Dinamani - சிறுகதைமணி - http://www.dinamani.com/specials/sirukathaimani/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2651304 ஸ்பெஷல்ஸ் சிறுகதைமணி இரண்டொழிய வேறில்லை லஷ்மி Friday, February 17, 2017 03:33 PM +0530 “அப்பா! அத்தான் கிட்டே இருந்து கடுதாசி வந்திருக்கு.”- செம்பவளவல்லி படபடப்புடன் அந்தக் கடிதத்தைப் பிரித்தாள்.
இருளப்பன் மகள் அருகில் நெருக்கமாக நின்றபடி, “முதல்ல படி, பாப்பம். செந்தில் என்ன எழுதி இருக்கு?”
உள்ளம் மகிழ்ச்சியால் துள்ள, கடிதத்தைப் பலமுறை மனதிற்குள் படித்துப் பார்த்தாள் செம்பவளம்.
“அன்பு பவளம்!
இப்போது எனது ஐ.ஏ.எஸ் பயிற்சி முடிந்து எங்களை வேலைக்கு அனுப்பத் தீர்மாணிக்கும் சமயம், நமது ஊர் எல்லைக்காளியை மனப்பூர்வமாக வேண்டிக்கொள். விரைவில் பெரிய கலெக்டராக, நம்ம ஊரிலேயே உன் அருமை அத்தான் வருவேன்!
பிறகு கேட்க வேணுமா? நமது சபதம் நிறைவேறும்.
ஆசை அத்தான்’ செந்தில்.”
“ஏயப்பா! செந்தில் கலெக்டரா வருவானா? ஏ குட்டி, செம்பு! நல்லா காக்கி உடை எல்லாம் போட்டுக்கிட்டு வருமில்ல?” இருளப்பன் மீண்டும் பெருமையாகக் கேட்டான்.
செம்பவளம் விழுந்து விழுந்து சிரித்தாள். “அவரு போலீஸ் இல்லேப்பா, கலெக்டர் வேலை, காக்கி போட வேணாம். ஆனா நல்ல சட்டை ஜோரா போடுவாரு.” உற்சாகமாக விவரித்தபடி, அந்தக் கடிதத்தை நினைவாக மாடப்பிறையில் வைத்தாள்.
முளகுப்புறம், வெகு சிறிய கிராமம் தான் , இன்னமும் பழைய பெருமையிலும், பண்பாடு என்று சொல்லிக்கொள்ளும் சில நம்பிக்கைகளிலும் ஊறிக் கிடந்த மக்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு ஒரு சில பெரிய வீடுகள் இருந்தன. சேரிப்புறத்தில் குடிசைகள் அதிகம். அதில் வாழும் மக்களும், அறியாமை காரனமாக பெருகிப் போய்விட்டிருந்தனர்.
இருளப்பன் தாழ்த்தப்பட்டோர் இனம். அதாவது தீண்டத்தகாதவன், தொழில்முறையில், செருப்பு தைப்பது அவனது பரம்பரைத் தொழில். கிராமத்து நெடுஞ்சாலையில், பெரிய பண்ணை அல்லது மைனர் பிள்ளைவாளை நெடுந்தூரம் கண்டுவிட்டால், “சாமி! கும்புடுறேனுங்க” என்று காலில் போட்ட செருப்புகளை உதறிக் கையில் பிடித்தபடி பணிவன்போடு கூழைக் கும்பிடு போடும் ஒரு பரட்டைத் தலையன்.
அவனது மனைவி மூக்காத்தா, செம்பவளவல்லியைப் பெற்றுப் போட்டுவிட்டு, வைத்திய உதவி இல்லாது உயிர் விட்ட சமயம். குழந்தை செந்திலுடன் அக்காள் ராமக்கா, அவனது குடிசையைத் தேடி அடைக்கலம் புகுந்து விட்டாள்.
ராமக்காவின் கணவன், பக்கத்து நகரத்து முனிஸிபாலிடியில் ‘பியூன்’ வேலை பார்த்தவன். அவன் திடீரென நோய் கண்டு இறக்கும் தறுவாயில் மனைவியைக் கூப்பிட்டான்.
“இத பாரு ராமக்கா! நான் ரொம்ப நாள் இருக்கமாட்டேன். அதனால ஒண்ணு மட்டும் நல்லா கவனம் வச்சுக்க. நம்ம செந்திலை நல்லாப் படிக்க வை. இப்ப அரசாங்கத்தில் நம்மளுக்கு சலுகைகள் தராங்க. புத்தி சாமர்த்தியமா பிழைச்சுக்க. அவனை எப்பாடு பட்டாவது பெரிய படிப்பு படிக்க வச்சிடு.”
ராமக்கா அழுது முடித்த கையோடு, தம்பி வீடு திரும்பியவள், செந்திலை அருகிலிருந்த பள்ளியில் சேர்த்தாள். குழந்தை முதல் பழகிய மிக நெருங்கிய நண்பர்களாகத்தான் செந்திலும், பவளமும் வளர்ந்தார்கள்.
”பவளமும் படிக்கணும், அப்பத்தான் பள்ளிக்கூடம் போவேன்” என்று அடம் பிடித்தான் செந்தில்.
தாழ்த்தப்பட்டவர்களை முன்னேறச் செய்ய அரசாங்கம் வசதி செய்துள்ள நிலையில் செம்பவளவல்லியும் அத்தானுடன் போட்டி போட்டுக் கொண்டு படித்தாள்.
“பொட்டச்சிக்கு எதுக்கு படிப்பு? நாளைக்கு உனக்குத் தானே அவளைக் கட்டிக்குடுக்கப் போகுது.” இருளப்பன் மறுத்துப் பார்த்தான்.
பெரிய பண்ணை பரமசிவம் கூட, “என்னலே! மவளைப் படிக்க வைக்கறியாமில்லே. பேசாம உன் அக்கச்சி மவனுக்குக் கட்டிவைடா” என்று மீசையைத் தடவியபடி உபதேசித்தார்.
“வயசு வந்த பொண்ணுகளை வீட்டோட வக்கறது தான் மருவாதை. காலம் கெட்டுக் கிடக்குது தம்பி ஏதோ ரெண்டு எழுத்துப் படிச்சிட்டுது போதும்.” அத்தை ராமக்கா கூட ஒரு நிலையில் தடுக்கப் பார்த்தாள்.
ஆனால் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் கல்யாணராமன் பெரிய காந்தியவாதி, செம்பவளமும், செந்திலும் அவர்களது பள்ளிக்குப் பெருமை தேடித் தரும் மானவச் செல்வங்கள் என்று அவர்களை ஊக்குவித்தார்.
ஒருமுறை பணிவுடன் இருளப்பன் அவரை அணுகினான். ‘ஐயா! செம்புக்குப் படிப்பு போதுங்க. அவன் படிக்கட்டும். இனிமே எங்க சாதியில இதுக்கு மேல படிக்க வச்சா ரொம்பப் பாடுங்க.” என்றான் வாயைப் பொத்தியபடி.
“இருளா! நீ ஏன் கவலைபடறே? உங்க சாதி சனமெல்லாம் படிச்சு முன்னுக்கு வரனும்னு தானே இவ்வளவு முயற்சிகள் நடக்குது. பேசாம படிக்கவை” என்றார் கல்யாணராமன்.
“இல்லிங்க! செந்திலைத் தானே செம்பு கட்டிக்கப் போவுது. போதுங்க.” பிடிவாதமாகக் கூறினான்.
“இதோ பாரு இருளா! நல்லா படிக்கற குழந்தையோட அறிவை வீணாக்காதே. நீ பேசாம போ.” அதட்டி அனுப்பினார் அவர்.
செந்தில் பத்தாவதில் முதலாவதாகத் தேர்வு பெற்றான். அருகிலிருந்த நகரத்துத் கல்லூரியில் சேர்ந்து உபகாரச் சம்பளத்தில் பட்டப்படிப்பு கடைசி வருடம் படித்த சமயம்.
செம்பவள வல்லி பத்தாவதில் பள்ளி இறுதிப் பரீட்சையில் மாகாணத்திலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றிருந்தாள்.
செந்திலுக்கும், கல்யாணராமனுக்கும் ஏகப் பெருமை. “ ஏய் பவளம்! நீ கட்டாயம் காலேஜ் படிக்கணும். நாம நல்லா படிச்சிட்டு, பிறகு இதே ஊருக்கு வந்து படிச்ச தம்பதிகளாய் வேலை செய்யணும். தாழ்த்தப்பட்டவங்களை முன்னேத்தனும். என்றான் செந்தில்.
செம்பவளவல்லி முகமெல்லாம் சிவக்க, உச்சி குளிர்ந்து போனாள்.
எனக்குத் தெரிஞ்சவா ஒரு பெரிய மனுஷர் இருக்கார். அவருக்கு லெட்டர் எழுதிப் போடறேன். கட்டாயம் செம்பவளம் படிக்க உதவி செய்வார்.” கல்யாணராமன் ஆசி கூறினார்.
ஆனால், அந்தச் சம்பவம் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் செம்பவளம், இப்படி வீட்டில் இருந்திருக்க மாட்டாள். மனதில் சிறு வேதனையுடன் அவள் மீண்டும் நினைவு கூர்ந்தாள்.
ஊர்ப்பொதுக் கிணற்றில் சேரி ஜனங்கள் சாதாரனமாக நீர் எடுக்க அனுமதி கிடையாது. ஜாதி இல்லை. சமம் என்றெல்லாம் பேசும் இந்தக் காலத்திலும், முளகுப்புறம் கிராமம் போன்ற மிகச் சிறிய கிராமங்களில் இந்த நியதி இருக்கத்தான் செய்தது.
கோடை நாட்களில் குடி தண்ணீருக்கான சேரி கிணறு வற்றிக்கிடந்தது. அதை விட்டால் மூன்று மைல்கள் நடந்து சென்று மலைச்சுனையிலிருந்து நீர் சுமந்து வர வேண்டும், படித்த பெண்ணான செம்பவளத்திற்கு இந்த நியதி. அநீதி என்ற ஆத்திரம் ஏற்பட்டது இயற்கை.
“ஏன்? நாமெல்லாம் மனுஷங்க இல்லியா? நமக்குப் பசி தாகம் இல்லியா?” வெகுண்டாள்.
“வேணாம் குட்டி செம்பு! பழக்கத்தில இல்லாததை நீ விபரீதமா செய்யாதே! பஞ்சாயத்துக் கூடி ஏதாச்சும் தகராறு செய்வாங்க.” இருளப்பன் பயந்தபடி மகளைக்க் எஞினான்.
அத்தை ராமக்காளுக்குக் கடும் காய்ச்சல். ஊர்ச்சுனை வரை போய் நீர் எடுத்து வர இயலாத நிலை. துணிச்சலாக, பொதுக்கிணற்றிலிருந்து செம்பவளம் நீர் எடுத்து வந்து விட்டாள்.
“என்னலே! இருளா! படிச்ச திமிரு உம்மவளுக்கு?” பெரிய பண்ணை பரமசிவம் மீசையை முறுக்கினார்.
கிழவன் இருளப்பன் அவர் காலில் விழுந்து கெஞ்சி மன்னிப்பு பெற்றான். மகளின் அடாத செயலுக்காக அபராதம் செலுத்தினான்.
அன்று தான் செம்பவளத்தின் மனதில் ஒரு ஆவேசம் பிறந்தது. விடுமுறைக்காகவும், காய்ச்சலில் அவதியுறும் தாயைப் பார்க்கவும் வந்த செந்திலிடம் சபதம் விட்டாள்.
“அத்தான்! இதே ஓர்ல நாம, பெரிய ஆபீஸரா வரணும். இதே பொதுக்கிணறுல நம்ம மக்களும் தண்ணீர் எடுக்க உத்தரவு போடனும்.”
“னீ ஏன் கவலைப்படறே பவளம்! நாம் பெரிய மாவட்ட கலெக்டரா வருவோம். வந்து நீ சொன்னதை நிறைவேத்துவோம். ஜாதி இரண்டொழிய வேறில்லை. ஆண், பெண் இரண்டே ஜாதி தான்னு நிரூபிப்போம்: என்றான் ஆங்காரமாக.
அத்தை காய்ச்சல் அதிகமாகி இறந்து போனாள். செந்தில் முதலாவதாகத் தேறிப் பட்டம் வாங்கி ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி விட்டு வந்திருந்தான்.
கல்யாணரானம் அவனைப் பாராட்ட வந்திருந்தவர் செம்பவளவல்லியைப் பார்த்து புன்னகைத்தார். “ஏம்மா! நீ ஏன் மேல படிக்கக் கூடாது?”
“நான் படிக்கத் தயார், ஆனா முதல்ல அத்தானோட படிப்பு முடியட்டுங்க, அவர் கலெக்டரா வந்து இங்க தன்கிட்ட பிறகு தாங்க நான் படிக்கப் போறேன். அதுவரைக்கும் எனக்காக நீங்க செய்யப்போற சிபாரிசு உதவி எல்லாம் அத்தானுக்கே செய்யுங்க ஸார்” என்றால் குழைவுடன்.
“ஏன்? உங்கத்தானைக் கட்டிக்கப் போறதுக்காக சொல்றியாம்மா.” அவர் வேடிக்கையாகச் சிரித்தார்.
“இல்லே ஸார்! ஒரு ஆண் முன்னுக்கு வந்தா ஒரு சமூகத்தையே காப்பாத்துவான். நான் பெண் தானே? ஒரு குடும்பத்திலே அடங்கிப் போறவ” என்றால் முறுவலித்த படி.
“தப்பும்மா! ஒரு பெண் படிச்சிருந்தா ஒரு பல்கலைக் கழகமே அங்கே உருவாகி விடும் தெரியுமா?”
“நான் அவ்வளவு படிச்சவ இல்லே சார்! எதுக்கும் அத்தான் முதல்ல ஏணி மேலே ஏறி மேல போகட்டும், பிறகு நான்...” முடித்து விட்டாள் அவள்.
இப்போது செந்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகி விடுவான். நெஞ்சு கொள்ளா மகழ்ச்சி. நேராக ஆசிரியரிடம் இந்தச் சந்தோச சமாசாரத்தைச் சொல்ல வேண்டும். பரபரத்தாள்.
“அத்தானுக்கு கடிதம் எழுத வேணுமே!” அவளே தபால் ஆபீஸிற்கு ஓடிச் சென்று கடிதம் எழுதிப் போட்ட பிறகு தான் ஓய்ந்தாள்.
மாதங்கள் பறந்தன. முளகுப்புறம் கிராமம் முழுதும் செந்தில் டெபுடி கலெக்ட்டராகி விட்ட செய்தி பரவியது.
இருளப்பன் மாரை நிமிர்த்தி கொண்டு ராஜ நடை போட்டான்.
“பயமகன் புத்துசாலி. பாவம்! எங்கக்கா பார்க்கக் குடுப்பினை இல்லாம போய்ச் சேர்ந்தா.” அங்கலாய்த்தான். நாட்கள் பறந்தன. செந்தில் மிகவும் வேலை இருப்பதாக எழுத ஆரம்பித்தான்.
”ஏன்லே இருளா! உன் செந்தில் ஐ.ஏ.எஸ் ஆபீஸராமே! நம்ம ஊருக்கு ‘ டெபுடி கலெக்ட்டராக’ வரப் போறாராமே!’ பரமசிவம் மீசையை முறுக்காமல் வியந்தார்.
“ராமே!” தனக்குள் ‘ குப்பெனச் சிரித்த செம்பவளம் “பதவி வந்ததும் மனுஷங்க மரியாதையும் சேத்துக்கறாங்க...” என்று நினைத்தாள்.
அன்று செந்தில் ஊருக்கு வரப்போகும் செய்தி வந்திருந்தது. மாவிலைத் தோரணங்கள் சகிதம், வரவேற்பு வளையங்கள்!
“செந்தமிழ்ச்செல்வனே வருக!”
“ஊரின் தவப்புதல்வா வருக!”
என்ற எழுத்துக்கள் காரில் வந்து இறங்கப் போகும் டெபுடி கலெக்டரைக் கொண்டாட மலர் மாலையுடன் பரமசிவம் முன்னால் நின்று கொண்டார். இருளப்பனும், செம்பவளமும் ஒரு ஓரமாக நின்றனர். கல்யாணராமனும் அருகாக நின்றார்.
கார், சாலை மண்ணை வாரி இறைத்தபடி வந்து நின்றது. செம்பவளம், கன்னம் சிவக்க, கண்களைக் கொட்டியபடி ஆசை அத்தானை நிமிர்ந்து பார்த்தாள்.
முன்னைவிட அழகாக, கம்பீரமாக, அலங்காரமாக வரிசைப் பற்கள் தெரிய செந்தில் காரை விட்டு இறங்கினான். பரமசிவம் பாய்ந்து சென்று மாலையைப் போட்டு பெரிய கும்பிடு போட்டார்.
அருகில் இறங்குவது... செம்பவளம் கண்களைக் குறுக்கினாள். மிக அழகாக, ஒய்யாரமாக ஒரு பெண்.
வேகமாக, செம்பவளத்தருகே வந்தான், “ஹலோ, நிஷா! இது தான் என் மாமன் மகள் செம்பவளம், மிகவும் அறிவுள்ள பெண் என்று கூறுவேனே அவள்... செம்பவளம்! இது தான் நிஷா ஐ.ஏ.எஸ் எனது மனைவி” என்றான் செந்தில் நிதானமாக.
காலடியில் பூமி பிளந்து ‘படார்’ என்ற ஓசையுடன் அவளை விழுங்கியது போல் நிலைகுலைந்து போனாள் செம்பவளம். நெஞ்சில் ஓங்கி யாரோ அறைந்து அவளது கனவுகளை சுக்குகூறாகச் சின்னாபின்னமாக்கியதைப் போன்ற பயங்கர உணர்வால் ஆடிப்போனாள், வாயில் வார்த்தைகள் இறைந்து போயின.
இருளப்பன் உதடுகள் கோபத்தால் துடித்தன. “னீ செய்தது நல்லா இருக்கா?”
“ஸ்! கலெக்ட்டர்! பேசாதே. போ அப்பால” பரமசிவம் அதட்டினார்.
“மாமா! நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பயிற்சிக்குப் போனோம். அவங்கப்பா, மந்திரி சபையிலே பெரிய அதிகாரி. நிஷா ரொம்ப நல்லவ.” செந்தில் முடிக்கு முன் “ ஹாய்!” நிஷா கையை உயர்த்தினாள். விரலில் வைர மோதிரம் மின்னியது.
“வாங்க மாமா! கார்லே ஏறுங்க...ம்! செம்பவளம். எங்கூட வாங்க. உபசரித்தான் அவன்.
செம்பவள வல்லி கண்களைத் துடைத்துக் கொண்டாள். அருகில் நின்ற கல்யாணராமனிடம் கூறினாள். ஸார் அவங்க எல்லாம் மேல் சாதிங்க, கார்ல போகட்டும். நாங்க கீழ்சாதி. கீழயே இருக்கோம். வாங்க. நாம போகலாம்.”
“பவளம்!” செந்தில் குற்ற உணர்வுடன் நின்றான்.
“கூப்பிடாதீங்க, நீங்க ஏணி மேல ஏறிப் போயிட்டீங்க. நான் இனிமேத்தான் ஸார் உதவியால ஏணி மேல ஏறி வரணும். கட்டாயமா நானும் ஒரு கலெக்ட்டரா வருவென். ஏன்னா, சாதி இரண்டொழிய வேறில்லைன்னு அன்னிக்கு சொன்னீங்களே. அந்த சாதி இரண்டு தான்னு இப்ப எனக்கு நல்லாப் புரிஞ்சு போயிட்டுது. உயர்வு, தாழ்வுங்கறது கூட, நமக்குள்ள ஏற்படும்னு விளங்கிட்டுது.” தழ தழத்தது அவளது குரல்.
கல்யாணராமன் ஆதரவாக அவளைப் பார்த்தார். “அழாதே அம்மா. நான் சிபாரிசு செய்து உன்னை மேலே படிக்க வைக்கிறேன்.”
”நிச்சயமா படிப்பேன். ஏன் ஸார்? இப்ப சாதியில இரண்டு தான் இருக்குதுன்னு தெரியுமா உங்களுக்கு?” கரகரத்தாள் அவள்.
“என்னம்மா சொல்றே?”
“ஆமாம் ஸார்! இப்பல்லாம் பணக்காரன், ஏழைன்னு ரெண்டே சாதி தான் இருக்குது தெரியுமா?” அவள் விம்மினாள்
செந்தில் தலையைக் குனிந்தபடி ஊருக்குள் நுழைந்தான்.

