Dinamani - தினந்தோறும் திருப்புகழ் - http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2984038 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 899 ஹரி கிருஷ்ணன் Monday, August 20, 2018 12:55 PM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

மகரம் அது கெட இரு குமிழ் அடைசி வார் ஆர் சரங்கள் என நீளும்

 

மகரம்: மகர மீன்; குமிழ்: குமிழம்பூ—நாசி(க்கு உவமை); அடைசி: அடைசுதல்—நெருங்குதல்;  வார் ஆர்: நீளமான; சரங்கள்: அம்புகள்;

மதர் விழி வலை கொ(ண்)டு உலகினில் மனிதர் வாழ் நாள் அடங்க வருவார் தம்

 

மதர்விழி: மதர்த்த விழி, செருக்குள்ள விழி;

பகர் தரு மொழியில் ம்ருக்மத களப பாடீர கும்பம் மிசை வாவி

 

ம்ருகமத(ம்): கஸ்தூரி; களப பாடீர: பாடீரக் களப—சந்தனக் கலவை (பாடீர(ம்): சந்தனம்; களப(ம்): கலவை; கும்பம்: குடம்—மார்பகம்; வாவி: தாவி, பாய்ந்து;

படி மனது உனது பரிபுர சரண பாதார விந்த(ம்) நினையாதோ

 

படி மனது: படிகின்ற மனது; பரிபுர(ம்): சிலம்பு; பாதாரவிந்தம்: பாத அரவிந்தம்—பாதத் தாமரை;

நகமுக சமுக நிருதரும் மடிய நானா விலங்கல் பொடியாக

 

நக(ம்): மலை; நகமுக சமுக: மலையிடங்களிலே வாழ்கின்ற குடி; நிருதரும்: அரக்கர்களும்; நானா: பலவிதமான; விலங்கல்: மலை;

நதி பதி கதற ஒரு கணை தெரியு(ம்) நாராயணன் தன் மருகோனே

 

நதிபதி: கடல்;

அகல் நக கனக சிவ தலம் முழுதும் ஆராம பந்தி அவை தோறும்

 

அகல்: அகன்ற; நக: மலையான; கனக: கனகனே—செம்பொன் ஆனவனே; ஆராம(ம்): சோலை; பந்தி: வரிசை;

அரி அளி விததி முறை முறை கருதும் ஆரூர் அமர்ந்த பெருமாளே.

 

அரி: அழகிய; அளி: வண்டுகள்; விததி: கூட்டம்;

மகரம் அது கெட இரு குமிழ் அடைசி வார் ஆர் சரங்கள் என நீளும் மதர் இருவிழி வலை கொ(ண்)டு... மகர மீனும் (தன் முன்னே) நிலைகெடும்படியாக; குமிழம்பூவை;ப போன்ற மூக்கின் இரு பகுதிகளையும் நெருக்கிச் சேர்த்து; நீளம் மிகுந்த அம்புகள் எனத்தக்க அம்புளைப் போல நீண்டதும் செருக்குள்ளதுமான கண்களாகிய வலையைக் கொண்டு,

உலகினில் மனிதர் வாழ் நாள் அடங்க வருவார் தம் பகர் தரு மொழியில் ம்ருக்மத களப பாடீர கும்பம் மிசை வாவிப் படி மனது உனது பரிபுர சரண பாதார விந்த(ம்) நினையாதோ... உலகத்திலுள்ள ஆண்களுடைய வாழ்நாள் சுருங்கும்படியாக எதிரிலே வருபவர்களான பெண்கள் பேசுகின்ற பேச்சின் மீதும்; கஸ்தூரியையும் சந்தனக் கலவையும் பூசிய குடம்போன்ற மார்பகங்களின் மீதும் தாவிப் படிகின்ற என்னுடைய மனம், உன்னுடைய சிலம்பணிந்த பாதத் தாமரைகளை நினைக்க மாட்டாதோ? (நினைக்கும்படி அருளவேண்டும்.)

நகமுக சமுக நிருதரும் மடிய நானா விலங்கல் பொடியாக நதி பதி கதற ஒரு கணை தெரியு(ம்) நாராயணன் தன் மருகோனே...மலைகளில் வாழ்பவர்களான அரக்கர்கள் இறக்கும்படியாகவும்; பலவகையான மலைகள் பொடியாகும்படியாகவும்; கடல் கதறும்படியாகவும் ஒப்பில்லாத அம்பை எய்தவனான ராமனுடைய மருகனே!

அகல் நக கனக சிவ தலம் முழுதும் ஆராம பந்தி அவை தோறும் அரி அளி விததி முறை முறை கருதும் ஆரூர் அமர்ந்த பெருமாளே.... அகன்ற மலைகளுக்கு உரியவனே!  செம்பொன் வடிவினனே! சிவதலங்கள் எல்லாவற்றிலும் அமர்ந்தவனே! வரிசையான சோலைகள்தோறும் வண்டுக் கூட்டங்கள் வரிசை வரிசையாக (மலர்த் தேனை) விரும்பி மொய்க்கின்ற திருவாரூரில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

மலை இடங்களில் வாழும் அரக்கர்கள் இறந்துபடும்படியாகவும்; பலவிதமான மலைகள் பொடிபடும்படியாகவும்; கடல் கதறும்படியாகவும்; ஒப்பற்ற அம்பை எய்தவனான ராமனுடைய மருகனே! அகன்ற மலையிடங்களுக்கு உரியவனே! செம்பொன்னின் வடிவினனே! எல்லாச் சிவதலங்களிலும் அமர்ந்திருக்கின்றவனே!  சோலைகளின் வரிசைதோறும் அழகிய வண்டுகளின் கூட்டம் மலர்தேனை எண்ணி மொய்க்கின்ற திருவாரூரில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

மகர மீனும் தன் நிலைகெடும்படியாக நெருக்கிச் சேர்க்கப்பட்ட இரு குமிழ மலர்களைப் போன்ற மூக்கும்; நீண்ட அம்புகளுக்கு இணையான கண்கள் என்னும் வலையை வீசுகின்ற பெண்களுடைய பேச்சிலும்; கஸ்தூரியையும் சந்தனக் கலவையையும் பூசிய மார்பகங்களிலும் சென்று சென்று படிகின்ற என் மனம், சிலம்புகளை அணிந்த உன் பாதத் தாமரைகளை நினைக்க மாட்டாவோ? (நினைக்கும்படியாக அருள வேண்டும்.)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/20/பகுதி---899-2984038.html
2983023 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 898 ஹரி கிருஷ்ணன் Sunday, August 19, 2018 12:00 AM +0530

 

‘உனது திருவடிகளை நினைக்கவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவாரூருக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 23 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; ஐந்தாம் சீரில் இரண்டு நெடில், ஒரு குறில் என மூனறெழுத்துகளும்; ஆறாம் சீரில் இரண்டு குறில், ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்று என இரண்டெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனதன தனன தனதன தனன

      தானான தந்த                       தனதான

 

மகரம துகெட இருகுமி ழடைசி

         வாரார்ச ரங்க                    ளெனநீளும்

      மதர்விழி வலைகொ டுலகினில் மனிதர்

         வாணாள டங்க                  வருவார்தம்

பகர்தரு மொழியில் ம்ருகமத களப

         பாடீர கும்ப                      மிசைவாவிப்

      படிமன துனது பரிபுர சரண

         பாதார விந்த                     நினையாதோ

நகமுக சமுக நிருதரு மடிய

         நானாவி லங்கல்                 பொடியாக

      நதிபதி கதற வொருகணை தெரியு

         நாராய ணன்றன்                 மருகோனே

அகனக கனக சிவதல முழுது

         மாராம பந்தி                     யவைதோறும்

      அரியளி விததி முறைமுறை கருது

         மாரூர மர்ந்த                    பெருமாளே.

 

 
 
 
 
]]>
http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/19/பகுதி---898-2983023.html
2982344 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 897 ஹரி கிருஷ்ணன் DIN Saturday, August 18, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

கூர்வாய் நாராய் வாராய் போனார் கூடாரோ சற்று அல ஆவி

 

போனார்: பிரிந்து போனவர்; கூடாரோ: திரும்பவந்து சேராரோ;

கோது ஆனேன் மாதா மாறு ஆனாள் கோளே கேள் மற்று இள வாடை

 

கோது ஆனேன்: சக்கையாகப் போனேன்; கோளே கேள்: சுற்றத்தார் கோள் மூட்டுகிறார்கள் (கேள்: சுற்றத்தார்); இளவாடை: தென்றல்;

ஈர் வாள் போலே மேலே வீசா ஏறா வேறிட்டு அது தீயின்

 

ஈர்வாள் போலே: அறுக்கின்ற வாளைப் போலே;

ஈயா வாழ்வோர் பேரே பாடா ஈடு ஏறாரில் கெடலாமோ

 

 

சூர் வாழாதே மாறாதே வாழ் சூழ் வானோர்கட்கு அருள் கூரும்

 

 

தோலா வேலா வீறு ஆரூர் வாழ் சோதீ பாகத்து உமை ஊடே

 

தோலா: தோற்காத; வீறு: மேம்பட்ட;

சேர்வாய் நீதி வானோர் வீரா சேரார் ஊரை சுடுவார் தம்

 

நீதீ: நீதி—நீட்டல் விகாரம்; சேரார்: பகைவர்களுடைய; ஊரை: திரிபுரங்களை;

சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே.

 

 

கூர்வாய் நாராய் வாராய் போனார் கூடாரே(ரோ)... கூர்மையான அலகை உடைய நாரையே! இங்கே வா! என்னைவிட்டுப் பிரிந்தவர் மீண்டும் வந்து என்னைச் சேர மாட்டாரா?

சற்று அல ஆவி கோது ஆனேன் மாதா மாறு ஆனாள்... கொஞ்சமாக இல்லை.  என்னுடைய உயிர் சக்கையாகவே போய்விட்டது.  என் தாயோ என்னோடு பகைகொண்டவளாக ஆனாள்.

கோளே கேள் மற்று இள வாடை ஈர் வாள் போலே மேலே வீசா... என்னுடைய உறவினர்கள் கோள்மூட்டுவதிலேயே ஈடுபட்டிருக்கிறார்கள்.  தென்றலோ அறுக்கின்ற வாளைப் போல என் மீது வீசி,

ஏறா வேறிட்டு அது தீயின்... எரிகின்ற நெருப்பைப் போல உடலைத் தீய்க்கிறது.

ஈயா வாழ்வோர் பேரே பாடா ஈடு ஏறாரில் கெடலாமோ... யாருக்கும் கொடுக்காமல் வாழ்கின்றவர்களுடைய புகழைப் பாடி ஈடேறாமல் தவிப்பர்களைப் போல நானும் தவிக்கலாமோ?

சூர் வாழாதே மாறாதே வாழ் சூழ் வானோர்கட்கு அருள் கூரும் தோலா வேலா... சூரன் வாழாதபடிக்குத் தங்களுடைய சுகவாழ்வைத் தேடுகின்ற தேவர்களுக்கு அருள்பாலிக்கின்றவனே!  தோல்வி அறியாத வேலா!

வீறு ஆரூர் வாழ் சோதீ பாகத்து உமை ஊடே சேர்வாய்... மேம்பட்டதான திருவாரூரில் வீற்றிருக்கின்ற சோதிமயமான சிவபெருமானுக்கும் அவருக்கு இடதுபாகத்தில் அமர்ந்துள்ள உமாதேவிக்கும் இடையே (சோமாஸ்கந்த மூர்த்தியாக) விளங்குபவனே!

நீதி வானோர் வீரா... நீதி நிறைந்தவனே! தேவர்களுடைய சேனைக்குத் தலைமை தாங்குகின்ற வீரனே!

சேரார் ஊரை சுடுவார் தம் சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் பெருமாளே... பகைவர்களுடைய ஊராகிய திரிபுரங்களை எரித்தவரான சிவபிரானுடைய மகனே! வேளே! பொலிவுள்ளவனே! தேவனே! தேவர்கள் பெருமாளே!

சுருக்க உரை

சூரன் வாழாதபடி தேவர்களுடைய நல்வாழ்வைப் பாதுகாத்து, தோல்வியே கண்டறியாத வேலனே! திருவாரூரில் சோதி வடிவாக விளங்குகின்ற சிவபெருமானுக்கும் அவருடைய இடதுபாகத்தில் உள்ள உமைக்கும் இடையில் சோமாஸ்கந்த மூர்த்தியாக விளங்குபவனே!  நீதிமானே!  பகைவர்களின் ஊரான திரிபுரங்களை எரித்த சிவபிரானின் மகனே! வேளே!  பொலிவுள்ளவனே!  தேவனே! தேவர்கள் பெருமாளே!

கூரிய அலகை உடைய நாரையே இங்கே வா.  என்னைவிட்டுப் பிரிந்து சென்றவர் திரும்பிவந்து என்னைச் சேர மாட்டாரோ.  என் உயிரோ சக்கையாகிவிட்டது.  தாயும் பகைமை பூண்டிருக்கிறாள்.  உறவினர்களோ கோள்மூட்டுகிறார்கள்; தென்றலோ என் மீது பட்டுத் தீயைப் போலச் சுடுகிறது.  அடுத்தவர்களுக்குக் கொடுக்காமல் வாழ்கின்றவர்களுடைய புகழைப் பாடி ஈடேறாது தவிப்பர்களைப் போல நானும் தவிக்கலாமோ?  (நான் தவிக்காதபடி என்னைக் காக்கவேண்டும் என்று அந்த வேலனிடம் நீபோய்ச் சொல்லவேண்டும்.)

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/18/பகுதி---897-2982344.html
2982334 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 896 ஹரி கிருஷ்ணன் Friday, August 17, 2018 10:55 AM +0530  

‘அவன் என்னையாட்கொள்ள மாட்டானா’ என்று நாரையை விளித்துக் கேட்பதைப் போன்று அமைந்திருக்கும் இந்தப் பாடல் நாயக-நாயகி பாவத்தில் அமைந்தது; திருவாரூருக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 16 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்றுமுதல் ஐந்து வரையிலான எல்லாச் சீர்களிலும் இரண்டு நெட்டெழுதுகளும்; ஆறாவது சீரில் ஒரு நெடில், ஒரு குறில் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என இரண்டெழுத்துகளும் அமைந்துள்ன.

தானா தானா தானா தானா

      தானா தானத்                       தனதான

 

கூர்வாய் நாராய் வாராய் போனார்

         கூடா ரேசற்                      றலஆவி

      கோதா னேன்மா தாமா றானாள்

         கோளே கேழ்மற்                 றிளவாடை

ஈர்வாள் போலே மேலே வீசா

         ஏறா வேறிட்                     டதுதீயின்

      ஈயா வாழ்வோர் பேரே பாடா

         ஈடே றாரிற்                      கெடலாமோ

சூர்வா ழாதே மாறா தேவாழ்

         சூழ்வா னோர்கட்                 கருள்கூருந்

      தோலா வேலா வீறா ரூர்வாழ்

         சோதீ பாகத்                      துமையூடே

சேர்வாய் நீதீ வானோர் வீரா

         சேரா ரூரைச்                    சுடுவார்தஞ்

      சேயே வேளே பூவே கோவே

         தேவே தேவப்                    பெருமாளே.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/17/பகுதி---896-2982334.html
2980524 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 895 ஹரி கிருஷ்ணன் Thursday, August 16, 2018 05:09 PM +0530

 

பதச் சேதம்

சொற் பொருள்

புரை படும் செற்ற குற்ற மனத்தன் தவம் இலன் சுத்த சத்ய அசத்யன் புகல் இலன் சுற்ற செத்தையுள் நிற்கும் துரிசாளன்

 

புரைபடும்: குற்றத்தை உடைய; செற்ற(ம்): கோபம்; சுத்த: கலப்பற்ற; சத்ய: மெய்யாக; அசத்யன்: பொய்யன்; சுற்ற: சுற்றுகின்ற, சுழல்கின்ற; செத்தையுள்: குப்பையைப் போல; துரிசாளன்: துக்கத்தை உடையவன்;

பொறை இலன் கொத்து தத்வ விகற்பம் சகலமும் பற்றி பற்று அற நிற்கும் பொருளுடன் பற்று சற்றும் இல் வெற்றன் கொடியேன் நின்

 

பொறை இலன்: பொறுமை இல்லாதவன்; கொத்து: பலதரப்பட்ட; வெற்றன்: பயனற்றவன்;

கரை அறும் சித்ர சொல் புகழ் கற்கும் கலை இலன் கட்டை புத்தியன் மட்டன் கதி இலன் செச்சை பொன் புய வெற்பும் கதிர் வேலும்

 

கட்டைப் புத்தியன்: மழுங்கிய அறிவைக் கொண்டவன்; மட்டன்: மட்டமானவன்—மூடன்; செச்சை: வெட்சி மாலை;

கதிரையும் சக்ர பொற்றையும் மற்றும் பதிகளும் பொற்பு கச்சியும் முற்றும் கனவிலும் சித்தத்தில் கருதி கொண்டு அடைவேனோ

 

கதிரையும்: கதிர்காமத் தலத்தையும்; சக்ரப் பொற்றையும்: வட்ட மலையையும் (இது கோவைக்கு அருகிலுள்ளது); பதிகளும்: தலங்களும்; கச்சியும்: காஞ்சியையும்;

குரை தரும் சுற்றும் சத்த சமுத்ரம் கதறி வெந்து உட்க் கண் புர(ம்) துட்டன் குலம் அடங்க கெட்டு ஒழிய சென்று ஒரு நேமி

 

குரைதரும்: ஒலிக்கின்றதும்; சுற்றும்: சுற்றியுள்ளதும்; சத்த சமுத்ரம்: சப்த சமுத்திரம்—ஏழு கடல்; நேமி: அடுத்த அடியில் காண்க;

குவடு ஒதுங்க சொர்க்கத்தர் இடுக்கம் கெட நடுங்க திக்கில் கிரி வர்க்கம் குலிச துங்க கை கொற்றவன் நத்தம் குடி ஏற

 

நேமிக் குவடு: சக்கரவாளகிரி (நேமி: சக்கர); இடுக்கம்: துன்பம்; நடுங்கத் திக்கில் கிரிவர்க்கம்—திக்குகளில் உள்ள மலைகள் நடுக்கம் எய்த; குலிச: குலிசாயுதத்தை (வஜ்ராயுதத்தை); துங்க: தூய; நத்தம்: ஊர் (தன் ஊரில், தேவலோகத்தில்);  

தரை விசும்பை சிட்டித்த இருக்கன் சதுர் முகன் சிட்சை பட்டு ஒழிய சந்ததம் வந்திக்க பெற்றவர் தத்தம் பகை ஓட

 

சிட்டித்த: சிருஷ்டித்த, படைத்த; இருக்கன்: ரிக் வேதத்தை ஓதுபவன்—பிரமன்; சிட்சைபட்டு: தண்டிக்கப்ப்பட்டு; சந்ததம்: எப்போதும்; வந்திக்கப்பெற்றவர்: வணங்கப்படுபவர்கள்;

தகைய தண்டை பொன் சித்ர விசித்ர தரு சதங்கை கொத்து ஒத்து முழக்கும் சரண கஞ்சத்தில் பொன் கழல் கட்டும் பெருமாளே.

 

தகைய: அழகிய; சரண கஞ்சத்தில்: திருவடித் தாமரையில் (கஞ்சம்: தாமரை);

புரைபடுஞ் செற்றக் குற்றமனத்தன் தவமிலன் சுத்தச் சத்யஅ சத்யன் புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்குந் துரிசாளன்... தீராத கோபம் முதலான குற்றங்கள் அனைத்தையும் கொண்டிருக்கும் கறைபடிந்த மனத்தை உடையவன்; தவம் அற்றவன்; கலப்பற்ற பொய்யையே பேசுபவன்; கதியற்றவன்; காற்றில் சுழல்கின்ற குப்பையைப் போன்றவன்; துக்கத்தை உடையவன்;

பொறையிலன் கொத்துத் தத்வ விகற்பஞ் சகலமும் பற்றி பற்றற நிற்கும் பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன்...பொறுமையற்றவன்; மாறுபட்டிருக்கின்ற பலவிதமான உண்மைகளைப் பற்றிக்கொண்டவன்; பற்றில்லாமல் நிற்கின்ற மெய்ப்பொருளின்மீது பற்று வைக்காதவன்; பயனற்றவன்;

கொடியேன் நின் கரையறுஞ் சித்ரச் சொற்புகழ் கற்குங் கலையிலன் கட்டைப் புத்தியன் மட்டன் கதியிலன் செச்சைப் பொற்புய வெற்புங் கதிர்வேலும்...கொடியவன்; உன்னுடைய எல்லையில்லாத அழகிய புகழைக் கற்கும் ஞானமற்றவன்; மழுங்கிய அறிவைக் கொண்டவன்; மட்டமானவன்; நற்கதியை அடைகின்ற பேறில்லாதவன்; வெட்சிமலரைச் சூடிய மலைபோன்ற தோள்களையும் ஒளிவீசுகின்ற வேலாயுதத்தையும்,

கதிரையுஞ் சக்ரப் பொற்றையு மற்றும் பதிகளும் பொற்புக் கச்சியு முற்றும் கனவிலும் சித்தத்தில் கருதிக்கொண்டு அடைவேனோ...கதிர்காமத்தையும், வட்டமலையையும்* மற்ற திருத்தலங்களையும், அழகான காஞ்சீபுரத்தையும் எப்போதும் கனவிலும் நனவிலும் தியானித்து உன்னை அடையப் பெறுவேனா? (அடையும்படி அருள்புரிய வேண்டும்.)

(* வட்டமலை: கோவைக்கு அருகிலுள்ள தலம்.)

குரைதருஞ் சுற்றுச் சத்தச முத்ரங் கதறிவெந்து உட்க கட்புர துட்டன் குலமடங்கக்கெட்டு ஒட்டொழிய... இரைச்சலிடுகின்ற ஏழு சமுத்திரங்களும் கதறி, வற்றிப் போக; வீரமகேந்திரபுரியை ஆண்ட துஷ்டனான சூரன் தன் குலத்தோடு முற்றவும் அழியவம்;

சென்று ஒருநேமிக் குவடு ஒதுங்க சொர்க்கத்தர் இடுக்கங் கெட நடுங்கத் திக்கிற் கிரி வர்க்கம் குலிச துங்கக்கைக் கொற்றவன் நத்தங் குடியேற... ஒப்பற்ற சக்ரவாளகிரி தன் இடத்தைவிட்டுப் பெயரவும்; தேவர்கள் தங்களுடைய துன்பம் நீங்கப் பெறவும்; எட்டுத் திக்குகளிளும் உள்ள மலைகளின் கூட்டங்கள் எல்லாம் நடுங்கவும்; வஜ்ராயுதத்தைத் தன் தூய கரத்தில் ஏந்தியிருக்கின்ற இந்திரன் தன்னுடைய ஊரான பொன்னகரத்திலே மீண்டும் குடியேறவும்;

தரைவிசும்பைச் சிட்டித்த இருக்கன் சதுர்முகன் சிட்சைப் பட்டொழிய சந்ததமும் வந்திக்கப் பெற்றவர் தத்தம் பகையோட... பூமியையும் ஆகாயத்தையும் படைத்தவனும், ரிக் வேதத்தில் வல்லவனுமான நான்முகப் பிரமன் தண்டனைபெற்று (குட்டப்பட்டு) விலகவும்; எப்போதும் வணங்கப் பெறுபவர்களான தேவர்களுடைய பகைவர்கள் (அசுரர்கள்) ஓட்டம்பிடிக்கவும்;

தகைய தண்டைப்பொற் சித்ரவி சித்ரந் தருசதங்கைக் கொத்து ஒத்துமு ழக்குஞ் சரண கஞ்சத்தில் பொற்கழல் கட்டும் பெருமாளே... அழகிய தண்டையும் பொன்னாலான சதங்கைக் கொத்துகளும் ஒலிக்கின்ற பாதத் தாமரைகளில் வீரக் கழலைக் கட்டிக்கொண்ட பெருமாளே!

சுருக்க உரை

ஒலிக்கின்றதும் உலகைச் சூழ்ந்திருப்பதுமான ஏழு கடலும் கதறி வற்றிப் போகும்படியும்; பெருமையுள்ள வீர மகேந்திரபுரத்திலிருந்த துஷ்டனான சூரபதுமன் தன்னுடைய குலம் முழுவதும் அழிபட்டு ஓடும்படியும்; சக்ரவாளகிரி தன்னுடைய இடத்தைவிட்டு ஒதுங்கும்படியும்; தேவர்களுடைய துன்பம் தொலையும்படியும்; திக்கிலுள்ள மலைக்கூட்டங்களெல்லாம் நடுங்கும்படியும்; குலிசாயுதத்தை ஏந்திய இந்திரன் தன்னுடைய அமராவதிக்குத் திரும்பும்படியும்; மண்ணையும் விண்ணையும் படைத்த நான்முகப் பிரமன் குட்டுப்பட்டு விலகும்படியும்; எப்போதும் வணங்கப்படுகின்ற தேவர்களுடைய பகைவர்களான அசுரர்கள் ஓட்டம்பிடிக்கும்படியும்,

தண்டையும் பொற்சதங்கையும் திகழ்கின்ற திருவடித் தாமரையில் வீரக்கழலைக் கட்டிய பெருமாளே!

தணியாத கோபம் முதலான குற்றங்களைச் சுமந்திருக்கும் மனத்தை உடையவனும்; தவம் இல்லாதவனும்; பொய்யனும்; கதியற்றவனும்; துக்கம் நிறைந்தவனும்; பொறுமையற்றவனும்; வேறுபடுகின்ற பலவிதமான உண்மைகளின் மீது பற்று வைத்தவனும்; தெய்வத்தின் மீது பற்று வைப்பதற்கான ஞானமற்றவனும்; மழுங்கிய அறிவை உடையவனும்; மூடனுமான நான் வெட்சிமாலையை அணிந்த அழகிய புய மலைகளையும்; ஒளிவீசும் வேலாயுதத்தையும்; கதிர்காமத் தலத்தையும்; வட்டமலையையும்; மற்றுமுள்ள தலங்களையும்; அழகிய கச்சிப் பதியையும் எப்போதும் என்னுடைய உள்ளத்தில் தியானித்துக்கொண்டு உன்னை அடையும் பேற்றைப் பெறவேண்டும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/24/w600X390/.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/16/பகு--895-2980524.html
2980523 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 894 ஹரி கிருஷ்ணன் Wednesday, August 15, 2018 12:00 AM +0530  

‘உன்னைக் கனவிலும் நனவிலும் நினைத்திருக்க வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் காஞ்சீபுரத்துக்குரியது.

அடிக்கு ஒற்றொழித்து 37 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்கள் நான்கு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றுமாக நான்கெழுத்துகளையும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்கள் இரண்டு குற்றெழுத்துகள், இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகள் என இரண்டெழுத்துகளையும்; மூன்று, ஏழு, பதினொன்று ஆகிய சீர்கள் மூன்று குற்றெழுத்துகளையும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றையும்; நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்கள் இரண்டு குற்றெழுத்துகளையும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றையும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றையும் கொண்டுள்ளன.

தனதனந் தத்தத் தத்தன தத்தந்

      தனதனந் தத்தத் தத்தன தத்தந்

      தனதனந் தத்தத் தத்தன தத்தந்                  தனதான

 

புரைபடுஞ் செற்றைக் குற்றம னத்தன்

         தவமிலன் சுத்தச் சத்யஅ சத்யன்

         புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்குந்         துரிசாளன்

      பொறையிலன் கொத்துத் தத்வவி கற்பஞ்

         சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்

         பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன்      கொடியேனின்

கரையறுஞ் சித்ரச் சொற்புகழ் கற்குங்

         கலையிலன் கட்டைப் புத்தியன் மட்டன்

         கதியிலன் செச்சைப் பொற்புய வெற்புங்       கதிர்வேலுங்

      கதிரையுஞ் சக்ரப் பொற்றையு மற்றும்

         படிகளும் பொற்புக் கச்சியு முற்றுங்

         கனவிலுஞ் சித்தத் திற்கரு திக்கொண்         டடைவேனோ

குரைதருஞ் சுற்றுச் சத்தச முத்ரங்

         கதறிவெந் துட்கக் கட்புர துட்டன்

         குலமடங் கக்கெட் டொட்டொழி யச்சென்      றொருநேமிக்

      குவடொதுங் கச்சொர்க் கத்தரி டுக்கங்

         கெடநடுங் கத்திக் கிற்கிரி வர்க்கங்

         குலிசதுங் கக்கைக் கொற்றவ னத்தங்         குடியேறத்

தரைவிசும் பைச்சிட் டித்தஇ ருக்கன்

         சதுர்முகன் சிட்சைப் பட்டொழி யச்சந்

         ததமும்வந் திக்கப் பெற்றவர் தத்தம்          பகையோடத்

      தகையதண் டைப்பொற் சித்ரவி சித்ரந்

         தருசதங் கைக்கொத் தொத்துமு ழக்குஞ்

         சரணகஞ் சத்திற் பொற்கழல் கட்டும்          பெருமாளே.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/15/பகுதி---894-2980523.html
2980489 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 893 ஹரி கிருஷ்ணன் Tuesday, August 14, 2018 12:49 PM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

கமரி மலர் குழல் சரிய புளகித கனக தன கிரி அசைய பொரு விழி கணைகள் என நுதல் புரள துகிலதை நெகிழ் மாதர்

 

கமரி: கமம் அரி—கமம்: நிறைய, நிறைந்திருக்கும், அரி: வண்டு;

கரிய மணி புரள அரிய கதிர் ஒளி பரவ இணை குழை அசைய நகை கதிர் கனக வளை கல நடைகள் பழகிகள் மயில் போல

 

 

திமிரு மத புழுகு ஒழுக தெரிவினில் அலைய விலை முலை தெரிய மயல் கொடு திலத மணிமுக அழகு சுழலிகள் இதழ் ஊறல்

 

புழுகு: புனுகு;

திரையில் அமுதென கழைகள் பல சுளை எனவும் அவர் தழுவும் அசடனை திருகு புலை கொலை கலிகள் சிதறிட அருள்தாராய்

 

பல சுளை: பலாச் சுளை;

குமர குருபர..........குமர குருபர என தாளம்

 

 

குரை செய் முரசமொடு அரிய விருது ஒலி டமடடம......என குமுற திமிலை சலரி கி(ன்)னரி முதல் இவை பாட 

 

சலரி: சல்லரி—பறைவகை; கினரி: கின்னரி—யாழ் வகை;

அமரர் முநிவரும் அயனும் அனைவரும் மதுகை மலர் கொடு தொழுது பதம் உற அசுரர் பரி கரி இரதமும் உடைபட விடும் வேலா

 

அயனும்: பிரமனும்; பரி: குதிரை; கரி: யானை;

அகில புவனமொடு அடைய ஒளி பெற அழகு சரண் மயில் புறம் அது அருளி ஒர் அருண கிரி குற மகளை மருவிய பெருமாளே.

 

 

கம அரி மலர் குழல் சரிய புளகித கனக தன கிரி அசைய பொரு விழி கணைகள் என நுதல் புரள துகில் அதை நெகிழ் மாதர்...வண்டுகள் நிறைந்து மொய்க்கின்ற கூந்தல் அவிழ்ந்து சரிய; புளகிதம் கொண்டதும், பொன் மலையைப் போன்றதுமான மார்பு அசைய; போரிடுகின்ற விழிகள் அம்பாக மாற; நெற்றி புரள; ஆடையை நெகிழ்த்துகின்ற பெண்களின்,

கரிய மணி புரள அரிய கதிர் ஒளி பரவ இணை குழை அசைய நகை கதிர் கனக வளை கல நடைகள் பழகிகள் மயில் போல...கழுத்திலே கரிய மணியாலான மாலை புரள்வதனால் அதிலிருந்து ஒளி பரவ; காதில் இரண்டு குண்டலங்களும் அசைய; ஒளி வீசுகின்ற பொன் வளையல்கள் கலகல என ஒலிக்க; மயில்போல நடைபழகுபவர்கள்,

திமிரு மத புழுகு ஒழுக தெருவினில் அலைய விலை முலை தெரிய மயல் கொடு திலத மணிமுக அழகு சுழலிகள்... பூசியிருக்கிற புனுகு கரைந்து ஒழுகும்படியாக வீதியில் அலைய; விலைக்கு வைத்திருக்கும் மார்பு தெரிய; திலகமணிந்து, மயக்கத்தை ஊட்டி அழகிய முகத்துடன் திரிந்துகொண்டிருக்கின்ற பெண்களுடைய,

இதழ் ஊறல் திரையில் அமுதென கழைகள் பல சுளை எனவும் அவர் மயல் தழுவும் அசடனை திருகு புலை கொலை கலிகள் சிதறிட அருள்தாராய்... இதழ்களில் ஊறும் எச்சிலைப் பாற்கடலில் எடுத்த அமுது என்றும்; கருப்பஞ்சாறு என்றும்; பலாச் சுளை இது என்றும் கருதிக்கொண்டு அவர்கள் மீது மோகம் கொண்டு தழுவுகின்ற அசடனாகிய என்னுடைய குற்றங்களும்; இழிந்த குணங்களும்; கொலைக்கு ஒப்பான துன்பங்களும் சிதறிப்போகும்படியாக அருள்புரிய வேண்டும்.

குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என தாளம் குரை செய் முரசமொடு அரிய விருது ஒலி டமட டமடம டமட டம என குமுற... குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என்னும் சப்தத்துடனுடத போர்ப்பறையைப் போன்ற தாளத்துடனும் முரசங்கள் டமட டமடம டமட டமடம என்ற ஓசையோடு வெற்றி ஒலியை எழுப்ப,

திமிலை சலரி கி(ன்)னரி முதல் இவை பாட அமரர் முநிவரும் அயனும் அனைவரும் மதுகை மலர் கொடு தொழுது பதம் உற...திமிலைப் பறையும் சல்லரிப் பறையும் கின்னரி என்னும் யாழ் வகையுமான வாத்தியங்கள் முழங்க, முநிவர்களும் பிரமனும் மற்றவர்களும் தேன் நிறைந்த பூக்களைக் கொண்டு வணங்கி அவரவருக்கான பதவிகளைப் பெற,

அசுரர் பரி கரி இரதமும் உடைபட விடும் வேலா... அசுரர்களுடைய குதிரை, யானை, ரதங்கள் எல்லாமும் அழியும்படியாக வேலை எறிந்தவனே!

அகில புவனமொடு அடைய ஒளி பெற அழகு சரண் மயில் புறம் அது அருளி ஒர் அருண கிரி குற மகளை மருவிய பெருமாளே....எல்லா உலகங்களும் ஒன்றுசேர ஒளிபெறுமாறு திருப்பாதத்தை மயிலின் மீது வைத்து ஒப்பற்ற திருவண்ணாமலையில் குறப்பெண்ணாகிய வள்ளியை அடைந்த பெருமாளே!

சுருக்க உரை

கும குருபர, குமர குருபர என்ற சப்தத்தோடு தாளங்களை எழுப்பி ஒலிக்கின்ற முரசங்கள் வெற்றி ஒலியை எழுப்பி டமட டமடம டமட டமடம என்று அதிர; திமிலைப் பறைகளும் சல்லரிகளும் கின்னரி யாழோடு முழங்க; தேவர்களும் முநிவர்களும் பிரமனும் மற்றவர்களும் தேன் ததும்புகின்ற மலர்களால் அர்ச்சித்துத் தத்தமக்குரிய பதவிகளைப் பெறும்படியாக அசுரர்களுடைய குதிரை, யானை, தேர்ப்படைகள் அழியும்படியாக வேலை வீசியவனே! உலகங்கள் எல்லாவற்றிலும் எல்லா இடங்களிலும் ஒளியால் நிறையும்படியாக திருப்பாதத்தை மயில் மீது வைத்து; ஒப்பற்ற திருவண்ணாமலையில் குறப்பெண்ணான வள்ளியை அடைந்த பெருமாளே!

வண்டுகள் நிறைந்து மொய்க்கின்ற கூந்தல் சரிந்துவிழ; புளகிதம் கொண்ட தனங்கள் அசைய; கண்கள் அம்பைப் போன்று விளங்க; நெற்றி புரய; ஆடையை நெகிழ்த்துகின்ற விலைமாதர்கள் வீதியிலே மயில்போன்று நடந்து வர, அவர்களின் மீது மோகம்கொண்டு இது கடலைக் கடைந்து பெற்ற அமுது என்றும் கரும்பு என்றும் பலாச்சுளை என்றும் தழுவுகின்ற அசடனான என்னுடைய குற்றங்களும் இழிவான தன்மைகளும் துன்பங்களும் தீமைகளும் சிதறி விலகுமாறு அருள்புரிய வேண்டும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/17/w600X390/54165.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/14/பகுதி---893-2980489.html
2978635 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 891 ஹரி கிருஷ்ணன் Sunday, August 12, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

தசை துறுந்து ஒக்கு கட்டு அளை சட்ட(க)ம் சரிய வெண் கொக்கு ஒக்க நரைத்து அம் தலை உடம்பு எய்த்து எற்பு தளை நெக்கு இந்த்ரியம் மாறி

துறுந்து: நெருங்கி; சட்டம்: சட்டகம்—frame; எய்த்து: நெகிழ்ந்து; எற்புத் தளை: எலும்புக் கட்டுகள்; நெக்கு: தளர்ந்து; இந்திரியம்: ஐம்புலன்கள்;

தடி கொ(ண்)டு திக்கு தப்ப நடக்கும் தளர்வு உறும் சுத்த பித்த விருத்தன் தகை பெறும் பல் கொத்துக்கள் அனைத்தும் கழலா நின்று

 

விருத்தன்: வயோதிகன்; பல் கொத்துகள்: பல் வரிசைகள்; கழலா நின்று: கழன்று;

அசலரும் செச்செ செச்செ என சந்ததிகளும் சிச்சி சிச்சி என தங்கு அரிவையும் துத்து துத்து என கண்டு உமியா மற்றவரும்

 

அசலரும்: அயலாரும்; செச்செ: சே சே; சந்ததிகளும்: பிள்ளைகளும்; உமியா: உமிழ;

நிந்திக்க தக்க பிறப்பு இங்கு அலம் அலம் செச்சை சித்ர மணி தண்டை அரவிந்தத்தில் புக்கு அடைதற்கு என்று அருள்வாயே

 

அலம் அலம்: போதும் போதும்; செச்சை: வெட்சிப் பூ; அரவிந்தத்தில்: பாத கமலத்தில்;

குசை முடிந்து ஒக்க பக்கரை இட்டு எண் திசையினும் தத்த புத்தியை நத்தும் குரகதம் கட்டி கிட்டி நடத்தும் கதிர் நேமி

 

குசை: கடிவாளம்; பக்கரை: அங்கவடி (Stirrup); நத்தும்: விரும்பும்; குரகதம்: குதிரை; கதிர்: சூரிய, சந்திரர்; நேமி: (தேர்ச்) சக்கரம்;

குல ரதம் புக்கு ஒற்றை கணை இட்டு எண் திரிபுரம் சுட்டு கொட்டை பரப்பும் குரிசில் வந்திக்க கச்சியில் நிற்கும் கதிர் வேலா

 

ஒற்றைக் கணை: திருமாலைக் கணையாக்கியது; குரிசில்: தலைவன்; கச்சி: காஞ்சிபுரம்;

திசை முகன் தட்டு பட்டு எழ வற்கும் சிகரியும் குத்துப்பட்டு விழ தெண் திரை அலங்கத்து புக்கு உலவி சென்று எதிர் ஏறி

 

திசைமுகன்: பிரமன்; தட்டுப் பட்டு: தடைப்பட்டு; வற்கும்: வலிமையான; சிகரியும்: மலையும்—கிரெளஞ்சமும்; அலங்கத்து: கொத்தளத்தில் (Rampart);

சிரம் அதுங்க பொன் கண் திகை இட்டு அன்று அவுணர் நெஞ்சில் குத்தி கறை  கட்கம் சிதறி நின்று எட்டி பொட்டு எழ வெட்டும் பெருமாளே.

 

அதுங்க: நசுங்க; திகையிட்டு: திசையில் இட்டு, பிரமிப்படைந்து; கட்கம்: வாள்;

தசை துறுந்து ஒக்குக் கட்டு அளை சட்ட(க)ம் சரிய வெண் கொக்குக்கு ஒக்க நரைத்து... மாமிசத்தாலும் நெருக்கமான தோலாலும் அளந்து வைக்கப்பட்டுள்ள இந்த உடலாகிய கூடு தளர்ந்து போக; தலை மயிர் கொக்கைப் போல வெண்ணிறமாக நரைத்தும்;

அம் தலை உடம்பு எய்த்து எற்புத் தளை நெக்கி இந்த்ரிய(ம்) மாறி... அழகான தலையும் உடலும் இளைத்தும், எலும்புக் கட்டுகள் நெகிழ்ச்சியுற்றும்; ஐம்புலன்களும் (தத்தமக்கு உரிய) தொழில்களில் மாறுபாட்டை அடைந்தும்;

தடி கொ(ண்)டும் திக்குத் தப்ப நடக்கும் தளர்வு உறும் சுத்தப் பித்த விருத்தன் தகை பெறும் பல் கொத்துக்கள் அனைத்தும் கழலா நின்று... தடியை ஊன்றியபடி, திசைத் தடுமாற்றம் ஏற்பட்டு நடக்கும்படியாகத் தளர்ச்சி எய்தியும்; வரிசையாக இருந்த பற்கள் அத்தனையும் கொட்டிப் போகவும்;

அசலரும் செச்செ செச்செ எனச் சந்ததிகளும் சிச்சி சிச்சி என தங்கு அரிவையும் துத்து துத்து எனக் கண்டு உமியா... அயலார்கள் ‘சே சே’ என்று இகழ; பிள்ளைகள் ‘சீ சீ’ வெறுக்க; உடனுறையும் பெண் (மனைவி) தூத்தூ என்று உமிழ்ந்து அவமதிக்க;    

மற்றவரு(ம்) நிந்திக்கத் தக்க பிறப்பு இங்கு அலம் அலம் செச்சைச் சித்ர மணித் தண்டை அரவிந்தத்தில் புக்கு அடைதற்கு என்று அருள்வாயே... மற்றவர்கள் எல்லோரும் நிந்தனை செய்யத்தக்கதான இந்தப் பிறப்பு போதும் போதும்.  வெட்சிப் பூவைச் சூடியதும்; அழகிய ரத்தினக்கற்கள் பதிக்கப்பட்ட தண்டையை அணிந்ததும் தாமரையைப் போன்றதுமான பாதங்களைப் பற்றிக் கொள்ளும் பேற்றை எனக்கு எப்போது அளிப்பாய்? (உடனே அளித்தருள வேண்டும்.)

குசை முடிந்து ஒக்கப் பக்கரை இட்டு எண் திசையினும் தத்தப் புத்தியை நத்தும் குரகதம் கட்டிக் கிட்டி நடத்தும் கதிர் நேமி குல ரதம் புக்கு... கடிவாளம் இடப்பட்டும் அங்கவடி பூட்டப்பட்டும் எட்டுத் திக்குகளிலும் தாவிச் செல்லக்கூடியவையும் ஞானத்தை விரும்புவதுமான (வேதங்களாகிய நான்கு) குதிரைகளை நெருங்கப் பூட்டி; சூரிய சந்திரர்களைச் சக்கரங்களாகக் கொண்ட சிறந்த ரதத்தில் ஏறிக்கொண்டு,

ஒற்றைக் கணை இட்டு எண் திரிபுரம் சுட்டுக் கொட்டைப் பரப்பும் குரிசில் வந்திக்கக் கச்சியில் நிற்கும் கதிர் வேலா... (திருமாலாகிய) ஒற்றை அம்பை வில்லில் பொருத்தி, திரிபுரங்களைப் பொசுக்கித் தம் வெற்றியைப் பரப்பிய தலைவான சிவபெருமான் வணங்கிநிற்கும்படியாகக் காஞ்சீபுரத்தில் நிற்கின்ற கதிர்வேலா!

திசை முகன் தட்டுப் பட்டு எழ வற்கும் சிகரியும் குத்துப்பட்டு விழ தெண் திரை அலங்கத்துப் புக்கு உலவிச் சென்று எதிர் ஏறிச் சிரம் அதுங்க... பிரமன் தடைப்பட்டு நிற்கும்படியாகவும்; வலிமை வாய்ந்த கிரெளஞ்ச மலை வேலால் பிளக்கப்படும்படியாகவும்; தெளிந்த அலைகளைக் கொண்ட கடலையும் எல்லா மதில்களையும் தாண்டிச் சென்று அரக்கர்களை வென்று, அவர்களுடைய தலைகள் நசுங்கி நாசமடையும்படியாகவும்;

பொன் கண் திகை இட்டு அன்று அவுணர் நெஞ்சில் குத்திக் கறை கட்கம் சிதறி நின்று எட்டிப் பொட்டு எழ வெட்டும் பெருமாளே....அகன்ற கண்களில் திகைப்புப் படரும்படியாகவும் அசுரர்களுடைய மார்பில் வேலால் குத்தி, அவர்கள் கையில் பிடித்திருந்த வாள்கள் சிதறித் தெறித்துப் பொடியாகும்படி வெட்டி வீழ்த்திய பெருமாளே!

சுருக்க உரை

கடிவாளத்தை இட்டு, அங்கவடிகளைப் பொருத்தி, எட்டுத் திக்கிலும் தாவிச் செல்லக் கூடியவையும் ஞானத்தை விரும்புபவையுமான வேதங்களைக் குதிரைகளாகப் பூட்டி; சூரிய சந்திரர்களைச் சக்கரங்களாகக் கொண்ட சிறந்த தேரில் ஏறி அமர்ந்து, திருமாலாகிய ஒற்றைக் கணையை வில்லிலே பொருத்தித் திரிபுரங்களைச் சுட்டுப் பொசுக்கித் தமது வெற்றியை எட்டுத் திக்குகளிலும் பரப்பிய சிவபெருமான் வணங்கி நிற்க, கச்சியில் நிற்கின்ற கதிர்வேலா!  பிரமனும் தடைப்பட்டு நிற்கும்படியாகவும்; வலிய கிரெளஞ்ச மலை வேலால் பிளக்கப்படும்படியாகவும்; தெளிந்த அலைகளைக் கொண்ட கடலையும் கோட்டை கொத்தளங்களையும் தாண்டிச் சென்று அரக்கர்களை வென்று அவர்களுடைய தலைகள் நசுங்கும்படியாகவும்; அரக்கர்களுடைய அகன்று விரிந்த கண்களிலே திகைப்புப் படரும்படியாகவும் அவர்களுடைய நெஞ்சில் வேலால் குத்தி, அவர்கள் கையில் பிடித்திருந்த வாள்கள் சிதறும்படியாகப் போரிட்டு அவர்களை வெட்டி வீழ்த்திய பெருமாளே!

