Dinamani - அசைவ வகைகள் - http://www.dinamani.com/specials/kitchen-corner/non-vegetarian/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2559366 கிச்சன் கார்னர் அசைவ வகைகள் சாம்பல புலுசு தவநிதி DIN Friday, September 2, 2016 07:10 PM +0530 தேவையானவை

மீன் துண்டுகள் - 8
புளி - எலுமிச்சம் பழ அளவு
மிளகாய்த் தூள் - 4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
வெங்காயம் - 4
பச்சைமிளகாய் - 5
இஞ்சிப் பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
எண்ணெய் - ஒன்னரை குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லி இலை - சிறிது

பொடி செய்ய தேவையான பொருட்கள்

தனியா - 4 தேக்கரண்டி
ஜீரகம் - 2 தேக்கரண்டி
கிராம்பு - 4

செய்முறை

மீனைக் கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளவும். வெங்காயத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.  பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் பொடியாக்கிக்கொள்ளவும். புளியை ஊறவைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதையும், பச்சை மிளகாயையும் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அவை வதக்கியதும், அதில் புளியை கரைத்து ஊற்றவும்.

குழம்பு நன்கு கொதிக்கும் வரை மூடி வைக்கவும். குழம்பு நன்கு கொதித்தவுடன்
அதில் மீன் துண்டுகளையும் பொடி செய்து வைத்துள்ள மசாலாவையும் போட்டு மீண்டும் மூடவும். குழம்பு நன்கு கொதித்ததும் கொத்துமல்லி தூவி பரிமாறவும். சுவையான சாப்பல புலுசு ரெடி.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/2/w600X390/fish-Copy.jpg http://www.dinamani.com/specials/kitchen-corner/non-vegetarian/2016/sep/02/செப்பல-புலுசு-2559366.html
3361 கிச்சன் கார்னர் அசைவ வகைகள் சுறா புட்டு மதி DIN Thursday, August 11, 2016 05:51 PM +0530 தேவையான பொருட்கள்:

சுறா மீன் - 250 கிராம்

தண்ணீர் - 2 டம்ளர்

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - 14 தேக்கரண்டி

எண்ணெய் -  தேவையான அளவு

கடுகு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 5

பெரிய பூண்டு - 2 ( பூண்டு நிறைய இருக்க வேண்டும்)

 உப்பு - தேவையான அளவு

செய்முறை: சுறா மீனை அலசிவிட்டு  2-3  துண்டுகளாக நறுக்கி  குக்கரில் போட்டு மீன் முழுகும் அளவு தண்ணீர் விட்டு வேகவிடவும். 2 விசில் வந்ததும் இறக்கிவிடலாம். பின்னர், நீரை வடிகட்டி மீன் துண்டுகளை எடுத்து தோல் மற்றும் எலும்புகளை நீக்கிவிட்டு, உதிர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு, வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு மற்றும் கறிவேப்பிலை தாளித்து, பின் பூண்டு பல்களைப் சேர்த்து வதக்கவும். பின்னர், வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அடுத்து இஞ்சி பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அத்துடன் மஞ்சள்தூள் சேர்க்கவும். அத்துடன் உதிர்த்து வைத்துள்ள சுறா மீனைச் சேர்த்து மசாலா நன்கு மீனில் சேரும் வரை கிளறி விட்டு இறக்கினால், சுறா புட்டு ரெடி.

 

]]>
sura puttu http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/11/w600X390/sura-puttu.jpg http://www.dinamani.com/specials/kitchen-corner/non-vegetarian/2016/aug/11/சுறா-புட்டு-3361.html
771 கிச்சன் கார்னர் அசைவ வகைகள் பூண்டு இறால் ஸ்ரீநிவாஸ் PTI Friday, July 29, 2016 07:23 PM +0530

தேவையான பொருட்கள்

இறால் - ½ டீஸ்பூன்

சோள மாவு - 1 டீஸ்பூன்

மிளகு - ½ டீஸ்பூன்

முட்டை - ½

மைதா - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

வெங்காயம் - 2

மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்

தக்காளி காய் - 1 ½ டீஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் சுத்தப்படுத்தி வைத்துள்ள இறால், மிளகு தூள், உப்பு, முட்டை கரு, மைதா, சோள மாவு இவை அனைத்தும் கலந்து ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நசுக்கிய பூண்டு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், மிளகாய் விழுது, தேவையான அளவு தக்காளி சாஸ், சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிய பின், வறுத்து வைத்துள்ள இறால், மிளகு தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் பிறகு பரிமாறவும்

குறிப்பு

சப்பாத்தி, சாதம், தயிர் சாதம் ஆகியவற்றுக்குப் இணை உணவாக இது பொருந்தும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/5/13/w600X390/garlic-prawns.jpg garlic-prawns http://www.dinamani.com/kitchen-corner/non-vegetarian/2016/may/13/பூண்டு-இறால்-771.html
1280 கிச்சன் கார்னர் அசைவ வகைகள் முட்டை தொக்கு kirthika PTI Friday, May 27, 2016 04:57 PM +0530

தேவையான பொருட்கள்:

முட்டை - 3

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - 12 தேக்கரண்டி

கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 3 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

 வறுத்து அரைப்பதற்கு...