தினமணி கதிர்- 17.04.81

Image Courtsy: Artist S.Elayaraja 

 

]]>
லஷ்மி சிறுகதை, இரண்டொழிய வேறில்லை, சிறுகதை மணி, lashmi short story, irandoziya verillai, sirukadhaimaNi http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/17/w600X390/lakshmi_short_story.jpg http://www.dinamani.com/specials/sirukathaimani/2017/feb/17/இரண்டொழிய-வேறில்ல-2651304.html
2642605 ஸ்பெஷல்ஸ் சிறுகதைமணி புரிந்தது உமா சந்திரன் Thursday, February 2, 2017 01:12 PM +0530  

ரோஸி அப்படிச் செய்வாளென்று யாரும் நினைக்கவில்லை. உண்மை எதிரே வந்து மோதிய போது ஒவ்வொருவர் மனத்திலும் ஆத்திரம் பொங்கியது. நன்றி கெட்ட பெண்! வளர்த்து ஆளாக்கியவர்கள் முகத்தில் கரியைப் பூசி விட்டுப் போய் விட்டாளே!
அந்த வீட்டில் எடுபிடி வேலை செய்யும் பெண்ணாகவா ரோஸியை நடத்தினார்கள்? கிறிஸ்துமஸ், ஈஸ்டர்- எந்தப் பண்டிகை வந்தாலும் ரோஸிக்கு புது டிரெஸ் வாங்காமல் இருக்க மாட்டார்களே! அவளை ஸ்கூலில் சேர்த்து அவள் நன்றாகப் படித்து முன்னேறுவதற்கு எல்லா வசதியும் செய்யவில்லையா? சுமை புத்தகங்களும், நோட்டுப் புத்தகங்களும் வாங்கிக் கொடுத்து பஸ் பாஸுக்குப் பணம் கொடுத்து அவளுடைய படிப்பில் எப்படியெல்லாம் அக்கறை காட்டி வந்தார்கள்.
ரோஸி வேலையை முடித்தாலும் சரி, முடிக்காவிட்டாலும் சரி, பள்ளிக்கூட நேரத்துக்குச் சரியாக பஸ்ஸைப் பிடிப்பதற்கு தயாராகி விட வேண்டும். சிறிது தாமதமானாலும் மேரி அம்மாள் குரல் கொடுப்பாள். ‘ரோஸி ஏன் மச மசன்னு நின்னுகிட்டிருக்கே? ஸ்கூலுக்கு நேரமாகல்லே! பஸ் போயிடுச்சுன்னா அப்புறம் ஸ்கூலுக்கு லேட்டா போய் நிப்பே உம்! கிளம்பு சீக்கிரம்!” - தன் கையாலேயே ரோஸிக்குத் தலை வாரி ரிப்பன் கட்டி அழகு பார்த்து அனுப்புவாள் மேரி அம்மாள்.
அனாதையாக வீட்டுக்கு வந்த பெண்ணுக்குத் தாயும் தகப்பனுமாக இருந்தவர்கள் மேரி அம்மாளும், காப்டன் டேனியலும், அவ்வளவெல்லாம் அன்பைப் பொழிந்தவர்களுக்கு துரோகம் செய்து விட்டுப் போக ரோஸிக்கு எப்படி மனம் துணிந்தது? அவள் அவ்வளவு கல் நெஞக்காரி என்று யார் தான் அவளைப் பற்றி நினைத்திருக்க முடியும்.?
மென்மையான மலர் போன்று இருந்தவள் ரோஸி, அவள் அதிர நடந்து யாரும் கண்டதில்லை. குரலை உயர்த்திப் பேசி யாரும் கேட்டதில்லை. அவளுடைய களங்கமற்ற குழந்தை முகத்தில் இனிய புன்னகை எப்போதும் தவழ்ந்து கொண்டிருக்கும். அமைதியாக, அடக்க ஒடுக்கமாக, ஒவ்வொன்றும் செய்து கொண்டிருப்பால். அப்படிப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றி யார் தான் தப்பாக நினைக்க முடியும்?
ஜானகி தான் முதன் முதலில் தியாகுவுக்குக் கோடி காட்டினாள். ஏதோ உள்ளுணர்வு அவளுக்குத் தோன்றியிருக்க வேண்டும்.
“ நீங்க கவனிச்சீங்களா? ரோஸி எப்பவும் போல இல்லை. அவளோட பார்வை எப்படியெப்படியோ எங்கெங்கயோ போகுது.
தியாகுவும் கவனித்தான். காலையில் வீட்டு முன்புறத்தைக் கூட்டும் போதும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் போதும் ரோஸியின் விழிகள் எதிர் வீட்டுப் பக்கம் அலையத்தான் செய்தன. அந்த நேரத்துகுச் சரியாக எதிர் வீட்டுக் குமார் ஸ்கூட்டரைக் கண்ணும் கருத்துமாகக் கவனிக்க வந்து விடுவான். ஆனால் அவன் நொடிக்கொரு தரம் ரோஸியைத் திரும்பிப் பார்ப்பது மட்டுமில்லை. அர்த்தம் நிறைந்த புன்னகை புரிவதும் சைகைகள் செய்வதுமாக ரோஸியுடன் ஏதேதோ சங்கேத உரையாடல் நடத்தினான். என்று தியாகுவுக்குத் தோன்றியது.

ரோஸி அப்போது பத்தாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். வீட்டு வேலை உண்டு, படிப்பு உண்டு என்று இருந்த பெண்ணை குமார் வீணாக வம்புக்கு இழுத்து அவளது மனதைக் கலைத்துக் கொண்டிருந்ததை நினைத்து தியாகுவுக்கு கோபமே வந்தது.

குமார் படிப்பை மூட்டை கட்டி வைத்து எத்தனையோ ஆண்டுகளாகியிருந்தன. வீட்டுக்கு ஒரே பிள்ளை. பெற்றோர் அவனுக்கு அளவுக்கு மிஞ்சி செல்லமும் சலுகைகளும் கொடுத்து அவனைத் தறுதலையாக்கி வைத்திருந்தார்கள். வசதி படைத்தவர்கள். தங்கள் பிள்ளை படிக்க வேண்டும். உத்தியோகம் பார்க்க வேண்டும். என்று அவர்கள் கவலைப்படவில்லை. குமாரும் ஏதேதோ பட்டறைகளில் தொழில் கற்றுக் கொள்வதாகச் சொல்லிக் கொண்டு ஸ்கூட்டரில் ஊர் சுற்றிக் கொண்டிருந்தான்.

அப்படிப்பட்ட உதவாக்கரைப் பையன் விரித்த வலையில் ரோஸி விழுந்து விடக்கூடாதே என்று கவலைப்பட்டனர் ஜானகியும், தியாகுவும்.

ராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றிருந்த காப்டன் டேனியலும் அவர் மனைவி மேரியம்மாளும் பல வருஷங்களாக தியாகு தம்பதியருடன் மனம் விட்டுப் பழகிக் கொண்டிருந்த அண்டை வீட்டுக்காரர்கள். இரண்டு வீடுகளுக்கும் இடையே இருந்த முள் வேலியருகே நின்று கொண்டு மேரியம்மாள் ஜானகியுடன் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருப்பாள். வெகுளி. தன்னுடைய சுக துக்கங்கள் ஒன்று விடாமல் அவள் ஜானகியுடன் பகிர்ந்து கொள்ளத் தவறுவதில்லை.

ஓய்வு நேரத்தை வீணாக்காமல் காப்டன் டேனியல் ஒரு தனியார் கம்பெனியில் செக்யூரிட்டி ஆபீஸராகப் பணியாற்றி வந்தார். அந்தத் தம்பதிக்கு ஒரு பிள்ளை, ஒரு பெண். பிள்ளை தாமஸ் ஏர்ஃபோர்ஸில் ஆபீஸராகச் சேர்ந்து பம்பாயில் இருந்தான். பெண் ஜூலி ஒரு டாக்டருக்கு வாழ்க்கைப்பட்டு, கணவனுடன் ஸ்டேட்ஸில் இருந்தாள். தனித்துவிட்ட டேனியல் தம்பதிக்கு ரோஸி சொந்தப்பெண்ணுக்குச் சமமாக வீட்டில் இருந்தது மனநிறைவை அளித்தது.

ஆறு வருஷங்களுக்கு முன்பு தியாகுவும் ஜானகியும் அங்கே குடி வந்த சமயத்தில் ரோஸி பத்துப் பதினோரு வயதுச் சிறூமியாயிருந்தாள். ஃபிராக் மட்டும் அணிந்து குடுகுடுவென்று அங்கும் இங்கும் ஓடியாடி வேலை செய்து கொண்டிருப்பாள். பள்ளிக்கூட நேரம் வந்ததும் வேறு நல்ல ஃபிராக் அணிந்து கொண்டு பரக்க பரக்க பஸ்ஸைப் பிடிக்க ஓடுவாள். அதே ரோஸி இந்த ஆறு வருஷத்தில் எப்படி மதமதவென்று வளர்ந்து விட்டாள்!

காப்டனின் வீட்டு வெளி வராந்தாவில் பழைய காலத்து மரக்கட்டில் ஒன்று மெத்தை தலையணை சகிதம் நிரந்தரமாகப் போடப்பட்டிருந்தது. பகல் நேரங்களில் மேரியம்மாள் ஓய்வாக இருக்கும் போதெல்லாம் அதில் வந்து தலையைச் சாய்த்துக் கொள்வாள். ஆனால் மாலை நேரத்தில் அதன் ஏகபோக உரிமை காப்டனுக்குத் தான். தமது வேலையிலிருந்து வீட்டுக்குத் திரும்பி வந்து தேநீர் அருந்தியதும் காப்டன் இடுப்பில் லுங்கி மட்டும் கட்டிக்கொண்டு வெற்றுடம்புடன் அந்தக் கட்டிலே தஞ்சமென்று அதில் மல்லாந்து படுத்து விடுவார்.

