Dinamani - செய்திகள் - http://www.dinamani.com/sports/sports-news/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3021738 விளையாட்டு செய்திகள் ஆஸி. சுற்றுப் பயணம் : தொடக்க வீரர், விக்கெட் கீப்பர் தேர்வில் சிக்கல் DIN DIN Wednesday, October 17, 2018 01:18 AM +0530
ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்ய உள்ள இந்திய அணிக்கு மூன்றாவது தொடக்க வீரர், இரண்டாவது விக்கெட் கீப்பரை தேர்வு செய்வது போன்ற முக்கிய பிரச்னைகள் தேர்வாளர் குழு மற்றும் அணி நிர்வாகத்தின் முன்பு உள்ளன.
இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்த இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரையும், ஒரு நாள் ஆட்டத் தொடரையும் இழந்தது. டி20 தொடரை மட்டுமே வென்றது. இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் துபையில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் 7-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. 2 டெஸ்ட், 5 ஒரு நாள், 3 டி20 ஆட்டங்கள் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தியா 2-0 என டெஸ்ட் தொடரை ஒயிட்வாஷ் செய்தது. இதில் முதல் டெஸ்டில் மும்பையின் 18 வயதே ஆன பிரித்வி ஷா அறிமுகம் செய்யப்பட்டார். முதல் டெஸ்டிலேயே 134 ரன்கள் குவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
அதே நேரத்தில் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்தும் 92 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். இத்தொடரில் இரு இளம் வீரர்களும் தங்கள் ஆட்டத்திறமையை பறைசாற்றினர். 
கேஎல்.ராகுல் ஏமாற்றம்: மற்றொரு இளம் வீரரான கேஎல்.ராகுல் தொடக்க வீரராக களமிறக்கப்பட்ட நிலையில் இதுவரை 17 இன்னிங்ஸ்களில் 14 முறை சரியாக ரன்களை எடுக்கவில்லை. ஆஸ்திரேலியா சுறறுப்பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் மூன்றாவது தொடக்க வீரர் (ரிசர்வ் ஓபனர்) தேவையாகும்.
டெஸ்ட் தொடருக்கான அணியை தேர்வு செய்வதில் மூன்றாவது தொடக்க வீரர், இரண்டாவது விக்கெட் கீப்பர் போன்றவை முக்கிய அம்சங்களாக உள்ளன. கேஎல். ராகுல் தனது தவறுகளை சரி செய்து கொள்வார். அவர் சிறந்த எண்ணங்களுடன் உள்ளார். மற்றவர்கள் கூறும் குறைகளையும் ஏற்கிறார் என கேப்டன் கோலி கூறியுள்ளார்.
வரும் டிசம்பர் மாதம் அடிலெய்டில் முதல் டெஸ்ட் ஆட்டம் தொடங்குகிறது. இதில் பிரித்வி ஷா-ராகுல் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கக் கூடும் எனத்தெரிகிறது.
17 பேர் கொண்ட அணியை அறிவிக்கும் போது பல்வேறு அம்சங்களை கருத்திக் கொள்ள வேண்டியுள்ளது. மயங்க் அகர்வால் தற்போது மேற்கிந்திய தீவுகள் தொடரில் மூன்றாவது தொடக்க வீரராக உள்ளார். உள்ளூர் போட்டிகளில் மயங்க் அகர்வால் கணிசமான ரன்களை குவித்துள்ளார்.
மிட்செல் ஸ்டார்க், ஹேசல்வுட், பேட் கம்மின்ஸ் ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொள்ள இளம் வீரர்களால் இயலுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கருண் நாயர், முரளி விஜய் ஆகியோரும் தொடக்க வீரர்களுக்கான பட்டியலில் இருந்தனர். ஆனால் முரளி விஜய்யின் ஆட்டத்திறன் குறித்து கேள்வி எழுந்துள்ளது. உள்ளூர் ரஞ்சி கோப்பை தொடரில் முரளி எவ்வாறு விளையாடுகிறார் என்பதை தேர்வாளர்கள் கவனிப்பர்.
முரளி விஜய்க்கு பதிலாக மயங்க் அகர்வாலுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஷிகர் தவன் டெஸ்ட் அணியில் இடம் பெறுவதில் சிக்கல் உள்ளது. ஆஸி. மைதானங்கள் தட்டையாக காணப்படுவதால் முதல் 20 ஓவர்களுக்கு தவனை பயன்படுத்திக் கொள்ளலாம். பேட்ஸ்மேன்கள் வரிசையில் பிரித்வி, ராகுல் முதல் இரண்டு இடங்களில் விளையாடுவர்.
விக்கெட் கீப்பர்
விக்கெட் கீப்பர்களில் ரித்திமன் சாஹாவுக்கு அடுத்தபடியாக ரிஷ் பந்த் மட்டுமே களத்தில் உள்ளார். சாஹா இன்னும் சரிவர குணமடையவில்லை. இதனால் அவர் ஆஸி.சுற்றுப்பயணத்துக்கு தேர்வு கேள்விக்குறியாகி விட்டது. இந்திய ஏ அணியில் விளையாடும் கொண பாரத்தும் விக்கெட் கீப்பர் பட்டியலில் உளளார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/17/w600X390/prithvi.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/17/ஆஸி-சுற்றுப்-பயணம்--தொடக்க-வீரர்-விக்கெட்-கீப்பர்-தேர்வில்-சிக்கல்-3021738.html
3021737 விளையாட்டு செய்திகள் ஒரு நாள் அணியில் மீண்டும் இடம் பெற்றார் உமேஷ் யாதவ் DIN DIN Wednesday, October 17, 2018 01:17 AM +0530
வேகப்பந்து வீச்சாளர் சர்துல் தாக்கூர் காயமடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் இந்திய ஒரு நாள் அணியில் இடம் பெற்றார் உமேஷ் யாதவ்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் இரண்டு ஒரு நாள் ஆட்டங்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இடம் பெற்ற சர்துல் தாக்கூர், ஹைதராபாத் டெஸ்ட் ஆட்டத்தில் தசைநாரில் காயமடைந்தார். இதனால் அவர் தொடர்ந்து ஒரு நாள் ஆட்டங்களிலும் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டது. அதே வேளையில் டெஸ்டில் உமேஷ் யாதவ் அபாரமாக பந்துவீசி 10 விக்கெட்டை சாய்த்தார். இந்நிலையில் ஒரு நாள் அணியில் உமேஷ் யாதவை சேர்க்கலாம் என தேர்வாளர்கள் குழு முடிவு செய்துள்ளது. 
இறுதியாக கடந்த ஜூலை லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துடன் நடைபெற்ற ஒரு நாள் ஆட்டத்தில் உமேஷ் பங்கேற்றிருந்தார்.
73 ஒரு நாள் ஆட்டங்களில் உமேஷ் 105 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர்தவன், கேஎல்.ராகுல், அம்பதி ராயுடு, மணிஷ் பாண்டே, தோனி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, சஹால், குல்தீப்யாதவ், முகமதுசமி, கலில் அஹமது, உமேஷ் யாதவ்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/17/w600X390/umesh.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/17/ஒரு-நாள்-அணியில்-மீண்டும்-இடம்-பெற்றார்-உமேஷ்-யாதவ்-3021737.html
3021736 விளையாட்டு செய்திகள் பாகிஸ்தான் 282, 6 பந்துகளில் 4 விக்கெட் சாய்த்தார் ஆஸி. வீரர் லியான் DIN DIN Wednesday, October 17, 2018 01:16 AM +0530
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 282 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸி பந்துவீச்சாளர் நாதன் லியான் அபாரமாக பந்துவீசி 6 பந்துகளில் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
முதல் டெஸ்ட் ஆட்டம் டிராவில் முடிந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் அபுதாபியில் நடைபெறுகிறது. முதலில் ஆடிய பாகிஸ்தான்
அணியில் துவக்க வீரர் பாக்கர் ஸமான் 94, கேப்டன் சர்பராஸ் அகமது 94 ஆகியோர் மட்டுமே நிலைத்து ஆடி அணியின் ஸ்கோர் உயர வழிவகுத்தனர். முகமது ஹபீஸ் 4, அஸார் அலி 15, ஹரிஸ் சோஹையில், ஆஸாத் ஷபிக், பாபர் ஆஸம் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் லியான் பந்தில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் பிலால் ஆசிப் 12, யாசிர் ஷா 28, முகமது அப்பாஸ் 10 ஆகியோர் ஆட்டமிழந்தனர். மீர் ஹம்சா 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 81 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து பாக். அணி 282 ரன்களை எடுத்தது.
லியான் அபார பந்துவீச்சு: உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லியான் தனது நான்காவது ஓவரின் போது 6 பந்துகளில் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அஸார் அலி, ஹரிஸ் சோஹைல், ஆஸாத் ஷபிக், பாபர் ஆஸம் ஆகியோரை லியான் வெளியேற்றினார். 12 ரன்களுக்கு 4 விக்கெட்டை அப்போது அவர் வீழ்த்தி இருந்தார். மொத்தம் 4-78 விக்கெட்டையும், மார்னஸ் லாபஸ்சேன் 3-45, ஸ்டார்க் 2-37, மார்ஷ் 1-21 விக்கெட்டை வீழ்த்தினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய ஆஸி. அணியில் உஸ்மான் கவஜா 3 ரன்களுக்கும், பீட்டல் சிடில் 4 ரன்களுக்கும் அப்பாஸ் பந்தில் வீழ்ந்தனர். ஆரோன் பின்ச் 13 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆட்டநேர முடிவில் 7 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு பாக். 20 ரன்களை எடுத்திருந்தது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/17/w600X390/lyon.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/17/பாகிஸ்தான்-282-6-பந்துகளில்-4-விக்கெட்-சாய்த்தார்-ஆஸி-வீரர்-லியான்-3021736.html
3021735 விளையாட்டு செய்திகள் டென்மார்க் ஓபன்: சிந்து அதிர்ச்சி தோல்வி DIN DIN Wednesday, October 17, 2018 01:16 AM +0530
டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனை சிந்து, 17-21, 21-16, 18-21 என்ற கேம் கணக்கில் கடும் போராட்டத்துக்குப்பின் அமெரிக்காவின் பெய்வேன் ஸாங்கிடம் அதிர்ச்சித் தோல்வியுற்று வெளியேறினார். 
இது அமெரிக்க வீராங்கனையிடம் சிந்து அடையும் மூன்றாவது தோல்வியாகும். ஆசிய போட்டியில் வெள்ளி வென்ற சிந்து, அதற்கு பின் நடைபெற்ற ஜப்பான் ஓபன் போட்டியிலும் இரண்டாவது சுற்றில் வெளியேறினார். சீன ஓபனிலும் காலிறுதியில் தோல்வியடைந்தார்.
சாய்னா வெற்றி:
அதே நேரத்தில் மற்றொரு நட்சத்திர வீராங்கனையான சாய்னா நெவால் முதல் சுற்றில் 20-22, 21-17, 24-22 என்ற கேம் கணக்கில் ஹாங்காங் வீராங்கனை நான் ஹீ செங்கை வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/17/w600X390/pv-sindhu.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/17/டென்மார்க்-ஓபன்-சிந்து-அதிர்ச்சி-தோல்வி-3021735.html
3021734 விளையாட்டு செய்திகள் யூத் ஒலிம்பிக்: ஆடவர் 5000 மீ நடைஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி DIN DIN Wednesday, October 17, 2018 01:15 AM +0530
யூத் ஒலிம்பிக் போட்டிகளின் ஒரு பகுதியாக தடகளத்தில் ஆடவர் 5000 மீ நடை ஓட்டத்தில் இந்திய வீரர் சூரஜ் பன்வர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஆர்ஜென்டீனாவின் பியூனோஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்று வரும் யூத் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு கட்டத்தை எட்டி உள்ளன. தடகளத்தில் 4 கி.மீ நீண்ட தூர ஓட்டப்பந்தயம் (கிராஸ் கண்ட்ரி) தவிர ஏனைய பந்தயங்களில் இறுதிச் சுற்று நடத்தப்படவில்லை. இதற்கு பதிலாக ஒவ்வொரு பிரிவும் இருமுறை நடத்தப்பட்டு, இரு சுற்றுக்களின் முடிவுகள் இறுதியாக கணக்கில் கொள்ளப்படுகின்றன.
இந்தியாவின் 17 வயது பன்வர், இரு சுற்றுகளையும் சேர்த்து 40: 59: 17 நிமிட நேரத்தில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி வென்றார்.
ஈக்குவடார் நாட்டின் ஆஸ்கர் தங்கத்தையும், பியுர்டோ ரிக்கோவின் ஜேன் மொரே வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இது இந்த யூத் ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியா வெல்லும் முதல் பதக்கமாகும். 
குத்துச்சண்டையில் ஜோதி தோல்வி
மகளிர் குத்துச்சண்டை 51 கிலோ பிரிவில் பங்கேற்ற ஓரே இந்திய வீராங்கனையும், முன்னாள் உலக சாம்பியனுமான ஜோதி குலியா 0-5 என்ற புள்ளிக்கணக்கில் காலிறுதிச் சுற்றில் இத்தாலியின் மார்ட்டினா பியானாவிடம் வீழ்ந்தார். 
கடந்த 2010 யூத் ஒலிம்பிக்கில் தான் குத்துச்சண்டையில் இந்தியா தலா 1 வெள்ளி, வெண்கலம் வென்றிருந்தது.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/17/w600X390/suraj-panwar-silver.jpg வெள்ளிப் பதக்கம் வென்ற சூரஜ் பன்வர். http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/17/யூத்-ஒலிம்பிக்-ஆடவர்-5000-மீ-நடைஓட்டத்தில்-இந்தியாவுக்கு-வெள்ளி-3021734.html
3021733 விளையாட்டு செய்திகள் புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் வெற்றி DIN DIN Wednesday, October 17, 2018 01:14 AM +0530
புரோ கபடி லீக் போட்டியின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தெலுகுடைட்டன்ஸை 25-30 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் வீழ்த்தியது.
ஹரியாணா மாநிலம் சோனிப்பட்டில் கபடி லீக் இரண்டாம் கட்ட போட்டிகள் நடக்கின்றன. இதை முன்னிட்டு நடைபெற்ற ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அபாரமாக ஆடி 25-30 என்ற புள்ளிக்கணக்கில் தெலுகு டைட்டன்ஸை வென்றது. பெங்கால் வாரியர்ஸ் அணி வீரர் மணிந்தர் சிங் சிறந்த ரைடராகவும், டைட்டன்ஸ் அணி வீரர் அபோஸர் சிறந்த டிபன்டராகவும், பெங்கால் வாரியர்ஸ் வீரர் ஸ்ரீகாந்த் தேவ்தியா ஜ்ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/17/w600X390/telugu-titans.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/17/புரோ-கபடி-லீக்-பெங்கால்-வாரியர்ஸ்-வெற்றி-3021733.html
3021732 விளையாட்டு செய்திகள் மே.இ.தீவுகள் அணி பயிற்சியாளர் ஸ்டுவர்ட் லா சஸ்பெண்ட்: ஐசிசி அதிரடி DIN DIN Wednesday, October 17, 2018 01:13 AM +0530
ஆட்ட நடுவர் ஒருவர் குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்சியாளர் ஸ்டுவர்ட் லாவை 2 ஒரு நாள் ஆட்டங்களில் சஸ்பெண்ட் செய்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் டெஸ்ட், ஒரு நாள், டி20 தொடர்களில் பங்கேற்று மேற்கிந்திய தீவுகள் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில் ஒரு நாள் தொடர் வரும் 21-ஆம் தேதி தொடங்குகிறது.
ஹைதராபாதில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தின் இறுதி நாளில் தொடக்க வீரர் கீய்ரன் பௌவல் ஆட்டமிழந்ததை அடுத்து டிவி நடுவர் அறைக்குச் சென்ற லா அங்கு தரக்குறைவாக விமர்சித்தாராம். 
பின்னர் வீரர்கள் முன்னிலையிலேயே நான்காவது ஆட்ட நடுவரையும் விமர்சித்தாராம்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய ஐசிசி ஸ்டுவர்ட் லா மீதான புகார் உறுதி செய்யப்பட்டதை அடுத்து குவஹாட்டி, விசாகப்பட்டினம் ஆகிய முதல் 2 ஒரு நாள் ஆட்டங்களில் அவர் பங்கேற்க முடியாதவாறு சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் அவரது ஆட்ட ஊதியத்தில் 100 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.
ஏற்கெனவே கடந்த 2017-இல் பாகிஸ்தானுடன் நடந்த டெஸ்ட் ஆட்டத்திலும் லா தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/17/w600X390/stuart-law-coach.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/17/மேஇதீவுகள்-அணி-பயிற்சியாளர்-ஸ்டுவர்ட்-லா-சஸ்பெண்ட்-ஐசிசி-அதிரடி-3021732.html
3021731 விளையாட்டு செய்திகள் ஆசிய ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி நாளை தொடக்கம் பா.சுஜித்குமார் DIN Wednesday, October 17, 2018 01:13 AM +0530
ஆசிய ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி சாம்பியன் பட்டத்தை இந்தியா மீண்டும் தக்க வைக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஹாக்கியில் ஒரு காலத்தில் உலகின் வல்லரசாகவும், 8 முறை ஒலிம்பிக் தங்கத்தை வென்றும் சாதனை படைத்த இந்திய அணி தனது பெருமையை இழந்தது. ஒலிம்பிக்கில் கடைசி இடம் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டது.
தற்போது ஹாக்கி இந்தியா அமைப்பு, சாய் போன்றவற்றின் தீவிர முயற்சியால் ஹாக்கி இழந்த பெருமையை மெதுவாக அடைய போராடி வருகிறது. கடந்த ஜூலை மாதம் நெதர்லாந்தின் பிரெடா நகரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவுக்கு இணையாக சிறப்பாக ஆடி நூலிழையில் பட்டத்தை தவற விட்டது. இந்தியா. தற்போது ஹாக்கி ஆடவர் அணி உலகத் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் உள்ளது.
ஆசிய போட்டியில் தோல்வி
ஆனால் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசியப் போட்டி அரையிறுதியில் பலம் குறைந்த மலேசியாவிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. பின்னர் பாகிஸ்தானை வென்று வெண்கலப் பதக்கத்துடன் திரும்பியது.
ஆசிய அளவில் வழக்கமாக பாகிஸ்தான், தென்கொரிய அணிகள் தான் இந்தியாவுக்கு சவால் ஏற்படுத்துபவையாக இருக்கும். ஆனால் தற்போது அந்த அணிகளை எளிதாக வீழ்த்தி வரும் இந்தியாவுக்கு புதிய சிக்கலாக, மலேசியா, ஜப்பான் அணிகள் உருவெடுத்துள்ளன.
ஆசிய சாம்பியன்ஸ் போட்டி: கடந்த 2016 இல் மலேசியாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் போட்டியில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வென்று பட்டம் வென்றது. இந்நிலையில் வரும் வியாழக்கிழமை ஓமனின் மஸ்கட் நகரில் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-ஓமனை எதிர்கொள்கிறது. 
வரும் டிசம்பர் மாதம் ஒடிஸாவின் புவனேசுவரத்தில் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெறவுள்ளன. அதற்கு தயாராகும் வகையில்இந்தியாவுக்கு |ஆசிய சாம்பியன்ஸ் போட்டி அமைந்துள்ளது. இதில் மீண்டும் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது..
இதுதொடர்பாக கேப்டன் மன்பிரீத் சிங் கூறியதாவது-
கடந்த ஜகார்த்தா ஆசியப் போட்டியில் அடைந்த ஏமாற்றத்துக்கு ஆறுதல் தேடும் வகையில் ஆசிய சாம்பியன்ஸ் போட்டி அமையும் என எதிர்பார்க்கிறோம். உலகக் கோப்பைக்கு தயாராகவும் இந்த போட்டி உதவும், தலைசிறந்த ஆசிய அணிகளை மீண்டும் எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
உலகக் கோப்பையில் நாம் புதிய எழுச்சியுடன் போட்டியிட வேண்டும். சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்டு மீண்டும்பட்டம் வெல்வோம் என்றார்.
ஜப்பான் பயிற்சியாளர் ஐக்மேன் கூறியதாவது-
சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு பட்டம் வெல்லும் வாய்ப்புள்ளது. பயிற்சியாளர் ஹரேந்திர சிங்கின் தலைமையில் இதற்கான நுணுக்கம், திறன் அணிக்கு உள்ளது. 
ஆசிய போட்டியில் தங்கம் வென்ற எங்கள் அணி 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் நோக்கில்உள்ளோம் . இந்தியா, பாகிஸ்தான், கொரியா, மலேசியா அணிகளை எதிர்கொள்வதில் எந்த அச்சமும் இல்லை என்றார்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/17/w600X390/hockey-men.jpg ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி. http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/17/ஆசிய-ஆடவர்-சாம்பியன்ஸ்-கோப்பை-ஹாக்கி-நாளை-தொடக்கம்-3021731.html
3021730 விளையாட்டு செய்திகள் பாரா விளையாட்டு வீரர்கள் உண்மையான அடையாளமாக திகழ்கின்றனர் DIN DIN Wednesday, October 17, 2018 01:11 AM +0530
பாரா விளையாட்டு வீரர்கள் உண்மையான அடையாளமாக திகழ்கின்றனர் என மத்திய விளையாட்டு அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜகார்த்தாவில் அண்மையில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பதக்கம் வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். விழாவில் பங்கேற்ற அமைச்சர் ரத்தோர் பேசியதாவது:
நாட்டின் உண்மையான அடையாளமாக பாரா விளையாட்டு வீரர்கள் உள்ளனர். பதக்கம் வென்று அனைவரும் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். உங்களின் இந்த வெற்றி, பல்வேறு சிக்கல் நிறைந்த பயணத்தை கடந்து வந்து பெறப்பட்டதாகும். விளையாட்டை எவரும் விட்டு விடக்கூடாது. உங்களது சுய நிர்ணயத்தை கைவிடக்கூடாது. பாரா வீரர்களுக்கு அரசின் முழு ஆதரவு உண்டு என்றார் ரத்தோர்.
விளையாட்டுத் துறை செயலாளர் ராகுல் பட்நாகர், ஸ்போர்ட்ஸ் இந்தியா இயக்குநர் ஜெனரல் நீலம் கபூர் பங்கேற்றனர்.
தங்கம் வென்றவர்களுக்கு ரூ.30 லட்சம், வெள்ளி வென்றவர்களுக்கு 20 லட்சம், வெண்கலம் வென்றவர்களுக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 
ஜகார்த்தா ஆசிய பாரா போட்டியில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 33 வெண்கலத்துடன் மொத்தம் 72 பதக்கங்களை வென்றிருந்தது.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/17/w600X390/modi.jpg ஆசிய பாரா போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசுகிறார் பிரதமர் மோடி. http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/17/பாரா-விளையாட்டு-வீரர்கள்-உண்மையான-அடையாளமாக-திகழ்கின்றனர்-3021730.html
3021729 விளையாட்டு செய்திகள் கால்பந்து: ஸ்பெயினை வீழ்த்தியது இங்கிலாந்து DIN DIN Wednesday, October 17, 2018 01:10 AM +0530
முன்னாள் உலக சாம்பியன் ஸ்பெயினை 3-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது.
இங்கிலாந்து அணி கடந்த ரஷிய உலகக் கோப்பையில் அபாரமாக ஆடி அரையிறுதி வரை முன்னேறியது. இந்நிலையில் செவில்லேவில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து 3-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. நட்சத்திர வீரர் ரஹீம் ஸ்டெர்லிங் 2 கோல்களை அடித்தார். மார்கஸ் ராஷ்போர்ட் மற்றொரு கோலை அடித்தார். ஸ்பெயின் அணிக்கு செர்ஜியோ ரமோஸ், போகா அலேகர் கோலடித்தனர். இந்த வெற்றி மூலம் குரூப் 4 பிரிவில் முதலிடம் பெறும் வாய்ப்பை இங்கிலாந்து தக்க வைத்துள்ளது.
 

]]>
http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/17/கால்பந்து-ஸ்பெயினை-வீழ்த்தியது-இங்கிலாந்து-3021729.html
3021621 விளையாட்டு செய்திகள் ஆசிய பாரா விளையாட்டு: பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து DIN DIN Tuesday, October 16, 2018 08:45 PM +0530  

ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய பாரா போட்டிகள் கடந்த சனிக்கிழமையுடன் நிறைவடைந்தன. இதில் 15 தங்கம் உள்பட 72 பதக்கங்களுடன் இந்தியா 9-ஆவது இடத்தைப் பெற்றது.

ஆசிய பாரா போட்டிகளில் 15 தங்கம், 24 வெள்ளி, 33 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா மொத்தம் 72 பதக்கங்களுடன் 9-ஆவது இடத்தைப் பெற்றது. 

இந்நிலையில், ஆசிய பாரா போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, செவ்வாய்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

சீனா, தென்கொரியா, ஈரான் உள்ளிட்டவை முறையே முதல் மூன்றிடங்களைப் பெற்றன.

கடந்த 2014 ஆசிய பாரா போட்டியில் இந்தியா 3 தங்கம், 14 வெள்ளி, 1 வெண்கலத்துடன் வெறும் 33 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/16/w600X390/DpoggbBWwAAZ65K.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/16/ஆசிய-பாரா-விளையாட்டு-பதக்கம்-வென்றவர்களுக்கு-பிரதமர்-மோடி-நேரில்-வாழ்த்து-3021621.html
3021583 விளையாட்டு செய்திகள் மே.இ. பயிற்சியாளருக்கு 2 ஆட்டங்கள் இடைக்காலத் தடை: ஐசிசி அறிவிப்பு! எழில் DIN Tuesday, October 16, 2018 05:55 PM +0530  

ஹைதராபாத்தில் சமீபத்தில் நடந்துமுடிந்த 2-வது டெஸ்ட் போட்டியின்போது மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க வீரர் கிரான் பவல், அஸ்வின் பந்துவீச்சில் ரஹானேவிடம் ஸ்லிப் பகுதியில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கள நடுவர்களுக்கு கேட்ச் பிடித்ததில் சந்தேகம் இருந்ததால் டிவி நடுவரிடம் ஆலோசனை பெற்றார்கள். அவரும் இந்திய அணிக்குச் சாதமாகத் தீர்ப்பு வழங்கியதால் கேட்ச் சரியான முறையில் பிடிக்கப்பட்டு பவல் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்த விக்கெட் வீழ்ந்ததின் பின்னால் நடைபெற்ற சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது. பவல் ஆட்டமிழந்த பிறகு, மே.இ. அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா, டிவி நடுவரின்  அறைக்குச் சென்று தவறாகப் பேசியுள்ளார். அதுமட்டுமன்றி, நான்காவது நடுவரின் அறை உள்ள பகுதிக்குச் சென்று வீரர்களுக்கு மத்தியில் நான்காவது நடுவர் குறித்து மோசமாகப் பேசியுள்ளார். இதையடுத்து கள நடுவர்கள் புரூஸ் ஆக்ஸன்ஃபோர்டு மற்றும் இயன் குட், மூன்றாம் நடுவர் நைஜல் லாங், நான்காவது நடுவர் நிதின் மேனன் ஆகியோர் ஐசிசி விதிமுறைகளை ஸ்டூவர்ட் லா மீறியதாகக் குற்றம் சுமத்தினார்கள்.  இதனால் மே.இ. அணி அடுத்து விளையாடவுள்ள இரு ஒருநாள் ஆட்டங்களில் பயிற்சியாளராகச் செயலபட லா-வுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று அபராதப் புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளது. நூறு சதவிகித ஆட்ட ஊதியம் அபாராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து இந்தியாவுக்கு எதிரான அக்டோபர் 21, 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஒருநாள் ஆட்டங்களில் ஸ்டூவர்ட் லா பயிற்சியாளராகச் செயல்பட மாட்டார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/16/w600X390/law12.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/16/west-indies-coach-stuart-law-suspended-for-two-odis-3021583.html
3021603 விளையாட்டு செய்திகள் என் மீது மேட்ச் ஃபிக்ஸிங் புகார் இல்லை: ஜெயசூர்யா விளக்கம் எழில் DIN Tuesday, October 16, 2018 05:20 PM +0530  

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா மீது இரண்டு பிரிவுகளின் கீழ் ஐசிசி ஊழல் தடுப்பு விசாரணைக் குழு குற்றம் சுமத்தியுள்ளது. ஆடுகளங்களை மாற்றி அமைத்தது தொடர்பான ஊழல் புகார் விசாரணைக்கு ஜெயசூர்யா உரிய ஒத்துழைப்பு தரவில்லை என அவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. மேலும் இதற்கு 2 வாரங்களில் அவர் பதில் அளிக்க வேண்டும் எனவும் அவகாசம் தரப்பட்டுள்ளது.