மாமிசத்தாலும் நெருங்கிய தோலாலும் அளந்து வைக்கப்பட்டுள்ள இந்த உடலாகிய கூடு தளந்ரு போக; தலைமயிர் நரைத்து வெளுக்க; தலையும் உடலும் இளைத்துப் போக, எலும்புக் கட்டுகள் தளர்ச்சியடைய; ஐம்புலன்களும் தங்கள் தொழிலிலே மாற்றம் அடைய; தடியை ஊன்றியபடி, திசையை உணராமல் தடுமாறு நடந்து; பித்தம் கொண்ட கிழவனாகி; பல்வரிசை அத்தனையும் கொட்டிப் போய்; அயலார் சேசே என்று தூற்ற; பிள்ளைகள் சீ சீ என்று பரிகசிக்க; மனைவியும் தூ தூ தூ என்று உமிழ்ந்து அவமதிக்க; பிறர் எல்லோரும் நிந்திக்க, இப்படிப்பட்டதான இந்தப் பிறப்பு போதும் போதும்.  வெட்சி மலரைச் சூடியதும், மாணிக்கங்கள் பதிக்கப்பட்ட தண்டையை அணிந்ததுமான உனது பாத கமலங்களைப் பற்றிக் கொள்ளும் பேற்றை அடியேனுக்கு உடனடியாக அருளவேண்டும்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/12/பகுதி--891-2978635.html
2978636 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 892 ஹரி கிருஷ்ணன் Saturday, August 11, 2018 05:42 PM +0530  

‘எனது கலி நீங்கப்பெற வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 46 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு, எட்டு, பத்து, பன்னிரண்டு ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனன தனதன தனன தனதன

      தனன தனதன தனன தனதன

      தனன தனதன தனன தனதன             தனதான

 

கமரி மலர்குழல் சரிய புளகித

         கனக தனகிரி யசைய பொருவிழி

         கணைக ளெனநுதல் புரள துகிலதை    நெகிழ்மாதர்

      கரிய மணிபுர ளரிய கதிரொளி

         பரவ இணைகுழை யசைய நகைகதிர்

         கனக வளைகல நடைகள் பழகிகள்      மயில்போலத்

திமிரு மதபுழு கொழுக தெருவினி

         லலைய விலைமுலை தெரிய மயல்கொடு

         திலத மணிமுக அழகு சுழலிக         ளிதழூறல்

      திரையி லமுதென கழைகள் பலசுளை

         யெனவு மவர்மயல் தழுவு மசடனை

         திருகு புலைகொலை கலிகள் சிதறிட   அருள்தாராய்

குமர குரபர குமர குருபர

         குமர குருபர குமர குருபர

         குமர குருபர குமர குருபர              எனதாளங்

      குரைசெய் முரசமொ டரிய விருதொலி

         டமர டமடம  டமட டமவென

         குமுத திமிலைச லரிகி னரிமுத        லிவைபாட

அமரர் முநிவரு மயனு மனைவரு

         மதுகை மலர்கொடு தொழுது பதமுற

         அசுரர் பரிகரி யிரத முடைபட           விடும்வேலா

      அகில புவனமொ டடைய வொளிபெற

         அழகு சரண்மயில் புறம தருளியொ

         ரருண கிரிகுற மகளை மருவிய        பெருமாளே.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/13/பகுதி---892-2978636.html
2977926 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 890 ஹரி கிருஷ்ணன் Saturday, August 11, 2018 12:00 AM +0530  

‘பிறவி போதும் போதும்’ என்று நெகிழும் இப்பாடல் காஞ்சிபுரத்துக்கானது. 

அடிக்கு ஒற்றொழித்து 37 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்கள் நான்கு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றுமாக நான்கெழுத்துகளையும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்கள் இரண்டு குற்றெழுத்துகள், இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகள் என இரண்டெழுத்துகளையும்; மூன்று, ஏழு, பதினொன்று ஆகிய சீர்கள் மூன்று குற்றெழுத்துகளையும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றையும்; நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்கள் இரண்டு குற்றெழுத்துகளையும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றையும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றையும் கொண்டுள்ளன.

தனதனந் தத்தத் தத்தன தத்தந்

      தனதனந் தத்தத் தத்தன தத்தந்

      தனதனந் தத்தத் தத்தன தத்தந்                  தனதான

 

தசைதுறுந் தொக்குக் கட்டளை சட்டஞ்

         சரியவெண் கொக்குக் கொக்கந ரைத்தந்

         தலையுடம் பெய்த்தெற் புத்தளை நெக்கிந்     த்ரியமாறித்

      தடிகொடுந் திக்குத் தப்பந டக்கும்

         தளர்வுறுஞ் சுத்தப் பித்தவி ருத்தன்

         தகைபெறும் பற்கொத் துக்கள னைத்துங்      கழலாநின்

றசலருஞ் செச்செச் செச்செயெ னச்சந்

         ததிகளும் சிச்சிச் சிச்சியெ னத்தங்

         கரிவையும் துத்துத் துத்துவெ னக்கண்        டுமியாமற்

      றவருநிந் திக்கத் தக்கபி றப்பிங்

         கலமலஞ் செச்சைச் சித்ரம ணித்தண்

         டையரவிந் தத்திற் புக்கடை தற்கென்         றருள்வாயே

குசைமுடிந் தொக்கப் பக்கரை யிட்டெண்

         டிசையினுந் தத்தப் புத்தியை நத்துங்

         குரகதங் கட்டிக் கிட்டிந டத்துங்               கதிர்நேமிக்

      குலரதம் புக்கொற் றைக்கணை யிட்டெண்

         டிரிபுரஞ் சுட்டுக் கொட்டைப ரப்புங்

         குரிசில்வந் திக்கக் கச்சியில் நிற்குங்          கதிர்வேலா

திசைமுகன் தட்டுப் பட்டெழ வற்குஞ்

         சிகரியுங் குத்துப் பட்டுவி ழத்தெண்

         டிரையலங் கத்துப் புக்குல விச்சென்          றெதிரேறிச்

      சிரமதுங் கப்பொற் கட்டிகை யிட்டன்

         றவுணர்நெஞ் சிற்குத் திக்கறை கட்கஞ்

         சிதறிநின் றெட்டிப் பொட்டெழ வெட்டும்       பெருமாளே.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/11/பகுதி---890-2977926.html
2977878 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 889 ஹரி கிருஷ்ணன் Friday, August 10, 2018 10:57 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

கறுக்கும் அஞ்சன விழி இணை அயில் கொடு நெருக்கி நெஞ்சு அற எறி தரு பொழுது ஒரு கனிக்குள் இன் சுவை அமுது உகும் ஒரு சிறு நகையாலே

 

கறுக்கும்: கரிய, கருத்த; அஞ்சன: மை; அயில்கொடு: வேலைக் கொண்டு;

களம் கொழும் கலி வலை கொடு விசிறியே மனைக்கு எழுந்திரும் என மனம் உருக ஓர் கவற்சி கொண்டிட மனை தனில் அழகொடு கொடு போகி

 

களம்: கழுத்து; களக் கொழும் கலி: கழுத்திலிருந்து எழுகின்ற ஒலி; கவற்சி: மனவருத்தம், கவலை;

நறைத்த பஞ்சு அணை மிசையினில் மனம் உற அணைத்த அகம் தனில் இணை முலை எதிர் பொர நகத்து அழுந்திட அமுது இதழ் பருகியும் மிடறூடே

 

நறைத்த: மணம் தோய்ந்த; மிடறு: தொண்டை;

நடித்து எழும் குரல் குமு குமு குமு என இசைத்து நன்கொடு மனம் அது மறுகிட நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயர் அற அருள்வாயே

 

நன்கொடு: நன்றாக; மறுகிட: கலக்கம் அடைந்திட; நழுப்பு: மயங்கச் செய்கின்ற; நஞ்சன: நஞ்சைப் போன்ற;

நிறைத்த தெண் திரை மொகு மொகு மொகு என உரத்த கஞ்சுகி முடி நெறு நெறு நெறு என நிறைத்த அண்ட முகடு கிடு கிடு என

 

உரத்த: வலிமையான; கஞ்சுகி: பாம்பு--ஆதிசேடன்;

நிவத்த திண் கழல் நிசிசரர் உரமொடு சிர கொடும் குவை மலை புர தர இரு நிண குழம்பொடு குருதிகள் சொரி தர அடுதீரா

 

நிவத்த: உயர்ந்த, உயர்வான; நிசிசரர்: அரக்கர்களுடைய;  உரமொடு: மார்புகளோடு; மலை புர தர: மலைக்கு ஒப்பாக; இரு: பெரிய; நிணக்குழம்பொடு: கொழுப்புக் குழம்புடன்;

திறல் கரும் குழல் உமையவள் அருள் உறு புழைக்கை தண் கட கய முக மிக உள சிவ கொழுந்து அன கணபதியுடன் வரும் இளையோனே

 

புழைக்கை: தொளையுடைய கை—துதிக்கை; தண் கட: குளிர்ச்சியான மதநீர்; கயமுக: கஜமுக—யானை முக;

சினத்தொடும் சமன் உதை பட நிறுவிய பரற்கு உளம் அன்புறு புதல்வ நன் மணி உகு திருப்பரங்கிரி தனில் உறை சரவண பெருமாளே.

 

சமன்: யமன், யமனை; பரற்கு: சிவபெருமானுக்கு;

கறுக்கும் அஞ்சன விழி இணை அயில் கொடு நெருக்கி நெஞ்சு அற எறி தரு பொழுது ஒரு கனிக்குள் இன் சுவை அமுது உகும் ஒரு சிறு நகையாலே... கரிய மை தீட்டிய கண்களாகிய இரண்டு வேல்களைக் கொண்டு நெருக்கி, நெஞ்சம் அழியும்படியாக வீசுகின்ற சமயத்தில்; பழச்சுவையையும் அமுதத்தைய்ம் சிந்துகின்ற ஒப்பற்ற புன்னகையால்;

களம் கொழும் கலி வலை கொடு விசிறியெ மனைக்கு எழுந்திரும் என மனம் உருக ஓர் கவற்சி கொண்டிட மனை தனில் அழகொடு கொடு போகி... கழுத்திலிருந்து எழுகின்ற வளமான ஒலி என்கின்ற வலையை வீசி, ‘வீட்டுக்கு வாருங்கள்’ என்று மனத்தை உருக்கும்படியாகவும், உள்ளே கவலை எழும்படியாகவும் வீட்டுக்கு அழகாக அழைத்துச் சென்று;

நறைத்த பஞ்சு அணை மிசையினில் மனம் உற அணைத்த அகம் தனில் இணை முலை எதிர் பொர நகத்து அழுந்திட அமுது இதழ் பருகியும்... மணம் மிகுந்த பஞ்சணையின் மேலே மனமாரத் தழுவி, மார்போடு மார்பு பொருந்தவும்; நகம் அழுந்தவும்; இதழின் அமுதைப் பருகியும்;

மிடறூடே நடித்து எழும் குரல் குமு குமு குமு என இசைத்து நன்கொடு மனம் அது மறுகிட நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயர் அற அருள்வாயே... தொண்டையிலிருந்து நடனமாடியபடி வெளிப்படுகின்ற குரல், பறவைகளின் ஒலியைப் போல குமுகுமுகுமு என்று சப்திக்க; நன்றாக மனம் கலங்கிட; மயங்கச் செய்கின்ற பெண்களால் ஏற்படுகின்ற துன்பம் விலகும்படியாக அருள வேண்டும்.

நிறைத்த தெண் திரை மொகு மொகு மொகு என உரத்த கஞ்சுகி முடி நெறு நெறு நெறு என நிறைத்த அண்ட முகடு கிடு கிடு என...நிரம்பியிருக்கினற கடலின் குளிர்ந்த அலைகள் பொங்கி, மொகு மொகு மொகு என்று ஒலிக்கவும்; ஆதிசேடனது முடி நெறுநெறு எனப் பொடிபடவும்; அண்டங்களின் உச்சி கிடுகிடுக்கவும்;

வரை போலும் நிவத்த திண் கழல் நிசிசரர் உரமொடு சிரக் கொடும் குவை மலை புரை தர இரு நிணக் குழம்பொடு குருதிகள் சொரி தர அடுதீரா... மலைபோல உயர்ந்திருக்கின்ற திண்மையான கழல்களை அணிந்திருக்கின்ற அரக்கர்களுடைய மார்புகளும் கொத்துக் கொத்தான தலைகளும் மிகுதியான மாமிசக் குழம்போடு ரத்தம் சொரியும்படியாக வெட்டித் தள்ளிய தீரனே!

திறல் கரும் குழல் உமையவள் அருள் உறு புழைக்கை தண் கட கய முக மிக உள சிவக் கொழுந்து அ(ன்)ன கணபதியுடன் வரும் இளையோனே... ஒளியும் கருமையும் கொண்ட கூந்தலையுடைய உமையம்மை அருளியவரும்; துதிக்கையையும் குளிர்ந்த மதப்பெருக்கையும் உடையவரும்; யானை முகத்தைக் கொண்டவரும்; சிவக்கொழுந்தைப் போன்றவருமான கணபதியோடு உலவுகின்ற இளையவனே!

சினத்தொடும் சமன் உதை பட நிறுவிய பரற்கு உளம் அன்புறு புதல்வ நன் மணி உகு திருப்பரங்கிரி தனில் உறை சரவண பெருமாளே.... கோபத்தோடு எமனை உதைத்தவரான சிவபெருமானுடைய உள்ளம் அன்புகொள்கின்ற புதல்வனே!  நல்ல மாணிக்கங்கள் சிதறுகின்ற திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கினற சரவணப் பெருமாளே!

சுருக்க உரை

கடல் அலைகள் ‘மொகு மொகு மொகு’ என்று ஆரவாரிக்கவும்; ஆதிசேடனுடைய முடிகள் நெறுநெறு என்று பொடிபடும்படியும்; மலையைப் போல பெரிய கழல்களை அணிந்திருக்கும் அரக்கர்களுடைய மார்புகளும் தலைகளும் கொத்துக் கொத்தாகச் சிதறுபடும்படியும்; அவற்றிலிருந்து மாமிசக் குழம்போடு ரத்தம் பெருக்கெடுக்கும்படியும் வெட்டிச் சாய்த்த தீரனே! ஒளியும் கருமையும் கொண்ட கூந்தலையுடைய உமையம்மை ஈன்றவரும்; துதிக்கையையும் மதப்பெருக்கையும் உடையவரும்; யானை முகத்தவருமான கணபதிக்குத் தம்பியே! யமனை உதைத்தவராகிய சிவபெருமானுடைய உள்ளம் அன்புறும் மகனே!  நல்ல மணிகள் சிதறுகின்ற திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கின்ற சரவணப் பெருமாளே!

கரியதும் மைதீட்டியதும் வேல் போன்றதுமான கண்களைக் கொண்டு நெருக்கி, இனிய புன்னகையைச் சிந்தி வீட்டுக்கு அழைத்துச் சென்று மணம் மிகுந்த பஞ்சணையில் மார்போடு மார்பு பொருத்தியும் நகம் அழுந்தவும் கலவியாடும் பெண்களால் விளைகின்ற துன்பத்திலிருந்து விடுவித்தருள வேண்டும்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/10/பகுதி---889-2977878.html
2976737 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 888 ஹரி கிருஷ்ணன் Thursday, August 9, 2018 12:00 AM +0530  

பொதுமகளிரால் வருகின்ற துன்பம் நீங்கவேண்டும் என்று கோரும் இப்பாடல் திருப்பரங்குன்றுக்குரியது.

அடிக்கு ஒற்றொழித்து 46 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களில் மூன்று குறில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என மூன்றெழுத்துகளும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்களில் மூன்று குறில், ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்று என மூனறெழுத்துகளும்; மூன்று-நான்கு, ஏழு-எட்டு, பதினொன்று-பன்னிரண்டு ஆகிய சீர்களில் நான்கு நான்கு குற்றெழுத்துகளுமாக அமைந்துள்ளன,

 

தனத்த தந்தன தனதன தனதன

      தனத்த தந்தன தனதன தனதன

      தனத்த தந்தன தனதன தனதன                  தனதான

 

கறுக்கு மஞ்சன விழியிணை அயில்கொடு

         நெருக்கி நெஞ்சற எறிதர பொழுதொரு

         கனிக்குள் இன்சுவை அமுதுகும் ஒருசிறு      நகையாலே

      களக்கொ ழுங்கலி வலைகொடு விசிறியெ

         மனைக்கெ ழுந்திரும் எனமனம் உருகஒர்

         கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு    கொடுபோகி

நறைத்த பஞ்சணை மிசையினில் மனமுற

         அணைத்த கந்தனில் இணைமுலை எதிர்பொர

         நகத்த ழுந்திட அமுதிதழ் பருகியு             மிடறூடே

      நடித்தெ ழுங்குரல் குமுகுமு குமுவென

         இசைத்து நன்கொடு மனமது மறுகிட

         நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயரற              அருள்வாயே

நிரைத்த தெண்டிரை மொகுமொகு மொகுவென

         உரத்த கஞ்சுகி முடிநெறு நெறுவென

         நிறைத்த அண்டமு கடுகிடு கிடுவென         வரைபோலும்

      நிவத்த திண்கழல் நிசிசர ருரமொடு

         சிரக்கொ டுங்குவை மலைபுரை தரஇரு

         நிணக்கொ ழம்பொடு குருதிகள் சொரிதர      அடுதீரா

திறற்க ருங்குழல் உமையவள் அருளுறு

         புழைக்கை தண்கட கயமுக மிகவுள

         சிவக்கொ ழுந்தன கணபதி யுடன்வரு         மிளையோனே

      சினத்தொ டுஞ்சமன் உதைபட நிறுவிய

         பரற்கு ளன்புறு புதல்வநன் மணியுகு

         திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண            பெருமாளே.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/09/பகுதி---888-2976737.html
2975568 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 887 ஹரி கிருஷ்ணன் DIN Wednesday, August 8, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

உடலின் ஊடு போய் மீளும் உயிரின் ஊடு மாயாத உணர்வின் ஊடு வான் ஊடு முது தீ ஊடு

 

 

உலவை ஊடு நீர் ஊடு புவியின் ஊடு வாதாடும் ஒருவரோடு மேவாத தனி ஞான

 

உலவை: காற்று;

சுடரின் ஊடு நால் வேத முடியின் ஊடும் ஊடாடு(ம்) துரிய ஆகுல அதீத சிவ ரூபம்

 

துரிய: (யோகியர்) தன்மயமாய் நிற்கும்; ஆகுல அதீத: துன்பங்களைக் கடந்த நிலையிலுள்ள;

தொலைவு இலாத பேராசை துரிசு அறாத ஓர் பேதை தொட உபாயம் ஏதோ சொல் அருள்வாயே

 

துரிசு: குற்றம்;

மடல் அறாத வாரீச அடவி சாடி மாறான வரி வரால் குவால் சாய அமராடி

 

வாரீச அடவி: தாமரைக் காட்டை; வரால் குவால்: வரால் மீன்  கூட்டம் (குவால்: கூட்டம்);

மதகு தாவி மீதோடி உழவர் ஆல அடாது ஓடி மடையை மோதி ஆறு ஊடு தடமாக

 

உழவர் ஆல அடாது ஓடி: உழவர்கள் தம்மை வருத்தாதபடி ஓடி;

கடல் புகா மகா மீனை முடுகி வாளை தான் மேவு கமல வாவி மேல் வீழு மலர் வாவி

 

கடல் புகா: கடலில் புகுந்து; மகா மீனை: பெரிய மீனை; வாவி: சுனை;

கடவுள் நீல(ம்) மாறாத தணிகை காவலா வீர கருணை மேருவே தேவர் பெருமாளே.

 

கடவுள்: தெய்வ (மணமுள்ள); நீலம்: நீலோற்பலம்;

உடலி னூடு போய்மீளும் உயிரி னூடு மாயாத உணர்வினூடு வானூடு முதுதீயூடு... உடலுக்கு உள்ளேயும்; அந்த உடலுக்குள் சென்று திரும்புகின்ற உயிருக்குள்ளேயும்; அழிவடையாத உணர்வுக்கு உள்ளேயும்; வானத்துக்குள்ளேயும்; முதிர்ந்த தீக்கு உள்ளேயும்;

உலவையூடு நீரூடு புவியினூடு வாதாடும் ஒருவரோடு மேவாத... காற்றுக்கு உள்ளேயும்; நீருக்கு உள்ளேயும்; மண்ணுக்கு உள்ளேயும்; சமய வாதங்களில் ஈடுபடுகின்ற யாரிடத்திலும் இல்லாததான,

தனிஞானச் சுடரினூடு நால்வேத முடியினூடும் ஊடாடு துரிய ஆகுல அதீத சிவரூபம்... இணையற்றதான ஞான ஒளிக்கு உள்ளேயும்; நான்கு வேதங்களின் உச்சிகளிலும் ஊடாடுகின்ற துரிய* நிலையில் இருப்பதும்; துன்பங்களைக் கடந்த நிலையில் இருப்பதுமான சிவரூபத்தை,

(* ஜாக்ரத் (விழிப்பு நிலை), ஸ்வப்ன (கனவு நிலை) ஸுஷுப்தி அல்லது சுழுத்தி (கனவற்ற ஆழ்துயில்) என்ற மூன்று நிலைகளையும் கடந்தது துரியம்.)

தொலைவிலாத பேராசை துரிசு அறாத வோர்பேதை தொடுமுபாயம் ஏதோசொல் அருள்வாயே... தீராத பேராசையும் குற்றமும் எப்போதும் நீங்காமல் நிற்கின்ற மூடனாகிய நான் அடைவதற்கு உரிய வழி எதுவென்று உபதேசித்தருள வேண்டும்.

மடல் அறாத வாரீச அடவி சாடி மாறான வரி வரால் குவால் சாய அமராடி... இதழ்கள் அவிழாத தாமரைக் காட்டை அழித்தும்; தன்னுடைய பகையான வரால் மீன்களின் கூட்டம் பின்வாங்குமாரும் போர்புரிந்து,

மதகு தாவி மீதோடி உழவரால அடாது ஓடி மடையை மோதி யாறூடு தடமாக... போகும் வழிகளில் இருக்கும் மதகுகளைத் தாவி; வயலில் உழுகின்ற உழவர்கள் தம்மை வருத்தாதபடி தப்பியோடி; வழியிலுள்ள மடைகளை மோதி உடைத்து; ஆற்றின் வழியே சென்று,

கடல்புகா மகாமீனை முடுகி வாளை தான்மேவு கமல வாவி மேல்வீழு மலர்வாவி... கடலுக்குள் புகுந்து, அங்கிருக்கின்ற பெரிய மீனைத் துரத்தியடித்த வாளை மீன் வந்து விழுகின்றதான இந்தத் தாமரைக் குளத்தில்,

கடவுள் நீல மாறாத தணிகை காவலா வீர கருணை மேருவே தேவர் பெருமாளே.... தெய்வீக மணம் கமழுகின்ற நீலோத்பல மலர் மலர்வது தவறாத திருத்தணிகையின் காவலனே! வீரா! கருணையில் மேருவைப்போல் உயர்ந்து நிற்பவனே!  தேவர் பெருமாளே!

சுருக்க உரை

இதழ் பிரியாத தாமரைகளின் காட்டைப் போல இருக்கின்ற குளங்களில் வாழ்கின்ற மீன்கள் வரால் மீன்களைத் துரத்தி, மதகுகளைத் தாவி உழவர்களிடமிருந்து தப்பித்து, மடைகளை உடைத்துக்கொண்டு, ஆற்றின் போக்கிலே சென்று கடலுக்குள் புகுந்து, அங்குள்ள பெரிய மீன்களைத் துரத்தியடித்து, அதன்பிறகு மீண்டும் அதே தாமரைத் தடாகத்தில் வந்து விழக்கூடிய செழிப்பான திருத்தணிகையின் காவலனே! கருணை மேருவே! தேவர்கள் பெருமாளே!

உடலுக்குள்ளேயோ உயிருக்குள்ளேயோ; ஆகாயம், தீ, காற்று, நீர், மண் ஆகிய பஞ்ச பூதங்களுக்குள்ளேயோ; சமயச் சண்டைகளை இடுவார்களிடத்திலேயோ காணக் கிடைக்காததும் ஒப்பற்றதுமான ஞான ஒளியின் உள்ளும்; வேதங்களின் முடிவிலும்; யோகியர் தன்வசமாக நிற்கின்ற உயர்ந்த நிலையிலும்; துன்பங்களைக் கடந்ததாய் உள்ள சிவரூபத்தை, மூடனாகிய அடியேன் அடைவதற்கான உபாயத்தை உபதேசித்து அருளவேண்டும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/08/பகுதி--887-2975568.html
2975566 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 886 ஹரி கிருஷ்ணன் Monday, August 6, 2018 05:04 PM +0530  

‘சிவரூபத்தை அடைகின்ற உபாயத்தைச் சொல்லியருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருத்தணிகைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களில் ஒரு நெடில், ஒரு குறில் என இரண்டெழுத்துகளும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களில் இரண்டு நெடில், ஒரு குறில் என்று மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனன தான தானான தனன தான தானான

      தனன தான தானான                தனதான

       

உடலி னூடு போய்மீளு முயிரி னூடு மாயாத

         உணர்வி னூடு வானூடு          முதுதீயூ

      டுலவை யூடு நீரூடு புவியி னூடு வாதாடு

         மொருவ ரோடு மேவாத         தனிஞானச்

சுடரி னூடு நால்வேத முடியி னூடு மூடாடு

         துரிய வாகு லாதீத               சிவரூபம்

      தொலைவி லாத பேராசை துரிச றாத வோர்பேதை

         தொடுமு பாய மேதோசொ       லருள்வாயே

மடல றாத வாரீச அடவி சாடி மாறான

         வரிவ ரால்கு வால்சாய          அமராடி

      மதகு தாவி மீதோடி யுழல ரால டாதோடி

         மடையை மோதி யாறூடு        தடமாகக்

கடல்பு காம காமீனை முடுகி வாளை தான்மேவு

         கமல வாவி மேல்வீழு           மலர்வாவிக்

      கடவுள் நீல மாறாத தணிகை காவ லாவீர

         கருணை மேரு வேதேவர்        பெருமாளே.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/07/பகுதி---886-2975566.html
2975517 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 885 ஹரி கிருஷ்ணன் DIN Monday, August 6, 2018 10:53 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

வினைக்கு இனமாகும் தனத்தினர் வேள் அம்பினுக்கு எதிர் ஆகும் விழி மாதர்

 

வினைக்கு இனமாகும்: வினைகளை (அதிகரிப்பதற்குத்) தொடர்புள்ள; தனத்தினர்: மார்பை உடையவர்கள்; வேள் அம்பினுக்கு: மன்மதன் கணைக்கு; எதிராகும்: இணையாகும்;

மிக பல மானம் தனில் புகுதா வெம் சமத்திடை போய் வெம் துயர் மூழ்கி

 

மானம்தனில்: அவமானகரமான செயல்களில்; புகுதா: நுழைந்து, அகப்பட்டு; சமத்திடை: (கலவிப்) போரிடை

கனத்த விசாரம் பிறப்பு அடி தோயும் கரு குழி தோறும் கவிழாதே

 

விசாரம்: கவலை;

கலை புலவோர் பண் படைத்திட ஓதும் கழல் புகழ் ஓதும் கலை தாராய்

 

கலை தாராய்: கல்வியை (ஞானத்தைத்) தாராய்;

புனத்து இடை போய் வெம் சிலை குறவோர் வஞ்சியை புணர் வாகம் புய வேளே

 

வாகம்புய: வாகு அம் புய—அழகிய தோள்களை உடையவனே;

பொருப்பு இரு கூறும் பட கடல் தானும் பொருக்கெழ வானும் புகை மூள

 

பொருப்பு: மலை—கிரெளஞ்சம்; பொருக்கெழ: வற்றிப் போக;

சினத்தோடு சூரன் கனத்த தி(ண்)ணிய மார்பம் திறக்க அமர் ஆடும் திறல் வேலா

 

 

திருப்புகழ் ஓதும் கருத்தினர் சேரும் திருத்தணி மேவும் பெருமாளே.

 

 

வினைக்கு இனமாகும் தனத்தினர் வேள் அம்பினுக்கு எதிர் ஆகும் விழி மாதர்... துன்பங்கள் பெருகுவதற்குக் காரணமான மார்பையும் மன்மதனுடைய கணைக்கு இணையான கண்களையும் கொண்ட பெண்களின் (மீது வைத்த ஆசையால்;

மிகப் பல மானம் தனில் புகுதா வெம் சமத்திடை போய் வெம் துயர் மூழ்கி... பல அவமானகரமான செயல்களில் ஈடுபட்டு; கலவிப் போரில் விழுந்து; கொடிய துன்பத்தில் மூழ்கி;

கனத்த விசாரம் பிறப்பு அடி தோயும் கருக் குழி தோறும் கவிழாதே... பொறுக்க முடியாத கவலைப்பட்டு; பிறப்புக்கு வழி வகுக்கின்ற கருக்குழிக்குள் நான் தலைகுப்புறக் கவிழாதபடி,

கலைப் புலவோர் பண் படைத்திட ஓதும் கழல் புகழ் ஓதும் கலை தாராய்... நூல்களிலே தேர்ச்சியுள்ள புலவர்கள் இசைகூட்டி ஓதுகின்ற உனது திருவடிகளுடைய புகழை ஓதித் துதிக்கின்ற ஞானத்தைத் தரவேண்டும்.

புனத்து இடை போய் வெம் சிலை குறவோர் வஞ்சியைப் புணர் வாகம் புய வேளே... தினைப்புனத்தில் புகுந்து, கொடிய வில்லை ஏந்திய குறக்குலத்தில் தோன்றி கொடியைப் போன்ற வள்ளியை அணைத்த அழகிய தோள்களை உடையவனே!

பொருப்பு இரு கூறும் பட கடல் தானும் பொருக்கு எழ வானும் புகை மூள... கிரெளஞ்ச பர்வதம் இரண்டு கூறாகும்படியும் கடல் வற்றும்படியும் வானத்தைப் புகை சூழும்படியும்,

சினத்தோடு சூரன் கனத்(த) தி(ண்)ணி(ய) மார்பம் திறக்க அமர் ஆடும் திறல் வேலா... கோபம் கொண்டு, சூரனுடைய பருத்த, வலிமையான மார்பு பிளக்கும்படியாகப் போரிட்ட வேலனே! 

திருப்புகழ் ஓதும் கருத்தினர் சேரும் திருத்தணி மேவும் பெருமாளே.... திருப்புகழை ஓதும்* ஆர்வமுள்ள அடியார்கள் கூடுகின்ற திருத்தணிகையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

(* அருணகிரிநாதருடைய வாக்கை மெய்ப்பிக்கும் வகையிலே அடியார்கள் ஆண்டுதோறும் டிசம்பர் 31ம் தேதியன்று திருத்தணிகையில் கூடித் திருப்புகழை ஓதுகிறார்கள்.)

சுருக்க உரை

வள்ளி மலையிலுள்ள தினைப்புனத்துக்குச் சென்று, குறக்குலப் பெண்ணான வள்ளியை அணைத்த அழகிய தோள்களை உடையவனே! கிரெளஞ்ச மலை இரண்டு துண்டாகும்படியும்; கடல் வற்றிப் போகும்படியும்; சூரனுடைய வலிய மார்பு பிளக்கும்படியும் போரிட்ட வேலாயுதனே!  திருப்புகழை ஓதும் ஆர்வத்தோடு அன்பர்கள் கூடியுள்ள திருத்தணியில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

துன்பங்களுக்குக் காரணமான கொங்கைகளையும்; மன்மதனுடைய கணைக்கு நிகரான விழிகளையும் கொண்ட பெண்களின் மீது பூண்ட ஆசையால் பலவிதமான அவமானகரமான செயல்களைச் செய்து; கலவிப் போரில் விழுந்து; கொடிய துன்பங்களில் மூழ்கி; கவலை அடைந்து; பிறப்புக்குக் காரணமாக இருக்கின்ற கருக்குழிக்குள் நான் மீண்டும் மீண்டும் தலைகுப்புறக் கவிழாதபடி,

புலவர்கள் பண்ணோடு பாடியிருக்கின்ற உன்னுடைய திருவடிகளின் புகழைப் பாடுவதற்கான ஞானத்தைத் தந்தருள வேண்டும்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/06/பகுதி---885-2975517.html
2974383 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 884 ஹரி கிருஷ்ணன் Sunday, August 5, 2018 12:00 AM +0530

 

‘எப்போதும் உனது திருவடிகளை ஓதவேண்டும்’ என்று கோரும் இப் பாடல் திருத்தணிக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடில், ஒரு குறில், ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும் என இரண்டெழுத்துகளுமாக அமைந்துள்ளன.

தனத்தன தானந் தனத்தன தானந்

      தனத்தன தானந்                    தனதான

 

வினைக்கின மாகுந் தனத்தினர் வேளம்

         பினுக்கெதி ராகும்                விழிமாதர்

      மிகப்பல மானந் தனிற்புகு தாவெஞ்

         சமத்திடை போய்வெந்            துயர்மூழ்கிக்

கனத்தவி சாரம் பிறப்படி தோயுங்

         கருக்குழி தோறுங்                கவிழாதே

      கலைப்புல வோர்பண் படைத்திட வோதுங்

         கழற்புக ழோதுங்                 கலைதாராய்

புனத்திடை போய்வெஞ் சிலைக்குற வோர்வஞ்

         சியைப்புணர் வாகம்              புயவேளே

      பொருப்பிரு கூறும் படக்கடல் தானும்

         பொருக்கெழ வானும்             புகைமீளச்

சினத்தொடு சூரன் கனத்திணி மார்பந்

         திறக்கம ராடுந்                   திறல்வேலா

      திருப்புகழ ழோதுங் கருத்தினர் சேருந்

         திருத்தணி மேவும்               பெருமாளே.

 

 
]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/05/பகுதி---884-2974383.html
2973656 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 883 ஹரி கிருஷ்ணன் Saturday, August 4, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

அமை உற்று அடைய பசி உற்றவருக்கு அமுதை பகிர்தற்கு இசையாதே

 

அமைவுற்று: மன அமைதியோடு; அடையப் பசியுற்றவருக்கு: முற்றப் பசியோடு வந்தவர்களுக்கு (அடையப் பசியுற்றவருக்கு அமைவுற்று—என்று மாற்றிக்கொள்ள வேண்டும்);

அடையப் பொருள் கை இளமைக்கு என வைத்து அருள் தப்பி மதத்து அயராதே

 

அடையப் பொருள்: வைத்துள்ள பொருள்; மதத்து: செருக்கால்; அயராதே: தளர்ச்சி அடையாமல்;

தமர் சுற்றி அழ பறை கொட்டி இட சமன் நெட்டு உயிரைக் கொடு போகும்

 

தமர்: உறவினர்கள்; சமன்: யமன்;

சரிரத்தினை நிற்கும் என கருதி தளர்வுற்று ஒழிய கடவேனோ

 

சரிரத்தினை: சரீரத்தினை, உடலை;

இமயத்து மயிற்கு ஒரு பக்கம் அளித்து அவருக்கு இசைய புகல்வோனே

 

மயிற்கு: மயிலுக்கு—உமைக்கு;

இரணத்தினில் எற்றுவரை கழுகுக்கு இரை விட்டிடும் விக்ரம வேலா

 

இரணத்தினில்: போரில்; எற்றுவரை: மோதுபவரை;

சமயச் சிலுகு இட்டவரை தவறி தவம் உற்ற அவருள் புக நாடும்

 

சிலுகு: குழப்பம், சேட்டை;

சடு பத்ம முக குக புக்கு கனம் தணியில் குமரப் பெருமாளே.

 

சடு பத்ம முக: ஷட் பத்ம முக—ஆறு தாமரைகளைப் போன்ற முகங்களை உடையவனே; தணியில்: திருத்தணியில்;

அடையப் பசியுற்றவருக்கு அமைவுற்று அமுதைப் பகிர்தற்கு இசையாதே... முற்றவும் பசியோடு வந்தவர்களுக்கு மன நிறைவோடு அன்னத்தைப் பகிர்ந்து தருவதற்கு மனமில்லாமலும்;

அடையப் பொருள் இளமைக்கென கைவைத்து அருள்தப்பி மதத்து அயராதே...கையில் வைத்துள்ள பொருளை, இளமை(ச் செயல்களு)க்கு என்று கையிலே வைத்துக்கொண்டு; அருள் நெறியினின்றும் தவறிப்போய்; செருக்கடைந்து தளராமலும்;

தமர் சுற்றியழப் பறைகொட்டியிட சமன் நெட்டுயிரைக் கொடுபோகும்... உறவினர்கள் சுற்றிலும் நின்றபடிக் கதறவும்; பறைகள் முழங்கவும்; யமன் உயிரை நெடுந்தொலைவுக்குக் கவர்ந்து செல்லவும் (என்றே அமைந்திருக்கின்ற);

சரிரத்தினை நிற்குமெனக் கருதி தளர்வுற்று ஒழியக் கடவேனோ... இந்த உடல் நிலைபெற்று நிற்கும் என்று நினைத்துக்கொண்டு, (இந்த உடலுக்காகவே) நான் உழைத்துத் தளர்ந்து அழிவதுதான் எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறதோ? (அவ்வாறு ஆகாமல் காத்தருள வேண்டும்.)

இமயத்து மயிற்கு ஒரு பக்கமளித்தவருக்கு இசையப் புகல்வோனே... இமகிரியரசனுடைய மகளான உமைக்கு, இடது பாகத்தைத் தந்த சிவபெருமானுடைய உள்ளம் இசைவுறுமாறு உபதேசித்தவனே!

இரணத்தினில் எற்றுவரைக் கழுகுக்கு இரையிட்டிடு விக்ரம வேலா... போர்க் களத்தில் வந்து மோதித் தாக்குபவர்களைக் கழுகுகளுக்கு இரையாக ஆக்குகின்ற வீரம் நிறைந்த வேலை ஏந்துபவனே!

சமயச் சிலுகிட்டவரைத் தவறி தவம் முற்ற அருள் புக நாடும்... சமயச் சேட்டைகளைச் செய்கின்ற சமயவாதிகளிடமிருந்து விலகி, என் தவம் முற்றுப்பெறுமாறு உன்னுடைய திருவருளுக்குள் புகுவதற்காக நான் நாடுகின்ற,

சடுபத்ம முகக் குக புக்க கனத் தணியிற் குமரப் பெருமாளே.... தாமரையை ஒத்த ஆறு முகங்களைக் கொண்ட குகனே! (வள்ளியை மணமுடித்த பிறகு) வந்தடைந்த பெருமை வாய்ந்த திருத்தணியில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

இமகிரி ராஜனுடைய மகளான உமையம்மையை இடது பாகத்தில் வைத்திருக்கும் சிவனார் மனத்துக்கு இசையும்படியாக உபதேசித்து அருளியவனே!  போர்க்களத்தில் எதிர்த்து வந்து மோதுபவரைக் கழுகுகளுக்கு இரையாக்குகின்ற வீரம் நிறைந்த வேலை ஏந்துபவனே!  சமயச் சேட்டைகளைச் செய்து திரிகின்றவர்களுடைய கூட்டத்திலிருந்து நான் விலகுவதற்காகவும்; என் தவம் நிறைவுறுவதற்காகவும் நான் நாடுகின்றவையும்; ஆறு தாமரைகளைப் போன்றவையுமான திருமுகங்களை உடைய குகனே! வள்ளியை மணமுடித்த பிறகு நாடிவந்ததாகிய திருத்தணியில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

பசியோடு வருபவர்களுக்கு ஒரு சிறிதளவேனும் அமுது படைக்க மனம் வராமலும்; சேர்த்து வைத்திருக்கிற எல்லாப் பொருளும் என் இளமைக்காகவே என்று வைத்துக்கொண்டும் ஆணவத்தால் தளராமலும்; உறவினர்கள் கதறியழ; பறைகள் முழங்க, நெடுந்தொலைவுக்கு யமன் இந்த உயிரை எடுத்துப் போவதற்காகவென்றே அமைந்திருக்கின்ற இந்த உடல் நிலைபெறும் என்று கருதிக்கொண்டு, இந்த உடலுக்காகவே பாடுபட்டு நான் தளர்வடைவதுதான் எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறதா? (அவ்வாறு தளர்வடையாமல் காத்தருள வேண்டும்.)

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/7/w600X390/1465.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/04/பகுதி---883-2973656.html
2972947 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 882 ஹரி கிருஷ்ணன் Friday, August 3, 2018 10:56 AM +0530  

‘இந்த உடல் நிலைத்திருக்கும் என்று நம்பி அழியாமல், பசித்து வந்தவருக்கு உணவளித்திடும் பேற்றைத் தரவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருத்தணிகைக்குரியது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று முதல் ஆறு வரையிலான எல்லாச் சீர்களிலும் மூன்று குறிலும் ஒரு வல்லொற்றுமாக மூன்று-மூன்று எழுத்துகள் அமைந்துள்ளன.

தனனத் தனனத் தனனத் தனனத்

      தனனத் தனனத்                     தனதான

 

அமைவுற் றடையப் பசியுற் றவருக்

         கமுதைப் பகிர்தற்                கிசையாதே

      அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத்

         தருள்தப் பிமதத்                 தயராதே

தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச்

         சமனெட் டுயிரைக்               கொடுபோகுஞ்

      சரிரத் தினைநிற் குமெனக் கருதித்

         தளர்வுற் றொழியக்               கடவேனோ

இமயத் துமயிற் கொருபக் கமளித்

         தவருக் கிசையப்                 புகல்வோனே

      இரணத் தினிலெற் றுவரைக் கழுகுக்

         கிரையிட் டிடுவிக்                ரமவேலா

சமயச் சிலுகிட் டவரைத் தவறித்

         தவமுற் றவருட்                 புகநாடும்

      சடுபத் மமுகக் குகபுக் ககனத்

         தணியிற் குமரப்                 பெருமாளே.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/03/பகுதி-882-2972947.html
2971556 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 881 ஹரி கிருஷ்ணன் Thursday, August 2, 2018 02:09 PM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

இருவர் மயலோ அமளி விதமோ எனேன செயலோ அணுகாத

 

 

இருவர் மயலோ: வள்ளி, தேவானை ஆகிய இருவர் மீது கொண்ட காதலாலா; அமளி விதமோ: (உன் ஆலயத்தில் எழுகிற) ஆரவாரங்களாலா; எனென செயலோ: அல்லது வேறு என்னென்ன செயல்களாலலா (அறியேன்); அணுகாத: உன்னை அணுக முடியாத;

இருடி அயன் மால் அமரர் அடியார் இடையும் ஒலி தான் இவை கேளாது

 

 

இருடி: ரிஷி, முனிவர்கள்; அயன்: பிரமன்; மால்: திருமால்; அமரர்: தேவர்கள்; அடியார்: உன்னுடைய அடியார்கள்; இடையும் ஒலி: முறையிடும் ஓசை;

ஒருவன் அடியேன் அலறும் மொழி தான் ஒருவர் பரிவாய் மொழிவாரோ

 

 

பரிவாய்: அன்போடு; மொழிவாரோ: உன்னிடத்திலே தெரிவிப்பார்களோ;

உனது பத தூள் புவன கிரி தான் உனது கிருபாகரம் ஏதோ

 

பத தூள்: திருவடியிலுள்ள தூசு; புவன கிரி: உலகிலுள்ள மலைகள்; கிருபாகரம்: திருவருளின் தன்மை;

பரம குருவாய் அணுவில் அசைவாய் பவன முதல் ஆகிய பூத

 

பவன(ம்) முதல் ஆகிய: காற்று முதலான (பவனன்: வாயு);

படையும் உடையாய் சகல வடிவாய் பழைய வடிவாகிய வேலா

 

படையும் உடையாய்: சேனைகளாக உடையவனே;

அரியும் அயனோடு அபயம் எனவே அயிலை இருள் மேல் விடுவோனே

 

அரி: திருமால்; அயனோடு: பிரமனோடு; அயிலை: வேலை; இருள் மேல்: இருளின் வடிவமெடுத்த சூரனின் மேல்;

அடிமை கொடு நோய் பொடிகள் படவே அருண கிரி வாழ் பெருமாளே.

 

கொடு நோய்: (என்னைப் பீடித்த) பொல்லாத நோய்;

இருவர் மயலோ அமளி விதமோ எனென செயலோ .... நீ வள்ளி தேவானையாகிய தேவியர் மீது கொண்டிருக்கும் மையலாலா; அல்லது உன்னுடைய திருக்கோயிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களின் ஆரவாரத்தாலா; அல்லது வேறு ஏதேனும் நிகழ்ச்சிகளாலா (என்பதை அறியேன்);

அணுகாத இருடி அயன்மால் அமரர் அடியார் இசையும் ஒலிதான் இவைகேளாது... உன்னை அணுக முடியாத முனிவர்கள், பிரமன், திருமால், தேவர்கள், அடியார்கள் ஆகிய அனைவரும் முறையிடுகின்ற ஓசை உனது திருச்செவிகளில் விழாதபோது;

ஒருவன் அடியேன் அலறு மொழிதான் ஒருவர் பரிவாய் மொழிவாரோ... இங்கே தன்னந்தனியாக நின்றபடி அடியேன் அலறிக்கொண்டிருப்பதை யாரேனும் அன்போடு உன்னிடத்தில் வந்து தெரிவிப்பார்களா?

உனது பததூள் புவன கிரிதான் உனது கிருபாகரம் ஏதோ... (உன்னுடைய விஸ்வரூபத்தில்) உன்னுடைய திருப்பாதத்தில் ஒட்டிக்கொண்டிருக்கின்ற தூசு, பூமியிலுள்ள மலைகளுக்குச் சமமாக இருக்குமென்றால், உன்னுடைய திருவருளின் தன்மை எவ்வளவு பெரிதாக இருக்குமோ (அடியேன் அறியேன்);

பரம குருவாய் அணுவில் அசைவாய் பவன முதலாகிய பூதப் படையும் உடையாய்... பரம குருவாக இருப்பவனே; அணுக்களிலே இயங்கும் இயக்கமாகவும் இருப்பவனே; காற்று முதலான ஐம்பூதங்களையும் சேனைகளாகக் கொண்டுள்ளவனே;

சகல வடிவாய் பழைய வடிவாகியவேலா... எல்லா வடிவங்களுமாக உள்ளவனே; தொன்மையான வடிவமாகவும் விளங்குகின்ற வேலா!

அரியும் அயனோடு அபயம் எனவே அயிலை யிருள்மேல் விடுவோனே...திருமாலும் பிரமனும் உன்னிடத்தில் அடைக்கலம் புக, இருளின் வடிவத்தை எடுத்த சூரனின்மேல் உன்னுடைய வேலை வீசியவனே!

அடிமை கொடுநோய் பொடிகள் படவே அருண கிரிவாழ் பெருமாளே.... அடியேனுடைய பொல்லாத நோயை நீக்கியவனே!* திருவண்ணாமலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

(* இது அருணகிரிநாதரைப் பீடித்திருந்த தொழுநோயைக் குறிக்கிறது; குருநாதர் தன் அனுபவம் கூறுகிறார் என்பார் உரையாசிரியர் குகத்திரு செங்கல்வராய பிள்ளையவர்கள்.)

சுருக்க உரை

மேலான குருமூர்த்தியே! அணுக்களுக்குள்ளே அசைவை ஏற்படுத்துபவனே!  எல்லா வடிவங்களுமாய் இருப்பனே! பழைமை முதல் புதுமை வரையில் எல்லா வடிவங்களுமாக இருப்பவனே!  திருமாலும் பிரமனும் உன்னிடத்திலே அடைக்கலம் புகுந்தபோது, இருளின் வடிவத்தை எடுத்த சூரபத்மனின் மீது உன்னுடைய வேலை வீசியவனே!  அடியேனைப் பீடித்திருந்த கொடிய நோயைப் போக்கியவனே! திருவண்ணாமலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

நீ உன்னுடைய தேவியர் இருவரின் மீதும் கொண்டுள்ள ஆசையாலோ அல்லது உன் ஆலயங்களில் நடைபெறும் திருவிழாக்களில் எழுகின் ஆரவாராத்தாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தாலோ, உன்னை அணுக முடியாத முனிவர்களும் பிரமனும் திருமாலும் உன்னுடைய அடியார்களும் உன்னிடத்திலே முறையிட்டு அலறும் ஓசை உன்னுடைய திருச்செவிகளிலே விழாதபோது, இங்கே தனியொருவனாக அடியேன் முறையிட்டுக் கூவிக்கொண்டிருப்பதை என்மீது அன்புகொண்டு யார்தான் உன்னிடத்தில் வந்து தெரிவிக்கப்போகின்றார்கள்! உன்னுடைய விஸ்வரூபத்தின்போது இந்த பூவுலகில் உள்ள மலைகளே உன் திருவடியில் ஒட்டிக்கொண்டிருக்கும் தூசின் அளவாக இருக்கும் என்றால் உன்னுடைய திருவருளின் தன்மை எப்படிப்பட்டது என்பதை அறியேன்.  (அடியேனால் அறியமுடியாத உன்னுடைய கிருபாசாகரத்தில் அடியேன் முழுகவேண்டும்.)

