Dinamani - தினம் ஒரு தேவாரம் - http://www.dinamani.com/specials/Thinam-oru-thavaram/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2827038 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 82. காலை எழுந்து கடிமலர் - பாடல் 5 என். வெங்கடேஸ்வரன் Saturday, December 16, 2017 12:00 AM +0530  

பாடல் 5:

கூற்றைக் கடந்ததும் கோள் அரவு ஆர்த்ததும்
                                                                  கோளுழுவை
நீற்றில் துதைந்து திரியும் பரிசதும் நாம் அறியோம்
ஆற்றில் கிடந்து அங்கு அலைப்ப அலைப்புண்டு
                                                                  அசைந்தது ஒக்கும் 
சோற்றுத்துறை உறைவார் சடை மேலதொர் தூமதியே


விளக்கம்:


உழுவை=புலி: ஆற்றில்=கங்கையில்: கோளரவு=கொலைத் தொழில் பூண்ட பாம்பு: கூற்றுவன் எதிர்கொண்ட போது அவனைக் கடந்து, அவனது வலிமையை வென்றவர் எவரும் இல்லை. சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரினைக் கவரும் பொருட்டு கூற்றுவன் வந்த போது, அவனைக் காலால் உதைத்து, அவனை கீழே வீழச் செய்தவர் சியபெருமான் என்பதை உணர்த்தும் வகையில், கூற்றினை கடந்தவர் என்று இங்கே குறிப்பிடுகின்றார்.    

பொழிப்புரை:

சிவபெருமான் கூற்றுவனை உதைத்து அவனது வலிமையைக் கடந்ததையும், கொலைத் தொழில் புரியும் பாம்பினை அடக்கித் தனது இடுப்பினில் சுற்றிக் கொண்டதையும், கொலைத் தொழில் புரியும் புலியினை அடக்கி அதன் தோலை உரித்ததையும், அனைத்து உடல்களும் அழிந்த பின்னர், எரித்த உடல்களின் சாம்பலை உடலில் பூசி, தான் ஒருவனே உலகில் நிலையானவன் என்பதை உணர்த்தியதையும் நாம் அறியமாட்டோம். அவரது வலிமைக்கும் திறமைக்கும் முன்னர், மேற்குறித்த வீரச் செயல்கள் மிகவும் சாதாரணம் என்பதால், இவற்றை பெரிதாகவும் கருத மாட்டோம். சோற்றுத்துறையில் உறையும் சிவபெருமானின் சடையில் அடைக்கப்பட்டுள்ள கங்கை ஆற்றின் கரையில் மோதி, அந்த அலைகளால் அலைப்புண்டு, மெதுவாக சந்திரன் அசைவது மிகவும் அழகான காட்சியாக உள்ளது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/dec/16/82-காலை-எழுந்து-கடிமலர்---பாடல்-5-2827038.html
2826983 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 82. காலை எழுந்து கடிமலர் - பாடல் 4 என். வெங்கடேஸ்வரன் Friday, December 15, 2017 10:33 AM +0530  

பாடல் 4:

ஆய்ந்த கை வாள் அரவத்தொடு மால்விடை
                                                               ஏறி எங்கும்
பேர்ந்த கை மான் இடம் ஆடுவர் பின்னு சடை
                                                              இடையே
சேர்ந்த கைம் மாமலர் துன்னிய சோற்றுத்துறை
                                                             உறைவார்   
ஏந்து கைச் சூலம் மழு எம் பிரானுக்கு அழகியதே


விளக்கம்:


மால்விடை=பெருமை வாய்ந்த இடபம்: வாளரவம்=மினுக்கும் ஒளியை உடைய கொடிய அரவம்: ஆய்ந்த=ஆராய்ந்த: பேர்ந்த கை=வீசி நடமாடும் கை: கைம்மலர்=அடியார்கள் பூசையின் பொது தங்கள் கைகளால் தூவிய மலர்கள்: 

பொழிப்புரை:

கையில் ஆராய்ந்து தேர்ந்தெடுத்த, மினுக்கும் கோடுகளை உடையதும் கொடியதும் ஆகிய பாம்பினை ஏந்திக் கொண்டு, பெருமைக்குரிய இடபத்தின் மீது ஏறி எங்கும் செல்பவர் சிவபெருமான். அவர் கைகளை வீசிக்கொண்டு நடமாடுகையில், மற்றொரு கையில் மான் கன்றினையும் ஏந்தி காணப்படுகின்றார். அடியார்கள் வழிபாட்டின் போது தங்கள் கைகளால் தூவிய மலர்கள் சிவபெருமானது சடையில் நிறைந்து காணப்படுகின்றது. இவ்வாறு சோற்றுத்துறை தலத்தில் உறையும் சிவபெருமானது கைகளில் சூலம் மற்றும் மழு மிகுந்த அழகுடன் காணப்படுகின்றது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/dec/15/82-காலை-எழுந்து-கடிமலர்---பாடல்-4-2826983.html
2826406 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 82. காலை எழுந்து கடிமலர் - பாடல்  3 என். வெங்கடேஸ்வரன் DIN Thursday, December 14, 2017 09:29 AM +0530
பாடல் 3:


அளக்கும் நெறியினன் அன்பர்கள் தம்
                          மனத்து ஆய்ந்து கொள்வான்
விளக்கும் அடியவர் மேல் வினை தீர்த்திடும்
                         விண்ணவர்கோன்
துளக்கும் குழை அணி சோற்றுத்துறை
                         உறைவார் சடை மேல்  
திளைக்கும் மதியம் அன்றோ எம் பிரானுக்கு
                         அழகியதே


விளக்கம்:


அளக்கும் நெறியினன் என்று அனைவரின் உள்ளத்து தன்மையையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவன் சிவபெருமான் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். மேலும் தனது அடியாரது மனத்தின் அன்பின் திறத்தை ஆராய்ந்து கொள்ளும் தன்மை படைத்தவன் என்றும் இங்கே கூறப்படுகின்றது. இதே கருத்து அப்பர் பிரான் இன்னம்பர் தலத்து குறுந்தொகை பாடலிலும் (5.21.6) காணப்படுகின்றது. இந்த பாடலில் அப்பர் பிரான், அடியவர் அல்லாதார் மனத்தினில் பெருமான், தன்னை வேறுபடுத்தித் தோன்றுவார் என்றும் அடியார்கள் மனத்தினில், அவர்களது அன்புக்குத் தகுந்தபடி அவர்களுடன் கலப்பார் என்றும் கூறுகின்றார். மேலும் சிவபிரான், தனது மனத்தினை உருகச் செய்து தன்னை குறிக்கொண்டுள்ளார் என்றும் அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். குளக்கும்=தன்னோடு தொடர்பு கொள்ளும்: இளக்கும்=இளகச் செய்யும்  

    விளக்கும் வேறுபடப் பிறர் உள்ளத்தில்
    அளக்கும் தன்னடியார் மனத்து அன்பினைக்
    குளக்கும் என்னைக் குறிக்கொள வேண்டியே
    இளக்கும் என் மனத்து இன்னம்பர் ஈசனே

தனக்கு அன்பராய் இருப்பவரை அறிந்து கொள்வார் சிவபெருமான் என்று பராய்த்துறை பதிகத்தில் கூறும் (5.30.4) அப்பர் பிரான், அன்பராய் அல்லாதாரையும் அறிந்து கொள்ளும் வல்லமை படைத்தவர் சிவபெருமான் என்று நமக்கு உணர்த்துகின்றார். இந்த பதிகத்தின் பாடல்கள் சிவபெருமான் பிச்சைப் பெருமானாய் தாருகவனம் சென்றதை குறிப்பிடும் பாடல்கள் ஆகும். மோழைமை=அறியாமையால் சொல்லப்படும் சொற்கள். தன்னைப் பின்தொடர்ந்து வந்த தாருகவனத்து முனிவர்களின் மனைவியர் முன்னே, அறியாமையால் மற்றவர்கள் பேசும் சில வார்த்தைகளை சிவபெருமான் பேசியதாக அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். பிச்சைப் பெருமான் வேடமும், அவர் பேசிய பேச்சுக்களும், தாருகவனத்து முனிவர்கள் தங்களது மனைவியரின் கற்புத் திறன் பற்றி கொண்டிருந்த கர்வத்தை அடக்குவதற்காக செய்த காரியங்கள் என்று புராணம் கூறுகின்றது.

    முன்பெலாம் சில மோழைமை பேசுவர்
    என்பெலாம் பல பூண்டு அங்கு உழி தர்வர்  
    தென் பராய்த்துறை மேவிய செல்வனார்
    அன்பராய் இருப்பாரை அறிவரே

இந்த பாடலில் அப்பர் பிரான், அன்பர்கள் தம் மனத்து ஆய்ந்து கொள்வான் விளக்கும் என்று சிவபெருமான், அடியார்களின் பெருமையை உலகறியச் செய்யும் தன்மையினை போற்றிப் பாடுகின்றார். அடியார்களின் உள்ளத்து பக்குவத்தை இறைவன் நன்றாக அறிந்திருந்தாலும், உலகவர் அறியும் பொருட்டு அடியார்களின் பெருமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் நிகழ்விப்பதை நாம் பல இடங்களில் பெரிய புராணத்தில் காண்கின்றோம். மேல்வினை=எதிர்காலத்தில் உயிரினை பற்ற இருக்கும் வினைகள். அடியார்களின் மேல் வினைகளைத் தீர்க்கும் சிவபெருமான் என்று இங்கே கூறுகின்றார். சிவபெருமானால்  அவரது அடிமையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அடியார்கள், தற்போதம் நீங்கிய நிலையில் உள்ளவர்கள் என்பதால் (தான், தனது என்ற நிலையைத் தாண்டி, அனைத்துச் செயல்களும் சிவத்தின் செயல்களாக கருதும் தன்மையில் இருத்தல்), பழவினைகளால் அவர்கள் எதிர்கொள்ளும் இன்ப துன்பங்களை ஒன்றாக கருதுவார்கள் என்பதால், அவர்களுக்கு மேலும் வினைகள் சேராது. இந்த நிலை தான் இங்கே குறிப்பிடப்படுகின்றது.

அளக்கும் நெறியினன் என்று சிவபெருமான் அனைவருக்கும் படியளிக்கும் கருணைச் செயல் குறிப்பிடப்படுகின்றது என்றும் பொருள் கொள்ளலாம்.

பொழிப்புரை:

எல்லோருடைய உள்ளக் கருத்தினையும் பண்பினையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்த சிவபெருமான், அடியார்களின் மனத்தினை ஆராய்ந்து, தக்கவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைத் தனது அடிமையாக ஏற்றுக்கொண்டு, அவர்களின் பெருமையை உலகம் அறியுமாறு செய்பவர். அத்தகைய அடியார்களுக்கு மேலும் வினைகள் பெருகா வண்ணம் அவர்களது உள்ளத்தை பதப்படுத்தும் சிவபெருமான், தேவர்களின் தலைவராய் விளங்குகின்றார். ஒளி வீசும் காதணிகளை அணிந்து காட்சி அளிக்கும் சோற்றுத்துறைப் பெருமானின் நீண்ட சடையின் மேல், மகிழ்ச்சியுடன் இருக்கும் பிறைச் சந்திரன் மேலும் அழகுடன் காணப்படுகின்றது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/dec/14/82-காலை-எழுந்து-கடிமலர்---பாடல்--3-2826406.html
2826405 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 82. காலை எழுந்து கடிமலர் - பாடல்  2 என். வெங்கடேஸ்வரன் Wednesday, December 13, 2017 12:00 AM +0530  

பாடல் 2: 

வண்டணை கொன்றையும் வன்னியும்
                                          மத்தமும் வாளரவும்
கொண்டு அணைந்தேறு முடி உடையான்
                                         குரை சேர் கழற்கே
தொண்டு அணைந்து ஆடிய சோற்றுத்துறை
                                        உறைவார் சடை மேல்  
வெண்டலை மாலை அன்றோ எம் பிரானுக்கு
                                       அழகியதே


விளக்கம்:


தொண்டு=தொண்டர்கள், அடியார்கள்: குரைசேர் கழல்=சிலம்புகள் அணிந்ததால் ஒலி எழுப்பும் பாதங்கள்.

பொழிப்புரை: 

புதுமலர்களாக காணப்படுவதால் வண்டுகள் தங்கும் தன்மை படைத்த கொன்றை மாலையினையும், வன்னி, ஊமத்தை மலர்களோடு, ஒளி வீசும் பாம்பினையும் தனது சடையில் அணிந்து காணப்படுபவர் சிவபெருமான் ஆவார். சிலம்புகள் ஒலியெழுப்பும் அவரது திருவடிகளை அடியவர்கள் வணங்குகின்றார்கள். அத்தகைய பெருமை வாய்ந்த சிவபெருமான் சோற்றுத்துறையில் உறைகின்றார். அவரது நீண்டு அழகாக காணப்படும் சடையில் உள்ள வெண்தலை மாலை சிவபெருமானுக்கு மேலும் அழகினைச் சேர்க்கின்றது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/dec/13/82-காலை-எழுந்து-கடிமலர்---பாடல்--2-2826405.html
2825065 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 82. காலை எழுந்து கடிமலர் - பாடல் 1 என். வெங்கடேஸ்வரன் Tuesday, December 12, 2017 10:19 AM +0530  

முன்னுரை:

திங்களூர் சென்று அப்பூதி அடிகளாரை சந்தித்து, பின்னர் விடம் தீண்டிய அவரது மகனை உயிர்ப்பித்த பின்னர், அப்பர் பிரான் திருப்பழனம் வந்தடைந்தார். பழன நகரில் உறையும் சிவபெருமானை, சொன்மாலை பயில்கின்ற என்று தொடங்கும் பதிகம் பாடி பணிந்த பின்னர், சோற்றுத்துறை அடைகின்றார். சோற்றுத்துறையில் தங்கியவாறே, திருப்பணிகள் செய்து பல பதிகங்கள் பாடினார். பொய்விரா மேனி தன்னை (4.41) என்று தொடங்கும் நேரிசைப்பதிகம், காலை எழுந்து என்று தொடங்கும் விருத்தப் பதிகம் (4.85), கொல்லை ஏற்றினர் என்று தொடங்கும் குறுந்தொகைப் பதிகம் (5.33), மற்றும் வானவர் தானவர் என்று தொடங்கும் திருத் தாண்டகப் பதிகம் (6.44) ஆகியவை நமக்கு கிடைத்துள்ள பதிகங்கள் ஆகும். இதனைக் குறிப்பிடும் பெரிய புராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்தானங்கள் என்ற வடமொழிச் சொல் தானங்கள் என்று இங்கே மாற்றப்பட்டுள்ளது. தானங்கள் என்றால் இறைவன் உறையும் இடங்கள் என்று பொருள். தழும்பு என்றால் மாறாத வடு என்று பொருள். இறைவன் பால் மாறாமல் நிலையாக இருக்கும் அன்பினோடு, அவனது திருத்தலங்கள் பலவும் அப்பர் பிரான் சென்றதாக சேக்கிழார் கூறுகின்றார். 

    எழும் பணியும் இளம் பிறையும்
                 அணிந்தவரை எம்மருங்கும்
    தொழும் பணி மேற்கொண்டு அருளித்
                திருச் சோற்றுத் துறை முதலாத்
    தழும்புறு கேண்மையில் நண்ணித்
                தானங்கள் பல பாடிச் 
    செழும் பழனத்து இறை கோயில்
                திருத்தொண்டு செய்திருந்தார்


பாடல் 1:


    காலை எழுந்து கடிமலர் தூயன
                              தாம் கொணர்ந்து
    மேலை அமரர் விரும்பும் இடம்
                             விரையால் மலிந்த
    சோலை மணம் கமழும் சோற்றுத்துறை
                             உறைவார் சடை மேல்
    மாலை மதியம் அன்றோ எம் பிரானுக்கு
                             அழகியதே


விளக்கம்:


தூயன=முறைப்படி தூய்மையாக உள்ள மலர்கள். இந்த பாடலில் அப்பர் பிரான் மலர்களைத் தேர்ந்தெடுத்து இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று கூறுகின்றார். அதிகாலையில் எழுந்தால் தானே, வண்டுகள் சுவைக்கும் முன்னர் நாம் மலர்களைப் பறிக்க முடியும். எனவே தான் காலை எழுந்து தூய்மையானதும் நறுமணங்கள் வீசுவதுமாகிய மலர்களை பறிக்க வேண்டும் என்று கூறும் அப்பர் பிரான் மலர்களின் தூய்மையினை தில்லைப் பதிகத்தின் ஒரு பாடலில் (5.1.2) விளக்குகின்றார். முழுவதும் மலராத மொட்டுக்களை நீக்க வேண்டும் என்றும், வாடிய மலர்களை ஆராய்ந்து கண்டுகொண்டு நீக்கவேண்டும் என்று இங்கே கூறுகின்றார். சுரும்பு என்றால் வண்டு என்று பொருள். வண்டுகள் சுவைக்கும் முன்னர் மலர்களை பறிக்க வேண்டும் என்றும் இங்கே கூறப்படுகின்றது.

    அரும்பு அற்றப்பட ஆய்மலர் கொண்டு நீர்
    சுரும்பு அற்றப்பட தூவித் தொழுமினோ
    கரும்பு அற்றச் சிலை காமனைக் காய்ந்தவன்
    பெரும்பற்றப் புலியூர் எம் பிரானையே

மலர்களைப் பறித்து வழிபடுவதில், மற்றவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர், தில்லையில் வாழுந்து வந்த  முனிவர் வியாக்ரபாதர். வண்டுகள் பூக்களில் உள்ள தேனைச் சுவைப்பதால், மலர்களின் தூய்மை குறைகின்றது என்று எண்ணிய முனிவர் அத்தகைய பூக்கள் இறைவனின் வழிபாட்டுக்கு உகந்தது அல்ல என்ற முடிவுக்கு வந்தார். அதனால் வண்டு சுவைக்கும் முன்னரே பூக்களைப் பறிக்க ஆசைப்பட்டார். அதற்கு வசதியாக விடியற்காலை இருட்டினில் தனக்கு கண்கள் நன்றாக தெரிய வேண்டும் என்றும், தான் மரத்தினில் ஏறும்போது பனியினால் நனைந்து இருக்கும் மரங்களின் தண்டுகளும் கிளைகளும், வழுக்காமல் இருக்க வேண்டும் என்றும் விரும்பிய முனிவர், தனக்கு புலிக்கு உள்ளது போன்ற கண்களும் கால்களும் வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினார். இறைவன் அருளால் அவரது ஆசை நிறைவேறியது. அன்று முதல் அவர் வியாக்ரபாதர் என்று அழைக்கப்பட்டார். வியாக்ரம் என்றால் வடமொழியில் புலி என்று பொருள். பெரும்பற்று கொண்டு புலிக்கால் முனிவர் இறைவனை வழிபட்டமையால், இந்த தலத்திற்கு பெரும்பற்றப் புலியூர் என்ற பெயர் வந்தது. இறைவனை வழிபட உதவும் மலர்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்று கூறும் அப்பர் பிரானுக்கு, வியாக்ரபாதர் நினவு வந்தது இயற்கையே. அன்னம் பாலிக்கும் என்று தொடங்கும் இந்த பதிகத்தின் மற்ற பாடல்களில் தில்லை என்றும், அம்பலம் என்றும், தில்லைச் சிற்றம்பலம் என்றும் சிற்றம்பலம் என்று குறிப்பிடும் அப்பர் பிரான், இந்த பாடலில் மட்டும் வியாக்ரபாதர் செய்த வழிபாட்டினை நினைவூட்டும் வகையில் பெரும்பற்றப் புலியூர் என்ற பெயரினை பயன்படுத்துகின்றார்.  

மேலும் நாண்மலர் என்று, அன்று பூத்த மலர்களை அப்பர் பிரான் குறிப்பிடுவதை கீழ்க்கண்ட பாடலில் நாம் காணலாம். நாண்மலர் என்றால் அன்று பூத்த மலர்கள் என்று பொருள். நமது கை நகங்கள் தேயும் அளவுக்கு நாம் அன்று பூத்த மலர்களை பறித்து கண்களிலிருந்து கண்ணீர் ஆறாக மல்கிப் பெருக, இறைவனைத் தொழுதால், இறைவன் நமது உள்ளத்தில் இருப்பார் என்று கூறும் திருவையாறு பதிகத்தின் (4.40) ஒரு பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது  

    சகம் அலாது அடிமை இல்லை தான்
                  அலாது துணையும் இல்லை
    நகம் எலாம் தேயக் கையால் நாண்மலர்
                 தொழுது தூவி
    முகம் எல்லாம் கண்ணீர் மல்க முன் பணிந்து
                 ஏத்தும் தொண்டர்
    அகம் அலால் கோயில் இல்லை அய்யன்
                 ஐயாறனார்க்கே

 
பொழிப்புரை:

காலையில் எழுந்து, நறுமணம் வீசும் மலர்களை ஆராய்ந்து கொணர்ந்து, சிவபெருமானை வானத்தில் உள்ள தேவர்கள் வணங்கும் தலம் சோற்றுத்துறை ஆகும். இந்த தலத்தில் நறுமணம் உடைய மலர்கள் நிறைந்த சோலைகள் உள்ளன. இங்கே விருப்பமுடன் உறையும் சிவபிரான் நீண்ட சடையின் மீது காணப்படும், மாலை நேரத்தில் ஒளி மிகுந்து உலவும் பிறைச் சந்திரன் மிகவும் அழகான அணிகலனாக அமைந்துள்ளது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/dec/12/82-காலை-எழுந்து-கடிமலர்---பாடல்-1-2825065.html
2824379 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 81. சொன்மாலை பயில்கின்ற - பாடல் 10 என். வெங்கடேஸ்வரன் DIN Monday, December 11, 2017 10:29 AM +0530  

பாடல் 10:

வஞ்சித்து என் வளை கவர்ந்தான் வாரானே
                                                               ஆயிடினும்
பஞ்சிக் கால் சிறகு அன்னம் பரந்து ஆர்க்கும்
                                                               பழனத்தான்
அஞ்சிப் போய்க் கலி மெலிய அழல் ஓம்பும் அப்பூதி
குஞ்சிப் பூவாய் நின்ற சேவடியாய் கோடு இயையே

 
விளக்கம்:

இராவணனின் கயிலை நிகழ்ச்சியையும், சிவபிரான் அவனுக்கு அருள் புரிந்ததையும், பதிகத்தின் கடைப்பாடலில் குறிப்படும் பழக்கத்திலிருந்து அப்பர் பிரான் இங்கே வழுவுகின்றார். அப்பூதி அடிகளுக்கு சிவபிரான் கருணை புரிந்ததை நோக்கில், இராவணன் பெற்ற பேறு சிறப்புடையது அல்ல என்ற எண்ணத்தில், அப்பூதி அடிகளை குறிப்பிடும் அப்பர் பிரான், இராவணனை இங்கே குறிப்பிடவில்லை போலும்.