தன் மீதான குற்றச்சாட்டு குறித்து ஜெயசூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: 

விளையாட்டு தொடர்பான விஷயங்களில் வெளிப்படையாகவும் உண்மையாகவும் நடந்துகொண்டுள்ளேன். என் மீதான புகாரில் மேட்ச் ஃபிக்ஸிங்கோ ஆடுகள மாற்றம் தொடர்பான குற்றச்சாட்டோ ஊழல் புகாரோ இல்லை. ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றுதான் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. என் மீதான புகார் குறித்து நான் பேசக்கூடாது. அப்படிப் பேசினால் ஐசிசி விதிமுறைகளை மீறிய குற்றத்துக்கு ஆளாக நேரிடும் என்று விளக்கம் அளித்துள்ளார்.

]]>
Sanath Jayasuriya, ACU charges http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/16/w600X390/jayasurya11.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/16/sanath-jayasuriya-states-his-integrity-and-transparency-in-wake-of-acu-charges-3021603.html
3021138 விளையாட்டு செய்திகள் ஊக்க மருந்து சோதனை: போல்ட் கொதிப்பு  சிட்னி, DIN Tuesday, October 16, 2018 01:27 AM +0530 ஊக்க மருந்து சோதனையில் பங்கேற்குமாறு நோட்டீஸ் அளிக்கப்பட்டதற்கு 8 முறை ஒலிம்பிக் சாம்பியன் உசேன் போல்ட் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
 தொழில்முறை கால்பந்து வீரராக மாறுவதற்காக முயற்சித்து வருகிறார். இதற்கிடையே ஊக்க மருந்து சோதனைக்கு ஆஜராக வேண்டும் என போல்ட்டுக்கு ஆஸி. கால்பந்து கூட்டமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிறுநீர், ரத்த மாதிரிகளை அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொதிப்படைந்த போல்ட் கூறியதாவது: நான் தடகளத்தை விட்டு விலகி விட்டேன். மேலும் கால்பந்திலும் தொழில்முறை ஆட்டக்காரராகவும் ஒப்பந்தம் செய்யவில்லை. எந்த கிளப்பிலும் இணையவில்லை.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/5/16/3/w600X390/bolt.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/16/ஊக்க-மருந்து-சோதனை-போல்ட்-கொதிப்பு-3021138.html
3021137 விளையாட்டு செய்திகள் துளிகள்... DIN DIN Tuesday, October 16, 2018 01:26 AM +0530 *இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா மீது இரண்டு பிரிவுகளின் கீழ் ஐசிசி ஊழல் தடுப்பு விசாரணைக் குழு குற்றம் சுமத்தியுள்ளது. ஆடுகளங்களை மாற்றி அமைத்தது தொடர்பான ஊழல் புகார் விசாரணைக்கு ஜெயசூர்யா உரிய ஒத்துழைப்பு தரவில்லை என அவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. மேலும் இதற்கு 2 வாரங்களில் அவர் பதில் அளிக்க வேண்டும் எனவும் அவகாசம் தரப்பட்டுள்ளது.
*சீனாவின் நிங்போ நகரில் நடைபெற்று வரும் ஏடிபி சேலஞ்சர் போட்டியில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார். அதே வேளையில் மற்றொரு முன்னணி வீரர் ராம்குமார் ராமநாதன் தோல்வியுற்று வெளியேறினார்.
*வரும் 2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை தென்கொரியா-வடகொரியா ஆகியவை இணைந்து நடத்த விண்ணப்பிப்பது தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம் சியோலில் திங்கள்கிழமை நடைபெற்றது. பரம வைரிகளாக உள்ள இரு நாடுகளும் அண்மைக்காலமாக விளையாட்டுத் துறையில் நெருங்கி ஒத்துழைத்து வருகின்றன. ஜகார்த்தா ஆசிய போட்டியில் சில பிரிவுகளில் இரு நாடுகள் வீரர்கள், வீராங்கனைகள் இணைந்து பங்கேற்றனர்.
*பெருகிவரும் டி20 லீக் கிரிக்கெட் போட்டிகளை நடத்த கடும் கட்டுப்பாடுகளை விதிக்க ஐசிசி தீர்மானித்துள்ளது. சிங்கப்பூரில் 16 முதல் 19-ஆம் தேதி வரை நடக்கவுள்ள ஐசிசி கூட்டத்தில் டி20, டி10 லீக் போட்டிகளை நடத்த கடும் கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் விதிப்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் எனக் கருதப்படுகிறது.

]]>
http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/16/துளிகள்-3021137.html
3021135 விளையாட்டு செய்திகள் நேஷன்ஸ் லீக் கால்பந்து: இத்தாலி முதல் வெற்றி    வார்ஸா, DIN Tuesday, October 16, 2018 01:26 AM +0530 நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் 4 முறை உலக சாம்பியன் இத்தாலி தனது முதல் வெற்றியை பெற்றுள்ளது.
 60 ஆண்டுகளில் முதன்முறையாக ரஷியாவில் நடைபெற்ற உலக கோப்பை போட்டிக்கு இத்தாலி தகுதி பெறவில்லை. இந்நிலையில் புதிய பயிற்சியாளராக ராபர்டோ மான்சினி நியமிக்கப்பட்டு அணியை கட்டமைத்து வந்தார்.யுஇஎப்ஏ நேஷன்ஸ் லீக் போட்டியில் முதல் ஆட்டத்தில் போர்ச்சுகலிடம் இத்தாலி தோல்வியுற்றது.
 இதற்கிடையே போலந்துடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இத்தாலி டிபன்டர் பிராஜி அடித்த கடைசி நிமிட நேர கோலால் இத்தால் 1-0 என முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
 மான்சினி பொறுப்பேற்ற பின் இத்தாலி பெறும் முதல் வெற்றியாகும்.
 இப்பிரிவில் போர்ச்சுகல் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இத்தாலி 4 புள்ளிகளுடன் உள்ளது. தோல்வியால் போலந்து லீக் பிரிவுக்கு தள்ளப்பட்டது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/16/w600X390/ITALY_WIN.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/16/நேஷன்ஸ்-லீக்-கால்பந்து-இத்தாலி-முதல்-வெற்றி-3021135.html
3021131 விளையாட்டு செய்திகள் டென்னிஸ் தரவரிசை: முதலிடத்தை நெருங்குகிறார் ஜோகோவிச்  பாரிஸ், DIN Tuesday, October 16, 2018 01:25 AM +0530 ஏடிபி டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் உலகின் நம்பர் ஒன் இடத்தை நோக்கி நெருங்கி வருகிறார் நோவக் ஜோகோவிச்.
 ஷாங்காய் மாஸ்டர்ஸ் போட்டி முடிவடைந்த நிலையில் தற்போது ஏடிபி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
 ரபேல் நடால் 7660 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ஆனால் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவர் ஆசிய பிரிவு ஏடிபி போட்டிகளில் பங்கேற்கவில்லை.
 அதே நேரததில் ஜோகோவிச், விம்பிள்டன், யுஎஸ் ஓபன், ஷாங்காய் மாஸ்டர்ஸ் உள்பட பல்வேறு போட்டிகளில் தொடர்ந்து பட்டம் வென்று வருகிறார்.
 நடாலை காட்டிலும் 215 புள்ளிகள் மட்டுமே ஜோகோவிச் பின் தங்கி உள்ளார். இரண்டாம் இடத்தில் ஜோகோவிச் (7445) புளளிகளுடன் உள்ளார்.
 3. பெடரர் (6260), 4. டெல் பொட்ரோ (5860), 5. அலெக்சாண்டர் வெரேவ் (5025), 6. மரின் சிலிக் (4185), 7. டொமினிக் தீம் (3825), 8. கெவின் ஆண்டர்சன் (3775), 9. டிமிட்ரோவ் (3440), 10. ஜான் ஐஸ்நர் (3290).
 டபிள்யுடிஏ தரவரிசை: சிமோனா முதலிடம்
 மகளிர் டென்னிஸ் தரவரிசையில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிமோனா ஹலேப் 7421 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
 2. கரோலின் வோஸ்னியாக்கி (6461), 3. ஏஞ்சலீக் கெர்பர் (5400), 4. நவோமி ஒஸாகா (4740), 5. கரோலினா பிளிஸ்கோவா (4465), 6. விட்டோலினா (4350). 7. பெட்ரா விட்டோவா (4255), 8. ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (4022), 9. ஜூலியா ஜார்ஜஸ் (3785), 10. கிகி பெர்டன்ஸ் (3740).
 தொடர்ந்து 40 வாரங்களாக சிமோனா ஹலேப் முதலிடத்தில் உள்ளார். இந்த சீசனை முதலிடத்துடன் நிறைவு செய்வது மிக்க பெருமையாக உள்ளது என்றார்.
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2012/10/7/19/w600X390/Novak-Djokovic-China-Open-2012.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/16/டென்னிஸ்-தரவரிசை-முதலிடத்தை-நெருங்குகிறார்-ஜோகோவிச்-3021131.html
3021126 விளையாட்டு செய்திகள் டென்னிஸ் வீரர் டெல் பொட்ரோ படுகாயம்  ஷாங்காய், DIN Tuesday, October 16, 2018 01:24 AM +0530 ஆர்ஜென்டீனா டென்னிஸ் வீரரும், உலகின் முதல் நிலை வீரர்களில் ஒருவரான ஜுவான் மார்ட்டின் டெல்பொட்ரோ ஷாங்காய் மாஸ்டர்ஸ் போட்டியில் பலத்த காயமடைந்தார்.
 தனது விளையாடும் காலம் முழுவதும் காயங்களால் பாதிக்கப்பட்டு சிறிது கூட அதிர்ஷ்டம் இல்லாத முன்னணி வீரராக உள்ளார் டெல்பொட்ரோ.
 கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற யுஎஸ் ஓபன் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்திருந்தார். இந்நிலையில் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நாக் அவுட் சுற்றில் போர்னோ கோரிக்குடன் நடைபெற்ற ஆட்டத்தில் வலது முட்டில் முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார்.
 நான்காம் நிலை வீரரான அவர் இந்த சீசனில் தான் சிறப்பாக ஆடி வருவதாக தெரிவித்திருந்தார். இந்த காயம் ஏற்பட்டது எனக்கு கடினமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இதில் இருந்து மீண்டும் குணமடைந்து வருவேனா எனத் தெரியவில்லை. என்னை வலுவில்லாமல் செய்து விட்டது இந்த காயம் என பொட்ரோ வேதனை தெரிவித்தார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/16/w600X390/DEL_POTRO.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/16/டென்னிஸ்-வீரர்-டெல்-பொட்ரோ-படுகாயம்-3021126.html
3021123 விளையாட்டு செய்திகள் யூத் ஒலிம்பிக்: ஹாக்கியில் முதன்முறையாக இந்தியாவுக்கு வெள்ளி  பியூனோஸ் அயர்ஸ், DIN Tuesday, October 16, 2018 01:22 AM +0530 யூத் ஒலிம்பிக் போட்டி ஹாக்கி 5 ஆட்டத்தில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் வெள்ளிப் பதக்கங்களோடு திருப்தி பட வேண்டியதாகியது.
 இரு அணிகளும் இறுதிச் சுற்றில் தங்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆடவர் அணி மலேசியாவோடு மோதியது. இந்திய வீரர் விவேக் சாகர் பிரசாத் முதல் கோலை அடித்த நிலையில், மலேசிய வீரர் ப்ராடஸ் பதில் கோலடித்தார். மீண்டும் அடுத்த கோலை பிரசாத் அடித்ததால் 2-1 என இந்தியா முன்னிலை பெற்றது.
 ஆனால் இரண்டாவது பாதியில் மலேசிய வீரர்கள் அகிமுல்லா, அமிருல் அஸார் ஆகியோர் கோலடித்து 4-2 என்ற கணக்கில் தங்கள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதன் மூலம் யூத் ஒலிம்பிக் ஹாக்கியில் முதல் தங்கத்தை மலேசியா வென்றது.
 மகளிர் ஹாக்கி:
 மகளிர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும்-ஆர்ஜென்டீனாவும் மோதின. முதலில் இந்திய வீராங்கனை மும்தாஸ் கான் அடித்த கோலால் முன்னிலை பெற்றது. பின்னர் ஆர்ஜென்டீனா வீராங்கனை ஜியாநெல்லா பதில் கோலடித்தார். பின்னர் சோபியா ரமல்லோ இரண்டாவது கோலை அடித்தார். இரண்டாம் பாதியில் பிரிஸா பிரக்கஸர் கோலடித்ததின் மூலம் 3-1 என வென்று ஆர்ஜென்டீனா முதல் தங்கத்தை வென்றது.
 இந்தியா இரு பிரிவுகளிலும் முதன்முதலாக வெள்ளிப் பதக்கம் வென்றது. ஆர்ஜென்டீனா ஆடவர், சீன மகளிர் அணிகள் வெண்கலம் வென்றன.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/16/w600X390/hockey_men_silver.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/16/யூத்-ஒலிம்பிக்-ஹாக்கியில்-முதன்முறையாக-இந்தியாவுக்கு-வெள்ளி-3021123.html
3021120 விளையாட்டு செய்திகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய ஏ அணி தோல்வி  மும்பை, DIN Tuesday, October 16, 2018 01:21 AM +0530 ஆஸி.ஏ மகளிர் அணியுடன் நடைபெற்ற ஒரு நாள் ஆட்டத்தில் 91 ரன்கள்வித்தியாசத்தில் இந்திய ஏ அணி தோல்வியடைந்தது.
 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் மும்பையில் நடைபெறுகிறது. இதன் துவக்க ஆட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
 பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸி. மகளிர் அணி 50 ஓவர்களில் 271/8 ரன்களை குவித்தது. ஆஸி. அணியில் டஹிலா மெக்ராத், 66 பந்துகளில் 58 ரன்களை விளாசினார். ஹீதர் கிரஹாம் 48, நவோமி 47 ரன்களை எடுத்தனர்.
 பின்னர் ஆடிய இந்திய அணி 46.2 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பிரிதி போஸ் 62, ஷிகா பாண்டே 42 ரன்களை எடுத்தனர்.
 இறுதியில் 91 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. அணி வென்றது. இரண்டாவது ஒரு நாள் ஆட்டம் புதன்கிழமை நடக்கிறது.
 

]]>
http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/16/மகளிர்-கிரிக்கெட்-இந்திய-ஏ-அணி-தோல்வி-3021120.html
3021119 விளையாட்டு செய்திகள் டென்மார்க் ஓபன்: சாய்னா, சிந்து பங்கேற்பு  ஓடென்ஸ் DIN Tuesday, October 16, 2018 01:21 AM +0530 டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய நட்சத்திரங்கள் பி.வி.சிந்து, சாய்னா நெவால் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
 ஓடென்ஸ் நகரில் செவ்வாய்க்கிழமை டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டி தொடங்குகிறது. இதில் மூன்றாம் நிலை வீராங்கனை சிந்து, 11-ஆம் நிலை வீராங்கனை சாய்னா ஆகியோர் மகளிர் ஒற்றையர் பிரிவில் களம் காண்கின்றனர்.
 துவக்க ஆட்டத்தில் அமெரிக்காவின் பெய்வேன் ஸாங்குடன் சிந்துவும், ஹாங்காங்கின் செங் யியுடன் சாய்னாவும் மோதுகின்றனர்.
 ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த், சாய் பிரணீத், சமீர் வர்மா, எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் இந்திய சவாலை முன்னெடுத்துச் செல்வர்.
 இரட்டையர் பிரிவில் மனு அட்ரி-சுமித் ரெட்டி இணையும், கலப்பு பிரிவில் அஸ்வினி பொன்னப்பா-சத்விக் ரங்கிரெட்டியும், மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி-சிக்கி ரெட்டி இணையும் பங்கேற்கின்றன.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/8/w600X390/Saina-PTI.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/16/டென்மார்க்-ஓபன்-சாய்னா-சிந்து-பங்கேற்பு-3021119.html
3021114 விளையாட்டு செய்திகள் விஜய் ஹஸாரே கோப்பை: அரையிறுதியில் ஜார்க்கண்ட், ஹைதராபாத்  பெங்களூரு DIN Tuesday, October 16, 2018 01:20 AM +0530 விஜய் ஹஸாரே கிரிக்கெட் கோப்பை போட்டியின் அரையிறுதிக்கு ஜார்க்கண்ட், ஹைதராபாத் அணிகள் முன்னேறியுள்ளன.
 ஏற்கெனவே மும்பை, தில்லி அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில் பெங்களூருவில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஜார்க்கண்ட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மகாராஷ்டிர அணியை வென்றது. முதலில் ஆடிய மகாராஷ்டிரம் 42.2 ஓவர்களில் 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் ஜார்க்கண்ட் அணி ஆடிய போது மழை குறுக்கிட்டதால், 34 ஓவர்களில் 127 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 32.2 ஓவர்களில் 127/2 ரன்களை எடுத்து இறுதியில் 8 விக்கெட் ஜார்க்கண்ட் அணி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. 18-ஆம் தேதி தில்லியுடன் மோதுகிறது ஜார்க்கண்ட்.
 மற்றொரு காலிறுதியில் ஹைதராபாத் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் ஆந்திரத்தை வீழ்த்தியது. ஹைதராபாத் 50 ஓவர்களில் 281/8 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய ஆந்திர அணி 50 ஓவர்களில் 267/9 ரன்களை எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஹனுமா விஹாரி ஆந்திர அணியில் 95 ரன்களை குவித்தார்.
 அதே நேரத்தில் ஹைதராபாத் அணியில் இடம் பெற்ற வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 3-50 விக்கெட்டை வீழ்த்தினார்.
 17-ஆம் தேதி மும்பையுடன் அரையிறுதியில் மோதுகிறது ஹைதராபாத்.

]]>
http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/16/விஜய்-ஹஸாரே-கோப்பை-அரையிறுதியில்-ஜார்க்கண்ட்-ஹைதராபாத்-3021114.html
3021111 விளையாட்டு செய்திகள் மீடூ புகார் எதிரொலி: ஐசிசி கூட்டத்தில் பங்கேற்க பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோரிக்கு கட்டுப்பாடு  புது தில்லி, DIN Tuesday, October 16, 2018 01:19 AM +0530 மீடூ பாலியல் புகார் எதிரொலியாக ஐசிசி குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோரிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. புகாருக்கு உடனே விளக்கம் தர கிரிக்கெட் நிர்வாகக் குழு வலியுறுத்தியுள்ளது.
 தனியார் தொலைக்காட்சியில் உயரதிகாரியாக இருந்த போது ராகுல் ஜோரி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என பெண் பத்திரிகையாளர் மீடூவில் புகார் செய்திருந்தார்.
 இது ஜோரிக்கு சிக்கலை ஏற்பட்டது. கடந்த 2016 முதல் பிசிசிஐ சிஇஓவாக உள்ளார் அவர். இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கம் தர கிரிக்கெட் நிர்வாகக் குழு உத்தரவிட்டது.
 மேலும் வரும் 16 முதல் 19 வரை சிங்கப்பூரில் நடைபெறவுள்ள ஐசிசி குழுக் கூட்டத்தில் ஜோரி பங்கேற்கத் தேவையில்லை. அவருக்கு பதிலாக தற்காலிக செயலர் அமிதாப் செளத்ரி கலந்து கொள்ளலாம். பாலியல் புகார் தொடர்பாக உடனே பதில் தர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/16/w600X390/AMITABH.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/16/மீடூ-புகார்-எதிரொலி-ஐசிசி-கூட்டத்தில்-பங்கேற்க-பிசிசிஐ-சிஇஓ-ராகுல்-ஜோரிக்கு-கட்டுப்பாடு-3021111.html
3021106 விளையாட்டு செய்திகள் ஐசிசி தரவரிசை: இந்தியா சாதனை  துபை, DIN Tuesday, October 16, 2018 01:17 AM +0530 ஐசிசி ஒரு நாள், டெஸ்ட் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி, பும்ரா ஆகியோர் முதலிடத்தில் நீடித்து சாதனை படைத்துள்ளனர்.
 அணிகள்
 தரவரிசையில் இங்கிலாந்து 6607 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 6492 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்திலும், 4602 புள்ளிகளுடன் நியூஸிலாந்து மூன்றாவது இடத்திலும், 4635 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா நான்காவது இடத்திலும், 4145 புள்ளிகளுடன் பாகிஸ்தான் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
 பேட்ஸ்மேன்: விராட் கோலி முதலிடம்
 பேட்ஸ்மேன் தரவரிசையில் 884 புள்ளிகளுடன் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் நீடித்து வருகிறார். 842 புள்ளிகளுடன் ரோஹித் சர்மா இரண்டாவது இடத்திலும், 818 புள்ளிகளுடன் இங்கிலாந்தின் ஜோ ரூட் மூன்றாவது இடத்திலும், 803 புள்ளிகளுடன் ஆஸி. அணியின் டேவிட் வார்னர் நான்காவது இடத்திலும், 802 புள்ளிகளுடன் இந்திய வீரர் ஷிகர் தவன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
 பெளலர்கள்: ஜஸ்ப்ரீத் பும்ரா முதலிடம்
 பெளலர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 797 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் 788 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், 700 புள்ளிகளுடன் இந்திய வீரர் குல்தீப் யாதவ் மூன்றாவது இடத்திலும், 699 புள்ளிகளுடன் நியூஸி வீரர் டிரென்ட் பெளல்ட் நான்காவது இடத்திலும், 696 புள்ளிகளுடன் ஆஸி. வீரர் ஜோஷ் ஹேஸல்வுட் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
 டெஸ்ட் தரவரிசை:
 ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையிலும் கேப்டன் கோலி முதலிடத்தில் உள்ளார். இளம் வீரர்கள் பிரித்வி ஷா, ரிஷப் பந்த்தும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பிரித்வி 73-ஆவது இடத்தில் இருந்து 60-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ரிஷப் பந்த் சிறப்பான ஆட்டத்தால் 62-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ரஹானே 18-ஆவது இடத்திலும், பெளலர்களில் உமேஷ் யாதவ் 25-ஆவது இடத்திலும் உள்ளனர்.
 பெளலர்கள் பிரிவில் மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர் 9-ஆவது இடத்திலும், பேட்ஸ்மேன் பிரிவில் 53-ஆவது இடத்திலும் உள்ளார். டெஸ்ட் அணிகள் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
 மகளிர் டி20 தரவரிசை: 5-ஆவது இடத்தில் இந்தியா
 ஐசிசி வெளியிட்ட மகளிர் டி20 தரவரிசை பட்டியலில் இந்தியா 5-ஆவது இடத்தில் உள்ளது. முதன்முறையாக மகளிர் டி20 அணிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆஸி. அணி முதலிடத்தில் உள்ளது. நியூஸி, இங்கிலாந்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
 அனைத்து மகளிர் டி20 ஆட்டங்களுக்கும் சர்வதேச அந்தஸ்தை ஐசிசி வழங்கியுள்ளது. பட்டியலில் நிலைக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு அணியும் முந்தைய 4 ஆண்டுகளில் 6 ஆட்டங்களில் ஆடி இருக்க வேண்டும். கிரிக்கெட்டை வளர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு டி20 ஆட்டங்கள் சிறந்த வழியாகும். உலகத் தரவரிசை, ஆட்டங்களுக்கு சர்வதேச அந்தஸ்து போன்றவை மகளிர் கிரிக்கெட்டை வளர்க்க உதவு. மகளிர் ஒரு நாள் அணி தரவரிசை என்பது 10 அணிகளுடன் தனியாக உள்ளது என ஐசிசி சிஇஓ டேவிட் ரிச்சர்ட்ஸன் தெரிவித்துள்ளார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/16/w600X390/VIRU.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/16/ஐசிசி-தரவரிசை-இந்தியா-சாதனை-3021106.html
3020915 விளையாட்டு செய்திகள் ஆஸி. தொடரில் 'இந்த வேகப்பந்துவீச்சாளர்' இடம்பிடிக்க வாய்ப்புள்ளது: கோலி சூசகம் Raghavendran DIN Monday, October 15, 2018 08:13 PM +0530  

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ஒரு குறிப்பிட்ட வேகப்பந்துவீச்சாளர் இடம்பிடிக்க நிச்சயம் வாய்ப்புள்ளது என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி சூசகமாக தெரிவித்துள்ளார்.

மே.இ.தீவுகளுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என இந்திய அணி கைப்பற்றியது. இதில் இளம் நட்சத்திர நாயகன் பிருத்வி ஷா தொடர் நாயகன் விருது பெற்றார்.

இதையடுத்து இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரில் பந்துவீச்சாளர்களின் பங்கு சிறப்பானதாக அமைந்தது. அவர்களால் தான் இந்த தொடரை வெல்ல முடிந்தது. குறிப்பாக இளம் வீரர்கள் பிருத்வி ஷா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரது ஆட்டம் பாராட்டுதலுக்குரியது. ஏனெனில் அவர்கள் பயமின்றி விளையாடினார்கள். அதற்கான சுதந்திரம் வழங்கப்பட்டது. அதை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். சர்வதேச அளவில் எப்படி விளையாட வேண்டும் என்ற திட்டம் அவர்களிடத்தில் உள்ளது. இந்த வாய்ப்பை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. 

அடுத்து வரவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இங்கிலாந்து போன்று அங்கு பந்து அதிகம் ஸ்விங் ஆகாது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க உமேஷ் யாதவுக்கு நிச்சயம் வாய்ப்புள்ளது என்றார்.

முன்னதாக, மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் மற்றும் 2-ஆவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் என மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய உமேஷ் யாதவ், ஆட்டநாயகன் விருது பெற்றார். மேலும் சர்வதேச அரங்கில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை அவர் எடுப்பது இதுவே முதல்முறையாகும். பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்த இந்த விக்கெட்டில் வேகப்பந்துவீச்சில் சாதித்த உமேஷ் யாதவுக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

]]>
Umesh Yadav, virat kohli, INDvsAUS, உமேஷ் யாதவ், விராட் கோலி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/15/w600X390/virat_umesh.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/15/ஆஸி-தொடரில்-இந்த-வேகப்பந்துவீச்சாளர்-இடம்பிடிக்க-வாய்ப்புள்ளது-கோலி-சூசகம்-3020915.html
3020912 விளையாட்டு செய்திகள் 'மீ டூ' -க்களுக்கு மத்தியில் 'ஜென்டில்மேன்' டிராவிட் - வைரலாகும் விடியோ Raghavendran DIN Monday, October 15, 2018 07:34 PM +0530  

நாடு முழுவதும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக மீ டூ புகார்கள் குவிந்து வரும் சூழலில் அப்போது முதலே தான் ஒரு ஜென்டில்மேன் என்பதை ராகுல் டிராவிட் நிரூபித்துவிட்டார்.

தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வரும் அந்த விடியோ பதிவில், தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த போது அந்த குறும்புத்தனம் (பிராங்) நடத்தப்பட்டது. அதில், பேட்டி முடிந்த பின்னர் ஸ்பை கேமரா மூலம் படமாக்கப்பட்ட அந்த காட்சியில் ராகுல் டிராவிட் அருகில் செல்லும் அந்த இளம் பெண் நிருபர் தன்னை மணந்துகொள்ளுமாறு வற்புறுத்துகிறார்.

 

ஆனால், ராகுல் டிராவிட் அந்த இடத்தை விட்டு உடனடியாக கிளம்ப முற்படுகிறார். பின்னர் அது ஒரு பிராங் என்று விளக்கமளிக்கப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அந்த விடியோ பதிவை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். அதை நினைத்தால் சிரிப்பாக வருகிறது. இருப்பினும் நான் அப்படி கடிந்துகொள்ளமால் மென்மையுடன் மறுப்பு தெரிவித்து வெளியேறி இருக்கலாம் என்று ராகுல் டிராவிட் தெரிவித்திருந்தார். 

 

]]>
Rahul dravid, ராகுல் டிராவிட் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/26/w600X390/Rahul_Dravid.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/15/மீ-டூ--க்களுக்கு-மத்தியில்-ஜென்டில்மேன்-டிராவிட்---வைரலாகும்-விடியோ-3020912.html
3020909 விளையாட்டு செய்திகள் கடின உழைப்பால் அனைத்தும் சாத்தியம்: விராட் கோலி பதிவை வைரலாக்கிய ரசிகர்கள் Raghavendran DIN Monday, October 15, 2018 06:49 PM +0530  

கடின உழைப்பால் நமது வாழ்வில் அனைத்தும் சாத்தியமாகும் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்து மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்றது. இதையடுத்து மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்க உள்ளது.