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/02/பகுதி---881-2971556.html
2971554 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 880 ஹரி கிருஷ்ணன் Tuesday, July 31, 2018 03:34 PM +0530  

‘உன்னுடைய கிருபையைப் பெறவேண்டும்’ என்று கோருகின்ற இப்பாடல் திருவண்ணாமலைக்குரியது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்து, ஒரு நெடில் என மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

 

தனன தனனா தனன தனனா

      தனன தனனா                      தனதான

 

இருவர் மயலோ அமளி விதமோ

         எனென செயலோ                அணுகாத

      இருடி அயன்மா லமர ரடியா

         ரிசையு மொலிதா                னிவைகேளா

தொருவ னடியே னலறு மொழிதா

         னொருவர் பரிவாய்               மொழிவாரோ

      உனது பததூள் புவன கிரிதா

         னுனது கிருபா                   கரமேதோ

பரம குருவா யணுவி லசைவாய்

         பவன முதலா                   கியபூதப்

      படையு முடையாய் சகல வடிவாய்

         பழைய வடிவா                   கியவேலா

அரியு மயனோ டபய மெனவே

         அயிலை யிருள்மேல்            விடுவோனே

      அடிமை கொடுநோய் பொடிகள் படவே

         அருண கிரிவாழ்                 பெருமாளே.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/aug/01/பகுதி---880-2971554.html
2967612 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 879 ஹரி கிருஷ்ணன் DIN Friday, July 27, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

இரவு பகல் பல காலும்

 

இயல் இசை தமிழ் கூறி

 

 

திரம் அதனை தெளிவு ஆக

திரம் அதனை: நிலைத்திருப்பதை;

திரு அருளை தருவாயே

 

 

பரம கருணை பெரு வாழ்வே

 

பர சிவ தத்துவ ஞானா

 

 

அரன் அருள் சற் புதல்வோனே

 

அருண கிரி பெருமாளே.

 

 

இரவுபகற் பலகாலும் இயலிசைமுத்தமிழ்கூறி... இரவு பகல் இரண்டு வேளைகளிலும் பற்பல முறை இயல், இசை நாடகம் என்ற மூன்ற தமிழாலும் உன்னைப் போற்றிப் பாடுவதால்,

திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே... எது நிலையான பொருளோ அதை நான் தெளிவாக உணரும்படி உன்னுடைய திருவருளைத் தந்தருள வேண்டும்.

பரகருணைப் பெருவாழ்வே... மேலான கருணையோடு விளங்குகின்ற பெருவாழ்வே!

பரசிவதத்துவஞானா... உயர்ந்த சிவமயமானதும் உண்மையானதுமான ஞானப் பொருளே!

அரனருள்சற் புதல்வோனே... சிவபெருமான் அருளிய நன் மகனே!

அருணகிரிப் பெருமாளே.... திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

மேலான கருணையோடு விளங்குகின்ற பெருவாழ்வே!  உயர்ந்த சிவமயமானதும் உண்மையானதுமான ஞானப் பொருளே! சிவபெருமான் அருளிய நன்மகனே!  திருவண்ணாமலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

இரவு பகல் இரண்டு வேளையும் அடியேன் உன்னை இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழால் போற்றிப் பரவவேண்டும்.  நீ எனக்கு நிலையான பொருள் எதுவோ அதை உணர்வதற்கான தெளிவைத் தந்தருள வேண்டும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jul/27/பகுதி---879-2967612.html
2967610 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 878 ஹரி கிருஷ்ணன் DIN Thursday, July 26, 2018 12:00 AM +0530  

‘திருவருளைப் பெறவேண்டும்’ என்று கோருகின்ற இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.

நான்கே சீர்களைக் கொண்டு, தொங்கல் சீர் இல்லாமல் அமைந்திருக்கும் இப்பாட்டில் அடிக்கு ஒற்றொழித்து 18 எழுத்துகள் உள்ளன. ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் மூன்று குறிலும் ஒரு நெடிலுமாக நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.

 

தனதனனத் தனதான

      தனதனனத் தனதான

                                               

இரவுபகற் பலகாலும்

      இயலிசைமுத் தமிழ்கூறித்          

திரமதனைத் தெளிவாகத்

      திருவருளைத் தருவாயே

பரகருணைப் பெருவாழ்வே

      பரசிவத் துவஞானா

அரனருள்சற் புதல்வோனே

      அருணகிரிப் பெருமாளே.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jul/26/பகுதி---878-2967610.html
2966844 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 876 ஹரி கிருஷ்ணன் Tuesday, July 24, 2018 11:09 AM +0530  

‘அடியேன் கலைஞானங்களைப் பெற வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.

அடிக்கு ஒற்றொழித் 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் இரண்டு குறில், ஒரு நெடில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என மூன்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குறில், இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்று என மூன்றெழுத்துகளும் உள்ளன.  ஆறாவது சீரில் மட்டும் ‘தனத்தத்’ என்றும் ‘தத்தத்’ என்றும் குழிப்பு மாறுபடுவதால் சில இடங்களில் இரண்டு குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளுமாக அமைந்துள்ளன. இதைப்போலவே இரண்டாம் அடியின் முதற் சீரும் லேசான மாற்றத்தைக் கொண்டிருக்கிறது.

தனத்தா தனத்தத் தனத்தா தனத்தத்

      தனத்தா தனத்தத்                   தனதான

 

அருக்கார் நலத்தைத் திரிப்பார் மனத்துக்

         கடுத்தாசை பற்றித்               தளராதே

      அடற்கா லனுக்குக் கடைக்கால் மிதித்திட்

         டறப்பே தகப்பட்                  டழியாதே

கருக்காரர் நட்பைப் பெருக்கா சரித்துக்

         கலிச்சா கரத்திற்                 பிறவாதே

      கருத்தா லெனக்குத் திருத்தா ளளித்துக்

         கலைப்போ தகத்தைப்            புகல்வாயே

ஒருக்கால் நினைந்திட் டிருக்கால் மிகுந்திட்

         டுரைப்பார்கள் சித்தத்             துறைவோனே

      உரத்தோ ளிடத்திற் குறத்தேனை வைத்திட்

         டொளித்தோடும் வெற்றிக்        குமரேசா

செருக்கா தருக்கிச் சுரச்சூர் நெருக்கச்

         செருச்சூர் மரிக்கப்                பொரும்வேலா

      திறப்பூ  தலத்திற் றிரட்சோ ணவெற்பிற்

         றிருக்கோ புரத்திற்               பெருமாளே.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jul/24/பகுதி---876-2966844.html
2966846 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 877 ஹரி கிருஷ்ணன் Tuesday, July 24, 2018 11:09 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

அருக்கார் நலத்தை திரிப்பார் மனத்துக்கு அடுத்த ஆசை பற்றி தளராதே

 

அருக்குஆர்: அருமை வாய்ந்த; நலத்தை: உடல் நலத்தை; திரிப்பார்: கெடுப்பார்; மனத்துக்கு அடுத்த ஆசை: மனம் விரும்பியேற்ய ஆசை;

அடல் காலனுக்கு கடை கால் மிதித்திட்டு அற பேதகப் பட்டு அழியாதே

 

அடல்:  வலிய; காலனுக்கு: யமனுக்கு; கடைக்கால்: அந்திமக் காலத்தில்; மிதித்திட்டு: அடிப்படையை ஏற்படுத்தி; பேதகப்பட்டு: மனவேறுபாடு கொண்டு;

கருக்காரர் நட்பை பெருக்கா சரித்து கலி சாகரத்தில் பிறவாதே

 

கருக்காரர்: பிறவிக்கு ஏதுவாகின்றவர்கள்; பெருக்கா: மிகவும்; சரித்து: கைக்கொண்டு; கலிச் சாகரத்தில்: கலியாகிய கடலில் (துன்பக் கடலில்);

கருத்தால் எனக்கு திரு தாள் அளித்து கலை போதகத்தை புகல்வாயே

 

போதகத்தை: ஞானத்தை;

ஒருக்கால் நினைந்திட்டு இருக்கால் மிகுத்திட்டு உரைப்பார்கள் சித்தத்து உறைவோனே

 

ஒருக்கால் நினைந்திட்டு: ஒருமுறை உன்னை நினைத்து; இருக்கால் மிகுத்திட்டு: உன் இரு கால்களையும் மிகுதியாக;

உர தோள் இடத்தில் குற தேனை வைத்திட்டு ஒளித்து ஓடும் வெற்றி குமரேசா

 

உரத்தோள் இடத்தில்: வலிமையுள்ள தோளிலே; குறத்தேனை: வள்ளியை; வைத்திட்டு ஒளித்து ஓடும்: சுமந்தபடி மறைவாக ஓடியவனே;

செருக்கால் தருக்கி சுர சூர் நெருக்கு அ செரு சூர் மரிக்க பொரும் வேலா

 

சுரச்சூர்: தெய்வத் தன்மை கொண்ட தேவர்களை;

திற பூதலத்தில் திரள் சோண வெற்பில் திரு கோபுரத்தில் பெருமாளே.

 

திரள்: (தீயுருவாகத்) திரண்ட;

அருக்கார் நலத்தை திரிப்பார் மனத்துக்கு அடுத்த ஆசை பற்றித் தளராதே... அருமை நிறைந்த (உடல்) நலத்தைக்  கெடுப்பவர்களான விலைமாதர்களின் மேல் மனம் இசைந்த ஆசையைக் கொண்டு சோர்வடையாமலும்;

அடல் காலனுக்கு கடைக் கால் மிதித்திட்டு அறப் பேதகப் பட்டு அழியாதே... வலியவனான யமனுக்கு என்னுடைய இறுதிக் காலத்தில் என் உயிரைக் கவர்வதற்கான அடிப்படையை ஏற்படுத்திக் கொடுத்து அதனால் மனவேறுபாடு அடைநது நான் அழியாமலும்;

கருக்காரர் நட்பை பெருக்கா சரித்து கலிச் சாகரத்தில் பிறவாதே... பிறவிக்குக் காரணமான செயல்களை உடையவர்களுடைய நட்பை மிகவும் கைக்கொண்டு துன்பக் கடலில் பிறக்காமலும்;

கருத்தால் எனக்குத் திருத் தாள் அளித்து கலைப் போதகத்தைப் புகல்வாயே... என்மீது அன்பு வைத்து உனது திருவடியைத் தந்தருளி, கலை ஞானத்தை அடியேனுக்க உபதேசித்து அருளவேண்டும்.

ஒருக்கால் நினைத்திட்டு இருக்கால் மிகுத்திட்டு உரைப்பார்கள் சித்தத்து உறைவோனே... உன்னை ஒருமுறை தியானித்து, உன் இரண்டு திருவடிகளையும் போற்றி உரைப்பவர்களுடைய மனத்தில் உறைபவனே!

உரத் தோள் இடத்தில் குறத் தேனை வைத்திட்டு ஒளித்து ஓடும் வெற்றிக் குமரேசா... வலிமையுள்ள தோளிலே இனிமையான குறப்பெண்ணைத் தூக்கிக் கொண்டு மறைவாக ஓடிய வெற்றிக் குமரேசா!

செருக்கால் தருக்கி சுரச் சூர் நெருக்கு அச் செருச் சூர் மரிக்கப் பொரும் வேலா... ஆணவத்தால் தெய்வத் தன்மையை உடைய தேவர்களை ஒடுக்கி; போருக்கு வந்த அந்தச் சூரன் இறக்கும்படியாகப் போரிட்ட வேலனே!

திறப் பூதலத்தில் திரள் சோண வெற்பில் திருக் கோபுரத்தில் பெருமாளே.... நிலைபெற்ற இந்த உலகத்திலே அக்கினியின் உருவாகத் திரண்டிருக்கும் திருவண்ணாமலையின் திருக்கோபுரத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

உன்னை ஒருமுறை தியானித்து, உன்னுடைய இரண்டு பாதங்களையும் போற்றுபவர்களுடைய மனத்தில் உறைபவனே!  வலிமை மிகுந்த தோள்களிலே குறப் பெண்ணான வள்ளியைத் தூக்கிக்கொண்டு மறைவாக ஓடிய வெற்றிக் குமரேசா!  ஆணவத்தால் தேவர்களை ஒடுக்கி, போருக்கு எழுந்த சூரன் இறக்கும்படியாகப் போரிட்ட வேலனே! நிலைபெற்ற இந்த உலகத்திலே அக்கினியின் உருவாகத் திரண்டிருக்கின்ற திருவாண்ணாமலையின் திருக் கோபுரத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

அருமை வாய்ந்த உடல் நலத்தைக் கெடுப்பவர்களான பொதுப் பெண்டிரின் மீது மனம் வைத்திருக்கும் ஆசையால் தளர்ச்சி அடையாமலும்; வலிமை வாய்ந்த காலனுக்கு என் அந்திம காலத்தில் என் உயிரைப் பறிப்பதற்கான அடிப்படையை ஏற்படுத்திக் கொடுத்து மனவேறுபாடுற்று அழியாமலும்; மீண்டும் பிறக்கச் செய்கின்ற செயல்களை மேற்கொண்டிருப்பவர்களுடைய நட்பைப் பெருக்கிக்கொண்டு துன்பக் கடலுக்குள் மீண்டும் பிறவமலும்

என்மீது நீ மனம் வைத்து, உனது திருத்தாளைத் தந்து, கலை ஞானத்தையும் உபதேசிக்க வேண்டும்.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jul/25/பகுதி---877-2966846.html
2964883 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 875 ஹரி கிருஷ்ணன் Monday, July 23, 2018 01:14 PM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

இருவினை ஊண் பசும் பை கரு விளை கூன் குடம்பை இடர் அடை பாழ் பொதும்பு அகித வாரி

 

ஊண்: உணவு; பசும்பை: புதிய பை; கூன் குடம்பை: கூன்விழுந்த, கோணலான கூடு; பொதும்பு: குகை; அகித(ம்): தகாதது, தீமை; வாரி: கடல்;

இடை திரி சோங்கு கந்தம் மது அது தேங்கு கும்பம் இரவு இடை தூங்குகின்ற பிண நோவுக்கு

 

இடைதிரி: (கடலுக்கு) நடுவிலே திரியும்; சோங்கு: மரக்கலம்; கந்தம்: மலச்சேறு; மது: நீர் (சிறுநீர்); கும்பம்: குடம்;

உருவு இயல் பாண்டம் அஞ்சும் மருவிய கூண்டு நெஞ்சொடு உயிர் குடி போம் குரம்பை அழியாது என்று

 

அஞ்சும் மருவிய கூண்டு: ஐம்புலன்களும் பொருந்தியிருக்கிற கூடு; குரம்பை: சிறுகுடில்;

உலகுடன் ஏன்று கொண்ட கரும பிராந்தி ஒழிந்து உன் உபய பதாம் புயங்கள் அடைவேனோ

 

ஏன்றுகொண்ட: ஏற்றுக்கொண்ட; கரும பிராந்தி: வினை மயக்கம்; உபய: இரண்டு; பதாம்புயங்கள்: திருவடித் தாமரைகள்;

அருணையில் ஓங்கு துங்க சிகரம் கராம் புயங்கள் அமரர் குழாம் குவிந்து தொழ வாழும்

 

அருணை: திருவண்ணாமலை; துங்க: தூய; சிகரம்: மலை; கராம்புயங்கள்: கர அம்புயங்கள்—கரமாகிய தாமரைகள்;

அடியவர் பாங்க பண்டு புகல் அகிலாண்டம் உண்ட அபிநவ சார்ங்க கண்டன் மருகோனே

 

பாங்க: தோழனே; பண்டு புகல்: முற்காலத்திலிருந்து சொல்லப்படுகின்ற; அபிநவ: புதுமையான; சார்ங்க: சார்ங்கம் என்னும் வில்லை ஏந்திய; கண்டன்: வீரன் (திருமால்);

கருணை ம்ருகேந்த்ர அன்பருடன் உரகேந்த்ரர் கண்ட கடவுள் நடேந்த்ரர் மைந்த வரை சாடும்

 

ம்ருகேந்த்ர: மிருகசிரேஷ்டரான வியாக்ரபாதர்—புலிக்கால் முனிவர்; உரகேந்த்ரர்: (உரகம்: பாம்பு) பாம்பு வடிவான—பதஞ்சலி முனிவர்; நடேந்த்ரர்: நடனத்தின் தலைவன்—நடராஜன்; வரை சாடும்: மலைகளைத் தூளாக்கும்;

கலபக கேந்த்ர தந்த்ர அரச நிசேந்த்ர கந்த குலிச கர இந்த்ரர் தங்கள் பெருமாளே.

 

கலபக: தோகையை உடைய—மயில்வாகனனே!; கேந்த்ர தந்த்ர: நூல்களில் வல்லவனான; நிசேந்த்ர: நிஜ இந்த்ர—சத்தியத்தின் தலைவனே; குலிசகர: வஜ்ராயுதத்தை ஏந்திய;

இருவினை ஊண் பசும் பை கரு விளை கூன் குடம்பை இடர் அடை பாழ் பொதும்பு... இருவினைகளும் தின்பதற்கான உணவை அடக்கிய புதுவிதமான பையும்; கரு வளர்வதற்கு இடமான வளைசலான பாத்திரமும்; துன்பங்களையே அடைத்து வைத்திருக்கிறதும், பாழடையப் போவதுமான குகையும்;

அகித வாரி இடை திரி சோங்கு கந்தம் மது அது தேங்கு கும்பம்... தகாதனவாகிய கடலுக்கு நடுவே திரிகின்ற மரக்கலமும்; மலமும் மூத்திரமும் நிரம்பியுள்ள குடமும்;

இரவு இடை தூங்குகின்ற பிண நோவுக்கு உருவு இயல் பாண்டம்... இரவிலே தூங்குகின்ற பிணமானதும்; நோவே வடிவாக அமைந்ததுமான பாத்திரமும்;

அஞ்சும் மருவிய கூண்டு... ஐம்பூதங்களும் பொருந்தியிருக்கிற கூடும்;

நெஞ்சொடு உயிர் குடி போம் குரம்பை அழியாது என்று... என் மனமும் உயிரும் குடியிருக்கும் சிறு குடிலுமான இந்த உடல் அழியாமல் நிலைத்து நிற்குமென்று,

உலகுடன் ஏன்று கொண்ட கரும பிராந்தி ஒழிந்து உன் உபய பதாம் புயங்கள் அடைவேனோ... வினைப் பயனால் வருவதும்; உலகத்தாரிடம் நான் ஏற்றுக்கொண்டுள்ளதுமான மயக்கம் நீங்கப்பெற்று உன்னுடைய இரு திருவடித் தாமரைகளை அடையப்பெறுவேனோ? (உன் திருப்பாதங்களை அடியேன் அடைய வேண்டும்.)

அருணையில் ஓங்கு துங்க சிகரம் கராம் புயங்கள் அமரர் குழாம் குவிந்து தொழ வாழும் அடியவர் பாங்க .... திருவண்ணாமலையில் ஓங்கி நிற்கின்ற, தூயதான கோபுரத்தைச் சூழ்ந்திருக்கும் தேவர்கள், தங்கள் தாமரைக் கரங்களைக் குவித்து வணங்குகின்றவனே! அடியார்கள் தோழனே!

பண்டு புகல் அகிலாண்டம் உண்ட அபிநவ சார்ங்க கண்டன் மருகோனே... சொல்லப்படுகின்ற எல்லா உலகங்களையும் முன்னொரு காலத்தில் விழுங்கியவனும்; புதுமை நிறைந்த சார்ங்கம் என்னும் வில்லை ஏந்திய வீரனுமான திருமாலின் மருகனே!

கருணை ம்ருகேந்த்ர அன்பருடன் உரகேந்த்ரர் கண்ட கடவுள் நடேந்த்ரர் மைந்த... கருணை நிறைந்தவரான புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரும்; சர்ப்ப உத்தமரான பதஞ்சலி முனிவரும் தரிசிக்கும்படியாக* நடனமாடிய நடராஜரின் மைந்தனே!

(* சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாதரும் கண்டு தரிசிக்கும்படியாக இறைவன் நடமாடியருளினான் என்பது புராணம்.)

வரை சாடும் கலபக கேந்த்ர தந்த்ர அரச நிசேந்த்ர கந்த குலிச கர இந்த்ரர் தங்கள் பெருமாளே.... மலைகளைப் பொடியாக்கும் தோகையை உடைய மயிலை வாகனமாகக் கொண்டவனே! நூல்களில் வல்லவனே! அரசே! சத்தியத்தின் தலைவனே! கந்தனே! கையிலே வஜ்ராயுதத்தைத் தாங்குபவனான இந்திரனுடைய தலைவனாகிய பெருமாளே!

சுருக்க உரை

திருவண்ணாமலையில் உயர்ந்தோங்கிய, பரிசுத்தமான கோபுர வாயிலில் வீற்றிருப்பவனே! தேவர்கள் தங்கள் தாமரையைப் போன்ற கைகளைக் குவித்துத் தொழுகின்றவனே! அடியவர் தோழனே!  முன்னொரு காலத்தில் எல்லா அண்டங்களையும் உண்டவனும் புதுமையான சார்ங்கம் என்ற வில்லைக் கொண்டவனுமான திருமால் மருகனே! கருணை நிறைந்த வியாக்ரபாதரும் பதஞ்சலியும் கண்டு தரிசிக்கும்படி நடனம் புரிந்தருளிய நடராஜரின் மைந்தனே!  மலைகளைத் தூளடிக்கின்ற தோகையை உடைய மயிலை வாகனமாகக் கொண்டவனே! சத்தியத்தின் தலைவனே! கந்தனே!  கையிலே வஜ்ரப் படையைத் தாங்கியிருக்கின்ற இந்திரனுடைய தலைவனான பெருமாளே!

இருவினைகளுக்கு உணவாக அமைந்திருக்கின்ற பையும்; கரு வளர்வதற்கு இடமான கோணலான பாத்திரமும்; துன்பங்களையே அடைத்து வைத்திருப்பதும் பாழாய்ப் போவதுமான குகையும்; தகாதனவையாகிய கடலுக்கு நடுவே செல்கின்ற மரக்கலமும்; மலத்தாலும் மூத்திரத்தாலும் நிறைந்துள்ள குடமும்; இரவிலே தூங்குகின்ற பிணம்போன்ற நோய்க்க உருவாக அமைந்த பாத்திரமும்; ஐந்து பூதங்களும் பொருந்தியிருக்கின்ற கூடும்; உயிரும் மனமும் குடியிருக்கும் சிறுகுடிலுமான இந்த உடல் அழியாமல் நிலைத்திருக்குமென்று இந்த உலகத்தாரோடு நான் ஏற்றுக்கொண்டுள்ள வினையின் பயனால் வருகின்ற மயக்கத்தை ஒழித்து அடியேன் உன்னுடைய திருவடித் தாமரைகளை அடைவேனோ? (அடியேன் உன்னுடைய திருவடித் தாமரைகளை அடையுமாறு அருளவேண்டும்.)

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/7/w600X390/1465.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jul/23/பகுதி---875-2964883.html
2964882 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 874 ஹரி கிருஷ்ணன் Saturday, July 21, 2018 05:46 PM +0530  

‘உனது திருவடிகளை அடையவேண்டும்’ என்று கோருகின்ற இப்பாடல் திருவண்ணாமலைக்குரியது. 

அடிக்கு ஒற்றொழித்து 32 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடில், மூனறு குறில், இரண்டு (கணக்கில் சேராத) மெல்லொற்றுகள் என நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனதன தாந்ததந்த தனதன தாந்ததந்த

      தனதன தாந்ததந்த                  தனதான

 

இருவினை யூண்பசும்பை கருவிளை கூன்குடம்பை

         யிடரடை பாழ்ம்பொதும்ப         கிதவாரி

      இடைதிரி சோங்குகந்த மதுவது தேங்குகும்ப

         மிரவிடை து|ங்குகின்ற           பிணநோவுக்

குருவியல் பாண்டமஞ்சு மருவிய கூண்டுநெஞ்சொ

         டுயிர்குடி போங்குரம்பை          யழியாதென்

      றுலகுட னேன்று கொண்ட கருமபி ராந்தொழிந்து

         னுபயப தாம்புயங்க               ளடைவேனோ

அருணையி லோங்குதுங்க சிகரக ராம்புயங்க

      ளமரர் குழாங்குவிந்து               தொழவாழும்

      அடியவர் பாங்கபண்டு புகலகி லாண்டமுண்ட

         அபிநவ சார்ங்ககண்டன்          மருகோனே

கருணைம்ரு கேந்த்ரஅன்ப ருடனுர கேந்த்ரர்கண்ட

         கடவுள்ந டேந்த்ரர்மைந்த         வரைசாடுங்

      கலபக கேந்த்ரதந்த்ர அரசநி சேந்த்ரகந்த

         கரகுலி சேந்த்ரர்தங்கள்           பெருமாளே.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jul/22/பகுதி---874-2964882.html
2964145 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 873 ஹரி கிருஷ்ணன் DIN Saturday, July 21, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

கரு பற்றி பருத்து ஒக்க தரைக்கு உற்றிட்டு உரு பெற்று கருத்தின் கண் பொருள் பட்டு பயில் காலம்

 

கருப்பற்றி: (ஒரு தாயின்) கருவைப் பற்றிக்கொண்டு; பருத்து: வளர்ந்து;

கணக்கிட்டு பிணக்கிட்டு கதித்திட்டு கொதித்திட்டு கயிற்றிட்டு பிடித்திட்டு சமன் ஆவி

 

கணக்கிட்டு: ஆயுளைக் கணக்கிட்டு; பிணக்கிட்டு: மாறுபாடு கொண்டு; கதித்திட்டு: விரைந்து வந்து; கொதித்திட்டு: கோபம் கொண்டு; கயிற்றிட்டு: பாசக் கயிற்றை வீசி; பிடித்திட்டு: உயிரைக் கவர்ந்து; சமன்: யமன்;

பெருக்க புத்தியில் பட்டு புடை துக்க கிளை பின் போய் பிணத்தை சுட்டு அகத்தில் புக்கு அனைவோரும்

 

ஆவி பெருக்க: ஆவியைப் பிரிக்க; புடை: பக்கதிலுள்ள; துக்கக் கிளை: துக்கத்திலிருக்கும் உறவினர்கள்

பிறத்தல் சுற்றம் முற்று உற்றிட்டு அழைத்து தொக்கு அற கத்து பிறப்பு பற்று அற செச்சை கழல் தாராய்

 

பிறத்தல்: (அந்தப்) பிறப்பில்; தொக்கு: சருமம், தோல்—இங்கே உடல்; கத்து பிறப்பு: அழுது கதறும் பிறப்பு; செச்சை: வெட்சிப் பூ;

பொருப்பு கர்ப்பூர கச்சு தன பொற்பு தினை பச்சை புன கொச்சை குற தத்தைக்கு இனியோனே

 

 

புரத்தை சுட்டு எரித்து பற்றலர்க்கு பொற் பத துய்ப்பை புணர்த்து பித்தனை கற்பித்து அருள்வோனே

 

புரத்தை: திரிபுரத்தை;

செருக்கு அ குக்கரை குத்தி செரு புக்கு பிடித்து எற்றி சினத்திட்டு சிதைத்திட்டு பொரும் வீரா

 

குக்கர்: நாய்கள், நாய் போன்றவர்கள் (குக்கல்: நாய்);

திருத்தத்தில் புகழ் சுத்த தமிழ் செப்பு த்ரய சித்ர திரு கச்சி பதி சொக்க பெருமாளே.

 

 

கருப் பற்றிப் பருத்து ஒக்கத் தரைக்கு உற்றிட்டு உருப் பெற்று... ஒரு தாயுடைய கர்ப்பத்தை அடைந்து, வளர்ந்து, உரிய காலம் வந்ததும் பூமியை வந்தடடைந்து; அந்தந்தப் பருவங்களுக்கு உரிய உருவங்களை முறைப்படி அடைந்து;

கருத்தின் கண் பொருள் பட்டு பயில் காலம்... எண்ணத்திலே பொருள் சேர்ப்பதையே குறியாகக் கொண்டு காலத்தைச் செலுத்துகின்ற சமயத்திலே,

கணக்கிட்டுப் பிணக்கிட்டு கதித்திட்டுக் கொதித்திட்டுக்... ஆயுள் முடிந்ததைக் கணக்கிட்டுப் பார்த்து, மாறுபாடு கொண்டு விரைந்து வந்து, கோபித்து,

கயிற்றிட்டுப் பிடித்திட்டுச் சமன் ஆவி பெருக்க... பாசக் கயிற்றை வீசி, யமன் உயிரைப் பிரித்து எடுத்துச் செல்லும்போது (அது),

புத்தியில் பட்டுப் புடைத் துக்கக் கிளைப் பின் போய்... புத்தியில் உறைத்து, துக்கத்தில் ஆழ்ந்தபடி சுற்றியிருக்கின்ற உறவினர்கள் பின்னாலே வந்து,

பிணத்தைச் சுட்டு அகத்தில் புக்கு அனைவோரும்... பிணத்தை எரித்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பிவந்து எல்லோரும்,

பிறத்தல் சுற்றம் முற்று உற்றிட்டு அழைத்துத் தொக்கு அறக் கத்து... அந்தப் பிறவியில் சுற்றத்தார்களாக உள்ள அனைவரையும் வரும்படிச் செய்து, அவர்கள் உடல் சோர்ந்து தளரும்படியாக அழுது கரைகின்ற,

பிறப்புப் பற்று அறச் செச்சைக் கழல் தாராய்...பிறவி என்பதில் உள்ள பற்று நீங்கும்படியாக, வெட்சிமாலையால் சூழப்பட்ட உனது திருவடிகளைத் தந்தருள வேண்டும்.

பொருப்புக் கர்ப்புரக் கச்சுத் தனப் பொற்புத் தினைப் பச்சைப்புன... மலையை ஒத்ததும் கற்பூரத்தையும் கச்சையும் அணிந்ததும் அழகுள்ளதுமான மார்பகத்தை உடையவளும்; பசுமையான தினைப்புனத்தைக் காத்தவளும்;

கொச்சைக் குறத் தத்தைக்கு இனியோனே... மழலைச் சொல்லைப் பேசுபவளுமான குறக்கிளியான வள்ளிக்கு இனியவனே!

புரத்தைச் சுட்டு எரித்துப் பற்றலர்க்குப் பொற் பதத் துய்ப்பை... திரிபுரங்களைச் சுட்டெரித்துப் பகைவர்களாயிருந்த திரிபுராதிகளுக்கு மேலான பதவி நுகர்ச்சியை,

திரி புரங்களைச் சுட்டு எரித்து, திரிபுரங்களில் பற்று இல்லாமல் சிவ வழிபாட்டில் இருந்த மூவர்க்கு* மேலான பதவி நுகர்ச்சியை 

புணர்த்து அப்பித்தனைக் கற்பித்து அருள்வோனே... கூட்டிவைத்த பித்தனாகிய சிவபெருமானுக்கு (குருவாக நின்று) பிரணவப் பொருளை ஓதுவித்து அருளியவனே!

செருக்கு அக் குக்கரைக் குத்திச் செருப் புக்குப் பிடித்து எற்றி... செருக்குடைய நாயைப் போல இழிந்தவர்களான அசுரர்களைக் குத்தியும் போருக்குச் சென்று பிடித்து எற்றியும்,

சினத்திட்டுச் சிதைத்திட்டுப் பொரும் வீரா... கோபித்து அழிவடையச் செய்து போரிட்ட வீரனே!

திருத்தத்தில் புகல் சுத்தத் தமிழ்ச் செப்புத் த்ரய... பிழையில்லாமல் ஓதப்படும் சுத்தமான முத்தமிழால் சொல்லப்படுகின்ற,

சித்ரத் திருக் கச்சிப் பதிச் சொக்கப் பெருமாளே.... சிறப்பு வாய்ந்ததும் மேன்மையானதுமான கச்சிப்பதியில் வீற்றிருக்கின்ற அழகிய பெருமாளே!

சுருக்க உரை

மலையைப் போன்றதும் கற்பூரத்தையும் கச்சையும் அணிந்ததுமான மார்பகத்தை உடையவளும்; மழலை பேசுபவளும்; தினைப்புனத்தைக் காத்தவளுமான வள்ளிக்கு இனியவனே! திரிபுரங்களை எரித்த சிவபெருமானுக்குப் பிரணவப் பொருளை குருவாக நின்று உரைத்தவனே! செருக்குடையவர்களும் நாயிலும் கடையவர்களுமான அசுரர்களை அழித்தவனே! பிழையில்லாமல் ஓதப்படும் சுத்மான முத்தமிழால் சொல்ப்படுகின்ற சிறப்பை உடையதும் மேன்மையானதமான கச்சிப்பதியில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

தாயின் கருவில் தோன்றி, வளர்ந்து, காலக் கணக்குப்படி பத்து மாதங்களில் பிறந்து, பொருள்தேடி வாழ்ந்து, வாழ்நாளைச் செலவழிக்கின்ற சமயத்தில், ஆயுள் முடிந்தது என்பதைக் கணக்கிட்டு யமன் வந்து பாசக்கயிற்றை வீசி, உயிரைப் பிரித்தெடுத்துச் சென்ற பிறகு, சுற்றத்தார் அனைவரும் துக்கமடைந்து, பிணத்தை எரித்து வீட்டுக்குத் திரும்புகின்ற இயல்பையுடைய இந்தப் பிறவிச் சுழற்சியில் உள்ள பற்று நீங்கும்படியாக வெட்சிமாலையைப் புனைந்த உன் திருப்பாதங்களைத் தந்தருள வேண்டும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jul/21/பகுதி---873-2964145.html
2964141 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 872 ஹரி கிருஷ்ணன் Friday, July 20, 2018 11:07 AM +0530  

‘என்னுடைய பற்றுகள் அற்றுப்போக வேண்டும்’ என்று வேண்டும் இப் பாடல் காஞ்சீபுரத்துக்கானது,

அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று முதல் ஆறு வரையில் உள்ள எல்லாச் சீர்களிலும் சம அளவில் நான்கு-நான்கு குற்றெழுத்துகளும்; மூன்று-மூன்று (கணக்கில் சேராத) வல்லொற்றுகளுமாக அமைந்துள்ளன.

தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்

      தனத்தத்தத் தனத்தத்தத்             தனதான

 

கருப்பற்றிப் பருத்தொக்கத் தரைக்குற்றிட் டுருப்பெற்றுக்

         கருத்திற்கட் பொருட்பட்டுப்       பயில்காலங்

      கணக்கிட்டுப் பிணக்கிட்டுக் கதித்திட்டுக் கொதித்திட்டுக்

         கயிற்றிட்டுப் பிடித்திட்டுச்         சமனாவி 

பெருக்கப்புத் தியிற்பட்டுப் புடைத்துக்கக் கிளைப்பிற்பொய்ப்

         பிணத்தைச்சுட் டகத்திற்புக்       கனைவோரும்

      பிறத்தற்சுற் றமுற்றுற்றிட் டளைத்துத்தொக் கறக்கத்துப்

         பிறப்புப்பற் றறச்செச்சைக்         கழல்தாராய்

பொருப்புக்கர்ப் புரக்கச்சுத் தனப்பொற்புத் தினைப்பச்சைப்

         புனக்கொச்சைக் குறத்தத்தைக்    கினியோனே

      புரத்தைச்சுட் டெரித்துப்பற் றலர்க்குப்பொற் பதத்துய்ப்பைப்

         புணர்த்தப்பித் தனைக்கற்பித்      தருள்வோனே

செருக்கக்குக் கரைக்குத்திச் செருப்புக்குப் பிடித்தெற்றிச்

         சினத்திட்டுச் சிதைத்திட்டுப்       பொரும்வீரா

      திருத்தத்திற் புகற்சுத்தத் தமிழ்ச்செப்புத் த்ரயச்சித்ரத்

         திருக்கச்சிப் பதிச்சொக்கப்         பெருமாளே.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jul/20/பகுதி---872-2964141.html
2961956 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 871 ஹரி கிருஷ்ணன் Thursday, July 19, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

இருவினை அஞ்ச மல வகை மங்க இருள் பிணி மங்க மயில் ஏறி

 

இருவினை: நல்வினை, தீவினை; இருள் பிணி: அஞ்ஞானமும் நோயும்;

இன அருள் அன்பு மொழிய கடம்புவின் அதகமும் கொ(ண்)டு அளி பாடக்

 

கடம்புவின்: கடம்பின், கடப்ப மாலையின்; அதகமும்: உயிர் தரு மருந்தையும் (அதகம்: உயிர் தரு மருந்து); அளி பாட: வண்டுகள் பாட;

கரி முகன் எம்பி முருகன் என அண்டர் களி மலர் சிந்த அடியேன் முன்

 

கரிமுகன் எம்பி: யானைமுகன் தம்பியே; அண்டர்: தேவர்கள்; களி: களிப்புடன்;

கருணை பொழிந்து முகமும் மலர்ந்து கடுகி நடம் கொ(ண்)டு அருள்வாயே

 

கடுகி: விரைவில்; நடம் கொடு: நடனம் புரிந்து;

திரி புரம் மங்க மதன் உடல் மங்க திகழ் நகை கொண்ட விடை ஏறி

 

மதன் உடல் மங்க: மன்மதனுடைய சரீரம் அழிய; நகைகொண்ட: சிரித்த; விடையேறி: விடையை வாகனாமாகக் கொண்ட சிவபெருமான்;

சிவம் வெளி அங்கண் அருள் குடி கொண்டு திகழ நடம் செய்து எமை ஈண

 

சிவம்: சிவன்; வெளி அங்கண்: வெட்டவெளியின்கண்—வெட்டவெளியிலே; ஈண: ஈன்ற;

அரசி இடம் கொள் மழுவுடை எந்தை அமலன் மகிழ்ந்த குருநாதா

 

அரசி: உமையம்மை; இடம்கொள்: இடதுபாகத்தில் வைத்திருக்கும்; மழுவுடை எந்தை: மழுவை (கோடரியை) ஏந்திய தந்தயான;

அருணை விலங்கல் மகிழ் குற மங்கை அமளி நலம் கொள் பெருமாளே.

 

அருணை: திருவண்ணாமலை; விலங்கல்: மலை;

இருவினை யஞ்ச மலவகை மங்க இருள்பிணி மங்க மயிலேறி... என்னுடைய நல்வினையும் தீவினையும் அச்சம்கொண்டு நீங்கவும்; ஆணவ, கன்ம, மாயா மலங்கள் மங்கிப் போகவும்; நீ மயில் வாகனத்தில் ஏறிவந்து;

இனவருள் அன்பு மொழிய க டம்புவின் அதகமும் கொடு அளிபாட... அருள்வாக்குகளையும் அன்பான மொழிகளையும் சொல்ல; உன்னுடைய கடப்ப மாலையிலுள்ள உயிர்தரும் மருந்தாகிய தேனைச் சுற்றி வண்டுகள் மொய்த்து ரீங்காரமிட;

கரிமுகன் எம்பி முருகனென அண்டர் களிமலர் சிந்த அடியேன்முன்...விநாயகன், ‘என் தம்பியே, முருகா’ என்று அழைக்க; தேவர்கள் மகிழ்ச்சிகொண்டு மலர்களைத் தூவ; அடியேன் முன்னாலே,

கருணைபொழிந்து முகமும் மலர்ந்து கடுகி நடங்கொடு அருள்வாயே...கருணை நிறைந்தவனாகவும் மலர்ந்த முகத்தவனாகவும் விரைவில் நடனமாடியபடி எழுந்தருள் புரிய வேண்டும்.

திரிபுர மங்க மதனுடல் மங்க திகழ்நகை கொண்ட விடையேறிச்... திரிபுரங்கள் அழியவும்; மன்மதனுடைய உடல் எரியவும் புன்னகை புரிந்தருளியவனும்; விடையேறுபவனுமான,

சிவம் வெளி யங்கண்அருள் குடிகொண்டு திகழந டஞ்செய்து... சிவன் வெட்டவெளியில் (பரவெளியில்) பேரருளோடு திருநடனம் செய்து,

எமையீண் அரசியிடங்கொள மழுவுடை யெந்தை அமலன் மகிழ்ந்த குருநாதா... எம்மை ஈன்றவளான உமையம்மையை இடது பாகத்தில் வைத்தபடி, மழுவாயுதத்தை ஏந்தியிருப்பவனான எந்தையும், மாசற்றவனுமான (சிவபிரான்) மனம் மகிழ்ந்த குருநாதனே!

அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை அமளிந லங்கொள் பெருமாளே.... திருவண்ணாமலைக் குன்றிலிலே மகிழ்ந்திருக்கின்ற குறமங்கையின் மலர்ப் படுக்கையிலே நலம் துய்க்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

திரிபுரம் அழியும்படியும் மன்மதனுடைய உடல் எரியும்படியும் புன்னகை பூத்தருளியவரும்; விடையேறுபவரும்; எம்மை ஈன்றவளான உமையம்மையை இடதுபாகத்தில் வைத்திருப்பவரும் எந்தையும் நிமலருமான சிவபெருமான் மகிழ்ந்த குருநாதனே!  திருவண்ணாமலைக் குன்றிலே மகிழ்ந்திருக்கும் குறமங்கையின் மலர்ப் படுக்கையிலே நலம் துய்க்கின்ற பெருமாளே!

அடியேனுடைய இருவினைகளும் மும்மலங்களும் அஞ்ஞானமும் பிணிகளும் ஒழியும்படியாக மயில்மீது ஏறியமர்ந்துகொண்டு; அருள் நிறைந்த மொழிகளைப் பேசி; தேன் நிறைந்த கடப்ப மலர் மாலையில் வண்டுகள் மொய்த்தபடிப் பாட; ‘தம்பியே, முருகா!’ என்று விநாயகன் அழைக்க, தேவர்கள் மலர்மாரி பொழிய, நடனமாடும் கோலத்தில் அடியேன் எதிரிலே எழுந்தருள வேண்டும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jul/19/பகுதி---871-2961956.html
2961954 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 870 ஹரி கிருஷ்ணன் Tuesday, July 17, 2018 03:08 PM +0530  

 

‘அடியேன் முன் நடனம் புரிந்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் இரண்டு குறில், ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்று என இரண்டெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனதன தந்த தனதன தந்த

      தனதன தந்த                        தனதான

 

இருவினை யஞ்ச மலவகை மங்க

         இருள்பிணி மங்க                மயிலேறி

      இனவரு ளன்பு மொழியக டம்பு

         வினதக முங்கொ                டளிபாடக்

கரிமுக னெம்பி முருகனெ னண்டர்

         களிமலர் சிந்த                   அடியேன்முன்

      கருணைபொ ழிந்து முகமும லர்ந்து

         கடுகி நடங்கொ                  டருள்வாயே

திரிபுர மங்கை மதனுடல் மங்க

         திகழ்நகை கொண்ட              விடையேறிச்

      சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு

         திகழந டஞ்செய்                  தெமையீண

அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை

         அமலன்ம கிழ்ந்த                குருநாதா

      அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை

         அமளிந லங்கொள்               பெருமாளே.

 

 

 
 
 
]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/7/w600X390/1465.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jul/18/பகுதி---870-2961954.html
2961923 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 869 ஹரி கிருஷ்ணன் Tuesday, July 17, 2018 12:07 PM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

வரி சேர்ந்திடு சேல் கயலோ எனும் உழை வார்ந்திடு வேலையும் நீலமும் வடு வாங்கிடு வாள் விழி மாதர்கள் வலையாலே

 

வரி சேர்ந்திடு: செவ்வரி படர்ந்திருக்கின்ற; உழை: மான்; நீலம்: நீலோத்பலம்—கருங்குவளை; வடு: மாவடு; வாங்கிடு வாள்: வீசத் தயாராய் இருக்கின்ற வாள்;

வளர் கோங்கு இள மா முகை ஆகிய தன வாஞ்சையிலே முகம் மாயையில் வள மாந் தளிர் போல் நிறமாகிய வடிவாலே

 

இள மா முகை: இள மொட்டைப் போன்ற அழகிய;

இருள் போன்றிடு வார் குழல் நீழலில் மயல் சேர்ந்திடு பாயலின் மீது உற இனிதாம் கனி வாயமுது ஊறல்கள் பருகாமே

 

பாயல்: படுக்கை; குழல் நீழலில்: கூந்தலின் ஒளியாலும் (நீழல்: ஒளியென்றும் பொருள்);

எனது ஆம் தனது ஆனவை போய் அற மலமாம் கடு மோக விகாரமும் இவை நீங்கிடவே இரு தாள் இணை அருள்வாயே

 

 

கரி வா(வு)ம் பரி தேர் திரள் சேனையுடன் ஆம் துரியோதனன் ஆதிகள் களம் மாண்டிடவே ஒரு பாரதம் அதில் ஏகி

 

கரி: யானை; வாவும் பரி: தாவும் குதிரை; பாரதம் அதில் ஏறி: பாரதப் போர்க்களத்திலே ஈடுபட்டு;

கன பாண்டவர் தேர் தனிலே எழு பரி தூண்டிய சாரதி ஆகிய கதிர் ஓங்கிய நேமியனாம் அரி ரகுராமன்

 

கன பாண்டவர்: பெருமை வாய்ந்த பாண்டவர்; எழுபரி: ஏழு குதிரைகளை; தூண்டிய: நடத்திய; நேமியனாம்: சக்ராயுதத்தைக் கொண்டவனாம்;

திரை நீண்டு இரை வாரியும் வாலியும் நெடிது ஓங்கு மரா மரம் ஏழொடு தெசமாம் சிர ராவணனார் முடி பொடியாக

 

திரை: அலை; வாரியும்: கடல் (மீதும்); தெசமாம் சிர: பத்துத் தலைகளின் (மீதும்);

சிலை வாங்கிய நாரணனார் மருமகனாம் குகனே பொழில் சூழ் தரு திரு வேங்கட மா மலை மேவிய பெருமாளே.

 

சிலை வாங்கிய: வில்லை வளைத்த;

வரிசேர்ந்திடு சேல்கயலோவெனும் உழைவார்ந்திடு வேலையு நீலமும் வடுவாங்கிடு வாள்விழி மாதர்கள் வலையாலே... செவ்வரிகள் படர்ந்திருக்கின்ற சேல் மீனோ, கயல் மீனோ என்றும்; மானோ என்றும்; பெரிய கடலோ என்றும்; கருங்குவளை மலரோ என்றும்; மாவடுவோ என்றும்; உருவப்பட்ட வாளோ என்றும் (நினைக்கச் செய்கின்ற) கண்களை உடைய பெண்கள் விரித்திருக்கிற வலையாலும்;

வளர்கோங்கிள மாமுகை யாகிய தனவாஞ்சையிலே முக மாயையில் வளமாந்தளிர் போல்நிற மாகிய வடிவாலே... வளர்வதும்; கோங்கு மரத்தின் இளம் மொட்டைப் போன்றதுமான தனங்களின் மீது ஏற்பட்ட ஆசையாலும்; செழுமையான மாந்தளிரைப் போன்ற மேனி வண்ணத்தாலும் வடிவத்தாலும்;

இருள்போன்றிடு வார்குழல் நீழலில் மயல்சேர்ந்திடு பாயலின் மீதுற இனிதாங்கனி வாயமு தூறல்கள் பருகாமே... இருட்டைப் போல கறுத்திருக்கும் நீண்ட கூந்தலுடைய ஒளியாலும்; மயக்கத்தை ஏற்படுத்தும் படுக்கையின் மீது பொருந்தி; இனிய கோவைக் கனியைப் போன்ற இதழ்களில் ஊறுகின்ற அமுதத்தைப் பருகாதபடியும்;

எனதாந் தனதானவை போயற மலமாங் கடு மோகவிகாரமு மிவைநீங்கிடவே இரு தாளினை யருள்வாயே... ‘என்னுடையது’ ‘தன்னுடையது’ என்ற உணர்வுகள் அற்றுப் போகவும்; அசுத்தமான மோக விகாரங்களெல்லாம் அற்றுப் போகவும் உனது திருவடிகளைத் தந்தருள வேண்டும்.

