Dinamani - இந்த நாளில்... - http://www.dinamani.com/specials/indha-naalil/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2719209 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 13.06.1997: தில்லி உப்ஹார் திரையரங்க தீ விபத்து நிகழ்ந்த தினம் இன்று! DIN DIN Monday, June 12, 2017 06:41 PM +0530  

தெற்கு டெல்லியில் இருந்த உப்ஹார் திரையரங்கில் கடந்த 1997 ஜூன் 13-ல் நேரிட்ட தீ விபத்தில் 59 பேர் பலியாகினர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 2015-ல் அளித்த தீர்ப்பில், உப்ஹார் திரையரங்க உரிமையாளர்கள் சுஷில் அன்சால், கோபால் அன்சால் ஆகியோருக்கு தலா ரூ.30 கோடி அபராதம் விதித்தது.

அபராதத்தை செலுத்த தவறி னால் 2 ஆண்டுகள் சிறை தண்ட னையை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இருவரும் அபராதத் தொகையை செலுத்தி சிறை தண்டனையிலிருந்து தப்பினர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து தீ விபத்தில் உயிரிழந்தோரின் உறவினர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதனை நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், குரியன் ஜோசப், ஆதர்ஷ் குமார் கோயல் விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினர்.

அதில் கோபால் அன்சாலுக்கு (66) ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. வயது முதுமை காரணமாக சுஷில் அன்சால் (77) விடுவிக்கப்பட்டார்.

]]>
dinamani, on this day, memeories, delhi, uphaar, thetare, fire, tragedy http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/12/w600X390/uphaar-fire.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/jun/12/13061997-தில்லி-உப்ஹார்-திரையரங்க-தீ-விபத்து-நிகழ்ந்த-தினம்-இன்று-2719209.html
2718553 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 12.06.1924: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் பிறந்த தினம் இன்று! DIN DIN Monday, June 12, 2017 12:00 AM +0530  

ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் ஜூன் 12, 1924 அன்று அமெரிக்காவில் பிறந்தார். இவர் அமெரிக்காவின் 41வது அதிபராவார். இவர் 1988 முதல் 1992 வரை பதவியில் இருந்தார். இவரது பதவிக்காலத்தில்தான் அமெரிக்கா ஈராக்குடன் யுத்தத்தில் ஈடுபட்டது.

புதிய ரக ஏவுகணைகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட இந்த யுத்தம் அவருக்கு மிகவும் கெட்ட பெயரை உண்டாக்கியது. 

இவருக்கு பின்னர் 1998-இல் இவரின் மகனான ஜார்ஜ் வாக்கர் புஷ் பின்னர் அமெரிக்காவின் 43வது அதிபர் ஆனார்.

]]>
dinamani, on this day, memeories, USA, george bush-senior, birthday http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/11/w600X390/george_bush-sr.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/jun/12/12061924-அமெரிக்க-முன்னாள்-அதிபர்-ஜார்ஜ்-புஷ்-பிறந்த-தினம்-இன்று-2718553.html
2718540 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 11.06.1947: புகழ்பெற்ற இந்திய அரசியல்வாதி லாலு பிரசாத் யாதவ் பிறந்த தினம் இன்று! DIN DIN Sunday, June 11, 2017 12:19 PM +0530  

லாலு பிரசாத் யாதவ் இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஒரு அரசியல்வாதி ஆவார். இராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர். மத்திய ரயில்வே துறை அமைச்சராகவும் பணியாற்றினார். . 14ஆம் மக்களவையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 15ஆம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட இவர் சரன் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

ஊழல் வழக்கின் காரணமாக லாலு பிரசாத் யாதவ் வழக்கின் மூலம் தன் முதல்வர் பதவியை இழக்க நேரிட்ட போது அவரின் மனைவியை முதல்வர் நாற்காலியில் அமரவைத்து ஆட்சி செய்தார்.

கடந்த தேர்தலில் லாலுவின் அரசியல் வாழ்கையை முடிவுக்கு கொண்டுவர நினைத்த அரசியல் கட்சிகளுக்கு ஏமாற்றமே அமைந்தது. அதற்கு முக்கிய காரணம் தனக்கு பரம எதிரியாக காணப்பட்ட நிதிஷ்குமாருடன் இவர் கூட்டணி வைத்தது தான். அதில் சிறப்பு என்னவென்றால் நிதிஷ் கட்சியை விட அதிக தொகுதிகளை வென்ற லாலு கட்சி முதல்வர் பொறுப்பை விட்டுகொடுத்து தான். தற்போதையாய் பீகார் அரசில் லாலுவின் மகன் துணை முதல்வர் ஆகா உள்ளார்.

லாலுவை பீகாரின் செல்ல பிள்ளை என்றே சொல்லலாம். இவர் மீது எதிர்கட்சிகள் பல்வேறு குற்றங்களை சுமத்தினாலும் பீகார் மக்கள் இவரை ஹீரோவாக தான் பார்க்கிறார்கள்.

]]>
dinamai, on this day, memeories, bihar, lalu oprasad yadav, birthday http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/11/w600X390/lalu.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/jun/11/11061947-புகழ்பெற்ற-இந்திய-அரசியல்வாதி-லாலு-பிரசாத்-யாதவ்-பிறந்த-தினம்-இன்று-2718540.html
2717431 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 10.06.1960: பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா பிறந்த தினம் இன்று! DIN DIN Saturday, June 10, 2017 12:00 AM +0530  

நந்தமூரி பாலகிருஷ்ணா என்னும் பாலகிருஷ்ணா புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட நடிகராவர். இவர் ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த என். டி. ராமராவ் அவர்களின் ஆறாவது மகனாவார். இவர் குழந்தை நட்சத்திரமாக 'தாத்தம்மா கலா' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர் என். டி. ராமராவ் - பசவ தரகம் தம்பதியினருக்கு மகனாக சென்னையில் பிறந்தார். அப்போது தெலுங்கு திரையுலகமும் பெரும்பாலும் சென்னையிலேயே இயங்கிவந்தது. அதனால் பாலகிருஷ்ணாவின் குழந்தைப்பருவம் சென்னையிலேயே கழிந்தது.

அதன் பின் ஆந்திரா,தமிழ்நாடு,கேரளா பிரிவினையின் போது பாலகிருஷ்ணாவின் குடும்பம் ஆந்திராவுக்கு குடிபெயர்ந்தது. இளங்கலை வணிகவியல் படிப்பை ஐதராபாத்தில் உள்ள நிசாம் கல்லூரியில் பாலகிருஷ்ணா முடித்தார். 1982ல் வசுந்திரா தேவியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

]]>
dinamani, on this day, memeories, telugu actor, NTR, balakrishna, birthday http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/9/w600X390/balakrishna.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/jun/10/10061960-பிரபல-தெலுங்கு-நடிகர்-பாலகிருஷ்ணா-பிறந்த-தினம்-இன்று-2717431.html
2716783 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 09.06.1949: இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியான கிரண் பேடி பிறந்த தினம் இன்று! DIN DIN Friday, June 9, 2017 07:23 AM +0530  

கிரண் பேடி ஓய்வு பெற்ற காவலரும், ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் சமூக சேவகரும் ஆவார். இவர் இந்தியக் காவல் பணியில் 1972ஆம் ஆண்டு சேர்ந்த முதல் பெண் அதிகாரியாவார். இவர் தில்லி, கோவா  மற்றும் மிசோரம் ஆகிய இடங்களில் பணியாற்றி உள்ளார்.

1971ஆம் ஆண்டில் ஆசிய பெண்கள் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றவர் இவர். 1993இல் இவர் தில்லி சிறைச்சாலைகளுக்கு பொது ஆய்வாளராக இருந்தபோது, திகார் சிறைகளில் இவராற்றிய சீர்திருத்தங்கள் பலரின் பாராட்டைப் பெற்றது. 1994ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் அரசு வழங்கும் ரமோன் மக்சேசே விருது பெற்றவர்.

2007ஆம் ஆண்டு இவர் விருப்பப்பணி ஓய்வு பெற்றார். பின்னர் இவர் பாரதிய ஜனதா கட்சியில் ஜனவரி 2015இல் இணைந்தார்.2016 ஆம் ஆண்டு மே 29 இல் புதுச்சேரி மாநில லெப்டினென்ட் ஆளுநராகப் பொறுப்பேற்ற இவர், அதற்பொழுது அப்பதவியில் இருக்கிறார்.

]]>
dinamani , on this day , birthday, memeories, kiran bedi, first IPS http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/8/w600X390/kiran_bedi.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/jun/09/09061949-இந்தியாவின்-முதல்-பெண்-ஐஏஎஸ்-அதிகாரியான-கிரண்-பேடி-பிறந்த-தினம்-இன்று-2716783.html
2716179 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... ஜூன் 8 - உலக கடல் தினம் இன்று! DIN DIN Thursday, June 8, 2017 12:00 AM +0530  

ஆண்டு தோறும் ஜூன் 8-ஆம் தேதியானது உலக கடல் தினமாக கொண்டாடப்படுகிறது

பூமியில் நாம் வாழ்வதற்கு கடல் பெரும்பங்கு வகிக்கிறது, மேலும் கண்டங்களை ஒன்றிணைத்து வாணிபம் செய்யவும், பலநாடுகளின் போக்குவரத்து தேவைகளும் கடல் மார்க்கமாகவே நடைபெறுகிறது. கடல் ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்வதோடு, ஆக்சிஜன் எனும் உயிர் வாயுவை உற்பத்தி செய்தும், முக்கியமான மருந்துகளின் மூலப்பொருட்களையும் வழங்குகிறது. மேலும், காலநிலை மாற்றங்களைச் சீரமைக்க பேருதவியாக உள்ள இப்பெருங்கடல்கள், சில சமூகத்தினரின் வாழ்வாதாரங்களாக அமைந்துள்ளது.

உலகப் பெருங்கடல்கள் நாள் என்பது உலக நாடுகளால் ஆண்டுதோறும் ஜூன் 8 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வை செய்வது குறித்து 1992 ஆம் ஆண்டில் பிரேசிலின், ரியோ டி செனீரோ நகரில் இடம்பெற்ற பூமி உச்சி மாநாட்டில், முதன் முறையாக கனடா கோரிக்கையை முன்வைத்தது. அடுத்து, இது அதிகாரபூர்வமற்ற வகையில் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வந்தது. பின்னர் ஐக்கிய நாடுகள் அவை 2008 ஆம் ஆண்டில் இந்நிகழ்வை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து அறிக்கை வெளியிட்டது.

அன்று முதல் உலகளாவிய அளவில் பெருங்கடல் திட்டம் என்ற அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்டு கடல் தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது.

]]>
dinamani, on this day, memeories, world ocean day, UN, celebration http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/7/w600X390/ocean_day.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/jun/08/ஜூன்-8---உலக-கடல்-தினம்-2716179.html
2716124 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 07.06.1974: இந்திய டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி பிறந்த தினம் இன்று! DIN DIN Wednesday, June 7, 2017 12:17 PM +0530  

மகேஷ் சீனிவாஸ் பூபதி இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழில்முறை டென்னிஸ் ஆட்டக்காரராவார். இவர் சென்னையில் பிறந்தவர். 1995ம் ஆண்டிலிருந்து தொழில்முறையில் ஆடி வருகிறார். தற்போது இவர் பெங்களூரில் வசித்து வருகிறார். உலகின் சிறந்த இரட்டையர் டென்னிஸ் வீரர்களில் இவரும் ஒருவராவார்.

2009-ம் ஆண்டுக்கான கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சாவுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார். 2012ம் ஆண்டுக்கான கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சாவுடன் இணைந்து பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார்

]]>
dinamani, on this day, memories, india, tennis star, mahesh bhupathi, birthday http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/7/w600X390/mahesh-bhupathi.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/jun/07/07061974-இந்திய-டென்னிஸ்-வீரர்-மகேஷ்-பூபதி-பிறந்த-தினம்-இன்று-2716124.html
2714836 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 06.06.2004: இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தினம் இன்று! DIN DIN Tuesday, June 6, 2017 12:00 AM +0530  

உலகெங்கும் கிட்டத்தட்ட 7,000 மொழிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன. உலக மொழிகளை ஆய்வுசெய்தபோது ஆப்பிரிக்கக் கண்டத்திலும் இந்தியாவிலும்தான் அதிக மொழிகள் பேசப்படுகின்றன எனத் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் சுமார் 1,600 மொழிகள் பேசப்படு கின்றன. அவற்றில் 22 மொழிகளை இந்தியாவின் ஆட்சி மொழிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அவற்றில் சம்ஸ்கிருதமும் தமிழும் அடங்கும்.

தமிழகத்தில் பேராசிரியர் பரிதிமாற் கலைஞர் தான் முதன்முறையாக தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என 1902-ல் கோரிக்கை விடுத்தார். அதன் பிறகு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புகளும் அறிஞர்களும் இது தொடர்பாகப் பல முயற்சிகளை எடுத்தனர்.

அதன் விளைவாக, இந்திய அரசால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்ட நாள் இன்று. செம்மொழி என இந்திய அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் இந்திய மொழி தமிழ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 - ம் ஆண்டில் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

]]>
dinamani, on this day, memeories, tamil, classical language http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/5/w600X390/semmozhi.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/jun/06/06062004-இந்தியாவில்-தமிழ்-செம்மொழியாக-அறிவிக்கப்பட்ட-தினம்-இன்று-2714836.html
2714235 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... ஜூன் 5 - உலக சுற்றுச் சூழல் தினம் இன்று! DIN DIN Monday, June 5, 2017 12:00 AM +0530  

ஐக்கிய நாடுகள் சபையால் உலக சுற்றுச்சூழல் தினமானது ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்த பூமியையும் அதன் இயற்கையையும் காப்பாற்றத் தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினம் கொண்டாடப்படுவதின் அடிப்படை நோக்கமாகும்.

இந்த கொண்டாட்டமானது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் சபையின் சார்பில் இந்த சிறப்பு தின கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) என்னும் அமைப்பு பொறுப்பெடுத்து செயற்படுகின்றது.

உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வோர் ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது.

]]>
dinamani, on this day, memories, world environment day, UN, celebration http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/4/w600X390/world_environment_day.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/jun/05/ஜூன்-5---உலக-சுற்றுச்-சூழல்-தினம்-இன்று-2714235.html
2714220 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 04.06.1946; பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பிறந்த தினம் இன்று!  DIN DIN Sunday, June 4, 2017 12:21 PM +0530  

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் எனப்படும் எஸ்.பி.பாலசுப்ரமணியம்  ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர். புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இசைப் பாடகர் ஆவார். எஸ். பி. பி (S.P.B) என்ற முன்னெழுத்துகளால் பரவலாக அறியப்படுகிறார்.

1966இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்படங்களில் பாடத் தொடங்கினார். 1966 முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். திரைப்பட பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர்.

இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் வழங்கியது. இவருக்கு 2016 ஆம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டது.

]]>
dinamani, on this day, memories, SPB, birthday http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/4/w600X390/spb.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/jun/04/04061946-பிரபல-பின்னணி-பாடகர்-எஸ்பிபாலசுப்ரமணியம்-பிறந்த-தினம்-இன்று-2714220.html
2713118 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 03.06.1924:  தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினம் இன்று DIN DIN Sunday, June 4, 2017 12:00 AM +0530  

தட்சிணாமூர்த்தி என்னும் இயற்பெயர் கொண்ட மு. கருணாநிதி ஜூன் 3, 1924 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் முத்துவேலருக்கும், அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்.

கருணாநிதி, தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நீதிக்கட்சியின் தூணாக கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14ஆவது அகவையில் இருந்தே  சமூக இயக்கங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

பெரியார், அண்ணா ஆகியோருடன் கொண்ட நட்பால் முக்கிய அரசியல் தலைவராக உருமாறினார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு தற்பொழுது வரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக உள்ளார்

கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார்

]]>
dinamani, on this day, memeories, tamilnadu, karunanidhi, birthday, DMK http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/2/w600X390/karunanidhi1.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/jun/04/03061924--தமிழக-முன்னாள்-முதல்வர்-கருணாநிதி-பிறந்த-தினம்-இன்று-2713118.html
2712439 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 02.06.1943: பிரபல இசையமைப்பாளர் இளையராஜா பிறந்த தினம் இன்று!  DIN DIN Friday, June 2, 2017 12:00 AM +0530  

இளையராஜா இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது.

தமிழக நாட்டுப்புற இசை, கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான தனது தனித்துவமான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர்.

]]>
dinamani, on this day, memeories, tamil cinema, ilaiyaraja, music director, birthday http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/1/w600X390/ilayaraja.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/jun/02/02061943-பிரபல-இசையமைப்பாளர்-இளையராஜா-பிறந்த-தினம்-இன்று-2712439.html
2712394 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 01.06.1926:  உலகப் புகழ் பெற்ற நடிகை மர்லின் மன்றோ பிறந்த தினம் இன்று! DIN DIN Thursday, June 1, 2017 11:26 AM +0530  

மர்லின் மன்றோ  அமெரிக்க நடிகையும் பாடகியும் திரைப்பட இயக்குநரும் ஆவார். 1960 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருது இவருக்குக் கிடைத்தது. அத்துடன் 1999 ஆம் ஆண்டில் அமெரிக்க திரைப்படக் கழகத்தினால் (AFI) அனைத்துக் காலப் பகுதிக்குமான சிறந்த நடிகை (greatest female star of all time) விருது வழங்கிச் சிறப்பித்தது. உலகில் ஏற்பட்ட கலாசாரா மற்றம் அல்லது புதிய கலாச்சாரத்திற்குக் காரணமான நடிகையாகவும் இவர் காணப்படுகின்றார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்த இவர், அனாதை இல்லத்தில் தனது ஆரம்ப வாழ்க்கையைக் கழித்த இவர், 16 வயதில் மனம் முடித்தார். 1944 இல் ஒரு மாடல் அழகியாக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். 1947 ஆம் ஆண்டில் இவர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் சிறிய பாத்திரங்களில் தோன்றினார். 1950 இல் The Asphalt Jungle மற்றும் All About Eve என்ற படங்கள் இவருக்குப் புகழ் தேடிக் கொடுத்தன. நகைச்சுவைப் பாத்திரங்களில் இவரது நடிப்பு பெரிதும் வரவேற்கப்பட்டது.

உடல் நலக் குறைபாடு காரணமாக ஆகஸ்ட் 5, 1962 அன்று மரணமடைந்தார்.

]]>
dinamani , on this day, memories, hollywood, marlin mandro, birthday http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/1/w600X390/marlin_mandro.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/jun/01/01061926--உலகப்-புகழ்-பெற்ற-நடிகை-மர்லின்-மன்றோ-பிறந்த-தினம்-இன்று-2712394.html
2711319 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 31.05.1981: யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட தினம் இன்று!  DIN DIN Tuesday, May 30, 2017 05:51 PM +0530  

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி நள்ளிரவு சிங்கள வன்முறைக் குழுவொன்றால் நடத்தப்பட்டது.

இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது.

இந்த நூலக எரிப்பு வன்கும்பலில் அப்போதைய இலங்கை அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர். நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி, அவர்களது தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது.    

]]>
dinamani, on this day, memeories, sri lanka, jaffna, central library, fire, lost http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/30/w600X390/Jaffna_Library.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/may/30/31051981-யாழ்ப்பாணம்-பொது-நூலகம்-எரிக்கப்பட்ட-தினம்-இன்று-2711319.html
2710827 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 30.05.1987: கோவா இந்தியாவின் 25-ஆவது மாநிலமாக மாறிய தினம் இன்று!  DIN DIN Tuesday, May 30, 2017 12:00 AM +0530  

கோவா பரப்பளவில் இந்தியாவின் மிகச்சிறிய மாநிலம் மற்றும் இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மக்கள் தொகை பட்டியலில் நான்காவது மிகக்குறைந்த மக்கள்தொகை உடைய மாநிலம் ஆகும்.

இந்தியாவில் உள்ள மேற்கு கடற்கரை பகுதியான கொங்கனில் அமைந்துள்ளது. இது வடக்கு திசையில் மகாராஷ்டிரா மாநிலத்தையும், கிழக்கில் கர்நாடகா மாநிலத்தையும் மற்றும் தெற்கு திசையில் அரபிக்கடலையும் எல்லைகளாகக் கொண்டு மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது.

பனாஜி இம்மாநிலத் தலைநகரம் ஆகும். வாஸ்கோடகாமா இங்குள்ள மிகப்பெரிய நகரமாகும். இதன் வரலாற்றுப் புகழ் வாய்ந்த நகரமாகத் திகழ்கின்ற மார்கோ 16 ஆம் நூற்றாண்டில் வியாபாரிகளாக குடிபுகுந்து விரைவில் நாட்டையே வெற்றி பெற்ற போர்ச்சுகீசியர்களின் கலாச்சாரம், செல்வாக்கு பெற்றிருந்ததை தற்பொழுதும் வெளிப்படுத்துவதாக உள்ளது.

இது போர்ச்சுகீசியர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக 450 ஆண்டுகளாக நீடித்தது.1947 இல் இந்தியா பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, போர்த்துக்கல் இந்தியாவில் உள்ள தங்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதியின் ஆட்சியுரிமையை திரும்பபெறுவதற்கான இந்தியாவுடனான உடன்படிக்கையை மறுத்தது. இந்திய இராணுவம் 1961 டிசம்பர் 12 இல் மேற்கொண்ட ஆப்ரேஷன் விஜய் என்னும் போர் நடவடிக்கை மூலம் கோவா, டாமன் மற்றும் டையூ ஆகிய இடங்களை கைப்பற்றி இந்தியாவுடன் ஒருங்கிணைத்தது. கோவா உள்ளிட்ட டாமன் மற்றும் டையூ ஆகியவை மத்திய அரசின் ஆட்சிக்குட்பட்ட இந்திய யூனியன் பிரதேசங்களாகும்

இங்குள்ள புகழ்வாய்ந்த கடற்கரைகள், இறைவழிபாட்டுத் தலங்கள் மற்றும் உலகப் புகழ் வாய்ந்த கட்டடக்கலைகள் ஆகியவை கோவாவிற்கு ஒவ்வொரு வருடமும் அயல்நாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளைக் கவருவதாக உள்ளது. இது தாவரம் மற்றும் விலங்கு சார்ந்த வனவளங்களைக் கொண்டு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியைச் சார்ந்துள்ளது. இது பல்லுயிரியம் சார்ந்த முக்கியத்தலமாக வகைபடுத்தப்பட்டுள்ளது.

1987 ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டு கோவா இந்தியாவின் 25 வது மாநிலமாக மாற்றப்பட்டது. டாமன் மற்றும் டையூ ஆகியவை தற்பொழுது வரை யூனியன் பிரதேசங்களாகவே தொடர்கின்றன

]]>
dinamani, on this day, memories, india, goa, state, portugheese, operation vijay, union territory http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/29/w600X390/goa.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/may/30/30051987-கோவா-இந்தியாவின்-25-ஆவது-மாநிலமாக-மாறிய-தினம்-இன்று-2710827.html
2710315 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 29.05.1953: எவரெஸ்ட் சிகரத்தை முதல் முறையாக மனிதன் எட்டிய தினம் இன்று!  DIN DIN Monday, May 29, 2017 12:00 AM +0530  

உலகின் மிக உயரமான சிகரம் இமயமலைத் தொடரிலமைந்துள்ள எவரெஸ்ட் ஆகும். 

நியூசிலாந்தைச் சேர்ந்த மலையேறும் ஆர்வம் கொண்ட சர். எட்மண்ட் ஹிலாரி அவர்களும் ஷெர்பா டென்சிங் நோர்கே ஆகிய இருவரும் இந்த உலகின் மிகவும் உயரமான மலைச் சிகரத்தை 1953ஆம் ஆண்டும் மே மாதம் 29ஆம் தேதி அடைந்தார்கள்.

நியுசிலாந்தில் தேனி வளர்க்கும் தொழிலைச் செய்து வந்த சர் எட்மண்ட் ஹிலாரியும், அவரின் நேபாள ஷெர்பா டென்சிங் நோர்கேயும் அறுபத்து நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 8848 மீட்டர் அதாவது 29 ஆயிரம் அடி இருக்கும் இச்சிகரத்தின் மீது ஏறியது மிகப் பெறும் சாதனையாக பார்க்கப்பட்டது.  