இந்நிலையில், விராட் கோலி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவருடைய இரு புகைப்படங்களை ஒப்பிட்டு வெளியிட்ட பதிவு அவரது ரசிகர்களால் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

அதில், குறிக்கோள் மற்றும் கடின உழைப்பால் அனைத்தும் சாத்தியமாகும். எனவே, தொடர்ந்து நம்பிக்கையுடன் உழைத்துக்கொண்டிருங்கள் என்று பதிவிட்டிருந்தார். 

]]>
virat kohli, விராட் கோலி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/9/13/w600X390/Virat-Kohli-2.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/15/கடின-உழைப்பால்-அனைத்தும்-சாத்தியம்-விராட்-கோலி-பதிவை-வைரலாக்கிய-ரசிகர்கள்-3020909.html
3020898 விளையாட்டு செய்திகள் முன்னாள் வீரர் ஜெயசூர்யா மீது ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவு புகார்! எழில் DIN Monday, October 15, 2018 04:33 PM +0530  

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா, ஐசிசி விதிமுறைகளை மீறியுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக ஜெயசூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது ஐசிசி. குற்றச்சாட்டுகளுக்கு 14 நாள்களில் பதில் அளிக்கும்படி கட்டளையிடப்பட்டுள்ளது. 

இலங்கை கிரிக்கெட்டில் உள்ள ஊழல்கள் குறித்து ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை செய்து வருகிறது. ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவுக்கு ஒத்துழைப்பு அளிக்காதது, சரியான தகவல்கள் அளிக்காதது மற்றும் ஐசிசி விசாரணையைத் தாமதப்படுத்தும் நோக்கில் ஆதாரங்களை அழிக்க முற்படுவது போன்ற குற்றச்சாட்டுகள் ஜெயசூர்யா மீது சுமத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து விரைவில் பதில் அளிக்க அவருக்கு ஐசிசி கட்டளையிட்டுள்ளது. 

]]>
Sanath Jayasuriya http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/15/w600X390/jayasurya11.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/15/sri-lanka-veteran-sanath-jayasuriya-charged-by-icc-under-anti-corruption-code-3020898.html
3020881 விளையாட்டு செய்திகள் சொந்த மண்ணில் வீரநடை போடும் இந்திய அணி: தொடரும் டெஸ்ட் தொடர் வெற்றிகள்! எழில் DIN Monday, October 15, 2018 03:40 PM +0530  

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-0 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது. 

சொந்த மண்ணில் வேறெந்த அணியை விடவும் இந்திய அணியே மிகவும் பலம் பொருந்திய அணியாக உள்ளது. மே.இ. அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி அதனை மீண்டும் நிரூபித்துள்ளது. அதுதொடர்பான புள்ளிவிவரங்கள்:

* 2000 முதல் இந்திய அணி உள்ளூரில் 34 டெஸ்ட் தொடர்களில் விளையாடி மூன்றில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. 26 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. 5 தொடர்கள் சமனில் முடிந்துள்ளன. 

சொந்த மண்ணில் இந்திய அணி தோற்ற மூன்று தொடர்கள்

vs தென் ஆப்பிரிக்கா (2000): 0-2 (2) 
vs ஆஸ்திரேலியா (2004): 1-2 (4)
vs இங்கிலாந்து (2012): 1-2 (4) 

* உள்ளூரில் இந்திய அணியின் தொடர்ச்சியான 10-வது தொடர் வெற்றி. ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக தலா ஒரு டெஸ்டுகளில் விளையாடி வென்றது இந்திய அணி. இதுபோல தொடர்ச்சியாக 10 தொடர்களில் வென்று ஆஸ்திரேலிய அணியின் சாதனையுடன் சமன் செய்துள்ளது. அதற்கு முன்பு 2000 மற்றும் 2008 ஆகிய வருடங்களில் ஆஸ்திரேலிய அணியின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு (10 தொடர்கள்) முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இவ்விரு அணிகளைத் தவிர இதர அணிகள் 8-க்கும் அதிகமான தொடர்ச்சியான உள்ளூர் டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் பெற்றதில்லை. 

* 23-1: 2013 முதல் இந்திய அணியின் உள்ளூர் டெஸ்டுகளின் வெற்றி -தோல்வி இது. 2013 முதல் வேறெந்த அணியும் உள்ளூரில் இந்தளவுக்கு வெற்றிகளைக் குவித்ததில்லை. விளையாடிய 29 டெஸ்டுகளில் 23-ஐ வென்றுள்ளது இந்திய அணி. அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. 27 டெஸ்டுகளில் 20 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் அந்த அணி சந்தித்துள்ளது. 

* மே.இ. அணிகளுக்கு எதிரான கடைசி 14 டெஸ்ட் தொடர்களில் இரு அணிகளும் சம வெற்றிகளை அடைந்துள்ளன. 2002-03 முதல் மே.இ. அணிக்கு எதிராக விளையாடிய 7 டெஸ்ட் தொடர்களையும் இந்திய அணி வென்றுள்ளது. இதில் விளையாடிய 21 டெஸ்டுகளில் இந்திய அணி ஒரு டெஸ்டிலும் தோல்வியடைந்ததில்லை. ஆனால் அதற்கு முன்பு விளையாடிய 7 டெஸ்ட் தொடர்களிலும் இந்தியாவை வீழ்த்தியுள்ளது மே.இ. அணி. 2002-03க்கு முன்பு இரு அணிகளும் விளையாடிய 16 டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி 2-ல் மட்டுமே வென்றுள்ளது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/15/w600X390/kohli_india1.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/15/indias-tenth-successive-test-series-win-at-home-3020881.html
3020861 விளையாட்டு செய்திகள் டெஸ்ட் தொடர்: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எழில் DIN Monday, October 15, 2018 02:37 PM +0530  

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-0 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் இளம் வீரர் பிருத்வி ஷாவும் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் உமேஷ் யாதவும் இடம்பெற்றுள்ளார்கள்.

டெஸ்ட் தொடர்: அதிக ரன்கள்

 எண்     பெயர் ஆட்டங்கள் ரன்கள்  சதம்   அரை சதம் சராசரி
 1.

 பிருத்வி ஷா   (இந்தியா)

 2  237  1  1  118.50
 2.  ராஸ்டன் சேஸ்   (மே.இ.)  2  185  1  1  46.25
 3.  விராட் கோலி   (இந்தியா)   2  184  1  0  92.00
 4.  ரிஷப் பந்த் (இந்தியா)  2  184  0  2  92.00
 5.  ரஹானே (இந்தியா)   2  121  0  1  60.50

 

டெஸ்ட் தொடர்: அதிக விக்கெட்டுகள்

 எண்     பெயர் ஆட்டங்கள்   விக்கெட்டுகள்   சிறந்த பந்துவீச்சு            
 1.

 உமேஷ் யாதவ்   (இந்தியா)

 2  11  6/88
 2.  குல்தீப் யாதவ் (இந்தியா)  2  10  5/57
 3.  அஸ்வின் (இந்தியா)  2  9  4/37
 4.  ஜடேஜா (இந்தியா)  2  7  3/12
 5.  ஹோல்டர் (மே.இ.)  1  5  5/56
]]>
Most wickets, Most runs http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/15/w600X390/prithivi_shaw100.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/15/most-runs-most-wickets-3020861.html
3020839 விளையாட்டு செய்திகள் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள்: ஆப்கானிஸ்தான் வீரர் சாதனை! (விடியோ) எழில் DIN Monday, October 15, 2018 12:07 PM +0530  

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 20 வயது ஹஸ்ரதுல்லா ஸஸாய், ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் போட்டியில் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

இதேபோல அதிரடியாக விளையாடிப் பெயர் பெற்ற கிறிஸ் கெய்லேவின் முன்னிலையில் இதை நிகழ்த்தியுள்ளார் ஹஸ்ரதுல்லா. 

நேற்று, ஷார்ஜாவில் நடைபெற்ற பால்க் லெஜண்ட்ஸ் மற்றும் காபுல் ஸ்வானன் அணிகளுக்கு இடையிலான  ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் டி20 போட்டியில் முதலில் விளையாடிய பால்க் லெஜண்ட்ஸ், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் குவித்தது. கிறிஸ் கெயில் 48 பந்துகளில் 10 சிக்ஸர் 2 பவுண்டரிகள் எடுத்தார். இந்தக் கடினமான இலக்கை எதிர்கொண்ட காபுல் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்துத் தோல்வியடைந்துள்ளது. 

காபுல் அணி சார்பாகத் தொடக்க வீரராகக் களமிறங்கிய ஹஸ்ரதுல்லா, 17 பந்துகளில் 7 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்து கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

நான்காவது ஓவரை வீசிய அப்துல்லா மஸாரியின் ஆறு பந்துகளிலும் சிக்ஸர் அடித்து சாதனை படைத்துள்ளார் ஹஸ்ரதுல்லா. அந்த ஓவரில் ஒரு ஒயிடையும் வீசினார் அப்துல்லா. இதனால் அந்த ஒரு ஓவரில் மட்டும் 37 ரன்கள் கிடைத்தன. இதற்கு முன்பு கேரி சோபர்ஸ், ரவி சாஸ்திரி, கிப்ஸ், யுவ்ராஜ் சிங், ராஸ் ஒயிட்லே ஆகியோர் ஒரு ஓவரின் 6 பந்துகளிலும் சிக்ஸர் அடித்துள்ளார்கள். இந்தச் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார் ஹஸ்ரதுல்லா.

மேலும் அவர் 12 பந்துகளில் அரை சதமெடுத்தார். இதனால் டி20 போட்டியில் 12 பந்துகளில் அரை சதமெடுத்த யுவ்ராஜ், கிறிஸ் கெயிலின் சாதனைப் பட்டியலிலும் இணைந்துள்ளார் ஹஸ்ரதுல்லா. 

 

]]>
Hazratullah Zazai http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/15/w600X390/Hazratullah_Zazai78xx.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/15/hazratullah-zazai-smashes-six-6s-in-an-over-in-apl-3020839.html
3020334 விளையாட்டு செய்திகள் யூத் ஒலிம்பிக்: ஹாக்கி இறுதியில் இந்திய அணிகள்  பியூனோஸ் அயர்ஸ், DIN Monday, October 15, 2018 01:14 AM +0530 யூத் ஒலிம்பிக் ஹாக்கி 5 இறுதிச் சுற்றுக்கு இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
 ஆடவர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஆர்ஜென்டீனாவை 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது. மகளிர் பிரிவு அரையிறுதியில் இந்தியா 3-0 என்ற கோல்கணக்கில் சீனாவை வென்றது.
 ஆடவர் இறுதியில் மலேசியாவையும், மகளிர் இறுதியில் ஆர்ஜென்டீனாவையும் இந்திய அணிகள் எதிர்கொள்கின்றன.
 ஹாக்கி 5 என்பது வழக்கமான ஹாக்கி மைதானத்தைக் காட்டிலும் சிறிய மைதானத்தில் ஆடப்படுகிறது. கடந்த 2014 சிங்கப்பூர் யூத் ஒலிம்பிக் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டது.
 மல்யுத்தத்தில் வெள்ளி பதக்கம்: மகளிர் மல்யுத்தம் ப்ரிஸ்டைல் 43 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை சிம்ரன் அமெரிக்காவின் எமிலியிடம் 6-11 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். சிம்ரன் கடந்த 2017 உலக கேடட் சாம்பியன் போட்டியில் 40 கிலோ பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார். இது இந்தியா பெறும் 5-ஆவது வெள்ளியாகும். 3 தங்கம் வென்றுள்ளனர்.
 அதே நேரத்தில் மானு பாக்கர், லக்ஷயா சென், தபாபி தேவி ஆகியோர் கலப்பு அணிகள் பிரிவில் வென்ற தங்கம் கணக்கில் கொள்ளப்படவில்லை.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/15/w600X390/HOCKEY_WOMEN.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/15/யூத்-ஒலிம்பிக்-ஹாக்கி-இறுதியில்-இந்திய-அணிகள்-3020334.html
3020333 விளையாட்டு செய்திகள் மெஸ்ஸி சிறந்த தலைவர் இல்லை: மாரடோனா சாடல்  பியூனோஸ் அயர்ஸ், DIN Monday, October 15, 2018 01:13 AM +0530 ஆர்ஜென்டீனா அணிக்கு மெஸ்ஸி சிறந்த கால்பந்து தலைவர் இல்லை என ஜாம்பவான் டீகோ மாரடோனா சாடியுள்ளார்.
 மெக்ஸிகோவில் இரண்டாம் டிவிஷன் கிளப் ஒன்றுக்கு பயிற்சியாளராக உள்ள மாரடோனா ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது=
 மைதானத்தில் ஆர்ஜென்டீனா அணிக்கு மெஸ்ஸி சிறந்த தலைவராக இல்லை. அவரை கால்பந்து கடவுளாக கருதக் கூடாது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு பல முறை சிறுநீர் கழிப்பவர் தலைவர் இல்லை. கிறிஸ்டியானோ ரொனால்டோவுன், மெஸ்ஸியை சிறந்த வீரராக கருதலாம். ஆனால் அவர் சிறந்த தலைவர் கிடையாது. பார்சிலோனாவுக்கு தான் மெஸ்ஸி என்றால் மெஸ்ஸி. ஆர்ஜென்டீனாவுக்கு இல்லை. நான் ஆர்ஜென்டீனா அணி பயிற்சியாளராக இருந்தால், மெஸ்ஸியே அணியில் மீண்டும் சேர்க்க மாட்டேன். அவரிடம் இருந்து கேப்டன் பதவியை எடுத்தால் தான் நமக்கு தேவையான மெஸ்ஸியை பெற முடியும் என்றார்.
 ஆர்ஜென்டீனா அணி மோதிய 3 நட்பு ஆட்டங்களில் மெஸ்ஸி பங்கேற்கவில்லை.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/15/w600X390/MARADONA.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/15/மெஸ்ஸி-சிறந்த-தலைவர்-இல்லை-மாரடோனா-சாடல்-3020333.html
3020332 விளையாட்டு செய்திகள் ஷாங்காய் மாஸ்டர்ஸ்: ஜோகோவிச் சாம்பியன்  ஷாங்காய், DIN Monday, October 15, 2018 01:12 AM +0530 ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
 சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் அரையிறுதிச்சுற்று ஜோகோவிச், ஜெர்மனியின் அலெக்சாண்டர் வெரேவை வென்றிருந்தார். மற்றொரு அரையிறுதியில் குரோஷிய வீரர் போர்னா கோரிக், உலகின் இரண்டாம் நிலை வீரர் பெடரரை வீழ்த்தினார்.
 இருவருக்கும் இடையிலான இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 இதில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஜோகோவிச் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 14 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற அவர் தொடர்ந்து 18 ஏடிபி போட்டிகளில் பட்டம் வென்றுள்ளார்.
 பெடரரிடம் இருந்து இரண்டாம் இடத்தை கைப்பற்றிய ஜோகோவிச், விரைவில் நடால் வசம் உள்ள உலகின் நம்பர் ஒன் வீரர் நிலையையும் கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 இது ஜோகோவிச் வெல்லும் நான்காவது ஷாங்காய் மாஸ்டர்ஸ் பட்டமாகும்.
 டியான்ஜின் ஓபன்: சீனாவின் டியான்ஜின் நகரில் நடைபெற்ற நெல்வி ஓபன் போட்டியில் பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா 7-6, 6-3 என்ற நேர் செட்களில் செக். வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவை வென்று பட்டம் வென்றார்.
 லியாண்டர் பயஸ் இணை வெற்றி: சான்டோ டோனின்கோ ஓபன் போட்டி இரட்டையர் பிரிவில் இந்திய மூத்த வீரர் லியாண்டர் பயஸ்-மெக்ஸிகோவின் மிகுவேல் ஏஞ்சல் இணை 4-6, 6-3, 10-5 என்ற செட் கணக்கில் ஏரியல் பெஹர்-ராபர்டோ குயிரோஸ் இணையை வீழ்த்தி பட்டம் வென்றது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/15/w600X390/JOKOVICH_WIN.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/15/ஷாங்காய்-மாஸ்டர்ஸ்-ஜோகோவிச்-சாம்பியன்-3020332.html
3020331 விளையாட்டு செய்திகள் விஜய் ஹஸாரே கோப்பை: அரையிறுதியில் தில்லி, மும்பை  பெங்களூரு DIN Monday, October 15, 2018 01:11 AM +0530 விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு தில்லி, மும்பை அணிகள் முன்னேறி உள்ளன.
 பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை தில்லி-ஹரியாணா அணிகள் இடையிலான காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. முதலில் ஆடிய ஹரியாணா அணி 229 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பேட்ஸ்மேன்கள் சைதன்யா பிஷ்னோய் 85, பிரமோத் சண்டிலா 59 ரன்களை எடுத்தனர். பின்னர் ஆடிய தில்லி அணி 39.2 ஓவர்களில் வெற்றி இலக்கான 230 ரன்களை எட்டியது. கேப்டன் கெளதம் கம்பீர் 72 பந்துகளில் 104 ரன்களை விளாசினார். துருவ் ஷோரே 50 ரன்களை சேர்த்தார். ஹரியாணா அணியில் ராகுல் 3 விக்கெட்டை வீழ்த்தினார். இறுதியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தில்லி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
 மும்பை-பிகார்: மும்பை-பிகார் அணிகள் இடையிலான ஆட்டத்தில் முதலில் ஆடிய பிகார் அணி 28.2 ஓவர்களில் 69 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மும்பை வீரர் துஷார் தேஷ்பாண்டே 5 விக்கெட்டையும், முலானி 3 விக்கெட்டையும் வீழ்த்தினர். பின்னர் ஆடிய மும்பை 12.3 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 70 ரன்களை எடுத்து வென்றது. ரோஹித் சர்மா 33, அகில் 24 ரன்களை குவித்தனர். 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று மும்பை அரையிறுதிக்கு முன்னேறியது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/15/w600X390/GAMBHIR.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/15/விஜய்-ஹஸாரே-கோப்பை-அரையிறுதியில்-தில்லி-மும்பை-3020331.html
3020330 விளையாட்டு செய்திகள் துளிகள்... DIN DIN Monday, October 15, 2018 01:10 AM +0530 * ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஆல் ரவுண்டர் ஜான் ஹேஸ்டிங்ஸ் மர்ம நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் பந்துவீசும் போது இருமலுடன், ரத்தக்கசிவு ஏற்படுகிறது என கண்டறியப்பட்டுள்ளது. ஒரு டெஸ்ட், 29 ஒரு நாள், 9 டி20 ஆட்டங்களில் ஆஸி. அணிக்காக ஹேஸ்டிங்ஸ் பங்கேற்றுள்ளார்.
* அபுதாபியில் தொடங்கவுள்ள ஆஸி.அணிக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்டில் கண்டிப்பாக வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது என அதன் மூத்த வீரர் அஸார் அலி கூறியுள்ளார். முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய போதிலும் பாகிஸ்தானால் வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
* தென்னாப்பிரிக்கா-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான கடைசி டி20 ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்டது. ஏற்கெனவே 2-0 என தொடரை தென்னாப்பிரிக்கா கைப்பற்றி விட்டது. ஒரு நாள் ஆட்டத் தொடரையும் 3-0 என தென்னாப்பிரிக்கா வென்று விட்டது.
* இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி ஆகியோர் ஹஸாரே கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக விடுவிக்கப்பட்டுள்ளனர். வரும் 15-ஆம் தேதி பெங்களூருவில் நடக்கவுள்ள ஹைதராபாத்-ஆந்திர அணிகள் இடையிலான காலிறுதி ஆட்டத்தில் சிராஜ், ஹைதராபாத் அணியிலும், விஹாரி ஆந்திர அணியிலும் இடம் பெறவுள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/15/துளிகள்-3020330.html
3020328 விளையாட்டு செய்திகள் சச்சின், சேவாக், லாராவின் கலவையாக உள்ளார் பிரித்வி ஷா  ஹைதராபாத், DIN Monday, October 15, 2018 01:10 AM +0530 சச்சின், சேவாக், லாராவின் கலவையாக காணப்படுகிறார் பிரித்வி ஷா என இந்திய தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார்.
 மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் மும்பையைச் சேர்ந்த 18 வயதே ஆன பிரித்வி ஷா அறிமுக வீரராக களமிறக்கப்பட்டார். முதல் டெஸ்டிலேயே 134 ரன்கள் விளாசி அறிமுக டெஸ்டில் சதம் அடித்த வீரர் என்ற சிறப்பை பெற்றார்.
 இதன்தொடர்ச்சியாக ஹைதராபாத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்திலும் முறையே 70, 33 ரன்களை எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.
 இதுதொடர்பாக ரவிசாஸ்திரி கூறியதாவது:
 பிரித்வி ஷாவின் பேட்டிங் , மூன்று ஜாம்பவான்களான சச்சின், லாரா,சேவாக் ஆகியோரின் கலவையாக அமைந்துள்ளது. கிரிக்கெட் ஆடுவதற்காக பிரித்வி பிறந்துள்ளார். 8 வயதில் இருந்து மும்பை மைதானங்களில் அவர் விளையாடி வருகிறார். அவரது கடின பயிற்சி, உழைப்பு இச்சிறப்பை தந்துள்ளது. பிரித்விக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது.
 பந்துவீச்சில் உமேஷ் யாதவின் பங்கு அளப்பரியது. கபில்தேவ், ஸ்ரீநாத் ஆகியோருக்கு அடுத்து ஓரே டெஸ்டில் 10 விக்கெட்டை வீழ்த்திய வீரராக உள்ளார்.
 ரிஷப் பந்த், ராகுல் ஆகியோரும் தங்கள் பங்கை சிறப்பாக செயல்படுத்தினர் என்றார் சாஸ்திரி.
 ஏற்கெனவே கேப்டன் விராட் கோலியும், அறிமுக டெஸ்டிலேயே எந்த அச்சமும் இன்றி சிறப்பாக ஆடினார் பிரித்வி என பாராட்டியுள்ளார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/15/w600X390/RAVI.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/15/சச்சின்-சேவாக்-லாராவின்-கலவையாக-உள்ளார்-பிரித்வி-ஷா-3020328.html
3020329 விளையாட்டு செய்திகள் ஹைதராபாத் டெஸ்ட்: மே.இந்திய தீவுகளை ஒயிட் வாஷ் செய்தது இந்தியா (2-0); 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி ஹைதராபாத், DIN Monday, October 15, 2018 01:09 AM +0530 மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-0 என டெஸ்ட் தொடரை கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது.
 ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் 12-ஆம் தேதி ஹைதராபாத்தில் இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் தொடங்கியது. மேற்கிந்தியதீவுகள் முதல் இன்னிங்ஸில் 311 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அந்த அணி வீரர் ரோஸ்டான் சேஸ் 106 ரன்களுடன் சதமடித்தார்.
 பின்னர் இந்தியா தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கியது. இரண்டாம் நாளான சனிக்கிழமை ஆட்ட முடிவில் 308-4 ரன்களை எடுத்திருந்தது. ரஹானே 75, ரிஷப் பந்த் 85 ஆட்டமிழக்காமல் இருந்தனர். சதம் அடிக்கும் முனைப்புடன் ஆடிய இருவரது கனவு நனவாகவில்லை. ரஹானே மேலும் 5 ரன்கள் சேர்த்த நிலையில் 80 ரன்களுக்கு ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரவீந்திர ஜடேஜா ரன் ஏதும் எடுக்காமல் ஹோல்டர் பந்தில் எல்பிடபிள்யு ஆனார்.
 பந்த் 92 ரன்களில் அவுட்
 சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பந்த் 2 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 134 பந்துகளில் 92 ரன்களுக்கு கேப்ரியேல் பந்தில் வெளியேறினார். பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டுமே நிலைத்து ஆடி 35 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
 குல்தீப் யாதவ் 6. உமேஷ் யாதவ் 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். சர்துல் தாக்கூர் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
 106.4 ஓவர்களில் இந்திய அணி 367 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது. ரிஷப் பந்த் தொடர்ந்து இரண்டாவது முறையாக 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 25 ரன்களில் 5 விக்கெட்டை இந்தியா இழந்தது. 314/4 என இருந்த நிலையில், 339 ரன்களுக்கு 9 விக்கெட் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. பின்னர் அஸ்வின் ஒரளவு ஆடி ஸ்கோரை உயர்த்தினார்.
 ஹோல்டர் அபாரம்
 மேற்கிந்திய தீவுகள் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் அபாரமாக பந்து வீசி 56 ரன்களை மட்டுமே விட்டுத்தந்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் 5-ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கேப்ரியேல் 3-107, ஜோமல் வாரிகன் 2-84 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் மேற்கிந்திய தீவுகளைக் காட்டிலும் 56 ரன்கள் கூடுதலாக பெற்றிருந்தது இந்தியா.
 127 ரன்களுக்கு மே.இ.தீவுகள் ஆல் அவுட்:
 பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணி தனது இரண்டாவது இன்னிங்ûஸ தொடங்கியது. தொடக்கமே அந்த அணிக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர்கள் பிராத்வொயிட், கீய்ரன் பொவல் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அவர்களுக்கு பின் ஆட வந்த ஷேய் ஹோப், ஷிம்ரன் ஹெட்மயர் ஆகியோர் நிதானமாக ரன்களை சேர்க்க முற்பட்டனர். ஆனால் இந்த இணையும் நீடிக்கவில்லை. ஹோப் 28, ஹெட்மயர் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். சுனில் அம்பரீஸ் மட்டுமே அதிகபட்சமாக 38 ரன்களை எடுத்தார்.
 முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த நம்பிக்கை நட்சத்திரம் ரோஸ்டான் சேஸ் 6 ரன்களுக்கும், ஷேன் டெளரிச் ஆகியோர் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் போல்டானார்கள்.
 கேப்டன் ஜேசன் ஹோல்டர் 19, தேவேந்திர பிஷு 10, ஜோமல் வாரிகன் 7, ஷேனான் கேப்ரியேல் 1 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
 இந்திய பந்துவீச்சு அபாரம்:
 இந்திய பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சை மேற்கிந்திய தீவுகளால் சமாளிக்க முடியவில்லை. குறிப்பாக உமேஷ் யாதவ் இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக பந்து வீசி 45 ரன்களை மட்டுமே விட்டுத்தந்து 4 விக்கெட்டை வீழ்த்தினார். ரவீந்திர ஜடேஜா 12 ரன்களைத் தந்து 3 விக்கெட்டையும், அஸ்வின் 24 ரன்களை விட்டுத்தந்து 2 விக்கெட்டையும், குல்தீப் யாதவ் 45 ரன்களுக்கு 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
 இந்தியா 75/0
 72 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ûஸ தொடங்கியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா 33, ராகுல் 33 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் 16.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 75 ரன்களை எடுத்த இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
 உமேஷ் யாதவ் முதன்முறையாக 10 விக்கெட்:
 இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் முதல் இன்னிங்ஸில் 6/88 விக்கெட்டையும், இரண்டாவது இன்னிங்ஸில் 4/45 விக்கெட்டையும் வீழ்த்தி ஓரே டெஸ்டில் முதன்முறையாக 10 விக்கெட் வீழ்த்திய சிறப்பை பெற்றார்.
 தொடர் நாயகனாக பிரித்வி ஷாவும், ஆட்ட நாயகனாக உமேஷ் யாதவும் தேர்வு செய்யப்பட்டனர்.
 ஒயிட் வாஷ்:
 ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் மூன்றாவது நாளே இந்தியா வென்றிருந்தது. தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்திலும் 10 விக்கெட் வித்தியாசத்தில் மூன்றாவது நாளே வென்று தொடரை 2-0 என கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.
 இங்கிலாந்திடம் 1-4 என தொடரை இழந்து படுதோல்வியை சந்தித்த இந்தியாவுக்கு இந்த வெற்றி பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது.
 விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உள்ளூரில் பெறும் 10-ஆவது நேரடி டெஸ்ட் தொடர் வெற்றியாகும்.
 ஆட்ட நாயகன் உமேஷ் யாதவ்
 இந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டதற்கு சக வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஓரே ஒரு வேகப்பந்து வீச்சாளராக நான் மட்டுமே இருந்த நிலையில் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என தீர்மானித்தேன். தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தினேன் என்றார்.
 தொடர் நாயகன் பிரித்வி ஷா
 இந்தியாவுக்காக சிறப்பாக ஆடி வெற்றியை ஈட்டுவது பெருமையாக உள்ளது. முதல் தொடரையே 2-0 என வென்று தொடர் நாயகன் விருதை பெற்றது சிறப்பானதாகும். நாங்கள் ஒரு குடும்பமாக தான் உள்ளோம். சீனியர், ஜூனியர் பாகுபாடில்லை. எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக செயல்படுவேன்.
 மே.இ.தீவுகள் கேப்டன் ஹோல்டர்
 இரண்டாவது இன்னிங்ஸில் எங்கள் பேட்டிங் சரியாக அமையவில்லை. எங்களால் முடிந்தவரை இந்த ஆட்டத்தில் போராடினோம். இந்திய அணிக்கு தான் பாராட்டு உரியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். உமேஷ் சிறப்பாக பந்துவீசினார். சுழற்பந்து வீச்சுக்கு இந்த மைதானம் ஏற்றதாக இல்லை என்றார்.
 மூன்று நாள்களில் வெற்றி பெறுவோம் என எதிர்பார்க்கவில்லை: கோலி
 மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் மூன்றே நாள்களில் வெற்றி பெறுவோம் என எதிர்பார்க்கவில்லை என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
 சாம்பியன் கோப்பையை பெற்ற பின் அவர் கூறியதாவது:
 அயல்நாடுகளில் பந்துவீச்சு என்பது பெரிய பிரச்னை இல்லை. நாம் நன்றாக பேட்டிங் செய்திருந்தால் அயல்நாடுகளிலும் வென்றிருக்கலாம். இந்திய பந்துவீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியது பெரிய விஷயம். முந்தைய தொடர்களில் இருந்து பாடம் கற்றுள்ளோம். உள்ளூரில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டோம். முந்தைய ஆட்டத்தில் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான சூழல் இல்லை. மேற்கிந்திய தீவுகள் கேப்டன் ஹோல்டர் தனது அனுபவ பந்துவீச்சால் விக்கெட்டை வீழ்த்தினார்.
 மேற்கிந்திய தீவுகள் அணி அபாரமாக ஆடி நமக்கு சிக்கலை ஏற்படுத்தினர். பெரியளவில் முன்னிலை கிடைக்கும் என எதிர்பார்த்தோம். உள்ளூர் சூழலுக்கு ஏற்ப எதிரணிக்கு எவ்வாறு நிர்ப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் எனத்தெரியும். பிரித்வி ஷா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதே போல் ரிஷப் பந்த், சமி, சர்துல் இல்லாத நிலையில் உமேஷ் 100 சதவீதம் தனது ஆட்டத்தை திறனை வெளிப்படுத்தினார். 3 நாள்களில் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்றார்.
 