கரிவாம்பரி தேர்திரள் சேனையும் உடனாந்துரி யோதன னாதிகள் களமாண்டிடவே யொரு பாரதம் அதிலேகி... யானைப் படையையும்; தாவிப் பாய்கின்ற குதிரைப் படையையும்; தேர்ப் படையையும்; திரண்ட காலாட் படையையும் கொண்டிருக்கும் துரியோதனாதியர் போர்க்களத்தில் மாண்டொழிய; ஒப்பற்ற பாரதப் போர்க்களத்துக்குச் சென்று,

கனபாண்டவர் தேர்தனி லே எழுபரிதூண்டிய சாரதி யாகிய கதிரோங்கிய நேமியனாம் அரி ரகுராமன்... பெருமை நிறைந்த பாண்டவ(னான அர்ஜுனனுடைய) தேரிலே (பூட்டப்பட்ட) ஏழு குதிரைகளை வழிநடத்திய சாரதியும்; ஒளிமிகுந்த சக்ராயுதத்தைக் கையில் தரித்தவனுமான ஹரி, ரகுராமனாகிய திருமாலும்,

திரைநீண்டிரை வாரியும் வாலியும் நெடிதோங்குமராமரம் ஏழொடு தெசமாஞ்சிர ராவணனார்முடி பொடியாக... அலைகள் மிகுந்து ஒலிக்கின்ற கடலையும்; வாலியையம்; ஓங்கி உயர்ந்த ஏழு மராமரங்களையும்; ராவணனுடைய பத்துத் தலைகளையும் பொடிசெய்யும்படியாக,

சிலைவாங்கிய நாரணனார் மருமகனாங் குகனே பொழில் சூழ்தரு திருவேங்கட மாமலை மேவிய பெருமாளே.... வில்லை வளைத்த நாராயணனுடைய (ராமனுடைய) மருமகனாகிய குகனே!  சோலைகள் சூழ்ந்திருக்கும் திருவேங்கடமாகிய மாமலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

வரான

சுருக்க உரை

யானை, தாவுகின்ற குதிரை, தேர், திரண்ட காலாட்படை என்று சதுரங்க சைனியங்களையும் கொண்டிருந்த துரியோதனன் முதலானோர் போர்க்களத்திலே வந்து இறந்துபோகும்படியாக ஒரு பாரத யுத்தத்தில் ஈடுபட்டு; பெருமைவாய்ந்த பாண்டவனுடைய (அர்ஜுனனுடைய) தேரில் பூட்டப்பட்ட ஏழு குதிரைகளையும் செலுத்திய சாரதி; ஒளிவீசும் சக்கரத்தைக் கையில் கொண்டிருக்கும் ஹரி; ரகுராமன்; ஒலிக்கின்ற கடலையும் வாலி என்னும் குரங்கரசனையும் உயர்ந்து ஓங்கி நின்ற ஏழு மராமரங்களையும்; ராவணனுடைய முடி தரித்த பத்துத் தலைகளையும் பொடியாக்கும்படி வில்லை வளைத்த நாராயணனுடைய மருமகனான குகனே!  சோலைகள் சூழ்ந்திருக்கின்ற திருவேங்கடத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

வரிகள் ஓடுகின்ற சேல் மீனோ, கயல் மீனோ என்று மயக்கம் தருவதும்; மான் போன்றதும் கடலைப் போன்றதும்; நீலோத்பலத்தையும் கடலையும் வீசத் தயாராய் இருக்கும் வாளையும் போன்ற கண்களை உடைய மாதர்கள் வீசுகின்ற வலையில் அகப்பட்டும்; வளர்வதும் கோங்கின் இளமொட்டைப் போன்றதுமான மார்பகத்தின் மீது எழும் ஆசையாலும்; செழிப்பான மாந்தளிரைப் போன்ற மேனி நிறத்தாலும்; இருள்போன்ற நீண்ட கூந்தலாலும் மோகமடைந்து பாயிலே கிடந்து கொவ்வைக் கனியைப் போன்ற உதடுகளில் ஊறும் சுவையைப் பருகாமலிருக்கவும்; ‘எனது’, ‘தனது’ என்ற உணர்வுகள் என்னை விட்டு அகலவும்; காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மும்மலங்களின் சேஷ்டைகள் விலகும்படியாகவும் உனது திருவடிகளைத் தந்தருள வேண்டும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jul/17/பகுதி---869-2961923.html
2949877 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 868 ஹரி கிருஷ்ணன் Saturday, June 30, 2018 10:58 AM +0530  

‘உனது திருவடிகளைத் தந்து ஆண்டுகொள்ள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவேங்கடத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 37 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் நான்கு குறில், ஒரு நெடில், ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்று என ஐந்தெழுத்துகளும்; இரண்டு-மூன்று, நான்கு-ஐந்து, எட்டு-ஒன்பது ஆகிய சீர்களில் ஒரு நெடில், இரண்டு குறில் என மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனதாந்தன தானன தானன

      தனதாந்தன தானன தானன

      தனதாந்தன தானன தானன               தனதான

 

வரிசேர்ந்திடு சேல்கய லோவெனு

         முழைவார்ந்திடு வேலையு நீலமும்

         வடுவாங்கிடு வாள்விழி மாதர்கள்      வலையாலே

      வளர்கோங்கிள மாமுகை யாகிய

         தனவாஞ்சையி லேமுக மாயையில்

         வளமாந்தளிர் போல்நிற மாகிய         வடிவாலே

இருள்போன்றிடு வார்குழல் நீழலில்

         மயல்சேர்ந்திடு பாயலின் மீதுற

         இனிதாங்கனி வாயமு தூறல்கள்        பருகாமே

      எனதாந்தன தானவை போயற

         மலமாங்கடு மோகவி காரமு

         மிவைநீங்கிட வேயிரு தாளினை        யருள்வாயே

கரிவாம்பரி தேர்திரள் சேனையு

         முடனாந்துரி யோதன னாதிகள்

         களமாண்டிட வேயொரு பாரத          மதிலேகிக்

      கனபாண்டவர் தேர்தனி லேயெழு

         பரிதூண்டிய சாரதி யாகிய

         கதிரோங்கிய நேமிய னாமரி            ரகுராமன்

திரைநீண்டிரை வாரியும் வாலியும்

         நெடிதோங்கும ராமர மேழொடு

         தெசமாஞ்சிர ராவண னார்முடி         பொடியாகச்

      சிலைவாங்கிய நாரண னார்மரு

         மகனாங்குக னேபொழில் சூழ்தரு

         திருவேங்கட மாமலை மேவிய         பெருமாளே.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jun/30/பகுதி---868-2949877.html
2948470 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 867 ஹரி கிருஷ்ணன் DIN Friday, June 29, 2018 12:00 AM +0530  

 

பதச் சேதம்

சொற் பொருள்

பழிப்பர் வாழ்த்துவர்சிலசில பெயர்தமை ஒருத்தர் வாய் சுருள்ஒருவர் கை உதவுவர் பணத்தை நோக்குவர்பிணமது தழுவுவர்
அளவளப் பதனாலே

 

ஒருத்தர் வாய்ச் சுருள்: ஒருவர் வாயிலே இருக்கிற வெற்றிலைச் சுருளை; ஒருவர் கை உதவுவர்: மற்றொருவரின் கையிலே கொடுப்பார்கள்;

படுக்கை வீட்டினுள்அவுஷதம் உதவுவர் அணைப்பர் கார்த்திகைவருது என உறு பொருள் பறிப்பர் மாத்தையில்ஒருவிசை வருக என
அவரவர்க்கு உறவாயே

 

அவுஷதம் உதவுவர்: மருந்து இடுவார்கள்; மாத்தையில்: மாதத்தில்; ஒருவிசை வருக: ஒருமுறையேனும் வரவேண்டும்;

அழைப்பர் ஆத்திகள்கருதவர் ஒருவரை முடுக்கி ஓட்டுவர்அழிகுடி அரிவையர் அலட்டினால் பிணைஎருது என மயல் 
எனும்நரகினில் சுழல்வேனோ

 

ஆத்திகள்: ஆஸ்திகள்; கருதவர்: கருது(ம்) அவர்; முடுக்கி ஓட்டுவர்: அவசரமாய் விரட்டுவார்கள்; அழிகுடி அரிவையை: குடியை அழிக்கும் பெண்கள்; அலட்டினால்: உபத்திரவத்தால்; பிணை எருதென: கட்டப்பட்ட எருதைப்போல;

அவத்தமாய் சில படுகுழி தனில் விழும் விபத்தை நீக்கி உன்அடியவர் உடன் எனை அமர்த்தி ஆட் கொளமனதினில் அருள்செய்து 
கதி தனைதருவாயே

 

அவத்தமாய்: பயனற்றதாய்;

தழைத்த சாத்திர மறைபொருள் அறிவு உள குருக்கள் போல் சிவநெறி தனைஅடைவொடு தகப்பனார்க்கு ஒருசெவி தனில் உரைசெய்த 
முருக வித்தகவேளே

 

அடைவொடு: முறைப்படி;

சமத்தினால் புகழ்சனகியை நலிவு செய் திருட்டு ராக்கதன் உடல்அது துணி செய்து சயத்த அயோத்தியில்வருபவன் அரி 
திருமருமக பரிவோனே

 

சமத்தினால்: சாமர்த்தியத்தால்; சனகி: ஜானகி; திருட்டு ராக்கதன்: ராவணன்;

செழித்த வேல் தனைஅசுரர்கள் உடல் அது பிளக்க ஓச்சிய பிறகுஅமரர்கள் பதி செலுத்திஈட்டிய சுர பதி மகள்தனை மணம் 
அதுஉற்றிடுவோனே

 

ஓச்சிய: வீசிய; அமரர்கள் பதி: தேவலாகம்; செலுத்தி: (தேவலோகத்துக்கு மீண்டும்) அனுப்பி; ஈட்டிய: ஈண்டிய, நெருங்கி நின்ற; சுரபதி: இந்திரன்; சுரபதி மகள்: தேவானை;

திறத்தினால் பலசமணரை எதிர் எதிர் கழுக்கள் ஏற்றியபுதுமையை இனிதொடு திருத்தமாய் புகழ்மதுரையில் உறை தரும்
அறுமுக பெருமாளே.

 

 

பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமை... (பொருள் கொடுக்காத சிலரைப்) பழிப்பார்கள்; (கொடுத்தவர்களை) வாழ்த்துவார்கள்;

ஒருத்தர் வாய்ச்சுருள் ஒருவர் கை உதவுவர் பணத்தை நோக்குவர் பிணமது தழுவுவர்... ஒருவருடைய வாயிலிருக்கிற வெற்றிலைச் சுருளை எடுத்து இன்னொருவரின் கையிலே கொடுப்பார்கள்; பணத்தின் மீதே குறியாக இருப்பார்கள்; (பணம் கிடைத்தால்) பிணத்தையும் தழுவுவார்கள்;

அளவளப் பதனாலே படுக்கை வீட்டினுள் அவுஷதம் உதவுவர் அணைப்பர்... பேசிக்கொண்டிருக்கும்போதே படுக்கை அறைக்குள் அழைத்துச் சென்று மருந்திடுவார்கள்; தழுவுவார்கள்;

கார்த்திகை வருது என உறு பொருள் பறிப்பர் மாத்தையில் ஒருவிசை வருக என அவரவர்க்கு உறவாயே அழைப்பர்... கார்த்திகைப் பண்டிகை வருகிறது (செலவுக்கு வேண்டும்) என்று கையிலுள்ள பொருளைப் பறிப்பார்கள்; மாதத்துக்கு ஒருமுறையேனும் இங்கு வரவேண்டும் என்று வந்திருக்கும் ஒவ்வொருவருடனும் சொந்தம் கொண்டாடி அழைப்பார்கள்;

ஆஸ்திகள் கருதுவர் ஒருவரை முடுக்கி ஓட்டுவர்... வந்திருப்பவருடைய சொத்துகளைப் பறிக்கக் கருதுவார்கள்; (பொருள் தராதவரை) அவசரப்படுத்தி விரட்டியடிப்பார்கள்;

அழிகுடி அரிவையர் அலட்டினால் பிணை எருது என மயல் எனும் நரகினில் சுழல்வேனோ... (இப்படியெல்லாம்) குடியை அழிக்கின்ற பொதுப்பெண்களுடைய உபத்திரவங்களாலே, கட்டப்பட்ட மாட்டைப்போல மையல் என்னும் நரகத்திலே நான் திரிந்துகொண்டிருப்பேனோ?

அவத்தமாய்ச் சில படு குழி தனில் விழும் விபத்தை நீக்கி... பயனில்லாத பெருங்குழியிலே நான் விழுகின்ற விபத்திலிருந்து என்னை விடுவித்து,

உன் அடியவர் உடன் எனை அமர்த்தி ஆட் கொள மனதினில் அருள் செய்து கதி தனைத் தருவாயே... உன் அடியார் திருக்கூட்டத்தோடு என்னைச் சேர்த்து ஆட்கொள்ளும்படியாக உன் மனத்தில் திருவருளைச் செய்து அடியேனுக்கு நற்கதியைத் தந்தருள வேண்டும்.

தழைத்த சாத்திர மறை பொருள் அறிவு உள குருக்கள் போல் சிவ நெறி தனை... செழிப்பாக நிற்கின்ற சாத்திரங்களின் மறைபொருளாக விளங்குவனவற்றை அறிந்த ஞானகுருக்களைப்போல சிவநெறிகளை,

அடைவொடு தகப்பனார்க்கு ஒரு செவி தனில் உரை செய்த முருக வித்தக வேளே... முறை தவறாமல் தந்தையாகிய சிவனாருடைய திருச்செவியிலே உபதேசித்த முருகா! வித்தகனே! வேளே!

சமத்தினால் புகழ் சனகியை நலிவு செய் திருட்டு ராக்கதன் உடல் அது துணி செய்து... புகழ்பெற்றவரான ஜானகியைத் தன் சாமர்த்தியத்தால் துன்பத்துக்கு ஆளாக்கிய திருட்டு அரக்கனான ராவணனுடைய உடலைத் துண்டாக்கி,

சயத்து அயோத்தியில் வருபவன் அரி திரு மருமகப் பரிவோனே...வெற்றிகொண்டு, அயோத்திக்குத் திரும்பிய ராமனாகிய திருமாலின் மருமகனே! அன்பு நிறைந்தவனே!

செழித்த வேல் தனை அசுரர்கள் உடல் அது பிளக்க ஓச்சிய பிறகு அமரர்கள் பதி செலுத்தி... செழித்திருக்கின்ற வேலை அசுரர்களுடைய உடலைப் பிளக்குமாறு செலுத்திய பின்னர், தேவர்களை அமரலோகத்துக்குத் திரும்பச் செய்து,

 

ஈட்டிய சுர பதி மகள் தனை மணம் அது உற்றிடுவோனே... நெருங்கி நின்றவளும், தேவர் தலைவனான இந்திரனுடைய மகளுமான தேவானை மணமுடித்தவனே!

திறத்தினால் பல சமணரை எதிர் எதிர் கழுக்கள் ஏற்றிய புதுமையை இனிதொடு திருத்தமாய்ப் புகழ் மதுரையில் உறை தரும் அறுமுகப்பெருமாளே.... (திருஞான சம்பந்தராக அவதரித்து) சமணர்களோடு வாதிட்ட திறத்தினால் அவர்களை எதிரெதிரே கழுவில் ஏற்றிய அற்புதத்தை இனிதே நிகழ்த்தி; புகழ்பெற்ற மதுரையில் திருத்தமாக வீற்றிருக்கின்ற ஆறுமுகப் பெருமாளே!

 சுருக்க உரை

வேதங்களின் மறைபொருளாக விளங்கும் தத்துவங்களை சிவபெருமானின் திருச்செவியில் குருநாதனாக நின்று ஓதியவனே! ஞானியே! செவ்வேளே! புகழ்பெற்ற ஜானகியைச் சிறையடைத்துத் துன்புறுத்திய திருட்டு அரக்கனான ராவணனுடைய உடலைப் பிளந்து வெற்றிகொண்டு அயோத்திக்குத் திரும்பிய ராமனாக அவதரித்த திருமாலின் மருகனே!  வேலை எறிந்து அரக்கர்களுடைய உடலைப் பிளந்தவனே! தேவர்களை அமராவதிக்குத் திரும்பச் செய்து, அதன்பின்னர் நெருங்கி நின்றவளும், இந்திரனுடைய மகளுமான தேவானையை மணமுடித்தவனே!  திருஞான சம்பந்தராக அவதரித்துச் சமணர்களோடு வாதிட்டு அவர்களைக் கழுவேற்றி அற்புதத்தை நிகழ்த்தியவனே! புகழ்பெற்ற மதுரையில் திருத்தமாக வீற்றிருக்கின்ற பெருமாளே!

பொதுப்பெண்டிர் பொருள் தராதவர்களைப் பழிப்பார்கள். தந்தவர்களை வாழ்த்துவார்கள். ஒருவருடைய வாயிலிருக்கும் வெற்றிலைச் சுருளை எடுத்து இன்னொருவர் கையிலே கொடுப்பார்கள். பணமே குறியாக இருப்பார்கள். பேசிக்கொண்டிருக்கும் போதே படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று மருந்து கொடுப்பார்கள். சொந்தம் கொண்டாடியபடி, ‘மாதத்துக்கு ஒருமுறையேனும் இங்க வரவேண்டும்’ என்று உரிமையாகச் சொன்னபடி அவர்களுடைய சொத்தை அபகரிப்பார்கள்.  பொருள் கொடாதவர்களை அவசரமாக விரட்டியடிப்பார்கள். இப்படியெல்லாம் குடியை அழிக்கின்றவர்களுடைய உபத்திரவங்களால், கட்டப்பட்ட எருதைப் போல மையல் என்னும் நரகத்தில் அடியேன் கிடந்து உழலலாமா?  இப்படிப்பட்ட பயனற்ற படுகுழியில் விழுகின்ற விபத்திலிருந்த அடியேனை மீட்டு, உன்னுடைய அடியார் திருக்கூட்டத்தோடு சேர்க்க உனது திருவுள்ளத்தால் கருதி, அடியேனுக்கு நற்கதியைத் தரவேண்டும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jun/29/பகுதி---867-2948470.html
2948462 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 866 ஹரி கிருஷ்ணன் Thursday, June 28, 2018 12:00 AM +0530  

‘அன்பர் திருக்கூட்டத்தோடு சேர்ந்திருக்கின்ற பேற்றை அருளி நற்கதியைத் தரவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் மதுரைக்கானது.

வழக்கத்தைவிட நீளமான தொங்கல் சீரை உடைய இந்தப் பாடலில் ஓரடிக்கு ஒற்றொழித்து 50 எழுத்துகள் உள்ளன.  ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக மூன்றெழுத்துகளும்; மூன்று, நான்கு—ஏழு, எட்டு—பதினொன்று, பன்னிரண்டு ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; தொங்கல் சீரின் முன்பாதியில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; பின்பாதியில் வழக்கம்போல மூன்று குறிலும் ஒரு நெடிலுமாக அமைந்துள்ளன.

தனத்த தாத்தன தனதன தனதன

                தனத்த தாத்தன தனதன தனதன

                தனத்த தாத்தன தனதன தனதன                                தனதனத் தனதான

 

 

 

பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமை

                        ஒருத்தர் வாய்ச்சுரு ளொருவர்கை யுதவுவர்

                        பணத்தை நோக்குவர் பிணமது தழுவுவர்             அளவளப்  பதனாலே

      படுக்கை வீட்டினு ளவுஷத முதவுவர்

                        அணைப்பர் கார்த்திகை வருதென வுறுபொருள்

                        பறிப்பர் மாத்தையி லொருவிசை வருகென     அவரவர்க் குறவாயே

அழைப்ப ராஸ்திகள் கருதுவ ரொருவரை

                        முடுக்கி யோட்டுவ ரழிகுடி யரிவையர்

         அலட்டி னாற்பிணை யெருதென மயலெனு     நரகினிற் சுழல்வேனோ

      அவத்த மாய்ச்சில படிகுழி தனில்விழும்

                        விபத்தை நீக்கியு னடியவ ருடனெனை

         அமர்த்தி யாட்கொள மனதினி லருள்செய்து             கதிதனைத் தருவாயே

தழைத்த சாத்திர மறைபொரு ளறிவுள

                        குருக்கள் போற்சிவ நெறிதனை யடைவொடு

         தகப்ப னார்க்கொரு செவிதனி லுறைசெய்த               முருகவித் தகவேளே

      சமத்தி னாற்புகழ் சனகியை நலிவுசெய்

                        திருட்டு ராக்கத னுடலது துணிசெய்து

                        சயத்த யோத்தியில் வருபவ னரி               திருமருகப் பரிவோனே

செழித்த வேற்றனை யசுரர்க ளுடலது

                        பிளக்க வோச்சிய பிறகம ரர்கள்பதி

            செலுத்தி யீட்டிய சுரபதி மகள்தனை                          மணமதுற் றிடுவோனே

      திறத்தி னாற்பல சமணரை யெதிரெதிர்

                        கழுக்க ளேற்றிய புதுமையை யினிதொடு

             திருத்த மாய்ப்புகழ் மதுரையி லுறைதரும்                அறுமுகப் பெருமாளே.

 

 

 
 
]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jun/28/பகுதி---866-2948462.html
2946994 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 865 ஹரி கிருஷ்ணன் DIN Wednesday, June 27, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

தாது மா மலர்முடியாலே பதறாத நூபுர அடியாலே கர தாளமாகியநொடியாலே மடிபிடியாலே

 

தாது: மகரந்தம்; மாமலர்: நல்ல மலர்கள்; முடியாலே: கூந்தலாலே; நூபுர(ம்): சிலம்பு;

சாடை பேசியவகையாலே மிகு வாடை பூசியநகையாலே பல தாறுமாறு  சொல்மிகையாலே அ(ன்)னநடையாலே

 

வாடை பூசிய: வாசனை திரவியங்களைப் பூசிய; நகையாலே: சிரிப்பாலே; மிகையாலே: செருக்காலே; அன நடையாலே: அன்னம்போன்ற நடையாலே;

மோதி மீறியமுலையாலே முலை மீதில் 
ஏறியகலையாலே வெகு மோடி நாணய(ம்)விலையாலே 
மயல்தரு(ம்) மானார்

 

கலையாலே: ஆடையாலே; மோடி: செருக்கு; நாணய விலையாலே: பணமாகப் பெறுகின்ற விலை; மானார்: பெண்கள்;

மோக வாரிதி தனிலேநாள் தொறு(ம்)மூழ்குவேன் 
உனதுஅடியார் ஆகிய மோனஞானிகளுடனேசேரவும்  அருள்வாயே

 

வாரிதி: கடல்; மோன: மௌன;

காதலாய் அருள்புரிவாய் நான் மறை மூலமே 
என உடனே மாகரி காண நேர் வருதிருமால் 
நாரணன்மருகோனே

 

நான்மறை மூலமே: நான்கு வேதங்களின் மூலப் பொருளே; மாகரி: (கஜேந்திரனாகிய) பெரிய யானை;

காதல் மாதவர் வலமே சூழ் சபை நாதனார்
தமதிடமே வாழ் சிவ காம நாயகி தரு
பாலா புலிசையில் வாழ்வே

 

புலிசையில்: புலியூரில்—சிதம்பரத்தில்;

வேத நூல் முறைவழுவாமே தினம் வேள்வியால் எழில்புனை மூவாயிரம் மேன்மை வேதியர்மிகவே பூசனைபுரிகோவே

 

 

வீறு சேர் வரை அரசாய்மேவிய மேரு 
மால்வரை என நீள் கோபுர மேலை வாயிலின்மயில் மீது ஏறியபெருமாளே.

 

வீறுசேர்: பொலிவு நிறைந்த; வரை அரசாய்: மேரு மலையாய்;

 

தாது மா மலர் முடியாலே பதறாத நூபுர அடியாலே கர தாளமாகிய நொடியாலே மடி பிடியாலே... மகரந்தம் நிறைந்த மலர்களைச் சூடிய கூந்தலாலும்; சிலம்பணிந்து பதறாமல் நடக்கும் பாதத்தாலும்; கையால் இடுகின்ற தாளத்தாலும்; (வந்தாரை) மடியைப் பிடித்து வசப்படுத்தும் தன்மையாலும்;

சாடை பேசிய வகையாலே மிகு வாடை பூசிய நகையாலே பல தாறுமாறு சொல் மிகையாலே அ(ன்)ன நடையாலே... ஜாடையாகப் பேசுகின்ற தன்மையாலும்; மிகுந்த வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொண்டு சிரிக்கின்ற சிரிப்பாலும்; தாறுமாறாகப் பேசுகின்ற பல பேச்சுகளின் திமிராலும்; அன்னம் போன்ற நடையாலும்;

மோதி மீறிய முலையாலே முலை மீதில் ஏறிய கலையாலே வெகு மோடி நாணய(ம்) விலையாலே மயல் தரு(ம்) மானார்... மோதித் திமிர்ந்தெழுகின்ற மார்பாலும்; மார்பின் மீது படிந்திருக்கின்ற ஆடையாலும்; மயக்குகின்ற திறத்தை காசுக்காக வெளிக்காட்டும் செருக்காலும் மையலை ஊட்டுகின்ற மாதர்களுடைய,

மோக வாரிதி தனிலே நாள் தொறு(ம்) மூழ்குவேன் உனது அடியார் ஆகிய மோன ஞானிகளுடனே சேரவும் அருள்வாயே... மோகக் கடலில் எப்போதும் மூழ்குகின்ற நான் உன்னுடைய அடியார்களாகிய மௌன ஞானிகளோடு சேர்ந்து கலந்திருப்பதற்கு அருள்புரிய வேண்டும்.

காதலாய் அருள் புரிவாய் நான் மறை மூலமே என உடனே மா கரி காண நேர் வரு திருமால் நாரணன் மருகோனே... ‘நான்கு வேதங்களுக்கும் மூலப் பொருளே! என்மீது அன்பு வைத்து அருளவேண்டும்’ என்று (கஜேந்திரானாகிய) யானை அழைத்ததும், அதனைக் காணுவதற்காக அதன் முன்னே நேரில் வந்தவரானா திருமால் நாராயணனுடைய மருமகனே!

காதல் மாதவர் வலமே சூழ் சபை நாதனார் தமது இடமே வாழ் சிவகாம நாயகி தரு பாலா புலிசையில் வாழ்வே... அன்பும் பெருந்தவமும் உடையவர்கள் வலம்வந்து வணங்கிச் சூழ்கின்ற கனகசபையின் நாதரான சிவபெருமானுடைய இடதுபாகத்தில் உள்ள சிவகாம சுந்தரி ஈன்ற பிள்ளையே! புலிசை எனப்படும் சிதம்பரத்தின் செல்வமே!

வேத நூன் முறை வழுவாமே தினம் வேள்வியால் எழில் புனை மூவாயிர(ம்) மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே...வேதங்களிலே சொல்லப்பட்டுள்ள முறைப்படி தினந்தோறும் வேள்விகளைச் செய்கின்ற தில்லை மூவாயிரவர்களான மேன்மை பொருந்திய வேதியர்கள் பெரிதும் பூஜிக்கின்ற தலைவனே!

வீறு சேர் வரை அரசாய் மேவிய மேரு மால் வரை என நீள் கோபுர மேலை வாயிலின் மயில் மீது ஏறிய பெருமாளே.... பொலிவு தங்கிய மலையரசனான மேரு மலையைப் போல உயர்ந்திருக்கின்ற கோபுரத்தின் மேற்கு வாயிலில் மயில் மீது அமர்ந்த கோலத்தில் விளங்குகின்ற பெருமாளே!

சுருக்க உரை

நால்வேதங்களுக்கும் மூலப் பொருளே, என்மீது அன்புகொண்டு அருளவேண்டும்’ என்று கஜேந்திரன் அழைத்தவுடனே நேரில் வந்து உதவிய திருமால், நாராயணனுடைய மருமகனே! பக்தியும் பெருந்தவமும் உடைய பெரியோர்கள் வலம்வந்து சூழ்கின்ற கனகசபையின் நாதரான நடராசருடைய இடப்பாகத்திலே உறையும் உமையம்மை ஈன்ற மகவே! புலியூரான சிதம்பரத்தில் வீற்றிருப்பவனே!  வேதங்களில் விதித்திருக்கிற முறை தவறாமல் தினந்தோறும் யாகங்களை வளர்க்கும் ஒழுக்கத்தை உடைய தில்லை மூவாயிரவரான வேதியர்கள் வெகுவாகப் பூசிக்கின்ற தலைவனே!  பொலிவு பொருந்திய மலையரசனாகிய மேரு மலையைப் போல உயர்ந்திருக்கும் கோபுரத்தின் மேற்கு வாயிலிலே மயில் மீது அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

மகரந்தம் நிறைந்த மலர்களைச் சூடிய கூந்தலாலும்; சிலம்பணிந்து பதறாமல் நடக்கும் பாதத்தாலும்; கைத்தாளங்களாலும்; தாறுமாறாகப் பேசுகின்ற பேச்சின் விதங்களாலும்; வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொண்டு சிரிக்கின்ற சிரிப்பாலும்; அன்ன நடையாலும்; திமிர்ந்தெழுந்த மார்பாலும்; அந்த மார்பின் மேலே கிடக்கும் ஆடையாலும் மையலை ஏற்படுத்துகின்ற பெண்கள் மீது ஏற்படும் மோகமாகிய கடலிலே மூழ்குபவனாகிய நான் உன் அடியார்களாகிய மௌன ஞானியர் திருக்கூட்டத்தோடு சேர்ந்து கலந்திருக்கும்படியாக அருளவேண்டும்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jun/27/பகுதி---865-2946994.html
2946991 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 864 ஹரி கிருஷ்ணன் Tuesday, June 26, 2018 12:00 AM +0530  

‘எப்போதும் உனது அடியார் திருக்கூட்டத்துடன் சேர்ந்திருக்க வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் சிதம்பரத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 37 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்கள் ஒரு நெடில், ஒரு குறில் என இரண்டெழுத்துகளையும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்களும் நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்களும் ஒரு நெடில் இரண்டு குறில் என மூன்றெழுத்துகளையும்; மூன்று, ஏழு, பதினொன்று ஆகிய சீர்கள் இரண்டு குறில் ஒரு நெடில் என மூன்றெழுத்துகளையும் கொண்டு அமைந்திருக்கின்றன.

தான தானன  தனனா தானன

                தான தானன  தனனா தானன

                தான தானன  தனனா தானன                                        தனதான

 

தாது மாமலர் முடியா லேபத

                        றாத நூபுர அடியா லேகர  

                         தாள மாகிய நொடியா லேமடி                               பிடியாலே

      சாடை பேசிய வகையா லேமிகு

                        வாடை பூசிய நகையா லேபல

                        தாறு மாறுசொல் மிகையா லேயன                  நடையாலே

மோதி மீறிய முலையா லேமுலை

                        மீதி லேறிய கலையா லேவெகு

                        மோடி நாணய விலையா லேமயல்                  தருமானார்

      மோக வாரிதி தனிலே நாடொறு

                        மூழ்கு வேனுன தடியா ராகிய

                        மோன ஞானிக ளுடனே சேரவு                             மருள்வாயே

காத லாயருள் புரிவாய் நான்மறை

                        மூல மேயென வுடனே மாகரி

                        காண நேர்வரு திருமால் நாரணன்                     மருகோனே

      காதல் மாதவர் வலமே சூழ்சபை

                        நாத னார்தம திடமே வாழ்சிவ

                        காம நாயகி தருபா லாபுலி                                        சையில்வாழ்வே

வேத நூன்முறை வழுவா மேதினம்

                        வேள்வி யாலெழில் புனைமூ வாயிர

                        மேன்மை வேதியர் மிகவே பூசனை                  புரிகோவே

      வீறு சேர்வரை யரசாய் மேவிய

                        மேரு மால்வரை யெனநீள் கோபுர

                        மேலை வாயிலின் மயில்மீ தேறிய                 பெருமாளே.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jun/26/பகுதி---864-2946991.html
2945704 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 863 ஹரி கிருஷ்ணன் DIN Monday, June 25, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

ஆதாளிகள் புரிகோலாகல விழியாலே அமுது எனு(ம்)மொழியாலே

 

ஆதாளி: பகட்டுப் பேச்சு; ஆதாளிகள் புரி: அப்படிப் பேசும் பெண்கள்;

ஆழ் சீர் இள நகையாலேதுடி இடையாலே மணமலி குழலாலே

 

துடி இடை: உடுக்கு போன்ற இடை (துடி: உடுக்கு); மணமலி: மணம் நிறைந்த;

சூது ஆர் இளமுலையாலே அழகிய தோடு ஆர் இரு குழைஅதனாலே

 

சூது ஆர்: பகடைக் காயைப் போன்ற;

சோரா மயல் தருமானார் உறவு இடர் சூழா வகை அருள்புரிவாயே

 

சோரா மயல்: சோர்வடையச் செய்யும் மையல்;

போது ஆர் இரு கழல்சூழாது அது தொழில் பூணாது எதிர் உறமதியாதே

 

போதார்: மலர் நிறைந்த;

போர் ஆடிய அதி சூராபொறு பொறு போகாதேஎன அடு திறலோனே

 

 

வேதா உடனொடு மால்ஆனவன் அறியாதார் அருளிய குமரேசா

 

வேதா: பிரமன்; மாலானவன்: திருமால்; அறியாதார்: (திருமாலாலும் பிரமனாலும்) அறியப்படாதவர்—பரமேஸ்வரர்;

வீரா புரி கோவேபழநியுள் வேலாஇமையவர் பெருமாளே.

 

 

ஆதாளிகள் புரி கோலாகல விழியாலே அமுது எனு(ம்மொழியாலே...  பகட்டான பேச்சையும் ஆடம்பரமான விழிகளையும் அமுதம் போன்ற இனிய மொழியையும் உடைய,

ஆழ் சீர் இள நகையாலே துடி இடையாலே மண மலி குழலாலே... ஆழமானதும் அழகியதுமான புன்னகையாலும் உடுக்கையைப் போன்ற இடையாலும் மணம் நிறைந்த கூந்தலாலும்,

சூது ஆர் இள முலையாலே அழகிய தோடு ஆர் இரு குழை அதனாலே... பகடைக் காய்களை ஒத்த இளைய மார்பகத்தாலும் அழகிய தோடுகளை அணிந்திருக்கின்ற இரண்டு செவிகளாலும்,

சோரா மயல் தரு மானார் உறவு இடர் சூழா வகை அருள் புரிவாயே... தளர்ச்சியடையச் செய்கின்ற மையலைத் தருகின்ற பெண்களுடைய உறவால் ஏற்படும் துன்பங்கள் என்னைச் சூழாதபடிக்கு அருள்புரிய வேண்டும்.

போது ஆர் இரு கழல் சூழாது அது தொழில் பூணாது எதிர் உற மதியாதே...மலர் நிறைந்த திருவடிகளை மனத்தில் இருத்தாமலும்; அப்படிச் சிந்திப்பதை மேற்கொள்ளாமலும் (போரில்) எதிர்த்து வந்த (சூரனைச்)  சற்றும் பொருட்படுத்தாமல்,

போர் ஆடிய அதி சூரா பொறு பொறு போகாதே என அடு திறலோனே... ‘போர்புரிய வந்த சூரனே, பொறுபொறு, போய்விடாதே’ என்று கூறியவண்ணமாக அவனை அழித்த திறலனே!

வேதா உடன் நெடு மால் ஆனவன் அறியாதார் அருளிய குமரேசா... பிரமனாலும் நெடியவனான திருமாலாலும் அறியமுடியதவராகிய பரமேச்வரன் அருளிய குமரேசா!

வீரா புரி கோவே பழநியுள் வேலா இமையவர் பெருமாளே.... வீரைநகரில்* வீற்றிருக்கும் அரசே!  பழநிப்பதியிலே இருக்கின்ற வேலனே! தேவர்கள் பெருமாளே!

(வீரைநகர் என்பது திருப்பெருந்துறைக்கு மேற்கே உள்ள ஒரு சிவத்தலமாகும்.)

சுருக்க உரை

மலர்கள் நிறைந்த உனது திருவடிகளைச் சிந்தியாமல் உன்னோடு போர்புரிய வந்த சூரபதுமனை, ‘கொஞ்சம் நில். போய்விடாதே’ என்று சொன்னபடி எதிர்த்துப் போரிட்டு வதைத்த திறலனே! பிரமனாலும் திருமாலாலும் அறிய முடியதவரான பரமசிவனார் அருளிய குமரனே! வீராபுரியுல் எழுந்தருளியிருப்பவனே! பழநியில் வீற்றிருக்கும் வேலனே! இமையவர்கள் பெருமாளே!

பகட்டுப் பேச்சையும் ஆடம்பரமான கண்களையும் அமுதம்போன்ற சொற்களையும் ஆழமான புன்சிரிப்பாலும் உடுக்கையைப் போன்ற இடையாலும் இள முலையாலும் அழகிய தோடுகளை அணிந்த இரு செவிகளாலும் மயக்குகின்ற பெண்களுடைய உறவால் ஏற்படும் துன்பம் சூழாதபடிக்கு அடியேனைக் காத்தருள வேண்டும்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jun/25/பகுதி---863-2945704.html
2945700 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 862 ஹரி கிருஷ்ணன் Sunday, June 24, 2018 12:00 AM +0530  

‘பொதுப் பெண்டிரின் மயக்கம் அறவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் வீரை நகருக்கு உரியது.  வீரை நகர் என்பது திருப்பெருந்துறைக்கு மேற்கே உள்ள ஒரு சிவத்தலம்.  இப்பாடல் பழநித் திருப்புகழ்ப் பாடல்களின் வரிசையில் வருகிறது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் இரண்டு நெட்டெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

 

தானா தனதன தானா தனதன

                தானா தனதன                                                            தனதான

 

ஆதா ளிகள்புரி கோலா கலவிழி

                        யாலே யமுதெனு                                            மொழியாலே

                ஆழ்சீ ரிளநகை யாலே துடியிடை

                        யாலே மணமலி                                               குழலாலே

சூதா ரிளமுலை யாலே யழகிய

                        தோடா ரிரு குழை                                            யதனாலே

                சோரா மயல்தரு மானா ருறவிடர்

                        சூழா வகையருள்                                             புரிவாயே

போதா ரிருகழல் சூழா ததுதொழில்

                        பூணா தெதிருற                                                  மதியாதே

                போரா டியஅதி சூரா பொறுபொறு

                        போகா தெனஅடு                                              திறலோனே

வேதா வுடனொடு மாலா னவனறி

                        யாதா ரருளிய                                                     குமரேசா

                வீரா புரிவரு கோவே பழநியுள்

                        வேலா இமையவர்                                         பெருமாளே.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jun/24/பகுதி---862-2945700.html
2944332 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 861 ஹரி கிருஷ்ணன் DIN Saturday, June 23, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

மூப்பு உற்று செவிகேட்பு அற்று பெரு மூச்சு உற்று செயல்தடுமாறி

 

 

மூர்க்க சொல் குரல்காட்டி கக்கிட மூக்குக்குஉள் சளி (ஈ)ளையோடும்

 

ஈளை:கபம்;

கோப்பு கட்டி இனா பிச்சுஎற்றிடு கூட்டில் புக்குஉயிர் அலையா முன்

 

கோப்புக் கட்டி: கோத்து கட்டியதைப் போல; இனா: துன்ப(ம்); பிச்சு: வெறி; இனாப்பிச்சு: துன்பத்தால் ஏற்படுகின்ற வெறி, வேதனை; கூட்டில்: உடலில்;

கூற்ற தத்துவம் நீக்கிபொன் கழல் கூட்டிசற்று அருள் புரிவாயே

 

 

காப்பு பொன் கிரி கோட்டிபற்றலர் காப்பைகட்டவர் குருநாதா

 

காப்பு: காவலாயிருக்கும்; பொன்கிரி: மேரு மலையை; கோட்டி: வளைத்து; பற்றலர்: பகைவர்கள்; காப்பை: மதிலை; கட்டவர்: அழித்தவர்;

காட்டுக்குள்குறவாட்டிக்கு பல காப்பு குத்திரம்மொழிவோனே

 

குறவாட்டி: குறமகள்; காப்பு: ‘காக்க வேண்டும்’ எனல்; குத்திர(ம்): வஞ்சகம்;

வாய்ப்பு உற்ற தமிழ்மார்க்க திண் பொருள் வாய்க்கு சித்திரமுருகோனே

 

வாய்ப்புற்ற: செழிப்புற்ற; திட்பொருள்: திண்(மையான) பொருள்; வாய்க்கு: வாய்மையான (விளக்கத்துக்கு);

வார்த்தை  சிற்பர தீர்த்தசுற்று அலை வாய்க்குள்பொற்பு அமர்பெருமாளே.

 

வார்த்தை: சொல்லுக்கும்; சிற்பர: அறிவுக்கும் (எட்டாத); அலைவாய்: திருச்சீரலைவாய், திருச்செந்தூர்;

மூப்புற்றுச் செவி கேட்பற்று பெரு மூச்சுற்றுச் செயல் தடுமாறி... வயதேறிப்போய், காது கேட்காத நிலையை அடைந்து; பெருமூச்சு விட்டுக்கொண்டு; செயல்களில் தடுமாற்றத்தை அடைந்து;

மூர்க்கச் சொற்குரல் காட்டி கக்கிட மூக்குக்கு உள்சளி இளையோடும் கோப்புக் கட்டி... கோபம் நிறைந்ததான சொற்களைக் கடுமையான குரலில் வெளிப்படுத்தி; (அப்போது) மூக்கினுள்ளே உள்ள சளியும் நெஞ்சிலுள்ள கபமும் ஒன்றாகக் கோத்துக்கொண்டதைப் போலக் கலந்து;

(ன்)னாப் பிச்சு எற்றிடு கூட்டிற் புக்கு உயிர் அலையாமுன்... (இவ்வகையான) துன்ப வெறி அதிகரித்திருப்பதான் இந்த உடலில் புகுந்திருக்கின்ற என் உயிர் தவிப்பதற்கு முன்னாலே,

கூற்றத் தத்துவ நீக்கி பொற்கழல் கூட்டிச் சற்றருள் புரிவாயே... யமன் என் உயிரைக் கவரந்துகொள்ளும் தன்மையை நீக்கி, உன்னுடைய அழகிய திருவடிகளிலே என்னைச் சேர்த்துக்கொண்டு சற்றே அருள்புரியவேண்டும்.

காப்புப் பொற்கிரி கோட்டி பற்றலர்காப்பைக் கட்டவர் குருநாதா... உலகத்துக்குக் காப்பாக விளங்கும் மேரு மலையை வில்லாக வளைத்து, எதிரிகளுடைய அரண்களை அழித்தவரான சிவபெருமானுடைய குருநாதனே!

காட்டுக்குட் குறவாட்டிக்கு பல காப்புக் குத்திர மொழிவோனே... காட்டிலே இருந்த குறமகளான வள்ளியிடத்திலே, ‘என்னைக் காத்தருள வேண்டும்’ என்றெல்லாம் வஞ்சனையான நயவுரைகளைச் சொன்னவனே!

வாய்ப்புற்றத் தமிழ் மார்க்கத் திட்பொருள் வாய்க்குச் சித்திர முருகோனே... செழிப்பான தமிழுடைய அகத்துறைக்குத் திண்மை வாய்ந்த பொருள் இதுவே என்று உண்மையை விளக்கிய* அழகிய முருகனே!

(முருகன் உருத்திரசென்மராய் வீற்றிருந்து இறையனார் அகப்பொருளுக்குப் பொருத்தமான உரை எது என்பதைச் சுட்டிய புராணம் சொல்லப்படுகிறது.)

வார்த்தைச் சிற்பர தீர்த்தச் சுற்றலைவாய்க்குள் பொற்பமர் பெருமாளே.... சொல்லையும் அறிவையும் கடந்தவனே!  புண்ணிய தீர்த்தங்களால் சூழப்பட்டுள்ள திருச்சீரலைவாயில் அழகாக வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

உலகத்துக்குக் காப்பாக எழுந்து நிற்கின்ற மேருமலையை வில்லாக வளைத்துப் பகைவர்களுடைய மதிலைத் தகர்த்தவரான சிவபெருமானுடைய குருநாதனே!  செழிப்பான தமிழின் (இறையனார் அகப்பொருளுக்கு ஏற்ற) உரையைச் சுட்டிக் காட்டிய (உருத்திரசென்மராய் அவதரித்த முருகனே! சொல்லையும் அறிவையும் கடந்தவனே!  புண்ணிய தீர்த்தங்கள் நிறைந்த திருச்செந்தூரில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

வயது முதிர்ந்து, காது கேட்காமல்போய், பெருமூச்சு விட்டுக்கொண்டு, செயல்களில் தடுமாற்றமடைந்து; கொடிய கோபத்துடனான சொற்களைக் கடுமை நிறைந்த குரலால் வெளிப்படுத்தும் அச்சமயத்திலே மூக்கிலும் நெஞ்சிலும் உள்ள கபமானது ஒன்றாகக் கோத்துக்கொண்டதுபோல் உடலைத் துன்புறுத்தி உயிரைத் தடுமாறச்செய்வதற்கு முன்னாலே,

யமன் வந்து என்னுடைய உயிரைக் கவர்ந்துகொள்ளும் தன்மையை நீக்கி உன்னுடைய திருவடிகளில் அடியேனைச் சேர்த்துக்கொண்டு அருள்புரிய வேண்டும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jun/23/பகுதி---86-2944332.html
2944329 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 860 ஹரி கிருஷ்ணன் Friday, June 22, 2018 12:00 AM +0530  

யமபயம் கெடுவதைக் கோரும் இப்பாடல் திருச்செந்தூருக்கானது.

அடிக்கு ஒற்றொழிது 19 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஒரு நெடில், ஒரு குறில், இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகள் என மூன்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தாத்தத் தத்தன தாத்தத் தத்தன

                தாத்தத் தத்தன                                                          தனதான

 

மூப்புற் றுச்செவி கேட்பற் றுப்பெரு

                        மூச்சுற் றுச்செயல்                                           தடுமாறி

      மூர்க்கச் சொற்குரல் காட்டிக் கக்கிட

                         மூக்குக் குட்சளி                                                யிளையோடும்

கோப்புக் கட்டியி னாப்பிச் செற்றிடு

                        கூட்டிற் புக்குயி                                                  ரலையாமுன்

      கூற்றத் தத்துவ நீக்கிப் பொற்கழல்

                        கூட்டிச் சற்றருள்                                              புரிவாயே

காப்புப் பொற்கிரி கோட்டிப் பற்றலர்

                        காப்பைக் கட்டவர்                                            குருநாதா

      காட்டுக் குட்குற வாட்டிக் குப்பல

                        காப்புக் குத்திர                                                     மொழிவோனே

வாய்ப்புற் றத்தமிழ் மார்க்கத் திட்பொருள்

                        வாய்க்குச் சித்திர                                              முருகோனே

      வார்த்தைச் சிற்பர தீர்த்தச் சுற்றலை

                        வாய்க்குட் பொற்பமர்                                   பெருமாளே.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jun/22/பகுதி---860-2944329.html
2942890 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 859 ஹரி கிருஷ்ணன் DIN Thursday, June 21, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

மனை கனகம் மைந்தர்தமது அழகு பெண்டிர் வலிமை குல(ம்) நின்றநிலை ஊர் பேர்

 

 

வளர் இளமை தஞ்சம்முனை புனை வளங்கள் வரிசை தமர் என்றுவரும் மாய

 

முனை: போர்முனை, துணிவு; புனை வளங்கள்: ஆபரணங்கள்; தமர்: சுற்றத்தார்;

கனவு நிலை இன்பம்அதனை எனது என்று கருதி விழி இன்பமடவார் தம்

 

 

கலவி மயல் கொண்டுபல உடல் புணர்ந்து கருவில் விழுகின்றதுஇயல்போ தான்

 

பல உடல்: பலரை;

நினையும் நினது அன்பர் பழ வினைகள் களைந்து நெடு வரை பிளந்த கதிர்வேலா

 

நினையும்: நினைக்கின்ற; நெடுவரை: நீண்ட மலை—கிரெளஞ்சம்;

நிலம் முதல் விளங்குநலம் மருவு செந்தில் நிலை பெற இருந்தமுருகோனே

 

 

புனை மலர் புனைந்தபுன மற மடந்தை புளகஇரு கொங்கை புணர்மார்பா

 

புளக இரு கொங்கை: மயிர்க்கூச்சம் அடைந்த மார்பகம்;

பொருது உடன் எதிர்ந்தநிருதர் மகுடங்கள் பொடிபட நடந்தபெருமாளே.

 

நிருதர்: அரக்கர்;

மனை கனகம் மைந்தர் தமது அழகு பெண்டிர் வலிமை குல(ம்நின்ற நிலைஊர் பேர்... வீடு, தங்கம், பிள்ளைகள், தன்னுடைய அழகிய மனைவி (முதலானவர்களும்); தன்னுடைய வலிமை, குலம், இருக்கின்ற நிலை, தன்னுடைய ஊர், பெற்ற பெயர்;

வளர் இளமை தஞ்சம் முனை புனை வளங்கள் வரிசை தமர் என்று வரும் மாய கனவு நிலை இன்பம் அதனை எனது என்று கருதி... வளர்வதான இளமை, தன்னுடைய பற்றுக்கோடு, துணிவு, அணியும் ஆபரணங்களின் வரிசை, தன் சுற்றத்தார் என்று விரிகின்ற மாயமானதும் கனவு நிலையுமான இந்த இன்பங்களை என்னுடையது என்று கருதிக்கொண்டு;

விழி இன்ப மடவார் தம் கலவி மயல் கொண்டு பல உடல் புணர்ந்து கருவில் விழுகின்றது இயல்போ தான்... விழியால் இன்பத்தை விளைக்கின்ற பெண்களைக் கூடும் மயக்கத்தில் பலரைக் கூடி, மீண்டும் மீண்டும் கருவிலே விழுந்து பிறவிகளை எடுப்பது தகுமோ? (இனி பிறவி ஏற்படாதபடி காத்தருள வேண்டும்.)

