Dinamani - சைவ வகைகள் - http://www.dinamani.com/specials/kitchen-corner/vegetarian/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2665918 கிச்சன் கார்னர் சைவ வகைகள் கைக்குத்தல் அரிசி அடை லஷ்மி ராமன் DIN Tuesday, March 21, 2017 12:00 AM +0530 தேவையானவை:
கைக் குத்தல் அரிசி - 1 கிண்ணம்
புழுங்கல் அரிசி - 1 கிண்ணம்
பச்சை அரிசி - அரை கிண்ணம்
பயத்தம் பருப்பு - அரை கிண்ணம்
உளுத்தம் பருப்பு - அரை கிண்ணம்
மிளகாய் வற்றல் - 15
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
சின்ன வெங்காயம் - 1 கிண்ணம்
கொத்துமல்லித் தழை - சிறிது
இஞ்சி - 1 சிறிய துண்டு

செய்முறை:
அரிசி பருப்பு வகைகளை தனித்தனியாக ஊறவைக்கவும்.  பின்னர் ஊற வைத்த அரிசி பருப்புகளை தேவையான அளவு நீர்விட்டு அரைக்கவும். (மாவு கெட்டியாக இருக்க வேண்டும்). பின்னர், தோசை மாவை விட்டு தோசைக்கல்லில் தேய்த்து  அதன் மேலே பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம், கொத்துமல்லித் தழை, பொடியாக நறுக்கிய இஞ்சி தூவி  இரண்டு பக்கமும் நன்றாக எண்ணெய்விட்டு திருப்பிப் போட்டு எடுக்கவும். கைக்குத்தல் அரிசி அடை தயார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/14/w600X390/arisi_adai.jpg http://www.dinamani.com/specials/kitchen-corner/vegetarian/2017/mar/21/கைக்குத்தல்-அரிசி-அடை-2665918.html
2665917 கிச்சன் கார்னர் சைவ வகைகள் பைனாப்பிள் ரசம் லஷ்மி ராமன் DIN Friday, March 17, 2017 08:44 AM +0530 தேவையானவை:
தோல் நீக்கிய பைனாப்பிள் - 3 துண்டுகள்
பழுத்த நாட்டுத் தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
ரசப் பொடி - 1 தேக்கரண்டி
துவரம்பருப்பு - 4 தேக்கரண்டி
வறுத்து அரைக்க:
எண்ணெய் - அரை தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
புளி - 1 நெல்லிக்காய் அளவு
பெருங்காயம் - முக்கால் தேக்கரண்டி


தாளிக்க:
நெய் - அரை தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்துமல்லி - சிறிது


செய்முறை:  தோல் நீக்கிய 2 பைனாப்பிள் துண்டுகளை மைய அரைத்துக் கொள்ளவும். 1 பைனாப்பிள் துண்டை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.  துவரம் பருப்பை தனியாக வேகவைத்து மசித்து வைத்துக் கொள்ளவும்.  வாணலியில் எண்ணெய்விட்டு வறுக்க கொடுத்துள்ளவற்றை வறுத்துப் பொடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு பொடியாக நறுக்கி வைத்த பைனாப்பிள்,   தக்காளி இரண்டையும் சேர்த்து வதக்கவும்.  அத்துடன்  வறுத்துப் பொடித்ததை சேர்த்து ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு பச்சை வாசனை போக கொதிக்க விடவும். அதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், ரசப் பொடி சேர்த்து நுரை வரும் அளவு கொதிக்க விட வேண்டும். பிறகு பெருங்காயம், கொத்துமல்லி சேர்த்து இறக்கிவிடவும். பின்னர், நெய்யில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்த்து பரிமாறவும். சுவையான பைனாப்பிள் ரசம் தயார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/14/w600X390/pinaple_rasam.jpg http://www.dinamani.com/specials/kitchen-corner/vegetarian/2017/mar/17/பைனாப்பிள்-ரசம்-2665917.html
2559371 கிச்சன் கார்னர் சைவ வகைகள் தேங்காய் உப்பு சீடை தவநிதி DIN Friday, September 2, 2016 02:25 PM +0530 தேவையானவை:
அரிசி மாவு - 2 கிண்ணம்
உளுத்த மாவு - 1 தேக்கரண்டி
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
எள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 கிலோ
பொடித்த தேங்காய் - கால் கிண்ணம்

செய்முறை:
எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருள்களையும் சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியான பதத்தில்  பிசைந்து கொள்ளவும்.

பின்னர், சிறு சிறு உருண்டைகளாக  உருட்டி வைத்துக் கொண்டு, வாணலியில் எண்ணெய்யை காய வைத்து, நன்கு காய்ந்ததும், மிதமான சூட்டில் வைத்து உருண்டைகளைப் போட்டு பொரித்து எடுக்கவும்.  