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/15/w600X390/INDIA_WIN.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/15/ஹைதராபாத்-டெஸ்ட்-மேஇந்திய-தீவுகளை-ஒயிட்-வாஷ்-செய்தது-இந்தியா-2-0-10-விக்கெட்-வித்தியாசத்தில்-அப-3020329.html
3020253 விளையாட்டு செய்திகள் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்தியா DIN DIN Sunday, October 14, 2018 05:57 PM +0530  

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என தொடரை வென்றது. 

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் கேப்டன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் எடுத்திருந்தது. ரஹானே 75 ரன்களிலும், பந்த் 85 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில், இருவரும் 3-ஆம் நாள் ஆட்டத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கினர். இன்றைய ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு முன் இந்திய அணி 106.4 ஓவர்கள் முடிவில் 367 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 56 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக பந்த் 92 ரன்கள் எடுத்தார். மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர் 5 விக்கெட்டுகளை இழந்து அசத்தினார். 

இதைத்தொடர்ந்து, மேற்கிந்திய தீவுகள் அணி தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால், அந்த அணி 46.1 ஓவர்கள் முடிவில் 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சுனில் அம்பிரிஸ் 38 ரன்கள் எடுத்தார். 

இந்திய அணியின் சார்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 2-ஆவது இன்னிங்ஸ் பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்தப் போட்டியில் மட்டும் உமேஷ் யாதவ் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 56 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால் 72 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த எளிதான இலக்கை இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிருத்வி ஷா மற்றும் ராகுல் துரிதமாக ரன் குவித்து 16.1 ஓவர்கள் முடிவில் எட்டினர். இதன்மூலம், இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிருத்வி மற்றும் ராகுல் தலா 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என இந்திய அணி கைப்பற்றியது. 

இந்தப் போட்டியில் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய உமேஷ் யாதவ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். முதல் போட்டியில் சதம் மற்றும் 2-ஆவது டெஸ்ட் போட்டியில் அரைசதம் என பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்திய அறிமுக இளம் வீரர் பிருத்வி ஷா தொடர் நாயகன் விருதை வென்றார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/14/w600X390/Prithvi_Shaw.jpg புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/14/india-beat-windies-by-10-wickets-and-clinched-series-2-0-3020253.html
3020232 விளையாட்டு செய்திகள் மைக்கெல் ஹோல்டிங், மால்கம் மார்ஷலுக்கு இணையாக ஜேஸன் ஹோல்டர் அபூர்வ சாதனை! DIN DIN Sunday, October 14, 2018 12:53 PM +0530  

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் அபூர்வ சாதனைப் படைத்தார்.

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 367 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் கூடுதலாக 56 ரன்களுடன் முன்னிலைப் பெற்றது. இதில் மே.இ.தீவுகள் அணியின் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதன்மூலம் அடுத்தடுத்த 3 இன்னிங்ஸ்களில் தொடர்ந்து 5 அல்லது அதற்கு மேற்கபட்ட விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் மே.இ.தீவுகளின் ஜாம்பாவன் வீரர்கள் மைக்கெல் ஹோல்டிங், மால்கம் மார்ஷல் ஆகியோருக்கு இணையாக இந்த அபூர்வ சாதனையைப் படைத்தார். 

]]>
Jason Holder, INDvsWI, ஜேஸன் ஹோல்டர் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/14/w600X390/jason_holder.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/14/மைக்கெல்-ஹோல்டிங்-மால்கம்-மார்ஷலுக்கு-இணையாக-ஜேஸன்-ஹோல்டர்-அபூர்வ-சாதனை-3020232.html
3020229 விளையாட்டு செய்திகள் ஹோல்டர் அபாரம்: 367 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்திய அணி DIN DIN Sunday, October 14, 2018 12:10 PM +0530  

மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 367 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. 

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் கேப்டன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் எடுத்திருந்தது. ரஹானே 75 ரன்களிலும், பந்த் 85 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில், இருவரும் 3-ஆம் நாள் ஆட்டத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கினர். ரஹானே இன்றைய ஆட்டத்தில் கூடுதலாக 5 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த நிலையில் 80 ரன்களுக்கு ஹோல்டர் பந்தி் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜடேஜா ரன் ஏதும் எடுக்காமல் அதே ஓவரில் ஆட்டமிழந்தார். 

இவர்களைத்தொடர்ந்து சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பந்த் 92 ரன்கள் எடுத்து மீண்டும் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அஸ்வின் ஓரளவு ரன் சேர்க்க இந்திய அணி 350 ரன்களை கடந்தது. அஸ்வின் 35 ரன்கள் எடுத்திருந்தபோது கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். 

இதன்மூலம், இந்திய அணி 106.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 367 ரன்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர் 5 விக்கெட்டுகளை இழந்து அசத்தினார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் அணியைவிட 56 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 

இதையடுத்து, உணவு இடைவேளை விடப்பட்டது. அதன்பிறகு, மேற்கிந்திய தீவுகள் அணி தனது 2-ஆவது இன்னிங்ஸை விளையாடவுள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/14/w600X390/holder.jpg கோப்புப்படம்: டிவிட்டர்/ஐசிசி http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/14/holder-restricts-india-to-367-3020229.html
3019785 விளையாட்டு செய்திகள் ஷாங்காய் மாஸ்டர்ஸ்: இறுதிச் சுற்றில் ஜோகோவிச்-கோரிக் மோதல்  ஷாங்காய் DIN Sunday, October 14, 2018 01:42 AM +0530 ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றில் ஜோகோவிச்-போர்னோ கோரிக் ஆகியோர் மோதுகின்றனர்.
 சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெறும் இப்போட்டியின் அரையிறுதிச் சுற்று ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன.
 உலகின் மூன்றாம் நிலை வீரர் ஜோகோவிச்சும், நான்காம் நிலை வீரர் அலெக்சாண்டர் வெரேவும் மோதினர். இதில் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் ஜோகோவிச் வென்று இறுதிக்கு தகுதி பெற்றார்.
 நடப்பாண்டில் விம்பிள்டன், யுஎஸ் ஓபன் சின்சினாட்டி ஓபன் போட்டிகளில் ஜோகோவிச் வென்று அபார பார்மில் உள்ளார்.
 பெடரர் அதிர்ச்சி: மற்றொரு அரையிறுதியில் உலகின் இரண்டாம் நிலை வீரர் ரோஜர் பெடரரும்-குரோஷியாவின் போர்னோ கோரிக்கும் மோதினர். இதில் 21 வயது வீரர் கோரிக் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் பெடரரை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தார். நடப்பாண்டில் பெடரர் ஆஸி. ஓபன் போட்டியில் மட்டுமே வென்றார். யுஎஸ் ஓபனில் நாக் அவுட், விம்பிள்டனில் காலிறுதியோடு வெளியேறினார் பெடரர்.
 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில் ஜோகோவிச்-கோரிக் மோதுகின்றனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/14/w600X390/JOKOVICH.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/14/ஷாங்காய்-மாஸ்டர்ஸ்-இறுதிச்-சுற்றில்-ஜோகோவிச்-கோரிக்-மோதல்-3019785.html
3019784 விளையாட்டு செய்திகள் டிராவில் முடிந்தது இந்தியா-சீனா நட்பு கால்பந்து ஆட்டம்  சுஷோ, DIN Sunday, October 14, 2018 01:41 AM +0530 இந்தியா-சீன அணிகள் இடையே சனிக்கிழமை இரவு நடைபெற்ற நட்பு கால்பந்து ஆட்டம் 0-0 என கோலின்றி டிராவில் முடிந்தது.
 ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை கால்பந்து 2019-க்கு தயாராகும் வகையில் இந்திய அணி பல்வேறு பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது.
 இதன் ஒரு பகுதியாக பலம் வாய்ந்த சீனாவுடன் கால்பந்து நட்பு ஆட்டத்துக்கு அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு ஏற்பாடு செய்தது.
 ஷாங்காய் அடுத்த சுஷோ நகரில் நடைபெற்ற நட்பு ஆட்டத்தில் சீனா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்த முனைந்தது. அந்த அணி வீரர்களின் பல்வேறு கோல் போடும் முயற்சிகளை இந்திய கோல்கீப்பர் குர்பிரீத் சிங் அபாரமாக தடுத்தார். பலமுறை இந்திய தற்காப்பு அரணுக்குள் ஊடுருவிய போதிலும் சீன வீரர்கள் முயற்சி தோல்வியில் முடிந்தது. 13-ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் பிரிதம் அடித்த பந்தை சீனத்தரப்பு தடுத்து விட்டது.
 மேலும் இந்திய மூத்த வீரர் சுனில் சேத்ரியும் கோலடிக்கும் வாய்ப்பை தவற விட்டார். இந்திய அணி பலம் வாய்ந்த சீனாவை 0-0 என டிரா செய்தது வீரர்களுக்கு உற்சாகம் ஊட்டியுள்ளது.
 

]]>
http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/14/டிராவில்-முடிந்தது-இந்தியா-சீனா-நட்பு-கால்பந்து-ஆட்டம்-3019784.html
3019783 விளையாட்டு செய்திகள் திருச்சியில் மாநில செஸ் போட்டி தொடக்கம்  திருச்சி, DIN Sunday, October 14, 2018 01:41 AM +0530 திருச்சியில் 45ஆவது அண்ணா நினைவு மாநில செஸ் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.
 திருச்சி மேலரண் சாலையில் அமைந்துள்ள தி சிட்டி கிளப் சார்பில் நடந்த போட்டிகளை சங்கத் துணைத் தலைவர் மலர் செழியன் தொடக்கி வைத்தார்.
 போட்டியானது இரு நிலைகளில் நடைபெறுகிறது. பொதுப்பிரிவில் தமிழ்நாடு செஸ் விளையாட்டு வீரர்கள் மட்டும் பங்கேற்கின்றனர். இதில் வயது வரம்பின்றி தமிழகம் முழுவதும் இருந்து சிறார், மகளிர், முதியோர் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 குழந்தைகள் பிரிவில் திருச்சி மாவட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் 7 வயதுக்குள்பட்டோர், 9 வயதுக்குள்பட்டோர் 13 வயதுக்குள்பட்டோர் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
 பொதுப்பிரிவு, உள்ளூர் பிரிவு, மகளிர், முதியோர் என 4 நிலைகளில் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. பொதுப்பிரிவில் 8 ரொக்கப் பரிசுகளும், இதர 3 பிரிவுகளிலும் தலா 3 ரொக்கப் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை போட்டி நிறைவுறுகிறது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/14/w600X390/CHESS.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/14/திருச்சியில்-மாநில-செஸ்-போட்டி-தொடக்கம்-3019783.html
3019782 விளையாட்டு செய்திகள் துளிகள்... DIN DIN Sunday, October 14, 2018 01:40 AM +0530 * தில்லியில் வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள ஹாஃப் மாரத்தான் பந்தயத்தில் கென்யாவின் உலகச் சாதனை வீரர் ஜாய்ஸ்சிலின் ஜெப்கோஸ்ஜி, 3 முறை ஒலிம்பிக் சாம்பியன் டிருனேஷ் டைபாபா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
 * இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆசியாவிலேயே அதிக டெஸ்ட் ரன்கள் குவித்த கேப்டன் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். 42 ஆட்டங்களில் கோலி 4233 ரன்களை குவித்துள்ளார். இதில் 17 சதங்கள் அடங்கும். அதே நேரத்தில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் 56 ஆட்டங்களில் 4214 ரன்களை (8 சதங்கள் அடங்கும்) குவித்திருந்ததே சாதனையாக இருந்தது.
 * மலேசியாவின் ஜோஹோர் நகரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற சுல்தான் ஜோஹோர் கோப்பை ஹாக்கி போட்டி இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் பிரிட்டனிடம் தோல்வியுற்று வெள்ளிப்பதக்கம் வென்றது. கடந்த முறை வெண்கலம் வென்றிருந்த இந்தியா தற்போது வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.
 * விஜய் ஹஸாரே கோப்பை போட்டியில் ஜார்க்கண்ட் அணி சார்பில் பங்கேற்று விளையாட முடியாது என முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார்.

]]>
http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/14/துளிகள்-3019782.html
3019781 விளையாட்டு செய்திகள் தேசிய கார் பந்தயம்: சென்னை வீரர் அஸ்வின் தத்தா முதலிடம்  கோயம்புத்தூர், DIN Sunday, October 14, 2018 01:39 AM +0530 கோவையில் நடைபெற்று வரும் 21-ஆவது ஜேகே டயர், எப்எம்எஸ்சிஐ தேசிய கார்பந்தய சாம்பியன் போட்டியில் சென்னை வீரர் அஸ்வின் தத்தா முதலிடம் பெற்றுள்ளார்.
 மும்பையின் நயன் சாட்டர்ஜி முதலில் சிறப்பாக செயல்பட்டாலும், கார்த்திக் தரணியுடன் இடையில் மோதியதால், இருவரும் வெளியேற நேர்ந்தது. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி அஸ்வின் தத்தா 1:01: 422 நேரத்தில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பெற்றார்.
 இரண்டாவது பந்தயத்தில் ஜோசப் மேத்யூ முதலிடத்தையும், சச்சின் செüத்ரி இரண்டாம் இடத்தையும், ராகுல் ரங்கசாமி, விஷ்ணுபிரசாத் ஆகியோர் முறையே 3 மற்றும் 4-ஆவது இடங்களைப் பெற்றனர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/14/w600X390/CHENNAIS_ASHWIN_DATTA_RACE.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/14/தேசிய-கார்-பந்தயம்-சென்னை-வீரர்-அஸ்வின்-தத்தா-முதலிடம்-3019781.html
3019780 விளையாட்டு செய்திகள் பாட்மிண்டன் வீரர் காஷ்யப் பாஸ்போர்ட் மாயம்  புது தில்லி DIN Sunday, October 14, 2018 01:38 AM +0530 தனது பாஸ்போர்ட்டை தொலைத்ததால் உதவுமாறு மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வாராஜுக்கு சுட்டுரை மூலம் கோரிக்கை வைத்தார் பாட்மிண்டன் வீரர் பாருபல்லி காஷ்யப்.
 கடந்த 2014 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற காஷ்யப் தற்போது ஓடென்ஸ் நகரில் நடக்கவுள்ள டென்மார்க் ஓபன் போட்டியில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். ஆம்ஸ்டர்டாம் நகரில் அவர் தனது பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டார். இதனால் அவர் போட்டிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுட்டுரை மூலம் தனக்கு உதவுமாறு மத்திய அமைச்சர் சுஷ்மாவுக்கு கோரிக்கை வைத்தார். மேலும் அப்பதிவில் பிரதமர் மோடி, விளையாட்டு அமைச்சர் ரத்தோர் ஆகியோரையும் டேக் செய்துள்ளார்.
 
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/14/w600X390/KASHYA.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/14/பாட்மிண்டன்-வீரர்-காஷ்யப்-பாஸ்போர்ட்-மாயம்-3019780.html
3019779 விளையாட்டு செய்திகள் யூத் ஒலிம்பிக்: பாட்மிண்டனில் வெள்ளி வென்றார் லக்ஷயா  பியூனோஸ் அயர்ஸ், DIN Sunday, October 14, 2018 01:37 AM +0530 ஆர்ஜென்டீனாவில் நடைபெற்று வரும் யூத் ஒலிம்பிக் போட்டி பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெள்ளி வென்றார் இந்திய வீரர் லக்ஷயா சென்.
 ஒற்றையர் இறுதி ஆட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் இந்திய நட்சத்திரம் லக்ஷயா சென் 15-21, 19-21 என நேர் செட்களில் சீன வீரர் லீ ஷிபெங்கிடம் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
 முதல் கேமில் சீன வீரர் 14-5 என முன்னிலை பெற்ற போதும், லக்ஷயா சென் போராடி 13-16 எனக்குறைத்தார். ஆனால் அதை தக்க வைக்கமுடியவில்லை. இரண்டாவது கேமிலும் சீன வீரர் முன்னிலையை தொடர்ந்து சீராக பராமரித்து வெற்றி பெற்றார்.
 ஆசிய ஜூனியர் சாம்பியன் ஆன லக்ஷயா சென் (17) கடந்த ஜூலையில் தான் ஆசிய போட்டி காலிறுதியில் லீ ஷிபெங்கை வீழ்த்தி இருந்தார். தற்போது அதற்கு சீன வீரர் பழிதீர்த்துக் கொண்டார். பாட்மிண்டனில் வளர்ந்து வரும் ஆடவர் நட்சத்திரமாக லக்ஷயா சென் திகழ்கிறார்.
 யூத் ஒலிம்பிக்கில் 3 தங்கத்தோடு இது இந்தியா பெறும் 4-ஆவது வெள்ளியாகும்.
 மகளிர் ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா
 யூத் ஒலிம்பிக் ஹாக்கி 5 போட்டி மகளிர் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது.
 காலிறுதி ஆட்டத்தில் போலந்து அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. லால்ரேமிசியாமி, கேப்டன் சலிமா டேட், பல்ஜீத் கெüர் உள்ளிட்டோர் கோலடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். முதல் பாதியில் போலந்து சிறிது நேரம் ஆதிக்கம் செலுத்தினாலும், பின்னர் இந்தியா வசம் ஆட்டம் கட்டுக்குள் வந்தது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/14/w600X390/LAKSHAYA_SEN.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/14/யூத்-ஒலிம்பிக்-பாட்மிண்டனில்-வெள்ளி-வென்றார்-லக்ஷயா-3019779.html
3019778 விளையாட்டு செய்திகள் பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோரி மீது மீ டூ மூலம் பாலியல் புகார்  புது தில்லி, DIN Sunday, October 14, 2018 01:36 AM +0530 பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோரி மீது மீ டூ மூலம் பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 கடந்த ஏப்ரல் 2016 முதல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய சிஇஓ பதவி வகித்து வருகிறார் ராகுல் ஜோரி.
 தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தபோது அவர் தன்னிடம் பாலியல் ரீதியில் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் பத்திரிகையாளர் ஒருவர் மீ டூ ஹேஷ்டாக் மூலம் பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே இலங்கை முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அர்ஜுண ரணதுங்க, வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா ஆகியோர் மீதும் மீடூ ஹேஷ்டாக் மூலம் பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 விளக்கம் தர சிஓஏ உத்தரவு: ராகுல் ஜோரி மீது மீ டூ வில் வெளியான பாலியல் புகார் எதிரொலியாக விளக்கம் தருமாறு அவருக்கு பிசிசிஐ கிரிக்கெட் நிர்வாக குழு உத்தரவிட்டுள்ளது. டிஸ்கவரி தொலைக்காட்சியில் கடந்த 2001 முதல் 2016 வரை பல்வேறு நிலைகளில் ஜோரி பணிபுரிந்திருந்தார். அப்போது அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுத்தாளர் ஹர்னீத் கெüர் பாதிக்கப்பட்ட நபர் பெயரை குறிப்பிடாமல் சுட்டுரையில் பதிவிட்டார்.
 இப்பிரச்னை தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என சிஓஏ கோரிக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கான காலவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/14/w600X390/RAHUL_JORI.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/14/பிசிசிஐ-சிஇஓ-ராகுல்-ஜோரி-மீது-மீ-டூ-மூலம்-பாலியல்-புகார்-3019778.html
3019777 விளையாட்டு செய்திகள் ஆசிய பாரா போட்டிகள்: 15 தங்கம் உள்பட 72 பதக்கங்களை வென்றது இந்தியா  ஜகார்த்தா, DIN Sunday, October 14, 2018 01:35 AM +0530 ஜகார்த்தா ஆசிய பாரா போட்டிகளில் 15 தங்கம் உள்பட 72 பதக்கங்களுடன் இந்தியா 9-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
 இறுதி நாளான சனிக்கிழமை மேலும் 2 தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றனர்.
 ஆடவர் பாட்மிண்டன் எஸ்எல் 3 பிரிவு இறுதிச் சுற்றில் இந்திய வீரர் பிரமோத் பகத் 21-19, 15-21, 21-14 என்ற செட் கணக்கில் வென்று தங்கம் வென்றார். இரு கால்களிலும் பாதிப்பு உள்ளோருக்கான பிரிவாகும் இது.
 ஆடவர் எஸ்எல் 4 பிரிவு இறுதிச் சுற்றில் இந்திய வீரர் தருண் 21-16, 21-6 என்ற கேம் கணக்கில் சீனாவின் யுவாங் கவோவை வென்று தங்கம் வென்றார். சனிக்கிழமையுடன் ஆசிய பாரா போட்டிகள் நிறைவடைந்தன. இதில் 15 தங்கம், 24 வெள்ளி, 33 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா மொத்தம் 72 பதக்கங்களுடன் 9-ஆவது இடத்தைப் பெற்றது. சீனா, தென்கொரியா, ஈரான் உள்ளிட்டவை முறையே முதல் மூன்றிடங்களைப் பெற்றன.
 கடந்த 2014 ஆசிய பாரா போட்டியில் இந்தியா 3 தங்கம், 14 வெள்ளி, 1 வெண்கலத்துடன் வெறும் 33 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/14/w600X390/TARUN_PRAMOD_GOLD_PARA.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/14/ஆசிய-பாரா-போட்டிகள்-15-தங்கம்-உள்பட-72-பதக்கங்களை-வென்றது-இந்தியா-3019777.html
3019776 விளையாட்டு செய்திகள் ஹைதராபாத் டெஸ்ட்: மே. இ.தீவுகள் 311, இந்தியா 308/4  ஹைதராபாத், DIN Sunday, October 14, 2018 01:34 AM +0530 இரண்டாவது டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன் வீரர் ரோஸ்டான் சேஸ் 106 ரன்களுடன் சதமடித்தார். பின்னர் ஆடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன்களை எடுத்திருந்தது. பிரித்வி ஷா 70 ரன்களை எடுத்தார். ரஹானே 75, ரிஷப் பந்த் 85 ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா ஒரு இன்னிங்ஸ், 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
 முதல் நாள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் 295/7 ரன்களை எடுத்திருந்தது. சனிக்கிழமை ஆட்டம் தொடங்கியவுடன் உமேஷ் யாதவ் பந்துவீச்சை அந்த அணியால் சமாளிக்க முடியவில்லை.
 இளம் இந்திய வீரர்கள் எழுச்சி: பின்னர் இந்திய அணி சார்பில் லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஹோல்டர் பந்துவீச்சில் ராகுல் போல்டாகி 4 ரன்களுக்கு வெளியேறினார். அபாரமாக ஆடி 1 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 53 பந்துகளில் 70 ரன்களை எடுத்த பிரித்வி ஷா, புஜாரா 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். கேப்டன் கோலி 45 ரன்களில், ஹோல்டர் பந்தில் எல்பிடபிள்யு முறையில் அவுட்டானார்.
 பின்னர் ரஹானே-ரிஷப் பந்த் இணை சிறப்பாக மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சை எதிர்கொண்டு ரன்களை சேர்த்தது. 5-ஆவது விக்கெட்டுக்கு இந்த இணை 146 ரன்களை சேர்த்தது. ஆட்ட நேர முடிவில் 81 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு இந்தியா 308 ரன்களை எடுத்திருந்தது. ரஹானே 75, ரிஷப் பந்த் 85 (120, 10, 2) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஷேனான் கேப்ரியேல் 1-73, ஹோல்டர் 2-45, ஜோமல் 1-76 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 இந்திய மிடில் ஆர்டர் பேட்டிங்கில் காணப்பட்ட குறைபாடுகள் தற்போது ரஹானே, ரிஷப் பந்த் ஆட்டம் மூலம் ஓரளவு சரியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
 ரோஸ்டான் 4-ஆவது சதம்
 1 சிக்ஸர், 8 பவுண்டரியுடன் 189 பந்துகளில் 106 ரன்களை எடுத்த ரோஸ்டான் சேஸ், தேவேந்திர பிஷு 2, ஷேனான் கேப்ரியேல் 0 ஆகியோர் உமேஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 101.4 ஓவர்களில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 உமேஷ் 6/88 அபாரம்
 இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் அபாரமாக பந்து வீசி 88 ரன்களை மட்டுமே விட்டுத்தந்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 3-85, அஸ்வின் 1-49 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதற்கு முன்பு கடந்த 2012-இல் பெர்த் டெஸ்டில் உமேஷ் 5/93 விக்கெட்டை வீழ்த்தி
 இருந்தார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/14/w600X390/UMESH_YADAV.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/14/ஹைதராபாத்-டெஸ்ட்-மே-இதீவுகள்-311-இந்தியா-3084-3019776.html
3019643 விளையாட்டு செய்திகள் இலங்கையுடனான 2-ஆவது ஒருநாள் போட்டி: டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இங்கிலாந்து வெற்றி DIN DIN Saturday, October 13, 2018 06:09 PM +0530  

இலங்கையுடனான 2-ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 ஒருநாள், 1 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இருஅணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. 

இதையடுத்து, 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் மார்கன் 92 ரன்களும், ரூட் 71 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

இலங்கை அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய மலிங்கா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆனால், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி திணறியது. இதனால், அந்த அணி 74 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 

தனஞ்ஜெயா டி சில்வா மற்றும் திசாரா பெரேரா ஆகியோர் அந்த அணியை சரிவில் ஈட்டு மீட்டனர். அந்த அணி 29 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, மழை குறுக்கிட்டதால் போட்டி தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

அதன்பிறகு, மழை தொடர்ந்து பெய்து வந்ததால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். 92 ரன்கள் குவித்த மார்கன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

இருஅணிகளுக்கிடையிலான 3-ஆவது ஒருநாள் போட்டி வரும் 17-ஆம் தேதி நடைபெறுகிறது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/13/w600X390/Morgan.jpg புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/13/இலங்கையுடனான-2-ஆவது-ஒருநாள்-போட்டி-டக்வொர்த்-லீவிஸ்-விதிப்படி-இங்கிலாந்து-வெற்றி-3019643.html
3019639 விளையாட்டு செய்திகள் பிருத்வி ஷா, ரஹானே, பந்த் அபாரம்: வலுவான நிலையில் இந்தியா DIN DIN Saturday, October 13, 2018 05:14 PM +0530  

மே.இ.தீவுகளுடனான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய அந்த அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் எடுத்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஸ்டன் சேஸ் 98 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இதைத்தொடர்ந்து, இன்று (சனிக்கிழமை) 2-ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் 98 ரன்களுடன் களத்தில் இருந்த சேஸ் சதம் அடித்தார். அதன்பிறகு, அந்த அணி உமேஷ் யாதவ் பந்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 

இதன்மூலம், அந்த அணி 101.4 ஓவர்களில் 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார். குல்தீப் யாதவ் 3, அஸ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. 