நினையும் நினது அன்பர் பழ வினை களைந்து நெடு வரை பிளந்த கதிர் வேலா... உன்னைச் சிந்திக்கின்ற அன்பர்களுடைய தொன்மையான வினைகளை நீக்குபவனே!  கிரெளஞ்ச மலையைப் பிளந்த கதிர்வேலனே!

நிலம் முதல் விளங்கு நலம் மருவு செந்தில் நிலை பெற இருந்த முருகோனே... உலகத்திலே முதன்மைபெற்று விளங்குவதும் அழகியதுமான திருசெந்தூர் நிலைபெறுமாறு வீற்றிருக்கின்ற முருகனே!

புனை மலர் புனைந்த புன மற மடந்தை புளக இரு கொங்கை புணர் மார்பா... அழகிய மலர்களைப் புனைந்த குறமகள் இருந்த தினைப்புனத்தில் அவளுடைய புளகம் எய்திய மார்பகங்களைத் தழுவிய மார்பனே!

பொருது உடன் எதிர்ந்த நிருதர் மகுடங்கள் பொடிபட நடந்த பெருமாளே.... போருக்கு எழுந்துவந்த அரக்கர்களுடைய மகுடங்கள் பொடியாகும்படியாக மிதித்து நடந்த பெருமாளே!

சுருக்க உரை

உன்னை நினைக்கின்ற அடியார்களுடைய பழவினைகளை நீக்குபவனே!  கிரவுஞ்ச மலையைப் பிளந்த கதிர்வேலனே! உலகில் முதலிடம் பெற்றுத் திகழ்வதான திருச்செந்தூர் நிலைபெறும்படியாக வீற்றிருக்கின்ற முருகனே!  அழகிய மலர்களைப் புனைந்து தினைப்புனத்தில் இருந்த குறமகளான வள்ளியின் தனங்களைப் பொருந்த அணைத்த மார்பனே!  போருக்கு எழுந்துவந்த அரக்கர்களுடைய மகுடங்கள் பொடிபடும்படியாகப் போரிட்டு, மிதித்து நடந்த பெருமாளே!

வீடு, பொன், மனைவி, மக்கள், தன் வலிமை, குலம், தன்னுடைய ஊர், பேர், இளமை, துணிவு, செல்வம், மேன்மை, சுற்றத்தார் என்றெல்லாம் விரிகின்ற மாயமான, கனவுநிலையான, நிலையற்ற இன்பங்களை என்னுடையவையாகக் கருதி, கடைக்கண்ணால் இன்பமூட்டுகின்ற மாதர்களுடைய கலவியில் மயங்கிப் பலரோடு கூடி, மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பது தகுமோ?  (அடியேன் கலவி மயக்கமுறாதவாறும் மீண்டும் பிறக்காதவாறும் ஆண்டருள வேண்டும்.)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jun/21/பகுதி---859-2942890.html
2942887 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 858 ஹரி கிருஷ்ணன் Wednesday, June 20, 2018 12:00 AM +0530  

‘கருவிலே விழுந்து மீண்டும் மீண்டும் பிறக்கின்ற இந்த நிலை ஒழியவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருச்செந்தூருக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும் உள்ளன.

தனதனன தந்த தனதனன தந்த

                தனதனன தந்த                                                           தனதான

 

மனைகனக மைந்தர் தமதழகு பெண்டிர்

                        வலிமைகுல நின்ற                                        நிலையூர்பேர்

      வளரிளமை தஞ்ச முனைபுனைவ ளங்கள்

                        வரிசைதம ரென்று                                          வருமாயக்

கனவுநிலை யின்ப மதனையென தென்று

                        கருதிவிழி யின்ப                                              மடவார்தம்

      கலவிமயல் கொண்டு பலவுடல்பு ணர்ந்து

                        கருவில் விழுகின்ற                                       தியல்போதான்

நினையுநின தன்பர் பழவினைக ளைந்து

                        நெடுவரைபி ளந்த                                            கதிர்வேலா

      நிலமுதல் விளங்கு நலமருவு செந்தில்

                        நிலைபெறஇ ருந்த                                          முருகோனே

புனைமலர்பு னைந்த புனமறம டந்தை

                        புளகஇரு கொங்கை                                        புணர்மார்பா

      பொருதுடனெ திர்ந்த நிருதர்மகு டங்கள்

                        பொடிபடந டந்த                                                  பெருமாளே.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jun/20/பகுதி---858-2942887.html
2941007 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 857 ஹரி கிருஷ்ணன் DIN Tuesday, June 19, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

ஆராத காதலாகி மாதர்தம் ஆபாத சூடம்மீதிலே விழியால் ஆலோலனாய்விகாரமாகிஇலஞ்சியாலே

 

ஆராத: தீராத; காதலாகி: மோகம் கொண்டு; ஆபாத: பாதத்திலிருந்து; சூடம்: உச்சி (வரையில்); ஆலோலனாய்: ஆலோலிதனாய் (ஆலோலிதன்: பிரியம் கொண்டவன்); இலஞ்சியாலே: குணவிசேடத்தால் (இலஞ்சி: குணம்);

ஆசா பசாசு மூடி மேலிட ஆசார ஈனனாகியே மிக ஆபாசன் ஆகியே ஓடிநாளும் அழிந்திடாதே

 

ஆசா: ஆசையாகிய; பசாசு: பிசாசு; ஆபாசன் ஆகி: ஒழுக்கம் கெட்டவனாகி;

ஈராறு தோளும் ஆறு மாமுகமோடு ஆரும் நீபவாச மாலையும் ஏறானதோகை நீல வாசியும்அன்பினாலே

 

ஆரும்: நிறைந்திருக்கும்; நீப வாச மாலையும்: நறுமணமுள்ள கடப்ப மாலையும்; ஏறான: ஆண் மயிலான; வாசியும்: குதிரையும் (மயில் வாகனமும்);

ஏனோரும் ஓதுமாறு தீதுஅற நான் ஆசு பாடி ஆடிநாள் தொறும் ஈடேறுமாறு ஞானபோதகம் அன்புஉறாதோ

 

ஏனோரும்: மற்றவர்களும்; ஞான போதகம்: ஞான உபதேசம்;

வாராகி நீள் கபாலிமாலினி மா மாயி ஆயிதேவி யாமளை வாசா மகோசரா பராபரைஇங்குள் ஆயி

 

கபாலி: கபாலத்தை ஏந்தியவள்; மாலினி: மாலையை அணிந்தவள்; மாமாயி: மகமாயி; ஆயி: தாய்; யாமளை: பச்சை நிறம் கொண்டவள்; வாசா மகோசரா: வாக்குக்கு எட்டாதவள்; இங்குளாயி: இங்கு (உள்ளத்திலே) உள்ள தாய்;

வாதாடி மோடி காடுகாள்உமை மா ஞால லீலிஆல போசனி மா காளிசூலி வாலை யோகினிஅம் பவானி

 

மோடி: துர்க்கை; காடுகாள்: வன தேவதை; மாஞால லீலி: பேருலகிலே லீலைகளைப் புரிபவள்; ஆல போசனி: ஆலகாலத்தை உண்டவள்; வாலை: பாலை; அம் பவானி: அழகிய பவானி;

சூராரி மா புராரிகோமளை தூளாய பூதிபூசு(ம்) நாரணி சோணாசல ஆதி லோகநாயகி தந்த வாழ்வே

 

சூராரி: சூரனைப் (மகிஷாசுரனை) வதைத்தவள்; புராரி: திரிபுரங்களை அழித்தவள்; கோமளை: அழகி; பூதி: திருநீறு; சோணாசலாதி: திருவண்ணாமலையில் ஆதி தேவதையாய் இருப்பவள்; லோகநாயகி: உலக நாயகி;

தோளாலும்வாளினாலும் மாறிடு தோலாத வான  நாடுசூறை கொள் சூராரியேவிசாகனே சுரர்தம்பிரானே

 

மாறிடு: பகைமை பூண்ட; தோலாத: தோல்வி அடையாத; சூறைகொள்: கொள்ளையிட்டவன்; சூராரியே: சூர பத்மனைப் வதைத்தவனே;

ஆராத காத லாகி மாதர்தம் ஆபாத சூட மீதி லே விழி யாலோலனாய் விகாரமாகி .... தணியாத மோகத்தினால் பெண்களுடைய உள்ளங்கால் முதல் உச்சி வரையிலே உள்ள அங்கங்களில் கண்கள் அலைபாய்வதால் மனவிகாரத்தை அடைந்து;

இலஞ்சியாலே ஆசா பசாசு மூடி மேலிட ஆசார வீனனாகியே மிக ஆபாசனாகி யோடி நாளும் அழிந்திடாதே... குணக்கேடு உற்றும்; ஆசையாகிய பிசாசால் கவரப்பட்டும்; அசுத்தனாகி எப்போதும் அலைந்து திரிந்து அழிந்துபோகாமல்;

ஈராறு தோளும் ஆறு மாமுகமோடு ஆரு நீப வாச மாலையும் ஏறான தோகை நீல வாசியும் .... பன்னிரு தோள்களையும்; ஆறு திருமுகங்களையும்; நிறைந்த வாசம் வீசுகின்ற கடப்ப மாலையையும்; மயில் என்னும் நீல நிற வாகனத்தையும்;

அன்பினாலே ஏனோரும் ஓதுமாறு தீதற நானாசு பாடி யாடி நாடொறும் ஈடேறு மாறு ஞான போதகம் அன்புறாதோ... (அன்பில்லாத) மற்றவர்களும் அன்பு பூண்டு போற்றும்படியாகவும் தீமைகள் நீங்கும்படியாகவும் நான் ஆசுகவிகளைப் பாடியும் ஆடியும் என்றும் கடைத்தேறுமாறு அடியேனுக்கு அன்போடு ஞானோபதேசம் அருளாயோ (அருளவேண்டும்).

வாராகி நீள் கபாலி மாலினி மாமாயி யாயி தேவி யாமளை... வாராகியும்; கபாலத்தை ஏந்தியவளும்; மாலையை அணிந்தவளும்; மகமாயியும்; தாயும்; தேவியும்; சியாமள நிறத்தினளும்;

வாசா மகோசரா பராபரை இங்கு உள் ஆயி... வாக்குக்கு எட்டாதவளும்; பராபரையும்; உள்ளத்திலே குடியிருக்கின்ற தாயும்;

வாதாடி மோடி காடுகாள் உமை மாஞால லீலி ஆல போசனி மாகாளி சூலி வாலை யோகினி அம்பவானி... (காளியாக) சிவனிடத்திலே வாது புரிந்தவளும்; துர்க்கையும்; வனதேவதையும்; உமாதேவியும்; பெரியதான நிலவுலகிலே லீலைகளைப் புரிந்தவளும்; நஞ்சை உண்டவளும்; மஹா காளியும்; சூலத்தை ஏந்தியவளும்; பாலாம்பிகையும்; யோகினியும்; அழகிய பவானியும்;

சூராரி மாபுராரி கோமளை தூளாய பூதி பூசு நாரணி சோணாசலாதி லோக நாயகி தந்தவாழ்வே... மகிஷாசுரனை வதைத்தவளும்; திரிபுரங்களை எரித்தவளும்; திருவண்ணாமலையில் ஆதி தேவியாக இருப்பவளுமான உலக நாயகி ஈன்ற செல்வமே!

தோளாலும் வாளினாலு மாறிடு தோலாத வான நாடு சூறைகொள் சூராரியே விசாகனே சுரர் தம்பிரானே... தோளாலும் வாளாலும் போரிட்டவனும்; பகைமை பூண்டவனும்; தோல்வியே இல்லாதவனும்; தேவலோகத்தைக் கொள்ளையடித்தவனுமான சூரனை வதைத்தவனே! விசாகனே! தேவர்கள் தலைவனே! (தம்பிரானே!)

சுருக்க உரை

வாராகியும்; கபாலத்தை ஏந்தியவளும்; மாலையை அணிந்தவளும்; மகமாயியும்; தாயும்; தேவியும்; சியாமள வண்ணமுடையவளும்; வாக்குக்கு எட்டாதவளும்; உள்ளத்தில் எப்போதும் குடியிருப்பவளும்; இறைவனுடன் காளியாக வாதாடியவளும்; துர்க்கையும்; வனதேவதையும்; உலகிலே லீலைகளைப் புரிபவளும்; விஷத்தை உண்டவளும்; மஹா காளியும்; சூலாயுதத்தை ஏந்தியவளும்; பாலாம்பிகையும்; யோகினியும்; அழகிய பவானியும்; மகிடாசுரனை வதைத்தவளும்; திரிபுரங்களை எரித்தவளும்; அழகியும்; திருநீற்றைப் பூசுபவளும்; நாரணியும்; திருவண்ணாமலையில் ஆதி தேவதையாக இருப்பவளுமான உலக நாயகி பெற்றெடுத்த செல்வமே! தோளாலும் வாளாலும் போரிட்டவனும்; பகைமை கொண்டவனும்; தோல்வியற்றவனும்; தேவலோகத்தைச் சூறையாடியவனுமான சூரனை வதைத்தவனே!  விசாகனே!  தேவர் தம்பிரானே!

அடங்காத மோகத்தால் பெண்களுடைய உச்சி முதல் பாதம் வரையில் விழிகள் அலைபாய்ந்து ஈடுபட்டு மனவிகாரம் கொண்டவனாயிருக்கும் குணத்தின் தன்மையாலும்; ஆசையாகிய பேய் பிடித்து ஆட்டுவதாலும்; ஆசாரக் குறைவுபட்ட அடியேன் அசுத்தனாகி எங்கெங்கும் திரிந்து கெட்டழியாதபடி,

உன்னுடைய பன்னிரு தோள்கள்; ஆறு முகங்கள்; வாசம் நிறைந்த கடப்ப மாலை; வாகனமான நீல மயில் முதலான எல்லாவற்றின் மீதும் பிறரும் அன்புகொண்டு போற்றுமாறும் தீமைகள் அழியுமாறும் ஆசுகவி பாடும்படியாக அடியேனுக்கு ஞானோபதேசம் செய்தருள வேண்டும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jun/19/பகுதி---857-2941007.html
2941004 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 856 ஹரி கிருஷ்ணன் Monday, June 18, 2018 12:00 AM +0530  

‘தமர் அல்லாதாரும் பாடி மகிழுமாறு நான் ஆசுகவி பாடவேண்டும்’ என்று கோரும் இப்பாடலில் அம்பிகையின் பல நாமங்கள் வரிசையாக அடுக்கப்படுகின்றன.

அடிக்கு ஒற்றொழித்து 34 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களில் இரண்டு நெடில், ஒரு குறில் என்று மூன்றெழுத்துகளும்; இரண்டு, மூன்று, ஆறு, ஏழு, பத்து, பதினொன்று ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாக இரண்டெழுத்துகளும்; நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்களில் ஒரு நெடில், இரண்டு குறில் என மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

 

தானான தான தான தானன

                தானான தான தான தானன

                தானான தான தான தானன                            தந்ததான

ஆராத காத லாகி மாதர்த

                        மாபாத சூட மீதி லேவிழி

                        யாலோல னாய்வி கார மாகியி            லஞ்சியாலே

                ஆசாப சாசு மூடி மேலிட

                        ஆசார வீன னாகி யேமிக

                        ஆபாச னாகி யோடி நாளும                      ழிந்திடாதே

ஈராறு தோளு மாறு மாமுக

                        மோடாரு நீப வாச மாலையு

                        மேறான தோகை நீல வாசியு                 மன்பினாலே

                ஏனோரு மோது மாறு தீதற

                        நானாசு பாடி யாடி நாடொறு

                        மீடேறு மாறு ஞான போதக                      மன்புறாதோ

வாராகி நீள்க பாலி மாலினி

                        மாமாயி யாயி தேவி யாமளை

                        வாசாம கோச ராப ராபரை                         யிங்குளாவி

                        வாதாடி மோடி காடு காளுமை

                மாஞால லீலி யால போசனி

                        மாகாளி சூலி வாலை யோகினி            யம்பவானி

சூராரி மாபு ராரி கோமளை

                        தூளாய பூதி பூசு நாரணி

                        சோணாச லாதி லோக நாயகி                 தந்தவாழ்வே

                தோளாலும் வாளி னாலு மாறிடு

                        தோலாத வான நாடு சூறைகொள்

                        சூராரி யேவி சாக னேசுரர்                          தம்பிரானே.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jun/18/பகுதி---856-2941004.html
2940290 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 855 ஹரி கிருஷ்ணன் Friday, June 15, 2018 02:54 PM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

என்னால் பிறக்கவும்என்னால் இறக்கவும் என்னால் துதிக்கவும்கண்களாலே

 

 

என்னால் அழைக்கவும்என்னால் நடக்கவும் என்னால் இருக்கவும்பெண்டிர் வீடு

 

 

என்னால் சுகிக்கவும்என்னால் முசிக்கவும் என்னால் சலிக்கவும்தொந்த நோயை

 

முசிக்கவும்: மெலிவடையவும் (முசித்தல்: மெலிவடைதல், களைத்துப் போதல்); தொந்த(ம்): பிணைப்பு, பாசம்;

என்னால் எரிக்கவும்என்னால் நினைக்கவும் என்னால் தரிக்கவும்இங்கு நான் ஆர்

 

தரிக்கவும்: தாங்கிக் கொள்ளவும்;

கல் நார் உரித்த என்மன்னா எனக்கு நல் கர்ண அமிர்த பதம் தந்தகோவே

 

கர்ணாமிர்த: செவிக்கு இன்பமான; பதம்: நிலை, உபதேச மொழி;

கல்லார் மனத்துடன்நில்லா மனத்தவ கண்ணாடியில் தடம்கண்ட வேலா

 

கல்லார்: உன்னைக் கல்லார், உணரார்;

மன்னான தக்கனைமுன்னாள் முடி தலை வல் வாளியில் கொளும்தங்க ரூபன்

 

மன்னான: மன்னனான; தங்க ரூபன்: பொன்னார் மேனியனான சிவன்;

மன்னா குறத்தியின்மன்னா வயல் பதி மன்னா முவர்க்கு ஒருதம்பிரானே.

 

வயற்பதி: வயலூர்; முவர்க்கு: மூவருக்கு—பிரம, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கு;

 

என்னால் பிறக்கவும் என்னால் இறக்கவும் என்னால் துதிக்கவும்...என்னுடைய முயற்சியால் பிறப்பதற்கும்; என்னுடைய செய்கையால் இறப்பதற்கும்; என்னுடைய முயற்சியாலே உன்னைத் துதிப்பதற்கும்;

கண்களாலே என்னால் அழைக்கவும் என்னால் நடக்கவும் என்னால் இருக்கவும்... என்னுடைய கண்களால் மற்றவரைப் பார்த்து அழைப்பதற்கும்; என்னுடைய முயற்சியால் காலைக் கொண்டு நடப்பதற்கும்; என்னுடைய முயற்சியால் நான் வாழ்ந்திருப்பதற்கும்;

பெண்டிர்வீடு என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும் என்னால் சலிக்கவும்... மனைவியையும் (குடும்பம்,) வாழ்கின்ற வீட்டையும் நான் அனுபவிப்பதற்கும்; துன்பப்பட்டு மெலிவடைவதற்கும்; ‘எதுவுமே வேண்டாம்’ என்று அலுப்டையவும்;

தொந்தநோயை என்னால் எரிக்கவும் என்னால் நினைக்கவும் என்னால் தரிக்கவும் இங்கு நான் ஆர்.... பந்தங்களின் காரணமாக ஏற்படும் நோய்களை என்னுடைய முயற்சியால் எரிப்பதற்கும்; என் மனத்தைக் கொண்டு பலவற்றையும் நினைப்பதற்கும்; என் வலிமையால் இன்ப துன்பங்களைத் தாங்கிக் கொள்ளவும் இங்கே நான் யார்? (எல்லாமே உன் செயல்).

கன்னார் உரித்த என் மன்னா எனக்குநல் கர்ணாமிர்தப்பதம் தந்தகோவே... என் மனமாகிய கல்லை உரித்து என்னைக் கனியச் செய்த என் அரசே! செவிக்கு அமுதமாக விளங்ககம் உபதேச மொழியை எனக்கு அருளிய தலைவனே!

கல்லார் மனத்துடன் நில்லா மனத்தவ கண்ணாடியில் தடம் கண்டவேலா...  உன்னை நினையாதார், உணராதார்களின் மனத்திலே வீற்றிருக்கச் சம்மதியாத மனத்தைக் கொண்டவனே! கண்ணாடி போன்ற தெளிவான தடாகத்தை உன்னுடைய வேலால்* தோற்றுவித்தவனே!

(திருமுருகன் பூண்டி என்னும் தலத்திலே முருகன் தன்னுடைய வேலால் ஒரு தடாகத்தை ஏற்படுத்தியதைக் குறிக்கிறது.)

மன்னான தக்கனை முன்னாள் முடித்தலை வன்வாளியிற் கொளும்... மன்னனாக விளங்கிய தட்சப் பிரஜாபதியை முற்காலத்தில், மகுடம் அணிந்த தலையோடு கொடிய அம்பைச் செலுத்திக் கொய்தவனும்,

தங்கரூபன் மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி மன்னா முவர்க்கொரு தம்பிரானே... பொன்னார் மேனியனுமாகிய சிவபெருமானுடைய குருநாதனே! குறமகளான வள்ளியின் தலைவனே! வயலூரின் இறைவனே! பிரமன், திருமால், சிவன் என்னும் மும்மூர்த்திகளுக்கும் தலைவனாக விளங்கும் தம்பிரானே!

சுருக்க உரை

கல்லைப் போன்ற என் மனத்திலிருந்து நார் உரிப்பதுபோல என்னைக் கனியச் செய்தவனே!  செவிக்கு அமுதமாக விளங்கும் உபதேச மொழிகளை அடியேனுக்கு அருளியவனே! (திருமுருகன் பூண்டி என்னும் தலத்தில்) கண்ணாடி போன்ற தடாகத்தை வேலால் உண்டாக்கியவனே! தட்சப் பிரஜாபதியின் தலையை முன்னொரு காலத்திலே தலையில் அணிந்திருக்கும் கிரீடத்தோடு அம்பெய்து கொய்தவரும் பொன்னார் மேனியருமான சிவபிரானின் குருநாதனே! குறவள்ளியின் தலைவனே! மும்மூர்த்திகளுக்கும் தலைவனாக விளங்கும் தம்பிரானே!

நான் பிறப்பதும் என் முயற்சினால் இல்லை; இறப்பதும் என்னுடைய செயலால் இல்லை; துதிப்பதும் என்னுடைய திறத்தால் இல்லை; கண்ணால் ஒருவரை அழைப்பதும் என்னுடைய திறத்தால் இல்லை; கால்கொண்டு நடப்பதும் என்னுடைய முயற்சியால் இல்லை; இந்த உலகத்தில் இருப்பதும் என்னுடைய திறத்தால் இல்லை; மனைவி, குடும்பம், வீடு என்று பல சுகங்களை அனுபவிப்பதும் என்னுடைய ஆற்றலால் இல்லை; எதையெதையோ விரும்பி இளைப்பதும் என்னுடைய தன்மையால் இல்லை; ‘இனி எதுவும் வேண்டாம்’ என்று அலுத்துப்போய் ஒதுக்குவதும் என் கையிலில்லை; பந்த பாசங்களைச் சுட்டுப் பொசுக்குவதும் என்னுடைய முயற்சியால் இல்லை; இந்த மனத்தைக் கொண்டு பலவற்றையும் நினைப்பதும் என்னுடைய செயலால் இல்லை; இன்ப துன்பங்களைத் தாங்கி நிற்பதும் என்னுடைய வலிமையால் இல்லை.  இவை எல்லாவற்றையும் என்னுடைய முயற்சியால் அடைவதற்கு நான் யார்?  எல்லாமே உன் செயல்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jun/17/பகுதி---85-2940290.html
2940288 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 854 ஹரி கிருஷ்ணன் Friday, June 15, 2018 02:49 PM +0530  

‘இந்த வாழ்வில் எல்லாமும் உன் செயலே’ என்று போற்றுகின்ற இந்தப் பாடல் வயலூருக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஒரு குறில், ஒரு நெடில், ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்று என இரண்டெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக அமைந்துள்ளன.

தன்னா தனத்தன தன்னா தனத்தன

                தன்னா தனத்தன                                                     தந்ததான

 

என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்

                        என்னால் துதிக்கவும்                                    கண்களாலே

                என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்

                        என்னா லிருக்கவும்                                        பெண்டிர்வீடு

என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்

                        என்னால் சலிக்கவும்                                    தொந்தநோயை

                என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும்

                        என்னால் தரிக்கவும்                                      இங்குநானார்

கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல்

                        கர்ணா மிர்தப்பதம்                                          தந்தகோவே

                கல்லார் மனத்துட னில்லா மனத்தவ

                        கண்ணா டியிற்றடம்                                      கண்டவேலா

மன்னா னதக்கனை முன்னாள் முடித்தலை

                        வன்வா ளியிற்கொளும்                             தங்கரூபன்

                மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி

                        மன்னா முவர்க்கொரு                                 தம்பிரானே.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/7/w600X390/1465.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jun/16/பகுதி---854-2940288.html
2939501 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 853 ஹரி கிருஷ்ணன் Friday, June 15, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

வாரி மீதே எழுதிங்களாலே

 

வாரி: கடல்; திங்கள்: சந்திரன்;

மார வேள் ஏவியஅம்பினாலே

 

மாரவேள்: மன்மதன்;

பார் எ(ல்)லாம் ஏசியபண்பினாலே

 

பண்பினாலே: தன்மையானே;

பாவியேன் ஆவிமயங்கலாமோ

 

 

சூரன் நீள் மார்புதொளைந்த வேலா

 

தொளைந்த: தொளைத்த;

சோதியே தோகைஅமர்ந்த கோவே

 

தோகை அமர்ந்த: மயில் மேல் அமர்ந்த;

மூரி மால் யானைமணந்த மார்பா

 

மூரி: பெருமை; மால்: அன்பு; யானை: தேவானை;

மூவர் தேவாதிகள்தம்பிரானே.

 

 

வாரிமீதேயெழு திங்களாலே...கடலின்மேல் உதிதெழுகின்ற சந்திரனாலும்,

மாரவே ளேவிய அம்பினாலே... மன்மதன் எய்த மலர்க்கணைகளாலும்,

பாரெலாம் ஏசிய பண்பினாலே...  உலகத்திலுள்ள எல்லோரும் பேசும் வசைச் சொற்களாலும்,

பாவியேன் ஆவி மயங்கலாமோ... (உனைப் பிரிந்து தனித்திருக்கும்) பாவியாகிய நான் என் உயிரிலே கலக்கம் எய்தலாமோ? (அடியேன் உயிர் கலங்காமல் காத்தருள வேண்டும்.)

சூரனீள் மார்பு தொளைந்த வேலா...சூரனுடைய நீண்ட மார்பைத் தொளைத் வேலை ஏந்தியவனே!

சோதியே தோகையமர்ந்த கோவே... ஜோதியே, மயில்மீது அமர்ந்திருக்கின்ற மன்னனே!

மூரிமால் யானைமணந்தமார்பா... பெருமையும் அன்பும் கொண்டவளான தேவானையை மணந்த திருமார்பனே!

மூவர்தேவாதிகள் தம்பிரானே.... மும்மூர்த்திகளுக்கும் தேவர்களுக்கும் தலைவனே!

சுருக்க உரை

சூரனுடைய அகன்ற மார்பைத் தொளைத் வேலை ஏந்தியவனே! சோதியே! மயில் மீது அமர்திருக்கின்ற மன்னனே! சிவன், விஷ்ணு, பிரமன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் அனைத்துத் தேவர்களுக்கும் தலைவனே!

கடலில் உதிதெழுகின்ற நிலவாலும் மன்மதன் எய்கின்ற மலர்க் கணைகளாலும் உலகிலுள்ளவர்களுடைய ஏச்சுகளாலும் உன்னைப் பிரிந்திருக்கின்ற பாவியேனாகிய நான் என்னுடைய ஆவியில் கலக்கம் எய்தலாமோ? (அடியேனுடைய ஆவி கலக்கம் எய்தாதவாறு காத்தருள வேண்டும்..)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jun/15/பகுதி---853-2939501.html
2938883 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 852 ஹரி கிருஷ்ணன் Thursday, June 14, 2018 10:54 AM +0530  

 

‘என் ஆவி மயக்கமடையாமல் காத்தருள வேண்டும்’ என்று நாயகி பாவத்தில் கோரும் இப்பாடல் பொதுப் பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 20 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, நான்கு ஆகிய சீர்களில் இரண்டு நெடிலும் ஒரு குறிலுமாக மூன்றெழுத்துகளும்; இரண்டு, ஐந்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலுமாக மூன்றெழுத்துகளும்; தொங்கல் சீர்களான நான்காம், ஆறாம் சீர்களில் இரண்டு குறிலும், இரண்டு நெடிலும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றுமாக நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.

தானான தானன                                                                       தந்ததானா

      தானான தானன                                                       தந்ததானா

 

வாரிமீ தேயெழு                                                                        திங்களாலே

                மாரவே ளேவிய                                                       அம்பினாலே

பாரெலா மேசிய                                                                        பண்பினாலே

                பாவியே னாவிம                                                      யங்கலாமோ

சூரனீள் மார்புதொ                                                                    ளைந்தவேலா

                சோதியே தோகைய                                               மர்ந்தகோவே

மூரிமால் யானைம                                                                ணந்தமார்பா

                மூவர்தே வாதிகள்                                                  தம்பிரானே.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/7/w600X390/1465.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jun/14/பகுதி---852-2938883.html
2937686 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 851 ஹரி கிருஷ்ணன் DIN Wednesday, June 13, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

வான் அப்பு கு பற்றுமருத்து கனல் மேவு

 

வான்: ஆகாயம்; அப்பு: நீர்; கு: மண்; பற்று: (இவற்றோடு) கூடிய; மருத்து: காற்று; கனல்: நெருப்பு (பஞ்சபூதங்கள்);

மாய தெற்றி பொய்குடில் ஒக்க பிறவாதே

 

தெற்றி: திண்ணை அல்லது மாடம் (ஆகுபெயராகக் கட்டடம்);

ஞான சித்தி சித்திரநித்தம் தமிழால் உன்

 

ஞானச் சித்தி: ஞானம் சித்திக்க (கைகூட); சித்திர: அழகான; நித்தம்: அழியாதது;

நாமத்தை கற்றுபுகழ்கைக்கு புரிவாயே

 

 

கான கொச்சை சொல்குறவிக்கு கடவோனே

 

கான: காட்டில் (வசித்த); கொச்சைச் சொல்: மழலைச் சொல்; குறவி: குறத்தி;

காதி கொற்ற பொன் குலவெற்பை பொரும்வேலா

 

காதி: கூறுசெய்து; பொற்குல வெற்பு: கிரவுஞ்சம்;

தேனை தத்த சுற்றியசெச்சைதொடையோனே

 

தேனை: (ஆகுபெயராக) வண்டுகளை; தத்த: தாவ; செச்சை: வெட்சி; தொடையோனே: மாலையணிந்தவனே (தொடை: மாலை);

தேவ சொர்க்கசக்கிரவர்த்திபெருமாளே.

 

 

வான் அப்புக் குப் பற்று மருத்துக் கனல் மேவு... வானம், நீர், பூமி இவற்றோடு சேர்ந்த காற்று, தீ என்ற பஞ்சபூதச் சேர்க்கையால் ஏற்பட்ட,

மாயத் தெற்றிப் பொய்க்குடில் ஒக்கப் பிறவாதே... மாயக் கட்டடமும் பொய்க் குடிசையுமான இந்த உடலோடு பிறக்காமல்;

ஞானச் சித்திச் சித்திர நித்தத் தமிழால்... ஞானம் கைவரப்பெறும்படியாக அழகியதும் அழியாததுமான தமிழைக்கொண்டு,

உன் நாமத்தைக் கற்றுப் புகழ்கைக்குப் புரிவாயே...  உன் திருநாமங்களை கற்றுணர்ந்து உன்னைப் போற்றுவதற்கு அருளவேண்டும்.

கானக் கொச்சைச் சொற்குற விக்குக் கடவோனே... காட்டில் இருந்தவளும் மழலைமொழியை உடையவளுமான வள்ளிக் குறமகளுக்குக் கடப்பாடு உடையவனே!

கொற்றப் பொற்குல வெற்பை காதிப் பொரும்வேலா... வெற்றியுடன் திகழ்ந்ததும் பொன்மயமானதும் குலபர்வதமுமான கிரெளஞ்ச மலையைப் பிளந்து அதனுடன் போரிட்ட வேலனே!

தேனைத் தத்தச் சுற்றிய செச்சைத் தொடையோனே... வண்டுகள் தாவிச் சூழ்கின்ற (தேன் நிறைந்த) வெட்சி மலர்மாலையை அணிந்தவனே!

தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப் பெருமாளே.... தேவர்களுடைய நாடான சொர்க்கத்துக்கு சக்கரவர்தியாகத் திகழ்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

காட்டில் இருந்தவளும் மழலைமொழி பேசுபவளும் குறமகளுமான வள்ளிக்குக் கடப்பாடு உடையவனே! பொன்மயமானதும் வெற்றிச் சிறப்புடையதும் குலகிரியுமான கிரெளஞ்சத்தைப் பிளந்து அதனுடன் போரிட்டவனே!  வண்டுகள் தாவிக் குதித்து மொய்க்கின்ற வெட்சிப்பூ மாலையைச் சூடியவனே! தேவர்களுடைய அமரலோகத்துக்குச் சக்கரவர்த்தியாக விளங்குகின்ற பெருமாளே!

பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் ஏற்பட்டதும் மாயம் நிறைந்ததும் அழியக்கூடிய பொய்யுடலுமான இந்தக் குடிலில் நான் மீண்டும் பிறவாமலும்; அடியேனுக்கு ஞானம் கைவரப்பெறுமாறு அழகானதும் என்றும் அழியாததுமான தமிழைக் கொண்டு உன்னுடைய திருநாமங்களை அறிந்துணர்ந்து, ‘முருகா, குமரா, ஆறுமுகா என்றெல்லாம்) உரைத்துப் போற்றி உன்னுடைய புகழைப் பாட அருளவேண்டும்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/24/w600X390/.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jun/13/பகுதி---2937686.html
2937685 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 850 ஹரி கிருஷ்ணன் Tuesday, June 12, 2018 12:00 AM +0530  

‘உன்னைத் தமிழால் போற்றவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது,

அடிக்கு ஒற்றொழித்து 26 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடில், ஒரு குறில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என மூன்றெழுத்துகளும்; இரண்டு, ஏழு ஆகிய சீர்களிலும்  நான்கு, எட்டு ஆகிய சீர்களிலும் இரண்டு குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளுமாக இரண்டெழுத்துகளும்; மூன்று, எட்டு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் என மூன்றெழுத்துகளும்; ஐந்து, ஒன்பது ஆகியவை தொங்கல் சீர்கள்.

தானத் தத்தத் தத்தன தத்தத்                                           தனதான

      தானத் தத்தத் தத்தன தத்தத்                           தனதான

 

வானப் புக்குப் பற்றும ருத்துக்                                         கனல்மேவு

                மாயத் தெற்றிப் பொய்க்குடி லொக்கப்     பிறவாதே

ஞானச் சித்தித் சித்திர நித்தத்                                         தமிழாலுன்

                நாமத் தைக்கற் றுப்புகழ் கைக்குப்               புரிவாயே

கானக் கொச்சைச் சொற்குற விக்குக்                        கடவோனே

                காதிக் கொற்றப் பொற்குல வெற்பைப்    பொரும்வேலா

தேனைத் தத்தச் சுற்றிய செச்சைத்                             தொடையோனே

                தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப்                 பெருமாளே.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jun/12/பகுதி---2937685.html
2936450 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 848 ஹரி கிருஷ்ணன் Saturday, June 9, 2018 03:58 PM +0530  

நற்கதி பெறுவதைக் கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 20 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; இரண்டு, ஐந்து ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; மூன்றும் ஆறுமான சீர்கள் தொங்கல் சீர்களாகவும் அமைந்துள்ளன.

தனதத்த தத்த   தனதான

      தனதத்த தத்த   தனதான

 

மனைமக்கள் சுற்ற                                                                 மெனுமாயா

                வலையைக்க டக்க                                                 அறியாதே

வினையிற்செ ருக்கி                                                              யடிநாயேன்

                விழலுக்கி றைந்து                                                   விடலாமோ

சுனையைக்க லக்கி                                                                விளையாடு

                சொருபக்கு றத்தி                                                      மணவாளா

தினநற்ச ரித்ர                                                                              முளதேவர்

                சிறைவெட்டி விட்ட                                               பெருமாளே.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jun/10/பகுதி---848-2936450.html
2936451 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 849 ஹரி கிருஷ்ணன் Saturday, June 9, 2018 03:57 PM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

மனை மக்கள் சுற்றம்என்னும் மாயா

 

 

வலையை கடக்கஅறியாதே

 

 

வினையில் செருக்கிஅடி நாயேன்

 

 

விழலுக்கு இறைத்துவிடலாமோ

 

 

சுனையை கலக்கிவிளையாடும்

 

 

சொருப குறத்திமணவாளா

 

 

தினம் நல் சரித்திரம்உ(ள்)ள தேவர்

 

 

சிறை வெட்டி விட்டபெருமாளே.

 

 

மனைமக்கள் சுற்றம் எனுமாயா வலையைக் கடக்க அறியாதே... மனைவி, பிள்ளைகள், சுற்றத்தார் எனப்படுவதான மாய வலையிலிருந்து விடுபடத் தெரியாமல்,

வினையிற்செ ருக்கி யடிநாயேன் விழலுக்கு இறைத்து விடலாமோ... என் செயல்களிலே பெருமிதம் அடைந்து, நாயினும் கடையேனாகிய நான் (என் வாழ்நாளை) விழலுக்கு இறைத்ததாக வீணில் கழித்துவிடும் இச்செயல் நன்றோ? (வீணே கழியாமல் காத்தருள வேண்டும்.)

சுனையைக்கலக்கி விளையாடு சொருபக்கு றத்தி மணவாளா... சுனையிலே இறங்கி அதைக் கலக்கி விளையாடும் அழகியாம் வள்ளிக் குறத்தியின் மணாளனே!

தினநற்ச ரித்ர முளதேவர் சிறைவெட்டி விட்ட பெருமாளே....எப்போது நல்ல நெறியிலே செல்பவர்களான தேவர்களுடைய சிறையை ஒழித்து அவர்களைச் சிறைவீடு செய்த பெருமாளே!

சுருக்க உரை

சுனையில் இறங்கி நீந்திக் களித்து அதைக் கலக்கி விளையாடுகின்ற குறமகளும் அழகியுமான வள்ளியின் மணாளா!  நல்லொழுக்கம் கொண்ட தேவர்களைச் சிறையிலிருந்து விடுவித்த பெருமாளே!

மனைவி, மக்கள், சுற்றம் என்கின்ற மாய வலையிலிருந்து விடுபடத் தெரியாத அடியேன்; என் செயல்களிலே பெருமிதம் கொண்டு மயங்கி நிற்கும் கீழான நாயைப் போன்ற அடியேன் என் வாழ்நாட்களையெல்லாம் வீண் நாட்களாகக் கழிப்பது நன்றோ?  (என் வாழ்நாள் வீணே கழியாமல் காத்தருள வேண்டும்.)

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jun/11/பகுதி---849-2936451.html
2934991 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 847 ஹரி கிருஷ்ணன் Friday, June 8, 2018 10:50 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

வீணை இசை கோட்டிஆலம் மிடறு ஊட்டு வீர(ம்) முனை ஈட்டிவிழியார் தம்

 

கோட்டி: வளைத்து, பிறப்பித்து; ஆலம்: விஷம்; மிடறு ஊட்டும்: தொண்டையில் செலுத்தும்;

வேதனையில் நாட்டம்ஆகி இடர் பாட்டில் வீழும் மயல் தீட்டிஉழலாதே

 

மயல் தீட்டி: மையலைக் கூராக்கி, அதிகரித்து;

ஆணி உள வீட்டைமேவி உளம் மாடு ஐ ஆவலுடன் ஈட்டிஅழியாதே

 

ஆணியுள வீடு: ஆதாரமான வீடு; உளம்: உள்ளம்: மாட்டை: செல்வத்தை (மாடு: செல்வம்);

ஆவி உறை கூட்டில்ஞான மறை ஊட்டி ஆன நிலை காட்டிஅருள்வாயே

 

 

கேணி உற வேட்ட ஞானநெறி வேட்டர் கேள்சுருதி நாட்டில்உறைவோனே

 

கேணியுற: கிணற்றைப் போல (ஆழமாக, ஆழத்திலிருந்து); வேட்ட: விரும்பிய; வேட்டர்: விரும்பியவர்கள்; சுருதி நாட்டில்: வேதத்தின் இடம் அல்லது வேதத்தின் மொழி;

கீத இசை கூட்டி வேதமொழி சூட்டு கீரர் இயல்கேட்ட க்ருபை வேளே

 

கீரர்: நக்கீரர்;

சேணின் உயர் காட்டில்வாழும் மறவாட்டி சீதஇரு கோட்டில்அணைவோனே

 

சேண்: தொலைவு (இங்கே விண்ணைத் தொடும்); சீத: குளிர்ந்த; கோட்டில்: (கோடு: மார்பகம்) மார்பகத்தை;

சீறு அவுணர் நாட்டில்ஆர அழல் மூட்டி தேவர்சிறை மீட்ட பெருமாளே.

 

அவுணர்: அரக்கர்; ஆர: நிரம்ப, முழுவதும்;

வீணை இசை கோட்டி ஆலம் மிடறு ஊட்டு வீர(ம்முனை ஈட்டி விழியார் தம்.. வீணையில் இசையை மீட்டி, தொண்டையில் விஷத்தைச் செலுத்துகின்ற வீரத்தைக் கொண்ட வேல் விழிகளைக் கொண்ட பெண்களால் விளைகின்ற,

வேதனையில் நாட்டம் ஆகி இடர் பாட்டில் வீழும் மயல் தீட்டி உழலாதே...  வேதனையில் மனத்தை வைத்தவனாக, துன்பத்தில் வீழ்த்துகின்ற மோக உணர்வை அதிகரித்துக்கொண்ட நான் திரியாமல்,

ஆணி உள வீட்டை மேவி உளம் மாட்டை ஆவலுடன் ஈட்டி அழியாதே... ஆதாரமாக இருப்பதான (குடியிருக்கும்) வீட்டை அடைந்து, ஆவலோடு செல்வத்தைச் சேர்த்துச் சேர்த்து அழிந்து போகாமல்,

ஆவி உறை கூட்டில் ஞான மறை ஊட்டி ஆன நிலை காட்டி அருள்வாயே... உயிரின் இருப்பிடமான இந்த உடலுக்குள் ஞான மறைப்பொருள்களை ஊட்டி, நன்மையைத் தருகின்ற நிலையைக் காட்டி அருளவேண்டும்.

கேணி உற வேட்ட ஞான நெறி வேட்டர் கேள் சுருதி நாட்டில் உறைவோனே... கிணற்றைப்போல அடியாழத்திலிருந்து ஊறுவதும் விரும்பப்படுவதுமான ஞானமார்க்கத்தை நாடுபவர்கள் ஆராயும் வேதமொழியில் (வேதத்தில்) உறைபவனே!

கீத இசை கூட்டி வேத மொழி சூட்டு கீரர் இயல் கேட்ட க்ருபை வேளே... கீத இசையோடு வேதமொழியைப் போன்ற திருமுருகாற்றுப்படையைப் பாடிய நக்கீரருடைய தமிழைக் கேட்டருளிய கருணை வேளே!

சேணின் உயர் காட்டில் வாழும் மறவாட்டி சீத இரு கோட்டில் அணைவோனே... ஆகாயம் வரையிலே உயர்ந்திருக்கின்ற வள்ளிமலைக் காட்டில் வாழ்ந்த குறமகளான வள்ளியின் குளிர்சி பொருந்திய தனங்களைத் தழுவுபவனே!

சீறு அவுணர் நாட்டில் ஆர அழல் மூட்டி தேவர் சிறை மீட்ட பெருமாளே....  சீறுகின்ற அரக்கர்களுடைய நாட்டில் நெருப்பை நிரம்ப மூளும்படியாகச் செய்து, தேவர்களைச் சிறையிலிருந்து விடுவித்த பெருமாளே!

சுருக்க உரை

கிணற்றைப் போன்ற ஆழத்திலிருந்து ஊறுவதும் விரும்பப்படுவதுமான ஞான மார்க்கத்தை விரும்புபவர்கள் ஆராய்கின்ற வேதத்தின் உள்ளுறையாய் விளங்குபவனே!  நக்கீரர் கீத இசையோடு வேதமொழியைப் போன்ற திருமுருகாற்றுப் படையை இயற்ற அதைக் கேட்டருளிய கருணை நிறைந்தவனே!  வானை முட்டும்படி வளர்ந்திருக்கின்ற வள்ளிமலையில் வாழ்ந்த குறப்பெண்ணான வள்ளியின் குளிர்ந்த மார்பகங்களைத் தழுவுபவனே!  கோபித்துச் சீறுகின்ற அரக்கர்களுடைய நாட்டில் தீயைப் பெரிதாக மூட்டி (அவர்களை அழித்த காரணத்தால்) தேவர்களைச் சிறையிலிருந்து விடுவித்த பெருமாளே!

வீணையில் இசையை மீட்டி, தொண்டைக்குள் ஆலகால விஷத்தைச் செலுத்துகின்றவையும்; ஈட்டி முனை போன்றவையுமான கண்களை உடைய பெண்களால் ஏற்படும் துன்பங்களிலே நாட்டம் உடையவனாய், துன்பங்களை அதிகரித்துக்கொண்டும் மையலை வளர்த்துக்கொண்டும் நான் திரியாமலும்; இருப்பதற்கு ஆதாரமாக உள்ள வீட்டை விரும்பியும்; பொன்னை ஆவலுடன் சேகரித்தபடியும் பொழுதை வீணில் போக்கி அழியாதபடி, உயிர் வாசம் செய்வதான இந்த உடலுக்குள் ஞான மறைப் பொருளை ஊட்டி (உபதேசித்து) நன்மை தருவதான நிலைமையைக் காட்டியருள வேண்டும்.

 
]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jun/09/பகுதி---847-2934991.html
2933568 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 845 ஹரி கிருஷ்ணன் DIN Friday, June 8, 2018 12:00 AM +0530

பதச் சேதம்

சொற் பொருள்

வேலை வாளைகொடியஆலகாலத்தை மதன் வீசு பாணத்தை நிகர்எனல் ஆகும்

 

 

வேதை சாதித்த விழிமாதர் ஆபத்தில்விளையாடி மோகித்து இரியும்வெகு ரூப

 

வேதை: துன்பம் தருவதை; இரியும்: சிதறும், நிலைகுலையும்;

கோலகாலத்தைவிடல் ஆகி மாற குண விகாரம் ஓட தெளியஅரிதான

 

கோலகாலத்தை: ஆடம்பரத்தை; குண விகாரம்: குணவேறுபாடுகள்;

கூற ஒ(ண்)ணாதற்பரம ஞானரூபத்தின் வழி கூடலாக பெருமைதருவாயே

 

தற்பரம: மேம்பட்டதான; கூடலாக: கூடல் ஆக—கூடும்படியாக, சேரும்படியாக;

வாலி மார்பை துணியஏழ் மரா இற்று விழ வாளி போட கருதும்மநு ராமன்

 

மரா: மரா மரங்கள்; வாளி: அம்பு: மநு ராமன்: மனு குலத்தில் உதித்த ராமன்;

வான் உலோகத்தில்அமரேசன் ஒலிக்கவளை ஊதிமோகித்து விழ அருள்கூறும்

 

வான் உலோகத்தில்: வானுலகத்தில் (என்பதன் விகாரம்); அமரேசன்: இந்திரன்; வளை: சங்கு;

நீல மேனிக்கு மருகாஉதாரத்து வரு நீசர்வாழ்வை களையும்இளையோனே

 

நீல மேனிக்கு: திருமாலுக்கு; உதாரத்து: மேம்பாடுடைய (உதாரம்: கொடை, இங்கே மேம்பாடு);

நேசமாக குறவர்தோகை மானைபுணரும் நீப தோள்ஒப்பு அரியபெருமாளே.

