல் தொழ வேண்டும். அல்லது இறைவன் என்னைப் பார்க்கிறான் என்ற எண்ணத்துடன் தொழ வேண்டும். இவ்வாறு இல்லாமல் கவனம் இன்றி தொழுபவர்களுக்குக் கேடு விளையும் என்று விளம்புகிறது. விழுமிய குர்ஆனின் 107- 4 ஆவது வசனம். உலக இன்பத்தில் மூழ்கி தொழுகையை தொழாது விட்டவர்கள் இழப்பிற்கு உள்ளாவார்கள் என்று உரைக்கிறது உத்தம குர்ஆனின் 19- 59 ஆவது வசனம். தொழுகையில் ஈடுபாடு இன்றி பிறர் தொழுபவர் என்று புகல்வதற்காக- புகழப்படுவதற்காக தொழுபவர்களைச் சாடுகிறது ஈடு இணையற்ற இறைமறை குர்ஆனின் 4-142 ஆவது வசனம், "" நிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்கிறார்கள். அவனோ அவர்களை வஞ்சித்து விடுகிறவன். மேலும் அவ்வஞ்சகர்கள் தொழுகையில் நின்றால் சோம்பேறிகளாக நின்று மனிதர்களுக்குக் காண்பிக்கிறார்கள்''. சிரத்தையின்றி தொழுபவர்கள் குறைவாகவே தொழுகின்றனர். காலத்தில் நேரத்தில் நிறைவேற்றாது தவறிய தொழுகையை மீண்டும் தொழமாட்டார்கள். உலக இன்பங்களில் இடையறாது ஈடுபடுவர். பிறர் பார்க்கும் காணும் காலத்தில் தொழுது மற்றவர் காணாத பொழுது தொழுவதைத் தவிர்த்து விடுவர். இவர்கள் இரு மந்தைகளுக்கு இடையில் இந்த மந்தையிலும் அந்த மந்தையிலும் தாவி தாவி எந்த மந்தையிலும் தங்காது தவிக்கும் ஆடு போன்றவர்கள் என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்ததைத் தொடுத்து சொல்கிறார் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம்.
அஜ்மீரில் அடக்கமாகி உள்ள காஜா முயினுத்தீன் சிஷ்தீ பாக்தாதிலிருந்து சிரியாவிற்குச் செல்கையில் ஒரு குகையில் உஹத் மஹ்மூது அல்லாஹிதி என்ற பெரியாரைச் சந்தித்தார். முப்பது ஆண்டுகளாக இக்குகையில் தொய்வில்லாது தொழுது கொண்டிருக்கும் நான், என் தொழுகையை இறைவன் ஏற்பானா? மறுப்பானா? என்று ஏங்கி அழுகிறேன் என்றார்.
உள்ள உறுதியுடன் ஈடுபாட்டோடு தொய்வில்லாது தொழுது மெய்யாகவே மேலோன் அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.
 

]]>
http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/24/தொழுகையில்-தொய்வில்லா-ஈடுபாடு-2814132.html
2814130 வார இதழ்கள் வெள்ளிமணி சிவபெருமானை பற்றிய சனீஸ்வரர்! க. சுகுமாரன் Friday, November 24, 2017 01:05 PM +0530 சனிபகவான் தீவிரமான சிவ பக்தர். காசியில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து அதன் பயனாக கிரக பதவியையும் அதிகாரமும் பெற்றார். எனினும் தனக்கு அருள் கொடுத்த சிவபெருமானை பற்றித் திருவிளையாடல் செய்தவர்.

ஒருசமயம், சனிபகவான் சிவபெருமானைத் தேடிக் கைலாயம் சென்றார். கயிலையில் சிவபெருமான் பார்வதியோடு அமர்ந்திருந்தார். தன்னைப் பற்றுவதற்காக வெகுதூரத்தில் சனி வருவதை அறிந்த சிவபெருமான், சனியின் பிடியிலிருந்து தப்பிக்க எண்ணினார். தான் செய்த முடிவை நிறைவேற்ற எண்ணிய சிவபெருமான் தேவியிடம் ""நான் சிறிது காலம் தவம் செய்யப்போகிறேன்'' என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றார். பக்கத்தில் கயிலை மலையில் இருந்த ஒரு குகைக்குள் புகுந்தார். அந்த குகை வாசலையும் பெரிய பாறையால் நன்றாக அடைத்துவிட்டார். உள்ளே சென்ற சிவபெருமான், நிஷ்டையில் யோக சமாதியில் ஆழ்ந்து விட்டார்.

ஏழரை ஆண்டுகள் ஆனபிறகு சமாதி கலைந்து எழுந்தார். சனிபகவான் பிடியிலிருந்து தப்பிவிட்ட மகிழ்ச்சியோடு சிவபெருமான் குகையில் பாறையை விலக்கிவிட்டு வெளியே வந்தார். குகை வாசலில் வெளியே சனிபகவான் நின்று கொண்டிருந்ததைக் கண்டு சிவபெருமான் அதிர்ச்சியுற்றார். வாசலில் நின்ற சனிபகவான் சிவபெருமானை நோக்கி, "" பிரபோ, என்னுடைய கடமை முடிந்தது. தங்களிடம் விடைபெற்றுக் கொள்கிறேன்'' என்றார்.

அதைக்கேட்ட சிவபெருமான், ""உன் பிடியிலிருந்து தப்பிப்பதற்காகவே, குகைக்குள் சென்றேன். ஆனால் நீயோ, உன் கடமை முடிந்தது என்கிறாயே! எனக்கு ஒன்றும் புரியவில்லையே!'' என்றார்.

சனிபகவான் புன்னகையோடு சிவபெருமானை நோக்கி, ""ஐயனே, தங்களை அம்பிகையிடமிருந்து பிரித்து இருளாக இக்குகைக்குள் ஏழரை ஆண்டுகள் அடைத்து வைத்தது அடியேன் தான். அதனால் இப்பொழுது நான் சென்று வருகிறேன். விடை கொடுங்கள்!'' என்று கூறி பணிந்து நின்றார்.

சிவபெருமானால் ஈஸ்வரன் பட்டம் பெற்ற சனீஸ்வரனின் பிறப்பு வியப்பானது. சூரியபகவானின் மனைவி சஞ்சிகை. சூரியனோடு வாழ்ந்து மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த அவள், தனது சாயலில் ஒரு பெண்ணைப் படைத்து அங்கேயே விட்டுவிட்டு தன்னுடைய கணவனுக்குத் தெரியாமல் நீங்கினாள். சஞ்சிகை சாயலில் இருந்த சாயா தேவிக்கும் சூரியனுக்கும் பிறந்த இரண்டாவது மகன் சனிபகவான் ஆவார்.

சனிபகவான் நீல ஆடை புனைந்தவர். எட்டுக்குதிரை பூட்டிய இரும்புத் தேரை உடையவர். காகத்தை வாகனமாக உடையவர். கழுகு இவருடைய வாகனமாகக் கருதப்படுகிறது. மை போனற கருமை நிறம் உடையவர். மேற்குத் திக்கை இடமாகக் கொண்டவர்.

"சனைச்சரன்' என்பதே இவரின் இயற்பெயர். இவர் ராசிமண்டலத்தில் மெதுவாக இயங்கக்கூடியவர். முட்டை வடிவமான ராசி மண்டலம் 360 பாகைகளைக் கொண்டது. அந்த 360 பாகைகளும் 12 பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாகமும் ராசி என்று 12 ராசிகளாக அழைக்கப்படுகிறது.

சூரியன் ஒரு ராசியை கடக்க ஒரு மாதமாகும். ஆனால் சனிபகவானோ ஒரு ராசியைக் கடக்க இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. அந்த முறையில் 12 ராசிகளையும் கடந்து செல்ல சனிபகவானுக்கு 30 ஆண்டுகள் ஆகின்றன. மெதுவாகச் சென்றாலும் உறுதியாகப் பற்றக் கூடியவர் சனிபகவானே ஆவார்.

சனிபகவான் எழுந்தருளியுள்ள ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. இங்கு, ஏழரைச் சனி, கண்டகச் சனி இவற்றால் பீடிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமைதோறும் சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/28/w600X390/sani_bhagavan.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/24/சிவபெருமானை-பற்றிய-சனீஸ்வரர்-2814130.html
2814106 வார இதழ்கள் வெள்ளிமணி திருநள்ளாரில் அருள் புரியும் சனிபகவான்! - ராமசுப்பு DIN Friday, November 24, 2017 12:37 PM +0530 அற்புதமான அந்த அரண்மனை கொலுமண்டபத்திலே தமயந்தியின் சுயம்வரத் திருமணம் நடந்தேறியது. நளனை மணந்து கொண்ட தமயந்தி, மனமகிழ்ச்சியுடன் நளனுடன் கைகோர்த்துக்கொண்டு மணமாலை சகிதமாய் மணிமண்டபத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள். தமயந்தியின் சுயம்வரத் திருவிழாவில் தானும் பங்கேற்று தமயந்தியை அடைய வேண்டும் என்ற ஆவலோடு எதிரே சற்றுத் தொலைவில் சனீஸ்வர பகவான் வந்துகொண்டிருந்தார். சனீஸ்வரனின் ஒரு கால் ஊனமாக இருந்ததால் அவரால் குறிப்பிட்ட நேரத்திற்குள் சுயம்வரத்துக்கு வரமுடியாமல் போனது.

இப்போது சுயம் வரம் முடிந்து நளனும் தமயந்தியும் எதிரே வருவதைக் கண்டார். தமயந்தி தமக்கு கிடைக்காமல் போனதால் வேதனையும் கோபமும் கொண்டு அப்படியே நின்றுவிட்டார். நளனும் தமயந்தியும் பெருமகிழ்ச்சியுடன் ஆனந்தமாகச் சிரித்தபடி சனீஸ்வரனை கண்டும் காணாமலும் சென்றனர்.

சனீஸ்வரனுக்கு ஏற்கெனவே தமயந்தி தனக்குக் கிடைக்கவில்லை என்ற கோபம் ஒருபுறம் இருந்தது. இப்போது அந்தக் கோபம் மேலும் அதிகரித்தது. இவர்கள் இருவரையும் தனது ஆட்சி காலம் வரும்போது ஆட்டிப் படைக்கலாம் என்று முடிவு செய்து அங்கிருந்து வெளியேறினார் சனீஸ்வரன்.

நிடத நாட்டை ஆளும் மன்னன் நளன், தன் பட்டத்தரசி தமயந்தியுடன் சில வருடங்கள் நல்லாட்சி செய்து வந்தான். சனிபகவானுக்கு அவர்கள் இருவரையும் ஆட்டிப்படைக்கும் சந்தர்ப்பமும் கிட்டியது. இறைவனை பூஜிப்பதற்காக பாதத்தில் தண்ணீர் ஊற்றி கழுவ முனைந்த நளன், சரிவரக் கழுவாமல் பூஜைக்கு சென்றமர்ந்தான். இந்த சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்த சனிபகவான், நளனின் இடது கால் பாதத்தைப் பற்றிக்கொண்டான்.

சனியின் பிடியால் நளனின் நல்வாழ்வு நலிவுற்றது. தொட்டதெல்லாம் கெட்டது. புத்தி மழுங்கியது. சூதாடி நாடு நகரத்தை இழந்தான். கட்டிய மனைவி தமயந்தியுடன் காட்டுக்குச் சென்றான். காட்டிலே நளனும் தமயந்தியும் பட்டபாடு சொல்லி மீளாது. நிறைய துன்பங்களை அனுபவித்தனர். ஒருநாள் இரவு தமயந்தியை தவிக்கவிட்டு போய்விட்டான். இருவரையும் சனீஸ்வரன் பிரித்துவிட்டான்.

காட்டுக்குள் தீயில் மாட்டிக்கொண்ட கார்கோடகன் என்ற நாகத்தைத் தீயிலிருந்து காப்பாற்றினான் நளன். ஆனால் அந்த நாகம் அவனைத் தீண்டியதால் கருநீல மேனியுடன் அடையாளமே தெரியாத அளவில் அலைந்து திரிந்தான் நளன். காட்டிலே விடப்பட்ட தமயந்தி பலதுன்பங்களை அடைந்து முடிவில் தன் தந்தையிடம் அடைக்கலமானாள். அதேநேரத்தில் வேற்று நாட்டரனுக்கு சமையல்காரன் ஆனான் நளன். இப்படியாக துன்பங்கள் அடைந்து இறுதியில் இருவரும் ஒன்று சேருகின்றனர்.

கார்கோடகன் கொடுத்த கம்பளியைப் போர்த்தியதும் சுயரூபம் பெற்று மீண்டும் பழைய நிலைக்கு வந்து அரசாளத் தொடங்கினான் நளன். ஆனாலும் மனக்கலக்கத்துடன் இருந்தான். நாரத மகரிஷி அறிவுரையின்படி சனிப்பிரீத்தி செய்ய தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். புண்ணிய நதிகளில் நீராடினான். பல மஹான்களைத் தரிசித்தான். இருப்பினும் மனக்கலக்கம் தீரவில்லை.

பரத்வாஜ முனிவரை சந்தித்து தன் மனக்கலக்கம் தீர வழிகேட்டான். அவரும், திருநள்ளாறு சென்று வழிபடுமாறு கூறினார். நளன் தன் மனைவி மக்களுடன் திருநள்ளாறு சென்று அங்கு நளகூபத்தில் நீராடி சனீஸ்வர பகவானை தரிசித்து கருமை நிற வஸ்திரம் சார்த்தி, எள் அன்னம் நிவேதனம் செய்து எள் விளக்கேற்றி தம் பிழையை பொறுத்தருளவும், நல்வாழ்வு கிட்டவும் வேண்டிக்கொண்டான். சனிபகவானும் நளனுக்கு பேரருள் வழங்கினார்.

நளனின் இக்கதையை யார் சொன்னாலும், சொல்லக் கேட்டாலும், படித்தாலும் அவர்களுக்கு என்னால் அவர்களுக்கு எந்தத் துன்பமும் நேராது. மாறாக, அவர்கள் மகிழ்ச்சியுடன் மனசஞ்சலமின்றி நல்வாழ்வு வாழ்வார்கள் என்று அருளினார்.

திருநள்ளாறு செல்பவர்கள் அங்குள்ள நள தீர்த்தத்தில் நீராடி, விநாயகருக்கு முதல் வணக்கத்தைச் செலுத்தவேண்டும். அதன்பிறகு சனிபகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரரையும் பிராணேஸ்வரி என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கும் அம்பிகையையும் தரிசிக்க வேண்டும். பின்னர், தனிசந்நிதியில் வீற்றிருக்கும் சனீஸ்வரரை தரிசித்து அருள் பெற வேண்டும்.

இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை வரும் சனிப்பெயர்ச்சியின்போது திருநள்ளாறு சனிபகவானை வழிபட்டால் அப்பெருமான் அவர்களது தோஷங்களை நிவர்த்தி செய்து சகல நன்மைகளையும் செல்வங்களையும் வழங்கி அருள்புரிவார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/24/w600X390/vm3.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/24/திருநள்ளாரில்-அருள்-புரியும்-சனிபகவான்-2814106.html
2814105 வார இதழ்கள் வெள்ளிமணி கோபத்தைக் குறைக்கும் திருகோணமலை கோணேசர்! - பொ.ஜெயச்சந்திரன் DIN Friday, November 24, 2017 12:34 PM +0530 இலங்கையில் உள்ள திருக்கோணேஸ்வரத்திற்கு தட்சிண கைலாசம், மச்சகேஸ்வரம் என்ற பெயர்கள் உண்டு. இந்த பெயர்கள் ஏற்பட்டதற்கான காரணங்களை புராணங்கள் விவரிக்கின்றன. ஆதிசேடனும், வாயு பகவானும் தங்கள் வலிமையை காட்ட முயன்று, ஆதிசேடன் மகாமேருவின் சிகரங்களில் ஒன்றைப் பெயர்த்து கடலில் வீச, அது இலங்கையின் கரையோரமாக விழுந்து திருகோணமலையாக உருவாகியது என்கிறது புராணம்.
இமயமலையின் ஒரு பகுதியே கோண பர்வதம் என்ற நம்பிக்கை காரணமாக கோணேஸ்வரத்திற்கு "தட்சிண கைலாசம்' என்ற பெயர் உருவாகியது. திருமால் மச்சாவதாரத்திலே தட்சிண கைலாசத்தை அடைந்து தனது மீன் உருவத்தை விட்டு நீங்கி மகேஸ்வரனை வணங்கியதால் "மச்சகேஸ்வரம்' என்ற பெயரும் உண்டு. புராண இதிகாசங்களில் இருந்து பல பெயர்களை அறிந்து கொண்ட போதிலும் திருக்கோணேஸ்வரம் என்ற பெயரே நீண்டகால வழக்கிலுள்ள தலப் பெயராகும். நிலாவெளிப் பிள்ளையார் கோயிலில் கிடைத்த சாசனத்தில் இத்தலம், மச்சகேஸ்வரம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மரபுக்கதைகளில் ராவணனுடன் தொடர்பு படுத்தபடும் திருகோணமலையின் மற்றுமொரு புனிதத்தலம் கன்னியா வெந்நீர் ஊற்றுகளும், கன்னியா சிவன் ஆலயமும் ஆகும். இவற்றை ராவணன் இறந்த தன் தாயின் ஈமக்கடனை நிறைவேற்ற உருவாக்கியதாக மரபுக்கதைகள் கூறுகின்றன.
ஈழத்தின் மிகப் பழைமையான நூலாகக் கருதப்படும் "மகாவம்சம்' திருகோணமலையில் காணப்பட்ட புராதன சிவாலயத்தை, மகாசேனன் மகாயான பெளத்தத்திற்கு ஆதரவாக மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக அழித்தான் என்கிறது. இந்நூல் "கோகர்ண' எனக் குறிப்பிடப்படுவது திருகோணமலை என்பதற்கான பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.
கலிங்க நாட்டில் மகேந்திர மலைத் தொடரிலே கோகர்ணம் என்றொரு சிவாலயம் இருந்தது. கலிங்கத்தை ஆண்ட கீழ்த்திசைக் கங்கர்கள் தங்கள் குலதெய்வமான கோகர்ண சுவாமிக்கு இந்த ஆலயத்தை எழுப்பினர். இது பற்றி கீழைத் தேசக் கங்கர்களின் கல்வெட்டுக்களில் காணமுடிகிறது.
கி.பி. 5 -ஆம் நூற்றாண்டில் குப்தர் ஆட்சிக்காலத்தில் உருவாகிய வாயு புராணம் மலைய தீவின் கிழக்கு கரையோரத்தில் அமைந்துள்ள கோகர்ண சிவாலயம் பற்றி குறிப்பிடுகின்றது. வாயு புராணத்தில் குறிப்பிடப்படும் கோகர்ண சிவாலயத்தை திருக்கோணேஸ்வரம் என ஏற்பது சரியானதாகும்.
இத்தலத்தில் உள்ள தீர்த்தம் "பாவநாசம்' எனப்படுகிறது. இத்தீர்த்தம், நம்மீது பட்டால் அனைத்து பாவங்களும் போகும் என்பது ஐதீகம்! கோபம் அதிகம் வருகிறவர்கள் கோணேசர் ஆலயத்திற்கு வந்து மனதை ஒரு நிலைப்படுத்தி வேண்டினால் அதிக கோபம் வருகின்றவர்களுக்கு கோபம் குறையும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம் பெற தொட்டில் கட்டும் வழக்கமும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இங்கு நடைமுறையில் உள்ளதாக கூறப்படுகிறது.
பங்குனி மாதத்தில் 18 நாள்கள் திருவிழா போன்ற பெருந்திருவிழாக்களுடன் ஒவ்வொரு வாரமும் மகா சக்தி பீட வழிபாடு, மற்றும் மகா சிவராத்திரி, மாத சிவராத்திரி போன்ற அனைத்து விழாக்களும் இங்கு வெகுச்சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/24/w600X390/vm2.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/24/கோபத்தைக்-குறைக்கும்-திருகோணமலை-கோணேசர்-2814105.html
2814103 வார இதழ்கள் வெள்ளிமணி விரும்பியது கொடுக்கும் மண்டை விளக்கு மகாதேவர்! - செங்கை பி. அமுதா Friday, November 24, 2017 12:30 PM +0530 காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் வளாகத்துக்குள் இரண்டு சிவன் கோயில்கள் அமைந்திருப்பது வித்தியாசமானது. 10 -ஆம் நூற்றாண்டு தண்டியலங்காரத்தில் "கனல் மழுவன் கச்சாலை எம்மான்' என்ற மேற்கோள் பாட்டு எடுத்துக்காட்டப் பட்டுள்ளதால் பல்லவர் காலம் முதல் இத்திருக்கோயில் இருந்திருக்கிறது.
உலகை மறு சிருஷ்டி செய்ய சிவபிரான், அண்டப் பெருவெளியில் உமாதேவியார் காணும்படித் திருநடனம் ஆடினார். காஞ்சிபுரத்தில், சோதிமயமான கச்சபேச லிங்கத்தில் தாமே தோன்றித் தம் சக்தியால் மீண்டும் அனைத்தையும் படைத்தருளினார். அச்சோதியைப் பிரம்மதேவன் சரஸ்வதியுடன் வழிபட்டுப் படைப்புத் தொழிலை மீண்டும் துவங்கினான்.
மற்றொரு நேரத்தில் தேவர்களும் அசுரர்களும் மந்திர மலையை மத்தாக்கி பாற்கடலைக் கடைந்தனர். திருமால் ஆமை வடிவம் கொண்டு சரிந்த மந்திர மலையைத் தன் முதுகில் தாங்கி நிறுத்த, அமுதம் தேவர்களுக்குக் கிடைத்தது. மகிழ்வில் திருமால் அக்கடல் முழுதும் திரிந்து கலக்கினார். அஞ்சிய தேவர்கள் சிவனைத் தஞ்சமடைய அந்த ஆமையை அழித்து, அதன் ஓட்டினைத் தமது மார்பில் அணிந்து கொண்டார் சிவபெருமான்.
தவறுணர்ந்த திருமால், குற்றம் நீங்க இச்சோதிலிங்கத்தினை வழிபட்டார். ஆமை வடிவில் திருமால் வழிபட்டதால் இந்த லிங்கம் கச்சபலிங்கம் எனவும் கோயில் கச்சபேஸ்வரம் எனப்பட்டது. இக் கச்சபேசப் பெருமானை வழிபடுவதால் இவ்வுலகில் துன்பம் நீங்கி இன்பம் பெற்று முடிவில் முத்தியும் பெறுவர் என காஞ்சி புராணம் கூறுகிறது.
தீ வடிவான சிவனை வேண்டி, இந்த அக்னி சொரூபம் மறைத்துத் தோன்றி காட்சி தந்தருள வேண்டுமென அனைத்து தேவர்களும் வேண்டினர். ஈசன், அவ்வாறே, ஒரு குளத்தை உருவாக்கி அதன் கரையில் சிவலிங்கமாக இருந்து அருள்புரிந்தார். பக்தர்களின் இஷ்டத்தை பூர்த்தி செய்பவராதலால் "இஷ்டசித்தீஸ்வரர்' ஆனார்.
பிருகு முனிவரின் வம்சத்தில் தோன்றிய தசீசி முனிவர் குபன் என்னும் அரசனுடைய நண்பராவார். ஒருநாள் அரசர், அந்தணர் இவர்களுள் யார் சிறந்தவர் என்ற விவாதம் வந்தது. ததீசி முனிவர் "அந்தணரே', எனவும், குபன், "அரசரே' எனவும் பேசினர். இந்த விவாதம் பெரும் போராக மாறியது. முனிவர் அரசனை அடித்தார். அரசன் முனிவரை வஜ்சிராயுதத்தால் வெட்டினான். வெட்டுண்டு விழும்போது முனிவர் சுக்கிரனை நினைத்துத் தரையில் விழுந்தார். சுக்கிரன், முனிவரின் துண்டுபட்ட உடலைப் பொருத்தி உயிர்பெறச் செய்து அவரிடம், காஞ்சி சென்று இஷ்டப்பட்டதை அருளும் இஷ்டசித்தீஸ்வரரை வணங்கி சாகாத் தன்மையைப் பெறுமாறு கூறினார்.
மேலும், காஞ்சி கச்சபேசத்தில் இஷ்ட சித்தீஸ்வரர் சந்நிதி அருகில் இஷ்டசித்தித் தீர்த்தம் உள்ளது. இத்தீர்த்தத்தில் நீராடி அருகில் உள்ள இஷ்ட சித்தீசப் பெருமானை வணங்கியே மிருதசஞ்சீவினி என்னும் இறந்தவரை எழுப்பும் மந்திரத்தை சுக்கிராச்சாரியார் பெற்றார். ஆதலால் அதில் மூழ்கினால் சிவபெருமானின் திருவருளோடு, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய பயன்கள் கிடைக்கும் . ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடுவது மேலும் பெரும்பயன் தரும். இத்தீர்த்தத்தில் தர்மதீர்த்தம், அர்த்த தீர்த்தம், காமதீர்த்தம், முக்திதீர்த்தம் என்னும் 4 தீர்த்தங்களும் உள்ளன. அதன் கரையில் தானம் செய்தால் பலன்கள் பன்மடங்கு ஆகும் என்று கூறினார் சுக்கிரர். இதைக் கேட்ட ததீசி காஞ்சி வந்து நீராடி இஷ்டசித்தீஸ்வரரை வணங்கி என்றுமே சாகாத உறுதியான உடலைப் பெற்றார்.
இஷ்டசித்தி தீர்த்தத்தில் நீராடி இஷ்டசித்தீசரை வழிபடுவது என்பது வைகாசி, ஆடி, மாசி மாதத்திலும் உண்டு என்றாலும் கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் பெருமளவில் இதில் நீராடி, புதுமண்சட்டியில் பச்சரிசி மாவு, வெல்லம் சேர்த்து உருட்டி ஸ்தூல சரீரமாக உருவகித்தும் சூட்சும சரீரமாக , அகலில் நெய்யிட்டுத் தீபமேற்றி, தேங்காய், பூ, பழத்தை அந்த மாவில் வைத்து சட்டியைத் தலையில் வைத்துக் கொண்டு கோயிலை விநாயகர் சந்நிதியில் துவங்கி சுற்றி வருவர்.
இதனால் தலைவலி, காதுவலி, காதில் சீழ்வடிதல், தலைக் குத்து போன்றவை நீங்கும். மாவிளக்குப் போடுவதாக வேண்டிக் கொள்ளுதல் இத்தலத்துக்குரிய சிறப்பாகும். கச்சபேஸ்வரர் திருக்கோயில் காஞ்சி மாநகரத்தில், நடுநாயகமான, ராஜவீதியில் அமைந்துள்ளது.

தொடர்புக்கு: 82481 14974/ 96776 53044.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/24/w600X390/vm1.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/24/விரும்பியது-கொடுக்கும்-மண்டை-விளக்கு-மகாதேவர்-2814103.html
2809764 வார இதழ்கள் வெள்ளிமணி சிவலிங்கவடிவில் சனிபகவான்! Friday, November 17, 2017 12:08 PM +0530  

மனிதர்களின் ஆயுளை நிர்ணயிக்கும் சனிபகவான் எந்திரம் பொறித்த, சிவலிங்க வடிவில் திருவண்ணாமலை மாவட்டம், ஏரிக்குப்பத்தில் எந்திர சனீஸ்வரராக கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். மூலவர்- எந்திர சனீஸ்வரர்; தீர்த்தம்- பாஸ்கர தீர்த்தம். 

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆண்ட சிற்றரசர் ஒருவர், இங்கு சனீஸ்வரருக்கு கோயில் எழுப்ப விரும்பினார். சனீஸ்வரர், "ஈஸ்வரர்' என்ற பட்டம் பெற்றவர் என்பதால் அதன் அடிப்படையில் எந்திரங்களை பிரதிஷ்டை செய்து, சிவலிங்கத்தின் பாண வடிவிலேயே சிலை அமைத்து கோயில் எழுப்பினார். பின்னர் பல ஆண்டுகள் கழிந்த நிலையில் கோயில் அழிந்து போனாலும் அந்த சிலை மட்டும் அப்படியே திறந்த வெளியில் இருந்தது. 

பக்தர்கள் அந்த லிங்க பாணம் இருந்த இடத்தில் புதிதாக கோயில் எழுப்பினர். எந்திரங்களுடன் இருப்பதால் மூலவர் எந்திர சனீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். நவக்கிரகங்களில் ஒருவரான சனிபகவான் ஏரிக்குப்பத்தில் எந்திர சிவலிங்க வடிவில் காட்சியருள்கிறார்.

மூலஸ்தானத்தில் தாமரை பீடத்தின் மீது இரண்டரை அடி அகலம், ஆறரை அடி உயரத்துடன் அமைந்த சிவலிங்க அமைப்பில் சனீஸ்வரர் காட்சி அருள்கிறார். சிலையின் உச்சியில் சூரியனும் சந்திரனும் அமைந்துள்ளனர். அவர்களுக்கு நடுவில் சனிபகவானின் வாகனம் காகம் இருக்கிறது.

லிங்கபாணத்தின் மத்தியில் அறுகோண அமைப்பிலுள்ள ஷட்கோண எந்திரம் உள்ளது. இச்சிலையில் "நமசிவாய' சிவ மந்திரம் , பீட்சாட்சர மந்திரம், லட்சுமி கடாட்ச மந்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. 

கோயிலைச் சுற்றிலும் வயல் வெளிகள் அமைந்துள்ளன. கோயில் முகப்பில் ஐந்து காகங்கள் பூட்டிய தேரில் சனீஸ்வரர் வருவது போன்ற சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
சனிபகவான் ஆயுளையும் தொழிலையும் நிர்ணயம் செய்பவர். எனவே, பக்தர்கள் நீண்ட ஆயுள் பெறவும் தொழில் மேன்மைக்காகவும் எள் தீபமிட்டு வழிபடுகின்றனர். சனிபெயர்ச்சியால் உண்டாகும் தோஷம் நீங்கவும் ஜாதக ரீதியாக சனி நீச்சம் பெற்றவர்களும் நிவர்த்திக்காக வேண்டுதல் செய்கின்றனர். திருமணம், குழந்தை பாக்கியம், வழக்குகளில் வெற்றி பெறவும் ஏரிக்குப்பம் சனீஸ்வரரை வந்து வழிபாடு செய்கின்றனர். 

- இ. பன்னீர்செல்வம்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/17/w600X390/v7.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/17/சிவலிங்கவடிவில்-சனிபகவான்-2809764.html
2809765 வார இதழ்கள் வெள்ளிமணி பட்டம் பதவி தந்தருளும் ஈசன்! DIN DIN Friday, November 17, 2017 11:35 AM +0530 தொண்டை வளநாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்பூதூர் வட்டத்தில் பிச்சிப்பாக்கம் என்று கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்ட தற்போதைய பிச்சிவாக்கம் என்ற கிராமம் உள்ளது. இங்கு, சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பரமானந்த வல்லி சமேத ஸ்ரீ பட்டமுடீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. தற்போது இத்திருக்கோயிலில் ஒருகால பூஜை மட்டும் நடைபெற்று வருகிறது. எழில் கொஞ்சும் வயல் வெளிக்கிடையே ஈசான்ய பகுதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. 

வீரமார்த்தாண்ட பைரவர் ஆராதிக்கின்ற சிவத்தலமாக விளங்குகிறது. மார்த்தாண்டன் என்பவர் சிவ, சூரிய, முருகர் ஆகிய மூன்று தெய்வ அம்சங்களும் நிறைந்தவர். அவரை மார்த்தாண்ட பைரவர் என அழைப்பர். அவர் வெண்குதிரையில் மஞ்சள் பொடி பூசிய திருமேனியுடன் கையில் வாள் ஏந்தி உக்ரமாக உள்ள தெய்வம் என்றும் ஓம்கார சொரூபமானவர் என்றும் ஆதி நூல்களில் கூறப்பட்டுள்ளது.

அவரது சைன்யம் பெரும் தேவ வீரர்களைக் கொண்டதாகும். அவர்தான் முதன் முதலில் படைகளுக்கு கொடி என்ற வழக்கத்தை ஏற்படுத்தியவர். அக்கொடியையே பட்டம் என்று கூறுவர். அதில் வில், வேல், சூரியன் ஆகிய மூன்றும் பொறிக்கப்பட்டதாகும். அந்த பைரவர் வணங்கும் சிவபெருமானே பட்டமுடீஸ்வரர் ஆவார். இந்த சர்வேஸ்வரனின் அருளால் எப்படிப்பட்ட எதிரிகளும் விலகிச் செல்வர், மறைவர் என்பது தேவபிரசன்னத் தகவல்.

தென்முக வாயில் கொண்ட திருக்கோயிலில் கிழக்கு முகமாகவும் ஓர் வாயில் அமைந்துள்ளது. இத்தல ஈசன் கிழக்கு முகமாக வீற்றிருந்து, தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டுவன செய்து அருள்புரிகிறார். அம்பிகை பரமானந்த வல்லி என்ற திருநாமம் தாங்கி தெற்கு முகமாக வீற்றிருந்து, அங்குசம், பாசம், அபய ஹஸ்தம் தாங்கியும் அருளுகின்றார். மஹா மண்டபத்திலுள்ள தூண்களில் மிக நேர்த்தியான கலைநயம் மிக்க வேலைப்பாடுகளுடன் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இவ்வாலயத்தின் வெளிப்புற திருச்சுற்றில் ஸ்ரீ நர்த்தனகணபதி, ஸ்ரீ தட்சணாமூர்த்தி, ஸ்ரீ லிங்கோத்பவர், பிரம்மா, துர்கையும் அமைந்து அருளுகின்றனர். திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர், உட்பிரகாரத்தில் விநாயகப்பெருமான், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், ஷண்முகப் பெருமான் வீற்றிருந்து அருளுகின்றனர். வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, வேலை இழப்பு , வருமான தடை, அஷ்டமசனி பாதிப்பு, மனக்கோளாறு பிரச்னைகளுக்கு இத்தல இறைவன், அம்பிகைக்கு விளக்கு ஏற்றி அர்ச்சனை செய்து பிரார்த்தித்துக் கொண்டால் பலன் நிச்சயம் உண்டு என்கின்றனர். இத் திருக்கோயில் குடமுழுக்கு விரைவில் நடைபெற, கிராம மக்களும் சிவநேயச் செல்வர்களும் திருப்பணிகள் துவங்கிட முயன்றால் செவ்வனே நடைபெற பட்டமுடீஸ்வரர் திருவருள் கூட்டுவார்.

சென்னை- அரக்கோணம் செல்லும் வழியில் தக்கோலத்திற்கு முன்பாக 4 கி. மீ. தொலைவில் பிச்சிவாக்கம் உள்ளது. தொடர்புக்கு : 90924 15100 / 95249 49373.
- க. கிருஷ்ணகுமார்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/17/w600X390/v8.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/17/பட்டம்-பதவி-தந்தருளும்-ஈசன்-2809765.html
2809762 வார இதழ்கள் வெள்ளிமணி கார்த்திகையில் காட்சியருளிய நரசிங்கம்! Friday, November 17, 2017 11:29 AM +0530 விசுவாமித்திரர் திருமாலை நரசிம்ம வடிவில் ஒரு கண நேரம் சோளிங்கர் மலையில் இருந்து வழிபட்டு பிரம்மரிஷி பட்டம் பெற்றார். யோக பட்டத்துடன் ஒரு விருச்சிக மாதத்தில் காட்சி தந்து அனுக்கிரகித்தார். யோக பட்டத்துடன் காட்சி தந்த அந்தத் திருக்கோலத்தை தாங்களும் கண்டு ஆனந்திக்க வேண்டுமென வசிஷ்டர், காசியபர், அத்ரி, ஜமதக்னி, கவுதமர், பாரத்துவாஜர் ஆகிய முனிசிரேஷ்டர்களோடு, விசுவாமித்திரரும் சோளிங்கரில் தவமிருந்தனர். ஸ்ரீ யோக நரசிம்மசுவாமி, முனிவர்கள் நினைத்த மாத்திரத்தில் ஒரு கடிகை (நொடிப்பொழுது) நேரம் அவர்களுக்கு திருமலையில் காட்சி அருளியதால் இத்தலம் கடிகாசலம் என பெயர் பெற்றதாக வரலாறு குறிப்பிடுகின்றது. 
பிரகலாதனுக்கு போக ஸ்தானக மூர்த்தியாக காட்சி தந்த அவதாரத் திருக்கோலத்தில் காட்சி தந்து அருள வேண்டும் எனக் முனிவர்கள் கேட்டனர். அதற்கு நரசிம்மரும் காண்டவ வனத்தில் விருச்சிக மாதத்தில் பிரகலாதனுக்கு காட்சிதந்த திருக்கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பதாக திருவாய் மலர்ந்தருளினார். 
ஒரு விருச்சிக மாதத்து சுவாதி நட்சத்திரத்தன்று உஷத்காலத்தில் திருமாமகள் என அழைக்கப்பட்ட மஹாலட்சுமி தாயாரை மடியில் அமர்த்திக் கொண்டு போக ஸ்தானக மூர்த்தியாகக் காட்சி தந்தார். முனிவர்களும் நரசிம்மரை போற்றித் துதித்தனர். முனிவர்களுக்குக் காட்சி தந்த உருவிலேயே ஸ்ரீ லட்சுமி நரசிம்மராக நரசிங்கபுரத்தில் அமைந்து அருள்பாலிக்கிறார். தன் துணைவியை மடியில் இருத்திக் கொண்டு அருளும் கோலம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் திருக்கோலமாகும். 
முனிவர்களுக்குக் காட்சி தந்த இடத்தில் அமைந்திருந்த இக்கோயில் பல்லவர்கள் காலத்தில் புதுப்பிக்கப்பட்டு மக்கள் வழிபாட்டில் இருந்திருக்க வேண்டும். காலவெள்ளத்தில் சிதிலம் அடைந்து, பிறகு சோழர்கள் காலத்திலும், விஜயநகர அரசர்கள் காலத்திலும் திருப்பணி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. சோழமன்னர்கள் முதலாம் குலோத்துங்கன் முதலாம் விக்கிரமாதித்திய சோழன் காலத்துக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
இத்திருக்கோயில் 5 நிலைகளுடன் 7 கலசங்களோடு கூடிய அழகிய ராஜ கோபுரத்தைக் கொண்டது. கொடி மரம், பலிபீடம், மஹாமண்டபம், முன்மண்டபம், அர்த்த மண்டபம் அடுத்து கருவறை உள்ளது. கருவறையில் இரு தள விமானத்தின் மூலவர் லட்சுமி நரசிம்மர் ஏழரை அடி உயரத்துடன் வலது காலை கீழே வைத்து, இடது காலை மடித்து சிரித்த முகத்துடன் தாயார் மகாலட்சுமியை மடியில் அமரவைத்து, தனது இடது கையால் தாயாரை அணைத்தபடி பக்தனுக்கு அருளும் அனுக்ரக மூர்த்தியாய் வலதுகரத்தை அபய ஹஸ்தமாக காட்டி அருள்தருகிறார்.
மூலவருக்கு எதிரில் 16 நாகங்களைத் தன் உடலில் தரித்துக் கொண்டு சுமார் 4 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி தரும் கருடாழ்வாரை தரிசிக்கலாம். நாகதோஷம் உள்ளவர்கள், இந்த கருடாழ்வாரை வழிபடுவதால் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். 
பிரகாரத்தின் உள்புறம் தெற்கில் சக்கரத்தாழ்வார், வடக்கில் வேதாந்ததேசிகன் எழுந்தருளியுள்ளனர். பிரகாரத்தின் தென்புறம் ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, வீரலட்சுமி, கஜலட்சுமி, மேற்கு பிரகாரத்தில் சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, ஐஸ்வர்யலட்சுமி, தனலட்சுமி ஆகிய அஷ்டலட்சுமிகளையும் தரிசிக்கலாம்.
தென்மேற்கில் கிழக்கு நோக்கி, 5 அடி உயரமுள்ள மரகதவல்லித் தாயார், அபயஹஸ்தத்துடன் ஆகர்ஷிக்கும் சிரிப்புடன் அருள்பாலிக்கிறார். முன் மண்டபத்தில் ஆழ்வார்களும், ஆஞ்சநேயரும் தரிசனம் தருகின்றனர். 
மற்ற திருக்கோயில்களில் மடியில் உள்ள தாயார் நரசிம்மரைப் பார்த்தபடி அமர்ந்திருப்பார். ஆனால் இங்கு தாயார் பெருமாளுடன் சேர்ந்து பக்தனை நேர்ப்பார்வை பார்த்தபடி அமர்ந்திருப்பதால் தரிசிப்பவர்களுக்கு சத்ரு பயம் அகலுவதோடு, லட்சுமி கடாட்சமும் சேர்ந்து கிடைக்கும். இவர் கல்யாண லட்சுமி நரசிம்மர் என்று அழைக்கப்படுகிறார். 
நரசிம்மர் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவரை 9 சுவாதி நட்சத்திர நாள்கள் வணங்கினால், தீராத கடன், நோய், திருமணத்தடை உள்ளிட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்று சொல்லப்படுகிறது. வாரத்தில் வியாழக்கிழமையில் கருடன், அனுமனையும்; வெள்ளி தாயாரையும்; சனி ஞாயிறு ஆகிய நாள்கள், சுவாதி நட்சத்திரத்தன்றும் தரிசனம் செய்வது உகந்தது. ஆனி 10 நாள் பிரும்மோற்சவம், நரசிம்ம ஜயந்தி, வைகுந்த ஏகாதசி, கருட வாகன புறப்பாடு, ஸ்ரீராமநவமி, திருவாடிப்பூரம் ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. 
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் நரசிங்கபுரம் தலம் உள்ளது. பேருந்து மார்க்கத்தில் பூவிருந்தவல்லி வழியாகவும்; மின்சார ரயிலில் வருபவர்கள் சென்ட்ரல் - அரக்கோணம் பாதையில் கடம்பத்தூர் இறங்கி பேரம்பாக்கம் வழியாக நரசிங்கபுரத்தை அடையலாம்.
தொடர்புக்குக்கு: 94871 94649/ 99410 38505.
- ஆர். அனுராதா
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/17/w600X390/v6.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/17/கார்த்திகையில்-காட்சியருளிய-நரசிங்கம்-2809762.html
2809742 வார இதழ்கள் வெள்ளிமணி திருவண்ணாமலை தீர்த்தங்கள்! DIN DIN Friday, November 17, 2017 10:54 AM +0530 திருவண்ணாமலையில் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் முந்நூற்று அறுபது தீர்த்தங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. திருவண்ணாமலையின் கிழக்கே இந்திரனால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் ஒன்று உள்ளது. இந்தத் தீர்த்தத்தில் தைப்பூசத்தன்று நீராடி ஒரு கையளவு நீர் உட்கொண்டால் கோடி பிரம்ஹத்தி தோஷம் போகும். அங்கு நீராடிய இந்திரன் தன் குற்றங்கள் நீங்கப் பெற்று தொடர்ந்து இந்திரப்பதவி வகிக்கும் பேறு பெற்றான்.
திருவண்ணாமலைக்குத் தென் கிழக்கில் அக்னி தீர்த்தம் உள்ளது. அதில் பங்குனி மாதம் பௌர்ணமி நாளில் மூழ்கி எழுந்தால் எப்பேர்பட்ட பாவமும் நீங்கும். அறமும் தவமும் வந்து சேரும். அக்னிதேவன் தனக்கு ஏற்பட்ட பாவத்தை இந்தத் தீர்த்தத்தில் மூழ்கி இறைவனை வழிபட்டு போக்கிக்கொண்டான்.
அண்ணாமலையின் நிருதி மூலையில் நிருதி தீர்த்தம் இருக்கிறது. இத்தீர்த்தத்தில் மூழ்கியவர்களுக்கு பகை நீங்கும் என்று சொல்லப்படுகிறது. நிருதியானவன் இத்தீர்த்தத்தில் மூழ்கியதால் நெருப்புப் போன்ற கண்களையும் பிளந்த வாயினையும் உடைய ஒரு ராட்சஸப் பேயை தன் வயமாக்கிக் கொண்டான். மேலும், மேற்குத் திக்கில் வருண தீர்த்தம் உள்ளது. அதில் பக்தியோடு மூழ்கி எழுந்தால் ஒன்பது கிரகங்களும் நன்மையை செய்யும். இத்தீர்த்தத்தின் வாயு திசையில் வாயு தீர்த்தம் இருக்கின்றது. அத்தீர்த்தத்தில் மூழ்கினால் சகல துன்பங்களும் தீரும் என்பர்.
திருவண்ணாமலையில் எமன் தீர்த்தத்திற்குத் தெற்கே அகத்தியர் தீர்த்தம் இருக்கிறது. அத்தீர்த்தத்தில் மூழ்கினால் சகல நோய்களும் தீரும் என்கின்றனர். வட திசையில் குபேர தீர்த்தம் என்றொரு தீர்த்தம் உண்டு. அதில் மூழ்கி எழுந்தால் சகல பாவங்களும் நீங்கி மேலான நிலையை அடைவதோடு சிவபெருமானின் பாதங்களைச் சேர்வர்.
இம்மலையின் வடதிசையில் உள்ள குபேர தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தால் சகல பாவங்களும் நீங்கி மேலான நிலையை அடைவதோடு சிவபெருமானின் பாதங்களைச் சேர்வார்கள். இந்த குபேர தீர்த்தத்தின் அருகே வசிஷ்ட நீர்த்தம் உள்ளது. அதில் நீராடிய விசிஷ்ட முனிவர், முனிவர்களுக்கெல்லாம் தலைமையை பெற்றார். இதில் மூழ்கி எழுந்தவர்
களுக்கு எல்லா சாஸ்திரங்களும் விளங்கும். மலைக்கு வட பக்கத்தில் திருநதி என்ற ஒரு நதி உண்டு. அதில் திருமகளான லட்சுமி தேவி மூழ்கி எழுந்ததால் திருமாலின் மார்பினைச் சேர்ந்தாள்.
திருவண்ணாமலையின் மேற்கு திசையில் புண்ணிய நதி ஒன்று உண்டு. இப்புண்ணிய நதிக்கு வடப்பக்கம் "சேயாறு' என்ற ஆறு உள்ளது. அது முருகப் பெருமானால் உண்டாக்கப்பட்டது என்பர். அதில் முருகப்பெருமான் மூழ்கி எழுந்து அசுரர்களைக் கொல்லும் வரமும் தேவசேனாதிபதி என்ற பேரும் பெற்றார். அருணாசலேஸ்வரர் கோயிலில் உள்ளே சிவகங்கை தீர்த்தம் உள்ளது . இதனை தினந்தோறும் உள்ளத்தில் நினைத்தால் கங்கை நதியில் மூழ்கிய பயன் உண்டாகும். அநேக உருத்திரர்கள் அதில் மாசி மாதத்தில் மூழ்கி இடபாரூடராய் எல்லா தேவரினும் மேலான பேறு பெற்றார்கள். இங்குள்ள சிவகங்கை தீர்த்தத்தின் அருகே சக்கர தீர்த்தம் உள்ளது. திருமால் வராக அவதாரம் எடுத்தபோது அதில் நீராடினார். அதில் நீராடுவோரும் அந்நீரை அருந்தியவர்களும் அதனை வலமாக வந்தவர்களும் துயரம் நீங்கி சிவபெருமானின் திருவடிகளைச் சேர்வர்.
அருணாசலேஸ்வரர் சந்நிதியில் அக்னி திசையில் பிரம்ம தேவனால் அமைக்கப்பெற்ற பிரம்ம தீர்த்தம் ஒன்றுண்டு. அதில் மூழ்கியவர்கள் பிறவிக்கடலில் நீந்தி சென்ற பிறப்புகளில் சேர்ந்த தீவினைகள் அனைத்தும் நீங்கப்பெறுவர். இந்த பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி அணுவளவு பொன்னை தானம் கொடுப்பாராயின் நவமணிகள் நிறைந்த நிலவுலகத்தையே ஓர் அடியவருக்குக் கொடுத்த பெரும் புண்ணியத்தை அடைவர். இத்தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து தானங்களைச் செய்தவர்கள் சிவபெருமானின் திருவடித் தாமரையை அடைவார்கள். விநாயகர், முருகன், சூரியன், சந்திரன், கங்கை, பார்வதி, பைரவர், சப்த கன்னியர், அட்டவசுக்கள், தேவர்கள் ஆகியோர் மூழ்கி எழுந்த தீர்த்தங்கள் பலவுண்டு. அவற்றின் பெருமையை வேதங்களும் அறியாது.
திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் தீர்த்தவாரி என்பது ஒரு முக்கிய நிகழ்வாகும். இறைவனையும் இறைவியையும் தரிசித்தவர்கள் இருவினையும் மும்மலங்களும் அடங்கி இறைவியின் திருப்பாதம் பெற்று பேரின்பத்தில் மூழ்குவர் என்பதாகும். இதன் அடிப்படையில்தான் பத்தாவது நாளில் தீர்த்தவாரி என்ற நிகழ்ச்சி திருக்கோயில்களில் நடைபெறுகின்றது. தீர்த்தவாரி நடைபெறும்போது மக்களின் ஆன்மா குளிர்ச்சியடைகிறது. அதாவது இறைவனோடு இறைபக்தியும் சேர்கிறது.
திருவண்ணாமலை திருக்கோயிலின் இறைவன் மணலூர்பேட்டை சென்று தீர்த்தமாடுவதும் கலசப்பாக்கம் சென்று தீர்த்தமாடுவதும் அந்தந்த ஆற்றிற்குச் சிறப்பாகும். எல்லா நதிகளும் அங்கு ஒன்றாக கலந்து இறைவனை வழிபடுவதாக ஐதீகம். லட்சக்கணக்கான பக்தர்கள், இறைவன் தீர்த்தவாரி நடைபெறும் போது தாங்களும் நீராடுவதால் தங்களுடைய பாவங்கள் தீரும் என்ற நம்பிக்கையை பெறுகின்றனர்.
} க. சுகுமாரன்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/17/w600X390/v5.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/17/திருவண்ணாமலை-தீர்த்தங்கள்-2809742.html
2809741 வார இதழ்கள் வெள்ளிமணி தேவனுக்கு கீழ்ப்படிதல்! DIN DIN Friday, November 17, 2017 10:50 AM +0530 இறை வாழ்க்கையில் நாம் தேவனுக்கு கீழ்ப்படிந்து அவர் சொல்படி வாழ்வதே அவருக்கு பிரியமான வாழ்க்கை ஆகும். இந்த கீழ்ப்படிதல் குறித்து பழைய ஏற்பாட்டில் சவுல் செய்த காரியத்தைப் பற்றி பார்க்கலாம். 
இஸ்ரவேல் மக்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று, அப்போது அவர்களை நியாயம் விசாரித்து வந்த சாமுவேலிடம் முறையிட்டனர். இதனால் சாமுவேல் தேவனிடம் விண்ணப்பம் செய்தான். தேவன் உத்தரவின் பேரில், இஸ்ரவேலின் ராஜாவாக சவுலை சாமுவேல் அபிஷேகம் பண்ணினான். இந்த சவுல் தேவன் சொன்ன காரியங்கள் அனைத்தையும் செய்தான். 
ஒரு முறை தேவன் சவுலிடம் அமலேக்கியரை அழிக்க கூறியிருந்தார். ஆனால் சவுல் அங்குள்ள நல்லவற்றை அழிக்காமல் விட்டு வைத்து அதை தேவனுக்கு பலியிட வேண்டும் என விட்டுவைத்தான். இதனால் தேவன் சவுலின்மேல் கோபம் கொண்டு, சாமுவேலின் மூலம் கூறிய வார்த்தையாவது, "பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்'' (1சாமு 15:22) என்று கூறினார். ஏன் தேவன் இவ்வாறு கூறினார் என்றால், பழைய ஏற்பாட்டுக் காலங்களில் ஜனங்கள் பலியிடுவதில் அதிக கவனமாக இருந்தனர். ஆனால் தேவன் வகுத்த கட்டளைகளை கடைப்பிடிப்பதில் அதிக கவனம் இல்லாமல் இருந்தனர். இந்த இடத்தில் தேவன் பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் மிக அவசியம் என்று அறியுறுத்துவதைப் பாக்கிறோம். 
இவ்வாறு கீழ்ப்படியாமல் சவுல் செய்த காரியத்தினால் தேவன் அவனை ராஜாங்கத்தில் இருந்து தள்ளினார். அதற்கு பதிலாக தாவீதை நியமித்தார். நம் வாழ்வில் கீழ்ப்படிதல் இல்லாமல் தேவனுடைய சத்தியத்தை அறிந்திருப்பது வீண் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 
நம் ஆதிப் பெற்றோர்கள் செய்த பாவம், தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் போனதுதான். தேவன் புசிக்கவேண்டாம் என்று சொன்ன கனியை புசித்ததினால் சாபத்தை பெற்றனர். ஏதேன் தோட்டத்தை விட்டே விரட்டப் பட்டனர். இறைவன் கொடுத்த ஆசீர்வாதத்தை இழந்து போனார்கள். நாமும் அநேக சமயங்களில் தேவன் சொல்லுக்கு செவிகொடுக்கிறோம் ஆனால் கீழ்ப்படியத் தவறிவிடுகிறோம். சங்கீதம் 2:10 இலும் கூட "உணர்வடையுங்கள்'' என்று சொல்லுகிறார். செவிகொடுத்தலோடு கூட, கீழ்ப்படிவதே நம் இருதயப்பூர்வமான உணர்வோடு ஆண்டவருடைய வார்த்தையைக் கனப்படுத்துவதும், தேவனுடைய வார்த்தையை நம்முடைய வாழ்க்கையில் நடைமுறை படுத்துவதுமாக இருக்கிறது. 
தேவனுக்குத் தேவைப்படும் இந்தக் கீழ்ப்படிதலானது அவரை நேசிக்கும் இருதயத்திலிருந்து மட்டுமே புறப்பட முடியும். "நீங்கள் எதைச் செய்தாலும் மனுஷருக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்' (கொலோ 3:24) என்று பவுல் அப்போஸ்தலன் கூறியிருக்கிறார். தண்டனை கிடைக்கும் என்ற பயத்தினால் வரும் கீழ்ப்படிதலானது அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்பட்டது. தேவனிடத்திலிருந்து நன்மை கிடைக்கும் என்ற எண்ணத்துடன் வரும் கீழ்ப்படிதலானது சுயநலமானது, மாம்சத்துக்குரியது. ஆனால், ஆவிக்குரிய மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கீழ்ப்
படிதலானது உற்சாகத்துடன் கொடுக்கப்படுகிறது: தகுதியில்லாத நமக்கு தேவன் கொடுத்திருக்கும் அன்பிற்காகவும், மதிப்பிற்காகவும் நம்முடைய இருதயத்தின் நன்றியால் வரும் கீழ்ப்படிதலாகும். 
- ஒய். டேவிட் ராஜா