ரோஸியின் மாலை நேரக் கடமை அப்போது துவங்கும். காப்டனுக்கு உடம்பு பிடித்து விடும் வேலை. அவருடைய பாரி சரீரத்துக்கு ரோஸியின் கைகளால் அமுக்கி விட்டால் எப்படிப் போதும்! அவரது உடம்பின் மீதே ஏறி நின்று கால்களால் மிதித்தால் தான் இதமாக இருக்கும் அவருக்கு. விட்டத்து வளையத்தில் கட்டப்பட்டு தொங்கிய ஒரு கயிற்றைப் பிடித்துக் கொண்டு ரோஸி அவருடைய உடம்பின் மீது அங்குமிங்கும் நடந்து தேவைப்பட்ட இடங்களில் அழுத்தி மிதிக்கும் போது காப்டன் “அப்பா! அப்பப்பா!” என்று அவ்வப்போது கூறிக்கொண்டு அந்த இதத்தை ரசித்துக் கொண்டிருப்பார்.

ஒருநாள் மாலை  வழக்கப் போல் ரோஸி காப்டனுக்கு உடம்பு மிதித்துக் கொண்டிருந்த போது மேரியம்மாள் கூச்சலிட்டது தியாகுவுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது.

“ஏ ரோஸிப்பொண்ணே! உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா? இன்னமும் பாதித் தொடை தெரியும்படியா ஃப்ராக்கைப் போட்டுக்கிட்டு உடம்பு மிதிக்கறயே! பாவாடை தாவணி எதுக்கு வாங்கிக் கொடுத்திருக்கேன்! எடுத்துக் கட்டிக்கிட்டு வந்து அப்புறம் மிதி. ஓடு!”

“ரோஸி போன வாரம் தான் பெரிய மனுஷி ஆனாளாம். மேரியம்மாள் எனக்குச் சொன்னாள்!” என்று தியாகுவின் காதில் கிசுகிசுத்தாள் ஜானகி.

ரோஸியின் மாலை நேரக் கடமை தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருந்தது. காப்டனுக்கு அவள் உடம்பு மிதித்து விடும்போது சில சமயம் அவர் சிடுசிடுப்பார் - “ ஏ ரோஸி! இப்படி பெரளறாப்பல பாவடை கட்டிகிட்டா மூஞ்சியில கிச்சுகிச்சு மூட்டறாப்பல இருக்கு. தும்மல் கூட வந்திடுது!”

இந்தத் தொந்திரவைத் தவிர்ப்பதற்காக ரோஸி பாவாடை விளிம்பைத் தூக்கிச் செருகிக் கொண்டு காப்டனுக்கு உடம்பு மிதித்து விடுவாள். அவளுடைய பாதம் பட்டு உடம்பு வலி விட்டுப் போகும் இதத்தைக் கண்களை மூடி ரசித்துக் கொண்டிருப்பார் காப்டன்.

இதற்குச் சில மாதங்களுக்குப் பிறகுதான் ரோஸியின் கண்கள் எங்கெங்கோ அலைபாய்வதை ஜானகி தியாகுவுக்குச் சுட்டிக் காட்டும் நிலை உருவாயிற்று. எதிர் வீட்டுக் குமாருடன் அவள் நடத்திய கண் ஜாடை உரையாடல்கள் ஒருபடி மேலே போய் ரகசியச் சந்திப்புக்கும் வழிவகுத்து விட்டன!

தியாகுவும் ஜானகியும் ஒருநாள் மாலையில் மார்கெட்டுக்குப் போய்விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஒரு மரத்தடியின் இருண்ட பகுதியில் இரண்டு உருவங்கள் நின்று ரகசியமாக உரையாடிக் கொண்டிருப்பதைக் கவனித்தனர். ரோஸியும், குமாரும் தான்!

இது எங்கே கொண்டு போய் விடுமோ என்று கவலைப்பட்டாள் ஜானகி. மேரியம்மாளிடம் சொன்னால் அந்த அனாதைப் பெண்ணை அடித்து துரத்தி விடப் போகிறாளோ என்ற பயம் அவளுக்கு. அப்படி ஒரு பாவத்தைக் கட்டிக்கொள்ள அவள் விரும்பவில்லை. அதே சமயம் அந்த தறுதலைக் குமார் அந்த அறியாப் பெண்ணை மோசம் செய்து விடக் கூடாதே என்றும் அவள் கவலைப்பாட்டாள். தியாகுவிடம் அவள் தன் கவலையைத் தெரிவித்த போது. தியாகு, “ இந்த ஊர்க்கவலையெல்லாம் உனக்கெதுக்கு? நம்ம பாடு தலைக்கு மேல கிடக்கு!” என்று அலட்சியமாகக் கூறி விட்டான்.

இதற்கு ஒருமாதத்துக்குள் அது நடந்து விட்டது. பெற்ற தாய் தந்தையர்களுக்கும் மேலாக இருந்தவர்களைத் தூக்கியெறிந்து விட்டு உதவாக்கரை குமாருடன் எங்கோ மறைந்து விட்டாள் ரோஸி.

“நன்றி கெட்ட, கழுதை! கெட்டழிஞ்சிட்டு மறுபடியும் இவங்க கிட்டத்தான் வந்து நிக்கப் போகுது” எப்று குமுறினாள் ஜானகி.
ஆனால் மேரியம்மாளோ, காப்டன் டேனியலோ அவளைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அந்த நன்றி மறந்த செயலுக்கு விளக்கம் தேவை இல்லையென்று இருந்து விட்டார்களோ?

இது நடந்து ஒரு வருஷத்துக்கு மேல் ஓடி விட்டது. ஜானகியும், தியாகுவும் தீவுத் திடலில் நடந்த சுற்றுலா கண்காட்சிக்குப் போயிருந்த போது தற்செயலாக ரோஸியைச் சந்தித்தனர். நிறைமாத கர்ப்பிணியாயிருந்த அவளுடன் குமாரும் வந்திருந்தான். இருவரும் வெட்கப்பட்டுக் கொண்டு கூட்டத்துள் மறைந்து விட முயற்சி செய்யவில்லை. தாங்களாகவே அவர்களருகில் வந்து வணக்கம் தெரிவித்தனர்.
“நல்லா இருக்கியா ரோஸி?”
“ ரொம்ப நல்லா இருக்கேம்மா” என்று கூறிய ரோஸி சற்றுத் தயங்கிய பிறகு கூறினாள்- “எங்க வீட்டுக்கு நீங்க ரெண்டு பேரும் கட்டாயம் வரணும். புதுப்பேட்டை நடுத்தெரு, ஆறாம் நம்பர்ல இருக்கோம்.”

ஆவல் உந்தித் தள்ள மறுநாளே தியாகுவை வற்புறுத்தி அழைத்துக் கொண்டு அங்கு சென்றாள் ஜானகி. வீட்டை அவர்கள் வைத்துக் கொண்டிருந்த விதமும், அவர்களை உபசரித்த விதமும் இருவரையும் பிரமிக்க வைத்தன.

குமாரா இப்படி மாறி விட்டான்? ரோஸி போட்ட சொக்குப் பொடியின் மகிமையா?

“சொந்தப் பட்டறை ஆரம்பிச்சிருக்காரம்மா. நல்ல வருமானம்!” என்றாள் ரோஸி.
“கலியாணம் எப்போ ஆச்சு!”

“அப்பவே பதிவுத் திருமணம் செய்துகிட்டோம். யாரு என்ன பேசறாங்கன்னு நாங்க கவலைப்படலே. செழிப்பா சந்தோசமா இருக்கோம்” என்று கூறிய குமார். தியாகுவும், ஜானகியும் எவ்வளவு தடுத்தும் கேளாமல் அவர்களுக்கு சிற்றுண்டி வாங்கி வர ஸ்கூட்டரில் விரைந்து சென்றான்.

“இவரோட அப்பா அம்மா இவரோட முகத்திலே முழிக்கிறதில்லேன்னு வைராக்கியமா இருக்காங்க, எத்தனை நாளைக்கு அப்படி இருக்கப் போறாங்களோ தெரியலே!” என்றாள் ரோஸி.

ஜானகி பிடித்துக் கொண்டாள். “வைராக்கியமா இருக்கறவங்க அவங்க மட்டும் இல்லையே! பெத்த மகளுக்குச் சமமா உன்னை வளர்த்தவங்க! என்ன இருந்தாலும்...”

“நீங்க என்ன சொல்ல நினக்கறீங்கன்னு எனக்குப் புரியுதம்மா. நான் நன்றி கெட்டவ- உப்புக்குத் துரோகம் செய்தவ- இப்படித் தான் எல்லோரும் என்னைப்பற்றி பேசறாங்க. ஆனா வயசுப் பொண்ணோட மனசைப் புரிஞ்சுக்க யாருக்கும் தோணலையே? நான் அனாதை தான். அவங்களை நம்பித்தான் வாழ்ந்துகிட்டு இருந்தேன். பெத்த தாய் தகப்பனாருக்குச் சமமா தான் அவங்களை மதிச்சிருந்தேன். அவங்க காலால இட்ட வேலையை தலையால செய்யக் கடமைப்பட்டவ தான் நான். ஆனால் அப்பாவுக்கு தினமும் உடம்பு மிதிக்கிற வேலை... நான் சின்னப் பெண்ணா இருந்த வரைக்கும் சரி. எனக்கு வயசு வந்தப்புறமும்...”

“ரோஸி!”

“யாரையும் நான் தப்பாச் சொல்லலீங்க. ஆனா நான் மரக்கட்டை இல்லையே! வயசுப் பொண்ணோட மனசும், உணர்ச்சிகளும் எனக்கும் உண்டு இல்லையா? அம்மாகிட்டே ஜாடையா சொல்லியும் பார்த்தேன். அந்த உடம்பு மிதிக்கிற வேலை மட்டும் எனக்கு கொடுக்க வேண்டாம்னு. ஆனா அம்மா என்னோட தவிப்பைப் புரிஞ்சுகிட்டாதானே!”

“தவிப்பா! நீ என்ன சொல்லறே ரோஸி!”

“பெத்த தகப்பானாருக்கும் மேலே உன்கிட்டே பாசம் காட்டறாரே. அவருக்காக நீ இது கூடச் செய்யக் கூடாதா?’ அப்படின்னு அம்மா என் வாய் மேல போட்டுட்டாங்க. என் மனசு பட்ட பாட்டை அவங்களுக்கு எப்படி புரிய வைக்க முடியும்? அப்பா என்ன தான் வயசில் பெரியவரானாலும் அவரோட உடம்பு ஆம்பிள்ளை உடம்பு தானே! நெருப்பு மேலே நடக்கற மாதிரி தான் நான் அந்த உடம்பை மிதிக்கிற வேலையைச் செய்துகிட்டிருந்தேன். அந்த அரைமணி நேரமும் என்னோட உடம்பில் ஒவ்வொரு அணுவும் அனல் பறக்கறாப்பல நான் தவிச்ச தவிப்பு...! அதை நான் யார் கிட்ட சொல்ல முடியும்? என்னோட தவிப்புக்கு வடிகாலா குமார் எனக்கு வாய்ச்சாரோ நான் பிழைச்சேனோ!” விம்மலினிடையே கூறிய ரோஸியை ஆதரவுடன் அணைத்துக் கொண்டாள் ஜானகி.

தினமணி கதிர்- 03.04.81

Image courtsy: http://www.freakingnews.com/

 

 