பிருத்வி ஷா தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடி துரிதமாக ரன் குவித்து வந்தார். மறுமுனையில் நிதானம் காட்டி வந்த ராகுல் வெறும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து, பிருத்வி ஷா உடன் புஜாரா ஜோடி சேர்ந்து அவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

பவுண்டரிகளாக அடித்து வந்த பிருத்வி தனது 2-ஆவது டெஸ்ட் இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வாரிக்கன் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, புஜாராவும் 10 ரன்களில் வெளியேறினார். 

அதன்பிறகு, சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் கோலி 45 ரன்கள் எடுத்து அரைசதம் அடிப்பதற்கு முன் ஆட்டமிழந்தார்.   

இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரஹானே, பந்த் ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரஹானே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, பந்த் துரிதமாக ரன் குவித்து வந்தார். இருவரும் அரைசதம் அடித்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இவர்கள், 2-ஆவது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட்டுகள் விழாமல் விளையாடினர்.  

இதன்மூலம், 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் அணியைவிட வெறும் 3 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது. ரஹானே 75 ரன்களிலும், பந்த் 85 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/13/w600X390/Pant_Rahane.jpg புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/13/பிருத்வி-ஷா-ரஹானே-பந்த்-அபாரம்-வலுவான-நிலையில்-இந்தியா-3019639.html
3019613 விளையாட்டு செய்திகள் கோலியுடன் கட்டிப்பிடித்து செல்ஃபி எடுக்க முயன்ற 19 வயது இளைஞர் மீது வழக்குப் பதிவு Raghavendran DIN Saturday, October 13, 2018 01:31 PM +0530  

மே.இ.தீவுகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலியுடன் செலஃபி எடுக்க முயன்ற 19 வயது இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. 

இதன் முதல் நாள் ஆட்டத்தின் போது இந்திய கேப்டன் விராட் கோலியுடன் செல்ஃபி எடுக்க முயன்ற சம்பவத்தில் 19 வயது இளைஞர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து  உப்பல் காவல் நிலைய ஆய்வாளர் கூறுகையில்,

ஹைதராபாத்தில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியை காண கடப்பா மாவட்டத்தில் இருந்து வந்திருந்த முகமது கான் (19) கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மைதானத்துக்குள் அத்துமீறிச் சென்று விராட் கோலியுடன் கட்டிப்படித்து செல்ஃபி எடுக்க முயன்றார். விசாரிக்கையில் அவர் விராட் கோலியின் தீவிர ரசிகர் என தெரிவித்தார். எனவே போட்டியின் போது மைதானத்துக்குள் அத்துமீறிச் சென்ற காரணத்துக்காக இந்திய தண்டனைச் சட்டம் 448-ன் கீழ் அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.  

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/13/w600X390/Virat_Kohli.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/13/கோலியுடன்-கட்டிப்பிடித்து-செல்ஃபி-எடுக்க-முயன்ற-19-வயது-இளைஞர்-மீது-வழக்குப்-பதிவு-3019613.html
3019597 விளையாட்டு செய்திகள் பிரித்வி ஷா மீண்டும் அபாரம்: உணவு இடைவேளையில் இந்தியா 80/1 DIN DIN Saturday, October 13, 2018 11:57 AM +0530  

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் 2-ஆவது நாள் உணவு இடைவேளையில் இந்திய அணி 1 விக்கெட்டை இழந்து 80 ரன்கள் எடுத்துள்ளது. 

2-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மே.இ.தீவுகள் அணி 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய அந்த அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் எடுத்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஸ்டன் சேஸ் 98 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இதைத்தொடர்ந்து, இன்று (சனிக்கிழமை) 2-ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரின் கடைசி பந்திலேயே பிஷூ உமேஷ் பந்தில் பிஷூ ஆட்டமிழந்தார். 98 ரன்களில் இருந்த சேஸ் சதம் அடித்தார். அதன்பிறகு, அந்த அணி உமேஷ் யாதவ் பந்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 

இதன்மூலம், அந்த அணி 101.4 ஓவர்களில் 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார். குல்தீப் யாதவ் 3, அஸ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. 

பிரித்வி ஷா தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடி துரிதமாக ரன் குவித்து வந்தார். மறுமுனையில் நிதானம் காட்டி வந்த ராகுல் வெறும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து, பிரித்வி ஷா உடன் புஜாரா ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பவுண்டரிகளாக அடித்து வந்த பிரித்வி தனது 2-ஆவது இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்து அசத்தினார். 

2-ஆவது நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையில், இந்திய அணி 1 விக்கெட்டை இழந்து 80 ரன்கள் எடுத்துள்ளது. பிரித்வி ஷா 52 ரன்களிலும், புஜாரா 9 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/13/w600X390/Prithvi_Shah.jpg புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/13/prithvi-shah-scored-half-century-at-day-2-lunch-3019597.html
3019591 விளையாட்டு செய்திகள் உமேஷ் யாதவ் அபாரம்: 311-க்கு ஆட்டமிழந்த மே.இ.தீவுகள் Raghavendran DIN Saturday, October 13, 2018 10:37 AM +0530  

2-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மே.இ.தீவுகள் அணி 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 101.4 ஓவர்களில் 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

அதிரடியாக ஆடிய ரோஸ்டன் சேஸ் சதமடித்தார். 189 பந்துகளில் 8 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 106 ரன்கள் குவித்தார். கேப்டன் ஜேஸன் ஹோல்டர் 52 ரன்கள் சேர்த்தார். 

இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார். குல்தீப் யாதவ் 3, அஸ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. 

]]>
INDvsWI http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/13/w600X390/umesh_yadav.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/13/உமேஷ்-யாதவ்-அபாரம்-311-க்கு-ஆட்டமிழந்த-மேஇதீவுகள்-3019591.html
3019128 விளையாட்டு செய்திகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நடால் உதவி  ஷாங்காய், DIN Saturday, October 13, 2018 03:40 AM +0530 ஸ்பெயின் நாட்டின் மஜோர்கா தீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ரபேல் நடால் உதவி புரிந்துள்ளதற்கு பெடரர், ஜோகோவிச் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
 மஜோர்கா தீவில் தான் நடால் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் அங்கு புதன்கிழமை ஏற்பட்ட தொடர் வெள்ளத்தால் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்து விட்டனர்.
 இதையடுத்து நடால் தனது வசிப்பிடத்தில் உள்ள கிடங்கு, விளையாட்டு மையம், அகாதெமியை திறந்து பொதுமக்கள் தங்க உதவி செய்தார். மேலும் வெள்ளத்தில் சிக்கியிருந்தவர்களையும் மீட்க உதவினார். காயம் காரணமாக நடால் தற்போது ஷாங்காயில் நடைபெறும் மாஸ்டர்ஸ் போட்டியில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் போட்டியில் பங்கேற்று விளையாடி வரும் ஏனைய முன்னணி வீரர்களான பெடரர், ஜோகோவிச் இருவரும் நடாலின் செயலைப் பாராட்டி உள்ளனர்.
 
 
 
 
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/13/w600X390/NADAL_FLOOD.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/13/வெள்ளத்தால்-பாதிக்கப்பட்டோருக்கு-நடால்-உதவி-3019128.html
3019127 விளையாட்டு செய்திகள் ஷாங்காய் மாஸ்டர்ஸ்: அரையிறுதியில் ஜோகோவிச்-வெரேவ்  ஷாங்காய், DIN Saturday, October 13, 2018 03:39 AM +0530 ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிச் சுற்றில் ஜோகோவிச்-அலெக்சாண்டர் வெரேவ் ஆகியோர் மோதுகின்றனர்.
 உலகின் மூன்றாம் நிலை வீரரான ஜோகோவிச் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை 7-6, 6-3 என நேர் செட்களில் வீழ்த்தினார்.
 மற்றொரு காலிறுதியில் உலகின் நான்காம் நிலை வீரர் வெரேவ் 6-4, 6-4 என நேர் செட்களில் பிரிட்டனின் கெயில் எட்மண்டை வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
 மற்றொரு காலிறுதியில் இரண்டாம் நிலை வீரர் ரோஜர் பெடரர் 6-4, 7-6 என ஜப்பானின் நிஷிகோரியையும், குரோஷிய வீரர் போர்னா கோரிக் 7-5, 6-4 என மேத்யூ எப்டனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/13/w600X390/sangai.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/13/ஷாங்காய்-மாஸ்டர்ஸ்-அரையிறுதியில்-ஜோகோவிச்-வெரேவ்-3019127.html
3019126 விளையாட்டு செய்திகள் உலக மல்யுத்த சாம்பியன் போட்டி: தரவரிசையில் பஜ்ரங் புனியா  புது தில்லி, DIN Saturday, October 13, 2018 03:37 AM +0530 உலக மல்யுத்த சாம்பியன் போட்டி தரவரிசையில் இடம் பெற்ற முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பஜ்ரங் புனியா பெற்றுள்ளார்.
 மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில் பஜ்ரங் புனியா தொடர்ந்து சிறப்பாக ஆடி வெற்றிகளைக் குவித்து வருகிறார். உலக சாம்பியன் போட்டி வரும் 20 முதல் 28-ஆம் தேதி வரை ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெறுகிறது. இதில் 65 கிலோ எடை ப்ரீஸ்டைல் பிரிவில் தரவரிசைப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் பஜ்ரங் புனியா உள்ளார். இந்த உலக சாம்பியன் போட்டியில் தான் முதன்முறையாக தரவரிசைப் பட்டியலை சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
 கடந்த 2017 பாரிஸ் உலக சாம்பியன் போட்டியில் ரேங்கிங் முறை அறிமுகம் செய்யப்பட்டது. துருக்கி வீரர் செல்ஹாட்டின் கிளிசலாயன், ரஷிய வீரர் இலியாஸ் பெபுலட்டோவ் முதலிரண்டு இடங்களில் உள்ளனர்.
 

]]>
http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/13/உலக-மல்யுத்த-சாம்பியன்-போட்டி-தரவரிசையில்-பஜ்ரங்-புனியா-3019126.html
3019125 விளையாட்டு செய்திகள் ஆசிய பாரா போட்டிகள்: இந்தியாவுக்கு 5 தங்கம்    ஜகார்த்தா DIN Saturday, October 13, 2018 03:37 AM +0530 ஜகார்த்தாவில் நடைபெறும் ஆசிய பாரா போட்டிகளில் இந்தியா மேலும் 3 தங்கம்வென்றது.
 மகளிர் பி1 செஸ் போட்டியில் கே.ஜெனித்தா ஆன்டோ 1-0 என இறுதிச் சுற்றில் இந்தோனேஷியாவின் மனுருங்கை வீழ்த்தி தங்கம் வென்றார்.
 அதே நேரத்தில் ஆடவர் வி1 ரேபிட் செஸ் போட்டியில் கிஷன் கங்கோலி சிறப்பாக ஆடி மஜித் பாகேரியை வீழ்த்தி தங்கம் வென்றார்.
 பாரா பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பாருல் பார்மர் 21-9, 21-5 என்ற ஆட்டக்கணக்கில் தாய்லாந்தின் வான்டி கம்டமை வீழ்த்தி தங்கம் வென்றார்.
 நீச்சலில் ஆடவர் 100 மீ பேக்ஸ்ட்ரோக் பிரிவில் ஸ்வப்நீல் பட்டீல் வெள்ளி வென்றார். ஏற்கெனவே 400 மீ. ப்ரீஸ்டைலில் வெண்கலம் வென்றிருந்தார் ஸ்வப்நீல். ஆடவர் சி4 தனிநபர் சைக்கிள் 4000 மீ பிரிவில் குர்லால் சிங் வெண்கலம் வென்றார்.
 ஜகார்த்தாவில் நடைபெறும் ஆசிய பாரா போட்டிகளில் வெள்ளிக்கிழமை மேலும் 2 தங்கப் பதக்கத்தை வென்றது இந்தியா.
 தடகளம் ஆடவர் ஈட்டி எறிதலில் எப் 55 பிரிவில் நீரஜ் யாதவ் 29.24 மீ தூரம் எறிந்து தங்கத்தையும், அமித் பால்யான் வெள்ளியும் வென்றனர்.
 ஆடவர் எப் 51 பிரிவு கிளப் த்ரோ பிரிவில் அமித்குமார் தங்கமும், தரம்பீர் வெள்ளியும் வென்றனர்.
 இதன் மூலம் இந்தியா தற்போது 13 தங்கம், 20 வெள்ளி, 30 வெண்கலத்துடன் மொத்தம் 63 பதக்கங்களை வென்றுள்ளது.
 ரியோ பாராலிம்பிக் வெள்ளி வென்ற வீராங்கனை தீபா மாலிக் எப்51 மகளிர் வட்டு எறிதலில் வெண்கலம் வென்றார். எப் 11 பிரிவில் நிதி மிஸ்ராவும் வட்டு எறிதலில் வெண்கலம் வென்றார்.
 

]]>
http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/13/ஆசிய-பாரா-போட்டிகள்-இந்தியாவுக்கு-5-தங்கம்-3019125.html
3019124 விளையாட்டு செய்திகள் 21 ஆண்டுகள் கழித்து சீனா-இந்தியா இடையே இன்று நட்பு கால்பந்து போட்டி  சுஷூ, DIN Saturday, October 13, 2018 03:36 AM +0530 21 ஆண்டுகள் கழித்து சீனா-இந்தியா இடையே நட்பு கால்பந்து போட்டி சனிக்கிழமை சீனாவின் சுஷூ நகரில் நடைபெறுகிறது.
 ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்திய அணி 8 ஆண்டுகள் கழித்து தகுதி பெற்றுள்ளது. இப்போட்டி வரும் 2019 ஜனவரி மாதம் ஐக்கிய அரபு நாடுகளில் நடக்கிறது. இதற்கு தயாராகும் வகையில் இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎஃப்எஃப்) பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
 இந்திய அணி பல்வேறு அயல்நாடுகளுக்கு சென்று பயிற்சி ஆட்டங்களில் ஆடி வருகிறது. ஆஸ்திரேலியா, மலேசியா, அரபு நாடுகளில் சென்று பயிற்சி பெற்ற நிலையில் தற்போது பலம் வாய்ந்த சீனாவுடன் நட்பு ஆட்டத்தில் மோதுகிறது. பிஃபா தரவரிசையில் சீனா 76, இந்தியா 97 இடங்களில் உள்ளன.
 கடந்த 17 முறை மோதியதில் ஒரு முறை கூட இந்தியா வென்றதில்லை. நட்பு ஆட்டம் ஷாங்காய் அருகே சுஷு நகரில் நடக்கிறது. 21 ஆண்டுகள் கழித்து இரு நாடுகளின் சீனியர் அணிகள் மோதுவது குறிப்பிடத்தக்கது.
 அணியின் பயிற்சியாளர் கான்ஸ்டான்டைன் கூறியதாவது-
 இதை வெறும் நட்பு ஆட்டமாக வீரர்கள் கருதக்கூடாது. 140 கோடி மக்களின் பிரதிநிதியாக நாம் விளையாடுகிறோம் என ஆட வேண்டும். இந்த போட்டி எவ்வளவு முக்கியம் என்பதை நாம் உணர வேண்டும் என்றார்.
 கடந்த 2015-இல் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கான்ஸ்டான்டைன் பொறுப்பேற்ற போது தரவரிசையில் 166-ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 97-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற ஆட்டத்தில் மாலத்தீவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்கக்து.
 
 

]]>
http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/13/21-ஆண்டுகள்-கழித்து-சீனா-இந்தியா-இடையே-இன்று-நட்பு-கால்பந்து-போட்டி-3019124.html
3019123 விளையாட்டு செய்திகள் சுல்தான் ஜோஹோர் கோப்பை ஹாக்கி: இறுதிச் சுற்றில் இந்தியா  ஜோஹோர், DIN Saturday, October 13, 2018 03:36 AM +0530 சுல்தான் ஜோஹோர் கோப்பை ஹாக்கி போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய ஜூனியர் அணி தகுதி பெற்றுள்ளது.
 ஜோஹோர் நகரில் நடைபெறும் இப்போட்டியின் ஒரு பகுதியாக இந்திய அணி வெள்ளிக்கிழமை பிரிட்டன் அணியை எதிர்கொண்டது. இதில் கடுமையாக போராடியும் 2-3 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்ந்தது.
 எனினும் 4 தொடர் வெற்றிகளின் மூலம் 12 புள்ளிகளை பெற்று இந்தியா ஏற்கெனவே இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
 பிரிட்டன் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.
 இப்போட்டியில் இந்தியா பெறும் முதல் தோல்வியாகும். இந்திய அணி வெல்லும் வாய்ப்பு கிடைத்த போதிலும் அதை தவறவிட்டது. சனிக்கிழமை இறுதி ஆட்டம் நடக்கிறது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/13/w600X390/INDIA_MEN_HOCKEY.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/13/சுல்தான்-ஜோஹோர்-கோப்பை-ஹாக்கி-இறுதிச்-சுற்றில்-இந்தியா-3019123.html
3019122 விளையாட்டு செய்திகள் நேஷன்ஸ் லீக்: போலந்தை புரட்டியது போர்ச்சுகல்  சோர்சோவ், DIN Saturday, October 13, 2018 03:34 AM +0530 நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக போலந்து அணியை 3-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வீழ்த்தியது.
 குரூப் 3 பிரிவில் போலந்தும்-போர்ச்சுகலும் மோதின. இது போலந்து அணியின் கேப்டன் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கியின் 100-ஆவது ஆட்டம் ஆகும். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. போர்ச்சுகல் அணி வீரர்கள் அபாரமான ஆட்டத்தால் 3-0 என போலந்து தோல்வியுற்றது. ஏற்கெனவே இத்தாலியை 1-0 என போர்ச்சுகல் வென்றுள்ளது.
 பொட்கோர்ஸியாவில் நடைபெற்ற ஆட்டத்தில் செர்பியா 2-0 என மான்டெநீக்ரோ அணியை வென்றது. இஸ்ரேல் 2-1 என ஸ்காட்லாந்தை வீழ்த்தியது. தொடர்ந்து 7 வெற்றிகளை குவித்த ஸ்காட்லாந்து முதல் தோல்வியை சந்தித்துள்ளது. மற்றொரு ஆட்டத்தில் கொசோவோ 3-1 என மால்டாவை வென்றது.
 தோல்வியில் இருந்து தப்பிய பிரான்ஸ்: இதற்கிடையே குயின்காம்பில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஐஸ்லாந்திடம் தோல்வியில் இருந்து தப்பியது உலக சாம்பியன் பிரான்ஸ். ஐஸ்லாந்து அணி 2-0 என முன்னிலை பெற்றிருந்த நிலையில் கடைசி 30 நிமிடங்களில் பதிலி வீரராக களமிறங்கிய கிளியான் மாப்பே அடித்த 2 கோல்களால் ஆட்டம் டிராவில் முடிந்தது.
 ஆர்ஜென்டீனா வெற்றி
 சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் ஆர்ஜென்டீனா-இராக் அணிகள் இடையே நடைபெற்ற நட்பு ஆட்டத்தில் 4-0 என ஆர்ஜென்டீனா அபார வெற்றி பெற்றது.
 அதன் நட்சத்திர வீரர் மெஸ்ஸி இல்லாத நிலையில் இந்த வெற்றி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் செவ்வாய்க்கிழமை வைரியான பிரேஸிலுடன் மோதுகிறது ஆர்ஜென்டீனா.
 மியாமியில் நடைபெற்ற நட்பு ஆட்டத்தில் கொலம்பிய அணி 4-2 என அமெரிக்க அணியை வீழ்த்தியது. கார்டிஃப் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன் ஸ்பெயின் 4-1 என்ற கோல்கணக்கில் வேல்ûஸ பந்தாடியது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/13/w600X390/mf.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/13/நேஷன்ஸ்-லீக்-போலந்தை-புரட்டியது-போர்ச்சுகல்-3019122.html
3019121 விளையாட்டு செய்திகள் யூத் ஒலிம்பிக்: பாட்மிண்டன் இறுதியில் லக்ஷயா சென்  பியூனோஸ் அயர்ஸ், DIN Saturday, October 13, 2018 03:32 AM +0530 யூத் ஒலிம்பிக் போட்டியின் ஒரு பகுதியாக பாட்மிண்டன் இறுதிச் சுற்றுக்கு இந்திய நட்சத்திர வீரர் லக்ஷயா சென் தகுதி பெற்றுள்ளார்.
 ஆசிய ஜூனியர் நடப்பு சாம்பியனான லக்ஷயா சென் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீரர் கொடை நரோகோவை 14-21, 21-15, 24-22 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார். இறுதி ஆட்டத்தில் அவர் சீனாவின்
 லீ ஷெபிங்கை எதிர்கொள்கிறார். இதில் வென்றால் யூத் ஒலிம்பிக் பாட்மிண்டனில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுவார் சென். கடந்த 2010-இல் முதல் யூத் ஒலிம்பிக்கில் பிரணாய் ராய் வெள்ளி வென்றிருந்தார்.
 காலிறுதியில் மகளிர் ஹாக்கி அணி
 மகளிர் ஹாக்கி 5 பிரிவில் இந்திய அணி 5-2 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. குரூப் ஏ பிரிவில் ஆர்ஜென்டீனாவுக்கு அடுத்து இரண்டாம் இடத்தை இந்தியா பெற்றுள்ளது. 5 ஆட்டங்களில் இது இந்தியா பெறும் 4-ஆவது வெற்றியாகும்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/13/w600X390/LAKSHAYA_SEN_YOUTH_OLYMPICS.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/13/யூத்-ஒலிம்பிக்-பாட்மிண்டன்-இறுதியில்-லக்ஷயா-சென்-3019121.html
3019120 விளையாட்டு செய்திகள் ஹைதராபாத் டெஸ்ட்: இந்திய பந்துவீச்சை சமாளித்த மேற்கிந்திய தீவுகள் 295/7  ஹைதராபாத் DIN Saturday, October 13, 2018 03:31 AM +0530 இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் முதலில் திணறி விக்கெட்டை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி பின்னர் நிலைத்து ஆடி ரன்களை குவித்தது. ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 295 ரன்களை எடுத்திருந்தது. ரோஸ்டான் சேஸ் ஆட்டமிழக்காமல் 98 ரன்களையும், கேப்டன் ஹோல்டர் 52 ரன்களையும் விளாசி ஸ்கோர் உயரச் செய்தனர்.
 ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இதன் தொடர்ச்சியாக இரண்டாவது ஆட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் பேட்டிங்கை தேர்வு செய்தது
 கிரெய்க் பிராத்வொயிட், கீய்ரன் பொவல் ஆகியோர் தொடக்க வீர்ரகளாக களமிறங்கினர். எனினும் இருவரும் நிலைத்து ஆடவில்லை. பிராத்வொயிட் 14, பொவல் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர், ஷேய் ஹோப் 5 பவுண்டரியுடன் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஷிம்ரன் பெட்மயர் 12, சுனில் அம்ப்ரிஸ் 18 ரன்களிலும் வீழ்ந்தனர். அப்போது 38.5 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 113 ரன்களை அந்த அணி எடுத்திருந்தது.
 பின்னர் ரோஸ்டான் சேஸ், ஷேன் டெüரிச் இணைந்து ஆடினர். டெüரிச் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ரோஸ்டான்-கேப்டன் ஜேஸன் ஹோல்டர் இணை இந்திய பந்துவீச்சை சமாளித்து ஆடி ரன்களை சேர்த்தது. 6 பவுண்டரியுடன் 92 பந்துகளில் 52 ரன்களை எடுத்த ஹோல்டர், உமேஷ் பந்துவீச்சில் வெளியேறினார்.
 அப்போது ஆட்ட நேர முடிவில் 95 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து மேற்கிந்திய தீவுகள் 295 ரன்களை எடுத்திருந்தது.
 ரோஸ்டான் சேஸ் 98 ரன்களுடனும், தேவேந்திர பிஷு 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
 குல்தீப், உமேஷ் அபாரம்
 இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 74 ரன்களை விட்டுத்தந்து 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 83 ரன்களை விட்டுத்தந்து 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அஸ்வின் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
 தொடக்கத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி நிலைகுலைந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும், உணவு இடைவேளுக்கு பின் ஹோல்டர்-ரோஸ்டான் இணை நிலைத்து நின்று ஆடி 7-ஆவது விக்கெட்டுக்கு 104 ரன்களை சேர்த்தது.
 முதல் டெஸ்டில் குறைந்த ரன்களில் சுருண்டது போல் அல்லாமல் இந்த டெஸ்டில் ரன்களை குவிக்க மேற்கீந்தி தீவுகள் போராடி வருகிறது.
 சர்துல் தாக்கூர் வெளியேறியதால் பாதிப்பு
 அந்த அணியின் மிடில் ஆர்டர், கடை நிலை பேட்ஸ்மேன்களை அவுட் செய்ய முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். அறிமுக வேகப்பந்து வீச்சாளர் சர்துல் தாக்கூர் இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக வெறும் 10 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் வெளியேறினார். இதனால் இந்தியா 4 பந்துவீச்சாளர்களோடு பந்துவீசும் நிலைக்கு தள்ளப்பட்டது. மூத்த பந்துவீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சு எடுபடவில்லை.
 100 விக்கெட் வீழ்த்தி குல்தீப் சாதனை:
 மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் சுனில் அம்ப்ரீஸ் விக்கெட்டை வீழ்த்தியதின் மூலம் டெஸ்ட், ஒரு நாள் ஆட்டங்களைச் சேர்ந்து 100-ஆவது விக்கெட்டை வீழ்த்தினார் குல்தீப் யாதவ். டெஸ்ட்களில் 19 விக்கெட்டுகளையும், ஒரு நாள் ஆட்டங்களில் 58, டி20 ஆட்டங்களில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
 மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் முதல் டெஸ்டில் பிரித்வி ஷா, இரண்டாவது டெஸ்டில் சர்துல் தாக்கூர் என இரண்டு புதிய வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர்.
 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/13/w600X390/ROSTON.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/13/ஹைதராபாத்-டெஸ்ட்-இந்திய-பந்துவீச்சை-சமாளித்த-மேற்கிந்திய-தீவுகள்-2957-3019120.html
3019031 விளையாட்டு செய்திகள் சரிவில் இருந்து மீட்ட சேஸ், ஹோல்டர்: முதல்நாள் முடிவில் மே.இ.தீவுகள் 295/7 DIN DIN Friday, October 12, 2018 05:34 PM +0530  

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இதில், டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

அந்த அணியின் டாப் ஆர்ட்ர் பேட்ஸ்மேன்கள் பெரிதளவு சோபிக்காமல் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து ரன் குவிக்கத் தவறினர். இதனால், அந்த அணி 113 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அப்போது, ரோஸ்டன் சேஸ் உடன் ,ஷேன் டௌரிச் ஜோடி சேர்ந்தார். இதில், டௌரிச் நிதானம் காட்ட சேஸ் ரன் குவித்து வந்தார். இருப்பினும், இந்த பாட்னரர்ஷிப் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அந்த அணி 182 ரன்கள் எடுத்திருந்தபோது டௌரிச் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதைத்தொடர்ந்து, சேஸ் உடன் கேப்டன் ஹோல்டர் இணைந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் விளையாடி அந்த அணியை சரிவில் இருந்து மீட்டது. சிறப்பாக விளையாடிய சேஸ் அரைசதம் அடித்து நம்பிக்கை அளித்தார். அவருக்கு ஒத்துழைப்பு அளித்து கேப்டன் என்ற முறையில் சிறப்பாக விளையாடிய ஹோல்டரும் அரைசதம் அடித்தார். 

இந்த ஜோடி 7-ஆவது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்திருந்தபோது ஹோல்டர் 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு, முதல்நாள் ஆட்டநேர முடிவு வரை சேஸ் மற்றும் பிஷூ விக்கெட்டுகளை பாதுகாத்து விளையாடினர். 

முதல்நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஸ்டன் சேஸ் 98 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். 