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/17/w600X390/v4.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/17/தேவனுக்கு-கீழ்ப்படிதல்-2809741.html
2809739 வார இதழ்கள் வெள்ளிமணி நிகழ்வுகள் DIN DIN Friday, November 17, 2017 10:48 AM +0530 ஜெயந்தி விழா
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமழம் என்னும் பேரூரில் சித்தி அடைந்த கோடகநல்லூர் தவத்திரு சுந்தர சுவாமிகள் ஆவர். இவருடைய தலைமையில் அரிமழம் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் முதல் குடமுழுக்கு நடைபெற்றது. அவருடைய வாழ்நாளில் 22 ஆலயங்களுக்கு குடமுழுக்கு நடத்தினார். புனித யாத்திரையாக வடநாடு சென்று திரும்பிய சுவாமிகள், நர்மதா பாணலிங்கம் இருக்குமிடம் மங்களகரமாய் இருக்கும் என்று சொல்லி தமது அடியார்களிடம் கொடுத்தார். 1878-ஆம் ஆண்டு, அக்டோபர் 21-ஆம் தேதி அரிமழத்தில் சித்தி அடைந்தார்கள். அவரது சீடர்கள் சுவாமியின் சமாதி மீது கோயிலைக்கட்டி, அதில் அவர் தந்த பாணலிங்கத்தை பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு நடத்தினார்கள். இம்மாதம் சுவாமிகளின் ஜெயந்தி விழா நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு : பொ.ஜெயச்சந்திரன்
நாள்: 19.11.2017.
மஹா குருபூஜை
மக்களுடைய தீராத நோய்களையும், பிரச்னைகளையும் தீர்த்தருளியவர் விராலிமலை ஸ்ரீ சதாசிவ சுவாமிகள். கும்பகோணம் அருகில் திருபுவனத்தில் உள்ள இவருடைய சமாதி வளாகமே ஸ்ரீ சதாசிவ சுவாமிகள் மடாலயம் என்ற பெயரில் பக்தர்களின் ஒரு நிரந்தர வழிபாட்டுத்தலமாக பரிமளிக்கின்றது. இவரின் 91 ஆம் ஆண்டு மஹாகுரு பூஜை (மூலம் நட்சத்திரம்) நடைபெறுகிறது. அன்று பக்தர்களின் பால்குடம், அபிஷேகம், மஹேஸ்வர பூஜை, அன்னதானம், தேவார இன்னிசை, பஜனை, சமயச் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. 
தொடர்புக்கு : கே. எஸ். சுந்தரமூர்த்தி - 74187 43762 / 91503 10998.
நாள்: 21.11.2017.
உழவாரப்பணி
செங்கல்பட்டிலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் சாலவாக்கம் கூட்டுரோடிலிருந்து 1 கி. மீ. தூரத்தில் உள்ளது கருணாகரச்சேரி கிராமம். இங்கு முற்றிலும் சிதிலமடைந்த பழைமையான சிவன் கோயிலின் இறைவன், தேவப்பிரசன்ன தகவல்படி கருணாம்பிகை சமேத பாஞ்சஜன்யேஷ்வரர் என்றும் அலங்காலப்பிரியாம்பிகை சமேத ஆவுடையப்பர் எனவும் இத்தலத்து இறைவன், இறைவி திருநாமங்களாக அறியப்படுகின்றது. அண்ணாமலையார் அறப்பணிக்குழு என்ற அமைப்பு இங்கு உழவாரப்பணியை மேற்கொள்கின்றது. சிவனடியார்கள் இந்த உழவாரப்பணியில் பங்கு பெறலாம். 
தொடர்புக்கு : வி. ராமச்சந்திரன் - 98840 80543.
நாள்:19.11.2017.
 

]]>
http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/17/நிகழ்வுகள்-2809739.html
2809738 வார இதழ்கள் வெள்ளிமணி நற்பேற்றிற்குரியவை நற்செயல்களே! DIN DIN Friday, November 17, 2017 10:47 AM +0530 இவ்வுலக வாழ்வு போட்டியும் விறுவிறுப்பும் நிறைந்தது என்பதை இறைமறை குர்ஆனின் 6-32 ஆவது வசனம், "இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் கேளிக்கையும் அன்றி வேறில்லை'' என்று உரைப்பதை உறுதி செய்கிறது 57-20 ஆவது வசனம். இவ்வசனத்தில் வரும் லஃபுன் என்ற அரபி சொல் விளையாட்டு என்ற பொருள் தரினும் இவ்வுலகில் செய்யும் பயனற்ற வேலைகளைக் குறைக்கிறது. அதுபோலவே லஹ்வுன் என்ற அரசி சொல் அவசிய செயல்களைப் புறக்கணித்து அனாவசிய செயல்களில் ஈடுபடுவதைக் குறிக்கிறது. அலி (ரலி) அவர்கள் அம்மார் இப்னு யாஸிர் (ரலி) அவர்களுக்கு அறிவுரை கூறிய பொழுது உலகில் உள்ள உணவுகளில் இனிய சுவைமிகு தேன் ஒரு ஈயின் எச்சில். பருகும் நீர் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பொதுவானது. உடையில் உன்னதமான பட்டு புழுவின் இழை. மணக்கும் பொருள்களில் இணக்கமான கஸ்தூரி மானின் உதிரம். இதுதான் உலக இன்பம். இதில் மூழ்காது முழுமையான நற்செயல்களைச் செய்ய வேண்டும் என்று எச்சரித்தார்.
"எவரேனும் இவ்வுலக வாழ்வையும் அதன்அலங்காரத்தையும் விரும்பினால் அவர்களின் விருப்பத்தை நாம் அவர்களுக்கு இவ்வுலகிலேயே கொடுத்து விடுவோம்'' என்ற குர்ஆனின் 11-15 ஆவது வசனம் கற்ற கல்வியை, பெற்ற செல்வத்தை, இவ்வுலக சுகங்களுக்காகப் பயன்படுத்தி பலனை இவ்வுலகிலேயே துய்த்தவர்களுக்கு இதன் பலன் மறுமையில் கிட்டாது என்பதை எடுத்துரைக்கிறது. 
"நன்மைகளை செய்ய நீங்கள் ஒருவரையொருவர் முந்துங்கள். தொடர்ந்து நல்லதையே செய்து மற்றவர்களுக்கு முன்னோடியாக திகழ இறையடியார்கள் இறைவனை வேண்டுவர். இன்னும் தொடர்ந்து "பரிசுத்தவான்களுக்கு எங்களை வழிகாட்டியாகவும் நீ ஆக்குவாயாக! நல்லவற்றில் மற்றவர்கள் எங்களைப் பின்பற்றும் படியாக எங்களை ஆக்குவாயாக!' என்றும் வேண்டுவர். நல்லது செய்வதில் மற்றவர்களுக்கு முன்னோடியாக முன்மாதிரியாக விளங்க இறைவனிடம் இறைஞ்சுவது ஏற்புடையது என்று இமாம் அல்கப்பால் (ரஹ்) அவர்களும் குர்ஆன் விரிவுரையாளர்களும் கூறுகின்றனர். என்னிடம் கல்வி கற்று கற்றதைக் கற்றபடி பிறருக்கும் கற்பிப்பவரை எனக்கு ஏற்படுத்திக் கொடு'' இறைஞ்சுவார்கள்- உர்வா (ரலி).
நபி தோழர்கள் அவ்வப்பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட கேள்விகளும் பெற்ற பதில்களும் - மனிதர்களில் சிறந்தவர் யார்? உங்களில் நீண்ட ஆயுளை உடைய அழகிய நற்செயல்களைச் செய்பவர்களே உங்களில் சிறந்தவர்கள். நூல்- அஹ்மது. மனிதர்களில் இறைவனுக்குப் பிடித்த அடியார் யார்? பிறர் நன்மையை நாடி அணுகுவோரையும்; அணுகுவோரைத் தீமை அணுகாமல் காப்போரும் மனிதர்களில் இறைவனுக்குப் பிடித்த அடியார்கள். நூல்- திர்மிதீ, அஹ்மது. மனிதர்களில் கண்ணியமானவர் யார்? மனிதர்களில் கண்ணியமானவர்கள் அழகிய நற்குணம் உடையவர்கள். நற்குணம் குடும்பத்திலிருந்து துவங்க வேண்டும். அழகிய நற்குணங்களில் முழுமை உடையவர் பெண்களிடம் சிறப்பாக நடப்பவர், நூல்- புகாரி, அஹ்மத். அடுத்து அண்டை வீட்டார்களிடம் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் தோழர்களிடம் நன்முறையில் நடப்பவர்கள், நூல்- புகாரி, அஹ்மத், திர்மிதீ. அழகிய நற்குணம் ஒரு மனிதனின் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும். தூய்மை அவனின் ஆளுமையை அதிகரிக்கும். ஆளுமை அவனைச் சமூகத்தில் கண்ணியம் உடையவனாக உருவகப் படுத்தும். 
உள்ளத் தூய்மையுடன் உண்மை பேசுபவர்கள் யார்? உள்ளத்தூய்மை என்பது இறைவன் தருவதை ஏற்று திருப்தி கொள்ளும் பதற்றம் இல்லாத உள்ளம். பதற்றம் இல்லாததால் இறைவழிபாட்டில் திளைத்து பொறாமை வெறுப்பு மிகுந்து பாவபழி செயல்களில் ஈடுபடாது இருக்கும் உள்ளம். நூல்- இப்னு மாஜா. குர்ஆனைக் குறைவற கற்று அதன்படி நடந்தாலே உள்ளம் தூய்மை பெற்று உயிரோட்டம் உறுதி பெறும். மனிதனுக்கு உயர்வும் மதிப்பும் மரியாதையும் பெற்று தரும். ""குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் கற்றுக்கொடுப்பவர் உங்களில் மிகவும் ஏற்றமானவர்கள்!'' நூல்- புகாரி.
" ஆதமின் சந்ததிகளை நாம் கண்ணியப் படுத்தினோம். தரையில் வாகனங்களிலும் கடலில் கப்பல்களிலும் நாம் தாம் அவர்களைப் பயணம் செல்ல செய்கிறோம். நல்ல உணவுகளையும் நாமே அவர்களுக்கு அளிக்கிறோம். நாம் படைத்த உயிரினங்களிலும் மேலாக மனிதர்களை வைத்திருக்கிறோம்'' என்று வான்மறை குர்ஆனின் 17-70 ஆவது வசனம் ஆதமின் சந்ததி என்று குறிப்பிடுவது மனிதர்களையே. மற்ற உயிரினங்கள் வாயினாலேயே பொறுக்கி உணவு உண்ண மனிதன் கைகளால் எடுத்து உண்கிறான். அறிவு, ஆற்றல், பிரித்தறியும் பண்பால் தீயதை விட்டு விலகி நல்லதை மேற்கொள்ளும் மேன்மை, செப்பல், செப்பலை ஒப்பி எழுதுதல், புதியன காணல், பழையன புதியனவற்றைப் பாங்குற பயன்படுத்துதல் முதலிய சிறப்புகளை அதிகமாக ஒரு சேர பெற்றவன் மனிதன். தரையில் வாகனத்திலும் கடலில் கப்பலிலும் வானில் விமானத்திலும் செல்லும் சிறப்பு மனிதனுக்கு மட்டுமே உண்டு. பிற உயிரினங்களில் ஊர்வன ஊரும்; நடப்பன நடக்கும்; பறப்பன பறக்கும். பயணத்திலும் பல சிறப்புகளைப் பெற்றவன் மனிதன். மற்ற உயிரினங்கள் சைவமோ அசைவமோ பச்சையாக உண்ணும்; பாழானதைத் தின்னும். மனிதன் இலைகளை கீரையாக, பூவை, காயை, கனியை, மணமாக சமைத்து இனம் பிரித்து சாப்பிடுகிறான். 
இத்தகு சிறப்பை, கண்ணியத்தைப் பெற்றுள்ள மனிதன் நற்செயல்களால் பொற்புடையவனாகி நற்பேற்றைப் பெற வேண்டும். இம்மை மறுமை இரண்டிலும் நல்வாழ்வு வாழவேண்டும்.
- மு.அ. அபுல் அமீன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/17/w600X390/v3.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/17/நற்பேற்றிற்குரியவை-நற்செயல்களே-2809738.html
2809736 வார இதழ்கள் வெள்ளிமணி பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர் DIN DIN Friday, November 17, 2017 10:44 AM +0530 • நல்லோர் மனதை நடுங்கச் செய்வது பாவம்; வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது பாவம்; மனமொத்த நட்பிற்கு வஞ்சகம் இழைப்பது பாவம்; ஏழைகள் வயிறு எரியச் செய்வது பாவம்; பசித்தோர் முகத்தைப் பாராதிருப்பது பாவம்; கோள் சொல்லி குடும்பம் கலைப்பது பாவம்; குருவை வணங்கக் கூசி நிற்பது பாவம்; ஊன் சுவை உண்டு உடலை வளர்ப்பது பாவம்; கல்லும் நெல்லும் கலந்து விற்பது பாவம்; தவம் செய்பவர்களைத் தாழ்த்திப் பேசுவது பாவம்; தாய், தந்தை மொழியைத் தட்டி நடப்பது பாவம்.
- வடலூர் வள்ளலார்

• எண்ணிறந்த ஜீவன்களையும் முடிவற்ற கல்யாண குணங்களையும் உடையவனான பகவானுடைய திருவடிகளை அடையுங்கள். அடைந்தவர்களை நழுவ
விடாத திருவடிகளை அடையுங்கள். 
- நம்மாழ்வார்.

• மனம் ஒரு குரங்கைப்போல் நின்ற இடத்தில் நிற்பதில்லை. "பரம்பொருளான இறைவனை வணங்க வேண்டும்' என்று நினைத்து மனதைக் கட்டுப்படுத்துவதற்குள், நமக்கே தெரியாமல் அது வேறெங்கோ போய்விடுகிறது. நமது மனதைப் போல் நம்முடனேயே இருந்து நம்மைக் கெடுப்பவர் வேறு யாரும் இல்லை.
-பசவண்ணா

• எம்பெருமானைத் தவிர மற்ற விஷயங்களில் ஆசையைவிட வேண்டும். ஜவுளிக் கடைக்குப் போனவன் கிழிசல்கள் பொத்தல்கள் உள்ள துணிகளைப் பார்த்தால், வேண்டாம் என்று சொல்லவில்லையா? மக்கள் ஊசிப் போன தின்பண்டத்தைவிட்டு விடுகிறதில்லையா? அதேபோல் ஐம்புலன்களாலும் அனுபவிக்கிற விஷயங்களில் உள்ள தோஷம், நம் மனதிற்குப்பட்டால் எளிதில் அவற்றில் ஆசையை விட்டுவிடலாம்.
- ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள்

• ஜபமாலையை உருட்டு; நெற்றியில் உன்னுடைய சமயச் சின்னத்தை அணிந்துகொள். நீண்ட, படாடோபமான ஜடாமுடியும் தரித்துக்கொள். அப்படி இருந்தும் உன் இதயத்தில் கொடிய விஷம் நிரம்பி இருக்கிறது. அப்படியானால் நீ இறைவனை எவ்வாறு அடைய முடியும்?
- கபீர்தாசர்

• இன்சொல் உங்கள் இனிய வாழ்க்கை. பொறுமை உங்கள் ஆஸ்தி. நேர்மை உங்கள் வெற்றி. கோபம் உங்கள் பகைவன். உழைப்பு உங்கள் உயர்வு. அமைதி உங்கள் ஆறுதல்.
- பாம்பாட்டி சித்தர்

• இறைவனின் பெருமை பற்றிய ஞானத்துடன் கூடியதும், மற்ற எதனிடமும் காட்டப்படாமல் இறைவனிடம் மட்டும் காட்டப்படுவதுமான விசேஷ அன்பே பக்தி எனப்படும். ஒருவருக்கு முக்தி, இத்தகைய பக்தியால் மட்டுமே கிட்டுமேயன்றி வேறு வழியில் அன்று.
- மத்வர்

• நம்முடைய வருவாயில் ஒரு சிறிது பாகமாவது ஏழைகளுக்கென்று ஒதுக்கி வைத்து, அதை அவர்களுக்கு அன்புடன் தந்து மறுமைக்கு மாறாத நலனைத் தேடிக்கொள்ள வேண்டும்.
- அருணகிரிநாதர்

• நீ செய்யும் காரியத்திற்கு நீயே பொறுப்பாயிருக்க வேண்டும். நீ செய்வதற்குப் பிறர் தண்டனை அடையும்படி ஏற்படக் கூடாது.
- ஒளவையார்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/17/w600X390/v2.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/17/பொன்மொழிகள்-தொகுப்பு-சுவாமி-கமலாத்மானந்தர்-2809736.html
2809735 வார இதழ்கள் வெள்ளிமணி கிணற்றுள் பிரவாகித்த கங்கை! Friday, November 17, 2017 10:41 AM +0530 பரந்த சமவெளியில் ஆர்ப்பரித்து, பிரவாகமாக ஓடி வருவது நதியின் இயல்பு, தன்மை. ஆனால் ஒரு குறுகிய கிணற்றினுள் அந்த செயல் நடைபெற்றது என்றால், ஆச்சரியப்பட வேண்டிய நிகழ்வு அல்லவா? ஆம், அவ்வாறு பிராவாகித்து வந்தவள் புனிதகங்கை. அவள் ஆபிர்வித்தது திருவிசலூர் கிராமத்தில் உள்ள மகான் ஸ்ரீதர ஐயாவாள் இல்லத்து கிணற்றில் ஆகும். இதற்காக அவர் எந்தவிதமான பகீரதப்பிரயத்தனமும் செய்யவில்லை. அவருடைய அபார சிவநாம பாராயணம், ஜபம், சிவபக்தியுமே அவ்வாறு ஏற்படக் காரணமாயிற்று. அந்த வரலாறு என்ன?
நாம சங்கீர்த்தனத்தின் ஒரு பகுதியான பஜனை சம்ப்ரதாயத்தில் ஸ்ரீபோதேந்திர சுவாமிகள், ஸ்ரீதர ஐயாவாள், ஸ்ரீ வேங்கடராம சத்குரு சுவாமிகள் என மூன்று குரு மூர்த்திகளை வழிகாட்டிகளாக சொல்லுகிறோம். அவர்களில் ஐயாவாள் என்று போற்றப்படும் மகான் ஸ்ரீதர வேங்கடேசர். மைசூர் சாம்ராஜ்யத்தில் தனது தகப்பனாருக்குப் பிறகு கிடைத்த திவான் பதவியை தியாகம் செய்து உஞ்சவிருத்தி பாகவதராக ஆனார். சிறந்த சிவபக்தர். தினந்தோறும் லட்சம் சிவ நாம ஜபம் செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தவர். தனது மனைவியுடன் காவிரிக் கரையில் உள்ள பல தலங்களை தரிசித்தவர். நிரந்தரமாக தங்குவதற்கு மகான்கள் வாழ்ந்த திருவிசலூர் கிராமத்தை (கும்பகோணம் அருகில் உள்ளது) தேர்ந்தெடுத்தார். சிவனைப் பற்றி பல ஸ்தோத்திரங்களையும், பாடல்களும் இயற்றினார். தான் ஹரிஹரபேதம் அற்றவர் என்பதை நிரூபிக்கும் வண்ணம் கிருஷ்ணரைப் பற்றிய ஸ்தோத்திரங்களும் புனைந்துள்ளார். திருவிடைமருதுர் மகாலிங்க சுவாமிகளின் தீவிர பக்தராய்த் திகழ்ந்து, பல அதிசயங்களை நிகழ்த்திய ஐயாவாள் வாழ்க்கையில் கங்கையை வரவழைத்தது சிகரமாக உள்ளது.
ஒரு முறை ஐயாவாள், நீராடுவதற்காகக் காவிரி செல்லும் வழியில் பசிக்களைப்பு மிகுதியினால் உயிர்போகும் தருவாயில் சுருண்டு படுத்திக்கொண்டிருந்த ஒருவனைப் பார்த்தார். இரக்கம் மேலிட, தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்று அன்று அவர் செய்ய வேண்டிய திவசத்திற்காக செய்து வைத்திருந்த பதார்த்தங்களை கொடுத்து பசி ஆற்றினார். அவருடைய மனசாட்சி அவர் செய்தது சரிதான் என்றது, ஆனால், ஊர்க்கட்டுப்பாடு மிகுந்த அக்கால கட்டத்தில், ஐயாவாளின் இந்த செயலை ஊர்ப்பெரியவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. ஆபத்துக்காலத்தில் செய்யப்பட்ட மனிதாபிமானச் செயல் எடுபடவில்லை. தவற்றிக்கு பிராயச்சித்தமாக ஐயாவாள் கங்கையில் தீர்த்த மாடிவிட்டு வரவேண்டும் என்று ஊரார் சபை கட்டளையிட்டது. (யாரும் முன்வராததால் அவ்வருட திவசம் மும்மூர்த்திகள் ஒரு சேர நடத்திவைத்ததாகச் சொல்லப்படுவது உண்டு). 
அடுத்த வருட திதி நாள் வந்தது. குறுகிய காலகட்டத்தில் காசிக்குச் சென்று வரமுடியாதே என்று எண்ணிய ஐயாவாள் ஊரார் முன்னிலையில் கங்காதேவியை பிரார்த்தனை செய்து "கங்காஷ்டகம்' எனும் ஸ்தோத்திரத்தை மனமுருகி பாராயணம் செய்தார். அவ்வளவுதான்! அவர் வீட்டுக் கிணற்றிலிருந்து கங்கை பிரவாகமாகப் பெருக்கெடுத்தது. அந்த வெள்ளம் வீதியிலும் ஓடிவரலாயிற்று. அதில் காசியில் கங்கையில் போடப்பட்ட மஞ்சள், பூ போன்ற மங்கல திரவியங்கள் காணப்பட்டன. ஐயாவாள் பெருமையை உணர்ந்த ஊர்க்காரர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டனர். அனைவரும் நீராடினார். ஐயாவாள் வேண்டியதற்கு இணங்க திரும்பவும் கங்கை அக்கிணற்றினுள் அடங்கிப்போனாள். மகான்கள் நினைத்தால் எதுவும் சாத்தியமாகும். இந்த சம்பவத்திற்குப் பிறகு கங்காதேவி அக்கிணற்றுள் நிரந்தரமாகக் குடியிருப்பதாக ஐதீகம்.
இந்த வைபவம் நடந்தது ஒரு கார்த்திகை அமாவாசை தினத்தில். இப்பொழுதும் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் அமாவாசையன்று இந்த வைபம் "ஸ்ரீதர ஐயாவாள் கங்காகர்ஷணம்' என்ற பெயரில் திருவிசலூரில் அவர் வாழ்ந்த இல்லத்தில் (தற்போது மடம்) விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றது. அன்று மக்கள் பெருந்திரளாகக் கூடி அப்புனித நீரில் நீராடுவது வழக்கம். இவ்வாண்டு (2017) நவம்பர்- 18 ஆம் தேதி அமாவாசையன்று இது நடைபெற உள்ளது. பத்து நாள்களுக்கு நடைபெறும் இந்த உத்சவத்தில் நாடெங்கிலும் உள்ள பாகவகோத்தமர்கள் பங்கேற்று நாம சங்கீர்த்தனம், இன்னிசைக் கச்சேரிகள் போன்ற வைபவங்கள் நவம்பர் 9 முதல் தொடங்கி நடத்தி வருகின்றனர். நவம்பர்- 19 ஆம் தேதி ஐயாவாள் உருவச்சிலை அலங்காரத்துடன் திருவீதி உலாவும், ஆஞ்சநேய உத்ஸவமும் நடைபெறுகின்றது.
கங்கைக்குச் சென்று நீராட இயலவில்லையே என்ற மனக்குறை உள்ளோர்க்கு இது ஓர் அரியவாய்ப்பு. ஆண்டவன் தொடர்புடைய அந்த கங்கைக்குள்ள பெருமையை விட அடியவர் வரவழைத்த இந்த கங்கை கூடுதல் சிறப்புடையது என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஸ்ரீதர ஐயாவாளை நினைத்து கங்காஸ்நானம் செய்தால் எல்லாப் புண்ணிய பலன்களும் கிட்டும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அமாவாசையன்று திருவிசலூருக்குச் செல்பவர்கள் கங்காஸ்நானம் செய்யமுன் காவிரியில் சென்று நீராடி விட்டுச் செல்ல வேண்டும் என்பது மரபு.
திருவிசலூருக்குச் செல்ல கும்பகோணத்திலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளது. 
தொடர்புக்கு: 0435-24161616 / 094440 56727.
- எஸ். வெங்கட்ராமன்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/17/w600X390/v1.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/17/கிணற்றுள்-பிரவாகித்த-கங்கை-2809735.html
2805953 வார இதழ்கள் வெள்ளிமணி நாகதோஷம் நீக்கும் நாதன்!  -  கே. ஆதித்யா Monday, November 13, 2017 12:16 PM +0530 காஞ்சிபுரம், செங்கல்பட்டு வட்டத்தில் பாலாற்றங்கரை படுகையில் எழில் கொஞ்சும் பசுமை நிறைந்த கிராமமாக அமைந்துள்ளது ஆத்தூர்.  ஒரு காலத்தில்  இவ்வூரில் ஏழுசிவாலயங்கள் சிறப்பான வழிபாட்டில் இருந்திருப்பதை அறியமுடிகின்றது.  

அவை முக்தீஸ்வரர், ஆதிலிங்கேஸ்வரர், திரங்கரினீஸ்வரர், முத்தபுரீஸ்வரர், வழித்துணை பணீஸ்வரர், சுவர்ணபுரீஸ்வரர் மற்றும் ஜலகண்டீஸ்வரர் என்பனவாகும்.  

இவற்றுள் அருள்மிகு தர்மசம்வர்த்தினி சமேத முக்தீஸ்வரர் திருக்கோயிலில் மட்டும் கிரமமாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.  மற்ற ஆலயங்கள் தகுந்த பராமரிப்பு இன்மையால் மண்ணில் புதைந்து போயுள்ளன.

இறையருளால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஏழு சிவாலயங்களுள் ஆத்தூர் தென்பாதி பகுதியில் அருணாச்சல நகரில் 5 ஆம் திருக்கோயிலான அருள்மிகு முத்தபுரீஸ்வரர் என்று அழைக்கப்படும் அட்சய சக்தி நாதர் ஆலயத்திற்கு உரித்தான சுவாமி, அம்பிகை, கல்வெட்டு ஆகியன மண்ணிலிருந்து வெளிக்கொணரப்பட்டு திருமுறைகளோடு தினப்படி வழிபாடு மட்டும் செய்யப்பட்டு வருகின்றது.  அம்மை அப்பனின் அழகை வெறும் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது. கண்டு அனுபவிக்க வேண்டும்.  மேலும் இக்கோயிலின் அம்பிகை அங்கையர்கண்ணியின் சாந்நித்யத்தை உணரலாம்.

இக்கோயில் கல்வெட்டினை ஆராய்ந்தபோது இக்கோயிலும் அருகில் உள்ள வீரநாராயணபுத்தேரி என்ற ஏரியும் முதலாம் பராந்தக கோழனால் (கி. பி. 927) கட்டப்பட்டுபராமரிக்கப்பட்டதாக அறியப்படுகின்றது.  மேலும் தேவப்பிரன்னம் மூலம் பார்க்கப்பட்டதில் இவ்வாலயத்தில் சுவாமியையும், அம்பிகையையும் அஷ்ட நாகர்களும் வழிபட்டு நாகராஜ பதவியை அடைந்ததாகவும் மற்றும் அளகாபுரி வேந்தனின் மைந்தர்களாகிய நளகூபரன், மணீக்தீவன் ஆகிய குபேர புத்திரர்கள் வணங்கி பேறு பெற்றதுமான அறிய தகவல் தெரியவந்தது. எனவே, இத்தலம், நாகதோஷத்தினால் ஏற்படுகின்ற துயர்களை களைய வல்லது என்பது ஐதீகம்.  

ஆலயம் முற்றிலும் புதிப்பிக்கப்பட வேண்டிய நிலையில் இருப்பதால் கிராம மக்கள் மற்றும் ஆத்தூர் தென்பாதி திருநாவுக்கரசர் நற்பணி மன்றம் என்ற அமைப்பின் உதவியுடன் திருப்பணி வேலைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டன.  மிகுந்த சிரமத்துக்கு இடையில் பக்தர்களின் ஒருமித்த ஆதரவுடன்  நடைபெறுகின்றது.  

கும்பாபிஷேகத்திற்கான தேதி (நவம்பர் - 23) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  சிவனடியார்கள் இத்திருப்பணியில் பங்குகொண்டு இறையருள் பெறலாம்.
 

தொடர்புக்கு: 88258 00602 / 88258 99151.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/11/w600X390/omsivalingam.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/11/நாகதோஷம்-நீக்கும்-நாதன்-2805953.html
2805950 வார இதழ்கள் வெள்ளிமணி அண்ணாமலையார் அரவணைத்த அருளாளர்!  -  எஸ். வெங்கட்ராமன். Monday, November 13, 2017 12:13 PM +0530  

காசிக்கு அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்த அந்த சிறுவன், ஒருநாள் தன் தாயாருக்கு கிணற்றிலிருந்து நீர் இறைப்பதற்கு உதவி செய்து வந்த தருணத்தில் சற்றும் எதிர்பாராதவிதமாக அவன் பயன்படுத்தி வந்த கயிறு அங்கு இருந்த ஒரு பறவையின் மீது வேகமாகப்பட்டு அதன் காரணமாக அது இறக்க நேரிட்டது. இதனால் மனஅளவில் மிகவும் பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் இறந்த பறவையைக் கையில் வைத்துக் கொண்டு கங்கைக் கரையில் அழுதவண்ணம் இருந்தான். அருகில் உள்ளவர்கள் எவ்வளவு சமாதானம் சொல்லியும் எடுபடவில்லை. இந்த பச்சாதாப உணர்வே அவனிடம் ஒரு பெரிய மன மாற்றத்தை ஏற்படுத்தி ஓர் ஆன்மீகத் தேடலுக்கான பாதைக்குவித்திட்டது. 

காசியில் ஓடும் கங்கைக் கரையில் உலாவுவதும், அங்கு குடிலில் வாழும் யோகிகள், துறவிகள் மற்றும் சந்நியாசிகளுடன் நட்புடன் பழகுவதும் என காலம் கழித்துவந்தான். இளமைப் பருவம் இவ்வாறு சென்று கொண்டிருந்த நிலையில் ஒருநாள் காசிவிஸ்வநாதர் சந்நிதியில் இறைவழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது ஒரு பேரொளியில்தான் கட்டுண்டதை உணர்ந்தான். அன்றிலிருந்து அவனுடைய ஆன்மீக நாட்டம் மேலும் வளர ஆரம்பித்தது. அந்த இளைஞனே பிற்காலத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆட்கொண்ட ஸ்ரீ யோகி ராம்சுரத் குமார் என்னும் அருளாளர் ஆவார்.

இல்லற வாழ்வில் ஈடுபட்டாலும் ஆன்மீகப் பசியின் தாக்கத்தால் தகுந்த குருவைத் தேடி அவர் தென்னகத்திற்கு வந்தார். பாண்டிச்சேரியில் ஸ்ரீ அரவிந்தரிடமிருந்து ஞானநிலையையும், ரமணரிடம் தவ நெறியையும், மங்களூருக்கு அருகில் கஞ்சன்காடு கிராமத்தில் இருந்த "பாப்பா ராமதாஸ்' என்ற குருவிடமிருந்து ராமநாம உபதேசத்தையும் பெற்றார். பாண்டிச்சேரி அன்னையின் அருளும், ஆசியும் கிடைத்ததாகவும் கூறப்படுவதுண்டு. காஞ்சி மஹாசுவாமிகளின் பேரன்பிற்கும் அருளாசிக்கும் பாத்திரமானார்.

பல தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டு, பின் சொந்த ஊர் திரும்பி, குரு ராமதாஸரிடமிருந்து அவர் பெற்ற "ஜெய்ராம் ஜெய்ஜெய்ராம்' எனும் மந்திரத்தை இடையறாது ஜெபித்ததின் காரணமாக ஆன்மிகத்தில் உச்சகட்டத்தை எட்டினார். தான் நிரந்தரமாக இருக்க வேண்டிய இடம் அண்ணாமலையின் அடித்தளமே என உணர்ந்து, திருவண்ணாமலைக்கு 1959 ஆம் ஆண்டு திரும்பி வந்தார். இறுதிகாலம் வரை வேறு இடம் செல்லவில்லை. திருவண்ணாமலை செங்கம் சாலையில் அவருடைய ஆஸ்ரமமும், அவருடைய அழகிய உருவச்சிலையுடன் கூடிய சமாதியையும், அதன்மேல் பாணலிங்கம் பிரதிஷ்டையாகி உள்ளதையும் தரிசிக்கலாம்.

பச்சைநிறத் தலைப்பாகையுடன் அதே நிறத்தில் சால்வையும் போர்த்திக்கொண்டு கையில் ஒரு விசிறியுடன், உணவிற்காக ஒரு கொட்டாங்கச்சியையும் வைத்துக் கொண்டு மிகவும் எளிமையான கோலத்தில் இருப்பிடம் ஏதுமின்றி திருவண்ணாமலை வீதியில் திரிந்த அவர் நாளடைவில் அவ்வூர் மக்களின் அன்புக்குப் பாத்திரமாய் "யோகிராம் சுரத்குமார்' என்றும் "விசிறிசாமியார்' என்றும் அவர்களால் போற்றி அழைக்கப்பட்டார். தனக்கு வாய்க்கப்பட்ட இறையருளை தன்னை நாடிவரும் மக்களின் உடல் பிணிக்கும் மனஉளைச்சலுக்கும் மருந்தாகப் பயன் படுத்தினார். கலியுகத்தில் இறைவனை அடைய எளிய வழி ராம நாம ஜபமே என்று கூறி அதன் மகிமையை உணர்த்தினார். மக்கள் நலனுக்கு மட்டுமே பல அற்புதங்களை நிகழ்த்தினார். தன்னை நாடி பிரார்த்தனை செய்ய வரும் அன்பர்களிடம் ""எனது தந்தையிடம்  (அண்ணாமலையார்) சொல்கிறேன், இந்த பிச்சைக்காரன் என்ன செய்ய முடியும்'' என்பாராம். 

இந்த அருளாளர் அவதரித்தது 1918 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் ஸ்வாதி நட்சத்திரத்தில். அவ்வகையில் இவ்வாண்டு 100 ஆவது ஜெயந்தி விழா தொடங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டும் அவரது ஜெயந்தி விழா அவரது ஆஸ்ரம வளாகத்திலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் செஞ்சியில் உள்ள சிறுகடம்பூர் பகுதியில் அன்னை ஓம் பவதாரிணி நகரில் செயல்பட்டு வரும் சித்தாஸ்ரமத்தில் உள்ள ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் சிவன் கோயில் அருகில் புதியதாக பகவான் யோகிராம் சுரத்குமாருக்கு ஒரு மணிமண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதில் பகவானின் முழு உருவச்சிலை பிரதிஷ்டையாக உள்ளது. கும்பாபிஷேக வைபவம் நவம்பர் 17 ஆம் தேதி, வெள்ளியன்று(சுவாதி) நடைபெறுகிறது. இத்துடன் 100 ஆவது ஜெயந்தி விழாவும் நவம்பர் 11 முதல் தொடங்கி 17 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

இதனையொட்டி, சிறப்பு ஹோமங்கள், பூஜைகள், பாராயணங்கள், 
சமயச் சொற்பொழிவுகள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 

தொடர்புக்கு  -  94431 39459/ 93626 08374.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/11/w600X390/visri.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/11/அண்ணாமலையார்-அரவணைத்த-அருளாளர்-2805950.html
2805957 வார இதழ்கள் வெள்ளிமணி துர்க்கை வடிவங்கள்! - ஆர் மகாதேவன் Saturday, November 11, 2017 05:26 PM +0530 திருத்தணிக்கு அருகில் மத்தூர் என்ற இடத்தில் உள்ள துர்க்கை திருவுருவின் கீழ்புறம், மகிஷனின் முழு உருவம் காணப்படுகிறது.  புதுக்கோட்டை மலையப்பட்டி குடவரை சிவன் கோயிலில் தாமரை மலரில் நின்ற கோலத்தில் எட்டு கரங்களுடன் காட்சி தருகிறாள் துர்க்கை. கும்பகோணம் அருகில் உள்ள பட்டீஸ்வரம் தேவபுரீஸ்வரர் திருக்கோயிலில் வடக்கு வாயிலில் அஷ்டபுஜ துர்க்கை அருள்புரிகிறாள். எட்டுக்கரங்களுடைய இந்த துர்க்கையின் கரங்களில் ஒன்றில் கிளியை வைத்திருப்பது சிறப்பாகும்.  

திருநெல்வேலியிலிருந்து கோவில்பட்டி செல்லும் வழியில் கங்கை கொண்டான் திருத்தலத்திற்கு அருகில் உள்ள பிராஞ்சேரி என்னும் இடத்தில் படுத்திருக்கும் கோலத்தில் சயன துர்க்கையை காணலாம்.  

வேதாரண்யம் வேதபுரீஸ்வரர் ஆலயத்திலும் கும்பகோணம் அருகில் உள்ள அம்மன் குடியிலும் திருவாரூர் ஆந்தக்குடியில் உள்ள சோமேஸ்வரர் ஆலயத்திலும் துர்க்கை தெற்கு நோக்கி அருள்கிறாள். விழுப்புரம், திருவக்கரை திருத்தலத்தில் அருள்புரியும் வக்ரகாளியம்மன் கோயிலில் அருள்புரியும் துர்க்கை தலை சாய்ந்த கோலத்துடன் வடக்கு நோக்கி வீற்றிருக்கிறாள். சுருட்டப்பள்ளி, பள்ளி கொண்ட ஈஸ்வரன் கோயிலில் பிடாரியின் மீது நிற்கும் கோலத்திலும்; தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலிலுள்ள துர்க்கை ஆறுகரங்களுடன் காட்சிதருகிறாள்.  கங்கைகொண்ட சோழபுரத்தில் பதினெட்டு கரங்களுடன் ஒரு பெரிய துர்க்கை திருமேனி உள்ளது.  இது ராஜேந்திர சோழன்
கங்கை வரை படையெடுத்துச்சென்றபோது கொண்டுவந்த வெற்றிச் சின்னமாகும்.

]]>
http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/11/துர்க்கை-வடிவங்கள்-2805957.html
2805944 வார இதழ்கள் வெள்ளிமணி துயர் துடைக்கும் பைரவர் வழிபாடு! - என். பாலசுப்ரமணியன்  Saturday, November 11, 2017 12:55 PM +0530 சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராக வணங்கப்படுபவர் மகா பைரவர்.  சிவ பெருமானின் ஐந்து குமாரர்களாக கணபதி, முருகன், பைரவர், வீரபத்திரர், சாஸ்தா என்று சொல்லப்படுகிறது. ஐவரில் பைரவ மூர்த்தி, பொதுவாக எல்லா ஆலங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையிலே பன்னிரு கரங்களுடன்  நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நின்றபடி நிர்வாணக் கோலத்தினராய் நீல மேனியராய் நாய் வாகனத்துடன் காட்சி தருபவர். 
இவர் சிவகணங்களுக்கு தலைவராக விளங்குபவர்.  ஆணவம் கொண்ட பிரம்மனின் சிரம் கொய்தவர். மன்
மதனின் கர்வம் அடங்கச் செய்தவர். முனிவரின் சாபத்திலிருந்து தேவேந்திரன் மகன் ஜெயந்தனைக் காத்தவர். சனீஸ்வரருக்கு குருவாக விளங்குபவர். சூரியன் மகனான யமதர்மனால் அலட்சியப் படுத்தப்பட்டு கௌரவக் குறைவை அடைந்த சனி, அவருடைய தாய் சாயாதேவியின் அறிவுரைப்படி பைரவரை வழிபட்டு அவருடைய அருளால் நவக்கிரக பதவி பெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.  காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று பார்த்த நித்ய பூஜா விதி 
கூறுகிறது. 
 ஒரு சமயம், அந்தகாசுரனின் அட்டூழியங்களை ஒழிக்க தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட, அவர் தன் இதய அக்னியிலிருந்து பைரவரை உருவாக்க அது விஸ்வரூப
மெடுத்து ஒன்றாகி, ஒன்றிலிருந்து எட்டாகி, எட்டிலிருந்து அறுபத்து நான்காகி அசுரர்களை முழுவதுமாக அழித்து தேவர்களுக்கு அமைதியை வழங்கியதாகவும் இதனால் மகிழ்வடைந்து தேவர்கள் அறுபத்து நான்கு யோகினிகளை அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. 64 யோகினிகளின் உபாசனை வடநாட்டில் பரவலாகக் காணப்படுகிறது. அவ்வாறு 64 யோகினிகளை உபாசிக்கும்போது 64 பைரவர்களுக்கும் சேர்ந்தே உபாசிக்கப்படுகிறது. 
சிவபெருமான் தடுத்தும் தன் தந்தை செய்த யாகத்திற்குச் சென்ற தாக்ஷôயிணி அவமானப்பட்டு, யாகத்தீயில் விழுந்து உயிர்விட, அந்த உயிரற்ற உடலை சுமந்து கொண்டு சிவபெருமான் பித்தனாக அலைய, அந்த கோலத்தைக் காணச் சகிக்காத மகாவிஷ்ணு, சிவபெருமானை அந்த மாயையிலிருந்து அகற்றுவதற்காக சக்ராயுதத்தினால் அவ்வுடலைச் சிதைத்தார். அவ்வாறு சிதைக்கப்பட்ட சதி தேவியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் சக்தி பீடங்களாக மாறின. ஒவ்வொரு சக்திபீடத்தையும் ஒவ்வொரு பைரவர் காவல் காக்கிறார்கள் என்கிறது புராணம்.
எட்டு பைரவர்கள் விசேஷமாகக் கொண்டாடப்
படுகிறார்கள். அந்த எட்டு பைரவர்களும் எட்டு திசை
களைக் காப்பவர்களாகக் கருதப்படுகின்றனர்.  
அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதல் வடிவமான "அசிதாங்க பைரவர்' காசி மாநகரில் அன்னப் பறவையினை வாகனமாகக் கொண்டு விருத்தகாலர் கோயிலில் அருள்செய்கிறார்.  குருகிரக தோஷம் நீங்க இவரை வணங்குகிறார்கள். சப்த மாதாக்களில் "பிராஹ்மி'  இவருடைய சக்தி வடிவமாக விளங்குகிறாள்.
ரிஷபத்தினை வாகனமாகக் கொண்டு  காசி மாநகரில் காமாட்சி கோயிலில் அருள்செய்யும் "ருருபைரவர்' அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார்.  சுக்கிர தோஷத்தைப் போக்கும் இவர், சப்த கன்னியரில்  காமாட்சியை தன் சக்தியாகப் பெற்று விளங்குகிறார். 
மூன்றாவது தோற்றமான  "சண்ட பைரவர்' காசி மாநகரில் துர்க்கை கோயிலில் மயிலை வாகனமாகக் கொண்டு அருள்செய்கிறார். செவ்வாய் கிரக தோஷத்தை நீக்கும் இவர் சப்த கன்னியரில் கெüமாரியைத் தன் சக்தியாகக் கொண்டிருக்கிறார்.
"குரோத பைரவர்' அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இவர் காசி மாநகரில் காமாட்சி கோயிலில் கருடனை வாகனமாக கொண்டு அருள்பாலிக்கிறார். சனி கிரக தோஷம் நீங்க இவர் வணங்கப்படுகிறார்.  இவருடைய சக்தி வடிவமாக வைஷ்ணவி விளங்குகிறாள்.
அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் "உன்மத்த பைரவர்' ஐந்தாவது தோற்றமாவார். இவர் காசி மாநகரில் பீம சண்டி கோயிலில் குதிரையை வாகனமாக கொண்டு விளங்குகிறார்.  நவக்கிரகங்களில் புதன் கிரக தோஷத்தை நீக்கும் இவர் வாராகியைத் தன் சக்தியாகக் கொண்டிருக்கிறார்.  ஆறாவது தோற்றமான "கபால பைரவர்'  காசி மாநகரில் லாட் பஜார் கோயிலில் கருடனை வாகனமாக க் கொண்டு அருள்செய்கிறார். சந்திர கிரக தோஷத்தை நீக்கும் இவரின் சக்தியாக  இந்திராணி விளங்குகிறாள். இவர் சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்.  
பைரவ உருவங்களில் பல உண்டு என்றாலும் பிரதானமானவராகக் கருதப்படுபவர் கால பைரவர். எண்ணற்ற மக்கள் கால பைரவரின் புனித ரட்சையை (காசிக்கயிறு) அணிந்து கொண்டு எவ்வித அச்சமும் இல்லாதவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். காசி யாத்திரையின் போது இவரை வணங்காவிட்டால் காசி யாத்திரையின் பலன் கிடைக்காதென்று கூறப்படுகிறது.
அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமான "பீக்ஷன பைரவர்' காசி மாநகரில் பூத பைரவ கோயிலில் சிங்கத்தை வாகனமாகப் பெற்று அருள்செய்கிறார். கேது கிரகதோஷம் நீங்க இவர் வணங்கப்படுகிறார். இவருடைய சக்திவடிவமாக  சாமுண்டி விளங்குகிறாள்.
அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் "சம்ஹார பைரவர்'  எட்டாவது தோற்றமாகும்.  இவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோயிலில் நாயை வாகனமாக கொண்டு அருள்செய்கிறார்.  ராகு கிரக தோஷம் நீங்க வணங்கப்படும் இவரின் சக்தியாக சண்டிகை விளங்குகிறாள்.  பஞ்சகுண சிவமூர்த்திகளில் பைரவர் வக்ர மூர்த்தி என்று அறியப்பெறுகிறார்.
பைரவரை  தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை சாற்றி, ராகு காலத்தில் பூஜை செய்வதும் தேய்பிறை அஷ்டமியில் பூஜிப்பதும் சிறப்பாகக் கூறப்படுகிறது. அவர் பூஜையில் மல்லிகையைத் தவிர்க்க வேண்டும். ஈசனின் அம்சமான இவரும் அபிஷேகப்பிரியராவார். பன்னிரண்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவக்கிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் விளங்குகிறார். பைரவரின் அபிஷேகத்திற்கு சந்தனம் , புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ. பச்சை கற்பூரம் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு உகந்த நாள். அந்த வகையில் ஒவ்வொரு அஷ்டமி திதிக்கும் ஒரு பெயர் உண்டு. இதில் காலபைரவாஷ்டமி  அன்று அவர் ஆவிர்பவித்ததாகக் கூறப்படுகிறது. இவ்வருடம், 11.11.2017 அன்று "காலபைரவாஷ்டமி' கொண்டாடப்படுகிறது. 
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் ஆற்றும் இந்த பைரவரின் வழிபாடு வடக்கே இருந்து வந்த கபாலிக வழிபாட்டின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.  ஆலயங்களில் நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவத்திற்கு முன்னும் பின்னும் பைரவருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. விசேஷ தினங்களில் இவருக்கு நெய் அபிஷேகம் சிறப்பாக செய்யப்படுகிறது. அந்த விசேஷ தின பூஜையில் எட்டுவித பட்சணங்களும், எட்டுவித அன்னங்களும் நைவேத்தியப் பொருட்களாக நிவேதிக்கப்படுகின்றன. இன்னும் எட்டுவித மலர்களால் அர்ச்சனை செய்து எட்டுவித ஆரத்திகளும் செய்யப்படுகின்றன.
பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். இந்த அகால நேரத்தில் பராசக்தியானவள் பைரவி என்னும் பெயரில் நடமாடுகின்றாராம். அவளுடன் இறைவனும் பைரவராக தலத்தை வலம் வருவார் என்பதனால் சித்தர்கள் அந்த நள்ளிரவு நேரத்தில் திரிபுர பைரவியையும் பைரவரையும் தியானிக்கின்றார்கள்.
பிரம்மனின் தலையைக் கொய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவனை வேண்ட, அவர் பைரவரை பூலோகம்  சென்று பிட்ûக்ஷ எடுத்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்றும் கூற, அவரும் பூவுலகம் வந்து, பிட்ஷை் ஏற்று வரும்போது திருவலஞ்சுழியில் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிற்று. அங்கு அருள்புரியும் ஸ்வேத விநாயகரை வழிபட, விநாயகர் தோன்றி, "உம் கையில் உள்ள சூலாயுதத்தை கிழக்கு நோக்கி வீசினால் அது எங்கு விழுகிறதோ அந்த இடத்தில் இருப்பாயாக'' என கூற, பைரவரும் அவ்வாறே கிழக்கு நோக்கி சூலாயுதத்தை வீச, அது விழுந்த இடமே தற்போதுள்ள ஷேத்திரபாலபுரம் ஆகும். சூலம் விழுந்த இடம் தீர்த்தமாயிற்று. கால பைரவருக்கு úக்ஷத்திர பாலகர் என்று பெயர். அவர் பெயராலேயே அவ்வூரும் úக்ஷத்திர பாலபுரம் என்று வழங்கலாயிற்று. இந்த ஊர் மயிலாடுதுறை தாலுகா, குத்தாலத்திற்கு அருகிலுள்ளது. காசியைப் போன்றே பைரவ வழிபாட்டிற்கு சிறப்புற்று விளங்குகிறது. 
பைரவரை வணங்குவதால் வாழ்வில் வரும் அனைத்து தடைகளும் நீங்கும். ஏவல், பில்லி சூனியம் இவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும். தன தான்ய சம்பத்துக்களுடன் சிறப்பாக வாழலாம். ஒருவருக்கு எந்த கெட்ட நேரம் நடந்தாலும் அதனை மாற்றக்கூடியவர். ஏழரைச் சனியால், அஷ்டமச் சனியால் ஏற்படக்கூடிய இடர்பாடுகளுக்கு பைரவர் வழிபாடு ஒரு பரிகாரமாகும். 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/11/w600X390/shribairavar.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/10/துயர்-துடைக்கும்-பைரவர்-வழிபாடு-2805944.html
2805958 வார இதழ்கள் வெள்ளிமணி கார்த்திகை மாதச் சிறப்புகள்  - டி.ஆர். பரிமளரங்கன் DIN Saturday, November 11, 2017 12:31 PM +0530 கார்த்திகை மாதத்தில் சூரியன் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறான். இம் மாதத்தில் மகாவிஷ்ணு நம் வீட்டில் உள்ள நீரில் ஆவிர்பவிக்கிறார் என்று சாஸ்திரம் கூறுகிறது.