]]>
uma chandran short story, உமா சந்திரன் சிறுகதை, தினமணி கதிர் 3.04.81 http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/2/2/w600X390/roSi_uma_chandran_story.jpg http://www.dinamani.com/specials/sirukathaimani/2017/feb/02/புரிந்தத-2642605.html
2631629 ஸ்பெஷல்ஸ் சிறுகதைமணி நாக்குகள்   ஜோதிர்லதா கிரிஜா Monday, January 16, 2017 12:01 PM +0530 “சாந்தி, நேத்து தான் தங்க மலர் சினிமாவுக்குப் போயிருந்தேண்டி.”
“அப்படியா? நல்லாருக்குதா?”
“ஓ.. ஒரு பணக்காரன் பொண்ணு தன் அந்தஸ்துக்கு கீழே இருக்கற ஒரு வேலைக்காரனை லவ் பண்றாடி. ஆனா பாவம், வழக்கம் போல அவளோட அப்பாவும், அம்மாவும் கலயானத்துக்கு ஒத்துக்கலை. ஆனா கடைசியிலே எப்படியோ ரெண்டு பேரும் ஏதோ ட்ரிக் பண்ணிப் பெரியவங்களைச் சம்மதிக்க வச்சுடறாங்க. அதுதான் கதையிலே சஸ்பென்ஸ்...”
“என்ன ட்ரிக்டி பண்றாங்க?”
“அதைச் சொல்லிட்டா அப்புறம் நாலைக்கு நீ படம் பார்க்கிறப்ப என்ன சுவாரஸ்யம்டீ இருக்கும்? நான் சொல்ல மாட்டேன். நான் என்ன டமில் சினிமா விமர்சனம் எழுதறவன்னு பார்த்தியா? கொஞ்சூண்டு இருக்கற சஸ்பென்ஸையும் விமர்சனத்துலயே சொல்லிப் படம் பார்க்கிறவங்க ஆவலைக் கெடுக்கறதுக்கு?”
“அப்ப நான் தமிழ்ப் பத்திரிகைகள்ளே வர்ற விமர்சனத்தையே படிச்சு சஸ்பென்ஸ் இன்னதுங்கறதைத் தெரிஞ்சுக்கறேன். அதுசரி, சினிமாவில வந்தது மாதிரி நிஜ வாழ்க்கையில நடக்குமாடி, கங்கா?”
“அத்தை யருடி கண்டா? நீ எதுக்குடி கேக்கறே இப்படி ஒரு கேள்வி?”
“வேற ஒண்ணுமில்லேடி, கங்கா, எனக்குத் தெரிஞ்ச பெண்ணு ஒண்ணு ஒரு ப்யூனை லவ் பண்ணுது. அது கிளார்க்காய் இருக்குது. போன வாரம் கூட அவங்களை ரொம்ப நெருக்கத்துல ஒரு கோவில்ல பார்த்தேன்...” இப்படி சொல்லி விட்டு அவள் சிரித்த சிரிப்பில் கங்காவும் கலந்து கொண்டாள்.
கங்காவும், சாந்தியும் சேர்ந்து பேசியதும் கேலியாகச் சிரித்ததும் சற்றுத் தொலைவில் உட்கார்ந்து பத்திரிகை ஒன்றில் ஆழ்ந்திருந்த தன் கவனத்தைத் திருப்பிச் சீண்டித் தன்னைப் புண்படுத்துவதற்குத்தான் என்பது துளசிக்கு நன்றாகவே புரிந்தது.
இருந்தாலும், யாரோ யாரைப் பற்றியோ என்னவோ பேசிக் கொண்டிருப்பதிலும் தனக்குத் துளியும் தொடர்பே இல்லாதது போல் அவள் தன் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு பத்திரிகை படிப்பதில் ஆழ்ந்திருந்தது போல் காட்டிக் கொண்டாள்.
கங்காவும், சாந்தியும் நக்கலாகச்  சிரித்துக் கொண்டே ஒரு சேரத் துளசியின் பக்கம் பார்வையைச் செலுத்தினார்கள், இரண்டு ஜோடிக் கண்கள் தன் மேல் ஊர்ந்து கொண்டிருந்ததால் விளைந்த குறுகுறுப்பைத் தாங்க மாட்டாமல் துளசி இலேசாகத் தலையை உயர்த்திய போது இருவரும் சட்டென்று விழிகலை நகர்த்திக் கொண்டு விட்டார்கள்.
துளசி அங்கிருந்து அகன்று தனது இருக்கைக்குத் திரும்பிப் போனாள். முதுகைத் தொடர்ந்த சிரிப்பொலி அவளை அவமானப் படுத்தியது. ஆனால், அவர்கலை ஒன்றும் செய்வதற்கில்லை. பேசுகிற வாய்களுக்குப் பூட்டா போட முடியும்? சீ”
அந்த அலுவலகத்தில் அவள் வேலையில் சேர்ந்ததற்குப் பிறகு தான் தேவமூர்த்தி அதற்கு முன்னால் வேறு ஏதோ அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தவன் இதே அலுவலகத்துக்குப் பியூனாக வேலைக்கு வந்தான். அவனும் எஸ்.எஸ்.எல்.ஸி வரை படித்திருந்தான். ஆனால் அவனது போதாத காலம் பியூன் வேலை தான் கிடைத்தது. தான் வேலை செய்த அலுவலகத்திலேயே வேலைக்கு வந்தது துளசிக்குப் பிடிக்கவில்லை தான். ஆனாலும் என்ன செய்வது? வங்கிகளில் பியூனானாலும் கை நிறையத்தானே சமபளம் தருகிறார்கள்? அதனால் இருவரும் அது பற்றீப் பேசி முடிவு செய்து கொண்டதன் பிறகே அவன் அதே வங்கியில் வேலைக்கு வந்து சேர்ந்தான்.
நாலுபேருக்கு எதிரில் கூடிய வரையில் தங்கள் உறவு தெரியாத படி பழகுவது என்று தான் தீர்மானித்து வைத்திருந்தார்கள்.
யாரோ தொண்டையைக் கணைத்தது மிக அருகில் கேட்டதால், துளசியின் எண்ணங்கள் கலைந்தன. அவள் பத்திரிகையை மேஜை மேல் போட்டு விட்டுப் பக்கவாட்டில் தலையைத் திருப்பி பார்த்த போது உதவி நிர்வாகி ராமாமிர்தம், “ஏன் அதுக்குள்ள வந்துட்டீங்க? லஞ்ச் டைம் அரைமணியாச்சேம்மா? அதைக் கூட எடுத்துக்கறதில்லையா? மத்தவங்கல்லாம் ஒரு மணி நேரம் எடுத்துக்கிறப்போ , நீங்க மட்டும் கால் மணியிலே வந்துட்டீங்களே? அதுலயும் இன்னைக்கு ரொம்ப சீக்கிரம் போனேன், வந்தேன்னு திரும்பிட்டீங்க?” என்றபடி பக்கத்தில் நின்றார். மரியாதைக்காகத் தானும் எழுந்து நின்ற துளசி, “ லேடீஸ் ரூம்ல இரைச்சல் ஜாஸ்தியாயிருந்தது. எனக்கு இன்னிக்கு கொஞ்சம் தலைவலி, சார். அதுதான் சாப்பிட்டதும், சாப்பிடாததுமாய் திரும்பி வந்துட்டேன்...”
“தலை வலின்னா எதுக்குக் கண்ணுக்கு வேலை குடுக்கறீங்க? பேசாம மேசை மேல தலையைக் கவுத்துண்டு கண்ணை மூடிண்டு சின்னதா ஒரு தூக்கம் போடுங்க. இங்க தான் யாருமே இல்லியே?...’ என்று சொல்லி விட்டு ராமாமிர்தம் நகரத் தொடங்கினார். இரண்டு தப்படிகளுக்குப் பிறகு திரும்பி பார்த்து, லஞ்ச் டயத்துல மட்டுமில்லாம மத்த டயத்துலயெல்லாம் இங்கே எல்லாரும் தூங்கறதை நீங்க பார்த்ததில்லையா என்ன? லேடீஸ், ஜெண்ட்ஸ் எல்லோருமே தான்.” என்று சிரித்து விட்டுப் போனார்.
ராமாமிர்தத்தின் சிரிப்பும், கல கலப்பும் அவள் எண்ணங்களைத் தாற்காலிகமாகவே திசை திருப்பின. மறுபடியும் அவள் தேவ மூர்த்தியைப் பற்றி நினைக்கத் தொடங்கினாள்.
அதற்கு முந்தின நாள் இருவரும் சேர்ந்து கோவிலுக்குப் போனது உண்மை தான். சாந்தியின் வீடும் திருவல்லிக்கேணியில் தான் இருந்தது என்பது அவளுக்குச் சுமார் ஒரு வாரத்துக்கு முன்னால் தெரிய வந்திருந்தது. அங்கிருந்த பெண்களில் யாருடனும் அவளுக்கு அவ்வளவாக நெருங்கிய பழக்கம் இன்னும் ஏற்பட்டிருக்கவில்லை. அதற்கு அவர்களில் யாரும் காரணம் இல்லை. அவளே தான் அவர்களில் யாருடனும் பேசாமல் ஒதுங்கி இருக்கிறாள். தேவ மூர்த்தியையும் தன்னையும் பற்றி யாரெனும், ஏதேனும் கேள்விகல் கேட்டு விட்டால் என்ன செய்வது? என்ற அச்சம் தான் அவள் அப்படி மறவர்களிலிருந்து ஒதுங்கி இருந்ததற்கு காரணம். ஆனால், அந்த ஒதுங்கி இருத்தலே அவள் பால் அவர்கள் தோழமையுணர்ச்சி கொள்ளாமற் போனதோடு நில்லாமல் அவள் காதுகளில் விழ வேண்டும் என்பதற்காகவே போல கேலியாகப் பேசுவதற்கும் கூட காரணமாகி விட்டது.
பார்வைகளும், மற்றவர்கள் பக்கத்தில் இல்லாதபோது ரகசியமாக அவர்கள் முணுமுணுப்பாக பரிமாறிக் கொள்ளுகிற சொற்களும் எவ்வலவு தான் ரகசியமாகச் செய்யப்பட்டவையானாலும், எப்போதேனும் யார் கண்ணிலேனும் படத்தான் செய்து விடுகின்றன. அதிலும் யார் கண்ணில் படக்கூடாது என நினைக்கப் படுகிறதோ அவர்கள் கண்ணில். இப்படி நினைத்த போது அவளுக்கு அந்த வேதனையிலும் சிரிப்பு வந்தது. தேவ மூர்த்திக்கு விரைவில் எங்காகிலும் வேறு வங்கியிலோ அல்லது தனியார் துறைத் தொழிற்சாலையிலோ வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றத் தொடங்கிற்று. ஒரே அலுவலகத்தில் இது போன்ற ஆண் பெண்களின் நடுவில் அவஸ்தப் பட்டுக் கொண்டு நாட்கள் எண்ணுவது இயலாது என்று தோன்றிற்று.
தேவ மூர்த்தி மிகுந்த கூச்சத்துடன் தான் அங்கே வேலைக்கு வந்தான். ஆனாலும் வேறு வேலை என்பது அவ்வளவு இலேசில் கிடைத்து விடக் கூடிய ஒன்றா என்ன? இந்த வேலைக்கே எவ்வளவு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி வந்தது? அதிலும், துளசியே தான் அந்த முயற்சிகளை செய்ய வேண்டியது வந்தது.
இனிமேல் தேவமூர்த்தியோடு எங்கேயும் வெளியே போகவே கூடாது என்று நினைத்துக் கொண்டாள். அலுவலகத்தில் தங்களையும் மீறி பேசிக் கொள்ள வேண்டி வருவதும், அதன் விளைவான வம்புகளுமே போதும் என்று பட்டது. அவளுக்கு மிகுந்த மனவேதனை ஏற்பட்டுக் கண்கள் கலங்கும் போலாயின. அடக்கிக் கொண்டு மறுபடியும் பத்திரிகை படிப்பதிலே ஆழ முயன்றாள்.
...மறுநாள் அவள் சற்றூத் தாமதமாகப் பெண்களின் சாப்பாட்டு அறையினுள் நுழைந்த போது தன் பெயர் மிக மெதுவாக உச்சரிக்கப்பட்டது காதில் விழுந்து அவள் அறைக்குள் உடனே புகுந்து விடாமல் வெளியிலேயே சற்றுத் தயங்கி தாமதித்தாள்.
“அவங்க ரெண்டு பேருக்குள்ளவும் ஏதோ விசயம் இருக்குடி. பக்கத்துல யாரும் இல்லைன்னா, குரலைத் தாழ்த்திப் பேசிக்கிறாங்க. இன்னொண்ணு கவனிச்சீங்களா? துளசி மட்டும் தேவமூர்த்தி கிட்ட வேலை வாங்கறதே இல்லே” இப்படிச் சொன்னது கங்கா தான்.
“வருங்காலக் கனவராச்சே? என்ன தான் காதல்னாலும், ஒரே ஆபீஸ்ல இருக்குற ஒரு பியூனை லவ் பண்ணினா இப்படித்தான் தர்ம சங்கடங்கள் நேரும்...” இது சாந்தி.
“ஓகோ, அப்படின்னா கணவரா ஆனதும் எல்லாத்துக்கும் செர்த்து வேலை வாங்கிடுவாங்கறீங்களாடி?’ என்று பாமா சிரித்தாள்.
 தன்னைப் பற்றிய பேச்சு இத்தனை மும்முரமாக நடந்து கொண்டிருக்கையில், உள்ளே போக அவ்ளுக்கு மனசில்லாமல் போயிற்று. அங்கே உட்கார்ந்து சாப்பிடுகிற சாப்பாடு உடம்பில் ஒட்டாது என்று தோன்றியதில் அவள் திரும்பிப் போய்த் தன் இருக்கையிலேயே உட்கார்ந்து சம்புடத்தைத் திறந்தாள். ‘சீ, என்ன அசிங்கம் இது? உண்மையை நிரந்தரமாக மறைக்க முடியுமா? அதற்குள் தேவமூர்த்திக்கு வேறு வேலை கிடைத்தால் தேவலையே?”
...அன்று வீட்டுக்குப் போன துளசி தன் தாயிடம் எல்லாவற்றையும் சொல்லி வருத்தப் பட்டாள்.
“தேவ மூர்த்திக்கு இது தெரிய வேண்டாண்டி. அப்புறம் இந்த வேலையை விட்டுடப் போறான். வேற வேலை கிடைக்கற வரைக்கும் பல்லைக் கடிச்சுக்கோ... அது சரி, இதே பாங்க் கிளார்க் வேலை கிடைக்க எத்தனை நாளாகும்?”
“அதுக்கு ரொம்ப நாளாகும்மா. அதுவரைக்கும் நான் எல்லாருடைய அசிங்கப் பேச்சையும் தாங்கிக்கணுமா?
“கொஞ்சம் பொறுத்துக்கோடி எனக்காக” என்று அவள் அம்மா கெஞ்சினாள்.
...இவளுடைய சங்கடத்தைப் போக்க வந்தாற் போல், தேவ மூர்த்திக்கு மறு வாரமே வேறொரு வங்கியில் வேலை கிடைத்து விட்டது. அவன் ராஜினாமாச் செய்து விட்டுப் புதிய வங்கியில் சேரப் போவதை எல்லாருடமும் சொன்னான்.
அன்றே தேவமூர்த்தியை விடுவித்து விடத் தீர்மானிக்கப்பட்டதால் பிற்பகலில் ஒரு சின்ன விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. உதவி நிர்வாகி ராமாமிர்தம் தாமே முன்னின்று ஏற்பாட்டைக் கவனித்தார்.
அவர் தனியாக இருந்த நேரத்தில் அவரது அறைக்குச் சென்ற துளசி, “சார், தேவ மூர்த்திக்குப் பார்ட்டி நடக்கறச்சே... எங்க உறவைப் பத்தின உண்மையை நீங்களே எல்லாருக்கும் சொல்லிப் பகிரங்கமாக்கிடுங்க, சார்” என்று கேட்டுக் கொண்டாள். தேவ மூர்த்தி நாஙாம் நிலை ஊழியன் என்ற காரணத்தால் விளைந்த சிறூமையில் அவனது விருப்பப்படியே உறவை மறைத்ததால் நாலு பேரின் கேலிகளுக்கும் வம்புப் பேச்சுகளுக்கும் ஆளானதையெல்லாம் அவரிடம் மனம் விட்டுச் சொல்லி வருத்தப் பட்டாள் துளசி.
விருந்து முடிந்ததும் உதவி நிர்வாகி பேச எழுந்தார். தேவமூர்த்தி அங்கே சேர்ந்து மிகச் சில நாட்களேயானாலும் ஒரு நல்ல ஊழியனாக இருந்தான் என்பதைச் சொல்லி முதலில் பாட்டிப் பேசிய ராமாமிர்தம் பிறகு தொண்டையைக் கனைத்துக் கொண்டு கூறினார்.
“...தேவமூர்த்திக்கும் நம்ம கிளார்க் துளசிக்கும் உள்ள உறவு உங்களுக்கெல்லாம் தெரியாதுன்னு நினைக்கிறேன்...” இப்படிச் சொல்லி விட்டு அவர் சில நொடிகளுக்கு நிறுத்தி விட்டு எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தார். கங்காவும், சாந்தியும் கிளிகிளிப்பை அடக்கிக் கொண்டது வெளிப்படையாகத் தெரிந்ததை துளசி பார்த்தாள். இப்போது அவளுக்கும் சிரிப்பு வரும் போலிருந்தது. ஒரு பெரிய் அபாரம் தன் மீதிருந்து இறக்கப்பட்ப் போவதற்கான விடுதலைப் பெருமூச்சுடன் அவள் தனது நாற்காலி முதுகில் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்.
“... என்ன தான் இருந்தாலும் உறவுக்காரப் பையன் மிக நெருங்கிய உறவினன் தான் க்ளார்க்காக இருக்கு அலுவலகத்தில் தனக்கு கீழே பியூனாக வேலை பார்ப்பது எந்தப் பெண்ணுக்கும் சங்கடமான விசயம் தான். அதிலும் அந்தப் பையனுடைய சங்கடம் இன்னும் அதிகமாக இருப்பது மிகவும் இயற்கையான விசயம் தான். அதிலும் அந்தப் பையன் துளசியினுடைய சொந்த அண்ணனாக வேறு இருந்ததால், இருவருக்குமே ரொம்பச் சங்கடம் தான். இல்லையா? இனிமேல் அந்தச் சங்கடம் இருக்காது...”
சாந்தியும், கங்காவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பார்வையில் இருந்தது தப்புக் கணக்குப் போட்ட அவமானமா? வாய்க்கு வந்தபடி பேசிய குற்ற உணர்வா அல்லது அதிர்ச்சியா? என்பதைத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் துளசி ஈடுபட்ட போது அவளைத் தலை உயர்த்திப்  பார்க்கத் தெம்பிலாமல் போய் இருவரும் கண்களைத் தாழ்த்திக் கொண்டு விட்டார்கள்.

