Dinamani - அரசுப் பணிகள் - http://www.dinamani.com/employment/goverment-jobs/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2780817 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் குரூப் 2 தேர்வு: பதிவெண் பட்டியல் வெளியீடு Thursday, September 28, 2017 01:32 AM +0530 துணை வணிக வரி அலுவலர் உள்பட குரூப் 2 தொகுதியில் அடங்கியுள்ள பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டோரின் பதிவெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( டி.என்.பி.எஸ்.சி. ) புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 2 தொகுதியில், துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர் நிலை -2, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உள்ளாட்சி மற்றும் நிதித் தணிக்கைத் துறையில் உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களில் முதுநிலை ஆய்வாளர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையில் மேற்பார்வையாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட 18 விதமானபதவிகள் உள்ளன. இவற்றில் 1,094 காலிப்பணியிடங்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21 -இல் நடத்தப்பட்டது. அதில் 9,833 பேர் பங்கேற்றனர். தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் அந்தப் பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 2,169 பேர் தாற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in-இல் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு அக்டோபர் 20 - ஆம் தேதி முதல் நவம்பர் 3 -ஆம் தேதி வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

]]>
http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/sep/28/குரூப்-2-தேர்வு-பதிவெண்-பட்டியல்-வெளியீடு-2780817.html
2763896 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான குரூப் ஏ, பி பணியிடங்கள் எவை? Wednesday, August 30, 2017 02:45 AM +0530 மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின்கீழ் குரூப் ஏ, பி போன்ற உயர் பதவிகளில் அவர்களுக்கேற்ற பதவியிடங்கள் எவை என்பதை தமிழக அரசு வரையறுத்துள்ளது.
இதற்கான உத்தரவை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை முதன்மைச் செயலாளர் நசிமுதின் வெளியிட்டார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அரசுப் பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. அதன்படி, குரூப் ஏ மற்றும் பி தொகுதி பணியிடங்களில் 263 இடங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், அவர்களுக்கான இடஒதுக்கீடு 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ள சூழலில், குரூப் ஏ மற்றும் பி பிரிவு பணியிடங்களில் அவர்களுக்கு எந்தெந்த பதவியிடங்களை ஒதுக்கலாம் என்பதற்கான அரசு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 -ன் கீழ் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, மாநில மாற்றுத்திறனாளிகள் நலத் துறை ஆணையாளர் அவற்றை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். 
அதன்படி மாவட்ட நீதிபதி, பட்ட மேற்படிப்பு ஆசிரியர் பணியிடங்கள், உடற்கல்வி இயக்குநர் ஆகிய குரூப் ஏ மற்றும் பி பிரிவு பணியிடங்களில் அவர்களுக்கு ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று தனது உத்தரவில் நசிமுதின் தெரிவித்துள்ளார்.
 

]]>
http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/aug/30/மாற்றுத்திறனாளிகளுக்கான-குரூப்-ஏ-பி-பணியிடங்கள்-எவை-2763896.html
2753625 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி: தேர்வு முடிவுகள் வெளியீடு Saturday, August 12, 2017 12:40 AM +0530 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்கான நேரடிப் பணித் தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெள்ளிக்கிழமை (ஆக.11) வெளியிட்டுள்ளது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் (நிலை -1) பணியிடங்களுக்கான (3,375) தேர்வை, டிஆர்பி கடந்த ஜூலை 2 -ஆம் தேதி நடத்தியது. இந்தத் தேர்வுக்கு 2,18,492 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 2,00,299 பேர் தேர்வை எழுதியிருந்தனர்.
இந்தத் தேர்வின் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. தேர்வு முடிவை    www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
தேர்ச்சி பெற்றவர்களில் இடஒதுக்கீட்டின்படி தகுதியுள்ளவர்கள் 1:1 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படவுள்ளனர். சான்றிதழ் சரிபார்க்கும் பணி 9 மாவட்டங்களில், ஆகஸ்ட் 28, 29 ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.trb.tn.nic.in இல் பெறலாம்.
இந்தத் தேர்வை எழுதியவர்கள் தங்களுடைய விடைத்தாளைப் பார்த்து சரியான விடைக்கு மதிப்பெண் கிடைத்திருக்கிறதா என்பதையும் சரிபார்த்துக்கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டிருக்கிறது.
மேலும், இப்பணியிடங்களில் மாற்றுத்திறனாளிக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், நான்கு சதவிகித இடங்களை அவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, நான்கு சதவீத இடங்கள்காலியிடங்களாக வைக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

 

]]>
http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/aug/12/முதுநிலை-பட்டதாரி-ஆசிரியர்-பணி-தேர்வு-முடிவுகள்-வெளியீடு-2753625.html
2748665 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் ஆக.9-இல் மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி Thursday, August 3, 2017 03:38 AM +0530 வேளாண் தகவல் பயிற்சி மையத்தில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி (புதன்கிழமை) மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி நடைபெறவுள்ளது. இதில், மண்புழு உரத்தில் தாவர வளர்ச்சிக்கேற்ற சத்துகள், நொதிகள், வளர்ச்சி ஊக்கிகள் ஆகியவற்றை சேர்ப்பதன் மூலம் தாவரங்களை செழிப்புடன் வளர்ப்பதற்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சி வீட்டிலிருப்போர், மாணவர்கள், இளைஞர்கள், தொழில் முனைவோர், தொண்டு நிறுவனத்தினருக்கு வாய்ப்பாக அமையும்.
பயிற்சியின் நிறைவில், சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 044 26263484 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தகவல் பயிற்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/aug/03/ஆக9-இல்-மண்புழு-உரம்-தயாரிக்கும்-பயிற்சி-2748665.html
2740446 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் ஜூலை 27-இல் காளான் வளர்ப்பு பயிற்சி Thursday, July 20, 2017 02:25 AM +0530 வேளாண் தகவல் பயிற்சி மையத்தில் ஜூலை 27 ஆம் தேதி (வியாழக்கிழமை) காளான் வளர்ப்புப் பயிற்சி நடைபெறவுள்ளது.
இந்த முகாமில், வீட்டிலிருப்போர், இளைஞர்கள், தொழில்முனைவோர், மகளிர், வணிகர்கள், தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்கலாம்.
இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் 044-26263484 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
காலை 9.30 மணி முதல் மாலை 4.30 வரை பயிற்சி அளிக்கப்படும். நிறைவாக, சான்றிதழ் வழங்கப்படும் என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தகவல், பயிற்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/jul/20/ஜூலை-27-இல்-காளான்-வளர்ப்பு-பயிற்சி-2740446.html
2722007 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் விரிவுரையாளர் பணியிடத் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம் Saturday, June 17, 2017 02:41 AM +0530 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு சனிக்கிழமை (ஜூன் 17) முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,058 விரிவுரையாளர் (பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடங்கள்) பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வரும் ஆகஸ்ட் 13 -ஆம் தேதி நடத்துகிறது இதற்கான அறிவிக்கை டிஆர்பி இணையதளத்தில்(www.trb.tn.nic.in)   வெள்ளிக்கிழமை (ஜூன் 16) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இணையதளம் மூலம் மட்டுமே சனிக்கிழமை (ஜூன் 17) முதல் ஜூலை 7 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்க இயலும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/jun/17/விரிவுரையாளர்-பணியிடத்-தேர்வு-இன்று-முதல்-விண்ணப்பிக்கலாம்-2722007.html
2720627 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் தேர்வு: ஜூன் 27, 28-இல் சான்றிதழ் சரிபார்ப்பு Thursday, June 15, 2017 01:35 AM +0530 கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் தேர்வில் தேர்வானவர்களுக்கு வரும் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தேர்வு III-இல் அடங்கிய கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவிக்கான 24 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட்டது.
இந்தத் தேர்வில் 46,797 பேர் பங்கேற்றனர். இந்த தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகள் அடிப்படையில் வெளிச்சந்தைப்பிரிவு (Open Market Category)  காலிப்பணியிடத்தின் கீழ் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தாற்காலிமாகத் தேர்வு செய்யப்பட்ட 137 விண்ணப்பதாரர்களின் பட்டியல் IV www.tnpsc.gov.in  என்ற தேர்வாணைய வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.

