Dinamani - உலகத் தமிழர் - http://www.dinamani.com/specials/world-tamils/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3012388 ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர் அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட பெரியார் - அண்ணா பிறந்தநாள் விழா பிரசாத் பாண்டியன் DIN Tuesday, October 2, 2018 03:29 PM +0530  

அமெரிக்காவின் முதல் மாநில மாம்டெலவரில் செப் 29, 2018, சனிக்கிழமையன்று டெலவர் பள்ளத்தாக்கு தமிழ் நண்பர்கள் தந்தை பெரியாரின் 140வது மற்றும் பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்தநாளை பெருவிழாவாக ஏற்பாடு செய்திருந்தனர். 

அதில் டெலவர், பென்சலவேனியா, நியூசெர்சி, மேரிலாந்து மற்றும் விர்சீனியா மாநிலத்திலிருந்து திரளாக தமிழ் மக்கள் வந்து கோலகலமாகக் கொண்டாடி, கருத்துகளை பகிர்நதுமகிழ்ந்தனர்.

இவ்விழாவின் சிறப்பாக பல்வேறு போட்டிகள் நடைப்பெற்றன. திருமிகு. ரமா ஆறுமுகம் மற்றும் திருமிகு.ஜெசிபிரியா பிரசாத் விழாவினை அருமையாக தொகுத்து வழங்கினார்கள்.

திருமிகு.ஜெய் (ரஜினி தென்னிந்திய உணவகம் உரிமையாளர்) கூறுகையைில், தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சமூகநீதி தொண்டினால்தான், என் போன்ற எளிய பிள்ளைகள் அமெரிக்கா வரவும், இவ்வுயரத்தை அடையவும் முடிந்தது என்று கூறினார்.

தொடர்ந்துவினாடிவினாப்போட்டிகள்நடைபெற்றன. 

வினாடி வினா போட்டியை நடத்திய திருமிகு. ராஜ்குமார் களியபெருமாள் கூறுகையில், “பெரியார், அண்ணா வாழ்க்கை மற்றும் கொள்கைகள் சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டன. அண்ணாவைப் பற்றியோ அல்லது பெரியாரைப் பற்றியோ கட்டுரை எழுதுங்கள் என்று கூறினால் உடனே இருபக்கம் எழுதிவிடுமளவுக்கு பயிற்சி எடுத்திருக்கிறார்கள். இதுவே இந்த போட்டியின் நோக்கம். அதுநிறைவேறியதாக உணர்கிறோம். 
கடல் கடந்த அமெரிக்க மண்ணில் பெரியாரிய சிந்தனைகளை பெரியார் பிஞ்சுகள் அறிந்து பதிலிளித்தது உள்ளபடியெ மகிழ்ச்சியளித்தது”  என்றார். அவர்களைப் பயிற்றுவித்த பெற்றோர்களுக்கும் அவர் நன்றி கூறினார்.

திருமிகு. தனம் பெரியசாமி அவர்கள் சிறப்பு பேச்சாளராக வந்திருந்து சிறப்பளித்தார். ஈரோட்டில் பெரியார் வாழ்ந்த அதே தெருவில் பெரியார் வாழ்ந்த காலத்தில் வசித்தவர். பெரியாரை பற்றிய அரிய தகவல்களை அவர் கூறி மகிழ்ந்து அனைவரையும் மகிழ்வித்தார்.

அதனைத் தொடர்ந்து பெரியவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது.

விழாவின் முத்தாய்ப்பாக தமிழர் மரபான கும்மி மற்றும் பறையிசை நிகழ்ச்சி நடைப்பெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கூடிய அனைவரும் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

“சமூக நீதிக்காவலர்கள்பெரியார், அண்ணா” என்ற தலைப்பின் கீழ்சமூகநீதி, பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்ணியம் மற்றும் சமத்துவம் என்ற துணைதலைப்புகளோடு கருத்தரங்கம் சிறப்பாக நடைப்பெற்றது. 

"சாமானிய மனிதர்கள்" என்ற தலைப்பில் பலதரவுகளுடன் தோழர் முனைவர் சொர்ணம் சங்கர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவர் திரையில் 1901 முதல் தற்போது வரையிலான தமிழ் சமூக வளர்ச்சியின் வேகத்தையும், அதற்கான பெரியார், அண்ணாவின் பங்களிப்பையும் விவரித்துக் கூறினார். அதன் பின் தமிழ்நாட்டிலிருந்து தனது மகனைப் பார்க்க அமெரிக்கா வந்திருந்த திருமிகு.வசந்தகோகிலா அவர்கள் நாகூர் அனிபாவின் “எங்களை ஏங்க விட்டு எங்கே சென்றாய்.. அண்ணா..”என்ற பாடலை அருமையாகப்பாட அரங்கமே அமைதியில் மூழ்கியது. 


அனைவரும் எழுந்து நின்று அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

"தமிழகத்தின் விடி வெள்ளி பெரியார்" என்ற தலைப்பில் தோழர் திருமிகு. கனிமொழியின் பேச்சு அநீதிகளை வெடித்துச் சிதறவைக்கும் ஒரு துப்பாக்கித் தோட்டா போலிருந்தது. தற்கால அரசியலின் அநீதிகளைக்களைய பெரியாரின் சிந்தனைகள் எப்படி பயன்படும் என்று எடுத்துரைத்தார்.

விழாவிற்கு வந்திருந்த அனைத்து பெண்களுக்கும் “பெண் ஏன் அடிமையானாள்?” என்ற புத்தகத்ததை விழாக்குழுவில் ஒருவரான திரு. ராஜ்குமார் வழங்கினார்.

விழாவின் இறுதியாக பரிசளிப்பு விழா நடைப்பெற்றது. விழாவிற்கு வந்த அனைவருக்கும் திருமிகு. துரைக்கண்ணன் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுப் பெற்றது.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/10/2/w600X390/Periyar_Anna.jpg http://www.dinamani.com/specials/world-tamils/2018/oct/02/அமெரிக்காவில்கொண்டாடப்பட்டபெரியார்---அண்ணா-பிறந்தநாள்-விழா-3012388.html
2943611 ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர் தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஆறாம் தமிழ் இலக்கிய அமர்வு DIN DIN Wednesday, June 20, 2018 04:03 PM +0530  

தைவான் தமிழ்ச்சங்கத்தினால் தொடர்ச்சியாக நடத்தப்படும் தமிழ் இலக்கிய அமர்வின் ஆறாம் அமர்வு தைபே (Taipei) நகரில் உள்ள தேசிய தைவான் பல்கலைக்கழகத்தில் (National Taiwan University) சிறப்பாக நடைபெற்றது. 

முனைவர் மு. திருமாவளவன் தலைமையேற்று அவை முன்னவராக இருந்து வழிநடத்த முனைவர் வனிதா நித்தியானந்தம் முனைவர் சுப்புராஜ் திருவெங்கடம்  உரையாற்றினார்கள். மேலும் பட்டிமன்றம் புகழ் திரு ராஜா அவர்கள் காணொளி வழியாக சிறப்புரையாற்றி இலக்கிய அமர்வினை துவங்கிவைத்தார்.    

கம்பனின் கவி
தமிழ் இலக்கிய அமர்வின் சிறப்புரையாக பட்டிமன்றம் புகழ்  ராஜா 'கம்பனின் கவி' என்ற தலைப்பில் கம்பனின் சிறப்பு பற்றி காணொளி வழியாக சிறப்புரையாற்றினார்.  கம்பராமாயணத்தில் சில இடங்களில் திருமால் மற்றும் ஸ்ரீராமரை புகழ்ந்தாலும்கூட "உலகம் யாவையும்" எனத்தொடங்கும் அதன் கடவுள் வாழ்த்துப்பாடலில் எந்த ஒரு கடவுளின் பெயரையும் குறிப்பிடாமல் பாடுவது கம்பனின் சமயம் கடந்த பார்வை. சிறந்த நாடக ஆசிரியர் என போற்றப்படும் ஷேக்ஸ்பியர் சுமார் முப்பதாயிரம் சொற்களை பயன்படுத்தியுள்ளார் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் கம்பனோ சுமார் ஒரு லட்சத்திற்கு மேலான தமிழ் சொற்களை பயன்படுத்தியுள்ளார் என்று ஆய்வறிக்கை சொல்கிறது. இதிலிருந்தே கம்பனின் சொல்லாட்சியை நாம் விளங்கிக்கொள்ள முடியும். கம்பனின் சொல்லாட்சிக்கு எடுத்துக்காட்டாக தாடகையை வதம் செய்யும் காட்சியை விளக்கும் "அலை உருவ" எனத்தொடங்கும் பாடலில் ஒன்பது இடங்களில் 'உருவ' என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் ஒன்பது இடங்களிலும் வேறு வேறு அர்த்தங்களில் வருகிறது. 

"மறு வாசிப்பில் கம்பன்  மலர்கிறான்"  என்ற வாக்கிற்கிணங்க முதல் வாசிப்புகளில் கடினமாய் இருந்தாலும் மேலும் மேலும் வாசிக்கையில் கம்பராமாயணம் இனிமையாய் இனிக்கும். மகாகவி பாரதி ''யாமறிந்த புலவர்களில் கம்பனைப்போல், வள்ளுவனைப்போல்” என்றும் “கம்பன் இசைத்த கவியெலாம்”  என்று குறிப்பிடுவதும், காளிதாசன் “கம்பன் என்றோர் மானிடன்” எனப் பாடத்துவங்குவதும், கண்ணதாசன் தன் பாடல்களில் பல இடங்களில் கம்பனின் பெயரை பயன்படுத்தியதும் தமிழ் இலக்கிய உலகில் கம்பனை தொடாத கவிஞர் எவருமில்லை என்று கூறி கம்பனின் கவி ஆளுமையை சிறப்பித்து பேசினார்.  

மதுரையில் தெருக்களின் பெயர்கள் தமிழ் மாதங்களின் பெயரில் உள்ளது போல தமிழ் மாதங்களின் முதல் மாதமான "தை " மாதத்தின் பெயர்   'தை'வான் நாட்டின் பெயரில் இருப்பது சிறப்பு என கூறினார். மேலும் தைவான் தமிழ் சங்கத்தின் தமிழ் தொண்டினை பாராட்டி வாழ்த்துகளை கூறி தன் சிறப்புரையை முடித்தார். 

இணையத்தில் தமிழ்  அறிவியல்

அதன்பின்னர் “இணையத்தில் தமிழ் அறிவியல்” என்ற தலைப்பில் முனைவர் வனிதா நித்தியானந்தம் அவர்கள் சிறப்புரையாற்றினார். தற்பொழுதைய சூழலில் இணையம் என்பது இன்றியமையாத ஒன்று. இத்தகைய காலத்தில் அறிவியல் செய்திகள் தமிழ் மொழி வழியாக இணையத்தில் கொண்டு சேர்க்கப்படுகிறதா என்ற கேள்விக்கு இல்லையென்பதே பதில். தற்போது, வலையொளி(youtube), வலைப்பூ(blogs), தமிழ் விக்கிபீடியா போன்றவைகள்  அறிவியல் செய்திகளை தமிழில் கொண்டுசேர்க்கிறது. இவற்றில் பெரும்பாலும் அடிப்படை அறிவியலே விளக்கப்படுகிறது. ஆனால்  பல முக்கிய ஆழ்ந்த அறிவியல் ஆராய்ச்சிகள், ஆய்வுமுடிவுகள் பற்றிய தற்பொழுதைய தகவல்களை தமிழில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பது மிக அவசியம். சமீபத்தில் தடுப்பூசி பற்றிய வதந்தியானது புலனம்(Whatsapp) மற்றும் முகநூல்(Facebook) வழியாக பரவியதை அனைவரும் அறிவோம். தடுப்பூசியினால்  மதியிறுக்கம் (Autisam) வரும் என்ற வதந்தியினால் பல பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத்தவறினர்.

இத்தகைய வதந்திகள் குழந்தைகளின் உயிரையே அடகுவைக்கின்றன. பல ஆராய்ச்சிகள் தடுப்பூசியினால் மதியிறுக்கம் நோய் வருவதில்லை என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆராய்ச்சிகள் பற்றிய விவரங்களை பின்வரும் இணைய தொடுப்புகளில் பெறலாம் https://www.ncbi.nlm.nih.gov/pubmed/25898051, https://www.ncbi.nlm.nih.gov/pubmed/25562790, https://www.ncbi.nlm.nih.gov/pubmed/24814559. இத்தகைய ஆய்வறிக்கைகள் இணையத்தில் தமிழில் வரவேண்டும். அப்படி வந்தால் தான் மக்கள் வதந்திகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வார்கள் என்று நவீன அறிவியல் தமிழில் வருவதால் உள்ள பயன்களை கூறினார். நம் அன்றாட வாழ்வில் அலைபேசி  தொடங்கி மருத்துவம், ராணுவம் வரை அறிவியல் உள்ளது. மக்கள் வாழ்வு மேம்பட அறிவியல் முன்னேற்ற தரவுகளை தமிழில் கொணர்தல் வேண்டும். ஆங்கிலம் அறிந்த அறிவியல் புரிந்த ஒவ்வொருவரும் தங்களால் முடிந்தவரை அறிவியல் செய்திகளை ஆதாரங்களோடு தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என கூறி தன் உரையை முடித்தார்.

தென்கிழக்காசிய நாடுகளில் பழந்தமிழர் கலாச்சாரத்தின் தாக்கம் 

அடுத்ததாக முனைவர். சுப்புராஜ் திருவெங்கடம் அவர்கள் "தென்கிழக்காசிய நாடுகளில் பழந்தமிழர் கலாச்சாரத்தின் தாக்கம் - ஒரு நாடோடியின்  பார்வையில்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.  மிகப்பெரும் வரலாற்று ஆய்வாளர்களான சர். ஜான் மார்ஷல், ஹென்றி ஹால், மற்றும் வில் டுராண்ட் ஆகியோரின் ஆய்வுகளின்படி, இந்தியாவில் வேதகாலத்திற்கு முன்பாகவே ஒரு செழுமையான கலாச்சாரம் புழங்கி வந்துள்ளது, அவர்கள் கடல் தாண்டிச்சென்று எகிப்து, சீனம் மற்றும் சுமேரிய கலாச்சார மக்களுடன் வாணிபத்தொடர்பு கொண்டிருந்தனர் என்று பதிவுசெய்துள்ளார்கள். மத்தியதரைக்கடல் தொடங்கி சீனக்கடல் வரையில் திரைகடலோடிய அந்த கடலோடிகளே திரமீளர் (தமிழர்) ஆவார்கள். திரமீளர் என்றால் திரை மீளர்,  கடல் கடந்து சென்று மீள்பவர்கள் என்றும் அர்த்தம் இருக்கிறது.

