Dinamani - FIFA 2018 - http://www.dinamani.com/sports/football-worldcup-2018/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2961274 விளையாட்டு FIFA 2018 உலகக் கோப்பையில் பங்குபெற்ற ஒவ்வொரு அணிக்கும் கிடைத்த பரிசுத்தொகை எவ்வளவு?  எழில் DIN Monday, July 16, 2018 06:04 PM +0530  

2018 உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு ரூ. 260 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது.

இரண்டாம் இடம்பெற்ற குரோஷியா அணிக்கு ரூ. 192 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இது உங்களுக்குத் தெரிந்த தகவல்தான். எனில், போட்டியில் பங்கேற்ற மற்ற அணிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை எவ்வளவு என்பது உங்களுடைய கேள்வியாக இருந்திருந்தால் அதற்கான விடை இதோ:

இந்தப் போட்டிக்கான பரிசுத்தொகையாக ரூ. 2740 கோடியைச் செலவழித்துள்ளது சர்வதேச கால்பந்துச் சங்கமான ஃபிஃபா.

மூன்றாம் இடம் பெற்ற பெல்ஜியம் அணிக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை - ரூ. 164 கோடி; நான்காம் இடம் பெற்ற இங்கிலாந்து அணிக்கு - ரூ. 151 கோடி.

இதுதவிர 5 முதல் 8 இடங்கள் வரை அடைந்த அணிகளுக்கு அதாவது காலிறுதிக்குத் தகுதி பெற்ற அணிகளுக்குத் தலா ரூ. 110 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ. 440 கோடி செலவாகியுள்ளது. 

9 முதல் 16 இடங்கள் வரை அடைந்த அணிகளுக்கு அதாவது காலிறுதிக்கு முந்தைய சுற்று வரை விளையாடிய அணிகளுக்குத் தலா ரூ. 82 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ. 656 கோடி செலவாகியுள்ளது.

17 முதல் 32 இடங்கள் வரை அடைந்த அணிகளுக்கு அதாவது முதல் சுற்றிலேயே வெளியேறிய 16 அணிகளுக்குத் தலா ரூ. 55 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ. 880 கோடி செலவாகியுள்ளது.

ஆக மொத்தம், போட்டியில் பங்கேற்ற 32 அணிகளுக்கான பரிசுத்தொகையாக ரூ. 2740 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. 

பரிசுத்தொகை பட்டியல்

 ரூ. 260 கோடி - பிரான்ஸ்
 ரூ. 192 கோடி - குரோஷியா
ரூ. 164 கோடி - பெல்ஜியம்
ரூ. 151 கோடி - இங்கிலாந்து
ரூ. 110 கோடி - உருகுவே, பிரேஸில், ரஷியா, ஸ்வீடன் (காலிறுதி)
ரூ. 82 கோடி - போர்ச்சுகல், ஆர்ஜென்டீனா, மெக்ஸிகோ, ஜப்பான், ஸ்பெயின், டென்மார்க், ஸ்விட்சர்லாந்து, கொலம்பியா (காலிறுதிக்கு முந்தைய சுற்று)
ரூ. 55 கோடி - சவுதி அரேபியா, எகிப்து, ஈரான், மொராக்கோ, பெரு, ஆஸ்திரேலியா, நைஜீரியா, ஐஸ்லாந்து, செர்பியா, கோஸ்டா ரிகா, தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி, துனிசியா, பனாமா, செனகல், போலந்து (முதல் சுற்றில் வெளியேறிய நாடுகள்)

]]>
prize money, 2018 World Cup http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/16/w600X390/fifa1xx1.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jul/16/prize-money-revealed-for-each-2018-world-cup-nation-2961274.html
2961232 விளையாட்டு FIFA 2018 பிரான்ஸ் அணி கால்பந்து விளையாட்டை விளையாடவில்லை: தோல்வியடைந்த குரோஷிய அணி வீரர் காட்டம்! எழில் DIN Monday, July 16, 2018 02:06 PM +0530  

பிரான்ஸ்-குரோஷியா அணிகள் இடையிலான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018 இறுதி ஆட்டம் மாஸ்கோ லுஷ்னிக் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு  நடைபெற்றது.

குரோஷியா சேம்சைட் கோல்: 18-ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் பார்வர்ட் கிரைஸ்மேன் ஃப்ரீ கிக் வாய்ப்பு மூலம் அடித்த பந்தை குரோஷிய வீரர் மரியோ மண்ட்ஸுகிக் தனது தலையால் தடுக்க முயன்ற போது, சேம் சைட் கோலானது. இதன் மூலம் பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றது. பின்னர் குரோஷிய அணியின் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியதால் 28-ஆவது நிமிடத்தில் அதன் வீரர் விடா கடத்தி அனுப்பிய பந்தை இவான் பெரிஸிக் அற்புதமாக கோலாக்கினார். இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக 38-ஆவது நிமிடத்தில் குரோஷிய வீரர் புரிந்த தவறால் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை பிசகின்றி கோலாக்கினார் பிரான்ஸ் வீரர் கிரைஸ்மேன். இதனால் முதல் பாதி ஆட்ட நிறைவில் 2-1 என பிரான்ஸ் முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில் குரோஷிய வீரர்களின் ஆட்டம் சோபிக்கவில்லை. பிரான்ஸ் அணி வீரர்கள் தங்கள் ஆதிக்கத்தை பலப்படுத்தியதன் விளைவாக 59-ஆவது நிமிடத்தில் அதன் மிட்பீல்டர் போக்பா கோலடித்தார்.  அதன் தொடர்ச்சியாக 65-ஆவது நிமிடத்தில் ஹெர்ணான்டெஸ் அனுப்பிய பந்தை இளம் வீரர் மாப்பே 25 அடிகள் தூரத்தில் இருந்து அற்புதமாக கோலாக்கினார். 68-ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் கோல்கீப்பர் லோரிஸ் வசம் இருந்த பந்தை பறித்து குரோஷிய பார்வர்ட் மரியோ மண்ட்ஸுகிக் கோலாக்கினார். பின்னர் குரோஷிய வீரர்கள் கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்று பிரான்ஸ் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இந்தத் தோல்வி குறித்து குரோஷிய அணி வீரர் லோவ்ரென் கூறியதாவது:

நாங்கள் சிறப்பாக விளையாடினோம். அவர்களை விடவும் நன்றாக விளையாடினோம். கால்பந்து திறமையை அருமையாக வெளிப்படுத்தினோம். உலகக் கோப்பையை பிரான்ஸ் வெல்லும் என்று சொல்லப்பட்டது. அவர்கள் வென்றுவிட்டார்கள். 

அவர்கள் வேறு வழியைக் கையாண்டார்கள். அவர்கள் கால்பந்து விளையாட்டை விளையாடவில்லை. தங்கள் வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து கோல்கள் அடித்துள்ளார்கள்.

அவர்களுக்கென்ன தனி உத்தி வைத்துள்ளார்கள். அதை நாம் மதிக்க வேண்டும். இந்தப் போட்டியில் எல்லா ஆட்டங்களையும் அப்படித்தான் விளையாடினார்கள்.

பெனால்டி அளித்த முடிவும் மிகவும் கடுமையானது. பெனால்டிக்குப் பிறகு அது நீண்டு போய் 4-1 என வந்து நின்றது. ஆனாலும் நாங்கள் சோர்வடையவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தோம். எனவேதான் குரோஷியாவில் எங்கள் அணி குறித்து எல்லோரும் மிகவும் பெருமைப்படுகிறார்கள் என்றார்.

]]>
Lovren, France, WorldCupFinal http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/16/w600X390/AP7_15_2018_000236A.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jul/16/lovren-blasts-france-they-didnt-play-football-2961232.html
2961228 விளையாட்டு FIFA 2018 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இப்படியொரு பெனால்டியைத் தர மாட்டார்கள்: குரோஷிய அணியின் பயிற்சியாளர் விமரிசனம்! எழில் DIN Monday, July 16, 2018 12:49 PM +0530  

பிரான்ஸ்-குரோஷியா அணிகள் இடையிலான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018 இறுதி ஆட்டம் மாஸ்கோ லுஷ்னிக் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு  நடைபெற்றது.

குரோஷியா சேம்சைட் கோல்: 18-ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் பார்வர்ட் கிரைஸ்மேன் ஃப்ரீ கிக் வாய்ப்பு மூலம் அடித்த பந்தை குரோஷிய வீரர் மரியோ மண்ட்ஸுகிக் தனது தலையால் தடுக்க முயன்ற போது, சேம் சைட் கோலானது. இதன் மூலம் பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றது. பின்னர் குரோஷிய அணியின் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியதால் 28-ஆவது நிமிடத்தில் அதன் வீரர் விடா கடத்தி அனுப்பிய பந்தை இவான் பெரிஸிக் அற்புதமாக கோலாக்கினார். இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக 38-ஆவது நிமிடத்தில் குரோஷிய வீரர் புரிந்த தவறால் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை பிசகின்றி கோலாக்கினார் பிரான்ஸ் வீரர் கிரைஸ்மேன். இதனால் முதல் பாதி ஆட்ட நிறைவில் 2-1 என பிரான்ஸ் முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில் குரோஷிய வீரர்களின் ஆட்டம் சோபிக்கவில்லை. பிரான்ஸ் அணி வீரர்கள் தங்கள் ஆதிக்கத்தை பலப்படுத்தியதன் விளைவாக 59-ஆவது நிமிடத்தில் அதன் மிட்பீல்டர் போக்பா கோலடித்தார்.  அதன் தொடர்ச்சியாக 65-ஆவது நிமிடத்தில் ஹெர்ணான்டெஸ் அனுப்பிய பந்தை இளம் வீரர் மாப்பே 25 அடிகள் தூரத்தில் இருந்து அற்புதமாக கோலாக்கினார். 68-ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் கோல்கீப்பர் லோரிஸ் வசம் இருந்த பந்தை பறித்து குரோஷிய பார்வர்ட் மரியோ மண்ட்ஸுகிக் கோலாக்கினார். பின்னர் குரோஷிய வீரர்கள் கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்று பிரான்ஸ் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தபோது பிரான்ஸ் அணிக்கு பெனால்டி கிடைத்தது. குரோஷிய வீரரின் கையில் பந்து பட்டதால் பெனால்டி தரப்பட்டது. இதுகுறித்து குரோஷியப் பயிற்சியாளர் டலிக் விமரிசனம் செய்துள்ளார். அவர் கூறியதாவது:

இரண்டாவது கோலை பெனால்டி மூலமாக அடித்தது பிரான்ஸ் அணி. அதைப் பற்றி நான் ஒரு வாக்கியத்தில் கூறுகிறேன் - உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இப்படியொரு பெனால்டியைத் தரமாட்டார்கள். இப்படியொரு போட்டியில் இப்படிப்பட்ட பெனால்டிக்கு வேலையில்லை. நாங்கள் நன்றாக விளையாடினாலும் பெனால்டி எங்களைக் கீழே தள்ளிவிட்டது. அதற்குப் பிறகு மீண்டுவருவது கடினமாகிவிட்டது. 

உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று நாங்கள் ஆர்வமாக இருந்தோம். ஆனால் கால்பந்து விளையாட்டின் மகத்துவம் இதுதான். பிரான்ஸ் அணி எங்களை ஆச்சர்யப்படுத்தவில்லை. சேம் சைட் கோலும் பெனால்டியும் நாங்கள் அவர்களுக்கு வழங்கியுள்ளோம். இந்தப் போட்டியில் எங்களுக்கு அதிர்ஷ்டம் அமையவில்லை. நான்கு கோல்களை எதிரணி அடிக்கும்போது அந்த ஆட்டத்தை உங்களால் வெல்ல முடியாது என்றார். 

]]>
Croatia, World Cup final, penalty http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/16/w600X390/france_penalty1.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jul/16/croatia-boss-zlatko-dalic-you-dont-give-a-penalty-like-that-in-a-world-cup-final-2961228.html
2961217 விளையாட்டு FIFA 2018 ரூ. 260 கோடி பரிசுத்தொகை வென்ற ‘வாலிபர் சங்கம்’: உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் சாதனைத் துளிகள்! எழில் DIN Monday, July 16, 2018 11:53 AM +0530  

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியாவை வீழ்த்தி பிரான்ஸ் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மீண்டும் ஒரு பிரெஞ்சுப் புரட்சியை நிகழ்த்தி உள்ளது.

பிரான்ஸ்-குரோஷியா அணிகள் இடையிலான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018 இறுதி ஆட்டம் மாஸ்கோ லுஷ்னிக் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு  நடைபெற்றது.

கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி 21-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கின. மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் முதல் சுற்று ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 16 அணிகள் வெளியேறின. ரவுண்ட் 16 எனப்படும் நாக் அவுட் சுற்று ஆட்டங்களில் ஜாம்பவான் ஆர்ஜென்டீனா, போர்ச்சுகல் உள்ளிட்டவையும், காலிறுதி ஆட்டங்களில் முன்னாள் சாம்பியன்கள் பிரேஸில், உருகுவே, ஸ்பெயின் உள்ளிட்டவையும் வெளியேறின.

பிரான்ஸ்-குரோஷிய ஏற்கெனவே 5 முறை மோதியதில் பிரான்ஸ் மூன்று ஆட்டங்களில் வென்றுள்ளது. இரு ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

ஆட்டம் தொடங்கியதுமே இரு அணிகளின் வீரர்களும் ஆதிக்கம் செலுத்த தலைப்பட்டனர். குரோஷியா சேம்சைட் கோல்: 18-ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் பார்வர்ட் கிரைஸ்மேன் ஃப்ரீ கிக் வாய்ப்பு மூலம் அடித்த பந்தை குரோஷிய வீரர் மரியோ மண்ட்ஸுகிக் தனது தலையால் தடுக்க முயன்ற போது, சேம் சைட் கோலானது. இதன் மூலம் பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றது. பின்னர் குரோஷிய அணியின் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியதால் 28-ஆவது நிமிடத்தில் அதன் வீரர் விடா கடத்தி அனுப்பிய பந்தை இவான் பெரிஸிக் அற்புதமாக கோலாக்கினார். இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக 38-ஆவது நிமிடத்தில் குரோஷிய வீரர் புரிந்த தவறால் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை பிசகின்றி கோலாக்கினார் பிரான்ஸ் வீரர் கிரைஸ்மேன். இதனால் முதல் பாதி ஆட்ட நிறைவில் 2-1 என பிரான்ஸ் முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில் குரோஷிய வீரர்களின் ஆட்டம் சோபிக்கவில்லை. பிரான்ஸ் அணி வீரர்கள் தங்கள் ஆதிக்கத்தை பலப்படுத்தியதன் விளைவாக 59-ஆவது நிமிடத்தில் அதன் மிட்பீல்டர் போக்பா கோலடித்தார். 

அதன் தொடர்ச்சியாக 65-ஆவது நிமிடத்தில் ஹெர்ணான்டெஸ் அனுப்பிய பந்தை இளம் வீரர் மாப்பே 25 அடிகள் தூரத்தில் இருந்து அற்புதமாக கோலாக்கினார். 68-ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் கோல்கீப்பர் லோரிஸ் வசம் இருந்த பந்தை பறித்து குரோஷிய பார்வர்ட் மரியோ மண்ட்ஸுகிக் கோலாக்கினார். 

பின்னர் குரோஷிய வீரர்கள் கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்று பிரான்ஸ் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இறுதிப் போட்டியின் சாதனைத் துளிகள்

* போட்டியை வென்ற பிரான்ஸ் அணிக்கு ரூ. 260 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற குரோஷிய அணிக்கு ரூ. 192 கோடி ரொக்கப் பரிசளிக்கப்பட்டது. 

கால்பந்து உலகக் கோப்பையை வென்றுள்ள அணிகள்

5 - பிரேஸில்
4 - இத்தாலி/ஜெர்மனி
2 - பிரான்ஸ்/ உருகுவே/ஆர்ஜென்டீனா
1 - இங்கிலாந்து/ ஸ்பெயின்

* கடந்த மூன்று உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளும் கூடுதல் நேரம் வரை சென்றன. 2006, 2010, 2014. அதிலும் 2006 உலகக் கோப்பை இறுதிப் போட்டி பெனால்டி ஷூட் அவுட் வரை சென்றது. ஆனால் இந்த வருடம் அத்தகைய கூடுதல் நேரம் தேவைப்படவில்லை. 

* தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணி உலகக் கோப்பையை வென்றுள்ளது. 1998-ல் வென்றபோது தரவரிசையில் 18-வது இடத்தில் இருந்தது. 

* இறுதிப்போட்டி என்றாலே பெரிய அளவில் வெல்வதுதான் பிரான்ஸ் அணியின் பாணிபோல. 1998-ல் பிரேஸிலை 3-0 என்கிற கோல் கணக்கில் வென்றது. நேற்றைய ஸ்கோர்: 4-2.

* 1958-ல் பீலே கோல் அடித்தபிறகு அதேபோல இறுதிப் போட்டியில் கோல் அடித்த டீன் ஏஜ் வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் 19 வயது வீரர் மாப்பே. நேற்று பிரான்ஸின் மூன்றாவது கோலை அவர் அடித்தார். 

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கோல் அடித்த இளம் வீரர்கள்

1958 - பீலே - 17 வருடம் 249 நாள்கள்
2018 - மாப்பே - 19 வருடம் 207 நாள்கள் 

* வீரராகவும் பயிற்சியாளராகவும் உலகக் கோப்பையை வென்ற மூன்றாவது நபர் என்கிற பெருமை பிரான்ஸ் பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸுக்குக் கிடைத்துள்ளது. 1998-ல் அவர் கேப்டனாக இருந்தபோது பிரான்ஸ் அணி உலகக் கோப்பையை வென்றது. தற்போது பயிற்சியாளராகவும் அவர் உலகக் கோப்பையை வென்றுள்ளார். இதற்கு முன்பு மரியோ ஸகால்லோ (1958, 1970), பிரான்ஸ் பெக்கன்பேர் (1974, 1990) ஆகியோர் இச்சாதனையைப் புரிந்தவர்கள். டெஸ்சாம்ப்ஸ் போல பெக்கன்பேரும் கேப்டனாகவும் இருந்து உலகக் கோப்பையை வென்றவர். ஜெர்மனி அணியின் கேப்டனாக இருந்து 1970-ல் உலகக் கோப்பையை வென்றதோடு பயிற்சியாளராக 1990-லும் கோப்பையை வென்றார். 

* குரோஷியாவின் கோல்கீப்பர் டேனிஜெல் சுபசிக், பிரான்ஸின் ஏஎஸ் மொனாகோ கிளப்பைச் சேர்ந்தவர். அந்த கிளப்பைச் சேர்ந்த இதர கோல்கீப்பர்களான ரொமிரோ (2014), ஸ்டேகெலன்பர்க் (2010), பர்தேஸ் (2006) ஆகியோரும் குரோஷிய கோல்கீப்பர் போல உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் தோல்வியை அடைந்துள்ளார்கள். 

* பிரான்ஸ் அணியின் சராசரி வயது - 25 வருடம் 10 மாதங்கள். 1970-ல் இதேபோல 25 வருடம் 9 மாதங்களைச் சராசரி வயதாகக் கொண்ட பிரேஸில் அணி உலகக் கோப்பையை வென்றது. (உலகக் கோப்பைப் போட்டியில் குறைந்தபட்சம் ஒரே ஒரு ஆட்டத்தில் விளையாடியவர்களைக் கொண்டு இந்த வயது கணக்கிடப்பட்டுள்ளது.)

* இப்படியொரு ஆட்டம் அமையும் என குரோஷிய வீரர் மரியோ மண்ட்ஸுகிக் எண்ணியிருக்கமாட்டார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சேம் சைட் கோலடித்த முதல் வீரர் என்கிற சங்கடமான பெருமையை அவர் பெற்றுள்ளார்.

* 1930, 1938, 1966, 2018 ஆகிய உலகக் கோப்பைகளின் இறுதிப் போட்டிகளில் தலா 6 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 1958 இறுதிப்போட்டியில் 7 கோல்கள் அடிக்கப்பட்டன. ஸ்வீடனை 5-2 எனத் தோற்கடித்தது பிரேஸில். 

* பிரான்ஸ் அணியின் தடுப்பாட்ட வீரர், அடில் ரமி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2010-லிருந்து பிரான்ஸ் அணிக்காக விளையாடியுள்ள ரமி, 35 சர்வதேச ஆட்டங்களில் இடம்பெற்றுள்ளார். பிரான்ஸ் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்தாலும் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் களத்தில் இறங்கி விளையாட ரமிக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. 

இறுதிப் போட்டியில் வழங்கப்பட்ட விருதுகள்

சிறந்த வீரர்: தங்கக் கால்பந்து விருது: லுகா மொட்ரிக் (குரோஷியா) 

வெள்ளிக் கால்பந்து விருது: ஈடன் ஹஸார்ட் (பெல்ஜியம்) 

வெண்கலக் கால்பந்து விருது: கிரைஸ்மேன் (பிரான்ஸ்)

அதிக கோல்கள்: தங்கக் காலணி: ஹேரி கேன் (இங்கிலாந்து), ஆறு கோல்கள் 

வெள்ளிக் காலணி: கிரைஸ்மேன் (பிரான்ஸ்), நான்கு கோல்கள் (கோல் அடிக்க உதவியதைக் கணக்கில் கொண்டும் வெள்ளி விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.)

வெண்கலக் காலணி: ரொமேலு லுகாகு (பெல்ஜியம்), நான்கு கோல்கள் 

சிறந்த கோல் கீப்பர்: தங்கக் கையுறை: கோர்டியாஸ் (பெல்ஜியம்) 

சிறந்த இளம் வீரர்: மாப்பே (பிரான்ஸ்) 

ஃபேர் பிளே விருது: ஸ்பெயின் 

இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன்:  கிரைஸ்மேன் (பிரான்ஸ்)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/16/w600X390/AP7_15_2018_000294B.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jul/16/fifa-world-cup-2018-france-brings-it-home-after-20-years-2961217.html
2958613 விளையாட்டு FIFA 2018 குரோஷியாவின் சாதனை வெற்றி: உலகக் கோப்பை வரலாற்றில் எந்த இடத்தைப் பிடிக்கப் போகிறது? எழில் DIN Thursday, July 12, 2018 03:26 PM +0530  

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குரோஷிய அணி. அந்த அணி முதல்முறையாக இந்தத் தகுதியை அடைந்துள்ளது.

இங்கிலாந்து அணி காலிறுதியில் ஸ்வீடனையும், குரோஷியா போட்டியை நடத்தும் ரஷியாவையும் வென்று அரையிறுதிக்கு முன்னேறின. கடந்த 1998-க்கு பின் தற்போது தான் குரோஷியா அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. அப்போது போட்டியை நடத்திய நாடான பிரான்ஸிடம் தோல்வி கண்டது. அதே நேரத்தில் 1966 சாம்பியனான இங்கிலாந்தும் 1990-க்குப் பிறகு தற்போது தான் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

இங்கிலாந்து அணி இந்த உலகக் கோப்பையில் துவக்கம் முதலே தனது தாக்குதல் ஆட்டத்தால் எதிரணிகள் மீது கோல் மழை பொழிந்தது. இந்த ஆட்டத்துக்கு முன்பு அந்த அணி வீரர்கள் மொத்தம் 11 கோல்களை அடித்துள்ளனர். இதில் 8 கோல்கள் திட்டமிட்டு அடிக்கப்பட்டவையாகும். 

குரோஷிய அணியும் முதல் சுற்றில் தோல்வியே காணாமல் அரையிறுதிக்கு முன்னேறியது. மெஸ்ஸியின் ஆர்ஜென்டீனாவை 3-0 என வீழ்த்திய பிறகு குரோஷியா அனைவரதும் கவனத்தையும் கவர்ந்து விட்டது.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் 5-வது நிமிடத்தில் ஃப்ரீ கிக் மூலமாக அற்புதமான கோலை அடித்தார் இங்கிலாந்தின் டிரிப்பியர். ஆனாலும் முதல் பாதியில் கிடைத்த பல வாய்ப்புகளை இங்கிலாந்து வீரர்கள் வீணடித்தார்கள். 

68-வது நிமிடத்தில் தனது முதல் கோலை அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தது குரோஷியா. கடைசிவரை இரு அணிகளும் 1-1 என இருந்ததால் கூடுதல் நேரம் தொடங்கப்பட்டது.

அதில் 109-வது நிமிடத்தில் குரோஷிய வீரர் மரியோ அட்டகாசமான கோலை அடித்தார். இதனால் குரோஷிய அணி முன்னிலை அடைந்தது. இதன்பிறகு இங்கிலாந்து வீரர்கள் கடும் முயற்சி எடுத்தும் பதில் கோலை அடிக்க முடியாததால் அரையிறுதியில் வெற்றி பெற்று முதல்முறையாக உலகக் கோப்பை போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது குரேஷிய அணி. ஞாயிறன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதவுள்ளன. இந்திய நேரம் இரவு 8.30 மணிக்குத் தொடங்கவுள்ளது. அதற்கு முன்பு, மூன்றாவது இடத்துக்கான போட்டி, சனிக்கிழமையன்று இரவு 7.30 மணிக்குத் தொடங்கவுள்ளது. அதில் இங்கிலாந்து - பெல்ஜியம் அணிகள் மோதவுள்ளன.

*

இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள பிரான்ஸ் இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றுள்ளது. ஆனால் குரோஷிய அணி இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. இதையடுத்து ஞாயிறன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியை வென்று 2 முறை சாம்பியன்கள் ஆன ஆர்ஜென்டீனா, உருகுவே அணிகளுடன் பிரான்ஸ் இணையப் போகிறதா, அல்லது உலகக் கோப்பையை வெல்லும் 9-வது அணி என்கிற பெருமையை குரோஷிய அணி அடையவுள்ளதா என்கிற எதிர்பார்ப்பில் உள்ளார்கள் ரசிகர்கள். 

உலகக் கோப்பையை வென்ற அணிகள் 

பிரேஸில் - 1958, 1962, 1970, 1994, 2002 (5)
ஜெர்மனி - 1954, 1974, 1990, 2014 (4)
இத்தாலி - 1934, 1938, 1982, 2006 (4)
ஆர்ஜென்டீனா - 1978, 1986 (2)

உருகுவே - 1930, 1950 (2)
பிரான்ஸ் - 1998 (1)
இங்கிலாந்து - 1966 (1)
ஸ்பெயின் - 2010 (1)

இதுவரை நான்கு அணிகள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியும் கோப்பையை வெல்ல முடியாமல் உள்ளன. இந்தப் பட்டியலில் குரோஷியா இணையக்கூடாது என்பதுதான் அதன் ரசிகர்களின் விருப்பம்.

1. நெதர்லாந்து (1974, 1978, 2010)
2. ஹங்கேரி (1938, 1954)
3. செக் குடியரசு (1934, 1962)
4. ஸ்வீடன் (1958)

1974-ல் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முதல்முறையாகத் தகுதி பெற்ற நெதர்லாந்து அணி, பிறகு ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது. எனினும், 1978-க்குப் பிறகு முதல்முறையாக இறுதிப் போட்டியில் விளையாடிய அணிகள் இரண்டும் (1998 - பிரான்ஸ், 2010 - ஸ்பெயின்)  உலகக் கோப்பையை வென்றுள்ளன. இந்தச் சாதனை குரோஷிய அணியின் வெற்றியிலும் தொடருமா?

]]>
Croatia http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/12/w600X390/croatia_eng_sf1_37.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jul/12/self-deception-lies-the-secret-behind-croatias-run-to-world-cup-final-2958613.html
2957856 விளையாட்டு FIFA 2018 கால்பந்து விளையாட்டுக்கே அவமானம்: பிரான்ஸ் அணியின் வெற்றி குறித்து பெல்ஜியம் கோல் கீப்பர் காட்டம்! எழில் DIN Wednesday, July 11, 2018 11:37 AM +0530  

உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிச் சுற்றுக்கு பிரான்ஸ் அணி முன்னேறியது. பரபரப்பாக நடந்த அரையிறுதி ஆட்டத்தில் பெல்ஜியத்தை 1-0 என வீழ்த்தியது

முதல் அரையிறுதி ஆட்டம் செயின்ட்பீட்டா்ஸ்பா்க் மைதானத்தில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகளுக்கு இடையே திங்கள்கிழமை நள்ளிரவு நடைபெற்றறது. காலிறுதியில் பிரான்ஸ் அணி உருகுவேயையும், பெல்ஜியம் முன்னாள் சாம்பியன் பிரேஸிலையும் வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றறன.

1998-ல் பட்டம் வென்ற பிரான்ஸ் தற்போது இரண்டாவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பிலும், முதல் முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் பெல்ஜியம் அணியும் மோதுவதால் இந்த ஆட்டத்துக்கு மிகுந்த எதிா்பாா்ப்பு ஏற்பட்டிருந்தது.

ஆட்டம் தொடங்கியது முதலே பெல்ஜியம் அணி தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. பிரான்ஸ் அணி பலமான தற்காப்பு ஆட்டத்தால் பெல்ஜியம் வீரர்களின் முயற்சிகளை முறியடித்தது. 18-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரா் பிளேய்ஸ் மட்யுடி பெல்ஜிய கோல்பகுதியை நோக்கி அடித்த பந்து குறி தவறிச் சென்றது.

இதற்கிடையே பெல்ஜியம் வீரா்கள் கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை. அதே நேரத்தில் பிரான்ஸ் முன்கள வீரா் ஆலிவா் ஜிராட் பலமுறை பெல்ஜியம் கோல் பகுதியில் ஊடுருவி கோலடிக்க முயன்றாா். முதல் பாதி ஆட்டம் முடிய சில நிமிடம் இருந்த நேரத்தில் பிரான்ஸ் அணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நட்சத்திர வீரா் கிரைஸ்மேன் சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை.

முதல் பாதி ஆட்டம் கோலின்றி 0-0 என முடிந்தது.

இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியதும் 51-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரா் கிரைஸ்மேன் காா்னா் மூலம் அனுப்பிய பந்தை தலையால் முட்டி அற்புதமாக கோலாக்கினாா் சாமுவேல் உதிதி. பின்னா் பெல்ஜியம் வீரா்கள் சமன் செய்வதற்காக பலமுறை முயன்றும் பிரான்ஸ் தற்காப்பு அரணைத் தகா்க்க முடியவில்லை.

இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று மூன்றாவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது பிரான்ஸ்.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணி ஆடிய விதத்தைக் கடுமையாக விமரிசித்துள்ளார் பெல்ஜியம் அணியின் கோல்கீப்பர் கோர்டோயிஸ். இதுபற்றி அவர் கூறியதாவது:

கடுப்பேற்றக்கூடிய வகையில் ஆட்டம் அமைந்தது. பிரான்ஸ் அணி விளையாடவே இல்லை. கோல் போஸ்டிலிருந்து 40 மீ. வரை 11 வீரர்களையும் நிறுத்தி தற்காப்பு ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். எங்களை விடவும் சிறந்த அணியிடம் நாங்கள் தோற்கவில்லை, ஒன்றுமே விளையாடாமல் தற்காப்பில் மட்டும் கவனம் செலுத்திய அணியிடம் தோற்றோம் என்பது கடுப்பேற்றுகிறது.

உருகுவேக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் ஃப்ரீ கிக் மூலமாகவும் கோல் கீப்பரின் தவறாலும் அவர்கள் வென்றார்கள். இன்று கார்னர் மூலமாக கோலடித்து வென்றார்கள். இன்று பெல்ஜியம் வெற்றி பெறாதது கால்பந்து விளையாட்டுக்கு அவமானகரமானது என்று தன் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

]]>
France, Belgium http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/11/w600X390/france23_belgium12.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jul/11/belgiums-courtois-blasts-france-victory-as-shame-for-football-2957856.html
2955196 விளையாட்டு FIFA 2018 உலகக் கோப்பையில் தென் அமெரிக்க நாடுகள் வெளியேற்றம்: புள்ளிவிவரங்கள் சொல்லும் விநோதக் கதைகள்! எழில் DIN Saturday, July 7, 2018 12:25 PM +0530  

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகளுக்குத் தென் அமெரிக்க நாடுகள் எப்போதும் கூடுதல் வசீகரம் அளிக்கக் கூடியவை. 

இந்தமுறை போட்டியில் கலந்துகொண்ட 5 தென் அமெரிக்க அணிகளில் நான்கு அணிகள் நாக் அவுட்டுக்கு முன்னேறின. 

ஆர்ஜென்டீனா, பிரேஸில், கொலம்பியா, உருகுவே ஆகிய நான்கு தென் அமெரிக்க அணிகள் தகுதி பெற்ற நிலையில் பெரு மட்டும் முதல் சுற்றிலேயே வெளியேறியது.

எனினும் தற்போது இந்த நான்கு அணிகளுமே அரையிறுதிக்குத் தகுதி பெறாமல் போட்டியை விட்டு வெளியேறியுள்ளன.  

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆர்ஜென்டீனாவும் கொலம்பியாவும் தோற்றுப்போய் வெளியேறின.
காலிறுதிச் சுற்றில் பிரேஸிலும் உருகுவேவும் தோல்வியடைந்து வெளியேறியுள்ளன.

* இதையடுத்து, நேற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்ற இரு அணிகள் (பிரான்ஸ் & பெல்ஜியம்) மற்றும் இன்று விளையாடவுள்ள நான்கு அணிகள் என ஆறு அணிகளுமே ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்தவை. 

* பிரேஸில் (5), ஆர்ஜென்டீனா(2), உருகுவே (2) ஆகிய அணிகள் ஒட்டுமொத்தமாக 9 உலகக் கோப்பைகளை வென்றுள்ளன. எனினும் இந்தமுறை அரையிறுதிவரை கூட தகுதி பெற முடியாமல் போய்விட்டது. 

* ஐரோப்பாவில் 1958-க்குப் பிறகு எந்தவொரு தென் அமெரிக்க நாடும் உலகக் கோப்பையை வென்றதில்லை. இந்தச் சோகம் இன்னமும் தொடர்கிறது. 

அரையிறுதியில் தென் அமெரிக்க நாடுகள் பங்குபெறாத உலகக் கோப்பைப் போட்டிக்ள்

இத்தாலி உலகக் கோப்பை 1934 
இங்கிலாந்து உலகக் கோப்பை 1966
ஸ்பெயின் உலகக் கோப்பை 1982
ஜெர்மனி உலகக் கோப்பை 2006
ரஷிய உலகக் கோப்பை 2018

* நாக் அவுட்டுக்குத் தகுதி பெற்ற 16 அணிகளில் ஆறு அணிகள் மட்டுமே உலக சாம்பியன் பட்டத்தைப் பெற்றவை.

பிரேஸில் - 5 
ஆர்ஜென்டீனா - 2
உருகுவே - 2
ஃபிரான்ஸ் - 1
இங்கிலாந்து - 1
ஸ்பெயின் - 1 

இவற்றில் பிரேஸில், ஆர்ஜென்டீனா, உருகுவே, ஸ்பெயின் ஆகிய அணிகள் தற்போது போட்டியை விட்டு வெளியேறிவிட்டன. பிரான்ஸ் மட்டும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்தின் நிலை இன்று தெரியவரும். இன்று இந்திய நேரம் 7.30 மணிக்கு நடைபெறவுள்ள காலிறுதி ஆட்டத்தில் அந்த அணி ஸ்வீடனை எதிர்கொள்கிறது. 

* மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் ஆகியோர் இல்லாத உலகக் கோப்பையாக இது மாறிவிட்டது.

* பெல்ஜியம் கால்பந்து அணியின் முன்னேற்றம் மகத்தானது. இதன் வளர்ச்சி அனைத்து அணிகளுக்கும் பாடமாக உள்ளது.

1920: அண்ட்வெர்ப் (பெல்ஜியம்) ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றது. 
1986: உலகக் கோப்பையில் அரையிறுதிக்குத் தகுதி பெற்று நான்காம் இடம் பெற்றது. 
2007: ஃபிஃபா தரவரிசையில் 71-வது இடம் 
2018: ஃபிஃபா தரவரிசையில் 3-ம் இடம். பத்து வருடங்களில் மேஜிக் நிகழ்த்தியிருக்கிறார்கள்.

]]>
south america http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/7/w600X390/belgium_brazil1_611.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jul/07/south-americas-world-cup-curse-continues-2955196.html
2955190 விளையாட்டு FIFA 2018 பிரேஸிலைக் காவு வாங்கிய சேம் சைட் கோலில் சாதனை நிகழ்த்தியுள்ள ரஷிய உலகக் கோப்பை! எழில் DIN Saturday, July 7, 2018 11:05 AM +0530  

ஒரு கால்பந்து உலகக் கோப்பை நடக்கும்போது அதிகபட்சமாக ஐந்து ஆறு சேம் சைட் கோல்கள் மட்டுமே அடிப்பது வழக்கம். அதற்கு மேல் யாரும் அடிக்கமாட்டார்கள். அடித்ததும் இல்லை.

ஆனால் இந்த உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் சேம் சைட் கோல்கள்தான் உள்ளன. 

ஆம். இதுவரை 11 சேம் சைட் கோல்கள் ரஷிய உலகக் கோப்பையில் அடிக்கப்பட்டுள்ளன. இது நம்பமுடியாத செய்தி.

இதற்கு முன்பு 1998-ல் ஆறு சேம் சைட் கோல்களும் 2015-ல் ஐந்து சேம் சைட் கோல்களும்தான் அடிக்கப்பட்டுள்ளன. இந்தமுறை இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காகிவிட்டது. 

ஆறாவது முறையாக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்கிற பிரேஸிலின் கனவு நேற்று தகர்ந்தது. பெல்ஜியம் அணி, பிரேஸிலை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து அரைறுதிக்கு முன்னேறியுள்ளது. அந்த அணி அரையிறுதியில் பிரான்ஸை எதிர்கொள்கிறது. பெல்ஜியம் அணி சேம் சைட் கோல் மூலமாக முன்னணி பெற்றது. கார்னரில் அடித்த பந்தை சேம் சைட் கோலாக மாற்றி பிரேஸில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார் ஃபெர்னான்டினோ.  இது இந்த உலகக் கோப்பையின் 11-வது சேம் சைட் கோல்!

உலகக் கோப்பை வரலாற்றில் இது பிரேஸில் அணியின் 2-வது சேம் சைட் கோல். 2014-ல் பிரேஸிலின் மார்செலோ ஓன் கோல் அடித்தார். எனினும் குரோஸியாவுக்கு எதிரான அந்த ஆட்டத்தை 3-1 என வென்றது பிரேஸில். நேற்று அதுபோல அந்த அணியால் மாற்றத்தை உண்டுபண்ண முடியவில்லை.  சேம் சைட் கோலால் தோற்று போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.

]]>
world cup, own goals http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/7/w600X390/belgium_brazil1_3.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jul/07/11-own-goals-2955190.html
2954481 விளையாட்டு FIFA 2018 நெய்மர் நடிக்கவில்லை: முன்னாள் வீரர் கருத்து! எழில் DIN Friday, July 6, 2018 03:39 PM +0530  

காயம் ஏற்பட்டது போல நெய்மர் நடிப்பதில்லை என்று அவரைப் பற்றிய விமரிசனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் முன்னாள் வீரர் ரொனால்டோ. 

மூன்று உலகக் கோப்பைப் போட்டிகளில் பிரேஸில் அணிக்காக விளையாடிய பிரபல வீரர் ரொனால்டோ நெய்மர் குறித்த விமரிசனங்களுக்குத் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். 

எதிரணி வீரர்கள் லேசாக இடித்தாலே வலியால் துடிப்பது போல நடிக்கிறார் என்று பிரேஸில் அணியின் வீரர் நெய்மர் மீது விமரிசனங்கள் எழுந்துள்ளன. நம் ஊரிலும் நெய்மர் குறித்த இக்குற்றச்சாட்டுகளை முன்வைத்து மீம்களும் உருவாக்கப்பட்டுள்ளன. நெய்மரின் இந்தச் செயலால் நேரம் வீணாவதாகவும் எதிரணிகளின் பயிற்சியாளர்கள் விமரிசனம் செய்துள்ளார்கள்.

இந்நிலையில் நெய்மருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் வீரர் ரொனால்டோ. இதுபற்றி அவர் கூறியதாவது:

கால்பந்து விளையாட்டைப் பலவிதங்களில் அணுகமுடியும். மாற்றிக் கருத்து சொல்லவும்முடியும். 

நெய்மர் நடிக்கிறார் என்கிற விமரிசனங்களை நான் மறுக்கிறேன். தன்னுடைய நகர்வுகளில் அவர் மிகவும் புத்திசாலித்தனமான வீரர். எதிரணி வீரர்களை எப்படி எதிர்கொள்வது, அவர்களிடமிருந்து எப்படித் தற்காத்துக்கொள்வது என்று அவருக்குத் தெரியும். (எதிரணி வீரர்களின் தாக்குதலில் இருந்து) நெய்மரை எந்தளவுக்கு நடுவர்கள் பாதுகாக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. என்னைப் பலரும் தொடர்ந்து தாக்கும்போது அதை நியாயமற்றதாகவே நான் கருதுவேன். (நெய்மர் மீதான ) விமரிசனங்கள் அபத்தமானவை. தொலைக்காட்சிகளும் அச்சு ஊடகங்களும் இடத்தை நிரப்பவே இதுபோல விமரிசனம் செய்கின்றன என்று நெய்மருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

]]>
Ronaldo, Neymar http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/6/w600X390/Neymar_brazil1_2.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jul/06/world-cup-brazils-ronaldo-sweeps-aside-neymar-criticism-2954481.html
2953807 விளையாட்டு FIFA 2018 துப்பாக்கி முனையில் தந்தை கடத்தப்பட்ட நிலையில், அர்ஜென்டீனாவுக்கு எதிராகத் துணிச்சலுடன் விளையாடிய நைஜீரிய கேப்டன்! DIN DIN Thursday, July 5, 2018 04:25 PM +0530  

ஒரே சமயத்தில் இரண்டு விஷயங்களுக்குப் பதற்றப்பட முடியுமா? இரண்டிலுமே கிட்டத்தட்ட தலை மேல் கத்தி தொங்குகிற நிலைமைதான். நைஜீரியக் கால்பந்து அணி கேப்டன் எப்படி இதைச் சமாளித்தார் என்று யோசிக்கவே முடியவில்லை. யாருக்கும் நேரக்கூடாத உயிரை அறுக்கும் நிமிடங்கள் அவை.

கால்பந்துக் களத்தில் அன்றைய தினம் நைஜீரிய அணி ஒருபோதும் தோற்றுவிடக் கூடாது. ஜூன் 26 அன்று, முதல் சுற்றின் கடைசி ஆட்டம் ஆர்ஜென்டீனாவுக்கு எதிரானது. நைஜீரியா 3 புள்ளிகளுடனும் ஆர்ஜென்டீனா 1 புள்ளியுடனும் இருந்தன. இந்த ஆட்டத்தில் நைஜீரியா வெல்ல வேண்டும் என்று கூட அவசியமில்லை. சமன் செய்தாலே காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடலாம். அதைவிடவும் இந்த ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா அணி தோற்றுவிட்டால் உலகக் கோப்பையை விட்டு வெளியேற வேண்டியதுதான். இதனால் இந்த ஆட்டத்தை உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். 

போட்டி தொடங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு நைஜீரிய அணி கேப்டன் ஜான் மைக்கெல் ஒபி, அணி வீரர்களுடன் பேருந்தில் மைதானத்துக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஊரிலிருந்து அவருக்குத் தொலைப்பேசி அழைப்பு வந்தது. 

உன் தந்தை மைக்கெல் கடத்தப்பட்டுள்ளார். இதைப் பற்றி வெளியே சொன்னால் அடுத்த நிமிடம் உன் தந்தை கொல்லப்படுவார் எனக் கடத்தல்காரர்கள் மிரட்டுகிறார்கள். என்ன செய்யலாம் என்று சொல்.
 
அதுவரை மெஸ்ஸி, ஆர்ஜென்டீனா வீரர்கள் என்று எண்ணிக்கொண்டிருந்த ஜானுக்கு அந்தச் சமயத்தில் தந்தையின் உயிரைப் பற்றி மட்டுமே எண்ணமுடிந்தது.

என்ன செய்யலாம்?

உடனே ஊர் திரும்பி, தந்தையை விடுவிக்க முயற்சி செய்யலாம்.

அல்லது

துயரம், கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு இன்றைய ஆட்டத்தில் பங்குபெறலாம். ஆனால் அது முடியுமா என்றும் யோசிக்க வேண்டும். தன்னால் அணிக்குப் பாதிப்புகள் வரக்கூடாது.

இந்த இரு முடிவுகளை எடுப்பதற்கு முன்பு, தன்னுடைய இந்த நிலையை அணியினரிடம் சொல்லக்கூடாது. அதனால் எவ்விதமான பாதிப்புகளும் தன் தந்தைக்கு நேரலாம். இந்தச் செய்தியே தனக்குத் தெரியாததுபோல இயல்பாக இருக்கவேண்டும். 

யோசித்துப் பாருங்கள். உலகக் கோப்பைப் போட்டியில் உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஓர் ஆட்டத்தில் பங்குபெறும் அணியின் கேப்டனுக்கு இப்படியொரு அபாயகரமான நிலை ஏற்பட்டால் என்ன செய்வார்?

ஜான் ஒரு பேட்டியில் இதுபற்றிக் கூறியபோது, உணர்வுபூர்வமாக நான் உடைந்துவிட்டேன். என்னால் விளையாட முடியுமா என்று முடிவெடுக்க வேண்டிய கட்டத்தில் இருந்தேன். குழப்பமாக இருந்தது. என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. கடைசியில் 18 கோடி நைஜீரிய மக்களைக் கைவிட மனமின்றி களத்தில் இறங்கினேன். நாட்டுக்காக எதையும் இழக்கலாம் என்றே என் தந்தை கூறுவார்.

அதிகாரிகளிடமோ அல்லது வேறு யாரிடமும் என் தந்தையைக் கடத்தியது குறித்துச் சொன்னால் உடனே என் தந்தையைச் சுட்டுவிடுவதாக மிரட்டியிருந்தார்கள். எனவே இந்த விவகாரம் குறித்து பயிற்சியாளரிடம் கூட நான் விவாதிக்கவில்லை. என்னுடைய பிரச்னையால் முக்கியமான ஆட்டத்தில் அவருடைய மற்றும் அணி வீரர்களின் கவனம் சிதறக்கூடாது என எண்ணினேன். எந்தளவுக்குப் பயிற்சியாளரிடம் இதுபற்றி விவாதிக்க நினைத்தேனோ, அந்தளவுக்கு என்னால் முடியாமல் போனது என்று கூறியுள்ளார்.

மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் கோல் அடித்தது ஆர்ஜென்டீனா. முதல் கோலை மெஸ்ஸி அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதன்பிறகு பெனால்டி மூலம் நைஜீரியா கோல் அடித்து சமன் செய்தது. ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் நைஜீரிய அணி பிரமாதமாக விளையாடியது. இதனால் ரசிகர்கள் பதற்றத்துடன் இருந்தார்கள். ஆட்டத்தின் கடைசிக்கட்டத்தில் 4 நிமிடங்கள் மீதமுள்ள நிலையில் மார்கோஸ் ரோஜோ அட்டகாசமான கோல் அடித்து ஆர்ஜென்டீனா அணி வெற்றி பெற உதவினார். மற்றொரு ஆட்டத்தில் குரோஷியா 2-1 என ஐஸ்லாந்தைத் தோற்கடித்ததால் 4 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது ஆர்ஜென்டீனா. நைஜீரியா போட்டியை விட்டு வெளியேறியது.

ஜானின் தந்தை கடந்த திங்களன்று விடுவிக்கப்பட்டார். இதற்காகக் கடத்தல்காரர்களுக்கு ரூ. 19 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. துப்பாக்கி முனையில் ஜானின் தந்தையைக் கடத்திய கடத்தல்காரர்கள் அவரை மழையில் ஐந்து கிலோ மீட்டர் நடக்கவைத்துள்ளார்கள். 

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. எனினும் ஜானின் தந்தை கடத்தப்படுவது இது முதல்முறையல்ல. 2011-ல் இதுபோல ஒருமுறை கடத்தப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். தெற்கு நைஜீரியாவில் இதுபோல பிரபலங்கள், செல்வந்தர்களின் குடும்ப உறுப்பினர்களைப் பணத்துக்காகக் கடத்துவது வழக்கம். பணத்தைக் கொடுத்துவிட்டால் விட்டுவிடுவார்கள். 

நைஜீரியாவில் நிலவும் இதுபோன்ற பாதுகாப்பற்ற நிலைமை அச்சுறுத்துவதாகக் கூறுகிறார் ஜான். இரண்டாவது முறையாக என் தந்தையை இழந்துவிடுவேனோ என்கிற அச்சத்தில் இருந்தேன். இன்று என் தந்தை. நாளை வேறு யாராகவும் இருக்கலாம். இச்சூழல் பயமுறுத்துகிறது. கடத்தியபோது என் தந்தையைத் துன்புறுத்தியதால் தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறியுள்ளார். 

இக்கட்டான சமயத்தில் உடனடியாக நாட்டுக்குத் திரும்பாமல், மைதானத்தில் களமிறங்கிய ஜானுக்கு நைஜீரிய ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

]]>
nigeria, John Mikel Obi http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/5/w600X390/Nigeria_John_Obi_Mikel.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jul/05/john-mikel-obi-calls-for-greater-security-in-nigeria-after-fathers-release-from-kidnappers-2953807.html
2953057 விளையாட்டு FIFA 2018 கிரிக்கெட்டில் தோற்றாலும் கால்பந்தில் வெற்றி கண்ட இங்கிலாந்து! பெனால்டியில் வென்று காலிறுதிக்குத் தகுதி! எழில் DIN Wednesday, July 4, 2018 11:40 AM +0530  

இங்கிலாந்து - கொலம்பியா இடையேயான கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி பெனால்டி வரை செல்லும் என எத்தனை பேர் எதிர்பார்த்திருப்பார்கள்?

92 நிமிடங்கள் வரை இந்த நாக் அவுட் சுற்றில் முன்னணியில் இருந்தது இங்கிலாந்து. 57-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி மூலமாக ஹேரி கேன் கோல் அடித்தார்.

இதனால் முதல் 90 நிமிடங்கள் வரை இங்கிலாந்து முன்னணியில் இருந்தது. 5 நிமிடங்கள் கூடுதலாகத் தரப்பட்டன. இதில் தன் பங்குக்கு ஒரு கோல் அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தது கொலம்பியா. யெர்ரி மினா அந்த கோலை அடித்தார். 

பிறகு அரை மணி நேரம் கூடுதல் நேரம் வழங்கியபிறகும் இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்கமுடியாமல் போனது. இதனால் பெனால்டி ஷூட்அவுட் முறையில் வெற்றியாளரை நிர்ணயிக்கும் பரபரப்பான நிமிடங்கள் ஆரம்பமாயின. 

முதல் மூன்று வாய்ப்புகளை கோல்களாக மாற்றியது கொலம்பியா. ஆனால் இங்கிலாந்து தனது மூன்றாவது வாய்ப்பை வீணாக்கியது. இதனால் ஆட்டம் மிகவும் பரபரப்பானது. மூன்று வாய்ப்புகளின் முடிவில் கொலம்பியா முன்னணியில் இருந்தது.

ஆனால் கொலம்பிய வீரர் அடுத்த வாய்ப்பை வீணாக்கினார். பிறகு இங்கிலாந்து அடுத்த பெனால்டியைச் சரியாகப் பயன்படுத்த 4 பெனால்டிகளின் முடிவில் இரு அணிகளும் மீண்டும் சமநிலையில் இருந்தன. இதனால் 5-வது வாய்ப்பு வெற்றியை நிர்ணயிப்பதாக அமைந்தது. 

முக்கியமான கட்டத்தில் கொலம்பியாவின் கார்லோஸ் பக்கா அடித்த பெனால்டியை இங்கிலாந்து கோல் கீப்பர் அருமையாகத் தடுத்தார். 

அடுத்ததாக இங்கிலாந்து வீரர் எரிக் டையர் கோல் அடித்தார்.

இதையடுத்து 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றியடைந்த இங்கிலாந்து, காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் அந்த அணி ஸ்வீடனை எதிர்கொள்கிறது. 

நேற்று இங்கிலாந்து விளையாட்டு ரசிகர்களுக்கு கிரிக்கெட், கால்பந்து என இரு முக்கியமான ஆட்டங்கள் இருந்தன. இந்தியாவுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் குல்தீப் யாதவின் பந்துவீச்சு, ராகுலின் சதம் ஆகியவற்றால் தோல்வியடைந்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. எனினும் ஆறுதல் தரும் விதமாக கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் வெற்றி கண்டு ரசிகர்களை மகிழ்வித்துள்ளது இங்கிலாந்து கால்பந்து அணி.