பிரிட்டிஷ் அரசியாக இரண்டாம் எலிசபத் முடிசூட்டப்பட்ட நாளில் இவர்கள் உலகின் உச்சத்தை அடைந்த செய்தி லண்டனை எட்டியது.

அன்று முதல் இன்று வரை எவரெஸ்ட் சிகரத்தில் 5000இற்கும் அதிகமானோர் ஏறியிருக்கிறார்கள். மனித முயற்சிக்கு இயற்கை அளிக்கும் இந்த உயரமான சவாலை எதிர் கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதன் பிறகு கணிசமாக அதிகரித்தது.

]]>
dinamani, on this day, memeories, mount everest, edmand hilary, tensingh, climbing http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/28/w600X390/everest.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/may/29/29051953-எவரெஸ்ட்-சிகரத்தை-முதல்-முறையாக-மனிதன்-எட்டிய-தினம்-இன்று-2710315.html
2710301 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 28.05.1908: உலகப்புகழ்பெற்ற 'ஜேம்ஸ் பாண்ட் 007'  கதாபாத்திரத்தை உருவாக்கிய ஐயன் பிளம்மிங் பிறந்த தினம் இன்று..! DIN DIN Sunday, May 28, 2017 12:20 PM +0530  

ரகசிய உளவாளி, ஏஜெண்ட்-007, பாண்ட் போன்ற புனைப்பெயர்களால் வர்ணிக்கப்படும் சுவாரசியமான கதாபாத்திரம் 'ஜேம்ஸ் பாண்ட்'. 19-ம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை பல நடிகர்களின் வித்தியாசமான நடிப்பில்  ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் உயிர்ப்புடன் துப்பறிந்து வருகிறது.

இத்தகைய அழுத்தமான கதாபாத்திரத்திற்கு சொந்தக்காரர் இங்கிலாந்தை சேர்ந்த 'அயன் பிளமிங்'.

அயன் பிளமிங், இங்கிலாந்தில் உள்ள மே-பேரில் பிறந்தவர். இவரது தந்தை வாலன்டைன் பிளம்மிங், ஹென்லி பகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக செயலாற்றினார். கல்லூரி படிப்பை நிறைவு செய்த பிளமிங் நாளிதழ் ஒன்றில் துணை ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் அங்கிருந்து வெளியேறி தந்தையின் தொழில்களை கவனிக்க ஆரம்பித்தார்.

இரண்டாம் உலக போர் நடைபெற்று கொண்டிருந்த சமயம் அது. ரியர் அட்மிரல் ஜான் காட்பிரை என்ற கடற்படை உளவுப்பிரிவில் அயன் பிளமிங் சேர வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி குறுகிய காலத்திலேயே கமாண்டராக பணி உயர்வு பெற்றார். 1942-ம் ஆண்டில் '30 அசால்ட்ஸ் கமாண்டோ' என்ற சிறப்பு உளவு படைக்கு தலைமை தாங்கும் பொறுப்பு பிளமிங்கிற்கு கிடைத்தது. அங்கு பணியாற்றிய உளவாளிகளின் குணாதிசயங்களை ஜேம்ஸ் பாண்ட் என்ற கதாபாத்திரத்தில் நிலைநிறுத்தி 1950-ம் ஆண்டில் 'காசினோ ராயல்' என்ற கதையை எழுதினார். இதுவே ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தின் முதல் கதை.

இதனை தொடர்ந்து 1952-ம் ஆண்டில் 'கோல்டன் ஐ' என்ற புத்தகத்தை எழுதி முடித்தார். பத்திரிகை துறையில் பணியாற்றிய அனுபவம் இவரை தொடர்ச்சியாக எழுத செய்தது. 1953-ம் ஆண்டு முதல் 1966-ம் ஆண்டிற்குள்ளாக 12 புத்தகங்களை எழுதி வெளியிட்டார். இதில் 'மேன் வித் த கோல்டன் கன்', 'ஆக்டோபுசி அண்ட் த டே லைட்' போன்ற கதைகளை ரஷியாவில் பனிபொழிவு பிரதேசங்களில் பணியாற்றிய அனுபவங்களை கொண்டு எழுதினார்.

அயன் பிளமிங்கின் ஜேம்ஸ் பாண்ட் கதைகளுக்கு லண்டன் நாட்டின் பிரபல எழுத்தாளரான ஜோவன் ஹ¨ என்பவர் அச்சு வடிவம் கொடுத்தார். இவரை தவிர மற்றவர்களிடம் பிளமிங் கதைகளை பகிர்ந்து கொண்டது கிடையாது. ஜேம்ஸ் பாண்ட் கதைகள் மீதான மக்களின் ஆர்வம் குறைபடாமல் இருக்க வேண்டும் என்பதில் முழு முனைப்புடன் செயல்பட்டார். கதைகளை எழுதும் போதே ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தின் கற்பனை சித்திரத்தையும் வரைந்தார். அவை ஸ்டைலான தலை முடி, அகன்ற முகம், புகைப்பிடிக்கும் பழக்க வழக்கம் என அயன் பிளமிங்கை இளமை தோற்றத்தில் வரைந்தது போன்று காட்சியளித்தன. புத்தகத்தின் முதல் பக்க அட்டை மற்றும் உள்பக்கத்தில் இடம்பெறும் புகைப்படங்கள் அத்தனையும் தானாகவே உருவாக்கினார். காசினோ ராயல் மூன்று பதிப்புகளாக வெளியிடப்பட்டது. அதற்கு பின்னரும் அச்சிடப்பட்டு வெளியானது. அன்று முதல் இன்று வரை ஜேம்ஸ் பாண்ட் கதைகள் பல்வேறு நவீன மாற்றங்களுடன் நூலகங் களையும், வீடுகளையும் அலங்கரித்து வருகின்றன.

]]>
dinamni, on this day, memeories, james bond, ian flamming, birthday http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/28/w600X390/ian_flemming.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/may/28/28051908-உலகப்புகழ்பெற்ற-ஜேம்ஸ்-பாண்ட்-007--கதாபாத்திரத்தை-உருவாக்கிய-ஐயன்-பிளம்மிங்-பிறந்த-தின-2710301.html
2709256 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 27.05.1975: பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹஸி பிறந்த தினம் இன்று! DIN DIN Saturday, May 27, 2017 12:00 AM +0530  

மைக்கல் எட்வர்ட் ஹஸி எனப்படும் மைக் ஹசி மே 27, 975) மேற்கு ஆஸ்திரேலியாவின் மோர்லேவில்  பிறந்தவர்.

ஆஸ்திரேலிய முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 15,313 ஓட்டங்கள் எடுத்திருந்தார். ஓரளவு வயதான பின்னரே ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்தார். தன்னுடைய சிறப்பான ஆட்டத்திறனால் 'மிஸ்டர் கிரிக்கெட்' என்ற பட்டப்பெயரால் பலரால் அறியப்படுபவர்.

]]>
dinamani, on this day, memeories, australia, cricket, michael hussy, birthday http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/26/w600X390/mike_hussy.png http://www.dinamani.com/specials/indha-naalil/2017/may/27/27051975-பிரபல-ஆஸ்திரேலிய-கிரிக்கெட்-வீரர்-மைக்கேல்-ஹஸி-பிறந்த-தினம்-இன்று-2709256.html
2708636 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 26.05.1937: புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகை 'ஆச்சி' மனோரமா பிறந்த தினம் இன்று! DIN DIN Friday, May 26, 2017 12:00 AM +0530  

மனோரமா பிரபலமான தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் தனது திறனை வெளிப்படுத்திய இவர் 1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இவர் தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் அன்போடு 'ஆச்சி' என அழைக்கப்பட்டார்.

இவர் தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். கா. ந. அண்ணாதுரை, மு. கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா மற்றும் ம. கோ. இராமச்சந்திரன் இவருடன் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் என். டி. ராமராவ் தெலுங்கு படங்களில் இவருடன் நடித்திருக்கிறார்.

தமிழ் திரையுலகின் ஈடு இணை இல்லாத நடிகையாக இருந்த மனோரமா உடல்நலக் குறைவால் 10 அக்டோபர் 2015 அன்று காலமானார்.

]]>
dinamani, on thsi day, memories, manorama, tamil cinema, birthday, http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/25/w600X390/manorama.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/may/26/26051937-புகழ்பெற்ற-தமிழ்-திரைப்பட-நடிகை-ஆச்சி-மனோரமா-பிறந்த-தினம்-இன்று-2708636.html
2707974 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 25.05.2007: ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் நான்கு பேட்ஸ்மேன்களும் சதம் அடித்த நாள் இன்று! DIN DIN Thursday, May 25, 2017 12:00 AM +0530  

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஒன்று பங்களாதேஷின் மிர்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் முதல் இனிங்ஸில் முதல் நான்கு வீரர்களும் சதம் அடித்தார்கள். இவ்வாறு நடைபெற்றது டெஸ்ட் கிரிக்கெட் வரலற்றில் முதல் தடவையாகும்.

அந்த சாதனையில் தினேஷ் கார்த்திக் 129 ஓட்டங்களையும் , வசீம் ஜபர் 138 ஓட்டங்களையும் , ராஹுல் டிராவிட் 129 ஓட்டங்களையும், சச்சின் டெண்டுல்கர் ஆட்டம் இழக்காமல் 122 ஓட்டங்களையும் பெற்றனர்.

]]>
dinamani, on this day, memeories, india, bangaladesh, test match, mirpur, world record, 4 centuries http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/24/w600X390/test_match.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/may/25/25052007-ஒரு-டெஸ்ட்-கிரிக்கெட்-போட்டியில்-முதல்-நான்கு-பேட்ஸ்மேன்களும்-சதம்-அடித்த-நாள்-இன்று-2707974.html
2707321 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 24.05.2006: விக்கிமேப்பியா தளம் பயன்பாட்டுக்கு வந்த தினம் இன்று! DIN DIN Wednesday, May 24, 2017 12:00 AM +0530  

விக்கிமேப்பியா (WikiMapia) என்பது ஒரு இணையதள வரைபடம் மற்றும் துணைக்கோள் படிம சேகரிப்பு வளம் கொண்ட தளமாகும். இது கூகுள் மேப்ஸ்களை விக்கி அமைப்புடன் இணைக்கிறது. அதன் வழியாக பயனாளர்கள் தகவல்களை பூமியின் எந்த இடத்திலும் விக்கிமேப்பியாவில் குறிப்பு வடிவத்தில் சேர்க்க அனுமதிக்கிறது.

இது அலெக்சாண்டர் கொரியாகினே மற்றும் எவ்கேனி சவேலியெவ் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. முதன்முறையாக முழு உலகத்தை வரைபடங்களாக விளக்கும் நோக்கத்துடன் மே 24 2006 இல் தொடங்கப்பட்டது.

இதில் இப்பொழுது ஒன்பது மில்லியனுக்கும் மேல் இடங்கள் குறிக்கப்பட்டிருக்கிறது. நாம் பதிவு செய்யும் பொழுது விக்கிமேப்பியாவில் தொகுக்கவோ அல்லது சேர்க்கவோ தேவையில்லை. தற்பொழுது வரை உலகம் முழுவதும் இரண்டு லட்சத்திற்கும் மேலான பயனாளர்கள் தற்பொழுது இதில் பதிவு செய்துள்ளனர்

]]>
dinamani, on this day, memeories, wikimapia, launch http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/23/w600X390/wikimapia.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/may/24/24052006-விக்கிமேப்பியா-தளம்-பயன்பாட்டுக்கு-வந்த-தினம்-இன்று-2707321.html
2706798 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 23.05.1966: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரேம் ஹிக் பிறந்த தினம் இன்று! DIN DIN Tuesday, May 23, 2017 12:00 AM +0530  

கிரேம் ஹிக் இங்கிலாந்துக்கு விளையாடிய ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்தவர். 65 டெஸ்ட் போட்டிகளில் 3,383 ரன்களை 31.32 என்ற சராசரியில் எடுத்தவர். இதில் 6 சதங்கள் 18 அரைசதங்களை அவர் எடுத்துள்ளார். 120 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 3,846 ரன்களை 5 சதங்கள் 27 அரைசதங்களுடன் எடுத்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் அதிகபட்ச ரன்கள் 178, ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்கள்: 126 நாட் அவுட்.

முதல் தர கிரிக்கெட்டில் 526 போட்டிகளில் 41,112 ரன்களை 52.23 என்ற சராசரியின் கீழ் 136 சதங்கள், 158 அரைசதங்களுடன் எடுத்தவர். இதில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 405 நாட் அவுட்.

கெவின் பீட்டர்சன் போல் திறமை மிக்க பேட்ஸ்மென் கிரேம் ஹிக். ஆனால் டெஸ்ட் வாழ்க்கையில் இவர் எதிர்ப்பார்க்கப்பட்ட அளவுக்கு சோபிக்கவில்லை. வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் இவரை பாடாய்ப் படுத்தி எடுத்தனர். ஆனாலும் கடினமான பிட்ச்களில் இவரது திறமை பல சமயங்களில் வெளிப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
dinamani, on this day, memeories, england, zimbabwe, greame hick, birthday http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/22/w600X390/greame_hick.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/may/23/23051966-இங்கிலாந்து-கிரிக்கெட்-வீரர்-கிரேம்-ஹிக்-பிறந்த-தினம்-இன்று-2706798.html
2706197 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... மே 22: சர்வதேச பல்லுயிர் தினம் இன்று! DIN DIN Monday, May 22, 2017 12:00 AM +0530  

பூமியில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு வாழ்க்கை முறை, வாழ்விடம் உள்ளது. ஒவ்வொன்றும் மற்றொன்றை சார்ந்துள்ளது. பல்லுயிரிகள் இருந்தால் தான், பூமியில் சமநிலை ஏற்படும். நமக்கு தேவையான உணவு, மருத்துவம் மற்றும் இதர தேவைகளுக்கு நாம் பல்லுயிர்களை சார்ந்து இருக்கிறோம்.

பல்லுயிரிகளுக்கான வாழ்விடங்களை பாதுகாக்க வலியுறுத்தி, மே 22ம் தேதி, சர்வதேச பல்லுயிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பூமியில் உள்ள நீர் மற்றும் நிலத்தில் வாழும் எண்ணற்ற உயிரின வகைகளின் (பறவை, விலங்குகள், மரங்கள், தாவரங்கள்) தொகுப்பு, "பல்லுயிர் பரவல்' எனப்படுகிறது.

17ம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்கு பிறகு, பூமி பெரிய அழிவுகளை சந்தித்து வருகிறது. பல லட்சம் எக்டேர் பரப்பளவில் காடுகளும், நுண்ணியிரிகள் முதல் பெரிய உயிரினங்கள் வரையிலான வாழ்விட சூழல்களும் அழிக்கப்படுகின்றன. பருவநிலை மாற்றம், வெப்பமயமாதல் போன்றவற்றால் இயற்கை பாதிப்பிற்குள்ளாகிறது. இதன் காரணமாக, பல்லுயிரிகள் பாதிப்புக்குள்ளாகின்றன. எஞ்சியிருப்பதையாவது பாதுகாத்தால் தான், எதிர்கால உலகம் நாம் வாழத் தகுதியாக இருக்கும்.

]]>
dinamani, on this day, memeories, international biodiversity day, prreservation http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/21/w600X390/biodiversity_day.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/may/22/மே-22-சர்வதேச-பல்லுயிர்-தினம்-இன்று-2706197.html
2705175 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 21.05.427: கிரேக்க தத்துவ  ஞானி பிளேட்டோ பிறந்த தினம் இன்று! DIN DIN Sunday, May 21, 2017 11:57 AM +0530  

பிளேட்டோ பெரும் செல்வாக்குள்ள கிரேக்கத் தத்துவஞானியாவார். இவர் சாக்கிரட்டீசின் சீடர், அரிஸ்டாட்டிலின் குரு. பிளாட்டோ தலைசிறந்த கிரேக்க தத்துவஞானி, கணிதவியல் அறிஞராவார். சாக்ரடீஸின் மாணவரான இவர் தத்துவ தர்க்கங்களை எழுதியுள்ளார்.

இவர் மேற்கு உலகின் முதல் கல்விக் கூடமாக ஏதென்ஸ் நகரில் அகாடமியை நிறுவினார். இவர் தனது ஆதரவாளர் சாக்ரடீஸ் மற்றும் தனது மாணவர் அரிஸ்டாட்டிலின் உடன் இணைந்து மேற்குலகின் தத்துவம் மற்றும் அறிவியலுக்கான அடிக்கல்லை நாட்டினார்.

]]>
dinamani , on this day , birthday, meemories, greece, plato http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/19/w600X390/plato.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/may/21/2105427-கிரேக்க-தத்துவ--பிளேட்டோ-பிறந்த-தினம்-இன்று-2705175.html
2705174 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 20.05.1998: ப்ளூடூத் தொழில்நுட்பம் கண்டறியப்பட்ட நாள் இன்று! DIN DIN Saturday, May 20, 2017 12:00 AM +0530  

புளூடூத் என்பது குறைந்த தொலைவிலுள்ள நிலையான அல்லது மொபைல் சாதனங்களிடையே தரவைப் பரிமாறிக்கொள்ள உதவும் ஒரு திறந்த தரநிலை கம்பியில்லா நெறிமுறை ஆகும்

புளூடூத் என்ற சொல்லானது பழைய ஜெர்மானிய மொழியிலான "ப்ளாடோன்" (Blátönn) அல்லது டேனிஷ் மொழியிலான "ப்ளாட்டேண்ட்" (Blåtand) ஆகிய சொற்களின் ஆங்கில வடிவமாகும். இது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த டென்மார்க்கின் முதலாம் ஹரால்ட் மன்னன் சிங்க் ஹெசால்ட் ப்ளாடண்ட் என்பவனின் சிறப்புப் பெயராகும். இந்த அரசனுக்கு புளூபெரீஸ் பழங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதைச் சாப்பிட்டு அவனது பற்கள் எல்லாம் நீலக்கறை படிந்திருந்தது. இதனால் அம்மன்னனை "புளு டூத்" என்று அழைக்கத் தொடங்கினர். அம்மன்னர் வேறுபட்ட டானிஷ் பழங்குடியினரை ஒன்றிணைத்து, அங்கிருந்த பல குறுநிலங்களை எல்லாம் ஒன்றாய்ச் சேர்த்து ஒரே பேரரசாகக் கட்டமைத்தார். புளூடூத் தொழில்நுட்பமும் அவரைப் போலவே தகவல்தொடர்பு நெறிமுறைகளை ஒரே தரநிலைக்குக் கொண்டு வரும் செயலைச் செய்கிறது என்பதால் இப்பெயர் வழங்கப்பட்டது.[2][3][4]

ஜெர்மானிய எழுத்துகளான H-rune.gif (ஹகால்) (Hagall) மற்றும் Runic letter berkanan.svg (பெர்க்கனான்) (Berkanan) ஆகியவை இணைந்த இணைப்பெழுத்துக்களின் சேர்க்கையே புளுடூத் சின்னம் ஆகும்.

புளுடூத் குறிப்புவிவரம் 1994 ஆம் ஆண்டில் ஜாப் ஹார்ட்ஸன் மற்றும் ஸ்வென் மேட்டிஸன் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. அவர்கள் ஸ்வீடனில் உள்ள லண்ட் என்ற இடத்திலுள்ள எரிக்சன் மொபைல் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தவர்கள்.  குறிப்புவிவரமானது அதிர்வெண் கற்றை தொழில்நுட்பத்தை (Frequency-hopping spread spectrum technology) அடிப்படையாகக் கொண்டது.

இந்தக் குறிப்புவிவரங்கள் புளுடூத் சிறப்பார்வக் குழுவால் (சிறப்பார்வக் குழு-SIG) முறைப்படுத்தப்பட்டன. SIG-ஆள் இந்த விபரங்கள் முறையாக 1998 ஆம் ஆண்டு மே 20 அன்று அறிவிக்கப்பட்டது.

]]>
dinamani, on this day, memeories, mobile, technology, bluetooth http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/19/w600X390/bluetooth.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/may/20/20051998-ப்ளூடூத்-தொழில்நுட்பம்-கண்டறியப்பட்ட-நாள்-இன்று-2705174.html
2704522 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 19.05.1925: அமெரிக்க மனித உரிமைச்செயற்பாட்டாளர் மால்கம் எக்ஸ் பிறந்த தினம் இன்று! DIN DIN Friday, May 19, 2017 12:00 AM +0530  

மல்கம் எக்ஸ்  ஒரு குறிப்பிடத்தக்க ஆபிரிக்க அமெரிக்கர். இவர் ஓர் அமெரிக்க முஸ்லிம் அமைச்சரும் இஸ்லாம் தேசத்தின் பேச்சாளராக இருந்தவருமாவார். 1964 இல் இஸ்லாம் தேசத்திலிருந்து விலகியபின் மக்காவுக்கு புனித ஹஜ் பயணம் சென்று ஒரு சுணி முஸ்லிம் ஆனார்.

மல்கம் லிட்டில் என்பது இவரது இயற்பெயர். லிட்டில் என்பது அடிமைத்தனத்தைக் குறிப்பதால் அதைக் கைவிட்டு எக்சு எனத் தம் பெயரில் சேர்த்துக் கொண்டார். அமெரிக்க கருப்பின மக்களின் உரிமைகளுக்காகத் தம் பேச்சாற்றலால் பாடுபட்டார். இசுலாம் என்னும் மத அடிப்படையிலும் கருப்பின மக்கள் என்னும் இன அடிப்படையிலும் தம் இயக்கத்தைக் கட்டினார். அமெரிக்காவில் கருப்பின மக்களிடையே இசுலாம் சமயம் பரவ இவர் முக்கியவராக இருந்தார்.

1964 மார்ச்சு 26 ஆம் பக்கலில் மார்டின் லூதர் கிங் சூனியரை மல்கம் எக்சு சந்தித்தார். இருவரும் சமூக உரிமைகளுக்கான விவாதம் ஒன்றில் கலந்து கொண்டார்கள்.

இசுலாம் தேசம் அமைப்பைவிட்டு மல்கம் எக்சு விலகினார். முசுலீம் மசூதி என்பதைத் தோற்றுவித்தார். சன்னி முசுலீம் பிரிவில் தம்மை இணைத்துக் கொண்டார்.

மதவெறியன் ஒருவனால் இவர் பெப்ரவரி 21, 1965 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது இறப்புக்கு பின்னால் பின்னர் பதிப்பாகி வெளிவந்த அவரது தன் வரலாறு நூல், கருப்பின இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இப்புத்தகம் 1960-70 காலகட்டத்தில் கறுப்பின மக்கள் முன்னெடுத்த அதிகாரப் போராட்டத்திற்கு அடித்தளம் இட்டது.

1992 இல் மல்கம் எக்ஸ் என்ற திரைப்படம் வெளியானது. இது மல்கம் எக்சின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும்.

]]>
dinamani, on this day, memeories, USA, Malcom X, birthday http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/18/w600X390/malcom_X.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/may/19/19051925-அமெரிக்க-மனித-உரிமைச்செயற்பாட்டாளர்-மால்கம்-எக்ஸ்-பிறந்த-தினம்-இன்று-2704522.html
2704481 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 18.05.1974: இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை நடத்திய தினம் இன்று! DIN DIN Thursday, May 18, 2017 12:21 PM +0530  

இந்திரா காந்தி இந்தியப் பிரதமராக இருந்த பொழுது, 1974-ஆம் ஆண்டு இதே நாளில்தான் இந்தியா தனது முதல் அணுக்கரு வெடிப்பு பரிசோதனைகளை செயல்படுத்தியது. சிரிக்கும் புத்தர் (Smiling Buddha) என்பது இதனையாக்  குறிப்பதற்கான ரகசிய குறிச்சொல் ஆகும்.

இந்த அணுக்கரு வெடிப்பு பரிசோதனைகள் ராஜஸ்தான் மாநிலத்தில் பொக்ரான் என்ற இடத்தில் 1974 ஆம் ஆண்டு மே மாதம் 18 அன்று நிகழ்ந்தது. அதுவரை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் ஐந்து நாடுகள் மட்டுமே இதற்கான வல்லமை படைத்த நாடுகளாக கருதப்பட்டு வந்தது. சபையின் உறுப்பினராக இல்லாத இந்தியா இந்த பரிசோதனைகளை நிகழ்த்தியதை இதர நாடுகள் உறுதி செய்தது.