தேங்காய் உப்பு சீடை தயார்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/2/w600X390/seedai.jpg http://www.dinamani.com/specials/kitchen-corner/vegetarian/2016/sep/02/தேங்காய்-உப்பு-சீடை-2559371.html
2536687 கிச்சன் கார்னர் சைவ வகைகள் பட்டாணி மசாலா தவநிதி Tuesday, July 12, 2016 12:57 PM +0530 தேவையான பொருட்கள்:

பச்சை பட்டாணி - 1 கிண்ணம்

சீரகம் - அரை தேக்கரண்டி

இஞ்சிப் பூண்டு விழுது - 1

தேக்கரண்டி

வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி

மல்லித் தூள் - அரைத் தேக்கரண்டி

கரம் மசாலா - அரைத் தேக்கரண்டி

கொத்துமல்லி - சிறிது

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

வெங்காயம் - 1 (நறுக்கியது)

தக்காளி - 3 (நறுக்கியது)

செய்முறை: முதலில் பச்சை பட்டாணியைக் குக்கரில் 3 விசில் விட்டு வேகவைத்து இறக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும். பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, அரைத்து வைத்துள்ள வெங்காயம் தக்காளி கலவையைச் சேர்த்து பச்சை வாசனைப் போக 3-4 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கிவிட்டு பிறகு, சிறிது தண்ணீர் தெளித்து நன்கு வதக்கி, வேக வைத்துள்ள பட்டாணியைச் சேர்த்து குறைவான தீயில் 5 நிமிடம் புரட்டி, கொத்துமல்லியைத் தூவி இறக்கினால், பட்டாணி மசாலா ரெடி.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/7/12/12/w600X390/pattani_sundal.jpg http://www.dinamani.com/specials/kitchen-corner/vegetarian/2016/jul/06/பட்டாணி-மசாலா-2536687.html
2536686 கிச்சன் கார்னர் சைவ வகைகள் முட்டை சப்பாத்தி தவநிதி Wednesday, July 6, 2016 06:08 PM +0530 தேவையான பொருட்கள்:

சப்பாத்தி - 2

முட்டை -2

கடலை மாவு - 4 தேக்கரண்டி

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

கொத்துமல்லி - சிறிது

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: முதலில் ஒரு வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, வதக்கிய வெங்காயம், மஞ்சள்தூள், உப்பு, கொத்துமல்லி சேர்த்து அத்துடன் முட்டை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும். பின்னர், தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றி, ஒரு சப்பாத்தியை எடுத்து கல்லில் போட்டு, கலந்து வைத்துள்ள முட்டை கலவையைத் தடவி எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால் முட்டை சப்பாத்தி ரெடி.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/7/6/18/w600X390/egg.jpg http://www.dinamani.com/specials/kitchen-corner/vegetarian/2016/jul/06/முட்டை-சப்பாத்தி-2536686.html
2536688 கிச்சன் கார்னர் சைவ வகைகள் பேபி கார்ன் வெஜ் நூடுல்ஸ் தவநிதி Wednesday, July 6, 2016 05:58 PM +0530 தேவையான பொருட்கள்:

நூடுல்ஸ் - 1 பாக்கெட்

பேபி கார்ன் - அரைக் கிண்ணம் (நீளமாக வெட்டியது)

கேரட் மற்றும் முட்டைக்கோஸ் - 1 கிண்ணம் ( பொடியாக நறுக்கியது)

குடைமிளகாய் - முக்கால் கிண்ணம் (நறுக்கியது)

பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

வெள்ளை வினிகர் - அரை தேக்கரண்டி

சோயா சாஸ் - அரை தேக்கரண்டி

ஸ்பிரிங் ஆனியன்( வெங்காயத் தாள்) - சிறிது

மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி

ஆலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி

சர்க்கரை - அரைதேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் நூடுல்ஸ் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்ததும், அதில் நூடுல்ûஸப் போட்டு வேக வைக்க வேண்டும். நூடுல்ஸ் வெந்ததும், அதனை இறக்கி, நீரை வடிகட்டி, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதித்ததும், அதில் பேபி கார்ன் சேர்த்து 2 நிமிடம் மூடி வேக வைத்து இறக்கி, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு மற்றும் ஸ்பிரிங் ஆனியனைச் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து வதக்க வேண்டும். பச்சை வாசனைப் போக வதக்கவும், பின் அதில் குடைமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அத்துடன் பேபி கார்ன் சேர்த்து நன்கு வதக்கவும். அடுத்து அதில் வினிகர் மற்றும் சோயா சாஸ் சேர்த்து கிளறி, மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பிறகு அதில் வேக வைத்துள்ள நூடுல்ûஸ சேர்த்து மீதமுள்ள எண்ணெய்யைச் சேர்த்து காய்கறிகளுடன் நூடுல்ஸ் சேருமாறு நன்கு புரட்டி விட்டு இறக்கினால், பேபி கார்ன் வெஜ் நூடுல்ஸ் ரெடி.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/7/6/17/w600X390/Hoisin-flavored-Asian-Noodles.jpg http://www.dinamani.com/specials/kitchen-corner/vegetarian/2016/jul/06/பேபி-கார்ன்-வெஜ்-நூடுல்ஸ்-2536688.html
1293 கிச்சன் கார்னர் சைவ வகைகள் சிறுதானிய போண்டா ( தினை - சோளம்) kirthika PTI Friday, May 27, 2016 05:10 PM +0530

