Dinamani - கவிதைமணி - http://www.dinamani.com/specials/kavithaimani/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2981154 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி இந்த வாரத்திற்கான தலைப்பு: நட்சத்திரங்கள் விழும் இரவினில் கவிதைமணி DIN Wednesday, August 15, 2018 02:53 PM +0530  

'திராவிடச் சூரியனே’ என்ற தலைப்பிற்கு கவிதை எழுதி அனுப்பிய கவிஞர்கள் அனைவருக்கும் நன்றி..! இந்த வாரம் நீங்கள் எழுத வேண்டிய கவிதைக்கான தலைப்பு: நட்சத்திரங்கள் விழும் இரவினில்..!

உங்கள் கவிதைகளை kavidhaimani@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். 12 வரிகளுக்கு மிகாமல் கவிதை இருத்தல் நலம். உங்கள் கவிதைகளை யூனிக்கோடு எழுத்துருவில் டைப் செய்து மேற்கண்ட மின்னஞ்சலில் அடுத்த புதன்கிழமைக்கு முன்பாக அனுப்ப வேண்டுகிறோம். கவிதைகள் திங்கள் முதல் புதன்கிழமை வரை வெளியிடுவோம்.

]]>
kavithai, poem, poetry, kavithaimani, dinamani, கவிதைமணி, கவிதை, நட்சத்திரம், இரவு http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/15/w600X390/images.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/aug/15/இந்த-வாரத்திற்கான-தலைப்பு-நட்சத்திரங்கள்-விழும்-இரவினில்-2981154.html
2981145 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி கடந்த வாரத் தலைப்பு ‘திராவிடச் சூரியனே’ வாசகர்களின் கவிதைகள்! கவிதைமணி DIN Wednesday, August 15, 2018 01:17 PM +0530 திராவிடச் சூரியனே!

முத்தமிழ் அறிஞனுக்கு
மூத்த தமிழனுக்கு - என்
இளந்தமிழ் கொண்டு
இரங்கற்பா பாடுவதோ..!

ஈரேழு உலகம் எங்கு நீ
சென்றாலும்...செந்தமிழ்
உன்னை உயிர்ப்போடு
வைத்திருக்கும் ஐயா..!

இரவா புகழ்ப் பெற்ற உனக்கு
எதற்கு இரங்கற்பா..!

இனி எம்மோடு இல்லை நீ
என்று யார் சொன்னது
ரோமாபுரி பாண்டியன் தொடங்கி
நீ எழுதிய வரலாற்று
நாவல்களிலும் உன் வாழ்வின் சரித்திர
பக்கங்களிலும்
என்றும் உயிர்ப்போடு பார்ப்போம்
உன்னை...!

சட்டப்பேரவை ஆனாலும்
அரசியல் மேடையானாலும்
ஊடகப் பேட்டியானாலும்
தமிழால் அலங்கரித்தாய்
உன் குறும்பு பேச்சும்
வீரத் தமிழும்
உன் பெயர் சொல்லில்யே
முழக்கம் இட்டது..!

அந்த சூரியனே உன்
வெற்றித் திலகம் ஆனது

தமிழால், தமிழர் உணர்வோடு
கலந்திருக்கும் உனக்கு
தமிழ் உள்ள வரை என்றும்
இறப்பு இல்லை

காற்று உள்ள வரை உன் குரல்
எம் செவிகளில் ஒலிக்கும்
என்பதால்
மரணம் என்பதும் உனக்கு
இல்லை..!

ஆயினும் ஒரு குறை ஐயா..!

எல்லோருக்கும் 24 மணி நேரமாக
இருந்த
ஒரு நாளின் அளவை நீ மட்டும்
48 மணிநேரமாக ஆக்கி
வாழ்ந்தாய்..!

அதுபோல உன் ஆயுளையும்
இன்னும் ஒரு
100 ஆண்டுகளுக்கு நீயே
நீட்டித்துக்
கொண்டிருந்திருக்கலாம்..!

உன் போல்
இனி ஒரு தலைவன்
வரும் தலைமுறை காணுமோ
என்றேன் தமிழ்தாயிடம்

தமிழன்னை கண்ணீரில்
நா தழதழக்க ஏதோ சொன்னாள்
உனை இழந்து..
வார்த்தைகள் வராமல்
வாய்மூடி நின்றாள்!

- கவிஞர் திருமலை சோமு

**

எதையும் தாங்கும் இதயத்தின் அருகில் 
துயில் கொள்ளச் செல்லும் ஓய்வறியாச் சூரியனே!
உன் போராட்டங்கள் எண்ணிலாதவை போலவே
உனக்காகத் திரண்ட உடன்பிறப்புகளும் எண்ணிலாதோர்
கண்ணீர் கடலில் மிதந்து செல்லும் கட்டுமரமே
உன்னைக் கடலோரத்தில் நிறுத்தி வைக்கிறோம்
என்றென்றைக்குமாய் எங்களுக்குப் பாடமாய் இரு!
நீ இன்றி எழுத முடியாது தமிழக அரசியல் வரலாற்றை
ஐந்தாண்டுகள் பொறுத்திருந்தால் நூறாண்டு கண்டிருப்பாய்
அதற்குள் என்ன அவசரமோ? அஸ்தமித்தாய் ஆகஸ்டில்
ஏற்றமும், இறக்கமும் புதிதில்லை உனக்கு காண்!
போராடி வெல்வதூஉம் பெரிதில்லை உனக்கு காண்!
இறந்தும் வென்றாய் இடஒதுக்கீட்டு போராட்டத்தில்!
அண்ணாவின் தம்பியாய் தமிழர்களின் தந்தையாய்
முத்தமிழ் காவலராய், திராவிட மும்மூர்த்திகளில் இளையவராய்
கடமைகளை முடித்திட்ட பாசமிகு குடும்பத் தலைவனாய்
ஐந்து முறை தமிழக முதல்வராய்
நயமான எதிர்கட்சி தலைவராய்
உடன்பிறப்புகளின் உற்ற தமையனாய்
நீ வகிக்காத பொறுப்புகள் இங்கில்லை!
போலவே உன் போன்று இனியொரு பிறவியில்லை!
எதையும் தாங்கும் இதயத்தின் அருகில்
துயில் கொள்ளச் செல்லும் ஓய்வறியாச் சூரியனே!
திராவிடச் சூரியனே!
என்றென்றைக்குமாய் எங்களுக்கு பாடமாய் இரு நீ!

- கார்த்திகா வாசுதேவன்

**

முத்தமிழ் சூரியனே 
மீண்டெழ மாட்டாயா ?
 கிழக்கின் விடியல்

 இனி நீ இன்றியா?

 பரணி பாடி 

மனதை தேற்றிட முடியுமா?

 கண்கள் அழுதாலும்

 நெஞ்சுரம் நீங்குமோ ?

புலம்பல் தேற்றுமோ?


 கலையும் எழுத்தும் 

சொல்லும் செயலும்

கட்டிய சாம்ராஜ்ஜியம் உறங்கிப் போகுமோ? கட்டுமரமாய் மிதக்குமோ? 

நம் மனக்கடலில் புயல் அடங்குமோ? தெள்ளு தமிழ் 

சூரியனுக்கு வீர வணக்கம்!! 

- கோமலீஸ்வரி

**
விதவைக்கு கைம்பெண் என பொட்டு வைத்தவர்
செம்மொழியாய் எம்தமிழை நட்டு வைத்தவர்
தலைமையேற்றபோதும்

தன்னைத் தடுத்தவரை விட்டு வைத்தவர்
தமிழை இகழ்ந்தோர்க்கெல்லாம் குட்டு வைத்தவர்
இன்று எட்டாம் தேதியில்

நம் அண்ணாவோடு எட்டு வைத்திருக்கிறார்

நிரந்திர ஒய்வு பெற்றது இந்த சக்கர நாற்காலி 
எமது ஓய்வறியா சூரியனான கலைஞரிடமிருந்து !!

 - லீஷு

**

இரங்கற்பா..! ஒன்று
எழுதுகிறேன்
என் தலைவா..!
அஞ்சுகத்தாய் பெற்றெடுத்த
அஞ்சா நெஞ்சனே..!
அன்னைத் தமிழின் தலைமகனே..!
திருக்குவளை தந்த திருமகனே..!
அறிஞர் அண்ணாவின் பாசத்தில்
படைக்கு அஞ்சாத் தளபதியே
கல்லக்குடி கொண்ட
கருணாநிதியே..!
இழிசாதி என்றோர்க்கும்
இடம் கேட்டுப் போராடி
சமூகநீதி காத்த சமத்துவமே..!
திராவிடத்தின் வார் பிடித்த
பேனாவைக் கூர் தீட்டி...
தமிழன் மார்தட்டி எழுந்திட
எழுதியது உன் எழுத்து- அது
மாற்றியது
தமிழகத்தின் தலையெழுத்து..!
வாழ்க்கை ஒரு போராட்டம்
ஆனதுண்டு பலருக்கு
போராட்டமே வாழ்க்கையாய்
போனதென்ன உமக்கு..!
அன்று...
கல்விக்கூடம் சேரவும்
இன்று...
கல்லறைக்குப் போகவும்
போராட்டம்...
போராட்டம்...
போராட்டம்...
அதனால்தான்
உயிர்நீத்த பின்னும்
நீதிகேட்டு
போராட்டம்...
இறப்பிலும் உனையன்றி
போராட்டத்தில் யார்தான்
வெல்ல முடியும்..!
அண்ணாவின் தம்பிக்கு
இடம் கேட்டுப்
போராட வைத்திட்டார்
அவரிடம் சொல்லுங்கள்
உங்களுக்கும் சேர்த்துதான்
உழைத்திட்டார் கலைஞர்..!
ஓய்வறியா சூரியனே...
உறங்கத்தான் சென்றாயோ..!
இரவலாகப் பெற்றிட்ட
அண்ணாவின் இதயத்தை
அவர் காலடியில் வைத்திட்டு
தோள் சாய்ந்து துயில்வாயோ..!
எப்போதும் உழைத்தவன்
உறங்குகிறான் என்று
கல்லறையில் எழுதுங்கள்...
மலர்மாலை சூடிட்ட
புன்னகை முகத்தினை
புரட்சித் தலைவனை...
மண்ணுக்குள் மூடிவிட்டு
மலர்களைப் போடாதீர்..!
தமிழ் வாழ...
தமிழர் வாழ...
அவன்
மண்ணுக்குள்ளிருந்தும்
விதைகளை தூவுவான்
உடன்பிறப்பே கலங்காதீர்..!
அவர்தான்
மு.க.
அவர்தான்...
திருக்குவளை முத்துவேலர்
கருணாநிதி
தி.மு.க.
சென்று வா தலைவா..!

- ரஞ்சித் வைத்தியலிங்கம்

திருக்குவளையின் தீப்பொறியே

நெஞ்சுக்கு நீதி பேசி
குறளோவியம் படைத்த செம்மொழி ஊற்றே

பராசக்தியில் சமூக நீதி பேசி
சமத்துவபுரத்தில் சங்கமித்தவரே

அரசியலில் நீ இருந்தாயா இல்லை 
அரசியலே நீயாக இருந்ததா

எதிரிகள் மத்தியில் வாழ்ந்து பழக்க பட்ட உனக்கு 
எதிரிகள் இல்லா வாழ்க்கை சலித்துவிட்டதோ 

அண்ணாவின் இதயத்தை இரவலாக பெற்ற உனக்கு
அண்ணா சமாதியில் இடமில்லையாம் பைத்தியக்காரர்கள் 
இறந்ததே அண்ணா என்று தெரியாதவர்கள்

நீ தி மு க வின் தலைவராக ஐம்பது ஆண்டுகள் 
இருந்தாய் என்று புகழ்கிறார்கள் 
தி மு க வே நீதான் என்று தெரியாதவர்கள் 
ஆம்
(தி)றுக்குவளை (மு)த்துவேல் (க)ருணாநிதி 

எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு
காவேரி பொங்கும்போதே எனக்கு தெரியும்
காவேரி உன் மேல் காதல் கொண்டுவிட்டாள் 
உன்னை அள்ளிக்கொண்டு போய்விடுவாள் என்று

எனக்கு உன் மீது ஒரு வருத்தம் உண்டு 
எதற்கும் அஞ்சா நீ
ஏன் இயற்கையின் அழைப்பை வணங்கி ஏற்றாய்
இயற்கையையே நாங்கள் ஏளனம் செய்துவிடுவோம் 
என்ற அச்சத்தாலா

போய்வா உதய சூரியனே 
நின் மறைவிற்கு பிறகும் மீண்டும் 
உன் நாமம் உதிக்கும் 

உன் சுவடுகள் இன்னும் ஓர் நூற்ற்றாண்டு 
உன் பெயர் சொல்லும்.

- ஆர்.ராமலிங்கம், கத்தார்

**

உன்னால் நாங்கள் விழித்தெழுந்தோம்
ஆம் - அடித்தட்டு மக்களுக்காக நீ உதித்தபோது

உன்னால் நிமிந்து நடந்தோம் 
ஆம் - ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்காக

நீ குரல் கொடுத்தபோது

உன்னால் ஒளி நிறைந்த வாழ்க்கையை

நோக்கி பயணப்பட்டோம்
ஆம் - சிறுபான்மை மக்களின் நலனுக்காக

நீ திட்டங்களை தீட்டியபோது

உன்னால் நிம்மதியாக படுத்துறங்கினோம்
ஆம் - பாதுகாப்பு அரணாக

நீ அரசு கோலோச்சியபோது

உன்னால் நாங்கள் உயர் கல்வி

நோக்கிச் சென்றோம் 
ஆம் - எங்களுடைய எதிர்காலத்திற்காக

நீ கடுமையாக உழைத்தபோது

நாங்கள் வாழ்க்கையில் உயர்ந்து விட்டோம்

என்று நினைத்து எங்களை விட்டுச் சென்றாயோ
ஆம் - எங்களை உயர்த்தி விட்டுச்

சென்றாயோ திராவிடச் சூரியனே 

- ஆம்பூர் எம். அருண்குமார்

**

எல்லா நாளும் சூரியன் கிழக்கில் உதித்தான். 
ஆனால் 27/7/18 முதல் 7/8/18 தேதிகளில்?
1956 முதல் 2017 வரை சட்டமன்றத்தில் 
ஒலித்த குரல் ஏங்க வைத்து 
7/8/18 ல் அன்பு அண்ணனுடன் உரையாடச்சென்று விட்டாயோ? 
ஆதவன் தினமும் கிழக்கில் உதித்து மேற்கில் மறைவான் 
ஆனால் 8/8/18 மட்டுமே கிழக்கில் உதித்து 
கிழக்கிலேயே மறைந்த விபரம் 
எத்தனை பேர் அறிவார்கள்.   

- பாரதிராஜன், பெங்களூர்

**

திகட்டாத பைந்தமிழே
திருவாரூர் அவதரித்து
பகட்டின்றி பார் மீது பகலவனாய் வந்ததென்ன?
அகலாத ஆண்மையுடன்
புகழோங்க அரசியலில்
திகழ்ந்தனையே திகழ்ந்தனையே
இகழ்ந்தோரும் நாணும்படி
நண்ணயம் பல செய்து
நடந்தனையே குறள் வழி,
அடர்ந்த காடதனில் 
அரிமா வாய் நீ இருக்க
அயவோர் அணுகிடவே
அஞ்சிய காலம் போய்,
விஞ்சிட உள்ளுவோர் - இனி
விவகாரம் செய்திடுவர்,
கலைத் தாயின் தலைமகனே
கதிரவனே - ஆதவனே
கண் துஞ்சு - கண் துஞ்சு
மீண்டு வா மண் மீதில்
ஈண்டு - துவண்டாளே தமிழ் தாயும் - கலைஞர் நான்கெழுத்து விவேகம்
நான்கெழுத்து - ஆற்றல்
நான் கெழுத்து - அதன் வழி
நடந்திடும் ஆதவன் நான்கெழுத்து, விரைந்து வா
எழுச்சி - எனும் நான்கெழுத்தை
எம் தமிழர் துடைத்து
ஏற்றம் எனும் நான்கெழுத்தை
இப்போதே - அடைந்திடவே.
திராவிடச் சூரியனே - நீ 
உறக்கம் விட்டு எம் உதிரம்
சேர்ந்தாய் -தமிழாக - தன்மானமாக
தமிழன் என்கிறார் இனமுண்டு - என பாரோருக்கு
இனி எவர் சொல்வார்!?

- கவிதா வாணி - மைசூர்

**
ஓயாமல் உழைத்தவர் இதோ ஓய்வு எடுக்கிறார்...

தமிழ் அன்னையின் மடியில் துயில் கொண்ட கலைஞா!
ஓயாது உழைத்த உன் ஓய்வு இதோ அண்ணாவின் பக்கத்தில்!

கடன் வாங்கிய இதயம் அதன் இருப்பிடத்திற்கு சென்றது!
கரகரத்த குரல் இனி எம்காதில் ஒலிக்காதென்பதில் மனம் பதைக்கிறது!

உன் திறமைகளை வார்த்தைகளில் அடைக்க இயலா!
தமிழுக்கு நீர் ஆற்றிய கடமையை ஒருவரும் மறக்க இயலா!

தமிழ் பார் எங்கும் ஒலிக்க செம்மொழியாக்கினாய்!
பலதலைமுறை காண தமிழை கணிணியில் ஏற்றினாய்!
திருவள்ளுவர்க்கு ஒய்யாரமாய் குமரியில் சிலை வடித்தாய்!
தமிழ், தமிழ் என எங்கும் முழங்கி நீர் இந்தி திணிப்பை எதிர்த்தாய்!

கொள்கை முழக்கங்கள்,
காலம் மறவா கடிதங்கள்,
கன்னித்தமிழ் கவிதைகள்,
சுவைமிகு நாடகங்கள்,
உணர்ச்சியான வசனங்கள்,
இவை நீர் காற்றில் கலந்தாலும்,
தமிழ் உள்ளவரை நீளும்!
தமிழ் உள்ளவரை வாழும்!

பகைவரும் உன்னிடம் அரசியல் பயில விரும்புவார்!
பிறமொழியினரும் உன் தமிழ் கேட்க விரும்புவார்!
போராட்டத்தின் மறுபெயரான கலைஞா நீர் துயில் கொள்!

இந்த நாடும், வீடும் தலைவரிழந்த மொட்டைக்காடாய் காட்சி தர,
திராவிடம் தன் ஓயாத பயணத்தை அடுத்ததலைமுறையிடையே பயணிக்கிறது!

சமூகநீதி வாழ்க!

- இனிய தமிழ் செல்வா, ஓமன்

**

கலைஞரின் சாவுக்கு வேவு பார்க்க வந்த

நோவினை சிறை படுத்தி; 

காவேரி யிருந்து தீவுக்கு கொண்டு

சென்று காவு கொடுக்க சிரம் தாழ்த்தி
தீர்ப்பளிக்க தீர்மானிக்குமுன்; 

தானே கர்வத்தோடு தலை நிமிர்ந்து

அண்ணா ஆணையிட்டார் எனக்கு;

என் தம்பி கருணாநிதி அல்லலுர க

னவு கண்டேன் நெஞ்சை நிறடுகிறது; 

போய் கையோடு அழைத்து வரச் சொன்னார்

அதனால் வந்தேன்;

கலைஞர் நாமம் பல்லாண்டு வாழும்

அண்ணாவை காணாமல்

கலைஞராலும் இருக்க முடியாது;

தயைக் கூர்ந்து அனுப்பி வையும்
இல்லையேல் அண்ணா என்னை வைவார்;

என்றே கெஞ்சி கூத்தாடி காஞ்சி 
தலைவரிடம் சேர்த்திட்டது நோய்;

ஒரு திராவிடச் சூரியனே மறைந்ததை

எண்ணி ஒளியிழந்து இருள் சூழ்ந்த வேளை;

மறு சூரியன் உதித்திட கண்டோம் 
ஆறுதல் அடைத்தோம் அதற்குள் 

அச் சூரியனும் அஸ்தமத்தை தேடி
மறைய இனி எச் சூரியன் உதித்து

வெளிச்சத்தை காண்போமோ அறியோம்
கண்ணீரை காணிக்கையாக

வைத்த வண்ணம் 

- அபிரகாம் வேளாங்கண்ணி, மும்பை 

**
திராவிடச் சூரியனே புகழாய்  வாழ்க

வற்றாத    எழுதுகோலில்    எழுதி   எழுதி
    வளரறிவைத்   தமிழர்க்கு   ஊட்டி   யோனே
கற்றோரும்   வியக்கின்ற    சுழலும்   நாக்கால்
    கருத்தூட்டி    விழிப்புணர்வை    ஏற்றி    யோனே
பெற்றதொரு    கணினியெனும்     மூளை    யாலே
    பெருந்திட்டம்     வகுத்துநாட்டை    உயர்த்தி    யோனே
உற்றதொரு    துணைநீதான் !    தமிழி    னத்தின்
    உயிர்கலைஞா  திரவிடத்தின் சூரியா    வாழ்க !

மலைஇமயம்    வென்றுவில்லைப்     பொறித்த   தைப்போல்
    மாச்செயலால்    புதழ்பொறித்த    நற்சே ரன்நீ
நிலைத்திருக்கும்    கல்லணைபோல்     குறள்கோட்    டத்தை
    நிலையாக    நிறுத்திட்ட    நற்சோ ழன்நீ
தலைச்சங்கம்    மூன்றமைத்துத்     தமிழ்வ   ளர்த்த
    தகைமையைப்போல்    வளர்த்திட்ட    பாண்டி   யன்நீ
கலைமிளிர்ந்த     பொற்கால    மூவேந்   தர்போல்
    கவின்ஆட்சி     தந்தகலைஞா  புகழாய்   வாழ்க !

பகுத்தறிவால்   பழம்மூடம்   சாதி   ஓட்டிப்
    படைத்திட்ட    சமத்துவத்தால்    பெரியார்   தான்நீ
வகுக்கின்ற    அரசியலின்    திறத்தால்   மாற்றார்
    வாழ்த்துமாறு    ஆற்றுவதில்    அண்ணா    தான்நீ
தொகுத்தளிக்கும்    நிர்வாகத்     திறனில்     நாடே
    தொழுதிட்ட    மூதறிஞர்   இராசாசி    தான்நீ
தகுகல்வி    உணவளித்த    காம   ராசர்
    தடம்வென்ற    கலைஞரேறே    வாழ்க   வாழ்க !

இந்தியாவே    பின்பற்றும்    உழவர்    சந்தை
    இருப்பவர்கள்    சமமென்னும்    சமத்துவப்    புரங்கள்
சிந்தனைக்கும்   எட்டாத    விதவை    மணங்கள்
    சிறப்பாக    உழுவோர்க்கே     சொந்த    நிலங்கள்
சந்தனத்    தமிழுக்குச்     செம்மொழித்    தகுதி
    சம்ச்சீரில்     கல்வியெனும்    நலத்திட்    டங்கள்
இந்நிலத்தில்    அளித்துத்தமிழ்      இனத்தின்     கண்ணாய்
    இலங்கிட்டாய்    புகழாக     வாழ்க   வாழ்க !

- பாவலர் கருமலைத்தமிழாழன்

**

கிழக்கு நோக்கிப் பார்,
காலைச்சூரியன்;
மேற்கு நோக்கிப்பார்,
மாலைச்சூரியன்

சூரிய ஒளியில்,
இருள் போனது;
கூரிய சிந்தனையால்,
வாளே உடைந்தது

போர் புரிய,
ஆயுதம் வேண்டாம்;
பேனா முனையே
போதும்

ஊர் அறிய,
விளம்பரம் வேண்டாம்;
நல்ல எண்ணமே
போதும்

வேருக்கு நீர்
வேண்டாம்;
அது
மரத்திற்கு

உழைப்புக்கு ஊதியம்
வேண்டாம்;
அது 
இனத்திற்கு

ஒவ்வொரு நாளும்
தேய்ந்து போகும்,
தேய்பிறை அல்ல நான்

மீண்டும் மீண்டும்
எழுந்து வரும்,
சூரியன் நான்

பகுத்தறிவுப்பகலவனின்
சீடன் நான்;
பகுத்தறிவுடன் வாழ்வை
வாழ்ந்தவன் தான்

அறிஞரின் அருகில்,
இருந்தவன் நான்
அவர் இதயத்தை,
இரவல் பெற்றவன் தான்

இன்று 
அவரருகிலேயே;
இளைப்பாறச்
சென்றுவிட்டேன்

ஒன்றைச்சொல்கிறேன்
கேள்;
உரிமைப்போராட்ட
களத்தில் நில்

உடன்பிறப்புகளின்
உரிமைக்காக போராடு;
உடன் இருப்பேன்
நான்

கிழக்கு நோக்கிப் பார்;
நான் காலையில் மலர்வேன்
மேற்கில் மறைந்தாலும்;
மறுநாள் உதிப்பேன்

கடமை,
கண்ணியம்,
கட்டுப்பாடு
வேண்டும்

நான் திராவிடச்சூரியன்.

- ம.சபரிநாத்

**

திராவிடமொழியாம் தமிழொளியை ஒளிர்செய் 
திராவிடச் சூரியன் மறைவதில்லை மண்ணில்
ஒளிரும் சூரியன் மிளிரும் சந்திரன் விண்ணில்
ஒளிராமலில் உலகில் எங்கோ ஒரு மூலையில்
மறைவது போல் மண்ணில் தோன்றினாலும் 
மறைவதில்லை, தமிழொளி ஒளிரும் வரை
மாமனிதர் தமிழ் தந்த சூரியனார் தமிழர்
மனதில் ஒளிரும் திராவிடச்சூரியன் அன்றோ
கருணை மிகு சூரியனால் மேகங்கள் உருபெறும்
மருவி மண்ணில் மழைபெய்யும் கருணையால்
தமிழ் விடுத்த திராவிடச் சூரியநிதியாய் என்றும்
தமிழ் திராவிடத்தில் வாரி வளங்குவார். 

- மீனாள் தேவராஜன்

**

திராவிடச் சூரியனே
திமுக தந்த பகுத்தறிவே
சட்டமன்றத் தேர்தல்தோறும்
சரித்திரம் படைத்துவிட்டாய்!

உறவுக்கும் வரவுக்கும்
உயர்வுகள் பல தந்தாய்
தமிழ் காக்கும் தலைவனாக
தரணியெங்கும் வலம் வந்தாய்!

ஆரியம் என்று பல உரைத்தே
அந்தணர் குலம் மழுங்கச்செய்தாய்
ஆண்டவனை வணங்கிடாமலே
ஆண்டவன் அடி அடைந்துவிட்டாய்.

- புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன், சிறுமுகை

**

ஒடுக்கப்பட்டவருள்
ஒடுக்கப்பட்டவருக்காக!
பிற்படுத்தப்பட்டவருள்
பிற்படுத்தப்பட்டவருக்காக!
தாழ்த்தப்பட்டவருள்
தாழ்த்தப்பட்டவருக்காக!
சிறுபான்மையினருள்
சிறுபான்மையினருக்காக!
இறுதிவரை ஓங்கி ஒலித்த குரலடா! 
அந்த தமிழ் குரல்! அந்த திராவிட குரல்!

நீ
பற்றவைத்து
சென்றிருக்கிறாய்!
அது
பற்றியெறியும்
பகுத்தறிவு
சுடராய்
தமிழகமெங்கும்!

- இராஜசேகர்

**

சூரியன் துயில் கொள்ள போனது! 
தமிழகம் இருள் சூழ நேர்ந்தது! 
உச்சம் கொண்டு பறந்த கொடி
உன் துக்கம் கேட்டு தோய்ந்ததோ? 
அச்சம் அறியா அறிஞனே
இன்னும் சொச்சம் கடக்க ஓடி வா! 
உடன் பிறப்புகளே என கூறிய உதடுகள் 
இன்று ஊமையானதே! 
உடை பொருளாய் உன் மக்கள் 
உள்ளம் சிதையலானதே! 
ஓய்வுக்கே ஓய்வு கொடுத்த 
மானுடம் நீ.. 
முத்தமிழில் மூழ்கி முத்தெடுத்த 
மூத்தத் தலைவன் நீ.. 
தாய் மீது கொண்டப் பாசத்தால் 
அன்று வடித்தாய் உருவச்சிலை! 
தாய்நாடு மீது கொண்டப் பாசத்தால் 
நீ அடைந்தாய் துருவ நிலை! 
காலனுக்கு ஏற்பட்டக் குழப்பத்தால் தான் 
உன் காலம் முடிந்தது.. 
மற்றபடி உன் இறப்பை காலம் 
தீர்மானிக்கவில்லை! 
தலைவா!    
ஓடி வா! 

 - பவித்ரா ரவிச்சந்திரன் 

**

திராவிடம் வேண்டி திருக்குவளையில் உதித்தது
கிராமந்தோறும் பகுத்தறிவுச் சிந்தனை விளைத்தது
பராரிகள் பாழைகளுக்காய்க் குரல் உயர்த்தியது
வராது வந்த மாமணியாய் தன் கட்சியை வளர்த்தது 

ஓயாது உழைத்த உழைப்பாளியாய் உருவானவர்
சாயாது தனித் தலைவனாய் தனித்துவமானவர்
தேயாத கொள்கைகள்வழி நிற்கத் தலைப்பட்டவர்
தீயாகப் பணிசெய்து அண்ணா கணையாழி பெற்றவர்

இழுத்து இழுத்துப் பேசிய வசனங்களின் வேகமின்மை
அழுத்திப் பேசி அனல் தெறித்த வசன வேகங்களாக்கி
புழுத்துப் போன மூட நம்பிக்கைகள் தானே எழுந்தோட
முழுமை நிறை தமிழ் வசனங்களில் வார்த்தெடுத்தார்

தெள்ளு தமிழ் தித்திக்கும் தமிழானது எழுதுகோலில்
அள்ளியெடுத்து அழகு பார்த்தது காகிதங்கள் நனைந்து
துள்ளிக் குதித்தோடிய துடிப்பு நடைச் சொற்களிலே
வெள்ளியின் வெண்மை பளிச்சிட்டதே ஒளிமயமாகி

உதிக்கும் சூரியன் மறைவதும் இயற்கைதானெனினும்
துதிக்கும் மக்களை விட்டுப் பிரிதல் துன்பமல்லவா
மதிக்கும் உலகம் திராவிடச் சூரியனாம் கலைஞரை
பதிக்கும் பொன்னெழுத்துகளால் புகழ் மணக்கவே.

- கவிஞர் ராம்க்ருஷ்

**

திருக்குவளையில் ஒரு அஞ்சுகம் – அவள்
கருப்பையில் உதித்தது ஒரு சூரியன் –அவன்
பள்ளிகள் பார்க்காத பண்டிதன் !!
திரைக்குள் கண்களை மட்டுமே வைத்த
ரசிகர்களின்
காதுகளை அல்லவா திருப்பச்செய்தாய் –
உன் வசனங்களால்
தேனில் தோய்த்த
சவ்வுகளை,  செவிகளில், முதன் முதலாய்
தமிழன் அனுபவித்தான் ...
உன் செம்மொழியை பேனா முனையில்
கசக்கிச்சொட்ட வைப்பாயே
உடன் பிறப்புகளுக்கு கடிதமாய் ---
சமூக வலைதளத்துள் புகுந்த
“மத” வைரஸ்களை
வதம் செய்தவன் ..
சதம் அடிப்பாய் என்று நினைத்தோமே !!  
உன் குரலை உள்வாங்கிய
ஒலி பெருக்கிகளின் உள்ளங்கள்
உணர்ச்சியில் துள்ளுமே !
அய்ந்து முறை முதல்வன் –
கோப்புகளுக்குள் உன் பார்வையின் வேகம்
விமானிகளுக்கும் பாடமே !
மனிதர்களை ஈர்த்து
ஓயாமல் சுழன்ற  பூமியாய் நீ !
உன் உழைப்பிற்கு முற்றுப்புள்ளி
வைத்தது இயற்கை !!
கடற்கரைக்குள் கலந்தாயே என்று
கலங்காதே தமிழா !
மெரினாவின் மெல்லிய காற்றில்
இனி என்றும் தமிழ் மணம் வீசும்

- கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி -- MD DNB PhD

**

உன்
மேடைப் பேச்சைக் கேட்டு
மேனி சிலிர்த்தது
தமிழகத்துக்கு மட்டுமல்ல
தமிழ்த்தாய்க்கும்

இருள்கவ்விய  தேசத்தில்
எழுந்து சிவந்து ஒளிபாய்ச்சிய
திராவிடச் சூரியன் நீ
திசைகளின் தீபம் நீ

எழுதுகோல் ராஜ்ஜியத்தில்
என்றுமே
முதல்வர் நீ

காலையில் தொடங்கி
மாலையில் முடங்கிப் போய்விடும்
சூரியனுக்குப் பொறாமை 
உன்
சுடர்முகம் பார்த்துத்தான்

எப்படி நிகழ்ந்தது இந்த அதிசயம்?
இரவிலும் பகலிலும்
எந்தப் பொழுதிலும்
உதய சூரியனாய் நீ மட்டும்தான்!

கலைஞர் என்ற பெயரை
உச்சரித்தே வாழ்ந்தது
ஒரு நூற்றாண்டு காலம்


உன்னைப் படித்தால்
ஒவ்வொருவரும் கற்கலாம்
நெருப்பாறுகளை
நீந்திக் கடக்க

-கோ. மன்றவாணன்

**

குவளையிலே பூத்தபெரும் அருள்நிதியே!
குவலயமே போற்றும்நின் கூர்மதியே! 
பேரறிஞர் அண்ணாவின் உடன்பிறப்பே!
பார்போற்றும் தமிழ்முழக்கம் உன்சிறப்பே!
ஆட்சியிலே மாட்சியுடன் அமர்ந்தவனே!
காட்சிக்கு எளியனாய்த் திகழ்ந்தவனே!
சமத்துவம் காத்திடவே ஊரமைத்தாய் உழவர் 
தமதுபொருள் விற்றிடவே சந்தை கண்டாய்!
நம்மொழியின் மகத்துவத்தைச் சகத்தோர் காணச்
செம்மொழியாம் தகுதியினைப் பெற்றுத் தந்தாய்!
அர்ச்சகராய்ப் பணிபுரிய அனைவ ருக்கும்
அரியதோர் வாய்ப்பளித்த அறிஞன் நீயே!
புவிபோற்றும் வள்ளுவனாம் பெரியோ னுக்குக்
கவினுறவே சிலையெடுத்தாய் கோட்டம் வைத்தாய்!
மணியான காவியங்கள் பலவுந் தீட்டி
அணியாகப் பூட்டினையே தமிழ்ப்பெண் ணாட்கு!
அயராத உன்னுழைப்பைக் கண்டு வானில்
அயர்ந்துபோய் ஆதவனும் நின்ற துண்டு!
வாழ்நாளில் போராட்டம் பலவுங் கண்டாய்!
வீழ்ந்தபின்னும் போராடி நீதி வென்றாய்!!
இருந்தாலும் மறைந்தாலும் எம்மு ளத்தில்
மறையாத திராவிடநல் சூரி யனே!!

- மேகலா இராமமூர்த்தி

**

தென்னகமாம் தமிழகத்தில்
தென்பாண்டிச் சிங்கமென
திருக்குவளையில் உதித்த
தினகரனே -திராவிடமே
தமிழுக்கு தலை மகன் நீ
தஞ்சைக்கு வந்த
நெஞ்சுக்கு நீதியும் நீ
அஞ்சுகத்தின் மைந்தனாய்
அவனியிலே உதித் திட்ட
ஆதவனே - மேதினியில்
இவர் போல் யார் வருவார்
ஈரோட்டு பெரியார் தம்
உள்ள மென நீ திகழ்ந்து
ஊரெங்கும் அவர் கருத்தை
எழுச்சியுடன்
ஏந்தி நின்று
ஐயன் வள்ளுவனின்
ஒரு உருவச் சிலை தன்னை
ஓங்கி நீ நிறுவிட வே
ஒளவையும் அகமகிழ்ந்தாள்

அஞ்சா நெஞ்சனே
ஆறாத் துயரில்
இப்புவியோரை
ஈண்டு ஆழ்த்தி
உதய சூரியனை
ஊட்டி வளர்த்து
எட்டாத உயரத்திற்கு
ஏன் சென்றாய்
ஐயன் வள்ளுவனுக்கு
கோட்டம் தந்து
சிலப்பதிகாரத்தை
புலப்பட  வைத்தவன்,
களத்தை இழக்கவில்லை என்று விடாது யுத்தம் கண்டவன்,
நாடே பயந்திருந்த போது
இந்திரா வை எதிர்த்து - ஒரு கண் இழந்தாலும் பொருட் படுத்தாது
ஓயாது உழைத்தவன்,
கோயில் தமிழ் பேசுவது உன்னால்,
அரசாங்க அலுவலில் தமிழர்களை உயர்த்தியது நீ
ஆசிரியர்களை பிற அரசு ஆ சிரியர்கள் என ஒதுக்க நீ யோ சம்பளத்தை ஆறு மடங்கு உயர்த்தினாய்,
சாவைப் பற்றி நீ கூறியதை
இங்கு தருகிறேன் 

உதிராத மலர் இல்லை;
உலராத பனி இல்லை;
புதிரான வாழ்க்கையிதில்
புதையாத பொருள் இல்லை;
உடையாத சங்கில்லை;
ஒடுங்காத மூச்சில்லை;
இயற்கை நியதிகளில்
இறப்பும் ஒரு கூறு அன்றோ!