ஆதலால் ஸ்ரீ சாளக்கிராமங்களுக்கு இம் மாதத்தில் செய்யப்படும் பூஜை ஆயிரம் மடங்கு பலனைத் தரும். திருமால், துளசியை மணந்து தனது திருமார்பில் அணிந்து கொண்டது இம்மாதத்தில்தான். திருமால் "சோமகன்' என்ற அசுரனைக் கொன்று வேதத்தை மீட்பதற்காக "மச்ச அவதாரம்' எடுத்த மாதம் கார்த்திகை. கார்த்திகை மாதத்தில் தினந்தோறும் சூரிய உதயத்தின்போது நீராடினால் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய பலன்கள் கிட்டும். ஐப்பசி மாதத்தில் காவிரியில் துலா ஸ்நானம் செய்ய
இயலாதவர்கள் கார்த்திகை முதல் தேதி காவிரி நதியில் நீராடினால் துலா ஸ்நானத்தின் முழு பலனையும் அடையலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இம்மாதத்தில் மஹாவிஷ்ணுவை துளசி தளத்தால் இலையால்) அர்ச்சனை செய்பவர்கள் அசுவமேத யாகம் செய்தப் பலனை அடைவார்கள் என்று கார்த்திகை மஹாத்மியம் நூல் கூறுகிறது. கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் கடைப்பிடித்து தீபங்கள் ஏற்றி விரதம் கடைப்பிடிப்பதுடன் முருகப் பெருமானை வழிபட்டால் செல்வச்செழிப்பு ஏற்படும். 

இம்மாதத்தில் பூமிக்கு அருகில் சந்திரன் வருகிறான். அதனால் நிலவின் ஒளி மற்ற நாள்களைவிட பிரகாசமாக இருக்கும். அன்று சிவபெருமான், தேவியுடன் பூமிக்கு அருகில் வந்து அருள்புரிவதாக ஐதீகம்! எனவே, கார்த்திகை பௌர்ணமி அன்று விரதமிருப்பது போற்றப்படுகிறது. இதனால் சிவபெருமான் அருளாசியுடன் முருகப்பெருமானின் அருளாசியும் கிட்டும் என்று வேத நூல்கள் கூறுகின்றன. கார்த்திகை பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீப ஜோதியை தரிசிப்பதும் கிரிவலம் வருவதும் புண்ணியப் பலன்களைத் தரும்.

திருவண்ணாமலை திருத்தலம், ஸ்ரீ சக்கர வடிவில் அமைந்துள்ளது என்றும்; இதனை,  "நவத்துவாரபுரி' என்றும் போற்றுவர். பொதுவாக, இம்மலையை வலம் வரும்போது மழை பெய்ய நேரிட்டால் அந்த மழை நீரில் நனைந்து கொண்டு வந்தால் தேவர்களின் ஆசி கிட்டும். லட்சம் மழைத்துளிகளில் ஒன்று தேவசக்தி பெற்றது என்று சாஸ்திரம் கூறும். இந்த மழை நீராடல் புனிதமானது. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரக்கூடியது என்பர்.

நாதர மகரிஷி, கார்த்திகை விரதத்தை பன்னிரண்டு ஆண்டுகள் கடைப்பிடித்து, சிவபெருமானை வழிபட்டு சப்தரிஷிகளுக்கும் மேலான பதவியையும் நினைத்த இடத்திற்குச் செல்லும் சக்தியையும் பெற்றார். பகீரதன் கார்த்திகை விரதம் மேற்கொண்டதால் இழந்த நாட்டை மீண்டும் பெற்றதுடன் கங்கையை பூமிக்கு இறக்கி வரும் ஆற்றலையும்
பெற்றான். திரிசங்கு என்ற மன்னன் கிருத்திகை விரதம் மேற்கொண்டதால் மிகப்பெரிய அரசனாகும் பாக்கியம் பெற்றான். 

பலி மகாராஜன், தன் தீராத உடல் வெப்ப நோயிலிருந்து குணமடைவதற்காக கார்த்திகை விரதம் மேற்கொண்டு நல்ல பலன்களைப் பெற்றான் என்கிறது புராணம். எனவே, கார்த்திகை மாதத்தில் வரும் விரத நாள்களில் பக்தியுடன் விரதம் மேற்கொண்டால் இறையருளால் நலமுடனும் வளமுடனும் வாழலாம் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/11/w600X390/shrilordsivasiva.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/11/கார்த்திகை-மாதச்-சிறப்புகள்-2805958.html
2805956 வார இதழ்கள் வெள்ளிமணி பேதுருவும் யோவானும் தம்மிடம்   -  தே. பால்பிரேம்குமார் DIN Saturday, November 11, 2017 12:27 PM +0530 பிச்சைக் கேட்ட சப்பாணியை நோக்கிப் பார்த்தார்கள். அவன் நிலை மிகவும் பரிதாப நிலையிலிருந்தது. அப்படிப்பட்ட பிச்சைக்காரனுக்கு பணம் காசு தந்து அவனை மகிழ்வித்திருக்கலாம். ஆனால் அவர்கள், அப்பிச்சைக்காரனின் கையை பிடித்து எழுப்பி, ""வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை, என்னிடத்திலுள்ளதை உனக்குத்
தருகிறேன். நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட!'' என்று சொல்லி அவனைத் தூக்கிவிட்டான். உடனே 
அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது. அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான். நடந்து குதித்து தேவனை துதிக் கொண்டு அவர்களுடனே கூடத்
தேவாலயத்திற்குள் பிரவேசித்தான். அவன் நடக்கிறதையும் தேவனைத் துதிக்கிறதையும் ஜனங்கள் எல்லாரும் கண்டு, தேவாலயத்தின் அலங்கார வாசலண்டையிலே
பிச்சை கேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து அவனுக்கு சம்பவித்ததைக் குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.
பேதுருவும் யோவானும், பிரமித்த மக்களிடம் ""இந்த அற்புதம் பற்றி ஆச்சரியப்பட வேண்டாம். தாம் இவ்வற்புதத்தை நடபிக்கவில்லை. இயேசு கிறிஸ்துவே தம் மூலம்
அற்புதம் செய்கிறார்'' என்று கூறினர். 
யார், யார் இயேசுவிடம் விசுவாசம் வைத்து அவரிடம் அன்பு கொள்கின்றார்களோ அவர்களும் இவ்வாறு வல்லமை பெற முடியும். வல்லமையினால் நல்வாழ்வும்
மகிழ்வான வாழ்வும் துன்பம் நீங்கி நன்மை பெறுவர். நாமும் இயேசுவின் சீடர் ஆவோம். துன்பம் நீங்கி இன்பம் பெற்றுக்கொள்வோம். 
 

]]>
http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/11/பேதுருவும்-யோவானும்-தம்மிடம்-2805956.html
2805955 வார இதழ்கள் வெள்ளிமணி துன்பம் நீக்கி இன்பம் தரும் தேவன்! DIN DIN Saturday, November 11, 2017 12:27 PM +0530 ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம் பன்னிரண்டு சீடர்களுக்கு கடவுள் அறியும் அறிவையும், சமய நெறிமுறைகளையும், மக்களுக்கு தொண்டு செய்வதையும் கற்றுதந்தார்.  மேலும் அவர் தம் சீடர்களுக்கு அற்புதங்கள் செய்யவும், நோய்களை குணமாக்குதல், பிசாசுகளை துரத்துதல் போன்ற வல்லமையை கற்று தந்திருந்தார். இப்படி வல்லமை பெற்ற சீடர்கள் பேதுருவும் யோவானும் ஒருநாள் காலையில் தேவாலயத்துக்குப் போனார்கள்.
அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்து கொண்டு வந்தார்கள். தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சை கேட்கும்படி, நாள்தோறும் அவனை அலங்கார வாசல் எனப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள். (அப்போஸ்தலர்:3:2) 
தேவாலயத்திலே பிரவேசிக்க போகிற பேதுருவையும் யோவானையும் அவன் கண்டு பிச்சை கேட்டான். அவன் இயேசுவின் சீடர்களிடத்தில் அதிகமாக காசு கிடைக்கும் என
ஆவலுடன் எதிர்பார்த்தான்.

]]>
http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/11/துன்பம்-நீக்கி-இன்பம்-தரும்-தேவன்-2805955.html
2805954 வார இதழ்கள் வெள்ளிமணி ராஜகோபுர நிர்மாண திருப்பணி DIN DIN Saturday, November 11, 2017 12:26 PM +0530 சிவகங்கை மாவட்டம், படமாத்தூர், இலுப்பக்குடி கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 325 ஆண்டுகள் பழைமை கொண்ட அருள்மிகு வாலகுருநாதன் அங்காள ஈஸ்வரி திருக்கோயிலில் மூன்று நிலைகளில் ராஜகோபுர நிர்மாண திருப்பணி நடைபெற்று வருகின்றது. பணி நிறைவு பெற்றதும் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.  

இத்திருக்கோயிலில் 30 பரிவார மூர்த்திகளும் காவல் தெய்வங்களும் நந்தீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், துர்க்கையம்மன், சப்தகன்னிகள், காலபைரவர் ஆகிய பரிவார நிவர்த்தி தெய்வங்களும் உள்ளன. இத்திருக்கோயில் திருப்பணியில் பக்தர்கள் பங்குகொண்டு இறையருள் பெறலாம்.

தொடர்புக்கு: 99650 91337.

]]>
http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/11/ராஜகோபுர-நிர்மாண-திருப்பணி-2805954.html
2805952 வார இதழ்கள் வெள்ளிமணி சிந்தனையின் சிறப்புகள்  -  மு.அ.அபுல் அமீன் DIN Saturday, November 11, 2017 12:23 PM +0530 சிந்தித்து உண்மையை உணர்ந்து நன்மை தரும் நல்ல செயல்களைச் செய்ய செம்மறை குர்ஆனின் வசனங்கள் வலியுறுத்துகின்றன. "" நாற்கால் பிராணிகளில் நிச்சயமாக உங்களுக்குப் படிப்பினை இருக்கிறது. உங்களுக்கு அவற்றின் வயிறுகளில் சாணத்திற்கும் ரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலைப் பருகுவதற்குத் தாராளமாக தருகிறோம்''  என்ற எழில்மறை குர்ஆனின் 16 - 66 ஆவது வசனம் அறிவிப்பை ஆய்வோம்.
ஒட்டகம், பசு, ஆடு தின்ற தீனி சீரணமாகியதும் அவைகளில் அடிப்பகுதியில் சாணமும் மேல் பகுதியில் உதிரமும் உண்டாகின்றன. இரண்டுக்கும் இடையில் ரத்தமோ சாணமோ கலக்காமல் தூய பால் சுரக்கிறது. இவ்விரண்டில் எதுவும் ஒன்றில் ஒன்று கலக்காமல் தடுக்கப்பட்டு ஒன்றின் வாடையோ வண்ணமோ மற்றொன்றில் சேராமல் மடிக்குச் செல்கிறது,. ரத்தமும் நரம்புகளில் ஓடுகிறது. சாணம் குடலில் தங்கிவிடுகிறது.
அக் கால்நடைகளை அறுத்துப் பார்த்தால் குடலில் குருதியோ பாலோ இருக்காது. குடலின் அடியில் சாணமும் நடுவில் பாலும் மேற்பகுதியில் ரத்தமும் உள்ளதைக் காணலாம். பிராணிகள் நோயுற்றால் மடியில் பாலோடு ரத்தமும் வரும். ரத்தம் பாலாக மாறாது. கால்நடைகள் நோயுற்ற காலத்தில் மட்டும் பாலில் கலக்கும் 
ரத்தம் பாலின் நிறத்தை மாற்றும். இத்தத்துவத்தின் சிந்தனை நம்மை சீராய் செயல்பட வைக்கும்; நாம் நேராய், நேர்மையாய் வாழ உதவும்.
தற்காலத்தில் தூய்மை இல்லாத கலப்பட  பால் பெருகி விற்பதைக் காண்கிறோம். எக்காலத்திற்கும் ஏற்ற குர்ஆன் இவ்வசனத்தில் கலப்பற்ற பாலைப் பருகுபவர்களுக்குப்
புகட்டுவதாக புகன்று தூய்மை அற்ற பால் விற்கப்படுவது பற்றி எச்சரிக்கிறது. 
"" அதன் வயிறுகளிலிருந்து பல வண்ணங்களில் வகைகளில் வரும் பானம் மனிதர்களுக்கு ஆரோக்கியம் அளிப்பது'' என்ற குர்ஆனின் 16 - 69 ஆவது வசனமும்
சிந்திப்பவர்களுக்குச் சான்றாக விளங்குகிறது, தேனீக்கள் கனிகள் மலர்களிலிருந்து சாறை உறிஞ்சி தேனாக வெளியாக்குகிறது. தேனீக்களின் வயது பருவத்திற்கேற்ப
தேனின் நிறம் மாறுபடும். இளந்தேனீயின் தேன் வெண்ணிறத்திலும் நடுவயது தேனீயின் தேன் மஞ்சள் நிறத்திலும் கிழ தேனீயின் தேன் செந்நிறத்திலும் இருக்கும்.  
சிந்தித்தால் ஆதாரங்களைப் பெறலாம். அந்த ஆதாரங்களின் அடிப்படையில் செயல்பட்டால் படிப்படியாக முன்னேறி பயன் பெறலாம். கொட்டினால் கடுக்கும் நஞ்சுடைய தேனீயின் வாயிலிருந்து இனிக்கும் தேன் உருவானதை உணர்ந்து பார்க்க வேண்டும்.
ஆதிமனிதன் ஆதம் நபி அன்னை ஹவ்வா இணையிடமிருந்து தோன்றியவர்களே இவ்வுலக மக்கள். ஆனால் அம்மக்கள் கருப்பு, மஞ்சள், சிவப்பு, வெண்மை நிறத்தவராய்
வேறுபட்ட வண்ணங்களில் வலம் வருகின்றனர். பல மாறுபட்ட மொழிகள் பேசுகின்றனர். சீரிய குர்ஆனின் நேரிய வசனப்படி சிந்தித்தால் எம்மொழி பேசினும் எந்நிறத்தவர்
ஆயினும் அனைவரும் சமம் என்பதை அறியலாம்; சகோதரத்துவம் பேணலாம்; சமத்துவ சமுதாயம் அமையும். 
""வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும் உங்களின் மொழிகளும் நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளது.  அறிவுடையோருக்கு
இதில் பல சான்றுகள் உள்ளன'' என்ற 30 - 22 ஆவது வசனம் ஒன்றைப் படித்து கேட்டு அறிந்தோர் அதன் உண்மையை உணர ஆதாரங்களைத் தேடுவது; ஆதாரங்களின்
அடிப்படையில் ஆராய்ச்சி செய்வது; ஆராய்ச்சியின் முடிவைப் பலரும் அறிய பரவலாக்கி; அதன் பயனை உலகம் துய்க்க; துணைபுரிவதற்குரிய உரிய சான்றுகளின் ஒன்றாக
அல்லாஹ்வின் படைப்புகளில் சிலவற்றைச் செப்புகிறது. 
இச்சான்றுகளின் அடிப்படையில் 
சிந்தித்து முந்திய நூல்களை வரலாற்றை ஆய்ந்த அறிஞர்களின் கூற்று ஆதியில் எழுபத்திரெண்டு மொழிகள் இருந்தன. நூஹ் நபியின் மகன் ஸôமின் சந்ததியினர்
எழுபத்திரெண்டில் பத்தொன்பது மொழிகளைப் பேசினர். யாபிதின் சந்ததியினர் முப்பத்தாறு மொழிகளைப் பேசினர். அறிவிப்பவர்  -  வஹபு (ரஹ்).
அல்லாஹ்வின் தூதர்கள் அனைவரும் அவர்களின் காலத்து மக்களை நடுநிலையாய் சிந்தித்து நல்ல கொள்கையை ஏற்க ஏவினர். இவ்வாறு இப்ராஹீம் நபி ஏவியதை
எடுத்துரைக்கிறது குர்ஆனின் 21 - 67 ஆவது வசனம். மூசா நபி கீழ் மேல் நாடுகளையும் அதற்கு மத்தியில் உள்ள நாடுகளையும் படைத்து காப்பவனை நீங்கள்
சிந்திப்பவராயின் சிறப்பாக அறிவீர் என்று கூறினார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தோழர்களைச் சிந்தித்து சிறந்த தீர்வுகளைக் கூறும்படி ஆலோசனை கேட்பார்கள். 
சிந்தித்தால் கடின காரியங்களையும் எளிதாய் முடிக்கும் ஏற்ற வழியைக் காணலாம். ஆழ்ந்த சிந்தனை தொலை நோக்கோடு ஆக்க வழியில் முனையும் முயற்சியில்
வெற்றியை நல்கும்; நேர் வழிக்கும் பிறழ் வழிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைப் பிரித்து காட்டும்; பிரச்னைக்குரிய தீர்வை எளிதாக்கும்; தடைகளை  உடைத்தெறிய
உதவும்; சவால்களைச் 
சந்தித்து வெற்றி பெற உற்ற துணைபுரியும். புதிய படைப்புகளுக்கு பாதை அமைக்கும்; கண்டுபிடிப்புகளின் பக்கம் பார்க்க வைக்கும். வேக வளர்ச்சியில் புதிய
கண்டுபிடிப்புகளின் தாகம் தீராதது.  சிந்தனை அப்பக்கம் நம்மைத் திருப்பி பயிற்சி பெற்று முயற்சி செய்து புதியன காணும் உதிப்பை உண்டாக்கும். 
அல்லாஹ்வின் படைப்புகளைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க செப்பும் செம்மறை குர்ஆனின் 87 - 17 முதல் 20 வரையுள்ள வசனங்கள் வரையறுக்கிறபடி சிந்திப்போம்;
செயல்படுவோம்; செம்மை பெறுவோம்; செயல்பாட்டின் நன்மைகளை நாட்டிற்கு அர்ப்பணிப்போம். அல்லாஹ் அருள்புரிவான்.

 

]]>
http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/11/சிந்தனையின்-சிறப்புகள்-2805952.html
2805951 வார இதழ்கள் வெள்ளிமணி பொன்மொழிகள்! சுவாமி கமலாத்மானந்தர் DIN Saturday, November 11, 2017 12:22 PM +0530 மனிதனுக்குப் பகை புறத்தில் இல்லை. நமக்குள்ளே சத்துருக்கள் மலிந்து கிடக்கிறார்கள். பயம், சந்தேகம், சோம்பல் முதலான குணங்கள் நம்மை வெற்றியடையவொட்டாமல் தடுக்கின்றன.

 -  திருநாவுக்கரசர் 

சுமையைத் தாங்கி அலுக்காமல் உழைக்க வேண்டும். வெயிலையும் குளிரையும் பாராட்டக் கூடாது. எப்போதும் ஆனந்தமாக இருக்க வேண்டும். இவை மூன்றையும் நீ கழுதையிடமிருந்து கற்றுக்கொள்.

 -  சாணக்கியன்

கல்லைக் குவித்துப் பெரிய கோயில்கள் ஏன் கட்டுகிறீர்கள்? இறைவன் உங்களுக்குள்ளேயே இருப்பதை அறியாமல் ஏன் தொல்லைப்படுகிறீர்கள்?

 -   யோகி வேமன்னா

யோகத்தின் முதல் படி பேச்சை அடக்குவதும், (அபரிக்ரகம்) தேவைக்கும் அதிகமாக வைத்துக்கொள்ளாமல் இருப்பதுமாகும்.

 -   விவேக சூடாமணியில் ஆதிசங்கரர்


செவிகள் இருந்தால் மாத்திரம் போதாது. பெரியோர்கள் சொல்லும் நல்லுபதேசங்களை அடிக்கடிக் கேட்டுச் செவியின் பயனைப் பெற வேண்டும். அப்போதுதான் கேட்கக்கேட்க இதுவரை விளங்காத பொருளும் முறையே உனக்குத் தெளிவாகிவிடும்.

 -  யோகி வேமன்னா


மது அருந்துபவன் தன் அறிவை மட்டுமல்ல,  சுற்றம், உறவு, நண்பர்களையும் இழக்கிறான்.

 -  சாணக்கியன்


எப்போதும் வானத்திலே சுற்றும் பருந்துபோல் போக விஷயங்களினால் கட்டுப்படாமல், பரமாத்மாவை நோக்குவதுதான் விடுதலையாகும்.

 -   குள்ளச் சாமியார்


உடலில் புண் அல்லது கட்டி தோன்றினால் அதை மறைத்து மூடி வைக்கமாட்டார்கள். மருத்துவர்கள் மூலம் அறுவை சிகிச்சையால் அதைக் களைந்து, குணப்படுத்திக்கொள்வார்கள். அதுபோன்று வெளியிலே நண்பர்களைப் போலப் பேசிப் பழகி, உள்ளுக்குள்ளேயே பகையுணர்வால் புழுங்கிக் கொண்டிருப்பவர்களிடம் அவர்களின் எண்ணத்தை வெளிப்படையாகக் கூறி, அவர்களிடமிருந்து விலகி வாழ்வது நல்லது.

-   குமரகுருபரர்

 (நீதிநெறி விளக்கம்  55)

எவனொருவன் எப்பொழுதும் தூய வார்த்தைகளையே பேசுகிறானோ, கர்வமும் தற்பெருமையும் இல்லாதவனாய் இருக்கிறானோ, அவனே உண்மைப் பொருளாகிய இறைவனை அடைகிறான். உண்மை, உலகப்பற்றின்மை, அன்பு ஆகிய நற்குணங்கள் உடையவனாய் இரு.

 -  கபீர்தாசர்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/11/w600X390/kamalanandhar.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/11/பொன்மொழிகள்-2805951.html
2805945 வார இதழ்கள் வெள்ளிமணி மஹாலட்சுமி தரிசித்த கௌரி தாண்டவம்! - இலக்கியமேகம் ந. ஸ்ரீநிவாஸன்  DIN Saturday, November 11, 2017 11:39 AM +0530 மாலவன் மிக்க மகிழ்வு கொண்டவராய் ஒருநாள் காணப் பெற்றார். அதற்கான காரணம் கேட்டார்  மகாலட்சுமி. திருமாலும் புன்னகை பூத்தவாறே, இன்று சிவபெருமான் அம்பிகை கௌரி மனம் மகிழ உலக உயிர்களைப் பேணவும், காக்கவும்வல்ல கௌரி தாண்டவத்தை ஆடியருளியதே தனது ஆனந்தத்துக்கு காரணம் என்றார்.  அந்த எல்லையில்லா மகிழ்வு தரும் ஆனந்தத் தாண்டவத்தினை தானும் காண வேண்டி அருள்புரிய  கேட்டுக்கொண்டார் அன்னை லட்சுமி தேவி, திருமாலும் மனமகிழ்ந்து  ""நீயும் தென்தமிழகத்தில் உள்ள திருப்புத்தூர் சென்று தவமியற்றி வா! பெருமான் அருள் நடனக் காட்சி கிடைக்கும்!' என திருவாய் மலர்ந்தருளினார்.

அன்னை மஹாலட்சுமியும் திருப்புத்தூர் எழுந்தருளி அங்கே சுயம்புவாய் அருள்பாலிக்கும்  ஈசனை வழிபாடு செய்து தவமியற்றினார். ஈசனும் மனம் மகிழ்ந்து கௌரி தாண்டவத்தை அன்னை மகாலட்சுமிக்காக திருப்புத்தூரில் நடனமாடிக் காட்டினார்.

எதிர்பாராமல் பாம்பு கால்களின் கீழ் வந்து விட்டால் எங்ஙனம் அஞ்சிக் காலைத் தூக்குவோமோ,  அங்ஙனம் இயல்பாகவே காலைத் தூக்கி எம்பெருமான் ஆடிய இந்நடனம் "புஜங்கதிராசம்' எனப் பெற்றது. காத்தல் தொழிலுக்காக ஆடியதால் "ராட்சா தாண்டவம்' எனப் பெயர் பெற்றது. அன்னை லட்சுமிக்காக ஆடியருளியதால் "லட்சுமி தாண்டவம்' எனவும் அழைக்கப் பெறுகிறது.

தமிழகத்தில் உள்ள ஆலயங்கள் கற்திருப்பணிகளால் செய்யப் பெற்றதால் "கற்றளி' என அழைப்பதுண்டு. இங்கே திருவே (மஹாலட்சுமியே) வந்து தவம் இயற்றியதால் திருத்தளி என்று அழைக்கப் பெறுவதுடன் ஈசன் திருநாமமும்  "திருத்தளிநாதர்' எனப் போற்றப் பெறுகின்றது.  

இத் திருக்கோயில் ஈசனையும் அம்பிகையையும் வழிபடுவோர் பேறுபெற்றோர். முதல் பிரகாரத்தில்  "அநபாயச் சோழன் காவணம்' என்னும் பெரிய மண்டபத்தினை ஒட்டி  "திருப்புத்தூர் தமிழ்ச் சங்க மன்றம்'  உள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் கொடிமரம், பெரிய  நந்தியம்பெருமான் அருள்பாலிக்கின்றார்.

மேற்கு நோக்கி சூரியனும், அவரை ஒட்டிய பெரிய கல் மண்டபத்தில் ஸ்ரீமஹாலட்சுமி வடக்கு நோக்கி நடராஜப் பெருமானை தரிசித்த வண்ணம் அருள்பாலிக்கின்றார்.  தொடர்ந்து அறுபத்து மூன்று நாயன்மார்கள், இருபத்தேழு நட்சத்திர நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். அருகில் 
ஸ்ரீவீரபத்திரர் சந்நிதி உள்ளது. தொடர்ந்து சப்தமாதர்கள் அமைந்துள்ளனர். பஞ்சமி திதி தோறும் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. சப்தமாதர்களுக்கு எதிராக கோஷ்டத்தில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கின்றார். தொடர்ந்து வலம் வரும்போது கன்னிமூலை கணபதி, ஸ்ரீவருண லிங்கேஸ்வரர், காசிவிஸ்வநாதர், 
விசாலாட்சி ஆகியோருக்கு தனிச்சந்நிதி உள்ளது. 

தலவிருட்சமாக சரக்கொன்றை மரம் உள்ளது. வான்மீகி முனிவரின் சிலையும் அமைந்துள்ளது.  தனிச் சந்நிதியில் அகஸ்தீஸ்வரர் அருள்கின்றார். அதே சந்நிதியில் மகாலட்சுமி தெற்கு நோக்கி புடைப்புச் சிற்பமாக உள்ளார்.

தொடர்ந்து வலம் வரும்போது சண்டிகேஸ்வரர், விஷ்ணு துர்க்கையை காணலாம்.

வெளியே தனிச் சந்நிதியில் தவக்கோலத்தில் பத்மாசனத்தில் தேவியர்கள் உடனுறை யோக நாராயணர் அருள்பாலிக்கின்றார். தனிச்சந்நிதியில் நடராஜப் பெருமானின் கௌரி தாண்டவ அற்புதக் கோலம் எதிரே உள்ள அன்னை ஸ்ரீ மஹாலட்சுமிக்கு அருள்பாலித்த வண்ணம் உள்ளார். மூலவர் சுயம்பு மூர்த்தி கொன்றை வனத்தில் தாமாகத் தோன்றியவர்; யுகங் கடந்தவர். அகத்தியர், வான்மீகி, அன்னை மஹாலட்சுமி, திருஞானசம்பந்தர், அப்பரடிகள் ஆகியோர் தரிசித்து பேறு பெற்ற மூர்த்தி. காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி, ஐந்தெழுத்தினை ஓதி  வழிபடுகின்றோம். 

வெளிப் பிரகாரத்தில் வடக்கு நோக்கி வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமண்ய சுவாமி அருள்பாலிக்கின்றார். மண்டபத் தூண்களில்  பெரிய மருது, சின்ன மருது, ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன. இவர்களே இத் திருப்பணியினைச் செய்த பெருமக்கள் ஆவர். 

மண்டபத்தினுள் நுழைந்து உள்ளே சென்றால்  ஸ்ரீயோக பைரவர் சந்நிதி உள்ளது.  மருது பாண்டியர்களின் குல தெய்வமாக விளங்கியவர்.

அந்தாகாசுரன், சம்பகாசுரனை இறைவனின் ஆணைக் கிணங்க போரிட்டு அழித்தவர். சிவபக்தனை கொன்ற சாபம் நீங்கிட பிரம்மஹத்தி தோலிஷம் போக்கிட இங்கு வந்து தவமியற்றி அருள்பெற்றார்.  இவரே ஆதி பைரவர் என்றழைக்கப் பெறுகின்றார்.  சிவபெருமானின் அருளால் எட்டுத் திக்குகளையும் காவல் செய்யவும்,  நவக் கிரகங்களை ஆட்சி செய்யவும் அருள்பெற்றார்.  எனவே, இத்தலம் பைரவத் தலமாகவும் உள்ளது.  இவரை வணங்கினால் நவக்ரக தோலிங்கள் நீங்கவும், பில்லி, சூனியம், ஏவல் போன்றவை அகலவும் அருள்கிடைக்கும். இவருக்கு உரிய  "மேருபீடம்', சந்நிதிக்கு நேராக மூன்றாம் பிரகாரத்தில் உள்ளது. 

சம்பகாசுரனை பைரவர் அடக்கி ஒடுக்கிய கார்த்திகை மாதம் சஷ்டி திதி பைரவரின் வெற்றி நாளாக "சம்பகசஷ்டி'  என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப் பெறுகின்றது.  தேவேந்திரனின் மகன் ஜெயந்தன் இங்கு வழிபட்டு தோலிஷம் நீங்கியதால், சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை ஜெயந்தன் பூஜை வெகு சிறப்பாக நடைபெறுகின்றது. சந்நிதியில் ஜெயந்தன் சிலையும் உள்ளது.

மூன்றாம் பிரகாரத்தில் ஈசான்ய மூலையில் கிழக்கு நோக்கிய திசையில் தனிக் கோயிலில் அம்பிகை  சிவகாம சுந்தரி அருள் பொழிகின்றாள். நின்ற திருக் கோலம்! அழகு ததும்பும் புன்னகையுடன் இரண்டு திருக்கரங்கள் என கண் கொள்ளாக் காட்சியாக அம்பிகை அருள்பாலிக்கின்றாள்.  அம்பிகையின் முன்னர் நந்திகேஸ்வரர், வலப்புறத்தில் சண்டிகேஸ்வரி சந்நிதி உள்ளது.

மதுரை - குன்றக்குடி சாலையில் மதுரையிலிருந்து 60 கி. மீ. தொலைவில் உள்ளது இத்திருத்தலம். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/11/w600X390/shrilordnatrajar.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/11/மஹாலட்சுமி-தரிசித்த-கௌரி-தாண்டவம்-2805945.html
2801004 வார இதழ்கள் வெள்ளிமணி பால் குடித்த தூர்வாசபுரம் திருப்பாதாளேச்சுவரர்! DIN DIN Friday, November 3, 2017 12:42 PM +0530 இவ்வூர் திருமா, துருமா, துர்வாசபுரம், தூர்வாசபுரம் ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள சுரங்கத்தில், தூர்வாச முனிவர் வாழ்ந்து தவம் புரிவதாகவும் அவர் இறைவனை வணங்குவதாகவும் கூறுகின்றனர். இவ்வூரில் அதிர்வேட்டு, வாணம் போன்ற பேரொலி எழுப்பும் வெடிகளை யாரும் வெடிப்பதில்லை. அந்த பேரோசைகள் துர்வாச முனிவரின் தவத்துக்கு இடையூறாகும்.  இம்மரபை மீறி யாரேனும் வெடி வெடித்தால் அவருடைய கைகள் வெடிப்பட்டு ஊனமாகி விடுகிறது என்று இன்றுவரை நம்பப்படுகிறது. அதனால் கோயிலை சுற்றி இருப்பவர்கள் யாரும்  வெடி வெடிப்பதில்லை. 

திருப்பாதாளேச்சுவரர் திருக்கோயிலின் சுவாமி கருவறையின் வெளிப்புறம் வடபக்கச் சுவரிலுள்ள கல்வெட்டு, திருப்புவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீவல்லபதேவர் ஆட்சி ஆண்டின் முப்பத்து மூன்றாவது ஆண்டில் வெட்டப்பட்டது. இதில் குறிக்கப் பெறும் பாண்டிய மன்னன் காலம் கி.பி.1030. பாண்டியர் கல்வெட்டு, கி.பி.1030 என காணப்படுவதால் இக்கோயில் அதற்கு முன்பே சிறந்திருக்க வேண்டும்.  

திருப்பாதாளேச்சுவரர் திருக்கோயில் உருவானமைக்கு ஒரு நாட்டுப்புறக் கதை வழங்குகிறது. திருமாவிலிருந்து நாள்தோறும் ஒருவன் ராசசிங்கமங்கலத்துக்குப் (இராங்கியம்) பால் கொண்டு சென்றான். அவன் பால் கொண்டு செல்லும் போது குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும், ஏதோ ஒரு காரணத்தால் பால் கொட்டிப் போகும்; கலயமும் உடைந்துவிடும். இவ்வாறு பால் கொட்டிப் போவதைக் கண்ட  அவன் அவ்விடத்தில் கரடு முரடாக இருந்த பகுதியைத் தூய்மை படுத்த வேண்டும் என்று மண் வெட்டி, அரிவாள்,கோடரி போன்ற கருவிகளுடன் வந்தான். அவன் அங்கிருந்த மேடுகளையும் கற்களையும் பெயர்த்த போது, ஒரு கல்லைக் கண்டான். அவன் அக்கல்லே தன்னைத் தினமும் தடுக்கிவிழச் செய்து பாலைக் கொட்டிற்று என்பதைக் கண்டு கொண்டான். 

அந்தக் கல்லை அடியோடு தோண்டி எடுக்க வேண்டும் என்ற வெறி அவனிடம் தென்பட்டது. வெட்ட வெட்ட அந்தக்கல்லின் அடிப்பாகத்தைக் காணமுடியவில்லை. பிறகுதான் அக்கல் சிவலிங்க வடிவம் என்றுணர்ந்தான். இக்கல்தான் தன்னுடைய பாலைத் தினமும் தடுத்துக் குளித்துக் குடித்தது என நினைத்தான். அதன் பின்பு இறைத் தன்மையை உணர்ந்த அவன் நாள்தோறும் பால் கொண்டு போகும்போது அந்த சிவலிங்கத்திற்கும் சிறிது ஊற்றிவிட்டுப் போகலாயினான். இதனால் அவனுடைய ஆடு, மாடுகளும் நிலமும் பயிரும், குடும்பமும் பெருகின. இவ்வாறு காட்டில் மண்ணுக்குள் மறைந்திருந்த சிவலிங்கம், அடியார்க்கு வெளிப்பட்டது. அதன் காரணமாக  திருக்கோயில் உருவாயிற்று. திருமாத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் திருப்பாதாளேச்சுவரர் தானே தோன்றி உருவான சுயம்புலிங்க மூர்த்தியாவார். 

இங்கே கருவறை கட்டப்பட்டபோது விநாயகர், சகஜரிநாயகி, சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன் ஆகியவைகள் நிறுவப் பெற்றிருக்கவேண்டும். திருக்கோயிலின் இரண்டாவது கால கட்ட வளர்ச்சியில் வயிரவன் கோயில், அம்மன் கோயில் சந்நிதி மண்டபம் இரண்டும் கட்டப்பட்டன. இதனை மெய்ப்பிக்கும் கல்வெட்டு அம்மன் சந்நிதியில் காணப்படுகிறது.  

பொதுமக்களால் இக்கோயில் அருள்மிகு பாதாளேச்சுவரர் கோயில் என வழங்கப்பெற்றாலும் அருள்மிகு ஸ்ரீசுந்தரேஸ்வரர் கோயில் என்றே குறிக்கப்பெற்றுள்ளது. 
கோயிலின் அம்மை பாதம்பிரியாள் என்ற பெயருடன் திகழ்கின்றாள். முற்காலத்தில் சகஜரி நாயகி என்று வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. பெண்கள் தம் திருமணத்திற்கு தடைகள் ஏற்படும்போது அவை நீங்க வேண்டும் என்று இறைவியிடம் பிரார்த்தனை செய்து கொண்டால், அத்தடைகள் நீங்கி விரைவில் திருமணப் பேறு அடைகிறார்கள். அப்படி திருமணம் நடந்தவர்கள் தம் நேர்த்திக்கடனாக வளையல்களைக் காணிக்கையாக செலுத்துவது வழக்கம். 

பைரவர் சிறப்பு:  தன் வடிவங்களில் ஒன்றான பைரவ மூர்த்தியை கோயில்களில் பாதுகாவலுக்காக வைத்துள்ளார் சிவன். இவருக்கு காவல் பிராணியான நாய் வாகனமாக இருக்கும். ஒரு காலத்தில் கோயில் பூட்டிய பிறகு, சாவியை இவரது சந்நிதி முன் வைத்து சென்றுவிடுவர். மறுநாள் காலையில் இவருக்கு பூஜை செய்து சாவியை எடுத்து கருவறை நடையைத் திறப்பர். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்தவர் பைரவர். அந்த சக்தி குறையாமல் இங்குள்ள பைரவர் அருள்பாலிக்கிறார். 

இக்கோயிலில் குழந்தைகளுக்காக பூஜை செய்வது மிக, மிக சிறப்பு. அவர்களின் ஆரோக்கியம், கல்வி நலனுக்காக தனியாக பூஜை செய்ய வேண்டும். பைரவர் மிகவும் உக்கிரம் வாய்ந்தவர் என்பதால், கற்பூர ஆரத்தியைக் யாருக்கும் காட்டுவதில்லை.  ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சம்பா சஷ்டிவிழா என்ற பெயரில் சிறப்பாக நடைபெறுகிறது. பைரவர் சந்நிதியில் பூசணிக்காயை பாதியாக வெட்டி, அதனுள் நல்லெண்ணையை ஊற்றி விளக்கேற்றிப் பிரார்த்தனை செய்தால் குடும்பத்தில் ஏற்படும் பில்லி சூனியங்கள் எல்லாம் நீங்கிவிடும் என்கின்றனர். 

அதேபோல் கால பைரவருக்குச் சாம்பிராணி புகை போட்டு வழிபாடு செய்தால் திருடு போன பொருட்களெல்லாம் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு. ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கு வந்து சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொள்வது மிகச்சிறப்பாகும். 

வழித்தடம்:  புதுக்கோட்டை மாவட்டம்,  திருமயத்திலிருந்து நகரப்பேருந்து குறிப்பிட்ட நேரங்களில் இயங்கி வருகிறது. ஆட்டோ வசதிகளும் உண்டு.  
தொடர்புக்கு- 94427 62219/  97512 46246. 
 - பொ.ஜெயச்சந்திரன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/3/w600X390/vm2.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/03/பால்-குடித்த-தூர்வாசபுரம்-திருப்பாதாளேச்சுவரர்-2801004.html
2801000 வார இதழ்கள் வெள்ளிமணி கருட பலன் DIN DIN Friday, November 3, 2017 11:46 AM +0530 வானில் பறக்கும் கருடனை தரிசிப்பதால் ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் பலன் கிடைக்குமென சொல்லப்படுகிறது.  ஞாயிறு- நோய்கள் நீங்கும். திங்கள்- குடும்பத்தில் சுபம் ஏற்படும். செவ்வாய்- தைரியம் பிறக்கும். புதன் - எதிரிகள் மறைவர்.  வியாழன்- நீண்ட ஆயுள் கிடைக்கும். வெள்ளி - லட்சுமியின் அருள் கிடைக்கும். சனி- முக்தி கிடைக்கும்.
- கே. லலிதா


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/3/w600X390/v8.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/03/கருட-பலன்-2801000.html
2800999 வார இதழ்கள் வெள்ளிமணி கேரோ தந்த தந்தக்கட்டில்! DIN DIN Friday, November 3, 2017 11:45 AM +0530 கிழக்கிந்திய கம்பெனியினர் பவானியை மாவட்டத் தலைநகராகக் கொண்டு ஆண்டபோது வில்லியம் கேரோ என்பவர் மாவட்ட  ஆட்சித் தலைவராக இருந்துவந்தார். அவர் ஆங்கிலேயராதலால் பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. வேதநாயகியின் தோற்றத்தில் மனதைப் பறிகொடுத்த அவர் கோயிலின் கிழக்குப்பகுதியில் துளை செய்து வழிபாடு நேரத்தில் அம்மனை வணங்கி வந்தார். நாளடைவில் அம்மனின் அடியவரானார்.
ஒருநாள், இரவு மாளிகையில் கேரோ அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தபோது அவரை அழகிய பெண்ணொருத்தி எழுப்பி கீழே அழைப்பதாக உணர்ந்து கீழே வந்ததும் கட்டடம் இடிந்து விழுந்தது.  
இந்த அதிசயம் வேத நாயகியின் அருளால் நிகழ்ந்தது என எண்ணிய கேரோ தன் நினைவாக, "1804 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் நாள் அன்று' எனக்குறிப்பிட்டு தனது கையொப்பமிட்டு தந்தக் கட்டில் ஒன்றை அம்மனுக்கு வழங்கினார். அந்தக் கட் டில் அம்மன் பள்ளியறையில் இன்றும் உள்ளது.
- கோட்டைச் செல்வம்

]]>
http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/03/கேரோ-தந்த-தந்தக்கட்டில்-2800999.html
2800998 வார இதழ்கள் வெள்ளிமணி நிறம் மாறும் சிவன்! DIN DIN Friday, November 3, 2017 11:45 AM +0530 உறையூரில் உள்ள பஞ்சவர்னேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் பெயருக்கு ஏற்றாற்போல 5 நிறங்களை 5 கால பூஜையின்போது காட்டுகின்றார். தங்கம், வெண்மை, செம்மை, கருமை, புகைமை என 5 நிறங்களை பிரம்மனுக்கு காட்டியருளினார். இப்போதும் ஒவ்வொரு கால பூஜைக்கும் இறைவன் ஒவ்வொரு நிறமாக காட்சி தருகிறார். 
*ராமேஸ்வரத்தில் திருப்பதி தேவஸ்தானம் "திருப்பதி' என்ற பெயரில் கட்டி கொடுத்திருக்கும் 16 அறைகளுக்கு சூட்டப்பட்டிருக்கும் பெயர்களும் ராமாயணத்தை நினைவூட்டுவதாகவும்  பக்தித் தொண்டாற்றிய பெரியார்களை சிறப்பிப்பதாகவும் அமைந்துள்ளன.
*மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் உள்ள துர்க்கையம்மன் கோயிலில் யானை மூலம் அம்மனுக்கு பூஜை நடத்தப்படுகிறது. இது எங்கும் இல்லாத ஓர் அற்புதமான பூஜையாகும். 
* திருவாரூர் தூவா நாயனார் கோயிலில் உள்ள அசலேஸ்வரர் திருக்கோயில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டுமே விழும். மற்ற திசைகளில் விழாது.  
- ஆறுபாதி புகழேந்தி

]]>
http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/03/நிறம்-மாறும்-சிவன்-2800998.html
2800997 வார இதழ்கள் வெள்ளிமணி ஆலயத்தில் சுவாமி தரிசனம் எப்போது செய்யலாம்?  DIN DIN Friday, November 3, 2017 11:44 AM +0530 கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுவதற்கும் சில காலநேரங்கள் உண்டு. காலையில் கோயில் திறந்த உடனேயே சென்று சாமி கும்பிடக் கூடாது. குருக்கள் முதலில் தீபம் ஏற்றி ஆராதனை காட்டிய பிறகே நாம் சென்று தரிசிக்க வேண்டும். திரை போடப்பட்ட காலநேரங்களிலும் சந்நிதியில் தீபம் இல்லாத போதும் சாமி தரிசனம் செய்யக்கூடாது. கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பி வந்ததும் உடனே கால்களைக் கழுவக்கூடாது. சிறிது நேரம் கழித்த பின்னரே காலைக் கழுவ வேண்டும். 
- முக்கிமலை நஞ்சன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/5/19/1/w600X390/god.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/03/ஆலயத்தில்-சுவாமி-தரிசனம்-எப்போது-செய்யலாம்-2800997.html
2800995 வார இதழ்கள் வெள்ளிமணி திருஆவினன்குடி பெயர் வந்தது எப்படி?  DIN DIN Friday, November 3, 2017 11:43 AM +0530 பழநியின் மற்றொரு பெயர் திருஆவினன்குடி. லட்சுமி, காமதேனு, சூரியன், பூமாதேவி, அக்னி ஆகியோர் முருகனை வழிபட்ட இடம் என்பதால் " திருஆவினன்குடி'  எனப் பெயர் பெற்றது. திரு (லட்சுமி), ஆ (காமதேனு), இனன் (சூரியன்), கு (பூமாதேவி), டி (அக்னி) ஆகியோரின் பெயர்களை குறிப்பாகக் கொண்டு அமைந்த பெயர் தான் " திருஆவினன்குடி!' 
- என்.  கிருஷ்ணமூர்த்தி

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/3/w600X390/v7.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/03/திருஆவினன்குடி-பெயர்-வந்தது-எப்படி-2800995.html
2800994 வார இதழ்கள் வெள்ளிமணி நாடும் வீடும் காப்பாள்..காட்டுச்செல்லி அம்மன்! DIN DIN Friday, November 3, 2017 11:40 AM +0530 விமானம், ராஜகோபுரம், கொடிமரம், பிரகாரம், திருமதில் எதுவும் கிடையாது. தெய்வம் உண்டு!  இந்த தெய்வத்தின்  மேல் அமைந்துள்ள வேதைக்கொடி என்னும் மூலிகைக் கொடி பசுமையாய் அழகாய் பந்தலாய்ப் படர்ந்து நின்று அம்மனுக்கும் வரும் பக்தர்களுக்கும் நிழல் தருகிறது. 

நாம் பயன்படுத்தும் சிறிய  வெற்றிலையை போல் இரண்டு மடங்கு தடிமனும் சிறிய அளவும் உள்ள இலைகள் கொண்ட சித்த மருத்துவத்துக்குப் பயன்படும் கொடி இது. இந்த  இலையில் வாசம் எதுவும் இல்லை. கொடியில் பால் வராது. பூ பூக்காது , காய்க்காது.   ஒவ்வொரு மார்கழி முடிந்து தை மாதம் வரும் போது இலைகள் எல்லாம் கொட்டிவிடும்; பங்குனி மாதம் 15 ஆம் நாளுக்குள் புத்திலைகள் தோன்றி புது நிழல் தந்து கோடைக் காலத்தின் வெம்மையைக் குறைத்து விடும் இந்த வேதைக் கொடி பந்தல்.  இப்பந்தலின் கீழே கொலு வீற்றிருக்கிறாள் அன்னை காட்டுச்செல்லி! அவள் இங்கு குடிகொண்டு காக்கும் வரலாறு அதிசயம் நிறைந்தது.