கணியன் பூங்குன்றனின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” மற்றும் அவ்வையின் ”திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்ற வரிகளில் உள்ள பிற உயிர் பேணும் சகோதரத்துவ மனப்பாங்கும், செல்வம் சேர்க்க நெடுந்தொலைவு கூட பயணிக்கலாம் என்கிற உளப்பாங்கும் தமிழர்க்கு ஆதியிலே ஊட்டப்பட்டிருப்பதால் கடலோடுதல் தமிழர்க்கு விருப்பமான ஒன்றாய் மாறியிருக்கலாம். இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் பற்றி ஆய்வாளர் குவாரிட்ச் வேல்ஸ் கூறுகையில், இந்திய ஆய்வாளர்களில் பெரும்பாலோனோர் வடபுலத்தவர் மற்றும் தென்புலத்தின் மேட்டுக்குடி சார்ந்த ஆய்வாளர்கள். அவர்கள் தென்கிழக்கு ஆசியாவில் வடபுல மற்றும் வேத கலாச்சாரம் வகித்த பாத்திரத்தை மிகைப்படுத்தி கூறுவதாக குறிப்பிட்டுள்ளார். எம். கோடீஸ் என்ற மற்றொரு ஆய்வாளர், " வடஇந்திய கலாச்சாரமானது இந்தியாவின் அனைத்துப் பகுதிகளின் கலாச்சார தொடர்பிற்கு பங்களித்திருக்கின்றன. ஆனால் தென்னகத்தின் கலாச்சார தாக்கமானது இலங்கை, ஜாவா, சுமத்ரா, போர்னியோ, மலாயா, கம்போடியா, தாய்லாந்து, மற்றும் பாலி ஆகிய பகுதிகளில் மிகவும் வெளிப்படையானது "என்கிறார். மிக சமீபமாக, எம். ஸ்டெர்ன் என்கிற ஆய்வாளர், சாம்பா (சியாம்) மற்றும் கம்போடியா ஆகியவற்றில் கூட, பல்லவ (தமிழ்) தாக்கங்கள் அவர்களின் கலாச்சாரம் பரிணாம வளர்ச்சியில் மிக முக்கியமான   ஒரு  பகுதியாக இருந்து வருகின்றன என்பதை சுட்டி காட்டுகிறார். தமிழ் மற்றும் தமிழர்களின் கலாச்சரத்தின் தாக்கமானது தென்கிழக்காசிய நாடுகளில் 17 நாடுகளில் இருந்ததாக கூறுகிறார். தற்போதைய பர்மா, மலேசியா மற்றும் இந்தோனேசிய நாடுகளில் பழந்தமிழர் கலாச்சாரத்தின் எச்சங்களாக கிடைத்துள்ள சான்றுகளை அனைவருக்கும் புரியும்படி எளிமையாக விளக்கி கூறி தனது சிறப்புரையை முடித்தார். 

தைவான் தமிழ்ச் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று இணைய காணொளி வழியாக சிறப்பானதொரு உரையை அளித்த  ராஜா அவர்களுக்கும் நேரலைக்கு உதவிய செல்வேந்திரன் அவர்களுக்கும் தைவான் தமிழ்ச் சங்கம் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது. இந்நிகழ்ச்சியில் தைவானில் வாழும் தமிழ் ஆர்வலர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் தைவான் தமிழ்சங்க நிர்வாகிகள்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இரமேஷ்  பரமசிவம்
துணை தலைவர், தைவான் தமிழ் சங்கம்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/20/w600X390/IMG_4355.JPG http://www.dinamani.com/specials/world-tamils/2018/jun/20/தைவான்-தமிழ்ச்சங்கத்தின்-ஆறாம்-தமிழ்-இலக்கிய-அமர்வு-2943611.html
2928521 ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர் தூத்துக்குடி படுகொலை: தைவான் தமிழ் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் DIN DIN Monday, May 28, 2018 02:51 PM +0530  

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தைவான் தமிழ் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் சுற்றுப்புற சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அறவழியில் போராடிய தூத்துக்குடி மாநகரப் பொது மக்களின் மீது தமிழக காவல்துறையினரின் கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதத்தை கண்டித்து தைவான் தமிழ்ச்சங்கத்தினாரால் கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு கண்டனக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

தைவானின் ஷிஞ்சு நகரத்தில் உள்ள பூங்காவில் தைவானின் பல்வேறு நகரத்தில் இருந்து தமிழ் மக்கள் வந்து கலந்து கொண்டு தமிழக காவல்துறையின் அடக்குமுறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள். 

ஒரு ஜனநாயக நாட்டில் அறப்போராட்டங்கள் மக்களின் அடிப்படை உரிமை. அவர்களைக் காக்க வேண்டியது அரசின் தலையாய கடமை. இந்த உயர்ப்பலி நிச்சயம் தவிர்த்திருக்கக் கூடிய ஒன்று. இந்த போராட்டத்தின் போது உயிர் இழந்த அனைத்து குடும்பத்தினருக்கும், தைவான் தமிழ்ச்சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். காவல் துறையின் துப்பாக்கி தோட்டாக்களுக்கு பலியாகிய அப்பாவி பொதுமக்கள் 13 பேருக்கும் தைவான் தமிழ்ச்சங்கத்தின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். 

சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கும்படி மாநில மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு இத்தருணத்தில் மீண்டும் ஒரு முறை தைவான் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கிறோம் என்று வலியுறுத்தப்பட்டது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/5/28/w600X390/IMG_4194.JPG http://www.dinamani.com/specials/world-tamils/2018/may/28/தூத்துக்குடி-படுகொலை-தைவான்-தமிழ்-சங்கத்தின்-சார்பில்-கண்டன-ஆர்ப்பாட்டம்-2928521.html
2908104 ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர் தைவானில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சித்திரை திருவிழா! இரமேஷ் பரமசிவம் DIN Thursday, April 26, 2018 05:58 PM +0530
கடந்த ஏப்ரல் 21ம் தேதி சனிக்கிழமை மாலை தைவானில் தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சித்திரை திருவிழா கலை நிகழ்ச்சிகளுடன் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

தைவானில் சங்கமித்த தைவான் வாழ் தமிழர்களின் சங்கமமாகும். இத்திருவிழாவில் தைவான் வாழ் தமிழர்கள் மட்டுமல்லாது தைவான் வாழ் இந்தியர்கள், தைவான் மற்றும் வெளிநாட்டவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். தைவான் வாழ் தமிழர்களை ஒருங்கிணைக்கும் வகையில் ஜனவரி 2013 ஆம் ஆண்டு தைவான் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது.  அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் பொங்கல் மற்றும் சித்திரை திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அவ்வண்ணமே, இந்த ஆண்டும் சித்திரை திருவிழாவனது கடந்த 21 ஆம் நாள் சனிக்கிழமை அன்று தைவான் தேசிய பல்கலைகழகத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. 

தைவானின் பல்வேறுபட்ட நகரங்களில் இருந்தும் குறிப்பாக ஷிஞ்சு, தைச்சூங், ஹொஷியாங் மற்றும் தைனன் நகரங்களில் இருந்து பெருபான்மையான தமிழர்கள் வந்து கலந்து கொண்டார்கள்.

சிறப்பு விருந்தினர்களாக இந்தியா தைபே அசோசியேசனின்  முதன்மை இயக்குனர் மேதகு ஸ்ரீதரன் மதுசூதனன், தேசிய தைவான் பல்கலைகழகத்திலிருந்து, மூலக்கூறு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பன்னாட்டு பட்டமேற்படிப்பு  துறை இயக்குனர் பேராசிரியர் சுன் வேய் சென், பேராசிரியர் ஷென்-மிங் சென், இரசாயன பொறியியல் மற்றும் உயிர் தொழில்நுட்பவியல் துறை மற்றும் இந்திய தைவான்கலாச்சார கூட்டமைப்பின் தலைவர் இராஜன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் சங்கத்தின் துணைத்தலைவர் ரமேஷ் பரமசிவம் விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று உரையாற்ற சிறப்பு விருந்தினர்களால் குத்து விளக்கேற்றி சித்திரை விழா இனிதே தொடங்கிவைக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்துச் செய்திகளால் விழா சிறப்புற நடைபெற்றது. இந்தியா தைபே அசோசியேசனின் முதன்மை இயக்குனர்  ஸ்ரீதரன் மதுசூதனன் அவர்கள் சிறப்புரையாற்றும் போது, இந்திய மாணவர் சமுதாயத்தின் பங்களிப்புதனை எடுத்துரைத்து, தைவான் அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையேயுள்ள நட்புறவுதனை எடுத்து உரைத்தார். மேலும் சீன மொழியின் எதிர்கால முக்கியத்துவத்தினை விளக்கி வாழ்த்துரை வழங்கினார்.

தைவானில் ஆராய்ச்சி பட்டம் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக கடந்த ஆண்டு முதல் "இளம் ஆராய்ச்சியாளர்" விருது தைவான் தமிழ்ச்சங்கத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதானது பணமுடிப்பு, பட்டையம் அனைத்தும் உள்ளடக்கியது. 2018 ஆம் ஆண்டிற்கான இளம் ஆராய்ச்சியாளர் விருதிற்கு

•           திருவளர். நடராஜன் கரிகாலன் (Karikalan Natarajan)
•           செல்வி. பவித்ரா ஸ்ரீராம் (Pavithra Sriram)
•           திருவளர். செல்லக்கண்ணு ராஜ்குமார் (Chellakannu Rajkumar)
•           செல்வி. பிரியதர்ஷினி (Priya Dharsini K)
•           திருவளர். அன்குர் ஆனந்த் (Ankur Anand)
•           திருவளர். முகேஷ் குமார் தாகூர் (Mukesh Kumar Thakur)

ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள். விழா மேடையில் இவ்விருதினை Dr. சுன் வெய் சென்( Director NTU),  Dr . சங்கர் ராமன் (துணை தலைவர், தைவான் தமிழ் சங்கம்) மற்றும் திரு. ரிஷிகேஷ் சுவாமிநாதன் ( உதவி இயக்குநர், ITA ) ஆகியோர் வழங்கி மாணவர்களை கௌரவப்படுத்தினர்.

மேலும் கடந்த வருடத்தில் தைவானின் பல்வேறு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை முடித்தவர்களை கெளரவ படுத்தும் விதமாக அவர்களுக்கு சங்க நிர்வாகிகள் சங்கர் ராமன், ரமேஷ் பரமசிவம், பிரசன்னன் மற்றும்  பொன்முகுந்தன் சுந்தரபாண்டி ஆகியோர் பதக்கம் அணிவித்து பாராட்டு பத்திரம் வழங்கி சிறப்பு செய்தார்கள்.

தைவான் தமிழ்ச்சங்கத்திற்கு உறுதுணையாக இருக்கும் ஆர்வலர்கள்  பிரகாஷ் - சங்கரி பிரியா தம்பதியினருக்கும் மற்றும் தில்லை நாயகம் அவர்களுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. சமீபத்தில் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக தைவான் தமிழ்ச்சங்கத்தால் நடத்தப்பட்ட கிரிக்கெட் கோப்பை 2018ல் வெற்றிபெற்ற தைபே இந்தியன்ஸ் அணியினருக்கும் இரண்டாம் இடம் வந்த பாக்கிஸ்தான் கிரிக்கெட் கிளப் தைபே அணியினருக்கும் விழா மேடையில் கோப்பை மற்றும் பணமுடிப்பு பரிசாக வழங்கப்பட்டது.

பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், சிறுவர் சிறுமியரின் நடனம் மற்றும் உடையலங்கார காட்சிகள், புதியீடு குழுவினரின் தமிழகத்தின் நிலை பற்றிய நாடகம் மற்றும் தைவான் மகளீரின் ஆடல் பாடல்  என்று கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றது. சிறுவர் சிறுமியருக்கான ஓவிய போட்டி நடத்தப்பட்டு விழா அரங்கின் முகப்பில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. விழாவில் அனைவருக்கும் அறுசுவை இரவு உணவு பரிமாறப்படது. இவ்விழாவில் சுமார் 350 பேர் கலந்துகொண்டு சிறப்பு செய்தார்கள். இவ்விழா தேசிய கீதத்துடன் நிறைவுபெற்றது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/4/26/w600X390/thaivan.JPG http://www.dinamani.com/specials/world-tamils/2018/apr/26/தைவானில்-தமிழ்ப்-புத்தாண்டு-மற்றும்-சித்திரை-திருவிழா-2908104.html
2906039 ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர் சிங்கப்பூரில் தமிழர் அறிவியலை போற்றி தமிழ் மொழி விழா கொண்டாட்டம்  DIN DIN Monday, April 23, 2018 05:47 PM +0530  

சிங்கப்பூரில் அமைந்திருக்கும் வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் இங்குள்ள தமிழ் அமைப்புகள் பல ஒன்றிணைந்து தமிழ் மொழி  விழாவினை ஏப்ரல் மாதம் முழுவதும்  சிறப்பான முறையில் கொண்டாடி வருகின்றனர். 

இவ்வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழ்மொழி விழா அண்மையில் கடந்த சித்திரை மாதம் 8- ஆம் திகதி (21-04-2018) அன்று சிங்கப்பூரில் அமைந்துள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் கொண்டாடப்பட்டது. தங்களின் ஐந்தாவது ஆண்டின் பங்களிப்பை  மிகச் சீரிய முறையில் செயல்படுத்தி  "என் கடன் பணி செய்து கிடப்பதே" எனும்  தேவாரப் பாடலின் சொல்லிற்கிணங்க ஆண்டுதோறும் தமிழுக்கு பணிசெய்யும் உயரிய நோக்குடன்  தன்னை இணைத்துக்கொண்டு தனக்கான தனி முத்திரை பதித்தது. 

இவ்வாண்டு தலைப்பின் கருப்பொருளாக, தமிழர்களின் அறிவியல்  சார்ந்த முற்போக்கு சிந்தனைகள் மற்றும் வாழ்வியல் முறைகளை உலகம் உள்ள வரை போற்றும் விதமாகவும், இளையோர்களின் தமிழ் மொழி ஆர்வத்தை மேலும் ஊக்குவித்து அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் "தமிழர் அறிவியல்" என்ற தலைப்பு மாணவர்களின் படைப்பாக்கத்திற்காகவும், அரங்கில் காணவருவோர் அனைவரும் கேட்டும், வியந்தும், மகிழும் விதமாக சிறப்புரையாற்ற, சிறப்புப் பேச்சாளர் முனைவர் . வெ.இறையன்பு அவர்களுக்கும் கொடுக்கப்பட்டது. 

விழாவில் வளர்தமிழ் இயக்கத்தின் துணைத் தலைவர் நஷீர் கனி உட்பட பல்வேறு தமிழ் அமைப்புகளை சார்ந்தவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முன்னாள் மாணவர்கள் சங்க உறுப்பினர்களின் குடும்பத்தார்கள் அனைவரும் பங்கேற்றார்கள்.

வரவேற்புரை நிகழ்த்திய அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முன்னாள் மாணவர்கள் சங்கம் சிங்கப்பூரின் தலைவர் அ.இளங்கோவன், நாம் முன்னெடுக்கும் நிகழ்வுகளை விளக்கியதோடு இனிவரும் ஆண்டுகளில், தமிழ் நிகழ்வுகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் நிகழ்ச்சிகள் மேலும் தொடரும் என்றும், ஆதரவு அளித்து வரும் வளர்தமிழ் இயக்கத்திற்கு நன்றியையும் தெரிவித்துக்கொண்டார். சங்கத்தின் செயலாளர் சங்கர் அவர்கள் நன்றியுரையை வழங்கினார். 

இம்மாதம் ஏப்ரல் 8ஆம் திகதி நடைபெற்ற முன் இறுதிச்சுற்று போட்டியில் 19 உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கக் கல்லூரியிலிருந்து 69 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், இருநிலைகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் தங்களின் படைப்பாக்கத்தை அனைவர் முன்னிலையில் மிகச்சிறந்த முறையில், தமிழர்கள் அறிவியலின் உச்சமாக திகழும் கல்லணை மற்றும் தஞ்சை பெருவுடையார் கோவிலின் அறிவியல் ஆய்வுகளை அனைவரும் போற்றும் வகையில் செவிக்கு விருந்தாகப் படைத்தார்கள்.

இந்த போட்டியில் முதல் பரிசினை தொடக்கக் கல்லூரி பிரிவில் குளோபல் இந்தியன் சர்வதேச பள்ளியை சார்ந்த ஸ்ரேயா மஹேந்திரன் மற்றும் நந்தினி பிரபாகரன் அணியினர் தட்டிச்சென்றனர் மற்றும் உயர்நிலைப்பள்ளி பிரிவில் தெமாசெக் தொடக்க கல்லூரியை சார்ந்த அப்துல் ரஹீம் சாஜித் ரஹ்மான் பெற்றார். 