- செந்தில்குமார் சுப்பிரமணியன்

**

நாடாண்ட நற்றமிழே - உன்
நா உதிர்ப்பது தெவிட்டாத தீந்தமிழே
நானிலம் போற்றும் நறுந்தமிழே
தமிழ் மாநிலம் காத்த பைந்தமிழே

முத்தமிழ் பருகிய முதல்வனே - நீ
தமிழின் கருப்பொருளே
தமிழரின் உயிர்ப்பொருளே


திரைகடலோடி திரவியம் தேடுவாருள்
நீ "திரை" கடல் மூழ்கி முத்தெடுத்தாய்
காவியம் பல வடித்து
காலத்தை வென்று நின்றாய்

ஓய்வறியா துழைத்த உழைப்பின் சிகரமே
ஏழைகளுக்கு கைகொடுத்தாய்
அவர்கள் வாழ்வுயர வழிகொடுத்தாய்
பாரதி கண்ட புதுமைப் பெண்ணுக்கு
சம உரிமை கொடுத்திட்டாய்
சமூகம் சீர்பெற அயராது உழைத்திட்டாய்

தமிழகம் தழைக்க தரணியில் உதித்தீரே
பட்ட கடன் தீர்த்து வைக்க விண்ணுலகம் சென்றீரோ
ஓய்வு தான் தேவையென்று
வங்கக்க கடலோரம் துயில் கொண்டீரோ

- சசி எழில்மணி

**

தீயாக, தீண்டாமை, 
சுட்டதை, எடுத்திட, தடுத்திட,
திராவிடத்தைக் கையில் எடுத்தாய்.
உன் மூலம் பயனுற்று, 
பலம்பெற்று, நலம்பெற்று 
வாழ்பவர் பலருண்டு.
உம்மைப்போல, தமிழை, 
தமிழன்னையை, பூஜித்தவர்
நேசித்தவர் யாருண்டு. – இனி,
உம்மைப்போல, தமிழை, 
தமிழன்னையை நேசிப்பவர், 
பூஜிப்பவர் யாருண்டு….
நீர் ஊற்றி, நீ, வளர்த்திட்ட, 
திராவிடஉணர்வுப்பயிர்களை,
திராவிடச் சூரியனாக, இனி,
காப்பவர் யாருண்டு

- களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்

**

பராசக்தி தென்பாண்டி பரப்பிரம்மம் மனோகராவும்
  பண்டார வன்னியனும் பொன்னரொடு சங்கருமாய்..
இராப்பகலாய் எழுதியவை இரவாது எழுச்சிதரும்
  இலக்கணங்கள் மாறாத இனியதமிழ்ப் பொக்கிஷங்கள்.!
உராய்வின்றி நெருடலிலா உன்னதமா யோங்கியவை
  உயிருடனே வாழ்பவையே.! ஓய்வின்றிப் படைத்தவரே.!
தராசிலிட்டால்..தமிழினிமைத் தங்காது மேலெழும்பும்
  தொல்காப்பி யத்துக்கோர்த் தெளிவுரையும் தந்தவராம்.!

அஞ்சுகத்தின் மகனாக அஞ்சுவிரல்க் கைகாட்டி
  ஆர்ப்பரிக்கும் குரலிலவர் அனைவரையும் ஈர்ப்பாரே.!
நெஞ்சுக்கு நீதிகேட்டு நெடும்பயணம் மேற்கொண்ட
  நிலையாது இதயத்தில் நின்றபெரும் எழுத்தாளன்.!
பஞ்சகச்சப் பெருமானாம் பெரும்பூதூர் மாமுனியைப்
  பாருலகப் பாமரர்கள் பார்த்தபடி வியக்கவைத்தான்.!
மஞ்சளாடைக் கண்ணாடி மங்காத விழிப்பார்வை
  மயக்குகின்ற தமிழாலே மாநிலமே போற்றுபவன்.!

கோடையிடி போன்றதொரு கரகரத்தக் குரலொத்த
  கலைஞரென்ற சூரியனால் கனிந்ததமிழ் அழியாது.!
ஓடைபோல அசைந்தாடி ஓடிவரும் அடுக்குமொழி
  ஓரிடத்தில் நில்லாமல் உதயமாகி எழுந்துவரும்.!
கூடைமலர்க் கவிதைமணம் கமழுகின்ற தமிழின்பம்
  கொத்தாகப் பலமொட்டுக் கருத்தாகக் கொந்தளிக்கும்.!
மேடையிலே வீசுகின்ற மெல்லியதோர்ப் பூங்காற்றும்
  மேடைக்குள் அடங்கியது மேன்மையான தமிழுயிராய்.!

- பெருவை பார்த்தசாரதி

**

தெற்கில் உதித்தொளிர்ந்த திராவிடச் சூரியனே
திருக்குவளை பெற்றெடுத்த தீந்தமிழ்ப் பாவலனே
தெலுங்குப் புலமையிலும்   தேர்ந்திட்ட பண்டிதனே
ஆற்றல், முயற்சி, ஆழுமைத்திறனோடு
போற்றற்குரிய பொறுமையையும் கைக்கொண்டு
ஆண்டு தமிழ்நாட்டை அனைவரும் வியந்திடவே
ஓயாதுழைத்து உச்சிதனையடைந்து
வழிகாட்டியாகி வரலாற்றை வசமாக்கி
தொண்ணூறைத் தாண்டியவோர் தொண்டுகிழமானாலும்
எண்ணற்றோர் நெஞ்சில் இடத்தைப் பிடித்து விட்ட
கலைஞர் கருணாநிதியே கரைபுரண்டு ஓடிய நின்
பேராற்றலாலே பெரும்பயனைப் பெற்றோம் நின்
விலை மதிக்க வொண்ணா வித்தகத்தாற் புத்தகங்கள்
சாலச்சிறந்தனவாய்த் தமிழுலகு மேன்மையுறத்
தந்தனை நீ ஐயா சாந்தியடைந்திடுக.

- எஸ். கருணானந்தராஜா, லண்டன்

**

கழுத்தில் அலங்கரிக்கும் மஞ்சள் துண்டு
  கண்ணில் அணிந்திருக்கும் கறுப்புக் கண்ணாடி
பழுத்த தமிழ்பேசும் மா, பலா, வாழைதோற்றுவிடும்
   புன்சிரிப்பால் பகையை கவிக்கும் கவிமுரசு
எழுத்துக்கள் எல்லாமும் எழுச்சி முரசாகும்
    இளஞர்களை கவரும் தென்றல்நடை பேச்சு
எழுத்தாளன் பேச்சாளன் கவிஞன் வசனகர்த்தா
    ஏதாவது ஒன்றில் எப்போதும் ரசிக்கின்றோம் !
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி
    கட்டளைகளாக  சொன்னார் ஐந்தை
அதன் படி மாநில முதல்வர் கொடியேற்றிட
  அந்நாளில் பெற்றளித்தார் உரிமை மய்யரசிடம்
அதன் பலன் எல்லா முதல்வர்களுக்கும் ஆனது
    இந்தித்திணிப்பை என்றும் எதிர்ப்போமென்றார்
இருமொழி தீர்மானித்தை நிறைவேற்றினார்
    உறவுக்குக் கைகொடுப்போம் உரிமைக்கு
குரல் கொடுப்போம், என்றார், டில்லியில் மாநாடு
இருந்த நிலை மாற்றவேண்டும், திட்டம் வகுப்பதுஅதை
   செயல் படுத்துவது எல்லா அதிகாரமும் ஒரே
இடத்தில் இருப்பதை மாற்றவேண்டும் என்றார்
 தேசிய வளர்ச்சி கூட்டத்தினின்று வெளியேறினார்
சொன்னதை செய்வார், செய்வதையே சொல்வார்
  எந்நாளும் அவரின் புகழ் வாழ்க! அவரின்
இலட்சியம் நிறைவேற உறுதி எடுத்துகோள்வோம்.
   இன்று நம் முன்னிருப்பது திராவிடம் முழுவதும்
இங்கிருக்கும் மாற்றங்கள் பிரதிபலிக்க வேண்டும்
  பெயருக்குப் பின்னால் ஒட்டுக்கள் போடுவது
ஒழிப்போம் என்ற உறுதி யைநாம் எடுப்போம் அதுதான்
     திராவிட சூரியனுக்கு நாம் செய்ய்யும் அஞ்சலி!

 - ரெ. தயாநிதி, விருதுநகர்

**

சூரிய முகத்தில்
உன் உதடுகளில் மலர்ந்து
சிரிப்பின் பலாச்சுளைகளென 
என்றும் குளிர்ந்து சுடரும்
நிலாப்பிறைகள் கொண்டவனே…

பொதிகை மலை தவழ் 
கருமுகிலாய்
சுருண்டு பிளந்த முடிகளின் நடுவில்
உதித்து
எல்லார்க்கும் பேதமிலா ஒளி பொழியும்
சூரியனுமாகிக் கொண்ட
சுந்தரவதனக் கலைஞன் நீ…

எதிரிகளை நேசிக்க வைத்தும்
கலவரப்படுத்தியும்
பே"னா"வில் குரல் முழக்கி
உடன்பிறப்புகளை அரவணைத்து
தலைமேல் 
கழகத்தைச் சுமந்து காத்து
தாயாகிப் போன
அதிசயம் நீ...

பதினான்கு வயதில்
கைப் பிடித்த போராட்டக் கொடி
மரணித்தும் போராடி
அண்ணா இடத்தில் இடம் பிடித்த நீ
நவீன சீதகாதி ...

நூற்றாண்டைத் தொட்டு
பல நூற்றாண்டுகளுக்கு வரலாறாய்
ஞாபகத்தில் கொண்டாட
தொண்டாற்றிய தொண்டின் தலைவன் நீ...

ஒடுக்கப்பட்ட 
இருளொழிக்க வந்த பகல் நீ
பகலின் துயரங்களை
சுட்டெரித்த சூரியனும் நீ...

இருளின் திரையில் வெளிச்சம் பாய்ச்சி
பகுக்கும் பேரறிவைப் பெருக்கிய
புதிய சிந்தனையாளனே...

பெரியாரின்
கைத்தடியைப் பற்றிக்கொண்டு
அண்ணாவின் தோள் சேர்ந்த
தொண்டனும் தம்பியும்
தலைவனும் கூட நீ தான்...

இனி
முன் வரிசையில் அமர வைத்து
உன்னைக் கொண்டாடி மகிழ்ந்து கொள்ளும்
உலக வரலாறு...

பன்முகம் கொண்டு
திசைகளுக்குப் பாடமாகி விட்டதில்
தென்தமிழ் சகாப்தம் நீ...

ஆம்
திராவிடச் சூரியனே
இனி நீ
திசைகளுக்கு ஒளியூட்டி
பிரகாசமானதில்
பெரும்பேறு கொண்டது;
பூகோள வரலாற்றில் தமிழ்நாடு...

- கவிஞர். கா.அமீர்ஜான்

**

அஞ்சுகமமாள் பெற்றெடுத்த 
அரசியல் சகாப்தமே....
திருக்குவளையில் உதித்து 
தமிழகத்தை ஆண்டு 
மெரினாவில் மறைந்த கலைஞரே...
தமிழென்னும் விதையை விதைத்து 
தமிழர்களின் உள்ளங்களில் 
வாழும் வித்தகரே....
கலை,அரசியல் என்று 
இரட்டை குதிரையில் 
சவாரிச் செய்த சாணக்கியரே...
தென்கோடியில் பிறந்தாலும் 
உலகத் தலைவர்களை 
கட்டியிழுத்த ஆளுமையே...
முற்போக்குச் சிந்தனைகளை 
ஊட்டிய மூத்தவரே...
கண்ணீர்களுடன் 
மலர் அஞ்சலி செலுத்துகிறோம்... 
பாசப்பிணைப்புடன் வளர்ந்து
ஒற்றுமையுடன் வாழ  
உடன்பிறப்புகளுக்கு ஆசியளியுங்கள் 
"திராவிடச் சூரியரே"!!!

- சு.ரேவதி, பரமக்குடி

**

அகவற்பா வல்ல இது, உனக்கு இரங்கற்பா!

நட்டத்தில் லாபம் உன்னை அனைவரும் 
ஏற்று கொண்டுவிட்டார்கள்
நீ இறந்தது எனக்கு சோகம், 
கோடிக்கணக்கான மக்கள்

உன் சேவையை! கொள்கையை! 
வெற்றியை! ஏற்றது!

அகம் நிறைந்திருக்கிறது! 
மகழ்ச்சியாக இருகிறேன்!
கலைஞரே ! நின் புகழ் நீடு வாழு
அன்னை தமிழ் உனக்கு மட்டும் 
இந்த திறன் கொடுத்தாள்!
என்னே புலமை முறையான 
பெரும் புலவர்க்கில்லா சிறப்பு
விந்தைமிகு தமிழ்ஆளன் நீ! 
தமிழின் மகுடத்தில் வீற்றிருக்கிறாய்

கந்தை கட்டுபவர்,முதல் கனவாங்கள் வரை
உன்னை உணர்கின்றார்

“என் உயிரிலும்மேலான உடன்பிறப்புகளே”
வசீகரமான உன் வார்த்தை

என் இதயத்தில் என்றும் 
ஒலித்துகொண்டிருக்கும் 
இன்பத்தமிழன் நீ

அகவற்பாவால் உன்னை அடக்கிவிட 
முயல்கின்றேன் ஆர்வத்தால்
அகவற்பா உன் போல் 
யாத்துவிட முடியுமா? 
என்னே நின் பாங்கு!


அண்ணாவைப் பற்றி 
அலங்காரவார்த்தைகளில் 
வர்ணிக்கும்போது

உன் நாவின் சுழற்சி ஒலி 
என் இதயம் தட்டுகிறது எ
ழுச்சிகொண்டு
கண்ணைவிட்டு அகலும் பொருள் 
நீ காணாமல் போவதுதான் நியதி!

கண்ணைவிட்டு அகலாமல் 
காட்சி தருகிறாயே நீ மீண்டுமீண்டும்!
உன்னை புதைத்துவிட்டோம்!
தமிழ் தாகத்தை,வீரத்தை புதைத்தோமா?

விண்ணைப்பிளக்கும் முழக்கங்கள்! 
“எழுந்து வா தலைவா”ஒலிகின்றது
உன் இடத்தை நிறைவு செய்ய 
கட்சிக்கு,ஆட்சிக்கு, அய்யாதுரையா?

உன் தமிழினின் மாட்சிக்கு யாரேனும் உள்ளனரா?
நம் தமிழ்மண்ணில் 
தன்மானத் தலைவனே, 
உன்னை “ திராவிடச்சூரியன்” என்பேன் நான்!

தமிகத்தின் சாதி சமத்துவக் கொள்கை 
திராவிடமுழுதும் பரவட்டும்

- கவிஞர் ஜி.சூடாமணி, ராஜபாளையம்

]]>
கருணாநிதி, Karunanithi, Poem, kavithaimani, kalaignar, கலைஞர், திராவிடச் சூரியன், dravida sooriyan http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/15/w600X390/kalaignar.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/aug/15/கடந்த-வாரத்-தலைப்பு-திராவிடச்-சூரியனே-வாசகர்களின்-கவிதைகள்-2981145.html
2977205 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி கடந்த வாரத் தலைப்பு ‘வாழ்வின் நிஜங்கள்’ - வாசகர்களின் கவிதைகள் பகுதி 2 கவிதைமணி DIN Thursday, August 9, 2018 05:16 PM +0530 வாழ்வின் நிஜங்கள்

பிறந்தோம், வளர்ந்தோம், மடிவோம்
பிறப்பின் நோக்கம் அறிந்தோமா?
உண்பதும், உறங்குவதும், தொடர்ந்தோம்,
உண்மையில் உழைப்பைக் கொடுத்தோமா?
மகிழ்கின்ற மனம்
பிறர் வாழக்கண்டு மகிழ்வித்து
மகிழ்ந்திட நினைத்தோமா?
இன்ப துன்ப சுகதுக்கங்கள்
கலந்திட்ட வாழ்வில்
இளமை, செல்வம், அழகு, உடல்
யாவும் நிலையாமோ?
ஆசை, கோபம், பொறாமை
எண்ணங்கள் அழிந்து!
அன்பு, கருணை, இரக்கம் மேலும்
நல்லெண்ணங்களை வளர்த்தோமா?
செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டோமா? 
வாழ்வில் செய்யக் கூடாததை செய்தோமா?
வாழும்போதே வலிகள், கவலைகள் உள்ளத்தை
வறுத்தெடுக்க, வாழ்வில் கவலைகள் தீருமோ?
வாழும்போது நமக்கு எது மிச்சம்?
வாழ்ந்தபின்னே எது நிலையானது?
வறுமையும், நோயும் நமக்கு வேண்டாம் 
இயற்கையோடு இணைந்த வாழ்வும்
கள்ளம், கபடமற்ற குழந்தை மனத்துடன் 
வாழ்வை வாழ்ந்திடவேண்டும். 
நடந்ததை மறந்து, நடப்பதை நினைத்து 
ஜீவனுள் அகவொளியைத் தேடுவோம்
நல்லெண்ணம், நல்லறிவுடன் வாழ்வில்
வளத்தைக் காண்போம்.
வந்தது, வருவதற்கிடையில் வாழும்
வாழ்வே நிஜம், வாழ்வே சுகம்
வாழ்வதே நிஜம், இயற்கையின் இயல்பில்
வாழ்வதே வாழ்வின் நிஜங்கள்

- ஏ.கே.சேகர், ஆகாசம்பட்டு

**
வாழ்வில் நிகழும் அத்தனையும் 
நம் நினைவில் வைக்க முடியாதே! 
சுழலுகின்ற உலகத்தில் சில
நிகழ்வு மனதை விட்டு அகலாதே! 
 இரவில் கண்ட கனவு எல்லாம் 
விடியல் சென்று அடையாதே! 
இன்பங்களை அள்ளி வைக்க 
ஒரு கோப்பை இங்குக் கிடையாதே! 
துன்பங்களை அள்ளி இரைத்து
வாழ்வைத் தொடர முடியாதே! 
பல தோல்வி காணா பாதம் 
என்றும் வெற்றி காண முடியாதே! 
நீர் நிறைந்த இடமெல்லாம் 
மீன்கள் காண முடியாதே! 
சுயநலமாய் வானுமிருந்தால் என்றும்
பூமி பசுமைக் காண முடியாதே! 
வாழ்வின் பொருள் அறிந்திருந்தால்
பேராசை இங்குக் கிடையாதே! 

- பவித்ரா ரவிச்சந்திரன், மதுரை

**

நிழலும் நிஜம் தான், சூரியன் மேலிருக்கும் வரை! 
நினைவுகள் நிஜம் தான், உடலில் உயிர் இருக்கும் வரை!
வாய்ப்புகள் நிஜம் தான், தேடல் உள்ளவரை!
வெற்றி நிஜம் தான், மனதில் உறுதி உள்ள வரை!
வார்த்தை நிஜம் தான், நோக்கம் நல்லதாக உள்ளவரை!
அன்பு நிஜம் தான், இரு மனம் இணைந்து இருக்கும் வரை! 
வாழ்வு நிஜம் தான், நாம் மண்ணில் உள்ளவரை! 

இருக்கும் வாழ்வை அன்பால் வாழ்வோம்!
இணக்கம் கொள்வோம்!இன்புற்றிருப்போம்! 

- இனிய தமிழ் செல்வா, நெல்லை

**

நேற்று இருந்தவர் இன்றில்லை
நாளை நடப்பது முன்பே தெரிந்தவர் ;
இல்லை;  தெரிவதும் இல்லை.
இங்கே எதுவும்;  நிரந்தரமில்லை
வாழும்வரை;  வாழும்தரையில், அன்போடு;
நல்ல பண்போடு, மனிதனாக;  புனிதனாக வாழ்வதுதான், வாழ்வின்-நிஜங்கள்

- களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்

**

அப்பாவை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதற்கு 
அழைத்து வந்தேன் அவரின் இசைவோடு
அப்பாவிற்கு முதியோர் இல்லத்தில் வசதிகளை
ஆக்கித்தர நான் முயன்றேன் ஒவ்வொன்றாய்
நான் சொல்ல அவரும் வேண்டா மென்றார்
அப்பாவுக்கு  படுக்கை வசதியோடு ஏசி,ஈசிசேர்
தனியாக உணவு  அவர் விரும்புகின்ற உணவு
முடிந்தது எங்களின் ஒப்பந்தம், அப்பாவை தேடினேன்
முன்புற ஓருவருடன் சகஜமாய் பேசிக்கொண்டிருந்தார்
ரொம்பவும் சுவாஸ்யமாய் பேச்சு, ரொம்பப்பழக்கமோ!
முன்னிருந்த விடுதியின் பொறுப்பாளரிடம் கேட்டறிந்தேன்
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஒருகுழந்தையை
இங்கிருந்து எடுத்துச்சென்றுள்ளார் என அறிந்தேன்
அந்த குழந்தை யார் என நான் கேட்டேன்
என் வாழ்வின் நிஜம் எனக்கு இனிதே புரிந்தது!    

- கவிஞர் அரங்க.கோவிந்தராஜன், ராஜபாளையம்  

**
வாழ்வின் நிஜங்கள் எங்களுக்கு குழந்தைப்
   பருவத்திலேயே முடிந்து விடுகின்றன
வாழ்வின் குறிப்பிட்ட பருவத்திற்கு பின்னால்
   பொய் முகங்களை மாட்டிக்கொண்டுவிட்டோம்

பொய் முகங்களை சுமந்து கொண்டு நாங்கள்
   பூவுலகில் சுமையாய் வாழ்கின்றோம்
வாய்த்தவரை கைப்பித்து, “ யார்? எப்படி! ஆள்! ‘
    யாரெனப் பாராது புதியவ்ருடன் ஒரு பயணம்

“ நீ சிரித்தால் சிரிப்போம்! நீ அழுதல் அழுவோம்
    ரசிக்கசொன்னால் ரசிப்போம் செயற்கையாய்
 நீ அனுமதிததால் அப்பா,அம்மாவிடம் பேசுவோம்
 நாங்கள் சமூகக்கோட் பாட்டில் நாங்கள் ஒருவிதம்”
   அடிமைகள்! நவின ரக அடிமைகள்! என் வாழ்வின்
 நிஜங்கள் என் மனம் எனும் திரையில் வந்து வந்து போகும்! சிலசமயம்

- கவிஞர் சூடாமணி, ராஜபாளையம்  

**

நிஜத்தைத் தேடி
நெடுந்தூரம் வந்துவிட்டேன்
நிலம் 
நீண்டுகொண்டே இருக்கிறது

நேற்று மெய்யென மிளிர்ந்தது
இன்று
இருட்டுக்குள் பதுங்குகிறது பொய்யென

மெய்யெது பொய்யெது போட்டியில்
கலந்துகொள்ளும்
கடவுளும் தோற்றுப் போகிறான்

பிறப்பதற்கும் இறப்பதற்கும் இடையில்
மறைத்து வைத்த புதையலைத் தேடி
அலைந்து களைப்பதல்லால்
அறியேன் வேறொன்றும் 

விட்டு விடுதலை ஆகிவிடும்
உயிர்ப்பறவை
நிஜத்தை
நெருங்கும் தருணத்தில்

- கோ. மன்றவாணன்

**

வெட்டுங்கள்  குளமென்றால்  வெட்டி  டாமல்
    வெட்டாதீர்  எனும்மரத்தை  வெட்டு  கின்றார்
கொட்டுங்கள்  குப்பையெனும்  இடத்தை  விட்டுக்
    கொட்டாதீர்  எனும்தெருவில்  கொட்டு  கின்றார் !
நட்டிடுவீர்   செடியென்றால்  நட்டி  டாமல்
    நட்டுகல்லை  விளைநிலத்தை  விற்கின்  றார்கள்
திட்டங்கள்  தீட்டுவோரே   திருடிச்  செல்லத்
    திருடரினைப்  பிடிக்காமல்   புகழ்கின்  றார்கள் !

உழைத்துவரும்  பணம்தன்னில்  உண்டி  டாமல்
    ஊரேய்த்தே   உண்டியலில்  கொட்டு  கின்றார்
பிழைப்பதற்கே    ஆயிரமாய்   வழியி  ருக்கப்
    பிறர்முதுகில்   ஏறுதற்கே   முனையு  கின்றார் !
உழைப்பதற்காய்   இருக்கின்ற   கையி  ரண்டில்
    உழைக்காமல்  இரப்பதற்கே  நீட்டு  கின்றார்
கழைக்கூத்தே   வாழ்க்கையென்  றறிந்தி  ருந்தும்
    கற்காமல்  வேடிக்கை   பார்க்கின்  றார்கள் !

பிறர்மீது  பழிசுமத்தித்  தம்மு  டைய
    பிழைகளினைத்  தெரியாமல்  மறைக்கின்  றார்கள்
அறத்தால்தான்   வரும்இன்பம்   என்ற  றிந்தும்
    அநீதித்தீ   சுகமென்றே   வீழு  கின்றார் !
புறம்பேசிப்  பொறாமையை   மனத்தி  ருத்திப்
    புகழ்வோர்க்கே   செவிமடுத்து  மயங்கு  கின்றார்
திறமையினை   மதித்திடாமல்  காலைக்  கையைத்
    தினம்பிடிக்கும்   போலியையே  வாழ்த்து  கின்றார் !

- பாவலர் கருமலைத்தமிழாழன்

**
பணமிருந்தால் நல்வாழ்வு வருமென்ற நினைப்பும்
குணமிருந்தால் கோயில் கோபுரம் ஏறலாமென்பதும்
ரணமாகும் நெஞ்சம் இவற்றின் நிலை மாறும்போது
கிணற்றில் விழுந்த கல்லாகும் வாழ்வின் நிஜங்கள்

அழகிய மனைவி வாய்க்கும்போது மனம் நினைக்கும்
கிழக்கின் சூரியனாய் வாழ்வு மெல்ல ஒளிவிசுமென
முழக்கும் முரண்கள் முன்வந்து நின்று கூத்தாடிட
வழக்கும் வாய்தாவுமே வாழ்வின் நிஜங்களாகுமே

ஓங்கி உயரும் அறிவும் ஆற்றலும் கைவசமிருந்திட
ஏங்கிய பதவிகள் படியேறி வருமென்ற நினைப்புகள்
தூங்கிய மனிதனின் செவிகளை எட்டாத நிலையாக
வாங்கிய கையூட்டு இடைவந்து நின்று தடுக்குமே

சாதி இரண்டொழிய வேறில்லை எனச் சாற்றுவார்
வாதியாகி வளமான வாழ்வுக்குத் துணை நிற்பார்
நாதியற்றுப் போகும் அவை சுயநலச் சேற்றிலே
வீதியில் எறிவார் பேசியதை வாழ்வின் நிஜமாகவே

- கவிஞர்  ராம்க்ருஷ்

**

உலகில் 
ஜனனம் மரணம்
விண்ணும் மண்ணும் 
இயற்கைத் தோற்றங்கள்  
வாழ்வின் நிஜங்கள்!

வாழ்வில் 
எண்ணங்கள் நினைவுகள் 
நினைக்கும் எண்ணங்கள் 
நிறைவேறினால் 
வாழ்வின் நிஜங்கள் ! 

சந்திக்கும் 
இன்பங்கள் துன்பங்கள்
விருப்புகள் வெறுப்புகள் 
சிந்தித்துப் பார்த்தால் 
வாழ்வின் நிஜங்கள்!

கற்பனைகள் கவலைகள்  
காதல்கள் மோதல்கள் 
பழக்கங்கள் வழக்கங்கள் 
வாழ்வின் நிஜங்கள் !

சிந்தனைகள் நிந்தனைகள்  
உறவுகள் பிரிவுகள் 
உண்மைகள் பொய்கள் 
வாழ்வின் நிஜங்கள் !

துடிப்புகள் நடிப்புகள் 
படிப்புகள் படிப்பினைகள் 
நம்மிடையே இருக்கும் 
நம்முள்ளே விளையாடும்     
வாழ்வின் நிஜங்கள் !

- பொன்விலங்கு பூ.சுப்ரமணியன், ஸ்ரீவில்லிபுத்தூர்

**

வழிந்தோடும் பொழுதுகள்
நீரலையாக
சுழலிற்கு மாட்டாது ஆழத்தில்
மூழ்கும் நினைவுகள்
மீன்களாய் துள்ளி எழும் எண்ணங்களாய்,

வண்ணமிலா
வான் வெளியை ஊதாவாயும், நீலமாகவும் 
வரைந்து மூழ்குகிறார்கள்
கற்பனையில், கவிஞர்களும் ஓவியர்களும்,

தூரிகைக்கும் காரிகைக்குமாய் 
மனம் மாய்ந்து திமிற
நாளைய செய்தி
தர வேண்டி நிருபரும், 
புதிதாய் யோசிக்க 
உதவி இயக்குனரும், போராட 
அடுத்த வேளை உணவிற்கும் 
ஒரு நாள் கூலிக்கும்
காத்திருக்கும் சனங்கள்
முச்சந்தியில் இருக்கவே செய்கிறார்கள்,
கார்மேகமாயும்
காய்ந்த பூமியெனவும், 
மழை வராமலும் வந்தும் கெடுக்கிறது
விவசாயத்தையும்
அன்றைய பிழைப்பையும் .

நிஜம் தேடி துரத்தித் திரிய
உறவுகளும் உணர்வுகளும்
ஒடும் காலத்தில் 
ஒதுங்குகிறார்கள் 
கரையற்ற நதிதோறும், 
கரை ஏற விடாமல் 
முதலையாய் ஆழத்தில் இழுக்கிறது
சுழன்றடிக்கும் சூழல்
கழன்று கொள்ள முடியாதுதான் போகிறது 
எவராலும்

- செந்தில்குமார் சுப்பிரமணியன்

**
பொய்களொடு நிஜஙகளும் பின்னியதே வாழ்க்கையாகும்.!
             பகுத்தறிவு கொண்டதனைப் பிரித்தறிய வேண்டுமன்றோ.!
மெய்யொன்றே மிகைப்படுத்தி மெய்யானத் தத்துவத்தை
             மிகவுரைத்தார் போதனையாய் மெய்ஞான யோகியரும்.!
செய்கையிலே நேர்மறையே சீராகக் கொண்டுசென்று
             செயலாற்ற வாழ்விலதைச் சிந்தையிலே ஏற்றவேண்டும்.!
உய்விடமொன் றனைவருக்கும் உண்டென்று தெரிந்தாலும்
              உனக்குமதில் தனியிடமாய் ஒன்றுண்டு எங்கேயோ.!

எத்தனைய நீதிகளாம் எத்தனையோ கொடுமைகளாம்
          எல்லாமே இவ்வுலகில் என்றுமென்றும் அரங்கேறும்.!
அத்தனையும் தாங்கித்தான் அன்னைபூமி நடக்கின்றாள்
          ஆதரவாய் மனிதருக்கே அரவணைப்பும் தருகின்றாள்.!
புத்தர்போல் காந்திபோலப் போன்றபலர் தோன்றிடினும்
          புவியிலின்னும் மாறவில்லை பொங்குகின்ற தீமைகளே.!
உத்தமர்கள் நிஜங்களாக உதித்தபின்னே! வாழ்க்கையிலே
          ஒளிவிளக்கு ஏற்றபலர் உலகிலின்னும் தோன்றவேணும்.!

எண்ணியவை எத்தனையோ ஏற்றங்கள் பெற்றததில்
             எண்ணிக்கை மிகக்குறைவே எல்லாமும் ஏமாற்றும்.!
விண்மண்நீர் காற்றுவானம் விலக்கல்ல இயற்கையுமே
            விதிவசத்தால் தப்பிக்க வழியில்லாமல் அல்லாடும்.!
நண்ணியபோ தேநடுங்கும் நம்முடலும் நம்மனமும்
            நிலையில்லா வாழ்வினிலே நிஜம்கூட நிலைபெறாது.!
புண்ணியங்கள் பலசெய்தும் பொய்யின்னும் போகாது
            பாருலகில் எப்போதுமே பதற்றம்தான் மாறவில்லை.!

- பெருவை பார்த்தசாரதி

**

குட்டி குழந்தையாய் கூடி கும்மாளமிட்டது நிஜம்
பொட்டு மழலையாய் பூரித்து நின்றது நிஜம்
சிட்டு சிறுவனாய் சிறகடித்து மகிழ்ந்தது நிஜம்
வெட்டி இளைஞனாய் காதலித்து களித்தது நிஜம்
திக்கு அற்றவனாய் திசைமாறி அலைந்தது நிஜம்
கல்யாணம் கண்டவனாய் கண்பிதுங்கி நின்றது நிஜம்
பருவம் வந்தவனாய் பக்குவம் பெற்றது நிஜம்
பக்குவம் பெற்றவனாய் பட்ஜெட்போட்டு வாழ்ந்தது நிஜம்
தகப்பனாய் தலையில் சுமந்தது நிஜம்
மூத்தவனாய் முதியோர் இல்லம் சென்றதும் நிஜம்

- ஆர்.ராமலிங்கம்

**

நம்
வாழ்வியல் தூரங்களை
வார்த்தைகள்
உறவுகளாய் இணைக்கின்றன

நெருங்கி நெருங்கி வர
தூரமாக்குவதில் 
வல்லமைக் கொள்கின்றன
மவுனங்களின் மனங்கள்

வாழ்வில்
நெருங்கி வருவது நிஜமா?
தூரமாகிவிடுவது நிஜமா?

புறமும்  அகமும்
வினாக்கள் எழுப்புவதால்
ஆழ்மனத்தின் சுயநலம்
அரூபமாய் இருக்கிறது?

மெய்மையையும் பொய்மையையும்
முரணாக 
அலங்கரித்துக் கொள்வதிலிருந்து விடுபடவில்லை
உதடுகளும் கண்களும்

உதட்டில்
புன்னகை பூக்க வைத்து
விழிகளில்
அருவிகளை  வார்ப்பதில்
நிஜத்திற்கு மட்டுமல்ல
நிழலுக்கும் வாய்த்ததுதான்

என்றாலும்
வாழ்வில் நிஜங்கள்
யாதென அறிய
துழாவுகையில் தெரிகின்றன
முகமூடிகள் அணிந்து கொண்டு
சாகச வரிசைகளில்
சந்நிதான ஈர்ப்புகளில்
முகமூடியை
கழற்றி அணிந்து கொள்வது
தானுமென்று...

எனினும்
மயான வேலியில் கூட பூக்களாய்
மலர்ந்து
இருக்கத்தான் செய்கின்றன
நல்லார் ஒருவர் உளரேல்
அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும்
மழையாக...

- கவிஞர்.கா.அமீர்ஜான்

**

ஞானியின் பார்வையில்

நிழல் நிஜமாகிறது
நிஜம் நிழலாகிறது

காதலும் மோதலும் நிஜம்
காதலியும் கல்யாணமும் நிழல்

கல்வியும் கலையும் நிஜம்
கல்லூரியும் கலைஞனும் நிழல்

பசியும் பட்டினியும் நிஜம்
பணமும் பதவியும் நிழல்

பக்தியும் பயமும் நிஜம்
கல்லும் கருப்பும் நிழல்

ஆண்மையும் பெண்மையும் நிஜம்
ஆணும் பெண்ணும் நிழல்

அறிவும் ஆற்றலும் நிஜம்
எண்ணும் எழுதும் நிழல்

உதவியும் உழ்வினையும் நிஜம்
உற்றாரும் மாற்றாரும் நிழல்

ஆம்
உயிர் மெய் உடம்பு பொய் 

- ஜோதி சுனிதா

**

அறுசீர் விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

வாழ்ந்து பார்ப்போம் என்றுநினை;
வசந்த காலந் தேடிவரும்!
வாழ்வே மாய மெனவுணர்ந்தால்  
வஞ்ச நெஞ்சம் நிலைக்காது!
வாழ்வின் நிசங்கள் புரிந்துவிட்டால் 
வந்த துன்பம் ஓடிவிடும்!
வாழ்வா சாவா என்றிராமல் 
வளங்கள் பெற்று வாழ்ந்திடலாம்! 

– வ.க.கன்னியப்பன்

**

வாழ்வின் நிஜங்களுக்குள் வாழத்தான் வேண்டும் நாம்.
தாழ்வு வரும் துன்பம் தலைதூக்க முடியாது
ஆழ அமுக்கும் அனைத்தையும் சமாளித்து
ஊழ்வினையோ வென்று உருக்குலைந்து சோராமல்
உழைப்பாலுயர்ந்து உறுதியுடன் நின்று
வாழ்வின் நிஜங்களுக்குள் வாழத்தான் வேண்டும் நாம்.

நம்பிக்கைத் துரோகம் நயவஞ்சகம் தீமை
எம்பி எழும்பவிடா எதிரிகளின் சதிகள்
கோள் பொய் பொறாமைகளின்
குதறல்கள் என்று பல
வாழ்வின் நிஜங்களுக்குள்
வாழத்தான் வேண்டும் நாம்.

நல்லவரும் கெட்டவரும் நமைச்சுற்றி இருப்பார்கள்.
பொல்லாரைத் தள்ளிப் புறமொதுக்கி வைத்திடலாம்
உள்ளத்திற் தூய்மை உடையோர் தம் வாய்மையிலே
கள்ளத்தனம் இல்லார்  கயமையிலார்  என்று பல
அன்பாலுயர்ந்த அறவோரை நம்முடைய
நண்பராய்ச் சேர்த்து நாமினிது வாழ்ந்திடலாம்.
என்றாலுமஃது எளிதான காரியமா?.