தாருகாசுரன் தன் மரணம் ஒரு  பெண்ணால் தான் நடைபெற வேண்டும் என்று வரம் பெற்றான். தேவர்களுக்கும் மக்களுக்கும் கடும்  துன்பம் தந்து கொண்டு இருந்தான். அவனை அழிக்க  சிவன் சக்திக்குக் கூற, சக்தியின் கண்ணிலிருந்து ஒரு  கொடிய விஷ சக்தி  உருவானது.  அதன் கோபாக்னியில் தாருகன் எரிந்து சாம்பலானான்.  அந்த கோபசக்தி ஒரு குழந்தையாக உருவெடுத்தது.  அதற்கு வீரியம்  கலந்த பாலை ஊட்டி மேலும் விஷசக்தியை அதிகமாக்கினாள் சக்தி. சக்தியின் அதீத நோக்கமறிந்த  சிவன் அந்த விஷக்குழந்தையையும் அதன் பாலையும் தன்னுள்ளேயே ஒடுக்கிக் கொண்டார்.  சக்தி வெகு கோபம்  கொண்டு கோர தாண்டவம் ஆடினாள். ஆடலரசன் அவளது ஆட்டத்தை அடக்க  நாட்டியப் போட்டிக்கு  அழைத்தார். போட்டியின் நடுவில் தன் காதினை அலங்கரித்துக் கொண்டிருந்த தோடினை  விழச் செய்து மீண்டும் அதனைத்  தன் காலால் எடுத்து பொருத்திக் கொண்டார். அந்த உக்ர கோப சக்தி அவ்வாறு  ஆடுவது சாத்தியம் இல்லை என நின்றாள். அந்நேரத்தில் சண்டி சிவனுடன்  ஆடிய அந்த சண்ட தாண்டவம் என்னும் போட்டியில் தோற்றதாகக் கருதினாள்.

சண்ட தாண்டவத்தில் தோற்ற அன்னை காளிக்கு தன் குழந்தையின் அழுகுரல் கேட்கவே, காதைப் பொத்திக்கொண்டு  வழியும் கண்ணீரோடு வேகமாக ஊரின் வடக்குப் புறமாய்  இருந்த காட்டிற்குள் சென்று வேதைக் கொடிகள் பின்னிப் படர்ந்து இருந்த பந்தலின் கீழ் அமர்ந்து  புற்றாக மாறிப் போனாள். அவ்வாறு அமர்ந்த நாள் ஒரு வியாழக்கிழமை ஆகும்.  ஊரார் அது முதல் வியாழக் கிழமைகளில் வந்து பகலில் பொங்கலிட்டு படையல் இட்டு வணங்கி அவளை தங்கள் குலசாமியாக வழிபட்டதுடன்  மாலை 6.00 மணிக்கு காட்டை விட்டு வெளியேறுவதையும் வழக்கத்தில் கொண்டனர்.

காட்டில் இருக்கும் அந்த காலாகாரியை ஊருக்குள் அழைத்துச் செல்ல முயன்று உத்தரவு கேட்டனர். தான் ஊருக்குள் வர விரும்பவில்லை ஊரில் குழந்தைகள் அழும் குரலோ சண்ட தாண்டவத்தின் போது சிவன் கால் பதியும்போது உண்டான  உலக்கை இடிக்கும் சத்தமோ கேட்கக் கூடாது என்றாள். பலமுறை முயன்றும்  அருகில் உள்ள ஆலங்குளம் வரை  மட்டுமே அழைத்துச் செல்ல முடிந்தது.  மீண்டும் காட்டுக்குத்திரும்பி வேதைக் கொடி பந்தலின் கீழேயே அமர்ந்து அனைவருக்கும் அருள் வழங்குவதும் மாலை 6.00 மணிக்கு மேல் வெளி வந்து காட்டைச் சுற்றி உலாவி அவளை வழிபடுவோரின் அல்லல்களைத் தீர்த்துக் காப்பாற்றினாள்.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலம்.. அந்த பகுதிக்கு  வந்த வெள்ளைத்துரை ஏரிக்கரை எதிரில்  முகாம் செய்து  உலவிக் கொண்டிருந்த துரையின் கண்ணில் மறுகரையில் சிவப்பு நெருப்புப் பிழம்பு ஒன்று நகர்ந்து கொண்டிருந்தது கண்ணில் பட்டது. அது இப்பகுதி மக்களின் காவல் தெய்வம் என்பதையும் காலையில் சென்று பார்க்க முடியும் எனக்கேட்டுத் தெரிந்து கொண்டு கூடாரத்தில் ஓய்வெடுக்கப் போனான்.

நள்ளிரவு  சலங்கை சத்தமும் கற்பூர வாடையும் வர, துரை கூடாரத்தை விட்டு வெளியே வந்தான். அதற்குள் கூடாரத்திற்குள்  ஓசை கேட்க  சென்று பார்த்தான். அவனது  படுக்கையில்  ஒரு பெரிய கரு நாகம்  ஊர்ந்து சென்றதை அடித்து தலையை நசுக்கி இருந்ததைப் பார்த்து  அதிர்ந்தான். மறுநாள்  துரையைக் காத்தது  அந்த எல்லைச் சாமி காட்டுச் செல்லியே  என்று ஊரார் கூறினர். வெள்ளைத் துரையால் புற்றில் குடிகொண்ட புனிதவதியின் வரலாறை   நம்பமுடியவில்லை.

கூடாரத்துக்குத் திரும்பிட ஏறிய குதிரை எல்லை தாண்டியதும் முன் கால் முறிந்து விழுந்தது. நடந்து கூடாரத்திற்குச் சென்றதும்  உடல் வியர்த்து நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுந்து துடி துடித்தான் துரை.  ஊரார்  அபிஷேக நீரைத் தெளித்து கோயிலிலிருந்து  வந்த எலுமிச்சங்கனியைக்  கொடுத்து படைத்த  பொங்கல் சிறிதளவு எடுத்து வாயிலிட,  அனைத்து அல்லல்களும் நீங்கி எழுந்தமர்ந்து அம்மன் இருந்த திசை நோக்கி கை எடுத்து கும்பிட்டான். 

இத்தனைச் சிறப்புகளும் கொண்ட காட்டுச்செல்லியம்மன் கோயில் திருவள்ளூர் மாவட்டம்,  பெரியபாளையத்திலிருந்து ஊத்துக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் தண்டலம் அடுத்துள்ள சூலைமேனி ஊரிலிருந்து தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்பேட்டைக்குச் செல்லும் சாலையில்  சுமார் 6  கி.மீ தொலைவில் செங்கரை கிராமத்தில் அமைந்துள்ளது. சுற்றிலும் சுமார்  40 ஏக்கர் பரப்புள்ள காட்டில் அமைந்த இயற்கைக் கோயில். காட்டினை ஒட்டியுள்ள  ஏரியின் மறு கரையில் இருந்தோருக்கு  செக்கச் செவேல் என அம்மன் காட்சி தந்ததால் செங்கரை என இந்த  கிராமம் வழங்கப்படுகிறது. 

தினமும் அபிஷேகமும் ஒரு கால பூஜையும் நடைபெறும் இத்திருக்கோவிலில் அம்மன் முதலில் வந்து அமர்ந்த நாளிலும் புற்றிலிருந்து வெளி வந்து சுய உருக் காட்டிய நாளான வியாழக் கிழமையிலும் அம்மனின் அருட்பார்வை அதிகம் என்பதால் அதிக அளவு மக்கள் வருகையும் உண்டு. ஞாயிற்றுக் கிழமைகளில் வேண்டுதல் செய்வோரும்  மற்ற நாள்களில் சுமாராகவும் மக்கள் வரவு இருக்கும்.

பலருக்கு குல தெய்வமாக இருப்பதால்  வீட்டில் எந்த நிகழ்ச்சிக்கும் முதலில் அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டே  துவங்குவர்.  பிள்ளைச் செல்வம் வரம் வேண்டுவோர்  9  வாரம் வந்து  வணங்கி பலன் பெற்று குழந்தைக்கு செல்லன், செல்லி எனப் பெயர் சூட்டி மொட்டை அடித்து காதணி விழா நடத்துவர். நோய் நொடி தீர வெற்றிலை மாலை சார்த்துவதும்  திருமணத்தடை  நீங்க, வேண்டி பிரார்த்தனையாக வஸ்திரத்தைக் கிழித்து மரத்தில் கட்டிப் பலன் பெறுவதும்; எதிரிகள் வாய்க்குப் பூட்டுப் போடும் பழக்கமும் இங்கு நடைமுறையில் உள்ளது.

ஆடி மாதம் கூழ் வார்த்தல்,  காய்கறி அலங்காரமும் நடைபெறும்.  சித்திரை 1 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று உளுந்து வடை செய்து மாலை சார்த்தி வழிபாடு செய்கின்றனர். கார்த்திகை தீப வழிபாடும் உண்டு.

வியாழக்கிழமைகளில் சூலைமேனியிலிருந்து அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மற்ற நாள்களில் அதிக அளவில் ஷேர் ஆட்டோக்கள் இயங்குகின்றன.
 தொடர்புக்கு: 93823 16493/  94440 22651.
- ஆர். அனுராதா

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/3/w600X390/v6.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/03/நாடும்-வீடும்-காப்பாள்காட்டுச்செல்லி-அம்மன்-2800994.html
2800992 வார இதழ்கள் வெள்ளிமணி சனிபகவானின் அருளைப் பெற செய்ய வேண்டியது:  Friday, November 3, 2017 11:26 AM +0530 முடவர்களுக்கும் அநாதைகளுக்கும் உதவுவதன் மூலமும் தன்னலம் கருதாது மக்கள் தொண்டாற்றுவதன் மூலமும் சனிப்பிரீதி செய்த பலன் கிடைக்கும். சனிக்கிழமைகளில் சனிபகவானை எள் தீபமேற்றி வழிபட்டும் வரவேண்டும். அவருக்கு உண்டான தலங்களான திருநள்ளாறு, திருக்கொல்லிக்காடு, குச்சனூர் போன்ற தலங்களுக்கும் சென்று வழிபட்டு வரவும். 

"பிரேத சம்ஸ்காரம்' என்ற இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கோ, எரிப்பதற்கோ உதவுவது மிகவும் உயர்ந்த சனிப்பிரீதியாகும் என்று முன்னோர்கள் கூறியுள்ளார்கள். குறிப்பாக, அநாதைப் பிணங்களை எரிக்க, அடக்கம் செய்ய நம் தேகத்தாலோ, பணத்தாலோ உதவி செய்பவர்கள் சனிபகவானின் அருளை விரைவில் பெறுவார்கள். அவர்களுக்கு சனிபகவானால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து விடும் என்பது உண்மை. அதனால்தான் என்னவோ அந்த காலத்தில் "பருப்புக்கு (திருமணம் போன்ற சுப காரியங்கள்) போகாவிட்டாலும் நெருப்புக்கு (சாவுக்கு) போகவேண்டும்'  என்ற பழமொழி உண்டானது என்று கூறவேண்டும். 

சனிப் பிரதோஷம்:  சுக்லபட்ச (வளர்பிறை) திரயோதசி திதியும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) திரயோதசி திதியும் பிரதோஷ தினம் என்று வழங்கப்படுகிறது. இந்த நாளன்று தேவர்கள், அசுரர்கள் திருபாற்கடலைக் கடைந்த காலத்தில் அதில் தோன்றிய விஷத்திற்கு அஞ்சி சிவபெருமானை அடைக்கலமாக, சிவபெருமான் ஆலத்தை (விஷம்) உண்டு அனுக்கிரஹித்தார். இந்தப் பிரதோஷமானது சனி வாரத்துடன் (சனிக்கிழமை) கூடி வருதல் விசேடம் என்று புராணங்கள் கூறுகின்றன. இதை சனிப்பிரதோஷம் என்று கூறுவார்கள். இந்த நாளன்று சிவபெருமானை எண்ணி விரதமிருந்து அனுஷ்டிப்பவர்கள் இஷ்ட சித்தி அடைவார்கள் என்பது உண்மை. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/3/w600X390/v5.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/03/சனிபகவானின்-அருளைப்-பெற-செய்ய-வேண்டியது-2800992.html
2800987 வார இதழ்கள் வெள்ளிமணி நீதியை நேசிப்போர் பேறுபெற்றோர்! DIN DIN Friday, November 3, 2017 11:05 AM +0530 "உடலை திருப்தி செய்ய அப்பத்துக்கும் ரசத்துக்கும் நான் பசிதாகமாய் இருப்பதைவிட அதிகமாக நீதியின் மேல் பசி தாக முடையவனாயிருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாயிருப்பேன்! ஏனெனில் நீதி எனக்கு திருப்தியளிக்குமே!'' என்கிறார் இயேசு. அதைத்தான் மலைப்பொழிவில் நான்காவது முத்தான கருத்தாக, " நீதியின் மேல் பசி தாகமுள்ளோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்'' என்பதாகும். 

உழைக்காதவன் உண்ணலாகாது என திருமறை கூறுகிறது. ஆனால் இன்றைய உலகில் நடப்பதென்ன? நீதியோடு உழைக்காமல் உண்ண நினைக்கிறான். அவன் சொர்க்கம் நரகம் உண்டென்று நம்புவான். தீவினையோடு இறந்தால் ஆன்மா நித்திய நெருப்புக்குச் செல்லும் என்பதையும் நன்கு அறிவான். இருந்தாலும் ஆன்மாவிற்கு உணவூட்ட ஞானத்தையும் நீதியையும் தேடமாட்டான். ஞானமும் நீதியுமானவர் இறைவனே. அந்த ஆன்மாவிற்கு அமுதூட்டுபவர் கடவுளே. அவரே தாயும் தந்தையுமானவர். அதை உட்கொண்ட மனிதன் அதன்பின் ஒருபோதும் தாகமாயிரான். 

"விண்ணிலிருந்து இறங்கிவந்த உயிருள்ள வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவனாவது உண்டால் அவன் என்றுமே வாழ்வான். என் தசை உண்மையான உணவு. என் ரத்தம் உண்மையான பானம், அது நிலை வாழ்வு தரும்' என்கிறார் இறைமகன் இயேசு. (யோவான் 6:55:56) முதலாவது, இறை அரசைத் தேடுங்கள். உங்களுக்கு எல்லாம் சேர்ந்து கொடுக்கப்படும் என்பது இறைவாக்கு. மேலும் இயேசு கூறுவார் "சாவு திருடனைப் போல் வரும். எனவே, விழிப்பாயிருங்கள்' என்கிறார். 

எனவே உயிர் வாழ, உணவும் தண்ணீரும் பெற உழைக்கவேண்டும். அது நீதியாக, நேர்மையாக, லஞ்ச ஊழல் இல்லாமல் பிறருக்கு தீங்கு செய்யாமல் உழைப்புக்கேற்ற ஊதியத்தை கொடுத்து சுயநலமில்லாது, இறை அன்பில் வாழ்வது உடலின் உயிராக இருக்கும் ஆன்மாவிற்கு ஊட்டமளிப்பதாகும். அதுவே உண்மையான பசியாய் இருக்க, நாம் விண்ணக நிறைவைப் பெறுவோம்!

நீதியின்பால் பசி தாகமுள்ளோர் பேறுபெற்றோர் என்று பார்த்தோம். தொடர்ந்து மலைப்பொழிவின் எட்டாவது பாக்கியமாக " நீதியின் நிமித்தம் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுடையதே'' என்பது பற்றி இறைமகன் இயேசு கூறிய விளக்கமாவது, 
"மனிதன் எந்த அளவுக்கு சாத்தானாகி விட்டானென்றால் எங்கெங்கே நல்லது இருந்தாலும் அதை பகைக்கிறான். நல்லவனாயிருப்பவனையும் பகைக்கிறான். நல்லவனாயிருப்பவன் மவுனமாயிருந்தாலும்கூட அவன் தன்னை குற்றம் சாட்டுவது போலவும் கண்டிப்பது போலவும் அவனைப் பகைக்கிறான். உண்மையான விசுவாச முடையவனின் விசுவாசம், ஒரு கள்ள விசுவாசமுடையவனின் கபடத்தை அதிக தெளிவாகக் காணும்படிச் செய்கிறது. தான் வாழும் முறையினால் எப்பொழுதும் நீதிக்கு சாட்சியாக இருப்பவன் அநீதர்களால் பகைக்கப்படத்தான் முடியும் என்பது உண்மையே. 

இறைமகன் இயேசுவை கொலை செய்ய வேண்டி, அன்றைய ஆளுநர் பிலாத்துவிடம் யூத தலைமை குருக்கள் இழுத்துச் சென்று சிலுவைச் சாவை கொடுத்து தீர்ப்பிட ஆளுநரை வற்புறுத்தியபோது ஆளுநர் இயேசுவைப்பார்த்து "நீயார்? எங்கிருந்து வந்தவன் என்ன  செய்தாய் என்று கேட்டபோது இறைமகன் இயேசு இப்படி கூறுகிறார். "உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையை சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்கு செவிசாய்க்கின்றனர்'' என்று. அதற்கு பிலாத்து, அவரிடம் " உண்மையா? அது என்ன?'' என்று கேட்டான் (யோவான் 18:37:38) ஆம் இன்றைய உலகு, பல நேரங்களில் நீதியா? உன் விலை என்னவென்று கேட்கிறது.

"போர்களில் நடப்பது இங்கும் நடக்கிறது. அன்பின் புனித கலையில் முன்னேறுவதைவிட, வதை செய்கிற சாத்தானுக்குரிய கலையில் மனிதன் கூடுதல் முன்னேறுகிறான். அவன் குறுகிய வாழ்வுடைய உடலை வதைக்க முடியும். நித்திய வாழ்வு அடையும் ஆன்மாவை அழிக்க முடியாது. அப்படி நீதிக்காக வதைகளால் உயிர் நீத்த ஆன்மாக்களுக்கு மோட்ச ராஜ்ஜியத்திலே அரச ஆசனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன'' என்கிறார் இறைமகன் இயேசு தன் மலைப்பொழிவில். இதை உள்ளத்தில் நிறுத்துவோம்! மேலும் நீதிக்காக துன்புறும் இடத்தில் வன்முறைக்கு இடமில்லை என்பதை அறிய வேண்டும். இறைமகன் இயேசு கூறியுள்ளது போன்று தீமை செய்வோரை எதிர்க்க வேண்டாம். மாறாக உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள் (மத்தேயு:5:39:43)
- ஜி.ஐ. பிரான்சிஸ்


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/3/w600X390/v4.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/03/நீதியை-நேசிப்போர்-பேறுபெற்றோர்-2800987.html
2800986 வார இதழ்கள் வெள்ளிமணி நிகழ்வுகள் DIN DIN Friday, November 3, 2017 11:02 AM +0530 குருபூஜை விழா
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, 69 - திருமூலர் சாத்தனூர் கிராமம், திருமூலநாயனார் திருக்கோயிலில் ஒன்பதாம் ஆண்டு குருபூஜை விழா நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: 94444 31691.
நாள்: 3.11.2017.
*******************
திருவண்ணாமலை மாவட்டம், போளூர், ஸ்ரீமத் விடோபா சுவாமி மடத்தில் ஸ்ரீமத் விடோபா சுவாமிகளின் 108 ஆவது ஆண்டு குருபூஜை மற்றும் ஆராதனை பெருவிழா நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: 94424 55933.
நாள்: 8.11.2017.
உழவாரப்பணி
கவரப்பேட்டை, அரியதுறை கிராமம் , அருள்மிகு வரமூர்த்தீஸ்வரர் திருக்கோயிலில், திருக்கோயில் உழவாரப்பணி மன்றத்தினர், சார்பில் உழவாரப்பணி,  வெள்ளையடிக்கும் பணி,  திருமுறை இன்னிசை மற்றும் கூட்டு வழிபாடு ஆகியவை நடைபெறுகின்றது. 
நாள்: 5.11.2017.
திருத்தலத் திருப்பணி
சைவம் தழைத்தோங்கிய காலம் அது. பரந்து விரிந்த சோழ தேசத்தின் எல்லா கிராமங்களிலும் பிரமாண்டமான சிவாலயங்கள் எழுப்பப்பட்டிருந்தன. அந்தக் கோயில்களுக்கு ஏராளமான நிலங்களும் மாடுகளும் நிவந்தமாக அளிக்கப்பட்டு செவ்வனே பராமரிக்கப்பட்டன. அதே காலகட்டத்தில் பாண்டிய தேசத்திலும், சேரநாட்டிலும், பல்லவர்களின் எல்லைக்கு உட்பட்ட ஊர்களிலும் வைணவம் சிறப்புறத் தழைத்திலிருந்தது. எங்கு திரும்பினாலும் சிவாலயங்களும் வைணவக் கோயில்களும் சரிசமமாகவே இருந்தன. ஊரில் ஏதேனும் விசேஷம், ஆடிப்பாடுதல், சொற்பொழிவுகள் நடத்தப்பட்டன. 
சிவனாரின் மீது மாறாத பக்தி கொண்ட கண்டராதித்த சோழ மன்னன், ராமாயணத்தையும் ஸ்ரீராம அவதாரத்தையும் கேட்கக் கேட்கச் சிலிர்த்துப் போனான். அவருக்கு கோயில் எழுப்பி வழிபட முடிவு செய்தான். தஞ்சாவூரின் தெற்குப்பகுதியில் ஸ்ரீகோதண்ட ராமருக்கு அழகிய கோயிலைக் கட்டினான். அற்புதமான கோலத்தில் சீதாதேவி லட்சுமணர் சமேதராக கோதண்டராமர். இவரைத் தரிசித்தாலே நம் பாவமெல்லாம் நீங்கும்.  
இங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீகோதண்டராமன் பேரழகுடன் அத்தனை செளந்தர்யத்துடன் சேவை சாதிக்கிறான். பிரிந்த தம்பதிகள், குழந்தைப்பேறு ஏற்படாதவர்கள் ஆகியோர்க்கு மிகுந்த வரப்பிரஸாதியாக பரமானுக்ரஹம் செய்யும் ஸ்ரீராமன் இவர். இங்கு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கோதண்டராமருக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சார்த்தி வழிபட்டால் விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்.  இவ்வாலயத்தில் திருப்பணிகள் நடைபெற்று முடிந்து,  23-11-2017 அன்று குடமுழுக்கு நடைபெறுகிறது.   
தொடர்புக்கு: 78710 42423.
- பொ.ஜெயச்சந்திரன்
 

]]>
http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/03/நிகழ்வுகள்-2800986.html
2800985 வார இதழ்கள் வெள்ளிமணி ஐயத்தை மெய்யாக்காதே DIN DIN Friday, November 3, 2017 10:58 AM +0530 விண்கலத்தில் நுண்ணியதையும் நுணுகி ஆயும் கணினி யுகத்தில் வலைதளங்களில் முகநூலில் அகத்தில் தோன்றும் அநாவசிய அநாகரித ஐயங்களை எல்லாம் மெய்யாக்கி மேதினியில் உலவவிட்டு கலகம் விளைவிப்போருக்கும் களங்கம் உண்டு பண்ணுவோருக்கும் விளங்கும் வண்ணம் வள்ளல் நபி (ஸல்) அவர்கள் " யார் சந்தேகத்திற்கு உரியவற்றைத் தவிர்த்து கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் மானத்தையும் காப்பாற்றி கொள்கிறார்'' என்று நவின்றதை நமக்கு உரைக்கிறார் நூஃமான் பின் பஷீர் (ரலி) நூல்- முஸ்லிம்.

சந்தேக நோய் சகலரிடத்திலும் சகவாசம் செய்யும். அதற்கு யாரும் பகையே கிடையாது. ஆனால் அது புகைய ஆரம்பித்தால் உலக பகையே உருவாகும். "சந்தேக எண்ணங்களைப் பற்றி எச்சரிக்கிறேன். சந்தேகம் பொய்யான பேச்சாகும்'' என்ற பெருமானார் நபி (ஸல்) அவர்களின் அருள்மொழியை அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம்.

நம்பிக்கையாளர்கள் சந்தேகங்களிலிருந்து விலகி கொள்ள வேண்டும். சந்தேகங்களில் சில பாவங்களாக இருக்கின்றன. பிறரின் குற்றங்களைத் துருவி துருவி விவசாரிப்பது விபரீதத்தை விளைவிக்கின்றது என்று எச்சரிக்கிறது எழில்மறை குர்ஆனின் 49-12 ஆவது வசனம். இவ்வசனத்திற்குச் சந்தேகம் என்பது ஒரு பொய் கூற்று. சந்தேக எண்ணங்களைத் தவிர்த்து கொள்ள வேண்டும்., சந்தேக எண்ணங்கள் குற்றம் புரிய கூட்டிச்செல்லும் என்று விளக்கம் தருகின்றனர். ஒருவரைப் பற்றி நன்கு அறியாத அவரைப் பற்றிய மற்றொருவரின் கருத்து சரியாகவும் இருக்கலாம்; தவறாகவும் அமையலாம். எண்ணியதைத் திண்ணியமாய் தெரியாதவரைப் பிறரிடம் கூறுவது குற்றமாகும். 

"நடைபாதை குறித்து உங்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் ஏழு முழங்கள் அகலம் உள்ள நிலம் பொது வழியாக ஆக்கப்படும்'' என்ற அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தீர்வைத் தெரிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) நூல்- முஸ்லிம். நடைபாதை அமைப்பதில் அந்நடைபாதையை உருவாக்குவோர் உபயோகிப்போர் இடையே ஒத்த கருத்து ஏற்படாமல் ஒருவருக்கொருவர் இடையே ஐயம் ஏற்பட்டு அவரவர் ஐயத்தை மெய்யாக்க முற்பட்டு மோதல் உண்டாவதைத் தடுக்க இந்த நந்மொழியை நவின்றார்கள் நந்நபி (ஸல்) அவர்கள்.  

"நீங்கள் உண்மையை அறிந்துகொண்டே  அதனை மறைத்து பொய்யை உண்மை என புரட்டிவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறது குர்ஆனின் 2-42 ஆவது வசனம். முந்திய இறைத்தூதர்களைப் பின்பற்றியோர் காலத்திற்கேற்ப கருத்துகளை மாற்றி உண்மையை மறைத்து பொய்யை உலவவிட்டு வேதத்தை மாற்ற முயற்சித்ததைக் கண்டிக்கிறது இவ்வசனம். இவ்வகை தகாத மாற்றங்கள் மனிதர்களைப் பாழ்படுத்தி அறவழியிலிருந்து விலகி பிற வழிகளில் தரமாய் திருத்த அல்லாஹ் அவ்வப்பொழுது தூதர்களை அனுப்புகிறான்.

"எதைப்பற்றி உனக்கு அறிவில்லையோ அதனை நீ பின்பற்றாதே'' என்று மொழிகிறது வழிகாட்டும் குர்ஆனின் 17- 36 ஆவது வசனம். ஹலால் (ஆகுமானது) ஹராம் (ஆகாதது- விலக்கப்பட்டது) தெளிவாக உள்ளவை. இவ்விரண்டிற்கும் இடையில் ஐயத்திற்குரியவையும் உண்டு. ஐயத்திற்குள்ளதில் வீழ்ந்து விடுவது விலக்கப்பட்டதில் விழுவது போன்றதே என்ற விளக்கத்தை விளம்புகிறார் நுஃமான் பின் பஸீர் (ரலி) நூல் -புகாரி, முஸ்லிம். உங்களுக்கு ஐயமானதை விட்டுவிட்டு ஐயமற்றதை மெய்யாக கடைபிடிக்க காருண்ய நபி (ஸல்) அவர்கள் ஏவியதை எடுத்துரைக்கிறார் ஹசன் பின் அலி (ரலி) நூல்- திர்மிதீ. 

தெரியாததைத் தெரிந்தது போல் காட்டி நடப்பது கூடாது. பார்க்காத ஒன்றைப் பார்த்ததாக தெரிவிப்பதோ கேட்காத ஒன்றைக் கேட்டதாக கூறுவதோ தெரியாத ஒன்றைத் தெரிந்ததாக நெஞ்சறிய வஞ்கமாக தெரிவிப்பதோ  கூடாது. பொய்சாட்சியும் இதில் அடங்கும். எச்செய்தியையும் அதன் உண்மையை உணராது அறியாது புரியாது தெரிந்தது போல தெளிவற்று இங்கொன்றும் அங்கொன்றுமாய் ஒருவரிடம் ஒன்றைச் சொல்லி அதே செய்தியை மற்றவரிடம் மாற்றி சொல்பவனை எச்சரிக்கும் ஏந்தல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரை " உலகில் உடையவராக இருப்பவர் மறுமையில் நெருப்பினால் ஆன இரு நாக்குகளுடன் இருப்பார்'' நூல்- மிஷ்காத்.

" இறை நம்பிக்கையுடையோரே! தீயவன் சொல்லும் செய்தியின் உண்மையை நன்றாக விசாரித்து தெளிவு படுத்தி கொள்ளுங்கள். தெளிவற்ற அறியாமையால் ஒரு கூட்டத்திற்குத் தீங்கு செய்துவிட்டு வருத்தப்படுவோராய் ஆகி விடுவீர்கள்'' என்றுரைக்கும் அருமறை குர்ஆனின் 49-6 ஆவது வசனப்படி எவர் எதைக் கூறினாலும் அதனை நன்கு ஆய்ந்து அறிந்த பின்பே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசரப்பட்டு  அடுத்தவருக்கு அநீதி இழைக்கக் கூடாது. அவசரப்படுவது சாத்தானின் சதி. தீர விசாரித்து திட்டமிட்டு செயல்படுவது இறை நெறியாகும். 

ஐயத்தை மெய்யாக்கும் பொய்யில் புரளாது மெய்யை மெய்யாக உணர்ந்து மெய்வழி நடப்போம். மேலோன் அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.
- மு.அ. அபுல் அமீன்


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/3/w600X390/v3.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/03/ஐயத்தை-மெய்யாக்காதே-2800985.html
2800984 வார இதழ்கள் வெள்ளிமணி பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர் DIN DIN Friday, November 3, 2017 10:54 AM +0530 • செருப்புக்குள்ளே கல்லும், காதுக்குள்ளே ஈயும், கண்ணுக்குள்ளே தூசியும், காலில் முள்ளும், வீட்டில் கலகமும் எத்தனை அளவில் சிறியதாயினும் அதிகத் துன்பத்தைத் தருவனவாகும்.            
- கவி வேமன்னா

• தென்னைமரத்தை, அதன் அடியில் வெறும் நீர் ஊற்றி வளர்த்தால், அது வளர்ந்த பின்பு இனிய இளநீரையும், தேங்காய்களையும் நமக்கு முடியாலே கைம்மாறாகத் தரத் தவறுவதில்லை. அதுபோலவே நற்குணமுடைய ஒருவருக்கு நாம் சிறிய உதவி செய்தாலும், அவர் மறவாமல் நமக்குப் பெரிய அளவில் உரியவாறு உதவி செய்யத் தவறமாட்டார். நாம் எந்தவிதக் கைமாறும் கருதாமல் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அந்த உதவி வீண் போகாது. அதன் பலன் பெரிய அளவில் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி.
- ஒளவையார் (மூதுரை  1)

• மருத்துவனிடம் சென்று மருந்து அருந்தாவிட்டால் நோய் நீங்காது. விளக்கு இல்லாவிட்டால் இருள் அகலாது. நல்லுபதேசமின்றி அக்ஞானம் அகன்று ஞானம் பெறுவது மிகவும் கடினம்.             
- யோகி வேமனா

• எல்லாவித பக்தியிலும் சிறந்த பக்தி இறைவனிடம் ஆத்ம நிவேதனம் அல்லது பூரண சரணாகதி அடைவதேயாகும்.    
- சமர்த்த ராமதாசர்

• உங்கள் வருகையால் எவர் முகத்தில் மகிழ்ச்சியும், விழிகளில் அன்பும் இல்லையோ, அவர்கள் இல்லத்தில் மேகம் தங்கி மழை பொழிந்தாலும், அங்கே செல்ல வேண்டாம். சென்றால், உங்களுக்கு இகழ்ச்சிதான் ஏற்படும்.
 - துளசிதாசர்

• உள்ளே புகுந்து நெய் குடிக்க முடியாமல் இருந்தாலும் அந்த நெய் இருக்கும் பாத்திரத்தை எறும்புகள் சுற்றிக்கொண்டு நிற்கும். அது போல, மறந்தாகிலும் அரைக்காசு கொடுக்காதவராக இருந்தாலும் செல்வந்தர்களை நூறு பேர் சுற்றிக்கொண்டிருப்பார்கள்.
-  நாலடியார்

• வேதத்தினால் விளக்கப்பட்டிருப்பதும், இம்மையிலும் மறுமையிலும் மேன்மை எய்துவதையே குறிக்கோளாய்க் கொண்டுள்ள ஒவ்வொரு மனிதனும் விரும்புவதும் எதுவோ அதுவே தர்மம்.                  
-  மீமாம்ஸா தரிசனம்

• உலகம் என்ற விஷமரம்தான் எல்லா ஆபத்துக்களையும் விளைவிக்கிறது. ஆனால் அது அறிவிலிகளை மட்டும் வதைப்பதாகையால் அறிவுள்ளவர்கள் முயன்று தம் அறியாமையை அகற்றிக்கொண்டு விட வேண்டும். 
- யோக வாசிட்டம்

• மனம் பிறழாமல் இறைநெறியில் ஆழ்ந்துவிடுபவனுக்கு, பதியுண்டு, நிதியுண்டு. புத்திரர்கள், மித்திரர்கள் பக்கமுண்டு, பவிசுண்டு, தவிசுண்டு, யமபடர் அணுகாத கதி உண்டு, ஞானமாகிய கதிஉண்டு, காய சித்திகள் உண்டு.
 - தாயுமானவர்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/3/w600X390/v2.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/03/பொன்மொழிகள்-தொகுப்பு-சுவாமி-கமலாத்மானந்தர்-2800984.html
2800983 வார இதழ்கள் வெள்ளிமணி பிணிகள் போக்கும் பெருமான்! Friday, November 3, 2017 10:52 AM +0530 தொண்டை வளநாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம்,  தாம்பரம் - ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் முடிச்சூர், மணிமங்கலம் அடுத்து எழில் கொஞ்சும் பசுமை நிறைந்த கிராமமான சேத்துப்பட்டு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பிரகந்நாயகி உடனுறை ஸ்ரீ சித்தானந்தேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. (தேவப்பிரசனத் தகவல்கள் மூலம் இறைவன், இறைவி பெயர்கள் அறியப்பட்டன)

வரலாற்றுச் சிறப்புகள்: பதினான்காம் நூற்றாண்டின் துவக்கத்தில் சம்புவராயர்கள் என்ற பல்லவ குறுநில மன்னர்கள் சோழப் பேரரசில் படைத்தலைவர்களாகப் பதவி வகித்தவர்கள்.  வீரமும் தெய்வ பக்தியும் கொண்டவர்கள். பலத் திருக்கோயில்களை நிர்மாணம் செய்து பக்தி நெறி பரவச் செய்தார்கள்.  

இவ்வரசர்களில் முக்கியமானவராகக் கருதப்பட்ட  "வென்று மண் கொண்டான் மல்லிநாத ராஜ நாராயணன் சம்பன்' என்பவர் (1291 - 1353) பல சைவ, வைணவ திருக்கோயில்களை உருவாக்கி சிறப்பான வழிபாடுகள் நடத்த வழிவகுத்தார். அப்படி உருவாக்கப்பட்ட திருக்கோயில்களில் சேத்துப்பட்டு ஸ்ரீ பிரகந்நாயகி உடனுறை ஸ்ரீ சித்தானந்தேஸ்வரர் திருக்கோயில் ஒன்றாகும்.  

பின்பு ஏற்பட்ட அந்நியர் படையெடுப்புகளில் பல திருக்கோயில்கள் நிர்மூலமாக்கப்பட்டன.  திருப்பணிகள் மேற்கொள்ளப்படாமல் கைவிடப்பட்டன. அதன்பின் விஐய நகரப் பேரரசர்கள் சாம்ராஜ்யம் உருவாக்கப்பட்டு ஆட்சிபுரிந்த வீர கம்பண்ண உடையார் தமிழகத்தில் மீண்டும் திருக்கோயில்களை புதுப்பித்து வழிபாடுகள் நடத்திட வழிவகுத்தார்.  அவற்றில் சேத்துப்பட்டு ஸ்ரீ சித்தானந்தேஸ்வரர் திருக்கோயிலும் ஒன்றாகும்.

சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட பஞ்ச மூர்த்திகளோடும், பஞ்ச கோஷ்டங்களோடும் சிறப்புற வழிபாடுகள் நடத்தப்பட்ட கோயிலாகும். பஞ்சபூதத் தலங்களில் ஆகாச தத்துவத் தலமாக விளங்கும் சிதம்பரம் ஸ்ரீ ஆடல் வல்லான் நடராஜப் பெருமானின் அம்சமாக விளங்குபவர் ஸ்ரீ சித்தானந்தேஸ்வரர்.  இவருக்கு சபாப்தி, சபேசன், அம்பலக் கூத்தன் போன்ற திருநாமங்களும் உண்டு என அறியப்படுகின்றது. 

அம்பிகை ஸ்ரீ பிரகந்நாயகி தனிச்சந்நிதி கொண்டு அங்குச பாசம், அபய ஹஸ்தம் தாங்கி அருள்கூட்டுகிறார்.  தற்போது,  விநாயகர், முருகப் பெருமான்,  சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு தனிச் சந்நிதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றது.  நந்தியெம்பெருமான், கோஷ்ட மூர்த்தங்களும் செய்யப்படுகின்றன.
மஹா விஷ்ணு சந்நிதி : ஒரு காலத்தில் இத்திருக் கோயிலில் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ தேவராஜப் பெருமாள் சந்நிதியும் அமைந்து வழிபாடு நடத்தப்பட்டு வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தீர்த்தம்: கிழக்கில் சிவ கங்கா தீர்த்தமும் (குளம்) நிருதியில் நந்தி தீர்த்தமும் (குளம்) அமையப் பெற்றுள்ளது.  இவ்விரு தீர்த்தங்களில் நீராடி ஈசனை வழிபடுவோர் பிறவிப் பிணி நீங்கப் பெறுவதோடு தீராப்பிணிகளில் அவதிப்படுவோர் பிணி நீங்கி குணமடைவர்.  கங்கையில் நீராடி காசி ஸ்ரீ விசாலாட்சி சமேத ஸ்ரீ விஸ்வநாதப் பெருமானை தரிசித்தப் பலனைப் பெறுவர்.

தலவிருட்சம்: இத்திருக்கோயிலின் தலவிருட்சம் வடவிருட்சம் எனும் ஆலமரமாகும்.  இவ்விருட்சம் குளக்கரையின்மேல் அமைந்துள்ளது.  இதன்கீழ் அமர்ந்து பல சித்த புருஷர்களும் மஹான்களும் தவமியற்றியுள்ளனர். சித்தர்கள் மற்றும் மஹான்களின் சாநித்யம் இன்றளவும் உணர முடியும்.

பரிகாரங்கள்: நுரையீரலில் நீர் கோர்த்துக்கொண்டு அவதியுறும் நோயாளிகள், ராகு கேது தோஷ பாதிப்புள்ளவர்கள், வாய்வு கோளாறினால் அவதிப்படுபவர்கள் இத்தல ஈசனை வணங்கி தீபமேற்றி அர்ச்சனை செய்துகொண்டு மனமுருகி பிரார்த்தனை செய்துகொள்வதன் மூலம் நோய் குணமாகும்.

பெண்களின் கர்ப்பப்பையில் ஏற்படும் அடைப்பு மற்றும் நீர்க்கட்டிகள் உள்ளவர்கள் அம்பிகை ஸ்ரீ பிரகந்நாயகிக்கு  அனைத்து விதமான அபிஷேகங்கள் செய்வித்து, புதிய புடவை சார்த்தி நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்துகொள்வதன் மூலம் பரிபூரண குணம் ஏற்படும்.

திருப்பணி: தற்போது இத்திருக்கோயிலில் திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகின்றது.  திருப்பணி வேலைகள் தொடர்ந்து சிறப்பாக நடைபெறுவதற்கு பக்தர்கள் இத்திருப்பணியில் பங்குபெற்று நலம் பெறலாம். 
தொடர்புக்கு : 97101 90577/98842 08855.
 - க. கிருஷ்ணகுமார்


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/3/w600X390/v1.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/nov/03/பிணிகள்-போக்கும்-பெருமான்-2800983.html
2796886 வார இதழ்கள் வெள்ளிமணி பசிப்பிணி போக்கும் அன்னாபிஷேகம்! Friday, October 27, 2017 03:56 PM +0530 சிவபெருமான் அபிஷேகப் பிரியர்! ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நன்னாளில் சிவாலயங்களில் சிவபெருமானுக்கு (லிங்கத் திருமேனி) சிறப்பு ஆராதனைகள் நடைபெறுவதைத் தரிசிக்கலாம். அந்த வரிசையில் ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று நடைபெறும் அன்னாபிஷேகம் மிகவும் போற்றப்படுகிறது.

ஐப்பசி மாதம்  "அஸ்வினி' நட்சத்திரத்தில் பௌர்ணமி வரும் நாளில் நடைபெறும் அன்னாபிஷேக வைபவத்தில் கலந்துகொண்டால் பசித்த வேளைக்கு உணவு தேடிவரும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

உலகில் உள்ள ஜீவராசிகளுக்கெல்லாம் உணவளித்துக் காக்கும் சிவபெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவனுக்கு அன்னம், காய்கறி, பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்கரிப்பார்கள்.

அன்னமே உண்மையான பிரம்ம சொரூபம், விஷ்ணு சொரூபம், சிவசொரூபம் ஆகையால்தான்அன்னமே உயர்வானது என்று வேதம் சொல்கிரது.

அன்னமே ஜீவன் என்கிறது சாஸ்திரம். "தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு பகிர்ந்தளிக்காமல் தான் மட்டும் யார் உண்கிறானோ.. அவன் பாவபிண்டத்தைத்தான் உண்கிறான்' என்கிறார் பகவான் கிருஷ்ணர்! "அன்னம் அளி.. அன்னம் அளி..  ஓயாமல் அன்னம் அளி' என்கிறது பவிஷ்யபுராணம். 

உலகில் உள்ள மானிடர்களுக்கு  மட்டுமல்ல இவ்வுலக வாழ்வை நீத்தவர்களுக்கும் பிண்டமாக அன்னம் அளிக்கப்படுகிறது என்று வேத நூல்கள் கூறுகின்றன. இதனையெல்லாம் நினைவு கூர்ந்துதான் துலா மாதமான ஐப்பசி பௌர்ணமியன்று சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

ஐப்பசி பௌர்ணமியில் சிவலிங்க மேனியில் சாற்றப்படும் ஒவ்வொரு பருக்கையும் சிவாம்சம் பெற்றது. அன்று சிவதரிசனம் செய்து அன்னாபிஷேக வைபவத்திற்கு தங்களால்இயன்றளவு  பொருளதவி செய்து கலந்து கொண்டால் வாழ்நாள் முழுவதும் பசித்த வேளைக்கு அன்னம் தேடிவரும் என்று சாஸ்திரம் கூறுகிறது. 

ஒருவன் எவ்வளவு வசதி படைத்த அதிகார பலம் கொண்ட பெரிய மனிதராக இருந்தாலும் பெரிய அளவில்தான் தான தர்மங்கள் செய்திருந்தாலும் அவை அனைத்தும் பசி என்று வரும் ஒருவருக்கும் செய்யும் அன்னதானத்திற்கு ஈடாகாது என்பது நம்முன்னோர்களின் வாக்கு ஆகும்.  

பொதுவாக, பலருக்கு செல்வம் நிறைந்திருக்கும். ஆனால் உணவைக் கண்டால் வெறுப்பாக இருக்கும். சாப்பிடப் பிடிக்காது. ஆனால் பசி இருக்கும். இதை அன்னத்துவேஷம் என்பார்கள். இந்த விநோத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்து அந்த அன்னத்தை எந்தவித விளம்பரமும் இல்லாமல் ஏழை எளியவர்களுக்கு தானம் செய்து வந்தால் அனைத்து துவேஷமும் விலகும் என்று வேத நூல்கள் கூறுகின்றன. தினமும் அன்னாபிஷேகம் நடைபெறும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் இதனை மேற்கொள்ளலாம். 

அன்னாபிஷேகத்திற்கென்று புகழ்பெற்ற கோயில்கள் இருக்கின்றன. குறிப்பாக, ராஜராஜசோழன் கட்டிய தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலும்; ராஜேந்திரசோழன் கட்டிய கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலும்  பிரசித்திப் பெற்றவை ஆகும். 

ஐப்பசி அன்னாபிஷேகத்திற்கு மிகவும் சிறப்பாக போற்றப்படும் மற்றொரு தலம், குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள பாடல்பெற்ற தலமான திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் உள்ள செந்தலை ஆகும். இத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு பகல் 11.00 மணி அளவில் அபிஷேகங்கள் நடைபெறும். பிறகு மாலை 5.00 மணிக்கு மேல் சிவபெருமான் லிங்கத்திருமேனி முழுவதும் அன்னம் மற்றும் காய்கறிகளால் அலங்காரம்  செய்வார்கள். பூரண அலங்காரத்துடன் விளங்கும் இறைவனுக்கு ஷோடச உபசாரங்களும் சிறப்பு தீபாராதனையும் நடைபெறும். அன்று இரவு 9.00 மணி அளவில் பூரண சந்திரன் தனது அமிர்தக் கலைகளால் தழுவி வழிபடுகிறான். சந்திரனின் ஒளிக்கதிர்கள் முழுமையாக அன்னாபிஷேக இறைவன் மீது படரும் அதிசயத்தைத் தரிசிக்கலாம். இந்த நிகழ்வு சில நிமிடங்கள் மட்டுமே நிகழும். 

மேலும், சிதம்பரம், திருவண்ணாமலை, திருவானைக்கா, திருவாரூர் தியாகராஜர் கோயில் என புகழ்பெற்ற சிவாலயங்களில் அனைத்திலும் அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது.

ஐப்பசி அன்னாபிஷேக வைபவத்தில் பங்கு கொண்டு தங்களால் இயன்ற பொருள் உதவி மற்றும் அரிசி, காய்கறிகளை கோயிலுக்கு வழங்கினால் செல்வச் செழிப்பு ஏற்படும். வளமான வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம்.
- டி.ஆர். பரிமளரங்கன்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/27/w600X390/v1.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/27/பசிப்பிணி-போக்கும்-அன்னாபிஷேகம்-2796886.html
2796887 வார இதழ்கள் வெள்ளிமணி ராசிமண்டலத்தில் சனிபகவானின் சிறப்பு Friday, October 27, 2017 03:56 PM +0530 சூரிய, சந்திர பகவான்களைத் தவிர்த்து மற்ற கிரகங்களான செவ்வாய், சுக்கிரன், புதன், குரு, சனிபகவான்களுக்கு இரண்டு ஆட்சி வீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. சூரியபகவானுக்கு சிம்ம ராசியும் சந்திரபகவானுக்கு கடக ராசியும் செவ்வாய்பகவானுக்கு மேஷ, விருச்சிக ராசிகளும் சுக்கிரபகவானுக்கு ரிஷப, துலாம் ராசிகளும் புதபகவானுக்கு மிதுன, கன்னி ராசிகளும் குருபகவானுக்கு தனுசு, மீன ராசிகளும் சனிபகவானுக்கு மகர, கும்ப ராசிகளும் ஆட்சி வீடுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு ராசி 30 பாகை விஸ்தீரணம் கொண்டது.  சனிபகவானுக்கு தொடர்ந்து அருகருகே உள்ள இரண்டு ராசிகள் ஆட்சி வீடுகளாக அமைந்திருப்பதால் அவர் முழுமையாக 60 பாகை விஸ்தீரணத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் என்ற சிறப்பு உண்டாகிறது. இது சனிபகவானுக்கு மட்டுமே ஏற்படுகிறது என்ற ஆச்சர்யத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
"காரகோ பாவ நாசாய' என்பது ஜோதிட வழக்கு. அதாவது சூரியபகவான் பித்ருகாரகராகி பித்ரு ஸ்தானமாகிய ஒன்பதாம் வீட்டில் இருந்தாலும் சந்திரபகவான் மாத்ரு காரகராகி நான்காம் வீட்டில் இருந்தாலும் செவ்வாய்பகவான் சகோதர காரகராகி மூன்றாம் வீட்டில் இருந்தாலும் சுக்கிரபகவான் களத்திரகாரகராகி ஏழாம் வீட்டில் இருந்தாலும் குருபகவான் புத்திரகாரகராகி ஐந்தாம் வீட்டில் இருந்தாலோ குறை என்று கூறப்பட்டுள்ளது. அதாவது அந்தந்த காரகர்கள் அந்தந்த வீட்டில் இருப்பது குறை என்று புரிந்து கொள்ள வேண்டும். அதேநேரம் ஆயுள்காரகராகிய சனிபகவான் ஆயுள் ஸ்தானமாகிய எட்டாம் வீட்டில் இருந்தால் குறை அல்ல, அது நிறை என்று கூறப்பட்டுள்ளது. அதாவது சனிபகவான் எட்டாம் வீட்டில் இருந்தால் தீர்க்காயுள் என்று கூறுவார்கள். இத்தகைய சிறப்பு சனிபகவானுக்கு தானாகவே அமைந்துவிட்டது. 
மரண பயம் போக்கும் சுலோகம்
அதிபீஷண கடுபாஷண யம கிங்கர படலீ,
க்ருத தாடன பரிபீடன மரணாகமஸமயே!
உமயா ஸஹ மம சேதஸி யமஸாஸன நிவஸன்
சிவசங்கர சிவசங்கர ஹரமே ஹர துரிதம்!!
சனிபகவானின் அருளைப் பெற ஸ்ரீ ராமபிரானின் தந்தையான தசரதச் சக்கரவர்த்தி அருளிய  சனீஸ்வர அஷ்டகத்தில் (எட்டு 
சுலோகங்கள்) சனிபகவானின் கருணை நம் மீது விழ கீழ்கண்ட பத்து நாமாக்களைக் கொண்டு துதிக்கிறார். இதை நாமும் தினமும் துதிப்போம்.  
"கோணேந்தகோ ரௌத்ரயமோத பப்ரு:
கிருஷ்ண: ஸநி: பிங்களமந்த ஸெளரி:! 
நித்யம் ஸ்ம்ருதோ யோ ஹரதே ச பீடாம்
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தனாய!!
கோணன், முடிவைச் செய்பவன்,  ரௌத்ரன்,  இந்திரியங்களை அடக்குபவன்,  பப்ரு, கிருஷ்ணன், சனி, பிங்களன்,  மந்தன், ஸூர்ய புத்திரன் என்ற பெயர்கள் படைத்த சனீஸ்வரன் நித்யம் நம்மால் நினைக்கப்பட்டவராகி சகல பீடைகளையும் போக்குகிறார். அத்தகைய ஸூர்ய புத்திரனான சனீஸ்வரனுக்கு நமஸ்காரம்.