Image courtsy: http://arul76.blogspot.in/2006/11/blog-post.html

]]>
சிறுகதை மணி, நாக்குகள் சிறுகதை, ஜோதிர்லதாகிரிஜா, தினமணி கதிர் 20.02.81 http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/1/12/w600X390/painting1.jpg http://www.dinamani.com/specials/sirukathaimani/2017/jan/12/நாக்குகுகள்-2631629.html
2559982 ஸ்பெஷல்ஸ் சிறுகதைமணி குழந்தையின் அழகு! ஆர். சூடாமணி DIN Monday, September 5, 2016 03:02 PM +0530 "எங்க குழந்தை!" தம்மைத் தாண்டி வெளி வந்த சொற்கள் அந்த உதடுகளுக்கு இன்னமும் ஒரு புதிய ஒளி தான். இன்னமும் அதன் மகிழ்ச்சியில் அவை வியப்புற்று நின்றன.
எதிர் முகத்தில் கேள்விக்குறி.
"உங்க....?"
"எங்க குழந்தை."
உதடுகளில் மலரும் புன்னகைப்பூ. நாவில் சுரக்கும் அதன் தேன். ராஜனை அவன் வசமின்றியே இன்பம் சிரிப்பாக ஆக்கிரமித்தது.
எதிரே கல்லான மௌனம்.
சிரிப்பை நிறுத்திக் கொண்டு ராஜன் கேட்டான். " என்ன அப்படித் திகைச்சுப் போயிட்டே வாசு? எங்க குழந்தை தான், அதிலென்ன சந்தேகம்?"
வாசு சுதாரித்துக் கொண்டான். பேச முயன்றான். முடியவில்லை.
"நம்பிக்கை வரவில்லையா வாசு? பேப்பர்ஸ் காட்டட்டுமா?"
"சேச்சே! டோன்ட் பி ஸில்லி.. ரொம்ப சந்தோசம் ராஜா. நல்ல முடிவு தான் பண்ணியிருக்கிங்க ரெண்டு பேரும்."
"பேபி, இந்த மாமாவுக்கு குட் மார்னிங் சொல்லு?"
ராஜனின் அணைப்பிலிருந்த வடிவத்துக்கு இன்னும் ஒரு வயது நிறைந்திருக்காது. உலகம் அதற்கு ஒரு புதுப்பொருள். ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு ஒலியும் அதன் முகத்தில் ஒரு பெரிய கண்டுபிடிப்பாய் விடிந்தது. கண்கள் இடம் இடமாய்த் தாவிக்  கவ்வின. குழந்தைக்குப் பேச்சு இன்னும் வரவில்லை. அவன் காட்டிய திசையைப் பார்த்து சிரித்தது.
“மாமாவுக்கு குட்மார்னிங் சொல்லும்மா, பேபி!”
ராஜன் குழந்தையாகி விட்டான். மழலை பேசிக் கொஞ்சினான். பேபியின் உருவில் தன் பூரிப்பை நோக்கிப் பேசினான். பல்லாண்டுக் கனவுகளின் சாரமான ஒன்று அவன் கரங்களில் சிரித்துக் கொண்டிருந்தது. அந்தக் கனவின் உருவகம் ஒரு தனி நபராய்ப் பரிணமிக்க காலம் செல்லும்.
குழந்தை ஏதேதோ சப்தங்களை எச்சில் தெறிக்கும் களிப்புடன் வெளியிட்டது.
“அட, குட்மார்னிங் சொல்றாளே என் பேபி!” ராஜன் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டான். “எங்கே மாமாவுக்கு ஒரு முத்தம் கொடு பார்க்கலாம்?”
வாசு திடுக்கிட்டு லேசாய் பின்வாங்கினான். நண்பன் நீட்டிய உருவம் தன் மீது உரசி விடுமோ என்று முகம் கூசியது. ராஜன் அவன் நண்பன் தான். அதற்காக? நிஜமாகவே ராஜனின் குழந்தையாயிருந்தால் பிரச்சினையில்லை. வாசு வலியச் சென்று தூக்கிக் கொஞ்சுவான். இதுவோ? ‘எங்க குழந்தை.’ அப்படித்தானா? அவ்வளவு சுலபத்தில் அமைந்து போகிற உறவா இது? ‘ஆம்’ என்று வலியுறுத்தும் நண்பனின் இந்த ஒளிமுகம் தான் எத்தகைய புதிர்!
“வேணாண்டா!... பாவம். சின்னக் குழந்தை. தொந்திரவு பண்ணாதே...”
“இதிலே தொந்திரவு என்ன?”
ஆனால் பேபியே சட்டென்று தலையைச் சாய்த்து ராஜனின் கழுத்தில் புதைந்து கொண்டது.
“அட, என்ன வெக்கம் இதுக்கு, பார்த்தியா! உனக்கு மாமா வேணாமா? அப்பா தான் வேணுமா? அட கண்ணு!” ராஜன் மீண்டும் குழந்தையை அணைத்து முத்தமிட்டான். பிறகு, உக்காரு வாசு” என்றான்.
இருவரும் உட்கார்ந்த போது ராஜனின் மனைவி உள்ளேயிருந்து வந்தாள்.
”சந்திரா நம்ம பேபியை வாசுவுக்கு காட்டிக் கிட்டிருந்தேன்.”
“எங்க பேபி ரொம்ப அழகாயில்லேங்க,” என்றாள் சந்திரா கணவனின் நண்பனிடம். பதிலை அவள் எதிர்பார்த்தாய் தெரியவில்லை. ராஜன் இந்தக் கேள்வியை ஒரு சாங்கியமாய்க் கூடக் கேட்கவில்லை
என்பது வாசுவுக்கு நினைவு வந்தது. தங்களுடைய குழந்தையின் அழகைப் பற்றி இருவருக்குமே சந்தேகமில்லை போலும்.
அவர்களுடைய குழந்தை!
“இருங்க. காப்பி கொண்டு வரேன்” என்று சந்திரா மறுபடியும் உள்ளே போனாள். நண்பர்கள் உரையாடினார்கள். ரஜனின் வாய் யந்திரமாய் பேசியது. ஆனால் கண்கள் பேபிக்கே அர்ப்பணம். கரங்களுக்கு
அந்தப் பூஞ்சதையே ஸ்பர்ச சுகத்தின் எல்லை.
விருந்தோம்பலை முடித்து விட்டுச் சந்திராவும் வந்து உட்கார்ந்து உரையாடலில் கலந்து கொண்டாள்.
“பேபி, அம்மா கிட்ட வரியா?” என்றாள், சிறிது நேரத்தில் குழந்தையை நோக்கிக் கரங்களை நீட்டியவாறு.
பேபி தலை நிமிர்ந்து அவளைப் பார்த்து சிரித்தது. சந்திரா குழந்தையை ராஜனிடமிருந்து வாங்கினாள். அது அவள் உடம்போடு ஒட்டிக் கொண்டது.
“அப்பா அம்மா ரெண்டு பேரையும் நல்லா புரிஞ்சு போச்சு பேபிக்கு!” என்று சந்திரா அதன் அடர்த்தியற்ற செம்பட்டை முடியை மெல்லத் தடவிக் கொடுத்தாள்.
“பின்னெ? பேபிக்குட்டிக்கு டாப் ஃ ப்ளோர் நல்ல கெட்டியில்லே?” ராஜன் உல்லாசமாய்க் குழந்தையின் மோவாயை ஒரு விரலால் தொட்டுக் கிளுகிளுப்பூட்டினான்.
கிளுகிளுத்துச் சிரிகும் குழந்தையை அணைத்துக் கொண்டு சந்திராவும் சிரித்து, “ஆமாம், கெட்டி தான், அம்மா மாதிரி!” என்றாள்.
“ஏன், அப்பா மட்டும் மக்கோ? பார்த்தியா பேபி, அம்மா எப்படி அப்பாவைத் திட்டறாங்கன்னு, அம்மாகிட்ட்டே இருக்காதே, இங்கே வந்துடு!” என்று கரங்களை நீட்டினான் ராஜன்.
சந்திரா பேபியைத் தன்னோடு அழுத்திக் கொண்டு,”ஆசையைப் பார்க்கலே! இத்தனை நேரமா உங்களண்டை தானே வச்சிருந்தீங்க! இப்பதான் நான் வாங்கிக் கிட்டேன், ஏதோ சாக்குச் சொல்லி உடனேதிருப்பி எடுத்துக்கிடனுமா? நீங்களே பாருங்க மிஸ்டர் வாசு. உங ஃப்ரெண்ட் செய்ற அக்கிரமத்தை?” என்றாள் உல்லாசமாக.
வாசு அந்தத் தம்பதியை மாறி மாறிப் பார்த்தான். இரு முகங்களிலும் மென்மையும் பாசமுமான ஒரே பாவனை. நாற்பதாண்டுகள் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்தால்  கணவன் மனைவியரிடயே ஒரே மாதிரி முகபாவம் உருவாகி விடுமென்று சொல்வார்கள். நாற்பதாண்டுகள் வேண்டாம் ஒரு குழந்தை போதும் அந்த ஒற்றுமையை உருவாக்க என்று இப்போது தோன்றியது.
குழந்தை! ”எங்க குழந்தை” என்கிறார்கள். இவள் அம்மாவாம், இவன் அப்பாவாம். பற்பல வைத்தியர்களின் தொழில் முறைத் தீர்ப்பு ஒரு பொருட்டே இல்லை என்பது போல், உடலுக்கு ஒரு கர்ப்பம் அவசியமே இல்லை என்பது போல், எங்கோ விழுந்த ஒரு வித்து ஏதோ ஒரு விடுதியில் ஒதுங்க ‘அது இங்கு தான், அது எமக்குத் தான்’ எனும் அங்கீகாரமே எல்லாமாய் விளங்க முடியும்’ என்பது போல் இவ்விரு முகங்களில் புலனாகும் இந்தச் சாதனை, இந்த மகிழ்ச்சி...
எப்படி முடிகிறது இவர்களால்?
சிறிது நேரம் மூவரும் உரையாடலில் தொடர்ந்து ஈடுபட்டார்கள். அரசியல், சினிமா, இலக்கியம், குடும்பம், ஆபீஸ், சமூக நிலவரம் என்று பல்வேறு பொருட்களைப் பேச்சு தொட்டுச் சென்றது. சந்திராவின் மடியில் பேபி தூங்கி விட்டது. அதைக் கீழே இறக்காமலேயே அவள் பேசிக் கொண்டிருந்தாள்.
“சந்திரா தூங்கற குழந்தையை ஏன் மடியிலேயே வச்சிக்கிட்டிருக்கே? நன் எடுத்துப் போய்  தொட்டில்லே போடறேன். கொண்டா” என்று எழுந்தான் ராஜன்.
சந்திரா கொடுக்கவில்லை. “வேணாங்க, இன்னும் அது அசந்து தூங்கலே. தொட்டா முழிச்சிக்கும்.”
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின், “இப்ப கொண்டா பேபியை” என்றான். அவள் மடியிலிருந்து ராஜன் பேபியை தூக்கிக் கொண்டான். அது சிணுங்காத போதிலும், தட்டிக் கொடுத்தான். உள்ளே எடுத்துப் போய் தொட்டிலில் போடவில்லை... கையில் அணைத்தபடியே அங்கு உட்கார்ந்து சினிமா விமர்சனம் செய்தான்.
“இப்போ இந்தப் பாரதி ராஜா வந்து...”
நேரம் கடந்தது. சினிமாக்கள் அக்கு அக்காகப் பிரித்து அலசப்பட்டன.
“தொட்டிலிலே போடப் போறேன்னு சொல்லி என்கிட்டே இருந்து வாங்கிக்கிட்டீங்களே? போடல்லேன்னா இப்படி மறுபடி என்கிட்டே கொடுங்க. ரொம்ப நேரமா வச்சிருந்தா உங்களுக்கு கை நோகும்” என்றாள் சந்திரா.
“இப்பத்தான் அசந்து தூங்க ஆரம்பிச்சிருக்குது, அசைக்க வேணாம்னு பார்க்கிறேன். கொஞ்ச நேரம் இப்படியே இருக்கட்டும், சந்திரா. உனக்கும் கால் மரத்துப் போகுமில்லே.”
ஒரு மணி நேரத்துக்குப் பிறகு கடைசியில் வாசு வீட்டுக்குக் கிளம்பிய போது கணவனும் மனைவியும் வாசலுக்கு வந்து விடை கொடுத்தார்கள். இப்போது பேபி சந்திராவின் கரத்திலிருந்தது. இன்னும் உறக்கம் முற்றிலும் தெளியாத கண்களைக் கொட்டியது. அந்த வீட்டில் ஒரு தொட்டில் அவசியமே இல்லை என்று வாசு நினைத்துக் கொண்டான்.
“மாமாவுக்கு டாட்டா சொல்லும்மா பேபி!” என்று சந்திரா பேபியின் கையைப் பற்றி அவன் பக்க்மாக அத்ற்கு வலிக்காமல் ஆட்டினாள். ராஜன் பேபியின் கன்னத்தை மிருதுவாய் வருடினான்.
சற்று அழகான குழந்தையாகவாவது தேர்ந்தெடுத்டிருக்கக் கூடதா? ஆனால் இவ்விருவரும் - இந்த அம்மாவும் அப்பாவும்? அதைப் பார்க்கும் போது, அதைத் தீண்டும் போது, அதை நோக்கிப் புன்னகை செய்யும் போது, அது அழகாகி விடுகிறதே! எப்படி?
“னான் வரேன் ராஜா! வரேம்மா.”
பேபிக்கு டாட்டா சொல்ல வேண்டுமோ? “ டாட்டா பேபி!”
வாசு வேகமாய் வெளியே நடந்தான். பஸ் ஏறினான். தன் வீட்டை அடைந்தான்.
உள்ளே நுழையும் போதே அழுகைக்குரல் கேட்டது. “சனியனே, இனிமே கிளாஸைக் கீழே போடுவியாடா?...
“கை நழுவிடுச்சு, வேணுமிண்ணே போடலே...”
“அப்படி நீ சொல்லிட்டா ஆயிடுச்சா? எங்களுக்கு நஷ்டம் நஷ்டம் தானேடா? துக்கிரிச் சனியன், உன்னை உட்கார வச்சுத் தண்டச் சோறு போடறதுக்குப் பலன் இதுவா? இனிமே கிளாஸைக் கீழே போடுவியா? திரும்பவும் போடுவியா?”
“ஐயோ அடிக்காதீங்க அத்தை. இனிமே போட மாட்டேன். ஜாக்கிரதையாயிருக்கேன். அடிக்காதீங்க... ஐயோ நோகுதே. அத்தை அடிக்காதீங்க...”
வாசுவின் சகோதரியின் மகனும்-- தாய் தந்தையை இழந்த அனாதையாய் அவனிடம் வளர்ந்து வருபவனுமான ஏழு வயதுச் சிறுவன் வாசுவின் மனைவியிடம் அடி வாங்கிக் கதறிக் கொண்டிருந்தான். இது போன்ற காட்சிகள் அவ்வீட்டில் புதியதல்ல. வாசுவே கூட எவ்வவளவோ முறைகள் அந்தப் பையனைத் திட்டியும் அடித்தும் இருக்கிறான். ஆனால் இன்று வாசு அக்காட்சியால் இன்னதென்று விளங்காத ஒரு கலக்கம் கொண்டு நின்றான்.
நண்பன் வீட்டு திடீர்க் குழந்தையை அழகாக்குவது எது என்பது அவனுக்கு அக்கணம் புரிகிறார்போல் இருந்தது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/5/w600X390/neww_ph_sooda.jpg http://www.dinamani.com/specials/sirukathaimani/2016/sep/05/குழந்தையின்-அழகு-2559982.html