 

]]>
http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/jun/15/கூட்டுறவுச்-சங்கங்களின்-இளநிலை-ஆய்வாளர்-தேர்வு-ஜூன்-27-28-இல்-சான்றிதழ்-சரிபார்ப்பு-2720627.html
2712571 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் உதவி ஆணையாளர் பதவி: தேர்வு அறிவிக்கை வெளியீடு Friday, June 2, 2017 03:25 AM +0530 இந்து சமய அறநிலையத் துறையில் உதவி ஆணையாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிக்கையை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
தேர்வுக்கு ஜூன் 1 முதல் விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பெண்கள் - தமிழ் வழியில் படித்தோர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என மூன்று பிரிவில் தலா ஒரு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது. தேர்வுக்கு டி.என்.பி.எஸ்.சி., (www.tnpsc.gov.in) இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், விண்ணப்பிக்க ஜூன் 28 கடைசி நாள் எனவும் தேர்வு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/jun/02/உதவி-ஆணையாளர்-பதவி-தேர்வு-அறிவிக்கை-வெளியீடு-2712571.html
2712556 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் 11 மாவட்டங்களில் 108 ஆம்புலன்ஸ் வேலை வாய்ப்பு முகாம் Friday, June 2, 2017 02:56 AM +0530 தமிழகத்தில் 11 மாவட்டங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான ஓட்டுநர், அவசரகால மருத்துவப் பணியாளர்களுக்கு ஜூன் 4-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
108 ஆம்புலன்ஸ் சேவையை அளிக்கும் ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனம் இந்த வேலை வாய்ப்பு முகாமை நடத்த உள்ளது.
அவசரகால மருத்துவ உதவியாளர்: பி.எஸ்.சி.நர்சிங், ஜி.என்.எம், ஏ.என்.எம்., மருந்தாளுநர் பட்டயப்படிப்பு, டிஎம்எல்டி அல்லது அறிவியல் சார்ந்த இளங்கலை பட்டப்படிப்பு படித்த, 20 முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.
அவசரகால மருத்துவ உதவியாளர்(பயிற்சி): அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த ஓராண்டு பட்டயப்படிப்பு படித்த, 19 முதல் 30 வயதுக்குட்பட்ட, ஆண், பெண் இருபாலரும் முகாமில் பங்கேற்கலாம்.
ஓட்டுநர்: 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இலகுரக ஓட்டுநர் உரிமம் பெற்று மூன்று ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள், உயரம் 162.5 செ.மீ.க்கும் குறையாமல், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்கள் இதில் கலந்து கொள்ளலாம்.
முகாம் நடைபெறும் இடங்கள்:
சென்னை - ஜிவிகே இஎம்ஆர்ஐ அலுவலகம், தேனாம்பேட்டை.
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகம்.
கடலூர் - அரசு பொது மருத்துவமனை
வேலூர் - ஆட்சியர் அலுவலக வளாகம்
சேலம் - பொது சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலக வளாகம் (ஆட்சியர் அலுவலகம் அருகில்).
கோவை - அரசு மருத்துவக் கல்லூரி வளாகம்.
திருச்சி - வேலை வாய்ப்பு அலுவலக வளாகம்
தஞ்சாவூர் - பழைய ஆட்சியர் அலுவலகம்
மதுரை - அரசு மருத்துவக் கல்லூரி
சிவகங்கை - ஆர்டிஎம் கல்லூரி
கன்னியாகுமரி - கோட்டாறு ஆயுர்வேத கல்லூரி மருத்துவமனை மேலும் விவரங்களுக்கு 044-2888 8060 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

 

]]>
http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/jun/02/11-மாவட்டங்களில்-108-ஆம்புலன்ஸ்-வேலை-வாய்ப்பு-முகாம்-2712556.html
2712481 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் இணையதளம் மூலம் அரசு செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வு Friday, June 2, 2017 01:08 AM +0530 வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வகையில் இணையதளம் மூலம் அரசு செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வு முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டி:
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் இதுவரை 17 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் 280 மருத்துவர்கள், 516 செவிலியர்கள், 1,200 கிராமப்புற சுகாதார செவிலியர்கள் உள்ளிட்டப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன.
ஏற்கெனவே பல்வேறு பணியிடங்களுக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிக்கப்பட்டு, அதன் பின்பு பணி நியமனம் நடத்தப்பட்டது. அதே போன்று இந்தியமுறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையில் பணி நியமனம் தொடர்பான வழக்குகளும் விரைந்து முடிக்கப்பட்டு, பணியிடங்கள் நிரப்பப்படும்.
இணையதள கலந்தாய்வு: அரசு செவிலியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நேர்காணல் மூலம் நடத்தப்பட்டு வந்தது. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் வகையில் இணையதளம் மூலம் கலந்தாய்வை நடத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் அரசு மருத்துவமனை செவிலியர்கள் தாற்காலிக செவிலியர்கள், கிராமப்புற செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களுக்குமான கலந்தாய்வு இணையதளத்தின் மூலம் நடத்தப்படும். அதன்படி, செவிலியர்கள் தங்களுக்கான இடமாறுதல் இடங்களை இணையதளத்திலேயே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு மாதத்தில் நடைமுறைக்கு வரும். சோதனைத் திட்டமாக முதலில் அரசு செவிலியர்கள் கலந்தாய்வு இணையதளத்தில் நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து பிற பணியிடங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என்றார்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/3/w600X390/vijayabaskar.jpg http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/jun/02/இணையதளம்-மூலம்-அரசு-செவிலியர்-இடமாறுதல்-கலந்தாய்வு-2712481.html
2711484 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் அரசுப் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு 4%ஆக உயர்வு Wednesday, May 31, 2017 05:22 AM +0530 மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பணியிடங்களில் வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் 1981-ஆம் ஆண்டிலிருந்தே மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
பார்வைக் குறைபாடுடையோர், செவித்திறன் குறைபாடுடையோர் மற்றும் கை-கால் பாதிக்கப்பட்டோருக்குத் தலா 1 சதவீத பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-ன் படி, மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பணியிடங்களில் 4 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதன்படி, ஏற்கெனவே நடைமுறைப்படுத்தி வந்த 3 சதவீத இடஒதுக்கீட்டை 4 சதவீதமாக தமிழக அரசுப் பணிகளிலும் உயர்த்தி அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.
யார் யாருக்கு எவ்வளவு? மாற்றுத் திறனாளிகளுக்காக அரசுப் பணிகளில் அளிக்கப்பட இருக்கும் 4 சதவீத ஒதுக்கீட்டில் பார்வைக் குறைபாடு உடையோருக்கு 1 சதவீதம், செவித் திறன் குறைபாடு உடையோருக்கு 1 சதவீதம், கை-கால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், குள்ளத்தன்மையுடையோர், அமில வீச்சால் பாதிக்கப்பட்டோர், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு 1 சதவீதம், புறஉலகு சிந்தனையற்றோர், அறிவு சார் குறைபாடுடையோர், மனலநம் பாதிக்கப்பட்டோருக்கு 1 சதவீதம் என ஒதுக்கீடு வழங்கப்படும். இந்த 4 சதவீத இடஒதுக்கீடானது அனைத்து அரசுப் பணியிடங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், அரசு உள்ளாட்சி அமைப்புகள், அரசின் நிதியுதவி பெறும் அமைப்புகள் ஆகியவற்றுக்குப் பொருந்தும்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/27/w600X390/palanisamy2.jpg http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/may/31/அரசுப்-பணியிடங்களில்-மாற்றுத்-திறனாளிகளுக்கு-இடஒதுக்கீடு-4ஆக-உயர்வு-2711484.html
2708137 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் Thursday, May 25, 2017 02:50 AM +0530 சென்னையில், தனியார் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள 250 பணியிடங்களை நிரப்ப, வரும் 26-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு வேலைவாய்ப்புக்காக பல்வேறு கல்வித் தகுதிகளுடன் பதிவு செய்துள்ளவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம், வரும் மே 26ஆம் தேதி காலை 11 மணிக்கு சாந்தோமில் உள்ள சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கல்வித் தகுதிக்கு ஏற்ப தனியார் நிறுவனத்தின் மூலம் பணியமர்த்தப்பட உள்ள இந்த முகாமில், 19 வயது முதல் 35 வயதுடைய ஆண்கள், பெண்கள் கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

 

]]>
http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/may/25/நாளை-தனியார்-வேலைவாய்ப்பு-முகாம்-2708137.html
2708130 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 1,045 பேருக்கு இடமாறுதல் ஆணை Thursday, May 25, 2017 02:39 AM +0530 இணையதளம் மூலம் நடைபெற்று வரும் முதுநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில் 1,045 பேர் புதன்கிழமை (மே 24) இடமாறுதல் ஆணை பெற்றனர்.
மேலும் இந்தக் கலந்தாய்வில் 10 கணினி பயிற்றுநர்கள், 4 வேளாண்மை பயிற்றுநர்களும் தாங்கள் விரும்பிய இடத்துக்கு மாறுதல் ஆணை பெற்றதாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ரெ.இளங்கோவன் தெரிவித்தார்.