இந்திய அணியின் தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/12/w600X390/Roston_Chase.jpg புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/12/roston-chase-pulled-windies-near-300-at-day-1-stumps-3019031.html
3018413 விளையாட்டு செய்திகள் இன்று இரண்டாம் டெஸ்ட்: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா DIN DIN Friday, October 12, 2018 01:03 AM +0530 மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கும் இரண்டாம் டெஸ்ட் ஆட்டத்தை வென்று தொடரை 2-0 என கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ், 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று ஐசிசி டெஸ்ட் அணி முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது.
இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெறவுள்ளது. ஐசிசி தரவரிசையில் 8-ஆவது இடத்தில் உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி முதல் டெஸ்டில் அடைந்த படுதோல்வியால் துவண்டுள்ளது. 
கேப்டன் ஹோல்டர் முழுமையாக குணமடையவில்லை. ஓரே ஒரு வேகப்பந்து வீச்சாளரான ஷனான் கேப்ரியேலும் கலந்து கொள்வது சந்தேகமாக உள்ளது.
கடந்த 2011 தொடரில் இந்தியா 2-0 என மேற்கிந்திய தீவுகளை வென்ற இந்திய அணி, பின்னர் ஆஸி.யுடன் நடந்த தொடரை 0-4 என இழந்தது. 
அதே போல் 2013-இலும் மேற்கிந்திய தீவுகளுடன் தொடரைவென்ற இந்தியா, பின்னர் தென்னாப்பிரிக்காவுடன் நடந்த தொடரையும் இழந்தது. 
கடந்த பல ஆண்டுகளாக மேற்கிந்திய தீவுகள் அணி முழுமையான ஆட்டத்திறனுடன் இல்லாத அணியாகவே காணப்படுவது அதற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதே நேரத்தில் கோலி தலைமையிலான இந்திய அணி சிறந்த பார்மில் உள்ளது. முதல் டெஸ்டில் கோலி 139, பிரித்வி ஷா ஆகியோர் சதமடித்தனர். புஜாரா, ஜடேஜாவும் அபாரமாக ஆடி ரன்களை குவித்தனர். 
துணை கேப்டன்ரஹானே பார்ம் கவலை தருவதாக உள்ளது. அவர் இரண்டாவது டெஸ்டில் சோபிக்காத பட்சத்தில் ஆஸி. தொடரில் இடம் பெறமுடியாத நிலை ஏற்படும். கேஎல்.ராகுல் சரிவர ஆடாத நிலையிலும், அவருக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படுகிறது. ஆஸி. தொடரில் பிரித்வி-ராகுலை தொடக்க இணை களமிறக்க வாய்ப்புள்ளது. 
மேற்கிந்திய தீவுகள் அணி முதல் டெஸ்டை போல் இல்லாமல் ஹைதராபாத் டெஸ்டில் ஓரளவு ஆடி ரன்களை குவிக்கும் முனைப்பில் உள்ளது. 
ராஜ்கோட்டில் 100 ஓவர்களை முழுமையாக ஆட முடியாமல் அந்த அணி ஆல் அவுட்டானது. எந்த ஆட்ட உத்தி, நுணுக்கத்தையோ பின்பற்றாத டெஸ்ட் அணியாக மேற்கிந்திய தீவுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி அறிவிப்பு: கேப்டன் கோலி தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அணியில் ரிஷப் பந்த், பிரித்வி ஷா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் 15 பேர் அணியில் முதலில் அறிவிக்கப்பட்டிருந்த மயங்க் அகர்வால் இந்த அணியிலும் சேர்க்கப்படவில்லை.
முகமது சிராஜ்,ஹனுமா விஹாரியும் இடம் பெறவில்லை. கோலிக்கு ஓய்வு தந்து விட்டு மயங்க் அகர்வால் சேர்க்கப்படலாம் எனக் கருதப்பட்ட நிலையில் கோலியே இதிலும் ஆடுகிறார்.
விராட் கோலி (கேப்டன்), கேஎல்.ராகுல், பிரித்வி ஷா, புஜாரா, ரஹானே, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சமி, உமேஷ் யாதவ், சர்துல் தாகுர்.
டியூக்ஸ் பந்துகளே சிறந்தவை
டெஸ்ட் ஆட்டங்களில் தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்படும் எஸ்.ஜி பந்துகளுக்கு பதிலாக டியூக்ஸ் பந்துகளை பயன்படுத்த வேண்டும் என கோலி விருப்பம் தெரிவித்துள்ளார். அவை விரைவில் தேய்ந்து மங்கலாகி விடுகின்றன. டியூக்ஸ் பந்துகளை டெஸ்ட் ஆட்டங்களில் பயன்படுத்த வேண்டும். 
மும்பையில் 4-ஆவது ஒரு நாள் போட்டி: உச்ச நீதிமன்றம் முடிவு
மேற்கிந்திய தீவுகள் -இந்தியா இடையே ஆன 4-ஆவது ஒரு நாள் ஆட்டத்தை வரும் 29-ஆம் தேதி மும்பையில் நடத்துவது குறித்து உச்சநீதிமன்றம் முடிவெடுக்க உள்ளது.
5 ஆட்டங்கள் கொண்ட தொடரிலல் 4-ஆவது ஆட்டம் மும்பையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.ஆனால் மும்பை கிரிக்கெட் சங்க வங்கிக் கணக்கை பராமரிக்க முடியாதது, போட்டியில் விளம்பரங்களுக்கான டெண்டரை விடமுடியாமை போன்றவற்றால் நிதி இல்லை. போட்டியை நடத்த இயலாது என பிசிசிஐயிடம் எம்சிஏ தெரிவித்தது.
சென்னையில் டி20 ஆட்டம்
மேற்கிந்திய தீவுகள் அணியுடன் வரும் நவம்பர் 4 ஆம் தேதி டி20 ஆட்டம் எவ்வித தடையும் இன்றி நடைபெறவுள்ளது.
சிறப்பு அனுமதி சீட்டுகள் விநியோகம் செய்வது தொடர்பாக டிஎன்சிஏ-பிசிசிஐ சிஓஏ இடையே முதலில் பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் பழைய முறையிலேயே சிறப்பு அனுமதிச்சீட்டுகள் விநியோகம் செய்ய சிஓஏ ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து டி20 ஆட்டம் எவ்வித பாதிப்பும் இன்றி சென்னையிலேயே நடைபெறும் என டிஎன்சிஏ வட்டாரங்கள் தெரிவித்தன.


முதலிரண்டு ஒரு நாள் போட்டி: இந்திய அணி அறிவிப்பு
மேற்கிந்திய தீவுகளுடன் நடைபெறவுள்ள முதலிரண்டு ஒரு நாள் ஆட்டங்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார்.
5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் வரும் 21-ஆம் தேதி குவஹாட்டியில் தொடங்குகிறது. நவம்பர் 1-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இறுதி ஒரு நாள் ஆட்டம் நடக்கிறது.
ஆசிய கோப்பை போட்டியில் கோலிக்கு ஓய்வு தரப்பட்ட நிலையில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். தற்போது கோலி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே விக்கெட் கீப்பராக மூத்த வீரர் தோனி உள்ள நிலையில், இரண்டாவது ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுளளார். 
பெளலிங்கிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புவனேஸ்வர் குமார், பும்ராவுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. சர்துல் தாக்கூர், கலில் அகமது இடம் பெற்றுள்ளனர். கடந்த 2017 ஆஸி.க்கு எதிரான தொடரில் கடைசியாக விளையாடிய முகமது சமி, தற்போது மீண்டும் இடம் பெற்றுள்ளார். ஆசிய கோப்பையில் காயமுற்ற ஹார்திக் பாண்டியா, கேதர் ஜாதவ் ஆகியோரும் இடம் பெறவில்லை. 
அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், அம்பதி ராயுடு, மணிஷ் பாண்டே, தோனி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, சஹால், குல்தீப் யாதவ், முகமது சமி, கலில் அகமது, சர்துல் தாக்கூர், கேஎல்.ராகுல்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/12/w600X390/west-indies-practice1.jpg தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள மேற்கிந்தீய தீவுகள் அணி. http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/12/இன்று-இரண்டாம்-டெஸ்ட்-தொடரை-வெல்லும்-முனைப்பில்-இந்தியா-3018413.html
3018412 விளையாட்டு செய்திகள் ஆசிய பாரா போட்டிகள்: உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார் சரத்குமார் DIN DIN Friday, October 12, 2018 01:01 AM +0530 ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா போட்டிகள் ஆடவர் உயரம் தாண்டுதலில் புதிய சாதனையுடன் சரத்குமார் தங்கம் வென்றார். அதே நேரத்தில் ஈட்டிஎறிதலில் சுந்தர் சிங் குர்ஜார் வெள்ளி வென்றார்.
26 வயதான சரத்குமார் ஏற்கெனவே உலக சாம்பியன் போட்டியில் வெள்ளி வென்றிருந்தார். இந்நிலையில் டி42 பிரிவில் 1.9 மீ உயரம் தாண்டி தங்கம் வென்றார். இது அவர் ஆசிய பாரா போட்டியில் தொடர்ந்து வெல்லும் இரண்டாவது தங்கமாகும். பிகாரைச் சேர்ந்த சரத்குமார் இரண்டு வயதான போது, முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டார். 
கை பாதிப்பு, தசை செயலிழப்பு போன்றவர்களுக்கான எஃப் 46 பிரிவில் ஈட்டி எறிதலில் சுந்தர் சிங் 61.33 மீ தூரம் எறிந்து வெள்ளி வென்றார். ரிங்கு 60.92 மீ தூரம் எறிந்து வெண்கலம் வென்றார். இரண்டு முறை தங்கம் வென்ற ஜஜ்ஹாரியா 4-ஆவது இடமே பெற்றார்.
ஆடவர் 400 மீ ஓட்டத்தில் 52 வினாடிகளில் கடந்து வெண்கலம் வென்றார் அன்வில்குமார், தடகளத்தில் 400 மீ. பிரிவில் ஆனந்தன் குணசேகரம் வெள்ளியும், மகளிர் 400 மீ.இல் ஜெயந்தி பெஹராவும் வெள்ளி வென்றனர். பார்வைத் திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கான 400 மீ. ஓட்டத்தில் ராதா வெங்கடேசன் வெண்கலத்தையும், ஆடவர் நீச்சல் 400 மீ. ப்ரீஸ்டைல் எஸ் 10 போட்டியில் ஸ்வப்நில் பட்டீல் வெண்கலமும் வென்றனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/12/w600X390/sharad-kumar-gold.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/12/ஆசிய-பாரா-போட்டிகள்-உயரம்-தாண்டுதலில்-தங்கம்-வென்றார்-சரத்குமார்-3018412.html
3018411 விளையாட்டு செய்திகள் யூத் ஒலிம்பிக் போட்டிகள்: செளரவ் செளத்ரிக்கு தங்கம் DIN DIN Friday, October 12, 2018 01:00 AM +0530
பியூனோஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்று வரும் யூத் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் இளம் வீரர் செளரவ் செளத்ரி துப்பாக்கி சுடுதல் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார். 16வயதே ஆன செளத்ரி 244.2 புள்ளிகள் குவித்து தங்கம் வென்றார். இதில் தென்கொரியா, சுவிட்சர்லாந்து வெள்ளி, வெண்கலம் வென்றன. மீரட் அருகே கலினா கிராமத்தைச் சேர்ந்த செளத்ரி, ஆசியப் போட்டி, ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றுள்ளார். மகளிர் பிஸ்டல் பிரிவில் 16 வயது மானு பாக்கர் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மகளிர் ஹாக்கியில் இந்தியா தோல்வி: ஆர்ஜென்டீனா யூத் ஒலிம்பிக் போட்டியின் ஒரு பகுதியாக புதன்கிழமை இரவு நடைபெற்ற 18 வயதுக்குட்பட்டோர் மகளிர் ஹாக்கி ஆட்டத்தில் இந்தியா 2-5 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டீனாவிடம் தோல்வியடைந்தது. தொடர்ந்து 3 வெற்றிகளை பெற்ற இந்திய அணி முதலில் ஈடுகொடுத்து ஆடினாலும், இறுதியில் ஆர்ஜென்டீனா வீராங்கனைகள் ஆட்டத்தை எதிர்கொள்ள முடியவில்லை.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/12/w600X390/savrav-chaudyr.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/12/யூத்-ஒலிம்பிக்-போட்டிகள்-செளரவ்-செளத்ரிக்கு-தங்கம்-3018411.html
3018410 விளையாட்டு செய்திகள் புரோ கபடி லீக்: யுபி யோத்தாஸை வென்றது பாட்னா DIN DIN Friday, October 12, 2018 01:00 AM +0530 புரோ கபடி லீக் சீசன் 6-ஆவது போட்டியின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் யுபி யோத்தாஸ் அணியை 43-41 என்ற புள்ளிக்கணக்கில் போராடி வென்றது நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ்.
புரோ கபடி லீக் போட்டியின் சென்னை பிரிவு போட்டிகள் வியாழக்கிழமையோடு நிறைவடையும் நிலையில் நேரு உள்விளையாட்டரங்கில் இரு அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டம் தொடக்கம் முதலே பரபரப்பாக அமைந்தது. நடப்பு சாம்பியன் முதல் ஆட்டத்தில் தமிழ்த் தலைவாஸிடம் படுதோல்வி அடைந்திருந்தது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற பாட்னா அணி தீவிர கவனம் செலுத்தியது. அந்த அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான பார்தீப் நர்வால் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 
அணியின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்கை வகித்த அவர் 16 புள்ளிகளை குவித்தார். முதல் பாதி நிறைவில் பாட்னா 25-21 என முன்னிலை பெற்றிருந்தது.
ஆட்டம் தொடங்கியதும், யுபி அணி ஆதிக்கம் செலுத்தினாலும், படிப்படியாக பாட்னா அணி வீரர்கள் தங்கள் கட்டுக்குள் ஆட்டத்தை கொண்டு வந்தனர்.
யுபி அணியின் ரைடர் ரிஷாங்க் தேவதிகா சிறப்பாக செயல்பட்டாலும், போதிய புள்ளிகள் குவிக்க முடியவில்லை. 
ஆட்டம் முடிய 4 நிமிடங்கள் இருக்கும் போது யுபி அணியின் ஸ்ரீகாந்த் ஜாதவ் 41-41 என சமநிலையை ஏற்படுத்தினார். ஆனால் இறுதியில் யுபி ரைடர் ரிஷாங்க் நடுவர் அழைப்பதற்கு முன்பு மைதானத்தில் நுழைந்ததால் பாட்னாவுக்கு 2 டெக்னிக்கல் புள்ளிகள் தரப்பட்டன. இதன் மூலம் 43-41 என பாட்னா வென்றது.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/12/w600X390/patna-up1.jpg யுபி யோத்தாஸ் அணியில் ஊடுருவ முயலும் பாட்னா கேப்டன் பார்திப் நர்வால். http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/12/புரோ-கபடி-லீக்-யுபி-யோத்தாஸை-வென்றது-பாட்னா-3018410.html
3018409 விளையாட்டு செய்திகள் சுல்தான் ஜோஹோர் கோப்பை ஹாக்கி: ஆஸி.யை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்தியா தகுதி DIN DIN Friday, October 12, 2018 12:59 AM +0530
சுல்தான் ஜோஹோர் கோப்பை ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய ஜூனியர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
மலேசியாவின் ஜோஹோர் நகரில்நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய வீரர் குர்சாஹிப்ஜித் சிங் 5-ஆவது அபாரமாக ஆடி முதல் பீல்ட் கோலை அடித்தார். 
தொடர்ந்து 11, 14, 15-ஆவது நிமிடங்களில் ஹஸ்பிரீத் சிங், மந்தீப் மோர், விஷ்ணுகாந்த் சிங் அடித்த கோல்களால் 4-0 என முன்னிலை பெற்றது. ஆனால் இது நீடிக்கவில்லை. 
இரண்டாம் காலிறுதியில் ஆஸி.அணி பதில் கோல்களை போட்டது.45-ஆவது நிமிடத்தில் ஷைலேனானந்த் லக்ரா 5-ஆவது கோலை அடித்தார். தொடர்ந்து ஆஸி. 
அணி சமன் செய்ய தீவிரமாக முயன்ற நிலையில் 59-ஆவது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் ஸ்டெபான்ஸ் கோலடித்தார்.எனினும் இறுதிவரை இந்திய தற்காப்பு வலுவாக இருந்ததால் ஆஸி.அணி 5-4 என தோல்வியடைந்தது. இதன் மூலம் அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றது. கடைசி குழு ஆட்டத்தில் பிரிட்டனை எதிர்கொள்கிறது.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/12/w600X390/india-hockey.jpg ஆஸி. அணியை வீழ்த்திய களிப்பில் இந்திய அணியினர். http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/12/சுல்தான்-ஜோஹோர்-கோப்பை-ஹாக்கி-ஆஸியை-வீழ்த்தி-அரையிறுதிக்கு-இந்தியா-தகுதி-3018409.html
3018408 விளையாட்டு செய்திகள் நேஷன்ஸ் லீக்: இத்தாலி- உக்ரைன் ஆட்டம் டிரா DIN DIN Friday, October 12, 2018 12:59 AM +0530
நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக ஜெனோவா நகரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன் இத்தாலி-உக்ரைன் மோதிய ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.
கடந்த 60 ஆண்டுகளில் முதன்முறையாக 3 முறை உலக சாம்பியன் இத்தாலி, ரஷிய உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறவில்லை. இந்நிலையில் அணிக்கு ராபர்ட்டோ மான்சினி புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையே யுஇஎஃப்ஏ சார்பில் நாடுகள் இடையே நேஷன்ஸ் லீக் போட்டி நடைபெற்று வருகிறது. தனது துவக்க ஆட்டத்தில் 1-0 என போர்ச்சுகலிடம் இத்தாலி தோல்வியுற்றறது. அதன் தொடர்ச்சியாக உக்ரைனுடன் நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்தில் 1-1 என டிரா கண்டது.
குரோஷியா-இங்கிலாந்து இன்று மோதல்
வெள்ளிக்கிழமை ரிஜெகா நகரில் நடைபெறும் ஆட்டத்தில் குரோஷியா-இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.
கடந்த ரஷிய உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதியில் குரோஷியா அணி இங்கிலாந்து வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதற்கு பழிதீர்க்கும் வகையில் இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வெல்லுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதல் ஆட்டத்தில் ஸ்பெயினிடம் 2-1 என தோல்வி கண்டது இங்கிலாந்து.  

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/12/w600X390/italy-ukraine.jpg கோலடித்த உக்ரைன் மிட்பீல்டர் மலினோவ்ஸ்கி. http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/12/நேஷன்ஸ்-லீக்-இத்தாலி--உக்ரைன்-ஆட்டம்-டிரா-3018408.html
3018407 விளையாட்டு செய்திகள் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: காலிறுதியில் ஜோகோவிச், பெடரர் DIN DIN Friday, October 12, 2018 12:58 AM +0530
சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்து வரும் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி காலிறுதிக்கு ரோஜர் பெடரர், ஜோகோவிச் ஆகியோர் முன்னேறினர்.
வியாழக்கிழமை நடந்த நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் இத்தாலியின் மார்கோ செசென்டிவோ 6-4,6-0 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்.
மற்றொரு ஆட்டத்தில் பிரிட்டன் வீரர் எட்மண்ட் 7-6, 6-3 என சிலியின் நிக்கோலாஸ் ஜாரியை வென்றார். 
மற்றொரு முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் வெரேவ் 6-1,6--4 என ஆஸி. நம்பர் ஓன் வீரர் அலெக்ஸ் மீனாரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். 
நடப்பு சாம்பியனும், உலகின் இரண்டாம் நிலை வீரருமான பெடரர் 6-4, 4-6, 6-4 என ரஷிய வீரர் டேனில் மெத்வதேவை போராடி வென்றார்.
ஆர்ஜென்டீனா வீரர் டெல் பொட்ரோ 7-5, 7-6 என ரிச்சர்ட் கேஸ்கட்டை வென்றார். விம்பிள்டனில் இரண்டாம் இடம் பெற்ற கெவின் ஆண்டர்சன் 6-,3, 6-2 என கஜகஸ்தானின் குகுஷ்கினை வீழ்த்தினார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/12/w600X390/federer1.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/12/ஷாங்காய்-மாஸ்டர்ஸ்-டென்னிஸ்-காலிறுதியில்-ஜோகோவிச்-பெடரர்-3018407.html
3018406 விளையாட்டு செய்திகள் முதலிரண்டு ஒரு நாள் போட்டி: இந்திய அணி அறிவிப்பு DIN DIN Friday, October 12, 2018 12:57 AM +0530
மேற்கிந்திய தீவுகளுடன் நடைபெறவுள்ள முதலிரண்டு ஒரு நாள் ஆட்டங்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார்.
5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் வரும் 21-ஆம் தேதி குவஹாட்டியில் தொடங்குகிறது. நவம்பர் 1-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இறுதி ஒரு நாள் ஆட்டம் நடக்கிறது.
ஆசிய கோப்பை போட்டியில் கோலிக்கு ஓய்வு தரப்பட்ட நிலையில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். தற்போது கோலி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே விக்கெட் கீப்பராக மூத்த வீரர் தோனி உள்ள நிலையில், இரண்டாவது ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுளளார். 
பெளலிங்கிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புவனேஸ்வர் குமார், பும்ராவுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. சர்துல் தாக்கூர், கலில் அகமது இடம் பெற்றுள்ளனர். கடந்த 2017 ஆஸி.க்கு எதிரான தொடரில் கடைசியாக விளையாடிய முகமது சமி, தற்போது மீண்டும் இடம் பெற்றுள்ளார். ஆசிய கோப்பையில் காயமுற்ற ஹார்திக் பாண்டியா, கேதர் ஜாதவ் ஆகியோரும் இடம் பெறவில்லை. 
அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், அம்பதி ராயுடு, மணிஷ் பாண்டே, தோனி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, சஹால், குல்தீப் யாதவ், முகமது சமி, கலில் அகமது, சர்துல் தாக்கூர், கேஎல்.ராகுல்.
 

]]>
http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/12/முதலிரண்டு-ஒரு-நாள்-போட்டி-இந்திய-அணி-அறிவிப்பு-3018406.html
3018405 விளையாட்டு செய்திகள் டி20 தகுதி ஆட்டம்: 11 பந்துகளில் நேபாளத்திடம் தோல்வி கண்ட சீனா DIN DIN Friday, October 12, 2018 12:57 AM +0530
கோலாலம்பூரில் நடைபெற்ற டி20 தகுதி ஆட்டத்தில் நேபாள அணி 11 பந்துகளில் சீனாவை வீழ்த்தியது.
ஐசிசி சார்பில் உலகக் கோப்பை டி20 தகுதிச் சுற்று ஆட்டம் கோலாலம்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. முதலில் ஆடிய சீனா அணி 26 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க வீரர் யான் ஹோங்ஜியாங் அதிகபட்சமாக 11 ரன்களை எடுத்தார். 26 ரன்களில் நேபாள பந்துவீச்சாளர்கள் அளித்த 9 எக்ஸ்டராக்களும் அடங்கும். ஐபிஎல் பந்துவீச்சாளர் சந்தீப் லேமிச்சேன் 4 ரன்களை மட்டுமே தந்து 3 விக்கெட்டை வீழ்த்தினார். 8 சீன வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாயினர்.
பின்னர் ஆடிய நேபாளம் 11 பந்துகளில் வெற்றி இலக்கை எட்டியது. சீன பந்துவீச்சாளர் குன் டியான்சென் முதல் ஓவரில் 21 ரன்களை வாரி வழங்கினார். நேபாள பேட்ஸ்மேன் வினோத் பண்டாரி அதிரடியாக 24 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டார்.
 

]]>
http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/12/டி20-தகுதி-ஆட்டம்-11-பந்துகளில்-நேபாளத்திடம்-தோல்வி-கண்ட-சீனா-3018405.html
3018382 விளையாட்டு செய்திகள் மீ டூ மூவ்மெண்ட்: பாலியல் குற்றச்சாட்டில் இலங்கை வீரர் மலிங்கா DIN DIN Thursday, October 11, 2018 09:44 PM +0530  

இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா மீது இந்தியப் பெண் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

'மீ டூ' மூவ்மெண்ட் இந்தியா முழுவதும் தற்போது வெளிப்படையாக பகிரப்பட்டு வருகிறது. இதன் மூலம், சினிமா, இதழியல், கிரிக்கெட் என பல பிரபலங்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவர தொடங்கியுள்ளது. பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீதான வெளிப்படையான குற்றச்சாட்டை முன்வைத்தார். இது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

இந்நிலையில், தனது தோழி பகிர்ந்த ஒரு கருத்தை சின்மயி தனது சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், 

"நான் எனது பெயரை வெளியிடாமலே இருக்க விரும்புகிறேன். சில வருடங்களுக்கு முன்பு, மும்பையில் நாங்கள் தங்கியிருந்த ஒரு விடுதியில் எனது தோழியை தேடிக்கொண்டிருந்தேன். உன் தோழி எனது அறையில் தான் இருக்கிறார் என்று தெரிவித்து ஒரு இலங்கை வீரர் என்னை வரவழைத்தார். 

நான் உள்ளே சென்றேன், ஆனால், எனது தோழி இல்லை. இதையடுத்து, அவர் என்னை படுக்கையில் தள்ளி பாலியல் ரீதியில் என்னை சீண்டினார். அந்த நேரத்தில் விடுதி ஊழியர் கதவை தட்டினார். அதை திறப்பதற்காக அவர் சென்றார். உடனடியாக நான் கழிவறைக்குச் சென்று எனது முகத்தை கழுவி விடுதி ஊழியர் வெளியேறியவுடன் நானும் அந்த இடத்தை விட்டு வெளியேறினேன். நான் அவமானத்துக்குள்ளானேன். 

அவர் பிரபலமானவர் என்பதை தெரிந்து தான் நீ அவரது அறைக்கு விருப்பத்துடன் சென்றாய், அதனால் உனக்கு இது தேவை தான் என்று பல பேர் சொல்வார்கள் என்று எனக்கு தெரியும்" என்றார். 

இந்தப் பதிவில் அவர் இலங்கை வீரர் என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தார். சின்மயி இதனை பதிவிடும் போது லசித் மலிங்கா என்று பெயரை குறிப்பிட்டார். 

ஏற்கனவே, இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரனதுங்கா மீது இந்திய விமானப் பணிப் பெண் ஒருவர் புதன்கிழமை குற்றம்சாட்டியிருந்தார்.  

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/28/w600X390/malinga2x.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/11/malinga-accused-of-sexual-harassment-3018382.html
3018377 விளையாட்டு செய்திகள் பிருத்வி ஷாவை யாருடனும் ஒப்பிடாதீர்கள்: விராட் கோலி வேண்டுகோள் Raghavendran DIN Thursday, October 11, 2018 07:47 PM +0530  

இந்தியா சுற்றுப்பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. தற்போது 2 டெஸ்ட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்றது.

இதையடுத்து இவ்விரு அணிகளும் மோதும் 2-ஆவது டெஸ்ட் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அக்.12 முதல் அக்.16 வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலி பேசுகையில்,

2-ஆவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி கடும் சவாலை அளிக்கும் என நம்புகிறேன். ஏனென்றால் இது 2 போட்டிகள் மட்டுமே கொண்ட தொடர் ஆகும். இதில் அடுத்த வாய்ப்பு இல்லாத காரணத்தால் தவறிழைக்க வாய்ப்பில்லை. ஹைதராபாத் ஆடுகளம் சிறப்பானதாக இருக்கும். மேலும் இங்குள்ள வானிலை காரணமாக 5 நாட்களுக்கு இந்த ஆடுகளத்தின் தன்மை ஒரே மாதிரியாக இருக்கும். 

இங்கு சிறப்பாக பேட்டிங் செய்தால் அதிக ரன்களையும், சிறப்பாக பந்துவீசினால் அதிக விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும். இளம் வீரர் பிருத்வி ஷாவை யாருடனும் ஒப்பிடாதீர்கள். அவர் வளர இன்னும் நிறைய காலங்களும், சவால்களும் காத்திருக்கின்றன. தற்போதைக்கு அவர் மேல் எவ்வித அழுத்தங்களையும் திணிக்க வேண்டாம் என நினைக்கிறேன். 

பிருத்வி ஷா மிகச்சிறந்த திறமையாளர் என்பதில் சந்தேகமில்லை. இதை அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். சர்வதேச அளவிலான சவால்களை எதிர்கொள்ளும் அளவுக்கான திறமையும், துணிவும் அவரிடம் உள்ளது. அதை அவரும் தன்னுடைய அறிமுகப் போட்டியிலேயே வெளிப்படுத்தியுள்ளார். 

சிறந்த கற்கும் திறன் கொண்டவர், மிகக் கூரிய சிந்தனை உடையவர். இதில் எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தான் என்று தெரிவித்தார். 

