Dinamani - விவசாயம் - http://www.dinamani.com/agriculture/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2846176 விவசாயம் உயர் விளைச்சல் தரும் மரவள்ளி சாகுபடி தொழில்நுட்பங்கள்! Thursday, January 18, 2018 12:59 AM +0530 நாமக்கல்: மரவள்ளிப் பயிரில் சாகுபடி தொழில்நுட்பங்களை முறையாகப் பின்பற்றினால் கூடுதல் மகசூல் பெறலாம் என ரிலையன்ஸ் அறக்கட்டளையின் வேளாண் தொழில்நுட்ப ஆலோசகரும், ஓய்வுபெற்ற வேளாண் துணை இயக்குநருமான மதனகோபால் தெரிவித்தார்.
மண்வகை:இதற்கு மண் மற்றும் மணல் கலந்த பூமி ஏற்றது. களிமண் மற்றும் வண்டல் மண்ணில் சாகுபடி செய்ய இயலாது. மண்ணில் கார அமிலத் தன்மை 6 முதல் 6.5 சதவீதம் வரை இருத்தல் வேண்டும்.
மரவள்ளியை இறவையிலும், மானாவாரியிலும் சாகுபடி செய்யலாம். மலைப் பிரதேசங்களில் மானாவாரியில் சாகுபடி செய்யப்படுகிறது. இறவையில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடவு செய்யலாம்.
ரகங்கள்:நீர்ப் பாசன வசதியுள்ள சமவெளிப் பகுதிகளில் முள்ளுவாடி, கோ-2, தாய்லாந்து, பர்மா, குங்குமரோஸ் போன்ற ரகங்களும், நீர்ப்பாசனம் குறைவாக உள்ள பகுதிகளில் எச்-226 என்ற ரகமும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஏத்தாப்பூர்-1 என்ற ரகம் இறவை சாகுபடிக்கு உகந்தது. 
விதைக் கரணை தேர்வு, நேர்த்தி: நன்கு வளர்ச்சி அடைந்த நோய் தாக்காத செடிகளிலிருந்து விதைக் கரணைகளைத் தேர்வு செய்து, குச்சியின் மேல் பாகம் மற்றும் அடிபாகத்தை நீக்கிவிட்டு நடுப் பாகத்திலிருந்து 15 செ.மீ. நீளமான தரமான குச்சிகளை வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
குச்சிகளை நடுவதற்கு முன், இயற்கை முறையாக இருந்தால் 1 லிட்டர் நீருக்கு 30 கிராம் அசோஸ்பைரில்லம், 30 கிராம் பாஸ்போபாக்டீரியா, 10 கிராம் டி.விரிடி வீதம் ஒரு ஏக்கருக்குத் தேவையான அளவு கரைசலை தயார் செய்து, அதில் 15 நிமிடம் நடவு கரணைகளை ஊறவைத்து அதன் பின்னர் நடவு செய்ய வேண்டும். 
மானாவாரிப் பயிராக இருந்தால் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் பொட்டாசியம் குளோரைடு, சிங்க் சல்பேட் 5 கிராம் மற்றும் பெரஸ் சல்பேட் 5 கிராம் வீதம் தேவையான அளவு கரைசலைத் தயார் செய்து, நடவு கரணைகளை 15 நிமிடம் ஊறவைத்து நடவு செய்ய வேண்டும். நடவு செய்யும் போது, கணுவின் பருக்கள் மேல்நோக்கி இருக்குமாறு நடுவது மிகவும் அவசியம்.
பயிர் இடைவெளி: இறவைப் பயிருக்கு வரிசைக்கு 75 செ.மீ. பார்களும், செடிக்கு 75 செ.மீ. இடைவெளியும் இருத்தல் வேண்டும். மானவாரிப் பயிருக்கு வரிசைக்கு 60 செ.மீ. பார்களும், செடிக்கு 60 செ.மீ. இடைவெளியும் இருத்தல் வேண்டும். 
உர அளவு: கடைசி உழவில் ஒரு ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் மற்றும் 100 கிலோ ஜிப்சம் இடுவதன் மூலம் மண் இலகுவாகி கிழங்குகள் நன்கு பருமனாவதுடன், கிழங்குகளின் மாவுச்சத்து அளவும் அதிகரிக்கும். 
நீர் நிர்வாகம்: மரவள்ளி நட்ட மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் விட வேண்டும். பின் செடிகள் நன்றாக வளர ஒரு மாதம் வரை 3 நாள்களுக்கு ஒருமுறையும், பின் 2-ஆம் மாதம் முதல் 7 மாதங்கள் வரை 7 முதல் 10 நாள்களுக்கு ஒரு முறையும், 8-ஆவது மாதம் முதல் அறுவடை வரை 20 முதல் 30 நாள்கள் இடைவெளியிலும் நீர் பாய்ச்ச வேண்டும்.
சொட்டு நீர் உரப் பாசனம்:
ஒரு ஏக்கருக்குத் தேவையான யூரியா 80 கிலோ மற்றும் வெள்ளை பொட்டாஷ் 160 கிலோ ஆகியவற்றை பயிர் வளர்ச்சி பருவம் முழுவதும் பிரித்து அளிக்கலாம்.
நடவு செய்த 20 நாள்களுக்குள் இடைவெளியை நிரப்ப வேண்டும். வயலில் முதல் களை 25 நாள்களிலும் அதன் பின் மாதம் ஒரு முறை வீதம் ஐந்தாம் மாதம் வரை களை எடுக்க வேண்டும். நடவு செய்த 60-ஆம் நாளில் நன்றாக வளர்ந்துள்ள இரண்டு கிளைகளை மட்டும் விட்டு இதர பக்கக் கிளைகளை அகற்ற வேண்டும்.
ஊடு பயிர் சாகுபடி: ஊடுபயிராக சிறிய வெங்காயம், உளுந்து, பச்சைப்பயறு, மற்றும் கொத்தமல்லி போன்ற குறுகிய காலப் பயிர்களை சாகுபடி செய்யலாம். நடவு செய்த 60-70 நாள்களில் ஊடுபயிரை அறுவடை செய்து, மேலுரம் இட்டு பின்னர் மண் அணைத்து நீர் பாய்ச்ச வேண்டும்.
நுண்ணூட்டச் சத்துகள் பற்றாக்குறை: இரும்புச்சத்து பற்றாக்குறை தென்பட்டால், இளம் செடிகளில் உள்ள இலைகளில் வெளிர்பச்சை நிறமாகவோ அல்லது மஞ்சள் நிறமாகவோ மாறும்.
இதனை நிவர்த்தி செய்ய ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரும்பு சல்பேட் என்ற அன்னபேதி உப்பு 10 கிராம், துத்தநாக சல்பேட் 5 கிராம், யூரியா 10 கிராம் ஆகியவற்றை சேர்ந்த கரைசலை தேவையான அளவு தயார் செய்து கைத்தெளிப்பான் கொண்டு இலைகள் நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும்.
களை நிர்வாகம்: கரணை நட்ட 3 நாள்களுக்குள் ஏக்கருக்கு 1.3 லிட்டர் பெண்டிமெத்தலின் களைக்கொல்லி மருந்தை தெளித்து களைகளைக் கட்டுப்படுத்தலாம்.
பூச்சிக் கட்டுப்பாடு
மாவுப்பூச்சி: மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு அசிரோபேகஸ் பப்பாயே என்ற ஒட்டுண்ணியை 100 எண்ணிக்கையில் விட வேண்டும். 16 நாள்களில் ஒரு ஏக்கரில் விடப்பட்ட 100 ஒட்டுண்ணிகள் சுமார் 5,000 ஒட்டுண்ணிகளாக இனவிருத்தி அடையும். ஒட்டுண்ணிகளை விடுவித்த பகுதிகளில் பூச்சிக்கொல்லிகள் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
வெள்ளை ஈ தாக்குதல்: இதனைக் கட்டுப்படுத்த டிரைசோபாஸ் 40 ஈ.சி 2 மில்லியை ஒரு லிட்டர் நீர் வீதம் தேவையான அளவு கரைசலை தயார் செய்து, தெளிப்பான் மூலம் தெளித்து விட வேண்டும்.
சிவப்பு சிலந்தி பேன் தாக்குதல்: இதனைக் கட்டுப்படுத்த டைக்கோபால் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீர் வீதம் தேவையான அளவு கரைசலை தயார் செய்து தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
தேமல் நோய் கட்டுப்பாடு: நாற்றங்கால் முறையைப் பின்பற்றி தேமல் நோய் தாக்கப்படாத நாற்றுகளை நடவு செய்ய தேர்ந்தெடுக்க வேண்டும். நோய் தாக்கிய செடிகளைப் பிடுங்கி எடுத்து தனியாக போட்டு எரித்து விட வேண்டும்.
கிழங்கு அழுகல் நோய் கட்டுப்பாடு: வயல்களில் வடிகால் வசதியினை மேம்படுத்த வேண்டும். ஏக்கருக்கு 2 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி என்னும் உயிர் பூஞ்சாணத்தை 100 கிலோ தொழுவுரத்துடன் கலந்து கரணைகளை நடவு செய்யும் முன் மண்ணில் இட வேண்டும்.
நடவு செய்த 7, 8 மற்றும் 9 மாதங்களில் காப்பர் ஆக்ஸிகுளோரைடு என்ற ரசாயன பூஞ்சாணக்கொல்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து செடியின் வேர்பாகம் நன்கு நனையுமாறு ஊற்ற வேண்டும்.
இலைப்புள்ளி நோய் கட்டுப்பாடு: மாங்கோஜெப் ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் வீதம் தேவையான அளவு கரைசலை தயார் செய்து, கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.
அறுவடை: இப்பயிர் 8 முதல் 10 மாதங்களில் அறுவடைக்குத் தயாராகும். அறுவடை செய்வதற்கு நான்கு அல்லது ஐந்து நாள்களுக்கு முன் நீர் பாய்ச்ச வேண்டும்.
மகசூல்: மானாவாரி பயிராக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 6 முதல் 10 மெட்ரிக் டன்னும், இறவைப் பயிராக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 16 முதல் 20 மெட்ரிக் டன் வரை மகசூல் பெறலாம். விவசாயிகள், வேளாண் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த தகவல்களை ரிலையன்ஸ் அறக்கட்டளையின் கட்டணமில்லா உதவி தொலைபேசி எண்: 18004198800 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/18/w600X390/maravalli3.jpg http://www.dinamani.com/agriculture/2018/jan/18/உயர்-விளைச்சல்-தரும்-மரவள்ளி-சாகுபடி-தொழில்நுட்பங்கள்-2846176.html
2846175 விவசாயம் பயறு வகைப் பயிர்களின் மகசூலுக்கு உதவும் இலைவழி கரைசல்! Thursday, January 18, 2018 12:59 AM +0530 விழுப்புரம்: பயறு வகைப் பயிர்களான உளுந்து, பச்சைப்பயிறு, துவரை, கொண்டக் கடலை, மொச்சை போன்றவை புரதச்சத்து வழங்கும் இந்திய உணவு வகைகளில் முக்கியத்துவம் வகிக்கிறது. இத்தகைய பயறு வகைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கிட தமிழக அரசு வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு தரமான விதையை வழங்கி வருகிறது. கிலோவுக்கு ரூ.25 மானியமும், பெருவிளக்கப் பண்ணைகள் அமைத்திட ஹெக்டேருக்கு ரூ.5 ஆயிரம் இடுபொருள் மானியமும், பயிர் வகை நுண்சத்துகள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் மற்றும் உயிர் உரங்களுக்கு 50 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.
மேலும், பயறு வகைப் பயிர்களை ஊக்குவித்திட, நிலத்தில் நீர்ப்பாசன குழாய்கள் பதிக்க ரூ.15 ஆயிரம் அளவில் ஹெக்டேருக்கு மானியம் வழங்கப்படுகிறது. வயல் வரப்புகளில் பயறுவகைப் பயிர்கள் சாகுபடி செய்திட 50 சதவீத மானிய விலையில் பயறு வகை விதைகள், பயறு வகைப் பயிர்களுக்கு இலைவழி தெளிப்புக்கு, டிஏபி உரங்கள் 50 சதவீதம் மானியத்தில் வழங்குகிறது. இந்த வகையில் பல்வேறு திட்டங்களை பயறு வகை உற்பத்தியை அதிகரித்திட தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தில் நடைமுறைப்படுத்தி வருகிறது.
உற்பத்தியை பெருக்கும் வழிகள்: உளுந்து உள்ளிட்ட பயறு வகைப் பயிர்கள் மண்ணுக்கும், மனிதருக்கும் வளம் தருகிறது. இத்தகைய பயறு வகைப் பயிர்களுக்கு விவசாயிகள் மேலுரம் இடாததால் விளைச்சல் பாதிக்கிறது. பயறு வகைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்க 50 சதவீதம் பூக்கும் பருவத்திலும், அதன் பிறகு 15 தினங்கள் கழித்தும் என இருமுறை 2 சதவீதம் அளவில் டிஏபி கரைசல் தெளிக்க வேண்டும்.
இந்த டிஏபி கரைசலை மாலை வேளையில் தெளிக்க வேண்டும். இதனால், பூக்கள் அதிகரிப்பதோடு, பூக்கள் கொட்டாமல் அனைத்து பூக்களும் காய்களாக மாற வாய்ப்புள்ளது. ஒரு ஏக்கருக்குத் தேவைப்படும் 4 கிலோ டிஏபி உரத்தை, தெளிப்பதற்கு முந்தைய இரவு 20 லிட்டர் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். 
மறுநாள் மாலை நேரத்தில் ஊற வைத்த கரைசலில் தெளிந்த நீரை மட்டும் எடுத்து பயிர்களின் மீது தெளிக்க வேண்டும். கைத்தெளிப்பான் மூலம் ஒரு டேங்குக்கு 1 லிட்டர் டிஏபி கரைசலுடன், 9 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். இந்த வகையில், மாலை நேரத்தில் ஏக்கருக்கு 20 டேங்க் அளவில் கரைசலை தெளிக்க வேண்டும்.
இந்த கரைசலுடன், பயிர் ஊக்கிகளையும் வாங்கி தெளித்தால், பூக்கள் அதிகரித்து காய்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும். மணிகளின் எடையும் கூடும். இதனால், ஏக்கருக்கு 800 கிலோ முதல் 1,300 கிலோ வரை மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. 
இதனால், நடப்பு பருவத்தில் உளுந்து உள்ளிட்ட பயறு வகைப் பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், டிஏபி கரைசலை இலைவழி தெளிப்பு செய்து, பயறு வகைப் பயிர்களில் உற்பத்தியை அதிகரித்து லாபம் பெறலாம். இத்தகவலை விழுப்புரம் மாவட்ட வேளாண் உதவி இயக்குநர் கென்னடிஜெபக்குமார் தெரிவித்துள்ளார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/18/w600X390/gram.jpg http://www.dinamani.com/agriculture/2018/jan/18/பயறு-வகைப்-பயிர்களின்-மகசூலுக்கு-உதவும்-இலைவழி-கரைசல்-2846175.html
2842440 விவசாயம் தக்காளியில் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் Thursday, January 11, 2018 12:49 AM +0530 மேலூர்: மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் தற்போது பயிரிடப்பட்டுள்ள தக்காளியை பூச்சி, நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கத் தேவையான பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் குறித்து மதுரை வேளாண் அறிவியல் மையத்தினர் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
தக்காளியில் அதிக சேதாரத்தை தரக் கூடியது வெள்ளை ஈ. பெவிசியாடபாசி என்ற இந்த வெள்ளை ஈ இளம்பருவம் மற்றும் வளர்ந்த பூச்சிகளும் தக்காளி செடியின் தண்டுப் பகுதியில் சாற்றை உறிஞ்சி அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது. ஈ தாக்கிய பின்னர் இலைகள் மஞ்சள் நிறமாகி சுருங்கி காய்ந்து கீழே விழுகின்றன. வெள்ளை ஈ சுரக்கும் தேன் நிறத்திலான திரவம் கரும் பூசாண படலமாக தோன்றி செடிகள் வளர்ச்சி தடைப்படும். மேலும் தக்காளி செடியில் இலை மடக்கு நோயை பரப்புகின்றன.
வெள்ளை ஈயை கட்டுப்படுத்தும் முறைகள்: தாக்குலுக்குள்ளான செடியில் இலைகள், இளம் நிலை பூச்சிகளை சேகரித்து அழிக்க வேண்டும். வெள்ளை ஈக்கான உணவு செடிகளான அபுட்டிலான், அகாலிபா, இர்போபியா செடிகளை அகற்ற வேண்டும். மஞ்சள் ஒட்டும் பொறி ஒரு ஏக்கருக்கு 15 இடங்களில் வைக்க வேண்டும். இதில் முதிர்ச்சியடைந்த வெள்ளை ஈக்கள் ஒட்டிக்கொள்ளும்.
இலைப்பேன்: இலைப்பேன் இளம் மற்றும் வளர்ச்சியடைந்த செடிகளில் இலைகளில் சாற்றை உறிஞ்சிக் குடிக்கின்றன. இதனால், இலைகளில் வெளிர்நிற திட்டுக்கள் தோன்றி, நாளடைவில் செடியிலுள்ள இலைகள் முழுமையாக வெளிர் நிறமடைந்து செடி கருகத் தொடங்கி விடும். இதன் தாக்குதல் ஆரம்பத்தில் இளம் கருத்து குருத்து இலைகள் வெள்ளை நிற வெளிறிய புள்ளிகளும் சிறிய கோடுகளும் தோன்றும். இதன் தாக்குதல் கோடை பருவத்தில் அதிகம் காணப்படும். இளம் செடிகளானால், இதன் தாக்குதலில் செடிகளின் வளர்ச்சி குன்றி பூ காய்கள் பிடிப்பதில்லை.
தீவிர தாக்குதல் காணப்பட்டால் செடிகள் பழுப்பு நிறமாகிவிடும். மேலும் இச்செடி மிளகாய் பயிரில் இலை சுருட்டு நோயை பரப்பும் காரணியாகச் செயல்படும். இலைப் பேன் தக்காளி செடியில் மொட்டு கருகல் நோயையும் பரப்புகிறது. 
கட்டுப்படுத்தும் வழிகள்:இளம் நாற்றங்காலில் நீரை வேகமாக தெளித்து இலைப்பேன் பெருக்கத்தை குறைக்கலாம். நாற்று நடவின்போது, போரேடே குருணை மருந்தை ஏக்கருக்கு முக்கால் கிலோ செடிகளின் அடியில் தூவலாம். நாற்று செடியின் வேரை . 5 சதம் மோனோகுரோட்டோபாஸ் கரைசலில் நனைத்து நடவு செய்யலாம். மேலும், இமிடாகுளோபரிட் இருநூறு எஸ்.எல். இருநூற்றி ஐம்பது மில்லி அல்லது தயோக்குளபரிட் இருநூற்றி நாற்பது எஸ்.எல். 225 மில்லி இவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு ஸ்பிரே செய்து கட்டுப்படுத்தலாம். மீதைல் டெமட்டான் .5 சதம் டைமீத்தோயேட் .6 சதம், பாஸ்லோன் . 7 சதம் இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.
பச்சை காய் புழுக்கள்: பச்சை காய் புழுக்கள் தக்காளி செடியில் காய்கள் பழங்களைத் துளையிட்டு உட்புறச் சதையை தின்று சேதப்படுத்துகின்றன. இப்பூச்சிகளின் நடமாட்டத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள தக்காளிச் செடி பூக்கும் பருவத்தில் இனக் கவர்ச்சிப் பொறிகள் ஏக்கருக்கு 5 இடங்களில் வைக்க வேண்டும். அந்துப்பூச்சிகள் தக்காளிப் பயிரில் முட்டையிடுவதைத் தவிர்க்க 4 நாளான தக்காளி தோட்டத்தில் கேந்தி என அழைக்கப்படும் மேரி கோல்டு நாற்றுக்களை பொரிப் பயிராக ஆறு வரிசைக்கு ஒருவரிசை நட வேண்டும். மேரிக்கோல்டு செடிகளால் அந்திப்பூச்சிகள் கவரப்பட்டு அதில் முட்டையிடும். முட்டைகளையும், இளம் புழுக்களையும் மேரி கோல்டு செடியிலிருந்து சேகரித்து அழித்துவிடலாம்.
தக்காளி பழத்தில் 1 சதத்துக்குமேல் சேதம் காணப்பட்டால், நன்மை செய்யும் பூச்சிகளான டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 5 ஆயிரம் என்ற அளவில் வாரம் ஒருமுறை தோட்டத்தில் அட்டைகளை கட்டினால், அதிலிருந்து வரும் பூச்சிகள் முட்டைகளை அழித்துவிடும். சேதாரம் அதிக அளவில் இருந்தால் கார்பரில் 2 கிராம், குயினால்பாஸ் 2.5 மில்லி பேசில்லஸ்துரிஞ்சியன்சிஸ் 2 கிராம் இவற்றில் ஏதேனும் ஒன்றை ஒருலிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்.
புரொடினியா புழு: பச்சைக் காய்ப் புழுவைப் போல காய்களையும் இலைகளையும் தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்துவது புரொடினியா புழு. இப் புழுவைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு இரு இடத்தில் விளக்குப் பொறிகள் மாலை நேரத்தில் வைக்க வேண்டும். வரப்பு ஓரங்களில் ஆமணக்குச் செடிகளை வளர்க்க வேண்டும். பெரும்பாலான பூச்சிகள் ஆமணக்கு இலைகளில் முட்டைகளை இடும். முட்டை குவியல்களையும் இளம் புழுக்களையும் சேகரித்தும் அழிக்கலாம். 
நச்சுத் தீனி- ஹெக்டேக்ருக்கு 12 கிலோ அரிசித் தவிடு, சர்க்கரை ஒன்னரை கிலோ, கார்பரில் மருந்து 1.25 கிலோ இவற்றை கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி, வயல் பரப்பை சுற்றிலும் வைத்தால் இரவில் புரொட்டினியா புழுக்கள் இதைத் தின்று அழியும். 
வாடல்நோய் மேலாண்மை: செடிகளின் இளம் இலைகள் வாடி கருகத் துவங்கும். சில தினத்தில் இலைக் காம்பும் அனைத்து இலைகளும் வாடத் தொடங்கும். முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமடைந்து மற்ற இலைகளிலும் பரவும். நாற்றின் தண்டில் திசுக்கள் பழுப்பு நிறமடைந்து பயிர் வளர்ச்சி குன்றி மடியும்.
பயிர் சுழற்சி முறையில் தக்காளி தோட்டத்தில் தானியப் பயிர்களை பயிரிட வேண்டும். பாதிக்கப்பட்ட தக்காளி செடிகளை உடனுக்குடன் அகற்றிவிட வேண்டும். பாதிக்கப்பட்ட செடியில் வேர் நனையுமாறு கார்பன்டைசிம் . 1 சதம் மருந்து கரைசல் ஊற்ற வேண்டும். இதனால், வாடல்நோயை கட்டுப்படுத்தலாம். 
இலைக் கருகல் நோய் அறிகுறிகள், கட்டுப்பாடு- இலைகளைச் சுற்றிலும் வெளிர் மஞ்சள் நிற வளையம் காணப்படும். இப்புள்ளிகள் கருகி இலைகள் உதிர்ந்துவிடும். தண்டுப் பகுதியிலும் இத்தகைய புள்ளிகளைத் தொடர்ந்து கருகல் நோய் ஏற்படும். தோட்டத்தில் பயிர் சுழற்சி முறையை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். பயிர் கழிவுகளை அகற்றுவன் மூலம் நோயின் தீவிரத்தை குறைக்கலாம். டைத்தேன் எம்.45 பூஞ்சான கொல்லியை ஒரு லிட்டர் நீரில் 2 கிராம் அளவில் கலந்து 15 நாள் இடைவெளியில் இருமுறை தெளிக்கவேண்டும்.
தக்காளி செடிகளில் காணப்படும் மேற் கூறிய அறிகுறிகளை கண்காணித்து பூச்சி, நோய்களின் தாக்குதலில் உள்ள வேறுபாடுகளை விவசாயிகள் உணர்ந்து சூழ்நிலைக்கேற்றவாறு மேலாண்மை முறைகளைப் பின்றவேண்டும். மேலும் விவரங்களுக்கு மதுரை வேளாண் கல்லூரி வளாகத்திலுள்ள வேளாண். அறிவியல் மையம் ஆராய்ச்சியாளர்கள் க. மனோன்மணி, பா. உஷாராணி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி ரமேஷ் ஆகியோரை அணுகலாம் என தெரிவித்துள்ளனர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/11/w600X390/tomoto.JPG http://www.dinamani.com/agriculture/2018/jan/11/தக்காளியில்-பயிர்-பாதுகாப்பு-தொழில்நுட்பங்கள்-2842440.html
2842439 விவசாயம் நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெற Thursday, January 11, 2018 12:49 AM +0530 பட்டுக்கோட்டை: நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெற அதற்குரிய தொழில்நுட்பங்களை கையாள வேண்டும் என வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.ஈஸ்வர் கூறியதாவது: 
டெல்டா பகுதி விவசாயிகள் மணற்பாங்கான நிலங்களில் நெல் அறுவடை செய்த பிறகு, நிலத்தை நன்கு உழுது சமன் செய்து, இயந்திரம் மூலமாகவோ, ஆள்களைக் கொண்டோ நிலக்கடலையை விதைத்து, பாத்திகள் அமைத்த பின்னர் கீழ்க்கண்ட தொழில்நுட்பங்களை கடைப்பிடிக்க வேண்டும். 
நிலக்கடலையில் கூடுதல் மகசூல் பெற பயிர் எண்ணிக்கையை பராமரிப்பது மிக அவசியம். ஏக்கருக்கு 80 கிலோ விதைகள் தேவைப்படும். வேளாண்துறை மூலம் கே 6 என்ற புதிய ரகம் மானிய விலையில் வழங்கப்படுகிறது. 
மேலும், நிலக்கடலையில் விதை மூலமும், மண் மூலமும் பரவும் வேர் அழுகல், தண்டு அழுகல், இலைப்புள்ளி ஆகிய நோய்களைக் கட்டுப்படுத்த 1 கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் டி.விரிடி கலந்து விதை நேர்த்தி செய்து, 24 மணி நேரம் கழித்து 200 கிராம் ரைசோபியம், 200 கிராம் பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றை ஆறிய வடிக்கஞ்சியில் கலந்து நிழலில் உலர்த்திய பின் விதைக்க வேண்டும். 
விதைகளை விதைக்கும்போது செடிக்கு செடி 10 செ.மீ வரிசைக்கு வரிசை 30 செ.மீ இடைவெளி இருக்குமாறும், விதைக்கப்படும் விதை 4 செ.மீ ஆழத்திற்கு கீழே சென்று விடாதவாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு விதைப்பு செய்வதால் 1 சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற அளவில் பயிர் எண்ணிக்கையை சரியாக பராமரிக்க முடியும். 
நிலக்கடலையில் களைகளைக் கட்டுப்படுத்த விதைப்பு செய்த 3 நாள்களுக்குள் மண்ணில் ஈரம் இருக்கும் சூழ்நிலையில் புளுகுளோரோலின் என்ற களைக் கொல்லியை ஏக்கருக்கு 800 மிலி என்ற அளவில் மணலுடன் கலந்து தூவ வேண்டும். நிலக்கடலையில் நன்கு திரட்சியான பருப்புகள் உருவாக விதைத்த 45 நாளில் மண் அணைக்கும்போது ஏக்கருக்கு 160 கிலோ ஜிப்சம் இட்டு பயிரைச் சுற்றி மண் அணைக்க வேண்டும். 
ஜிப்சத்தில் உள்ள சுண்ணாம்பு சத்து காய்களை திரட்சியாக, அதிக எடை கொண்டதாக மாற்றவும், கந்தகச் சத்து எண்ணெய் சத்தை அதிகரிக்கவும் பயன்படுகிறது. நிலக்கடலையில் பூக்கள் அதிகம் பிடிக்கவும், வறட்சியை தாங்கும் தன்மை அதிகரிக்கவும், உயர் விளைச்சலைப் பெறவும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக தயாரிப்பான நிலக்கடலை ரிச் என்ற பயிர் வளர்ச்சி ஊக்கியை ஏக்கருக்கு 2 கிலோ வீதம் 200 லிட்டர் நீரில் கலந்து அதனுடன் ஒட்டும் திரவம் சேர்த்து பூக்கும் பருவத்தில் ஒரு முறையும், காய் பிடிக்கும் பருவத்தில் ஒரு முறையும் தெளிக்க வேண்டும்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/11/w600X390/groundnut.JPG http://www.dinamani.com/agriculture/2018/jan/11/நிலக்கடலை-சாகுபடியில்-அதிக-மகசூல்-பெற-2842439.html
2838195 விவசாயம் மண் பரிசோதனை செய்வது ஏன்? Thursday, January 4, 2018 12:48 AM +0530 கடலூர்: விவசாயத்துக்கு அடிப்படையான மண்ணின் தன்மைக்கேற்பவே என்ன விவசாயம் செய்யலாம் என்பதை முடிவு செய்ய இயலும். பொதுவாக ஒரு ஊரில் உள்ள மண்வளமானது அனைத்து வயல்களிலும் அதே தரமானதாகவோ, தன்மை உடையதாகவோ இருக்க முடியாது. ஒவ்வோர் வயலிலும் மண்ணின் தன்மையில் மாற்றம் இருக்கும். அதனைக் கண்டறிந்து அதற்கேற்ப பயிர் செய்வதே சிறந்ததாகும். மண்ணின் வளத்தை எவ்வாறு கண்டறிவது என்பதற்கு, ஒவ்வோர் மாவட்டத்திலும் வேளாண்மை உதவி இயக்குநரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மண்பரிசோதனை நிலங்கள் உதவி செய்கின்றன. 
மண் பரிசோதனையின் முக்கியத்துவம்: மண்ணில் உள்ள தழை, மணி, சாம்பல் சத்துக்களின் அளவை அறிந்திட மண் பரிசோதனை அவசியம். மேலும், பயிர்களுக்குத் தேவையான உரமிடும் அளவை அறிந்து உரமிட; மண்ணில் உள்ள களர், அமில, உவர் மற்றும் சுண்ணாம்பு தன்மைகளை அறிந்து தக்க சீர்திருத்தம் செய்திட; தேவைக்கேற்ப உரமிடுவதால் உரச் செலவை மிச்சமாக்க; இடும் உரம் பயிருக்கு முழுமையாகக் கிடைத்திட; உரச் செலவை குறைத்து அதிக மகசூல் பெற்றிட; அங்ககச் சத்தின் அளவை அறிந்து, நிலத்தின் நிலையான வளத்தைப் பெருக்கிட; மண்ணின் தன்மைக்கேற்ப பயிரைத் தேர்ந்தெடுக்க என பல்வேறு முக்கியக் காரணங்கள் உள்ளன. 
மண் மாதிரி சேகரிக்கும் முறை: ஒரு வயலில் எடுக்கும் மண் மாதிரி அந்த வயலின் சராசரி தன்மையைக் காட்டும் வகையில் இருக்க வேண்டும். மண்ணின் வளமும், தன்மையும் ஒரே வயலில் கூட இடத்துக்கு இடம் மாறுபடும். ஆகையால் ஒரே இடத்தில் மண் மாதிரி எடுக்கக் கூடாது. ஏக்கருக்கு குறைந்தது 10 இடங்களில் எடுத்து கலந்து அதிலிருந்து அரைக் கிலோ மண் மாதிரி எடுக்க வேண்டும். மண் மாதிரி எடுக்கும் போது எரு குவிந்த இடங்கள், வரப்பு ஓரங்கள், மர நிழல் மற்றும் நீர்க் கசிவு உள்ள இடங்களைத் தவிர்க்க வேண்டும். மண் மாதிரி எடுக்க வேண்டிய இடத்திலுள்ள இலை, சருகு, புல், செடி ஆகியவற்றை மேல்மண்ணை நீக்காமல் கையினால் அப்புறப்படுத்த வேண்டும்.
ஆங்கில எழுத்தான ய வடிவக் குழி குறிப்பிட்ட ஆழத்துக்கு வெட்ட வேண்டும். குழியின் இருபக்கங்களிலும் மேலிருந்து கீழ் வரை ஒரே சீராக அரை அங்குல கனத்தில் செதுக்க வேண்டும். வெட்டிய மண்ணை ஒரு சட்டியிலோ அல்லது சாக்கிலோ இட வேண்டும். காய்ந்து வெடித்த வயலில் குழி வெட்ட சிரமமாக இருந்தால் மண்கட்டி ஒன்றை பெயர்த்து மேலே வைத்து அதன் பக்கவாட்டில் மண்ணை குறிப்பிட்ட ஆழத்துக்குச் செதுக்கி எடுக்கலாம். நெல், கேழ்வரகு, கம்பு, வேர்க்கடலை பயிரிட்ட வயல்களில் மேலிருந்து 15 செ.மீ. ஆழத்துக்கும், பருத்தி, கரும்பு, மிளகாய், வாழை, மரவள்ளி பயிர்களில் மேலிலிருந்து 22.5 செ.மீ. ஆழத்துக்கும், தென்னை, மா மற்றும் பழந்தோட்ட பயிர்களுக்கு 30,60,90 செ.மீ. ஆழத்துக்கும் என 3 மாதிரிகள் எடுக்க வேண்டும்.
களர், உவர் சுண்ணாம்புத் தன்மை உள்ள நிலத்தில் ஒவ்வொரு அடிக்கும் ஒரு மண் மாதிரி வீதம் 3 அடி ஆழத்துக்கு 3 மாதிரிகள் எடுக்க வேண்டும். 
வயலில் சேகரித்த மண் ஈரமாக இருந்தால் நிழலில் உலர்த்த வேண்டும். சுத்தமான தரையில் அல்லது காகித விரிப்பில் மண்ணை சீராக பரப்பி 4 சம பாகங்களாக பிரிக்க வேண்டும். பின்னர் எதிர் எதிர் மூலையில் இரு பக்கங்களில் உள்ள மண்ணை நீக்கி விடவும். மீண்டும் மண்ணை பரப்பி 4 சம பாகங்களாகப் பிரித்து வேறு எதிர் மூலையில் உள்ள மண்ணை நீக்கி விடவும். இப்படி பகுத்து சுமார் அரை கிலோ மண்ணை துணிப்பையில் இட்டு, கட்டி விபரங்களை இணைத்து அனுப்ப வேண்டும். 
நுண்ணூட்டச் சத்து ஆய்வு: நுண்ணூட்டச்சத்து ஆய்வுக்கு மண் மாதிரியை சேகரிக்கவும் மேற்கண்ட வழிமுறைகளையே கையாள வேண்டும். ஆனால், குழி வெட்டுவதற்கு இரும்பால் ஆன கருவிகளைப் பயன்படுத்தாமல் மரக் குச்சியைப் பயன்படுத்தவும். சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை விவசாயியின் பெயர், முகவரி, சர்வே எண் அல்லது நிலத்தின் பெயர், பயிரிடப்போகும் பயிர், ரகம், இறவை மற்றும் மானாவாரி வயலில் உள்ள பிரச்னைகள் குறித்து குறிப்பு எழுதப்பட வேண்டும். ஆய்வுக் கட்டணமாக ஒவ்வொரு மண் மாதிரிக்கும் பேரூட்டச்சத்து ஆய்வு செய்ய ரூ.10, நுண்ணூட்டச்சத்து ஆய்வு செய்ய ரூ.10 செலுத்த வேண்டும். 
எனவே, விவசாயிகள் தங்களது மண்ணின் தன்மையை அறிந்து பயிர் செய்தால் அதிக நன்மையைப் பெறலாம்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/4/w600X390/soil4.jpg http://www.dinamani.com/agriculture/2018/jan/04/மண்-பரிசோதனை-செய்வது-ஏன்-2838195.html
2838194 விவசாயம் சின்ன வெங்காயத்தில் இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்த... Thursday, January 4, 2018 12:48 AM +0530 அரியலூர்: சின்ன வெங்காயத்தில் ஏற்படும் இலைப்பேன் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத் தொழில்நுட்ப வல்லுநர் ராஜாஜோஸ்லின் கூறியதாவது:
அரியலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் சாகுபடியை 125 ஏக்கரில் விவசாயிகள் செய்துள்ளனர். இப்பயிருக்கு நல்ல வடிகால் வசதியுடன் கூடிய வண்டல் மண் மிகவும் உகந்தது. களிமண் நிலத்தில் வெங்காயச் சாகுபடி மிகவும் கடினம். இதன் பருவமானது ஏப்ரல், மே மற்றும் அக்டோபர், நவம்பர், நிலத்தை 2 அல்லது 3 முறை நன்கு உழ வேண்டும்.
கடைசி உழவின்போது 45 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும். ஏக்கருக்கு அடியுரமாக 12 கிலோ தழைச்சத்து, 24 கிலோ மணிச்சத்து மற்றும் 12 கிலோ சாம்பல் சத்து மற்றும் யூரியா 26 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 150 கிலோ, பொட்டாஷ் 20 கிலோ என்ற அளவில் ரசாயன உரங்களை அளிக்க வேண்டும்.
மேலும் நடுத்தர அளவுள்ள நன்கு காய்ந்த வெங்காயத்தை பார்களின் இருபுறமும் சரிவில் 10 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும். 
விதைத்த 3 ஆம் நாளும், பின்பு வாரம் ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும். தேவைப்படும்போது களையெடுக்க வேண்டும். வெங்காயம் நட்ட 30 நாட்கள் கழித்து மேலுரமாக ஏக்கருக்கு 12 கிலோ தழைச்சத்து கொடுக்கக் கூடிய யூரியா உரத்தை போட வேண்டும்.
சின்ன வெங்காயத்தில் பல்வேறு நோய்கள் தாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்துகின்றன. அதில் இலைப்பேன் தாக்குதல் பெரும் இழப்பை விவசாயிகளுக்கு ஏற்படுத்துகிறது. இந்நோய் தாக்குதலின்போது பூச்சிகள் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இலைகளைச் சுரண்டி உறிஞ்சுவதால் இலைகள் வெண் திட்டுக்களாக இருக்கும். 
இலைகள் நுனியில் இருந்து வாடும். இதைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு மீதைல் டெமட்டான் 200மி. அல்லது பாஸ்போமிடான் 200 மி என்ற அளவில் தெளிக்க வேண்டும். அதிகம் தழைச்சத்து இடுவதையும், நெருக்கி நடுவதையும் விவசாயிகள் தவிர்க்க வேண்டும்.
மேலும் வெங்காய ஈ தாக்குதலின்போது மண்ணில் உள்ள இடுக்குளில் முட்டையிடும். அவற்றிலிருந்து வரும் சிறிய வெண்ணிறப் புழுக்கள் நிலத்தடியில் உள்ள தண்டுப்பகுதி மற்றும் வெங்காயத்தை குடைந்து தின்று அழுகச் செய்யும். இதைக் கட்டுப்படுத்த புரபனோபாஸ் 50 இசி, ஒரு மிலி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன் மாலிக்ட்ரகசைடு என்ற பயிர் முளைப்பைக் கட்டுப்படுத்தும் பயிர் விளையல் ரசாயனப் பொருளை 2.5 மி.லி லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் இலைவழி ஊட்டமாகத் தெளிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் வெங்காயத்தின் சேமிப்புக் காலத்தை அதிகப்படுத்தலாம். மேலும் வெங்காயத்தைப் பிடுங்கிய பின்னர் மேல்தாள்களை நீக்கி காய வைக்க வேண்டும். பின் நல்ல காற்றோட்டமுள்ள அறைகளில் சேமித்து வைக்க வேண்டும். இதனால் சின்னவெங்காயத்தில் அதிக மகசூல் பெற முடியும். மேலும் இதுதொடர்பாக தகவல் பெற சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மைய அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/4/w600X390/onion1.jpg http://www.dinamani.com/agriculture/2018/jan/04/சின்ன-வெங்காயத்தில்-இலைப்பேன்-தாக்குதலை-கட்டுப்படுத்த-2838194.html
2834008 விவசாயம் வெண்டையில் அமோக விளைச்சல் பெற... Thursday, December 28, 2017 12:50 AM +0530 திருநெல்வேலி: வெண்டை சாகுபடியில் அமோக விளைச்சல் பெறுவது தொடர்பாக தோட்டக்கலைத் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது. 
இதுதொடர்பாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
வெண்டையில் கோ-2, எம்.டி.யு. 1, அர்கா அனாமிகா, பார்பானி கிராந்தி, பூசா சவானி, வர்சா உப்கார் ஆகிய சாதாரண ரகங்களும், யு.எஸ். 7902, கோ 3, யு.எஸ்.9 ஏ, ஆர்த்தி, வர்ஷா, எம்- 10, எம்- 12, விஜயா, விஷால் ஆகிய வீரிய ஒட்டு ரகங்களும் சாகுபடிக்கு ஏற்றவை.
வெண்டை அனைத்து வகை மண்ணிலும் விளையும். நல்ல உரச் சத்துள்ள மண் வகைகளில் நன்றாக வளரும். கார, அமில நிலையை ஓரளவு தாங்கி வளரும். வெண்டை பயிரிட ஜூன் - ஆகஸ்ட், பிப்ரவரி - மார்ச் மாதங்கள் ஏற்றவை.
சாதாரண ரகங்களுக்கு ஏக்கருக்கு 3 கிலோவும், வீரிய ஒட்டு ரகங்களுக்கு 1.5 கிலோவும் விதை தேவை. மூன்று அல்லது நான்கு முறை நிலத்தை உழ வேண்டும். அடியுரமாக ஏக்கருக்கு 10 டன் தொழுஉரம் இடவேண்டும்.
விதை நேர்த்தி: விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு விதைகளை கிலோவுக்கு 2 கிராம் கார்பண்டசிம் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைகளை 400 கிராம் அசோஸ் பைரில்லம், ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து நிழலில் உலரவைக்க வேண்டும். 45 செ.மீ., இடைவெளியில் பார் அமைத்து 30 செ.மீ. இடைவெளியில் 2 விதைகள் வீதம் 2 செ.மீ. ஆழத்தில் ஊன்ற வேண்டும். 10 நாள்களுக்குப் பின் நன்றாக உள்ள செடியை வைத்துக்கொண்டு மற்றதைக் களைத்துவிட வேண்டும். பின்னர் வாரம் ஒருமுறை நீர்ப்பாய்ச்ச வேண்டும். சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பது சிறந்தது.
உர நிர்வாகம்: அடியுரமாக ஏக்கருக்கு 8 கிலோ தழைச்சத்து தரக்கூடிய 18 கிலோ யூரியா, 20 கிலோ மணிச்சத்து தரக்கூடிய 125 கிலோ சூப்பர் பாஸ்பேட், 16 கிலோ சாம்பல் சத்து தரக்கூடிய 27 கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை அடியுரமாக இட வேண்டும்.
விதைத்த 30 நாளுக்குப் பிறகு 8 கிலோ தழைச்சத்து தரக்கூடிய 18 கிலோ யூரியாவை மேலுரமாக இட வேண்டும். ஏக்கருக்கு 800 கிராம் அசோஸ்பைரில்லம், 800 கிராம் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை, 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து மண்ணில் நேரடியாக இட்டு, தழை, மணிச்சத்து உரத் தேவையைக் குறைத்துக்கொள்ளலாம்.
இலைவழி உரமளித்தல்: ஒரு லிட்டர் நீருக்கு 10 கிராம் யூரியா கலந்து பெறப்பட்ட ஒரு சத யூரியா கரைசலை விதைத்த 30ஆம் நாள் முதல் 10 நாள் இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 17 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ் கலந்து பெறப்பட்ட ஒரு சதக் கரைசலை விதைத்த 30, 45, 60ஆம் நாள் என 3 முறை தெளிக்க வேண்டும். இதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம்.
பூச்சி நோய் நிர்வாகம்: காய்த் துளைப்பானைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 5 இனக் கவர்ச்சிப் பொறி வைத்து, தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். காய்ப் புழுக்களால் தாக்கப்பட்ட காய்களைச் சேகரித்து அழிக்கவேண்டும். முட்டைகளை அழிக்க ஏக்கருக்கு 40 ஆயிரம் டிரைகோ கிரம்மா முட்டை ஒட்டுண்ணிகளை விடவேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் பேசில்லஸ் துரிஞ்சென்சிஸ் என்ற உயிர்ப் பூஞ்சணக் கொல்லியை கலந்து தெளிக்கலாம்.
ஒரு லிட்டர் நீருக்கு 50 கிராம் வேப்பங்கொட்டைப் பொடி அல்லது 2 கிராம் கார்பரில் நனையும் தூள் அல்லது 2 மி.லி. மானோகுரோட்டோபாஸ் மருந்துகளில் ஒன்றைத் தெளிக்க வேண்டும். சாம்பல் நிற வண்டுகளைக் கட்டுப்படுத்த கார்போபியூரான் 3ஜி குருணை மருந்து ஏக்கருக்கு 5 கிலோ இட வேண்டும்.
நூற்புழு தாக்குதல் மண் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டால், ஏக்கருக்கு 160 கிலோ வேப்பம் பிண்ணாக்கை அடியுரமாக, பிற உரங்களுடன் கலந்து இடவேண்டும். மேலும் ஏக்கருக்கு 400 கிராம் 3 சத கார்போபியூரான் அல்லது 10 சத போரேட் குருணை மருந்து இடலாம். அசுவிணியைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. மிதைல் ஓ டெமட்டான் அல்லது 2 மி.லி. டைமிதியேட் மருந்துகளில் ஒன்றைத் தெளிக்க வேண்டும்.
மஞ்சள் நரம்புத் தேமல் நோய்: இது வெள்ளை ஈ எனும் பூச்சியால் வெண்டையில் பரவும் ஒரு நச்சுயிரி (வைரஸ்) நோய். இதைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி. வேப்பெண்ணெய் அல்லது 2 மி.லி. மானோகுரோட்டாபாஸ் மருந்துகளில் ஒன்றைத் தெளிக்க வேண்டும். 
வெள்ளை ஈக்களைக் கவர்ந்திழுக்க மஞ்சள் ஒட்டும் பொறிகளை வயலில் அமைக்கலாம். கோடைக்காலங்களில் இந்நோய் மிக அதிக அளவில் தாக்கும். எனவே, இந்நோயைத் தாங்கி வளரும் அர்கா அனாமிகா, யு.எஸ்.9ஏ, ஏ.யு.எஸ்.7902 போன்ற ரகங்களைச் சாகுபடி செய்ய வேண்டும்.
சாம்பல் நோய்: நோயின் அறிகுறி தென்பட்டவுடனும், பின் 15 நாள் கழித்தும் ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் நனையும் கந்தகம் கலந்து தெளிக்க வேண்டும். 
அறுவடை: விதைத்த 45ஆம் நாள் முதல் 2 நாளுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். 90 - 100 நாளில் ஏக்கருக்கு 6 டன் வரை மகசூல் எடுக்கலாம்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/28/w600X390/ladiesfinger.jpg http://www.dinamani.com/agriculture/2017/dec/28/வெண்டையில்-அமோக-விளைச்சல்-பெற-2834008.html
2834007 விவசாயம் லாபம் தரும் திலேப்பியா மீன் வளர்ப்பு Thursday, December 28, 2017 12:50 AM +0530 நாமக்கல்: ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் ஒரு ஹெக்டேர் பரப்பில் திலேப்பியா மீன் வளர்ப்பதால், 6 மாதங்களில் ரூ.1.75 லட்சம் வருவாய் ஈட்டலாம். 
இதுகுறித்து நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் என்.அகிலா, பேராசிரியர் பால்பாண்டி ஆகியோர் கூறியதாவது:-
திலேப்பியா மீன்கள் எகிப்திய நாடுகளில், 4,000 ஆண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்டன. திலேப்பியா இனங்களில், குறிப்பாக ஒரியோகுரோமிஸ் நைலோட்டிகஸ் என்னும் நைல் திலேப்பியா பல நாடுகளில் வளர்க்கப்பட்டு, அதிக அளவில் உணவாகப் பயன்படுகிறது.
அறிவியல் ரீதியில் முதன் முதலாக 1924-இல் கென்யாவில் திலேப்பியா வளர்ப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. உலகின் பல பகுதிகளுக்கு விரைவாக பரவியது. இந்தியாவில் 1952ல் திலேப்பியா மீன் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மீனின் கட்டுப்படுத்த முடியாத இனப்பெருக்கத்தின் காரணமாக குளங்களில் திலேப்பியா மீன்களின் வளர்ச்சி தடைப்பட்டது. சந்தையில் இந்த மீன் குறைந்த விலைக்கே விற்பனை செய்யப்பட்டது.
இதனால் இதனை களை மீன் எனக் கருதி இந்தியாவில் வளர்க்கத் தடை விதிக்கப்பட்டது. இருந்தும் 1970-இல் நைலோடிகஸ் திலேப்பியா மீன் வளர்ப்போரால் மேற்கு வங்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது ஹார்மோன்கள் மூலமாக அனைத்து மீன்களையும் பால் மாற்றம் செய்து ஆண் மீன்களாக உரு மாற்றம் செய்து வளர்க்கப்பட்டு, சந்தைகளில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இந்த மீன்கள் 5 மாதத்தில் ஒரு கிலோ வரை வளரும். இந்தியாவில் திலேப்பியா மீன் வளர்ப்பதற்கு அரசு சில விதிமுறைகளுடன் மீன் பண்ணையளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
திலேப்பியா மீன் வளர்ப்பதற்கான நெறிமுறைகள்: இந்திய வேளாண் துறை திலேப்பியா மீன் வளர்ப்பைக் கண்காணிக்க ஒரு வழிகாட்டிக் குழுவை அமைத்துள்ளது. விவசாயிகள் அல்லது மீன் பண்ணைத் தொழில் முனைவர்கள், திலேப்பியா மீன்களை இனப்பெருக்கம் செய்யவோ அல்லது குளங்களில் வளர்க்கவோ, மாநில மீன்வளத் துறையிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்று வளர்க்க வேண்டும்.
மீன் பண்ணைக்காகத் தேர்வு செய்யும் இடமானது கரடு முரடான பாறைகள், மேடு பள்ளங்கள், அடர்ந்த முள்செடிகள் இல்லாத இடமாக இருக்க வேண்டும். மீன் பண்ணை அமைக்க மிதமாக காற்று வீசும் பகுதிகளைத் தேர்வு செய்வது நல்லது.
மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களில் பண்ணைகள் அமைக்கக் கூடாது. மீன் பண்ணை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் முன் இடத்தின் அமைப்பு, நீர் மற்றும் மண்வளம், போக்குவரத்து வசதி, மின்சாரம், விற்பனை வசதி, பணியாட்கள் கிடைப்பது போன்றவற்றை நன்கு ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டும்.
வளர்ப்பு முறைகள்: ஹார்மோன்கள் முலமாக முற்றிலும் மலட்டுத் தன்மையாக்கப்பட்ட ஆண் மீன்கள் அல்லது இயற்கைச் சூழ்நிலையில் காணப்படும் நைலோட்டிகஸ் ஆண் மீன்களை மட்டும் வளர்க்க வேண்டும்.
குளத்தின் அளவு 0.1 ஹெக்டேர் முதல் ஒரு ஹெக்டேர் வரை இருந்தால் நல்லது. குளத்தின் உள்பகுதியை நோக்கியிருக்கும் சாய்வு, 2:1 முதல், 3:1 (உயரம்:அகலம்) என்ற விகிதத்திலும், வெளிப்புற சாய்வு, 1.5:1 முதல் 2.1 (அகலம்:நீளம்) என்ற விகிதத்திலும் அமைத்திருக்க வேண்டும்.
திலேப்பியா மீன்கள் பண்ணையிலிருந்து வெளிவராத வண்ணம், மீன் பண்ணையை அமைத்தல் வேண்டும். உள்மடை, வெளிமடையில் வலையைக் கட்ட வேண்டும்.
மேலும், பறவைகள் உட்புகாத வண்ணம் வலையினால் வேலியமைத்துப் பாதுகாக்க வேண்டும். வளர்ப்பு மீன் குஞ்சுகள் மற்றும் மீன்கள், ஆறு, குளம் மற்றும் குட்டைகளில் சேராத வகையில் இருப்பதற்கு, சிறிய கண்ணியினால் ஆன பாதுகாப்புக் கதவை அமைக்க வேண்டும்.
குஞ்சுகளை இருப்பு செய்தல்: மீன் வளர்ப்புக் குளத்தைத் தயார் செய்தபின் வளர்ப்புக்கேற்ற மீன் குஞ்சுகளை (விரளவு குஞ்சுகள் 4-5 வாரங்கள்) வாங்கி வந்து வெப்பம் குறைவான நேரத்தில் (மாலை 6 மணி முதல், காலை, 7 மணி வரை) இருப்பு செய்ய வேண்டும். ஒரு ஹெக்டேர் குளத்தில் 20,000 முதல், 50,000 வரை இருப்பு செய்யலாம்.
மீன் குஞ்சுகள், குளத்து நீரின் தன்மைக்கு இணங்கியதும் குளத்தில் உள்ள நுண்ணுயிர் மிதவைகளை உண்டு அவற்றின் இருப்பு மிகவும் குறைந்துவிடும் என்பதால், அவற்றுக்கு மேலுணவு தேவைப்படும்.
தவிடு பிண்ணாக்கு (3:1) விகிதத்தில் மீன்களின் மொத்த எடையின் அடிப்படையில் சமமாகக் கலந்து உருண்டைகளாக உருட்டி குளத்தின் மூலைகளில் உணவுத் தட்டுகட்டி அதில் வைக்க வேண்டும். மீன்களின் வளர்ச்சி, எடை ஆகியவற்றை அறிந்து அவற்றுக்கு ஏற்ப மீன்களுக்கு இட வேண்டிய உணவின் அளவை மாதாந்தோறும் உயர்த்த வேண்டும்.
வருமானம்: ஒரு ஹெக்டேர் குளத்தில் மீனின் பிழைப்பு திறன் 85 சதவீதம் இருக்கும். ஒரு கிலோ மீன் உற்பத்திக்கு ரூ.45 முதல் ரூ.50 வரை செலவு செய்தால், ஒரு கிலோ மீன் ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனை செய்லாம். 
ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் ஒரு ஹெக்டேர் மீன் வளர்ப்பு செய்வதன் மூலம் 6 மாதங்களில் கூடுதலாக ரூ.1.75 லட்சம் வரை வருவாய் ஈட்டலாம் என்றனர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/28/w600X390/Tilapia-Fish.jpg http://www.dinamani.com/agriculture/2017/dec/28/லாபம்-தரும்-திலேப்பியா-மீன்-வளர்ப்பு-2834007.html
2829846 விவசாயம் நெற்பயிரில் இலைக் கருகல் நோய்த் தாக்குதல் Thursday, December 21, 2017 12:51 AM +0530 சம்பா மற்றும் தாளடி நெல் வயல்களில் இலைக் கருகல் நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல்துறை உதவிப் பேராசிரியர் ராஜா. ரமேஷ் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதன் விவரம்: 
பூஞ்சாணத்தால் உண்டாகும் இலையுறைக் கருகல் நோய்த் தாக்குதல் நெற் பயிரின் தூர்க் கட்டும் பருவத்திலேயே தொடங்கினாலும், பூக்கும் பருவத்திலும், பயிர் அறுவடைக்கு நெருங்கும் நேரத்திலும் அறிகுறிகள் அதிகமாகவும், தெளிவாகவும் காணப்படும். இதன் தாக்குதலால் 16 முதல் 49 சதவீத மகசூல் இழப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நோய் பரவுவதற்கு 95 சதவீதத்துக்கும் அதிகமான ஈரப்பதம், மிதமான வெப்ப நிலை (30 முதல் 32 சென்டி கிரேடு) மிகவும் ஏற்றதாகும். திடீரென உயரும், குறையும் வெப்ப நிலையும் நோய் பரவுவதற்கு உகந்ததாகும். அதிக தழைச்சத்து உரமிடுதல், நாற்றுகளை நெருக்கமாக நடுதல், நிழற்பகுதிகளில் வளரும் பயிர்களில் இந்நோயின் தாக்குதல் காணப்படும்.
இந்நோயானது முதலில் நீர் மட்டத்துக்கு அருகிலுள்ள இலையுறையில் முட்டை வடிவ அல்லது நீண்ட உருளை வடிவத்துடன் கூடிய பழுப்பு கலந்த பச்சை நிற புள்ளிகள் உண்டாகும். இப்புள்ளிகள் பிறகு, பெரியதாகி அருகிலிருக்கும் புள்ளிகளுடன் ஒன்றோடு ஒன்றாக இணைந்து விடும். 
அப்போது, அந்த இடத்திலுள்ள திசுக்கள் அழிக்கப்படுவதால், இலை இறந்து விடும். தாக்குதல் மிகுந்து காணப்படும்போது தூர்களிலுள்ள அனைத்து இலைகளும் கருகியதுபோல் காட்சியளிக்கும். கதிர் உருவாகும் சமயங்களில் தாக்குதல் காணப்பட்டால் பயிரின் கீழ் பகுதிகளிலுள்ள கதிர்களில் மணிகள் முழுவதும் உருவாகாமல் இருப்பதைக் காணலாம்.
இதைக் கட்டுப்படுத்த நோய் தாக்கப்பட்ட பயிரின் பாகங்களை பறித்து அழித்துவிட வேண்டும். 
நெருக்கமாக நடவு செய்யாமல் போதிய இடைவெளி இட்டு நடவு செய்ய வேண்டும். தழைச்சத்து உரங்களை பிரித்து இட வேண்டும். நன்கு மக்கிய தொழு உரம் மற்றும் பசுந்தாள் உரப் பயிர்களை கடைசி உழவில் மடக்கி உழுவதனால் மண்ணிலுள்ள பூஞ்சாண வித்துக்களை அழிக்கலாம்.
வேப்பம் புண்ணாக்கு ஏக்கருக்கு 400 கிலோ என்ற அளவில் இடுவதினால் இந்நோயின் பாதிப்பை தடுக்க இயலும். சூடோமோனாஸ் புளோரசன்ஸ் உயிரியல் கொல்லி மருந்து ஏக்கருக்கு 1 கிலோ என்ற அளவில் நாற்று நட்ட 45-ஆவது நாள் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். 
இதற்கு 10 நாள்களுக்குப் பிறகு தாக்குதலைப் பொருத்து இதே அளவு மீண்டும் தெளிக்க வேண்டும். யூரியா, ஜிப்சம் மற்றும் வேப்பம் புண்ணாக்கு இவற்றை 5 : 4 : 1 என்ற அளவில் கலந்து பயன்படுத்த வேண்டும். அதிக அளவிலான சாம்பல் சத்து இந்நோயின் தாக்குதலைக் குறைக்கும் என்றார் அவர்.
இலை சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்தும் முறைகள்
பெருந்துறை: நெற்பயிரில் இலை சுருட்டுப் புழுவின் தாக்குதல் ஆங்காங்கே தென்படுகிறது. இதைக் கட்டுபடுத்த கீழ்கண்ட முறைகளைப் பின்பற்றலாம் என பெருந்துறை வேளாண்மை உதவி இயக்குநர் ரங்கநாயகி தெரிவித்துள்ளார்.
இலை சுருட்டுப் புழுவின் தாக்குதலுக்கான அறிகுறிகள்: இலைகள் நீள்வாக்கில் மடிக்கப்பட்டிருக்கும். பச்சை நிற புழுக்கள், அதன் கழிவுகள் மடிப்புக்குள் இருக்கும். புழுக்கள் இலைகளின் பச்சை நிற திசுக்களைச் சுரண்டுவதால், இலைகள் வெண்மையாக மாறி காய்ந்திருக்கும். தீவிர தாக்குதலின்போது முழு நெல் வயலும், வெண்மையான நிறத்தில் காய்ந்திருக்கும். இலை சுருட்டுப் புழுவின் அந்துப் பூச்சியானது, மஞ்சளான பழுப்பு நிற இறக்கைகளுடன் காணப்படும். அவற்றின் முன், பின் இறக்கைகளில் அடர்ந்த நிறத்துடன் அலை அலையாய் கோடுகள் காணப்படும். 
கட்டுப்படுத்தும் முறைகள்: தேவைக்கு அதிகமாக தழைச்சத்து இடுவதைத் தவிர்க்கவும். வயல் வரப்புகளைச் சுத்தமாகவும், வயலில் களைகள் இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்துப்பூச்சியைக் கட்டுப்படுத்த இனக் கவர்ச்சி பொறிகளை ஏக்கருக்கு 5 என்ற அளவில் பயன்படுத்தலாம் அல்லது விளக்குப் பொறிகளை இரவு நேரங்களில் 2 ஏக்கருக்கு ஒன்று என்கிற அளவில் வைத்து அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் - முட்டை ஒட்டுண்ணிகளை நடவு செய்த 37 அல்லது 44, 51-ஆவது நாள்களில் மொத்தம் 3 முறை என்கிற அளவில் விட வேண்டும். வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவீதம் அல்லது வேப்பெண்ணெய் 3 சதவீதம் (1 லிட்டர் தண்ணீருக்கு 30 மி.லி.) அல்லது அசார்டிராக்டின் 0.03 சதவீதம், 400 மி.லி. மருந்தை ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
மேலும், தாக்குதல் பொருளாதார சேத நிலையைத் தாண்டும்போது புரபினோபாஸ் 50 ஈ.சி-400 மி.லி., இகுளோட்ல்பைட்ல்பாஸ் 20 ஈ.சி - 500 மி.லி., இகார்டாப் ஹைட்ரோகுளோரைடு - 50 எஸ்.பி - 400 கிராம், குளோரன் ட்ரான்லிபுரோல் 18.5 எஸ்.சி - 60 மி.லி. ஆகிய ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளில் ஏதாவது ஒன்றை ஓர் ஏக்கருக்கு 200 லி தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்: பயிருக்குத் தேவையான சரியான மருந்துகளை சரியான அளவில் தெளிக்க வேண்டும். பயிர் பாதுகாப்பு மருந்துகளை காலை 10 மணிக்குள்ளும், மாலை 4 மணிக்குப் பிறகும் தெளிக்க வேண்டும். மருந்து கலக்கும்போது பரிந்துரைக்கப்பட்ட தண்ணீர் அளவில் கலந்து தெளிக்க வேண்டும். மருந்து தெளிப்பவர் கையுறை, காலுறை, மூக்கு, வாய் கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். காற்றுவீசும் திசையிலேயே மருந்து தெளிக்க வேண்டும். 
காற்று அடிக்கும் திசைக்கு எதிர் திசையில் மருந்து அடிப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
தரமற்ற, தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகளை உபயோகிக்கக் கூடாது. பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கும்போது, விசைத் தெளிப்பான் எனில் அதிக பட்சம் 10 டேங்க், கை தெளிப்பான் எனில் 16 டேங்க் மட்டுமே ஒருவர் தெளிக்க வேண்டும். அதற்கு, அதிகமாக தெளிக்கும்போது உடல் நலக்குறைவு ஏற்பட வாய்புள்ளது.
எனவே, மனிதர்கள், கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பாக பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்தலாம் என்றார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/21/w600X390/rice.jpg http://www.dinamani.com/agriculture/2017/dec/21/நெற்பயிரில்-இலைக்-கருகல்-நோய்த்-தாக்குதல்-2829846.html
2829845 விவசாயம் நாட்டுக்கோழியில் நல்ல வருமானம்! Thursday, December 21, 2017 12:51 AM +0530 திருநெல்வேலி: மிகக் குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் ஈட்ட நாட்டுக்கோழி வளர்ப்பு முறை சிறந்தது.
கிராமப் புறங்களில் வீட்டுக்குவீடு நாட்டுக் கோழி வளர்ப்பர். அதையே, கூடுதல் அக்கறையுடன் கோழிகளின் எண்ணிக்கையை அதிகமாக்கினால் மிகுந்த லாபம் பெறலாம். இன்றைய சூழலில் நாட்டுக்கோழிக்கு நல்ல விலை கிடைக்கிறது. 450 சதுர அடி இருந்தால் போதும். 10 கோழிகளை வளர்த்து மாதம் ரூ. 2,500 வரை வருமானம் ஈட்டலாம்.
ஒரு பெட்டைக்கோழி ஆண்டுக்கு 3 பருவங்களில் முட்டையிடும். ஒவ்வொரு முறையும் 15 முட்டைவரை இடும். முட்டை இடுவதை தேதி வாரியாக எழுதிவைத்து, கடைசியாக இட்ட 9 முட்டைகளை அடைகாக்க வைப்பது லாபகரம். நல்ல வளர்ச்சி பெற்ற ஒரு பெட்டைக் கோழியால் 9 முட்டைகளை மட்டுமே அடைகாக்க முடியும். 
அடுப்புச் சாம்பல், மணல் ஆகியவற்றைக் கலந்து கூடையில் நிரப்பி, ஈரப்பதத்தை உறிஞ்சி கதகதப்பை ஏற்படுத்த கரித்துண்டும், இடியைத் தாங்க இரும்புத் துண்டும் போட்டுவைக்க வேண்டும். இந்தக் கூடையில் கோழியை அடைகாக்கச் செய்வதன் மூலம் 9 முட்டைகளும் பொரியும் வாய்ப்புள்ளது.
குஞ்சுகள் பொரிந்ததும் அவற்றுக்கு முதல் வாரம், தினமும் மஞ்சள்தூள் கலந்து கொடுக்க தண்ணீர் வேண்டும். பின்னர், 3 வாரங்களுக்கு ஏதேனும் வைட்டமின் டானிக் மருந்தை சில சொட்டு கலந்து கொடுக்கலாம்.
வாரம் ஒருமுறை அரசு கால்நடை மருந்தகங்களில் கோழிக்கு தடுப்பு ஊசி போடவேண்டும். இதைத் தவறாமல் கடைப்பிடிப்பதன் மூலம் கோழிகளைப் பாதுகாப்பாக வளர்க்கலாம். 
கோழி வளர்க்கும் இடத்தைச் சுற்றி 4 அடி உயரத்துக்கு வலையால் வேலி போட வேண்டும். வேலியோரம் கீழ் மண்ணைக் குவித்து வைத்து சிமென்ட் பால் ஊற்றினால் பிற உயிரினங்களால் கோழிகளுக்கு தொல்லை ஏற்படாது.
வலை போட்டுள்ள பகுதியில் 3 அடிக்கு 3 அடி என்ற அளவில் சதுரமாக 3 அடி உயரத்தில் 3 குடிசை போட வேண்டும். நாட்டுக் கோழி குப்பையில் புரண்டு இறக்கையை உதறும். இதன்மூலம் உடம்பிலிருக்கும் 'செல்' போன்ற சின்னச் சின்ன உயிரினங்கள் வெளியேறும்.
பண்ணையில் குப்பைக்குழிக்கு வாய்ப்பில்லை. எனவே, தரையில் சாம்பல், மணலைக் கலந்து வைக்க வேண்டும். தீவனத் தொட்டி, தண்ணீர்க் குவளை போன்றவற்றையும் வைக்க வேண்டும். கோழிகளை சுதந்திரமாகத் திரிய விட வேண்டும்.
10 கோழிகளுக்கு ஒரு சேவல் என வளர்க்க வேண்டும். சில கோழிகள் அடிக்கடி பறந்து வெளியே செல்லும். அவற்றுக்கு மட்டும் ஒரு பக்க இறக்கையை 4 விரல் அளவுக்கு வெட்டினால்போதும். அவை பறக்காது. 
10 கோழிகளை வளர்ப்பது ஒரு யூனிட். அவ்வாறு பல யூனிட்களை உருவாக்கலாம். குஞ்சுகள் தாயிடமிருந்து பிரிந்ததும், அவற்றைக் கொண்டு யூனிட் அமைப்பது நல்லது.
கோழிகளின் உணவுக்காக கரையான் உற்பத்தி செய்து கொடுக்கலாம். அடுப்புக் கழிவுகள், காய்கறிக் கழிவுகள், இலை - தழைகள், வீணாகும் தானியங்கள் கொடுத்தால் போதும். 5 மாதங்களில் ஒன்றரை கிலோ அளவுக்கு வளர்ந்துவிடும். நாட்டுக்கோழி விற்பதில் சிரமமில்லை. நாம் விற்பது தெரிந்தால் வியாபாரிகள் வீடுதேடிவந்து வாங்கிச் செல்வர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/21/w600X390/hen.jpg http://www.dinamani.com/agriculture/2017/dec/21/நாட்டுக்கோழியில்-நல்ல-வருமானம்-2829845.html
2825849 விவசாயம் இயற்கை வேளாண்மையில் மலைக் காய்கறிகள் Thursday, December 14, 2017 12:39 AM +0530 சத்தியமங்கலத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் ரசாயனக் கலவையின்றி இயற்கை வேளாண்மையில் மலைக் காய்கறிகள் சாகுபடி செய்து விவசாயத்தில் கணிசமான லாபம் ஈட்டி வருகிறார் பெண் விவசாயி சசிகலா கோவிந்தராஜன். 
சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் சசிகலா கோவிந்தராஜன் (46). விவசாயப் பாரம்பரியம் இல்லாத குடும்பத்தில் பிறந்த இவர் திருமணத்துக்குப் பிறகு விவசாயத்தைப் பற்றி தெரிந்துகொண்டார். விவசாயத்தில் ஆர்வம் காட்டி வரும் சசிகலா கலப்படமில்லாத இயற்கை வேளாண் சாகுபடிக்கு மாறியுள்ளார். தற்போது இவரது தோட்டத்தில் ரசாயன கலவை இல்லாமல் இயற்கை உரம் தயாரித்து மலைப் பகுதி விளை பொருள்களை சாகுபடி செய்து வருகிறார்.
களைச்செடிகள், கால்நடைகளின் சாணம், கழிவுநீரை வைத்து பஞ்சகவ்யா, தொல்லுயிர் கரைசல், அமுதக் கரைசல், மோர் கரைசல் என இயற்கை உரம் தயாரித்து தென்னை சாகுபடியில் ஊடு பயிராக பாக்கு, சேனைக்கிழங்கு சாகுபடி செய்து வருகிறார்.
நீர் மேலாண்மை

நீலகிரி, தாளவாடி ஆகிய பகுதியில் விளையக் கூடிய ஆரஞ்சு, எலுமிச்சை, கோகோ, வெண்ணெய் பழ ரகங்களை சாகுபடி செய்து சென்னை போன்ற மாநகரங்களுக்கு விற்பனை செய்து வருகிறார். அதோடு மஞ்சள், தக்காளி, கத்தரி, பீட்ரூட், புடலை, வாழைப் பழம் ஆகியவற்றின் மகசூலை அதிகப்படுத்தியும் விவசாயிகளை ஊக்குவித்துள்ளார். 
தென்னை மரங்களிடையே தேனீ வளர்க்கும்போது அதன் வளர்ச்சி இயற்கையாக இருக்கும் என்பதால் 5 தேனீப் பெட்டிகள் வைத்து தேன் உற்பத்தி செய்து வருகிறார். 
சொட்டுநீர்ப் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சியும், தென்னை மரங்களின் அடிபாகத்தில் தென்னைக் கீற்றுகளை வைத்து ஈரப்பதம் தொடர்ந்து இருக்கும்படி அதனை சமநிலைப்படுத்தியும் நீர் மேலாண்மையைப் பின்பற்றி விவசாயத்தை லாபகரமாக மாற்றியுள்ளார்.
மாணவ, மாணவியர் ஆர்வம்

இயற்கை வேளாண்மையில் ஆர்வம் காட்டி வரும் சசிகலாவை கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் திங்கள்கிழமை சந்தித்து இயற்கை வேளாண்மையில் பெண்களின் பங்கு குறித்து கேட்டறிந்தனர். மேலும், சமவெளிப் பகுதியான சத்தியமங்கலத்தில் நீலகிரி, தாளவாடியில் விளையக் கூடிய ஆரஞ்சு, எலுமிச்சை, கோகோ, வெண்ணெய்பழம், பாக்கு, சேனைக்கிழங்கு ஆகிய பயிர்களை சாகுபடி செய்யும் முறையையும் பார்வையிட்டு, தேனீ வளர்ப்பு, அதன் உற்பத்தி, இயற்கையாக உரம் தயாரித்தல், சாகுபடி காலம், அதனை சந்தைப்படுத்துதல் குறித்தும் ஆர்வமுடன் கேட்டறிந்தனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/14/w600X390/fruits.jpg இயற்கை வேளாண்மையில் சாகுபடி செய்த சாத்துக்குடியை ஆய்வு செய்யும் கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள். http://www.dinamani.com/agriculture/2017/dec/14/இயற்கை-வேளாண்மையில்-மலைக்-காய்கறிகள்-2825849.html
2825848 விவசாயம் மல்லிகை, ரோஜா சாகுபடி! Thursday, December 14, 2017 12:37 AM +0530 மல்லிகை, ரோஜா மலர்கள் சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெறுமாறு தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.
மலர் பயிர்களின் ராணி மல்லிகை. விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்தும் பயிர்களில் மல்லிகையும் ஒன்று. தொடர்ந்து பத்து வருடங்கள் வரை 
மகசூல் தரும் பயிர். செடிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப மகசூல் அதிகரிக்கும்.