 

]]>
http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/27/ராசிமண்டலத்தில்-சனிபகவானின்-சிறப்பு-2796887.html
2796890 வார இதழ்கள் வெள்ளிமணி மகேஸ்வர வடிவங்கள்! Friday, October 27, 2017 03:55 PM +0530 சிவபெருமானுக்கு ஸத்யோ ஜாதம், வாம தேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் எனும் ஐந்து முகங்கள்.  ஒவ்வொன்றும் ஐந்து வடிவங்களாகி இருபத்தைந்து  மகேஸ்வர வடிவங்களாக காட்சியளிக்கின்றன.  அவைகள்:  
சோமஸ்கந்தர், தட்சிணா மூர்த்தி, நடராஜர்,  கிராத மூர்த்தி, ரிஷபாரூடர், நீலகண்டர், கல்யாண சுந்தரர், கங்கலர், சந்திர சேகர், உக்ரதனர்,  பிஷாடனர், கஜமுக அனுக்ரகர், காலஸம்ஹாரர், ஏகபாதர், ஜலந்தரர், லிங்கோத்பவர், திரிபுராந்தகர், சுகாஸனர், அனுஸம்ஹாரர், உமா மகேஸ்வரர்,  வீரபத்ரர்,  சங்கர நாராயணர், அர்த்த நாரீஸ்வரர் என இருபத்தைந்து  ரூபங்களில் அனுக்ரஹ  மூர்த்திகள் ஆறு. ஸம்ஹார மூர்த்திகள் ஏழு, ஞான மூர்த்திகள் ஐந்து, சிவ விஷ்ணு மூர்த்திகள் மூன்று, சிவசக்தி மூர்த்திகள் நான்கு எனவே மேற்கண்ட ரூபத்தில் எதை வழிபட்டாலும் சிவனை வழிபட்டதற்கு சமம்.
- உ. இராச மாணிக்கம்

]]>
http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/27/மகேஸ்வர-வடிவங்கள்-2796890.html
2796892 வார இதழ்கள் வெள்ளிமணி ஜனகர் அளித்த பரிசு! Friday, October 27, 2017 03:55 PM +0530 மகரிஷி வேத வியாசரிடமிருந்து வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றறிந்த நான்கு முக்கியமான சீடர்களில் ஒருவர் வைசம்பாயனர்! இவர் யஜூர் வேதத்தை கசடறக் கற்றவர். யஜூர் வேதத்தை இந்த மகான் 86 சாகைகளாக மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுத்து வந்தார். இவரது பல சீடர்களில் ஒருவர் "யாக்ஞவல்கியர்' ஆவார். வைசம்பாயனரின் சகோதரியின் மகன் இந்த யக்ஞவல்கியர். இவருக்கு விசேஷமாக, " தைத்திரிய சாகா' என்ற பழைய வேதத்தையும் கற்றுக்கொடுத்தார்.

ஒரு சமயம், விதேக நாட்டு முனிவர்கள், பண்டிதர்கள்அனைவரும் ஓர் இடத்தில் கூடி சதுர்வேதங்களைப் பற்றி விவாதிப்பது என்று முடிவு எடுத்ததோடு, இக்கூட்டத்தில் பங்குபெறாத முனிவர்கள், பண்டிதர்கள், வித்வான்களுக்கு  "பிரம்மஹத்தி' தோஷம் பீடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்தனர். 

மகரிஷி வைசம்பாயனரால் இக்கூட்டத்தில் பங்குபெற முடியாமல் போய்விட்டது. அதனால் அவரை பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது. இத்தோஷம் தன்னைவிட்டு அகல, அதற்குரிய உபாயங்களைக் கண்டறிந்து சொல்ல வைசம்பாயனர் தனது மாணாக்கர்களுக்குக் கட்டளை இட்டார்.

சீடர்கள் அனைவரும் இதற்கான உபாயம் புரியாமல் திகைத்தனர். ஆனால் தனக்கு அந்த ரகசியம் தெரியும் என்று யாக்ஞவல்கியர் கூறி இறுமாப்பு கொண்டதாக அறிந்த குரு, யாக்ஞவல்கியரை மிகவும் கடிந்துக்கொண்டார். இதுவரையில் தன்னிடம் கற்றுக்கொண்ட வை அனைத்தையும் தமக்குத் திருப்பித் தந்துவிடும் படியும் ஆசிரமத்தைவிட்டு வெளியேறும் படியும் உத்தரவிட்டார். அதன்படியே  குருவின் கட்டளையை சிரமேற்கொண்டு அவரிடம் கற்ற அனைத்தையும் சற்றும் தயங்காமல் அவர் முன்பு கக்கி வெளியேற்றிவிட்டு ஆசிரமத்தைவிட்டு வெளியேறினார்.

குரு வைசம்பாயனரின் ஆசிரமத்திலிருந்து வெளியேறிய யாக்ஞவல்கியர், ஆரண்யம் அடைந்து சூரியபகவானை நோக்கி கடுந்தவம் இருந்தார். சூரியன் குதிரை ரூபம் கொண்டு யாக்ஞவல்கியருக்கு சதுர்வேதங்களையும் போதித்தார். இவ்வேதம், யஜூர் வேதத்தில் "வஜஸன்னேயி சாகை' எனப்படுகிறது. 

ஜனக மகாராஜா, ஓர் அஸ்வமேத யாகத்தைத் துவக்கினார். இதற்காக பல தேசங்களிலிருந்தும் எண்ணற்ற வேத பண்டிதர்கள், சாஸ்திர விற்பன்னர்கள் மற்றும் சகல கலைகளும் கற்ற அறிஞர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கிடையே ஒரு வாதப்போட்டி நடத்தப்பட்டது. அதில் வென்றவருக்கு கொம்புகளில் பொற்கிழி கட்டப்பட்ட ஆயிரம் பசுக்கள் வெகுமதியாக அளிக்கப்படும் என்று ஜனக மகாராஜா அறிவித்திருந்தார். இதில் மகரிஷி யாக்ஞவல்கியரும் கலந்துகொண்டார். வாதம், விவாதம் என கடுமையாக நடைபெற்ற அப்போட்டிகளில் யாக்ஞவல்கியரே வெற்றி பெற்று அப்பரிசினையும் பெற்றார். 

மகரிஷி யாக்ஞவல்கியரின் திறமையை அறிந்த ஜனக மகாராஜா, அவரைப் போற்றிப் பாராட்டி தம் குருவாக ஏற்றுக் கொண்டார். அவரிடமிருந்து " பிரம்ம வித்தை'யை கற்றறிந்தார். 

மைத்ரேயி, காத்யாயனி ஆகிய இரு தேவியரை மணம் புரிந்த யாக்ஞவல்கியர், அவர்களில் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கிய மைத்ரேயியுடன் குருவும் சீடருமான இருந்து உயர்ந்த பல தத்துவங்களை உலகினருக்கு வழங்கி உயர்வடைந்தார்கள்.
- டி.எம். இரத்தினவேல்


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/27/w600X390/v2.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/27/ஜனகர்-அளித்த-பரிசு-2796892.html
2796893 வார இதழ்கள் வெள்ளிமணி கள்வனுக்கும் கருணை காட்டிய இடங்கழி நாயனார் திருக்கோயில்! Friday, October 27, 2017 03:55 PM +0530 மடல் சூழ்ந்த தார் நம்பி இடங்கழிக்கும் - தஞ்சை
மன்னவனாம் செருத்துணை தன் அடியார்க்கும் அடியேன்
- திருத்தொண்டர் தொகை

சோழவளநாட்டின் குறு நாடான கோனாட்டில் கொடும்பாளூர் என்ற வரலாற்று சிறப்பு மிக்க ஊரைத் தலைநகராகக் கொண்டு நல்லாட்சி செய்து வந்த சிவனடியார் இடங்கழியார். இவர் காலத்தில் நாடெங்கும் சைவம் தழைத்தோங்கியது. இவரே நூறு சிவாலயங்களை எழுப்பி சிவ வழிபாட்டினை போற்றி வந்தார் என வரலாறு கூறுகிறது.

சிவனடியார்களுக்காக நெல் திருடியவரை தண்டிக்காமல் நெற் களஞ்சியத்தையே திறந்து வைத்த மன்னர் குலத்தைச் சார்ந்தவர் இடங்கழி நாயனார். இவர் நாட்டில் வயதான சிவனடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் நாள்தோறும் சிவனடியாருக்கு மகேசுவர பூஜை செய்விப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு நிலையில், பொருள் இன்மையால் இத்தொண்டை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

வேறு வழியில்லாத சூழலில் இடங்கழியாரின் அரண்மனைக்குள் புகுந்து, நெல் மூட்டைகளைத் திருடினார். காவலர்களிடம் அகப்பட்டு, மன்னர் முன்பு விசாரணைக்கு நிறுத்தப்பட்டார். நெல்லைத் திருடிய காரணத்தை அறிந்த மன்னர் இடங்கழியாருக்கு, அவரின் மீது இரக்கம் ஏற்பட்டது. அவரை விடுதலை செய்தார். நெல் பண்டாரமும், நிதிப் பண்டாரமும், அளித்தார். அதோடு, தன் நெற்களஞ்சியத்தை சிவனடியார்களுக்கு திறந்துவிட்டு, கொள்ளையடித்துச் செல்ல முரசு கொட்டி நாட்டு மக்களுக்கு அறிவித்தார். சிவனடியார்கள் நெல் கொண்டு செல்வதைக் கண்டு மகிழ்ந்தார்.

இவரின் விநோதமான செயலால் மனம் மகிழ்ந்த இறைவன் இவரை பல்லாண்டு காலம் நல்லாட்சி செய்ய வைத்து தன் திருவடிகளில் சேர்த்துக் கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டத்தில் கொடும்பாளூர் திருத்தலம் அமைந்துள்ளது. இன்றைய கொடும்பாளூர் பழைமையான வரலாற்றுச் சிறப்புகள் கொண்ட ஊராகும். ராஜராஜ சோழனின் தாயார் பிறந்த ஊர். சிவன், விஷ்ணு, பிரம்மா என மூவரைக் கொண்ட மூவர் கோயில், பஞ்சமூர்த்திகள் கொண்ட ஐவர் கோயில், முதுகுன்றீசர் ஆலயம், தஞ்சை பெரிய கோயில், நந்தியின் வடிவில் தனி நந்தி விளங்கும் தலம், சிதம்பரம் கருவறை கூரைக்குத் தங்கத்தை உபயமாக வழங்கிய தலம், கோனாட்டின் தலைநகரம் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலம் கொடும்பாளூர்.

எட்டு ஆண்டுகளுக்கு முன், விருத்தாசலம் அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளை மற்றும் கொடும்பாளூர் இடங்கழி நாயனார் அறக்கட்டளை இணைந்து, இந்து சமய அறநிலையத்துறை நிதி உதவியோடு இடைகழி நாயனார் திருக்கோயிலை எழுப்பியது. இந்த ஆலயத்தை தற்போது புனரமைப்பு செய்து, சுற்றுச்சுவர் எழுப்பி குருபூஜை நடைபெறவுள்ளது. இவரின் குருபூஜை வரும் நவம்பர் மாதம் 5 ஆம் தேதி, (ஐப்பசி மாதம்- கார்த்திகை நட்சத்திரம்) காலை 9.00 மணி அளவில் நடைபெறுகின்றது.

சென்னை-மதுரை வழித்தடத்தில் விராலிமலைக்குத் தெற்கே 6 கி.மீ. தொலைவில் கொடும்பாளூர் அமைந்துள்ளது. கொடும்பாளூர்-சந்திரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வடக்கே ஒரு கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.
தொடர்புக்கு : அறுபத்துமூவர் திருப்பணி அறக்கட்டளை - 98424 88031 / 94441 68508.
- பனையபுரம் அதியமான்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/27/w600X390/v3.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/27/கள்வனுக்கும்-கருணை-காட்டிய-இடங்கழி-நாயனார்-திருக்கோயில்-2796893.html
2796894 வார இதழ்கள் வெள்ளிமணி மென்மை தன்மையின் நன்மைகள் Friday, October 27, 2017 03:54 PM +0530 இஸ்லாமியர் மனிதர்களிடம் மென்மையாக நிதானமாக நளினமாக நடக்க நல்லுரை நல்கிய நந்நபி (ஸல்) அவர்கள் அவ்வாறே நடந்ததை அவர்களிடம் பத்து ஆண்டுகள் பணிபுரிந்த அனஸ் (ரலி), " அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒருபொழுதும் கோபம் கொண்டது இல்லை. நான் தவறாக செய்த செயலை ஏன் செய்தாய்? என்று கேட்டதும் இல்லை. நான் செய்ய மறந்ததை ஏன் செய்யவில்லை என்று கண்டித்ததும் இல்லை. அத்தகு மென்மை தன்மை உடையவர்கள் தாஹா நபி (ஸல்) அவர்கள்'' என்று அறிவிக்கிறார். நூல்- புகாரி. மனிதர்களின் மென்மை மேலோங்கி நிற்கும்; நிதானம் நிலை நிறுத்தும்; நளினம் நல்லருளை ஈட்டும்.

அக்காலத்தில் எகிப்தை ஆண்ட  மன்னர்களுக்கு பிர்அவ்ன் என்ற சிறப்பு பெயர் உண்டு. மூசா நபி காலத்தில் எகிப்தை ஆண்ட  பிர்அவ்னின் உண்மை பெயர் அல் வலீதுப்னு முஸ் அப். இவன் தன்னையே கடவுள் என்று கூறி எதேச்சதிகார ஆட்சி புரிந்தவன். ஏக இறை கொள்கையை எடுத்து இயம்ப இவனிடம் சென்ற மூசா நபிக்கு மென்மையாய் உண்மையை உரைக்குமாறு அல்லாஹ் ஏவியதை மேவும் குர்ஆனின் 20-44 ஆவது வசனம், " அவனுக்கு மிருதுவான சொல்லாக சொல்லுங்கள்'' என்று கூறுகிறது. 

மென்மை தன்மையின் நன்மைகளைப் பற்றி நந்நபி (ஸல்) அவர்கள் நவின்ற நல்லுரை. கட்டுக் கடங்காமல் ஓடிய ஒட்டகத்தைப் பிடித்து கட்ட பலர் முயன்றனர். ஒன்று சேர்ந்து பலர் விரட்ட ஒட்டகம் மேலும் விரண்டு ஓடியது; ஒருவரிடமும் பிடிபடவில்லை. அப்பொழுது அங்கு வந்த ஓர் ஒட்டக ஓட்டி அந்த ஒட்டகத்தை ஓட ஓட விரட்டாமல் மெதுவாக நடந்து அதன் அருகில் சென்று ஒட்டகத்தைத் தடவி விட்டு அதன் திமிலைப்பிடித்தான். அதன்பின் ஒட்டகத்தின் வாலை நீவிவிட்டு தந்திரமாக அந்த ஓட்டகத்தை வசப்படுத்தினான். அந்த ஒட்டக ஓட்டியைப் போன்று பிற மக்களிடம் இதமாக மென்மை தன்மையுடன் நடந்தால் நன்மைகள் விளையும். அவர்களால் ஏற்படும் இன்னல்களை இன்முகத்துடன் சகித்துக் கொண்டு அவர்களுக்கு நன்மை பயக்கும் நற்செயல்களை மேலும் மேலும் மென்மையாய் செய்ய வேண்டும்.  அவர்களும் மென்மை தன்மையை பெறுவர். 

"மலர்ந்த முகத்துடன் ஒருவரையொருவர் சந்திப்பதும் மென்மை தன்மையே; நன்மை பயப்பதே'' என்ற நபி மொழியை அறிவிப்பவர் அபூதர்தா (ரலி) நூல் - முஸ்லிம். அல்லாஹ் மென்மையானவன். அதனால் மென்மையை நேசிக்கிறான். நூல்- புகாரி, முஸ்லிம். மென்மையான செயல்கள் அழகு உடையவை. அழகை அனைவரும் ஆதரிப்பர். மென்மை இல்லாத வன்மை வெறுப்பை உண்டாக்கி விரோத குரோதங்களில் கொண்டு விடும். மென்மை இதயத்தைத் திறக்கும் திறவுகோல். 

ஜரீர் (ரலி) ஏறி இருந்த ஒட்டகம் முரண்டு பிடித்தது.  ஜரீர் (ரலி) அந்த ஒட்டகத்தை இங்கும் அங்கும் திருப்பி கொண்டிருப்பதைக் கண்ட கருணை நபி (ஸல்) அவர்கள் மென்மையை மேற்கொள்ள அறிவுறுத்தி " எவர் மென்மையை இழந்து விடுகிறாரோ அவர் நன்மைகளை இழக்கிறார்'' என்று எச்சரித்ததை ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிப்பது முஸ்லிமில் உள்ளது. " நிச்சயமாக மென்மை எதில் குடி கொண்டிருக்கிறதோ அது அதனை அழகு படுத்தி விடுகிறது. எதில் மென்மை அகற்றப்படுகிறதோ அது அதனை அழகற்றதாக்கி விடுகிறது''  என்ற அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததை அன்னை ஆயிஷா (ரலி) தெரிவிப்பதை முஸ்லிம், அபூதாவூத் நூல்களில் காணலாம். அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை மென்மையாக நடக்குமாறு நந்நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தியதை அஹ்மத் நூலில் காணலாம். "தன் குடும்பத்தினரிடம் மிக மென்மையாக நடப்பவர் ஈமானில் (ஏக இறை கொள்கை) முழுமையானவர்'' என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மொழிந்ததையும் அன்னை ஆயிஷா (ரலி) அறிவிப்பதைத் திர்மிதீயில் காணலாம்.

உங்களுடன் உறவை முறிப்பவருடனும் நீங்கள் உறவு கொள்ளுங்கள். உங்களுக்குத் தீங்கு இழைத்தவர்களுக்கும் நீங்கள் நன்மையை செய்யுங்கள் என்று செம்மல் நபி (ஸல்) அவர்களின் வாளில் எழுதப்பட்டிருந்ததாக எடுத்துரைக்கிறார் அலி (ரலி) நூல்- ரஜீன். இவ்வாறு செயல்பட நம்மிடம் மென்மை தன்மை இருக்க வேண்டும். மென்மை தன்மை இல்லையேல் இந்நீதிக்குப் புறம்பாய் நடக்கும்படி ஆகிவிடும். 

கொடுக்கல் வாங்கல் கடனை நிறைவேற்றுதல் கடன் நிறைவேற்ற கோருதல் முதலியவற்றில் மென்மையை கடைப்பிடிக்க வேண்டும். " விற்கும் பொழுதும் வாங்கும் பொழுதும் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்கும் பொழுதும் மென்மையை கடைப்பிடிப்போருக்கு அல்லாஹ்வின் அருள்கிட்டும்'' என்ற அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அருளுரையை அறிவிப்பவர் ஜாபிர் (ரலி) நூல்- புகாரி. " கடனைச் செலுத்த முடியாமல் இன்னலில் இருப்பவருக்கு இனியன கூறி மென்மையாக மேலும் கால நீடிப்பு கொடுப்பவருக்கும் கடனைத் தள்ளுபடி செய்பவருக்கும் நிழலில்லா ஊழி நாளில் உன்னத  அர்ஷின் நிழலை அல்லாஹ் அளிப்பான்'' அறிவிப்பவர் அபூஹுரைரா  (ரலி) நூல்- திர்மிதீ.

மென்மை தன்மையுடன் மேதினியில் தீதகற்றி மேலோன் அல்லாஹ்வின் அருளால் நன்மைகளைப் பெற்று நல்வாழ்வு வாழ்வோம்.
- மு.அ. அபுல் அமீன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/27/w600X390/v4.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/27/மென்மை-தன்மையின்-நன்மைகள்-2796894.html
2796895 வார இதழ்கள் வெள்ளிமணி பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர் Friday, October 27, 2017 03:53 PM +0530 • செல்வம் இல்லாத காலத்திலும், தங்களால் முடிந்த அளவு, செல்வம் உடையவர்களைப் போன்று மிகவும் மகிழ்ச்சியோடு ஏழைகளுக்குக் கொடுக்கும் நற்குணம் உடையவர்களுக்கு மோட்சம் கிடைப்பது உறுதி.
-  நாலடியார்

• தாய் தந்தையர்கள், குரு முன்னிலையில் பரிகாச வார்த்தைப் பேசுவதும், படபடப்புக் கொள்வதும், கோபம் முதலியவற்றைக் காட்டுவதும் பாவமாகும். இத்தகைய பாவங்களைச் செய்பவன் மறுபிறவியில் கண்கள் இல்லாமல் பிறப்பான்.    

• மனிதர்கள் வாழ்க்கையில் அடக்கம், பொறுமை, சத்தியம், குருபக்தி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். மறுபிறப்பு இல்லாமல் இருப்பதற்கு நல்ல வழி இந்தப் பிறவியில் இறைவன் மீது பக்தியை வளர்த்துக்கொள்வதுதான்.

• மனிதன் தன் முயற்சியாலேயே உயர்ந்த நிலைக்கு வருகிறான். தன் தீய செயல்களாலேயே கீழ்நிலைக்குப் போகிறான். அவனுடைய ஆசாபாசங்கள், பிரக்ஞை, அறிவு, எண்ணங்கள் எல்லாம் அவனுக்கே உரியவை. மற்றவர்கள் யாரும் அவனைக் காப்பாற்ற முடியாது. அவனேதான் அவனைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். தியானத்தின் மூலம் அவன் தன் வாழ்க்கையைச் சிறப்பாக்கிக்கொள்ள முடியும்.
- மயான யோகி

• சுயபுத்தி இல்லாதவர்கள் சொல்புத்தி கேட்டுத் தீங்கான காரியங்களைத் திடீரென்று செய்துவிடுவார்கள். நாலும் தெரிந்தவர்கள் ஒன்றுக்கு நாலு தரம் யோசித்தே எதையும் செய்வார்கள்.
- விவேகசிந்தாமணி

• திருப்தி என்ற அமுதத்தை உட்கொண்டு மனச்சாந்தி பெறுவதால் உண்டாகும் மகிழ்ச்சி, பொன்னை அடைவதற்காக இங்கும் அங்கும் சதா அலைந்து திரிகிறவர்களுக்குக் கிடைக்கவே கிடைக்காது.        
-  பஞ்சதந்திரம்

• துன்பம் தலைக்கு மேல் வந்தால் இறைவனை நினைக்கிறார்கள். செல்வம் வந்து நிலைமாறினால் அவர்கள் இறைவனை மறந்துவிடுகிறார்கள். மனிதன் எப்பொழுதும் ஒரே நெறியிலிருந்தால் என்ன குறைந்துவிடும்? மனிதன் இப்படித் திடீரென மாறுவதற்கு காரணம் யார் செய்த பாவமோ தெரியவில்லை.

• "கனவு போன்று நிலையற்ற இந்த உலகத்தை உண்மையானது' என்று தவறாக உணர்ந்து, அதில் பெண், பிள்ளை, மனைவி ஆகிய பாசத்தாலும் கட்டுண்டு அனைவரும் பரமனை மறந்துவிடுகிறார்கள்.              
- யோகி வேமனா
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/27/w600X390/v5.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/27/பொன்மொழிகள்-தொகுப்பு-சுவாமி-கமலாத்மானந்தர்-2796895.html
2796896 வார இதழ்கள் வெள்ளிமணி துயரங்கள் நீக்கும் இயேசு! Friday, October 27, 2017 03:53 PM +0530 நாம் மற்றவர்களிடம் பகையில்லாமல் பொறாமையில்லாமல் கர்வம் இல்லாமல் இருப்பது அன்பை மாத்திரம் பார்க்கிற கண்களை கொண்டிருப்பது எவ்வளவு இனிமையானது. அன்பின் செயல்களுக்கு மாத்திரமே தூண்டக்கூடிய இதயம் எவ்வளவு இனியாமையானது என்று இறைவன் ஆசிர்வதிக்கிறார். ஆனால் உலகம் துயரைத்தான் தருகிறது. துயருறுவோர் யாரைத் தேட வேண்டும். நாட வேண்டுமென்று இயேசு கிறிஸ்து தனது மலைப் பொழிவில் இரண்டாவதாக இப்படிக் கூறுகிறார். 

"துயருறுவோர் பேறு பெற்றோர்;  ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்'' -மத்தேயு 5:4
"துயரம் உலகில் இருக்கின்றது. துயரம் மனிதரிடமிருந்து கண்ணீரை பிழிந்தெடுக்கிறது. படைப்பின் போது துயரம் இருந்ததில்லை. மனிதன் அதனை உலகிற்கு கொண்டு வந்தான். அவனவன் தன் கெட்ட புத்தியினால் அதை எவ்வகையிலும் அதிகரிக்கத் தொடர்ந்து முயற்சிக்கிறான்''.

"துன்ப துயரங்கள் பலவழிகளில் வருகிறது. நோய்கள் ஒருபுறமிருக்க, இயற்கைச் சீற்றங்கள் இடி, மின்னல், புயல் காற்றுகள், நிலச்சரிவுகள், பூமி அதிர்ச்சிகள் என பல வகைகளில் மனிதன் துன்பப்படுகிறான். அதையெல்லாம் விட மற்றவர்களை துன்புறச் செய்வதற்கும் மரண ஆயுதங்களை கண்டுபிடிக்கிறான். ஏனென்றால் நாம் மற்றவர்கள்தான் துன்பப்பட வேண்டுமென்று விரும்கிறோம். நாம் துன்புற விரும்புவதில்லை. மற்றவர்களைத் துன்புறச் செய்யும் திட்டமிட்ட காரியங்களினால் விளையும் துன்பங்கள் பயங்கமாயிருக்கின்றன. மனிதன் தன் ரகசிய அரசனாகிய சாத்தானின் துôண்டுதலால் தன் அயலானை எவ்வளவு கண்ணீர் வடிக்கச் செய்கிறான். ஆனால் இதோ நான் உங்களுக்குச் சொல்கின்றேன். அந்தக் கண்ணீர் ஒரு குறையல்ல, மனிதனின் நிறைபாடாக இருக்கும்'' என்று இயேசு கூறுகின்றார்.

குறிப்பாக, நம் குடும்பங்களில் சமாதானம் இல்லாமல் எவ்வளவு துயரை உண்டாக்குகின்றோம். பெற்றோரை அழவைத்து அனாதை இல்லங்களுக்கு விரட்டும் பிள்ளைகள், உறவுகளை, நட்பை நாவினால் சுட்டு அவர்களது உள்ளத்தில் மாறாத துயரத்தை உருவாக்குகிறோம். மனிதன் ஏன் இவ்வாறு இருக்கிறான்? எல்லாம் சுயநலம்! நித்திய வாழ்வுக்கு இவ்வுலக வாழ்வு ஒரு சோதனைச் சாலை என்பதை மறந்து, இவ்வுலக வாழ்வை நித்தியம் என எண்ணி, மனக்கண்ணை மூடிக்கொள்கிறான். 

யாதார்த்தமாக, துயறுருவோரைப் பார்த்து "நீங்கள் பேறு பெற்றோர்'' எனச் சொல்ல முடியுமா? இயேசு அப்படிச் சொல்கிறார் என்றால், மனித உருவெடுத்த அவர், நம்மைப் போல் வாழ்ந்து துயரங்களை ஏற்றார். அவர் துயரங்களின் அரசன். அதனால் தான் கண்ணீரை கடவுளின் இதயத்தில் சிந்துங்கள்.. அங்கே ஆறுதல் கிடைக்கும் என்கிறார். 

"துயர் எனும் பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்போரே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். என் நுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். என் நகம் அழுத்தாது. என் சுமை எளிதாயுள்ளது'' என்று அன்பர் இயேசு கூறுகிறார். (மத்தேயு 11: 28-30).

எனவே, "நம்பிக்கையை இழக்காத கண்ணீர்;  செபத்தை பயனற்றதாக்காத கண்ணீர்;  புரட்சியை வெறுக்கின்ற கண்ணீர்; இப்படி அமைந்த மனதுடன் ஏற்கப்பட்ட கண்ணீர்; தங்கள் இயல்பை மாற்றி துயரத்திற்குப்பதிலாக ஆறுதலாகின்றன. ஆண்டவரை நேசித்தபடி அழுகிறவர்கள், ஆறுதல் அடைவார்கள்'' என்று இறைமகன் இயேசு மலைப் பொழிவில் கூறியதை உள்ளத்தில் ஏற்று வாழ்வோம்.
- ஜி.ஐ. பிரான்சிஸ்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/27/w600X390/v6.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/27/துயரங்கள்-நீக்கும்-இயேசு-2796896.html
2796897 வார இதழ்கள் வெள்ளிமணி வெள்ளத்தில் வந்த சனிபகவான்! Friday, October 27, 2017 01:04 PM +0530  

சனிசிங்கனாபூரில் சனிபகவான் கோயிலில் கோபுரம், சுற்றுச்சுவர் எதுவும் கிடையாது. மேடைமீது திறந்த தளத்தின் மத்தியில் சனிபகவான் விக்ரகம் உள்ளது. அந்த விக்ரகம் எல்லாக் கோயில்களிலும் உள்ள விக்ரகம் போன்று கிடையாது. எந்த வித உருவ அமைப்பும் செதுக்கப்படாத கருப்பு வண்ணக் கல்லாக காட்சி தருகின்றார். இவர் இங்கே சுயம்புவாகத் தோன்றி அருள்பாலித்து வருகிறார். எந்தச் சிற்பியாலும் உளி கொண்டு செதுக்கப்படவில்லை. இவர் எப்படி இங்கே தோன்றினார் என்பதற்கு ஒரு சுவையான வரலாறு உண்டு. 

சுமார் 175 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமயம், இந்தப்பகுதியில் அளவிடமுடியாத பெரிய அடைமழை பெய்தது.  இக்கிராமத்திற்குக் கிழக்கே உள்ள ஓடை ஒன்றில் பெரும் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது. அந்த வெள்ளத்தில் இந்த விக்ரகம் அடித்து வரப்பட்டு இக்கிராமத்திற்கு 100 மீ.தூரத்தில் கரை ஓரமாக ஒரு புதரில் சிக்கித் தங்கிவிட்டது. அடுத்த நாள் காலையில் ஆடுமேய்க்கும் சிறுவர்கள் இப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றனர். அவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தபோது ஒரு பையன் விளையாட்டாகத் தன் தடியால் இவ்விக்ரகத்தை அடித்தான். அப்போது இக்கல்லிலிருந்து ரத்தம் வந்தது. சிறுவன் பயந்து ஓடிப்போய் ஊரிலுள்ள பெரியவர்களிடம் இதுபற்றிக் கூறினான். அவர்களில் சிலர் விக்ரகத்தில் காயம்பட்டு ரத்தம் வந்திருப்பதை கண்டு வியந்தனர். 

அன்று இரவு கிராமவாசி ஒருவரின் கனவில் சனிபகவான் தோன்றி அந்த விக்ரகம் தன்னுடையது என்றும் அதனை எடுத்து இந்தக் கிராமத்தில் பிரதிஷ்டை செய்யும்படியும் கூறியது. அந்த கிராமவாசி மற்றவர்களிடம் தனது கனவுப்பற்றிக் கூற, அனைவரும் அதிசயப்பட்டு மாட்டு வண்டியைப் பூட்டிக்கொண்டு சனிதேவன் இருக்குமிடம் நோக்கி பெரும் கூட்டமாகச் சென்றனர். அந்த மாட்டு வண்டியில் விக்ரகத்தை ஏற்ற முயன்றனர். பலர் ஒன்று கூடி தூக்கியும் ஓர் அங்குலம்கூட நகர்த்த முடியாமல் ஏமாற்றமுடன் வீடு திரும்பினர். மீண்டும் அதே கிராமவாசியின் கனவில் அன்று இரவே தோன்றி தாய்மாமன் - மருமகன் முறையுள்ள உறவுக்காரர்கள் தம்மைத் தூக்கினால் தூக்க முடியும் என்றும் தர்ப்பைப்புல் போட்ட வண்டியில் கிராமத்திற்குச் சென்று குறிப்பிட்ட இடத்தில் மேடை அமைத்து அதில் வைக்கும்படிக் கூறி மறைந்தார். 

அதன்படியே, அடுத்தநாள் மகிழ்ச்சியுடன் கிராம மக்கள் தாளவாத்தியத்துடன் சென்று அவரை எடுத்து  வந்து வேப்பரமரத்தடியில் மூன்றடி உயர மண்மேடை மீது வைத்து வழிப்பட்டனர். 

சில நாள்கள் கழித்து நகரவாசி ஒருவர் மேடை அமைக்க முயற்சி செய்தார். சனி தேவனைத் தூக்கி வைத்துவிட்டு மேடை கட்ட முயற்சி செய்து போது அவரைத் தூக்க முடியாமல் வேலை தடைப்பட்டது. யாவரும் கவலைப் பட்டுக்கொண்டு இருக்கும்போது அதே பழைய கிராமவாசி கனவில் சனிதேவன் தோன்றி தாம் இருக்குமிடத்திலேயே தம்மை எடுக்காமல் அப்படியே சுற்றிலும் மேடை கட்டும்படி கூறினார்.  

அதன்படியே மேடை கட்டி முடிக்கவும் முதலில் இருந்த அளவு 5.9 அடி உயரமுள்ள உருவமாக தாமே சுயம்புவாக வளர்ந்து எப்போதும் போல மேடையில் காட்சி அருளினார். மக்கள் சனி மகாராஜ் என மகிழ்ந்து வழிபடத் தொடங்கினர். 

பல ஆண்டுகளாக வெயில், மழை, காற்று யாவற்றையும் தாங்கிக்கொண்டு வெட்ட வெளியில் சாமி இருப்பதைப் பொறுக்க மாட்டாத பக்தர்கள் சிலர் கோயிலும், மண்டபமும் கட்ட முயன்றனர். சனிதேவன் மக்கள் கனவில் தோன்றி தமக்கு எந்த விதத்திலும் கோயிலோ கூரையோ கட்டக்கூடாது எனக் கண்டிப்பாகக் கூறி விட்டாரம். அதுபோலவே இக்கிராம வீடுகளுக்கு கதவு நிலை வைக்கக்கூடாது எனவும் கூறி விட்டாராம். இன்றும் அப்பகுதியில் சில வீடுகள் பூட்டப்படுவது கிடையாது. 

சனிக்கிழமைச் செல்வம்: முன்னோரு காலத்தில் சிங்கனாபூரில் வாழ்ந்த விவசாயி ஒருவருக்கு நான்கு மகன்கள் இருந்தார்கள். அவர்கள் குடும்பம் பிழைப்பதற்கு போதுமான நிலம் இருந்தது. அந்த நிலத்தில் நால்வரும் உழைத்து வாழ்ந்து வந்தனர். ஆனால் மழை இல்லாத காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும். அப்படி ஒரு சமயம் நிலத்தில் போதிய விளைச்சல் இல்லாததனால் குடும்பத்தில் உணவுத்தானியத் தட்டுப்பாடு ஏற்பட்டது. கிராமமக்கள் ஒன்று சேர்ந்து மழைவர சனிதேவனுக்கு மூங்கில் கழி விழா எடுத்தனர். நல்ல மழை பெய்தது. மழை ஒய்ந்ததும் ஒரு சனிக்கிழமை காலை அந்த விவசாயி தம் மக்களை அழைத்துக் கொண்டு முதல் மருமகளை மட்டும் வீட்டில் வேலைகளை கவனிக்கச் சொல்லிவிட்டு நிலத்திற்குச் சென்றுவிட்டார். 

மூத்த மருமகள் தானிய அறைக்குச் சென்று இருந்து தானியத்தை எடுத்து அரைத்து ரொட்டியும், குருமாவும் தயாரித்துக் கொண்டு இருந்தாள். அன்று மாத முதல் சனிக்கிழமை அன்று சனிதேவன் ஒரு வழிப்போக்கன் உருவில் அவ்வீட்டிற்கு வந்து எனது உடல் வலிக்கிறது. எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி, பசிக்கு ஏதாவது உணவு கொடுக்குமாறும் கேட்டார். முதல் மருமகள் வீட்டில் எதுவும் தானியம் இல்லை எனக்கூறி அவரை அனுப்பிவிட்டார். சனிதேவன் அவள் கூறியபடியே உணவு தானியம் இல்லாமல் போகச் சபித்துவிட்டுச் சென்றார். அவள் சமைத்த உணவும் தானிய அறையிலிருந்தவைகளும் மாயமாக மறைந்து விட்டன. பிறகு தான் புரிந்தது வந்து போனது சனிபகவான் என்று! அதன் தொடர்ச்சியாக எல்லோரும் அன்று சனிபகவான் எழுந்தருளி உள்ள மேடைக்குச் சென்று சனிபகவானுக்கு எண்ணெய்க் காப்பு செய்து உணவுப் பண்டங்கள், துணி மணிகள் வைத்தும் வழிபட்டனர். 

மூத்த மருமகள் தன் தவறுக்கு மன்னிக்க வேண்டி ஒரு உண்டியல் தயார் செய்து அதில் காசுகள் போட்டு மேடை அருகே கட்டி வைத்தாள். எல்லோரும் மன மகிழ்வுடன் அன்று இரவு தூங்கினர். அடுத்த நாள் இரவு விவசாயி கனவில் சனிதேவன் தோன்றி நம் மேடை அருகில் வைக்கப்பட்ட உண்டியலை அகற்றிவிடும் படியும் தமக்கு அளிக்கப்பட்ட துணிமணிகளை ஏழை மக்களுக்கு வழங்கி அவர்களுக்கு அன்னதானம் செய்யும்படி கூறி மறைந்தார். அது போலவே அவரும் செய்தார்.

எருக்கு இலை மாலைபோடும் அதிசயம்:  சிங்கனாபூரில் சனிபகவானுக்கு எருக்கு இலையை மாலையாகக் கட்டிப்போட்டு வழிபடுகின்றனர். நமது ஊர்ப்பக்கம் விநாயகருக்கு வெள்ளை எருக்கம் பூ மாலைப் போட்டு வழிபடுகின்றோம் என்பது குறிப்பிடதக்கது. ஒவ்வொரு சனிக்கிழமையும் வழிபாடு மிகவும் சிறப்பாக இருக்கும். அதுபோன்றே சனிப்பெயர்ச்சி அன்று அங்கே வழிபடுவது மிகவும் சிறப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.  

செல்லும் வழித்தடம்: சனிசிங்கனாபூருக்குத் துல்ஜாபூரிலிருந்து ஒரு பாதை உள்ளது. சீரடியிலிருந்து அகமத்நகர் வழியாகயும் ஒரு பாதையும் உண்டு. 
- பொ.ஜெயச்சந்திரன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/27/w600X390/v7.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/27/வெள்ளத்தில்-வந்த-சனிபகவான்-2796897.html
2796891 வார இதழ்கள் வெள்ளிமணி நிகழ்வுகள் DIN DIN Friday, October 27, 2017 10:59 AM +0530 ஸ்ரீ யாக்ஞவல்க்ய ஜெயந்தி மகோத்சவம்
ஸ்ரீ யோகீச்வர யாக்ஞவல்க்ய பரமாச்சார்யாளின் ஜெயந்தி மகோத்சவம் சென்னை பழைய பல்லாவரம் பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீ யாக்ஞவல்க்ய சபா மண்டபத்தில் நவ-1ஆம் தேதி தொடங்கி 5ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு நாமசங்கீர்த்தனம், வேதபாராயணம், யாக்ஞவல்க்ய சகஸ்ரநாமம், மூலமந்த்ர ஹோமம், உபன்யாசம், இன்னிசை நிகழ்ச்சி, பரத நாட்டியம், சுவாஸினி பூஜை, குத்துவிளக்கு பூஜை போன்ற ஆன்மிக நிகழ்வுகள் நடைபெறுகின்றன.  நவ-5ஆம் தேதியன்று நடைபெறும் முக்கிய விழாவிற்கு பக்தர்கள் பங்கேற்கும் பொருட்டு பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்து இலவச வேன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சபையினர் தெரிவிக்கின்றனர்.  
 தகவல்களுக்கு: 044-22477215.
திருமூல நாயனார் குருபூஜை விழா
"திருமந்திரம்' அளித்த திருமூலரின் அவதாரத் தலமான 69-சாத்தனூரில் அமைந்துள்ள திருமூல நாயனார் திருக்கோயிலில் திருமூலரின் குருபூஜை விழா நவ-3ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 7.30 மணி முதல் நடைபெறுகிறது.  கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறையிலிருந்து கிழக்கே 3 கி.மீ. தொலைவில் 69-சாத்தனூர் உள்ளது. 
தொடர்புக்கு: எம்.சந்திரசேகரன்-9444431691
 

]]>
http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/27/நிகழ்வுகள்-2796891.html
2792874 வார இதழ்கள் வெள்ளிமணி சனிப்பெயர்ச்சி பலன்கள் -2017: ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் சென்னை DIN DIN Friday, October 20, 2017 10:56 AM +0530 இந்த ஜேவிளம்பி ஆண்டு தட்சிணாயன புண்ணிய காலத்தில் சரத் ருது, ஐப்பசி மாதம் 9 ஆம் தேதி (26-10-2017) வியாழக்கிழமை, சுக்லபட்ச (வளர்பிறை) சப்தமி, பூராடம் நட்சத்திரம், சுக நாம யோகம், கரஜை கரணம் நேத்திரம் 1, ஜீவன் 1/2, சூரியபகவான் ஹோரையில் பிற்பகல் மணி 3.23 ஐ.எஸ்.டி. அளவில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இங்கு, 23.1.2020 வரை சஞ்சரித்துவிட்டு 24-01-2020 அன்று காலை மணி 9.55 ஐ.எஸ்.டி. மணி அளவில் சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்த காலகட்டத்தில் 11-10-2018 அன்று இரவு மாலை 07.20 ஐ.எஸ்.டி. மணி அளவில் குருபகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். மேலும் 5-11-2019 அன்று காலை மணி 5.20 ஐ.எஸ்.டி மணி அளவில் குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து  தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். ராகு- கேது பகவான்கள் 23.3.2019 அன்று மாலை மணி 4.14 ஐ.எஸ்.டி. அளவில் கடக, மகர ராசிகளிலிருந்து மிதுன, தனுசு ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள். இந்த சனிப்பெயர்ச்சி பலன்கள் 11-10-2018 வரை ஒரு பகுதியாகவும் 23-01-2020 வரை மற்றொரு பகுதியாகவும் (குருபகவானின் சஞ்சாரத்தைக் கருத்தில் கொண்டு) எழுதப்பட்டுள்ளது.

லக்னம் மற்றும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதியான சனிபகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார்.  இதனால் அயல்நாடு சம்பந்தப்பட்ட விஷயங்கள் சிறப்புறும். ஐக்கிய நாடுகள் அரங்கில் நமது நாட்டின் குரல் எதிரொலிக்கும். அன்னியச் செலாவணி கையிருப்பு கணிசமான அளவுக்கு உயரும். ஏற்றுமதியில் நமது நாட்டுப் பொருள்களுக்கு மதிப்பு கூடும். வெளிநாடுகளுடன் நமது நாட்டின் உறவு மேன்மையாக இருக்கும். குருபகவானின் கனிந்த பார்வை லக்னத்தின்மீது படிவதால் நமது உள்நாட்டு வளர்ச்சியும் கூடத்தொடங்கும். மேலும் மக்கள் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டிவரும். நமது நாட்டு மக்களுக்கு வெளிநாடுகளில் வசிக்க எளிதாக குடியுரிமைக் கிடைக்கும். சுக பாக்கியாதிபதியான சுக்கிரபகவான் அஷ்டம ஸ்தானத்தில் நீச்சம் பெறுகிறார். இந்த கன்னி ராசிக்கு அதிபதியான புதபகவான் துலாம் ராசியில் அமர்ந்திருப்பதால் பரிவர்த்தனை உண்டாயிருக்கிற படியால் சுக்கிரபகவான் முழுமையான நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார்.இதனால் சுக்கிர புத பகவான்களின் காரகத்துவங்கள் அனைத்தும் வளர்ச்சியடைத் தொடங்கும். 

குறிப்பாக, நகைத்தொழில், வைரம், வெள்ளி, சிமெண்ட், பெயிண்ட், இரும்பு, கம்பி, பெட்ரோலியம் ஆயில், வாகன உதிரிபாகம், மருந்து, கவரிங் சம்பந்தப்பட்ட துறைகள் வளர்ச்சியடையும். புதபகவானின் காரகத்துவங்களான தகவல் தொடர்பு, நவீன விஞ்ஞானம், சட்ட ஆலோசனை, நடுவர், நீதிமன்றம், குறிப்பாக வெளிநாட்டுச் சட்டக் கம்பெனிகள் இந்தியாவில் காலூன்றுதல் போன்றவை நடக்க வாய்ப்புண்டாகும். தன லாபாதிபதியான குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சூரியபகவானுடன்இணைந்து (நவாம்சத்திலும் இருவரும் தனுசு ராசியில்  அமர்கிறார்கள்) இருப்பதால் தங்க இறக்குமதி குறைந்து அந்நியச் செலவானி வெளியேறுவது குறையும். மற்றபடி நமது நாடு வெளியிடும் தங்கப் பத்திரங்களுக்கு மக்களின் ஆதரவு கூடும். மேலும் ஆலயங்களுக்குச் சொந்தமான தங்கமும் அரசாங்கத்திற்குக் கிடைத்து அதன் உள்நாட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். நமது நாட்டின் பெருமை உயரத்தொடங்கும். மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்கத் தொடங்கும். பணவீக்கம் உயரும். மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். பொருள்களின் விலை குறையும். நேர்முக மறைமுக வரிவருவாய் இதுவரை காணாத அளவிற்கு உயர்ந்து காணப்படும். 

செவ்வாய், சுக்கிரபகவான்களின் இணைவால் தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகிறது.  யோகங்களில் முதல்தர யோகமாக தர்மகர்மாதிபதி யோகம் உள்ளது.  இதனால் நமது நாடு மற்றவர்களால் எட்ட முடியாத அளவுக்கு உயரும். உலகத்திற்கு ஆன்மிக போதனை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். நமது நாட்டில் தூய்மையை கடைபிடிக்கும் குருமார்கள் மேன்மையடைவார்கள். சந்திரபகவான் லாப ஸ்தானத்தில் பாக்கியாதிபதியான சுக்கிரபகவானின் சாரத்தில் இருப்பதால் நீராதாரம் பெருகும். நீர்வழி கால்வாய்கள் தூர்வாரப்படும். நல்ல மழை பொழிந்து நீர்த்தேக்கங்கள் நிறையும். உடல் வளமும் பெருகும். நட்பு ஸ்தானாதிபதியான சூரியபகவான் பாக்கிய ஸ்தானத்தில் நீச்சம் பெற்றிருக்கிறார். இவருடன் குருபகவான் இணைந்திருப்பதால் சிவராஜ யோகமும் புதபகவானுடன் இணைந்து இருப்பதால் புதஆதித்ய யோகமும் உண்டாகிறது. ஒரு கிரகத்திற்கு முழுமையான நீச்சபங்க ராஜயோகம் உண்டானால் நீச்சமான மற்ற அனைத்து கிரகங்களும்  முழுமையான நீச்சபங்க ராஜயோகத்தை அடைந்துவிடும் என்பது ஜோதிட விதி. பாக்கிய ஸ்தானம் வலுவாக உள்ளதால் நமது நாடு இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் சிறப்பான வளர்ச்சியை எட்டிவிடும் என்று உறுதியாகக் கூறலாம். ஆறாம் வீட்டில் ராகுபகவான் அமர்ந்திருப்பதால் அஷ்டமலட்சுமி யோகம் உண்டாகிறது. கும்ப லக்னத்திற்கு ராகுபகவான் முழுயோக காரகர் என்ற அந்தஸ்தில் இருப்பதால் நமது எதிரிகள் தானாகவே பயந்து ஓடிவிடுவார்கள். போர் என்று வந்துவிட்டால் நமது நாடு உறுதியாக சுலபமாக வெற்றி பெற்று விடும்.