]]>
FIFA World Cup 2018, penalties http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/4/w600X390/england_col1.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jul/04/england-beat-colombia-4-3-on-penalties-2953057.html
2952348 விளையாட்டு FIFA 2018 நம்பமுடியாத வெற்றியை அடைந்த பெல்ஜியம்: ஜப்பான் ரசிகர்கள் கண்ணீர்! DIN DIN Tuesday, July 3, 2018 12:52 PM +0530  

உலகக் கோப்பை போட்டிக்கு ஆசியாவில் இருந்து சவூதி அரேபியா, ஜப்பான், தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் தகுதி பெற்றன. இவற்றில் ஜப்பான் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

குரூப் ஜி பிரிவில் முதலிடம் பெற்ற பெல்ஜியம் அணியுடன் ரோஸ்டோவ் மைதானத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மோதியது.

முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. தரவரிசையில் ஜப்பானை விடவும் 58 இடங்கள் முன்னிலையில் இருக்கும் பெல்ஜியம் அணி இரண்டாவது பாதில் 0-2 என பின்தங்க வேண்டிய நிலைமை உருவானது. இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் ஜெங்கியும் டகாஷியும் தலா ஒரு கோல் அடித்து நம்பமுடியாத முன்னிலையை தங்கள் அணிக்குத் தந்தார்கள். இதனால் ஜப்பான் அணி காலிறுதிக்கு நிச்சயம் தகுதி பெறும் என்கிற நம்பிக்கை கால்பந்து ரசிகர்களுக்கு ஏற்பட்டது. 69வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் வெர்டொன்கென் கோல் அடித்து பெல்ஜியம் ரசிகர்களை ஆறுதல்படுத்தினார். தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை நிகழ்த்தியதால் 74-வது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டு வந்தது பெல்ஜியம். இதனால் நேரிலும் தொலைக்காட்சியிலும் இணையம் வழியாகவும் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் பரபரப்பு அடைந்தார்கள். ஆட்ட நேரம் முடிந்து கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் வெற்றி கோல் அடிக்கக் கூடுதலாக முயற்சி செய்தன. கடைசியில் பெல்ஜியத்தின் சாட்லி அட்டகாசமான கோல் அடித்து நம்பமுடியாத வெற்றியைத் தன் அணிக்கு ஏற்படுத்தினார். 

47’ #பெல்ஜியம் 0-1 #ஜப்பான் 
52’ #பெல்ஜியம் 0-2 #ஜப்பான் 
69’ #பெல்ஜிய 1-2 #ஜப்பான் 
74’ #பெல்ஜியம் 2-2 #ஜப்பான் 
94’ #பெல்ஜியம் 3-2 #ஜப்பான் 

1970-ல் ஜெர்மனி அணி இரு கோல்கள் பின்னடைவில் இருந்து கடைசியில் 3-2 என இங்கிலாந்தைத் தோற்கடித்தது. அதற்குப் பிறகு இப்போதுதான் ஓர் அணி இரு கோல்களைக் கொடுத்த பிறகும் மீண்டு வந்து வெற்றியடைந்துள்ளது. உலகக் கோப்பைப் போட்டியில் இதுபோல ஆறு தடவை மட்டுமே நடந்துள்ளது. பெல்ஜியத்தின் ஈடன் ஹஸார்ட் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

இந்த ஆட்டத்தில் 56% பந்தைத் தன் வசம் வைத்திருந்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது பெல்ஜியம் அணி. ஜப்பான் அணி இரு கோல்கள் அடித்தபின்பும் நம்பிக்கையுடன் விளையாடி மறக்கமுடியாத வெற்றியை அடைந்துள்ளது. காலிறுதிக்குத் தகுதி பெற்று சாதனை படைக்கும் என்று நம்பிக்கை வைத்த ஜப்பான் ரசிகர்கள் கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்கள். இருப்பினும் கடுமையாகப் போராடித் தோற்ற ஜப்பான் அணிக்குப் பலத்த பாராட்டுகள் கிடைத்துள்ளன.

]]>
Japan, FIFA World Cup 2018, Belgium http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/3/w600X390/beljium_japan1.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jul/03/fifa-world-cup-2018-belgium-fight-back-from-two-down-to-beat-japan-3-2-in-stoppage-time-2952348.html
2952366 விளையாட்டு FIFA 2018 அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகும் ஓய்வறையைச் சுத்தமாக்கித் தந்த ஜப்பான் வீரர்கள்! குவியும் பாராட்டுகள்! எழில் DIN Tuesday, July 3, 2018 12:52 PM +0530  

உலகக் கோப்பை போட்டிக்கு ஆசியாவில் இருந்து சவூதி அரேபியா, ஜப்பான், தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் தகுதி பெற்றன. இவற்றில் ஜப்பான் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. குரூப் ஜி பிரிவில் முதலிடம் பெற்ற பெல்ஜியம் அணியுடன் ரோஸ்டோவ் மைதானத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மோதியது.

முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. தரவரிசையில் ஜப்பானை விடவும் 58 இடங்கள் முன்னிலையில் இருக்கும் பெல்ஜியம் அணி இரண்டாவது பாதில் 0-2 என பின்தங்க வேண்டிய நிலைமை உருவானது. இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் ஜெங்கியும் டகாஷியும் தலா ஒரு கோல் அடித்து நம்பமுடியாத முன்னிலையை தங்கள் அணிக்குத் தந்தார்கள். இதனால் ஜப்பான் அணி காலிறுதிக்கு நிச்சயம் தகுதி பெறும் என்கிற நம்பிக்கை கால்பந்து ரசிகர்களுக்கு ஏற்பட்டது. 69வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் வெர்டொன்கென் கோல் அடித்து பெல்ஜியம் ரசிகர்களை ஆறுதல்படுத்தினார். தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை நிகழ்த்தியதால் 74-வது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டு வந்தது பெல்ஜியம். இதனால் நேரிலும் தொலைக்காட்சியிலும் இணையம் வழியாகவும் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் பரபரப்பு அடைந்தார்கள். ஆட்ட நேரம் முடிந்து கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் வெற்றி கோல் அடிக்கக் கூடுதலாக முயற்சி செய்தன. கடைசியில் பெல்ஜியத்தின் சாட்லி அட்டகாசமான கோல் அடித்து நம்பமுடியாத வெற்றியைத் தன் அணிக்கு ஏற்படுத்தினார். இதனால் 0-2 என்கிற மோசமான நிலைமையிலிருந்து 3-2 என வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றது பெல்ஜியம் அணி.

47’ #பெல்ஜியம் 0-1 #ஜப்பான் 
52’ #பெல்ஜியம் 0-2 #ஜப்பான் 
69’ #பெல்ஜிய 1-2 #ஜப்பான் 
74’ #பெல்ஜியம் 2-2 #ஜப்பான் 
94’ #பெல்ஜியம் 3-2 #ஜப்பான் 

காலிறுதிக்குத் தகுதி பெற்று சாதனை படைக்கும் என்று நம்பிக்கை வைத்த ஜப்பான் ரசிகர்கள் கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்கள். இருப்பினும் கடுமையாகப் போராடித் தோற்ற ஜப்பான் அணிக்குப் பலத்த பாராட்டுகள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் ஜப்பான் ரசிகர்கள், குப்பையை ஒழுங்குபடுத்தி இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்வது பரவலாகப் பாராட்டைப் பெற்று வருகிற நிலையில் தற்போது ஜப்பான் வீரர்களும் அத்தகைய பாராட்டுகளைப் பெற்றுள்ளார்கள்.

இதுபோன்ற அதிர்ச்சித் தோல்விகளின் முடிவில் வீரர்கள் ஓய்வறைக்கு வந்து அங்குள்ள பொருள்களை உடைத்துச் சேதப்படுத்துவதை நாம் நிறைய கண்டுள்ளோம். ஆனால் ஜப்பான் வீரர்களோ சோகம் மனத்தில் இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அல்லது அதனால் மோசமான நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாமல் தங்களுடைய ஓய்வறையைச் சுத்தம் செய்து மைதான நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்துள்ளார்கள். மேலும், ரஷிய மொழியில் நன்றி என்றும் எழுதிவைத்துவிட்டுச் சென்றுள்ளார்கள். இக்கட்டான நேரத்திலும் அறையைச் சுத்தப்படுத்துவதில் கவனம் செலுத்திய ஜப்பான் வீரர்களுக்குப் உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிகின்றன.

வீரர்கள் மட்டுமல்லாமல் நேற்றும் ஜப்பான் ரசிகர்கள் நம்பமுடியாத தோல்விக்குப் பிறகு மைதானத்தில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்கள். இதனால் துப்புரவுப் பணியாளர்களின் உதவியின்றி மைதானம் ஜப்பான் ரசிகர்களின் நடவடிக்கைகளால் சுத்தமாக மாறியது. இந்த நிகழ்வுகளின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

]]>
FIFA World Cup, Japanese Fans http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/3/w600X390/japan_players1.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jul/03/fifa-world-cup-japanese-fans-win-hearts-after-cleaning-up-stadium-2952366.html
2951796 விளையாட்டு FIFA 2018 உலகக் கோப்பையில் வெளியேறும் முன்னாள் சாம்பியன்கள்! மீதமுள்ள சாம்பியன்களின் நிலைமை? எழில் DIN Monday, July 2, 2018 03:35 PM +0530  

ரஷியாவில் நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் இதுவரை பல அதிர்ச்சிகள் நிகழ்ந்துள்ளன. முதல் அதிர்ச்சி, நடப்பு சாம்பியனான ஜெர்மனி, முதல் சுற்றுடன் வெளியேறியது. 

அடுத்ததாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆர்ஜென்டீனா, ஸ்பெயின் ஆகிய முன்னாள் உலக சாம்பியன்கள் வெளியேறியுள்ளன. எனினும் 1998 சாம்பியன் பிரான்ஸ், இருமுறை சாம்பியனான உருகுவே ஆகிய அணிகள் முதல் நாக் அவுட்டில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. 

இந்நிலையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரேஸில், இங்கிலாந்து ஆகிய இரு முன்னாள் உலக சாம்பியன்கள் மட்டுமே மீதமுள்ளன. 

இன்று இந்திய நேரம் 7.30 மணிக்கு பிரேஸிலும் மெக்ஸிகோவும் மோதவுள்ளன. நாளை இரவு 11.30 மணிக்கு இங்கிலாந்தும் கொலம்பியாவும் மோதவுள்ளன. இதில் பிரேஸிலும் இங்கிலாந்தும் வெற்றி பெற்றால் காலிறுதிக்கு நான்கு முன்னாள் சாம்பியன்கள் தகுதி பெற்றுவிடும். 

வெளியேறியுள்ள உலக சாம்பியன்கள்

ஜெர்மனி 1954, 1974, 1990, 2014
ஆர்ஜென்டீனா 1978, 1986
ஸ்பெயின் 2010

களத்தில் உள்ள உலக சாம்பியன்கள் (ஜூலை 1 வரை)

பிரேஸில் 1958, 1962, 1970, 1994, 2002
உருகுவே 1930, 1950
இங்கிலாந்து 1966
பிரான்ஸ் 1998

(4 முறை உலக சாம்பியனாக இருந்த இத்தாலி அணி ரஷியப் போட்டிக்குத் தகுதி பெறவில்லை.)

]]>
Worldcup , FIFAWorldCup2018 http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/2/w600X390/Germany_korea1_1222.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jul/02/former-winners-of-worldcup-knocked-out-in-fifaworldcup2018-2951796.html
2949863 விளையாட்டு FIFA 2018 ஆச்சர்யங்களும் சர்ச்சைகளும்: உலகக் கோப்பை முதல் சுற்றின் முக்கிய அம்சங்கள்! எழில் DIN Friday, June 29, 2018 04:06 PM +0530  

ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி ரஷியாவில் ஜூன் 14 முதல் தொடங்கியுள்ளன. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறும் 64 ஆட்டங்களில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்நிலையில் நேற்றுடன் முதல் சுற்று ஆட்டங்கள் முடிவு பெற்றுள்ளன. இதையடுத்து பிரான்சு, ஆர்ஜென்டீனா, போர்ச்சுகல், உருகுவே, ஸ்பெயின், ரஷியா, குரோஷியா, டென்மார்க், பிரேஸில், மெக்ஸிகோ, பெல்ஜியம், ஜப்பான், ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, கொலம்பியா, இங்கிலாந்து ஆகிய 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

முதல் சுற்றும் நாக் அவுட்டும்: முக்கிய அம்சங்கள்

* நாக் அவுட்டுக்குத் தகுதி பெற்ற 16 அணிகளில் ஆறு அணிகள் உலக சாம்பியன் பட்டத்தைப் பெற்றவை. 

பிரேஸில் - 5 
ஆர்ஜென்டீனா - 2
உருகுவே - 2
ஃபிரான்ஸ் - 1
இங்கிலாந்து - 1
ஸ்பெயின் - 1

* முதல் சுற்றில் அதிக கோல்கள் அடித்த அணி: 

பெல்ஜியம் - 9
இங்கிலாந்து/ரஷியா - 8    
குரோஸியா - 7

முதல் சுற்றில் அதிக கோல்கள் விட்டுக்கொடுத்த அணி:

பனாமா - 11
துனிசியா - 8
சவுதி அரேபியா - 7

* முதல் சுற்றில் உருகுவே மட்டுமே இதுவரை ஒரு கோலும் விட்டுக் கொடுக்கவில்லை. ஃபிரான்ஸ், டென்மார்க், குரோஸியா, பிரேஸில் ஆகிய அணிகள் 1 கோல் மட்டுமே விட்டுக் கொடுத்தவை. 

* முதல் சுற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள்

ஹென்றி கேன் (இங்கிலாந்து) - 5 கோல்கள் ( 2 ஆட்டங்கள்)
ரொமலு லுகாகு (பெல்ஜியம்) - 4 கோல்கள் ( 2 ஆட்டங்கள்)
கிறிஸ்டியனோ ரொனால்டோ (போர்ச்சுகல்) - 4 கோல்கள் (3 ஆட்டங்கள்)
டெனிஸ் செரிஷெவ் (ரஷியா) - 3 கோல்கள் ( 3 ஆட்டங்கள்)
டியகோ கோஸ்டா (ஸ்பெயின்) - 3 கோல்கள் ( 3 ஆட்டங்கள்)

* முதல் சுற்றில் சிறப்பாக ஆடிய அணிகள் அதாவது 3 ஆட்டங்களில் வென்று முழுப்புள்ளிகளையும் (9 புள்ளிகள்) பெற்ற அணிகள்:  

உருகுவே, குரோஸியா, பெல்ஜியம்: 3 வெற்றிகள், 9 புள்ளிகள். 

குறைந்த புள்ளிகளுடன் நாக் அவுட்டுக்குத் தகுதி பெற்ற அணிகள்:

ஆர்ஜென்டீனா - 4 புள்ளிகள்
ஜப்பான் - 4 புள்ளிகள்

ஆதிக்கம் செலுத்தும் கண்டங்கள்

* நாக் அவுட்டுக்கு 10 ஐரோப்பிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்தப் போட்டியில் கலந்துகொண்ட 14 அணிகளில் 4 மட்டுமே வெளியேறியுள்ளன. 

பெல்ஜியம், குரோஸியா, டென்மார்க், இங்கிலாந்து, ஃபிரான்ஸ், போர்ச்சுகல், ரஷியா, ஸ்பெயின், ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து ஆகிய 10 ஐரோப்பிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

ஜெர்மனி, ஐஸ்லாந்து, போலந்து, செர்பியா ஆகிய 4 ஐரோப்பிய அணிகள் வெளியேறியுள்ளன.

* கால்பந்து உலகக் கோப்பைக்கு எப்போதுமே தனி வண்ணம் அளிப்பவர்கள், தென் அமெரிக்க வீரர்கள். இந்தமுறை கலந்துகொண்ட 5 அணிகளில் நான்கு அணிகள் நாக் அவுட்டுக்கு முன்னேறியுள்ளன. 

ஆர்ஜென்டீனா, பிரேஸில், கொலம்பியா, உருகுவே ஆகிய நான்கு தென் அமெரிக்க அணிகள் தகுதி பெற்ற நிலையில் பெரு மட்டும் வெளியேறியுள்ளது. 

* ஆசிய அணிகளின் பங்களிப்பு எப்போதுமே கால்பந்தின் வளர்ச்சியாகப் பார்க்கப்படும். இந்தமுறை 5 அணிகள் தகுதி பெற்றதில் ஒரே ஓர் அணி மட்டுமே நாக் அவுட்டுக்குச் சென்றுள்ளது. அதாவது தென் அமெரிக்க நிலைக்கு இது அப்படியே தலைகீழ்.

ஜப்பான் மட்டுமே தகுதி பெற, ஈரான், சவுதி அரேபியா, தென் கொரியா, ஆஸ்திரேலியா (ஆசியக் கால்பந்து கூட்டமைப்பின் ஓர் அங்கம்) ஆகிய ஆசிய அணிகள் வெளியேறியுள்ளன.

* வட அமெரிக்க நாடுகளில் ஒரு நாடு மட்டுமே அடுத்தச் சுற்றுக்குச் செல்கிறது.

கோஸ்டா ரிகா, பனாமா ஆகிய வட அமெரிக்க நாடுகள் வெளியேறியுள்ளன. மெக்ஸிகோ மட்டுமே நாக் அவுட்டில் விளையாடுகிறது. 

* உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிர்ச்சிய ஏற்படுத்துவதில் ஆப்பிரிக்க நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கும். ஆனால் இந்தமுறை மிகப்பெரிய ஏமாற்றம்.

எகிப்து, மொராக்கோ, நைஜீரியா, செனகல், துனிசியா என ஐந்து ஆப்பிரிக்க அணிகள் பங்கேற்றதில் ஒன்றுகூட காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. 1982-க்குப் பிறகு இப்போதுதான் எந்தவொரு ஆப்பிரிக்க அணியும் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. இது மிகப்பெரிய விவாதமாக உருவாகியுள்ளது.

நீயா நானா போட்டியின் வரலாறு

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பங்குபெறும் அணிகள் இதற்கு முன்பு உலகக் கோப்பையில் மோதியபோது நடந்தது என்ன?

* போர்ச்சுகல் vs உருகுவே, ஸ்பெயின் vs ரஷியா, குரோஷியா vs டென்மார்க், ஸ்வீடன் vs ஸ்விட்சர்லாந்து - இதுவரை உலகக் கோப்பைப் போட்டியில் இந்த அணிகள் மோதிக்கொள்ளவேயில்லை. முதல்முறையாக மோதவுள்ளதால் கடுமையான போட்டிக்குப் பஞ்சம் இருக்காது. 

பிரான்சு vs ஆர்ஜென்டீனா - இருமுறை மோதியதில் ஆர்ஜென்டீனாவே வென்றுள்ளது.

பிரேஸில் vs மெக்ஸிகோ - 4 ஆட்டங்களில் மூன்றில் பிரேஸில் வென்றுள்ளது.

பெல்ஜியம் vs ஜப்பான் - ஒருமுறை மோதிய ஆட்டம் டிரா ஆகியுள்ளது.

கொலம்பியா vs இங்கிலாந்து - ஒருமுறை மோதிய ஆட்டத்தை இங்கிலாந்து வென்றது.

இதர அம்சங்கள்

* குரூப் ஹெச் பிரிவில் ஜப்பான், செனகல் ஆகிய இரு அணிகளும் ஒரு புதிரான நிலையை  நேற்று உருவாக்கின. இதனால் முதல் சுற்று பரபரப்புடனும் சர்ச்சையுடனும் முடிந்தது.

இரு அணிகளும் 4 புள்ளிகளுடன் 4 கோல்களை அடித்து 4 கோல்களை விட்டுக்கொடுத்துள்ளன. இரு அணிகளும் ஒருவருக்கொருவர் மோதிய ஆட்டமும் சமனில் முடிந்தது. இப்படி எல்லாமே சம அளவில் இருந்ததால் நன்னடத்தை விதிகளின்படி, செனகல் ஆறு மஞ்சள் அட்டைகள் பெற்றிருந்த நிலையில் 4 மஞ்சள் அட்டைகள் மட்டுமே பெற்ற ஜப்பான் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது. உலகக் கோப்பை வரலாற்றில் இதுபோல தகுதி பெற்ற முதல் அணி என்கிற பெருமையை அடைந்துள்ளது ஜப்பான் அணி. தனது கடைசி ஆட்டத்தில் கடைசி 10 நிமிடங்களில் இதனை அறிந்த ஜப்பான் வீரர்கள் கோலடிக்க முயற்சி செய்யாமல் தற்காப்பு உத்தியுடன் விளையாடியது பார்வையாளர்களை வெறுப்பேறியது. உலகக் கோப்பைப் போட்டியில் இதுபோல ஓர் அணி எவ்வித லட்சியமும் இன்றி விளையாடுவது இழுக்கு என்றே பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.     

* முதல் சுற்றில் எகிப்து vs சவுதி அரேபியா, துனிசியா vs பனாமா ஆகிய இரு ஆட்டங்கள் மட்டுமே நாக் அவுட்டுக்குப் பயன்படாத ஆட்டங்கள். மற்றபடி இந்தப் போட்டியில் கலந்துகொண்ட அனைத்து அணிகளும் குறைந்தது 2 கோல்களையாவது அடித்தன. உலகக் கோப்பை வரலாற்றில் இது முதல்முறை.

சவுதி அரேபியா, எகிப்து, போலந்து, ஈரான், மொராக்கோ, டென்மார்க், பெரு, ஆஸ்திரேலியா, ஐஸ்லாந்து, செர்பியா, கோஸ்டா ரிகா, ஜெர்மனி, பனாமா ஆகிய 13 அணிகள் இந்தப் போட்டியில் குறைந்த கோல்கள் அடித்தவை. அனைத்துமே 2 கோல்கள் அடித்தன. இதில் டென்மார்க் மட்டும் 2
கோல்கள் மட்டுமே அடித்தாலும் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

* நாளை முதல் காலிறுதிக்கு முந்தைய சுற்று தொடங்குகிறது. அதன் அட்டவணை:

காலிறுதிக்கு முந்தைய சுற்று

ஜூன் 30 

பிரான்சு vs ஆர்ஜென்டீனா (இந்திய நேரம் இரவு 7.30 மணி)
போர்ச்சுகல் vs உருகுவே (இரவு 11.30 மணி)

ஜூலை 1

ஸ்பெயின் vs ரஷியா (இரவு 7.30 மணி)
குரோஷியா vs டென்மார்க் (இரவு 11.30 மணி)

ஜூலை 2

பிரேஸில் vs மெக்ஸிகோ (இரவு 7.30 மணி)
பெல்ஜியம் vs ஜப்பான் (இரவு 11.30 மணி)

ஜூலை 3

ஸ்வீடன் vs ஸ்விட்சர்லாந்து (இரவு 7.30 மணி)
கொலம்பியா vs இங்கிலாந்து (இரவு 11.30 மணி)

இதன்பிறகு காலிறுதி ஆட்டங்கள் ஜூலை 6 முதல் தொடங்குகின்றன.

]]>
World Cup's first round http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/29/w600X390/Argentina_nigeria1_4.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/29/winners-losers-trends-from-the-world-cups-first-round-2949863.html
2949811 விளையாட்டு FIFA 2018 உலகக் கோப்பை: முதல் சுற்றின் முடிவில் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியல்! எழில் DIN Friday, June 29, 2018 11:07 AM +0530  

ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி ரஷியாவில் ஜூன் 14 முதல் தொடங்கியுள்ளன. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறும் 64 ஆட்டங்களில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்நிலையில் நேற்றுடன் முதல் சுற்று ஆட்டங்கள் முடிவு பெற்றுள்ளன. 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

இதையடுத்து முதல் சுற்றின் முடிவில் அதிக கோல்கள் அடித்த வீர்களின் பட்டியல்:

 வரிசை   எண்             வீரர்  ஆட்டங்கள்  கோல்கள் 
 1.  ஹென்றி கேன்   (இங்கிலாந்து)  2   5
 2.  ரொமலு லுகாகு   (பெல்ஜியம்)  2  4
 3.  கிறிஸ்டியனோ   ரொனால்டோ   (போர்ச்சுகல்)  3  4
 4.  டெனிஸ் செரிஷெவ்   (ரஷியா)  3  3
 5.  டியகோ கோஸ்டா     (ஸ்பெயின்)  3  3

 

ஹென்றி கேன்
ரொமலு லுகாகு
கிறிஸ்டியனோ   ரொனால்டோ
டெனிஸ் செரிஷெவ் 
டியகோ கோஸ்டா
]]>
Most goals http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/29/w600X390/Ronaldo_portugal_5.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/29/most-goals-2949811.html
2949799 விளையாட்டு FIFA 2018 உலகக் கோப்பை: நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்ற அணிகளின் முழுப்பட்டியலும் அட்டவணையும்! எழில் DIN Friday, June 29, 2018 10:42 AM +0530  

ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி ரஷியாவில் ஜூன் 14 முதல் தொடங்கியுள்ளன. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறும் 64 ஆட்டங்களில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்நிலையில் நேற்றுடன் முதல் சுற்று ஆட்டங்கள் முடிவு பெற்றுள்ளன. இதையடுத்து 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

முதல் சுற்றுகளில்...

குரூப் ஏ பிரிவில் உருகுவே, ரஷிய அணிகள் தகுதி பெற, சவுதி அரேபியா, எகிப்து அணிகள் வெளியேறியுள்ளன.

குரூப் பி பிரிவில் ஸ்பெயின், போர்ச்சுகல் அணிகள் தகுதி பெற, ஈரான், மொராக்கோ அணிகள் வெளியேறியுள்ளன.

குரூப் சி பிரிவில் ஃபிரான்ஸ், டென்மார்க் அணிகள் தகுதி பெற, பெரு, ஆஸ்திரேலிய அணிகள் வெளியேறியுள்ளன.

குரூப் டி பிரிவில் குரோஸியா, ஆர்ஜென்டீனா அணிகள் தகுதி பெற, நைஜீரியா, ஐஸ்லாந்து அணிகள் வெளியேறியுள்ளன.

குரூப் இ பிரிவில் பிரேஸில், ஸ்விட்சர்லாந்து அணிகள் தகுதி பெற, செர்பியா, கோஸ்டா ரிகா அணிகள் வெளியேறியுள்ளன.

குரூப் எஃப் பிரிவில் ஸ்வீடன், மெக்ஸிகோ அணிகள் தகுதி பெற, கொரியா, ஜெர்மனி அணிகள் வெளியேறியுள்ளன.

குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், இங்கிலாந்து அணிகள் தகுதி பெற, துனிசியா, பனாமா அணிகள் வெளியேறியுள்ளன.

குரூப் ஹெச் பிரிவில் கொலம்பியா, ஜப்பான் அணிகள் தகுதி பெற, செனகல், போலந்து அணிகள் வெளியேறியுள்ளன.


இன்று ஓய்வு நாள். நாளை முதல் காலிறுதிக்கு முந்தைய சுற்று தொடங்குகிறது. அதன் அட்டவணை:

காலிறுதிக்கு முந்தைய சுற்று

ஜூன் 30 

பிரான்சு vs ஆர்ஜென்டீனா (இந்திய நேரம் இரவு 7.30 மணி)
போர்ச்சுகல் vs உருகுவே (இரவு 11.30 மணி)

ஜூலை 1

ஸ்பெயின் vs ரஷியா (இரவு 7.30 மணி)
குரோஷியா vs டென்மார்க் (இரவு 11.30 மணி)

ஜூலை 2

பிரேஸில் vs மெக்ஸிகோ (இரவு 7.30 மணி)
பெல்ஜியம் vs ஜப்பான் (இரவு 11.30 மணி)

ஜூலை 3

ஸ்வீடன் vs ஸ்விட்சர்லாந்து (இரவு 7.30 மணி)
கொலம்பியா vs இங்கிலாந்து (இரவு 11.30 மணி)

இதன்பிறகு காலிறுதி ஆட்டங்கள் ஜூலை 6 முதல் தொடங்குகின்றன.

]]>
FIFA World Cup 2018, round of 16 http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/29/w600X390/ronaldo111144.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/29/fifa-world-cup-2018-who-plays-who-in-the-round-of-16-2949799.html
2949140 விளையாட்டு FIFA 2018 ஜெர்மனி வெளியேற்றம் ஏன்?: ஐந்து முக்கியக் காரணங்களும் விளைவுகளும்! எழில் DIN Thursday, June 28, 2018 03:27 PM +0530  

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எதிர்பாராத நிகழ்வாக நடப்புச் சாம்பியனான ஜெர்மனி நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறாமல் போட்டியிலிருந்து வெளியேறியது. ஜெர்மனி, உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் சுற்றோடு வெளியேறுவது கடந்த 80 ஆண்டுகளில் இது முதல் முறையாகும்.

நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்ய தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல்கள் வித்தியாசத்தில் வென்றிருக்க வேண்டிய ஜெர்மனி, மாறாக அந்த அணியிடம் 2 கோல்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அத்துடன், எஃப்' பிரிவில் 3 புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பிடித்தது.

கஸான் அரினா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முழு நேரம் வரையில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. பின்னர் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் தென் கொரியா 2 கோல்கள் அடித்து வரலாற்று வெற்றி கண்டது.

ஜெர்மனி அணி எதனால் தோல்வி கண்டது? இந்தத் தோல்வியைச் சுற்றியுள்ள ஐந்து முக்கிய அம்சங்கள்:

பலமான பின்னணி = அதீத நம்பிக்கை?

* 1938-க்குப் பிறகு இப்போதுதான் முதல் சுற்றில் வெளியேறியிருக்கிறது ஜெர்மனி. அதாவது 80 வருடங்களில் முதல்முறையாக முதல் சுற்றிலேயே வெளியேறியிருக்கிறது. ஃபிஃபா தரவரிசைப் பட்டியலில் ஜெர்மனி முதலிடத்தில் உள்ளது.

உலக சாம்பியனாக நான்கு முறை (1954, 1974, 1990, 2014) கொடிகட்டிப் பறந்த அணிக்கு இந்த நிலைமை என்பதை யாரால் நம்பமுடியும்? 18 முறை உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடிய ஜெர்மனி அணி, 13 முறை அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. 8 முறை இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்று நான்கு முறை சாம்பியன் ஆகியுள்ளது.

கடந்த 5 உலகக் கோப்பைப் போட்டிகளில் இது நான்காவது முறை. 2002-ல் பிரான்சும் 2010-ல் இத்தாலியும் 2014-ல் ஸ்பெயினும் 2018-ல் ஜெர்மனியும் நடப்பு சாம்பியன்களாக இருந்து முதல் சுற்றிலேயே வெளியேறிய அணிகள். 

உலகக் கோப்பை உள்ளிட்ட சமீபத்திய ஆறு பெரிய போட்டிகளில் ஜெர்மனி அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதனால் ரஷியப் போட்டியிலும் குறைந்தபட்சம் அரையிறுதிக்குத் தகுதி பெறும் என அணி நிர்வாகமும் ரசிகர்களும் நம்பினார்கள்.

உலகக் கோப்பை 2006: அரையிறுதி 
யூரோ கோப்பை 2008: இரண்டாம் இடம்
உலகக் கோப்பை 2010: அரையிறுதி
யூரோ கோப்பை 2012: அரையிறுதி
உலகக் கோப்பை 2014: சாம்பியன்
யூரோ கோப்பை 2016: அரையிறுதி

எங்கே இளம் வீரர்கள்?

* கடந்த வருடம் ரஷியாவில் நடைபெற்ற கான்ஃபெடரேஷன் கோப்பையை இளம் வீரர்களைக் கொண்டு ஜெர்மனி அணி வென்றது. இதனால் அதே ரஷியாவில் நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டியையும் ஜெர்மனி வெல்லும் என்றே பலரும் நம்பினார்கள். ஆனால் முதல் சுற்றிலேயே வெளியேறியது யாருமே எதிர்பாராதது. 

கான்ஃபெடரேஷன் கோப்பையில் மூத்த வீரர்களின் உதவியின்றி இளம் வீரர்களைக் கொண்டு வென்றது ஜெர்மனி. ஆனால் உலகக் கோப்பையில் டிமோ வெர்னரைத் தவிர இதர இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. மூத்த வீரர்களுக்குக் காயம் ஏற்படும்போது மட்டுமே லியோன், நிக்லாஸ், ஜூலியன் செபாஸ்டியன் ருடி போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. பிரீமியர் லீக் போட்டியில் சிறந்த இளம் வீரராகப் பட்டம் வென்ற லெராய் சேனை அணியில் சேர்க்காததும் பெரிய குற்றமாகத் தற்போது பார்க்கப்படுகிறது. 

முதல் ஆட்டத்தில் மெக்ஸிகோவுடன் 0-1 எனத் தோற்றது ஜெர்மனி. இதையடுத்து ஸ்வீடனுக்கு எதிரான ஆட்டத்தில் மெசுட் ஓஸில், கெடிரா ஆகிய இருவரும் நீக்கப்பட்டார்கள். அதில் 2-1 என வென்றது ஜெர்மனி. எனினும் நேற்றைய ஆட்டத்தில் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இருவரும் சொதப்பி மீண்டும் ஏமாற்றினார்கள். 2014 உலகக் கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்த தாமல் முல்லர் நேற்று எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. டோனி க்ரூஸும் அப்படியே. முக்கிய வீரர்களின் மோசமான பங்களிப்பால் இந்தத் தோல்விகளைச் சந்தித்துள்ளது ஜெர்மனி அணி. 

வலையில் விழாத கோல்கள்

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் கோல்கள் அடிக்க முயற்சி செய்ததில் ஜெர்மனி அணிக்கே முதலிடம். அந்த அணி 72 கோல் ஷாட்களை அடித்துள்ளது. ஆனால் அதிலிருந்து அந்த அணிக்கு 2 கோல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. என்னவொரு பரிதாப நிலை. அடுத்த இடத்தில் உள்ள ஸ்பெயின் அணி, 49 ஷாட்களில் 6 கோல்கள் அடித்துள்ளது. ஜெர்மனிக்கு இந்த விதத்தில் 3% மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது. ஒரு கோலும் அடிக்காத கோஸ்டா ரிக்கா மட்டுமே ஜெர்மனியை விடவும் மோசமான நிலையை இந்தப் போட்டியில் சந்தித்துள்ளது. நடப்பு சாம்பியனுக்கு இப்படியொரு நிலை வந்திருக்க வேண்டாம். 

2014 உலகக் கோப்பையில் ஜெர்மனிக்கு எதிராக ஏழு ஆட்டங்களில் நான்கு கோல்கள் மட்டுமே எதிரணிகளால் அடிக்கமுடிந்தது. ஆனால் இந்தமுறை சரியான தடுப்பாட்டம் இல்லாததால் 3 ஆட்டங்களிலேயே 4 கோல்களை விட்டுக்கொடுத்துள்ளது. 

இந்த உலகக் கோப்பையில் ஜெர்மனி அணி, 2 கோல்களை மட்டுமே அடித்துள்ளது. 1938-ல் இரு ஆட்டங்கள் மட்டுமே விளையாடி 3 கோல்களை அடித்தது. இந்த இரு முறையும் அந்த அணி முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளது. 

ஆதிக்கம் எங்கே?

2014-க்கும் இந்த வருடப் போட்டிக்கும் எவ்வளவு வித்தியாசம்? அந்த வருட உலகக் கோப்பைப் போட்டியில் ஜெர்மனி அணி, ஒட்டுமொத்தமாக 8 நிமிடங்கள் மட்டுமே பின்தங்கியிருந்தது. அந்தளவுக்குப் போட்டி முழுக்க ஆதிகம் செலுத்தியது. ஆனால் இந்தமுறை, ஸ்வீடனுக்கு எதிராக ஒரே ஒரு நிமிடம் முன்னணியில் இருந்தது. அவ்வளவுதான். மற்ற எல்லா ஆட்டங்களிலும் பின்தங்கியிருந்தது. உலக சாம்பியன் அணி என்றால் எப்படி இருக்கவேண்டும்!

பின்விளைவுகள்

* ஜெர்மனி பயிற்சியாளர் ஜோவாசிம் லோயிவ்-வுக்கு 2022 வரை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 2006 முதல் ஜெர்மனி பயிற்சியாளராக உள்ளார். ஆனால் இந்த மோசமான தோல்விக்குப் பிறகு அவர் விரைவில் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜெர்மனியின் பிரபல வீரர்களான முல்லர், ஹம்மல்ஸ், கெடிரா, போடங் ஆகியோர் அடுத்த கத்தார் உலகக் கோப்பையின்போது 32 வயதைத் தாண்டிவிடுவார்கள். இதனால் இந்த முக்கிய வீரர்களை அடுத்த உலகக் கோப்பையில் காண்பது கடினம் என்று அறியப்படுகிறது.

]]>
Germany, World Cup 2018 http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/28/w600X390/Germany_korea1_1222.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/28/reasons-why-germany-failed-in-world-cup-2018-2949140.html
2948450 விளையாட்டு FIFA 2018 நைஜீரியாவை வீழ்த்திய ஆட்டத்தில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி நிகழ்த்திய சாதனைகள்! எழில் DIN Wednesday, June 27, 2018 03:45 PM +0530  

உலகக் கோப்பை 2018-ல் பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி. தொடக்க ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணியிடம் டிரா செய்தது. ஆனால் அடுத்த ஆட்டத்தில் 3-0 என ஆர்ஜென்டீனாவை வென்றது குரோஷிய அணி. இதையடுத்து வெறும் 1 புள்ளியுடன் நைஜீரியாவை நேற்று எதிர்கொண்டது முன்னாள் சாம்பியனான ஆர்ஜென்டீனா அணி. வாழ்வா சாவா ஆட்டமாக அமைந்த ஆட்டத்தில் 2-1 என்கிற கோல் கணக்கில் அட்டகாசமாக வென்று நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி படைத்துள்ளது.

16 முறை உலகக் கோப்பையில் விளையாடி, ஐந்துமுறை அரையிறுதிக்குத் தகுதி பெற்று, ஐந்துமுறை இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்து இருமுறை உலகக் கோப்பையை வென்றுள்ளது ஆர்ஜென்டீனா அணி. இந்நிலையில் ரஷிய உலகக் கோப்பையில் முதல் சுற்றுடன் வெளியேறிவிடுமா என்கிற அச்சத்தில் நேற்றைய ஆட்டத்தைக் கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். 

மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் கோல் அடித்தது ஆர்ஜென்டீனா. முதல் கோலை மெஸ்ஸி அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதன்பிறகு பெனால்டி மூலம் நைஜீரியா கோல் அடித்து சமன் செய்தது. ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் நைஜீரிய அணி பிரமாதமாக விளையாடியது. இதனால் ரசிகர்கள் பதற்றத்துடன் இருந்தார்கள். ஆட்டத்தின் கடைசிக்கட்டத்தில் 4 நிமிடங்கள் மீதமுள்ள நிலையில் மார்கோஸ் ரோஜோ அட்டகாசமான கோல் அடித்து ஆர்ஜென்டீனா அணி வெற்றி பெற உதவினார். மற்றொரு ஆட்டத்தில் குரோஷியா 2-1 என ஐஸ்லாந்தைத் தோற்கடித்ததால் 4 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது ஆர்ஜென்டீனா.

இந்த ஆட்டத்தில் கோல் அடித்த மெஸ்ஸி சில சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

* உலகக் கோப்பை வரலாற்றில், டீன் வயதில், 20களில், 30களில் கோல் அடித்த ஓரே வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் மெஸ்ஸி. 2006 உலகக் கோப்பைப் போட்டியில் 18 வயதில் ஒரு கோல் அடித்தார். 2014 உலகக் கோப்பைப் போட்டியில் 4 கோல்கள் அடித்தார். அதாவது 26 வயதில். 31 வயதைக் கடந்த மெஸ்ஸி, இந்தப் போட்டியில் நேற்று தன்னுடைய முதல் கோலை அடித்தார். 

(பீலே கோல் அடிக்கவில்லையா என்று கேள்வி எழுப்புவர்களுக்கு - உலகக் கோப்பையில் 17 வயதில், 21 வயதில், 25 வயதில், 29 வயதில் அவர் கோல் அடித்துள்ளார். அதாவது 20களில் பல கோல்கள் அடித்த அவர், 30 வயதாக நான்கு மாதங்கள் இருக்கும்போது தனது கடைசி உலகக் கோப்பையை (1970) விளையாடி முடித்துவிட்டார்.

* மெஸ்ஸி இதுவரை அடித்த 6 உலகக் கோப்பை கோல்களில் மூன்று கோல்கள் நைஜீரியாவுக்கு எதிராக அடித்தவை. மேலும் உலகக் கோப்பையில் 662 நிமிடங்களுக்குப் பிறகு நேற்று கோல் அடித்துள்ளார். கடைசியாக 2014 போட்டியில் முதல் சுற்றில், நைஜீரியாவுக்கு எதிராக கோல் அடித்தார்.

* மரடோனா, கேப்ரியல் படிஸ்டுடா, மெஸ்ஸி ஆகிய மூன்று ஆர்ஜென்டீனா வீரர்கள் மட்டுமே மூன்று உலகக் கோப்பைப் போட்டிகளில் கோல் அடித்துள்ளார்கள்.

* உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆர்ஜென்டீனா அணிக்கு எதிராகத் தொடர்ந்து 5 ஆட்டங்களில் தோற்றுள்ளது நைஜீரியா. 

* இந்த உலகக் கோப்பையின் 100-வது கோலை அடிக்கும் வாய்ப்பு மெஸ்ஸிக்குக் கிடைத்துள்ளது.

* 2014-ல் நைஜீரியாவை 3-2 எனத் தோற்கடித்தது ஆர்ஜென்டீனா அணி. அப்போது மெஸ்ஸி, ரோஜோவும் கோல் அடித்தது போல நேற்றைய ஆட்டத்திலும் இருவரும் கோல் அடித்துள்ளார்கள்.

]]>
Argentina, Lionel Messi http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/27/w600X390/Argentina_nigeria1_4.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/27/amid-argentinas-drama-lionel-messis-brilliance-emerges-2948450.html
2948427 விளையாட்டு FIFA 2018 அது எப்படி பெனால்டி இல்லை?: ஆர்ஜென்டீனாவுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்த நடுவருக்கு நைஜீரிய அணி கேப்டன் கேள்வி! எழில் DIN Wednesday, June 27, 2018 01:15 PM +0530  

உலகக் கோப்பை 2018-ல் பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்பட்டது நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி. ஆனால் தொடக்க ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணியிடம் டிரா செய்தது. ஆனால் அடுத்த ஆட்டத்தில் 3-0 என ஆர்ஜென்டீனாவை வென்றது குரோஷிய அணி. இதையடுத்து வெறும் 1 புள்ளியுடன் நைஜீரியாவை நேற்று எதிர்கொண்டது முன்னாள் சாம்பியனான ஆர்ஜென்டீனா அணி. வாழ்வா சாவா ஆட்டமாக அமைந்த ஆட்டத்தில் 2-1 என்கிற கோல் கணக்கில் அட்டகாசமாக வென்று நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி படைத்துள்ளது.

16 முறை உலகக் கோப்பையில் விளையாடி, ஐந்துமுறை அரையிறுதிக்குத் தகுதி பெற்று, ஐந்துமுறை இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்து இருமுறை உலகக் கோப்பையை வென்றுள்ளது ஆர்ஜென்டீனா அணி. இந்நிலையில் ரஷிய உலகக் கோப்பையில் முதல் சுற்றுடன் வெளியேறிவிடுமா என்கிற அச்சத்தில் நேற்றைய ஆட்டத்தைக் கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். 

மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் கோல் அடித்தது ஆர்ஜென்டீனா. முதல் கோலை மெஸ்ஸி அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதன்பிறகு பெனால்டி மூலம் நைஜீரியா கோல் அடித்து சமன் செய்தது. ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் நைஜீரிய அணி பிரமாதமாக விளையாடியது. இதனால் ரசிகர்கள் பதற்றத்துடன் இருந்தார்கள். ஆட்டத்தின் கடைசிக்கட்டத்தில் 4 நிமிடங்கள் மீதமுள்ள நிலையில் மார்கோஸ் ரோஜோ அட்டகாசமான கோல் அடித்து ஆர்ஜென்டீனா அணி வெற்றி பெற உதவினார். மற்றொரு ஆட்டத்தில் குரோஷியா 2-1 என ஐஸ்லாந்தைத் தோற்கடித்ததால் 4 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது ஆர்ஜென்டீனா.

இரண்டாம் பகுதியில் ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தபோது பந்து, ஆர்ஜென்டீனா வீரர் ரோஜோவின் கையில் பட்டது. ஆனால் விடியோ நடுவரிடம் இதுகுறித்து மேல்முறையீடு செய்தபிறகும் பெனால்டி வழங்க மறுத்தார் ஆட்ட நடுவர் கனேயெட் சகிர். அவருடைய இந்த முடிவு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

நைஜீரிய அணி கேப்டன் ஜான் ஒபி இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவது: அது எப்படி பெனால்டி இல்லை என்று எங்களுக்குப் புரியவில்லை. பந்து அவர் கையில் பட்டது தெளிவாகத் தெரிகிறதே! போர்ச்சுகலுக்கு நேற்று வழங்கியதை விடவும் மோசமானது இது. கையை வெளியே நீட்டிக்கொண்டிருந்தபோது பந்து அவர் கையில் பட்டது. முதலில் ஒரு பெனால்டி தந்துவிட்டதால் அடுத்த பெனால்டி தர நடுவருக்கு மனமில்லை போல. ஆனால் அது பெனால்டிக்கு உகந்தது என்றால் பெனால்டி தரவேண்டியதுதானே. ஓய்வறைக்கு வந்தபிறகு நாங்கள் விடியோவில் அதைப் பார்த்தோம். பந்து கையில் பட்டது உண்மைதான். நிச்சயம் பெனால்டி வழங்கியிருக்க வேண்டும். பந்து கையில் பட்டதா என்று நடுவரிடம் கேட்டேன். ஆமாம் என்றார். பிறகு ஏன் அது பெனால்டி இல்லை என்று கேட்டதற்கு,
அது எனக்குத் தெரியாது என்கிறார் எனத் தன வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் நைஜீரிய கேப்டன்.

]]>
nigeria, Argentina http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/27/w600X390/Argentina_nigeria1_10.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/27/nigeria-felt-they-should-have-had-a-penalty-versus-argentina-2948427.html
2948421 விளையாட்டு FIFA 2018 ஆட்டம் இனிமேல்தான் ஆரம்பம்: எதிரணிகளுக்கு மெஸ்ஸி எச்சரிக்கை! எழில் DIN Wednesday, June 27, 2018 12:40 PM +0530  

முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சமீபத்தில் ஒரு ட்வீட்டை வெளியிட்டார்.

எனக்கு மட்டும்தான் இப்படித் தோன்றுகிறதா, சில ஆட்டங்கள் தவிர, இந்த கால்பந்து உலகக் கோப்பை ஆட்டங்கள் போர் அடிப்பதாகப் படுகிறது. ஒருநாள் கிரிக்கெட்டின் நடு ஓவர்கள் போல என்று ட்வீட்டை வெளியிட்டுக் கூடவே விமரிசனங்களையும் நன்கு வாங்கிக்கட்டிக்கொண்டார். 

உண்மையிலேயே, உலகக் கோப்பை ஆரம்பித்தபின்பு இந்தியாவில் அதன் பரபரப்பு சற்று குறைவாகவே இருந்தது. ஆனால், ஐஸ்லாந்துக்கு எதிரான தொடக்க ஆட்டத்தை வெல்ல முடியாமல் ஆர்ஜென்டீனா அணி டிரா செய்தபோது இந்திய ரசிகர்களுக்கும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அடுத்த ஆட்டத்தில் குரோஷிய அணியிடம் தோற்க, அவ்வளவுதான். எங்குப் பார்த்தாலும் உலகக் கோப்பை பற்றிய பேச்சும் ஆர்ஜென்டீனாவுக்கு என்ன ஆகும் என்கிற கவலையும்தான் அதிகமாகத் தென்பட ஆரம்பித்தன. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுக்க இந்த உலகக் கோப்பைப் போட்டி அதிகக் கவனம் பெற்றதற்கு ஆர்ஜென்டீனா அணியினரும் முக்கியமாக மெஸ்ஸியும் முக்கியக் காரணங்களாக உள்ளார்கள். 

உலகக் கோப்பை 2018-ல் பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்பட்டது நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி. ஆனால் தொடக்க ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணியிடம் டிரா செய்தது. ஆனால் அடுத்த ஆட்டத்தில் 3-0 என ஆர்ஜென்டீனாவை வென்றது குரோஷிய அணி. இதையடுத்து வெறும் 1 புள்ளியுடன் நைஜீரியாவை நேற்று எதிர்கொண்டது முன்னாள் சாம்பியனான ஆர்ஜென்டீனா அணி. வாழ்வா சாவா ஆட்டமாக அமைந்த ஆட்டத்தில் 2-1 என்கிற கோல் கணக்கில் அட்டகாசமாக வென்று நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி படைத்துள்ளது. 

16 முறை உலகக் கோப்பையில் விளையாடி, ஐந்துமுறை அரையிறுதிக்குத் தகுதி பெற்று, ஐந்துமுறை இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்து இருமுறை உலகக் கோப்பையை வென்றுள்ளது ஆர்ஜென்டீனா அணி. இந்நிலையில் ரஷிய உலகக் கோப்பையில் முதல் சுற்றுடன் வெளியேறிவிடுமா என்கிற அச்சத்தில் நேற்றைய ஆட்டத்தைக் கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். 

மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் கோல் அடித்தது ஆர்ஜென்டீனா. முதல் கோலை மெஸ்ஸி அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதன்பிறகு பெனால்டி மூலம் நைஜீரியா கோல் அடித்து சமன் செய்தது. ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் நைஜீரிய அணி பிரமாதமாக விளையாடியது. இதனால் ரசிகர்கள் பதற்றத்துடன் இருந்தார்கள். ஆட்டத்தின் கடைசிக்கட்டத்தில் 4 நிமிடங்கள் மீதமுள்ள நிலையில் மார்கோஸ் ரோஜோ அட்டகாசமான கோல் அடித்து ஆர்ஜென்டீனா அணி வெற்றி பெற உதவினார். மற்றொரு ஆட்டத்தில் குரோஷியா 2-1 என ஐஸ்லாந்தைத் தோற்கடித்ததால் 4 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது ஆர்ஜென்டீனா.

ஆர்ஜென்டீனா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி இந்த உலகக்கோப்பையுடன் ஓய்வு பெறுவார் எனக் கருதப்படுகிறது. உலகக் கோப்பையில் பட்டம் வெல்லும் கனவோடு வந்த மெஸ்ஸி தொடக்க ஆட்டத்தில் பெனால்டி கிக் வாய்ப்பைத் தவறவிட்டார். குரோஷியாவோடு நடந்த ஆட்டத்தில் 3-0 என ஆர்ஜென்டீனா படுதோல்வி அடைந்தபோது மெஸ்ஸியின் ஆட்டமும் மெச்சும்படியாக இல்லை. கடந்த 2014-இல் இறுதிச் சுற்று வரை முன்னேறிய ஆர்ஜென்டீனா தற்போது துவக்க ஆட்டங்களிலேயே தடுமாறி, அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுமா என்கிற கேள்வி எழுந்தபோது பலருக்கும் மெஸ்ஸி வில்லனாகத் தெரிந்தார். எனினும் நேற்றைய ஆட்டத்தில் முதல் கோலை அடித்து தன் மீதான விமரிசனங்களுக்குப் பதிலடி கொடுத்தார் மெஸ்ஸி. 

நாங்கள் எப்படி முதல் சுற்றிலேயே வெளியேற முடியும்? அதற்கான அணி அல்ல இது. நாங்கள் வெற்றி பெறுவோம் என்பது எங்களுக்கு முன்பே தெரியும். ஆனால் அது இந்தளவுக்குக் கடினமாக இருக்கும் என எண்ணவில்லை. எங்களுடைய உலகக் கோப்பை இப்போதுதான் தொடங்கியுள்ளது. இன்று முதல் எங்களுக்குப் புதிய உலகக் கோப்பையாக இருக்கப்போகிறது. வாழ்க்கையில் இந்தளவுக்கு வேதனைப்பட்டதில்லை. ஆனால் தோற்றுப்போய் வெளியேறுவோம் என்று எண்ணவே இல்லை. கடவுள் எங்களுடன் உள்ளார். எங்களைக் கைவிடமாட்டார் என்று நம்பினேன் என்று இந்த வெற்றி குறித்துக் கூறியுள்ளார் மெஸ்ஸி. 

ஜூன் 30 அன்று நடைபெறவுள்ள காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஃபிரான்ஸை எதிர்கொள்கிறது ஆர்ஜென்டீனா. இதுபற்றி மெஸ்ஸி கூறியதாவது: பிரான்ஸ் வீரர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களுடைய உலகக் கோப்பை ஆட்டங்கள் எல்லாவற்றையும் பார்த்துள்ளோம். அதனால் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதும் எங்களுக்குத் தெரியும். ஆனால் அது மிகவும் கடினமான ஆட்டமாக இருக்கப்போகிறது என்பது மட்டும் நிச்சயம் என்றார்.