குண்டு மல்லி 

மல்லிகையை நடவு செய்யும்பொழுது செடிக்கு செடி இடைவெளி 4 க்கு 4 அல்லது 5க்கு 4 அடி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். பதியன் குச்சிகளை ஆடி மாதம் நடவு செய்வது மல்லிகைக்கு சிறந்தது. ஒன்றுக்கு ஒன்றரை அடி ஆழம் குழி வெட்டி ஒரு மாதம் கழித்து மண்புழு உரத்துடன் சிறிது மக்கிய ஆட்டு உரம் மற்றும் மண் கலந்து தயார் செய்து கொள்ளவும். நடவு செய்யும் போது செடியை சுற்றிலும் சிறிது மண் அணைத்து நடவு செய்ய வேண்டும். இதனால் வேர்பிடிப்பு நன்றாக இருக்கும். மண் தன்மைக்கு ஏற்ப தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
மாதம் ஒரு முறை நுண்ணூட்ட சத்துகள் வேருக்கு அருகே இட்டு தண்ணீர் கட்ட வேண்டும். உயிர் உரங்களான பாஸ்போபாக்டீரியா, அசோஸ் பைரில்லம், பொட்டாஷ் பாக்டீரியா, தொழு உரத்துடன் கலந்து சிறிது வெல்லம், தயிர் கலந்து மூன்று நாள்கள் நிழலில் வைத்து மாதம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சி பின் வேரில் இடுவதால் செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும் செடிகள் திடமாகவும் இருக்கும்.
மல்லிகையில் களைகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. வரிசைகள் இடைவெளியில் சணப்பை விதைகளை தொடர்ந்து தூவி ஓரளவு வளர்ந்த உடன் மடக்கி உழுதுவிட்டால் நல்ல சத்துகள் மல்லிகை செடிகளுக்கு கிடைக்கும். மேலும் களைகள் எளிதாக கட்டுப்படும்.
மல்லிகை நடவு செய்த ஆறாம் மாதம் முதல் பூக்கள் தோன்றும். ஏப்ரல் மாதம் முதல் அதிகமாக துளிர்கள் தோன்றும். பிறகு மொட்டுகள் தோன்ற ஆரம்பிக்கும். மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசல் மற்றும் மீன் அமிலம் ஆகியவற்றை தொடர்ந்து பாசன நீரில் கலந்து விடுவதால் நல்ல மகசூல் கிடைக்கும். மேலும் அளவிற்கு அதிகமாக துளிர் மற்றும் பூக்கள் தோன்றும். வருடத்திற்கு இரண்டு முறை கட்டாயம் மக்கிய ஆட்டு சாணம் இடவேண்டும்.
மல்லிகை செடிகளை அதிகம் தாக்குவது செம்பேன் மற்றும் மொட்டு துளைப்பான். கற்பூர கரைசல் மற்றும் மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசல் இவை இரண்டையும் மாறி மாறி தெளித்து வந்தால் எந்தவித பூச்சி தாக்குதலும் இருக்காது. இரண்டாவது வருடம் முதல் பூக்கள் பூத்து முடிந்த உடனே கவாத்து செய்து செடிகள் அதிக உயரம் வளராமல் தடுக்கலாம். இதனால் அதிக துளிர்கள் தோன்றும். மேற்சொன்ன இயற்கை சாகுபடி முறையை பின்பற்றினால் வருடம் முழுவதும் பூக்கள் பறிக்கலாம். மகசூல் அதிகமாக இருக்கும்.


ரோஜா

மல்லிகையை விட அதிக வருவாய் ஈட்டித் தரக்கூடியது ரோஜா மலர்கள். ரோஜாக்களில் சமீபத்திய பயன்பாட்டில் பல ரகங்கள் உண்டு. இதில் முக்கியமாக ஆந்திர சிவப்பு வண்ண ரோஜா, அடுத்து அதிகமாக சாகுபடியில் உள்ளது பட்டன் ரோஜா. பட்டன் ரோஜா முள் இல்லாமல் இருக்கும். சந்தையில் நிலையான வரவேற்பு உள்ள மலர்.
ரோஜா பயிரிட நீர் தேங்காத மண் உகந்தது. 
முக்கியமாக, மணல் மற்றும் களிமண் கலந்த மண் சிறப்பானது. ஆடி பட்டத்தில் நடுவது சிறப்பு. நடவு இடைவெளி பல வகையில் விடப்படுகிறது, நிலத்தின் அளவிற்கேற்ப, 3 க்கு 3, 5 க்கு 2, 4 க்கு 4 அடி அளவில் பயிர் செய்கின்றனர். ரோஜா பல வருடங்கள் தொடர்ந்து மகசூல் தரக்கூடியது. 
அதனால் இயந்திரம் மூலம் களைகளை கட்டுப்படுத்த வசதியாக இடைவெளி விட்டு நடவு செய்யவேண்டும். அவ்வப்பொழுது சணப்பை மற்றும் அகத்தி இரண்டும் கலந்து விதைத்து பின் மடக்கி உழுது விட்டால் செடிகளுக்கு அதிகமான சத்துகள் கிடைக்கும். 
1க்கு 0.5 அளவு குழிகளில் மண் புழுஉரம் இரண்டு கிலோ, வேப்பம்பிண்ணாக்கு அரை கிலோ, சிறிது சுண்ணாம்பு தூள் கலந்து இட்டு பதியன் குச்சிகளை நடவேண்டும். குழுக்களை சுற்றி மண் இருக்கும் அளவிற்கு சுற்றிலும் நன்கு மிதித்து விட வேண்டும்.
ரோஜா செடி நட்ட பத்தாவது நாள் முதல் துளிர்கள் வர ஆரம்பிக்கும். பின்னர் மொட்டுகள் தோன்ற ஆரம்பித்து விடும்.
ரோஜாவை அதிகமாக தாக்கும் நோய்கள், சாறுஉறிஞ்சும் பூச்சி மற்றும் மாவுப் பூச்சி. 
கற்பூர கரைசல் தொடர்ந்து வாரம் ஒரு முறை தெளித்தால் எந்த பூச்சி தாக்குதலும் இருக்காது. அளவிற்கு அதிகமாக துளிர் மற்றும் மொட்டுகள் தோன்றும். 
மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் வேரில் அளிப்பதன் மூலமாக அதாவது பாசன நீரில் கலந்து விட்டால் நல்ல வளர்ச்சியை காணலாம். தினமும் பூக்கள் பறிக்க வேண்டும். 
பூ பூப்பது நின்ற உடன் கவாத்து செய்வது மிகவும் அவசியம். 
மண் தன்மைக்கு ஏற்ப தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 
தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/14/w600X390/rose.jpg http://www.dinamani.com/agriculture/2017/dec/14/மல்லிகை-ரோஜா-சாகுபடி-2825848.html
2821455 விவசாயம் தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறை! Thursday, December 7, 2017 12:58 AM +0530 பெரம்பலூர்: தென்னையில் இளங்கன்றுகளிலிருந்து முதிர்ந்த மரங்கள் வரைக்கும் பல வகையான பூச்சிகள் தாக்கும். இவற்றில் காண்டாமிருக வண்டு, சிவப்புக் கூண் வண்டு, எரியோபைட் சிலந்தி, கருந்தலைப் புழு, ஒத்தைப் புழு, செதில் பூச்சி ஆகியவை அதிக சேதாரத்தை ஏற்படுத்துபவை.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள வேளாண் அறிவியல் மையத் தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ஜே. கதிரவன் கூறியது: 
காண்டாமிருக வண்டு

தென்னை பயிரிடக்கூடிய பெரும்பாலான இடங்களில் காண்டாமிருக வண்டுகளின் பாதிப்பு உள்ளது. இந்த வண்டுகளின் தாக்குதல் ஆண்டு முழுவதும் இருந்தாலும், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை அதிகமாக இருக்கும். தென்னை மரத்தின் நடுக்குருத்து மட்டையிடுக்கில் இந்தக் காண்டாமிருக வண்டு உட்கார்ந்துகொண்டு, மடிப்புடன் வெளிவரும் குருத்து மட்டையை கடித்துண்ணும். இந்த மட்டை குருத்திலிருந்து வெளிவந்த பின் விசிறிபோல முக்கோண வடிவத்தில் கத்தரித்துவிட்டதுபோல காணப்படும்.
இளம் தென்னங்கன்றுகள் தொடர்ந்து காண்டாமிருக வண்டின் தாக்குதலுக்குள்ளானால், அந்தக் கன்று பட்டுவிடுவதோடு, வளர்ந்த மரங்களின் வளர்ச்சியும் குன்றிவிடும். பாதிக்கப்பட்ட மட்டையின் அடிப்பாகத்தில் முட்டை வடிவத் துவாரம் காணப்படும். காற்று பலமாக வீசினால் இந்த மட்டை ஒடிந்து விழுந்துவிடும். 
நடுக்குருத்தில் வெளிவரும் பூங்கொத்தையும் இந்த வண்டுகள் தாக்கும். பாளை வெடிப்பதற்கு முன் காண்டாமிருக வண்டு தாக்கினால் மகசூல் குறையும். வளரும் தென்னையின் குருத்துப் பாகத்தில் காண்டாமிருக வண்டு கடிப்பதனால் ஏற்படும் காயத்தில், சிவப்புக் கூண் வண்டு உற்பத்தியாகி குருத்துப் பாகத்தைத் தாக்குவதால் அந்த மரத்தின் குருத்து முதலில் சாய்ந்து மரம் பட்டுப்போகும். 
தென்னந்தோப்பில் எருக்குழி இருந்தாலோ, தோப்போரத்தில் வீரிய ஒட்டு தென்னை மரங்களை நடவு செய்திருந்தாலோ, தோப்பைச் சரியாகப் பராமரிக்கவில்லையென்றாலோ காண்டாமிருக வண்டின் தாக்குதல் அதிகமாக இருக்கும். எனவே, தோப்பைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தோப்பில் பட்டுப்போன மரம் இருந்தால் அதை அடியோடு வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.
கட்டுப்படுத்தும் முறை: காம்போஸ்ட், தொழுவுரம் இவற்றை தோப்புக்கு பயன்படுத்தும்போது, அதில் இருக்கும் காண்டாமிருக வண்டின் புழுக்களையும், கூட்டுப் புழுக்களையும் பொறுக்கி அழித்துவிட வேண்டும். எருக்குழியில் மெட்டாரைசியம் என்னும் பூஞ்சாணத்தை இடுவதால் காண்டாமிருக வண்டின் புழுக்களை இந்தப் பூஞ்சை அழித்துவிடும்.
இனக்கவர்ச்சிப் பொறிகளைப் பயன்படுத்தியும் வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம். இதற்கு ஆமணக்கு புண்ணாக்கை தண்ணீரில் கலந்து, வாய் அகலமாக உள்ள மண் சட்டிகளில் எடுத்து தோப்பில் வைத்துவிட்டால் அதன் வாசனைக்கு வண்டு வந்து விழும். ஒவ்வொரு நாள் காலையிலும் விழுந்துகிடக்கும் வண்டுகளைப் பொறுக்கி அழித்துவிட வேண்டும். தேங்காய் அறுவடை செய்யும் ஒவ்வொரு முறையும் குருத்துப் பகுதியில் வண்டு உள்ளதா எனப் பார்த்து, வண்டு இருந்தால் கூர்மையான கம்பியைப் பயன்படுத்தி குத்தியெடுத்து அழிக்க வேண்டும்.
சிவப்புக் கூண் வண்டு

இந்த கூண் வண்டு மரத்தின் அடித்தண்டுப் பகுதிகளிலும், உச்சியிலும் உள்ள தண்டுப்பகுதிகளில் சின்ன சின்ன துவாரங்களை ஏற்படுத்தி முட்டை வைக்கும். முட்டையிலிருந்து வெளிவரும் புழுவானது தண்டுப் பகுதியில் உள்ள மிருதுவான திசுக்களை சாப்பிட்டு மரநார்களை துவாரம் வழியாக வெளியே தள்ளும். மரத்தில் காது வைத்துக் கேட்டால் புழுக்கள் இரையும் சப்தம் கேட்கும். தாக்கப்பட்ட மரத்தின் துவாரம் வழியாக பழுப்பு நிறத்தில் ஒருவகை திரவம் வெளிவரும்.
கட்டுப்பாடு: இதைக் கட்டுப்படுத்த மரத்தில் காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது மிக அவசியம். வண்டு தாக்கிய மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். மரத்தில் உள்ள துளைகளில் 5 மில்லி மோனோகுரோட்டோபாஸ் பூச்சிக்கொல்லியை 5 மில்லி தண்ணீருடன் கலந்து ஊசி வழியாகச் செலுத்த வேண்டும். 10 மில்லி மோனோகுரோட்டோபாஸ் பூச்சிக்கொல்லியை 10 மில்லி தண்ணீருடன் கலந்து வேரில் கட்டிவிடலாம். கூண் வண்டுகளை கவர கரும்புச்சாறு 3 லிட்டர், ஈஸ்ட் 5 கிராம், அசிட்டிக் அமிலம் 5 மில்லி, நீளவாக்கில் வெட்டப்பட்ட இலைமட்டைத் துண்டுகளை ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு ஏக்கருக்கு 30 என்னும் எண்ணிக்கையில் தென்னந்தோப்பில் உள்ள மரங்களில் கட்டி அழிக்கலாம். கூண் வண்டு தாக்கிய வாரத்தில் 3 கிராம் எடையுள்ள அலுமினியம் பாஸ்பைடு மாத்திரைகளை போட்டு களிமண்ணால் மூடியும் அழிக்கலாம். 
ஈரியோபைட் சிலந்தி 

ஈரியோபைட் சிலந்தி தென்னங் குரும்பைகளிலும், இளம் காய்களின் தொட்டுக்கு அடியிலும் இருந்துகொண்டு மிருதுவான திசுக்களை தாக்கி சாறை உறிஞ்சும். அவ்வாறு உறிஞ்சப்பட்ட பகுதி பழுப்பு நிறமாக மாறும். தாக்குதலுக்குள்ளான குரும்பைகள் வளர்ச்சியடைந்து, இளங்காயாக மாறும்போது பழுப்பு நிறப் பகுதியின் அளவு அதிகமாகி, நீளவாக்கில் பல சின்னச் சின்ன வெடிப்புகளும் தோன்றும். இதனால் தேங்காயின் அளவு குறைவதோடு மட்டுமன்றி, உள்ளே இருக்கும் பருப்பின் அளவும் குறைந்துவிடும். 1- 9 மாதக் குரும்பைகள் இச்சிலந்தியின் தாக்குதலுக்குள்ளாகும். இந்தச் சிலந்தி குறுகிய காலத்தில் அதிக இனப்பெருக்கம் அடைந்து, காற்று மூலமாக வேகமாகப் பரவும். 
கட்டுப்பாடு: இதைக் கட்டுபடுத்த அதிகம் பாதிப்புள்ளாகி உதிர்கின்ற குரும்பைகளை மண்ணில் புதைத்து அல்லது எரித்து அழித்துவிட வேண்டும். இயற்கை பூச்சி விரட்டிக் கரைசல் பயன்படுத்தியும் ஈரியோபைட் சிலந்தியைக் கட்டுப்படுத்தலாம். ஒரு பாத்திரத்தில் 500 மில்லி தண்ணீரை எடுத்துக்கொண்டு, 5 கிராம் துணி சோப்பைக் கரைக்க வேண்டும். வேப்ப எண்ணெய் 20 மில்லியை இந்த சோப்புக் கரைசலில் ஊற்றி நன்றாக நுரை வரும் வரை கலக்க வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் 500 மில்லி தண்ணீரை எடுத்து 20 கிராம் வெள்ளைப் பூண்டை நசுக்கிப் போட்டு நன்றாகக் கலக்கி துணியால் வடிகட்டி வேப்ப எண்ணெய், சோப்புக் கரைசல் உள்ள பாத்திரத்தில் ஊற்றி நன்றாகக் கலக்க வேண்டும். இந்தக் கரைசலை இளம் குரும்பைகளின் மீது தெளிப்பதன் மூலமாக ஈரியோபைட் சிலந்தியைக் கட்டுப்படுத்தலாம். 
டிரையசோபாஸ் பூச்சிக்கொல்லியை ஒரு லிட்டர் நீருக்கு 5 மில்லி அளவு கலந்து தெளிக்கலாம். சிலந்தி பூச்சியின் தாக்குதல் பெரும்பாலும் ஏப்ரல், மே மாதங்களில் அதிகமாகக் காணப்படும். இந்நேரத்தில் மருந்து தெளித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கருந்தலைப் புழு

இந்தப்புழு இலைகளின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு பச்சையத்தை சுரண்டிச் சாப்பிடும். கருந்தலைப் புழுக்களின் தாக்குதல் அதிகமாக காணப்படும் தென்னை மரங்களின் முதிர்ந்த ஓலைகள் முழுவதுமாக காய்ந்து கரும்பழுப்பு நிறத்திற்கு மாறிவிடும். நடுப்பகுதியில் உள்ள 3- 4 இளம் ஓலைகள் மட்டும் பச்சை நிறத்தில் இருக்கும். கருந்தலைப் புழுக்கள் ஓலைகளிலிருந்து சுரண்டிய திசுக்களையும், கழிவுப்பொருளையும் சேர்த்து, அதன் வாயில் சுரக்கும் திரவத்தைக் கொண்டு, மெல்லிய நூலாம் படை போன்ற கூடுகளைக் கட்டும். 
வெப்பநிலை 32 முதல் 35 செல்சியசும், காற்றின் ஈரப்பதம் 75 லிருந்து 85 சதவீதம் வரையிலும் உள்ள காலநிலையில், கருந்தலைப் புழுக்களின் தாக்குதல் அதிகமிருக்கும். தாய் அந்துப்பூச்சிகள் பறந்துசென்று மற்ற தென்னை மரங்களில் முட்டையிடுவதன் மூலமாக இந்தப் பூச்சி பரவும். 
கட்டுப்பாடு: இதைக் கட்டுப்படுத்த அதிகம் பாதிப்புக்குள்ளான ஓலைகளை வெட்டித் தீயிட்டுக் கொளுத்த வேண்டும். 1 லிட்டர் நீருக்கு மாலத்தியான் பூச்சிக்கொல்லி மருந்து 5 மிலி, ஒட்டும் திரவம் 1 மில்லி கலந்து ஓலைகளின் கீழ்பாகத்தில் நன்றாக படும்படி தெளிக்க வேண்டும். உயரமான மரங்களுக்கு மரத்தின் வேரில் மோனோகுரோட்டோபாஸ் 10 மி.லி.யுடன் தண்ணீர் 10 மி.லி. கலந்து பாலீத்தின் பையில் கட்டிவிடலாம். 
நத்தைப் புழு 

இந்த நத்தைப் புழுக்கள் தென்னை ஓலையின் அடிப்பாகத்தில் இருந்துகொண்டு பச்சையத்தை சுரண்டிச் சாப்பிடும். தாக்கப்பட்ட ஓலைகள் நாளடைவில் காய்ந்துவிடும். தென்னை மரத்தின் அடியில் இப்புழுக்களின் எச்சம் மரத்தூள்போல இறைந்து கிடக்கும். தாக்கப்பட்ட மட்டைகளை வெட்டித் தீ வைத்து எரிக்க வேண்டும். டைகுளோர்வாஸ் மருந்தை 1 லிட்டர் நீருக்கு 2 மி.லி வீதம் கலந்து ராக்பர் ஸ்பிரேயர் மூலமாக தெளிக்கலாம்.
மோனோகுரோட்டோபாஸ் பூச்சிக்கொல்லி 10 மி.லி.யை 10 மி.லி. நீருடன் கலந்து வேர் மூலமாக செலுத்தலாம். விளக்குப் பொறிவைத்து அந்து பூச்சிகளை அழிக்கலாம்.
செதில் பூச்சி 

இந்தப் பூச்சி தென்னை ஓலைகளிலும், பாளையிலும் சாற்றை உறிஞ்சுகிறது. இதனால், இலைகளின் மேல்புறம் மஞ்சள் நிறமாக மாறி நாளடைவில் காய்ந்துவிடும். இதைக் கட்டுப்படுத்த தாக்கப்பட்ட மட்டைகளை வெட்டி தீ வைத்துக் கொளுத்த வேண்டும். மீதைல் டெமடான் பூச்சிக்கொல்லியை 1 லிட்டர் நீருக்கு 2 மி.லி அளவில் கலந்து தெளித்து செதில் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம். வேப்ப எண்ணெய்யை 1 லிட்டர் நீருக்கு 30 மி.லி. என்ற அளவில் கலந்து தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/7/w600X390/coconut.jpg http://www.dinamani.com/agriculture/2017/dec/07/தென்னையில்-ஒருங்கிணைந்த-பூச்சி-மேலாண்மை-முறை-2821455.html
2821454 விவசாயம் நெற்பயிரைத் தாக்கும் ஆனைக் கொம்பன் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் Thursday, December 7, 2017 12:57 AM +0530 கிருஷ்ணகிரி: நெல் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் ஆனைக் கொம்பன் பூச்சித் தாக்குதலில் இருந்து பயிரைப் பாதுகாப்பது குறித்து கிருஷ்ணகிரி மாவட்டம், பையூரில் உள்ள மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் என்.தமிழ்ச்செல்வன் அறிவுறுத்தியுள்ளார்.
அவர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில் ஆனைக் கொம்பன் ஈக்களின் தாக்குதல்தான் பரவலாகக் காணப்படுகிறது.
கால் இல்லாத புழுக்களான இவை, வளரும் நெற்பயிரில் தூர்களைத் தாக்குகிறது. தூர்களின் வழியே நுழைந்து, வளரும் பகுதிகளை உண்கிறது. இவை தாக்கப்பட்ட பயிர்களில் நெற்கதிர்கள் பிடிப்பது இல்லை. மேலும், பயிர் வளர்ச்சிக் குன்றிவிடும். தாக்குதலுக்கு உள்ளான தூர்கள் வெள்ளித்தண்டு போல் அல்லது வெங்காய இலைப்போல் காணப்படும்.
பூச்சி தனது முட்டைகளை இலைப் பகுதியின் கீழ் 2 முதல் 6 முட்டைகளை இடுகிறது. இந்த முட்டைகள் நீளமாகவோ அல்லது உருளை வடிவத்திலோ இருக்கும். மேலும், வெள்ளை அல்லது சிவப்பு (அ) இளம்சிவப்பு நிறத்தில் மின்னுவது போல் தோற்றமளிக்கும். முட்டையிலிருந்து வெளியேறும் கால் இல்லாத புழுக்கள் ஊர்ந்து சென்று, பூ மொட்டுகளுக்குள் செல்கிறது. பின் அதில் கூட்டுப் புழுவாக வெளியே வருகிறது. முதிர்ச்சியடைந்த பூச்சிகள், மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் கொசு போன்று சிறிதாகக் காணப்படும்.
இலையில் உள்ள பனித் துளிகளை இவை உள்கொள்ளும். ஆனைக் கொம்பன் பூச்சியின் தாக்குதல் அதாவது, வெங்காய இலைகள் அல்லது வெள்ளித் தண்டுகள்போல 10 சதவீதத்துக்கு மேல் இருந்தால், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் பரிந்துரைக்கப்படும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு உத்திகளைச் செயல்படுத்தி பூச்சியை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு உத்திகள்:
பிளாஸ்டிகேஸ்டரை 10 சதுர மீட்டருக்கு ஒன்று என்ற வீதத்தில் நாற்று நட்ட 10-ஆவது நாளில் இட வேண்டும். அறுவடையை உடனே செய்து, நிலத்தை உழவு செய்ய வேண்டும்.
வயல்களில் இருக்கும் மாற்றுப் பயிர்களை அகற்றி, முன்கூட்டியே நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.
பூச்சிக்கொல்லி மருந்துகளான பாசலோன் 35 சத ஈசி 1,500 மில்லி- ஹெக்டேர் அல்லது கார்போசல்பான் 25 சத ஈசி 800 முதல் 1000 மில்லி - ஹெக்டேர் அல்லது குளோரிபயிரிபாஸ் 20 சதம், ஈசி 1,250 மில்லி - (ஹெக்டேருக்கு) போன்ற மருந்துகளைப் பயன்படுத்தலாம்.
நாற்றங்காலில் இருந்து நாற்றுக்களைப் பிடுங்கி வேர்களை 0.5 சத குளோரிபயிரிபாஸ் கரைசலில் நனைத்து நடவு செய்வதன் மூலம் ஆனைக் கொம்பன் தாக்குதலிலிருந்து பயிர்களை எதிர்காலத்தில் பாதுகாக்கலாம் எனத் தெரிவித்தார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/7/w600X390/plant.JPG http://www.dinamani.com/agriculture/2017/dec/07/நெற்பயிரைத்-தாக்கும்-ஆனைக்-கொம்பன்-பூச்சித்-தாக்குதலை-கட்டுப்படுத்தும்-வழிமுறைகள்-2821454.html
2817454 விவசாயம் நெற்பயிரில் இலை சுருட்டுப்புழு Thursday, November 30, 2017 01:06 AM +0530 பட்டுக்கோட்டை: நெற்பயிரில் இலை சுருட்டுப்புழுவைக் கட்டுப்படுத்த விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குநர் வை.தயாளன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நெற்பயிரில் தற்போது நிலவும் பருவ நிலை மாற்றம் காரணமாக இலை சுருட்டுப்புழு தாக்குதலுக்கு வாய்ப்பு உள்ளது. இவற்றை ஒருங்கிணைந்த முறைகளைக் கையாண்டு கட்டுப்படுத்தலாம்.
நெல் வயல்களில் வளரும் அல்லது தூர் பிடிக்கும் பருவத்தில் உள்ள இளம் பயிர்களைத் தாக்கும் இப்புழுக்கள், இலைகளை உள்பக்கமாக சுருட்டி உள்ளிருந்து பச்சையத்தை சுரண்டி உண்கின்றன. 
இதனால் இலைகள் வெள்ளை நிற சுரண்டல்களுடன் காணப்படும். இலைகள் நீளவாக்கில் சுருண்டு, புழுக்கள் அதனுள்ளே இருந்து விடும். தீவிர தாக்குதலின்போது, முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும். தாக்குதல் அதிகமானால் செடிகள் காய்ந்து விடும். இப்பூச்சியின் தாக்குதல் இருக்கும் சமயத்தில் தழைச்சத்து உரமிடுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். 
சேதம் விளைவிக்கும் பூச்சிகளை விவசாயிகள் அடையாளம் காண்பது மிகவும் அவசியம். பூச்சிகளின் முட்டைகள் தட்டையான முட்டை வடிவத்தில் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்திலும், புழுக்கள் பச்சையான நிறத்தில் ஒளி கசியும் தன்மை கொண்டும் காணப்படும். முன்மார்புக் கேடயம் நுனி நோக்கி நிமிர்ந்தும், பக்கவாட்டில் உருளையாகவும் காணப்படும். தொடர்ந்து 7-10 நாள்கள் கூட்டுப் புழுக்களாக இருக்கும். அந்துப் பூச்சியான முதிர்பூச்சிகள் மஞ்சளான பழுப்பு நிற இறக்கைகளைக் கொண்டது. அதில் கருப்பு நிறத்தில் அலை போன்ற கோடுகள் நடுவிலும், இறக்கைகளின் ஓரத்திலும் காணப்படும். 
நெற்பயிரில் சேதத்தை ஏற்படுத்தும் இலைச் சுருட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்த வரப்புகளை சீராக்கி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். புல் களைகளை நீக்கியும் இப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். விளக்குப் பொறிகளை வைத்து அந்துப் பூச்சிகளை கவர்ந்து, அதனை கொல்ல வேண்டும். 10 ஏக்கருக்கு குறைந்தது 1 விளக்குப் பொறியாவது வைக்க வேண்டும். 
நெற்பயிரின் வளர்ச்சிப் பருவத்தில் பூச்சியை உண்ணும் பறவைகள் நிற்பதற்காக தென்னை குரங்கு மட்டைகளை ஏக்கருக்கு 20 எண்ணிக்கையில் ஆங்காங்கே வயல்களில் பொருத்த வேண்டும். பொருளாதார சேத நிலை அளவு, வளர்ச்சிப் பருவத்தில் 10 சதவீதம் இலைச்சேதம் மற்றும் பூக்கும் பருவத்தில் 5 சதவீதம் கண்ணாடி இலைச் சேதத்திற்கு மேற்பட்டால் மட்டுமே கீழ்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும்.
ஏக்கருக்கு மோனோகுரோட்டோபாஸ் 36 எஸ்எல் 400 மிலி அல்லது அசிபேட் 400 கிராம் அல்லது கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 400 கிராம் தெளிக்க வேண்டும். 
தவிர, ஏக்கருக்கு 10 கிலோ வேப்பங்கொட்டைச்சாறு அல்லது 600 மில்லி வேப்பெண்ணையை தெளிக்க வேண்டும். விவசாயிகள் மேற்கூறிய ஒருங்கிணைந்த முறைகளைக் கையாண்டு, நெற்பயிரில் இலைச்சுருட்டுப் புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/30/w600X390/rice.jpg http://www.dinamani.com/agriculture/2017/nov/30/நெற்பயிரில்-இலை-சுருட்டுப்புழு-2817454.html
2817459 விவசாயம் வீரிய கலப்பின வெண்டை சாகுபடி Thursday, November 30, 2017 01:05 AM +0530 பெரம்பலூர் : மால்வேசியே குடும்பத்தைச் சேர்ந்த வெண்டை, இந்தியாவில் பயிரிடப்படும் முக்கிய காய்கறிப் பயிராகும். உலகளவில் வெண்டை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வெண்டை பயிரிடப்படுகிறது.
வெண்டைக்காய் சத்து மற்றும் சுவை மிகுந்த காய் கறி ஆகையால், அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி உண்ணப்படுகிறது. 100 கிராம் வெண்டைக்காயில் 1.9 கிராம் புரதம், 6.4 கிராம் கார்போஹைட்ரேட், 1.2 கிராம் நார்ச்சத்து, 0.7 கிராம் தாதுச்சத்து மற்றும் 0.2 கிராம் கொழுப்புச்சத்து அடங்கியுள்ளது.
இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள வேளாண் அறிவியல் மைய தோட்டக்கலை தொழிழ்நுட்ப வல்லுநர் ஜெ. கதிரவன் மேலும் கூறியது:
வெண்டை அதிக பூச்சி நோய் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய பயிராகும். குறிப்பாக, மஞ்சள் தேமல் எனப்படும் நச்சுயிரி நோய் வெண்டையை தீவிரமாக தாக்கக்கூடியது. வெள்ளை ஈக்கள் மூலம் பரவக்கூடிய இந்நோய் பாதிப்பு ஏற்பட்டால் 50 முதல் 94 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படும். பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி இந்நோயைக் கட்டுப்படுத்துவது சிரமமான காரியம். எனவே, இந்நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்ட ரகங்களை பயிரிடுவதே சிறந்தது. அந்த வகையில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்ட 3 வீரிய கலப்பின வெண்டை ரகங்கள் மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்புத் தன்மை உடையவை. 
கோ.பிஎச்- 1:மஞ்சள் தேமல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத் தன்மை கொண்டது. காய்கள் அடர் பச்சை நிறத்திலிருக்கும். குறைவான நார்த்தன்மை மற்றும் குறைவான முடிகள் கொண்டது. ஏக்கருக்கு 8 டன் மகசூல் தரக்கூடியது. 
கோ. பிஎச் -3:செடிக்கு 25 முதல் 29 காய்கள் உருவாகும். ஏக்கருக்கு 10 டன் மகசூல் தரவல்லது.
கோ. பிஎச் 4: மலைப் பிரதேசங்கள் தவிர தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிட ஏற்றது. செடிக்கு 25 முதல் 29 காய்கள் உருவாகும். ஒரு பருவத்தில் 22 அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 12 டன் மகசூல் தரக்கூடியது. 
மண் மற்றும் தட்ப வெப்பநிலை:வெண்டை அனைத்து வகையான மண் வகையிலும் வளரும் என்ற போதிலும், அமில காரத்தன்மை 6.5 முதல் 7.5 வரையுள்ள கரிசல் மண் முதல் செம்மண் வகைப்பாட்டு நிலங்களில் வெண்டை நன்கு வளரும். வெண்டை வெப்பத்தை விரும்பும் பயிர். நீண்டநேர வெப்ப நாள்கள் இதற்குத் தேவை. வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் முதல் 35 டிகிரி செல்சியஸ் வரையுள்ள சமயங்களில் வெண்டையின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மழைக்காலங்களிலும் வெண்டையை வெற்றிகரமாக சாகுபடி செய்யலாம். மண்ணின் வெப்பநிலை 20 டிகிரி செல்சியசை விட குறையும்போது விதை முளைப்புத்திறன் வெகுவாக பாதிக்கப்படும்.
விதையளவு:வீரிய கலப்பினத்தைப் பொருத்த வகையில் ஏக்கருக்கு 1 கிலோ விதை தேவைப்படும். 
நிலம் தயாரிப்பு மற்றும் விதைப்பு:நிலத்தை மூன்று முதல் நான்கு முறை நன்கு உழவு செய்யவேண்டும். கடைசி உழவுக்கு முன்னதாக ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் இட்டு, 60 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும். விதைப்புக்கு 24 மணி நேரம் முன்னதாக விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதற்கு, 1 கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மாவிரிடி 5 கிராம் அல்லது திரவம் 2 கிராம் கொண்டு நேர்த்தி செய்யலாம். பின்னர், 400 கிராம் அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தை ஆறிய அரிசிக் கஞ்சியில் கலந்து விதைகளின் மீது தெளித்து நன்கு கிளறி நிழலில் உலர்த்த வேண்டும். இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 45 செ.மீ இடைவெளியில் 2 செ.மீட்டர் ஆழத்தில் விதைப்பு செய்யலாம். 
நீர் மற்றும் களை நிர்வாகம்:விதைத்த உடனே, பின்னர் மண்ணின் நீர்ப்பிடிப்புத் தன்மைக்கேற்ப 5 முதல் 7 நாள்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சலாம். களைகள் முளைக்கும் முன் விதைத்த 3-வது நாள் ஆக்சி புளுரோபென்களைக்கொல்லி ஏக்கருக்கு 250 மி.லி அல்லது புளுகுளோரலின் களைக்கொல்லியை ஏக்கருக்கு 800 மி.லி அளவில் தெளித்து களையைக் கட்டுப்படுத்தலாம். பின்னர், 30-வது நாள் களைக்கொத்து கொண்டு களை எடுக்கவேண்டும். 
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம்:அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களை ஏக்கருக்கு முறையே 1 கிலோ என்ற அளவில் 50 கிலோ மட்கிய எருவுடன் கலந்து நிலத்தில் தூவ வேண்டும். வீரிய கலப்பினங்களுக்கு அடியுரமாக ஏக்கருக்கு தழை, மணி, சாம்பல் சத்துக்கள் ஒவ்வொன்றும் முறையே 40 கிலோ தேவைப்படும். இதை அளிப்பதற்கு யூரியா, சூப்பர் பாஸ்பேட், மியூரியேட் ஆப் பொட்டாஷ் உரங்கள் முறையே 87 கிலோ, 250 கிலோ மற்றும் 66 கிலோ தேவைப்படும். மேலுரமாக விதைப்பு செய்த 30- வது நாள் யூரியா 87 கிலோ இடலாம். இலைவழித் தெளிப்பாக நீரில் கரையக்கூடிய 19:19:19 உரத்தை 1 லிட்டர் நீருக்கு 5 கிராம் அளவில் கலந்து 35 மற்றும் 50-வது நாள் தெளிக்கலாம். நுண்சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்து பச்சைநிற நேரான காய்கள் கிடைக்க காய்கறி நுண்ணூட்டக் கலவையை 1 லிட்டர் நீருக்கு 3 கிராம் அளவில் கலந்து 40 மற்றும் 60-வது நாளில் இலைவழியாகத் தெளிக்கலாம்.
பூச்சி மேலாண்மை

காய்த் துளைப்பான்: வெண்டையில் காய்த்துளைப்பான் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். இவற்றைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறி ஏக்கருக்கு 5 வைக்க வேண்டும். காய்ப்புழுக்களால் தாக்கப்பட்ட காய்களை சேகரித்து அழித்துவிட வேண்டும். ஏக்கருக்கு முட்டை ஒட்டுண்ணியான ட்ரûக்கோகிரம்மா 40 ஆயிரம் விடவேண்டும். கார்பரில் நனையும் தூள் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும். இவற்றுடன், வேப்பம் கொட்டைப்பொடி 50 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.
செஞ்சிலந்தி பேன்: இவை சிவப்புநிற சிறிய அளவிலான சிலந்திப் பேன்கள். இலையில் கூட்டமாக அமர்ந்து சாற்றை உறிஞ்சி அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க வேப்பம் கொட்டை சாறு கரைசலை 15 நாள் இடைவெளியில் இலைவழியாக தெளிக்கலாம். தாக்குதல் அதிகமாக இருக்கும் பட்சத்தில் புராபர்கைட் 5 7ஈ.சி பூச்சிக்கொல்லியை ஏக்கருக்கு 400 மி.லி அளவில் தெளிக்கலாம். 
நூற்புழு தாக்குதலைத் தடுக்க: ஏக்கருக்கு 200 கிலோ வேப்பம் பிண்ணாக்கு விதைக்கும்போது உரத்துடன் கலந்து இட வேண்டும் அல்லது ஒரு ஏக்கருக்கு கார்போபியூரான் 3 ஜி குருணை மருந்து 5 கிலோ அல்லது போரேட் 10 ஜி குருணைமருந்து 5 கிலோ இட வேண்டும்.
அசுவினிப் பூச்சி:இதைக் கட்டுப்படுத்த, இமிடாகுளோப்ரிட் 70 டபள்யூ.ஜி குருணையை 1 ஏக்கருக்கு 12 கிராம் அளவில் நீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து கட்டுப்படுத்தலாம்.
நோய் மேலாண்மை

மஞ்சள் நரம்புத் தேமல் நோய்: இது மிகவும் அதிக அளவில் வெண்டையைத் தாக்கக்கூடிய ஒருநச்சுயிரி நோயாகும். இந்நோய் வெள்ளை ஈ என்ற பூச்சிகளால் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரப்பப்படுகிறது. இப்பூச்சியைக் கட்டுப்படுத்த 2 மி.லி வேம்பு எண்ணையை ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும். கோடைக் காலத்தில் இந்நோய் மிக அதிக அளவில் வெண்டையைத் தாக்கும். இந்தப் பருவத்தில் நோயை எதிர்த்து வளரக் கூடிய ரகங்களைப் பயிரிடவேண்டும்.
சாம்பல் நோய்:இந்நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் நனையும் கந்தகத் தூள் 2 கிராம் ஒருலிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். பிறகு 15 நாள் இடைவெளியில் மறுபடியும் ஒருமுறை தெளிக்கவேண்டும். 
அறுவடை: நட்டுவைத்த 45 நாள்களில் காய்கள் அறுவடைக்கு வரும். காய்கள் முற்றுவதற்கு முன் அறுவடை செய்துவிட வேண்டும். 1 முதல் 2 நாள்களுக்கு ஒருமுறை அறுவடை செய்வது முக்கியமாகும்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/30/w600X390/lades-finger.jpg http://www.dinamani.com/agriculture/2017/nov/30/வீரிய-கலப்பின-வெண்டை-சாகுபடி-2817459.html
2815550 விவசாயம் பருத்தியைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்த யோசனை Monday, November 27, 2017 02:11 AM +0530 பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி பயிரை தாக்கியுள்ள நோய்களைக் கட்டுப்படுத்த யோசனை தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண் துறை) கல்யாணி. 

பெரம்பலூர் மாவட்டத்தில் நிகழாண்டில் 33,492 ஹெக்டேர் பரப்பளவில் மானாவாரி பருத்தி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதாலும், காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதாலும் பருத்தி பயிரை நோய்கள் தாக்குவதற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை நிலவுகிறது. பருத்தி பயிரை தாக்கும் நோய்களின் அறிகுறிகளை கண்டு, விவசாயிகள் கட்டுப்படுத்த வேண்டும். 

சாம்பல் அல்லது தயிர்ப்புள்ளி நோய்: இந்நோயானது, இலையின் அடிப்புறத்தில் ஒழுங்கற்ற, கசியும் புண்களுடன் சாம்பல் நிற புள்ளிகள் இலையின் மேற்பரப்பில் காணப்படும். இந்நோய் தீவிரமடைந்த நிலையில், சாம்பல் நிற நுண் துகள்கள் இலையின் மேற்பரப்பிலும் காணப்படும். பாதிக்கப்பட்ட இலைகள் நுனியில் இருந்து உள்நோக்கி காயத் தொடங்கும். 

பின்னர், மஞ்சள் நிறமாகி இளம் இலைகள் உதிர்ந்துவிடும். இந்நோயைக் கட்டுப்படுத்த, தாவர குப்பைகளை அகற்றி தீயிடவும். அதிகப்படியான நைட்ரஜன் உரங்களை தவிர்க்கவும். 

கார்பென்டசிம் 250 கிராம், ஹெக்டேர் அல்லது வெட்டபுள் சல்பர் 1.25 -2.0 கிலோ ஹெக்டேர் என்ற அளவில் தெளிக்கவும். அல்லது, நேட்டிவோ 1 மி.லி அல்லது ஹெக்சாகோனோசால் 1.5 மி.லி அல்லது புரபிகோனோசோல் 1.5 மி.லி அல்லது குளோரோதானில் 2 கிராம் லிட்டர் என்ற அளவில் தெளிக்கவும். 

ஆல்டர்நேரியா இலைக்கருகல் நோய்: இந்நோயானது, அனைத்துப் பருவத்திலும் பாதிக்கக்கூடியது. ஆனால், 45- 60-ஆம் நாளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட இலைகளில் வெளிர் பழுப்பு நிறத்தில் வட்ட வடிவத்தையோ, ஒழுங்கற்ற வடிவத்தையோ கொண்ட சிறு, சிறு புள்ளிகள் காணப்படும். ஒவ்வொரு புள்ளியின் நடுவிலும், அழுக்காக வளையங்கள் காணப்படும்.   

புள்ளிகள் ஒன்றோடொன்று இணைந்து, இலை முழுவதும் பாதிக்கும். பாதிக்கப்பட்ட இலைகள் நொறுங்கி உதிர்ந்து விடும். சில நேரங்களில் தண்டுகளிலும் நோயின் அறிகுறி காணப்படும். தீவிர நிலையில் புள்ளிகள் பூவடிச் செதில்களிலும், காய்களிலும் காணப்படும். 

இந்நோயைக் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட தாவரக் குப்பைகளை அகற்றவும். 
ஆரம்ப நிலையில் மான்கோசெப் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2 கிலோ ஹெக்டேர் தெளிக்கவும். 15 நாள் இடைவெளியில், மீண்டும் ஒருமுறை தெளிக்கவும். நேட்டிவோ 1 மி.லி அல்லது ஹெக்சாகோனோசால் 1.5 மி.லி அல்லது புரபிகோனோசோல் 1.5 மி.லி அல்லது குளோரோதானில் 2 கிராம் என்ற அளவில் தெளிக்கவும்.

பாக்ட்டீரியா கருகல் நோய்: இந்நோயானது, நீர்க்கசிவுடன் கூடிய கருமை நிற புள்ளிகள் இலையின் நரம்புகளுக்கிடையில் தோன்றி கோண வடிவத்தில் இருக்கும். 

இந்நோயைக் கட்டுப்படுத்த, 10 லிட்டர் தண்ணீரில் காப்பர் ஆக்ஸி குளோரைடு 20 கிராம் மற்றும் ஸ்ட்ரப்டோசைக்ளின் 1 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கவும். மேற்கண்ட முறைகளை பயன்படுத்தினால், நோய் தாக்குதலை கட்டுப்படுத்தி மகசூல் பெறலாம்.

]]>
http://www.dinamani.com/agriculture/2017/nov/27/பருத்தியைத்-தாக்கும்-நோய்களைக்-கட்டுப்படுத்த-யோசனை-2815550.html
2812987 விவசாயம் நெல்லில் ஒருங்கிணைந்த களை நிர்வாகம் Thursday, November 23, 2017 10:18 AM +0530 தருமபுரி: நெற்பயிரில் களைகள் அதிக அளவு விளைச்சல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவற்றைத் தவிர்த்து மகசூல் அதிகம் பெற பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் பா.ச. சண்முகம், முனைவர்கள் அய்யாதுரை, மா.அ.வெண்ணிலா ஆகியோர் கூறும் ஒருங்கிணைந்த களை நிர்வாக முறைகள்:

தருமபுரி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பரவலாக பெய்து வருவதால் விவசாயிகள் நெல் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். களைகளினால் நெல் பயிரில் 70 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது. களைகள் பயிர்களோடு போட்டியிட்டு, பயிருக்குண்டான சத்துகள், நீர், சூரிய ஒளி, நிலம் போன்றவற்றை அதிக வீரியத்துடன் பகிர்ந்து பயிர் மகசூலைக் குறைக்கின்றன. களைகளினால் நடவு நெல், நேரடி நெல் விதைப்பு, மானாவாரி நெல் சாகுபடி முறைகளில் முறையே 34 முதல் 67 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
தட்பவெப்ப நிலை, மண்ணின் வகை, நெல் பயிரிடும் முறை, வகைகளின் குணம், ரகம், நீர் மேம்பாடு முறைகள் போன்ற காரணிகளினால் நெற்பயிரில் களைகளின் பாதிப்பு வேறுபடும். பொதுவாக, தமிழகத்தில் நெல் சாகுபடி செய்யும்போது நெல் வயலில் புல் வகை களைகளான வர்சனாம் புல், குதிரை வாலி, இஞ்சி புல், கோரை வகை களைகளான வட்டக்கோரை, ஊசிக்கோரை, அகன்ற இலை களைகளான நீர்மேல் நெருப்பு, நீர்முள்ளி, வல்லாரை, நீர்ப்புள்ளி, நீர் கிராம்பு, அரைகீரை, நீர்த்தாமரை, பொடுதழை, கொடகுசால், கொட்டகரந்தி ஆகியவை நெல் பயிரில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
ஒருங்கிணைந்த களை நிர்வாகம்: சாகுபடி செய்யும் பயிர்களைக் காட்டிலும் விரைவாக வளர்வதற்கும், பரவுவதற்கும் களைகள் சிறப்புத் தன்மைகள் பெற்றுள்ளன. களைகளை அழிப்பது, ஒழிப்பது என்பது முடியாத செயலாகும். நல்ல மகசூல் பெற நடவு நெல் வயலில் நடவுசெய்த 30-ஆம் நாள் வரையிலும், நேரடி நெல் விதைப்புக்கு விதைத்த 35-ஆம் நாள் வரையிலும், மானாவாரி நெற்பயிருக்கு 40 முதல் 60 நாள் வரையிலும் களைகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். பயிர் சாகுபடியில் குறிப்பிட்ட பருவம் வரை மட்டும் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்கும் பயிர்களின் வளர்ச்சிப் பருவத்தில் தகுந்த களைக் கட்டுப்பாடு முறைகளைக் கையாண்டு குறைப்பதையே ஒருங்கிணைந்த களை நிர்வாக முறையாகும். அதாவது, உழவியல் மற்றும் பயிர் சாகுபடி முறைகள் கருவி, இயந்திரக் களையெடுப்பு முறைகள் களைக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை சூழ்நிலைக்கேற்ப ஒருங்கிணைந்த முறையில் கடைப்பிடிக்க வேண்டும். 
உழவியல் முறைகள்: விதைகள் கலப்பில்லாத நெல் விதைகளை உபயோகித்தல். வரப்பு, வாய்க்கால்களில் களை வராமல் சுத்தமாக வைத்தல். கோடை உழவு முறையில் உழவு மற்றும் சமன் செய்து நிலம் தயாரித்தல், பயிரையும் ரகத்தையும் தேர்வு செய்தல், பயிர் எண்ணிக்கையைப் பராமரித்தல். ஊடுபயிர், நிலப்போர்வை இடுதல், தகுந்த பயிர் சுழற்சியைக் கடைப்பிடித்தல், களைக் கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பயன்படுத்துதல், உரிய களைக்கொல்லி மருந்துகளை சரியான தருணத்திலும் அளவிலும் தெளித்தல் சிறந்தது.
களைகள் முளைக்கும் முன் கட்டுப்படுத்துதல்: 2-3 ஆம் நாள் நேரடி நெல் விதைப்பு செய்து, 2-3 ஆம் நாளில் களைக் கொல்லியை ஹெக்டேருக்கு 1.5 லிட்டர் அளவில் 50 கிலோ மணலுடன் கலந்து 1- 2 செ.மீ அளவு தண்ணீரை நிறுத்தி சீராக வயல் முழுவதும் தூவி விட வேண்டும். இக்களைக் கொல்லியை இட்டவுடன் 3 -ஆம் நாள் வரை தண்ணீரைப் பாய்ச்சவோ, வடிகட்டவோ கூடாது.
களைகள் முளைத்தப் பின் கட்டுப்படுத்துதல்: பால்பேக் சோடியம் களைக்கொல்லியை களைகள் முளைத்த பின் (2 முதல் 3 இலைகள் தருணத்தில்) 15 முதல் 20 நாளில் ஹெக்டேருக்கு 200 மி.லி. வீதம் 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். இக் களைக் கொல்லியை இட்டவுடன் 3ஆம் நாள் வரை தண்ணீரைப் பாய்ச்சவோ, வடிகட்டவோ கூடாது. 
களை எடுக்கும் கருவி (கோனோ, ரோட்டால் வீடர்): களைகளைக் கட்டுப்படுத்த, களை எடுக்கும் கருவிகளைப் பயன்படுத்துவதால், கைக் களை எடுக்கும் செலவைக் காட்டிலும் குறைந்த செலவில் களைகளைக் கட்டுப்படுத்தி, மகசூலைப் பெருக்க முடியும். இக் களைக் கருவிகளை நடவு நெல் விதைப்பு செய்த வயலில் வரிசைக்கு வரிசை இடைவெளியில் முன்னும், பின்னும் நகர்த்தி இயக்குவதால், களைகளைக் கட்டுப்படுத்துவதோடு, மண்ணில் காற்றோட்ட வசதி ஏற்பட்டு, அதிக தூர்களும், கதிர்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. இக் களை கருவி வரிசையிலுள்ள களைகளை மட்டுமே (70-75 சதம்) அழித்து விடும். செடிகளுக்கு இடையே உள்ள களைகளை (20-25 சதம்) மிகக் குறைவான ஆள்களைக் கொண்டு கட்டுப்படுத்தலாம். இக் களைக் கருவிகள் ஒன்று மற்றும் இரண்டு உருளும் முள்போன்ற வடிவில (கோனோ, ரோட்டால் வீடர்) அமைக்கப்பட்டுள்ளன. இக் களை கருவிகளை விதைத்த 10-ஆம் நாள் முதல் முறையாகவும் அடுத்து களைகளின் தீவிரத்தைப் பொருத்து 10 அல்லது 15 நாள்களுக்கு ஒன்று அல்லது இரு முறைகள் பயன்படுத்துவதால் களைகளின் எண்ணிக்கையைக் கட்டுபடுத்துவதோடு, இயற்கை உரமாகவும் மாற்றலாம். நன்கு வளர்ந்த பயிர்களுக்கு இடையே இக் களை கருவியைப் பயன்படுத்துவது சிரமமாக இருப்பதால், விதைத்த 30-35 நாள்களுக்குள் பயன்படுத்துவது நல்லது. 
எனவே, உழவியல் முறைகள், களைக்கொல்லிகளையும், கருவியையும் ஒருங்கிணைந்து களைகளை அதிக அளவில் கட்டுப்படுத்துவதனால் மகசூலையும், வருவாயையும் அதிகரிக்கலாம் என்றனர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/23/w600X390/farmar.JPG http://www.dinamani.com/agriculture/2017/nov/23/நெல்லில்-ஒருங்கிணைந்த-களை-நிர்வாகம்-2812987.html
2812983 விவசாயம் இயற்கை முறையில் காபி உற்பத்தி: அதிக விலையால் விவசாயிகள் மகிழ்ச்சி Thursday, November 23, 2017 10:17 AM +0530 இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் காபி பயிருக்கு அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

நீலகிரி மாவட்டம், குந்தா பகுதியில் தேயிலை சாகுபடி பிரதானத் தொழிலாக உள்ளது. தேயிலைச் செடிகளுக்கு நடுவே ஊடுபயிராக காபி பயிரிடப்படுகிறது. மஞ்சூர், கிண்ணக்கொரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 6,000 ஹெக்டேர் பரப்பளவில் காபி சாகுபடி செய்யப்படுகிறது. 
தேயிலைக்கு போதிய விலை கிடைக்காத நிலையில், காபி சாகுபடியை அதிகரிக்க விவசாயிகள் முன்வந்தனர். போதிய விழிப்புணர்வு இல்லாததால் சிறு விவசாயிகள் காபி உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்குத் தேவையான அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறையினர் கூறியதாவது:
இயற்கை விவசாயத்தில் அதிக அளவில் விளையும் பயிர்களில் காபி ஒன்றாகும். இதன் உற்பத்திக்கு இதமான வெயில், நிலையான காலநிலை அவசியம். மலைச் சவுக்கு என்று அழைக்கப்படும் சில்வர் ஓக் மரத்தின் அடியில் காபி சாகுபடி செய்யப்படுகிறது.
இதனால், காபி செடிக்குத் தேவையான நிழல் கிடைப்பதுடன், இம்மரத்தில் இருந்து விழும் இலைகள் மூலம் தேவையான இயற்கை உரமும் கிடைக்கிறது. ஒரு ஹெக்டேர் பரப்பளவில் 10,000 கிலோ இலைகள் உதிர்கின்றன. தோட்டத்தில் இவை மக்கும்போது 160 கிலோ தழைச்சத்து, 45 கிலோ மணிச்சத்து, 50 கிலோ சாம்பல் சத்து ஆகியவை கிடைக்கும். இத்துடன் நுண்ணூட்டச் சத்தும் காபி செடிக்கு கிடைக்கிறது.

காபி தோட்டத்தில் காலியாக உள்ள இடங்களில் கொள்ளு, தட்டைப்பயறு போன்ற பயிர்களையும் விதைக்கலாம். இவை காற்றிலுள்ள தழைச்சத்துக்களை இழுத்து மண்ணை வளப்படுத்துகிறது. இதன் மூலம் கூடுதல் வருமானமும் கிடைக்கிறது. ஒரு ஹெக்டேரில் 25 டன் வரை தொழுஉரம் இடலாம். கோழி எருவாக இருந்ததால் குறைந்தது 2 ஆண்டுகள் மட்க வைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், தொழுஉரம் அல்லாமல் அசோஸ்பைரில்லம், பாஸ்பூ பாக்டீரியா போன்ற உயிர் உரங்களையும் பயன்படுத்தலம். இயற்கை முறையில் சாகுபடி செய்யும்போது செலவு குறைவதுடன், கூடுதல் விலையும் கிடைக்கும் என்றனர்.

இது குறித்து காபி விவசாயி சசிகுமார் கூறியதாவது: 
மஞ்சூர் பகுதியில் தேயிலைச் செடிகளுக்கு நடுவே ஊடுபயிராக காபி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறையினர் விவசாயிகளிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காபி சாகுபடிக்கான மானியத்தை அளித்தால் உதவியாக இருக்கும். இயற்கை முறையில் விளையும் காபிக்கு விலை உயர்வு ஏற்பட்டுள்ளதால், விளைச்சலை அதிகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும்.