வேள்விகள் செய்வதன் மூலம் கலி புருடனின் தாக்கத்தை குறைக்கலாம் என்ற நம்பிக்கை அப்பர் காலத்திலும் இருந்து வந்தது இந்த பாடலின் மூலம் தெரிகின்றது. ஞான சம்பந்தப் பெருமானும், தனது தில்லைத் திருப்பதிகத்தின் (பதிக எண்:1.80) முதல் பாடலில், வேள்விகள் வளர்த்து கலியின் செய்கையை வென்ற மறையவர்கள் என்று தில்லையில் வாழ்ந்த அந்தணர்களை குறிப்பிடுகின்றார். வேதங்களைக் கற்று, கற்ற கல்விக்குத் தக்கவாறு வேள்விகள் வளர்த்த அந்தணர்கள் செய்கையால் கலியை வரவிடாமல் வென்றார்கள் என்று இங்கே குறிப்பிடுகின்றார்.

    கற்றாங்கு எரி ஓம்பி கலியை வாரமே 
    செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
    முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே
    பற்றா நின்றாரைப் பற்றா பாவமே 

கலி கடிந்த கையார் என்றும்(3.43.5), கலியை வென்ற வேதியர்கள் என்றும்(3.119.7), கலி கடி அந்தணர் என்றும்(7.16.4), சிந்தையினார் கலி காக்கும் என்றும்(7.88.2), அந்தணர்கள் தாங்கள் வளர்த்த வேள்விகள் மூலம் கலியின் கொடுமையை அடக்கிய விதம் பல தேவாரப் பதிகங்களில் கூறப்பட்டுள்ளது.   

கோடு இயைதல் என்பது, தலைவனை விட்டு பிரிந்திருக்கும் தலைவி, தலைவனுடன் கூடுவது எந்நாளோ என்ற கவலையில், செய்யும் ஒரு செயல். தனது கண்களை மூடிக்கொண்டு, கால் கட்டை விரலால் தரையில் கோடுகள் இடுவது, அல்லது சிறு சிறு வட்டங்கள் போடுவது வழக்கம். இவ்வாறு போடப்படும் கோடுகள் இணைந்தால், தலைவன் தன்னுடன் கூடுவான் என்றும், வரைந்த சிறு வட்டங்கள் இரட்டைப் படை எண்ணிக்கையில் வந்தால் தலைவன் தன்னுடன் கூடுவான் என்றும் நம்புவதுண்டு. எனவே இவ்வாறு கோடுகள் இடும்போதும், வட்டங்கள் வரையும் போதும், அந்த கோடுகள் இயைய வேண்டும், அதாவது இணைய வேண்டும் என்றும் வட்டங்கள் இரட்டைப்படையாக கூட வேண்டும் என்று விரும்புவதும், அந்த விருப்பம் ஈடேற வேண்டும் என்று வேண்டுவதும் இயற்கை. எனவே தான், அப்பர் நாயகி தான் வரையும் கோடுகள் இணைய வேண்டும் என்று தனது விருப்பத்தை வேண்டுகோளாக, கோடு இயையே என்று இங்கே இறைவனை வேண்டுகின்றாள். 

நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்களிலும் ஆழ்வார்கள், கூடல் கூட வேண்டும் என்று தங்களது விருப்பத்தை வேண்டுகோளாக விடுப்பதை நாம் காணலாம். திருமழிசை ஆழ்வார் அருளிய ;நான்முகன் திருவந்தாதியின் 39ஆவது பாடலில் இத்தகைய வேண்டுகோள் இருப்பதை நாம் உணரலாம்.

    அழைப்பான் திருவேங்கடத்தானைக் காண
    இழைப்பன் திருக்கூடல் கூட மழைப்பேர்
    அருவி மணி வரன்றி வந்திழிய யானை
    வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு  .   

நாச்சியார் திருமொழியின் நான்காவது திருமொழியின், (தெள்ளியார் பலர் என்று தொடங்கும் பிரபந்தம்) அனைத்துப் பாடல்களும், ஆண்டாள் நாச்சியாரின், கூடல் கூட வேண்டும் என்ற விருப்பம் தெரிவிக்கப்படுகின்றது. இந்த திருமொழியின் அனைத்துப் பாடல்களிலும் ஆண்டாள், கூடிடுகூடலே என்று தனது விருப்பத்தை தெரிவிக்கின்றார். இந்தத் திருமொழியின் முதல் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

    தெள்ளியார் பலர் கை தொழும் தேவனார்
    வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்
    பள்ளி கொள்ளுமிடத்து அடி கொட்டிட
    கொள்ளுமாகில் நீ கூடிடு கூடலே

இதே கருத்து கம்பராமாயணத்தில் இரண்டு பாடல்களிலும், பல சங்க இலக்கியப் பாடல்களிலும் காணப்படுகின்றது.  
முந்தைய பாடலில் எனது வளையல்களை நான் இழக்க நேரிடுமோ என்று தனது அச்சத்தை வெளிப்படுத்தும் அப்பர் நாயகி, இங்கே தனது வளையல்கள் கவரப்பட்டு விட்டன என்று கூறி, தான் ஏங்கித் தவிக்கும் நிலையினை இறைவனுக்கு உணர்த்தி, கோடு இயைய வேண்டும் என்று வேண்டுவதை நாம் காணலாம். சேவடியாய் என்று கூறுவதை சேவடியாக இருந்தவன் என்றும் பொருள் கொள்ளலாம், செவ்விய திருப்பாதங்களை உடையவன் என்றும் எடுத்துக் கொள்ளலாம். குஞ்சி=குடுமி, தலயில் உள்ள முடிக் கற்றை.          

பொழிப்புரை:

எனது வளையல்களைக் கவர்ந்து என்னை வஞ்சித்து, என்னை பிரிந்துவிட்ட எனது தலைவன் சிவபிரான்,  செம்பஞ்சு போன்ற சிவந்த கால்களையும் வெண்பஞ்சு போன்ற சிறகுகளையும் உடைய அன்னங்கள் கூட்டமாக ஆரவாரம் செய்யும் பழனத்துப் பெருமான்,   வாராமால் போனாலும் போகலாம். எனவே, பயத்தினால் கலி வருந்தி மெலியுமாறு வேள்விகள் செய்யும் அப்பூதி அடிகளின் தலைமுடியில் பூவாகத் தனது சேவடிகளை வைத்த சிவபெருமானே, நான் வரையும் கோடுகள் இணையுமாறு அருளவேண்டும். அவ்வாறு கோடுகள் இணைந்தால், எனது தலைவன் சிவபிரான் என்னுடன் வந்து கூடுவான் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்படும்.

முடிவுரை:

வடமொழியில் உள்ள காளிதாசனின் கவிதைகள் தலைவனின் பிரிவால் ஏங்கித் தவிக்கும் தலைவியின் உணர்வுகளை அழகாக பிரதிபலிப்பது போன்று, நமது தீந்தமிழ் மொழியில்  நால்வர் பெருமானர்கள் அருளியுள்ள பாடல்களும், இறைவன் பால் அவர்கள் கொண்டிருந்த காதலின் தீவிரத்தை உணர்த்தும் அழகினை நாம் காணலாம். இத்தகைய பாடல்கள், நாமும் எவ்வாறு, உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பதியாக உள்ள, பசுபதியை நினைத்து உருகி, அவனைச் சென்று அடைவதே நமது நோக்கமாக இருக்கவேண்டும் என்பதையும் உணர்த்துகின்றன.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/dec/11/81-சொன்மாலை-பயில்கின்ற---பாடல்-10-2824379.html
2824376 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 81. சொன்மாலை பயில்கின்ற - பாடல் 9 என். வெங்கடேஸ்வரன் Sunday, December 10, 2017 12:00 AM +0530  

பாடல் 9:

புள்ளிமான் பொறி அரவம் புள் உயர்த்தான்
                                                              மணி நாகப்
பள்ளியான் தொழுது ஏத்த இருக்கின்ற பழனத்தான்
உள்ளுவார் வினை தீர்க்கும் என்று உரைப்ப
                                                             உலகெல்லாம்
கள்ளியேன் இவர்க்கு என் கனவளையும் கடவேனோ

விளக்கம்:

புள்ளுயர்த்தான்=அன்னப்பறவையை தனது கொடியில் வைத்துக் கொண்டு உயர்ந்த இடத்தை அதற்கு அளித்த பிரமன். நாகப் பள்ளியான்=நாகத்தை படுக்கையாகக் கொண்ட திருமால். 

பலவகையான பறவைகளை தூதாக அனுப்பிய அப்பர் நாயகி, தான் எதிர்பார்த்த விளைவு ஏதும் விளையாத காரணத்தால், சிவபெருமானின் அருகில் இருக்கும் புள்ளிமான் மற்றும் பாம்பினை தூதாகச் செல்லுமாறு அழைக்கின்றாள். சிவபிரானுக்கு வேண்டியவர்களாக எப்போதும் அவரது அருகில் இருப்போர் தூது சென்றால், தனது எண்ணம் கைகூடும் என்ற நம்பிக்கையில் செய்யும் இந்த செயல், அப்பர் நாயகி சிவபிரான் பால் கொண்டுள்ள காதலின் தீவிரத்தை உணர்த்துகின்றது. கனவளை என்று இங்கே நாயகி கூறுகின்றாள். காதலின் ஏக்கத்தில் உடல் இளைத்த காரணத்தால், வளையும் தாங்க முடியாத சுமையாக மாறியது போலும். கனவளையும் கடவேனோ என்று, தனது உடல் மெலிந்து வளையல்கள் கழலும் அளவுக்குத் தான் சிவபிரான் பால் கொண்டுள்ள காதல் தீவிரமாக இருக்க வேண்டும் என்று தனது விருப்பத்தையும் அப்பர் நாயகி இங்கே உணர்த்துகின்றாள். மேலும் அவ்வாறு நேர்வதற்கு முன்னர், சிவபிரான் தன்னுடன் கூடி, தனது ஏக்கத்தைத் தீர்க்கும் வகையில், தூது பயன் உள்ளதாக இருக்கவேண்டும் என்ற ஆசையும் சொல்லாமல் சொல்லப்படுகின்றது.     

உள்ளத்தில் கள்ளத்தன்மை கொண்டு, சிவபெருமானை முழுமனதோடு தியானிக்காத தன்னை கள்ளியேன் என்று அப்பர் நாயகி கூறிக்கொள்வதை நாம் உணரலாம். நமது வினைகள் கழிந்தால், நாம் பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு, இறைவனுடன் சென்று சேர்கின்றோம்; பின்னர் அவரிடமிருந்து பிரியாமல் பேரானந்தத்தில் திகழ்கின்றோம். எனவே அந்த நிலையினை அடையவேண்டும் என்று ஆசைப்படுகின்றாள். தன்னை தியானம் செய்பவர்களின் வினைகளைக் களையும் சிவபிரான், தனது வினைகளைக் களையாததன் காரணம் தன்னுடைய தவறு தான், இறைவனது அல்ல என்று உணர்த்தும்  சொற்கள் நமக்கு ஒரு முக்கியமான பாடத்தை கற்பிக்கின்றன. நமது விருப்பங்கள் ஈடேறாவிட்டால், நாம் உடனே இறைவனைத் தான் குற்றம் சொல்கின்றோம். நமது பக்தியில் உள்ள குறை நமக்குத் தெரிவதில்லை. உலகத்தவர் அனவைரும், தன்னைத் தியானிப்பவர்களின் வினைகளைக் களைபவர் சிவபிரான் என்று கூறும் நாயகியின் சொற்கள், நாம் இறைவனை முழு மனதோடு நினைத்து நினைந்து உருகினால், நமது இடர்கள் தீர்க்கப்படுவது மட்டும் அல்லாமல், வினைகளும் களையப்படும் என்று இங்கே உணர்த்தப்படுகின்றது.   

புள்ளிமான் பொறி அரவம் என்ற சொற்களை, பழனத்தான் என்ற சொல்லுடன் இணைத்து, புள்ளி மானையும், பாம்பினையும் தன்னுடன் கொண்டுள்ள சிவபெருமான் என்றும் பொருள் கொள்ளலாம். இதே பதிகத்தின் முந்தைய பாடல்களில் பல பறவைகளை அழைத்து, தனது ஏக்கத்தினை வெளிப்படுத்தி, சிவபிரானிடம் தூது செல்லுமாறு வேண்டியமையால், தூதுக்கு மானையும் நாகத்தையும், அப்பர் நாயகி அழைக்கின்றாள் என்று கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது.          

பொழிப்புரை:

புள்ளிகளை உடைய மானே, புள்ளிகளை படத்தில் கொண்டுள்ள நாகமே, அன்னப் பறவையின் உருவம் எழுதப்பட்டுள்ள கொடியினை உடைய பிரமனும், ஒளி வீசும் மணிகளை உடைய ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்டுள்ள திருமாலும், தொழுது துதிக்கும் சிவபெருமான், தன்னைத் தியானித்து உள்ளம் உருகுபவர்களின் வினைகளைத் தீர்க்க வல்லவன் என்று உலகத்தவர் உரைக்கின்றார்கள். உள்ளத்தில் வஞ்சனை கொண்டு, இறைவனை முழுமனதுடன் நினைக்காத எனது வினைகள் தீரவில்லை; சிவபிரான் பால் நான் கொண்டுள்ள காதலின் காரணமாக எனது உடல் மிகவும் இளைத்து, நான் அணிந்திருக்கும் வளையல்கள் எனக்குச் சுமையாகத் தோன்றுகின்றன. அவர் என்னைக் கூடாததால், எனது ஏக்கம் மேலும் அதிகமாகி, எனது உடல் மேலும் இளைத்து, எனது வளையல்கள் இழக்கும் நிலையை அடைவேனோ?. 

]]>
http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/dec/10/81-சொன்மாலை-பயில்கின்ற---பாடல்-2824376.html
2819207 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 81. சொன்மாலை பயில்கின்ற - பாடல் 8 என். வெங்கடேஸ்வரன் DIN Saturday, December 9, 2017 12:00 AM +0530  

பாடல் 8:

கூவை வாய் மணி வரன்றிக் கொழித்தோடும்
                                                                     காவிரிப்பூம்
பாவை வாய் முத்து இலங்கப் பாய்ந்தாடும்
                                                                    பழனத்தான்
கோவை வாய் மலைமகள் கோன் கொல்லேற்றின்
                                                                   கொடி ஆடைப்
பூவைகாள் மழலைகாள் போகாத பொழுது
                                                                  உளதே

விளக்கம்:

தலைவனின் பிரிவால் வருந்தும் தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் அப்பர் நாயகி, அந்த பிரிவு எவ்வளவு கொடியதாக உள்ளது என்பதை இங்கே உணர்த்துகின்றாள். தனது காதலன் சிவபிரானின் பிரிவால் வருந்தும், தனக்கு ஒவ்வொரு கணமும் மிகவும் நீண்டு, எளிதில் கழியாமல், தன்னைத் துன்புறுத்துவதாக அப்பர் நாயகி இங்கே கூறுகின்றாள். முன்னம் தான் முயன்ற தூதுகள் பலன் ஏதும் அளிக்காமையால், நாகணவாய்ப் பறவையை தூதுக்கு தேர்ந்தெடுக்கின்றாள். சிவபெருமான் வைத்துள்ள இடபக் கொடியின் மேல் சார்த்தப்பட்டுள்ள பூவினைப் போன்று இனிமையாக இருக்கும் பூவை (நாகணவாய்ப் பறவை) என்று பூவை என்ற சொல்லினை வேறு வேறு பொருள் அளிக்குமாறு நயமாக அப்பர் பிரான் இங்கே கையாண்டுள்ளார். பூக்கள் காண்பவரின் கண்களுக்கு இன்பம் அளிக்கும். நாகணவாய்ப் பறவைகள், தங்கள் குரலினைக் கேட்பவர்க்கு இன்பம் அளிக்கும். பூவைகாள்=நாகணவாய்ப் பறவைகள்; மழலைகாள்=மழலை போன்று இனிமையாக பேசும்   

கூவை என்ற சொல் குவை என்றார் சொல்லின் திரிபு, குவியல், திரள் என்று பொருள். வரன்றி=வாரிக் கொண்டு வருதல். தான் வரும் வழியில் பல இடங்களிலும் கிடந்த முத்தினையும், மணியையும் வாரிக் கொண்டு காவிரி நதி வருவதாக அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். இந்த நிலை, நமக்கு சுந்தரரின் பரவும் பரிசு என்று தொடங்கும் பதிகத்தினை நினைவூட்டும் (பதிக எண்: 7.77). இந்தப் பதிகத்தின் பல பாடல்களில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காவிரி நதியின் தோற்றத்தை சுந்தரர் விவரிக்கின்றார், பதிகத்தின் ஆறாவது பாடல், காவிரி நதி மாணிக்கங்களையும், முத்துக்களையும், பொன்னையும் வாரிக் கொண்டு வருவதாக கூறுகின்றார்.

    மலைக் கண் மடவாள் ஒரு பாலாய்ப் பற்றி உலகம் பலி தேர்வாய்
    சிலைக்கொள் கணையால் எயில் எய்த செங்கண் விடையாய் தீர்த்தன் நீ
    மலைக் கொள் அருவி பல வாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டு
    அலைக்கும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ .

 
பொழிப்புரை:

பல இடங்களிலிருந்தும் மணிகளை வாரிக் கொண்டு வந்து இரு கரைகளில் சேர்க்கும் காவரி நதியில், தங்களது முத்து போன்ற பற்கள் விளங்கித் தோன்றுமாறு பெண்கள் பாய்ந்து நீராடுகின்றார்கள். இவ்வாறு நீர்வளமும் செல்வ வளமும் கொண்ட திருப்பழனத்துப் பதியில் உறைபவனும் கொவ்வைக் கனி போன்று சிவந்த வாயினை உடைய மலைமகளின் கணவனும் ஆகிய சிவபிரான் வைத்திருக்கும் இடபக் கொடியில் காணப்படும் பூவினைப் போன்று, இனிமையாக மழலைமொழி பேசும் நாகணவாய்ப் பறவைகளே, எனது தலைவனாகிய சிவபிரானின் பிரிவாற்றலால் ஒவ்வொரு கணமும் மிகவும் நீண்டு, விரைவில் கழியாமல் என்னைத் துன்பத்தில் ஆழ்த்துகின்றது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/dec/09/81-சொன்மாலை-பயில்கின்ற---பாடல்-8-2819207.html
2819205 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 81. சொன்மாலை பயில்கின்ற - பாடல் 7 என். வெங்கடேஸ்வரன் DIN Friday, December 8, 2017 12:00 AM +0530 பாடல் 7:

துணை ஆர முயங்கிப் போய்த் துறை சேரும்
                                                                         மட நாராய்
பணை ஆரவாரத்தான் பாட்டு ஓவாப் பழனத்தான்
கணை ஆர இரு விசும்பில் கடி அரணம் பொடி
                                                                        செய்த
இணை ஆர மார்பன் என் எழில் நலம் உண்டு
                                                                       இகழ்வானோ

 
விளக்கம்:

கணை ஆர=அம்பு பொருந்தி தங்க; அம்பினை பயன்படுத்தாமல் சிரித்தே திரிபுரங்களை எரித்த செய்கை இங்கே குறிப்பிடப்படுகின்றது. இறைவன் திரிபுரத்தவர்களுடன் போருக்குச் சென்ற போது, வில்லில் பூட்டப்படிருந்த அம்பினைப் பயன்படுத்தாமல் தனது சிரிப்பினால் மூன்று நகரங்களையும் சாம்பல் பொடியாக மாற்றிய நிகழ்ச்சி இங்கே, அம்பு வில்லில் தங்கி இருக்கும்போதே. திரிபுரங்கள் எரிந்தன என்ற செய்தியின் மூலம் குறிக்கப்படுகின்றது. இந்த செய்தி பல தேவாரப் பதிகங்களிலும் திருவாசகத்திலும் இடம் பெறுகின்றது. ஞான சம்பந்தப் பெருமான் அருளிய வீழிமிழலைப் பதிகத்தின் ஒரு பாடல் (1.124.6) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. அன்றினர்=பகைவர்; அரி=சிங்கம்; அரிய தவம் செய்து வரமாகப் பெற்ற மூன்று கோட்டைகளும் ஒரு நொடியினில் எரிந்து சாம்பலாக மாறுமாறு புன்னகை புரிந்தவன் (சிறுமுறுவல்) என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். 

