Dinamani - இனிப்பு வகைகள் - http://www.dinamani.com/specials/kitchen-corner/sweets/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2761694 கிச்சன் கார்னர் இனிப்பு வகைகள் சுவையான பாஸந்தி DIN DIN Friday, August 25, 2017 05:57 PM +0530 தேவையானவை :

க்ரீம் மில்க் - 1/2 லிட்டர் சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன் 
நறுக்கிய முந்திரி பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 
ஏலக்காய் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன் 

செய்முறை 

  • நல்ல கனமான அடியுள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றவும்.
  • பால் நன்றாக கொதிக்கும் வரை சூடுபடுத்தி அடிப்பகுதியில் பிடிக்காத வண்ணம் கிளறிக் கொண்டே இருக்கவும்.
  • பால் பாதியளவு ஆகும் வரை சுண்டக் காய்ச்ச வேண்டும் 
  • இப்பொழுது சர்க்கரையை சேர்த்து 2-3 நிமிடங்கள் நன்றாகக் கிளறி விடவும் 
  • நறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் முந்திரி பருப்பைச் சேர்க்கவும். பின் நன்றாகக் கலக்கவும்.
  • அடுப்பை அணைப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன் ஏலக்காய் பொடி சேர்த்து பரிமாறவும். 

பால் பாத்திரத்தில் ஒட்டாத வண்ணம் நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கொண்டால் பால் கருகுவதை தடுக்கலாம் பாலின் அளவு பாதியாக குறைந்த பிறகு சர்க்கரையைச் சேர்க்கவும். இல்லையென்றால் அது கலவையை கெட்டியாக மாற விடாது. குங்குமப் பூ சேர்த்தால் சுவையுடன் சேர்ந்து நிறம் கிடைக்கும்.

]]>
Basunthi, பாஸந்தி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/25/w600X390/70-Pineapple_Basundhi.jpg http://www.dinamani.com/specials/kitchen-corner/sweets/2017/aug/25/basundhi-preparation-2761694.html
2665920 கிச்சன் கார்னர் இனிப்பு வகைகள் நார்த்தங்காய் இனிப்பு பச்சடி லஷ்மி ராமன் DIN Tuesday, March 28, 2017 12:00 AM +0530 தேவையானவை:

நார்த்தங்காய் - 1
வெல்லம் - அரை கிண்ணம்
(தண்ணீரில் ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும்)
பச்சை மிளகாய் - 1
மிளகாய் வற்றல் - 1
உப்பு - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது

செய்முறை:
நார்த்தங்காயைச் சுத்தம் செய்து, விதைகளை நீக்கிவிட்டு பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து பெருங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய நார்த்தங்காயைச் சேர்த்து வதக்கி அதில் சிறிது உப்பு சேர்க்கவும். பச்சை வாசனை போகவிடவும். பின்னர், கரைத்த வெல்லத்தை வடிக்கட்டி பின்னர் வாணலியில் விட்டு பாகு பதத்திற்கு காய்ச்சவும். பின்னர், வெல்லப் பாகை நார்ந்தங்காயுடன் சேர்த்து கிளறவும். எல்லாம் ஒன்று சேர்ந்து ஜாம் பதம் வந்தவுடன் இறக்கவும். சுவையான நார்த்தங்காய் இனிப்பு பச்சடி தயார். சப்பாத்தி, தோசை தகுந்த சைடிஷ்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/14/w600X390/narthangai.jpg http://www.dinamani.com/specials/kitchen-corner/sweets/2017/mar/28/நார்த்தங்காய்-இனிப்பு-பச்சடி-2665920.html
2635585 கிச்சன் கார்னர் இனிப்பு வகைகள் மூங்கிலரிசி தேங்காய்ப் பால் சாதம் நாச்சாள் DIN Saturday, January 28, 2017 12:00 AM +0530 தேவையானவை:
மூங்கிலரிசி ரவை - 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
சின்ன வெங்காயம் - 6
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
ஏலக்காய் - 1
கிராம்பு - 2
பட்டை - 1
உப்பு - தேவைக்கேற்ப
தேங்காய் எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:  சின்ன வெங்காயத்தை தோலுரித்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி எடுக்கவும். மூங்கிலரிசியை ரவையாக உடைத்துக் கொள்ளவும். தேங்காய்த் துருவலை மிக்ஸியிலிட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து பிழிந்து 1 கிண்ணம் அளவிற்கு பால் எடுத்துக் கொள்ளவும்.