எண்ணெய் - 1 தேக்கரண்டி

 தக்காளி - 1 (நறுக்கியது)

வரமிளகாய் - 2-3

சின்ன வெங்காயம் - 10

மல்லி - 1 தேக்கரண்டி

பட்டை - 1 சிறிய துண்டு

ஏலக்காய் - 1

சோம்பு - 12 தேக்கரண்டி

கசகசா - 12 தேக்கரண்டி

மிளகு - 12 தேக்கரண்டி

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 2 நிமிடம் கிளறி, பின் சிறிது தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து குறைவான தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும். அதே சமயம் மற்றொரு அடுப்பில் ஒரு நான்ஸ்டிக் பேனை வைத்து, அதில் முட்டையை வைத்து, அதன் மேல் மிளகாய்த் தூள், கரம் மசாலா

மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி, பின் அதனை கொதித்துக் கொண்டிருக்கும் மசாலாவில் சேர்த்து 2 நிமிடம் முட்டையில் மசாலா சேரும் வரை நன்கு வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், முட்டை தொக்கு ரெடி.

***

]]>
http://www.dinamani.com/kitchen-corner/non-vegetarian/2016/may/27/முட்டை-தொக்கு-1280.html
1279 கிச்சன் கார்னர் அசைவ வகைகள் சாமை கோழி பிரியாணி ஸ்ரீநிவாஸ் PTI Friday, May 27, 2016 04:53 PM +0530

தேவையான பொருட்கள்

நாட்டு கோழி - 500 கிராம்

மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

நெய் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கொத்துமல்லி - ஒரு கைப்பிடி

புதினா - ஒரு கைப்பிடி

காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

சாமை அரிசி - 500 கிராம்

பிரியாணி இலை - 2

பட்டை - 3

கிராம்பு - 6

ஏலக்காய் - 5

அன்னாசி பூ - 2

வெங்காயம் - 2

இஞ்சி - 50 கிராம்

பூண்டு - 50 கிராம்

தக்காளி - 2

தயிர் - 2 கப்

தேங்காய் பால் - ¼ கப்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய நாட்டு கோழி அத்துடன் சிறிதளவு மஞ்சள் தூள் 1 ½ தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து 30 நிமிடம் குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்.

ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து அதனுடன்பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப் பூ போட்டு வதக்கவும்.

இதனுடன் நீளவாக்கில் வெட்டி வைத்துள்ள வெங்காயம் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கயி பின்னர், இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போன பின் புதினா மற்றும் கொத்துமல்லியைச் சேர்க்கவும்.

பின்னர் நறுக்கிய தக்காளி மற்றும் மஞ்சள் தூள், தயிர் காஷ்மீரி மிளகாய் தூள் ஆகியவற்றுடன்,  தயாரித்து வைத்துள்ள சிக்கன் கலவையைச் சேர்த்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.

கால் கப் தேங்காய் பால் மற்றும் தேவையான தண்ணீர், சாமை அரிசி சிறிதளவு நெய் மற்றும் புதினா, கொத்துமல்லியைச் சேர்த்து 15 நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும். கமகமக்கு சாமை கோழி பிரியாணி ரெடி!

]]>
http://www.dinamani.com/kitchen-corner/non-vegetarian/2016/may/27/சாமை-கோழி-பிரியாணி-1279.html
1278 கிச்சன் கார்னர் அசைவ வகைகள் பூண்டு இறால் kirthika PTI Friday, May 27, 2016 04:52 PM +0530

தேவையான பொருட்கள்

இறால் - ½ டீஸ்பூன்

சோள மாவு - 1 டீஸ்பூன்

மிளகு - ½ டீஸ்பூன்

முட்டை - ½

மைதா - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

வெங்காயம் - 2

மிளகாய் விழுது - 1 டீஸ்பூன்

தக்காளி காய் - 1 ½ டீஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் சுத்தப்படுத்தி வைத்துள்ள இறால், மிளகு தூள், உப்பு, முட்டை கரு, மைதா, சோள மாவு இவை அனைத்தும் கலந்து ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நசுக்கிய பூண்டு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், மிளகாய் விழுது, தேவையான அளவு தக்காளி சாஸ், சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிய பின், வறுத்து வைத்துள்ள இறால், மிளகு தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் பிறகு பரிமாறவும்

குறிப்பு

சப்பாத்தி, சாதம், தயிர் சாதம் ஆகியவற்றுக்குப் இணை உணவாக இது பொருந்தும்.