    அன்றினர் அரி என வருபவர் அரிதினில்
    ஒன்றிய திரிபுரம் ஒரு நொடியினில் எரி
    சென்று கொள் வகை சிறுமுறுவல் கொடு ஒளிபெற
    நின்றவன் மிழலையை நினைய வலவரே  

நாரையை தூது செல்ல அழைக்கும் அப்பர் நாயகி, துணையுடன் கூடி, துணையினை மகிழச் செய்த நாரையே என்று அழைக்கின்றார். தனது கடமையை உணர்ந்து, தனது துணையினை மகிழச் செய்த ஆண் நாரை, தனது பிரிவாற்றலின் கொடுமையை நன்கு உணர்ந்து செயல்படும் என்ற நம்பிக்கை இந்த பாடலில் தொனிப்பதை நாம் காணலாம். முந்தைய பாடல்களில் குறிப்பிட்டபட்ட தூது ஏதும் பயன் அளிக்காத நிலையில், அப்பர் நாயகி, துணையின் வருத்தத்தை போக்கக்கூடிய கடமையை உணர்ந்த ஒரு ஆண் தூதுவனாகச் செல்வது பயன் அளிக்கும் என்ற நம்பிக்கையில் ஆண் நாரையின் உதவியை நாடுவது இயற்கையான செயலாக காணப்படுகின்றது. துணை ஆர முயங்குதல்=துணை மகிழ்ந்து இருக்கும்: ஓவா=ஓயாது ஒலிக்கும்;    
 
பொழிப்புரை:

உனது துணையான பெண் நாரையின் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைவுற்று இருக்கும் வண்ணம் துணையுடன் கூடி மகிழ்ந்து பின்னர் நீர்த்துறையை அடையும் இள நாரையே, முரசங்களின் ஆரவார ஒலியும், பாடல்களின் ஒலியும் இடைவிடாது ஒலிக்கும் பழனத்தின் தலைவனும், பரந்த ஆகாயத்தில் திரிந்த மூன்று கோட்டைகளையும், தான் கையில் ஏந்தியிருந்த வில்லில் பொருந்திய அம்பு, பொருத்தப்பட்ட நிலையிலே இருந்தபோதும், தனது சிரிப்பினால் மூன்று கோட்டைகளையும் பொடி செய்தவனும் மார்பின் இரண்டு பக்கங்களிலும் தொங்கும் மாலைகளையும் அணிந்தவனான சிவபெருமான், எனது அழகினையும் இனிமையான தன்மையையும் பொருட்படுத்தாது அலட்சியம் செய்வானோ?

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/dec/08/81-சொன்மாலை-பயில்கின்ற---பாடல்-7-2819205.html
2819203 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 81. சொன்மாலை பயில்கின்ற - பாடல் 6 என். வெங்கடேஸ்வரன் DIN Thursday, December 7, 2017 12:00 AM +0530 பாடல் 6:

பொங்கோத மால் கடலில் புறம்புறம் போய்
                                                                       இரை தேரும்
செங்கால் வெண் மடநாராய் செயல் படுவது
                                                                      அறியேன் நான்
அங்கோல வளை கவர்ந்தான் அணி பொழில்
                                                                      சூழ் பழனத்தான்
தங்கோல நறும் கொன்றைத் தார் அருளாது
                                                                     ஒழிவானோ

 
விளக்கம்:

ஓதம்=ஓசை; மால் கடல்=பெரிய கடல்; தார்=மாலை. சிவபிரான் பேரில் கொண்ட ஆழ்ந்த காதல் காரணமாக, சிவபிரான் தன்னருகில் இல்லாதபோது, அவனுடன் தொடர்பு கொண்ட பொருள் ஏதேனும் இருந்தால் ஆறுதலாக இருக்கும் என்று நினைக்கும் அப்பர் நாயகி, சிவபிரான் தனது சடையில் சூடியுள்ள கொன்றை மாலையைத் தனக்குத் தரவேண்டும் என்று ஏங்குகின்றாள். அந்த ஏக்கத்தை வெளிப்படுத்தி, நாரையிடம் சிவபிரான் தனக்கு கொன்றை மாலை தருவாரா என்று கேட்கின்றாள். தனது ஏக்கத்தைப் புரிந்து கொண்ட நாரை, தனது விருப்பத்தை சிவபிரானிடம் சொல்லி கொன்றை மலர் பெற்றுத் தர வேண்டும் என்று தனது ஆசையினை இங்கே பதிவு செய்கின்றாள்.   

பொழிப்புரை:

பெருத்த ஆரவாரத்துடன் பொங்கும் அலைகள் நிறைந்த பெரிய கடலின் அலைகளின் பின்னர் சென்று உனக்கு வேண்டிய உணவாகிய மீன்களைத் தேடும், சிவந்த கால்களை உடைய வெண்ணிறம் கொண்ட இளைய நாரையே, நான் என்ன செய்வது என்று அறியாது திகைக்கின்றேன்; எனது அழகிய வளையல்களைக் கவர்ந்த சிவபெருமான், சோலைகள் சூழ்ந்த பழனத் தலத்தில் உறையும் சிவபெருமான், தனது தலையில் சூடியுள்ள நறுமணம் வீசும் கொன்றை மாலையை எனக்குத் தாராமல் போய்விடுவானோ? நீ தான் தூது சென்று அந்த மாலை எனக்கு கிடைக்குமாறு உதவவேண்டும். .   

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/dec/07/81-சொன்மாலை-பயில்கின்ற---பாடல்-6-2819203.html
2819202 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 81. சொன்மாலை பயில்கின்ற - பாடல் 5 என். வெங்கடேஸ்வரன் DIN Wednesday, December 6, 2017 12:00 AM +0530  

பாடல் 5:
மண் பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்
விண் பொருந்து தேவர்க்கும் வீடு பேறாய் நின்றானைப்
பண் பொருந்த இசை பாடும் பழனம் சேர் அப்பனை என்
கண் பொருந்தும் போதத்தும் கைவிட நான் கடவேனோ

விளக்கம்:
தீர்த்த=புனிதம் உடைய; மாதீர்த்த=மிகவும் புனிதமான; இசை பாடும் என்ற வினைச் சொல்லை, அப்பனை என்ற பெயர்ச் சொல்லுடன் சேர்த்து, பண் பொருந்த இசை பாடும் இறைவன் என்று பொருள் கொள்ள வேண்டும். ஊழிக்காலத்தில் தசை கழிந்த, பிரமன் மற்றும் திருமாலின் உடலில் எஞ்சிய எலும்புக்கூடுகளை தோளில் அணிந்தவண்ணம் சிவபிரான் வீணை வாசித்தபடியே, ஒடுங்கிய உலகினை மறுபடியும் தோற்றுவிக்கும் எண்ணத்தில், இருப்பதாக அப்பர் பிரான் ஒரு பதிகத்தில் (4.112.7) கூறுகின்றார்
   
    பெருங்கடல் மூடி பிரளயம் கொண்டு பிரமனும் போய்
    இருங்கடன் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும்
    கருங்கடல் வண்ணன் களேபரமும் கொண்டு கங்காளராய்
    வரும் கடன் மீள நின்று எம் இறை நல்வீணை வாசிக்குமே

நாம் இறக்கும் சமயத்திலும் சிவபிரானது நினைவு இருக்க வேண்டும் என்ற தனது கவலையை அப்பர் பிரான் வெளிப்படுத்தும் பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த கவலை நமக்கும் இருக்கவேண்டும், திருப்புகலூர் தலத்தில் இறைவனைப் பற்றிய சிந்தைனையில் இருந்தபோதே இறைவனின் திருவடிகளில் சேர்ந்த அப்பர் பிரானுக்கு அருளியது போல், நமக்கும் இறைவன் அருள் புரிய வேண்டும் என்று நாம் இறைவனை வேண்டும் முகமாக, தினமும் சிவபூஜை செய்யும் அன்பர்கள் தாங்கள் பூசையினை முடிக்கும் சமயத்தில், இந்த பாடலை சொல்லவேண்டும் என்று பெரியோர்கள் கருதுகின்றனர்.

கண் பொருந்துதல்=இறப்பினைக் குறிக்கும் மங்கலச் சொல். கண் பொருந்தும் போதத்தும் கைவிட நான் கடவேனோ என்று (இறக்கும் சமயத்தில் பழனத்து அப்பனின் நினைவை நான் கை விட்டு விடுவேனோ) தனது அச்சத்தை வெளிப்படுத்தும் அப்பர் பிரான், தான் இறக்கும் சமயத்திலும் சிவபிரானைப் பற்றிய நினைவு தனக்கு இருக்கவேண்டும் என்ற தனது விண்ணப்பத்தை, மறைமுகமாக இறைவனிடம் தெரிவிக்கின்றார். அப்பர் பிரான் பல பாடல்களில், தனது உடலிலிருந்து உயிர் பிரியும் சமயத்தில் இறைவனைப் பற்றிய எண்ணங்கள் தனது மனதில் தோன்றவேண்டும் என்றும், சிவபிரானின் திருநாமத்தைத் தான் சொல்ல வேண்டும் என்றும் வேண்டுகின்றார். அத்தைகைய நேரத்தில், இறைவனும் தனக்கு அருள் புரிய வேண்டும் என்று கோரும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. (4.113.3 -- வெள்ளிக் குழைத் துணி என்று தொடங்கும் பதிகம்):

    முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும் இம்மூவுலகுக்கு
    அன்னையும் அத்தனும் ஆவாய் அழல் வணா நீ அலையோ
    உன்னை நினைந்தே கழியும் என் ஆவி கழிந்ததற்பின்
    என்னை மறக்கப் பெறாய் எம்  பிரான் உன்னை வேண்டியதே    


பொழிப்புரை:
இந்த மண்ணுலகில் வாழும் மனிதர்களுக்கும், தூய்மையான வேதியர்களுக்கும், மற்றும் விண்ணுலகத்தில் வாழும் தேவர்களுக்கும் முக்திநிலை அளிக்கக்கூடிய சிவபிரானை, அவனது அடியார்கள் பண்ணோடு பொருந்திய பாடல்களைப் பாட அதனைக் கேட்டு இன்பமுறும் பழனத்து அப்பனை, நான் இறக்கும் தருவாயில் நினைக்காமல் போய்விடுவேனோ என்று அஞ்சுகின்றேன். அவ்வாறு ஏதும் ஏற்படாதவாறு, நான் அந்த சமயத்திலும் உன்னை நினைக்குமாறு நீ அருள் புரிய வேண்டும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/dec/06/81-சொன்மாலை-பயில்கின்ற---பாடல்-5-2819202.html
2819201 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 81. சொன்மாலை பயில்கின்ற - பாடல் 4 என். வெங்கடேஸ்வரன் DIN Tuesday, December 5, 2017 12:00 AM +0530 பாடல் 4:

புதியையாய் இனியையாய் பூந்தென்றால்
                                                                      புறங்காடு
பதியாவது இது என்று பலர் பாடும் பழனத்தான்
மதியாதார் வேள்வி தனை மதித்திட்ட மதி கங்கை
விதியாளன் என் உயிர் மேல் விளையாடல்
                                                                      விடுத்தானோ

விளக்கம்:

தென்றால்=தென்றல் என்பதன் திரிபு; புறங்காடு=ஊருக்கு வெளியே இருக்கும் சுடுகாடு; மதி கங்கை விதியாளன்=அழியும் நிலையில் இருந்த சந்திரனுக்கு அடைக்கலம கொடுத்து அவன் விரிந்து வளருமாறும், பரந்தும் விரிந்தும் கீழே இறங்கிய கங்கை நதியினை ஒடுக்கி தனது சடையினில் அடக்கியும் கருணைச் செயல்கள் புரிந்த தன்மை இங்கே விளக்கப் பட்டுள்ளது. உயிர் மேல் விளையாடல்=உயிரினுள் கலந்து நின்று ஆட்கொள்ளுதல். அழியும் நிலையில் இருந்த சந்திரன் வளரத் தொடங்கியது; பரந்து விரிந்து கீழே பாய்ந்த கங்கை நதி ஒடுக்கப் பட்ட பின்னர், சிறிய நதியாக சடையிலிருந்து வெளியிடப்பட்டது. இவ்வாறு சந்திரன், கங்கை ஆகிய இருவரின் நிலையையும், சிவபிரான் மாற்றிய செய்கை மதிகங்கை விதியாளன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

மதியாதார்=தக்கன்; தன்னை அழைக்காமல் தக்கன் வேள்வி செய்யத் தொடங்கியபோது, முதலில் சிவபிரான் அதனை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. ஆனால் வேள்வி நடந்த இடத்திற்குச் சென்ற தனது மனைவியாகிய தாட்சாயணி, இகழப்பட்ட போது, சிவபிரான் தனது அம்சமான வீரபத்திரரை அங்கே அனுப்பி, யாகத்தை அழித்தார்; யாகத்தில் பங்கு பெற்றவர்களுக்கும் தண்டனை அளித்தார். இவ்வாறு தக்கனுக்கும் அவனைச் சார்ந்தார்க்கும் மறக்கருணை அளித்தது, நகைச்சுவையாக மதித்திட்ட என்று எதிர்மறையாக குறிப்பிடப் பட்டுள்ளது. 

இந்த பாடலில் தென்றல் காற்று தூதுவனாக அனுப்பப்பட்டு, தன்னை ஆட்கொள்ள வேண்டும் என்று தனது ஆசையினை சிவபிரானிடம் வெளிப்படுத்த வேண்டும் என்று அப்பர் நாயகி கூறுவதாக அமைந்துள்ளது. தென்றல் காற்றினை நாம் இதுவரை எத்தனை முறை அனுபவித்து ரசித்திருந்தாலும், அடுத்த முறை தென்றல் காற்று நமது உடலில் மீது படும்போது, தனிவிதமான புத்துணர்ச்சியை, இனிமையை நாம் உணருகின்றோம். இந்த கருத்தினை உள்ளடக்கி, புதிய, இனிய தென்றல் காற்று என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.    

பொழிப்புரை:
இனிமையானதும், நறுமணம் கமழும் பூக்களின் வாசனையுடன் எப்போதும் புதியதாக உணரப்படும் தென்றல் காற்றே, ஊருக்கு வெளியே இருக்கும் சுடுகாட்டினைத் தனது இருப்பிடமாகக் கொண்ட சிவபிரான், தன்னை மதிக்காமல் வேள்வி நடத்திய தக்கனுக்கும் அந்த வேள்வியில் பங்கு கொண்ட மற்றவர்களுக்கும் பாடம் புகட்டிய சிவபெருமான், பழனம் என்று அழைக்கப்படும் தலத்தில் உறையும் பெருமான், சந்திரனுக்கும் கங்கைக்கும் அவரவர்கள் எண்ணத்திற்கு ஏற்ப வாழ்வு அளித்தும் (வாழ்வு வேண்டிய சந்திரனுக்கு வாழ்வு அளித்தவர்: கர்வத்துடன் பொங்கிப் பாய்ந்த கங்கை நதியை சடையில் சிறை வைத்தவர்) ஒடுக்கியும், அவர்களது போக்கினை மாற்றிய பெருமான், எனது உயிருடன் கலந்து என்னை ஆட்கொள்ளும் செயலை விட்டுவிட்டானோ? எனது வருத்தத்தை அவனுக்கு உணர்த்தி, சிவபிரான் மறுபடியும் என்னுடன் கலந்து என்னை ஆட்கொள்ளுமாறு நீ தூதுச் செய்தியை அவனுக்கு கூறவேண்டும்.  

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/dec/05/81-சொன்மாலை-பயில்கின்ற---பாடல்-4-2819201.html
2819200 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 81. சொன்மாலை பயில்கின்ற - பாடல் 3 என். வெங்கடேஸ்வரன் DIN Monday, December 4, 2017 12:00 AM +0530  

பாடல் 3:

மனைக்காஞ்சி இளம் குருகே மறந்தாயோ
                                                                   மத முகத்த
பனைக் கைம்மா உரி போர்த்தான் பலர் பாடும்
                                                                   பழனத்தான்
நினைக்கின்ற நினைப்பு எல்லாம் உரையாயோ
                                                                   நிகழ் வண்டே
கனைக் குவளை மலர் கண்ணாள் சொல் தூதாய்
                                                                   சோர்வாளோ

விளக்கம்:

பனைக் கைம்மா=பனை மரத்தைப் போன்று அடியில் பெருத்தும் நுனியில் சிறுத்தும் காணப்படும் துதிக்கையை உடைய விலங்கு, யானை; 

இந்த பாடலில் குருகும் வண்டும் தூதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை நாம் உணரலாம். முதல் இரண்டு பாடல்கள் மூலம் விடுத்த தூது பயன் ஏதும் அளிக்காத நிலையில் அப்பர் நாயகி திகைக்கின்றாள். அடுத்து வேறு எவரை அனுப்பினால் தூது பலனளிக்கும் விதமாக இருக்கும் என்று ஆராய்கின்றாள். வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்து இருக்கும் குருகினைக் காணும் தலைவிக்கு, தனது துயரங்களை அருகில் இருந்த பார்த்த குருகு தூது சென்றால், தனது நிலை சரியாக எடுத்துரைக்கப்படும் என்ற நம்பிக்கை பிறக்கின்றது. நமது அருகில் இருப்பவர்களுக்குத் தானே நமது நிலைமை முழுவதுமாகத் தெரியும். அதனால் குருகு தேர்ந்தெடுக்கப்படுகின்றது. இரண்டாவது பாடலில் தான் சிவபிரானின் நினைவாக இருப்பதையும், தனது மனதினில் உள்ள எண்ணங்களையும் தெரிவித்த அப்பர் நாயகி, சிவபிரானின் மனதினில் ஓடும் எண்ண ஓட்டங்களைத் தான் அறிய வேண்டும் என்று ஆசைப்படுகின்றாள். 

சிவபிரானுக்கு சூட்டப்படும் புது மலர்களில் உள்ள தேனினை குடிப்பதற்காக, வண்டுகள் சிவபிரானின் அருகில் செல்வது அவளுக்கு நினைவுக்கு வருகின்றது. மேலும் ரீங்காரமிட்டுப் பாடும் இசைக் கலைஞர்களாகிய வண்டுகளுக்கும், நடனக் கலையில் வல்லவனான சிவபெருமானுக்கும், இருவரும் கலைஞர்கள் என்பதால் இயல்பான நெருக்கம் இருக்கும் அல்லவா? அந்த நெருக்கத்தாலும், அருகாமையில் இருப்பதாலும், சிவபிரானின் நினைவுகள் எவ்வாறு இருக்கின்றன என்பதை, வண்டுகள் அறியமுடியும் என்று நம்புகின்றாள். சிவபிரானின் எண்ண ஓட்டங்களை அறிந்து கொண்டால், தான் சிவபிரானின் மீது கொண்டுள்ள காதலுக்கு, இறைவனது செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பதை உணரமுடியும் என்று நினைக்கின்றாள். அதனால் தான் வண்டுகளை அழைத்து, சிவபிரான் என்ன நினைக்கின்றார் என்று அறிந்து உரைக்குமாறு இங்கே வேண்டுகின்றாள்.       

பொழிப்புரை:

வீட்டுத் தோட்டத்தில் வளரும் காஞ்சி மரத்தில் அமர்ந்துள்ள குருகே, எனது தலைவனாகிய சிவபிரானிடம் சொல்ல வேண்டிய செய்திகள் மறக்காமல் உனது நினைவில் உள்ளனவா? சிவபெருமானுக்கு அருகாமையில் இருக்கும் வண்டே, தாருகவனத்து முனிவர்கள் ஏவிய பனை மரத்தின் தண்டு போன்று உரம் வாய்ந்த கையினைக் கொண்டதும் மதம் கொண்டதுமான யானையின் தோலை உரித்துத் தனது உடலில் போர்த்துக்கொண்ட பழனத்தானின் அனைத்து நினைவுகளையும் நீ அறிந்து எனக்கு சொல்வாயாக. குவளை மலர் போன்ற கண்களைக் கொண்ட எனது தோழி, என் சார்பாக சிவபிரானிடம் தூது சென்றவள், சிவபிரானின் அழகில் மயங்கி, தான் மேற்கொண்ட தூதினை மறந்தாள் போலும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/dec/04/81-சொன்மாலை-பயில்கின்ற---பாடல்-3-2819200.html
2819199 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 81. சொன்மாலை பயில்கின்ற - பாடல் 2 என். வெங்கடேஸ்வரன் Sunday, December 3, 2017 12:00 AM +0530  

பாடல் 2:
கண்டகங்காள் முண்டகங்காள் கைதைகாள்
                                                                         நெய்தல்காள்
பண்டரங்க வேடத்தான் பாட்டோவாப் பழனத்தான்
வண்டுலாம் தடம் மூழ்கி மற்று அவன் என் தளிர்
                                                                        வண்ணம்
கொண்ட நாள் தான் அறிவான் குறிக் கொள்ளாது
                                                                        ஒழிவானோ

 

விளக்கம்:

சிவபிரான் பால் காதல் கொண்ட பெண்களின் வரிசையில் புதியவளாகச் சேர்ந்துள்ள தனது காதலை, சிவபிரான் இகழாமல் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற கவலையில் இருந்த அப்பர் நாயகியின் கற்பனை விரிகின்றது. தான் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது, குளத்தில் மூழ்க இருந்த தன்னை சிவபிரான் காப்பாற்றி கரை சேர்த்ததாக கற்பனை செய்கின்றாள். அவ்வாறு கரை சேர்த்தபோது சிவபிரான் தன்னைத் தழுவிக் கொண்டதாக கற்பனை செய்யும் அப்பர் நாயகி, அதனை இனிய அனுபவமாக நினைத்து மகிழ்கின்றாள். அந்த கற்பனைக் காட்சியின் தொடர்ச்சியாக இந்த பாடல் அமைந்துள்ளது. அந்த கற்பனைக் காட்சியில் அவளுக்கு, தான் குளித்த இடமும், அந்த இடத்தில் வளர்ந்திருந்த மலர்களும் தெரிகின்றன. எனவே, தான் சிவபிரானுடன் இணைந்திருந்த காட்சியினைக் கண்ட, நீர் நிலைகளில் வளரும் மலர்களும், அதனருகே காணப்படும் மலர்களும் தூது செல்வதற்காக  தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.   