2559627 ஸ்பெஷல்ஸ் சிறுகதைமணி குழந்தையின் அழகு! - ஆர். சூடாமணி ஆர்.சூடாமணி Saturday, September 3, 2016 09:55 PM +0530 "எங்க குழந்தை!" தம்மைத் தாண்டி வெளி வந்த சொற்கள் அந்த உதடுகளுக்கு இன்னமும் ஒரு புதிய ஒளி தான். இன்னமும் அதன் மகிழ்ச்சியில் அவை வியப்புற்று நின்றன.
எதிர் முகத்தில் கேள்விக்குறி.
"உங்க....?"
"எங்க குழந்தை."
உதடுகளில் மலரும் புன்னகைப்பூ. நாவில் சுரக்கும் அதன் தேன். ராஜனை அவன் வசமின்றியே இன்பம் சிரிப்பாக ஆக்கிரமித்தது.
எதிரே கல்லான மௌனம்.
சிரிப்பை நிறுத்திக் கொண்டு ராஜன் கேட்டான். " என்ன அப்படித் திகைச்சுப் போயிட்டே வாசு? எங்க குழந்தை தான், அதிலென்ன சந்தேகம்?"
வாசு சுதாரித்துக் கொண்டான். பேச முயன்றான். முடியவில்லை.
"நம்பிக்கை வரவில்லையா வாசு? பேப்பர்ஸ் காட்டட்டுமா?"
"சேச்சே! டோன்ட் பி ஸில்லி.. ரொம்ப சந்தோசம் ராஜா. நல்ல முடிவு தான் பண்ணியிருக்கிங்க ரெண்டு பேரும்."
"பேபி, இந்த மாமாவுக்கு குட் மார்னிங் சொல்லு?"
ராஜனின் அணைப்பிலிருந்த வடிவத்துக்கு இன்னும் ஒரு வயது நிறைந்திருக்காது. உலகம் அதற்கு ஒரு புதுப்பொருள். ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு ஒலியும் அதன் முகத்தில் ஒரு பெரிய கண்டுபிடிப்பாய் விடிந்தது. கண்கள் இடம் இடமாய்த் தாவிக்  கவ்வின. குழந்தைக்குப் பேச்சு இன்னும் வரவில்லை. அவன் காட்டிய திசையைப் பார்த்து சிரித்தது.
“மாமாவுக்கு குட்மார்னிங் சொல்லும்மா, பேபி!”
ராஜன் குழந்தையாகி விட்டான். மழலை பேசிக் கொஞ்சினான். பேபியின் உருவில் தன் பூரிப்பை நோக்கிப் பேசினான். பல்லாண்டுக் கனவுகளின் சாரமான ஒன்று அவன் கரங்களில் சிரித்துக் கொண்டிருந்தது. அந்தக் கனவின் உருவகம் ஒரு தனி நபராய்ப் பரிணமிக்க காலம் செல்லும்.
குழந்தை ஏதேதோ சப்தங்களை எச்சில் தெறிக்கும் களிப்புடன் வெளியிட்டது.
“அட, குட்மார்னிங் சொல்றாளே என் பேபி!” ராஜன் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டான். “எங்கே மாமாவுக்கு ஒரு முத்தம் கொடு பார்க்கலாம்?”
வாசு திடுக்கிட்டு லேசாய் பின்வாங்கினான். நண்பன் நீட்டிய உருவம் தன் மீது உரசி விடுமோ என்று முகம் கூசியது. ராஜன் அவன் நண்பன் தான். அதற்காக? நிஜமாகவே ராஜனின் குழந்தையாயிருந்தால் பிரச்சினையில்லை. வாசு வலியச் சென்று தூக்கிக் கொஞ்சுவான். இதுவோ? ‘எங்க குழந்தை.’ அப்படித்தானா? அவ்வளவு சுலபத்தில் அமைந்து போகிற உறவா இது? ‘ஆம்’ என்று வலியுறுத்தும் நண்பனின் இந்த ஒளிமுகம் தான் எத்தகைய புதிர்!
“வேணாண்டா!... பாவம். சின்னக் குழந்தை. தொந்திரவு பண்ணாதே...”
“இதிலே தொந்திரவு என்ன?”
ஆனால் பேபியே சட்டென்று தலையைச் சாய்த்து ராஜனின் கழுத்தில் புதைந்து கொண்டது.
“அட, என்ன வெக்கம் இதுக்கு, பார்த்தியா! உனக்கு மாமா வேணாமா? அப்பா தான் வேணுமா? அட கண்ணு!” ராஜன் மீண்டும் குழந்தையை அணைத்து முத்தமிட்டான். பிறகு, உக்காரு வாசு” என்றான்.
இருவரும் உட்கார்ந்த போது ராஜனின் மனைவி உள்ளேயிருந்து வந்தாள்.
”சந்திரா நம்ம பேபியை வாசுவுக்கு காட்டிக் கிட்டிருந்தேன்.”
“எங்க பேபி ரொம்ப அழகாயில்லேங்க,” என்றாள் சந்திரா கணவனின் நண்பனிடம். பதிலை அவள் எதிர்பார்த்தாய் தெரியவில்லை. ராஜன் இந்தக் கேள்வியை ஒரு சாங்கியமாய்க் கூடக் கேட்கவில்லை
என்பது வாசுவுக்கு நினைவு வந்தது. தங்களுடைய குழந்தையின் அழகைப் பற்றி இருவருக்குமே சந்தேகமில்லை போலும்.
அவர்களுடைய குழந்தை!
“இருங்க. காப்பி கொண்டு வரேன்” என்று சந்திரா மறுபடியும் உள்ளே போனாள். நண்பர்கள் உரையாடினார்கள். ரஜனின் வாய் யந்திரமாய் பேசியது. ஆனால் கண்கள் பேபிக்கே அர்ப்பணம். கரங்களுக்கு
அந்தப் பூஞ்சதையே ஸ்பர்ச சுகத்தின் எல்லை.
விருந்தோம்பலை முடித்து விட்டுச் சந்திராவும் வந்து உட்கார்ந்து உரையாடலில் கலந்து கொண்டாள்.
“பேபி, அம்மா கிட்ட வரியா?” என்றாள், சிறிது நேரத்தில் குழந்தையை நோக்கிக் கரங்களை நீட்டியவாறு.
பேபி தலை நிமிர்ந்து அவளைப் பார்த்து சிரித்தது. சந்திரா குழந்தையை ராஜனிடமிருந்து வாங்கினாள். அது அவள் உடம்போடு ஒட்டிக் கொண்டது.
“அப்பா அம்மா ரெண்டு பேரையும் நல்லா புரிஞ்சு போச்சு பேபிக்கு!” என்று சந்திரா அதன் அடர்த்தியற்ற செம்பட்டை முடியை மெல்லத் தடவிக் கொடுத்தாள்.
“பின்னெ? பேபிக்குட்டிக்கு டாப் ஃ ப்ளோர் நல்ல கெட்டியில்லே?” ராஜன் உல்லாசமாய்க் குழந்தையின் மோவாயை ஒரு விரலால் தொட்டுக் கிளுகிளுப்பூட்டினான்.
கிளுகிளுத்துச் சிரிகும் குழந்தையை அணைத்துக் கொண்டு சந்திராவும் சிரித்து, “ஆமாம், கெட்டி தான், அம்மா மாதிரி!” என்றாள்.
“ஏன், அப்பா மட்டும் மக்கோ? பார்த்தியா பேபி, அம்மா எப்படி அப்பாவைத் திட்டறாங்கன்னு, அம்மாகிட்ட்டே இருக்காதே, இங்கே வந்துடு!” என்று கரங்களை நீட்டினான் ராஜன்.
சந்திரா பேபியைத் தன்னோடு அழுத்திக் கொண்டு,”ஆசையைப் பார்க்கலே! இத்தனை நேரமா உங்களண்டை தானே வச்சிருந்தீங்க! இப்பதான் நான் வாங்கிக் கிட்டேன், ஏதோ சாக்குச் சொல்லி உடனேதிருப்பி எடுத்துக்கிடனுமா? நீங்களே பாருங்க மிஸ்டர் வாசு. உங ஃப்ரெண்ட் செய்ற அக்கிரமத்தை?” என்றாள் உல்லாசமாக.
வாசு அந்தத் தம்பதியை மாறி மாறிப் பார்த்தான். இரு முகங்களிலும் மென்மையும் பாசமுமான ஒரே பாவனை. நாற்பதாண்டுகள் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்தால்  கணவன் மனைவியரிடயே ஒரே மாதிரி முகபாவம் உருவாகி விடுமென்று சொல்வார்கள். நாற்பதாண்டுகள் வேண்டாம் ஒரு குழந்தை போதும் அந்த ஒற்றுமையை உருவாக்க என்று இப்போது தோன்றியது.
குழந்தை! ”எங்க குழந்தை” என்கிறார்கள். இவள் அம்மாவாம், இவன் அப்பாவாம். பற்பல வைத்தியர்களின் தொழில் முறைத் தீர்ப்பு ஒரு பொருட்டே இல்லை என்பது போல், உடலுக்கு ஒரு கர்ப்பம் அவசியமே இல்லை என்பது போல், எங்கோ விழுந்த ஒரு வித்து ஏதோ ஒரு விடுதியில் ஒதுங்க ‘அது இங்கு தான், அது எமக்குத் தான்’ எனும் அங்கீகாரமே எல்லாமாய் விளங்க முடியும்’ என்பது போல் இவ்விரு முகங்களில் புலனாகும் இந்தச் சாதனை, இந்த மகிழ்ச்சி...
எப்படி முடிகிறது இவர்களால்?
சிறிது நேரம் மூவரும் உரையாடலில் தொடர்ந்து ஈடுபட்டார்கள். அரசியல், சினிமா, இலக்கியம், குடும்பம், ஆபீஸ், சமூக நிலவரம் என்று பல்வேறு பொருட்களைப் பேச்சு தொட்டுச் சென்றது. சந்திராவின் மடியில் பேபி தூங்கி விட்டது. அதைக் கீழே இறக்காமலேயே அவள் பேசிக் கொண்டிருந்தாள்.
“சந்திரா தூங்கற குழந்தையை ஏன் மடியிலேயே வச்சிக்கிட்டிருக்கே? நன் எடுத்துப் போய்  தொட்டில்லே போடறேன். கொண்டா” என்று எழுந்தான் ராஜன்.
சந்திரா கொடுக்கவில்லை. “வேணாங்க, இன்னும் அது அசந்து தூங்கலே. தொட்டா முழிச்சிக்கும்.”
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின், “இப்ப கொண்டா பேபியை” என்றான். அவள் மடியிலிருந்து ராஜன் பேபியை தூக்கிக் கொண்டான். அது சிணுங்காத போதிலும், தட்டிக் கொடுத்தான். உள்ளே எடுத்துப் போய் தொட்டிலில் போடவில்லை... கையில் அணைத்தபடியே அங்கு உட்கார்ந்து சினிமா விமர்சனம் செய்தான்.
“இப்போ இந்தப் பாரதி ராஜா வந்து...”
நேரம் கடந்தது. சினிமாக்கள் அக்கு அக்காகப் பிரித்து அலசப்பட்டன.
“தொட்டிலிலே போடப் போறேன்னு சொல்லி என்கிட்டே இருந்து வாங்கிக்கிட்டீங்களே? போடல்லேன்னா இப்படி மறுபடி என்கிட்டே கொடுங்க. ரொம்ப நேரமா வச்சிருந்தா உங்களுக்கு கை நோகும்” என்றாள் சந்திரா.
“இப்பத்தான் அசந்து தூங்க ஆரம்பிச்சிருக்குது, அசைக்க வேணாம்னு பார்க்கிறேன். கொஞ்ச நேரம் இப்படியே இருக்கட்டும், சந்திரா. உனக்கும் கால் மரத்துப் போகுமில்லே.”
ஒரு மணி நேரத்துக்குப் பிறகு கடைசியில் வாசு வீட்டுக்குக் கிளம்பிய போது கணவனும் மனைவியும் வாசலுக்கு வந்து விடை கொடுத்தார்கள். இப்போது பேபி சந்திராவின் கரத்திலிருந்தது. இன்னும் உறக்கம் முற்றிலும் தெளியாத கண்களைக் கொட்டியது. அந்த வீட்டில் ஒரு தொட்டில் அவசியமே இல்லை என்று வாசு நினைத்துக் கொண்டான்.
“மாமாவுக்கு டாட்டா சொல்லும்மா பேபி!” என்று சந்திரா பேபியின் கையைப் பற்றி அவன் பக்க்மாக அத்ற்கு வலிக்காமல் ஆட்டினாள். ராஜன் பேபியின் கன்னத்தை மிருதுவாய் வருடினான்.
சற்று அழகான குழந்தையாகவாவது தேர்ந்தெடுத்டிருக்கக் கூடதா? ஆனால் இவ்விருவரும் - இந்த அம்மாவும் அப்பாவும்? அதைப் பார்க்கும் போது, அதைத் தீண்டும் போது, அதை நோக்கிப் புன்னகை செய்யும் போது, அது அழகாகி விடுகிறதே! எப்படி?
“நான் வரேன் ராஜா! வரேம்மா.”
பேபிக்கு டாட்டா சொல்ல வேண்டுமோ? “ டாட்டா பேபி!”
வாசு வேகமாய் வெளியே நடந்தான். பஸ் ஏறினான். தன் வீட்டை அடைந்தான்.
உள்ளே நுழையும் போதே அழுகைக்குரல் கேட்டது. “சனியனே, இனிமே கிளாஸைக் கீழே போடுவியாடா?...
“கை நழுவிடுச்சு, வேணுமிண்ணே போடலே...”
“அப்படி நீ சொல்லிட்டா ஆயிடுச்சா? எங்களுக்கு நஷ்டம் நஷ்டம் தானேடா? துக்கிரிச் சனியன், உன்னை உட்கார வச்சுத் தண்டச் சோறு போடறதுக்குப் பலன் இதுவா? இனிமே கிளாஸைக் கீழே போடுவியா? திரும்பவும் போடுவியா?”
“ஐயோ அடிக்காதீங்க அத்தை. இனிமே போட மாட்டேன். ஜாக்கிரதையாயிருக்கேன். அடிக்காதீங்க... ஐயோ நோகுதே. அத்தை அடிக்காதீங்க...”
வாசுவின் சகோதரியின் மகனும்-- தாய் தந்தையை இழந்த அனாதையாய் அவனிடம் வளர்ந்து வருபவனுமான ஏழு வயதுச் சிறுவன் வாசுவின் மனைவியிடம் அடி வாங்கிக் கதறிக் கொண்டிருந்தான். இது போன்ற காட்சிகள் அவ்வீட்டில் புதியதல்ல. வாசுவே கூட எவ்வவளவோ முறைகள் அந்தப் பையனைத் திட்டியும் அடித்தும் இருக்கிறான். ஆனால் இன்று வாசு அக்காட்சியால் இன்னதென்று விளங்காத ஒரு கலக்கம் கொண்டு நின்றான்.
நண்பன் வீட்டு திடீர்க் குழந்தையை அழகாக்குவது எது என்பது அவனுக்கு அக்கணம் புரிகிறார்போல் இருந்தது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/9/3/w600X390/neww_ph_sooda.jpg http://www.dinamani.com/specials/sirukathaimani/2016/sep/05/குழந்தையின்-அழகு-2559627.html
2558763 ஸ்பெஷல்ஸ் சிறுகதைமணி கடைசியில் இவ்வளவு தானா? - பிரபு சங்கர் பிரபு சங்கர் Saturday, September 3, 2016 02:52 PM +0530 ராகவன் பரபரத்தான்.