 

நீப: கடம்பு, கடப்ப மாலை;

வேலை வாளைக் கொடிய ஆலகாலத்தை மதன் வீசு பாணத்தை நிகர் எனல் ஆகும்... வேலுக்கும் வாளுக்கும் கொடிய ஆலகால விஷத்துக்கும் மன்மதன் தொடுக்கின்ற பாணங்களுக்கும் இணையானது என்று சொல்லக்கூடிய,

வேதை சாதித்த விழி மாதர் ஆபத்தில் விளையாடி மோகித்து இரியும்... துன்பம் தருவதையே சாதித்திருக்கின்ற கண்களை உடைய பெண்களால் ஏற்படும் ஆபத்தோடு விளையாடி, மோகம்கொண்டு நிலைதடுமாறுகின்ற,

வெகு ரூப கோலகாலத்தை விடல் ஆகி மாறக் குண விகாரம் ஓட...பலவகையான ஆடம்பரங்களை நான் விட்டொழிக்கவும்; நல்வழிக்கு மாறவும்; என்னுடைய குணவேறுபாடுகன் என்னைவிட்டு ஓடவும்;

தெளிய அரிதான கூற (ண்)ணா தற்பரம ஞான ரூபத்தின் வழி கூடலாகப் பெருமை தருவாயே... தெளிந்து உணர்வதற்கு அரியதும்; எடுத்துரைக்க முடியாததும்; மேம்பட்டதும் ஞானமயமானதுமான நெறியிலே நடக்கின்ற பெருமையை அடியேனுக்குத் தந்தருள வேண்டும்.

வாலி மார்பைத் துணிய ஏழ் மரா இற்று விழ வாளி போடக் கருது(ம்மநு ராமன்... வாலியுடைய மார்பைப் பிளப்பதற்காகவும்; ஏழு மராமரங்ளை வீழ்த்துவதற்காகவும் அம்பை எய்ய சித்தம்கொண்டவனும் மனுவம்சத்தில் தோன்றியவனுமான ராமனும்;

வான் உலோகத்தில் அமரேசன் ஒலிக்க வளை ஊதி மோகித்து விழ அருள் கூறும் நீல மேனிக்கு மருகா... தேவலோகத்தில் தேவர் தலைவனாகிய இந்திரன் அபயக் கூக்குரல் எழுப்ப; சங்கை ஊதி, அதன் பேரோசையால் தேவர்களை மயங்கிவிழச் செய்த* நீலநிறத்துக் கண்ணனாகிய திருமாலுக்கு மருகனே!

(* கண்ணனுடைய தேவியான சத்தியபாமா பாரிஜாத மலரை விரும்பியபோது ‘இதை மானிடப் பெண்ணுக்குத் தரமுடியாது’ என்று இந்திராணி மறுக்கவே, கருடன் அந்தப் பாரிஜாதச் செடியைப் பறித்துவந்து சத்தியபாமாவின் இல்லத்தில் நட்டார். இதையறிந்த இந்திரனும் தேவர்களும் கண்ணனோடு போர்தொடுப்பதற்காக எழ, கண்ணன் தன் பாஞ்சஜன்யத்தை ஊதவும் அதன் பேரோசையைக் கேட்ட தேவர்களும் இந்திரனும் மயங்கிச் சாய்ந்தார்கள் என்ற புராணம் இங்கே சொல்லப்படுகிறது.)

உதாரத்து வரு நீசர் வாழ்வைக் களையும் இளையோனே... மேம்பட்ட நிலையில் ஆடம்பரமாக வாழ்ந்திருந்த நீசர்களான அரக்கர்களை அழித்தவனான இளையவனே!

நேசமாகக் குறவர் தோகை மானைப் புணரும் நீப தோள் ஒப்பு அரிய பெருமாளே....அன்பின் பெருக்கத்தால், வேடர் குலத்தவளும் மயிலையும் மானையும் ஒத்தவளுமான வள்ளியை அணைத்துக்கொள்கின்ற; கடப்பமாலையை அணிந்த இணையற்ற தோள்வலிமையை உடைய பெருமாளே!

சுருக்க உரை

வாலியின் மார்பைப் பிளக்கும்படியாகவும் ஏழு மராமரங்களை வீழ்த்தும்படியாகவும் அம்பை எய்த மனுக் குலத்தில் உதித்த ராமனும்; தேவலோகத்தில் தேவர் தலைவனான இந்திரன் அபயக் கூச்சலை எழுப்புமாறு பாஞ்சஜன்யத்தை ஊதி அதன் பேரோசையைக் கேட்ட தேவர்கள் மயங்கிச் சாயச் செய்த கண்ணனுமான திருமாலுக்கு மருகனே! மேன்மைகளோடு ஆடம்பரமாக வாழ்ந்திருந்த நீசர்களான அரக்கர்கள் அழியுமாறு வேலை எறிந்த இளையவனே!  வேடர் குலத்தில் உதித்தவளும் மானையும் மயிலையும் ஒத்தவளுமான வள்ளியை அன்பின் பெருக்கத்தால் தழுவுகின்றதும்; கடப்ப மாலையை அணிந்ததும்; இணையற்ற வலிமையைக் கொண்டதுமான தோள்களை உடைய பெருமாளே!

வேலையும் வாளையும் ஆலகால விடத்தையும் மன்மதனுடைய பாணங்களையும் ஒத்தவையும்; துன்பத்தையே தருபவையுமான கண்களைக்கொண்ட பெண்களோடு களித்து நிலைதடுமாறுகின்ற பலவிதமான ஆடம்பரமான போக்கு என்னைவிட்டு அகலவும்; நான் நல்ல நெறிக்கு மாறவும்; தீய குணங்கள் என்னை விட்டு ஓடவும்; தெளிந்து உணர்வதற்கு அரிதானதும் விரித்துச் சொல்ல முடியாததுமான ஞான மார்க்கத்தில் அடியேன் செல்லும்படியான பெருமையைத் தந்தருள வேண்டும்.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jun/08/பகுதி---845-2933568.html
2934988 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 846 ஹரி கிருஷ்ணன் Friday, June 8, 2018 12:00 AM +0530

 

‘அடியேனுக்கு ஞானத்தைத் தந்தருள வேண்டும்’ என்று கோருகிற இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் மூன்று குறிலுமாக நான்கெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடில், ஒரு குறில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என இரண்டெழுத்துகளும் அமைந்துள்ளன.

தானதன தாத்த தானதன தாத்த

                தானதன தாத்த                                                          தனதான

 

வீணையிசை கோட்டி யாலமிட றூட்டு

                        வீரமுனை யீட்டி                                               விழியார்தம்

      வேதனையில் நாட்ட மாகியிடர் பாட்டில்

                        வீழுமயல் தீட்டி                                                யுழலாதே

ஆணியுள வீட்டை மேவியுள மாட்டை

                        யாவலுட னீட்டி                                                 யழியாதே

      ஆவியுறை கூட்டில் ஞானமறை யூட்டி

                        யானநிலை காட்டி                                           யருள்வாயே

கேணியுற வேட்ட ஞானநெறி வேட்டர்

                        கேள்சுருதி நாட்டி                                             லுறைவோனே

      கீதவிசை கூட்டி வேதமொழி சூட்டு

                        கீரரியல் கேட்ட                                                  க்ருபைவேளே

சேணினுயர் காட்டில் வாழுமற வாட்டி

                        சீதவிரு கோட்டி                                                 லணைவோனே

      சீறவுணர் நாட்டி லாரவழல் மூட்டி

                        தேவர்சிறை மீட்ட                                           பெருமாளே.

 

 

 
]]>
http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jun/08/பகுதி---846-2934988.html
2933566 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 844 ஹரி கிருஷ்ணன் DIN Thursday, June 7, 2018 12:00 AM +0530  

‘ஞன நெறியைப் பெறவேண்டும்’ என்று கோருகின்ற இப்பாடல், பொதுப் பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் இரண்டு நெடிலும் ஒரு குறிலுமாக மூன்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் நான்கு குறில் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என்று நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.

தானனா தத்ததன தானனா தத்ததன

                தானனா தத்ததன          தனதான

 

வேலைவா ளைக்கொடிய ஆலகா லத்தைமதன்

                        வீசுபா ணத்தைநிக                                          ரெனலாகும்

      வேதைசா தித்தவிழி மாதரா பத்தில்விளை

                        யாடிமோ கித்திரியும்                                    வெகுரூப

கோலகா லத்தைவிட லாகிமா றக்குணவி

                        காரமோ டத்தெளிய                                       அரிதான

      கூறொணா தற்பரம ஞானரூ பத்தின்வழி

                        கூடலா கப்பெருமை                                      தருவாயே

வாலிமார் பைத்துணிய ஏழ்மரா இற்றுவிழ

                        வாளியோ டக்கருது                                       மநுராமன்

      வானுலோ கத்திலம ரேசனோ லிக்கவளை

                        யூதிமோ கித்துவிழ                                        அருள்கூரும்

நீலமே னிக்குமரு காவுதா ரத்துவரு

                        நீசர்வாழ் வைக்களையு                               மிளையோனே

      நேசமா கக்குறவர் தோகைமா னைப்புணரு

                        நீபதோ ளொப்பரிய                                          பெருமாளே.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jun/07/பகுதி---844-2933566.html
2933564 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 843 ஹரி கிருஷ்ணன் Wednesday, June 6, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

என் பந்த வினைதொடர் போக்கிவிசையமாகி

 

விசையமாகி: வெற்றி தந்து;

இன்பம் தனை உற்றுமகா ப்ரியம் அதுவாகி

 

 

அன்பு உந்திய பொன்கிணி பாற் கடல்அமுதான

 

பொன்கிணி: பொன் கிண்ணி;

அந்தம் தனில் இச்சைகொள் ஆற்பதம்அருள்வாயே

 

ஆற்பதம்: ஆஸ்பதம்—ஆதாரம்;

முன் புந்தி நினைத்துஉருவால் சிறுவடிவாகி

 

புந்தி நினைத்து: மனத்தால் எண்ணி;

முன் திந்தி எனபரதாத்துடன் நடமாடி

 

பரதாத்துடன்: பரத சாத்திர முறையுடன்;

தம் பந்தம் அற தவ(ம்)நோற்பவர் குறை தீர

 

 

சம்பந்தன் என தமிழ்தேக்கிய பெருமாளே.

 

தேக்கிய: தேக்குதல்—நிரம்பப் பருகுதல் (தேக்கெறிதல் என்றால் ஏப்பம் விடுதல் என்று பொருள்);

என்பந்த வினைத்தொடர் போக்கி விசையமாகி...  என்னைப் பிணித்திருக்கின்ற வினையாகிய சங்கிலித் தொடரிலிருந்து நான் விடுபடச்செய்து, என்னை வெற்றிபெறச் செய்து,

இன்பந்தனை யுற்று மகாப்ரியம் அதுவாகி...  இன்ப நிலையை எய்தி, பெரு விருப்பம் கொண்டு,

அன்பு உந்திய பொற்கிணி பாற்கடல் அமுதான... அன்பால் தூண்டப்பட்டு, பாற்கடல் என்னும் பொற்கிண்ணத்திலே உள்ள அமுதத்துக்கு இணையான,

அந்தந்தனில் இச்சைகொள் ஆற்பதம் அருள்வாயே... முடிவான பேரின்பப் பொருளின் மீது இச்சை கொள்கின்ற ஆதார நிலையைத் தந்தருள வேண்டும்.

முன் புந்தி நினைத்து உருவாற் சிறு வடிவாகி... முற்காலத்தில் (சூரனை அழிக்க) மனத்தால் நினைத்து, வடிவத்தால் சிறிய பாலகனாகத் தோன்றி,

முன்திந்தியெனப் பரதாத்துடன்நடமாடி... (சூரனை சம்ஹரித்தபோது) ‘திந்தி’ என்ற தாளகதியோடு பரதசாஸ்திர முறைப்படி, துடி என்னும் கூத்தினை ஆடி*,

(* இது, முருகன் சிதம்பரத்தில் நடனமாடியதைக் குறிக்கலாம் என்பது தணிகைமணி செங்கல்வராய பிள்ளையவர்களின் கருத்து.  ‘அலைகடல் வளைந்துடுத்த’ என்று தொடங்கும் திருக்கணியல் வகுப்பிலும் அருணகிரி நாதர் ‘முதலி பெரியம்பலத்துள் வரை அசல மண்டபத்துள், முநிவர் தொழ அன்று நிர்த்தம் ஆடினான்’ என்று பாடுவதைக் காணலாம்.)

தம்பந்தம் அறத் தவ நோற்பவர் குறைதீர... தங்களுடைய பந்த பாசங்களிலிருந்த விடுபடுவதற்காகத் தவம் மேற்கொண்டுள்ளவர்களுடைய குறை தீரும்படியாக,

சம்பந்தன் எனத்தமிழ் தேக்கிய பெருமாளே.... திருஞான சம்பந்தராக அவதரித்து தமிழை நிரம்பப் பருகி (தேவாரமாக உலகுக்கு அளித்த) பெருமாளே!

சுருக்க உரை

முற்காலத்தில் சூரனை அழிக்கவேண்டும் என்று மனத்தால் நினைத்து, சிறிய பாலகன் வடிவத்தைக்கொண்டு அவனை !ம்ஹரித்து, அந்த ஸம்ஹார காலத்திலே பரத சாஸ்தி முறைப்படி துடி என்னும் கூத்தை (சிதம்பரம், பேரம்பலத்தில்) ஆடியவனே!  தங்களுடைய பந்தபாசங்களிலிருந்து விடுபடவேண்டும் என்பதற்காக தவம் மேற்கொண்டுள்ளவர்களுடை மனக்குறையைப் போக்கும்படித் திருஞான சம்பந்தராக அவதரித்து, தமிழை நிரம்பப் பருகி, தேவாரப் பண்களாக உலகுக்கு அளித் பெருமாளே!

என்னைப் பிணித்திருக்கின்ற வினைத்தொடர் என்னும் சங்கிலியிலிருந்து என்னை விடுவித்து, என்னை வெற்றிபெறச் செய்து, நான் இன்ப நிலையை அடைந்து மிகுந்த பிரியத்துடனும் அன்புப் பெருக்கத்துடனும், பாற்கடல் என்னும் பொற்கிண்ணத்தில் உள்ள அமுதத்துக்கு இணையானதான முடிவான பேரின்பப் பொருளின்மீது விருப்பம்கொள்கின்ற ஆதார நிலையத் தந்தருள வேண்டும்.

 
]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jun/06/பகுதி--843-2933564.html
2933559 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 842 ஹரி கிருஷ்ணன் Tuesday, June 5, 2018 11:09 AM +0530  

முடிவான பொருளைப் பெற வேண்டும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) மெல்லொற்றுகளும்; இரண்டு ஆறு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; மூன்று, ஏழு ஆகிய சீர்களில் ஒரு நெடில், ஒரு  (கணக்கில் சேராத) வல்லொற்று, இரண்டு குறில் என மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

 

தந்தந்தன தத்தன தாத்தன                                               தனதான

 

என்பந்தவி னைத்தொடர் போக்கிவி                        சையமாகி

                இன்பந்தனை யுற்றும காப்ரிய                       மதுவாகி

அன்புந்திய பொற்கிணி பாற்கட                                    லமுதான

                அந்தந்தனி லிச்சைகொ ளாற்பத                  மருள்வாயே

முன்புந்திநி னைத்துரு வாற்சிறு                                 வடிவாகி

                முன்திந்தியெ னப்பர தாத்துட                        னடமாடித்

தம்பந்தம றத்தவ நோற்பவர்                                          குறைதீரச்

                சம்பந்தனெ னத்தமிழ் தேக்கிய                     பெருமாளே.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jun/05/பகுதி---842-2933559.html
2928523 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 840 ஹரி கிருஷ்ணன் Thursday, May 31, 2018 12:00 AM +0530  

‘உன்னை மலரிட்டுப் பூசை செய்ய வேண்டும்’ என்று கோரும் இப்பாடல், பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களின் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் அமைந்துள்ளன.

 

தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன

                தத்தனத் தத்ததன                                                    தனதான

 

மக்களொக் கற்றெரிவை பக்கமிக் கத்துணைவர்

                        மற்றுமுற் றக்குரவ                                        ரனைவோரும்

      வைத்தசெப் பிற்பணமும் ரத்நமுத் திற்பணியு

                        மட்டுமற் றுப்பெருகு                                      மடியாரும்

புக்குதுக் கித்தெரிகள் தத்தவைக் கப்புகுது

                        பொய்க்குமெய்க் குச்செயலு                    முருகாதே

      புஷ்பமிட் டுக்கருணை நற்பதத் தைப்பரவு

                        புத்திமெத் தத்தருவ                                       தொருநாளே

செக்கர்கற் றைச்சடையில் மிக்ககொக் கிற்சிறகு

                        செக்கமுற் றச்சலமு                                      மதிசூடி

      சித்தமுற் றுத்தெளிய மெத்தமெத் தத்திகழு

                        சித்தமுத் திச்சிவமு                                       மருள்வோனே

கொக்குறுப் புக்கொடுமை நிற்கும்வட் டத்தசுரை

                        கொத்தினொக் கக்கொலைசெய்          வடிவேலா  

      கொற்றவெற் றிப்பரிசை யொட்டியெட் டிச்சிறிது

                        குத்திவெட் டிப்பொருத                                பெருமாளே.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/may/31/பகுதி---840-2928523.html
2928527 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 838 ஹரி கிருஷ்ணன் DIN Tuesday, May 29, 2018 12:00 AM +0530

 

‘உன்னை மலரிட்டுப் பூசை செய்ய வேண்டும்’ என்று கோரும் இப்பாடல், பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களின் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் அமைந்துள்ளன.

 

தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன

                தத்தனத் தத்ததன                                                    தனதான

 

மக்களொக் கற்றெரிவை பக்கமிக் கத்துணைவர்

                        மற்றுமுற் றக்குரவ                                        ரனைவோரும்

      வைத்தசெப் பிற்பணமும் ரத்நமுத் திற்பணியு

                        மட்டுமற் றுப்பெருகு                                      மடியாரும்

புக்குதுக் கித்தெரிகள் தத்தவைக் கப்புகுது

                        பொய்க்குமெய்க் குச்செயலு                    முருகாதே

      புஷ்பமிட் டுக்கருணை நற்பதத் தைப்பரவு

                        புத்திமெத் தத்தருவ                                       தொருநாளே

செக்கர்கற் றைச்சடையில் மிக்ககொக் கிற்சிறகு

                        செக்கமுற் றச்சலமு                                      மதிசூடி

      சித்தமுற் றுத்தெளிய மெத்தமெத் தத்திகழு

                        சித்தமுத் திச்சிவமு                                       மருள்வோனே

கொக்குறுப் புக்கொடுமை நிற்கும்வட் டத்தசுரை

                        கொத்தினொக் கக்கொலைசெய்          வடிவேலா  

      கொற்றவெற் றிப்பரிசை யொட்டியெட் டிச்சிறிது

                        குத்திவெட் டிப்பொருத                                பெருமாளே.

 

 
]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/may/29/பகுதி---838-2928527.html
2928528 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 839 ஹரி கிருஷ்ணன் Monday, May 28, 2018 03:24 PM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

மக்கள் ஒக்கல்தெரிவை பக்க மிக்கதுணைவர் மற்றும்உற்ற குரவர்அனைவோரும்

 

ஒக்கல்: உறவினர்; தெரிவை: பெண், மனைவி; துணைவர்: சகோதரர்களும் நண்பர்களும்; உற்ற: உள்ள; குரவர்: பெரியோர்கள்;

வைத்த செப்பிற்பணமும் ரத்நம்முத்தில் 
பணியும் மட்டும் அற்றுபெருகும் அடியாரும்

 

செப்பில்: உண்டியலில், சேமிப்பில்; பணியும்: ஆபரணங்களும்; மட்டுமற்று: மட்டுமல்லாமல்;

புக்கு துக்கித்து எரிகள்தத்த வைக்க
புகுது பொய்க்கு மெய்க்குசெயலும் உருகாதே

 

புக்கு: வீட்டுக்குள் வந்து; துக்கித்து: துக்கம் கொண்டாடி; எரிகள்: நெருப்பு; தத்த வைக்க: கொழுந்துவிட்டெரிய; பொய்க்கு: பொய்யான; மெய்க்கு: உடலுக்கு;

புஷ்பம் இட்டுகருணை நல் 
பதத்தைபரவு புத்தி மெத்ததருவது ஒரு நாளே

 

பரவு(ம்): போற்றுகின்ற

செக்கர் கற்றைசடையில் மிக்ககொக்கின் 
சிறகு செக்கம் உற்றசலமும் மதி சூடி

 

செக்கர் கற்றைச் சடை: செந்நிறமுள்ள கற்றைச் சடை; செக்கம்: செகம், உலகம்; செக்கம் உற்ற சலம்: உலகுக்கு வந்த நீர்—கங்கை;

சித்தம் உற்று தெளியமெத்த மெத்ததிகழு(ம்) 
சித்த முத்திசிவமும்அருள்வோனே

 

சித்த முத்தி: திடமான முத்தி; சிவமும்: நன்மைப் பொருளையும்;

கொக்கு உறுப்பு கொடுமை நிற்கும் 
வட்டத்துஅசுரை கொத்தின்ஒக்க கொலை செய்வடி வேலா

 

கொக்கு உறுப்பு: (கொக்கு மாமரம், உறுப்பு: கிளை) மாமரக் கிளை; மை வட்டத்து: கரிய வட்டமாகிய கடல்; அசுரை: அசுரனை—சூரனை;

கொற்றம் வெற்றிபரிசை ஒட்டி எட்டிசிறிது குத்தி வெட்டிபொருத பெருமாளே.

 

கொற்றம்: வீரம்; பரிசை: கேடயத்தை; ஒட்டி எட்டி: அருகிலிருந்தும் தூர இருந்தும்;

 

மக்கள் ஒக்கல் தெரிவை பக்க மிக்கத் துணைவர் மற்றும் உற்ற குரவர் 
அனைவோரும்...  குழந்தைகள், உறவினர்கள், அருகில் இருக்கின்ற பல சகோதரர்கள், நண்பர்கள், அதற்குமேலும் இருக்கின்ற பெரியவர்கள் என்று அனைவரும்,

வைத்த செப்பிற் பணமும் ரத்நம் முத்தில் பணியும் மட்டும் அற்றுப் பெருகும் அடியாரும்... (நான்) சேர்த்து வைத்திருக்கிற செப்புக் காசுகளும், ரத்தினத்தாலும் முத்தாலும் ஆன அணிகலளும் என் (பிணத்தோடு) வராமல் போக; திரளான கூட்டமாகக் கூடுகின்ற அடியார்களும்,

புக்கு துக்கித்து எரிகள் தத்த வைக்கப் புகுது பொய்க்கு மெய்க்குச் செயலும் உருகாதே... வீடு புகுந்து துக்கம் கொண்டாடி, (சுடுகாட்டில் வைக்கின்ற இந்த உடலுக்கு) வைக்கின்ற தீ கொழுந்துவிட்டெரியச் செய்யப்போகின்ற பொய்யானதும் நிலையற்றதுமான இந்த உடலின்பொருட்டு  என் செய்கைகள் ஈடுபட்டு உருகாமல்,

புஷ்பம் இட்டுக் கருணை நல் பதத்தைப் பரவு புத்தி மெத்தத் தருவது ஒரு 
நாளே...  மலர்களைத் தூவிப் பூசித்து, கருணை நிறைந்தததான உன் திருப்பதங்களை நான் போற்றுவதற்கான அறிவை எனக்கு விரைவில் நிரம்பத் தந்தருள வேண்டும்.

செக்கர் கற்றைச் சடையில் மிக்க கொக்கின் சிறகு செ(க்)கம் உற்றச் சலமும் மதி சூடி... சிவந்த கற்றைச் சடையில் மிகுதியாக கொக்கின் இறகுகளையும்; இந்த மண்ணுலகுக்கு வந்ததான கங்கை நதியையும்; பிறை நிலவையும் அணிந்திருக்கின்ற சிவபெருமானுக்கு,

சித்தம் உற்றுத் தெளிய மெத்த மெத்தத் திகழு(ம்சித்த முத்திச் சிவமும் 
அருள்வோனே... அவருடைய மனத்திலே நன்கு பொருந்தி தெளிவடையுமாறும் மிகமிக நன்றாக விளங்குமாறும் திடமான முக்தி நிலையாகிய நன்மைப் பொருளை அருளியவனே!

கொக்கு உறுப்புக் கொடு மை நிற்கும் வட்டத்து அசுரரை கொத்தின் ஒக்கக் கொலை செய் வடிவேலா... மாமரத்தின் கிளைகளைப் பரப்பிக்கொண்டு, வட்டமான கருங்கடலுக்கு நடுவில் நின்ற சூரபதுமனையும் மற்ற அரக்கர்களையும் ஒரே வீச்சில் கொன்றொழித்த கூரிய வேலை உடையவனே!

கொற்ற வெற்றிப் பரிசை ஒட்டி எட்டிச் சிறிது குத்தி வெட்டிப் பொருத 
பெருமாளே.... வீரத்தையும்ம் வெற்றியையும் உடைய கேடயத்தோடு அருகிலும் தூரத்திலும் நின்றபடி (சிலரை வேலால்) குத்தியும்; (சிலரை வாளால்) வெட்டியும் போரிட்ட பெருமாளே!

சுருக்க உரை

சிவந்த கற்றைச் சடாமுடியில் கொக்கின் இறகுகளையும் கங்கையையும் பிறைச் சந்திரனையும சூடிய சிவபிரானுக்குச் சித்தத்தில் பொருந்தியிருக்குமாறு திடமான முத்திப் பொருளை உபதேசித்தவனே! கரிய வட்டமாகக் கிடக்கின்ற கடலின் நடுவிலே கிளைகளோடு மாமர வடிவிலே நின்ற சூரபதுமனையும் மற்ற அசுரர்களையும் ஒரே வீச்சில் கொன்றொழித்த கூரிய வேலை ஏந்துபவனே! வீரமும் வெற்றியும் பொருந்தியதான கேடயத்தை ஏந்தியபடி அருகிலிருந்த சில அரக்கர்களை வாளால் வெட்டியும்; தூர இருந்த சில அசுரர்களை வேலால் குத்தியும் போரிட்ட பெருமாளே!

மக்களும் உறவினர்களும் சகோதரர்களும் நண்பர்களும் குரு முதலான பெரியோர்களும், நான் சேமித்து வைத்திருக்கும் பொருளும் (என் பிணம் செல்லும்போது) கூட வராமல் ஒழிய; திரளாகக் கூடிய அன்பர்கள் துக்கம் மேலிட்டு என் உடலுக்குத் தீ வைக்க, அத்தீ கொழுந்துவிட்டெரிய, அழிந்துபோகும் நிலையற்ற இந்த உடலின்பொருட்டாக என் செயல்கள் உருகிக்கொண்டிராமல், உன் திருவடிகளுக்கு மலர் தூவி பூசித்துப் போற்றும் நல்லறிவை அடியேனுக்கு உடனே தந்தருள வேண்டும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/7/w600X390/1465.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/may/30/பகுதி---839-2928528.html
2928524 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 841 ஹரி கிருஷ்ணன் Monday, May 28, 2018 03:10 PM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

இத்தரணி மீதில்பிறவாதே

 

 

எத்தரொடு கூடிகலவதே

 

 

முத்தமிழை ஒதிதளராதே

 

 

முத்தி அடியேனுக்குஅருள்வாயே

 

 

தத்துவ மெய் ஞானகுரு நாதா

 

 

சத்த சொருப புத்அமுதோனே

 

சத்த சொருப: ஒலி வடிவினனே;

நித்திய க்ருதா நல்பெரு வாழ்வே

 

க்ருதா: (நற்செய்கைகளைச்) செய்பவனே;

நிர்த்த ஜெக ஜோதிபெருமாளே.

 

நிர்த்த: ஆடல் வல்ல;

இத்தரணி மீதிற் பிறவாதே... (அடியேன்) இந்த உலகத்திலே பிறக்காமலும்,

எத்தரொடு கூடிக் கலவாதே... எத்தர்களோடு நட்புகொண்டு திரியாமலும்,

முத்தமிழை யோதித் தளராதே... எப்போதும் முத்தமிழை (மட்டுமே) சொல்லிச் சொல்லிச் சோர்வடையாலும்,

முத்தி அடியேனுக்கு அருள்வாயே...அடியேனுக்கு முக்தி நிலையைத் தந்தருள வேண்டும்.

தத்துவமெய்ஞ் ஞானக்குருநாதா... உண்மைப் பொருளாகிய மெய்ஞ்ஞானத்தை உபதேசிக்கின்ற குருமூர்த்தியே!

சத்தசொருபா புத்தமுதோனே... நாத வடிவாகத் திகழ்பவனே! புதிய அமுதத்தைப் போன்றவனே!

நித்தியக்ருதா நற் பெருவாழ்வே... எப்போதும் எனக்கு நன்மைகளையே செய்பவனே! என்னுடைய பெருஞ்செல்வமே!

நிர்த்தஜெக ஜோதிப் பெருமாளே.... ஆடல் வல்லோனே! எல்லா உலகங்களுக்கும் பேரொளியாக விளங்குபவனே”

சுருக்க உரை

உண்மைப் பொருளான மெய்ஞ்ஞானத்தை உபதேசிக்கின்ற குருமூர்த்தியே! நாத வடிவானவனே! புதிய அமுதத்தை ஒத்தவனே! எனக்கு எப்போதும் நன்மைகளையே செய்பவனே! ஆடல் வல்லோனே!  அனைத்துலகங்களுக்கும் பேரொளியாக விளங்குபவனே!

நான் இனி இந்தப் புவியில் பிறக்காமலும்; வஞ்சகர்களோடு கூடித் திரியாமலும்; முத்தமிழை மீண்டும் மீண்டும் படித்துத் தளராமலும் முக்தி நிலையை அடியேனுக்கு அருள வேண்டும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/jun/01/பகுதி---841-2928524.html
2927310 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 837 ஹரி கிருஷ்ணன் DIN Monday, May 28, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

கட்டம் உறு நோய்தீமை இட்ட குடில் மாமாய கட்டுவிடும் ஓர்கால் அளவா (ஏ)

 

கட்டம் உறு: கஷ்டத்தைத் தருகின்ற; இட்ட குடில்: அமைக்கப்பட்ட உடல்; கட்டுவிடும்: பந்தத்தை விடுகின்ற;

கத்த உறவோர் பாலர்தத்தை செறிவார்வாழ்வு கற்பு நெறிதான் மாய உயர்காலன்

 

கத்த உறவோர்: உறவினர்கள் கத்த; பாலர்: பிள்ளைகள்; தத்தை செறிவார் வாழ்வு: ஆபத்துகள் நிறைந்த நீண்ட வாழ்வு என்பது குகத்திரு செங்கல்வராய பிள்ளையவர்களின் விளக்கம்; கற்புநெறி: ஒழுக்க நெறி;

இட்ட ஒரு தூதாளும்முட்ட வினையால்மூடி இட்ட விதியேஆவி இழவா முன்

 

இட்ட: ஏவிய; தூதாளும்: தூதர்களும்; முட்ட: தாக்க;

எத்தி உனைநாடோறும்முத்தமிழினால் ஓத இட்டம் இனிதோடுஆர நினைவாயே

 

எத்தி உனை: ஏத்தி உனை, உன்னைப் போற்றி; ஆர: நன்றாக;

துட்டர் என ஏழ் பாரும்முட்ட வினையாள்சூரர் தொக்கில் நெடுமா மார்புதொளையாக

 

ஏழ்பாரும்: ஏழு உலகங்களும்; முட்ட வினையாள் சூரர்: வினை முட்ட ஆள் சூரர்—(கொடுந்)தொழில்களை முழுக்கச் செய்துவந்த சூரர்கள்; தொக்கில்: தோலில்—உடலில் (த்வக்: தோல்—வடமொழி);

தொட்ட வடிவேல் வீரநட்டம் இடுவார் பால சுத்த தமிழ் ஆர் ஞானமுருகோனே

 

நட்டம் இடுவார்: நடனமாடுபவர்—நடராஜர்;

மட்டு மரை நால்வேதன் இட்ட மலர்போல் மேவ மத்தமயில் மீது ஏறி வருநாளை

 

மட்டு: நறுமணம்; மரை: தாமரை; நால்வேதன்: பிரமன்; இட்ட மலர்: இஷ்டமான மலர்; இட்டமலர் போல் மேவ: தாமரையைப் போன்ற பதுமாசனத்திலே அமர்ந்து; மத்த மயில்: செருக்குற்ற மயில்;  

வைத்த நிதி போல்நாடி நித்தம் அடியார்வாழ வைத்த படிமாறாத பெருமாளே.

 

வைத்தநிதி: சேமித்து வைத்த நிதி; வைத்தபடி: வைத்த நிலையில் (படி: தன்மை);

கட்டம் உறு நோய் தீமை இட்ட குடில் மா மாய கட்டுவிடும் ஓர் காலம் அளவாவே... கஷ்டத்தைக் கொடுக்கின்ற நோய்களாலும்ம் பிற தீமைகளாலும் அமைந்திருக்கும் குடிலான இந்த உடலானது உலக மாயையின் தொடர்பை விடப்போகின்ற (உயிர் போகப்போகின்ற) சமயத்தை அறிந்துகொண்டு,

கத்த உறவோர் பாலர் தத்தை செறிவார் வாழ்வு கற்பு நெறி தான் மாய... உறவினர்களும் பிள்ளைகளும் கதறி அழ; ஆபத்துகள் நிறைந்த நீண்ட வாழ்க்கையும், (மேற்கொண்டிருந்த) ஒழுக்க நெறியும் அழியும்படியாக,

உயர் காலன் இட்ட ஒரு தூதாளும் முட்ட வினையால் மூடி இட்ட விதியே ஆவி இழவா முன்... உயர்ந்த யமன் அனுப்பிய ஒப்பற்ற தூதர்களும் தாக்க; வினைகளால் மூடப்பட்டு, விதியின் முறைப்படியே உயிர் பிரிவதற்கு முன்னாலே,

எத்தி உனை நாடோறும் முத்தமிழினால் ஓத இட்டம் இனிதோடு ஆர நினைவாயே... முத்தமிழால் நான் உன்னை எப்போதும் போற்றித் துதிப்பதற்கு, நீ விருப்பத்துடனும் மகிழ்ச்சியுடனும் நன்றாக நினைத்தருள வேண்டும்.

துட்டர் என ஏழ் பாரும் முட்ட வினையாள் சூரர் தொக்கில் நெடு மா மார்பு தொளையாக தொட்ட வடிவேல் வீர ..... ‘இவர்கள் துஷ்டர்கள்’ என்று ஏழுலகிலும் உள்ளவர்கள் சொல்லும்படியாகத் தங்கள் கொடுந்தொழிலை முழுக்க நடத்திய சூரர்களுடைய, தோலால் மூடப்பட்ட அகன்ற மார்பிலே துளைக்கும்படியாக வடிவேலைச் செலுத்திய வீரனே!

நட்டம் இடுவார் பால சுத்த தமிழ் ஆர் ஞான முருகோனே... நடராஜருடைய பாலனே! சுத்தத் தமிழால் நிறைந்திருக்கும் ஞானவேள் முருகனே!

மட்டு மரை நால் வேதன் இட்ட மலர் போல் மேவ மத்த மயில் மீது ஏறி வரு நாளை... நறுமணம் கமழும் தாமரையில் வீற்றிருக்கின்ற பிரமனுக்கு விருப்பமான பதுமத்தின் வடிவிலான (பத்மாசனத்தில்) செறுக்கு நிறைந்த மயிலின் மீது நீ அமர்ந்து வருகின்ற அந்த நாளை,

வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ வைத்த படி மாறாத பெருமாளே.... தாங்கள் சேமித்து வைத்த நிதி என்று போற்றுகின்ற அடியார்களை எப்போதும் வாழவைப்பவனே! கருணைத் தன்மை எப்போதும் மாறாத பெருமாளே!

சுருக்க உரை

‘இவர்கள் துஷ்டர்கள்’ என்று ஏழுலகங்களில் உள்ளவர்களும் வேதனையுடன் கூறும்படியாகத் தம் கொடுந்தொழில்களை முழுமையாகச் செய்துவந்தவர்களான சூரர்களுடைய அகன்ற மார்பைத் துளைக்கும்படியாகச் செலுத்திய வடிவேலை ஏந்தியவனே! நடராஜருடைய பாலனே! சுத்தத் தமிழால் நிறைந்திருக்கும் ஞானவேளே! முருகனே!  செறுக்குள்ள மயிலின்மீது. தாமரையில் வீற்றிருப்பவனும் நால்வேதங்களையும் ஓதுபவனுமான பிரமனுக்கு விருப்பமுள்ள மலரான பதுமத்தின் வடிவிலமைந்த பதுமாசனத்தில் நீ அமர்ந்த நிலையில் வரும் நாளைத் தாம் சேமித்து வைத்த நிதியாகப் போற்றுகின்ற அடியார்களை எப்போதும் வாழவைப்பவனே!  கருணை மாறாதா பெருமாளே!

கஷ்டத்தைக் கொடுக்கும் நோய்களாலும் பிற தீமைகளாலும் நிறைந்துள் இந்த உடல், உலகின் மாயப் பிணிப்பிலிருந்து விடுபட்டு, உயிர் நீங்கப்போகும் தறுவாயில் சுற்றத்தாரும் குழந்தைகளும் கதறி அழ, நீண்டதும், ஒழுக்கம் நிறைந்ததுமான வாழ்க்கை அழியும்படியாக யமன் அனுப்பிய தூதர்கள் வந்து தாக்குவதால் நான் உயிரை இழப்பதற்கு முன்னால் உன்னை எப்போதும் முத்தமிழால் போற்றவேண்டும் உன் கருணை நிறைந்த மனத்தால் விருப்பத்துடன் நினைத்தருள வேண்டும்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/may/28/பகுதி--837-2927310.html
2927309 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 836 ஹரி கிருஷ்ணன் Sunday, May 27, 2018 12:00 AM +0530  

‘எப்போதும் உன்னை முத்தமிழால் ஓதவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் இரண்டு நெட்டெழுத்துகளும் ஒரு குற்றெழுத்துமாக மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தத்ததன தானான தத்ததன தானான 

                தத்ததன தானான                                                    தனதான

 

கட்டமுறு நோய்தீமை யிட்டகுடில் மாமாய

                        கட்டுவிடு மோர்கால                                    மளவாவே

                கத்தவுற வோர்பாலர் தத்தைசெறி வார்வாழ்வு

                        கற்புநெறி தான்மாய                                      வுயர்காலன்

இட்டவொரு தூதாளு முட்டவினை யால்மூடி

                        யிட்டவிதி யேயாவி                                      யிழவாமுன்

                எத்தியுனை நாடோறு முத்தமிழி னாலோத

                        இட்டமினி தோடார                                        நினைவாயே

துட்டரென ஏழ்பாரு முட்டவினை யாள்சூரர்

                        தொக்கில்நெடு மாமார்பு                            தொளையாகத்

                தொட்டவடி வேல்வீர நட்டமிடு வார்பால

                        சுத்ததமி ழார்ஞான                                         முருகோனே

மட்டுமரை நால்வேத னிட்டமலர் போல்மேவ

                        மத்தமயில் மீதேறி                                         வருநாளை

                வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ

                        வைத்தபடி மாறாத                                         பெருமாளே.

 

 

]]>
http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/may/27/பகுதி---836-2927309.html
2926055 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 835 ஹரி கிருஷ்ணன் Thursday, May 24, 2018 05:46 PM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

மைந்தர் இனியதந்தை மனைவி மண்டி அலறி மதிமாய

 

மண்டி: நெருங்கி, ஒன்றுகூடி;

வஞ்ச விழிகள்விஞ்சும் மறலி வன்கை அதனில் உறுபாசம்

 

மறலி: யமன்; பாசம்: பாசக் கயிறு;

தந்து வளைய புந்திஅறிவு தங்கைகுலைய உயிர் போமுன்

 

தந்து: வீசி; வளைய: (என் உயிரை) வளைக்க; தங்கை: தங்குகை, நிலைபெற்றிருத்தல்;

தம்ப(ம்) உனது செம்பொன் அடிகள் தந்துகருணை புரிவாயே

 

தம்பம்: ஸ்தம்பம், பற்றுக்கோடு;

மந்தி குதி கொள் அம்தண் வரையில் மங்கை மருவும்மணவாளா

 

மந்தி: குரங்கு;

மண்டும் அசுரர்தண்டம் உடைய அண்டர் பரவமலைவோனே

 

மண்டும்: நெருங்கிச் சூழும்; தண்டம்: தண்டாயுதம்; மலைவோனே: போரிட்டவனே;

இந்து நுதலும் அந்தமுகமும் என்றும்இனிய மடவார் தம்

 

இந்து: பிறைச் சந்திரன்; அந்த முகமும்: அந்தம் முகமும்—அழகிய முகத்தையும்; மடவார்தம்: வள்ளி, தேவானை ஆகிய தேவியர்களுக்கு;

இன்பம் விளையஅன்பின் அணையும் என்றும் இளையபெருமளே

 

 

மைந்தர் இனிய தந்தை மனைவி மண்டி அலறி மதி மாய... பிள்ளைகளும் இனியவரான தந்தையும் மனைவியும் நெருங்கி, கதறி அழுது அறிவு கெடும்படியாக;

வஞ்ச விழிகள் விஞ்சும் மறலி வன் கை அதனில் உறு பாசம்... வஞ்சத்தை வெளிப்படுத்தம் விழிகளைக் கொண்ட யமன், தன் கையிலுள்ள பாசக்கயிற்றை,

தந்து வளைய புந்தி அறிவு தங்கை குலைய உயிர் போ முன்... வீசி என் உயிரை வளைக்க; என் அறிவு ஒரு நிலையில் நிற்காமல் தடுமாறும்படியாக என் உயிர் போவதற்கு முன்னால்,

தம்ப(ம்உனது செம் பொன் அடிகள் தந்து கருணை புரிவாயே... பற்றுக்கோடாக விளங்குகின்ற உனது சிவந்த திருவடிகளைத் தந்து எனக்குக் கருணை புரிந்தருள வேண்டும்.

மந்தி குதி கொள் அம் தண் வரையில் மங்கை மருவும் மணவாளா... குரங்குகள் குதித்து விளையாடுகின்ற அழகிய குளிர்சியான மலையில் இருந்த வள்ளியம்மையைத் தழுவுகின்ற மணாளனே!

மண்டும் அசுரர் தண்டம் உடைய அண்டர் பரவ மலைவோனே... நெருங்கிச் சூழ்கின்ற அசுரர்களுடைய தண்டாயுதங்கள் உடையும்படியாகவும்; தேவர்கள் போற்றும்படியாகவும் போரிட்டவனே!

இந்து நுதலும் அந்த முகமும் என்றும் இனிய மடவார் தம்... பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றியையும் அழகிய முகத்தையும் உடைய இனியவர்களான வள்ளி, தேவானை என்னும் இருவரும்,

இன்பம் விளைய அன்பின் அணையும் என்றும் இளைய பெருமாளே.... இன்பமுறுமாறு அன்போடு அணைத்துக்கொள்பவனாகவும் என்றும் இளையவனாகவும் விளங்குகின்ற பெருமாளே!

சுருக்க உரை

குரங்குகள் விளையாடுகின்ற குளிர்ச்சியான வள்ளி மலையிலே இருந்த வள்ளியம்மையின் மணாளனே! நெருங்கிச் சூழ்ந்த அசுரப் படைகளின் ஆயுதங்கள் உடைந்து சிதறும்படியாகவும் தேவர்கள் போற்றும்படியாகவும் போரிட்டவனே! பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றியையும் அழகிய முகத்தையும் கொண்ட வள்ளி தேவானையருக்கு இன்பம் பெருகும்படியாக அணைக்கின்றவனே! என்றும் இளையவனாக விளங்குகின்ற பெருமாளே!

பிள்ளைகளும் இனியவரான தந்தையும் மனைவியும் ஒன்றுகூடிக் கதறி அழுது அறிவு கலங்கும்படியாக யமன் என் முன்னே தோன்றி, கையில் உள்ள பாசக் கயிற்றை வீசி என் உயிரை வளைப்பதனால் என் அறிவு நிலைகொள்ளாமல் தவித்து என் உயிர் பிரிவதற்கு முன்னால் உன்னுடைய திருவடிகளை அடியேனுக்குத் தந்து கருணைபுரிய வேண்டும்.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/18/w600X390/.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/may/26/பகுதி---835-2926055.html
2926054 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 834 ஹரி கிருஷ்ணன் Thursday, May 24, 2018 05:19 PM +0530  

‘கருணை புரிந்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல், பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 19 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும்; இரணடு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

 

தந்த தனன தந்த தனன

                தந்த தனன                                                                    தனதான

 

மைந்த ரினிய தந்தை மனைவி

                        மண்டி யலறி                                                       மதிமாய

      வஞ்ச விழிகள் விஞ்சு மறலி

                        வன்கை யதனி                                                   லுறுபாசந்

தந்து வளைய புந்தி யறிவு

                        தங்கை குலைய                                                உயிர்போமுன்

      தம்ப முனது செம்பொ னடிகள்

                        தந்து கருணை                                                     புரிவாயே

மந்தி குதிகொ ளந்தண் வரையில்

                        மங்கை மருவு                                                     மணவாளா

      மண்டு மசுரர் தண்ட முடைய

                        அண்டர் பரவ                                                       மலைவோனே

இந்து நுதலு மந்த முகமு

                        மென்று மினிய                                                  மடவார்தம்

      இன்பம் விளைய அன்பி னணையு

                        மென்று மிளைய                                              பெருமாளே.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/may/25/திருப்புகழ்---834-2926054.html
2924773 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 833 ஹரி கிருஷ்ணன் Thursday, May 24, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

பணிகள் பணமும்அணி கொள்துகில்கள்  
பழையஅடிமையொடு மாதும்

 

பணிகள்: ஆபரணங்கள்; அணிகொள் துகில்கள்: அணிகின்ற ஆடைகள்; பழைய அடிமையொடு: பலகாலம் பணியாற்றிய வேலைக்காரனோடு; மாதும்: மனைவியும்;

பகரில் ஒருவர் வருகஅரிய  பயணம்அதனில் 
உயிர் போக

 

பகரி: சொல்லப்போனால்; ஒருவர்: இவர்களில் ஒருவரும்; வருக அரிய: கூட வருவதற்கு முடியாத;

குணமும் மனமும்உடைய கிளைஞர் 
குறுகி விறகில் உடல்போடா

 

குறுகி: அருகே அடைந்து; உடல் போடா: உடலைப் போட்டு;

கொடுமை இடு(ம்)முன் அடிமை அடிகள்
குளிர மொழிவது அருள்வாயே

 

கொடுமை இடுமுன்: (தீயில் இடுவதாகிய) கொடிய செயலைச் செய்வதன் முன்னால்; அடிமை: அடிமையாகிய நான்; அடிகள்: உன் திருவடிகளை; குளிர: உள்ளம் குளிரும்படியாக; மொழிவது: துதிப்பதை;

இணை இல் அருணைபழநி கிழவ 
இளையஇறைவ முருகோனே

 

 

எயினர் வயினின்முயலும் மயிலை
இரு கை தொழுதுபுணர் மார்பா

 

எயினர்: வேடர்க(ளுடைய); வயினின்: இடத்தில்; முயலும்: (புனம்) காக்கும்;

அணியொடு அமரர்பணிய அசுரர் அடைய 
மடிய விடும்வேலா

 

அணியொடு: வரிசையாக; அடைய: முழுவதும்;

அறிவும் உரமும்அறமும் நிறமும் அழகும் 
உடையபெருமாளே.