]]>
Argentina, Lionel Messi http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/27/w600X390/Argentina_nigeria1_1.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/27/i-knew-god-was-with-us-lionel-messi-hails-argentinas-salvation-2948421.html
2947674 விளையாட்டு FIFA 2018 இந்தப் பட்டியலில் ரஷியப் போட்டி இணையுமா? ஆர்ஜென்டீனா அணியின் மோசமான உலகக் கோப்பை போட்டிகள்! எழில் DIN Tuesday, June 26, 2018 04:18 PM +0530  

உலகக் கோப்பை 2018-ல் பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்பட்டது நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி. ஆனால் தொடக்க ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணியிடம் டிரா செய்தது. ஆனால் அடுத்த ஆட்டத்தில் 3-0 என ஆர்ஜென்டீனாவை வென்றது குரோஷிய அணி. வெறும் 1 புள்ளியோடு உள்ளது. உலகக் கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக இன்று நடைபெறவுள்ள நைஜீரியாவுடனான ஆட்டம் முன்னாள் சாம்பியன் ஆர்ஜென்டீனாவுக்கு வாழ்வா சாவா ஆட்டமாக அமைந்துள்ளது. இந்த ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா கட்டாயம் வெல்ல வேண்டும்.

16 முறை உலகக் கோப்பையில் விளையாடி, ஐந்துமுறை அரையிறுதிக்குத் தகுதி பெற்று, ஐந்துமுறை இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்து இருமுறை உலகக் கோப்பையை வென்றுள்ளது ஆர்ஜென்டீனா அணி. இந்நிலையில் இன்றிரவு 11.30 மணிக்கு நடைபெறவுள்ள ஆட்டத்தைக் கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

ஆர்ஜென்டீனா அணியின் மோசமான உலகக் கோப்பைப் போட்டிகள் என கீழ்க்கண்ட பட்டியலைச் சொல்லலாம். இந்தப் பட்டியலில் ரஷிய உலகக் கோப்பைப் போட்டி இணைந்துவிடக்கூடாது என்று அனைத்து ஆர்ஜென்டீனா ரசிகர்களும் வேண்டிக்கொள்கிறார்கள்.

1934 இத்தாலி உலகக் கோப்பை

இதில் ஒரே ஒரு ஆட்டம் மட்டுமே விளையாடியது. நாக் அவுட் பாணியில் நடைபெற போட்டியில், ஸ்வீடனுக்கு எதிரான ஆட்டத்தில் 2-3 என்கிற கோல் கணக்கில் தோற்று முதல் சுற்றிலேயே வெளியேறியது.

1958 ஸ்வீடன் உலகக் கோப்பை

1934 முதல் 1954 வரையிலான உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆர்ஜென்டீனா அணி விளையாடவில்லை. 24 வருடங்கள் கழித்து ஸ்வீடனில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில், இரு தோல்விகள், ஒரு வெற்றி என மோசமாக விளையாடி நாக் அவுட்டுக்குத் தகுதி பெறாமல் போனது. அனுபவம் வாய்ந்த வீரர்களுக்குப் பதிலாக இளம் வீரர்களைத் தேர்வு செய்ததால் ஆர்ஜென்டீனா அணிக்கு இந்த நிலை ஏற்பட்டது.  

1962 சிலி உலகக் கோப்பை

இந்தமுறை எப்படியும் சாதித்துவிட வேண்டும் என்று சரியான பயிற்சிகளுடன் களமிறங்கியது. பல்கேரியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 1-0 என வென்றது. ஆனால் 1-3 என இங்கிலாந்திடம் அடுத்ததாகத் தோற்றது. ஹங்கேரியுடனான ஆட்டம் 0-0 என சமன் ஆனது. இங்கிலாந்துடன் சமஅளவில் புள்ளிகள் கொண்டிருந்தாலும் கோல்கள் வித்தியாசத்தில் நாக் அவுட்டுத் தகுதி பெறவில்லை. 

1974 ஜெர்மனி உலகக் கோப்பை

மோசமான நிர்வாகம், சரியான பயிற்சியின்மை போன்ற காரணங்களின் விளைவைச் சந்தித்தது. முதல் ஆட்டத்தில் 2-3 என்ற கோல் கணக்கில் போலந்திடம் தோற்றது. இத்தாலியுடன் சமன் செய்து, ஹைதியை வென்றது. இதனால் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றது. ஆனால் கிழக்கு ஜெர்மனியுடன் சமன் செய்த ஆர்ஜென்டீனா, நெதர்லாந்து, பிரேஸிலிடம் தோற்று வெளியேறியது. ஆனால் அடுத்த 1978 உலகக் கோப்பையை வென்று முதல்முறையாக சாம்பியன் ஆனது. 

1982 ஸ்பெயின் உலகக் கோப்பை

மரடோனாவுக்குக் கிடைத்த புகழால் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்றாக ஆர்ஜென்டீனா இருந்தது. ஆனால் பெல்ஜியத்துக்கு எதிரான முதல் ஆட்டத்திலேயே தோற்றது. மூத்த வீரர்களுக்கும் இளம் வீரர்களுக்குமிடையே பூசல் ஏற்பட்டதால் நிலைமை மோசமானது. எனினும் அடுத்த ஆட்டத்தில் 4-1 என ஹங்கேரியை வென்றது. 2-0 என எல் சல்வடோரை வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் இத்தாலி, பிரேஸிலுக்கு எதிரான ஆட்டங்களில் தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது. எனினும் அடுத்த 1986 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.  

2002 தென் கொரியா & ஜப்பான் உலகக் கோப்பை

குரூப் எஃப் அணியில் ஆர்ஜென்டீனா, இங்கிலாந்து, நைஜீரியா, ஸ்வீடன் ஆகிய அணிகள் இருந்தன. முதல் ஆட்டத்தில் நைஜீரியாவுக்கு எதிராக 1-0 என வென்றது. பெனாலிடியில் டேவிட் பெக்கம் அடித்த கோலால் இங்கிலாந்துக்கு எதிராக 0-1 என்கிற கோல் கணக்கில் தோற்றது. ஸ்வீடனுக்கு எதிராக 1-1 என சமன் செய்ததால் போட்டியிலிருந்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது ஆர்ஜென்டீனா.

]]>
Argentina, World Cup campaigns http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/26/w600X390/1958_1.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/26/some-of-argentinas-poor-world-cup-campaigns-over-the-years-2947674.html
2947664 விளையாட்டு FIFA 2018 இன்றிரவு 11.30 மணிக்கு என்ன நடக்கும்? தப்பிக்குமா ஆர்ஜென்டீனா? பரபரப்பில் கால்பந்து ரசிகர்கள்! எழில் DIN Tuesday, June 26, 2018 02:49 PM +0530  

இன்றிரவு 11.30 மணிக்கு (இந்திய நேரம்) நடைபெறவுள்ள இரு ஆட்டங்களையும் கால்பந்து ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

ஆர்ஜென்டீனா vs நைஜீரியா
குரோஷியா vs ஐஸ்லாந்து

உலகக் கோப்பை 2018-ல் பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்பட்டது நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையிலான அணி. ஆனால் தொடக்க ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணியிடம் டிரா செய்தது. அதே நேரத்தில் குரோஷியா 2-0 என நைஜீரியாவை வென்றது.

இந்நிலையில் குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ள ஆர்ஜென்டீனாவும்-குரோஷியாவும் வியாழக்கிழமை இரவு நோவாகிராடில் நடைபெற்ற ஆட்டத்தில் மோதின. எதிர்பார்த்ததை விடவும் குரோஷிய வீரர்கள் அமர்க்களமாக விளையாடினார்கள். 53-வது நிமிடத்தில் ஆர்ஜென்டீனா கோல் கீப்பர் வில்லியின் தவறால் ஆண்டே ரெபிக் முதல் கோலை அடித்தார். கடைசிக் கட்டத்தில் லுகாவும் இவானும் மேலும் கோல்கள் அடித்து ஆர்ஜென்டீனா, மெஸ்ஸி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார்கள். இதனால் குரோஷிய அணி 3-0 என்கிற கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றது.   குரோஷியா இரு அட்டகாசமான வெற்றிகளால் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. 1998-க்குப் பிறகு இப்போதுதான் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறுகிறது. துணிச்சலான வீரர்களைக் கொண்ட இந்த அணி மேலும் பல அதிர்ச்சிகளை அளிக்கும் என தற்போது எதிர்பார்க்கப்படுகிறது.

 நாடு  ஆட்டம்   வெற்றி   தோல்வி   டிரா   கோல்   வித்தியாசம்   புள்ளிகள் 
 குரோஷியா   2  2  0  0  5  6
 நைஜீரியா  2  1  1  0  0  3
 ஐஸ்லாந்து  2  0  1  1  -2  1
 ஆர்ஜென்டீனா   2  0  1  1  -3  1

ஐஸ்லாந்துடன் டிரா, குரோஷியாவுடன் தோல்வி அடைந்த ஆர்ஜென்டீனா வெறும் 1 புள்ளியோடு உள்ளது. உலகக் கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக இன்று நடைபெறவுள்ள நைஜீரியாவுடனான ஆட்டம் முன்னாள் சாம்பியன் ஆர்ஜென்டீனாவுக்கு வாழ்வா சாவா ஆட்டமாக அமைந்துள்ளது. இந்த ஆட்டத்தில்  ஆர்ஜென்டீனா கட்டாயம் வெல்ல வேண்டும். அதே நேரத்தில் குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணி தோல்வியடைய வேண்டும். நைஜீரியா 3 புள்ளிகளுடன் உள்ளது. ஐஸ்லாந்தும், ஆர்ஜென்டீனாவும் தலா 1 புள்ளியுடன் உள்ளன. இதனால் நாக் அவுட் சுற்றுக்கு ஆர்ஜென்டீனா அணி முன்னேறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஆர்ஜென்டீனா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி இந்த உலகக்கோப்பையுடன் ஓய்வு பெறுவார் எனக் கருதப்படுகிறது. உலகக் கோப்பையில் பட்டம் வெல்லும் கனவோடு வந்த மெஸ்ஸியின்
ஆர்ஜென்டீனா அணி துவக்க ஆட்டத்தில் ஐஸ்லாந்துடன் டிரா செய்தது. மெஸ்ஸி அந்த ஆட்டத்தில் பெனால்டி கிக் வாய்ப்பையும் தவறவிட்டார். குரோஷியாவோடு நடந்த ஆட்டத்தில் 3-0 என படுதோல்வி அடைந்தது. மேலும் மெஸ்ஸியின் ஆட்டமும் மெச்சும்படியாக இல்லை. கடந்த 2014-இல் இறுதிச் சுற்று வரை முன்னேறிய ஆர்ஜென்டீனா தற்போது துவக்க ஆட்டங்களிலேயே தடுமாறி, அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுமா எனத் தெரியவில்லை. தனது அணி சோபிக்கத் தவறியதால், இந்த உலகக் கோப்பையோடு ஓய்வு பெற மெஸ்ஸி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த 2016-இல் ஏற்கெனவே ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட அவர் பின்னர் திடீரென தனது முடிவை மாற்றிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

குரோஷிய அணியில் முக்கியமான 6 வீரர்களுக்கு மஞ்சள் அட்டை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் அவர்களுக்கு ஓய்வு தரப்படும் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் இரண்டாம் நிலை வீரர்கள் ஐஸ்லாந்துக்கு எதிரான போட்டியில் களமிறக்கப்படுவர். அதில் குரோஷியா தோல்வியடைந்தால் ஆர்ஜென்டீனாவின் நிலை சிக்கலாகிவிடும். எனினும் கோல் சராசரி அடிப்படையில் ஆர்ஜென்டீனாவுக்கு வாய்ப்புள்ளது.

ஆர்ஜென்டீனா நாக் அவுட்டுக்குத் தகுதி பெறும்

* நைஜீரியாவைத் தோற்கடித்தால், அதேசமயம் ஐஸ்லாந்து, குரோஷியுடன் தோற்கவேண்டும்.
* ஆர்ஜென்டீனா, ஐஸ்லாந்து ஆகிய இரு அணிகளும் வென்றால் இரு அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அந்நிலையில் கோல்கள் வித்தியாசத்தில் ஆர்ஜென்டீனா தகுதி பெற
வாய்ப்புண்டு. அதாவது ஐஸ்லாந்து வெல்கிற பட்சத்தில் ஆர்ஜென்டீனா அணி, நைஜீரியாவுக்கு எதிராக 2 கோல்கள் அதிகமாக அடித்திருக்கவேண்டும். 

ஆர்ஜென்டீனா வெளியேறிவிடும்

* நைஜீரியாவுடன் தோற்றுவிட்டால்.
* நைஜீரியாவுடனான ஆட்டம் சமனில் முடிந்தால்.
* ஆர்ஜென்டீனா, ஐஸ்லாந்து ஆகிய இரு அணிகளும் வென்றால் இரு அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அந்நிலையில் கோல்கள் வித்தியாசத்தில் பின்தங்கியிருந்தால் வெளியேற
வாய்ப்புண்டு. 
* கோல்கள் வித்தியாசத்திலும் இரு அணிகளும் சமநிலையில் இருந்தால், பிறகு நன்னடத்தைப் புள்ளிகளைக் கொண்டு மதிப்பிடப்படும். எனில் ஆர்ஜென்டீனா நிச்சயம் வெளியேறிவிடும். இதுவரை அந்த அணி 3 மஞ்சள் அட்டையைப் பெற்றுள்ளார்கள். ஆனால், ஐஸ்லாந்து அணி ஒன்றுகூட பெறவில்லை. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/26/w600X390/Messi_crotia1.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/26/d-day-for-argentina-against-nigeria-2947664.html
2947635 விளையாட்டு FIFA 2018 உலகக் கோப்பை 2018: அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியல்! எழில் DIN Tuesday, June 26, 2018 11:06 AM +0530  

ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி ரஷியாவில் ஜூன் 14 முதல் தொடங்கியுள்ளன. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறும் 64 ஆட்டங்களில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த உலகக் கோப்பைப் போட்டியில் நேற்று வரை (ஜூன் 25) அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியல்:

 வரிசை   எண்             வீரர்  ஆட்டங்கள்  கோல்கள் 
 1.  ஹென்றி கேன்   (இங்கிலாந்து)  2   5
 2.  ரொமலு லுகாகு   (பெல்ஜியம்)  2  4
 3.  கிறிஸ்டியனோ   ரொனால்டோ   (போர்ச்சுகல்)  2  4
 4.  டியகோ கோஸ்டா     (ஸ்பெயின்)  2  3
 5.  டெனிஸ் செரிஷெவ்   (ரஷியா)  3  3

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/26/w600X390/Harry_KANE_england2.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/26/goals-scored-2947635.html
2946356 விளையாட்டு FIFA 2018 நடப்பு சாம்பியன் ஜொ்மனி தலை தப்பியது DNS DNS Sunday, June 24, 2018 08:14 PM +0530  

ஸ்வீடனுடன் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜொ்மனி அதிர்ஷ்டவசமாக இறுதி கட்டத்தில் 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

குரூப் எஃப் பிரிவைச் சோ்ந்த ஸ்வீடன்-ஜொ்மனி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சனிக்கிழமை நள்ளிரவு சோச்சி பிஷ்ட் மைதானத்தில் நடைபெற்றது. பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணியாக கருதப்பட்ட ஜொ்மனி, இதே பிரிவைச் சோ்ந்த மெக்ஸிகோவுடன் தொடக்க ஆட்டத்தில் 0-1 என அதிர்ச்சித் தோல்வியடைந்தது. 

இதனால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுமா என கேள்விக் குறி எழுந்த நிலையில் ஸ்வீடனுடன் மோதியது. இரு அணிகளும் 11 முறை மோதியதில் ஜொ்மனியே அனைத்திலும் வென்றுள்ளது.

இந்நிலையில் ஆட்டம் தொடங்கிய 32-வது நிமிடத்தில் ஸ்வீடன் வீரா் கிளாஸன் கடத்தி அனுப்பிய பந்தை ஓலா டொய்வோனென் அற்புதமாக கோலாக்கினார். 48-வது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் கோமஸ் அனுப்பிய பந்தை மார்கோ ரியுஸ் கோலாக்கினார்.

மார்கோ ரியுஸ் கடத்தித் தந்த பந்தை ஆட்டம் முடிய சில விநாடிகள் இருக்கையில் டோனி குரூஸ் கோலாக்கி தனது அணி வெல்ல உதவினார். இதன் மூலம் ஜொ்மனி 2-1 என வெற்றி பெற்றது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/24/w600X390/_102179978_durmaz_afp.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/24/நடப்பு-சாம்பியன்-ஜொ்மனி-தலை-தப்பியது-2946356.html
2946355 விளையாட்டு FIFA 2018 கேப்டன் ஹாரி கேன் ஹாட்ரிக்: பனாமாவுக்கு எதிராக இங்கிலாந்து கோல் மழை DNS DNS Sunday, June 24, 2018 08:06 PM +0530  

பனாமாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 6-1 கோல்மழை பொழிந்தது. குரூப் ஜி பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து- பனாமா அணிகள் மோதும் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நோவாகிராடில் நடைபெற்றது.

8-வது நிமிடத்திலேயே இங்கிலாந்தின் டிரிப்லா் அனுப்பிய பந்தை ஜான் ஸ்டோன்ஸ் அற்புதமாக கோலாக்கினார். 22-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பின் மூலம் கேப்டன் ஹாரி கேன் கோலடித்தார். 36-வது நிமிடத்தில் ஜெஸ்ஸி லின்கார்டும், 40-வது நிமிடத்தில் ஜான் ஸ்டோன்ஸும் கோலடித்தனா்.

45-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை பயன்படுத்தி தனது இரண்டாவது கோலை அடித்தார் கேப்டன் ஹாரி. இதன் மூலம் ஆட்டத்தின் முதல் பாதி நிறைவில் இங்கிலாந்து 5-0 என முன்னிலை பெற்றிருந்தது. முதல் பாதியில் 4 கோல்களுக்கு மேல் அடிப்பது இங்கிலாந்துக்கு இதுவே முதன்முறையாகும்.

இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியதும் 62-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் லாப்டஸ் சீக் கடத்தி அனுப்பி பந்தை அற்புதமாக கோலாக்கினார் கேப்டன் ஹாரி கேன். இதன் மூலம் ஹாரி கேன் ஹாட்ரிக் கோலடித்தார். 

பனாமாவுக்கு ஆறுதலாக 78-வது நிமிடத்தில் அந்த அணியின் அவில்லா அனுப்பிய பந்தை பெலிப் பலோய் சிறறப்பாக கோலடித்தார். இறுதியில் 6-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வென்று நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/24/w600X390/Harry_Kane.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/24/கேப்டன்-ஹாரி-கேன்-ஹாட்ரிக்-பனாமாவுக்கு-எதிராக-இங்கிலாந்து-கோல்-மழை-2946355.html
2946344 விளையாட்டு FIFA 2018 காணாமல் போன ஆர்ஜென்டினா கால்பந்து அணி ரசிகர் பிணமாக மீட்பு ANI ANI Sunday, June 24, 2018 03:42 PM +0530  

கேரளாவில் காணாமல் போன ஆர்ஜென்டினா கால்பந்து அணியின் தீவிர ரசிகர் ஞாயிற்றுக்கிழமை பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பை கால்பந்து 2018 நடைபெற்று வரும் இந்த நேரத்தில், அதுவும் மெஸ்ஸியின் பிறந்த தினத்தில் இக்கோரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கேரளாவில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாக கால்பந்து திகழ்கிறது. அங்கு பிரேசில், ஆர்ஜென்டினா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட அணிகளின் தீவிர ரசிகர்கள் உள்ளனர்.

ஜூன் 21-ஆம் தேதி ஆர்ஜென்டினா, குரோஷியா அணிகளுக்கு இடையிலான லீக் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில் குரோஷியா, பலம் வாய்ந்த ஆர்ஜென்டினாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 

கேரளாவில் உள்ள கோட்டயம் பகுதியில் வசிக்கும் டினு ஜோஸப் என்ற 30 வயது ஆர்ஜென்டினா ரசிகர் ஜூன் 22-ஆம் தேதி முதல் காணாமல் போனார். மேலும், இனி இந்த கால்பந்து உலகக் கோப்பையில் நான் ரசிப்பதற்கு ஒன்றுமில்லை. எனவே நான் தற்கொலை செய்துகொள்கிறேன், இதற்கு யாரும் காரணமில்லை என்று எழுதிவிட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில், 2 நாட்கள் தீவிர தேடுதலுக்குப் பின்னர் டினு ஜோஸப்-இன் உடல் கோட்டயத்தில் உள்ள இல்லிக்கல் பாலத்தின் கீழ் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/24/w600X390/argi_fan.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/24/காணாமல்-போன-ஆர்ஜென்டினா-கால்பந்து-அணி-ரசிகர்-பிணமாக-மீட்பு-2946344.html
2945659 விளையாட்டு FIFA 2018 உலகக் கோப்பை: நாக் அவுட்டுக்குத் தகுதி பெற்ற அணிகளும் வெளியேறிய அணிகளும்! எழில் DIN Saturday, June 23, 2018 11:24 AM +0530  

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி ரஷியாவில் ஜூன் 14 முதல் தொடங்கியுள்ளன. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறும் 64 ஆட்டங்களில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்நிலையில் நேற்று வரையிலான (ஜூன் 22) ஆட்டங்களின் முடிவில், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு நான்கு அணிகளே தகுதி பெற்றுள்ளன. அதேசமயம் 5 அணிகள் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளன. அந்த அணிகள் கடைசி ஆட்டத்தில் வென்றாலும் நாக் அவுட்டுக்குத் தகுதி பெறமுடியாது. குரூப் ஏ முதல் குரூப் ஈ வரையிலான பிரிவுகள் அனைத்து அணிகளும் தலா இரு ஆட்டங்கள் ஆடியுள்ளன. ஆனால், குரூப் எஃப், குரூப் ஜி, குரூப் ஹெச் ஆகிய மூன்று பிரிவுகளிலும் அனைத்து அணிகளும் இதுவரை ஓர் ஆட்டத்தில் மட்டுமே பங்கேற்றுள்ளன. 

காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்ற அணிகள்

ரஷியா
உருகுவே
பிரான்ஸ்
குரோஷியா

வெளியேறிய அணிகள்

எகிப்து
சவுதி அரேபியா
மொராக்கோ
பெரு
கோஸ்டா ரிகா

]]>
FIFAWorldCup2018 http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/23/w600X390/crotia1.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/23/qualified-to-next-round-2945659.html
2945045 விளையாட்டு FIFA 2018 கோஸ்டா ரிகாவை வெளியேற்றியது பிரேஸில் DIN DIN Friday, June 22, 2018 08:03 PM +0530  

கோஸ்டா ரிகா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிரேஸில் நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது. இரு தோல்விகளை கண்ட கோஸ்டா ரிகா போட்டியில் இருந்து வெளியேறியது.

குரூப் ஈ பிரிவைச் சோ்ந்த பிரேஸில்-கோஸ்டா ரிகா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் செயின்ட் பீட்டா்ஸ்பா்க் நகரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இரு அணிகளும் ஏற்கெனவே 10 முறை மோதியுள்ளன. இதில் பிரேசில் 9 முறை வென்றறது. கோஸ்டா ரிகா ஓரே ஒரு முறை மட்டுமே வென்றுள்ளது. பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றான பிரேஸில் தனது முதல் ஆட்டத்தில் சுவிட்சா்லாந்துடன் டிரா செய்தது. காயத்தால் அவதிப்பட்ட அதன் நட்சத்திர வீரா் நெய்மா் அந்த ஆட்டத்தில் சரிவர விளையாடவில்லை. 

இதற்கிடையே கோஸ்டா ரிகா அணி தனது முதல் ஆட்டத்தில் சொ்பியாவிடம் தோல்வியடைந்தது.

நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற இந்த ஆட்டத்தில் வென்றே தீர வேண்டும் என்ற நிலையில் பிரேஸில் களமிறங்கியது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதன் வீரா்கள் நெய்மா், குட்டின்ஹோ, கப்ரியேல் ஜீஸஸ் ஆகியோர் தாக்குதல் ஆட்டத்தை கடைபிடித்தனா். 

26-வது நிமிடத்தில் ஜீஸஸ் அடித்த பந்து கோஸ்டா ரிகா கோல்பகுதியில் புகுந்தும், அது ஆஃப் சைட் என அறிவிக்கப்பட்டது. நெய்மரும் இந்த ஆட்டத்தில் கோலடிக்க தீவிரமாக முயற்சி மேற்கொண்டார். எனினும் அவரது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. 

இந்நிலையில் முதல் பாதி ஆட்ட நிறைவில் இரு அணிகளும் கோலடிக்கவில்லை.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் பிரேஸில் கட்டுப்பாட்டிலேயே பந்து இருந்து கோலடிக்க முடியவில்லை. கூடுதலாக 6 நிமிடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் கப்ரியேல் ஜீஸஸ் அனுப்பிய பந்தை பிலிப் குட்டின்ஹோ அற்புதமாக கோலடித்தார். 

அடுத்த சிறிது நேரத்திலேயே டக்ளஸ் கோஸ்டா கடத்தி தந்த பந்தை நட்சத்திர வீரா் நெய்மா் கோலாக்கினார்.

அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பிரேஸில் தலைமை பயிற்சியாளா் டைட் மைதானத்தின் உள்ளே ஓடிச் சென்ற போது கீழே விழுந்த நிலையிலும் வெற்றியைக் கொண்டாடினார்.

இந்த வெற்றி மூலம் குரூப் ஈ பிரிவில் 4 புள்ளிகளுடன் பிரேஸில் முதலிடத்திலும், 3 புள்ளிகளுடன் சொ்பியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/22/w600X390/Neymar.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/22/கோஸ்டா-ரிகாவை-வெளியேற்றியது-பிரேஸில்-2945045.html
2944956 விளையாட்டு FIFA 2018 ‘மெஸ்ஸிக்கு ஏற்கெனவே தெரியும்’: ஆர்ஜென்டீனா தோல்வியின் ஐந்து முக்கிய அம்சங்கள்! ச.ந. கண்ணன் DIN Friday, June 22, 2018 11:49 AM +0530  

உலகக் கோப்பை கால்பந்து 2018 இறுதிச் சுற்றில் இங்கிலாந்து-ஆர்ஜென்டீனா அணிகள் மோதும் என பிரபல முன்னாள் வீரர் டேவிட் பெக்காம் ஆரூடம் தெரிவித்த நிலையில் ஆர்ஜென்டீனா அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெறுவதே மிகவும் சிரமம் என்கிற நிலை உருவாகியுள்ளது. 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி ரஷியாவில் ஜூன் 14 முதல் தொடங்கியுள்ளன. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறும் 64 ஆட்டங்களில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன.

குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ள ஆர்ஜென்டீனாவும்-குரோஷியாவும் வியாழக்கிழமை இரவு நோவாகிராடில் நடைபெற்ற ஆட்டத்தில் மோதின.

பலமான ஆர்ஜென்டீனா தனது தொடக்க ஆட்டத்தில் கத்துக்குட்டி அணியான ஐஸ்லாந்திடம் டிரா மட்டுமே செய்ய முடிந்தது. நட்சத்திர வீரர் மெஸ்ஸியால் பெனால்டி கிக் வாய்ப்பைக் கூட கோலாக மாற்ற முடியவில்லை. இதனால் ஆர்ஜென்டீனாவுக்கு 1 புள்ளி மட்டுமே கிடைத்தது. அதே நேரத்தில் குரோஷியா 2-0 என நைஜீரிய அணியை வீழ்த்தி உற்சாகத்துடன் ஆர்ஜென்டீனாவை எதிர்கொண்டது. குரூப் டி பிரிவில் 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. 

இதனால் இந்த ஆட்டத்தை ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்தார்கள். ஆனால் எதிர்பார்த்ததை விடவும் குரோஷிய வீரர்கள் அமர்க்களமாக விளையாடினார்கள். 53-வது நிமிடத்தில் ஆர்ஜென்டீனா கோல் கீப்பர் வில்லியின் தவறால் ஆண்டே ரெபிக் முதல் கோலை அடித்தார். கடைசிக் கட்டத்தில் லுகாவும் இவானும் மேலும் கோல்கள் அடித்து ஆர்ஜென்டீனா, மெஸ்ஸி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார்கள். இதனால் குரோஷிய அணி 3-0 என்கிற கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. 1 புள்ளிகள் உள்ள ஆர்ஜென்டீனா அணி, நைஜீரியாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வென்றால் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறமுடியும். 

இந்தப் போட்டியில் ஆர்ஜென்டீனா அணி மோசமாக விளையாடி வந்தாலும் அதன் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். நேற்றைய ஆட்டத்தின்போது அற்புதமான சூழலை உருவாக்கினார்கள். இதனால் உத்வேகம் அடையாமல் ஆர்ஜென்டீனா தோற்றபிறகு, பலரும் கண்ணீர் சிந்தினார்கள். இப்படிப்பட்ட ரசிகர்களை இந்த நிலைக்குத் தள்ளக்கூடாது.

குரோஷியா இரு அட்டகாசமான வெற்றிகளால் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. 1998-க்குப் பிறகு இப்போதுதான் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறுகிறது. துணிச்சலான வீரர்களைக் கொண்ட இந்த அணி மேலும் பல அதிர்ச்சிகளை அளிக்கும் என தற்போது எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்ஜென்டீனா அணியின் தோல்வி: ஐந்து முக்கிய அம்சங்கள்

* குரூப் பிரிவு ஆட்டங்களில் 3 கோல்கள் வித்தியாசத்தில் ஆர்ஜென்டீனா அணி தோற்பது இது இரண்டாவது முறை.

1958: 1-6 vs செக்கோஸ்லோவாகியா
2018: 0-3 vs குரோஷியா 

* ஆட்டம் தொடங்கும்முன்பு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது நெற்றியைத் தேய்த்தபடி மெஸ்ஸி கவலையுடன் காணப்பட்டார். இதனால் நடக்கப்போவதை முன்பே அறிந்திருந்தார் மெஸ்ஸி என்று ரசிகர்கள் தற்போது கூறிவருகிறார்கள். மெஸ்ஸியினால் மட்டுமே ஆர்ஜென்டீனா அணியைக் காப்பாற்றமுடியாது. இதர வீரர்கள் பங்களிக்க வேண்டும் என்பது இந்த உலகக் கோப்பைப் போட்டியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

* ஐஸ்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கோல் அடிக்க 11 முறை முயன்றார் மெஸ்ஸி. ஆனால் நேற்று அவர் அதுபோன்ற ஒரு ஷாட்டை மட்டுமே அடித்தார். 

இது எங்களுடைய திட்டம். அதை நிறைவேற்றியுள்ளோம் என்கிறார் குரோஷியா பயிற்சியாளர் லுகா. ஆட்டத்திலிருந்து அவரை முழுவதுமாகத் துண்டிக்க எண்ணினோம். அவருக்குப் பந்து செல்லாதவாறு பார்த்துக் கொண்டோம். அவர் மிகவும் ஆபத்தான வீரர். அவரால் மட்டுமே எல்லாவற்றையும் செய்துவிடமுடியாது. கால்பந்து விளையாட்டில் சக வீரர்களின் உதவியும் தேவை என்று அவர் கூறியுள்ளார்.

* மெஸ்ஸி, ஆர்ஜென்டீனா கோல் கீப்பர் என இந்தத் தோல்விக்குப் பலரும் இவர்களைக் கை காட்டுகிறார்கள். ஆனால் முதல் பகுதியில் கிடைத்த அற்புதமான வாய்ப்பைத் தவறவிட்ட ஆர்ஜென்டீனாவின் என்ஸோ  பெரேஸை என்னவென்று சொல்வது? இந்த விடியோவைப் பாருங்கள். இதை மட்டுமே கோல் ஆக மாற்றியிருந்தால் ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கும் அல்லவா!

* இன்று நடைபெறுகிற ஆட்டத்தில் நைஜீரியாவை ஐஸ்லாந்து தோற்கடித்து விட்டால் ஆர்ஜென்டீனாவின் நிலைமை மிகவும் மோசமாகிவிடும். ஐஸ்லாந்து அதன் கடைசி ஆட்டத்தில் தோற்கவேண்டும். பிறகு கடைசி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா வெல்லவேண்டும். இது நடந்தால் மட்டும் போதாது. கோல்களின் அடிப்படையில் முன்னிலை பெற்றிருந்தால் மட்டுமே ஆர்ஜென்டீனா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெறும். இன்றைய நிலையில் எல்லாமே கடினமான சவாலாக உள்ளன.

ஆர்ஜென்டீனா - குரோஷியா ஆட்டத்தின் ஹைலைட்ஸ்

]]>
Argentina, Messi, Croatia http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/22/w600X390/Messi_crotia1.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/22/five-things-we-learnt-from-argentinas-loss-to-croatia-2944956.html
2944320 விளையாட்டு FIFA 2018 எதன் அடிப்படையில் உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றுக்கு அணிகள் தேர்வாகின்றன? ஃபிஃபா விதிமுறைகள் என்ன? எழில் DIN Thursday, June 21, 2018 03:19 PM +0530  

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி ரஷியாவில் ஜூன் 14 முதல் தொடங்கியுள்ளன. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறும் 64 ஆட்டங்களில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன.

மொத்தமுள்ள 8 பிரிவுகளில் இருந்து தலா இரு அணிகள் தேர்வாகி மொத்தம் 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுகளில் போட்டியிடும். குரூப் ஏ மற்றும் பி பிரிவுகளில் மட்டும் அனைத்து அணிகளும் தலா 2 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. குரூப் சி, டி, இ, எஃப், ஜி, ஹெச் ஆகிய பிரிவுகளில் உள்ள அணிகள் தலா ஓர் ஆட்டத்தில் மட்டுமே பங்கேற்றுள்ளன.

இந்நிலையில் நேற்று வரையிலான ஆட்டங்களின் அடிப்படையில் இரு அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள லீக் ஆட்டங்கள் மூலம் 14 அணிகள் தேர்வாகவுள்ளன.

இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட அணிகள் சம அளவிலான புள்ளிகளைக் கொண்டிருந்தால் கீழ்க்கண்ட ஃபிஃபா விதிகளின் அடிப்படையில் நாக் அவுட் சுற்றுக்கு அணிகள் தேர்வு செய்யப்படும்.

1. மொத்தப் புள்ளிகள்
2. கோல்கள் வித்தியாசம்
3. கோல்களின் எண்ணிக்கை
4. நன்னடத்தைப் புள்ளிகள். (மஞ்சள் அட்டை = -1, மறைமுகமான சிவப்பு அட்டை (இரண்டாவது மஞ்சள் அட்டை) = -3, நேரடியான சிவப்பு அட்டை = -4, மஞ்சள் அட்டை மற்றும் நேரடியான சிவப்பு அட்டை = -5)
5.. குலுக்கல் முறை

]]>
Russia 2018, Tie-breakers http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/21/w600X390/brazil1.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/21/tie-breakers-for-russia-2018-groups-2944320.html
2944310 விளையாட்டு FIFA 2018 உலகக் கோப்பை: நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்ற இரு அணிகள்! எழில் DIN Thursday, June 21, 2018 02:56 PM +0530  

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி ரஷியாவில் ஜூன் 14 முதல் தொடங்கியுள்ளன. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறும் 64 ஆட்டங்களில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன.

மொத்தமுள்ள 8 பிரிவுகளில் இருந்து தலா இரு அணிகள் தேர்வாகி மொத்தம் 16 அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுகளில் போட்டியிடும். குரூப் ஏ மற்றும் பி பிரிவுகளில் மட்டும் அனைத்து அணிகளும் தலா 2 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. குரூப் சி, டி, இ, எஃப், ஜி, ஹெச் ஆகிய பிரிவுகளில் உள்ள அணிகள் தலா ஓர் ஆட்டத்தில் மட்டுமே பங்கேற்றுள்ளன.

இந்நிலையில் நேற்று வரையிலான ஆட்டங்களின் அடிப்படையில் இரு அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள லீக் ஆட்டங்கள் மூலம் 14 அணிகள் தேர்வாகவுள்ளன.  

குரூப் ஏ பிரிவில் உள்ளூர் அணியான ரஷியாவும் உருகுவேவும் 6 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கிடையே நடைபெறும் ஆட்டத்தில் வெல்லும் அணி குரூப் ஏ பிரிவில் முதலிடத்தைப் பிடிக்கும்.

குரூப் பிரிவில் இதுபோல தெளிவான நிலை இல்லை. ஸ்பெயின், போர்ச்சுகல் அணிகள் 4 புள்ளிகளும் ஈரான் அணி 3 புள்ளிகளும் பெற்றுள்ளன.  இரு ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ள மொராக்கோ போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. 

அடுத்ததாக திங்கள் அன்று, ஸ்பெயின் vs மொராக்கோ, ஈரான் vs போர்ச்சுகல் ஆகிய ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. கடைசி ஆட்டத்தில் ஸ்பெயின் தோற்றாலும், ஈரானுக்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகல் வெற்றி பெற்றால், போர்ச்சுகல், ஸ்பெயின் அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெறும். ஆனால் ஸ்பெயின் தோற்று, ஈரான் வெற்றி பெற்றுவிட்டால், அந்த அணி நாக் அவுட் சுற்றுக்குச் சென்றுவிடும். கோல்களின் அடிப்படையில் ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய இரு அணிகளில் ஓர் அணி தகுதி பெறும்.  

2018 உலகக் கோப்பை: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்ற அணிகள்

1. ரஷியா
2. உருகுவே

லீக் ஆட்டங்கள் ஜூன் 28 அன்று முடிவடைகின்றன. காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் ஜூன் 30 முதல் தொடங்கவுள்ளன. ஜூலை 6 முதல் காலிறுதிச் சுற்றுகளும் ஜூலை 10 முதல் அரையிறுதிச் சுற்றுகளும் தொடங்கவுள்ளன. இறுதிச்சுற்று ஜூலை 15 அன்று நடைபெறவுள்ளது.

]]>
2018 FIFA World Cup, last-16 http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/21/w600X390/Suarez_Uruguay_3.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/21/last-16-2944310.html
2944260 விளையாட்டு FIFA 2018 இன்றைய உலகக் கோப்பை ஆட்டங்கள்: காலிறுதிக்குத் தகுதி பெறவேண்டிய நெருக்கடியில் நட்சத்திர அணிகள்! எழில் DIN Thursday, June 21, 2018 11:12 AM +0530  

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி ரஷியாவில் ஜூன் 14 முதல் தொடங்கியுள்ளன. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறும் 64 ஆட்டங்களில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்நிலையில் இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்த மூன்று ஆட்டங்களின் முடிவுகளும் காலிறுதி வரிசையை நிர்ணயிப்பதாக உள்ளன. எனவே ரசிகர்கள் இந்த மூன்று ஆட்டங்களின் முடிவுகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

பிரான்ஸ் vs பெரு (ஆட்ட நேரம்: இரவு 8.30 மணி)

முந்தைய ஆட்டங்கள்

பிரான்ஸ் 2 ஆஸ்திரேலியா 1
பெரு 0 டென்மார்க் 1

குரூப் சி பிரிவில் முதலிடம் பிடிக்கும் முனைப்பில் உள்ள பிரான்ஸ் வியாழக்கிழமை பெரு அணியுடன் மோதுகிறது. தற்போது உலகக் கோப்பை 2018-இல் பட்டம் வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் நிலையில் அந்த அணி ஏற்கெனவே ஆஸி. அணியை வென்று 3 புள்ளிகளுடன் உள்ளது. அதே பிரிவில் டென்மார்க் அணியும் 3 புள்ளிகளுடன் உள்ளது.

வலுவான அணியாக கூறப்படும் பிரான்ஸ் தனது முதல் ஆட்டத்தில் ஆஸி. அணியுடன் போராடி தான் வெல்ல முடிந்தது. இதற்கிடையே ஏனைய ஜாம்பவான் அணிகளான ஆர்ஜென்டீனா, பிரேஸில் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது. நடப்பு சாம்பியன் ஜெர்மனியோ, மெக்ஸிகோவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இதனால் தனது பிரிவில் முதலிடம் பெறும் முனைப்பில் பிரான்ஸ் உள்ளது.

இதற்கிடையே பெரு அணியுடன் பிரான்ஸ் மோதவுள்ளது. பிரான்ஸில் பால் போக்பா, கிளியன் மாப்பே, ஆலிவர் ஜெரார்ட், உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். அதே நேரத்தில் பெரு அணி பாவ்லோ கியுரோ நட்சத்திர வீரராக திகழ்கிறார். இரு அணிகளில் பிரான்ஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. இன்றைய வெற்றியுடன் காலிறுதிக்குத் தகுதி பெறுமா பிரான்ஸ்?

ஆஸ்திரேலியா vs டென்மார்க் (ஆட்ட நேரம்: மாலை 5.30 மணி)

முந்தைய ஆட்டங்கள்

ஆஸ்திரேலியா 1 பிரான்ஸ் 2
டென்மார்க் 1 பெரு 0

டென்மார்க் ஏற்கெனவே பெருவை 1-0 என வென்று 3 புள்ளிகளுடன் உற்சாகமாக உள்ளது. அதே நேரத்தில் ஆஸி.அணி 1-2 என பிரான்ஸிடம் தோல்வியைத் தழுவியது. கடந்த 1986-இல் மட்டுமே டென்மார்க் தனது இரண்டு துவக்க சுற்று ஆட்டங்களிலும் வென்றிருந்தது.

ஐரோப்பிய அணிகளில் இரண்டாம் நிலை வலுவான அணியாக உள்ள டென்மார்க்கில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் சிறப்பான பார்முடன் காணப்படுகிறார். அதன் கோல்கீப்பர் கஸ்பர் சிமைச்சல் சிறப்பாக பெருவின் கோலடிக்கும் வாய்ப்புகளை தடுத்தார். கஸானில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் வென்றால் தான் போட்டியில் தொடர்ந்து நீடிக்க முடியும் என்பதால் ஆஸி. கடுமையாக போராடும் எனத் தெரிகிறது. கேப்டன் ஜெடிநாக், டிரென்ட் செயின்ஸ்பரி, ஜியாங்ஸு ஆகியோரை ஆஸி நம்பியுள்ளது. இந்த ஆட்டத்தில் டென்மார்க் அணிக்கே வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் அந்த
அணி காலிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

ஆர்ஜென்டீனா vs குரோஷியா (ஆட்ட நேரம்: இரவு 11.30 மணி)

முந்தைய ஆட்டங்கள்

ஆர்ஜென்டீனா 1 ஐஸ்லாந்து 1
குரோஷியா 2 நைஜீரியா 0

குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ள ஆர்ஜென்டீனாவும்-குரோஷியாவும் வியாழக்கிழமை இரவு நோவாகிராடில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன. 

பலமான ஆர்ஜென்டீனா தனது தொடக்க ஆட்டத்தில் கத்துக்குட்டி அணியான ஐஸ்லாந்திடம் டிரா மட்டுமே செய்ய முடிந்தது. நட்சத்திர வீரர் மெஸ்ஸியால் பெனால்டி கிக் வாய்ப்பைக் கூட கோலாக மாற்ற முடியவில்லை. இதனால் ஆர்ஜென்டீனாவுக்கு 1 புள்ளி மட்டுமே கிடைத்தது. அதே நேரத்தில் குரோஷியா 2-0 என நைஜீரிய அணியை வீழ்த்தி உற்சாகத்துடன் ஆர்ஜென்டீனாவை எதிர்கொள்கிறது. குரூப் டி பிரிவில் 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

பட்டம் வெல்லும் அணி எனக் கருதப்படும் ஆர்ஜென்டீனா இந்த ஆட்டத்தில் வென்றால் தான் போட்டியில் நீடிக்க முடியும் என்பதால் குரோஷியாவுடன் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

]]>
world cup, Denmark vs. Australia, France vs. Peru, Argentina vs. Croatia http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/21/w600X390/messi9911.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/21/denmark-vs-australia-france-vs-peru-argentina-vs-croatia-2944260.html
2943644 விளையாட்டு FIFA 2018 மொராக்கோவை வெளியேற்றியது போர்ச்சுகல்: கிறிஸ்டியானோ ரொனால்டோ அபாரம் DIN DIN Wednesday, June 20, 2018 08:38 PM +0530  

உலகக் கோப்பை 2018-இல் இருந்து மொராக்கோ அணியை வெளியேற்றியது போர்ச்சுகல் அணி. மாஸ்கோவின் லுஷ்னிகி மைதானத்தில் புதன்கிழமை மாலை இரு அணிகளுக்கு இடையிலான குரூப் பி பிரிவு ஆட்டம் நடைபெற்றது.

ஐரோப்பிய சாம்பியனான போர்ச்சுகல் ஆட்டத்தின் தொடக்க முதலே தாக்குதல் ஆட்டத்தில் கவனம் செலுத்தியது. கேப்டனும், நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ அபார ஃபார்மில் உள்ள நிலையில் கோலடிப்பதில் அவா் தீவிர கவனம் செலுத்தினார். 

இதன் பலனாக 4-ஆவது நிமிடத்தில் மௌடின்ஹோ கார்னா் மூலம் அடித்த பந்தை ரொனால்டோ கோலாக்கினார். இது உலகக் கோப்பையில் அவா் அடிக்கும் நான்காவது கோலாகும். அதன் பின்னா் சமன் செய்ய மொராக்கோ அணி தீவிரமாக தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. ஆனால் கோலடிக்க முடியவில்லை. 

இதனால் முதல் பாதி ஆட்ட நிறைறவில் போர்ச்சுகல் 1-0 என முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் இரண்டாம் பாதியிலும் மொராக்கோ அணி ஆதிக்கம் செலுத்தியது. பெரும்பாலான நேரம் பந்து அதன் வசமே இருந்த நிலையில் கோலடிக்கும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.

மொராக்கோ அணி சிறறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், விழலுக்கு இறைறத்த நீராகியது. போர்ச்சுகலிடம் 1-0 என பெற்றற தோல்வியால் உலகக் கோப்பை 2018-இல் இருந்து வெளியேற்றறப்பட்டது.

மொராக்கோ கடந்த 1986-இல் மட்டுமே ஓரே முறைற போர்ச்சுகலை வென்றிருந்தது. இதர 3 ஆட்டங்களில் இரண்டில் போர்ச்சுகல் வென்றது. கடந்த 10 உலகக் கோப்பை குழு ஆட்டங்களில் போர்ச்சுகல் ஒன்றில் மட்டுமே தோல்வி அடைந்தது. 5-இல் வெற்றியும், 4-இல் சமனும் செய்தது.

ரொனால்டோ புதிய சாதனை:

மொராக்கோவுடன் அடித்த கோல் மூலம் இந்த உலகக் கோப்பையில் 4 கோல்கள் அடித்து அதிக கோலடித்த வீரா் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் சா்வதேச கால்பந்தில் 85 கோல்கள் அடித்த முதல் ஐரோப்பிய வீரா் என்ற சாதனையையும் அவா் படைத்துள்ளார்.

]]>
FIFAWorldCup 2018, கால்பந்து உலகக் கோப்பை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/20/w600X390/ronaldo.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/20/fifaworldcup-2018-portugal-beat-morocco-1-0-in-group-b-clash-at-luzhniki-stadium-in-russia-2943644.html
2943561 விளையாட்டு FIFA 2018 கால்பந்து உலகக் கோப்பை: நேற்று என்ன நடந்தது? எழில் DIN Wednesday, June 20, 2018 11:41 AM +0530  

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி ரஷியாவில் ஜூன் 14 முதல் தொடங்கியுள்ளன. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறும் 64 ஆட்டங்களில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன.

நேற்று நடைபெற்ற ஆட்டங்களின் விவரங்கள்:

ஜப்பான் 2 கொலம்பியா 1

குரூப் ஹெச் பிரிவில் உள்ள ஜப்பான்-கொலம்பியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் செவ்வாய்க்கிழமை மாலை சரன்ஸ்க் நகரில் நடைபெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஆட்டத்தில் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர போராடினர். ஆட்டம் தொடங்கி 4-வது நிமிடத்தில் கோல் பகுதியில் கொலம்பிய வீரர் கார்லோஸ் சாஞ்செஸ் கையில் பட்டு பந்து பவுல் ஆனது. இதையடுத்து கார்லோஸுக்கு நடுவர் சிகப்பு அட்டை காண்பித்ததால் வெளியேற்றப்பட்டார். பின்னர் 10 வீரர்களுடன் மட்டுமே கொலம்பியா ஆட முடிந்தது. இதையடுத்து ஜப்பான் அணிக்கு தரப்பட்ட பெனால்டி கிக் வாய்ப்பை பயன்படுத்தி ஷின்ஜி ககாவா அற்புதமாக கோலடித்தார். இதன் மூலம் ஜப்பான் 1-0 என முன்னிலை பெற்றது.

இதற்கிடையே 39-வது நிமிடத்தில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி ஜூவான் குயிண்டெரோ அற்புதமாக கோலடித்தார். இதனால் முதல் பாதி ஆட்ட முடிவின் போது 1-1 என சமநிலையில் இருந்தது. இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியவுடன் இரு அணி வீரர்களும் மீண்டும் முன்னிலை பெற தீவிரமாக போராடினர்.73-வது நிமிடத்தில் கிடைத்த கார்னர் மூலம் கீய்ஸுகி ஹோண்டா அடித்த பந்தை யுயா ஓஸாகா தலையால் முட்டி கோலாக்கினார். இதன் மூலம் ஜப்பான் 2-1 என முன்னிலை பெற்றது. ஆட்டம் முடியும் வரை கோலடிக்க கொலம்பிய வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. 

இறுதியில் ஜப்பான் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. கொலம்பிய வீரர் கார்லோஸ் சாஞ்செஸ் பெற்ற சிவப்பு அட்டை அந்த அணி தோல்விக்கு காரணமாகி விட்டது.

செனகல் 2 போலந்து 1

குரூப் ஹெச் பிரிவில் இடம் பெற்றுள்ள போலந்து-செனகல் அணிகள் இடையிலான ஆட்டம் மாஸ்கோ ஸ்பார்டக் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. 

38-வது நிமிடத்தில் செனகல் வீரர் மேன் பந்தை கடத்தி சக வீரர் இட்ரிஸா குயேவுக்கு அனுப்பினார். அதைத் தடுத்து போலந்து வீரர் தியாகோ சியோனக் வெளியில் அடிக்க முயன்ற போது, கோல்கம்பத்துக்குள் சென்று சேம்சைட் கோலானது. முதல் பாதி ஆட்ட நிறைவில் செனகல் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.

60-வது நிமிடத்தில் போலந்து வீரர் கியோசோவியக் வலுவின்றி தனது அணி கோல்கீப்பரிடம் பந்தை அடித்தார். அப்போது செனகல் முன்கள வீரர்கள் மியாங் நியாங் அந்த வாய்ப்பை பயன்படுத்தி அற்புதமாக கோலடித்தார். இதனால் 2-0 என செனகல் முன்னிலை பெற்றது. ஆட்டம் முடிய சிறிது நேரம் இருக்கையில் 86-ஆவது நிமிடத்தில் போலந்து வீரர் கிரகோர்ஸ் கியோசோவியக் ப்ரீ கிக் வாய்ப்பு மூலம் ஓரே கோலை அடித்தார். இறுதியில் செனகல் அணி 2-1 என போலந்தை வீழ்த்தி, உலகக் கோப்பையில் ஆப்ரிக்க அணியின் முதல் வெற்றியை பதிவு செய்தது.

ரஷியா 3 எகிப்து 1

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ரஷிய அணி 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் எகிப்தை எதிர்கொண்டது. 

இரண்டாம் பாதியில் 15 நிமிடங்களுக்குள் 3 கோல்களை அடித்து முன்னிலை பெற்றது ரஷிய அணி. 47வது நிமிடத்தில் எகிப்தின் அஹமது ஃபதி எதிர்பாராதவிதமாக சேம்சைட் கோல் அடித்து ரஷிய அணியின் முதல் கோலுக்குக் காரணமாக இருந்தார். 59 மற்றும் 62-வது நிமிடங்களில் ரஷிய வீரர்கள் கோலடித்து வெற்றி வாய்ப்பை உருவாக்கினார்கள். இதன்பின்னர் எகிப்தின் முகமது சாலா பெனால்டி மூலமாக ஒரு கோல் அடித்தாலும் அதனால் எகிப்தின் தோல்வியைத் தவிர்க்கமுடியவில்லை. ஆடிய இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவியுள்ளதால் போட்டியிலிருந்து வெளியேறுகிறது எகிப்து அணி. ரஷிய அணி இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளதால் காலிறுதிக்குத் தகுதி பெறும் நிலைமையில் உள்ளது. சவுதி அரேபியாவை உருகுவே தோற்கடித்துவிட்டால் ஓர் ஆட்டம் மீதமுள்ள நிலையில் ரஷியாவும் உருகுவேவும் காலிறுதிக்குத் தகுதிபெற்றுவிடும்.