]]>
INDvsWI, virat kohli, prithvi shah, விராட் கோலி, பிருத்வி ஷா http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/14/w600X390/VIRAT_KOHLI_.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/11/பிருத்வி-ஷாவை-யாருடனும்-ஒப்பிடாதீர்கள்-விராட்-கோலி-வேண்டுகோள்-3018377.html
3018372 விளையாட்டு செய்திகள் 2-ஆவது டெஸ்ட்: இந்திய அணியில் மாற்றமில்லை Raghavendran DIN Thursday, October 11, 2018 06:31 PM +0530  

மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி மாற்றமின்றி அறிவிக்கப்பட்டது.

இந்தியா சுற்றுப்பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. தற்போது 2 டெஸ்ட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்றது.

இதையடுத்து இவ்விரு அணிகளும் மோதும் 2-ஆவது டெஸ்ட் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அக்.12 முதல் அக்.16 வரை இப்போட்டி நடைபெறவுள்ளது.  

இதில் விளையாடும் 12 பேர் கொண்ட இந்திய அணி வியாழக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டது. முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற அதே 12 பேர் கொண்ட இந்திய அணி எந்த மாற்றமும் இன்றி மீண்டும் அறிவிக்கப்பட்டது. இதில், சமீபகாலங்களாக ஆட்டத்திறனில் சரிவைக் கண்டு வரும் ரஹானேவுக்கு மாற்றாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பளிக்கப்படலாம். 

2-ஆவது டெஸ்ட் போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணியின் விவரம் பின்வருமாறு:

விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், பிருத்வீ ஷா, மயங்க் அகர்வால், சேத்தேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர்.

]]>
INDvsWI, virat kohli http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/6/w600X390/virat_kohli.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/11/2-ஆவது-டெஸ்ட்-இந்திய-அணியில்-மாற்றமில்லை-3018372.html
3018369 விளையாட்டு செய்திகள் தினேஷ் கார்த்திக்குக்கு கல்தா! முதல் இரு ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு Raghavendran DIN Thursday, October 11, 2018 05:59 PM +0530  

இந்தியா சுற்றுப்பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. தற்போது 2 டெஸ்ட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய வெற்றிபெற்றதையடுத்து 2-ஆவது டெஸ்ட் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. பின்னர் 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. 

இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் ஆசியக் கோப்பையில் கேப்டனாக செயல்பட்ட ரோஹித் ஷர்மா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஆசியக் கோப்பையில் இடம்பிடித்திருந்த தினேஷ் கார்த்திக் பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்திய அணி விவரம் பின்வருமாறு:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணைக்கேப்டன்), ஷிகர் தவன், அம்பத்தி ராயுடு, மணீஷ் பாண்டே, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, கலீல் அகமது, ஷர்துல் தாக்கூர், கே.எல்.ராகுல்.

]]>
INDvsWI, Indian Cricket Team, virat kohli http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/4/w600X390/kohlidhonirahul.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/11/தினேஷ்-கார்த்திக்குக்கு-கல்தா-முதல்-இரு-ஒருநாள்-போட்டிகளுக்கான-இந்திய-அணி-அறிவிப்பு-3018369.html
3017688 விளையாட்டு செய்திகள் யூத் ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ் அரையிறுதியில் அர்ச்சனா தோல்வி DIN DIN Thursday, October 11, 2018 12:59 AM +0530
ஆர்ஜெண்டீனாவில் நடைபெறும் யூத் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் அர்ச்சனா கிரீஷ் காமத் அரையிறுதியில் தோல்வி கண்டார். 
அந்த ஆட்டத்தில் சீனாவின் யிங்ஷா சன்னை எதிர்கொண்ட அர்ச்சனா, 1- 4 என்ற கணக்கில் அவரிடம் வீழ்ந்தார். இதையடுத்து அவர், வெண்கலப் பதக்கத்துக்கான பிளே ஆஃப் ஆட்டத்தில் விளையாடவுள்ளார். அதில் ருமேனியாவின் ஆண்ட்ரியா டிராகமோனை எதிர்கொள்கிறார். முன்னதாக, யூத் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அர்ச்சனா தனது காலிறுதியில் அஜர்பைஜானின் நிங் ஜிங்கை 13-11, 8-11, 6-11, 11-3, 6-11, 12-10, 11-7 என்ற செட்களில் வீழ்த்தினார். அப்போது பேசுகையில், இந்த ஆட்டம் மிகவும் கடினமானதாக இருந்தது. நிகன் ஜிங் ஆட்டத்தின் இறுதி வரை போராடினார். எனவே, இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கடும் சவால் அளித்த நிகன் ஜிங்கை நிச்சயம் பாராட்டியாக வேண்டும் என்றார்.
ஹாக்கியில் இந்தியா வெற்றி: யூத் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான ஹாக்கி விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் தெற்கு பசிபிக் ஓசியானிய நாடான வானுவடுவை 16-0 என்ற கோல் கணக்கில் பந்தாடியது.
ஓர் அணியில் தலா 5 பேர்களுடன் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இந்தியாவின் சார்பில் அதிகபட்சமாக மும்தாஸ் கான் 4 கோல்களும், சேத்னா 3 கோல்களும் அடித்தனர். முன்னதாக ஆட்டம் தொடங்கிய 2-ஆவது நிமிடத்திலேயே இந்திய வீராங்கனை லால்ரெம்சியாமி கோலடித்தார். அணியின் 2-ஆவது கோலை ரீத் அடிக்க, 4-ஆவது நிமிடத்திலேயே அணியின் கோல் எண்ணிக்கையை 3 ஆக்கினார் கேப்டன் சலிமா டெடெ.
ஆட்டத்தின் 5-ஆவது நிமிடத்தில் பல்ஜீத் கெளவர் பங்களிப்பால் இந்தியா 5 கோல்களை எட்டியது. பின்னர் சேத்னாவும், ரீத்தும் வரிசையாக 6-ஆவது நிமிடத்தில் தலா ஒரு கோலடித்தனர். மும்தாஸ் 8-ஆவது நிமிடத்திலும், லால்ரெம்சியாமி 10-ஆவது நிமிடத்திலும் கோல்கள் அடிக்க, முதல் பாதியின் முடிவில் இந்தியா 9-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
பின்னர் தொடங்கிய ஆட்டத்தின் 2-ஆவது பாதியிலும் இந்தியாவின் ஆதிக்கமே தொடர்ந்தது. மும்தாஸ் 11, 12, 15-ஆவது நிமிடங்களிலும், சலிமா 13-ஆவது நிமிடத்திலும், சேத்னா 14, 15-ஆவது நிமிடங்களிலும் என இந்திய வீராங்கனைகள் கோல் மழை பொழிந்தனர். இறுதியாக ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் இந்தியாவின் இஷிகா செளதரி கோலடிக்க இந்தியா, 16-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்திய அணி தரப்பில் கோல் கீப்பர் தவிர அனைத்து வீராங்கனைகளுமே கோலடித்தது குறிப்பிடத்தக்கது.

செளரவ் செளதரிக்கு தங்கம்


யூத் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 10 மீ ஏர் ரைஃபிள் போட்டியில் இந்தியாவின் செளரவ் செளதரி தங்கம் வென்றார். 
இறுதிச்சுற்றில் அவர் 244.2 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்க, தென் கொரியாவின் சன் யன்ஹோ 236.7 புள்ளிகளுடன் வெள்ளியும், ஸ்விட்சர்லாந்தின் சோலரி ஜேசன் 215.6 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/11/w600X390/olympic-archana.jpg காலிறுதி ஆட்டத்தில் வெற்றிபெற்ற பிறகு நிங் ஜிங்குடன் அர்ச்சனா. http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/11/யூத்-ஒலிம்பிக்-டேபிள்-டென்னிஸ்-அரையிறுதியில்-அர்ச்சனா-தோல்வி-3017688.html
3017687 விளையாட்டு செய்திகள் ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்: வெற்றியை நோக்கி பாக். DIN DIN Thursday, October 11, 2018 12:58 AM +0530
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி வாய்ப்பை நெருங்கியுள்ளது.
துபையில் நடைபெறும் இப்போட்டியில் 462 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை ஆடி வரும் ஆஸ்திரேலியா, 4-ஆம் நாளான புதன்கிழமை முடிவில் 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களே எடுத்துள்ளது. 
கடைசி நாளான வியாழக்கிழமை ஆட்டத்தில் அந்த அணி 7 விக்கெட்டுகளைக் கொண்டு 326 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. அந்த அணி விக்கெட்டுகளை இழக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் வெல்லும். ஆட்டநேர முடிவு வரை விக்கெட்டை தக்கவைக்கும் பட்சத்தில் ஆட்டம் டிரா ஆகும்.
தற்போது ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா 50, டிராவிஸ் ஹெட் 34 ரன்களுடன் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் 3 விக்கெட்டுகளையும் முகமது அப்பாúஸ சாய்த்துள்ளார்.
முன்னதாக கடந்த 7-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 164.2 ஓவர்களில் 482 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 83.3 ஓவர்களில் 202 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 280 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான், தனது 2-ஆவது இன்னிங்ஸில் 57.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. அதைத் தொடர்ந்து 462 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி ஆடி வருகிறது.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/11/w600X390/pak.jpg ஷான் மார்ஷ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் முகமது அப்பாஸ். http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/11/ஆஸிக்கு-எதிரான-டெஸ்ட்-வெற்றியை-நோக்கி-பாக்-3017687.html
3017686 விளையாட்டு செய்திகள் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள்: ஹர்விந்தர், நாராயணுக்கு தங்கம் DIN DIN Thursday, October 11, 2018 12:57 AM +0530
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வில் வித்தைப் பிரிவில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங்கும், 100 மீ ஓட்டத்தில் நாராயண் தாக்குரும் தங்கப் பதக்கம் வென்றனர். இந்தோனேஷியாவில் நடைபெறும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் தனிநபர் ரீகர்வ் வில் வித்தைப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இதில் டபிள்யூ2/எஸ்டி பிரிவு மாற்றுத்
திறனாளிகளுக்கான இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங் 6-0 என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவின் ஜாவ் லிக்ஸை வீழ்த்தி தங்கம் வென்றார்.
தடகளம்
தடகள போட்டிகள் பிரிவில் ஆடவருக்கான 100 மீ ஓட்டத்தில் டி35 பிரிவில் இந்தியாவின் நாராயண் தாக்குர் 14.02 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றார். சவூதி அரேபியாவின் அகமது அதாவி 14. 40 விநாடிகளில் வந்து வெள்ளி வென்றார்.
ஆடவருக்கான வட்டு எறிதலில் இந்தியாவின் மோனு கங்காஸ் எஃப் 11 பிரிவில், தனது 3-ஆவது முயற்சியில் 35. 89 மீ தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். அப்பிரிவில் ஈரானின் ஒலாட் மாதி 42. 37 மீ தூரம் எறிந்து ஆசிய பாரா சாதனையுடன் முதலிடம் பிடித்தார்.
இதேபோல், ஆடவருக்கான குண்டு எறிதலில் எஃப் 46 பிரிவில் இந்தியாவின் முகமது யாசர் 14.22 மீ தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். அதே பிரிவில் சீனாவின் வெய் என்லாங் 15.67 மீ தூரம் எறிந்து ஆசிய பாரா சாதனையுடன் தங்கம் வென்றார். கஜகஸ்தானின் மன்சுர்பயேவ் ரவில் 14. 66 மீ தூரம் எறிந்து வெள்ளியை கைப்பற்றினார்.
ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் டி42/டி61/டி63 பிரிவில் இந்தியாவின் விஜய் குமார் 5.05 மீ நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். இப்பிரிவில் இலங்கையின் சரிதா நிர்மலா புத்திகா 5.22 மீ தாண்டி தங்கம் தட்டிச் சென்றார். 
செஸ்
செஸ் போட்டியில் மகளிருக்கான தனி நபர் பிரிவில் இந்தியாவின் காணிக்கை இருதயராஜ் ஜெனிதா ஆன்டோ வெள்ளிப் பதக்கம் வென்றார். மகளிருக்கான அணிகள் பி1 பிரிவில் இந்தியாவின் காணிக்கை இருதயராஜ் ஜெனிதா ஆன்டோ, ராஜு பிரேமா கனிஷ்ரி இணையும், 5-பி1/பி3 பிரிவில் சக்ரவர்த்தி மேகா, கவார் திஜன் புனாராம், பாண்டே மிருனாளி பிரகாஷ் ஆகியோர் அடங்கிய குழுவும் வெண்கலப் பதக்கம் வென்றன.
பளுதூக்குதல்
ஆடவருக்கான பளுதூக்குதல் போட்டியில் 80 கிலோ பிரிவில் இந்தியாவின் சுதிர் 192 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.
டேபிள் டென்னிஸ்
மகளிர் இரட்டையர் டேபிள் டென்னிஸில் டிடி3-5 பிரிவில் இந்தியாவின் பவிநாபன் படேல்-சோனால்பென் படேல் இணை தனது இறுதிச்சுற்றில் 4-11, 12-14 என்ற செட்களில் 
இந்தோனேஷியாவின் அசாயுத் தரரத்-பட்டார்வடி வராரிடாம்ரோங்குல் ஜோடியிடம் தோற்று வெற்றியை கைப்பற்றியது.
ஆசிய பாராவில் அதிகபட்சம்...
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் புதன்கிழமை மட்டும் இந்தியா 9 பதக்கங்கள் வென்ற நிலையில், மொத்தமாக 7 தங்கம், 13 வெள்ளி, 17 வெண்கலம் என 37 பதக்கங்களுடன் 7-ஆவது இடத்தில் உள்ளது. இது, ஆசிய பாரா விளையாட்டு போட்டி வரலாற்றில் இந்தியாவின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாகும். சீனா 101 தங்கம், 49 வெள்ளி, 39 வெண்கலம் என 189 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/11/w600X390/para-singh.jpg வில் வித்தையில் தங்கம் வென்ற ஹர்விந்தர் சிங். http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/11/ஆசிய-பாரா-விளையாட்டு-போட்டிகள்-ஹர்விந்தர்-நாராயணுக்கு-தங்கம்-3017686.html
3017685 விளையாட்டு செய்திகள் துளிகள்... DIN DIN Thursday, October 11, 2018 12:55 AM +0530 டி20, டி10 உள்ளிட்ட லீக் கிரிக்கெட் போட்டிகளை எதிர்காலத்தில் எவ்வாறு கட்டுப்படுத்துவது என ஐசிசி கலந்தாலோசிக்கவுள்ளது.

இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையே பகலிரவாக நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டம் மழை காரணமாக தாமதமானதால் முடிவின்றி கைவிடப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச, பேட் செய்த இங்கிலாந்து 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்தது.

முன்னாள் தடகள வீரர் உசைன் போல்ட், சிட்னியில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள மகார்தர் செளத்வெஸ்ட் யுனைடெட் அணிக்கு எதிரான நட்புரீதியிலான கால்பந்தாட்டத்தில் சென்ட்ரல் கோஸ்ட் மெரைனர்ஸ் அணியின் மூலமாக முதல் முறையாக கால்பந்து விளையாட்டில் களமிறங்குகிறார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை, பிரையன் லாரா உள்ளிட்டோர் இருந்தபோது கூட மேற்கிந்தியத் தீவுகளால் வெல்ல இயலவில்லை என்று அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் கூறினார்.


இந்தியா-சீனா கால்பந்து அணிகள் மோதும் நட்புரீதியிலான கால்பந்தாட்டம் வரும் சனிக்கிழமை சீனாவில் நடைபெறுகிறது.

ஐஎஸ்எல் புதிய அட்டவணையின்படி, பெங்களூரு அணி வரும் 31-ஆம் தேதி கொல்கத்தாவில் அட்லெடிகோ கொல்கத்தாவை சந்திக்கிறது. பிறகு, டிசம்பர் 13-ஆம் தேதி தனது சொந்த மண்ணில் ஸ்ரீ கண்டீவரா மைதானத்தில் அதே அணியுடன் மோதுகிறது.

]]>
http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/11/துளிகள்-3017685.html
3017684 விளையாட்டு செய்திகள் உலகக் கோப்பை ஹாக்கி: சுனில் விலகல் DIN DIN Thursday, October 11, 2018 12:52 AM +0530
உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணியில் இருந்து, மூத்த வீரரான எஸ்.வி. சுனில் முழங்கால் காயம் காரணமாக விலகியுள்ளார். இது இந்திய அணிக்கான பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் இந்திய அணி பயிற்சி முகாமில் கலந்துகொண்டுள்ள நிலையில், அங்கு சுனிலுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இம்மாத இறுதியில் மஸ்கட்டில் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான அணியிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணிக்காக சர்வதேச அளவில் 200-க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ள சுனில், முன்களத்தில் ஆகாஷ்தீப்புடன் சேர்ந்து அணியின் தாக்குதல் ஆட்டத்தை வழிநடத்தும் முக்கிய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
மைதானம் திறப்பு: இதனிடையே, உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெறவுள்ள கலிங்கா மைதானம் மறுசீரமைக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/11/w600X390/sunil.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/11/உலகக்-கோப்பை-ஹாக்கி-சுனில்-விலகல்-3017684.html
3017683 விளையாட்டு செய்திகள் ஷாங்காய் மாஸ்டர்ஸ்: 4-ஆவது சுற்றில் ஃபெடரர் DIN DIN Thursday, October 11, 2018 12:52 AM +0530
சீனாவில் நடைபெறும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னதாக அவர் தனது 3-ஆவது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவை 6-4, 4-6, 6-4 என்ற செட்களில் வீழ்த்தினார். இதையடுத்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஃபெடரர், ஸ்பெயினின் ராபர்டோ பெளதிஸ்டா அகுட்டை எதிர்கொள்கிறார்.
முன்னதாக பெளதிஸ்டா 3-6, 6-4, 6-1 என்ற செட்களில் அமெரிக்காவின் மெக்கென்ஸி மெக்டொனால்டை வென்றிருந்தார். இதேபோல் ஜெர்மனியின் அலெக்ஸாண்ட் ஸ்வெரேவ் 7-5, 6-4 என்ற செட்களில் ஜியார்ஜியாவின் நிகோலஸ் பாசிலாஷ்விலியை வீழ்த்தினார்.
ஆர்ஜெண்டீனாவின் ஜுவான் மார்ட்டின் டெல்போட்ரோ 7-5, 7-6(9/7) என்ற செட்களில் பிரான்ஸின் ரிச்சர்டு காஸ்கட்டை வென்றார். தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் 6-3, 6-2 என்ற செட்களில் கஜகஸ்தானின் மிகைல் குகுஷ்கிணை சாய்த்தார்.
இந்திய ஜோடி தோல்வி: ஷாங்காய் மாஸ்டர்ஸின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திவிஜ் சரண்-நியூஸிலாந்தின் ஆர்டெம் சிடக் ஜோடி 3-ஆவது சுற்றிலும், இந்தியாவின் ரோஹண் போபண்ணா-பிரான்ஸின் எட்வர்ட் ரோஜர் வாùஸலின் ஜோடி 2-ஆவது சுற்றிலும் தோற்றன.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/11/w600X390/fed.jpg டேனில் மெத்வதேவுக்கு பந்தை திருப்பும் ஃபெடரர். http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/11/ஷாங்காய்-மாஸ்டர்ஸ்-4-ஆவது-சுற்றில்-ஃபெடரர்-3017683.html
3017682 விளையாட்டு செய்திகள் ஐஎஸ்எல்: இடமாற்றம் DIN DIN Thursday, October 11, 2018 12:51 AM +0530
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்தாட்டப் போட்டியில், பெங்களூரு எஃப்சி அணி தனது சொந்த மண்ணில் ஆடும் ஆட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக பெங்களூரு அணி வரும் 31-ஆம் தேதி ஸ்ரீ கண்டீவரா மைதானத்தில் அட்லெடிகோ கொல்கத்தா அணியை எதிர்கொள்வதாகவும், அதே அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ள டிசம்பர் 13-ஆம் தேதி கொல்கத்தா செல்வதாகவும் இருந்தது.
இந்நிலையில், கர்நாடக அரசுக்கு கன்னட தின கொண்டாட்டத்துக்காக ஸ்ரீ கண்டீவரா மைதானம் தேவைப்பட்டதை அடுத்து, ஆட்டத் தேதியில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய அட்டவணையின்படி, பெங்களூரு அணி வரும் 31-ஆம் தேதி கொல்கத்தாவில் அட்லெடிகோ கொல்கத்தாவை சந்திக்கிறது. பிறகு, டிசம்பர் 13-ஆம் தேதி தனது சொந்த மண்ணில் ஸ்ரீ கண்டீவரா மைதானத்தில் அதே அணியுடன் மோதுகிறது.
 

]]>
http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/11/ஐஎஸ்எல்-இடமாற்றம்-3017682.html
3017681 விளையாட்டு செய்திகள் சுல்தான் ஜோஹர் கோப்பை: அரையிறுதியில் இந்தியா DIN DIN Thursday, October 11, 2018 12:51 AM +0530
சுல்தான் ஜோஹர் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி 5-4 என்ற கோல் கணக்கில் நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
மலேசியாவில் நடைபெறும் இப்போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் 5-ஆவது நிமிடத்திலேயே அணியின் கோல் கணக்கை, ஃபீல்டு கோல் மூலம் தொடங்கினார் குர்சாஹிப்ஜித் சிங். அதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 11, 14, 15-ஆவது நிமிடங்களில் முறையே ஹஸ்பிரீத் சிங், மன்தீப் மோர், விஷ்ணுகாந்த் சிங் ஆகியோர் கோலடித்தனர்.
இவ்வாறு ஆக்ரோஷமாக ஆடிய இந்தியா, தனது தடுப்பாட்டத்தில் பின்னடைவைச் சந்தித்தது. இதனால் 18-ஆவது நிமிடத்தில் பெனால்டி ஸ்ட்ரோக் மூலமாக ஆஸ்திரேலியாவின் கோல் கணக்கை தொடங்கினார் டேமன் ஸ்டெஃபன்ஸ். அடுத்து 35-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் மூலமாக 2-4 என முன்னேறியது ஆஸ்திரேலியா.
43-ஆவது நிமிடத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. இந்தியாவின் சார்பில் சிலானந்த் லக்ரா அடித்த கோலால் இந்தியா 5-3 என முன்னிலையில் இருந்தது. கடைசி நேரத்தில் இந்தியாவின் தடுப்பரணை உடைத்த ஆஸ்திரேலியா 59-ஆவது நிமிடத்தில் ஒரு கோலடிக்க, இறுதியில் 5-4 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி கண்டது இந்தியா.
இந்திய ஜூனியர் ஆடவர் அணி வெள்ளிக்கிழமை தனது 5-ஆவது ஆட்டத்தில் பிரிட்டனை எதிர்கொள்கிறது.
 

]]>
http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/11/சுல்தான்-ஜோஹர்-கோப்பை-அரையிறுதியில்-இந்தியா-3017681.html
3017680 விளையாட்டு செய்திகள் மே.இ. தீவுகளுக்கு எதிரான தொடர்: இந்திய ஒருநாள் அணி இன்று அறிவிப்பு DIN DIN Thursday, October 11, 2018 12:51 AM +0530
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வியாழக்கிழமை தேர்வு செய்யப்படுகிறது.
எனினும், இந்த அணி முதல் 3 ஆட்டங்களுக்கானதா, அல்லது ஒட்டுமொத்த தொடருக்குமானதா என தெளிவுபடத் தெரிவிக்கப்படவில்லை. தோனியின் பேட்டிங் ஃபார்ம் மோசமடைந்துள்ள நிலையில், பேட்டிங்கிற்கு பக்கபலமாக ரிஷப் பந்த் தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது. 
ஒட்டுமொத்த தொடருக்கும் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட வாய்ப்பில்லை எனத் தெரியும் நிலையில், அவருக்கான பணிச்சுமையும் முக்கியமான விவகாரமாக கவனத்தில் கொள்ளப்படும். இருப்பினும், தோனிக்கென ஒரு பக்கபலமான பேட்ஸ்மேனை தேர்வு செய்வதே தேர்வாளர்களின் முக்கிய நோக்கமாக இருக்கும் எனத் தெரிகிறது.
தினேஷ் கார்த்திக் ஒரு தேர்வாக உள்ளபோதும், முக்கியமான தருணங்களில் அவரது நிலைத்தன்மை மற்றும் ஆட்டத்திறன் குறித்து அணி நிர்வாகம் கவலை கொண்டுள்ளது. வீரர்களின் வரிசையிலும் மாற்றம் கொண்டுவரப்படலாம் எனத் தெரிகிறது.
காயம் காரணமாக ஒருநாள் போட்டிகளில் இருந்து கேதார் ஜாதவ் வெளியேறுவதால், மிடில் ஆர்டரில் காலியாகும், அந்த இடத்தை அம்பட்டி ராயுடு தக்க வைக்கலாம். விராட் கோலி விளையாட முடிவு செய்தாலும் இதில் மாற்றமிருக்காது எனத் தெரிகிறது.
பந்துவீச்சைப் பொருத்த வரையில், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா அணிக்குத் திரும்பும் நிலையில், ஜடேஜாவும் தனக்கான இடத்தை உறுதி செய்கிறார். எனவே, மணீஷ் பாண்டே அணியிலிருந்து விலக்கப்படலாம் எனத் தெரிகிறது.

]]>
http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/11/மேஇ-தீவுகளுக்கு-எதிரான-தொடர்-இந்திய-ஒருநாள்-அணி-இன்று-அறிவிப்பு-3017680.html
3017666 விளையாட்டு செய்திகள் விஜய் ஹஸாரே தொடரில் களமிறங்குகிறாரா தோனி? DIN DIN Wednesday, October 10, 2018 08:38 PM +0530  

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஜார்கண்ட் அணிக்காக விஜய் ஹஸாரே தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, களத்தில் கோலி, ரோஹித் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு தனது அனுபவம் மூலம் ஆலோசனை வழங்கி உதவி வருகிறார். கோலி மற்றும் ரோஹித் தங்களது கேப்டன் பொறுப்பில் முக்கியமான சில முடிவுகளை தோனியுடன் ஆலோசனை நடத்திய பிறகே எடுக்கின்றனர். அதனால், தோனி அணியின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வீரராக திகழ்கிறார். 

இருப்பினும், கடந்த சில போட்டிகளாகவே பேட்டிங்கில் பெரிதளவு சோபிக்க தோனி தவறி வருகிறார். இந்நிலையில், ஆசியக் கோப்பை முடிவடைந்த பிறகு அவர் விஜய் ஹஸாரே தொடருக்கான ஜார்கண்ட் அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார். இருப்பினும், அவர் லீக் சுற்று போட்டிகளில் களமிறங்கவில்லை. இதையடுத்து, விஜய் ஹஸாரே தொடரில் ஜார்கண்ட் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய பிறகு அந்த அணிக்காக தோனி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நடப்பு ஆண்டில் அவர் இந்திய அணிக்காக 15 ஒருநாள் போட்டிகள் மற்ரும் 7 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அதாவது, வெறும் 22 நாள் மட்டுமே அவர் விளையாடியுள்ளார். இதன்மூலம் குறைந்த போட்டிகளில் விளையாடிய பயிற்சியே இருப்பதால் அவர் விஜய் ஹஸாரே தொடரில் விளையாடுவது அவருக்கு உதவியளிக்கும் வகையில் அமைய வாய்ப்புள்ளது. மேலும், இளைஞர்களுக்கும் அது உதவும் அமையும் என்று கணிக்கப்படுகிறது. 

அதனால், ஜார்கண்ட் அணிக்காக தோனி களமிறங்கும் வாய்ப்பு அதிகமாகவே இருப்பதாக கருதப்படுகிறது. விஜய் ஹஸாரே தொடரின் நாக் அவுட் சுற்றில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா மும்பை அணிக்காக களமிறங்கவுள்ளார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/10/w600X390/crick.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/10/ms-dhoni-likely-to-play-vijay-hazare-knockouts-for-jharkhand-3017666.html
3017662 விளையாட்டு செய்திகள் இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரனதுங்கா மீது பாலியல் குற்றச்சாட்டு: இந்திய விமானப் பணிப் பெண் பேஸ்புக்கில் பதிவு DIN DIN Wednesday, October 10, 2018 07:22 PM +0530  

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரனதுங்கா மீது இந்தியாவைச் சேர்ந்த விமானப் பணிப் பெண் குற்றம்சாட்டியுள்ளார். 

1996-இல் உலகக்கோப்பை வென்ற இலங்கை அணியின் கேப்டன் அர்ஜுனா ரனதுங்கா. இவர், 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5105 ரன்களும், 269 ஒருநாள் போட்டிகளில் 7456 ரன்களும் குவித்திருக்கிறார். இலங்கையில் மிகவும் போற்றக்கூடிய கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான இவர் தற்போது அந்நாட்டின் பெட்ரோலியத் துறை அமைச்சராக இருக்கிறார். 