தேவையானவை:

தினை மாவு - 1/2 கிண்ணம்

சோள மாவு - 1/2 கிண்ணம்

உருளைக்கிழங்கு - 3

வெங்காயம் - 2

இஞ்சி விழுது  - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிது

பச்சை மிளகாய் - 1

மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி

கடுகு - சிறிது

உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இத்துடன் மசித்த கிழங்கு, உப்பு, மஞ்சள்தூள், கொத்துமல்லி சேர்த்து நன்றாகப் பிசைந்து  சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

தினை மாவு மற்றும் சோளமாவு இரண்டையும் ஒன்றாகக் கலந்து அத்துடன் சிறிது உப்பு, மிளகாய்த்தூள், ஆப்ப சோடா சேர்த்து, கொஞ்சமாக தண்ணீர்விட்டு கலந்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து வைத்து கொள்ளவும்.

 எண்ணெய் காய்ந்தவுடன் உருளைக்கிழங்கு மசாலா உருண்டைகளை, மாவில் தோய்த்து எண்ணெய்யில் போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.

]]>
http://www.dinamani.com/kitchen-corner/vegetarian/2016/may/27/சிறுதானிய-போண்டா--தினை---சோளம்-1293.html
1294 கிச்சன் கார்னர் சைவ வகைகள் ஜவ்வரிசி பக்கோடா kirthika PTI Friday, May 27, 2016 05:10 PM +0530

தேவையானவை:

ஜவ்வரிசி - 1 கிண்ணம்

ரவை - 1 கிண்ணம்

பச்சரிசி மாவு - 1 கிண்ணம்

தயிர் - 2 கிண்ணம்

வெங்காயம் - 1/2 கிண்ணம்

முந்திரிபருப்பு - 100 கிராம்

இஞ்சி - சிறிதளவு

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: தயிரில் ஜவ்வரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, ஊறிய ஜவ்வரிசியுடன் ரவை, பச்சரிசி மாவு சேர்த்து நன்றாக பிசையவும். அத்துடன் நறுக்கிய மிளகாய், வெங்காயம், முந்திரி சேர்த்து எண்ணெய்யில் பக்கோடா போல் உதிர்த்துப் போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான ஜவ்வரிசி பக்கோடா ரெடி.

]]>
http://www.dinamani.com/kitchen-corner/vegetarian/2016/may/27/ஜவ்வரிசி-பக்கோடா-1294.html
1292 கிச்சன் கார்னர் சைவ வகைகள் பேபி கார்ன் (சோளக்கதிர்) மசாலா kirthika PTI Friday, May 27, 2016 05:07 PM +0530

தேவையான பொருள்கள் :

பேபி கார்ன் - 1 பாக்கெட்

வெண்ணெய்  - 100 கிராம்

பெரிய வெங்காயம் - 1

சீரகம் - 1 தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2  தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - 2   தேக்கரண்டி

மல்லித் தூள் - 12  தேக்கரண்டி

கொத்துமல்லி - சிறிதளவு

எண்ணெய் - 2  தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரைக்க

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 2

எண்ணெய் - 1 தேக்கரண்டி

செய்முறை: முதலில் பேபி கார்னை  சிறு சிறு துண்டுகளாக  நறுக்கி கொள்ளவும்.  கடாயில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள வெங்காயம், தக்காளி  வதக்கி இறக்கி ஆற வைத்து, பின் மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், கடாயில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து சூடானதும், சீரகத்தைத் தாளித்து, பின் வெங்காயம் மற்றும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அரைத்து வைத்துள்ள  தக்காளி கலவையைச் சேர்க்க வேண்டும். பின்னர், மிளகாய்த் தூள், மல்லித்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து 2  நிமிடம் கிளறி,  அதனுடன்  நறுக்கி  வைத்துள்ள பேபி கார்னை   சேர்த்து  நன்கு  கிளறவும். மசாலா பச்சை வாசனை போனவுடன்  2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து  தொக்கு பதம் வந்தவுடன் மல்லி இலை போட்டு இறக்கவும். இது  சப்பாத்திக்கு  தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும்.