கடந்த காலங்களில் தேயிலை விவசாயத்தில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்தோம். தேயிலை விலை வீழ்ச்சி ஏற்பட்டதால், ஊடுபயிராக காபி பயிரிட்டோம். இயற்கை முறையில் பயிரிடப்படும் காபிக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/23/w600X390/coffe.JPG நீலகிரி மாவட்டம், பெங்கால்மட்டம் பகுதியில் காய்த்துக் குலுங்கும் காபிப் பழம். http://www.dinamani.com/agriculture/2017/nov/23/இயற்கை-முறையில்-காபி-உற்பத்தி-அதிக-விலையால்-விவசாயிகள்-மகிழ்ச்சி-2812983.html
2808499 விவசாயம் லாபம் தரும் தேனீக்கள் Thursday, November 16, 2017 12:46 AM +0530 பொள்ளாச்சி: மழைப்பொழிவு குறைந்து வறட்சியால் விவசாயம் செய்ய முடியாமல் நஷ்டத்தைச் சந்தித்து வரும் விவசாயிகளிடையே, மாற்றி யோசித்து தண்ணீர்த் தேவையின்றி தேனீ வளர்ப்பில் மாதம் ரூ. 50,000-க்கு மேல் வருவாய் ஈட்டி வருகிறார் பொள்ளாச்சி விவசாயி விவேக்.
வறட்சி, நோய்த் தாக்குதல், விளைபொருளுக்கு கட்டுபடியான விலை கிடைக்காதது போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயத்தைக் கைவிட வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். 
கடன் தொல்லையால் சில விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தற்போதைய விவசாயத்தின் நிலை இருந்து வருகிறது. இத்தகைய சூழலில் சில விவசாயிகள் மட்டும் விவசாயத்துடன், விவசாயம் சார்ந்த மாற்றுத் தொழில்களையும் மேற்கொண்டு வருகின்றனர். 
இத்தகைய சூழலில், பொள்ளாச்சியை அடுத்த பெரியபோதுவைச் சேர்ந்த விவசாயி விவேக், தேனீ வளர்ப்பின் மூலமாக மாதம் ரூ. 50,000-க்கு மேல் வருவாய் ஈட்டி வருகிறார். 
ஆனைமலையைச் சேர்ந்த எம்.வி.சுப்ரமணியம் என்ற விவசாயி வாயிலாக கடந்த 2015- இல் தேனீ வளர்ப்பு குறித்து விவேக் அறிந்துகொண்டார். அவரிடமிருந்து 7 பெட்டிகளுடன் தேனீயை வாங்கி வளர்க்கத் துவங்கினார். தேனீ வளர்ப்பில் அனுபவம் இல்லாவிட்டாலும் முன்னோடி விவசாயியான எம்.வி.சுப்ரமணியத்தின் ஆலோசனைப்படி செயல்பட ஆரம்பித்தார். கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அங்கும் தேனீ வளர்ப்புக்குப் பயிற்சி பெற்றார். அந்தமான்- நிகோபார், புதுதில்லி ஆகிய இடங்களிலும் தேனீ வளர்ப்பு குறித்துத் தெரிந்து கொண்டார். 
ஆரம்ப காலத்தில் தேனீ வளர்ப்பு அவருக்கு கடினமாகத் தோன்றியது. அவரால் வருவாய் ஈட்ட முடியவில்லை. ஆனால், தனது விடாமுயற்சியால் தொடர்ந்து தேனீக்களின் வாழ்க்கை முறை பற்றி படிப்படியாகத் தெரிந்து கொண்டார். 
7 பெட்டிகளில் வளர்க்கப்பட்ட தேனீக்கள், 14, 100 என அதிகரித்து தற்போது ஆயிரம் பெட்டிகளை எட்டிவிட்டன. 
விவேக் தனது தென்னந்தோப்பின் பல இடங்களில் தேனீ வளர்ப்புப் பெட்டிகளை வைத்துள்ளதுடன், சுற்றுவட்டார விவசாயிகளின் தோட்டங்களிலும் தேனீ பெட்டிகளை வைத்து தேனை சேகரித்து வருகிறார். 
இது தவிர, கேரள மாநிலத்தின் சில பகுதிகள், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று, தேனீப் பெட்டிகளை வைத்துள்ளார். ஆரம்பத்தில் தேனீ வளர்ப்பில் தடுமாறிய விவேக், தற்போது பிற விவசாயிகளுக்கும் தேனீ வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, தேனீக்களுடன் பெட்டிக்கு ரூ. 1,000 முதல் ரூ. 1,500 வரையிலான விலையில் விற்பனை செய்கிறார். அவற்றை வாங்கிச் செல்பவர்களின் இடத்துக்கே சென்று பராமரிப்பு விளக்கமளித்தும் வருகிறார்.
குறிப்பாக, கேரள வனத்துறையினருக்கு தேனீக்களுடன் பெட்டிகளை இவர் விற்பனை செய்துவருகிறார். ஒரு தேனீப் பெட்டியில் ஓர் ஆண்டுக்கு 9 லிட்டர் முதல் 15 லிட்டர் வரை தேன் எடுக்கலாம். ஒரு லிட்டர் தேன் ரூ. 350 முதல் ரூ. 400 வரை விற்பனையாகிறது. தேன்மெழுகும் விற்பனையாகிறது. இதன்மூலமாக மாதம் ரூ. 50,000-க்கு மேல் வருவாய் ஈட்டி மற்ற விவசாயிகளுக்கு முன்னோடியாக விவேக் திகழ்கிறார். 
தனது விவசாயத் தோட்டத்தில் தேனீக்களை வளர்ப்பதால், தென்னை மரங்களில் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெற்று மகசூல் அதிகரிப்பதாகவும் அவர் கூறுகிறார். மேலும் அவர் கூறியதாவது:
தேனீ வளர்ப்பு என்பது விவசாயம் சார்ந்த உபதொழில். தேனீக்கள் விவசாயத்துக்கு உதவிகரமாக இருக்கின்றன. தேனீ வளர்ப்புக்கு அதிக அளவில் தண்ணீர் தேவைப்படுவதில்லை. தேனீக்களை வளர்க்க நிழல்தரும் இடம், அதிகப் பூக்கள் உள்ள இடம், இயற்கை சார்ந்த சூழல் போன்றவை இருந்தால் சிறப்பாக இருக்கும். குறைந்த முதலீட்டில், ஒரு விவசாயி தனது இடத்தில் 50 பெட்டிகளில் தேனீக்களை வளர்த்தாலே மாதம் ரூ. 10,000 வரை வருவாய் ஈட்ட முடியும். இதற்கு பராமரிப்புப் பணி குறைவுதான். 
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தில் என்னை சிறந்த தேனீ வளர்ப்பாளர் என கௌரவித்தனர். கோவை மாவட்டத்தில் சிலர் மட்டுமே இந்தத் தொழிலில் ஈடுபடுகின்றனர். சிறு, குறு விவசாயிகளுக்கு விவசாயம் சார்ந்த சிறந்த வர்த்தக வாய்ப்பு இது. கால்நடை வளர்ப்பை விட அதிக லாபம் கிடைக்கும். இந்திய வகை தேனீக்கள் வளர்ப்புக்கு எளிதாக உள்ளன என்றார்.
ரூ. 250 கட்டணத்தில் பயிற்சி
தேளீ வளர்ப்பு குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறை பேராசிரியர் ஸ்ரீநிவாசன் கூறியதாவது:
தேனீ வளர்ப்பு, விவசாயிகளுக்கு சிறந்த வகையில் பயன்தரும். தேன் எடுப்பதற்காக மட்டும் தேனீக்கள் வளர்க்கப்படுவதாக நினைக்கக் கூடாது. தேனீ வளர்ப்பதால் அயல் மகரந்தச் சேர்க்கை வாயிலாக விவசாயத்தில் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்கும். தேனீக்கள் வளர்ப்பு தொடர்பாக, ஒவ்வொரு மாதமும் 6-ஆம் தேதி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி தேவைப்படுவோர் ஒவ்வொரு மாதமும் 6-ஆம் தேதி பூச்சியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவரை, காலை 9 மணிக்கு அனுகினால், ரூ. 250 கட்டணம் செலுத்தி பயிற்சி பெற முடியும். பயிற்சியுடன் சான்றிதழும் வழங்கப்படுகிறது என்றார்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/16/w600X390/honey.jpg http://www.dinamani.com/agriculture/2017/nov/16/லாபம்-தரும்-தேனீக்கள்-2808499.html
2808498 விவசாயம் மானாவாரி நிலக்கடலை பயிர் சாகுபடியில் அதிக மகசூல் Thursday, November 16, 2017 12:45 AM +0530 பெரியாறு-வைகை பாசனப்பகுதியில் கால்வாய்களில் தண்ணீர் வராதபகுதிகளிலும் புன்செய்நிலங்களிலும் மானாவாரியாக நிலக்கடலை சாகுபடிசெய்வதனால் அதிக அளவு மகசூல் பெறவாய்ப்புள்ளது. 
உலகஅளவில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் இந்தியா 3-வது இடத்திலும், நிலக்கடலை உற்பத்தியில் முதலிடத்திலும் உள்ளது. இந்தியாவில் சாகுபடிப்பரப்பளவில் 40 சதவிகிதம் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. நிலக்கடலையில் 47 சதவிகிதம் முதல் 53 சதவிகிதம்வரையிலும் எண்ணெயும் 26 சதவிகிதம் புரதசத்தும் உள்ளது. நிலக்கடலை பயிர் 70 சதவிகிதம் மானாவாரியாகவும் 30 சதவிகிதம் இறவைப்பாசனத்திலும் சாகுபடியாகிறது. 
தமிழகத்தில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திலும் 56ஆயிரத்து 163 எக்டேரில் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. இதில் 84 சதவிகிதம் மானாவாரியாக உள்ளது. அதிலிருந்து 10.98 லட்சம் டன்கடலை உற்பத்தியாகிறது. மற்ற நாடுகளுடன் மகசூலை ஒப்பிட்டுப்பார்த்தால் நாம் குறைந்த அளவு மகசூலையே பெறுவது தெளிவாகும். சராசரிùக்டேருக்கு 1400 கிலோ நிலக்கடலை கிடைக்கிறது.
இலைவழிஉரம்-
நிலக்கடலை பயிரில் மகசூலை அதிகரிக்க தமிழ்நாடு வேளாண்.பல்கலைக்கழகம் பல்வேறு ஆராய்ச்சிகளைச்செய்து வருகிறது. நிலக்கடலையைப் பொருத்தவரை அதிக அளவில் பூக்கள் பூக்கும். அதில் பாதியளவு பூக்கள் காய்களாகும். மீதிப்பூக்கள் உதிர்ந்துவிடும். இதைக்கட்டுப்படுத்துவதன் மூலம் நிலக்கடலை மகசூலை 15 சதவிகிதம் அதிகரிக்கமுடியும்.
தமிழ்நாடு வேளாண். பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கிரவுநட்ரிச் ஊட்டச்சத்து பயிர்ஊக்கியை பயன்படுத்தவேண்டும். எக்டேருக்கு 2.250 லிட்டர் ஊட்டச்சத்தினை 200 லிட்டர் நீரில் கரைத்து, கைத்தெளிப்பான் மூலமாக நிலக்கடலை பயிர் முழுமையாக நனையுமாறு காலை அல்லது மாலைநேரத்தில் தெளிக்கவேண்டும். இதில்,தேûக்கேற்ப ஒட்டும் திரவத்தை கலக்கலாம். ஆனால், இக்கரைசலில்பூச்சி,பூஞ்சாள மருந்தை கலக்கக்கூடாது.
நிலக்கடலை செடி பூக்கும் தருணத்துக்கு முன்பும் அதிலிருந்து15 நாட்களுக்குப் பின்னரும் தெளிக்கவேண்டும். இதனால், நிலக்கடலை பயிர் வறட்சியைத்தாக்குப்பிடிக்கும் திறன் அதிகரிக்கும். மகசூலும் அதிகரிக்கும்.
தண்ணீர் பற்றையில் பயிர் தாக்குப்பிடிக்க நிலக்கடலை சாகுபடிக்கு தரிசில் எக்டேருக்கு 3 டன் நன்கு மக்கிய தென்னை நார்க்கழிவை தழைச்சத்தாக அடியுரமாக போடவேண்டும். இதனால், மண்ணில் ஈரப்பதம் பாதுகாக்கப்படும். மேலும், நிலக்கடலைசெடியில் பொட்டாசியம் குளோரைடு 5 சதம் ஒருலிட்டர் நீரில்கரைத்து வையான அளவு செடியில் தெளிக்கவேண்டும். இதனால், காய்கள் அதிகரிக்கும்.
தற்போது அதிகஇடைவெளியில் பெய்துவரும் பருவமழை நிலக்கடலை சாகுபடிக்கு பேருதவியாக அமையும் என அருப்புக்கோட்டை மானாவாரி பயிர் ஆராய்ச்சிநிலையத்தின் வேளாண்.அறிவியல்மைய ஆராய்ச்சியாளர்கள்ப.பாக்கியாத்துசாலிஹா, இரா.விஜயலட்சுமி ஆகியோர் தெரிவித்தனர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/16/w600X390/ground-net.jpg http://www.dinamani.com/agriculture/2017/nov/16/மானாவாரி-நிலக்கடலை-பயிர்-சாகுபடியில்-அதிக-மகசூல்-2808498.html
2804220 விவசாயம் நெற்பயிரில் இலைச் சுருட்டுப்புழு Thursday, November 9, 2017 01:00 AM +0530 நீடாமங்கலம்: நெற்பயிரில் இலைச் சுருட்டுப்புழு மேலாண்மை குறித்து திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி முனைவர் ராஜா. ரமேஷ் பரிந்துரை அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்தது: நெற்பயிரானது விதைப்பு முதல் அறுவடை வரையில் பல்வேறு வகையான பூச்சிகளால் சேதம் உண்டாக்கப்பட்டு 25 முதல் 30 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் இலைச் சுருட்டுப்புழுவானது குறிப்பிடத்தக்க வகையில் சேதத்தை உண்டாக்கி மகசூல் இழப்புக்குக் காரணமாக அமைகிறது.
இலைச் சுருட்டுப்புழுவின் முட்டை பெண் அந்துப்பூச்சியானது வெள்ளை நிற தட்டையான அளவில் சிறிய 10 முதல் 12 முட்டைகளை தனித்தனியாக இளம் இலைகளின் நடுநரம்புக்கு அருகில் வரிசையாக இடும். ஒரு பெண் அந்துப்பூச்சி 300 முட்டைகள் வரை இடும்.
இளம் புழுக்கள் முட்டையிலிருந்து 4 முதல் 7 நாள்களில் வெளிறிய மஞ்சள் கலந்த பச்சை நிற இளம் புழுக்கள் வெளிவரும். புழுப்பருவமானது 15 முதல் 27 நாள்களைக் கொண்டது.
கூட்டுப்புழு: கூட்டுப்புழுவானது சுருட்டப்பட்ட இலைகளுக்கு உள்ளே காணப்படும். கூட்டுப்புழுவிலிருந்து 6 முதல் 8 நாட்களில் அந்துப்பூச்சி வெளிவரும்.
அந்துப்பூச்சி: தாய் அந்துப்பூச்சி பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் காணப்படும். அவற்றின் முன் மற்றும் பின் இறக்கைகளில் அடர்ந்த நிறத்துடன் அலை அலையாய் கோடுகள் காணப்படும். இறக்கைகளின் கீழ்பகுதி ஓரங்களில் அடர்ந்த கரும்பழுப்பு நிற பட்டை காணப்படும். இதன் வாழ்க்கைச் சுழற்சியானது 26 முதல் 42 நாள்களைக் கொண்டது.
தாக்குதலுக்கு சாதகமான சூழ்நிலை
1. அதிக அளவில் தழைச்சத்து இடுதல்.
2. மர நிழலை ஒட்டிய வயல் பகுதிகளில் இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
3. மிதமான வெப்பநிலை கொண்ட அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை இதன் தாக்குதல் மிக அதிகமாக காணப்படும்.
சேதத்தின் அறிகுறிகள்
1. புழுக்கள் திறக்கப்படாத புது இலையின் அடிப்பகுதிக்குச் சென்று உண்ணும். பின்பு இலைகள் நீளவாக்கில் மடக்கப்பட்டு ஆங்காங்கே பட்டு போன்ற மெல்லிய இழைகளால் இணைக்கப்பட்டிருக்கும். புழுக்கள் சுருட்டப்பட்ட இலைக்குள்ளே இருந்து கொண்டு இலைகளின் பச்சையத்தை சுரண்டித் தின்பதால் தாக்கப்பட்ட இலைகளின் பல இடங்களில் வெள்ளையான சருகு போன்று காணப்படும். மடக்கப்பட்ட இலைக்குள்ளே புழுக்களின் கழிவுகளும் காணப்படும்.
2. ஒரு புழுவானது 3 முதல் 4 இலைகளைத் தாக்கும் ஆற்றல் கொண்டது.
3. நிழற்பகுதிகள் மற்றும் வரப்பு ஓரங்களில் இதன் தாக்குதல் முதலில் தோன்றி பின்பு வயலின் உட்பகுதியில் வேகமாக பரவும்.
பொருளாதாரச் சேத நிலை
1. பயிர்களின் ஆரம்ப வளர்ச்சி பருவத்தில் 10 சதவீத இலைகளில் சேதம்.
2. பூக்கும் பருவத்தில் 5 சதவீத இலைகள் பாதிக்கப்பட்டு இருத்தல்.
இலைச் சுருட்டுப்புழு மேலாண்மை முறைகள்
1. நிழற்பகுதிகள் மற்றும் வரப்பு ஓரங்களில் இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும். எனவே, வயல்களில் நிழல் இல்லாத வண்ணம் பார்த்துக் கொள்ளவேண்டும்.
2. வயல்களிலும், வரப்புகளிலும் காணப்படும் களைகளை நீக்கி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
3. விளக்குப்பொறியை இரவு நேரங்களில் 5 ஏக்கருக்கு ஒன்று என்ற அளவில் பயிர் பரப்பிலிருந்து 20 அடி தொலைவுக்கு தள்ளி வைத்து வளர்சியடைந்த அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
4. டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் - முட்டை ஒட்டுண்ணியை ஒரு ஏக்கருக்கு 2 சிசி (40,000 முட்டைகள்) என்ற அளவில் மூன்று முறை அதாவது நடவு நட்ட 37, 44 மற்றும் 51 -ஆவது நாள்களில் வயலில் வெளியிட வேண்டும்.
5. தழைச்சத்தை பிரித்தும், யூரியாவுடன் வேப்பம் புண்ணாக்கை கலந்தும் இடவேண்டும்.
6. வயலில் காணப்படும் தரை வண்டுகள், ஒட்டுண்ணி குளவிகள், நீள்கொம்பு வெட்டுக்கிளிகள், நீர்த்தாண்டி, நீர் மிதப்போன், தட்டான்கள், இடுக்கிவால் பூச்சிகள் முதலிய நன்மை செய்யும் பூச்சிகளையும் மற்றும் சிலந்திகள் போன்ற உயிரினங்களையும் பாதுகாத்து பெருக்குதல் வேண்டும்.
7. வேப்பெண்ணைய் சார்ந்த அசடிராக்டின் 0.03 சதவீதம் மருந்தை ஏக்கருக்கு 400 மில்லி அல்லது வேப்பங்டிகர்டைக் கரைசல் 5 சதவீதம் என்ற அளவில் ஒட்டும் திரவத்தை சேர்த்து 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
8. கீழ்கண்ட ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதாவது ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.
ஃப்ளுபென்டியாமைட் 39.35 எஸ்.சி.-20 மில்லி, ஃப்ளுபென்டியாமைட் 20 டபிள்யூ.ஜி.- 50 கிராம், புரபினோபாஸ் 50 ஈ.சி. - 400 மில்லி, கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 50 எஸ் பி - 400 கிராம், குளோரன்ட்ரான்லிபுரோல் 18.5 எஸ்.சி.- 60 மில்லி, குளோரன்ட்ரான்லிபுரோல் 4 ஜி - 4 கிலோ, டிரையசோபாஸ் 40 ஈ.சி. - 400 மில்லி, குளோர்பைரிபாஸ் 20 ஈ.சி. - 500 மில்லி, டைகுளோர்வாஸ் 76 டபிள்யூ. எஸ்.சி. - 250 மில்லி, பாஸ்போமிடான் 40 எஸ்.எல் - 240 மில்லி. இவ்வாறு அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/9/w600X390/plant.jpg http://www.dinamani.com/agriculture/2017/nov/09/நெற்பயிரில்-இலைச்-சுருட்டுப்புழு-2804220.html
2804215 விவசாயம் பிசான பருவத்தில் இயந்திர நெல் நடவு! Thursday, November 9, 2017 12:59 AM +0530 திருநெல்வேலி: நிகழ் பிசான பருவத்தில் விவசாயிகள் இயந்திர நெல் நடவு முறையைப் பின்பற்றி குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம் என, வேளாண் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விவசாயிகள் பிசான பருவ சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆள் பற்றாக்குறை, கூடுதல் செலவினம் போன்ற காரணத்தால் விவசாயிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இப்பிரச்னையை சமாளிக்க விவசாயிகள் இயந்திர நெல் நடவு முறையைக் கடைப்பிடித்தால் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம்.
இயந்திர நடவுக்கு வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்படுகிறது. வேளாண்மையில் இயந்திரத் தொழில்நுட்பம் அதிகரித்து வருவதால், விவசாயிகள் இயந்திரங்களைப் பயன்படுத்தி செலவினங்களைக் குறைக்கலாம். 
இயந்திர நடவு: சான்று பெற்ற விதைகளை ஏக்கருக்கு 3 கிலோ எனப் பயன்படுத்தி ஒரு சென்ட் பரப்பில் (40 ச.மீ.) பாய் நாற்றங்கால் அல்லது நாற்றங்கால் தட்டுகளில் நாற்றுவிட வேண்டும். நன்கு சமன் செய்த நடவு வயல்களில் 10 முதல் 14 நாள் வயதுடைய நாற்றுகளை, ஒரு குத்துக்கு ஒன்று வீதம் வரிசைக்கு வரிசை முக்கால் அடி (22.5 செ. மீ.), குத்துக்கு குத்து முக்கால் அடி (22.5 செ. மீ.) என, சதுர நடவாக நடவேண்டும். நிலத்தில் 2.5 செ.மீ. உயரத்துக்கு மட்டும் நீரைத் தேக்க வேண்டும்.
நடவு செய்த 10ஆம் நாளிலிருந்து 10 நாளுக்கு ஒருமுறை என 4 முறை கோனோவீடர் களைக்கருவி அல்லது விசைக் களைக் கருவியை குறுக்கும் நெடுக்குமாகப் பயன்படுத்தி களைகளை நிலத்துக்குள் அமுக்கிவிடவேண்டும்.
இலை வண்ண அட்டையைப் பயன்படுத்தி நிறச்செறிவு நன்கு இருக்குமாறு தேவைக்கு தழைச்சத்து உரமிட வேண்டும்.
நன்மைகள்: விதையின் அளவும், விதைச் செலவும் குறைவு. ஓர் ஏக்கருக்கு ஒரு சென்ட் நாற்றங்கால் போதும். நடவு நேரத்தில் ஆள் கிடைக்கவில்லை என்ற அச்சம் தேவையில்லை. நடும் செலவு குறைவு. சீரான நடவு, களைக் கருவி மூலம் களையை மண்ணுக்குள் அமுக்கிவிடுவதால் தழை உரமாகிறது. களையெடுக்கும் ஆள் செலவு குறைகிறது.
களையெடுக்கும் கருவியை குறுக்கும் நெடுக்குமாக இயக்குவதால் வேர்களின் வளர்ச்சி, வேர்கள் அதிகரித்து உரச் சத்துகளை எடுத்துக் கொள்ளும் திறன் அதிகரிக்கிறது. 
இதனால் அதிக தூர்கள், அதிக கதிர்கள், அதிக நெல் மணிகள், அதிக மகசூல், அதிக வைக்கோல் என நெல் சாகுபடி மகசூல் அதிகரிக்கிறது.
களை முளைக்குமோ என்ற அச்சமின்றி, நீர்மறைய நீர்கட்டுவதால் 40 சதவீதம் பாசனநீர்த் தேவை குறைகிறது. மோட்டார் பயன்படுத்தும் பகுதிகளில் மின்சாரம் சேமிக்கப்படுகிறது. மோட்டார்களுக்கு டீசல் பயன்பாடு குறைகிறது. பயிர்கள் சாயாமல் திரட்சியாக இருக்கும். 
மானியம்: இயந்திர நடவு முறையால் பல நன்மைகளும், மகசூல் அதிகரிப்பும் உள்ளதால் லாபம் கிடைக்கிறது. இயந்திர நடவு செய்யும் விவசாயிகளுக்கு தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் நெல் இயக்கத்தின் கீழ் வேளாண் துறை மூலம் ஹெக்டேருக்கு ரூ. 5 ஆயிரம் நடவுக்குப் பிந்தைய மானியாக வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டேர் பரப்புக்கு இந்த மானிய உதவி வழங்கப்படுகிறது. 
இத்திட்டத்தில் நாற்றங்காலுக்குத் தேவையான நாற்றங்கால் தட்டுகளும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. 
இயந்திர நடவு முடிந்ததும் அரசு வழங்கும் மானியம் பெற குடும்ப அட்டை, ஆதார் அட்டை, நில உரிமை இயந்திர நடவு செய்த பரப்பளவைக் குறிக்கும் அடங்கல், வங்கிக் கணக்கு விவரம், மார்பளவு புகைப்படம் 2, நடவு முடிந்த பின்னர், விவசாயி அந்த வயலில் நிற்கும் புகைப்படம் ஆகியவற்றுடன் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளித்து பயன்பெறலாம்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/9/w600X390/agri-land.jpg http://www.dinamani.com/agriculture/2017/nov/09/பிசான-பருவத்தில்-இயந்திர-நெல்-நடவு-2804215.html
2799975 விவசாயம் வைகை அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு Thursday, November 2, 2017 02:14 AM +0530 வைகை அணையிலிருந்து புதன்கிழமை முதல் போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீரை திறந்து வைத்தார்.
தேனி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததாலும், மூல வைகையில் இருந்து நீர் வரத்து இல்லாததாலும் வைகை அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வரும் நீரை வைத்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. 
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 55.64 அடியை எட்டிப் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையேற்று புதன்கிழமை (நவ. 1) முதல் வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து புதன்கிழமை இந்த அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்காக 900 கன அடி தண்ணீரை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்துவிட்டார்.
தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில், தமிழக வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, வருவாய்த் துறை அமைச்சர் உதயக்குமார், எம்எல்ஏக்கள் ஜக்கையன், ராஜன் செல்லப்பா, மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், தேனி மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/2/w600X390/vaikai.jpg வைகை அணை மதகுகள் வழியே ஆர்ப்பரித்து வெளியேறும் தண்ணீர். http://www.dinamani.com/agriculture/2017/nov/02/வைகை-அணையிலிருந்து-முதல்-போக-சாகுபடிக்கு-தண்ணீர்-திறப்பு-2799975.html
2799973 விவசாயம் தேசிய வேளாண் விற்பனைச் சந்தை: திண்டுக்கல்லில் தொடக்கம் Thursday, November 2, 2017 02:14 AM +0530 தமிழகத்தின் 2 -ஆவது தேசிய வேளாண் விற்பனைச் சந்தை திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், திண்டுக்கல் விற்பனைக் குழு செயலர் ரா.சுரேஷ் பேசியதாவது:
விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைப் பொருள்களுக்கு அதிகபட்ச விலை கிடைக்கும் வகையிலும், இடைத் தரகர்களின் தலையீடு இல்லாமல் வியாபாரிகளிடம் விற்பனை செய்வதற்கு வசதியாகவும் 585 தேசிய வேளாண்மை விற்பனைச் சந்தைகள் தொடங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி கடந்த ஜூலை வரையிலும் 13 மாநிலங்களில், 455 சந்தைகள் செயல்படத் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 278 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் உள்ளன. இதில் முதல்கட்டமாக 15 விற்பனைக் கூடங்கள், தேசிய வேளாண்மை விற்பனைச் சந்தை திட்டத்தின்கீழ் இணைக்கப்பட உள்ளன. தமிழகத்தின் முதல் வேளாண்மை விற்பனைச் சந்தை வேலூர் மாவட்டம், அம்மூரில் செயல்பட்டு வரும் நிலையில், 2 -ஆவது சந்தை திண்டுக்கல்லில் தொடங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைச் சந்தையை பொருத்தவரை, நெல், நிலக்கடலை மற்றும் பருத்தி ஆகிய பயிர்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் விரும்பினால் பிற பயிர்களையும் இணைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
விவசாயிகளிடம் ஆர்வம் இல்லை
இடைத் தரகர்களின் பாதிப்பிலிருந்து விவசாயிகள் விடுபட்டு, அதிகபட்ச விலையை பெற வேண்டும் என்பதற்காகவே தேசிய வேளாண் விற்பனைச் சந்தைகள் தொடங்கப்படுகின்றன. ஆனால், திண்டுக்கல்லில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் சுமார் 10 விவசாயிகள் மட்டுமே கலந்து கொண்டனர். இதுகுறித்து வேளாண் துறை அலுவலர்கள் கூறுகையில், 'திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால், வருவதாக ஒப்புக்கொண்ட விவசாயிகளும் கூட்டத்திற்கு வரவில்லை' என்றனர்.
 

]]>
http://www.dinamani.com/agriculture/2017/nov/02/தேசிய-வேளாண்-விற்பனைச்-சந்தை-திண்டுக்கல்லில்-தொடக்கம்-2799973.html
2799875 விவசாயம் மகசூல் அதிகரிக்க பயறுவகை உற்பத்தித் தொழில்நுட்பங்கள் Thursday, November 2, 2017 12:47 AM +0530 தருமபுரி: பயறு வகைப் பயிர்களின் சாகுபடி பரப்பு தற்போது குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப அதன் தேவையானது அதிகரித்துக் கொண்டே வருகிறது.
எனவே, குறைவான சாகுபடிப் பரப்பில் பயறு வகைகளில் அதிக மகசூல் எடுக்க மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்களைக் கையாள வேண்டும் என்பது குறித்து தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேந்திரன் மற்றும் அட்மா தொழில்நுட்ப மேலாளர் ரவி ஆகியோர் கூறும் வழிமுறைகள்:
நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட, பருவத்திற்கேற்ற உயர் விளைச்சல் ரகங்களைச் சாகுபடி செய்தல்.
துவரை: கோ (ஆர்.ஜி) 7, வம்பன்1, வம்பன்2, வம்பன்3, கோ6, ஏ.பி.கே.1, பி.எஸ்.ஆர்.1, எல்.ஆர்.ஜி.41, ஜ.சி.பி.எல். ரகங்கள். 
உளுந்து: வம்பன்3, வம்பன்4, வம்பன்5,6, ஆடுதுறை3, ஆடுதுறை 5, டி.எம்.வி.1., ஏ.பி.கே.1. 
பாசிப்பயறு : கோ6, கோ8, வம்பன்2, வம்பன்3, வி.ஆர்.எம்.
(ஜிஜி)2,கோ7, ஆடுதுறை 3. 
தட்டைப்பயிறு: கோ 6, 
கோ(சிபி)7, வம்பன், வம்பன்2, கோ2, பையூர்1.
கொள்ளு: பையூர்1, பையூர்2. அவரை: கோ12, கோ13, கோ14.மொச்சை: கோ1, கோ2.
விதைநேர்த்தி செய்து விதைத்தல்: ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராமம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் ஆகியவற்றில் ஒன்றைக் கொண்டு விதை நேர்த்தி செய்யலாம்.
ரசாயன விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம், 50 டிபிள்யூ.பி. கொண்டு விதை நேர்த்தி செய்யலாம்.
நுண்ணுயிர் விதை நேர்த்தி: தலா ஒரு பொட்டலம் (200 கிராம்), ரைசோபியம் (பயறு) மற்றும் பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர் உரங்களை 200 மி.லி. ஆறிய அரிசிக்கஞ்சியில் கலந்து அவற்றில் ஓர் ஏக்கருக்குத் தேவையான பயறு விதைகளைக் கலந்து 15 நிமிடம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். ஓர் ஏக்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட விதையளவுடன் 50 மி.லி. மெத்தைலோ பாக்டீரியா திரவ நுண்ணுயிரியினைக் கலந்து 10 நிமிடம் நிழலில் உலர்த்தி விதைக்கவும்.
பயிர் எண்ணிக்கையைப் பராமரித்தல்: வரிசைக்கு வரிசை 30. செ.மீ. இடைவெளியும், செடிக்குச் செடி 10.செ.மீ இடைவெளியும் இருக்குமாறு விதைக்க வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் இருக்கலாம்.
ஒருங்கிணைந்த உர மேலாண்மை: அங்கக உரம் ஏக்கர் ஒன்றுக்கு 5 டன் மக்கிய தொழு உரம் அல்லது கம்போஸ்ட் கடைசி உழவின்போது இட்டு உழவு செய்ய வேண்டும்.
பயறு நுண்ணூட்டக் கலவை: ஏக்கருக்கு 2 கிலோ பயறு நுண்ணூட்டக் கலவையினைத் தேவையான அளவு மணலுடன் கலந்து விதைப்புக்கு முன் சீராகத் தூவ வேண்டும். நுண்ணூட்டக் கலவையினை அடியுரமாக இட்டு உழக் கூடாது.
நுண்ணுயிர் உரங்கள்: ஏக்கர் ஒன்றுக்கு தலா நான்கு பொட்டலங்கள் (800 கிராம்) ரைசோபியம் (பயறு) மற்றும் பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர் உரங்களை தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும் அல்லது ஏக்கர் ஒன்றுக்கு தலா 200 மி.லி. ரைசோபியம் (பயறு) மற்றும் பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிரிகளை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, அதனை பத்து கிலோ நன்கு தூள் செய்யப்பட்ட தொழு உரம் அல்லது மணலுடன் கலந்து நடவு வயலில் தூவ வேண்டும்.
இலைவழி உரம் தெளித்தல்: ஏக்கர் ஒன்றுக்கு நான்கு கிலோ டி.ஏ.பி . உரத்தினை 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாள் இரவே ஊற வைத்து, மறுநாள் கரைசலை வடிகட்டி தெளிந்த கரைசலுடன் தேவையான அளவு தண்ணீர் கலந்து 200 லிட்டர் கரைசலாக்கி கைத்தெளிப்பான் மூலம் மாலை வேளையில் பூக்கும் தருணம் ஒருமுறையும் பின்பு 15 நாள்கள் கழித்து ஒரு முறையும் என இருமுறை தெளிக்க வேண்டும் அல்லது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் யூரியா உரத்தைக் கலந்து பூக்கும் தருணமும் 15 நாள்கள் கழித்து ஒரு முறையும் என இருமுறை தெளிக்க வேண்டும் அல்லது ஏக்கருக்கு 2.25 கிலோ பயறு அதிசயம் எனும் பயிர் வளர்ச்சியூக்கியைப் பூப்பூக்கும் தருணத்தில் 200 லிட்டர் தண்ணீர் கலந்து காலை அல்லது மாலை வேளையில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். பூக்கள் உதிர்வதைத் தடுக்க என்.ஏ.ஏ 40 பிபிஎம் (பிளானோபிக்ஸ்) 4.5 லிட்டர் தண்ணீருக்கு நான்கு மி.லிட்டர் அளவில் பூக்கும் தருணத்தில் ஒரு முறையும் 15 நாள்கள் கழித்து ஒருமுறையும் என இருமுறை தெளிக்க வேண்டும்.
தெளிப்பு நீர்ப் பாசனம் செய்தல்: தண்ணீரைச் சிக்கனப்படுத்திக் குறைந்த அளவில் தண்ணீரில் மிகுந்த அளவு பரப்பில் பயறு வகை பயிர்களைச் சாகுபடி செய்திட தெளிப்பு நீர்ப் பாசன கருவி நடமாடும் தெளிப்பு நீர்க் கருவி மழைத்தூவான் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ளல்: நிலத்தினை நன்கு ஆழமாக உழவு செய்தல், கோடையுழவு செய்து காய்த் துளைப்பான்களின், கூண்டு புழுக்களைக் கட்டுப்படுத்துதல், பருவத்தில் விதைப்பு செய்தல், பூச்சி நோய் எதிர்ப்புள்ள ரகங்களைப் பயிரிடலாம்.
துவரை: வம்பன்2 - மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்டது. ஏபி.கே1-காய்த் துளைப்பானுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது.
உளுந்து: வம்பன்4, 5,6,7,8 மற்றும் கோ 6, மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்டவை. 
பாசிப்பயறு: வம்பன் 2, வம்பன்3, மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்டவை.
நேரடி இயந்திர முறைகள்: இரவில் விளக்குப்பொறி வைத்துப் பூச்சிகளைக் கண்காணித்தல். 
இனக் கவர்ச்சிபொறி- ஏக்கர் ஒன்றுக்கு ஐந்து எண்கள் வைத்து பச்சைக்காய்ப் புழு (ஹெலிக்கோவெர்பா), புள்ளிக்காய்ப் புழு (மெளருக்கா). முள்காய்ப்புழு (ஈட்டியெல்லா) ஆகியவற்றின் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். நன்கு வளர்ந்த புழுக்களையும் முட்டைக் குவியல்களையும் கையுறை அணிந்து கைகளில் சேகரித்து அழிக்கலாம். களைகள் இல்லாமல் வயலைச் சுத்தமாக வைத்திருத்தல். 
உயிரியல் கட்டுப்பாட்டு முறை: ஒரு கிலோ விதைக்கு நான்கு கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனஸ் புளோரசன்ஸ் உயிரியல் மருந்து கொண்ட விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும். சாறு உறிஞ்சும் பூச்சிக்களான அசுவினி இலைப்பேன், தண்டு ஈ, வெள்ளை ஈ, தத்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த வெர்ட்டிசீலியம் லெக்கானி எனும் உயிரியல் பூஞ்சாளக்கொல்லி மருந்தினை ஏக்கருக்கு 1 முதல் 2 கிலோ அளவு வரை கலந்து 15 நாள்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும். பெவேரியா பேசியானா - ஏக்கருக்கு 1 முதல் 2 கிலோ அளவு வரை ஒட்டும் திரவத்துடன் சேர்த்து 200 லிட்டர் தண்ணீர் கலந்து 15 நாள்கள் இடைவெளியில் இருமுறை தெளித்து காய்த் துளைப்பான்களைக் கட்டுப்படுத்தலாம்.
ரசாயனக் கட்டுப்பாட்டு முறைகள்: பொருளாதாரச் சேத நிலையினை (10 சதம் பாதிக்கப்பட்ட காய்கள் அல்லது இலைகள்) தாண்டும்போது ஏக்கர் ஒன்றுக்கு இமாமெக்டின் பென்சோனேட் 5 எஸ்.ஜி-100 கிராம் அல்லது இன்டாக்சாகார்ப் 15.8 இ.சி.- 130 மி.லி. அல்லது நோவலூரான் 10 இ.சி., 300 மி.லி. அல்லது ஸ்பினோசட் 45 எஸ்.சி.-50 மிலி தெளித்துக் கட்டுப்படுத்தலாம். 
வெள்ளை ஈ ஏக்கர் ஒன்றுக்கு அசிட்டாமிபிரிடு 20 எஸ்.பி-80 முதல் 100 கிராம் வரை அல்லது டைமெத்தோயேட் 30 இ.சி. 200 மி.லி. தெளித்துக் கட்டுப் படுத்தலாம். 
அசுவினி: ஏக்கர் ஒன்றுக்கு டைமேத்தோயேட் 30 இ.சி, 200 மிலி தெளித்து கட்டுப்படுத்தலாம்.
மஞ்சள் தேமல் நோய்: இந்நோயினைப் பரப்பும் வெள்ளை ஈயை ஏக்கர் ஒன்றுக்கு 80 முதல் 100 கிராம் வரை அசிட்டாமிபிரிடு 20 எஸ்.பி. அல்லது டைமெத்தோயேட் 30 இ.சி-200 மிலி தெளித்துக் கட்டுப்படுத்தலாம். எனவே, விவசாயிகள் இத்தகைய தொழில்நுட்பங்களைப் பின்பற்றி அதிக மகசூல் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/2/w600X390/tree.JPG http://www.dinamani.com/agriculture/2017/nov/02/மகசூல்-அதிகரிக்க-பயறுவகை-உற்பத்தித்-தொழில்நுட்பங்கள்-2799875.html
2799869 விவசாயம் மானிய உதவியோடு பழம் பழுக்க வைக்கும் அறை அமைக்கலாம்! Thursday, November 2, 2017 12:45 AM +0530 திருநெல்வேலி: வேளாண் துறையில் பழங்கள் சாகுபடிக்கு ஆண்டுதோறும் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. மக்களின் கல்வியறிவு, வாங்கும் சக்தி ஆகியவை அதிகரித்த பின்பு மின்னணு சாதனங்கள், மருத்துவப் பொருள்களுக்கு அடுத்தப்படியாக பழங்களின் பயன்பாடு கடந்த 30 ஆண்டுகளைக் காட்டிலும் இப்போது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மொத்த வியாபாரம், சில்லறை விற்பனையோடு நின்று விடாமல் ஏற்றுமதி துறையிலும் பழங்கள் சாகுபடிக்கு தனியிடம் கிடைத்துள்ளது. இந்தியாவில் இருந்து பல்வேறு வகையான பழங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. 
திருநெல்வேலி மாவட்டத்தில் நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட சாகுபடிக்கு மத்தியில் மலர் சாகுபடியும், பழங்கள் சாகுபடியும் குறிப்பிடும்படியாக உள்ளன. பழங்கள் சாகுபடியை அதிகரிக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் புதிய பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. பழங்கள் சாகுபடியில் பழுக்க வைக்கும் சிக்கலால் வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. கார்பைடு கல் கொண்டு சிலர் பழுக்க வைக்க முயற்சிக்கும்போது தேவையற்ற உடல் உபாதைகள் ஏற்படுவதோடு, அதிகாரிகள் சோதனை நடத்தி விற்பனையைத் தடுத்து பறிமுதல் செய்யும் சூழலும் ஏற்படுகிறது. இத்தகைய சூழலைத் தடுக்கும் வகையில் பழம் பழுக்க வைக்கும் அறைகள் அமைத்து வணிகத்தைப் பெருக்க விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டு வருகிறார்கள். அதற்காக மானியத்துடன் புதிய சலுகை திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருநெல்வேலி தோட்டக்கலை துணை இயக்குநர் (பொ) எம்.அசோக் மேக்ரின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் 20 ஆயிரத்து 689 ஹெக்டேர் பரப்பளவில் மா, பலா, வாழை, சப்போட்டா, பப்பாளி உள்ளிட்ட பழப் பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. இதனை முறையாக பழுக்க வைத்து விற்பனை செய்து பயன்பெறுவதற்கான முறையான வசதிகள் இல்லை. பழங்கள் பழுக்க வைக்கும் அறைகள் அமைக்க 35 சதவிகித மானியம் அளிக்கப்பட உள்ளது. இம் மாவட்டத்தில் 40 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பழங்கள் பழுக்கும் வைக்கும் அறை அமைக்கும் வகையில் ரூ.17 லட்சம் நிதி தோட்டக்கலை துறையால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பழம் பழுக்க வைக்கும் அறையில் மா, பலா, வாழை, பப்பாளி மற்றும் இதர பழங்களையும் பழுக்க வைக்க முடியும். இந்த முறையில் பழுக்க வைப்பதால் மனிதர்களுக்கு எந்தவொரு தீங்கும் ஏற்படாது. பழங்களும் நீண்ட நாள்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். பழம் பழுக்க வைக்கும் அறை அமைப்பதற்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.1 லட்சம் செலவு ஆகும். ரூ.35 ஆயிரம் மானியத் தொகை தோட்டக்கலைத்துறையின் மூலம் வழங்கப்படும். இத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் தங்கள் பகுதி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் எனச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/11/2/w600X390/banana.jpg http://www.dinamani.com/agriculture/2017/nov/02/மானிய-உதவியோடு-பழம்-பழுக்க-வைக்கும்-அறை-அமைக்கலாம்-2799869.html
2795757 விவசாயம் நெற்பயிரைத் தாக்கும் ஹைட்ரஜன் சல்பைடு Thursday, October 26, 2017 12:32 AM +0530 கோவை: காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் தீவிரமாக சாகுபடி செய்யப்பட்டு வரும் பகுதிகளில் தற்போது பாசன நீர் சார்ந்த பிரச்னைகள் தோன்றியுள்ளன. நடவு செய்த பிறகு பயிர்கள் வளர்ச்சியற்று, நுனியில் இருந்து பின்னோக்கி அழுகி, மண்ணோடு மண்ணாக மறைந்து விடுகின்றன.
இத்தகைய நிலங்கள் வடிகால் வசதியற்று தொடர்ந்து நீர் தேங்கி, எப்போதும் நிலம் சதுப்புத் தன்மையுடன் காணப்படுவதும், மண்ணின் காற்றோட்ட வசதியும் முற்றிலும் பாதிக்கப்பட்டு இருக்கும். இந்தப் பிரச்னை கந்தகச் சத்து மிகுந்த இடங்களில், குறிப்பாக ஆழ்துளை நீரை தொடர்ந்து பயன்படுத்தி வரும் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது.
இந்த கந்தகமானது தண்ணீரில் கரைந்து ஹைட்ரஜன் சல்பைடு எனும் நச்சு வாயுவைத் தோற்றுவிக்கிறது. இந்த வாயு நெற்பயிர்களுக்கு தீங்கு விளைவிப்பதால், நடவு செய்யப்பட்ட பயிர்கள் நிலத்தில் இருந்து ஊட்டச் சத்துகளை வேர் மூலம் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் திறன் குறைந்து, அதனால் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு அழிந்துவிடுகிறது.
எனவே, இந்தப் பகுதி உழவர் பெருமக்கள் நெற்பயிரில் ஹைட்ரஜன் சல்பைடு நச்சினால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும் முறைகள், வந்த பிறகு கடைப்பிடிக்க வேண்டிய நிவர்த்தி முறைகள் போன்றவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் உழவியல் துறை முதுநிலை ஆய்வாளர் கி.மருதுபாண்டி, பூச்சியியல் துறை ஆய்வாளர் ஏ.சஞ்சீவிகுமார் ஆகியோர் கூறியதாவது: 
ஹைட்ரஜன் சல்பைடு நச்சுத் தன்மைக்கான காரணிகள் கந்தகச் சத்து மிகுந்த நீரை தொடர்ந்து பாசனத்துக்குப் பயன்படுத்தும்போது தண்ணீரில் ஹைட்ரஜன் சல்பைடின் அளவு அதிகரிக்கிறது. 
வயலில் வடிகால் வசதியின்றி தொடர்ந்து நீர் தேங்கியிருப்பதால் ஏற்படும் குறைந்த காற்றோட்டத்தால் ஹைட்ரஜன் சல்பைடு நச்சு மண்ணில் மேலும் அதிகரிக்கிறது.
நெற்பயிருக்கு சாம்பல் சத்தைக் குறைவாக இடுவதாலும், மணிச்சத்து சுண்ணாம்புச் சத்து, மெக்னீசியம் போன்ற ஏனைய சத்துகளின் குறைபாடும் சல்பைடு நச்சுத் தன்மை அதிகரிக்கக் காரணமாக அமைகின்றன.
ஹைட்ரஜன் சல்பைடு நச்சின் அறிகுறிகள்: ஹைட்ரஜன் சல்பைடு பாதிப்புள்ள வயல்களின் அருகில் சென்றால் அழுகிய முட்டையின் வாடை வருவதுடன் வயலில் இறங்கும்போது தண்ணீரில் இருந்து நுரையாக வாயு வரும். இலைகளின் நரம்புக்கு இடைப்பட்ட பகுதிகள் மஞ்சளாகி வெளிறி காணப்படும். நச்சுத்தன்மை அதிகமாகும்போது பயிர் நுனியிலிருந்து பின்னோக்கி அழுகி மண்ணோடு மண்ணாக மறைந்துவிடும்.
நெற்பயிரின் சல்லி வேர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைந்தும் வளர்ச்சியின்றியும் கரும்பழுப்பு நிறமாகவும் காணப்படும்.
மண்ணில் இருந்து பயிரானது ஊட்டச் சத்துகளை எடுத்துக் கொள்ளும் திறன் குறைவதால் பயிரில் சாம்பல் சத்து, சுண்ணாம்புச் சத்து, மெக்னீசியம், சிலிக்கான் போன்றவற்றின் பற்றாக்குறைக்கான அறிகுறிகள் தென்படும். ஹைட்ரஜன் சல்பைடு நச்சினால் ஊட்டச் சத்துகளின் சமச்சீர் தன்மை பாதிக்கப்படுவதால் பயிரின் வளர்ச்சி குறைந்து தண்டு அழுகல், செம்புள்ளி போன்ற நோய்கள் பயிரைத் தாக்கும் அபாயம் உள்ளது.
ஹைட்ரஜன் சல்பைடு நச்சுத் தன்மையைத் தடுக்கும் வழிகள்: ஹைட்ரஜன் சல்பைடு நச்சுத் தன்மையைத் தாங்கி வளர, பயிரின் வளர்ச்சி அதிகமாக இருக்க வேண்டும். எனவே, திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிரின் வேர் வளர்ச்சி துரிதப்படுவதாலும், ஊக்குவிக்கப்படுவதாலும் இந்த நச்சுத் தன்மையைத் தாங்கி வளர வாய்ப்பு உள்ளது. மேலும், திருந்திய நெல் சாகுபடி முறையில் கோனோவீடர் எனும் களை எடுக்கும் கருவியைக் கொண்டு களையை சேற்றில் அமுக்கி கலக்கும்போது மண்ணின் காற்றோட்டம் மேம்படுவதால் ஹைட்ரஜன் சல்பைடு நச்சு வாயு வெளியேறி பாதிப்பு குறையவும் வாய்ப்பு உள்ளது.
கோடை உழவு செய்வதால் மண்ணில் காற்றோட்டம் அதிகரித்து கந்தகம், இரும்பு அயனிகளின் மாற்றம் அதிகமாவதால் ஹைட்ரஜன் சல்பைடு நச்சு மண்ணில் தேங்குவது குறைகிறது. கந்தகச் சத்து மிகுந்த ஆழ்துளைக் கிணற்று நீரை பாசனத்துக்குப் பயன்படுத்துவதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.
தொடர்ந்து வயலில் நீர் தேங்கி இருப்பதைத் தவிர்ப்பதுடன், வடிகால் வசதியற்ற, கந்தகம் அதிகம் உள்ள வயல்களில் காய்ச்சலும் பாய்ச்சலுமாக பாசனம் செய்ய வேண்டும். பயிருக்குத் தேவையான ஊட்டச் சத்துகளைத் தேவைக்கு ஏற்ப, சமச்சீர் அளவில் பயிருக்கு அளித்தல், சாம்பல் சத்தை பரிந்துரைக்கப்படும் அளவை விட 10 சதவீதம் வரை கூடுதலாக இடுவது அவசியம்.
பாசன நீர் உப்பாக இருக்கும்போது பம்ப் செட்டில் இருந்து நீரை நேரடியாக வயலுக்குப் பாய்ச்சாமல், சிறிய குட்டையில் தேக்கியோ, நீண்ட வாய்க்காலில் ஓடி பிறகுப் பயிருக்குப் பாயுமாறோ செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும்போது சல்பைடு நச்சு ஆவியாகி அதன் தாக்கம் குறையும் வாய்ப்பு உள்ளது.
நீரை நன்கு வடித்த பிறகு ஏக்கருக்கு 10 கிலோ யூரியாவுடன் 10 கிலோ பொட்டாஷ் உரத்தைச் சேர்த்து சீராக தூவ வேண்டும். பிறகு 2 நாள்கள் கழித்து லேசாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மேற்கூறிய உரமிடுதலை 7 - 10 நாள்கள் இடைவெளியில் மறுபடியும் மேற்கொள்ள வேண்டும். பிறகு தேவையான ஊட்டச் சத்தை இலை வழியாக அளித்தும், பயிர் வளர்ச்சியை ஊக்கப்படுத்தலாம்.
இரும்புச் சத்துள்ள உப்பு, உரங்களை (அன்னபேதி உப்பு) அதிக அளவு மண்ணில் இடலாம். இதனால் ஹைட்ரஜன் சல்பைடானது பெர்ரஸ் சல்பைடாகி நெற்பயிரில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும். எனவே, காவிரி டெல்டா விவசாயிகள் எதிர்வரும் காலங்களில் நெல்லுக்குப் பரிந்துரைக்கப்படும் உர மேலாண்மை, நீர் மேலாண்மை முறைகளை சரிவர கையாள்வதுடன் திருந்திய நெல் சாகுபடி முறையையும் கடைப்பிடித்து ஹைட்ரஜன் சல்பைடு நச்சின் பாதிப்பைத் தவிர்த்து நெல்லில் நிறைவான மகசூல் பெறலாம்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/26/w600X390/rice1.jpg http://www.dinamani.com/agriculture/2017/oct/26/நெற்பயிரைத்-தாக்கும்-ஹைட்ரஜன்-சல்பைடு-2795757.html
2795750 விவசாயம் குருத்துப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம் Thursday, October 26, 2017 12:29 AM +0530 நீடாமங்கலம்: நெற்பயிரில் குருத்துப்பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் பரிந்துரை அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் முனைவர் ராஜா.ரமேஷ், முனைவர் ஆ. பாஸ்கரன்ஆகியோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தற்போது பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர் நாற்றங்கால் மற்றும் நடவு வயல்களில் ஆங்காங்கே குருத்துப்பூச்சி தாக்குதல் காணப்படுகின்றன. அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை இதன் தாக்குதல் அதிகமாகக் காணப்படும்.
நாற்றங்கால் மற்றும் நடவு வயலிலுள்ள இளம் பயிர்களின் தூர்கட்டும் பருவம் வரை தாக்கும்போது நடுக்குருத்து காய்ந்து விடும் அல்லது இறந்த குருத்துக்கள் உண்டாகும். அதைப் பிடித்து இழுத்தால் எளிதாக கையோடு வந்துவிடும். பயிர் நன்கு வளர்ந்து பால் பிடிக்கும் பருவத்தில் தாக்குதல் காணப்படும்போது, நெற்கதிருக்கு செல்லும் உணவு தடைப்பட்டு, நெல் மணிகள் பால் பிடிக்க முடியாமல் வெளிவரும் கதிர்கள் அனைத்தும் வெண் அல்லது சாவி கதிர்களாக மாறிவிடும்.
பொருளாதார சேதநிலை: இளம் பயிரில் ஒரு சதுர மீட்டருக்கு குருத்துப்பூச்சிகளின் 2 முட்டைக் குவியல்கள் இருத்தல் அல்லது ஒரு சதுர மீட்டருக்கு 1 அல்லது அதற்கு மேற்பட்ட குருத்துப்பூச்சிகள் காணப்படுதல். வளர்ச்சி பருவத்தில் 10 சதவீத நடுக்குருத்து காய்ந்து விடுதல் அல்லது 2 சதவீத வெண்கதிர்கள் காணப்படுதல்.
குருத்துப்பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள்:
1. நாற்றுகளை வயலில் நடும்போது முட்டைக் குவியல்கள் உள்ள இலைகளின் நுனிகளை கிள்ளிவிட்டு நடவு செய்ய வேண்டும்.
2. இனக் கவர்ச்சிப் பொறிகளை நடவு செய்த 10 நாள்களுக்குப் பிறகு ஏக்கருக்கு 5 என்ற அளவில் வைத்து, ஆண் குருத்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும்.
3. டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் என்ற முட்டை ஒட்டுண்ணியை இரு முறை 2சிசி (40,000 முட்டைகள்) என்ற அளவில் இரு முறை அதாவது நடவு நட்ட 30 மற்றும் 37-ஆவது நாள்களில் வயலில் வெளியிட வேண்டும்.
4. வேப்ப எண்ணெய் 3 சதவீதம் அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மிலி அல்லது 5 சதவீதம் வேப்பங்கொட்டைக் கரைசலை தேவையான அளவு ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும்.
5. ஒரு ஏக்கருக்கு ஃப்ளுபென்டியாமைட் 20டபிள்யூ.ஜி- 50கிராம், ஃப்ளுபென்டியாமைட் 39.35 எஸ்.சி - 20 மிலி, கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 50எஸ்.பி.- 400 கிராம், குளோரன்ட்ரான்லிபுரோல் 18.5 எஸ்.சி.- 60 மிலி, பிப்ரோனில் 5 எஸ்.சி.- 400 மிலி ஆகிய பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதாவது ஒரு மருந்தை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும். 
6. வயலில் காணப்படும் நன்மை செய்யும் பூச்சிகளான சிலந்திகள், தரை வண்டுகள், ஒட்டுண்ணி குளவிகள், நீர்த்தாண்டி, நீர் மிதப்பேன், தட்டான்கள், இடுக்கிவால் பூச்சிகள் போன்றவற்றை பாதுகாத்து பெருக்குதல் போன்றவற்றினால் குருத்துப் பூச்சிகள் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/26/w600X390/rice.jpg http://www.dinamani.com/agriculture/2017/oct/26/குருத்துப்பூச்சி-தாக்குதலை-கட்டுப்படுத்தும்-வழிமுறைகள்-வேளாண்-விஞ்ஞானிகள்-விளக்கம்-2795750.html
2788573 விவசாயம் நெற்பயிரில் இயற்கை முறையில் பூச்சிக்கட்டுப்பாடு: வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம் வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம் Thursday, October 12, 2017 12:54 AM +0530 நீடாமங்கலம்: நெல்லில் இயற்கை முறையில் பூச்சிக் கட்டுப்பாடு குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் பரிந்துரை அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் முனைவர் ராஜா.ரமேஷ், ஆ. பாஸ்கரன் ஆகியோர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நெல் சாகுபடியில் உழவியல் முறைகளை சரியாக பின்பற்றினாலே பெரும்பான்மையான பூச்சிகளின் தாக்குதலிலிருந்து நெற்பயிரை பாதுகாக்க முடியும். பட்டம் விட்டு நடுதல் மற்றும் பயிர் இடைவெளி குறைந்த அளவு இருக்கும் போது புகையான், ஆனைக்கொம்பன் ஈ மற்றும் இலை மடக்குப் புழுவின் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். ஒற்றை நாட்டு முறையில் அதிக இடைவெளியில் நடப்படுவதால் பூச்சிகளின் தாக்குதல் குறைவாகக் காணப்படும். 
நீர் நிர்வாகம்: வெள்ள நீர்ப் பாய்ச்சுவதால் ஆனைக்கொம்பன் ஈ, மாவுப்பூச்சி மற்றும் படைப் புழுவின் தாக்குதல் குறைவாக இருக்கும். தண்ணீரை 3 அல்லது 4 நாள்களுக்கு வடித்து விடுவதால் புகையான் மற்றும் குருத்து ஈ ஆகியவற்றின் தாக்குதலைக் குறைக்க இயலும். காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர் கட்டுவதால் புகையான் மற்றும் நாவாய்ப் பூச்சிகளின் தாக்குதல் குறையும்.
களைக் கட்டுப்பாடு: களைகளானது பெரும்பாலான தீமை செய்யும் பூச்சிகளுக்கும் மற்றும் நோய் காரணிகளுக்கும் மாற்று உறைவிடமாய் இருந்து அவற்றின் பெருக்கத்துக்கு உதவி புரிகின்றன. எனவே, களைகள் இல்லாமல் இருப்பது அவசியமான ஒன்றாகும்.
உர நிர்வாகம்: மக்கிய தொழு உரம், பசுந்தாள் மற்றும் உயிர் உரங்களை பெருமளவில் பயன்படுத்த வேண்டும். தழைச்சத்து உரங்களை அதிகமாகப் பயன்படுத்தினால் நெற்பயிர் பூச்சிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும். மிதமான மற்றும் அதிகமான சாம்பல் சத்து உரங்கள் பயிர்களை பூச்சிகள் தாக்காத வண்ணம் காக்கும். மண் பரிசோதனை முடிவுகளின்படி பரிந்துரை செய்யப்படும் அளவுகளில் மட்டுமே ரசாயன உரங்களை வயலில் இடவேண்டும். 
தழைச்சத்து நிர்வாகம்: தழைச்சத்து உரங்களை தேவைக்கு அதிகமாக அளிக்கும்போது தண்டுத்துளைப்பான், பச்சை தத்துப்பூச்சி, புகையான் மற்றும் இலைமடக்குப் புழு தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, தழைச்சத்து உரங்களை 3 அல்லது 4 முறைகளாகப் பிரித்து ஜிப்சம் மற்றும் வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றுடன் 5:4:1 என்ற அளவில் கலந்து அளிப்பதன் மூலமாக பெரும்பாலான பூச்சிகளின் தாக்குதலைக் குறைக்கலாம். 
வரப்புகளில் பயறு வகை பயிர்களை வளர்த்தல்: வயல் வரப்புகளில் உளுந்து மற்றும் தட்டைப் பயறு போன்ற பயறுவகைப் பயிர்களை வளர்ப்பதன் மூலம் நன்மை செய்யும் உயிரினங்களான பொறிவண்டு, சிலந்திகள் போன்றவை பல்கி பெருகி, நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகளை அழிக்கும். 
பயிர் சுழற்சி முறை: வருடம் முழுவதும் நெற்பயிரையே தொடர்ந்து பயிர் செய்வதை தவிர்த்து, உளுந்து, பச்சைப்பயறு, பருத்தி, எள், கடலை, காய்கறிப் பயிர்கள் போன்றவற்றைப் பயிர் செய்வதன் வாயிலாக பல்வேறு தீமை செய்யும் பூச்சிகள் தங்களது வாழ்க்கை சுழற்சிக்கு தேவையான பயிர்கள் இல்லாத காரணத்தால், அவற்றினால் தொடர்ந்து பல்கி பெருக இயலாமல் இறந்துவிடும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/12/w600X390/rice.jpg http://www.dinamani.com/agriculture/2017/oct/12/நெற்பயிரில்-இயற்கை-முறையில்-பூச்சிக்கட்டுப்பாடு-வேளாண்-விஞ்ஞானிகள்-விளக்கம்-வேளாண்-விஞ்ஞானிகள்-விளக-2788573.html
2788570 விவசாயம் 'நிலக்கடலையில் விதை நேர்த்தி செய்தால் அதிக மகசூல் பெறலாம்' Thursday, October 12, 2017 12:53 AM +0530 அரியலூர்: இறவை நிலக்கடலையில் விதை நேர்த்தி செய்தால் அதிக மகசூல் பெறலாம் என சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் திருமலைவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
அரியலூர் மாவட்டத்தில் இறவை நிலக்கடலை ஏறக்குறைய 18 ஆயிரம் ஹெக்டரில் பயிர் செய்கின்றனர். டிஎம்வி-7, கோ-3, கோ-4, விஆர்ஐ-2, விஆர்ஐ-3, விஆர்ஐ-5, டிஎம்வி-13 மற்றும் விஆர்ஐ-8 போன்ற ரகங்கள் இப்பருவத்திற்கு ஏற்ற ரகமாகும். இறவையில் நிலக்கடலை விதைப்பதற்கு ஒரு ஏக்கருக்கு 50 கிலோ விதை போதுமானதாகும். பெரிய பருப்பு ரகங்களான விஆர்ஐ-2, விஆர்ஐ-8, கோ-2, கோ-3 போன்ற ரகங்களுக்கு கூடுதலாக 5 கிலோ பயன்படுத்த வேண்டும்.
விதைகளை விதைப்பதற்கு முன் விதைநேர்த்தி செய்தல் மிக அவசியம். விதைகளை உயிர் பூஞ்சாணமான டிரைகொடெர்மா விரிடி 1 கிலோ விதைக்கு 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் ப்ளுரோசன்ஸ் 1 கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் விதைநேர்த்தி செய்து பின்பு உயிர் உரங்களான ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உடன் தலா 2 பொட்டலம் வீதம் விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
விதைநேர்த்தி செய்வதன் மூலம் விதைகள் மூலம் வரும் பூஞ்சாண நோயை கட்டுப்படுத்தலாம். விதைகளை விதைக்கும் போது வரிசைக்கு வரிசை 30 செ.மீ, செடிக்கு செடி 10 செ.மீ. இடைவெளிவிட்டு விதைக்க வேண்டும். இயந்திரத்தின் மூலம் விதைப்பதினால் விதை அளவு மற்றும் விதைப்பு செலவு குறைகிறது.
மேலும் நிலக்கடலை விதைப்பதற்கு முன் அடியுரமாக 5 டன் தொழு உரம், யூரியா 11 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 125 கிலோ, பொட்டாஷ் 25 கிலோ, ஜிப்சம் 80 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 50 கிலோ மற்றும் உயிர் உரமான அசோஸ்பைரில்லம் 1 கிலோ, பாஸ்போ பாக்டீரியா 1 கிலோ மற்றும் எதிர் உயிர் பாக்டீரியா சூடோமோனாஸ் ப்ளோரோசன்ஸ் 1 கிலோ இட வேண்டும். மண் பரிசோதனையின் படி உரமிடுதல் நல்லது.
மேலும் வரப்பு ஓரங்களில் ஆமணக்கு, கம்பு மற்றும் மக்காச்சோளம் பயிரிடுதல் மூலம் பூச்சியின் தாக்கத்தை தவிர்க்கலாம், ஊடுபயிராக துவரை, உளுந்து, தட்டைப்பயிறு, கம்பு ஆகிய பயிர்களைப் பயிரிடுவதன் மூலம் பூச்சிகளின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
விளக்கு பொறிகளை இரவு 7-10 மணி வரை வைத்து அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம், இனக்கவர்ச்சி பொறிவைத்து புரோடீனியா, கிலியோதீஸ் ஆண் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம், பச்சை தத்துப்பூச்சி, வெள்ளை ஈக்களை கவர மஞ்சள் நிற ஒட்டுப்பொறி வைத்து கவர்ந்து கட்டுப்படுத்தலாம்,
மேலும் நோய் தென்படும் சமயங்களில் சூடோமோனாஸ் ப்ளோரொசன்ஸ் எதிர் உயிர் பாக்டீரியா லிட்டருக்கு 2 கிராம் என்ற அளவில் தெளிப்பதன் மூலம் வேர் அழுகல் மற்றும் தண்டு அழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நிலக்கடலையில் ஒரு ஏக்கருக்கு 1000 கிலோ முதல் 1200 கிலோ வரை மகசூல் கிடைக்கும் என்றார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/12/w600X390/seed.jpg http://www.dinamani.com/agriculture/2017/oct/12/நிலக்கடலையில்-விதை-நேர்த்தி-செய்தால்-அதிக-மகசூல்-பெறலாம்-2788570.html
2788567 விவசாயம் கொள்ளு சாகுபடி தொழில்நுட்பங்கள் Thursday, October 12, 2017 12:52 AM +0530 கிருஷ்ணகிரி: கொள்ளு பயிரானது செப்டம்பர் - நவம்பர் - மாத காலங்களில் சாகுபடி செய்வது மிகச் சிறந்தது. இது தமிழகத்தில் சுமார் 60,500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. 
ரகங்கள்: கோ-1, பையூர் -1, பையூர் - 2. 
சாகுபடி முறைகள்: நிலத்தை ஐந்து கலப்பை அல்லது ஒன்பது கலப்பை கொண்டு புழுதி படிய நன்கு உழவு செய்ய வேண்டும்.
விதையளவு: ஏக்கருக்கு 8 கிலோ விதைகள் போதுமானது. ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பண்டாசிம் கொண்டு விதை நேர்த்தி செய்யவும். 
ரைசோபியம் மற்றும் பாஸ்போபேக்டீரியா தலா (1 பாக்கெட்) 200 உயிர் உரத்தை 400 மில்லி ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து, 1 ஏக்கருக்குத் தேவையான விதைகளைக் கலந்து, பின் நிழலில் உலர்த்தி பின் 24 மணி நேரத்திற்குள் விதைக்க வேண்டும். 
விதை நேர்த்தி செய்யவில்லை என்றால், 10 பாக்கெட் ரைசோபியம் மற்றும் 10 கிலோ பாஸ்போ பாக்டீரியாவை 25 கிலோ தொழுவுரம் மற்றும் 25 கிலோ மண்ணுடன் கலந்து விதைப்பதற்கு முன் இட வேண்டும். 
ஊட்டச்சத்து மேலாண்மை: விதைப்பதற்கு முன்பாக அடி உரமாக ஹெக்டேருக்கு 12.5 டன் நன்கு மக்கிய தொழு உரம் இடவும். மண் பரிசோதனை ஆய்வுப்படி உரம் இட வேண்டும். இல்லையெனில், பொது பரிந்துரைக்காக ஏக்கருக்கு 5:10:5 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்கள் தரவல்ல 11 கிலோ யூரியா, 63 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 8 கிலோ மியூரேட் ஆப் பொட்டாஷே அடியுரமாக இட வேண்டும். 
களை கட்டுப்பாடு: 20 முதல் 25 நாள்களுக்குள் ஒருமுறை களை எடுக்க வேண்டும். 
அறுவடை: அனைத்து காய்களும் முதிர்ச்சி அடைந்தவுடன், அறுவடை செய்ய வேண்டும். பின்னர், காய்களைக் காயவைத்து கதிரடித்து பருப்புகளை தனியே பிரித்து எடுக்க வேண்டும். 
மகசூல்: ஏக்கருக்கு 300 முதல் 350 கிலோ வரை மகசூல் கிடைக்கும். மிகக் குறைந்த சாகுபடி செலவுகளைக் கொண்டுள்ள கொள்ளு பருப்பானது மருத்துவ பலன்களைக் கொண்டது. 
பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள கொள்ளுப் பயிரை சாகுபடி செய்து விவசாயிகள் தங்களது வருவாயை அதிகரித்துக் கொள்ளலாம் என கிருஷ்ணகிரி அருகே எலுமிச்சங்கிரி கிராமத்தில் செயல்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் - வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் தோ. சுந்தராஜ் தெரிவித்தார். மேலும் விவரங்களுக்கு 04343-290639 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/12/w600X390/kollu.jpg http://www.dinamani.com/agriculture/2017/oct/12/கொள்ளு-சாகுபடி-தொழில்நுட்பங்கள்-2788567.html
2784372 விவசாயம் நன்செய் நிலங்களில் சேற்று நெல் சாகுபடி! Thursday, October 5, 2017 12:42 AM +0530 திருநெல்வேலி: நன்செய் நிலங்களில் நெல் பயிரிடுவதில் ஆர்வமுள்ள விவசாயிகள் சேற்று நெல் சாகுபடி முறையைப் பின்பற்றி நல்ல மகசூல் ஈட்டலாம் என, வேளாண் துறை தெரிவித்துள்ளது.
விதையளவு: ஒரு ஹெக்டேர் நடவுக்கு நீண்ட கால ரகம் எனில் 30 கிலோ, மத்திய காலமாயின் 40 கிலோ, குறுகிய கால ரகம் என்றால் 60 கிலோ போதும்.
விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கார்பன்டஜிம் அல்லது பைரோகுயிலான் 2 கிராம் அல்லது டிரைசைக்லோஜோல் கரைசல் 2 மி.லி. கலந்து 10 மணி நேரம் ஊற வைத்து பின்னர் வடிகட்ட வேண்டும். இதன் மூலம், இளம் வயதில் பாதிக்கக்கூடிய தோகை எரிப்பு நோயிலிருந்து 40 நாள் வரை பாதுகாப்பு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஊற வைத்த விதையை உடன் விதைக்க வேண்டுமெனில் நனைந்த கோணிச் சாக்கில் கட்டி மூடி, 24 மணி நேரம் இருட்டில் வைத்து முளை எட்டிய பின்னர் விதைக்கலாம். அல்லது நிழலில் உலர்த்தி தக்க ஈரப்பதத்தில் சேமித்து பின்னர் விதைக்க வேண்டும்.
சூடோமோனாஸ் ஃபுளுரசன்ஸ் கரைசல் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து 10 மணி நேரம் ஊற வைத்து நீரை வடிகட்டி முன்பு சொன்ன முறையில் விதைக்கலாம்.
நாற்றங்கால் தயாரிப்பு: தயாரிக்கப்பட்ட நிலம் 2.5 மீ (8 அடி) அகலமுள்ள பாத்திகளாக, 30 செ.மீ (ஓரடி) இடைவெளியுள்ள வாய்க்கால் பாத்தியைச் சுற்றிலும் அமைக்க வேண்டும். பாத்தியின் நீளம் 8 முதல் 10 மீ வரையில் நிலத்தின் சமன் அமைப்பு மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப அமைக்கலாம். வாய்க்கால் அமைக்கும்போது எடுக்கப்பட்ட மண்ணை பாத்தியில் பரப்பி நிரவலாம்.
விதைப்பு: முளைகட்டிய விதையைப் பாத்தியில் பரவலாக தூவ வேண்டும். தண்ணீர் அளவு 1-2 செ.மீ. அளவு இருத்தல் நல்லது.
நீர் நிர்வாகம்: விதைத்த 24 மணி நேரத்துக்குள் தண்ணீர் வடிக்கப்பட்டு விதை முளைக்க சந்தர்ப்பம் தரப்படவேண்டும்.
குண்டுகுழிகளில்கூட தண்ணீர் தேங்கி நிற்காதவாறு பாத்தி அமைப்பும், நீர் நிர்வாகமும் அமைக்கப்பட வேண்டும்.
விதைத்த மூன்று முதல் ஐந்து நாள் வரை நீர் கட்டுவது, தண்ணீர் தேங்கி நிற்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நீரின் உயரம் 5 நாளிலிருந்து சிறிது சிறிதாக நாற்றின் வளர்ச்சிக்கேற்ப உயர்த்தலாம். அதிக பட்சமாக (ஓர் அங்குல ஆழம்) நீர் கட்டுவது சிறந்தது.
களை நிர்வாகம்: விதைத்த 3 அல்லது 4ஆம் நாளில் களை முளைப்புக்கு முந்தைய களைக்கொல்லி பிரிடில்லாகளோர், சேஃப்பனர் 0.3 கிலோ என்ற அளவில் ஒரு ஹெக்டேர் நாற்றுகளுக்குத் தெளிக்க வேண்டும். களைக்கொல்லி தெளிக்கும் முன்னர் சிறிய அளவு தண்ணீர் நிறுத்த வேண்டும். தேக்கப்பட்ட நீரை வடிக்கக் கூடாது.
தானாகவே மண்ணில் மறைதல் சிறந்தது. விதைத்த 8 நாளுக்குப் பிறகு ஈரப்பதம் இருக்கும் நிலையில் களைக்கொல்லி தெளிக்க வேண்டும்.
உர நிர்வாகம்: 20 சென்டுக்கு 1 டன் தொழு உரம், மாட்டு எரு தேவைப்படும். கடைசி உழவின்போது 20 சென்ட் நாற்றங்காலுக்கு 40 கிலோ டிஏபி உரமோ அல்லது 16 கிலோ யூரியாவும் 120 கிலோ சூப்பர் பாஸ்பேட்டும் கலந்தோ இட வேண்டும். அடியுரமாக டிஏபி இடுவது குறைவான மண் சத்துள்ள நாற்றங்கால்களுக்கு உகந்தது.
நாற்றுகளை 25 நாளுக்குப் பின்னர் எடுத்து நடவேண்டிய தருணங்களில், ரசாயன உரமிட்டு, அதிகபட்சம் 10 நாளுக்குள் நாற்றுகள் எடுத்து நடவேண்டும். மிக அதிகமான களிமண் நிலத்தில் நாற்று எடுக்கும்போது வேர் அழுகும் நிலை ஏற்படின், விதைத்த 10 ஆம் நாள் ஒரு சென்டுக்கு 4 கிலோ ஜிப்சம், 1 கிலோ டிஏபி கலந்து இட வேண்டும்.
புழுதி நாற்றங்கால்: ஆற்றில் தண்ணீர் வருவது பின்தங்கும் தருணத்தில் புழுதி நாற்றங்கால் வரப்பிரசாதமாக அமையலாம். நாற்றங்காலின் பரப்பு, விதை அளவு, விதை நேர்த்தி ஆகியவை சேற்று நாற்றங்காலுக்குக் குறிப்பிட்டதைப்போல பின்பற்ற வேண்டும். நாற்றங்கால் நன்கு உழப்பட்டு 1 முதல் 1.5 மீ அகலமுள்ள பாத்திகளாக அமைக்க வேண்டும். பாத்தியைச் சுற்றிலும் ஓரடி அகல வாய்க்கால் அமைப்பது நல்லது. களிப்பு அதிகமுள்ள மண் வகைகளில் மேட்டுப் பாத்தி அமைக்கலாம். மணற்பாங்கான பகுதிகளில் படுக்கைப் பாத்தி போதுமானது. நேர்த்தி செய்யப்பட்ட உலர்ந்த விதைகள் தூவப்பட்டு நன்கு மக்கிய மாட்டு அல்லது தொழு உரத்தால் விதைகள் மூடப்பட வேண்டும். மண் நனையும் அளவு நீர் பாய்ச்சுவதோ, தெளிப்பதோ வேண்டும். நான்கு இலைப் பருவம் நடவுக்கு ஏற்றது.
ரசாயன உரமிடுதல்: மண் பரிசோதனை மூலம் தேவையான உரங்களைக் கணக்கிட வேண்டும். இறவை நெற்பயிருக்கு குறிப்பிட்ட வயலுக்கேற்ற உரமிடும் முறை மூலம் மணி, சாம்பல் சத்து இடுவதை நிர்ணயிக்கவேண்டும். மண் பரிசோதனை மூலம் உரமளிக்க நேரமில்லையெனில் பொதுவான பரிந்துரையைப் பின்பற்றலாம்.
நீர் மேலாண்மை: சேற்று உழவும், உழுது நிலத்தை சமன் செய்தலும், நீரின் தேவையைக் குறைக்கின்றன. இரும்புச் சக்கரக் கலப்பையால் சேற்றுழவு செய்யும்போது நீர் மண்ணினுள் ஊடுருவி வீணாவது 20% வரை தடுக்கப்படுகிறது. வயலில் மடக்கி உழப்பட்ட பசுந்தாள் உரம் நல்ல முறையில் மக்குவதற்கு குறைந்தது ஓர் அங்குல நீர் நிறுத்த வேண்டும். குறைந்த நார்த்தன்மையுடைய சணப்பை, தக்கைப்பூண்டு போன்றவற்றுக்கு 7 நாளும், அதிக நார்த்தன்மையுடைய கொளுஞ்சி இனங்களுக்கு 15 நாளும் நீர் நிறுத்திய பின்னரே நடவு செய்யவேண்டும்.
நடும்போது தண்ணீரின் அளவு, சேறும் சகதியுமாய் இருத்தல் நல்லது. இவ்வாறு அமைந்தால் சரியான ஆழத்தில் நடவும், அதிக தூர் பிடிப்பதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கும். நட்ட ஒரு வாரத்துக்கு ஓர் அங்குல நீர் தேக்கி வைக்கவேண்டும். இது தூர் பச்சை பிடிக்கும் காலமானதால் நீர் அளவு குறையாமல் பராமரிக்கவேண்டும். பச்சை பிடித்த பின்பு 2 அங்குல ஆழத்துக்கு நீர்கட்டி, கட்டிய நீர் மறைந்து நூலளவு மண்வெடிப்பு தோன்றும்போது மீண்டும் நீர்கட்டுதல் வேண்டும். இம்முறையில் நீர்கட்டுதல் பயிர் முதிர்ச்சியடையும் வரை கடைப்பிடிக்கவேண்டும்.
அறுவடை: நட்ட ரகத்தின் வயதுக்கேற்ப அறுவடைக் காலத்துக்கு 7 நாள் முன்பாக நீர் தேங்கி நிற்காமல் பார்த்துக்கொள்வது அறுவடைக்கு நல்லது. 80 சதம் கதிர்மணி முற்றிய பின்பும்கூட வயலில் பச்சை இலைகளின் தோற்றம் காணப்படும். 
எனவே, கதிர் முதிர்ச்சியடைந்துவிட்டதா என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம். பொதுவாக கதிரின் அடிப்பாகத்தில் உள்ள நெல்மணிகளை விரல்களால் அழுத்திப்பார்த்து முதிர்ச்சியை முடிவு செய்யலாம். மணிகள் அழுத்தப்படும்போது கடினமாகவும் பால் வெளியில் வராத நிலையிலும் இருப்பின் அறுவடைக்குத் தயார் எனக் கருதலாம். 
அறுவடை செய்த நெல்மணிகளை பதர் நீக்கி, இளம் வெயிலில் நீர்ப்பதம் குறைத்து சேமிக்க வேண்டும். ஈரம் உலர்த்தப்படும் விதம் நெல்லின் அரைவை திறனையும், அரிசியின் தன்மையையும் பாதிக்கும். அறுவடையை 3 நாள் முன்கூட்டி செய்ய வேண்டியிருந்தால் சாப்பாட்டு உப்புக் கரைசல் 20 சதம் என்ற அளவில் இலைகளில் தெளித்து 48 மணி நேரத்துக்குப் பின் அறுவடை செய்யலாம்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/5/w600X390/rice.jpg http://www.dinamani.com/agriculture/2017/oct/05/நன்செய்-நிலங்களில்-சேற்று-நெல்-சாகுபடி-2784372.html
2784371 விவசாயம் அனைத்து வகை மண்ணுக்கும் ஏற்ற சப்போட்டா! Thursday, October 5, 2017 12:41 AM +0530 திருநெல்வேலி: பழப் பயிர்களை சாகுபடி செய்வதில் ஆர்வமுள்ள விவசாயிகள் அனைத்து வகை மண்ணிலும் வளரும் சப்போட்டாவை தேர்வு செய்து, நீடித்த லாபத்தை ஈட்டலாம் என தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சப்போட்டா எவ்வகை மண்ணிலும் செழித்து வளரும். நல்ல வடிகால் வசதியான மண் ஏற்றது. ஆழமான வண்டல் மண் கலந்த நிலங்கள் மிகவும் உகந்தது. சப்போட்டா ஓரளவு உப்புத் தன்மையுள்ள நிலங்களிலும் உப்புத் தன்மை கொண்ட நீரையும் தாங்கி வளரும்.
ரகங்கள்: கிரிக்கெட் பால், ஓவல், பாராமசி, தகரப்புடி, துவாரப்புடி, கீர்த்தபர்த்தி, பாலா, காளிப்பட்டி, கோ.1, கோ 2, பெரியகுளம் 2, பெரியகுளம் 3 , பெரிய குளம் 4 , பெரிய குளம் 5 ஆகிய ரகங்கள் ஏற்றவை.
பருவம்: சப்போட்டா சாகுபடிக்கு பொதுவாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சிறந்தவை.
செடிகள் நடுதல்: சப்போட்டா பயிரிட 8 மீட்டருக்கு இடைவெளியில் 60 செமீ நீளம், அகலம், 60 செமீ ஆழம் என்ற அளவில் குழிகள் எடுக்க வேண்டும். குழிகளை சிறிது நாள்களுக்கு ஆறவிட வேண்டும். 10 கிலோ மக்கிய தொழு உரம், ஒரு கிலோ வேப்பம் பிண்ணாக்கு இட்டு மேல் மண் காலங்களிலேயே செடிகள் நடப்படுதல் வேண்டும். செடிகள் நட்ட உடன், செடிகளுக்கு இருபுறமும் குச்சிகள் வைத்துக் கட்டுவதால் காற்றில் செடிகள் ஆடிச் சேதமடைவதைத் தவிர்க்கலாம்.
நீர் நிர்வாகம்: மகரந்தச் சேர்க்கை நல்ல முறையில் நடைபெற்று காய் அதிகம் பிடிக்க குறைந்த பட்சம் 2 அல்லது 3 மரம் இருக்குமாறு நட வேண்டும். செடிகள் நட்ட சிறிது நாளுக்கு, 2 முதல் 3 நாளுக்கு ஒருமுறை பின்னர் 4 முதல் 5 நாளுக்கு ஒருமுறை என்ற அளவிலும் நீர் ஊற்றவேண்டும். ஓராண்டுக்குப் பிறகு 10 முதல் 15 நாளுக்கு ஒருமுறை என்ற அளவில் நீர் பாய்ச்சலாம். சப்போட்டா சிறந்த முறையில் வறட்சியைத் தாங்குவதால் மானாவாரிப் பயிராகவே பயிரிடலாம்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை: சாதாரணமாக செடி நடும்போது ரசாயன உரம் எதுவும் இடவேண்டியதில்லை. ஒரு வயது முடிந்தபின், செடிக்கு 200 கிராம் தழைச்சத்து, 200 கிராம் மணிச்சத்து, 300 கிராம் சாம்பல் சத்து என்ற அளவிலும், இதையே ஆண்டு ஒன்றுக்கு 200: 200: 300 கிராம் என்ற அளவில் அதிகரித்தும் வழங்க வேண்டும். 5 ஆண்டுளுக்குப் பிறகு 1 கிலோ தழைச்சத்து, 1 கிலோ மணிச்சத்து மற்றும் 1.5 கிலோ சாம்பல் சத்து என்ற அளவில் இடவேண்டும். மக்கிய தொழு உரம் ஒரு செடிக்கு 30 முதல் 50 கிலோ என்ற அளவில் இடுவது நல்லது.
மேற்படி உர அளவை, நீர்ப் பாசன வசதியுள்ள பகுதிகளில் கோடைக் காலத்தில் ஒருமுறையும், மழைக் காலத்தில் ஒருமுறையும் என 2ஆகப் பிரித்து இடலாம். இதன் மூலம் செடிகளின் வளர்ச்சி சீராக இருப்பதோடு, உர சேதமும் தடுக்கப்படும்.
களைக் கட்டுப்பாடு, பின்செய் நேர்த்தி: ஒட்டுப் பகுதிகளின் கீழே தழைத்துவரும் வேர்ச் செடியின் தளிர்களை அவ்வப்போது அகற்றவேண்டும். தரைநிலையிலிருந்து 2 அடி உயரம் வரை கிளைகள் எதுவும் பிரியாமல் பார்த்துக் கொள்வது நல்லது. கிளைகள் மரத்தில் சீராகப் பரவி இருக்கவேண்டும். சப்போட்டா மரத்துக்கு கவாத்து செய்யத் தேவை இல்லை. உயரமாக வளரும் ஒருசில தண்டுகளை மட்டும் நீக்க வேண்டும். அடர்த்தியான, நிழல் விழும் கிளைகளையும் நீக்கிவிடவும்.
கரும் பூஞ்சாண நோய்: சப்போட்டாவில் இந்நோயைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ மைதா அல்லது ஸ்டார்ச் வினையை 5 லிட்டர் நீரில் கலந்து கொதிக்க வைக்கவேண்டும். ஆறிய பின் 20 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். மேகமூட்டம் இருக்கும்போது தெளிக்கக் கூடாது.
அறுவடை: முதிர்ந்த காய்கள் வெளிறிய பழுப்பு நிறத்தில் இருக்கும். அதன் சதைப் பகுதி வெளிறிய மஞ்சள் நிறத்தில் இருக்கும்போது அறுவடை செய்யவேண்டும். பொதுவாக பழங்கள் பிப்ரவரி, ஜூன், செப்டம்பர், அக்டோபரில் அறுவடைக்கு வரும். அறுவடை செய்த பழங்களை 5,000 பி.பி.எம் எத்ரல், 10 கி சோடியம் ஹைட்ராக்ஸைடு கலவையுடன் காற்றுப் புகாத அறையில் வைக்கவேண்டும்.
மகசூல்: ஆண்டுக்கு ஹெக்டேருக்கு 25 டன் பழங்கள்வரை கிடைக்கும்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/5/w600X390/tree.jpg http://www.dinamani.com/agriculture/2017/oct/05/அனைத்து-வகை-மண்ணுக்கும்-ஏற்ற-சப்போட்டா-2784371.html
2780770 விவசாயம் காய்கறி பயிர்களில் நுண்ணூட்ட மேலாண்மை Thursday, September 28, 2017 12:58 AM +0530 பெரம்பலூர்: தாவரங்களில் வினையியல் பணிகள் சரிவர நடைபெறுவதற்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஊட்டச்சத்துகள், அத்தியாவசியமான ஊட்டச்சத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை சரிவரக் கிடைக்காவிட்டால், தாவரங்களின் வாழ்க்கைச் சுழற்சி (தாவர வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம்) தடைபடுகிறது. அந்த வகையில், 17 ஊட்டச்சத்துகள் அத்தியாவசியமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. அவை கரிமம், நீரியம், உயிரியம், தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, சுண்ணாம்பு, மெக்னீசியம், கந்தகம், இரும்பு, மாங்கனீஸ், துத்தநாகம், தாமிரம், வெண்காரம், குளோரின், மாலிப்டினம் மற்றும் நிக்கல் ஆகியவைகளாகும். 
பயிர்களின் ஊட்டச்சத்து தேவை முழுமையாக நிறைவடையாத நேரங்களில் ஊட்டச்சத்து குறைபாடுகள் தோன்றுகின்றன. இதனால், பயிர் வளர்ச்சி குறைவு, பச்சைய சோகை, நிறம் மாற்றம், இலை காய்தல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படுகின்றன. தாவரங்களில் ஊட்டச்சத்துக்கள் நகர்ந்து செல்லும் திறனைப் பொறுத்து, தாவரத்தின் இளம் பாகங்கள் அல்லது முதிர்ந்த பாகங்களில் அறிகுறிகள் தென்படுகின்றன. 
தோட்டக்கலைப் பயிர்களில் உற்பத்தித் திறனை அதிகப்படுத்தி, அவற்றின் தரத்தை மேம்படுத்த முறையான ஊட்டச்சத்து மேலாண்மை அவசியமாகிறது. ஊட்டச்சத்துக்களை பேரூட்டச் சத்துக்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் என இரு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். இதில், பேரூட்டச் சத்துக்களான தழை, மணி, சாம்பல் சத்துக்களை ரசாயன உரங்களான யூரியா, டி.ஏ.பி. சூப்பர் பாஸ்பேட், மியூரியேட் ஆப் பொட்டாஷ் மற்றும் கலப்பு உரங்கள் அளிப்பதன் மூலமாக பயிருக்கு சத்துக்கள் கிடைக்கின்றன. அப்படியிருந்தும் கூட, நம் நாட்டின் பெரும்பாலான சாகுபடி நிலங்கள் இதில் ஏதேனும் ஒன்று அல்லது அனைத்து சத்துக்களின் பற்றாக்குறையுடனே காணப்படுகின்றன. நுண்ணூட்டச் சத்துகளான துத்தநாகம், இரும்பு, போரான் சத்துக்களும் பெரும்பாலான நிலங்களில் பற்றாக்குறையாகவே உள்ளது. இம்மாதிரியான நிலங்களில், 50 சதவீதத்திற்கும் அதிகமாக மகசூல் இழப்பு ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, காய்கறிப் பயிர் சாகுபடியில் இதன் தாக்கம் அதிகமாகவே உணரப்படுகிறது. மேலும், அதிகப்படியான பேரூட்ட உரங்களின் பயன்பாடு, பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு ஆகியவற்றால் உற்பத்தி செலவும் அதிகமாகி விடுகிறது. முறையான உர மேலாண்மையைக் கையாள்வதன் மூலமாக, குறிப்பாக நுண்ணூட்டச் சத்துக்களை சரியான தருணத்தில் சரியான அளவில் அளிப்பதன் மூலமாக காய்கறிப் பயிர்களில் விளைச்சல் மற்றும் தரம் அதிகரிப்பதோடு மட்டுமின்றி செடிகளில் பூச்சி நோய்களுக்கு எதிர்ப்புத்திறனும் அதிகரித்து விடுகிறது. 
நுண் சத்துக்களின் செயல்பாடு- முக்கியத்துவம்: இந்திய விளைநிலங்களில் விளையக்கூடிய பயிர்களில் சுமார் 40 முதல் 60 சதவீதம் வரையிலான பயிர்கள் ஒன்று அல்லது மேற்பட்ட நுண்சத்து பற்றாக்குறையினால் பாதிப்புக்குள்ளாகின்றன. எனவே, காய்கறி பயிர்களில் நுண்சத்து மேலாண்மை என்பது அதன் மகசூல் மற்றும் தரத்தை அதிகப்படுத்த அவசியமான ஒன்றாகிறது. பொதுவாக, காய்கறிப் பயிர்களுக்கு துத்தநாகம், இரும்பு மற்றும் பேரான் நுண்ணூட்டங்களின் தேவை அத்தியாவசியமாகிறது. காய்கறிப் பயிருக்குத் தேவையான பேரூட்டச் சத்துக்களை அதன் பரிந்துரைப்படி அளிக்கும் விவசாயிகள் நுண்ணூட்டச் சத்துக்களை முறையாக அளிப்பதில்லை. இதற்கு போதிய விழிப்புணர்வின்மையே காரணம். சில வகையான நுண்ணூட்டங்களையும், அவற்றின் முக்கியத்துவங்கள் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம். 
துத்தநாகம்: துத்தநாகம் பயிரின் வளர்ச்சியுடன் நேரடித் தொடர்புடையதாதலால், இது அத்தியாவசியமான நுண்சத்தாகிறது. துத்தநாகச் சத்து பற்றாக்குறை ஏற்பட்டால் பயிர் வளர்ச்சி குன்றி காணப்படும். மேலும், இலைகளில் இலை நரம்புகளுக்கு இடையேயான பகுதி வெளிர் நிறத்தில் தோற்றமளிக்கும். இதை நிவர்த்தி செய்ய துத்தநாகம் அடங்கிய நுண்ணூட்ட உரத்தை நிலத்திலோ, இலை வழியாகவோ அளிக்கலாம். மணிச்சத்து தரவல்ல சூப்பர் பாஸ்பேட், டி.ஏ.பி உரங்களை அதிக அளவில் நிலத்தில் இடுவதனால், அவை மண்ணில் உள்ள துத்தநாகத்துடன் வினைபுரிந்து அதை பயிருக்கு கிடைக்காமல் செய்துவிடும். எனவே, இந்த உரங்களை இடும்போது பரிந்துரைக்கப்படும் அளவில் மட்டும் இட வேண்டும்.
காய்கறி நுண்ணூட்டக் கலவை: காய்கறிப் பயிர்களுக்கு ஏற்படும் நுண்ணூட்டக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, காய்கறிக்களுக்கென்று பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் காய்கறி நுண்ணூட்டக் கலவையை பயன்படுத்தலாம். இது துத்தநாகம், இரும்பு, போரான், மாங்கனீசு மற்றும் தாமிரம் ஆகிய நுண்சத்துக்களை உள்ளடக்கிய கலவையாகும். நுண்ணூட்டக் கலவையை நிலத்தில் இடுவதை விட, இலைவழியாகத் தெளிப்பதன் மூலம் நுண்சத்துக்கள் பயிருக்கு உடனடியாக கிடைக்க வழிவகை செய்யலாம். நிலத்தில் இடும்போது, அதிக அளவில் நுண்ணூட்ட உரம் தேவைப்படும். இதற்கு மாறாக இலைவழியாக தெளிக்கும்போது குறைந்த அளவே போதுமானது. 
மேலும், நிலத்தில் இடும்போது பயிர் எடுத்துக் கொள்ளக்கூடிய நுண்சத்தின் அளவு மிகக் குறைவாகவே இருக்கும். பெரும்பாலான சத்துக்கள் நீரில் கரைந்து பூமிக்குள்ளாகவும் மண் அரிமானம் மூலமாகவும் விரயமாகிவிடும். ஆனால், இலை வழியாகத் தெளிக்கும்போது குறைந்த அளவு நுண்ணூட்டமே பயன்படுத்தினாலும், அதன் பெரும்பகுதி பயிருக்கு கிடைத்துவிடும்.
தெளிக்கும் தருணம்: காய்கறிப் பயிரின் வயதைப் பொருத்து தெளிக்கும் தருணம் மாறுபடும். 50 நாள்களுக்கு குறைவான ஆயுள் உள்ள பயிர்களுக்கு விதைத்த 10- 15 நாள்களுக்குள் ஒருமுறை மட்டும் தெளித்தால் போதுமானது. 50 நாள்களுக்கு மேல் ஆயுள் உள்ள பயிர்களுக்கு மாதம் ஒருமுறை வீதம் அறுவடை வரை தெளிக்கலாம். 
பரிந்துரைக்கப்படும் அளவு: தக்காளி, வெங்காயம், மரவள்ளி 1 லிட்டர் நீருக்கு 5 கிராம், கத்தரி, மிளகாய் 3 கிராம், வெண்டை, அவரை, தட்டைப்பயறு 3 கிராம், பாகல், புடல், பீர்க்கு, சுரை, பரங்கி, பூசணி 1 கிராம் தெளிக்க வேண்டும். 
தெளி திரவம் தயாரிப்பு: 1 ஏக்கருக்குத் தேவையான தெளி திரவம் தயார் செய்ய 200 லிட்டர் நீருடன், பரிந்துரைக்கப்பட்ட அளவு காய்கறி நுண்ணூட்டக் கலவையை கரைத்து, அதில் 20 எலுமிச்சம் பழங்களைப் பிழிந்துவிட வேண்டும். பின்னர், இக்கரைசலில் தலை குளிப்பதற்கு பயன்படுத்தும் ஷாம்பூ 30 மில்லி ஊற்றி நன்கு கலந்து பிறகு தெளிக்கலாம். பயிருக்கு தெளிக்கும்போது காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும். தெளிப்பு செய்து 24 மணி நேரத்திற்கு மழைப்பொழிவு இல்லாமல் இருப்பது நல்லது. காய்கறி நுண்ணூட்டக் கலவையின் சிறந்த செயல்திறனுக்கு, இதனுடன் எவ்விதமான பூச்சிக்கொல்லியோ, பூஞ்சாணக்கொல்லியோ கலக்காமல் தனியே பயன்படுத்த வேண்டும் என்றார் வாலிகண்டபுரம் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ஜே. கதிரவன்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/28/w600X390/brinjal.PNG http://www.dinamani.com/agriculture/2017/sep/28/காய்கறி-பயிர்களில்-நுண்ணூட்ட-மேலாண்மை-2780770.html
2780769 விவசாயம் விவசாயத்துக்கு உறுதுணை புரியும் மண்வளப் பரிசோதனை Thursday, September 28, 2017 12:57 AM +0530 புதுக்கோட்டை: 'மண்வளமே விவசாயிகளின் நலம்' என்ற உயரிய நோக்கத்துடன் தமிழக அரசு அனைத்து விவசாயிகளுக்கும் மண்பரிசோதனை செய்து மண்வளத்தை பெருக்குவதற்கான வழிமுறைகளை செயல்படுத்தி வருகிறது. 
மண்வளம் என்பது பயிருக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்கள், நன்மை தரும் நுண்ணுயிரிகள், மண்புழுக்களை கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது.
உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், தீவிர பயிர் சாகுபடியில், அளவிற்கு அதிகமான ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டு, மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் மற்றும் மண்புழுக்கள் எண்ணிக்கையில் குறைக்கப்பட்டு மண் உயிரற்றதாகிறது.
இத்தகைய மண்ணில் விளையும் பயிர்களின் வளர்ச்சி குன்றிபூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. மண் மாசுபடுதல், மாறிவரும் பருவநிலைகளின் விளைவுகள் போன்ற பல்வேறு காரணங்களால், 1980 ஆம் ஆண்டில் 1.26 சதவீதமாக இருந்த மண்ணின் அங்ககச் சத்து 2013-14 -ஆம் ஆண்டில் 0.68 சதவிகிதமாக குறைந்துள்ளது. எனவே, விளைநிலங்களின் மண்வள நிலையை குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிந்து, அதற்கேற்ப பயிருக்கேற்ற சமச்சீர் உரங்களை இடுவதும், அதிக அளவில் தழை மற்றும் தொழு உரங்களை உபயோகிப்பதால் மட்டுமே இழந்த மண்வளத்தை மீட்கவும் பாதுகாக்கவும் முடியும்.
இதை கருத்தில் கொண்டே தமிழக அரசால் கடந்த 2011-2012 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பண்ணைக் குடும்பங்களுக்கும் ஒருங்கிணைந்த விவசாயிகள் கையேடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ், அனைத்து விவசாயிகளின் விளைநில மண் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு, ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் விவசாயிகள் தங்கள் பயிர் சாகுபடி திட்டத்தை மேற்கொள்ளவும், பயிர் வாரியான இடுபொருட்கள் மற்றும் ஊட்டச் சத்துக்களை இடவும், திட்டப் பயன்கள் குறித்து அறியவும் ஒருங்கிணைந்த விவசாயிகள் கையேடு மூலம் வழிவகை செய்யப்பட்டது. மேலும், போதிய அளவு உரமிடவும், பண்ணை மற்றும் பருவ வாரியான உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் குறித்த விவரங்களை பராமரிக்கவும், இந்த கையேடு விவசாயப் பெருமக்களுக்கு பேருதவியாக விளங்கியது.
தமிழகத்தின் இத்திட்டத்தை முன்னோடியாகக் கொண்டு பிரதமரால் கடந்த ஆண்டில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் 'மண்வள அட்டை' வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக மண்வள அட்டை வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மண்வள அட்டையின் மூலம் விவசாயிகள் தங்கள் நிலத்தின் மண்வளத்தை அறிந்துகொள்ளவும், மண்ணில் ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா என்பதை அறிந்து, சீர்திருத்த முறைகளை மேற்கொண்டு, அப்பிரச்னைகளை நிவர்த்தி செய்ய இயலும். 
ரசாயன உர உபயோகத்தை குறைத்து அதிக அளவில் தொழு , தழை உரம், பசுந்தாள் உரம் மற்றும் நுண்ணுயிரி உரங்களை உபயோகிக்கவும் மண்வள அட்டையின் மூலம் பரிந்துரை செய்யப்படுகிறது. இவ்வாறு தேவைக்கேற்ப அங்கக, ரசாயன உரங்களை உபயோகிக்க வழிவகை செய்வதால் சாகுபடி செலவு குறைக்கப்படுவதுடன், அளவுக்கு அதிகமாக ரசாயன உரங்கள் மண்ணில் இடப்படுவது தவிர்க்கப்பட்டு மண்வளம் பாதுகாக்கப்படுகிறது.
மண்வள அட்டை வழங்கும் திட்டம் தமிழகத்தில் 2015-2016 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ், புவியியல் விவரங்களுடன் கூடிய கட்ட அடிப்படையிலான, இறவை பரப்பில் 2.5 எக்டருக்கு ஒரு மாதிரி மற்றும் மானாவாரிப் பரப்பில் 10 எக்டருக்கு ஒரு மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, அந்த ஆய்வின் அடிப்படையில் பயிருக்கேற்ற உரப்பரிந்துரையுடன் கூடிய மண்வள அட்டை அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. உரச் செலவை குறைத்து, விளைநிலங்களின் மண்வளத்தை பேணுவதில் பெரும் பங்காற்றும் இந்த மண்வள அட்டையைப் பெற்று அதில் குறிப்பிட்டுள்ளவாறு உரங்களைப் பயன்படுத்தி, விவசாயம் செய்து பயனடையலாம்.
 