இந்தியா இந்த பரிசோதனைகளை கனடா நாட்டின் அணுமின் உலை தொழில் நுட்பத்தின் உதவியுடன் செயல்படுத்தியது. இந்த அணுக்கரு வெடிப்பின் பொழுது வெளிப்பட்ட ஆற்றலின் அளவு சுமார் எட்டு கிலோ டன்கள் (டி.என். டி வெடிபொருள் வெடிப்புக்குச் சமம்) என கணிக்கப்பட்டுள்ளது.

]]>
dinamani, on this day, memeories, india, nuclear test, canada http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/18/w600X390/pokhran.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/may/18/18051974-இந்தியா-தனது-முதல்-அணுகுண்டு-சோதனையை-நடத்திய-தினம்-இன்று-2704481.html
2702731 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... மே 17- உலக தொலைத்தொடர்பு தினம் DIN DIN Wednesday, May 17, 2017 12:00 AM +0530  

1865இல் உருவான சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் International Telecommunication Union (ITU) என்னும் அமைப்பானது உலக தொலைத்தொடர்பு தினத்தை அனுஷ்டிக்கிறது.

மனித குலத்துக்கு தோலை தொடர்பு என்னும் சாதனம் ஆற்றிவரும் சேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது. ஆண்டு தோறும் கொண்டாடப்படும் சர்வதேச தொலைத்தொடர்பு தினத்தின் முக்கிய நோக்கமானது தொலைத்தொடர்பு நாட்டின் அபிவிருத்திற்கும் மனிதாபிமான வளர்ச்சிக்கும் உதவுதல் பற்றி எடுத்துக் காட்டுவதே ஆகும்.

மனிதனின் தகவல் தொடர்புகள், செய்மதிப் பரிமாற்றம், கல்வியூட்டல், கருத்துப் பரிமாற்றம், பொழுதுபோக்கு, கலை வெளிப்பாடு, வர்த்தகம், முன்னெச்சரிக்கையான பல தேவைகளுக்கு தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் பயன்பட்டு வருகின்றது. சூறாவளிகள், எரிமலைகள், பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்த வேளைகளிலும், போர்மூட்டம், பாதுகாப்பு, தொற்றுநோய் போன்ற சந்தர்பங்களிலும் அறிவுறுத்தல்களை வழங்குவதால் மக்கள் முதற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க முடிகிறது.

நிவாரண நடவடிக்கைகளைக்கூட இன்று நடமாடும் கம்பியில்லாத் தொலைபேசி மூலம் துரிதமாக மேற்கொள்ள முடிகிறது.

]]>
dinamani, on this day, memeories, telecommunication day http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/15/w600X390/telecommunication_day.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/may/17/மே-17--உலக-தொலைத்தொடர்பு-தினம்-2702731.html
2702730 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 16.05.1975: எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண்ணான ஜூன்கோ டாபி சிகரத்தை அடைந்த தினம் இன்று! DIN DIN Tuesday, May 16, 2017 12:00 AM +0530  

ஜப்பானில் பிறந்த ஜூன்கோ டாபி (Junko Tabei) 10வயதாக இருக்கும் போதே மலையேறும் பயிற்சியில் சேர்ந்தார். ஜப்பானில் உள்ள நாசுமலை சிகரத்தில் ஏறுவதற்கு பயிற்சி பெற்றார். டோக்கியோ அருகில் உள்ள ஷோவா பெண்கள் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கிய பட்டம் பெற்றார். படிக்கும் போதே மலையேறும் கிளப் ஒன்றில் உறுப்பினராக சேர்ந்தார். 1969ம் ஆண்டில் பெண்கள் மலையேறும் கிளப் தொடங்கினார். இதற்கு ஜப்பான் பெண்கள் மலையேறும் கிளப் என்று பெயரிட்டார்.

திருமணத்துக்கு பின்னர் கணவருடன் இணைந்து பல சிகரங்களில் மலையேறும் பயிற்சிகளை மேற்கொண்டார். ஜப்பானில் உள்ள புஜி மலை உள்ளிட்ட சில உயரமான சிகரங்களில் ஏறி பயிற்சி பெற்றார். சுவிஸ் ஆல்ப் மலை சிகரங்களில் உள்ள மாட்டர்ஹார்னிலும் மலையேறும் பயிற்சி பெற்றார். பல பயிற்சிகளின் காரணமாக 1972ம் ஆண்டு ஜப்பானின் மிகச்சிறந்த மலையேறும் பெண் பயிற்சியாளர் என்ற பெயரை பெற்றார். இதையடுத்து ஜப்பானில் இருந்து வெளிவரும் யோமியுரி நாளிதழ் மற்றும் நிகான் தொலை காட்சி ஆகியவை இணைந்து ஜப்பானில் உள்ள பெண்கள் மலையேறும் குழுவை எவரஸ்ட் சிகரத்துக்கு அனுப்ப முடிவு செய்தன.

ஜூன்கோ டாபி உட்பட 15 பெண்களை தேர்வு செய்தனர். இதற்காக அவர்களுக்கு கடுமையான பயிற்சிகள் அளிக்கப் பட்டன. 1975ம் ஆண்டின் தொடக்கத்தில் காத்மாண்டுவுக்கு அனுப்பப்பட்டனர். அங்கு உள்ளூரை சேர்ந்த 9 பேரை வழிகாட்டிகளாக அழைத்துக்கொண்டனர். 1953ம் ஆண்டு எவரஸ்ட் சிகரத்தை அடைந்த எட்மண்ட் ஹில்லாரி, டென்சிங் நார்காய் ஆகியோர் சென்ற வழியில் பெண்கள் குழுவினர் எவரஸ்ட் சிகரத்தை நோக்கி சென்றனர். மே மாதம் எவரஸ்ட் சிகரத்தில் 6 ஆயிரத்து 300 மீட்டர் உயரத்தை அடைந்து அந்த பகுதியில் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் தீடீரென பனிப்பாறைகள் சரிந்தன. எல்லா பெண்களும் பனிப்பாறைக்கு அடியில் புதைந்து போயினர். ஜூன்கோ டாபியும் சுயநினைவை இழந்து விட்டார். அந்த சமயத்தில் ஒரு வழிகாட்டி ஜூன்கோ டாபி உள்ளிட்ட பெண்களை மீட்டார். அதன் பின்னர் 12 நாள் கழித்து ஜூன்கோ டாபி மட்டும் 1975ம் ஆண்டு இதே நாளில் எவரஸட் சிகரத்தை அடைந்தார்.

]]>
dinamani, on this day, memeories, everest, jungo tabei http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/15/w600X390/junko-tabei.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/may/16/16051975-எவரெஸ்ட்-சிகரத்தை-அடைந்த-முதல்-பெண்ணான-ஜூன்கோ-டாபி-சிகரத்தை-அடைந்த-தினம்-இன்று-2702730.html
2702654 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... மே 15 - உலக குடும்ப தினம்! DIN DIN Monday, May 15, 2017 01:24 PM +0530  

இன்றைய நவீன உலகில், வாழ்வாதாரத்திற்காக, சொந்த இடங்களை விட்டு, வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இருப்பது அரிதாக உள்ளது. குடும்ப கட்டமைப்பிலும் "விரிசல்' உருவாகிறது. ஒவ்வொருவரும், குடும்பத்துக்கு முக்கியத்துவம் தர வலியுறுத்தி, மே 15ம் தேதி சர்வதேச குடும்ப தினம் கடைபிடிக்கப்படுகிறது.

வெளியே இருப்பவர்கள் என்ன தான் குடும்பத்திற்கு வருமானத்தை அங்கிருந்து அளித்தாலும், அருகில் இல்லாதது அவர்களது குடும்பங்களுக்கு ஏமாற்றமாகவே இருக்கும். குடும்பங்களுக்குள் ஒற்றுமை இருக்கும் வரை, வாழ்க்கையில் கவலை இருப்பதில்லை.

ஒருவர் எந்த சூழ்நிலையிலும், எந்த வயதினிலும், எவருக்காகவும், குடும்பத்தை கைவிடாமல் ஆதரவளிக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.

]]>
dinamni, on this day, memeories, world family day, celebration, http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/15/w600X390/family_day.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/may/15/மே-15---உலக-குடும்ப-தினம்-2702654.html
2700964 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... மே 14 - உலக அன்னையர் தினம் இன்று! DIN DIN Sunday, May 14, 2017 12:00 AM +0530  

அன்னையர் நாள் (Mother's day) என்பது உலக அன்னையர் மற்றும் தாய்மையைப் போற்றும் நாளாக அன்னா ஜார்விஸ் அவர்களால் மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் உருவாக்கப்பட்டது; இது குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குடும்பங்களின் உறவுச் சூழல்களை மையமாகக் கொண்டது.

இது இப்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகின்றது. குறிப்பாக இங்கிலாந்தில் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்படுகின்றது.

அன்னையர் தின நிறுவனர் அன்னா ஜார்விஸ் உள்ளிட்ட பலரும் அதை நினைவு கொள்ளத்தக்க ஒரு விடுமுறை தினம் என்று கருதினர். அன்னா தான் முதலில் விடுமுறையை உருவாக்குவதற்கு உதவியதிலிருந்து மாறி, இறுதியில் அன்னையர் தின விடுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

]]>
dinamani, on this day, memeories, world mother's day, celebration http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/12/w600X390/mothers-day.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/may/14/மே-14---உலக-அன்னையர்-தினம்-இன்று-2700964.html
2700963 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 13.05.1648: தில்லி செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்ட தினம் இன்று! DIN DIN Saturday, May 13, 2017 12:00 AM +0530  

முகலாயப் பேரரசர் ஷாஜகான் 1638 ஆம் ஆண்டு இந்த மிகப்பெரிய கோட்டையைக் கட்டத் தொடங்கினார், பத்து  ஆண்டுகள் கழித்து 1648 ஆம் ஆண்டு இந்தக்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. இந்த செங்கோட்டையானது  உண்மையில், "குயிலா-ஐ-முபாரக்" (ஆசிர்வதிக்கப்பட்ட கோட்டை) என குறிப்பிடப்பட்டது, ஏனெனில் இது அரசக்குடும்பங்களின் வசிப்பிடமாக இருந்தது.

செங்கோட்டையின் தளவரைபடமானது சலிம்கர் கோட்டையின் தளத்துடன் ஒருங்கிணைத்து அமையும்படி அமைக்கப்பட்டிருந்தது. இந்த கோட்டையானது, இடைக்கால வரலாற்று நகரமான ஷாஜகானாபாத்தின் முக்கிய மையமாக இருந்தது. பேரரசர் ஷாஜகானின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த செங்கோட்டையின் செயல்திட்டம் மற்றும் அழகியல், முகலாயர்களின் படைப்புத் திறனை வெளிப்படுத்துகின்றது. இந்த கோட்டை கட்டப்பட்ட பிறகு, பல மேம்பாடுகள் பேரரசர் ஷாஜகானால் செய்யப்பட்டது.

இந்த கோட்டையின் குறிப்பிடத்தக்க மேம்பாடுகள் ஔரங்கசீப் காலத்திலும் அதற்குப்பிறகு வந்த முகலாயர்களின் ஆட்சிகாலத்திலும் நடந்தது. ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் 1857 ஆம் ஆண்டில் முதல் சுதந்திரப்போர் முடிவுற்ற பின்பு, இந்த இடத்தின் ஒட்டுமொத்த அமைப்புகளில் செய்யப்பட்ட முக்கிய மாற்றங்கள் வெளிக்கொணரப்பட்டன.

ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இந்தக்கோட்டை முக்கியமான இராணுவ முகாமாகப் பயன்படுத்தப்பட்டது, மேலும் சுதந்திரம் அடைந்த பின்னரும் 2003 ஆம் ஆண்டு வரையில் இந்த கோட்டையின் முக்கியமான பகுதி இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

]]>
dinamani, on this day, memeories, delhi, red fort http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/12/w600X390/red_fort.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/may/13/13051648-தில்லி-செங்கோட்டை-கட்டி-முடிக்கப்பட்ட-தினம்-இன்று-2700963.html
2700397 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... மே 12 - உலக செவிலியர் தினம்   DIN DIN Friday, May 12, 2017 12:00 AM +0530  

உலகெங்கும் பொதுமக்களுக்கு செவிலியர்கள் ஆற்றி வரும் உன்னதமான பணியினை உலகிற்கு உணர்த்தும் வகையில், சர்வதேச செவிலியர் தினம் (International Nurses Day ) ஆண்டுதோறும் மே 12ம் தேதி கொண்டாடப்படுகிறது.

1965-ம் ஆண்டிலிருந்து உலக செவிலியர் அமைப்பு (ICN - International Council of Nurses )இந்த தினத்தை அனுசரித்து வருகிறது. 1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) பிறந்த நாளான மே 12 ஆம் தேதியை, சிறப்பாக நினைவு கூற முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அன்றைய தினத்தை நாளை சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது. இங்கிலாந்தில் ஆண்டு தோறும் மே 12-ம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (Westminster Abbey) சம்பிரதாயப்பூர்வமாக இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது.

இங்குள்ள செவிலியர் மூலம் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அங்கு வருகைதரும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அது அங்குள்ள உயர்ந்த பீடத்தில் வைக்கப்படும்.இது ஒரு செவிலியரில் இருந்து மற்றொருவருக்கு தமது அறிவைப் பரிமாறப்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

]]>
dinamani, on this day, memeories, florence nightingale, nurse day http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/11/w600X390/nurse_day.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/may/12/மே-12---உலக-செவிலியர்-தினம்-2700397.html
2699043 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 11.05.1998: பொக்ரான் அணுகுண்டுச் சோதனை நடைபெற்ற தினம் இன்று!  DIN DIN Thursday, May 11, 2017 12:00 AM +0530  

மே 11-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் 45 கிலோ டன் ஹைட்ரஜன் குண்டை வெடித்து இந்தியா சோதனை செய்தது.

இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் நடைபெற்ற அணுகுண்டு சோதனைக்கு பிறகு 1998-ல் மீண்டும் ஒரு அணுகுண்டு சோதனை நடத்த வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசு தயாரானது. இதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னரே அணுகுண்டு சோதனைக்கு நரசிம்மராவ் தலைமையிலான அரசு தயாரானது. ஆனால், பொக்ரானில் அணுகுண்டு சோதனைக்கான தயாரிப்புகள் நடந்துகொண்டிருந்தது, உலகத்தைக் கண்காணித்துக்கொண்டிருக்கும் அமெரிக்க செயற்கைக் கோள்களின் கழுகுக் கண்களில் பட்டுவிட்டது. இதனால், இந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. வாஜ்பாய் அரசு அதை நிறைவேற்றிக்காட்டியது.

இம்முறை அமெரிக்க செயற்கைக் கோள்களின் பார்வையில் படாத வகையில் ஏற்பாடுகளை இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) மேற்கொண்டது. சுழன்றுகொண்டிருக்கும் செயற்கைக்கோள்கள் பூமியில் பொக்ரான் பகுதியிலிருந்து வேறு திசைக்குத் திரும்பியிருந்த கால இடைவெளியில் அணுகுண்டு சோதனையைச் சத்தமின்றி முடித்துவிட்டது இந்தியா. மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் டைரக்டர்-ஜெனரலாக அப்துல் கலாம் இருந்தபோது இந்த சோதனை நடைபெற்றது.

இந்த சோதனை முழு வெற்றியடைந்ததாக அப்துல் கலாம் குறிப்பிட்டார். அதே ஆண்டு மே 13-ம் தேதி இரு சிறிய குண்டுகள் வெடித்து சோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனைக்கு ‘சக்தி’ என்று பெயரிடப்பட்டிருந்தது.

அமெரிக்காவின் அப்போதைய அதிபர் பில் கிளிண்டனால் இதை நம்ப முடியவில்லை. அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., தேசியப் பாதுகாப்பு அமைப்பு ஆகியவை இவ்விஷயத்தில் இந்தியாவிடம் ஏமாந்துவிட்டதாக அமெரிக்க அரசு கருதியது.

இதற்கிடையே, இந்தியாவுக்குப் போட்டியாக 1998 மே 28-ல் சாகாய் எனும் இடத்தில் பாகிஸ்தானும் அணுகுண்டு சோதனை நடத்தியது. இதையடுத்து, இரண்டு நாடுகளையும் அமெரிக்கா கடுமையாகக் கண்டித்தது. அமெரிக்கா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகள் இந்தியாமீது பொருளாதாரத் தடைகளை விதித்தன.

]]>
dinamani, on this day, memeories, india, nuclear bomb, test, rajathan, pokhran http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/9/w600X390/pokhran.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/may/11/11051998-பொக்ரான்-அணுகுண்டுச்-சோதனை-நடைபெற்ற-தினம்-இன்று-2699043.html
2699041 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 10.05.1857: இந்திய சிப்பாய்க் கலகம் துவங்கிய நாள் இன்று! DIN DIN Wednesday, May 10, 2017 12:00 AM +0530  

இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 (Indian Rebellion of 1857) அல்லது சிப்பாய்க் கலகம் என்பது பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய்கள் மே 10, 1857 இல் இந்தியாவில் மீரட் என்ற நகரில் தொடங்கிய கிளர்ச்சியைக் குறிக்கும்.

இக்கிளர்ச்சி பின்னர் இந்தியாவின் பல இடங்களிலும், குறிப்பாக இந்தியாவின் மத்திய மலைப் பகுதிகளில், பரவியது. பொது மக்கள் பலரும் இக்கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர். முக்கிய கிளர்ச்சி இன்றைய உத்தரப் பிரதேசம், உத்தரகாண்டம், வடக்கு மத்தியப் பிரதேசம், டெல்லி, மற்றும் குர்காவுன் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டிருந்தது.

கிளர்ச்சியாளர்கள் பிரித்தானியப் படையினருக்கு ஒரு பெரும் சவாலாக விளங்கினர். ஜூன் 20, 1858 இல் குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன் இது முடிவுக்கு வந்தது. இக்கிளர்ச்சி ""இந்தியாவின் முதலாவது விடுதலைப் போர்", அல்லது "சிப்பாய்க் கலகம்" எனவும் அழைக்கப்படுகிறது.

]]>
dinamani, on this day, memeories, UP, meerut, sippoy mutiny, revoult http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/9/w600X390/sippo_mutiny.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/may/10/10051857-இந்திய-சிப்பாய்க்-கலகம்-துவங்கிய-நாள்-இன்று-2699041.html
2697849 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 09.05.1866: இந்திய சுதந்திர போராட்ட வீரர் கோபால கிருஷ்ண கோகலே பிறந்த தினம் இன்று! DIN DIN Tuesday, May 9, 2017 02:23 PM +0530  

கோபால கிருஷ்ண கோகலே, 1866 ஆம் ஆண்டு மே 9 அன்று மஹாராஷ்டிராவின் கோதாலுக்கில் பிறந்தார், அப்போது இந்த மாநிலம் இந்திய மேற்கு கடற்கரையோரம் இருந்த பாம்பே பிரெசிடென்சியின் ஒரு அங்கமாக இருந்தது. அவர்கள் சித்பாவன் பிராமணர்களாக இருந்தபோதிலும் கோகலேவின் குடும்பம் ஒப்பீட்டளவில் ஏழ்மையில் இருந்தது.

ஆனாலும் அவர்கள் கோகலேவுக்கு ஆங்கில கல்வி கிடைப்பதை உறுதிசெய்தனர், இதன் மூலம் ஆங்கிலேய அரசில் ஒரு கிளார்க்காகவோ சிறு அதிகாரியாகவோ வேலை கிடைக்கும் நிலையில் கோகலே இருப்பார் என நம்பினர். பல்கலைக்கழக கல்வியைப் பெறும் முதல் தலைமுறை இந்தியர்களில் ஒருவராக இருந்த கோகலே 1884 ஆம் ஆண்டில் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் தன் பட்டப்படிப்பை முடித்தார்.

கோகலேவின் கல்வி அவருடைய எதிர்கால வாழ்க்கைத் தொழிலின் போக்கை மிகப் பெரிய அளவில் தூண்டுவதாக அமைந்தது – ஆங்கிலம் கற்றதோடல்லாமல் அவர் மேற்கத்திய அரசியல் கோட்பாடுகளுக்கு உள்ளாகி ஜான் ஸ்டூவார்ட் மில் மற்றும் எட்முண்ட் புர்கே போன்ற தத்துவ அறிஞர்களின் பெரும் ஆர்வலராக ஆனார்.

ஆங்கில காலனிய ஆட்சிமுறையின் பல அம்சங்களைத் தயக்கமின்றி விமர்சித்து வந்தபோதிலும், கோகலே தன்னுடைய கல்லூரி ஆண்டுகளில் பெற்ற ஆங்கிலேய அரசியல் கோட்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீதான மரியாதை அவருடைய வாழ்நாள் முழுவதற்கும் அவருடனேயே இருந்தது.

]]>
dinamani , memories, on this day , birthday, freedom fighter, gobala krishan gohale http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/9/w600X390/Gokhale1.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/may/09/09051866-இந்திய-சுதந்திர-போராட்ட-வீரர்-கோபால-கிருஷ்ண-கோகலே-பிறந்த-தினம்-இன்று-2697849.html
2697848 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... மே 8 - உலக செஞ்சிலுவை தினம் இன்று DIN DIN Monday, May 8, 2017 12:00 AM +0530  

உலகில் யுத்தம் மற்றும் அனர்த்தங்களால் பாதிப்படைவோருக்கு மனிதாபிமான நோக்கில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் முகமாக செஞ்சிலுவைச் சங்கம், மற்றும் செம்பிறைச் சங்கம் ஆகியன சர்வதேச ரீதியில் அமைக்கப்பட்டுள்ளன.

செஞ்சிலுவைச் சங்கம், மற்றும் செம்பிறைச் சங்கம் என்பன பெயரில் ஒரு வித்தியாசத்தைக் காட்டி நின்றாலும் கூட, அடிப்படையில் இரண்டு அமைப்புகளும் ஒரே நோக்கத்தை முன்னெடுப்பவைகளே. குறிப்பாக அரபுலக நாடுகளி;ல் சிலுவை எனும் குறியீட்டுக்கும், வார்த்தைப்பதத்திற்கும் பதிலாக பிறை எனும் குறியீடும், வார்த்தைப்பதமும் பயன்படுத்தப்படுகின்றது..

தற்போது உலக நாடுகளில் 178 தேசிய கிளைகளினூடாக இந்த அமைப்புகள் மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. உலக செஞ்சிலுவை - செம்பிறை தினத்தின் பிரதான கருப்பொருள் யுத்தங்களினாலும் அனர்த்தங்களினாலும் பாதிப்புறும் மக்களுக்கு இன, மத, மொழி பேதமின்றி உதவி செய்வதும் முரண்பாடுகள் மிக்க தரப்பினரிடையே நடுநிலை வகித்து சமாதானத்திற்கு உதவுவதுமாகும்.

இச்சங்கத்தின் ஸ்தாபகரான ஜீன் ஹென்றி டியூனண்ட் (Henry Dunant) பிறந்த தினமான மே மாதம் 8ம் தேதி அம்மனிதாபிமான மிக்க மனிதப் புனிதரைக் கெளரவிக்க இத்தினத்தை உலக செஞ்சிலுவைச் சங்கத் தினமாக உலகத்தோர் அனுஷ்டிக்கின்றனர்.

]]>
dinamani, on this day, memeories, red cross society, hendry dunanad, birthday http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/7/w600X390/red_cross.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/may/08/மே-8---உலக-செஞ்சிலுவை-தினம்-இன்று-2697848.html
2697832 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 07.05.1814: திராவிட மொழியியலின் தந்தை ராபர்ட் கால்டுவெல் பிறந்த தினம் இன்று! DIN DIN Sunday, May 7, 2017 12:20 PM +0530  

ராபர்ட் கால்டுவெல் 1814 ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் தேதி அயர்லாந்தில் பிறந்தார். இளமையிலேயே சமயப் பற்று மிக்கவராகக் காணப்பட்டார். தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர், பின்னர் கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தில் இணைந்து கல்வி பயின்றார். அங்கே அவருக்கு ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது. 24 வயதாக இருந்தபோது இலண்டன் மிசனரி சொசைட்டி என்னும் கிறித்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து, மதத்தைப் பரப்புவதற்கென்று 1838 சனவரி 8 ஆம் தேதி சென்னைக்கு வந்து தமது மதப்பணியைத் தொடங்கினார்.