இதுவரை, சனிபகவான் சஞ்சரித்து வந்த விருச்சிகராசி அவரின் பகை வீடாகும். இனி சஞ்சரிக்கப்போகும் தனுசு ராசிக்குரிய குருபகவான் சனிபகவானுக்கு சமம் என்கிற அந்தஸ்தில் இருப்பதால் இங்கு, அவர் மகிழ்ச்சியோடு சஞ்சரிப்பார். இதனால் ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமச் சனி, அர்தாஷ்டமச்சனி நடப்பவர்களுக்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் மகர ராசிக்கு ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. தனுசு ராசிக்கு ஜென்ம சனியும் கன்னி ராசிக்கு  அர்த்தாஷ்டம சனியும் நடக்கும். துலா ராசிக்கு ஏழரை சனி முடிவடைகிறது. துலா ராசிக்கு மூன்றாம் வீட்டிலும் கடக ராசிக்கு ஆறாம் வீட்டிலும் கும்ப ராசிக்கு பதினொன்றாம் வீடான லாப ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். அதாவது 3,6,11 ஆம் வீடுகளில் சனிபகவான் சஞ்சரித்தால் மிகவும் நன்மை உண்டாகும் என்பது ஜோதிட விதி. சனிபகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரித்து 12 ராசிகளையும் (அதாவது சூரியபகவானைச் சுற்றிவர) சராசரியாக 29 1/2 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். இவர் மெதுவாக, சஞ்சரிப்பதால் சனைச்சரன் என்று பெயர் பெற்றார். பொதுவாக,  சனிபகவானின் சஞ்சாரத்தினால் சிறிது கஷ்டங்களும் சஞ்சலங்களும் குழப்பங்களும் மாற்றங்களும் அனைவரின் வாழ்க்கையிலும் ஏற்படுகிறது என்பதை மறுக்க முடியாது. ஒருவரின் வாழ்க்கையில் இந்த ஏழரை சனி சஞ்சாரம் மூன்று முறை வர வாய்ப்புள்ளது. முதல் ஏழரை சனி சஞ்சாரத்தை அல்லது முதல் சுற்றை மரண சனி என்றும் கூறுவார்கள். ஏழரை சனியில் பொதுவாக, மரணம் ஏற்படுவது இல்லை என்று கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

சனிபகவான் நாம் முற்பிறவிகளில் செய்த வினைகளுக்கு உரிய பலாபலன்களை நமக்கு அணா பைசா வித்தியாசம் இல்லாமல் பெற்றுத் தருகிறார். தங்கத்தை இரும்புச் சம்மட்டியால் அடித்து அடித்துத்தான் ஆபரணமாக ஆக்குவார்கள். அதுபோன்று நமக்கு கஷ்டங்கள் என்கிற அடியை கொடுத்து நம்மைத் திருத்தி சமுதாயத்திற்கு பயன்படும் ஆபரணம் போல் மாற்றுபவர் சனிபகவான் என்றால் மிகையாகாது. உளி தாங்கும் கற்கள் தானே பின்பு அழகான சிலைகளாக மாறுகின்றன! விதி என்பது மதிக்கு (அறிவுக்கு) புலப்படாதது. விதியானது மதியைக் கூடத் தன் வசமாக்கிக்கொண்டு இயங்கும் தன்மையுடையது. இத்தகைய விதிக்கு காரகராக சனிபகவான் அமைந்திருக்கிறார். ஒரு மரத்திற்கு வேர் எப்படி முக்கியமோ அதைப்போன்று மனித வாழ்வுக்கு விதி என்பது முக்கியமானது. ஒரு மரத்தின் வேரை மாற்றி வேறு மரமாக எப்படி மாற்ற  முடியாதோ! அப்படி ஒருவர் பிறந்த மூலாதார நவக்கிரக சக்தியை மாற்ற முடியாது. இது மருத்துவத்தில் டி.என்.ஏ. என்பதற்கொப்பானது. 

" நம்பினோர் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு' என்பது வழக்கு. நம்பக் கூடியது எது, நம்பக் கூடாதது எது என்பதை நமக்கு சனிபகவானின் சஞ்சாரம் சரியாக உணர்ந்திவிடும். சத்தியத்தையும் தர்மத்தையும் கடைப்பிடித்து இவைகள் மீது நம்பிக்கை வைத்து நடந்து கொண்டால் சனிபகவானின் அருள் நமக்கு எப்பொழுதும் கிடைத்துவிடும். கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளும் சக்தியும் கிடைக்கும். அதாவது, ஒரு மரக்கட்டையை இழுத்துச் செல்ல வேண்டியது விதியென்றும்; சத்தியத்தையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர்களுக்கு அந்த மரக்கட்டையை ஒரு நீர் பரப்பின் மீது போட்டு விட்டு இழுத்துச் சென்றால் எப்படி பாரம் தெரியாமல் இருக்குமோ அப்படி சனிபகவான் அருள்புரிவார் என்றால் மிகையாகாது. புறனாறுப் பாடலில் " பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தலும் இலமே' என்கிற வரி இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. அதாவது தத்துவத்தின் சாறை நாம் பருக வாய்ப்பளிப்பார்.  நம் மனம் தத்துவ நெறி வழி செல்லும்படி ஆக்கிவிடுவார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/20/w600X390/v6.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/20/சனிப்பெயர்ச்சி-பலன்கள்--2017-ஜோதிடர்-கேசிஎஸ்-ஐயர்-சென்னை-2792874.html
2792873 வார இதழ்கள் வெள்ளிமணி கூத்தாடி மைந்தனின் சம்ஹாரக் கூத்து! DIN DIN Friday, October 20, 2017 10:49 AM +0530 முருகப்பெருமான் சூரபதுமனை வெற்றிகொண்டு, தேவர்களைக் காப்பாற்றி, தேவலோகத்தை மீட்டு, தேவேந்திரனை மீண்டும் இந்திரலோகத்திற்கு அரசனாக்கிய நிகழ்ச்சியையும், தேவேந்திரன் தனது மகள் தெய்வயானையை முருகப்பெருமானுக்குத் திருமணம் செய்து கொடுத்த வரலாற்றையும் குறிக்கும் விதமாக அனைத்து முருகன் தலங்களிலும் ஐப்பசி மாதத்தில் ஆறு நாள்கள்கந்தஷஷ்டி விழா சிறப்பாக நடைபெறுவது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதில் ‘சூரசம்ஹாரம்' என்பது ஒரு தத்துவார்த்தத்தை குறிக்கும் செயலாகும். உண்மையான சம்ஹாரம் அல்ல. அது என்னவென்று தெரிந்து கொள்வோம்.

உயிரைச் சார்ந்துள்ள ஆணவம், கன்மம், மாயை எனப்படும் மூன்று மலங்களுள் கன்மம், மாயை இரண்டும் தவத்தால் அழியும். ஆணவம் மட்டும் செம்பில் களிம்புபோல் இருந்து கொண்டே இருக்கும். அதனை ஞானகுருவின் அருட்பார்வை ஒன்றே அழிக்க இயலும். எனவே ஆணவ வடிவாக இருந்த சூரபதுமனை தனது ஞானவேல்கொண்டு ஆணவத்தை அழித்து, ஆனந்தமயமாக்கித் தன்னுடனேயே சேவற்கொடியாகவும், மயில் வாகனமாகவும் வைத்துக் கொண்டார். இதுவே முருகப்பெருமானின் அருட்செயலாகும். ஞான வடிவமான முருகப்பெருமானோடு இச்சா சக்தியாக வள்ளியும் கிரியா சக்தியாக தெய்வயானையும் ஞானசக்தியாக வேலும் உள்ளன.

காஞ்சிக்கு வடமேற்கு திசையில் வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில் உள்ளது மேலபுலம்புதூர். இவ்வூரில் உள்ள பழைமையான சிவசுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தர் சஷ்டி விழா சற்று வித்தியாசமானது. 

கந்தர் சஷ்டி தொடங்கி 6 ஆவது நாளன்று இரவு 10.00 மணிக்கு சுவாமி புறப்பாடு ஆனபின் அவர் முன்னிலையில் அவரைச் சாட்சியாக வைத்து தெருக்கூத்து (முருகன் பிறப்பு, வளர்ப்பு, சிறப்பைப் பற்றிய நாடகம்) நடைபெற்று கூத்தின் முடிவில் விடியற்காலை 3.00 மணி அளவில் சம்ஹார நிகழ்ச்சி நடைபெறும் வழக்கம் காலம்காலமாக பின்பற்றப்படுகின்றது. 

இவ்வாண்டு அக்டோபர் -25 இரவு 10.00 மணிக்கு நாடகம் ஆரம்பித்து மறுநாள் (அக்டோபர்  26) காலை 3.00 மணிக்கு சூரசம்ஹாரத்துடன் நிறைவுபெறும். அன்று மாலை வள்ளி தேவசேனாவுடன் சிவசுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகின்றது. வாய்ப்புள்ளவர்கள் அவசியம் கண்டுகளிக்க வேண்டிய ஒரு ஆன்மீக நிகழ்வு. (மேலபுலம்புதூர் செல்ல காஞ்சீபுரம், ஆற்காடு, அரக்கோணத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன)
- எஸ்.வெங்கட்ராமன்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/20/w600X390/v5.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/20/கூத்தாடி-மைந்தனின்-சம்ஹாரக்-கூத்து-2792873.html
2792872 வார இதழ்கள் வெள்ளிமணி வேலை பெற உதவும் விநாயகர்! DIN DIN Friday, October 20, 2017 10:47 AM +0530 நீண்ட காலமாக அந்தக் கோயிலில் பூஜை செய்து கொண்டு அந்த விநாயகரிடமே தன்  வாழ்க்கையை ஒப்படைத்து விட்டு வாழ்ந்து வந்தார் அந்த அர்ச்சகர். ஆனாலும் ஒரு கட்டத்தில்  அந்த அர்ச்சகரை வறுமை மிக அதிகமாக வாட்டி எடுத்தது. ஒருநாள் இனிமேல் வேறு ஏதாவது  வேலை தேடிக் கொள்ளலாம் என்று நினைத்தார் அர்ச்சகர். பல ஆண்டுகள் நான்கைந்து தலைமுறைகளாக பூஜை செய்து,  அழகுபார்த்த கணபதியை விட்டு விலகுகிறோம் என்ற நினைப்பில் அன்று நள்ளிரவுக்குப் பிறகே தூங்கச்  செல்கிறார். 

அதிகாலை எழப்போகும் நேரம் அர்ச்சகருக்கு அப்படியொரு கனவு வருகிறது. ஒரு  யானை தும்பிக்கையில் பூச்சரத்தை சுமந்து கொண்டு சுற்றி சுற்றி வருகிறது. பல முறை சுற்றி வந்த யானை, விநாயகர் தலையில் பூச்சரத்தை வைத்து விட்டு அர்ச்சகரை ஆசீர்வதிக்கிறது. இப்படியொரு கனவுக்குப் பிறகும் அந்தக் கோயிலை விட்டு விலகி, பூஜை செய்வதை  விட்டு விலகி வேறு வேலைக்கு அர்ச்சகர் போவாரா என்ன?  

ஆசீர்வதித்த கணபதி அமைதியாக இருப்பாரா? என்ன? தன் பக்தர் பட்ட கஷ்டமெல்லாம் போதுமென்று நினைத்து உதவிட ஓடோடி வந்தார். அடுத்த இரண்டு நாள்களில் அந்த அதிசயம் நடந்தது. சுங்கத் துறையில் உயர் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர் பழத்தட்டோடும் பணத்தட்டோடும் அந்தக்  கோயிலுக்கு வந்தார். அர்ச்சகருக்கு இன்ப அதிர்ச்சி!

வேலை கிடைக்க வேண்டும் என்று 48 நாள்கள்  விரதம் இருந்து கோயிலை வலம் வந்த அவர். வேலை கிடைத்ததும் தன் வேண்டுதலை நிறைவேற்ற வந்திருந்தார்.  அன்று அந்த அர்ச்சகருக்கு அள்ளிக் கொடுக்கத் தொடங்கிய விநாயகர் இன்று வரை  கொடுப்பது குறையாமல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.     

இந்த சித்தி  விநாயகர் திருக்கோயில், திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து கிழக்கே 3 கி.மீ.  தொலைவில் உள்ள தூத்துக்குடி கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் பல லட்சம் செலவில் திருப்பணிகள்  மேற்கொள்ளப்பட்டு மகா கும்பாபிஷேகம் 1.11.2017 அன்று நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: 94869 12793. 
- ஆதலையூர் த. சூரியகுமார்.

]]>
http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/20/வேலை-பெற-உதவும்-விநாயகர்-2792872.html
2792871 வார இதழ்கள் வெள்ளிமணி நல்ல நிலம்! DIN DIN Friday, October 20, 2017 10:47 AM +0530 பஞ்ச பூதங்களைப் படைத்த இறைவன் அவை ஒவ்வொன்றும் ஆக்கபூர்வமாக இயங்கும்போது, மனிதகுலத்திற்கு கோடானு கோடி நன்மைகளைப் பெற்றுத் தருமாறு படைத்துள்ளார். மழைநீர் பூமிக்கடியில் சென்று நிலத்தை வளமாக்கி பயிர்கள் மட்டுமன்றி பல்லுயிர்களும் வாழ ஆதாரமாய்த் திகழ்கிறது. காற்று இல்லையேல் எந்தவொரு ஜீவராசியும் உயிர்வாழ்தலே இயலாது. நெருப்பு உணவைச் சுவையூட்ட மட்டுமன்றி தொழிற்சாலைகள் பலவும் இயங்குவதற்கும் வழிவகுக்கிறது. வானமோ மழையைப் பொழிவதோடு காலங்களை நிர்ணயிக்கும் கோள்களைத் தன்னகத்தே தாங்கி நிற்கிறது. நம்மைத் தாங்கி நிற்கும் நிலமோ பயிர்களை விளைவித்து வாழ்வை வளமாக்குகிறது.

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளைப்போன்று நாம் பலன் தரவேண்டும் என்பதை இயேசு ஓர் உவமை மூலம் விளக்குகிறார். " விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைத்தபோது, சில விதைகள் வழியோரம் விழுந்து மிதிபட்டன; வானத்துப் பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. வேறு சில விதைகள் பாறைமீது விழுந்தன. அவை முளைத்தபின் ஈரமில்லாததால் கருகிப்போயின. மற்றும் சில விதைகள் முடிசெடிகளின் நடுவே விழுந்தன. முடிசெடிகள் அவற்றை நெருக்கிவிட்டன. இன்னும் சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன. அவை வளர்ந்து நூறு மடங்கு விளைச்சலைக் கொடுத்தன‘‘ (லுக்கா 8:4-8)

விதை என்பது இறைவார்த்தையாகும். வழியோரம் விழுந்த விதைகள் அவ்வார்த்தைகளைக் கேட்போரில் சிலரைக் குறிக்கும். அவர்கள் கேட்டு பலன் பெறாதவாறு, சாத்தான் அவர்கள் உள்ளத்திலிருந்து அந்த விதையை அகற்றி விடுகிறது. பாறைமீது விழுந்த விதைகள், அவ்வார்த்தையை கேட்கும்போது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்பவர்களைக் குறிக்கும். ஆயினும் வாழ்வில் சோதனைகளை எதிர்கொள்ளும்போது நம்பிக்கையை விட்டு விடுவார்கள். முட்செடிகளுள் விழுந்த விதைகள், கவலை, துன்பம், செல்வம், புகழ் போன்றவற்றால் நெருக்கப்பட்டு இறைநம்பிக்கையை கைவிட்டு விடும் முதிர்ச்சியற்றோரைக் குறிக்கும்.  நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, வார்த்தையைக் கேட்டு, கடைசிவரை பின்பற்றி மனஉறுதியுடன் செயல்படுபவர்களைக் குறிக்கும்.

அனைத்துப் பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் நல்ல நிலங்களில் விதைக்கப்பட்ட விதைபோல்அதிக அறிவோடு வளமாக வாழவேண்டும் என்றே விரும்புகின்றனர். அதற்காக பல தியாகங்கள் செய்து அவர்களைக் கல்வி, கலைகள், விளையாட்டு ஆகிய பல துறைகளில் தேர்ச்சி பெற தங்களால் இயன்ற முயற்சிகளைச் செய்கின்றனர். பள்ளி ஆசிரியர்களும் ஆன்மிக வழிகாட்டிகளாகிய குருக்களும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவர்களும் மக்களும் நல்வழியில் வாழ்ந்து பயன் தர வேண்டும் என்றே விரும்புகின்றனர்.

நாம் நம் மனங்களை நல்ல நிலங்களை பண்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். அதை வழியோர நிலமாகவோ, கற்பாறையாகவோ, முட்புதராகவோ வைத்துக் கொள்ளாமல் சீர்படுத்தி நல்ல விளைநிலமாக்கி வாழ்ந்தால் நாம் இம்மையிலும் மறுமையிலும் நூறு மடங்கு பலனளிப்பவர்களாக வாழ்வோம் என்பதில் ஐயமில்லை.
- பிலோமினா சத்தியநாதன்


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/20/w600X390/v4.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/20/நல்ல-நிலம்-2792871.html
2792870 வார இதழ்கள் வெள்ளிமணி அபய ப்ரதானம் என்றால் என்ன? DIN DIN Friday, October 20, 2017 10:43 AM +0530 * ஒருவன் மிகவும் பயந்து போயிருக்கிறான். அவன் மற்றொருவனிடன் பூரணமாகச் சரணடைந்து, "என்னைக் காப்பாற்றுங்கள்!'' என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறான். அவனை ஒருவன், " நீ பயப்படாதே, உன்னுடைய துன்பத்திலிருந்து நான் உன்னை விடுவிக்கிறேன்'' என்று கூறுகிறான். அவ்விதம் கூறுபவன் தன்னிடம் சரணடைந்தவனுக்கு "அபய ப்ரதானம்' செய்கிறான்.

* விபீஷணன் மிகவும் பயந்த நிலையில் ஸ்ரீ ராமரிடம் சரணடைகிறான். ஸ்ரீ ராமர் விபீஷணின் பயத்தைப் போக்கி, " அபய ப்ரதானம்' வழங்குகிறான். 

* அதுபோல் மகாபாரதப் போர் துவங்கியபோது, அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணனிடம் சரணடைகிறான். அப்போது ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு,  "அபய ப்ரதானம்' வழங்குகிறான். 

* தமது கோயில்களில் தேவ - தேவியர்களுக்கு "அபய கரம், வரம் தரும் கரம்'  ஆகியவை இருக்கின்றன. இவற்றில் " அபய கரம்' தன்னை வழிபடும் பக்தர்களுக்கு "அபய ப்ரதானம்'  வழங்குவதைக் குறிக்கும். 

* "பயம்' என்றால் "அச்சம்', அச்சமற்ற நிலையை, தன்னிடம் சரணடைந்தவனுக்கு ஒருவன் வழங்குவது  "அபய ப்ரதானம்' எனப்படும்.

]]>
http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/20/அபய-ப்ரதானம்-என்றால்-என்ன-2792870.html
2792869 வார இதழ்கள் வெள்ளிமணி புகழுக்குரியவன் அல்லாஹ் DIN DIN Friday, October 20, 2017 10:40 AM +0530 அல்லாஹ் என்னும் அரபி சொல் நிகரில்லாத நிதர்சனமான தன்னிலேதானே நிலைத்திருக்கும் தன்னிகரற்ற தன்மையை குறிப்பது. இச்சொல் ஆண்பாலோ பெண்பாலோ பலர்பாலோ ஒருமையோ பன்மையோ அல்ல. சர்வசக்தியுள்ள அல்லாஹ் இல்லாமையிலிருந்து மனிதனை உருவாக்குகிறான். மனிதன் உலகில் உள்ளவனாகி உலகின் இன்ப துன்பங்களைத் துய்க்கியறான். மனிதன் இறந்தபின் இல்லாமல் என்ற மூன்று நிலைகளில் மனிதனை கருவாக்கி, உருவாக்கி, உருவிருக்க உயிரிழந்து திருவாளனிடம் திரும்ப செல்லும் வரை அல்லாஹ்வைப் புகழ வேண்டும். பூவுலகில் பூரிப்புடன் வாழ்ந்து மறுமையிலும் நற்பேற்றைப் பெறலாம். 

அல்லாஹ்வின் ஆற்றலை அகத்தில் இருத்தி புகழும்பொழுது மனிதனின் இறுமாப்பு, அகந்தை, ஆதிக்க செருக்கு, பொறாமை முதலிய கெட்ட குணங்கள் கெட்டழிகின்றன. தான் என்ற தற்பெருமையும் பிறர் புகழ வேண்டும் என்ற பேதமையும் நீங்கி நீக்கமற நிறைந்துள்ள அல்லாஹ்வே ஆக்க சக்தியைத் தருபவன் என்று உணர வைக்கும். அல்லாஹ்விற்கு அடிபணிய வைக்கும். அந்த அடியானின் உள்ளம் உணர்வதும் உரைப்பதும் அல்லாஹ்வின் புகழாகவே இருக்கும். 

ஆதிமனிதன் ஆதம் நபி முதல் இறுதிதூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வரை அல்லாஹ்வைப் புகழ்ந்ததைப் புகலும் குர்ஆனின் ஒரேயொரு வசனம் 27-15 ஐ மட்டும் குறிப்பிடுகிறேன். "தாவூதுக்கும் சுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வியைக் கொடுத்தோம். அதற்கு அவ்விருவரும் புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே சொந்தம். அவன்தான் நம்பிக்கை கொண்ட அவனின் நல்லடியார்கள் பலரைவிட எங்களை மேன்மையாக்கி வைத்தான் என்று கூறினார்கள்.'' அரசாட்சி செய்த தாவூது நபியும் சுலைமான் நபியும் கல்வியில் அவர்களை மேலாக்கி வைத்ததற்காக மேலோன் அல்லாஹ்வை மேதினியில் புகழ்ந்து கொண்டே இருந்தார்கள்.

வானையும் நிலத்தையும் அவற்றிலுள்ள அனைத்தையும் ஆட்சிபுரியும் அல்லாஹ்வைப் புகழ வேண்டும் என்று புகலும் புர்கானின் 64-1 ஆவது வசனம், " வானில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் துதிக்கின்றன. அனைத்தும் அல்லாஹ்வின் ஆட்சிக்கு உரியவை. புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கு உரியது.'' வானங்களையும் பூமியையும் படைத்து ஒளியையும் இருளையும் உண்டாக்கிய அல்லாஹ்விற்கே எல்லா புகழும் என்று புகல்கிறது இகல் வெல்லும் குர்ஆனின் 6-1 ஆவது வசனம். அகிலத்தார் அனைவரையும் படைத்து பரிபாலித்து பக்குவப்படுத்துபவனாகிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் என்று இயம்புகிறது இறைமறை குர்ஆனின் 1-1 ஆவது வசனம்.

சந்ததி இல்லாத உதவியாளன் இல்லாத அல்லாஹ்வைப் பெருமைபடுத்தி புகழ பூமான் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவுறுத்துகிறது அருமறை குர்ஆனின் 17-111 ஆவது வசனம்.

ஏக இறைவனான அல்லாஹ்வின் ஏகத்துவத்தை எல்லாரும் ஏற்கும் வண்ணம் எப்படி புகழவேண்டும் என்று உரைக்கிறது இந்த வசனம். இணையில்லா இறைவன் அல்லாஹ் துணையின்றி உலகை உருவாக்கி மனிதர்களைப் படைத்து காத்து பரிபாலிக்கும் பெருமைக்குரிய பண்புகளைப் பகரும் அல்லாஹ்வின் திருப்பெயர்களைத் திருத்தமாய் ஓதுவதும் அல்லாஹ்வைப் புகழ்வதே ஆகும். குறையற்ற நிறை குர்ஆனை நீதர் நபி (ஸல்) அவர்களுக்கு அருளிய அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் என்று 18-1 ஆவது வசனம் அறிவிக்கிறது. மேகத்திலிருந்து மழையைப் பொழிய செய்து வறண்ட பூமியை வளமாக்குபவன் யார் என்று இறைமறுப்பாளர்களைக் கேட்டால் அதற்கு பதில் அல்லாஹ் என்று கூறுவார்கள். அப்பொழுதும் புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கு என்று அவர்களுக்கு அறிவுறுத்த அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவுறுத்துகிறது நெறி காட்டும் குர்ஆனின் 29-63 ஆவது வசனம்.

பூமியில் வானங்களில் உள்ளவை அனைத்தும் இரவும் பகலும் இறைவனைப் புகழ்வதை புரிந்து நீங்களும் அவ்வாறே இறைவனைப் புகழ வேண்டும் என்று போதிக்கிறது நீதிமறை குர்ஆனின் 30-17,18 ஆவது வசனங்கள். இவ்விரு வசனங்களில் வரும் சொற்கள் ஐங்காலத் தொழுகைகளில் அல்லாஹ்வைப் புகழ புகல்கிறது. விளக்கம் அளிக்கிறார் இப்னு அப்பாஹ் (ரலி).

சூரியன் உதயத்திற்கு முன்னும் மறைவதற்கு முன்னும் உங்கள் இறைவனின் புகழைத் துதித்திடுங்கள்'' என்ற 50-39 ஆவது வசனம் சூரியன் உதிப்பதும் மறைவதும் நாளும் மாறா நிகழ்வுகள். எனினும் மாறா நிகழ்ச்சிகள் மாறினால் என்ன ஆகும் என்பதை எண்ணினால் அம்மாறா நிகழ்வுகளை மாறாது நிகழ்த்தும் அல்லாஹ்வைப்  புகழுவது கடமை என்பது நமக்கு புரியும். " இடியோசை இடி இறைவனைப் புகழும் துதி'' என்று புகல்கிறது புர்கான் என்னும் குர்ஆனின் 13-13 ஆவது வசனம். "ஏழு வானங்களும் பூமியும் அவற்றிலுள்ள எல்லா படைப்புகளும் அல்லாஹ்வைத் துதிக்கின்றன. எவை, அல்லாஹ்வைப் புகழ்ந்து துதிப்பதை நீங்கள் அறியமாட்டீர்கள் என்று 17-44 ஆவது வசனம் அறிவிக்கிறது. 

"ஒருவர் தும்மினால் அவர் அல்லாஹ்வைப் புகழட்டும். அப்புகழைக் கேட்பவர் புகழ்ந்தவருக்கு அல்லாஹ் அருள்புரிய இறைஞ்ச வேண்டும்'' என்று இறுதி தூதர் (ஸல்) இயம்பியதை அறிவிக்கிறார் அபூ ஹுரைரா (ரலி) நூல்- புகாரி. உணவை உண்ட பின் பானங்களைப் பருகிய பின் பசி நீக்கி தாகம் போக்கிய அல்லாஹ்வைப் புகழ்பவனை அல்லாஹ் பொருந்தி கொள்வதைக் கோமான் நபி (ஸல்) அவர்கள் கோடிட்டதைக் கூறுகிறார் அனஸ் (ரலி) நூல்- முஸ்லிம்.
"நல்லடியார்களின் இறுதி இறைவேட்டலும் இறை புகழ்ச்சியாக இருக்கும்'' என்று இறைமறையின் 10-10 ஆவது வசனம் வரையறுக்க இந்த இறையடியார்கள் "எங்களை விட்டு கவலைகளைப் போக்கிய அல்லாஹ்விற்கே எல்லா புகவும் உரியது. நிச்சயமாக எங்கள் இறைவன் மன்னிப்பவன், நன்றிய ஏற்பவன்'' என்று அல்லாஹ்வைப் புகழ்ந்து கொண்டே சொர்க்கம் செல்வர் என்று 35-34 ஆவது வசனம் விளக்குகிறது. 

நாள் எல்லாம் அல்லாஹ்வைப் புகழ்ந்து இம்மையில் நன்மைகள் செய்து நல்வாழ்வு வாழ்ந்து மறுமையிலும் மாறா நற்பேற்றப் பெற அல்லாஹ் நல்லருள் புரிவானாக!
-மு.அ. அபுல் அமீன்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/20/w600X390/v3.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/20/புகழுக்குரியவன்-அல்லாஹ்-2792869.html
2792868 வார இதழ்கள் வெள்ளிமணி நிகழ்வுகள் DIN DIN Friday, October 20, 2017 10:37 AM +0530 பிரம்மோத்ஸவம்
தாமிரபரணி நதியின் வடகரையில் இருக்கும் கார்க்கோடக úக்ஷத்திரத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் பெரிய பிரான் என்கின்ற ஸ்ரீ பிரஹன் மாதவன் சந்நிதியில் ஐப்பசி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 19 - ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றுவருகின்றது. விழா நாள்களில் காலை வேளைகளில் பெருமாள், தேசிகன் புறப்பாடும்;  மாலை சிறப்பு வாகனங்களில் பெருமாள் புறப்பாடும் நடைபெறும். 
தொடர்புக்கு: 044 2267 2928.
நாள்: 20.10.2017 - 22.10.2017.
திருப்பணி
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுக்கா, ஆளப்பிறந்தான் வட்டம், காஞ்சிரான்வயல் கிராமத்தில் அமைந்துள்ள "அருள்மிகு ஸ்ரீ கழனிஉடையார்' என்கின்ற அய்யனார் திருக்கோயிலில் விரைவில் குடமுழுக்கு நடைபெற வேண்டி திருப்பணி வேலைகள் நடைபெறுகின்றது.  பக்தர்கள் இவ்வாலயத் திருப்பணியில் பங்கு கொண்டு அய்யனாரின் அருளைப் பெறலாம்.
தொடர்புக்கு: 72998 42308/  98659 69399. 
பவித்ரோத்ஸவம்
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருள்மிகு ஸ்ரீ பூவராஹப் பெருமாள் சந்நிதியில் திருப்பவித்ரோத்ஸவம் நவம்பர் 2 -இல் தொடங்கி நவம்பர் 4 -ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. மேற்படி நாள்களில் திருமஞ்சனம், சிறப்பு ஹோமங்கள், பவித்திரமாலை சாற்றுதல், போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. நவம்பர் 4 -ஆம் தேதி இரவு ஸ்ரீ யக்ஞவராஹ மூர்த்தி உற்சவர் திருவீதி உலா நடைபெறும்.
தொடர்புக்கு: பவித்ரோத்ஸவ கமிட்டி- 94431 81679/ 90920 16027. 
மஹோத்ஸவம்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திப்பிராஜபுரம், சென்னியமங்கலம் கிராமத்தில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளிஅருள்புரியும் இரட்டை லிங்கேஸ்வரர் ஸ்ரீ உண்ணாமுலை அம்பிகா சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர்; ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ சொக்கநாதர் திருக்கோயிலில் முதலாம் ஆண்டு ஸம்வத்ஸன மஹோத்ஸவம் நடைபெறுகின்றது.
தொடர்புக்கு: 94430 86587/  81242 47647.
நாள்: 1.11.2017.
 

]]>
http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/20/நிகழ்வுகள்-2792868.html
2792867 வார இதழ்கள் வெள்ளிமணி பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர் Friday, October 20, 2017 10:36 AM +0530 * தூக்கத்தை வென்றவனே! எல்லா உயிர்களின் இதயத்தில் இருக்கும் ஆத்மா நான். உயிர்களின் ஆரம்பமும் நடுவும் முடிவும் நானே.
- பகவத்கீதை 10.20

* இந்த ஆத்மா ஒருபோதும் பிறந்ததில்லை, இறந்ததும் இல்லை; உண்டாகி மீண்டும் இல்லாமல் போவதும் இல்லை. இது பிறப்பற்றது, இறப்பற்றது, நிலையானது, பழைமையானது. ஆதலால் உடல் கொல்லப்பட்டாலும் ஆத்மா கொல்லப்படுவதில்லை.
 - பகவத்கீதை 2.20

* பிறந்தவனுக்கு மரணம் நிச்சயம், இறந்தவன் பிறப்பது உறுதி. பரிகாரம் காண முடியாத இந்த விஷயத்தில் நீ கவலைப்படுவது பொருந்தாது.   
- பகவத்கீதை 2.27

* ஆத்மாவை (கத்தியால்) வெட்ட முடியாது, (நெருப்பால்) எரிக்க முடியாது, (நீரால்) நனைக்க முடியாது, (காற்றால்) உலர்த்தவும் முடியாது. இது எங்கும் நிறைந்தது, என்றென்றும் இருப்பது, நிலையானது, அசைவற்றது, புராதனமானது.
- பகவத்கீதை 2.24

* உபகாரமே நட்புக்கு அறிகுறியல்ல; அபராதமும் விரோதத்தின் லட்சணம் அல்ல. நல்லெண்ணமா, கெட்ட எண்ணமா என்ற மனநிலை ஒன்றுதான் சரியான காரணம்.
- பஞ்சதந்திரம்

* பகவானுக்கும் பக்தர்களுக்கும் இடையில் வேற்றுமை இல்லை.

* பக்திக்கு இடையூறு விளைவிக்கும் தீயவர்களின் உறவை எந்த வகையிலும் விட்டுவிட வேண்டும். ஏனென்றால் அப்படிப்பட்ட தீயவர்களின் தொடர்பு காமம், கோபம், அறிவு மயக்கம், நினைவு தடுமாற்றம், புத்தி அழிவு  இப்படி எல்லாவிதமான அழிவுகளுக்கும் காரணமாகிறது. இவைகள் (காமம், கோபம் முதலியவை) முதலில் தோன்றும் அலைபோல சிறிய வடிவத்தில் தோன்றி, பிறகு தீயவர் உறவினால் கடலைப்போல் விசாலமான உருவத்தைப் பெறுகின்றன.    
-  நாரத பக்திசூத்திரம்

* காக்கையின் மலம்போல் போகப் பொருள்களில் சகிக்க முடியாத வெறுப்பு ஏற்படுவது, தீவிர உலகப்பற்றின்மை (வைராக்கியம்) எனப்படும்.
 - வேதாந்த சங்கரஹம்


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/20/w600X390/v2.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/20/பொன்மொழிகள்-தொகுப்பு-சுவாமி-கமலாத்மானந்தர்-2792867.html
2792866 வார இதழ்கள் வெள்ளிமணி கந்தசஷ்டியின் மகிமை! Friday, October 20, 2017 10:35 AM +0530 முருகன், குமரன், குகன், கந்தன், ஆறுமுகன் என்றெல்லாம் பக்தர்களால் புகழப்பெறும் செந்தமிழ்க் கடவுளின் பல்வேறு விழாக்களில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற விழாவே கந்தசஷ்டிப் பெருவிழாவாகும். சஷ்டி என்றால் ஆறு என்று பொருள். எனவே, சஷ்டி விழா ஆறுநாள் விழாவாகும். கச்சியப்ப சிவாசாரியரின் கந்தபுராணமும் பாம்பன் சுவாமிகளின் முதல்வன் புராண முடிப்பும் இவ்விழாவை விளக்குகின்றன.

தேவர்களைக் கொடுமைப்படுத்திய சூரபதுமன், அவன் தம்பிகளாகிய தாருகன், சிங்கமுகன் ஆகியவர்களோடு முருகப்பெருமான் போரிட்டு வென்று தேவர்களை சிறைமீட்டு, அவர்களுக்கு ஆட்சியுரிமை தந்து, தேவருலகை வாழ வைத்த வரலாற்ரை அடிப்படையாகக் கொண்டது கந்தசஷ்டிப் பெருவிழா. கந்த பெருமானுக்கும் சூரபதுமனுக்கும் போர் நடைபெற்ற இடம் திருச்செந்தூர்.

போருக்குப்பின்னர், முருகன், இந்திரன் மகளாகிய தெய்வயானையை மணம் செய்த இடம் திருப்பரங்குன்றம். இது ஏழாம் நாள் விழா. செந்தமிழ் நாட்டில் நடைபெற்ற வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட செந்தமிழ்க்கடவுளின் தெய்வப் பெருவிழாவே கந்தசஷ்டிப் பெருவிழா!

ஆன்மாக்களுக்கு மூன்று வகையான அழுக்குகள் உண்டு. மூலமாகிய முதல் அழுக்கே ஆணவம்.  அதையொட்டி,  ஆன்மாக்களுக்கு உண்டாகிய இரண்டு அழுக்குகள் உண்டு. அவைகள், மாயை, கன்மம் எனப்பெறும். மாயையானது உலகப்பொருள்களில் கவர்ச்சியை உண்டாக்கி ஆன்மாக்களுக்கு மோகத்தை உண்டு பண்ணும். ஞானிகளைக் கூட மயங்க வைத்துவிடும். மயக்கத்தை உண்டாக்குதலும் ஆன்மமாக்களை உலகப் பொருள்களின் மேல் பற்று ஏற்படுத்துதலும் மாயை. சூரபதுமனின் ஒரு தம்பியாக நின்ற தாருகனே மாயை மயமாக நின்று செயல்படுபவன்.

அடுத்து, அழுக்கானது கன்மம். இதுவும் இரண்டு வகையானது. நல்வினை, தீவினை என சிங்கமுகன் கன்ம மயமாக நின்றவன். மூன்றாவது மூல அழுக்கே ஆணவம். இதுவும்  நான் என்றும்; எனது என்றும் செயல்படும். சூரபதுமன் ஆணவ மயமாக நின்றவன். மூன்று அழுக்குகளும் ஆறாகப் பிரிந்து செயல்பட்டன. ஆகையால் ஆறு நாள்களில் அவைகளை அழித்து ஆன்மாக்களுக்கு உண்மை ஞானம் கொடுத்தான் கந்தன் என்பதே கந்தசஷ்டிப் பெருவிழாவின் தத்துவம்!

இந்த மூன்று அழுக்குகளிலிருந்து நீங்கிய மனிதனின் ஆன்மா இறைவனடி சேர்ந்து இன்புற்றிருக்கும். உலகமும் உலகப் பொருள்களும் இறைவன் படைப்புகள் என்று உணர்ந்தால் மாயையிலிருந்து விடுபடலாம். தீவினைகள் எப்போதும் செய்யக்கூடாது. நல்வினைகளைச் செய்யும்போது அவைகள் நம் முயற்சியென்று கருதாமல் அவைகளை இறைவன் நம் மூலமாகச் செய்விக்கிறான் என்று உணர வேண்டும். அப்போது நல்வினைப்பயன் நம்மைச் சாராது. மறுபிறப்பும் ஏற்படாது. அற வாழ்க்கையை மேற்கொண்டு, எப்போதும் இறைவனைச் சிந்தித்து எல்லா நிகழ்வுகளும் அவனால் நிகழ்கின்றன என்று கருதினால் ஆணவத்திலிருந்து விடுபடலாம்.

இத்தத்துவத்தை நம் கையிலுள்ள ஐந்து விரல்கள் மூலம் அறியலாம். மேலும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் சின்முத்திரை இந்தத் தத்துவத்தைக் குறிக்கும்.இறைவனுக்குத் தேங்காய் படைப்பதும் இத் தத்துவத்தைக் குறிக்கும். 

கந்தபெருமான் சூரபதுமனை வென்று, அவனைத் தன் மயில் வாகனமாகவும் சேவற்கொடியாகவும் மாற்றினான். சிங்கமுகா சூரன் உமையம்மையின் சிங்க வாகனமாக மாற்றப்பட்டான். தாரகாசூரன் அய்யனாரின் யானை வாகனமாக ஆக்கப்பட்டான். கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டித்து முருகப்பெருமானின் அருளைப் பெறுவோம்.
- செ.வே. சதாநந்தன்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/20/w600X390/v1.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/20/கந்தசஷ்டியின்-மகிமை-2792866.html
2789684 வார இதழ்கள் வெள்ளிமணி ஆயுள்பலம் அருளும் அரன்! Friday, October 13, 2017 04:27 PM +0530  

திருவாரூர் மாவட்டத்தில் எண்கண் முருகன் கோயிலிலிருந்து சுமார் 2 கி. மீ. தூரத்தில் உள்ளது ஆய்குடி கிராமம் (69 ஆய்குடி ஊராட்சி). இவ்வூரில் அமைந்துள்ளது மிகப் பழமையான அருள்மிகு அபிராமி உடனுறை கைலாசநாதர் சிவன் கோயில். 

ஒருசமயம், "ஆய்' என்ற பெயருடைய அந்தணர் இவ்வூரில் வசித்துவந்தார். தினந்தோறும் அபிஷேகத்திற்கு பசும்பால் அளித்துவரும் கைங்கர்யத்தை செய்துவந்தார்.  ஒரு நாள் பசுக்களை மேய்த்துக்கொண்டு அமர்ந்திருந்த அவர், சற்று கண் அயர்ந்திருக்கையில் நல்ல பாம்பு தீண்டிவிட்டது.  அவ்வமயம், மதிய உணவு கொண்டுவந்த மனைவியிடம் தகவலைக் கூறிவிட்டு மயக்க மடைந்துவிட்டார். அவரை அப்படியே தூக்கிக்கொண்டு சுவாமி சந்நிதியில் கிடத்திவிட்டு அம்பிகையிடம் தன் கணவரின் உயிர் பிழைக்கவும் தனது திருமாங்கல்ய பலம் தழைக்கவும் கதறி வேண்டினாள்.  அம்பிகை சிவனிடம் முறையிட, சிவனார் தீண்டிய பாம்பை திரும்ப அழைத்து திரும்பவும் அந்தணரை தீண்டச்செய்து உயிர்ப்பித்தாராம்.  "ஆய்' என்ற அந்தணர் வாழ்ந்ததாலேயே இவ்வூர் ஆய்க்குடி எனப்பட்டது என்பர். மேலும் அபிராமி அம்மன் குடிகொண்டு அருள்தரும் ஊர் என்பதால் ஆய்க்குடி எனப்பெயர் அமைந்ததாகவும் கூறுவர்.

ஆகம விதிகளின்படி ஒரு சிவாலயத்திற்குரிய அனைத்து சந்நிதிகளும் அமையப்பெற்று திருக்குளம், திருமஞ்சன தீர்த்தக் கிணறு போன்றவைகளுடன் அழகுற திகழ்கின்றது இவ்வாலயம். ஸ்ரீ அபிராமி அம்மன் கருவறையில் தென்திசை நோக்கி அபயவரத தாமரை மலர் அட்சமாலை தாங்கி நான்கு கைகளுடன் அருள்புரிகின்றாள். அரியும் சிவனும் ஒன்றுதான் என்பதற்கேற்ப இவ்வாலயத்தில் கன்னி மூலையில் அலர்மேல்மங்கைத் தாயாருடன் வெங்கடாஜலபதி சந்நிதி கொண்டுள்ளது சிறப்பு.

இவ்வாலய நிலங்களின் பெயர்கள் பரவை நாச்சியார் குளம் (பரவைக்குளம்), நம்பி ஆரூரன்குட்டை என்றழைக்கப்படுவதால் இவ்வூர் சரித்திரத் தொடர்புடையதாக இருக்கலாம் என்று அறிய முடிகிறது. மேலும் சில ஆண்டுகளுக்கு முன், ஆலய மஹாமண்டபத்தின் தென்புற சுவரினை செப்பனிட கீழே பள்ளம் தோண்டுகையில் கிடைக்கப்பெற்ற நர்த்தன சம்பந்தர், போக சக்தி அம்மன் ஐம்பொன்சிலைகள் (தற்போது சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது). 15 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தது என அறியப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆலய திருக்குளத்தில் நீராடி சந்நிதிகளில் திருவிளக்கு ஏற்றி அபிராமி அம்மன் கைலாசநாதரை தொடர்ந்து 21 நாள்களுக்கு 21 முறை வலம் வந்து வணங்கினால் ஆயுள் சம்பந்தமான தோஷங்கள் நீங்கி ஆயுட்பலம் பெருகும் என்பது அனுபவபூர்வமான உண்மை.  மேலும் சஷ்டி அப்தபூர்த்தி சாந்தி ஹோமம் செய்துகொள்வதற்கு பிரத்யேகமாக சொல்லப்பட்ட தலங்களுள் இதுவும் ஒன்று.  பாம்பு மற்றும் விஷப்பூச்சிகளினால் ஏற்படும் தொல்லைகளுக்கு நிவாரணம் வேண்டியும் விஷத் தன்மை நீங்கவும் இத்தல இறைவனை வேண்டுகின்றனர்.

தமிழக இந்துசமய அறநிலையத்துறை ஆளுகையின்கீழ் உள்ள இவ்வாலயத்தில் கும்பாபிஷேகம் நடந்தேறி 20 வருடங்களுக்கு மேல் ஆகியுள்ளது. 

முன்மண்டபங்களில் பிளவு ஏற்பட்டு மேற்கூரையில் மரங்கள் முளைத்துவந்ததால் உடனடியாக திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு புதியதாக மூன்று நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணியும் மிகுந்த சிரமத்துடன் நடந்துவருகின்றது. வெகு விரைவில் குடமுழக்கு நடத்த வேண்டிய நிலையில் உள்ளது.  இந்த சிவாலயத் திருப்பணியில் சிவனடியார்கள் பங்கேற்று நலம் பெறலாம்.
தொடர்புக்கு :  94884 15137 / 04366-278014.
- எஸ். வெங்கட்ராமன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/13/w600X390/v8.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/13/ஆயுள்பலம்-அருளும்-அரன்-2789684.html
2789685 வார இதழ்கள் வெள்ளிமணி நன்மையே பயக்கும் நரக சதுர்த்தசி! Friday, October 13, 2017 04:26 PM +0530 தமிழ்நாட்டில் நாம் கொண்டாடும் பண்டிகைகள் பல வட நாட்டில் கொண்டாடுவதில்லை. அதே போன்று வட நாட்டில் கொண்டாடப் பெறும் பல பண்டிகைகள் தென்னகத்தில் குறிப்பாகத் தமிழகத்தில் கொண்டாடப் பெறுவதில்லை. ஆனால் இந்தியா முழுவதும் இந்துக்களால் கொண்டாடப்பெறும் ஒரே பண்டிகை தீபாவளி! ராமேஸ்வரம் தொடங்கி இமயம் வரை எல்லோரும் கொண்டாடுகின்றோம். தமிழகத்தில் பட்டாசு வெடித்து, புத்தாடை உடுத்தி, இனிப்புக்களை உண்டு பெரியவர்களை வணங்கி ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து கொண்டாடுகின்றோம்.

வட நாட்டில் தீபங்களை வரிசையாக ஏற்றி அலங்காரமாக வைத்துக்கொண்டாடுகிறார்கள். பகவான் மஹாவிஷ்ணு வராஹ அவதாரத்தின் போது பூமாதேவியை மணந்து கொண்டார். அப்போது அவர்கள் இருவருக்கும் தோன்றிய மகன் பெயர் பௌமன். அவன் தவம் செய்து பல வரம் பெற்று அசுர குணங்களால் நிரம்பியவனாக எல்லோரையும் துன்புறுத்தியதால் "நரகாசுரன்' என்றழைக்கப் பெற்றான்.

இரக்கம் இல்லாத நெஞ்சினர் அரக்கர் என்பார் கம்பர். அவனை அழிக்க பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் திருவுளம் கொண்டார். அதற்கு சத்யபாமாவே தேரோட்டிச் சென்றாள்.

தற்போதைய அசாம் மாநிலத்தில் பிராக்ஜோதிலிம் என்னும் நகரில் அவன் ஆட்சி செய்தான். தனக்குத் தன் தாயைத்தவிர வேறு யாராலும் மரணம் நேரக்கூடாது என வரம் வாங்கியிருந்தான். அவனுடன் பகவான் சண்டையிடும்போது அவனது கதாயுதம் பகவான் நெற்றியில் பட்டு தேரிலேயே மயங்கி விழுந்தார். உடனே சத்யபாமா வெகுண்டு எழுந்தார்.

வில்லையும் அம்பையும் தானே எடுத்துக்கொண்டு நரகாசுரனுடன் போரிட்டு அவனை அழித்தார். அந்த நாளே ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியாகும். நரகாசுரனை வதம் செய்ததால் அன்றைய தினம் நரக சதுர்த்தசி என வழங்கப்பெற்றது.

அவன் மரணத்தறுவாயில்தான் சத்யபாமாவுக்கு இவன் தன் மகன் என்ற உண்மை புரிந்தது. ஆயினும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் லீலை அல்லவா இது? என உணர்ந்து பகவானிடம் வரம் வேண்டினாள். அதுவே உலக மக்களுக்கு நரகாசுரன் வதமானது ஒரு விழாவாக அமைந்தது.

தன் மகனே இறந்தாலும் கூட பகவானிடம் அந்தத்தாய் உலகமக்களுக்காக வரம் கேட்டாள். அதாவது வருடந்தோறும் அன்றைய தினத்தில் மக்கள் அனைவரும் விடியற்காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து, வெந்நீரில் குளித்து, புத்தாடை உடுத்தி, இனிப்புகளை பகிர்ந்து உண்டு, இறை வழிபாடு செய்து, ஆனந்தமாக வாழ வேண்டும் என வரம் கேட்டாள். அதற்கு பகவானும் புன்னகையுடன் சம்மதித்தார்.

"ஜலே கங்கா தைலே லக்ஷ்மி' என துலாம் மகாத்மியம் தெரிவிக்கின்றது. அதன்படி, அன்றைய தினம் விடியற்காலையில் எல்லோருடையஇல்லத்திலும் இருக்கும் நீரில், கங்கை குடிகொள்கிறாள். மகாலட்சுமி எண்ணெயிலும், சீயக்காய் தூளிலும் வாசம் செய்கிறாள். எனவேதான் அன்றைய தினம் நாம் விடியற்காலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறோம்.

நம் இல்லங்களில் இதன் மூலம் லட்சுமி கடாட்சம் பெருகுகிறது.

தீபாவளி தற்போது வட மாநிலங்களில் லக்ஷ்மி பூஜையாக, குபேர பூஜையாகக் கொண்டாடப் பெறுகின்றது. இந்நாளில் அவர்கள் வியாபாரத்திற்கான புதுக்கணக்குகளைத் துவங்குகின்றார்கள். மண்ணாலான காளியை பூஜை செய்து, தீபாவளியை வங்காளத்தில் கொண்டாடுகின்றார்கள். மகாபலி சக்ரவர்த்தி தீபாவளித் திருநாளில்தான் முடிசூட்டிக் கொண்டார் என, வாமன புராணம் தெரிவிக்கின்றது. ஆதிசங்கரர் ஞான பீடங்களை தீபாவளித் திருநாளில்தான் நிறுவியதாக நம்பப் பெறுகிறது. விஜயதசமியில் ராவண சம்ஹாரம் நிறைவடைந்து ஸ்ரீ ராமர், அயோத்திக்குத் திரும்பிய நன்நாளையே அந்த யுகத்தில் (திரேதாயுகம்) மக்கள் புத்தாடை உடுத்தி, தீபங்களை ஏற்றி தீபாவளியாகக் கொண்டாடினார்கள்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பூவலக வாழ்வை விடுத்து வைகுண்டம் திரும்பிய நாளை தீபாவளியாக குஜராத் மக்கள் வழிபாடு செய்கின்றார்கள். சமண சமயத்தில் 24 -ஆவது தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர் பரிநிர்வாணம் அடைந்த நாள் தீபாவளியாகும்.

இருள் என்பது அறியாமை, அஞ்ஞானம். ஒளி என்பதே ஞானம், மகிழ்ச்சி, நம்பிக்கை, ஆனந்தமாகும். எனவே, இறையருளால் இந்த தீப ஒளித் திருநாள் அனைவர் வாழ்விலும் ஆனந்தத்தை உண்டாக்கி, வாழ்க்கையை பிரகாசிக்கச் செய்யும்.
- இலக்கியமேகம் ந. ஸ்ரீநிவாசன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/13/w600X390/v9.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/13/நன்மையே-பயக்கும்-நரக-சதுர்த்தசி-2789685.html
2789683 வார இதழ்கள் வெள்ளிமணி சந்தான பாக்கியம் அருளும் கந்த சஷ்டி விரதம்! DIN DIN Friday, October 13, 2017 11:23 AM +0530 செவ்வேள் குறவனாகிய  முருகன்,  கடலின் அடியில் தலைகீழாக மாமரமாக நின்ற சூரபத்மனுடன் ஆறு நாள் போர் செய்து,  அவனை  வென்றதாக வரலாறு. அந்த ஆறு நாள்களை கந்த சஷ்டித் திருவிழாவாகக்  கொண்டாடுகிறோம்.  இது குறித்து திரிகூடராசப்ப கவிராயர் தமது குற்றாலக் குறவஞ்சியில் பாடியுள்ளார்.