சொந்த மென்றும் சுற்றமென்றும்
சொல்பவர்களிற் பலபேர்
இந்தவுலகில் எமக்குத் துரோகிகளாய்
வந்து விடக்கூடும் வாழ்க்கையிலே, அன்னவரை
எந்த வகையில் எடுத்தெறிந்து போடுவது?
அந்த உறவுகளை அறுத்தல் எளிதாமோ!
வந்துவிட்டோம் இவ்வுலகில்
வாழத்தான் வேண்டும் நாம்.
வாழ்வின் நிஜங்களுக்கு யார்தான் விதிவிலக்கு.

- எஸ். கருணானந்தராஜா

நிலைகண்ணாடியின் முன்
பதின்வயதில் பார்த்த முகம்
இளமையின் நீர்த்துளியுடன்
நினைவலைகளில் மிதக்கிறது
முதல் நரையின் கதை
சொல்லி காலம் கண் சிமிட்டுகிறது
பிறப்பிற்கும் இறப்பிற்குமான
நெடுவழிப் பயணத்தின்
வாழ்வின் நிஜங்கள் எல்லாம்
நிகழ்த்திக் காண்பிக்கிறது
ஆயிரமாயிரம் மாயங்களை!

- உமா பார்வதி

 

]]>
life, கவிஞர், Poem, கவிதை, கவிதைமணி, kavithai http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/9/w600X390/10933761_332998130239465_636506715472090133_n.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/aug/09/கடந்த-வாரத்-தலைப்பு-வாழ்வின்-நிஜங்கள்---வாசகர்களின்-கவிதைகள்-பகுதி-2-2977205.html
2976743 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி இந்த வாரத்திற்கான தலைப்பு: திராவிடச் சூரியனே! கவிதைமணி DIN Wednesday, August 8, 2018 05:46 PM +0530 'வாழ்வின் நிஜங்கள்’ என்ற தலைப்பிற்கு கவிதை எழுதி அனுப்பிய கவிஞர்கள் அனைவருக்கும் நன்றி..! இந்த வாரம் நீங்கள் எழுத வேண்டிய கவிதைக்கான தலைப்பு: திராவிடச் சூரியனே!

 

உங்கள் கவிதைகளை kavidhaimani@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். 12 வரிகளுக்கு மிகாமல் கவிதை இருத்தல் நலம். உங்கள் கவிதைகளை யூனிக்கோடு எழுத்துருவில் டைப் செய்து மேற்கண்ட மின்னஞ்சலில் அடுத்த புதன்கிழமைக்கு முன்பாக அனுப்ப வேண்டுகிறோம். கவிதைகள் திங்கள் முதல் புதன்கிழமை வரை வெளியிடுவோம்.

]]>
kalaignar karunanithi, kavidhaimani, கவிதைமணி, திராவிடச் சூரியன், கலைஞர், கருணாநிதி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/8/w600X390/mk51.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/aug/08/இந்த-வாரத்திற்கான-தலைப்பு-திராவிடச்-சூரியனே-2976743.html
2976742 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி கடந்த வாரத் தலைப்பு ‘வாழ்வின் நிஜங்கள்’ - வாசகர்களின் கவிதைகள் பகுதி 1 கவிதைமணி DIN Wednesday, August 8, 2018 05:01 PM +0530 வாழ்வின் நிஜங்கள் 

முக நூலில் நட்பு வட்டம் பெரிது... ஆனால் 
அகமும் முகமும் மலர்ந்து  சிரிக்கும் அவன் சுற்றமும் நட்பும் 
பார்த்து அவன் முகம்  மலர்ந்து சிரிப்பதே அரிது !
இது வாழ்வின் நிஜம் !

நிஜம் நிஜமாக இருக்கையில் நிஜத்தின் அருமை 
பெருமை தெரியாமல் இருந்து விட்டு நிஜம் 
நிழலாக மாறிய பின்னர் நிழலுக்கு மாலையும் 
மரியாதையும் தவறாமல் நடக்கும் தினமும் 
இது வாழ்வின் நிஜம் ! 

நிழலை நிஜம் என்று நம்பி நிஜ வாழ்வை 
தொலைத்தவர்  பலர் ... இதுவும் வாழ்வின் நிஜம் !
நெறுநெல் உளனொருவன் இன்றில்லை என்னும் 
பெருமை படைத்த இவ்வுலகு என்னும் வள்ளுவன் 
வாக்கை மறந்து தான் வாழும் வாழ்வு என்றும் 
நிரந்தரம் ...சுக போக வாழ்வு அது என் சுதந்திரம் ,!
என்று வாதிப்பர் பலர் ...இதுவும் வாழ்வின் நிஜம் !

என் வாழ்க்கை நான் வாழ்வதற்கே என்று நம்பி 
நிலையில்லா வாழ்வு என்னும் அலைகடலில்  
ஓட்டைப் படகில் துடுப்பும் இன்றி பயணிப்பர் 
மெத்தப் படித்த புத்திசாலிகள் சிலர் !
இதுவும் வாழ்வின் நிஜத்தில் ஒன்று !

நிழல் எது  நிஜம் எது என்று தெரியாமலே 
நிழலை நிஜமாகவும் நிஜத்தை நிழலாகவும் 
நினைத்து வாழ்ந்து முடித்தவரும் பலர் !
வாழ்வின் நிஜம் இதில் நிதர்சனம் !

- கே.நடராஜன்

** 

ஒவ்வொரு நொடியும் வாழ்வின்
ஒயிலான நிஜம் என்பதனை
உணர்ந்திட்டால் நமக்கி ங்கே 
ஒன்று  மில்லை  பிரச்னைகள்!

பிறப்பும் அது தொடரும் 
இறப்புந் தானே வாழ்வில்
நிரந்தர நிஜங் களென்று
நிம்மதி கொள்ள லாமே!

நிஜமாகவே சொல்கிறே னென்று 
நிம்மதி குலைத்துப் போடும்
உளுத்தர்கள் உற வொதுக்கி
ஒதுங்கினால் உண்டு நிம்மதி!

நிஜத்தினை உரக்கச் சொல்ல
நெஞ்சுரம் கொஞ்சம் போதும்!
நிஜத்தினால் உறவு பேண
நெஞ்சினில் ஈரம் வேண்டும்!

வாழ்வினில் நிஜங்கள் பேணி
வல்லமை கொண்டு வாழ்ந்தால்
வரலாறு  நம்   பெயரை
வையத்தில் நிலைக்கச் செய்யும்!

-ரெத்தின.ஆத்மநாதன், காட்டிகன்,சுவிட்சர்லாந்து

**

வீட்டிற்கு ஒன்று,
வெளியுலகிற்கு ஒன்று,
குழந்தைகளுக்கு ஒன்று,
அலுவலகத்திற்கு ஒன்று,
நண்பர்களுக்கு ஒன்று என 
நித்தம் ஒரு 
புத்தம் புது முகமூடி 
அணிந்து பழக்கப்பட்ட 
நமக்கு நேருக்கு நேராக 
பார்க்கும்  
திராணி இருப்பதில்லை

எந்த முகமூடியையும் 
பொசுக்கிவிடும் 
வாழ்வின் நிஜங்களைக் காண.

அடுத்த முறை
உங்கள் நடைபயிற்சிக்கு 
ஒரு பெரிய காம்பவுண்டு வைத்த
அரசு மருத்துவமனையை 
தேர்ந்தெடுக்கவும்

அவசர சிகிச்சைப் பிரிவு,
எலும்பு முறிவு,
பிரசவ வார்டு,
ரத்தப் பரிசோதனை 
என சுற்றி முடிக்கும் போது
பாதியும்

அதன் வாசலில் 
சிறு கோவிலில் 
கண்ணீர் கறையோடு தொழும்
பிரார்த்தனையில் 
மீதியும் 

தெரிய வரும்
வாழ்வின் நிஜங்கள்.

கனவே இல்லாத 
கருவறை இருட்டின் 
தூக்கம்
தீர்வு தராமல் 
போகலாம்
அனால் அது,
மெல்ல அழிக்கும் 
வாழ்வின் நிஜங்களை

எப்போதாவது 
நான் மட்டும் 
ரகசியமாக
எடுத்துப் பார்க்கும்

நீ அனுப்பிய
வாழ்த்து அட்டைகள்,
பரிசுகள்,
கையெழுத்திட்ட புத்தகங்கள்,
சிறு கீ செயின்கள்,
ஒரு பர்ஸ், 
எல்லாம் நேற்றைய
கனவின் நிழல்கள்

எல்லோரும் பார்க்க
ஹாலில் மாட்டிய
என் குடும்ப புகைப்படங்கள்
இன்றைய 
வாழ்வின் நிஜங்கள்.

- டோட்டோ

**

அன்புடன் கூடி ஊட்டும் இல்வாழ்க்கை இல்லை
ஆண்டவனைத் தொழுவதில் உண்மை இல்லை
குடும்பத்தில் இன்பமாய்க் கூடி குலவ முடிவதில்லை
பிள்ளைகளை வளர்க்கத் துளிக்கூடப் பொழுதில்லை 
அலுவலகம் செல்ல பகலென்ற கால வரம்பில்லை
காலவிரைக்கேற்று வீட்டடுப்பு மூட்ட முடிவதில்லை
வேண்டிய உணவு விதவிதமாய் வீட்டில் கிடைப்பதில்லை

அன்பிற்குத் தாழ்வைத்து அடைத்து விட்டதால்
போலி வெளிப்புறவலரிடம் புல்லரிடம் மயங்கி
பால்க்காரன், தண்ணீர்க்காரன், காவற்காரன் வலையில்
விட்டில் பூச்சிகளாய் இளம்கொழுந்து பெண்களழிவது
காட்டுமிருகங்களாய் ஆண்பிள்ளைகள் போலி நட்பலையில்
மாட்டிக் குடித்தும்  போதைப்பொருள் உண்டுமழிவது
பணத்திற்கே முதலிடம் கொடுக்கும் இக்கால சமுதாய
சமுதாய வாழ்வியல் நிஜங்களென அறிவீர்! 

**

இருக்கும் வரை தெரியலடி
இனியவளே உன் இனிமை
பொறுப்பான பொன் உனையே
போற்றிடவே  மறந்தவன் நான்

உடல் சோர்ந்து நீ இருக்க - ஓர்
உதவி செய்ததில்ல
அன்பான பேச்சுமில்ல
அரவணைப்பை கொடுத்ததில்ல

அடியே நீ போன பின்பு
அடியேனுக்கு யாருமில்ல
வாழும் வரை புரிவதில்ல
வாழ்க்கையின் நிஜ உருவம்

- பார். விஜயேந்திரன், கருங்குழி

**

நம்பினார் கெடுவதில்லை இது நான்குமறை  தீர்ப்பு
நிஜத்திலோ நம்பி கடன் தந்தோர் திரும்பக்கேட்டால் தாக்குதல்.. 

குழந்தையும் தெய்வமுமும் ஒன்று சான்றோர் வாக்கு 
நிஜத்திலோ கயமை எண்ணத்தில் குழந்தைகள் வன்புணர்வு,  பின்  கொடூரக்கொலை  

உணவைத்தருவோர் கடவுள் போல.... யாரோ சொன்னது
நிஜத்திலோ விவசாயிக்கு மதிப்பே இல்லை

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் சான்றோர் சொன்னது
நிஜத்திலோ மூத்தோர் முதியோர் இல்லங்களிலும் பட்டியினிலும்

பெண்ணென்றால் பேயும் இறங்கும் என்பார்கள் இன்றோ சுயநலம் மட்டுமே
யாரும் யாருக்கும் இரக்கம் காட்டுவதில்லை

கனாவில் காணும் பல எண்ணங்கள் வானவில் போல அழகாய்! 
பயம் கொள்ள வைக்குது எதிரில் காணும் கேட்கும் படிக்கும் சம்பவங்கள்

பல்வேறு காரணிகள்... காரணங்கள்... பின்னணிகள்.. தலைசுற்றுது! ... 
பயமுறுத்துது  நாளைய நம் சந்ததிகள் சந்திக்கவிருக்கும் வாழ்வின் நிஜங்கள்.... 

- ஆகர்ஷிணி 

**

இன்பம் துன்பம் இரண்டும் கலந்ததே வாழ்க்கை
இன்பம் மட்டுமே நிரந்தரமாக யாருக்கும் இல்லை!

எனக்கு மட்டுமே இவ்வளவு துன்பம் என்று
எல்லோருமே புலம்பி தவித்து வாழ்ந்து வருகின்றனர்!

மற்றவர்களைப் பார்த்து பொறாமை கொள்கின்றனர்
மற்றவர்களைப் பார்த்து பெருமை கொள்ளுங்கள்!

வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது போலவே
வாசல்தோறும் வேதனை பல உண்டு!

என்னடா வாழ்க்கை என்று சலிப்பதை விடுத்து
எதையும் சமாளிப்பேன் என்று விரும்பி வாழ்ந்திடுக!

தோல்விகள் கண்டு துவண்டு விடக்கூடாது
தோல்விகள் நிரந்தரமன்று வெற்றி வந்து சேரும்!

ஒரே நாளி உயர்ந்து விட வாழ்க்கை 
ஒன்றும் திரைப்படமல்ல உணர்ந்திட வேண்டும்!

மேடு பள்ளம் இரண்டும் உண்டு சாலையில்
மகிழ்ச்சி துன்பம் இரண்டும் உண்டு வாழ்க்கையில்

சோதனைகளை சாதனைகளாக மாற்றிட வேண்டும்
சோர்வையும் சோம்பேறித்தனத்தையும் நீக்கிட வேண்டும்!

இழப்புகள் வரலாம் சோகங்கள் நிகழலாம்
எதையும் தாங்கிடும் உள்ளம் வேண்டும்!

நேர்வழியில் கிட்டிடும் பொருள் நிலைத்திடும்
நேர்மையற்ற வழியில் கிட்டுவது நிலைக்காது!

முடிந்தவரை பிறருக்கு உதவிட வேண்டும்
முடிவு கட்டிட வேண்டும் தன்னல வாழ்க்கைக்கு!  

- கவிஞர் இரா .இரவி

**

நிழல்கள்  நிஜமாவது 
மனிதா.... உன் கையில்தான் 
உள்ளது.......
வாழ்வின்  ஒவ்வொரு கணத்தையும்
தாழ்வில்லா ஏற்றத்துடன் 
எதிர்  நோக்கினால் 
சதிராடாமல் அனைத்து 
நிஜங்களும் நமக்கு புரியும்!
படிக்கும்  மாணவனுக்கு 
பாடமே  அவன் 
வாழ்வின்  நிஜங்கள்!
நிஜத்தை  புரிந்து 
கவனத்துடன் படித்தால் 
மனம் விரும்பும்  வாழ்வு அமையும்!
நிழல் படம்  நிஜமாகி 
உற்சாக  வாழ்வு வேண்டுமென 
எண்ணும்  உள்ளங்களே....
வாழ்வில் எல்லாமே 
நிஜங்கள்தான்!
நம்பி  உழைப்போம்!
தெம்புடன்  வாழ்வோம்!

- உஷாமுத்துராமன்,  திருநகர்

**

பிரமுகர்கள் பின்னால்
பினாமிகளின் பிறப்பு –
நிஜத்தை மறைத்த
நிழல்களின் ஆட்சி –
தொழிலில் செழுமை:
பொறுக்காமல் சுழியாக்க
குழிபறிப்போர் சிலர் –
உண்மைகளை மறைக்கத் தவிக்கும்
 உதடுகள் –
உருவாக்கிய சிரிப்புடன்
உறவுகள்-
வாய்மை மரங்களை
வெட்டிச்சாய்த்து
ஒரு வாழ்க்கைச்சாலை –போதும் .
இறந்து பார் – எரிப்பதற்கு முன்  
எத்தனை உடல்கள் விரதத்தில்,
எத்தனை கண்களில் உப்புக்கடல்:
எண்ணிப்பார் ,
அவை சொல்லும் வாழ்க்கையின் நிஜங்களை

- கவிஞர் டாக்டர். எஸ். பார்த்தசாரதி  -- MD DNB PhD

**
பெற்ற தாயை
விரட்டி,
வளர்த்த தந்தையைத்
துரத்தி,
வயோதிக நிலை, தனக்கு
வராதென நினைத்து
சுருங்குந் தோளழகைப்
பேரழகாய்ப் புகழ்ந்து,
பெண்ணே! − கடவுளின்
பேரெழில் படைப்பாய்,
பின் சென்று
பிதற்றிச் சிரித்து
பித்தந் தனக்குள் திணித்து,
பிச்சாடனக் கோலந் தரித்து,
கண்மத்துள் காணாமல்,
கலந் துருகிக்
கெட்டியான − மண்
பானையா யுருமாறித்
திரிவது தான்
திரிந்த நாகரீகத்தின்
வாழ்வியற் கோட்பாட்டு
வளமையற்ற உண்மைகள்.....

- முகில் வீர உமேஷ், திருச்சுழி.

**

பால் குடங்களும்
பன்னீர் அபிஷேகமும் இறைவனுக்கு!
பசியால்  இறந்தது பச்சிளங்குழந்தை !

சட்டத்தின் காவலர் நீதிபதி
சட்டப் புத்தகம் கையிலே !
சட்டைப்பையில் இருந்ததோ 
லஞ்சப்பணம்.!

தமிழ் எங்கள் மூச்சு
தங்கத் தலைவனின் முழக்கம்
அவர்தம் குழந்தைக்கோ கான்வென்ட்  படிப்பு .!.

மது எனும் அரக்கன் மடியில்
மயங்கிக்கிடக்கும் குடி மக்கள்
மதுவிற்பனையில் வருமானம் 
உயர்ந்தது மகிழ்ச்சியில் அரசு!.

பெண்ணும் ஆணும் சமமென
பேச்சிலும் எழுத்திலும் சொல்லப்பட்டது !
தொடர்வதோ பெண் சிசுக் கொலை !

அண்டைஅயலாரை அறியார் ஆனால் அறிமுகம நண்பர்கள் 
அகிலம் முழுவதும் இணையம் மூலம் !

பெருகி வரும் மக்கள்தொகை
தொடர்கிறது தொழில்.  புரட்சி!
தொலைநதது இங்கே இயற்கை மலர்ச்சி!

இவை யாவும் வலி தரும்
இன்றையவாழ்வின் நிஜங்கள்! 

- ஜெயா வெங்கட்

**
வாழ்வின் நிஜங்கள் அன்று
வாழ்க்கையை உயர்த்தியது.

வாழ்வின் நிஜங்கள் இன்று
வறண்ட பூமியாக்கியது.

விழ்வின் நிஜ முகமூடிகள்
வெளிச்சத்திற்கு வர வேண்டும்.

வாழ்வின் நிஜங்கள் இன்று
பேச முடியாத ஊமையினது.

வாழ்வின் நிஜங்கள் இன்று
லஞ்ச ஊழலுக்கு அடிமையானது.

வாழ்வின் பொய்யான நிஜங்களை நம்பி
நிழலாகி விடாதே மனிதா! 

வாழ்வின் நிஜங்கள் நிசப்தமானது.

- உமாதுரை

வாழ்வின் நிஜங்கள் வக்கிரங்கள், பெரும்பாலோர்
தாழ்ந்தமனங் கொண்டவர்கள் தானெனலாம்!--ஆழ்ந்திதனைப்
பார்க்குங்கால் இதற்கு பண்டிதரும் விலக்கல்ல;
யார்நம்பத் தக்கவரோ இயம்பு!

ஆன்மீக வாதிகளாய் அவதாரம் எடுத்தவர்கள்,
வான்புகழ் தனைகண்ட வல்லுனர்கள் பலரிடமும்
காண்கின்றோம் வக்கிரத்தை, கடிதான உண்மையிது!
வீண்வேஷம் போடுகிறார் வீணர்களும் நல்லவர்போல்!

- அழகூர். அருண். ஞானசேகரன்.

நிழலும் நிஜம் தான், சூரியன் மேலிருக்கும் வரை! 
நினைவுகள் நிஜம் தான், உடலில் உயிர் இருக்கும் வரை!
வாய்ப்புகள் நிஜம் தான், தேடல் உள்ளவரை!
வெற்றி நிஜம் தான், மனதில் உறுதி உள்ள வரை!
வார்த்தை நிஜம் தான், நோக்கம் நல்லதாக உள்ளவரை!
அன்பு நிஜம் தான், இரு மனம் இணைந்து இருக்கும் வரை! 
வாழ்வு நிஜம் தான், நாம் மண்ணில் உள்ளவரை! 

இருக்கும் வாழ்வை அன்பால் வாழ்வோம்!
இணக்கம் கொள்வோம்!இன்புற்றிருப்போம்! 

-இனிய தமிழ் செல்வா, நெல்லை

**

வெட்டுங்கள்  குளமென்றால்  வெட்டி  டாமல்
    வெட்டாதீர்  எனும்மரத்தை  வெட்டு  கின்றார்
கொட்டுங்கள்  குப்பையெனும்  இடத்தை  விட்டுக்
    கொட்டாதீர்  எனும்தெருவில்  கொட்டு  கின்றார் !
நட்டிடுவீர்   செடியென்றால்  நட்டி  டாமல்
    நட்டுகல்லை  விளைநிலத்தை  விற்கின்  றார்கள்
திட்டங்கள்  தீட்டுவோரே   திருடிச்  செல்லத்
    திருடரினைப்  பிடிக்காமல்   புகழ்கின்  றார்கள் !

உழைத்துவரும்  பணம்தன்னில்  உண்டி  டாமல்
    ஊரேய்த்தே   உண்டியலில்  கொட்டு  கின்றார்
பிழைப்பதற்கே    ஆயிரமாய்   வழியி  ருக்கப்
    பிறர்முதுகில்   ஏறுதற்கே   முனையு  கின்றார் !
உழைப்பதற்காய்   இருக்கின்ற   கையி  ரண்டில்
    உழைக்காமல்  இரப்பதற்கே  நீட்டு  கின்றார்
கழைக்கூத்தே   வாழ்க்கையென்  றறிந்தி  ருந்தும்
    கற்காமல்  வேடிக்கை   பார்க்கின்  றார்கள் !

பிறர்மீது  பழிசுமத்தித்  தம்மு  டைய
    பிழைகளினைத்  தெரியாமல்  மறைக்கின்  றார்கள்
அறத்தால்தான்   வரும்இன்பம்   என்ற  றிந்தும்
    அநீதித்தீ   சுகமென்றே   வீழு  கின்றார் !
புறம்பேசிப்  பொறாமையை   மனத்தி  ருத்திப்
    புகழ்வோர்க்கே   செவிமடுத்து  மயங்கு  கின்றார்
திறமையினை   மதித்திடாமல்  காலைக்  கையைத்
    தினம்பிடிக்கும்   போலியையே  வாழ்த்து  கின்றார் !

- பாவலர் கருமலைத்தமிழாழன்

**

அன்புடன் கூடி ஊட்டும் இல்வாழ்க்கை இல்லை
ஆண்டவனைத் தொழுவதில் உண்மை இல்லை
குடும்பத்தில் இன்பமாய்க் கூடி குலவ முடிவதில்லை
பிள்ளைகளை வளர்க்கத் துளிக்கூடப் பொழுதில்லை 
அலுவலகம் செல்ல பகலென்ற கால வரம்பில்லை
காலவிரைக்கேற்று வீட்டடுப்பு மூட்ட முடிவதில்லை
வேண்டிய உணவு விதவிதமாய் வீட்டில் கிடைப்பதில்லை

அன்பிற்குத் தாழ்வைத்து அடைத்து விட்டதால்
போலி வெளிப்புறவலரிடம் புல்லரிடம் மயங்கி
பால்க்காரன், தண்ணீர்க்காரன், காவற்காரன் வலையில்
விட்டில் பூச்சிகளாய் இளம்கொழுந்து பெண்களழிவது
காட்டுமிருகங்களாய் ஆண்பிள்ளைகள் போலி நட்பலையில்
மாட்டிக் குடித்தும்  போதைப்பொருள் உண்டுமழிவது
பணத்திற்கே முதலிடம் கொடுக்கும் இக்கால சமுதாய
சமுதாய வாழ்வியல் நிஜங்களென அறிவீர்! 

- மீனாள் தேவராஜன்

**

ஆங்காங்கே பிரச்சினை சிந்தி
கிடக்கும்; உறுதி ஆகிடவிடாமல்
துகள் ஆக்கிட சிந்திக்க வேண்டும்; 
நம்மை நாமே அறிந்து கொள்ளவும் 
வாழ்வின் நிஜங்கள் வெளிப்படும் 

தீர்க்க முடியாது என்று தீர்க்கமாக
தெரிய; அமைதியை அலங்கரித்து 
கடவுளை பிராத்திக்க; மனதில் அதீத
நம்பிக்கை பிறந்து மனம் இலேசாகும்;
பிரச்சனை தீரந்திட வழி தெரிந்திடும்
வாழ்வின் நிஜங்கள் வெளிப்படும் 

பிரச்சினையை கண்டு பயந்தோடாதே
அமைதியோடு சந்தி; எதுவரினும் நாம்
அஞ்சோம் என துணிகரமாக எதிரிகள் 
எதிரில் நில்ல; அவனது கடுங்காலில்
அவன் பயத்தின் அறிகுறி தெரியும்; 
மனதில் கூடுதல் பலம் சேர்க்கும் 
வாழ்வின் நிஜங்கள் வெளிப்படும் 

தேவைகள் கால்வாய் வெட்டும் அதில் 
மனசோர்வு எனும் கண்ணீரே ஓடும்;
ஆசைகள் எனும் கொடி கிளை படரும்
தேவையில்லாத கிளைகள் தறிக்க;
அடிக்கொடி தடிக்கும் அடிக்கும் காற்றில் 
அங்குமிங்கும் அலையாமல் இருக்கும்;
மனதில் கூடுதல் பலம் சேர்க்கும் 
வாழ்வின் நிஜங்கள் வெளிப்படும் 

- ஆபிரகாம் வேளாங்கண்ணி 


 

]]>
kavithaimani, poem, poet, கவிதை, கவிதைமணி, கவிஞர் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/8/w600X390/download.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/aug/08/கடந்த-வாரத்-தலைப்பு-வாழ்வின்-நிஜங்கள்---வாசகர்களின்-கவிதைகள்-பகுதி-1-2976742.html
2972912 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி கடந்த வாரத் தலைப்பு ‘முதல் தனிமை’ - வாசகர்களின் கவிதைகள் பகுதி 2 கவிதைமணி DIN Friday, August 3, 2018 04:53 PM +0530 தனிக்குடும்பத்தில் தாய் தந்தை
அலுவலகம் செல்ல
தாத்தா பாட்டி அரவணைப்பின்றி 
பள்ளி சென்று வீடு திரும்பும்
குழைந்தையின் பிஞ்சு பருவத்திலேயே 
உண்டாகும் முதல் தனிமை!!

எண்ணில் அடங்க எண்ணங்களை
நாம் எண்ணத்தில் கொண்டு சேர்க்கும் 
முதல் தனிமை
எண்ணற்ற நாம் சிந்தனைக்கு 
என்னவெல்லாம் உயிர் கொடுக்கும் 
முதல் தனிமை
நாம் யார் என்பதை உணரவும்
இவ்வுலகத்துக்கு உணர்த்தவும் உதவியாய் நிற்கும்
முதல் தனிமை
வீரர்களையும் கோழையாக்கும்
கோழைகளையும் சாதனை படைக்க வைக்கும்
முதல் தனிமை!!

 - கோமலீஸ்வரி

பிறந்ததுமே தெரியவந்த பிறப்பிடமே முதல்த்தனிமை
  பிறகேதான் தெரியவந்த பிறப்பினுடை உண்மையிலை.!
அறவழியில் போராடி ஆண்டுகளும் கழிந்தபின்னே
  அம்மாயார் என்பதுமே அறிந்துகொள முடியவிலை.!
புறவுலகம் தள்ளிவைத்துப் புறந்தள்ளி நகையாடி
  பித்தன்போல் ஆனபோது  பிதாவங்கே வரவில்லை.!
பிறருமென்னைப் பார்த்தவுடன் பழிக்காத நாளில்லை
  பெற்றோரும் உற்றோரும் பிறர்கூட வாழ்ந்ததில்லை.!


கனாவொன்று கண்டேன்நான் கன்னியவள் வந்தாளாம்
  கையிலுள்ள குழந்தையையும் குப்பையிலே வீசினாளாம்.!
வினாக்களும் அந்நேரம் விளைந்ததுவே பலப்பலவாய்
  விடையொன்று கிடைக்காது விதியறியா அலைந்தேனே.!
அனாதியானேன் என்றுதெரிந்த் அம்மாவும் அப்பாவும்
  அரவணைக்க வரவில்லை ஆருணர்வார் எம்பிறப்பை.!
அனாதையெனை இன்றுவரை ஆருமெனைச் சேரவிலை
  அதற்கான காரணத்தை அறியநானும் முயலவில்லை.!

தனதுதப்பை மறைப்பதற்குத் தாங்களீன்ற சந்ததியைத்
  தந்தைதாயும் மறந்தனராம் தனிமையாக்கத் துணிந்தாரே.!
அனகச்செய் கையேதும் அரும்பவில்லை மனத்துள்ளே
  ஆருமறி யாவண்ணம் அரங்கேற்றம் செய்தனரே.!
சனனமுதல் சாவுவரைச் சங்கடங்கள் கொண்டதுதான்
  சந்ததிகள் காலைவாரச் சதித்திட்டம் போட்டனரோ.!
புனர்ஜென்மம் உண்டென்றால் புதுப்பிறவி மீட்பிறப்பில்
  பிறவிமுதல் தனிமையிலாப் பிறப்பொன்றே வேண்டுமப்பா!

- பெருவை பார்த்தசாரதி

முதன் முதலாய்
உன்னைப்பார்த்து பிரியும் போது
இதயத்தில் ஏதோ
இனம் புரியாத வலி!
புரிந்து கொண்டேன்
தனிமை எனக்கு புதிது

முதல் தனிமை கருவறையில் வந்து விட்டது
யாருமில்லாமல் கட்டிலிலோ தொட்டிலிலோ
இருக்கும் பொழுதும் தனிமைதான்!
பள்ளியில் பலர் இருந்தாலும்
பெற்றோர் விட்டுச் சென்றபின் தனிமைதான்!
விரும்பிய பெண் நம்மை விட்டு
நீங்கும் பொழுதும் தனிமைதான்!
புகுந்த வீட்டில் விட்டுவிட்டுச்
செல்லும்பொழுதும் தனிமைதான்!
ஆனால், எல்லாத் தனிமையிலும் துயரத் தனிமை
துணையைப்பிரிந்து தவித்து இருப்பதே!

- இளவல்

பள்ளியில் முதல் நாள் 
கல்லூரியில் புதிய நண்பர்கள்                                                   
திருமணத்துக்குப் பின் மனைவி 
ஊருக்குச் செல்வது
எது முதல் தனிமை 
அந்தந்த நிலையில் இவையெல்லாம்
இன்னமும் கூட
வாழ்வின் பல தருணங்களில்
முகிழ்க்கும் முதல் தனிமைகள்

- பாரதிராஜன் பெங்களூரு

குறைப்பாடு உள்ளதாக நீக்கப்பட்டவனின்  
தோழமையான தொடு உணர்ச்சியை காணாமல் 
முதல் தனிமையை 
உணர தொடங்கியது 
கருவில் இருக்கும் 
மற்றொரு குழந்தை!

-சுபர்ணா

தாயின் பால் அமிர்தம் என்பார்கள்
எனக்கு மட்டும் விஷமானது
பிறந்து ஆறு மாதங்கள் ஆன எனக்கு 
பாலூட்டி பசியாற்ற மறந்து
விஷம் குடித்து மறைத்து போன 
அன்று முதல் என் "முதல் தனிமை" 
முற்றிலும் தனிமை ஆனது 

- தினேஷ் உமேஷ்

தாயின் கருவறையில் இருந்து  பிரிந்தது,  முதல் தனிமை. மனதில் காதலோடு அவள் முதலா முடிவா  என்று நினைத்து கொண்டு நின்றது தனிமை. 
காதல் பிரிவில் உள்ள தனிமை தரும் வேதனை மிக கொடுமை. "தனிமை இது நானாக தேடிக்கொண்ட சாபம் அல்ல, இது நான் உயிராக நேசித்தவர்கள் அளித்த வரம். காதலியிடம் காதலை சொல்ல தைரியம் இல்லாமல் நிற்கின்ற அந்த முதல் தனிமை,  கற்றுக்கொடுத்த பாடம் வாழ்வின் மகத்துவம். இது வெறும் புரிதல் மட்டும் அல்ல இது அன்பின் வெளிப்பாடு . தனிமையில்  மட்டுமே நாம் அனைத்தையும் உணரமுடியும், அந்த  தனிமை வாழ்க்கையின் இனிமை ... 
              
- ந. அருள்செல்வன்,  தரசூர்

முதல் தனிமை   தாயின் ஸ்பரிசம் விலக அழுகையில் துவக்கம்!
அடுத்தத்தனிமை வயிற்றின் பசிக்காக அழவைக்கும்! 
மூன்றாம் தனிமை  இருட்டைக்கண்டு கண்கதறும்!
மழலையில் ‘நடக்கும்’ தனிமை  வேடிக்கைக் காட்டும்!
பதின்பருவத்தனிமை  பயத்தை எதிர்கொள்ளச்செய்யும்!
தொடர்ந்து வரும் தனிமையெல்லாம்  துயரங்களின் துவக்கமே . . .
துவக்கம் மட்டுமே!!
ஒரு புன்னகை ஒரு புத்தகம்  ஒரு திரைப்படம்  ஒரு ஓவியம்  
ஒரு  சிட்டுக்குருவி  ஒரு காற்றசைவு  ஒரு கவிதை  ஒரு நெல்லிக்கனி
ஏதோ ஒன்று  இட்டுநிரப்பிக்கொண்டே வர 
வாழ்க்கை ஓட்டம் ஓடாது நகரும்!
கடைசித்தனிமைக்கு சாய்வு நாற்காலியாவது துணை சேரும்!
முதல் தனிமை அழவைத்தது!  கடைசித்தனிமையோ 

 -கே.ஆர்.கார்த்திகா

பெற்றவர் பஞ்சு கைகள் பட
ஒரு பிஞ்சுபருவம் –
ஆதவனாய் ஒரு ஆசிரியன் ,
பளிச்சென்ற படிப்பு வெளிச்சத்தைத்தர,
அதை  கண்ணுக்குள் இழுத்த கல்விக்காலம் –
தொழிற்சாலையையே நுகரும்  
தொடர் வேலை,
இருந்தும் அங்கு
நற்குணச்சோலையாய்  ஒரு
நட்புக்குழாம் –
துன்ப வியர்வையை
துடைக்கப் புறப்பட்டது
குடும்ப விசிறி !
எல்லாம் முடிந்தது !
தனிமையில் நானோ ?
இல்லை , இல்லவே இல்லை !
கைகளுக்கு முத்தம் தர முத்தமிழ்
இருக்க,  எனக்கேது முதல் தனிமை !

- கவிஞர் டாக்டர். எஸ்.பார்த்தசாரதி 

எனது முதல் தனிமை காதலினால் அல்ல! 
எனது முதல் தனிமை வாலிபத்தால் நேர்ந்தது!

பிறந்தது முதல் பார்த்து பார்த்து வளர்க்கப்பட்ட பாலகன்! 
கையில் சாப்பிட சிரமப்பட்டு ஊட்டிவிட்டு வளர்ந்தான் பாலகன்!
நாட்கள் ஓடின அதனுடனே படித்தான், வளர்ந்தான்!
பருவம் கொண்டான், கல்லூரியும் முடித்தான்!
வேலை கிடைப்பதோ பட்டிணத்தில் தான், நோக்கினான்!

வாழ்க்கை என்னும் வட்டத்தில் பொருள் தேடி புறப்பட்டான்!
உறவும், தோளும் ஊரிலே வழியனுப்பி நின்றது!
கடனும் கனவும் விடாமல் துரத்தின!
அயலூர் வீதிகளில் அல்லும் பகலுமாய் திரிந்து!
ஐந்தையும் பத்தையும் பார்த்து பார்த்து செலவு செய்து!
எஞ்சியதில் மிஞ்சினால் மாதக்கடைசியில் உணவு உண்டு!
கண்டு கண்டு பயணித்து கன்றுபோல் நடந்து!
வேலை என்னும் சிகரம் நோக்கி குன்றேறினான்!

முதல் முறை கூட்டை விட்டு பறக்கும் பறவைக்கு கூட துணையுண்டு!
ஆனால் வேலை தேடி பட்டிணம் போகும் பிள்ளைக்கு யார் துணை!
காலம் தான் துணை! 
 
பெற்றோர்களே பிள்ளைகளை உங்கள் கண்முன் சிறகடிக்க பழக்கிவிடுங்கள்! 
ஒரு முறை விழுந்து பின்பு எழுவதை கற்றுக்கொடுங்கள்!

பருவத்திலும் கைப்பிடித்து நடக்காமல்!
கையில் உணவு ஊட்டாமல்!
தூர நின்று நடக்க கற்றுக்கொடுங்கள்!
தட்டில் எடுத்து போட்டு உண்ணச்சொல்லுங்கள்!
அம்பாரியில் இருந்து இறக்கிவிட்டு!
நடந்து போக கற்றுக்கொடுங்கள்!
அவன் விழுவான் சற்று பொறுங்கள் எழுவான்!

தனிமையே அவனை தனிமனிதனாக தேற்றும்!