அவர் சென்னைக்கு அன்னை மேரி என்னும் கப்பலில் பயணித்த போது கடலில் ஏற்பட்ட சூறைக்காற்றுக் காரணமாக இன்னொரு பிரெஞ்சு கப்பலுடன் மோதி ழூழ்கியதில் ஆறு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். அதில் ராபர்ட் கால்டுவெல்லும் ஒருவர் என்பது குறிப்பிட்டத்தக்கது. பின்னர் இவர் நற்செய்தி பரப்புவதற்கான சபை (Propagation of the Gospel Mission) எனும் குழுவினருடன் இணைந்து கொண்டார். தனது பணிக்குத் தமிழ் மொழி அறிவு முக்கியம் என்பதை உணர்ந்த கால்டுவெல், தமிழை முறைப்படி பயிலத் தொடங்கினார்.

1841ல் குரு பட்டம் பெற்றுத் திருநெல்வேலி சென்று அங்கே இடையன்குடி என்னும் ஊரில் தங்கி 50 ஆண்டுகள் தமது மதப்பணியுடன் சேர்த்து தமிழ்ப்பணியும் செய்தார். இவர் ஆங்கில மொழியில் ஆக்கிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூல் உலகெங்கும் இவருக்கு மிகுந்த புகழ் ஈட்டித்தந்தது. தமிழ்மொழி உலகின் முதல் மொழி என்றும் .மலையாளம் ,தெலுகு ,கன்னடம் எல்லாம் தமிழ் மற்றும் பிற மொழி கலப்பில் வந்தது என்றும் கண்டுபிடித்தார் 

]]>
dinamani, on this day, memeories, robert caldwel, birthday http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/7/w600X390/robert_caldwell.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/may/07/07051814-திராவிட-மொழியியலின்-தந்தை-ராபர்ட்-கால்டுவெல்-பிறந்த-தினம்-இன்று-2697832.html
2696751 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 06.05.1967: சாகிர் உசேன் இந்தியாவின் முதல் முஸ்லிம் குடியரசுத் தலைவரான தினம் இன்று! DIN DIN Saturday, May 6, 2017 12:00 AM +0530  

சாகிர் உசேன் இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967 இல் இருந்து 1969 வரை அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார்.

இவர் கல்வித்துறையில் சிறந்த அறிஞராகவும் திறமைமிக்க நிர்வாகியாகவும் விளங்கினார். ஆந்திர மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தில் 1897 பெப்ரவரி 8 ஆம் நாள் இவர் பிறந்தார்உத்தரப் பிரதேசத்திலுள்ள எடவா என்ற ஊரில் உயர்நிலைக் கல்வி கற்றார். அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார். பின் ஜெர்மனியில் உள்ள பெர்லின் பல்கலைக் கழகத்தில் பயின்று பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் மாணவராக இருந்தபோது , காந்தியடிகளின் தீவிர பற்றாளரானார். காந்தியடிகளின் ஆதாரக் கல்விமுறை இவரை மிகவும் கவர்ந்த்து. கல்வித்துறையில் அவர் பணியாற்றியபோது ஆதாரக் கல்விமுறையினை நாடெங்கும் பரப்ப அரும்பாடுபட்டார்.

இந்தியநாட்டின் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள ஜமியா மில்லியா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக 1926 முதல் 1948 வரை பணியாற்றினார். அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும் எட்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்கள்.

பீகார் மாநிலத்தின் ஆளுநராகவும்இருந்தார். 1962 ல் மே-6 அன்று இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்வுபெற்றார். 1967 ல் இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளே அப்பதவியிலிருந்த அவர் 1969 மே மாதம் 3 ஆம் நாள் காலமானார்.

]]>
dinamani, on this day, memeories, muslim president, zakir hussain http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/5/w600X390/zakir_hussain.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/may/06/06051967-சாகிர்-உசேன்-இந்தியாவின்-முதல்-முஸ்லிம்-குடியரசுத்-தலைவரான-தினம்-இன்று-2696751.html
2696738 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 05.05.1818: ஜெர்மானிய மெய்யியலாளரான கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம் இன்று! DIN DIN Friday, May 5, 2017 02:54 PM +0530  

கார்ல் மார்க்ஸ் என்கிற கார்ல் என்ரிச் மார்க்ஸ் மே 5, 1818-ல் ஜெர்மனியில் பிறந்தார். ஜெர்மானிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார். அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகக் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார்.

பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளை வகுத்த மூவரில் ஒருவராக கார்ல் மார்க்ஸ் கருதப்படுகிறார்

உடல்நலக் குறைபாடு காரணமாக மார்ச் 14, 1883 அன்று லண்டனில் இவர் மறைந்தார்.

]]>
dinamani, on this day, memeories, germany, karl marx, birthday http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/5/w600X390/karl_marx.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/may/05/05051818-ஜெர்மானிய-மெய்யியலாளரான-கார்ல்-மார்க்ஸ்-பிறந்த-தினம்-இன்று-2696738.html
2695489 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... மே 4 - உலக தீயணைக்கும் படையினர் தினம் DIN DIN Thursday, May 4, 2017 12:00 AM +0530  

ஒவ்வொரு ஆண்டும் மே 4ம் தேதியன்று அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள் International Firefighters' Day (IFFD) ஆக கொண்டாடப்பட்டு வருகிறது.

தீயணைக்கும் படையினர் எனும்போது ஒரு நாட்டில் இவர்களின் பணி மிக விசாலமானது.. ஆனால், இப்படையினரின் தேவை அடிக்கடி அவசியப்படாமையினால் இவர்களின் முக்கியத்துவம் பெரிதாக உணரப்படுவதில்லை.

இயற்கை சேதங்களினாலோ அல்லது விபத்துக்களினாலோ அல்லது கலவரங்களினாலோ தீ பற்றும்போது அத்தீயினை அணைப்பதற்காக வேண்டி இவர்களின் சேவை அளப்பரியது. பிற உயிரைக் காப்பதற்கு தனது உயிரை துச்சமாக மதித்து இவர்கள் ஆற்றும் பணி தன்னலமானது. குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் ஏற்படக்கூடிய கலவர நிலைகளிலும் மேற்கத்திய நாடுகளின் காட்டுத் தீ போன்ற இயற்கை அனர்த்தங்களின்போதும், அதே போல சகல தீ அனர்த்தங்களின் போதும் இவர்களின் செயற்பாடானது பாராட்டத்தக்கதாகும்.

]]>
dinamani, on this day, memeories, fire fighters, international day http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/3/w600X390/fire_fighters_day.png http://www.dinamani.com/specials/indha-naalil/2017/may/04/மே-4---உலக-தீயணைக்கும்-படையினர்-தினம்-2695489.html
2695441 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 03.05.1935: எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம் இன்று! DIN DIN Wednesday, May 3, 2017 11:37 AM +0530  

சுஜாதா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் தனித்துவமிக்க உரைநடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு திருச்சியில் இருந்து வெளிவந்த 'சிவாஜி' என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்

ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பி.இ (மின்னணுவியல்) கற்றார்.

அதன் பின்னர் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார், டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.

அறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.

மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணமாக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்கில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா. இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது.

சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.

உடல் நிலை மோசமானதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுஜாதா சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 27, 2008 இரவு 9.30 மணியளவில் மறைந்தார். மறைந்த ரங்கராஜனுக்கு சுஜாதா என்ற மனைவியும், ரங்கபிரசாத், கேசவ பிரசாத் என இரு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

]]>
dinamani, on this day, memories, tamil, writer sujatha, birthday http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/3/w600X390/sujatha.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/may/03/03051935-எழுத்தாளர்-சுஜாதா-பிறந்த-தினம்-இன்று-2695441.html
2694303 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 02.05.1994: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் ஜனநாயக தேர்தலில் நெல்சன் மண்டேலா வெற்றி பெற்ற தினம் இன்று! DIN DIN Tuesday, May 2, 2017 12:00 AM +0530  

மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாப் பிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது.

நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார்.

தொடக்கத்தில் வன்முறையற்ற போராட்ட வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர்.

மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது.

அந்த தேர்தலில் போட்டியிட்டு மண்டேலா வெற்றி பெற்றார். இதன்மூலம் உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.

]]>
dinamani, on this day, mememries, south africa, nelson mandeka, election, victory http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/1/w600X390/mandela.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/may/02/02051994-தென்-ஆப்பிரிக்காவில்-நடைபெற்ற-முதல்-ஜனநாயக-தேர்தலில்-நெல்சன்-மண்டேலா-வெற்றி-பெற்ற-தினம்-2694303.html
2693754 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... மே 1: சர்வதேச தொழிலாளர் தினம் இன்று  DIN DIN Monday, May 1, 2017 12:00 AM +0530  

உலகில் பெரும்பாலான நாடுகளில் மே 1 என்பது தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இது தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகளைக் கொண்டாடுவதை குறிக்கின்றது.

இந்நாள், பிரபலமாக மே தினம் அல்லது சர்வதேச தொழிலாளர் நாள் என்று அறியப்படுகின்றது. சிலநாடுகளில் குறிப்பாக கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையில் கொண்டாடுகின்றன.

கடினமான வேலைச்சூழலில் இருந்து தொழிலார்களுக்கு எட்டு மணிநேர வேலை என்னும் முறை அமல்படுத்தப்பட்டதை இந்த நாளில் கொண்டாட்டம் நினைவுபடுத்துகிறது.

]]>
dinamani, on this day, memeories, workers day, celebration http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/30/w600X390/may_day.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/may/01/மே-1-சர்வதேச-தொழிலாளர்-தினம்-இன்று-2693754.html
2692671 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 30.04.1870: 'இந்திய சினிமாவின் தந்தை' தாதா சாஹேப் பால்கே பிறந்த தினம் இன்று! DIN DIN Sunday, April 30, 2017 12:00 AM +0530  

தாதாசாஹெப் பால்கே மஹாரஷ்டிராவின் நாசிக்கில் பிறந்தார். 1885ஆம் ஆண்டு மும்பையில் உள்ள சர் ஜெ.ஜெ கலைக்கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார். பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார்.

இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் தாதா சாகேப் பால்கே. இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். தொடக்கத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் வண்ணப்படங்கள் அல்ல. ஒலியும் இல்லாமல் ஊமைப்படங்களாகத்தான் இருந்தன. பால்கே தனது தீவிர முயற்சியினால் ஒரு சினிமாவை எழுதி இயக்கினார். படத்தின் பெயர் அரிச்சந்திரா.

நடிகர்களை எப்படித் தேர்வு செய்வது என்று அவர் யோசிக்கவே இல்லை. தனது குடும்பத்திலிருந்த மொத்தம் 18 பேர்களையும் நடிகர்களாக ஆக்கி நடிக்க வைத்து விட்டார் பால்கே. எனவே முதல் இந்திய சினிமா ஒரு குடும்பப் படமே ஆகும். அவருடைய நினைவாகவே தாதா சாகெப் பால்கே விருது நிறுவப்பட்டது.

]]>
dinamani, on this day, memeories, indian cinema, dada sahib phalkhe http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/28/w600X390/palkhe.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/apr/30/30041870-இந்திய-சினிமாவின்-தந்தை-தாதா-சாஹேப்-பால்கே-பிறந்த-தினம்-இன்று-2692671.html
2692670 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 29.04.1891: ' பாவேந்தர்' பாரதிதாசன் பிறந்த தினம் இன்று DIN DIN Saturday, April 29, 2017 12:00 AM +0530  

பாரதிதாசன் பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.

இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார்.

புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.

தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.

பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946 சூலை 29இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

பாரதிதாசன் 21.4.1964 அன்று காலமானார்.

]]>
dinamani, on this day, memeories, paavendhar, bharathidasan, birthday http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/28/w600X390/bharathidasan.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/apr/29/29041891--பாவேந்தர்-பாரதிதாசன்-பிறந்த-தினம்-இன்று-2692670.html
2691990 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 28.04.1937: இராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன் பிறந்த தினம் இன்று! DIN DIN Friday, April 28, 2017 12:00 AM +0530  

சதாம் உசேன் அப்த் அல்-மஜித் அல்-திக்ரிதி முன்னாள் ஈராக் நாட்டின் அதிபராவார். இவர் ஜூலை 16, 1979ல் இருந்து ஏப்ரல் 9 2003 வரை அமெரிக்கா தலைமையிலான ஈராக் படையெடுப்பு வரையில் இவர் அந்நாட்டின் அதிபராக இருந்தார்.

ஈராக்கின் பாத் கட்சியின் முக்கிய நபரான சதாம் 2 1968ல் அக்கட்சி நடத்திய அதிகார கைப்பற்றல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகித்தார். தனது நெருங்கிய உறவினரான ஜெனரல் அகமது பாக்கரின் கீழ் துணை அதிபராகப் பணியாற்றிய சதாம், அரசுக்கும் ஆயுதப் படைகளுக்கும் இடையேயான பிரச்சினைகளை கடுமையாக அடக்கி ஆண்டு, அரசு இயந்திரத்தின் மீதான தன் கட்டுப்பாட்டை வலுவாக்கிக் கொண்டார்.

அதிபராகப் பொறுப்பு வகித்த சதாம், யதேச்சிகார அரசு ஒன்றை நடத்தினார். ஈரான் – ஈராக் போர் (1980–1988) மற்றும் குவைத் போர் (1991) நடந்த காலங்களிலும் அதிகாரத்தை தன் கைப்படியில் வைத்திருந்தார். இக்காலகட்டங்களில் ஈராக் மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்ததோடு அவர்களின் மனித உரிமைகளுக்கும் பங்கம் ஏற்பட்டது. சதாமின் அரசு, விடுதலை அல்லது தன்னாட்சியை வலியுறுத்திய, இனம் அல்லது சமயம் சார் இயக்கங்களை மட்டுப்படுத்தியது.

ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டாளிகள் இணைந்து மேற்கொண்ட 2003 ஈராக் போருக்கு பிறகு சதாமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. டிசம்பர் 13, 2003 அன்று திக்ரித்துக்கு வெளியே உள்ள பாதாள அறை ஒன்றில் ஒளிந்திருந்த சதாமை அமெரிக்கப் படையினர் கைது செய்தனர். பல மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாக இடைக்கால ஈராக் அரசு அமைத்திருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சதாம் விசாரிக்கப்பட்டார். நவம்பர் 5, 2006 இல் அவருக்கு தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

டிசம்பர் 26, 2006 இல் சதாமின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. டிசம்பர் 30, 2006 உள்ளூர் நேரம் 06:05 மணிக்கு அவர் தூக்கிலிடப்பட்டார்.

]]>
dinamani, on this day, memeories, iraq, sadam hussain, birthday http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/27/w600X390/sadam_hussain.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/apr/28/28041937-இராக்-முன்னாள்-அதிபர்-சதாம்-ஹுசைன்-பிறந்த-தினம்-இன்று-2691990.html
2691412 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 27.04.1791:  தந்தி அனுப்புவதற்கான சங்கேத மொழியை உருவாக்கிய சாமுவேல் எஃப்.பி. மோர்ஸ் பிறந்த தினம் இன்று! DIN DIN Thursday, April 27, 2017 12:00 AM +0530  

1844ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் நாள் முதல் தந்தியை, சாமுவேல் எஃப்.பி. மோர்ஸ் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யிலிருந்து பால்டிமோருக்கு சோதனை முறையில் அனுப்பினார். இவர்தான் தந்தி அனுப்புவதற்கான சங்கேத மொழியை உருவாக்கியவர். அதனால்தான் அந்த மொழிக்கே மோர்ஸ் கோட் (MORSE CODE) என்று பெயர்.

ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு குறியீடு இருக்கும். அந்தக் குறியீட்டை மோர்ஸ் பலகையில் (morse key) அழுத்தி மறுமுனைக்குப் புரிய வைப்பார்கள். அதனை அங்குள்ளவர் புரிந்துகொண்டு செய்தியை எழுதிக்கொள்வார். அந்தச் செய்தி ஒரு தாளில் எழுதப்பட்டு சம்பந்தப்பட்டவருக்குக் கொடுக்கப்படும். இதற்கெனப் பயிற்சி பெற்றவர்களே தந்தி அலுவலகத்தில் பணியில் அமர்த்தப்படுவார்கள். மோர்ஸ் பலகை இயந்திரத்தில் கட்..கடா..கட்... என்று எழுப்பப்படும் ஓசையிலேயே செய்திகள் புரிந்து கொள்ளப்படும்.

தொலைப்பேசியை கிரஹாம் பெல் கண்டுபிடிப்பதற்கு முன்பு வரை தந்தி சாதனம்தான் உலகின் தகவல் தொடர்புக் கருவியாக இருந்தது. அதாவது, புறாக்களின் கால்களில் தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருந்த காலத்திற்கு அடுத்தபடியாக, தகவல் அனுப்பும் முதல் அறிவியல் சாதனம் தந்தி அனுப்பும் கருவிதான்.

]]>
dinamani, on this day, meemories, telegram, morse code, samuel morse http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/26/w600X390/morse.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/apr/27/27041791--தந்தி-அனுப்புவதற்கான-சங்கேத-மொழியை-உருவாக்கிய-சாமுவேல்-எஃப்பி-மோர்ஸ்-பிறந்த-தினம்-இன்-2691412.html
2690856 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 26.04.1762: சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகள் பிறந்த தினம் இன்று! DIN DIN Wednesday, April 26, 2017 12:00 AM +0530  

சியாமா சாஸ்திரிகள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவாரூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் வெங்கடசுப்ரமணிய சர்மா என்பதாகும். "சியாம கிருஷ்ணா" செல்லப்பெயரே இசை உலகில் நிலைத்து விட்டது. தெய்வப்புலமை பெற்ற வாக்கேயக்காரரென எல்லோராலும் மதிக்கப்பட்டார். ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் இவர்பால் மிக்க அன்பு கொண்டிருந்தார்.

சியாம கிருஷ்ணன் இளமை முதல் சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் மிக்க ஆர்வம் கொண்டிருந்தார். அதனால் இவர் அம் மொழிகளில் பெரும் புலமை பெற்றார். பாடல்கள் இயற்றும் ஆற்றல் பெற்றார்.

இவர் ஆரம்பத்தில் தமது மாமனாரிடம் இசை பயின்றார். பின்னர் சங்கீத சுவாமிகள் என்பவரைக் குருவாகக் கொண்டு சங்கீத நுட்பங்களையும் தாள சாஸ்திர மர்மங்களையும் சங்கீத நடை பேதங்களின் கிரமங்களையும் நன்கு அறிந்து கொண்டார். சங்கீத சுவாமிகள், சியாமா சாஸ்திரிகளுக்கு இசை நுட்பங்களைப் போதித்ததோடு நில்லாது அரிய இசைச் சுவடி ஒன்றையும் கொடுத்துதவினார்.

சங்கீத சாஸ்திர நுட்பங்களை நன்குணர்ந்த சியாமா சாஸ்திரிகள் இளமையிலேயே உருப்படிகளை இயற்ற ஆரம்பித்தார். முதலில் சமஸ்கிருதத்திலும் பின்னர் தெலுங்கிலும் கிருதிகளை இயற்றினார். சில உருப்படிகளை தமிழில் செய்தார்.

இசை நுணுக்கம் தெரிந்தவர்களே இவரது பாடல்களை நன்கு பாட முடியும். இவரது பாடல்களைக் கதலி ரசத்திற்கு ஒப்பிடுவர். ஏறத்தாழ 300 கிருதிகளை இவர் இயற்றியுள்ளார். அபூர்வமான இராகங்களை மாஞ்சி, கல்கட, கர்நாடக காபி, சிந்தமணி போன்றவற்றிலும் கிருதிகளைச் செய்துள்ளார்

]]>
dinamani, on this day, memories, carnatic music, trinity, shyama sasthirigal http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/25/w600X390/syama_sasthirigal.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/apr/26/26041762-சங்கீத-மும்மூர்த்திகளில்-ஒருவரான-சியாமா-சாஸ்திரிகள்-பிறந்த-தினம்-இன்று-2690856.html
2690857 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 26.04.1762: சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகள் பிறந்த தினம் இன்று! DIN DIN Wednesday, April 26, 2017 12:00 AM +0530  

சியாமா சாஸ்திரிகள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவாரூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் வெங்கடசுப்ரமணிய சர்மா என்பதாகும். "சியாம கிருஷ்ணா" செல்லப்பெயரே இசை உலகில் நிலைத்து விட்டது. தெய்வப்புலமை பெற்ற வாக்கேயக்காரரென எல்லோராலும் மதிக்கப்பட்டார். ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் இவர்பால் மிக்க அன்பு கொண்டிருந்தார்.

சியாம கிருஷ்ணன் இளமை முதல் சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் மிக்க ஆர்வம் கொண்டிருந்தார். அதனால் இவர் அம் மொழிகளில் பெரும் புலமை பெற்றார். பாடல்கள் இயற்றும் ஆற்றல் பெற்றார்.

இவர் ஆரம்பத்தில் தமது மாமனாரிடம் இசை பயின்றார். பின்னர் சங்கீத சுவாமிகள் என்பவரைக் குருவாகக் கொண்டு சங்கீத நுட்பங்களையும் தாள சாஸ்திர மர்மங்களையும் சங்கீத நடை பேதங்களின் கிரமங்களையும் நன்கு அறிந்து கொண்டார். சங்கீத சுவாமிகள், சியாமா சாஸ்திரிகளுக்கு இசை நுட்பங்களைப் போதித்ததோடு நில்லாது அரிய இசைச் சுவடி ஒன்றையும் கொடுத்துதவினார்.

சங்கீத சாஸ்திர நுட்பங்களை நன்குணர்ந்த சியாமா சாஸ்திரிகள் இளமையிலேயே உருப்படிகளை இயற்ற ஆரம்பித்தார். முதலில் சமஸ்கிருதத்திலும் பின்னர் தெலுங்கிலும் கிருதிகளை இயற்றினார். சில உருப்படிகளை தமிழில் செய்தார்.

இசை நுணுக்கம் தெரிந்தவர்களே இவரது பாடல்களை நன்கு பாட முடியும். இவரது பாடல்களைக் கதலி ரசத்திற்கு ஒப்பிடுவர். ஏறத்தாழ 300 கிருதிகளை இவர் இயற்றியுள்ளார். அபூர்வமான இராகங்களை மாஞ்சி, கல்கட, கர்நாடக காபி, சிந்தமணி போன்றவற்றிலும் கிருதிகளைச் செய்துள்ளார்

]]>
dinamni, on this day, memeories, carnatic music, trinity, shyama sasthirigal, birthday http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/25/w600X390/syama_sasthirigal1.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/apr/26/26041762-சங்கீத-மும்மூர்த்திகளில்-ஒருவரான-சியாமா-சாஸ்திரிகள்-பிறந்த-தினம்-இன்று-2690857.html
2690232 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 25.04.1874: வானொலியைக் கண்டுபிடித்த மார்க்கோனியின் பிறந்த தினம் இன்று! DIN DIN Tuesday, April 25, 2017 12:00 AM +0530  

மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி ஏப்ரல் 25, 1874 அன்று பிறந்தார். வால்வுகளுள்ள வானொலியைக் கண்டு பிடித்தவர். 'நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வானொலியின் தந்தை" எனப்படுபவர். ' கம்பியற்ற தகவல்தொடர்பு முறை' மற்றும் 'மார்க்கோனி விதி' ஆகியவற்றை உருவாக்கியவர்.

அவரது இந்த சிறப்புமிகு கண்டுபிடிப்பிற்காக 1909-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார். இவர் ஒரு தொழில் முனைவர், தொழிலதிபர் ஆவார்.

இவரே 1897 ல் 'மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவனர்', 'வானொலி'மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவரம் ஆவார்.

உடல்நலக் குறைபாடு காரணமாக இவர் 20.07.1937 அன்று மரணமடைந்தார்.

]]>
dinamani, on this day, memeories, italy, radio, marchoni, birthday http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/24/w600X390/marconi.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/apr/25/25041874-வானொலியைக்-கண்டுபிடித்த-மார்க்கோனியின்-பிறந்த-தினம்-இன்று-2690232.html
2689699 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 24.04.2005: உலகின் முதல் குளோனிங் நாயான ஸ்னப்பி உருவாக்கப்பட்ட தினம் இன்று! DIN DIN Sunday, April 23, 2017 04:50 PM +0530  

தென் கொரியாவில் இருக்கும் சியோல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானிகள் குழுவானது   `குளோனிங்' மூலம் உருவாக்கப்பட்ட `ஸ்னப்பி' என்ற பெயருள்ள உலகின் முதல் நாயை இதே நாளில் உருவாக்கி சாதனை படைத்தார்கள்.