]]>
http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/may/25/முதுநிலை-பட்டதாரி-ஆசிரியர்கள்-1045-பேருக்கு-இடமாறுதல்-ஆணை-2708130.html
2699825 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் 1663 ஆசிரியர் காலியிடங்கள்: அறிவிக்கை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம் Thursday, May 11, 2017 02:25 AM +0530 பள்ளிக் கல்வித் துறை, இதர துறைகளின்கீழ் உள்ள பள்ளிகளில் 1,663 ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) புதன்கிழமை (மே 10) வெளியிட்டது.
இதன்படி, முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை -1 ஆகிய காலி பணியிடங்களுக்கு இணையதளம்(www.trb.tn.nic.in)  வாயிலாக விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க மே 30 -ஆம் தேதி கடைசி நாளாகும்.
ஜூலை 2 -இல் எழுத்துத் தேர்வு: ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு ஜூலை 2 -ஆம் தேதி நடைபெறும்.
விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு, கல்வி தகுதிகள், பாடவாரியாக காலி பணியிட விவரங்கள் உள்ளிட்ட அனைத்தும் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in)   வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2013/6/15/4/w600X390/tet.jpg http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/may/11/1663-ஆசிரியர்-காலியிடங்கள்-அறிவிக்கை-வெளியிட்டது-ஆசிரியர்-தேர்வு-வாரியம்-2699825.html
2699802 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் குரூப் 2 தேர்வு: வரும் 15 முதல் இரண்டாம்கட்ட கலந்தாய்வு Thursday, May 11, 2017 01:40 AM +0530 குரூப் 2 பிரிவில் காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 15 -ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
குரூப் 2 பிரிவில் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்ய எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜனவரியில் நடந்தது. அதற்கான தேர்வு முடிவுகள் ஜூனில் வெளியானது.
ஏற்கெனவே முதல்கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், இரண்டாம்கட்ட கலந்தாய்வு வரும் 15-ஆம் தேதி தொடங்குகிறது. சென்னை பாரிமுனையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் வரும் 17 -ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.
இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பதிவெண் பட்டியல் மற்றும் தரவரிசையின்படி கால அட்டவணை பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில்(www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதி, நேரம் ஆகிய தகவல்கள் அடங்கிய அழைப்பாணை விரைவஞ்சல் மூலம் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. இந்த அழைப்பாணையை தேர்வாணைய இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த கலந்தாய்வுக்கு வரத் தவறுபவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

 

]]>
குரூப் 2,குரூப் 2 தேர்வு, வேலைவாய்ப்பு,Group II,Group II Exam,Employment News http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/may/11/குரூப்-2-தேர்வு-வரும்-15-முதல்-இரண்டாம்கட்ட-கலந்தாய்வு-2699802.html
2696173 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் ஓமந்தூரார் மருத்துவமனை இயக்குநர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் Friday, May 5, 2017 01:31 AM +0530 ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை இயக்குநர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை 2014-இல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்டது. 3 ஆண்டுகள் நிறைவடைந்தும், மருத்துவமனை இயக்குநர் பணியிடம் நிரப்பப்படவில்லை.
இந்நிலையில் இப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்க மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் www.mrb.tn.gov.in  என்ற இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ். படித்து மருத்துவப் பணியில் 10 முதல் 15 ஆண்டுகள் பணியாற்றிய, வேறு பல்நோக்கு மருத்துவமனையில் 5 ஆண்டுகள் நிர்வாக அனுபவம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மருத்துவமனை நிர்வாகத்தில் பட்டம் அல்லது பட்டயப்படிப்பு படித்தவர்கள், மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர், மருத்துவக் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்கள் விண்ணப்பங்களை உறுப்பினர் செயலர், மருத்துவப் பணிகள் தேர்வாணையம், 7-ஆவது தளம், டிஎம்எஸ் கட்டடம், 359, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை - 6 என்ற முகவரிக்கு பதிவுத் தபால் அல்லது விரைவுத் தபால் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் மே 19.
தேர்வு எப்படி: விண்ணப்பங்களைப் பரிசீலிக்க தமிழக அரசின் சார்பில் ஒரு குழு அமைக்கப்படும். அந்தக் குழுவினர் தகுதியான நபரைப் பரிசீலித்து, தமிழக அரசுக்குப் பரிந்துரைப்பர். ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் இயக்குநர் பணியமர்த்தப்படுவார். அதன் பின்பு அவரின் செயல்பாட்டைப் பொறுத்து, ஒப்பந்தம் நீட்டிக்கப்படும்.

 

]]>
http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/may/05/ஓமந்தூரார்-மருத்துவமனை-இயக்குநர்-பணியிடத்துக்கு-விண்ணப்பிக்கலாம்-2696173.html
2695601 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் சமூக பாதுகாப்புத் துறையில் கணக்கு உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் Thursday, May 4, 2017 02:18 AM +0530 சமூக பாதுகாப்புத் துறையில் கணக்கு உதவியாளர் காலிப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பிளஸ் 2 வகுப்பில் வர்த்தகம், கணக்கு பாடப் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஏதேனும் நிறுவனத்தின் கணக்குகள் துறையில் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது 40-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
www.tn.gov.in/department/30 http://www.tn.gov.in/job_opportunity  அல்லது www.socialdefence.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பணியிடத்துக்கு தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் உரிய படிவத்தில் வரும் 18-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் வர வேண்டும்.
இந்த விண்ணப்பத்தை ''ஆணையர்-செயலாளர், மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம், சமூக பாதுகாப்புத் துறை, 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை-10'' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். தொலைபேசி எண்: 044-26421358.

 

]]>
சமூக பாதுகாப்புத் துறை,தமிழக அரசு,வேலைவாய்ப்பு செய்திகள்,Social Security Department,Tamilnadu Government,Employment News http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/may/04/சமூக-பாதுகாப்புத்-துறையில்-கணக்கு-உதவியாளர்-பணியிடத்துக்கு-விண்ணப்பிக்கலாம்-2695601.html
2693398 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள்: கடினமான உளவியல், எளிதான கணிதம்: இன்று பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு Sunday, April 30, 2017 01:09 AM +0530 தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (ஏப்.29) நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளை 2.7 லட்சம் பேர் எழுதினர். குழந்தைகளுக்கான உளவியல் பகுதி வினாக்கள் கடினமாகவும் கணிதம், தமிழ் பகுதி வினாக்கள் எளிதாக இருந்ததாகவும் தேர்வர்கள் தெரிவித்தனர்.
முதல் வகுப்பு முதல்...: தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு சனிக்கிழமை தொடங்கியது. முதல் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பணியாற்றுவதற்கான இடைநிலை ஆசிரியர் பணிக்கான (முதல் தாள்) தேர்வு நடைபெற்றது. இதற்கு கல்வித் தகுதி ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
இத்தேர்வுக்காக தமிழகத்தில் 598 மையங்களில் 2 லட்சத்து 37 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். காலை 10 மணிக்குத் தொடங்கிய தேர்வுக்கு அரை மணி நேரத்துக்கு முன் தேர்வு எழுதுபவர்கள் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
செல்லிடப்பேசி, கால்குலேட்டர், கைக்குட்டை போன்றவற்றைத் தேர்வர்கள் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டது. இதனால் தீவிர சோதனைக்குப் பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படை, கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டிருந்தது.
மாவட்ட ஆட்சியர் ஆய்வு:சென்னை மாவட்டத்தில் அண்ணாநகரில் உள்ள அண்ணா ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் பள்ளித் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் பார்வையிட்டார்.
அசோக்நகர், கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாவட்டத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட 10,147 பேரில் 9,657 பேர் தேர்வெழுதினர்.
அசோக்நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய என்.பிரபாகரன், எஸ்.கோகிலா உள்ளிட்டோர் கூறியது:
தமிழ், ஆங்கிலம், கணிதம், குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் (கல்வி உளவியல்), சூழ்நிலை அறிவியல் ஆகிய 5 பாடப் பகுதிகளில் தலா 30 கேள்விகள் வீதம் மொத்தம் 150 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
உளவியல் பகுதியில் தானியங்கி நரம்புத் தொகுதியில் மனவெழுச்சிகளால் தூண்டும் செயல்களால் ஏற்படும் மாற்றங்களின் வேகத்தை அளவிடப் பயன்படும் கருவியின் பெயர், ஒரு நியூரானிலிருந்து மற்றொரு நியூரான் தூண்டலைப் பெறும் பாகம் உள்பட 10-க்கும் மேற்பட்ட வினாக்கள் கடினமாக இருந்தன. தமிழ் பிரிவில் சில இலக்கண வினாக்களுக்குப் பதிலளிப்பது சற்று சிரமமாக இருந்தது.
கணிதப் பிரிவில்...கணிதப் பிரிவில் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் விலை 8 சதவீத மதிப்புக்கூட்டு வரியுடன் ரூ.15,660 எனில், மதிப்புக்கூட்டு வரியின்றி அதன் விலை என்ன உள்பட சூழ்நிலை அறிவியல், ஆங்கிலம் ஆகிய பிரிவுகளில் கேட்கப்பட்ட பெரும்பாலான வினாக்கள் எளிதாக இருந்தன. கடந்த தேர்வுகளில் 30 சதவீதம் வரை பாடப் பகுதிக்கு வெளியிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டன. ஆனால், இந்த முறை 50 சதவீத வினாக்கள் அவ்வாறு கேட்கப்பட்டிருந்தன. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு முதல் தாள் சற்று கடினமாகவே இருந்தது என்றனர்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான (இரண்டாம் தாள்) தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஏப்.30) நடைபெறவுள்ளது. இதில் 5 லட்சம் பேர் தேர்வு எழுதவுள்ளனர்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/30/w600X390/EXAM.jpg சென்னை அண்ணா நகர் அண்ணா ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வைப் பார்வையிடும் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன். http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/apr/30/ஆசிரியர்-தகுதித்-தேர்வு-முதல்-தாள்-கடினமான-உளவியல்-எளிதான-கணிதம்-இன்று-பட்டதாரி-ஆசிரியர்களுக்கான-2693398.html
2692904 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் இன்று தொடக்கம்: 7.40 லட்சம் பேர் எழுதுகின்றனர் Saturday, April 29, 2017 10:07 AM +0530 தமிழக பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வுகள் சனிக்கிழமை (ஏப்.29) தொடங்குகின்றன.
இன்றும் நாளையும் தேர்வு: இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு (சனிக்கிழமை-ஏப்.29), பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு (ஞாயிற்றுக்கிழமை-ஏப்.30) என இரண்டு நாள்கள் தொடர்ந்து நடைபெறும் தேர்வுக்கு மொத்தம் 7 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அதாவது, இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (தாள்-1) 2 லட்சத்து 37,293 பேர் பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, 5 லட்சத்து 2 ஆயிரத்து 964 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அரசாணை காரணமாக...: அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.
எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும் என ஆசிரியர் வேலை தேடும் பி.எட்., மற்றும் பிளஸ்-2 முடித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி முடித்த லட்சக்கணக்கானவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்த நிலையில் நிகழாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29, 30 தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது.
இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மார்ச் 6-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் விற்பனை செய்யப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் மார்ச் 23-ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளப்பட்டன.
இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு...: இந்தத் தேர்வுக்கு (தாள்-1) 2 லட்சத்து, 37,293 பேர் பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, 5 லட்சத்து, 2 ஆயிரத்து 964 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம் ரூ.33.5 கோடி வருமானம் தேர்வு வாரியத்துக்குக் கிடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக 1,861 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 598 மையங்கள் சனிக்கிழமை (ஏப்.29) நடைபெறும் முதல் தாளுக்கு உரியதாகும்.
சென்னை மாவட்டத்தில்...: சென்னை மாவட்டத்தில் சனிக்கிழமை (ஏப்.29) நடைபெறவுள்ள தாள்-1 தேர்வை, 27 மையங்களில் 10,147 தேர்வர்களும், ஞாயிற்றுக்கிழமை (ஏப்.30) நடைபெற உள்ள தாள்-2 தேர்வை 88 தேர்வு மையங்களில் 31,235 தேர்வர்களும் எழுதவுள்ளனர்.
அதிக கண்காணிப்புடன்...: தேர்வு நடைபெறுவதைக் கண்காணிப்பதிலும், விடைத்தாள்களை ஆசிரியர் தேர்வு மையங்களில் கொண்டு சேர்க்கும் பணியைக் கண்காணிப்பதிலும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் ஈடுபட உள்ளனர்.