சிறப்புப் பேச்சாளர் முனைவர் வெ.இறையன்பு, தமிழர்களின் அறிவியல் இன்றளவும் எவ்வாறு அனைத்து துறைகளிலும் (கட்டிடக்கலை, உழவுத்தொழில், வானவியல், கடல்சார் அறிவியல் மற்றும் பல துறைகள்) பயன்பாட்டில்  உள்ளதையும், சங்ககால இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள தமிழர்களின் அறிவியலை மேற்கோள்காட்டியும், நவீன அறிவியலில் இன்றைய காலத்தில் வளர்ந்த நாடுகள் கூட தமிழனின் பேரானந்த நடனத்தினை போற்றி கொண்டாடுவதிலிருந்தே தமிழர்கள் அறிவியல் அறிவை அறியலாம் என எடுத்துரைத்தும் பார்வையாளர்களின் பலத்த கைதட்டல்களுக்கிடையே தன் உரையை தொடர்ந்தார். 
மாற்றம் என்பது சாத்தியமானவற்றிலிருந்து சாத்தியமானவற்றை கற்பனை செய்து நிகழ்த்திய காலத்திலிருந்து, சாத்தியமானவற்றிலிருந்து அசாத்தியமானவற்றை கற்பனை செய்து அதனை நவீன தொழில்நுட்பத்தில் புகுத்தி புது ஆக்கங்களை உருவாக்குவதே என்றும்,  மேலும் இன்றைய தமிழ் சமூக இளையோர்கள் இம்மாதிரியான  மாற்றங்களை சுற்றுச்சூழலுக்குக் கேடு ஏற்படாமல் இயற்கையோடிணைந்து உருவாக்க வேண்டும் என்ற விதையை இளையோர்கள் மனதில் ஆழவிதைத்துள்ளார். கேள்வி பதில் நேரத்தில் இளையோர்களின் கேள்விகளுக்கு மிகவும் நேர்த்தியான முறையிலும் தனது அனுபவத்தின் துணை கொண்டும் இனிவரும் காலங்களில், தமிழ் சமூக இளையோர்கள் விழிப்புடனும், துடிப்புடனும் செயல்பட வேண்டிய விளக்கங்களை அனைவரின் முன்னிலையிலும் எடுத்துரைத்து இவ்விழாவினை நிறைவு செய்தார். 

450 க்கும் மேற்பட்டோர் முன்னிலையில், இவ்விழா பலஆயிரம் ஆண்டுகால  தமிழர்களின் அறிவியல் சற்றும் மாறா தன்மையுடன் இன்றளவும் நம் பயன்பாட்டில் உள்ளதை உணர்த்தும் விதமாக அனைவரும் வியந்து போற்றும்படி அமைந்தது தமிழர் அறிவியலுக்கே உரிய சிறப்பு!

‘காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது’ என்று ஒரு பழமொழி உண்டு.  நேரத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்தால் காலம் நம்மை வெற்றிக்கு இட்டுச்செல்லும், அதனை ஏற்பாட்டு குழுத் தலைவர்  ஜெ. கார்த்திக் மற்றும் குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கடமையை கண்ணாய் கொண்டு பொன்னான காலத்தை நேர்த்தியாக  கொண்டுநோக்கி இவ்விழாவினை மிகச் சிறப்பான முறையில் செயல்படுத்தியமைக்கு அனைவருக்கும் இந்நேரத்தில் பாராட்டுக்கள் மற்றும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். 
                                                                                                                                         
- வ.வடிவேல்

]]>
http://www.dinamani.com/specials/world-tamils/2018/apr/23/சிங்கப்பூரில்-தமிழர்-அறிவியலை-போற்றி-தமிழ்-மொழி-விழா-கொண்டாட்டம்-2906039.html
2899482 ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர் காவேரி வாரியம் அமைக்க, ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தைவானில் போராட்டம் DIN DIN Friday, April 13, 2018 03:45 PM +0530  

புலம் பெயர்ந்து வந்து தைவானில் வாழ்ந்தாலும், தைவான் வாழ் தமிழர்கள் தாய் தமிழகத்தின் மீது எப்பொழுதும் பற்றுகொண்டிருப்பர். 

தமிழகத்தில் தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடைபெறும் அறப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மேலும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வழியுறுத்தியும் தைவான் தமிழ்ச்சங்கம் சார்பில் ஒரு போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.

தைபேயில் உள்ள தேசிய தைவான் பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தின் முன்புறம் வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு தைவான் தமிழ்ச்சங்கத்தின் துணைத் தலைவர், முனைவர் சங்கர் ராமன்  தலைமை தாங்கினார். 

இடிமுழக்கத்துடன் கூடிய‌ கொட்டும் மழையிலும், தைவான் வாழ் தமிழர்கள் திரளாக கூடினார்கள். காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வழியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் கைகளில் பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினார்கள். மேலும் விவசாயத்தையும், விவசாயிகளையும் எப்பொழுதும் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தைவான் வாழ் தமிழர்கள் சார்பில் வைக்கப்பட்டது.
 

]]>
http://www.dinamani.com/specials/world-tamils/2018/apr/13/காவேரி-வாரியம்-அமைக்க-ஸ்டெர்லைட்-ஆலையை-மூடக்-கோரி-தைவானில்-போராட்டம்-2899482.html
2888478 ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர் தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாம் தமிழ் இலக்கிய அமர்வு DIN DIN Tuesday, March 27, 2018 05:54 PM +0530  

தமிழ்நாடு விட்டுவந்த போதும், அயல்மண்ணில் தமிழையும் அதன் சொல்லின் சிறப்புதனையும் தைவானில் வாழும் தமிழ் மக்களிடம் கொண்டுச்செல்லும் சீரியபணிதனை தைவான் தமிழ் சங்கம் செவ்வனே செய்து வருகிறது. 

அவ்வண்ணமே, தைவான் தமிழ்ச்சங்கம் சார்பில் தொடர்ச்சியாக நடத்தப்படும் தமிழ் இலக்கிய அமர்வின் ஐந்தாம்  அமர்வு தைபே (Taipei) நகரில் உள்ள தேசிய தைபே  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப  பல்கலைக்கழகத்தில் (National Taipei University of Science and technology) சிறப்பாக நடைபெற்றது. முனைவர். சுப்புராஜ் அவர்களின் சீரிய தலைமையில் குபேந்திரன் அவை முன்னவராக இருந்து வழிநடத்தினார்.

இலக்கிய நோக்கில் தமிழர்களின் வாழ்வியல் முறைகள்
முதலாவதாக ‘இலக்கிய நோக்கில் தமிழர்களின் வாழ்வியல் முறைகள்’ என்ற தலைப்பில் கோவை ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப் பணியாற்றும் பேராசிரியர் முனைவர் ந. சண்முகம், தலைவர், தமிழ் ஆராய்ச்சி துறை மற்றும் வர்மக்கலை ஆசான் அவர்கள் காணொளி மூலமாக நேரடியாக பேசினார்.  அவர் தன் உரையின் தொடக்கமாக தைவான் தமிழ்ச்சங்கத்தின் சீரிய தமிழ் தொண்டினை பாராட்டியும் அது மென்மேலும் வளர வாழ்த்துகளும் கூறினார்.

தமிழ் மொழியின் தொன்மை, பழமை, செழுமை ஆகியவற்றை இவ்வுலகம் நம் முன்னோரின் கூற்றுகள் மூலம் அறிய இயலும். எனவேதான் பேரறிஞர்கள் பலரும் உலகில் தோன்றிய மொழிகளில் முதன்மையானது தமிழ் எனக் கூறுகின்றனர். தமிழ் என்ற சொல்லை பலமுறை சொல்லும்போது அமிழ்து என வரும். எனவேதான் பாரதிதாசன் தமிழுக்கு அமிழ்து என்று பேர் என்றார். அமிர்தம் எனப்படும் அமிழ்தை உண்டவர்க்கு அழிவில்லை என்பர் அதுபோலவேதான் தமிழை பேசியவர்கள், பேசுபவர்கள், தமிழை சுவாசிப்பவர்கள் இருக்கும்வரை தமிழுக்கும் தமிழர்களுக்கும்  அழிவில்லை. இதற்கு 'யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனாரின் வாக்கே சான்று. இந்த உலகில் எத்தனையோ மொழிகள் இருந்தும் எதிலும் சொல்லப்படாத ஒரு அற்புதமான தத்துவம். உலகில் உள்ள அனைவரையும் உறவினர்களாக பார்க்கவேண்டும் என்ற இத்ததுவத்தை தமிழனை தவிர வேறு எவராலும் சொல்லப்படவில்லை. மேலும் ஐந்தாம் நூற்றாண்டில் திருமூலரால் சொல்லப்பட்ட ‘ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்’, இரண்டாம் நூற்றாண்டில் வள்ளுவனால் சொல்லப்பட்ட ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’, ‘காக்கை குருவிகளும் எங்கள் சாதி’ என்ற பாரதியின் கூற்று, ‘வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்’, என்ற வள்ளலாரின் கூற்று என பழந்தமிழின் கூற்றுகள் பலவற்றையும் அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த உலகிற்கு இந்தகைய உயரிய தத்துவங்களை தமிழனால் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தமிழ் சித்தாந்தங்களை எடுத்துரைத்து ஐம்புலன்கள் எவ்வாறு நம் அறிவை வளர்த்துக்கொள்ள உதவுகிறது என்பதையும் தமிழ் மொழி மேலும் பல வாழ்வியல் நெறிமுறைகளை இந்த உலகிற்கு கொடுத்துள்ளது என்பதை பற்றியும் சிறப்பாக பேசினார்.

பெண் ஏன் அடிமையானாள்
இரண்டாவதாக ‘பெண் ஏன் அடிமையானாள்; என்கிற தலைப்பில் தேசிய தைவான் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் N.ரஜிஷ்குமார் குமார்  பேசினார். 

அவர் தனது உரையின் தொடக்கமாக சமத்துவத்தின் அடையாளமே தோழர் என்ற சொல் எனவும் தற்போதைய பெண்களின் மீதான தாக்குதல்களுக்கு வருத்தத்தையும் கண்டனத்தையும் பதிவு செய்தார். பெண்களின் மீதான தாக்குதல்களுக்கு நம் சமூகம் எப்பொழுதுமே அவர்களின் மீதான அடக்குமுறைகளையே தீர்வாக சொல்கிறது. இதற்கு முக்கிய காரணமே ஆணாதிக்க சிந்தனைதான். காதல் என்பது உன்னதமானது, தெய்வீகமானது, மென்மையானது மற்றும் கண்டவுடன் வரும் காதலே சிறப்பானது என்ற தவறான கண்ணோட்டமானது திரைப்படங்களின் மூலமாக பரவியிருக்கிறது. ஆனால் யதார்த்த வாழ்க்கையில் காதல் அப்படி வருவதல்ல‌. ஒவ்வொருவரும் தங்களுக்கென்று தனி வரைமுறைகளை வைத்துக்கொண்டு அதனை அடிப்படையாக கொண்டே தங்களுடைய காதலை தேர்ந்தெடுக்கிறார்கள். இதிலும் பெண்களின் ஒருதலைக்காதல் தற்கொலையிலும் ஆண்களின் ஒருதலைக்காதல் கொலையிலும் முடிகிறது. இது பெண்களின் மீதான ஆணாதிக்க சிந்தனை எத்தகைய கொடூரமாக திணிக்கப்படுவதை காட்டுகிறது.

கற்பு என்ற வார்த்தைக்கு அகராதிப்படி உண்மைத்தன்மை என்ற பொருள். ஆனால் இன்று அந்த வார்த்தை அப்படியான பொருள்படவா இருக்கிறது.  ஒரு பெண் தனக்கான துணையை தானே தன் விருப்பபடி தேர்ந்தெடுத்து உடலுறவு கொண்டால் அது கற்பிழப்பு எனவும், அதுவே பெற்றோர்களால் தெரிவு செய்யப்பட்ட ஆணுடன் இருந்தால் நேர்மையானது உண்மையானது எனவும் அப்பெண் கற்புடன் வாழ்ந்தால் என்றும் போற்றப்படுகிறது. இங்கே கற்பு என்பது ஆண்களுக்கு பொருந்துவதில்லை, அதனை பெண்களுக்கு மட்டுமே உரியதாக‌ நம்முடைய சமூகம் சுருக்கிவிட்டது.  பெண் என்பவள் கற்பு என்கிற விடயத்தின் மூலமாக அடிமையாக்கப்படுகிறாள். இத்தகைய அடிமைப்படுத்துதல் ஆதிகாலத்தில் இருந்து நம் சங்க இலக்கிய காலம் தொட்டு இன்றளவும் தொடர்கிறது.  இதற்கு சான்று சிலப்பதிகாரம் முதல் பல தமிழ் நூல்களில் காணக்கிடைக்கிறது. தற்பொழுதய சமுதாயம் பெண்களை அவர்களின் உடற்கூறுகளை வைத்து வீட்டிலே அடிமைபடுத்தி வைத்திருக்கிறது. ஆனால் வேட்டையாடும் இனத்தில் பெண் என்பவள் சமமாகவோ அல்லது அதற்கும் ஒருபடி மேலானாவளாகவோ தான் இருந்திருக்கிறாள். ஆனால் ஒரு கட்டத்தில் ஆணாதிக்க மனோபாவம் மேலோங்கி பெண்களை அடிமைபடுத்திவிட்டார்கள். சாதி, மதங்கள் அனைத்தும் பெண் ஒரு பொருள், அவளை மூடி வைத்துக்கொள் என்கின்றன. தற்பொழுதிய கார்பரேட் உலகத்தில் பெண் ஒரு பொருள் அவளை திறந்து விடு என்கிறது. இதற்கு தற்பொழுது வருகின்ற விளம்பரங்களை பார்த்தாலே தெரியும். ஆக மொத்தத்தில் பெண்களை உயிருள்ள மனிதராக யாரும் நடத்தவில்லை.

ஆதிகாலம் முதலே அனைத்து மதங்களிலும் சரி,  பின்னாளில் சாதியகூறுகள்  வந்தபோதும் சரி பெண்களுக்கு கல்வி என்பது மறுக்கப்பட்டே வந்துள்ளது. நம் இந்திய திருநாட்டில் அறிஞர்கள்  பலர் வந்தாலும் அண்ணல்  அம்பேத்காரும், தமிழ்நாட்டில் தந்தை பெரியாரும்  பெண் கல்வியை மிகவும் போராடி பெற்று தந்தனர். மேலும் அவர் தன் உரையில் பல்வேறு சான்றுகளை எடுத்துரைத்து பெண் ஏன் அடிமையானாள் என்பதை விரிவாக பேசி முடித்தார். அதன் பின் நடைபெற்ற விவாதத்தில் திருமிகு ஸ்ரீதரன் மதுசூதனன் மற்றும் வைதேசி ஸ்ரீதரன் அவர்கள் சிறப்பான விவாதங்களை முன்வைத்தார்கள்.

தமிழர்களும் ஆன்மிகமும்
மூன்றாவதாக தேசிய டொன்ஹுவா பல்கலைக்கழகத்தில் இருந்து ஆராய்ச்சி மாணவர்  தயானந்த பிரபு அவர்கள்  ‘தமிழர்களும் ஆன்மிகமும்’  என்ற தலைப்பில் பேசினார். பண்டைய தமிழர்களின் வழிபட்டு முறை இயற்கையை  வணங்குதல் ஆகும்.  இதற்கு சான்றாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முனபாக எழுதப்பட்ட  திருக்குறளில் திருவள்ளுவர் ''தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்'', என்ற குரலின் மூலம் நம் முன்னோர்கள்  கடவுளை நம்பினதை விட அவரவர் முயற்சி உழைப்பு ஆகியவற்றில் நம்பிக்கை வைத்து வாழ்ந்துள்ளனர் என்பதும்,   மதம் சார்ந்து இல்லாமல் தமிழன்  வாழ்ந்தான் என்பது புலப்படும். மேலும் தமிழர்களின் வழிபாட்டு முறை  தற்போதுள்ள முறையாக இருந்திருக்க வாய்ப்பு குறைவு, இதற்கு பல சான்றுகள் உள்ளன. அதில் முதலாவதாக  இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில்  கடவுள் வாழ்த்துப்பாடல் என ஒன்றும் இல்லை. அதில் வாழ்த்துப்பாடல் திங்களை போற்றுதும் திங்களை போற்றுதும், ஞாயிறு  போற்றுதும் ஞாயிறு போற்றுதும் மாமலை போற்றுதும்  என பாடப்பட்டுள்ளது. இதன் மூலம் மதம் என ஒன்றும்  கடவுள் என ஒருவர் இருந்ததாகவும் தெரியவில்லை . எனவே பண்டைய தமிழன்  இயற்கையை போற்றி வந்துள்ளான். நம் பொங்கல்  பண்டிகையே இதற்கு மிகப்பெரிய சான்று ஆகும்.