கண்டகம்=நீர் முள்ளி; முண்டகம்=தாமரை; கைதை=தாழை; நெய்தல்=வெள்ளாம்பல் மலர்; 

பொழிப்புரை:
நீர் முள்ளிகளே, தாமரை மலர்களே, தாழம்பூக்களே, வெள்ளாம்பல் மலர்களே, அடியார்கள் சிவபிரானைப் புகழ்ந்து பாடும் பாடல்கள் இடைவிடாது ஒலிக்கும் பழனம் நகரில் உறையும் சிவபெருமான், முன்னர் திரிபுரத்தை எரித்த பின்னர் பண்டரங்கம் என்று அழைக்கப்படும் கூத்தினை மகிழ்ந்து ஆடியவன்; முன்னொரு நாள் வண்டுகள் உலாவும் குளிர்ந்த குளத்தில் நான் மூழ்கிய போது, எனது உடலைத் தழுவிக் கொண்டு என்னை காப்பாற்றி கரை சேர்த்த சமயத்தில் எனது மேனியின் வண்ணத்தினை அறிந்து கொண்ட சிவபெருமான், அந்த நாளை மறந்து விட்டு, என்னை பொருட்படுத்தாது இருப்பானோ? கருணை உள்ளம் கொண்டு அன்று காப்பாற்றிய சிவபெருமான், அந்த நாளை மறக்கமாட்டான்; என்னையும் நினைவில் வைத்திருப்பான். எனவே நீங்கள் எல்லோரும் தூது சென்று அவனுக்கு, நான் அவனை நினைத்து ஏங்கும் நிலையினை எடுத்து உரைக்கவேண்டும்.   
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/dec/03/81-சொன்மாலை-பயில்கின்ற---பாடல்-2-2819199.html
2819154 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 81. சொன்மாலை பயில்கின்ற - பாடல் 1 என். வெங்கடேஸ்வரன் Saturday, December 2, 2017 11:14 AM +0530  

முன்னுரை:

திங்களூரில் அப்பூதி அடிகளாரின் பாம்பு கடித்து இறந்த மகனை, ஒன்று கொலாம் என்ற பதிகம் பாடி, இறைவன் அருளால், பிழைப்பித்த திருநாவுக்கரசர், அதன் பின்னர் அருகில் உள்ள பழனம் என்று அழைக்கப்படும் தலம் வந்தடைந்தார். பழனத்து இறைவனைப் புகழ்ந்து பாடும், சொன்மாலை பயில்கின்ற என்று தொடங்கும் இந்த பதிகத்தைப் பாடினார். இந்த பதிகத்தின் கடைப் பாடலில், அப்பூதி அடிகளை சிறப்பித்து குறிப்பிடுவதை சேக்கிழார் பெரிய புராணத்தில் நமக்கு உணர்த்துகின்றார்.

புடை மாலை மதிக் கண்ணிப் புரிசடையார்
                                                                                  பொற்கழல் கீழ்
அடை மாலைச் சீலமுடை அப்பூதி அடிகள் தமை
நடை மாணச் சிறப்பித்து நன்மைபுரி தீந்தமிழின்
தொடை மாலைத் திருப்பதிக சொல்மாலை பாடினார். 

சிவபிரானின் திருவடிக்கீழ் சென்று அடைதற்கு உரிய தன்மை படைத்த அப்பூதி அடிகள் என்று சேக்கிழார் இங்கே குறிப்பிடுகின்றார். அந்தணராகிய அப்பூதி அடிகள் தினமும் வேள்வி செய்த ஒழுக்கம் இந்த பதிகத்தில் குறிப்பிடப்படுகின்றது என்பதையும் நமக்கு சேக்கிழார் உணர்த்துகின்றார். நடை=நாள்தோறும் மேற்கொண்டு வந்த ஒழுக்கம். மாண்பு=மாண்பினை வெளிப்படுத்தும் விதமாக: தொடை மாலை=அழகிய சொற்களால் தொடுக்கப் பட்ட மாலை.    

சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே
பன்மாலை வரி வண்டு பண் மிழற்றும் பழனத்தான்
முன் மாலை நகு திங்கள் முகிழ் விளங்கு முடிச் சென்னிப்
பொன்மாலை மார்பன் என் புதுநலம் உண்டு இகழ்வானோ

விளக்கம்:
பன்மாலை வரி வண்டு=வரிசை வரிசையாக கோடுகள் கொண்ட வண்டுகள்; 

இனிமையான சொற்களைக் கொண்ட குயிலினை தூது அனுப்ப அப்பர் நாயகி முடிவு செய்கின்றாள். ஒரு தூதனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான குணங்கள், இனிமையான சொற்கள் மற்றும் சொன்ன சொற்களை மறவாது இருக்கும் தன்மை. குயிலின் இனிமையான குரல் பற்றி நாம் அனைவரும் அறிவோம். அழகாக இனிமையாக கூவுவது குயிலுக்கே உரித்தான குணம். பயிலுதல் என்றால் இடைவிடாது செய்யும் செயலைக் குறிக்கும். சொல்மாலை பயிலுதல் என்று சொன்ன சொற்களை மறுபடியும் மறுபடியும் சொல்லிச் சொல்லி, செய்தியை மனதினில் தக்கவைத்துக் கொள்ளும் தன்மை உடைய குயிலினம் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். எவரிடம் தூது செல்லவேண்டும், அவர் எங்கிருக்கின்றார் என்பதை குயிலுக்கு உணர்த்தும் முகமாக, வண்டுகள் பண்பாடும் இடம் என்றும் பழனத்தான், என்றும் இடமும் தூது எவருக்காக என்றும் இங்கே உணர்த்தப்பட்டுள்ளது.  

குயிலினை தூதுக்கு அனுப்புவது தமிழ் இலக்கிய மரபு. தனது தலைவனிடம் தூது சென்று அவன் வருமாறு குயில் கூவ வேண்டும் என்று பொருள் பொதிந்த பாடல்கள் மணிவாசகர் இயற்றிய திருவாசகத்திலும் ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழி பாசுரங்களிலும் காணப்படுகின்றன. இந்த இரண்டு தொகுப்பின் முதல் பாடல்கள் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன. சங்கு என்ற சொல் இங்கே வெண்முத்து போன்று வெண்மை நிறத்தில் ஒளிரும் வளையல்களை குறிக்கும். பன்னி=திரும்பத் திரும்ப; இருவரும் குயிலினை நோக்கி, மேற்கொண்டுள்ள தூதினைத் திறமையாக முடித்து, அந்த தூதின் விளைவாக  தலைவன் வருமாறு செய்ய வேண்டும் என்று கோருகின்றனர்.

    கீதம் இனிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான்
    பாதம் இரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக்கு அப்பால்
    சோதி மணிமுடி சொல்லில் சொல் இறந்து நின்ற தொன்மை
    ஆதி குணம் ஒன்று இல்லான் அந்தம் இலான் வரக்கூவாய்

    மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி வண்ணன்
                                         மணிமுடி மைந்தன் தன்னை
    உகந்தது காரணமாக என் சங்கு இழக்கும் வழக்குண்டே
    புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் பொதும்பினில்
                                         வாழும் குயிலே
    பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவளவாயன்
                                         வரக்கூவாய் 

   
பொழிப்புரை:

சொல் வரிசையை தவறாமல் கூவும் குயில் இனங்களே, வரிசை வரிசையாக கோடுகள் பொருந்திய வண்டுகள் பண் பாடும் பழன நகரில் உறையும் சிவபெருமான், மாலைப் பகுதியின் முற்பகுதியில் ஒளி வீசும் பிறைச் சந்திரனைத் தனது சடை முடியில் தாங்கியவனும், பொன் போன்ற கொன்றை மாலையை மார்பில் சூடியவனும் ஆகிய சிவபெருமான், இப்போது நான் அவனிடம் காதல் கொண்டுள்ள எனது அன்பினை உணர்ந்தாலும் அதனை பொருட்படுத்தாது அலட்சியம் செய்வானோ?  குயிலே நீ தான் எனது அன்பின் ஆழத்தை அவனுக்கு உணர்த்தி அவன் என்னை புறக்கணிக்காதவாறு, எனது நிலையை அவனுக்கு எடுத்துரைக்க வேண்டும்  

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/dec/02/81-சொன்மாலை-பயில்கின்ற---பாடல்-1-2819154.html
2817302 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 80. ஒன்று கொலாம் - பாடல் 10 என். வெங்கடேஸ்வரன் DIN Friday, December 1, 2017 12:00 AM +0530  

பாடல் 10:

பத்து கொலாம் அவர் பாம்பின் கண் பாம்பின்பல்
பத்து கொலாம் எயிறும் நெரிந்து உக்கன
பத்து கொலாம் அவர் காயப் பட்டான் தலை 
பத்து கொலாம் அடியார் செய்கை தானே

விளக்கம்:

சிவனடியார்களிடம் இருக்க வேண்டிய குணங்களை அக குணங்கள் என்றும் புறக் குணங்கள் என்றும் பிரிக்கின்றனர்.. பத்து புற குணங்கள், திருநீறும் உருத்திராக்கமும் பக்தியுடன் தரித்தல், சிவபெருமானை புகழ்ந்து பாடுதல், சிவபிரானின் திருநாமங்களை ஓதுதல், சிவபூசனை புரிதல், சிவபுண்ணியங்கள் செய்தல், சிவபுராணங்களையும் சிவச்சரிதைகளையும் கேட்டல், சிவாலய வழிபாடு செய்தல், சிவனடியார்களை வணங்குதல், சிவனடியார்களுக்கு வேண்டுவன கொடுத்தல், சிவனடியார்கள் இல்லங்களில் அன்றி வேறிடத்தில் அன்னம் உட்கொள்ளாது இருத்தல் ஆகும். பத்து அக குணங்கள், சிவபிரானின் புகழைக் கேட்கும்போது கண்டம் விம்முதல், நாக்கு தழுதழுத்தல், உதடுகள் துடித்தல், உடம்பு குலுங்குதல், மயிர்ப்புளகம் கொள்ளுதல், உடல் வியர்த்தல், சொல் எழாமல் இருத்தல், கசிந்துருகி கண்ணீர் பெருக்குதல், வாய் விட்டு அழுதல், மெய்ம்மறத்தல் ஆகும்

பொழிப்புரை:

சிவபிரான் தனது உடலில் அணிந்திருக்கும் ஐந்தலைப் பாம்பின் கண்கள் மொத்தம் பத்து, பற்கள் பத்து. ஐந்தலைப் பாம்பின் விஷம் கக்கும் எயிறுகள் பத்து. அவரால் கயிலாய மலையின் கீழ் நசுக்குண்டு வருந்தியவன் தலை பத்து. அவரது அடியார்களின் செய்கைகள் பத்து.

முடிவுரை:

இந்த பதிகம் பாடி முடித்த பின்னர், உடலில் இருந்த விடம் நீங்கவே அப்பூதி அடிகளாரின் மூத்த மகன் உறக்கம் கலைந்து எழுபவன் போல் எழவே, அப்பர் பிரான் அவனுக்கும் திருநீறு அணிவித்து பின்னர் அமுது அருந்தினார். பாம்பு கடித்து இறந்த தனது மகன் மீண்டும் உயிர்பெற்று எழுந்ததற்கு மகிழ்ச்சி அடைவதற்கு பதிலாக அப்பூதி அடிகள், வருத்தம் அடைகின்றார். அவரது வருத்தத்திற்கு காரணம், மூத்த மகனின் இறப்பினால் அப்பர் பிரான் அமுது அருந்துவது தாமதப்பட்டது என்பதே ஆகும்

அப்பர் பிரான் இந்த பதிகம் பாடி, அப்பூதி அடிகளாரின் மகனை உயிர்ப்பித்த பின்னர், திங்களூரில் எவரும் பாம்பு தீண்டி இறந்ததில்லை என்று கூறுகின்றார்கள். மேலும் அருகில் உள்ள ஊர்களில் எவரேனும் பாம்பு தீண்டினால் அவர்களது உடலினை திங்களூர் கோயில் முன்னர் வைத்து, இந்த பதிகத்தினை படிக்க, விடம் இறங்குவதும் இன்றும் நடைபெறும் அதிசயமாக சொல்லப்படுகின்றது. திருமருகல் தலத்தில் பாம்பினால் தீண்டப்பட்டு இறந்த மணமகனை உயிர்ப்பிக்க சம்பந்தப் பெருமான் அருளிய சடையாய் எனுமால் என்று தொடங்கும் பதிகமும், இந்த பதிகத்தைப் போலவே இந்தளம் பண்ணில் அமைக்கப்பட்டுள்ளது.

]]>
http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/dec/01/80-ஒன்று-கொலாம்---பாடல்-10-2817302.html
2759907 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 71. காடுடைச் சுடலை நீற்றர் - பாடல் 5 என். வெங்கடேஸ்வரன் Thursday, November 30, 2017 03:14 PM +0530  

பாடல் 5:
    
வேதங்கள் நான்கும் கொண்டு விண்ணவர் பரவி ஏத்தப்
    பூதங்கள் பாடி ஆடல் உடையவன் புனிதன் எந்தை
    பாதங்கள் பரவி நின்ற பத்தர்கள் தங்கள் மேலை
    ஏதங்கள் தீர நின்றான் இடைமருது இடம் கொண்டாரே

விளக்கம்:
ஏதங்கள்=துன்பங்கள்; புனிதன்=தூய்மை வடிவினன். தூய்மை வடிவினன் என்பது பெருமானின் எட்டு குணங்களில் ஒன்று. மற்ற குணங்களாவன, தன் வயத்தன், இயற்கை உணர்வினன், முற்றும் உணர்ந்தவன், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவன், பேரருள் படைத்தவன், முடிவில்லாத ஆற்றல் உடையவன், வரம்பிலா இன்பம் உடையவன். தங்கள் மேலை ஏதங்கள் என்ற தொடருக்கு அடியார்களின் மேல் படர்ந்துள்ள மூன்று விதமான வினைகள், பிராரத்தம், ஆகாமியம் மற்றும் சஞ்சிதம் என்றும் விளக்கம் அளிப்பதுண்டு. ஆகாமியம் என்பது, முந்தைய வினைகளின் விளைவாகிய நன்மைகளையும் தீமைகளும் அனுபவிக்கும் சமயத்தில் நாம் செய்யும் செயல்கள் ஏற்படுத்தும் வினைகள் ஆகாமியம் என்றும் மேல்வினைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. முந்தைய பிறவிகளில் ஈட்டிய வினைகளின் தொகுதி தொல்வினை என்றும், அந்த தொல்வினைகளின் ஒரு பகுதியாக இந்த பிறப்பினில் நாம் அனுபவித்து கழிக்கப்படுவதற்காக ஒதுக்கப்படும் வினைகள் பிரார்த்த வினைகள் அல்லது ஊழ்வினைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த பிறவியில் நாம் ஈட்டும் வினைகள், தொல்வினைகளுடன் எஞ்சிய தொகுதியுடன் சேர்ந்து இனி நாம் எடுக்கவிருக்கும் பிறவிகளுக்கு தொல்வினைகளாக மாறுகின்றது.   
    
பொழிப்புரை:
தேவர்கள் நான்கு வேதங்களிலும் சொல்லப்பட்டுள்ள பாடல்களை பாடி இறைவன் சிவபெருமனை புகழ்ந்து  பாடுகின்றார்கள்; இவ்வாறு தேவர்களால் புகழப்படும் பெருமான், தன்னைச் சுற்றி சிவகணங்கள் சூழ்ந்து நிற்க நடனம் ஆடுபவனாக உள்ளான். தூய்மை வடிவினனாகவும் எமது தந்தையாகவும் இருக்கும் பெருமான், தனது திருப்பாதங்களை துதித்துத் தொழும் அடியார்களின் மேலை வினைகளையும், அவற்றால் வரக்கூடிய துன்பங்களையும் தீர்ப்பவனாக விளங்குகின்றான். அத்தைகைய கருணை உள்ளம் கொண்ட பெருமான் இடைமருது நகரத்தினைத் தான் இருக்கும் இடமாகக் கொண்டவர் ஆவார். 

]]>
http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/aug/23/71-காடுடைச்-சுடலை-நீற்றர்---பாடல்-5-2759907.html
2755752 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 71. காடுடைச் சுடலை நீற்றர் - பாடல் 4 என். வெங்கடேஸ்வரன் Thursday, November 30, 2017 03:13 PM +0530  

பாடல் - 4

விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள்
                                                               நான்கும் அங்கம்
பண்ணினார் பண்ணின் மிக்க பாடலார் பாவம்
                                                              தீர்க்கும்
கண்ணினார் கண்ணின் மிக்க நுதலினார் காமர்
                                                              காய்ந்த
எண்ணினார் எண்ணின் மிக்க இடைமருது இடம்
                                                              கொண்டாரே

விளக்கம்:
விண்ணுலகம் என்றும் சொர்க்கம் என்றும் தேவர்கள் வாழும் உலகத்தை சொல்வதுண்டு. சிவபெருமான் உறையும் சிவலோகம், தேவலோகத்தை விடவும் சிறந்ததாக கருதப் படுவதால், விண்ணின் மிக்கார் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இவ்வாறு அவர் கூறுவது நமக்கு ஞானசம்பந்தப் பெருமானின் சாய்க்காடு தலத்து பதிகத்த்ன் முதல் பாடலை (2.43.1) நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் சம்பந்தர் சாய்க்காடுத் தலத்தின் தலைவனாகிய பரமனின் தாள் சார்ந்த அடியார்கள், அவனது புகழினைக் கற்றவர்களும் கேட்டவர்களும் ஆகிய அடியார்கள், மறுபடியும் பிறப்பெடுத்து மண்ணுலகம் புக மாட்டார்கள், பேரின்பம் அடைவார்கள், மனத்தால் சோர்வு அடையமாட்டார்கள், பசி துன்பம் இடுக்கண் ஆகியவற்றை அறிய மாட்டார்கள், விண்ணுலகம் செல்ல மாட்டார்கள் அதற்கும் உயர்ந்ததகிய சிவலோகம் செல்வார்கள் என்று குறிப்பிடுகின்றார். கண்=இடுக்கண்; 
    
    மண் புகார் வான்புகுவர் மனம் இளையார் பசியாலும்
    கண் புகார் பிணி அறியார் கற்றாரும் கேட்டாரும்
    விண் புகார் என வேண்டா வெண்மட நெடுவீதித்
    தண் புகார்ச் சாய்க்காட்டெம் தலைவன் தாள் சார்ந்தாரே

பண்ணின் மிக்க பாடல்கள்=மேம்பட்ட பண்களைக் கொண்ட பாடல்கள்; நுதல்=நெற்றி: எண்ணின் மிக்கார்=மேம்பட்ட எண்ணங்களை உடைய அடியார் மனதினில்; கண்=கருத்து; 
   
பொழிப்புரை:
தேவர்கள் வாழும் தேவலோகத்தை உடையவராகிய பெருமான், அந்த தேவலோகத்தை விடவும் உயர்ந்ததாகிய சிவலோகத்தைத் தனது இருப்பிடமாக உடையவர். நான்கு வேதங்களையும், அவற்றை பாதுகாக்கும் அரணாக உள்ள ஆறு அங்கங்களையும் உலகம் அறியச் செய்தவர் சிவபெருமான்; அவர் சிறப்பான பண்களை உடைய தேவாரப் பாடல்களையும் மற்ற பாடல்களையும் உடையவர் ஆவார்; அவர் அடியார்களின் பாவங்களைப் போக்கும் கருத்தை உடையவர்; இரண்டு கண்களுக்கும் மேலாக உள்ள மூன்றாவது கண்ணினை நெற்றியில் உடையவர் ஆவார்; அந்த நெற்றிக் கண்ணினால் காமனை வெகுண்டு எரித்த பெருமான், அடியார்களின் மேம்பட்ட எண்ணத்தில் உறைகின்றார். இத்தகைய பெருமைகளை உடைய பெருமான் இடைமருது நகரத்தினைத் தான் இருக்கும் இடமாகக் கொண்டவர் ஆவார்.  

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/aug/22/71-காடுடைச்-சுடலை-நீற்றர்---பாடல்-4-2755752.html
2755750 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 71. காடுடைச் சுடலை நீற்றர் - பாடல் 3 என். வெங்கடேஸ்வரன் Thursday, November 30, 2017 03:12 PM +0530  

பாடல் - 3
காருடைக் கொன்றை மாலை கதிர்மணி அரவினோடு
நீருடைச் சடையுள் வைத்த நீதியார் நீதியாய
போருடை விடையொன்று ஏற வல்லவர் பொன்னித் தென்பால்
ஏறுடைக் கமலம் ஓங்கு இடைமருது இடம் கொண்டாரே

விளக்கம்:
ஆவடுதுறை சென்று இறைவனை வழிபட்ட அப்பர் பிரான், அங்கிருந்து இடைமருது வந்ததாக பெரிய புராணம் கூறுகின்றது. ஆவடுதுறை தான், தருமதேவதை, பெருமானை வேண்டிக்கொண்டு அவரது வாகனமாக மாறிய தலம். ஆவடுதுறை தலத்தினை விட்டு இடைமருது தலத்திற்கு வந்த பின்னரும், அப்பர் பிரானின் நினைவிலிருந்து ஆவடுதுறை தலத்தின் சிறப்புகள் நீங்கவில்லை போலும். அந்த தலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியினை. இந்த பாடலில், நீதியாய விடை என்ற சொற்றொடர் மூலம் உணர்த்துகின்றார். நீதி வழுவாது இருந்தாலும் போர்க்குணம் கொண்ட விடை என்று கூறுவதை நாம் காணலாம்.

காருடைக் கொன்றை மாலை என்று கார் காலத்தில் அதிகமாக பூக்கும் கொன்றை மாலையின் தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது. கதிர்மணி=மாணிக்கக் கல்; நாகப் பாம்பின் கழுத்தில் மாணிக்க மணி இருப்பதாக நம்பிக்கை பண்டைய நாளில் நிலவி வந்தது. பொன்னித் தென்பால் இருந்த தலம் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவதன் மூலம், அவரது காலத்திலேயே, சோழ நாட்டுத் தலங்கள், காவிரி வடகரைத் தலங்கள் என்றும் காவிரித் தென் கரைத் தலங்கள் என்றும் பிரிக்கப்பட்டிருந்தன என்பதை நாம் அறிகின்றோம். கமல வேலி என்று பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்ட அப்பர் பிரான், இந்த பாடலிலும் தாமரை மலர்கள் அதிகமாக விளைந்து, நீர்வளமும் நிலவளமும் மிகுந்த தலமாக இடைமருது விளங்கியதை நமக்கு உணர்த்துகின்றார்.     
 