 

]]>
ஆசிரியர் தகுதித் தேர்வு, வேலைவாய்ப்பு,தமிழ்நாடு,TET Exam,Employment News,Tamilnadu http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2013/8/18/0/w600X390/tet.jpg http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/apr/29/ஆசிரியர்-தகுதித்-தேர்வுகள்-இன்று-தொடக்கம்-740-லட்சம்-பேர்-எழுதுகின்றனர்-2692904.html
2692096 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் குரூப் 2ஏ: 1,953 காலியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியீடு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு Friday, April 28, 2017 01:38 AM +0530 குரூப் 2ஏ பிரிவில் காலியாகவுள்ள 1,953 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது.
இது குறித்து டி.என்.பி.எஸ்.சி., செயலாளர் விஜயகுமார் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2ஏ-வில் அடங்கிய (நேர்முகத் தேர்வு அல்லாத) பதவிகளுக்கான அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இப்பதவிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணைய வழியில் வரவேற்கப்படுகின்றன.
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 1953. தமிழ்நாடு அமைச்சுப் பணிகள், தமிழ்நாடு தலைமைச்செயலகப் பணிகள் மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவைப் பணிகளில் அடங்கிய உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பதவிகளில் சுமார் 1953 காலிப்பணியிடங்கள் உள்ளன.
உதவியாளர் மற்றும் கணக்கர் பதவிகளுக்கு ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு அல்லது இளங்கலை சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நேர்முக உதவியாளர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு இளங்கலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 26 ஆம் தேதி கடைசி நாளாகும். ஆகஸ்ட் 6 ஆம் தேதி தேர்வு நடைபெறும். விண்ணப்பங்களை www.tnpsc.gov.in, www.tnpscexams.net   என்ற இணையதளங்களின் வழியே பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஏனெனில், கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பொழுது விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்பப் பிரச்சனைகளோ எழ வாய்ப்புள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை கடைசி கட்ட நாள்களில் சமர்ப்பிக்க இயலாது போனால் அதற்குத் தேர்வாணையம் பொறுப்பாகாது.
விண்ணப்பிக்கும் முறை குறித்த சந்தேகங்களை 044-25332855, 044-25332833 மற்றும் கட்டணமில்லாத தொலைபேசி எண்: 1800-425-1002- இல் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்று தனது அறிவிப்பில் விஜயகுமார் குறிப்பிட்டுள்ளார்.

]]>
குரூப் 2 ஏ,டி.என்.பி.எஸ்.சி.,குரூப் 2,Group 2 A,TNPSC,Group 2 http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/apr/28/குரூப்-2ஏ-1953-காலியிடங்களை-நிரப்ப-அறிவிக்கை-வெளியீடு-டிஎன்பிஎஸ்சி-அறிவிப்பு-2692096.html
2687990 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு: ஏப்ரல் 24 முதல் விண்ணப்பங்கள் பெறப்படும் Friday, April 21, 2017 01:23 AM +0530 தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான (2017-2018) அனைத்து வகை ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:
ஆசிரியர் சமுதாயத்தின் நலனுக்காக வெளிப்படையான ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு பொதுமாறுதல் வழிகாட்டி விதிமுறைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்ற அரசின் முடிவின்படி 2017-2018-ஆம் கல்வி ஆண்டில் அரசு நகராட்சி, தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பொது மாறுதல் கலந்தாய்வு இணையதளத்தின் வாயிலாக நடைபெறவுள்ளது.
ஏப்ரல் 24 முதல்....ஆசிரியர்களின் பொது மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் ஏப்ரல் 24 முதல் மே 5-ஆம் தேதி வரை பெறப்படும்.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பொருத்தவரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திலும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம், உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்திலும் மாறுதல் விண்ணப்பங்கள் பெறப்படும்.
மே 19 முதல்...ஆசிரியர் மாறுதல் விண்ணப்பத்தை உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்தல் உள்ளிட்டவை வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் தொடங்கும். பொது மாறுதலுக்கான விண்ணப்பத்தை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பித்தல் உள்ளிட்டவை வரும் மே 5-ஆம் தேதி முதல் தொடங்கும். மே 19-ஆம் தேதி முதல் மே 31 வரை மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும்.
2017-2018ஆம் ஆண்டுக்கான ஆசிரியர்கள் பணிநிரவல், மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வுக்கான கால அட்டவணை:

 

]]>
http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/apr/21/ஆசிரியர்-இடமாறுதல்-பதவி-உயர்வு-கலந்தாய்வு-அட்டவணை-வெளியீடு-ஏப்ரல்-24-முதல்-விண்ணப்பங்கள்-பெறப்படும-2687990.html
2687368 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் கலந்தாய்வில் மறைக்கப்படும் இடங்கள்: அரசு செவிலியர்கள் சாலை மறியல் Thursday, April 20, 2017 02:13 AM +0530 காலியாக உள்ள இடங்கள், இடமாறுதல் கலந்தாய்வில் மறைக்கப்படுவதாகக் கூறி, அரசு மருத்துவமனை செவிலியர்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு சென்னை டிஎம்ஸ் வளாகத்தில் புதன்கிழமை தொடங்கியது.
இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தக் கலந்தாய்வில், தென்மாவட்டங்களில் உள்ள காலியிடங்கள் மறைக்கப்படுவதாகக் கூறி, கலந்தாய்வில் பங்கேற்க வந்த செவிலியர்களில் சுமார் 200 -க்கும் மேற்பட்டோர் அண்ணா சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் தலையிட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
இதுதொடர்பாக கலந்தாய்வில் பங்கேற்றோர் கூறியது:
சுமார் ஆயிரம் காலியிடங்களில் கலந்தாய்வுக்கு செவிலியர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், கலந்தாய்வின்போது காலியிடங்கள் பட்டியலில் சுமார் 500 இடங்கள் மட்டுமே காட்டப்பட்டிருந்தது.
தென்மாவட்டங்களில் உள்ள 99 சதவீத காலியிடங்கள் பட்டியலில் காண்பிக்கப்படவில்லை. கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மை வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டோம்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அதிகாரிகள் அழைத்தனர்.
5 பேர் பேச்சுவார்த்தை நடத்தச் சென்று, 3 மணி நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.
விசாரித்ததில், அவர்களை காவல் துறையினர் உதவியுடன் அதிகாரிகள் மிரட்டி, பின்புற வாசல் வழியே வெளியேற்றிவிட்டது தெரியவந்தது என்றனர் அவர்கள்.