மேலும் கீழடி தொல்லியல் ஆய்வுகள்  இத்தகைய இயற்கை  வழிபாட்டிற்கு  வலுசேர்ப்பதாக உள்ளது. அங்கு தோண்டி எடுக்கப்பட்டுள்ள  பொருட்கள் சுமார் 3000 - 3500  ஆண்டுகள் பழமையானது. அதில்  மதம், கடவுள் ஆன்மிகம் பற்றிய  இத்தைகைய சான்றுகளும் கிடைக்கப்பெறவில்லை. அங்கு கிடைக்கபெற்ற  ஒரு தங்க கட்டியில் கோதை என்ற சொல்லும், மண் ஓட்டில் மாடச்சி என்ற சொல் இருப்பதாகவும்  ஆய்வறிக்கை கூறுகிறது. எனவே பண்டைய தமிழன் மத வழிபாடு அன்று, இயற்கை, முன்னோர் வழிபாடு செய்ததாக அறியப்படுகிறது.

வரலாற்று தரவுகள் அனைத்தும் பண்டைய  தமிழன் இயற்கை  மற்றும் முன்னோர் வழிபாடு செய்ததாகவே  கூறுகிறது. ஆனால் இதிகாசங்கள் மட்டுமே  கடவுள்  ஆன்மிகம் என பல்வேரு கோட்ப்பாடுகளை தருகிற்து. இதிகாசங்கள்  கற்பனை கலந்து எழுதப்பட்டவை. ஆனால் வரலாற்று கூறுகள் நடந்தவற்றை அப்படியே எழுதுதல் ஆகும் . மேலும் அவர் தன் உரையில்  தமிழனின் இயற்கை  மற்றும் முன்னோர் வழிபாட்டிற்கான பல்வேறு சான்றுகளை அடுக்கி பேசினார். தற்போதுள்ள மத  ஆன்மீக குருக்கள் நல்லவற்றை போதிக்காமல் மத துவேஷங்களையும் மக்களை தவறான பாதையில் வழிநடத்துவதாகவும்  கூறி தன்  உரையை முடித்தார்.

மருந்தில்லா மருத்துவம்
நான்காவதாக தேசிய தைவான் பல்கலைக்கழக  ஆராய்ச்சி மாணவர் G.முத்து சங்கர் அவர்கள்  ‘மருந்தில்லா மருத்துவம்’ என்ற தலைப்பில் பேசினார். நம் உடலில் ஏற்படும் பெரும்பாலான நோய்களை  உணவு பழக்க வழக்கங்கள் மூலம் சரிசெய்ய முடியும், ஆனால் விபத்து  போன்ற‌ அவசர சிகிச்சைகளுக்கு மருத்துவமனைக்கு  செல்வது அவசியம் என பேசினார்.  மேலும்  ஒரு நோய்க்கு  மருத்துவம் என்பது நான்கு கூறுகளைக் கொண்டது. அவை  நோய் எதிர்ப்பு சக்தி, மருத்துவரால்  நோயின் தன்மை அறிதல், அதற்கேற்ற மருந்து அளித்தல் மற்றும் அத்தகைய மருந்துகளை தயாரித்தல். இத்தகைய நான்கு கூறுகளை  தவிர்த்து  நோயின் தன்மைக்கு ஏற்ப  உணவு பழக்க வழக்கங்கள் மூலம்   சரி செய்தலே சிறந்தது. ‘நொறுங்க தின்றால் நூறு வயது’ என்பது தமிழ் பழமொழி. எனவே எதையும் உண்ணும்போது அவ்வுணவை ரசித்து ருசித்து நன்றாக மென்று உண்பது அவசியம். அவ்வாறு செய்யும் போது நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. மேலும் ஒரு நோயின் தன்மையை விளக்கும் விதமாக அவர் சர்க்கரை  வியாதியை பற்றி விரிவாக பேசினார்.  சர்க்கரை நோய்  என்பது வியாபார நோக்கிற்காக  உருவாக்கப்பட்ட நோய். சர்க்கரை  அல்லது குளுக்கோஸ் என்ற வேதிப்பொருள் நம் உடலின் இயக்கத்திற்கு இன்றியமையாதது.  இது நம் உண்ணும்  உணவில் இருந்து பெறப்படுகிறது.

செரித்த உணவில் இருந்து பெறப்பட்ட  தேவையான அளவு குளுக்கோஸ் போக மீதமான குளுக்கோஸ்  கிளைகோஜன்  எனும் வேதிப்பொருளாய் மாற்றப்பட்டு  உடலின் தசைகளில் சேமித்து வைக்கப்படும்.  தேவையானபோது மீண்டும்  அவை குளுக்கோஸாக  மாற்றி மீண்டும் பயன்படுத்தப்படும். சேமிக்கப்பட்ட  க்ளைகோஜன் தேவையானபோது எல்லாம்  பயன்படுத்தப்பட்டு முடிந்துவிடும் பட்சத்தில்  குறை சர்க்கரை நோய் எனவும், இதுவே தேவைக்கு   அதிகப்படியான கிளைகோஜன்  சேமித்து  வைக்கும் பட்சத்தில் அதி சர்க்கரை நோய் எனவும்  வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை சரியான உணவு பழக்க வழக்கங்களின் மூலமும், சரியான உடற்பயிற்சி மூலமும் கட்டுப்படுத்த முடியும். இதுவே மருந்தில்லா மருத்துவம் ஆகும். இதற்கான பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் சான்றுகள்  உள்ளது எனவும் பல தீர்வுகள் உள்ளன எனவும் பேசிமுடித்தார்.

இந்த தமிழ் அமர்வில், தைவான் தமிழ்ச்சங்க நிர்வாகிகள், தமிழ் ஆர்வலர்கள், தைவான் வாழ் தமிழ் மாணவ மாணவிகள் திரளாக கலந்துகொண்டு, அதன் பின் நடைபெற்ற விவாதங்களிலும் பங்கெடுத்தார்கள்.
 

- இரமேஷ்  பரமசிவம்
துணை தலைவர், தைவான் தமிழ் சங்கம்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/3/27/w600X390/19.JPG http://www.dinamani.com/specials/world-tamils/2018/mar/27/தைவான்-தமிழ்ச்சங்கத்தின்-ஐந்தாம்-தமிழ்-இலக்கிய-அமர்வு-2888478.html
2852334 ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர் சிங்கப்பூர் புக்கிட் பாஞ்சாங்கில் களைகட்டிய 11ஆம் ஆண்டு பொங்கல் விழா DIN DIN Saturday, January 27, 2018 05:53 PM +0530  

உலகத் தமிழர்கள் ஒருமித்து, ஒரே மாதிரி கொண்டாடும் ஒரே திருவிழா பொங்கல் திருநாள் எனப்படும் உழவர் திருநாளாகும்.

 தை பிறந்தால் வழி பிறக்கும் இது ஆன்றோர் வாக்கு. தை திருநாளில் இது வரை இருந்து வந்த துன்பங்கள் நீங்கி நல்வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த சிறப்புக்குரிய விழா கடந்த 21.1.18 ஞாயிறு அன்று புக்கிட் பாஞ்சாங், பெண்டிங் LRT  அருகிலுள்ள திறந்தவெளி அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புக்கிட் பாஞ்சாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், வடமேற்கு மாவட்ட மேயருமான டாக்டர் தியோ ஹோ பின் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

விழாவின் சிறப்பு அம்சமாக, சிங்கப்பூர் சாதனை முயற்சியாக சீன மலாய்காரர்களின் நமது பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிவகுப்பு நடைபெற்றது.
 

 அத்துடன் சிங்கப்பூர் புகழ் மணிமாறன் குழுவினரின் இசை, நடனம், கரகாட்டம், மயிலாட்டம் மற்றும் கிராமிய பாடல்கள் அடங்கிய கலை நிகழ்ச்சியுடன் கிராமிய சூழ்நிலையில் பொங்கல் விழா நடைபெற்றது.

தொடர்ந்து 11வது ஆண்டாக நடைபெறும் இந்த பொங்கல் விழாவில், இந்திய உணவு வகைகளில் மிகவும் பிரபலமான உணவான பரோட்டா செய்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டதோடு, அனைத்து இனத்தவரும் ஒரே நேரத்தில் பங்குகொண்டு பரோட்டா செய்யும் காட்சி இடம்பெற்றது.

மேலும் விழாவை மெருகூட்ட தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழி, தாயம் போன்ற விளையாட்டுகளை சிறப்பு விருந்தினர்களும் கண்டு மகிழந்தனர்.

பொங்கல் விழாவின் சிறப்பு அம்சமாக ஜோதி மாணிக்கவாசகம் அவர்களின் சிந்தனை தூண்டும் தமிழர் திருநாள் சிறப்புரை இடம்பெற்றது.

 பலதரப்பு மக்களும்  குடும்பத்தோடு கலந்துகொண்டு இந்த பொங்கல் விழாவை சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
- கார்த்திகேயன் நடராஜன், சிங்கப்பூர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/27/w600X390/IMG-20180127-WA0022.jpg http://www.dinamani.com/specials/world-tamils/2018/jan/27/சிங்கப்பூர்-புக்கிட்-பாஞ்சாங்கில்-களைகட்டிய-11ஆம்-ஆண்டு-பொங்கல்-விழா-2852334.html
2846717 ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர் மண் வாசனை... குயீன்ஸ்லாந்துவாழ் தமிழ் மக்களின் பொங்கல் விழா - கட்டுரையாளர்: வாசுகி சித்திரசேனன்  DIN Thursday, January 18, 2018 06:08 PM +0530  

'மொழி எம் உரிமை, எம் இனம், எம் அடையாளம்' என்ற வீர முழக்கத்துடன் தாய்த்தமிழ்ப்பள்ளியும், குயீன்ஸ்லாந்து தமிழ் மன்றமும் இணைந்து நடத்திய பொங்கல் விழா,  திருவள்ளுவராண்டு 2049 தை முதல் நாள் (14/01/18) அன்று, ரொபெல்ல பூந்திடலில் வெகு கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

கடந்த நான்கு வருடங்களாக, எங்கள் குயீன்ஸ்லாந்து மாநில  பொங்கல் விழாவை தைத்திருநாளிலிருந்து ஓரிரு வாரங்கள் கழித்து ஏதேனும் ஒரு வாரயிறுதியில் கொண்டாடுவது வழமை. இம்முறையும் அவ்வாறு அத்திடலிலேயே நடத்த முடிவுசெய்து, திடலை பதிவுசெய்ய முனைந்தபோது, ஏற்கனவே வேறு ஏதோவொரு அமைப்பு, நாம் வழக்கமாக நிகழ்த்தும் வாரயிறுதிகளை முன்னதாகவே முன்பதிவு செய்ததை அறிந்தோம். இதனால் தைத்திருநாள் அன்றே விழாவை கொண்டாட நேர்ந்ததை ஒரு வரப்பிரசாதமென்றே சொல்லவேண்டும்.

"எனக்கென கொண்டாடும் விழாவை, என்னொளி மாநிலத்தில், என் நாளன்றே (ஞாயிறன்றே) கொண்டாடுங்கள்" எனக் கதிரவன் உத்தரவிடுகிறான் எனக்கருதி பொங்கலன்றே விழாவை நடத்த முடிவுசெய்தோம். எத்தகைய அருமையான முடிவு அது என்பதை, விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அழகாகப் புரிந்திருக்கும்.

ஆகா...! எத்தகைய அருமையான, அழகிய நாளது! 
காலையிலேயே சுமார் இருபது குடும்பங்கள், வரிசையாகப் பானைகளை வைத்து பொங்கி, பொங்கல் சமைத்தது, ஒரு ஆரவாரமான ஆரம்பத்தைத் தந்தது. 

சுவைமிகுந்தப் பொங்கலைத் தேர்ந்தெடுக்கும் வைபவமும் நேர்த்தியாக நடந்து முதல் மூன்று இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசளிக்கப் பட்டன.

காலை 10 மணியளவில், ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின், மெல்பர்ன் தலைமையகத்திலிருந்து, எமது விழாவினைப் பற்றி அறிந்து, பத்து நிமிட தொலைபேசிவழி  ஆங்கில நேர்காணலை நேரலையாக  ஒலிபரப்பிய பொழுது, 'எம் மொழி, எம் கலாச்சாரம், எம் அடையாளம்' என்ற பெருமிதத்தில் நெஞ்சு விம்மியது.

மற்றைய நிகழ்ச்சிகள், மதியம் மூன்று மணிக்கு மேல் ஆரம்பமாகின. கொளுத்திக் கொண்டிருந்த கதிரவன், தனக்குத் தரப்படும் மரியாதையை ஏற்கும்முகமாகத் தன் தீவிரத்தை சற்றே குறைத்தான். "நானும் இயற்கையின் ஒரு அங்கம்தானே, எனவே என் திறமையும் காட்ட வேண்டும்" என்று வாயுபகவான் நினைத்தானோ என்னவோ... இதமான மந்த மாருதமும் வீச ஆரம்பித்து, இதம் தந்தது. 

சிறுவர், பெற்றோர், பெரியோர் என வந்து குழுமிய மக்கள் பண்டிகையைக் கொண்டாட ஆரம்பித்தனர். ஒலிபெருக்கியில் இடைவிடாது ஒலித்த தமிழ் பாடல்கள் நாம் பிறந்த தமிழ் பேசும் நாடுகளிலேயே விழா கொண்டாடப்படுவது போன்ற பெருமிதத்தை ஊட்டியது. மைதானத்தைச் சுற்றிக் காணப்பட்ட, பலவித திண்பண்டக் கடைகள், விளையாட்டு சவாரிகள் என்பன ஒரு திருவிழாக் கோலத்தை ஏற்படுத்தின.

அதுமட்டுமா...?

அனைவரும் விளையாடி மகிழத்தக்க வகையில், பலவித விளையாட்டுகளை, விழா ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். வயது வித்தியாசமின்றி அனைவரும் விளையாடி மகிழ்ந்தது, மகிழ்ச்சியைத் தந்தது.

அப்பொழுது, விழா பற்றிய தொலைபேசி நேர்காணலை, SBS ஒலிபரப்புச் சேவையின் அறிவிப்பாளர் சஞ்சயன், திடலின் பின்னணி ஒலிகளுடன் பதிவுசெய்து , பின்னர் ஒலிபரப்பியது, மீண்டும் நம் பொங்கல் விழாவின் பெருமையை, ஆஸ்திரேலியாவாழ் தமிழ் சமூகம் முழுவதும் எடுத்துச் சென்றது. எடுத்துச் சொன்னது. 

திடலின் ஒரு புறத்தே, நடைபாதையில் அழகிய கோலப்போட்டி நடந்தது. உழவுக்கும், தொழிலுக்கும், உழவருக்கும் வந்தனை செய்யுமாறு எடுத்துரைத்தன வண்ணமிகு சித்திரங்கள். ஆறு கோலங்களின் அணிவகுப்பு விழாவிற்கு மேலும் மெருகூட்டியது. 