]]>
2018 World Cup, Tuesday's matches http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/20/w600X390/Senegal_new_6.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/20/2018-world-cup-final-scores-for-tuesdays-matches-2943561.html
2942920 விளையாட்டு FIFA 2018 ஓரே அணிக்காக விளையாடும் சகோதரர்கள் (பெல்ஜியம்) DIN DIN Wednesday, June 20, 2018 10:34 AM +0530 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஓரே அணிக்காக விளையாடும் சகோதரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர் பெல்ஜியத்துக்காக விளையாடும் ஹசார்ட் சகோதரர்கள்.
பெல்ஜிய அணி கேப்டன் ஈடன் ஹசார்ட்-தோர்கன் ஹசார்ட் இருவரும் சகோதரர்கள் ஆவர். உலகக் கோப்பையில் ஓரே அணிக்காக சகோதரர்கள் ஆடுவது இது முதன்முறை இல்லை. 
ஏற்கெனவே 19 முறை நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் வெவ்வேறு அணிகளுக்காக சகோதரர்கள் ஓரே அணிக்கு ஆடியுள்ளனர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/20/w600X390/eden.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/20/ஓரே-அணிக்காக-விளையாடும்-சகோதரர்கள்-பெல்ஜியம்-2942920.html
2942921 விளையாட்டு FIFA 2018 இங்கிலாந்து கேப்டன் ஹாரிக்கு வாழ்த்து கூறிய கோலி DIN DIN Wednesday, June 20, 2018 10:34 AM +0530 உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி கேனுக்கு சுட்டுரை (டுவிட்டர்) மூலம் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி வாழ்த்து கூறினார்.
இங்கிலாந்து-துனிசியா இடையிலான ஆட்டம் வோல்காகிராடில் திங்கள்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி கேன் அடித்த அற்புத கோல்களால் அந்த அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு தனது சுட்டுரை பக்கத்தில் உலகக் கோப்பையில் வெற்றி பெற வாழ்த்துகள் என கோலி குறிப்பிட்டுள்ளார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/20/w600X390/virat.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/20/இங்கிலாந்து-கேப்டன்-ஹாரிக்கு-வாழ்த்து-கூறிய-கோலி-2942921.html
2942922 விளையாட்டு FIFA 2018 காயம் காரணமாக வீடு திரும்பினார் குரோஷிய வீரர் நிக்கோலா காலினிக் DIN DIN Wednesday, June 20, 2018 10:34 AM +0530 முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக குரோஷிய தாக்குதல் ஆட்டக்காரர் நிக்கோலா காலினிக் வீடு திரும்பினார். நைஜீரியாவுடன் நடைபெற்ற ஆட்டத்தில் இரண்டாம் பாதியில் பயிற்சியின் போது முதுகுப் பகுதியில் காயமடைந்தார். சர்வதேச அளவில் 15 கோல்களை அடித்துள்ள காலினிக் குரோஷியா உலகக் கோப்பைக்கு தகுதி பெறவும் உதவினார். காயம் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாததால் அவர் நாடு திரும்பினார் என அணியின் பயிற்சியாளர் டாலிக் தெரிவித்தார்.
 

]]>
http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/20/காயம்-காரணமாக-வீடு-திரும்பினார்-குரோஷிய-வீரர்-நிக்கோலா-காலினிக்-2942922.html
2942923 விளையாட்டு FIFA 2018 சவுதி அரேபிய வீரர்கள் சென்ற விமான என்ஜினில் தீப்பற்றியதால் பரபரப்பு DIN DIN Wednesday, June 20, 2018 10:33 AM +0530 உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக ரோஸ்டோவ் ஆன் டானில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்காக சவுதி அரேபிய வீரர்கள் சென்ற விமானம் நடுவானில் சென்ற போது ஒரு என்ஜினில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. 
எனினும் விமானியின் சாமர்த்தியத்தால் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. விமானத்தின் வலதுபுற என்ஜினில் சிறியதாக தீப்பற்றியது. எனினும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது என சவுதி அரேபிய கால்பந்து கூட்டமைப்பு தலைவர் அஹமது அல் ஹார்பி தெரிவித்துள்ளார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/20/w600X390/fire.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/20/சவுதி-அரேபிய-வீரர்கள்-சென்ற-விமான-என்ஜினில்-தீப்பற்றியதால்-பரபரப்பு-2942923.html
2942927 விளையாட்டு FIFA 2018 முதல் ஆட்டத்தில் சொதப்பிய முன்னணி அணிகள் -ஏ.வி.பெருமாள் DIN Wednesday, June 20, 2018 10:33 AM +0530 ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வாகைசூட வாய்ப்பிருப்பதாக கருதப்படும் பிரேசில், நடப்புச் சாம்பியன் ஜெர்மனி, கடந்த முறை இறுதிச் சுற்று வரை முன்னேறிய ஆர்ஜென்டீனா, ஸ்பெயின் ஆகிய 4 அணிகளும் தங்களின் முதல் ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கின்றன.
சமீபத்திய உலகக் கோப்பை வரலாற்றை எடுத்துக் கொண்டால், கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளஅணிகளாகக் கருதப்படும் 4 முன்னணி அணிகள் முதல் ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பை இழப்பது இதுவே முதல்முறையாகும். எனினும் ஆரம்பக் கட்ட ஆட்டங்களை வைத்து முன்னணி அணிகளை குறைத்து மதிப்பிட முடியாது. ஸ்பெயின், பிரேசில், ஆர்ஜென்டீனா ஆகியவை தங்களின் முதல் ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், டிரா செய்துவிட்டன. ஆனால் வலுவான அணியாகக் கருதப்படும் நடப்பு சாம்பியனான ஜெர்மனியோ 0-1 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவிடம் தோற்றிருக்கிறது. இதன்மூலம் உலகக் கோப்பை போட்டியில் நடப்பு சாம்பியனாக களமிறங்கி முதல் ஆட்டத்தில் தோற்ற அணிகளின் வரிசையில் ஸ்பெயின் (2014), பிரான்ஸ் (2002), ஆர்ஜென்டீனா (1990, 1982), இத்தாலி (1952) ஆகியவற்றுடன் ஜெர்மனியும் இணைந்துள்ளது.
ஜெர்மனிக்கு எதிராக துல்லியமாக உத்திகளை வகுத்து களமிறங்கிய மெக்ஸிகோ, அபாரமாக ஆடி வெற்றி கண்டதன் மூலம் புதிய உத்வேகம் பெற்றிருக்கிறது. இந்த ஆட்டத்தில் ஜெர்மனி வீரர்கள் வசம் அதிகநேரம் பந்து இருந்தபோதிலும், அவர்களால் மெக்ஸிகோவின் பின்கள வீரர்களைத் தாண்டி கோலடிக்க முடியாமல் போனது ஜெர்மனிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
ஜெர்மனிக்கு சிக்கல்: 
இளமை, அனுபவம் என சமபலம் கொண்ட அணியாகத் திகழும் ஜெர்மனி முழு பலத்துடன் களமிறங்கியபோதிலும், முதல் ஆட்டத்தில் தோற்றதால், அடுத்த இரு ஆட்டங்களில் வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியில் இருக்கிறது ஜெர்மனி. அடுத்த ஆட்டங்களில் ஸ்வீடனையும், தென் கொரியாவையும் கட்டாயம் ஜெர்மனி வெல்ல வேண்டும். இல்லையெனில் நடப்பு சாம்பியனுக்கு அடுத்த சுற்று கனவாகிவிடும்.
பிரேசில், ஆர்ஜென்டீனா அணிகள் தங்களின் முதல் ஆட்டத்தில் முன்னிலை பெற்ற நிலையில், அதன்பிறகு எதிரணிகளை கோலடிக்கவிட்டதன் மூலம் வெற்றி வாய்ப்பை கோட்டைவிட்டன. இதற்கு அந்த அணிகள் பதற்றத்துடன் விளையாடியதே காரணம் என கூறப்படுகிறது. குறிப்பாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மரை ஸ்விட்சர்லாந்து தடுப்பாட்டக்காரர்களும், மிட்பீல்டர்களும் சுற்றி வளைத்தபோது, பிரேசிலின் மற்ற ஸ்டிரைக்கர்களான காபிரியேல் ஜீசஸ், வில்லியன், குடின்கோ ஆகியோர் கோலடிக்க முயலாதது ஏமாற்றம் அளிப்பதாக அமைந்தது.
ஸ்பெயின் அணி 3-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலுடன் டிரா செய்தது. இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் போர்ச்சுகலின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல்களை அடித்ததால்தான், ஸ்பெயின் வெற்றியை இழக்க நேரிட்டது. எனினும் எஞ்சிய ஆட்டங்கள் அந்த அணிக்கு எளிதானதாக இருக்கும் என்பதால், அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் எந்த சிக்கலும் இருக்காது.
பயிற்சியாளரே பலம்: ஜெர்மனியை வீழ்த்திய முதல் மத்திய அமெரிக்க நாடு என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது மெக்ஸிகோ. இந்த வெற்றியின் சூத்திரதாரியாக அனைவராலும் போற்றப்படுவர் அந்த அணியின் பயிற்சியாளர் ஜூவான் கார்லோஸ் ஒசாரியோதான். காரணம், அவர் தனது அணியினரை வெற்றிக்காக விளையாடுமாறு ஊக்கப்படுத்துகிறாரே தவிர, மாறாக தோல்வியைக் கூறி நெருக்கடி கொடுப்பதில்லை.
முதல் ஆட்டத்தில் சொதப்பிய முன்னணி அணிகள், அடுத்த ஆட்டத்தில் வெற்றிப் பாதைக்கு திரும்புமா, அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/20/w600X390/player.JPG http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/20/முதல்-ஆட்டத்தில்-சொதப்பிய-முன்னணி-அணிகள்-2942927.html
2942928 விளையாட்டு FIFA 2018 செனகல் அதிரடி, (2-1) போலந்து தோல்வி DIN DIN Wednesday, June 20, 2018 10:32 AM +0530 வலுவான போலந்து அணி 1-2 என்ற கோல் கணக்கில் செனகல் அணியிடம் தோல்வியைத் தழுவியது.
குரூப் ஹெச் பிரிவில் இடம் பெற்றுள்ள போலந்து-செனகல் அணிகள் இடையிலான ஆட்டம் மாஸ்கோ ஸ்பார்டக் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இரு அணிகள் இடையிலான ஆட்டம் தொடங்கியவுடன் போலந்து அணியின் கை சிறிது நேரம் ஓங்கி இருந்தது. எனினும் செனகல் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான சாடியோ மேன் தலைமையில் வீரர்கள் மெல்ல மெல்ல ஆட்டத்தை தாங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 
போலந்து வீரர் சேம்சைட் கோல்: 38-வது நிமிடத்தில் செனகல் வீரர் மேன் பந்தை கடத்தி சக வீரர் இட்ரிஸா குயேவுக்கு அனுப்பினார். அதைத் தடுத்து போலந்து வீரர் தியாகோ சியோனக் வெளியில் அடிக்க முயன்ற போது, கோல்கம்பத்துக்குள் சென்று சேம்சைட் கோலானது. பின்னர் சாடியோ மேனுக்கு கிடைத்த கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோலடிக்க முயன்றும் முடியவில்லை. முதல் பாதி ஆட்ட நிறைவில் செனகல் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.
இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியவுடன் போலந்து நட்சத்திர வீரர் ராபர்ட் லெவண்டோவ்ஸ்கி தீவிரமாக கோலடிக்க முயற்சி மேற்கொண்டார். சமன் செய்து விட வேண்டும் என்ற நோக்கில் போலந்து அணியினர் சாரை சாரையாக தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டனர்.
எனினும் 60-வது நிமிடத்தில் போலந்து வீரர் கியோசோவியக் வலுவின்றி தனது அணி கோல்கீப்பரிடம் பந்தை அடித்தார். அப்போது செனகல் முன்கள வீரர்கள் மியாங் நியாங் அந்த வாய்ப்பை பயன்படுத்தி அற்புதமாக கோலடித்தார். இதனால் 2-0 என செனகல் முன்னிலை பெற்றது.
ஆட்டம் முடிய சிறிது நேரம் இருக்கையில் 86-ஆவது நிமிடத்தில் போலந்து வீரர் கிரகோர்ஸ் கியோசோவியக் ப்ரீ கிக் வாய்ப்பு மூலம் ஓரே கோலை அடித்தார். இறுதியில் செனகல் அணி 2-1 என போலந்தை வீழ்த்தி, உலகக் கோப்பையில் ஆப்ரிக்க அணியின் முதல் வெற்றியை பதிவு செய்தது.

]]>
http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/20/செனகல்-அதிரடி-2-1-போலந்து-தோல்வி-2942928.html
2942929 விளையாட்டு FIFA 2018 பழிதீர்த்தது ஜப்பான் DIN DIN Wednesday, June 20, 2018 10:32 AM +0530 கடந்த 2014-ஆம் உலகக் கோப்பையில் தோல்வி அடைந்ததற்கு பதிலடியாக கொலம்பியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று ஜப்பான் பழிதீர்த்தது.
குரூப் ஹெச் பிரிவில் உள்ள ஜப்பான்-கொலம்பியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் செவ்வாய்க்கிழமை மாலை சரன்ஸ்க் நகரில் நடைபெற்றது. 
6-வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் கொலம்பிய அணி கடந்த 2014-ம் ஆண்டு போட்டியில் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ்ஸின் சிறப்பான ஆட்டத்தால் காலிறுதி வரை முன்னேறியது. 4 முறை ஆசியக் கோப்பை கால்பந்து பட்டத்தை வென்ற ஜப்பான் அணியும் 6-வது முறையாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.
மேலும் கடந்த 2014 போட்டியில் ஜப்பான் 1-4 என கொலம்பியாவிடம் தோல்வியடைந்திருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஆட்டத்தில் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர போராடினர்.

10 வீரர்களுடன் கொலம்பியா
ஆட்டம் தொடங்கி 4-வது நிமிடத்தில் கோல் பகுதியில் கொலம்பிய வீரர் கார்லோஸ் சாஞ்செஸ் கையில் பட்டு பந்து பவுல் ஆனது. இதையடுத்து கார்லோஸுக்கு நடுவர் சிகப்பு அட்டை காண்பித்ததால் வெளியேற்றப்பட்டார். பின்னர் 10 வீரர்களுடன் மட்டுமே கொலம்பியா ஆட முடிந்தது. இதையடுத்து ஜப்பான் அணிக்கு தரப்பட்ட பெனால்டி கிக் வாய்ப்பை பயன்படுத்தி ஷின்ஜி ககாவா அற்புதமாக கோலடித்தார். இதன் மூலம் ஜப்பான் 1-0 என முன்னிலை பெற்றது.
இதற்கிடையே 39-வது நிமிடத்தில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி ஜூவான் குயிண்டெரோ அற்புதமாக கோலடித்தார். இதனால் முதல் பாதி ஆட்ட முடிவின் போது 1-1 என சமநிலையில் இருந்தது. இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியவுடன் இரு அணி வீரர்களும் மீண்டும் முன்னிலை பெற தீவிரமாக போராடினர்.73-வது நிமிடத்தில் கிடைத்த கார்னர் மூலம் கீய்ஸுகி ஹோண்டா அடித்த பந்தை யுயா ஓஸாகா தலையால் முட்டி கோலாக்கினார். இதன் மூலம் ஜப்பான் 2-1 என முன்னிலை பெற்றது. 

சிவப்பு அட்டையால் தோல்வி

ஆட்டம் முடியும் வரை கோலடிக்க கொலம்பிய வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இறுதியில் ஜப்பான் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. 
இது அந்த அணி ஐரோப்பாவில் பெற்ற முதல் வெற்றியாகும். அதே நேரத்தில் தென் அமெரிக்க அணிக்கு எதிரான முதலாவது வெற்றியும் ஆகும். கொலம்பிய வீரர் கார்லோஸ் சாஞ்செஸ் பெற்ற சிவப்பு அட்டை அந்த அணி தோல்விக்கு காரணமாகி விட்டது.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/20/w600X390/japan.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/20/பழிதீர்த்தது-ஜப்பான்-2942929.html
2942060 விளையாட்டு FIFA 2018 சர்ச்சையில் சிக்கினார் மாரடோனா DIN DIN Monday, June 18, 2018 02:11 PM +0530 உலகக் கோப்பை போட்டியைக் காண வந்த ஜாம்பவான் மாரடோனா தடையை மீறி புகைத்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.
 ஆர்ஜென்டீனா அணியின் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா, சனிக்கிழமை இரவு ஸ்பார்டக் மைதானத்தில் ஐஸ்லாந்து-ஆர்ஜென்டீனா இடையே நடந்த போட்டியைக் காண வந்திருந்தார். உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கும் 12 மைதானங்களிலும் சிகரெட் பிடிப்பது, புகைத்தல் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பார்வையாளர் மாடத்தில் இருந்த மாரடோனா தடையை மீறி புகைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.,
 இது தொடர்பாக பிஃபா நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது. சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற மாரடோனா, ஏற்கெனவே கடந்த 1986-இல் உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கையால் கோலை தள்ளிவிட்டார். பின்னர் அதுகுறித்து கேட்ட போது கடவுளின் கை அது எனக்கூறினார். மேலும் போதை மருந்து பழக்கம் தொடர்பாகவும் அவர் மீது புகார்கள் எழுந்தன. மேலும் ஆசிய ரசிகர் ஒருவரிடம் இனரீதியில் அவமானப்படுத்தும் வகையில் நடந்ததாக தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டது. இதற்கு பதிலளித்த மாரடோனா, ஆசிய ரசிகர் ஒருவர் ஆர்ஜென்டீனா அணி சீருடையை அணிந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்தேன். தற்போதைய சூழலில் எதையாவது செய்தியாக்க வேண்டும் என சிலர் தேடுகின்றனர் எனத் தெரிவித்தார்.
 மேலும் தனது முகநூல் பக்கத்தில் புகைபிடித்ததற்காக வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளார் மாரடோனா.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/18/w600X390/fb.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/18/சர்ச்சையில்-சிக்கினார்-மாரடோனா-2942060.html
2941722 விளையாட்டு FIFA 2018 மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மருக்கு ஆதரவு உலகக் கோப்பை  DIN DIN Monday, June 18, 2018 02:10 PM +0530 கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடந்து வரும் நிலையில் பிரபல நட்சத்திர வீரர்கள் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மருக்கு இந்திய விளையாட்டு வீரர்களிடம் அதிக ஆதரவு உள்ளது தெரியவந்துள்ளது. மெஸ்ஸிக்கு, பாட்மிண்டன் வீரர் பிரணாய், ஹாக்கி கேப்டன் சந்தீப் சிங் ஆகியோரும், நெய்மருக்கு கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் ரொனால்டோவுக்கு குத்துச்சண்டை வீரர் அகில்குமார், கோல்ஃப் வீரர் ராகில் கஞ்சி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

]]>
http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/18/மெஸ்ஸி-ரொனால்டோ-நெய்மருக்கு-ஆதரவு-உலகக்-கோப்பை-2941722.html
2941723 விளையாட்டு FIFA 2018 ஜெர்மனி அதிர்ச்சித் தோல்வி DIN DIN Monday, June 18, 2018 02:10 PM +0530 நடப்புச் சாம்பியன் ஜெர்மனி 0-1 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
குரூப் எஃப் பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்புச் சாம்பியன் ஜெர்மனிக்கும், அனுபவம் வாய்ந்த மெக்ஸிகோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மாஸ்கோ லுஷ்னிக் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
4 முறை சாம்பியனான ஜெர்மனி தற்போது 5-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் பல்வேறு நட்சத்திர வீரர்களைக் கொண்ட வலுவான அணியை களமிறக்கி உள்ளது. அதே நேரத்தில் மெக்ஸிகோ அணி ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்ற அனுபவம் வாய்ந்த வீரர்களை கொண்டதாக விளங்குகிறது. உலகக் கோப்பையில் மூன்று முறை ஜெர்மனியுடன் மோதியுளள மெக்ஸிகோ அனைத்திலும் தோல்வியே அடைந்தது.
துவக்கம் முதலே இரு அணி வீரர்களும் ஆட்டத்தை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு செல்ல தீவிரமாக முயற்சித்தனர். இரு தரப்பினரும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டபோதும் கோலடிக்க முடியவில்லை. 35-வது நிமிடத்தில் மெக்ஸிகோ வீரர் ஹிர்விங் லொசான்úஸா ஜெர்மனியின் தடுப்பு அரணையும் மீறி முதல் கோலை அடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெர்மன் வீரர்கள் தீவிரமாக கோலடிக்க முயன்றும் முடியவில்லை. இதையடுத்து முதல் பாதி ஆட்ட முடிவில் மெக்ஸிகோ 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியிலும் ஜெர்மனி அணி வசமே பெரும்பாலும் பந்து இருந்ததால் அடிக்கடி மெக்ஸிகோவின் தற்காப்பு அரணை ஊடுருவிச் சென்றனர். எனினும் அவர்களால் கோலடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் இறுதி வரை ஜெர்மனி வீரர்கள் சாரை சாரையாக சென்று மெக்ஸிகோ கோல்பகுதியை முற்றுகையிட்டனர்.
இறுதியில் மெக்ஸிகோ 1-0 என நடப்புச் சாம்பியன் ஜெர்மனியை முதன்முறையாக வீழ்த்தியது. டோனி குரூஸ், மெசுட் ஓஸில், நியுர், கிம்மிச், ஹம்மல்ஸ், முல்லர், டிராக்ஸ்லர், வெர்னர் என பல நட்சத்திர வீரர்கள் கொண்ட ஜெர்மனியின் தோல்வி மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சர்ச்சையில் சிக்கினார் மாரடோனா

உலகக் கோப்பை போட்டியைக் காண வந்த ஜாம்பவான் மாரடோனா தடையை மீறி புகைத்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.
ஆர்ஜென்டீனா அணியின் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா, சனிக்கிழமை இரவு ஸ்பார்டக் மைதானத்தில் ஐஸ்லாந்து-ஆர்ஜென்டீனா இடையே நடந்த போட்டியைக் காண வந்திருந்தார். உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கும் 12 மைதானங்களிலும் சிகரெட் பிடிப்பது, புகைத்தல் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பார்வையாளர் மாடத்தில் இருந்த மாரடோனா தடையை மீறி புகைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 
இது தொடர்பாக பிஃபா நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது. சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற மாரடோனா, ஏற்கெனவே கடந்த 1986-இல் உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கையால் கோலை தள்ளிவிட்டார். பின்னர் அதுகுறித்து கேட்ட போது கடவுளின் கை அது எனக்கூறினார். மேலும் போதை மருந்து பழக்கம் தொடர்பாகவும் அவர் மீது புகார்கள் எழுந்தன. மேலும் ஆசிய ரசிகர் ஒருவரிடம் இனரீதியில் அவமானப்படுத்தும் வகையில் நடந்ததாக தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டது. இதற்கு பதிலளித்த மாரடோனா, ஆசிய ரசிகர் ஒருவர் ஆர்ஜென்டீனா அணி சீருடையை அணிந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்தேன். தற்போதைய சூழலில் எதையாவது செய்தியாக்க வேண்டும் என சிலர் தேடுகின்றனர் எனத் தெரிவித்தார்.
மேலும் தனது முகநூல் பக்கத்தில் புகைபிடித்ததற்காக வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளார் மாரடோனா.

செர்பியா அபாரம்

கோஸ்டா ரிகா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் செர்பியா வீழ்த்தியது.
குரூப் ஈ பிரிவில் இடம் பெற்றுள்ள கோஸ்டா ரிகா மற்றும் செர்பிய அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை சமாராவில் நடைபெற்றது.
கடந்த 2014 உலகக் கோப்பை போட்டியில் கோஸ்டா ரிகா அணி காலிறுதி வரை முன்னேறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதில் நெதர்லாந்திடம் தோல்வியுற்று வெளியேறியது. அதே நேரத்தில் செர்பியா ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் போட்டியில் தனது பிரிவில் அனைத்து ஆட்டங்களிலும் வென்று முதலிடம் பெற்றிருந்தது. மேலும் 7 ஆண்டுகளுக்கு பின் பெரிய அளவிலான போட்டிக்கு செர்பியா தகுதி பெற்றது. ஆட்டம் தொடங்கியது முதலே செர்பிய அணியின் தீவிர தாக்குதல் ஆட்டத்தால் முதல் கார்னரை பெற்றது. எனினும் கோலடிக்க முடியவில்லை. 25 நிமிடங்கள் கழிந்த நிலையில் செர்பியா ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. எனினும் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது. இரண்டாவது பாதி தொடங்கியவுடன் 56-வது நிமிடத்தில் கோஸ்டா ரிகா வீரர் டேவிட் கிஸ்மன் செய்த பவுலால் செர்பியாவுக்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதை கேப்டன் அலெக்சாண்டர் கொலோரவ் 25 அடி தூரத்தில் இருந்து சிறப்பாக பயன்படுத்தி கோலடித்தார். இதனால் 1-0 என செர்பியா முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் கடைசி பகுதியில் கோஸ்டா ரிகா வீரர்கள் ஆதிக்கம் செலுத்த முயன்றபோதும், கோலடிக்க முடியவில்லை. இறுதியில் செர்பியா வெற்றி பெற்று 3 புள்ளிகளை தன் வசமாக்கிக் கொண்டது.
குரூப் இ பிரிவில் பிரேஸில், சுவிட்சர்லாந்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் செர்பியாவின் வெற்றி அதற்கு உறுதுணையாக அமைந்துள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/18/w600X390/spt2.jpg கோலை தடுக்கும் முயற்சியில் தோல்வியடைந்த ஜெர்மனி கோல் கீப்பர். http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/18/ஜெர்மனி-அதிர்ச்சித்-தோல்வி-2941723.html
2941711 விளையாட்டு FIFA 2018 நைஜீரியாவை எளிதில் வென்றது குரோஷியா DIN DIN Monday, June 18, 2018 02:09 PM +0530 உலகக் கோப்பை கால்பந்து குரூப் டி பிரிவு ஆட்டம் ஒன்றில் நைஜீரியாவை 2-0 என எளிதில் வென்றது குரோஷியா. குரோஷியாவின் லுகா மொட்ரிக் ஒரு கோலடித்தார். அதே நேரத்தில் நைஜீரியாவின் ஓஹேனகரோ எபோ சேம் சேட் கோலடித்து குரோஷியாவின் வெற்றியை உறுதி செய்தார்.
காலின்கிராடில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இளம் வீரர்களைக் கொண்ட நைஜீரிய அணி தொடக்கம் முதலே ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க போராடியது. முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.சூப்பர் ஈகிள்ஸ் எனப்படும் நைஜீரிய வீரர்களால் கோலடிக்கும் வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை.குரோஷிய தாக்குதல் ஆட்டக்காரர் மண்டுஸிக்கின் தொடர் முயற்சியால் நைஜீரிய தற்காப்பு கேள்விக்குறியானது.
எபோ சேம்சைட் கோல்: குரோஷியாவின் லுகா மொட்ரிக் அடுத்த கார்னர் வாய்ப்பில் பந்தை தடுக்க முயன்ற போது, நைஜீரிய வீரர் எபோ அடித்த பந்து சேம்சைட் கோலானது. இதனால் குரோஷியா 1-0 என முன்னிலை பெற்றது.
பெனால்டி வாய்ப்பில் கோல்: 70-வது நிமிடத்தில் நைஜீரிய வீரர்கள் வில்லியம்-காங் ஆகியோர் தேவையின்றி குரோஷிய வீரர் மண்டுஸிக்கை கோல் பகுதியில் தடுத்து தள்ளி விட்டனர். இதையடுத்து தங்களுக்கு வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பை லுகா மொட்ரிக் சரியாக பயன்படுத்தி கோலடித்தார். இதன் மூலம் 2-0 என குரோஷியா வென்றது. இந்த வெற்றி மூலம் 3 புள்ளிகளுடன் குரோஷியா குரூப் டி பிரிவில் முதலிடம் பெற்றுள்ளது. ஆர்ஜென்டீனா-ஐஸ்லாந்து அணிகள் ஆட்டம் டிராவில் முடிந்ததால் அந்த அணிகள் தலா 1 புள்ளியுடன் உள்ளன.

]]>
http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/18/நைஜீரியாவை-எளிதில்-வென்றது-குரோஷியா-2941711.html
2941719 விளையாட்டு FIFA 2018 பல்வேறு புகார்களில் மெக்ஸிகோ வீரர்கள் DIN DIN Monday, June 18, 2018 02:09 PM +0530 உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ள அனுபவம் வாய்ந்த மெக்ஸிகோ அணி வீரர்கள் மீது போதை மருந்து கடத்தல் உள்பட பல்வேறு 
புகார்கள் எழுந்துள்ளன.
அந்த அணியின் நட்சத்திர வீரர் ரஃபேல் மார்கஸ் மீது போதை மருந்து கடத்தும் அமைப்பின் முன்னோடியாக உள்ளார் என அமெரிக்க நிதித்துறை புகார்  கூறியுள்ளது. மேலும் கடந்த 5-ஆம் தேதி பாலியல் தொழில் புரிவோருடன் இரவு விருந்தில் மெக்ஸிகோ வீரர்கள் 9 பேர் பங்கேற்றதாகவும் தகவல் வெளியானது.

]]>
http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/18/பல்வேறு-புகார்களில்-மெக்ஸிகோ-வீரர்கள்-2941719.html
2941714 விளையாட்டு FIFA 2018 எகிப்தின் அடுத்த ஆட்டத்தில் விளையாடுகிறார் சலா DIN DIN Monday, June 18, 2018 02:08 PM +0530 காயத்தால் அவதிப்பட்டு மீண்ட எகிப்தின் நட்சத்திர வீரர் முகமது சலா இரண்டாவது ஆட்டத்தில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்தில் தோளில் காயமடைந்தார். இதனால் அவரால் எகிப்து அணிக்காக உலகக் கோப்பையில் ஆடமுடியுமா என கேள்வி எழுந்தது. காயத்தில் இருந்து குணமடைந்த நிலையில் எகிப்து-உருகுவே இடையிலான முதல் ஆட்டத்தில் சலா விளையாடவில்லை. 
உருகுவே தோல்வியால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த சலா வரும் செவ்வாய்க்கிழமை 19-ஆம் தேதி ரஷியாவுடன் நடக்க உள்ள ஆட்டத்தில் 
விளையாடுவார் என எகிப்து அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

]]>
http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/18/எகிப்தின்-அடுத்த-ஆட்டத்தில்-விளையாடுகிறார்-சலா-2941714.html
2942110 விளையாட்டு FIFA 2018 போராடி டிரா செய்த பிரேசில்: தொடர் வெற்றிக்கு தடைபோட்ட ஸ்விட்சர்லாந்து Raghavendran DIN Monday, June 18, 2018 01:15 PM +0530  

ஸ்விட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன் பிரேசில் அணி போராடி டிரா செய்தது.

'உலகக் கோப்பை கால்பந்து 2018' பிரேசில், ஸ்விட்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 5 முறை உலக சாம்பியனான பிரேசில், தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்விட்சர்லாந்திடம் போராடி டிரா செய்தது.

போட்டியின் முதல் பாதியில் பிரேசிலின் ஃபிலிப் கௌடினோ அபாரமாக செயல்பட்டு கோல் அடித்தார். இருப்பினும் சிறிது நேரத்தில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டீவன் சுபேர், அற்புதமாக தலையால் கோல் அடித்தார். இதனால் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டது.

இருப்பினும் ஸ்விட்சர்லாந்து வீரர்களின் அபாரமான ஆட்டத்தாலும், அந்த அணியின் கோல் கீப்பர் யான் சோம்மரின் அற்புதமான செயல்பாட்டாலும் பிரேசில் அணி திணறியது. எனவே மேற்கொண்டு இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காத காரணத்தால் போட்டி டிராவில் முடிந்தது.

இதன்மூலம் உலகக் கோப்பை தொடர்களில் தொடர்ந்து 9 துவக்க ஆட்டங்களில் வெற்றிபெற்று வந்த பிரேசில் அணிக்கு இதில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 

]]>
FIFA World Cup 2018, கால்பந்து உலகக் கோப்பை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/18/w600X390/Brazil_vs_Switzerland.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/18/போராடி-டிரா-செய்த-பிரேசில்-தொடர்-வெற்றிக்கு-தடைபோட்ட-ஸ்விட்சர்லாந்து-2942110.html
2941566 விளையாட்டு FIFA 2018 கோஸ்டா ரிகா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் சொ்பியா வீழ்த்தியது DIN DIN Sunday, June 17, 2018 08:30 PM +0530  

குரூப் ஈ பிரிவில் இடம் பெற்றுள்ள கோஸ்டா ரிகா மற்றும் சொ்பிய அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை சமாராவில் நடைபெற்றறது.

கடந்த 2014 உலகக் கோப்பை போட்டியில் கோஸ்டா ரிகா அணி காலிறுதி வரை முன்னேறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதில் நெதா்லாந்திடம் தோல்வியுற்று வெளியேறியது. அதே நேரத்தில் சொ்பியா ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் போட்டியில் தனது பிரிவில் அனைத்து ஆட்டங்களிலும் வென்று முதலிடம் பெற்றிருந்தது. 

மேலும் 7 ஆண்டுகளுக்கு பின் பெரிய அளவிலான போட்டிக்கு சொ்பியா தகுதி பெற்றறது. ஆட்டம் தொடங்கியது முதலே சொ்பிய அணியின் தீவிர தாக்குதல் ஆட்டத்தால் முதல் கார்னரை பெற்றது. எனினும் கோலடிக்க முடியவில்லை. 25 நிமிடங்கள் கழிந்த நிலையில் சொ்பியா ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. எனினும் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.

இரண்டாவது பாதி தொடங்கியவுடன் 56-வது நிமிடத்தில் கோஸ்டா ரிகா வீரா் டேவிட் கிஸ்மன் செய்த பவுலால் சொ்பியாவுக்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதை கேப்டன் அலெக்சாண்டா் கொலோரவ் 25 யார்ட் தூரத்தில் இருந்து சிறப்பாக பயன்படுத்தி கோலடித்தார். இதனால் 1-0 என சொ்பியா முன்னிலை பெற்றறது.

ஆட்டத்தின் கடைசி பகுதியில் கோஸ்டா ரிகா வீரா்கள் ஆதிக்கம் செலுத்த முயன்றபோதும், கோலடிக்க முடியவில்லை. இறுதியில் சொ்பியா வெற்றி பெற்று 3 புள்ளிகளை தன் வசமாக்கிக் கொண்டது.

குரூப் இ பிரிவில் பிரேசில், சுவிட்சா்லாந்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் சொ்பியாவின் வெற்றி அதற்கு உறுதுணையாக அமைந்துள்ளது.

]]>
FIFA World Cup 2018, கால்பந்து உலகக் கோப்பை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/17/w600X390/Aleksandar_Kolarov.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/17/கோஸ்டா-ரிகா-அணியை-1-0-என்ற-கோல்-கணக்கில்-சொ்பியா-வீழ்த்தியது-2941566.html
2941254 விளையாட்டு FIFA 2018 பெருவை 1-0 வீழ்த்தி டென்மார்க் அசத்தல் DIN DIN Sunday, June 17, 2018 02:59 PM +0530 சரன்ஸ்க் நகரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற உலகக் கோப்பை ஆட்டம் ஒன்றில் பெருவை 1-0 என வீழ்த்தியது டென்மார்க்.
குரூப் சி பிரிவில் இரு அணிகளும் முதன்முறையாக உலகக் கோப்பையில் மோதுகின்றன. 36 ஆண்டுகள் கழித்து பெரு 5-வது முறையாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. அதே நேரத்தில் டென்மார்க் கடந்த 3 உலகக் கோப்பைகளிலும் நாக் அவுட் சுற்று வரை முன்னேறியது. டென்மார்க் அணியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சனும், பெருவில் அதன் கேப்டன் பாவ்லோ கியுரோவும் பக்கபலமாக உள்ளனர்.
இதற்கிடையே மார்டோவியா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தை தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்த இரு அணிகளும் முயற்சித்தன.
எரிக்சன் பலமுறை பெருவின் தற்காப்பு அரணை ஊடுருவிச் செல்ல முயன்றும் முடியவில்லை. 43-வது நிமிடத்தில் டென்மார்க் செய்த பவுலால் வார் அடிப்படையில் பெருவுக்கு பெனால்டி தரப்பட்டது. ஆனால் பெரு வீரர் கிறிஸ்டியன் குவே அடித்த பந்து கோல் கம்பத்துக்கு மேலே சென்று விட்டது. முதல் பாதி 0-0 என கோலின்றி முடிந்தது.
இரண்டாம் பாதியில் 59-வது நிமிடத்தில் டென்மார்க்கின் எரிக்சன் அடித்த பந்தை, யுராரி பெüல்சன் கோலாக்கினார். இதனால் 1-0 என டென்மார்க் முன்னிலை பெற்றது. ஆட்டம் முடியும் வரை கோலடிக்க பெரு மேற்கொண்ட முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராகின. 
இதனால் டென்மார்க் 1-0 என வென்று 3 புள்ளிகளை பெற்றது.
குரூப் சி பிரிவில் பிரான்ஸ், டென்மார்க் தலா 3 புள்ளிகளைப் பெற்றுள்ளன.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/17/w600X390/pt5.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/17/பெருவை-1-0-வீழ்த்தி-டென்மார்க்-அசத்தல்-2941254.html
2941137 விளையாட்டு FIFA 2018 ஆர்ஜென்டீனா-ஐஸ்லாந்து ஆட்டம் டிரா: பெனால்டி வாய்ப்பை வீணாக்கிய மெஸ்ஸி DIN DIN Sunday, June 17, 2018 02:59 PM +0530 ஆர்ஜென்டீனா-ஐஸ்லாந்து அணிகளுக்கு இடையில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற குரூப் டி பிரிவு ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மாஸ்கோவின் ஸ்பார்டக் மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
2 முறை சாம்பியனான ஆர்ஜென்டீனா கடந்த 2014 உலகக் கோப்பையில் இறுதிச் சுற்று வரை முன்னேறி தோல்வி அடைந்தது. மேலும் 2015, 2016 கன்பெடரேஷன்ஸ் கோப்பை போட்டியிலும் இறுதியில் தோல்வியடைந்தது. பெரிய போட்டிகளில் வெற்றியை பெற முடியாத தேக்க நிலையில் ஆர்ஜென்டீனா அணி நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியையே நம்பியுள்ளது. மேலும் ஓரே ஆண்டில் 3 பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டனர்.
அதே நேரத்தில் ஐஸ்லாந்து அணி முதன்முறையாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த 2016 யூரோ சாம்பியன் போட்டியில் காலிறுதி வரை முன்னேறியது. இந்நிலையில் இரு அணிகளும் முதன்முறையாக மோதின. தொடக்கம் முதலே கேப்டன் மெஸ்ஸி, தாக்குதல் ஆட்டக்காரர்கள் செர்ஜியோ அகியுரோ, ஏஞ்சல் மரியா ஆகியோர் ஐஸ்லாந்தின் தற்காப்பு அரணுக்குள் அடிக்கடி ஊடுருவினர். மெஸ்ஸி கோல்கம்பம் நோக்கி அடித்த பந்தை ஐஸ்லாந்து கோல்கீப்பர் லாவகமாக தடுத்தார். பின்னர் ஆர்ஜென்டீனாவின் செர்ஜியோ அகியுரோ ஐஸ்லாந்து வீரர்களை சமாளித்து முதல் கோலை அடித்தார்.
எனினும் 4 நிமிடங்களுக்குள் ஐஸ்லாந்து வீரர் ஆல்பிரட் பின்போகாசன் ஐஸ்லாந்தின் முதல் உலகக் கோப்பை கோலை அடித்தார். இதனால் முதல் பாதியில் 1-1 என சமநிலை நிலவியது.
இரண்டாவது பாதி தொடங்கிய உடனே இரு அணி வீரர்களும் கோலடிக்க தீவிரமாக முயற்சித்தனர். எனினும் ஆட்டத்தின் 63-வது நிமிடத்தில் கோல் பகுதியில் ஐஸ்லாந்து வீரர்கள் தடுக்க முயன்ற போது மெஸ்ஸி கீழே விழுந்தார். இந்நிலையில் ஆர்ஜென்டீனா அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.
பெனால்டி வாய்ப்பை வீணாக்கிய மெஸ்ஸி: அதை கேப்டன் மெஸ்ஸி அடித்த போது, ஐஸ்லாந்து கோல்கீப்பர் ஹால்டர்சன் அற்புதமாக தடுத்து பந்தை வெளியேற்றினார். சிறந்த அனுபவம் வாய்ந்த மெஸ்ஸி பெனால்டிவாய்ப்பை தவற விட்டது, ஆர்ஜென்டீனாவின் வெற்றி வாய்ப்பை தடுத்து விட்டது.
இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/17/w600X390/spt2.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/17/ஆர்ஜென்டீனா-ஐஸ்லாந்து-ஆட்டம்-டிரா-பெனால்டி-வாய்ப்பை-வீணாக்கிய-மெஸ்ஸி-2941137.html
2941121 விளையாட்டு FIFA 2018 ஆஸி.யை 2-1 என வீழ்த்தி பிரான்ஸ் முதல் வெற்றி DIN DIN Sunday, June 17, 2018 02:58 PM +0530 கஸானில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற குரூப் சி பிரிவைச் சேர்ந்த ஆஸ்திரேலியா-பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான தகுதிச் சுற்று ஆட்டத்தில் 2-1 என தனது முதல் வெற்றியை பதிவு செய்தது பிரான்ஸ்.
2018 உலகக் கோப்பையில் பட்டம் வெல்லக் கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்படும் பிரான்ஸ் அணியும்-ஆஸி.யும் கசான் மைதானத்தில் மோதின. முதல் பாதியில் பிரான்ஸ் அணியின் முன்கள ஆட்டக்காரர்கள் பால் போக்பா, கிளியன் மாப்பே, அன்டைன் கிரைஸ்மேன் ஆகியோர் சரமாரியாக ஆஸி. அணியின் தற்காப்பு அரணில் ஊடுருவினர். மாப்பே, கிரைஸ்மேன் ஆகியோர் கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகளை ஆஸி அணி முறியடித்தது.
ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் மைல் ஜெடினாக், டிரென்ட் செயின்ஸ்பரி, மேத்யூ லெக்கி ஆகியோர் தீவிரமாக முயன்றும் கோலடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிவடைந்தது. இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியவுடன் 58-வது நிமிடத்தில் ஆஸி வீரர் ரிஸ்டன் செய்த பவுல் செய்தார். 
இந்த ஆட்டத்தில் முதன்முறையாக வார் எனப்படும் விடியோ உதவி நடுவர் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பை வழங்கினார். அதை கிரைஸ்மேன் சரியாக பயன்படுத்தி முதல் கோலை அடித்தார். இதனால் பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றது.
எனினும் 62-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கோலோ கண்டே செய்த பவுலால் ஆஸி. அணிக்கு பெனால்டி வாய்ப்பு தரப்பட்டது. அதை ஜெடினாக் கோலாகினார். இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது.
அதன் பின் இரு அணிகளும் கோலடிக்க தீவிரமாக முயன்றன. இதில் 80-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஓலிவர் ஜிரெளட் அடித்த பந்தை பால் போக்பா கோலாக்கினார். இறுதியில் பிரான்ஸ் அணி 2-1 என ஆஸியை வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பெற்றது. இதன் மூல் 3 புள்ளிகளையும் பெற்றது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/17/w600X390/spt3.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/17/ஆஸியை-2-1-என-வீழ்த்தி-பிரான்ஸ்-முதல்-வெற்றி-2941121.html
2941125 விளையாட்டு FIFA 2018 மெக்ஸிகோவை எதிர்கொள்ளும் நடப்புச் சாம்பியன் ஜெர்மனி DIN DIN Sunday, June 17, 2018 02:58 PM +0530 5-வது முறை உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள நடப்புச் சாம்பியன் ஜெர்மனி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த மெக்ஸிகோவை எதிர்கொள்கிறது.

பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணியான ஜெர்மனி நட்பு ஆட்டங்களில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறவில்லை. அதே நேரத்தில் மெக்ஸிகோ தொடர்ந்து 7-வது உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்று அனுபவம் வாய்ந்த அணியாக உள்ளது. 

பிரேசில் - சுவிட்சர்லாந்து

குரூப் இ பிரிவில் 5 முறை சாம்பியன் பிரேசில் ஞாயிற்றுக்கிழமை ரோஸ்டோவ் மைதானத்தில் நடக்கவுள்ள ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை எதிர்கொள்கிறது. 
அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மர், 3 மாதங்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பிரேசில் அணிக்கு பின்னடைவு ஏற்படும் எனக் கருதப்பட்ட நிலையில் நெய்மர் குணமடைந்து மீண்டும் அணி சார்பில் களமிறங்குகிறார். தற்போது முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை சந்திக்கிறது. ஐரோப்பிய தகுதிச் சுற்று ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காமல் அந்த அணி தகுதி பெற்றுள்ளது.

கோஸ்டா ரிகா-செர்பியா

கோஸ்டா ரிகா கடந்த 2014 போட்டியில் காலிறுதி வரை முன்னேறிய அணியாகும். எனினும் அண்மையில் நடந்த பல்வேறு ஆட்டங்களில் அந்த அணி தோல்வியை சந்தித்து வருகிறது.அதே நேரத்தில் செர்பியா அணி 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் உலகக் கோப்பையில் இடம் பெற்றுள்ளது. பொலிவியாவுக்கு எதிரான நட்பு ஆட்டத்தில் 5-1 என வென்ற உற்சாகத்துடன் செர்பியா களம் காண்கிறது.

]]>
http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/17/மெக்ஸிகோவை-எதிர்கொள்ளும்-நடப்புச்-சாம்பியன்-ஜெர்மனி-2941125.html
2941118 விளையாட்டு FIFA 2018 உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்ட விடியோ உதவி நடுவர் முறை DIN DIN Sunday, June 17, 2018 02:57 PM +0530 உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே முதன்முறையாக வார் எனப்படும் விடியோ உதவி நடுவர் முறை பிரான்ஸ்-ஆஸி. அணி ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்டது.
மாரடோனா கடந்த 1986 போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக அடித்த கோல் கையால் தள்ளப்பட்டது என சர்ச்சை எழுந்தது. அதை கடவுளின் கையால் அடிக்கப்பட்ட கோல் என மாரடோனா கூறியிருந்தார். மேலும் பல்வேறு கோல்கள் அடிப்பதில் பிரச்னைகள், பந்து கோட்டை விட்டு வெளியேறுதல் போன்றவற்றை துல்லியமாக கணித்து முடிவைக் கூற வார் எனப்படும் விடியோ உதவி நடுவர் முறையை பிஃபா தற்போதைய உலகக் கோப்பை போட்டியில் அறிமுகம் செய்தது.
பிரான்ஸ்-ஆஸி. ஆட்டத்தின் போது பிரான்ஸ் வீரர் அன்டைன் கிரைஸ்மேன் கோல்கம்பப் பகுதியில் தடுக்கப்பட்டு கீழே விழுந்தார். ஆனால் நடுவர் அதற்கு ஸ்பாட் கிக் வாய்ப்பை தரவில்லை. ஆனால் விடியோ உதவி நடுவர்கள் அது தொடர்பான பதிவை விடியோவில் ஆய்வு செய்து பெனால்டி வாய்ப்பு வழங்க முடிவு செய்தனர்.
அதன்படி அளிக்கப்பட்ட பெனால்டி வாய்ப்பை கிரைஸ்மேன் கோலாக்கினார். இதன் மூலம் உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே முதன்முறையாக வார் உதவியுடன் முடிவெடுக்கப்பட்டது.
இத்தாலி சீரி ஏ, ஜெர்மனி பண்டஸ்லிகா, லீக் போட்டிகளில் வார் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

]]>
http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/17/உலகக்-கோப்பை-வரலாற்றில்-முதன்முறையாக-பயன்படுத்தப்பட்ட-விடியோ-உதவி-நடுவர்-முறை-2941118.html
2941025 விளையாட்டு FIFA 2018 ஃபிஃபா 2018: அர்ஜென்டினா, ஐஸ்லாந்து ஆட்டம் டிரா Raghavendran DIN Saturday, June 16, 2018 08:42 PM +0530  

'உலகக் கோப்பை கால்பந்து 2018' அர்ஜென்டினா, ஐஸ்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆரம்பம் முதலே மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா முன்னணி வீரர் மெஸ்ஸி, பல கோல் வாய்ப்புகளை தவற விட்டார்.

போட்டி தொடங்கிய 17-ஆவது நிமிடத்தில் மெஸ்ஸியின் முதல் கோல் வாய்ப்பு ஐஸ்லாந்து கோல் கீப்பரால் துல்லியமாக முறியடிக்கப்பட்டது. ஆனால் 19-ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் சேர்கோ ஆகிரோ முதல் கோலை அடித்தார்.

மீண்டும் 21-ஆவது நிமிடத்தில் மெஸ்ஸியின் மற்றொரு கோல் முயற்சியும் முறியடிக்கப்பட்டது. அதேநேரத்தில் 23-ஆவது நிமிடத்தில் கிடைத்த கோல் வாய்ப்பை ஐஸ்லாந்து வீரர் ஆல்ஃப்ரெட் ஃபின்போகன்ஸன் சரியாகப் பயன்படுத்தி கோல் அடித்தார்.

இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. இந்நிலையில், 64-ஆவது நிமிடத்தில் மீண்டும் மெஸ்ஸியின் கோல் முயற்சி தகர்க்கப்பட்டது. இறுதியாக 95-ஆவது நிமிடத்தில் கிடைத்த ஃபெனல்டி வாய்ப்பையும் மெஸ்ஸி கோட்டை விட்டார்.

துரிதமாக செயல்பட்ட ஐஸ்லாந்து கோல் கீப்பர் ஹேன்னஸ் ஹால்டர்ஸன், அபாரமாக செயல்பட்டு மெஸ்ஸியின் கோல் முயற்சிகளை துல்லியமாக முறியடித்தார். இதனால் 1-1 என்ற கோல் கணக்கில் இப்போட்டி டிராவில் முடிந்தது.

]]>
FIFA World Cup 2018, கால்பந்து உலகக் கோப்பை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/16/w600X390/LionelMessi.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/16/ஃபிஃபா-2018-அர்ஜென்டினா-ஐஸ்லாந்து-ஆட்டம்-டிரா-2941025.html
2940988 விளையாட்டு FIFA 2018 உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள்! எழில் IANS Saturday, June 16, 2018 06:26 PM +0530  

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி ரஷியாவில் ஜூன் 14 முதல் தொடங்கியுள்ளன. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறும் 64 ஆட்டங்களில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன. 

உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள்

16 -  மிரோஸ்லவ் க்ளோஸ் (ஜெர்மனி)
15 - ரொனால்டோ (பிரேஸில்)
14 - முல்லர் (ஜெர்மனி)
13 - ஜஸ்ட் ஃபோண்டைன் (பிரான்சு)
12 - பீலே (பிரேஸில்)

]]>
world cup, leading scorers http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/16/w600X390/klose1.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/16/world-cup-all-time-leading-scorers-2940988.html
2941013 விளையாட்டு FIFA 2018 முன்னணி வீரர் மட்டும் ரஷியப் பெண்ணைக் காதலிக்கலாம்: நைஜீரிய கால்பந்து வீரர்களுக்குப் புதுக்கட்டுப்பாடு! எழில் DIN Saturday, June 16, 2018 05:50 PM +0530  

நைஜீரியக் கால்பந்து வீரர்கள் ரஷியப் பெண்களைக் காதலிக்கக் கூடாது, அவர்களுடன் டேட்டிங் செல்லக்கூடாது என்று தன்னுடைய வீரர்களுக்குக் கட்டுப்பாடு விதித்துள்ளார் நைஜீரியக் கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஜெர்நாட் ரோர்ஹ்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: நைஜீரிய அணியின் முன்னணி வீரரான ஜான் ஒபி மைகேல் மட்டும் ரஷியப் பெண்ணைக் காதலிக்க அனுமதி உண்டு. ஏனெனில் ரஷியப் பெண்ணைக் காதலித்து அவருடன் வசித்து வருவதால் மைகேலுக்கு மட்டுமே சிறப்பு அனுமதி அளிக்கப்படுகிறது. நாங்கள் முக்கியமான ஒரு போட்டியில் கலந்துகொண்டுள்ளோம். ஆட்டங்கள் முடிந்தபிறகே வீரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கமுடியும். எங்கள் அணி வீரரான பிரையன் ரஷிய வம்சாவளியைச் சேர்ந்தவர். எங்களுடைய முன்னணி வீரர் ரஷியப் பெண்ணைக் காதலிக்கிறார். அகமது முசாவுக்கு ரஷியாவில் நிறைய ரசிகர்கள் உள்ளார்கள். எனவே இங்குள்ள அனைவரும் எங்கள் மீது நிறைய அன்பு செலுத்துகிறார்கள். இதனால் எங்களுடைய ஆட்டங்களில் ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

ஜான் ஒபி மைகேல்
]]>
Russian women, Gernot Rorh, John Obi Mikel http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/16/w600X390/Nigeria_1.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/16/only-nigerian-lead-player-can-date-russian-women-says-coach-2941013.html
2941011 விளையாட்டு FIFA 2018 ஃபிஃபா 2018: 2-1 கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை பிரான்ஸ் வீழ்த்தியது Raghavendran DIN Saturday, June 16, 2018 05:49 PM +0530  

'உலகக் கோப்பை கால்பந்து 2018' குரூப் சி பிரிவில் இடம் பெற்றுள்ள ஜாம்பவான் பிரான்ஸ் அணியுடன் சனிக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி மோதியது.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளின் கோல் முயற்சிகளும் முதல் பாதியில் துல்லியமாகத் தடுக்கப்பட்டன. 58-ஆவது நிமிடத்தில் க்ரீஸ்மான் அடித்த கோல் மூலம் பிரான்ஸ் அணி தனது கோல் கணக்கை தொடங்கியது. 