இவர், இந்தியாவுக்கு வந்திருந்த போது தன் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக விமானப் பணிப் பெண் ஒருவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர், அந்தப் பதிவில் அர்ஜூனா ரனதுங்கா மட்டுமில்லாது பாலியல் ரீதியில் சீண்டிய பல நபர்களை குறிப்பிட்டுள்ளார். 

அவர், அர்ஜூனா ரனதுங்கா குறித்து பதிவிட்டுள்ள பதிவின் சுருக்கம், 

"அர்ஜூனா ரனதுங்கா என் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அப்போது, நான் அவரது காலில் உதைத்து அச்சத்தில் கத்தினேன். இந்தியரிடம் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் தவறாக நடந்துக்கொள்வதால், போலீஸாரிடம் தெரிவிப்பது, பாஸ்போர்ட் ரத்து செய்யப்படுவது என கடுமையான விளைவுகள் குறித்து அவரை மிரட்டினேன். இதையடுத்து, உடனடியாக விடுதி வரவேற்பு அறைக்கு சென்று இதுதொடர்பாக தெரிவித்தேன். அவர்கள், இது உங்களது தனிப்பட்ட விஷயம், எங்களால் உதவி செய்ய முடியாது என்று தெரிவித்தனர்" என்று பதிவிட்டிருக்கிறார். 

பாலிவுட்டில் தொடங்கி தற்போது இந்தியாவின் அனைத்து துறைகளிலும் பரவி வரும் 'மீ டூ' பிரசாரத்தின் நீட்சியாக அர்ஜூனா ரனதுங்கா மீதான இந்தக் குற்றச்சாட்டும் வெளிவந்துள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/10/w600X390/Arjuna_Ranatunga_PTI.jpeg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/10/இலங்கை-முன்னாள்-கேப்டன்-அர்ஜுனா-ரனதுங்கா-மீது-பாலியல்-குற்றச்சாட்டு-இந்திய-விமானப்-பணிப்-பெண்-பேஸ்புக்கில்-பதிவு-3017662.html
3017661 விளையாட்டு செய்திகள் சுல்தான் ஜோஹோர் கோப்பை: ஆஸி.,யை 5-4 என வீழ்த்தியது இந்திய ஜூனியர் ஹாக்கி DIN DIN Wednesday, October 10, 2018 06:53 PM +0530  

சுல்தான் ஜோஹோர் கோப்பை ஜூனியர் ஹாக்கியில் புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 5-4 என வீழ்த்தியது. 

மலேசியாவின் சுல்தான் நகரில் 8-ஆவது சுல்தான் ஜோஹோர் ஹாக்கி கோப்பை நடைபெற்று வருகிறது. இதில், இந்திய ஜூனியர் ஆடவர் அணி தனது முதல் போட்டியில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. 

இதில், இந்திய அணி போட்டியின் முதல் கால்பகுதி ஆட்டத்திலேயே தனது ஆதிக்கத்தை செலுத்தியது. போட்டியின் 5-ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் குர்சஹிப்ஜித் சிங் முதல் கோலை அடித்தார். அதன்பிறகு, ஹஸ்பிரீத் சிங், மன்தீப் மோர் மற்றும் விஷ்ணுகாந்த் சிங் ஆகியோர் முறையே 11, 14 மற்றும் 15 ஆகிய நிமிடங்களில் கோல் அடித்தனர். இதனால், முதல் கால்பகுதி ஆட்டத்தில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை வகித்தது. இது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. 

இருப்பினும், 2-ஆவது கால்பகுதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் தடுப்பாட்டத்தில் சற்று சொதப்ப ஆஸ்திரேலிய அணி எழுச்சி பெற தொடங்கியது. அதன் விளைவாக அந்த அணி 18-ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோலை அடித்தது. இதையடுத்து, 35-ஆவது நிமிடத்தில் அந்த அணி 2-ஆவது கோல் அடித்து 2-4 என இந்திய அணியின் கோல் கணக்கை நெருங்க முயன்றது. அந்த அணியின் முதல் இரண்டு கோலையும் டேமோன் ஸ்டீபன்ஸ் என்ற வீரர் அடித்தார்.  

இந்த நிலையில், இந்திய அணியின் ஷிலாநந்த் 43-ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து 5-3 என வலுவான முன்னிலை பெற வைத்தார். அதன்பிறகு, ஆஸ்திரேலிய அணி போட்டி முடியும் வரை இந்திய அணிக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தது. அதற்கு பலனாக போட்டி முடிவதற்கு ஒரு நிமிடத்துக்கு முன் ஒரு கோல் அடித்தது. இருப்பினும், அதன்பிறகு அந்த அணியால் கடைசி நிமிடத்தில் கோல் போட்டு சமமாக்க முடியவில்லை. இதையடுத்து, போட்டியின் முடிவில் இந்திய அணி 5-4 என த்ரில் வெற்றி பெற்றது. 

இந்திய அணி தனது 5-ஆவது போட்டியில் இங்கிலாந்தை வரும் வெள்ளிக்கிழமை எதிர்கொள்கிறது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/10/w600X390/Hockey_PTI.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/10/indian-hockey-colts-beat-australia-5-4-in-sultan-of-johor-cup-3017661.html
3017113 விளையாட்டு செய்திகள் புரோ கபடி லீக்: வெற்றியை தவற விட்டது குஜராத் DIN DIN Wednesday, October 10, 2018 02:38 AM +0530
புரோ கபடி லீக் போட்டியின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை இரவு குஜராத்-தில்லி அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டம் 32-32 என்ற புள்ளிக்கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் லீக் போட்டிகள் தொடங்கி நடைபெறும் நிலையில் குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ், தபாங் தில்லி அணிகள் மோதின.
விஷால் மானே, ரவீந்தர் பஹால், மேராஜ் ஷேய்க், ஜோகிந்தர் நர்வால் ஆகிய அனுபவ வீரர்களுடன் தில்லியும், சுனில் குமார் தலைமையில் முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட குஜராத் அணியும் மோதியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. ஆட்டம் தொடங்கிய 6-ஆவது நிமிடத்திலேயே குஜராத் ஆல் அவுட்டானது. எனினும் தில்லி அணியின் துடிப்பான ஆட்டத்தை சமாளித்து முதல் பாதி நிறைவில் 17-12 என குஜராத் முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதியில் தில்லி அணியின் ரைடர்கள் அடிக்கடி குஜராத் பகுதியில் ஊடுருவி புள்ளிகளை குவித்தனர். 
சந்திரன் ரஞ்சித் இறுதிக் கட்டத்தில் சிறப்பாக ஆடி 2 புள்ளிகளை குவித்து சமநிலை ஏற்படச் செய்தார். தொடர்ந்து பெற்ற முன்னிலையை தக்க வைக்க முடியாமல் குஜராத் அணி திணறியது.
இறுதியில் 32-32 என்ற புள்ளிக்கணக்கில் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதனால் எளிதாக பெற வேண்டிய வெற்றியை கோட்டை விட்டது குஜராத். 
தமிழ்த் தலைவாஸ் தோல்வி:
தெலுகு டைட்டன்ஸ் மற்றும் தமிழ்த் தலைவாஸ் அணிகள் இடையே நடைபெற்ற பிகேஎல் போட்டியில் 28-33 என்ற புள்ளிக் கணக்கில் தலைவாஸ் தோல்வியடைந்தது.
சென்னை உள்விளையாட்டரங்கில் இரண்டாவதாக நடைபெற்ற ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர ரைடர் ராகுல் செளத்ரி மற்றும் ஈரான் வீரர் மொசென் மகசெளதுலு ஆகியோரின் அபார ஆட்டத்தை தமிழ்த் தலைவாஸ் வீரர்களால் சமாளிக்க முடியவில்லை. ராகுல் 9 புள்ளிகளையும், மொசென் 3 ரைட் புள்ளிகள், உள்பட 7 புள்ளிகளைக் குவித்தார்.
தலைவாஸ் அணியில் கேப்டன் அஜய் தாக்கூர் மட்டுமே ஒரளவுக்கு ஆடினார். நட்சத்திர வீரர்களான மஞ்சித் சில்லார், ஜஸ்வீர் சிங் ஆகியோரது ஆட்டம் சோபிக்கவில்லை. முதல் பாதி நிறைவில் 17-11 என டைட்டன்ஸ் முன்னிலை பெற்றிருந்தது. அந்த முன்னிலையை இறுதி வரை அவர்கள் தக்க வைத்துக் கொண்டதால் 6-ஆவது சீசனில் முதல் வெற்றியைப் பெற்றனர். தமிழ்த் தலைவாஸ் அணி பெறும் இரண்டாவது தோல்வி இதுவாகும்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/10/w600X390/kabadi.jpg வெற்றி மகிழ்ச்சியில் தெலுகு டைட்டன்ஸ் வீரர்கள். http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/10/புரோ-கபடி-லீக்-வெற்றியை-தவற-விட்டது-குஜராத்-3017113.html
3017041 விளையாட்டு செய்திகள் யூத் ஒலிம்பிக்: இந்தியாவுக்கு 2 தங்கம் DIN DIN Wednesday, October 10, 2018 01:11 AM +0530 ஆர்ஜென்டீனாவில் நடைபெறும் யூத் ஒலிம்பிக் போட்டியில் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்றார் 15 வயது வீரரான லால்ரின்னுங்கா ஜெரேமி.
கடந்த 6-ஆம் தேதி 3-ஆவது யூத் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின. இந்தியா சார்பில் 48 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. ஏற்கெனவே துப்பாக்கி சுடுதலில் துஷார் மானே, மெஹுலி கோஷ், ஜூடோவில் தபாபி தேவி, ஆகியோர் 3 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
இதற்கிடையே திங்கள்கிழமை நள்ளிரவு பளுதூக்குதலில் 62 கிலோ எடைப்பிரிவில் லால்ரின்னுங்கா ஜெரேமி மொத்தம் 274 கிலோ தூக்கி தங்கம் வென்றார். அவர் மிசோரம் தலைநகர் அய்ஸ்வாலைச் சேர்ந்த 15 வயது வீரரான ஜெரேமி 124 கிலோ + 150 கிலோ என 274 கிலோ தூக்கி தங்கம் வென்றார். துருக்கி, கொலம்பியா முறையே வெள்ளி, வெண்கலம் வென்றன.
இந்திய பளுதூக்குதலில் அவர் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகியுள்ளார். ஏற்கெனவே ஆசிய யூத் போட்டியில் வெள்ளி, ஜூனியர் பிரிவில் வெண்கலம் வென்றார்.
டேபிள் டென்னிஸ் பிரிவில் மானவ் தாக்கர், அர்ச்சனா காமத் தத்தமது ஆட்டங்களில் வென்றனர். ஹாக்கியில் இந்திய அணி 9-1 என ஆஸ்திரியாவை வீழ்த்தியது. பாட்மிண்டனில் இளம் வீரர் லக்ஷயா சென் 2-0 என நேர் செட்களில் உக்ரைனின் போஸ்னிக்கை வென்றார்.

துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றார் மானுபாக்கர்


யூத் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் இளம் வீராங்கனை மானு பாக்கர் செவ்வாய்க்கிழமை தங்கம் வென்று சாதனை படைத்தார்.
16 வயது மானு 236.5 புள்ளிகளை குவித்து துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் முதல் தங்கத்தை வென்றார். ரஷியா வெள்ளி, வெண்கலத்தை வென்றது.
உலகக் கோப்பை, காமன்வெல்த் போட்டிகளில் ஏற்கெனவே மானு பாக்கர் தங்கம் வென்றுள்ளார். எனினும் ஜாகர்த்தா ஆசியப் போட்டி, உலக சாம்பியன் போட்டிகளில் மானு பாக்கர் பதக்கம் வெல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தார். ஹரியாணாவின் ஜஜ்ஜார் பகுதியைச் சேர்ந்த மானு தற்போது தங்கம் வென்று தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார். இது இந்தியா பெறும் இரண்டாவது தங்கமாகும்.
ஹாக்கி ஆடவர் பிரிவில் இந்தியா 7-1 என்ற கோல் கணக்கில் கென்யாவை சாய்த்தது. மூன்று வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா அடுத்து வியாழக்கிழமை ஆஸி.அணியுடன் மோதுகிறது.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/10/w600X390/Jeremy-Lalrinnunga-gold1.jpg பளு தூக்குதலில் தங்கம் வென்ற ஜெரேமி லால்ரின்னுங்கா . http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/10/யூத்-ஒலிம்பிக்-இந்தியாவுக்கு-2-தங்கம்-3017041.html
3017040 விளையாட்டு செய்திகள் ரொனால்டோவை மாற்றுவது எளிதல்ல: ஜுவென்டஸ் நிர்வாகம் DIN DIN Wednesday, October 10, 2018 01:10 AM +0530
நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை மாற்றுவது அத்துணை எளிதல்ல என ஜுவென்டஸ் கிளப் விளையாட்டு இயக்குநர் பேபியோ பராட்டிசி தெரிவித்துள்ளார்.
ரியல் மாட்ரிட் அணியில் விளையாடி வந்த ரொனால்டோ (33) கடந்த கோடைக்காலத்தில் 115 மில்லியன் டாலர்களுக்கு ஜுவென்டஸ் அணியில் இணைந்தார். இதற்கிடைய ஸ்பெயின் லீக் போட்டியான லா லிகாவில் ரியல் மாட்ரிட் 3 தோல்விகள், 1 டிராவுடன் நான்காம் இடத்திலேயே உள்ளது. 
இந்நிலையில் ஜுவென்டஸ் அணி ரொனால்டோவின் சிறப்பான ஆட்டத்தால் இத்தாலி சீரி ஏ லீக் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறது. இந்நிலையில் விளையாட்டு இயக்குநர் பராட்டிசி கூறியுள்ளதாவது:
எக்காரணத்தைக் கொண்டும் ரொனால்டோவை விட்டுத் தர மாட்டோம். எங்கள் அணியில் சேர தொடக்கம் முதலே அவர் ஆர்வம் காண்பித்தார். இது சாதகமாக அமைந்தது. 
இதற்கிடையே ஜுவென்டஸ் அணியில் இருந்து மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு சென்ற உலகக் கோப்பை வெற்றி வீரரான பால் போக்பா மீண்டும் எங்கள் அணிக்கு வர வாய்ப்பில்லை என்றார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/10/w600X390/ronaldo.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/10/ரொனால்டோவை-மாற்றுவது-எளிதல்ல-ஜுவென்டஸ்-நிர்வாகம்-3017040.html
3017039 விளையாட்டு செய்திகள் விஜய் ஹஸாரே கோப்பை: மும்பை அணியில் விளையாடுகிறார் ரோஹித் சர்மா DIN DIN Wednesday, October 10, 2018 01:09 AM +0530
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய தொடக்க வீரர் ரோஹித் சர்மா விஜய் ஹஸாரே கோப்பை போட்டியில் விளையாடுகிறார்.
மும்பை அணியில் இடம் பெறும் ரோஹித் சர்மா,நாக் அவுட் சுற்று ஆட்டங்களில் விளையாடுகிறார். ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் அவர் பங்கேற்பார் என தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்தார்.
ஷிரேயஸ் ஐயர் கேப்டனாக செயல்படுவார். அண்மையில் முடிவடைந்த ஆசிய கோப்பை போட்டியில் ரோஹித் சிறப்பாக ஆடி இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். 
விஜய் ஹஸாரே கோப்பை ரோஹித்துக்கு உரிய பயிற்சியாக அமையும் எனக் கருதப்படுகிறது.
ஒரு நாள் ஆட்டங்களில் தோனியின் பேட்டிங் சரிவர அமையாத நிலையில் அவரும் விஜய் ஹஸாரே போட்டிகளில் விளையாட வேண்டும் என ஜாம்பவான் கவாஸ்கர் கருத்து தெரிவித்திருந்தார்.
50 ஓவர் ஆட்டங்களில் குறைந்த நேரமே ஆட முடியும், அதே நேரத்தில் 4 நாள் ஆட்டத்தில் பங்கேற்றால் கால்களுக்கு வலிமை, ஓடும் தன்மை போன்றவை கிடைக்கும் என்றார் கவாஸ்கர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/10/w600X390/rohit.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/10/விஜய்-ஹஸாரே-கோப்பை-மும்பை-அணியில்-விளையாடுகிறார்-ரோஹித்-சர்மா-3017039.html
3017038 விளையாட்டு செய்திகள் ஆசிய பாரா போட்டிகள்: ஏக்தா, மணிஷ் நர்வாலுக்கு தங்கம் DIN DIN Wednesday, October 10, 2018 01:08 AM +0530
ஆசிய பாரா போட்டிகளின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை கிளப் த்ரோவில் ஏக்தா பேயனும், 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதலில் மணிஷ் நர்வாலும் தங்கம் வென்றனர். எஃப் 32 பிரிவில் நான்காவது முறையில் 16.02 மீ தூரம் எறிந்து ஏக்தா பேயன் தங்கம் வென்றார். 
கை பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த பிரிவில் போட்டி நடத்தப்படுகிறது. பல்வேறு பாதிப்பு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஜகார்த்தாவில் ஆசிய பாரா போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மோனு கங்காஸ் குண்டு எறிதலிலும், குணசேகரன் 200மீ ஓட்டத்திலும், ஜெயந்தி பெஹரா மகளிர் 200 மீ ஓட்டத்திலும் வெண்கலம் வென்றனர். ஆடவர் துப்பாக்கி சுடுதலில் மணிஷ் தங்கம் வென்றதையடுத்து அதன் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. ஏற்கெனவே ஈட்டி எறிதலில் சந்தீப் செளத்ரி தங்கம் வென்றார். திங்கள்கிழமை 3 தங்கம் உள்பட 11 பதக்கங்களை இந்தியா வென்றிருந்தது.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/10/w600X390/ektha-bhyan.jpg ஆசிய பாரா போட்டி கிளப் த்ரோவில் தங்கம் வென்ற ஏக்தா பேயன். http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/10/ஆசிய-பாரா-போட்டிகள்-ஏக்தா-மணிஷ்-நர்வாலுக்கு-தங்கம்-3017038.html
3017037 விளையாட்டு செய்திகள் புரோ கபடி லீக்: வெற்றியை தவற விட்டது குஜராத் DIN DIN Wednesday, October 10, 2018 01:08 AM +0530
புரோ கபடி லீக் போட்டியின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை இரவு குஜராத்-தில்லி அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டம் 32-32 என்ற புள்ளிக்கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் லீக் போட்டிகள் தொடங்கி நடைபெறும் நிலையில் குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ், தபாங் தில்லி அணிகள் மோதின.
விஷால் மானே, ரவீந்தர் பஹால், மேராஜ் ஷேய்க், ஜோகிந்தர் நர்வால் ஆகிய அனுபவ வீரர்களுடன் தில்லியும், சுனில் குமார் தலைமையில் முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட குஜராத் அணியும் மோதியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. ஆட்டம் தொடங்கிய 6-ஆவது நிமிடத்திலேயே குஜராத் ஆல் அவுட்டானது. எனினும் தில்லி அணியின் துடிப்பான ஆட்டத்தை சமாளித்து முதல் பாதி நிறைவில் 17-12 என குஜராத் முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதியில் தில்லி அணியின் ரைடர்கள் அடிக்கடி குஜராத் பகுதியில் ஊடுருவி புள்ளிகளை குவித்தனர். 
சந்திரன் ரஞ்சித் இறுதிக் கட்டத்தில் சிறப்பாக ஆடி 2 புள்ளிகளை குவித்து சமநிலை ஏற்படச் செய்தார். தொடர்ந்து பெற்ற முன்னிலையை தக்க வைக்க முடியாமல் குஜராத் அணி திணறியது.
இறுதியில் 32-32 என்ற புள்ளிக்கணக்கில் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதனால் எளிதாக பெற வேண்டிய வெற்றியை கோட்டை விட்டது குஜராத்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/10/w600X390/delhi-gujarat.jpg தில்லி வீரரை மடக்க முயலும் குஜராத் அணியினர். http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/10/புரோ-கபடி-லீக்-வெற்றியை-தவற-விட்டது-குஜராத்-3017037.html
3017036 விளையாட்டு செய்திகள் ஃபார்மில் தான் உள்ளேன்: பெடரர் DIN DIN Wednesday, October 10, 2018 01:07 AM +0530
நான் இன்னும் ஃபார்மில் தான் உள்ளேன் என சக வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் உலகின் இரண்டாம் நிலை வீரர் ரோஜர் பெடரர் (37).
சீனாவின் ஷாங்காய் நகரில் ஏடிபி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உலகின் முதல்நிலை வீரர்களானபெடரர், ஜோகோவிச் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மூத்த வீரரான பெடரர் கூறியதாவது:
நான் எனது பயிற்சி அட்டவணையை சரியாக பின்பற்றி வருகிறேன். கடந்த 2017-ம் ஆண்டு முழுவதும் களிமண் தரை போட்டிகளில் பங்கேற்கவில்லை.
வயதானாலும் நான் இன்னும் ஃபார்மில் தான் உள்ளேன் என்பதை சக வீரர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் எனது ஆட்டம் நீண்ட காலம் தொடரும் என்றார்.
ஷாங்காய் மாஸ்டர்ஸ் போட்டியின் நடப்பு சாம்பியனான பெடரருக்கு, சக வீரர்களான ஜோகோவிச், டெல்பொட்ரோ ஆகியோர் கடும் சவாலை அளிக்கலாம். காயம் காரணமாக நடால் விலகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோகோவிச் வெற்றி: இதற்கிடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாஸ்டர்ஸ் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் சார்டியை வீழ்த்தினார். டொமினிக் தீம் 4-6, 7-6, 6-7 என்ற செட்கணக்கில் எபிடெனிடம் தோல்வியடைந்தார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/10/w600X390/Roger-Federer.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/10/ஃபார்மில்-தான்-உள்ளேன்-பெடரர்-3017036.html
3017035 விளையாட்டு செய்திகள் அகில இந்திய ரயில்வே செஸ்: சென்னை ஐ.சி.எப். சாம்பியன் DIN DIN Wednesday, October 10, 2018 01:07 AM +0530 திருச்சியில் நடைபெற்று வந்த 31 ஆவது அகில இந்திய ரயில்வே செஸ் போட்டியில் சென்னை ஐ.சி.எப். அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
அகில இந்திய அளவில் ரயில்வேயின் 12 மண்டலங்கள், 2 உற்பத்திப் பிரிவு அணிகள் பங்கேற்ற 31 ஆவது அகில இந்திய அளவிலான செஸ் போட்டி தெற்கு ரயில்வே சார்பில் திருச்சியிலுள்ள ரயில்வே மண்டலப் பயிற்சி மையத்தில் கடந்த 3 ஆம் தேதி தொடங்கியது. குழு மற்றும் தனிப் பிரிவில் நடத்தப்பட்ட போட்டிகளில் 12 மண்டலங்கள், 2 உற்பத்திப் பிரிவுகள் என 14 அணிகளிலிருந்து 87 பேர் விளையாடினர். இவர்களில் 5 கிராண்ட் மாஸ்டர்கள், 18 சர்வதேச வீரர்களும் அடங்குவர். தெற்கு ரயில்வே பொது மேலாளர்ஆர்.கே. குல்சிரேஷ்டா போட்டிகளைத் தொடக்கி வைத்தார்.
குழுப் போட்டியில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை அணி விளையாடிய 6 போட்டிகளில் 4 -இல் வென்றும், 2 போட்டிகளை சமன் செய்து 10 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றது. இதுபோல தனி நபர் பிரிவில், இந்த அணியின் தீபன் சக்கரவர்த்தி 6.5 புள்ளி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார்.
குழுப் பிரிவில் அணிகள் பெற்ற இடங்கள், அணிகள் பெற்ற புள்ளிகள் என்ற அடிப்படையில் விவரம் :
சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை - 10 புள்ளிகள், கிழக்கு ரயில்வே - 9, மேற்கு ரயில்வே- 8, தென் மேற்கு ரயில்வே- 8, வடக்கு ரயில்வே- 7, தென்மத்திய ரயில்வே- 8, தெற்கு ரயில்வே- 6, தென் கிழக்கு ரயில்வே- 6, மத்திய ரயில்வே- 5, தென்கிழக்கு மத்திய ரயில்வே-5, வடமேற்கு ரயில்வே-5, கொல்கத்தா மெட்ரோ- 5, மேற்கு மத்திய ரயில்வே- 4, ரயில் பெட்டித் தொழிற்சாலை -1.
தனிநபர் பிரிவில் முதல் 10 இடங்களைப் பெற்ற வீரர்கள், புள்ளிகள் அடிப்படையில் விவரம்:
ஜெ. தீபன் சக்கரவர்த்தி ( ஐ.சி.எப்)- 6.5, திவாரி அருண் ( மேற்கு ரயில்வே), ராய் சவுத்ரி சப்தரிஷி ( மெட்ரோ), சி.ஆர்.ஜி. கிருஷ்ணா ( தென்மேற்கு ரயில்வே)- தலா 6 புள்ளிகள், பி. ஷியாம் நிகில், பி. கார்த்திகேயன் ( ஐ.சி.எப்), கே. ரத்னாகரன் (தெற்கு ரயில்வே), பி.டி.எஸ். கிரிநாத் ( தென் மத்திய ரயில்வே), ஹூசைன் ஹிமால் ( மேற்கு ரயில்வே), எம்.எஸ்.தேஜ்குமார் ( தென் மேற்குரயில்வே)- தலா 5.5 புள்ளிகள். இவர்கள் அனைவரும் டிசம்பர் மாதம் நடைபெறும் தேசிய ரயில்வே போட்டியில் ரயில்வே சார்பில் பங்கேற்பர்.
செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற விழாவில், தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் பி.கே. மிஷ்ரா பங்கேற்று வென்ற அணிகளுக்கு கோப்பை வழங்கினார். விழாவில், தெற்கு ரயில்வே தலைமை வணிக மேலாளர் ( பயணிகள் சேவை) ஒய். நாகேந்திரபாபு, கோட்ட ரயில்வே மேலாளர் பி. உதயகுமார் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/10/w600X390/icf.jpg போட்டியில் வென்ற சென்னை ஐ.சி.எப். அணிக்கு கோப்பையை வழங்குகிறார் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் பி.கே. மிஷ்ரா.  http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/10/அகில-இந்திய-ரயில்வே-செஸ்-சென்னை-ஐசிஎப்-சாம்பியன்-3017035.html
3017034 விளையாட்டு செய்திகள் ஐஎஸ்எல் 2018: ஜாம்ஷெட்பூர் அணி வீரர் வயது சர்ச்சை குறித்து விசாரணை DIN DIN Wednesday, October 10, 2018 01:05 AM +0530
ஐஎஸ்எல் கால்பந்து லீக் 5-ஆவது சீசன் அணிகளில் ஒன்றான ஜாம்ஷெட்பூர் கிளப்பில் வீரர் கெளரவ் முகியின் வயது சர்ச்சை குறித்து விசாரணை நடத்த ஏஐஎஃப்எஃப் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கெளரவ் முகி கோலடித்தார். இதன் மூலம் ஐஎஸ்எல் போட்டியிலேயே 16 வயதில் கோலடித்த இளம் வீரர் கெளரவ் என அறிவிக்கப்பட்டது.
அவரது முகத்தில் காணப்பட்ட தடிமனான மீசை, உடல்வாகு காரணமாக வயது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்து. அவரது வயது சர்ச்சை குறித்து உரிய குழுக்கள், ஒழுங்கு நடவடிக்கை குழு போன்றவை விசாரணை நடத்தும். 
அவரது பாஸ்போர்ட்டில் பிறந்த ஆண்டு 2002 எனவும், கடந்த 2015-இல் கெளரவ் அளித்த அறிக்கை ஒன்றில் பிறந்த ஆண்டு 1999 எனவும் மாற்றி மாற்றி குறிப்பிடப்பட்டுளளது. கடந்த 2015 தேசிய சாம்பியன் போட்டியில் வயது பிரச்னையால் அவர் சிக்கிய நிலையில், ஜார்க்கண்ட் சங்கம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏஐஎஃப்எஃப் மத்திய தகவல் பதிவேட்டில் அனைத்து விவரங்களும் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/10/w600X390/gaurav-mukhi.jpg http://www.dinamani.com/sports/sports-news/2018/oct/10/ஐஎஸ்எல்-2018-ஜாம்ஷெட்பூர்-அணி-வீரர்-வயது-சர்ச்சை-குறித்து-விசாரணை-3017034.html