மாலை 5.30 மணிக்கு மேல், விழாவின் பிரதம அதிதிகளாக இப்ஸ்விச் நகர பிதா, இப்ஸ்விச் பாராளுமன்ற உறுப்பினர், மற்றைய அதிதிகள் ஆகியோர் மேடையில், மங்களகரமாகக் குத்துவிளக்கு ஏற்றி கலைநிகழ்ச்சிகளை ஆரம்பித்துவைத்தனர்.

 பிஜி இந்திய சமுகத்தைப் பிரதிப்பலித்து, பெண்மணி கவிதா பரதநாட்டிய நிகழ்வின் மூலம் கலை நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்த திருமதி.பிரியா சிவகுமாரனின் இனியகுரலில், 'சின்னஞ்சிறு கிளியே' என்ற மகாகவியின் பாடல் தென்றலாய்த் திடல் முழுவதும் தழுவிச் சென்றது. தென்றலைத் தொடர்ந்தது இடிமுழக்கம். இடியாய் ஒலித்த நம் பறை முழக்கம். 

"பறை, கலை, இயற்கை, மக்கள்" என்ற சதுர்வேதம் போன்ற வார்த்தைகளுடன், சகோதரர் லாரன்ஸ் அண்ணாதுரையின் தலைமையிலான ஆஸ்திரேலியத் தமிழர் கலையகத்தினர் தம் முழக்கத்தைத் தொடங்கினர். அவர்கள் குழுவோடு, எங்கள் குயீன்ஸ்லாந்து மாநிலத்தவர்களும் சேர்ந்து, செவிப்பறைகள் அதிர, அதிர்ந்த, நாடி நரம்புகளை முறுக்கேற்றும் பறையொலியுடன், மயிலாட, காளையாட, திருமுருகன் விளையாடத் திடல் முழுவதும் ஊர்வலம் வந்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது.  தொடர்ந்து மேடையேறி இசையும் அசைவுமாக, மறக்கமுடியாத அனுபவத்தைத் தந்த, அடிலேய்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆஸ்திரெலிய தமிழர் கலைக் குழுவினருக்கு, குயீன்ஸ்லாந்துவாழ் தமிழ் மக்களின் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். 

பிரியாவின் பாடல் தென்றலாகத் தழுவிச் சென்றது எனில், நிலவொளியாக, சிறுமழையாக நெஞ்சம் நனைத்தது இளைஞர் ஹரியின் "இளைய நிலா பொழிகிறது" எனும் இதமானத் தமிழ்ப்பாடல். புயலாகத் தொடர்ந்தது அவர் தம் குழுவினருடன் பாடி ஆடிய 'போக்கிரிப் பொங்கல்' பாடல். பின், மயூராலயா நடனப் பள்ளியின் நால்வர் குழுவினரின் அழகிய பரத நிகழ்வு தொடர்ந்து அரங்கேறி, அவையோரை மகிழவைத்தது.

பொற்கரையின் சங்கமம் கலைக் குழுவினர், வேப்பிலை, காவடி, கரகத்துடன் அம்மனை அழைத்து ஆட, அம்மனாய் சூலத்துடன் சேர்ந்தாடினார் குழு அங்கத்தவரொருவர். சிறார்கள் அம்மனை அழைத்து ஆட, 'ஆளப் போறான் தமிழன் உலகம் எல்லாமே' என்ற பிரபலத் திரைப்படப் பாடலுக்கு, சங்கமத்தின் இரு யுவதிகளையும், நான்கு இளைஞர்களையும் கொண்ட வாலிபர் குழு துள்ளலிசையுடன் துள்ளியாடி எல்லோரையும் மகிழ்வித்தனர்.

இறுதியங்கமாக மீண்டும் ஆஸ்திரேலியக் கலைக் குழுவின் இசையுடனும், பரிசளிப்பு விழாவுடனும் மேடை நிகழ்வுகள் நிறைவேறின.

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாய், வான்முற்றம் முழுவதும் வண்ணக் கலவையாய் கோலமிட்டு ஒளிர்ந்தது இறுதி நிகழ்வான வாண வேடிக்கை. 

காணவந்தோரின் களிமிக்க ஒலிகளுடன் இனிதே நிறைவேறியது எங்கள் பொங்கல் திருவிழா! தமிழர் நமது தனிவிழா!

தமிழ் என்பது அறம்!
அது எங்கள் வரம்! 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/18/w600X390/pongal1.jpg http://www.dinamani.com/specials/world-tamils/2018/jan/18/மண்-வாசனை-குயீன்ஸ்லாந்துவாழ்-தமிழ்-மக்களின்-பொங்கல்-விழா-2846717.html
2843014 ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர் தைவான் தமிழ் சங்கத்தின் தைப்பொங்கல் விழா DIN DIN Thursday, January 11, 2018 01:03 PM +0530  

தைவான் தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா கொண்டாட்டம் கடந்த சனிக்கிழமை அன்று 'பியூஜென் கத்தோலிக் பல்கலைக்கழக' வளாகத்தில் நடைபெற்றது. 

விழாவில் தமிழ் சங்க தலைவர் முனைவர் யு ஹசி அவர்களும், இந்தியா தைப்பே குழும இயக்குனர் மதுசூதனன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

தாய் தமிழ் மண்ணை விட்டு கடல்கடந்து சென்றாலும் தமிழர்கள் தங்களின் கலாச்சாரத்தினை மறக்காமல் கொண்டாடி மகிழ்கின்றனர். அவ்வண்ணமே கிழக்காசிய பிராந்திய அழகிய தீவு தைவானில் சங்கம் அமைத்து தமிழ் வளர்க்கும் தைவான் தமிழ்ச் சங்கத்தின் தொடர் நிகழ்ச்சியாக, தன்னுடைய ஆறாம் ஆண்டு பொங்கல் விழாவினை வெகு விமர்சியாக பொற்றடை ஆண்டு  மார்கழி 22ஆம்  நாள்   (ஜனவரி 6ம் தேதி 2018) தைபேயில் உள்ள ஃபூ ஜென்  கத்தோலிக்க பல்கலைக்கழத்தில் தைவான் தமிழ்ச்சங்க தலைவர் முனைவர் யூசி அவர்கள் தலைமையில் துணைத்தலைவர்கள் முனைவர் சங்கர் ராமன் மற்றும் இரமேஷ் பரமசிவம் ஒருங்கிணைப்பில் இனிதாய் நடைபெற்றது. 


தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய பொங்கல் கொண்டாட்டத்தில் தைவான் தமிழ் சங்கம் சார்பாக சங்க செயலாளர் முனைவர் ஆகு. பிரசண்ணன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேச, சிறப்பு விருந்தினர்களால் குத்து விளக்கேற்றி பொங்கல் விழா இனிதே தொடங்கிவைக்கப்பட்டது.

தைவான் தமிழ் சங்கத்தின் தலைவரும், கவிஞருமான முனைவர் யுசி தலைமையுரை ஆற்றி  விழாவினை தொடக்கி வைத்தார். முதன்மை விருந்தினராக இந்தியா தைபே அசோசியேசன் முதன்மை இயக்குனர் அன்பிற்கினிய  ஸ்ரீதரன் மதுசூதனன்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும்  இப்பொங்கல் விழாவிற்கு  பெருமை சேர்க்கும் விதமாக  மரியாதைக்குரிய விருந்தினர்கள் தேசிய தைவான் பல்கலைக்கழக்தின் சர்வேதச மூலக்கூறு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முதுநிலை திட்டத்தின்  இயக்குனர்  முனைவர். சுன் வேய் சென்,   ஃபூ ஜென்  கத்தோலிக்க பல்கலைக்கழத்தின் சர்வதேச தொடர்பின் துணைத் தலைவர்  முனைவர்  மைக்கேல் டி.எஸ். லீ, தேசிய தைபே தொழில் நுட்ப பல்கலைக்கழக சர்வதேச EOMP முனைவர் பட்ட திட்டத்தின் முதன்மை பேராசிரியர் ஷென் மிங் சென் அவர்களும்  வாழ்த்துரை வழங்கினார்கள். 
 

இவ்விழாவின் சிறப்பு அம்சமாக தமிழ் மண்ணின் இயல், இசை, நாடகம் என்று முப்பரிமாணத்தில் பாரம்பரிய மற்றும் கிராமிய நடனம், சிறுவர்-சிறுமியரின் கலை நிகழ்சிகளுடன் அவர்களின்  ஆடை-அலங்கார அணிவகுப்பும் நடைபெற்றது. 


முத்தாய்ப்பாக முனைவர் மு. திருமாவளவன் எழுதிய “தைவானில் தமிழ்த்தூறல்” என்னும் கவிதை தொகுப்பு நூல்  தைவான் தமிழ்ச்சங்கத்தின் தலைவர், கவிஞர் யூ சி அவர்கள் வெளியிட துணைத்தலைவர் முனைவர் சங்கர் ராமன் அவர்கள் பெற்றுக்கொண்டார். மேலும் எதிர்கால தமிழகத்தை  காக்க அனைவரும் அரசியல் பேசவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக “அரசியல் பேசாதே” எனும் நாடகம் நடைபெற்று பார்வையாளர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 

பட்டிமன்றம்
முன்னதாக பொங்கல் விழாவினை சிறப்பிக்கும் விதமாக  சிறப்பு பட்டிமன்றம் ஒன்று ''தமிழை அதிகம் வளர்ப்பது தமிழக தமிழர்களா??? புலம் பெயர் தமிழர்களா???’’ எனும் தலைப்பில் நடைபெற்றது. முனைவர் இரா. சீனிவாசன் தலைமையில் தமிழக தமிழர்களே என முனைவர் மு. திருமாவளவன், கி.ராகவேந்திரா, முனைவர் வசந்தன் திருநாவுக்கரசு ஆகியோர் வாதாட இவர்களுக்கு எதிராக முனைவர்பட்ட ஆராய்ச்சியாளர்களான செல்வன் தயானந்தபிரபு, செல்வி பவித்ரா, செல்வன் தமிழ் ஒளி ஆகியோர் சிறப்பாக பேசினர். இறுதியாக தமிழை அதிகம் வளர்ப்பது புலம் பெயர் தமிழர்களே என நடுவர் தீர்ப்பளித்து நிறைவு செய்தார்.
 

இறுதியாக தைவான் தமிழ் சங்க துணை செயலாளர் சு.பொன்முகுந்தன், பொருளாளர் முனைவர் சந்தானமூர்த்தி நாச்சிமுத்து மற்றும் துணை பொருளாளர் முனைவர் பூபதி சுப்பிரமணி விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும், விழா ஏற்பாட்டாளர்கள் சார்பாக  நன்றி கூற தேசிய கீதத்துடன் பொங்கல் விழா இனிதே நிறைவடைந்தது.

இவ்விழாவினை தைவானின் அனைத்து நகரங்களில் இருந்தும் குறிப்பாக தாய்பெய், ஷிஞ்சு, தைச்சூங், கௌஷியாங் மற்றும் தைனன் நகரங்களில் இருந்து நானூறுக்கும் மேற்பட்ட தமிழ் நெஞ்சங்கள்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

- இரமேஷ் பரமசிவம்
துணை தலைவர், தைவான் தமிழ் சங்கம்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/11/w600X390/1_dsc_0113_jpg__1.jpg http://www.dinamani.com/specials/world-tamils/2018/jan/11/தைவான்-தமிழ்-சங்கத்தின்-தைப்பொங்கல்-விழா-2843014.html
2833991 ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர் கோலாகலமாக நடைபெற்ற ஐதராபாத் மாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 20வது ஆண்டு விழா DIN DIN Wednesday, December 27, 2017 06:19 PM +0530  

ஐதராபாத் மாநகர்த் தமிழ்ச் சங்கம் 1998ம் ஆண்டு தொடங்கி 21ம் ஆண்டை நோக்கி வெற்றிகரமாகப் பயணிக்கிறது. ஐதராபாத் பகுதி வாழ் தமிழர்கள் தொடர்ந்து நம் மொழி, கலாசாரத்தை கட்டிக்காக்கும் வகையிலும், அடுத்த தலைமுறை நம் தமிழ் மொழியைப் போற்றும் வகையிலும், நல்ல பல நிகழ்ச்சிகளை, திட்டங்களை ஆண்டுதோறும் நம் சங்கம் முன்னெடுத்து வருகிறது. 

ஐதராபாத் மாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 20வது ஆண்டு விழா டிசம்பர் மாதம் 23ம் தேதி சனிக்கிழமை அன்று சரியாக மாலை 6.00 மணிக்கு சிகிந்தராபாத், பத்மராவ் நகரில் உள்ள கெளத காமகோடி கல்யாண நிலையத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

உறுப்பினர்கள் அனைவரும் தமிழ் தாய் வாழ்த்து பாடிய பின்னர் நிகழ்ச்சியின் நன்கொடையாளர்கள் மதுசூதனன், சீனிவாசராவ், தமிழ்ச்சங்க தலைவர் சாய்காந்த், பொதுச்செயலாளர் கிருபானந்தம், செயற்குழு உறுப்பினர்கள் செல்வதிரவியம், ராஜ்குமார், இராமலிங்கம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்ற விழா இனிதே தொடங்கியது.

ஹபீப் நிகழ்ச்சியை கவிதைத் தமிழில் தொகுத்து வழங்க சுமார் 800க்கு மேல் பார்வையாளர்கள் கலந்து கொண்ட ஆண்டு விழாவின் முதல் நிகழ்வாக தமிழ்ச் சங்க தலைவர்  சாய்காந்த் அவர்கள் நிகழ்ச்சியின் நன்கொடையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், விழாக்கலைஞர்கள் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு அறிக்கையை பொதுச் செயலாளர் கிருபானந்தம் வாசித்தார்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையாளர் R.V.சந்திரவதனன் அவர்கள் கலந்துகொண்டு பார்வையாளர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்தினை தெரிவித்தார்.

தொடர்ந்து வளர்த்து வரும் கலைஞர் சதீஷ் பலகுரல் நிகழ்ச்சி நடைபெற்றது, அடுத்து பிரபல நடன கலைஞர் அம்பிகாவின் ரிங் நடனம் அரங்கு நிறைந்த ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

பின்னர் செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் ஐதராபாத் மாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் செயல் திட்டங்கள், சீரிய முறையில் ஆற்றிவரும் தமிழ்ப் பணியை எடுத்துக் கூறினார்.

விழாவின் முக்கிய நிகழ்வாக பிரபல நகைச்சுவை நடிகர் மதுரை முத்து அவர்களின் அசலான நகைச்சுவை விருந்து அவையினரின் பெரும் கரகோசத்தையும் பெற்றது.  அரங்கேறிய அத்தனை நிகழ்ச்சிகளும் யாவர் மனதையும் கொள்ளை கொண்டு விட்டதென்றே சொல்ல வேண்டும்.

சிறப்புவிருந்தினர் தெலுங்கானா மாநில மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையாளர் R.V.சந்திரவதனன், கலைஞர்கள்  மதுரை முத்து, செல்வி. அம்பிகா, சதீஷ், நன்கொடையாளர்கள் மதுசூதனன், சீனிவாசராவ், ஜெயபால், சிவகுமார், முன்னாள் செயற்குழு உறுப்பினர் முத்துவேல் மற்றும் முஸ்தபா ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கௌரவப்படுத்தியது ஐதராபாத் மாநகர்த் தமிழ்ச் சங்கம்.

பொருளாளர் போஸ் அவர்கள் நன்றியுரை கூற விழா திட்டமிடப்பட்ட நேரத்தில் இனிதே நிறைவுற்றது. விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் நகைச்சுவை விருந்தோடு அறுசுவை இரவு உணவும் வழங்கப்பட்டது.