பின்னர் 61-ஆவது நிமிடத்தில் கிடைத்த ஃபெனல்டி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய ஜெடனிக், அதை கோலாக மாற்றினார். இதனால் ஆஸ்திரேலியா 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தது.

ஆட்டம் முடிய சில நிமிடங்கள் இருந்த நிலையில், பிரான்ஸ் வீரர் ஃபோபா அற்புதமாக செயல்பட்டு 81-ஆவது நிமிடத்தில் துல்லியமாக கோல் அடித்தார். இதனால் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் மீண்டும் முன்னிலைப் பெற்றது.

இதையடுத்து போட்டி முடியும் வரை இரு அணிகளின் கோல் முயற்சிகளும் பலனளிக்காத நிலையில், 2-1 என்ற கணக்கில் பிரான்ஸ் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

]]>
Fifa World Cup 2018, கால்பந்து உலகக் கோப்பை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/16/w600X390/fravsaus.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/16/ஃபிஃபா-2018-2-1-கோல்-கணக்கில்-ஆஸ்திரேலியாவை-பிரான்ஸ்-வீழ்த்தியது-2941011.html
2941002 விளையாட்டு FIFA 2018 உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் நான்தான்: நெய்மர் எழில் DIN Saturday, June 16, 2018 04:30 PM +0530  

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் நான்தான் என்று பிரேஸில் நட்சத்திர வீரர் நெய்மர் கூறியுள்ளார்.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி ரஷியாவில் ஜூன் 14 முதல் தொடங்கியுள்ளன. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறும் 64 ஆட்டங்களில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன. 

ஞாயிறு அன்று நடைபெறவுள்ள தனது முதல் ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்தை எதிர்கொள்கிறது பிரேஸில். இந்நிலையில் நெய்மர் ஒரு பேட்டியில் கூறியதாவது:

தன்னடக்கமின்றிச் சொல்வதென்றால், உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் நான்தான் என நினைக்கிறேன். மெஸ்ஸியும் ரொனால்டோவும் வேற்று கிரகத்திலிருந்து வந்தவர்கள். எனவே நானே நெ.1 என்று சற்றுக் கிண்டலாகவும் கூறியவர் பிறகு இந்த உலகக் கோப்பைப் போட்டி எந்தளவுக்குத் தனக்கு முக்கியம் என்று கூறியதாவது: 

தனிப்பட்ட புகழ்ச்சிகளில் கவனம் செலுத்துவதை விடவும் என் கவனம், ரஷியாவில் பிரேஸில் அணியை வெற்றி பெறச் செய்து உலகக் கோப்பையைக் கைப்பற்றுவதில்தான் உள்ளது. காயத்திலிருந்து நான் மீண்டுவந்துவிட்டேன். நல்ல உடற்தகுதியுடன் உள்ளேன். கடந்த உலகக் கோப்பையை விடவும் இந்தமுறை பக்குவத்துடன் செயல்படுவேன் என்று கூறியுள்ளார்.

]]>
Neymar, Messi, Ronaldo http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/16/w600X390/neymar9911.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/16/neymar-messi-ronaldo-are-from-another-planet-so-im-worlds-best-2941002.html
2940998 விளையாட்டு FIFA 2018 மெஸ்ஸிக்கு இது கடைசி உலகக் கோப்பை அல்ல! எழில் DIN Saturday, June 16, 2018 04:12 PM +0530  

ரஷிய உலகக் கோப்பை போட்டியிலும் வெல்ல முடியவில்லை என்றால் மெஸ்ஸி ஓய்வு பெற்றுவிடுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இதை மறுத்துள்ளார் அர்ஜென்டீனா பயிற்சியாளர் ஜார்ஜ் சம்போலி. 

குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ள முன்னாள் சாம்பியனான ஆர்ஜென்டீனா, 1978, 1986 ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்றது. தற்போது நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி இடம் பெற்ற நிலையில் கடந்த 2014 உலகக் கோப்பையில் இறுதிச் சுற்று வரை முன்னேறியது. மேலும் 2015, 2016 கோபா அமெரிக்க போட்டியிலும் தோல்வியைத் தழுவியது.

ஆர்ஜென்டீனா பயிற்சியாளர் ஜார்ஜ் சம்போலி கூறியதாவது: உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடுவதில் மெஸ்ஸி மிக ஆர்வமாக உள்ளார். சர்வதேச ஆட்டங்களிலிருந்து எப்போது ஓய்வு பெற வேண்டும் என்கிற முடிவை அவரே எடுப்பார். இது அவருடைய கடைசி உலகக் கோப்பை என நான் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

]]>
Argentine coach, Messi, World Cup http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/16/w600X390/messi111.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/16/argentine-coach-says-this-wont-be-messis-last-world-cup-2940998.html
2940959 விளையாட்டு FIFA 2018 பரபரப்பான ஆட்டத்தில் ரொனால்டோ அடித்த ஹாட்ரிக் கோல்கள்! (விடியோ) எழில் DIN Saturday, June 16, 2018 11:55 AM +0530  

குரூப் பி பிரிவில் ஐரோப்பிய கால்பந்து ஜாம்பவான்களான ஸ்பெயின்-போர்ச்சுகல் அணிகள் இடையிலான ஆட்டம் சோச்சியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.

பலமான இரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம் என்பதால் உலகம் முழுவதும் இதில் யார் வெல்லுவர் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் சோச்சி பிஷ்ட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தின் துவக்கம் முதலே போர்ச்சுகல் அணி ஆதிக்கம் செலுத்தியது. 4-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர்கள் செய்த பவுலால் கிடைத்த பெனால்டி மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் கோலை அடித்தார். இந்நிலையில் 24-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் டீகோ கோஸ்டா சிறப்பான கிக் மூலம் பதில் கோலடித்தார். அப்போது 1-1 என சமநிலை நிலவியது. எனினும் 44-வது நிமிடத்தில் ரொனால்டோ தனது 2-வது கோலை அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியின் போது போர்ச்சுகல் 2-1 என முன்னிலை பெற்றிருந்தது.

இரண்டாவது பாதி தொடங்கியதும் ஸ்பெயின் கோலடிக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியது. இதன் பலனாக 55-வது நிமிடத்தில் டீகோ கோஸ்டா ப்ரீ கிக் முறையில் கிடைத்த வாய்ப்பின் மூலம் இரண்டாவது கோலை அடித்தார். அதைத் தொடர்ந்து அடுத்த 58 நிமிடத்திலேயே ஸ்பெயின் வீரர் நாச்சோ அடித்த வலுவான பந்து கோல் கம்பத்தில் பட்டு வலைக்குள் புகுந்தது. ஆட்டத்தின் 88-ஆவது நிமிடத்தில் ரொனால்டோ 3-ஆவது கோலை அடித்தார். இதன் மூலம் 3-3 என ஆட்டம் சமன் ஆனது.

ஹாட்ரிக் கோல் அடித்த ரொனால்டோவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

]]>
hat-trick, Ronaldo http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/16/w600X390/ronaldo111122.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/16/hat-trick-hero-ronaldo-holds-spain-at-bay-in-thrilling-3-3-shootout-2940959.html
2940391 விளையாட்டு FIFA 2018 வெற்றியுடன் கணக்கை தொடங்குமா மெஸ்ஸியின் ஆர்ஜென்டீனா? DIN DIN Saturday, June 16, 2018 11:54 AM +0530 குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ள முன்னாள் சாம்பியனான ஆர்ஜென்டீனா தனது தொடக்க ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
1978, 1986 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்ஜென்டீனா குறிப்பிடத்தக்க வெற்றி எதையும் பெறவில்லை. தற்போது நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி இடம் பெற்ற நிலையில் கடந்த 2014 உலகக் கோப்பையில் இறுதிச் சுற்றுவரை முன்னேறியது. மேலும் 2015, 2016 கோபா அமெரிக்க போட்டியிலும் தோல்வியைத் தழுவியது. 
5 முறை உலகின் சிறந்த வீரர் விருதை பெற்றுள்ள அவருக்கு இது பெரும் குறையாகவே உள்ளது. ரஷிய உலகக் கோப்பை போட்டியிலும் வெல்ல முடியவில்லை என்றால் நிரந்தரமாக ஓய்வு பெறுவேன் எனவும் சூசகமாக தெரிவித்துள்ளார்.
ஐஸ்லாந்துடன் மோதல்:
இதற்கிடையே குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ள ஆர்ஜென்டீனா தனது முதல் ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணியை சனிக்கிழமை எதிர்கொள்கிறது. உலகக் கோப்பைக்கு முதன்முறையாக ஐஸ்லாந்து அணி தகுதி பெற்றுள்ள நிலையில் ஜாம்பவான் ஆர்ஜென்டீனாவை சமாளிக்குமா என கேள்வி எழுந்துள்ளது. ஆனால் யூரோ 2016 சாம்பியன் போட்டியில் ஐஸ்லாந்து அணி சிறப்பாக ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது. போர்ச்சுகல் அணியுடன் டிரா, இங்கிலாந்துடன் வெற்றி என ஐஸ்லாந்து அணி திறமையை வெளிப்படுத்தியது. அதே நேரத்தில் ஆர்ஜென்டீனா நட்சத்திர வீரர் மெஸ்ஸியின் முழு திறமையையே நம்பி உள்ளது. இஸ்ரேலுக்கு எதிரான இறுதி நட்பு ஆட்டம் பாலஸ்தீனர்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது, வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
ஆர்ஜென்டீனா பயிற்சியாளர் ஜார்ஜ் சம்போலி கூறுகையில்: முற்றிலும் மெஸ்ஸியையே எங்கள் அணி நம்பியிருக்கவில்லை. செர்ஜியோ அகியுரோ, பாவ்லோ டைபாலா, கோன்சாலோ ஹிகியுன் ஆகியோரும் சிறப்பாக ஆடி வருகின்றனர். எனினும் மெஸ்ஸி தனது தோள்களில் அணியை சுமந்து செல்வார் என்றார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/16/w600X390/foodball.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/16/வெற்றியுடன்-கணக்கை-தொடங்குமா-மெஸ்ஸியின்-ஆர்ஜென்டீனா-2940391.html
2940394 விளையாட்டு FIFA 2018 மொராக்கோவின் சேம் சைட் கோலால் ஈரான் வெற்றி DIN DIN Saturday, June 16, 2018 11:54 AM +0530 மொராக்கோ வீரர் அடித்த சேம் சைட் கோலால் ஈரான் அணி வெற்றி பெற்றது.
குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஈரான்-மொராக்கோ அணிகள் இடையிலான ஆட்டம் வெள்ளிக்கிழமை இரவு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்றது.
ஆசியாவில் வலுவான அணிகளில் ஒன்றான ஈரான் தற்போது 5-வது முறையாக உலகக் கோப்பை போட்டியில் விளையாடுகிறது. எனினும் குழு தகுதிச் சுற்று ஆட்டங்களோடு ஈரான் வெளியேறுவது வழக்கமாக உள்ளது. கடந்த 1998-இல் அமெரிக்க அணிக்கு எதிரான வெற்றியே அதன் ஓரே வெற்றியாகும்.
அதே நேரத்தில் மொராக்கோ அணி 20 ஆண்டுகளுக்கு பின்னர் உலகக் கோப்பைக்கு தேர்வாகி உள்ளது. கடந்த 1998 உலகக் கோப்பையில் அந்த அணி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. இரு அணிகள் இடையிலான ஆட்டம் தொடங்கியது முதலே மொராக்கோ தாக்குதல் ஆட்டத்தை கடைபிடித்தது. அந்த அணியின் முன்கள வீரர் அயுப் எல் கபி தொடர்ந்து ஈரான் அணியின் தற்காப்பு அரணை ஊடுருவி கோலடிக்க முயன்றும் முடியவில்லை. மேலும் சர்தார் அஸ்மெளன் கோலடிக்க மேற்கொண்ட பல முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. 
முதல் பாதி ஆட்டத்தில் ஈரானுக்கும், மொராக்கோவுக்கும் கோலடிக்க தலா 3 வாய்ப்புகள் கிடைத்தும் வீணடித்தன. ஈரான் வீரர் ஹாஜி சஃபி 45-ஆவது நிமிடத்தில் ப்ரி கிக் முறையில் அடித்த பந்து கோல் கம்பத்துக்கு மேலே சென்று விட்டது. இதனால் முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.
இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியவுடன் மொராக்கோ வீரர் முபாரக் புசெளபா அடித்த ஃப்ரீ கிக் வாய்ப்பு வீணாகியது. 
எனினும் வீரர்கள் காயம் மற்றும் மாற்று வீரர்கள் களமிறங்குதலிலேயே இரண்டாவது பாதி ஆட்டம் கழிந்தது. ஆட்டத்தை டிரா செய்வதில் ஈரானும், வெற்றி பெற வேண்டும் என மொராக்கோ வீரர்களும் முனைப்புடன் ஆடினர்.
இறுதியில் கூடுதலாக 6 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. இறுதி வரை இரு அணிகளும் கோலடிக்கவில்லை. எனினும் ஆட்டம் முடிய 1 நிமிட நேரத்தில் மொராக்கோ வீரர் அஜிஸ் புஹோதோஸ் அடித்த சேம் சைட் கோல் அடித்தார். இதன் மூலம் ஈரான் அணி 1-0 என வென்றது.
இந்த வெற்றியின் மூலம் ஈரான் அணி 3 புள்ளிகளைப் பெற்றது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/16/w600X390/aziz.jpg சேம் சைட் கோல் அடிக்கும் மொராக்கோ வீரர் அஜிஸ் புஹோதோஸ். http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/16/மொராக்கோவின்-சேம்-சைட்-கோலால்-ஈரான்-வெற்றி-2940394.html
2940401 விளையாட்டு FIFA 2018 உலகக் கோப்பை கால்பந்து: உருகுவே அதிரடி வெற்றி 1-0 எகிப்தை வீழ்த்தியது DIN DIN Saturday, June 16, 2018 11:54 AM +0530 நட்சத்திர வீரர் முகமது சலா களமிறங்காத நிலையில் எகிப்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணி வீழ்த்தியது.
குரூப் ஏ பிரிவில் உருகுவே-எகிப்து அணிகள் இடையிலான கால்பந்து போட்டி எகடெரின்பர்க் மைதானத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. 
இருமுறை உலக சாம்பியனான உருகுவே அணியில் நட்சத்திர வீரர் லுயிஸ் ஸ்வாரஸ், எடிசன் கவானி, டிய்கோ கோடின் ஆகியோர் மிகப்பெரிய பலமாக உள்ளனர். அதே நேரத்தில் 28 ஆண்டுகளுக்கு பின் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ள எகிப்து அணி நட்சத்திர வீரர் முகமது சலாவை நம்பி உள்ளது. பிரீமியர் லீக் போட்டியில் அவர் 44 கோல்களை அடித்து சிறப்பாக ஆடி வரும் நிலையில் சாம்பியன்ஸ் லீக் இறுதிச் சுற்றில் காயமடைந்தார்,
இதனால் சலா ஆட முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் அவர் முழுமையாக குணமடைந்து விட்டதால், உருகுவே அணிக்கு எதிரான ஆட்டத்தை எகிப்து அணி நம்பிக்கையுடன் எதிர்கொண்டது. இதனிடையே உருகுவே அணி தொடர்ந்து 3-வது உலகக் கோப்பையில் விளையாடுகிறது. கடந்த 2010-இல் நான்காவது இடம் பெற்ற உருகுவே வலுவான அணி உள்ள நிலையில் எகிப்தை சந்தித்தது.
ஆட்டம் தொடங்கிய 12 நிமிடங்கள் கழித்து உருகுவே அணி பந்தை தனது கட்டுக்குள் கொண்டு வந்தது. அந்த அணியின் தாக்குதல் ஆட்டக்காரர்கள் லூயிஸ் ஸ்வாரஸ், எடிசன் கேவனி ஆகியோர் பலமுறை எகிப்து அணியின் தற்காப்பு அரணை ஊடுருவி கோலடிக்க முயன்றனர். கேவனி அடித்த பந்தை எகிப்து கோல்கீப்பர் தடுத்து விட்டார். அதே போல் லூயிஸ் ஸ்வாரஸ் மேற்கொண்ட கோலடிக்கும் முயற்சியும் பலனளிக்கவில்லை. பின்னர் எகிப்து அணியும் தாக்குதல் ஆட்டத்தை மேற்கொண்டது. முதல் பாதி வரை இரு அணிகளும் கோலடிக்கவில்லை. 
ஆட்டம் முடிய கடைசி 2 நிமிடங்களில் உருகுவே அணியின் தற்காப்பு ஆட்டக்காரர் சாஞ்செஸ் அடித்த ப்ரீ கிக் வாய்ப்பை பயன்படுத்தி ஜோஸ் கிமினேஸ் தலையால் பந்தை முட்டி வெற்றி கோலை அடித்தார். எகிப்து அணியினர் கடைசி வரை கோலடிக்க மேற்கண்ட முயற்சி பலன்தரவில்லை. இந்த வெற்றி மூலம் குரூப் ஏ பிரிவில் ரஷியா, உருகுவே அணிகள் தலா 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளன.
நட்சத்திர வீரர் முகமது சலா
எகிப்து அணியின் நட்சத்திர வீரர் முகமது சலா தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக் கோப்பையில் விளையாடுவாரா என கேள்விக்குறி ஏற்பட்ட நிலையில் அவர் குணமடைந்து அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார். எனினும் அவர் தொடக்க ஆட்டத்தில் களமிறக்கப்படவில்லை. இது எகிப்து அணிக்கு சற்று பின்னடைவாக அமைந்தது.


டென்மார்க்கை சமாளிக்குமா பெரு?
குரூப் சி பிரிவில் வலுவான டென்மார்க் அணியுடன் சனிக்கிழமை சரன்ஸ்க் நகரில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் பெரு அணி மோதுகிறது.
டென்மார்க் அணி நட்சத்திர வீரரும், நடுக்கள ஆட்டக்காரருமான கிறிஸ்டியன் எரிக்சனை நம்பி களமிறங்குகிறது. அதே நேரத்தில் பெரு அணி ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய கேப்டன் பாவ்லோ கியுரோ தனது திறமையை நிருபீக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
கடந்த 14 ஆட்டங்களில் டென்மார்க் தோல்வியை சந்திக்காத உற்சாகத்துடந் உள்ளது. குரூப் சி பிரிவில் பிரான்ஸ் அணி முதலிடம் பெறும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு அடுத்த இடத்தைப் பெற முயலும் டென்மார்க்கும், பெருவும் இந்த ஆட்டத்தில் வென்றே தீர வேண்டும்.

ஆஸி.- பிரான்ஸ் மோதல்
 குரூப் சி பிரிவில் இடம் பெற்றுள்ள ஜாம்பவான் பிரான்ஸ் அணியுடன் சனிக்கிழமை நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி மோதுகிறது.
கடந்த 1998-இல் உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணி அதன் பின் பெரிய போட்டிகளில் சோபிக்கவில்லை. 
அதே நேரத்தில் ஆஸி. அணியின் டிம் காஹில் சிறந்த ஆட்டத்திறனுடன் உள்ளது பிரான்ஸ் அணிக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து 5-வது உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றிருக்கும் ஆஸி. அணி, பிரான்ஸ் அணியிடன் தாக்குதல் ஆட்டத்தை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளது. 
பெரிய போட்டிகளின் துவக்க ஆட்டங்களில் பிரான்ஸ் தடுமாற்றத்துடனே ஆடியுள்ளது அதற்கு பாதகமாக உள்ளது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/16/w600X390/wc9-winner.jpg வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் உருகுவே அணி வீரர்கள். http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/16/உலகக்-கோப்பை-கால்பந்துஉருகுவே-அதிரடி-வெற்றி-1-0-எகிப்தை-வீழ்த்தியது-2940401.html
2940581 விளையாட்டு FIFA 2018 உலகக் கோப்பை கால்பந்து: போர்ச்சுகல்-ஸ்பெயின் 3-3 DIN DIN Saturday, June 16, 2018 11:53 AM +0530
குரூப் பி பிரிவில் ஐரோப்பிய கால்பந்து ஜாம்பவான்களான ஸ்பெயின்-போர்ச்சுகல் அணிகள் இடையிலான ஆட்டம் சோச்சியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
போர்ச்சுகல் அணி தனது ஏழாவது உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஸ்பெயின் அணியில் ஜெரார்ட் பிக், செர்ஜியோ ராமோஸ், ஆன்ட்ரெஸ் இனெஸ்டா, டேவிட் சில்வா, இஸ்கோ, டீகோ கோஸ்டா உள்ளிட்ட திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளனர். 
ஆனால் போர்ச்சுகல் அணி நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஆட்டத்தை பெரிதும் நம்பியுள்ளது. பலமான இரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம் என்பதால் உலகம் முழுவதும் இதில் யார் வெல்லுவர் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் சோச்சி பிஷ்ட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தின் துவக்கம் முதலே போர்ச்சுகல் அணி ஆதிக்கம் செலுத்தியது. 4-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர்கள் செய்த பவுலால் கிடைத்த பெனால்டி மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் கோலை அடித்தார். இந்நிலையில் 24-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் டீகோ கோஸ்டா சிறப்பான கிக் மூலம் பதில் கோலடித்தார். அப்போது 1-1 என சமநிலை நிலவியது.
எனினும் 44-வது நிமிடத்தில் ரொனால்டோ தனது 2-வது கோலை அடித்தார். ஆட்டத்தின் முதல் பாதியின் போது போர்ச்சுகல் 2-1 என முன்னிலை பெற்றிருந்தது. 
இரண்டாவது பாதி தொடங்கியதும் ஸ்பெயின் கோலடிக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியது. இதன் பலனாக 55-வது நிமிடத்தில் டீகோ கோஸ்டா ப்ரீ கிக் முறையில் கிடைத்த வாய்ப்பின் மூலம் இரண்டாவது கோலை அடித்தார். அதைத் தொடர்ந்து அடுத்த 58 நிமிடத்திலேயே ஸ்பெயின் வீரர் நாச்சோ அடித்த வலுவான பந்து கோல் கம்பத்தில் பட்டு வலைக்குள் புகுந்தது. ஆட்டத்தின் 88-ஆவது நிமிடத்தில் ரொனால்டோ 3-ஆவது கோலை அடித்தார். இதன் மூலம் 3-3 என சம நிலை எட்டியது. 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/16/w600X390/foodball-1.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/16/உலகக்-கோப்பை-கால்பந்துபோர்ச்சுகல்-ஸ்பெயின்-3-3-2940581.html
2940331 விளையாட்டு FIFA 2018 ஃபிஃபா 2018: எகிப்துக்கு எதிராக உருகுவே வெற்றி Raghavendran DIN Friday, June 15, 2018 08:55 PM +0530  

'உலகக் கோப்பை கால்பந்து 2018' 2-ஆம் நாள் லீக் ஆட்டத்தில் இந்திய நேரப்படி மாலை 5:30 மணிக்குத் தொடங்கிய முதல் போட்டியில் எகிப்து, உருகுவே அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளின் கோல் முயற்சிகளும் துல்லியமாகத் தடுக்கப்பட்டன.

இந்நிலையில், போட்டியின் முடிவில் சரியாக 89-ஆவது நிமிடத்தில் உருகுவே வீரர் ஜோஸ் மரியா ஜமினெஸ், ஃப்ரீ கிக் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி கோல் அடித்தார்.

இதனால் உருகுவே அணி 1-0 என்ற கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தியது. மேலும் கடந்த 1970 முதல் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தங்களின் முதல் போட்டியில் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்துள்ள உருகுவே அணி தற்போது முதன்முறையாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/15/w600X390/EGYURU.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/15/ஃபிஃபா-2018-எகிப்துக்கு-எதிராக-உருகுவே-வெற்றி-2940331.html
2940294 விளையாட்டு FIFA 2018 இந்தியாவில் தொற்றிய கால்பந்து ஜுரம்: தங்கம், வீடு, கேக் என பரவியது Raghavendran DIN Friday, June 15, 2018 03:48 PM +0530  

உலகக் கோப்பை கால்பந்து 2018 திருவிழா வியாழக்கிழமை இரவு மாஸ்கோவின் லுஷ்னிகி விளையாட்டரங்கில் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது. 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஃபிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. 

இந்நிலையில் 2018-ம் ஆண்டு 21-வது உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் வாய்ப்பு ரஷியாவுக்கு கிடைத்தது. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறும் 64 ஆட்டங்களில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன. வரும் ஜூலை 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையடுத்து இந்தியாவில் உள்ள கால்பந்து ரசிகர்கள் பலர் இதை தங்கள் வழிகளில் கொண்டாடி வருகின்றனர். தொலைக்காட்சிகளில் பார்வையாளர்களாக மட்டும் இல்லாமல் தங்களின் தனித்துவமான திறமைகளாலும் கால்பந்தின் மீதான தங்களது காதலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கொல்கத்தாவில் உள்ள பேக்கரி மற்றும் இனிப்பகத்தில் கால்பந்து உலகக் கோப்பை நினைவாக ரசிகர்களின் கோரிக்கைளின் அடிப்படையில் பிரத்யேகமான கேக் மற்றும் இனிப்பு வகைகளை வடிவமைத்து வருகிறது. இதுகுறித்து அந்த கடையின் உரிமையாளர் கூறுகையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் கால்பந்து விளையாட்டின் தீவிர ரசிகர்கள். எனவே அவர்களின் கோரிக்கைகளின் பேரில் இதைச் செய்து வருகிறோம். எங்களது வாடிக்கையாளர்களும் இதை விரும்பி வாங்கிச் செல்கின்றனர் என்றார்.

 

அதுபோல மேற்கு வங்கத்தின் சிலிகுரி பகுதியைச் சேர்ந்த மற்றொரு பேக்கரி உரிமையாளர், இந்த உலகக் கோப்பையை மையப்படுத்தி கேக்குகளை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறார். மேலும் விரைவில் கால்பந்து உலகக் கோப்பையில் இந்திய அணி பங்கேற்க வேண்டும் என்று தனது வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் கோவைப் பகுதியைச் சேர்ந்த பிரபல மினியேச்சர் ஆர்டிஸ்ட் (ஒரு பொருளின் சிறு மாதிரி வடிவமைப்பாளர்) பி.மாரியப்பன், 2018 உலகக் கோப்பை கால்பந்து கோப்பையின் வடிவத்தை 900 மில்லி கிராம் தங்கத்தைக் கொண்டு வடிவமைத்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களை ஊக்கப்படுத்துவதே தனது நோக்கம் எனவும், 2022 உலகக் கோப்பை தொடரின் போது இந்திய அணி இடம்பிடிக்கும் எனவும் மாரியப்பன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தம்பதி தங்களது வீட்டை பிரேசில் நாட்டின் தேசியக் கொடியின் நிறத்தில் வண்ணமடித்துள்ளனர். மேலும் பிரேசில் கால்பந்து அணியின் பிரபல வீரர்களின் ஓவியங்களையும் வீட்டின் சுவர்களில் வரைந்துள்ளனர். மேலும் தங்களது வீட்டுக்கு 'பிரேசிலின் இல்லம்' ("House of Brazil") என்று பெயரிட்டுள்ளனர். இந்த உலகக் கோப்பையில் தங்களின் விருப்பத்துக்குரிய பிரேசில் அணிக்கு ஆதரவு அளிக்கும் விதமாக இதைச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 

]]>
FIFA World Cup 2018, கால்பந்து உலகக் கோப்பை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/15/w600X390/football_world_cup_2018.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/15/coimbatore-based-miniature-artist-mariappan-p-has-created-miniature-forms-of-fifa-world-cup-2018-2940294.html
2940289 விளையாட்டு FIFA 2018 நேற்றைய உலகக்கோப்பை ஆட்டம் இவர்களுக்கு மட்டும் பிரச்னையாக இருந்தது ஏன்? எழில் DIN Friday, June 15, 2018 02:58 PM +0530  

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி ரஷியாவில் ஜூன் 14 முதல் தொடங்கியுள்ளன. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறும் 64 ஆட்டங்களில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ரஷியாவும் சவுதி அரேபியாவும் மோதின.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ரஷிய அணி 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ரஷியாவுக்காக யுரி கஸ்னிகி, டெனிஸ் செரிஷேவ் (2), அர்டெம் டையுபா, கோலோவின் ஆகியோர் கோலடித்தனர்.

நேற்றைய ஆட்டத்தில் இரு அணிகளின் உடைகளின் வண்ணங்கள் என்ன என்று ஒரு நொடி எண்ணிப்பாருங்கள்? ரஷிய அணியினர் சிவப்பு உடையணிந்தும் சவுதி அரேபியா அணியினர் பச்சை நிற உடையணிந்தும் விளையாடினார்கள் இல்லையா! இதுதான் கால்பந்து ரசிகர்கள் பலருக்கும் சிக்கலை உண்டாகியிருக்கிறது. 

நிறக்குருடுப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இந்த ஆட்டத்தைக் காண்பதில் பிரச்னை ஏற்படுவதாகச் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் எழுதினார்கள். 

நிறக்குருடுப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்குச் சிவப்பு மற்றும் பச்சை நிறங்களைப் பிரித்துப் பார்க்கும் சக்தி இருக்காது. எல்லாமே ஒரே நிறத்தில்தான் தெரியும். இந்தப் பாதிப்பினால், சாதாரணமாகப் பார்வையிலோ, பார்க்கிற காட்சிகளிலோ எந்தப் பிரச்னையும் இருக்காது. ஆனால், காண்கிற காட்சிகளின் நிறங்களில்தான் பிரச்னை ஏற்படும். 

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் ரஷிய அணியினர் சிவப்பு உடையிலும் சவுதி அரேபிய அணியினர் பச்சை உடையிலும் விளையாடியதுதான் நிறக்குருடு பிரச்னை உள்ளவர்களுக்குச் சிக்கலை வரவழைத்துள்ளது. அதுகுறித்து சமூகவலைத்தளங்களில் வெளியான சில பதிவுகள்:

]]>
Russia vs Saudi Arabia , colour blindness, FIFA World Cup http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/15/w600X390/russia_1st_game1xx.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/15/russia-vs-saudi-arabia-game-proved-a-little-tricky-for-people-with-colour-blindness-2940289.html
2940271 விளையாட்டு FIFA 2018 ஸ்பெயின் vs போர்ச்சுகல்: ரசிகர்கள் எதிர்பார்க்கும் பரபரப்பான ஆட்டம் இன்று நடைபெறுகிறது! எழில் DIN Friday, June 15, 2018 12:52 PM +0530  

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் மாஸ்கோவில் நேற்று தொடங்கின. துவக்க ஆட்டத்தில் சவுதி அரேபியாவை ரஷியா 5-0 என வீழ்த்தியது. 

இதன் தொடர்ச்சியாக கால்பந்து ஜாம்பவான்களின் முதல் ஆட்டமாக ஸ்பெயின்-போர்ச்சுகல் அணிகள் இன்று சோச்சியில் மோதுகின்றன. 

இதுவரை உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு போர்ச்சுகல் ஒருமுறை கூட தகுதி பெறாத நிலையில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவையே பெரிதும் நம்பி உள்ளது. கடந்த 2016 யூரோ போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற உற்சாகத்தில் போர்ச்சுகல் அணி மிகுந்த நம்பிக்கையுடன் இந்த உலகக் கோப்பையில் களமிறங்கியுள்ளது. இதுவரை ஆறு முறை உலகக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்றுள்ள போர்ச்சுகல் அணி, முதல் முதலில் பங்கேற்ற 1966-ல் மூன்றாம் இடம் பிடித்து அசத்தியது. அதுவே போர்ச்சுகல் அணியின் சிறந்த உலகக் கோப்பைப் போட்டியாகும். 2006-ல் நான்காம் இடம் பிடித்தது. 

அதே நேரத்தில் 2010-ஆம் ஆண்டு உலக சாம்பியனான ஸ்பெயின் அணி கடந்த 2014 உலகக் கோப்பையில் நெதர்லாந்து, சிலி போன்ற அணிகளிடம் தகுதிச் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது. நிகழாண்டு உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டங்களில் சிறப்பாக ஆடியதின் மூலம் ஸ்பெயின் தகுதி பெற்றுள்ளது.

2010-இல் சாம்பியன் பட்டம் வெல்ல காரணமான ஆன்ட்ரெஸ் இனியெஸ்டா ஸ்பெயின் அணிக்காக தனது கடைசி உலகக் கோப்பை போட்டியில் ஆட உள்ளார். அதே நேரத்தில் 5 முறை தங்கக் காலணி விருதை வென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோவும் ஆடும் கடைசி உலகக் கோப்பை போட்டியாக இது அமையும்.

பல்வேறு கிளப் சாம்பியன் பட்டங்கள் அனைத்தையும் தன் வசம் வைத்துள்ள அவருக்கு இதுவரை உலக சாம்பியன் பட்டம் கிடைக்கவில்லை. குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு எளிதாக முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

]]>
Portugal vs Spain http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/24/w600X390/ronaldo1xx.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/15/portugal-vs-spain-2940271.html
2940248 விளையாட்டு FIFA 2018 உலகக் கோப்பை: சவுதி அரேபியாவுக்கு எதிராக ரஷியா அடித்த 5 கோல்களின் விடியோ! எழில் DIN Friday, June 15, 2018 10:44 AM +0530  

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி ரஷியாவில் ஜூன் 14 முதல் தொடங்கியுள்ளன. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறும் 64 ஆட்டங்களில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ரஷியாவும் சவுதி அரேபியாவும் மோதின.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ரஷிய அணி 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ரஷியாவுக்காக யுரி கஸ்னிகி, டெனிஸ் செரிஷேவ் (2), அர்டெம் டையுபா, கோலோவின் ஆகியோர் கோலடித்தனர்.

]]>
2018 FIFA World Cup, Russia v Saudi Arabia http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/15/w600X390/russai1.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/15/russia-v-saudi-arabia---2018-fifa-world-cup-russia-2940248.html
2939660 விளையாட்டு FIFA 2018 கோலாகலமாகத் தொடங்கியது கால்பந்து திருவிழா DIN DIN Friday, June 15, 2018 10:34 AM +0530 * வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள், இசைநிகழ்ச்சிகள்
* பல்லாயிரக்கணக்கில் குவிந்த ரசிகர்கள்

உலகக் கோப்பை கால்பந்து 2018 திருவிழா வியாழக்கிழமை இரவு மாஸ்கோவின் லுஷ்னிகி விளையாட்டரங்கில் வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது. 
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. இந்நிலையில் 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் வாய்ப்பு ரஷியாவுக்கு கிடைத்தது. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறும் 64 ஆட்டங்களில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன. 
வரும் ஜூலை 15-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிக்காக ரஷிய அரசு ரூ.87 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது. கால்பந்து ஆட்டங்களைக் காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் ரஷியாவுக்கு வருவர் என்பதால் பல்வேறு சிறப்பான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
21-வது உலகக் கோப்பை போட்டியின் தொடக்க விழா மாஸ்கோவின் பிரம்மாண்டமான லுஷ்னிகி விளையாட்டரங்கில் நடைபெற்றது. ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், பிஃபா தலைவர் கியானி இன்பேன்டினோ தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தனர். 
இங்கிலாந்தைச் சேர்ந்த புகழ் பெற்ற பாடகர் ராபி வில்லியம்ஸ், ரஷிய இளம் பாடகி அய்டா கலிஃபுல்லினா ஆகியோரின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் ரஷிய கலாசாரம், பண்பாடு, கால்பந்து விளையாட்டின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வண்ணிகு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 15 நிமிடங்களில் துவக்க விழா முடிவடைந்தது.
81 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வசதி கொண்ட லுஷ்னிகி மைதானம் முழுவதும் நிரம்பி வழிந்தது. ரஷிய அணியின் சீருடைகளை அணி ரசிகர்கள் தங்கள் நாட்டு அணியை உற்சாகப்படுத்துவதற்காக குவிந்திருந்தனர். 
பலத்த பாதுகாப்பு 
போட்டி நடைபெறும் மைதானத்தைச் சுற்றிலும் ரஷிய பாதுகாப்புத் துறை சார்பில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
மைதானம் அருகே விமான எதிர்ப்பு பீரங்கிகளும் நிறுத்தப்பட்டிருந்தது.
லுஷ்னிக் மைதானத்துக்கு ரசிகர்கள் சாரை சாரையாக வரத் தொடங்கினர். மாஸ்கோ நகரமே உலகக் கோப்பை போட்டியால் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.

ரஷியா அபார வெற்றி: 

ஆட்டத்தின் முதல் கோலை அடித்த மகிழ்ச்சியில் ரஷிய வீரர்கள்.


உலகக் கோப்பை கால்பந்து போட்டியின தொடக்க ஆட்டத்தில் ரஷிய அணி 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
சவுதி அணியில் அப்துல்லா அல் மயூப், உஸாமா ஹுசாவி, ஓமர் ஹோசாவி, யாசர் ஹல் ஷரானி, மொகமது அல் பரிக், அப்துல்லா ஓடிப், சல்மான் அல் பராஜ், யாஹியா அல் ஷிஹிரி, டைசிர், சலேம் அல் தோசரி, பஹத் அல் மொலத் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் இரு அணி வீரர்களும் பந்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர போராடினர். துவக்க முதலே ஆதிக்கம் செலுத்திய ரஷியாவின் யுரி கஸ்னிகி ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார்.
இதற்கிடையே ஆலன் ஸாகோவ் காயமடைந்து வெளியேறியதால் அவருக்கு பதிலாக இடம் பெற்ற டெனிஸ் செரிஷேவ் இரண்டாவது கோலை அடித்தார். பின்னர் வந்த மற்றொரு பதிலி வீரரான அர்டெம் டையுபா தனக்கு கிடைத்த பந்தை தலையால் முட்டி மூன்றாவது கோலை அடித்தார். 
உள்ளூர் ரசிகர்கள் ஆதரவுடன் அபராமாக ஆடிய ரஷிய அணி 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தியது.
ரஷியாவுக்காக யுரி கஸ்னிகி, டெனிஸ் செரிஷேவ் (2), அர்டெம் டையுபா, கோலோவின் ஆகியோர் கோலடித்தனர்.

5145 கி.மீ சைக்கிள் பயணம் செய்த ரசிகர்
உலகக் கால்பந்து போட்டி 2018 ஒரு பகுதியாக மாஸ்கோவில் வியாழக்கிழமை நடைபெற்ற ரஷியா-சவுதி அரேபிய அணிகளின் தொடக்க ஆட்டத்தைக் காண மொத்தம் 75 நாள்கள் 5144 கி.மீ தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்ட சவுதி ரசிகர் பாத் அல் யாஹியா மாஸ்கோ வந்துள்ளார்.

உலகக் கோப்பையை வெல்ல ரொனால்டோவுக்கு கடைசி வாய்ப்பு
போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ரஷியாவில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியே வெல்வதற்கான கடைசி வாய்ப்பாகும். அவரது பதக்கப் பட்டியலில் உலகின் முக்கிய கோப்பைகள் அனைத்தும் இடம் பெற்றிருந்தாலும் உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் இடம் பெறவில்லை.

உலகக் கோப்பைக்காக கூகுள் டூடில்
உலகக் கோப்பை கால்பந்து 2018 போட்டியை முன்னிட்டு கூகுள் டூடில் சிறப்பு லோகோவை தனது பக்கத்தில் வைத்துள்ளது.
முக்கிய பிரமுகர்கள் பிறந்த நாள், ஆண்டு விழா முக்கிய சம்பவம் போன்றவற்றின் போது கூகுள் டூடில் சிறப்பு லோகோவை தனது முகப்பு பக்கத்தில் வைப்பது வழக்கம். வியாழக்கிழமை ரஷியாவில் தொடங்கிய உலகக்கோப்பை போட்டியில் 32 நாடுகள் கலந்து கொள்கின்றன. இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு நாட்டின் திறமை, வெவ்வேறு வகை கலாசாரம் தொடர்பாக ஓவியர் மூலம் வரையப்பெற்ற லோகோ கூகுள் முகப்பு பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு நாளும் போட்டி முடியும் வரை அந்தந்த நாட்டில் கால்பந்து எவ்வாறு சிறப்புடன் திகழ்கிறது என சிறப்பு லோகோ முகப்பு புத்தகத்தில் வைக்கப்படும்.கூகுள் நிறுவனம் முதன் முறையாக 20.8.1998-இல் முதல் டுடிலை தனது முகப்பு பக்கத்தில் வைக்கத் தொடங்கியது.

இன்றைய ஆட்டங்கள்
15-6-2018 (வெள்ளிக்கிழமை)
எகிப்து-உருகுவே, மாலை 5.30.
மொராக்கோ-ஈரான், இரவு 8.30.
போர்ச்சுகல்-ஸ்பெயின், இரவு 11.30.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/15/w600X390/wc19.jpg ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்குவதை முன்னிட்டு வியாழக்கிழமை நடைபெற்ற கண்கவர் கலைநிகழ்ச்சிகள்.  http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/15/கோலாகலமாகத்-தொடங்கியது-கால்பந்து-திருவிழா-2939660.html
2938833 விளையாட்டு FIFA 2018 கடைசி பிஃபா உலகக்கோப்பை: சாதிப்பாரா மெஸ்ஸி? DIN DIN Thursday, June 14, 2018 05:49 PM +0530  

உலகமே உற்று நோக்கி இருக்கும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவின் மாஸ்கோவில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. உலகக்கோப்பை கால்பந்தில் ஆதிக்கம் செலுத்தும் அணிகளில் அர்ஜென்டினா தவிர்க்கப்படாத அணி. இந்த அணி 1978 மற்றும் 1986 ஆகிய ஆண்டுகளில் கோப்பை வென்றது. அதன்பிறகு அந்த அணி அரையிறுதி சுற்றுக்கு கூட தகுதி பெற்றது கிடையாது. 

அர்ஜென்டினா அணியின் நம்பிக்கை நட்சத்திரமே லயோனல் மெஸ்ஸி தான். உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களுள் மெஸ்ஸிக்கு தனி இடம் உண்டு. மைதானத்தில் பந்து இவர் வசம் சென்றுவிட்டால் ஒட்டுமொத்த மைதானமே கொக்கரிக்கும் ஒரே சொல் மெஸ்ஸி. இவர், 2006-ஆம் ஆண்டு முதன்முறையாக அர்ஜென்டினா அணிக்காக உலகக்கோப்பை தொடரில் விளையாடினார். அந்த உலகக்கோப்பையில் அர்ஜென்டினா அணி காலிறுதிசுற்றில் ஜெர்மனியிடம் தோல்வியடைந்து வெளியேறியது. 

அதன்பிறகு, 2010-ஆம் உலகக்கோப்பையிலும் அந்த அணி காலிறுதி சுற்று வரை சென்று மீண்டும் அதே வலுவான ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது. 

இதைத்தொடர்ந்து, நடைபெற்ற 2014-ஆம் உலகக்கோப்பையிலும் அர்ஜென்டினா நம்பிக்கையுடன் களமிறங்கியது. பார்சிலோனா அணிக்காக ஜொலிக்கும் மெஸ்ஸி தேசிய அணியான அர்ஜென்டினா அணியில் விளையாடும் போது ஜொலிக்க தவறுகிறார் என்ற விமரிசனங்கள் எழத் தொடங்கின. 

இதனால், கடந்த உலகக்கோப்பையில் அர்ஜென்டினா அணி சற்று ஆதிக்கம் செலுத்தி விளையாட காலிறுதி, அரையிறுதி போட்டிகளில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால், இறுதிப்போட்டியில் கடந்த 2 உலகக்கோப்பைகளில் வெளியேற்றப்பட்ட அதே ஜெர்மனியை இறுதிப்போட்டியில் எதிர்கொண்டது. அந்த போட்டியிலும் அர்ஜென்டினா அணி ஜெர்மனியிடம் தோல்வியடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது. 

இந்த சோகத்தில் இருந்து மீள நினைத்த அர்ஜென்டினா அணிக்கு அடுத்தடுத்து சோகங்கள் வந்தது. 2015 மற்றும் 2016 கோபா அமெரிக்கா தொடரிலும் அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பையை தவறவிட்டது. 

இதனால், மெஸ்ஸிக்கு எதிராக விமரிசனங்கள், ஊடகங்களின் தொடர் கேள்விகள் என தொடர்ச்சியாக ஒலித்துக்கொண்டே இருந்தது. இதனால், வேறு வழி இல்லாமல் மெஸ்ஸி 2016-இல் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பிறகு அவர் தனது முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் சர்வதச கால்பந்து அணிக்காக விளையாட தொடங்கினார். 

இந்நிலையில், மெஸ்ஸி மீண்டும் உலகக்கோப்பையில் களமிறங்குகிறார். மெஸ்சிக்கு வயது 31 ஆகிறது. அதனால், அவரால் அடுத்த உலகக்கோப்பை வரை விளையாட முடியுமா என்பதற்கு உத்தரவாதம் இல்லை. 3 முறை கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்த மெஸ்ஸிக்கு உலகக்கோப்பையை ருசிப்பதற்கு இது கடைசி வாய்ப்பாக கருதப்படுகிறது. 

இந்த உலகக்கோப்பைக்கே கடைசி தகுதிச் சுற்று போட்டியில் ஈகுவாட்டர் அணிக்கு எதிராக மெஸ்ஸி அடித்த ஹாட்ரிக் கோலால் தான் அர்ஜென்டினா அணி தகுதி பெற்றது.

அதனால், இந்த கடைசி வாய்ப்பில் மெஸ்ஸி தனது முழு உழைப்பையும் செலவிட்டு இந்த உலகக்கோப்பையை கைப்பற்றுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

இதுகுறித்து மெஸ்ஸி கூறுகையில் கூட, நாங்கள் உலகக்கோப்பை வெல்ல இது கடைசி வாய்ப்பு. இந்த உலகக்கோப்பைக்கு பிறகு நான் ஓய்வு பெறுவேனா இல்லையா என்று தெரியாது. ஆனால், இந்த உலகக்கோப்பையில் எப்படி விளையாடப் போகிறோம் என்பதை எண்ணியிருக்கிறோம் என்றார்.

அர்ஜென்டினா அணியில் மெஸ்ஸியுடன் மேலும் சில வீரர்கள் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள். அதனால், இந்த உலகக்கோப்பையை நிச்சயம் கைப்பற்ற வேண்டும் என்று மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா காத்திருக்கின்றனர். இந்த உலகக்கோப்பையை மெஸ்ஸி வென்றுவிட்டால் கால்பந்தில் அவர் கால்பதிக்காத வெற்றியே கிடையாது என்பது போல் அவருடைய கால்பந்து வாழ்க்கை அமையும். 

நடப்பு கால்பந்து உலகக்கோப்பையில் அர்ஜென்டினா அணியின் போட்டி விவரம்:

அர்ஜென்டினா அணி குரூப் டி-இல் இடம்பெற்றுள்ளது

முதல் போட்டி: ஐஸ்லாந்து - ஜூன் 16

2-ஆவது போட்டி: குரோஷியா - ஜூன் 21

3-ஆவது போட்டி: நைஜீரியா - ஜூன் 26

]]>
world cup, Argentina, Messi, FIFA , பிஃபா, உலகக்கோப்பை கால்பந்து, அர்ஜென்டினா, மெஸ்ஸி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/29/w600X390/messi.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/13/can-messi-score-world-cup-trophy-in-his-final-appearance-2938833.html
2937716 விளையாட்டு FIFA 2018 உலகக் கோப்பையில் கால்பந்தை கொண்டு செல்ல 2 இந்திய சிறுவர்கள் தேர்வு DIN DIN Thursday, June 14, 2018 05:48 PM +0530 ரஷியாவில் நடக்கவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டி அதிகாரப்பூர்வமாக பந்து கொண்டு செல்பவர்களாக 2 இந்திய சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் கியா மோட்டார்ஸ் நிறுவனம், பிஃபாவின் அதிகாரப்பூர்வ பங்குதாரராக உலகக் கோப்பையில் இடம் பெற்றுள்ளது. கால்பந்து ஆட்டங்களில் சிறுவர்களே பந்துகளை கொண்டு சென்று வழங்குவது வழக்கம். இந்நிலையில் 10 முதல் 14 வயதுள்ள 1600 சிறுவர்கள் இதற்கான தகுதிச் சுற்றில் இடம் பெற்றனர். குர்கானில் கடந்த மாதம் நடந்த தேர்வுப் போட்டியில் இந்திய கேப்டன் சுனில் சேத்ரி இறுதியாகதேர்வு செய்யப்பட்ட 50 சிறுவர்களில் இருந்து 2 பேரை தேர்வு செய்தார்.
கர்நாடகத்தைச் சேர்ந்த 10 வயது ரிஷி தேஜ், தமிழகத்தைச் சேர்ந்த 11 வயது நத்தானியா ஜான் ஆகியோர் இதற்காக ரஷியா செல்கின்றனர். பிரேசில்-கோஸ்டா ரிகா மற்றும் பனாமா-பெல்ஜியம் அணிகள் இடையே நடைபெறும் ஆட்டங்களில் இச்சிறுவர்கள் பந்தை கொண்டு செல்வர்.
உலகம் முழுவதும் இருந்து 64 பள்ளிச் சிறுவர்கள் இதற்காக தேர்வு செóயப்பட்டுள்ளனர்.



 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/12/w600X390/ombc1.jpg உலகக் கோப்பை போட்டியில் கால்பந்தை அணிகளிடம் வழங்கும் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய சிறுவர்கள். http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/12/உலகக்-கோப்பையில்-கால்பந்தை-கொண்டு-செல்ல-2-இந்திய-சிறுவர்கள்-தேர்வு-2937716.html
2937722 விளையாட்டு FIFA 2018 ரஷியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018 வெல்லும் வாய்ப்புள்ள அணிகள் ஒரு பார்வை DIN DIN Thursday, June 14, 2018 05:47 PM +0530
சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்புள்ள அணிகள்
பெல்ஜியம்
பயிற்சியாளர் ராபர்டோ மார்டினஸ்: ஆட்ட வியூகம்: 4-2-3-1.
அணியில் இடம் பெறக்கூடிய வீரர்கள்: 
குர்டாய்ஸ், அல்டர்வெய்ர்ட், சைமன், வெர்டோன்ஜென், மியுனியர், 
டே புருயன், விஸ்டல், பெரைரா, மெர்டென்ஸ், ஈடன் ஹசார்ட், லுகாகு. தகுதிச் சுற்று ஆட்டங்களின் போது பெல்ஜியம் கவலை இல்லாத அணியாக காணப்பட்டது. 
கிரீஸ், போஸ்னியா, எஸ்டோனியா, சைப்ரஸ், ஜிப்ரால்டர் அணிகளை வீழ்த்தி உலகக் கோப்பை பெல்ஜியம் தகுதி பெற்றது. சிறந்த கோல்கீப்பராக குர்டாய்ஸ், தற்காப்புக்கு வெர்டோன்ஜென், அல்டர்வெய்ரெல்ட், கொம்பனி ஆகியோரும், நடுக்களத்தில் மெளசா, டி புருயன், விஸ்டல் ஆகியோரும், ஹசார்ட், லுகாகு, மிர்சி பட்ஸுவாய் ஆகியோர் முன்கள தாக்குதல் ஆட்டத்துக்கும் அணிக்கு உறுதுணையாக இருப்பர்.
பயிற்சியாளர் ராபர்டோ மார்டினஸ் பயிற்சியில் கட்டுக்கோப்பான அணியாக உருவெடுத்துள்ளது. தற்போதுள்ள பெற்றுள்ள ஜாம்பவான் அணி பெயரை நிரூபிக்கும் வகையில் பெல்ஜியம் உள்ளது.