]]>
http://www.dinamani.com/agriculture/2017/sep/28/விவசாயத்துக்கு-உறுதுணை-புரியும்-மண்வளப்-பரிசோதனை-2780769.html
2776639 விவசாயம் பூச்சி, நோய் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு முறைகள் Thursday, September 21, 2017 12:53 AM +0530 கோவை: தமிழக விவசாயிகளுக்கு செப்டம்பர் மாதத்துக்கான பூச்சி, நோய் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு முறைகள் குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது பூச்சி, நோய்களின் தாக்கமானது பொருளாதார சேத நிலைக்குக் குறைவாகவே உள்ளது. எனவே, விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் உள்ள பூச்சி, நோய்களின் தாக்குதல் அறிகுறிகளை விளக்குப் பொறி, மஞ்சள் ஒட்டும்பொறி, இனக் கவர்ச்சிப் பொறிகளை வைத்துக் கண்காணிக்க வேண்டும்.
நெற்பயிர்
நாற்றங்காலில் (20 சென்டுக்கு) இலைப்பேன் தாக்குதலைக் கட்டுப்படுத்த பாஸ்போமிடான் 40 எஸ்.எல். 50 மில்லியை 20 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும். நெல்லில் இலைச்சுருட்டுப் புழு, தண்டுத் துளைப்பான் தாக்குதலைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கு வயல்களில் விளக்குப் பொறி (ஏக்கருக்கு 1வீதம்) வைக்க வேண்டும்.
தேவைப்பட்டால் வேப்பங் கொட்டைச் சாறு 5 சதம், ஹெக்டேருக்கு 25 கிலோ அல்லது குளோர்பைரிபாஸ் 1,250 மில்லி அல்லது கார்டாப் ஹெக்டேருக்கு 1,000 கிராம் வீதம் பயிர்களில் தெளிக்க வேண்டும்.
தற்பொழுது காலநிலை மேகமூட்டத்துடனும், அடிக்கடி மழை பெய்தும் வருவதால் பாக்டீரியா இலைக் கருகல், குலை நோய் தாக்கும் வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் இவ்விரு நோய்கள் தென்படுவதைக் கண்காணிக்க வேண்டும்.
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் நெற்பயிர்களில் இலைப்புள்ளி நோயின் தாக்குதல் தென்படுகிறது. எனவே, விவசாயிகள் குறிப்பாக இயந்திரம் மூலம் நடவு செய்யும் விவசாயிகள் நாற்றங்கால், நடவு நட்ட வயல்களில் மான்கோசோப் 1 லிட்டர் நீருக்கு 2 கிராம் தேவைக்கு ஏற்ப 2 அல்லது 3 முறை 10-15 நாள்கள் இடைவெளியில் நோயின் தாக்கத்துக்கு ஏற்ப தெளிக்கவும்.
கரும்பு
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி பகுதிகளில் கரும்பு பயிரில் நுனிக் குருத்துப் புழு, இடைக் கணு புழு சேதம் கண்டறியப்பட்டுள்ளன. இந்தச் சேதத்தைக் கட்டுப்படுத்த கீழ்க்கண்ட மேலாண்மை முறைகளைக் கையாள வேண்டும்.
1. நன்கு விளைந்த, நுனிக்குருத்துப் புழு, இடைக்கணு புழு தங்கிய கரும்பை முன்னுரிமை அடிப்படையில் அறுவடை செய்து அரவைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
2. தாக்கப்பட்ட கரும்புகளை உடனடியாக அறுவடை செய்ய வேண்டும். இதன் மூலம் பூச்சிகள் மேலும் பெருகுவதையும், மற்ற இளம் பயிர்களுக்குப் பரவுதலையும் கட்டுப்படுத்தலாம்.
3. நுனிக் குருத்துப் புழு, இடைக்கணு புழு பூச்சிகளைத் தொடர்ந்து கண்காணிக்க இனக்கவர்ச்சிப் பொறிகளை ஒரு ஹெக்டேருக்கு 20 வீதம் வைக்க வேண்டும்.
4. ட்ரைக்கோகிராமா கைலோனிஸ் 2.5 சி.சி. (ம) டிரைக்கோகிரமா ஜப்பானிக்கம் என்ற முட்டை ஒட்டுண்ணிகளை வாரம் ஒரு முறை வைப்பதால் துளைப்பான்களின் தாக்கம் குறையும்.
5. நீர் தேக்கம் இல்லாதவாறு நிலத்தைப் பராமரிக்க வேண்டும்.
6. காய்ந்த கரும்பு சோகைகளை நட்ட பின் 5, 7 மாதங்களில் நீக்க வேண்டும்.
7. விட்டம் கட்டுவதை செயல்படுத்துவதால் ஒட்டுமொத்த துளைப்பான் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம்.
பருத்தி