அதற்கும் மேலாக, தற்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட நாய்க்குட்டிகளையும் `குளோனிங்' முறையில் உருவாக்கி உலகையே வியக்க வைத்திருக்கிறார்கள்.

]]>
dinamani, on this day, memeories, soth korea, cloning, dog, snuffy http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/23/w600X390/snuffy.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/apr/23/24042005-உலகின்-முதல்-குளோனிங்-நாயான-ஸ்னப்பி-உருவாக்கப்பட்ட-தினம்-இன்று-2689699.html
2689684 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... ஏப்ரல் 23 - உலக புத்தக தினம் இன்று DIN DIN Sunday, April 23, 2017 11:28 AM +0530  

பாரிஸ் நகரில் 1995 ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படது. அத்தீர்மானம் பின் வருமாறு:

"அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்"

இதன்படி உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவே இந்நாள் தெரிவு செய்யப்பட்டதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. 1616 ஆம் ஆண்டு இந்நாளிலேயே மிகுவேல் டி செர்வண்டேஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர், இன்கா டி லா வேகா (Inca Garcilaso de la Vega) ஆகியோர் காலமானார்கள். இதே நாள் மொரிஸ் ட்ருவோன், ஹோல்டோர் லக்ஸ்னெஸ், விளாமிடிர் நபோகோவ், ஜோசெப் பிளா, மனுவேல் மெஜியா வலேஜோ ஆகிய எழுத்தாளர்களினதும் பிறந்த நாளாகவோ அல்லது இறந்த நாளாகவோ அமைகிறது.

இந்நாளைக் கொண்டாடும் எண்ணம் முதன் முதலாக ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில் உருவானது. இவர்கள் ஏப்ரல் 23 ஆம் நாளை சென். ஜோர்ஜின் நாளாகக் கொண்டாடினர். இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகத்தையும், ரோஜா மலரையும் தம்மிடையே பரிசாகப் பரிமாறிக் கொள்வார்கள்.

உலகப் புத்தக தினம் என்று ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து சர்வதேச பதிப்பாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டு ஸ்பெயின் நாட்டு அரசால் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. ரஷ்யப் படைப்பாளிகள் புத்தக உரிமைக்கும் (காப்புரிமை) முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று கருதியதால் ஏப்ரல் 23 உலகப் புத்தகம் மற்றும் புத்தக உரிமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

]]>
dinamani, on this day, memories, world book day, UNESCO http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/23/w600X390/world_book_day.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/apr/23/ஏப்ரல்-23---உலக-புத்தக-தினம்-இன்று-2689684.html
2688550 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 22.04.1870: ரஷ்யாவின் கம்யூனிஷத் தலைவர் லெனின் பிறந்த தினம் இன்று! DIN DIN Saturday, April 22, 2017 12:00 AM +0530 விளாதிமிர் இலீச் லெனின் ஒரு ரஷ்யப் புரட்சியாளரும், போல்செவிக் கட்சியின் தலைவருமாவார். சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபராக இருந்தவர். பின்னாளில் ரஷ்ய அதிபரான ஜோசஃப் ஸ்டாலினால் மார்க்சியம்-லெனினியம் என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினியம் என்ற அரசியல் கோட்பாட்டின் நிறுவுனரும் ஆவார்.

விளாடிமிர் லெனின் 22 ஏப்ரல் 1870ல் ரஷ்யாவில் வால்கா நதியின் கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் எனும் நகரத்தில் இல்யா உல்யனாவ் - மாயா உல்யானவ் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் விளாடிமிர் இலீச் உல்யானவ் என்பதாகும். அலெக்ஸாண்டர், டிமிட்ரி என்ற சகோதரர்களும், ஆனர், மரியா, ஆல்கா என்ற சகோதரிகளும் லெனினுக்கு இருந்தனர். இல்யா உல்யனாவ் மாவட்ட கல்வி அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

ரஷ்யாவில் பொதுவுடமை ஆட்சியை நிறுவுவதற்குக் காரணமாக இருந்த முக்கிய அரசியல் தலைவர் லெனின் ஆவார். இவருடைய இயற்பெயர் விளாடிமிர் இலியீச் உலியானாவ் என்பதாகும். ஆனால், இவருடைய புனை பெயரான "லெனின்" என்ற பெயரிலேயே இவரை உலகம் நன்கறியும். பொதுவுடமைக் கொள்கையை நிறுவிய உலகப் புகழ்பெற்ற கார்ல் மார்க்ஸ் என்பாரின் ஆர்வம் மிக்க சீடரான லெனின், மார்க்ஸ் அவ்வப்போது கோடி காட்டிய கொள்கைகளை நடைமுறையில் தீவிரமாகச் செயற்படுத்தினார் லெனின் உருவாக்கிய பொதுவுடமைக் கொள்கை வரலாற்றில் மிகுந்த செல்வாக்கு மிக்க மாந்தர்களுள் ஒருவராக அவர் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார்.

]]>
dinamani, on this day, memeories, russia, lenin, birthday, communism http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/21/w600X390/lenin.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/apr/22/22041870-ரஷ்யாவின்-கம்யூனிஷத்-தலைவர்-லெனின்-பிறந்த-தினம்-இன்று-2688550.html
2688522 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 21.04.1945: பிரான்சில் முதன்முறையாக பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்ட தினம் இன்று DIN DIN Friday, April 21, 2017 02:44 PM +0530 பெண்கள் வாக்குரிமை என்பது தேர்தல்களில் பெண்கள் வாக்கு அளிக்கவும், பொதுப்பணிப் பதவிகளில் பங்கேற்க வாக்கெடுப்புகள் வழியாக பெண்கள் தேர்ந்தெடுக்கப்படவும் கொண்டுள்ள உரிமையைக் குறிக்கிறது.

இன்றிலிருந்து சரியாக 75 ஆண்டுகளுக்கு முன்னால் பிரான்சில் பெண்களுக்கு முதல் முறையாக வாக்குரிமை வழங்கப்பட்ட நாள் இதுவாகும். 

]]>
dinamani, on this day, memories, france, paris, women, voting rights http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/21/w600X390/voting.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/apr/21/21041945-பிரான்சில்-முதன்முறையாக-பெண்களுக்கு-வாக்குரிமை-அளிக்கப்பட்ட-தினம்-இன்று-2688522.html
2687833 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 20.04.1889: ஜெர்மனியின் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் பிறந்த தினம் இன்று! DIN DIN Thursday, April 20, 2017 11:13 AM +0530  

அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கியவர். அவர் 1933-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் சான்சலராக நியமிக்கப்பட்டார். பின்பு 1934-ஆம் ஆண்டு, ஜெர்மனி நாட்டின் தலைவரானார்.1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ந் தேதியன்று தற்கொலை செய்துக்கொண்டது வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார்.

ஜெர்மனி நாட்டின் ஃபியூரர் என அழைக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் இட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றது. அப்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று பதிவெடுகள் கூறுகின்றது. அவரோடு அவர் மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகின்றது.

]]>
dinamani, on this day, memeories, germany, adolf hitler, birthday http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/20/w600X390/hitler.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/apr/20/20041889-ஜெர்மனியின்-சர்வாதிகாரி-அடால்ப்-ஹிட்லர்-பிறந்த-தினம்-இன்று-2687833.html
2686633 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 19.04.1975: இந்தியாவின் முதல் செயற்கை கோளான ஆர்யபட்டா விண்ணில் ஏவப்பட்ட தினம் இன்று! DIN DIN Wednesday, April 19, 2017 12:00 AM +0530  

ஆரியபட்டா இந்தியாவின் முதல் செயற்கைகோள் ஆகும். இந்தியாவில் வானவியலில் சிறந்து விளங்கிய ஆரியபட்டரின் பெயரை இந்த முதல் செயற்கை கோளுக்கு அனுப்பினர்.

ஆரியபட்டா செயற்கைக் கோளானது, சோவியத் யூனியன் உதவியுடன் தயாரிக்கப்பட்டது. இதன் எடை 360கிகி ஆகும். சோவியத் ரஷ்யாவின் ராக்கெட் மூலம், கபூஸ்டியன்யார் ஏவுதளத்தில் இருந்து 1975-ல் ஏப்ரல் 19ஆம் தேதி ஏவப்பட்டது.

பூமியில் இருந்து சுமார் 619 கிமீ உயரத்தில் பறந்து வந்தது இந்த ஆரியபட்டா. எனினும், விண்வெளியில் இது 5 நாட்கள் மட்டுமே செயல்பட்டது. செயற்கைகோளுக்கு மின்சாரத்தை தயாரித்து அனுப்பும் பகுதி பழுதானதால், இந்த செயற்கைக் கோள் தொடர்ந்து செயல்படாமல் போனது.

பிறகு 1979ஆம் ஆண்டு மீண்டும் ரஷ்யாவின் உதவியுடன் பாஸ்கரா என்ற செயற்கைக் கோளை அனுப்பியது. அதன்பிறகு 1980-ல் இருந்து இந்தியா சுயமாக செயற்கைக் கோளை ஏவ ஆரம்பித்தது.

]]>
dinamani, on this day, memeories, satelite, aryabhata, india, russia http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/18/w600X390/aryabhata.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/apr/19/19041975-இந்தியாவின்-முதல்-செயற்கை-கோளான-ஆர்யபட்டா-விண்ணில்-ஏவப்பட்ட-தினம்-இன்று-2686633.html
2686045 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... ஏப்ரல் 18: உலக பாரம்பரிய தினம் DIN DIN Tuesday, April 18, 2017 12:00 AM +0530  

உலகில் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும் தங்களது பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை காப்பதற்காக ஏப்ரல் 18 ம் தேதியை உலக பாரம்பரிய தினமாக (World Heritage Day) கொண்டாடப்படுகிறது.

1982 ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18ஆம் நாள் சர்வதேச நினைவிடங்கள் (International Day for Monuments and Sites) தினமாக கொண்டாட பரிந்துரைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் இதனை அங்கீகரித்தது. இதுவே பின்னாளில் உலக பாரம்பரிய தினமாக மாறியது.

இந்த நாளில் கட்டிட பெருமைகளைக் கண்காட்சிகள் அமைத்து விவரிப்பது; கட்டணம் ஏதுமில்லாமல் இந்த ஒரு நாள் நினைவிடம், அரும் பொருளகம்(Monument), தலங்களுக்கு மக்களை அனுமதிப்பது; இந்த நாள் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரிவிப்பது; பொது இடங்களில் விவாதங்கள் நடத்துவது

புத்தகங்கள், தபால் தலை முத்திரைகள்(Stamps), போன்றவற்றை அச்சிடுவது; பாரம்பரியத்தை காப்பாற்றியவருக்கு சிறப்பு பரிசுகள் வழங்குவது; பள்ளி மாணவர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் நிகழ்ச்சிகள் நடத்துவது உள்ளிட்ட செயல்களை செய்யலாம் என்று அந்த மாநாடு பரிந்துரைத்தது.

]]>
dinamani, on this day, memeories, world heritage day, UNESCO http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/17/w600X390/world_heritage_day.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/apr/18/ஏப்ரல்-18-உலக-பாரம்பரிய-தினம்-2686045.html
2683905 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 17.04.1756: விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த தினம் இன்று DIN DIN Monday, April 17, 2017 03:20 PM +0530  

தீரன் சின்னமலை தமிழகத்திலிருந்து செயல்பட்ட இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தமிழகத்தில் ஆங்கிலேயே கம்பெனி ஆட்சியை எதிர்த்து போரிட்டவர்களுள் ஒருவர். கொங்கு நாட்டில் ஓடாநிலை என்னுமிடத்தில் கோட்டை கட்டி ஆண்டவர்.

இன்றைய ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் வட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தார். அவரின் தந்தையார் பெயர் ரத்னசாமி கவுண்டர். தாயார் பெயர் பெரியாத்தா இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர்.

இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த கிழக்கிந்தியக் கம்பனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்று சேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார்.

போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர்.

]]>
dinamani , on this day , birthday, memeories, theeran sinnamalai http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/17/w600X390/dheeran.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/apr/17/17041756-விடுதலைப்-போராட்ட-வீரர்-தீரன்-சின்னமலை-பிறந்த-தினம்-இன்று-2683905.html
2683903 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 16.04.1889: உலகப்புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் பிறந்த நாள் இன்று! DIN DIN Sunday, April 16, 2017 12:00 AM +0530  

சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் ஐம்பது சாப்ப்ளினின் இயற்பெயர் ஆகும். இவர் ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன.

சாப்ளின் ஐந்து வயதிலேயே நடிக்கத் தொடங்கி விட்டார். முதன் முதலில் 1894ஆம் ஆண்டில் மியூசிக் ஹாலில் தனது தாய்க்குப் பதிலாக ஒரு வேடத்தில் நடித்தார். சிறுவனாக பல நாட்கள் உடல் நலக் குறைவால் படுத்த படுக்கையாக இருந்தபொழுது, இரவுகளில் அவரது தாய் சன்னல் ஓரம் அமர்ந்து வெளியில் நடக்கும் நிகழ்வுகளை நடித்துக் காட்டுவார்.

சாப்ளினுக்கு பத்து வயதாக இருந்த பொழுது சிட்னி இலண்டன் ஹிப்போட்ரோமில் சின்ட்ரெல்லா பாண்டோமைமில் ஒரு பூனையாக, நகைச்சுவையான பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை வாங்கித் தந்தார்

தயாரிப்பாளர் மாக் செனட் சாப்ளினின் திறமையைக் கவனித்து அவரது நிறுவனமான கீஸ்டோன் திரைப்பட நிறுவனத்தில் (Keystone Film Company) சேர்த்துக் கொண்டார். முதலில் சாப்ளினுக்கு கீஸ்டோன் நடிப்பு முறைக்கு தன்னை மாற்றிக் கொள்வது சற்று கடினமாக இருந்தது. ஆனால் மிக விரைவில் தன்னைப் பழக்கிக் கொண்டு கீஸ்டோனின் சிறந்த கலைஞராக வளர்ந்தார்.

]]>
dinamani, on this day, memeories, charlie chaplin, birthday http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/13/w600X390/chaplin.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/apr/16/16041889-உலகப்புகழ்-பெற்ற-நகைச்சுவை-நடிகர்-சார்லி-சாப்ளின்-பிறந்த-நாள்-இன்று-2683903.html
2683902 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 15.04.1452: இத்தாலியச் சேர்ந்த பிரபல கலைஞர் லியொனார்டோ டா வின்சி பிறந்த தினம் இன்று! DIN DIN Saturday, April 15, 2017 12:00 AM +0530  

லியொனார்டோ டா வின்சி  ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞரும், கண்டுபிடிப்பாளரும், பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும் ஆவார். ஒரு பல்துறை மேதையாகக் கருதப்பட்டவர்.

குறிப்பாக இவரது, சிறப்பான ஒவியங்களான "கடைசி விருந்து" (The Last Supper), "மோனா லிசா" (Mona Lisa) ஆகியவை உலகப் புகழ் பெற்றவை.

தன காலத்திற்கு உன்னதாகவே செய்யப்பட்ட பல கண்டுபிடிப்புக்கள் தொடர்பிலும் இவர் பெயர் பெற்றவர். எனினும் இவரது காலத்தில் இவை எதுவும் வெளியிடப்படவில்லை. இவர் தனிக்க முடியாத ஆர்வம் கொண்டவராகவும் தீவிர கற்பனை வளம் கொண்டவராகவும் அறியப்படுகிரார்

உலகில் இது வரை வாழ்ந்த மிகச்சிறந்த ஒவியர்களில் ஒருவராகவும், பண்முக ஆற்றல் கொண்டவராகவும் அறியப்படுகிறார்.

]]>
dinamani, on this day, memeories, italy, leonardo da vinci, birthday http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/13/w600X390/da_vinci.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/apr/15/15041452-இத்தாலியச்-சேர்ந்த-பிரபல-கலைஞர்-லியொனார்டோ-டா-வின்சி-பிறந்த-தினம்-இன்று-2683902.html
2683896 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 14.04.1891: பாபா சாகேப் அம்பேத்கர் பிறந்த தினம் இன்று! DIN DIN Friday, April 14, 2017 12:00 AM +0530  

பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 14 ஏப்ரல், 1891 அன்று பிறந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். 'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்டவர் எனப்பட்ட தலித் மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்.

அம்பேத்கர் உடல் நலக் குறைவால் 6 டிசம்பர், 1956 அன்று மரணமடைந்தவர்.    இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990 இல் இவருக்கு வழங்கப்பட்டது

]]>
dinamani, on this day, memories, ambedkar, birthday http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/13/w600X390/b--r--ambedkar.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/apr/14/14041891-பாபா-சாகேப்-அம்பேத்கர்-பிறந்த-தினம்-இன்று-2683896.html
2683331 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 13.04.1919: ஜாலியன்வாலா பாக் படுகொலை நிகழ்ந்த தினம் இன்று! DIN DIN Thursday, April 13, 2017 12:00 AM +0530  

ஜாலியன்வாலா பாக் படுகொலை (Jallianwala Bagh Massacre), அல்லது அமிர்தசரஸ் படுகொலை என்பது வட இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 இல் நிகழ்ந்த துக்க சம்பவமாகும்.

ரெஜினால்ட் டையர் என்ற இராணுவ அதிகாரியின் தலைமையில் ஆங்கிலேய இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட பீரங்கிச் சூட்டு நிகழ்வை இது குறிக்கிறது. இந்நிகழ்வில் பெண்கள், சிறுவர்கள் நூற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் நீடித்த இச்சூட்டு நிகழ்வில் மொத்தம் 1650 தடவைகள் அல்லது ஒரு சிப்பாய்க்கு 33 சூடுகள் என்ற முறையில் குண்டுகள் சுடப்பட்டன.

ஆங்கிலேய அரசின் தகவல்களின் படி மொத்தம் 379 பேர் இந்நிகழ்வில் இறந்தனர். ஆனாலும் தனியார்களின் தகவல்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.காந்தியடிகளால் அமைக்கப்பட்ட இந்தியக் குழுவின் கணக்கெடுப்பின்படி ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

]]>
dinamani, on this day, memories, punjab, jalian wala baugh, masscare, brotish, shoot out http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/12/w600X390/jallianwala_bagh_massacre.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/apr/13/13041919-ஜாலியன்வாலா-பாக்-படுகொலை-நிகழ்ந்த-தினம்-இன்று-2683331.html
2682723 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 12.04.1961: ரஷ்யாவின் யூரி ககாரின் விண்வெளியில் முதன்முறையாக பறந்த தினம் இன்று! DIN DIN Wednesday, April 12, 2017 12:00 AM +0530  

1960 இல் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் ஒன்றினை சோவியத் ரக்ஷய செய்லபடுத்தியது. அந்த திட்டத்தில் இணந்துகொண்ட 20 விண்வெளி வீரர்களில் யூரி ககாரினும் ஒருவர். இவர்களுக்கு அங்கு உடலியல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் மிகவும் கடுமையான பயிற்சி கொடுக்கப்பட்டது.

கடும் பயிற்சிக்குப் பின்னர் ககாரின், கெர்மன் டீட்டோவ் ஆகிய இருவரும் விண்வெளிப் பயணத்திற்குத் தெரிவானார்கள். இவர்களில் ககாரின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீடத்தால் விண்வெளியில் பயணிக்கும் முதல் மனிதராக அனுப்புவதற்காகத் தெரிவு செய்யப்பட்டார்.

ககாரின் 1961 ஏப்ரல் 12 இல் வஸ்தோக் 3KA-2 (வஸ்தோக் 1) விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெயரைப் பெற்றுக் கொண்டார். விண்கலத்தில் முதன் முதல் பூமியை ஒரு முறை வலம் வந்தார். அவரது விண்கலம் 1:48 மணி நேரம் பறந்து, பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வந்தது.

]]>
dinamani, on this day, memeories, russia, space mission, yuri gagaarin http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/11/w600X390/yuri_gagarin.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/apr/12/12041961-ரஷ்யாவின்-யூரி-ககாரின்-விண்வெளியில்-முதன்முறையாக-பறந்த-தினம்-இன்று-2682723.html
2682185 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 11.04.1869: காந்தியடிகளின் துணைவியார் கஸ்தூரிபா காந்தி பிறந்த தினம் இன்று! DIN DIN Tuesday, April 11, 2017 12:00 AM +0530  

கஸ்தூரிபா குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பெரும்வணிகர் குடும்பத்தில் கோகுல்தாஸ் கபாடியாவின் மகளாக 11.04.1869 ல் பிறந்தார். இவரது தாய் மொழி குஜராத்தி.

1883-ல் இவர் தனது 13ஆம் வயதில் தம் வயதேயான, குடும்ப உறவினரான மோகன்தாஸ் காந்தியை மணந்தார். திருமணத்தின் போது எழுதப்படிக்கத் தெரியாத இவருக்கு இவருடைய கணவர் கல்வி கற்பித்தார். கணவர் மேல்படிப்பிற்காக 1888ல் இலண்டன் சென்றபோது இந்தியாவிலேயே தங்கியிருந்தார்.

பின்னர் இந்தியா திரும்பிய காந்தி பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டதால் குடும்பப் பொறுப்பு முழுவதும் கஸ்தூரிபா கவனித்துக் கொண்டார். இத் தம்பதியினருக்கு, ஹரிலால் (1888), மணிலால் (1892), ராமதாஸ் (1897), தேவதாஸ் (1900) ஆகிய நான்கு புதல்வர்கள் பிறந்தனர்.

]]>
dinamani, on this day, memeories, gandhi, kasturba http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/10/w600X390/kasturba-gandhi.png http://www.dinamani.com/specials/indha-naalil/2017/apr/11/11041869-காந்தியடிகளின்-துணைவியார்-கஸ்தூரிபா-காந்தி-பிறந்த-தினம்-இன்று-2682185.html
2681653 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 10.04.1912: டைட்டானிக் கப்பல் தனது முதலும் கடைசியுமான கடற்பயணத்தை துவக்கிய நாள் இன்று ! DIN DIN Monday, April 10, 2017 12:00 AM +0530  

ஆர்எம்எஸ் டைட்டானிக் (RMS Titanic) என்பது ஒரு ஆடம்பர பயணிகள் கப்பல் ஆகும். இது வட அயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் உருவானது. 1912 இல் முதன் முதலாகச் சேவைக்கு விடப்பட்டபோது இதுவே உலகின் மிகப் பெரிய பயணிகள் நீராவிக் கப்பலாகும்.

டைட்டானிக் தனது முதற் பயணத்தை இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து நியூயோர்க் நகரை நோக்கி புதன்கிழமை, ஏப்ரல் 10, 1912 இல் கேப்டன் எட்வர்ட் சுமித் தலைமையில் தொடங்கியது.

இரண்டு நாட்களில்  ஏப்ரல் 14, 1912 இல் இரவு 11:40 மணிக்கு வட அட்லாண்ட்டிக் பெருங்கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதியது; மோதி 2 மணி 40 நிமிடங்களில் ஏப்ரல் 15, 1912 இல் முற்றாக மூழ்கியது.

]]>
dinamani, on this day, memories, titanic, UK, maiden voyeage http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/9/w600X390/titanic.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/apr/10/10041912-டைட்டானிக்-கப்பல்-தனது-முதலும்-கடைசியுமான-கடற்பயணத்தை-துவக்கிய-நாள்-இன்று--2681653.html
2680522 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 09.04.1967: உலகின் முதல் போயிங் 737 விமானம் பறந்த தினம் இன்று! DIN DIN Sunday, April 9, 2017 12:00 AM +0530  

போயிங் 737 (Boeing 737) உலகின் மிகப் பிரபலமான பயணிகள் விமானமாகும். போயிங் நிறுவனத்தால் 1967 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாகத் தயாரிக்கப்படும் இவ்வகை விமானங்கள் இதுவரை 5,000 க்கும் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

இவ்வகை விமானங்களில் ஏறத்தாழ 1,250 வகைகள் உள்ளன. சராசரியாக ஒவ்வொரு ஐந்தாவது நிமிடத்திலும் ஒரு போயிங் 737 விமானம் பறக்கத் தொடங்குகிறது அல்லது தரையிறங்குகிறது என்று கணிப்பிடப்பட்டுள்ளது.