செயற்குழு உறுப்பினர்கள் தர்மசீலன், நேரு, ராஜ்குமார், இராமலிங்கம் செல்வதிரவியம் மற்றும் நிகழ்ச்சி உதவி தேவிகாராணி, கனிசீலன், அருணா, கெளரி, சாந்தா தத், ராமதிலகம், குமாரராஜன், குணசேகர், கார்த்திகேயன், வீடியோ உதவி ஷ்ரவன், புகைப்பட உதவி கவுதம் மற்றும் பிற தோழமைகளின் அயராத உழைப்பும், பங்களிப்பும், ஒத்துழைப்பும் மட்டுமே பேருதவியாக இருக்கிறது என்பதை மட்டற்ற பெருமகிழ்வுடனும், நன்றியுடனும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஐதராபாத் மாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகளில் தங்களை இணைத்துக்கொண்டு தொடர்ந்து எங்களுடன் பயணிக்கும் நல்லிதயம் கொண்ட தோழமைகளுக்கும், இயன்ற பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் நல்கி நமது நிகழ்ச்சிகளுக்கு உறுதுணையாக இருந்து வரும் அன்பு உள்ளங்களுக்கும் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம்.

தொடரும் ஆண்டுகளிலும் உங்களின் நட்பும், ஆதரவும் நமது தமிழ்ச் சங்கத்தை முன்னெடுத்துச் செல்ல உதவும் என்ற நம்பிக்கையுடன்.

- ஐதராபாத் மாநகர்த் தமிழ்ச் சங்கம்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/27/w600X390/IMG_2327_1.jpg http://www.dinamani.com/specials/world-tamils/2017/dec/27/கோலாகலமாக-நடைபெற்ற-ஐதராபாத்-மாநகர்த்-தமிழ்ச்-சங்கத்தின்-20வது-ஆண்டு-விழா-2833991.html
2822041 ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர் சிங்கப்பூரில் மின்சார கார் பகிர்வு திட்டம் துவங்குகிறது DIN DIN Thursday, December 7, 2017 04:31 PM +0530  

சிங்கப்பூரில்  ப்ளூகார் (Bluecar) என்னும் நிறுவனம் முதன் முதலில் மின்சார கார் பகிர்வு திட்டத்தைத் துவங்குகிறது. 

டிசம்பர் 12 முதல் முதற்கட்டமாக 80 மின்சார கார்களுடன் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. சிங்கப்பூர் முழுவதிலும் 30 நிலையங்கள் அமைக்கப்பட்டு அதில் 120 மின்விசை சேர்வி மையங்கள் அமைக்கப்படுகின்றது.

இந்த  சேவையினை பயனர்கள் மின்விசை சேர்வி நிலையத்தில் இருந்து ப்ளூகார் (Bluecar) ஒன்றைத் தேர்ந்தெடுத்து உபயோகிக்கலாம்.  சேவை முடிந்த பின்பு அருகில் உள்ள மின்விசை சேர்வி நிலையத்தில் விட்டு விட வேண்டும். இந்த சேவைக்கான கட்டணங்கள் நிமிடக்கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். குறைந்தது 15 நிமிடங்கள் உபயோகிக்க வேண்டும். கட்டணமாக 30 நிமிடங்களுக்கு $15 (Rs. 700) வசூலிக்கப்படும்

இதன் நிர்வாக இயக்குனர் பிராங்க் விட்லே (Franck Vittle) கூறுகையில், “சிங்கப்பூரில் தொடங்கவிருக்கும் இந்த சேவை குறித்த அதிகாரப்பூர்வ வெளியீடு வரவிருப்பதால் நாங்கள் உற்சாகமாக உள்ளோம். பாரிஸுக்கு அடுத்தபடியாக இது உலகின் இரண்டாவது மிகப்பெரிய மின்சார வாகன கார் பகிர்வு திட்டமாகும். சிங்கப்பூரில் வசிப்பவர்களுக்கு இந்த சேவையின் பலன்களையும் வசதிகளையும் கொடுக்க நாங்கள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறோம்.”
 
கூகுல் பிலே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் இல்  இந்த சேவைக்கான செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் 

மேலும் விபரங்களுக்கு : https://www.bluesg.com.sg/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
செய்தி : கார்த்திகேயன் நடராஜன், சிங்கப்பூர். 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/12/7/w600X390/BlueSG_-_1.jpg http://www.dinamani.com/specials/world-tamils/2017/dec/07/சிங்கப்பூரில்-மின்சார-கார்-பகிர்வு-திட்டம்-துவங்குகிறது-2822041.html
2719193 ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர் நியூஜெர்சியில் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் ஆண்டு விழா DIN DIN Monday, June 12, 2017 05:38 PM +0530  

நியூஜெர்சி மாநிலம், எடிசன் நகரிலுள்ள திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் ஏழாம் ஆண்டு விழா, ஞாயிறு, மே 14 அன்று, எடிசன் ஜே.பி. ஸ்டீபன்ஸ் உயர்நிலைப்பள்ளிக் கலையரங்கில் விமரிசையாகக்  கொண்டாடப்பட்டது.

காலை 10 மணிக்குத் தொடங்கி, எட்டு மணி நேரம் நடைபெற்ற இவ்விழாவில் சுமார் நானூறு மாணவர்கள் பங்குகொண்டு, இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் பல்சுவை நிகழ்ச்சிகளை வழங்க, இவ்விழா தமிழ்ப்பள்ளியைக் கொண்டாடும் விழாவாக மட்டுமல்லாமல், தமிழ் மொழி, தமிழர் கலை, கலாச்சாரம், பண்பாட்டைக் கொண்டாடும் விழாவாகவும் அமைந்தது.  

"வெள்ளம்போல் தமிழர் கூட்டம் 
வீரங்கொள் கூட்டம்; 
அன்னார் உள்ளத்தால் ஒருவரே 
மற்று உடலினால் பலராய் காண்பார், "

என பாரதிதாசன் கூறியதை நினைவூட்டுகின்ற வகையில், விழாவிற்கு பெருந்திரளாக மக்கள் வந்திருந்தனர். மலர் மாலைகள்,  தமிழ் ஆளுமைகளின் ஓவியங்கள் என மேடை சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.  

பள்ளிக்குழந்தைகள் தமிழ்த்தாய் வாழ்த்தை மேடையில் பாட, அதைத் தொடர்ந்து அமெரிக்க தேசிய கீதமும் இசைக்கப்பட, ஆண்டு விழா இனிதே துவங்கியது. தமிழ்ப்பள்ளி மூத்த ஆசிரியை ஆன்னி ஜெயராம் வரவேற்புரையாற்றினார். ஆசிரியர்கள், விசாலாட்சி நாகராஜன், ராஜேஷ் பன்னீர்செல்வம், சௌமியா பாலசுப்ரமணியன், பாலா தனசேகரன், யசோதா கிருஷ்ணராஜ், குரு ராகவேந்திரன்,  இந்திரா கண்ணன், மற்றும் ஆனந்த் தமிழரசன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர். 

மூன்று முதல் பதினாறு வயது வரையிலான சுமார் 425 குழந்தைகள் கவிதை ஒப்புவித்தல், பாடுதல், நடனம் ஆடுதல், நாடகத்தில் நடித்தல் என ஐம்பதற்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பங்குகொண்டனர்.  இவ்வருடம் நிறுவப்பட்ட திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் புதிய கிளையான பார்சிபனி நகரப் பள்ளி மாணவர்களும், விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

கவிதை ஒப்புவித்தல் நிகழ்ச்சிகளில், ஆத்திசூடி பாக்கள்,  திருக்குறள்,  பாரதியார், பாரதிதாசன் கவிதைகளை உடல் மொழி, முகபாவனைகளோடு மாணவர்கள் ஒப்புவித்தனர். ஆண்டு விழாவில், ஏராளமான மழலையர், மொழிப்பற்று, திரைப்படப் பாடல்களை மாணவர்கள் இன்புற்றுப் பாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

விழா நெடுக, பல வகையான நடனங்களும் அரங்கேறின.  குழந்தைப் பருவ பாடல்களுக்கும், கிராமிய மண்வாசனை வீசும் நாட்டுப்புறப் பாடல்களுக்கும்,  இந்திய தேசபக்தி பாடல்களுக்கும், இளைஞர் எழுச்சியை ஆதரித்த ஜல்லிக்கட்டு பாடல்களுக்கும், வாழ்வோடு பிணைந்துவிட்ட திரைப்பட பாடல்களுக்கும், பரத நாட்டியம், குத்து ஆட்டம், ஹிப் ஹாப், திரை நடனம், நவீன நடனம் என்று பல பாணிகளில் மாணவர்கள் நடனமாடினர். குறிப்பாக, பறையாட்டம், தீச்சட்டியாட்டம், கும்மியாட்டம், காவடியாட்டம் போன்ற தமிழர் மரபு நடனங்கள் காண்போரின் கவனத்தைக் கவர்ந்தது.
 

இருபத்தைந்திற்கும் மேற்பட்ட குறு நாடகங்களும் அரங்கேறின. பீர்பால், தெனாலிராமன் கதைகள்,  திருக்குறள், ஆத்திசூடி நீதிக்கதைகள், சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற வள்ளல் பாரி-புலவர் கபிலர் நட்புக்கதை,  மக்கள் கவிஞர் இன்குலாப் இயற்றிய பல ஔவையார்கள் பற்றிய நாடகம், சுற்றுபுறச் சூழலைப் பேணும் கதைகள்,  இராமாயணம், மகாபாரதம்,  சிலப்பதிகார கதைகள், அரசியல் சார்ந்த கதைகள், அறிவியல் புனைவுக் கதைகள் என பல விதமான நாடகங்களில் மாணவர்கள் நடித்தனர். 

நியூஜெர்சி வாழ் தமிழ்க் குழந்தைகள், ஆங்கிலத்தை முதல் மொழியாக படிக்கின்ற போதும், தமிழில் அழகுற ஆடியதும், பாடியதும், பொருள் புரிந்து நாடகத்தில் நடித்ததும் கண்டோரை மெய்சிலிர்க்க வைத்தது.  

“அகரம் முதலாம் தமிழெனுந் தேன் 
அடுத்த தலைமுறைக் கதுகொண்டு சேர்,”

என்ற வாசகத்தையே குறிக்கோளாக கொண்டு, 2010-ஆம் ஆண்டில் லாப-நோக்கமற்ற அமைப்பாக நிறுவப்பட்ட திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி, நியூஜெர்சியில் வாழும் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்குத் தமிழ் மொழியை வெற்றிகரமாகப் பயிற்றுவித்து வருகிறது. தொடக்கத்தில் 65 மாணாக்கர்களையும் 12 தன்னார்வலர்களையும் கொண்டிருந்த இப்பள்ளி, தற்போது 65 தன்னார்வலர்களின் உதவியுடன் சுமார் 425 மாணவர்களுக்குத் தமிழ்ச் சேவையைத் தொடர்ந்து செய்து வருகிறது. 

தமிழ்ப்பள்ளி வெற்றிகரமாக இயங்கிட உறுதுணையாக நிற்கும் அனைத்து தன்னார்வலர்களின் தொடர் சேவையைப் பள்ளி முதல்வர் சாந்தி தங்கராஜ் போற்றினார். மேடையில் அவர்களுக்கு நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.

ஹார்வர்ட் தமிழ் மொழி அமர்வின் முக்கியத்துவத்தைப் பறைச்சாற்றும் நிகழ்ச்சியாகவும் இவ்விழா அமைந்தது. பிரபல வலைப்பதிவர் PK சிவக்குமார், பள்ளி தன்னார்வலர் சரவணக்குமார், முதல்வர் சாந்தி தங்கராஜ் ஆகியோர் பார்வையாளர்களை நன்கொடைகள் வழங்குமாறு கோரிக்கைவிடுத்தனர். தமிழ்ப்பள்ளியின் சந்தைப்படுத்தல் குழுவின் உதவியுடன், ஒரே நாளில் 7500 டாலர் நிதியும் (சுமார் 5 லட்சம் ரூபாய்) திரட்டப்பட்டது.
 

மே 14 அன்னையர் தினத்தை முன்னிட்டு, முதல்வரின் வேண்டுகோளிற்கிணங்க பார்வையாளர்கள் விழாவிற்கு வந்திருந்த அனைத்து தாய்மார்களையும் பாட்டிமார்களையும் கரவொலியுடன் வாழ்த்தினர். அன்னையர் சிறப்பைப் போற்றும் மாணவர் குறுநாடகம் ஒன்றும் அரங்கேறியது.

இவ்வாண்டு விழா வெற்றிகரமாக நடைபெற, பல நிறுவனங்களும் நிதி தந்து உதவின.  ஓட்டல் சரவணபவன் காலை/மாலை சிற்றுண்டியும், மதிய உணவும் மலிவு விலைக்குத் தந்து உதவியது.   

ஆண்டு விழாவின் இறுதியில் அரங்கேறிய ஆசிரியர்கள் நடித்த  “பண்ணையாரம்மாவும் பருந்துக் கூட்டமும்” என்ற அரசியல் நையாண்டி நாடகம் பார்வையாளர்களை நகைச்சுவையில் ஆழ்த்தியது.

முடிவில், தமிழ்ப்பள்ளியின் துணைமுதல்வர் லக்ஷ்மிகாந்தன் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க உதவிய அனைத்துத் தன்னார்வலர்களுக்கும் நன்றி கூறினார். ஒலிப்பெருக்கியில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட, கூத்தும் கும்மாளமும் மகிழ்ச்சியுமாக நீடித்த பள்ளியின் ஏழாம் ஆண்டு விழா சிறப்பாக நிறைவுபெற்றது. 

- சாந்தி தங்கராஜ் 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/12/w600X390/TTS-AnnualDay1.jpeg http://www.dinamani.com/specials/world-tamils/2017/jun/12/நியூஜெர்சியில்-திருவள்ளுவர்-தமிழ்ப்பள்ளியின்-ஆண்டு-விழா-2719193.html
2704501 ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர் லய இசையில் லயித்த மெல்பெர்ன்! DIN DIN Thursday, May 18, 2017 03:33 PM +0530
ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரில் அண்மையில் இடம்பெற்ற மிருதங்க அரங்கேற்றத்தைக் கண்டு களிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அந்நிகழ்வு பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாமென எண்ணுகின்றேன். 

Indian Arts Academy-ன் 44-வது மாணவனின் மிருதங்க அரங்கேற்றம் இதுவாகும். Rivergum Performing Arts Centre மண்டபத்தில் நடந்த இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நவரத்னம் ரகுராமும் செல்வி கஜானு மகேஸ்வரனும் மேடையில் வந்து எல்லோரையும் வரவேற்று அரங்கேற்ற நிகழ்வை ஆரம்பித்தனர்.

தொடர்ந்து, அரங்க நாயகன் செல்வன். கணாதீபனின் சகோதரி செல்வி. சுபானு மகேஸ்வரன் வரவேற்புரையை வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து மேடைக்கு வந்த குரு ஸ்ரீ யோகராஜா கந்தசாமி இரத்தினச் ருக்கமாக சில வார்த்தைகள் பேசி சம்பிரதாயபூர்வமாக அரங்கேற்றத்தை ஆரம்பித்து வைத்தார்.

மண்டபத்தின் திரை விலகவும் ஒளி வெள்ளத்தில் நீல வர்ணத்தில் அமைந்த சிவனின் பின்னணி திரைச்சீலையும் அதற்கு முன்னே அலங்கரிக்கப்பட்ட மேடையில் பாடகர் சிறீ அகிலன் சிவானந்தன் நடு நாயகமாக வீற்றிருக்க, விழா நாயகன் செல்வன். கணாதீபன் மகேஸ்வரன் அணியிசைக் கலைஞர்களுடன் ஒருமித்த இசையொலி நாதத்தை அள்ளி ஊற்றியது என்றால் மிகையாகாது.