பெரம்பலூர், சேலம் மாவட்டங்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகளான இலைப்பேன், வெள்ளை ஈக்களின் பாதிப்பு தென்படுகிறது. எனவே, இவற்றைக் கண்காணிக்க விவசாயிகள் மஞ்சள் ஒட்டும் பொறி 12.5 எண்ணிக்கை (ஒரு ஹெக்டேருக்கு) வைக்கவும். மேலும், மீன் எண்ணெய் சோப் 2.5 கிலோவை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம் அல்லது இமிடாகுளோபிரிட் 100 மி.லி. நீர்மக் கரைசலை (ஹெக்டேருக்கு) பயன்படுத்தலாம்.
பருத்தியில் சிவப்பு காய்ப் புழுவின் தாக்குதல் தென்படுவதால் இனக்கவர்ச்சிப் பொறிகளை வைத்து அந்திப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். தேவைப்பட்டால் டிரையசோபாஸ் 2,500 மி.லி. (ஹெக்டேருக்கு) அல்லது குயினால்பாஸ் 2,000 மி.லி. அல்லது தயோடிகார்ப் 1,000 கிராம் தெளிக்கலாம்.
அசுவினி, இலைப்பேன்களைக் கட்டுப்படுத்த மித்தைல் டெமாட்டான் 25 இ.சி 500 மில்லி (அ) டைமித்தோயோட் 500 மில்லி (அ) புப்ரோபோசின் 25 எஸ்.சி 1,000 மில்லி என்ற அளவில் ஒரு ஹெக்டேருக்கு 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
நிலக்கடலை
இலைத் துளைப்பானின் நடமாட்டத்தைக் கண்டறிய விளக்குப் பொறி ஏக்கருக்கு ஒன்று வைத்து கண்காணிக்கவும். விளக்குப் பொறியில் அந்திப் பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பின் உடனடியாக டைகுளோட்வாஸ் 76 டபிள்யு.எஸ்.சி. 500 மில்லி அல்லது குளோர்பைர்பாஸ் 20 இ.சி. 500 மில்லி (ஏக்கருக்கு) அல்லது பாசலோன் 35 இ.சி. 300 மில்லி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
கோவை மாவட்டத்திலும், திண்டிவனம் பகுதியிலும் நிலக்கடலையில் வேர் அழுகல் நோய், இலைப்புள்ளி நோய்த் தாக்குதல் ஏற்படலாம். வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த கார்பன்டாசிம் பூசணக்கொல்லி 0.1 சதவீதம் என்ற அளவில் மண்ணில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
முன்பருவ இலைப்புள்ளி நோயை மேன்கோசெப் (அ) குளோரோதலோனில் 1,000 கிராம் (ஒரு ஹெக்டேருக்கு) தெளித்து கட்டுப்படுத்தலாம்.
பயறு
புதுக்கோட்டை, தேனி, நெல்லை மாவட்டங்களில் உளுந்து, பச்சைப் பயறில் வேர் அழுகல் நோய், மஞ்சள் தேமல் நோய் ஏற்படுகிறது. 
இதைக் கட்டுப்படுத்த கார்பன்டாசிம் மருந்தை லிட்டருக்கு 1 கிராம் என்ற அளவில் செடியைச் சுற்றி விட வேண்டும்.
மஞ்சள் நிற ஒட்டுப் பொறியை 15 என்ற அளவில் அமைக்க வேண்டும். மேலும், வேப்ப எண்ணை 2 மில்லி (அ) டைமீத்டோயேட் அல்லது மெத்தில் டெமட்டான் மருந்தை லிட்டருக்கு 2 மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
வாழை
கோவை, ஈரோடு, திருச்சி மாவட்டங்களில் வாழையில் இலைப்புள்ளி நோய்த் தாக்குதல் காணப்படுகிறது.
இதைக் கட்டுப்படுத்த கார்பன்டாசிம் 0.1 சதவீதம் அல்லது புராப்பாகோனேசோல் 0.1 சதவீதம் அல்லது மான்கோசெப் 0.25 சதவீதம் ஒட்டும் திரவமான டீப்பால் சேர்த்து 3 முறை 10-15 நாள்கள் இடைவெளியில், அறிகுறிகள் ஆரம்பித்ததில் இருந்து இலையின் அடிப்பகுதியில் தெளிக்க வேண்டும்.
பியூசேரியம் வாடல் நோயைக் கட்டுப்படுத்த கார்பன்டாசிம் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து, கரைசலில் 30 நிமிடம் கிழங்கை நனைத்து நடவு செய்யவும். மரத்தின் 3, 5, 7-ஆம் மாதத்தில் கார்பன்டாசிம் 2 விழுக்காடு (20 கிராம்) கரைசல் தயாரித்து 3 மி.லி.யை கிழங்கினுள் செலுத்தவும். 
நோய் தாக்கப்பட்ட மரம், அதைச் சுற்றியுள்ள மற்ற வாழை மரங்களுக்கும் கார்பன்டாசிம் (1 கிராம்) தயாரித்து மரத்தைச் சுற்றி 2, 4, 6-ஆம் மாதத்தில் ஊற்ற வேண்டும்.
வெங்காயம்
வெங்காயத்தில் இலைச் சரும கொப்புளங்கள் ஏற்பட்டால் இதைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீரில் மேன்கோசெப் 2 கிராம் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2.5 கிராம் என்ற விகிதத்தில் தெளிக்கவும். 
அடித்தண்டு அழுகல் நோயைக் கட்டுப்படுத்த ட்ரைக்கோடெர்மா விரிடி என்ற பூஞ்சாணக் கொல்லியை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவிலும், ஹெக்டேருக்கு 2.5 கிலோ என்ற வீதமும் மண்ணில் இட வேண்டும்.
தென்னை
பொள்ளாச்சி பகுதியில் தென்னையில் வெள்ளை ஈக்களின் பாதிப்பு பரவலாகத் தென்படுகிறது.
இரைவிழுங்கிப் பூச்சிகள், வெள்ளை ஈக்களுடன் சேர்ந்து காணப்படுகிறது. தேவை ஏற்பட்டால் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பூச்சியியல் துறையை அணுகி இரைவிழுங்கிப் பூச்சிகளைப் பெற்று ஒரு முறை பரவலாக தோப்புகளில் விடுவதால் அவை பெருகி வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தும்.
தோட்டக்கலைப் பயிர்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் கட்டுப்பாடு
சாறு உறிஞ்சும் பூச்சிகளான தத்துப் பூச்சி, இலைப்பேன், வெள்ளை ஈ, சுருள் வெள்ளை ஈ, மாவுப் பூச்சியின் சேதம் அதிகமாக வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் மஞ்சள் ஒட்டும் பொறியை ஏக்கருக்கு 5 வீதம் வைத்து நடமாட்டத்தைக் கண்டறியலாம்.
தேவைப்படின் வேப்பங்கொட்டைச்சாறு 5 சதம் அல்லது மீன் எண்ணெய் சோப் 1 கிலோ 40 லிட்டர் தண்ணீருக்கு என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தவும். வெள்ளை ஈயின் நடமாட்டத்தை மஞ்சள் ஒட்டும் பொறி (ஹெக்டேருக்கு 12) அமைத்து கண்காணிக்கவும். தேவைப்படின் மித்தைல் டெமட்டான் அல்லது டைமித்தோயேட் 2 மில்லியை 1 லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவும்.
காய்கறி
காய்கறி பயிர்களில் காய்ப் புழுக்களைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறிகள் (ஹெக்டேருக்கு 12) அமைத்து அந்திப்பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்டறியவும். தாக்கப்பட்ட காய்கள், வளர்ந்த புழுக்களைக் கைகளால் எடுத்து அப்புறப்படுத்தவும். தேவைப்பட்டால் பேசில்லஸ் துரிஞ்சியசிஸ் 2 கிராமை ஒரு லிட்டரில் கலந்து தெளிக்கவும். இது குறித்த மேலும் தகவல்களுக்கு பல்கலைக்கழகத்தின் பயிர்ப் பாதுகாப்பு மையம் அல்லது வேளாண் பூச்சியியல் துறை அல்லது பயிர் நோயியல் துறையை கீழ்க்கண்ட எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம். 0422-6611237, 0422-6611414, 0422-661226.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/21/w600X390/vegetable.PNG http://www.dinamani.com/agriculture/2017/sep/21/பூச்சி-நோய்-கண்காணிப்பு-கட்டுப்பாட்டு-முறைகள்-2776639.html
2776638 விவசாயம் நிலக்கடலை மகசூல் அதிகரிக்க... Thursday, September 21, 2017 12:51 AM +0530 கோபி: நிலக்கடலையில் அமோக மகசூல் பெற ஜிப்சம் இட வேண்டும் என கோபி வேளாண்மை அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி கூறியதாவது:
நிலக்கடலை உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இது, தாவர எண்ணெய் உற்பத்தியில் முக்கிய இடம் பெறுவதோடு, நல்ல தரம் வாய்ந்த புரதம், தேவையான அளவு சத்துகள் அடங்கிய உணவுப் பொருளாகவும் விளங்குகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த நிலக்கடலைப் பயிரை சாகுபடி செய்யும்போது அதன் மகசூலை அதிகரிப்பதற்கு ஜிப்சம் உரம் மிகவும் பயன்படுகிறது. ஜிப்சம் உரத்தின் ரசாயனப் பெயர் கால்சியம் சல்பேடி எனப்படுகிறது. இதில், கால்சியம் (சுண்ணாம்புச் சத்து) 23 சதவீதம் வரையிலும், சல்பர் (கந்தகச்சத்து) 18 சதவீதம் வரையிலும் உள்ளது. 
நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய், புரதப் பயிர்கள் அனைத்துக்கும் ஜிப்சம் அவசியம் இட வேண்டும். ஏனெனில், இந்தப் பயிர்களுக்கு மிகவும் அவசியமான கந்தகச் சத்து ஜிப்சத்தில்தான் அதிக அளவிலும், குறைந்த விலையிலும் கிடைக்கிறது.
தமிழகத்தில் அனைத்துப் பகுதி மண் வகைகளிலும் கந்தகச்சத்து குறைபாடு காணப்படுகிறது.
இதன் காரணமாக விளைச்சல் குறைவதுடன், எண்ணெயின் அளவும் குறைகிறது. பயிர் வளர்ச்சி குன்றி வேர் முடிச்சுகள் பாதிப்படைவதால் தழைச்சத்தை நிலை நிறுத்துவதும் பாதிக்கப்படுகிறது.
ஜிப்சம் இடுவதால் இந்தக் குறைபாடுகள் நீக்கப்படுகின்றன. மேலும், ஜிப்சம் இடுவதால் மண் இறுக்கம் குறைந்து நிலக்கடலையின் பருமன் ஒரே சீராகவும், திரட்சியாகவும் ஆகிறது.
நிலக்கடலைப் பருப்பு விதைக்கும்போது, ஏக்கருக்கு 80 கிலோவும், விதைத்த 45-ஆவது நாளில் களை வெட்டி மண் அணைக்கும்போது, ஏக்கருக்கு 80 கிலோவும் ஆக இரண்டு முறை மொத்தம் 160 கிலோ ஜிப்சம் இட வேண்டும். நிலக்கடலை மட்டுமல்லாது களர் மண் நிலங்களின் பயிர் மகசூலைக் கூட்டவும் ஜிப்சம் அற்புதமாகச் செயல்படுகிறது.
களி மண் அடர் தன்மையைக் கூட இலகுவாக்கி வேர் வளர்ச்சிக்கு ஜிப்சம் துணை புரிகிறது. மண்ணின் நீர்ப்பிடிப்புத் தன்மையை அதிகமாக்குகிறது. மேலும், நெல், கரும்பு உள்ளிட்ட பல்வேறு பயிர் சாகுபடியின் போதும் ஜிப்சம் இட்டு நிலத்தை மேம்படுத்தலாம் என தெரிவித்தார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/21/w600X390/groundnet.PNG http://www.dinamani.com/agriculture/2017/sep/21/நிலக்கடலை-மகசூல்-அதிகரிக்க-2776638.html
2772663 விவசாயம் ஏழைகளின் உணவு குதிரைவாலி...! Thursday, September 14, 2017 12:45 AM +0530 அரக்கோணம்: வறட்சியைத் தாங்கி வளரும் தன்மையுடைய பயிரான குதிரைவாலி, தண்ணீர் தேங்கினாலும் தாக்குப்பிடிக்கக் கூடியது. இது மானாவாரியில் அதிகளவு பயிரிடப்படுகிறது. 40 சதவீத புரதசத்து கொண்டது. ஏழை மக்கள் பெரும்பாலானோரின் உணவாக குதிரைவாலி தானியம் விளங்குகிறது. இதுபோக மது தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. 
இந்தியாவில் தமிழ்நாடு, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் பிகார் போன்ற மாநிலங்களில் அதிகளவு பயிரிடப்படுகிறது. 
குதிரைவாலி வெப்பம் மற்றும் வெப்பம் சார்ந்த காலநிலைகளில் நன்கு வளரும். மற்ற பயிர்களைக் காட்டிலும் மாறுபட்ட சீதோஷ்ண நிலைகளையும் தாங்கி வளரக்கூடியது. இது தண்ணீர் தேங்கிய ஆற்றுப் படுகை, களி மண்நிலங்களில் நன்கு வளரும். கற்கள் நிறைந்த மண் மற்றும் குறைந்த சத்துக்கள் உடைய மண் சாகுபடிக்கு குதிரைவாலி ஏற்றதல்ல.
பயிரிடும் முறை: குதிரைவாலியை பயிரிட விரும்புவோர் முதலில் நிலத்தை அதற்கேற்றாற்போல் தயார்படுத்துவது மிக முக்கியம். இரண்டு முறை நிலத்தை கலப்பை கொண்டு உழுது சமன்படுத்தி விதைப்படுக்கையை தயார்படுத்த வேண்டும். 
பருவமழை தொடங்கியவுடன் 15 நாள்களுக்கு விதைக்க வேண்டும், விதைகளை தெளித்தல் அல்லது பார்பிடித்து 3-4 செ.மீ. துளையிட்டு விதைக்கலாம். ஒரு ஹெக்டேருக்கு 8 முதல் 10 கிலோ விதை தேவைப்படும். வரிசைக்கு வரிசை இடைவெளியாக 25 செ.மீ. விடலாம்.
ஒரு ஹெக்டேருக்கு 5 முதல் 10 டன்கள் தொழு உரம் இடலாம். தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை கிலோ ஒரு ஹெக்டேருக்கு 40:30:50 என்ற விகிதத்தில் இடவேண்டும். விதை விதைத்த பிறகு உரம் முழுவதையும் போட வேண்டும். நீர்பாசனப் பகுதிகளில் பாதியளவு தழைச்சத்தை விதைத்த 25 முதல் 30 நாள்களுக்கு பிறகு இடலாம். 
பொதுவாக, குதிரைவாலிக்கு நீர்ப்பாசனம் தேவையில்லை வறண்ட சூழ்நிலை நிலவினால் ஒருமுறை நீர்ப்பாசனம் பூங்கொத்து வரும் தருனத்தில் அளிக்க வேண்டும். அதிகப்படியான மழை பொழியும் காலங்களில் வடிகால் வசதி ஏற்படுத்தி நீரை வெளியேற்ற வேண்டும்.
வயலில் விதைத்த 25 முதல் 30 நாள்கள் வரை களை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் இரு முறை களை எடுத்தல் போதுமானது. கைகொத்து அல்லது சக்கர கொத்தி மூலம் களை எடுக்கலாம். பல்வேறு நோய்கள் குதிரைவாலியைத் தாக்கக்கூடும். அவற்றில் பூஞ்சாண காளாண் நோய், கரிப்பூட்டை நோய், துருநோய் ஆகியன முக்கியமானவை.
பூஞ்சான் காளான் நோயால் பாதிக்கப்பட்ட செடியைப் பிடுங்கி எறிவதன் முலம் கட்டுப்படுத்தலாம். விதைகளை ஆரோக்கியமான செடிகளில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். கரிப்பூட்டை நோயும் ஒரு வகை பூஞ்சான் காளான் நோயாகும். இதை விதை நேர்த்தி மூலம் அக்ரோசன் 2.5 கிராம் ஒரு கிலோ விதைக்கு என்ற விகிதத்தில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். சுடு தண்ணீரில் நனைத்தும் (55 செல்சியஸ் 7 முதல் 12 நிமிடங்களில்) விதைக்கலாம். துரு நோயும் பூஞ்சான் காளான் நோயே ஆகும். டைத்தேன் எம்-45, 2 கிலோவை 1000 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.
குதிரைவாலியை பொருத்தவரை பூச்சி கட்டுப்பாடும் அவசியம். தண்டு துளைப்பான் பூச்சியை திமெட் குருணை 15 கிலோ ஒரு ஹெக்டேருக்கு என்ற விகிதத்தில் இடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம். இதில், அறுவடை மற்றும் கதிரடித்தல் பொறுமையாக செய்தல் முக்கியம். கதிர்களை காளைகளின் கால்களில் போட்டு நசுக்கி தானியங்களைப் பிரித்தெடுக்கலாம். 
மகசூல், சராசரியாக ஒரு ஹெக்
டேருக்கு 400 முதல் 600 கிலோ தானியமும், 1,200 கிலோ வைக்கோலும் கிடைக்கும். மேம்படுத்தப்பட்ட சாகுபடி முறைகளால் 10 முதல் 12 குவிண்டால் வரை கூடுதல் தானிய மகசூல் பெறலாம்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/14/w600X390/kuthiravali.jpg http://www.dinamani.com/agriculture/2017/sep/14/ஏழைகளின்-உணவு-குதிரைவாலி-2772663.html
2772662 விவசாயம் சூரியகாந்தியில் புகையிலைப் புழு கட்டுப்பாடு! Thursday, September 14, 2017 12:45 AM +0530 திருநெல்வேலி: சூரியகாந்தி பயிரில் தலைத்துளைப்பான், புகையிலைப் புழு கட்டுப்பாடு முறைகளைப் பின்பற்றி மகசூல் இழப்பைத் தடுத்து அதிக லாபம் பெறலாம் என, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
தலைத் துளைப்பான்: பயிரின் தலைப் பகுதியில் மட்டும் துளையிடும் புழு என்பதால் தலைத் துளைப்பான் எனப்படுகிறது.
அறிகுறி: பயிரில் தலைப் பகுதியின் உள்ளே துளைகள் காணப்படும். நன்றாக வளர்ந்த விதைகளின் மீது புழுக்கள் உண்டதற்கான அறிகுறி காணப்படும். பூஞ்சான் உருவாகி, தலைப்பகுதி அழுகத் தொடங்கும். வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் புழுக்கள் இலைகளை அதிகமாக உண்ண ஆரம்பித்து பின்னர் தலைப் பகுதியைத் துளைக்கும்.
பூச்சி விவரம்: முட்டைகள் உருளை வடிவத்தில், பால் வெள்ளை நிறத்தில் காணப்படும். தனித்தனியே முட்டை இடும். புழு பச்சை நிறத்திலிருந்து பழுப்பு நிறமாக தோற்றமளிக்கும். உடலின் மீது அடர் பழுப்பு சாம்பல் நிற வரிகளும், அடர், மங்கிய நிற வளையங்களும் காணப்படும். கூட்டுப்புழு பழுப்பு நிறத்தில் மண், இலை, காய், பயிர், குப்பைகளில் காணப்படும். பூச்சியின் இறக்கைகள் இளம் புகை வெள்ளை நிறத்துடன், அகலமான கருப்பு நிற வெளி விளிம்புடன் காணப்படும். இளம் பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில், தடித்து காணப்படும். முன் இறக்கைகள் ஆலிவ் பச்சை நிறத்திலிருந்து இளம் பழுப்பு நிறத்துடன், அடர் பழுப்பு நிற வட்ட வடிவ புள்ளி நடுவிலும் காணப்படும்.
கட்டுப்பாடு: சூரியகாந்தியில் ஊடு பயிராக பச்சைப் பயிறு, உளுந்து, கடலை, சோயாபீன் பயிரிடுவதன் மூலம் தலைத்துளைப்பானைக் கட்டுப்படுத்தலாம். 3-க்கு 4 வரிசை என்ற அளவில் மக்காச்சோளத்தை பயிரைச் சுற்றி விதைக்கலாம். பொறிப் பயிர்களாக ஏக்கருக்கு துலக்கமல்லி 50 செடிகள் என்ற அளவில் விதைக்கலாம். ஏக்கருக்கு 4 இனக் கவர்ச்சிப் பொறிகள் வைத்தும் கட்டுப்படுத்தலாம். விளக்குப்பொறி வைத்தும் கட்டுப்படுத்தலாம்.
இரை விழுங்கிகளான காக்சி நெல்லி டிஸ், கிரைசோபெர்லா கார்னியா 1 புழு என்ற அளவில் வயலில் வெளியிடலாம்.
ஒட்டுண்ணிகளான டிரைக்கோகிராமா பிரக்கான் வகைகள், கேம்போலெட்டிஸ் வகைகளை வயலில் வெளியிடலாம். தகுந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை மாலை நேரங்களில் தெளிக்கலாம். 5 சதவீத வேப்பெண்ணெய் அல்லது 5 சதவீத வேப்பங்கொட்டைச் சாற்றை முட்டை இடும் முன் தெளிக்க வேண்டும்.
புகையிலைப் புழு அறிகுறி: இவ்வகை பூச்சிகள் இளம் இலைகள், கிளைகள், இதழ்களை உண்ணும். பின்னர் வயல் முழுவதும் பரவி, இலைகள் உதிரும். வளர்ந்த விதைகளை புழுக்கள் உண்ணும்.
பூச்சியின் விவரம்: இதன் முட்டை கூட்டமாக காணப்படும். தங்க நிறம் கலந்த பழுப்பு நிறத்தில் தோற்றமளிக்கும். புழு இளம் பச்சை நிறத்துடன் அடர் குறிகளுடன் காணப்படும். இளம் நிலையில் தீவிரமாக உண்ணும்.
பூச்சியின் முன் இறக்கைகள்: பழுப்பு நிறத்தில், அலை போன்ற வெள்ளை நிற குறிகளுடன் காணப்படும். பின் இறக்கைகள் வெள்ளை நிறத்தில், விளிம்புகளில் பழுப்பு நிற திட்டுக்களுடன் காணப்படும்
கட்டுப்பாடு: புகையிலைப் புழு தாக்கிய முட்டைகளை சேகரித்து, அழிக்க வேண்டும். பரிந்துரைக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றை மாலை 4 மணிக்குப் பிறகு தெளிக்க வேண்டும். ஏனெனில், அப்போதுதான் தேனீக்கள் வரவு குறைவாக இருக்கும். பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்க மருந்து தெளித்த நாளில் பூச்சிக்கொல்லியை தெளிக்க வேண்டும். இத்தகைய தொழில்நுட்பமுறைகளைப் பின்பற்றி மகசூல் இழப்பைத் தடுக்கலாம்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/14/w600X390/sunflower.jpg http://www.dinamani.com/agriculture/2017/sep/14/சூரியகாந்தியில்-புகையிலைப்-புழு-கட்டுப்பாடு-2772662.html
2772661 விவசாயம் மருத்துவக் குணம் நிறைந்த மணத்தக்காளி! Thursday, September 14, 2017 12:44 AM +0530 திருநெல்வேலி: தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்வதில் ஆர்வமுடைய விவசாயிகள் மருத்துவக் குணம் நிறைந்த மணத்தக்காளி சாகுபடி செய்து நல்ல வருவாய் ஈட்டலாம் என, தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.
பயன்கள்: மணத்தக்காளி வாத நோய், வீக்கம், இருமல், ஆஸ்துமா, மார்புச்சளி நோய், காயம், அல்சர், வயிறுப் பொருமல், வயிறு மந்தம், ஈரல் வீக்கம், காதுவலி, கண் மருத்துவம், வாந்தி, இதய நோய், தொழு நோய், தோல் நோய்கள், காய்ச்சல், மண்ணீரல் வீக்கம், நச்சுத் தடை மருந்து, ஒவ்வாமை, செரிமானம், குடலிளக்கி, புத்துணர்ச்சி, மனதை அமைதிப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும், சத்து மருந்தாகவும் முழுத் தாவரமும் பயன்படுகிறது.
மண், காலநிலை: வெப்ப, மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் 2,000 மீ குத்துயரத்தில் மணத்தக்காளி நன்கு வளரும். அங்ககத் தன்மை அதிகமுள்ள மண் ஏற்றது. வறண்ட, கற்கள் நிறைந்த, மணற்பாங்கான அல்லது ஆழமான மண்ணில் நன்கு வளரும். ஈரப்பத மணலில் களையாக வளரும். வெப்ப, மிதவெப்ப மண்டல வேளாண் காலநிலை மண்டலத்தில் சாகுபடி செய்யலாம்.
நாற்றங்கால், நடவு: விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. நாற்றுகள் நாற்றங்காலிலிருந்து 30 முதல் 45 நாளில் பயிர் 8 முதல் 10 செமீ உயரம் அடைந்தவுடன் விளைநிலங்களில் நடவு செய்யப்படுகிறது. மழைக் காலத்தில் வரப்புகளிலும், வெயில் காலத்தில் வாய்க்காலிலும் நடவு செய்யப்படுகிறது. 30-க்கு 90 செமீ இடைவெளியில் பயிரின் படரும் தன்மையைப் பொறுத்து நடவேண்டும். வெயில் காலங்களில் நட்ட பயிருக்கு தாற்காலிக நிழல் 4 நாளுக்கு அளிக்க வேண்டும்.
உர மேலாண்மை: நிலத்தை தயாரிக்கும்போது தொழுவுரம் ஹெக்டேருக்கு 20 முதல் 25 டன் அளிக்க வேண்டும். தழை, மணி, சாம்பல் சத்து ஹெக்டேருக்கு முறையே 75: 40: 40 என்ற விகிதத்தில் அளிக்க வேண்டும். சாம்பல் சத்தை அடியுரமாகவும், தழை, மணிச்சத்தை 2 அல்லது 3 பிரிவுகளாகவும் அளிக்க வேண்டும்.
நீர் மேலாண்மை: நாற்றங்கால், பயிருக்கு வார இடைவெளியில் பாசனம் செய்ய வேண்டும். பயிரில் பூ அரும்பும் வரை பாசனம் செய்ய வேண்டும்.
ஊடுசாகுபடி: களை எடுத்த பின், மேலுரம் அளித்த பின் பயிருக்கு மண் அணைக்க வேண்டும். வெயில் காலங்களில் 3 முதல் 4 நாளுக்கு ஒருமுறையும், காய்ப் பருவத்தில் ஒருநாள் விட்டு ஒருநாளும் பாசனம் செய்ய வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு: இப்பயிரைத் தாக்கும் தண்டுத் துளைப்பான், மாவுப்பூச்சி, இலை பிணைக்கும் புழு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த மிதமான பூச்சிக்கொல்லி தெளித்தால் போதும். வேர் முடிச்சுப் புழு, வாடல் நோய் ஆகியவற்றை நிலத்தை சுத்தப்படுத்துதல், பயிர் சுழற்சி, பயிர் எச்சங்களை எரிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
அறுவடை, மகசூல்: மண், காலநிலையைப் பொறுத்து மணத்தக்காளி 4 முதல் 6 மாதங்களில் அறுவடைக்குத் தயாராகும். மணத்தக்காளி செடியைச் சேகரித்து நிழலில் உலர்த்த வேண்டும்.
மகசூல்: ஹெக்டேருக்கு 12 முதல் 20 டன் மூலிகை கிடைக்கும்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/14/w600X390/leaf.jpg http://www.dinamani.com/agriculture/2017/sep/14/மருத்துவக்-குணம்-நிறைந்த-மணத்தக்காளி-2772661.html
2768478 விவசாயம் நிலக்கடலையில் சிவப்பு கம்பளிப்புழு Thursday, September 7, 2017 12:50 AM +0530 சேலம்: நிலக் கடலைப் பயிரில் சிவப்பு கம்பளிப்புழுவைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை வேளாண்துறை தெரிவித்துள்ளது.
சிவப்பு கம்பளிப் பூச்சியின் புழுக்கள் நிலக்கடலை பயிரைக் குறிப்பாக மானாவாரிப் பயிரைத் தாக்கி அதிக சேதம் விளைவிக்கக் கூடியவை. இது ஒரு சில பருவங்களில் மாத்திரம் மிக அதிக அளவில் தோன்றக் கூடிய 'எபிடமிக் ' வகைப்பூச்சி. காலநிலையைப் பொருத்து பூச்சிகள் ஒரே சமயத்தில் ஏராளமான எண்ணிக்கையில் தோன்றும். தமிழகத்தில் கோவை, கடலூர், விழுப்புரம் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஜூன் - ஜூலை மாதங்களிலும், மதுரை, ராமநாபுரம் மாவட்டங்களில் ஆகஸ்டு - செப்டம்பர் மாதங்களிலும் திடீரென்று பெருவாரியாக தோன்றும். 
இவை ஆயிரக்கணக்கில் அலை அலையாக அடுத்துள்ள வயல்களுக்கு செல்லும். புழுக்கள் கடித்து சேதப்படுத்திய பயிர், கால்நடைகள் மேய்ந்ததை போன்று தோன்றத்தை அளிக்கும். தாக்கப்பட்ட பயிரிலிருந்து பெரும்பாலும் மகசூல் பாதிக்கும். இது நிலக்கடலை தவிர கொண்டைக்கடலை, துவரை, சோளம், கம்பு, பருத்தி , கேழ்வரகு மற்றும் ஆமணக்கு பயிர்களையும் தாக்கக்கூடியது.
பூச்சிகளின் வாழ்க்கை சரிதம்: நல்ல கோடை மழைக்கு இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குப் பின்னர் மாலை வேளைகளில் மண்ணுக்கு அடியிலுள்ள மண் கூடுகளிலிருந்து அந்து பூச்சிகள் வெளிவரும். வெளிவந்த உடனேயே அவை இனச்சேர்க்கை செய்து முட்டைகள் இட ஆரம்பிக்கும். ஒரு பெண் அந்து பூச்சி 2 - 6 நாள்களில் 600 முதல் 700 முட்டைகளை குவியல்களாக நிலக்கடலை இலைகளின் அடிப்பரப்பில் இடும். சில வேளைகளில் வேறு பயிர்களின் இலைகள் , மண்கட்டிகள், காய்ந்துபோன குச்சிகள் போன்றவற்றிலும் முட்டையிடக்கூடும். முட்டைகள் மஞ்சள் நிறமாகவும், பளபளப்பாகவும் தென்படும். முட்டைகளிலிருந்து 2 - 3 நாள்களில் இளம்புழுக்கள் வெளிவரும். அவை கூட்டம் கூட்டமாக இலைகளின் அடிப்பரப்பில் இருந்து கொண்டு , ஒரிரு நாள்கள் வரையில் பச்சையத்தைச் சுரண்டி உண்ணும். அவை சாம்பல் நிறமாகவும், ரோமம் கலந்தும் தென்படும் . சுமார் 40 முதல் 50 நாள்களில் அவை முழு வளர்ச்சி அடையும். வளர்ந்த புழுக்களைவிட இளம் புழுக்கள் அதிக சுறு சுறுப்புடன் இயங்குவதோடு அதிக சேதத்தையும் விளைவிக்கக் கூடியவை. நன்கு வளர்ந்த புழுக்கள் 5.0 செ.மீ நீளத்திலும், சிகப்பு கலந்த பழுப்பு நிறத்திலும், உடல் முழுவதும் சிகப்பு கலந்த பழுப்பு நிற ரோமங்களைக் கொண்டு காணப்படும். ஓரளவு மழைபெய்து, மண் நனைந்து மிருதுவானவுடன் வளர்ந்த புழுக்கள் மண்ணைக் குடைந்து சென்று 10 முதல் 20 செ.மீ. ஆழத்தில் மண் கூட்டினுள் கூண்டு புழுவாக மாறும் அந்த சமயத்தில் மழை இல்லாவிட்டால் பெரும்பாலான புழுக்கள் மண்ணுக்குள் செல்ல முடியாதபடி மடிந்துவிடும். கூண்டுப்புழு பருவம் 10 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கும். அடுத்த வருடம் மறுபடியும் கோடைமழைக்குப் பின்னர் அவை அந்துப் பூச்சிகளாக வெளிவரும் . அந்துப் பூச்சிகள் நடுத்தர அளவுடன் வெண்மை நிறத்திலும் முன் இறக்கைகளின் மேல் விளிம்பை ஒட்டி மஞ்சள் நிறக்க கோடுடனும் பழுப்பு நிற கீற்றுக்களுடனும் பின் இறக்கைகள் வெண்மை நிறத்தில் கருப்புநிற கோடுடனும் பழுப்பு நிற கீற்றுகளுடனும் பின் இறக்கைகள் வெண்மை நிறத்தில் கருப்பு நிறப்புள்ளிகளுடனும் தென்படும். தலையிலும் ஒரு மஞ்சள் நிறப்பட்டை காணப்படும். 
தாக்குதல் அறிகுறிகள்: இளம்புழுக்கள் பச்சையத்தை சுரண்டி தின்கின்றன. வளர்ந்த புழுக்கள் இலைகளைச் சாப்பிட்டு சேதம் விளைவிக்கிறது. செடிகளின் அடித்தண்டு, காம்புகள் , நடு நரம்புகள் தவிர மற்ற எல்லா இலைபாகங்களையும் கடித்து உண்டு விடும். இவைகள் சேதமுறுவதால் ஒளிச்சேர்க்கை தடைபட்டு காய்ப்பிடிப்பு குறைந்துவிடும். சில சமயங்களில் பயிரில் எந்த மகசூலும் கிடைக்காது. 100 மீட்டருக்கு 8 முட்டை குவியல்கள் தென்படுதல் பொருளாதார சேதநிலை ஆகும். 
தடுப்புமுறை: கோடை உழவு செய்து கூட்டுப்புழுக்களை அழித்தல். முட்டை குவியல்களைச் சேகரித்து அழிக்க வேண்டும். விளக்குப் பொறி மற்றும் சொக்கப்பனை வைத்து அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். 
நிலக்கடலைப் பயிரில் சோயா மொச்சை அல்லது துவரை அல்லது தட்டைப்பயறு ஊடு பயிராக பயிரிடலாம். இவற்றில் இடும் முட்டைகளை எளிதில் சேகரித்து அழிக்கலாம். வெயில் நேரங்களில் புழுக்கள் கூட்டம் கூட்டமாக துவரை பயிரின் மேல் வந்து இருக்கும் அவற்றை எளிதில் சேகரித்து அழிக்கலாம். 
உயிரியல் முறைகள்: நியூக்ளியார் பாலிஹெட்ரோசிஸ் நச்சுயிரி (என்.பி.வி.) இளநிலை புழுக்களை நன்கு கட்டுப்படுத்தக் கூடியவை . இதற்கு ஒரு ஏக்கருக்கு 100 புழு சமன். அதாவது நச்சுயிரிகள் தாக்கி மடிந்து போன 100 புழுக்களிலிருந்து கிடைக்கக் கூடிய நச்சுயிரி துகிள்களை போதுமான நீருடன் கலந்து பயிரின்மேல் நன்கு தெளிக்க வேண்டும். ஒரு புழு சமன் என்பது 6 109 நச்சுயிரி துகிள்களுக்கு சமமானது. 
விஷத் தெளிப்பு :
1. ரோமம் முளைக்காத இளநிலைப் புழுக்களை கட்டுப்படுத்த ஏக்கருக்கு பாசலோன் 4 சத தூள் அல்லது குயினல்பாஸ் 1.5 சத தூள் அல்லது கார்பரில் 10 சத தூள் 10 கிலோவினை 1 ஏக்கருக்கு தூவ வேண்டும். 
2. சற்று வளர்ந்த புழுக்களை கட்டுப்படுத்த ஏக்கருக்கு டைகுளோர்வாஸ் 250 மி.லி அல்லது குயினால்பாஸ் 30 இசி 300 மி.லி அல்லது குளோரிபைரிபாஸ் 20 இசி 500 மி.லி அல்லது பாசலோன் 45 இசி 300 மி.லியை 200 லிட்டர் தண்ணீரில் ஒட்டும் திரவம் சேர்த்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 
3.வளர்ந்த புழுக்களைக் கட்டுப்படுத்த டைகுளோர்வாஸ் ஏக்கருக்கு 300 மி.லி யினை தெளித்துக் கட்டுப்படுத்தலாம். இப்பூச்சி ஒரே சமயத்தில் அதிக பரப்பளவில் தோன்றக்கூடியது. ஆதலால் எல்லா விவசாயிகளும் ஒன்று சேர்ந்து கூட்டாக ஒருங்கினைந்த கட்டுப்பாட்டு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என மகுடஞ்சாவடி வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.செல்லதுரை தெரிவித்
துள்ளார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/7/w600X390/plant.jpg http://www.dinamani.com/agriculture/2017/sep/07/நிலக்கடலையில்-சிவப்பு-கம்பளிப்புழு-2768478.html
2768477 விவசாயம் பார்த்தீனிய செடிகளை ஒழிக்க ஒருங்கிணைந்த களைக் கட்டுப்பாடு! Thursday, September 7, 2017 12:49 AM +0530 தாராபுரம்: பார்த்தீனிய செடிகளை ஒருங்கிணைந்த களைக் கட்டுப்பாடு மூலம் அகற்றுவது குறித்து வேளாண் துறை விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து தாராபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.எம்.ஞானசேகரன் கூறியதாவது:
பயிர் சாகுபடி இல்லாத சூழ்நிலையில் வயல்களில் பார்த்தீனியம் செடிகள் அதிகமாக காணப்படுகிறது. அதைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியம்.
பார்த்தீனிய செடிகளின் இயல்புகள் 
ஒரு செடி 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் விதைகள் உற்பத்தி செய்து வேகமாகப் பரவும் தன்மையுடையது. விதைகளுக்கு உறக்க காலம் கிடையாது. விழுந்தவுடன் முளைக்கும். விதைகள் காற்று, நீர் மூலம் அனைத்து இடங்களுக்கும் எளிதாகப் பரவும். இந்தச் செடி அதிக வறட்சி, மழையைத் தாங்கி அனைத்து மண்களிலும் வளரும்.
பாதிப்புகள்
கால்நடைகள், மனிதர்களின் உடல்களில் இந்தச் செடி படும்போது சர்ம நோய்கள் ஏற்படும். இதனை உண்டால் கால்நடைகளுக்குப் பாதிப்பும், மனிதர்களுக்கு இப்பூக்களின் மகரந்தம் சுவாசக் கோளாறையும் ஏற்படுத்தும். 
கட்டுப்படுத்தும் முறைகள்
வளர்ந்த செடிகள் அதிகம் உள்ள இடங்களில் கையுறைகளைப் பயன்படுத்தி பிடுங்கி அழுத்திட வேண்டும். சாகுபடி நிலங்களில் செண்டுசாமந்தி(மேரிகோல்டு) பயிரிட்டு கட்டுப்படுத்தலாம். தரிசுநிலம், சாலையோரங்களில் இதைக் கட்டுப்படுத்த 1 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் சாதாரண உப்பைக் கரைத்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
சாகுபடி நிலங்களில் பயிருக்கு ஏற்ப அட்ரசின், கிளைபோசேட், மெட்ரிபூசன் போன்ற களைக் கொள்ளிகளை வேளாண் துறை அறிவுரையின்படி பயன்படுத்தலாம்.
சைகோகிராமா மைகாலரேட் எனும் உயிரியல் காரணி பார்த்தீனியத்தின் இலைகளைச் சாப்பிடுவதன் மூலம் இதன் பரவலைக் கட்டுப்படுத்துகிறது.
பார்த்தீனியத்தைக் கொண்டு மண்புழு உரம் தயாரிக்கும் முறை
பூ பூக்கும் முன் பார்த்தீனிய செடிகளைச் சேகரித்து அவற்றை 5 முதல் 10 செ.மீ. நீளவாட்டில் சிறியதாக நறுக்கி 1 மீ. சுற்றளவில் 10 செ.மீ. உயரத்துக்கு கீழே இருந்து அவற்றை அடுக்க வேண்டும். 
இவற்றின் மேல் 10 சதவீதம் மாட்டுச் சாணத்தை கரைச்சலாக கொண்டு சமமாகத் தெளிக்க வேண்டும். 
இவற்றை 10 நாள்கள் மக்குவதற்காக வைக்கவேண்டும். 5 நாள்கள் கழித்து 250 முதல் 300 மண்புழுக்களை இந்த மக்கிய உரத்தில் விடவேண்டும் என்றார்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/7/w600X390/plant1.jpg http://www.dinamani.com/agriculture/2017/sep/07/பார்த்தீனிய-செடிகளை-ஒழிக்க-ஒருங்கிணைந்த-களைக்-கட்டுப்பாடு-2768477.html
2764482 விவசாயம் லாபம் தரும்: சாமந்திப்பூ சாகுபடி Thursday, August 31, 2017 12:46 AM +0530 அரக்கோணம்: புரட்டாசி, கார்த்திகை, தை மாதங்களில் சாமந்தி பூவுக்கு தட்டுப்பாடு அதிகரிக்கும். எனவே சாமந்திப் பூவை தற்போது சாகுபடி செய்தால் அந்த கால கட்டத்தில் அவை அறுவடைக்கு தயாராகி விடும். 
சாமந்திப் பூ ரகங்களை பொருத்தவரை கோ-1, கோ-2 மற்றும் எம்.டி.யு- 1ஆகியன. 
கோ -1 மஞ்சள் நிறப் பூக்களைக் கொடுக்கும். கோ -2 கரும்பழுப்பு நிறத்தில் பூக்களைக் கொடுக்கும். எம்.டி.யு.- 2 மஞ்சள் நிறப் பூக்களைக் கொடுக்கும். பெரும்பாலும் பூக்கள் சாகுபடிக்கு வடிகால் வசதியுடன் மணல் கலந்த செம்மண் நிலம் ஏற்றதல்ல. 
மண்ணின் கார அமிலத் தன்மை சுமார் 6.0 முதல் 7.0 வரை இருக்க வேண்டும். நீர்த் தேக்கமுள்ள வடிகால் வசதி குறைந்த, கனமாக களிமண் சார்ந்த மண் வகைகள் சாமந்தி பயிருக்கு ஏற்றவை. சாமந்தி ஒரு வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலப் பயிராகும். இச் செடிகள் நீண்ட இரவு மற்றும் குறுகிய பகல் கொண்ட பருவங்களில் பூக்கும். 
இதற்கான சாகுபடி நிலம் தயாரித்தலின்போது நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது பண்படுத்திய பிறகு, கடைசி உழவின்போது ஹெக்டேருக்கு 25 டன் நன்கு மக்கிய தொழு உரம் இட்டு மண்ணுடன் கலக்க வேண்டும். நிலத்தை நன்கு சமன்படுத்திய பிறகு சுமார் ஒரு அடி இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும். 
நடவுப் பருவத்தின்போது கவனமாக செயல்பட வேண்டியது அவசியம். 
சேர் பிடித்த இளம் தளிர்களைப் பார்களின் ஒரு பக்கத்தில் வரிசையாக செடிக்குச் செடி 30 செ.மீ. இடைவெளி இருக்குமாறு நடவேண்டும். நடும்போது வேர்ப்பாகம் மடியாமல் நேராக மண்ணுக்குள் செல்லுமாறும், வேர்ப்பாகம் முழுவதும் மறையும்படி நடுதல்வேண்டும். 
பருவம் தவறி நடும்போது செடிகளின் பூக்கும் திறன் மற்றும் மகசூல் பாதிப்பு ஏற்படும். நடும் முன் வேர்பிடித்த தளிர்களை, எமிசான் கரைசலில் (ஒரு கிராம், ஒரு லிட்டர் தண்ணீர் கலந்த கலவை) முக்கி நடவேண்டும். ஒரு ஹெக்டேர் நடவு செய்ய 1,11,000 சாமந்தி செடிகள் தேவைப்படும்.
உர மேலாண்மை: அடியுரமாக ஹெக்டேருக்கு 25 டன் தொழு உரம் கடைசி உழவின்போது இடவேண்டும். பின்னர் செடி நடும் முன்னர் 60 கிலோ தழைச்சத்து, 120 கிலோ மணிச்சத்து, 25 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக் கூடிய ரசாயன உரங்களை, பார்களின் அடிப்பகுதியில் இட்டு, இலேசாகக் கிளறி மண்ணினுள் மூட வேண்டும். 
மேல் உரமாக 60 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய ரசாயன உரத்தை நட்ட 30 நாள்கள் கழித்து இடவேண்டும். மறுதாம்புப் பயிருக்கும் இதே அளவு உரம் இடவேண்டும். பூக்கள் அதிகம் பிடிக்க நட்ட 30, 45 மற்றும் 60-ஆவது நாள்களில் ஜிப்ரலிக் அமிலம் 50 பிபிஎம் கரைசலைத் தெளிக்க வேண்டும்.
நடுவதற்கு முன்னர் ஒரு தண்ணீர், நட்ட மூன்று நாள்களுக்குப் பின்னர் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் ஒரு வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். தேவைப்படும்பொழுது களை எடுக்கவேண்டும். 
செடிகள் நட்ட ஆறு வாரங்களுக்குள் நுனிக்கிளையினை ஒடித்து பக்கக் கிளைகள் வளர ஊக்குவிக்க வேண்டும். சாமந்தியில் மறுதாம்புப் பயிர் என்பதும் முக்கியம். நவம்பர் மாதத்தில் நடவுப் பயிர் பூத்து ஓய்ந்துவிடும். அதன் பின்னர் டிசம்பர் மாதத்தில், செடிகளைத் தரைமட்டத்திலிருந்து வெட்டி விட்டு, களை எடுத்து, நடவுப் பயிருக்குப் பரிந்துரை செய்த அதே அளவு உரத்தினை இட்டு நீர் பாய்ச்சவேண்டும்.
இலைப்பேன், அசுவினி இலைப்புழு: இவைகள் இலைகளில் சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும். கட்டுப்படுத்த மானோகுரோட்டாபாஸ் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். சாமந்தி பூச்செடிகளை தாக்கும் நோய்களாக வேளாண் விஞ்ஞானிகள் குறிக்கும் நோய்கள் பல உள்ளன. 
வேர் வாடல் நோய் : செடிகள் திடீரென வாடி காய்ந்து விடும். தாக்கப்பட்ட செடிகளின் வேர்கள் அழுகி காணப்படும். கட்டுப்படுத்த காப்பர் அக்ஸி குளோரைடு 2.5 கிராம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து செடிகளைச் சுற்றி ஊற்றவேண்டும். 
இலைப்புள்ளி நோய் : தாக்கப்பட்ட இலைகளில் பழுப்பு நிறத்தில் புள்ளிகள் தோன்றி, இலைகள் வெளுத்துவிடும். இதனால் செடிகளின் வளர்ச்சிக் குன்றி மகசூல் இழப்பு ஏற்படும். கட்டுப்படுத்த மேன்கோசெப் 2 கிராம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும்.
சாமந்தி பூவுக்கு வயது எனும் போது நடவுப் பயிருக்கு 6-8 மாதங்கள், மறுதாம்புப் பயிருக்கு 4 மாதங்கள். 
நட்ட 3 மாதங்களில் சாமந்தி அறுவடைக்கு வரும், பூக்களை சூரிய வெப்பத்துக்கு முன்னர் காலைவேளைகளில் பறிக்க வேண்டும். ஹெக்டேருக்கு நடவுப் பயிரில் 20 டன் மலர்கள் கிடைக்கும். மறுதாம்புப் பயிரில் 10 டன்கள் கிடைக்கும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/31/w600X390/samanthi.jpg http://www.dinamani.com/agriculture/2017/aug/31/லாபம்-தரும்-சாமந்திப்பூ-சாகுபடி-2764482.html
2764481 விவசாயம் திருவள்ளூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் திட்டங்கள் Thursday, August 31, 2017 12:45 AM +0530 திருவள்ளூர்: தமிழக அரசின் வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, பொதுப்பணித் துறை ஆகிய துறைகளின் கீழ், விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் முத்துதுரை கூறியதாவது:
அரசின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால், பெரும்பாலான விவசாயிகள், அரசிடமிருந்து தங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என குறை கூறுகின்றனர். விவசாயிகள் தோட்டக்கலைத் துறையில் செயல்படுத்தப்படும் கீழ்க்கண்ட திட்டங்கள் குறித்து அறிந்து பயன்பெற வேண்டும்.
ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம்: இத்திட்டத்தின் கீழ், ஒரு விவசாயிக்கு 2 ஹெக்டேருக்கு மிகாமல் காய்கறி விதைகள் 40 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 
(உயர் தொழில்நுட்ப உற்பத்தி பெருக்குத் திட்டம்): முக்கனி (மா, பலா, வாழை) பயிர்களின் பரப்பினை அதிகரிக்கும் வகையில் பழப் பயிர்கள் சாகுபடி செய்வதற்கு மானியத்தில் செடிகள் மற்றும் இடுபொருள்கள் வழங்கப்படுகின்றன.
மா (ஒரு ஹெக்டேர்) ரூ.7,650 மதிப்பிலும், கொய்யா ரூ.9,900 மதிப்பிலும், பப்பாளி ரூ.22,500 மதிப்பிலும் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியத்தில் இடுபொருள்கள் வழங்கப்படுகின்றன. 
காய்கறி பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 மானியத்தில் காய்கறி விதைகள் மற்றும் இடுபொருள்கள் வழங்கப்படுகின்றன. மிளகாய் சாகுபடிக்காக அதற்கான விதைகள், இடுபொருள்கள் ஒரு ஹெக்டேருக்கு ரூ.12,000 மானியம் வழங்கப்படுகிறது.
மலர் சாகுபடியை அதிகரிக்க, மல்லிகை பயிருக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.16,000 மானியத்தில் செடிகள் வழங்கப்படுகின்றன. 
தோட்டக்கலை பயிர்கள் சாகுபடிக்கு நிழல் வலைக்குடில் அமைப்பதற்கு ரூ.355- (ஒரு சதுர மீட்டருக்கு) மற்றும் பசுமைக்குடில் அமைப்பதற்கு ரூ. 467.50 (ஒரு சதுர மீட்டருக்கு) மானியம் வழங்கப்படுகிறது.
காய்கறித் தளைகள் வழங்கும் திட்டம்: வீட்டில் காய்கறி தோட்டம் அமைப்பதற்காக மானியத்தில் தளைகள் வழங்கப்படுகிறது. 
பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம்: தொகுப்பு முறையில் ஒரு குழுவுக்கு 50 விவசாயிகள் வீதம் தேர்வு செய்து, இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்வதற்கு பயிற்சி மற்றும் இடுபொருள்கள் மானியத்தில் வழங்கப்படுகின்றன.
பிரதம மந்திரியின் விவசாயத்துக்கான நீர்பாசனத் திட்டம்: தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைப்பதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.
இதுபோன்று ஏராளமான திட்டங்கள் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படுகின்றன. இதுகுறித்து மேலும் விவரங்களைப் பெற திருவள்ளூர் உழவர் சந்தை வளாகத்தில் உள்ள அலுவலகத்தையும், கீழ்க்காணும் அந்தந்த பகுதிக்கான தோட்டக்கலைத் துறை அலுவலர்களின் செல்லிடப்பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
ஆர். கே.பேட்டை 8870739991 
பள்ளிப்பட்டு 9442943312 
திருத்தணி 9790171116 
திருவாலங்காடு 9566272112 
ஈக்காடு 9843643170 
எல்லாபுரம் 8825748432 
சோழவரம் 9600009853 
கடம்பத்தூர் 9444227095 
பூந்தமல்லி 9787504272 
அம்பத்தூர் 9176691999 
பூண்டி 9843643170 
புழல் 9566272112
கும்மிடிப்பூண்டி 9787504272 
மீஞ்சூர் 9600009853
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/31/w600X390/vegetable.jpg http://www.dinamani.com/agriculture/2017/aug/31/திருவள்ளூர்-மாவட்டத்தில்-தோட்டக்கலைத்-துறையின்-திட்டங்கள்-2764481.html
2760528 விவசாயம் மஞ்சள் சாகுபடியில் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் Thursday, August 24, 2017 12:45 AM +0530 பெரம்பலூர்: மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சள் தென்னிந்திய சமையலில் இன்றியமையாத இடத்தைப் பிடித்துள்ளது. பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் பலவகையான நோய்களுக்கு எதிர்பொருளாக மஞ்சள் செயலாற்றுகிறது. இதன் காரணமாக, பலவகையான அழகுசாதன பொருள்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், துணிகளுக்கு சாயமேற்றுவதிலும் மஞ்சள் பயன்படுத்தப்படுவதால் சந்தையில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
ரகங்கள்: கோ- 1, கோ- 2, பி.எஸ்.ஆர் 1, பி.எஸ்.ஆர் 2, ஈரோடு உள்ளூர் ரகம், சேலம் உள்ளூர் ரகம் ஆகியவை தமிழகத்தில் சாகுபடி செய்ய உகந்த ரகங்கள்.
பருவம்: கடல் மட்டத்திலிருந்து 1,500 மீட்டர் உயரம் வரையிலும், 20- 30 செல்சியஸ் வெப்ப நிலையும், ஆண்டு மழையளவு 1,500 மி.மீ வரையுள்ள வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் மஞ்சள் சாகுபடி செய்யலாம். ஏப்ரல் மாத இறுதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை மஞ்சள் நடவு செய்யலாம். எனினும், ஜூன் மாதத்தில் நடவு மேற்கொண்டால் அதிக மகசூல் பெறமுடியும்.
மண்: நல்ல வடிகால் வசதிகொண்ட அங்ககச் சத்து நிறைந்த இரும்பொறை மண் மிகவும் ஏற்றது. பொல பொலப்புத் தன்மை வாய்ந்த செம்மண், வண்டல் மண் மற்றும் களிமண் நிலங்களிலும் வளரும் தன்மைகொண்டது. அமில காரநிலை 6- 7 இருக்கும் நிலங்களில் பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூல் நன்றாக இருக்கும். அதிகமாக நீர் தேங்கும் நிலங்களிலும், காரத்தன்மை வாய்ந்த நிலங்களிலும் பயிர் வெகுவான பாதிப்பிற்குள்ளாகும். கரடு முரடான மற்றும் கற்கள் நிறைந்த நிலங்களில் கிழங்கின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
மஞ்சள் கிழங்கு நேர்த்தி: தரமான மஞ்சள் கிழங்கைத் தேர்வுசெய்து, அவற்றை 1 லிட்டர் நீருக்கு கார்பெண்டாசிம் பூஞ்சாணக்கொல்லி 2 கிராம் மற்றும் மோனோகுரோட்டோபாஸ் பூச்சிக்கொல்லி 1.5 மில்லி என்ற அளவில் கலந்த கரைசலில் 20 நிமிடங்கள் நனைத்து வைக்கவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கிழங்கு அழுகல் நோய் ஏற்படுத்தக் கூடிய பூஞ்சை மற்றும் செதில் பூச்சி தாக்குதலிலிருந்து பயிரை பாதுகாக்க முடியும்.
குழித்தட்டு நாற்று உற்பத்தி: காய்கறி மற்றும் கரும்பு பயிர்களைப் போல மஞ்சள் கிழங்கையும் குழித்தட்டுகளைப் பயன்படுத்தி நாற்று உற்பத்தி செய்து நடவு செய்யலாம். இதற்கு நேர்த்தி செய்யப்பட்ட கிழங்குகளை சிறு, சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். ஒவ்வொரு துண்டும் 2 வளையங்கள் ஒரு கணுவைக் கொண்டிருக்குமாறு நறுக்க வேண்டும். இவ்வாறு நறுக்கப்படும் மஞ்சள் துண்டுகளின் எடை தோராயமாக 5 கிராம் என்ற அளவில் இருக்கும். 50 குழிகள் கொண்ட குழித்தட்டுகளை மஞ்சள் நாற்று உற்பத்திசெய்ய பயன்படுத்தலாம். 1 ஏக்கருக்கு தேவையான மஞ்சள் நாற்றுகள் உற்பத்தி செய்ய சுமார் 600 குழித்தட்டுகள் தேவைப்படும். மட்கிய தென்னை நாருடன் டிரைக்கோடெர்மாவிரிடி மற்றும் சூடோமோனாஸ் புரசன்ஸ் உயிரிகட்டுப்பாட்டு பொருள்களை ஏக்கருக்கு 1 கிலோ என்ற அளவில் கலந்து குழித்தட்டுகளில் உள்ள குழிகளில் பாதி அளவு நிரப்பி நறுக்கபபட்ட மஞ்சள் துண்டுகளை கணுப்பகுதி மேல் நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும். பிறகு, இதன்மீது தென்னை நார் கலவையை இட்டு நிரப்பி நிழலான இடத்தில் அடுக்கி வைக்க வேண்டும். பூவாளி கொண்டோ அல்லது கைத்தெளிப்பான் பயன்படுத்தியோ ஒரு நாளைக்கு ஒருமுறை நீர் தெளிக்க வேண்டும். அனைத்து குழிகளிலும் ஒரு இலை வெளிவந்த பிறகு ஹியூமிக் அமிலத்தை 1 லிட்டர் நீருக்கு 5 மி.லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். 4-வது நாளில் நாற்றைப் பிடுங்கி நடவு செய்யலாம். குழித்தட்டுகளை நீரில் கழுவி நிழலில் பாதுகாப்பாக வைத்திருந்தால் 3 ஆண்டுகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
குழித்தட்டு நாற்று முறையின் நன்மைகள்: விதைக் கிழங்கு தேவை குறைவு (150 கிலோ, ஏக்கர்) நடவு வயலில் இருக்கும் காலம் குறைவதால், கணிசமான அளவு நீர் மற்றும் மின்சாரம் சேமிக்கப்படுகிறது. ஒருமுறை களை எடுப்பதற்கான செலவு குறைகிறது. சரியான பயிர் எண்ணிக்கையை பராமரிக்க முடியும்.
நிலம் தயாரிப்பு மற்றும் நடவு: உழவிற்கு முன்பாக நிலத்தில் ஏக்கருக்கு 4 டன் என்ற அளவில் தொழு உரம் இட்டு அல்லது ஆடு மாடுகள் கொண்டு கிடைகட்டி உழவு செய்யவேண்டும். மண் நன்கு பொடியாகும் வரை 3 முதல் 4 முறை ஒரு அடி ஆழம் வரை உழவுசெய்ய வேண்டும். 45 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைத்து நீர் பாய்ச்சி ஈரம் இருக்கும்போது, 30 செ.மீ இடைவெளியில் மஞ்சள் நாற்றுகளை நடவுசெய்ய வேண்டும். டிரைக்கொடெர்மா ஹார்சியானம் எனும் எதிர் உயிர் பூஞ்சாணத்தை, ஏக்கருக்கு 1 கிலோ என்றஅளவில் எருவுடன் கலந்து நிலத்தில் ஈரம் இருக்கும்போது தூவி விடலாம்.
ஊடுபயிர்: வெங்காயம், கத்திரி, மிளகாய் உள்ளிட்ட பயிர்களை மஞ்சளில் ஊடு பயிராகப் பயிரிடலாம். மஞ்சள் ஒரு நிழல் விரும்பும் பயிர். ஆனால், அதிக நிழல் கிழங்கின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதால், வரப்பு ஓரங்களில் ஆமணக்கு, அகத்தி, துவரை ஆகிய பயிர்களைப் பயிரிடலாம்.
நீர் நிர்வாகம்: மண்ணின் நீர்பிடிப்புத் தன்மை மற்றும் காலநிலையைப் பொருத்து 5 முதல் 9 நாள்களுக்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்சலாம். களிமண் பாங்கான நிலங்களுக்கு 15- 20 முறையும், மணற்பாங்கான நிலங்களுக்கு 30- 35 முறையும் நீர் பாய்ச்ச வேண்டும். கிழங்குகள் உருவாகும் சமயத்தில் நீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.
உர மேலாண்மை: அடியுரமாக ஏக்கருக்கு 80 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 22 கிலோ யூரியா, 150 கிலோ சூப்பர் பாஸ்பேட், 12 கிலோ பொட்டாஷ் உரங்களை பார் அமைப்பதற்கு முன்பாக இட வேண்டும். பார் அமைத்த பிறகு 12 கிலோ பெரஸ்சல்பேட், 6 கிலோ துத்தநாக சல்பேட் உரங்களை பார்களின் மீது தூவி விட வேண்டும். அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை, ஏக்கருக்கு 4 கிலோ அளவில் நிலத்தில் ஈரம் இருக்கையில் தூவி விட வேண்டும். நடவு செய்த 30, 60, 90 மற்றும் 120-வது நாள்களில் ஏக்கருக்கு 22 கிலோ யூரியா மற்றும் 12 கிலோ பொட்டாஷ் உரங்களை இட வேண்டும்.
நுண்ணூட்ட மேலாண்மை: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள இந்திய நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் மஞ்சள் பயிருக்கென்று பிரத்யேமாக நுண்ணூட்டக் கலவையைத் தயார் செய்து வழங்கி வருகிறது. ஐ.ஐ.எஸ்.ஆர் பவர் மிக்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நுண்ணூட்டக் கலவையை, ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் அளவில் நடவு செய்த 60 மற்றும் 90-வது நாள்களில் இலைவழியாகத் தெளிப்பதன் மூலம் நுண்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்து, 10 முதல் 15 சதவீத கூடுதல் மகசூல் பெறலாம். மேலும், கிழங்குகளின் தரமும் நன்றாக இருக்கும்.
கிழங்கு அழுகல் நோய்: நன்கு வளர்ந்த நிலையில், இலைகள் முழுவதும் காய்ந்துவிடுவதோடு, கிழங்குகள் அழுகி மட்கிவிடும். பாதிப்புக்குள்ளான செடிகளை கிழங்குடன் நிலத்திலிருந்து அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடத்திலும், அதைச் சுற்றியுள்ள செடிகளுக்கும் காப்பர் ஆக்சிகுளோரைடு மருந்தை 1 லிட்டர் நீருக்கு 2.5 கிராம் கலந்து ஊற்றலாம். டிரைக்கோடெர்மா ஹார்சியானம் எதிர் உயிர் பூஞ்சாணத்தை எருவுடன் கலந்து நிலத்தில் தூவலாம்.
இலைப்புள்ளி நோய்: இளம் இலைகளின் மேற்பரப்பில் பழுப்புநிற புள்ளிகள் தோன்றும். ஒழுங்கற்ற வடிவிலிருக்கும் இப்புள்ளிகளின் மையப்பகுதி வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் காணப்படும். நாளடைவில் இப்புள்ளிகள் ஒன்றிணைந்து பெரிய புள்ளிகளாக இலை முழுதும் பரவி இலை மடிந்துவிடும். இந்நோயைக் கட்டுப்படுத்த புரோபிகோனசோல் பூஞ்சாணக் கொல்லியை 1 லிட்டர் நீருக்கு 1 மில்லி அளவில் கலந்து தெளிக்கலாம்.
இலைத் தீயல் நோய்: நீள் உருளை வடிவ அல்லது செவ்வக வடிவ பழுப்புநிற புள்ளிகள் இலைகளின் இருபுறமும் காணப்படும். தாக்குதல் தீவிரமடையும் நிலையில் புள்ளிகள் அடர் பழுப்பு நிறத்திற்கு மாறி இலைகள் மஞ்சள் அல்லது பழுப்பு நிறமாகிவிடும். முறையான தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், செடியில் உள்ள அனைத்த கிளைகளுக்கும் பரவி செடியே மடிந்துவிடும். கிழங்கு உருவாவது வெகுவாக பாதிக்கப்படும். இதைக் கட்டுப்படுத்த பாதிப்பிற்குள்ளான இலைகளை செடியிலிருந்து அகற்றி தீயிட்டுக் கொளுத்த வேண்டும். பின்னர், அசாஸிஸ்ட்ரோபின் மற்றும் டைபென்கோனசோல் கலவை பூஞ்சாணக் கொல்லியை 1 லிட்டர் நீருக்கு 1 மி.லி அளவில் கலந்துதெளிக்கலாம்.
அறுவடை மற்றும் மகசூல்: ரகத்தைப் பொறுத்து நடவு செய்த 7- 9 மாதங்களில் மஞ்சள் அறுவடைக்குத் தயாராகும். இச்சமயத்தில் தரைக்கு மேலுள்ள அனைத்து பாகமும் காய்ந்து மடிந்துவிடும். இவற்றை அரிவாள் கொண்டு அறுத்து அப்புறப்படுத்தி விட்டு தேவை எற்பட்டால் நீர்பாய்ச்சி உலரவிட்டு, பின்னர் மஞ்சள் கொத்தும் கருவி கொண்டு கிழங்கைத் தோண்டி எடுக்கலாம். டிராக்டரில் பொருத்தி இயங்கக்கூடிய மஞ்சள் அறுவடைக் கருவியைப் பயன்படுத்தியும் கிழங்குகளைத் தோண்டி எடுக்கலாம். தோண்டி எடுக்கப்பட்ட மஞ்சளிலிருந்து மண்ணை அப்புறப்படுத்தி விட்டு, பின்னர் பதப்படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு 8- 10 டன் பச்சை கிழங்கு மகசூலாகக் கிடைக்கும் என தெரிவித்தார் பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ஜே. கதிரவன்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/24/w600X390/turmeric.PNG http://www.dinamani.com/agriculture/2017/aug/24/மஞ்சள்-சாகுபடியில்-மேம்பட்ட-தொழில்நுட்பங்கள்-2760528.html
2760523 விவசாயம் பணம் கொழிக்கும் பாசிப்பயறு! Thursday, August 24, 2017 12:43 AM +0530 திருநெல்வேலி: தண்ணீர்ப் பற்றாக்குறை நேரத்தில் குறைந்தஅளவு நீரைக் கொண்டு பாசிப்பயறு சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டலாம் என, வேளாண் துறை தெரிவித்துள்ளது.
பாசிப்பயறு: தண்ணீர்ப் பற்றாக்குறையால் நெல், வாழைப் போன்றவற்றை சாகுபடி செய்ய முடியாதபோது பாசிப்பயறு சாகுபடி செய்யலாம். பயிர்களில் பாசிப்பயறு சாகுபடி காலம் மிகக் குறைவு. மேலும் பாசன நீர் குறைவாக கிடைத்தாலும் போதும்.
பாசிப்பயறு சாகுபடியில் இதர நன்மைகளும் உள்ளன. மற்ற பயிர்களைவிட ஏக்கருக்கு உரச்செலவு மிகவும் குறைவு. பயிர்ப் பாதுகாப்புக்கு அதிக செலவில்லை. பாசிப்பயறு சாகுபடியால் நிலம் நல்ல வளம் பெறும். 90 நாளில் லாபம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சாகுபடி முன்: ஓர் ஏக்கருக்கு 10 வண்டி தொழு உரமிட்டு நிலத்தை நன்கு உழ வேண்டும். அடி உரமாக ஏக்கருக்கு 60 கிலோ டை அம்மோனியம் பாஸ்பேட் உரமிடவேண்டும். நிலத்தில் நீர் பாய்ச்சி நல்ல ஈரப்பதத்தில் ஒரு சால் உழுது விதைக்க வேண்டும். ஏக்கருக்கு 8 கிலோ தரமான விதை தேவை. நீர் பாசனம் செய்ய நிலத்தில் சிறுசிறு பாத்திகள் (20 அடி, 10 அடி) அமைக்கவேண்டும். விதைக்கும் முன் விதைநேர்த்தி, நுண்ணுயிர் நேர்த்தி செய்ய வேண்டும். இதற்கு அளிக்கும் கவனம் நல்ல பலன் தரும்.
விதை நேர்த்தி: 8 கிலோ விதையுடன் 32 கிராம் திரம் அல்லது டைத்தேன் எம். 45 மருந்து கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து பின்னர் நுண்ணுயிர் நேர்த்தி செய்ய வேண்டும்.
நுண்ணுயிர் நேர்த்தி: பயறு விதைகளுக்கு நுண்ணுயிரை விதையுடன் நேர்த்தி செய்ய வேளாண் துறை பரிந்துரைக்கிறது. விதைநேர்த்தி செய்த விதையை ஒரு பாக்கெட் நுண்ணுயிர்க் கலவையுடன் கலந்து நேர்த்தி செய்ய வேண்டும். இதற்கு முதலில் நுண்ணுயிர்க் கலவையை அரிசிக் கஞ்சியில் கலந்து நன்கு பரப்பிய விதையில் கரைசலைத் தெளிக்க வேண்டும். பின்னர், விதையை நிழலில் 15 நிமிடம் உலரவைத்த பிறகு விதைக்க வேண்டும்.
இலைமூலம் உரமிடல்: பாசிப்பயறுக்கு டிஏபி உரக்கரைசலை இலைமேல் தெளிக்கும்போது சுமார் 50 கிலோ கூடுதல் மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. கரைசலை கவனமாக தயாரிக்க வேண்டும். ஏக்கருக்கு தேவையான டை அம்மோனியம் பாஸ்பேட் 4.5 கிலோவை 25 லிட்டர் நீரில் கலந்து ஒருநாள் வைத்திருந்து, தெளிந்த கரைசலை எடுத்து 210 லிட்டர் நீரில் கலந்து முதல் தடவையாக பூக்கும் போதும், பின்னர் 15 நாளில் அதாவது, 2ஆவது முறையும் கைத்தெளிப்பானால் தெளித்தல் வேண்டும். விதைத் தெளிப்பானைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மருந்து தெளிக்கும்போது பூக்கள் கீழே விழும் அபாயம் உள்ளது.
களையெடுத்தல்: பாசிப்பயறுக்கு களையெடுத்தால் நல்ல பயன் கிடைக்கும். களையெடுத்த வயல்களில் காய்கள் கொத்துக் கொத்தாக பிடித்திருக்கும். விதைத்த 20 ஆம் நாளிலும், 30ஆம் நாளிலும் களையெடுத்தால் அதிக மகசூல் கிடைக்கும்.
நீர்ப்பாசனம்: கோடையில் பாசிப்பயறுக்கு 6 அல்லது 9 பாசனங்கள் தேவை. விதைத்த 3ஆம் நாள் ஒருமுறையும் பிறகு மண் தன்மைக்கு ஏற்ப 10 முதல் 15 நாளுக்கு ஒருமுறையும் பாசனம் கொடுக்கலாம். அதிக அளவில் பாசனம் கொடுத்தால் காய் பிடிப்பது பாதிக்கும். அதிக பாசனம் கொடுத்தால் இலைகள் அதிகம் வளர்ந்து வெயிலில் செடிகள் துவண்டு விடும். இதனால் பூப்பிடிப்பது பாதிக்கும். ஆகவே, பாசனத்தைக் கவனித்து மேற்கொள்வதால், காய் பிடிப்பது சீராக இருக்கும்.
பயிர்ப் பாதுகாப்பு: பூச்சி, நோய்கள் தாக்காமலிருக்க விதைத்த 25 ஆம் நாள், 130 மில்லி டைமக்ரான், 500 கிராம் டைத்தேன் எம் 45 ஆகியவற்றை நீரில் கலந்து பயிருக்குத் தெளிக்க வேண்டும்.
தேமல் நோய் வராமல் தடுக்க எச்சரிக்கை அவசியம். நோய் தாக்கிய செடிகளை உடனுக்குடன் பிடுங்கி பிளாஸ்டிக் பையில் போட்டு தனியே எடுத்துச் சென்று எரிக்க வேண்டும். நோய் தாக்கிய செடிகளைத் தொட்டுவிட்டு நோய் தாக்காத செடிகளைத் தொடக்கூடாது.
அறுவடை: பாசிப்பயறில் 3 முதல் 4 அறுவடை கிடைக்கும். விதைத்த 56, 64, 85ஆவது நாள்களில் அறுவடை கிடைக்கும். நல்ல சாகுபடி முறையெனில் 4ஆவது அறுவடை கிடைக்கவும் வாய்ப்புள்ளது. பொதுவாக, 500 கிலோ மகசூல் எடுக்க முடியும். கட்டுக்கோப்பு சாகுபடி முறையைக் கையாண்டால் 600 கிலோ மகசூல் உறுதி.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/24/w600X390/moong.jpg http://www.dinamani.com/agriculture/2017/aug/24/பணம்-கொழிக்கும்-பாசிப்பயறு-2760523.html
2756356 விவசாயம் ஆடிப்பட்டத்தில் மக்காச்சோள சாகுபடி தொழில்நுட்பங்கள் Thursday, August 17, 2017 12:47 AM +0530 பெரம்பலூர்: மக்காச்சோளம் ஒரு முக்கியமான தானியப்பயிர். தானியப்பயிர்களின் அரசி என்று இது அழைக்கப்படுகிறது. மற்ற பயிர்களுடன் ஒப்பிடுகையில் மக்காச்சோள சாகுபடிக்கான வேலையாள்களின் தேவை குறைவு, சாகுபடி செலவு, பூச்சி, நோய் தாக்குதல் மிகவும் குறைவு. இந்தியாவில் அரிசி, கோதுமைக்கு அடுத்தபடியாக மக்காச்சோளம் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்தியாவில், குறிப்பாக மத்தியப் பிரதேசம், ஆந்திரம், கர்நாடகம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவில் விளைவிக்கப்பட்டு முக்கிய உணவாக உட்கொள்ளப்படுகிறது.
மக்காச்சோள சாகுபடியில் அதிக விளைச்சல் காண சாகுபடி தொழில்நுட்பம் அவசியம். ஒரு ஏக்கருக்கு எந்தெந்த அளவுகளில் எந்த உரத்தை எந்த நேரத்தில் இடுவது என்பதை கவனித்து செய்தால் அதிக விளைச்சலை பார்க்கலாம்.
தொழு உரம் இடுதல்: ஒரு ஏக்கருக்கு 5 டன் மட்கிய தொழு உரத்தை கடைசி உழவிற்கு முன் சீராக இட்டு, அதனுடன் 4 பாக்கெட் (800 கிராம்) அசோஸ்பைரில்லம் கலந்து பரப்பி நன்கு உழவு செய்யவும்.
நிலம் தயாரித்தல்: முதலில் நிலத்தை டிராக்டர் மூலம் சட்டிக் கலப்பையால் ஒருமுறை உழவு செய்யவும். பின்பு தொழு உரத்தை நிலத்தில் பரப்பிய பிறகு கொக்கி கலப்பைக் கொண்டு இருமுறை நன்கு உழவு செய்யவும். 60 செ.மீ இடைவெளியில் 6 மீட்டர் நீளத்தில் பார்கள் அமைக்கவும். பார்களுக்கு குறுக்கே பாசன வாய்க்கால் அமைக்கவும். செலவினைக் குறைக்க டிராக்டர் மூலம் பார் அமைக்கும் கருவிகளை பயன்படுத்தலாம்.
பருவம்: மக்காச்சோளமானது, தமிழகத்தில் மானாவாரியாக ஆடி மற்றும் புரட்டாசிப் பட்டத்திலும், இறைவைப் பயிராக தை மற்றும் சித்திரைப் பட்டத்திலும் சாகுபடி செய்யப்படுகிறது.
விதையளவு மற்றும் இடைவெளி: நல்ல தரமான சான்று பெற்ற விதைகளை விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும். விதையளவு ஏக்கருக்கு 8 கிலோ (ரகம்) மற்றும் 6 கிலோ (வீரிய ஒட்டு ரகம்) என்ற அளவில் பின்பற்றவும். ஒரு செடிக்கும், மற்றொரு செடிக்கும் இடையே 20 செ.மீ (ரகம்) 25 செ.மீ (வீரிய ஒட்டு ரகம்) இடைவெளியும், வரிசைக்கு வரிசை 60 செ.மீ இடைவெளியும் இருக்க வேண்டும்.
விதைத்தல்: கரிசல் மண்ணில் விதையை ஆழமாக விதைக்கக் கூடாது. குறைந்த ஆழத்தில் அதாவது 2 செ.மீட்டரில் விதைக்க வேண்டும். ஏனெனில், கரிசல் மண்ணில் நீர் அதிக நேரம் தேங்கி நிற்கும். மேலே நடவு செய்த விதைகள் முழுமையாக ஊறிவிடும். விதை உறிஞ்சுவதற்குத் தேவையான நீர் கிடைத்து முளைக்க ஏதுவாக இருக்கும்.
கரிசல் மண்ணில் ஆழமாக விதையை விதைப்பு செய்தால், விதைகள் விரைந்து முளைப்பதில் இடர்பாடு ஏற்படும். செம்மண் பாங்கான பூமியில் விதையை சற்று ஆழமாக விதைப்பு செய்ய வேண்டும். அதாவது 3 செ.மீட்டரிலிருந்து 4 செ.மீட்டரில் விதைக்க வேண்டும். ஏனெனில், செம்மண் பூமியில் நீர் விரைவாக கீழே சென்று விடும். ஆழமாக நடவு செய்யப்பட்ட விதைகள் தேவையான நீரை உறிஞ்சி விரைந்து முளைக்கும். மேலாக விதைப்பு செய்யப்பட்ட விதைகளுக்கு சரியான நீர் கிடைக்காமல் முளைப்பு இல்லாமல் போய்விடும். எனவே, செம்மண் பூமியில் மழையில்லா சூழ்நிலையில் தண்ணீர் கட்டுவது அவசியம்
பயிர் எண்ணிக்கை பராமரித்தல்: மக்காச்சோள பயிரின் விளைச்சலை நிர்ணயிப்பதில் செடிகளின் எண்ணிக்கை முக்கிய பங்கு வகிக்கிறது. விதைப்பு செய்த 7- 8 ஆம் நாளில் நல்ல, தரமான நாற்றுகளை விட்டு, விட்டு தேவையற்ற மற்ற செடிகளை நீக்கிவிட வேண்டும். வெதுவெதுப்பான சுடுநீரில் மக்காச்சோள விதைகளை மூன்று மணி நேரம் ஊறவைத்து, நிழலில் உலர்த்தி பின்னர் விடுபட்ட இடத்தில் விதைப்பு செய்தால் விதைகள் நன்கு முளைப்பதோடு மட்டுமல்லாமல் குருத்துப்பூச்சி தாக்குதலும் குறையும்.
உரமிடுதல்: மண் பரிசோதனைக்கு ஏற்ப தழை, மணி, சாம்பல் சத்துக்களை இடுதல் வேண்டும். இல்லையெனில், பொதுப் பரிந்துரையான 54:24:20 கிலோ ஏக்கர் (117:150:33 கிலோ ஏக்கர் யூரியா, சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ்) அளவில் ரகங்களுக்கும், 100:30:30 கிலோ ஏக்கர் (217:188:50 கிலோ ஏக்கர் யூரியா, சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ்) அளவில் வீரிய ஒட்டு ரகங்களுக்கும் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களைப் பொதுவாக அளிக்க வேண்டும். அடியுரமாக பாதியளவு தழைச்சத்து, முழு அளவு மணிச்சத்து மற்றும் பாதியளவு சாம்பல் சத்துக்களை இட வேண்டும். மீதமுள்ள தழை மற்றும் சாம்பல் சத்துக்களை இரண்டு முறையே, அதாவது ஆறாவது கணுநிலை மற்றும் ஒன்பதாவது கணு நிலையில் இட வேண்டும். ஏக்கருக்கு 3 கிலோ தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக நுண்ணூட்டக் கலவையை 30 கிலோ தொழு உரத்துடன் தகுந்த ஈரப்பதத்தில் கலந்து ஒரு மாதம் நிழலில் வைத்து வயலில் இட வேண்டும்.
களைக்கட்டுப்பாடு: களைகள் பயிருடன் நீர், நிலம் மற்றும் சத்துக்கள் போன்வற்றிற்கு போட்டியிட்டுக் கொண்டு விளைச்சலை வெகுவாக குறைக்கிறது. களை முளைக்கும் முன் பயன்படுத்தப்படும் அட்ரசின் (அட்ராப்) என்னும் களைக் கொல்லியை ஏக்கருக்கு 500 கிராமை, 200 லிட்டர் தண்ணீர் கலந்து விசிறி நாசில்லினைப் பயன்படுத்தி விதைப்பு செய்த மூன்றாம் நாளில் தெளிக்க வேண்டும். அல்லது ஊடுபயிராக பயிறுவகை பயிர்களை பயிர் செய்தால் பெண்டிமெத்தலின் என்ற களைக் கொல்லியை 1.2 லிட்டருடன் 200 லிட்டர் தண்ணீர் கலந்து விதைப்பு செய்த மூன்றாவது நாள் தெளிக்க வேண்டும். மண்ணில் போதுமான ஈரப்பதம் இருக்கும்போதே களைக் கொல்லியைப் பயன்படுத்தவும். பின்னர் 30-லிருந்து 35 நாளில் கைக்களை எடுக்க வேண்டும்.
நீர் நிர்வாகம்: மக்காச்சோளப் பயிர் அதிக வறட்சியையும், அதிக நீரையும் தாங்காது. அதனால் பயிரின் தேவைக்கேற்ப நீர்ப்பாய்ச்சுதல் அவசியம்.
இலைவழி ஊட்டம்: மக்காச்சோள மேக்சிம் ஏக்கருக்கு 3 கிலோவை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து ஆண் மஞ்சரி மற்றும் மணி உருவாகும் பருவத்தில் இலை வழியாக தெளிக்க வேண்டும். இதனால் மணி பிடிக்கும் திறன் அதிகரிக்கும். விளைச்சல் 20 சதம் கூடும்.
அறுவடை: முதிர்ந்த இலைகள் காய்ந்து விடுதலும், மேல்மட்ட இலைகள் மஞ்சளாவதும் முதிர்ச்சியைக் குறிக்கும். கதிரின் மேல் தோல் பழுத்து முதிர்ந்தவுடன் காய்ந்து விடும். விதைகள் கடினமாகவும், காய்ந்தும் காணப்படும். இப்பருவம் அறுவடைக்கேற்றது என பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர்கள் ஜெ. கதிரவன், மு. புனிதவதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/17/w600X390/conflower.jpg http://www.dinamani.com/agriculture/2017/aug/17/ஆடிப்பட்டத்தில்-மக்காச்சோள-சாகுபடி-தொழில்நுட்பங்கள்-2756356.html
2756355 விவசாயம் 45 நாளில் அறுவடை தரும் வெண்டை! Thursday, August 17, 2017 12:46 AM +0530 திருநெல்வேலி: 45 நாளில் மகசூல் தரும் வெண்டை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடலாம் என தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
ரகங்கள்: கோ 2. எம்டியு 1, அர்கா அனாமிகா, அர்கா அபஹாப், பார்பானி கிராந்தி, கோ 3, பூசா சவானி மற்றும் வர்சா உப்கார் ரகங்களை தேர்வு செய்யலாம்.
வெண்டை கோ.பி.ஹெச் 1 இனக்கலப்பு: இது வர்சா உப்பார் தெரிவு, பி.ஏ. 4ன் இனக்கலப்பு ரகம். மஞ்சள் இலை மொசைக் நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது. சந்தைக்கு ஏற்றது. பழம் அடர் பச்சை, இளம், குறைவான நார், அங்கங்கு முடிகள் காணப்படும். ஹெக்டேருக்கு 22.1 டன் மகசூல் தரும்.
கோ 1 (1976): இது ஹைதராபாதிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சுத்தமான ரகம். இளம் சிவப்பு நிறம் கொண்டது. மகசூல் 90வது நாளில் 12 டன் கிடைக்கும்.
கோ 3 (1991): இது பிரபானி கராந்தி மற்றும் எம்.டி.யூன் முதல் சந்ததி இனக்கலப்பு ரகம். மகசூல் 16 முதல் 18 டன் கிடைக்கும்.
கோ 2 (1987): இது ஏ.ஈ 180 மற்றும் பூசா சவானியன் முதல் சந்ததி இனக்கலப்பு ரகம். 90 நாளில் 15 முதல் 16 டன் மகசூல் தரும்.
மண், தட்பவெப்பநிலை: வெண்டை வெப்பம் விரும்பும் பயிர். நீண்ட நேர வெப்ப நாள் தேவை. பனி மூட்டத்தால் இதன் வளர்ச்சி பாதிக்கப்படும். குளிர் காலத்திலும், குளிர் பிரதேசங்களிலும் வெண்டை நல்ல முறையில் வளராது. வெண்டையை எல்லா வகை மண் வகையிலும் பயிரிடலாம். நல்ல உரச்சத்துள்ள மண்களில் மிகவும் நன்றாக வளரும். கார அமில நிலையை ஓரளவு தாங்கி வளரும்.
பருவம்: ஜூன் - ஆகஸ்ட், பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடலாம்.
விதை, விதைப்பு: ஹெக்டேருக்கு 7.5 கிலோ விதை போதும்.
நிலம் தயாரித்தல்: 3 அல்லது 4 முறை நிலத்தை உழவேண்டும். கடைசி உழவுக்கு முன்பு 25 டன் தொழு உரம் இட்டு 45 செமீ இடைவெளி விட்டு வரிப்பாத்தி (பார்சால்) அமைக்கவேண்டும்.
விதை நேர்த்தி, விதைத்தல்: விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு ஒரு கிலோவுக்கு 2 கிராம் கேப்டான் அல்லது திராம் கொண்டு நேர்த்தி செய்யவேண்டும். பின்பு விதைகளை 400 கிராம் அசோஸ்பைரில்லம் கலவையுடன் கலந்து விதைக்கவேண்டும். நிழலில் ஆறவைத்த அரிசிக் கஞ்சியுடன் அசோஸ்பைரில்லம் தூளை நன்கு கலக்கவேண்டும். பிறகு இதில், வெண்டை விதையை நன்கு கலந்து அரை மணி நேரம் உலர வைக்கவேண்டும். இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை வரியில் 30 செ.மீ இடைவெளியில் 2 விதைகள் என்ற விகிதத்தில் 2 செ.மீ ஆழத்தில் ஊன்றவேண்டும். 10 நாட்களுக்கு பிறகு 2 செடிகளை விட்டு மீதம் உள்ளவற்றை களைதல் வேண்டும்.
நீர் நிர்வாகம்: நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும், பிறகு வாரத்திற்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.
உரமிடுதல்: அடியுரமாக 20 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 30 கிலோ சாம்பல் சத்து வரிகளில் ஒரு பக்கத்தில் இட்டு மண்ணுடன் நன்கு கலந்துவிடவேண்டும். நட்ட 30 நாள் கழித்து மேலுரமாக 20 கிலோ தழைச்சத்து இடவேண்டும். 2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியம் நுண்ணுயிர்க் கலவையை 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து நேரடியாக மண்ணில் இட்டு, தழைச்சத்தின் தேவையைக் குறைத்துக் கொள்ளலாம். மேலுரம் இட்டு மண் அணைத்து தண்ணீர் கட்டுவது மிகவும் அவசியம்.12 கிலோ இடவேண்டும்.
நூற்புழு தாக்குதலைத் தடுக்க: ஹெக்டேருக்கு 400 கிலோ வேப்பம் பிண்ணாக்கு விதைக்கும்போது, உரத்துடன் கலந்து இடவேண்டும் அல்லது ஒரு ஹெக்டேருக்கு கார்போபியூரான் 3ஜி குருணை மருந்து 1 கிலோ அல்லது போரேட் 10ஜி குருணை மருந்து கிலோ இடவேண்டும்.
அறுவடை: 45 நாளிலேயே அறுவடை செய்யலாம். காய்கள் முற்றும் முன்பாக அறுவடை செய்ய வேண்டும். 2 நாளுக்கு ஒருமுறை அறுவடை செய்வது அவசியம். ஹெக்டேருக்கு 90 முதல் 100 நாளில் 15 டன் வரை காய்கள் கிடைக்கும்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/17/w600X390/ladyfinger.jpg http://www.dinamani.com/agriculture/2017/aug/17/45-நாளில்-அறுவடை-தரும்-வெண்டை-2756355.html
2752437 விவசாயம் இதயத்தைப் பாதுகாக்கும் சிறுதானிய உணவுகள் Thursday, August 10, 2017 12:39 AM +0530 நாமக்கல்: சிறுதானிய உணவுகள் ரத்த அழுத்தத்தைச் சீராக்குவதால், இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கின்றன.சிறுதானிய பயிர் சாகுபடி தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் வழங்குகிறது.
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் என்.அகிலா, பேராசிரியர் அழகுதுரை ஆகியோர் தெரிவித்தது:
சிறு தானியங்களில் சோளம், கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, பனிவரகு மற்றும் குதிரைவாலி போன்றவை மிக முக்கியமானவை.
மனிதர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதில் சிறு தானியங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சிறு தானியங்கள் உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கும் நுண் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுத்து, பெருங்குடலின் செயல்பாட்டைச் சீராக்குகின்றன.
சிறு தானியங்களில் மக்னீசியம் சத்து அதிக அளவில் உள்ளதால், ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி வராமல் தடுக்கின்றன. ரத்த அழுத்தத்தைச் சீராக்குவதால், இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கின்றன.
தினமும் சிறு தானியங்களைப் பயன்படுத்துவோருக்கு இரண்டாம் வகை சர்க்கரை நோய் வருவதில்லை. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன. ஊட்டச்சத்துக் குறைவினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களைத் தடுக்க உதவுகின்றன.
சிறு தானிய உணவுகள் பெண்களுக்கு பித்தப் பையில் கற்கள் உருவாவதைத் தடுக்கின்றன. அதிக அளவு நார்ச்சத்து நிறைந்த சிறு தானியங்கள் புற்றுநோய் வருவதைத் தடுக்கின்றன. உடல் பருமன் மற்றும் எடையினைச் சீராக வைத்திருக்கவும் உதவுகின்றன.
சாகுபடி முறைகள்:
சிறு தானியங்கள் சாகுபடிக்கு குறைந்த அளவு நீரே தேவைப்படுகிறது. இறவை மற்றும் மானாவாரி நீர்நிலைகளில், நன்கு வளரக் கூடியவை. சிறு தானியங்களின் வயது குறைவு (75-90 நாள்கள்). மேலும், பூச்சி நோய் தாக்குதல் மற்று பயிர்களை விட குறைவு. அறுவடைக்குப் பின் தட்டைகளை, கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தலாம்.
மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் மற்றும் பொருள்கள்: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மூலம் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சிறு தானிய பயிர்களில் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்த திட்டமானது கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இத் திட்டத்தின் மூலம் சிறு தானியப் பயிர்கள் சாகுபடி செய்யும் 5 விவசாயக் குழுக்களுக்கு கல் நீக்குதல், தரம் பிரித்தல், உமி நீக்குதல், மாவு அரைத்தல், சளித்தல் மற்றும் சிப்பம் இடும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இக் குழுக்கள் நாமக்கல் மாவட்டத்தில், முத்துக்காப்பட்டி, சின்னப்பள்ளம்பாறை, ஆர்.புதுப்பட்டி, ராமநாயக்கன்பட்டி மற்றும் சின்னமணலி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. சிறு தானியங்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த இயந்திரங்களை குறைந்த வாடகைக்குப் பயன்படுத்தி பயன் பெறலாம்.
சிறு தானிய உணவுகள்: இத் திட்டத்தின் மூலம், ருசி மற்றும் ஆரைக்கால் சிறுதானிய உணவு என்ற பெயரில் சிறுதானிய அரிசி, மாவு, சத்துமாவு, அதிரசம், ரவை, லட்டு, மிக்சர், முறுக்கு, சிறுதானிய இட்லி பொடி மற்றும் நவதானிய பருப்புப் பொடி போன்ற பொருள்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது சிறு தானியங்களுக்கு நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் சிறு தானியப்பயிர்கள் சாகுபடியை மேற்கொண்டு கூடுதல் வருவாய் பெறலாம்.
மேலும், சிறுதானியப் பயிர்கள் சாகுபடி, உயர் விளைச்சல் ரகங்கள் மற்றும் மதிப்புக் கூட்டுதல் தொடர்பாக வேளாண் அறிவியல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/10/w600X390/grain.gif http://www.dinamani.com/agriculture/2017/aug/10/இதயத்தைப்-பாதுகாக்கும்-சிறுதானிய-உணவுகள்-2752437.html
2752435 விவசாயம் வளமான வருவாய் தரும் வான்கோழி வளர்ப்பு! Thursday, August 10, 2017 12:38 AM +0530 திருநெல்வேலி: தமிழகத்தில் கால்நடை வளர்ப்போருக்கு வளமான வருவாய் தரும் வகையில் வான்கோழி வளர்ப்பு விளங்கி வருகிறது. இதுதொடர்பாக கால்நடை பராமரிப்புத் துறையினர் கூறியது:
வான்கோழிகளை புறக்கடை வளர்ப்பு, மிதத்தீவிர முறை அல்லது மேய்ச்சலுடன் கொட்டகையில் வளர்ப்பு, ஆழ்கூள முறையில் கொட்டகையில் வளர்ப்பு, கம்பி வலை மேல் வளர்ப்பு ஆகிய முறைகளில் வளர்க்கலாம்.
புறக்கடை வளர்ப்பு: புறக்கடை வளர்ப்பு என்பது கிராமப்புறங்களில் விவசாயிகள் வீட்டுத் தோட்டங்களில் வான்கோழிகளை வளர்ப்பதைக் குறிக்கும். வீடுகளில் இருக்கும் நெல், அரிசி, குறுணை, கம்பு, சோளம், தவிடு, எஞ்சிய சமைத்த உணவு, சமையல் அறைக் கழிவுகள் ஆகியவை வான்கோழிகளுக்கு உணவாக அமைகின்றன. புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகளுக்குத் தானியங்கள், கீரைகள், களைகள் போதுமான அளவு கிடைத்து விடும். ஆனால், புரதச்சத்து தேவை நிறைவு பெறாது. இதை ஈடுகட்ட கடலைப் பிண்ணாக்கு, எள்ளுப் பிண்ணாக்கு, சூரியகாந்திப் பிண்ணாக்கு இவற்றில் ஏதாவது ஒன்றினைத் தண்ணீரில் ஊறவைத்து இத்துடன் சிறிதளவு தவிடு வகையினைச் சேர்த்து கொடுக்க வேண்டும். ஒரே சமயத்தில் அதிகமாக வைக்காமல் சிறிது சிறிதாகத் தீவனம் வைக்க வேண்டும்.
மேய்ச்சலுடன் கொட்டகையில் வளர்ப்பு: வியாபார முறையில் வான்கோழிப் பண்ணை அமைத்திட, மேய்ச்சலுடன் கொட்டகை கட்டி வளர்க்கும் முறை, புறக்கடை முறையைவிடச் சிறந்ததாகும். ஒரு ஆண் வான்கோழிக்கு கொட்டகையில் 5-க்கு 6 சதுர அடியும், ஒரு பெட்டை வான்கோழிக்கு சுமார் 4-க்கு 4 சதுர அடியும் இடவசதி தேவைப்படும். இந்தக் கொட்டகையில் நெல் உமி அல்லது கடலைத் தோல் போட்டு, ஆழ்கூளம் அமைத்து விட வேண்டும். சுமார் 100 வான்கோழிகள் கொண்ட பண்ணை அமைத்திட 20 ஆண் வான்கோழிகள் தேவை. இதற்காகச் சுமார் 20 அடி அகலம், சுமார் 25 அடி நீளம் கொண்ட ஒரு கொட்டகை அமைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கொட்டகையைச் சுற்றி சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பிற்கு கம்பி வலை கட்டப்பட்ட பகுதியில் மேய்ச்சலுக்கு விடலாம். புல் பூண்டுகள், களைகளை ஓரிரு நாள்களில் தின்று விடும். இந்த இடத்தில் அருகம்புல் கொண்டு வந்து போடலாம். கலப்புத் தீவனம் இரண்டு அல்லது மூன்று முறை தினமும் அளிக்கலாம்.
ஆழ்கூள முறை வளர்ப்பு: ஆழ்கூளம் அமைப்பதற்கு நெல் உமி அல்லது கடலைத் தோலை சிமெண்ட் தரையின் மீது ஆறு அங்குலத்திற்கு பரப்பவேண்டும். இம்முறையில் வான்கோழிகளை வியாபார நோக்கில் வளர்க்க வேண்டுமானால் குறைந்தது 200 வான்கோழிகள் கொண்ட பண்ணையை அமைக்க வேண்டும். இம் முறையில் 40 ஆண் வான்கோழிகளுக்கு, 160 பெட்டை வான்கோழிகள் என்ற விகிதத்தில் வளர்க்கலாம்.
கம்பி வலைச் சட்டங்களில் வளர்ப்பு: அதிகமாக மழைபெய்யும் இடங்களிலும், ஆழ்கூளம் காய்ந்த நிலையில் வைக்க முடியாத இடங்களிலும் கம்பிவலைச் சட்டங்களைப் பொருத்தி அதன் மேல் வான்கோழிகளை வளர்க்கலாம். இதற்கான கொட்டகையினை அமைப்பதை ஆழ்கூள முறையில் போன்றே கட்டிக் கொள்ள வேண்டும். ஆனால், சிமெண்ட் கான்கிரீட் கொண்ட தரை அமைக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் கோழிகளை கம்பி வலைச் சட்டங்களின் மேல் விட்டுத்தான் வளர்க்கப்போகின்றோம். பக்கவாட்டுச் சுவர், கம்பிவலைச் சட்டத்திற்கு மேல் 11/2 அடி உயரத்திற்கு அமைத்துக் கொள்ள வேண்டும். சட்டமானது ஒரு அங்குலத்திற்கு 2 அங்குலம் இடைவெளி கொண்ட கம்பி வலையினை 2 அடிக்கு 2 அடி மரச்சட்டங்களை அமைத்துக் கொண்டு அதன்மேல் பொருத்திவிட வேண்டும். அவற்றின் மீது வளர்ந்த வான்கோழிகளை வளர்த்திடலாம்.
கண்காணிப்பு வழிமுறைகள்: வான்கோழிகள் 7 முதல் 8 மாதங்களில் முட்டை இட ஆரம்பிக்கும். வான்கோழிக்கு எதிரிகள் நாய், நரி, கீரி, காட்டுப்பூனை, வீட்டுப்பூனை, காக்கை, கழுகு ஆகியவையாகும். வான்கோழிகள் பெரும்பாலும் சுயமாக முட்டைகளை அடைகாப்பது இல்லை. அடைகாக்கும் இயந்திரத்தின் மூலம் அல்லது நாட்டுக் கோழிகளைக் கொண்டு அடைகாக்கப்படுகிறது. முட்டைகளை மழை, பனிக்காலத்தில் 7 நாள் வரையிலும், காற்று இளவேனிற் காலத்தில் 6 நாள் வரையிலும், வெயில் காலத்தில் 4 நாள் வரையிலும் சேமித்துவைத்துப் பின் அடை வைக்க பயன்படுத்த வேண்டும். நாட்டுக் கோழிகளில் 7 முட்டை வரையிலும் அடை வைக்கலாம். அடைகாக்கும் நாள் 28 ஆகும்.
குஞ்சு பருவம் வளர்ப்பு முறை: வான்கோழி வளர்ப்பில் மிக முக்கியமான காலகட்டம் ஒரு மாதம் வரை வளர்ப்பதாகும். பொரித்த குஞ்சுகளை முடி உலர்ந்த பின் செயற்கை வெப்பமாக புரூடர் அமைத்து புரதம் நிறைந்த தீவன உணவு கொடுக்க வேண்டும். குளுகோஸ் கலந்த குடிநீரை வைக்க வேண்டும். வறுகடலை தூள் செய்து உணவாகக் கொடுக்கலாம். அவித்த முட்டையின் வெண்கரு மட்டும் எல்லா வகை தானியங்களுடன் கலந்து கொடுக்கலாம். தோப்புகள், விவசாய நிலங்கள், தரிசு நிலங்கள், மலர்த்தோட்டம், பழத்தோட்டம், தென்னந் தோப்புகள் இவற்றில் வான்கோழி வளர்க்கலாம். விவசாயத்தில் தீமை செய்யும் புழு, பூச்சி, கொசுக்களை உணவாக உட்கொண்டு பாதுகாக்கிறது. தென்னையில் உள்ள காண்டாமிருக வண்டு குப்பை கூளங்களில் முட்டை இட்டு புழுக்களை பெருக்கும் அந்த இளம்புழுக்களை வான்கோழி உணவாக உட்கொள்வதால் காண்டாமிருக வண்டு கட்டுப்படும்.
அரிசி, நெல்மணிகளை பெருமளவு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். குடிநீரை நிழலான இடங்களில் வைக்க வேண்டும். வெயில் பட்டு குடிநீர் சூடாவதைத் தவிர்க்க வேண்டும்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/10/w600X390/vaankozhi.gif http://www.dinamani.com/agriculture/2017/aug/10/வளமான-வருவாய்-தரும்-வான்கோழி-வளர்ப்பு-2752435.html
2748562 விவசாயம் நோய்க் கிருமிகளைகட்டுப்படுத்தும் இயற்கை முறை பயிர் சாகுபடி Thursday, August 3, 2017 12:50 AM +0530 வேலூர்: பயிர்களுக்கு இயற்கை சார்ந்த நோய் நிர்வாக முறைகளைக் கையாளுவதன் மூலம் பயிர்களைத் தாக்கும் கிருமிகள், நோய்களைக் கட்டுப்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு தீங்கில்லாத, நஞ்சில்லாத விளைபொருள்களை சாகுபடி செய்யலாம்.
இதுகுறித்து வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரத்தில் உள்ள அரசு வேளாண்மை ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர்கள் த.தினகரன், மு.பாண்டியன் ஆகியோர் கூறியதாவது:
மனிதர்களைப் போல பயிர்களையும் நோய்கள், பூச்சிகள் தாக்குகின்றன. இதனால் 10 முதல் 15 சதவிகிதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக நெற்பயிரில் தோன்றும் பழுப்புப் புள்ளி நோயினால் 1943-ஆம் ஆண்டில் வங்க தேசத்தில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. அதேபோல, 1918-இல் தஞ்சை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட நெல் குலை நோய் பல்வேறு கால கட்டங்களில் பெரும் சேதத்தை விளைவித்துள்ளன. இத்தகைய இழப்பைத் தவிர்க்க பல்வேறு ரசாயன மருந்துகளே பயன்படுத்தப்படுகின்றன.
ரசாயன மருந்துகளைக் கொண்டு பயிர்களை நோய்களை கட்டுப்படுத்தும்போது மண், காற்று, நீர் மாசடைவதுடன் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள், பறவைகள், விலங்குகள் பாதிக்கப்படுகின்றன, மேலும் மனிதர்களுக்கும் கேடு உண்டாகிறது. எனவே சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், தீங்கு விளைவிக்காத, லாபகரமான மாற்றுப் பயிர் பாதுகாப்பு முறைகளைக் கையாளுதல் அவசியம். அந்த வகையில், இயற்கை வழி பயிர் நோய் நிர்வாக முறைகளில் நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர் ரகங்களைச் சாகுபடி செய்தல், சாகுபடி முறையில் சில மாற்றங்களைச் செய்தல், நன்மை தரும் நுண்ணுயிர்களைப் பயன்படுத்துதல், தாவரப் பொருள்களைப் பயன்படுத்துதல் முக்கியமானதாகும்.
முதலாவதாக, நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட பயிர் ரகங்களைத் தேர்வு செய்து விதைத்தல், நோயின் தாக்குதல் அதிகம் உள்ள நிலங்களில் எதிர்ப்புத் திறனுடைய ரகங்களைச் சாகுபடி செய்வது நல்லது. எடுத்துக்காட்டாக, நெல் குலை நோய்க்கு ஆடுதுறை 36, ஆடுதுறை 39, ஆடுதுறை 40, கோ 43, கோ 44, கோ 45, ஏஎஸ்டி 18, ஐஆர் 20, ஐஆர் 36, ஐஆர் 62, ஐஆர் 64 ஆகிய ரகங்களும், உளுந்து மஞ்சள் தேமல் நோய்க்கு வம்பன் 4, வம்பன் 6 ரகங்களும், நிலக்
கடலை டிக்கா இலைப்புள்ளி நோய்க்கு ஏஎல்ஆர் 1, ஏஎல்ஆர் 3, விஆர்ஐ 5 ஆகிய ரகங்களும், நிலக்கடலை துரு நோய்க்கு ஏஎல்ஆர் 1, ஏஎல்ஆர் 2, ஏஎல்ஆர் 3, விஆர்ஐ 4, விஆர்ஐ 5 ஆகிய ரகங்களும், கரும்பு செவ்வழுகல் நோய்க்கு கோ 62198, கோ 7704, கோக 8001, கோக 8201 ஆகிய ரகங்களும், வாழை வாடல் நோய்க்கு பூவன் ரகம், வெண்டை மஞ்சள் நரம்புத் தேமல் நோய்க்கு அர்க்கா அனாமிகா, பர்பானி கிராந்தி ஆகிய ரகங்கள் எதிர்ப்புத் திறன் கொண்டவை.
சாகுபடி முறையில் மாற்றம்: ஆழமான கோடைஉழவு செய்யும்போது மண்ணின் ஆழத்தில் தங்கியிருக்கும் நோய்ப் பூசண வித்துகள் மண்ணின் மேற்பகுதிக்கு கொண்டு வரப்பட்டு வெப்பத்தினால் அழிக்கப்படுகின்றன. இம்முறையில் மண்வழிப் பரவும் வாடல், வேர் அழுகல், தண்டு அழுகல் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
இயற்கை எரு, பசுந்தாள் உரம், கம்ப்போஸ்ட், கரும்பு ஆலைக்கழிவு, மக்கிய தென்னை நார்க்கழிவு, வேப்பம் புண்ணாக்கு முதலியவற்றை பரிந்துரைக்கப்படும் அளவுக்கு மண்ணில் இடும்போது மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் பெருகுவதுடன் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
குறிப்பிட்ட பருவத்தில் விதைத்தாலோ அல்லது நடவு செய்தாலோ ஒரு சில நோய்களின் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
எனவே இப்பருவத்தைத் தவிர்த்து மற்ற பருவங்களில் சாகுபடி செய்யலாம். உதாரணமாக குறுவைப் பட்ட நெல்லில் குலை நோயின் தாக்குதலும், கோடைப் பருவத்தில் இலைப்புள்ளி நோய் தாக்கம், கரும்பில் செவ்வழுகல் நோய் தாக்கம் குறைவாக காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
உளுந்து, பாசிப் பயறு விதைத்துள்ள நிலத்தைச் சுற்றி தடை பயிராகச் சோளம், மக்காச்சோளம், கம்பு விதைத்தால் மஞ்சள் தேமல் நோய் பரப்பும் வெள்ளை ஈக்கள் தடுக்கப்பட்டு நோயின் தீவிரம் குறைகிறது.
எள் பயிரில் துவரை ஊடுபயிராக சாகுபடி செய்யும் போது பூவிலை நோயின் தீவிரம் கட்டுப்படுத்தப்படுகிறது. பயிரின் இடைவெளி அதிகமாக இருக்கும் நிலங்களில் மட்டைக் காய்ச்சல் என்றழைக்கப்படும் வாழை இலைப் புள்ளி நோயின் தீவிரம் குறைந்து காணப்படுகிறது.
நோய் நிர்வாகத்தில் களைக் கட்டுப்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. நோய்க் காரணி நுண்ணுயிர்கள் மற்றும் நோய் பரப்பும் பூச்சிகள் களைச் செடிகளில் தங்கி வாழ்கின்றன. களைச்செடிகளை அழித்து நிலத்தைச் சுத்தமாக பராமரிக்கும் போது பயிர்களில் தோன்றும் இலைப்புள்ளி, இலைக்கருகல், நச்சுயிரி நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
நோயுள்ள செடிகளை முக்கியமாக வாடல், வேரழுகல், தண்டழுகல், நச்சுயிர் தாக்கிய செடிகளை அவ்வப்போது பிடுங்கி அழிப்பதன் மூலமும் நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்துவதோடு, நோய் பரவுவதையும் தடுக்கலாம்.
பூச்சிகளைக் கவரும் பொறிகளும் நோய் நிர்வாகத்துக்கு உதவுகின்றன. ஒரே பயிரைத் தொடர்ந்து சாகுபடி செய்யாமல், மாற்றுப் பயிரை சுழற்சி முறையில் சாகுபடி செய்வது நல்லது.
எடுத்துக்காட்டாக வாழை வாடல் நோயை கட்டுப்படுத்த நெல் அல்லது கரும்பை பயிர்சுழற்சி முறையில் பயிரிட்டு நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம். கரும்பு செவ்வழுகல் நோயைக் கட்டுப்படுத்த நெல் அல்லது பசுந்தாள் உரம் சாகுபடி செய்யலாம்.
பயறு வகைப் பயிர்களில் தோன்றும் வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த சிறு தானியப் பயிர்களை சுழற்சி முறையில் சாகுபடி செய்யலாம். இயற்கை வழி நோய் நிர்வாகத்தில் வகை தாவரப் பொருள்களைப் பயன்படுத்துதல் ஆகும். இம் முறையில் பெரும்பாலும் வேம்பு சார்ந்த பொருள்களே பயன்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவிகிதம் அல்லது வேப்பெண்ணெய் 3 சதவீதக் கரைசலைப் பயன்படுத்தி நெல் இலையுறைக் கருகல், நச்சுயிர் நோய், உளுந்து, பாசிப்பயறில் தோன்றும் சாம்பல் உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்தலாம். ஏக்கருக்கு 60 முதல் 80 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடுவதன் மூலம் நெல் இலையுறைக் கருகல், உளுந்து, பாசிப்பயறு, எள், பருத்தியில் வேர் அழுகல் நோய், வெற்றிலை வாடல் நோய்களைக் கட்டுப்படுத்த முடியும்.
தென்னையில் வாடல் நோயின் தீவிரத்தைக் குறைக்க மரத்துக்கு 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். இதைத் தவிர கருவேல இலைப் பொடிச் சாறு 5 சதவிகிதம், நெய்வேலி காட்டாமணக்கு இலைச்சாறு 5 சதவிகிதம் தெளிப்பதன் மூலம் நெல் கதிர் உறை அழுகல் நோயின் தீவிரத்தையும், தென்னை அல்லது சோள இலைப் பொடிச் சாறு 10 சதவிகிதம் தெளிப்பதன் மூலம் நிலக்கடலை மொட்டுக் கருகல் அல்லது வளையத் தேமல் நோயின் தீவிரத்தை குறைக்க முடியும்.
இதுபோன்ற இயற்கை சார்ந்த நோய் நிர்வாக முறைகளைக் கையாளுவதன் மூலம் நோய்களை சிறப்பான முறையில் கட்டுப்படுத்துவதுடன் சுற்றுப்புறச் சூழலுக்கு தீங்கில்லாத, நஞ்சில்லாத விளைபொருள்களைக் பெறுவதோடு அதிக லாபம் ஈட்ட முடியும் என்றனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/3/w600X390/plant.jpg http://www.dinamani.com/agriculture/2017/aug/03/நோய்க்-கிருமிகளைகட்டுப்படுத்தும்-இயற்கை-முறை-பயிர்-சாகுபடி-2748562.html
2748561 விவசாயம் செம்மறியாடுகள் வளர்ப்பில் அதிக லாபம் ஈட்ட உதவும் மேய்ச்சல் தரை Thursday, August 3, 2017 12:49 AM +0530 நாமக்கல்: மேய்ச்சல் தரை அமைத்து செம்மறியாடுகளை வளர்க்கும் போது செலவு குறைவதுடன், தரமான பசுந்தீவனமும் ஆடுகளுக்குக் கிடைக்கிறது. அதன் மூலம் துரித வளர்ச்சியை ஆடுகள் எட்டுவதால், அதிக லாபத்துக்கு ஆடுகள் விற்பனையாகும் என நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் என்.அகிலா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தது: ஆடு வளர்ப்பைப் பொறுத்தவரை மேய்ச்சல் நிலம் இருந்தால் மட்டுமே சாத்தியம். ஆடுகளில் பல்வேறு வகை இருந்தாலும், செம்மறி ஆடுகளின் தீவன மேலாண்மையில் மேய்ச்சல் நிலம் பெரும் பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் மிகக் குறைந்த அளவிலேயே மேய்ச்சல் நிலம் உள்ளது.
மேலும், அவற்றில் இருந்து 4 முதல் 6 மாதம் வரைதான் பசுந்தீவனம் கிடைக்கிறது. எனவே, செம்மறியாடுகளை அதிக எண்ணிக்கையில் வளர்த்து பயன்பெறும் வகையில், தரமான மேய்ச்சல் நிலங்களை உருவாக்கி, அவற்றைப் பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மரம் சார்ந்த மேய்ச்சல் நிலம் உருவாக்கும் போது, ஆண்டு முழுவதும் பசுந்தீவனம் கிடைக்க வாய்ப்புள்ளது. நீலம், கருப்பு மற்றும் வெள்ளை, கொழுக்கட்டைப்புல், மார்வெல்புல், ஊசிப்புல் போன்ற தீவனப்புல் வகைகளும், முயல் மசால், சிராட்ரோ, நரிபயறு, வேலி மசால், சங்கு புஷ்பம் போன்ற பயறு வகை தீவனப் பயிர்களும், மேய்ச்சல் நிலத்துக்கு ஏற்றவை.
மேய்ச்சல் நிலம் தயாரிக்கும் முறை: பருவ மழை தொடங்கியவுடன், நிலத்தை நன்கு உழுது ஹெக்டேருக்கு 750 கிலோ தொழு உரம் அல்லது 10 டன் குப்பை எரு, 10 பாக்கெட் அசோஸ்பைரில்லம், 10 பாக்கெட் ரைசோபியம் இடவேண்டும்.
மேலும், 55 கிலோ பாக்டீரியா, 150 கிலோ சூப்பர் பாஸ்பேட், 23 கிலோ பொட்டாஷ் இட வேண்டும். தொடர்ந்து, நீல கொழுக்கட்டைப்புல் 6 கிலோ, முயல் மசால் 3 கிலோ, சிராட்ரோ 2 கிலோ, சங்குப்பூ 2 கிலோ என்ற அளவில் ஒரு ஹெக்டேருக்கு விதைகளைக் கலந்து பரவலாகத் தூவி விதைக்க வேண்டும்.
அதே நிலத்தில், வரிசைக்கு வரிசை ஒரு மீட்டர் இடைவெளியில், சூபாபுல், அகத்தி, சித்தகத்தி போன்ற மரங்களையும் கருவேல், வெள்வேல், கொடுக்காப்புலி போன்ற மரக்கன்றுகளையும் 6 மீட்டர் இடைவெளியில் குழி எடுத்து நட வேண்டும்.
மேய்ச்சல் நிலத்தைச் சுற்றி நான்கு புறங்களிலும் 5 மீட்டர் இடைவெளியில், அனைத்து வகை தீவன மரங்களையும் மாற்றி மாற்றி நட வேண்டும். விதைத்த மூன்றாம் மாதத்தில் இருந்து கொழுக்கட்டைப் புல், சிரோட்ரோ, முயல் மசால் போன்றவை நன்கு வளர்ந்து மேய்ச்சலுக்குப் பயன்படும்.
ஹெக்டேருக்கு 40 டன் பசுந்தீவனம்: இரண்டாம் ஆண்டில் இருந்து தீவன மரங்களில் இருந்து பசுந்தீவனம் கிடைக்கும். ஒரு ஹெக்டேருக்கு மேய்ச்சல் நிலத்திலிருந்து மானாவாரியில் 35 முதல் 40 டன்கள் பசுந்தீவனம் பெறலாம்.
இதுபோன்ற மரம் சார்ந்த ஒரு ஹெக்டேர் மேய்ச்சல் நிலத்தில் 20 செம்மறியாடுகளை சிறந்த முறையில் பராமரிக்கலாம்.
மா, பலா, கொய்யா, புளி, நாவல், இலந்தை போன்ற நன்கு வளர்ந்த மரங்கள் கொண்ட பழத்தோட்டத்திலும், மரங்களுக்கு இடையில் தீவனப்பயிர்கள் சாகுபடி செய்து செம்மறியாடுகளை நேரடியாக மேய்ச்சலில் வளர்க்கலாம். ஆடுகளுக்கு மரத்திலிருந்து உதிர்ந்த இலைகளும், கூடுதல் தீவனமாகக் கிடைக்கும்.
ஆகவே, மேய்ச்சல் தரை அமைத்து செம்மறியாடுகளை வளர்க்கும் போது செலவு குறைவதுடன், தரமான பசுந்தீவனமும் ஆடுகளுக்குக் கிடைக்கிறது. அதன் மூலம் துரித வளர்ச்சியை ஆடுகள் எட்டுவதால், அதிக லாபத்துக்கு விற்பனையாவதற்கு வாய்ப்பு உள்ளது. மேய்ச்சல் தரை அமைப்பது செம்மறியாடுகளுக்கு இன்றியமையாத ஒன்று என்றார்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/3/w600X390/sheep.jpg http://www.dinamani.com/agriculture/2017/aug/03/செம்மறியாடுகள்-வளர்ப்பில்-அதிக-லாபம்-ஈட்ட-உதவும்-மேய்ச்சல்-தரை-2748561.html
2744554 விவசாயம் அதிக வருவாய் தரும் பீர்க்கை சாகுபடி Thursday, July 27, 2017 12:50 AM +0530 கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 9,500 ஹெக்டேர் பரப்பளவில் காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, குறைந்த முதலீட்டில், நீரில் அதிக வருவாய் தரும் பீர்க்கை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடலாம்.
வகைகள்: கோ-1, கோ-2, அர்கா ப்ரோசன் மற்றும் தனியார் வீரிய ஒட்டுகள் உள்ளன.
மண் வளம்: நல்ல வடிகால் வசதி கொண்ட மணல் கலந்த களிமண், நடுநிலையான கார அமிலத் தன்மை கொண்ட வரை மண் பீர்க்கை பயிர் சாகுபடிக்கு ஏற்றது.
பருவம் மற்றும் விதை அளவு:
ஜூலை மற்றும் ஜனவரி மாதம் ஏற்ற சாகுபடி பருவம் ஆகும். ஹெக்டேருக்கு 1.5 கிலோ கிராம் விதைகளைப் பயன்படுத்தலாம்.
விதை நேர்த்தி: சூடோ மோனஸ் 10 கிராம் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் விதைக்கு விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதன்மூலம் மண் மூலம் ஏற்படும் அனைத்து நோய்களையும் எளிதில் கட்டுப்படுத்தலாம்.
நிலத்தைத் தயார் படுத்துதல் மற்றும் விதைப்பு: நிலத்தை நன்கு உழுது 30 செ.மீ. - 30 செ.மீ.- 30.செ.மீ. அளவு 2.5-2 மீ இடைவெளி விட்டு குழிகள் எடுத்து குழிக்கு 5 என்ற அளவில் விதைத்து, பின் 2 செடிகள் என்ற அளவில் வைக்க வேண்டும்.
ஒவ்வொரு குழிக்கும் 100 கிராம் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து அளிக்க வேண்டும். மேலும், நுண்ணுயிர் உரங்களை ஹெக்டேருக்கு இரண்டு கிலோ கிராம் மற்றும் வேப்பம் பிண்ணாக்கு 10 கிராம் இட வேண்டும்.
களை நிர்வாகம்: மண்வெட்டி உதவியுடன் களைகளை அகற்ற வேண்டும். மேலும், வளர்ச்சி ஊக்கியான எத்தரால் 250 பி.பி.எம். வரை இடைவெளியில் நான்கு முறை அளிக்க வேண்டும்.
பயிர்ப் பாதுகாப்பு: பல்வேறு பட்டாம் பூச்சிகளால் நோய் தாக்கினாலும், பின் வரும் பூச்சிகளின் தாக்குதல் மிக முக்கியமானதாகும்.
வண்டுகள், புழுக்கள், பழ ஈக்கள்: இவற்றை கட்டுப்படுத்த டைக்ளோர்வோஸ் 76% ஈ.சி.6.5 மி.லி. அல்லது டிரைகுளோரோபன் 50% ஈ.சி.1.0 மி.லி. தெளிக்கவும். தாமிரம் மற்றும் கந்தகத் தூள் ஆகியவை தாவர நச்சுத் தன்மை கொண்டவை.
நோய்கள்: சாம்பல் நோய்: 1 லிட்டர் தண்ணீரில் டைனோகேப் 1 மி.லி அல்லது கார்பன்டாசிம் 0.5 கிராம் கலந்து தெளிப்பதன் மூலம் சாம்பல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
அடிச் சாம்பல் நோய்: 1 லிட்டர் தண்ணீரில் மேன்கோசெப் அல்லது குளோரோதாலோனில் 2 கிராம் கலந்து 10 நாள் இடைவெளியில் 2 நாள்கள் தெளிக்க வேண்டும்.
மகசூல்: ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 14 முதல் 15 டன் வரையில் மகசூல் ஈட்டலாம்.
மேலும் விவரங்களுக்கு, கிருஷ்ணகிரியை அடுத்துள்ள எலுமிச்சங்கிரி கிராமத்தில் செயல்பட்டு வரும் வேளாண் அறிவியல் நிலையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் தோ.சுந்தராஜை அஞ்சல் மூலமோ அல்லது நேரிலோ தொடர்பு கொள்ளலாம்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/27/w600X390/RidgeGourd.jpg http://www.dinamani.com/agriculture/2017/jul/27/அதிக-வருவாய்-தரும்-பீர்க்கை-சாகுபடி-2744554.html
2744553 விவசாயம் மல்லிகை சாகுபடியில் உயரிய தொழில் நுட்பம் Thursday, July 27, 2017 12:49 AM +0530 விழுப்புரம்:

குண்டுமல்லிகைச் சாகுபடியில் உயரிய தொழில் நுட்பம்:
மலர்களின் அரசி என்றழைக்கப்படும் மல்லிகை தமிழகத்தில் 15 ஆயிரம் எக்டர் பரப்பளவில் பயிரடப்பட்டு சுமார் 7 லட்சத்து 22 ஆயிரம் டன் விளைச்சல் வழங்கி வருகிறது. ராமநாதபுரம் குண்டுமல்லி, ராமாபாணம், மதன்பான், ஒற்றை மொகரா, இரட்டை மொகரா, இருவாச்சி, கஸ்தூரி மல்லி, ஊசிமல்லி, சூஜிமல்லி, அர்க்கா, ஆராதனா உள்ளிட்ட ரகங்கள் இந்தியாவில் பரவலாக பயிரப்பட்டு வருகிறது.
இதில், ராமநாதபுரம் குண்டுமல்லி ரகமே வணிக ரீதியாக தமிழகத்தில் சாகுபடி செய்ய ஏற்ற ரகமாகும். மலர் பயிர்களில் அறிவு சார்ந்த சொத்துரிமை நமது குண்டு மல்லிகைப் பூவிற்கே கிடைத்துள்ளது. மதுரை மல்லிக்கே முதன் முதலில் புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
வணிகரீதியாக பயிரிடப்படும் குண்டு மல்லிகையில் உயர் விளைச்சல் பெற நீர்ச்சிக்கனத்தையும், பயிருக்குத் தேவையான நீர்வழி உரப்பாசனத்தை மேற்கொள்ளவும், நவீன துல்லியப்பண்ணை சாகுபடி முறைகளைக் கடைபிடிப்பது இன்றைய சூழ்நிலையில் அவசியமாகிறது.
துல்லியப் பண்ணைத் திட்டத்தின் கீழ் உழிக்கலப்பை, சட்டிக்கலப்பை, ரொட்டவேட்டர் உழவினைப் பயன்படுத்த வேண்டும். இழுவை இயந்திரத்தில் இணைக்கப்பட்ட மட்ட பலகை கொண்டு நிலத்தை சமன்படுத்த வேண்டும். சொட்டுநீர் பாசன முறை அவசியமாகும்.
மணிக்கு 4 லிட்டர் தண்ணீர் சொட்டக்கூடிய டிரிப்பர்களை ஒரு மீட்டர் இடைவெளியில் அமைக்க வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள மான்யத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் சொட்டு நீர் பாசனத்தை அமைத்துக்கொள்ளலாம்.
துல்லியப்பண்ணை திட்டத்தில் 1.2-1.0 என்ற பயிர் இடைவெளி கடைபிடிக்கப்படுவதால், ஏக்கருக்கு 3,320 செடிகள் நடவு செய்யலாம். இதன் மூலம் ஏக்கருக்கு 760 செடிகள் அதிகமாக நடவு செய்யப்படுகிறது. பாரம்பரிய முறையில் நடவு செய்யும்போது குழி ஒன்றுக்கு 5 கிலோ வீதம் தொழு உரம் மட்டுமே அளிக்கப்படுகிறது.
ஆனால், உயரிய தொழில் நுட்ப முறையான துல்லியப்ண்ணை முறையில், ஒரு குழிக்கு நன்கு மக்கிய தொழு உரத்துடன், 250 கிராம் வேப்பம் பின்னாக்கு 100 கிராம், மண்புழு உரம் மற்றும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டீரியா, பொட்டாஷ் பேக்டீரியா ஆகியவை ஏக்கருக்கு முறையே 1 கிலோ வீகிதத்திலும், நுண் உயிர் இயற்கை பூச்சி, பூஞ்சான் உயிரி கொல்லிகளான சூடோமோனஸ் புளுரேஜன்ஸ், டிரைக்கோ டெர்மோ, டெர்மா, விரிடி, பேஜில்லஸ் சப்லிடிஸ் ஆகியவை முறையே ஏக்கருக்கு 1 கிலோ விகிதத்திலும் கடைசி உழவில் அளிக்கப்படும்.
நீர்வழி உரமிடுதல் அவசியம்: நீர்வழி உரமிடுதலில் துல்லியப்பண்ணையில் மிகமிக முக்கியமானதாகும். பரிந்துரைக்கப்பட்ட 100 சதவிகித உர அளவினையும் நீர்வழி உரமாக சொட்டு நீர்பாசனத்தில் அமைக்கப்படும் உரத்தொட்டி அல்லது உரங்கள் உறிஞ்சும் வென்சுரி மூலம் வாரம் ஒரு முறை, பயிரின் வளர்ச்சியைப் பொருத்து, விடாமல் செலுத்த வேண்டும்.
நீர்வழி உரமிடுதல் நீரில் கரையக்கூடிய உரங்களான பாலிபீடு, பொட்டாசியம் நைட்ரேட், யூரியா ஆகியவற்றை செடி ஒன்றுக்கு 160 கிராம், 200 கிராம், 20 கிராம் முறையே செடிகள் வளர்ச்சிப் பருவத்திற்கேற்ப பிரித்து வாரம் ஒரு முறை, சொட்டு நீர் பாசனத்தின் மூலம் செலுத்த வேண்டும். மூன்று நாளுக்கு ஒரு முறை சொட்டு நீர் பாசனம் செய்ய வேண்டும்.
உயிர் ஊக்கிகள்: துல்லியபண்ணைச் சாகுபடியில் உயிர் ஊக்கிகளான பஞ்சகவ்யா 3 சதவீதம், ஹியுமிக் அமிலம் 0.4 சதவீதம் கரைசலை செடிகளுக்கு மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். இதனால், பூக்களின் தரம் மேம்படுவதோடு, உற்பத்தியும் அதிகரிக்கும். பருவமில்லா காலங்களிலும், அதாவது மார்க்கெட்டுக்கு பூக்கள் வராதபோதிலும், 60 சதவீதம் பூக்களைப் பெறவும் இவ்வுயூர் ஊக்கிகள் பயன்படும். இந்த உயிர் ஊக்கி கரைசலை வடிகட்டி வேர்களிலும் செலுத்தலாம்.
பூச்சிக்கொல்லிகள்: மல்லிகை சாகுபடியில் பூச்சி, நோய் மேலாண்மை மிகவும் முக்கியம். மொட்டிகளை துளைத்து சாப்பிடும் மொட்டுப்புழுக்கள் ஏராளமான முட்டைகளிட்டு மொட்டுகளின் வடிவத்தையே மாற்றிவிடும்.
மலர் ஈக்கள் இலைகளையும் கிளைகளையும் ஒன்றினைத்து இலைகளின் பச்சையத்தை உறிஞ்சி அதிகப் பொருளாதார சேதத்தை ஏற்படுத்தும்.
இலைப் பிணைக்கும் புழுக்களை கட்டுப்படுத்த 1 லிட்டர் தண்ணீருக்கு புரபினோபாஸ் 0.5 மில்லி அல்லது ஸ்பினோசாட் மருந்துகளை தெளித்து கட்டுப்படுத்தலாம்.
இப்போது அதிக வெப்பநிலை என்பதால் இலையின் அடிப்பகுதியில் நூல்படையினை ஏற்படுத்தி பச்சையத்தை உறிஞ்சுவிடும். செம்பொன்சிலந்திகள் இதழ்களில் பழுப்பை ஏற்படுத்தி பூக்களை பாதிக்கும். வெண்பட்டு சிலந்தி பூச்சிகளை கட்டுப்படுத்த 0.03 சதவீதம் அசாடிராக்டின் என்ற தாவர பூச்சிக்கொல்லியுடன் 15 நாள்கள் இடைவெளியில் டைக்கோபால் மருந்தினை 1.5 மில்லி மற்றும் ப்ரெப்ர்கைட் மருந்து 2 மில்லி வீதம் கலந்து தெளிப்பதால் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். பூஞ்சான் நோயினை கட்டுப்படுத்த சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத உயிரியல் கலைவைகளான பேசில்லஸ் சப்லிடிஸ் அல்லது சூடோமோனஸ் புளுரோசன்ஸ் 0.5 சதவீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
இவ்வாறு துல்லிய பண்ணை சாகுபடியில் மல்லிகைப் பயிரிட்டால் நிச்சயம் ஒரு ஏக்கருக்கு 4 முதல் 5 டன்கள் ஏற்றுமதி தரம் வாய்ந்த பூக்களைப் பெற முடியும். செடிகளின் வளர்ச்சி, பூக்களின் மணம், நிறம் தரத்தின உயர்த்த 15 நாள்களுக்கு ஒரு முறை பயிர் வளர்ச்சி ஊக்கிகளான நைட்ரோ பென்சன் 24 சதம் வி.வி 2000 பிபிஎம் அல்லது 0.0001 சதம் ஜிப்ராலிக் அமிலம் 1000 பிபிஎம் அல்லது விட்டமின்களுடன் கலந்து தெளித்து பயன்பெறலாம்.
பொதுவாக குண்டு மல்லைகை நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் கவாத்து செய்யப்பட்டு உரமிடப்படும். தற்போது நவீன ஆராய்ச்சியால் புதிய முறைகளையும் வேளாண் துறை கண்டறிந்துள்ளது. அதனை கேட்டறிந்து பயன்பெறலாம்.
இந்த முறைகளை கடைபிடித்தால், வெளிநாட்டு ஏற்றுமதிக்கும், உள்நாட்டு தேவைகளுக்குமான தரமான மல்லிகை மரர்களை உற்பத்தி செய்து அதிக வருவாய் பெற முடியும்.
மேலும், விவரங்களுக்கு தங்கள் பகுதி தோட்டக்கலைத்துறை, வேளாண்துறையினரை தொடர்புகொள்ளலாம் என்று, சென்னை தோட்டக்கலை துணை இயக்குநர் (ஓய்வு) எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். (செல்.72009 95619)

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/27/w600X390/jasmine.jpg http://www.dinamani.com/agriculture/2017/jul/27/மல்லிகை-சாகுபடியில்-உயரிய-தொழில்-நுட்பம்-2744553.html
2740363 விவசாயம் வாழையில் வாடல் நோய் Thursday, July 20, 2017 02:39 AM +0530  

மேலூர்: வாழையைத் தாக்கும் பனாமா வாடல் நோய் விவசாயிகளுக்கு மிகப்பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. ஆரம்ப நிலையில் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால், பொருளாதார சேதத்தை தவிர்க்கலாம் என மதுரை வேளாண் கல்லூரியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தினர் தெரிவிக்கின்றனர்.
வாழையில் இலைகள் கருகி, மட்டைகள் முறிந்து வாழை மரத்தில் துணியை சுற்றிக் கட்டிவிட்டது போல காட்சியளிக்கும். முதலில் இலையின் ஓரத்தில் மஞ்சள் நிறாகக் கணப்படும். பின்னர் இலையின் மையப் பகுதி வரை மஞ்சள் நிறாக மாறி, தொடர்ந்து கருகத் தொடங்கும். இதனால், வாழை மட்டைகள் முறிந்து தொங்கும். வாழை கிழங்கை குறுக்கே வெட்டிப் பார்த்தால் உள்பகுதியில் மஞ்சள் செம்பழுப்பு நிறாக காணப்படும்.
மரத்தில் குறுத்து இலை மஞ்சள் நிறாகி விரைப்பாக நிற்கும். வாழை தண்டை வெட்டிப் பார்த்தால் நீர் உறிஞ்சும் திசுக்கள் நிறம் மாறி பூஞ்சானங்கள் நிறைந்திருக்கும். இதை வெடிவாழை நோய், பனாமா வாடல் நோய் என அழைக்கின்றனர்.
பனாமா நோய் தடுப்பு: நேந்திரன், பூவன் ரகங்கள் வாடல் நோய் எதிர்ப்புத் திறனுள்ளவை. ரஸ்தாளி, மொந்தன், கற்பூரவள்ளி மற்றும் பச்சை நாடன் ரகங்களை இந்நோய் எளிதாக தாக்கும். வாழை கன்று பயிரிடும்போது நோய் தாக்காத ஆரோக்கியமான கன்றுகளையே தேர்வு செய்ய வேண்டும். கன்றின் கிழங்குகளை பார்த்து நோய் பாதிப்பை தெரிந்து கொள்ளலாம். விதை கிழங்கில் செந்நிற குறிகள் இருப்பதை சீவிவிட வேண்டும். கிழங்கை களிமண் கரைசலில் நனைத்து, குழியில் கார்போபியுரான் குருணை மருந்தை தூவி நடவு செய்தால், நூற்புழு தாக்குதலை தவிர்க்கலாம். மேலும் வாடல் நோய் தாக்குதல் கட்டுப்படும்.
ஒரு ஹெக்டேருக்கு அல்லது குழிக்கு ஒரு கிலோ வேப்பம் பிண்ணாக்கு மற்றும் குழிக்கு ஐந்து கிலோ சர்க்கரை ஆலைக் கழிவு இடவேண்டும். அமிலப்பாங்கான நிலத்தில் இந்நோயின் தாக்குதல் அதிகம் இருக்கும். எனவே, ஒன்று முதல் 2 கிலோ சுண்ணாம்பு மண் இட வேண்டும். வாடல் நோய் காரணி நீண்ட காலம் மண்ணில் தங்கியிருக்கும். சல்லி வேர்கள் வழியாக வாழை மரத்தில் புகுந்துவிடும். மேலும் பாசன நீரின் மூலமாகவும் இந்நோய் பரவுகிறது. எனவே, மழை காலத்தில் நிலத்தில் நீர் தேங்காமல் நன்கு வடித்துவிட வேண்டும். சொட்டு நீர்ப்பாசன முறையே சிறப்பானதாகும்.
நோய் பாதித்த பகுதியில் உயிரியல் முறையில் நோய் தடுப்பு. உயிர் கொல்லியான சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ்கொண்டு வாழைகன்றுக்கு 10 கிராம் அளவில் விதை நேர்த்தி செய்யலாம். சூடோமோனாஸ் ப்ளுசன்ஸை ஹெக்டேருக்கு 2.5 கிலோ வீதம் 50 கிலோ மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரத்துடன் கலந்து, பத்து பதினைந்து நாட்கள் நிழலில் உலரவைத்து நிலத்தில் போடுவதன் மூலம் வாடல் நோயை கட்டுப்படுத்தலாம்.
சூடோமோனாஸ் கரைசலை 60 மில்லி கேப்சூஸþலில் நிரப்பி வாழை கிழங்கில் துளையிட்டு, அதில் கேப்சூளை வைத்து களிம
நோய் தாக்கம் தீவிரமானால்: கார்பண்டாசிம் 0.2 சதம் அல்லது புரொபினோசோல் 0.1 சதம் என்ற பூஞ்சான கொல்லியை கன்று நடவான 5 மாதம் கழிந்து இருமாத இடைவெளியில் மரத்தைச் சுற்றி நீரில் கலந்து மண் நனையுமாறு ஊற்ற வேண்டும்.
வெடிவாழை அறிகுறி தென்பட்டால்... அனைத்து மரங்களுக்கும் கார்பண்டாசிம் 2 சதம் கரைசலை ஊசிமூலம் 3 மில்லி அளவில் கிழங்கில் செலுத்த வேண்டும்.
மருந்து கரைசலுக்குப் பதில், 60 மில்லி கார்பண்டாசிம் நிரப்பிய குப்பியை கிழங்கில் 7 மில்லிமீட்டர் துளையிட்டும் செலுத்தலாம் என மதுரை வேளாண் அறிவியல் மைய பேராசிரியர்கள் க.மனோண்மணி, பா.உஷாராணி, இரா.அருண்குமார், செல்வி ரமேஷ் ஆகியோர் தெரிவித்தனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/20/w600X390/bananatree.jpg http://www.dinamani.com/agriculture/2017/jul/20/வாழையில்-வாடல்-நோய்-2740363.html
2740364 விவசாயம் உளுந்தில் லாபம் பெறும் வழிமுறைகள்... Thursday, July 20, 2017 02:39 AM +0530 தருமபுரி: பயறு வகைப் பயிர்களில் உளுந்து அதிக புரதம் மற்றும் பயன்பாடு, கலோரிச் சத்து உள்ள பயிராகும் . குறுகிய காலப் பயிராதலால், இதனை தனிப் பயிராகவும் ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம். தரமான உளுந்து, நல்ல விலைக்கு விற்கப்படுவதால், வேளாண்மைத் துறையில் விதைப் பண்ணையாக பதிவு செய்து, விதைச் சான்று நடைமுறைகளைக் கையாண்டு, நல்ல லாபம் ஈட்டலாம் என்று தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வேளாண் உதவி இயக்குநர் வி. குணசேகரன் மற்றும் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் மு.சிவசங்கரி ஆகியோர் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறும் வழிமுறைகளாவன:
தரமான விதை: இனத் தூய்மை மிக்க, பிற ரகங்கள் மற்றும் பயிர் விதைகள் கலவாத தரமான விதைகள், அதிக முளைப்புத் திறனுடன் கூடிய விதைகளைப் பயன்படுத்த வேண்டும்.
நிலத் தேர்வு: உளுந்து விதைப் பண்ணை அமைக்க உள்ள வயலில் ஏற்கெனவே உளுந்து சாகுபடி செய்திருக்கக் கூடாது. ஏனெனில், முந்தைய பயிரின் விதை இப்போது சாகுபடி செய்ய உள்ள பயிரின் விதையுடன் கலக்க வாய்ப்பு உள்ளது. வடிகால் வசதியுள்ள நல்ல நிலமாக இருப்பது அவசியம்.
பருவம்: விதைகள் முற்றும் போது, அதிக மழை மற்றும் வெயில் இல்லாமல் இருத்தல் வேண்டும். எனவே, ஆடி மற்றும் மாசிப் பட்டம் மிகவும் உகந்தது. நிலத்தினை நன்கு உழவு செய்ய வேண்டும். முதலில் உளிக் கலப்பை கொண்டு உழவு செய்தால், மண்ணின் அடியில் உள்ள கெட்டியான படுக்கை உடையும். இதனால் மண்ணின் நீர் கொள்ளும் திறன் அதிகரிக்கும்,. மேலும், வேர்கள் நன்கு வளரும். பின் 5 கலப்பையில் ஒரு சாலும், 12 கலப்பையில் ஒரு சாலும் உழவு செய்தால் மண் பொல பொலவென்று இருக்கும். நிலத்தில் ஓர் அடி இடைவெளியில் பார்கள் அமைத்து நடவு மேற்கொள்ளலாம். ஏக்கருக்கு 10 வண்டி தொழு உரம் இடுவது அவசியமாகிறது. பின்னர், 20 கிலோ யூரியா சூப்பர் 50 கிலோ அடியுரமாக பார்களின் பக்கவாட்டில் இடுதல் வேண்டும். விதைத்தவுடன் 5 கிலோ பயறு வகைகளுக்கான நுண்ணூட்டச் சத்தினை 20 கிலோ மணலுடன் கலந்து சீராகத் தூவ வேண்டும். இதனால் நுண்ணூட்டச் சத்துப் பற்றாக்குறை ஏற்படாமல் பயிர் மகசூல் கூடும்.
விதைத் தேர்வு: விதைப் பண்ணை அமைக்க தரமான சான்று பெற்ற விதைகளையே பயன்படுத்த வேண்டும். வேளாண்மை விரிவாக்க மையங்களில வம்பன் 4, வம்பன 5, எம்டியு 1 போன்ற ரகங்கள் தற்போது விவசாயிகளிடையே பிரபலம். மற்ற ரகங்களும் மாவட்டத்திற்கேற்ப, பயிரிடும் பருவத்திற்கேற்ப பயன்படுத்தப்படுகிறது. சராசரியாக அனைத்து ரகங்களும் விதைக்க 30-35 ஆவது நாளில் பூக்க ஆரம்பிக்கிறது. 70 முதல் 75 நாளில் அறுவடைக்கு வரும். அதிகபட்சமாக ஹெக்டேருக்கு 800 முதல் 1000 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
விதையளவு மற்றும் விதைப்பு: ஏக்கருக்கு 8 கிலோ விதை தேவைப்படும் சரியான பருவத்தில் சரியான ஆழத்தில் சரியான இடைவெளியில் விதைப்பு செய்வது அவசியம். வரிசைக்கு வரிசை 30 செ.மீ. (ஓர் அடி) செடிக்கு செடி 10 செ.மீ. அளவு இடைவெளி மற்றும் 2 செ.மீ. ஆழத்தில் இரண்டு விதைகளாக விதைப்பு செய்ய வேண்டும். இதனால் விதைகள் நன்கு முளைத்து பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க முடியும். விதைத்த ஒரு வாரத்தில் அதிகமாக உள்ள செடிகளைக் களைந்து சரியான பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும்.
நீர் நிர்வாகம்: விதைக்கும் போது, ஒருமுறை தண்ணீர், மூன்றாம் நாள் உயிர் தண்ணீர், பின்னர் 10-15 நாள்களுக்கு ஒரு முறை மண்ணின் தன்மைக்கேற்ப நீர் பாய்ச்ச வேண்டும். பூப் பருவம் மற்றும் காய்பிடிக்கும் தருணத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கக் கூடாது.
இலைவழி உரம்: அடியுரம் இடும்போது பயிரின் உடனடித் தேவை பூர்த்தி செய்யப்பட்டாலும், தொடர்ந்து சீரான வளர்ச்சிக்கு இலைவழி உரமிடல் அவசியம். இதற்கு, யூரியா 4 கிலோ, டிஏபி 1 கிலோ, பொட்டாஷ் 600 கிராம், டீபால் 20 மி.லி.யுடன் 100 லிட்டர் தண்ணீரில் கலந்து 25-35-ஆம் நாள் ஒருமுறையும் கலந்து தெளித்தால், காய்கள் திரட்சியாக இருக்கும். இதற்கு, பதிலாக 2 கிலோ டிஏபியை 100 லிட்டர் தண்ணீரில் முந்தைய நாள் இரவே ஊற வைத்து அடுத்த நாள் காலையில் தெளிந்த தண்ணீரை 15 நாள்களுக்கு ஒருமுறையாக மொத்தம் இருமுறை தெளிக்க வேண்டும். தற்போது 17:17:17: அல்லது 19:19:19 என்ற கரையும் உரங்கள் இரண்டு கிலோவினை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து இருமுறை தெளித்து நல்ல பலனை விவசாயிகள் பெற்றுள்ளனர்.
பயிர்ப் பாதுகாப்பு: தண்டு ஈயின் தாக்குதலால் செடிகள் காய்ந்து விடும். இதற்கு, மருந்தினை விதைத்த 7-ஆம் நாள் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி. என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். வளர்ச்சிப் பருவத்தின் போது காணப்படும் அசுவிணி, தத்துப் பூச்சி, வெள்ளை ஈ போன்றவற்றை கட்டுப்படுத்த, மித்தைல் டெமட்டான் அல்லது டைமெத்தேயேட் மருந்து 2 மி.லி.யை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். வளர்ச்சிப் பருவத்தில் தேமல் நோய் தென்பட்டால், உடனே பயிரை பிடுங்கி அப்புறப்படுத்த வேண்டும். அசுவிணிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும்போது, டைக்குளார்வாஸ் மருந்து 2 மி.லி. ஒரு லிட்டர் தண்ணீருக்கு என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். நோய்களைப் பொருத்தவரை, வாடல் நோய், வேர் அழுகல் நோய் தாக்கக் கூடும். தாக்கப்பட்ட செடிகளை அகற்றி, அந்த இடத்தில் பெவிஸ்டின் 10 கிராம் 1 லிட்டர் தண்ணீரில் கலந்து நீரை ஊற்ற வேண்டும். இதனால் நோய் பரவாமல் தடுக்கலாம். சாம்பல் நோய் தென்படும்போது ஒரு லிட்டர் நீரில் 10 கிராம் நனையும் கந்தகத்தூளைத் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
அறுவடை: விதைத்த 55-60 நாளில் காய்கள் அறுவடைக்குத் தயாராகும். காய்கள் பழுப்பு நிறடைந்தால், காய்களை அறுவடை செய்யலாம். 70 சத காய்கள் கருமை நிறடைந்தால் செடிகளை முழுவதும் பிடுங்கலாம். தாமதித்தால் காய்கள் வெடித்து சிதறி வீணாகும்.
வேளாண் துறையால் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் அனைத்து விதைகளும் விதைச் சான்றளிப்புத் துறையினால் பரிசோதிக்கப்பட்டு, தரமான விதைகள் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள், ஆதார விதைகளை வாங்கும் போதே, சான்றட்டை எண்ணுடன் பட்டியலிடப்பட்டு, உரிய படிவத்தில் உற்பத்தியாளர் பெயருக்கு விதைப் பண்ணை பதிவு செய்யப்படுகிறது.
பதிவு செய்யப்பட்ட விதைப் பண்ணையினை அந்த பகுதியைச் சார்ந்த விதைச் சான்று அலுவலர் கள ஆய்வு மேற்கொண்டு, விதையின் ஆதாரம், தனிமைப்படுத்தும் தூரம், கலவன் நீக்குதல், அறுவடை சமயம், விதை சுத்திகரிப்பு மற்றும் கொள்முதல் செய்த விதைகளின் முளைப்புத் திறன் மற்றும் சான்றட்டை பொருத்தி சிப்பமிடுதல் வரை விதைச்சான்றளிப்பு துறை செயல்பட்டு, தரமான விதைகளுக்கு மட்டும் விதைச் சான்றளிப்பு செய்யப்படுகிறது.
சான்றளிப்பு செய்த விதைகள் மட்டும் வேளாண்மைத் துறையால் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. சான்று பெற்ற விதையில் 98 சதம் சுத்தமான விதைகள் இருக்கும்.
விதைப் பண்ணை அமைத்து, தரமான விதை உற்பத்தி செய்யும் விவசாயிக்கு சந்தை விலையுடன் ஊக்கத்தொகை மற்றும் உற்பத்தி மானியம் கிடைப்பதால், விவசாயிக்கு அதிக லாபம் கிடைப்பதுடன், பயன்படுத்தும் பல விவசாயிகளுக்கு உற்பத்தி பெருகுவதால், அதிய லாபம் கிடைக்கிறது என்றனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/20/w600X390/ural.jpg http://www.dinamani.com/agriculture/2017/jul/20/உளுந்தில்-லாபம்-பெறும்-வழிமுறைகள்-2740364.html
2739144 விவசாயம் சொட்டு நீர்ப் பாசனத்துக்கு 100 சதவீத மானியம்: தோட்டக்கலை துறை அதிகாரி தகவல் Tuesday, July 18, 2017 01:43 AM +0530 சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் வழங்கப்படும் என தோட்டக்கலை துணை இயக்குநர் முத்து துரை அறிவித்துள்ளார்.
திருவள்ளூரை அடுத்த பிராயாங்குப்பத்தில் விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் தோட்டக்கலை துறை துணை இயக்குநர் முத்து துரை கலந்து கொண்டு விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்கும் முறை, அதனால் ஏற்படும் நன்மைகள், அரசு வழங்கும் மானியம் ஆகியன குறித்து விளக்கி கூறினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாளுக்கு நாள் நீரின் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நீரை சிக்கனமாக பயன்படுத்தி, பயிர் செய்வது குறித்து, தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தற்போது பிரதம மந்திரியின் விவசாயத்துக்கான சொட்டு நீர் பாசன திட்டத்தின் கீழ், பயிர் செய்யும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, 5 ஏக்கர் வரை 100 சதவீத மானியமும், பெரு விவசாயிகளுக்கு, 12.5 ஏக்கர் வரை, 75 சதவீத மானியமும் வழங்கப்படும்.
இதில், அதிகபட்சமாக விவசாயிகள் ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம்.
தகுதி: வருவாய்த்துறை நில வகைப்பாட்டின் படி நிலம் வைத்துள்ள விவசாயிகள், இம்மானிய உதவி பெற தகுதியானவர்கள்.
மேலும், சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் மோட்டாருடன் கூடிய கிணறோ, ஆழ்துளைக் கிணறோ போதிய நீராதாரத்துடன் இருக்க வேண்டும்.
சிறு, குறு விவசாயிகளுக்குரிய சான்றிதழை வட்டாட்சியரிடம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேலும், நிலத்தின் கணினி பட்டா, சாகுபடி செய்துள்ள அல்லது செய்யவுள்ள பயிர் பரப்பை சர்வே எண்கள் வாரியாகக் குறிப்பிட்டு கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய அடங்கல், வயல் வரைபட நகல், குடும்ப அட்டை நகல் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், மண் மற்றும் நீர் மாதிரி சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
மா, கொய்யா, வாழை, சப்போட்டா, மிளகாய், முருங்கை, மலர்கள் போன்ற தோட்டக்கலை பயிர்களைச் சாகுபடி செய்யும் சிறு, குறு விவசாயிகள் வட்டார தோட்டக்கலை துறை அலுவலர்களை அணுகி பயன்பெறலாம் என்றார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/18/w600X390/form.jpg திருவள்ளூரை அடுத்த பிரையாங்குப்பம் பகுதியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சொட்டு நீர்ப் பாசனம். http://www.dinamani.com/agriculture/2017/jul/18/சொட்டு-நீர்ப்-பாசனத்துக்கு-100-சதவீத-மானியம்-தோட்டக்கலை-துறை-அதிகாரி-தகவல்-2739144.html
2732361 விவசாயம் நாற்று நடவு முறையில் துவரை சாகுபடி Thursday, July 6, 2017 12:39 AM +0530 தருமபுரி: பருவமழை தவறினாலும், பருவம் போகாமல், புதிய தொழில்நுட்பமமான நாற்று நடவு முறையில் துவரை சாகுபடி செய்ய முடியும் என்று தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் என். ராஜேந்திரன் மற்றும் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பி.ரவி ஆகியோர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, மேலும் அவர்கள் கூறியது: பயிர் வகையிலே துவரை பயிர் மட்டும் பருவம் மாறாமல் பயிர் செய்ய வேண்டும். பருவம் தவறி பயிர் செய்தால் கண்டிப்பாக மகசூல் பாதிக்கும். இதனைப் போக்க, புதிய தொழில்நுட்மான நாற்று நடவு துவரை சாகுபடி முறையைப் பின்பற்றி, துவரையில் அதிக மகசூல் பெறலாம். இதற்கான பருவம் ஆடிப் பட்டம் சிறந்தது.
நாற்றங்கால் தயாரித்தல்: துவரை நாற்று நடவு முறை சாகுபடிக்கு, ஏக்கருக்கு 1 கிலோ விதை மட்டுமே தேவைப்படுகிறது. ஒரு கிலோ விதையுடன் 2 கிராம் கார்பெண்டாசிம் அல்லது 2 கிராம் திரம் அல்லது 4 கிராம் டிரிக்கோடேர்மாவிரிடி போன்றவற்றில் ஏதாவது ஓன்றில் விதை நேர்த்தி செய்து 24 மணி நேரத்துக்குப் பிறகு, ஒரு பாக்கெட் ரைசோபியம் நுண்ணுயிர் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
மணல், மண், எரு ஆகியவற்றை சம அளவில் கலந்து 2?? மைக்ரான் உள்ள 6''-க்கு 4'' அளவுள்ள நெகிழிப் பைகளில் நிரப்பி விதைக்கப் பயன்படுத்த வேண்டும். பைகளில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்க பைகளைச் சுற்றி 4 துளைகள் போட வேண்டும். பின்னர், விதை நேர்த்தி செய்த விதைகளை ஒரு பைக்கு ஒரு விதை என்ற அளவில் ஒரு செ.மீ. ஆழத்தில் விதைத்து, ஒவ்வொரு நாளும் தண்ணீர் தெளித்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, விதைப்பு செய்யப்பட்ட பைகளை நிழலான இடங்களில் வைத்து 30 - 35 நாள்கள் பாரமரிக்க வேண்டும். நடுவதற்கு சில நாள்கள் முன் இளம் வெயிலில் நாற்றுகளை வைத்து, கடினப்படுத்தி பின்பு நடவு செய்தல் நல்லது.
நடவு செய்தல்: தனிப்பயிர் சாகுபடிக்கு 15 செ.மீ. அளவுள்ள குழிகளை, 5-க்கு 3 அடி இடைவெளிலும் ( 2904 பயிர் / ஏக்கர்), காராமணி, உளுந்து போன்ற ஊடுப்பயிர் சாகுபடி செய்யக்கூடிய இடங்களில் 6-க்கு 3 அடி இடைவெளிலும் (2420 பயிர் / ஏக்கர் ) குழிகள் எடுக்க வேண்டும். நாற்றுகளை நடுவதற்கு 15 நாள்களுக்கு முன், குழிகளை மண் எருவைக் கொண்டு நிரப்பி வைக்க வேண்டும். ஒரு குழிக்கு ஒரு செடி வீதம் நடவு செய்யப்பட வேண்டும். பின்னர், மண்ணின் ஈரப்பதத்துக்கு ஏற்ப 3-4 முறை பாசனம் செய்யப்பட வேண்டும். நடவு செய்த 30-40 நாள்கள் வரை களையின்றி பராமரிக்க வேண்டும்.
உர நிர்வாகம்: மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு யூரியா 27.5 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 156 கிலோ, பொட்டாஷ் 21 கிலோ இட வேண்டும். இறவைப் பயிர்களுக்கு யூரியா 55 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 312 கிலோ, பொட்டாஷ் 42 கிலோ ஆகிய உரங்களை நடவு செய்த 20-30 நாள்கள் கழித்து மண் அணைப்பதற்கு முன் இட வேண்டும். மேலும், துத்தநாக சல்பேட் 10 கிலோ செடியைச் சுற்றி இடுவதால், அதிக விளைச்சல் கிடைக்கும்.
நுனி கிள்ளுதல்: நடவு செய்த 20-25 நாள்கள் கழித்து அல்லது விதை விதைத்த 50-55 நாள்கள் கழித்து 5 அல்லது 6 செ.மீ அளவுக்கு நுனிக் குருத்தைக் கிள்ளி விடுவதால், பக்க கிளைகள் அதிகரிக்கும். இதனால் பயிரின் மகசூல் அதிகரிக்கும்.
பயறு வொண்டர் தெளித்தல் : பூ பூக்கத் தொடங்கும் பருவத்தில், பயறு வொண்டரை ஏக்கருக்கு 2 கிலோ என்ற அளவில் தண்ணீரில் கலந்து இலை வழியாகத் தெளிப்பதன் மூலம் பூ உதிர்தலைத் தடுக்கலாம். இதனால் அதிக மகசூல் பெறலாம். மேலும், வறட்சியைத் தாங்கி வளரவும் வழிவகை செய்கிறது.
நாற்று நடவு சாகுபடியின் நன்மைகள்: நடவு முறையில் மழை தாமதமானாலும் குறித்த பருவத்தில் பயிர் செய்ய முடியும். துவரை நடவு அதிக ஆழத்தில் செய்யப்படுவதால், நன்கு வேர் வளர்ச்சி காணப்பட்டு, பயிர் வறட்சியைத் தாங்கி வளரும். வரிசை நடவு முறை செய்யப்படுவதால், பயிர் பாதுகாப்பு முறைகளை எளிமையாகவும் திறம்படவும் செய்ய முடியும். கணிசமான அளவுக்கு விதை சேமிப்பு செய்ய முடிகிறது. இதனால், குறைந்த அளவுக்கு கிடைக்கும் புதிய ரக விதைகளை அதிக பரப்பளவு சாகுபடிக்கு கொண்டு வர முடியும். நுனி கிள்ளுவதால் அதிக பக்க கிளைகள் உருவாகி, அதிக விளைச்சல் கிடைக்கிறது.
எனவே, விவசாயிகள் ஆடிப்பட்டத்தில் பருவமழை தவறினாலும், இந்தப் புதிய தொழில்நுட்பமான துவரை நாற்று நடவு தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்து, அதிக மகசூல் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/6/w600X390/dall.jpg http://www.dinamani.com/agriculture/2017/jul/06/நாற்று-நடவு-முறையில்-துவரை-சாகுபடி-2732361.html
2732360 விவசாயம் தென்னையில் கூன் வண்டு தாக்குதல் மேலாண்மை Thursday, July 6, 2017 12:38 AM +0530 கிருஷ்ணகிரி: விவசாயிகளுக்கு நல்ல வருவாய் தரக் கூடிய பயிராக தென்னை தமிழகம் முழுவதும் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. இத்தகைய பயிரான தென்னையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் மகசூல் குறைந்து விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, கூன்வண்டு தாக்குதலால் தென்னை மரம் பட்டுப்போகிறது. எனவே, விவசாயிகள் கூன்வண்டு தாக்குதல் மேலாண்மையைக் கையாள்வதன் மூலம் தென்னை சாகுபடியில் மகசூல் குறைவதை தடுத்து, நல்ல வருவாய் ஈட்டலாம்.
அறிகுறிகள்: வண்டு தாக்குதலுக்கு உள்ளான மரத்தின் கீழ் பகுதியில் சிறப்பு நிறச் சாறு வடிந்த நிலையில், சிறு சிறு துளைகள் காணப்படும்.
இந்த துளையினுள் கூன் வண்டு இருப்பதைக் காணலாம். தென்னை மரத்தின் உள் ஓலைகள் மஞ்சள் நிறாகவும், நுனிப்பக்கத்தில் உள்ள நடுகுருத்து வாடிய நிலையிலும் காணப்படும். பின்னர், மரம் முற்றிலும் காய்ந்துவிடும்.
பூச்சி விவரம்: கூன் வண்டின் முட்டையானது வெள்ளை நிறத்தில் காணப்படும்.
புழுக்கள் லேசான மஞ்சள் நிறத்தில் காணப்படும். வண்டானது சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்திலும், மார்புப் பகுதியில் 6 அடர்ந்த புள்ளிகள் காணப்படும். ஆண் வண்டுகள் நீல முகத்துடன் காணப்படும்.
மேலாண்மை முறைகள்: கூன்வண்டு தாக்குதலால் காய்ந்து போன மரம், சேதமடைந்த மரத்தை அகற்றி, கூன்வண்டின் இனப்பெருக்கத்தை தடுக்கலாம்.
தென்னந்தோப்பை துய்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதன் மூலம் கூன்வண்டின் தாக்குதலைத் தவீர்க்கலாம்.
உழவுப் பணியின்போது தென்னை மரம் சேதமடையாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். காண்டாமிருக வண்டுகள் தாக்கிய மரத்தை கூன்வண்டுகள் தாக்கும்.
அதனால், மரத்தை காண்டாமிருக வண்டுகள் தாக்காமல் இருக்க தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கூன்வண்டுகள் முட்டை இடுவதைத் தடுக்க மணல், வேப்பங்கொட்டை தூளை 2:1 என்ற அளவில் கலந்து, மரத்தின் குருத்து பகுதியிலும், மேல் உள்ள மரத்தின் 3 மட்டைகளின் கீழ்ப் பகுதியிலும் இட வேண்டும்.
கூன்வண்டுகளைக் கவர்ந்து இழுக்கும் பேரொழியுர் எனப்படும் கவர்ச்சி மற்றும் உணவுப் பொறிகளை இரண்டு ஹெக்டேருக்கு ஒன்று வீதம் வைத்து கூன்வண்டுகளைக் கட்டுப்படுத்தலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி அருகே உள்ள மூங்கில் புதூர் கிராமத்தில் மாணிக்கம் என்ற விவசாயின் நிலத்தில் மேற்கொண்ட சோதனையில் இந்த மேலாண்மை முறை நல்ல பயனைத் தந்துள்ளது என்கின்றனர் பெங்களூரைச் சேர்ந்த வேளாண் அறிவியல் விஞ்ஞானிகள்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/6/w600X390/tree.jpg http://www.dinamani.com/agriculture/2017/jul/06/தென்னையில்-கூன்-வண்டு-தாக்குதல்-மேலாண்மை-2732360.html
2723094 விவசாயம் வைகை அணையில் 'வறட்சி': தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஜி.ராஜன் Monday, June 19, 2017 12:33 AM +0530 முல்லைப் பெரியாறு அணை மற்றும் மூல வைகை நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழையில்லாததால், தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களுக்கு முதல் போக நெல் சாகுபடிக்கு பெரியாறு அணை மற்றும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி தேனி மாவட்டத்தில் 14,707 ஏக்கர் பரப்பளவிலும், பெரியாறு மற்றும் வைகை அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி மதுரை, திண்டுக்கல் மாவட்ட பெரியாறு பாசனப் பகுதிகளில் 45,041 ஏக்கர் பரப்பளவிலும் இருபோக நெல் சாகுபடி நடைபெறும்.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதும், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு வழக்கமாக ஜூன் 2-ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். கடந்த 2016-ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் பெரியாறு அணையில் இருந்து காலதாமதமாக 14.7.2016 அன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரை பயன்படுத்தி தேனி மாவட்டத்தில் 8,000 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே முதல் போக நெல் சாகுபடி நடைபெற்றது. மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக நெல் சாகுபடிக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
அதே போல் பெரியாறு அணை மற்றும் மூல வைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின்றி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்ததால், கடந்த 2016, செப்டம்பர் மாதம் 2-ஆம் போக நெல் சாகுபடிக்கும் தண்ணீர் திறக்கப்பட வில்லை.
அணைகளில் போதிய தண்ணீரில்லாததால் கடந்த 2016-ஆம் ஆண்டு, முதல் மற்றும் 2-ஆம் போக நெல் சாகுபடியை கைவிட்ட விவசாயிகள், இந்த ஆண்டு கேரளத்தில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், பெரியாறு அணை மற்றும் மூல வைகை நீர்பிடிப்பில் ஓரிரு நாள்கள் மட்டுமே லேசான சாரல் மழை பெய்துள்ளது. இதனால் அணைகளுக்கு போதிய நீர்வரத்து இல்லை.
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 112 அடிக்கும் மேல் உயர்ந்தால் மட்டுமே தேனி மாவட்ட முதல் போக நெல் சாகுபடிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியும். தற்போது, பெரியாறு அணை நீர்மட்டம் 108.90 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 75 கன அடியாகவும் உள்ளது. அணையில் தண்ணீர் இருப்பு 739 மில்லியன் கன அடி. அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு குடிநீர் திட்டங்களுக்காக விநாடிக்கு 75 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அதே போல், வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து 22.90 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 158 மில்லியன் கன அடி. அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. அணையில் இருந்து மதுரை, ஆண்டிபட்டி- சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்கு விநாடிக்கு 40 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை மற்றும் வைகை அணையில் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே இருப்பில் உள்ள நிலையில், தென்மேற்கு பருவமழை இல்லாததால் தேனி, மதுரை, திண்டுகல் மாவட்டங்களில் இந்த ஆண்டும் முதல் போக நெல் சாகுபடி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் அதிருப்தி: கடந்த 2016-ஆம் ஆண்டு வறட்சியால் அணைகளில் போதிய தண்ணீரின்றி முதல் மற்றும் 2-ஆம் போக நெல் சாகுபடியை கைவிட்ட விவசாயிகளுக்கு அரசு சார்பில் வறட்சி நிவாரண நிதி வழங்கவில்லை. பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட வில்லை. தற்போது, அணைகளில் நீர்மட்டம் சரிந்து இந்த ஆண்டும் முதல் போக நெல் சாகுபடி நடைபெறுவது கேள்விக் குறியாகி உள்ளது. இதனால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/19/w600X390/DAM.jpg வைகை அணையில் ஞாயிற்றுக்கிழமை 22.90 அடியாக சரிந்துள்ள நீர்மட்டம். http://www.dinamani.com/agriculture/2017/jun/19/வைகை-அணையில்-வறட்சி-தேனி-திண்டுக்கல்-மதுரை-மாவட்டங்களில்-முதல்-போக-நெல்-சாகுபடிக்கு-தண்ணீர்-திற-2723094.html
2722520 விவசாயம் தேசிய பாரம்பரிய நெல் திருவிழா: பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்பு Sunday, June 18, 2017 12:33 AM +0530 திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் தேசிய அளவிலான 11-ஆவது பாரம்பரிய நெல் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.
நாகை சாலை அண்ணாசிலை அருகிலிருந்து இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் உருவப் படத்துடன் பேரணி புறப்பட்டது. காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஏ.வி. துரைராஜன் தலைமையில் நடைபெற்ற பேரணியை, மாநில நெல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் சி. பாலகிருஷ்ணராஜா தொடங்கி வைத்தார்.
பாரம்பரிய நெல், அரிசி வகைகள், வேளாண்மைக் கருவிகள், மூலிகை மற்றும் பழமரக் கன்றுகள் அடங்கிய கண்காட்சியை தொழிலதிபர் ஏ.ஆர்.வி. விவேக் தொடங்கி வைத்தார். கிரியேட் நிர்வாக அறங்காவலர் பொன்னம்பலம் தலைமை வகித்தார். தமிழக இயற்கை உழவர் இயக்க மாநிலத் தலைவர் சிக்கல் அ. அம்பலவாணன், திருச்சி அகில இந்திய வானொலி நிலைய இயக்குநர் கே. நடராஜன், நமது நெல்லைக் காப்போம் தேசிய ஒருங்கிணைப்பாளர் எஸ். உஷாகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் எஸ். நாகூர்அலி ஜின்னா விழாவை தொடங்கி வைத்துப் பேசியது:
தமிழகத்தில் வேளாண்மை மேம்பாட்டிற்காக நபார்டு வங்கி சார்பில் ரூ. 22,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் நீர் நிலைகள் மேம்பாட்டிற்கு மட்டும் ரூ. 5,000 கோடி பயன்படுத்தப்படவுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் நீர்நிலைகள் மேம்பாட்டிற்காக ரூ. 3,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதன்மூலம் 41,000 ஏரிகள் தூர் வார முடிவு செய்து, அதில் 19,000 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. இதன்மூலம், நீர் சேமிக்கப்பட்டு, கடுமையான வறட்சியிலும் 120 சதவீதம் நெல் மகசூல் பெறப்பட்டுள்ளன.
அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த தேசிய விளைபொருள் விற்பனை ஆணையம் அமைக்கப்பட்டு, அதன்மூலம் விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருள்களுக்கான தொகை 30 நிமிடங்களில் அவர்களின் வங்கிக் கணக்கில வரவு வைக்கப்படும் என்றார்.
இதையடுத்து நடைபெற்ற கருத்தரங்கில் நமது நெல்லைக் காப்போம் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல்.ஜெயராமன் பேசியது:
நிகழாண்டு 6,000 விவசாயிகளுக்கு தலா 2 கிலோ பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்பட உள்ளன. விதை நெல் பெறும் விவசாயிகள் அடுத்த ஆண்டில் 4 கிலோ நெல் விதைகளாக திருப்பித் தரவேண்டும். பாரம்பரிய விதைகள் மற்றும் இயற்கை விவசாயத்தைக் காக்க இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கனவை நனவாக்கும் வகையில் நெல் திருவிழாவை அரசே ஏற்று நடத்தவேண்டும் என்றார்.
பின்னர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ், விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகள் வழங்கிப் பேசினார். நபார்டு வங்கியின் திட்டங்கள், விளை நிலங்கள், நீராதாரங்கள் பாதுகாப்பு, ஒரு ஏக்கர் நிலத்தில் கால் கிலோ விதை தொழில் நுட்பம், விற்பனைச் சந்தை வாய்ப்புகள், பருவநிலை மாற்றமும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களும் ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இயற்கை விவசாயத்தில் விளைவிக்கக் கூடிய பொருள்களை சந்தைப்படுத்த முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இதைப்போக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட வேண்டும். இதற்கு வட்டார அளவில் சந்தைகளை உருவாக்க வேண்டும். விவசாயிகள் விளைவித்த தானியங்களுக்கான விலையை விவசாயிகளே நிர்ணயிக்கும் நிலை ஏற்படவேண்டும் என கருத்தரங்கில் பேசியவர்கள் வலியுறுத்தினர்.
இக்கருத்தரங்க வளாகத்தில் கிச்சலி சம்பா, கைவர சம்பா, இழுப்பப்பூ சம்பா, மாப்பிள்ளை சம்பா, குழியடிச்சான், காட்டுயானம் உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இவ்விழாவில் புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் விவசாயிகள் பங்கேற்றனர்.
திருவாரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மயில்வாகனன், பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் என்.வி. சுப்பாராவ், மாவட்ட நபார்டு வளர்ச்சி மேலாளர் பேட்ரிக்ஜாஸ்பர், விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் வலிவலம் மு. சேரன், வேலுடையார் கல்வி அறக்கட்டளை நிர்வாகி தியாகபாரி, நகர மேம்பாட்டுக் குழுத் தலைவர் டாக்டர் டி.ராஜா, வர்த்தகர் சங்கத் தலைவர் கே.எஸ். செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/18/w600X390/farmer.jpg பாரம்பரிய நெல் திருவிழாவில் விவசாயிகளுக்கு விதை நெல் வழங்குகிறார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ். http://www.dinamani.com/agriculture/2017/jun/18/தேசிய-பாரம்பரிய-நெல்-திருவிழா-பல்வேறு-மாநிலங்களைச்-சேர்ந்த-விவசாயிகள்-பங்கேற்பு-2722520.html
2721996 விவசாயம் டெல்டா மாவட்டங்களில் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்: அமைச்சர் காமராஜ் Saturday, June 17, 2017 02:33 AM +0530 காவிரி டெல்டா மாவட்டங்களில் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சர் காமராஜ் வெளியிட்ட அறிவிப்புகள்:
25 நேரடிக் கொள்முதல் நிலையங்கள்: காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இவற்றுக்கு நிரந்தரக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது.
அதன்படி, நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்களில் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தலா ரூ.40 லட்சம் வீதம் மொத்தம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நபார்டு நிதியுதவியுடன் கட்டப்படும்.
நெல் உலர்த்தும் களம்: அறுவடையாகும் நெல்லை உலர்த்த ஏதுவாக ஏற்கெனவே சொந்தக் கட்டடங்களில் செயல்படும் நேரடிக் கொள்முதல் நிலையங்களின் காலி இடத்தில் நடப்பாண்டில் ரூ.5.5 கோடி மதிப்பீட்டில் 50 நெல் உலர்த்தும் களங்கள் அமைக்கப்படும்.
அகவிலைப்படி உயர்வு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடிக் நெல் கொள்முதல் நிலையங்களில் பருவகால பட்டியல் எழுத்தர், உதவுபவர், காவலர் நிலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 1948 -ஆம் ஆண்டு குறைந்தபட்ச கூலி சட்டத்தின்படி வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி ரூ.2,450-இலிருந்து ரூ.2,995-ஆக 2014 ஏப்ரல் 1-லிருந்து உயர்த்தி வழங்க உள்ளது. இதன் மூலம் 4,460 பருவ காலப் பணியாளர்கள் பயன்பெறுவர். இதனால் அரசுக்கு ரூ.2.72 கோடி கூடுதல் செலவாகும்.
பட்டைக் குறியீடு: நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பொருள்களுக்கு தனித்தன்மை வாய்ந்த அடையாள எண் வழங்கும் இயந்திரங்கள், ஸ்கேன் செய்யும் இயந்திரங்கள் அதற்கு உண்டான மென்பொருள் உள்ளிட்ட 1,762 பட்டை குறியீடு இயந்திரங்கள் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும் என்பது உள்பட மொத்தம் 14 அறிவிப்புகளை அமைச்சர் காமராஜ் வெளியிட்டார்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/12/w600X390/kamaraj.jpg http://www.dinamani.com/agriculture/2017/jun/17/டெல்டா-மாவட்டங்களில்-25-நேரடி-நெல்-கொள்முதல்-நிலையங்கள்-அமைச்சர்-காமராஜ்-2721996.html
2721995 விவசாயம் 'நீர்நிலைகள் தூர்வாரல் மூலம் விவசாயிகளுக்கு 1.47 லட்சம் கனமீட்டர் வண்டல் மண் அளிப்பு' Saturday, June 17, 2017 02:32 AM +0530 விவசாயிகளுக்கு இதுவரை ஒரு லட்சத்து 47 ஆயிரம் கனமீட்டர் வண்டல் மண் எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
தெரிவித்தார்.
வறட்சி நிவாரணம் தொடர்பாக, சட்டப் பேரவையில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் வெள்ளிக்கிழமை கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:
துரை சந்திரசேகர் (திமுக): தமிழகத்தில் 140 ஆண்டுகள் இல்லாத வறட்சி ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள வறட்சி நிவாரண நிதி முழுமையாகச் சென்றடையவில்லை. இடுபொருள் மானியமாக ஏக்கருக்கு ரூ.5,625 அளிக்கப்பட்டாலும் அது கூட்டுக் குடும்பமாக வசிப்போருக்குக் கிடைப்பதில்லை.
திருவையாறு, பூதலூர், தஞ்சை வட்டங்களில் நிவாரண நிதி விடுபட்டுள்ளது. திருவாரூரில் உள்ள 27 பிர்க்காக்களில் பயிர்க் காப்பீட்டுக்கான இழப்பீட்டுப் பணம் சென்றடையவில்லை. பம்ப் செட்டுகள் மூலம் விவசாயம் செய்வோருக்கு சிறப்பு குறுவைத் திட்டத்தை அறிவித்து செயல்படுத்த வேண்டும்.
கே.ஆர். ராமசாமி (காங்கிரஸ்): வறட்சியால் பாதித்த அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்கவில்லை. காப்பீடு செய்திருந்தாலும் இழப்பீடு முழுமையாகக் கிடைக்கப் பெறாத நிலை உள்ளது. உரிய இழப்பீடுகளை மத்திய அரசுடன் இணைந்து பெற்றுத் தர வேண்டும்.
வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார்: உலகம் முழுவதும் ஏற்பட்டு வருகிற பருவநிலை மாற்றங்களின் காரணமாக இயற்கை நம்மை வஞ்சித்து வருகிறது. இதுபோன்ற மிகக் கடுமையான நிலைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எத்தகைய கடுமையான நிலைகள் வந்தாலும் விவசாயிகளுக்கான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. வறட்சிக்காக நிவாரணம் அளித்த ஒரே மாநிலம் தமிழகம்தான்.
தமிழகத்தில் உள்ள நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கும் வகையிலும், நிலத்தடி நீர் அளவை உயர்த்தவும் நீர் நிலைகளில் படிந்துள்ள வண்டல் படிவுகளை எடுத்து, அதை விவசாயிகளுக்கு இலவசமாக அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ், 29 மாவட்டங்களில் 11 ஆயிரத்து 467 நீர் நிலைகளில் இருந்து இதுவரை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 310 கனமீட்டர் வண்டல் மண் எடுக்கப்பட்டு ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 522 விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/17/w600X390/RP.jpg http://www.dinamani.com/agriculture/2017/jun/17/நீர்நிலைகள்-தூர்வாரல்-மூலம்-விவசாயிகளுக்கு-147-லட்சம்-கனமீட்டர்-வண்டல்-மண்-அளிப்பு-2721995.html
2719242 விவசாயம் மேட்டூர் அணையின் திறப்பு தள்ளி போனது! Tuesday, June 13, 2017 12:42 AM +0530 மேட்டூர் அணையின் 84ஆவது ஆண்டில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு தள்ளி போனது.
இந்த அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-இல் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும். அன்று ஜனவரி 28-ஆம் தேதி வரை 230 நாள்களுக்கு குறுவை, சம்பா, தாளடி பாசனத்துக்கு 330 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும்.
டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் மழையை பொருத்து பாசனத் தேவை குறையும். மேட்டூர் அணை கட்டப்பட்டு முதல் முதலாக 1934-ஆம் ஆண்டு பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டது.
கடந்த 83 ஆண்டுகளில் 16 முறை மட்டுமே குறித்த நாளான ஜூன் 12-ஆம் தேதியும், 10 முறை நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் அந்தத் தேதிக்கு முன்பாகவும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
2016-ஆம் ஆண்டில் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாத காரணத்தால், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. சம்பா சாகுபடிக்காக செப்டம்பர் 20-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
58-ஆவது முறையாக திறப்பு தள்ளி போனது: 2011-ஆம் ஆண்டுதான் கடைசியாக ஜூன் 6-இல் முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பிறகு, 6 ஆண்டுகள் உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
நடப்பு ஆண்டில் திங்கள்கிழமை தண்ணீர் திறக்கப்படாததால், 58-ஆவது ஆண்டாக தண்ணீர் திறப்பு தள்ளிப் போனது.
இதனால் கிணற்றுப் பாசனம் உள்ள விவசாயிகள் மட்டுமே குறைந்த அளவில் குறுவை சாகுபடியைத் தொடங்கி உள்ளனர். கடந்த 6 ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான விவசாயிகள் குறுவை சாகுபடியை கைவிட்டுள்ளனர்.
நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை கை கொடுத்தால் மட்டுமே மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரும் வாய்ப்பு உள்ளது. இல்லையானால் விவசாயம் பொய்த்து போகும் அபாயம் உள்ளது.
அணையின் நீர்மட்டம்: இந்த நிலையில், அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 23.44 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 118 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு விநாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 5.16 டி.எம்.சி.யாக உள்ளது.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/24/w600X390/metturr.jpg http://www.dinamani.com/agriculture/2017/jun/13/மேட்டூர்-அணையின்-திறப்பு-தள்ளி-போனது-2719242.html
2712015 விவசாயம் மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி: வேளாண் தகவல் மையம் ஏற்பாடு Thursday, June 1, 2017 02:30 AM +0530 வேளாண் தகவல் பயிற்சி மையத்தில் ஜூன் 7 ஆம் தேதி மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி நடைபெறவுள்ளது.
இதில், இளைஞர்கள், சுயஉதவிக்குழுவினர், தொழில்முனைவோர் உள்ளிட்டோர் கலந்துகொள்ளலாம்.
இந்தப் பயிற்சிக்கு முன்பதிவு செய்ய விரும்புவோர், 044-26263484 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். பயிற்சியின் நிறைவாக சான்றிதழ் வழங்கப்படும் என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தகவல் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.