]]>
http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/apr/20/கலந்தாய்வில்-மறைக்கப்படும்-இடங்கள்-அரசு-செவிலியர்கள்-சாலை-மறியல்-2687368.html
2687353 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் 'துணைவேந்தர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்' Thursday, April 20, 2017 01:32 AM +0530 பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள்: அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களைத் தேர்வு செய்வதற்கான பணியை தேடல் குழுக்கள் நிறைவு செய்து, அதை தமிழக ஆளுநரிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.
எனவே, விரைவில் மூன்று பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவர்.
பொறியியல் சேர்க்கைக்கு 2018-19 கல்வியாண்டு முதல் ஒரே பொது நுழைவுத் தேர்வு கொண்டுவருவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியிருக்கிறோம். அதைப் பரிசீலனை செய்வதாகக் கூறியிருக்கின்றனர்.
எனவே, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் சேர்க்கை நடத்தப்படும். அவ்வாறு விலக்கு அளிக்கவில்லையெனில், பள்ளி மாணவர்களுக்குத் தேவையான பயிற்சி அளிப்பதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ளும்.

 

]]>
http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/apr/20/துணைவேந்தர்-பணியிடங்கள்-விரைவில்-நிரப்பப்படும்-2687353.html
2686741 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் வன சீருடைப் பணியாளர் தேர்வு: தாற்காலிக பட்டியல் வெளியீட்டு Wednesday, April 19, 2017 02:11 AM +0530 தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வில் தகுதிப் பெற்றவர்களின் தாற்காலிகப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் சார்பில், வனவர், கள உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வில் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தாற்காலிகப் பட்டியல் வனத் துறையின் இணையதளமான www.forests.tn.nic.in வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான குறிப்பாணை, விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தனித்தனியே பதிவு அஞ்சல் மூலமாக அனுப்பப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/apr/19/வன-சீருடைப்-பணியாளர்-தேர்வு-தாற்காலிக-பட்டியல்-வெளியீட்டு-2686741.html
2686706 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் பள்ளிக் கல்வித்துறையில் 6,390 இடங்கள் காலி: ஆண்டு திட்ட அறிக்கை வெளியிட்டது பள்ளிக் கல்வித்துறை Wednesday, April 19, 2017 01:27 AM +0530 பள்ளிக் கல்வித் துறையில் காலியாகவுள்ள 6,390 இடங்களை நிரப்புவதற்கான தேர்வு கால அட்டவணையை துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
வருங்காலத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை இணைய வழி மூலமே விண்ணப்பிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை கூறியது:
ஆசிரியர் பிரிவில்: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பிரிவில் 2,119 காலியிடங்கள் உள்ளன. இந்தக் காலியிடங்களை நிரப்ப மே 2-வது வாரத்தில் தேர்வு அறிவிக்கை வெளியிடப்படும். தேர்வு ஜூலை 2-ஆம் தேதியும், தேர்வு முடிவு ஆகஸ்ட்டிலும் வெளியிடப்படும்.
விரிவுரையாளர் பிரிவில்...பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் 1,137 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான தேர்வு அறிவிக்கை ஜூன் 2-வது வாரத்தில் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் 13-இல் தேர்வு நடத்தப்படும். தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியாகும்.
சிறப்பு ஆசிரியர்கள் பிரிவில்: சிறப்பு ஆசிரியர்கள் பணியிடங்களில் 1,188 காலியாக உள்ளன. இதற்கான அறிவிக்கை ஜூலை 3-வது வாரத்தில் வெளியிடப்பட்டு, தேர்வு ஆகஸ்ட் 19-இல் நடத்தப்படும். தேர்வு முடிவுகள் நவம்பரில் வெளியாகும்.
வேளாண் பிரிவில்: வேளாண் கல்வி கற்பிப்போர் பிரிவில் 25 இடங்கள் காலியாக உள்ளன.
அவற்றுக்கு ஜூலை 3-வது வாரத்தில் அறிவிக்கையும், ஆகஸ்ட் 20-இல் எழுத்துத் தேர்வும் நடத்தப்படும். தேர்வு முடிவுகள் நவம்பரில் வெளியாகும்.
உதவிப் பேராசிரியர் பிரிவில்: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பிரிவில் 1,883 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றுக்கு ஜூலை 4-வது வாரத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்டு செப்டம்பரில் தேர்வும், அக்டோபரில் தேர்வு முடிவுகளும் வெளியாகும்.
கல்வி அலுவலர் பிரிவில்: உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பிரிவில் காலியாகவுள்ள 38 இடங்களுக்குத் தேர்வு அறிவிக்கை ஆகஸ்ட் 2-வது வாரத்தில் வெளியிடப்பட்டு, எழுத்துத் தேர்வு செப்டம்பர் 30-லிலும், தேர்வு முடிவுகள் டிசம்பரிலும் வெளியாகும்.
இணையவழி விண்ணப்பம்: வருங்காலங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணைய வழி மூலமே விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட சில தேர்வுகளுக்கு மட்டும் கணினி வழித்தேர்வினை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் கே.ஏ.செங்கோட்டையன்.
பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் த.உதயச்சந்திரன், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் காகர்லா உஷா ஆகியோர் உடனிருந்தனர்.

 

]]>
பள்ளிக் கல்வித் துறை,செங்கோட்டையன், வேலைவாய்ப்பு,Employment News,Jobs http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/19/w600X390/senkotain.jpg ஆண்டு திட்ட அறிக்கையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட அதைப் பெறும் அரசுச் செயலர் உதயசந்திரன். உடன், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் காகர்லா உஷா. http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/apr/19/பள்ளிக்-கல்வித்துறையில்-6390-இடங்கள்-காலி-ஆண்டு-திட்ட-அறிக்கை-வெளியிட்டது-பள்ளிக்-கல்வித்துறை-2686706.html
2686120 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள்: 6 மாவட்டங்களில் இன்று கலந்தாய்வு; வேலூர், கிருஷ்ணகிரியில் நாளை நடைபெறும் Tuesday, April 18, 2017 02:23 AM +0530 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு இதுவரை 22 மாவட்டங்களில் கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ள நிலையில் திருவள்ளூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமையும் (ஏப்.18), வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புதன்கிழமையும் (ஏப்.19) கலந்தாய்வு நடைபெறும்.
4,362 காலியிடங்களை நிரப்ப... அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற்றது.
140 பேர் வரவில்லை: இதையடுத்து எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பில் பெற்ற மதிப்பெண் கூட்டுத்தொகை அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து 22 மாவட்டங்களில் கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு 2,558 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் 2,418 பேர் பங்கேற்றனர். வேறு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றது உள்ளிட்ட சில காரணங்களால் 140 பேர் வரவில்லை.
இதையடுத்து கடலூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவள்ளூர், விருதுநகர், தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு நடைபெறும்.
வேலூர், கிருஷ்ணகிரி...மாவட்டங்களில் தேர்வு பெற்றவர்களின் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும். அதையடுத்து இரு மாவட்டங்களைச் சேர்ந்த கலந்தாய்வு புதன்கிழமை (ஏப்.19) நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