]]>
dinmani, on this day, memeories, boeing 737, USA, test fly http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/7/w600X390/boeing_737.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/apr/09/09041967-உலகின்-முதல்-போயிங்-737-விமானம்-பறந்த-தினம்-இன்று-2680522.html
2680519 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 08.04.1938: ஐ.ந சபையின் முன்னாள் பொது செயலாளர் பிறந்த தினம் இன்று! DIN DIN Friday, April 7, 2017 09:15 PM +0530  

கோபி அன்னான் கானாவைச் சேர்ந்தவர். ஐக்கிய நாடுகள் அவையின் ஏழாவது செயலாளராக பதவி வகித்தவர்.  ஜனவரி 1, 1997 இல் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கோபி அன்னான் டிசம்பர் 31, 2006 அன்று ஓய்வு பெற்றார். 2001 இல் அன்னான் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கு கூட்டாக "சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைதியான உலகத்திற்காக உழைத்ததற்காக " அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.

பின்னர் பிப்ரவரி 23, 2012 முதல் 31 ஆகஸ்ட் 2012 வரை, சிரியாவிற்கான ஐ.நா. அரபு லீக் கூட்டுச் சிறப்பு பிரதிநிதியாக இருந்தார் .ஆனால் இது குறித்த செயல் திட்டங்களுக்கு ஐ.நா.வின் பற்றாக்குறையான பங்களிப்பு குறித்து சலிப்படைந்த கோபி அன்னான்,  சிறப்பு பிரதிநிதி பதவியில் இருந்து விலகினார்.

]]>
on this day , memeories, dinamni, UN, ghana, gopi annan, secretary general http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/7/w600X390/gopi_annaan.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/apr/08/08041938-ஐந-சபையின்-முன்னாள்-பொது-செயலாளர்-கோபி-அன்னான்-பிறந்த-தினம்-இன்று-2680519.html
2679853 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... ஏப்ரல் 7 - உலக சுகாதார தினம் DIN DIN Friday, April 7, 2017 12:00 AM +0530  

1948ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation) தொடங்கப்பட்டதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளை, உலக சுகாதார தினமாக கொண்டாடுகிறோம்.

உலகின் உள்ள அனைவருக்கும் முடிந்த வரை கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே உலக சுகாதார அமைப்பின் நோக்கமாகும்.

உலகநாடுகளைஒருங்கிணைத்து ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டதன் பின்னர் சுகாதார மற்றும்மருத்துவம் குறித்த விசேஷ நோக்கங்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதே உலக சுகாதார நிறுவனம் ஆகும்.

இது சுகாதாரம் தொடர்பிலான நிலைப்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டது. சர்வதேச ரீதியில் சுகாதாரம் தொடர்பான நிகழ்தகவுகளை வெற்றிகரமாக கொண்டு செல்வதே இந்த நிறுவனத்தின் குறிக்கோளாகும்.

]]>
dinamani, on this day, memories, Un, WHO, world health day http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/6/w600X390/world-health-day.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/apr/07/ஏப்ரல்-7---உலக-சுகாதார-தினம்-2679853.html
2679806 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 06.04.1930: மகாத்மா காந்தி தண்டியில் உப்புச்சத்தியாகிரகத்தை துவங்கிய தினம் இன்று!  DIN DIN Thursday, April 6, 2017 11:12 AM +0530  

உப்பு சத்தியாகிரகம் அல்லது தண்டி நடைப்பயணம் / யாத்திரை (Salt March) என்பது காலனிய இந்தியாவில் ஆங்கிலேயர் இந்தியர்கள் மீது விதித்த உப்பு வரியை அறவழியில் எதிர்க்கும் திட்டமிட்ட போராட்டமாகும்.

மார்ச்சு 12, 1930 இல் குஜராத் மாநிலத்திலுள்ள தண்டியில் தடையை மீறி உப்பெடுக்கும் நடைப்பயணமாகத் துவங்கியது. 1930 ஜனவரி 30 ஆம் நாள் இந்திய தேசிய காங்கிரசு அறிவித்த முழு விடுதலை என்ற விடுதலைப் பிரகடனத்திற்குப் பிறகு ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து அமைப்பு ரீதியாகச் செய்யப்பட்ட முதல் நடவடிக்கையாகும்.

காந்தி தனது சபர்மதி ஆசிரமத்திலிருந்து 23 நாள்கள் 240 மைல் தூரத்திலுள்ள தண்டிக்கு நடை பயணத்தை வழி நடத்தினார், உப்பை உற்பத்தி செய்வதற்கு விதித்த தடையை மீறி வழியில் அவருடன் இந்தியர்கள் பெருமளவு எண்ணிக்கையுடன் இணைந்தனர். ஏப்ரல் 6, 1930 இல் காந்தி தண்டியில் உப்புச் சட்டங்களை உடைத்தபோது, அது பேரளவில் சட்ட மறுப்பு இயக்கமாக இலட்சக்கணக்கான இந்தியர்களை ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடத் தூண்டியது.

]]>
dinamani, on this day, memories, british rule, gandhiji, salt march, hujarath, thandi http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/6/w600X390/salt_march.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/apr/06/06041930-மகாத்மா-காந்தி-தண்டியில்-உப்புச்சத்தியாகிரகத்தை-துவங்கிய-தினம்-இன்று-2679806.html
2678635 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 05.04.1946: முன்னாள் துணைப்பிரதமர் ஜகஜீவன் ராம் பிறந்த தினம் இன்று!  DIN DIN Wednesday, April 5, 2017 12:00 AM +0530 பாபு எனப் பிரியமாக அழைக்கப்படும் ஜகஜீவன் ராம் 1946-ல் பிஹார் மாநிலத்தில் போஜ்பூர் மாவட்டம் சந்தவா கிராமத்தில் சாமர் எனும் தலித் சமூகத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். குழந்தைப் பருவம் முதலே தீண்டாமையின் கோர முகத்தைப் பல தருணங்களில் எதிர்கொண்டவர். பின்னாளில் பிரதமராகும் வாய்ப்பு நான்கு முறை முறியடிக்கப்பட்டவர். ஆனால், 1977-ல் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் துணைப் பிரதமர் நிலைக்கு உயர்ந்தவர். மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்ட முன்வடிவக் குழுவில் உறுப்பினராகச் செயல்பட்டவர்

தனது 23 வயதில் காங்கிரஸில் இணைந்த ஜகஜீவன் ராம் காந்தியடிகளின் சத்தியாகிரகத்தை முழுவதுமாகப் பின்பற்றத் தொடங்கினார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல முறை சிறை சென்றார். 1950 முதல் அடுத்த 36 ஆண்டுகளுக்குச் சட்ட மன்ற உறுப்பினராகச் செயல்பட்டார். கோயில்களில் தாழ்த்தப்பட்டோர் நுழைந்து வழிபாடு நடத்தவும் பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும் உரிமைகோரிப் போராடினார். தலித் பிரதிநிதியாக பிஹார் மாகாண அரசுக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அரசியல் நிர்ணயச் சபையில் உறுப்பினராக இருந்து, சமூக நீதி அரசியல் சட்டத்தில் இடம் பெற அல்லும் பகலும் பாடுபட்டார். 1977 முதல் 1979 வரை இந்தியத் துணைப் பிரதமர் பொறுப்பு வகித்தார்.

]]>
dinamani, on this day, memeories, jaga jeevan ram, deputy prime minister, congress, birthday http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/4/w600X390/babu_jaga_jeevan_ram.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/apr/05/05041946-முன்னாள்-துணைப்பிரதமர்-ஜகஜீவன்-ராம்-பிறந்த-தினம்-இன்று-2678635.html
2677946 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 04.04.1975: மைக்ரோசாப்ட் நிறுவனம் துவங்கப்பட்ட தினம் இன்று! DIN DIN Tuesday, April 4, 2017 12:00 AM +0530  

மைக்ரோசாப்ட்  என்பது அமெரிக்காவை மையமாக கொண்டு செயல் படும் ஓர் பன்னாட்டு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது உலகின் மிகப் பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது.

கணினிக்குத் தேவையான பல வகை மென்பொருட்களை தயாரிப்பது, மேம்படுத்துவது, உரிமை மற்றும் ஆதரவு அளிப்பது போன்ற செயற்பாடுகளை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

வாசிங்டனில் உள்ள ரெட்மாண்ட் நகரத்தில் இதன் தலைமை இடம் உள்ளது. இதனை பில் கேட்சும் பவுல் ஆல்லெனும் சேர்ந்து ஏப்ரல் 4, 1975இல் நிறுவினர். வருமானத்தின் அளவுகொண்டு உலகின் மிகப்பெரும் மென்பொருள் ஆக்குனராக மைக்ரோசாப்ட் விளங்குகிறது.

உலகளவில் பங்குச்சந்தையில் மிகக் கூடுதலான மொத்தமதிப்பைக் கொண்டுள்ள நிறுவனமாகவும் இது விளங்குகிறது.]விண்டோஸ் இயக்குதளங்கள், மைக்ரோசாப்ட் ஆபிஸ் ஆகியவை இதன் முக்கிய உற்பத்தி பொருட்கள் ஆகும்.

]]>
dinamani, on this day, memeories, microsoft, bill gates, windows http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/3/w600X390/microsoft.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/apr/04/04041975-மைக்ரோசாப்ட்-நிறுவனம்-துவங்கப்பட்ட-தினம்-இன்று-2677946.html
2677343 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 03.04.1924: பிரபல ஹாலிவுட் நடிகர் மார்லன்  பிராண்டோ பிறந்த தினம் இன்று! DIN DIN Monday, April 3, 2017 12:00 AM +0530  

மார்லன் பிராண்டோ 03.04.1924 அன்று அமெரிக்காவின் நெப்ரஸ்காவில் பிறந்தவர்.  த காட்ஃபாதர், அப்போகலிப்ஸ் நவ், ஆன் த வாட்டர் பிரண்ட் உட்பட பல படங்களில் நடித்து உலகப் புகழ் பெற்றவர்.

இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இரு தடவை ஆஸ்கார் விருது வென்றார். ஒரு நடிகராக மட்டுமல்லாது, சமூக செயற்பாட்டாளராகவும் விளங்கினார்.அமெரிக்க திரைப்படத்துறை வரலாற்றின் மிக முக்கியமான நடிகர்களில் இவரும் ஒருவர் ஆவர்

இறுதியாக 01.07.2004 அன்று தன்னுடைய எண்பதவித்து வயதில் காலமானார்.

]]>
dinamnai, on this day, mmeories, hollywood, USA, marlon brando, god father http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/2/w600X390/marlon_brando.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/apr/03/03041924-பிரபல-ஹாலிவுட்-நடிகர்-மார்லன்--பிராண்டோ-பிறந்த-தினம்-இன்று-2677343.html
2676278 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... ஏப்ரல் 2: சர்வதேச ஆட்டிச விழிப்புணர்வு தினம் DIN DIN Sunday, April 2, 2017 12:00 AM +0530  

2007 ஆம் ஆண்டு முதல் ஐ.நா.வின் அறிவுறுத்தலின் பேரில் உலகம் முழுவதிலும் இந்த நாள் ஆட்டிச விழிப்புணரவு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆட்டிசம் ஏ.எஸ்.டி(ASD) என்று சுருக்கமாக சொல்லப்படுகிறது. இதன் முழுமையான பெயர் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு. இது ஒருவகையான நரம்பியல் குறைபாடு. இன்ன காரணமாகத்தான் இக்குறைபாடு ஏற்படுகிறது என்பதை இன்னும் உறுதியாகக் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், இதற்கு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. உலக அளவில் 68க்கு ஒரு குழந்தை ஆட்டிசத்தின் பிடியில் உள்ளது. இந்தியாவில் மட்டும் ஒருகோடிக்கும் அதிகமான ஆட்டிசநிலையாளர்கள் இருக்கலாம் என்று சொல்கிறது.

இந்த பாதிப்பு குறித்து முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

]]>
dinamani, on this day, memeories, autism, awareness day, UN http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/31/w600X390/autism.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/apr/02/ஏப்ரல்-2-சர்வதேச-ஆட்டிச-விழிப்புணர்வு-தினம்-2676278.html
2676277 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 01.04.1935: இந்திய ரிசர்வ் வங்கி துவங்கப்பட்ட தினம் இன்று! DIN DIN Saturday, April 1, 2017 12:00 AM +0530  

இந்திய ரிசர்வ் வங்கி என்பது இந்தியாவின் நடுவண் வங்கியாகும். 1949இல் இது நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இதுவே அரசின் கருவூலம் ஆகும். நாட்டின் செலாவணிக்குரிய நாணயத்தை வெளியிடுவதோடு, இவ்வங்கி நாட்டின் பல பொருளாதார நடவடிக்கைகளை இயக்கியும் வருகிறது.

பொது மக்கள் மற்ற வங்கிகளைப் பயன்படுத்துவது போல ரிசர்வ் வங்கியைப் பயன்படுத்த முடியாது. ஆனால் தனது முகமை (ஏஜன்ட்) ஏற்றுச் செயலாற்ற பல வங்கிகளை இது அமைத்துள்ளது. அவ்வகையில் பாரத ஸ்டேட் வங்கி இதன் முகமை வங்கி ஆகும்.

ரிசர்வ் வங்கியைப் பொது மக்கள் நேரடியாகப் பயன்படுத்தாவிட்டாலும் பொது மக்கள் நடத்தும் மற்ற வங்கிகளோடு தொடர்பு கொண்டு அவற்றைக் கண்காணித்தும் வருகிறது. இந்திய நாட்டின் நாணய மதிப்பு(அந்நியச் செலாவணிக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு) ரிசர்வ் வங்கி கையிருப்பில் வைத்திருக்கும் தங்கம், ரொக்கம் ஆகியவற்றைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது.

முதலில் கொல்கத்தா நகரை தலைமையகமாக கொண்டு விளங்கிய இவ்வங்கி 1937-ஆம் ஆண்டு முதல் மும்பை நகரை தலைமையகமாக கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கிக்கு இந்தியா முழுவதும் 22 வட்டாரக் கிளைகள் உள்ளன. தனியாரால் துவங்கப்பட்ட இவ்வங்கியானது 1949 ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது. தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுனர் உர்ஜித் பட்டேல் ஆவார்.   

]]>
dinamani, on this day, memories, RBI, india, calcutta, mumbai http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/31/w600X390/rbi.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/apr/01/01041935-இந்திய-ரிசர்வ்-வங்கி-துவங்கப்பட்ட-தினம்-இன்று-2676277.html
2675624 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 31.03.1889: உலகப் புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் திறக்கப்பட்ட தினம் இன்று! DIN DIN Friday, March 31, 2017 12:00 AM +0530  

பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான, எக்ஸ்பொசிசன் யூனிவேசெல் (1889) என்னும் உலகக் கண்காட்சி விழா பாரிசில் நடைபெற்ற பொழுது, நுழைவாயில் வளைவாக ஈபிள் டவர் கட்டப்பட்டது. 1889, மார்ச் 31 ஆம் தேதி தொடக்கவிழா நடைபெற்று. பின்னர் மே 6 அன்று பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டது.

இதனை உருவாக்க 300 உருக்கு வேலையாட்கள், 5 இலட்சம் ஆணிகளைப் பயன்படுத்தி, 18,038 உருக்குத் துண்டுகளை ஒன்றுடனொன்று பொருத்தினார்கள். அக்காலத்திய பாதுகாப்புத் தரத்தைக் கருத்தில் கொள்ளும்போது, இதன் கட்டுமானக் காலத்தில் உயர்த்திகளைப் பொருத்தும்போது, ஒரேயொரு தொழிலாளி மட்டுமே இறக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இக் கோபுரம், அதன் உச்சியிலுள்ள, 20மீட்டர் உயரமுள்ள தொலைக்காட்சி ஆண்டெனாவைச் சேர்க்காது 300 மீட்டர்கள் (986 அடிகள்) உயரமானதும், 10,000 டன் எடையும் உடையதுமாகும். இது கட்டிமுடிக்கப்பட்டபோது, உலகின் அதிக உயரமான அமைப்பு இதுவாக இருந்ததது.

இது கட்டப்பட்ட காலத்தில், எதிர்பார்க்கக் கூடிய வகையில், பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பு இருந்தது. பலர் இது பார்வைக்கு அழகாக இருக்காது என்று கருதினார்கள். இன்று இது உலகிலுள்ள மிகக் கவர்ச்சிகரமான கட்டிடக்கலைகளுள் ஒன்று என்று கருதப்படுகிறது.

]]>
dinamani, on this day, memories, france, paris, effiel tower http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/30/w600X390/eiffel-tower.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/mar/31/31031889-உலகப்-புகழ்-பெற்ற-ஈபிள்-கோபுரம்-திறக்கப்பட்ட-தினம்-இன்று-2675624.html
2674966 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 29.03.2005: பிரபல தேடுபொறி தளமான யாஹூவின் 'யாஹூ 360°' சேவை துவக்கப்பட்ட தினம் இன்று! DIN DIN Thursday, March 30, 2017 03:55 PM +0530  

யாஹூ 360° ஆனது கூகிளின் 'ஆர்குட்'  போலவே பயனாளர்களின் பிரத்தியேகத் தொடர்பாடலுக்கு உதவும் ஒரு தளமாகும். இது இப்போது சோதனை நிலையிலேயே உள்ளது. இது சமூகவலையமைப்பு, வலைப்பதிவு, படங்களைப் பகிர்தல் போன்றவற்றில் ஈடுபடமுடியும்.

பயனர்கள் பிரத்தியேக இணையப் பக்கங்கள் அமைத்து யாஹூ போட்டோஸ் ஊடாகப் புகைப்படங்களைப் பகிர்ந்து, வலைப்பதிவுகளை மேற்கொண்டும் இணையத்தொடர்பிலுள்ள நண்பர்கள் போன்றவிபரங்களையும் பெற்றுகொள்ள முடியும்.

]]>
dinamani , on this day , memeories, yahoo, yahoo! 360 http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/29/w600X390/yahoo_360.JPG http://www.dinamani.com/specials/indha-naalil/2017/mar/29/29032005-பிரபல-தேடுபொறி-தளமான-யாஹூவின்-யாஹூ-360°-சேவை-துவக்கப்பட்ட-தினம்-இன்று-2674966.html
2675020 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 30.03.1709: 'நாட்குறிப்பு வேந்தர்' ஆனந்தரங்கம் பிள்ளை பிறந்த தினம் இன்று! DIN DIN Thursday, March 30, 2017 12:00 AM +0530  

ஆனந்தரங்கம் பிள்ளை பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் உரைபெயர்ப்பாளராகவும் துய்ப்ளெக்சு என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். பதினெட்டாம் நூற்றாண்டு காலத்திய பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்றுக் கருவூலமாகவும் ஆவணமாகவும் இலக்கியமாகவும் திகழக்கூடிய நாட்குறிப்புகளைத் தந்தவர்.

1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார். உலக நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடியான புகழ் பெற்ற ஆங்கில நாட்குறிப்பாளர் சாமுவேல் பெப்பீசு என்பவரைப் போன்று தமிழில் நாட்குறிப்பு எழுதியமையால், இவர் இந்தியாவின் பெப்பீசு எனவும் நாட்குறிப்பு வேந்தர் எனவும் போற்றப்படுகின்றார்.

இவரது நாட்குறிப்புகள் அக்காலத்தில் நடந்த சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றின் பதிவாகத் திகழ்கிறது. பிரெஞ்சு ஆளுநர் துய்ப்ளெக்சின் அந்தரங்கப் பேச்சாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பன்மொழிப் புலவராகவும் இருந்தவர். இவரின் நாட்குறிப்பு மூலம் நமக்கு பதினெட்டாம் நூற்றாண்டு தென்னிந்திய ஆளுமைகளைப் பற்றியும், முக்கியமான அரசியல், இராணுவ நிகழ்வுகளைப் பற்றியும் அறிய முடிகிறது[1]. இவரது நாட்குறிப்புகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் இன்றளவும் நடைபெற்று வருகின்றன.   

]]>
dinamani, on this day, memeories, pondicherry, anadarangam pillai, dairies http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/29/w600X390/anandarangam_pillai.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/mar/30/30031709-நாட்குறிப்பு-வேந்தர்-ஆனந்தரங்கம்-பிள்ளை-பிறந்த-தினம்-இன்று-2675020.html
2674318 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 28.03.1868: உலகப் புகழ் பெற்ற 'தாய்' நாவலை எழுதிய ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி பிறந்த தினம் இன்று! DIN DIN Tuesday, March 28, 2017 10:21 AM +0530  

மாக்சிம் கார்க்கி என்று அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் ரஷ்ய நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.  இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் 'தாய்' என்ற புதினத்தை எழுதினார்.

மாக்சிம் கார்க்கி ரஷ்யாவில் உள்ள நிஸ்னி நவ்கரோட் என்ற ஊரில் ஏழ்மையான குடும்பத்தில் 28.03.1868-இல் பிறந்தார். இயற்பெயர் அலெக்சி மாக்சிமோவிச் பெஷ்கோவ். இவரது 5 வயதில் தந்தை இறந்தார். தாயின் ஆதரவும் இல்லாத இவரை இவரின் பாட்டிதான் வளர்த்தார்.

வறுமை காரணமாக பள்ளிப் படிப்பு அவ்வளவாக கிடைக்கவில்லை. 8 வயதிலேயே வேலைக்குச் சென்றார். வேலை செய்துகொண்டே தானாகவே முயன்று கல்வி கற்றார். உருசிய, பிரெஞ்சு, இத்தாலி, ஆங்கிலம், செருமனி ஆகிய மொழிகளைக் கற்றார்.

எந்நேரமும் குறிப்பேடு வைத்திருப்பார். தனக்குத் தோன்றுவதை அதில் எழுதுவார். 1892-ல் இவரது முதல் சிறுகதையான ‘மகர் சுத்ரா’ (Makar Chudra) வெளிவந்தது. மாக்சிம் கார்க்கி என்ற பெயரில் தொடர்ந்து எழுதிவந்தார்.

1898-ல் ‘ஸ்கெட்சஸ் அண்ட் ஸ்டோரீஸ்’ வெளிவந்தது. 1899-ல் முதல் நாவலும், 1902-ல் ‘தி லோயர் டெப்த்ஸ்’ என்ற நாடகமும் வெளிவந்தன. இவரது உலகப் புகழ்பெற்ற ‘மதர்’ (தாய்) புதினம் 1906-ல் வெளிவந்தது. கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்வது, அதிகார வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவை இவரது எழுத்துகளின் அடிநாதமாகத் திகழ்ந்தன. இதனால் அரசின் கோபத்துக்கு ஆளானார். பலமுறை கைது செய்யப்பட்டார். இவரது படைப்புகள் கடும் தணிக்கையை எதிர்கொண்டன.

பல கவிதைகள் எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார். அபார நினைவாற்றல் படைத்தவர். எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார். சிறிய சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.

பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். இவர் படைத்த ‘தாய்’ (மதர்) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது. இது 200 முறைக்கு மேல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இவர் 18.06.1936 அன்று மரணம் அடைந்தார்.

]]>
dinamani, on this day, memeories, russia, maxim kaarky, mother, novel http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/28/w600X390/kaarky.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/mar/28/28031868-உலகப்-புகழ்-பெற்ற-தாய்-நாவலை-எழுதிய-ரஷ்ய-எழுத்தாளர்-மாக்சிம்-கார்க்கி-பிறந்த-தினம்-இன்-2674318.html
2673161 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 27.03.1845: எக்ஸ்ரே கதிர்களை கண்டு பிடித்த ராண்ட்ஜென் பிறந்த தினம் இன்று! DIN DIN Sunday, March 26, 2017 04:46 PM +0530  

ஜெர்மனி நாட்டு வணிகக் குடும்பம் ஒன்றில் 1845 ஆம் ஆண்டு பிறந்தார் ராண்ட்ஜென். பள்ளியில் படிக்கும் போதே இயற்கையின் மீது பற்று கொண்டு , ஒய்வு நேரத்தை தனிமையான கிராமங்கள் மற்றும் மரங்கள் நிறைந்த காடுகளிலும் சுற்றித் திரிந்தார்.