பொழிப்புரை:
கார்க்காலத்தில் மிகவும் அதிகமாக பூக்கும் கொன்றை மாலையை, மாணிக்கத்தைத் தன் பால் கொண்ட பாம்பினோடும், கங்கை நதியினோடும் தனது சடையில் வைத்தவர் சிவபெருமான். நீதிநெறி வழுவாது நீதிநெறியின் மொத்த உருவமாக விளங்கும் பெருமான், நீதி தேவதையின் வேண்டுகோளுக்கு இணங்கி, நீதி தேவதையை போர்க்குணம் கொண்ட இடபமாக மாற்றித் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டவர் ஆவார். அவர் காவரி நதியின் தென் கரையில் அமைந்ததும் அழகு நிறைந்ததும் ஆகிய இடைமருது நகரத்தினைத் தான் இருக்கும் இடமாகக் கொண்டவர் ஆவார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/aug/21/71-காடுடைச்-சுடலை-நீற்றர்---பாடல்-3-2755750.html
2755744 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 71. காடுடைச் சுடலை நீற்றர் - பாடல் 2 என். வெங்கடேஸ்வரன் Thursday, November 30, 2017 03:11 PM +0530  

பாடல் - 2
    முந்தையார் முந்தியுள்ளார் மூவர்க்கு முதல்வர் ஆனார்
    சந்தியார் சந்தியுள்ளார் தவநெறி தரித்து நின்றார்
    சிந்தையார் சிந்தையுள்ளார் சிவநெறி அனைத்தும் ஆனார்
    எந்தையார் எம்பிரானார் இடைமருது இடம் கொண்டாரே

விளக்கம்:

முந்தையார்=முன்னே தொன்றியவர்கள், பிரமன் மற்றும் திருமால் ஆகியோர்; முன்னே தோன்றியவர்களுக்கும் முன்னோனாக இருக்கும் தன்மை என்று அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுவது, நமக்கு மணிவாசகரின் திருவெம்பாவை பாடலை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருள் என்று இறைவனை மணிவாசகர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். உலகத்தில் தோன்றும் எந்த பொருளுக்கும் அழிவு என்பது நிச்சயம். எனவே இன்றோ அல்லது நாளையோ அல்லது அதற்கு பின்னரோ தோன்றும் எந்த பொருளும், அவை தோன்றும் சமயத்தில் புதியது என்ற உணர்வினை நம்மிடம் ஏற்படுத்தும். எனினும் அத்தகைய பொருட்கள் அழிந்த பின்னரும், இருப்பவன் இறைவன் என்பதால், இறைவனே என்றும் புதியவனாக, இனிமேல் தோன்ற இருக்கும் பொருட்களுக்கும் புதியவனாக இருக்கின்றான் என்று மணிவாசகர் இந்த பாடலில் உணர்த்துகின்றார்.     
    
முன்னை பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாக பெற்ற உன் சீர் அடியோம்    
உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
இன்ன வகையே எமக்கு எங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய் 

பாங்கு=அருகில், துணையாக; திருவெம்பாவை பதிகத்தில் முதல் எட்டு பாடல்களில், ஒருவரை ஒருவர் எழுப்பிக்கொண்டு நீராடச் செல்லும் தோழிகள், அனைவரும் சேர்ந்து பாடும் ஒன்பதாவது பாடலாக மேற்கண்ட பாடல் அமைந்துள்ளது. பெருமானது அடியார்களைத் தவிர வேறு எவரையும் வணங்க மாட்டோம் என்று சொல்லும் தோழிகள், சிவனடியாரையே தங்களது கணவராக ஏற்றுக் கொள்வோம் என்றும், அவர் இடும் கட்டளைகளை நிறைவேற்றுவதே தங்களது பணியாக ஏற்றுக்கொண்டு மிகவும் மகிழ்சியுடன் செய்வோம் என்றும், அத்தகைய வாய்ப்பு தங்களது வாழ்க்கையில் கிடைத்தால், எந்த குறையும் தங்களுக்கு இல்லை என்றும் கூறுவதாக அடிகளார் இந்த பாடலில் கூறுகின்றார். திருமணத்திற்கு முன்னர், சிவபெருமானது அடியாராக இருந்த தாங்கள், திருமணத்திற்கு பின்னரும் அவ்வாறே இருக்க வேண்டும் என்று ஆசைப் படுவதையும், அந்த வாய்ப்பினை நல்குமாறு இறைவனிடம் வேண்டுவதையும் நாம் இந்த பாடலில் உணரலாம். 

மூவர்க்கும் முதல்வர்=அரி, அயன், அரன் ஆகிய மூவர்க்கும் முதலாக இருப்பவர் சிவபெருமான். சந்தி=இரண்டு பொழுதுகள் சேரும் சமயம், இரவு முடித்து பகல் தோன்றும் சமயமாகிய காலை நேரம், நண்பகல் முடிந்து பின்பகல் தோன்றும் உச்சி நேரம், பகல் முடிந்து இரவு தோன்றும் சமயமாகிய மாலை நேரம். இந்த மூன்று நேரங்களிலும் சந்தியாவந்தனம் செய்து இறைவனை தியானிப்பது அந்தணர்கள் வழக்கம். அந்த மூன்று நேரங்களாகவும், சந்தியாவந்தனம் செய்யும் அந்தணர்களின் மனதினில் உள்ளவராகவும் இறைவன் இருக்கும் தன்மை, சந்தியார் சந்தியுள்ளார் என்ற தொடரால் குறிப்பிடப் படுகின்றது.   

சந்தியா வந்தனம் செய்வோர்கள், உடலால் பல செயல்கள் செய்வது மட்டுமன்றி மந்திரங்களையும் ஓதுவார்கள். எனவே இவர்கள், சந்தியாவந்தனம் மூலமாக இறைவனை வழிபடுவது சரியை மற்றும் கிரியை மூலம் வழிபடுவதாக கருதப்படுகின்றது. தவநெறி தரித்துள்ள முனிவர்கள் வழிபடுவது யோக முறையினையும், யோகத்தால் அவர்கள் அடையும் ஞானம் ஞான நெறியை உணர்த்துகின்றது. இவ்வாறு நான்கு நெறிகளிலும் வழிபடும் அடியவர்கள் நெஞ்சினில் இறைவன் இருப்பது இந்த பாடலில் உணர்த்துப் படுகின்றது.           

பொழிப்புரை:

உலகிலுள்ள மூத்தவர்களுக்கும் மூத்தவராக இருக்கும் சிவபெருமான், அரி அயன் உருத்திரன் ஆகிய மூவருக்கும் முதல்வராக விளங்குகின்றார். மூன்று பொழுதுகளாக விளங்குவது அன்றியும் ஒரு பொழுதுக்கும் மற்றொரு பொழுதுக்கும் இடையில் உள்ள நேரமாகவும் விளங்கும் சிவபெருமான், மூன்று வேளைகளிலும் சந்தியாவந்தனம் செய்து தன்னை தியானிக்கும் அந்தணர்களின் மனதினில் உறைகின்றார். மேலும் தவக்கோலம் பூண்டு தவம் செய்து ஞானத்தை அடையும் முனிவர்கள் மற்றும் துறவிகளின் சிந்தனையில் பொருந்தி உறைகின்றார். மற்றும் மங்கலமான நெறிகள் அனைத்திலும் பொருந்தி விளங்கும் சிவபெருமான், எமக்கு தந்தையாகவும் எனது தலைவனாகவும் விளங்குகின்றார். அவர் தான் இடைமருது நகரத்தினைத் தான் இருக்கும் இடமாகக் கொண்டவர் ஆவார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/aug/20/காடுடைச்-சுடலை-நீற்றர்---பாடல்-2-2755744.html
2755742 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 71. காடுடைச் சுடலை நீற்றர் - பாடல் 1 என். வெங்கடேஸ்வரன் Thursday, November 30, 2017 03:10 PM +0530  

முன்னுரை:

திருவாவடுதுறை தலத்து இறைவனை வழிபாட்டு பல பதிகங்கள் பாடிய அப்பர் பிரான் அதன் பின்னர் இடைமருது தலத்திற்கு வருகின்றார். இடைமருது தலத்தில் பல நாட்கள் தங்கி உழவாரப் பணிகள் செய்த அப்பர் பிரான், தலத்து இறைவன் மீது அருளிய நேரிசைப் பதிகம் தான் இந்த பதிகம். ஒவ்வொரு பாடலிலும் இறைவனாரின் பெருமையை உணர்த்தி, அத்தகைய பெருமைகளை உடைய இறைவன், இடைமருது தலத்தினை இடமாகக் கொண்டான் என்று கூறும் முகமாக, இடைமருது இடம் கொண்டாரே என்று ஒவ்வொரு பாடலையும் அப்பர் பிரான் முடிக்கின்றார்.  

பாடல் 1: 
    
    காடுடைச் சுடலை நீற்றர் கையில் வெண்டலையர் தையல்
    பாடுடைப் பூதம் சூழப் பரமனார் மருத வைப்பில்
    தோடுடைக் கைதையோடு சூழ் கிடங்கு அதனைச் சூழ்ந்த
    ஏடுடைக் கமல வேலி இடைமருது இடம் கொண்டாரே 

 
விளக்கம்:
காடுடைய சுடலை நீற்றர் என்று அப்பர் பிரான் கூறுவது நமக்கு திருஞானசம்பந்தரின் முதல் பதிகத்தின் முதல் பாடலை நினைவூட்டுகின்றது. காடுடைய சுடலைப் பொடி பூசிய பெருமான் தனது உள்ளம் கவர்ந்த கள்வர் என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் (1.1.1) கூறுகின்றார் 
    
    தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூ வெண்மதி சூடி
    காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
    ஏடுடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த
    பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே 

மேற்கண்ட பாடலில் திருஞான சம்பந்தர், பெருமான் புரியும் ஐந்து தொழில்களை குறிப்பிடுகின்றார். தருமதேவதை எப்போதும் சிவபிரானுடன் இணைந்து இருக்கவேண்டும் என்ற விருப்பம் கொண்டு, தன்னை வாகனமாக ஏற்றுக் கொள்ளுமாறு பெருமானிடம் வேண்ட, பெருமானும் அதற்கு இணங்கி தருமதேவதையை இடபமாக மாற்றிய தன்மை படைத்தல் தொழிலையும் (விடையேறி), முற்றிலும் தேய்ந்து வந்து அணுகிய சந்திரனுக்கு அடைக்கலம் கொடுத்த செயல் காக்கும் தொழிலையும் (தூ வெண்மதி சூடி), முற்றூழிக் காலத்தில் அனைத்து உயிர்களும் தன்னிடம் ஒடுங்கிய பின்னர் உலகப் பொருட்களும் உடலும் அழிந்து எரிந்த சாம்பலை பூசிக் கொண்ட செயல் அழிக்கும் தொழிலையும் (காடுடைய சுடலைப் பொடி பூசி), அடுத்தவர் பொருளினைக் கவரும் தொழிலைச் செய்யும் திருடன் தான் திருடிய பொருளை மறைப்பது போன்று ஞான சம்பந்தரின் உள்ளத்தைக் கவர்ந்து மறைத்தது மறைத்தல் தொழிலையும் (உள்ளம் கவர் கள்வன்), பிரமனுக்கு அருள் செய்த செயல் அருளும் தொழிலையும் (அருள் செய்த) குறிப்பதாக விளக்கம் அளிப்பார்கள். 

இதழ்கள் ஒன்றின் மேல் ஒன்று உள்ள தாமரை மலரை ஏடுடைய மலர் என்று ஞான சம்பந்தர் மேற்கண்ட பாடலில் குறிப்பிட்டது போன்று, ஏடுடைக் கமலம் என்று அப்பர் பிரானும் இந்த பதிகத்தின் பாடலில் குறிப்பிடுவதை நாம் உணரலாம். பாடு=பக்கம், அருகில்; பாடுடைத் தையல்=உடலின் ஒரு பாகத்தில் அமர்ந்துள்ள பார்வதி தேவி; கிடங்கு=அகழி; கைதை=தாழை மலர் தோடு=மடல்கள்: இந்த பாடலில் தலத்தில் அகழி இருந்ததாகவும், அகழியில் தாமரைக் கொடிகள் இருந்ததாகவும் அப்பர் பிரான் கூறுகின்றார். தாமரைக் கொடியின் தண்டுகள் ஒன்றுக்கொன்று பின்னிக் கொண்டிருக்கும் நிலையில், கொடிகளில் சிக்கிக் கொள்ளாமல் நீந்திச் செல்வது மிகவும் கடினமான செயல் என்பதால், அகழியில் இருந்த தாமரைக் கொடிகள் வேலியாக அமைந்த நகரம் இடைமருது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பரமன்=அனைவர்க்கும் மேலானவர்; 
  
பொழிப்புரை:
சுடுகாட்டில் உள்ள பிணங்களின் சாம்பலை பூசியவராக, தனது கையில் உலர்ந்து வெண்மை நிறத்தில் காணப்படும் பிரமனின் கபாலத்தை ஏந்தியவராக, தனது உடலின் ஒரு பாகத்தில் உமையம்மையை ஏற்றவராக, பூதங்கள் சூழ இருக்கும் பெருமான், அனைவர்க்கும் உயர்ந்தவர் ஆவார். மடல்களை உடைய தாழை மலர்கள் நிறைந்ததும்  அகழிகளில் குதித்து கரையேற முயலும் பகைவர்களைத் தடுக்கும் வல்லமை கொண்ட கொடிகள் கொண்ட, இதழ்கள் ஒன்றின் மேல் ஒன்று அடுக்காக அமைந்த தாமரை மலர்கள் நிறைந்த அகழியினை அரணாகக் கொண்டதும் ஆகிய இடைமருது நகரத்தினைத் தான் இருக்கும் இடமாகக் கொண்டவர் சிவபெருமான் ஆவார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/aug/19/காடுடைச்-சுடலை-நீற்றர்---பாடல்-1-2755742.html
2817298 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 80. ஒன்று கொலாம் - பாடல் 9 என். வெங்கடேஸ்வரன் Thursday, November 30, 2017 12:00 AM +0530  

பாடல் 9:

    ஒன்பது போல் அவர் வாசல் வகுத்தன 
    ஒன்பது போல் அவர் மார்பினில் நூலிழை
    ஒன்பது போல் அவர் கோலக் குழற்சடை
    ஒன்பது போல் அவர் பாரிடம் தானே


விளக்கம்:


பாரிடம் என்பதற்கு அகன்ற பூமி என்று பொருள் கொண்டு, அவர் படைத்த பூமியின் கண்டங்கள் ஒன்பது என்றும் விளக்கம் கூறுவார்கள். நவகண்ட பூமிப் பரப்பு என்று தாயுமானவர் ஒரு பாடலில் குறிக்கின்றார்.  

பொழிப்புரை:

சிவபெருமான் நமது உடலுக்கு வைத்துள்ள வாசல்கள் ஒன்பது, அவை இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு நாசித் துவாரங்கள், வாய், கருவாய், எருவாய் ஆகியவை. அவர் தமது திருமார்பில் அணிந்துள்ள பூணூலின் இழைகள் ஒன்பது. (முப்புரி நூல் எனப்படும்). அவரது அழகிய சடைகளின் எண்ணிக்கை ஒன்பது. அவரிடம் பணி செய்யும் பூதப் படையினர் ஒன்பது வகையினர் ஆவார்கள்.

]]>
http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/nov/30/80-ஒன்று-கொலாம்---பாடல்-9-2817298.html
2817242 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 80. ஒன்று கொலாம் - பாடல் 8 என். வெங்கடேஸ்வரன் Wednesday, November 29, 2017 09:54 AM +0530  

பாடல் 8:

    எட்டு கொலாம் அவர் ஈறில் பெருங்குணம்
    எட்டு கொலாம் அவர் சூடும் இன மலர்
    எட்டு கொலாம் தோள் இணையாவன
    எட்டு கொலாம் திசை ஆக்கினதாமே

 
விளக்கம்:

இறைவன் எண்குணத்தான் என்று ஒரு திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ளது

கோளில் பொறியின் குணம் இலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. 


இந்த பாடலுக்கு உரை கண்ட பரிமேலழகர் எட்டு குணங்களாவன, தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினனாக இருத்தல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைத்தல், முடிவில்லாத ஆற்றல் உடைமை, வரம்பு இல்லாத இன்பம் உடைத்தல். இந்த எட்டு குணங்களே சைவ சித்தாந்தத்தில் சிவபிரானது குணங்களாக கூறப்படுகின்றன. 

சிவபெருமான் விரும்பி அணிகின்ற எட்டு மலர்கள், புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவட்டை, குவளை, பாதிரி, அலரி, செந்தாமரை. அக மலர்கள் என்று நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய குணங்கள் எட்டினை குறிப்பிடப் படுகின்றன.  கொல்லாமை, இரக்கம், ஐம்பொறிகளை அடக்குதல், பொறுமை, தவம், வாய்மை, அன்பு, அறிவு என்பனவாகும். நாம் அனைவரும் இந்த குணங்களைக் கொண்டு, அக மலர்களாகிய இவைகளால் வழிபடுவதையே கடவுள் விரும்புகின்றார்.

நான்கு முகங்கள் கொண்ட இறைவனை எண்தோளான் என்று பல தேவாரப் பதிகங்கள் குறிப்பிடுகின்றன. கருகாவூர் மீது அப்பர் பிரான் அருளிய குருகாம் வயிரமாம் என்று தொடங்கும் பதிகத்தின் (6.15) ஒன்பதாவது பாடலில், சிவபெருமான் எண்தோளான் என்று குறிப்பிடப்படுகின்றார். விட்டுருவம்=தனது உருவத்தை விட்டு நீங்கி; சூழல்=நிலை; பாணி=தாளம், பட்டுருவ தோல்=பட்டு போன்று மென்மையான தோல்; கீண்டான்=கிழித்தவன்; கட்டுருவம்=அழகான உருவம் கொண்ட மன்மதன்; கடியான்=கடிந்தவன், கோபித்தவன், கண்=வழிகாட்டி. பல வல்லமைகள் படைத்து இருந்தாலும். அடியார்களுக்கு மிகவும் எளியானாக, அவர்களுக்கு வழிகாட்டியாக சிவபெருமான் விளங்குகின்றான் என்று இங்கே அப்பர் பெருமான் கூறுகின்றார். 

விட்டுருவம் கிளர்கின்ற சோதியானாம்
         விண்ணவர்க்கும் அறியாத சூழலானாம்
பட்டுருவ மால் யானைத் தோல் கீண்டானாம்
          பலபலவும் பாணி பயின்றான்             தானாம்
எட்டுருவ மூர்த்தியாம் எண்தோளானாம்
          என்னுச்சி மேலானாம் எம் பிரானாம்
கட்டுருவம் கடியானைக் காய்ந்தானாகும்
          கண்ணாம் கருகாவூர் எந்தை தானே

எண்தோள்களையும், மூன்று கண்களையும் உடைய சிவபெருமான், தன்னை ஆட்கொண்டு தனது உடல், பொருள், ஆவி மூன்றினையும் தனதாக்கிக் கொண்டமையால், தனக்கு ஏதும் இடையூறு இனி இல்லை என்று கூறும் மணிவாசகர், தனக்கு நன்மை, தீமை, எது ஏற்பட்டாலும் தனக்கு அதனால் ஏதும் பாதிப்பு இல்லை என்றும் கூறுகின்றார்.

அன்றே என் தன் ஆவியும் உடலும்
                     உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னை ஆட்கொண்டபோதே
                     கொண்டிலையோ
இன்றோர் இடையூறு எனக்கு உண்டோ எண்தோள்
                     முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ
                     இதற்கு நாயகமே  

பொழிப்புரை:

சிவபிரானின் அழிவில்லாத குணங்கள் எட்டு. அவர் விரும்பி சூடும் மலர்கள் எட்டு. ஒன்றுக்கொன்று இணையாக காணப்படும் அவரது தோள்கள் எட்டு. அவர் ஆக்கிய திசைகள் எட்டு.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/nov/29/80-ஒன்று-கொலாம்---பாடல்-8-2817242.html
2816541 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 80. ஒன்று கொலாம் - பாடல் 7 என். வெங்கடேஸ்வரன் Tuesday, November 28, 2017 10:12 AM +0530  

பாடல் 7:

    ஏழு கொலாம் அவர் ஊழி படைத்தன
    ஏழு கொலாம் அவர் கண்ட இருங்கடல்
    ஏழு கொலாம் ஆளும் உலகங்கள்
    ஏழு கொலாம் இசை ஆக்கினதாமே

விளக்கம்:

ஒவ்வொரு ஊழிக் காலத்தின் தொடக்கத்திலும் சிவபெருமானால் படைக்கப்படும் உயரினங்கள், தாவரம், நீரில் வாழ்வன, ஊர்வன, நடப்பன, பறப்பன, மனிதன், தேவர் ஆகிய ஏழு வகைகளில் அடங்கும். சிவபிரானால் தோற்றுவிக்கப்பட்ட கடல்கள் ஏழு; அவையாவன, உப்பு, தேன், தயிர், பால், நெய், கருப்பஞ்சாறு, மற்றும் நீர்.  அவர் ஆளுகைக்கு உட்பட்ட கீழ் மேல் உலகங்கள் ஏழு ஆகும். அவையாவன; உலகங்கள்: பூலோகம், புவர்லோகம், சுவர்கலோகம், ஜனலோகம், தவலோகம், மகாலோகம் மற்றும் சத்யலோகம். கீழேழ் உலகங்கள், அதலம், விதலம், சுதலம், நிதலம். தராதலம், இரசாதலம், பாதாளம். ஏழு வகையான இசைகள், குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம். தமிழ் மொழியில் இவ்வாறு அழைக்கப்படும் இந்த ஏழு இசைகள், வடமொழியில் சஞ்சமம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாரம் என்று அழைக்கப்படுகின்றன. சுருக்கமாக சரிகமபதநி என்று கூறுவார்கள்

ஏடுடைய மேல் உலகோடு ஏழ் கடலும் சூழ்ந்த நாடுடைய நம்பெருமான் என்று சம்பந்தப் பெருமானும் தனது திருநள்ளாறு (போகமார்த்த பூண்முலையாள்) பதிகத்தில் குறிப்பிடுவது இங்கே நினைவு கூறத்தக்கது.