]]>
http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/apr/18/ஆய்வக-உதவியாளர்-பணியிடங்கள்-6-மாவட்டங்களில்-இன்று-கலந்தாய்வு-வேலூர்-கிருஷ்ணகிரியில்-நாளை-நடைபெறும-2686120.html
2679984 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் குடிமைப் பணி: நிகழாண்டில் 980 அதிகாரிகளை தேர்வு செய்ய மத்திய அரசு திட்டம் Friday, April 7, 2017 03:19 AM +0530 நிகழாண்டில் குடிமைப் பணித் தேர்வுகள் மூலம் 980 ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளை நியமிக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய குடிமைப் பணிகளுக்கு (யுபிஎஸ்சி) மூன்று நிலைகளில் தேர்வு நடைபெறுகிறது. முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நிகழாண்டில் குடிமைப் பணியிடங்களுக்கு எத்தனை பேர் நியமிக்கப்பட உள்ளனர்? என்பது குறித்து மாநிலங்களவையில் வியாழக்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
கடந்த ஆண்டில் (2016) குடிமைப் பணிகளுக்கு மொத்தம் 1,209 காலியிடங்கள் இருந்தன. அவற்றுக்குத் தகுதியான நபர்களை நியமிப்பதற்காக யுபிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்பட்டன. அதற்கான இறுதி முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், நிகழாண்டில் தோராயமாக 980 அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்காக தேர்வுகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன. அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் தனது பதிலில் தெரிவித்தார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நீக்கம்: இதனிடையே, மற்றொரு கேள்வியொன்றுக்குப் பதிலளித்த ஜிதேந்தர சிங், சரிவர பணியாற்றாத 5 ஐஏஸ் அதிகாரிகளையும், 2 ஐபிஎஸ் அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்துள்ளதாகத் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
குடிமைப் பணி அதிகாரிகளின் செயல்பாடுகளை அவர்களது பதவிக் காலத்தில் இரு முறை மதிப்பீடு செய்வது வழக்கம். அதில் அதிகாரிகள் சரிவர பணியாற்றாதது தெரியவந்தால், அவர்களுக்கு முன்கூட்டியே ஓய்வளிக்கப்
படும். அந்த அடிப்படையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும், 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் முன்கூட்டியே ஓய்வளிக்கப்பட்டுள்ளது என்றார் ஜிதேந்திர சிங்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/31/w600X390/jidendar.jpg http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/apr/07/குடிமைப்-பணி-நிகழாண்டில்-980-அதிகாரிகளை-தேர்வு-செய்ய-மத்திய-அரசு-திட்டம்-2679984.html
2675743 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் ஏப்.6 இல் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி Friday, March 31, 2017 02:24 AM +0530 வேளாண் தகவல் மையத்தில் ஏப்ரல் 6 -ஆம் தேதி திடக்கழிவு மக்க வைக்கும் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்த விவரம்:
நகர்ப்புறங்களில் கிடைக்கப்பெறும் திடக்கழிவுகளை மக்கவைத்து மாடித்தோட்டம் வளர்ப்பு உள்ளிட்டவைக்கு பயன்படுத்தப்படுகிறது. மாடித்தோட்டம் அமைக்க விரும்புவோர் பயன்பெறும் வகையில், திடக்கழிவுகளை மக்கவைக்கும் நவீன தொழில்நுட்ப பயிற்சி வேளாண் தகவல் மையத்தில் அளிக்கப்படுகிறது.
நீர் தர மதிப்பீடு பயிற்சி: அதுபோல் வீடுகளில் குடிநீர், இதர பயன்பாடுகளுக்கு, நீரின் தரத்தை அறிந்து கொள்வது அவசியமாகிறது. இதன்மூலம், உடல்நலம், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு வழிவகுக்கப்படுகிறது.
திடக்கழிவு மக்கவைத்தல், நீரின் தரம் அறிதல் ஆகிய பயிற்சிகளை ஏப்ரல் 6 -ஆம் தேதி (வியாழக்கிழமை) அண்ணாநகரில் உள்ள தமிழ்நாடு வேளாண் தகவல் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதில் இளைஞர்கள், சுயதொழில் முனைவோர், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கலாம். ரூ.600 பயிற்சி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காலை 9.30 முதல் மாலை 4.30 வரை நடைபெறும்.
பயிற்சி நிறைவாக சான்றிதழ் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 044 2626 3484 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என வேளாண் தகவல் பயிற்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/mar/31/ஏப்6-இல்-திடக்கழிவு-மேலாண்மை-பயிற்சி-2675743.html
2675148 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் உடற்கல்வி, ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: கல்வித் துறை இயக்குநர் Thursday, March 30, 2017 02:15 AM +0530 தமிழகப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,500 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு கடந்த 2015-ஆம் ஆண்டில் நடைபெற்ற எழுத்துத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இப்பணியிடங்களை நிரப்புவதற்கான வழிமுறைகளை வகுத்து, கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், விழுப்புரம் கல்வி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆய்வக உதவியாளர் பணியிடங்களை, அந்தந்த மாவட்டங்களில் காலிப் பணியிடங்களுக்கு தகுந்த வகையில், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக, எழுத்துத் தேர்வில் தேர்வானவர்கள் குறித்த பட்டியல், ஏப்ரல் 1,2ஆம் தேதிகளில், அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஒட்டப்படும். உரியவர்களுக்கு அழைப்புக் கடிதமும் அனுப்பி வைக்கப்படும். காலியிடத்துக்கு தகுந்தாற் போல், 1:5 என்ற விகிதத்தில் அழைக்கப்படுவர். இதனையடுத்து, அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஏப்ரல் 9 முதல் 11-ஆம் தேதி வரை இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுடன் (150-க்கு), வேலைவாய்ப்புப் பதிவுக்கு 10 மதிப்பெண்களும் கூடுதல் கல்வித் தகுதியாக பிளஸ் 2-க்கு 2-ம், பட்டப்படிப்புக்கு 3 மதிப்பெண்களும் ஆய்வக உதவியாளர் அனுபவச் சான்று இருந்தால் 2 மதிப்பெண்களும் வழங்கப்படும். இதனையடுத்து, இனசுழற்சி இடஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்பட்டு, அடுத்த ஒரு வாரத்தில் பணி ஆணை வழங்கப்படும்.
இந்த நியமனம் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், வெளியிடப்பட்ட அரசாணைப்படி நேர்மையாக நடைபெறும். மேலும், 600 உடற்கல்வி ஆசிரியர்கள், 300 ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள் 100, தையல் ஆசிரியர்கள் 100 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன என்றார்.
சரியான வினாக்கள்தான்: பிளஸ் 2 கணிதத் தேர்வில், பாடத் திட்டத்தில் இல்லாத கடினமான வினாக்கள் கேட்கப்பட்டது குறித்த கேள்விக்கு, பாடத் திட்டத்திலிருந்து தான் சரியாகக் கேட்கப்பட்டுள்ளது என்றார் ச.கண்ணப்பன்.
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் தற்போது நடைமுறையில் இல்லாத திட்டக் குழு தொடர்பான வினா இடம் பெற்றது குறித்த கேள்விக்கு, திட்டக் குழுவின் தலைவர் யார் என்று, பொதுவானதாக சரியாகவே கேட்கப்பட்டுள்ளது. திட்டக் குழுவுக்கு பதிலாக நடைமுறையில் உள்ள நிதிஆயோக்கின் தலைவரும் பிரதமர் தான், அதனால், வினாவில் தவறில்லை என்றார்.

 

]]>
http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/mar/30/உடற்கல்வி-ஓவிய-ஆசிரியர்-பணியிடங்கள்-விரைவில்-நிரப்பப்படும்-கல்வித்-துறை-இயக்குநர்-2675148.html
2674571 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் கிராமப்புற செவிலியர் பணியிடம்: ஏப்.3 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு Wednesday, March 29, 2017 01:50 AM +0530 கிராமப்புற செவிலியர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டோருக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் ஏப்ரல் 3 -ஆம் தேதி தொடங்கவுள்ளது.
தமிழகத்தில் 2,804 தாற்காலிக கிராமப்புற சுகாதார செவிலியர்கள் பணியிடங்கள், மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்படவுள்ளன.
இதன்படி, மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,183 பேர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி ஏப்ரல் 3 -ஆம் தேதி முதல் 8 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் அமைந்துள்ள தமிழக மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெறவுள்ளன.
மேலும் விவரங்களை தேர்வாணையத்தின்  www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் பெறலாம்.

 

]]>
http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/mar/29/கிராமப்புற-செவிலியர்-பணியிடம்-ஏப்3-முதல்-சான்றிதழ்-சரிபார்ப்பு-2674571.html
2672196 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் ஆசிரியர் தகுதித் தேர்வு: 7.4 லட்சம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு Saturday, March 25, 2017 01:47 AM +0530 தமிழகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மொத்தம் 7 லட்சத்து 40 ஆயிரத்து 257 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு ஏப்ரல் 29 -ஆம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு ஏப்ரல் 30 -ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த மார்ச் 6 -ஆம் தேதி முதல் மார்ச் 22 -ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட்டன. ஆசிரியர் பயிற்சி, பி.எட்., பட்டதாரிகள் என மொத்தம் 8 லட்சத்து 47 ஆயிரத்து 241 விண்ணப்பங்கள் விற்பனையாகின.
ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் 2 லட்சத்து 77 ஆயிரத்து 329 பேர் விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றனர். அதில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 293 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. பி.எட்., பட்டதாரிகள் 5 லட்சத்து 69 ஆயிரத்து 912 பேர் விண்ணப்பத்தை பெற்றனர். அதில் 5 லட்சத்து 2,964 பேர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பித்துள்ளனர்.