திருக்குற்றாலத்திற்கும் தென்காசிக்கும் இடையில் இருக்கிறது இலஞ்சி. அங்குள்ள குமரன் கோயிலில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவில்,  முதல் ஐந்து நாள்கள் பிரம்மா, மகாவிஷ்ணு, சிவன், மகேஸ்வரன், சதாசிவன் என ஐந்து திருக்கோலத்தில் இலஞ்சி முருகன் எழுந்தருள்வார். ஆறாம் நாள் சஷ்டியன்று, முருகன் வெள்ளி மயில் வாகனத்தில் உலா வந்து சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெறும்.

முருகனுக்குச் சிறப்பாக 16 திருஉருவங்களை குமார தந்திரம் முதலிய நூல்கள் குறிப்பிடுகின்றன. அவற்றுள் ஒன்று ஸ்கந்தன் அல்லது கந்தன்.  ஸ்கந்தன் என்பதற்கு வடமொழியில் பகைவர்களை வற்றச் செய்பவன்;  தமிழில்  ஒன்றாகச் சேர்க்கப்பட்டவன் என்றும்  பொருள்.

கந்தர் கலிவெண்பாவில், குமரகுருபரர் "அன்னவள் கண்டு அவ்வுருவம் ஆறினையும் தன்னிரண்டு கையாலெடுத்துக் கந்தனெனப் பேர் புனைந்து' என்று கந்தன் என்ற பெயர்க் காரணத்தைப் பாடியுள்ளார். திருத்தணிக் குன்றில் நிற்கும் கந்தா என்றும்; சங்கு சக்ராயுதத்தையுடைய திருமாலும், விரிஞ்சனும் ( பிரம்மா) அறிந்து கொள்ள முடியாத சூலாயுதத்தைக் கையில் வைத்துள்ள சிவபெருமானின் குமாரர், "வேலாயுதத்தை உடைய கந்த சுவாமி' என்றும் கந்தர் அலங்காரத்தில் அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

கந்த புராணத்தில் கந்த விரதப் படலம் என்று ஒரு பகுதி உள்ளது. அதில் முருகப்பெருமானுக்குரிய முக்கிய விரதங்களான சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம், சஷ்டி விரதம் என்ற மூன்று விரதங்களையும் அவற்றைக் கடைப்பிடித்துப் பயன் அடைந்தவர்கள் பற்றியும் வசிஷ்ட முனிவர் முசுகுந்தச் சக்ரவர்த்திக்கு கூறுகிறார். 

பகீரதன்  என்ற அரசன் சுக்ரவார விரதமிருந்து இழந்த  ஆட்சியை மீளப் பெற்றான். நாரதர் விநாயகப் பெருமான் அறிவுரைப்படி கார்த்திகை விரதமிருந்தார்.

தேவர்கள், முனிவர்கள் முதலியோர் சஷ்டி விரதம் இருந்து மேன்மை பெற்றுள்ளனர். வசிஷ்ட ரிஷி கூறியபடி முசுகுந்தச் சக்ரவர்த்தி, சஷ்டி விரதம் இருந்து முருகப் பெருமானின் அருளைப் பெற்றதாக கந்த புராணம் தெரிவிக்கிறது. 

மூன்று விரதங்களிலும் கந்த சஷ்டி விரதம் தலையானது.  தீபாவளியைத்  தொடர்ந்து வரும் பிரதமை திதியன்று விரதத்தைத் தொடங்கி, ஐந்து நாள்கள் நோற்ற பின், ஆறாவது  நாளான சஷ்டியன்று கோயில் சென்று, கந்தக் கடவுளை வணங்கி வரவேண்டும். ஆறு நாள்களும் திருப்புகழ், கந்தர் அலங்காரம்,  கந்தர் அநுபூதி, கந்தர் அந்தாதி,  கந்த புராணம், திருமுருகாற்றுப்படை, கந்தர் கலிவெண்பா முதலிய நூல்களை ஓதி வழிபடவேண்டும்.  

"சட்டியில்  இருந்தால் அகப்பையில் வரும்' என்ற முதுமொழியும்;  சஷ்டி விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பதை மெய்ப்பிக்கிறது!  

திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழநி முதலிய   தலங்களில் பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள்,  ஆறு தினங்களும் கோயில் வளாகம் மற்றும் அருகில்  தங்கி,  கடுமையாக விரதமிருந்து,  ஆறாம்நாள் சஷ்டியன்று சூரசம்ஹாரம் முடிந்த பின் விரதத்தை நிறைவு செய்வதைக் காணமுடியும்.

திருச்செந்தூர் கடற்கரையில் செந்திலாண்டவர் சூரனுக்குப் பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியை  அலையெனக் கூடும் மக்கள் கண்டு களித்து விரதத்தை  நிறைவு செய்வதைக் காணலாம். 

சுவாமிமலை, திருத்தணிகை,  பழமுதிர்ச்சோலை மற்றும் உள்ள முருகன்  குடி கொண்டிருக்கும் அனைத்துத் தலங்களிலும்  கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.  20.10.2017 -இல் தொடங்கி 25.10.2017 அன்று கந்த சஷ்டியுடன் நிறைவடைகிறது.

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ்  நூல்விரித் தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது  மறவா  தவர்க்கொரு தாழ்வில்லையே.
என்று கந்தர் அலங்காரத்தில் அருணகிரிநாதர் பாடியது போல் நாமும்  எப்பொழுதும் கந்தக் கடவுளை வழிபட்டு சகல  வளங்களையும் பெறுவோம்.
- மருத்துவர் கைலாசம் சுப்ரமணியம்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/13/w600X390/v7.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/13/சந்தான-பாக்கியம்-அருளும்-கந்த-சஷ்டி-விரதம்-2789683.html
2789682 வார இதழ்கள் வெள்ளிமணி தங்கத்திருமேனியில் ஸ்ரீ அன்னபூரணி! DIN DIN Friday, October 13, 2017 11:16 AM +0530 தீபாவளி பண்டிகையை ஒட்டி, மூன்று நாள்கள் மட்டும் தங்கத் திருமேனியில் முழுமையாக தரிசனம் தரும் ஒரே தெய்வம்  காசியில் அருள்புரியும் ஸ்ரீ அன்னபூரணி தேவி என்றால் மிகையல்ல. 

ஸ்ரீ அன்னபூரணி தேவிக்கு தீபாவளியையொட்டி நரக சதுர்த்தியின் முதல் நாளான  தன திரயோதசி அன்று ரத்ன கிரீடமும்  நவரத்தின நகைகள் அலங்காரமும் செய்யப்பட்டிருக்கும். அன்று மாலை திரை விலக்கி பூஜை செய்தபின், மறுபடியும் திரை போடுவார்கள். மறுநாள் சதுர்த்தசி, அமாவாசை, பிரதமை ஆகிய மூன்று நாள்களும் தங்க விக்ரகமாக அன்னை காட்சி தருவாள். தீபாவளியையொட்டி வரும் மூன்று நாள்களுக்கு மட்டுமே அன்னையை தங்கத்திருமேனியில் தரிசிக்க முடியும். மற்ற நாள்களில் வெள்ளியினால் ஆன அன்னையின் திருமுகத்தை மட்டும் தரிசிக்க முடியும்.  தீபாவளி முடிந்ததும் தங்கத்தினால் ஆன அன்னபூரணி விக்ரகம் அரசாங்க வங்கியில்  பாதுகாப்பில் வைத்து விடுவது வழக்கம்.

மணிமகுடம் அணிந்து நவரத்தினங்களால் ஆன ஆபரணங்களால் அலங்காரங்களுடன் தங்கக்கிண்ணமும் தங்கக்கரண்டியும் ஏந்தி, அன்னை ஸ்ரீ அன்னபூரணி இறைவனுக்கு தங்கக்கரண்டியால் உணவு வழங்குகிறாள். அன்னையின் இருபுறமும் ஸ்ரீ தேவி- பூதேவி வீற்றிருக்க, பிச்சாண்டிக் கோலத்தில் இறைவன், அன்னையிடம் பிட்சை கேட்கும் அற்புதக் கோலத்தையும் தரிசிக்கலாம். சுமார் ஆறடி உயரத்தில் பிட்சாடனர் வெள்ளியால் ஆன விக்கிரகமாக திருவோடு ஏந்தி, ஸ்ரீ அன்னபூரணியிடம் பிட்சை கேட்கும்  பாவனையில் அலங்காரம் செய்திருப்பார்கள். 

நாகாபரணத்தை அணிந்து இடுப்பில் புலித்தோலுடன் ஒரு கையில் உடுக்கையும் மறுகையில் பிரம்ம கபாலமும் ஏந்தியிருக்கும் திருக்கோலத்தில் இறைவன் காட்சி தருவது தனிச் சிறப்பாகும்.

தீபாவளி அன்று, உலகிற்கு அன்னமளிக்கும் ஸ்ரீ அன்னபூரணியின் தங்கத்திருமேனி, லட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பவனி வருவது கண்கொள்ளா காட்சி என்று போற்றப்படுகிறது. இதனைத் தரிசித்தாலே வாழ்நாள் முழுவதும் பசித்த வேளைக்கு உணவு தேடிவரும் என்து ஐதீகம்! லட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ அன்னபூரணி ஊர்வலம் வரும்போது, தேரில் அலங்கரிக்கப்பட்டிருக்கும் லட்டுகள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும். தேர், கோயிலை அடையும்போது, தேரில் ஒரு லட்டுகூட இருக்காது என்று சொல்லப்படுகிறது.

தீபாவளி அன்று ஸ்ரீ அன்னபூரணியைத் தரிசிக்கும் பக்தர்கள், அன்னையின் காலடியில் காணிக்கையாக ரூபாய் நோட்டுகளைச் சமர்ப்பித்து வழிபட்டு பிரசாதம் பெறுகிறார்கள். 

அன்று, அன்னை அருள்பாலிக்கும் முன்புறமுள்ள மண்டபத்தில் விதவிதமான பட்சணங்கள், பெரிய பெரிய பாத்திரங்களில் நிறைந்திருக்கும். "அன்னக்கூடம்' அமைக்கப்பட்டு வழிபாடுகள் முடிந்ததும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவர்.

ஸ்ரீ அன்னபூரணி சந்நிதியில் "தர்ம துவாரம்', "பிக்ஷத்துவாரம்' எனும் இரு துவாரங்கள் உள்ளன. இந்த பிக்ஷத்துவாரத்தின் வழியாக "பகவதி பிக்ஷôம் தேஹி' என்று மும்முறை கூறிக்கொண்டே கையேந்தி பிச்சை கேட்டால், அன்னை நமக்கு அருளாசி வழங்குவதுடன் வாழ்நாள் முழுவதும் பசித்த வேளைக்கு அன்னம் அருள்வாள் என்று கூறப்படுகிறது.

காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு தென்புறத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அன்னபூரணியை காசியில் வாழும் மக்கள் மட்டுமல்லாமல் வெளியூர், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்து தரிசித்து பேறுபெறுகிறார்கள்.

புனித கங்கை நதியில் நீராடும் பக்தர்கள், காசிவிஸ்வநாதர், ஸ்ரீ விசாலாட்சி மற்றும் அங்கு அருள்புரியும் டுண்டி விநாயகர் ஆகிய தெய்வங்களை வழிபட்டு புனிதம் பெறுகிறார்கள்.

இறுதியாக, காசியின் காவல் தெய்வமான ஸ்ரீ பைரவரை வழிபட்டு,  அங்கு வழங்கும் காசி  கறுப்புக்கயிற்றினைக் கையில் கட்டிக்கொண்டு தங்கள் ஊருக்குச் செல்கிறார்கள்.

வசதி உள்ளவர்கள் காசிக்குச் சென்று ஸ்ரீ அன்னபூரணியைத் தரிசித்து பேறுகள் பெறலாம். இயலாதவர்கள் திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், காஞ்சிபுரம் மற்றும் சில கோயில்களில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அன்னபூரணி தேவியை தங்களுக்கு வசதிபட்ட நாள்களில் தரிசித்து பலன் பெறலாம். அதுவும் இயலாத நிலையில் தங்கள் பூஜை அறையில் ஸ்ரீ அன்னபூரணி திருஉருவத்தை எழுந்தருளச்செய்து ஆதிசங்கரர் பாடிய ஸ்ரீ அன்னபூர்ணா அஷ்டகத்தைச் சொல்லி வீட்டிலேயே ஸ்ரீ அன்னபூரணியை வழிபட்டாலே அனைத்து நலன்களையும் பெறலாம்.
- டி.ஆர். பரிமளரங்கன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/13/w600X390/v6.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/13/தங்கத்திருமேனியில்-ஸ்ரீ-அன்னபூரணி-2789682.html
2789680 வார இதழ்கள் வெள்ளிமணி சாந்தமுடையோர் பேறு பெற்றோர் DIN DIN Friday, October 13, 2017 11:13 AM +0530 மலைப் பொழிவில் இயேசு கிறிஸ்து மூன்றாவது கருத்தாக மொழிந்தது.
"கனிவுடையோர் அல்லது சாந்தமுடையோர் பேறுபெற்றோர்; 
ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமை சொத்தாக்கிக் கொள்வர்'' என்பதாகும் (மத்தேயு -5:5)
கனிவு என்றால் அன்பு மற்றும் பரிவு ஆகியவை நயமாக அல்லது பணிவாக வெளிப்படுத்துதல் என பொருள் படும். திருமறை நூலில் கலாத்தியர் 5:22 இல் தூய ஆவியின் கனியோ அன்பு, மகிழ்ச்சி, அமைதி. பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, தன்னடக்கம் என ஒன்பது பண்புகளை எடுத்துரைக்கும். இது தூய ஆவிக்கு அதாவது கடவுளுக்கு  விருப்பமானது. விருப்பமில்லாதது ஊனியல் பின் செயல்களான பரத்தமை, கெட்ட நடத்தை,, காமவெறி, பில்லி சூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம்  என்பன (களாத்தியார் 5:19:21)
சில நல்ல பெற்றோர்கள், தம் மக்கள் பெயருக்கேற்று வளர வேண்டும். வாழ வேண்டும் என விரும்பி சாந்தா, சாந்தி. சாந்தன், கனி, கனிமொழி, கனியன் என்றெல்லாம் பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். இறைவன் அதைத்தான் விரும்புகிறார். அதனால்தான் தன் மலைப்பொழிவில் சாந்தமுடையோர் அல்லது கனிவுடையோர் பேறு பெற்றோர் என உலக மக்களுக்கு விளக்குகின்றார். பொறுமையுள்ள தாழ்மையான அன்புடன் கருணையோடு ஆன்மாக்களைக் கைப்பற்ற முயற்சிக்காத குருக்கள், கடவுளுக்கு எந்த ஓர் ஆன்மாவையும் சம்பாதிக்க மாட்டார்கள், அவர்கள் ஆயுதமேந்திய போர்ச் சேவகரைப் போன்று கடுமையான தாக்குதல்களைச் செய்வார்கள். சகிப்புத்தன்மையில்லாமல் கடுமையாக நடந்து கொள்வதால் அவர்கள் ஆன்மாக்களை இழந்து போகிறார்கள். ஆன்மாக்கள் தூயவர்களாக இருந்தால் ஒளியைச் சென்றடைவதற்கு குருக்கள் தேவையில்லையே. அதுபோன்று நீதிபரிபாலகர்களும் மருத்துவர்களும் தங்களைத் தேடி நீதிக்காகவும் உடற் சுகத்திற்காகவும் வரும் ஆன்மாக்களை விரட்டாதீர்கள். அன்பினால் அவர்களை கவர்ந்திருழுங்கள். ஏனெனில் மனத் தரித்திரம் எப்படி அன்பாயிருக்கிறதோ, அப்படியே மனத்தாழ்ச்சியும். அன்புதான் உங்கள் தாழ்மையினால் அதாவது அன்பாகவும் தாழ்ச்சியாகவும் கனியாகவும் சாந்தமாகவும் இருப்பதனால் அது பகையையும் ஆங்காரத்தையும் வெல்லும். "இழிந்த அரசனான பகையையும் ஆங்காரத்தையும்  ஆன்மாக்களிலிருந்து வெளியே துரத்தும். உலகம் உங்களுக்குச் சொந்தமாகும்'' என்கிறார் இறைமகன் இயேசு. 
எனவே, அவரவர் தம் கடமைகளில் கனிவோடு நடந்து, சுக ஆன்மாக்களை அன்பால் கவர்ந்திட ஆண்டவர் இயேசுவின் மலைப்பொழிவை மனதில் நிறுத்திவாழ்வோம்.
- ஜி.ஐ. பிரான்சிஸ்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/13/w600X390/v5.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/13/சாந்தமுடையோர்-பேறு-பெற்றோர்-2789680.html
2789679 வார இதழ்கள் வெள்ளிமணி நிகழ்வுகள் DIN DIN Friday, October 13, 2017 11:10 AM +0530 ஸ்ரீ சிவன் சார் ஜெயந்தி மகோத்சவம்
காஞ்சி மகா சுவாமிகளின் பூர்வாச்ரம இளைய சகோதரர் பூஜ்ய ஸ்ரீ சிவன் சார் அவர்களின் ஜெயந்தி விழா அவரது ஆத்மார்த்த சீடர்களால் இன் போஸிஸ் ஹால், ஸ்ரீராமகிருஹ்ணா மிஷன் பள்ளி, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர் (விவேக் அருகில்) நடத்தப்படுகின்றது. 
தொடர்புக்கு: ஜி. சிவராமன் 96000 15230/ 73584 81420.
நாள்: 14.10.2017 (புரட்டாசி, பூசம்), நேரம்: மாலை 6.00 மணி. 
கந்தசஷ்டி வேல் பூஜை விழா
சென்னை, தங்கசாலை தெருவில் கந்தகோட்டம் அருகில் செயல்பட்டுவரும் சைவ சமய பக்த ஜன சபை என்ற அமைப்பு 1904 ஆம் வருடம் துவங்கப்பட்ட பெருமையுடையது. இவ்வளாகத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியப்பெருமானுக்கு கந்தர்சஷ்டி விழாவை முன்னிட்டு அக்டோபர் 20 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 25 ஆம் தேதி வரைஅலங்கார தூப தீப நைவேத்தியாதி சோடசோபஸôரங்களும் தொடர்ந்து மாலை வேளைகளில் கந்தபுராணம் தொடர் சொற்பொழிவும் திருப்புகழ் பாராயணமும் நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: 044 2535 4490.
"சிக்கல்' தலத்தில் கந்த சஷ்டி விழா
நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் அருள்மிகு நவநீதசுவர சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா அக்டோபர் 20 - இல் தொடங்கி, அக்டோபர் 29 வரை நடைபெறுகின்றது. முக்கியமான நாள்கள்: அக்டோபர்: 22 - தங்கமயில் வாகனம்; 24- திருத்தேர், வேல் வாங்குதல்; 25- சூரசம்ஹாரம்; 26- தெய்வசேனை திருக்கல்யாணம்; 27 - வள்ளி திருக்கல்யாணம்.
1008 லட்டு அலங்காரம்
கோடம்பாக்கம் ஆண்டவர் நகர், ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயத்தில் தீபாவளித் திருநாளன்று அம்மனுக்கு 1008 லட்டு அலங்காரம் நடைபெறுகின்றது. மறுநாள், அமாவாசையன்று மாலை பிரத்யங்கரா தேவி ஹோமம் நடைபெறும். முன்னதாக, அக்டோபர் 13 ஆம் தேதியன்று காலை சந்தான கோபால கிருஷ்ண யாகமும்; கருமாரியம்மனுக்கு 508 புடவை அலங்காரமும் (கிருஷ்ண பகவான் திரௌபதையம்மனுக்கு வஸ்திரம் அளிக்கும் காட்சி) பிரத்யேகமாக நடைபெறுகின்றது. 
தொடர்புக்கு: என். சங்கரன்- 72998 16626/ 98843 28777.
நாள்: 18.10.2017.
லட்டு வைபவம்
சென்னையை அடுத்த அம்பத்தூர், மேனாம்பேடு கிராமத்தில் ஈசான்ய லிங்கமாக விளங்கும் ஸ்ரீ அன்னபூரணி சமேத ஸ்ரீ ஆத்மநாத சுவாமி ஆலயத்தில் தீபாவளி திருநாளில் லட்டு வைபவம் நடைபெறுகின்றது. சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் ஏகாதச பைரவர் வீற்றிருந்துஅருள்பாலிக்கும் இவ்வாலத்தில் ஸ்ரீ அன்னப்பூரணி அம்மனுக்கு சுமார் ஆயிரம் லட்டுகள் படைத்து, லட்டு வைபவம் கோலாகலமாக நடைபெறும். அன்றைய தினம் அம்பாள் புறப்பாடாகி முக்கிய வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
நாள்: 18.10.2017.
தொடர்புக்கு: 90030 86204.
திருபவித்ரோத்ஸவம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், சந்திய விஜய நகரத்தில் ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்தில் திருபவித்ரோத்ஸவத் திருவிழா நடைபெறுகின்றது. அக்டோபர் 15 ஆம் தேதியன்று புஷ்பயாகம் எனப்படும் சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றது.
நாள்: 14.10.2017 - 16.10.2017.
தொடர்புக்கு: 94439 64738.
 

]]>
http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/13/நிகழ்வுகள்-2789679.html
2789678 வார இதழ்கள் வெள்ளிமணி சுமுகமான சமூக பொறுப்பு DIN DIN Friday, October 13, 2017 11:07 AM +0530 மனிதன் சமூக உயிரினம். ஒரு மனிதன் மற்றொரு மனிதனைச் சார்ந்து சேர்ந்து வாழ்வது மனித இயற்கை; மனித இயல்பு. மனிதன் தனித்து இயங்க இயலாது.

குகை வாழ்வு தொடங்கி இன்றைய கூடகோபுர மாட மாளிகை வாழ்வு வரை கூடி வாழ்வதே மனித குணம்.  இம்முறையில் கூடி வாழ்வதே சமூக, சமுதாய வாழ்வு. இந்த சமூக வாழ்வில் சமூக பொறுப்பு என்பது மனிதனுக்குப் பொதுவாக அற பண்பு. சமூக பொறுப்பு சமுதாய வளர்ச்சிக்கு வித்து. இவ்வித்தைச் சரியான நிலத்தில் சரியாக நட்டு முறையாக நீர்விட்டு வளர்த்தால் நிறையவே பயன் பெறலாம். அதுபோல சமுதாயத்தில் ஒவ்வொருவருக்கும் உள்ள பொறுப்பை ஒவ்வொருவரும் ஒழுங்காக கடைபிடித்தால் முறையாக நிறைவேற்றினால் சமுதாயம் சகல நிலைகளிலும் உயரும்.

மனித நேயம் சமூக பொறுப்பின் அடிப்படை குணம். மனித நேயம் எல்லா நிலைகளிலும் எல்லாரிடத்திலும் வெளிப்பட வேண்டும். குடும்ப தலைவர் குடும்பத்தில் உள்ள பெற்றோர், மனைவி, மக்கள், மருமக்கள், பேரன், பேத்திகள், அனைவரின் நலனைக் கவனித்து கண்காணித்து கடமை ஆற்றும் பொறுப்புடையவர். அப்பொறுப்பு அண்டை, அயலார், தெரு, ஊர், வட்டம், மாவட்டம், மாநிலம், நாடு என்று விரிந்து பரவலாகும் பொழுது சமூக, சமுதாய, நாட்டு தலைவர்களாகும் நல்ல வாய்ப்புகளையும் வழங்கும். 

சமூக பொறுப்பின் பிறர் நலம் பேணுவது தலையாயது. பிறர் நலம் பேணும் பேராண்மை பெற போட்டி, பொறாமை, மோசடி, வாக்கு மாறும் இழி குணங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். "மனிதர்கள் தங்களுக்குள் பொறாமை கொள்ளாத காலம் எல்லாம் நன்மையில் நிலைத்திருப்பார்கள்'' என்ற நீதர் நபி (ஸல்) அவர்களின் நீதியை நினைவூட்டுகிறார் ழமுரா (ரலி) நூல்- முஃஜமுத்தப்ரானி. வாக்குறுதியை வாக்களித்தபடி நிறைவேற்ற வான்மறை குர்ஆனின் 16- 91 ஆவது வசனம் வலியுறுத்துகிறது.

பிறர் நலம் பேணும் பேராண்மையால் ஒருவருக்கொருவர் உதவுவது உரிய நேரத்தில் உற்றுழி உதவுவது, சற்றும் எதிர்பாராத சங்கடங்களில் சிக்கி இருப்போரின் சிக்கலைத் தீர்த்து சிரமத்தைப் போக்குவது சமூக பொறுப்புகளில் சில. நல்ல முயற்சிகளுக்கும் நற்செயல்களுக்கும் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இது சமூக சூழலை உருவாக்கும்.

மன்னிக்கும் மனப்பாங்கும் சமூக பொறுப்புகளில் ஒன்று. கோபத்தை விழுங்கி மனிதர்களை மன்னிப்பவர்களை அல்லாஹ் நேசிப்பதாக அருமறை குர்ஆனின் 3-134 ஆவது வசனம் கூறுகிறது. பிறரின் தீங்கை மன்னிப்பது வீரம் மிக்கது என்று விளம்புகிறது இலங்கும் குர்ஆனின் 42-39 முதல் 43 வரை உள்ள வசனங்கள். மன்னிப்பது மன்னிக்கப்பட்டவர் மனம் திருந்தி சமூகத்தோடு ஒத்துவாழ உதவும்; சமூகத்தில் பிளவு ஏற்படாது தடுக்கும். தண்டனை தவறைத் திருத்தாது.

மன்னிப்பு ஏற்படுத்தும் மனமாற்றம் ஏற்றம் பெற்று உயர ஏணியாய் உதவும், உறவை முறிக்கும் புறக்கணிக்கும் போக்கு சமூகத்திற்கு உகந்தது அல்ல. உங்களைத் துண்டிப்பவர்களை நீங்கள் துண்டிக்காது அவர்களுக்குத் துணை நின்று உதவினால் உன்னத சமுதாயம் உருவாகும் என்று உத்தம நபி (ஸல்) அவர்கள் தோழர் உக்பா இப்னு ஆமிர் (ரலி) அவர்களுக்கு அறிவுரை கூறினார்கள்.

மலர்ந்த முகமும் மாறா சிரிப்பும் தீரா பகையையும் தீய்த்து நேரிய வழியில் நெருங்க வைக்கும். இந்த நெருக்கம் சமூக ஒற்றுமையை வலுவாக்கும். சங்கடங்கள் சஞ்சலங்கள் நேருகையில் சகிப்புத் தன்மையோடு நடப்பது சகலரையும் வசப்படுத்தும். சமூகத்தைக் கட்டுக்குள் வைக்கும்; பகைமை இல்லாமல் ஆக்கும்.

பிறர் குறையை துருவி துருவி விசாரித்து விளம்பரப்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கிறது எழில்மறை குர்ஆனின் 49- 12 ஆவது வசனம். ஒருவரின் குறையை மற்றவர் பெரிது படுத்தி பேசினால், மற்றவர் பேசியவரின் குறையை குன்றன்ன குறையாக உயர்த்திக் காட்டி உரக்க பேசுவார். பெருங்குழப்பம் உருவாகி சமூகம் பிளவுபடும். ஏதிலார் குற்றத்தை ஏளனப் படுத்தாது தோதாய் திருத்தி தோழமை பூணுவது சமூகத்தை வலுபடுத்தும். குறைகூறி புறம் பேசுவோர் கேடடைவர் என்று எச்சரிக்கிறது எக்காலத்திற்கும் ஏற்ற குர்ஆனின் 104- 1 ஆவது வசனம்.

தனி மனிதனின் சமூக பொறுப்பை உணர்ந்து தன்னலம் தவிர்த்து சமூக நலம் பேணி அல்லன அகற்றி நல்லன  செய்தால் சமூக ஒற்றுமை நாட்டையும் வலுப்படுத்தும்.
- மு.அ. அபுல் ஆமீன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/13/w600X390/v4.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/13/சுமுகமான-சமூக-பொறுப்பு-2789678.html
2789677 வார இதழ்கள் வெள்ளிமணி பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர் DIN DIN Friday, October 13, 2017 11:05 AM +0530 * நல்லவர்கள் தர்மத்திலிருந்து தவறமாட்டார்கள், கவலைப்படமாட்டார்கள், அழியமாட்டார்கள். நல்லவர்களின் தொடர்பு ஒருபோதும் வீணாகாது. நல்லவர்களிடம் பயம் கிடையாது. நல்லவர்கள் சத்தியத்தால் சூரியனை இயக்குகிறார்கள்; பூமியை நிலைத்து நிற்க வைக்கிறார்கள். நல்லவர்கள் இடையே நல்லவர்கள் கஷ்டப்படுவதில்லை;  இது பெரியோர்கள் சொல்லும் சாசுவதமான நெறியாகும்.
- மகாபாரதம்

* நீண்ட காலம் இடைவிடாமல் ஏற்பட்ட ஆன்மிக சாதனைகளுடன் தொடர்ந்து பயிற்சி (அப்பியாசம்)  நிகழுமானால், அது உறுதியாகி விரும்பிய பலனைத் தரும்.
- யோக சூத்திரம்

* பக்தன் உலகியல் இழப்பைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. ஏனென்றால் அவன் தன்னையும், தன்னுடைய எல்லாச் செயல்களையும் பகவானுக்கு சமர்ப்பணம் செய்துவிட்டான். ஆனால் பக்தியில் சித்தி (பூரணத்துவம்) ஏற்படாத வரையில், உலக விவகாரங்களைத் துறந்துவிடக் கூடாது; கர்மாக்களின் பயனைத் துறந்து (நிஷ்காம உணர்வுடன்) பூரண பக்திக்கான ஆன்மிக சாதனைகளைச் செய்ய வேண்டும்.

* பக்தி என்பது இறைவனிடம் ஏற்படும் உன்னதமான பிரேமை வடிவமாகும்.
- நாரத பக்திசூத்திரம்

* யாசகம் கேட்பவன், சரணாகதியடைந்தவன் ஆகியவர்களின்  விருப்பத்துக்கு பங்கம் ஏற்படாமல் நடந்துகொள்பவனே, இந்த உலகில் உள்ள மனிதர்களில் சிறந்தவன். அவனே சத்புருஷர்களின் விரதத்தை நிறைவேற்றி வைத்தவன்.
- பஞ்சதந்திரம்

* உடலைப் பாதுகாப்பதில் அளவுக்கும் மீறி பற்றுடைய ஒருவன் ஆத்மாவைக் காண ஆசைப்படுவது, முதலையைத் தெப்பக்கட்டை என்ற புத்தியால் பிடித்துக்கொண்டு ஆற்றைக் கடப்பதற்குச் சமமாகும்.    

* வேதத்தை நன்கு கற்றுணர்ந்தவரும், பாவமற்றவரும், ஆசை வழியில் அழியாதவரும், பிரம்ம நிஷ்டையில் ஒடுங்கி நிற்பவரும், பிரம்மஞானிகளில் சிறந்தவரும், விறகில்லாத நெருப்புப்போல் அமைதியாக இருப்பவரும், கடல்போல் கருணையுள்ளவரும், தன்னை வணங்கும் நல்லவர்களுக்கு உறவினரும் எவரோ, அவரே சிறந்த குரு ஆவார்.
 - விவேகசூடாமணி

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/13/w600X390/v3.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/13/பொன்மொழிகள்-தொகுப்பு-சுவாமி-கமலாத்மானந்தர்-2789677.html
2789676 வார இதழ்கள் வெள்ளிமணி மகா ஸ்வாமிகள் போற்றிய பிறவி ஞானி - சிவன் சார் DIN DIN Friday, October 13, 2017 11:01 AM +0530 காஞ்சி காமகோடி பீடம் கோவிந்த தீட்சிதர் வம்சத்தில் ஈச்சங்குடி மகாலட்சுமி அம்மாள் -பிரஹ்மஸ்ரீ சுப்ரமணிய சாஸ்திரிகள் தம்பதியருக்கு இரு தலை சிறந்த ஞானியர்கள் மகவாகத் தோன்றினார்கள். மூத்தவர் பற்றி உலகமே அறியும். ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்கிற காஞ்சி மகாஸ்வாமிகள்.

இளையவர், அவ்வளவாக அனைவராலும் அறியப்படாதவர். அவர் சிவன் சார் என்று பக்தர்களால் அறியப்படும் ஸ்ரீ சதாசிவ சாஸ்திரிகள்.  இவரது 113 ஆவது  பிறந்த தினம் - 14.102017 அன்று வருகின்றது.

1994 ஆம் ஆண்டு ஜனவரி திங்களில் ஒரு நாள் வழக்கம் போல் நிஷ்டையில் இருந்த சிவன் சார், திடீரென்று  "ஒரு மஹா புருஷரை உலகம் இழக்கப் போகிறது. எல்லாம் ஆயிடுத்து' என்றாராம். சிறிது நேரத்தில் காஞ்சி மகாஸ்வாமிகள் சித்தியான செய்தி வெளியானது. தொடர்ந்து இரண்டு வருடத்தில் தம் 91 - ஆம் வயதில் சிவன் சாரும் பல வருடங்கள் குளியல் பார்த்திராத, உறக்கம் கொள்ளாத, அன்ன பானம் பெருமளவில் தவிர்த்தபோதும் துர்கந்தமோ வியர்வையோ அறியாத தம் உடலைத் துறந்தார்.       

மகாஸ்வாமிகளின் பூர்வாஷ்ரம  தம்பி என்பதாலோ என்னவோ இருவரின் கொள்கை, செயல்பாடுகள் பல ஒத்து இருந்தன. செல்வத்தை, சுகபோகத்தை இவரும் துச்சமாக மதித்தார். "எனக்கு எதுக்குக் காசு? என் தோள் மேல் இருக்கிற துண்டே எனக்கு பாரம்' என்றார்.இத்தனைக்கும் சிவன் சார் இல்லறத்தானாக தன் ஆன்மிகப் பாதையில் நுழைந்தவர். குடந்தை டவுன்பள்ளியில் 11ஆவது வரைக்கும் படித்து அய்யன் தெருவில் சித்திரப் பயிற்சியும் எடுத்தார். அபாரபுகைப்படம் எடுக்கும் திறன் இருந்ததால் ஒரு போட்டோ ஸ்டுடியோ வைத்து கொஞ்ச காலம்  நடத்திவந்தார். மகாஸ்வாமிகள் காவிரியில் குளித்து விட்டு காவிரிக் கரையில் 100 சிஷ்யர்கள் புடைசூழ நிற்கும் படம்; சிதம்பரம் கோயிலின்  நான்கு கோபுரங்களும் தெரியும்படி எடுக்கப்பட்ட கோயில் படம் போன்றவை இவர் எடுத்தவை.     

குறிப்பாக, மகாபெரியவரின் "தெய்வத்தின் குரல்' நூலைப் போல சிவன் சார் பக்தர்கள் நர்மதா பதிப்பகம் வெளியீடான "ஏணிப் படிகளில் மாந்தர்கள்' என்ற ஸ்ரீ சிவன் நூலைப் போற்றுகின்றனர். சாரும் "என்ஆத்மாவைக் கரைத்து அந்நூலை எழுதினேன்' என்று சொல்லியுள்ளார்.  கல்வி, வானவியல், தொல்பொருள், ஆன்மிகம், அரசியல், தர்ம சாஸ்திரம் என்று அப்புத்தகத்தில் அவர் சொல்லாத விஷயங்கள் இல்லை. ஆயினும் "நான் எங்கே அதை எழுதினேன்? வெறுமனே பேனா புடிச்சுண்டு இருந்தேன். சுவாமி சொன்னார்' என்று அடக்கமாக அதுபற்றிப் பின்னர் சொன்னார். ஓவியர் மணியம்செல்வன் அந்நூலுக்கு முகப்புப் படம் வரைந்தார். சார் சிறு திருத்தம் கொடுத்த பின் வெளிவந்த அவர் திருஉருவம் சென்னை மத்ய கைலாஷில் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது.

தாம் ஏன் குளிப்பதில்லை, நீர் அருந்துவது இல்லை என்பது பற்றிச்சொல்ல வரும் சிவன் சார் "நான் எங்கே தண்ணியை விட்டேன். அது என்னை விட்டுடுத்து' என்றார்.  "இது மத்த உடம்பு போல இல்லை. தேயு. திருவருனையைப் போல நெருப்பின் அவதாரம்' என்பது அவர் கூற்று. அதை தம்மை வேடிக்கையாக பெட் செய்து கேட்ட ஒரு சிறுவன் முன்னால் நிரூபணமும் செய்தாராம். அரிசி கொட்டினால் வெந்து விடும் அளவுக்குச் சூடான வெந்நீரில் மிளகாய்ப் பொடி போட்டு தேய்த்துக் குளித்து சாதரணமாக வெளி  வந்தாராம்.    
இவரது 113வது பிறந்த தினம் 14-10-2017 அன்று வருகிறது
- ஸ்ரீதர் சாமா

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/13/w600X390/v2.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/13/மகா-ஸ்வாமிகள்-போற்றிய-பிறவி-ஞானி---சிவன்-சார்-2789676.html
2789675 வார இதழ்கள் வெள்ளிமணி அருளாளரைத் தேடிவந்த அன்னபூரணி! Friday, October 13, 2017 10:58 AM +0530 இசையால் இறைவனைத் தன் வசப்படுத்திக் கொண்ட இசை ஞானிகளில் காளி உபாசகரான வங்கதேசத்தைச் சேர்ந்த ராம்பிரசாத் என்ற மஹானும் ஒருவர்.

வங்க தேசத்திலுள்ள கும்ஹார்கட்டா என்ற கிராமத்தில் ராம் - ராம் சென், சித்தேஸ்வரி தம்பதியர்களுக்குப் பிறந்தவர். மண்பானைகள் செய்யும் குடும்பத்தை சேர்ந்த இவர், உருது, பாரசீகம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். ஸரவாணி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, பின்னர் உலக வாழ்க்கை மீது பற்றின்றி துறவறம் மேற்கொண்டார். "ஆகம வாசீகர்' என்ற தாந்திரீக பக்தரிடம் ஞானோபதேசம் பெற்று "காளி' மாதாவின் மீது அளவில்லாத பக்தி கொண்டு சக்தி உபாசனையில் முழு நேரத்தை செலவழித்து காளி மாதாவின் மீது எண்ணற்ற பாடல்களைப் பாடினார். ஒவ்வொரு நாளும் கங்கையில் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு இதயத்தை தொடும் பாடல்களை காளி தேவியின்மீது "ஹிருதயகங்கா' என்ற பாடல்களைப் பாடுவார்.

ஒரு சமயம், ஒரு சிறு பெண் அவரிடம் வந்து ஒரு பாடல்பாடும் படி கேட்க, அதற்கு அவர் "நான் இப்போது காளி பூஜையில் இருக்கிறேன். போய் விட்டு அப்புறம் வா" என்று கூறி அனுப்பிவிட்டார். அன்று மாலை அவர் தனது பூஜை அறைக்குள் சென்ற பொழுது அங்கே உள்ள சுவரில் "நான் உன் பாட்டைக் கேட்டு ரசிக்க காசியிலிருந்து வந்த அன்னபூரணி. பாட மறுத்து விட்டாய் உனக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது காசிக்கு வந்து பாடு" என்று எழுதப்பட்டு இருந்தது. அதைக்கண்ட  ராம்பிரசாத் அதிர்ச்சியடைந்து உடனே காசிக்குப் புறப்பட்டார். பாதிவழியில் இரவு வந்துவிடவே, இரவைக் கழிக்க அங்கேயோ படுத்து உறங்கிவிட்டார். "நீ இங்கேயே பாடு நான்  கேட்கிறேன்' என்று கனவில் வந்து அன்னபூரணி கூறினாள். உறக்கம் கலைந்த ராம் பிரசாத் அந்த இடத்திலேயே அமர்ந்து அற்புதமான பாடல்களை அன்னை மீது பாடினார்.

அன்று முதல் அவர் காளி உபாசனையில் முழுவல்லமை பெற்றார். ஊர் ஊராக நடந்தே புனிதப் பயணத்தை மேற்கொண்டார். பல பக்தர்கள் அவரைத் தொடர்ந்தனர். இவர் பாடல்கள் மெருகேறியது. வடமாநிலம் முழுவதும்  பரவியது.

இவர் தீபாவளித் திருநாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார். தீபாவளித் திருநாளன்று அன்னையின் உருவத்தை மண்ணால் செய்து அலங்கரித்து இரவு முழுவதும் பஜனை செய்து பாடல் பாடி ஆடுவார். சில சமயம், காளி மாதா உடன் வந்து ஆடுவாளாம்! இதைக் காண பக்தர்கள் கூடுவார்கள். ஒளிமயமான அந்த ஆனந்த பஜனை அங்கே அமர்க்களப்படும். இப்படிப் பல தீபாவளிதிருநாள்கள் கடந்தன.

கடைசியாக, ஒரு  தீபாவளித்திருநாளன்று இந்த ஆனந்த உற்சவம் இரவு முழுவதும் நடந்தது. மறுநாள் காலை காளி மாதாவின் திருவுருத்தைத் தலையில் தாங்கியபடி கங்கையில் வழக்கம் போல இறங்கினார் ராம்பிரசாத். அந்த மண்சிலையோடு சிலையாக அருட்ஜோதியாகக் கலந்தார் ராம்பிரசாத். அப்படியே கங்கையில் மூழ்கினார். பக்தர்கள் கரம் குவித்து கண்ணீர் மல்க அப்படியே கங்கைக் கரையில் விழுந்து வணங்கினார்கள். 

இன்றும் வங்கதேச மக்கள் தீபாவளியன்று இரவு முழுவதும் அவர் படத்தை வைத்து, வரிசையாக தீப மேற்றி அவரது பாடல்களைப்பாடியும் ஆடியும் கொண்டாடுகின்றனர். 
- ராமசுப்பு

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/13/w600X390/v1.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/13/அருளாளரைத்-தேடிவந்த-அன்னபூரணி-2789675.html
2785511 வார இதழ்கள் வெள்ளிமணி ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் ஜெயந்தி Saturday, October 7, 2017 12:51 PM +0530 ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் ஜெயந்தி
பரமேஸ்வரரின் அம்சாவதாரமாகிய மஹான் ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதரின் ஜெயந்தி மகோத்ஸவம் அவரது ஜன்ம பூமியான அடையபலம் கிராமத்தில் அக்டோபர்-6 ஆம் தேதி, ஏகாதச ருத்ர பாராயணம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை, வித்வத்ஸதஸ் போன்ற வைபவங்களுடன் நடைபெறுகின்றது.  ஏற்பாடுகளை ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் ப்ரைவேட் டிரஸ்ட் செய்துள்ளது.
தொடர்புக்கு : 044-2464 2982.
 

]]>
http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/06/நிகழ்வுகள்-2785511.html
2785504 வார இதழ்கள் வெள்ளிமணி பூமியில் தோன்றிய பொக்கிஷம்! Saturday, October 7, 2017 12:24 PM +0530  

"ஏழுமலை இருக்க எனக்கென்ன மனக்கவலை..?;'' ஏழேழ் பிறவிக்கும் எதற்கும் பயமில்லை எனப் பாடிப்பாடி உருகியவர் ஓர் அன்பர். செட்டிநாட்டில் காரைக்குடி அருகில் உள்ள அரியக்குடிஎன்னும் தலத்தில் வாழ்ந்தவர் சேவுகன் செட்டியார் என்ற அன்பர் நிறையப் பொருள் படைத்திருந்த அவர் அருளும் பெற்றிருந்தார்.

இவர் தன்னிலை மறந்து தியானம் செய்கையில் சில சமயங்களில் பாம்புகள் அவர் மேல் ஏறி விளையாடுவதனைக் கண்டு ஊரார் பரவசம் அடைந்திருக்கின்றார்கள். இவரையே பெருமாளாகக் கருதி சேவை செய்தோரும் உண்டு.

திருப்பதி ஏழுமலையானை நோக்கி ஆண்டுதோறும் நடைப் பயணம் செய்து தரிசனம் செய்து மகிழ்வார். இவரின் திருப்பதி பாதயாத்திரையே ஒரு திருவிழாப் போல நடைபெறும்.

ஒரு முறை, திருமலையில் ஏறிச் செல்லும் போது தள்ளாமையால் மயங்கி வீழ்ந்ததோடு மேற்கொண்டு மலையேற முடியாமல் கண்ணீர் பாய கசிந்து கிடந்தார்.

ஏழுமலையான் எழில் கோலமாய் காட்சி தந்தான். " இனிமேல் நீங்கள் என்னை நாடி வரவேண்டாம். யாமே உம்மிடத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பேன். என்னை அங்கு பிரதிஷ்டை செய்வாயாக'' என சில மங்கல விஷயங்கள் கூறி அருள்பொழிந்தார்.

ஊருக்குத் திரும்பிய சேவுகன் செட்டியாருக்கு ஊர் எல்லையில் கருடன் வட்டமிட்டு வரவேற்க, பெருமாள் சொன்ன அடையாளங்கள் மங்களமாய்த் தென்பட்டது. மகிழ்வோடு அந்த இடத்தில் பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கியபோது பூமியிலிருந்து பொக்கிலிமாய்ப் பெருமாள் தோன்றினார். ஸ்ரீ தேவி, பூதேவியுடன் பெருமாளுக்கு ஆலயம் அமைத்தார்.

கிழக்கு நோக்கிய ஆலயம், 7 நிலைகள் கொண்ட அழகான ராஜகோபுரத்திற்கும் ஐந்து நிலைகளுடைய மற்றொரு கோபுரத்திற்கும் நடுவே தசாவதார மண்டபம் காட்சி அளிக்கின்றது. மகா மண்டபத்தின் தென் பகுதியில் கொடி மரத்தை அடுத்து, ராமர் சந்நிதியும் தேசிகர் சந்நிதியும் உள்ளன.

துவார பாலகர்களைக் கடந்து சென்றால் பெருமாள் சந்நிதியை அடையலாம். ஸ்ரீ தேவி, பூதேவியுடன் பெருமாள் திருவேங்கடமுடையான் கண்கொள்ளாக் காட்சித் தருகிறார். பெருமாளின் தென்புறத்தில் அலர்மேல் மங்கைத் தாயார் சந்நிதி; கீழ்த்திருப்பதியில் குடிகொண்டுள்ள தேவியே இங்கு வந்து இருப்பதாக ஐதீகம்! இச்சந்நிதியின் வடகிழக்கு மூலையில் சேனை நாயகர் சந்நிதியும்; வடபுறத்தில் ஆண்டாள் சந்நிதியும் அமைந்துள்ளன.

வெளிப்பிரகாரத்தின் வடபகுதியில் ஏகாதசி மண்டபமும் சொர்க்கவாசல் கதவும் உள்ளது. ஏகாதசி மண்டபத்தினை அடுத்து கோயிலின் மேல் தளத்தில் ஈசான்ய மூலையை நோக்கி மூலைக்கருடன் சந்நிதி உள்ளது. மூலைக் கருடன் சந்நிதிக்கு நேர் எதிரில் கருடதீர்த்தம் என்னும் திரு மஞ்சன புஷ்கரணி உள்ளது. மூலைக்கருடனுக்கு விடலைத்தேங்காய் உடைப்பதன் மூலம் சகல பிரச்சனைகளும் தீரும் என்பது நம்பிக்கை. வெள்ளிக்கிழமைகளில் தாயார் திருமஞ்சனமும்;

திருவோண நட்சத்திரத்தில் பெருமாள் திருமஞ்சனமும் பிரசித்தம்! திருக்கல்யாணம் நடத்தி வழிபடுபவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுகிறது.

சித்திரை வருட பிறப்பன்று விசேலிஷ திருமஞ்சனம் நடைபெற்று இரவில் மஞ்சக்கருட வாகனத்தில் எம்பெருமான் வலம் வருவார். வைகாசியில் பிரம்மோத்சவம், ஆடியில் பத்து நாட்கள் திருவாடிப்பூரம் உற்சவம் நடைபெறும். ஆவணியில் கோகுலாஷ்டமி உரியடித் திருவிழா, புரட்டாசியில் நான்கு சனிக்கிழமைகளிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள்கூடி வழிபாடு செய்வார்கள்.

பெரிய திருவோணத் திருநாளில் இரவு பெரிய அகல் சட்டியில் தீபம் ஏற்றி ஊரில் உள்ள நகரத்தார்கள் "கோவிந்தா கோவிந்தா!'' என கோலிஷம் எழுப்பியபடி தீபத்தினை வலம் வருவார்கள். திருக்கார்த்திகையில் சொக்கப்பனைக் கொளுத்துதலும் மார்கழியில் திருப்பள்ளி எழுச்சி, வைகுண்ட ஏகாதசியும் மிகவும் விசேஷமாகும். பங்குனி உத்திர நன்னாளில் ஸ்ரீ அலமேலு மங்கைத் தாயாருக்கும் திருவேங்கடமுடையானுக்கும் திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது. ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று மூலைக்கருடனுக்கு திருமஞ்சனம் நடைபெறும். ஆடி மாத சுவாதியில் விஷேச அபிஷேகமும் உண்டு. இத்திருக்கோயிலில் உள்ள ஏகாதசி மண்டபத்தில் 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட அழகிய ஓவியங்கள் உள்ளன.

ஸ்ரீ ரெங்கம் பெரிய கோயிலில் இருந்து நம் பெருமான் விக்கிரஹமும் திருப்பதியில் இருந்து சடாரியும், திருக்கோஷ்டியூர் திருமெய்யத்திலிருந்து அக்னியும் இங்கு கொண்டு வரப்பெற்றதால் இத்தலத்தினை வழிபாடு செய்பவர்களுக்கு மேற்சொன்ன தலங்களை வழிபாடு செய்த பலன்கள் உண்டு.
- மீனாட்சி ஸ்ரீநிவாஸன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/6/w600X390/v1.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/06/பூமியில்-தோன்றிய-பொக்கிஷம்-2785504.html
2785506 வார இதழ்கள் வெள்ளிமணி நற்செயல்களால் நன்மதிப்பு Saturday, October 7, 2017 12:23 PM +0530 நன்மதிப்பும் நற்புகழும் விலை மதிப்பற்ற சொத்து. இச்சொத்தைப் பெறுவதே மனிதனின் புனித நோக்கமாக இருக்க வேண்டும். இதனையே இவ்வுலகில் உதித்த நபிமார்கள் நவின்றனர். இதனை இப்ராஹீம் நபி இறைவனிடம் இறைஞ்சியதை நிறைவாய் நினைவுறுத்துகிறது குர்ஆனின் 26-84 ஆவது வசனம். "நல்ல மதிப்பை எனக்கு ஏற்படுத்து. எனது காலத்திற்குப் பிறகும் இந்த மனிதர்களிடம் நிலையான உண்மையான நியாயமான நற்பெயரையும் நன்மதிப்பையும் உருவாக்கித் தருவாயாக!''