பொழிப்புரை:

ஒவ்வொரு ஊழிக் காலத்தின் தொடக்கத்திலும் இறைவன் படைக்கும் உயிரினங்கள் ஏழு வகைப் பட்டன. அவர் படைத்தவை ஏழு கடல்கள், அவர் ஆட்சி செய்வன ஏழு உலகங்கள். அவர் தோற்றுவித்த இசை ஏழு வடிவங்கள் உடையவை. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/nov/28/80-ஒன்று-கொலாம்---பாடல்-7-2816541.html
2815840 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 80. ஒன்று கொலாம் - பாடல் 6 என். வெங்கடேஸ்வரன் DIN Monday, November 27, 2017 10:33 AM +0530  

பாடல் 6:

    ஆறு கொலாம் அவர் அங்கம் படைத்தன
    ஆறு கொலாம் அவர்தம் மகனார் முகம்
    ஆறு கொலாம் அவர் தார் மிசை வண்டின் கால்
    ஆறு கொலாம் சுவை ஆக்கினதாமே

 
பொழிப்புரை:

சிவபிரான் படைத்த வேதத்தின் அங்கங்கள், சிட்சை, கல்பம், வியாகரணம், நிருத்தம், சந்தம், சோதிடம் ஆகிய ஆறு. அவரது மகனார் முருகனின் முகங்கள் ஆறு. அவர் சூடியிருக்கும் மாலையைச் சூழும் வண்டுகளின் கால்கள் ஆறு. அவரால் ஏற்படுத்தப்பட்ட சுவைகள், இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உப்பு, காரம் என்னும் ஆறு வகையில் அடங்குவன.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/18/w600X390/1689.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/nov/27/80-ஒன்று-கொலாம்---பாடல்-6-2815840.html
2815839 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 80. ஒன்று கொலாம் - பாடல் 5 என். வெங்கடேஸ்வரன் DIN Sunday, November 26, 2017 12:00 AM +0530  

பாடல் 5:

    அஞ்சு கொலாம் அவர் ஆடரவின் படம்
    அஞ்சு கொலாம் அவர் வெல் புலன் ஆவன
    அஞ்சு கொலாம் அவர் காயப்பட்டான் கணை
    அஞ்சு கொலாம் அவர் ஆடினதாமே

பொழிப்புரை:

சிவபிரான் தன் திருமேனியில் ஆபரணமாக அணிந்திருக்கும் நாகத்தின் படங்கள் ஐந்து. சிவபிரான் வென்ற புலன்கள், மெய், வாய், கண் மூக்கு செவி என்று ஐந்தாவன. சிவபிரானால் காயப்பட்ட மன்மதன் பயன்படுத்தும் பூங்கணைகள், தாமரை, அசோகு, மா, முல்லை மற்றும் கருங்குவளை ஆகிய ஐந்து பூக்கள். சிவபிரான் விரும்பி நீராடுவது, பசுக்களிலிருந்து பெறப்படும் பால், தயிர், நெய், கோசலம் மற்றும் கோமியம் ஆகியவற்றால் செய்யப்படும் பஞ்சகவியம் ஆகும்.  . 
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/nov/26/80-ஒன்று-கொலாம்---பாடல்-5-2815839.html
2815838 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 80. ஒன்று கொலாம் - பாடல் 4 என். வெங்கடேஸ்வரன் Saturday, November 25, 2017 12:00 AM +0530  

பாடல் 4:

    நாலு கொலாம் அவர் தம் முகமாவன
    நாலு கொலாம் சனனம் முதல் தோற்றமும்
    நாலு கொலாம் அவர் ஊர்தியின் பாதங்கள்
    நாலு கொலாம் மறை பாடினதாமே

விளக்கம்:

எண்தோளன் என்று பல தேவாரப் பதிகங்களிலும் எண்தோள் முக்கண் எம்மானே என்று மணிவாசகராலும் போற்றப்படும் சிவபிரான் நான்கு முகங்களை உடையவன். அதனால் தான் எண்தோளன் என்று அழைக்கப்படுகின்றான். அப்பர் பெருமான் திரு ஆலவாய் தலத்தின் மீது அருளிய வேதியா வேத கீதா என்று தொடங்கும் பதிகத்தின் இரண்டாம் பாடலில் சிவபெருமானை நான்முகத்தான் என்றே அழைக்கின்றார்.

நம்பனே நான்முகத்தாய் நாதனே ஞான மூர்த்தீ 
என்பொனே ஈசா என்றென்று ஏத்தி நான் ஏசற்று
                                                                                      என்றும்   
பின்பினே திரிந்து நாயேன் பேர்த்தினிப் பிறவா
                                                                                      வண்ணம்
அன்பனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே

உயிர்கள் நான்கு விதமான கருவிகள் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன. கருப்பை மூலம் குட்டி போட்டு பால் கொடுத்தல், முட்டையிட்டு குஞ்சு பொறித்தல், வியர்வை மூலம் இனப்பெருக்கம் செய்தல், உமிழ்நீர் மூலம் இனப்பெருக்கம் செய்தல். இவைகளை வடமொழியில் அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் என்று சொல்வார்கள். இந்த நான்கு வகைகளை அப்பர் பெருமான் இங்கே பிறப்பின் முதல் தோற்றம் என்று குறிப்பிடுகின்றார். 
 
பொழிப்புரை:

சிவபிரானின் திருமுகங்கள் நான்கு. உயிர்கள் தோன்றுவதற்கான கருவிகள் முட்டை, கருப்பை, வியர்வை, மற்றும் உமிழ்நீர் என்று நான்கு வகையாவன. சிவபிரானது ஊர்தியாகிய  இடபத்தின் கால்கள் நான்கு. அவர் பாடிய மறைகள் நான்கு. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/nov/25/80-ஒன்று-கொலாம்---பாடல்-4-2815838.html
2814034 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 80. ஒன்று கொலாம் - பாடல் 3 என். வெங்கடேஸ்வரன் Friday, November 24, 2017 09:37 AM +0530 பாடல் 3:

    மூன்று கொலாம் அவர் கண் நுதல் ஆவன
    மூன்று கொலாம் சூலத்தின் மொய்யிலை
    மூன்று கொலாம் கணை கையது வில் நாண்
    மூன்று கொலாம் புரம் எய்தனதாமே

பொழிப்புரை:

அவரது நெற்றிக்கண்ணையும் சேர்த்து சிவபிரானின் கண்கள் மூன்று. அவர் ஏந்தியிருக்கும் சூலம் மூன்று இலைகளைக் கொண்டது. அவர் கையில் திகழும் வில், மூன்று வேறு வேறு பொருட்களை (வில்லாக இருக்கும் மேருமலை, நாணாகத் திகழ்வது வாசுகி பாம்பு, அம்பாக இருப்பது திருமால் என்று மூன்று பொருட்களை) தனது அங்கங்களாக உடையது. அந்த வில்லில் உள்ள அம்பு எய்யப்பட்டது மூன்று புரங்களை நோக்கி.   . 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/nov/24/80-ஒன்று-கொலாம்---பாடல்-3-2814034.html
2813442 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 80. ஒன்று கொலாம் - பாடல் 2 என். வெங்கடேஸ்வரன் Thursday, November 23, 2017 10:22 AM +0530  

பாடல் 2:

    இரண்டு கொலாம் இமையோர் தொழு பாதம்
    இரண்டு கொலாம் இலங்கும் குழை பெண் ஆண்
    இரண்டு கொலாம் உருவம் சிறு மான் மழு
    இரண்டு கொலாம் அவர் எய்தினதாமே

விளக்கம்:

தோடுடைய செவியன் என்று ஞானசம்பந்தப் பெருமான் பாடியதற்கு ஏற்ப, ஒரு காதினில் குழையையும் மற்றொரு காதினில் தோட்டினையும் அணிகலனாக கொண்டவர் சிவபெருமான். இந்த செய்தியையே அப்பர் பிரான் இங்கே இரண்டு கொலாம் இலங்கும் குழை என்று குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை:

இமையோர் தொழும் சிவபிரானின் பாதங்கள் இரண்டு. அவரது காதினில் அணிந்திருக்கும் ஆபரணம் தோடு, குழை என்று இரண்டு வகையானது. அவரது உருவம் பெண் ஆண் என்று இரண்டு தன்மையையும் கொண்டது. அவர் திருக்கைகளில் ஏந்தியிருக்கும் பொருள்கள் இரண்டு, மான் மற்றும் மழு ஆகும். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/nov/23/80-ஒன்று-கொலாம்---பாடல்-2-2813442.html
2812834 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 80. ஒன்று கொலாம் - பாடல் 1 என். வெங்கடேஸ்வரன் Wednesday, November 22, 2017 10:20 AM +0530
பின்னணி:


திருப்பழனம் சென்ற அப்பர் பெருமான் அங்கிருந்து அருகிலிருந்த திங்களூர் என்ற தலத்திற்குச் செல்கின்றார். திருநாவுக்கரசரைத் தனது தெய்வமாக ஏற்றுக்கொண்ட அப்பூதி அடிகள் என்ற நாயனார் வாழ்ந்து வந்த தலம் திங்களூர். திங்களூர் வந்த அப்பர் பிரான் கடைத்தெருவில் திருநாவுக்கரசர் மருத்துவசாலை, திருநாவுக்கரசர் தண்ணீர் பந்தல், திருநாவுக்கரசர் அன்னதான சாலை என்று பல இடங்களில் தனது பெயரைக் கண்டு வியப்பு அடைந்து, அவைகளை நிறுவியவர் யார் என்று வினவுகின்றார். அதற்கு அவற்றை நிறுவியவர் அப்பூதி அடிகள் என்றும் அவரது இல்லம் அருகில் உள்ளது என்றும் அங்குள்ளோர் விடையளித்தனர். அப்பூதி அடிகளின் இல்லம் சென்று அவரை சந்தித்த அப்பர் பிரான், அவர் நிறுவிய அமைப்புகளுக்கு அவரது பெயரை இடாமல் வேறு ஒருவர் பெயரை இட்டது ஏன் என்று கேட்டார்.

வந்தவர் நாவுக்கரசர் என்பது தெரியாமல், சைவ சமயம் மறுபடியும் தழைப்பதற்கு காரணமாகவும், சிவபிரானின் அருளை பூரணமாகப் பெற்றதால் சமணர்களின் சூழ்ச்சியிலிருந்து தப்பிய அடிகளாரை வேறு எவரோ ஒருவர் என்று கூறிய நீர், சைவர் தானா, நீர் யார் எங்கிருந்து வருகின்றீர் என்று அப்பூதி அடிகள் மிகவும் கோபமாக கேட்டார். சமண சமயத்தில் பல வருடங்கள் கழித்த பின்னர் சூலை நோய் கொடுக்கப்பட்டு சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்ட அடியேன் யான் என்று வந்தவர் பதில் கூறினார். வந்தவர் திருநாவுக்கரசர் என்பதை அறிந்த அப்பூதி அடிகளார் மிகவும் மகிழ்ச்சி அடைந்து அவர் தமது இல்லத்தில் அமுது அருந்தவேண்டும் என்று வேண்டினார். 

அப்பர் பிரானுக்கு அமுது படைப்பதற்காக கொல்லையிலிருந்து வாழையிலை அறுக்கச் சென்ற அடிகளாரின் மூத்த மகன், பாம்பு தீண்டவே இறந்தான். மகன் இறந்த விவரம் அறிந்தால் அப்பர் பிரான் உணவு கொள்ளமாட்டார் என்று பயந்து, மகன் இறந்ததை மறைத்து, அப்பூதி அடிகள் அப்பர் பிரானுக்கு அமுது படைக்க முற்பட்டார். உணவு உட்கொள்ளும் முன்னர், இல்லத்தில் இருந்தவர்கள் அனைவருக்கும் திருநீறு அணிவிக்கத் திருவுள்ளம் கொண்ட அப்பர் பிரான், அங்கே அடிகளாரின் மூத்த மகன் இல்லாமல் போகவே அவரையும் அழைத்து வருமாறு கோரினார். அப்பூதி அடிகளார் அவன் இப்போது உதவான் என்று மறுமொழி கூறவே அதனைக் கேட்ட அப்பர் பிரான் நடந்ததை கூறுமாறு அடிகளாரை பணித்தார். தனது மூத்த மகனுக்கு நேர்ந்ததை உள்ளவாறு அப்பூதி அடிகளார் உரைக்கவே, அப்பர் பிரான் இறந்த மகனின் உடலை திருக்கோயில் முன் கிடத்தி, இந்த பதிகத்தை பாடினார்.  

இந்தப் பதிகத்தின் எந்த பாடலிலும் அப்பர் பிரான் சிவபிரானிடம் எந்த வேண்டுகோளையும் விடுக்கவில்லை. சிறுவனை பாம்பு கடித்து அவன் இறந்த செய்தியும் நேரடியாக சொல்லப் படாமல், கடைப் பாடலில் பாம்பின் பல் குறிப்பிடப்பட்டு குறிப்பால் உணர்த்தப்படுகின்றது. அனைத்துப் பாடல்களிலும் சிவபிரானின் அடையாளங்களும், அவனது புகழ்ச் செயல்களும் கூறப்படுகின்றன. வேண்டத் தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுதும் தருவோய் நீ என்று மணிவாசகப் பெருமான் பாடியதற்கு ஏற்ப, நமது தேவைகளை, நாம் சொல்லாமலே அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்த சிவபிரானிடம் நாம் தனியாக வேண்டுகோள் ஏதும் விடுக்க வேண்டிய அவசியம் இல்லை; அவனது புகழினைப் பாடினால் போதும் நமது குறைகள் தீர்க்கப் படும் என்று அப்பர் பிரான் இந்த பதிகத்தின் மூலம் நமக்கு உணர்த்துகின்றார் போலும் பத்து பாடல்களும் பாடி முடிக்கப்பட்ட பின்னர் அப்பர் பிரானின் உள்ளக் கிடக்கையை அறிந்து கொண்ட சிவபிரான், சிறுவனின் உடலில் இருந்த நஞ்சினை நீக்குகின்றார்.

இந்த சம்பவத்தை குறிப்பிடும் சேக்கிழார் பெருமான், பதிகம் எடுத்து உடையான் சீர் பாடப் பின்றை விடம் போய் நீங்கிப் பிள்ளை உணர்ந்து எழுந்திருந்தான் என்று குறிப்பிடுகின்றார்.

    அன்று அவர்கள் மறைத்தனுக்கு
                அளவிறந்த கருணையராய்க்
    கொன்றை நறுஞ்சடையார் தம்
               கோயிலின் முன் கொணர்வித்தே
    ஒன்று கொலாம் எனப் பதிகம்
               எடுத்து உடையான் சீர் பாடப்  .              
    பின்றை விடம் போய் நீங்கிப்
               பிள்ளை உணர்ந்து எழுந்து இருந்தான்

ஐந்தாம் திருமுறையில் உள்ள ஒன்று வெண்பிறை என்று தொடங்கும் குறுந்தொகைப் பாடலும், இந்த பதிகம் போன்று, ஒன்று முதல் பத்து வரை உள்ள சொற்களை முதற்சொல்லாகக் கொண்டுள்ள அடிகளை உடைய பதிகமாகும். இந்த பதிகத்தில் வரும் கொலாம் என்பது பொருள் ஏதும் இல்லாத அசைச் சொல் ஆகும்.
  
பாடல் 1:

    ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர் வரை
    ஒன்று கொலாம் உயரும் மதி சூடுவர்
    ஒன்று கொலாம் இடு வெண்தலை கையது
    ஒன்று கொலாம் அவர் ஊர்வது தானே

 

விளக்கம்:

ஒன்று என்ற சொல் ஒப்பற்றது என்ற பொருளில் இந்த பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாடலின் முதல் அடியில் சிவபிரானது உயர்ந்த உள்ளத்தை குறிப்பிடுவதன் மூலம் அப்பர் பிரான், அடியார்களுக்கு சிவபிரான் உதவும் திறத்தை உணர்த்துகின்றார். பாம்பின் விடம் மிகவும் கொடிய வெப்பத்தை உண்டுபண்ணும். அதற்கு நேர்மாறான குளிர்ச்சியை உடைய சந்திரனை சூடியிருக்கும் சிவபிரான் என்று குறிப்பிடுவதன் மூலம், விடத்தின் தன்மையை போக்கக் கூடிய ஆற்றல் படைத்தவர் சிவபிரான் என்பதையும் இங்கே குறிப்பால் உணர்த்துகின்றார். சிவபிரானின் சென்னியில் இடம் பெற்றமையால், கலைகள் அனைத்தும் தேய்ந்து அழியும் நிலையில் இருந்த சந்திரன், அழியாமல் நிலைத்து நிற்கும் நிலைக்கு உயர்ந்ததால், உயரும் மதி என்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. சிவபெருமான் கையில் ஏந்தியிருக்கும் பிரமனின் தலை, உலர்ந்ததால் வெண்தலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிவபெருமான் பலி ஏற்று உலகம் திரிவது, யான் எனது என்று நாம் உணரும் நமது செருக்கினை தனது பிச்சைப் பாத்திரத்தில் ஏற்றுக்கொள்வதற்காகவே என்று பெரியோர்கள் கூறுவார்கள். யான் எனது என்ற தற்போதம் நீங்கிய நிலையில், நமக்கு இருவினை ஒப்பு என்ற குணம் வந்து சேரும். அத்தகைய குணத்தினைப் பெற்று நாம் மேலும் வினைகளைச் சேர்த்து கொள்ளாமல் இருக்கும் நிலையினையே இறைவன் விரும்புகின்றான். இத்தகைய உயர்ந்த எண்ணம் கொண்டு பலி ஏற்பதால் அவரது பலிப் பாத்திரம் மிகவும் ஒப்பற்றதாக விளங்குகின்றது. தான் எப்போழுதும் அழியாமல் இருக்கவேண்டும் என்று வேண்டிய தருமதேவதை இடபமாக மாறி சிவபிரானுக்கு வாகனமாக இருப்பதால், அவரது வாகனம் ஒப்பற்றதாக விளங்குகின்றது.        

பொழிப்புரை:

சிவபிரானது உள்ளம் அவர் இருக்கும் ஒப்பற்ற கயிலை மலை போன்று மிகவும் உயர்வானது. சிவபிரானின் கருணையால் ஒப்பற்ற நிலைக்கு உயர்ந்த சந்திரனை தனது சென்னியில் சூடியவர் சிவபெருமான். தனது கையில் வெண் தலையை ஒப்பற்ற பலிப் பாத்திரமாக ஏந்தியுள்ளவர் சிவபிரான். அவரது வாகனமாகிய இடபமும் ஒப்பற்றது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/nov/22/80-ஒன்று-கொலாம்---பாடல்-1-2812834.html
2810508 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 79. நீலமாமணி கண்டத்தர் - பாடல் 11 என். வெங்கடேஸ்வரன் DIN Tuesday, November 21, 2017 12:00 AM +0530
பாடல் 11:  

    உரத்தினால் அரக்கன் உயர் மாமலை
    நெருக்கினானை நெரித்தவன் பாடலும்
    இரக்கமா அருள் செய்த பாலைத்துறை
    கரத்தினால் தொழுவார் வினை ஓயுமே

விளக்கம்:

உரம்=வலிமை: நெருக்கினான்=அச்சமுறச் செய்தவன்: 

பொழிப்புரை:

தனது வலிமையினால் கயிலை மலையை அசைத்து, உமையம்மை அச்சம் கொள்ளுமாறு செய்த அரக்கன் இராவணனை, மலையின் கீழ் அடர்த்து அவனது தலைகளையும் தோள்களையும் நெரித்தவன் சிவபெருமான். பின்னர் அரக்கன் சாமகானம் இசைத்து பெருமானை வணங்க, அரக்கன் பால் இரக்கம் கொண்டு அவனுக்கு அருள் புரிந்தவர் சிவபெருமான். பாலைத்துறையில் உறையும், அவரைத் தமது கரங்களால் தொழும் அடியார்களின் வினைகள் அவர்களை விட்டு நீங்கிவிடும். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/nov/21/79-நீலமாமணி-கண்டத்தர்---பாடல்-11-2810508.html
2810507 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 79. நீலமாமணி கண்டத்தர் - பாடல் 10 என். வெங்கடேஸ்வரன் DIN Monday, November 20, 2017 12:00 AM +0530  

பாடல் 10:

    வெங்கண் வாளரவு ஆட்டி வெருட்டுவர்
    அங்கணார் அடியார்க்கு அருள் நல்குவர்
    செங்கண் மாலயன் தேடற்கு அரியவர்
    பைங்கண் ஏற்றினர் பாலைத் துறையரே 

விளக்கம்:

வெங்கண்=கொடிய கண்கள்: வாளரவு=ஒளிவீசும் பாம்பு: அடிக்கடித் தனது தோலை உரிப்பதால் பாம்பின் உடல் ஒளி வீசும். அங்கணார்=அழகிய கண்களை உடைய சிவபெருமான். பதிகத்தின் நான்கு அடிகளிலும் கண் என்ற சொல் வருவதை நாம் உணரலாம்.