தொடக்கமே எம்மையெல்லாம் நிமிர்ந்து இருக்க வைத்த அந்த இசையொலி உள்ளத்தில் ஏற்படுத்திய உணர்வினை எங்கும் கண்டதில்லை. ஆதி தாளத்தில் அமைந்த நவராகமாளிகா வர்ணத்தோடு நிகழ்வு ஆரம்பித்து தொடர்ந்து Gowla ராகத்தில் அமைந்த முத்துச்சுவாமி தேசிகரின் பாடலான ஸ்ரீ மகா கணபதியோடு தொடர்ந்தது. 

பாடகர் அகிலன் சிவானந்தனின் குரல் வளத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. தொடர்ந்து சுத்த சாவேரி ராகத்தில் அமைந்த தாயே திரிபுர சுந்தரி என்ற பாடலும் பின்னர் பேகாக் ராகத்தில் அமைந்த ஆடும் சிதம்பரம் பாடலும் சபையோரை கட்டி வைத்துவிட்டது. செல்வன். கணாதீபனின் அமைதியான ஆனால் லாவகமான வாசிப்பு அவரது திறமையையும் குருவின் பயிற்சியையும் புடம்போட்டு காட்டி நின்றது.

அணியிசைக் கலைஞர்கள் தமது திறமையை வெளிக்கொண்டு வந்ததோடு அரங்க நாயகன் கணாதீபனுக்கு முழு உற்சாகத்தை கொடுத்து அவரை மிளிரச் செய்து, அவரது திறமையை சபையோர் முன் படைக்க வழங்கிய ஒத்துழைப்பு அபாரம்.

அதனைத் தொடர்ந்து இடைவேளை விடப்பட்டு 20 நிமிடங்களில் மீண்டும் நிகழ்வுகள் ஆரம்பித்தன. Hindola ராகத்தில் அமைந்த ராகம் தானம் பல்லவியோடு மீண்டும் ஆரம்பித்த நிகழ்வு சந்திர கென்ஸ் ராகத்தில் அமைந்த பிட்டுக்கு மண்சுமந்த என்ற பாடலோடு தொடர்ந்தது.

அதனைத் தொடர்ந்து கலைஞர்கள் கௌரவிப்பும் குரு கௌரவிப்பும் நடந்தேறியது. தொடர்ந்து கணாதீபன் தனது பெற்றோர்களுக்கு ஒரு சிறப்பு பரிசு வழங்கி அவர்களை கௌரவித்து, அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கியது சபையோரின் பாராட்டைப் பெற்றது.

தொடர்ந்து ரேவதி ராகத்தில் அமைந்த ஜனனி, ஜனனி பாடல் இடம்பெற்று நிறைவாக தில்லானா, மங்களத்தோடு அரங்கேற்றம் நிறைவிற்கு வந்தது. இந்நிகழ்ச்சிகளின் இடையிடையே பல்வேறு வகைப்பட்ட தகவல்களை வழங்கி சிந்தனைக்கு விருந்தளித்திருந்தார் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரகுராம். பக்கவாத்தியக் கலைஞர்களான வயலின் வாசித்த வைத்திய கலாநிதி பத்ரி அவர்களும், கெஞ்சீரா வாசித்த தென்காசி ஹரிகரன் பரமசிவம் அவர்களும், மோர்சிங் வாசித்த மலைக்கோட்டை ஆர்.எம். தீனதயாளு அவர்களும், கடம் வாசித்த உள்ளூர் கலைஞரான திவாகர் யோகபரன் அவர்களும் தம்புரா வாசித்த செல்வி. கீர்த்தனா ராஜசேகர் மற்றும் செல்வன். நிவாஷன் தயாபரன் ஆகியோர் பாடகர் சிறீ. அகிலன் சிவானந்தன், நாயகன் செல்வன். கணாதீபன் மகேஸ்வரன் மிருதங்க இசையோடு பார்வையாளர்களை பரவசப்படுத்தி விட்டனர்.

மிக மிகக் கடுமையான ஜதிகளையும் தாளக்கட்டுக்களையும் கொண்ட கீர்த்தனைகள் பாடல்களுக்கு கணாதீபன் அசராமல் மிருதங்கத்தினை கையாண்டவிதம் தானொரு தலைசிறந்த கலைஞன் என்பதனை உணர்த்தி விட்டார். நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக கலாகுருத்தி நாட்டியப் பள்ளியின் நிறுவனர் சிறீமதி. ஷோபா சேகர் அவர்களும் சிறப்பு விருந்தினராக கனடாவிலிருந்து வருகை தந்திருந்த சுப்ரமணியம் ராஜரத்னம் அவர்களும் சிறப்பித்தனர்.

சுருங்கக் கூறின் ஒரு அரங்கேற்ற நிகழ்வு என்ற எண்ணத்தையே மனதை விட்டு அகல வைத்து மிகச்சிறந்த இசை நிகழ்ச்சியாக அமைந்திருந்தது அரங்கேற்றம். அனைத்து கலைஞர்களும் மிகப் பாராட்டப்பட வேண்டியவர்கள். அதற்கு மேல் குரு யோகராஜா கந்தசாமியும் அரங்க நாயகன் கணாதீபனுக்கும் வாழ்த்துக்கள்.

- சித்தம் அழகியான்
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/18/w600X390/miru_1.jpg http://www.dinamani.com/specials/world-tamils/2017/may/18/லய-இசையில்-லயித்த-மெல்பேர்ண்-2704501.html
2687860 ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர் சிங்கப்பூரில் தமிழர் பாரம்பரிய உணவின் மகத்துவம் பற்றிய நிகழ்ச்சி DIN DIN Thursday, April 20, 2017 03:25 PM +0530 சிங்கப்பூர் வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவில் பதினோராவது ஆண்டாக நடைபெறும் தமிழ் மொழி விழா 2017ல் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் பங்கெடுப்பது இது நான்காவது ஆண்டாகும்.
மாணவர்களிடையே மொழி ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும், பண்பாடு தொன்மையை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கடந்த மூன்று ஆண்டுகளாக உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கான நிகழ்ச்சியை நடத்தியது. தொடக்க கல்லூரி மாணவர்களையும் சேர்த்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தமிழ்மொழி விழா 2017ல் உயர் நிலை பள்ளி மாணவர்களையும் தொடக்க கல்லூரி மாணவர்களையும் பங்கெடுக்க வைப்பதென்று முடிவு செய்தது செயற்குழு.

ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டு, அவர்கள் அந்த தலைப்பை ஒட்டி ஆய்வு செய்து படைக்க வேண்டும். மாணவர்களின் ஆய்வின் ஆழம், குரல் வளம், படைக்கும் திறன், பார்வையாளர்களை தொடர்பு படுத்தும் திறன் போன்றவைகளை அடிப்படையாகக்கொண்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்ய படுகிறார்கள். அதே தலைப்பை ஒட்டி அந்த தலைப்பில் நிபுணத்துவம் பெற்ற ஒரு சிறப்பு பேச்சாளர் சிறப்புரை ஆற்றுவார்.

இவ்வாண்டு 'உணவை' கருப்பொருளாக வைத்து 'தமிழர் பாரம்பரிய உணவும் ஆரோக்கியமும்' என்ற தலைப்பினை மாணவர்கள் படைப்புக்காகவும் 'உணவுக்கும் அமுதென்று பெயர்' என்ற தலைப்பினை சிறப்பு பேச்சாளர் மருத்துவர் கு. சிவராமன் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துவருகிறது.இந்த ஆண்டு முன் இறுதிச்சுற்றில் 60 மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆய்வினை படைத்தது சிறப்புக்குரியதாகும். பெற்றோர்களும், பள்ளி ஆச்சிரியர்களும் மாணவர்களும் மொழியின் மீது கொண்டுள்ள பற்றை பறைசாற்றுவதாகவே இந்நிகழ்வு அமைந்தது.

ஏப்ரல் 15 மாலை உமறுப்புலவர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட உயர் நிலை பள்ளி மாணவர்கள் இருவரும் தொடக்க கல்லூரி மாணவர்கள் இருவரும் தங்கள் ஆய்வினை சிறப்பாக படைத்தனர். அதில் தமிழர்கள் அதிகம் பயன்படுத்திய எள், மஞ்சள்,மிளகு போன்ற பல  பொருட்களின் முக்கியத்துவத்தை தற்கால வாழ்க்கைமுறைக்கேற்றவாறு எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார்.

இந்த போட்டியில் இந்திய அனைத்துலக பள்ளியின் மாணவிகளாகிய வைஷ்ணவி ஹரிஹர வெங்கடேசன் ஆகியோர் உயர்நிலைப் பள்ளிகள் பிரிவிலும், செயிண்ட் ஆண்ட்ருஸ் தொடக்கக் கல்லூரியைச் சார்ந்த மீனலோச்சனி முத்துக்குமார் மற்றும் சிம்மரோஷினி மகேந்திரன் ஆகியோர் தொடக்கல்லூரி பிரிவிலும் முதல் பரிசைப் பெற்றனர்.
 

சிறப்புரை ஆற்றிய மருத்துவர் கு.சிவராமன் தமிழர் பாரம்பரிய உணவின் சிறப்பையும் சிறந்த உணவு வகைகளையும் உணவு பழக்கங்களையும் எடுத்து கூறியதோடு உணவு தொடர்பாக உலக அளவில் நடத்த ஆய்வுகளையும், அந்த ஆய்வுகளோடு ஒப்பிட்டு பார்க்கையில் தமிழர்களின் உணவுமுறை சிறந்து விளங்குவதையும் எளிமையாக விளக்கினார். மேலும் தமிழர்களின் உணவுமுறை சாதாரணமாக தோன்றியது அல்ல,அது பல ஆயிரம் ஆண்டுகளின் அறிவியல் என்றும் மிக நீண்ட உரையை நேர்த்தியோடுத்த தந்தார் மருத்துவர் கு. சிவராமன். விழாவில் வளர் தமிழ் இயக்கத்தின் தலைவர் ராஜாராம் உட்பட பல்வேரு தமிழ் அமைப்புகளை சார்ந்தவர்களும், ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்க உறுப்பினர்களின் குடும்பத்தார் என 600-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் அ. இளங்கோவன் வரும் ஆண்டுகளில் இதே போன்ற மாணவர்களை ஈடுபடுத்தும் நிகழ்ச்சிகள் தொடரும் என்றும், ஆதரவு அளித்துவரும் வளர்தமிழ் இயக்கத்திற்கு நன்றியையும் தெரிவித்துக்கொண்டார். சங்கத்தின் செயலாளர் ரா.சங்கர் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது. அறுநூற்றுக்கும் மேற்பட்டோர் முன்னிலையில் அரங்கேறிய இவ்விழா தமிழர்களின் உணவுமுறைகளை பற்றிய சிறு விழிப்புணர்வை உருவாக்கியது என்றுதான் சொல்லவேண்டும்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/20/w600X390/singapore_dr.jpg http://www.dinamani.com/specials/world-tamils/2017/apr/20/tamil-mozhi-vizha-2017-2687860.html
2599677 ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர் ஜெர்மனியில் கலாச்சார தீபாவளி சரவணன் DIN Wednesday, November 16, 2016 01:01 PM +0530 ஜெர்மனியில் உள்ள கொலோன் நகரில், நவம்பர் பன்னிரெண்டாம் தேதி தீபாவளி பண்டிகை 'கொலோன் வாழ் தமிழ் மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

தமிழர்களுடைய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் விதத்தில் சிலம்பாட்டம், கரகாட்டம் போன்ற கலை நிகழ்சிகள் அரங்கேற்றப்பட்டன. புலம்பெயர் வாழ்வில், கலாச்சார பண்டிகைகளின் தேவைகளை முன்னிறுத்தும் வகையில் பட்டிமன்ற நிகழ்ச்சி நடந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, வயது வாரியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

குழந்தைகளுக்காக அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மேலும் உறுப்பினர்களின் பங்களிப்புடன், தமிழ்நாட்டில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/11/16/w600X390/kolon_1.jpg http://www.dinamani.com/specials/world-tamils/2016/nov/16/ஜெர்மனியில்-கலாச்சார-தீபாவளி-2599677.html
2559586 ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர் குவின்ஸ்லாந்து பொற்கரையில் சங்கத்தமிழும் நவீன இலக்கியமும சங்கமித்த எழுத்தாளர் – கலைஞர் ஒன்றுகூடல்! DIN DIN Friday, September 9, 2016 05:40 PM +0530  

முதல் தடவை கோல்ட்கோஸ்டில் நடந்த தமிழ் எழுத்தாளர் விழா

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை முதல் தடவையாக குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கோல்ட்கோஸ்டில் கடந்த 27-08-2016 ஆம் திகதி பேராசிரியர் ஆசி. கந்தராஜா தலைமையில் Auditorium, Helensvale Library மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்விழாவை இலங்கையிலிருந்து வருகை தந்த மூத்த எழுத்தாளர் திருமதி. தாமரைச்செல்வி மங்கல விளக்கேற்றி தொடக்கிவைத்தார். திரு. பவனேந்திரகுமாரின் வரவேற்புரையுடன் ஆரம்பமான விழா நிகழ்ச்சிகளில், மறைந்த படைப்பாளிகள், கலைஞர்களின் ஒளிப்படக் கண்காட்சி, கவியரங்கு, கருத்தரங்கு, பட்டி மன்றம், வாசிப்பு அனுபவப்பகிர்வு, மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

நூல் விமர்சன அரங்கில் – கந்தசாமியும் கலக்சியும் ( நாவல்) – (ஜே.கே.’ ஜெயக்குமாரன்) – கொஞ்சும் தமிழ் (சிறுவர் இலக்கியம்) – கவிஞர் அம்பி – கீதையடி நீ எனக்கு (குறுநாவல்கள்) கறுத்தக்கொழும்பான் (படைப்புக்கட்டுரைகள்) – (பேராசிரியர் கந்தராஜா) – வாழும் சுவடுகள் (தொழில்சார் அனுபவப் பதிவுகள்) (மருத்துவர் நடேசன் )ஆகிய நூல்கள் இடம்பெற்றன.

மருத்துவர் நடேசன், திரு. முருகபூபதி, மருத்துவர் வாசுகி சித்திரசேனன், திரு. செல்வபாண்டியன் ஆகியோர் இந்த அரங்கில் உரையாற்றினர்.

கருத்தரங்கில் கன்பராவிலிருந்து வருகைதந்த இலக்கிய ஆர்வலர் மருத்துவர் கார்த்திக் வேல்சாமி “சமகால தமிழ் இலக்கியப் பரப்பில் அவுஸ்திரேலியப்படைப்பாளிகளின் எழுத்துலகம்” என்னும் தலைப்பில் உரையாற்றினார். ” வெளிநாட்டு வாழ்வில் நாம் பெற்றது அதிகமா ? இழந்தது அதிகமா?” என்ற தலைப்பில் சிட்னியிலிருந்து வருகைதந்த திரு. திருநந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற பட்டி மன்றத்தில் மருத்துவர் கண்ணன் நடராசன் அறிமுக உரையாற்றினார். வெளிநாட்டு வாழ்வில் நாம் பெற்றது அதிகமா? என்னும் தலைப்பில், திருமதி.வாசுகி சிவானந்தன், திரு.காந்தன் கந்தராசா, திரு.சிவகைலாசம் ஆகியோரும் இழந்தது அதிகமா ? என்னும் தலைப்பில், திருமதி சாரதா இரவிச்சந்திரன் திருமதி இரமாதேவி தனசேகர், திரு. குமாரதாசன் ஆகியோரும் வாதாடினார்கள்.