-செல்வா, நெல்லை

தாயின் கருவறையில் தனிமை உருவாக, அவ்வப்போது தாய் புலம்ப தனிமை - உடைபடும்
"நீ - பெரியவனானா இவங்க போல இருக்காத " 
நீ வெளிய வந்து - இவங்கள என்ன சேதீன்னு கேக்கனும் - சரியா?" இப்படி
பிறகு - விட்டுச் செல்வார்கள் வீட்டில் - தனிமையை துணையாக்கி,
பொம்மைகள் - நண்பர்களாய்
போட்டோக்கள் - உறவுகளாய்,
டி.வி-யின் தாலாட்டில் உறக்கம், பின் பள்ளி நாட்களில்
தந்தை மரணித்த பின் - சூழ்ந்து கவ்விய தனிமை,
ஆழ்த்தியது சொல்லொணா சோகத்தில்,
வளர்ந்து மணம் முடித்த பிறகோ - வீட்டில் வெளியூரில் நான்கு சுவற்றுக்குள் நாகரீக சிறையில் நாளும் தனிமை,
இதில் எல்லாமே புதிதாய் முதல் தனிமையாகவே இருக்க - எதற்கு முதலிடம் தருவது ?
நாளை பிள்ளைகள் நமை விட்டுச் செல்லும் போதும் - இதே தனிமை என்னை விடப் போகிறதா என்ன?

- கவிதா வாணி - மைசூர்

நீ இல்லாத வீட்டின் 
தேடிக் கலைக்கும் 
துணியடுக்கில்,
தொலைந்த சாவியில்,
படர்ந்த தூசியில்,
குளியல்றைக் கண்ணாடியில்
ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் 
பொட்டுகளில்
படர்ந்திருந்தது 
என் 
முதல் தனிமை

- விஸ்வநாதன், அம்பத்தூர்

முதல் தனிமையின் கதகதப்பில்
கவலை இன்றிக் கிடந்தேன்
கருவறைக்குள்

வெளிவந்தேன்
விழிதிறந்தேன்
அகல வாய்விரித்தது
அமைதியற்ற உலகம்

கண்ட நொடியே
கதறினேன் கலங்கினேன்
இனி தனிமை 
எப்போது வாய்க்கும் என

மறைந்து
எரிந்து கரைந்து போனால்தான்
புதைந்து சிதைந்து மட்கினால்தான்
தளிர்விடுமோ
தனிமை 

-கோ. மன்றவாணன்

கணவனோடு இரண்டறக் கலந்து வாழ்ந்தவள் 
கணவனை விட்டு பிரிந்து இயற்கையில் கலந்தாள்!

சோடிப் புறாவாக வாழ்ந்த அவர்கள் இன்று
தனித்த புறாவாக தவித்து வாடி வாழ்கிறான் !

குறிப்பு அறிந்து உதவி மகிழ்ந்த இனியவள்
கேட்காமலே அவன் தேவையைத் தந்தவள்!

அவன்  நிழல் கூட சில நேரம் பிரிவதுண்டு
அவள் அவனைவிட்டு எப்போதும் பிரிந்ததில்லை!

மனைவி இறந்தபின் கணவனின் வாழ்க்கை
மயான வாழ்க்கை தான் நொடியும் வதைதான்!

மனைவி இறந்ததும் கணவன் இறந்திட்டால்
மனதில் கவலைகள் வரவே வராது!

மனைவியை இழந்துவிட்டு நடைப்பிணமாக வாழும்
மோசமான வாழ்க்கை உணர்ந்தவர் அறிவர்!

மனைவிக்கு ஈடான உறவு உலகில் வேறில்லை!
மனையின் அழகு மனைவியால் வருவது!

சந்தனம் போல தன்னைத் தேய்த்து நாளும்
சிறந்த வாசனை தந்து மகிழ்வித்தவள்!

மெழுகு போல தன்னை நாளும் உருக்கி
முழு நிலவென குடும்ப ஒளி தந்தவள்!

ஏணியாக நின்று உயர்த்தி விட்டவள்
தோணியாக இருந்து கரை சேர்த்தவள்!

உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்தவள்
ஓய்வு என்றால் என்னவென்றே அறியாதவள்!

யாரிடமும் அவனை விட்டுக் கொடுக்காதவள்
யாதுமாக அவனுள் நிறைந்து இருந்தவள்!

காலத்தின் கொடுமை அவளை இழந்து
கண்ணில் கண்ணீருடன்  முதல் தனிமை !

- கவிஞர் இரா .இரவி

உயிர்க் கவிதைகள், அனாதை இல்லத்தில்
உலவி வரும் குழந்தைகள் தனி! ஒருதனிமை!
உயிர்க் குயிராய் வளர்த்தவள் தாய்! –அவள்
உலவுவதோ முதியோர் இல்லம்!
ஆறுதலாய் மகன் வந்து தன்னிடத்தே
அன்புமொழி பேசானோ! என ஏங்கும்
தாயின் சிறப்பை சாற்றாதார் யாருமில்லை!
தனித்த அந்த அபலைத்தாய் தனிமை!
  
கண்டதும் காதல் கொண்டது கோலம்
கருத்து மாறுபாடு வந்ததும் பிரிவர்!
கொண்டிருந்த அன்பின் அடையாளம் குழந்தை
குப்பைத் தொட்டியில் குழந்தை ஒரு தனிமை!
திவ்யா-இளவரசன், இவர் போன்ற இன்னும் பலர்
நேசித்து வந்த நிஜமான வாழ்வு
பொய்யாகி போக வினை செய்வார்கள்
பிரிந்தனர்,மறைந்தனர்,சிலர் தனித்தனியாவாழ்கிறார்
எண்ணற்ற தனிமை நினைக்க ,நினைக்க தெரியும்
அனாதை இல்லக்குழந்தைகள் தானே முதல்தனிமை                             

- கவிஞர். அரங்க.மணி, பராசக்திநகர்

தந்தை, தாயினைப் பிரிந்து அன்புள்ள உடன்பிறப்பைத் துறந்து
வந்த கணவனுடன் இணைந்து ஏகிடும் ஒருவகை தனிமை
தனித்துவத் திறமை பெற்று தலைமைப்பொறுப்பை ஏற்றதும்
அணியாய் இருந்தவர் பிரிந்து நண்பர்களை தியாகம் செய்து
தனிமையினை உணரும் ஒருவகை தனிமை ஒருவகையில்
தனித்தே நிற்கும் போது உணர்வோம் தனிமையினை
அணியினரை அப்புறம் பார்த்திடினும் எப்பபோது பார்த்தாலும்
அன்று ஏற்படும் உணர்வு ஒட்டவைத்தது போல்  ஒரு தனிமை!
பெற்ற பிள்ளையின் அன்புக்கு ஏங்கும் உற்ற தயின் தனிமை!
அருகில் வந்து பேச அன்புடன் ஏங்குகின்ற பாசத்தாயின் அவா!
கணவன் மனைவி ஏதோ காரணத்தால்பிரிந்து வாழும் தனிமை
அன்னை,தந்தயை இழந்து யாரோ கொண்டு வந்து சேர்க்க
அனாதை இல்லங்களை அடையும் பிஞ்சுக் குழந்தைகள்
கண்முன்  காட்சி தந்திடும் குழந்தைகள் தான் முதல்தனிமை
தனிமையில் கொடியது எது? கேள்வி எழுகிறது நமக்கு
காதலித்தவரை பிரித்து பிடிக்காதவரை கொல்லும் ஆணவம்
காதலனோ காதலியோ தனித்து விடப்படும் அவலம் ,தனிமை !
குப்பைத் தொட்டியில் போடப்படும்  குழந்தைகளின் தனிமை
யாராவது எடுக்கும் வரை அங்கே ஏற்படும் தனிமை கொடுமை
இத்தனை தனிமைகள், அனாதைகுழந்தைகள் முதல் தனிமை! . 

- கவிஞர் ஜி. சூடமணி

இரவில் அகல் விளக்கின்
சிறு வெளிச்சத்தில்
நினைவின் நீர்ப்பரப்பில் 
மூழ்கியெழும் போதும்
விழித்திருக்கும் போது
காணும் கனவுகளின்
உயிர்த்துடிப்புக்கள் 
குறைந்து வருகையிலும்
எண்ணங்களின் சாகரத்தில்
தீச்சுடராய் ஒளிரும்
ஒற்றை உருவினை
உணரும் தருணங்களிலும்

அகத்தனிமை நீளும்
மெய்க்கணமதில் நிலைக்க
மனம் உவகை கொள்ளும்
தனிமை ஓர் வரம்!

- உமா

]]>
கவிதை, kavithaimani, கவிதைமணி, loneliness, முதல் தனிமை, kavithai http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/2/w600X390/Loneliness.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/aug/02/கடந்த-வாரத்-தலைப்பு-முதல்-தனிமை---வாசகர்களின்-கவிதைகள்-பகுதி-2-2972912.html
2972920 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி இந்த வாரத்திற்கான தலைப்பு: ‘வாழ்வின் நிஜங்கள்’ கவிதைமணி DIN Thursday, August 2, 2018 01:10 PM +0530 'முதல் தனிமை’ என்ற தலைப்பிற்கு கவிதை எழுதி அனுப்பிய கவிஞர்கள் அனைவருக்கும் நன்றி..! இந்த வாரம் நீங்கள் எழுத வேண்டிய கவிதைக்கான தலைப்பு: 'வாழ்வின் நிஜங்கள்'

உங்கள் கவிதைகளை kavidhaimani@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். 12 வரிகளுக்கு மிகாமல் கவிதை இருத்தல் நலம். உங்கள் கவிதைகளை யூனிக்கோடு எழுத்துருவில் டைப் செய்து மேற்கண்ட மின்னஞ்சலில் அடுத்த புதன்கிழமைக்கு முன்பாக அனுப்ப வேண்டுகிறோம். கவிதைகள் திங்கள் முதல் புதன்கிழமை வரை வெளியிடுவோம்.

]]>
poem, kavithai, kavithaimani, கவிதை, கவிதைமணி, வாழ்வின் நிஜங்கள் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/8/2/w600X390/truth.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/aug/02/இந்த-வாரத்திற்கான-தலைப்பு-வாழ்வின்-நிஜங்கள்-2972920.html
2971566 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி கடந்த வாரத் தலைப்பு ‘முதல் தனிமை’ - வாசகர்களின் கவிதைகள் கவிதைமணி DIN Tuesday, July 31, 2018 06:07 PM +0530  

கட்டவிழ்த்த காளையல்ல
கட்டுப்பாடற்ற மனிதனுமல்ல
கடற்கரையின் ஓயாத அலைகள் போல
காற்றுக்கும் அலைகளுக்குமான தொடர்பு போல,
மனதில் தோன்றி அழியும் பல எணணங்கள்!
முதன் முதலில் ஏற்பட்ட தனிமையே 
எனை ஞானியாக்கியதோ?
கவனமும், மன உறுதியும், நிதானமும்
வழங்கும் இறைவா!
நான் இதைத்தான் பிரார்த்தனை செய்கிறேனா?
மலரென உள்ளுணர்வு விழித்தெழுகிறதா?
அமைதியும், மெளனமும் உள்ளுள் உறைகிறதா?
தீமைகள், தவறுகள், அறியாமைகள் உட்பட்ட
'நான்' என்ற எண்ணங்கள்
மெளனத்தில் கரைகிறதா?
என்னுள் ஆழ்ந்த பொருளை இதயத்தின் ஆழத்தில்
உணர முடிகிறதோ? 
இங்கே நான் எதைக் கற்றுக் கொள்கிறேன்?
மோனம் ஏகாந்தமோ? அது இனிமையானதோ?
ஆசை, காமம், மோகம் தொலைந்தபடி
தனிமை எனும் தவத்தால்
வாழ்வின் புரிதலை மெளனத்தின்
பயணங்களோடு மீட்டெடுக்கிறேன்!
தனிமை தவம், தவமே தனிமை!

- ஆகாசம்பட்டு கி.சேகர்

பணிமாற்றம் பழகிய அப்பா
பணம் கட்டி ரசீதை
வாங்கி விடைபெற்றார்
நான் பாத்துக்கறேன் என்று சொன்ன
அப்பாவின் ஆசிரிய நண்பர் 
வேறு வகுப்புக்கு போய்விட்டார்

நீண்ட சிமென்ட் வழியும், 
உடைந்த ஜன்னல் வழி தெரியும் 
பெரிய மைதானமும் பார்த்தபடி
எனக்கான பெஞ்சை 
தேர்வு செய்து உட்கார்ந்தேன்
கூடவே  உட்கார்ந்திருந்தது
மாற்றலில் 
என்னுடன் வந்த 
முதல் தனிமை.

 - டோட்டோ 

மரகதந் தரித்த
மண் மகளின்
குணமிகு கொண்ட
குமரி களின்
ஏகாந்தந் தவிர்த்து
காந்தமாயி ணைத்து
சரிநிகர் சமத்துவம்
சரியாய் தந்து
ஆச்சாரம் பகரும்
ஆச்சரிய மென்று
மெஞ்ஞானம் பரப்பும்
மெய் வாலை யென்று;
பூப்பதும் காய்ப்பதும்
பெண்மையி னியல் பென்று
பூரிப்பு முப்பும்
பெண்மையி னிலக்கணம்;
இயற்கையும் பெண்மை தான்
இயல்பினி லொன்றுதான்
இடும்பைக் குறைத்தால்
கரும்பா யினிக்கும்
கரும்பாய் நினைத்தால்
காவிரி பொங்கும் - அடுத்தது
பெண்ணும் மண்ணும்
புவியின் சொத்து
புரிந்து பார்;
புகழு முன்னை
பாதுகாப்பாய்
கடைசி வழியாய் - இராமன்
கணை தந்த வழியாய்.......

- முகில் வீர உமேஷ், திருச்சுழி

முதல்தனிமை தான்நம்மின் வாழ்வினில் காணும்
       முத்தான நாளதனை மறக்கத்தான் தகுமோ?
இதனைப்போல் இனிதான நாளேதும் இல்லை
        இல்லறத்தின் தொடக்கமதும் இன்னாளில் தானே!
பதமான இளஞ்சூட்டுப் பாலுடனே நுழையும்
         பாவையவள் வருகையதே வசந்தத்தின் தொடக்கம்!
விதம்விதமாய் இனிப்புக்கள் தனைகண்டப் போதும்
         வேல்விழியாள் இதழூற்றுக் இணையாகத் தகுமோ?

கமழ்கின்ற முல்லைமல்லிச் சரங்கள் தொங்க
       கட்டிலிலே வண்ணமலர் எங்குமே நிறைய
தமக்கெனவோர் துணையெனவே வந்தவளின் வரவை
       தவிக்கின்ற உள்ளமுடன் எதிர்பார்த் திருக்கும்!
அமைதியான இரவுக்கோ ஆயிரமாம் மணிகள்
       அவள்வந்தப் பின்னாலோ அரைமணிதான் பொழுதும்!
நமதுமண வாழ்வினிலே மறக்கவுமே ஒண்ணா
        நல்லறத்தைத் துவக்கும்நாள் புனிதநன் நாளே!

- அழகூர். அருண்.  ஞானசேகரன்

தனிமை  - அது  புத்திசாலிகளுக்கு 
இனிமை தரும் தருணம்!
இதில்...
முதல்  தனிமையில் பல 
முதன்மையான  செய்திகளை 
பதமாக  படித்து  உணரலாம்!
முதல்  தனிமையில்  கிடைக்கும்
முதல்  அனுபவம் இனிமையாயின் 
மேமேலும் தேடுவாரே 
முதல் தனிமையினை!
காதசிரியனுக்கு கிடைக்கும் 
முதல்  தனிமையில் எழுதி 
 விடலாமே  பயன் 
தரும்  நீதிக்கதைகளை!
கவிஞனுக்கு  கிடைக்கும் 
முதல் தனிமையில்  எழுதி
விடலாமே.... அர்த்தமுள்ள  கவிதையினை!
தனிமை கொடுமை 
என்பது மூடர்களின்  சொல்!
முதல்  தனிமையில் நல்ல 
அனுபவங்களை  பெற்றுவிட்டால் 
தேடுவார்  அடுத்தடுத்து 
தனிமை  பொழுதினை!
தனிமையினை  இனிமையாக்குவது
மனிதனே,........ உன் கையில்தான்!
இதை  உணர்ந்து  கொண்டாடு 
முதல்  தனிமையினை! 

- உஷாமுத்துராமன்,  திருநகர்

]]>
Poem, தனிமை, கவிதை, loneliness, முதல் தனிமை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/31/w600X390/download_1.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/31/முதல்-தனிமை-2971566.html
2966906 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி அடுத்த வரி கவிதைமணி DIN Wednesday, July 25, 2018 03:36 PM +0530 அடுத்தவரி அன்பை   பரிமாறும்  வரி
அடுத்த வரி  ஆனந்தத்தைத் தரும் வரி

அடுத்த வரி  ஆச்சரியம்
ஊட்டும் வரி
அடுத்த வரி  அழ, சிரிக்க வைக்கும் வரி
அடுத்த வரி  எதிர்பார்க்கும் வரி 
அடுத்த வரி கேள்வி‌, கேட்கும் வரி
அடுத்த வரி தொடரும் வரி

- உமா ராணி

முதலில் எதை எழுத
அடுத்த வரி 
எப்படி இருக்கும் என்றெல்லாம் 
கவலைப்படாமல் 
கண்டதைக் கிறுக்கி 
கதை எழுதும் கயவர்களுக்கு 
எங்கே தெரியப் போகிறது? 
தமிழனின் அடையாளம் 
அடகு வைக்கப்படுகிறதென்று! 
பாட்டனுக்கு
எழுதப்படிக்கத்தெரியாது 
ஆனால் 
அடுத்த வரி தெரியும் 
அரசாங்க வரியும் தெரியும் 

- சுதா ஏகம்மை

எடுத்தவுடன் தொடக்க வரி
உன் நினைவில் தொடுத்தேன் ! 
அடுத்தக்கனம் அடுத்த வரி
என் உணர்வை  பிழிந்தேன் ! 
நான் தொடுத்த வரி அனைத்திலுமே
நம் பாசம் பிசைந்தேன் ! 
நீ அடித்தவறி விழுந்தாலும்_உன்
இதழ் அழைக்கும் அடுத்த வரி நானே!
என் வாழ்க்கை எனும் ஏட்டில் உன் பிடிதவறினாலும் 
என்றும் பிடித்த வரி.. என் நினைவில் அடுத்த வரி நீயே! 
நான் தொடுத்த கவிகளின் 
அடுத்த வரி அறிவேன்... 
இறை கொடுத்த வாழ்விலே
அடுத்த நிலை எவர் அறிவார்!! 
                             
- பவித்ரா ரவிச்சந்திரன், மேலூர் (மதுரை) 

அடுக்கும் அடுக்கலில் மிளிரும் அழகு
தடுக்கும் அடுக்கடுக்கில் திண்ணையாகும்
மிடுக்கும் அடுத்தடுத்த செயலில ஒளிரும்
நடுக்கலும் வரிவரியாய் மனதில் வலிக்கும்

முதல் வரியை அழகுறத் தாங்கிப் பிடிப்பதே
இதமான அடுத்தடுத்த வரிகளின் பொருளே
விதவிதமான பொருள்களை அடுக்கடுக்காக
பதமான வகை தருவது அடுத்தடுத்த வரிகளே

வரி முதலில் அழகாயிருந்தால் போதாது
விரியும் அழகில் அடுத்தடுத்த வரிகளும்
புரியும் வண்ணம் பொருள் தந்து விளங்க
சரியான சந்தங்களில் சிந்து பாட முடியுமே

கொடுத்த தலைப்பை உணர்ந்து முதல் வரி
அடுத்த வரி அதைத் தொடர்ந்து செல்லுமழகு
அடுத்தடுத்த வரிகளும் தொடர கவிதையும்
தொடுத்த முல்லையாய் மணம் வீசிடுமே

எடுத்த முதல் வரி சொல்லும் கருத்தெல்லாம்
அடுத்தடுத்த வரிகளிலே புதிராகத் தெரிய
அடுத்த வரிகள் செழுமையாய் கட்டமைந்து
மிடுக்காகக் கவிதை வெற்றிநடை போடுமே 

கவிஞர்  ராம்க்ருஷ்

ஆண்டவன் மீதே பாடினாலும்
அடுத்த வரி இன்பவரம்தா என்றுதானே
இயம்புகின்றோம்?!

தந்தைக்குக் கடிதம்
தப்பாமல் எழுதும்போதும்
தனக்கு வேண்டியதெல்லாம்
அடுத்த வரியில்
எழுத மறந்ததுண்டோ?!

பொய் உரைக்கத் தொடங்கி
பொதுவில் வெறுப்பைத் தந்தாலும்
அடுத்த வரியில்
காதலுக்கும் காதலிக்கும்
அன்பு காட்ட மறந்ததுண்டோ?!

அடுத்துவரும் வரிகள் எல்லாம்
அகத்தைக்காட்டும்
அவளது முகத்தைக்கூட
மறவாமல் முழுநிலவாய்
வர்ணிக்க மறந்ததுண்டோ?!

ஒரே வரியில்
எழுத வந்த கவிஞர்கூட
அடுத்த வரியை
அற்புதமாய் அமைத்து விட்டார்
முதலும் முடிவுமாய்
அவள் வந்ததினால்
அடுத்த வரியை
தலைப்பாக அமைத்து விட்டார்.

- புலவர் நரசிம்ம சுப்பிரமணியன்.. சிறுமுகை

உள்ளத்தே உதித்த எண்ணத்தை எழுத்தாக்கி
பள்ளத்தே பாய்ந்தோடும் அருவி போல்
சலசலவென படைப்பதுதான் கவிதை!
முதல்வரியை முடித்தபின் அடுத்தவரி அசைபோடாது
அடுத்து வரின் அனைவருக்குமே வசப்படும் கவிதை!
எழுத்துக்களை கோர்க்கையில் எண்ணத்தில் குழப்பமிருந்தால்
வழுக்கி விடும் வார்த்தைகள்!
பழகிவரும் தமிழ்ப்பாக்கள் தந்திடுமே நல்பயிற்சி
அழகாக உருவாகிடுமே மணியான கவிதை!
முதல் முதலாய் கவிதை படைக்கையில் எழுத்துக்களில்
மோதல் கூடாது! பிழைபடவே எழுதிடவே எழுத்துக்
காதல் நிறைவேறாது!
அடுக்கடுக்காய் சொற்கள் அலைமோதி தொடர்ந்திடவே
இடுக்கண் வராது!
முதல்வரியை எழுதிடும்போதே பிறந்திடவேண்டும் அடுத்தவரி
முதல்வரியை பின் தொடரும் அடுத்தவரிகளாலே
அழகாக அலங்கரிக்கும் கவிதை  தன்னாலே!

- நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

இதுவரை சொல்லாத கருத்தை 
சொல்லத் துடிக்கும் 
பிரசவ வலியோடு 
பிறக்குது அடுத்த வரி!

வருவாயைப் பெருக்குவது 
அரசின் அடுத்த வரி!
வாசகனைப் பெருக்குவது 
எழுத்தாளனின் அடுத்த வரி!

அடுத்தவர் துயர் துடைத்து 
உவகை கொடுத்து 
உலகையே புரட்டும் 
நெம்புகோல் வரியே!
தலைவனின் அடுத்த வரி!

போராளியின் அடுத்த வரியில் 
புரட்சிகள் வெடிக்கும்!
அகிம்சாவாதியின் அடுத்த வரியில் 
அன்பு மலை போல் செழிக்கும்!

அடுத்த வரி
அடுத்தவர் வரியானால்
திருட்டு!
அடுத்த வரி 
அடுத்தவருக்கான வரியானால் 
அடுத்தவரை திரட்டும்!

ஒவ்வொரு எழுத்தாளனின் 
உன்னத வரி! 
அவனது முந்தைய வரியை வெல்லும் 
அடுத்த வரியே!

- கு.முருகேசன்

தண்ணீரின் அடுத்த வரி 
புண்ணியனே உன் கையில் 
போதுமென்ற அளவுக்கு - நீரை 
பொறுப்பாக பயன்படுத்து 

பூமியின் அடுத்த வரி 
சாமியே உன் கையில் 
நெகிழியை இட்டு நீயும் -அதை 
நாளும் கெடுத்திடாதே 

இயற்கையின் அடுத்த வரி 
இறைவா உன் கையில் 
செயற்கையை தள்ளி வைத்து 
இயற்கைக்கு கை கொடுப்பாய் 

அடுத்த தலைமுறைக்கு 
அடுத்த வரி வேண்டாமா 
அவருக்காக வைத்திடுங்க 
அருமையான வளங்களையும் 

சொத்து மட்டும் போகாது 
சுகம் கூட வேணுமய்யா 
சுகம் நமக்கு வேணுமுன்னா 
சுத்தமிங்கே வேணுமைய்யா 

-பார்.விஜயேந்திரன், கடலூர்

                                                  
'இதயம் தேடும் அன்பைப் போல
இரவைத் தேடும் நிலவை போல'
முதல்வரி உதயமானது, அடுத்தவரி
'உன்னைத்தேடி வந்தேன் நான்' என்றது.
'நீ மாற்றாருக்கு மணவரை கண்டால்'
ஏக்கத்தோடு முதல்வரி தோன்ற
'நான் காதலோடு கல்லறை செல்வேன்'
விரக்தியாக முடிகிறது அடுத்தவரி
'அங்கும் உடல் மட்டும் மண்ணோடு வாழும்’
வெறுமையில் முதல்வரியை ஆரம்பித்தவர்
'என் மணம் (வாசம்) உன்னோடு வாழும்!
விரக்தியோடு அடுத்தவரி அமைகிறது!
வேறு:-
'உனக்கு ஒன்றுதெரியுமா?நட்புக்குள் காதலிலை
என்றேதான் முதல் வரியை துவங்கினார்
அடுத்த வரியில் காதலுக்குள் நட்புண்டு'என்றார்                          
'காதலிலை' தோழனாய் எனை விட்டு
சென்றாலும் அது    
நிஜத்தைவிட்டு விட்டு வந்த நிழ்ல் போல
என்றமைத்தார் அடுத்தவரியில்!
அவனும் அவளும்தான் செய்த தவறுக்கு
என்று துவங்கிய கவிஞர் அடுத்தவரியில்
தண்டனை குழந்தைக்கு குப்பைத்தொட்டிஆனது
இலக்கியமுகம் இலக்கணமும் தெரியாதன்
ஏடெழுதல்                         
துவங்கியவர் அடுத்தவரியில் 'கேடுநல்கும்' என்றார்

- கவிஞர் அரங்க கோவிந்தராஜன், ராஜபாளையம் 

எழுத்துக்கள் கோர்வையாக ஊர்வலம் போய் கடைசியில் கால்புள்ளி, அரைப்புள்ளி கடக்க சிலபோது ஆச்சரியமும் தாண்டி அடுத்த வரியாய் மறுபிறப்பெடுக்கின்றன.
வினவு தலாய், தேடுதலாய் நகரும் வாழ்க்கைக்கு, வெளிச்சமிட்டுக் காட்டும் நம்பிக்கை வரிகள், சிலர் - கம்பரின் வரிகளுக்கும் ஷெல்லியின் வரிகளுக்கும், வியந்து விழுந்து
ரசிக்க - பாரதியும் குறளும் விலக்கல்ல, உயிர்களைப் போன்றே எழுத்துக்களும் ஜனிக்கும், இப்பிறவியில் செய்ய முடியாத ஏக்கம், மறு முறை தீர்க்க எண்ணும், சொல் -
செயலாக, செயல் விளைவாக காரண காரியங்களுடன் எல்லாமும் நிகழ, இதெல்லாம் பேத்தல் என்று ஆத்திகம் மறுத்து, வாழ்ந்தாலும் அடுத்தவரி- யாரென யாருக்கும்
புரிவதில்லை, இவ்விதம் எழுதுபவனும் இருப்பதில்லை, இன்னொரு நாளில், உயிர்த்தலும் - மரித்தலுமாக - எல்லாம் நடக்கிறது - மௌனமாக, வாழ்வும் -எழுத்தும்
அடுத்தவரி யாதென யாரோ நடத்த அதை காலம் தீர்மானிக்கிறது, எல்லாவற்றையும் ஜீரணித்தவாறு

- செந்தில்குமார் சுப்பிரமணியன்

போதையில் காளையர் புறம்போக்கியாவது
மமதையில் கன்னியரின் கற்பைக் களைப்பது 
பெருங்கல்வி கற்றும் அறிவுகற்புடன் திகழாது
பொருளீட்டும் போதையில் பெண்மை போக்குவது

நெறியில்லா நேர்மையிலா வாழ்வு வாழ்வது
பறித்திடும் பிணியில்லா புகழில்லா வாழ்வை
கண்டதே காட்சியன்று, கொண்டே கோலமென்று
தண்டமாய் வாழ்வது வாழ்வா? வாலிப வயதினரே!

அட்டூழியம் செய்து அடுத்தவனை அடித்துச் சேர்ப்பது
மக்கள் அரசு வரி ஏய்ப்பு, அரசினர் மக்களை ஏய்ப்பது 
பண்டங்கள் சேர்த்தாலும் பசிக்குண்பார் சிலரன்றோ! 
பிண்டமளவுகூட உண்ணயிலா, பிணிபல உளதினால்

அடுக்கிவைக்கும் அலமாரி நிறை உடுப்புகளில்
எடுத்து ஒரு முறை அணிவது ஓர் உடுப்புதானே 
அடுத்த வரி ஆண்டவன் என்ன எழுதியுள்ளனோ?
படுத்தால் தவிப்பில்லாது உயிர் போகுமா! யோசிப்பீரே!

எழுத்தை சேர்த்து அசையாக்கி
அசையை சேர்த்து சீராக்கி
சீரை தொடுத்து தளையாக்கி
தளையை தொடுத்து அடியாக்கி...

அடியை தொடுத்து தொடையாக்கி
எதுகை, மோனை தொடுத்து மிக எளிமையாக்கி
இயைபை கொண்டு இயல்பாக்கி
இரட்டைக்கிழவி,அடுக்குத்தொடர் கொண்டு அழகாக்கி...

இவை அனைத்தையும்  கொண்ட 
கன்னித்தமிழில் எழுத தொடங்கினாள் 
வரிக்கு வரி யோசிக்காமல் அடுத்த வரியை 
அற்புதமாகவும் அழகாகவும் எழுதலாம் அன்னைத்தமிழில்.

- க.முனிராசு

புத்தியை தீட்டும் தகவல்கள்
புத்தகஙகளில் இருப்பதாக சொல்லி 
வாசிக்கும் பழக்கத்தை
நேசிக்க வைத்தார் எமது தந்தையன்று !
நேற்றைய தினம்
சற்றே கிடைத்த பொழுதில் 
புதிதாக வாங்கிய
புத்தகத்தை புரட்டினேன் .
ஒரு சில வரிகள்
ஓராயிரம் உணர்வுகளைத் தரும் என்றால் அது மிகையில்லை !
ஒரு வரி .........
நல்ல புத்தகஙகளை சுவைக்க வேண்டும் .!
அடுத்தடுத்த வரிகள் ..........
சில புத்தகங்களை விழுங்கி விடவேண்டும்.!
சிலவற்றை நன்றாக மென்று செரிக்கவிட வேண்டும் .!
புத்தங்களைப் பற்றிய
இத்தகைய அருமையான வரிகள்  எந்தன்
எண்ணங்களை நிறைத்ததால்
 உணவு உண்ண மறந்தது   உண்மை !

- ஜெயா வெங்கட், கோவை

ஒரு கருப்பு மேகத்துக்குள்ளும்
மெல்லிய காதல் –
கற்பனையும் மொழியும் சுழன்று
கவிதை ஒன்றின் தொடக்கம் –
பூமியில் எந்தப்பெண்
வேண்டுமென்று,  
முதல் வரியை
வானத்தில்
“மின்னலாய்” எழுதி,
அடுத்த வரியை
மழைத்துளியால்
நிலத்தில் எழுதுகிறது ?    

- கவிஞர் டாக்டர்.  எஸ். . பார்த்தசாரதி - MD DNB PhD, புதுச்சேரி

முதல் வரி எழுதும் பொழுதே
உன்னை பற்றிய சிந்தனை
முத்து முத்தாய் எழுகிறதே..
முந்தானையால் மூடி மழையிலிருந்து
காத்தது முதலாய் முட்டி
மோதி வார்த்தைகள் போட்டி
போட்டு வரிந்து கட்டுகிறதே..
அடுத்த வரி ஆரம்பிக்க
ஆர்பாட்டமாய் அணிவகுக்கின்றதே..
தாய்மையையும் காதலையும்
தரமாக தூயதாய் தத்து
அற்று தனகுடன் அளிக்கின்றவளே..
அடுத்த அடுத்த வரிகள்
என அணிவகுத்தாலும்
அவை போதாது உனை போற்ற..

- ப.க.நடராசன்

பேச்சில் கவனம் தேவை
எடுத்தெறிந்து பேசும்
அடுத்த வரி
தடுத்துவிடும் உறவுகளை
மட்டுமல்லாமல் 
நல்ல நட்புக்களையும்தான்!
அடுத்த வரி 
என்ன பேசப்போகிறார்
என்ன ஆவலை துண்டுபவர்
திறமையான பேச்சாளர்!
அடுத்த வரி 
பேசுவதில் ஆர்வம் 
காட்டி பிள்ளைகளை 
தன்னிடம் இழுப்பவர்
திறமையான  ஆசிரியர்!
அடுத்த வரி
யோசிக்காமல்  பேசுபவன்
அவசரக்காரன்!
அடுத்த வரி 
யோசித்து பேசுபவன்
பொறுமைசாலி!
பொறுமைசாலியாக இருப்போம்
அருமையான  வெற்றிக்கனியினை 
பெருமையுடன்  சுவைப்போம்!

- உஷா முத்துராமன், திருநகர்

அடுத்த வரி
 
போகத்தி லுறைந்த
போசனப் பிரியரே!
யோக மறிந்து
யோகங் கொள்க!
யாகத்தின் பயன்
யாவு முன்னை நாடும்
தானத்தின் பெருமை
தரணியில் சிறக்கும்
மோகன விழியை
மோதி யெரித்து
மோதகங் கொண்ட
மூஷிக வாகனை நாடு
முழுது மறிவாய்
முக்தியின் பேற்றை;
வாமன வடிவும்
விருட்ச மாகும்
விருட்சங் கூட - கவி
விருத்தமாகும்;
நம்பியாண் டானின்
வேள்வி தீபோல் - உன்
நம்பிக்கைக் கூட்டிட
தும்பிக்கை வரும்
துயரினைத் துடைத்திட
அடுத்த ஒலியாய்;
ஆனந்த ஊற்றாய் - நீ
துதிக்கையில்
துதிக்கை தாங்கி
கைலையி லேற்றும்......

- ப.வீரக்குமார், திருநின்றவூர்

அடுத்தவரி எதுவருமென அலருகின்ற நிலைதனிலே
நடுத்தர மக்களின்று நாட்டினிலே!--கெடுமதியர்
ஆட்சிதனில் காண்பதெலாம் அவலமின்றி வேறில்லை;
வீட்டுக்கு அனுப்பவே விழை!

அடுத்தவரின் வரிப்பணத்தில் அகிலமதைச் சுற்றிடுவோன்
படுதோல்வி தனைகாணப் பார்த்திடலாம்!--கெடுதலே
மிகுந்ததவன் ஆட்சிதனில்,மீளுமோ நாடிதுவும்;
பகுத்தறிவு தனைகொண்டுப் பார்!

- அழகூர்.  அருண்.  ஞானசேகரன்.

ஆவலைத் தூண்டிய உன் கடிதத்தின் 
அடுத்த வரியை 
மீண்டும் மீண்டும் பார்த்தாலும் 
அதில் தொனிப்பது காதலா நட்பா 
என்று தெரியாதவாறு 
மிக சாமார்த்தியமாக 
உன் மனதை மறைத்திருந்தாய்.
ஒன்று நினைவில் கொள்,
சந்திர சூரியரையும் பாயும் நதியால் 
நிகழும் காட்டாற்று வெள்ளத்தையும் 
உன் இரு கரங்களால் அணைக்க முடியாது,
ஆனால் என்னை அணைத்து இதயத்தை திறக்க இயலும்,
யாருக்கு இந்த உன் அரிதாரம்,
நிஜம் எது என சுட்டுகிறது - உன் கண்கள், 
ஆழ்மன ஒசையைச் சொல்லத் துடிக்கும் உன் உதடுகளை
நிஜமான அடுத்த வரியை சொல்ல விட்டு
உன் சந்தனப்பட்டு விரல்களால் எழுது
நம் நிஜமான நேசத்தை, 
இருக்கும் ஓர் வாழ்வில் ஏன் இத்தனை அரிதாரம்?
உன் அடுத்த வரிக்காக - திறந்த புத்தகமாய் நான்
மையற்ற எழுத்தாணியாய் நீ ,
மையல் கைகூடுமா? 
அடுத்த வரியால் என எதிர் நோக்கி இருக்கும்
காற்றில் பறக்கும் காகிதமாய் என் இதயம்.
எப்போது எழுத வருகிறாய்
எதார்த்தத்தை .? 
காத்திருக்கிறேன்.

- கவிதா வாணி

அடுத்த வரி எழுத ஐந்து நட்சத்திர ஓட்டலில்
அலங்கார அறை போட்டு அளவாய் மதுவருந்தி
அப்பொழுதும் சொல் வராமல் அப்படியே க்ளாஸ் கவிழ்க்கும்
அதிகாரக் கவிஞர் பலர் நம் திரைத்துறையில் மிகவுண்டு!