மண் பானையை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காயவிடவும். அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், நறுக்கின வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு இஞ்சி,  பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் 1 கிண்ணம் தேங்காய்ப் பால் சேர்க்கவும்.

மேலும் 1 கிண்ணம் தண்ணீருடன் உப்பு சேர்க்கவும். மண் பானையை சிறுதீயில் வைத்து மூடி வைத்து கொதிக்க விடவும். சுமார் 3 நிமிடங்கள் கழித்து, கொதித்து நுரை வரும் போது மூங்கிலரிசி ரவையைப் போடவும். பின் நன்கு கிளறி 15 நிமிடம் வேக விடவும். 3 நிமிடத்திற்கு ஒரு முறை கிளறி விட்டு நன்கு வெந்ததும் இறக்கவும்.

சுவையான சத்தான மூங்கிலரிசி தேங்காய்ப் பால் சாதம் தயார். மனமும் சுவையும் உள்ள ஒரு உணவு.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/20/w600X390/moongil_sadham.jpg http://www.dinamani.com/specials/kitchen-corner/sweets/2017/jan/28/மூங்கிலரிசி-தேங்காய்ப்-பால்-சாதம்-2635585.html
2635582 கிச்சன் கார்னர் இனிப்பு வகைகள் ராகி குழிப் பணியாரம் நாச்சாள் DIN Wednesday, January 25, 2017 12:00 AM +0530 தேவையானவை:
புழுங்கல் அரிசி - 1 கிண்ணம்
வரகு அரிசி - 1 கிண்ணம்
ராகி மாவு - 1 கிண்ணம்
உளுந்து -  1 கிண்ணம்
வெந்தயம் - அரை தேக்கரண்டி
வெல்லம் - 2 கிண்ணம்
ஏலக்காய் - 5
தேங்காய் எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - 1  தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 ஈர்க்கு

செய்முறை: புழுங்கல் அரிசி, வரகு அரிசி, உளுந்து, வெந்தயம் நான்கையும் ஊற வைத்து, அரைத்து, ராகி மாவை அதனுடன் கலந்து சுமார் ஆறு மணி நேரம் புளிக்க வைக்கவும்.

மாவு நன்கு புளித்ததும் வெல்லம், ஏலக்காய் சேர்த்து நன்கு கலக்கவும். அடுப்பில் குழிப்பணியார சட்டியை வைத்து சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் மாவினை சிறு சிறு குழிகளில் ஊற்றவும்.  ஒரு பக்கம் நன்கு வெந்ததும் மறு பக்கம் திருப்பி வேகவிடவும். கார ராகி குழிப்பணியாரம் செய்ய, மாவுடன் வெல்லத்திற்கு பதில் உப்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து ஊற்றவும்.

இந்த ராகி குழிப்பணியாரம் செய்ய காலையிலேயே அரிசி ஊற வைத்து, மதியம் எடுத்து அரைத்து வைத்தால் மாலையில் புளித்த பின்பு பணியாரம் சுட சரியாக
இருக்கும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/20/w600X390/ragi_pani.jpg http://www.dinamani.com/specials/kitchen-corner/sweets/2017/jan/25/ராகி-குழிப்-பணியாரம்-2635582.html
2635581 கிச்சன் கார்னர் இனிப்பு வகைகள் காட்டுயானம் அவல் பாயசம் நாச்சாள் DIN Monday, January 23, 2017 12:00 AM +0530 தேவயானவை:
காட்டுயானம் அவல் - 1 கிண்ணம்
தேங்காய்ப்பால் - 1 1/2 கிண்ணம்
வெல்லம் - 1 கிண்ணம்
ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
முந்திரி, உலர் திராட்சை - தேவைக்கேற்ப
பச்சைக் கற்பூரம் - சிறிதளவு
பசு நெய் - தலா சிறிதளவு

செய்முறை: காட்டுயானம் அவலை நெய்யில் சிவக்க வறுத்துக் கொள்ளவும். வறுத்த காட்டுயானம் அவலை 2-3 முறை தண்ணீர்விட்டு அரைத்த தேங்காய்ப்பாலில் வேக விடவும்.  வெல்லத்தை ஊறவைத்து மண் இல்லாது வடிகட்டி வைக்கவும்.