கலையரங்கில் வீணையிசை – பரதம் முதலான நிகழ்ச்சிகளில் செல்வி. சிவரூபிணி முகுந்தன், ஸ்ரீமதி. பத்மலக்ஷ்மி ஸ்ரீராமும் குழுவினரும், செல்வி மதுஜா பவன், செல்வி சிவகௌரி சோமசுந்தரம், ஆகியோர் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட தமிழ்நதி சிறப்பிதழை முனைவர் பிரதீப்குமார், திருமதி தாமரைச்செல்விக்கு வழங்கி வெளியிட்டுவைத்தார்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் வாசுகி சித்திரசேனன் தொகுத்து வழங்கிய மூவேந்தர் வளர்த்த சங்கத்தமிழின் பெருமை பற்றிய முத்தமிழ் விருந்து கதம்ப நிகழ்ச்சியில், சங்கமம் கலைக்குழுவைச்சேர்ந்த முப்பதிற்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர்.இவ்விழாவில் அண்மையில் நடந்த அவுஸ்திரேலியா பல கதைகள் சிறுகதைப்போட்டி முடிவுகளை அறிவித்த அதன் ஏற்பாட்டாளர் திரு. முகுந்தராஜ் , விழா நிகழ்ச்சிகளின் இறுதியில் நன்றியுரை நிகழ்த்தினார்.

அவுஸ்திரேலியா பல கதைகள் – சிறுகதைப்போட்டி முடிவுகள்:

முதல் பரிசு – இமிகோலிங் – அகிலன் நடராஜா – மேற்கு அவுஸ்திரேலியா

இரண்டாம் பரிசு – காவோலைகள் – சியாமளா யோகேஸ்வரன்; – குவின்ஸ்லாந்து.

மூன்றாம் பரிசு – தாயகக்கனவுகள் – கமலேந்திரன் சதீஸ்குமார் – தெற்கு அவுஸ்திரேலியா

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/3/w600X390/ATLAS-Festival-2016.jpg http://www.dinamani.com/specials/world-tamils/2016/sep/03/குவின்ஸ்லாந்து-பொற்கரையில்-சங்கத்தமிழும்-நவீன-இலக்கியமும-சங்கமித்த-எழுத்தாளர்-–-கலைஞர்-ஒன்றுகூடல்-2559586.html
2556916 ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர் தமிழ் சந்ததிகளுக்காக ஆஸ்திரேலியாவில் அவ்வை தமிழ்ப்பள்ளி DIN DIN Monday, August 15, 2016 03:21 PM +0530 ஆஸ்த்ரேலியா நாட்டில் மெல்பெர்ன் நகரில் வாழும் தமிழர்களின் பிள்ளைகள் மற்றும் எதிர்காலத் தமிழ்ச் சந்ததிகளுக்காக, நம் மூதாட்டி அவ்வையாரை பெருமை படுத்தும் விதமாக அவர்கள் பெயரிலேயே 'அவ்வை தமிழ்ப் பள்ளி' உருவானது.

வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த ஐந்து தமிழ் நண்பர்கள் - அந்தோணி, அரசு, ருத்ரா, செல்வா, செந்தில் என அனைவரும் ஒன்று சேர்ந்து தன் தாய்மொழி தமிழுக்கு அவர்கள் வாழும் மெல்பெர்ன் மண்ணில் எப்படி சிறப்பு சேர்க்கலாம் என எண்ணிய பொழுது உருவானது மெல்பெர்ன் தமிழ் மன்றம் ஆகும்.

அவர்கள் ஒன்று சேர்ந்து முதலில் மெல்பெர்ன் தமிழ் மன்றம் (Melbourne Tamil Mandram - (MTM)) என்ற ஓர் இலாப நோக்கற்ற அமைப்பை ஆஸ்ட்ரேலியன் விதி முறைகளின் படி பதிவு செய்தார்கள். பின்னர் இந்த மண்ணில் வாழும் தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்ற விவாதத்தில், உடனே ஆற்ற வேண்டிய முதல் பணியாக அவர்கள் எடுத்த முடிவுதான் அவ்வை தமிழ்ப் பள்ளி உருவாகக் காரணமானது.

இளைய தலைமுறையை காக்கும் ஒரே பணி தமிழ்ப் பள்ளித் தொடங்குவதுதான் எனத் தீர்மானித்து அவ்வை தமிழ்ப் பள்ளி தொடங்கப்பட்டது. . அவ்வாறு தொடங்கிய அவ்வைப்பள்ளி மூலம் தமிழ் வாயிலாக, நமது தமிழ்க் குடியின் சிறப்பு, 50,000 ஆண்டுகள் மூத்தகுடித் தமிழனின் பெருமை, பாரம்பரியம், பண்பாடு, நாகரீகம் அனைத்தையும் அள்ளிக்கொடுத்து இங்கு வாழும் நமது அடுத்தத் தலைமுறை தங்களது சொந்த அடையாளத்தை தொலைத்து விடாமலும் சுயமரியாதையுடனும் வாழ வழி செய்வது என தீர்மானித்தோம்.

அவ்வாறு கடந்த ஏப்ரல் 16ந் தேதி சனிக்கிழமை காலை இனிதே அவ்வை தமிழ்ப் பள்ளி தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக சிதம்பரம் சீனிவாசன், வாசன் சீனிவாசன் அவர்களை அழைத்திருந்தோம். அவர்கள் வந்திருந்து விழாவினைச் சிறப்பித்து அருமையான சொற்பொழிவை ஆற்றினார்கள். எதிர்பார்த்ததை விட அதிக தமிழ்க் குடும்பங்கள், பெற்றோர்கள், குழந்தைகள் வந்திருந்து விழாவினை சிறப்பித்தனர்.

ஐந்து இயக்குனர்கள் முறையே பொறுப்புகளைப் பிரித்துக்கொண்டனர். அதன்படி அந்தோணி அவர்கள் வெளியுறவுகளை கவனிக்க, அரசு அவர்கள் விழாவில் வரவேற்புரையை நிகழ்த்தினார். செந்தில் அவர்கள் தலைவர் உரை நிகழ்த்த,அவ்வைப் பள்ளியின் தலைமையாசிரியரான செல்வா அவர்கள் ஆசிரியைகளின் அறிமுகம் மற்றும் பாடத் திட்ட வரைவு போன்ற அனைத்தையும் விளக்கி கூறினார்கள். ருத்ரா அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர் கமிஷனர் சிதம்பரம் சீனிவாசன் அவர்கள் அவ்வை தமிழ்ப்பள்ளியின் சீரிய பணியை பாராட்டி, இப்படிப்பட்ட இன்றியமையாத சேவை இன்றைய உலகின் அவசியத்தேவை என்பதை தன் இயல்பான பேச்சினால் விளக்கி கூறினார்கள். தமிழ், சமஸ்கிருதம், பெங்காலி, ஆங்கிலம், ஜாப்பனீஸ் போன்று பல மொழிகள் தெரிந்திருந்தாலும் தமிழையும் அதன் சிறப்பையும் கண்டு பிரம்மித்ததோடு, தமிழில், தான் உரையாடும்பொழுது ஓர் இனம் புரியாத மகிழ்ச்சி தனக்குள் ஏற்படுவதை நினைவு கூர்ந்தார்கள். அதோடு தான் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டதற்கு அதனை ஏற்று அதன்படி பல வழிகாட்டுதல்கள், மற்றும் உற்சாகப் படுத்துதல் தொடர்பான கருத்துகளை தயார் செய்து வந்து பேசுவதை தனக்குக் கொடுத்த பொறுப்போடு நியாயப்படுத்திக் கூறியபோது அரங்கமே அதிர்ந்தது!!

அடுத்ததாக பேசிய மற்றொரு சிறப்பு விருந்தினர் வாசன் சீனிவாசன் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக ஆஸ்ட்ரேலியாவில் வாழ்ந்து அதன்படி, தான் புரிந்துள்ள தமிழ்ப் பள்ளியின் அவசியம் பற்றியும் இது போன்ற பள்ளிகள் முன்பு தமிழர்களுக்காக இல்லாதது குறித்தும், சிரமங்களை விளக்கினார்கள். அடுத்து தன்னுடைய விடாமுயற்சியால் 71 படுக்கைகள் அடங்கிய முதியோர் இல்லத்தை, நோபல்பார்க் புறநகர் பகுதியில், இந்தியர்களுக்காகவே அரசாங்கத்திடம் போராடி பெற்றதன் சிறப்பை விளக்கினார்கள். இதற்கு முன் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குமுன் கேரம்டோவ்ன்ஸ் புறநகரில் அமைந்துள்ள சிவா-விஷ்ணு கோவில் உண்டானபோது, அதற்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்து, இந்தியாவிலிருந்து விநாயகர் சிலையை வடிவமைத்து அதனை, ஜீயர், மற்றும் சங்கராச்சாரியார் மகாசுவாமிகள் மூலம் உருவேற்றி அதனைச் சக்தி குறையாமல் இங்கு கொண்டு வந்து ஸ்தாபித்தது முதல் தன் முக்கிய பொறுப்புகளைக் கூறியபொழுது, கூடியிருந்த ஒவ்வொரு தமிழனும் வாழ்கையில் நாமும் ஏதாவது செய்யவேணும் என என்னத் தோன்றியது.

ஒரு மனிதன் அவனது உடலையும் உலகத்தில் அவனது இருப்பையும் இணைப்பது அவனுடைய மூச்சுக்காற்று ஆகும்.

அதுபோல அவன் பிறந்த சமூகத்தில் அவனுக்கும் அவன் சமூகத்திற்கும் உள்ள தொடர்பை அவனது சொந்த தாய்மொழியால் மட்டுமே அறிய முடியும்.. அத்தோடு அவனது அடையாளம் அவன் சமூகம் சார்ந்த பெருமை அனைத்தும் அவனது தாய்மொழியால் மட்டுமே காக்கப்படும்.. அந்த வகையில் இங்கு தொடங்கப்பட்டுள்ள அவ்வை தமிழ்ப் பள்ளியானது தனது சிறந்த சேவையைத் தொடர்வதன்மூலம், தமிழ்ச் சமுகம் காக்கப்பட்டு இன்னும் சில வருடங்களில் உலகத் தமிழர்கள் போற்ற சரித்திரம் படைக்கும் என்பது மட்டும் நிச்சயம்!!!

மெல்பெர்ன் வாழ் தமிழர்களே!! வாருங்கள், உங்கள் குழந்தைகளை அழைத்து வாருங்கள். தமிழ் பயிலுவோம்!! தமிழ் கற்பிப்போம்!! தமிழ் வளர்ப்போம்!! உலகின் மூத்த குடியாம் தமிழ்க்குடியின் சிறப்பு, தமிழனின் பெருமை, பண்பாடு, நாகரிகம் பாரம்பரியம் அனைத்தையும் நம் தாய்மொழியாம் தமிழின் மூலம் அடுத்த தலைமுறைப் பிள்ளைகளுக்கு வழங்கி, நம் வருங்கால சந்ததிக்கு பெருமை சேர்ப்போம். வாழ்க தமிழ்!! வாழிய பல்லாண்டு!!!

அவ்வை தமிழ்ப் பள்ளியானது ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9.30 மணி முதல் 12.00 மணி வரை ஹன் டிங்டேல் தொடக்கப் பள்ளி, ஓக்ஃலி தெற்கு (Huntingdale Primary School, Grange Street, Oakleigh South, Victoria-3167) புறநகர் பகுதியில் நடைபெற்று வருகிறது என்பதை மகிழ்வோடு தெரிவித்து, குழந்தைச் செல்வங்களை வரவேற்று மகிழ்கிறோம். நன்றி.

]]>
world tamils, dinamani, Austraila, Melbourne, Tamil school http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/15/w600X390/avvai_tamil_school.jpg http://www.dinamani.com/specials/world-tamils/2016/aug/15/தமிழ்-சந்ததிகளுக்காக-ஆஸ்திரேலியாவில்-அவ்வை-தமிழ்ப்பள்ளி-2556916.html
2556914 ஸ்பெஷல்ஸ் உலகத் தமிழர் சாக்ரமெண்டோவில்    மும்மூர்த்திகள் இசை விழா DIN DIN Monday, August 15, 2016 03:16 PM +0530 மே 21ம் நாள் காலை 8-30 மணியளவில் சாக் பல்கலைக் கழகத்தின் காபிஸ்ட்ராநோ இசை அரங்கம் இசையில் நாட்டம் மிகுந்தவர்களால் நிரம்பி வழிந்தது. காரணம் சாக்ரமெண்டோ ஆராதனா நடத்திய சங்கீத மும்மூர்த்திகள் விழா.

சில ஆண்டுகளுக்கு முன் தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவாக கொண்டாடப்பட்ட இந்நிகழ்ச்சி சென்ற ஆண்டிலிருந்து மும்மூர்த்திகள் விழாவாக விரிவாக்கப்பட்டுள்ள நிலையில் இது இவர்களின் இரண்டாம் ஆண்டு இசை விழா ஆகும்.

விழா குழலிசை விதூஷி சிக்கில் மைதிலி சந்திரசேகரின்  சேதுலாரா  என்ற  பாடலுடன் துவங்கியது. பின்னர் கர்நாடக இசை வித்வான் சிக்கில் குருசரண் வழியொட்டி தியாகராஜரின் பஞ்சரத்தின கீர்த்தனைகள் சேர்ந்திசையாக இசைக்கலைஞர்களால் தக்க பக்க வாத்யங்களுடன் வெகு நேர்த்தியாக இசைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து சாக்ரமெண்டோ மற்றும் வளைகுடா பகுதிகளில் உள்ள பல இசைப்பள்ளிகளிலிருந்து வந்த மாணவ மாணவியர்கள் மும்மூர்த்திகளின் கீர்த்தனங்களைப் நேர்த்தியாகப் பாடி தங்கள் இசைத்திறனை காட்டி, தங்கள் ஆசிரிய ஆசிரியைகளுக்கு பெருமை சேர்த்தனர். மேலும்  இசைக்கருவிகளில் பயிற்சி பெற்றவர்கள் தம் ஆர்வத்தையும் திறமையையும் வெளிப்படுத்தினர்.

தவிர, மேடையில், இசைக்கருவிகளில் தேர்ச்சி பெற்ற, வளரும் கலைஞர்களின் தனி வீணை, வயலின் கச்சேரிகள் இடம் பெற்றன.

இன்னும் சில மாணவ, மாணவியர் சீர்காழி மூவர் என்றழைக்கப்பட்ட தமிழ் மூவர்களான முத்து தாண்டவர், அருணாசலக்கவி, மாரிமுத்தா பிள்ளை ஆகியோரின் பாடல்களைப் பாடி சபையோரின் கவனத்தை ஈர்த்தனர்.

விழாவில் மற்றுமொரு சிறப்பு அம்சமாக சௌராஷ்டிர மும்மூர்த்திகளின் ஓர் அறிமுகம் என்ற ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை முனைவர் அர்ச்சனா வெங்கடேசன் பார்வையாளர்கள் கவனத்திற்கு வைத்தார்.

கூடவே வித்வான் சிக்கில் குருசரண் சௌராஷ்டிர மும்மூர்த்திகளான வெங்கட ரமண பாகவதர், கவி வெங்கடசூரி, நாயகி சுவாமிகள்  ஆகியோரின் கீர்த்தனைகளைப் பாடி  விளக்கமளித்தார். பாடல்களின் சிறப்பு அவை பஜனை சம்பிரதாயத்தை ஒட்டி இயற்றப்பட்டவையாகும்.

முத்தாய்ப்பாக, விதூஷி சங்கீதா சுவாமிநாதனின் இசைக்கச்சேரி சிறப்பாக நடந்தேறியது. வயலினிலில் வித்வான் சரவணபிரியன், மிருதங்கத்தில் ஸ்ரீ கோபால் ரவீந்த்ரன்  பக்க துணையாக இருந்தனர்.

சம்பந்தபட்டவர்களுக்கு விழாக்குழுவினர் நன்றி கூற விழா இனிதே முடிவுற்றது.

ரஜனிகோபாலன்
சாக்ரமெண்டோ

]]>
dinamani, world tamil, heritage, music, trinity, USA http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/15/w600X390/sacremento_aaradhana.jpg http://www.dinamani.com/specials/world-tamils/2016/aug/15/சாக்ரமெண்டோவில்   -மும்மூர்த்திகள்-இசை-விழா-2556914.html