அடுத்தவரி யெழுத  அருகில்   அமர்ந்தெழுதும்
நண்பனின் விடைத்தாளை நயவஞ்சகமாய்க் கண்ணுற்று 
பயம்பாதி தன் நண்பனின் பதில் சரிதான வென்ற 
சந்தேகத்தினூடே சரியாய் எழுதாத மாணவர் பலருண்டு!

அடுத்தவரி  போட்டாலும்  அதனையும்  உடன்கட்ட 
ஐரோப்பிய நாட்டு  மக்கள்  அத்தனை  பேருமே 
மனமொப்பி அதுவேற்று மகிழ்வுடனே செயலாக்கம்
செய்வதினால் அவர்நாடு சிறந்தோங்கித் தழைக்கிறது!

அடுத்தவரி  யெழுத  ஆழமாய்  யோசிப்போர் 
இன்னும் பலரும் இவ்வுலகில் இருப்பதனால்
நல்ல கருத்துக்கள் நயமான விஷயங்கள் பல
உலகம் பெறுகிறது! உன்னதமாய் வாழ்கிறது!

-ரெத்தின.ஆத்மநாதன், சுவிட்சர்லாந்து

அடுத்த வரிக்கான சொற்கள்
அகப்படாத போது, கவிதை
அண்ணாந்து விட்டத்தைப்
பார்க்கிறதோ........

அலையும் புரளும்
அடுத்த வரி மனதிலேயே
கருக்கொள்ளுமுன்,
சிதைந்து போகிறதோ.....

அடுத்தவர் படைப்புக்குள்
அலசி, ஆராய்ந்து
அடுத்த வரி மீட்க
அலை பாய்கிறதோ......

தொடுத்த முதல்வரி
துவண்டு விழுமுன்,
அடுத்து வந்த வரி
அசை போடுகிறதோ......

அடுத்த வரி ஒன்றில்
அத்தனை கருத்தையும்
அடுக்கி வைக்கவியலாமல்
அரைகுறை ஆகிறதோ......

சுகமோ....சோகமோ...
சொல்லொணாத் துயரமோ
அடுத்த வரி ஒன்றில்
அமைதி அடைகிறதோ......

அடுத்த வரி விதிக்க
அரசு கற்பிதஞ்செய்ய.....
அடுத்து  வரும் தேர்தலில்
அடிகொடுக்க நினைக்கும் மக்கள்....

அடுத்த வரி அடுக்கி
விலையிலாப் பொருளால்
வசியஞ்செய்து
வசப்படுத்த நினைக்கும் கட்சிகள்....

ஆகப் பெரும்பாலும்
அடுத்த வரிக்கேங்கியே
அத்தனை கவிதைகளும்
குறைப் பிரசவமாய்ப் பிறக்கிறதோ......

அடுத்த வரி அறியாமலேயே
அடைவதற்கு விருதுகள்
அப்படியே காத்திருக்க....
அறிந்தாலும் என்ன.... அறியாமற்
ஆனாலும் என்ன......

- கவிஞர் "இளவல்" ஹரிஹரன், மதுரை

இயற்கையிடம்…
இம்மனிதன் என்பவன் யாரெனக் கேட்டேன்…
இறை படைப்பின் உச்சமென்றது…!
இறைவன் என்பவன் யாரெனக் கேட்டேன்…
இங்கு காணும் அனைத்துமென்றது…!

அன்னை என்பவள் யாரெனக் கேட்டேன்…
அன்பு என்பதன் உருவமென்றது…!
தந்தை என்பவர் எவரெனக் கேட்டேன்…
தியாகம் என்பதன் அடையாளமென்றது…!

நட்பு என்பது யாதெனக் கேட்டேன்…
நல்லதை மட்டும் நினைப்பதுவென்றது…!
உறவு என்பது யாதெனக் கேட்டேன்…
உறு துணையாய் இருப்பதென்றது…!

காலம் என்பது யாதெனக் கேட்டேன்…
கடந்து விட்டால் திரும்பாததென்றது…!
வாழ்க்கை என்பது யாதெனக் கேட்டேன்…
வாழ்பவை அனைத்தையும் ஓம்புதலென்றது…!

வெற்றி என்பது யாதெனக் கேட்டேன்…
விட்டுக் கொடுப்பதில் கிடைப்பதென்றது…!
அமைதி என்பது யாதெனக் கேட்டேன்…
அகத்தின் உள்ளே பார்க்கவுமென்றது…!

அடுத்தடுத்த வினாக்கள் எழுப்பிப் பார்த்தேன்…
அனைத்து விடைகளும் ஒற்றை வரியில்…!
அடுத்த வரியைச் சிந்தித்துப் பார்த்தேன்…
ஆழமாய் ஒன்றும் தோன்றிட வில்லை…!

- ஆ. செந்தில் குமார்.

 

முதல் வரி எழுதும்போது அடுத்த வரி 
அடுத்த வரி என வரிசை கட்டி என்
முதல் கவிதையை எழுதி முடிக்க வைத்த 
என் முதல் துடிப்பு இன்றும் என் கவிதை 
பயணத்தில் நல்ல ஒரு படகு துடுப்பு !

வரிந்து கட்டி எழுத வேண்டும் கவிதை..அது 
அடுத்தவரின் மனதை நோகடிக்காமலும் இருக்க 
வேண்டும்! ... படிப்பவரின் மனம் என்றும் 
மகிழ வேண்டும் என் கவிதை சொல்லும் 
நல்ல செய்தியில் !

அடுத்தவரின் துணை இன்றி நான் 
அடுத்த வரி அடுத்த வரி என்று தேடி 
அடுத்த கவிதை அடுத்த கவிதை என்று 
அதே முதல் துடிப்புடன் எழுத வேண்டும் என்றும் ! 

- கே.நடராஜன்

 

அடுத்த வரி தேவை
அழகாய்க்
கவிதை முடிவுற

இரவு வானத்தை
இறவாணத்தை
அண்ணாந்து பார்த்தபடியே இருக்கிறேன்

வெறுங்கையோடு திரும்புகிறேன்
கம்பன்
கடலில் மூழ்கியும்

அடுத்து அடுத்தென
மொட்டு விரித்துக்கொண்டே இருக்கிறது
முற்றத்து மல்லிகை
என்னை
ஏளனமாய்ப் பார்த்து

ஊர்வசியோ மேனகையோ 
ஊடுருவ முடியாத வெளியில்
உறக்கம் பசி மறந்து
தவம் கிடக்கிறேன்...
அடுத்த வரிக்காக

- கோ. மன்றவாணன்

 ஆண்டாண்டு காலமாக 
மண் சேற்றில் கால் வைத்து 
ஊருக்கெல்லாம் சோறு போட
உழைத்து உழைத்துக்களைத்த விவசாயி 
மனதுக்குள் மருகுகிறான்
வானமும் பொய்த்தது 
கிணறும் வற்றி விட்டது 
ஆற்றுநீரும் கிடைக்கவில்லை 
என் பாட்டன் பூட்டன் 
எம் குலத்துக்கென விட்டுப்போன 
மண்ணும் வீடும் பறிபோகிறது 
பாசத்துடன் வளர்த்த மரங்களும் 
வெட்டப்படவிருக்கின்றன  
என்னை படைத்த ஆண்டவன் 
என் தலையில் எழுதிய 
விதியின் அடுத்த வரி என்ன?

- ஆகர்ஷிணி 

அடுத்த வரி என்ன போடுவார்களோ? என்ற
அச்சத்தில் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்!

நின்றால் வரி நடந்தால் வரி என்றானது இன்று
நாடெங்கும் ஒரே வரி என்று முதுகெலும்பை முறித்தனர்!

சிறுதொழில்கள் எல்லாம் மூடுவிழா நடந்தது
பெருமுதலாளிகள் எல்லாம் கொள்ளை இலாபம் அடைந்தனர்!

உப்புக்கு வரியா ?  என்று  நம் காந்தியடிகள்
உணர்ச்சிப் பொங்கிட எதிர்த்துப் போராடினார்!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் வருமான வரி
அனேக ஊழியர்களுக்கு மார்ச் மாத ஊதியமில்லை!

வருமானவரியே செலுத்தாத பணக்காரர்கள் உண்டு
வருமானவரி அலுவலகம் கண்டுகொள்வதே இல்லை!

உண்மையாகவே வரி செலுத்தும் அரசுஊழியர்களிடம்
ஒன்பது கேள்விகள் வேறு கேட்பார்கள்!

சாப்பாட்டிற்கு வரி செலுத்தும் நிலைவந்தது இன்று
சாமானியர்களும் வருந்துகின்றனர் இந்நிலை கண்டு !

வரி வரி திரும்பிய பக்கமெல்லாம் வரி என்றானது
வரியின்றி எதுவுமில்லை என்றானது நிலை இன்று !

வீட்டு வரி குழாய் வரி சாக்கடை வரி மட்டுமல்ல
விற்றால் வரி வாங்கினால் வரி என்றானது இன்று!

இன்னும் சில நாளில் பாருங்கள் இது நடக்கும்
இனி மூச்சு விடுவோரெல்லாம் வரி செலுத்திட வேண்டும்!

அந்த வரி இந்த வரி எங்கின்றனர் விற்போர்
எந்த வரி புரியாமலே செலுத்துகின்றனர் வாங்குவோர்!

அந்நியன் ஆண்டபோது கூட இவ்வளவு வரி இல்லை
இந்தியன் ஆளும்போதும் தான் இவ்வளவு வரித்தொல்லை!

அடுத்த வரி என்ன போடலாம் என்று தினமும்
ஆள்வோர் சிந்தித்து தொடர்ந்து வரி போடுகின்றனர்! 

துபாய் சென்று பாருங்கள் வரியே வாங்குவதில்லை
துபாய் போல மாறுங்கள் வரியிலிருந்து விடுதலை வழங்குங்கள்!

வரிப்புலியினைப் போலவே பொதுமக்களை நாளும்
வாட்டி வதைத்து வரும் வரிகளை ஒழியுங்கள்!!

- கவிஞர் இரா .இரவி

 

வரிக்குதிரை  எனும்விலங்கைப்  பார்த்த  துண்டு
    வரிநாட்டைப்  பார்த்ததுண்டா?  நம்நா  டன்றி
வரிசையாகச்  சாலையோரம்  மரங்கள்  நட்டு
    வளர்த்துநிழல்  அசோகன்தான்  தந்தா  னன்று
பரிசாகக்  கவிஞர்க்கே  ஊர்கள்  தம்மைப்
    பட்டாவாய்  மன்னர்கள்  தந்தா  ரன்று
உரிக்கின்ற  ஆட்டுத்தோல்  போல  இன்றோ
    உரிக்கிறது  வரிகளாலே  நம்நாட்  டாட்சி !

ஈட்டுகின்ற  வருவாயின்  தொகையைக்  கூட்டி
    இடுகின்றார்  வருமான  வரியாம்  என்றே
கூட்டிவரி  பறித்தபின்பும்  கடைக்குச்  சென்று
    கூறியொரு  பொருள்தன்னை  வாங்கும்  போதோ
போட்டுவரி  நம்மிடமே  வாங்கு  கின்றார்
    பொருள்தன்னை  விற்பதற்கு  வரியாம்  என்றே
மாட்டிற்கு  மூக்கிலிடும்  கயிறு  போல
    மக்களுக்கு  வரிக்கயிற்றை  இட்ட  தாட்சி !

மரம்தன்னை  நடுவதற்கும்  வரியாம் !  அந்த
    மரம்பூத்தால்  பூவிற்கும்  வரியாம் !  அந்த
மரம்பூத்த  பூ கனியாய்  மாறும்  போது
    மறுபடியும்  அக்கனிக்கு  வரியாம் !  அந்த 
மரக்கனியோ  விற்பகைக்கு  வந்தால்  அங்கும்
    மறக்காமல்  போடுகின்ற  வரியைப்  போன்றே
அரசின்று  உருவாகும்  ஒருபொ  ருள்கே
    அடுத்தடுத்து  வரிபோட்டே  கொல்லு  தந்தோ !

- பாவலர் கருமலைத்தமிழாழன்

ஓவ்வொரு வார்த்தைக்கும் 
அர்த்தம் உண்டு அழகும் உண்டு
தாக்கமும்  வாசமும் உண்டு
அடுத்த வரி எதிர்கால தேடல் 

பாசத்தில் நிறைவு கண்டு முதல்
வரியை எழுதிவிட்டால் ஆக்கமும்
தேடலும் கூடி விடுகிறது  அடுத்த
வரி  எதிர்பார்ப்பின் வெளிப்பாடு

காதலில் இன்பம் கண்டு மனம்
திளைத்துவிட அனுபவத்தை
எழுதினால் அடுத்த வரி ஈர்ப்பு
இன்பம் எதிர்கால ஆனந்தமே 

இயற்கையின் அழகை ரசித்து
விட்டு அதை கவிதையாக்கி
கொடுக்கும் போது அடுத்த வரி
ரசிப்பாகும் அது  புதுமையாகும் 

தாய்மண்  வாசனையை நுகர்ந்து
விட்டு அதன் அருமையை நல்
பெருமையை   உணர்ச்சி   பட
கொடுக்க அடுத்த வரி சிலிர்ப்பு 

கடல் அலையின் அழகை ஓசை
ஆர்ப்பரிப்பை கேட்டு விட்டு
அழகாக படைப்பின் ரகசியத்தை
சொல்ல அடுத்தவரி புரியாதபுதிர் 

கல்வியின் மேன்மையை திறம்
பட உணர்த்திவிட்டு அடுத்தவர்
பயன்பெறகல்வியை உரைத்திடும்
அடுத்த வரி கலையே காவியமே 
வரிக்கு வரி ஆளுமை திறமை
மெருகு அழகு என்று தீட்டிட
அடுத்த வரி கல்வெட்டு  காலப்
பொக்கிஷம்  எதிர்கால வரலாறு

 
- சீர்காழி .ஆர்.சீதாராமன்

அடுத்த வரியை
வாசிக்கும் ஆர்வத்திலேயே
தொடர்கிறது
கவிதை வாசிப்பு. 

ஒன்றை எழுதும் போது
உருவாகி விடுகிறது மனதில்
அடுத்த வரி. 

அடுத்த வரி
அதற்கடுத்த வரி என
முற்றுப் பெறாமல்
நீண்டு கொண்டேயிருக்கிறது
படைப்பு. 

அடுத்த வரியை
எழுதுவதிலேயே இருக்கிறது
ஒரு படைப்பாளியின்
ஆளுமை. 

அடுத்த வரி
எதுவென தெரியாமலே
முற்றுப் பெறுகிறது
இத்துடன்
இந்தக் கவிதை. 

- பொன். குமார், சேலம்

முதல் வரி எப்படி தொடங்குவது என்று தெரியாமல் பரிதவிக்கிறேன், இதில் எப்படி அடுத்தவரி தொடங்குவது என்று நினைத்தேன். 

நினைத்த நேரத்தில் நீ என்று தொடங்கினேன். 

நீ மட்டும் முதல்வரியாக இருக்க, அடுத்தவரியாக நான் நின்றேன் நின்றது அடுத்த வரிக்கு பிடிக்காமல் போக. 

நின்றேன் காதல் வரிகளோடு, அதில் ஒரு வரி கவிதை உன் பெயர்தான் என் ஆருயிரே ... 

- ந. அருள்செல்வன்

காகிதத்தில் காணும் 
வரிகள் மட்டமல்ல
இதழ்கள்  பிரிந்து
பேசும் வார்த்தைகள் 
ஒலிக்கும் வரிகளே !

கவிஞனின்
முகவரி தேடிய கவிதை 
அடுத்த வரிக்காக 
காத்துக் கொண்டிருந்தது 
கவிஞன் எழுதுகோல்...

குருவின் பார்வையில் 
ஆழ்தியானத்தில் வரும் 
அடுத்த வரிக்காக 
அமைதியாக சீடன்
அமர்ந்திருந்தான் !

காதலன் 
அனுப்பும் குறுஞ்செய்தியில் 
அடுத்து அடுத்து வரும்
வரிச் செய்திக்காக 
காதலி கைபேசியில் 
வழிமேல் விழி வைத்து
காதல் மொழிக்காக
காத்துக் கொண்டிருந்தாள் ! 

காதலி கவிதாவிடம் 
கவிதா! ‘கவி தா’
கவிதை வரியில் 
காதலன் விளையாடினான் !  

- பொன்விலங்கு பூ.சுப்ரமணியன், வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்

அடுத்தவரி கிடைக்காமல் அல்லாடும் கவிகளுக்கு
 அருந்தமிழில் எடுத்துதவ அரிதான பெண்கவிகள்.!
எடுத்துக்காட் டாயதிலே எங்கும்கால் பதித்திருப்பார்
 எப்போதும் மறையாத எழுத்துக்கள் தந்திருப்பார்.!

கொடுந்தமிழில் கவிதைவரி கெடுபிடியாய் இல்லாமல்
 கொஞ்சுமொழி தமிழிலவர்க் கவிக்கழகுச் சேர்த்திடுவார்.!
அடுக்கடுக்காய் உதித்தபல ஆயிரமாயிரம் கவிஞர்கள்
 ஒளவைமுதல் ஆவுடையக் காள்வரையி லுண்டாமே.!

அடுப்பூதும் பெண்களெலாம் அருங்கல்வி அறிவுபெற
 அவசியமும் இல்லையென அவமதித்துச் சொன்னார்கள்.!
எடுத்துகாட்டாய் இனியவர்கள் எல்லாத்து றையிலுமே
 எழிலொடின்று சிறப்புற்று ஏற்றமுற நிற்கின்றாரே.!

இடுப்பொடிய வேலையின்றி இனிக்கின்ற இல்லறமும்
 இகம்சிறக்க வல்லதுவும் இன்றுமவர் துலங்குகிறார்.!
தடுப்பையெலா மூதிவிட்டுத் தங்குதடை யேதுமின்றி
 தனித்திறமை பெற்றங்கு தரணியெலாம் விளங்குகிறார்.!

ஒருவரியில் சொல்லியதை அடுத்தவரி முடித்திட்டு
 உலகத்தில் உள்ளவற்றை ஒடுக்கிவிட்ட ஒருவனேதான்.!
திருவள்ளு வனென்பனவன் தெவிட்டாத புலமையிலே
 திளைக்காமல் எழுதிவிட்ட தேனின்பச் செம்மொழியில்.!

அருங்கலையாம் எழுதுகலை ஆண்டவனே அருளியது
 அரிதாகத் தெரியவில்லை அருவிபோலக் கொட்டியது.!
இருக்கின்ற கவிகளுக்குள் இமயயெனச் சிறந்தவனாம்
 இவ்வுலகிற் கெடுத்துரைத்தான் இனியகவி பாரதியும்.!

- பெருவை பார்த்தசாரதி

அடுத்த வரி அதற்குள்ளா?
ஜிஎஸ்டியே இன்னும் சீராகா வேளையிலே
இன்னுமொரு வரி விதிப்பா?
இந்தியர்கள் தாங்குவரா?!
எத்தனைதான் அடித்தாலும்
எப்படியோ தாங்குகிறான்
என்றே பாராட்டி...
ஏகமாய் உதைகொடுத்து...
அனுப்பியபின் வடிவேலு 
அழுது கொண்டே சொல்வாரே!
அந்தக் கதையிங்கு...
அடிமனத்தை நெருடிவரும்!

அடுத்தவரி கவிதைக்கு...
அன்பே உன் கண்களன்றோ...
வார்த்தை நீர் சுரக்கும்
வற்றாத நீர்வீழ்ச்சி!
கண்களைச் சிமிட்டாமல்
கண்ணே எனை நிமிர்ந்து...
கொஞ்ச நேரம் பார்!
குவலயமே வியந்து போற்றும் 
காவியத்தை உருவாக்கி...
கலையுலகில் உலவ விட்டு...
உன்மடியில் தஞ்சம்புக
ஓடியும் நான் வருகின்றேன்!

- பெருமழை விஜய், காட்டிகன்,சுவிட்சர்லாந்து

கண்டதை படித்தால் பண்டிதனாவான்
            கண்டதை தின்றால் பைல்வானாவான்
என்பதை உணர்ந்தே என் பாட்டனார்
            இயல்பாய் அறிவை வளர்த்துக்கொண்டார்
அதிக விஷயங்களை தெரிந்தவர் ஆனால்
            ஆரம்பப்பள்ளியில் படித்ததுள்ளார் அவ்வளவுதான்
அவரிடம் இது பற்றி கேட்டறிந்து கொண்டோம்
              அடுத்தவரி டம்கேட்டே அனைத்தையும் அறிந்தாராம்!

அடுத்தவரிடம் கேட்டு பரிட்சை எழுதக்கூடாது
              ஆனால் ஆட்சி செய்யலாம் ஆற்றலுடன்
அடுத்தவரி டம்கேட்டே அட்சியில் மிளின்றார் முதல்வர்
              அவருக்கு எல்லாம் தெரியாது சொன்னால் கோபம் வரும்
அடுத்தவரி டம்கேட்டு பரிட்சை எழுதியள்ளார்   
               ஐ ஏ எஸ்  ஆயி உள்ளார்  பலபேர் இன்று
அடுத்தவரி டம்கேட்டு அறிந்தே வியாபாரம் செய்தவர்
                அனுபவத்தால் உயர்ந்துள்ளார் வியாபாரத்தில்
        
அடுத்தவரி டம் கேட்டே சுச்சுமம் சூப்பர்  சிங்கர் ஆகிறார்
             அடுதவரிடம் கற்று செய்பவர்தனே அகிலம்முழுது முள்ளார்

- ஜி. சூடாமணி, ராஜபாளையம்


மரகதந் தரித்த
மண் மகளின்
குணமிகு கொண்ட
குமரி களின்
ஏகாந்தந் தவிர்த்து
காந்தமாயி ணைத்து
சரிநிகர் சமத்துவம்
சரியாய் தந்து
ஆச்சாரம் பகரும்
ஆச்சரிய மென்று
மெஞ்ஞானம் பரப்பும்
மெய் வாலை யென்று;
பூப்பதும் காய்ப்பதும்
பெண்மையி னியல் பென்று
பூரிப்பு முப்பும்
பெண்மையி னிலக்கணம்;
இயற்கையும் பெண்மை தான்
இயல்பினி லொன்றுதான்
இடும்பைக் குறைத்தால்
கரும்பா யினிக்கும்
கரும்பாய் நினைத்தால்
காவிரி பொங்கும் - அடுத்தது
பெண்ணும் மண்ணும்
புவியின் சொத்து
புரிந்து பார்;
புகழு முன்னை
பாதுகாப்பாய்
கடைசி வழியாய் - இராமன்
கணை தந்த வழியாய்.......

- முகில் வீர உமேஷ், திருச்சுழி

சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளும்
சிறுவன் எந்த நொடி விழுவான்
எந்த நொடி எழுவான்?

புயல் காற்றில் ஊசலாடும்
மொட்டை மாடிக் கொடி கயிறு
அறுந்து விழுமா? விழாதா?

வெட்டி வீழ்த்தப்படாமல் மரங்கள் 
சாலையோரம் பூத்திருக்கும் காட்சி
கனவா? நிஜமா?

புல்தரையில் வெகுதூரம் நடந்த
நினைவில் இன்னும் ஈரம் 
இருக்குமா? மறக்குமா?

ஞாபகச் சிமிழுக்குள் புதைந்த
தொலைந்த உறவொன்றின் துயர் 
நீங்குமா? தொடருமா?

வெகு நேரம் விழித்திருந்து
எழுதிய இக்கவிதையின் அடுத்தவரி
சரியா? பிழையா?

- உமா

]]>
Poem, கவிதை, kavithaimani, கவிதைமணி, அடுத்த வரி, next line http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/24/w600X390/1_42ebJizcUtZBNIZPmmMZ5Q.jpeg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/24/அடுத்த-வரி-2966906.html
2966907 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி இந்த வாரத்திற்கான தலைப்பு: ‘முதல் தனிமை’ கவிதைமணி DIN Tuesday, July 24, 2018 06:17 PM +0530 'அடுத்த வரி’ என்ற தலைப்பிற்கு கவிதை எழுதி அனுப்பிய கவிஞர்கள் அனைவருக்கும் நன்றி..! இந்த வாரம் நீங்கள் எழுத வேண்டிய கவிதைக்கான தலைப்பு: முதல் தனிமை

 

உங்கள் கவிதைகளை kavidhaimani@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். 12 வரிகளுக்கு மிகாமல் கவிதை இருத்தல் நலம். உங்கள் கவிதைகளை யூனிக்கோடு எழுத்துருவில் டைப் செய்து மேற்கண்ட மின்னஞ்சலில் வரும் சனிக்கிழமைக்கு முன்பாக அனுப்ப வேண்டுகிறோம். கவிதைகள் திங்கள் முதல் புதன்கிழமை வரை வெளியிடுவோம்.

]]>
poem, poetry, first loneliness, http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/24/w600X390/maxresdefault_1.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/24/இந்த-வாரத்திற்கான-தலைப்பு-முதல்-தனிமை-2966907.html
2962677 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Wednesday, July 18, 2018 11:20 AM +0530  

மழையே மழையே
மகிழ்ந்து மகிழ்ந்து 
குழந்தைபோல் விளையாட  
விண்ணுக்கும் மண்ணுக்கும் 
ஏணி அமைக்க வா !

மழையே மழையே 
பகலவன் சூடு தணிய 
விண்ணில் விளையாடும் 
கருமேகமே மழைத்துளிகளை
மண்ணுக்கு மலர்போல் 
இரவில் அள்ளி வீசு !

மழையே அந்தி மழையே 
விண்ணில் சிந்து பாடி 
மண்ணில் நொந்த உயிர்கள்
மகிழ்ந்து வாழ – நீ 
மண்ணில் வந்து விளையாடு !

மழையே இரவு மழையே 
மண்ணில் நீ வீழ்ந்தால் 
மரம் செடிகொடிகள் 
மகிழ்ந்து தலையாட்டும்
விண்ணில் தோன்றும் 
முழுநிலவு மறைந்து
நின்று குடை பிடிக்கும் !

இரவில் 
பெய்யும் மழைத்துளிகள் 
ஏழையின் குடிசையில்
தலையாட்டும் மண்பானையில்
இனிய ஜலதரங்கம் 
விடிய விடிய இசைக்கும் !
 
- பொன்விலங்கு பூ.சுப்ரமணியன் 
வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/18/w600X390/DSC_0013.JPG http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/18/மழை-இரவு-2962677.html
2962030 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி இந்த வாரத்திற்கான தலைப்பு: ‘அடுத்த வரி’ கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 05:53 PM +0530 'மழை இரவு’ என்ற தலைப்பிற்கு கவிதை எழுதி அனுப்பிய கவிஞர்கள் அனைவருக்கும் நன்றி..! இந்த வாரம் நீங்கள் எழுத வேண்டியகவிதைக்கான தலைப்பு:

 

உங்கள் கவிதைகளை askdinamani@dinamani.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். 12 வரிகளுக்கு மிகாமல் கவிதை இருத்தல் நலம். உங்கள் கவிதைகளை யுனிக்கோடு எழுத்துருவில் டைப் செய்து மேற்கண்ட மின்னஞ்சலில் வரும் சனிக்கிழமைக்கு முன்பாக அனுப்ப வேண்டுகிறோம். கவிதைகள் திங்கள் முதல் புதன்கிழமை வரை வெளியிடுவோம்.

]]>
kavithaimani, dinamani, கவிதை, கவிதைமணி, அடுத்த வரி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2013/1/11/10/w600X390/books.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/இந்த-வாரத்திற்கான-தலைப்பு-அடுத்த-வரி-2962030.html
2962028 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 05:46 PM +0530  

மழை......இது பெய்யாவிடில்
தழைக்காதே ஞாலம்!
உழைக்கும் வர்கம் 
அயர்ந்து உறங்கும் 
இரவு நேரத்தில் 
"சோ" என இரைச்சலுடன் 
பெய்யும் மழை 
அவர்களுக்கு தாலாட்டு!
அடித்து பெய்த 
இரவு  மழையில் 
பள்ளங்களில்   நீர் நிறைய 
உள்ளம் கேட்கும் அந்த 
நீரில் இருக்கும்  தவளை 
செய்யும் சப்தம்!
உயிர் வாழ நீர் தேவை 
அது பொழிவது இரவானால் 
அதையும் ரசிப்பவர் 
மகிழ்ச்சியில் சொல்வது 
"மழை இரவு" 

- உஷாமுத்துராமன், திருநகர்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/rainy.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவு-2962028.html
2962027 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 05:45 PM +0530  

* கவிதையாய்
என் நோட்டு புத்தகத்தை
நனைத்த மழை இரவு

* காதலியுடன்
குடைக்குள்ளும்
நண்பனுடன் தேநீர்
கடைக்குள்ளும் ஒதுங்க
வைத்த மழை இரவு

* மரங்களின் கூட்டிற்குள்
இருக்கும் குஞ்சுபறவை எப்படி
இருக்கும் என என் இதயத்தில்
இருந்த இரக்கத்தை 
வெளிக்கொணர்ந்த மழை இரவு

- கு.வைரச்சந்திரன் திருச்சி

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/images_9.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவு-2962027.html
2962026 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 05:43 PM +0530  

நிசப்தமான பின்னிரவுக்கும் முன்னிரவுக்கும் 
இடைப்பட்ட கால வெளியில்
நீண்ட மூச்சு சத்தங்களோடு 
உறங்கிய உந்தன் அருகாமையில் 
விழித்திருக்கும் என் தூங்கா இதயத்தில்
ரீங்காரமாய் கேட்கும்
மழைத் துளி ஓசை
சோ - என்று
இரு வீட்டு மதில் மேல் 
குட்டிகளோடு வசித்து வரும் பூனை,
அருகாமையில் பட்டுப் போன 
தென்னை மரப் பொந்தில்வசித்து வந்த
ஆந்தை கூட்டம்,
எங்கோ தூரத்தில் வரிசையாய் 
வகை வகையாய் குலைக்கும் நாய்கள் |
சிறு வயதில் பயமூட்டிய முனி
நடமாட்டமோ என எண்ணத் தூண்டிய
யாரோ விசையோடு குதித்த ஓசை,
கரு நிழலில் - துடிக்கும் லப்டப் சத்தம்,  
வவ்வால் சிலவற்றின் வலசை
என்று - எல்லாம் காதில் விழுகிறது
எப்போது தூங்கினேன் என
தெரியாமலே தழுவும் உறக்கமும்,
நீ இன்றி நிஜத்தில்
நழுவும் பொழுதுகளும்,
விதிவசத்தால் எனை யாருடனோ 
தூங்க வைப்பதை திரும்பவும் நினைவூட்டும்
மழை இரவு,
மீண்டும் சூரிய உதயத்தில் 
முகிழ்ந்து மறைந்த மண் மணமாய்
காணாமல் தான் போகின்றது, 
அடுத்த நாளின் துவக்கத்திற்காக

- கவிதைப் பிரியன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/images_12.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவு-2962026.html
2962023 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 05:16 PM +0530  

மழையிரவில் மனம் மகிழ...
போர்த்திக் கொண்டு உறங்குவதில் 
உண்டாகும் சுகத்துக்கு ஈடுண்டா?!

மழையிரவில் உளம் நெகிழ...
நா.பா  கல்கி  நாவல்களை 
படித்தின்புறலுக்கு இணை யேது?

மழையிரவில் இதயம் குளிர...
இளம்பிராயத்தை அசை போட்டு
இருப்பதிலல்லவா பெருஞ் சுகம்!

மழையிரவில் மனஞ் சோர்ந்து...
மறைந்தோர் தனை நினைந்து
புலம்புவதிலும் ஒரு புதுசுகம்!

- பெருமழை விஜய், காட்டிகன், சுவிட்சர்லாந்து

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/main-qimg-21926b6e3ed15f5af1ab624d37fc7377-c.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவு-2962023.html
2962021 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 05:13 PM +0530  

மழை இரவு மயக்கும் இரவாகும் இளங் காதலர்க்கு
இழை இழையான இன்பப் பிணைப்புப் பிடிக்குமவர்க்கு
உழைப்பு மறந்து உல்லாசம் தேடும் உணர்வு அவர்க்கு
அழைப்பு ஏதும் செவியில் ஏறாத மோன நிலையவர்க்கு

சிந்தனைகள் சிறகடிக்கும் சில்லென்ற கவிதை வரும்
நிந்தனைகள் நீர் விலக அன்பு ஊற்று பெருகி வரும்
எந்தனை உந்தனை என உலகைச் சுற்றி வரும்
வந்தணைக்கும் வண்ண மயிலும் காதல் தருமே

மண்ணிளக்கம் பற்றி மனம் மகிழ்ச்சியில் திளைக்கும்
எண்ணியெண்ணி இன்பக் குளத்தில் மனம் நீந்தும்
கண்ணில் நாளைய வயலின் உழுதல் வந்துபோகும்
விண்ணின் மழை விளைக்கும் இன்பம் இனிக்குமே

இரவின் விளக்குகள் மின்மினிகளென கண்ணசைக்கும்
பரவும் நீர் வாகனங்களை வளமாகவே புதுப்பிக்கும்
மரத்திலெல்லாம் நீர்த்துளிகள் மினுமினுக்கும்
வரமாக வந்த மழை இரவை வண்ண மயமாக்குமே

நித்திரையின் வெப்பத்தை நன்றாகத் துடைத்துவிடும்
சித்திரையும் ஐப்பசி போலாகி இன்ப இரட்டிப்பாகிடும்
முத்திரையாய் முழுநிலைவையும் வெண்மையாக்கிடும்
இத்தரைமீது வந்துதித்த மழை இரவு இன்பமல்லவா.

- கவிஞர்  ராம்க்ருஷ்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/1234.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவு-2962021.html
2962020 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 05:10 PM +0530  

ஒரு மழை இரவு 
குழந்தை பருவமாக இருந்தால்
குதித்து கும்மாளமிடலாம்
வாலிப பருவமாச்சே!
மழை வலுக்க வலுக்க
கொஞ்ச நஞ்சமிருந்த
பகலும் இரவுக்குள் அடமானம் ஆனது
அதென்னவோ மழை தூறல் விழுந்தாலே
எங்க ஊர் மின்சாரம்                                                        
காணாமல் போய்விடும்
பகலாயிருந்தாலும் வேடிக்கை பார்க்கலாம்
இரவாயிற்றே ஒருவர் முகம்
ஒருவருக்குத்தெரியாது
அதுவும் கூட வசதிதான்
அறைக்கதவை சாத்திவிட்டு
படுக்கையில் விழுந்தேன்
இரவு நேரஅமைதி கூட
கடல் அலையாய்
ஆர்ப்பரித்த்து என்னுள்
முந்தையஒரு மழை நாளில்
நானும் அவளும்
பற்றிய கைகளினூடே
பார்த்த விழிகளோடு படர்ந்த காதல்
மழையால்  நெருக்கமாய்  இறுக்கமாய்
மழைத்துளியின் வாசனையில்----
தம்பி சாப்பிடவாடா அம்மாவின் குரலால்
களைந்து எழுந்தேன்
உறங்கி கிடக்கும் உணர்ச்சிகளை
கிளர்த்திவிட்டுப்போவதில்
குரூர திருப்தி இரவு நேர மழைக்கு

- சரஸ்வதி ராசேந்திரன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/splashing-water-umbrella-rain-black-white-color-tone-93600367.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவு-2962020.html
2962019 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 05:08 PM +0530  

தூது செல்லும்
மேகத்  தோழிகளே ...
சூரியக் காதலன்
உங்கள் காதலை
ஏற்று கொள்ளாததனால் தானோ...
இரவில் மழையை
கண்ணீராய் உகுக்கின்றீர்களோ ...?
இரவின் மழையே ...
நீதான் அற்புதமான பொருள்  ...
ஏனென்றால்,
ஒளியை கண்டு எல்லோரும்
மயங்குவது இயல்பு ....
ஆனால் நீ  இருளை கண்டு
மயங்கினாயே.....!
வரையா மரபின் மாரி நீதானே...?
மழைக்காலனே...
நீ உன் தூதர்களான
இடி மின்னலுடன்
என்னை கைது செய்து கொண்டு போயேன்...!