அவல் வெந்ததும், உடனடியாகக் குளிர்ந்த நீர் அரை கிண்ணம் சேர்க்கவும். இப்படிச் செய்வதால் அவல் ஒட்டாமல் குழையாமல் இருக்கும்.
மீண்டும் கொதிக்க ஆரம்பிக்கும்போது, வெல்லம் சேர்த்துக் கரையவிடவும். சேர்ந்து வரும்போது கெட்டி தேங்காய்ப்பால், பச்சைக் கற்பூரம் சேர்த்து இறக்கவும். நெய்யில் முந்திரி, உலர்ந்த திராட்சை பொரித்துச் சேர்க்கவும். காட்டுயானம் பாயசம் தயார்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/20/w600X390/katuyanam.jpg http://www.dinamani.com/specials/kitchen-corner/sweets/2017/jan/23/காட்டுயானம்-அவல்-பாயசம்-2635581.html
2635579 கிச்சன் கார்னர் இனிப்பு வகைகள் வரகு இனிப்பு பொங்கல் நாச்சாள் DIN Friday, January 20, 2017 12:00 AM +0530 தேவையானவை:
வரகரிசி - 1 கிண்ணம்
பாசிபருப்பு - அரை கிண்ணம்
நாட்டு சர்க்கரை  - 1 1/2 கிண்ணம்
ஏலக்காய் - 2
முந்திரி பருப்பு - 10
உலர்ந்த திராட்சை - 10
பசு நெய் - கால் கிண்ணம்

செய்முறை:

வரகரிசி, பருப்பை கழுவி 1 கிண்ணத்துக்கு 2 1/2 கிண்ணம் வீதம் தண்ணீர் சேர்த்து மண் பானையில் வேகவிடவும். 5 நிமிடத்திற்கு ஒருமுறை நன்கு கிளறி விட்டு மூடிவைத்து சிறு தீயில் 15 - 20 நிமிடம் வேக விடவும்.

பருப்பும் வரகரிசியும் நன்கு வெந்த பின் நாட்டு சர்க்கரை சேர்த்து கிளறவும்.
நாட்டு சர்க்கரை  அந்த சாதத்தின் சூட்டிலேயே இளகிவிடும். இது செய்யும் போதே தாளிக்கும் கரண்டியில் 1 தேக்கரண்டி பசு நெய்யை சற்று சூடு படுத்தி ஏலக்காயை நசுக்கி சேர்த்து அதனுடன் உலர்ந்த திராட்சை முந்திரியைச் சேர்த்து சிவக்க வறுத்து நெய்யுடன் பொங்கலில் சேர்க்கவும்.

பின் மீதியுள்ள நெய்யை விட்டு பொங்கலை நன்றாக  கிளறி அடுப்பை சிம்மில் வைத்து கிளறி நாட்டுச்சர்க்கரையின் வாசம் போனதும் இறக்கி பரிமாறலாம்.
தைத் திருநாள் பொங்கலுக்கு நமது பாரம்பரிய சிறுதானிய அரிசியில் பொங்கல் செய்து உண்பது சிறப்பானது.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/20/w600X390/varagu_pongal.jpg http://www.dinamani.com/specials/kitchen-corner/sweets/2017/jan/20/வரகு-இனிப்பு-பொங்கல்-2635579.html
2625906 கிச்சன் கார்னர் இனிப்பு வகைகள் பன்னீர் பாயசம் தவநிதி DIN Tuesday, January 10, 2017 12:00 AM +0530 தேவையானவை:

துருவிய பன்னீர் - அரை கிண்ணம்
பால் -  இரண்டு கிண்ணம்
மில்க்மெய்ட் - 2 தேக்கரண்டி
சர்க்கரை -  கால் கிண்ணம்
குங்குமப்பூ - சிறிதளவு
சோள மாவு - ஒரு தேக்கரண்டி (தண்ணீரில் கரைத்து கொள்ளவும்)
முந்திரி, பாதாம் - ஐந்து துண்டு (நெய்யில் வறுத்தது)
ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி காய்ந்ததும் சிறு தீயில் வைத்து, அதில் பன்னீர் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக கைவிடாமல் கிளறவும். கரைத்த சோள மாவு ஊற்றி ஒரு நிமிடம் நன்றாக கிளறவும். பின், சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

குங்குமப்பூ, ஏலக்காய் தூள், முந்திரி துண்டுகள் சேர்த்து கிளறி ஒரு கொதிவந்தவுடன் இறக்கவும். பால் காய்ந்தவுடன் ஐந்து நிமிடம் வைத்திருந்து இறக்கிவிடவும். பன்னீர் பாயசம் ரெடி.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/2/w600X390/panner_payasam.jpg http://www.dinamani.com/specials/kitchen-corner/sweets/2017/jan/10/பன்னீர்-பாயசம்-2625906.html
2560032 கிச்சன் கார்னர் இனிப்பு வகைகள் தேங்காய் பர்ஃபி - தவநிதி DIN Wednesday, September 7, 2016 12:00 AM +0530
தேவையானவை:
துருவிய தேங்காய் - 1 கிண்ணம்
சர்க்கரை - முக்கால் கிண்ணம்
தண்ணீர் - கால் டம்ளர்
நறுக்கிய முந்திரி - 1 தேக்கரண்டி
நெய் - 4  தேக்கரண்டி
ஏலக்காய் பொடி -  அரை தேக்கரண்டி

செய்முறை:
ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கித் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு  தட்டில் சிறிது நெய் ஊற்றி தடவி தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு நான்-ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை  கரையும் வரை கொதிக்க விடவும்.

சர்க்கரை நன்கு கரைந்து, ஓரளவு கெட்டியாக வரும் போது, அதில் துருவிய தேங்காயை சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும். 

அப்படி கிளறிவிடும் போது, நுரைக்க ஆரம்பிக்கும் தருணத்தில் முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து 3 அல்லது 5 நிமிடம் கிளறி, ஓரளவு கெட்டியாகும் போது அடுப்பில் இருந்து  இறக்கி தட்டில் அக்கலவையைக் கொட்டி பரப்பி, கத்தியால் துண்டுகளாக்கினால், தேங்காய் பர்ஃபி ரெடி.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2015/12/22/10/w600X390/BURFI4.jpg http://www.dinamani.com/specials/kitchen-corner/sweets/2016/sep/07/தேங்காய்-பர்ஃபி-2560032.html
3360 கிச்சன் கார்னர் இனிப்பு வகைகள் வாழைப் பழ அப்பம் மதி DIN Thursday, August 11, 2016 05:47 PM +0530 தேவையானவை:
வாழைப்பழம் - 3
உலர்திராட்சை - 50 கிராம்
மைதா மாவு - 25 கிராம்
தேங்காய்த் துருவல் - 1 கரண்டி
சர்க்கரை - 50 கிராம்
முந்திரிப்பருப்பு - 20
ஏலப்பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: நன்கு பழுத்த வாழைப்பழங்களின் தோலை அகற்றிவிட்டுக் கட்டியில்லாமல் நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.

முந்திரி, உலர் திராட்சை, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதுடன் வாழைப்பழம், மைதாமாவு, சர்க்கரை, ஏலப்பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். பின்பு சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய்விட்டு நன்றாக காய்ந்தவுடன் வட்டங்களாக கரைத்த கலவையை ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுத்து சுடச்சுடப் பரிமாற வேண்டும்.