 

]]>
http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/mar/25/ஆசிரியர்-தகுதித்-தேர்வு-74-லட்சம்-விண்ணப்பங்கள்-சமர்ப்பிப்பு-2672196.html
2672061 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் ஆய்வக உதவியாளர் பணியிடத்துக்கு ஏப். 9-இல் சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம் Saturday, March 25, 2017 12:30 AM +0530 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நிரப்பப்படவுள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி ஏப்ரல் 9 -ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) வெளியிடப்பட்டன.
அதன் அடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப, ஒரு பணியிடத்துக்கு 5 ஆய்வக உதவியாளர்கள் (1:5) வீதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியல் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் வெளியிடப்படும்.
இதைத்தொடர்ந்து, வரும் ஏப்ரல் 9, 10, 11 ஆகிய தேதிகளில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் அறிவிக்கப்படும் மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெறும். அப்போது, விண்ணப்பத்தில் தெரிவித்திருந்த விவரங்களுக்குரிய சான்றிதழ்களை விண்ணப்பதாரர்கள் முன்னிலைப்படுத்த வேண்டும்.
இந்தப் பணியிடம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பின் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள நெறிமுறைகளின்படி சான்றிதழ் சரிபார்ப்பின்போது தகுதிகாண் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
கூடுதல் கல்வித் தகுதி: இந்தப் பணியிடத்துக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாளான 6.5.2015 வரையில் தகுதியுள்ள வேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமை, உயர்கல்வி தகுதி, ஆய்வக உதவியாளர் பணியில் பணி அனுபவம் ஆகியவை மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்பின்போது சமர்ப்பிக்கப்படும் அசல் ஆவணங்களின் அடிப்படையிலேயே மதிப்பெண்கள் வழங்கப்படும். அதற்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/mar/25/ஆய்வக-உதவியாளர்-பணியிடத்துக்கு-ஏப்-9-இல்-சான்றிதழ்-சரிபார்ப்பு-தொடக்கம்-2672061.html
2671467 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு Friday, March 24, 2017 04:28 PM +0530 ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) வெளியிடப்பட உள்ளன.
தமிழக அளவில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 4,362 காலிப் பணியிடங்களை நிரப்பும் நோக்கத்தில், கடந்த 2015-ஆம் ஆண்டு மே 31-இல் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை மாநில அளவில் 8 லட்சம் பேர் எழுதினார்கள்.
இத்தேர்வில் வெற்றி பெறுவோருக்கு, ஒரு இடத்துக்கு 5 பேர் என்ற வீதத்தில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். அதில் அதிக மதிப்பெண்கள் பெறுவோருக்கு பணியிடம் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கணக்கிடாவிட்டால் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாகக் கூறி வழக்குத் தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து கடைநிலைப் பணிகளுக்கு, நேர்முகத் தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும், தேவை என்றால் எழுத்துத் தேர்வு மதிப்பெண், வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண் ஆகியவற்றை மொத்தமாகக் கணக்கிட்டு இறுதி முடிவு அறிவிக்க வேண்டும் என 2015-ஆம் ஆண்டு ஆக.7-இல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியிடாமல் இருந்த எழுத்துத் தேர்வு முடிவுகள் (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட உள்ளன. இதில் தேர்வு பெறுவோருக்கு வரும் 31-ஆம் தேதிக்குள் பணி நியமனம் வழங்கப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

]]>
தேர்வு முடிவுகள், ஆய்வக உதவியாளர், தமிழ்நாடு http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/mar/24/ஆய்வக-உதவியாளர்-பணிக்கான-தேர்வு-முடிவுகள்-இன்று-வெளியீடு-2671467.html
2667967 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் கலந்தாய்வில் வெளிப்படைத் தன்மை இல்லை: சுகாதார மைய மருத்துவர்கள் வாக்குவாதம் Saturday, March 18, 2017 02:15 AM +0530 இடமாறுதல் கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறி, ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கான கலந்தாய்வு சென்னை குடும்பநல பயிற்சி மையத்தில் 2 நாள்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறி கலந்தாய்வில் பங்கேற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக கலந்தாய்வில் பங்கேற்றோர் கூறியது:
இடமாறுதல் கலந்தாய்வில் எந்த மாவட்டத்தில், எத்தனை காலியிடங்கள் உள்ளன என்பது வெளிப்படையாக தெரிவிக்கப்படுவது இல்லை. மேலும் சென்னை உள்ளிட்ட நகரப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் உள்ள காலியிடங்கள் கலந்தாய்வு நடைபெறும் சமயத்தில் தகவல் பலகையில் காட்டப்படுவதே இல்லை.
குறிப்பிட்ட ஆரம்ப சுகாதார மையத்தில் காலியிடம் இருக்கிறது என்பது தெரிந்தாலும், அது கலந்தாய்வில் காட்டப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது என்றனர்.
இதனையடுத்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். சிறிது நேரம் ஒத்திவைப்புக்குப் பின்பு கலந்தாய்வு மீண்டும் நடைபெற்றது.

 

]]>
http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/mar/18/கலந்தாய்வில்-வெளிப்படைத்-தன்மை-இல்லை-சுகாதார-மைய-மருத்துவர்கள்-வாக்குவாதம்-2667967.html
2667310 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் திட்டம் Friday, March 17, 2017 02:45 AM +0530 தமிழகம் முழுவதும் 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிப்பதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கம் செயல்பட்டு வருகிறது. இதுவரையில் கடந்த 6 ஆண்டுகளாக 2.46 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 73,558 பேருக்கு வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், தகுதி சான்றிதழ் எதும் இல்லாத 1 லட்சம் திறன் பெற்ற தொழிலாளர்களை தேர்வு செய்து, திறன் சான்றிதழ் அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக நிகழாண்டில் 2017-18 இல் ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பன்னாட்டுத் திறன் பயிற்சி மையம்: இது தவிர கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் மத்திய அரசு நிதி உதவியுடன் இந்தியப் பன்னாட்டு திறன் பயிற்சி மையங்களை அமைக்கவும் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் வேலை தேடுவோருக்கு மேம்பட்ட பயிற்சியும், அயல் மொழிப் பயிற்சியும் இம்மையங்கள் மூலம் வழங்கப்படும். இதன் மூலம் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன உதவியுடன் வேலைவாய்ப்பும் உருவாக்கித் தர முடியும்.
வேலைவாய்ப்பு உதவித் தொகை: வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையானது இந்த ஆண்டில் இருந்து இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், இத்திட்டத்தில் பயனடையும் இளைஞர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி, தகுதிக்கு ஏற்ப திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு பெற்றுத் தரவும் ஏற்பாடு செய்யப்படும் என அந்த நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/mar/17/ஒரு-லட்சம்-பேருக்கு-வேலைவாய்ப்பு-பயிற்சி-அளிக்கும்-திட்டம்-2667310.html
2664357 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் வெளிப்படையாகவே நேர்காணல்: மின்சார வாரியம் Sunday, March 12, 2017 12:37 AM +0530
உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் வெளிப்படையாகவே நடைபெறும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவிப் பொறியாளர்கள் நியமனத்துக்கான நேர்காணல் மார்ச் 13 முதல் 18 வரை வண்டலூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறுகிறது. இந்த நேர்காணல் வெளிப்படையான முறையில் நடைபெற மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு நேர்காணல் நடைபெற உள்ளது. நேர்காணலை நடத்தும் குழுவில் உள்ளோர் ஒவ்வொரு நாளும் குலுக்கல் முறையில் மாற்றப்படுவர்.
மேலும், நேர்காணலில் பங்கேற்போரும் நேர்காணல் நடத்தும் குழுவினரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நேர்காணல் முற்றிலும் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறும். இடைத்தரகர்களை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/mar/12/வெளிப்படையாகவே-நேர்காணல்-மின்சார-வாரியம்-2664357.html
2661316 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டணங்கள் அதிகரிப்பு: ஆன்-லைன் முன்பதிவுக் கட்டணம் ரூ.30-லிருந்து ரூ.150 ஆக உயர்வு Tuesday, March 7, 2017 03:42 AM +0530 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டண விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையிலான ஒரு முறை ஆன்-லைன் முன்பதிவுக்கான கட்டணம் ரூ.30-லிருந்து 5 மடங்கு அதிகரித்து ரூ.150-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட உத்தரவு:
நேரடி எழுத்துத் தேர்வுகள்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), அரசுத் துறைகளுக்கு போட்டித் தேர்வுகளை நடத்துகிறது. அதன்படி, நேரடி நியமனம் மூலமாக நிரப்பப்படும் தமிழ்நாடு மாநிலப் பணிகளுக்கு நடைபெறும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் இப்போது ரூ.125-ஆக உள்ளது. இது, ரூ.200-ஆக உயர்த்தப்படுகிறது.
சார்புப் பணிகளுக்கு நடத்தப்படும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.150-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சார்புப் பணிகள், அமைச்சுப் பணிகள், நீதி அமைச்சுப் பணிகள், தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி ஆகியவற்றுக்கான எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.75-லிருந்து ரூ.100-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முதல்நிலைத் தேர்வு: அனைத்து வகையான பணிகளுக்கு நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வுக்கான கட்டணம் ரூ.75-லிருந்து ரூ.100-ஆகவும் ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையிலான ஒருமுறை ஆன்-லைன் பதிவுக்கான கட்டணம் ரூ.30-லிருந்து ரூ.150-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர் பட்டப் படிப்புப் படித்திருந்தால், அவர்களுக்கு மூன்று முறை கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
மார்ச் 1 முதல்....இந்தப் புதிய கட்டண மாற்றங்கள் அனைத்தும் மார்ச் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/7/w600X390/TNPSC-.jpg http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/mar/07/டிஎன்பிஎஸ்சி-தேர்வுக்-கட்டணங்கள்-அதிகரிப்பு-ஆன்-லைன்-முன்பதிவுக்-கட்டணம்-ரூ30-லிருந்து-ரூ150-2661316.html
2659689 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் மின்வாரிய உதவிப் பொறியாளர் பணியிடங்கள்: மார்ச்13 -இல் நேர்காணல் தொடக்கம் Saturday, March 4, 2017 02:31 AM +0530 மின்சார வாரியத்தில் 375 உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு மார்ச் 13 -ஆம் தேதி முதல் நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
300 மின்னியல் உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனத்துக்கான நேர்முகத்தேர்வு மார்ச் 13 -ஆம் தேதி முதல் 16 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
மேலும், 50 கட்டடவியல் உதவிப் பொறியாளர் மற்றும் 25 இயந்திரவியல் உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு மார்ச் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள விஜய் பார்க் ஹோட்டலில் நேர்முகத் தேர்வுகள் நடைபெற உள்ளன.
இந்தத் தேர்வுக்கு தகுதி பெற்றவர்கள் www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் இருந்து அழைப்புக் கடிதம் மற்றும் விவரப் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/mar/04/மின்வாரிய-உதவிப்-பொறியாளர்-பணியிடங்கள்-மார்ச்13--இல்-நேர்காணல்-தொடக்கம்-2659689.html
2657135 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் புள்ளி விவரத் தொகுப்பாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு Tuesday, February 28, 2017 10:28 AM +0530 சென்னை மாவட்ட புள்ளியியல் அலுவலகங்களில் புள்ளி விவரத் தொகுப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ப.மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
சென்னை மாவட்ட புள்ளியியல் துணை இயக்குநர் அலுவலகங்களில் தாற்காலிகமாக 9 புள்ளி விவரத் தொகுப்பாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித் தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, கணினியில் டிப்ளமோ சான்றிதழ் தேர்ச்சி (எம்.எஸ்.ஆபிஸ்), வயது வரம்பு 1.7.2015 அன்றைய நிலவரப்படி எஸ்.சி., எஸ்.டி., மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் 35 வயதுக்கு மிகாமலும், இதர பிரிவினர் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மாத தொகுப்பூதியம் ரூ.15,000 ஆகும்.
தகுதியான நபர்கள் மார்ச் 10 -ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ’’புள்ளியியல் துணை இயக்குநர், சென்னை மாவட்ட புள்ளியியல் அலுவலகம், டி.எம்.எஸ். வளாகம், எண் 359, இணைப்புக் கட்டட தரைதளம், தேனாம்பேட்டை, சென்னை -6 என்ற முகவரிக்கு, ஏ4 அளவிலான தாளில் அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி சுயவிவர குறிப்புடன் தங்களது விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/feb/28/புள்ளி-விவரத்-தொகுப்பாளர்-பணி-விண்ணப்பங்கள்-வரவேற்பு-2657135.html
2650844 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் அரசு தேர்வு பணித் தேர்வுக்கு பிப். 19, 20-இல் இலவச கருத்தரங்கம் Friday, February 17, 2017 03:17 AM +0530 அரசு தேர்வுகளுக்கு விண்ணப்பித்த இளைஞர்கள் பயனடையும் வகையில், சென்னையில் இலவச கருத்தரங்கம் பிப்ரவரி 19, 20-ஆம் தேதிகளில் நடை
பெறுகிறது.
இதுகுறித்து சென்னை சைதாப்பேட்டையில் செயல்பட்டு வரும் "தி வெங்கடேஸ்வரா ஸ்கூல் ஆஃப் காம்பிடிடிவ் எக்ஸாம்ஸ்' நிறுவனம் சார்பில் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2, 2ஏ, எஸ்.எஸ்.சி-எம்.டி.எஸ், ஆசிரியர் தகுதித் தேர்வு, மத்திய பணியாளர் தேர்வு வாரியம், காப்பீடு துறை ஆகியன அறிவித்துள்ள காலிப்பணியிடங்களுக்கான தேர்வுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்தத் தேர்வில் வெற்றி பெறுவதை எளிமையாக்கும் நோக்கத்தில் வரும் 19,20 ஆகிய நாள்களில் இலவச கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளது.
அதனால், இதில் பங்கேற்க விரும்புவோர் 9790834213, 9940363727 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் பெயரைப் பதிவு செய்து பயனடையலாம்.