பொழிப்புரை:

கொடிய கண்களையும், ஒளி வீசும் உடலையும் உடைய பாம்புகளைத் தனது உடலில் சுற்றிக் கொண்டு அவற்றை, தனது விருப்பம் போல் ஆட்டுபவர் சிவபெருமான். அழகிய கண்களை உடைய அவர், அடியார்களுக்கு எப்போதும் அருள் புரிபவராக இருக்கின்றார். தாமரை போன்று சிவந்த கண்களை உடைய திருமாலும் பிரமனும், அடி முடி காண முடியாமல் அவர்கள் தேடுவதற்கு அரியவராக, நீண்ட தீப்பிழம்பாக காட்சி அளித்த  சிவபெருமான், பசுமையான கண்களை உடைய எருதினை வாகனமாகக் கொண்டவர். அவர்  பாலைத்துறையில் உறைகின்றார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/nov/20/79-நீலமாமணி-கண்டத்தர்---பாடல்-10-2810507.html
2810505 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 79. நீலமாமணி கண்டத்தர் - பாடல் 9 என். வெங்கடேஸ்வரன் Sunday, November 19, 2017 12:00 AM +0530
பாடல் 9: 

    மேகம் தோய் பிறை சூடுவர் மேகலை
    நாகம் தோய்ந்த அரையினர் நல்லியல்
    போகம் தோய்ந்த புணர்முலை மங்கையோர்
    பாகம் தோய்ந்தவர் பாலைத் துறையரே

விளக்கம்:

மேகலை=பெண்கள் இடுப்பினில் அணியும் நகை. மாதொரு பாகனாக விளங்கும் பெருமான் என்பதால் மேகலை அணிந்தவராக காணப்படுகின்றார்.

பொழிப்புரை:

மேகத்தினிடையே உலாவும், பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடியவர் சிவபெருமான். மேகலை அணியுடன் நாகங்கள் சூழ்ந்த இடுப்பினை உடையவர் அவர். நல்ல இயல்பினையை உடையவளும், இன்பத்தினை அளிக்கக்கூடிய மார்பகங்களை உடையவளும் ஆகிய உமையம்மையைத் தனது உடலின் இடது பாகத்தில் வைத்து இருக்கும் சிவபெருமான், திருப்பாலைத்துறையில் உறைகின்றார்.  

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/nov/19/79-நீலமாமணி-கண்டத்தர்---பாடல்-9-2810505.html
2810432 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 79. நீலமாமணி கண்டத்தர் - பாடல் 8 என். வெங்கடேஸ்வரன் Saturday, November 18, 2017 10:22 AM +0530 பாடல் 8: 

    தொடரும் தொண்டரைத் துக்கம் தொடர்ந்து வந்து
    அடரும் போது அரனாய் அருள் செய்பவர்
    கடலின் நஞ்சணி கண்டவர் கடி புனல்
    படரும் செஞ்சடைப் பாலைத் துறையரே

விளக்கம்:

அரன்=அழித்தல் தொழிலைச் செய்பவன்: 
 
பொழிப்புரை:

தம்மைத் தொடர்ந்து வணங்கும் அடியார்களைத் துன்பங்கள் தொடரும் போது, அந்த துன்பங்களை அழிக்கும் அரனாக செயல்படுபவர் சிவபெருமான். ஆலகால விடம் துன்பமாக தேவர்களைத் தொடர்ந்த போது, அந்த நஞ்சினைத் தான் உட்கொண்டு, தேவர்களை அந்த துன்பத்திலிருந்து காத்து அருள் புரிந்தவர் சிவபெருமான் ஆவார். அவர் நறுமணம் கமழும் கங்கை நீரினைத் தனது செஞ்சடையில் அடக்கியுள்ளார். அவர் தாம் பாலைத்துறையில் உறையும் பெருமானாவார்.  

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/nov/18/79-நீலமாமணி-கண்டத்தர்---பாடல்-8-2810432.html
2809732 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 79. நீலமாமணி கண்டத்தர் - பாடல் 7 என். வெங்கடேஸ்வரன் Friday, November 17, 2017 09:56 AM +0530  

பாடல் 7:

    குரவனார் கொடுகொட்டியும் கொக்கரை
    விரவினார் பண் கெழுமிய வீணையும்
    மருவு நாண்மலர் மல்லிகை செண்பகம்
    பரவு நீர்ப் பொன்னிப் பாலைத் துறையரே 

விளக்கம்:

குரவனார்=குருவாக இருப்பவர்: நாண்மலர்=அன்றைய நாளில் பறித்த மலர்கள், புது மலர்கள்: சிவபெருமான் வீணை வாசிப்பது பல திருமுறைப் பாடல்களில் குறிப்பிடப் படுகின்றது. திருவாசகம் திருவண்டப்பகுதி அகவலில், மணிவாசகர் இன்னிசை வீணையில் இசைந்தோன் காண்க என்று குறிப்பிடுகின்றார். சிரபுரம் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தில் (1.47.6) கையினில் வெண்மழுவும், வீணையும் பாம்புடன் வைத்தவன் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். மூன்று கண் உடையவன் என்று சிவபெருமானை குறிப்பிடும் சம்பந்தர் எண் மூன்றுடன் இணைந்த பல பொருட்கள் சிவபெருமான் மற்றும், அவனது அடியார்களுடன்  இணைந்திருப்பதாக இங்கே நயமாக கூறுகின்றார். மூன்று பண்களை உடைய வீணை என்று, கீழ்ஸ்தாயி, நடுஸ்தாயி மற்றும் மேல்ஸ்தாயி ஆகிய மூன்று விதமாக இசை எழுப்பும் வீணை என்று இங்கே குறிப்பிடுகின்றார். மேலும் மூன்று கனல்கள் (ஆகவனீயம், காருகபத்தியம், தாக்ஷிணாக்னி ஆகிய மூன்று வகை நெருப்புகள்) , மூன்று வேள்விகள் (தேவ வேள்வி, பித்ரு வேள்வி மற்றும் முனிவர்கள் வேள்வி) ஆகியவை மூன்றுடன் இணைந்த மற்ற பொருட்கள் ஆகும். கண்ணு மூன்றும் உடையதன்றிக் கையினில் வெண்மழுவும்

பண்ணு மூன்று வீணையோடு பாம்புடன்
                                                          வைத்தல் என்னே
எண்ணு மூன்று கனலும் ஓம்பி எழுமையும்
                                                          விழுமியராய்
திண்ண மூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே

பெருமான் வீணை வாசிப்பதைக் குறிப்பிடும் அப்பர் பிரானின் பாடல் (4.112.7) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. முற்றூழிக் காலத்தில் அனைத்து உயிர்களும் உடலிலிருந்து பிரிந்து, பெருமானிடம் ஒடுங்கிய பின்னர், பெருமான் உயிரற்ற திருமால் மற்றும் பிரமனின் உடல்களைத் தனது தோளில் வைத்துக்கொண்டு கூத்தாடுகின்றான். பின்னர் உயிர்கள் பால் கொண்டுள்ள கருணையால், அந்த உயிர்கள் தங்களது வினைத் தொகையைக் கழித்து தன்னிடம் வந்து சேர்வதற்கு ஒரு வாய்ப்பு அளிக்கும் முகமாக, மீண்டும் ஒடுங்கப்பட்ட உயிர்களும், உலகப் பொருட்களும் விடுவிக்க எண்ணி வீணை வாசிக்கின்றான் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். உயிர்களின் நன்மை கருதி, உயிர்களை விடுவிப்பாதும் உலகைத் தோற்றுவிப்பதும் தனது கடமையாக நினைத்து இறைவன் செயல்படுகின்றான் என்று இங்கே கூறுகின்றார். முற்றூழிக் காலத்தில் எஞ்சி இருப்பது சிவபெருமானும், பெரு வெளியும் மட்டுமே. வீணையில் பிறக்கும் நாதம், உலகத் தோற்றத்திற்கு காரணமாக இருப்பதால் தான், நாதத்தை எழுப்பும் உடுக்கை, தோற்றத்தை உணர்த்துவதாக நடராஜ தத்துவம் கூறுகின்றது.

    பெருங்கடல் மூடிப் பிரளயம் கொண்டு
                                                           பிரமனும் போய்
    இருங்கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும்
    கருங்கடல் வண்ணன் களேபரமும் கொண்டு
                                                          கங்காளராய்
    வரும் கடன் மீள நின்று எம் இறை நல்வீணை
                                                          வாசிக்குமே

வீணை தான் பெருமானின் இசைக் கருவி என்று சுந்தரர் உணர்த்தும் பாடல் (7.33.5) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

    கோணல் மாமதி சூடரோ கொடுகொட்டி
                                                   காலொர் கழலரோ
    வீணை தான் அவர் கருவியோ விடை ஏறு
                                                  வேத முதல்வரோ
    நாணதாகவொர் நாகம் கொண்டு அரைக்கு
                                                 ஆர்ப்பரோ நலமார் தர
    ஆணையாக நம் அடிகளோ நமக்கு
                                                 அடிகளாகிய அடிகளே  
       

பொழிப்புரை:

அனைவருக்கும் குருவாக விளங்குபவரும், கொடுகொட்டி, கொக்கரை மற்றும் வீணை ஆகிய இசைக் கருவிகளிலிருந்து எழும் இசையுடன் கலந்து இருப்பவரும் ஆகிய சிவபெருமான், அழகிய மல்லிகை, செண்பகம் என்று புதியதாக மலர்ந்த மலர்களைக் கொண்ட நிலப் பரப்பினை உடையதும் காவிரி நதிக் கரையில் உள்ளதும் ஆகிய பாலைத்துறை தலத்தில் உறையும் இறைவன் ஆவார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/nov/17/79-நீலமாமணி-கண்டத்தர்---பாடல்-7-2809732.html
2809044 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 79. நீலமாமணி கண்டத்தர் - பாடல் 6 என். வெங்கடேஸ்வரன் Thursday, November 16, 2017 09:36 AM +0530
பாடல் 6: 

    விண்ணினார் பணிந்து ஏத்த வியப்புறும்
    மண்ணினார் மறவாது சிவாய என்று
    எண்ணினார்க்கு இடமா எழில் வானகம்
    பண்ணினார் அவர் பாலைத் துறையரே

விளக்கம்:

தன்னை வந்தடையும் அடியார்கள் தங்குவதற்காக, திருத்தமாக சிவலோகத்தைப் படைத்தவர் சிவபெருமான் என்று பதினோராம் திருமுறையின் பொன் வண்ணத்து அந்தாதியின் பதினோராவது பாடலில் சேரமான் பெருமாள் நாயனார் கூறுகின்றார். 

    நெஞ்சம் தளிர்விடக் கண்ணீர் அரும்ப முகம் மலர
    அஞ்சொல் கரதலம் கூம்ப அட்டாங்கம் அடி பணிந்து
    தம் சொல் மலரால் அணிய வல்லார்கட்குத் தாழ்சடையான்
    வஞ்சம் கடிந்து திருத்தி வைத்தான் பெரு வானகமே

சிவபிரானின் திருநாமமாகிய பஞ்சாக்கர மந்திரத்தை மகிழ்ந்து போற்ற வல்லவர்கள், உலகப் பொருட்களின் மீது வைத்துள்ள பந்த பாசங்களைத் தவிர்த்து, இறையுணர்வில் திளைப்பார்கள் என்று சம்பந்தர் நமச்சிவாயப் பதிகத்தின் (3.49.) கடைப் பாடலில் கூறுவதை நாம் இங்கே காணலாம். இந்த பாடலில் சிவபெருமானை நந்தி என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். நந்துதல் என்றால் குறைத்தல், முற்றிலும் அழித்தல் என்று பொருள். பல பிறவிகளாக நாம் சேர்த்து வைத்துள்ள வினைத் தொகைகளை அழிக்க வல்லவன் சிவபெருமான் ஒருவன் தான் என்பதால் நந்தி என்று அவனை குறிப்பிட்டு, நாம் நமது வினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் அவனை வணங்க வேண்டும் என்பதை சம்பந்தர் இங்கே நமக்கு உணர்த்துகின்றார். 

    நந்தி நாமம் நமச்சிவாய என்று
    சந்தையால் தமிழ் ஞானசம்பந்தன் சொல்
    சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம்
    பந்த பாசம் அறுக்க வல்லார்களே 

திருமூலரும் தனது திருமந்திரப் பாடல்களில் அநேக இடங்களில் நந்தி என்று சிவபெருமானை குறிப்பிடுகின்றார். ந என்ற எழுத்துடன் தொடங்கும் மந்திரம் தான் நந்தி தன் நாமம் என்று திருமூலர் கூறுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் உணரலாம். அ, உ, ம் என்ற மூன்று எழுத்துக்களின் கூட்டு தான் ஓம் என்று சொல்லப்படும் பிரணவ மந்திரம். ஓம் என்ற சொல்லுடன் பெருமானின் நாமத்தைச் சொல்ல அதுவே மந்திரமாக மாறும் என்பதை உணர்த்தும் பாடல். சிவபெருமான் தான் ஐம்பத்தொன்று எழுத்தாக உள்ளார் என்று திருமூலர் கூறுகின்றார். திருமூலர் காலத்தில் தமிழ் மொழியில் ஐம்பத்தொன்று எழுத்துகள் இருந்து, வழக்கலிருந்து பல எழுத்தகள் ஒழிந்தனவா என்று தெரியவில்லை. ஆனால் வடமொழியில் இப்போதும் ஐம்பது எழுத்துகள் உள்ளன, இவற்றுடன் ஓம் எனப்படும் பிரணவ எழுத்தினைச் சேர்த்தால் ஐம்பத்தொன்று வருகின்றது. இவற்றைத் தான் திருமூலர் இந்த பாடலில் குறிக்கின்றார் போலும்.
   
    அகார முதலாக ஐம்பத்தொன்றாகி
    உகார முதலாக ஓங்கி உதித்து
    மகார இறுதியாய் மாய்ந்து மாய்ந்து ஏறி
    நகார முதலாகும் நந்தி தன் நாமமே

நமச்சிவாய மந்திரத்தில் உள்ள ஐந்து எழுத்துகளும் ஐந்து ஓரெழுத்துச் சொற்களாக ஐந்து பொருட்களை உணர்த்துகின்றன என்று சுந்தரர் திருவாரூர் பதிகத்தின் (7.83) முதல் பாடலில் கூறுகின்றார். அஞ்சு பதம் என்று பஞ்சாக்கர மந்திரத்தை இங்கே சுந்தரர் குறிப்பிடுகின்றார். சிவபெருமானின் திருநாமத்தை, சொல்ல வேண்டிய முறையில் சொல்லி, அவனது திருநாமத்தை சிந்தையினில் இருத்தி, திருவாரூர் சென்று அவனை வணங்குவது எந்நாளோ என்று தனது ஏக்கத்தை, திருவாரூர் பெருமானைப் பிரிந்து பல நாட்கள் இருந்ததை சுந்தரர் வெளிப்படுத்தும் பாடல்.  

    அந்தியும் நண்பகலும் அஞ்சு பதம் சொல்லி 
    முந்தி எழும் பழைய வல்வினை மூடா முன் 
    சிந்தை பராமரியாத் தென் திருவாரூர் புக்கு
    எந்தை பிரானாரை என்று கொல் எய்துவதே

நமச்சிவாய மந்திரத்தை தூல பஞ்சாக்கரம் என்று கூறுவார்கள். ந என்ற எழுத்து திரோதான மலத்தையும், ம என்ற எழுத்து ஆணவம் முதலான மலத்தையும், ய என்ற எழுத்து ஆன்மாவையும், சி என்ற எழுத்து சிவத்தையும் வ என்ற எழுத்து சிவனின் அருளாகிய சக்தியையும் குறிக்கும். உயிர்க்கு தனியாக எந்த குணமும் இல்லாததால், உயிர் சார்ந்ததன் வண்ணமாகத் திகழும். ய என்ற எழுத்தால் குறிக்கப்படும் உயிர், ஒரு பக்கத்தில் மலங்களாலும் மறு பக்கத்தில் சிவத்தாலும் சூழப்பட்டுள்ளது. சிவத்தைச் சென்று அடைய வேண்டும் என்று உயிர் விரும்பினாலும், அவ்வாறு நிகழாதவாறு மலங்கள் உயிரைத் தடுக்கின்றன. பிறப்பு மற்றும் இறப்பினை விளைவிக்கக் கூடிய பாசம் ஒரு புறம் இழுக்க, முக்தி அளிக்கக்கூடிய சிவத்தைச் சார வேண்டும் என்று உயிர் விரும்ப, உயிருக்கும் பாசங்களுக்கும் இடையே ஒரு போராட்டம் நடைபெறுகின்றது. பாசத்தை வெல்லவேண்டும் என்று விரும்பும் உயிர்கள் ஐந்தெழுத்தை ஓதி, இறைவனின் துணையுடன் பாசத்தை வெல்லலாம். இதனை உணர்த்தும் அப்பர் பிரானின் பாடல் (5.59.1) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதும் உயிர்களின் மனதில் சிவனும் அவனது அருட்சக்தியும் உறைந்திருப்பார்கள் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.

    ஏதும் ஒன்றும் அறிவிலர் ஆயினும்
    ஓதி அஞ்செழுத்தும் உணர்வார்கட்கு
    பேதம் இன்றி அவரவர் உள்ளத்தே
    மாதும் தாமும் மகிழ்வர் மாற்பேறரே

நமச்சிவாய மந்திரத்தின் சிறப்பு கருதி, நமச்சிவாயப் பதிகங்கள் அருளிய மூவரும், பல பாடல்களில் நமச்சிவாய மந்திரத்தை குறிப்பிட்டு அதனால் ஏற்படும் பலன்களை எடுத்து உரைக்கின்றார்கள். அத்தகைய பதிகங்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். பெருமானின் திருநாமமாகிய நமச்சிவாய மந்திரத்தைச் சொல்பவர்கள் வீடுபேறு அடையலாம் என்று அப்பர் பிரான் கூறும் பாடலை (6.93.10) நாம் இங்கே காணலாம். இந்த பிறவியில் நமக்கு ஏற்பட்டுள்ள எந்த உறவும், நமக்கு இதற்கு முந்தைய பிறவிகளில் இருந்ததில்லை, வரப்போகும் பிறவிகளிலும் இருக்கப் போவதில்லை. எனவே உங்களது உறவுகளின் மீது நீங்கள் வைத்துள்ள பாசங்களிலிருந்து விடுபடுங்கள் என்று அப்பர் பெருமான் உணர்த்தும் பாடல் இது. தனியாக உலகிற்கு வந்த நாம், தனியாக செல்லப் போகின்றோம் என்று சொல்லி, உறவினர் எவரும் நிலையல்ல என்பதையும் அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

தந்தையார் தாயார் உடன் பிறந்தார்
        தாரம் ஆர் புத்திரர் ஆர் தாம் தாம் ஆரே
வந்தவாறு எங்ஙனே போமாறேதோ
       மாயமாம் இதற்கு ஏதும் மகிழவேண்டா
சிந்தையீர் உமக்கொன்று சொல்லக் கேண்மின்
       திகழ்மதியும் வாளரவும் திளைக்கும் சென்னி
எந்தையார் திருநாமம் நமச்சிவாய
      என்று எழுவார்க்கு இருவிசும்பில் இருக்கலாமே

     
நமச்சிவாய என்ற மந்திரத்தால் குறிப்பிடப்படும் இறைவனைத் தவிர நமக்கு புகலிடம் வேறு ஒன்றும் இல்லை என்று மணிவாசகர் உணர்த்தும் பாடல், திருச்சதகம் பதிகத்தில் இடம் பெற்றுள்ளது.

போற்றி ஓம் நமச்சிவாய புயங்கனே மயங்குகின்றேன்
போற்றி ஓம் நமச்சிவாய புகலிடம் பிறிதொன்றில்லை
போற்றி ஓம் நமச்சிவாய புறம் எனைப் போக்கல்
                                                                                                    கண்டாய்
போற்றி ஓம் நமச்சிவாய சயசய போற்றி போற்றி  

தூல பஞ்சாக்கர மந்திரத்தை வாய் விட்டு சொல்லலாம். சிவாயநம எனப்படும் பஞ்சாக்கர மந்திரம் சூக்கும பஞ்சாக்கரம் என்று சொல்லப்படுகின்றது. நிட்டையில் இருப்போர் தியானிப்பது போன்று மனதினில் நிலைநிறுத்தி உச்சரிக்க வேண்டிய மந்திரம். சிவாயநம என்ற மந்திரத்தை குறிப்பிடும் பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். நல்லம் தலத்தின் மீது அருளிய பாடலில், தம்மால் இயன்ற அளவு சிவாயநம என்று கூறினால், வினைப் பகைகளையும், பூதங்களாக நம்மை ஆட்டுவிக்கும் பொறிகளிலிருந்தும் விடுதலை  பெறலாம் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் (5.43.6) கூறுகின்றார். நம்மை வென்று, உலகப் பொருட்களின் மாயையில் நம்மை ஆழ்த்தி, மறுபடியும் மறுபடியும் பிறப்பிறப்புச் சுழற்சியில் ஆழ்த்துவதே வினைகளின் நோக்கம் என்பதால், வெல்ல வந்த வினைப்பகை என்று இங்கே குறிப்பிடுகின்றார்.

    அல்லல் ஆக ஐம்பூதங்கள் ஆட்டினும்
    வல்லவாறு சிவாயநம என்று 
    நல்லம் மேவிய நாதன் அடி தொழ
    வெல்ல வந்த வினைப்பகை வீடுமே

சிவாயநம என்று கூறினால் நமது உள்ளத்தில் வெள்ளம் போன்று பெருகி வரும் ஒளி உண்டாகும் என்றும் இந்த மந்திரத்தை உச்சரிக்காதவர் மறுபடியும் மறுபடியும் பிறவிக் கடலில் சுழன்று தவிப்பார்கள் என்றும் திருமூலர் கூறும் பாடல் இது. நீர் சுழலும் போது துள்ளும் நீர், மறுபடியும் அந்த நீர்ச் சுழலில் விழுவதைப் போன்று, சிவாயநம என்ற மந்திரத்தை உச்சரிக்காதவர்கள், தாங்கள் இறந்தபின்னரும் மறுபடியும் பிறவிச் சுழலில் விழுவார்கள் என்று நமக்கு விளக்கும் பாடல்.