- த.தினேஷ், கடலூர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/images_6.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவு-2962019.html
2962018 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 05:05 PM +0530  

எத்தனையோ இரவுகள் வந்து 
போகும் ஆனாலும் சிறப்பு அழகு
மழை இரவு நீங்காத சிதறல் ஓசை
மனதை தட்டி எழுப்பும் இசை

கவிதைகளும் இயற்கை கனவு
அதில் எழும் எழுச்சி இன்பம்
காதில் விழும் நீரோசை காண
கண்கோடி வேண்டும் இசை இரவு 

இடியின் இசை மின்னலின்
வெட்டல் வேகம் இருட்டின் அழகு
ஓயாமல் பெய்யும் மழை ரசிக்க
மழை இரவு இயற்கையின் வரம்

இருண்டு கிடக்கும் வானில் புது
தோற்றம் நொடி மறைவு மின்னல்
அதன் தாக்கம் ஒரு  இடிசத்தம் 
மழை இரவு மெளனம் ஜொலிப்பு

குழந்தைகள் ஆனந்தம் துடிப்பு
எதிர்பார்ப்பு வேடிக்கை மகிழ்ச்சி
குதூகல கொண்டாட்டம்  மழை
இரவு மனதின் இன்ப நிறைவு 

எத்தனை இரவுகளிலும் மனமது
மறக்காத இரவு முதல் இரவும்
மழை  இரவும்   மட்டுமே  துளிர் 
விடும் சிந்தனை புதுமகிழ்ச்சியே

நினைவுகளை கடந்த கால 
வாழ்க்கையை அசை போட
மனம் அதில் திளைக்க உகந்த
காலம் என்றும் மழை இரவே
 
தூய மண்வாசனையை  நுகர 
இயற்கையின் வர்ண ஜாலத்தை
ரசிக்க ஒரே ஒரு மழை இரவு
போதாது தொடரட்டும் நல்லிரவு

- சீர்காழி .ஆர்.சீதாராமன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/120127_011.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவு-2962018.html
2962016 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 05:02 PM +0530  

மழை காலம் ஒருநாள், 
மழை இரவு இருட்டு சூழல்
மழைச் சாரலுடன் 
முற்று பெறாத கதையுடன் தாத்தா!
மழையாகி இங்கே, 
கதைசொல்லியாக வந்தார்
மழை பேசினது ! 
ஆம்! தாத்தா தான் பேசினார் மழையாக!
மழை நான்! எனக்கு 
பெற்றோர் உண்டு, கதிரவன்-கடலன்னை
மழைக்கு காதலன் உண்டு, 
குளிர் காற்றே நாயகனாவான்!
கதிரவன் தன்வெப்பக் கதிர்களாலே 
கடல் அன்னையை கட்டிதழுவு வான்
அதிலெழும் வெப்பத்தால் 
ஆவியாகி நீர் மேகமாய் 
கருக்கொண்டு மாறும்
காற்றெனும் காதலன் 
தன் கருணை காட்ட 
கார்மழையென பொழிகிறேன்  
ஆற்று வெள்ளமாய் அவதரிப்பேன்! 
அகிலம் தழைத்திட வழிவகுப்பேன்!
ஊற்றாய்க் கூட உதயமாகி நிற்பேன்!
ஓங்கி அருவியாய் சிரித்திடுவேன்!  
என்னால் மக்களுக்கு ஜல மின்சாரம் 
எடுக்க அருவியாய் உதவுவேன்
சீற்றத்தால் அழிவு 
சில சமயம் வெள்ளமாய் 
உருவெடுத்து பாயும்போது
கைமாறு கருதாமல் உதவுவேன், 
நீங்களும் உதவுங்கள் என்போல்!
கதைசொல்லி கதை முடித்தார், 
காது கொடுத்து கேட்டோம்,களித்தோம்
கும்மிருட்டு, தாத்தா விடைபேற்றார்,
கொட்டியது மழை! குதூகலித்தோம்!

- கவிஞர் .அரங்க.கோவிந்தராஜன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/12.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவு-2962016.html
2962015 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 04:57 PM +0530 இரவு மழை பொழிந்தாலும்
உறவு மழையில் நனைந்தாலும்
உள்ளங்கள் தோறும் மகிழ்ச்சிதானே!

பகலென்ன இரவென்ன
பார் செழிக்கச் தேவை மழை தானே
மேகம் கடலில் வாங்கிச் சுமந்தே
கருக்கொண்டே கார்முகிலாகி
மலையரசியின்  மரக்கரங்களால்
ஈர்க்கப்பட்டு காற்றோடு கலந்தே
நிலமகளைக்  குளிரூட்டி ஆறு குளம்
நிரப்பித் தாவி உயிரெல்லாம்
ஆனந்தம் அடையச் செய்தே
பிறப்பிடமாம் கடலைச் சேர்வது மழைதானே!
படைத்தவனின் பெருமை பேசும்
பண்புமிக்க உயிர்நீரும் மழை தானே!

பகல் மழையால் பாதிப்பு வரக்கூடும்
இரவு மழை பேரின்பம் தரக்கூடும்
இரவு மழையே தவறாது வருவாயே
இந்தியாவில் இன்பமழைபொழிவாயே.

- புலவர் நரசிம்ம சுப்பிரமணியன், சிறுமுகை
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/images_.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவு-2962015.html
2962014 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 04:52 PM +0530  

கருமேகங்கள் சூழ்ந்து இருளை மேலும் இருளாக்க
காரிருளை கிழித்துக்கொண்டு பெய்யென பெய்யும் மழை!
மின்விளக்குகள் அணைந்து போய்
எண்ணெய் விளக்குகளுக்கு உயிர்கொடுக்கும் மழை!
நகரின் இரைச்சலை அமைதியாக்கி
நிகரில்லா ஓசையோடு பெய்யும் மழை!
சாலைகள் எல்லாம் ஓடைகள் ஆக
நகரத்து அழுக்குகள் அதில் கரைந்து ஓட
நதிகளை தேடி ஓடும் நல்ல மழை!
தனிமையான ஓர் மழை இரவு
மனதினை திறந்து பார்க்கிறது!
நினைவுகளை பின்னோக்கி இழுத்து
இன்றைய இரவினை இனிமையாக்கி
சென்ற காலங்களை கண்முன் விரிக்கிறது!
பேரிரைச்சல் மழையில் ரீங்காரமிடும்
பெரும் நினைவுகளை மீட்டெடுக்கையில்
புதிதாக பிறப்பெடுக்கிறோம்!
மழை இரவுகள் உள்ளத்தின் ஈரத்தை
ஊறச் செய்கிறது! உதிரும் நீர்த்துளிகள்
மனதை கழுவி புதுப்பிக்கிறது!
மழை கழுவிய சாலைகளில் நடக்கையில்
மனதில் உற்சாகம் பிறப்பெடுக்கிறது!

- நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/book-shield-children-from-darkness.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவு-2962014.html
2962013 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 04:49 PM +0530  

மழை  வருமா  வராதா ...எல்லோர் 
மனதிலும் இந்த கேள்வி ஒன்றுதான் !
அந்திக் கருக்கலில் கொட்டியது மழை !
பட்டென கேட்டார் எல்லோரும் 
"என்ன மழை இது ...வீட்டுக்கு நான் 
எப்படி செல்ல ?"
இந்த மழை இரவில் பொழியக் கூடாதா ?
இரவு முழுதும் மழை ....காலையில் 
வெய்யில் என்று இருக்கக் கூடாதா ?
மழை நான் கேட்கிறேன் .. மனிதா உன் வீட்டுக்கு 
எப்படி செல்வது மழை என்னுடன் பயணித்து என 
நீ கேட்கிறாய் ! 
வீடு என்று ஒன்று இல்லாத நடைபாதை வாசிகள் 
மழை இரவிலும் "இரவில்  மழை ஏன்" என்று இதுவரை 
என்னைக் கேட்டது இல்லையே !
என் வரவுக்கு இறைஞ்சும் நீ... நீ சொல்லும் 
நேரம் மட்டும் நான் வர வேண்டும் என்று 
நினைப்பது என்ன நியாயம் ? 

- கே.நட்ராஜ்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/DSC_0013.JPG http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவு-2962013.html
2962012 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 04:46 PM +0530  

அடைமழை இரவு; அதிலொரு கனவு 
எனைமட்டும் உயிராய் நினைந்திடும் உறவு;

தனிமையில் நிலவு; தவித்திடும் பொழுது 
துணையென பொழியும் கருணையும் அழகு 

குழந்தையின் சிரிப்பாய் குளிர்ந்திடும் மனது
பொழிந்திதும் அழகில் மகிழ்ந்திடும் இரவு

கொடுந்தண லதனில் புழுங்கிடும் பொழுது 
கடுங்குளிர் வழங்கும் துளிகளும் இனிது 

நெடுந் தனிமைகளைக்  களைந்திட  விழைந்து  
உறவெனப் புகுந்தாய் உயிருக்குள் நுழைந்து 

மழை கண்டவுடனே மேகங்கள் கொண்டு 
அகம் மறைத்திடுமே முழுமதி விரைந்து 

உனைக் கண்டவுடனே விரல்களும் குவிந்து 
முகம் மறைத்திடுமே வெட்கத்தில் குனிந்து 

பிரிவென்ப தொன்று நிகழ்வதன் கருத்து 
உறவென்ப ததனைப் புதுப்பிக்கும் பொருட்டு 

மழையொழிந்த பின்னும் ஒளிர்ந்திடும் நிலவாய்
உன் நினைவுகளுடனே நிறைந்திடும் மனது  !!!!

- கவிஞர் டாக்டர். இராஜலட்சுமி இராகுல்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/little-girl-with-umbrella-in-hands-jumping-in-the-rain_nyw7bveve__F0000.png http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவு-2962012.html
2962011 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 04:42 PM +0530  

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் 
என்று நான்கு கண்கள் சந்திக்கும் காட்சியை 
கம்பன் பாடிய போது கம்பனுக்கு மகிழ்ச்சி!  
கம்பன் பாடிய காவியத்தில் சீதை  
ராமனைப் பார்க்க ராமன் சீதையைப் பார்க்க 
நமக்குள்ளே பற்றிப்  படர்கிறது மட்டற்ற மகிழ்ச்சி!  
எங்கோ இருக்கும் காதலியை 
மனக்கண்ணில் பார்க்கும் போது 
எண்ணத்தில் நிறைவது 
ஈடில்லா மகிழ்ச்சி!  
உள்ளம் தவித்திருக்கும் ஒற்றை மனிதனுக்கு 
அன்னை தந்தை மனைவி மக்கள் 
எண்ணம் ஒன்றே இன்ப மலர்களாய் ஏற்படும் மகிழ்ச்சி !  
பேச்சில்  உயர்ந்து கவிதையில்  
சிறந்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி  
பெற்றுவிடும் மாணவர்களின் குதூகலம் 
விண்ணைத் தாண்டிச் செல்லும் 
வேகத்தில் மகிழ்ச்சி !  
வளமான பொருளாதாரம் வந்துவிட்டால் 
வறிய, எளிய மக்களுக்கு வாணளவு மகிழ்ச்சி !  
பஞ்சமும் பசியுமின்றி கொஞ்சமும் குறைகளின்றி 
நெஞ்சிலே குளிர்வைத் தந்து 
கொஞ்சிடும் பருவத்தால் பொய்க்காது 
பொழிகின்ற மகிழ்வு நிலையே ‘மழை இரவு’

- நம்பிக்கை நாகராஜன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/minnal-act.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவு-2962011.html
2962007 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 04:34 PM +0530 நள்ளிரவு 
இருளில் கோடு வரையும்
வெள்ளைமழை

தூரத்து மலையில் இருந்து
அவசரமாய் இறங்கும்
அருவி

அமைதியாகக் குளிக்கும்
சாலைகள்

புதுசிவன் புதுநக்கீரன் சொற்போர்
பூக்களைத் தழுவிய மழைக்கு
மணமுண்டா?

தாமரைக் குளத்தில் 
தவளைகள் நடத்தும் 
விவாத அரங்கு 

மூடிய அறைக்குள் குறட்டைவிடும் உன்னை
நிராகரித்து நடக்கிறது
மழையிரவு

- கோ. மன்றவாணன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/57670376-people-with-umbrella-in-the-rain-bird-s-eye-view-.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவு-2962007.html
2962004 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 04:32 PM +0530  

மழை இரவு மழையால் 
நனையிதிங்கு நம் உறவு முக்
காலத்துள் ஒரு கால வரவது 
பூமி குளிர்ந்து மனதிற்கு நிறைவு 
நோய்கள் குமுறி ஓடி மறைவு
பசுமைக்கில்லை ஒரு குறைவு

ஆழ்ந்து சிந்திக்க ஆதரவிழந்து 
நடைபாதை மனங்கள் நாளும் 
படும் உபாதை கொஞ்சமன்று 
ஆண்டுக்கு ஆண்டு நிகழும் 
பழகிவிட்ட ஒன்றாயினும் மழை 
இரவு அதை வெருப்பாரில்லை

இரவு தூக்கமில்லை ஒருபக்கம் 
வெள்ளம் வருமோ அடித்து போய்
பள்ளத்தில் விட்டு விடுமோயென 
நாடி நரம்பெல்லாம் மிருதங்கம் 
வாசித்திட பயந்து யோசிக்கும் 
நிலை மாற வேறு வழியில்லை 

வாரைமேல் அமைந்த கூரையை 
வாரி எறிந்து விடுமோ காற்று 
நாப்பக்க சுவரையும் மேப்பக்க
கூரையையும் உற்று நோக்கியே 
கோழித்தூக்கம் தூங்கி நாளும்
காலத்தை கழிக்கும் நிர்பந்தம்

இருள் என்றாலே மிரள் என்றே 
பொருள் கொண்டு மிரட்டிவிடும்
அதிலும் "மழை இரவு" நித்திரைக்கு
அரக்கு பூசி முத்திரை குத்திவிடும்
யாரைச் சொல்லிக் குற்றமில்லை
கடவுள் செய்த குற்றமென்றாகிடும்

- ஆபிரகாம் வேளாங்கண்ணி, மும்பை மகாராஷ்டிரா 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/main-qimg-231aa6b7d532be5b31f95ab9439c9157-c.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவு-2962004.html
2962001 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 04:29 PM +0530  

நிலவை பூட்டி வைத்தது
கருப்பா வெளுப்பா என்று தெரியாத
சில இருட்டு மேகங்கள்—
இந்த பூமியை நனைக்க
என்னைப் பயன்படுத்தினாயே  
என்று ஆனந்தக்கண்ணீரை
தரைகளில் கசக்கியது இரவு –
வானத்தில் கட்டிய தேன்கூடுகளை
இரவில் உடைத்தது யார்
என்ற ஐயம்,  ருசித்த இளைஞர்களுக்கு—
மழை இரவில்
மனமுவந்து நடனமாடியவர்கள்
வெய்யிலைப் போற்றுவரோ ?
குடை இல்லை
என்று மகிழ்ந்தவர்கள்
உலகத்தை ரசிக்கத்தெரிந்தவர்கள் –
சொட்டும் மழையை விடு –
கொட்டும் மழையில்
சில குடிசைகள்
சிணுங்கி அழும் –
அவை மேலே பட்டும்,  
உடல் உழைத்த அசதியில்
சில ஏழைகளின்
உறக்க ஊர்வலத்தில்
தடையே இல்லை –
மகிழ்ச்சியில் சில தவளைகளின்
அன்புச்சத்தங்களை
செவியில் வாங்கியபடி, கையில்
சூடான தேநீரும் , சுஜாதா நாவலுமாய்
ஜன்னலோரத்தில் மழையிரவில் நான் –

- கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி -- MD DNB PhD

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/download.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவு-2962001.html
2961999 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 04:22 PM +0530  

அது ஒரு மழை இரவு..
மனைவியின் ஆலிங்கன ஆசையில்
மச்சுவீட்டில் ஏறி பாம்பை கயிறாகப் பிடித்து
மனைவி முன் நிற்க 
அவள் சொன்னாள்
“என் ஆசை தவிர்;”
“அவன் ஆசை கொள் ”
பிறந்தது துளசி இராமாயணம்
அது ஒரு மழை இரவு..
ஓட்டைத் தகரக் குடிலில் விழுந்த
மழைத்துளி தான் தாய்ப்பாலெனச்
சப்பிய குழந்தையை அணைத்து
அழுதவளின் வேதனையில்
கணவன் எழுதினான் மூலதனம்
அது ஒரு மழை இரவு..
இயற்கையின் தாய்ப்பாலாய் 
மழைத்துளி விழ வழியும் 
தாயின் மடியைச் சுவைத்துவிட்டு
சிலிர்த்து நின்றது ஆட்டுக்குட்டி
அது ஒரு மழை இரவு..
தெருவிளக்கின் வெளிச்சத்தில் 
தெரிந்த மழையின் கம்பீரம்
சற்றே காதலில் என்னுள்ளும் புகுந்தது
அலறிய அலைபேசியை அணைத்தேன்
மழைத்துளியின் சங்கீதம் கேட்க

- மகேஸ்வரி சற்குரு

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/tumblr_noqcu2trBB1rfp1lho1_500.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவு-2961999.html
2961995 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 04:18 PM +0530  

இலைப் பிரதேசங்களிலிருந்து பூமித்தாய்க்கு 
இலவச சொட்டு நீர்ப் பாசன விநியோகம். 
மரக் கூடுகளிலிருந்து தேகம் சிலிர்த்த வண்ணம்
விண்வீதியில் கிளர்ந்த புள்ளினங்கள்.
நடுக்கம் தெளிந்து நடுவீதிக்கு ஏகும் 
ஒடுங்கி இருந்த ஐந்தறிவு ஜீவன்கள்.
முந்தைய இரவு முழுமையாக முக்காடு விலக்கியது  
வானம் என்பதை பறைசாற்றிய நிகழ்வுகள். 
பசுமைப் புரட்சிக்காரர்களின் ஏகோபித்த சந்தோஷங்கள். 
படுக்க இடமில்லாத தெருச்சொந்தங்களின் சாபங்கள். 
எது எப்படியோ, சந்தோஷமாக மழையில் 
நனைந்த குடைகள் பாவாடை 
விரித்து படுத்திருந்திருந்தன
வீட்டின் நுழைவாயில் நடைபாதையில். 

- பான்ஸ்லே. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/download_1.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவு-2961995.html
2961991 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 04:13 PM +0530  

மேகக் கூட்டங்களுடன்
மோதிய முழு மதி
தோற்றுப் போனதால்
இடி விழுமென பயந்த
மும்முனை மின்சாரம்
ஓடி ஒளிந்துகொண்டது
மேகம் சுமந்த நீரை
மெதுவாகப் பொழிந்து
மண்ணுக்குப் பரிசளித்து
மின்னல் விளக்கால்
இருட்டின் அழகை
வெளிச்சமிட்டுக் காட்டியது
அந்த மழை இரவு!

- சு.ஜெயக்குமார்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/mazhai_minnal.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவு-2961991.html
2961989 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 04:08 PM +0530  

அதிகாலை மழை செய்யுள்
அறிந்தவர்களுக்கு மட்டுமே புரியும்
காலை மழை மரபுக் கவிதை
படித்தவர்களுக்கு மட்டுமே புரியும்
வானவில்லோடு வரும் மதிய மழை ஹைகூ
புரியாதவர்களையும் ரசிக்க வைக்கும்
முன் இரவு மழை நவீன கவிதை
உற்று கவனித்த பின்னரே ரசிக்க வைக்கும்
செய்யுள் மரபு புதுமை நவீனம் ஹைகூ
எல்லாம் கலந்திருக்கும் இரவு மழை
மழை இரவாக மாற்றம் காணும் காப்பியமாகும்!

-கே.ஆர்.கார்த்திகா, திருப்பத்தூர்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/rain-003-1.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவு-2961989.html
2961987 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 04:02 PM +0530  

ஒண்டுதற்கு இடமுமின்றி
ஓடுதற்குவழியுமின்றி
நனைத்துக் கொண்டிருக்கிறது
நடைபாதை வாசிகளை
இந்த மழை இரவு.

தெரு நாய்கள்
இங்குமங்கும் அலைகின்றன
நனைந்து கொண்டே
மனிதருக்குப் போட்டியாக
இடம் பிடிப்பதற்கு.

இளந்தம்பதியரின்
இன்ப இரவாய் ஆக்க
மழை இரவு தவறி விட்டது
ஒழுகும் நீர்
பிடித்து வைக்கப் பாத்திரங்களின்றி.

நடுங்கிக் கொண்டு
முணுமுணுத்தவாறு
சபிக்கின்றனர்
முதியோர்கள் குளிர் பொறுக்காமல்.

காமத்தைத் தீர்த்துக் கொள்ள
மறைவிடமின்றி
ஒட்டி உராயதலில்
நிறைவு பெறுகிறான் ஒருவன்

குளிரூட்டப்பட்ட அறையில்
தூக்கம் வராமல் நெளிபவன்
அறைக்கு வெளியே வந்து
நடக்கும் மழைஇரவுக் காட்சிகளை
ரசித்துக் கொண்டிருக்கிறான்
பெய்யும் மழையையும் சேர்த்து.

அடாத மழை காரணமாய்
அடுத்த நாள் நிச்சயம்
பள்ளி விடுமுறை கிட்டுமெனத்
தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகள்
நிம்மதியாய்......

- கவிஞர் 'இளவல்’ஹரிஹரன், மதுரை

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/images_4.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவு-2961987.html
2961985 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 03:59 PM +0530  

மழையுடனே நல்லவெயில் மனிதனுக்கு அவசியமாம்

.........மாசற்ற தூயகாற்றும் மண்வளமும் அமையவேண்டும்.!

தழைகளுடன் மரம்செடியும் தழைத்தோங்கி வளர்தற்கு

.........தாரணியில் நிலையாகத் தண்ணீரும் தங்கவேண்டும்.!

மழைவருமுன் விழிப்புணர்வு மக்களுக்கு வேண்டும்

.........மழைநீரைச் சேமிக்க மாந்தருமே நினைக்கவேண்டும்.!

உழைப்பாலே உயர்ந்தபின்னே உழவனுமே கூடிமகிழ

.........ஊரிலுள்ள ஏரிகுளம் உயரவேண்டும் நன்னீரால்.!

புழைவழிப் புகுந்துப் பெருவயல் நிரப்ப

.........பெய்யும் நல்மழை இரவும் பகலுமாய்

பிழைப்புநன்கு நடத்துதற்கு பெரும்பங்கு வகிக்கின்ற

.........பஞ்சமாபூ தங்களுமே பாதுகாக்க வேண்டியவை.!

- பெருவை பார்த்தசாரதி

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/trees.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவு-2961985.html
2961982 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 03:55 PM +0530  

வயலின் வயிறும் வெடித்துக் காய்ந்து 
வற்றா  தாகந் தன்னில் வதைந்து 
இயலா நிலையில் ஏங்கித் தவித்து 
இரவும் பகலும் மழைக்காய் ஏங்கின! 

வயலுழும் உழவர் வானம் பார்த்து 
வயிறும் காய்ந்து வதங்கி கிடக்க 
புயலாய் வந்து ஓர்மழை இரவில் 
பொழிந்து புவியைக் குளிர வைத்திட 
வழிந்த மழையால் உழவர் மகிழ்ந்தர்!

எங்கும் வெள்ளம் கும்மாளம் போட 
எளியோர் மனமும் இன்பங் கண்டன;
பொங்கிய மழைவெள் ளத்தால் மகிழ்வைப் 
பிடுங்கு மென்று உணரா(து)  இருந்தனர்! 

வயல்பயிர், மாந்தர்,விலங்கு, வீட்டை 
வெள்ளம் விழுங்கின; வேர்பி டித்துப் 
புயல்மழை நின்றன; பிழைப்பு மின்றி 
பசியில் தவித்தனர்; பிணமாய்ப் போயினர்! 

மழைஇர வின்றும் அச்ச மூட்டின; 
மழையோ எதிரியாய் மாறிய தாலே;
மழைஇர(வு)ஈந்த வலியால் மழையை 
வெறுத்தால்  மண்ணுயிர் வாழாது ; அழைப்போம்!

- நெருப்பலைப் பாவலர், இராம இளங்கோவன்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/braving_the_night_rain_by_dannyst-d3fx9rt.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவு-2961982.html
2961981 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 03:52 PM +0530  

கும்மிருட்டு மழை இரவில்
மரத்தின் இலைகள் 
தலை குளிக்கும்!
மனித தலைகள் 
குடை பிடிக்கும்!

மழை இரவில் 
குளிரடிக்கும்!
மனதுக்கு 
இதமளிக்கும்!

மழை இரவில் 
வானம் ஒலி ஒளி அமைத்து 
மழைத் தூவும்!
தவளைகள் தாளம் போட்டு 
வரவேற்கும்!

மாலையில் மஞ்சள் 
குளிக்கும் வான மகள் 
மழை இரவில்
தலை குளிப்பாள்!

மழை இரவில் 
வானம் அருவி போல 
நீர் கொடுக்கும்!
பூமி தாகம் எடுத்தவன் போல
நீர் குடிக்கும்!

- கு.முருகேசன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/images.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவு-2961981.html
2961979 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி இரவு மழை கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 03:49 PM +0530
 
மிரட்சி யினுள்ளே!
பசி தாகம் எடுக்க
சிற்றின்ப நினைவில்
சிரித்தாலும்
சிந்திக்கத் தயங்கும்
வழிமுறையில்
மதி; - எனை
மதியாமல், இடமில்லா
வழியில்
நாவினை சமைத்து
நடுங்கிடும்
மெய்யில்
இசையில்லா
ஓசையாய்
பற்களும் பாட
எளிதல்ல
ஏழைக்கு, 
சுகமற்ற
அடர் குளிர் மழையால்
பலகாரக் கடைக்குள்ளே!
சருக்கரை நோயாளியாய்.......

- ப.வீரக்குமார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/night-1-of-1.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/இரவு-மழை-2961979.html
2961978 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 03:46 PM +0530  

காதல் மோகம், 
காலத்தின் வேகம்,
கடற்கரை ஓரம்,
கனியிதழ் சிரித்து, 
கலங்கரையாய்,
மனதுள் நினைத்து
வடிவினைக் கூட்டி
வார்த்தையை மெலித்து
வழக்கத்தை மாற்றி
முகமூடிக் கோலம்
போடுங் காலமென
சுற்றித் திரிந்து
சுகமாய் களித்து
எட்டிக் காயாய்;
ஏக்க மூச்சில்;
இப்படி ? இப்படி?
இனி எப்படி? எப்படி?
இழந்ததை மீட்கப் போராட
இல்ல மொன்னுமங் கூடாக;
துயராய் மலர்ந்த
உன்மத்தம் பூவாய்
இருட்டில் பூத்து
மழையி லழுகும்
வீட்டில் தீ தின்ற
தீபத்தின் திரி.............

- முகில் வீர  உமேஷ், திருச்சுழி.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/1.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவு-2961978.html
2961975 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 03:43 PM +0530 அந்தி சாயும் அந்நேரம்.. 
ஆதவன் மறையும் அந்நேரம்…
அந்தி மலர்கள் முகிழ்ந்ததுவே.. 
கார்முகில் ஒன்றாய்த் திரண்டதுவே…
பெருமழை சோவெனக் கொட்டியது.. 
புதுவெள்ளம் பெருக்கெடுத் தோடியது…
இருளைக் கிழித்த மின்னலுமே.. 
பளிச்சென வானில் மின்னியது…!

பேரிடி பலவும் முழங்கியது.. 
காரிருள் எங்கும் அப்பியது…
பருத்துப் பெருத்த மரங்களெல்லாம்... 
பேயெனக் காற்றில் ஆடியது…
இம்மழை அனைவர்க்கும் மகிழ்வெனினும்.. 
இன்னலுற்றோரும் சிலர் உண்டு…
இடிவிழுந் தெரிந்த குடிசையிலே.. 
இன்னுயி ரொன்று பறிபோனது…!

சூரைக் காற்றின் வேகத்தில்… 
கூரைகள் பெயர்ந்துப் பறந்ததனால்…
குடிசையில் வாழும் மக்களுக்கு.. 
உறக்கம் தொலைந்த இரவானது…
இயற்கையை வெல்லும் ஆற்றலெல்லாம்..  
இல்லை நமக்கு என்றாலும்…
இன்ன லுற்றோர் அனைவருக்கும்.. 
இருகரம் கொடுத்து உதவிடுவோம்…!

-ஆ. செந்தில் குமார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/hut.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவு-2961975.html
2961972 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 03:38 PM +0530  

குளிர் தோய்ந்த மழை இரவொன்றின் ஈரப் பொழுதில்
சாத்திய சன்னல் இடுக்கில் நுழைந்த
பனிக்காற்றாய் என் இதயம் தொட்டு, மனதை நனைத்தாய்
ஒரு விபத்திற்கு பின் 
எல்லாம் மறந்தவனாய் ஆனேன் 
உன்னைத் தவிர..
ஒரு நீண்ட ரயில் பயணத்தின் 
சக பயணியாய் நன்கு பழகி
உண்டு, விளையாடி, சிரித்து மகிழ்ந்து 
கதை பல கூறி,  நிறுத்தம் வர, 
பெயர் கூட தெரிவிக்காமல், 
உடமையுடன் இறங்கிச் செல்பவளாய், 
நீயும் இடம் பெயர்ந்தாய்   
முன் அறிவிப்பேதுமின்றி 
எப்போதோ திரும்ப நிகழவிருக்கும் 
நம் சந்திப்பிற்காக நம்பிக்கையுடன் 
மணம் மறுத்து காத்திருக்கிறேன்!

- செந்தில்குமார் சுப்பிரமணியன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/raingirl.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவு-2961972.html
2961969 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 03:31 PM +0530  

மழை இரவு மன்மதனுக்குக் கொண்டாட்டம்
மழலைப்பிறப்பு  மறுவருடக் கொண்டாட்டம்
மண்காதலி முத்தமிடும் சடங்கு நடந்தேறும்
விண்மண் அம்புகள்  நாட்டியம்  ஆடிடும்
கிராமப்புறத்தில் மின்சாரத்தடை அரகேற்றம் 
இரவிருள் மயானயமைதி ஒலிஒளியேற்றம்
இடையில் மின்மினிப்பூச்சி ஒளிவீசிப் பறக்க
கொட்டும் மழை நீரில் பூமி குளிர்ந்து பூரிக்க
வெட்கி மழைநீரோட்டம் குனிந்து குளம்விழ 
பருவ மழை பெய்தது கழனியெங்கும் விளைச்சல் 
பெருகிடுமென உழவனுகந்தான் மறுநாள் விடியலில்  

- மீனாள் தேவராஜன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/maxresdefault_2.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவு-2961969.html
2961968 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 03:28 PM +0530  

பிரகாச  வெளிச்சம் 
அப்போதைக்கப்போது 
வந்து போயின 
மின்னலின் விளைவால் 
.
பிரளய ஒலிகளும் 
மிரட்டி போயின 
சிறிது சிறிதாக 
இடியின் துணையோடு 
.
குளுமையின் தாக்கம் 
கூடித்தான் இருந்தது 
பகலின் வெம்மையை
ஒத்தால் 
.
மறுநாள் காலை 
குளிர்ச்சியுடன் 
தொடங்க ஓர் 
நல் தொடக்கம் 
.
யாருக்கும் இம்சை 
விளைவிக்காத 
அகிம்சைவாதியாய் 
இரவு மழை.

இரா.வெங்கடேஷ் 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/123.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவு-2961968.html
2961960 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 03:25 PM +0530  

மழைபெய்யும்  இரவுநேரம்  ஏழை  தம்மின்
    மண்குடிசைக்  குள்குறுகிப்  படுத்தி  ருந்தான்
மழைவலுத்துத்  தெருவெல்லாம்  வெள்ளக்  காடாய்
    மண்குடிசை  சுற்றிலும்நீர்  சூழ்ந்த  போது
அழைக்கின்ற  குரலொலிதான்  காதில்  வீழ
    அந்தஏழை  கதவுதனைத்  திறந்து  பார்க்க
மழைதன்னில்  நனைந்தபடி  ஒருவர்  உள்ளே
    மழைக்கொதுங்க  இடமுளதா  என்றே  கேட்டார் !

சிறிதான  குடிசைக்குள்  ஒருவர்  மட்டும்
    சிரம்வைத்துப்  படுப்பதற்கே  இயலும்  ஆனால்
உரியவாறு  இருவரிங்கே  அமர்வ  தற்கே
    உகந்தவிடம்  உள்ளதுள்ளே  வாரும்  என்றான்
பெரியதொரு  மனமுடையோய்   வாழ்க  வென்றே
    பெருமழையில்  நனைந்தவரோ  உன்ளே  வந்தார்
வறியவனின்  குடிசைக்குள்  தரையின்  மீது
    வசதியாக  இருவருமே  அமர்ந்து  கொண்டார் !

அடுத்தசில  நொடிகளிலே  கதவு  தட்டும்
    அரவந்தான்  கேட்டிடவே  ஏழை  மீண்டும்
தடுத்திருந்த  கதவுதனைத்  திறந்து  பார்க்கத்
    தலைநனைந்த   மற்றொருவர்  மழைக்கொ  துங்க
விடுத்திட்டார்  கோரிக்கை !  அதனைக்  கேட்டே
    வீட்டிற்குள்  வசதியுடன்  இருவர்  மட்டும்
அடுத்தடுத்தே  அமர்ந்திடலாம் ;  நின்று  கொண்டால்
    அடுத்துமக்கும்   இடம்கிடைக்கும்  வாரும்  என்றான் !

நில்லாமல்  மழைபெய்ய  இரவெல்  லாமே
    நின்றபடி  மூவருமே   இருந்தா  ருள்ளே
மெல்லகதிர்   தலைகாட்ட   மழையும்   நிற்க
    மெதுவாக  இருவரிலே   ஒருவர்   சொன்னார்
நல்லவரே  நானிந்த  நாட்டின்  மன்னன்
    நல்லமைச்சர்   இவரென்றார் !   வேட  மிட்டே
அல்லலுறும்  மக்கள்தம்  குறைகள்  காண
    அல்பொழுதில்  வந்திட்டோம்  நகர்வ  லந்தான் !

மண்குடிசை   என்றாலும்   எங்க  ளுக்காய்
    மனமுவந்து  நின்றிருந்தாய்  இரவெல்  லாமே
உன்னுடைய   இரக்ககுணம்  உதவும்  பண்பை
    உண்மையிலே  பார்த்துநாங்கள்   உவகை  கொண்டோம் !
தன்னலமே  இல்லாத   உம்மைப்  போன்றோர்
    தாமிந்த   நாட்டிற்குச்  சொத்தாம்  என்றே
தன்கழுத்து   முத்துமாலை  எடுத்த  ளித்தே
    தன்கையால்  மன்னனுமே  தழுவிக்  கொண்டார் !

- பாவலர் கருமலைத்தமிழாழன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/maxresdefault_3.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவு-2961960.html
2961957 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 03:14 PM +0530 செக்க சிவந்த வானம் கறுத்திருக்க
           செடிகொடிகள் சிலுசிலுவென காற்றுதர
           வெக்கையாய் சற்றே மாறிடத்தான்
           வெண்ணிலவு மேகத்தில் மறைந்தோட
    

           குக்கூ என்றேதான் குரல்கொடுத்திடும்
           குயில்கள் எல்லாம் மரத்தில் ஒதுங்கிட
           தெக்கத்தி காற்றும் இதமாய் வீசிட
           திடிரென்று மாறியதே மழைஇரவாய்
        

           மண்வாசனை காற்றில் மிதந்துவர
           மேகங்கள் எல்லாம் மாநாடு போட
           விண்மங்கை கருநிற ஆடைபூண
           விடியவிடிய இருந்த்தே மழைஇரவாய்

                - கவிஞர் கே. அசோகன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/images_2.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவ-2961957.html
2961955 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 03:11 PM +0530 வெளியில் செல்ல முடியவில்லை ஆனால் 
வழிந்த மழைத் துளிகளை ரசித்து மகிழ்ந்தேன் !

வானில் இருந்து வரும் மழைத்துளிகள் 
வளம் செழிக்க பயிர் வளர உதவுகின்றன !

மழை பொய்த்தால் வறட்சி வரும் 
மழை பெய்தால் பூமி குளிரும் !

கடலில் இருந்து ஆவியாகப் பறந்து 
கடினப் பயணம் செய்து வானம் சென்று !

புறப்பட்ட பூமிக்கே வந்து விழுகின்றது 
புத்துணர்வு தருகின்றது பூமிப்பந்துக்கு !

நானும் அவளும் ஒரு நாள் ஒரு குடையில் 
நல்ல மழையில் நனைந்து   வந்தோம் !

பசுமரத்து ஆணியாகப் பதிந்த நினைவை 
பெய்த மழை நினைவூட்டி மகிழ்வித்தது !

இரவு மழையை வணிகர்கள் வாழ்த்துவார்கள் 
இரவில் வணிகம் செய்வதில்லை என்பதால் !

உழவனும் இரவு மழையையே விரும்புவான் 
உழவை பகலில் செய்திட வாய்ப்பாக இருக்கும் !  

இரவு மழை இதம் தரும் இனிமை தரும் 
இன்னல் மறந்து இன்புற உதவிடும் ! 

- கவிஞர் இரா .இரவி

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/50-Rainy-Day-Farm-Wedding-by-How-Photography.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவ-2961955.html
2961953 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 03:07 PM +0530 1)

வானில் வானவேடிக்கை

மண்ணில் மழைத்தூறல்

இரவில் மின்வெட்டு

***

2)

மழையும் சுகம்
இரவும் சுகம்
இரண்டும் பக்கம்
இணைந்தால் 
இன்னும் சுகம்..
உயிர் காக்கும்
உயிர் நீரே
உணர்வாய் தழைத்து
உன்னதம் அளித்து
வளம் பெருக
வந்திட்டாய் ..
வாழ்வு சிறக்க
விவசாயம் வளர
மானுடம் மலர
மண்ணில் மோதி
மங்கல ஊற்றை
அளித்திட்டாய்..
கார் மேகமாய்
பவனி வந்து
கரடும் கமழ
வித்திட்டாய்..
நன்னீர் தந்து
நலமுடன் வாழ
வழி தரும்
மாரியே
நீ மாறாது
பருவத்தே
வருகை தந்திடுவாய்..
பன்னீருடன்
நாங்கள்....

- ப.க.நடராசன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/rainy-night.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவ-2961953.html
2961950 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 03:00 PM +0530 விதை போட்டு 
விளைச்சல் பார்த்து 
காத்திருந்த போது 
கொட்டித்தீர்த்த மழை
இரவில் சொன்னது
உன் வலிமையை 
உலகிற்கு காட்டவே 
நானும் வந்தேனென்று! 
உழவனின் உழைப்பை நிறுத்த
யாராலும் முடியாது -ஏனெனில்
சுழன்றும் ஏர் பின்னது உலகம்!