இயற்பியலில் பட்டம் பெற வேண்டுமென விருப்பம் கொண்டு பல்கலைக்கழகத்தில் 1865 ஆம் ஆண்டு சேர்ந்தார். ஆனால், பட்டம் பெறுவதற்குத் தேவையான மதிப்பெண்களை பெற முடியாமல் போனது, எனவே, அங்குள்ள பாலிடெக்னிக்கில் நடைபெற்ற நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அவரை இயந்திரவியல் பிரிவில் சேர்த்துக் கொண்டனர். முயன்று பயின்று பட்டம் பெற்றார்.

பின்னர் ஸுரிச் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு 1969-ஆம் ஆண்டு ‘டாக்டர்’ (முனைவர்) பட்டம் பெற்றார் ராண்ட்ஜென்!.

அக்காலத்தில், மிக உயர்ந்த மின் அழுத்தத்தை உருவாக்கவல்ல ஒருவகை மின் சுருளின் எல்லைக்குள், சில அபூர்வான வாயுக்களை நிரப்பினால் அவை மின்சாரத்தை உருவாக்கும் அதுதான் ‘காத்தோட் கதிர்’ என அறியப்பட்டிருந்தது. “மின் சுருளுக்கு அளிக்கப்படும் உயர் மின் அழுத்தமானது முழுக்க அடைக்கப்பட்ட காற்றுப் புகாத ஒரு குழாய்க்குள் நிகழும்”எனப் பல அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். இது எப்படி சாத்தியமாகிறது? என்ற வினா ராண்ட்ஜென் மனதில் ஏற்பட்டது.

எந்த அறிவியல் கண்டுபிடிப்பும் ஒரு நாளைக்குள் நடைபெற்றுவிடுவது இல்லை. கண்டுபிடிப்புகள் நிகழ பல ஆண்டுகள் உழைத்திட வேண்டும் என்பது ராண்ட்ஜென்னின் புதிய கண்டுபிடிப்பிலும் உறுதி செய்யப்பட்டது.

பரிசோதனைக் குழாயைச் சுற்றிலும் கனமான கறுப்பு தடுப்பு கொண்டு மூடி, துளிகூட ஒளிபுகாவண்ணம் செய்து, மின்சுருள் பரிசோதனையை முழு இருட்டான ஓர் அறைக்குள் வைத்து நடத்தினார். அப்பரிசேதனையின் விளைவால் கதிர்களின் பாதையில் நீட்டப்படும் ‘பேரியம் ப்ளேட்டினோஸைனைட்’ பூசப்பட்ட ஒரு சிறுதட்டு தகதகவென மினுமினுப்பதைக் கண்டறிந்தார். பரிசோதனைக் குழாயிலிருந்து சில மீட்டர் துhரம் தள்ளி வைக்கப்பட்டாலும் கூட, அதில் மினுமினுப்பு ஏற்படுவதைக் கண்டார் ராண்ட்ஜென்.

ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். பலவிதமான தடிமன்கள் கொண்ட பொருட்களைக் கதிர்வீச்சின் குறுக்கே வைக்கும்போது அவற்றில் விதவிதமான மாறுபட்ட மினுமினுப்புகள் உண்டாவதைக் கவனமாகப் பதிவு செய்தார். இந்த ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அந்தப் பக்கமாக நடந்து வந்த தமது மனைவியை அழைத்து, மனைவியின் கையைக் கதிர்வீச்சுப் பாதையில் புகுத்தி சிறிது நேரம் அப்படியே அசையாமல் நிறுத்தி வைக்கச் செய்தார். அப்போது உருவான பிம்பத்தைப் புகைப்படச் சுருளில் பதிவு செய்து கொண்டார். பின்னர், புகைப்படச் சுருளை படமாக்கிப் பார்த்தார், அதில் அவரது மனைவியின் கை எலும்புகளும், அவர் அணிந்திருந்த மோதிரமும் மட்டும் தெளிவாகப் பதிந்திருந்தன. கைப்பகுதியின் சதைகளனைத்தும் கிரகணம் போலத் தெளிவில்லாமல் தெரிந்தன. இதுதான், முதன்முதலாகப் பதிவாகி அறிவிக்கப்பட்ட ‘ராண்ட்ஜென் பதிவு’ ஆகும்.

‘காத்தோட் கதிர்களின் பாதையில் ஏதேனும் பொருளை வைத்தால், அப்போது ஏற்படும் மோதலின் காரணமாக மேலும் புதுக் கதிர்கள் உருவாகின்றன’ – எனத் தமது கண்டுபிடிப்புக்கான விளக்கத்தை அளித்தார் ராண்ட்ஜென்.

]]>
dinamani , on this day , memeories, x-ray, rontgen http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/26/w600X390/rontgen.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/mar/27/27031845-எக்ஸ்ரே-கதிர்களை-கண்டு-பிடித்த-ராண்ட்ஜென்-பிறந்த-தினம்-இன்று-2673161.html
2673146 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 26.03.1971: வங்கதேச விடுதலை தினம் இன்று! DIN DIN Sunday, March 26, 2017 12:17 PM +0530  

வங்காள தேசம் ஒரு தெற்காசிய நாடாகும். இது பண்டைய வங்காளத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்தியா, மியான்மர் ஆகியவை இதன் அண்டை நாடுகளாகும். டாக்கா இதன் தலைநகரமாகும். இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைப் போன்று, இந்நாட்டிலும் வங்காள மொழியே பேசப்படுகிறது.

இந்நாட்டின் எல்லைகள் 1947ஆம் ஆண்டு வங்காளப் பிரிவினையின் போது நிறுவப்பட்டது. 1947 ஆண்டு இந்திய விடுதலைக்குப் பின், இப்பகுதி கிழக்கு பாக்கிஸ்தான் என்ற பெயரில் பாக்கிஸ்தான் நாட்டின் பகுதியாக இருந்தது. இருப்பினும், இப்பகுதிக்கும் மேற்கு பாக்கிஸ்தான் பகுதிக்கும் இடையிலான தொலைவு சுமார் 1600 கிலோமீட்டர்.

மேற்கு பாக்கிஸ்தானுக்கும் கிழக்கு பாக்கிஸ்தானுக்கும் இடையான எந்த போக்குவரத்தும் இந்தியாவின் வழியாகவே நடைபெறவேண்டும் என்ற நிலையில், மொழி வேறுபாடு காரணமாகவும், பொருளாதரப் புறக்கணிப்பு காரணமாகவும், கிழக்குப் பாக்கிஸ்தான் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டது. தனிநாடு கோரிக்கை முன் வைக்கப்பட்டது. 26.03.1971 அன்று கிழக்கு பாக்கிஸ்தான் பகுதி இந்தியாவின் துணைக் கொண்டு வங்காளதேச விடுதலைப் போருக்குப் பின் வங்காளத் தேசம் என்ற நாடாக அறிவிக்கப்பட்டது.

]]>
dinamani, on this day, memeories, pakistan, banagaladesh, freedom http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/26/w600X390/bangaladesh.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/mar/26/26031971-வங்கதேச-விடுதலை-தினம்-இன்று-2673146.html
2672055 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 25.03.1857: ஒலியைப் பதிவு செய்யும் போனாட்டோகிராஃப் கருவி கண்டுபிடிக்கப்பட்ட தினம் இன்று! DIN DIN Saturday, March 25, 2017 12:00 AM +0530  

போனாட்டோகிராஃப் என்று அழைக்கப்படும் ஒலியை பதிவு செய்யும் கருவியை முதன்முதலாக (phonautograph) பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் இன்றுதான் கண்டுபிடித்தார்.

பின்னர் இதற்கான காப்புரிமையையும் அவர் பெற்றார். இது ஒலியை ஒரு பார்க்கக்கூடிய ஊடகமாகப் பதிவு செய்யக்கூடியதாக இருந்தது. ஆனாலும் பதிவு செய்த ஒலியை மீண்டும் ஒலிக்கச் செய்ய முடியாமல் இருந்தது.

இவருக்கு பின்னர் எடிசன் இதன்மேம்பாட்டு வடிவமான கிராமபோனை கண்டறிந்தார்.

]]>
dinamani, on this day, memeories, phonautograph, invention, lion scott http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/24/w600X390/phonautograph.png http://www.dinamani.com/specials/indha-naalil/2017/mar/25/25031857-ஒலியைப்-பதிவு-செய்யும்-போனாட்டோகிராஃப்-கருவி-கண்டுபிடிக்கப்பட்ட-தினம்-இன்று-2672055.html
2671368 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 24.03.1923: பிரபல பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் பிறந்த தினம் இன்று! DIN DIN Friday, March 24, 2017 12:00 AM +0530  

டி. எம். சௌந்தரராஜன் மார்ச் 24, 1923 அன்று மதுரையில் சௌராட்டிரக் குடும்பம் ஒன்றில் தொ. அ. மீனாட்சி ஐயங்கார் என்பவரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். 1946 இல் சுமுத்திரா என்பவரைத் திருமணம் புரிந்தார். பிரபல வித்துவான் பூச்சி சிறீனிவாச ஐயங்காரின் மருமகன் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்று திரையுலகில் நுழைந்தார்.

பல ஆண்டுகளாகக் கச்சேரி செய்து வந்த இவரை சுந்தரராவ் நட்கர்னி என்பவர் தனது கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார். அதைத் தொடர்ந்து மந்திரி குமாரி, தேவகி, சர்வாதிகாரி போன்ற படங்களில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. தேவகி படத்தில் அவர் பாடி நடித்திருந்தார்.

இவர் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன்,எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் நாகேஷ் உட்பட பல முன்னணி திரைப்பட நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுத்தமான, தனித் தனி குரலில் பாடி, அந்த நடிகர்களின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்னில் நிலை நிறுத்தும் ஆற்றல் இவருக்கு மட்டுமே உண்டு என்று தமிழக மக்கள் இவரை புகழ்ந்து வருகின்றனர்

வீரம், காதல், சோகம், துள்ளல், தத்துவம், நையாண்டி மற்றும் கிராமிய மணம் கமழும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 2500க்கு மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். இன்றைய முன்னணி திரைப்பட நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியவர்களுக்கும் பாடியுள்ளார். இவர் 2003-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.

2010ல் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக உருவான “செம்மொழியான தமிழ்மொழியாம்” என்ற பாடலே டி. எம். சௌந்தரராஜன் இறுதியாக பாடிய பாடலாகும். உடல்நலம் குன்றிய நிலையில் அவர் மே 25, 2013 அன்று மரணமடைந்தார்.

]]>
dinamani, on this day, memories, TMS, tamil cinema, play back singer, birthday http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/23/w600X390/TMS.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/mar/24/24031923-பிரபல-பின்னணிப்-பாடகர்-டி-எம்-சௌந்தரராஜன்-பிறந்த-தினம்-இன்று-2671368.html
2670724 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 23.03.1893: தமிழகத்தின் அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு பிறந்த தினம் இன்று! DIN DIN Thursday, March 23, 2017 12:00 AM +0530  

ஜி.டி. நாயுடு என்று பரவலாக அறியப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடு தமிழகம் தந்த அறிவியல் மாமேதைகளுள் ஒருவர். விவசாயத்தில் எண்ணற்ற ஆராய்ச்சிகளை செய்தவர்.

இவர் கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் பிறந்தார். ஜி.டி. நாயுடு அவர்கள் தன் இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டம் இல்லாதவராய் இருந்தார். எழுதப் படிக்க தெரிந்திருந்த இவர் தனக்குத் தானே ஆசிரியராக இருந்து தனக்கு விருப்பமான நூல்களையெல்லாம் வாங்கி படித்து தன் அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டார்.

எதைச் செய்தாலும் அதில் தன்னுடைய தனித்தன்மை வெளிப்படவேண்டும் என்று நினைத்தவரை அவருடன் இருந்தவர்கள் விநோதமாய் பார்த்தனர்.

வாலிப வயதில் ஒரு புரட்சிக்காரனாக இருந்தவர் ஒருமுறை தன் கிராமத் தலைவர்களுக்கு எதிராக குடியானத் தொழிலாளர்களைத் திரட்டி அதிகக் கூலி கேட்டு வேலை நிறுத்தம் செய்தார். வேலை நிறுத்த நேரத்தில் கூலியின்றி சிரமப்பட்ட தொழிலாளர்களுக்கு தன்னுடைய சொந்த சேமிப்பு முழுவதையும் கொடுத்தார்.

இளம் வயதில் ஜி.டி.நாயுடு கோவையிலிருந்த ஒரு மோட்டார் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தார். பணியிலிருந்தபோதே அத்தொழிலின் நுட்பங்களை கருத்தூன்றி படித்து அறிந்துக்கொண்டார்.

சிறிது காலத்திலேயே அவருக்கு பிறரிடம் தொழிலாளியாhsjaj Iejshக இருப்பது வெறுத்துப் போனது. வேலையை விட்டுவிட்டு தன்னுடைய ஊதியத்திலிருந்து சேமித்து வைத்திருந்த பணத்துடன் நண்பர்களிடம் கடன் பெற்று திருப்பூரில் ஒரு பருத்தித் தொழிற்சாலையை நிறுவினார்.

அப்போது முதலாம் உலகப் போர் துவங்கிய காலமாயிருந்ததால் அவருடைய பருத்தி தொழில் சூடு பிடித்தது. அவருடைய அபிரிதமான வர்த்தகத் திறமை குறுகிய காலத்திலேயே திருப்பூரில் விரல் விட்டு எண்ணக்கூடிய லட்சாதிபதிகளில் ஒருவரானார்.

பின்னர் தனது பல்வேறு கண்டுபிடிப்புகளின் மூலம் அழியாய் புகழ் பெற்றார்.

]]>
dinamani, on this day, memeories, GT nayudu, tamilnadu, coimbatore, inventor http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/22/w600X390/JT_nayudu.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/mar/23/23031893-தமிழகத்தின்-அறிவியல்-மாமேதை-ஜிடி-நாயுடு-பிறந்த-தினம்-இன்று-2670724.html
2670066 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 22.03.2005; நடிகர் 'ஜெமினி' கணேசன் இறந்த தினம் இன்று DIN DIN Wednesday, March 22, 2017 12:00 AM +0530  

ஜெமினி கணேசன் தமிழ்த் திரையுலகில் புகழ் வாய்ந்த நடிகர்களுள் ஒருவராவார். காதல் மன்னன் என்று அழைக்கப்படும் இவர், தமிழ் மற்றும் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஜெமினி கணேசன் 17 நவம்பர் 1920 அன்று தமிழகத்தின் புதுக்கோட்டையில் நவம்பர் 1920ல் இராமசுவாமி ஐயர், கங்கம்மா இணையருக்குப் பிறந்தவர்.  அவரது சினிமா வரலாறு மிஸ் மாலினி (1947) மூலமாகத் துவங்கியது. பெண், கணவனே கண்கண்ட தெய்வம் மற்றும் மிஸ்ஸியம்மா போன்ற படங்கள் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை அளித்தன. தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலுமாக 200 படங்களுக்கும் மேல் ஜெமினி கணேசன் நடித்திருக்கிறார்.

அவருக்கு பத்மஸ்ரீ, நடிப்புச் செல்வம் மற்றும் நடிகர் மன்னன் போன்ற விருதுகளும், பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அவரை அன்பாகக் "காதல் மன்னன்" என்றே அழைத்தனர். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவருடைய உருவம் தாங்கிய தபால்தலையும் வெளியிடப்பட்டது.

உடல்நலக்குறைவால் அவர் 22.03.20005 அன்று சென்னையில் காலமானார்.    

]]>
dinamani, on this day, memories, tamil cinema, gemini ganeshan http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/21/w600X390/gemini_ganeshan.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/mar/22/22032005-நடிகர்-ஜெமினி-கணேசன்-இறந்த-தினம்-இன்று-2670066.html
2669414 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... மார்ச் 21- உலக வன தினம் இன்று! DIN DIN Tuesday, March 21, 2017 12:00 AM +0530  

உலகில் பருவம் தப்பாத கால நிலை பெரும்பாலும் சீராக இருப்பற்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவே மார்ச் 21ம் தேதி உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த தினத்தில் காடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் எடுத்துச் சொல்லப்படுகிறது. மேலும், வன வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் எடுத்து சொல்லப்படுகிறது. 

பொதுவாக மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு அல்லது வனம் என்று அழைக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலுமுள்ள காடுகள் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொள்கின்றன. மேலும் இவை பல விலங்குகளுக்கு புகலிடமாக விளங்குகின்றன. காடுகள் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மண் அரிப்பையும் தடுக்கின்றன.

காடுகளில் பல வகைகள் உண்டு. சதுப்பு நிலக்காடுகள், பசுமை மாறாக்காடுகள் என்பன அவற்றுள் சில வகைகளாகும்.வெப்பமண்டலக் காடுகள் உலகில் வாழும் 50% உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்குகின்றன.உலக நிலப்பரப்பில் 30 சதவீத அளவுக்கு காடுகள் உள்ளன. இதில் 60 ஆயிரம் வகை தாவரங்கள் உள்ளன.

நிழல், இலை, காய், கனி, மணம், குணம், பானம், மழை, குளுமை, தூய்மை, எண்ணெய், உறைவிடம், விறகு என மனித சமுதாயத்துக்கு பல வழிகளும் தாவரங்கள் நன்மை தருகின்றன. மறுபுறம் பல வழிகளில் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படப் போகும் ஆபத்துகள் கடுமையாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

]]>
dinamani, on this day, memeories, world fprest day, conservation http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/20/w600X390/world_forest_day.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/mar/21/மார்ச்-21--உலக-வன-தினம்-இன்று-2669414.html
2668860 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... மார்ச் 20 - உலக சிட்டுக்குருவி தினம் இன்று DIN DIN Monday, March 20, 2017 12:00 AM +0530  

2010-ம் ஆண்டு முதல் மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இன்று சிட்டுக்குருவி இனம் மெல்ல, மெல்ல அழிந்து வருகிறது. நகரங்களில் சிட்டுக்குருவிகளே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. அதுபற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் இன்று உலக சிட்டுக்குருவி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

செல்போன் அலைவரிசை கோபுரங்கள் காரணமாக சிட்டுக் குருவிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. சிட்டுக்குருவிகளை காப்பாற்றி முன்பு போல உலாவ விட பல முயற்சிகள் நடந்து வருகிறது. என்றாலும் சிட்டுக்குருவியின் எண்ணிக்கை விவசாய நாடான இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே குறைந்து வருகிறது.

சிட்டுக்குருவிகள் பொதுவாக மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே கூடுகட்டி வாழ விரும்புகின்றன.வீட்டு மாடம், பரண், ஓடுகளின் இடைவெளி போன்ற இடங்களில் கூடுகட்டி வசித்து வந்த இந்த சின்னஞ்சிறு பறவை கான்கிரீட் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகரிப்பால் இன்று நகரங்களில் இருந்து விடைபெறத் தொடங்கிவிட்டன.

சிட்டுக்குருவிகள் விரும்பி உண்ணும் கம்பு, கேழ்வரகு, சோளம், திணை, சாமை போன்ற சிறுதானியங்களின் பயன்பாடு குறைந்துவிட்டதும், நெல் பயிரிடுதலில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதும் சில முக்கியக் காரணங்களாக கூறப்படுகிறது.

]]>
dinamani, on this day, memories, sparrow, world sparrow day, preservance http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/19/w600X390/.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/mar/20/மார்ச்-20---உலக-சிட்டுக்குருவி-தினம்-இன்று-2668860.html
2667817 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 19.03.2008: புகழ்பெற்ற நடிகர் ரகுவரன் இறந்த தினம் இன்று! DIN DIN Sunday, March 19, 2017 12:00 AM +0530  

நடிகர் ரகுவரன் 1958 ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கேரளாவில் பிறந்தார். பி.ஏ. பட்டதாரியான இவர் 1982 ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

ஆனாலும் வில்லன் வேடங்களில் அவரின் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. சம்சாரம் அது மின்சாரம், அஞ்சலி போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். கடைசியாக அவர் நடித்து வெளியான தமிழ்ப் படம் சில நேரங்களில். இது தவிர இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

போதைப் பழக்கத்திற்கு அடிமையானார். இந்த போதைப் பழக்கம் அவரது திரை வாழ்க்கையை மட்டுமின்றி அவரது சொந்த வாழ்க்கையையும் பாதித்தது. இதன் காரணமாக  இவர் காதல் திருமணம் செய்துகொண்ட நடிகை ரோகினியும் அவரை விட்டு பிரிந்து சென்றார். ரகுவரனுக்கு ரிஷி என்ற மகன் உள்ளார்.

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை சேத்துப்பட்டில் நடிகர் ரகுவரன் மார்ச் 19, 2008 இல் காலமானார்.

]]>
dinamani, on this day, memeories, tamilcinema, actor raghuvaran, actress rohini, http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/17/w600X390/actor_raghuvaran.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/mar/19/19032008-புகழ்பெற்ற-நடிகர்-ரகுவரன்-இறந்த-தினம்-இன்று-2667817.html
2667815 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 18.03.1858: டீசல் எஞ்சினைக் கண்டுபிடித்த ருடால்ஃப் டீசல் பிறந்த தினம் இன்று! DIN DIN Saturday, March 18, 2017 12:00 AM +0530  

ருடால்ஃப் டீசல் பிரான்ஸில் (1858) பிறந்தவர். இவரது பெற்றோர் ஜெர்மனியை சேர்ந்தவர்கள் என்பதால், பிரெஞ்ச் - பிரஷ்யா போரின்போது பிரான்ஸில் இருந்து வெளியேற்றப்பட்டு இங்கிலாந்தில் குடியேறினர்.

படிப்பைத் தொடர்வதற்காக சிறுவன் டீசல் மட்டும் பிரான்ஸில் இருந்த உறவினர் வீட்டுக்கு அனுப்பப்பட்டான். இயந்திரங்களுடன் அதிக நேரம் செலவிடுவதில் அவனுக்கு கொள்ளை ஆசை. படிப்பிலும் கெட்டிக்காரன்.பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு ஜெர்மனிக்குச் சென்றவர், ஆக்ஸ்பர்கில் புதிதாகத் தொடங்கப்பட்ட தொழிற்கல்விக் கூடத்தில் சேர்ந்தார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு முனீச் நகரில் உள்ள ராயல் பவேரியன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

உடல்நலம் குன்றியதால் 1879-ல் படிப்பைத் தொடரமுடியவில்லை. அந்த நேரத்தில், சல்ஸர் பிரதர்ஸ் மிஷின் வொர்க்ஸ் என்ற நிறுவனத்தில் சேர்ந்து பொறியியல் நுணுக்கங்களைக் கற்றார். இன்ஜின்கள் குறித்தும் டீசல் ஆராய்ந்தார். அந்த இன்ஜின்களின் திறனை 4 மடங்கு அதிகரிக்க முடியும் என்று நம்பினார். இதற்காக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 10 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து விதவிதமான இன்ஜின்களை வடிவமைத்தார்.

நீராவி இன்ஜினில் 90 சதவீத எரிபொருள் வீணாவதைக் கண்டறிந்தார். கார்னாட் சுழற்சி அடிப்படையிலான இன்ஜினை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கினார். இறுதியில் நீராவி இன்ஜினுக்கு மாற்றாக ‘கம்ப்ரெஷன் இக்னிஷன்’ இன்ஜினை கண்டுபிடித்தார். அதுவே அவரது பெயரில் டீசல் இன்ஜின் எனப்படுகிறது. டீசல் இன்ஜின் கண்டுபிடிப்பு குறித்த ஆய்வுக் கட்டுரையை 1886-ல் வெளியிட்டார்.

பல நாடுகளிலும் டீசல் இன்ஜினுக்கு காப்புரிமை பெற்றார். டீசல் இன்ஜினில் சில வகையான தாவர எண்ணெய்களையும் எரிபொருளாகப் பயன்படுத்த முடியும். பெட்ரோலியத்தில் இருந்து எடுக்கப்பட்டு டீசல் இன்ஜினுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்க்கும் ‘டீசல்’ என்ற பெயரே நிலைத்துவிட்டது. டீசல் இன்ஜின் கண்டுபிடிப்பு, தொழில் துறை வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.

1913-ல் ருடால்ஃப் டீசல் திடீரென காணாமல் போனதாகவும், ஒரு வாரம் கழித்து அவரது உடல் நார்வே அருகே வடகடலில் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உலகின் மிக முக்கிய கண்டுபிடிப்பாகப் போற்றப்படும் டீசல் இன்ஜினை உருவாக்கிய டீசல் 55 வயதில் மறைந்தார்.