 

]]>
http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/feb/17/அரசு-தேர்வு-பணித்-தேர்வுக்கு-பிப்-19-20-இல்-இலவச-கருத்தரங்கம்-2650844.html
2650205 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் குரூப் -4 காலிப் பணியிடங்களுக்கு கலந்தாய்வு Thursday, February 16, 2017 03:26 AM +0530 குரூப் -4 தொகுதியில் அடங்கியுள்ள இளநிலை உதவியாளர் உள்ளிட்ட காலியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் வரும் 22 -ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
குரூப் 4 தொகுதியில் அடங்கியுள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணிகளுக்கு நடைபெற்ற எழுத்துத் தேர்வின் முடிவுகள் கடந்த 2015 மே மாதம் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, கலந்தாய்வுகள் நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
மேலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு வரும் 22 -ஆம் தேதி முதல் 24 -ஆம் தேதி வரை, டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய தாற்காலிகப் பட்டியல் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு அதற்கான தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மற்றும் மின்னஞ்சல் மூலமும், கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் விரைவஞ்சல் மூலமும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/feb/16/குரூப்--4-காலிப்-பணியிடங்களுக்கு-கலந்தாய்வு-2650205.html
2650212 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர்களுக்கு பிப்.25-இல் நேர்காணல் Thursday, February 16, 2017 02:27 AM +0530 அஞ்சலக ஆயுள் காப்பீடு நேரடி முகவர்கள் பணிக்கு பிப்ரவரி 25 ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விவரம்: அஞ்சலக ஆயுள் காப்பீடு நேரடி விற்பனை முகவர்களை நியமிக்க அஞ்சல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதில், காப்பீடு முகவர்களாக பணிபுரிய விரும்புவோர், 5 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை உள்ள பகுதியில் வசிப்போர் எனில் 10-ஆம் வகுப்பும், அதற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட பகுதியில் வசிப்போர் எனில் 12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வேலையில்லாதவர்கள், சுய தொழில் புரியும் இளைஞர்கள் உள்ளிட்டோர் ஏதேனும் காப்பீடு நிறுவனத்தில் காப்பீடு ஆலோசகராக பணிபுரிந்தவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
அதுபோல், அங்கன்வாடி, மஹிளா மண்டல பணியாளர்கள், சுய உதவிக் குழுக்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். இதற்கு வயது வரம்பு 18 வயதிலிருந்து 60 வயது வரையாகும்.
அதோடு, காப்பீடு விற்பனையில் முன்அனுபவம் உள்ளவர்கள், கணினி பயிற்சி பெற்றவர்கள், வசிக்கும் பகுதி குறித்து நன்கு அறிந்தவர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த நேர்காணலுக்கு, எண்.2, சிவஞானம் சாலை, தியாகராய நகர் (பாண்டி பஜார் அருகில்) என்ற முகவரியில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில், பிப்ரவரி 25-ஆம் தேதி காலை 11 மணிக்கு வரவேண்டும்.
இதில், கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் சுய விவரம், வயது, கல்வித்தகுதி, அனுபவ சான்றிதழ்களுடன் நேரில் பங்கேற்கலாம் என அஞ்சல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

]]>
http://www.dinamani.com/employment/goverment-jobs/2017/feb/16/அஞ்சலக-ஆயுள்-காப்பீடு-முகவர்களுக்கு-பிப்25-இல்-நேர்காணல்-2650212.html
3229 வேலைவாய்ப்பு அரசுப் பணிகள் குரூப் 4 தேர்வுகள்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு Venkatesan.R Thursday, August 11, 2016 12:06 PM +0530 தமிழக அரசின் காலிப் பணியிடங்களுக்கான, குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நிலஅளவர், வரைவாளர் உள்ளிட்ட 5,451 காலிப் பணியிடங்களுக்கான பணியாளர்களை நியமனம் செய்யும் பொருட்டு, நடத்தப்படும் குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இளநிலை உதவியாளர் ( பிணையமற்றது) - 2345

**இளநிலை உதவியாளர் ( பிணையமுள்ளது ) - 121

**வரி தண்டலர் - 8

**நில அளவர் - 532

**வரைவாளர் - 327

**தட்டச்சர் - 1714

**சுருக்கெழுத்து தட்டச்சர் - 404 ஆகிய பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற செப்டம்பர் மாதம் 8-ம் தேதியாகும். தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி வருகிற செப்டம்பர் மாதம் 11-ம் தேதியாகும். தேர்வு நாள் வருகிற நவம்பர் மாதம் 6-ம் தேதியாகும்.

விருப்பமுள்ளவர்கள் www.tnpscexams.net/www.tnpscexams.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதுகுறித்து கூடுதல் விவரங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/10/w600X390/tnpsc.jpg http://www.dinamani.com/employment/goverment-jobs/2016/aug/10/குரூப்-4-தேர்வுகள்-தமிழ்நாடு-அரசு-பணியாளர்-தேர்வாணையம்-அறிவிப்பு-3229.html