- சுதா ஏகம்மை

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/60cff93795ad0d5af19f4ad33e2ecd75.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவ-2961950.html
2961948 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மழை இரவு  கவிதைமணி DIN Tuesday, July 17, 2018 02:54 PM +0530  

மும்மாரி பெய்து
முப்போகம் விளைவித்த
முன்னோர்களைப் பற்றிய
நினைவுடன் உறங்கச் சென்றபோது
இரவின் இருளை கவ்விச் சென்றது
இடியுடன் கூடிய மின்னல் ஒன்று!
துளியாய்த்  தொடங்கி
தூறலாய் தொடர்ந்த
முன்னிரவில் பெய்த பெருமழையில்
முழுவதுமாய் நனைந்தது
மண்ணோடு சேர்ந்து மனதும்! 

- ஜெயா வெங்கட்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/17/w600X390/rain.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/17/மழை-இரவு-2961948.html
2956451 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி இந்த வாரத்திற்கான தலைப்பு: ‘மழை இரவு’ கவிதைமணி DIN Monday, July 9, 2018 01:03 PM +0530 பிரியும் தருணத்தில் தலைப்பிற்கு கவிதை எழுதி அனுப்பிய கவிஞர்கள் அனைவருக்கும் நன்றி..! இந்த வாரம் நீங்கள் எழுத வேண்டியகவிதைக்கான தலைப்பு:

மழை இரவு

உங்கள் கவிதைகளை askdinamani@dinamani.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். 12 வரிகளுக்கு மிகாமல் கவிதை இருத்தல் நலம். உங்கள் கவிதைகளை யுனிக்கோடு எழுத்துருவில் டைப் செய்து மேற்கண்ட மின்னஞ்சலில் வரும் சனிக்கிழமைக்கு முன்பாக அனுப்ப வேண்டுகிறோம்.
 

]]>
poem, rain, மழை இரவு, கவிதை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/7/9/w600X390/A-Rainy-Night-Background-For-Desktop.jpg http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jul/09/இந்த-வாரத்திற்கான-தலைப்பு-மழை-இரவு-2956451.html
2947008 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி இந்த வாரத்திற்கான தலைப்பு: "பிரியும் தருணத்தில்" கவிதைமணி DIN Monday, June 25, 2018 06:04 PM +0530 "ஒரு முறையேனும்"  தலைப்பிற்கு கவிதை எழுதி அனுப்பிய அன்பு நண்பர்கள் அனைவருக்கும்நன்றி..! இந்த வாரம் நீங்கள் எழுத வேண்டிய

கவிதைக்கான தலைப்பு

"பிரியும் தருணத்தில்"

உங்கள் கவிதைகளை askdinamani@dinamani.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். உங்கள் கவிதைகளை யுனிக்கோடு எழுத்துருவில் டைப் செய்து மேற்கண்ட மின்னஞ்சலில் வரும் சனிக்கிழமைக்கு முன்பாக அனுப்ப வேண்டுகிறோம்.

"ஒரு முறையேனும்" என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகளை படிக்க... இங்கே க்ளிக் செய்யவும்:  http://www.dinamani.com/specials/kavithaimani

]]>
http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/இந்த-வாரத்திற்கான-தலைப்பு-பிரியும்-தருணத்தில்-2947008.html
2947007 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒருமுறையேனும்: கவிஞர் பேராசிரியர் பு மகேந்திரன் கவிதைமணி DIN Monday, June 25, 2018 06:04 PM +0530 ஒரு முறையேனும் உலகைச் சாகடி நான் மட்டும் போதும்... ஊழிக்கால சிவன் போல அனைத்தும் புதிது. ஒரு முறையேனும் தண்டிக்கணும் இங்கு எங்கு நலம் உலகில் பாழாய் வாழுது பழுதாய் கசப்பும் கருப்புமாய் யார் இறந்தால் என்ன யார் எப்படியானால் என்ன நான் சுகப்பட வேண்டும் ஒரு முறையேனும் இவர்கள் வாழ்வை வாழ்ந்துள்ளனனரா சாவு வீட்டிலும் சுயலாபம் தேடும் சாவுராக்குகள் சாகட்டும் ஒரு முறை புதிய தோர் பூமி ஒருமுறையேனும் வந்து விடாதா நல்ல காற்று சுகப்படாதா தீயவை அழிந்து விடாதா ஒரு முறை தீயதை அழிக்க எனக்கு வரம் தா கடவுளே ஒரு முறை சுத்தமாய் கழுவி சுத்தப்படுத்துவோம்.]]> http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒருமுறையேனும்-கவிஞர்-பேராசிரியர்-பு-மகேந்திரன்-2947007.html 2947001 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒருமுறையேனும்: உஷா முத்துராமன் கவிதைமணி DIN Monday, June 25, 2018 05:32 PM +0530 மறுபடியும் செல்ல முடியாத 
கருவறை போன்று 
பிறந்தோம் ஞாலத்தில்
சிறந்து  விளங்குவதே 
நம்  உயிர் மூச்சென 
கொண்டால்......
அதுவே சிறந்த எண்ணம்!

வாழ்க்கையில் ஒருமுறையேனும்
தர்மம் செய்வோம்...
மர்மமென நினைக்கும் 
உலகில்  நம்மால் முடிந்தது.
உடல்....
உயிர் துறந்த  பின்னும் 
உயிருடன் இருக்கும் 
கண், சிறுநீரகமென
மண்ணில் போனால் 
மட்டுமே  உயிர் விடும் 
உறுப்புகளை 
மறுப்புஎதுவுமின்றி 
சுறுசுறுப்புடன்  செய்வோம் 
தானம்......

ஒருமுறையேனும் 
இதை  சிந்திப்போம்!
செயல்  படுத்துவோம்!
வாழ்வது  ஒரு முறையே!

]]>
http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒருமுறையேனும்-உஷா-முத்துராமன்-2947001.html
2946998 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒருமுறையேனும்: ஆ.செந்தில் குமார் கவிதைமணி DIN Monday, June 25, 2018 05:29 PM +0530 மனித ரெல்லாம் அழகானவர்தான் 
ஒருமுறை அவர்தம்
மறு முகத்தை உணராத வரை…!

ஆபத்து கூட அழகானதுதான்
ஒருமுறை நாம் 
அதன் அருகே செல்லாத வரை…!

அச்சம் என்பது நிரந்தரந்தான்: 
ஒரு முறை நாம் 
அதை நேருக்கு நேர் சந்திக்காத வரை…!

அறியாமை என்பது நிரந்தரந்தான் 
ஒரு முறை நாம்
ஆக்கத்தோடு சிந்திக்காத வரை…!

அடிமைத் தளைகள் நிரந்தரந்தான் 
ஒரு முறையேனும் நாம்
அதற்கெதிராய் கிளர்ச்சிகள் செய்யாத வரை…!

அயல்மொழி ஆதிக்கம் நிரந்தரந்தான் - 
ஒரு முறை நம்
அன்னை மொழியின் சிறப்பை உணராத வரை…!

அன்பும் கூட எட்டாக்கனிதான் 
ஒரு முறையேனும் நாம்
அதை எவரிடத்தும் செலுத்தாத வரை…!

நாட்டிற்கு வளர்ச்சி இன்றியமையாததுதான் 
ஒரு முறையேனும்
நாமதன் வளங்களைக் குலைக்காத வரை…!

எத்தகு செயலும் நற்பயன் தருமா?  
ஒரு முறையேனும் நாம்
எதிர் விளைவுகளைச் சிந்திக்காத வரை…!

]]>
http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒருமுறையேனும்-ஆசெந்தில்-குமார்-2946998.html
2946996 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒருமுறையேனும்:  பேராசிரியை செ. சுதா ராமு  கவிதைமணி DIN Monday, June 25, 2018 05:23 PM +0530 வறண்டு கிடக்கும் 
ஆற்றுப்படுகைகளில்
வளமாக நதிநீர் பாய்ந்து
மண் குளிர்வதை
கண் குளிர காணவேண்டும்
ஒரு முறையேனும்! 
சேற்றில் கால் வைத்து 
சோற்றில் கைவைக்க முடியாமல் 
மாண்டு போகும் 
உழவர்களின் வாழ்வில் 
வறுமை நீங்கி 
உலகின் முதல் பக்கம் 
உழவேதெய்வமென்று 
பறை சாற்றி மகிழ்வதை 
காண வேண்டும் 
ஒரு முறையாவது!
 

]]>
http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒருமுறையேனும்--பேராசிரியை-செ-சுதா-ராமு-2946996.html
2946995 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒரு முறையேனும்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு கவிதைமணி DIN Monday, June 25, 2018 05:22 PM +0530 ஒரு முறையேனும் ஓடும் வாழ்க்கையை
கொஞ்சம் திரும்பிப்பாருங்கள்!
வாழ்க்கை வசமாகும்!
ஒரு முறையேனும் உறவின் குரல்களுக்கு
செவிகொடுங்கள்!
உறவுகள் இனிக்கும்!

ஒரு முறையேனும் நட்பின் துயர்களுக்கு
தோள் கொடுங்கள்!
நட்பு சிறக்கும்!
ஒரு முறையேனும் குழந்தையின் கனவுகளுக்கு
உயிர் கொடுங்கள்!

மழலை மயக்கும்!
ஒரு முறையேனும் இசையின் இனிமையை
ரசித்து பழகுங்கள்!
இதயம் சிலிர்க்கும்!
ஒரு முறையேனும் உழைக்கும் உடலுக்கு
பயிற்சி கொடுங்கள்!

தேகம் வலுவாகும்!
ஒரு முறையேனும் தேசத்தின் நலனுக்கு
வாக்களியுங்கள்!
நல்லரசு உதயமாகும்!
ஒரு முறையேனும் வதங்கும் செடிகளுக்கு
நீர் இறையுங்கள்!
பசுமை வளமாகும்!
ஒருமுறையேனும் உங்களை சுற்றிய மாசுக்களை
வெளியேற்றுங்கள்!

இதயம் நலமாகும்!
ஒருமுறையேனும்  நீளும் கரங்களுக்கு
உதவிடுங்கள்!
நெஞ்சங்கள் உங்களை வாழ்த்திடும்!
ஒருமுறையேனும் தீய பழக்கங்களை
துரத்தி அடியுங்கள்!

நன்மை உங்களை பாதுகாக்கும்!
ஒரு முறையேனும் அன்பை
விளைவித்து பாருங்கள்!
ஆனந்தம் பெருக்கெடுக்கும்!
ஒருமுறையேனும் உங்கள் குழந்தைகளோடு
விளையாடிப்பழகுங்கள்!

குதூகலம் பிறப்பெடுக்கும்!
ஒருமுறையேனும் இயற்கையை
நேசித்து பாருங்கள்!
இன்பம் பெருக்கெடுக்கும்! 

]]>
http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒரு-முறையேனும்-நத்தம்எஸ்சுரேஷ்பாபு-2946995.html
2946993 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒரு முறையேனும்: கவிஞர் கே. அசோகன் கவிதைமணி DIN Monday, June 25, 2018 05:20 PM +0530 உணவை உண்ணும் போது போற்றி வணங்கினோமா? விவசாயிகளை! தனதுநலனை விட்டு பொதுநலம் பேணும் செவிலியரை நினைத்தோமா? கனவு காணுங்கள் என்றே உரைத்த அப்துல் கலாம் புத்தகம் படித்தோமா? தினமும் ஒளி நல்கும் ஆதவனின் செயலை போற்றி மகிழ்ந்தோமா? அன்பாய் அன்னை அறிவாய் தந்தை அன்றாடம் வணங்கினோமா? பண்பாய் பழகி பாசத்தை கொட்டும் பாட்டி தாத்தாவை மகிழ வைத்தாமோ? தன்னிகரல்லா தனித்தமிழால் காலத்தால் காவியக் கண்ணதாசன் நினைத்தோமா? எண்ணற்ற எண்ணங்கள் வளைய வந்தாலும் நல்லெண்ணம் ஒன்றே வாழ்வை வளமாக்கும் நினைத்தோமா ? ஒரு முறையேனும்…. ]]> http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒரு-முறையேனும்-கவிஞர்-கே-அசோகன்-2946993.html 2946992 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒருமுறையேனும்: ப.க.நடராசன் கவிதைமணி DIN Monday, June 25, 2018 05:17 PM +0530 அறியாமையினால் இழந்தேன் கிடைத்த
அரிய வாய்ப்பினை..

அடுத்து அமைந்தால்
அரியணை அமைப்பேன்
ஆரவாரம் இல்லாமல்..

இதழ்கள் இசைக்கின்றன
இயல்பாய் வரிகள்..

தமிழ் ஈகையாய்
வாரி வழங்குகின்றன
சொற்களை கோர்வையாக..

உலகில் உரிய வழியில் உன்னதம் பெற
வாய்ப்பினை ..

ஒருமுறையேனும்
எதிர்பார்த்து...
ஊர் நலம் பெற
எழுத்துக்கள்

என் எழுத்துக்கள்
ஏணியாய் அமையும்
ஐயம் இன்றி
சொல்வேன்
வாய்ப்பே
ஒருமுறையேனும்
வந்துவிடு..

]]>
http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒருமுறையேனும்-பகநடராசன்-2946992.html
2946989 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒருமுறையேனும்: புலவர் கு.நரசிம்ம சுப்பிரமணியன் கவிதைமணி DIN Monday, June 25, 2018 05:15 PM +0530 அன்புத்தாய் தன்சேய் காக்க ஒருமுறையேனும் மறப்பதுண்டோ! ஆசைப்பேய் மனம் ஆளாமல் ஒருமுறையேனும் இருப்பதுண்டோ! இன்பம் வேண்டாம் என்று ஒருமுறையேனும் இதயம் துடிப்பதுண்டோ! வென்ற பின்னர் அரசியலார் ஒருமுறையேனும் நமக்காக வருவதுண்டோ! வேடிக்கை மனிதர் கூட்டம் ஒருமுறையேனும் வெற்றி பெற்ற நிலைகளுண்டோ! குற்றம் செய்யும் மனமுடையார் ஒருமுறையேனும் தன்சித்தம் தெளிய நினைப்பதுண்டோ! பலமுறை செய்திடும் செயலை ஒருமுறையேனும் எண்ணிச்செய்வோம் பலரும் வாழ்வில் உயர்ந்திடவே ஒருமுறையேனும் பரமனைத் துதித்திடுவோம்.]]> http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒருமுறையேனும்-புலவர்-குநரசிம்ம-சுப்பிரமணியன்-2946989.html 2946988 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒரு முறையேனும்: சசி எழில்மணி கவிதைமணி DIN Monday, June 25, 2018 05:14 PM +0530 உயரம் சென்ற மனிதா நீ
வந்த வழி மறக்கலாமோ
கடந்து வந்த பாதை மறந்து
மதம் பிடித்து நடக்கலாமோ

இல்லாத நேரத்தில்
நீ பட்ட துன்பங்கள்
எல்லாம் வந்ததும்
பழையதை மறந்தாயோ

மறந்தால் வாழ்க்கை
இனிதாய் அமையுமோ
நினைத்தால் வாழ்க்கை
பாழாகிப் போகுமோ

வாழ்க்கையைத் திரும்பிப்பார்
இருக்கின்ற நேரத்தில்
நீ தந்து மகிழ்ந்திடு
உலகம் உன்னை கவனிக்கும்
ஒரு முறையேனும்.

]]>
http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒரு-முறையேனும்-சசி-எழில்மணி-2946988.html
2946986 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒருமுறையேனும்: முகில் வீர உமேஷ் கவிதைமணி DIN Monday, June 25, 2018 05:07 PM +0530 உன்
தேன் கண்ணுக்குள்
தேனீ நானாகி;

தேனெடுத்து
இதயத்தில் திணித்து
ராணித் தேனீயை
அழைக்கிறேன்;

இதயம் காப்பாற்ற
இலக்கைத் தேர்ந்தெடுக்க;
உதயமிலா வானில்
ஒளி வீச;

கலங்கமிலாக் கூட்டில்
மிலாவாய் துள்ளியோட;
அணைக்குள் அகப்பட்ட
அனைத்து
ஆரவார வெள்ளமாய்;

எனக்கு  ளடைபட்ட
குடத்து வெல்லமாய்:
குங்கிலிய வாசனையால்
குரல் தரும் காற்றினில்
தினம் - எனக்கு  ளூறும்
வாழ்வியல் வழிகாட்டி
வார்த்தைகள் திசைகாட்டி

எனக்குள் வலிகூட்டி
நினைப்பது பலமுறை;
நடக்கட்டும் - இந்த
ராசாவின் ராஜ்ஜியமாய்.........

]]>
http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒருமுறையேனும்-முகில்-வீர-உமேஷ்-2946986.html
2946985 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒரு முறையேனும்: கவிஞர் டாக்டர். இராஜலட்சுமி இராகுல் கவிதைமணி DIN Monday, June 25, 2018 05:05 PM +0530 ஆடையக வாசலிலே ஒய்யாரமாக நிற்கும் நீ... ​அணிகலன்கள் அழகு சேர்க்க ஆடைகளும் புத்தம் புதிதாய் !!! உன் பாதங்களோ பன்மடங்கு விலையுயர்ந்த பாதுகைகளுக்குக் சொந்தக்காரனாய் !!! சுட்டெரிக்கும் வெப்பதில் மிதியடியும் இன்றி மேலங்கியும் இன்றி - என் பிட்டத்தைச் சுட்டிக்காட்டும் வட்டமான இரு ஓட்டைகள் கொண்ட காற்சட்டையுடன் அரை நிர்வாணமாய் உனை வெறித்துப்பார்த்திடும் நான் இறைவனிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான்!!! உயிரை எனக்குத் தந்த இறைவன் உடையை மட்டும் உனக்குத் தந்ததேன் !!! கண்ணாடி பேழைக்குள் காட்சிப் பதுமையாய் நிற்கும் உன் உடலை அலங்கரிக்கும் ஆடைகள் ஒரு முறையேனும் அதனை ஏக்கத்தோடு காணும் எனது உடலைத் தழுவ வாய்த்திடும் நாள் வருமோ!!! ]]> http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒரு-முறையேனும்-கவிஞர்-டாக்டர்-இராஜலட்சுமி-இராகுல்-2946985.html 2946983 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒருமுறையேனும்: ரா.பார்த்தசாரதி  கவிதைமணி DIN Monday, June 25, 2018 05:03 PM +0530 மறை செய்யும் முறைகளை ஒரு முறையேனும் ஆய்ந்தோமா ! மறைகளையும் வேதங்களையும் ஆவல்கொண்டு என்றாவது கற்றோமா! நற்குலத்தில் பிறந்தாலும் அதுபற்றி கற்க நினைப்புடன் முயன்றோமா ! பணமே உயிரென தேடி அலைந்தோமே மிச்சப்படுத்தி தர்மங்கள் செய்ய நினைத்தோமா ! பணத்திற்காக தகுதியற்றவனை மெச்சினோமே நடுநிலை காணமுடியாமல் வெட்கப் பட்டோமா ! ஒரு சிலவற்றிற்கு தன்மானத்தையும் அடகுவைத்து கூனி குறுகி நின்ற நிலைமையை நினைத்துப்பார்த்தோமா ! மனிதனே, ஒரு முறையேனும் உனது மனசாட்சியை நினை சூதினை என்றாவது தர்மம் வெல்லும் என்பதை நினை !]]> http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒருமுறையேனும்-ராபார்த்தசாரதி-2946983.html 2946982 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒருமுறையேனும்: ப.வீரக்குமார் கவிதைமணி DIN Monday, June 25, 2018 05:01 PM +0530 பித்தந் தெளிந்து
சத்தம் மறந்து
சங்கடங் குறைத்து
சிம்புட் பறவையாய்

சிறகை விரித்து;
அகண்ட புவியில்
ஆனந்தம் மணக்க
ஆசை சுரப்பியைத்
தூண்டிய செய்து;

மேகத்துக்குள்
போதனைகள் கரைத்து;
பால் வெளியில் 
பாங்கோடு சுற்றி; 

பண்பட்ட மனங் கொண்டு
புண் தரும் வழிதடுத்து;
ஏகாந்தப் பொருளை
ஓங்காரத்தில் நிறுத்தி
ஓசை கூட்டி

வென்றேன் வென்றேன்;
வாழ்வின்
இன்பத்துள் நுழைந்து
சொர்க்கத்தின் 
வாசல் கடந்து
தேவருடன் கலந்து
செறிவுற்ற சித்தத்தில்
மயங்கிடும் நிலை
என்றாவது 
ஒரு நாள்

]]>
http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒருமுறையேனும்-பவீரக்குமார்-2946982.html
2946981 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒரு முறையேனும்:  கு.முருகேசன் கவிதைமணி DIN Monday, June 25, 2018 04:57 PM +0530 பனிக் குடத்தை
நீந்தியே கடந்த எனக்கு
ஒரு முறையேனும்
பாற்கடலையும்
நீந்திக் கடக்க ஆசை!

ஒரு முறையேனும்
பறவையாய் மாறி
கடவுச் சீட்டின்றி
கண்டம் தாண்ட ஆசை!

மூச்சுக் காற்று முழுசாய் நிற்பதற்குள்
ஒரு முறையேனும்
சாதித்து சிகரம் தொட
சலிக்காமல் எனக்கு ஆசை!

வாழ்வில்
ஒரு முறையேனும்
பாலப் பருவத்துடன்
பள்ளிக்குச் செல்ல ஆசை!

]]>
http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒரு-முறையேனும்--குமுருகேசன்-2946981.html
2946978 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒரு முறையேனும்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி கவிதைமணி DIN Monday, June 25, 2018 04:21 PM +0530 மூச்சு விட திணறுகிறது,
இந்தியாவின் மூச்சுக்காற்று ,
தலைநகரம் புது டில்லி –

“காற்று” திரைப்படம்
ஓட முடியாமல்
முளைத்தது ஒரு புது வில்லி –
அங்கே போட்டிருப்பது
தார் சாலைகளா , கார் சாலைகளா ?
நகர்ந்து கொண்டிருக்கிறது
அந்தத் தேர்
“குப்பை” என்ற அச்சாணியில் –
வாய்க்குள் புகுந்த வாகனப்புகை :
எச்சில் கூட பிசு பிசுக்கிறது –
விலங்குகளையும் விடவில்லை ஆஸ்த்மா !

அடுக்கு மாடிக்குடியிருப்புகளில்
தொட்டால் அழுக்கு ஒட்டும் மேகங்கள் !
சிறிகளால் விரட்டிக் கொண்டிருக்கிறது
 ஒரு கூட்டம் –
எந்த துக்கத்தை மனதில் வைத்து
கருப்பு சட்டை உடுத்தியது
தாஜ் மஹால் ?

மனிதக்கண்களுக்கு
ஒரு மாசுப்போர்வை
மங்கலாய் ஒரு பார்வை –
போதும் – தடுத்து நிறுத்துங்கள்—
ஒரு முறையேனும் – வாரத்தில்
ஒரு முறையேனும்  
மிதிவண்டியில் செல்லுங்கள் –
சைக்கிளுக்கு கை கொடுங்களேன்..

]]>
http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒரு-முறையேனும்-கவிஞர்-டாக்டர்-எஸ்-பார்த்தசாரதி-2946978.html
2946977 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒரு முறையேனும்: -ஆர். வித்யா கவிதைமணி DIN Monday, June 25, 2018 04:19 PM +0530 பசியறிந்து ருசி உணர்ந்து உணவை ஒருமுறையேனும் உட்கொண்டதுண்டா?! மனம் துள்ளும் இசை கேட்டு உட்கார்ந்தபடியாவது நடனமாட ஒருமுறையேனும் உடம்பு இசைந்ததுண்டா?! சாதா மழைக்கே வீட்டுக்குள் வந்துவிட்ட வெள்ளத்தை இயற்கையின் வரமென்று ஒருமுறையேனும் மனம் ஏற்றதுண்டா?! கவிதை வாசிப்பில் கதையும் கதை வாசிப்பில் கவிதையும் கிடைத்திட்ட பரவசவேளையை ஒருமுறையேனும் அடைந்ததுண்டா?! அக்னி உச்சி வெய்யில் வேளையில் மரநிழலில் ஒதுங்கி மரக்குளுமையால் ஒருமுறையேனும் உடலை குளிர்வித்ததுண்டா?! குடை இன்றி குளிரக்குளிர மழையில் ஒருமுறையேனும் நனைந்து கொண்டே நடந்ததுண்டா?! மின்வெட்டு வேளையை ஒருமுறையேனும் சபிக்காமல் ஏற்றுக்கொண்டதுண்டா?! தூரநின்று கடல் அலையையும் நடுவில் நின்று மித ஓட்ட நதி நீர் அலையையும் ஒருமுறையேனும் படித்ததுண்டா?! அடிமை உணர்ந்து விடுதலை அடைந்து ஒருமுறையேனும் சுதந்திரக்காற்றை சுவாசித்ததுண்டா?! குழந்தையை வலிக்க வலிக்க அடித்துவிட்டு தனிமையில் கண்ணீர்வராமல் ஒருமுறையேனும் அழுததுண்டா?! பனியில் நனைந்தபடி கிழக்கில் எழுந்துவரும் கதிரவனின் முதல் கதிரை ஒருமுறையேனும் கண்டதுண்டா? அப்படியாயின் நீவீர் மனிதராவீர்!! வாழ்க மானுடம் !! ]]> http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒரு-முறையேனும்--ஆர்-வித்யா-2946977.html 2946975 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒருமுறையேனும்: கே.ஆர். கார்த்திகா கவிதைமணி DIN Monday, June 25, 2018 04:16 PM +0530 ஒருமுறைதான் பிறப்பு
பெற்றோர் தரும் உயிர்
ஒருமுறைதான் இறப்பு
நாம் செய்யும் தவம்
இடைப்பட்டவையெல்லாம்
இயற்கை கொடுத்தருளிய வரம் . . .
சொன்னாலும் சொல்லாவிடினும்
வாழ்க்கை ஒருமுறைதான். . .

வாழ்ந்துதான் காட்ட வேண்டும்
இறப்பும் ஒருமுறைதான்
இறந்துகாட்டமுடியாது
இறப்பையும் வாழ்ந்து காட்டியே
நிரூபிக்கவேண்டியதிருக்கு . . .
ஒரு முறையேனும் கிடைத்ததே
இந்த அற்புத வாழ்க்கை நமக்கு. . .

]]>
http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒருமுறையேனும்-கேஆர்-கார்த்திகா-2946975.html
2946974 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒரு முறையேனும்: அ.வேளாங்கண்ணி கவிதைமணி DIN Monday, June 25, 2018 04:13 PM +0530 ஒரு முறையேனும் கோபப் படு நீயும் வாழும் மனிதன் அன்றோ? ஒரு முறையேனும் சிரித்து விடு சிரிப்பு மனிதனின் வரமும் அன்றோ? ஒரு முறையேனும் அழுது விடு அழுதால் வலிகள் அடங்கும் அன்றோ? ஒரு முறையேனும் மன்னிப் பாய் அதனால் உனக்கொரு இழப்பும் இல்லை ஒரு முறையேனும் எண்ணிப் பார் எதனால் என்றொரு கருத்தும் வரும் ஒரு முறையேனும் உன்னைப் பார் நீயும் உன்னையே உணர்ந்து கொள்வாய் ஒரு முறையேனும் தானம் கொடு கொடுத்த‌பின் இன்னும் தர முயற்சியெடு ஒரு முறையேனும் திருப்பிக் கொடு அடக்கி வைத்தென நன்மை பெற்றாய் ஒரு முறையேனும் மரத்தை நடு வெட்டிய பாவத்தை கழுவிக் கொள்ள‌ ஒரு முறையேனும் மௌனம் பற்று பேசியே எத்தனை குழிகள் கண்டாய் ஒரு முறையேனும் ஊரைச் சுற்று படைத்தவன் தன்னையே மதிக்கும் படி ஒரு முறையேனும் மொழிகள் கற்று உனக்கு நீ பேசிடு அற்புதமே ஒரு முறையேனும் அமைதி கொள்ளு உள்ளத்தின் துயரங்கள் அடங்கும் பாரு ஒரு முறையேனும் அடங்கி நில்லு எட்டாத உயரங்கள் கிடைக்கும் பாரு ஒரு முறையேனும் நல்லது சொல்லு பொல்லாத சொற்களெல்லம் ஓடும் பாரு ஒரு முறையேனும் வாழ்ந்து விடு வாழ்க்கை என்பது அழகாய் வாழ்வதற்கே ஒரு முறையேனும் வாழ்ந்து விடு வாழ்க்கை எல்லோரையும் சிறப்பாய் வாழ்த்துவதற்கே ஒரு முறையேனும் வாழ்ந்து விடு இப்போ வாழாமல் எப்போதான் வாழ்வோம் ]]> http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒரு-முறையேனும்-அவேளாங்கண்ணி-2946974.html 2946973 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒருமுறையேனும்: ஈழநங்கை கவிதைமணி DIN Monday, June 25, 2018 04:12 PM +0530 ஒருமுறையேனும்
துன்பங்கள் மறந்து
தாய்மடி மீது 
சின்னஞ்சிறு குழந்தையாய்
தூங்கி விட ஆசை

ஒருமுறையேனும் மீண்டும்
பாடசாலை சென்று
பள்ளி மாணவியாய்
பள்ளித்தோழியருடன்
துள்ளித்திரிந்திட ஆசை

ஒருமுறையேனும்
துன்பங்கள் மறந்து
சிட்டுக்குருவியாய்
சிறகடித்துப் பறந்து
உலகை சுற்றிவர ஆசை

நாளும் பொழுதுமாய்
நகருகின்ற வாழ்க்கையிலே
கனவிலாவது கிடைத்துவிட வேண்டும்
நினைவழியா ஆசைகள்
ஒருமுறையேனும்.

]]>
http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒருமுறையேனும்-ஈழநங்க-2946973.html
2946972 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒரு முறையேனும்: கலைபரமேஷ்.ம கவிதைமணி DIN Monday, June 25, 2018 04:11 PM +0530 அரைசான் வயிற்றுக்குள் அடங்கி வாழ்ந்தவள் பிறக்கிறாள் கனவோடு – சூளையில் அம்மா வயிற்றில் மிதிப்பட்டபொழுது. வலியோடு கத்திய அம்மாவின் கதறலை இவள் குரல் – அடக்கியது. மாவீரனாக தோளில் அப்பா அவளை தூக்கிய பொழுது அதே பிரசவ கடனிற்காக மிதித்தனர் - இம்முறை அப்பா. செம்மண்ணின் நிறம் சிகப்பாக மாறியது இவனின் இரத்தம் சொட்ட…. அதே மண் அவன் இரத்ததில் கலந்ததது காயத்தின் மீது அவள் பூசிய மண்ணாக வருடங்கள் கடந்தன, செங்கல்களுக்கு இவள் கைகள் உயிர்கொடுத்தன – தீயில் எரிந்து முழு உயிர்பெற்றது. தினம் தினம் நினைத்துக்கொண்டால் ஒரு முறையேனும் இந்த அடிமைத்தனத்தை எரிப்போம் செங்கல்களை போல் இறுதியில் தீயில் கருகியது செங்கல்கள்…….. ]]> http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒரு-முறையேனும்-கலைபரமேஷ்ம-2946972.html 2946971 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒருமுறையேனும்: வேதஹரி கவிதைமணி DIN Monday, June 25, 2018 04:08 PM +0530 ஒருமுறையேனும் கவிதை ஏன்எழுதவேன்டும் எதர்காகஎழுதவேன்டும் காதல்வளர்குமா மொழிவளர்க்குமா புகழ்நிலைக்குமா அப்படியானால்... இதுநாள்வரை… மயில்ஆடும் குயில்பாடும் மலைஅழகு பூமலரும் வைகரைபுலரும் நிலவு வானம் நீலம் யாருக்குத்தான்தெரியாது சொல்வனயாவும் அரிந்தவையே தெரியாததைசொன்னால் அபத்தம் கவிதை யாருக்காகஎழுதுவது உனக்காகவா எனக்காகவா பத்திரிக்கைகளுக்கா புத்தகங்களுக்கா எதைச்சொல்லஎழுதுவது ஒன்றுமில்லை உனக்கும் எனக்கும் பிடுக்கும் அவ்வளுவுதான். ]]> http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒருமுறையேனும்-வேதஹரி-2946971.html 2946969 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒருமுறையேனும்: வ.க.கன்னியப்பன் கவிதைமணி DIN Monday, June 25, 2018 04:06 PM +0530 அருநெறி அருளும் அன்பில் ஆட்சிசெய் இறைவன் காட்டும் கருணையை என்றும் எண்ணி, காத்திடும் இறையின் பண்பைக் கருவிழி மாந்தர் கண்ணில் காட்டிடும் பாசந் தன்னில் ஒருமுறை யேனும் உன்னி உருகிட வேண்டும் நன்றாய்! ]]> http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒருமுறையேனும்-வககன்னியப்பன்-2946969.html 2946968 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒருமுறையேனும்: ஆர்.அருண்குமார் கவிதைமணி DIN Monday, June 25, 2018 04:05 PM +0530 எத்தனையோ கனவுகள் மனதுக்குள் அத்தனையும் பலிக்கவில்லை. வித்தகனாக வேண்டும் என்றகனவு பித்தனாக அலையவைத்தது. நல்லவனாக வேண்டுமென்ற நனவு மெல்லவே மாறிப்போனது. வல்லவனாக நினைத்தபோதில் சொல்லமுடியா வேதனை தந்தது. நாட்டைத் திருத்த எண்ணிய மனமோ வேட்டை நாயாய் திரிய வைத்தது. கோட்டை கட்ட போராடியபோது போட்ட திட்டமெல்லாம் மறைந்தது. உண்மையைக் கூறினால் உலகமோ அண்மையில் வராதே என்றது. வண்ணமாய் ஒளிர்ந்தபோது எண்ணமோ அலைபாய்ந்தது. ஒருமுறையேனும் நினைத்தபடி உள்ளம் மாறவேண்டும். மறுமுறையாவது மனமெல்லாம் உறுதுணைபுரிய வேண்டும். ]]> http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒருமுறையேனும்-ஆர்அருண்குமார்-2946968.html 2946967 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒருமுறையேனும்: கவிஞர் இரா. இரவி ! கவிதைமணி DIN Monday, June 25, 2018 04:01 PM +0530 ஒருமுறையேனும் இலங்கை இராணுவத்தை நமது இந்திய இராணுவம் சுடவேண்டும் என் ஆசை இது! மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களின் வலையை அறுக்கிறான் மீனவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கி வருகிறான்! துப்பாக்கியால் காக்கா குருவியென சுடுகிறான் தலைகளைக் கண்டாலே தாவி ந்து தாக்குகிறான்! உயிரோடு திரும்பி வருவது மீனவர்களுக்கு உத்திரவாதம் இல்லாமல் போனது இலங்கையால் ! தானம் தந்த கச்சத்தீவில் ஆதிக்கம் செய்கிறான் தத்தளிக்க விட்டு கொடூரமாக ரசித்து மகிழ்கிறான்! படகுகளைப் பறித்துக் கொண்டு விரட்டுகின்றான் பரிதவிக்க விடுகிறான் பாவப்பட்ட மீனவர்களை! கடலுக்குள் ஏதடா எல்லை புரியவில்லை இலங்கைக்கு காற்று அடித்தால் கடந்து விடும் படகு அறியவில்லை! எல்லை தாண்டி வந்து பயங்கரவாதம் புரிகிறான் எல்லை மீறிய அடாவடித்தனம் செய்து வருகிறான்! தட்டிக் கேட்க யாருமில்லை இறுமாப்பு கொள்கிறான் தடியடியாவது நடத்துங்கள் இலங்கை இராணுவத்தை! தமிழக மீனவனும் இந்தியன்தான் உணருங்கள் தமிழனைக் காக்க இராணுவத்தை அனுப்புங்கள்! தமிழக மீனவன் மீது கை வைத்தால் இந்திய இராணுவம் தட்டிக் கேட்கும் என்ற பயத்தைக் காட்டுங்கள்! உலகமகா ரவுடியாக வலம் வரும் கொடூரன் இலங்கை இராணுவத்திற்கு பாடம் புகட்டுங்கள்! என் ஆசை என்றும் நிறைவேறாது தெரியும் ஒருமுறையேனும் இலங்கை இராணுவத்தைச் சுடுங்கள்!]]> http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒருமுறையேனும்-கவிஞர்-இரா-இரவி--2946967.html 2946966 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒருமுறையேனும்:  சரஸ்வதி ராசேந்திரன் கவிதைமணி DIN Monday, June 25, 2018 03:59 PM +0530 நாட்டின் நிலவரம் நாளும் கலவரம் அம் மென்றால் ஆர்ப்பாட்டம் உம் மென்றாலே போராட்டம் சோறுபோடும் உழவர் கூட்டம் கூறு போடபிரிந்து விவசாயமும் செத்ததிங்கே தீவிர வாதமும் பாலியல்கொடுமையும் தினமும் நடக்கிறது குடும்ப உறவுகளோ குடை சாய்ந்துகிடக்கிறது நாடு நலம் பெற நலத்திட்டங்கள் விரிவடைய நயத்தை இழந்து சுயத்தையும் இழந்து தவிக்கும் மக்கள் துயரம் போக நல்லாட்சி அமைந்திட வல்லரசாய் இந்தியா நல்லரசாக நானிலத்தில் ஒரு முறையேனும் வருவாரா காமராசர்போல் ஒருவர்,,,,,,,,]]> http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒருமுறையேனும்--சரஸ்வதி-ராசேந்திரன்-2946966.html 2946962 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒருமுறையேனும்.: இராஜேந்திரன் சத்யா கவிதைமணி DIN Monday, June 25, 2018 03:31 PM +0530 என் ஐம்பூத உலகினில் உலாவி வரும் உயிராய்....!!! என் நான்திசை பக்கமும் வளம் வரும் வாசமாய் ...!!! என் முப்பொழுதினிலும் முகம் பதிக்கும் பதுமையாய் ...!!! என் இரு கண்களின் கனவிலும் கடத்தி செல்லும் சோலையாய் ....!!! என் ஒற்றை இதயத்தை ஓயாமல் ஒலித்து, ஒளிந்திருக்கும் ஓவியமாய்....!!! காதலொழுக கதை பேசும் என் மனதிற்கு............ அவள் உதடுகள் உதிர்த்த காதலை.... என் செவிகளும் பருகாதோ....... ஒருமுறையேனும்.......!!!]]> http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒருமுறையேனும்-இராஜேந்திரன்-சத்யா-2946962.html 2946959 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒருமுறையேனும்: பெருவை பார்த்தசாரதி கவிதைமணி DIN Monday, June 25, 2018 03:28 PM +0530 சந்திரனையும் சூரியனையும் தந்தது யார் சற்றேயொரு முறை யேனும் யோசியுங்கள்.! எந்திர சக்தியை எங்கிருந்(அ)து பெற்றதாம் எங்கேயோ அந்தரத்திலது தொங்கு தற்கு.! மந்திரத்தால் இயங்க வில்லை தெரிந்துமது மாயமாய் மறைந்து மீண்டும் திரும்புகிறது.! தந்திரத்தால் அங்கே போகமுடியுமா?நிரந்- தரமாய் நிலையா யங்கே தங்கமுடியுமா.? தருகின்ற ஒளியும் தடங்களில்லாக் காற்றும் தரணியைக் காக்கச் சன்மானம் ஏதுமில்லை.! இருளும் ஒளியும் நீதராது இவ்வுலகுண்டா இயற்கையே உன்னை என்றும் மதிப்பேன்.! ஒருநாளில் ஒருமுறை யேனும் உன்னை உறங்கு முன்னே நினைப்பேன் அதன்பின்.! வருகின்ற மற்றை நாட்களில் எல்லாமும் வாழ்வி லொருவகைப் பிடிப்பு வருமென்றே.! ஒருமுறை தான்பிறவி வேண்டு மதுவும் உலகுக்குதவி செயும் கிரகங்களைப் போல.! கருவிலே இருக்கும் போதே நாங்களும் கருணை யுள்ளமுடன் உயிராக வேண்டும்.! இருளிலும் ஒளிதந்து பிரதிபலன் பாராத உன்னொளியால் நீரிலும் மலர் மலர்கிறது.! உருவிலே சிறிதாய் இருந்தாலும் இப்பரந்த உலகையே ஆளும் திறமை உனக்குண்டு.!]]> http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒருமுறையேனும்-பெருவை-பார்த்தசாரதி-2946959.html 2946958 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒரு முறையேனும்: பாலா கார்த்திகேயன்  கவிதைமணி DIN Monday, June 25, 2018 03:25 PM +0530 தெய்வமே 
தேடித் தேடி அலைகிறோம் 
தேடிக் கிடைக்காமல் தவிக்கிறோம் 
உன் அருள்  தேவையே 
உன் கருணைப் பார்வை வேண்டுமே 

தமிழனின் உரிமைகள் 
தமிழனின் போராட்டங்கள் 
தீர்வு கிடைக்குமா....