 

]]>
http://www.dinamani.com/specials/kitchen-corner/sweets/2016/aug/11/வாழைப்-பழ-அப்பம்-3360.html
2553612 கிச்சன் கார்னர் இனிப்பு வகைகள் வாழைப் பழ அப்பம் சுவாதி Saturday, August 6, 2016 04:10 PM +0530 தேவையானவை:
வாழைப்பழம் - 3
உலர்திராட்சை - 50 கிராம்
மைதா மாவு - 25 கிராம்
தேங்காய்த் துருவல் - 1 கரண்டி
சர்க்கரை - 50 கிராம்
முந்திரிப்பருப்பு - 20
ஏலப்பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: நன்கு பழுத்த வாழைப்பழங்களின் தோலை அகற்றிவிட்டுக் கட்டியில்லாமல் நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். முந்திரி, உலர் திராட்சை, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதுடன் வாழைப்பழம், மைதாமாவு, சர்க்கரை, ஏலப்பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். பின்பு சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு நன்றாக காய்ந்தவுடன் வட்டங்களாக கரைத்த கலவையை ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுத்து சுடச்சுடப் பரிமாற வேண்டும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/6/10/w600X390/8.jpg http://www.dinamani.com/specials/kitchen-corner/sweets/2016/aug/06/வாழைப்-பழ-அப்பம்-2553612.html
1271 கிச்சன் கார்னர் இனிப்பு வகைகள் சோர்மா லட்டு (ராஜஸ்தான் இனிப்பு வகை) kirthika PTI Friday, May 27, 2016 04:43 PM +0530

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 1 கப்

சர்க்கரை - 150 கிராம்

உப்பு - சிறிதளவு

ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்

பால் - 1/4 கப்

நெய் - 4 டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

கோவா (சர்க்கரை நீக்கியது) - 100 கிராம்

முந்திரி, பாதாம், கிராம்பு - தேவைக்கேற்ப

செய்முறை

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவைக் கொட்டி, சிறு தீயில் வறுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு, வறுத்த கோதுமை மாவுடன் சர்க்கரை, உப்பு, ஏலக்காய் தூள் மற்றும் கொதித்த பால், சிறிதளவு தண்ணீர், நெய் சேர்த்து நன்றாகப் பிசைந்து சப்பாத்தி மாவைப்போல் தயார் செய்துகொள்ளவும்.

பின்னர் சப்பாத்திபோல் உருட்டி நான்கு துண்டுகளாக நறுக்கிவைத்து ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுப் பொறித்து, அதை உருளை வடிவத்தில் செய்து அதனுள் கோவா, நெய் மற்றும் பொடியாக நறுக்கிவைத்துள்ள பாதாம், முந்திரி, சிறிதளவு சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்து பிடிமானத்துக்காக ரெண்டு கிராம்பு வைத்து மைக்ரோ ஓவனில் வைத்து ஒரு நிமிடம் கழித்து எடுத்தால் சுவையும் சத்தும் நிறைந்த சோர்மா லட்டு ரெடி.

]]>
http://www.dinamani.com/kitchen-corner/sweets/2016/may/27/சோர்மா-லட்டு-ராஜஸ்தான்-இனிப்பு-வகை-1271.html
1270 கிச்சன் கார்னர் இனிப்பு வகைகள் தேங்காய்ப் பால் கஞ்சி kirthika PTI Friday, May 27, 2016 04:41 PM +0530

கடுமையான வெயில் பலருக்கு  வாய்ப் புண்ணையும் வயிற்றுப் புண்ணையும் உண்டாக்கிவிடும். இத்தகைய வாய்ப்புண்கள் வருவதும் போவதுமாக சில மாதங்கள் கஷ்டப்படுத்திக்கொண்டே இருக்கும். அத்தகைய வாய்ப்புண்களுக்கு சரியான தீர்வு இந்த தேங்காய்ப் பால் கஞ்சி தான்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 கப்

பூண்டு - 10 பல்

வெந்தயம் - 1 தேக்கரண்டி

தேங்காய் - அரை மூடி.