 

]]>
http://www.dinamani.com/agriculture/2017/jun/01/மண்புழு-உரம்-தயாரிப்பு-பயிற்சி-வேளாண்-தகவல்-மையம்-ஏற்பாடு-2712015.html
2705311 விவசாயம் சூறாவளிக் காற்று : 5000 வாழைகள் முறிந்து விழுந்தன Saturday, May 20, 2017 02:48 AM +0530 குடியாத்தம் பகுதியில் வியாழக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்ததால் சுமார் 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
சூறைக் காற்றால் குடியாத்தத்தை அடுத்த சீவூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி யோகாநந்தத்துக்குச் சொந்தமான 2 ஆயிரம் வாழை மரங்கள், அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி, அசோகன், கே.வி.குப்பத்தைச் சேர்ந்த கஜேந்திரன் மற்றும் சிலருக்குச் சொந்தமான 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/20/w600X390/bananatree.jpg http://www.dinamani.com/agriculture/2017/may/20/சூறாவளிக்-காற்று--5000-வாழைகள்-முறிந்து-விழுந்தன-2705311.html
2705312 விவசாயம் வறட்சி: 125 ஏக்கரில் கரும்பு பயிர்கள் காய்ந்தன: பயிர் காப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை Saturday, May 20, 2017 02:32 AM +0530 காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டத்திலுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடும் வறட்சி காரணமாக கரும்புப் பயிர்கள் காய்ந்து விட்டதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். எனவே பயிர் காப்பீட்டுத் தொகையை அரசு வழங்கக் கோரி மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அளித்துள்ளனர்.
வரலாறு காணாத கோடை வெப்பத்தின் காரணமாக இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவுகிறது. பெரும்பாலான அணைகள், ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகள் வறண்டு போனதால், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
செய்யூர் வட்டத்துக்கு உள்பட்ட மேல்பட்டு, செங்காட்டூர், மடையம்பாக்கம், திருவாத்தூர், பவுஞ்சூர், கீழச்சேரி உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் பணப் பயிரான கரும்பு பயிரிட்டுள்ளனர்.
இந்த ஆண்டு மழையின்றி, கோடை வெப்பம் வழக்கத்தைவிட அதிகமாக உள்ளதால் வறட்சியால் பாசன ஏரி, கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு கட்டாந்தரையாகக் காட்சியளிக்கின்றன. இதனால் கரும்புகள் காய்ந்து கருகி வருகின்றன.
ஒரு ஏக்கர் கரும்பு பயிரிட ரூ.40 ஆயிரம் வரை செலவாகிறது. பல விவசாயிகள் கடன் வாங்கி பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் நீரின்றி கரும்பு பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் நஷ்டமடைந்து வேதனைக்குள்ளாகித் தவிக்கின்றனர்.
கீழ்பட்டு, மேல்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் தற்சமயம் வறட்சியால் சுமார் 125 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்புகள் காய்ந்து விட்டன. வறட்சி, வெள்ளப் பெருக்கு போன்ற இயற்கை இடர்பாடுகளால் விவசாயிகள் பாதிக்கப்படும்போது பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ. 45,000 நஷ்டஈடாக அரசால் வழங்கப்படுவது வழக்கம்.
ஆனால் கடந்த 2015-இல் மழை வெள்ளத்தாலும், 2016- 2017இல் கோடை வறட்சி யாலும் பாதிக்கப்பட்ட பெரும்பாலான கரும்பு விவசாயிகளுக்கு இதுவரை பயிர் காப்பீட்டுத் தொகையை தமிழக அரசு வழங்கவில்லையென ஏற்கெனவே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு கரும்பு விவசாயிகள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத் துணைத் தலைவர் மேல்பட்டு வெங்கடேசன் கூறியதாவது:
பெரும்பாலான விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்துள்ளனர். இருப்பினும், நஷ்டம் ஏற்பட்டால் காப்பீடு மூலம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதில்லை. செய்யூர் வட்டம் வறட்சி பாதிக்கப்பட்ட
பகுதியாகும்.
எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு, பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு மூலம் இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தர வேண்டும் என்றார்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/20/w600X390/socket.jpg வறட்சியால் காய்ந்த நிலையில் கரும்பு பயிர்கள். http://www.dinamani.com/agriculture/2017/may/20/வறட்சி-125-ஏக்கரில்-கரும்பு-பயிர்கள்-காய்ந்தன-பயிர்-காப்பீடு-வழங்க-விவசாயிகள்-கோரிக்கை-2705312.html
2704631 விவசாயம் மேட்டூர் அணையைத் தூர்வாரும் பணி ஒரு வாரத்தில் தொடங்கும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி Friday, May 19, 2017 02:45 AM +0530 மேட்டூர் அணையைத் தூர்வாரும் பணி அடுத்த வாரத்தில் தொடங்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உதகையில் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள மலர்க் கண்காட்சியின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக கோவைக்கு விமானம் மூலம் வியாழக்கிழமை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் மழை நீரைச் சேமிப்பதற்காக முதல் கட்டமாக ரூ. 100 கோடி ஒதுக்கி, குடிமராமத்துத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 1,519 ஏரிகளில் குடிமராமத்துப் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், ரூ. 300 கோடி நிதி ஒதுக்கி சுமார் 2,200 ஏரிகளைத் தூர்வார அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல், அடுத்த வாரத்தில் மேட்டூர் அணையைத் தூர்வாரும் பணியைத் தொடங்க உள்ளோம். இதையடுத்து, மாநிலத்தில் உள்ள பல்வேறு அணைகளிலும் கூடுதல் நீரைச் சேமித்து வைக்கும் வகையில் தூர்வாரும் பணி தொடங்கப்பட உள்ளது.
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வங்கிக் கணக்குகள் மூலமாக நிவாரணம் அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நிதி பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
சுமார் ரூ. 6 ஆயிரம் கோடி முதல் ரூ. 7 ஆயிரம் கோடி வரை காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு நிதியுதவி பெறுவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகத்தையும் ஆய்வு செய்யும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக கோவை, மதுரை, சேலம், திருச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வின்போது, மாவட்டங்களில் குடிநீர்த் திட்டப் பணிகள் எந்த அளவில் நடந்து வருகின்றன என்பது அறியப்பட்டதுடன், பிரச்னை உள்ள இடங்களில் விரைவில் தீர்வு காண உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் யாரேனும் நிவாரணம் பெறாமல் இருந்தால் அவர்களைப் பட்டியலில் சேர்த்து நிவாரணம் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமைச்சர் ஜெயகுமார் குறித்து மதுசூதனன் தெரிவித்துள்ள கருத்துகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றார்.
பேட்டியின்போது, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன், சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/19/w600X390/admk.jpg உதகை செல்லும் வழியில் கோவைக்கு வியாழக்கிழமை வந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்கும் எம்எல்ஏ அம்மன் கே.அர்ச்சுணன் http://www.dinamani.com/agriculture/2017/may/19/மேட்டூர்-அணையைத்-தூர்வாரும்-பணி-ஒரு-வாரத்தில்-தொடங்கும்-முதல்வர்-எடப்பாடி-பழனிசாமி-2704631.html
2699743 விவசாயம் தேனீ வளர்ப்பில் அதிக லாபம் பெற யோசனை Thursday, May 11, 2017 01:00 AM +0530 தேனீ வளர்ப்பில் தொழில்நுட்பங்களைக் கையாளுவதன் மூலம், அதிக லாபம் பெற முடியும் என விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி அழகுகண்ணன் அண்மையில் வெளியிட்ட அறிக்கை: மருத்துவக் குணம் வாய்ந்த தேன் மனித வாழ்வுக்கு இன்றியமையாததாக இருந்து வருகிறது. விவசாயிகள் கூடுதல் வருமானத்துக்கு விவசாயம் சார்ந்த தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம்.
தேன் மற்றும் அதைச் சார்ந்த பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதால், தேனீ வளர்ப்பு ஒரு தொழிலாக முக்கியம் அடைந்துள்ளது. தேனீ வளர்ப்பில் தேன், மெழுகு முக்கிய பொருட்களாகும். தேனீ வளர்ப்புக்கு குறைந்த நேரம், பணம் மற்றும் கட்டமைப்பு மூலதனமே தேவைப்படும், குறைந்த மதிப்புள்ள விவசாய நிலங்களில் தேன், மெழுகைத் தயாரிக்கலாம், தேனீ வளர்ப்பு வேறு எந்த விவசாயச் செயலுக்கான வளங்களுடனும் போட்டியிடாது. சுற்றுச்சூழலை மேம்படுத்த உதவும். தேனீ வளர்ப்பு தனி நபராலோ அல்லது குழுக்களாகவோ தொடங்கப்படலாம். தேனீக்களில் மலைத் தேனீ, கொம்புத் தேனீ, அடுக்குத் தேனீ, கொசுத் தேனீ ஆகியவை உள்ளன.
தேனீக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரமுள்ள வாசனையை அறியும் தன்மை உடையவை. நீலம், பச்சை, செந்நீலம் ஆகிய வண்ணங்களை தேனீக்களுக்கு அதிகம் பிடிக்கும். தேனீக்களின் மொழி நடன மொழியாகும். பயிர்களின் மகசூலை அதிகரிப்பதில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.
மூன்றில் ஒரு பகுதி அயல் தாவரங்கள் மகரந்தச் சேர்க்கை தாவரங்களாகும். தேனீக்கள் மகரந்தச் சேர்க்கைக்கு பெரும் உதவியாக உள்ளன. கம்பு, சூரியகாந்தி, ஆமணக்கு, வெங்காயம், கேரட், பப்பாளி போன்ற பயிர்களில் தேனீக்கள் மூலமே மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. இதனால் பயிர்களின் மகசூல் அதிகரிக்கிறது.
ஒரு தேனீ பெட்டியில் ஆண்டுக்கு 10 கிலோ தேன் கிடைக்கும். சுமார் 15 பெட்டிகளில் 150 கிலோ தேனை உற்பத்தி செய்யலாம். ஒரு கிலோ தேனின் விலை ரூ. 300 வரை விலைபோகிறது. தேனை பாட்டில்களில் அடைத்து பெரிய நிறுவனங்களுக்கு விற்கலாம். தேனீ வளர்ப்பின் மூலம் தேன், மெழுகு ஏற்றுமதி தரம் வாய்ந்த அரக்கூழ், தேன் பிசின் மற்றும் மகரந்தம் போன்றவை கிடைக்கின்றன.
உடல் வளர்ச்சிக்குச் தேவையான அமினோஅமிலம், விட்டமின் பி2, பி6, சி மற்றும் கே போன்ற சத்துகள் தேனில் உள்ளன. பல்வேறு நோய்களைத் தீர்க்கும் மருந்தாக நாட்டுவைத்தியங்களில் பயன்படுத்தப்படுகிறது. நம்நாட்டில் உள்ளது மிக குறைந்த அளவுள்ள தேன் உற்பத்தியை அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பயிர்களில் தேனீக்கள் மூலம் மகசூலையும் அதிகப்படுத்த முடியும் என்றார் அவர்.
தேனீ வளர்ப்பை பொருளாதார ரீதியில் செய்ய தேனீ பெட்டி, தேனீ பெட்டி தாங்கி, தேனீ முகத்திரை, கை உரை, பாதுகாப்பு உடை, புகைப்பான், தேன் எடுக்கும் கருவி. தேனீ பெட்டிகள் செய்வதற்கு புன்னை மரம் ஏற்றது. ஓவ்வொரு தேன் கூட்டிலும் இரண்டு அறைகள் உள்ளன. கீழே உள்ள அறையை புழு அறை என்றும் மேலே உள்ளதை தேன் அறை என்றும் அழைப்பார்கள்.
இரண்டு அறைகள் உள்ள சட்டத்தின் அளவு வேறுபடும். ஓவ்வொரு பெட்டிக்கும் இடைவெளி சுமார் 6 அடிக்கு மேல் இருக்க வேண்டும். பூக்கள் நிறைந்த பகுதிகளில் ஒரே இடத்தில் 30 பெட்டிகள் வரை வைக்கலாம். பெட்டிகள் செங்குத்தாக நடப்பட்ட 3 அடி உயர கால்களின் மேல் கயிற்றால் கட்டப்பட வேண்டும். அவ்வாறு நடப்பட்ட கால்களைச் சுற்றி தண்ணீர் தேக்கியும் அல்லது எறும்புப் பொடி, வேப்பெண்ணெய், கிரீஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கால்களில் தடவி தேனீக்களை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கலாம்.
சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையம் மற்றும் பாரத மாநில வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து தேனீ வளர்ப்பு பயிற்சியை வரும் 15-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை மொத்தம் 6 நாட்கள் அம்மையத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் முன்பதிவு செய்வது அவசியம். முன்பதிவுக்கு கிரீடு வேளாண் அறிவியல் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/11/w600X390/bee1.jpg http://www.dinamani.com/agriculture/2017/may/11/தேனீ-வளர்ப்பில்-அதிக-லாபம்-பெற-யோசனை-2699743.html
2699742 விவசாயம் மானாவாரி சாகுபடியில் அதிக மகசூல் பெற... Thursday, May 11, 2017 12:59 AM +0530 கோபி: மானாவாரிப் பருவம் தொடங்குவதால், முன்கூட்டியே ஊட்டமேற்றிய உரம் தயாரிக்குமாறு, வேளாண்மைத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடிக்காக ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிப்பது குறித்து, நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவின் மொத்தப் பரப்பில் 75 சதவீதம் மானாவாரி நிலமாகும். இதில், சுமார் 50 சதவீதம் தமிழகத்தில் உள்ளது. மானாவாரியாக பயிரிடப்படும் நிலங்களில் குறைந்த மகசூலே கிடைக்கிறது. இதற்குக் காரணம் பருவம் தவறிய மழை, மழை அளவில் நிலையில்லாத தன்மை, குறைந்தகால மழைப் பருவம், அதிக அளவில் நீர் ஆவியாதல், மண் அரிப்பு போன்றவையாகும்.
எனவே, நிலையில்லாத சூழ்நிலையில் மானாவாரி விவசாயத்தில் சில உத்திகளைப் பயன்படுத்தி ஓரளவு நிலைத்த வருமானத்தைப் பெறலாம். இதில் முக்கியமானது ஊட்டமேற்றிய தொழு உரமாகும். மண் வளப் பராமரிப்பு வேளாண் பயிர்களின் விளைச்சலில் மிக முக்கியப் பங்கு வகுக்கிறது.
மண்ணில் உள்ள சத்துகளில் மணிச்சத்தானது பயிர்களுக்கு அதிக அளவில் தேவைப்படும் சத்தாகும். குறிப்பாக பயிர்கள் வேரூன்றி செழித்து வளர மணிச்சத்தானது மிக அவசியமாகிறது. மண்ணில் காணப்படும் தழைச்சத்தும் பயிருக்கு உடனே கிடைக்கும் நிலையில் இருப்பதில்லை. இந்த ஊட்டச் சத்துகளை ஊட்டமேற்றிய தொழுஉரம் மூலமாக இடுவதன் மூலமாக பயிருக்கு உடனே கிடைக்கும் நிலை ஏற்படும்.
உரமிட்டால் மகசூல் கூடும்: மானாவாரி சாகுபடி வயல்களில் உரமிட்ட பயிர்களில் அதிக மகசூல் கிடைக்கிறது என ஆராய்ச்சி முடிவுகள் மூலம் தெரியவருகிறது. தமிழகத்தில் மானாவாரி சாகுபடிப் பரப்பில் 10 சதவீதம் மட்டுமே போதிய உரமிடப்படுகிறது. நம்பியூர் வட்டாரத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் மானாவாரிப் பகுதியாக உள்ளது. இதில், 10 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக ஆண்டுதோறும் மானாவாரி நிலக்கடலை பயிராகிறது.
நிச்சயமற்ற மழை, வறட்சி காரணமாக மானாவாரி நிலக்கடலைக்கு உரமிட விவசாயிகள் தயங்குகின்றனர். மேலும், போதிய தொழுஉரம் கிடைக்காததாலும், அதன் விலை அதிகமாக இருப்பதாலும் இயற்கை உரத்தின் பயன்பாடும் குறைந்துவிட்டது.
இந்த சூழ்நிலையில் பயிருக்கு உரமிடுவதில் புதிய உத்தியைக் கையாள்வது அவசியமாகிறது. அதிகம் செலவு பிடிக்காத, மிகவும் எளிமையான இந்த ஊட்டமேற்றிய தொழு உரம் இடும் முறையைக் கையாள்வதன் மூலம் மானாவாரியிலும் மகத்தான மகசூலைப் பெறலாம்.
உரம் தயாரித்தல்: ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிப்பது மிகவும் எளிமையானதாகும். மானாவாரி நிலக்கடலை விதைப்பதற்கு குறைந்தது ஒரு மாதம் முன்பே இதைத் தயாரித்து வைக்க வேண்டும். ஒரு வண்டி (சுமார் 300 கிலோ) நன்கு மட்கிய தொழு உரத்துடன் (சாணிக் குப்பை) ஒரு ஏக்கருக்கு பரிந்துரை செய்யப்படும் உரங்களான 25 கிலோ சூப்பர் பாஸ்பேட், 30 கிலோ பொட்டாஷ் ஆகிய உரங்களை நன்கு கலந்து மூட்டமாகக் குவித்து வைத்து நிழலில் களி மண் மூலம் நன்கு மூடி வைக்க வேண்டும். அல்லது நன்கு தண்ணீர்த் தெளித்து கெட்டியாக குவியலைத் தட்டிவிட வேண்டும்.
காற்று புகாத நிலையில் உரச்சத்துகள் வீணாகாமல் தடுக்கப்படும். அதை அப்படியே ஒரு மாதகாலம் விட்டு வைக்கும்போது, தொழு உரம் ஊட்டம் பெற்று கூடுதல் சத்துகளைப் பெறுகின்றன. ஒரு மாதம் கழித்து இத்துடன் 9 கிலோ யூரியாவைக் கலந்து ஒரு ஏக்கரில் விதைப் பருப்பு சால் விடும்போது அந்தப் படைக்காலிலேயே தூவிவிட வேண்டும். அதாவது முழுவதும் அடியுரமாகவே இட வேண்டும்.
பயன்கள்: இதன் மூலமாக மானாவாரி நிலக்கடலைக்கு இடவேண்டிய உரச்சத்துகள் இழப்பின்றி பயிருக்கு உடனே கிடைக்கின்றன. பயிர்களின் வேர் வளர்ச்சி அதிகமாகி மகசூல் கூடுகிறது. மணிச்சத்து வீணாகாமல் பயிருக்குக் கிடைக்கிறது. மண்ணின் இயற்பியல் தன்மை மேம்படுகிறது. மண்ணில் நீர் தேங்கும் திறன் அதிகரிக்கிறது.
மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மற்ற சத்துகளும் பயிருக்குக் கிடைத்து, விளைச்சல் அதிகரிக்கிறது. மேலும், வறட்சியின்போது ரசாயன உரமிடுவதால் ஏற்படும் அபாயமும் குறைகிறது. அதுமட்டுமின்றி ஓரளவு தொழு உரமும் பயிருக்கு இடும் வாய்ப்பு கிட்டுகிறது. ஒரு ஏக்கருக்கு ஒரு வண்டிக்கும் கூடுதலாகத் தொழு இட்டால், இன்னும் மகசூல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.
மேலும், ஒரு ஏக்கருக்கு குறைந்தது இரண்டு பொட்டலம் (400 கிராம்) ரைசோபியம், இரண்டு பொட்டலம் பாஸ்போபேக்டீரியா ஆகிய உயிர் உரங்களை நிலக்கடலை விதையுடன் ஆறிய கஞ்சியில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைப்பதால் கூடுதல் மகசூல் பெறலாம்.
விதை விதைக்கும்போது மேற்கூறப்பட்ட உயிர் உரங்களைத் தனியாக சிறிது தொழு உரத்துடன் கலந்து வயலில் இட்டு அதிக மகசூல் பெறலாம். பெருகிவரும் உரத் தட்டுப்பாடு, இடுபொருள்களின் விலை உயர்வு போன்ற இடர்பாடுகளுக்கு மத்தியில் இதற்கு மாற்றாக நல்ல தரமான ஊட்டமேற்றிய தொழுஉரத்தை விவசாயிகள் உற்பத்தி செய்து பயன்படுத்தி, நல்ல மகசூல் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/11/w600X390/agri.jpg ஊட்டமேற்றிய உரம் தயாரித்தல். http://www.dinamani.com/agriculture/2017/may/11/மானாவாரி-சாகுபடியில்-அதிக-மகசூல்-பெற-2699742.html
2697958 விவசாயம் டெல்டா மாவட்டங்களில் வறட்சியும்-புலம்பெயர்வும் -வி.என். ராகவன் Monday, May 8, 2017 01:52 AM +0530 ஏறத்தாழ 140 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவும் மிகக் கடுமையான வறட்சியால் புலம்பெயர்வும் தொடர்கிறது.
தமிழகத்தில் வறட்சி என்பது புதிதல்ல. பல நூறு ஆண்டுகளில் அவ்வப்போது நிலவிய வறட்சி குறித்த சான்றுகள் கிடைக்கப் பெறுகின்றன. கி.பி. 1570-இல் திருநெல்வேலிக் கடற்கரைப் பிரதேசத்தில் நிலவிய வறட்சி பற்றிய தகவல்களை போர்ச்சுகீசிய மிஷன் பதிவேடு கூறுகிறது. இதேபோல, கி.பி. 1648-ல் கோவையிலும், 1659-ல் தமிழகத்திலும் வறட்சி நிலவியது.
17, 18 ஆம் நூற்றாண்டுகளில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வறட்சி கடுமையானது. இதை அந்தந்த மாவட்ட அரசிதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாது வருஷத்து பஞ்சம்:
இப்போது, வரலாறு காணாத வறட்சி எனக் கூறப்படுகிறது. இதேபோன்ற வறட்சி 1876-ல் தொடங்கி, தொடர்ந்து இரு ஆண்டுகளுக்கு நீடித்தது. இது, தமிழ் ஆண்டு தாது ஆண்டில் ஏற்பட்டது. எனவே, இதை தாது வருஷத்து பஞ்சம் என அழைக்கின்றனர். இந்த வறட்சி தமிழகத்தில் மட்டுமல்லாமல், தென் மாநிலங்கள் முழுவதும் நிலவியது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் பசியாலும், பட்டினியாலும் இறந்தனர். விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், மக்களின் பொருளாதாரம் வியக்கத்தக்க அளவுக்குக் குறைந்தது. மக்களும் வருமானமின்றி வாடி வருந்தினர். இப்போது, சோமாலியா நாட்டில் நிலவிய பஞ்சம் அக்காலத்தில் தமிழகத்தில் இருந்தது எனக் குறிப்பிடுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
இதனால், மக்கள் வாழ்வதற்கு இடமின்றி எஞ்சிய ஆடு, மாடுகளுடனும், அவசியமான உடைமைகளுடனும் பல இடங்களுக்கும் புலம் பெயர்ந்தனர்.
இந்த நிலைமை அக்காலத்தில் டெல்டா மாவட்டங்களிலும் நிலவியது. அப்போது இருந்த ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் இயல்பான சாகுபடி அளவில் 25 சதம்தான் அறுவடையானது. நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வெளி மாவட்டங்களிலிருந்து வந்த மக்களும் மேலும் வறுமைக்கு ஆளாகி ஏமாற்றமடைந்து, பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால், அக்காலத்தில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகம் இருந்ததாக மாவட்ட அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் வறுமையும், பட்டினியும் அதிகரித்ததால் எஞ்சிய கால்நடைகளுடனும், அத்தியாவசியமான உடைமைகளுடனும் ஏராளமானோர் புலம்பெயர்ந்தனர். குறிப்பாக, நாகை, திருவாரூர் பகுதியில் உள்ள மக்கள் மேற்கு நோக்கி நகர்ந்தனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத் தமிழ் பண்டிதரும் வரலாற்று ஆய்வாளருமான மணிமாறன் தெரிவித்தது:
தாது வருஷத்தில் நிலவிய கடும் வறட்சி காரணமாக நாகை, திருவாரூர் மாவட்டங்களிலிருந்து பிழைப்புத் தேடி மேற்கு நோக்கிச் சென்றுள்ளனர். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகேயுள்ள பழங்கனாங்குடி, துப்பாக்கித் தொழில்சாலை பகுதிகளில் வசிக்கும் மக்களின் முன்னோர்கள் திருவாரூர், நாகை மாவட்டங்களில் இருந்து சென்றிருக்கலாம் என்பது கள ஆய்வில் தெரிய வருகிறது. அவர்களுடைய வழிபாட்டு முறைகள் உள்ளிட்டவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இதை உறுதி செய்ய முடிகிறது. சிலர் மேற்கு மாவட்டங்களுக்கும் சென்றுள்ளனர் என்றார் மாறன்.
அதன் பிறகு, அவ்வப்போது மழை குறைவால் சாகுபடி பாதிக்கப்பட்டு வறட்சி நிலவியது. 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு டெல்டா மாவட்டங்களில் காவிரி நீர் வரத்து இல்லாததாலும், மழையளவு குறைந்துவிட்டதாலும் சாகுபடிப் பணிகள் குறைந்துவிட்டது. இதன் காரணமாக விவசாயத் தொழிலாளர்களும், சிறு, குறு விவசாயிகளும் பிழைப்புத் தேடி திருப்பூர், ஈரோடு, கேரள மாநிலத்துக்குச் சென்றனர்.
ஒவ்வொரு கிராமத்திலும் சராசரியாக 50 சதத்துக்கும் அதிகமானோர் பிழைப்புக்காக நகரங்களை நோக்கியும், வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சென்றுவிட்டனர் என்கிறார் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலர் கே. பக்கிரிசாமி. குறிப்பாக, 2016 ஆம் ஆண்டில் குறுவை மட்டுமல்லாமல் சம்பாவும் பொய்த்துவிட்டதால், டெல்டா மாவட்டங்களில் விவசாயக் கூலி வேலை கிடைப்பதில்லை. எனவே, பிழைப்புக்காக மேற்கு மாவட்டங்களுக்குச் செல்வது தொடர்கிறது என்றார் அவர்.
இந்த வறட்சி நிலைமை மே, ஜூன் மாதங்களிலும் தொடர்ந்தால் புலம்பெயர்வு அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே, நீர்நிலைகளை முறையாகப் பராமரித்து, தண்ணீரைச் சேமிப்பதற்கும், வாழ்வாதாரங்களை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே புலம்பெயர்வைத் தடுக்க முடியும்.
 

* வறட்சி தொடர்ந்தால் புலம்பெயர்வு அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே, நீர்நிலைகளை முறையாகப் பராமரித்து, தண்ணீரைச் சேமிப்பதற்கும், வாழ்வாதாரங்களை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே புலம்பெயர்வைத் தடுக்க முடியும். *

-வி.என். ராகவன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/8/w600X390/delta.jpg http://www.dinamani.com/agriculture/2017/may/08/டெல்டா-மாவட்டங்களில்-வறட்சியும்-புலம்பெயர்வும்-2697958.html
2695636 விவசாயம் வறட்சி எதிரொலி: நிகழாண்டில் தானிய உற்பத்தி 50% குறையும்: பழைய காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.168 கோடி ஒதுக்கீடு Thursday, May 4, 2017 05:41 AM +0530 தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக, நிகழாண்டில் உணவு தானிய உற்பத்தி 50 சதவீதமாகக் குறையும் என்று தமிழக வேளாண்மைத் துறை மதிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் 130 லட்சம் மெட்ரிக் டன்னை எட்டிய உணவு தானிய உற்பத்தி இந்த ஆண்டில் வெறும் 50 முதல் 60 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நிதியுதவிகளை தமிழக அரசு விடுவித்துள்ளது.
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால், மாநிலத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், உணவு தானிய உற்பத்தியும் வெகுவாகக் குறைந்துள்ளது.
கடந்த 2011-12-ஆம் ஆண்டில் இருந்து 2015-16-ஆம் ஆண்டு வரை உணவு தானிய உற்பத்தி 100 லட்சம் மெட்ரிக் டன்னைத் தாண்டியே இருந்தது. கடந்த ஆண்டு 130 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி இருந்தது.
வறட்சி எதிரொலி: ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு நடைபெறும் பாசனம் முற்றிலும் முடங்கியுள்ளது. ஆழ்துளைக் கிணறு மூலம் நடைபெறும் பாசனத்தில் எந்த பாதிப்பும் இல்லை. குறிப்பாக, மயிலாடுதுறை போன்ற காவிரி டெல்டாவின் வடக்குப் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறு மூலமான விவசாயம் நடைபெறுவதால் அந்தப் பகுதிகளில் உணவு தானிய உற்பத்தியில் பாதிப்பு இருக்காது என வேளாண்மைத் துறை எதிர்பார்க்கிறது.
பாதிப்பு எவ்வளவு?: ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு நடைபெறும் பாசனம் முற்றிலும் இல்லாமல் போனதால் அது மாநிலத்தின் மொத்த உணவு தானிய உற்பத்தியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என வேளாண்மைத் துறை மதிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் 130 லட்சம் மெட்ரிக் டன்னை எட்டிய உணவு தானிய உற்பத்தி, இந்த ஆண்டு வெறும் 50 முதல் 60 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு மட்டுமே இருக்கும் எனத் தெரிகிறது.
ரூ.168 கோடிக்கு அரசு உத்தரவு: தமிழகத்தில் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணத்துக்காக மட்டும் ரூ.2,247 கோடி தொகையை தமிழக அரசு விடுவித்துள்ளது. இந்த ஆண்டு பிரதம மந்திரியின் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 15 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குச் செலுத்த வேண்டிய காப்பீட்டுக்கான பிரீமியத் தொகையாக ரூ.412 கோடியை மாநில அரசு செலுத்தியுள்ளது.
இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு வரையில் தமிழகத்தில் மத்திய அரசின் பழைய வேளாண் காப்பீட்டுத் திட்டமே செயல்படுத்தப்பட்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் பிரீமியத் தொகையைச் செலுத்துவதுடன், இழப்பீட்டுக்கான தொகையிலும் சரிபாதியை மாநில அரசே ஏற்க வேண்டும் என்ற விதி உள்ளது.
இதன் அடிப்படையில், கடந்த ஆண்டில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பிரீமியத் தொகையான ரூ.53 கோடியுடன், இழப்பீட்டுத் தொகையில் பாதியளவு தொகையான ரூ.168 கோடியை தமிழக அரசு அண்மையில் விடுவித்தது. இதற்கான அரசு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தொகை பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்குக் கிடைக்கப் பெறும்.
மேலும், இந்த ஆண்டுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கும் பணியை வேளாண்மை காப்பீட்டுக் கழகம், ஐ.சி.ஐ.சி.ஐ., நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ஆகிய நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்தக் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை ஜூன் 15-ஆம் தேதிக்குள் வழங்கிட காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/4/w600X390/tree.jpg http://www.dinamani.com/agriculture/2017/may/04/வறட்சி-எதிரொலி-நிகழாண்டில்-தானிய-உற்பத்தி-50-குறையும்-பழைய-காப்பீட்டுத்-திட்டத்துக்கு-ரூ168-கோடி-2695636.html
2695437 விவசாயம் நடவுமுறை துவரை சாகுபடி தொழில்நுட்பங்கள் Wednesday, May 3, 2017 11:24 AM +0530 பயறு வகை பயிர்களில் துவரை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. துவரையில் 22 சத புரதச் சத்து உள்ளது. இந்த புரதச் சத்து தானிய பயறுகளின் புரதச் சத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகம்.

நடவு முறையில் துவரை சாகுபடி தொழில்நுட்பங்களை, டாக்டர் பெருமாள் வேளாண்மை அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் டி.சுந்தராஜ் கூறியதாவது:

நடவு முறை:
துவரை மானாவாரியில் சாகுபடி செய்யப்படுவதால், வறட்சியால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. துவரையில் நாற்றுகள் தயார் செய்து நடும் முறை பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது.

நடவு முறையில் மழை தாமதமானாலும், குறித்த பருவத்தில் பயிர் செய்ய முடியும். துவரை நடவு அதிக ஆழத்தில் செய்யப்படுவதால், வேர் வளர்ச்சி காணப்பட்டு, பயிர் வறட்சியைத் தாங்கி வளர வழி ஏற்படுகிறது.
வைகாசிப் பட்டம் (மே - ஜூன் மாதம்), ஆடிப் பட்டம் (ஜூலை) போன்ற பருவக் காலங்களில் துவரையைப் பயிரிட வேண்டும்.

ரகங்கள்:
எல்.ஆர்.ஜி-41 என்ற ரகம் 200 நாள்கள் வயதுடையது. ஒரு ஹெக்டேருக்கு 2,500 கிலோ மகசூல் கிடைக்கும். காய்ப்புழு எதிர்ப்பு சக்தி கொண்டது. பி.ஆர்.ஜி-1 என்ற ரகம் 180 நாள்கள் வயதுடையது. ஒரு ஹெக்டேருக்கு 1,400 கிலோ மகசூல் கிடைக்கும். பச்சை காய் ஒரு செடிக்கு 3 கிலோ வரை மகசூல் கிடைக்கும். பி.ஆர்.ஜி-2 என்ற ரகம் 150 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 1,500 கிலோ வரையில் மகசூல் கிடைக்கும். காய்ப்புழு எதிர்ப்பு சக்தி கொண்டது. கோ-6 என்ற ரகம் 180 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு ஆயிரம் கிலோ வரையில் மகசூல் கிடைக்கும். கோ-7 130 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 1,200 கிலோ மகசூல் கிடைக்கும்.
விபிஎன்-3 என்ற ரகம் 105 நாள்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு 1,550 கிலோ மகசூல் கிடைக்கும்.

விதை:
விதைப்பதற்கு சான்றிதழ் பெற்ற சுமார் 90 சத முளைப்புத் திறன் உள்ள விதைகளையே பயன்படுத்த வேண்டும். ஹெக்டேர் நடவு முறையில் சாகுபடி செய்ய சுமார் 2.5 கிலோ விதை போதுமானது. சாதாரண முறையில் விதைக்க ஒரு ஹெக்டேருக்கு 25 கிலோ விதை தேவைப்படும்.
ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் கால்சியம் குளோரைடை கலந்த பின் விதைகளை அந்தக் கலவையில் ஒருமணி நேரம் ஊற வைத்து, பின் ஏழு மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். இவ்வாறு விதைகளைக் கடினப்படுத்துவதன் மூலம் செல்லின் புரோட்டோபிளாசம் கடினப்படுத்தப்பட்டு, நீரை கிரகிக்கும் தன்மை அதிகரிக்கும்.
இதனால், விதைகளின் முளைப்புத் திறனும், பயிர் வளர்ச்சி பெற்று அதிக விளைச்சல் பெற வழிவகுக்கும்.

பூஞ்சண விதை நேர்த்தி:
கடினப்படுத்தப்பட்ட விதையை 100 கிராம் ரைசோபியம் நுண்ணுயிர் கலவை மற்றும் 100 மி.லி. சூடில்லாத அரிசிக் கஞ்சியுடன் நன்கு கலந்து 15 நிமிடம் நிழலில் உலர வைத்து விதைக்க வேண்டும். நுண்ணுயிர் கலந்த விதைகளை உடனே விதைக்க வேண்டும்.

நாற்றங்கால் தயாரித்தல்:
குழித்தட்டு முறை: 98 குழி கொண்ட குழித்தட்டில் தென்னை நார் கழிவு நிரப்பி, விதை நேர்த்தி செய்த விதைகளை ஒரு குழிக்கு ஒரு விதை என்ற அளவில் 1 செ.மீ. ஆழத்தில் விதைத்து, பின் தென்னை நார் கழிவு மூலம் விதைகளை மூட வேண்டும். இவ்வாறு விதைப்பு செய்யப்பட்ட குழித்தட்டுகளை நிழலான இடங்களில் வைத்து தண்ணீர் தெளித்து பாதுகாக்க வேண்டும். நன்கு பராமரிக்கப்பட்ட செடிகளை 15 - 20- ஆம் நாளில் நடவுக்குப் பயன்படுத்த வேண்டும். நடுவதற்கு நில நாள்களுக்கு முன்பு இளம்வெயிலில் நாற்றுகளை வைத்து கடினப்படுத்திய பின்பு நடவு செய்ய வேண்டும்.

பாலிதீன் பை முறை:
மணல், மண், எரு ஆகியவற்றை சம அளவில் கலந்து 6-க்கு 4 அளவுள்ள 200 மைக்ரான் பாலிதீன் பைகளில் நிரப்பி விதைக்கப் பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு பைக்கு ஒரு விதை என்ற அளவில் 1 செ.மீ. ஆழத்தில் விதைத்து, ஒவ்வொரு நாளும் தண்ணீர் தெளித்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, விதைப்பு செய்யப்பட்ட பைகளை நிழலான இடங்களில் வைத்து 30-40 நாள்களுக்கு முன்பு இளம்வெயிலில் நாற்றுகளை வைத்துக் கடினப்படுத்தி, பின்பு நடவு செய்ய வேண்டும்.

நடவு நிலம் தயாரித்தல்:
வடிகால் வசதி கொண்ட செம்மண் அல்லது வண்டல் மண் நிலங்கள் துவரை சாகுபடி செய்ய மிகவும் ஏற்றது.

நடவு முறை:
துவரை நடவு செய்வதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பே குறையாமல் நன்கு மக்கிய எருவை ஹெக்டேருக்கு 12.5 டன் அல்லது மண்புழு உரம் ஹெக்டேருக்கு 5 டன் என்ற அளவில் இட வேண்டும். மானாவாரியில் தனிப்பயிர் சாகுபடிக்கு 15 சதுர செ.மீ. அளவுள்ள குழிகளை 5-க்கு 3 இடைவெளியிலும் (ஹெக்டேருக்கு 7,260 பயிர்கள்), ஊடுபயிர்ச் சாகுபடி செய்யும் இடங்களில் 6 க்கு 3 (ஹெக்டேருக்கு 6,060 பயிர்கள்) என்ற இடைவெளியிலும் குழிகள் எடுக்க வேண்டும்.

நடவு செய்த 30-ஆம் நாளில் மண் அணைக்கும்போது களைகளை ஒரு முறை எடுத்த பின் நீர்ப் பாய்ச்ச வேண்டும் அல்லது நடவு செய்த 20-ஆம் நாளில் இமாஜந்திபிர் எனும் களைக் கொல்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மி.லி. கலந்து தெளிக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை:
மானாவாரி பயிராக இருந்தால் 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து, 12.5 கிலோ சாம்பல் சத்து மற்றும் 10 கிலோ கந்தகச் சத்து அடியுரமாக இட வேண்டும்.  இறவைப் பயிராக இருந்தால் அடியுரமாக 12.5 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 12.5 கிலோ சாம்பல் சத்து மற்றும் 20 கிலோ கந்தகச் சத்து இட வேண்டும்.

மேலும், நடவு செய்த 30-ஆம் நாளில் மண் அணைக்கும்போது மீதமுள்ள 12.5 கிலோ தழைச்சத்து மற்றும் 12.5 கிலோ சாம்பல் சத்து கலந்து மண்ணில் இட்ட பின் நீர் பாய்ச்ச வேண்டும்.

நடவு நட்ட 40 - 45 நாளில் 2 சத டிஏபி கரைசல் தெளிக்க வேண்டும். ஒரு வார இடைவெளியில் ஹெக்டேருக்கு 2.5 - 5 சத ஹெக்டேர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

ஊடுபயிர்:
ஊடு பயிர் செய்யும் இடங்களில் நடவுக்கு முன் உளுந்து, பாசிப் பயறு, அவரை மற்றும் மொச்சை போன்ற பயிர்களை விதைத்து, பிறகு துவரை நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். சோளத்தை ஊடு பயிராகச் செய்யும்போது காய்ப்புழுவின் பாதிப்பு குறைவாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
மேற்கூறிய தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் மானாவாரியில் சாகுபடி செய்யும் துவரையில் அதிக மகசூல், லாபம் பெற முடியும் எனத் தெரிவித்தார் அவர்.

]]>
Planting , cultivation techniques http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/3/w600X390/dhol.jpg http://www.dinamani.com/agriculture/2017/may/03/நடவுமுறை-துவரை-சாகுபடி-தொழில்நுட்பங்கள்-2695437.html
2695430 விவசாயம் வறட்சியின் வரப்பிரசாதம்: குறைந்த செலவில் தீவன உற்பத்தி! Wednesday, May 3, 2017 11:15 AM +0530 வறட்சியால் ஏற்பட்டுள்ள பசுந்தீவனத் தட்டுப்பாட்டைப் போக்கக் கால்நடைத் துறை சார்பில் மண்ணில்லாமல் பசுந் தீவனம் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதோடு, கோடை வெப்பமும் உக்கிரமாக உள்ள நிலையில் விவசாயப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், விவசாயத்தின் சார்புத் தொழிலான கால்நடைத் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு பசுந்தீவனத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

மண்ணில்லா பசுந்தீவனம் வளர்ப்பு: இதற்கிடையே, மண்ணில்லா பசுந்தீவனம் வளர்ப்பு (ஹைட்ரோபோனிக்ஸ்) எனும் முறையைக் கால்நடைத் துறை அறிமுகம் செய்துள்ளது.

இந்த நிலையில், புதிய தொழில்நுட்பம் குறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

இந்த முறைக்கு செங்குத்தான விவசாயம் என்று பெயர். ஆகவே, தட்டுகளை வைக்க ஸ்டேன்டு செய்ய வேண்டும். இதில், ஓர் அடுக்குக்கும், இன்னொரு அடுக்குக்கும் 1 அடி இடைவெளி வைக்க வேண்டும். மொத்த ஸ்டேன்டின் உயரம் 6 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஸ்டேன்டின் நீளம், அறையின் அளவு மற்றும் அமைப்பு மாறுபடும். இதுதவிர, 1 அடி அகலம், ஒன்றரை அடி நீளம், 3 அங்குலம் உயரம் உள்ள பிளாஸ்டிக் தட்டுகள் தேவைப்படும். தண்ணீர் தெளிக்க ஸ்பிரேயர், விதைகளை ஊறவைக்க பிளாஸ்டிக் வாளி, முளைப்புக் கட்ட கோணி சாக்கு, ஈரப்பதம் மற்றும் குளிர் நிலையை அறிய ஒரு தெர்மா மீட்டர் ஆகியவையும் தேவைப்படும்.

மக்காச்சோளம், கோதுமை, பார்லி, ஓட்ஸ், சணப்பை, கொள்ளு மற்றும் தட்டைப்பயறு போன்ற பயிர் வகைகளை இந்த மண்ணில்லாத தீவன முறையில் வளர்க்கலாம். இதில்,விவசாயிகளுக்கு எளிதாக கிடைப்பது மக்காச் சோளம். புதிய நன்கு காய்ந்த பூசனம் பிடிக்காத நன்கு விளைந்த முளை உடையாத மக்காச் சோளத்தை தேர்வு செய்ய வேண்டும். சோளம் பயிரிட்டால், இளம் சோளப் பயிரில் நச்சுத்தன்மை இருக்கும். அதனால் அதை தவிர்ப்பது நல்லது.

வளர்ப்பு அறை: "கிரீன் ஹவுஸ்' எனப்படும் பசுமைக் கூடாரம் அமைத்துக் கொள்ளலாம். சூரிய ஒளி நன்கு கிடைக்கக் கூடிய இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். பயிர் வளர்ச்சிக்கு சூரிய ஒளி மிக அவசியமாகும். சூரிய ஒளியைக் கடத்தக் கூடிய புறஊதாக் கதிரால் பாதிப்பு ஏற்படுத்தாத கெட்டியான பாலித்தீன் பையினால் சுற்றி மூட வேண்டும். வளர்ப்பு அறைக்குள் இருக்கும் குளிர் நிலையும், காற்றின் ஈரப்பதமும் வெளியேறக் கூடாது. வசதிக்கேற்ப நீள அகலத்தில் ஸ்டேன்டுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டேன்டுகளை இரும்பு அல்லது பி.வி.சி. குழாய் அல்லது மரத்தால் செய்து கொள்ளலாம். தினமும் பலமுறை தண்ணீர் தெளிக்கப்படுவதால், தண்ணீரால் பாதிப்பு ஏற்படாத பொருள்களால் ஸ்டேன்டு அமைத்துக்கொள்ள வேண்டும். பயிர் வளர்ப்பு அறையின் தரையில் குறைந்தது அரை அடி உயரத்துக்கு ஆற்று மணல் போட வேண்டும்.

ஓர் அடி அகலம், ஒன்றரை அடி நீளம், 3 அங்குலம் உயரம் உள்ள பிளாஸ்டிக் தட்டுகளின் அடியில் 3.5 மில்லி மீட்டர் அளவுள்ள 12 துளைகள் இட வேண்டும். அதிகப்படியான தண்ணீர் இந்த துளைகள் வழியாக வெளியேற்றப்படுகிறது.
பயிர் வளர்ப்பு முறை: ஒன்றரை சதுர அடி பரப்பளவுள்ள தட்டு ஒன்றுக்கு 300 கிராம் அளவுக்கு மக்காச்சோள விதை போதுமானது. மக்காச் சோளத்தின் திரட்சி, அளவின்படி இந்த அளவை கூட்டியோ அல்லது குறைத்தோ பயன்படுத்தலாம். நாள் ஒன்றுக்கு எத்தனை தட்டுகள் தீவனம் தேவையோ, அதேபோல் 8 மடங்கு வாங்க வேண்டும்.

 உதாரணமாக, ஒரு நாளைக்கு தேவை 10 தட்டுகள் தீவனம் என்றால், 80 தட்டுகள் வாங்க வேண்டும். 10 தட்டுகளுக்குத் தேவையான 3 கிலோ மக்காச் சோளத்தை நீரில் நன்கு மூழ்கும்படி பிளாஸ்டிக் வாளியில் 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

ஊறிய விதையை சணல் சாக்கில் கட்டி 24 மணி நேரத்துக்கு இருட்டில் வைக்க வேண்டும். மீண்டும் 24 மணி நேரம் கழித்துப் பார்த்தால் விதைகளில் சிறுமுளை விட்டிருக்கும்.

முளைவிட்ட விதைகளை பிளாஸ்டிக் தட்டுகளில் தட்டு ஒன்றுக்கு சுமார் 300 கிராம் வீதம் இடைவெளியின்றி ஒரு விதையின்மேல் இன்னொரு விதை விழாத வகையில் பரப்பி, சில நிமிடங்கள் காற்றோற்றமாக வைக்க வேண்டும். பிறகு தட்டுகளை வளர்ப்பு அறைக்கு எடுத்துச் சென்று ஸ்டேன்டில் அடுக்கி வைத்து, நீர் தெளிப்பான் மூலம் தண்ணீரை புகைபோல் தெளிக்க வேண்டும். விதைகளில் எப்போதும் ஈரப்பதம் குறையாமல் வைத்திருக்க வேண்டும்.

மண்ணில்லா தீவனப் பயிருக்கு தண்ணீர் மிக குறைவாகத்தான் தேவைப்படுகிறது. அடிக்கடி தண்ணீர் தெளிப்பது மிக அவசியம். அறையின் வெப்ப நிலை 24-25 டிகிரி வரையிலும் காற்றின் ஈரப்பதம் 80-85 விழுக்காடாகப் பராமரித்தால், விளைச்சல் நன்றாக இருக்கும். அளவுகளில் கொஞ்சம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் பெரிய பாதிப்பு இல்லை. அறையின் வெப்பநிலையைக் குறைக்க அறையின் தரையில் மணல் பரப்ப வேண்டும். மண்ணில்லா தீவன வளர்ப்பு முறையில் 7 நாட்களில் 25 முதல் 30 செ.மீ. உயரப் பயிராக வளர்ந்து விடுகிறது.

மண்ணில்லா பசுந்தீவனத்தில் உள்ள சத்துகள்: மண்ணில்லாமல் வளர்க்கப்பட்ட தீவனத்தில் அதிக புரதச் சத்து (13.6), குறைந்த நார்ச்சத்து இருப்பதால், கால்நடைகளுக்கு நாள் ஒன்றுக்கு 10 -25 கிலோ வரை கொடுக்கலாம்.

இந்தத் தீவனத்தை அளித்து கறவை மாடுகளில் பரிசோதனை செய்ததில் 7-8 கிலோ பசுந்தீவனம் கொடுப்பதால், ஒரு கிலோ அடர் தீவன அளவைக் குறைப்பதோடு 15 சதவீதம் பால் உற்பத்தி அதிகரிக்கும்.

மேலும், கால்நடைகளில் பரிசோதனை செய்ததில் 10 கிலோ பசுந்தீவனம் கொடுப்பதால், 1.70 கிலோ எடை அதிகரித்ததும் கண்டறியப்பட்டுள்ளது. பாலின் கொழுப்பு 0.3 சதவீதம், கொழுப்பில்லாத திடப் பொருட்கள் அளவு 0.5 சதவீதம் அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. மண்ணில்லாத தீவனப் பயிரில் இலை, வேர், விதைப் பகுதி என மூன்றையும் கால்நடைகளுக்குத் தீவனமாக அளிக்கலாம்.

மண்ணில் பயிர் நடவு செய்து 25-30 செ.மீட்டர் உயரம் வளர்ப்பதற்கு எவ்வளவு தண்ணீர் செலவு செய்கிறோமோ, அதில் 5 சதவீதத்துக்கும் குறைவான அளவு தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி, அதே அளவு தீவன மகசூல் எடுக்க முடியும். இந்த பசுந் தீவனத்தை பசுக்களுக்குத் தொடர்ந்து கொடுத்து வந்தால், பாலின் அளவு அதிகரிக்கும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/3/w600X390/animals-food.jpg http://www.dinamani.com/agriculture/2017/may/03/வறட்சியின்-வரப்பிரசாதம்-குறைந்த-செலவில்-தீவன-உற்பத்தி-2695430.html
2692104 விவசாயம் விவசாயிகளுக்கு அடுத்த மாதம் முதல் ரூபே அட்டை: அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல் Friday, April 28, 2017 02:14 AM +0530 ஏ.டி.எம். இயந்திரங்களில் பயன்படுத்திக் கொள்ள விவசாயிகளுக்கு மே மாதம் முதல் ரூபே அட்டை வழங்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அறிவித்தார்.
சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசியது: கூட்டுறவு நிறுவனங்களில் சிறு குறு விவசாயிகள் பயிர்க் கடன் பெற்று கடந்த ஆண்டு மார்ச் வரையில் நிலுவையில் இருந்த பயிர்க் கடனை தள்ளுபடி செய்ததன் மூலம் 12,02,075 விவசாயிகள் ரூ.5,318.78 கோடியை தள்ளுபடியாகப் பெற்றுப் பயனடைந்துள்ளார்கள்.
நடப்பாண்டில் (2017-18) கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக ரூ.7000 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் முதல் ரூபே: கூட்டுறவுத் துறையை கணினிமயமாக்குவதற்கு துரித நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் கணினிமயமாக்கப்பட்டு தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளுக்கு இணையாக வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவையை சிறப்பாக அளித்து வருகின்றன.
பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசு ரூபே விவசாயக் கடன் அட்டை திட்டத்தை செயல்படுத்துமாறு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், பயிர்க்கடன் பெறும் விவசாயிகளுக்கு ரூபே விவசாயக் கடன் அட்டை மே மாதம் முதல் வழங்கப்பட உள்ளது. ரூபே விவசாயக் கடன் அட்டையைக் கொண்டு இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளின் ஏடிஎம்களிலும் பரிவர்த்தனை செய்துகொள்ளலாம்.
கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் 32,715 முழு நேர மற்றும் பகுதி நேர நியாயவிலைக் கடைகள் கனிணிமயமாக்கப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு நிர்வாக முறையில் அத்தியாவசியப் பொருள்களை வழங்கி வருகிறது. புதிய குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்க, முகவரி மாற்றம் செய்ய, புதிய பெயர் சேர்க்க, நீக்க, மொபைல் எண் மாற்றம் செய்ய www.tnpds.com என்ற இணையதளத்தின் மூலம் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
புகார் தெரிவிக்க செல்லிடப்பேசி எண்: மேலும், நியாயவிலைக் கடையில் என்னென்ன பொருள்கள் உள்ளன, கடையில், எவ்வளவு இருப்பு உள்ளது, நுகர்வோர்கள் வாங்கிய பொருள்களின் விவரம், கடை திறந்துள்ளதா இல்லையா என அறிதல், வாங்காத பொருள்களுக்கு எஸ்.எம்.எஸ். வருதல் போன்ற குறைகளைக் களைய 1967 மற்றும் 18004255901 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்கலாம்.
கூட்டுறவு நிறுவனங்களில் அனைத்து நிலைகளிலும் உள்ள காலிப் பணியிடங்கள் இன சுழற்சி முறையில் உரிய வழிமுறைகளைப் முறையாக பின்பற்றி விரைவில் நிரப்பப்படும் என்றார் செல்லூர் கே.ராஜூ.
இந்தக் கூட்டத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அ.ஞானசேகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

]]>
செல்லூர் ராஜூ,ரூபே அட்டை,தமிழ்நாடு,Sellur Raju,RuPay Card,Tamilnadu http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/28/w600X390/sellurraju.jpg http://www.dinamani.com/agriculture/2017/apr/28/விவசாயிகளுக்கு-அடுத்த-மாதம்-முதல்-ரூபே-அட்டை-அமைச்சர்-செல்லூர்-ராஜூ-தகவல்-2692104.html
2690254 விவசாயம் மோகனூரில் சூறைக் காற்று: 600 வாழை மரங்கள் முறிந்து சேதம் Tuesday, April 25, 2017 12:30 AM +0530 இதனால் விவசாயிகளுக்கு ரூ. 2.50 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை காலை பொதுமக்களை வெயில் வாட்டி வந்த நிலையில் மாலையில் சீதோஷ்ண நிலை மாறியது. மோகனூர் பகுதியில் மாலை பொழுதில் சூறைக் காற்று வீசியது. இதில், கட்டடங்களின் மேற்கூரைகளில் போடப்பட்டிருந்த ஆஸ்பெஸ்டாஸ் அட்டைகள், ஓடுகள் காற்றில் பறந்தன. மேலும், புளி, வேம்பு, புங்கம் உள்ளிட்ட மரங்களும் காற்றுத் தாக்குப் பிடிக்க முடியாமல் முறிந்தும், வேரோடும் சாய்ந்தும் விழுந்தன. பல வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
மோகனூர் பெரியசாமி நகரைச் சேர்ந்த முருகேசன் என்பவர் வண்ணாந்துறையில் இரு ஏக்கர் பரப்பளவில் 2,000 வாழை மரங்களை சாகுபடி செய்துள்ளார். ரஸ்தாளி, பச்சநாடன், மொந்தன் போன்ற ரகங்கள் அதில் விளைவிக்கப்பட்டுள்ளன. இவை அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் வீசிய சூறைக் காற்றில் 200 மரங்கள் முறிந்து விழுந்து சேதமாகின. அதேபோல், சிங்காரம் என்பவரின் தோட்டத்தில் 200 வாழை மரங்களும், பழனிமலை என்பவர் தோட்டத்தில் 150 வாழை மரங்களும், காந்தி தோட்டத்தில் 50 வாழை மரங்களுமாக மொத்தம் 600-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.2.50 லட்சம் என விவசாயிகள் தெரிவித்தனர்.