பொன்னம்மா வரும் நேரம்

'இன்று எப்படியாவது அவளிடம் கேட்டு விட வேண்டும்!'

அம்மா கடைக்குப் போய் விட்டார். அப்பா பென்ஷன் வாங்கப் போய் விட்டார். ராகவன் வீட்டுக்குக் காவல். பொன்னம்மா வரும் நேரம்.

’என்ன சுறுசுறுப்புடி அம்மா அவள்!’ அம்மா பொன்னம்மாவை ஓகோ என்று தான் பாராட்டுவாள். ஒருநாள் கூட அவள் அனாவசியமாக வேலைக்கு வராமல் நின்றதில்லை. வேலையிலும் தான் எவ்வளவு கச்சிதம்! பாத்திரங்களைத் தேய்க்கும் போதும் சரி. தேய்ந்த பாத்திரங்களை அலம்பி ஈரம் போகத் துணியில் துடைத்து, கவிழ்த்து வைக்கும் போதும் சரி, கொஞ்சமாவது  சப்தம் கேட்க வேண்டுமே?

பாத்திரங்களும் தான் எவ்வளவு பளபளப்பாக இருக்கும்! துணி துவைப்பதிலும் ஒரு நளினம் உண்டு. என்றுமே 'பட், பட்' டென்று  அடித்துத் துவைக்க மாட்டாள். உடம்பு அழகாக குலுங்க குலுங்க துணிகளைக் கசக்கித் தான் தேய்ப்பாள். வீடு பெருக்கி மெழுகும் பதவிசே தனி. மயிலின் நடனமாக அசைந்து அசைந்து அவள் பெருக்கி வரும் போது, அதை பார்த்து அப்பா ஒரு முறை பெருமூச்சு விட, அம்மா அப்பாவை முறைக்க, இருவரும் ஒருவாரம் வரை பேசிக் கொள்ளாமலிருந்த சம்பவமும் நடந்திருக்கிறது.

கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு, வேலைக்காக அந்தர் பல்டி அடித்து கொண்டிருக்கும் ராகவனுக்கு, பொன்னம்மா மீது சமீப காலமாகத்தான் லயிப்பு விழுந்தது. கச்சிதமாக உடை உடுத்தி, ஒயிலாக நடந்து வரும் அவளிடம் எப்படியாவது அதைக் கேட்டு விட வேண்டும் என்று துடியாய்த் துடிப்பான். சமயம் தான் சரிப்பட்டு வராது.

இப்போது வந்திருக்கிறது.

தெற்குப் பக்கத்து ஜன்னல் வழியாக அம்மாவோ அப்பாவோ வந்து விடுவார்களோ என்ற தவிப்புடன் பார்த்துக் கொண்டான். வடக்குப் பக்க ஜன்னல், அவனது ஆவல் மிகுந்த பார்வையை வெளியே ஓட விட்டது. அப்பாடா! அவனுக்குப் பெருமூச்சு  வந்தது. உடல் பர பரத்தது.

பொன்னம்மா வந்து விட்டாள். அம்மாவும் அப்பாவும், சரியாக பொன்னம்மா வரும் சமயத்தில் வெளியே போய் விடுவார்கள் என்று முந்தின இரவே தெரியும். ராத்திரி முழுதும் தூங்காமல் கற்பனை உரையாடலில் மெய் மறந்திருந்தான். அவளை நெருங்கிப் பேசும் போது எந்த விதத் தயக்கமோ, படபடப்போ இருக்கக் கூடாது என்று தீர்மானித்துக் கொண்டான்.

பேச்சு சரியாக வராமல் தொண்டை வறண்டு விடக் கூடாதே என்று மடக் மடக் என ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தான்.

பொன்னம்மா உள்ளே வந்தாள். வழக்கம் போல ரொம்பவும் சுவாதீனமாகப் பாத்திரங்களை எடுத்து முற்றத்தில் வைத்துக் கொண்டாள். தோய்க்க வேண்டிய துணிகளை சோப்புத் தண்ணீரில் நனைத்தாள். கொட்டாங்கச்சியிலுள்ள சாம்பலை எடுத்துத் தேங்காய் நாருடன் சேர்த்து பாத்திரத்தில் வைத்து...

"பொ.... பொன்னம்மா..."

அவள் நிமிர்ந்தாள். அவளுக்கு அதிசயமாக இருந்தது. எதற்கு இப்படிப் பரக்க பரக்க விழிக்கிறது, இந்தப் பிள்ளை? ராகவன், தனக்கு எதிரில் நிற்கக் கூட வெட்கப் படுவான்.

இன்று தைரியமாக பெயர் சொல்லி அழைத்து... அவன் அடிக்கடி வாசல் பக்கமாகப் பார்த்துக் கொண்டு பேசவும் வராமல் தவிப்பதைக் கண்டு அவளுக்குச் சிரிப்பு வந்து விட்டது.

"என்ன?" என்றாள். அவன் உடலெல்லாம் நடுங்கியது. வியர்த்துக் கொட்டியது அவனுக்கு.

"வந்து  பொன்னம்மா... ஒன்னு கேட்பேன்... வந்து ... அம்மாகிட்ட சொல்ல மாட்டியே..."

பாத்திரம் தேய்க்கும் அசைவில் நழுவி விழுந்த முந்தானையை எடுத்துக் போட்டுக் கொள்ளவும் தோன்றாமல் அவனை அதிசயமாகப் பார்த்தாள் பொன்னம்மாள்.

"வந்து வீட்ல தண்டைச் சோறு தின்னுக்கிட்டு வெட்டியா பொழுது போக்கறதுக்கு ரொம்பவும் சங்கடமா இருக்கு பொன்னம்மா. உன் புருஷன் வாட்ச் மேனா வேலை பார்க்கிற வீட்டுக்காரர் பெரிய கம்பெனி முதலாளின்னு சொல்லுவியே, அவர் கிட்ட சொல்லக் சொல்லி, எனக்கு ஏதாவது வேலை போட்டுக் கொடுக்கச் சொல்லேன்.. வந்து, அம்மா கிட்ட சொல்லாதே. பொன்னம்மா... திட்டுவாங்க"
"அட, இதுக்கா இவ்வளோ யோசனை? ஒரு அப்ளிகேஷன் எயுதி குடு; பார்க்கலாம்" என்றாள் பொன்னம்மாள்.