(ருசிக்கு ஏற்ப உப்பு அல்லது சர்க்கரை)

செய்முறை

ஒரு குக்கரில் பச்சரிசி, பூண்டு, வெந்தயம் ஆகியவற்றை 3 கப் தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேக வைத்துக்கொள்ளவும்.

தேங்காயைத் துருவி அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.

சாதத்தை நன்கு மசித்து அதனுடன் தேங்காய் பாலை சேர்த்துக் கலந்து, ருசிக்கு ஏற்ப உப்பு அல்லது சீனி சேர்க்கவும். தேங்காய்ப்பால் கஞ்சி தயார்.

காலையில் வெறும் வயிற்றில் பருகலாம். இவ்வாறு இரண்டு மூன்று நாட்கள் பருகி வந்தால் வாய்ப்புண்ணும் வயிற்றுப்புண்ணும் மறைந்து விடும்.   

]]>
http://www.dinamani.com/kitchen-corner/sweets/2016/may/27/தேங்காய்ப்-பால்-கஞ்சி-1270.html
1269 கிச்சன் கார்னர் இனிப்பு வகைகள் அன்னாசிப்பழ கீர் kirthika PTI Friday, May 27, 2016 04:40 PM +0530

தேவையான பொருட்கள்

அன்னாசி பழம் - 1/2

ரவை - 100 கிராம்

சர்க்கரை - 150 கிராம்

குங்குமப் பூ - ஒரு சிட்டிகை

பால் - 1/2 லிட்டர்

நெய் - 2 டீஸ்பூன்

வெண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்

முந்திரி - 10

பாதாம் - 5

செய்முறை

நெய்யில் ரவையை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

சூடான பாலில் குங்குமப் பூவை கரைத்து வைக்வும்.

அன்னாசிப் பழத்தை சிறுசிறு துண்டாக நறுக்கவும்.

முந்திரியையும், சுடுதண்ணீரில் ஊற வைத்து தோல் உரித்த பருப்பையும் நன்றாக துருவி ஒரு பாத்திரத்தில் வெண்ணெயில் போட்டு வறுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் பாலைக் கொதிக்கவிடவும்.

கொதித்தபின்னர் வறுத்த ரவையைச் சேர்த்து கிளறவும்.

அதன்பின் தேவையான சர்க்கரையை சேர்த்துப் பதம் வந்தவுடன் கரைத்து வைத்துள்ள குங்கும பூவை ஊற்றவும்.

அத்துடன் சிறிதளவு நெய் மற்றும் துண்டுகளாக நறுக்கிய அன்னாசி பழம் சேர்த்து கிளறி ஒரு நிமிடத்திற்குப் பின் வறுத்த முந்திரி, பாதாம் தூவி பறிமாறவும்.

]]>
http://www.dinamani.com/kitchen-corner/sweets/2016/may/27/அன்னாசிப்பழ-கீர்-1269.html
894 கிச்சன் கார்னர் இனிப்பு வகைகள் ரோஸ் ரசகுல்லா ஸ்ரீநிவாஸ் PTI Wednesday, May 18, 2016 03:48 PM +0530

தேவையான பொருட்கள்

பால் - 2 லிட்டர்

வெள்ளை வினிகர் - 2 டீஸ்பூன்

ரோஸ் வாட்டர் - 2 டீஸ்பூன்

ராஸ்பெரி கலர்

சர்க்கரை  250 கிராம்

குல்கந்த் - 100 கிராம்

செய்முறை

பாலை நன்றாக சுண்டக் காயும் அளவு கொதிக்க வைத்த பின் அதில் இரண்டு துளி வெள்ளை வினிகர் சேர்க்கவும். உடனே பால் திரிய ஆரம்பிக்கும். நன்றாகத் திரிந்தபின் தண்ணீரை வடித்துக் கெட்டியான பன்னீரை எடுத்துக் கொள்ளவும்.

கெட்டியான பன்னீரில் ராஸ்பெரி கலர் சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டையாக பிடித்து வைத்துக் கொள்ளவும்.

உருண்டையின் நடுவே குல்கந்த் வைத்துப் பிடித்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் தண்ணீர் விட்டு தேவையான சர்க்கரை போட்டு கொதித்து வந்தவுடன் ரோஸ் வாட்டர் இரண்டு தேக்கரண்டி சேர்க்கவும்.