 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/25/w600X390/banana-tree.jpg முறிந்து கிடக்கும் வாழை மரங்கள். http://www.dinamani.com/agriculture/2017/apr/25/மோகனூரில்-சூறைக்-காற்று-600-வாழை-மரங்கள்-முறிந்து-சேதம்-2690254.html
2683299 விவசாயம் பருத்தியில் மாவுப்பூச்சி தாக்குதலைத் தடுக்கும் வழிமுறைகள் என்ன? Wednesday, April 12, 2017 01:09 PM +0530 வறண்ட வானிலை காரணமாக  பருத்தியில் ஏற்படும் மாவுப்பூச்சி தாக்குதலைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ராஜா.ரமேஷ், ஏ.பாஸ்கரன் ஆகியோர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
தற்போது நிலவும் வறண்ட வானிலை காரணமாக, ஒரு சில இடங்களில்  மாவுப்பூச்சியின் தாக்குதல் தென்படுகிறது. இந்த மாவுப்பூச்சியை சுற்றியுள்ள மெழுகுப்படலம், ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் நன்மை செய்யும் பூச்சிகளிடமிருந்து அவற்றைப் பாதுகாக்கிறது
பரவும் வழிகள்: காற்று, மனிதர்கள், பறவைகள் மூலமாகவும், நீர்பாசனம் செய்யும்போதும், பண்ணைக் கருவிகள் மற்றும் உபகரணங்கள், தாக்கப்பட்ட நடவுப் பொருள்கள் ஆகியவற்றை இடமாற்றம் செய்யும்போது, அதன்மூலம் இவை எளிதாகப் பரவுகின்றன.
எறும்புகளின் நடமாட்டத்தைப் பார்த்து இவற்றின் தாக்குதலை உறுதி செய்யலாம். எறும்புகள் இந்த மாவுப்பூச்சிகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு இடம்பெயர உதவுகின்றன.
அறிகுறிகள்: பஞ்சு போல் படர்ந்த முட்டைகளுடன் கூடிய இப்பூச்சிக் கூட்டங்கள் இலைகள், இளம் தண்டுகளில் பரவிக் காணப்படும். இலை மற்றும் தண்டின் சாறை உறிஞ்சுவதால் இலைகள் சிறுத்து, மடங்கி மஞ்சள் நிறமாகி, பின்னர் உதிர்ந்துவிடும்.
தாக்கப்பட்ட செடியானது வளர்ச்சியின்றி குட்டையாக காணப்படும். இப்பூச்சிகள் வெளியேற்றும் தேனை உண்பதற்கு எறும்புகள் செடியின் மேல் ஊர்ந்து செல்வதை காணலாம். மேலும், கேப்னோடியம் என்ற பூஞ்சானம் இலையின் மேற்பரப்பில் படர்வதால் ஒளிச்சேர்க்கை பாதிக்கப்பட்டு மகசூல் குறைந்து விடும்.
கட்டுப்படுத்தும் முறை: வயலில் காணப்படும் களைச் செடிகளை அழித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இப்பூச்சிகளை உயிரியல் முறையில் கட்டுப்படுத்த அசிரோபேகஸ் பப்பாயே என்ற ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 100 பூச்சிகள் என்ற எண்ணிக்கையில் விடவேண்டும்.
கிரிப்டோலேமஸ் பொறி வண்டின் புழுக்கள் மாவுப்பூச்சியின் அனைத்து வளர்ச்சி நிலைகளையும் உண்கின்றன. இந்த இரைவிழுங்கியை பயன்படுத்தி மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
தாவரப் பூச்சிக்கொல்லிகளான வேப்பெண்ணெய் 2 சதவீதம் அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் அல்லது வேப்பங்கொட்டைக் கரைசல் 5 சதவீதம் அல்லது மீன் எண்ணெய் சோப் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 25 கிராம் என்ற அளவில் தேவையான அளவு ஒட்டும் திரவம் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
ஒரு ஏக்கருக்கு டைமீத்தோயேட் 30 ஈசி 400 மிலி அல்லது பிரபினோபாஸ் 50 ஈசி 500 மிலி அல்லது தயோடிகார்ப் 250 கிராம் என்ற அளவிலும் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2013/1/10/12/w600X390/paruthi.jpg http://www.dinamani.com/agriculture/2017/apr/12/பருத்தியில்-மாவுப்பூச்சி-தாக்குதலைத்-தடுக்கும்-வழிமுறைகள்-என்ன-2683299.html
2680526 விவசாயம் கொடைக்கானலில் பட்டர் புரூட் சீசன் தொடக்கம் Saturday, April 8, 2017 12:25 AM +0530 கொடைக்கானலில் விளையும் மருத்துவ குணம் வாய்ந்த பட்டர் புரூட் பழ சீசன் தொடங்கியுள்ளது.
இங்கு பிளம்ஸ், பீச்சஸ், வாழை, ஆரஞ்சு போன்ற பழவகைகள் விளைவிக்கப்படுகின்றன. தற்போது மருத்துவ குணமுள்ள பட்டர் புரூட் சீசன் தொடங்கியுள்ளது. இப்பழம் சின்னபள்ளம், வெள்ளப்பாறை, வடகவுஞ்சி, பெருமாள்மலை, செண்பகனூர், பி.எல்.செட் உள்ளிட்ட பகுதிகளில் விளைகிறது. இப்பழங்கள் கொடைக்கானலில் உள்ள பழக்கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியது:
மருத்துவ குணம் கொண்ட இப்பழம் கோடை வெயிலுக்கு உகந்தது. மேலும், உடல் வெப்பத்தை தணிக்கும். உடலில் வலிமையைக் கூட்டும். இது அழகு சாதனப் பொருள்களில் மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இதை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது. மேலும் இந்தப் பழம் கர்நாடகம், கோவா, ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது சீசன் காலமாக இருப்பதால் நன்கு விற்பனையாகிறது என்றனர்.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/8/w600X390/butter.jpg கொடைக்கானல் பழக்கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பட்டர் புரூட். http://www.dinamani.com/agriculture/2017/apr/08/கொடைக்கானலில்-பட்டர்-புரூட்-சீசன்-தொடக்கம்-2680526.html
2675169 விவசாயம் சூறைக் காற்றில் 10 ஆயிரம் வாழைகள் சேதம் Thursday, March 30, 2017 10:20 AM +0530 திருநெல்வேலி சுற்று வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை மாலை மற்றும் இரவு நேரத்தில் சூறைக் காற்றுடன் பெய்த மழையில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பருவமழை பொய்த்துப் போனதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வறட்சி நிவாரணம் போதவில்லை, வங்கிகளில் கடன் சுமை என நெருக்கடியில் உள்ளனர். இந்த சூழலில், கருங்காடு பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்திருப்பது, கூடுதல் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி சுற்று வட்டாரத்தில் சுத்தமல்லி, மானூர், திருவேங்கடநாதபுரம், கோபாலசமுத்திரம், களக்காடு, கருங்காடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் வாழை பயிரிடப்படுகிறது. இதில், கருங்காடு பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த சூறைக் காற்று வீசியது. மேலும், பலத்த காற்றுடன் மழை பெய்ததில், குலைகள் தள்ளிய நிலையில் இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.

இதுதொடர்பாக, கருங்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி சுந்தரம் கூறியது:
கருங்காடு பகுதியில் பயிரிட்ட வாழைகளை அறுவடை செய்ய இன்னும் சில நாள்களே இருந்த சூழலில் அனைத்தும் நாசமாகியுள்ளது. ஏற்கெனவே வங்கிகளில் பெற்ற கடனை செலுத்த முடியாமல் திண்டாடி வரும் சூழலில், பயிரிட்ட வாழையும் பாழாகியுள்ளது. எனவே, வாழைகள் சேதமடைந்த பகுதிகளை வேளாண்மைத் துறையும், வருவாய்த் துறையும் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/30/w600X390/banana-tree.jpg திருநெல்வேலி பேட்டையை அடுத்த கருங்காடு பகுதியில் சேதமடைந்த வாழைகள். http://www.dinamani.com/agriculture/2017/mar/30/சூறைக்-காற்றில்-10-ஆயிரம்-வாழைகள்-சேதம்-2675169.html
2675170 விவசாயம் முருங்கைக்காய் கிலோ ரூ. 5: விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை Thursday, March 30, 2017 10:19 AM +0530 முருங்கைக்காய் விளைச்சல் அமோகமாக உள்ள நிலையில், அதன் விலை கிலோ ரூ. 5 என்ற அளவில் கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கொத்தப்பாளையம், ஆலமரத்துப்பட்டி, சாந்தப்பாடி, ஈசநத்தம், அம்மாபட்டி, தடாகோவில், வெஞ்சமாங்கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் 10,000 ஏக்கருக்கு மேல் முருங்கை சாகுபடி நடைபெற்று வருகிறது. வெப்ப மண்டல பயிராக உள்ள இந்த முருங்கை, குறைந்த தண்ணீரில் அதிக லாபம் தரக்கூடியது.

இப்பகுதியில் விளையும் முருங்கைக்காய் திரட்சியாகவும், சுவையாகவும் இருப்பதால் இவை மும்பை, தில்லி, ஆந்திர மாநிலம் காக்கிநாடா, பெங்களூரு, கொச்சி, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது, சீசன் காரணமாக இப்பகுதியில் விளைச்சல் அமோகமாக உள்ளதால், அவற்றின் விலை 10 மடங்கு குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் காய்களை பறிக்கும் செலவுக்குக் கூட விலை கிடைப்பதில்லை எனக் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக, நாம் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு சங்கக் கரூர் மாவட்டத் தலைவர் ஈசநத்தம் செல்வராஜ் கூறியது: கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஓரளவு பெய்த மழையால் முருங்கைக்காய் நல்ல விளைச்சல் அடைந்துள்ளது. இதனால், அரவக்குறிச்சி, ஈசநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முருங்கைக்காய் மொத்த கொள்முதல் வியாபாரிகளிடம் கொண்டுவரப்படும் முருங்கைக்காய் கிலோ ரூ. 5-க்கு மட்டுமே வாங்குகின்றனர். கடந்த மாதம் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ. 50 முதல் ரூ. 60 வரை விற்கப்பட்டது. ஆனால், இப்போது ரூ. 5-க்கு விற்கப்படுவதால், முருங்கை சாகுபடி செய்த விவசாயிகள் பலத்த நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

காய் பறிக்க வரும் நபருக்கு ரூ. 250 முதல் ரூ. 300 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. முருங்கை விற்பதில் கிடைக்கும் பணத்தில், இவர்களுக்கு ஊதியம் கொடுக்கக்கூட முடியாமல் விவசாயிகள் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, கடும் வறட்சியால் தோட்டத்து கிணறுகளில் இருந்து மணிக்கணக்கில் பணம் கொடுத்து தண்ணீர் பாய்ச்சியும், காய்களை நோய்களில் இருந்து காப்பாற்ற பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு செலவு செய்தும் பலனில்லாமல் போய்விட்டது.

இந்தப் பகுதியில் முருங்கைக்காய் பவுடர் தொழிற்சாலை கொண்டுவரப்படும் என அரசியல்வாதிகள் கூறுகின்றனர். இந்தத் தொழிற்சாலை கொண்டுவரப்பட்டால் விவசாயிகள் இதுபோன்ற இன்னல்களில் இருந்து தப்பிக்க முடியும் என்றார்.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/30/w600X390/drumstic.jpg வெளிமாநிலத்திற்கு அனுப்புவதற்காக ஈசநத்தம் பகுதியில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் முருங்கைக்காய்கள். http://www.dinamani.com/agriculture/2017/mar/30/முருங்கைக்காய்-கிலோ-ரூ-5-விலை-வீழ்ச்சியால்-விவசாயிகள்-கவலை-2675170.html
2674591 விவசாயம் ஆதிதிராவிட விவசாயிகள் துரித மின் இணைப்புப் பெற வசதி Wednesday, March 29, 2017 02:27 AM +0530 ஆதிதிராவிட விவசாயிகள் துரித மின் இணைப்புத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: இந்தத் திட்டத்தின்கீழ், விண்ணப்பிக்கும் விவசாயி ஆதிதிராவிடராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருப்பதுடன், நிலம் விண்ணப்பதாரருக்குச் சொந்தமாக இருக்க வேண்டும். அவரது பெயரில் நிலப்பட்டா இருக்க வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி -பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் இணையதள முகவரியில் (http:application.tahdco.com) விண்ணப்பத்தை ஆன்-லைன் முறையில் பதிவு செய்ய வேண்டும். ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க உதவி தேவைப்படுவோரின் வசதிக்காக தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகங்களிலும் ரூ.20 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் வசதி உள்ளது என்று அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/agriculture/2017/mar/29/ஆதிதிராவிட-விவசாயிகள்-துரித-மின்-இணைப்புப்-பெற-வசதி-2674591.html
2667303 விவசாயம் பண்ணை இயந்திரமயமாக்கலுக்கு ரூ.100 கோடி: வேளாண் இயந்திரங்கள்-கருவிகள் வாங்க ரூ.30 கோடி மானியம் Friday, March 17, 2017 02:20 AM +0530 விவசாயத் தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ள 2017-2018-ஆம் ஆண்டில் பண்ணை இயந்திரமயமாக்கலுக்கு ரூ.100 கோடி செலவிடப்படவுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2017-2018-ஆம்
நிதியாண்டில் 1 கோடி மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி என்ற இலக்கை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. கூடுதலாக 35,000 ஏக்கர் கரும்பு சாகுபடியை நுண்ணீர்ப்பாசன முறையின் கீழ் கொண்டு வரவும் நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையை மேலும் 40,000 ஏக்கரில் விரிவுபடுத்துவதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பயிர்க் காப்பீட்டுக் கட்டண மானியம்: பிரதமரின் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 15.20 லட்சம் விவசாயிகள் பதிவு செய்யப்பட்டு 30.33 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2016-ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுக் கட்டணமாக ரூ.487.37 கோடியை தமிழக அரசு அனுமதித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் பயிர்க் காப்பீட்டுக் கட்டண மானியத்துக்காக 2017-2018-ஆண்டுக்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.522.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பளவு 39 லட்சம் ஏக்கராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். நெல் கொள்முதலுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையைக் கூடுதலான தொகையை உற்பத்திக்கான ஊக்கத் தொகையாக வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மானியமாக ரூ.30 கோடி: விவசாயத் தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்வதற்கும், வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் மையங்களை இளைஞர்கள் தொடங்குவதற்கும் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. 2017-2018-ஆம் ஆண்டில் இதற்காக ரூ.100 கோடி செலவிடப்படும். அதில் ரூ.30 கோடி வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வழங்க மானியமாக வழங்கப்படும். வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்குவதற்காக 590 கூடுதல் மையங்களை அமைக்க அரசு உதவும்.
விதை உற்பத்தியை வலுப்படுத்த... விதைகள் உற்பத்தியை வலுப்படுத்தும் வகையில் விதை உற்பத்திக்கான உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய திட்டத்தை ரூ.50 கோடியில் தமிழக அரசு செயல்படுத்தும்.
வரும் நிதியாண்டில் ரூ.369 கோடி நிதி ஒதுக்கீட்டில் கரும்பு, தோட்டக்கலைப் பயிர்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்தும் வகையில் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ஏக்கர் கூடுதலாகக் கொண்டு வரப்படும்.
புதிதாக 2,000 விவசாயக் குழுக்கள்: சிறு, குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்திக் குழுக்களாகவும், உழவர் உற்பத்தி அமைப்புகளாகவும் உருவாக்க ஒரு புதுமையான திட்டம் அறிமுகப்படுத்தவுள்ளது. 2 லட்சம் விவசாயிகள் பயனடையும் வகையில் ஒவ்வொரு குழுவிலும் குறைந்தபட்சம் 100 விவசாயிகள் கொண்ட 2,000 குழுக்கள் தொடங்க ஊக்குவிக்கப்படும்.
இக்குழுக்களுக்கு மூலதன நிதியாக ரூ.5 லட்சம் வீதம் வழங்கப்படும். இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வரும் 5 ஆண்டுகளில் 40 லட்சம் விவசாயிகள் ஒருங்கிணைக்கப்படுவர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/11/4/w600X390/agri.jpg http://www.dinamani.com/agriculture/2017/mar/17/பண்ணை-இயந்திரமயமாக்கலுக்கு-ரூ100-கோடி-வேளாண்-இயந்திரங்கள்-கருவிகள்-வாங்க-ரூ30-கோடி-மானியம்-2667303.html
2653050 விவசாயம் வாழப்பாடி பகுதியில் கடும் வறட்சி: 500 ஹெக்டேர் பாக்கு மரங்கள் கருகின Tuesday, February 21, 2017 02:40 AM +0530 வாழப்பாடி பகுதியில் பருவ மழை பொய்த்து கடும் வறட்சி நிலவுவதால், 500 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள நீண்டகால பலன் தரும் பாக்கு மரங்கள் காய்ந்து கருகின. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், புழுதிக்குட்டை ஆணைமடுவு அணை மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், பாப்பநாயக்கன்பட்டி கரியகோயில் அணை பாசன வசதி பெறும் கிராமங்கள், வசிஷ்டநதி மற்றும் வெள்ளாற்றுப் படுகை கிராமங்கள் உள்ளிட்ட 200 கிராமங்களில், 3,000 ஹெக்டேர் பரப்பளவில், நீண்டகால பலன் தரும் பாக்கு மரங்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
தொடர்ந்து 30 ஆண்டுகள் வரை மகசூல் கொடுக்கும் என்பதால், பாக்கு மரங்களுக்கு முறையாக நீர்ப்பாசனம் செய்து, இயற்கை உரமிட்டு தொடர்ந்து விவசாயிகள் பராமரிக்கின்றனர். பெரும்பாலான விவசாயிகள், மகசூல் தரும் மரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆண்டுதோறும் மகசூல் உரிமையை, வியாபாரிகளுக்கு குத்தகைக்கு விடுகின்றனர்.
மகசூல் உரிமம் பெறும் வியாபாரிகளும், மகசூல் உரிமத்தை குத்தகைக்கு விடாத விவசாயிகளும், மரமேறும் கூலித் தொழிலாளர்களைக் கொண்டு, முதிர்ந்த பாக்குக் காய்களை அறுவடை செய்து தோலுரித்து வேக வைத்து, பதப்படுத்தி ஆப்பி என குறிப்பிடப்படும் கொட்டைப்பாக்கு உற்பத்தி செய்கின்றனர்.
குறிப்பாக, வாழப்பாடி, சிங்கிபுரம், பழனியாபுரம், பொன்னாரம்பட்டி, கொட்டவாடி, படையாச்சூர், பெத்தநாயக்கன்பாளையம் கிராமங்களில் கொட்டைப்பாக்கு உற்பத்தி தொழில் பெருமளவில் நடந்து வருகிறது. ஆண்டுதோறும் தமிழ் மாதமான ஆடியில் துவங்கி தை மாதம் வரையிலான 6 மாதங்களுக்கு, மரமேறும் கூலித்தொழிலாளர்கள், பாக்குக் காய்களை உரிக்கும் பெண் தொழிலாளர்கள், வேக வைத்து பதப்படுத்துவோர், லாரிகளில் லோடு ஏற்றுவோர் உள்ளிட்ட 30,000 பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
வாழப்பாடி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கொட்டைப்பாக்கு, தமிழகத்தில் கும்பகோணம், சிதம்பரம், சீர்காழி, மதுரை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் பிரபல பாக்கு தயாரிக்கும் கம்பெனிகளுக்கு மட்டுமின்றி, கர்நாடகம், குஜராத், பிகார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநில பான் பராக், பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பாக்கு பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் ஏற்றுமதியாகிறது.
வாழப்பாடி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில், ஆண்டுக்கு 200 கோடிரூபாய் அளவுக்கு பாக்கு வர்த்தகம் நடக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து வறட்சி நிலவி வருவதால், பாசனத்துக்கு வழியின்றி, 500 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள பாக்கு மரங்கள் காய்ந்து கருகிப் போயின. எஞ்சி நிற்கும் பாக்கு மரங்களிலும் எதிர்பார்த்த அளவுக்கு மகசூல் இல்லாததால், பாக்கு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாக்கு விலையும் வீழ்ச்சியடைந்து, ஒரு கிலோ கொட்டைப்பாக்கு, 245 ரூபாய்க்கு மட்டுமே விலை போகிறது. அதனால், விவசாயிகள், பாக்குத் தொழிலை நம்பி பிழைப்பு நடத்தி வந்த வியாபாரிகள், கூலித்தொழிலாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். வாழப்பாடி பகுதியில் கொட்டைப்பாக்கு உற்பத்தித் தொழில் நலிவடைந்து வருகிறது.


 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/21/w600X390/tree.jpg வாழப்பாடியை அடுத்த இடையப்பட்டி புதூர் கிராமத்தில் பாசனத்துக்கு வழியின்றி கருகி நிற்கும் பாக்கு மரங்கள். http://www.dinamani.com/agriculture/2017/feb/21/வாழப்பாடி-பகுதியில்-கடும்-வறட்சி-500-ஹெக்டேர்-பாக்கு-மரங்கள்-கருகின-2653050.html
2651555 விவசாயம் 'கலப்பு பண்ணையம், கலப்பு வேளாண்மை திட்டங்கள் தேவை' Saturday, February 18, 2017 03:21 AM +0530 தமிழகத்தில் கலப்புப் பண்ணையம் மற்றும் கலப்பு வேளாண்மைத் திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்த வேண்டும் என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கூறினார்.
நபார்டு வங்கியின் மாநில அளவிலான கடனுதவிக் கருத்தரங்கம், சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் நபார்டு வங்கியின் 2017 - 2018-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டுக்கான கடனுதவி அறிக்கை வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில், 2017 - 2018-ஆம் ஆண்டில் தமிழகத்தில் ரூ.1.90 லட்சம் கோடிக்கு கடன் வழங்க வாய்ப்புள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதில், விவசாயத் துறைக்கு ரூ.1.20 லட்சம் கோடி, மத்திய சிறு, குறு தொழில், வர்த்தக நிறுவனங்களுக்கு ரூ.35,836 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதர தொகை முன்னுரிமை பிரிவுகளுக்கு கடனாக வழங்கப்படும். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 11 சதவீதம் அதிகமாகும்.
நிகழ்ச்சியில் எம்.எஸ்.சுவாமிநாதன் பேசியது:
மத்திய அரசு இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கான வருவாயை இரட்டிப்பாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று அறிவித்துள்ளது. நம்முடைய நிலங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,பாலை என்று 5 வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. எனவே, 5 வகை நிலங்களுக்கு ஏற்றாற்போல் தனித்தனியாக வேளாண்மைத் திட்டங்களை வகுக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனுதவி அவர்களுக்கான கடவுச்சீட்டு போன்றது. எனவே, குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன் உதவி அளிப்பது அவர்களின் வெற்றிக்கு அதிக பங்களிப்பை அளிக்கும்.
மலேசியாவில் தென்னை மரங்களுக்கு இடையே அன்னாசி பயிரிடப்படுகிறது. அதே ஒருங்கிணைந்த கலப்பு பண்ணையம் மற்றும் கலப்பு விவசாய முறைகளை தமிழகத்திலும் அதிகம் பின்பற்ற வேண்டும்.
விவசாயத்தில் நஷ்மடைந்து உயிரிழக்கும் விவசாயிகளுக்குப் பிறகு அவர்களிடம் குடும்பத்தை வழிநடத்துவதற்கு வழியில்லாமல் போய்விடுகிறது. எனவே, பெண்களுக்கும் விவசாயிகளுக்கு வழங்கும் கிசான் கடன் அட்டை, வங்கிகளில் கடனுதவி உள்ளிட்டவை அளிக்க வேண்டும். பெண்கள், இளைஞர்கள் என்று தனித்தனியாக வேளாண் துறை சார்ந்த உதவிகள் வழங்கப்பட வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில், பருவநிலை மாற்றம் விவசாயிகளுக்கு பெரிய சவாலாக உள்ளது. எனவே, பருவநிலை மாற்றத்துக்கு ஏற்றாற்போல் வேளாண்மையைப் பெருக்க புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றார் அவர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/18/w600X390/award.jpg சுய உதவிக் குழுக்களோடு இணைந்து சிறப்பாகப் பணியாற்றிய பொதுத்துறை வங்கிகள் பிரிவில், இந்தியன் வங்கிக்கு முதல் பரிசை வழங்குகிறார் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன். http://www.dinamani.com/agriculture/2017/feb/18/கலப்பு-பண்ணையம்-கலப்பு-வேளாண்மை-திட்டங்கள்-தேவை-2651555.html
2637541 விவசாயம் மணிமுத்தாறு அணை மூடல்; அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது Wednesday, January 25, 2017 12:36 AM +0530 திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததையடுத்து, மணிமுத்தாறு அணை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால், அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. 3 தினங்களில் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் தலா 10 அடி உயர்ந்தது.
இந்நிலையில், அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 325.76 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 52 கனஅடி, கடனாநதி அணைக்கு 30 கனஅடி நீர்வரத்து இருந்தது.
பாபநாசம் அணை மேலும் ஓரடி உயர்ந்து 32.20 அடியாகவும், சேர்வலாறு அணை 72.08 அடியாகவும், மணிமுத்தாறு அணை 34.85 அடியாகவும் இருந்தது.
பிற அணைகளின் நீர்மட்டம்: கடனாநதி 52.50 அடி, ராமநதி 36.50 அடி, கருப்பாநதி 44.75 அடி, குண்டாறு 21.75 அடி, அடவிநயினார் 65.75 அடி, வடக்குப் பச்சையாறு 3.25 அடி, நம்பியாறு 9.28 அடி, கொடுமுடியாறு 11.50 அடி.

 

]]>
http://www.dinamani.com/agriculture/2017/jan/25/மணிமுத்தாறு-அணை-மூடல்-அணைகளுக்கு-நீர்வரத்து-குறைந்தது-2637541.html
2634398 விவசாயம் தானியங்களைத் தாக்கும் அந்துப் பூச்சியை கட்டுப்படுத்தும் மேலாண்மை DN Wednesday, January 18, 2017 11:10 AM +0530 திருவள்ளூர்: கிடங்குகளில் சேமிக்கப்படும் தானியங்களை அந்துப் பூச்சி தாக்குதலிலிருந்து பாதுகாக்க பூச்சி மேலாண்மையை கடைப்பிடிக்க வேண்டும் என திரூர் வேளாண் அறிவியல் நிலையத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.
 இதுகுறித்து வேளாண் அறிவியல் நிலைய பூச்சியல் துறை உதவி பேராசிரியர் சுமதி கூறியதாவது:
 திருவள்ளூரை அடுத்த கொளுந்தலூரில் இயங்கி வரும் விதைப்பண்ணையில் ஆய்வு மேற்கொண்டதில் அங்குள்ள தானியங்களில் அந்துப் பூச்சியின் தாக்குதல் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
 இப்பூச்சிகள் நெல், சோளம், பார்லி, கோதுமை ஆகிய தானியங்களை குடைந்து, கடைசியில் உமி மட்டுமே மிஞ்சும். இவை 19 நாள்களில் நன்கு வளர்ச்சியடைந்து, தானியத்தின் உள்ளேயே கூட்டுப் புழுவாக மாறுகின்றன. இக்கூட்டுப்புழுவிலிருந்து 5 நாள்களில்
தாய்ப்பூச்சிகள் தானியத்திலிருந்து சிறிய துவாரத்தின் மூலம் வெளிவரும்.
  சேமிப்புக் கிடங்குகளில் பூச்சி மேலாண்மை: சேமிப்புக் கிடங்கின் சுவர் வெடிப்புகள், துவாரங்கள் மற்றும் மூலைகள் போன்ற இடங்களை பிரஷ் மூலம்
நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். தானியத்தின் ஈரப்பதத்தை 10 சதவீதத்துக்கு குறைவாக பராமரிக்க வேண்டும்.
 சேமிக்க பயன்படுத்தும் அனைத்தையும் வெயிலில் நன்கு உலர்த்த வேண்டும். மூட்டைகளை மரத்தாங்கிகள் மீது இருவரிசைகளுக்கிடையே 0.75-1.00 மீட்டர் இடைவெளியிலும் சுவர்கள் மீது மோதாமலும் அடுக்க வேணடும்.
 சேமிப்புக்கிடங்கின் சுவர், நடைபாதைகள், மரத்தாங்கி, சாக்குகள் மீது ஒரு லிட்டருக்கு 10 மில்லி லிட்டர் என்ற அளவில் மாலத்தியான்-50 தெளிக்க வேண்டும்.
 வாயூ நச்சு: ஒரு டன் தானியத்துக்கு 3 செல்பாஸ் மாத்திரை வீதம் பயன்படுத்தலாம். 28 கன மீட்டர் அளவுள்ள சேமிப்புக் கிடங்குக்கு 21 செல்பாஸ் மாத்திரைகளை பயன்படுத்தலாம். இவற்றை தார்ப்பாய் கொண்டு மூட வேண்டும்.
 தார்ப்பாயின் முனைகளை களிமண்னைக் கொண்டு பூசி, காற்றோட்டமில்லாதவாறு பாதுகாக்க வேண்டும். 5-6 நாள்களுக்கு பிறகு தார்ப்பாயின் முனைகளை பிரித்து காற்றேட்டம் ஏற்பட்ட சில மணி நேரத்துக்கு பிறகே கிடங்கின் உள்ளே செல்ல வேண்டும்.
 இந்த முறைகளைப் பயன்படுத்தி அந்துப் பூச்சி மேலாண்மையை கடைப்பிடித்து தானியங்களை பாதுகாக்கலாம் என்றார்.

]]>
http://www.dinamani.com/agriculture/2017/jan/18/தானியங்களைத்-தாக்கும்-அந்துப்-பூச்சியை-கட்டுப்படுத்தும்-மேலாண்மை-2634398.html
2630546 விவசாயம் வறட்சியிலும் கால்நடைகளுக்கு எளிதில் தீவனம்: கால்நடை பல்கலை.யில் புதிய கருவி கண்டுபிடிப்பு ஜெனி ஃப்ரீடா Wednesday, January 11, 2017 02:26 AM +0530 வறட்சியிலும் கால்நடைகளுக்கு எளிதில் தீவனம் தயாரிப்பதற்கான புதிய கருவி, தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பண்ணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம் அதிக மூலதனம் இல்லாமல் குறைந்த செலவில் தீவனத்தைத் தயாரிக்க முடியும்.
ஹைட்ரோபோனிக் கருவி: மழை பொய்த்து தண்ணீர் இல்லாத காரணத்தினால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வறட்சி பாதித்துள்ளது. பல இடங்களில் கால்நடைகளுக்கு தீவனம் வழங்கக்கூட இயலாத நிலையில் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மண் இல்லாமல், குறைந்த அளவிலான தண்ணீரை வைத்து தீவனத்துக்கான விதைகளை வளர்ப்பற்கு ஹைட்ரோபோனிக் என்ற கருவி கண்டறியப்பட்டுள்ளது. தீவனத்துக்கான மக்காச்சோளம், கோதுமை, பார்லி, காராமணி உள்ளிட்டவற்றை அதில் பயிரிடலாம். 1.65 கிலோ மக்காச்சோளத்திலிருந்து 10 கிலோ தீவனம் கிடைக்கும்.
எவ்வாறு செயல்படும்: இந்தக் கருவியில் வரிசையாக 7 -க்கும் மேற்பட்ட தட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். தட்டுகளில் வைக்கப்பட்டுள்ள விதையானது மண் இல்லாமல், தண்ணீரை மட்டும் பயன்படுத்தி 24 மணி நேரம் ஊற வைக்கப்படும். அவ்வாறு ஊற வைக்கப்படும் விதைகள் ஈரமான சணல் பைகளில் கட்டி வைக்கப்படும். அவை நீரினால் ஈரப்படுத்தப்படும். 3-ஆவது சணல் பைகளில் இருந்து விதைகள் எடுக்கப்பட்டு தட்டில் கொட்டப்படும். அதன் பின்பு 3 மணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீர் தெளிக்கப்படும். இவ்வாறு வளர்க்கப்படும் தீவனமானது 8 நாள்களில் 30 செ.மீ. வரை வளர்ந்துவிடும்.
சிறு, குறு விவசாயிகளுக்கு பயன்: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டிய இந்தக் கருவியின் விலை ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை உள்ளது. ஆனால் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒரு சில கால்நடைகளை வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு ஏற்றாற்போல் குறைந்த விலையில் புதிய கருவி கால்நடை பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பண்ணையில் உருவாக்கப்பட்டுள்ளது. ரூ.90 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் செலவில் இந்தக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1000 கிலோ தீவனத்தை வெறும் 480 சதுர அடியில் தயாரிக்க முடியும்.
இதுதொடர்பாக தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பண்ணையின் தலைவரும் பேராசிரியருமான டென்சிங் ஞானராஜ் கூறியது:
சாதாரணமாக 70 நாள்களில் அறுவடை செய்யும் தீவனத்தை இந்தக் கருவியின் மூலம் 9 நாள்களிலேயே அறுவடை செய்துவிட முடியும். இதில் விதை, வேர், புல் என மூன்று விதமான தீவனம் இருப்பதால், கால்நடைகள் மிகவும் விரும்பி உண்ணும். அதிக ஊட்டச்சத்துகளும் கிடைக்கும். மேலும் இதில் கல், மண், தூசு, பூச்சி மருந்துகள் போன்றவை இருக்காது. 50 லிட்டர் தண்ணீர் செலவில், ஒரு நாளைக்கு 3 யூனிட் மின்சாரத்தில் இதை செயல்படுத்த முடியும். இந்த செயல்முறைக்கு பயன்படுத்தப்படும் நீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தலாம் என்றார் அவர்.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/11/w600X390/molka.jpg நவீன ஹைட்ரோபோனிக் கருவியில் வளர்க்கப்படும் தீவனப் பயிர். http://www.dinamani.com/agriculture/2017/jan/11/வறட்சியிலும்-கால்நடைகளுக்கு-எளிதில்-தீவனம்-கால்நடை-பல்கலையில்-புதிய-கருவி-கண்டுபிடிப்பு-2630546.html
2630531 விவசாயம் குறைந்தபட்ச அளவை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்: குடிநீர்த் தேவைக்கு தண்ணீர் கிடைக்குமா? Wednesday, January 11, 2017 02:14 AM +0530 சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தபட்ச அளவை எட்டியுள்ளது. இதனால் தொடர்ந்து குடிநீர்த் தேவைக்கு தண்ணீர் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.
காவிரி நடுவர் மன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கர்நாடகம் வழங்க மறுத்து வருகிறது. தென்மேற்குப் பருவ மழையால் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை மாறி, பருவ மழையும் பொய்த்துப் போனது. வடகிழக்குப் பருவ மழையாவது கைகொடுக்கும் என எதிர்பார்த்த நிலையில், வழக்கத்தைவிட குறைவாகப் பெய்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக சரிந்தது. செவ்வாய்க்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 32 கன அடியாகச் சரிந்தது. அணையிலிருந்து நொடிக்கு 750 கன அடி வீதம் குடிநீர்த் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்தைவிட திறப்பு அதிகமாக இருப்பதால், செவ்வாய்க்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 35.69 அடியாகச் சரிந்தது. அணையின் நீர் இருப்பு 9.97 டி.எம்.சி.யாக சரிந்தது.
மேட்டூர் அணையில் உள்ள மீன் வளத்தைப் பாதுகாக்கவும், மேட்டூர்-ஆத்தூர் குடிநீர்த் திட்டம், சேலம் மாநகராட்சி தனிக் குடிநீர்த் திட்டம், காடையாம்பட்டி கூட்டுக் குடிநீர்த் திட்டம், கோனூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம், கொளத்தூர் குடிநீர்த் திட்டம், வேலூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம், மேட்டூர் நகராட்சி தனிக் குடிநீர்த் திட்டம் உள்ளிட்ட பல்வேறு குடிநீர்த் திட்டங்களுக்காகவும் மேட்டூர் அணையில் 9.5 டி.எம்.சி தண்ணீர் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
தற்போது அணையின் நீர்மட்டம் குறைந்தபட்ச அளவை எட்டி உள்ளது. கடந்த 2014, ஏப்ரல் 25ஆம் தேதி அணையின் நீர் மட்டம் 9.69 அடியாக இருந்தது. அதன்பிறகு இப்போதுதான் நீர்மட்டம் குறைந்தபட்ச அளவை எட்டியுள்ளது.
காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் வரை டெல்டா பாசனக் கால்வாய் கரையோர கிராமங்களுக்கு குடிநீர்த் தேவைக்காகவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் அணையிலிருந்து அதிகபட்சம் நொடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். அதுவரை மேட்டூர் அணையில் இருப்பு உள்ள தண்ணீர் போதுமானதா என்பது கேள்விக்குறியே.
நீர்மட்டம் தொடர்ந்து சரிந்தால், பல்வேறு குடிநீர்த் திட்டங்களுக்கும் தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/11/w600X390/mettur.jpg நீர்மட்டம் சரிந்ததால் குட்டைபோல காட்சியளிக்கும் மேட்டூர் அணை. http://www.dinamani.com/agriculture/2017/jan/11/குறைந்தபட்ச-அளவை-எட்டியது-மேட்டூர்-அணை-நீர்மட்டம்-குடிநீர்த்-தேவைக்கு-தண்ணீர்-கிடைக்குமா-2630531.html
2627865 விவசாயம் விலை போகாத விதைக் காய்: வீணாகும் சின்ன வெங்காயம் கே.விஜயபாஸ்கர் Friday, January 6, 2017 11:51 AM +0530  

நாமக்கல் மாவட்டத்தில், கிலோ ரூ. 2-க்குக் கூட வாங்கிக் கொள்ள யாரும் முன்வராமல் ஏறத்தாழ 1 லட்சம் மூட்டை சின்ன வெங்காயம் பட்டறையிலேயே வீணாகி விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், எருமபட்டி வட்டாரத்தில் சுமார் 25,000 ஏக்கர் பரப்பில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. ஜூன் மாதம் நடவு செய்யப்படும் வெங்காயத்தில் கிடைக்கும் மகசூலில் சமையலுக்கு பெரிய காய்களை விற்பனை செய்து வருகின்றனர். சிறிய காய்களை விதைக்கு விற்பனை செய்ய நிலத்திலேயே பட்டறை போட்டு பாதுகாத்து வைத்திருந்து, டிசம்பர் மாத நடவுக்கு விற்பனை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஏக்கருக்கு 40 முதல் 50 மூட்டை வரை மகசூல் கிடைக்கும். இதில் 20 மூட்டை பெரிய காய் இருக்கும். அறுவடையின்போதே இந்தக் காய்கள் விற்பனை செய்யப்பட்டு விடும். இதன் மூலம் சாகுபடி செலவில் பாதி பணம் விவசாயிகளுக்கு கிடைத்து விடுகிறது. மீதி உள்ள 30 மூட்டை காய்களை 3 மாதம் பாதுகாத்து வைத்திருந்து விதைக்கு விற்பனை செய்யும்போது, கிலோ ரூ.20 வரைக்கும் விற்பனையாகும். இதன் மூலம் விவசாயிகளுக்கு சாகுபடி செலவு போக ஏக்கருக்கு ரூ.10,000 வரை லாபம் கிடைக்கும்.

ஆனால், நிகழாண்டில் விதை வெங்காயம் கொள்முதல் செய்ய வியாபாரிகள் யாரும் முன்வரவில்லை. இதனால், எருமபட்டி பகுதியில் ஏறத்தாழ 1 லட்சம் மூட்டை அளவுக்கு விதை வெங்காயம் பட்டறையிலேயே வீணாகிவிடும் நிலையில் உள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்டம் பவித்திரம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி டி.நல்லையன் கூறியது:

நூறு நாள் பயிரான சின்ன வெங்காயம் நடவு, நாற்று நடவு என 2 முறைகளில் பயிரிடப்பட்டு வருகிறது. எருமபட்டி வட்டாரத்தில் 25,000 ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது.

இப்பகுதியில் விளையும் சின்ன வெங்காயம் சென்னை, திருச்சி, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இந்தோனேஷியா போன்ற வெளிநாடுகளுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை, சமையலுக்குப் பயன்படும் சின்ன வெங்காயம் (பெரிய காய்) கிலோ ரூ. 35 வரை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. பின்னர், அதன் விலை படிப்படியாகக் குறைந்து, தற்போது கிலோ ரூ.10 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

அதே சமயத்தில், கடந்த செப்டம்பர் மாதத்தில் அறுவடை செய்யப்பட்டு, விதைக் காய்களுக்காக பட்டறையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தை இப்போது கிலோ ரூ.2-க்கு வாங்கிக் கொள்ள கூட வியாபாரிகள் முன்வரவில்லை.

நவம்பர் மாதத்தில் மழை பெய்தால், டிசம்பர் மாதத்தில் நடவு தொடங்கும். அப்போது கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை விலை கிடைக்கும். ஆனால், இப்போது இந்த வெங்காயம் முழுமையாக வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சமையல் தேவைக்கு விற்பனை செய்ய விவசாயிகள் முன்வந்தாலும், கிலோ ரூ.2-க்குக் கூட வாங்கிக் கொள்ள வியாபாரிகள் யாரும் முன்வரவில்லை. இதனால் எருமபட்டி வட்டாரத்தில் சுமார் 1 லட்சம் மூட்டை அளவுக்கு சின்ன வெங்காயம் வீணாகி வருகிறது.

இப்போது வெளிச்சந்தையில் சின்ன வெங்காயம் (பெரிய காய்) கிலோ ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை கவனத்தில் கொண்டு, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை நேரடியாக விவசாயிகளிடம் விதைக் காய்களை ரூ.10-க்கு குறையாமல் கொள்முதல் செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் விவசாயிகளுக்கு மகசூல் செலவு தொகையாவது கிடைக்கும். இதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/6/w600X390/small_onion1.jpeg http://www.dinamani.com/agriculture/2017/jan/06/விலை-போகாத-விதைக்-காய்-வீணாகும்-சின்ன-வெங்காயம்-2627865.html
2627866 விவசாயம் தமிழகத்துக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும் Friday, January 6, 2017 02:47 AM +0530 வரும் கோடை காலத்தில் கடுமையான வறட்சி நிலையை எதிர்நோக்கியுள்ள தமிழகத்துக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடித விவரம்: வடகிழக்கு பருவ மழை பொய்த்துப்போனதால் வரும் கோடையில் மிகவும் கடுமையான வறட்சி நிலையினை தமிழகம் எதிர்நோக்கியுள்ளது.
இத்தகையச் சூழலில் மத்திய அரசு வெறும் பார்வையாளராக சலனமற்று இருக்க முடியாது. இந்தப் பிரச்சனையில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி, தமிழக மக்களின் துயர் துடைக்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் போதுமான இழப்பீடு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/6/w600X390/rangarajan1.jpg http://www.dinamani.com/agriculture/2017/jan/06/தமிழகத்துக்கு-போதுமான-இழப்பீடு-வழங்க-வேண்டும்-2627866.html
2627868 விவசாயம் தற்கொலையை தடுக்க மாவட்ட வாரியாக நிபுணர் குழு அமைக்கக் கோரி மனு: 4 வாரத்துக்குள் பதிலளிக்க அரசுக்கு உத்தரவு Friday, January 6, 2017 02:47 AM +0530 தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலையைத் தடுப்பதற்கு, மாவட்ட வாரியாக நிபுணர் குழுவை அமைக்க உத்தரவிட கோரிய மனுவுக்கு, 4 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பொது நல வழக்குகளுக்கான மையத்தின் நிர்வாக அறங்காவலர் கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனு விவரம்: தமிழகத்தில் வடகிழக்கு, தென்மேற்கு பருவ மழை பொய்த்துப் போனதால் விவசாயம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, லட்சக்கணக்கான விவசாய தொழிலாளர்கள் தங்களது வேலையை இழந்துள்ளனர். ஒரு சில பகுதி விவசாயிகள் வேலை தேடி, அருகில் உள்ள மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். போதியளவில் விளைச்சல் இல்லாததால், தமிழகத்தில் பல்வேறு பகுதி விவசாயிகள் பலர் தற்கொலை செய்து வருகின்றனர்.
குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால், விளைச்சல் இன்றி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
இவற்றால் விவசாயிகள் தங்களது பயிர்க் கடன்களை கூட திரும்ப செலுத்த முடியவில்லை. எனவே, விவசாயி தற்கொலையை தடுக்க மாவட்ட அளவில் நிபுணர்கள் குழுக்களை அமைக்க வேண்டும்.
பருவ மழை பொய்க்கும்போது, நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு பயிர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில், வேளாண் துறையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக, பருவமழை காலத்துக்கு முன்பாகவே கடந்தாண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி தமிழக அரசுக்கு பரிந்துரை மனுக்கள் அனுப்பியும், எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.
எனவே, தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலையை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த ஆவணங்களை 4 வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, அடுத்த கட்ட விசாரணையை பிப்ரவரி 14-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/12/19/w600X390/high_court.jpg http://www.dinamani.com/agriculture/2017/jan/06/தற்கொலையை-தடுக்க-மாவட்ட-வாரியாக-நிபுணர்-குழு-அமைக்கக்-கோரி-மனு-4-வாரத்துக்குள்-பதிலளிக்க-அரசுக்கு-உ-2627868.html
2627870 விவசாயம் விவசாயிகள் பிரச்னை: வறட்சியால் தற்கொலை செய்த விவசாயிகள் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு கோரி மனு: அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு Friday, January 6, 2017 02:47 AM +0530 தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த பாலகணேசன் தாக்கல் செய்த மனு:
விளைநிலங்கள் வீட்டுமனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும், மாறுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. நான்கு வழிச்சாலை உள்ளிட்டவற்றைக் கூறி ஏராளமான மரங்கள் வெட்டப்படுகின்றன. இதுபோன்ற காரணிகளால் தமிழகத்தில் தற்போது பருவமழை பொய்த்துள்ளது. ஆறுகள், நீராதாரங்கள் வறண்டு விட்டன. நீராதாரம் இன்றி குறுவை, சம்பா பயிர்கள் கருகிவிட்டன.
இந்நிலையில் மத்திய அரசின் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன் பெற முடியவில்லை. கடன் சுமையால் இதுவரை 90 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வங்கிகளில் பெரும் தொழில் நிறுவனங்கள் பெற்றுள்ள ரூ.7 ஆயிரம் கோடி வாராக் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது. அதேபோல விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
மேலும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். வறட்சி நிவாரண நிதியாக ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் அறிவித்து இடைக்கால நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.20 ஆயிரத்தை உடனடியாக வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 8-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/6/w600X390/maduaihighcourt.jpg http://www.dinamani.com/agriculture/2017/jan/06/விவசாயிகள்-பிரச்னை-வறட்சியால்-தற்கொலை-செய்த-விவசாயிகள்-குடும்பத்துக்கு-ரூ30-லட்சம்-இழப்பீடு-கோரி-ம-2627870.html
2627873 விவசாயம் ஒரே மாதத்தில் 106 விவசாயிகள் உயிரிழந்த விவகாரம்: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் Friday, January 6, 2017 02:46 AM +0530 தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 106 விவசாயிகள் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து ஆறு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் பருவ மழை பொய்த்துப் போனதாலும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததாலும் பயிர்கள் வாடி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி தமிழ் நாளிதழ் ஒன்றில் விவசாயிகள் தொடர்பாக ஒரு செய்தி வெளியாகி இருந்தது.
அதில், தமிழகத்தில் மாரடைப்பால் 83 விவசாயிகள் உயிரிழந்ததாகவும், விவசாயிகள் பலர் தற்கொலையில் ஈடுபடுவதாகவும், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம் (53), விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி முருகன் (எ) விஜய் ராகவம் (50) ஆகியோர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டிருந்தது. அதே நாளிதழில் வியாழக்கிழமை வெளிவந்த செய்தியில் விவசாயிகளின் உயிரிழப்பு 106 ஆக எட்டிவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தது.
ஆங்கில நாளிதழில் ஜனவரி 3-ஆம் தேதி வெளிவந்த செய்தியில், நான்கு விவசாயிகள் மாரடைப்பால் இறந்ததாகவும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த விவசாயி முருகய்யன் என்பவர் தனது வயலிலேயே மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டிருந்தது. மேலும், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஊடங்களில் வெளியான இச்செய்தி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து, இச்சம்பவத்தை ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது. இதைத் தொடர்ந்து, இது தொடர்பாக ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு ஆணையம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
அதில், "விவசாயத் துறைக்காக உருவாக்கப்பட்டுள்ள கொள்கைத் திட்டங்கள், சட்டங்கள் ஆகியவற்றை சீரிய வகையில் அமல்படுத்தும் தேவை எழுந்துள்ளது. குறிப்பாக சிறு விவசாயிகளுக்கான கொள்கைத் திட்டங்கள் உரிய வகையில் அமல்படுத்தப்படுதுவது அவசியம். பயிர்கள் பாதிப்பால் விவசாயிகள் நிதி ரீதியாக பாதிக்கப்படுவது மட்டுமின்றி, மனரீதியாகவும் பாதிப்புக்கு உள்ளாகுகின்றனர்.
விவசாயி ஒருவர் உயிரிழக்கும் போது அல்லது தற்கொலை செய்துகொள்ளும் போது அவரது ஒட்டுமொத்த குடும்பமே நிலைகுலைந்து விடுகிறது. ஆகவே, தமிழகத்தில் விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் அல்லது மேற்கொள்ள உத்தேசித்துள்ள நடவடிக்கைகள் குறித்து 6 வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை தலைமைச் செயலர் தாக்கல் செய்ய வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/6/w600X390/farmerr3.jpg http://www.dinamani.com/agriculture/2017/jan/06/ஒரே-மாதத்தில்-106-விவசாயிகள்-உயிரிழந்த-விவகாரம்-தமிழக-அரசுக்கு-தேசிய-மனித-உரிமை-ஆணையம்-நோட்டீஸ்-2627873.html
2627874 விவசாயம் வறட்சி: அமைச்சர்கள் நேரில் ஆய்வு Friday, January 6, 2017 02:46 AM +0530 பருவ மழை பொய்த்ததால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியின் பாதிப்புகளை, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தமிழக அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
மதுரை மாவட்டத்தின் வறட்சி பாதிப்பு குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. வீட்டுவசதித் துறை முதன்மைச் செயலரும், மதுரை மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலருமான தர்மேந்திர பிரதாப் யாதவ், மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:
நிகழாண்டில் பருவ மழை பொய்த்த காரணத்தால் சென்னை தவிர்த்த 31 மாவட்டங்களிலும் வறட்சி நிலவுகிறது. குடிநீருக்கும், பாசனத்துக்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உத்தரவின் பேரில் அனைத்து மாவட்டங்களிலும் வறட்சி பாதிப்பு நிலைமை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்படி மாதிரி கள ஆய்வை அதிகாரிகள் முறையாக எடுக்க வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசுகையில், வறட்சி பாதிப்பை சரியான வகையில் கணக்கெடுத்து பாதிக்கப்பட்டவர்கள் விடுபடாமலும், பாதிப்பு இல்லாதவர்களைச் சேர்த்துவிடாமலும் அறிக்கை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பயிர் சாகுபடி பாதிப்பு காரணமாக ஏற்பட்டிருக்கும் வேலையிழப்பு, குடிநீர்த் தட்டுப்பாடு, கால்நடைத் தீவனங்களுக்கான தட்டுப்பாடு ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யுமாறு மதுரை மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் அறிவுறுத்தினார்.
இதன் பிறகு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மதுரை யா.ஒத்தக்கடை அருகே உள்ள அயிலாங்குடி, தெற்குத் தெரு, திருமங்கலம் அருகே உள்ள செளடார்பட்டி ஆகிய பகுதிகளில் வறட்சி பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர்.
"திண்டுக்கல் மாவட்டத்தில் 75 சதவீத விவசாயம் பாதிப்பு': இதனிடையே, திண்டுக்கல் மாவட்டத்தில் 75 சதவீத விவசாயம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக, வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம், பழனி மற்றும் வேடசந்தூர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் குறித்து வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சீனிவாசனுடன், அதிகாரிகளும் உடனிருந்தனர். பின்னர், அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பயிர் சேதங்களை துல்லியமாக கணக்கீடு செய்ய புவன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள் பயிர் சேதங்கள் புகைப்படங்களுடன் பதிவேற்றம் செய்வார்கள். இந்த பணி மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் நடைபெறுவதால் பயிர் சேதங்கள் குறித்து துல்லியமாக கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் இம்மாவட்டத்தில் ராபி பருவத்தில் இதுவரை 97,797 ஹெக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 44,870 ஹெக்டேர் பயிர் காய்ந்துவிடும் நிலையில் உள்ளது. 10 நாள்களில் மழை பெய்யவில்லை எனில் கூடுதலாக 28,925 ஹெக்டேர் பயிர் காய்ந்து விடும். இதனால், 75 சதவீத விவசாய நிலம் வறட்சியால் பாதிக்கப்படும் என்றார்.
வறட்சிப் பகுதிகளை பார்வையிட்ட பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மைத் துறை, வருவாய்த்துறை ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் சீனிவாசன் கலந்து கொண்டார். வேடசந்தூரில் நடைபெற்ற ஆய்வின் போது சட்டப்பேரவை உறுப்பினர் பரமசிவம் உடனிருந்தார்.

பழனி பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களைப் பார்வையிடுகிறார் வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன்.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/6/w600X390/mduvisit.jpg மதுரையை அடுத்த அயிலாங்குடியில் வறட்சி பாதிப்பு குறித்து அதிகாரிகளுடன் வியாழக்கிழமை ஆய்வு செய்த அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ மற்றும் ஆர்.பி.உதயகுமார். http://www.dinamani.com/agriculture/2017/jan/06/வறட்சி-அமைச்சர்கள்-நேரில்-ஆய்வு-2627874.html
2627875 விவசாயம் வறட்சியால் பயிர்கள் நாசம்: மேலும் 9 விவசாயிகள் உயிரிழப்பு Friday, January 6, 2017 02:46 AM +0530 தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மேலும் 9 விவசாயிகள் வியாழக்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தனர்.
இவர்களில், அரியலூர் மாவட்டத்தில் 3 பேரும் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 பேரும் ராமநாதபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம், தேனி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் வறட்சி காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர்.
அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தர்மன், மாற்றுத் திறனாளி. இவர் சாகுபடி செய்திருந்த உளுந்து பயிர் கருகியதால் கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்தார். இந்நிலையில், வியாழக்கிழமை காலை வயலுக்குச் சென்றவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதேபோல், ஓட்டக்கோயில் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கலியபெருமாள் வியாழக்கிழமை வயலுக்குச் சென்றபோது அங்கு மக்காச்சோளப் பயிர் கருகிக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
ஆண்டிமடம் அருகே ஓலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவர் தனது வயலில் சாகுபடி செய்திருந்த உளுந்து பயிர் கருகியதைக் கண்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
தஞ்சாவூரில் 2 பேர் பலி: இதனிடையே, தஞ்சாவூர் மாவட்டத்தில் வறட்சி காரணமாக மனமுடைந்து, ஒரு மூதாட்டி உள்பட 2 பேர் மாரடைப்பால் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.
திருவையாறு அருகே திருச்சோற்றுத்துறை கீழத் தெருவைச் சேர்ந்தவர் பஞ்சநாதனின் மனைவி பாப்பா (68). நெல் பயிர் நடவு செய்த இவர், குடமுருட்டி ஆற்றில் தண்ணீர் வராததாலும், பருவமழை பொய்த்துவிட்டதாலும் வியாழக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
அதேபோல், ஒரத்தநாடு அருகே சின்னபொன்னாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த நெல் விவசாயி ஆர். கணேசனும் (56), வியாழக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டியில் மாரடைப்பால் விவசாயி சாவு: கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெரியபாளையம், பெரிய வண்ணான்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (61). இவர், 4 ஏக்கரில் நெல் பயிரிட்டிருந்தார்.
அண்மையில் வீசிய வர்தா புயலின் சீற்றத்தால் இவரது வயலில் உள்ள நெற்பயிர்கள் அழிந்தன. இருப்பினும் நம்பிக்கை இழக்காத ராஜேந்திரன், புதன்கிழமை அறுவடை பணியை தொடங்கினார். அன்று மாலை அறுவடையான நெல்லின் கணக்கை அளவிட்டபோது, ஒரு ஏக்கருக்கு வழக்கமாக 40 மூட்டைகள் விளையும் நிலத்தில், தற்போது 10 மூட்டைகள் மட்டுமே நெல் சாகுபடி இருந்தது. இதனைக் கண்டு அதிர்ந்த ராஜேந்திரன், திடீரென வயலில் மயங்கி விழுந்தார்.
இதைத் தொடர்ந்து, அருகிலிருந்தவர்கள் ராஜேந்திரனை பெரியபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே உயிரிழந்தார்.
கமுதி அருகே ஒரு விவசாயி உயிரிழப்பு: வறட்சி காரணமாக, ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே டி.வாலசுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சித்தையா (62), தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அனுமந்தபட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கண்ணன் (58), நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆதனூர் ஊராட்சி, கோயில்தாவு கிராமத்தைச் சேர்ந்த சிவானந்தம் (55) ஆகியோரும் வியாழக்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தனர்.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/6/w600X390/farmar.JPG http://www.dinamani.com/agriculture/2017/jan/06/வறட்சியால்-பயிர்கள்-நாசம்-மேலும்-9-விவசாயிகள்-உயிரிழப்பு-2627875.html
2560311 விவசாயம் விவசாய நிலத்தின் தரத்தினை தெரிவிக்கும் மண்வள அட்டைகள்: வேளாண் துறை வழங்கல் dn Tuesday, September 6, 2016 07:54 AM +0530 விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய மண்வள இயக்கத்தில், விவசாயிகளுக்கு “மண்வள அட்டைகள்” வழங்கிடும் பணியை ஆட்சியர் எம்.லட்சுமி அண்மையில் தொடங்கி வைத்தார்.
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநர் ராமலிங்கம் விளக்கிப் பேசியது:  தேசிய மண்வள அட்டை இயக்கமானது, பிரதமரால் 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-இல் ராஜஸ்தானில் துவக்கி வைத்து நாடு முழுவதிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் பெருகிவரும் மக்கள் தொகையில், குறைந்து வரும் சாகுபடி பரப்பு மற்றும் அதிகரிக்கும் பருவநிலை மாற்றங்கள் என நகரும் இக்கட்டான இக்காலகட்டத்தில் விவசாயத்திற்கு அடிப்படையான மண்ணின் தன்மை, சத்துகளின் நிலை ஆகியவற்றை ஆராய்ந்து அதன் அடிப்படையில் பயிர்களுக்குத் தேவையான சத்துக்களை சரியாகவும், சரிவிகிதமாகவும் அளிப்பதன் மூலம் மண்வளம் காப்பதோடு, உரச்செலவினைக் குறைத்து விவசாயிகள் குறைந்த செலவில் நிறைந்த மகசூல் எடுத்திட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

விழுப்புரம் மாவட்டத்தில் “கிரிட் முறையில்” வேளாண்துறை மூலம் கடந்தாண்டு மற்றும் நடப்பாண்டில் 85,409 மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு, மாவட்டத்திலுள்ள மண் ஆய்வுக்கூடங்கள் மூலம், இதுவரை 44,401 மண் மாதிரிகள் ஆய்வுசெய்யப்பட்டு முடிவுகள் வலைதளத்தில் ஏற்றப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 5,19,000 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்க திட்டமிட்டுள்ளதால், வரும் டிசம்பருக்குள் இப்பணிகள் முடிக்கப்படும்.
இந்த மண்வள அட்டையில், விசாயிகளின் மண்ணின் நயம், கார அமிலத்தன்மை, தழை,  மணி, சாம்பல் சத்துக்கள் மற்றும்நுண்சத்துக்களின் அளவுகள் தெளிவாக வழங்கப்படுகிறது.

விவசாயிகள் தங்கள் மண்ணிற்கு இடவேண்டிய உரங்களின் விவரங்கள் சாகுபடி செய்திட வேண்டிய பயிர்களின் விவரங்கள் அதில் அளிக்கப்படுகிறது.
இதனால் விவசாயிகள், தங்கள் நிலத்திலுள்ள சத்துக்களின் அடிப்படையில் உர மேலாண்மை செய்வதால், ரசாயன உரங்களின் பயன்பாடு குறைவதுடன் மகசூல் அதிகரித்து வருவாயும் அதிகரிக்கும்.
மாவட்டத்திலுள்ள விவசாயிகள், தேசிய மண்வள அட்டை இயக்கத்தில் பயன்பெற வேண்டும் என்றார்.

]]>
http://www.dinamani.com/agriculture/2016/sep/06/விவசாய-நிலத்தின்-தரத்தினை-தெரிவிக்கும்-மண்வள-அட்டைகள்-வேளாண்-துறை-வழங்கல்-2560311.html
2559931 விவசாயம் ஒகேனக்கல்லில் நொடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வரத்து dn Monday, September 5, 2016 09:47 AM +0530 தருமபுரி: ஒகேனக்கல் காவிரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து இருந்தது.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக சனிக்கிழமை காலை முதல் செய்திகள் வெளியாயின.
இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரியாற்றில் சனிக்கிழமை மாலை வரை நொடிக்கு 8 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி இந்த வரத்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.
ஞாயிற்றுக்கிழமை என்பதால், பொதுப்பணித் துறையினர் பிற்பகல் தண்ணீர் வரத்து அளவீடு செய்ய வரவில்லை எனத் தெரிகிறது. காலை தண்ணீர் வரத்து நிலவரம் குறித்த குறுஞ்செய்தி வருவாய்த் துறை அலுவலர்களுக்கு வந்திருக்கிறது.
 

 

]]>
http://www.dinamani.com/agriculture/2016/sep/05/ஒகேனக்கல்லில்-நொடிக்கு-10-ஆயிரம்-கன-அடி-நீர்-வரத்து-2559931.html
2559911 விவசாயம் தைல மரக்கன்றுகளை நட மக்கள் எதிர்ப்பு: திரும்பி சென்ற வனத்துறையினர் dn Monday, September 5, 2016 08:45 AM +0530 புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், குலமங்கலம் கிராமத்தில் வனத் துறைக்குச் சொந்தமான  இடத்தில் தைல மரகன்றுகளை நடவு செய்ய வந்த வனத் துறையினர் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக திரும்பிச் சென்றனர்.

திருமயம் வட்டம், குலமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான 50 ஏக்கர் பரப்பளவில் தைல மரக்கன்றுகளை நடுவதற்காக வியாழக்கிழமை சென்றனர்.

தகவலறிந்த அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து  தைல மரக்கன்றுகளை நடுவதற்கு பதிலாக பலன் தரும் மரக்கன்றுகளை நட வேண்டுமென வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் சங்க நிர்வாகி ராமதீர்த்தார் கூறியது:

தைல மரக்கன்றுகள் நடுவதால் அதைச் சுற்றி உள்ள பாசனக் குளங்களில் உள்ள நீர் உறிஞ்சப்படுகிறது.

மேலும் வனத்துறையினர் 4 அடி உயரத்துக்கு மழை நீர்  வெளியேறாத வகையில் ஆங்காங்கே தடுப்பணைகளை அமைத்துள்ளனர். அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

குளங்களுக்கு நீர்வரத்து இல்லாமல் விவசாயம் செய்வதற்கும் குடிப்பதற்கும் தண்ணீரின்றி விவசாயிகளும் பொதுமக்களும் சிரமப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, தைல மரக்கன்றுகளை நடும் நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் தடுக்க வேண்டும் என்றார்.

தகவலறிந்த பனையப்பட்டி போலீஸார், வனத்துறை அதிகாரிகள் மக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வனத்துறையினர் தைல மரக்கன்றுகளை நடாமல் திரும்பிச் சென்றனர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/5/w600X390/agri1.jpg http://www.dinamani.com/agriculture/2016/sep/05/தைல-மரக்கன்றுகளை-நட-மக்கள்-எதிர்ப்பு-திரும்பி-சென்ற-வனத்துறையினர்-2559911.html
2559913 விவசாயம் கொல்லிமலை மிளகு கொடியில் பூக்கள் அதிகரிப்பு: கூடுதல் மகசூல் எதிர்பார்ப்பில் விவசாயிகள் dn Monday, September 5, 2016 08:44 AM +0530 நாமக்கல்:  கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பெய்த தொடர் மழை காரணமாக கொல்லிமலையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மிளகு கொடியில் பூக்கள் அதிகம் முளைத்துள்ளன. இதனால் அடுத்த ஆண்டு அறுவடையின்போது கூடுதல் மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
 நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் சுமார் 3,000 ஏக்கரில் மிளகு சாகுபடி செய்யப்படுகிறது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் மழை பெய்து வருமானால், செப்டம்பர் மாதத்தில் நல்ல முறையில் பூப் பிடித்து அடுத்த ஆண்டில் நல்ல விளைச்சல் இருக்கும்.
 2015-ஆம் ஆண்டில் ஏப்ரல், மே மாதங்களில் கொல்லிமலையில் போதிய மழை இல்லை. இதனால் கொடிகளில் பூப் பிடிப்பது குறைந்து, விளைச்சல் பெருமளவில் குறைந்துவிட்டது. சராசரியாக ஒரு சில்வர் ஓக் மரத்தில் ஏற்றிவிடப்படும் ஒரு கொடியில் 2 முதல் 3 கிலோ வரை மிளகு விளைச்சல் இருக்கும். நிகழாண்டு பிப்ரவரி, மார்ச் மாதம் நடந்த அறுவடையில் 1 கிலோ கூடக் கிடைக்கவில்லை.
 ஏக்கருக்கு 440 சில்வர் ஓக் மரங்களை வைத்து, மிளகு கொடிகளை ஏற்றிவிட முடியும். கொடிக்கு 2 முதல் 3 கிலோ வரை விளைச்சல் இருக்கும். இதன்மூலம் ஏக்கருக்கு 1,000 முதல் 1,200 கிலோ வரை மிளகு கிடைக்கும். கிலோ சராசரியாக ரூ.500-க்கு விற்றாலே ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை வருவாய் ஈட்ட முடியும்.
 ஆனால், கடந்த பிப்ரவரி, மார்ச் மாதம் நடந்த அறுவடையில் ஏக்கருக்கு 500 கிலோ கூட கிடைக்கவில்லை. இதனால் ஏக்கருக்கு ரூ.30,000-க்கும் குறைவாகவே வருவாய் கிடைத்தது. இதனால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை வருவாய் இழப்பு ஏற்பட்டது. போதிய அளவு விளைச்சல் இல்லாமல் போனதால்தான் இப்போது விளைச்சல் பகுதியிலேயே கிலோ ரூ.1,000 வரை விற்கிறது.
 இதுகுறித்து தமிழ்நாடு பழங்குடியினர் நல அமைப்பு மாநிலத் தலைவரான விவசாயி கே. குப்புசாமி கூறியது:
 கொல்லிமலை மிளகு அடர்த்தியாகவும், காரமாகவும் இருக்கும். ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படாததும், இங்குள்ள இயற்கைச் சூழலும் மிளகு விளைச்சலுக்கு சாதகமாக உள்ளது. இங்கு விளையும் மிளகு தரமானதாக இருப்பதால், நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது.
 இப்போது பூ வைத்துள்ள மிளகு கொடியில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் காய்ப் பிடிக்கத் தொடங்கும். பின் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அறுவடை செய்து விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது.
 கடந்த ஆண்டு போதிய மழைப் பொழிவின்மை காரணமாக கடந்த பிப்ரவரி, மார்ச் மாத அறுவடையில் விவசாயிகள் எதிர்பார்த்த அளவுக்கு மிளகு மகசூல் கிடைக்கவில்லை. நிகழாண்டு ஏப்ரல், மே மாதங்களில் போதிய மழைப்பொழிவு இருந்ததால், இப்போது நன்றாக பூப்பிடித்துள்ளது.
 கடந்த ஆண்டு எதிர்பார்த்த மகசூல் இல்லாமல் கடும் இழப்பைச் சந்தித்த விவசாயிகள், 2017 ஆம் ஆண்டு அறுவடையில் கூடுதல் மகசூலை எதிர்பார்த்துள்ளனர். தற்போதைய சூழலில் மிளகுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது என்றார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/5/w600X390/milaku5b.jpg http://www.dinamani.com/agriculture/2016/sep/05/கொல்லிமலை-மிளகு-கொடியில்-பூக்கள்-அதிகரிப்பு-கூடுதல்-மகசூல்-எதிர்பார்ப்பில்-விவசாயிகள்-2559913.html