தினமணி கதிர் - 4/ 7/ 80

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/29/w600X390/sirukadhai_photo.jpg http://www.dinamani.com/specials/sirukathaimani/2016/aug/29/கடைசியில்-இவ்வளவு-தானா-2558763.html
2558276 ஸ்பெஷல்ஸ் சிறுகதைமணி ஆதர்சம் - என்.ஆர். தாசன் என்.ஆர். தாசன்  Saturday, September 3, 2016 02:52 PM +0530 ராஜாராமிற்கு கல்யாண வீட்டிற்குப் போய் வந்த உணர்வைக் காட்டிலும் ஒரு விபத்தைப் பார்த்து வந்த உணர்வு தான் மேலோங்கி நின்றது. கலியாண வீட்டிற்குப் போய் வந்தால் மனதிற்கு எப்பொழுதும் எவ்வளவு சந்தோஷமும், சந்துஷ்டியும் இருக்கும்! சந்தனமும், பன்னீரும், பூக்களும் தனித் தனியாகவும், கலைவையாகவும் மணம் பரப்பி உள்ளே உறங்கிக் கிடைக்கும் நினைவுகளை எல்லாம் உசுப்பி விடும்.
ஒரு கேலிப் பேச்சு, அமுத்தலான சிரிப்பு; ரெட்டை அர்த்தமான வசனம் - அவனை உள்ளுக்குள் தோண்டித் தோண்டிப் பார்க்க வைக்கும். மர்மக் கதைப் புத்தகத்தின் பக்கங்களை புரட்டுகிற அவசரமும், சர சரவென ஓடித் தேய்கிற காட்சிகளைக் கண்ணுக்குள் பிடித்துப் போடத் துடிக்கும் ஒரு ரயில் பிரயாணியின் பதட்டமும் அந்த நினைப்பிற்கு இருக்கும்.
கீறல்களும், வெடிப்புகளும், கரி இழுப்புக்களும் அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையினூடே பரிசுத்தமான, பரிபூரணமான ஒரு காட்சியை அம்புக் குறியிட்டுக் காட்டும். ஒரு மாவிலை, தென்னை ஓலை இப்படி அப்படி லேசாக அசைந்தால் அவனுக்கு இறக்கைகள் கிடைத்தது மாதிரி எங்கெல்லாமோ பறந்து வருவான். குடும்பக் கஷ்டமோ, மனைவியுடனான அர்த்தமற்ற மனஸ்தாபமோ, ஆபீஸ் தொல்லையோ மனதில் ஏற்படுத்தும் கனம் கலியாணத்திற்குப் போய் விட்டுத் திரும்பும் போது மறைந்து போகும்.
கலங்காமல் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும், சண்டையும் மனஸ்தாபமும் வன்மமும் வாழ்க்கையைச் சரியாகப் புரிந்தவனுக்குத் தேவையற்றதென்றும், சண்டையிட்டவர்களிடமெல்லாம் வலியச் சென்று கண்ணீர் கசிய சமாதானம் செய்து கொள்ள வேண்டுமென்றும் ஆன்மீக விழிப்போடும், வெளிச்சத்தோடும் வருவது இன்று ஏன் கை கூடாமல் போய் விட்டது? விபத்தைக் கண்டது போல் துக்கமும், அதிர்ச்சியும் அனுதாபமுமே தோன்றின.
அவன் இன்று 'காஷ்யுவல்  லீவ் எடுத்திருக்கக் கூடாதோ? வழக்கம் போல ஆபீஸில் உள்ளவர்களுக்குத் திருமணம் என்றால் ஒரு மணி நேரம் ' பெர்மிஷன்' எடுத்துக் கொள்வான். அப்படிப் பெர்மிஷன் எடுத்திருந்தால்   இப்பொழுது அவன் ஆபீஸ்  வேலையின் பரபரப்பில் இவற்றையெல்லாம் மறந்திருக்கக் கூடும்.
அந்த மாப்பிள்ளைப் பையனை நினைக்க நினைக்க அவன் மீது இரக்கமாய் இருந்தது. அவளைப்பற்றி அவன் எவ்வளவு நம்பிக்கையுடன் இருப்பான்! அவள் பொத்திப் பொத்திக் காப்பாற்றி வந்துள்ள அந்தரங்க ரகசியங்கள் எல்லாம் தனக்குத் தான் முதல் முதலாக வெளிப்படுத்தப்பட இருப்பதாக அவன் பெருமைப் பட்டுக் கொண்டிருக்கலாம். அவள் மறைத்துப் பாதுகாத்து வந்த பருவப் பொக்கிஷங்களைத் தனது விரல்களே முதலில் ஸ்பரிசிக்கிற பாக்கியம் பெற்றுள்ளதாக அவன் நெஞ்சு விம்மிப் பூரிக்கலாம். அவன் எவ்வளவு அடக்க ஒடுக்கமானவன் என்பது அவன் மணப்பந்தலில் உட்கார்ந்திருந்த தினுஷிலிருந்தே புரிந்து கொள்ள முடிந்தது. யவ்வனத்துக்கான தவறுக்கலியே செய்தறியாததால் ஏற்பட்ட தெளிவையும், பரிசுத்தத்தையும் அவன் முகம் பளிச்சென்று வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. நண்பர்களின் கிண்டலும், கேலியும் அப்போதப்போது அந்தச் சாந்தமான முகத்தில் சத்தமில்லாத கண்ணியமான சிரிப்பைப் பூவாக மலர்த்திக் கொண்டிருந்தது. அந்தக் கேலிப் பேச்சிற்கெல்லாம் தான் எந்தப் பதிலும் சொல்ல உரிமையற்றவன் போல அவன் இருந்தான்.
எல்லாவற்றையும் மனப்பூர்வமாக வாங்கித் தன் பையில் போட்டுக் கொள்ள வேண்டியது. இன்று அவன் ஏற்றுக் கொண்டிருந்த பாத்திரத்துக்கு இயைந்த செயலாக அவனுக்கு இருந்தது, மணப்பந்தலில் உட்கார்ந்தபடியே வருகிறவர்களை எல்லாம் கையெடுத்து கும்பிட்டுக் கொண்டிருந்தான். தாலி காட்டுகிற போது கூட தனது கை அவளது கழுத்திலும், தோள் பட்டையிலும், முதுகிலும் படாமல் மிகுந்த ஜாக்கிரதை உணர்வுடன் நடந்து கொண்டானே!
இப்படிப் பட்டவனுக்கு? ...
'அடப்பாவி....சகதியை அள்ளி முகத்துல பூசிக்கிட்டையாடா...' என்று எத்தனையோ முறை கத்த வேண்டும் போலிருந்தது. மணப்பந்தலில் பித்தளைத் தாம்பாளங்களில் வைக்கப்பட்டிருந்த பழங்கள் சிலவற்றில் பல் பதிவும், சிலவற்றில் எச்சில் ஈரமும், சிலவற்றில் நகக் கிள்ளலும் இருப்பது போல் ராஜாராமின் பார்வையில் பட்டது.
'பட வேண்டியது இவன் பார்வையில் படவில்லையே...?
அவன் பார்வையைத் துல்லியமாகக் கணக்கிட எண்ணி, அவனது முழுத்தோற்றமும் கிடைக்கிற இடமாகப் பார்த்து நகர்ந்து போய் உட்கார்ந்தான். ராஜாராம். அந்தப் பார்வையில் பெருமித உணர்ச்சியே ததும்புவதாக அவனுக்குத் தோன்றியது. பக்கத்து வீடுகளில் விசாரித்திருக்க மாட்டார்களா? வீட்டுப் பெரியவர்கள் தான் செய்யவில்லை. இவனாவது இவளைப் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள முயன்றிருக்க கூடாதா? இவள் வேலை பார்க்கும் ஆபீசில் வந்து விசாரித்தால் ஒவ்வொருத்தனும் அவளை பற்றிச் சொல்லுவதற்கு கட்டுக்கட்டாக, ஃபைல் ஃபைலாக விஷயங்கள் வைத்திருப்பான்!
விசாரிக்க வந்திருந்தால்...
அப்படி விசாரிக்க வந்தவனையே 'சட்' டென்று நிமிர்ந்து நோக்கிக் கண்சிமிட்டாமல் பார்ப்பார்கள். அவளைத் தேடி வரும் பலருள்  இவனும் கூட ஒருவனாக இருக்குமோ என்ற சந்தேகம் வரும். வந்த நோக்கத்தை விளக்கியதும் அட்டகாசமாகச் சிரிப்பார்கள்.
சரி, அவர்கள் இருக்கட்டும். இந்தப் புஷ்பாவிற்கு மட்டும் கலியாண ஆசை அப்படி திடீரென்று ஏன் தோன்றியது?
புஷ்பாவை நேற்று இன்றா தெரியும்? அந்தத் தெரிதலுக்கு பத்து வயதிற்கு மேலாகி இருக்காதா? வேலை பார்த்த ஆபீஸுக்கு 'டென்- ஏ- ஒன்- கான்டிடேட்டாக  வந்து சேர்ந்ததிலிருந்து அவன் அறிவான். டைப்பிஸ்டாகச் சேர்ந்த அவள் பிறகு தான் ஸ்டெனோகிராஃபர்  ஆனாள்.அப்படி புஷ்பாவிடம் குறிப்பிட்டுச் சொல்வதற்கு எதுவும் இருக்கவில்லை. சராசரி தோற்றம் கொண்டவன் தான். கட்டை குட்டையாக இருப்பாள். கறுப்பென்றும், மாநிறம் என்றும் சொல்ல முடியாத மங்கல் நிறம். முகத்தில் சடை சடைத்துக் கிடைக்கும் பருக்களும், அவை உண்டாக்கிய தழும்புகளும் முகத்தை மட்டும் அதிகம் கறுப்பாக்கிக் காட்டும். அந்த முகமும் குவிந்து குதிரையை நினைவூட்டும். ஆனால் வயதிற்கான 'வளர்ச்சிகள்' இருந்தன. கடைசியில் ஒரு ஆணின் பிரத்யட்ச பார்வையின் கணக்கிற்கு உள்ளடங்குபவை - இவை தான்' என்பதை நிரூபணம் செய்வதற்கு அவளிடமே சம்பவங்கள் எண்ணக் கூடிய அளவிற்கு இருந்தனவே.
ஆபீஸிலிருந்த இளவட்டங்கள் எல்லாம் வெறும் பேச்சுடன் நின்று விட்ட போது முதல் முதலாக அவளை வளைத்துப் போடும் சாமர்த்தியம் அந்தக் கிழட்டு வழுக்கைத் தலைவரான அசிஸ்டெண்ட் செக்ரட்டரிக்குத்தான் வாய்த்தது. அவர் ரிட்டையராவதற்கே இன்னும் ஒரு வருஷத்திற்கு குறைவாகத் தான் இருக்கும். அவரது அறைக்கு முன் வைக்கப்பட்டிருந்த மெலிதான பச்சை நிற ஸ்க்ரீன் ஸ்டாண்ட் வழியே ராஜாராம் பார்த்திருக்கிறான். 'டிக்டேஷன்' கொடுக்கும் போது இடை இடையில் யோசிப்பதாக பாவனை காட்டிக் கொண்டு தனது இடது கை உள்ளங்கையில் அவளது வலது கையை எடுத்து வைத்துக் கொண்டு தனது மற்றொரு கையால் செல்லமாகப் பொத்திப் பொத்தித் தட்டிக் கொடுப்பார். மொச மொசவென ரோமம் அடர்ந்து உருண்டு ' கிண்'ணென்று  முன் கையிலிருந்து சதை பூச்சை புஜம் வரை வருடிக் கொண்டிருப்பார். யாருக்கேனும் தன்னைப் பற்றி சந்தேகம் துளிர்க்கக் கூடாது என்பதற்காக சில அசிஸ்டெண்டுகள், சூப்பிரெண்டுகளுக்கு முன்பு கூட  அவளைத் தொட்டு தன் 'கற்புத்தனத்தை' ருசுப்படுத்திக் கொள்ள  முயல்வார். தான் கொடுத்த டிக்டேஷன்களை தவறாக எடுத்து, டைப்பிடித்து வைக்கும் போது இந்த அருமையான சந்தர்ப்பங்கள் அவருக்கு கிட்டும். தலையில் குட்டப் போவது போல் கையை உயர்த்திக் செல்லமாகக் கன்னத்தைக் கிள்ளுவார். அந்த விரல்கள் பலமற்றுப் பூவைப் போல இருக்கும். ஆனல் கண்களிலும், உதடுகளிலும் கொத்தித் தின்னத் துடிக்கும் வேகமும் வெறியும் கொண்ட கொடிய பறவைகளைப் பார்க்க முடியும்.
இந்த துவக்க விழாவிற்குப் பின் இளவட்டங்கள் விழித்துக் கொண்டார்கள்.
எஸ்டாபிளிஷ்மென்ட்' செக்க்ஷனில் இருந்த ஜுனியர் அசிஸ்டன்ட் ராஜாகோபால் புஷ்பாவை அந்தரங்க சுத்தியுடன் காதலித்தான். கடிதம் எழுதிக் கொடுப்பான்.; பீச்சிற்கு கூட்டிப் போவான்; சினிமாவிற்கு அழைத்துப் போவான். அத்துடன் சரி; அதற்கு மேல் ஒரு அங்குலம் மேலெடுத்து வைக்க மாட்டான்.
'இப்படியே கூட்டிக்கிட்டே திரிய்யா...ஏதோ ரெண்டு நா சுத்திக்கிட்டிருந்தோம். சட்டு புட்டுன்னு வேலையே முடிச்சோம்னு இல்லாமே..." என்று ஆபீசில் அவன் நண்பன் கேலி பேசினால், 'சீச்சீ ' என்று ராஜகோபால் முகத்தைச் சுளித்து அசூயையை வெளிக்காட்டுவான்.
"அசிங்கம் அசிங்கமா பேசாதையா" என்று ரொம்பவும் தயவுடன் வேண்டிக் கொள்வான்..
"அடப்பாவி மனுஷா .. சுத்த யூஸ்லஸ் மேனா இருக்கையே, காதலிக்கிறது, கலியாணம் பண்ணிக்கிறது எல்லாம் கடைசியில அந்த அசிங்கம் பண்றதுக்குத் தான்யா..." என்று நண்பன் சொல்வதை நம்ப முடியாமல் திகைத்து நிற்பான்.
எஸ்டாபிளிஷ்மென்ட் செக்க்ஷனில் இருந்த சூப்பிரெண்டுக்கும் அவள் மீது கண் இருந்தது.
ஒரு பொம்பளே கொஞ்சம் ஒரு மாதிரியா இருக்கானு தெரிஞ்சாலே ஒவ்வொருத்தனுக்கும் சபலம் வரவே செய்யுது. ஆத்துல போற தண்ணியே அம்மா குடிச்சா என்ன, ஆத்தா குடிச்சா என்னங்கற மனோபாவமோ? என்று ராஜாராமிற்கு நினைத்துப் பார்க்கத் தோன்றும். இந்த சூப்பிரண்ட், ராஜகோபால் மாதிரி இல்லை; காரியக்காரன். கடிதம் எழுதுவது, சினிமாவுக்கு கூட்டிப் போவது இத்யாதி எல்லாம் ஒரு ஹைஸ்கூல் மாணவனின் காரியங்கள் என்பது அவனது தீர்க்கமான முடிவு.ஃபைல்களை அஸ்திரங்களாகப் பிரயோகிக்கும்  வித்தை அவனுக்கு கைவந்த ஒன்று. முதலில் ராஜகோபாலன் மீது குறி வைத்தான். அவன் எழுதி போடும் ஃபைல்களில்  எல்லாம் விழுந்து குதறினான்.
ஒரு நாள் இரண்டு நாட்கள் தாமதங்களைக் கூட 'நோட்'களில் கருப்பு மையில் லட்டு மாதிரி அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துக் போய், முகாந்திரம் கேட்க வைத்தான். நாட்சாடிஸ் ஃபாக்டரி'  'வார்ன்ட்' என்றெல்லாம் அதிகாரிகள் பச்சை மையிலும், சிவப்பு மையிலும் குதறிப் போடச் செய்திருக்கிறான். அந்த நிர்பந்தம் ராஜகோபாலுக்கும், புஷ்பாவுக்கு இடையில் கத்தரிக் கோலாக இருக்க வேண்டும் என்பது தான் அவன் குறி.
ஆபீஸில் இருக்கும் அத்தனை போரையும் ஏதோ ஒரு வழியில் சுருக்கிட்டு இழுக்கிற சூட்சுமக் கயிறு எஸ்டாபிளிஷ்மென்ட் செக்க்ஷனில் இருக்கும் போது புஷ்பா மட்டும் தப்பி விட முடியுமா? ஒருநாள் தாமதமாக வர மாட்டாளா? முன் அனுமதி பெறாமல் காஷ்யூவல் லீவ் கொடுத்து விட முடியாமல் ஆப்சென்ட்டாக இருக்க மாட்டாளா? அத்தனைக்கும் மெமோக்கள் தரப்பட்டன. அவள் டெம்பரரியாக இருந்ததால், 'ஏன் ஊஸ்ட் செய்யக்கூடாது' என்று கூடக் கேட்கப்பட்டது. அசிஸ்டன்ட் செக்ரட்டரி அப்படி இப்படி என்று அவளுக்குப் பாதுகாப்புத் தர முயன்றார். இவனது பிடிவாதம் அவரைப் பணிய வைத்தது.
ஒரு நிர்பந்தத்திற்கான தர்க்க பூர்வமான விளைவு சம்பவித்தது. புஷ்பா அவனைச் சுற்றிச் சுற்றி வந்தாள். அவன் அவளை வீட்டிற்கே கூட்டிச் சென்றான். இரவு தங்கலுக்கு வசதியான ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்றான். அவன் இதிலெல்லாம் ரொம்பவும் தாராளம். ஸ்கூட்டரில் அவனுடன் பின்னால் உட்கார்ந்து ஒரு ஹோட்டலில் இறங்கியதை பார்த்த அன்று தான் ராஜகோபாலுக்கு விழிப்புத் தட்டியது.
"வேலே பாக்குற பொம்பளைகள்ல நூத்துக்கு  ஒருத்தியாவது யோக்கியமா இருப்பாளான்னு எனக்குச் சந்தேகமா இருக்கு...என்று அதன் பிறகு ராஜகோபாலன் சந்தர்ப்பம் ஏற்படும் போதெல்லாம் பேசிப் பேசித் தன் விரக்தியைக் காட்டிக் கொண்டான்.
புஷ்பா பிறகு சர்வீஸ் கமிஷன் பரீட்சையில் தேர்வு பெற்று சென்னை ஆபீஸ் ஒன்றில் நிரந்தரமாக நியமிக்கப்பட்ட போதும், அவளது நடவடிக்கைகளை அறியும் வாய்ப்பு ராஜாராமிற்கு கிட்டியுள்ளது. அவன் குடியிருந்த தெருவில் தான் அவளும் வாடகைக்கு இருந்தாள்.
அப்படிப் பட்டவளுக்கு இன்று ரகசியமாக இல்லாமல் பகிரங்கமாக பத்திரிகை அடித்து, ஐயர் வைத்து, அம்மி மிதித்து, அவளை பற்றித் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோரும் கூடி....மாப்பிள்ளைப் பையன் மீது இரக்கம் இரக்கமாக வந்தது. அவனைத் தோளோடு சேர்த்துக் கட்டிக் கொண்டு, முதுகில் ஆறுதலாகத் தட்டிக் கொடுத்து கசியும் கண்ணீரை அவனுக்குத் தெரியாமல் அடைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.
மனம் புழுங்கிக் காய்ந்தது, வெக்கை தாங்க முடியாததாக இருந்தது. தடித்த இருள் மேலே அடுக்கிக் கொண்டு தன் முழு பலத்தையும் கொண்டு அழுத்தியது.
ராஜாராம் பல்கலைக் கடித்துக் கொண்டு உடம்பை நெளித்து முறுக்கினான்.
திடீரென அவனுள் கட்டு மெழுகுவர்த்திகள் பற்றிக் கொண்டு எரிவது போல் இருந்தன. வெளிச்சம் நாயைத் துரத்துவது போல் இருளை விரட்டியது.
இப்பொழுது புஷ்பா மாறுபட்ட தோற்றத்தில் இருப்பதாக ராஜாராமின் பார்வையில் பட்டது.
அவளுக்கே தன் பழைய வாழ்வு ஏன் கசந்து வெறுத்துப் போயிருக்கக் கூடாது? பழங்கணக்குகளை அடித்து ஒதுக்கி விட்டு புதுக்கணக்கு துவங்கும் மனமாற்றம் அவளுக்கே ஏன் ஏற்பட்டிருக்கக் கூடாது?
தன் மீதே காறித்துப்பிக் கொண்டு , கண்ணீர் மல்க ஆத்மக் கசிவுடன், அந்தரங்க சுத்தியுடன் வரும் எந்த மாற்றத்தையும் வரவேற்கத் தயங்குவது கொடுமையல்லவா? மாற்றம் நேர்கிற நிமிஷமே,
மதிக்கப்பட வேண்டிய நிமிஷமல்லவா?
அவனை மட்டும் ஏன் ஏமாளியாக நினைக்க வேண்டும்? பழைய கணக்குகள் காலாவதியானவை என்றும், ஜீவநர்த்தனம் புரியும் இந்த வாழ்வுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்றும் கேட்கிற ஆதர்ஷ மனிதனான அவன் ஏன் இருக்கக் கூடாது?
நேரம் நகர்ந்தது.
ராஜாராம் கண்களை இறுக்க மூடிக் கொண்டான். தீபக் கொழுந்தாய் மனம் ஒன்றிக் குவிந்தது.
இதுவரை அவளை பத்தி அவனுக்கு ஒன்னும் தெரியாதது போல இனியும் தெரியாமே இருக்கணும்....தெரிஞ்சாலும் பழைய கணக்கு' ன்னு ஒதுக்கி விட்டுப் போற ஆதர்ஷ மனுஷனா இருக்கனும்...."
இதைத் திரும்பத் திரும்ப நினைத்த போது அது பிரார்த்தனை போல உள்ளுக்குள் சப்தித்தது.
அவனுக்கு இப்பொழுது கோவிலுக்குப் போக வேண்டும் போல் இருந்தது.
காலையிலோ, மாலையிலோ கோவிலுக்குப் போவதை அவன் நியமமாகக் கொண்டவனல்ல.
எப்போதாவது விசேஷக் காரணம் இருக்கும் போது தான் மனம் அப்படி ஆசைப்படும்.
இன்று விசேஷமான காரணம் இருப்பதாக அவனுக்கு உறுதிப் பட்டிருக்கிறது.   
தினமணி கதிர் -       18/7/80

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/25/w600X390/short_story_1.jpg http://www.dinamani.com/specials/sirukathaimani/2016/aug/25/ஆதர்சம்- என்ஆர்-தாசன்-2558276.html