]]>
dinamani, on this day, memeories, diesel engine, rudolf diesel http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/17/w600X390/rudalf_diesel.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/mar/18/18031858-டீசல்-எஞ்சினைக்-கண்டுபிடித்த-ருடால்ஃப்-டீசல்-பிறந்த-தினம்-இன்று-2667815.html
2667163 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 17.03.1920: ‘வங்கபந்து’ ஷேக் முஜிபுர் ரஹ்மான் பிறந்த தினம் இன்று! DIN DIN Friday, March 17, 2017 12:00 AM +0530  

ஷேக் முஜிபுர் ரஹ்மான் கிழக்கு வங்கப் பகுதியின் டோங்கிபுரா கிராமத்தில் 17.03..1920-இல் பிறந்தவர். முஸ்லிம் மாணவர் அமைப்பில் 1940-ல் சேர்ந்து மாணவர் தலைவர் ஆனார். 1943-ல் வங்காள முஸ்லிம் லீக்கில் சேர்ந்தார்

பாகிஸ்தானில் உருது மட்டுமே தேசிய மொழி என்று 1949-ல் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு வங்கத்தில் நடந்த போராட்டங்களுக்கு தலைமை யேற்றார். கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டும் 13 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். மக்கள் ஆதரவு பெருகியதால் விடுதலை செய்யப்பட்டார்.

அவாமி லீக் கட்சியில் இணைந்தார். 1955-ல் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றார். கிழக்கு வங்கம் 1956-ல் கிழக்கு பாகிஸ்தான் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1958-ல் ஜெனரல் அயூப்கான், ராணுவ ஆட்சியைக் கொண்டு வந்தார். இதை எதிர்த்த முஜிபுர் கைது செய்யப்பட்டார்.

சிறையில் இருந்து வெளிவந்த இவர், தலைமறைவு இயக்கத்தைத் தொடங்கினார். எந்த வேறுபாடுமின்றி அனைத்து வங்காளிகளின் ஏகோபித்த ஆதரவும் கிடைத்ததால் ‘வங்கபந்து’ (வங்காளிகளின் நண்பர்) என்று போற்றப்பட்டார்.

1970-ல் நடந்த பொதுத் தேர்தல்களில் அவாமி லீக் கட்சி அபார வெற்றி பெற்றது. ஆனால் இவர் பிரதமராவதை ராணுவமும், முக்கியத் தலைவர்களும் விரும்பவில்லை. பாக். அதிபர் யாஹியா கான் ராணுவச் சட்டத்தைக் கொண்டு வந்து, அவாமி லீக்கை தடை செய்தார். புரட்சி வெடித்தது. ஏராளமானோர் கொல்லப் பட்டனர். முக்தி பாஹினி படை உருவானது. இந்திய ராணுவத்தின் உதவியுடன் முக்தி பாஹினி படையினர் பாகிஸ்தானுடன் போரிட்டு வென்றனர். 1971-ல் வங்க தேசம் உருவானது. புதிய தேசத்தின் முதல் அதிப ராகப் பொறுப்பேற்றார். பின்னர், பிரதமராகவும் இருந்தார்.

ராணுவ சதியினால் 1975-ல் முஜிபுர் ரஹ்மானும் குடும்ப உறுப்பினர்களும் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது அவருக்கு வயது 55. அவரது இரு மகள்கள் (வங்கதேசத்தின் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா, அவரது சகோதரி ஷேக் ரிஹானா) மட்டும் வெளியூரில் படித்ததால் தப்பினர்.

]]>
dinamani, on this day, bangaladesh, memeories, shiek mujiburrehman, birthday http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/16/w600X390/vangabandhu.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/mar/17/17031920-வங்கபந்து-ஷேக்-முஜிபுர்-ரஹ்மான்-பிறந்த-தினம்-இன்று-2667163.html
2666528 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 16.03.1968: வியட்நாம் போரின் பொழுது அமெரிக்காவால் 'மை லாய் படுகொலைகள்'  நிகழ்த்தப்பட்ட தினம் இன்று! DIN DIN Thursday, March 16, 2017 12:00 AM +0530  

மை லாய் படுகொலைகள் (My Lai Massacre) என்பது தெற்கு வியட்நாமில் மார்ச் 16, 1968 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கப் படைகளினால் 347 முதல் 504 வரையான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிப்பதாகும்.

இந்த படுகொலை சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த பெரும்பாலானோர் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டோ அலல்து அடிக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டோகொள்ளப்பட்டனர்.

பெரும்பாலானோரின் உடல்கள் பெரும் சிதைவுக்குள்ளாகிக் கண்டுபிடிக்கப்பட்டன. இப்படுகொலைகள் வியட்நாம் போரின் போது சோன் மை என்ற கிராமத்தில் மை லாய் மற்றும் மை கே ஆகிய பகுதிகளில் இடம்பெற்றது.

ஆரம்பத்தில் 26 அமெரிக்கப் போர்வீரர்கள் இப்படுகொலைகளுக்குக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும், லெப்ட்டினன்டாகப் பணியாற்றிய வில்லியம் கேலி என்பவனுக்கு மட்டுமே தண்டனை கிடைத்தது. முதலில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டாலும், இது பின்னர் 3 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு, அத்தண்டனையையும்  அவனை தனது வீட்டிலேயே கழித்தான்.

]]>
diinamani, on this day, memeories, vietnam war, USA, mai lai masscare http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/15/w600X390/mai_lai_masscare.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/mar/16/16031968-வியட்நாம்-போரின்-பொழுது-அமெரிக்காவால்-மை-லாய்-படுகொலைகள்--நிகழ்த்தப்பட்ட-தினம்-இன்று-2666528.html
2665926 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... மார்ச் 15 - உலக நுகர்வோர் தினம் DIN DIN Wednesday, March 15, 2017 12:00 AM +0530  

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15 ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமைகள் நாளாக கொண்டாடப்படுகிறது.இந்திய அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 15 ஆம் தேதியை தேசிய நுகர்வோர் உரிமைகள் நாளாகப் (National consumer rights day)  பிரகடனப்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோன். எப். கென்னடி, அமெரிக்க பாராளுமன்றத்தில் 1962 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாகவும், நுகர்வோர் உரிமைகள் சட்டம் தொடர்பாகவும் ஆற்றிய முக்கியமான ஒன்றாகும். அவ்வுரையே உலக அளவில் ஒரு நாட்டுத் தலைவர் நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பாக ஆற்றிய முக்கிய உரையாகக் கணிக்கப்படுகின்றது.

அதே வேளை நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பாகக் கரிசனை காட்டிய முதலாவது நாட்டுத் தலைவராகவும்  ஜோன். எப். கென்னடி கணிக்கப்படுகின்றார். அதனை நினைவு கூறும் விதமாக 1962 ஆம் ஆண்டு, ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 15 ஆம் திகதியை உலக நுகர்வோர் உரிமைகள் நாள் ஆக பிரகடனப்படுத்தி அறிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு அதாவது 1963 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி உலக நுகர்வோர் உரிமைகள் நாள் ஆக அனுசரிக்கபப்டுகிறது.

]]>
dinamani, on this day, memeories, consumer right, protection, USA, john f kennady http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/14/w600X390/consumer1.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/mar/15/மார்ச்-15---உலக-நுகர்வோர்-தினம்-2665926.html
2665333 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 14.03.1879: இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியலாளரான ஐன்ஸ்டைன் பிறந்த தினம் இன்று! DIN DIN Tuesday, March 14, 2017 12:00 AM +0530  

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்  குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இவர் இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளரர் என்று பெரும்பாலானவர்களால் கருதப்படுகிறார்.

இவர் உலகப் புகழ் பெற்ற சார்புக் கோட்பாட்டை  கண்டுபிடித்து அளித்தார். மேலும் குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் (statistical mechanics) மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பல்வேறு பங்களிப்புகளைச் செய்துள்ளார்.

ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical physics) அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1999-ஆம் ஆண்டு புத்தாயிரமாவது ஆண்டை குறித்து வெளியிடப்பட்ட டைம் (இதழ்), "இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது.

]]>
dinamani, on this day, memories, albert einstien, birthday, theory of relativity http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/13/w600X390/einstien.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/mar/14/14031879-இருபதாம்-நூற்றாண்டின்-தலைசிறந்த-அறிவியலாளரான-ஐன்ஸ்டைன்-பிறந்த-தினம்-இன்று-2665333.html
2664714 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 13.03.1733: ஆக்சிஜனை கண்டுபிடித்த  விஞ்ஞானி ஜோசப் பிரீஸ்ட்லி பிறந்த தினம் இன்று!  DIN DIN Monday, March 13, 2017 12:00 AM +0530  

ஜோசப் பிரீஸ்ட்லி. 1733ல் இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் நகரத்தில் ஓர் ஏழை நெசவாளியின் மகனாகப் பிறந்து, ஏழு வயதிலேயே தந்தையை இழந்து அத்தையின் அரவணைப்பில் படித்து, பட்டம் பெற்றுப் பாதிரியாராக ஆனார். பல மொழிகளிலும் சிறந்த புலமை பெற்றாலும் தட்டுத் தடுமாறித்தான் பேசுவார்.

ஒரு சிறு தேவாலயம் அவரைப் பாதிரியாராக ஏற்றுக் கொண்டது. அது வருமானமில்லாத தேவாலயம். வாரத்திற்கு ஒரு பவுண்டு தான் வருமானம். அதனால் ஒரு பள்ளியில் ஆசிரியர் பணியையும் ஏற்றுச் செய்து வந்தார் பிரீஸ்ட்லி.

அந்த தேவாலயத்துக்குப் பக்கத்தில் மதுபானம் தயாரிக்கும் ஆலை ஒன்று இருந்தது. அங்கிருந்து எப்போதும் வீசும் துர்நாற்றம் பிரீஸ்ட்லியின் மூக்கைத் துளைத்தது. அந்த துர்நாற்றம் சாராயம் காய்ச்சும் தொட்டியி லிருந்து கிளம்பும் ஆவியி லிருந்து தான் வருகிறது என்று அனுமானித்த அவர், ஆலைக்குள் சென்று அந்த ஆவியை ஒரு பெரிய கண்ணாடிப் புட்டியில் பிடித்துக் கொள்ள அனுமதி கோரினார். ஆலை நிர்வாகியும் அதற்கு அனுமதியளித்தார்.

அதன்படி, அந்த ஆவியைக் கண்ணாடி புட்டியொன்றில் பிடித்துக்கொண்டு திரும்பிய பிரீஸ்ட்லி அதை ஆராய்ந்தார். புட்டியின் மூடியை லேசாகத் திறந்து அந்த ஆவி வெளி யேறும் போது அதற்கு மேல், எரியும் விறகை நீட்டினார். உடனே அது அணைந்து விட்டது. அதன் மூலம் தீயை அணைக்கும் சக்தி அந்த ஆவிக்கு இருப்பதைத் தெரிந்து கொண்டார்.

அந்த ஆவியைப் பற்றி பிரபல விஞ்ஞானி களின் நூல்களில் ஏதாவது சொல்லப் பட்டுள்ளதா என்று தேடினார். ஒன்றும் தெரிய வில்லை. அந்த ஆவியைத் தனியாகத் தயாரிக்க முடியுமா என்றும் ஆராய்ந்தார். அதில் வெற்றியும் பெற்றார்.

அவர் கண்டுபிடித்த அந்த வாயு தான் "கரியமில வாயு.' அத்துடன் வேறு சில வாயுக்களையும் சேர்த்து ஆராய்ந்த பிரீஸ்ட்லி பிராண வாயுவையும் கண்டுபிடித்தார்.

]]>
dinamani, on this day, memeories, joseph freestley, scientist, oxygen, carbon di oxide http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/12/w600X390/joseph_freestly.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/mar/13/13031733-ஆக்சிஜனை-கண்டுபிடித்த--விஞ்ஞானி-ஜோசப்-பிரீஸ்ட்லி-பிறந்த-தினம்-இன்று-2664714.html
2664292 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 12.03.1954: சாகித்ய அகாதமி அமைப்பு துவங்கப்பட்ட நாள் இன்று! DIN DIN Sunday, March 12, 2017 12:00 AM +0530  

சாகித்ய அகாதமி இந்திய அரசினால், மார்ச் 12, 1954 இல் துவக்கப்பட்ட ஓர் அமைப்பு. இந்திய மொழிகளில் இலக்கியமும் இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் எண்ணத்தோடு துவக்கப்பட்ட அமைப்பு, சாகித்ய அகாதமி. இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இலக்கிய கூட்டங்களும், எண்ணற்ற பயிற்சி முகாம்களும் மற்ற பிற இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை நடத்தியுள்ளது சாகித்ய அகாதமி.

இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளை பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவது, சிறந்த படைப்புகளை விருது அளித்து ஊக்கப்படுத்துவது ஆகியவையும் சாகித்ய அகாதமியின் பணிகளாகும். .

சாகித்திய அகாதமியின் சார்பாக சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் விருது வழங்கப்படுகிறது. பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

]]>
dinamani, on this day, memeories, delhi, sahithay akademi http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/11/w600X390/sahithya_akathemi.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/mar/12/12031954-சாகித்ய-அகாதமி-அமைப்பு-துவங்கப்பட்ட-நாள்-இன்று-2664292.html
2663739 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 11.03.1955: பெனிசிலினை கண்டுபிடித்த அலெக்ஸ்சாண்டர் பிளம்மிங் மரணமடைந்த தினம் இன்று!  DIN DIN Saturday, March 11, 2017 12:00 AM +0530  

உலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிசிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பெனிசிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம். லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன.

ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிஸிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. பெனிசிலினைக் கண்டு பிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானிதான் அலெக் ஸாண்டர் ஃப்பௌமிங்.

ஃப்ளெமிங் 1881 ஆகஸ்ட் 6 அன்று ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்தவர். அவரது இளமைக்கல்வி இயற்கையெழில் சூழ்ந்த மலைப்பகுதியில் அமைந்தது. பாலிடெக்னிக் படிப்பை முடித்தபிறகு 16 வயதிலேயே கப்பல் நிறுவனம் ஒன்றில் அவர் அலுவலராகச் சேர்ந்தார். எழுத்தர் பணி அவருக்கு மனநிறைவை அளிக்கவில்லை. தூரத்து உறவினர் ஒருவரிடமிருந்து கிடைத்த சொத்து, அவர் மிகத் தாமதமாக 20 வயதில் மருத்துவக் கல்லூரியில் சேர வழி செய்தது.

படிப்பை முடித்த பிறகு, நோய்க்கிருமிகளுக்கெதிரான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆல்ம்நாத் ரைட் என்பவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார் ஃப்ளெமிங். நான்கு ஆண்டுகள் நடந்த முதல் உலகப்போரில் ரைட் குழுவினரின் தடுப்பூசி மட்டும் பயன்படுத்தப்பட்டிரா விட்டால், ஆயிரக்கணக்கானோர் டைஃபாய்டு காய்ச்சலுக்கு பலியாகியிருப்பார்கள். போரில் காயமடைந்த வீரர்களுக்கு கார்பாலிக் அமிலம், போரிக் அமிலம், ஹைட்ரஜன் பெராக்ஸைட் போன்ற நச்சுமுறி மருந்துகளையே அக்காலத்தில் பயன்படுத்தி வந்தனர். இந்த மருந்துகள் சிகிச்சைக்கு உதவாததோடு, இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அழித்து மேலும் பலர் இறப்பதற்கே வழிவகுத்தன என்று ஃப்ளெமிங்க் நிரூபித்தார். குறைபாடற்ற நச்சுமுறி மருந்தைக் கண்டுபிடிப்பதில் அவர் கவனம் திரும்பியது.

பல்வேறு வகை நுண்ணுயிர்களை தட்டுகளில் வளர்த்து அவற்றின் இயக்கங்களை அவர் ஆராயத் தொடங்கினார். தனது மூக்கிலிருந்து ஒழுகிய நீரிலிருந்தே ஓரிரு சொட்டுகள் எடுத்து பாக்டீரியாக்கள் அடங்கிய தட்டில் வைத்து வளர்த்தபோது, சளித்திரவத்தைச் சுற்றியிருந்த பாக்டீரியாக்கள் மட்டும் அழிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார். இதேபோல் கண்ணீர், உமிழ் நீர், சீழ் போன்ற உடலில் சுரக்கும் பல திரவங்களை எடுத்து ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். இந்த திரவங்கள் அனைத்திற்கும் நோய்க்கிருமிகளை வளராது தடுக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டார். இயற்கையிலேயே அமைந்த இந்த நச்சு முறிபொருளுக்கு ‘லைசோசைம்’ எனப் பெயரிட்டார்.

1928ஆம் ஆண்டில் நுண்ணுயிர்கள் வளர்க்கப்பட்ட ஒரு தட்டை நோக்கிய போது, லைசோசைம் அதுவரை செய்திராத ஒரு செயலை காளான் செய்திருந்ததைத் தற்செயலாகக் கண்டார். கொப்புளங்கள், கட்டிகள், மூக்கு, தொண்டை, தோல் இவற்றில் ஏற்படும் தொற்றுநோய்களை வரவழைக்கும் ஸ்டாபைலொகாக்கி எனப்படும் கிருமிகளை காளான் அழித்திருந்தது. அது மட்டுமல்ல, அந்தக் காளானின் சாரம் வெள்ளை அணுக்களை அழிக்கவில்லை என்றும் வேறு திசுக்களைப் பாதிக்கவில்லை என்றும் சோதித்துத் தெரிந்து கொண்டார். காளானில் பரவிய அப்பொருளுக்கு ‘பெனிசிலின்’ எனப் பெயரிட்டார் ஃப்ளெமிங்

]]>
dinamani, on this day, memories, pensylin, alexander fleming http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/10/w600X390/alexander_fleming.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/mar/11/11031955-பெனிசிலினை-கண்டுபிடித்த-அலெக்ஸ்சாண்டர்-பிளம்மிங்-மரணமடைந்த-தினம்-இன்று-2663739.html
2663063 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 10.03.1933: 'பாவலரேறு' பெருஞ்சித்திரனார் பிறந்த தினம் இன்று! DIN DIN Friday, March 10, 2017 12:00 AM +0530  

'தமிழ்த்தேசிய தந்தை'  என்று அறியப்படும் பெருஞ்சித்திரனார் 10.03.1933 அன்று பிறந்தார். இவர் இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர் ஆவார். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர்.

தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரணாக காத்து அவர்களை வளர்தெடுத்தவரும் இவர்தான். தமிழரசன் போன்ற தமிழ்தேசிய தலைவர்களுக்கு ஆதி காரணமாய் விளங்கியவரும் இவரே. 20 முறை சிறை சென்றும், இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் தமிழீழ போராட்டம் வரை இவரது செயல்பாடுகள் தமிழர்கள் நடுவில் வியந்து போற்றபடுகிறது.

தமிழ்தேசிய தந்தையாக இன்று தமிழர்களால் போற்றப்படுகிறார்.  இவர் உடல்நலக் குறைபாடு காரணமாக 11.06.1955 அன்று மரணமடைந்தார்.

]]>
dinamani, on this day, memories, perunchithiranar, tamil nationalism, prabhakaran, supporter http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/9/w600X390/perunchithiranaar.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/mar/10/10031933-பாவலரேறு-பெருஞ்சித்திரனார்-பிறந்த-தினம்-இன்று-2663063.html
2662472 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 09.03.1959: உலக அளவில் புகழ்பெற்ற பார்பி பொம்மைகள் விற்பனைக்கு வந்த தினம் இன்று DIN DIN Thursday, March 9, 2017 12:00 AM +0530  

உலக அளவில் பொம்மைகளுக்கான சந்தையில் ஐம்பது வருடங்களாக பார்பி பொம்மை இன்றும் ஒரு முக்கியமான பாகமாக இருந்து வருகிறது.

பார்பி என்னும் பொம்மையானது 'மேட்டல் இங்க்'  என்னும் பொம்மைகள் தயாரிக்கும் ஒரு அமெரிக்க நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. முதன்முறையாக 1959வது வருடம் மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி இது சந்தையில் வெளியிடப்பட்டது.

பில்ட் லில்லி என்னும் ஒரு ஜெர்மன் பொம்மையை இதற்கான அடிப்படை ஊக்கமாகக் கொண்டு இதை உருவாக்கியதாக இத வடிவமைப்பாளரும், அமெரிக்க தொழிலதிபரான ரூத் ஹாண்ட்லர்  என்னும் பெண்மணி பெருமை பெறுகிறார்.

மேலும் அந்தப் பொம்மை மற்றும் அதன் வாழ்க்கையமைப்பு முறை ஆகியவவை பல பரிகாசம் மற்றும் வழக்குகளுக்கும் ஆளாகியுள்ளது. தற்போது கடந்த சில வருடங்களாக பார்பி பொம்மையானது 'ப்ராட்ஜ்' வகைப் பொம்மைகளிடமிருந்து அதிகரித்து வரும் போட்டியையும் சந்தித்து வருகிறது.

]]>
dinamani, on this day, memeories, babarie, doll, famous http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/8/w600X390/barbie.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/mar/09/09031959-உலக-அளவில்-புகழ்பெற்ற-பார்பி-பொம்மைகள்-விற்பனைக்கு-வந்த-தினம்-இன்று-2662472.html
2662402 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... மார்ச் 8 - சர்வதேச மகளிர் தினம் DIN DIN Wednesday, March 8, 2017 11:56 AM +0530  

ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

18ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர்.வீட்டு வேலைகளை செய்வதற்காக பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது.

1857ம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணி வாய்ப்பு தரப்பட்டது. பெண்களால் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது. ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.

இதனால் பெண்கள் மிகுந்த வருத்தமடைந்தனர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக்கோரி குரல் எழுப்பினர். அப்போதைய அமெரிக்க அரசு இதற்கு செவி கொடுக்கவில்லை. இதனால் அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள் கிளர்ச்சியில் இறங்கினர், 1857ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி இதற்கான போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இப்போராட்டத்தை அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் ஒடுக்கினர்.

1920ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து 1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

]]>
dinamani, on this day, memories, women day, celebration http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/8/w600X390/womans-day.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/mar/08/மார்ச்-8---சர்வதேச-மகளிர்-தினம்-2662402.html
2661180 ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்... 07.03.1952: மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் பிறந்த தினம் இன்று! DIN DIN Tuesday, March 7, 2017 12:00 AM +0530  

சர் ஐசக் விவியன் அலெக்சாண்டர் ரிச்சர்ட்ஸ் மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான சென்ட்  ஜான்ஸஸில் 07.03.1952 அன்று பிறந்தார். மேற்கிந்தியத் தீவுகள்அணியின் முன்னாள் மட்டையாளராவர். அவரது இரண்டாவது பெயரான விவியன் அல்லது இன்னும் பரவலாக விவ் அல்லது செல்லப் பெயரான 'கிங் விவ்' என்று அறியப்பட்டார்.

இந்த நூற்றாண்டின் தலைசிறந்த ஐந்து துடுப்பாட்ட வீரர்களில் , டான் பிராட்மன், சோபர்ஸ், ஜாக் ஹாப்ஸ், மற்றும் ஷேன் வோர்ன் ஆகியாருடன் ஒருவராக 2000ஆம் ஆண்டு 100 வல்லுனர்கள் அடங்கியக்குழு ஒன்று இவரையும் வாக்களித்து தேர்ந்தெடுத்தது.

பெப்ரவரி 2002ஆம் ஆண்டு புகழ்பெற்ற விஸ்டன் பத்திரிக்கையினால் எக்காலத்திலும் சிறந்த ஒருநாள்  துடுப்பாட்ட வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டு டிசம்பரில் அவரை சிறந்த ஒருநாள் துடுப்பாட்ட வீரராகவும் தேர்வுசெய்யப்பட்டார்.

]]>
dinamani, on this day, memeories, west indies, vivian richards, birthday http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/6/w600X390/vivian_richards.jpg http://www.dinamani.com/specials/indha-naalil/2017/mar/07/07031952-மேற்கிந்திய-தீவுகள்-அணி-கிரிக்கெட்-வீரர்-விவியன்-ரிச்சர்ட்ஸ்-பிறந்த-தினம்-இன்று-2661180.html