இப்ராஹீம் நபியைப் பின்பற்றியோரும் அவர்களுக்குபபின் தோன்றிய நபிமார்களைப் பின்பற்றியோரும் இறுதி தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றும் இக்கால இஸ்லாமியர்களும் இப்ராஹீம் நபியைப் போற்றி பாராட்டுவது இப்ராஹீம் நபி இறை நம்பிக்கையோடு நற்குணத்தாலும் மென்மையான சொல்லாலும் செய்த நன்மை பயக்கும் நற்செயல்களால் இறைவன் இப்ராஹீம் நபியின் இறைஞ்சலை நிறைவேற்றி நீளுலகில் மனித ஆளுமை நடைபெறும் காலம் எல்லாம் நன்மதிப்பைப் பெற செய்தான்.

உன்னத புகழ் கடந்த கால களங்கம் இல்லா வரலாறு நன்மதிப்பு ஆகியன போட்டி உலகில் வெற்றியை நல்கும்;  அறியா புறத்திலிருந்து வரும் ஆபத்துகளைத் தடுக்கும்; மனித மனங்களை வெல்லும்; எண்ணம் விரிவடையும்; எண்ணியன எண்ணிய வண்ணம் பயன் தரும்.

யூசுப் நபி மீது பொய் குற்றம் சாட்டிய ஜூலைகாவின் பொய்யைப் பொய்யாக்கி நபியின் நற்செயல்களால் நபியின் நன்மதிப்பு உயர்த்தப்பட்டதை உத்தம குர்
ஆனின் 12-51 ஆவது வசனம் கூறுகிறது. 19-96 ஆவது வசனம் " நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிவோர் நன்மதிப்பைப் பெறுவர்'' என்று உறுதி 
செய்கிறது.

நற்செயல்களை நாளும் செய்ய வேண்டும். அழகிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அன்றாட வேலைகளில் நம்பகத் தன்மையும் பொறுப்புணர்ச்சியும் இருக்க வேண்டும். நியாயமான அணுகுமுறை வேண்டும். இவை உடன் உறைபவர்கள் மத்தியில் நன்மதிப்பை உருவாக்கும். உடன் உறைபவர்களிடம் இணக்கமான உறவைப் பேண வேண்டும். சொல்லிய வண்ணம் செயல்பட வேண்டும் ஒரு தனி மனிதனின் நன்மதிப்பு அவன் சார்ந்த சமூகத்திற்கும் நன்மதிப்பு கிடைக்கச் செய்யும்.

வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ளும் முறையால் வியாபாரியும் பணியாளரும் வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பைப் பெறுவர்.  நன்மதிப்பு பெற்றவரை மக்கள் பாராட்டுவர். இப்பாராட்டு மனிதன் பிறந்த ஊர் பிறந்த நாட்டிற்கும் பெருமையை சேர்க்கும். அனைத்து மக்களிடமும் அழகாக பேசுவது நாட்டின் நன்மதிப்பை உயர்த்தும். குழந்தைகளுக்கும் நன்மதிப்பின் நற்பயனைக் கூறி நாகரிகமாக நடக்க கற்று கொடுக்க வேண்டும்.

நபி பட்டம் பெறுவதற்கு முன்னரே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்அமீன் - உண்மையான நம்பிக்கையாளர் என்ற நன்மதிப்பை மக்களிடம் 
பெற்றார்கள்.

யேமன் நாட்டிற்கு அனுப்பிய  மஆது (ரலி) அவர்களுக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகளின் இறுதி சொல்   " மக்களுக்கு உங்கள் குணத்தை அழகாக்கிக் கொள்ளுங்கள்'' அறிவிப்பவர் - மாலிக் (ரஹ்) நூல் -முஅத்தா.

பெருமானாரின் திருமொழிகளில் சில. " மக்களிடம் நற்குணம் கொண்டு பழகுங்கள்'' அறிவிப்பவர் ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) நூல்- அஹ்மது, திர்மிதீ. " மனிதனுக்கு வழங்கப் பட்டவைகளில் மேலானது நற்குணம்'' அறிவிப்பவர்- அன்னை ஆயிஷா (ரலி) நூல்- பைஹகீ.

" நிச்சயமாக ஆதமின் மக்களை நாம் சங்கைப் படுத்தினோம். நாம் படைத்துள்ள படைப்புகள் பலவற்றைப் பார்க்கினும் மனிதர்களை மேன்மைப் படுத்தினோம்'' என்று எழில்மறை குர்ஆனின் 17-70 ஆவது வசனம் கூறுகிறது. அறிவு, சிந்தித்து உணரும் தன்மை, சீரான உருவம், நேரான வழியில் நேரிய வாழ்வு, பிற உயிரினங்களை அடக்கி ஆளும் ஆற்றல்,  புதிய கண்டுபிடிப்புகளைக் காணும் ஆளுமைகளை வழங்கி மேன்மை படுத்திய மேலோன் அல்லாஹ் அவ்வப்பொழுது நேர்வழி காட்டும் தூதர்களையும் அனுப்பி மனிதன் மதிப்போடு வாழ வழிகாட்டுகிறான். அதனால் மனிதன் அன்பு, பரிவு, பாசம், நேசம், இரக்கம், வாய்மை, நேர்மை, நீதி, பிறர் நலம் பேணல், தாராள தன்மை, கலந்து பழகும் பான்மை, விட்டு கொடுக்கும் சகிப்பு தன்மை, மற்றவரை மதிக்கும் மனப்பாங்கு முதலிய மேலான குணங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்நற்குணங்களாலும் இந்நற்குணங்களின் அடிப்படையில் புரியும் நற்செயல்களாலும் நன்மதிப்பைப் பெற வேண்டும்.
- மு.அ. அபுல் அமீன்


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/6/w600X390/v3.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/06/நற்செயல்களால்-நன்மதிப்பு-2785506.html
2785508 வார இதழ்கள் வெள்ளிமணி என்னைத் தொட்டது யார்? Saturday, October 7, 2017 12:22 PM +0530 தொடுதல் ஓர் இன்ப அனுபவம்! தாய் தன் குழந்தையை தொடுதலில் குழந்தையும் தாயும் இன்ப உணர்வை பெறுகின்றனர். அப்பா தன் பிள்ளையின் கைபிடித்து வெளியே செல்லும்போது பிள்ளைகள் மிகவும் இன்ப உணர்வும் பாசத்தின் உணர்வும் பெறுகின்றனர். குழந்தைகள் தம் விளையாட்டு பொம்மையை தொட்டு மகிழ்கின்றன. 

வேதாகமத்தில் இயேசுவைத் தொட்டு குணமான ஒரு பெண்மணியின் நிகழ்ச்சி ஒன்று உண்டு. பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து தன ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும் ஒருநாளும் குணமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரி (லுக்கா 8:43) இவ்வாறு ஒரு பெண்மணியின் துன்ப நோய்ப்பற்றி சொல்லப்பட்டுள்ளது. 

வேதாகமத்தில் சொல்லப்பட்ட இந்த பெண்மணி உதிரப்போக்கு நோயினால் பன்னிரண்டு ஆண்டுகள் துன்புற்றுள்ளார். இந்நோயினால், அந்த பெண் ரத்த சோகை உள்ளவளாகி, அழகுபோய் நடைப்பிணமாகிவிட்டார். 

அப்பெண்மணி சிறு வைத்தியம் தொடங்கி மிக செலவழிக்கும் வைத்தியம் வரை பன்னிரண்டு ஆண்டுகள் பார்த்தார்.  நெஞ்சை உருக்கும் துன்பம்! இத்துன்பத்தை வார்த்தையால் விவரிக்க முடியாது.

கொஞ்சமும் குணமாகாத நிலையில் மரண போராட்டமாக இருந்து கஷ்டப்பட்டாள். இயேசு அன்புள்ள தெய்வம். அவர் பாவங்களை மன்னிக்கின்றார். பேய் பிடித்தோர் விடுதலை பெறுகின்றனர். பார்வையற்றோர் பார்வை அடைகின்றனர். நடக்கமுடியாத மாற்றுத் திறனாளிகள் கால்கள் குணமடைந்து  நடக்கின்றனர். மரித்தவர் உயிர் பெறுகின்றனர் என கேள்விப்பட்ட அந்த பெண் இயேசுவிடம் சென்று குணமாக விரும்பினார்.

இப்பெண்மணி ஒரு தீர்மானம் எடுத்துக்கொண்டாள். நடந்துபோகும் இயேசுவை நெருங்கி அவர் ஆடையின் கீழ்பகுதியை தொட்டால் குணமாவேன். அவரை சூழ்ந்துள்ள ஆண்கள் கூட்டம் தன் செயலை அனுமதிக்காது. கண்டுபிடிக்கப்பட்டால் தான் தண்டிக்கப்பட்டாலும் தண்டனை பற்றி கவலையில்லை என அப்பெரும் கூட்டத்தின் உள்ளே சென்று "குணமாக்கும்' என வேண்டி இயேசுவின் ஆடையை தொட்டாள். தொட்ட மாத்திரத்தில் பன்னிரண்டு ஆண்டு உதிரபோக்கு நின்று போயிற்று.

இயேசுவோ நின்று, " என்னை தொட்டது யார்?'' என கேட்டார். "குணமாக்கும் வல்லமை சென்று குணமாக்கியதே'' என்றார். இயேசுவின் சீடர்கள் ஆண்டவரே பெருங்கூட்டமாக உள்ளது;  எவராகிலும் உம்மை தொட்டிருப்பர்'' என்றனர்.

குணமான பெண்ணோ தாம் இயேசுவை தொட்டது தெரிந்து போனது என அறிந்து தான்பட்ட துன்பத்தையும் பன்னிரண்டு ஆண்டுகள் நோய் குணமானதை எல்லார் முன்பும் அறிவித்தாள். 

இவ்வாறு நோயுற்றவர் தொட்டது குற்றம் தண்டிக்கப்படுவோம் என பயந்தாள். இயேசு அப்பெண்மணியை பார்த்து, "மகளே திடங்கொள். உன் விசுவாசம் உன்னை ரட்சித்தது. சமாதானத்தோடு போ'' என்றார்.

நாமும் நம் நோயிலும் துன்ப நேரத்திலும் வறுமையிலும் உதவி வேண்டும் போதும் இயேசு கேட்ட மாத்திரத்தில் உதவி செய்வார். மனதால் வேண்டியும் அவரைத் தொட்டால் குணமளிப்பார்.
- தே. பால்பிரேம் குமார்


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/6/w600X390/v5.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/06/என்னைத்-தொட்டது-யார்-2785508.html
2785514 வார இதழ்கள் வெள்ளிமணி பக்தியும் முக்தியும் ஸ்ரீமந் நாராயணனே..! Friday, October 6, 2017 04:47 PM +0530 வைணவத் திருத்தலங்களில் 108-இல் முதன்மையானது என்றும், பெரிய கோயில், பூலோக வைகுந்தம் என்றும் போற்றப்படுவது ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில்.

ஆழ்வார்களும், நாதமுனி, ஆளவந்தார், ராமானுஜர், மணவாளமுனிகள் போன்ற ஆச்சாரியர்களும், ஏனைய சான்றோர்களும் ஸ்ரீரங்கத்தை புனிதமாகக் கருதியதால் வைணவத் திருத்தலங்களில் திருவரங்கத் திருப்பதி என்ற சிறப்பிடத்தையும் பெற்று இக்கோயில் விளங்குகிறது.

இத்திருக்கோயிலில் ஆண்டில் அனைத்து மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெற்றாலும், புரட்டாசி மாதத்தில் தாயாருக்கு நடைபெறும் நவராத்திரி உற்ஸவம் மிகுந்த சிறப்புடையது. மகாளய அமாவாசை தினத்தை துவக்கமாக கொண்டு நவராத்திரி திருநாள் இக்கோயிலில் நடத்தப்பட்டு வருகிறது.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடிச் சேவை, இத்திருவிழாவின் ஏழாம் நாளில் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நவராத்திரி விழாவையொட்டி இக்கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் சுமார் முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட அரங்குகளில் நவராத்திரி கொலு காட்சி அமைக்கப்பட்டிருந்தது அனைவரையும் கவர்ந்தது.

இவ்வாண்டு, "பக்தியும்- முக்தியும் ஸ்ரீமன் நாராயணனே!' என்ற மையக் கருத்தைக் கொண்டு கொலு காட்சி அமைக்கப்பட்டது. வைகுந்த ஏகாதசியில் அரங்கனைத் தரிசிக்கும் பக்தர்கள் பரமபதத்தை அடைவார்கள் என்றும்; அரங்கன் மீது பக்தி கொண்டு இத்திருக்கோயிலில் ஆண்டாள், திருப்பாணாழ்வார் உள்ளிட்டோர் முக்தியும் அடைந்துள்ளார்கள் என்ற மையக் கருத்தைக் கொண்டு கொலுக் காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன.

வைணவத் தத்துவங்களை விளக்கும் வகையில் விஷ்ணுவின் அவதாரங்கள் 11 அறைகளில் வைக்கப்பட்டிருந்தன. அதற்கு நேர் எதிரில் லட்சுமியின் அம்சங்கள், தாயார், ஆண்டாள் காட்சிகளுடன், ராமானுஜரின் முத்திருமேனிகள், லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை அம்மன் காட்சிகளும் சிறப்பாய் அமைந்திருந்தன. கொலு காட்சியின் மையப்பகுதியில் சந்திரபுஷ்கரிணி, மனிதப் பிறப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பரமபத சோபனப் படக் காட்சியும் வைக்கப்பட்டது சிறப்பு! மேலும் நடுப்பகுதியில் விஷ்ணுவை துதிக்கும் நவவிதபக்தி முறைகளை விளக்கும் கொலுக் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

அரங்கின் ஒரு பகுதியில் பக்தி முறையை விளக்கும் வைணவப்பக்தி ( மச்சவாதாரப்பக்தி) என்றபெயரில் விஸ்வரூபதரிசனக் காட்சியை விளக்கும் பொம்மைகள், கூர்மவதாரம், வராகவதாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், கல்கி அவதாரம் என, ஸ்ரீரங்கம் கோயில் திவ்ய தேசக் காட்சி என்ற தலைப்புகளில் காட்சிகள் அரங்கில் நிறைந்திருந்தன. இதே அரங்கில் விஷ்வரூப பக்தி, மாதா, பிதா, குரு, தெய்வப் பக்தி, பதி பக்தி, பிராத பக்தி, பிரேம பக்தி, காருண்ய பக்தி, ஸ்ரீரங்கப் பக்தி முறையை விளக்கும் வகையில் உரிய காட்சி விளக்கங்களுடன் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன.

இதைத் தொடர்ந்து கொலு கண்காட்சியின் அரங்கின் நடுப்பகுதியில் விஷ்ணுவைத் துதிக்கும் நவபக்தி முறைகள் காட்சிகளாக இருந்தன. ஸ்வரணம் (காதால் கேட்டல்), கீர்த்தனம் (பாடுதல்), ஸ்மரணம் (ஜபம் செய்தல்), பாதசேவனம் (நமஸ்காரம் செய்தல்), அர்ச்சனம் (அர்ச்சனை செய்தல்), வந்தனம் ( வணக்கம் செய்தல்), தாஸ்யம் (அடியாராக இருத்தல்), சாக்கியம் ( நண்பனாக இருத்தல்) ஆத்மநிவேதனம் (தியானித்தல்) ஆகியவற்றை விளக்கும் வகையிலும் கொலுக் காட்சிகள் அமைந்திருந்தன.

வைணவப் பக்தி என்ற பெயரில் வைக்கப்பட்டிருக்கும் அரங்குகளுக்கு நேர் எதிரில் லட்சுமியின் அம்சங்கள் ஊஞ்சலுடன் அமைந்திருந்தன.

அரங்கநாதசுவாமிக்கு நேர் எதிரில் தாயாரும், ராமானுஜருக்கு எதிரில் ஆண்டாளும், விஷ்ணுவுக்கு எதிரில் லட்சுமியும் காட்சியாக வைக்கப்பட்டிருந்தனர்.

லட்சுமியின் அம்சங்களாக ஆதிலட்சுமி, தானியலட்சுமி, விஜயலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, வித்யாலட்சுமி, வீரலட்சுமி, தனலட்சுமி ஆகிய லட்சுமியின் அம்சங்கள் காட்சிப் படைப்புகளாகத் திகழ்ந்தன. ஒவ்வொரு லட்சுமி அம்சமும் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதைத் தவிர, ராமானுஜரின் முத்திருமேனிகளும் கொலுக் கண்காட்சியில் இடம் பெற்றன.

கண்காட்சி அரங்கின் மையப்பகுதியில் தாமரை மலரில் சந்திரபுஷ்கரிணியும், மனிதப் பிறப்பின் முக்கியத்துவை உணர்த்தும் வகையிலும் விளையாட்டிலும் பக்தியை உணர்த்தும் வகையில் பரமபத விளையாட்டை "பரமபதசோபன படம்' என்ற பெயரில் காட்சிப் படைப்பு வைக்கப்பட்டது.

ஆயிரங்கால் மண்டபத்தில் கொலுக் கண்காட்சி அமைக்கப்பட்டிருக்கும் பகுதியில் வண்ண விளக்குகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆயிரங்கால் மண்டபத்தின் அழகை மேலும் மெருகேற்றும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கொலு கண்காட்சியை திருக்கோயிலுக்காக அமைத்துத் தந்திருப்பவர்கள் மயிலாப்பூர் ஸ்ரீசுமுகி ராஜசேகர் அறக்கட்டளையைச் சேர்ந்த, மயிலை மூவர் எனப்படும் எஸ். சுரேந்திரநாத், எஸ். அமர்நாத், எஸ். அபர்ணா மற்றும் எம். சுகதன் ஆவார்கள்.

ஆண்டுக்கு ஆண்டு வித்தியாசமான முறையில், கருத்துகளை விளக்கும் வகையிலான கொலுக் காட்சிகளை படைத்து வரும் இவர்கள், பரம்பரை பரம்பரையாக கொலு கண்காட்சியை கடந்த 65 ஆண்டுகளாக அமைத்து வருகிறார்கள்.

நமது கலாசாரம், பண்பாடு, வரலாறு, ஆன்மிகம் ஆகியவற்றின் சிறப்பை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இவர்கள் இந்த கொலுக் கண்காட்சி அரங்குகளை அமைத்து இறைப்பணி செய்து வருகிறார்கள். பெரிய பெருமாள், பெரியபிராட்டி, பெரியகோயில், பெரியதளுகை என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் ஆயிரங்கால் மண்டபம், இந்த கொலுக் கண்காட்சியால் நிறைந்து பக்தர்களைக் கவர்ந்தது.
- கு. வைத்திலிங்கம்
படங்கள்: எஸ். அருண்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/6/w600X390/v7.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/06/பக்தியும்-முக்தியும்-ஸ்ரீமந்-நாராயணனே-2785514.html
2785510 வார இதழ்கள் வெள்ளிமணி நாளை எனாத நரசிம்மன் Friday, October 6, 2017 10:36 AM +0530 பல்லவர்களில் நரசிம்மன் என்ற பெயருடைய மன்னர்கள் பலர் உண்டு. அவர்கள் பெருமாள் பக்தர்கள். நரசிம்மரையே தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர். தங்களின் ஆளும் எல்லையை விரிவுபடுத்திச் செல்லும் இடங்களில் எல்லாம் நரசிம்மர் உருவையோ கோயிலையோ நிறுவி வந்துள்ளனர்.

அதுபோன்று தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், நரசிங்கன்பேட்டையில் காவிரிக்கு தென்கரையில் அனுக்கிரக மூர்த்தியாக அமைந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீ யோக நரசிம்மர்! ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்படாத திவ்ய தேசங்கள் பலவற்றுள் இதுவும் ஒன்றாகும்.

யோக நரசிம்மர்: தெளிந்தபின் தீமையை அழித்து நன்மை செய்வது என்றாலும் இரண்யகசிபுவைக் கொன்ற தோஷம் தன்னை வந்து சேர்ந்து இருப்பதை உணர்ந்தார். தன்னை பீடித்துள்ள ஹத்திதோஷம் நீங்க சிவனை நோக்கி கடுந்தவமிருந்தார். வெகு உக்கிரகமாக நரசிம்மர் தவம் இருந்ததைக் கண்ட சிவபெருமான், உலக இயக்கம் சரிவர நடைபெற நரசிம்மரின் தோஷம் நீங்கிட வேண்டும் என்பதை உணர்ந்தார். அவசரமும் வேகமுமாகத் தோன்றியதால் லிங்கவடிவில் சுயம்புமூர்த்தியாய் எழுந்தருளி காட்சியளித்தார். லிங்கவடிவில் தோன்றிய சிவபெருமானுக்கு மாலையிட்டு பூஜை செய்து வழிபட்டு தோஷம் நீங்கினார் நரசிம்மர். நரசிம்மர் தவம் செய்த இடமே நரசிங்கன்பேட்டை ஆனது. அவர் பூஜை செய்த லிங்கம் "சுயம்பு நாதஸ்வாமி' என்ற திருநாமத்தோடு இக்கோயிலுக்கு தென் திசையில் 1/4 கி.மீ. தொலைவில் தனிக்கோயிலில் அமைந்து அருள்புரிகிறார். சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலான பழைமை உடையது இத்திருக்கோயில்!

கோயில் அமைப்பு: கிழக்கு நோக்கி இருந்து அருளும் விமானத்துடன் கூடிய இந்த திருத்தலம், சக்தி மிக்க நரசிம்மர் திருத்தலங்களில் தனிச்சிறப்பு பெற்றதும் ஆகும். யோக நிலை நரசிம்மர் மற்ற நரசிம்ம மூர்த்தங்களை விட சக்தி வாய்ந்தவர். தன் பக்தனுக்கான மறைமுகமான எதிர்ப்புகளான ஏவல், சூன்யம் முதலியவற்றை நொடியில் அழித்து விடுவார் யோகநரசிம்மர்.

கருவறையில் நரசிம்மப் பெருமாள் சதுர்புஜத்துடன் சங்கு, சக்கரம் இரு கைகளில் ஏந்தி, இரு கால்களையும் அரைசம்மணமிட்டு இரண்டு கைகளை யோக முத்திரையில் இருத்தி, அமர்ந்த திருக்கோலத்தில் சேவை தருகிறார். எதிரிலேயே தோஷம் அகற்றத் துணை நிற்கும் கருடாழ்வார், தனிசந்நிதியில் காரிய சித்தி அனுமன் அமைந்து அருள்கின்றனர். உற்சவர் பிரகலாதவரதன் ஸ்ரீதேவி-பூதேவியுடன் நின்று அருளுகிறார். பக்தனின் துன்பம் நீக்க, மூலவர் நரசிம்மர் எப்படி முன்னிற்பாரோ அதுபோன்றே உற்சவரும் வரம் அருளுவதில் முதலில் நிற்பார்.

பிரார்த்தனைகள்: யோக நரசிம்மருக்கு ஏற்றப்படும் நெய் தீபம், மோசமான மன நலம் மற்றும் உடல்நலக் கோளாறு உள்ளவரையும் உடனடியாக தேற்றும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இவருக்கு வெல்லப் பானகம் விசேஷ நைவேத்யமாகும் !

பிரதோஷ தினங்கள், அமாவாசை, பெளர்ணமி மற்றும் வார சனிக்கிழமைகள், சுவாதி நட்சத்திரம் அன்று நடைபெறும் திருமஞ்சனம் ஆகியவை முக்கியமானவை.

காரியசித்தி ஆஞ்சநேயரை ஒருமுறை வேண்டிக்கொண்டு நரசிம்மரிடம் தங்கள் பிரார்த்தனை நிறைவேற விண்ணப்பம் செய்து பிரகாரத்தை வலம் வந்து பய பக்தியுடன் மட்டை தேங்காய்களை கட்டுகின்றார்கள் பக்தர்கள். காரியம் வெற்றி அடைந்ததும் தேங்காயை அவிழ்த்து பிரகாரத்தை மூன்று முறை சுற்றியும் ஆஞ்சநேயரை பதினோறு முறை சுற்றி பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்! இதுவரை, சுமார் 4 லட்சம் மட்டைத் தேங்காய்கள் பிரார்த்தனை முடிந்து கட்டி அவிழ்த்து சூரைக் காயாக உடைக்கப் பட்டுள்ளன.

ஒவ்வொரு மாதமும் மூலம் நட்சத்திரத்தில் ஆஞ்சநேயருக்குச் சிறப்புத் திருமஞ்சனம் நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் சனிக்கிழமைகள் மட்டுமில்லாமல் மாதம் முழுவதும் சிறப்பானவையாகவே கருதப்படுகிறது. வருடத்தில் சித்திரை மாதத்தில் நரசிம்ம ஜெயந்தியும், மார்கழி மாதத்தில் அனுமந் ஜெயந்தியும் வெகுசிறப்பாக நடைபெறுகிறது.

அமைவிடம்: மாயவரத்திலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் நரசிங்கன்பேட்டைக்கு அடிக்கடி பேருந்துகள் செல்கின்றன.
- ஆர். பத்ராசலம்

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/6/w600X390/v6.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/06/நாளை-எனாத-நரசிம்மன்-2785510.html
2785507 வார இதழ்கள் வெள்ளிமணி உருத்திரபசுபதி நாயனார் குருபூஜை! DIN DIN Friday, October 6, 2017 10:29 AM +0530 "ஆய அந்தனணர் அருமறை உருத்திரம் கொண்டு 
 மாயனார் அறியா மலர்ச்சேவடி வழுத்தும்
 தூய அன்போடு தொடர்பினில் இடையாறச் சுருதி
 நேய நெஞ்சினராகி அத்தொழில் நின்றார்'
பாடல் விளக்கம்: அரிய மறைப் பொருளாய உருத்திர மந்திரத்தைக் கொண்டு, திருமாலும் பன்றியாய்ச் சென்று உணராச் சேவ டியை போற்றிடும் தூயதான அன்புடன் இடையறாது அவ்வுருத்திர மந்திரத்தை எண்ணுதலையே விரும்பிய நெஞ்சினராகி, அதனையே ஓதுகின்ற பணியில் தலை நின்றார். 

சோழவள நாட்டில் திருத்தலையூர் என்னும் ஊர் அமைந்திருந்தது. இவ்வூரில் எந்நேரமும் அந்தணர்களின் வேதபாராயணம் வானெட்ட ஒலித்த வண்ணமாகவே இருக்கும். இவர்கள் வளர்க்கும் வேள்வித் தீயின் பயனாய் மாதம் மும்மாரி பெய்யும் அளவிற்கு அருளுடைமையும், பொருளுடைமையும் ஓங்கிட  அன்பும் அறனும் சால்பும் குன்றாது குறையாது நிலைபெற்று விளங்கின. இத்தகைய சீரும், சிறப்புமிக்கத் திருத்தலையூரில் பசுபதியார் என்னும் ஓர் அந்தணர் இருந்தார்.

இவர்தமது மரபிற்கு ஏற்ப வேத சாஸ்திர இதிகாச புராணங்களில் சிறந்த புலமை பெற்றிருந்தார்.  பசுபதியார் அருமறைப் பயனாகிய திருஉத்திரம் என்னும் திருமந்திரத்தை இடையறாமல் பக்தியுடனும், அன்புடனும் சொல்லிக் கொண்டேயிருப்பார். 

திரு அல்லது ஸ்ரீ என்பது திருமகனாகிய செல்வம், அழகு ஆகிய பொருள்களில் சொல்லப்படுவதால் எம்பெருமான் ஸ்ரீருத்திரன் அல்லது திருவுருத்தன் என்னும் திருநாமம் பெற்றார். ருத் என்றால் துன்பம் என்றும் திரன் என்றால் தீர்ப்பவன் என்றும் பொருள் கொள்ளப்படுவதால் எம்பெருமான் ருத்திரன் என்னும் திருநாமம் பெற்றார். உருத்திரராகிய சிவபெருமானுக்குரிய திருமந்திரம் உருத்திரமாகும். சிவபெருமானுக்கு உருத்திரம் கண்ணாகவும், பஞ்சாட்சரம் கண்மணியாகவும் விளங்கின.

எம்பெருமானுடைய பெருமையைச் சொல்லும் இம்மந்திரமே வேதத்தின் மெய்ப்பொருளாகும் அருமறைப் பயனாகிய உருத்திரம் என்று சேக்கிழார் சுவாமிகள் பாராட்டியுள்ளார்.  இத்திருமந்திரத்தையே தமது மூச்சாகவும், பேச்சாகவும் கொண்டு ஒழுகி வந்தார் பசுபதியார். 

இவர் தினந்தோறும் தாமரைப் பொய்கையில் நீராடி கழுத்தளவு நீரில் நின்று கொண்டு தலைக்கு மேல் கரங்கள் குவித்து உருத்திர மந்திரத்தை ஓதுவார். இரவென்றும் பகலென்றும் பாராமல் எந்நேரமும் உருத்திரத்தைப் பாராயணம் செய்வதிலே தம் பொழுதெல்லாம் கழித்தார். இது காரணம் பற்றியே இவருக்கு உருத்திய பசுபதியார் என்றும் சிறப்புப் பெயர் ஏற்பட்டது. 

உருத்திர பசுபதியின் பக்தியைப் பற்றி ஊரிலுள்ள அனைவரும் புகழ்ந்து பேசிய வண்ணம் இருப்பர். உருத்திர பசுபதியாரின் பக்தியின் பெருமை எம்பெருமானின் திருவுள்ளத்தை மகிழச் செய்தது; எம்பெருமான், பசுபதியாருக்குப் பேரருள் புரிந்தார். உருத்திரபசுபதி நாயனார் இறைவனுடைய திருவடி பெற்றார். இந்நாயனாரின் குரு பூஜை தினம்: 7-10-2017 (அசுவதி நட்சத்திரம்) 
-  பொ.ஜெயச்சந்திரன் 


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/6/w600X390/v4.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/06/உருத்திரபசுபதி-நாயனார்-குருபூஜை-2785507.html
2785505 வார இதழ்கள் வெள்ளிமணி பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர் DIN DIN Friday, October 6, 2017 10:24 AM +0530 * மகான்கள் உடல் பற்றிய நினைவேயின்றி தியானத்திலேயே இருப்பார்கள். எந்தத் துர்தேவதைகளின் சக்தியும் அவர்களிடத்தில் செல்லாது. 

* தன் உடலைப் பாதுகாத்துக்கொள்வதற்கு எவ்வளவு பொருள் தேவைப்படுகிறதோ, அவ்வளவு பொருளைத்தான் தன்னுடையதாக ஒருவன் கருத வேண்டும். அதற்கு மேல் தன்னுடைய பொருளாகக் கருதுபவன் தண்டனைக்கு உரிய திருடனாவான்.
-  பாகவதம்

* இயற்கை உண்மையை அறிந்துகொள்வதற்கு 1. கேள்விஞானம், 2. சிந்தனை ஞானம், 3. அனுபவஞானம் ஆகிய மூன்று ஞானங்களையும் முழுமையாகப் பெற வேண்டும்.
- தியான யோகம் 

* உலகமும் ஏனைய ஜீவன்களும் அகண்டாகார பிரம்மத்தின் சிறு துளிகளே ஆகும். அவை மாயையின் தன்மையால் வேறு வேறாகத் தோன்றுகின்றன.  "பிரம்மமும் ஆன்மாக்களும் ஒன்றுதான்' என்பதை உணர்ந்தால் அஞ்ஞானம் விலகி, ஞானம் தோன்றும்.
 -அத்வைதம்

* குளத்தில் இரவில் தெரியும் நட்சத்திரங்களின் பிரதிபிம்பங்களை (தனது உணவாகிய) ஆம்பல் பூவின் முளை என்று நினைத்துத் திரும்பத் திரும்பக் கடித்து ஏமாந்த மூடத்தனமான அன்னப்பறவை, பகலிலே ஆம்பலை நட்சத்திரம் என்று நினைத்து அதைக் கடித்து சாப்பிடாமல் இருந்துவிடும். அது போலவே, வஞ்சகக்காரர்களால் ஏமாற்றப்பட்ட உலகம், நேர்மையானவர்களிடமும் ஏதோ அபாயம் இருக்கும் என்று பார்க்கிறது.

* பசுதானமோ, பூமிதானமோ, அன்னதானமோ எதுவும் அபயம் (துன்புற்றவனுக்குப் புகலிடம்) அளிப்பது போன்று முக்கியமானது அல்ல. உலகத்திலேயே எல்லாத் தானங்களிலும் அபய ப்ரதானமே மிகவும் பெரியது.
- பஞ்சதந்திரம்

* மக்களே கேளுங்கள்: பிறப்பு, இறப்பு என்னும் நோய்க்கு யாக்ஞவல்கியர் போன்ற முனிவர்கள் கூறிய மருந்து இதுதான்: அதாவது, நம்முள் அந்தர்யாமியாக இருக்கும் ஜோதிமயமான கண்ணனின் நாமங்களாகிய அமிருதத்தைப் பருகினால்   சாசுவதமான மோட்ச சுகம் கிடைக்கும். ஆகவே அதை அருந்துங்கள்.
-  ஸ்ரீ முகுந்தமாலா

* பணத்தைக் கொண்டு சுயநலத்துடன் அனுஷ்டிக்கப்படும் தர்மம் விரைவில் அழிந்துபோகும். பிறருக்காகச் செலவு செய்வதிலும், பிறருக்கு உதவும் பொருட்டும் செலவிடப்படும் பணமோ மோட்சத்தைத் தேடித் தரும்.
-  பத்ம புராணம்

* பிரம்மமாகிய பரமாத்மா பிரபஞ்சமாகத் தோன்ற முடியும். எனவே பிரபஞ்சமானது மாயை அல்ல. மோட்சத்திற்கும் பக்தியே உயர்ந்த சாதனமாகும். அருள் சிந்தனையும், ஆச்சாரிய நம்பிக்கையும் இருந்தால், மக்கள் கர்ம பந்தங்களிலிருந்தும் விடுபட்டு முக்தி பெறலாம்.    
-  விசிஷ்டாத்வைதம்

* எவர் மனம் எப்போதும் விருப்பு  வெறுப்பு முதலியவை இல்லாமல் சுத்தமாயிருக்கிறதோ அவர்கள் அழுக்காகவும், அழுக்கு உடைகளை அணிந்தவர்களாகவும் இருந்தாலும் சுத்தமானவர்கள்தான். இதற்கு மாறாக எவர் மனம் கலங்கியிருக்கிறதோ, அவர்கள் வெளியே சுத்தமானவர்களாகக் காணப்பட்டாலும் அசுத்தமானவர்கள்தான்.
 - நீதி த்விஷஷ்டிகா

* பிரம்மமாகிய பரமாத்மா வேறு, ஜீவாத்மாக்கள் வேறு. உலகம் மாயை அல்ல, உலகம் உண்மையானது. இந்திரன் முதலான தேவர்களும்கூட சாதாரணமான ஜீவாத்மாக்கள்தான். பரமாத்மாவின் அருளால் மட்டுமே ஜீவாத்மாக்கள், இம்மையிலும் மறுமையிலும் நன்மை பெறுகின்றன.
- துவைத சித்தாந்தம்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/6/w600X390/v2.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/oct/06/பொன்மொழிகள்-தொகுப்பு-சுவாமி-கமலாத்மானந்தர்-2785505.html
2781916 வார இதழ்கள் வெள்ளிமணி அருள் தரும் பச்சைக்கல் பாபா! Monday, October 2, 2017 03:11 PM +0530 மனிதப்பிறவி எடுத்து நம்மை வழி நடத்திய புனிதர்களில் ஒருவர் ஸ்ரீ சமர்த்த சத்குரு சாயிபாபா.  சமாதி நிலையிலும் அவரது அருளாட்சி தொடர்கிறது. சென்னை தாம்பரம் அருகில் ஊரப்பாக்கம் ரயில் நிலையம் மற்றும் அங்குள்ள புதிய மேம்பாலத்திலிருந்து ஆதனூர் மெயின்ரோட் செல்லும் பாதையில் ஸ்ரீ வர்த்தமான் நகரில் ஒரு புதிய சாய் மந்திர் உருவாகி வருகின்றது.  

இங்கு பிரதிஷ்டையாக உள்ள சாயிநாதரின் திருஉருவம் முழுவதும் பச்சைக் கல்லால் (இத்தாலியன் மார்பிள்) ஆனது.  இக்காரணம் பொருட்டே இந்த மந்திர் "மரகத சாயிபாபா ஆலயம்' என சிலாகித்து அழைக்கப்பட உள்ளது.  மகானுடன் துவாரகாமாயி, மகாமேரு, மீனாட்சியம்மை, விநாயகர், முருகர் சந்நிதிகளும் அமைய உள்ளன.  ஆலயம் வருவதற்கு முன்னதாக தலவிருட்சமாக மகானுக்குப் பிரியமான வேப்பமரம் பெரியதாக வளர்ந்துள்ளதும் அருகிலேயே ஓர் அம்மன் ஆலயமும், பெரிய பாம்புப்புற்று இருப்பதும் விசேஷமாகக் கருதப்படுகின்றது.

மயிலை சாயிபாபா ஆலய வளர்ச்சிக்கு உதவி செய்தவர்களில் ஒருவராகத் திகழ்ந்த புதுக்கோட்டை பூஜ்யஸ்ரீ கோபால கிருஷ்ண பாகவதரின் பேரன் லட்சுமிநரசிம்மன் என்ற சாயிபக்தர் கடந்த 2010 -ஆம் ஆண்டு ஷீரடிக்குச் சென்ற தருணத்தில் ஒரு கடையில் இந்தப் பச்சைக்கல் பாபா விக்ரகத்தைக் கண்டு, வாங்கி கொண்டு சென்னை வந்துள்ளார்.  அவரது இல்லத்தில் பாபாவைத் தரிசித்த பலர் கோயிலில் அமர வேண்டிய விக்ரகம் அது என அறிவுறுத்தினர்.

அதன்படி, ஆலயம் அமைவதற்கான ஏற்பாடுகள் துவங்கின.  சாயி பக்தர்கள் உதவியுடன் பணிகள் சிறப்பாக நடைபெற "சாயி பிரசார் சேவா டிரஸ்ட்' என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றது.  

மகானின் திவ்ய திருமேனி விக்ரகம் பொதுமக்கள் தரிசிக்க ஏதுவாக மேற்கு மாம்பலம், பாபு ராஜேந்திர பிரசாத் 2 ஆவது தெருவில் ஒரு "தரிசன மையம்' ஏற்படுத்தப்பட்டுள்ளது.  நித்ய பூஜை ஆராதனைகள், நவராத்திரி உட்பட முக்கிய விசேஷ தினங்கள், மகாமேரு நவாவர்ண பூஜை, பாராயணங்கள், சங்கல்ப பஜனைகள் போன்ற வைபவங்கள் இங்கு நடைபெற்று வருகின்றன.  

சீரடியில் மகான் சமாதி நிலையை அடைந்தது 1918- ஆம் வருடம் விஜயதசமியன்று ஆகும்.  அதனை மனதிற்கொண்டு இவ்வாண்டு, செப்டம்பர்-30 ஆம் தேதி, சனிக்கிழமை விஜயதசமி நன்னாள் சமாதி நூற்றாண்டு விழா ஆரம்ப தினமாகக் கொண்டாடப்பட உள்ளது. பக்தர்கள் இவ்வாலய திருப்பணியில் பங்கு கொண்டு பச்சைக்கல் பாபாவின் திருவருளைப் பெறலாம்.
தொடர்புக்கு: 098403 25245 /044-2371 2195.
- எஸ். வெங்கட்ராமன்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/29/w600X390/v6.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/sep/29/அருள்-தரும்-பச்சைக்கல்-பாபா-2781916.html
2781908 வார இதழ்கள் வெள்ளிமணி தூப்புல் தூமணியான மலையப்பனின் மணி! Monday, October 2, 2017 02:49 PM +0530 சுமார், 761 ஆண்டுகளுக்கு முன்னால் 1256 ஆம் ஆண்டு திருமலையில் சிறிது காலம் குழந்தை இல்லாமல் இருந்த கணவன் மனைவி இருவரும் தாங்கள் கண்ட கனவின்படி மலையப்பனின் புரட்டாசித் திருவோணத் திருவிழாவை தங்கி தரிசித்துக் கொண்டிருந்தனர்.

ஓரிரவில் திருவேங்கடமுடையான் ஒரு சிறுவனாகத் தோன்றி தன்னுடைய தங்க பூஜைமணியைத் தனது கையில் கொடுத்து, அதை விழுங்கும்படிச் சொன்னதாக கனவு கண்டாள்.

தன் கணவனை எழுப்பி, இந்த விவரங்களைத் தெரிவிக்க, அவர் தனக்கும் அக் கனவு வந்ததாகச் சொன்னார்.

மறுநாள் காலையில் கோயில் திருக்காப்பு நீக்கியபொழுது தங்கக் கைமணியைக் காணாமல் அனைவரும் திகைத்து நின்றனர்.

விசாரணை நடந்தபோது, திருவேங்கடமுடையான் தாமே அந்த மணியை மறையச் செய்திருப்பதாகவும் அதைப்பற்றி மேலே விசாரிக்க வேண்டியதில்லை என்று தமக்கு எம்பெருமான் கனவில் கூறியதாகவும் நிர்வாகியான திருமலை ஜீயர் தெரிவிக்க, எல்லோரும் சமாதானமானார்கள்.

தங்கியிருந்த அநந்தசூரியும் திருவேங்கடமுடையானுடைய உத்தரவு பெற்றுக்கொண்டு தம் தேவியுடன் காஞ்சிபுரம் சென்றார். தோதாத்ரியம்மையும் அதுமுதல் கர்ப்பம் தரித்துஇருந்தாள்.

பன்னிரண்டு ஆண்டு கழித்து கலியுகம் 4370, சகாப்தம் 1191ஆண்டிற்குச் சரியான கி.பி. 1268 ஆம் ஆண்டு, விபவ வருடம், புரட்டாசி மாதம், திருவோண நட்சத்திரத்தில், புதன்கிழமை அநந்தசூரி - தோதாத்ரி அம்மைக்கு மகனாக காஞ்சிபுரத்தில் தூப்புல் எனும் பகுதியில் (தூப்புல் என்றால் தூய்மையான் புல், புனிதமான தர்ப்பைபுல் என்பதாகும். அந்த இடத்தில் விளக்கொளிப்பெருமாள் சந்நிதி எனப்படும் திவ்ய தேசத்தின் அருகில்) திருமலை வேங்கடவன் கோயில் சந்நிதி கைமணியின் அம்சமாக ஸ்ரீவேதாந்த தேசிகர் அவதரித்தார்.

இவருக்குப் பெற்றோர் வேங்கடநாதன் என்னும் மலையப்பசாமியின் பெயரை இட்டழைத்தனர். பின்னாளில் இவர் "சுவாமி தேசிகன்', "தூப்புல் நிகமாந்த தேசிகன்', "உபயவேதாந் தாச்சாரியார், "வேதாந்த தேசிகர்' போன்ற பல காரணப் பெயர்களால் அழைக்கப் பெற்றார்.

தென்மறையான திவ்விய பிரபந்தமும் வடமொழி வேதங்களும் புராணங்கள் சாத்திரங்கள் ஆகியவற்றை முழுவதுமாகக் கற்றார். ராமானுஜர் வகுத்த வழியில் இவர் வைணவத்தை மேலும் வளர்ச்சிப் பாதையை நோக்கி நகர்த்திச் செல்ல வழியிருந்தது. இருபத்தோராம் வயதில் திருமங்கை என்னும் நங்கையை மணம் செய்வித்தனர். தன்னுடைய 27 ஆம் வயதில் வைணவ ஆச்சாரியன் என்னும் குரு நிலையை அடைந்தார். கிடாம்பி அப்புள்ளாரின் ஆணைப்படி திருவஹீந்திரபுரம் சென்று சில காலம் வாழ்ந்தார். அங்கு ஆசார்யனால் உபதேசிக்கப்பட்ட ஸ்ரீவைநதேய மந்திரத்தை (கருட மந்திரம்) ஜபம் செய்து சித்தி பெறவேண்டும் என்கிற எண்ணத்துடன், ஒüஷதாத்ரி மலையில் ஆலமரத்தின் கீழே அமர்ந்து , ஸ்ரீ கருட மந்திரத்தை உச்சாடனம் தொடங்கிய உடனே ஸ்ரீ வைநதேயன் தோன்றி ஸ்ரீ ஹயக்ரீவருடைய மூர்த்தி ஒன்றைக் கொடுத்து, அவருடைய மந்திரத்தையும் உபதேசித்தார்.

ஸ்ரீ ஹயக்ரீவ மந்திரத்தை அங்கேயே ஜபம் செய்யத் துவங்க, ஸ்ரீ ஹயக்ரீவரும் காட்சி கொடுத்து தன் பிரசாதத்தை வழங்க அனைத்து கலைகளும் கைவரப்பெற்று ஸ்ரீதேவநாயக பஞ்சாசத் மும்மணிக்கோவை, பந்துப்பா, கழல்பா, அம்மானைப்பா , ஊசல்பா, ஏசல்பா, ஸ்ரீ கோபால விம்சதி ஸ்ரீஸ்துதி என்னும் தமிழ் வடமொழி இலக்கியங்களை அருளிச்செய்தார். இவ்வாறு அவர் வாழ்நாளில் செய்த இலக்கியங்களும் தோத்திரங்களும் சுமார்நூற்றுமுப்பதுக்கும் மேல் ஆகும்.

திருப்பாணாழ்வாரின் பதிகத்துக்கு பெரியவாச்சான் பிள்ளை ஆணைப்படி இவர் அமலனாதிபிரான் வியாக்கியானம் என்னும் விரிவுரை நூல் செய்துள்ளார். தமிழ்மொழியே வடமொழிக்கு இணையாக தெய்வத்தன்மை உடையது என்று கூறியவர் இவர். உபய வேதாந்தம் எனும் கொள்கையை உருவாக்கி கோயில்களில் வடமொழியோடு ஆழ்வார்களின் திருமொழியும் இடம்பெறுமாறு செய்தவர் இவரேயாகும்.

ஒரு சமயம் காஞ்சிக்கு அவர் பரிவாரங்களுடன் சென்று கொண்டிருந்தார். மாலைவேளை, களத்தூர் என்னும் ஊரில் இரவு தங்கி காலை பயணத்தைத் தொடர்வது என்பது திட்டம் மாலைவேளையில் கொட்டிலில் கட்டப்பட்டிருந்த அவரது குதிரைகள் அவிழ்த்துக் கொண்டுபோய் மறுநாள் அறுவடைக்கு இருந்த நெற் பயிர்களை மேய்ந்து விட்டன. விவசாயிகள் வந்து தங்களின் இழப்பைச் சொல்லி அழுதனர். அவர்களை பரிமுகக்கடவுள் வழிகாட்டுவான் என்று தேற்றி அனுப்பினார். அவரது இஷ்ட தெய்வமான ஹயக்ரீவரை வணங்கி அவர்களின் குறைதீர்க்க வேண்டினார்.

மறுநாள் அறுவடைக்குப்போன விவசாயிகள் மகிழ்வுடன் சுவாமி தேசிகரை வந்து வணங்கினர். குதிரை மேய்ந்த வயல்களில் எல்லாம் நெல் பொன்னாக விளைந்திருப்பதாகவும் அதனை அடித்துத்தூற்ற அதன் துகள்கள் பக்கத்து ஊரில் சென்று தங்கப்பதர்களாக விழுவதாகவும் தெரிவித்தனர். அன்று முதல் அவ்வூர் பொன்விளைந்த களத்தூர் எனவும் பதர் விழுந்த ஊர் பொன்பதர்கூடம் எனவும் வழங்கத் தொடங்கியது.

தில்லை திருச்சித்திரக் கூடத்தில் அகற்றப்பட்ட ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளை மீண்டும் நிறுவியது போன்ற அதிஅற்புதச் செயல்களை ஸ்ரீராமானுஜர் காட்டிய வழியில் அவருக்கு 250 ஆண்டுகளுக்குப் பின் வந்த தூப்புலில் உதித்த தூமணியாகிய ஸ்ரீ வேதாந்த தேசிகர் செய்தார் என்ற பெருமை உலகறியும்.

மாலிக்காபூர் படையெடுப்பின் போது திருவரங்கக் கோயிலைக் காத்த சிறப்புக்குரியவர்களுள் இவரும் ஒருவர். இறுதியில் தன் மகனான குமார வரத தேசிகனோடு திருவரங்கம் வந்தவர் இப்புவியில் 101 வருடங்கள் வாழ்ந்து திருமால் திருவடி பற்றினார்.

அவரின் 749 ஆவது அவதார உற்சவம் கடந்த 22.09.2017 முதல் துவங்கி காலையில் அவரது அவதார நோக்கம், வரலாறு ஆகியவற்றுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகளை பிரதிபலிக்கும் வகையில் அலங்காரங்களுடனும் மாலையில் பல வாகனங்களிலும் ஸ்ரீ தேசிகர் புறப்பாடு சிறப்பாக நடைபெறுகின்றது.

1.10.2017 அன்று ஞாயிறு காலை விளக்கொளிப் பெருமாளை மங்களாசாசனம் செய்யும் உற்சவம் நடைபெறுகிறது. பெருமாள் கோயில் என அழைக்கப்படும் தேவராஜப்பெருமாள் உலா வரும் பெரிய தங்கப்பல்லக்கு அவரது படை பரிவாரங்கள் அனைத்தும் தூப்புலுக்கு வந்து ஸ்ரீ தேசிகருக்கு மரியாதை செய்து அதனிலேயே அவரை அழைத்துச் செல்லுவர்.

திருக்கோயிலுக்கு அஞ்சலி அஸ்தத்தோடு ஸ்ரீ வேதாந்த தேசிகர் தனது அவதார தினத்தில் சென்று பெருமாளையும் தாயாரையும் தரிசனம் செய்து வருவார். ஒவ்வோர் ஆண்டும் இந்த அபூர்வ நிகழ்வு இங்கு மட்டும் நடைபெறுகிறது.

தொடர்புக்கு: 94440 41571/ 94447 24557.
- இரா. இரகுநாதன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/29/w600X390/v1.jpg http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2017/sep/29/தூப்புல்-தூமணியான-மலையப்பனின்-மணி-2781908.html