]]>
http://www.dinamani.com/kitchen-corner/non-vegetarian/2016/may/27/பூண்டு-இறால்-1278.html
1277 கிச்சன் கார்னர் அசைவ வகைகள் காளிஃபிளவர் முட்டை வறுவல் kirthika PTI Friday, May 27, 2016 04:51 PM +0530

தேவையான பொருட்கள்

காளிஃபிளவர் -1

முட்டை - 1 ½

வெங்காயம் - 2

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 10

உப்பு - தேவைக்கேற்அ

சிகப்பு கலர் - ஒரு சிட்டிகை

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

சீரகத் தூள் - 1 டீஸ்பூன்

வெள்ளை மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மல்லித் தூள் - 1 ½ டீஸ்பூன்

சோம்பு தூள் - ½ டீஸ்பூன்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் காளிஃபிளவர், உப்பு மஞ்சள் தூள் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்த பின்  தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் வெள்ளை மிளகுத் தூள், சீரகத் தூள், மல்லித் தூள், சோம்புத் தூள், மிளகாயத் தூள், உப்பு, எடுத்து வைத்த காலி ஃபிளவர், முட்டை போட்டு பிசைந்து ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து வதக்கி பின்பு வறுத்து வைத்த காளிபிளவர் சேர்த்து சிறிதளவு மிளகாய்த் தூள் மற்றும் மல்லித்தழை தூவி 5 நிமிடங்கள் கழித்து பரிமாறவும்.

குறிப்பு

சப்பாத்தி, வெறும் சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம் போன்றவற்றுக்கு பொருந்தும்.

]]>
http://www.dinamani.com/kitchen-corner/non-vegetarian/2016/may/27/காளிஃபிளவர்-முட்டை-வறுவல்-1277.html
1276 கிச்சன் கார்னர் அசைவ வகைகள் காஜூ (முந்திரி) சிக்கன் ஸ்ரீநிவாஸ் PTI Friday, May 27, 2016 04:50 PM +0530

தேவையான பொருட்கள்

முந்திரி - 150 கிராம்

சிக்கன் - 500 கிராம்

கடுகி - 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 3

பட்டை - 2

கிராம்பு - 6

ஏலக்காய் - 3

வெங்காயம் - 2

ஜாதி பத்திரி - 1

இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்

மல்லித் தூள் - 1 1/2 ஸ்பூன்

கரம் மசாலா - 1

அன்னாசிப் பூ - 1

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - 2 டீஸ்பூன்

பாதாம் - 2 டீஸ்பூன்

கசகசா - 50 கிராம்

செய்முறை

நறுக்கி வைத்துள்ள வெங்காயம், ஊற வைத்த முந்திரி பருப்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதி பத்திரி, அன்னாசிப் பூ, ஊற வைத்துள்ள கசகசா, இவை அனைத்தும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்துப்பின் விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சிறிதளவு உப்பு சேர்த்து பின்னர் இஞ்சி பூண்டு விழுது போட்டு அதன் பச்சை வாசனை போனபின்பு மல்லித்தூள், மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து பத்து முதல் 15 நிமிடங்கள் கொதித்த பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கழித்து ஒரு சிட்டிகை கரம் மசாலா தூவி இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு பரிமாறவும்.

குறிப்பு

சப்பாத்தி, புக்கா, நான், ரொட்டி, புலாவ், பிரியாணி போன்ற உணவுகளுக்கு பொருந்தும்.

]]>
http://www.dinamani.com/kitchen-corner/non-vegetarian/2016/may/27/காஜூ-முந்திரி-சிக்கன்-1276.html
760 கிச்சன் கார்னர் அசைவ வகைகள் காஜூ (முந்திரி) சிக்கன் kirthika PTI Friday, May 13, 2016 04:39 PM +0530

தேவையான பொருட்கள்

முந்திரி - 150 கிராம்

சிக்கன் - 500 கிராம்

கடுகி - 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 3

பட்டை - 2

கிராம்பு - 6

ஏலக்காய் - 3

வெங்காயம் - 2

ஜாதி பத்திரி - 1

இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்

மல்லித் தூள் - 1 1/2 ஸ்பூன்

கரம் மசாலா - 1

அன்னாசிப் பூ - 1

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - 2 டீஸ்பூன்

பாதாம் - 2 டீஸ்பூன்

கசகசா - 50 கிராம்

செய்முறை

நறுக்கி வைத்துள்ள வெங்காயம், ஊற வைத்த முந்திரி பருப்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதி பத்திரி, அன்னாசிப் பூ, ஊற வைத்துள்ள கசகசா, இவை அனைத்தும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்துப்பின் விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சிறிதளவு உப்பு சேர்த்து பின்னர் இஞ்சி பூண்டு விழுது போட்டு அதன் பச்சை வாசனை போனபின்பு மல்லித்தூள், மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து பத்து முதல் 15 நிமிடங்கள் கொதித்த பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கழித்து ஒரு சிட்டிகை கரம் மசாலா தூவி இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு பரிமாறவும்.

குறிப்பு

சப்பாத்தி, புக்கா, நான், ரொட்டி, புலாவ், பிரியாணி போன்ற உணவுகளுக்கு பொருந்தும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/5/13/w600X390/kaju_chicken.jpg kaju_chicken http://www.dinamani.com/kitchen-corner/non-vegetarian/2016/may/13/காஜூ-முந்திரி-சிக்கன்-760.html