ஸ்பெயின்
பயிற்சியாளர் ஜுலன் லோபேட்கை:
ஆட்ட வியூகம்: 4-2-3-1.
அணியில் இடம் பெறக்கூடிய வீரர்கள்: 
டி கெ, கார்வஜால், பிகியு, ரமோஸ், ஆல்பா, டேவிட் சில்வா, பஸ்குயட்ஸ், தியாகோ, இஸ்கோ, இனியெஸ்டா, டீகோ கோஸ்டா.கடந்த 2010-இல் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அதன் பின்னர் பெரிய போட்டிகளில் பட்டம் வெல்லவில்லை. எனினும் ஆர்ஜென்டீனாவுடன் நடந்த ஆட்டத்தில் 6-1 கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று மீண்டும் அனைவரது கவனத்தையும் ஸ்பெயின் திருப்பியது. 
தகுதி ஆட்டங்களில் 9-இல் வென்று 1-இல் மட்டுமே தோல்வி அடைந்தது. 3 கோல்களை விட்டுத்தந்து 36 கோல்களை அடித்துள்ளது.
இனியெஸ்டா, இஸ்கோ, தீயாகோ, சில்வா போன்ற வீரர்கள் சிறந்த பார்மில் உள்ளனர்.பயிற்சியாளர் ஜூலன் லோபேட்கையின் சிறப்பான பயிற்சியே இதற்கு காரணம். 19, 21 வயதுக்குட்பட்ட ஸ்பெயின் அணிகளுக்கு லோபேட்கை பயிற்சி அளித்தார்.மேலும் சீனியர் அணிக்கு புதிய நுணுக்கங்கள் மூலம் புத்துயிர் ஊட்டினார். தியாகோ, இனியெஸ்டா ஆகியோர் முன்களத்திலும், சில்வா நடுக்களத்திலும், இஸ்கோ இறுதிக் கட்டத்திலும் கவனம் செலுத்துவர். குறிப்பாக கோலடிக்கும் வாய்ப்புகளை உருவாக்குவதில் பொறுமையான பாணியை ஸ்பெயின் கடைபிடிக்கும்.

பிரேசில்
பயிற்சியாளர்: டைட்.
ஆட்ட வியூகம்: 4-3-3.
அணியில் இடம் பெறக்கூடிய வீரர்கள்: 
அல்லிசன், டேனி ஆல்வ்ஸ், தியாகோ சில்வா, மிராண்டா, மார்செலோ, கேஸ்மிரோ, வில்லியன், பாவ்லினோ, குட்டின்ஹோ, பிர்மினோ, கப்ரியேல் ஜீஸஸ். கடும் காயத்தில் இருந்து குணமடைந்து வந்துள்ள நட்சத்திர வீரர் நெய்மருக்கு சில தொடக்க ஆட்டங்களின் போது ஓய்வு தர அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் ராபர்டோ பிர்மனோவுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்கும் நிலை உள்ளது. அதே நேரத்தில் நடுக்கள தற்காப்பு ஆட்டக்காரர் கேஸ்மிரோ, எதிரணிகளின் தாக்குதலை சமாளிக்க வேண்டும். 
முன்கள வீரர்களான மார்செலோ, ஆல்வ்ஸ் ஆகியோர் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தவறாமல் கோலாக மாற்ற வேண்டும். கேஸ்மிரோவுக்கு பாவ்லினோ, பிர்மினோ, வில்லியன்ஆகியோர் உதவிகரமாக இருப்பர்.
பிரேசிலின் தற்காப்பு அரண் சிறப்பாக காணப்படுகிறது. அதே நேரத்தில் முன்கள வீரர்களின் தாக்குதல் ஆட்டத்துடன் சேர்ந்து சிறப்பான சமநிலையுடன் காணப்படுகின்றன. கடந்த 10 ஆட்டங்களில் 2 கோல்களை மட்டுமே விட்டுத்தந்து 19 கோல்களை அடித்துள்ளது. இதில் இருந்தே தற்காப்பு குறித்து கவலையின்றி பிரேசில் உள்ளதை அறியலாம்.
மேலும் நெய்மர், எடெர்சன், பெர்ணான்டின்ஹோ, மார்கியுனோஸ், டக்ளஸ் கோஸ்டா உள்ளிட்டோரை மாற்றி மாற்றி பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.

போர்ச்சுகல்
பயிற்சியாளர்: பெர்ணான்டோ சான்டோஸ் 
ஆட்ட வியூகம்: 4-4-2.
அணியில் இடம் பெறக்கூடிய வீரர்கள்: 
ருய் பேட்ரிகோ, சோரெஸ், பெபே, ஆல்வ்ஸ், கியூரிரோ, பெர்னார்டோ சில்வா, மெளடின்ஹோ, ல்லியம் காவ்லோ, ஜோவோ மரியோ, ஆன்ட்ரெ சில்வா, கிறிஸ்டியானோ ரொனால்டோ. 
சிறந்த வீரர்களை கொண்டதாக போர்ச்சுகல் விளங்கினாலும், உலகக் கோப்பை போட்டிகளில் சோபிக்கவில்லை. கடந்த 2016 யூரோ போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதே அந்த அணியின் பெரிய வெற்றியாகும். கருப்பு குதிரைகளாக கருதப்பட்ட நிலை மாறி தற்போது பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
ஒவ்வொரு அணிக்கும் சில பிரிவுகளில் சாபம் தொடர்ந்து வரும். குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு கோல்கீப்பர் ரூபத்தில் கடந்த 20 ஆண்டுகளாக சாபம் தொடர்கிறது. போர்ச்சுகல் அணிக்கோ மத்திய 
முன்கள வீரர்கள் நிலை சாபக்கேடாக விளங்கி வருகிறது. இக்குறையை ஆன்ட்ரே டி சில்வா, டேன்னி, ஹியுகோ அல்மைடா ஆகியோர் இந்த முறை போக்குவர் எனத்தெரிகிறது. கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு துணையாக பென்úஸமா செயல்படுவார். 
பயிற்சியாளர் சான்டோஸ் கூறுகையில்: நாங்கள் வெல்வதற்காக தான் ரஷியாவுக்கு வந்துள்ளோம். எங்களிடம் இருக்கும் ஆயுதங்களைக் கொண்டு விளையாடுவோம். இது தான் தற்போது தேவை. இதே வியூகத்தால் உலக கோப்பையும் வெல்ல முடியும் என கருதுகிறது.

ஆர்ஜென்டீனா: 
பயிற்சியாளர்: ஜார்ஜ் சம்போலி
ஆட்ட வியூகம்: 2-3-3-2
அணியில் இடம் பெறக்கூடிய வீரர்கள்: 
காபலேரோ, நிக்கோலஸ், ஓடேமெண்டி, பெடரிக்கோ பேசியோ, காப்ரியேல் மெர்காடோ, ஜியோவனி செல்சோ, லுகாஸ் பிஜிலியா, பாவ்லோ டபாலா, ஏஞ்சல் டி மரியா, லியோனல் மெஸ்ஸி, செர்ஜியோ அகியுரோ. 2 முறை சாம்பியனான ஆர்ஜென்டீனா, 2018 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றதே பெரிய சவாலான விஷயம் ஆகிவிட்டது. ஈக்குவடார், சிலி, பொலிவியா போன்ற அணிகளுடன் தோல்வியைத் தழுவியதால், தகுதிச் சுற்றிலேயே வெளியேறும் நிலை ஏற்பட்டது. 3 பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டு இறுதியாக சம்போலி பொறுப்பேற்றார். 2017-இல் ஈக்குவடாருக்கு எதிரான ஆட்டத்தில் கண்டிப்பாக வென்றால் தான் தகுதி பெறும் நிலை இருந்தபோது, 1 கோல் பின்தங்கி இருந்தது. ஆனால் மெஸ்ஸியின் அபார ஹாட்ரிக்கால் வென்று உலகக் கோப்பைக்கு வந்துள்ளது.
குரூப் டி பிரிவில் நைஜீரியா, குரோஷியா, ஐஸ்லாந்து போன்ற சவாலான அணிகளுடன் ஆர்ஜென்டீனா இடம் பெற்றுள்ளது. 3 நட்பு ஆட்டங்களில் 2-இல் வென்று, ஒன்றில் படுதோல்வியை சந்தித்தது. முற்றிலும் மெஸ்ஸியின் ஆட்டத்தை நம்பியே உள்ளது. எனினும் செர்ஜியோ அகியுரோ, டபாலா, ஏஞ்சல் மரியா ஆகியோரும் எதிரணிக்கு சவால் விடுவர்.

பிரான்ஸ்
பயிற்சியாளர்: டையர் டெஸ்சாம்ப்ஸ்
ஆட்ட வியூகம்: 4-3-3.
அணியில் இடம் பெறக்கூடிய வீரர்கள்: 
லோரிஸ், சிடிபெ, வரேனே, உமிட்டி, மென்டி, கன்டே, போக்பா, மட்டுய்டி, கிரைஸ்மேன், மாப்பே, லீமர்.பால் போக்பாவின் தீவிர ஆட்டம் வெளிப்பட்டால் எதிரணிகள் நிலைகுலையும் அபாயம் உள்ளது. அனைத்து நிலைகளிலும் திறனுடன் பிரான்ஸ் அணி உள்ளது. 
ஆனால் போக்பாவின் ஆட்டத்திறன் சரியில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன. கன்டே நடுக்களத்திலும், மட்டுய்டி தற்காப்பிலும் சிறப்பாக தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என தேவை உள்ளது. இரு வீரர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தாக்குதல் ஆட்டத்தில் போக்பா, கிரைஸ்மேன், மாப்பே, லீமர் ஆகியோர் சிறப்பான பார்மில் உள்ளனர். 4-4-2 ஆட்ட வியூகம், எதிரணிகளுக்கு எச்சரிக்கை விடக்கூடிய வகையில் உள்ளது. உலகக் கோப்பை வென்ற அணியில் நடுக்கள தற்காப்பு ஆட்டக்காரராக திகழ்ந்த டெஸ்சாம்ப்ஸ், தனது அணியின் நோக்கம், வெல்லும் சாத்தியம் குறித்து அறிந்துள்ளார். குறிப்பாக பிரான்ஸ் அணி சரியான சமநிலை, ஆட்டத்திறனை பெற்று விட்டால், வெற்றியை தடுப்பது சாத்தியமாகாது. மேலும் அந்த அணியின் ஆட்ட முறை வரையறுக்கப்படவில்லை. வரும் நாள்கள் பிரான்ஸுக்கு புதிய பொற்காலத் தலைமுறையாக அமையும்.

ஜெர்மனி
பயிற்சியாளர்: ஜோசிம் லோ 
ஆட்ட வியூகம்: 4-2-3-1, 
அணியில் இடம் பெறக்கூடிய வீரர்கள்: 
நியர், கிம்மிச், ஹம்மல்ஸ், போடேங், ஹெக்டர், க்ரூஸ், கேடிரா, ரியுஸ், டிராக்ஸ்லர், முல்லர், வெர்னர். வெற்றிக்காக திட்டமிட்டு, பின்னர் அதை களத்தில் செயல்படுத்துவதில் ஜெர்மன் அணி தனித்தன்மையுடன் திகழ்கிறது. 
ஒரு வியூகத்தை செயல்படுத்துவதற்காக அவர்கள் காட்டும் சிரத்தை அபரிதமானது. முக்கிய வீரர்களான லெராய் சேன், மரியோ கோட்ஸ், எம்ரே கேன் ஆகியோரை தேர்வு செய்யவில்லை. ஆட்டத்தில் ஒவ்வொரு கட்டமாக ஜெர்மன் அணி தனது தாக்குதலை வெளிப்படுத்துகிறது. ஏனைய அணிகள் தொடக்கத்திலேயே வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தும். இதனால் அந்த அணிகள் சோர்வடையும் நேரத்தில் ஜெர்மன் வீரர்கள் தங்களின் தாக்குதல் ஆட்டத்தை மேற்கொண்டு கோல்கள் அடிப்பதில் வல்லவர்கள். கோல்கீப்பர் நியுரின் உடல்தகுதி கேள்விக்குறியாக உள்ளது.
முக்கிய வீரர்களான கிம்மிச், டிராக்ஸ்லர், முல்லர், ரியுஸ், வெர்னர் ஆகியோர் மைதானத்தில் பந்தை கடத்துவதிலும், கோல் வாய்ப்புகளை உருவாக்குவதிலும் கில்லாடிகள். எதிரணியின் தற்காப்பு 
வீரர்களுக்கு இவர்களில் எவரை தடுப்பது என்பதே தெரியாத நிலை ஏற்படும். துல்லிய மற்றும் சமநிலையை கொண்டதாக விளங்கும் ஜெர்மனி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் நிலையிலேயே காணப்படுகிறது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/12/w600X390/player.JPG http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/12/ரஷியாவில்-நடைபெறவுள்ள-உலகக்-கோப்பை-கால்பந்து-போட்டி-2018-வெல்லும்-வாய்ப்புள்ள-அணிகள்-ஒரு-பார்வை-2937722.html
2936668 விளையாட்டு FIFA 2018 யார் வெல்வார் என குறி சொல்லும் ரஷிய பூனை DIN DIN Thursday, June 14, 2018 05:46 PM +0530 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எந்த அணி வெல்லும் என ரஷியாவைச் சேர்ந்த காது கேளாத அச்சிலீஸ் என்ற பெயர் கொண்ட பூனை குறி சொல்ல அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் போதும் விலங்குகளைக் கொண்டு பட்டம் வெல்லும் அணி எது என முன்கூட்டியே கணித்து கூறப்படுகிறது.
இதன்படி கடந்த 2010 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் பால் என்ற பெயர் கொண்ட ஆக்டோபஸ் குறி சொல்லியது. ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என சரியாக கணித்தது.
அதற்கடுத்து 2014 பிரேசில் கால்பந்து போட்டியின் போது ஐக்கிய அரபு நாட்டில் பாலைவனத்தில் இருந்த ஷாகின் என்ற ஓட்டகம் எந்த அணி வெல்லும் என குறி சொல்லியது. அதன் முன்பு கால்பந்து ஒன்றையும், இரு அணிகளின் கொடிகளையும் வைத்து அது தனது பல்லால் எந்த அணி என கணித்து கூறியது. 
அச்சிலீஸ் பூனை
அதே போல் தற்போது ரஷிய உலகக் கோப்பை போட்டிக்கும் காது கேளாத அச்சிலீஸ் பூனை அதிகாரப்பூர்வ குறி கூறும் பூனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அச்சிலீஸ் பூனை முன்பு இரு அணிகளின் கொடிகள் அடங்கிய கிண்ணம் வைக்கப்பட்டு எந்த அணி வெல்லும் என அது குறிப்பிடும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/14/w600X390/russian_cat.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/10/யார்-வெல்வார்-என-குறி-சொல்லும்-ரஷிய-பூனை-2936668.html
2936670 விளையாட்டு FIFA 2018 1994: சாம்பியன் பிரேசில் DIN DIN Thursday, June 14, 2018 05:45 PM +0530 15-ஆவது உலகக் கோப்பை அமெரிக்காவில் 9 நகரங்களில் நடைபெற்றது. அமெரிக்காவில் கால்பந்து லீக் போட்டி முறை இல்லாத நிலையிலும் பிஃபா சார்பில் வாய்ப்பு தரப்பட்டது. பொருளாதார ரீதியில் மிகவும் வெற்றிகரமாக நடந்த போட்டிகள் என்ற பெயரை பெற்றது. ஒவ்வொரு போட்டியிலும் சராசரியாக 69000 பேர் கண்டு களித்தனர். மொத்தம் 24 அணிகள் இடம் பெற்ற நிலையில் தகுதிச் சுற்று, காலிறுதி ஆட்டங்களுக்கு பின் அரையிறுதியில் இத்தாலி 2-1 என பல்கேரியாவையும், பிரேசில் 1-0 என ஸ்வீடனையும் வென்றன. இந்த போட்டியில் தான் உலகக் கோப்பை வரலாற்றிலேயே இறுதி ஆட்டம் பெனால்டி முறையில் தீர்மானிக்கப்பட்டது. பிரேசில் 3-2 என இத்தாலியை வென்று நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இறுதி ஆட்டத்தில் இத்தாலியின் நட்சத்தி வீரர் ராபர்டோ பாஜியோ பெனால்டி வாய்ப்பை வீணடித்ததால் அந்த அணியின் தோல்விக்கு வழிவகுத்தது.
ஆட்டங்கள்: 52, கோல்கள்: 141, பார்வையாளர்கள்; 35,87, 538, அதிக கோலடித்தவர்: ரிஸ்டோ ஸ்டாய்ச்கோவ், சலேங்கோ தலா 6 கோல்கள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/14/w600X390/1994_brazil.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/10/1994-சாம்பியன்-பிரேசில்-2936670.html
2936669 விளையாட்டு FIFA 2018 வீரர்கள், ரசிகர்களுக்கு ரஷிய அதிபர் புதின் வரவேற்பு DIN DIN Thursday, June 14, 2018 05:43 PM +0530 உலகக் கோப்பை கால்பந்து 2018 போட்டிக்கு வரும் பல்வேறு நாடுகளின் வீரர்கள், ரசிகர்களை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வரவேற்றுள்ளார்.
வரும் 14-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை 1 மாதம் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் 11 நகரங்களில் நடைபெறுகின்றன. இதில் 32 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன. கால்பந்து ஆட்டங்களைக் காண மொத்தம் 1 கோடி ரசிகர்கள் ரஷியாவுக்கு பயணிப்பர் எனக்கருதப்படுகிறது.
இந்நிலையில் அதிபர் புதின் சனிக்கிழமை ரஷிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
அனைத்து ரசிகர்கள், இந்த உலகின் சிறந்த கால்பந்து அணிகளை வரவேற்கிறேன். கால்பந்து திருவிழா பாசம், உணர்ச்சி, நிரம்பியதாக இருக்க விழைகிறேன். ரஷியாவுக்கு வரும் அனைவரும் தங்கள் சொந்த வீட்டில் இருப்பதை போல் உணருவர் என்றார் புதின்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/7/w600X390/putin.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/10/வீரர்கள்-ரசிகர்களுக்கு-ரஷிய-அதிபர்-புதின்-வரவேற்பு-2936669.html
2935846 விளையாட்டு FIFA 2018 உலகக் கோப்பை  கால்பந்து: இளம் வீரர்களைக் கொண்ட நைஜீரிய, இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் DIN DIN Thursday, June 14, 2018 05:41 PM +0530 ரஷியாவில் நடக்கவுள்ள உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டியில் மிகவும் இளம் வயது வீரர்களை கொண்டதாக நைஜீரிய, இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் உள்ளன.
வரும் 14 முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் 32 நாடுகளின் அணி வீரர்கள் பங்கேற்று விûளையாடுகின்றனர். 19 முதல் 45 வயது வரையுள்ள வீரர்கள் வெவ்வேறு அணிகளில் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக நைஜீரியா, இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் இளம் வயது வீரர்களை கொண்ட அணிகளாக திகழ்கின்றன.
குறிப்பாக நைஜீரிய அணியில் வீரர்கள் சராசரி வயது 25.9 ஆக உள்ளது. அதே நேரத்தில் இங்கிலாந்து, பிரான்ஸ் அணி வீரர்களின் சராசரி வயது 26 ஆக உள்ளது. 
குறைந்த வயது வீரர்களைக் கொண்டதாக பிரான்ஸ் திகழந்தாலும், 6 வீரர்கள் 40-க்கு மேற்பட்ட சர்வேதச போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்டுள்ளனர். ஆனால் இங்கிலாந்து அணியிலோ ஓரே ஒரு வீரர் மட்டுமே 40 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றவர். 
உலகக் கோப்பையின் குறைந்த, அதிக வயது வீரர்கள்
ஆஸ்திரேலிய அணியின் டேனியல் அர்சானி தான் உலகக் கோப்பையின் மிகவும் குறைந்த வயது வீரர். 1999-இல் பிறந்தவர். அதே நேரத்தில் எகிப்து அணியின் ஈசாம் எல் ஹடாரி 45 வயது நிறைந்தவராக அதிக வயதுடையவராக உள்ளார்.
19 வயதுடைய வீரர்கள் 7 பேர் உள்ள நிலையில், 40 வயதுக்கு மேற்பட்டவர் எல் ஹடாரி மட்டுமே. மெக்ஸிகோவின் 39 வயதான ரபேல் மார்க்ஸ் 5-வது உலகக் கோப்பை போட்டியில் விளையாடுகிறார். ரஷியாவின் செர்ஜி இக்னாஷேவிச் (38), ஆஸி.யின் டிம் காஹில் (38) ஆகியோரும் அதிக வயது நிறைந்தவர்களாக உள்ளனர்.
மேலும் பனாமா, கோஸ்டா ரிகா, மெக்ஸிகோ அணிகள் அதிக அனுபவம் நிறைந்தவர்களை கொண்டுள்ளன. குறிப்பாக பனாமாவில் 6 வீரர்கள் 100 சர்வதேச ஆட்டங்களில் ஆடிய அனுபவத்தை கொண்டவர்கள். 
குறைந்த வயது கேப்டன்
நைஜீரிய அணியில் பிரான்ஸிஸ் ஸோஹோ 19 வயதே நிறைந்த கோல்கீப்பராக உள்ளார். மிகவும் குறைந்த வயதுடைய கேப்டனாக இங்கிலாந்தின் ஹாரி கேன் (24) உள்ளார். 
பெல்ஜியம் அணியில் வீரர்கள் சராசரி வயது 27.6 ஆக உள்ளது. மிகவும் அனுபவம் நிறைந்த வீரர்களாககொண்டதாக அதாவது 12 வீரர்கள் 50 சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்றுள்ளனர். திறமை மற்றும் அனுபவம் நிறைந்ததாக பெல்ஜிய அணி உள்ளது.
19 வயது வீரர்கள்:
டேனியல் அர்ஸானி (ஆஸி.), கிளியன் மாப்பே (பிரான்ஸ்)), அஷ்ரப் ஹக்கிமி (மொரக்கோ), பிரான்சிஸ் úஸாஹோ (நைஜீரியா), டிரென்ட் அலெக்சாண்டர் (இங்கிலாந்து).
அதிக வயது வீரர்கள்: 
எல் ஹடாரி (எகிப்து) 45, ரபேல் மார்க்ஸ் (மெக்ஸிகோ) 39, செர்ஜி இக்னாஷேவிச் (ரஷியா) 38, டிம் காஹில் (ஆஸி.), 38, ஜீஸஸ் கரோனா (மெக்ஸிகோ) 37.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/9/w600X390/player.JPG http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/09/உலகக்-கோப்பை--கால்பந்து-இளம்-வீரர்களைக்-கொண்ட-நைஜீரிய-இங்கிலாந்து-பிரான்ஸ்-அணிகள்-2935846.html
2937106 விளையாட்டு FIFA 2018 உலகக் கோப்பை கால்பந்து 2018: 1998-சாம்பியன் பிரான்ஸ் DIN DIN Thursday, June 14, 2018 04:33 PM +0530 16-ஆவது உலகக் கோப்பை பிரான்ஸ் நாட்டில் 10 நகரங்களில் நடைபெற்றது. 1938-க்கு பின் இரண்டாவது முறையாக போட்டிகள் பிரான்ஸில் நடைபெற்றன. இதில் தான் 24 அணிகள் எண்ணிக்கை 32 அணிகளாக மாற்றப்பட்டது. இந்த போட்டியில் தான் முதன்முறையாக நான்காவது நடுவர் மின்னணு பலகைகளுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டார். மேலும் முதன்முறையாக கோல்டன் கோல் முறை அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் வீரரின் பின்னால் இருந்து பந்தை பறிக்க முயல்வது தடை செய்யப்பட்டது. முதல் அரையிறுதியில் பிரேசில் 4-2 என பெனால்டி வாய்ப்பில் நெதர்லாந்தையும், இரண்டாவது ஆட்டத்தில் பிரான்ஸ் 2-1 என குரோஷியாவையும் வீழ்த்தின.

இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் 3-0 என பிரேசிலை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் ஆனது. அந்த அணியின் ஜிடேன் ஜீனடேனின் அற்புதமான ஆட்டத்தால் பிரான்ஸ் பட்டம் வென்றது.

மொத்த ஆட்டங்கள்: 64, கோல்கள்: 171, பார்வையாளர்கள்; 27,84,687, அதிக கோலடித்தவர்; டேவிட் சக்கர் (குரோஷியா).


நட்பு ஆட்டங்கள்

பிரான்ஸ்-அமெரிக்கா: 1-1

உலகக் கோப்பை கால்பந்து போட்டியை முன்னிட்டு பல்வேறு அணிகளின் நட்பு ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா அணிகள் இடையிலான நட்பு ஆட்டம் லியானில் நடைபெற்றது. பிரான்ஸின் நட்சத்திர வீரர் பால் போக்பா சிறப்பாக விளையாடினாலும் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது. அமெரிக்க வீரர் ஜூலியன் கிரீன் முதலில் கோலடித்தார். இரண்டாவது பாதியில் பிரான்ஸின் கிளியன் மாப்பே அடித்த கோல் மூலம் ஆட்டம் டிராவில் முடிந்தது.
வரும் 16-ஆம் தேதி பிரான்ஸ் தனது முதல் ஆட்டத்தில் ஆஸி.யை எதிர்கொள்கிறது.

ஸ்பெயின்-துனிசியா: 1-0

2010 சாம்பியன் ஸ்பெயின்-துனிசியா அணிகள் இடையிலான நட்பு ஆட்டம் கிராஸ்நோடர் நகரில் நடைபெற்றது. இதில் ஸ்பெயின் அணியின் ஆட்டம்  குறிப்பிடும்படியாக இல்லாத நிலையில் ஆட்டம் முடிய கடைசி 7 நிமிடங்கள் இருக்கையில் அந்த அணி வீரர் லாகோ அஸ்பாஸ் அடித்த ஓரே கோலால் ஸ்பெயின் வென்றது. வரும் 15-ஆம் தேதி ஐரோப்பிய சாம்பியன் போர்ச்சுகலை தனது முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் எதிர்கொள்கிறது. துனிசியா 18-ஆம் தேதி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

டென்மார்க்- மெக்ஸிகோ: 2-0

புடாபெஸ்டில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஹங்கேரி 1-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. டலின்னில் நடந்த ஆட்டத்தில் மொராக்கோ 3-1 என்ற கோல் கணக்கில் எஸ்டோனியாவையும், கிராஸ் நகரில் நடந்த ஆட்டத்தில் செர்பியா 5-1 என பொலிவியாவையும், பிரான்ட்பையில் நடந்த ஆட்டத்தில் டென்மார்க் 2-0 என மெக்ஸிகோவையும் வீழ்த்தின.கோதன்பர்க்கில் நடந்த ஸ்வீடன்-பெரு அணிகள் இடையிலான ஆட்டம் 0-0 என டிராவில் முடிந்தது.


கொலம்பியா 

கடந்த 2014 உலகக் கோப்பையில் காலிறுதிக்கு தகுதி பெற்ற கொலம்பியா. தொடர்ந்து 2-வது முறையாக தகுதி பெற்றுள்ளது. ஆனால் தகுதி பெறுவதற்கு 
கடுமையாக சிரமப்பப்பட்ட கொலம்பியா கடைசி ஆட்டத்தில் தான் வென்று தகுதி பெற முடிந்தது.

நட்சத்திர வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ்: 

கடந்த உலகக் கோப்பையில் கண்டெடுக்கப்பட்ட ரோட்ரிக்ஸ், உருகுவேக்கு எதிரான சைக்கிள் கிக் மூலம் அடித்த கோல் இதுவரை பேசப்பட்டு வருகிறது. 
தற்போது பேயர்ன் முனிக் அணியில் விளையாடி வருகிறார். 

பயிற்சியாளர் ஜோஸ் பெக்கர்மேன்:

ஆர்ஜென்டீனா அணிக்கு பயிற்சியாளராக இருந்து சிறப்பாக செயல்பட்ட பெக்கர்மேன் கொலம்பியா மீண்டும் உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

போலந்து

கடந்த 2006-ஆம் உலகக் கோப்பைக்கு பின் முதன்முறையாக போலந்து நாட்டு ரசிகர்கள் அதிகளவில் ரஷியாவுக்கு பயணிக்கின்றனர். அந்த அணியின் தாக்குதல் ஆட்டக்காரர்களான ராபர்ட் லெவன்டோஸ்கி, ஜேகுப் பிளாஸிகோவ்ஸ்கி ஆகியோர் இந்த உலகக் கோப்பையுடன் விடை பெறும் வாய்ப்பும் உள்ளது.

கடந்த 2016 யூரோ சாம்பியன் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய போலந்து அணி பெனால்டி வாய்ப்பில் போர்ச்சுகலிலும் தோல்வியுற்றது. 

உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டம் ஒன்றில் 4-0 என்ற கோல்கணக்கில் டென்மார்க்கிடம் படுதோல்வி அடைந்தது அந்த அணி நிர்வாகத்தை கவலைக்குள்ளாகி உள்ளது.

நட்சத்திர வீரர் ராபர்ட் லெவன்டோஸ்கி: 

போலந்தின் சிறந்த தாக்குதல் ஆட்டக்காரரான ராபர்ட் அதிக கோலடித்த வீரராகவும் உள்ளார். 

தகுதி ஆட்டங்களில் அவர் மொத்தம் 16 கோல்களை அடித்து சாதனை புரிந்தார்.

பயிற்சியாளர் ஆடம் நவால்கா:

போலந்து அணியை தாக்குதல் ஆட்ட முûறையில் இருந்து போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் அணியாக நவால்கா உருவாக்கி உள்ளார்.

செனகல்

கடந்த 2002-இல் நடப்புச் சாம்பியனாக திகழ்ந்த பிரான்ûஸ வீழ்த்தி காலிறுதிக்கு செனகல் அணி தகுதி பெற்றது. அதன் பின் வந்த உலகக் கோப்பை போட்டியில் செனகல் சோபிக்கவில்லை. தற்போது முதன்முறையாக அந்த அணி தகுதி பெற்றுள்ளது. 

தகுதி ஆட்டம் மூலம் தேர்வாகாமல் மேட்ச் பிக்சிங் நடைபெற்றதால், தென் ஆப்பிரிக்காவிட் 2-1 என்ற கோல் கணக்கில் செனகல் தோல்வியைத் தழுவிய போட்டியை மீண்டும் நடத்த பிஃபா உத்தரவிட்டது. அதன்படி பின் நடந்த ஆட்டத்தில் செனகல் வென்று உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது.

நட்சத்திர வீரர் சாடியோ மேன்: லிவர்பூல் அணியில் விளையாடி வரும் சாடியோ மேன் சிறந்த துடிப்பான வீரராக செயல்படுகிறார். செனகல் அணியின் பல்வேறு வெற்றிகளுக்கு காரணமாக உள்ளார்.

பயிற்சியாளர் அலியு சிசெ: கடந்த 2002 உலகக் கோப்பையில் செனகல் அணியின் கேப்டனாக இருந்த அலியு சிசி தற்போது பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜப்பான்

இதர கால்பந்து ஜாம்பவான் அணிகளுக்கு இருக்கும் நட்சத்திர வீரர்கள் பலம், ஜப்பானுக்கு இல்லையென்றாலும், ஐரோப்பாவில் விளையாடிய அனுபவம் பெற்ற பல்வேறு வீரர்கள் அந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். ஷின்ஷி ககாவா, ஷின்ஜி ஓகாசகி ஆகியோர் அணியில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

நட்சத்திர வீரர் ஷின்ஷி ககாவா: 

89 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ள ககாவா நடுக்களத்தில் சிறப்பாக செயல்படக்கூடியவர். தற்காப்பில் இவருடன் யுடோ நாகமுட்டோ, கீய்சுக் ஹோண்டா ஆகியோர் சிறப்பாக இணைந்து ஆடுகின்றனர்.

பயிற்சியாளர் வாஹித் ஹலில்ஹோடிக்: 

போஸ்னியாவைச் சேர்ந்த வாஹித் கடந்த 2014 போட்டியில் அல்ஜீரிய அணியை முதன்முறையாக காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெறச் செய்தார். அதே போல் ஜப்பான் அணிக்கும் தீவிர பயிற்சி அளித்துள்ளார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/11/w600X390/spt2.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/11/உலகக்-கோப்பை-கால்பந்து-2018-1998-சாம்பியன்-பிரான்ஸ்-2937106.html
2938322 விளையாட்டு FIFA 2018 உலகக் கோப்பை கால்பந்து 2018 நாளை தொடக்கம்: ஜொலிக்கும் மாஸ்கோ  DIN DIN Thursday, June 14, 2018 04:33 PM +0530 அணிகள், ரசிகர்கள் வருகையால் கோலாகலம்
மாஸ்கோ, ஜூன் 12: உலகக் கோப்பை கால்பந்து 2018 தொடக்க விழாவில் பிரபல கலைஞர்கள் கலந்து கொண்டு இசைநிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்ளும் முக்கிய விளையாட்டு திருவிழாவான உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரும் வியாழக்கிழமை (ஜூன் 14-ஆம் தேதி தொடங்கி ஜூலை 15-ஆம் தேதி) வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் 64 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
மொத்தம் ரூ.87 ஆயிரம் கோடி செலவில் உலகக் கோப்பை போட்டிக்கான ஏற்பாடுகள், விளையாட்டு மைதான வசதிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ரஷிய அரசு செய்துள்ளது. உலகம் முழுவதும் இருந்து 1 கோடி ரசிகர்கள இதற்காக பயணம் மேற்கொள்வர் என கணிக்கப்பட்டுள்ளது.

துவக்க விழா மாஸ்கோவின் லூசினிக்கி விளையாட்டரங்கில் வியாழக்கிழமை இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் 3 பிரபல கலைஞர்களான ராபி வில்லியம்ஸ், அய்டா கரிஃபுல்லினா, ரொனால்டோ ஆகியோர் பங்கேற்று இசைநிகழ்ச்சி நடத்துகின்றனர். மேலும் உள்ளூரைச் சேர்ந்த 500 கலைஞர்களும் தங்கள் திறமையை சுமார் 30 நிமிடங்கள் வெளிப்படுத்துகின்றனர். இதில் நடனக் கலைஞர்கள், ஜிம்னாஸ்டிக்ஸ், இசைக்கலைஞர்கள் இடம் பெற்றிருப்பர்.

ரஷியா-சவுதி அரேபியா மோதல்:
பின்னர் போட்டியை நடத்தும் ரஷியா-சவுதி அரேபிய அணிகள் தொடக்க ஆட்டத்தில் மோதுகின்றன. நடப்புச் சாம்பியன் ஜெர்மனி 17-ஆம் தேதி மெக்ஸிகோவுடன் மோதும் ஆட்டம் மாஸ்கோவிலும், 5 முறை சாம்பியன் பிரேசில்-சுவிட்சர்லாந்துடன் மோதும் ஆட்டம் 18-ஆம் தேதி ரோஸ்டோவ் ஆன் டான் விளையாட்டரங்கிலும் நடக்கிறது, தொடக்க விழா சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. 

உலகப் புகழ் பெற்ற இசைக் கலைஞர் ராபி வில்லியம்ஸ், ரஷிய கலைஞர் அய்டா கரிஃபுல்லினா, பிரேசில் வீரர் ரொனால்டோ ஆகியோர் துவக்க விழாவில் பங்கேற்று நிகழ்ச்சியை வழங்குகின்றனர்.

இதுகுறித்து ராபி வில்லியம்ஸ் கூறுகையில்: உலகக் கோப்பை திருவிழாவுக்காக 80 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் இசைநிகழ்ச்சி நடத்துவது பெருமை தருகிறது. நான் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி இருந்தாலும், பிஃபா உலகக் கோப்பை துவக்க விழாவில் பங்கேற்று நிகழ்ச்சி நடத்துவது என்பது சிறுவயது கனவு என்றார். 

அதே போல் அய்டா கலிஃபுல்லினாவும் தொடக்க விழாவில் நிகழ்ச்சி நடத்த கிடைத்த வாய்ப்பு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது என்றார். 

கடந்த 2014 பிரேசிலில் நடந்த உலக கோப்பை தொடக்க விழாவில் பங்கேற்றேன். தற்போது மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது பெருமைக்குரிய விஷயம் என்றார் ரொனால்டோ.

எனினும் உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ பாடல் லிவ் இட் அப், பாடப்படுமா என்பது குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதில் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், கொலம்பியா பாப் கலைஞர் நிக்கி ஜாம், கொசோவா பாடகர் இரா ஸ்டெரெஃபி ஆகியோர் பங்கேற்பர் என முதலில் கூறப்பட்டிருந்தது.

எனினும் தொடக்க விழாவில் பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், அவரது பங்கேற்பு உறுதி செய்யப்படவில்லை.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்:

இதற்கிடையே உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு தீவிரபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போட்டி நடைபெறும் மைதானங்கள் அருகே விமான எதிர்ப்பு பீரங்கிகள், ஜாமர் கருவிகள், வைக்கப்பட்டுள்ளன. மேலும் ரஷியாவுக்கு போட்டியைக் காண வரும் ரசிகர்கள் உள்ளூர் போலீஸாரிடம் தங்கள் பெயர்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரஷியா-சவுதி அரேபியா தொடக்க ஆட்டத்துக்காக 30 ஆயிரம் போலீஸார் மாஸ்கோவில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபடுவர். மேலும் சந்தேகப்படும்படி வரும் விமானத்தைக் கண்காணிக்க விமானப் படை விமானங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. உலகக் கோப்பை போட்டியை சிறப்பாக நடத்துவதின் மூலம் ரஷியா வல்லரசு நாடு என்பதை மீண்டும் உறுதி செய்ய அதிபர் புதின் திட்டமிட்டுள்ளார் எனக் கருதப்படுகிறது.

2026 உலகக் கோப்பை வாய்ப்பு? இன்று வாக்கெடுப்பு
வரும் 2026 உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பை யாருக்கு வழங்குவது என்பது குறித்த பிஃபா வாக்கெடுப்பு புதன்கிழமை மாஸ்கோவில் நடக்கிறது.

ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதற்கான வாய்ப்பு பிஃபா பொதுக்குழுக் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தி வழங்கப்படும். போட்டியை நடத்த விண்ணப்பித்துள்ள நாடுகள், அவற்றில் உள்ள கட்டமைப்பு வசதிகள், செலவிடும் தன்மை போன்றவற்றை பொருத்து வாய்ப்பு கிடைக்கும். வரும் 2022-ஆம் ஆண்டு போட்டி கத்தாரில் நடக்கிறது. 

இந்நிலையில் 2026-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியை நடத்த மொராக்கோவும், அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா நாடுகள் இணைந்தும் விண்ணப்பித்துள்ளன. வாய்ப்பை யாருக்கு வழங்குவது என்பது குறித்த வாக்கெடுப்பு புதன்கிழமை மாஸ்கோவில் நடக்கவுள்ள பிஃபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் நடக்கிறது. உறுப்பினர்களாக உள்ள 207 நாடுகள் இதில் வாக்களிக்க உள்ளன. ஏற்கெனவே பிஃபா ஆய்வுக் குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கையில் பல்வேறு அம்சங்கள் வட அமெரிக்க நாடுகளின் விண்ணப்பத்துக்கு சாதகமாக இருந்தன. இந்த போட்டியில் தான் தற்போதுள்ள 32 நாடுகளுக்கு பதிலாக 48 நாடுகளாக அதிகரிக்கப்படுகிறது.
மேலும் பிஃபா-கோக கோலா சர்வதேச தரவரிசைப் பட்டியல் மதிப்பிடும் முறையில் மாற்றங்கள் கொண்டு வருதல், போன்றவை குறித்தும் விவாதித்து அறிவிக்கப்படுகிறது.

முதன்முறையாக தகுதி பெற்ற அணிகள்
உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு முதன்முறையாக 2 அணிகள் தகுதி பெற்றுள்ளன. அதே நேரத்தில் 3 அணிகள் நீண்ட காலத்துக்கு பின் மீண்டும் தகுதி பெற்றுள்ளன.

வரும் வியாழக்கிழமை ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குகின்றன. 1 மாத காலம் நடைபெறும் இதில் 32 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன.பெரும்பாலான ஜாம்பவான் அணிகள் வழக்கம் போல் தகுதி அடைந்த நிலையில் புதிய அணிகளும் இந்த முறை தகுதி பெற்றன.

எகிப்து அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

ஐஸ்லாந்து
கடந்த சில ஆண்டுகளாக ஐஸ்லாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நட்சத்திர வீரர் ஜில்பி சிகுர்ட்சன் அணியின் தூணாக இருந்து செயல்படுகிறார். கடந்த 2016 யூரோ போட்டியில் ஐஸ்லாந்து அணி காலிறுதி வரை முன்னேறியது. இந்நிலையில் தற்போது முதன்முறையாக பிஃபா உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. தரவரிசைப் பட்டியலில் 22-வது இடத்தில் உள்ள ஐஸ்லாந்து மக்கள் தொகை அடிப்படையில் தகுதி பெற்ற நாடுகளில் மிகவும் சிறியதாக விளங்குகிறது. 

பனாமா
உலகின் 55-வது இடத்தில் உள்ள பனாமா அணியும் முதன்முறையாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. இதற்காக 12 தகுதி ஆட்டங்களில் விளையாடி இந்த சிறப்பை பனாமா பெற்றுள்ளது. 
மெக்ஸிகோ, ஹோண்டுராஸ், கோஸ்டா ரிகா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்ட பிரிவில் இருந்து 3-வதாக பனாமா தேர்வாகியுள்ளது.

பல ஆண்டுகள் கழித்து தகுதி பெற்ற அணிகள்
 

எகிப்து
கடந்த 1934, 1990-ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பைக்கு எகிப்து தகுதி பெற்றது. இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக எகிப்து தேர்வாகி உள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் தகுதிச் சுற்றோடு வெளியேறியது. ஆனால் தற்போது ஐரோப்பிய லீக் போட்டிகளில் கலக்கி வரும் முகமது சலா என்ற நட்சத்திர வீரர் துணையோடு எகிப்து களம் காண்கிறது. 

மொராக்கோ
தீவிர கால்பந்து ரசிகர்களைக் கொண் மொராக்கோ தற்போது 20 ஆண்டுகள் கழித்து தகுதி பெற்றுள்ளது. கடந்த 1998-இல் மொராக்கோ இறுதியாக தகுதி பெற்ற நிலையில் அதன் கேப்டன் மெதி பெனட்டியா உலக கோப்பைக்கு தகுதி பெற உதவினார்.

பெரு
36 ஆண்டுகள் கழித்து பெரு தற்போது தான் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. தென் அமெரிக்காவில் உலக் கோப்பைக்கு தகுதி பெற கடும் போட்டி நிலவிய நிலையில் தகுதி சுற்றில் பராகுவே அணி, நியூஸி அணியையும் வீழ்த்தி ரஷியாவுக்கு தகுதி பெற்றது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/13/w600X390/stadium-moscow.jpg மின்னொளியில் மாஸ்கோ லூசினிக்கி விளையாட்டரங்கம். http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/13/உலகக்-கோப்பை-கால்பந்து-2018-நாளை-தொடக்கம்-ஜொலிக்கும்-மாஸ்கோ-2938322.html
2935850 விளையாட்டு FIFA 2018 உலகக் கோப்பை கால்பந்து 2018: குரூப் எஃப் DIN DIN Thursday, June 14, 2018 04:32 PM +0530

ஜெர்மனி
மெக்ஸிகோ
ஸ்வீடன்
தென்கொரியா

இந்த பிரிவில் இருந்து ஜெர்மனி, மெக்ஸிகோ அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது.
முக்கிய வீரர்கள், நிலவரம்

ஜெர்மனி
கால்பந்து அணிகளில் நாகரிகமான ஆட்டத்துக்கு பெயர் பெற்றது ஜெர்மன் நாட்டு அணி. நான்கு முறை உலக சாம்பியன், மூன்று முறை ஐரோப்பிய சாம்பியன், ஒரு முறை கன்பெடரேஷன் கோப்பை சாம்பியன் என உலக அரங்கில் ஜாம்பவான் அணியாக ஜெர்மனி உள்ளது.
தற்போது 2018 உலகக் கோப்பையில் நடப்புச் சாம்பியன் அந்தஸ்தில் நேரடி தகுதி பெற்றுள்ளது.
கடந்த 2017 ஜூலையில் ரஷியாவில் நடந்த கன்பெடரேஷன் கோப்பையில் சாம்பியன் பட்டம், 10 தகுதி ஆட்டங்களிலும் வெற்றி, ஐரோப்பிய அளவில் 43 கோல்கள் அடித்து சாதனை என்ற தெம்போடு உலகக் கோப்பை போட்டியை எதிர்கொள்கிறது.
நட்சத்திர வீரர் டோனி குரூஸ்: 
அணியின் புதிய கேப்டன் டோனி குரூஸ் நடுக்களத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். அவரது துல்லிய ஒருங்கிணைந்த ஆட்டம் மற்ற வீரர்களுக்கும் ஊக்கத்தை ஏற்படுத்துகிறது. 
பயிற்சியாளர் ஜோசிம் லோ: 
கடந்த 2006 உலகக் கோப்பையில் ஏற்பட்ட மோசமான தோல்வி அனுபவத்துக்கு பின் ஜோசிம் லோ பயிற்சியாளராக பொறுப்பேற்றார். அவரது தொடர் தீவிர பயிற்சியால் 2014-இல் ஜெர்மனி தனது 4-வது பட்டத்தை வென்றது. வரும் உலகக் கோப்பையிலும் பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணியாக கருதப்படுகிறது.

மெக்ஸிகோ
ஒவ்வொரு முறை உலகக் கோப்பை போட்டியிலும் மெக்ஸிகோ அணி தவறாமல் தகுதி பெற்று வருகிறது. கடந்த 6 உலகக் கோப்பையிலும் இடம் பெற்ற அந்த அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றிலேயே வெளியேறுவதை வழக்கமாக கொண்டுள்ளது. 1970, 1986 என இரு முறை மட்டுமே காலிறுதி வரை மெக்ஸிகோ முன்னேறியது. அதே போல் நடப்பாண்டு போட்டியிலும் காலிறுதிக்கு தகுதி பெற்றாலே பெரிய வெற்றியாகும்.
தகுதிப் போட்டியில் கோஸ்டா ரிகா, பனாமா நாடுகளைக் காட்டிலும் முதலில் தேர்வானது மெக்ஸிகோ. அதன் பரம வைரியான அமெரிக்கா தகுதி பெறவில்லை. 
நட்சத்திர வீரர் ஜேவியர் ஹெர்னான்டெஸ்: 
தாக்குதல் ஆட்டத்திலும், முன்களத்திலும் சிறந்து விளங்கும் இவர் ஏனைய வீரர்கள் ஜீசஸ் கரோனா, லாசான்úஸா போன்றவர்களோடு எதிரணிக்கு அச்சுறுத்துலை ஏற்படுத்துவார்.
பயிற்சியாளர் ஜுவான் கார்லோஸ் சோரியோ: 
திட்டமிடல், விரைவான தாக்குதல் ஆட்ட முறையை பின்பற்றும் ஜுவான் கார்லோஸ் பயிற்சியில் மெக்ஸிகோ அணி மேம்பட்டுள்ளது. ஆனால் சுயக்கட்டுப்பாடு இல்லாமல் கார்லோஸ் தவித்து வருகிறார்.

ஸ்வீடன்
தற்போதைய உலகக் கோப்பைக்கு இத்தாலியை தகுதி பெறாமல் செய்த பெருமை ஸ்வீடனையே சாரும். தகுதிப் போட்டியில் ஸ்வீடன் வென்றதின் மூலம் இத்தாலி முதன்முறையாக உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. அந்த அணியின் முக்கிய வீரராக இருந்த லட்டன் இப்ராஹிமோவிக் ஓய்வு பெற்றாலும், அவரது செல்வாக்கு தொடர்ந்து அணியில் படர்ந்துள்ளது. அவர் இல்லாத நிலையில் ஸ்வீடன் அணி தற்போது சிறந்த கட்டமைப்புடன் ஒருங்கிணைப்பாக ஆடி வருகிறது.
நட்சத்திர வீரர் எமில் போர்ஸ்பெர்க்: 
இப்ராஹிமோவிக் இல்லாத குறையை போர்ஸ்பெர்க் தீர்த்து வைத்துள்ளார். ஸ்வீடன் தாக்குதல் ஆட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
பயிற்சியாளர் ஜேன் ஆண்டர்சன்: 
கடந்த 2016 யூரோ போட்டிக்கு பின் அணியின் பயிற்சியாளரான ஆண்டர்சன் தனது தீவிர பயிற்சியால் பெரிய அணிகளுக்கு சவால் தரக்கூடிய வகையில் அணியை உருவாக்கி உள்ளார்.

தென்கொரியா 
ஆசியக் கண்டத்தின் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக விளங்கும் தென்கொரியா 1986-ஆம் ஆண்டு முதல் அனைத்து உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்று வருகிறது. 2002 உலகக் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறிய தென்கொரியா, கடந்த 2014 இல் முதல் சுற்றோடு வெளியேறியது.
ஆசிய தகுதிச் சுற்று ஆட்டங்களில் தட்டுத் தடுமாறி வென்று தென்கொரியா தற்போதைய 2018 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. 
இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டியில் விளையாடி வரும் சன் ஹியுங் மின், கீ சங் யிங், லீ சங் யோங் ஆகியோரின் அனுபவம் இந்த முறை உதவும் என எதிர்பார்க்கலாம்.
நட்சத்திர வீரர் சன் ஹியுங் மின்: 
பிரீமியர் லீக் வரலாற்றிலேயே அதிக கோலடித்த ஆசிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தென்கொரிய அணியின் தூணாக விளங்கி வருகிறார்.
பயிற்சியாளர் ஷின் டே யோங்: 
தகுதிச் சுற்றில் கத்தார் மற்றும் சீனாவுடன் மோதிய ஆட்டங்களில் தென்கொரியா தோல்வியை சந்தித்த போது, 23 வயதுக்குட்பட்டோர் அணியின் பயிற்சியாளராக இருந்த ஷின் டே யோங் நியமிக்கப்பட்டார். அதன் பின் அணி ஒரளவுக்கு நிலைத்து ஆடி வருகிறது. இவர் ஏற்கெனவே ஆஸி. அணிக்கும் பயிற்சி அளித்துள்ளார்.

1990: சாம்பியன் மேற்கு ஜெர்மனி


14-ஆவது உலகக் கோப்பை போட்டிகள் இத்தாலியில் நடைபெற்றன. மொத்தம் 12 நகரங்களில் நடந்த போட்டியில் 24 அணிகள் பங்கேற்றன. இது தான் மேற்கு ஜெர்மனி சார்பில் ஒரு அணியாக பங்கேற்ற கடைசி போட்டியாகும். இப்போட்டியில் தான் அதிகபட்சமாக 16 சிகப்பு அட்டைகள் காண்பிக்கப்பட்டன. வெற்றி பெறும் அணிக்கு 3 புள்ளிகள் வழங்கப்பட்டன. தொலைக்காட்சி வரலாற்றிலேயே அதிக மக்களால் பார்க்கப்பட்ட போட்டி என்ற பெயரைப் பெற்றது. ஆப்பிரிக்க நாடான கேமரூன் காலிறுதிக்கு முன்னேறி அதிர்ச்சியை உண்டாக்கியது. 
அரையிறுதியில் முன்னாள் சாம்பியன்கள் ஆர்ஜென்டீனா, இங்கிலாந்து, இத்தாலி, மேற்கு ஜெர்மனி தகுதி பெற்றன. முதல் ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா 4-3 என இத்தாலியையும், இரண்டாவது ஆட்டத்தில் மேற்கு ஜெர்மனி 4-3 என இங்கிலாந்தையும் வீழ்த்தின.
இறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனாவை 1-0 என வீழ்த்தி மேற்கு ஜெர்மனி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

தமிழில் மொழியாக்கம் செய்ய சோனி திட்டம்
உலகக் கோப்பை கால்பந்து 2018 போட்டிகளை தமிழ் மொழியாக்கத்துடன் காண சோனி பிக்சர்ஸ் ஏற்பாடு செய்துள்ளது.
இப்போட்டிகள் சோனி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு கால்பந்து ரசிகர்கள் பயன்பெறும் வகையில் தமிழ் மொழியாக்கத்துடன் போட்டிகளை சோனி ஒளிபரப்பும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கேப்டன் சுனில் சேத்ரி, பிரபல கால்பந்து வீரர்கள் லூயிஸ் கார்சியா, லூயிஸ் சாஹா, டேவிட் ஜேம்ஸ் ஆகியோரும் வர்ணனையாளர்கள் செயல்படுவர். 

உலக கோப்பை பந்து
உலகக் கோப்பை கால்பந்து 2018 போட்டிகளில் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்பட உள்ள டெல்ஸ்டார் 18 ரக பந்துகள். இப்பந்துகளில் துல்லியமான ஒளிபரப்புக்காக சிப்களும் பொருத்தப்பட்டுளளன.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/9/w600X390/tony-kroos.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/09/உலகக்-கோப்பை-கால்பந்து-2018-குரூப்-எஃப்-2935850.html
2936694 விளையாட்டு FIFA 2018 உலகக் கோப்பை கால்பந்து 2018: அணிகள், நாள், நேரம் (இந்திய நேரப்படி) DIN DIN Thursday, June 14, 2018 04:32 PM +0530 வரும் 14-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை ஒரு மாத காலம் ரஷியாவில் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. 

துவக்க ஆட்டம்

14/6/2018
ரஷியா-சவுதி அரேபியா
நேரம்: இரவு 8.30.

15/6/18 (வெள்ளிக்கிழமை)
எகிப்து-உருகுவே, மாலை 5.30.
மொராக்கோ-ஈரான், இரவு 8.30.
போர்ச்சுகல்-ஸ்பெயின், இரவு 11.30.