 

நிறம்: ஒளி;

 

பணிகள் பணமும் அணி கொள் துகில்கள் பழைய அடிமையொடு மாதும்... ஆபரணங்களோ, பணமோ, உடுத்தும் ஆடைகளோ, நெடுநாள் வேலை செய்த வேலைக்காரர்களோ, மனைவியோ,

பகரில் ஒருவர் வருக அரிய பயணம் அதனில் உயிர் போக... சொல்லப்போனால் (இவர்களில்) யாருமே கூட வருவதற்கு முடியாததான (இறுதிப்) பயணத்தில் உயிர் பிரிய,

குணமும் மனமும் உடைய கிளைஞர் குறுகி விறகில் உடல் போடாக் கொடுமை இடுமுன்... நல்ல குணங்களையும் நல்ல மனத்தையும் உடைய உறவினர்கள் ஒன்றாகக்கூடி இந்த உடலை விறகிலே இடுகின்ற கொடுமையைச் செய்வதற்கு முன்னதாக,

அடிமை அடிகள் குளிர மொழிவது அருள்வாயே... உனது அடிமையாகிய நான் என்னுடைய உள்ளம் குளிரும்படியாக உனது திருவடிகளைத் துதிக்கின்ற தன்மையைத் தந்தருள வேண்டும்.

இணை இல் அருணை பழநி கிழவ இளைய இறைவ முருகோனே... இணையற்றவையான திருவண்ணாமலை, பழநி ஆகிய தலங்களுக்கு உரியவனே! என்றும் இளையவனே! இறைவனாகிய முருகனே!

எயினர் வயினின் முயலு(ம்மயிலை இரு கை தொழுது புணர் மார்பா... வேடர்களிடத்திலே (தினைப்புனத்தைக்) காக்கும் தொழிலை மேற்கொண்டிருந்த வள்ளியை இரு கைகளாலும் தொழுது அணைத்துக்கொண்ட திருமார்பை உடையவனே!

அணியொடு அமரர் பணிய அசுரர் அடைய மடிய விடும் வேலா...தேவர்கள் வரிசையாக நின்று பணிய; அரக்கர்கள் எல்லோரும் இறக்கும்படியாக வீசிய வேலை ஏந்தியவனே!

அறிவும் உரமும் அறமும் நிறமும் அழகும் உடைய பெருமாளே.... அறிவையும் வலிமையையும் அறநெறியையும் ஒளியையும் அழகையும் உடைய பெருமாளே!

சுருக்க உரை

தன்னிகரில்லாத திருவண்ணா மலைக்கும் பழநிக்கும் உரியவனே! என்றும் இளையவனே! இறையவனே! முருகனே! வேடர்களுடைய தினைபுனத்தைக் காத்துக்கொண்டிருந்த மயிலைப் போன்றவரான வள்ளியை இருகரத்தாலும் வணங்கி, தழுவிக்கொண்ட மார்பை உடையவனே! தேவர்கள் வரிசையாக நின்று பணிபவனே!  எல்லா அசுரர்களும் அழியும்படியாக வீசிய வேலை ஏந்தியவனே!  அறிவையும் வலிமையையும் அறநெறியையும் ஒளியையும் அழகையும் உடைய பெருமாளே!

அணிந்திருக்கின்ற ஆபரணங்களோ; சேர்த்து வைத்திருக்கின்ற பணமோ; உடுத்தியிருக்கின்ற நல்ல ஆடைகளோ; பலகாலமாகப் பணியாற்றும் வேலைக்காரர்களோ; மனைவியோ யாருமே கூடவர முடியாத பயணத்தில் உயிர் பிரிந்ததும் நல்ல குணங்களையும் நல்ல மனத்தையும் உடைய உறவினர்கள் ஒன்றுகூடி இந்த உடலை விறகிலே கொண்டுபோட்டு எரிக்கின்ற கொடுமை நேர்கின்ற தருணம் வருவதற்கு முன்னாலேயே உனது திருவடிவகளைப் பணிந்து போற்றும் நல்ல தன்மையை உனது அடியவனாகிய எனக்குத் தந்தருள வேண்டும்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/24/w600X390/.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/may/24/பகுதி---833-2924773.html
2924772 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 832 ஹரி கிருஷ்ணன் Tuesday, May 22, 2018 04:21 PM +0530  

 

‘உன் திருவடிகளை எப்போதும் துதிக்க வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 24 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று முதல் ஆறு வரையிலான எல்லாச் சீர்களிலும் மூன்று மூன்று குற்றெழுத்துகளால் அமைந்திருக்கின்றன.

தனன தனன தனன தனன

                தனன தனன                                                                தனதான

 

பணிகள் பணமு மணிகொள் துகில்கள்                   

                        பழைய அடிமை                                                 யொடுமாதும்    

      பகரி லொருவர் வருக அரிய    

                        பயண மதனி                                                        லுயிர்போகக்    

குணமு மனமு முடைய கிளைஞர்    

                        குறுகி விறகி                                                        லுடல்போடாக்    

      கொடுமை யிடுமு னடிமை யடிகள்    

                        குளிர மொழிவ                                                   தருள்வாயே    

இணையி லருணை பழநி கிழவ    

                        இளைய இறைவ                                              முருகோனே    

      எயினர் வயினின் முயலு மயிலை    

                        யிருகை தொழுது                                            புணர்மார்பா     

அணியொ டமரர் பணிய அசுரர்     

                        அடைய மடிய                                                     விடும்வேலா     

      அறிவு முரமு மறமு நிறமு     

                        மழகு முடைய                                                   பெருமாளே.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/may/23/பகுதி---832-2924772.html
2922289 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 831  ஹரி கிருஷ்ணன் Friday, May 18, 2018 02:42 PM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

நாரியர்கள் ஆசையைகருதாதே

 

நாரியர்கள்: பெண்களுடைய;

நான் உன் இரு பாதபத்மமும் நாட

 

பாத பத்மம்: திருவடித் தாமரை;

ஆர அமுதமானசர்க்கரை தேனே

 

ஆர அமுது: தெவிட்டாத அமுது;

ஆன அநுபூதியைதருவாயே

 

 

காரணம் அதாய உத்தம சீலா

 

 

கான குற மாதினைபுணர்வோனே

 

 

சூரர் கிளை தூள் எழபொரும் வேலா

 

 

தோகை மயில்வாகன பெருமாளே.

 

 

நாரியர்கள் ஆசையைக் கருதாதே நான் உன் இரு பாத பத்மமும் நாட... பெண்கள் மீது எழும் ஆசையைச் சிந்தை செய்யாமல் உன்னுடைய இரண்டு திருவடித் தாமரைகளையும் நாடுவதற்கு,

ஆர அமுதமான சர்க்கரை தேனே ஆன அநுபூதியைத் தருவாயே... தெவிட்டாத அமுதம், சர்க்கரை, தேன் என்னும்படியான அனுபவ ஞானத்தைத் தந்தருள வேண்டும்.

காரணம் அதான உத்தம சீலா... எல்லாவற்றுக்கும் மூல காரணமாக நிற்கும் உத்தம சீலனே!

கான குற மாதினைப் புணர்வோனே... காட்டில் வளர்ந்த குறமகளான வள்ளியை மணந்தவனே!

சூரர் கிளை தூள் எழப் பொரும் வேலா... சூரனும் அவன் சுற்றத்தாரும் இறந்து புழுதி பறக்குமாறு போரிட்ட வேலனே!

தோகை மயில் வாகனப் பெருமாளே.... தோகை மயிலை வாகனமாகக் கொண்டிருக்கும் பெருமாளே!

சுருக்க உரை

எல்லாவற்றுக்கும் மூலகாரணமாக விளங்குகின்ற உத்தம சீலனே!  காட்டில் வளர்ந்த குறப்பெண்ணான வள்ளியை மணந்தவனே! சூரன் தன் சுற்றத்தாரோடு இறந்து விழுந்த புழுதி பறக்குமாறு போரிட்ட வேலனே! தோகை மயிலை வாகனமாகக் கொண்டிருக்கும் பெருமாளே!

பெண்களின்பால் எழுகின்ற ஆசையைச் சிந்தை செய்யாமல் உன்னுடைய திருவடித் தாமரைகளை விரும்பித் தேடுவதற்காக தெவிட்டாத அமுதத்தையும் சர்க்கரையையும் தேனையும் ஒத்த ஞானானுபவத்தைத் தந்தருள வேண்டும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/may/20/பகுதி--831-2922289.html
2922288 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 830 ஹரி கிருஷ்ணன் Friday, May 18, 2018 02:41 PM +0530  

அனுபூதியாகிய அனுபவ ஞானத்தைக் கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் மூன்று குறிலுமாய் நான்கெழுத்துகளும்; இரண்டு, ஐந்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும், இரண்டு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக மூன்றெழுத்துகளும்; மூன்றும் ஆறுமாக அமைந்திருக்கும் தொங்கல் சீர்களில் நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.

 

தானதன தானனத்                                                                  தனதான

 

நாரியர்க ளாசையைக்                                                          கருதாதே

                நானுனிரு பாதபத்                                                    மமுநாட

ஆரமுத மானசர்க்                                                                   கரைதேனே

                ஆனஅநு பூதியைத்                                                 தருவாயே

காரணம தானவுத்                                                                   தமசீலா

                கானகுற மாதினைப்                                              புணர்வோனே

சூரர்கிளை தூளெழப்                                                              பொரும்வேலா

                தோகைமயில் வாகனப்                                      பெருமாளே.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/24/w600X390/.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/may/19/பகுதி---830-2922288.html
2920972 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 829 ஹரி கிருஷ்ணன் Wednesday, May 16, 2018 03:44 PM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

நாளும் மிகுத்த கசிவாகி

 

கசிவாகி: நெகிழ்ச்சி அடைந்து;

ஞான நிருத்தம் அதை நாடும்

 

நிருத்தம்: நடனம்

ஏழை தனக்கும் அனுபூதி

 

அனுபூதி: அனுபவ ஞானம்;

ராசி தழைக்க அருள்வாயே

 

ராசி: யோகம், பாக்கியம்;

பூளை எருக்கு மதி நாக(ம்)

 

பூளை: ஒருவகைப் பூ—சிவபெருமான் சூடுவது; மதி: சந்திரன்;

பூணர் அளித்த சிறியோனே

 

பூணர்: பூண்டவர்;

வேளை தனக்கு உசிதமாக

 

வேளை தனக்கு: சமயத்துக்கு; உசிதமாக: ஏற்றாற்போல;

வேழம் அழைத்த பெருமாளே.

 

வேழம் அழைத்த: யானையை வரவழைத்த (வள்ளியை அச்சுறுத்துவதற்காக விநாயகனை வரவழைத்தது.)

நாளு மிகுத்த கசிவாகி... எப்போதும் அன்பினால் மனம் நெகிழ்ந்தபடி,

ஞான நிருத்தம் அதைநாடும்... உனது ஞான நடனத்தைக் காண விரும்புகின்ற,

ஏழை தனக்கும் அநுபூதி... எளியேனுக்கும் ஞான அனுபவம் என்கின்ற,

எளியோனாகிய எனக்கும் அனுபவ ஞானம் என்னும் 

ராசி தழைக்க அருள்வாயே... பாக்கியம் சித்திக்குமாறு அருள்புரிய வேண்டும்.

பூளை யெருக்கு மதிநாக... பூளைப்பூவையும் எருக்க இலையையும் பிறை நிலவையும் பாம்பையும்

பூண ரளித்த சிறியோனே... சடாமுடியில் தரித்திருப்பவரான சிவனார் அருளிய மகவே!

வேளை தனக்கு உசிதமாக... சமயத்துக்குத் தகுந்ததைப் போல,

வேழ மழைத்த பெருமாளே.... யானையை வரவழைத்த பெருமாளே*!

(தினைப்புனத்தில் வள்ளியை அச்சுறுத்துவதற்காக விநாயகனை வரவழைத்தது.)

சுருக்க உரை

பூளைப் பூவையும் எருக்க இலையையும் பிறை நிலவையும் நாகத்தையும் சடாமுடியில் தரித்தவரான சிவபெருமான் அருளிய பிள்ளையே! உனக்கு வேண்டிய சமயத்திலே (வள்ளியை பயமுறுத்துவதற்காக) விநாயகனை  யானையாக வரவழைத்த பெருமாளே!

எப்போதும் மனம் கசிந்துருகி உன்னுடைய ஞான நடனக் கோலத்தைக் காணவிரும் எளியேனாகிய எனக்கு அனுபவ ஞானம் என்னும் பாக்கியம் சித்திக்குமாறு அருளவேண்டும்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/may/18/பகுதி---829-2920972.html
2920971 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 828 ஹரி கிருஷ்ணன் Wednesday, May 16, 2018 03:43 PM +0530 828

 

‘அநுபூதி அளித்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 18 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாய் இரண்டெழுத்துகளும்; இரண்டு, ஐந்து ஆகிய சீர்களில் மூன்று குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக மூன்றெழுத்துகளும்; மூன்றும் ஆறுமாக இருக்கும் தொங்கல் சீர்களில் நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.

 

தான தனத்த                              தனதான

 

நாளு மிகுத்த                             கசிவாகி

      ஞான நிருத்த                       மதைநாடும்    

ஏழை தனக்கு                             மனுபூதி

      ராசி தழைக்க                       அருள்வாயே

பூளை யெருக்கு                           மதிநாக

      பூண ரளித்த                        சிறியோனே

வேளை தனக்கு                           சிதமாக

      வேழ மழைத்த                      பெருமாளே.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/may/17/பகுதி---828-2920971.html
2919628 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 827 ஹரி கிருஷ்ணன் DIN Wednesday, May 16, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

பரவைக்கு எத்தனை விசை தூது

 

பரவைக்கு: பரவை நாச்சியாருக்கு (சுந்தரருக்காக); எத்தனைவிசை: எத்தனை முறை;

பகரற்கு உற்றவர் என மாண் உன்

 

பகரற்கு உற்றவர்: சொல்லத் தயாராயிருந்தவர்; மாண்: பெருமை (படைத்த)

மரபுக்கு உச்சித ப்ரபுவாக

 

உச்சித: உசித, ஏற்ற வகையில்; ப்ரபுவாக: பெரியோனாக;

வரம் மெத்த தர வருவாயே

 

 

கரட கற்பகன் இளையோனே

 

கரட: மதம் பெருகும்; கற்பகன்: விநாயகன்;

கலை வில் கண் குற மகள் கேள்வா

 

கலை: மான் (போன்ற) வில்கண்: ஒளிபொருந்திய கண்(ணை உடைய);

அரனுக்கு உற்றது புகல்வோனே

 

உற்றது: நேர்ந்தது—இந்த இடத்திலே பிரணவத்தின் பொருள்;

அயனை குட்டிய பெருமாளே.

 

அயனை: பிரமனை;

பரவைக்கு எத்தனை விசைதூது... (சுந்தர மூர்த்தி நாயனாருக்காக) பரவை நாச்சியாரிடம் எத்தனைமுறை வேண்டுமானாலும் தூது சென்று,

பகரற்கு உற்றவர் என மாண்... பேசுவதற்குத் தயாராய் இருந்தவர் இவர் என்னும் பெருமையை உடைய (தந்தையான சிவபெருமானுடைய)

உன் மரபுக்கு உச்சித ப்ரபுவாக... உன் மரபுக்கு ஏற்ற பெரியோனாக விளங்கும் வண்ணமாக,

வரம் மெத்தத் தர வருவாயே... எனக்கு நிறைய வரங்களை அளிப்பதற்காக என் முன்னே எழுந்தருள வேண்டும்.

கரடக் கற்பகன் இளையோனே... மதம் பெருகும் மத்தகத்தை உடைய கற்பக விநாயகனுடைய இளையவனே!

கலைவிற் கட்குற மகள்கேள்வா... மானைப் போன்றதும் ஒளிவிடுவதுமான கண்களை உடைய குறமகளுடைய கேள்வனே!

அரனுக்கு உற்றது புகல்வோனே... சிவபெருமானுக்கு பிரணவத்தின் பொருளை உபதேசித்தவனே!

அயனைக் குட்டிய பெருமாளே.... பிரமனைக் குட்டிய பெருமாளே!

சுருக்க உரை

மதம் பெருகும் மத்தகத்தை உடைய கற்பக விநாயகனுக்கு இளையவனே! மானைப்போன்றதும் ஒளிர்வதுமான கண்களையுடைய குறமகள் வள்ளியின் மணாளனே! பிரணவத்தின் பொருளை சிவபெருமானுக்கு உபதேசித்தவனே! பிரமனைக் குட்டிய பெருமாளே!

சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்காக பரவை நாச்சியாரிடம் எத்தனைமுறை வேண்டுமானாலும் தூது நடக்கத் தயாராக இருந்தவர் என்னும் பெருமையை உடைய சிவபெருமானின் குலத்துக்கு ஏற்ற பெரியோனாக விளங்கும் நீ, அடியேனுக்குப் பற்பல வரங்களைத் தருவதற்காக என் முன்னே எழுந்தருள வேண்டும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/may/16/பகுதி---827-2919628.html
2919626 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 826 ஹரி கிருஷ்ணன் Tuesday, May 15, 2018 12:00 AM +0530  

‘அடியேனுக்கு நிறைய வரங்களை அளித்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் (கணக்கில் சேராத) நான்காவது எழுத்து வல்லொற்றாகவும்; இரண்டு, ஐந்து ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் (கணக்கில் சேராத) இரண்டாவது எழுத்து வல்லொற்றாகவும் அமைந்துள்ளன.

தனனத் தத்தன                           தனதான

 

பரவைக் கெத்தனை                       விசைதூது

      பகரற் குற்றவ                       ரெனமாணுன்

மரபுக் குச்சித                             ப்ரபுவாக

      வரமெத் தத்தர                      வருவாயே

கரடக் கற்பக                              னிளையோனே

      கலைவிற் கட்குற                   மகள்கேள்வா

அரனுக் குற்றது                           புகல்வோனே

      அயனைக் குட்டிய                   பெருமாளே.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/may/15/பகுதி---2919626.html
2917748 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 825 ஹரி கிருஷ்ணன் DIN Monday, May 14, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

சினத்து சீறிய வழி காண சிரித்து பேசியும் மயல் பூண

 

சினத்துச் சீறிய: கோபித்துச் சீறியும்; வழிகாண: வசப்படும் வழிதெரிந்ததும்;

கனத்து போர் செயும் முலை தோண கலைக்குள் பாதியும் மறைவாக

 

கலைக்குள்: ஆடைக்குள்;

மனத்துக்கு ஆறுதல் வருமாறு மலைப்ப பேணியும் மிகவாய

 

மலைப்ப: மலைப்புக் கொள்ளுமாறு;

தனத்தை சூறை கொள் மடவார் தம் சதிக்கு போம் வழி தவிர்வேனோ

 

தனத்தை: பொருளை; சூறைகொள்: கொள்ளையடிக்கும்;

தெனத்தத் தாதென எனவே பண் திருத்தத்தோடு அளி இசை பாடும்

 

அளி: வண்டு;

புனத்து காவல் கொள் குற மாதின் புணர்ச்சிக்கே ஒரு வழி தேடி

 

 

இனத்து காவலர் அறியாமல் இணக்கி தோகையை மகிழ்வோய் என்று

 

இனத்துக் காவலர்: வேட்டுவ இனத்துக் காவலாளிகள்; என்று: என்றைக்கு;

எனக்கு தாளினை அருள் வாய் சூர் இறக்க போர் செய்த பெருமாளே.

 

 

சினத்துச் சீறிய வழி காணச் சிரித்துப் பேசியும்... சினம்கொண்டு சீறியும் (வசப்படுத்தும்) வழி தென்பட்டதும் சிரித்துப் பேசியும்;

மயல் பூண கனத்துப் போர் செயும் முலை தோணக் கலைக்குள் பாதியும் மறைவாக... மையலைத் தூண்டும்படியாகப் போரிடும் மார்பகம், ஆடையால் பாதியே மறைக்கப்பட்டிருக்க (நின்று);

மனத்துக்கு ஆறுதல் வருமாறு மலைப்பப் பேணியும்... மனத்துக்கு இதம் ஏற்படுமாறு, மலைக்கச் செய்கின்ற முறையிலே உபசரித்தும்;

மிகவாய தனத்தைச் சூறை கொள் மடவார் தம் சதிக்குப் போம் வழி தவிர்வேனோ... (அதன் பிறகு) கையிலே உள்ள பெரும்பொருளைக் கொள்ளையடிப்பவர்களுமான இந்தப் பெண்களுடைய சதிவழிலே சிக்கிக் கொள்கின்ற நடத்தையை ஒழிப்பேனோ?  (ஒழிக்கும்படி அருளவேண்டும்.)

தெனத்தத் தாதென எனவே பண் திருத்தத்தோடு அளி இசை பாடும்... தெனத்த தாதென என்று ஒலியெழுப்பியபடி வண்டுகள் திருத்தமாகப் பாடுகின்ற,

புனத்துக் காவல் கொள் குற மாதின் புணர்ச்சிக்கே ஒரு வழி தேடி... தினைப் புனத்துக்குக் காவலிருந்த குறப்பெண்ணாகிய வள்ளியை அடைவதற்காக ஒரு வழியைத் தேடி,

இனத்துக் காவலர் அறியாமல் இணக்கித் தோகையை மகிழ்வோய்... வேட்டுவ இனத்தின் காவலாளிகளுக்குத் தெரியாமல் (அந்த) மயில்போன்ற வள்ளியை நயந்தவனே!

என்று எனக்குத் தாளினை அருள்வாய்... உன்னுடைய திருவடிகளை எனக்கு என்று அளிக்கப் போகிறாய்?

சூர் இறக்கப் போர் செய்த பெருமாளே.... சூரன் இறக்கும்படியாகப் போரிட்ட பெருமாளே!

சுருக்க உரை

சீறிக் கோபித்தும், வசப்படும் வழி தென்பட்டதும் சிரித்துப் பேசியும், இச்சையைத் தூண்டும்விதமாக மார்பகத்தை ஆடைக்குள் பாதி மறைத்தும்; இதமான வார்த்தைகளைப் பேசியும்; மலைத்துப்போகும்படியாக உபசரித்தும் இறுதியில் கையில் உள்ள பொருள் அத்தனையையும் கொள்ளையடிப்பவர்களான இந்தப் பெண்களின் சதிவழி என்னும் சிறுநெறியிலே அடியேன் சிக்கிக் கொள்ளாதபடி அருளவேண்டும்.

தெனத்தத் தாதென்று வண்டுகள் திருத்தமாகப் பாடுகின்ற தினைப்புனத்திலே காவலிருந்தவளான வள்ளியை அடைவதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிப்பதற்காக வேட்டுவ இனத்துக் காவலாளிகள் அறியாமல் அவளைக் கவர்ந்துசென்று தோகைமயில் போன்ற அப்பெண்ணை நயந்தவனே! சூரன் இறக்கும்படியாகப் போரிட்ட பெருமாளே! உன் திருவடிகளை என்று எனக்கு அளிக்கப் போகிறாய்? (உடனே தந்தருள வேண்டும்.)

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/may/14/பகுதி---825-2917748.html
2917746 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 824 ஹரி கிருஷ்ணன் Sunday, May 13, 2018 12:00 AM +0530  

‘அடியேனை நல்வழிப்படுத்தி அருளவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

எத்தனை நீளமான அமைப்பாக இருந்தபோதிலும் வழக்கமாக நான்கே அடிகளைக் கொண்டனவையாக அமைந்திருக்கும் பிறபாடல்களைப்போல் அல்லாமல் இப்பாடல் எட்டு அடிகளைக் கொண்டது.  எதுகையமைப்பிலும் எட்டு எதுகைகள் இருப்பதைக் காணலாம். 

அடிக்கு ஒற்றொழித்து 20 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும்; இரண்டு, ஐந்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரு குறிலுமாய் மூன்றெழுத்துகளும்; மூன்றும் ஆறுமாய் அமைந்திருக்கும் தொங்கல் சீர்களில் மூன்றாவது எழுத்து நெடிலாக அமைந்த நான்கெழுத்துகள் உள்ளன.

தனத்தத் தானன                          தனதான

      தனத்தத் தானன                    தனதான

சினத்துச் சீறிய                            வழிகாணச்

      சிரித்துப் பேசியு                     மயல்பூண

கனத்துப் போர்செயு                       முலைதோணக்

      கலைக்குட் பாதியு                   மறைவாக

மனத்துக் காறுதல்                        வருமாறு

      மலைப்பப் பேணியு                  மிகவாய

தனத்தைச் சூறைகொள்                    மடவார்தம்

      சதிக்குப் போம்வழி                  தவிர்வேனோ

தெனத்தத் தாதென                        எனவேபண்

      திருத்தத் தோடளி                   யிசைபாடும்

புனத்துத் காவல்கொள்                    குறமாதின்

      புணர்ச்சிக் கேயொரு                 வழிதேடி

இனத்துக் காவல                          ரறியாமல்

      இணக்கித் தோகையை              மகிழ்வோயென்

றெனக்குத் தாளிணை                     யருள்வாய்சூர்

      இறக்கப் போர்செய்த                 பெருமாளே.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/may/13/பகுதி---824-2917746.html
2916471 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 823 ஹரி கிருஷ்ணன் DIN Saturday, May 12, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

சமய பத்தி விருதா தனை நினையாதே

 

விருதாதனை: வீணான(து என்று); நினையாதே: கருதாமல்;

சரண பத்ம சிவ அர்ச்சனை தனை நாடி

 

 

அமைய சற்குரு சாத்திர மொழி நூலால்

 

அமைய: மனம் பொருந்த;

அருள் எனக்கு இனி மேல் துணை தருவாயே

 

 

உமை முலை தரு பால் கொடு அருள் கூறி

 

அருள்கூறி: திருவருளைப் (தேவாரமாகப்) பாடி;

உரிய மெய் தவமாக்கி நல் உபதேச

 

 

தமிழ் தனை கரை காட்டிய திறலோனே

 

 

சமணரை கழு ஏற்றிய பெருமாளே.

 

 

சமய பத்தி விருதாத்தனை நினையாதே... மதங்களின் (முறைப்படி) பக்திசெய்வது பயனற்றது என்று கருதாமல்,

சரண பத்ம சிவார்ச்சனை தனைநாடி அமைய... உன் திருவடியாகிய தாமரையில் சிவார்ச்சனை செய்ய விரும்புகின்ற நான், மனம்பொருந்தி நிலைத்திருக்க,

சற்குரு சாத்திர மொழிநூலால்... சத்குருவின் மூலமாகவும், சாஸ்திரங்களைச் சொல்கின்ற நூல்களின் மூலமாகவும்,

அருளெனக்கினிமேல் துணைதருவாயே... இனிமேல் உன் அருளை எனக்குத் துணையாகத் தரவேண்டும்.

உமைமுலைத்தரு பாற்கொடு அருள்கூறி... உமையம்மையின் முலைப்பாலைப் பருகிய காரணத்தால், சிவபெருமானுடைய அருளை(த் தேவாரம் மூலமாகப்) பாடுவதையே,

உரிய மெய்த்தவ மாக்கி... தன்னுடைய* மெய்த்தவம் என்று கொண்டு,

(‘தன்னுடைய’ என்பது திருஞான சம்பந்தரைக் குறிக்கிறது.  அருணகிரி நாதர், திருஞான சம்பந்தராக வந்தது முருகனே என்ற கொள்கையை உடையவர்.)

நல் உபதேசத் தமிழ்தனை  கரை காட்டிய திறலோனே... நல்ல உபதேசங்களைக் கொண்ட (தேவாரமாகிய) தமிழுக்குக் கரைகண்ட வல்லவனே!

சமணரைக்கழுவேற்றிய பெருமாளே.... (வாதில் வென்ற) சமணர்களைக் கழுவேற்றிய பெருமாளே!

சுருக்க உரை

உமையம்மையின் திருமுலைப் பாலைப் பருகி, அதன் காரணத்தால் சிவபெருமானுடைய திருவருளைத் தன் தேவாரப் பாடல்களால் பாடுவதையே தன்னுடைய மெய்த்தவமாகக் கொண்டு, நல்ல உபதேச மொழிகளைக் கொண்ட தேவாரத்தில் கரைகண்டவராக விளங்கிய ஞானசம்பந்தராக வந்தவனே! சமணர்களை வாதில் வென்று கழுவேற்றிய பெருமாளே!

சமயக் கொள்கைகளை வீணானவை என்று கருதாமல், உனது திருவடித் தாமரைகளில் சிவார்ச்சனை செய்ய விரும்புகின்ற என் மனம் எப்போதும் (இந்நிலையிலேயே) பொருந்தியிருக்குமாறு, சத்குருவின் மூலமாகவும் சாத்திரங்களை எடுத்தோதுகின்ற நூல்களின் மூலமாகவும் நினது திருவருளையே எனக்குத் துணையாகத் தந்தருள வேண்டும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/may/12/பகுதி--823-2916471.html
2916470 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 822 ஹரி கிருஷ்ணன் Wednesday, May 9, 2018 05:22 PM +0530  

‘உனது திருவருள் துணை நிற்கவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 26 எழுத்துகளைக் கொண்ட அமைப்பு.  ஒன்று, ஐந்து ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; இரண்டு, ஆறு ஆகிய சீர்களின் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் என மூன்றெழுத்துகளும்; மூன்று, ஏழு ஆகிய சீர்களில் ஒரு நெடில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று, இரண்டு குறில் என மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனன தத்தன தாத்தன                    தனதானா

 

சமய பத்திவ்ரு தாத்தனை                 நினையாதே

  சரண பத்மசி வார்ச்சனை                தனைநாடி

அமைய சற்குரு சாத்திர                   மொழிநூலால்

  அருளெ னக்கினி மேற்றுணை           தருவாயே

உமைமு லைத்தரு பாற்கொடு             அருள்கூறி

  உரிய மெய்த்தவ மாக்கிந                லுபதேசத்

தமிழ்த னைக்கரை காட்டிய                திறலோனே

  சமண ரைக்கழு வேற்றிய               பெருமாளே.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/may/11/பகுதி---822-2916470.html
2916417 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோயிலில் கட்டமுது விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு ஹரி கிருஷ்ணன் DIN Wednesday, May 9, 2018 11:18 AM +0530
திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோயிலில் கட்டமுது விழா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். 

அப்பருக்கு சிவபெருமான் கட்டமுது வழங்கியதாகக் கருதப்படும் இடத்தில் ஒவ்வொரு ஆண்டும் கட்டமுது விழ வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. 

அதன்படி, இந்த ஆண்டு கட்டமுது விழா நேற்று நடைபெற்றுது. இதையொட்டி கோயிலில் இருந்து நீலிவனேஸ்வரர் புறப்பட்டு, அப்பர் இளைப்பாறியதாகக் கருதப்படும் சோலையில் எழுந்தருளினார். அங்கு சிவனடியார்கள் மற்றும் ஓதுவார்களின் பக்தி சொற்பொழிவும், தேவார இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 

விழாவில் திருச்சி, சேலம், கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

]]>
http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/may/09/திருப்பைஞ்சீலி-நீலிவனேஸ்வரர்-கோயிலில்-கட்டமுது-விழா-திரளான-பக்தர்கள்-பங்கேற்பு-2916417.html
2915774 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 821 ஹரி கிருஷ்ணன் Wednesday, May 9, 2018 10:53 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

சருவிய சாத்திர திரளான

 

சருவிய: பழகிய, பயிற்சியுள்ள;

சடு திகழ் ஆஸ்பதத்து அமையாத

 

சடுதிகழ்: ஆறாக விளங்குகின்ற; ஆஸ்பதத்து: ஆதாரங்களில்;

அரு மறையால் பெறற்கு அரிதாய

 

 

அனிதய வார்த்தையை பெறுவேனோ

 

அனிதய: இதயத்துக்கு எட்டாத—மனத்துக்கு எட்டாத;

நிருதரை மூக்கு அறுத்து எழு பார

 

நிருதரை: அரக்கர்களை; எழு: ஏழு; பார: பெருமையுடைய;

நெடு திரை ஆர்ப்பு எழ பொருதோனே

 

நெடுதிரை: நீண்ட அலைகள்; ஆர்ப்பு: பேரொலி; பொருதோனே: போரிட்டோனே;

பொருள் அடியால் பெற கவி பாடும்

 

பொருள்: மெய்ப்பொருள்; அடியால்: (உன்) திருவடியால்;

புலவர் உசாத்துணை பெருமாளே.

 

உசாத்துணை: உற்ற துணை;

சருவிய சாத்திரத் திரளான... நன்கு பயின்ற எல்லாச் சாத்திரங்களின் திரண்ட பொருளாக (விளங்குவது எதுவோ),

சடுதிகழ் ஆஸ்பதத்து அமையாத... ஆறாக அமைந்துள்ள (மூலாதாரம் முதலான) ஆதாரங்களுக்குள் பொருந்தி அடங்காதது (எதுவோ),

அருமறையாற் பெறற்கு அரிதாய... அரிய மறைகளால் அடைய முடியாதது (எதுவோ),

அனிதய வார்த்தையைப் பெறுவேனோ...மனத்துக்கு எட்டாதது (எதுவோ, அப்படிப்பட்ட) உபதேச மொழியை நான் பெறுவேனோ (அப்படிப்பட்ட உபதேசத்தை அடியேனுக்கு அருள வேண்டும்).

நிருதரை மூக்கறுத்து... அரக்கர்களுடைய மூக்கை அறுத்து (அவமதித்து),

எழுபார நெடுதிரை யார்ப்பெழப் பொருதோனே... நீண்ட அலைகள் புரள்கின்ற ஏழு கடல்களிலும் பேரொலி எழுமாறு போரிட்டவனே!

பொருள் அடியாற் பெறக் கவிபாடும்...  உன்னுடைய திருவடிகளின் துணையால் மெய்ப்பொருளை அடைவதற்காகப் பாடல்களைப் புனைகின்ற,

புலவர் உசாத்துணைப் பெருமாளே.... புலவர்களுக்கு உற்ற துணையாக நிற்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

அசுரர்களை மூக்கறுத்து அவமதித்து, அலைகள் புரள்கின்ற ஏழு கடல்களிலும் பேரொலி உண்டாகுமாறு போரிட்டவனே!  உன்னுடைய திருவடிகளைத் துணைக்கொண்டு (அதன் மூலமாக) மெய்ப்பொருளை அடையவேண்டும் என்பதற்காகப் பாடல்களைப் புனைகின்ற புலவர்களுக்கு உற்ற துணையாக விளங்குகின்ற பெருமாளே!

நன்கு பழகிய சாத்திரத் தொகுதிகளின் உட்பொருளாக ஆனதும்; ஆறு ஆதாரங்களிலும் பொருந்தி அமையாததும்; அரிய வேதங்களாலும் அடைய முடியாததும்; மனத்துக்கு எட்டாததுமான அந்த அரிய உபதேசத்தை அடியேனுக்கு அளித்தருள வேண்டும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/may/10/பகுதி--821-2915774.html
2915757 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 820 ஹரி கிருஷ்ணன் Wednesday, May 9, 2018 10:52 AM +0530  

‘ஞானோபதேசம் பெறவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் ஒரு நெடில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று, இரண்டு குறில் என்று மூன்றெழுத்துகளும்; ஐந்தாவதாக உள்ள தொங்கல் சீரில் ஒன்று அல்லது இரண்டு நெடில்களைக் கொண்ட நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனதன தாத்தனத் தனதானா

சருவிய சாத்திரத்                         திரளான

      சடுதிக ழாஸ்பதத்                   தமையாத

அருமறை யாற்பெறற்                     கரிதாய

      அனிதய வார்த்தையைப்             பெறுவேனோ

நிருதரை மூக்கறுத்                        தெழுபார

      நெடுதிரை யார்ப்பெழப்              பொருதோனே

பொருளடி யாற்பெறக்                     கவிபாடும்

      புலவரு சாத்துணைப்                பெருமாளே.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/7/w600X390/1465.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/may/09/பகுதி--820-2915757.html
2915107 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 819 ஹரி கிருஷ்ணன் Tuesday, May 8, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

கருப்பையில்சுக்கிலத்து உலைத்து
உற்பவித்து மறுகாதே

 

உற்பவித்து: பிறந்து; மறுகாதே: கலங்காமல்;

கபட்டு அசட்டர்க்குஇதத்த சித்ரதமிழ்க்கள்
உரையாதே

 

கபட்டு: கபடமான, வஞ்சகமான; தமிழ்க்கள்: தமிழ் பாடல்கள்;

விருப்பம் உற்றுதுதித்து எனை பற்றுஎன 
கருது நீயே

 

 

வெளிப்பட பற்றிடபடுத்த தருக்கிமகிழ்வோனே

 

 

பருப்பதத்தைதொளைத்த சத்திபடை சமர வேளே

 

பருப்பதத்தை: பர்வதத்தை, கிரெளஞ்ச மலையை; சமர வேளே: போர் நாயகனே!

பணி குலத்தை கவர்பதத்துக்கு அளித்த
மயிலோனே

 

பணிக் குலத்தை: பாம்புக் குலத்தை; கவர்ப் பதத்துக்கு: (விரல்களால்) பிரிவுபட்ட பாதத்துக்கு;

செரு புறத்துசினத்தை முற்றபரப்பும் இசையோனே

 

செருப்புறத்து: போர்க்களத்தில்; பரப்பும்: விரிக்கின்ற; இசையோனே: புகழை உடையவனே;

தினை புனத்துகுறத்தியை கைபிடித்த பெருமாளே.

 

 

கருப்பையிற் சுக்கிலத்து உலைத்து உற்பவித்து மறுகாதே... கருப்பையில் இருக்கின்ற சுக்கிலத்தில் (பெண் முட்டையில்) அலைக்கப்பட்டு மறுபடியும் பிறந்து கலங்காமலும்;

கபட்டு அசட்டர்க்கு இதத்த சித்ரத் தமிழ்க்கள் உரையாதே... வஞ்சனை நிறைந்த அசடர்களின் மனத்துக்கு இதமாக அழகிய தமிழ்ப்பாடல்களைப் புனையாமலும்;  

விருப்பமுற்றுத் துதித்து எனைப்பற்று எனக்கருதுநீயே... ‘விருப்பத்தோடு துதித்து என்னைப் பற்றிக்கொள்வாயாக’ என்று நீயே திருச்சித்தம் கொண்டருள வேண்டும்.

வெளிப்படப் பற்றிடப் படுத்தத் தருக்கி மகிழ்வோனே... (அவ்வாறு பற்றிக் கொள்கையில் என் எதிரே) வெளிப்பட்டு என்னை ஆதரித்து ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி அடைபவனே!

பருப்பதத்தைத் தொளைத்த சத்திப் படைச் சமரவேளே... கிரெளஞ்ச மலையைத் துளைத்த சக்தியாயுதத்தை ஏந்தியிருக்கின்ற போர்த் தலைவனே!

பணிக்குலத்தைக் கவர்ப்பதத்துக்கு அளித்த மயிலோனே... பாம்புக் கூட்டங்களைத் தன் விரலிடுககில் கவ்வுகின்ற மயிலை வாகனமாக உடையவனே!

செருப்புறத்துச் சினத்தை முற்றப் பரப்பும் இசையோனே... போர்க்களத்திலே சினத்தை முற்றிலும் பரப்பிய புகழை உடையவனே!

தினைப்புனத்துக் குறத்தியைக்கைப் பிடித்த பெருமாளே.... தினைப்புனத்திலிருந்த குற வள்ளியைக் கைப்பிடித்து மணந்துகொண்ட பெருமாளே!

சுருக்க உரை

‘என்னை விருப்பமுற்றுத் துதி’ என்று திருச்சித்தத்தால் கருதி (உன் அருளாலே நான் உன்னைப்) பற்றிக்கொள்ளவும் என் முன்னே வெளிப்பட்டு என்னை ஆதரிப்பதில் மகிழ்ச்சியடைபவனே! கிரெளஞ்ச மலையைத் துளைத்த வேலாயுதத்தை ஏந்தியிருப்பவனே! பாம்புக்கூட்டங்களைத் தன் விரலிடுக்கிலே கவ்வியிருக்கின்ற மயிலை வாகனமாக உடையவனே!  உன்னுடைய சினத்தைப் போர்க்களமெங்கும் பரப்பிய புகழை உடையவனே!  தினைப்புனத்திலிருந்த குறத்தியான வள்ளியைக் கரம்பற்றி மணந்த பெருமாளே!

கருப்பையிலே உள்ள பெண் முட்டையால் அலைப்புண்டு பிறந்து கலங்காமலும்; வஞ்சகர்களான மூடர்களின் மனம் மகிழுமாறு அவர்களின்மேல் அழகிய தமிழ்ப்பாடல்களைப் புனையாமலும் ‘விருப்பத்தோடு என்னைத் துதி’ என்று நீயே கருதி, என்னை ஆட்கொள்ள வேண்டும்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/may/08/பகுதி---819-2915107.html
2913919 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி -818 ஹரி கிருஷ்ணன் Saturday, May 5, 2018 04:55 PM +0530

 

‘நான் உன்னைப் பற்றுவதை எண்ணவேண்டும்’ என்ற கருத்து உன் திருச்சித்தத்திலே ஏற்படவேண்டும் என்று கோரும் இப்பாடல், பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.  ‘விருப்பமுற்றுத் துதித்து எனைப் பற்று’ என்று வருகின்ற இரண்டாம் அடியை, குருநாதரின் வாழ்க்கைக் குறிப்பு என்று கொள்ள இடமுண்டு.

அடிக்கு ஒற்றொழித்து 34 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; இரண்டு, நான்கு, எட்டு, பத்து ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும் அமைந்துள்ளன.

தனத்த தத்தத் தனத்த தத்தத் தனத்த                                       தனதானா

 

கருப்பை யிற்சுக் கிலத்து லைத்துற் பவித்து                      மறுகாதே

                கபட்ட சட்டர்க் கிதத்த சித்ரத் தமிழ்க்க                    ளுரையாதே

விருப்ப முற்றுத் துதித்தெ னைப்பற் றெனக்க                   ருதுநீயே

                வெளிப்ப டப்பற் றிடப்ப டுத்தத் தருக்கி                    மகிழ்வோனே

பருப்ப தத்தைத் தொளைத்த சத்திப் படைச்ச                      மரவேளே

                பணிக்கு லத்தைக் கவர்ப்ப தத்துக் களித்த            மயிலோனே

செருப்பு றத்துச் சினத்தை முற்றப் பரப்பு                                மிசையோனே

                தினைப்பு னத்துக் குறத்தி யைக்கைப் பிடித்த     பெருமாளே.

 

 

 
]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/may/07/பகுதி--818-2913919.html
2913270 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 817 ஹரி கிருஷ்ணன் Friday, May 4, 2018 02:56 PM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

கருப்பற்று ஊறிபிறவாதே

 

கருப்பற்று: கருவிலே பிறக்கும் ஆசை;

கனக்க பாடு உற்றுஉழலாதே

 

கனக்க: மிகவும்; பாடுற்று: துன்பப்பட்டு;

திரு பொன் பாதத்துஅனுபூதி

 

 

சிறக்க பாலித்துஅருள்வாயே

 

 

பரப்பு அற்றாருக்குஉரியோனே

 

பரப்பு அற்றாருக்கு: ஆசைப் பெருக்கம் இல்லாதவருக்கு;

பரத்த அப்பாலுக்குஅணியோனே

 

பரத்த: மேலான; அப்பாலுக்கு: (எல்லாம்) கடந்த இடத்துக்கு; அணியோனே: அருகில் உள்ளவனே;

திரு கை சேவல்கொடியோனே

 

 

செகத்தில் சோதிபெருமாளே.

 

 

கருப்பற்று ஊறிப் பிறவாதே...கர்ப்பத்திலே தோன்றவேண்டும் என்ற பற்று ஏற்பட்டு மீண்டும் பிறவாமலும்;

கனக்கப் பாடுற்று உழலாதே... அளவற்ற துன்பங்களை அடியேன் அடைந்து திரியாமலும்;

திருப்பொற் பாதத்து அநுபூதி... உன்னுடைய அழகிய திருவடிகளாகிய அநுபூதி நிலையை,

சிறக்கப் பாலித்து அருள்வாயே... அடியேன் சிறப்படையுமாறு தந்தருள வேண்டும்.

பரப்பற்றாருக்கு உரியோனே... ஆசைப் பெருக்கம் இல்லாதவர்களுக்கு உரியவனே!

பரத்து அப்பாலுக்கு அணியோனே... மேலானதாகவும்; அனைத்தையும் கடந்ததாகவும் உள்ள நிலைக்கு அருகில் இருப்பவனே!

திருக்கைச் சேவற் கொடியோனே... திருக்கரத்தில் சேவற்கொடியை உடையவனே!

செகத்திற் சோதிப் பெருமாளே.... உலகிலே ஜோதி ஸ்வரூபமாக விளங்குகின்ற பெருமாளே!

சுருக்க உரை

ஆசைப் பெருக்கற்றவர்களுக்கு உரியவனே!  மேலானதும், அனைத்தையும் கடந்ததுமான நிலையில் இருப்பவனே!  திருக்கரத்தில் சேவற்கொடியை ஏந்தியவனே!  உலகிலே ஜோதி மயமாக விளங்குகின்ற பெருமாளே!

கர்ப்பத்தில் மீண்டும் பிறக்காமலும்; மிகுந்த துன்பங்களை அடைந்து உழலாமலும் உன்னுடைய திருப்பாதங்களை அனுபவிக்கின்ற அநுபூதி நிலையை அடியேனுக்கு அளித்தருள வேண்டும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/may/06/பகுதி---817-2913270.html
2913269 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 816 ஹரி கிருஷ்ணன் Friday, May 4, 2018 02:42 PM +0530  

‘அனுபூதி பெறவேண்டும்’ என்று கோரும் இப்பாடல், பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 18 எழுத்துகளைக் கொண்ட பாடல்.ஒன்று, நான்கு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும்; இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக இரண்டெழுத்துகளும்; தொங்கல் சீரில் இரண்டு குறிலும் இரண்டு நெடிலுமாக நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனத்தத் தானத்                                                                         தனதானா

 

கருப்பற் றூறிப்                                                                           பிறவாதே

                கனக்கப் பாடுற்                                                           றுழலாதே

திருப்பொற் பாதத் தநுபூதி

                சிறக்கப் பாலித்                                                           தருள்வாயே

பரப்பற் றாருக் குரியோனே

                பரத்தப் பாலுக்                                                             கணியோனே

திருக்கைச் சேவற் கொடியோனே

                செகத்திற் சோதிப்                                                    பெருமாளே.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/may/05/பகுதி---816-2913269.html
2912590 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 815 ஹரி கிருஷ்ணன் Friday, May 4, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

கொடியன பிணிகொ(ண்)டு 
விக்கிகக்கின் போந்துஅசடு ஆகும்

 

கக்கி: வாந்தியெடுத்து; கூன்போந்து: கூன் விழுந்து;

குடில் உற வரும் ஒருமிக்க சித்ர கோண்பூண்டு அமையாதே

 

குடில்: உடல்; மிக்கச் சித்ர: மிகவும் விசித்திரமான; கோண் பூண்டு: கோணலான (Crooked) நிலையை அடைந்து;

பொடிவன பரசமயத்து தப்பி போந்தேன் தலைமேலே

 

பொடிவன: பொடிப்பொடியாகப் போகும்; பரசமயத்து: புற மதங்களுடைய;

பொருள் அது பெறஅடி நட்பு சற்று பூண்டு ஆண்டுஅருள்வாயே

 

 

துடி பட அலகைகள்கை கொட்டிட்டு சூழ்ந்து ஆங்கு உடன்ஆட

 

துடி பட: உடுக்கை ஒலிக்க; அலகைகள்: பேய்கள்;

தொகு தொகு திகு திகுதொக்கு 
திக்கு தோம்தாம் தரி தாளம்

 

 

படி தரு பதிவ்ரதைஒத்த சுத்த பாழ் கான்தனில் ஆடும்

 

படிதரு: (தாளத்தைப்) படியும்படியாக, அழுந்தப் போடும்; பாழ் கான்: சுடுகாடு;

பழயவர் குமர குறதத்தைக்கு  
பாங்காம்பெருமாளே.