பின்னர் பிடித்த உருண்டையை வாணலியில் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு பரிமாறும் போது குங்கும பூ தூவி பறிமாறவும். கண்ணைக் கவரும் ரோஸ் ரஸகுல்லா ரெடி!

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/5/18/w600X390/rose_rasagulla.jpg http://www.dinamani.com/kitchen-corner/sweets/2016/may/18/ரோஸ்-ரசகுல்லா-894.html
893 கிச்சன் கார்னர் இனிப்பு வகைகள் வெள்ளரி தூத்பேடா ஆர். ஜெயலட்சுமி PTI Wednesday, May 18, 2016 03:37 PM +0530

தேவையானவை:

நடுத்தரமான வெள்ளரிக்காய் - 400 கிராம்

சர்க்கரை - 200 கிராம்

நெய் - 100 கிராம்

மைதாமாவு - 100 கிராம்

கெட்டிப்பால் - 400 மில்லி

வெள்ளரிவிதை - 1 மேசைக்கரண்டி

வென்னிலா எசன்ஸ் - சில துளிகள்

பச்சைக் கலர் - சில துளிகள்

செய்முறை : வெள்ளரிக் காய்களைக் கழுவித் தோல் சீவி துண்டுகளாக நறுக்கி அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், வெள்ளரி விதைகளை லேசாக நெய்யில் வறுத்துக் கொள்ள வேண்டும். மைதாமாவை லேசாக வறுத்து ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். பாலை வாணலியில் கொதிக்க விட்டு வெள்ளரி விழுதைப் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். பால்வற்றி விழுது சுருண்டு வரும் பொழுது பாதி நெய்யைவிட்டு கிளற வேண்டும். சர்க்கரையைச் சேர்த்து நிதானமான தீயில் நன்றாகக் கிளற வேண்டும். சர்க்கரை நன்கு சேர்ந்து தளதள என்று கொதிக்கும்போது மைதாவைப் போட்டுக் கட்டித் தட்டாமல் கிளறி பாக்கி நெய்யை விட வேண்டும். கலர், எஸன்ஸ் சேர்க்க வேண்டும். ஒன்றாகச் சேர்ந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி சிறிய உருண்டைகளாகச் செய்து பேடா மாதிரி தட்டி வெள்ளரி விதைகளைத் தூவ வேண்டும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/5/18/w600X390/CUCCUMBER2.jpg CUCCUMBER2 http://www.dinamani.com/kitchen-corner/sweets/2016/may/18/வெள்ளரி-தூத்பேடா-893.html
758 கிச்சன் கார்னர் இனிப்பு வகைகள் பப்பாளி கேசரி தவநிதி PTI Friday, May 13, 2016 04:30 PM +0530

தேவையான பொருள்கள் :

பப்பாளித் துண்டுகள் - ஒரு கிண்ணம்

ரவை - ஒரு கிண்ணம்

சர்க்கரை - ஒரு கிண்ணம்

பால் - கால் கிண்ணம்

நெய், முந்திரி - தேவையான அளவு

ஏலக்காய் - 2

செய்முறை: பப்பாளித் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பால் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு  ரவையை வறுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி முந்திரி சேர்த்து வறுக்கவும். அதன்பிறகு ஒரு கிண்ணம் ரவைக்கு 2 கிண்ணம் தண்ணீர் விட்டு கலர் பொடி,ஏலக்காய்ப் பொடி, சர்க்கரை மற்றும் அரைத்த பப்பாளி விழுதை சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் ரவையைக் கொட்டி கட்டி தட்டாமல் கிளறி விடவும். ரவை ஒன்று சேர்ந்து வெந்து கெட்டியாகி வரும்போது இறக்கவும். சுவையான பப்பாளி கேசரி தயார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/5/13/w600X390/Fruit-Kesari.jpg Fruit-Kesari http://www.dinamani.com/kitchen-corner/sweets/2016/may/13/பப்பாளி-கேசரி-758.html