காய்ந்து போன உள்ளத்தில் 
மாய்ந்து போன மனிதனிடத்தில் 
சோர்ந்து போன நெஞ்சத்தில் 
அயர்ந்து போன எம் குலத்தில் 

அமைதி பிறக்க 
அற்புதம் நடக்க 
ஒரு முறையேனும் 
தெய்வமே உன் கண் பார்வை படாதா....

]]>
http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒரு-முறையேனும்-பாலா-கார்த்திகேயன்-2946958.html
2946957 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒரு முறையேனும்: கே.நடராஜன் கவிதைமணி DIN Monday, June 25, 2018 03:23 PM +0530 அலை பேசி , கை பேசி எதுவும் 
இல்லாமல் தனி ஒருவனாய் 
என்னை மறந்து, இந்த உலகை 
மறந்து , வலையின் மாயையில் 
இன்னும் சிக்காத ஒரு மண்ணின் 
மடியில் நான் ஆடி ஓடி நடை பயில 
வேண்டும் ஒரு நாள் முழுதும் !

அந்த மண்ணின் மரத்தில் 
குடியிருக்கும் குயிலின் பாட்டு 
பாட்டு மட்டும் கேட்க வேண்டும் 
ஒரு நாள் முழுதும் நான் !

இது என் தீராத ஆசை !  என் 
ஆசை நிறைவேறுமா என் வாழ் நாளில் 
ஒரு முறையேனும் ?

]]>
http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒரு-முறையேனும்-கேநடராஜன்-2946957.html
2946956 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒருமுறையேனும்: பி.பிரசாத் கவிதைமணி DIN Monday, June 25, 2018 03:20 PM +0530 ஒருங்கிணைத்து, வழிகாட்டி ஒருகுழுவை நடத்திடவே ஒருதலைவன் வேண்டுமதில் சந்தேகம் ஏதுமிலை ! தலைவனவன் காட்டும்வழி கண்மூடி செல்லுதலோ வலைதன்னில் வலிந்தேநாம் வீழ்தல்போல் ஆகிடுமே ! சொன்னவழி நல்வழியா? சிறந்ததொரு நன்முறையா? என்றுஒரு முறையேனும் சுயமாக சிந்திப்போம் ! தவறென்றால் தலைவனிடம் தயங்காமல் எடுத்துரைப்போம் ! எவருக்கும் பயந்தேநாம் எதையும்தான் செய்யோமே ! சரியென்ற வழியதுவே நமைசேர்க்கும் நல்லிடமே! 'சரி'யென்று யாவைக்கும்.. சரியின்று சொல்லோமே ! ஆடுகளின் கூட்டம்போல் அலைந்தேபின் செல்லோமே ! கேடுவரும் எனதெரிந்தும் கெட்டவழி செல்லோமே ! ஒருமுறையே தானும்நாம் செய்யும்முன் சிந்திப்போம் ! ஒருகுறையும் வாராதே ! வந்தாலும் எதிர்கொள்வோம் ! எண்ணியேநீ துணிகவென‌ சொன்னானே அன்றேதான் ! கண்மூடி செல்லாமல் கருத்தோடு சிந்திப்போம் !]]> http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒருமுறையேனும்-பிபிரசாத்-2946956.html 2946954 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒரு முறையேனும்: குமார் சுப்பையா கவிதைமணி DIN Monday, June 25, 2018 03:16 PM +0530 ஒரு முறையேனும் ஒளிவு மறைவின்றி! ஒருமித்த உணர்வுடன் பாலம் ஓங்கிட! பரிதாப மனதுடன் ஒவ்வொரு முறையும்! பாலங்கள் பதறி பரிதவிக்கிறது! கையூட்டு பெற்று கைவிட்டு விடுவாரோ என்று! ஆறுகள் கண்ணீர் வற்றிப் போனது! அழுதாலும் மணலும் அற்றுப் போனது! உடையின்றி உருவின்றி உருகிப் போனேன்! உனைநீங்கி எனையிழந்து காணாப் போகிறேன்! ஒரு முறையேனும் மணல் எனும்! ஆடையை விட்டு வைத்தால்! உலகில் நானும் வாழ்வேன்! உன்னைக் காத்திட! _மனிதா உன்னையும் உன் உயிரையும் காத்திட! ]]> http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒரு-முறையேனும்-குமார்-சுப்பையா-2946954.html 2946952 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒருமுறையேனும்: பாவலர் கருமலைத்தமிழாழன் கவிதைமணி DIN Monday, June 25, 2018 03:11 PM +0530 தண்ணீரே வாராதத் தெருக்கு ழாய்கள் தாரின்றிக் கல்குத்தும் வீதிச் சாலை மண்சேறாய்ச் சாக்கடைநீர் தேங்கும் முற்றம் மறந்துமொளி வீசாத மின்கம் பங்கள் கண்மறைக்கும் ஆளுயர விளம்ப ரங்கள் காட்சிதரா ஆட்சியாளர் என்றே நாளும் எண்ணற்ற பிரச்சனைகள் எதிரில் நிற்க எவரேனும் கேட்பதற்கு வந்த துண்டா ! இயற்கையினை அழிக்கின்றார் ! சுற்றுச் சூழல் இனியகாற்றை மாசாக்கிக் கெடுக்கின் றார்கள் வயல்ஏரி குளங்களினை விற்கின் றார்கள் வளம்தந்த ஆற்றுமணல் அள்ளு கின்றார் அயல்மொழியில் கல்விதந்து வணிக மாக்கி அன்னைமொழி தமிழ்மொழியை ஒதுக்கு கின்றார் செயல்பட்டே இவைகளினைத் தடுப்ப தற்குச் செழுந்தோளார் எவரேனும் வந்த துண்டா ! அரசியலார் செய்கின்ற தவற்றைக் கேட்க அரசாங்க அலுவலர்கள் கையூட் டோட்டக் குரலெடுத்து முழக்கமிட்டே ஒருவ ரேனும் கூடிடுவோம் ஒற்றுமையாய் என்ற துண்டா விரல்நீட்டிக் கயவரினைச் சுட்டி நீங்கள் விரட்டுதற்கே ஒருமுறைதாம் எழுந்து விட்டால் வரலாற்றை மாற்றிடலாம் ! தூய ஆட்சி வளவாழ்வு இங்கமையும் வாரீர் வாரீர் !]]> http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒருமுறையேனும்-பாவலர்-கருமலைத்தமிழாழன்-2946952.html 2946951 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒருமுறையேனும்: ​கோ. மன்றவாணன் கவிதைமணி DIN Monday, June 25, 2018 03:09 PM +0530 அன்பூற்றி, ஆசையிட்டு
ருசிக்க ருசிக்க மனைவி சமைத்த
அமுதுணவை நாவிலிடும் போது
அலுவலகத்தின்
அவசர வேலைகளை
நினைவால் மெல்லுகிறீர்கள்

அலுவலகத்தில்
அதிகப் பணிநெருக்கடியின் போதும்
உடன்பணியாற்றும் எதிராளியின்
உயர்முன்னேற்றத்தை நினைத்து
மனசைச்
மலச்சாக்கடையில் அமிழ்த்துகிறீர்கள்

இலக்கியக் கூட்டத்தில் சுகி.சிவம் பேசும்போதும்
கைப்பேசியில்
விரல் தேய்க்கிறீர்கள்

பஞ்சணையில் மனைவி அரவணைக்கும் போதும்
பள்ளிப் பருவக் காதலை
அசைபோடுகிறீர்கள்

இன்றில் வாழும் போது
நேற்றில்
கால்பதித்து நடக்கிறீர்கள்.

கோவிலுக்குள் சென்று கும்பிடும் போதும்
களவு போகாமல் தப்புமோ என்று
வெளியில் நிறுத்திய வாகனத்தில்

உள்ளத்தை
ஒருமுகப்படுத்துகிறீர்கள்.

வாகனத்தை மிகுவேகத்தில் செலுத்தும்போதும்
மனது பறக்கிறது
வேறு திசைநோக்கி

நிகழ்நேரத்தில்
வாழ்ந்து மகிழ்ந்ததுண்டா
ஒருமுறையேனும்....?

]]>
http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒருமுறையேனும்-​கோ-மன்றவாணன்-2946951.html
2946950 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒரு முறையேனும்: கவிஞர்.கா.அமீர்ஜான் கவிதைமணி DIN Monday, June 25, 2018 03:08 PM +0530 சுயத்தை
சோதித்துப் பார்த்துக் கொள்ள
சுதந்திரம் இருந்தும்
சும்மாவே இருக்கின்றோம்...

பொய் சூது வஞ்சம் 
யாவும்
மெய்யாக மெய் மறைக்க
புரண்டபடி ஆடுகிறோம்
புலன்களோடு...

புன்னகையை உதட்டில் ஒட்டி
புரட்டின் முட்களை
புலன்களால் போர்த்திக் கொண்டு 
பூனைகளாய் ஆகின்றோம்
பூகோளம் இருண்டதென்று...

கோவில் கொத்தளத்தில்
கும்பிடப் போகாமல்
நாவில் குருதிச் சொட்டும்
காம வெறிக்கு
கடவுள் முன்னாலேயே 
பூவைப் பெய்த்தெறிதல்
பாவமென்று தெரியாதோ...

சிந்தனைச் சரிதலும்
சண்டாள எண்ணங்களில்
சரணடைந்து மகிழ்தலும்...

சாமிக்கு முன்னாலே
சாதிகளைப் பேசுவதும்
சந்தியிலே மதங்களை
சம்ஹாரம் செய்வதுவும்...

சமதர்மப் பொதுநலங்கள்
சங்கமிக்கச் செய்யாமல்
தீமூட்டி ஆர்ப்பறித்தால்
திசைகள் ஏசாதோ...

அன்பின் அச்சாணியில்
அகிலம் சுழலுவதை
மறுப்பாறும் உண்டோ...
ஆனந்த இன்பத்தை
வெறுப்பாரும் உண்டோ...

மன்பதை வாழ்வோரே
மனதில் இதை நிறுத்திப்பார்த்து
ஒரு முறையேனும் சிந்தித்ததுண்டா...!?

]]>
http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒரு-முறையேனும்-கவிஞர்காஅமீர்ஜான்-2946950.html
2946948 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒருமுறையேனும்: கவிஞர் நம்பிக்கை நாகராஜன் கவிதைமணி DIN Monday, June 25, 2018 03:06 PM +0530 சொல்லுகின்ற சொற்களெல்லாம் சுடுமே என்று சிந்தனையில் சிறிதேனும் நினைத்தல் உண்டோ அள்ளவேண்டும் பொருளென்று எண்ணும் போதே அதுவெல்லாம் பொதுவுடமை கணக்கில் உண்டா மெல்லமனம் சொல்லுகின்ற நீதி எல்லாம் மௌனத்தால் கனிந்திருந்து நினைத்தல் உண்டோ எல்லையின்றி உழைப்பவர்கள் உதிரம் எல்லாம் உன்செல்வம் என்றுணரும் எண்ணம் உண்டா உனக்கெனவே சுயநலமாய் பாதை கண்டாய் உழைக்கின்ற எளியோரை அடிமை என்றாய் கணக்கில்லா துன்பத்தைக் கண்ணால் கண்டும் கருணையில்லா செயல்காட்டி கடிந்து நின்றாய் மனத்துள்ளே ஓர்நாளும் இரக்கம் இன்றி மதியில்லா கீழ்பிறப்பாய் நடந்து கொண்டாய் குணங்காட்டி என்றேனும் இசைவாய்ப் பேசி குளிர்கின்ற ஓர்பார்வை பார்த்த துண்டா ? வருந்துன்பம் வறியவர்க்கா ? நமக்கே என்று வலிந்துதவும் சிந்தனையை மனதால் நாடு மருளென்ற இருள்நீங்கப் பரிவாய்ப் பேசி மனமெல்லாம் அருளாகி நேசம் காட்டு தருகின்ற கைதானே தாயின் கைகள் தணிந்தருள பயந்தோடும் வறுமைப் பேய்கள் இருள்சூழ்ந்த ஏழையரின் இன்னல் தீர “இதயமொரு முறையேனும் துடித்தல்” வேண்டும்]]> http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒருமுறையேனும்-கவிஞர்-நம்பிக்கை-நாகராஜன்-2946948.html 2946947 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒருமுறையேனும்: ஜி. சூடாமணி கவிதைமணி DIN Monday, June 25, 2018 03:03 PM +0530 ஓருமுறையேனும் காவிரியாறு தமிழகத்தில் கரைபுரண்டு ஓடவேண்டும் கங்கை நீர் தாமிரபரணியில் கலந்து வரவேண்டும் ஒருமுறையேனும் இந்தியா ஒன்று நினைவு வரவேண்டும் பொன்னியி செல்வன் காலத்தில் வந்த புதுவெள்ளம் இப்போது வரவேண்டும் கரிகாற்சோழன் காலத்தில் இருப்பாதாய் கனவு வரவேண்டும், அதில் களிப்பு வரவேண்டும் ஒருமுறையேனும் அமெரிக டாலரின் மதிப்பு இந்திய உரூபாய்க்கும் நிகராய் வரவேண்டும் ! ஒருமுறையேனும் வரிசையில் நின்றவர்கெல்லாம் ரேஷனில் பொருள்கள் கிடைக்கும் நம்பிக்கை வரவேண்டும்! ஒருமுறையேனும் சம்பளத்தை மட்டும் வைத்து குடும்பம் நடத்த மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டும் ! ஒருமுறையேனும் ஊழியர்கள் போராடாமல் அரசே ஊ\தியம் மாற்றி யமைக்க வேண்டும் ஒருமுறையேனும் உரூபாய் வாங்காமல் நமது வாக்கை நாம் தக்கவர்க்கு அளிக்க வேண்டும் ஒருமுறையேனும் கடனே வாங்காமல் தீபாவளி பண்டிகை திருப்தியாய் கொண்டாடவேண்டும்]]> http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒருமுறையேனும்-ஜி-சூடாமணி-2946947.html 2946946 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒரு முறையேனும்: ஆபிரகாம் வேளாங்கண்ணி  கவிதைமணி DIN Monday, June 25, 2018 03:00 PM +0530 ஆறுகளில் ஓடும் நீரால் தான் ஊர்களில் வாழும் வாழ்க்கை ஓடிக்கொண்டே இருந்தது இன்று ஆறுகளில் கழிவுகள் கலந்து ஆங்காங்கே தேங்கி நிற்பதால் ஊரார் வாழ்க்கையும் தேங்கியது ஜலதேவதையே தேங்கியோர் ஏங்கியோர் மேலோங்கி எழு "ஒரு முறையேனும்" நின்றன் கருணைக் கண்ணி யிரண்டை திறந்திட மாட்டாயா கார்மேகத்தை ஏவியெங்கள் தாகத்தை தணித்திடும் யோகத்தை அளித்திட வேண்டும் ஆவணம் செய்திடுவாய் தாயே அண்டை மாநிலத்தவரோடு நாளும் மண்டையை உருட்டி பலனேயில்லை தொண்டை வற்றியதே எஞ்சியது உரிமையை கெஞ்சிப் பெருவாரோ உரிமை மீறல்கள் போடுது வேஷம் அறிவு கவசம் உடுத்தி செய் துவசம் அஞ்சிடலில் பல னேது முண்டோ பூக்கடையில் மீன்களை தேடுவதும் சாக்கடையில் பூக்களை தேடுவதும் நாவுக்கடியில் உமிழ்நீர் சுரந்தாலோ சிலர் விழங்குவார் சிலர் உமிழ்வார் உமிழ்நீரை மட்டுமா வாய் பேசிடும் வார்த்தையையும் தான் அறியீரோ ஒரு முறையேனும் குறைத்தீருமா]]> http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒரு-முறையேனும்-ஆபிரகாம்-வேளாங்கண்ணி-2946946.html 2946940 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒருமுறையேனும்: கவிஞர் ராம்க்ருஷ் கவிதைமணி DIN Monday, June 25, 2018 02:53 PM +0530 உரசும் ஊழல் சேற்றிலிருந்து விலகி அரசியல் தருமத்தை மறக்காது பழகி சிரசு முதல் கால்வரை அன்பில் நனையும் முரசு ஒலி ஒருமுறையேனும் கேட்பேனோ சாதாரணப் பணியும் லஞ்சத்தில் நடக்கும் ஆதாரம் கேட்டு அலைய வைக்கும் என்றும் சேதாரமில்லாது செயல்கள் நடக்கும் அந்த மாறாத நிலை ஒருமுறையேனும் வருமா ஆதி மனிதன் நாகரிகமில்லாதிருந்தாலும் சாதி மதம் என உருவாக்கி சதிராடியதில்லை மோதிக் கொண்டது உணவுக்காக மட்டுமே நாதியற்ற இழிவு ஒருமுறையேனும் நீங்குமா ஓடியோடி உழைத்த நிலை இன்றில்லை ஆடிப்பாடி மிகுந்திடும் நேரமே உழைப்பானது கூடிப்பேசி ஒன்றாகி உழைத்து உயர்வதென வாடிப்போகா நிலை ஒருமுறையேனும் வருக கண்டதே காதல் கொண்டதே கோலம் என்றாகி அண்டம் முழுதும் பாலியல் வேட்கையில் மகிழ உண்டான ஆணாதிக்கப் போக்கு எங்குமாகி நண்டாகி நாசமாகாது ஒருமுறையேனும் செல்க சேவை மனிதகுல மாயை என ஒதுங்கி நின்று தேவை காப்பாற்றும் ஆளென வீண்பேச்சு பேசி ஆமை போல் அசைந்தாடி ஒத்துழையாது தீமை செய்யாது ஒருமுறையேனும் இருந்திடுக, ]]> http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒருமுறையேனும்-கவிஞர்-ராம்க்ருஷ்-2946940.html 2946937 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒருமுறையேனும்: சீர்காழி .ஆர்.சீதாராமன் கவிதைமணி DIN Monday, June 25, 2018 02:48 PM +0530 வாழ்க்கையில் அக்கம்
பக்கம் தொட்டு நட்பு உறவு
பார்த்து பழகிவிடு மனிதாபி
மானத்தோடு ஒரு முறை

வெற்றிப் படிக்கட்டை தொடு
வீரநடை போடு தலை நிமிர்
வாழ்க்கை பயணத்தில் 
ஒரு முறையேனும் கால் பதி 

கசப்பு இனிப்பு இன்பம் 
துன்பம் சகலமும் தெரிந்து
கொள்ள ஒரு முறையேனும்
மிதித்து விடு காதல் படியை

மழலையை ரசிக்க அகம்
மகிழ்ந்து பார்க்க அணைக்க
விளையாடி கூடி மகிழ ஒரு
முறையேனும் பிற மனிதாக

காடு கழனி வரப்பு பசுமை
என சுற்றித் திரிந்து ரசி
மண்வாசனையை நுகர்
ஒரு முறையேனும்  வாழ்வில்

வேற்றுக்கிரகம் சென்று வா
பூமியின் தாய் மண்ணின்
பெருமையை உணர ஒரு
முறையேனும் பயணி நீ

தானம் சேவை அன்பு பாசம்
ஒரு முறையேனும் இவை
உன் வசம் வந்து மனம் வாசம்
வீச பழகிடு மனிதா வா

ஒரு முறையேனும்  நல்ல
மனிதனாய் வாழ முயற்சி
செய் எதிர்கால தேடல் உன்
பின்னால் வரும் என்கிற
நம்பிக்கையில் இன்று .....

 

]]>
http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒருமுறையேனும்-சீர்காழி-ஆர்சீதாராமன்-2946937.html
2946936 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒருமுறையேனும்: பாவலர் இராம இளங்கோவன்  கவிதைமணி DIN Monday, June 25, 2018 02:44 PM +0530 பிறக்கும்  போது  ஆரம்பித்த 
    பாச  மிகுந்த  அழுகையின்று 
இறக்கும் வரையில் தொடர்கிறதே! 
    இன்னல் வந்து வாட்டியேதான் 
அறமு(ம்)  அற்ற  நிலையினிலே 
    அன்றா  டுந்தான்  வதைக்கிறதே! 
உறவுக   ளெல்லாம்  சூழ்ந்திருக்க 
    ஒருமுறை யேனும்  வாழவேண்டும்! 

உயர்ந்த கல்வி,உயர்பதவி,
    உயர்ந்த செல்வம், நல்மனையாள்,
உயர்ந்த குணத்து நன்மக்கள்,
  உறவுகள் சூழ்ந்து உன்னதத்து 
இயற்கை போன்ற இயல்பான 
   இன்பம்  நிறைந்த வாழ்க்கையினை 
இயல்பாய் இனியொரு முறையேனும் 
   இப்புவி தன்னில் வாழவேண்டும்! 

இன்பத் தமிழின் சீர்கலைகள்,
   இன்பத் தமிழின் இலக்கணங்கள், 
இன்பத் தமிழின் இலக்கியங்கள், 
    எல்லாம் முழுதும் கற்றுயர்ந்து, 
இன்பத் தமிழின் பண்பாட்டில்
    இன்பத் தமிழின்அடையாளம் 
என்றும் காத்து உண்மையாக 
   ஒருமுறை யேனும் வாழவேண்டும்! 

வள்ளல் குணமும் வழிந்திடாத 
    வளம்நி றைந்த நெஞ்சமுடன் 
அள்ள அள்ளக் குறைந்திடாத 
    ஆற்றல் பெற்று நல்வினைகள் 
உள்ளந் தோறும் விதைக்கின்ற 
   ஊக்கமும் ஆக்கமும் உடையவனாய் 
கள்ள மின்றி வாழவேண்டும்;
   கோலோச் சியொரு முறையேனும்! 

]]>
http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒருமுறையேனும்-பாவலர்-இராம-இளங்கோவன்-2946936.html
2942914 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி இந்த வாரத்திற்கான தலைப்பு: "ஒருமுறையேனும்" கவிதைமணி DIN Monday, June 25, 2018 02:43 PM +0530 "மிச்சத்தை மீட்போம்"  தலைப்பிற்கு கவிதை எழுதி அனுப்பிய அன்பு நண்பர்கள் அனைவருக்கும்நன்றி..! இந்த வாரம் நீங்கள் எழுத வேண்டிய

கவிதைக்கான தலைப்பு

"ஒரு முறையேனும்"

உங்கள் கவிதைகளை askdinamani@dinamani.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். உங்கள் கவிதைகளை யுனிக்கோடு எழுத்துருவில் டைப் செய்து மேற்கண்ட மின்னஞ்சலில் வரும் சனிக்கிழமைக்கு முன்பாக அனுப்ப வேண்டுகிறோம்.

"மிச்சத்தை மீட்போம்" என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகளை படிக்க... இங்கே க்ளிக் செய்யவும்:  http://www.dinamani.com/specials/kavithaimani

]]>
http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/19/இந்த-வாரத்திற்கான-தலைப்பு-ஒரு-முறையேனும்-2942914.html
2946935 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒருமுறையேனும்: ரெத்தின.ஆத்மநாதன் கவிதைமணி DIN Monday, June 25, 2018 02:42 PM +0530 ஒருமுறையேனும்... உண்மையாய் நேர்மையாய் உளம்விரும்பி மக்களின் நலனில் மகத்தான விருப்பங் கொண்டே அரசியல்வாதிகள் அத்தனைபேரும் செயல் பட்டாலே சிரமங்கள் மறைந்து சிரித்திடாரோ சாமானியர்கள்?! ஒருமுறையேனும்... உளத்தின் ஆழத்தில் நினைத்து எல்லாம் வல்ல இறைவனோடு ஒன்றி நல்லதே நடக்க நயவஞ்சகம் ஒழித்து இறைஞ்சிக் கேட்டால் இல்லையென்பானோ இறைவன்?! ஒருமுறையேனும்...காந்தியாய் நம்மை உருவகஞ்செய்து உண்மையை மட்டுமே உளமெங்கும் நிறைத்து செய்யுந் தொழிலை தெய்வமென மதித்து நடந்து கொண்டால் நாமுய்வோம் நன்றாய்! ஒருமுறையேனும்...வாஞ்சிநாதன், வ.ஊ.சி.,கட்டபொம்மன் பட்ட துயரைப் படித்தாவது அறிந்தால் சுதந்திரம் மீது நமக்கு சொல்லொணாப் பற்று வெள்ளமென பெருகும்! வீண்ஜம்பங்கள் குறையும்! ஒருமுறையேனும்...வள்ளுவன்வகுத்த வான்குறள் தன்னை செம்மையாய்ப் படித்து சிறப்பாய் அதன்படி நடந்தே காட்டினால் நானிலம் மெச்சும் பிறந்த பயனையும் பெருமையாய் அடையலாம்! ]]> http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒருமுறையேனும்-ரெத்தினஆத்மநாதன்-2946935.html 2946934 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒருமுறையேனும்:  பொன். குமார் கவிதைமணி DIN Monday, June 25, 2018 02:40 PM +0530 ஒருமுறையேனும் குறைந்தபட்சம் நகராட்சி உறுப்பினராகிவிடும் நப்பாசையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறான் அரசியல்வாதி. ஒருமுறையேனும் இமயமலை ஏறிடவேண்டுமென தீவிர இலட்சியத்துடன் இயங்கிக் கொண்டுள்ளான் மலையேற்ற வீரன். ஒருமுறையேனும் சுதந்திர காற்றைச் சுவாத்திட ஏங்கிக் கொண்டுள்ளான் இலங்கைத் தமிழன். ஒரு முறையேனும் கடவுளைக் கண்டுவிட வழிபட்டுக்கொண்டுள்ளான் பக்தன். ஒருமுறையேனும் சேரிக்குள் தேர் வரவேண்டுமென்று போராடிக்கொண்டுள்ளான் தலித். ஒருமுறையேனும் தமிழ்நாட்டை தமிழன் ஆளவேண்டுமென்று தவமிருக்கிறான் தமிழன். ஒரு முறையேனும்..... ஒருமுறையேனும் மனிதராக வாழ்ந்து மரணிக்க வில்லை எவரும்.... ]]> http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒருமுறையேனும்--பொன்-குமார்-2946934.html 2946933 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி ஒருமுறையேனும்: பெருமழை விஜய் கவிதைமணி DIN Monday, June 25, 2018 02:39 PM +0530 ஒருமுறையேனும் அம்மாநானும் பெண்ணாய்ப் பிறந்து... தியாகமே உருவாய்... பிள்ளையைச் சுமக்கும் பேற்றினை அடைந்து... குடும்பம் நடத்தி கொடுமைப் பட்டு... பழியைச் சுமந்து படும்பாட்டினை யுணர்ந்து... நீபட்ட துயரத்தை உள்ள படியே... உணர்ந்திட வேண்டும்! ]]> http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/25/ஒருமுறையேனும்-பெருமழை-விஜய்-2946933.html 2942166 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மிச்சத்தை மீட்போம்: பாவலர் கருமலைத்தமிழாழன் கவிதைமணி DIN Monday, June 18, 2018 07:19 PM +0530 வழித்துவிட்ட தலைமொட்டை போல நாட்டை வறட்சியிலே தள்ளிவிடும் செயலை விட்டே அழித்ததுபோய் காடுகளில் மிச்சம் தன்னை அடுத்துவரும் தலைமுறைக்காய் மீட்ட ளிப்போம் ! குழிபோட்டு குழிபோட்டுப் பூமிக் குள்ளே குழாய்விட்டே இருக்கின்ற நீரெ டுத்தே விழிபிதுங்கிச் சந்ததியர் தாகத் தாலே விக்கியுயிர் விட்டிடாமல் மிச்சம் வைப்போம் ! அறிவியலின் முன்னேற்றம் என்று சொல்லி அதிவிரைவு வாகனங்கள் சாலை ஓட்டிப் பொறிபறக்க நச்சுபுகை பரவ விட்டுப் பொலிவான சுற்றுபுறம் காற்றை யெல்லாம் வெறியோடு மாசுசெய்தே எச்சத் தார்கள் வெவ்வேறு நோய்களிலே துடிது டிக்கத் தறிகெட்டுப் போகாமல் தூய்மை காத்துத் தந்திடுவோம் இயற்கையினைச் செம்மை யாக ! மலைகளினை தகர்த்திட்டோம் குளங்கள் ஏரி மனைகளாக்கி விற்றுவிட்டோம் ஆற ழித்து விலைபேசி மணலள்ளி மலடு செய்தோம் விளைநிலத்தில் சாலைபோட்டு வாழ்வி ழந்தோம் ! தலைமுறையாய்க் காத்துவந்த வளத்தை யெல்லாம் தாரைவார்த்துச் சந்ததியைத் தவிக்க விட்டோம் வலைதுடிக்கும் மீன்கள்போல் வருங்கா லந்தாம் வாய்த்திடாமல் இயற்கையினை மீட்போம் வாரீர் !]]> http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/18/மிச்சத்தை-மீட்போம்-பாவலர்-கருமலைத்தமிழாழன்-2942166.html 2942163 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மிச்சத்தை  மீட்போம்: சசி எழில்மணி கவிதைமணி DIN Monday, June 18, 2018 06:42 PM +0530 பறந்து விரிந்த தேசமதில் சிறைப்பட்டு கிடக்கின்றோம் சிறகு விரித்து பறந்த நாம் இறகொடிந்து வாழுகின்றோம் தேசம் பல வென்று வாகை சூடி வளர்ந்த இனம் வாடியது மேனோ அச்சத்தில் உழல்வதுமேனோ வஞ்சத்தின் பார்வையது நம்மேல் விழுந்ததோ நம்மை நிலைகுலையச் செய்ததோ உச்சத்தில் கிடந்த நாம் எச்சமாய் இருக்கின்றோம் இனிதானும் விழித்தெழுவோம் சூழ்ச்சி களை முறியடித்து மிச்சத்தை மீட் (டெடுப்)போம்]]> http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/18/மிச்சத்தை--மீட்போம்-சசி-எழில்மணி-2942163.html 2942162 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மிச்சத்தை மீட்போம்: ப.வீரக்குமார் கவிதைமணி DIN Monday, June 18, 2018 06:38 PM +0530 எரிமலைக் குளம்போடு நடத்திய யுத்த காண்டத்துள், விழுங்கிய எரிமலை நாக்கில் துடித்த உயிர்களை, துவண்டு பார்த்த மனம்; துக்கம் மேலேறி தூக்கத்தை கீழ்தள்ளி ஏக்கப் பெருமூச்சாய், என் உரிமை அதோ! அதோ!! என்று விழுமிய உணர்வுகள்; ஒன்றிணைத்து குளம்பு எறிந்த மிச்சப் பகுதிகளை மிச்சப் படுத்திப் பாது காப்போடு நம்முடன் இணைப்போம் நலமோடு வளமோடு நச்சழிந்த மண்ணோடு..... ]]> http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/18/மிச்சத்தை-மீட்போம்-பவீரக்குமார்-2942162.html 2942161 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மிச்சத்தை மீட்போம்: முகில் வீர உமேஷ் கவிதைமணி DIN Monday, June 18, 2018 06:36 PM +0530 அடர்ந்த காட்டுள் ஆற்றங் கரையில் நாகரீகத் தோற்றம், விஞ்ஞான மென்ற வெற்று அரைவேக்காடும் சமத்துவ மெனும் சாக்கடையுங் கலந்து காட்டை நாடாக்கி ஆற்றைக் கற்பழித்து சரித்தி ரத்தைத் தரித்திர மாக்கி, மீண்டும் மீண்டும் கொஞ்ச முள்ள அழ கையும் காமத்தி புராவில் விற்கும் நினைவோடு அழித்து அழித்து, இன்னு மாதுகி லுரியும் காட்சி கண்ணா விழி − உன் மொழியால், மீதம் மக்களுக்குப் பெற்றுத்தா ஆணவ மேறிய அரக்கரை யழித்து......... ]]> http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/18/மிச்சத்தை-மீட்போம்-முகில்-வீர-உமேஷ்-2942161.html 2942160 ஸ்பெஷல்ஸ் கவிதைமணி மிச்சத்தை  மீட்போம்: கே.நடராஜன் கவிதைமணி DIN Monday, June 18, 2018 06:33 PM +0530 அடுக்கு மாடி கட்டிட மாயையில் 
விளை நிலம் விலை போனது !

விரல் சொடுக்கி வீட்டில் இருந்தே 
குரல் கொடுத்து அதன் விலை 
என்ன என்றே தெரியாமல் 
"ஆன் லைன்" வர்த்தகம் செய்வதில் 
நமக்கு ஒரு பெருமை !

எது வாங்குகிறோம் ,எதற்கு 
வாங்கு கிறோம்,  கொடுக்கும் விலை 
சரிதானா அதற்கு ... பார்க்க 
நேரமில்லை நமக்கு!.

பட்டியல் இட்டு கணினியில் தெரியும் 
மொத்த பணத்துக்கும் ஒரு அட்டை 
எண் மட்டும் தேவை நமக்கு !
அயல் நாட்டு வர்த்தக மோகத்தில் 
நம் நாட்டின் சிறு ,குறு வர்த்தகம் 
சீர் குலைய வழி காட்டி விட்டோம் நாம் !

நம் நாட்டின் பாரம்பரிய அருமையும்  
தெரியவில்லை நமக்கு ...சொல்லியும் 
தரவில்லை நாம் அதை  நம் பிள்ளைகளுக்கு !
யோகா முதல் பிள்ளையாருக்கு போடும் 
தோப்புக்கரணம் வரை அதன் அருமை 
பெருமை என்ன என்றே நமக்கு தெரியாது  
வேறு ஒரு நாட்டுக்காரன் அதன் அருமை பெருமை 

என்ன என்று நமக்கு சொல்லும் வரை !
தொலைத்து விட்டோம் நம் நாட்டின் 
மாணிக்க கற்களை  வெறும் கற்கள் 
என்று நினைத்து !

எஞ்சி இருப்பதை ஒரு துச்சமாக 
நினைக்காமல் மிச்சம் இருப்பதையாவது  
மதித்து மீட்டு எடுத்து கொடுப்போம் 
நம் பிள்ளைகளுக்கு மறக்காமல் !

]]>
http://www.dinamani.com/specials/kavithaimani/2018/jun/18/மிச்சத்தை--மீட்போம்-கேநடராஜன்-2942160.html