16/6/18 (சனிக்கிழமை)
பிரான்ஸ்-ஆஸ்திரேலியா, மாலை 3.30.
ஆர்ஜென்டீனா-ஐஸ்லாந்து, மாலை 6.30.
பெரு-டென்மார்க், இரவு 9.30.

17/6/18 (ஞாயிற்றுக்கிழமை)
குரோஷியா-நைஜீரியா, அதிகாலை 12.30.
கோஸ்டா ரிகா-செர்பியா, மாலை 5.30.
ஜெர்மனி-மெக்ஸிகோ, இரவு 8.30.
பிரேசில்-சுவிட்சர்லாந்து, இரவு 11.30.

18/6/18 (திங்கள்கிழமை)
ஸ்வீடன்-தென்கொரியா, மாலை 5.30.
பெல்ஜியம்-பனாமா, இரவு 8.30.
துனிசியா-இங்கிலாந்து, இரவு 11.30.

19/6/18 (செவ்வாய்க்கிழமை)
கொலம்பியா-ஜப்பான், மாலை 5.30.
போலந்து-செனகல், இரவு 8.30.
ரஷியா-எகிப்து, இரவு 11.30.

20/6/18 (புதன்கிழமை)
போர்ச்சுகல்-மொராக்கோ, மாலை 5.30.
உருகுவே-சவுதி அரேபியா, இரவு 8.30.
ஈரான்-ஸ்பெயின், இரவு 11.30.

21/6/18 (வியாழக்கிழமை)
டென்மார்க்-ஆஸ்திரேலியா, மாலை 5.30.
பிரான்ஸ்-பெரு, இரவு 8.30.
ஆர்ஜென்டீனா-குரோஷியா, இரவு 11.30.

22/6/18 (வெள்ளிக்கிழமை)
பிரேசில்-கோஸ்டா ரிகா, மாலை 5.30.
நைஜீரியா-ஐஸ்லாந்து, இரவு 8.30.
செர்பியா-சுவிட்சர்லாந்து, இரவு 11.30.

23/6/18 (சனிக்கிழமை)
பெல்ஜியம்-துனிசியா, மாலை 5.30.
தென்கொரியா-மெக்ஸிகோ, இரவு 8.30.
ஜெர்மனி-ஸ்வீடன், இரவு 11.30.

24/6/18 (ஞாயிற்றுக்கிழமை)
இங்கிலாந்து-பனாமா, மாலை 5.30.
ஜப்பான்-செனகல், இரவு 8.30.
போலந்து-கொலம்பியா, இரவு 11.30.

25/6/18 (திங்கள்கிழமை)
சவுதி அரேபியா-எகிப்து, இரவு 7.30.
உருகுவே-ரஷியா, இரவு 7.30.
ஈரான்-போர்ச்சுகல், இரவு 11.30.
ஸ்பெயின்-மொராக்கோ, இரவு 11.30.

26/6/18 (செவ்வாய்க்கிழமை)
ஆஸ்திரேலியா-பெரு, இரவு 7.30.
டென்மார்க்-பிரான்ஸ், இரவு 7.30.
நைஜீரியா-ஆர்ஜென்டீனா, இரவு 11.30.
ஐஸ்லாந்து-குரோஷியா, இரவு 11.30.

27/6/18 (புதன்கிழமை)
மெக்ஸிகோ-ஸ்வீடன், இரவு 7.30.
தென்கொரியா-ஜெர்மனி இரவு 7.30.
சுவிட்சர்லாந்து-கோஸ்டா ரிகா, இரவு 11.30.
செர்பியா-பிரேசில், இரவு 11.30.

28/6/18 (வியாழக்கிழமை)
செனகல்-கொலம்பியா, இரவு 7.30.
ஜப்பான்-போலந்து, இரவு 7.30.
இங்கிலாந்து-பெல்ஜியம், இரவு 11.30.
பனாமா-துனிசியா, இரவு 11.30.

காலிறுதிக்கு முந்தைய ஆட்டம்
30/6/18 முதல் 3/7/18 வரை.


காலிறுதி ஆட்டங்கள்

6/7/18 (இரவு 7.30), 
7/7/18 (இரவு 11.30).

இறுதி ஆட்டம் : 15/7/18, இரவு 8.30.

பனாமா

மத்திய அமெரிக்க நாடான பனாமா முதன்முறையாக உலகக் கோப்பையில் இடம் பெற்றுள்ளது. முதன்முதலாக தகுதி பெற்ற நாள் தேசிய விடுமுறையாக  அறிவிக்கப்பட்டது. இறுதி தகுதி ஆட்டத்தில் கோஸ்டா ரிகாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி பனாமா தகுதி பெற்றது. 40 லட்சம் மக்கள் தொகையே கொண்ட பனாமா, 32 கோடி மக்கள் தொகை கொண்டஅமெரிக்காவை காட்டிலும் சிறப்பாக ஆடி தேர்வாகியுள்ளது.நட்சத்திர வீரர் லூயிஸ் தேஜடா அணியின் தாக்குதல் ஆட்டக்காரரான லூயிஸ் இதுவரை 43 கோல்களை அடித்துள்ளார். அணிக்கு தூணாக லூயிஸ் விளங்குகிறார்.பயிற்சியாளர் ஹெர்னன் டாரியோ கோம்ஸ் கொலம்பியாவைச் சேர்ந்த ஹெர்னன் பனாமா அணிக்கு சிறப்பாக பயிற்சி அளித்துள்ளார். இவரது பயிற்சியில் கடந்த 1998-இல் கொலம்பியா ஏற்கெனவே சிறப்பாக ஆடியது. 2002-இல் ஈக்குவார் தனது முத்திரையை பதித்தது. தற்போது பனாமா முறையாகும்.


பெல்ஜியம்

சிறந்த ஆட்டத்திறனைக் கொண்டுள்ள பெல்ஜியம் அணி தனது இருப்பை வெளிப்படுத்தும் சரியான தருணமாக உலகக் கோப்பை 2018 அமைந்துள்ளது. இதுவரை அரையிறுதிச் சுற்றுக்கு கூட தகுதி பெறாத நிலையில் பெல்ஜியம் உள்ளது. முன்களத்துக்கு ரோமேலு லுகாகு, நடுக்களத்தில் ஈடன் ஹசார்ட், கோல்கீப்பர் தைபாட் கோர்டாஸ் ஆகியோர் அணியின் வெற்றிக்கு ஊன்றுகோலாக விளங்குகின்றனர். எனினும் தற்காப்பில் சிறிது கவனம் செலுத்த வேண்டியுள்ளது. வின்சென்ட் கொம்பனி, டோபி ஆல்டர், ஜன் வெர்டோன்ஜன் ஆகியோர் பக்கபலமாக உள்ளனர்.

நட்சத்திர வீரர் கெவின் டே புருயன்: கடந்த 2014 உலகக் கோப்பையிலேயே ஈடன் ஹசார்டை விட சிறப்பாக ஆடியவர் என்ற பெயரை கெவின் புருயன் பெற்றார். அவர் ஆட்டத்திந் போக்கையே மாற்றக்கூடிய திறனுடன் உள்ளார்.

பயிற்சியாளர் ராபர்டோ மார்டினஸ்: கடந்த 2016 யூரோ போட்டியில் அதிர்ச்சிகரமான தோல்விக்கு பின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ராபர்டோ அணியின் சூழலுக்கு ஏற்ப தன்னை துரிதமாக மாற்றிக் கொண்டு சிறந்த கட்டுக்கோப்பான அணியை உருவாக்கி உள்ளார்.

 

முக்கிய வீரர்கள், நிலவரம்


இங்கிலாந்து 

ஓரே ஒருமுறை சாம்பியன் பட்டம் வென்ற (1966) இங்கிலாந்தில் கால்பந்து அதிக பிரபலமான விளையாட்டாகும். உலகின் அதிக பணம் புரளும் லீக் போட்டிகளை கொண்ட இங்கிலாந்து கடந்த 2014 உலகக் கோப்பையில் முதல் சுற்றிலும், 2016 யூரோவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றிலும் தோல்வியடைந்து வெளியேறியது. தற்போது உலகக் கோப்பை போட்டிக்கு இளம் வீரர்கள் அதிகம் பேரை கொண்ட அணியை தேர்வு செய்துள்ளனர். 

நட்சத்திர வீரர் ஹாரி கேன்:

நிகழாண்டில் உலகின் சிறந்த தாக்குதல் ஆட்டக்காரராக உருவாகி உள்ள கேன் பிரீமியர் லீக், சாம்பியன்ஸ் லீக்போட்டிகளில் தனது முத்திரையை பதித்தவர். 
இங்கிலாந்துக்காக இதுவரை 23 கோல்களை அடித்துள்ளார். பயிற்சியாளர் காரேத் செளத்கேட்: கடந்த 2016-இல் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற செüத்கேட், தைரியமான முடிவுகளை எடுப்பதில் வல்லவர்.


துனிசியா 

தகுதி ஆட்டங்களில் தோல்வியையே சந்திக்காத துனிசியா தற்போது 12 ஆண்டுகளுக்கு பின் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. காங்கோ, லிபியா, கினியா போன்ற நாடுகளை பின்னுக்கு தள்ளி 5-வது முறையாக துனிசியா தேர்வாகியுள்ளது. ஆனால் முதல் சுற்று ஆட்டங்களோடு துனிசியா வெளியேறி விடும். தற்போது வாபி கஸிரி, அயிமன் அப்தெனார், ஆகியோர் அணிக்கு பக்கபலமாக உள்ளனர்.

நட்சத்திர வீரர் யூசுப் சஹ்னி:

27 வயது முன்கள வீரரான சஹ்னி தகுதி ஆட்டங்களில் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக கினியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் கோலடித்தார். பயிற்சியாளர் நபில் மாலோல்: முன்னாள் பயிற்சியாளர் ரோகர் லெமராயின் கீழ் உதவி பயிற்சியாளராக மாலோல் பணிபுரிந்த போது, 2002-இல் ஆப்பிரிக்க கோப்பையை துனிசியா வென்றது. தகுதி ஆட்டங்களின் போது மாலோல் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/10/w600X390/spt2.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/10/உலகக்-கோப்பை-கால்பந்து-2018-அணிகள்-நாள்-நேரம்-இந்திய-நேரப்படி-2936694.html
2934315 விளையாட்டு FIFA 2018  உலகக் கோப்பை கால்பந்து 2018: குரூப் டீ DIN DIN Thursday, June 14, 2018 04:31 PM +0530 ஆர்ஜென்டீனா
ஆர்ஜென்டீனா
குரோஷியா
நைஜீரியா


ஆர்ஜென்டீனா
தென் அமெரிக்க நாடுகளில் கால்பந்து விளையாட்டில் பிரேசிலுக்கு அடுத்த வலிமையான அணியாக ஆர்ஜென்டீனா உள்ளது. 2 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆர்ஜென்டீனாவில் டீகோ மாரடோனாவுக்கு அடுத்த புகழ் பெற்ற வீரராக தற்போது கேப்டன் லியோனல் மெஸ்ஸி உள்ளார்.
கடந்த 2014 உலகக் கோப்பையில் இரண்டாம் இடம் பெற்ற போதிலும், தற்போதைய போட்டிகளுக்கு தகுதி பெறுவதில் ஆர்ஜென்டீனா பெரும் சிக்கலைகளை சந்திக்க நேர்ந்தது. மேலும் செர்ஜியோ அகியுரோ, கோன்சலா ஹியுகின், டாரியா பெனெடோ ஆகிய சிறந்த வீரர்கள் அணிக்கு உறுதுணையாக உள்ளனர்.
நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி 
டீகோ மாரடோனாவுக்கு அடுத்து ஆர்ஜென்டீனாவின் சிறந்த வீரராக கருதப்படும் மெஸ்ஸியும் அனைத்து விதமான கிளப் சாம்பியன் பட்டங்களையும் வென்றுள்ளார். ஆனால் இதுவரை உலகக் கோப்பையில் பட்டம் வெல்லவில்லை. மெஸ்ஸியின் சிறப்பான ஆட்டத்தால் தகுதி ஆட்டங்களில் ஆர்ஜென்டீனா வென்று உலகக் கோப்பைக்கு தேர்வு பெற்றது. உலகக் கோப்பை வெற்றி மட்டுமே இவரது தீராத கனவாக உள்ளது.
பயிற்சியாளர் ஜார்ஜ் சம்போலி
ஓரே ஆண்டில் 2 பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டு மூன்றாவது பயிற்சியாளராக சம்போலி பொறுப்பேற்றார். 4 அதிகாரபூர்வ ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே இவரது அணி வென்றுள்ளது. 

வெறும் 3.3 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட மிகவும் சிறிய நாடான ஐஸ்லாந்து முதன்முûறையாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. கோலியாத்தை வீழ்த்திய தாவீது போல் பெரிய ஜாம்பவான் அணிகளை ஐஸ்லாந்து தோல்வியுறச் செய்தது. 2016 யூரோ சாம்பியன் போட்டியில் காலிறுதியில் பலம் வாய்ந்த இங்கிலாந்தை வெளியேற்றியது. உக்ரைன், குரோஷியா போன்ற பலமான அணிகளுக்கு முன்பே ஐஸ்லாந்து உலகக் கோப்பைக்கு தகுதி பெற்று விட்டது. இந்த உற்சாகத்துடன் ரஷியாவில் மேலும் பல வெற்றிகளை பெறும் முனைப்பில் உள்ளது அந்த அணி.
நட்சத்திர வீரர் ஆரோன் குன்னர்சன்
அணியின் கேப்டனான ஆரோன் குன்னர்சன் அனைத்து வீரர்களையும் ஒருங்கிணைத்து வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையில் துடிப்பான ஆட்டத்தை கையாண்டு வருகிறார். அதே நேரத்தில் ஜில்பி சிகுர்ட்சன் தாக்குதல் ஆட்டத்துக்கு பக்க துணையாக உள்ளார்.
பயிற்சியாளர் ஹெய்மிர் ஹால்ரிம்சன் பல் மருத்துவ நிபுணரான ஹெய்மிர் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ஐஸ்லாந்து அணியை கட்டுக்கோப்பான திறன் மிக்க அணியாக மாற்றி உள்ளார்.

நைஜீரியா
ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற முதல் நாடு நைஜீரியா. தகுதி ஆட்டங்களில் நடப்பு ஆப்பிரிக்க சாம்பியன் கேமரூன், ஜாம்பியா, அல்ஜீரியா போன்ற அணிகளை வீழ்த்தி தகுதி பெற்றுள்ளது. சூப்பர் ஈகிள்ஸ் என அழைக்கப்ப்படும நைஜீரியா அணி வீரர்கள் எதிரணிகளை நிலையகுலையச் செய்யும் தன்மை கொண்டவர்கள். 
கடந்த ஆண்டு நடந்த ஆர்ஜென்டீனாவுக்கு எதிரான நட்பு ஆட்டத்தில் 2 கோல்கள் பின்தங்கி இருந்த நிலையில் சிறப்பாக ஆடி இறுதியில் 4-2 என வெற்றி பெற்றனர். கடந்த 6 உலகக் கோப்பை போட்டிகளில் 5-இல் தகுதி பெற்றுள்ளனர்.
நட்சத்திர வீரர் ஜான் ஓபி மைக்கேல்
அணியின் நட்சத்திர வீரரான மைக்கேல் நடுக்கள தற்காப்பு பொறுப்பை திறம்பட கையாண்டு வருகிறார். அதே நேரத்தில் தாக்குதல் ஆட்டத்துக்கு அலெக்ஸ் ஓபி, கெலச்சி இனாச்சோ, விக்டர் மோசஸ் போன்றவர்கள் உள்ளனர். 
பயிற்சியாளர் ஜெர்னாட் ரோஹர் கடந்த 2014-ஆம் உலகக் கோப்பைக்கு பின் 8 பயிற்சியாளர்களை நைஜீரியா அணி நிர்வாகம் மாற்றி விட்டது. இந்நிலையில் ஜெர்னாட் ரோஹர் பயிற்சியில் அந்த அணி திறன் மிக்க அணியாக விளையாடி வருகிறது.

குரோஷியா
கடந்த 1998-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் மூன்றாம் இடத்தை வென்று குரோஷியா தனது முத்திரையைப் பதித்தது. ஆனால் தொடர்ந்து பெரிய அளவிலான போட்டிகளில் இந்த அணி சோபிக்கவில்லை. 
மரியோ மண்ட்சுகிக், இவான் ரக்டிக், இவான் பெர்சிக் ஆகியோரின் செயல்பாட்டையே அணி நம்பியுள்ளது. இவர்கள் அனைவரும் கிளப் அளவிலான போட்டிகளில் ஜொலித்து வருகின்றனர். அதை பெரிய போட்டிகளில் வெளிப்படுத்த வேண்டும்.
நட்சத்திர வீரர் லுகா மோட்ரிக்ரியல் மாட்ரிட் 
அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மோட்ரிக், தலைமையிலான குரோஷிய அணி இழந்த புகழை மீண்டும் பெறும் துடிப்புடன் உள்ளது. 
பயிற்சியாளர் லட்கோ டாலிக் தகுதிச் சுற்று ஆட்டங்களில் தொடர் தோல்விக்கு பின் ஓர் ஆட்டம் மட்டுமே நிலுவையில் இருந்த நிலையில் இவர் பொறுப்பேற்றார். இவரது பயிற்சியால் உக்ரைனையும், கீரிஸையும் வீழ்த்தி குரோஷியா தகுதி பெற்றது.

டாப் 10 நட்சத்திர வீரர்கள்: முகமது சலா (எகிப்து)
எகிப்து நாட்டைச் சேர்ந்த முகமது சலா மிகவும் எதிர்பார்க்கப்படும் வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். ஏஎஸ் ரோமா அணியில் இருந்து லிவர்பூல் அணிக்கு இடம் மாறிய சலா பிரீமியர் லீக் போட்டிகளில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டினார். 36 லீக் ஆட்டங்களில் 32 கோல்களை அடித்த சலா, மேலும் 10 கோல்களை அடிக்கவும் உதவினார். லீக் சீசனில் சிறந்த ஆட்டக்காரர் விருதையும் பெற்றார்.
சாம்பியன்ஸ் லீக் ஆட்டங்களிலும் சலா தனது திறனை நிரூபித்தார். 10 கோல்கள் அடித்தும், 4 கோல்கள் அடிக்க உதவியும், லீவர்பூல் அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற உதவினார். எனினும் போட்டியில் காயமுற்றதால் தனது அணியை அவரால் வெற்றி பெறச் செய்ய முடியவில்லை.
உலகக் கோப்பைக்கு முதன்முறையாக தகுதி பெற்ற எகிப்து அணியின் கனவுகள் சலாவையே சார்ந்துள்ளன.

1982 உலகக் கோப்பை: சாம்பியன் இத்தாலி


12-ஆவது உலகக் கோப்பை போட்டிகள் ஸ்பெயினில் 1982 ஜூன் 13 முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் இத்தாலி 3-1 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த போட்டியில் தான் முதன்முறையாக 16 அணிகளில் இருந்து 24 அணிகளாக எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் ஆப்பிரிக்கா, ஆசியாவில் இருந்து கூடுதல் நாடுகள் பங்கேற்க முடிந்தது.
6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ரவுண்ட் ராபின் முறையில் ஆட்டங்கள் முதலில் நடந்தன. அரையிறுதி முதல் ஆட்டத்தில் இத்தாலி 2-0 என்ற கோல் கணக்கில் போலாந்தை வென்றது. இரண்டாவது அரையிறுதியில் மேற்கு ஜெர்மனி 5-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வென்றது.
இறுதி ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜெர்மனியை வென்று இத்தாலி சாம்பியன் பட்டம் வென்றது. 1938-ஆம் ஆண்டுக்கு பின் 44 ஆண்டுகள் கழித்து இத்தாலி மூன்றாவது முறையாக பட்டம் வென்றது. அந்த அணியின் பாவ்லோ ரோசி போட்டி முழுவதும் சிறப்பாக ஆடினார்.
தகுதிச்சுற்றில் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெறாமல் டிரா செய்து அடுத்த சுற்றுக்கு இத்தாலி முன்னேறியது.
மொத்த ஆட்டங்கள்: 52.
கோல்கள்: 146.
பார்வையாளர்கள்: 21,09,723.
அதிக கோலடித்தவர்: 
பாவ்லோ ரோசி (இத்தாலி)-6 

இந்தப் பிரிவில் இருந்து ஆர்ஜென்டீனா, நைஜீரியா உள்ளிட்ட அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/7/w600X390/messi.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/07/உலகக்-கோப்பை-கால்பந்து-2018-குரூப்-டீ-2934315.html
2935222 விளையாட்டு FIFA 2018 உலகக் கோப்பை கால்பந்து 2018: குரூப் இ DIN DIN Thursday, June 14, 2018 04:31 PM +0530

பிரேசில்
கோஸ்டா ரிகா
சுவிட்சர்லாந்து
செர்பியா

இந்த பிரிவில் இருந்து பிரேசில், சுவிட்சர்லாந்து அணிகள் அனைத்து சுற்றுக்கு தகுதிபெறும்.

முக்கிய வீரர்கள், நிலவரம்

சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்து அணி கடந்த 1954-ம் ஆண்டு மட்டுமே உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றில் வென்றுள்ளது. ஆனால் தொடர்ந்து தகுதிச் சுற்று ஆட்டங்களில் மட்டுமே ஆடியது. கடந்த 2009-இல் 17 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற பெரும்பாலான அனுபவம் நிறைந்த வீரர்கள் தற்போதைய அணியில் இடம் பெற்றுள்ளனர். 2018 உலகக் கோப்பையில் தகுதி பெற9 தொடர் வெற்றிகளுடன் சுவிட்சர்லாந்து இறுதியில் வட அயர்லாந்தை வென்று தகுதி பெற்றது. தற்காப்பு ஆட்டத்தில் சிறந்து விளங்கும் மானுவேல் அகான்ஜி உள்ளது அணிக்கு கூடுதல் பலமாகும்.
நட்சத்திர வீரர் வலோன் பெஹ்ராமி: தனது 4-வது உலகக் கோப்பையில் விளையாடும் வலோன் பெஹ்ராமி, இளம் வீரர்கள் கொண்ட அணிக்கு முன்னோடி போல் உள்ளார். போர்ச்சுலுக்கு எதிரான தகுதி ஆட்டத்தில் அவர் இல்லாததால் சுவிட்சர்லாந்து தோல்வியடைந்தது.
பயிற்சியாளர் விளாடிமிர் பெட்கோவிச்: போஸ்னியாவைச் சேர்ந்த விளாடிமிர் கடந்த 3 ஆண்டுகளாக அணியை வலிமையாக்கி கட்டுக்கோப்புடன் வைத்துள்ளார். குறைந்தபட்சம் காலிறுதி வரை முன்னேறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

கோஸ்டா ரிகா 
மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த மிகச் சிறிய நாடான கோஸ்டா ரிகா கடந்த 2014 உலகக் கோப்பையில் காலிறுதி வரை முன்னேறி, நியூஸிலாந்திடம் தோல்வியுற்றது. தற்போது 5-வது முறையாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ள 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த அணி சிறப்பாக விளையாடி வருகிறது. குறிப்பாக தாக்குதல் ஆட்டத்தில் பிரைஹன் ருயிஸும், நடுக்களத்தில் செல்சோ போர்ஜஸும் எதிரணிக்கு சவால் தருகின்றனர். எனினும் ஸ்பெயினுடன் நடந்த நட்பு ஆட்டத்தில் 5-
0 எனவும், ஹங்கேரியுடன் 1-0 எனவும் கோஸ்டாரிகா தோல்வியடைந்துள்ளது.
நட்சத்திர வீரர் கீலர் நவாஸ்: சிறந்த கோல்கீப்பர்களில் ஒருவரான கீலர் நவாஸ் அணியின் முக்கிய பலமாக உள்ளார். 2014 முதல் மாட்ரிட் அணியில் விளையாடி வருகிறார்.
பயிற்சியாளர் ஆஸ்கர் ராமிரெஸ்: 
இவரது பயிற்சியின கீழ் ஆட்டத்திறன் மிக்கதாக மாறியுள்ள கோஸ்டா ரிகா அணி, கடந்த 2014 போட்டியில் பெற்ற நிலையை மீண்டும் அடைய கடுமையாக போராடும்.


பிரேசில்
5 முறை உலக சாம்பியனான பிரேசில் அணி கால்பந்து ஆட்டத்தின் ஜாம்பவான் அணிகளில் ஒன்றாகும். பீலே, ஸீகோ, ரொனால்டோ, நெய்மர் உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்கள் இடம் பெற்ற அணி. கடந்த 2014-ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரையிறுதியில் ஜெர்மனியிடம் 7-1 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது பிரேசில். அந்த அதிர்ச்சியில் இருந்து அந்நாட்டு பொதுமக்கள், வீரர்கள் மீளுவதற்கு நீண்ட காலம் ஆகியது.
இந்நிலையில் 2018 உலகக் கோப்பை தென் அமெரிக்காவில் இருந்து முதலில் தகுதி பெற்ற அணி பிரேசில். பரம வைரியான ஆர்ஜென்டீனாவை 3-0 என தகுதிச் சுற்றில் வீழ்த்தியது. கடந்த 2016 முதல் புத்துணர்வு பெற்ற பிரேசில் அணி 13 வெற்றிகள், 3 டிரா, ஓரே ஒரு தோல்வி என அபாரமாக ஆடி வருகிறது. 
நட்சத்திர வீரர் நெய்மர்:
அந்த அணியின் முக்கிய வீரராக நெய்மர் திகழ்கிறார். கடந்த சில மாதங்களாக காயத்தால் அவதிப்பட்ட அவர் உலகக் கோப்பையில் விளையாடுவதே சந்தேகமாக இருந்தது. தற்போது குணமடைந்து மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார். ரஷியாவில் நடக்கும் போட்டியில் பிரேசில் வெல்லும் பட்சத்தில் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரை நெய்மர் பின்னுக்கு தள்ளி ஜொலிப்பார்.
பயிற்சியாளர்: அடேனோர் பாச்சி டைட்  எனவும் அழைக்கப்படும் பயிற்சியாளர் பாச்சி அணியை வலுவாக கட்டமைத்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு போட்டியில் துங்கா பயிற்சியாளராக இருந்தபோது அந்த அணி நெய்மரையே பெரிதும் சார்ந்திருந்தது. ஆனால் தற்போது டைட் பயிற்சியில் அந்த அணி சிறப்பான அணியாக மிளிர்ந்து வருகிறது.

டாப் 10 நட்சத்திர வீரர்கள்: லியோனல் மெஸ்ஸி (ஆர்ஜென்டீனா)
வலுகுன்றிய அணியில் இடம்பெற்றுள்ள உலகின் தலைசிறந்த வீரர் என்ற பெயரை லியோனல் மெஸ்ஸி பெற்றுள்ளார். எந்த அணியாக இருந்தாலும், மெஸ்ஸி தனது திறமையான ஆட்டத்தால் போட்டியின் தன்மையையே மாற்றக்கூடியவர். அவர் இடம் பெற்றுள்ள பார்சிலோனா அணி இந்த லீக் சீசனில் ஓரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது. 34 கோல்களை அடித்தும், 12 கோல்களை அடிக்கவும் மெஸ்ஸி உதவினார்.
அவர் இடம் பெறும் அனைத்து அணிகளிலும் மெஸ்ஸியே பிரதான இடத்தைப் பெறுகிறார். அவர் இடம் பெறும் அணிகள் அனைத்தும் வெற்றி படிக்கெட்டில் பயணிக்கும் நிலையில், ஆர்ஜென்டீனா அணியும், மீண்டும் உலகக் கோப்பையை வெல்ல அவர் உதவுவார் என எதிர்நோக்கி உள்ளது.

செர்பியா
8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ள செர்பியா தகுதி ஆட்டங்களில் அயர்லாந்து, வேல்ஸ், ஆஸ்திரியா அணிகளை வீழ்த்தி முன்னேறியது. குறிப்பாக தனி நாடான பின் 
2006-இல் முதன்முறையாக உலகக் கோப்பையில் விளையாடி 3-வது இடத்தை பெற்றது.நிகழாண்டு நடந்த தகுதி ஆட்டங்களில் செர்பியா 20 கோல்களை அடித்து வெற்றி நடை போட்டது. அலெக்சாண்டர் மிட்ரோவிக் அபாரமாக ஆடினார். 
நட்சத்திர வீரர் பிரானிஸ்லேவ் இவானோவிச்: 
செயின்ட் பீட்டர்ஸ்பக் அணியில் விளையாடி வரும் பிரானிஸ்லேவ் தற்காப்பு ஆட்டத்தில் மலை போல் விளங்குகிறார். தற்காலியாக பயிற்சியாளராக லேடன் ஸ்டேஜிக் செயல்பட்டு வருகிறார்.

நட்பு ஆட்டங்கள்: பெல்ஜியத்திடம் 3-0 என வீழ்ந்தது 
எகிப்து உலகக் கோப்பை போட்டிகளை ஒட்டி நடந்து வரும் நட்பு ஆட்டம் ஒன்றில் பெல்ஜியத்திடம் 3-0 என கோல்கணக்கில் எகிப்து அணி வீழ்ந்தது. 
பிரஸ்ஸலிஸ் நடந்த நட்பு ஆட்டத்தில் அந்த அணியின் ஈடன் ஹசார்ட் சிறப்பான ஆட்டத்தால் பெல்ஜியம் அபார வெற்றி பெற்றது. குரூப் ஜி பிரிவில் இங்கிலாந்து, துனிசியா, பனாமாவுடன், பெல்ஜியம் இடம்பெற்றுள்ளது. நட்சத்திர வீரர் முகமது சலா காயத்தின் காரணமாக சிகிச்சை பெறும் நிலையில் எகிப்து படுதோல்வியை சந்தித்தது.
நார்வே-பனாமா
ஆஸ்லோவில் நடந்த மற்றொரு நட்பு ஆட்டத்தில் உலகக் கோப்பையில் சிறப்பாக ஆடலாம் என நோக்கில் வந்துள்ள பனாமா அணி 0-1 என நார்வே அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத நிலையில் நார்வே அணி சிறப்பாக ஆடியது.

1986: சாம்பியன் ஆர்ஜென்டீனா
13-ஆவது உலகக் கோப்பை போட்டிகள் மெக்ஸிகோவில் 1986 மே 31 முதல் ஜூன் 29 வரை நடைபெற்றது. ஆர்ஜென்டீனா 3-2 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த போட்டி வாய்ப்பு கொலம்பியாவுக்கு கிடைத்த நிலையில் பொருளாதாரம் சரியில்லாததால் அந்நாடு மறுத்து விட்டது. இதையடுத்து இரண்டாது முறையாக உலகக் கோப்பை போட்டியை மெக்ஸிகோ நடத்தியது. 
9 நகரங்களில் நடந்த இப்போட்டியில் 24 அணிகள் பங்கேற்றன. அதிக உயரம் கொண்ட மலைப்பிரதேசத்தில் விளையாட்டு மைதானங்கள் அமைந்திருந்தது வீரர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியது. 
நூற்றாண்டின் சிறந்த கோல் (மாரடோனா)
இங்கிலாந்து-ஆர்ஜென்டீனா இடையிலான காலிறுதி ஆட்டத்தை கால்பந்து ரசிகர்களால் எளிதில் மறக்க முடியாது. முதல் பாதியில் ஆர்ஜென்டீனாவின் மாரடோனா நடுவர் பார்க்காத நிலையில் பந்தை கோல்கம்பத்துக்குள் லேசாக கையினால் தள்ளி விட்டார். அதை நடுவர் பார்க்காமல் கோலாக அறிவித்தார். இதை ஹேண்ட் ஆஃப் காட் கோல் (கடவுளின் கையால் அடிக்கப்பட்ட கோல்) என மாரடோனா வர்ணித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இரண்டாவது பாதியில் இங்கிலாந்து வீரர்கள் 5 பேரை கடந்து மாரடோனா அடித்த கோல் நூற்றாண்டின் கோல் என அழைக்கப்படுகிறது.
தகுதி, காலிறுதி ஆட்டங்கள் முடிந்த நிலையில் முதல் அரையிறுதியில் மேற்கு ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வென்றது. 
இரண்டாவது அரையிறுதியில் பெல்ஜியத்தை 2-0 என ஆர்ஜென்டீனா வீழ்த்தியது. இறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா 3-2 என மேற்கு ஜெர்மனியை வென்று 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/8/w600X390/kisspng-internet.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/08/உலகக்-கோப்பை-கால்பந்து-2018-குரூப்-இ-2935222.html
2932000 விளையாட்டு FIFA 2018 உலகக் கோப்பை கால்பந்து 2018 DIN DIN Thursday, June 14, 2018 04:30 PM +0530 மைதானங்கள் ஒரு பார்வை
சரன்ஸ்க்
(மார்டோவியா மைதானம்)

(பார்வையாளர்கள்-45,000)
உலகக் கோப்பை போட்டி நடைபெறும் மைதானங்களில் ஒன்றான மார்டோவியா மைதானம் முதலில் 2011-இல் கட்ட தொடங்கப்பட்டு, 2018-இல் பணிகள் முடிவடைந்தன. பல்வேறு சிக்கல்களால் பணிகள் தாமதமாக நடந்து முடிக்கப்பட்ட இதில் 45000 பேர் அமரலாம். இதில் 4 முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வோல்கோகிராட் மைதானம்
(பார்வையாளர்கள்-45,000)
எஃப்சி ரோடார் வோல்கோகிராட் அணியின் சொந்த மைதானமாக உள்ள இது தென் ரஷியாவில் உள்ள வோல்கோகிராட் நகரில் கட்டப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருந்த சென்ட்ரல் மைதானம் இடிக்கப்பட்டு புதிய மைதானம் கட்டப்பட்டது. கேபிள் முறையில் புதுமையாக கூரை அமைக்கப்பட்டுள்ளது. வோல்கா நதிக்கரையில் இந்த மைதானம் கட்டப்பட்டுள்ளது.இந்த மைதானத்தில் 4 முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

1966 உலகக் கோப்பை சாம்பியன்
இங்கிலாந்து
1966-இல் இங்கிலாந்தில் 8 நகரங்களில் நடைபெற்ற 8-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முதன்முறையாக இங்கிலாந்து அணி 4-2 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜெர்மனியை வென்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் தான் கருப்பு-வெள்ளை நிற ஒளிபரப்பு இறுதியாக நடைபெற்றது.
நடப்புச் சாம்பியன் பிரேசில், போட்டியை நடத்தும் நாடு என்ற அந்தஸ்தில் இங்கிலாந்து போன்றவை நேரடியாக தகுதி பெற்றன. பிஃபாவின் உத்தரவின்படி ஆப்பிரிக்காவில் இரண்டாம் சுற்றில் வெல்வோர், ஆசிய மண்டலத்தில் வெல்லும் அணியுடன் மோத வேண்டும். ஆனால் இந்த உத்தரவு ஒருதலைபட்சமானது எனக்கூறி 31 ஆப்பிரிக்க நாடுகள் போட்டியை புறக்கணித்தன.
இறுதியாக 16 நாடுகள் போட்டியில் பங்கேற்றன. இப்போட்டிக்காக காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஜூல்ஸ் ரிம்லெட் கோப்பை திருடப்பட்டது. பின்னர் பிக்கிஸ் என்ற நாய் உதவியுடன் கோப்பை மீட்கப்பட்டது. 4 குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டன. பின்னர் லீக் சுற்றைத் தொடர்ந்து நாக் அவுட் சுற்று நடந்தது. முதல் அரையிறுதியில் இங்கிலாந்து 2-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் மேற்கு ஜெர்மனி 2-1 என்ற கோல் கணக்கில் சோவியத் யூனியை வென்றது.
இறுதிப் போட்டியில் இங்கிலாந்து 4-2 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜெர்மனியை வென்று முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
வெம்ப்ளி மைதானத்தில் நடந்த போட்டியை 98000 போர் கண்டு களித்தனர்.
* மொத்த ஆட்டங்கள்: 32 =அடிக்கப்பட்ட கோல்கள்: 89
* பார்வையாளர்கள்: 15,63,135 =அதிக கோலடித்தவர்: இயுஸ்பியோ (9 கோல்கள்).

டாப் 10 நட்சத்திர வீரர்கள்
லூயிஸ் ஸ்வாரஸ் (உருகுவே)
கால்பந்தில் முன்னணி அணிகளில் ஒன்றான உருகுவே 1930, 1950-இல் உலகக் கோப்பை பட்டம் வென்றது. அதன் பின்னர் அதனால் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற முடியவில்லை. இதற்கிடையே இழந்த புகழை மீட்கும் வகையில் கடந்த 2010 உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதி வரை உருகுவே முன்னேறியது. பின்னர் 2011-இல் கோபா அமெரிக்கா பட்டத்தையும் வென்றது. இதற்கு லூயிஸ் ஸ்வாரஸின் அபாரமான ஆட்டத்திறன் தான் முழு காரணம் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை. 30 வயதான ஸ்வாரஸ் 94 போட்டிகளில் 47 கோல்களை அடித்துள்ளார். மேலும் பெரியளவிலான போட்டிகளில் சாதித்துக் காட்டியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக உலகின் சிறந்த தாக்குதல் ஆட்டக்காரராக விளங்கும் அவர் முதலில் லிவர்பூல் அணியில் சிறப்பாக ஆடிய நிலையில் தற்போது பார்சிலோனா அணியில் கலக்கி வருகிறார். மற்ற எந்த பலமான அணியையும் வீழ்த்தும் வலிமை கொண்டதாக உருகுவே உள்ளது என்றால் அதற்கு ஸ்வாரஸ் இருப்பது பிரதான காரணம் ஆகும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/3/w600X390/1966_ENGLAND.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/03/உலகக்-கோப்பை-கால்பந்து-2018-2932000.html
2931555 விளையாட்டு FIFA 2018 உலகக் கோப்பை கால்பந்து 2018 DIN DIN Thursday, June 14, 2018 04:30 PM +0530 மைதானங்கள் ஒரு பார்வை
ரோஸ்டோவ் ஆன் டான் 
(பார்வையாளர்கள்-45,000)

இந்த மைதானம் உலக கோப்பைக்காக புதிதாக கட்டப்பட்டது. ரோஸ்டோவ் ஆன் டான் நகரமும் போட்டியை நடத்துவதற்கு தேர்வு செய்யப்பட்டது. 2013-இல் கட்டுமானப் பணிகள் தொடங்கி கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. எஃப்சி ரோஸ்டோவ் அணியின் சொந்த மைதானமாக இது விளங்குகிறது. டான் நதியின் கரையில் இந்த மைதானம் அமைந்துள்ளது. இங்கு 4 முதல் சுற்று ஆட்டங்கள், காலிறுதிக்கு முந்தைய ஆட்டம் நடக்கிறது.
சமாரா (காஸ்மாஸ்)
(பார்வையாளர்கள்-45,000)

காஸ்மாஸ் மைதானம் அல்லது சமாரா மைதானம் என அழைக்கப்படும் இது சமாரா நகரில் புதிதாக கட்டப்பட்டது. கடந்த 2014-இல் கட்டுமானப் பணிகள் தொடங்கி 2018-இல் முடிவடைந்தது. ரிலியா சோய்டோவ் அணியின் சொந்த மைதானமாக உள்ளது. முதலில் சமாரா, வோல்கா நதிகள் சந்திக்கும் இடத்தில் 
தீபகற்ப பகுதியில் கட்ட திட்டமிடப்பட்டு அடிப்படை வசதிகள் இல்லாததால் மாற்றி அமைக்கப்பட்டது. இங்கு நான்கு முதல் சுற்று போட்டிகள், 
காலிறுதிக்கு முந்தைய ஆட்டம், காலிறுதி ஆட்டம் போன்றவை நடக்கின்றன.

1962 ஏழாவது உலகக் கோப்பை: சாம்பியன் பிரேசில்
தென் அமெரிக்க நாடான சிலியில் கடந்த 1962-ஆம் ஆண்டு மே 30-ஆம் தேதி முதல் ஜூன் 17-ஆம் தேதி வரை ஏழாவது உலகக் கோப்பை போட்டிகள் 19 நாள்கள் 4 நகரங்களில் நடைபெற்றன. போட்டியை நடத்தும் நாடாக சிலியும், நடப்புச் சாம்பியன் அந்தஸ்தில் பிரேசிலும் நேரடியாக தகுதி பெற்ற நிலையில் 14 நாடுகள் தகுதிப் போட்டிகள் மூலம் பங்கேற்றன.
இந்த போட்டியில் வீரர்களிடையே வன்முறை, மோதல் நடைபெற்றதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. இதில் தான் முதன்முறையாக அணிகளின் கோல் சராசரியும், புள்ளிகளோடு கணக்கிடப்பட்டது.
ஐரோப்பாவில் இருமுறை தொடர்ந்து உலகக் கோப்பை நடந்ததால், 1962-இல் தென் அமெரிக்காவுக்கு வாய்ப்பு தர வேண்டும். இல்லையென்றால் போட்டியை புறக்கணிப்போம் என கோபா அமெரிக்க நாடுகள் மிரட்டல் விடுத்தன. முதலில் 8 நகரங்களில் நடத்தப்படுவதாக இருந்த போட்டிகள் 1960-இல் ஏற்பட்ட கடும் நிலநடுக்க பாதிப்பால் 4 நகரங்களாக குறைக்கப்பட்டது.
4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தகுதிச் சுற்று, நாக் அவுட் சுற்று என ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் அரையிறுதியில் செக்ஸ்லோவோக்கியா 3-1 என்ற கோல் கணக்கில் யுகோஸ்லேவியாவை வென்றது. மற்றொரு அரையிறுதியில் பிரேசில் 4-2 என்ற கோல் கணக்கில் சிலியை வென்றது. இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி 3-1 என்ற கோல் கணக்கில் செக் அணியை வீழ்த்தி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
மொத்த ஆட்டங்கள்: 32.
மொத்தம் அடிக்கப்பட்ட 
கோல்கள்: 89.
பார்வையாளர்கள்-8,93,172.
அதிக கோல் அடித்தவர்கள்: 
காரினிச்சா, வாவா (பிரேசில்), லியோனல் சாஞ்செஸ் (சிலி), பிளோரியன் ஆல்பர்ட் (ஹங்கேரி), வலேன்டின் இவனோவ் 
(சோவியத் யூனியன்), 
டிராசான் ஜெர்கோவிக் 
(யுகோஸ்லேவியா).

உலகக் கோப்பை டாப் 10 நட்சத்திர வீரர்கள்
காப்ரியேல் ஜீஸஸ் 
(பிரேசில்)

இவரை பற்றிய கேள்வி தொடர்ந்துக் கொண்டே உள்ளது. காப்ரியேல் ஜீஸஸ் சிறந்த வளரும் வீரரா அல்லது கிளப் அணிகள் அளவிலேயே சிறப்பாக 
விளையாடுகிறார் என்பதாகும். ஆனால் சர்வதேச அளவில் கால்பந்து விளையாட்டில் இவரது வயதில் சிறந்த வீரர் தனது அணிக்காக விளையாடுகிறார் 
என்பது வியப்பை தரும். மான்செஸ்டர் சிட்டி அணியில் விளையாடி வரும் இவர் தனது முன்னோடியாக கருதும் ரொனால்டோ வழியில் ஆடி வருகிறார். 20 வயதே ஆன காப்ரியேல் ஏற்கெனவே உலகக் கோப்பை தகுதி போட்டிகளில் 7 கோல்கள் அடித்து மேலும் 3 கோல்கள் அடிக்க உதவினார். பிரேசில் அணி கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படுவது காப்ரியேல் போன்ற திறன் மிக்க வீரர்கள் உள்ளதால் தான் என்பதை நிரூபிப்பார் எனத் தெரிகிறது. 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ள பிரேசில் அணியின் முன்னுள்ள சவால்களை காப்ரியேல் எதிர்கொள்வார் என நம்பலாம். 
அவரது முன்னோடியைப் போல புகழ் பெறுவார் என எதிர்பார்க்கலாம்.


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/2/w600X390/1962_BRAZIL.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/02/உலகக்-கோப்பை-கால்பந்து-2018-2931555.html
2932593 விளையாட்டு FIFA 2018 உலகக் கோப்பை கால்பந்து 2018 DIN DIN Thursday, June 14, 2018 04:30 PM +0530 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் 2018 வரும் 14-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன. போட்டியை நடத்தும் நாடு என ரஷியாவும், நடப்புச் சாம்பியன் அந்தஸ்தில் ஜெர்மனியும் நேரடியாக தகுதி பெற்றன. ஏனைய 30 அணிகள் தகுதிச் சுற்று ஆட்டங்கள் மூலம் தேர்வாகி உள்ளன. 32 அணிகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

குருப் ஏ
இன்னும் 10 நாள்களில் உலகக் கோப்பை போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் குருப் ஏ-வில் இடம்பெற்றுள்ள அணிகள், வீரர்கள், அவற்றின் சாதக பாதகங்கள்
ரஷியா
உலகக் கோப்பையை நடத்த ரஷியா விண்ணப்பித்த போது அந்த அணி சிறந்த ஆட்டத்திறனுடன் இருந்தது. 2008-இல் ஐரோப்பிய சாம்பியன் போட்டி அரையிறுதி வரை முன்னேறியது. ஆனால் தற்போது நிலைமை மாறி விட்டது. காலிறுதி, அரையிறுதிக்கு தகுதி பெறுவது போன்றவை இல்லாமல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினாலே போதும் என்ற நிலையில் ரஷிய அணி உள்ளது. 
முக்கிய வீரர்: இகோர் அகின்பீவ், சிறந்த கோல்கீப்பரான இவர் அணியின் கேப்டனாகவும் உள்ளார். பயிற்சியாளர்: ஸ்டான்ஸ்லேவ் செர்ஸ்கோவ், பல்வேறு வெளிநாட்டு பயிற்சியாளர்கள் இருந்தும் அணி பெரிய வெற்றிகளை பெறாததால், உள்ளூர் பயிற்சியாளரான ஸ்டான்ஸ்லேவ் நியமிக்கப்பட்டார்.

சவுதி அரேபியா
சவுதி அரேபியா அணி 5-ஆவது முறையாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. இரண்டு பயிற்சியாளர்கள் நீக்கப்பட்டனர். போர்ச்சுகல், பல்கேரியாவிடம் ஏற்பட்டதோல்வியால் எகர்டோ பவுஸா நீக்கப்பட்டார். கடந்த 2006-ல் தகுதி பெற்ற போதும் பயிற்சியாளராக இருந்த பெர்ட் வேன் மார்விக் நீக்கப்பட்டார். 
தற்போது ஜுவான் அன்டோனியா பிஸ்ஸி நியமிக்கப்பட்டுள்ளார். 
கடந்த 1994 உலகக் கோப்பையில் இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றதே சவுதி அரேபியாவின் சிறந்த செயல்பாடாகும்.
முக்கிய வீரர்: மொகமது அல் சலாவி, 30 வயதான இவர் தகுதிச் சுற்று ஆட்டங்களில் 16 கோல்களை அடித்து சவுதி அரேபியா உலக கோப்பைக்கு தகுதி பெற உதவினார்.

எகிப்து
7 முறை ஆப்பிரிக்க சாம்பியன் பட்டம் வென்ற எகிப்து அணி, கடந்த 1990-க்கு பின்னர் பல ஆண்டுகள் கழித்து தற்போது தான் உலகக் கோப்பைக்கு தகுதி பெற முடிந்தது. கடந்த 2012-15 ஆண்டுகளில் ஆப்பிரிக்க கோப்பை போட்டிக்கும் தகுதி பெற முடியாமல் இருந்தது. 
நிகழாண்டு ஆப்பிரிக்க கோப்பை இறுதிக்கும், அதோடு உலகக் கோப்பைக்கும் தகுதி பெற்றனர். 
முக்கிய வீரர்: முகமது சலா, லீவர்பூல் அணிக்காக விளையாடும் முகமது சலா, எகிப்து தகுதி பெற்றதில் முக்கிய பங்கு வகித்தார். தகுதி ஆட்டங்களில் அவர் 5 கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். எனினும் அவர் காயமடைந்துள்ளதால் விளையாட முடியுமா என கேள்விக்குறி எழுந்துள்ளது. பயிற்சியாளர்-ஹெக்டர் கப்பர்.

உருகுவே: 
இரு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள உருகுவே, தென் அமெரிக்காவில் பிரேசில், ஆர்ஜென்டீனா போன்ற நாடுகளுக்கு சவால் விடும் திறமை வாய்ந்ததாகும். 
முக்கிய வீரர்: டீகோ கோடின், எடிசன் கவானி, லூயிஸ் ஸ்வாரஸ் மூத்த வீரர்களாக உள்ளனர். 
அதே நேரத்தில் பெட்ரிகோ வல்வேர்டே, நஹீதன் நான்டெஸ், ஆகியோர் இளம் வீரர்களாக உள்ளனர். அதே நேரத்தில் கடந்த 2006 முதல் பயிற்சியாளராக உள்ள ஆஸ்கர் டபரெஸ் முயற்சியால் உருகுவே அணி தற்போது புதிய வலிமையுடன் திகழ்கிறது. 

குருப் ஏ பிரிவில் இருந்து இரண்டாம் சுற்றுக்கு உருகுவே, எகிப்து அணிகள் தகுதி பெறும் நிலை உள்ளது.

1970 உலகக் கோப்பை சாம்பியன் பிரேசில்
மெக்ஸிகோவில் 1970-இல் முதன்முறையாக நடைபெற்ற 9-வது உலகக் கோப்பை போட்டியில் பிரேசில் அணி மூன்றாம் முறையாக பட்டம் வென்றது.
ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவை தவிர்த்து முதன்முறையாக வட அமெரிக்காவில் உள்ள மெக்ஸிகோவில் இப்போட்டி மே 31 முதல் ஜூன் 21-ஆம் தேதி வரை 5 நகரங்களில் நடைபெற்றது. இதில் 5 கண்டங்களைச் சேர்ந்த 16 அணிகள் கலந்து கொண்டன. போட்டியை நடத்தும் நாடாக மெக்ஸிகோ, நடப்புச் சாம்பியனாக இங்கிலாந்து உள்ளிட்டவை நேரடியாக தகுதி பெற்றன. ஏனைய அணிகள் தகுதிச் சுற்றின் மூலம் தேர்வாகின.
பெரும்பாலான நகரங்கள் உயரமான மலைப்பிரதேசங்களில் இருந்ததால், பல்வேறு அணிகள் போட்டி தொடங்குவதற்கு பல மாதங்கள் முன்னரே பயிற்சிக்கு வந்து விட்டன. 4 பிரிவுகளாக 16 அணிகள் பிரிக்கப்பட்டு தகுதி ஆட்டங்கள் நடந்தன. அரையிறுதிக்கு முன்னாள் உலக சாம்பியன்கள் தகுதி பெற்றன. பிரேசில் 3-1 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியையும், இத்தாலி 4-3 என்ற கோல்கணக்கில் மேற்கு ஜெர்மனியையும் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறின.
இறுதி ஆட்டத்தில் பீலே, ஜெர்சன், கார்லஸ் அல்பர்டோ, ஜயிரின்úஸா ஆகியோர் சிறப்பாக ஆடி கோலடித்தனர். இதன் மூலம் 4-1 என இத்தாலியை வீழ்த்தி மூன்றாம் முறையாக பிரேசில் சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் தான் முதன்முறையாக நடுவர்கள் மஞ்சள், சிவப்பு நிற அட்டைகளை காண்பிக்கும் முறை தொடங்கியது.
மொத்த ஆட்டங்கள்: 32. வ் மொத்த கோல்கள்; 95. 
வ்பார்வையாளர்கள்; 16,04,065. 
வ் அதிக கோலடித்தவர்: ஜெர்ட் முல்லர் (மேற்கு ஜெர்மனி)-10.

டாப் 10 நட்சத்திர வீரர்கள்
ராபர்டோ பிர்மினோ 
(பிரேசில்)
பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான பிர்மினோ நெய்மருடன் இணைந்து ஆடினால் எதிரணிகளுக்கு பெரும் சவாலாக விளங்குவார். கோலடிக்கு இயந்திரம் போல் செயல்படும் பிர்மினோ கோலடிப்பது மட்டுமின்றி, இதர வீரர்களுக்கு அதற்கான வாய்ப்பையும் உருவாக்கித் தருகிறார். லிவர்பூல் கிளப் அணியில் ஆடி வரும் அவர் சிறந்த தடுப்பு ஆட்டக்காரராகவும் விளங்குகிறார்.
பிரீமியர் லீக் சீசனில் பிர்மினோ 10 கோல்களை அடித்தும், 7 கோல்களை அடிக்கவும் உதவினார். உலகக் கோப்பையில் பிரேசில் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக பிர்மினோவின் ஆட்டமும் விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/4/w600X390/1970_BRAZIL.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/04/உலகக்-கோப்பை-கால்பந்து-2018-2932593.html
2933650 விளையாட்டு FIFA 2018 உலகக் கோப்பை கால்பந்து 2018 DIN DIN Thursday, June 14, 2018 04:30 PM +0530 குரூப் சி


பிரான்ஸ்
ஆஸ்திரேலியா
பெரு
டென்மார்க்

முக்கிய வீரர்கள், நிலவரம்
குரூப் சி பிரிவில் இருந்து பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது.