***

]]>
http://www.dinamani.com/kitchen-corner/vegetarian/2016/may/27/பேபி-கார்ன்-சோளக்கதிர்-மசாலா-1292.html
1290 கிச்சன் கார்னர் சைவ வகைகள் ஆனியன் ரிங்ஸ் kirthika PTI Friday, May 27, 2016 05:06 PM +0530

தேவையானவை:

பெரிய வெங்காயம் - 1

மைதா - 1/2  கிண்ணம்

சோள மாவு - 1 /2 கிண்ணம்

இஞ்சி பூண்டு  விழுது - 1/2 தேக்கரண்டி

மிளகுத் தூள் - 1/4 தேக்கரண்டி

பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி

பிரட் தூள் - 1 கிண்ணம்

சாட் மசாலா - 1 தேக்கரண்டி

உப்பு, தண்ணீர் - தேவைக்கேற்ப

செய்முறை: முதலில் வெங்காயத்தை  பட்டையான வளையங்களாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு, இஞ்சிப் பூண்டு விழுது, மிளகுத்தூள், பேக்கிங் பவுடர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி ஓரளவு கெட்டியாகக் கலந்து கொள்ளவும். பின்பு, ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வெங்காய ரிங்கை மாவில் தோய்த்து எடுத்து பிரட் தூளில் புரட்டி பொரித்து எடுக்கவும்.

]]>
http://www.dinamani.com/kitchen-corner/vegetarian/2016/may/27/ஆனியன்-ரிங்ஸ்-1290.html
1289 கிச்சன் கார்னர் சைவ வகைகள் கத்தரிக்காய் வதக்கல் தவநிதி PTI Friday, May 27, 2016 05:05 PM +0530 தேவையான பொருள்கள் :

சின்ன  கத்தரிக்காய்   - கால் கிலோ

மிளகாய்த்தூள்   - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள்   - கால்  தேக்கரண்டி

நல்லெண்ணெய்  - 4  தேக்கரண்டி

உப்பு  - தேவையான அளவு

கறிவேப்பிலை  - சிறிதளவு

கடுகு  - கால் தேக்கரண்டி

செய்முறை: கத்தரிக்காயை நீள வாக்கில் நறுக்கி வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்  கடுகு  கறிவேப்பிலை தாளித்து அதனுடன்  நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காயை  சேர்த்து வதக்கவும். அத்துடன்  மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி மூடிவிட்டு சிறுதீயில்  10 நிமிடம்  வேக வைக்கவும். காய் நன்கு வெந்ததும் கிளறி இறக்கவும். இது சாம்பார் சாதம், தயிர்சாதத்திற்கு தொட்டுக் கொள்ள அருமையோ அருமை.

]]>
http://www.dinamani.com/kitchen-corner/vegetarian/2016/may/27/கத்தரிக்காய்-வதக்கல்-1289.html
772 கிச்சன் கார்னர் சைவ வகைகள் பேபி கார்ன் (சோளக்கதிர்) மசாலா தவநிதி PTI Tuesday, May 17, 2016 09:42 AM +0530 தேவையான பொருள்கள் :

பேபி கார்ன் - 1 பாக்கெட்

வெண்ணெய்  - 100 கிராம்

பெரிய வெங்காயம் - 1

சீரகம் - 1 தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2  தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - 2   தேக்கரண்டி

மல்லித் தூள் - 12  தேக்கரண்டி

கொத்துமல்லி - சிறிதளவு

எண்ணெய் - 2  தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரைக்க

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 2

எண்ணெய் - 1 தேக்கரண்டி

செய்முறை: முதலில் பேபி கார்னை  சிறு சிறு துண்டுகளாக  நறுக்கி கொள்ளவும்.  கடாயில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள வெங்காயம், தக்காளி  வதக்கி இறக்கி ஆற வைத்து, பின் மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், கடாயில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து சூடானதும், சீரகத்தைத் தாளித்து, பின் வெங்காயம் மற்றும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அரைத்து வைத்துள்ள  தக்காளி கலவையைச் சேர்க்க வேண்டும். பின்னர், மிளகாய்த் தூள், மல்லித்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து 2  நிமிடம் கிளறி,  அதனுடன்  நறுக்கி  வைத்துள்ள பேபி கார்னை   சேர்த்து  நன்கு  கிளறவும். மசாலா பச்சை வாசனை போனவுடன்  2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து  தொக்கு பதம் வந்தவுடன் மல்லி இலை போட்டு இறக்கவும். இது  சப்பாத்திக்கு  தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/5/17/w600X390/Baby-Corn-Masala2.jpg Baby-Corn-Masala2 http://www.dinamani.com/kitchen-corner/vegetarian/2016/may/17/பேபி-கார்ன்-சோளக்கதிர்-மசாலா-772.html