 

பழயவர்: பழையவர், ஆதியானவர்; குறத் தத்தைக்கு: குறக்கிளிக்கு—வள்ளிக்கு; பாங்காம்: துணை ஆகின்ற;

கொடியன பிணி கொ(ண்)டு விக்கிக் கக்கிக் கூன் போந்து அசடு ஆகும். கொடிய நோய்களை அடைந்து விக்கியும் வாந்தியெடுத்தும் கூன் விழுந்தும் அறிவிலே கலக்கம் அடைந்தும்;

குடில் உற வரும் ஒரு மிக்கச் சித்ரக் கோண் பூண்டு அமையாதே... உடலிலே விசித்திரமாக வந்து பொருந்தும் கோணலான தன்மையை அடையாமல்,

பொடிவன பர சமயத்துத் தப்பிப் போந்தேன் தலை மேலே... பொடிபட்டு அழியக்கூடிய புறச்சமயங்களிடமிருந்து தப்பித்துக்கொண்டு வந்திருக்கின்ற என்னுடைய தலையின் மேலே,

பொருள் அது பெற அடி நட்புச் சற்றுப் பூண்டு ஆண்டு அருள்வாயே. மெய்ப்பொருளை அடியேன் அடையும் வண்ணமாக அன்புகொண்டு உனது திருவடிகளை வைத்து ஆண்டருள வேண்டும்.

துடி பட அலகைகள் கைக் கொட்டிட்டுச் சூழ்ந்து ஆங்கு உடன் ஆட. உடுக்கைகள் ஒலிக்க, பேய்கள் கைகளைக் கொட்டிக்கொண்டு வட்டமாகச் சூழ்ந்துகொண்டு (உடுக்கை, கைத்தாள ஒலிக்கு) இசைவாக ஆட,

தொகு தொகு திகு திகு தொக்குத் திக்குத் தோம் தாம் தரி தாளம் படி தரு பதிவ்ரதை ஒத்த... தொகு தொகு திகு திகு தொக்குத் திக்குத் தோம் தாம்தரி என்றவண்ணமாகத் தாளத்தை அழுந்தப் போடுகின்ற பதிவிரதையாகிய உமாதேவியோடு,

சுத்தப் பாழ்ங் கான் தனில் ஆடும் பழயவர் குமர குறத் தத்தைக்குப் பாங்காம் பெருமாளே....சுடுகாட்டில் நடனமாடும் முதல்வரான சிவபெருமானுடைய குமரனே!  குறமங்கையான வள்ளிக்குத் துணைவனான பெருமாளே!

சுருக்க உரை

உடுக்கைகள் ஒலிக்க; பேய்கள் கைத்தாளம் போட்டபடிக் கூத்தாட; தொகுதொகு திகுதிகு என்றெல்லாம் தாளம் அழுத்தமாக விழும்படியாக உமாதேவியார் உடன் ஆட, சுடுகாட்டில் நடனமாடும் முதல்வரான சிவபெருமானுடைய குமரனே!  குறவள்ளிக்குத் துணைவனான பெருமாளே!

கொடுமையான நோய்களால் துன்புற்று, விக்கி, வாந்தியெடுத்துக் கூன் விழுந்து அறிவிலே மயக்கம் ஏற்பட்டு, உடலிலே ஏற்படுகின்ற விசித்திரமானதும் கோணலாதுமான மாறுபாட்டை நான் அடையாமல் அடியேன் மெய்ப்பொருளை உணரும் வண்ணமாக என்னுடைய தலையின் மீது உனது திருவடிகளை அன்போடு சூட்டியருள வேண்டும்.

 

 

]]>
திருப்புகழ் - 451 http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/may/04/பகுதி---815-2912590.html
2911934 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 814 ஹரி கிருஷ்ணன் Thursday, May 3, 2018 12:00 AM +0530  

‘உன் திருவடியைச் சூட்டியருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 18 எழுத்துகளையும் ஐந்து சீர்களையும் கொண்ட பாடல்.  ஒன்று, இரண்டு ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு மூன்று ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும்; ஐந்தாம் சீரில் இரண்டு நெடிலும் இரண்டு (கணக்கில் சேராத) மெல்லொற்றுகளும் அமைந்திருக்கின்றன.

தனதன தனதன தத்தத் தத்தத்

                தாந்தாந்                                                                           தனதானா

 

கொடியன பிணிகொடு விக்கிக் கக்கிக்

                        கூன்போந்                                                               தசடாகுங்

      குடிலுற வருமொரு மிக்கச் சித்ரக்

                        கோண்பூண்                                                           டமையாதே 

பொடிவன பரசம யத்துத் தப்பிப்

                        போந்தேன்                                                             தலைமேலே

      பொருளது பெறஅடி நட்புச் சற்றுப்

                        பூண்டாண்                                                              டருள்வாயே

துடிபட அலகைள் கைக்கொட் டிட்டுச்

                        சூழ்ந்தாங்                                                                குடனாடத்

      தொகுதொகு திகுதிகு தொக்கத் திக்குத்

                        தோந்தாந்                                                                தரிதாளம்

படிதரு பதிவ்ரதை யொத்தச் சுத்தப்

                        பாழ்ங்கான்                                                            தனிலாடும்

      பழயவர் குமரகு றத்தத் தைக்குப்

                        பாங்காம்                                                                 பெருமாளே.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/may/03/பகுதி---814-2911934.html
2911298 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 813 ஹரி கிருஷ்ணன் Tuesday, May 1, 2018 05:41 PM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

துயரம் அறு(ம்) நின்வறுமை தொலையும் 
மொழியும் அமிர்த சுரபானம்

 

மொழியும்: சொல்லப்படும்--பிரசித்திபெற்ற; சுரபானம்: தேவர்கள் பருகும் உணவு;

சுரபி குளிகை எளிதுபெறுக   துவளும்எமது 
பசி தீர

சுரபி: காமதேனு; குளிகை: ரசகுளிகை—எல்லாவற்றையும் பொன்னனாக மாற்ற வல்லது;

தயிரும் அமுதும்அமையும் இடுக  சவடி
கடக நெளிகாறை

சவடி: காதணி; கடக(ம்): தோள் வளை; நெளி: ஒருவகையான மோதிரம்; காறை: கழுத்தணி;

தருக தகடொடு உறுகஎனும்  இவ்விரகுதவிர்வதும் ஒருநாளே

தருக: தரவல்ல; தகடொடு: தாயத்துத் தகடு; உறுக: பெறுக; விரகு: தந்திர மொழி; தவிர்வதும்: விடுபடுவதும்;

உயரு(ம்) நிகர் இல்சிகரி மிடறும்  உடலும்
அவுணர்நெடு மார்பும்

உயரும்: உயர்ந்துள்ளதும்; நிகரில்: இணையற்றதும்; சிகரி: மலை—கிரெளஞ்சம்; மிடறு: தொண்டை, கழுத்து;

உருவ மகர முகரதிமிர  உததி  உதரம்அது பீற

உருவ: உருவிச் செல்ல; மகர: மீன் (உலவுவதும்); முகர: ஒலிப்பதும்; திமிர: இருண்டதும்; உததி: கடல்; உதரமது பீற: வயிறு கிழிபட;

அயரும் அமரர் சரணநிகள(ம்)    முறியஎறியும் 
அயில் வீரா

 

அயரும்: சோர்வுறும்; சரண(ம்): கால்; நிகளம்: விலங்கு; சரண நிகளம்: கால்விலங்கு; அயில்: கூர்மை (ஆகுபெயராக வேல்);

அறிவும் உரமும்அறமு(ம்) நிறமும்   அழகும்
உடையபெருமாளே.

 

உரம்: வலிமை; நிறம்: ஒளி;

 

துயரம் அறு(ம்நின் வறுமை தொலையும் மொழியும் அமிர்த சுர பானம் சுரபி குளிகை எளிது பெறுக...  உன்னுடைய எல்லாத் துன்பமும் தீரும்; வறுமை தொலையும்; பிரசித்தி பெற்ற அமுதம் எனப்படும் தேவர்கள் பருகுகின்ற உணவையும் காமதேனுவையும் (எதையும் பொன்னாக்க வல்ல) ரசகுளிகையையும் நீ எளிதில் பெறலாம்;

துவளும் எமது பசி தீரத் தயிரும் அமுதும் அமையும் இடுக சவடி கடக நெளி காறை தருக தகடொடு உறுக... என்னைத் துவளச் செய்கின்ற பசி தீரும்படியாக தயிர்சோற்றை இடு; (உனக்கு நான் பொன்னாலான) காதணியையும் தோள் வளையையும் நெளி மோதிரத்தையும் கழுத்தணியையும் தரவல்ல தாயித்தைத் தருவேன்; பெற்றுக்கொள்வாய்;

எனும் இவ்விரகு தவிர்வதும் ஒரு நாளே... என்றெல்லாம் சொல்கின்ற (ரசவாதிகளின்) கபடமொழிகளிலிருந்து என்றேனும் விடுபடுவேனா? (இந்தக் கபடத்திலிருந்து அடியேனை விடுவித்தருள வேண்டும்.)

உயரு(ம்நிகர் இல் சிகரி மிடறும் உடலும் அவுணர் நெடு மார்பும் உருவ மகர முகர திமிர உததி உதரம் அது பீற... உயர்ந்து எழுவதும்; ஒப்பற்றதுமான கிரெளஞ்ச மலையையும்; அரக்கர்களுடைய கழுத்தையும் உடலையும் அகன்ற மார்பையும் ஓடுருவும்படியும்; சுறா மீன்கள் திரிவதும் பேரொலியை எழுப்புவதும் இருண்டதுமான கடலுடைய வயிறு கிழியும்படியாகவும்;

அயரும் அமரர் சரண நிகள(ம்முறிய எறியும் அயில் வீரா... சோர்வுற்றுக் கிடந்த  தேவர்களுடைய கால் விலங்குகள் உடைபடும்படியாகவும் வேலை வீசிய வீரனே!

அறிவும் உரமும் அறமு(ம்நிறமும் அழகும் உடைய பெருமாளே.... அறிவுச் செறிவும் வலிமையும் அறமும் ஒளியும் அழகும் நிறைந்து விளங்குகின்ற பெருமாளே!

சுருக்க உரை

உயர்ந்தெழுவதும் இணையற்றதுமான கிரெளஞ்ச மலையும் அசுரர்களுடைய கழுத்தும் பெரிய உடலும் மார்பும் துண்டுபடும்படியாகவும்; சுறா மீன்கள் திரிவதும் பேரொலியை எழுப்புவதும் இருண்டதுமான கடலுடைய வயிறு கிழியும்படியாகவும்; சோர்வுற்றுக்க கிடந்த தேவர்களுடைய கால்விலங்கு தெறிக்கும்படியாகவும் வேலை வீசிய வீரனே! அறிவுச் செறிவும் வலிமையும் தருமமும் ஒளியும் அழகும் நிறைந்து விளங்குகின்ற பெருமாளே!

‘உன்னுடைய துன்பமெல்லாம் தீரும்; வறுமை ஒழியும்; தேவர்கள் பருகும் அமுதத்தையும் காமதேனுவையும் எதையும் பொன்னாக மாற்றக்கூடிய ரசகுளிகையையும் நீ எளிதில் அடையுமாறு செய்கிறேன்.  ரசவாதத்தால் உனக்குப் பொன்னாலான காதணி, தோளணி, கழுத்தணிகளை உண்டாக்கித் தருகிறேன். தாயித்தையும் தருகிறேன்.  இப்போது என் பசியடங்கும்படியாகக் கொஞ்சம் தயிர்சோற்றைப் போடு’ என்று பேசுகின்ற கபடவேட ரசவாதிகளின் அசட்டுப் பேச்சுகளிலிருந்து நான் விடுபடும்படிச் செய்து அடியேனை ஆண்டுகொள்ள வேண்டும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/7/w600X390/1465.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/may/02/பகுதி---813-2911298.html
2909324 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 812 ஹரி கிருஷ்ணன் DIN Monday, April 30, 2018 12:00 AM +0530
 

‘எல்லாவற்றையும் பொன்னாக மாற்றவேண்டும்’ என்ற ரசவாதப் பற்று அழியவேண்டும் என்று கோருகின்ற இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று முதல் ஆறு வரையிலான எல்லாச் சீர்களிலும் மூன்று—மூன்று குற்றெழுத்துகள் அமைந்துள்ளன.

தனன தனன தனன தனன 

                தனன தனன                                தனதான

துயர மறுநின் வறுமை தொலையு

                        மொழியு மமிர்த                 சுரபானம்   

      சுரபி குளிகை யெளிது பெறுக   

                        துவளு மெமது                     பசிதீரத்   

தயிரு மமுது மமையு மிடுக   

                        சவடி கடக                             நெளிகாறை    

      தருக தகடொ டுறுக எனுமி

                        விரகு தவிர்வ                    தொருநாளே   

உயரு நிகரில் சிகரி மிடறு  

                        முடலு மவுணர்               நெடுமார்பும்   

      உருவ மகர முகர திமிர   

                        வுததி யுதர                        மதுபீற   

அயரு மமரர் சரண நிகள   

                        முறிய எறியு                    மயில்வீரா   

      அறிவு முரமு மறமு நிறமு   

                        மழகு முடைய              பெருமாளே.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/apr/30/பகுதி---812-2909324.html
2909319 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 811 ஹரி கிருஷ்ணன் Saturday, April 28, 2018 02:54 PM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

தேன் இயல் சொற்குஅணி மாதர்

 

தேன் இயல்: தேனின் தன்மையை; சொற்கு அணிமாதர்: சொல்லில் அணிந்திருக்கின்ற பெண்களுக்கு;

சேவை தனைகருதாதே

 

 

யான் எனது அற்றிடுபோதம்

 

போதம்: ஞானம்;

யான் அறிதற்குஅருள்வாயே

 

 

வானவருக்கு அரசான

 

 

வாசவனுக்குஇனியோனே

 

வாசவன்: இந்திரன்;

ஆனை முகற்குஇளையோனே 

 

 

ஆறு முக பெருமாளே.

 

 

தேன் இயல் சொற்கு அணி மாதர் சேவை தனைக் கருதாதே... தங்களுடைய பேச்சிலே தேனின் இனிமையைக் கொண்டிருக்கின்ற பெண்களுக்குத் தொண்டாற்றிக் கொண்டிருப்பதை எண்ணத்தில் கொள்ளாமல்,

யான் எனது அற்றிடு போதம் யான் அறிதற்கு அருள்வாயே... யான், எனது (எனப்படும் அகங்காரமும் மமகாரமும்) என்னைவிட்டு நீங்குவதற்கான ஞானத்தை நான் உணரும்படியாக அருளவேண்டும்.

வானவருக்கு அரசான வாசவனுக்கு இனியோனே... தேவர்களின் அரசனான இந்திரனுக்கு இனியவனே!

ஆனை முகற்கு இளையோனே ஆறு முகப் பெருமாளே.... ஆனை முகனின் இளையவனே!  ஆறுமுகங்களைக் கொண்ட பெருமாளே!

சுருக்க உரை

தேவர்களுக்கு அரசனான இந்திரனுக்கு இனியவனே! யானைமுகனுக்கு இளையவனே!  ஆறுமுகங்களைக் கொண்ட பெருமாளே!

தேனின் இனிய சுவையைத் தங்களுடைய பேச்சிலே கொண்டிருக்கும் பெண்களுக்குப் பணிவிடை செய்துகொண்டிருப்பதை நான் நினையாமல், ‘நான், எனது’ என்னும் கட்டுகளை அறுப்பதற்கான ஞானத்தை உணருமாறு அருளவேண்டும்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/apr/29/பகுதி---811-2909319.html
2909316 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 810 ஹரி கிருஷ்ணன் Saturday, April 28, 2018 02:36 PM +0530  

‘யான், எனது’ என்ற மயக்கம் அறவேண்டும் என்ற கோரும் இப்பாடல், பொதுப்பாடல்களின் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 16 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  தொங்கல் சீரை விட்டுவிட்டால் அடிக்கு இரண்டே இரண்டு சீர்களைக் கொண்ட பாடல்.  தொங்கல் சீரையும் சேர்த்துக் கணக்கிட்டால் அடிக்கு ஐந்து சீர்கள் என்று கொள்ளவேண்டும்.  ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாக இரண்டெழுத்துகளும்; இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் அமைந்துள்ளன.  தொங்கல் சீரில் வழக்கம்போல மூன்றாவது எழுத்து நெடிலாகவும் மற்ற மூன்றும் குறிலாகவும் வரும் நான்கெழுத்துகள் அமைந்திருக்கின்றன.

 

தான தனத்          தனதான

தேனி யல்சொற்            கணிமாதர்

                        சேவை தனைக்        கருதாதே

யானெ னதற்றிடுபோதம்

                        யான றிதற்           கருள்வாயே

வான வருக்                கரசான

                        வாச வனுக்        கினியோனே

ஆனை முகற்        கிளையோனே

                        ஆறு முகப்        பெருமாளே.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/1/17/w600X390/1225.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/apr/28/பகுதி---810-2909316.html
2908076 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 809 ஹரி கிருஷ்ணன் Friday, April 27, 2018 12:00 AM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

துள்ளும் மத வேள் கை கணையாலே      

 

மதவேள்: மன்மதன்; கைக் கணையாலே: கையால் எய்யும் மலர்க் கணைகளாலும்;

தொல்லை நெடு நீல கடலாலே   

 

தொல்லை: பழமையான

மெள்ள வரு(ம்) சோலை குயிலாலே

 

சோலைக் குயிலாலே: என்பது குயிலின் இசையைக் குறிக்கும்;

மெய் உருகும் மானை தழுவாயே

 

 

தெள்ளு தமிழ் பாட தெளிவோனே  

 

தெளிவோனே: தெளிந்த ஞானசம்பந்தராக வந்தவனே;

செய்ய குமரேச திறலோனே

 

செய்ய: சிவந்த;

வள்ளல் தொழு(ம்)

ஞான கழலோனே   

 

வள்ளல்: சிவன்;

வள்ளி மணவாள பெருமாளே.

 

துள்ளுமத வேள் கைக் கணையாலே... துள்ளி வருகின்ற மன்மதன் கையின் மலர்க் கணைகளாலும்,

தொல்லைநெடு நீலக் கடலாலே... பழமையானதும் துன்பத்தைத் தருவதுமான நீலக் கடல் (எழுப்பும் ஒலியாலும்),

மெள்ளவரு சோலைக் குயிலாலே... (காதில்) மெதுவாக வந்து விழுகின்ற சோலைக் குயிலின் (சோக) கீதத்தாலும்,

மெய்யுருகு மானைத் தழுவாயே... (காதல்கொண்டு) உடல் உருகுகின்ற என்னை அணத்துக்கொள்ள வேண்டும்.

தெள்ளுதமிழ் பாடத் தெளிவோனே... தெளிந்த தமிழ்ப்பாடல்களைப் பாட (அவதரித்த) ஞான சம்பந்தப் பெருமானே!

செய்யகும ரேசத் திறலோனே... செம்மை வாய்ந்த குமரேசன் என்று பெயர்கொண்ட வீரனே!

வள்ளல்தொழு  ஞானக் கழலோனே...வள்ளலாகிய சிவபெருமான் தொழுகின்ற ஞானத் திருவடிகளைக் கொண்டவனே!

வள்ளிமண வாளப் பெருமாளே.... வள்ளிக்கு மணவாளனாக விளங்குகின்ற பெருமாளே!

சுருக்க உரை 

இனிய, தெளிவான தேவாரப் பாடல்களைப் பாடுவதற்காக திருஞான சம்பந்தராக அவதரித்தவனே! செம்மை வாய்ந்தவனே!  குமரேசன் என்று பெயர்பெற்ற வீரனே! சிவபெருமான் தொழுகின்ற ஞானத் திருவடிகளைக் கொண்டவனே! வள்ளியை மணம்புரிந்தவனான பெருமாளே!

துள்ளி வருகின்ற மன்மதனுடைய கையின் மலர்க் கணைகளாலும்; பழையதும் துன்பத்தைத் தரும் ஒலியை எழுப்புவதுமான நீலக் கடலாலும்; மிக மெதுவாகக் காதிலே வந்து விழுகின்ற சோலைக் குயிலின் சோக கீதத்தாலும் காதலால் உடல் மெலிகின்ற இந்தப் பேதைப் பெண்ணைத் தழுவிக்கொண்டு அருளவேண்டும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/apr/27/பகுதி---809-2908076.html
2907389 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 808 ஹரி கிருஷ்ணன் Thursday, April 26, 2018 11:02 AM +0530

 

‘என்னைத் தழுவியருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் நாயகி பாவத்தில் இயற்றப்பட்டது. பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) இடையின மெய்யும்; இரண்டாம் சீரிலும் நான்காம் சீரிலும் ஒரு நெடில், ஒரு குறில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என இரண்டெழுத்துகளும் அமைந்திருக்கின்றன.

தய்யதன தானத்                          தனதானா

துள்ளுமத வேள்கைக்                     கணையாலே

         தொல்லைநெடு நீலக்             கடலாலே   

மெள்ளவரு சோலைக்                     குயிலாலே   

         மெய்யுருகு மானைத்             தழுவாயே   

தெள்ளுதமிழ் பாடத்                       தெளிவோனே       

         செய்யகும ரேசத்                 திறலோனே   

வள்ளல்தொழு ஞானக்                    கழலோனே       

         வள்ளிமண வாளப்               பெருமாளே.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/7/w600X390/1465.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/apr/26/பகுதி---808-2907389.html
2906697 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 807 ஹரி கிருஷ்ணன் Tuesday, April 24, 2018 03:44 PM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

நீலம் கொள் மேகத்தின் மயில் மீதே

 

 

நீ வந்த வாழ்வை கண்டு அதனாலே 

 

வாழ்வை: திருக்கோலத்தை;

மால் கொண்ட பேதைக்கு உன் மண(ம்) நாறும்

 

மால்: மயக்கம், மோகம்;

மார் தங்கு(ம்) தாரை தந்து அருள்வாயே

 

தாரை: மாலையை (தார் என்பது ஆண்கள் அணியும் மாலை);

வேல் கொண்டு வேலை பண்டு எறிவோனே 

 

வேல்: வேலாயுதம்; வேலை: கடலை; பண்டு: முன்பு; எறிவோனே:

வீரம் கொள் சூரர்க்கும் குலகாலா

 

குலகாலா: குலத்துக்கு யமனே;

நால் அந்த வேதத்தின் பொருளோனே 

 

 

நான் என்று மார் தட்டும் பெருமாளே.

 

 

(உன்னுடைய தரிசனத்தைத் தரவேண்டும் என்று கேட்கும் மற்ற பாடல்களை போல் அல்லாமல் ‘நீ வந்த வாழ்வைக் கண்டதனாலே’ நான் உன்னை ஏற்கெனவே தரிசித்துவிட்ட படியால்’ என்று பாடும் இப்பாடல் தனிச்சிறப்பு வாய்ந்தது.)

நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே...நீல நிறமான மேகத்தை ஒத்த மயிலின் மீது (அமர்ந்தபடி),

நீவந்த வாழ்வைக்கண்டதனாலே... நீ எனக்குமுன்னே தோன்றிய தரிசனக் கோலத்தைக் கண்டுவிட்ட காரணத்தால்,

மால்கொண்ட பேதைக்கு உன் மணநாறும்... உன்மீது மோகம் கொண்டிருக்கும் இந்தப் பெண்ணுக்கு மணம் வீசுகின்ற உன்னுடைய,

மார்தங்கு தாரைத் தந்தருள்வாயே... மார்பிலே அணிந்திருக்கின்ற மாலையைத் தந்து அருளவேண்டும்.

வேல்கொண்டு வேலைப்பண்டெறிவோனே... (கையிலுள்ள) வேலாயுதத்தைக் கடல் வற்றும்படியாக முன்பு வீசியவனே!

வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா... வீரர் என்று பெருமிதம் கொள்கின்ற சூரர்களுடைய குலத்துக்கே யமனாகத் திகழ்பவனே!

நாலந்த வேதத்தின் பொருளோனே... (ரிக், யஜுர், சாம, அதர்வண என்று) நான்காக விளங்குகின்ற வேதங்களின் பொருளாக விளங்குபவன் (யாரென்றால், அது)

நானென்று மார்தட்டும் பெருமாளே.... நானேதான் என்று பெருமிதத்தோடு மார்தட்டிக்கொள்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

கையிலே ஏந்தியுள்ள வேலாயுதத்தைக் கடல் வற்றும்படியாக முன்பு செலுத்தியவனே!  வீரச் செருக்கு மிகுந்த சூரர்களின் குலத்துக்கு யமனே! நான்கு வேதங்களின் பொருளாக அமைந்திருப்பவர் யார் என்று கேட்டால், ‘அது நானேதான்’ என்று மார்தட்டுகின்ற பெருமாளே!

நீலவண்ணத்தைக் கொண்டதும் மேகத்தை ஒத்ததுமான மயிலின்மீது நீ அமர்ந்துவந்த கோலத்தைக் கண்ட காரணத்தால் உன்மீது மோகம்கொண்டிருக்கின்ற பேதையான எனக்கு உன் மார்பிலே விளங்குகின்ற மாலையைத் தந்தருள வேண்டும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/apr/25/பகுதி---807-2906697.html
2906014 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 806 ஹரி கிருஷ்ணன் Tuesday, April 24, 2018 11:00 AM +0530

 

‘உன் மார்பிலே அணிந்திருக்கும் மாலையைத் தந்தருள்வாயாக’ என்று இறைவனை நாயகி பாவத்திலே வேண்டும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.  பொதுவாக குருநாதரின் அகத்துறைப் பாடல்களில் பெரும்பான்மையும் ‘நற்றாயிரங்கல்’ துறையில், ‘உன்மீது மோகம் கொண்ட என் மகளை ஆண்டருள்வாயாக’ என்று கேட்பதாக அமைந்திருக்கும்.  இந்தப் பாடல், தன்னையே நாயகியாகப் பாவித்து, ‘உன் மார்பிலே அணியும் மாலையைத் தந்தருள்வாயக’ என்று கேட்கும் அரிய வகையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 20 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் ஒரு நெடில், இரண்டு குறில், ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்று என மூன்றெழுத்துகளும்;  இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் ஒரு நெடில், இரண்டு குறில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று, ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்று என மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தானந்த தானத்தந்                         தனதானா

 

நீலங்கொள் மேகத்தின்                    மயில்மீதே

         நீவந்த வாழ்வைக்கண்            டதனாலே 

மால்கொண்ட பேதைக்குன்                மணநாறும் 

         மார்தங்கு தாரைத்தந்             தருள்வாயே  

வேல்கொண்டு வேலைப்பண்              டெறிவோனே 

         வீரங்கொள் சூரர்க்குங்            குலகாலா 

நாலந்த வேதத்தின்                        பொருளோனே 

         நானென்று மார்தட்டும்           பெருமாளே.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/7/w600X390/1465.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/apr/24/பகுதி---806-2906014.html
2906002 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 805 ஹரி கிருஷ்ணன் Monday, April 23, 2018 03:00 PM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

நித்தம் உற்று உனைநினைத்து மிக நாடி

நித்தம்: தினந்தோறும்; உற்று: வந்து பொருந்தி;

நிட்டை பெற்று இயல்கருத்தர் துணையாக

 

நிட்டை: நிஷ்டை;

நத்தி உத்தமதவத்தின் நெறியாலே

நத்தி: விரும்பி;

(இ)லக்ய (இ)லக்கணநிருத்தம்அருள்வாயே

லக்ய லக்கண: இலக்கிய, இலக்கண; நிருத்தம்: நடனம்;

வெற்றி விக்ரமஅரக்கர் கிளைமாளவிட்ட

விக்ரம(ம்): பராக்கிரமம்; கிளை: சுற்றத்தாரை;

நத்து கரனுக்குமருகோனே

நத்து: சங்கு; நத்துகரன்: சங்கை ஏந்தியவன்—திருமால்;

குற்றம் அற்றவர்உ(ள்)ளத்தில் உறைவோனே

 

குக்குட கொடி தரித்தபெருமாளே.

குக்குடக்கொடி: கோழிக்கொடி;

நித்தம் உற்றுனைநினைத்து மிகநாடி... ஒவ்வொரு நாளும் உன்னை எண்ணி மனத்திலிருத்தியும் உன்னை நாடியும்,

நிட்டைபெற்றியல்கருத்தர் துணையாக... நிஷ்டையிலே நிலைபெற்றிருக்கும் பெரியோர்களைத் துணையாகக் கொண்டு,

நத்தி (த்)தம தவத்தின் நெறியாலே... (அவர்களை) விரும்புவதாகிய உத்தமமான தவநெறியின் பயனாக,

லக்ய லக்கண நிருத்தம் அருள்வாயே... இலக்கிய (பரத சாஸ்திர), இலக்கண (நாட்டியத்தின் இலலக்கண) முறைப்படியான நடன தரிசனத்தைத் தந்தருள வேண்டும்.

வெற்றி விக்ரமவரக்கர் கிளைமாள விட்ட... வெற்றியையும் பராக்கிரமத்தையும் உடைய அரக்கர்கள் (போரிலே) தங்கள் சுற்றத்தாரோடு மாளும்படியாகச் செய்த,

நத்துகரனுக்கு மருகோனே... பாஞ்சஜன்யமாகிய சங்கத்தை ஏந்திய கரத்தை உடைய திருமாலின் மருமகனே!

குற்றமற்றவர் உளத்தில் உறைவோனே... குற்றமற்ற அடியார்களுடைய மனத்தில் குடிகொண்டிருப்பவனே!

குக்குடக் கொடிதரித்த பெருமாளே.... கோழிக்கொடியை ஏந்துகின்ற பெருமாளே!

சுருக்க உரை

வெற்றியையும் பராக்கிரமத்தையும் உடைய அரக்கர் குலம் தன் சுற்றத்தாரோடு மாளும்படியாகச் செய்தவனும் சங்கத்தை ஏந்தியவனுமான திருமால் மருகனே! குற்றமற்ற அடியார்களுடைய மனத்தில் உறைபவனே! சேவற்கொடியை ஏந்துகின்ற பெருமாளே!

தினந்தோறும் உன்னை நினைத்து மன ஒருமைப்பாட்டோடு மிக விரும்பித் தியானிக்கின்ற பெரியார்களுடைய துணையைப் பெறுவதாகிய தவ ஒழுக்கத்தை நான் கடைப்பிடிப்பதன் பயனாக, இலக்கிய இலக்கணங்களுக்கு இசையும்படியான உன்னுடைய நர்த்தன தரிசனத்தை அடியேனுக்குத் தந்தருள வேண்டும்.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/7/w600X390/1465.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/apr/23/பகுதி---2906002.html
2904109 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 804 ஹரி கிருஷ்ணன் Friday, April 20, 2018 04:41 PM +0530
‘உனது நடன தரிசனத்தைத் தந்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.  பொதுப் பாடல்கள் வரிசையைச் சேர்ந்த இப்பாடலல்லாமல் சிதம்பரம், திருத்தணிகை, திருச்செந்தூர், கொடுங்குன்றூர் ஆகிய தலங்களிலும் இறைவனுடைய திருநடனக்கோலத்தை தரிசிக்கவேண்டுமென்று குருநாதர் பாடியுள்ளார்.

அடிக்கு ஒற்றொழித்து 24 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும்; இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் அமைந்துள்ளன. 

தத்தனத் தனதனத்த      தனதான

 

நித்தமுற் றுனைநினைத்து                                              மிகநாடி

                         நிட்டைபெற் றியல்கருத்தர்                    துணையாக

நத்தியுத் தமதவத்தி                                                               னெறியாலே

                        லக்யலக் கணநிருத்த                                    மருள்வாயே

வெற்றிவிக் ரமவரக்கர்                                                       கிளைமாள

                        விட்டநத் துகரனுக்கு                                     மருகோனே

குற்றமற் றவருளத்தி                                                           லுறைவோனே

                        குக்குடக் கொடி தரித்த                                 பெருமாளே.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/apr/21/பகுதி---2904109.html
2903388 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 803 ஹரி கிருஷ்ணன் Friday, April 20, 2018 11:09 AM +0530

பதச் சேதம்

சொற் பொருள்

பசை அற்ற உடல் வற்ற வினை முற்றி நடை நெட்டி பறிய கை சொறிய பல் வெளியாகி

 

பசையற்ற: ஈரமற்ற; வினை முற்றி: வினை முதிர்ந்து; நடைநெட்டி: நடை தள்ளாளி; பறிய: நிலை பெயர;

படலைக்கு விழி கெட்ட குருடு உற்று மிக நெக்க பழம் உற்று நரை கொக்கின் நிறமாகி

 

படலை: கதவு—இங்கே கண்ணில் விழும் பூ;

விசை பெற்று வரு பித்தம் வளியை கண் நிலை கெட்டு மெலிவு உற்று விரல் பற்று தடியோடே

 

வளியை: வாயுவை;

வெளி நிற்கும் விதம் உற்ற இடர் பெற்ற ஜனனத்தை விடுவித்து உன் அருள் வைப்பது ஒரு நாளே

 

 

அசைவு அற்ற நிருதர்க்கு மடி உற்ற பிரியத்தில் அடல் வஜ்ர கரன் மற்றும் உள வானோர்

 

நிருதர்க்கு: அரக்கர்களுக்கு; வஜ்ரகரன்: வஜ்ராயுதத்தைக் கையில் ஏந்தியவன்—இந்திரன்;

அளவு அற்ற மலர் விட்டு நிலம் உற்று மறைய செய் அதுல சமர வெற்றி உடையோனே

 

அதுல: நிகரற்றவனே; சமர: போர்;

வசை அற்று முடிவு அற்று வளர் பற்றின் அளவு அற்ற வடிவு உற்ற முகில் கிட்ணன் மருகோனே

 

கிட்ணன்: கிருஷ்ணன்;

மதுர செம் மொழி செப்பி அருள் பெற்ற சிவ பத்தர் வளர் விர்த்த கிரி உற்ற பெருமாளே.

 

விர்த்தகிரி: விருத்தாசலம்;

 

பசை அற்ற உடல் வற்ற வினை முற்றி நடை நெட்டி பறியக் கை சொறியப் பல் வெளியாகி... உடலில் ஈரம் வற்றிக் காய்ந்து தோல் வற்றிப்போய்; வினையின் பயன் முற்றிப்போய்; நடையில் தள்ளாட்டம் வந்து; நிலை தடுமாறி; கையால் சொறிந்தபடி இருந்து; (ஈறுகள் தேய்வதால்) பல் வெளிப்பட்டு துருத்திக்கொள்ள,

படலைக்கு விழி கெட்ட குருடு உற்று மிக நெக்க பழம் உற்று நரை கொக்கின் நிறமாகி... கண்ணிலே பூ விழுந்து மறைப்பதனால் பார்வையை இழந்து; உடல் தளர்ந்து பழத்தைப் போல ஆகி; தலைமயில் நரைத்து கொக்கைப் போல வெண்ணிறம் உடையதாகி,

விசை பெற்று வரு பித்தம் வளியைக் கண் நிலை கெட்டு மெலிவு உற்று விரல் பற்று தடியோடே... வேகத்தோடு எழுகின்ற பித்தத்தாலும் வாயுவாலும் கண் நிலைதடுமாறி, உடல் இளைத்து, விரல்களால் பற்றிக்கொள்ளப்பட்ட தடியோடு,

வெளி நிற்கும் விதம் உற்ற இடர் பெற்ற ஜனனத்தை விடுவித்து உன் அருள் வைப்பது ஒரு நாளே... வெளியிலே நிற்கின்ற தன்மையை உடையதும் துன்பத்தையே கொண்டதுமான பிறப்பிலிருந்து விடுவித்து உன் அருளைத் தருகின்ற நாள் ஒன்று உண்டாகுமா? (உன் அருளை விரைவிலேயே தந்தருள வேண்டும்.)

அசைவு அற்ற நிருதர்க்கு மடி உற்ற பிரியத்தில் அடல் வஜ்ர கரன் மற்றும் உள வானோர்... கலக்கம் இல்லாத அரக்கர்கள் இறந்துபட, அதனால் மகிழ்ச்சியடையந்தவனும் வஜ்ராயுதத்தை ஏந்தியவனுமான இந்திரனும் மற்ற தேவர்களும்,

அளவு அற்ற மலர் விட்டு நிலம் உற்று மறையச் செய் அதுலச் சமர வெற்றி உடையோனே... அளவில்லாமல் பூக்களைச் சொரிந்து பூமி முழுவதையும் மறையும்படிச் செய்த நிகரற்றவனே! போரில் வெற்றியையே அடைபவனே!

வசை அற்று முடிவு அற்று வளர் பற்றின் அளவு அற்ற வடிவு உற்ற முகில் கிட்ணன் மருகோனே...  வசைக்கு இடமில்லாமலும் எல்லையில்லாமலும் (பாண்டவர்களின்மீது கொண்டிருந்த) பற்றின் காரணமாக கணக்கற்ற வடிவங்களைக்* கொண்ட முகில் வண்ணனான கண்ணனின் மருமகனே!

(வில்லிபாரதத்தின்படி உத்தியோக பர்வத்தில் சகதேவனுக்கும்; வியாச, வில்லி பாரதங்களின்படி போரின்போது அர்ஜுனனுக்கும் விசுவரூப தரிசனம் கொடுத்தது இங்கே சொல்லப்படுகிறது.)

மதுரச் செம் மொழி செப்பி அருள் பெற்ற சிவ பத்தர் வளர் விர்த்த கிரி உற்ற பெருமாளே.... மதுரமும் செம்மையும் உடைய மொழிகளைப் பேசுகின்றவர்களும்; இறையருள் பெற்றவர்களுமான சிவபக்தர்கள் நிரம்பியிருக்கின்ற விருத்தாசலத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

எதற்கும் கலங்காத அரக்கர்கள் மடிந்ததால் மகிழ்வுற்ற வஜ்ராயுதனாகிய இந்திரனும் பிற தேவர்களும் மிகுதியான மலர்மாரியைச் சொரிந்ததனால் பூமியே மறைந்துபோகும்படிச் செய்தவனாகிய நிகரற்றவனே! போரில் வெற்றியையே பெறுபவனே! வசையற்றதும் அளவற்றதுமான அன்பைப் பாண்டவர்கள்பால் வைத்திருந்தவனும் (சகதேவனுக்கும் அர்ஜுனனுக்கும்) விசுவரூப தரிசனத்தைக் காட்டியவனும் முகிலின் வண்ணத்தைக் கொண்டவனுமான கிருஷ்ணனின் மருகனே!  மதுரமும் செம்மையும் நிறைந்த மொழிகளைப் பேசி உனது திருவருளுக்கு ஆட்பட்ட சிவபக்தர்கள் நிறைந்திருக்கின்ற விருத்தாசலத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

ஈரமில்லாமல் நைந்து வற்றிப் போயிருக்கின்ற இந்த உடலில் வினையும் முதிர்ச்சியடைய; நடை தடுமாற; நிலைபெயர; கை சொறிந்தவண்ணமாகவே இருக்க; பற்கள் வெளியே நீட்டிக்கொள்ள; கண்ணிலே பூ விழுந்து பார்வையை மறைக்க; உடல் நெகிழ்ந்து பழத்தைப்போல ஆக; மயிர் நரைத்து கொக்கின் நிறத்தைக் கொள்ள; வேகத்துடன் எழுகின்ற வாதத்தாலும் பித்தத்தாலும் நிலைதடுமாற; கைவிரல்கள் ஊன்றுகோலைப் பற்றியிருக்க; ஆதரவின்றி வெளியே நிற்கின்ற துன்பம் மிகுந்தததான இந்தப் பிறவியினின்றும் என்னை விடுவித்து உன்னுடைய திருவருளை அடியேனுக்கு விரைவில் தந்தருள வேண்டும்.

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/apr/20/பகுதி---803-2903388.html
2902715 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 802 ஹரி கிருஷ்ணன் Thursday, April 19, 2018 10:49 AM +0530  

உன்னுடைய அருளைத் தந்தருள வேண்டும் என்று கோரும் இப்பாடல் விருத்தாசலத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று முதல் ஆறு வரையிலான எல்லாச் சீர்களிலும் நான்கு நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் பயில்கின்றன.

தனதத்த தனதத்த தனதத்த தனதத்த

                தனதத்த தனதத்த    தனதான

 
பசையற்ற வுடல்வற்ற வினைமுற்றி நடைநெட்டி

                        பறியக்கை சொறியப்பல்        வெளியாகிப்

      படலைக்கு விழிகெட்ட குருடுற்று மிகநெக்க

                        பழமுற்று நரைகொக்கி        னிறமாகி

விசைபெற்று வருபித்தம் வளியைக்க ணிலைகெட்டு

                        மெலிவுற்று விரல்பற்று        தடியோடே

      வெளிநிற்கும் விதமுற்ற இடர்பெற்ற ஜனனத்தை

                        விடுவித்து னருள்வைப்ப        தொருநாளே

அசைவற்ற நிருதர்க்கு மடிவுற்ற பிரியத்தி

                        னடல்வஜ்ர கரன்மற்று        முளவானோர்

      அளவற்ற மலர்விட்டு நிலமுற்று மறையச்செய்

                        அதுலச்ச மரவெற்றி            யுடையோனே

வசையற்று முடிவற்று வளர்பற்றி னளவற்ற

                        வடிவுற்ற முகில்கிட்ணன்        மருகோனே

      மதுரச்செ மொழிசெப்பி யருள்பெற்ற சிவபத்தர்

                        வளர்விர்த்த கிரியுற்ற        பெருமாளே.

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/apr/19/திருப்புகழ்---2902715.html
2902669 ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ் பகுதி - 801 ஹரி கிருஷ்ணன் Wednesday, April 18, 2018 12:27 PM +0530  

பதச் சேதம்

சொற் பொருள்

தீ ஊதை தாத்ரி பானீயம் ஏற்ற  வான் ஈதியால் திகழும் ஆசை

 

தீ: நெருப்பு; ஊதை: காற்று; தாத்ரி: மண்; பானீயம்: நீர்; வான்: ஆகாயம்—பஞ்ச பூதங்கள்; ஈதியால்: ஈந்தததால், சேர்ந்து படைத்ததால்;

சேறு ஊறு தோல் பை யானாக நோக்கு(ம்)  மா மாயை தீர்க்க அறியாத

 

தோற்பை: உடல்;

பேய் பூதம் மூத்த பாறு ஓரி காக்கை  பீறா இழா தி(ன்)னு(ம்) உடல் பேணி

 

பாறு: பருந்து; ஓரி: நரி; பீறா: பீறி, கிழித்து; இழா: இழுத்து; தின்: தின்கின்ற; உடல் பேணி: உடலைப் போற்றி;

பேயோன் நடாத்து கோமாளி வாழ்க்கை  போம் ஆறு பேர்த்து உன் அடி தாராய்

 

நடாத்து: நடத்துகின்ற; போமாறு: போகின்ற வண்ணம், தொலையுமாறு; பேர்த்து: விலக்கி;

வேய் ஊரு சீர் கை வேல் வேடர் காட்டில் ஏய்வாளை வேட்க உரு மாறி

 

வேய்: மூங்கில்--புல்லாங்குழல்; ஊரு: ஊர்கின்ற, தடவுகின்ற—இங்கே ஊதுகின்ற;

மீளாது வேட்கை மீது ஊர வாய்த்த  வேலோடு வேய்த்த இளையோனே

 

வேய்த்த: வேவுகாரர்களைப் போல மறைந்து நின்ற;

மாயூர ஏற்றின் மீதே புகா பொன் மா மேரு வேர் பறிய மோதி

 

மாயூர: மயூர, மயில்; மாயூர ஏற்றின்: ஆண்மயிலின்; மாமேரு: (இந்த இடத்திலே) கிரெளஞ்ச மலை;

மாறு ஆன மாக்கள் நீறாக ஓட்டி  வான் நாடு காத்த பெருமாளே.

 

மாறு ஆன: பகைவர்களான (அரக்கர்களை);

தீ ஊதை தாத்ரி பானீயம் ஏற்ற வான் ஈதியால் திகழும்... தீ, காற்று, மண், நீர், ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களால் ஆனதும்,

ஆசைச் சேறு ஊறு தோல் பை யானாக நோக்கு(ம்) மா மாயை தீர்க்க அறியாதே.... ஆசையாகிய சேறு ஊறியுள்ளதும் தோலால் ஆனதுமான இந்த உடலை ‘நான்’ என்று நினைத்துக்கொள்கின்ற பெரிய மாயையை ஒழிக்கும் விதத்தை அறியாமல்,

பேய் பூதம் மூத்த பாறு ஓரி காக்கை பீறா இழாத் தி(ன்)னு(ம்) உடல் பேணி... பேய்களும் பூதங்களும்ம் வயதான பருந்துகளும்ம் நரிகளும்ம் காக்கைகளும் பிய்த்து இழுத்துத் தின்னப்போகின்ற உடலைப் போற்றிப் பாதுகாத்து,

பேயோன் நடாத்து கோமாளி வாழ்க்கை போம் ஆறு பேர்த்து உன் அடி தாராய்... பேயைப் போன்றவனாகிய நான் நடத்துகின்ற கோமாளித்தனமான வாழ்க்கையைத் தொலைத்து விலக்கவல்ல உன்னுடைய திருப்பாதங்களைத் தந்தருள வேண்டும்.

வேய் ஊரு சீர்க் கை வேல் வேடர் காட்டில் ஏய்வாளை வேட்க உரு மாறி... புல்லாங்குழலைத் தடவுகின்ற (ஊதுகின்ற) சீரான கையிலே வேலை ஏந்துகின்ற வேடர்கள் (வாழ்கின்ற) (வள்ளிமலைக்) காட்டிலே இருந்தவளான வள்ளியை மணக்க விரும்பி உருவத்தை மாற்றிக்கொண்டு,

மீளாது வேட்கை மீது ஊர வாய்த்த வேலோடு வேய்த்த இளையோனே... அடங்காத விருப்பம் பொங்கியெழ, கையில் பிடித்த வேலோடு, வேவுகாரர்களைப் போல மறைவாகச் சென்ற இளையவனே!

மாயூர ஏற்றின் மீதே புகாப் பொன் மா மேரு வேர்ப் பறிய மோதி... நிகரற்ற மயிலின்மீது ஏறிக்கொண்டு, பொன்னைப்போல மின்னிய கிரெளஞ்ச மலையை வேரோடு பறிக்கப்படும்படியாகத் தாக்கி,

மாறு ஆன மாக்கள் நீறாக ஓட்டி வான் நாடு காத்த பெருமாளே.... பகைகொண்டு எதிர்த்த அரக்கர்களைச் சுட்டுப் பொசுக்கி அழித்து, தேவர்களுடைய அமராவதிப் பட்டணத்தைக் காத்த பெருமாளே!

சுருக்க உரை

புல்லாங்குழலை ஊதுகின்ற சீரான கைகளில் வேலை ஏந்துகின்ற வேடர்கள் வாழும் வள்ளிமலைக் காட்டில் இருந்த வள்ளியைத் திருமணம் செய்துகொள்வதற்காக உருவத்தை மாற்றிக்கொண்டு; ஆவல் மீதூர வேலை எடுத்துக்கொண்டு ஒற்றர்களைப் போல மாறுவேடத்தில் சென்ற இளையவனே! மயில் வாகனத்தில் ஏறிக்கொண்டு பொன்போன்று விளங்கிய கிரெளஞ்ச பர்வதத்தை வேரோடு பிடுங்கி, பகைகொண்டு எழுந்த அரக்கர்களைப் பொசுக்கி, தேவலோகத்தைக் காத்த பெருமாளே!

தீ, காற்று, மண், நீர், ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களால் ஆனதும்; ஆசை என்னும் சேற்றில் ஊறியதும்; தோலாலே ஆன பையைப் போன்றதுமான இந்த உடலையே ‘நான்’ என்று கருதிக்கொள்கின்ற மாயையை ஒழிக்கும் விதத்தை அறியாமல்,

பேய்களும் பூதங்களும் பருந்துகளும் நரிகளும் காக்கைகளும் பிய்த்து இழுத்துத் தின்னப்போகின்ற இந்த உடலைப் போற்றிப் பாதுகாத்தபடி, பேயைப் போன்ற அடியேன் நடத்துகின்ற இந்தக் கோமாளித்தனமான வாழ்க்கை போய்த் தொலையுமாறு (இனி பிறவிகள் நேராதவாறு) உன்னுடைய திருவடிகளைத் தந்தருள வேண்டும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/25/w600X390/4565.jpg http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/apr/18/பகுதி---2902669.html