பிரான்ஸ்
ஐரோப்பாவில் கால்பந்து ஜாம்பவான் அணிகளில் ஒன்றாக விளங்கும் பிரான்ஸ் அணி கடந்த 1998-இல் பாரிஸில் நடந்த உலகக் கோப்பையில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
ஆனால் தொடர்ந்து குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக 2006 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இத்தாலியிடம் பெனால்டி முறையில் தோல்வியடைந்தது. 2014 போட்டியில் காலிறுதியோடு வெளியேறியது. 2016-ல் சொந்த மண்ணிலேயே நடந்த யூரோ சாம்பியன் போட்டியில் போர்ச்சுகலிடம் வீழ்ந்தது. தற்போது அந்த அணி திறமையான இளம் வீரர்களை கொண்டுள்ளது. இரண்டாவது முறையாக சாம்பியன் ஆகும் முயற்சியில் உள்ள பிரான்ஸ் தாக்குதல், பந்தை கடத்துதல் போன்றவற்றில் பின்தங்கி உள்ளது. 
நட்சத்திர வீரர் ரஃபேல் வரேன் இவர் அணியின் தற்காப்பு ஆட்டத்துக்கு முக்கியமானவராக விளங்குகிறார். எதிரணி வீரர்களை சமாளிப்பதில் ரஃபேல் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
பயிற்சியாளர் டியர் டெஸ்சாம்ப்ஸ்
1998 உலகக் கோப்பை, 2000 யூரோ போட்டியில் பிரான்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து பட்டம் வெல்ல உதவிய டெஸ்சாம்ப்ஸ் தற்போது அணியை வலுமிக்கதாக மாற்றி உள்ளார். உலகக் கோப்பை 2018 அரையிறுதி வரை முன்னேறுவதை குறைந்தபட்ச நோக்கமாக அவர் கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலியா 
தொடர்ந்து 4-வது முறையாக உலகக் கோப்பை போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி பெற்றுள்ளது. ஆனால் சவுதி அரேபியாவின் கோல் சராசரியை விட சற்று குறைவானதால் ஆசியாவில் இருந்து நேரடித் தகுதி பெற முடியாமல் ஆஸி. அணி மொத்தம் 22 தகுதி ஆட்டங்களில் விளையாடி சிரியா, ஹோண்டுராஸ் அணிகளை வென்ற பின் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது.
கடந்த 2014 போட்டியில் இடம் பெற்ற அதே இளம் வீரர்கள் தற்போதும் உள்ளனர். முதன்முறையாக 2015-இல் ஆசிய கோப்பை பட்டத்தை ஆஸி வென்றது. தற்போது தாக்குதல் ஆட்டத்தை கடைபிடித்து வரும் இந்த அணியின் பயிற்சியாளர் அன்கே போஸ்டேக்லு பதவியை ராஜிநாமா செய்து விட்டார். இதனால் புதிய பயிற்சியாளரை நியமிக்க வேண்டியுள்ளது.
நட்சத்திர வீரர் மைல் ஜெடிநாக் நடுக்கள ஆட்டக்காரரான ஜெடிநாக் ஹோண்டுராஸுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் கோலடித்து வெற்றிக்கு உதவினார். காயத்துக்கு பின் மீண்டும் இணைந்துள்ள அவரது ஆட்டத்தை ஆஸி அணி நம்பியுள்ளது. 

பெரு 
தென் அமெரிக்க நாடுகளில் கால்பந்தில் வலுவான பிரேசில், ஆர்ஜென்டீனா, உருகுவே, கொலம்பியா, சிலி, உள்ளிட்ட அணிகளுக்கு பின் பேசப்படும் அணிகளில் பெருவும் ஒன்றாகும். 
உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் போட்டியில் சிலி, பராகுவே, ஈக்குவடார் போன்றவை இருந்தாலும், பெரு தகுதி ஆட்டங்களில் வென்று ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
பெரு அணியின் பெரும்பாலான வீரர்கள், மெக்ஸிகோ நாட்டு கிளப் அணிகளில் விளையாடி வருகின்றனர். பெட்ரோ கால்சே, லூயிஸ் அட்வின்சுலா, பெட்ரோ அக்கியுனோ, ரவுல் ருடியாஸ், 
ஆன்டி போலோ அவர்களில் முக்கியமானவர்கள்.
நட்சத்திர வீரர் பாவ்லோ கியுரோ 33 வயதான கேப்டன் பாவ்லோ கியுரோ தகுதி ஆட்டங்களில் 6 கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். எனினும் பிஃபாவின் ஊக்க மருந்து புகார் தடையால் அவர் விளையாடுவது மிகுந்த கேள்விக்குறியாக இருந்தது. மேலும் சுவிட்சர்லாந்து உச்சநீதிமன்றத்திலும் கியுரோ மேல்முறையீடு செய்த நிலையில் அவர் மீதான தடை நீக்கப்பட்டதால், மீண்டும் உலகக் கோப்பையில் விளையாட உள்ளார்.
பயிற்சியாளர் ரிக்கார்டோ கார்சியா 
ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த ரிக்கார்டோ 2015-இல் இருந்து பெரு அணிக்கு பயிற்சி அளித்து வரும் அவர் சிறப்பான ஆட்டத்திறன் கொண்டதாக மாற்றி உள்ளார்.

டென்மார்க் 
ஐரோப்பாவின் வலுவான கால்பந்து அணிகளில் ஒன்றாக மிக வேகமாக 
டென்மார்க் வளர்ந்து வருகிறது. கடந்த 2012 யூரோ போட்டிகளுக்கு பின் பெரிய போட்டியில் ஆடாத அந்த அணி, கடந்த 2016 நடந்த தகுதி ஆட்டங்களில் 2 தோல்விகளை சந்தித்தது. ஆனால் அதைத் தொடர்ந்து 11 ஆட்டங்களில் வெற்றி வாகை சூடியது. போலந்தை 4-0 எனவும், அயர்லாந்தை 5-1 எனவும் வென்றது.
நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன்: 
வெறும் 18 வயதில் 2010 உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய எரிக்சன் தற்போது சிறந்த பார்மில் உள்ளார். டென்மார்க் அணியின் வெவ்வேறு ஆட்டங்களில் 11 கோல்களை அடித்து வெற்றிக்கு உதவியுள்ளார். ரஷியாவில் எரிக்சன் ஆட்டமே அணியின் வெற்றிப் பாதையை முடிவுசெய்யும்.
பயிற்சியாளர் ஏஜ் ஹரைட் 
நார்வே நாட்டைச் சேர்ந்த ஹரைட் டென்மார்க் அணியை சிறப்பான அணியாக உருவாக்கி உள்ளார். தனது நாட்டு அணிக்கும் 5 ஆண்டுகள் பயிற்சி அளித்துள்ளார்.

டாப் 10 நட்சத்திர வீரர்கள்: கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்)
கடந்த 10 ஆண்டுகளாக உலக கால்பந்து அரங்கில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பெயர் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கிளப் அணிகளுக்கான அனைத்து பட்டங்களையும் அவர் பெற்று விட்டார்.
கடந்த 2016-இல் இவரது சிறப்பான ஆட்டத்தால், தனது நாடான போர்ச்சுகலை முதன்முறையாக ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். இதன் மூலம் கால்பந்து வரலாற்றில் தலைசிறந்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோவும் இடம் பெற்றார்.உலகக் கோப்பை போட்டி தகுதி பெற்ற போர்ச்சுகல், தற்போது சாம்பியன் பட்டத்தை வெல்வதை நோக்கமாக கொண்டுள்ளது. நான்கு முறை தங்க காலணி விருது வென்றுள்ளார்.

1978 சாம்பியன் ஆர்ஜென்டீனா


தென் அமெரிக்க நாடான ஆர்ஜென்டீனாவில் முதன்முறையாக 11-ஆவது உலகக் கோப்பை போட்டிகள் கடந்த 1978 ஜூன் 1 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற்றன. 6 நகரங்களில் நடந்த இப்போட்டியில் 16 அணிகள் இடம் பெற்றன. போட்டியை நடத்தும் நிலையில் ஆர்ஜென்டீனாவும், நடப்புச் சாம்பியன் நிலையில் மேற்கு ஜெர்மனியும் நேரடித் தகுதி பெற்றன.
4 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. ஆனால் இந்த உலகக் கோப்பை போட்டி பல்வேறு புகார்களுக்கு உள்ளானது. ஆர்ஜென்டீனா அணி தான் வெற்றி பெறுவதற்கு சாதகமாக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்ப்பட்டது.
மேலும் அப்போதைய சர்வாதிகார அரசு தலையிட்டு, ஆர்ஜென்டீனாவுக்கு சாதகமாக பெரு அணியை வற்புறுத்தியதாக புகார் எழுந்தது. 
இந்நிலையில் இறுதிச் சுற்று ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா அணி 2-1 என்ற கோல்கணக்கில் நெதர்லாந்தை வென்று முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. மரியோ கெம்பஸ் சிறப்பாக ஆடி வெற்றிக்கு வித்திட்டார்.

மொத்த ஆட்டங்கள்-38. 
கோல்கள்: 102.
பார்வையாளர்: 15,45, 791.
அதிக கோலடித்தவர்; மரியோ கெம்பஸ் (ஆர்ஜென்டீனா)-6.

நட்பு ஆட்டங்கள் சிலியிடம் 1-0 என செர்பியா தோல்வி


உலகக் கோப்பை 2018 போட்டியை முன்னிட்டு நடைபெற்ற நட்பு ஆட்டம் ஒன்றில் சிலி அணி 1-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது. 
கிராஸ் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் சிலி அணி 1-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வென்றது.
பிரேசில், கோஸ்டா ரிகா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட அணிகள் பிரிவில் இடம் பெற்றுள்ள செர்பியாவும், தென் அமெரிக்க சாம்பியனுமான சிலியும் மோதின. இதில் செர்பிய வீரர்கள் சரிவர ஆடாத நிலையில் தோல்வியைத் தழுவினர்.
குரூப் பி பிரிவில் இடம் ஈரான், போர்ச்சுகல், ஸ்பெயின் உள்ளிட்ட அணிகளுடன் இடம் பெற்றுள்ள மொராக்கோவும்-ஸ்லோவோக்கியாகவும் ஜெனிவா நகரில் நடந்த நட்பு ஆட்டம் ஒன்றில் மோதின. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் மொராக்கோ வென்றது. 


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/6/w600X390/paulo.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/06/உலகக்-கோப்பை-கால்பந்து-2018-2933650.html
2933239 விளையாட்டு FIFA 2018 உலகக் கோப்பை கால்பந்து 2018 DIN DIN Thursday, June 14, 2018 04:30 PM +0530 குருப் பி
* போர்ச்சுகல்
* ஸ்பெயின்
* மொராக்கோ
* ஈரான்
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள நாடுகள், நட்சத்திர வீரர்கள், நிலவரம்

நபிள் டிரார்
மொராக்கோ
ஆப்பிரிக்க நாடான மொராக்கோ தீவிர கால்பந்து ரசிகர்கள் நிறைந்த நாடாகும். 4 முறை உலகக் கோப்பை போட்டிகளை நடத்த முயற்சி மேற்கொண்டும் அதன் முயற்சி பலன் தரவில்லை. தற்போது 20 ஆண்டுகள் கழித்து மொராக்கோ உலக கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த அணியில் பல திறமையான இளம் வீரர்கள் குறிப்பாக ஹக்கிம் சியெச், யூனுஸ் பெஹன்டா, உள்ளனர். 
நட்சத்திர வீரர் நபிள் டிரார் 
நடுக்கள ஆட்டக்காரரான டிரார் பிரான்ஸ் லீக் போட்டியில் மொனாக்கோ அணி பட்டம் வெல்ல முக்கிய காரணமாக விளங்கினார்.
பயிற்சியாளர் ஹெர்வே ரெனார்ட்
பிரெஞ்ச் நாட்டவரான ஹெர்வே பயிற்சியின் கீழ் மொராக்கோ அணி சிறப்பான தடுப்பாட்டம், வேகமான தாக்குதல் ஆட்டத்தில் சிறப்பாக உள்ளது. இவரது பயிற்சியின் கீழ் ஏற்கெனவே ஜாம்பியா, ஐவரிகோஸ்ட் போன்றவை ஏற்கெனவே ஆப்பிரிக்க கோப்பை பட்டத்தை வென்றன.

கிறிஸ்டியானோ ரொனால்டோ
போர்ச்சுகல் 
ஐரோப்பாவில் சிறிய நாடாக திகழும் போர்ச்சுகல் கால்பந்தில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. பெரிய போட்டிகளிலும் பட்டம் வெல்ல முடியும் என்ற தகுதியுடன் திகழும் போர்ச்சுகல் அணியின் முக்கிய தூணாகவும், நட்சத்திர வீரராகவும் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளங்ககிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு பிரான்ஸில் நடந்த யூரோ சாம்பியன் போட்டியில் ரொனால்டோ காயமடைந்த நிலையிலும் பட்டம் வென்றதே அந்த அணியின் பெரிய வெற்றியாக உள்ளது.
உலகக் கோப்பை போட்டிக்கு செல்லும் போர்ச்சுகல் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். பெப்பே தடுப்பாட்டத்திலும், ஜோவா மெளடின்ஹோ பந்தை கடத்தி அனுப்புவதிலும், ஆன்ட்ரெ சில்வா தாக்குதல் ஆட்டத்திலும் சிறப்பாக ஆடி வருகின்றனர்.
நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ
32 வயதான இவர் முன்பு கோலடிக்கும் இயந்திரம் போல் சிறப்பாக விளையாடிய நிலை தற்போது மாறி உள்ளது. அணி நிர்வாகம் ரொனால்டோவை எவ்வாறு சமயோசிதமாக பயன்படுத்துகிறது என்பதை பொறுத்தே போட்டியின் தன்மை அமையும். 
பயிற்சியாளர் பெர்ணான்டோ சான்டோஸ் 
கடந்த 2014-ஆம் ஆண்டு இவர் பொறுப்பேற்றது முதல் போர்ச்சுகல் அணி தடுப்பாட்டத்தில் சிறந்து விளங்கி வருகிறது.

ஆன்ட்ரெஸ் இனியெஸ்டா 
ஸ்பெயின்
கடந்த சில ஆண்டுகளாக கால்பந்து விளையாட்டில் ஸ்பெயின் பெயர் முக்கியமாக பேசப்பட்டு வருகிறது. கடந்த 2010 உலகக் கோப்பை, 2016-இல் யூரோ சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது. எனினும் 2014-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் பட்டத்தை அந்த அணியால் தக்க வைக்க முடியவில்லை.
திறமையான நடுக்கள, முன்கள வீரர்கள் டேவிட் டே ஜீயே, செர்ஜியோ ரமோஸ், ஜெரார்ட் பிகு ஆகியோர் இருந்தாலும், தாக்குதல் ஆட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வீரர் இல்லாதது அணிக்கு பின்னடைவாக உள்ளது. அல்வரோ மொரட்டா தாக்குதல் ஆட்டத்தில் ஓரளவு ஆடினாலும், அவருக்கு துணையாக டீகோ கோஸ்டா காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார்.
நட்சத்திர வீரர் ஆன்ட்ரெஸ் இனியெஸ்டா 
அணியின் முக்கிய வீரராக ஆன்ட்ரெஸ் இனியெஸ்டா விளங்குகிறார். இவர் அடித்த ஓரே கோலால் தான் 2010 உலகக் கோப்பை பட்டத்தை ஸ்பெயின் வென்றது. 34 வயதாகும் அவர் அதே ஆட்டத் திறனுடன் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. 
பயிற்சியாளர் ஜூலேன் லோப்ட்கை 
இவரது பயிற்சியின் கீழ் ஸ்பெயின் அணி உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டங்களில் தொடர்ந்து 9 வெற்றிகளை ஈட்டியது. ஓரே ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது.

சர்தார் அமோன்
ஈரான்
ஆசியாவில் இருந்துஉலகக் கோப்பை 2018-க்கு தகுதி பெற்ற முதல் நாடாக ஈரான் திகழ்கிறது. இரண்டு தகுதிச் சுற்று போட்டிகளில் 18 ஆட்டங்களில் ஈரான் தொடர் வெற்றியை குவித்தது. சிரியாவுடன் மட்டுமே டிரா செய்தது. தனது 5-வது உலகக் கோப்பை போட்டியில் தகுதி பெற்றுள்ள ஈரான் அணி கடந்த 2014-இல் வெற்றி எதையும பெறாமல் வெளியேறியது. 
நட்சத்திர வீரர் சர்தார் அமோன்
அணியின் முக்கிய வீரராக சர்தார் அமோன் உள்ளார். 22 வயதான முன்கள வீரரான சர்தார் சர்வதேச போட்டிகளில் இதுவரை 22 கோல்களை அடித்து எதிரணிகளுக்கு சவாலாக உள்ளார். 
பயிற்சியாளர் கார்லோஸ் குயிரோஸ்
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் கடந்த 2014-இல் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். தற்போது அணியின் செயல்திறனை மேம்படுத்தி கட்டமைத்து, புதிய இளம் வீரர்களை உருவாக்கி உள்ளார். நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதே லட்சியம், ரஷ்யாவுக்கு நாங்கள் சுற்றுலா பயணிகள் போல் சென்று வரமாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

குரூப் பி பிரிவில் இருந்து போர்ச்சுகல், ஸ்பெயின் உள்ளிட்டவை அடுத்த சுற்றுக்கு முன்னேறக் கூடும்.

டாப் 10 நட்சத்திர வீரர்கள்: நெய்மர் (பிரேசில்)
பிரேசில் அணியின் தூணாகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் உள்ள நெய்மர் சிறந்த முன்கள ஆட்டக்காரராக உள்ளார். கடந்த ஆண்டு பிரான்சின் பிஎஸ்ஜி அணிக்காக உலகிலேயே அதிக தொகை தந்து வாங்கப்பட்ட கால்பந்து வீரராக திகழ்ந்தார். பிரெஞ்ச் லீக் ஆட்டங்களில் 19 கோல்களை அடித்தும், 13 கோல்களை அடிக்க உதவிய நெய்மர் அண்மையில் காயம் காரணமாக ஆட முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது குணமடைந்துள்ள நெய்மர் உலகக் கோப்பையில் பிரேசிலுக்காக விளையாட உள்ளார். 

1974 உலகக் கோப்பை: சாம்பியன் மேற்கு ஜெர்மனி
10-ஆவது உலகக் கோப்பை 1974 மேற்கு ஜெர்மனியில் ஜூன் 13 முதல் ஜூலை 7 வரை 9 நகரங்களில் நடைபெற்றது. 5 கண்டங்களைச் சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றன, போட்டியை நடத்தும் நாடு என மேற்கு ஜெர்மனியும், நடப்புச் சாம்பியன் அந்தஸ்தில் பிரேசிலும் நேரடியாக தகுதி பெற்றன.
மீதி அணிகள் தகுதி ஆட்டங்கள் மூலம் தேர்வாகின. பிரேசில் மூன்றாவது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றதால் ஜூல்ஸ் ரிம்லட் கோப்பை அந்த நாட்டுக்கே பரிசளிக்கப்பட்டது. இதனால் 1974 போட்டிக்கு இத்தாலிய சிற்பி சில்வியோ கஸ்ஸாநிகாவால் வடிவமைக்கப்பட்ட தற்போதைய கோப்பை பயன்படுத்தப்பட்டது. 4 குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டு லீக் மற்றும் நாக் அவுட் ஆட்டங்கள் நடந்தன.
இறுதிச் சுற்றில் பிரான்ஸ் பெக்கன்பர் தலைமையிலான மேற்கு ஜெர்மனியும், ஜோஹன் கிரஃப் தலைமையிலான நெதர்லாந்து அணியும் மோதின. இதில் மேற்கு ஜெர்மனி 2-1 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக வென்றது,
தகுதி ஆட்டத்தில் தோற்றிருந்தாலும், சாம்பியன் பட்டத்தை மேற்கு ஜெர்மனி வென்றிருந்தது. ஜெர்ட் முல்லரின் சிறப்பான ஆட்டத்தால் ஜெர்மனி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
* மொத்த ஆட்டங்கள்: 38.
* அடிக்கப்பட்ட கோல்கள்; 97.
* பார்வையாளர்கள்: 18,65,762.
* அதிக கோலடித்தவர்; 
கிரகோர்ஸ் லட்டோ (போலந்து)
-7 கோல்கள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/5/w600X390/1974_GERMANY.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/05/உலகக்-கோப்பை-கால்பந்து-2018-2933239.html
2929921 விளையாட்டு FIFA 2018 உலகக் கோப்பை கால்பந்து 2018  DIN DIN Thursday, June 14, 2018 04:29 PM +0530
பிஷ்ட் ஒலிம்பிக் மைதானம் (பார்வையாளர்கள்: 48,000)
கடந்த 2014-இல் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்காக சோச்சியில் பிஷ்ட் ஒலிம்பிக் மைதானம் கட்டப்பட்டது. ஒலிம்பிக்கில் தொடக்க, நிறைவு விழாக்கள் இதில் நடைபெற்றன. உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக கூடுதலாக 6 ஆயிரம் இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. 2018 உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக இங்கு 4 முதல் சுற்று ஆட்டங்கள், காலிறுதிக்கு முந்தைய ஆட்டம், ஒரு காலிறுதி ஆட்டம் என 6 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
கடந்த 2017-ஆம் ஆண்டு கன்பெடரேஷன்ஸ் போட்டி அரையிறுதி ஆட்டங்களும் இங்கு நடைபெற்றன.

ஏகடெரின்பர்க் அரேனா மைதானம் (பார்வையாளர்கள்: 45,000)


கடந்த 1957-இல் கட்டப்பட்ட இந்த மைதானம் முதலில் பல்நோக்கு வகையில் பயன்பட்டது. பின்னர் 2007-இல் மைதானம் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு 2011-இல் முடிக்கப்பட்டதை அடுத்து, உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் மைதானங்களில் ஒன்றாக ஏகடெரின்பர்க் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், தொடக்கத்தில் பிஃபா ஒப்புதல் கிடைக்காததை அடுத்து, பின்னர் அந்த தரத்துக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டது.
எஃப் சி யுரல் அணியின் சொந்த மைதானமாக இது உள்ளது. இந்த உலகக் கோப்பை போட்டியின் 4 முதல் சுற்று ஆட்டங்கள் இங்கு நடைபெறவுள்ளன.
5-ஆவது உலகக் கோப்பை (1954): மேற்கு ஜெர்மனி சாம்பியன்


1954-ம் ஆண்டு ஐந்தாவது உலகக் கோப்பை ஸ்விட்சர்லாந்து நாட்டில் நடைபெற்றது. இதில் மேற்கு ஜெர்மனி முதன்முறையாக சாம்பியன் ஆனது.
ஜூன் 16 முதல் ஜூலை 4- ஆம் தேதி வரை 19 நாள்கள் நடந்த இப்போட்டியில் 4 கண்டங்களைச் சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றன. 6 நகரங்களில் போட்டிகள் நடந்தன. இதில் அதிக கோலடித்தல், கோல் சராசரி போன்றவற்றில் சாதனைகள் படைக்கப்பட்டன. 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடந்தன. தரவரிசையில் இடம் பிடித்த 8 நாடுகள், அதில் இடம் பெறாத நாடுகள் என பிரிக்கப்பட்டு போட்டிகள் நடந்தன. முதல் அரையிறுதியில் மேற்கு ஜெர்மனி 6-1 என ஆஸ்திரியாவையும், இரண்டாவது அரையிறுதியில் ஹங்கேரி 2-1 என்ற கோல் கணக்கில் உருகுவேயையும் வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றன. மேற்கு ஜெர்மனி-ஹங்கேரி மோதிய இறுதி ஆட்டத்தைக் காண பெர்ன் மைதானத்தில் 60 ஆயிரம் பேர் கூடியிருந்தனர். தொடர் வெற்றி பெற்றிருந்த ஹங்கேரியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மேற்கு ஜெர்மனி முதல்முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றது.
மொத்த ஆட்டங்கள் 26 
மொத்த கோல்கள் 140 
பார்வையாளர்கள் 7,68,607 
அதிக கோலடித்தவர் சான்டோர் கோஸிஸ் (11)
டாப் 10 வீரர்கள்: 


பாவ்லோ டபாலா (ஆர்ஜென்டீனா)
ஆர்ஜென்டீனாவின் இளம் வீரரான பாவ்லோ டபாலா (23) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஏற்கெனவே ஜுவென்டஸ் அணி சார்பில் விளையாடி ரசிகர்களின் உள்ளத்தில் இடம் பெற்றுள்ளார். மேலும் இத்தாலியன் கால்சியோ அணிக்காகவும் சிறப்பாக விளையாடியுள்ளார்.
இந்த சீசனில் 7 லீக் ஆட்டங்களில் 10 கோல்களை அடித்துள்ளார் டபாலா. ஆர்ஜென்டீனா அணியின் கேப்டன் மெஸ்ஸிக்கு நிகராக வளரும் சிறந்த இளம் வீரர் என டபாலா புகழப்படுகிறார். பந்தை கடத்துவது, பாஸ் செய்வது, கோல்களை அடிப்பதில் சிறப்பாக செயல்படுகிறார். 
கிறிஸ்டியானோ ரொனால்டோ அல்லது மெஸ்ஸி போன்றவர்களுக்கு தான் நிகரில்லை எனக் கூறும் ஜுவென்டஸ் நட்சத்திரமான டபாலா, அவரது ஆட்டத்திறனால் விரைவில் அத்தகைய புகழை அடையப் போவது நிச்சயம். உலகக் கோப்பையில் டபாலா ஜொலித்து தனது ஆர்ஜென்டீனா அணியை தற்போதுள்ள தேக்க நிலையிலிருந்து வெற்றிக்கு அழைத்துச் செல்வாரா என 
ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/31/w600X390/r3.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/may/31/உலகக்-கோப்பை-கால்பந்து-2018-2929921.html
2929238 விளையாட்டு FIFA 2018 உலகக் கோப்பை கால்பந்து 2018: மைதானங்கள் - ஒரு பார்வை DIN DIN Thursday, June 14, 2018 04:29 PM +0530 செயின்ட் பீட்டர்ஸ்பர்க் (பார்வையாளர்கள் 67,000)
ரஷியாவின் இரண்டாவது பெரிய நகரான செயிண்ட்பீட்டர்ஸ்பர்கில் ரெஸ்டோவிஸ்கி மைதானம் கடந்த 2006-இல் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு இறுதியாக 2017-இல் தான் முடிக்கப்பட்டது. ஸெனிட் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அணி இங்கு பயிற்சி மேற்கொள்கிறது. மேலும் இங்கு பிஃபா கன்பெடரேஷன் கோப்பை போட்டிகளும் நடைபெற்றன.
இந்த மைதானத்தில் 4 லீக் சுற்று ஆட்டங்கள், ஒரு காலிறுதி ஆட்டம், அரையிறுதி, மூன்றாவது இடத்துக்கான ஆட்டங்கள் நடக்கின்றன.

ஸ்பார்டக் மைதானம் (மாஸ்கோ) மொத்த பார்வையாளர்கள்-42,000


எஃப் சி ஸ்பார்டஸ் கிளப் அணி பயன்படுத்தி வரும் இந்த மைதானம் 2014-இல் கட்டி முடிக்கப்பட்டது. முதலில் 35 ஆயிரம் இருக்கை வசதிகளுடன் கட்ட திட்டமிடப்பட்டு, பின்னர் உலக கோப்பையை கருதி 42 ஆயிரமாக இருக்கைகள் அதிகரிக்கப்பட்டன. மாஸ்கோவில் இரண்டாவது மைதானமாக இது உள்ளது. இங்கு 5 ஆட்டங்கள் நடக்கின்றன.

டாப் 10 நட்சத்திர வீரர்கள்
ரஷியாவில் நடக்கவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கவனிக்கப்பட வேண்டிய டாப் 10 நட்சத்திர வீரர்கள்.
உலகத்திலேயே அதிக மக்களால் விரும்பப்படும் விளையாட்டுகளில் கால்பந்து முதலிடம் வகிக்கிறது. அதிலும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை போட்டிகள் பிரபலமானவை. ரஷியாவில் வரும் ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை போட்டிகள் நடக்கின்றன.
கடந்த 20 ஆம் நூற்றாண்டில் பிரேசிலன் பீலே, டிகோ மாரடானா ஆகியோர் தலைசிறந்த வீரர்களாக அறியப்பட்டனர்.
இந்நிலையில் ஆட்டத்தின் போக்கையே மாற்றக் கூடிய டாப் 10 வீரர்கள் வருமாறு:

டிமோ வெர்னர் (ஜெர்மனி)


21 வயதே ஆன ஜெர்மனியின் இளம் வீரரான வெர்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த கன்பெடரேஷன்ஸ் கோப்பை போட்டியில் தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார். தங்ககாலணி விருதுக்கான போட்டியில் வெர்னரும் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெர்மன் அணியின் தாக்குதல் ஆட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார். கோல்கள் அடிப்பதிலும், கோலடிக்கும் வாய்ப்பை உருவாக்குவதிலும் வெர்னர் சிறந்து விளங்குகிறார். ஏற்கெனவே பண்டஸ்லீகா லீக் போட்டியில் 5 கோல்களை அடித்துள்ளார்.

1950 நான்காவது உலகக் கோப்பை: சாம்பியன் உருகுவே


1950-ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாம் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் உருகுவே இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
1938 உலகக் கோப்பை போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. இதனால் நிலவிய பதற்றமான சூழலால் 1942, 1946-இல் நடத்த வேண்டிய உலகக் கோப்பை போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. போரினால் ஐரோப்பா நிலைகுலைந்து போயிருந்தது. இதனால் தென் அமெரிக்காவில் போட்டிகளை நடத்த பிஃபா முடிவு செய்தது. இதன்படி பிரேசில் நாட்டில் போட்டிகள் நடைபெற்றன.
போட்டியை நடத்தும் நாடு பிரேசில், நடப்புச் சாம்பியன் இத்தாலி போன்றவை நேரடியாக தகுதி பெற்றன. ஜெர்மனி, ஜப்பான் போன்றவை பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. சோவியத் யூனியன், செக், ஹங்கேரி போன்றவை பங்கேற்கவில்லை. இறுதியாக 13 அணிகள் பங்கேற்றன. 6 நகரங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. ரவுண்ட் ராபின் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டு பிரேசில், ஸ்வீடன், உருகுவே, ஸ்பெயின் ஆகியவை அரையிறுதிக்கு முன்னேறின. இறுதியாக நடந்த ஆட்டத்தில் உருகுவே 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
மொத்த ஆட்டங்கள் 22
மொத்த கோல்கள் 88
பார்வையாளர்கள் 10, 45, 246
அதிக கோலடித்தவர் அடெமீல் (8)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/30/w600X390/stpetersburgnew_top.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/may/30/உலகக்-கோப்பை-கால்பந்து-2018-மைதானங்கள்---ஒரு-பார்வை-2929238.html
2930622 விளையாட்டு FIFA 2018 உலகக் கோப்பை கால்பந்து 2018 DIN DIN Thursday, June 14, 2018 04:29 PM +0530 கசான் (பார்வையாளர்கள்-45,000)
எஃப் சி ரூபன் கசானா அணியின் சொந்த மைதானமாக விளங்கும் இது, கடந்த 2010-ல் கட்டும் பணி தொடங்கப்பட்டு, 2013-இல் நிறைவு பெற்றது. முதன்முதலில் ரஷியா-ஸ்லோவோக்கியா இடையேயான நட்பு ஆட்டம் இந்த மைதானத்தில் நடைபெற்றது.
கடந்த 2017-இல் கன்பெடரேஷன் கோப்பை போட்டிகளும் நடந்தன. பின்னர் உலகக் போட்டிக்கான மைதானமாக தேர்வு செய்யப்பட்டு சீரமைப்பு பணிகள் நடந்தன. இங்கு 4 முதல் சுற்று ஆட்டங்கள், காலிறுதிக்கு முந்தைய ஆட்டம், ஒரு காலிறுதி ஆட்டம் உள்ளிட்டவை நடக்கின்றன.

நிஷ்னி நோவோகிராட் (பார்வையாளர்கள்-44,899) 
நோவோகிராட் நகரில் புதிதாக கட்டப்பட்ட நிஷ்னி மைதானம் உலகக் கோப்பை போட்டி மைதானங்களில் ஒன்றாக கடந்த 2012-இல் தீர்மானிக்கப்பட்டது. 2015-இல் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டு 2018 தொடக்கத்தில் முடிவுற்றது.
எஃப்சி ஓலிம்பியட்ஸ் அணி மைதானமாக இது உள்ளது. வோல்கா நதிக்கரையில் அருமையான இயற்கை சூழலில் அமைந்துள்ள இந்த மைதானத்தில், 4 முதல் சுற்று ஆட்டங்கள், காலிறுதிக்கு முந்தைய ஆட்டம், காலிறுதி ஆட்டங்கள் நடக்கின்றன.

டாப் 10 நட்சத்திர வீரர்கள்: கிலியான் பாப்பே (பிரான்ஸ்) 
பிரான்ஸ் நாட்டு கால்பந்து ரசிகர்களின் ஒட்டுமொத்த வரவேற்பை பெற்றுள்ள கிலியான் பாப்பே, லீக் 1 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 18 வயது இளம் வீரரான பாப்பே, சாம்பியன்ஸ் லீக் நடப்பு சீசனில் மொத்தம் 6 கோல்களை அடித்து தனது ஏஎஸ் மொனாக்கோ அணி அரையிறுதிக்கு தகுதி பெற உதவினார்.
பிரான்ஸ் நாட்டு தேசிய அணியில் இடம் பெற்றுள்ள இவரை, பிரபல பாரிஸ் செயின்ட் ஜெர்மன் கிளப் 180 மில்லியன் யூரோ தொகை கொடுத்து (நெய்மருக்கு அடுத்து உலகிலேயே அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட இரண்டாவது வீரர்) வாங்கியது.
உலகக் கோப்பை போட்டியில் பிரான்ஸ் அணி இவரது முன்கள ஆட்டத்தை பெரிதும் நம்பியுள்ளது. அணி தோல்வியுறும் சமயங்களில் கூட பாப்பே சிறப்பாக ஆடி நிலையை மாற்றியுள்ளார். துடிப்பான ஆட்டம், பந்தை டிரிப்ளிங் செய்வதில் சிறந்த வீரராக பாப்பே திகழ்கிறார். 

6-ஆவது உலகக் கோப்பை (1958): பிரேசில் சாம்பியன்
1958-இல் ஸ்வீடனில் 12 நகரங்களில் நடைபெற்ற 6-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முதன்முறையாக பிரேசில் 5-2 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் போட்டியில்தான் புகழ் பெற்ற வீரர் பீலே தனது 17-வது வயதில் களமிறங்கினார்.
நடப்புச் சாம்பியன் மேற்கு ஜெர்மனி, போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் ஸ்வீடன் நேரடியாக தகுதி பெற்றன. இதர 14 இடங்களில் ஐரோப்பாவுக்கு 9, தென் அமெரிக்காவில் 3, வட அமெரிக்காவில் 1, ஆசியாவில் 1 என ஒதுக்கப்பட்டன. முதன்முறையாக சோவியத் யூனியன், வட அயர்லாந்து அணிகள் தகுதி பெற்றன.
4 குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டன. முதன்முறையாக இந்த போட்டியில் தான் கோல் சராசரி கடைப்பிடிக்கப்பட்டது. காலிறுதிக்கு பின் அரையிறுதியில் ஸ்வீடன் 5-1 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் பிரேசில் 5-2 என்ற கோல் கணக்கில் பிரான்ûஸ வீழ்த்தியது. இதில் பீலே ஹாட்ரிக் கோலடித்தார்.
சோல்னாவில் நடந்த இறுதி ஆட்டத்தில் 5-2 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை வீழ்த்தி பிரேசில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த போட்டியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டன. முதன்முறையாக இளம் வீரர் பீலே பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்றார். 35 வயதான நில்ஸ் லைட்ஹோம் இறுதி ஆட்டத்தில் கோலடித்த வயதான வீரர் ஆனார். இறுதி ஆட்டத்தில் முதன்முறையாக 7 கோல்கள் அடிக்கப்பட்டன.
* மொத்த ஆட்டங்கள் 35
* அடிக்கப்பட்ட கோல்கள் 26
* பார்வையாளர்கள் 8,19,810
* அதிக கோல்கள் 
ஜஸ்ட் போன்டைன் (13)
=சிறந்த இளம் வீரர் பீலே

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/1/w600X390/KAZAN.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/01/உலகக்-கோப்பை-கால்பந்து-2018-2930622.html
2928577 விளையாட்டு FIFA 2018 உலகக் கோப்பை கால்பந்து 2018: மைதானங்கள் ஒரு பார்வை DIN DIN Thursday, June 14, 2018 04:28 PM +0530 லூசினிக்கி மைதானம் (மாஸ்கோ)


ரஷியாவில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 11 நகரங்களில் உள்ள 12 மைதானங்களில் 65 ஆட்டங்கள் ஜூன் 14-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. 

இதற்காக அமைக்கப்பட்ட பெரிய மைதானம் மாஸ்கோவில் உள்ள லூசினிக்கி மைதானம் ஆகும். சிறிய மைதானம் காலின்கிராட் நகர மைதானம் ஆகும்.
தொடக்க, இறுதி ஆட்டங்கள் நடக்க உள்ள லூசினிக்கி விளையாட்டரங்கம் (மாஸ்கோ)-

மொத்த பார்வையாளர்கள்-81000, இந்த விûளாட்டரங்கம் கடந்த 1956-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1980-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் இங்கு நடைபெற்றன. கடந்த 1982-இல் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி ஒன்றில் ரசிகர்கள் அவசரமாக வெளியேற முயன்றதால் ஏற்பட்ட நெரிசலில் 65 பேர் உயிரிழந்தனர்.
1996-இல் மேற்கூரை அமைக்கப்பட்டு மைதானம் புதுப்பிக்கப்பட்டது. 1999, 2008-இல் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதி ஆட்டங்கள் நடந்தன. இந்நிலையில் தற்போது நடக்கவுள்ள உலகக் கோப்பை போட்டியில் தொடக்க, இறுதிச் சுற்று ஆட்டம், 3 முதல் சுற்று ஆட்டங்கள், அரையிறுதி ஆட்டம் போன்றவையும் லூசினிக்கி மைதானத்தில் நடக்கின்றன.

சிறிய மைதானம் காலின் கிராட்


காலின்கிராட் நகரில் அமைந்துள்ள அரேனா பால்டிக்கா எனப்படும் இந்த மைதானம் உலகக் கோப்பையை முன்னிட்டு கடந்த 2015-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. நிதிச் சிக்கல் உள்பட பல்வேறு காரணங்களால் இந்த மைதானம் கட்டப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. 
இதில் மொத்தம் 35000 பார்வையாளர்கள் அமர முடியும். உலகக் கோப்பையில் ஆட்டங்கள் நடைபெறுவதில் இது மிகச் சிறிய மைதானமாகும். காலின் கிராட் மைதானத்தில் 4 லீக் சுற்று துவக்க ஆட்டங்கள் நடக்கின்றன. எஃப் சி பால்டிகா அணி இதை தாயகமாகக் கொண்டு விளையாடி வருகிறது. 12 மைதானங்களில் இதுதான் சிறிய மைதானமாகும்.

1938 மூன்றாவது உலகக் கோப்பை சாம்பியன் இத்தாலி

1938-ம் ஆண்டு நடைபெற்ற மூன்றாம் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இத்தாலி சாம்பியன் பட்டம் வென்றது.
1936-இல் நடந்த பிஃபா கூட்டத்தில் பிரான்ஸில் உலக கோப்பை போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக ஐரோப்பாவில் போட்டி நடத்த அனுமதி தரப்பட்டதால், தென் அமெரிக்க நாடுகள் அதிருப்தி அடைந்தன. உருகுவே, ஆர்ஜென்டீனா போன்றவை இதில் பங்கேற்கவில்லை.

நடப்புச் சாம்பியன் என இத்தாலியும், போட்டியை நடத்தும் நாடு என பிரான்ஸும் நேரடியாக தகுதி பெற்றன. மீதமுள்ள 14 இடங்களில் 11 இடங்கள் ஐரோப்பாவுக்கும், 2 இடங்கள் அமெரிக்காவுக்கும், 1 இடம் ஆசியாவுக்கும் ஒதுக்கப்பட்டது. 1938 ஜூன் 4 முதல் 19-ஆம் தேதி வரை (16 நாள்கள்) போட்டி 10 நகரங்களில் நடைபெற்றது. 

அரையிறுதியில் ஸ்வீடனை 5-1 என ஹங்கேரியும், பிரேசிலை 2-1 என இத்தாலியும் வென்று இறுதிக்கு தகுதி பெற்றன. பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டரங்கில் நடந்த இறுதி ஆட்டத்தில் ஹங்கேரியை 4-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி வென்று தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இரண்டாம் உலகப் போரால் பாதிப்பு: இந்நிலையில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றதால் 1942, 1946-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளை நடத்த முடியவில்லை. அதன் பின்னர் 1950-இல் தான் நிலைமை சீரடைந்தது. எதிரி நாடுகளிடம் இருந்து கோப்பையை பாதுகாக்கும் வகையில் அப்போதைய பிஃபா துணைத் தலைவர் ஓட்டாரினோ காலணி பெட்டியில் மறைத்து வைத்திருந்தார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/29/w600X390/luzhniki10.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/may/29/உலகக்-கோப்பை-கால்பந்து-2018-மைதானங்கள்-ஒரு-பார்வை-2928577.html
2933649 விளையாட்டு FIFA 2018 ஜாம்பவான்கள் முதல் ஆட்டம்: 15-இல் ஸ்பெயின்-போர்ச்சுகல் மோதல் DIN DIN Thursday, June 14, 2018 04:27 PM +0530 உலக கோப்பை 2018-இல் ஜாம்பவான் அணிகள் மோதும் முதல் ஆட்டமாக 15-ஆம் தேதி ஸ்பெயின்-போர்ச்சுகல் அணிகள் மோதுகின்றன.
வரும் 14-ஆம் தேதி உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் மாஸ்கோவில் தொடங்குகின்றன. துவக்க ஆட்டத்தில் ரஷியா-சவுதி அரேபிய அணிகள் மோதுகின்றன. 
இதன் தொடர்ச்சியாக கால்பந்து ஜாம்பவான்களின் முதல் ஆட்டமாக ஸ்பெயின்-போர்ச்சுகல் அணிகள் 15-ஆம் தேதி சோச்சியில் நடக்கிறது. இதுவரை உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு போர்ச்சுகல் ஒருமுறை கூட தகுதி பெறாத நிலையில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவையே பெரிதும் நம்பி உள்ளது. கடந்த 2016 யூரோ போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஊக்கத்தில் போர்ச்சுகல் அணி இந்த உலகக் கோப்பையில் களமிறங்கியுள்ளது.
அதே நேரத்தில் 2010-ஆம் ஆண்டு உலக சாம்பியனான ஸ்பெயின் அணி கடந்த 2014 உலகக் கோப்பையில் நெதர்லாந்து, சிலி போன்ற அணிகளிடம் தகுதிச் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது. நிகழாண்டு உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டங்களில் சிறப்பாக ஆடியதின் மூலம் ஸ்பெயின் தகுதி பெற்றுள்ளது.
2010-இல் சாம்பியன் பட்டம் வெல்ல காரணமான ஆன்ட்ரெஸ் இனியெஸ்டா ஸ்பெயின் அணிக்காக தனது கடைசி உலகக் கோப்பை போட்டியில் ஆட உள்ளார்.
அதே நேரத்தில் 5 முறை தங்கக் காலணி விருதை வென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோவும் ஆடும் கடைசி உலகக் கோப்பை போட்டியாக இது அமையும். பல்வேறு கிளப் சாம்பியன் பட்டங்கள் அனைத்தையும் தன் வசம் வைத்துள்ள அவருக்கு இதுவரை உலக சாம்பியன் பட்டம் கிடைக்கவில்லை. குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு எளிதாக முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
எனினும் மொராக்கோவும், ஈரானும் தகுதிச் சுற்று ஆட்டங்களில் திடீர் ஆச்சர்ய வெற்றிகளை குவிக்கும் வாய்ப்பும் உள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/6/w600X390/fifa-2018.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/06/ஜாம்பவான்கள்-முதல்-ஆட்டம்-15-இல்-ஸ்பெயின்-போர்ச்சுகல்-மோதல்-2933649.html
2938921 விளையாட்டு FIFA 2018 உலகக் கோப்பை கால்பந்து 360: இன்று முதல் ஆட்டம்: ரஷியா-சவூதி அரேபியா மோதல் DIN DIN Thursday, June 14, 2018 10:39 AM +0530 ஃபிஃபா 21-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் வியாழக்கிழமை தொடங்குகிறது. உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடைபெறுவது இது முதல்முறையாகும்.
தலைநகர் மாஸ்கோவில் வியாழக்கிழமை நடைபெறும் முதல் ஆட்டத்தில், போட்டியை நடத்தும் ரஷியாவும்- சவூதி அரேபியாவும் மோதுகின்றன. ரஷியா-சவூதி அரேபியா அணிகள் மோதும் முதல் ஆட்டம், மாஸ்கோவில் 80,000 பேர் அமரும் வகையிலான வசதி கொண்ட லுஸ்னிகி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. முதல்நாளில் இந்த ஓர் ஆட்டம் மட்டும் நடைபெறவுள்ளது. 
உலகக் கோப்பை போட்டியை ஒட்டி அனைத்து அணிகளும், சர்வதேச நாடுகளில் இருந்து ரசிகர்களும் ரஷியாவில் குவிந்துள்ளனர். அங்கு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும், முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சோச்சிக்கு புதன்கிழமை வந்தடைந்த போலந்து அணியினர்.

ஸ்பெயின் பயிற்சியாளர் அதிரடி நீக்கம்
உலகக் கோப்பை போட்டி தொடங்க ஒரே நாள் இருந்த நிலையில், ஸ்பெயின் கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஜுலன் லோபெடெகுய் அதிரடியாக அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
அவர், ரியல் மாட்ரிட் அணியின் மேலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து ஸ்பெயின் அணி நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கையாக உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் ஸ்பெயின் அணிக்கான பயிற்சியாளராக ஃபெர்னான்டோ ஹியரோ உடனடியாக நியமிக்கப்பட்டார். ஸ்பெயின் 2-ஆவது டிவிஷன் அணிக்கு பயிற்சியளித்த அனுபவம் மட்டுமே ஃபெர்னான்டோவுக்கு உள்ளது.

1,300 பேருக்கு இங்கிலாந்து தடை
உலகக் கோப்பை போட்டிக்கு இடையூறை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக 1,312 குண்டர்கள் ரஷியா செல்ல இங்கிலாந்து தடை விதித்துள்ளது.
இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் அளித்துள்ள தகவலின்படி, அவர்களில் 1,254 பேர் தங்களது கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்களை அரசிடம் ஒப்படைத்துள்ள நிலையில், 58 பேர் தேடப்பட்டு வருகின்றனர். கால்பந்து விளையாட்டுக்கும், ரசிகர்களுக்கும் இடையூறு ஏற்படுவதை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது. மேலும், கால்பந்து ரசிகர்கள் சுமார் 10,000 பேர் இங்கிலாந்திலிருந்து ரஷியா செல்ல இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016-இல் யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் இரு நாட்டு ரசிகர்களிடையே மோதல் எழுந்த சம்பவத்தின் அடிப்படையில் இந்தத் தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடாவில் 2026 உலகக் கோப்பை
2026-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா நாடுகள் பெற்றுள்ளன.இதற்கான தேர்தல் ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் புதன்கிழமை நடைபெற்ற நிலையில், போட்டியில் முன்னணியில் இருந்த மொராக்கோவை பின்னுக்குத்தள்ளி அந்த மூன்று நாடுகள் தங்களுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளன.
கடந்த 1994-ஆம் ஆண்டு அமெரிக்கா உலகக் கோப்பை போட்டியை நடத்திய பிறகு, முதல் முறையாக அந்தப் போட்டியை நடத்தும் வாய்ப்பை வட அமெரிக்க நாடான மெக்ஸிகோ பெற்றுள்ளது.
2026-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அணிகளின் எண்ணிக்கை 48-ஆக உயர்த்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

களம் திரும்புகிறார் முகமது சலா?
எகிப்து கால்பந்து அணியின் உலகக் கோப்பை கனவை நீடிக்கச் செய்யும் வகையில் அந்த அணியின் நட்சத்திர வீரர் முகமது சலா போட்டியில் பங்கேற்க வாய்ப்பு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாத இறுதியில் சாம்பியன்ஸ் லீக் போட்டியின் இறுதிச்சுற்றில் ரியல் மாட்ரிட் அணிக்கு எதிரான மோதலின்போது காயமடைந்த முகமது சலா, அதன் பிறகு பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்கவில்லை.அவர் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் நிலவி வந்த நிலையில், புதன்கிழமை அவர் தனது அணியினருடன் முதல் முறையாக பயிற்சியில் ஈடுபட்டார்.
அதுகுறித்து அணி இயக்குநர் இஹப் லஹிதா கூறுகையில், முகமது சலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் தெரிகிறது. எனினும், வெள்ளிக்கிழமை நடைபெறும் உருகுவேக்கு எதிரான எகிப்தின் முதல் ஆட்டத்தில் அவர் பங்கேற்பாரா என உறுதியாகக் கூற இயலாது' என்றார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆர்ஜென்டீனா கைதிகள்
உலகக் கோப்பை கால்பந்து போட்டியை காணும் வகையில், சிறையில் பழுதடைந்திருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளை சரிசெய்து தருமாறு ஆர்ஜென்டீனாவின் பியூர்டோ மாட்ரின் நகரில் இருக்கும் சிறையில் உள்ள கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கால்பந்து விளையாட்டை பார்ப்பது தங்களது அடிப்படை உரிமை என்று கூறியுள்ள அவர்களில் சிலர், இதுதொடர்பாக புகார் மனு அளிக்க முனைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆர்ஜென்டீனா அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் சனிக்கிழமை ஐஸ்லாந்தை சந்திக்கிறது.

பாதுகாப்பு நடவடிக்கையில் இங்கிலாந்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக ரஷியா செல்லும் இங்கிலாந்து அணியினர், ரஷிய ஹேக்கர்களிடம் இருந்து எவ்வாறு தங்களது தரவுகளை பாதுகாத்துக் கொள்வது என்பதற்கான விளக்கங்களை இங்கிலாந்து தனது வீரர்களுக்கு அளித்துள்ளது. மேலும், இங்கிலாந்து வீரர்களின் செல்லிடப்பேசிகள் மற்றும் மின்னணு சாதனங்களில் பாதுகாப்பு மென்பொருள் ஒன்று பொருத்தப்பட்டுள்ளதாகவும், நாடு திரும்பிய பிறகே அது அகற்றப்படும் என்றும் டெய்லி மெயில் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.இங்கிலாந்து பிரபலங்களை குறிவைத்து ரஷிய ஹேக்கர்கள் சமீப காலங்களில் தரவுத் திருட்டு நடத்தி வருவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/14/w600X390/food-ball.jpg ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மைதானத்தில் புதன்கிழமை பயிற்சியில் ஈடுபட்டிருந்த இங்கிலாந்து அணியினர். http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/14/உலகக்-கோப்பை-கால்பந்து-360-இன்று-முதல்-ஆட்டம்-ரஷியா-சவூதி-அரேபியா-மோதல்-2938921.html
2938890 விளையாட்டு FIFA 2018 2026 ஃபிஃபா உலகக் கோப்பை: அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ தேர்வு Raghavendran DIN Wednesday, June 13, 2018 06:45 PM +0530  

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை போட்டித் தொடர் நடத்தும் நாடுகளுக்கான ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஒருங்கிணைந்த நாடுகளான அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகள் வெற்றிபெற்றுள்ளன.

இந்த ஏலத்தில் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய ஒருங்கிணைந்த நாடுகளுக்கு எதிராக மொராக்கோ போட்டியிட்டது. இதில் ஒருங்கிணைந்த நாடுகளுக்கு ஆதரவாக 134 வாக்குகளும், மோராக்கோவுக்கு ஆதரவாக 65 வாக்குகளும் கிடைத்தன. 

எனவே 2026 ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை போட்டித் தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.

அதுபோல 2026 உலகக் கோப்பையில் கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக 48 அணிகள் பங்கேற்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச அரசியலில் எதிர் நிலைப்பாடு கொண்ட ரஷியா (நடப்பு உலகக் கோப்பை நடத்தும் நாடு) அமெரிக்க ஒருங்கிணைந்த நாடுகளுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

]]>
FIFA , FIFA 2026 World Cup, ஃபிஃபா, கால்பந்து உலகக் கோப்பை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/13/w600X390/fifa.jpg http://www.dinamani.com/sports/football-worldcup-2018/2018/jun/13/fifa-2026-world-cup-to-be-held-in-us-canada--mexico-2938890.html