    தெள்ளமுது ஊற சிவாயநம என்று
    உள்ளமுது ஊற ஒருகால் உரைத்திடும்
    வெள்ளமுது ஊறல் விரும்பி உண்ணாதவர்
    துள்ளிய நீர் போல் சுழல்கின்றவாறே

சிவாயநம என்ற மந்திரத்தில் மலங்களைக் குறிக்கும் கடைசி இரண்டு எழுத்துக்கள் நீங்கிய நிலையில் இருக்கும் மீதி மூன்று எழுத்துக்களே சிவாய என்பதாகும். எனவே இந்த எழுத்துக்களை பாசம் நீங்கிய முக்தி பஞ்சாக்கரம் என்றும், கூறுவர். முக்தி பஞ்சாக்கர நாமத்தை சொல்பவர்க்கு முக்தி அளிப்பவர் சிவபிரான் என்பதால், அப்பர் பிரான் மேலே கூறிய பாடலில் எழில் வானகம் பண்ணினார் என்று சிவலோகம் ஏற்படுத்தி உள்ள நிலையை குறிக்கின்றார். இந்த மந்திரத்தை ஓதினால், அருவினைகள் தீர்க்கப்படும் என்று திருமூலர் குறிக்கின்றார். வினைகள் தானே பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து நாம் விடுபடாமல் இருப்பதற்கு காரணம். அந்த வினைகள் தீர்க்கப்பட்டால், முக்தி பெறுவது எளிதல்லவா.

அருள் தரும் ஆயமும் அத்தனும் தம்மில்
ஒருவனை ஈன்றவர் உள்ளுறை மாயை
திரிமலம் நீங்க சிவாய என்று ஓதும்
அருவினை தீர்ப்பதுவும் அவ்வெழும் தாமே 

சிவாய எனப்படும் இந்த மந்திரத்தை, அதி சூக்கும பஞ்சாக்கரம் என்றும் காரண பஞ்சாக்கரம் என்றும் கூறுவார்கள். நட்போடு சிவபெருமானை அணுகி சிவாய என்று சொன்னால், இன்பமயமாக இருக்கும் சிவபெருமான் நமக்கும் இன்பம் அளிப்பான் என்று சம்பந்தர் இந்த பாடலில் (2.46.10) கூறுகின்றார். இந்த பாடல், புத்தர் மற்றும் சமணர்களை குறிக்கும் பதிகத்தின் பத்தாவது பாடல். சிவபெருமானின் நாமத்தை உச்சரித்தாலும், பகையுணர்ச்சியுடன் சமணர்கள்/புத்தர்கள் கூறுவதிலிருந்து வேறுபடுத்திக் காட்ட, நட்புணர்வோடு அன்புடன் சிவபிரானின் நாமத்தைக் கூறவேண்டும் என்று சம்பந்தர் இங்கே சொல்கின்றார்.

    துன்பாய மாசார் துவராய போர்வையார்
    புன்பேச்சுக் கேளாதே புண்ணியனை
                                                             நண்ணுமின்கள்
    நண்பால் சிவாய எனா நாலூர் மயானத்தே
    இன்பாய் இருந்தானை ஏத்துவார்க்கு இன்பமே

நம்மைப் பற்றியுள்ள வலிமை வாய்ந்த வினைகளைத் தீர்ப்பது சிவாய எனப்படும் மந்திரம் என்று திருமூலர் கூறும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. ஆயம்=கூட்டம். பிராமி, வைஷ்ணவி, காளி முதலாகிய பல விதமான சக்தியின் அம்சங்கள் இணைந்த கூட்டம், ஆயம் என்ற தொடரால் உணர்த்தப்பட்டு, சிவபிரான் அருள் வடிவாகிய சக்தியை குறிக்கின்றது. வினைகளுக்கு ஏற்ப உயிரினை உடலுடன் பொருத்தச் செய்வதால், சிவபெருமானை உயிரை ஈன்றவர் என்று குறிப்பிடுகின்றார். 

    அருள் தரு ஆயமும் அத்தனும் தம்மில்
    ஒருவனை ஈன்றவர் உள்ளுறு மாயை
    திரிமல நீங்கிச் சிவாய என்று ஓதும்
    அருவினை தீர்ப்பதும் அவ்வெழுத்தாமே  

பொதுவாக ஐந்தெழுத்து என்று குறிப்பிடப்படுவதும் இந்த மந்திரங்கள் தாம். எத்தனை  பிறவிகள் எடுத்தாலும் இறைவனுக்கும் நமக்கும் உள்ள பிணைப்பு மாறுவதில்லை. தொடர்ச்சியாக, அவன் இறைவன், நாம் அவனுக்கு அடியான் என்று உள்ள நிலையினை மறவாமல், தினமும் காலையிலும் மாலையிலும் அஞ்செழுத்து ஓதி வழிபட்டால், நாம் இறைவன் மீது வைத்துள்ள அன்பு அதிகமாகும் என்று கூறும் அப்பர் பிரானின் பாடல் (4.70.5) நனிப்பள்ளி பதிகத்தில் உள்ள பாடலாகும்.

துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை
                                                                      மறந்திராதே
அஞ்செழுத்து ஓதி நாளும் அரனடிக்கு அன்பதாகும்
வஞ்சனைப் பால் சோறாக்கி வழக்கிலா
                                                                     அமணர் தந்த
நஞ்சு அமுது ஆக்குவித்தான் நனிப்பள்ளி அடிகளாரே

கருவூர்த் தேவர், அன்போடு அஞ்செழுத்து ஓதினால் இறைவன் நமக்கு அளிக்கும் பல பேறுகளை குறிப்பிட்டு, அவரினும் அற்புதத் தெய்வம் வேறு எவரும் இல்லை என்று சொல்லும் பாடல், ஒன்பதாம் திருமுறையில் உள்ள கங்கை கொண்ட சோளேச்சரத்து பதிகத்தின் மூன்றாவது பாடல். மலைகள் போன்ற பொற்குவியல்கள், மாளிகைகள், பலவிதமான செல்வங்கள், அழகிய இளம் மகளிருடன் இணையும் வாய்ப்பு, கற்பகச் சோலை என்று நாம் பெறவிருக்கும் பேறுகளை அடுக்குகின்றார். 

அற்புதத் தெய்வம் இதனின் மற்றுண்டே
       அன்பொடு தன்னை அஞ்செழுத்தின்
சொற்பதத்துள் வைத்து உள்ளம் அள்ளூறும்
       தொண்டருக்கு எண்திசைக் கனகம் 
பற்பதக் குவியும் பைம்பொன் மாளிகையும்
        பவளவாய் அவர் பணைமுலையும்
கற்பகப் பொழிலும் முழுதுமாம் கங்கை
        கொண்ட சோளேச்சரத்தானே

பொழிப்புரை:

தேவர்கள் சிவபெருமானை பணிந்து வழிபடுவதைக் காணும் நிலவுலகத்தில் உள்ள மனிதர்கள் வியப்படைகின்றார்கள். அவர்கள், மறவாமல் சிவாய என்ற நாமத்தை தியானிக்க, அந்த அடியார்கள் தங்குவதற்கு அழகிய வானகத்தை படைத்து அருள்பவர், பாலைத்துறையில் உறையும் சிவபெருமான் ஆவார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/nov/16/79-நீலமாமணி-கண்டத்தர்---பாடல்-6-2809044.html
2808368 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 79. நீலமாமணி கண்டத்தர் - பாடல் 5 என். வெங்கடேஸ்வரன் Wednesday, November 15, 2017 09:20 AM +0530  

பாடல் 5:

    சித்தர் கன்னியர் தேவர்கள் தானவர்
    பித்தர் நான்மறை வேதியர் பேணிய
    அத்தனே நமை ஆளுடையாய் எனும்
    பத்தர்கட்கு அன்பர் பாலைத் துறையரே
 

விளக்கம்:

தானவர்=அசுரர்: பித்தர்=தங்களது சொல்லுக்கும் செயலுக்கும் தாங்கள் கொண்டுள்ள  வேடத்திற்கும் எந்த தொடர்பும் இல்லாமல் இருப்பவர்கள். பத்தர்=சிவனடியார்களுக்கு இருக்க வேண்டிய பத்து அக குணங்களையும் பத்து புற குணங்களையும் உடைய அடியார்கள். சிவனடியார்களிடம் இருக்க வேண்டிய குணங்களை அக குணங்கள் என்றும் புறக் குணங்கள் என்றும் பிரிக்கின்றனர். பத்து புற குணங்கள், திருநீறும் உருத்திராக்கமும் பக்தியுடன் தரித்தல், சிவபெருமானை புகழ்ந்து பாடுதல், சிவபிரானின் திருநாமங்களை ஓதுதல், சிவபூசனை புரிதல், சிவபுண்ணியங்கள் செய்தல், சிவபுராணங்களையும் சிவச்சரிதைகளையும் கேட்டல், சிவாலய வழிபாடு செய்தல், சிவனடியார்களை வணங்குதல், சிவனடியார்களுக்கு வேண்டுவன கொடுத்தல், சிவனடியார்கள் இல்லங்களில் அன்றி வேறிடத்தில் அன்னம் உட்கொள்ளாது இருத்தல் ஆகும். பத்து அக குணங்கள், சிவபிரானின் புகழைக் கேட்கும்போது கண்டம் விம்முதல், நாக்கு தழுதழுத்தல், உதடுகள் துடித்தல், உடம்பு குலுங்குதல், மயிர்ப்புளகம் கொள்ளுதல், உடல் வியர்த்தல், சொல் எழாமல் இருத்தல், கசிந்துருகி கண்ணீர் பெருக்குதல், வாய் விட்டு அழுதல், மெய்ம்மறத்தல் ஆகும்.

பொழிப்புரை:

சித்தர்கள், கன்னியர்கள், தேவர்கள், அசுரர்கள், சிவபெருமானையே எப்போதும் நினைவில் நிறுத்தி வாழ்வதால் தங்களது சொல்லும் சொல்லுக்கும் செயலுக்கும் தாங்கள் கொண்டுள்ள வேடத்திற்கு தொடர்பேதும் இல்லாதவராய் செயல்படும் அன்பர்கள், நான்கு மறைகளையும் கற்றுத் தேர்ந்த வேதியர்கள், ஆகியோர் போற்றிப் புகழும் சிவபெருமான், என்னை அடிமையாக ஏற்றவனே என்று பணியும் அடியார்களுக்கு, அன்பராய்த் திகழ்கின்றார். அவர் பாலைத்துறை தலத்தில் உறைகின்றார்.   

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/nov/15/79-நீலமாமணி-கண்டத்தர்---பாடல்-5-2808368.html
2808357 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 79. நீலமாமணி கண்டத்தர் - பாடல் 4 என். வெங்கடேஸ்வரன் Wednesday, November 15, 2017 09:18 AM +0530

பாடல் 4: 

    நீடு காடு இடமாய் நின்ற பேய்க்கணம்
    கூடு பூதம் குழுமி நின்று ஆர்க்கவே
    ஆடினார் அழகாகிய நான்மறை
    பாடினார் அவர் பாலைத் துறையரே

விளக்கம்:

நீடு காடு=நீண்ட காடு: ஆர்க்க=ஆரவாரிக்க: 

பொழிப்புரை:
நீண்ட காட்டினைத் தாங்கள் வாழும் இடமாகக் கொண்ட பேய்க்கணங்களும், கூடி நின்ற பூத கணங்களும், மிகுந்த ஆரவாரத்துடன் ஆட, அவைகளின் ஆடலுக்கு இணைந்து ஆடும் சிவபெருமான். அழகான நான்மறைகளை பாடியவாறே ஆடுகின்றார். அத்தகைய திறமை வாய்ந்த அவர் பாலைத்துறை தலத்தில் உறைகின்றார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/nov/14/79-நீலமாமணி-கண்டத்தர்---பாடல்-4-2808357.html
2807037 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 79. நீலமாமணி கண்டத்தர் - பாடல் 3 என். வெங்கடேஸ்வரன் DIN Monday, November 13, 2017 11:16 AM +0530  

பாடல் 3:

    மின்னின் நுண்ணிடைக் கன்னியர் மிக்கெங்கும்
    பொன்னி நீர் மூழ்கிப் போற்றி அடிதொழ
    மன்னி நான் மறையோடு பல் கீதமும்
    பன்னினார் அவர் பாலைத் துறையரே 

விளக்கம்:

மன்னி=நிலை பெற்ற: மிக்கு=மிகுதியாக: பன்னுதல்=திரும்ப திரும்ப சொல்லுதல்: இந்த பாடலில் வேதங்கள் மற்றும் பல இசைப் பாடல்களை சிவபெருமான் பாடுவதாக அப்பர் பிரான் கூறுகின்றார். திருஞான சம்பந்தர், தில்லைத் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (3.1.1) சிவபெருமான், வேதங்களையும் பல இசைப் பாடல்களையும் பாடுவதாக குறிப்பிடுகின்றார். இசைப் பாடல்கள் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தது என்பதால் தான், நால்வர் பெருமானர்களும் இசையுடன் இணைத்துப் பாடும் வகையில் தேவார, திருவாசகப் பதிகங்களை அருளியுள்ளார்கள். தமிழ் அறிந்த நாம் அனைவரும், இந்த வாய்ப்பினை நழுவ விடாமல் இசைப் பாடல்களைப் பாடி இறைவனை மகிழ்வித்து பலன் அடையவேண்டும்.  

    ஆடினாய் நறுநெய்யொடு பால் தயிர்
          அந்தணர் பிரியாத சிற்றம்பலம்
    நாடினாய் இடமா நறும் கொன்றை நயந்தவனே
    பாடினாய் மறையோடு பல் கீதமும் பல்சடைப்
          பனிக்கால் கதிர் வெண் திங்கள்
    சூடினாய் அருளாய் சுருங்க எம தொல் வினையே

பொழிப்புரை:

மின்னல் போன்று நுண்ணிய இடையினை உடைய கன்னிப் பெண்கள் பலரும் ஒன்றாக கூடி, காவிரி நதியில் நீராடிய பின்னர், சிவபெருமானின் திருவடிகளைத் தொழுது போற்றுகின்றார்கள். அவ்வாறு தொழப்படும் பெருமான், பல யுகங்களைக் கடந்து நிலை பெற்று நிற்கும் வேதங்களையும், பலவகையான இசைப் பாடல்களையும் எப்போதும் பாடியவாறு காணப்படுகின்றார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/nov/13/79-நீலமாமணி-கண்டத்தர்---பாடல்-3-2807037.html
2807036 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 79. நீலமாமணி கண்டத்தர் - பாடல் 2 என். வெங்கடேஸ்வரன் DIN Sunday, November 12, 2017 12:00 AM +0530

பாடல் 2:

    கவள மா களிற்றின் உரி போர்த்தவர்
    தவள வெண்ணகை மங்கையோர் பங்கினர்
    திவள வானவர் போற்றித் திசை தொழும்
    பவள மேனியர் பாலைத் துறையரே

விளக்கம்:

கவளம்=பெரிய சோற்று உருண்டை: யானைக்கு வைக்கப்படும் உணவு உருண்டைகள் பெரிய அளவில் இருக்கும் என்பதை உணர்த்த கவள மா களிறு என்று இங்கே கூறப்பட்டுள்ளது. தவள=வெண்மை, வடமொழிச்சொல்: திவள வானவர்=சிறப்பாக விளங்கும் தேவர்கள்.

பொழிப்புரை:

பாலைத்துறையில் உறையும் சிவபெருமான், பெரிய சோற்றுருண்டைகளை உண்டு வாழும் வலிமை மிக்க யானையின் தோலை உரித்தவர்: வெண்மையான பற்களைக் கொண்டு, வெண்ணகை வீசும் பார்வதி அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டவர்: சிறப்பாக விளங்கும் தேவர்களும் சிவபெருமான் இருக்கும் திசை நோக்கித் தொழுகின்றார்கள். அவர் பவளம் போன்று சிவந்த மேனியை உடையவர்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/nov/12/79-நீலமாமணி-கண்டத்தர்---பாடல்-2-2807036.html
2807035 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 79. நீலமாமணி கண்டத்தர் - பாடல் 1 என். வெங்கடேஸ்வரன் DIN Saturday, November 11, 2017 12:00 AM +0530  

முன்னுரை:

வேதங்கள் மொத்தத்தில் நான்கு என்றாலும், அதர்வண வேதம் மந்திரங்கள், மருத்துவம்  பற்றி அதிகமாக கூறுவதால், அதனை விட்டுவிட்டு மூன்று வேதங்கள் என்று கூறுவதுண்டு. இந்த மூன்று வேதங்களின் தொகுப்பினை வேதத்ரயீ என்றும் சொல்வார்கள். இன்றும் வடநாட்டில் சதுர்வேதி, திரிவேதி என்ற பெயர்கள் பழக்கத்தில் உள்ளன. இந்த மூன்று வேதங்களில் நடுவாக கருதப்படுவது யஜூர் வேதமாகும். யஜூர் வேதத்தில் ஏழு காண்டங்கள் உள்ளன.  நடுவாக உள்ள நான்காவது காண்டத்தில் பதினோரு அனுவாகங்கள் உள்ளன. பதினோரு அனுவாகங்களில் நடுவாக கருதப்படுகின்ற ஆறாவது அனுவாகத்தில் ஸ்ரீ ருத்ரம் உள்ளது. பதினோரு சூக்தங்கள் கொண்டுள்ள ஸ்ரீ ருத்ரத்தின் ஆறாவது சூக்தத்தின் நடுப் பகுதியில் பஞ்சாட்சர மந்திரம் வருகின்றது. இவ்வாறாக வேதத்தின் நடுவில் பஞ்சாட்சர மந்திரம் வருகின்றது என்று நாம் கருதலாம். திருமூலரும் வேதத்தின் நடுவில் உள்ள மந்திரம் பஞ்சாட்சர மந்திரம் என்று கூறுகின்றார்.

    காலை நடுவுறக் காயத்தில் அக்கரம்
    மாலை நடுவுற ஐம்பதும் ஆவன
    மேலை நடுவுற வேதம் விளம்பிய
    மூலம் நடுவுற முத்தி தந்தானே 

நான்கு வேதங்களின் உட்பொருளாக, உண்மைப் பொருளாக உள்ளது நமச்சிவாய மந்திரம் என்று ஞானசம்பந்தர் நமச்சிவாயப் பதிகத்தின் முதல் பாடலில் (3.49.1) கூறுகின்றார். 

    காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
    ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பன
    வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
    நாதன் நாமம் நமச்சிவாயவே

தேவார ஆசிரியர்கள் மூவரில் நடுவில் வைக்கப்பட்டு போற்றப் படுபவர் அப்பர் பிரான்.. அவர் அருளிய திருமுறைகளில் நடுவில் வருவது ஐந்தாம் திருமுறை. நூறு பதிகங்கள் கொண்ட இந்த திருமுறையின் நடுவில் உள்ள பதிகம் என்று ஐம்பது மற்றும் ஐம்பதொன்றாவது பதிகங்களை கருதலாம். ஐம்பத்தொன்றாம் பதிகத்தின் பதினோரு பாடல்களில் நடுவாக அமைந்துள்ளது ஆறாவது பாடல். இந்த பாடலின் நடுவே சிவாய என்று பஞ்சாக்ஷர மந்திரம் வருகின்றது. வடமொழி வேதங்களைப் போன்று, தமிழ் வேதங்களாக கருதப்படும் தேவாரத்தின் நடுவிலும் ஐந்தெழுத்து மந்திரம் வருவதை நாம் உணரவேண்டியது அவசியம். இந்த பதிகம் தான் இங்கே விளக்கப்படுகின்றது பல தேவாரப் பாடல்களில் நமச்சிவாய என்றும் சிவாயநம என்றும் ஐந்தெழுத்து மந்திரம் வந்தாலும், தேவாரப் பதிகங்களின் நடுவே வரும் இந்த பதிகம், தனது நடுவில் பஞ்சாட்சர மந்திரத்தை அடக்கியதாக உள்ளதால், இந்த பதிகம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது.  

இந்த நமச்சிவாய மந்திரத்தின் சிறப்பு கருதியே மூவர் பெருமானார்கள் நமச்சிவாயப் பதிகங்களை அருளியுள்ளார்கள். மேலும் மணிவாசகப் பெருமானும் தனது திருவாசகத்தை நமச்சிவாய என்ற மந்திரத்தை முதற் சொல்லாக வைத்து ஆரம்பிக்கின்றார். (நமச்சிவாய வாழ்க நாதன் தான் வாழ்க). மூவர் பெருமானார்கள் அருளிய நமச்சிவாயப் பதிகங்களின் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று பதிகங்களின் அனைத்துப் பாடல்களும் நமச்சிவாய என்ற சொல்லினைக் கொண்டுள்ளன. ஞானசம்பந்தர் அருளிய துஞ்சலும் துஞ்சலில்லாத என்று தொடங்கும் பதிகம் (3.22) அஞ்செழுத்துப் பதிகம் என்று அழைக்கப்படுகின்றது. 

அருளியவர்             தொடக்கச் சொல்             பதிக எண்

ஞான சம்பந்தர்     காதலாகி கசிந்து                    3.49
அப்பர் பிரான்        சொற்றுணை வேதியன்      4.11
சுந்தரர்                      மற்றுப் பற்று எனக்கு             7.48
 

பாடல் 1:

    நீலமாமணி கண்டத்தர் நீள் சடைக்
    கோல மாமதி கங்கையும் கூட்டினார்
    சூல மான் மழு ஏந்திச் சுடர்முடிப்
    பால் நெய் ஆடுவார் பாலைத் துறையரே

விளக்கம்:

கோல மாமதி=அழகில் சிறந்த சந்திரன்: நீல மாமணி=கழுத்தில் பெரிய நீல மணி கட்டியது போன்று, நீலநிறம் கொண்டவர்:  

பொழிப்புரை:
ஆலகால விடத்தை உண்டதால், கழுத்தினில் பெரிய நீள் மணி போன்று கறையினை உடையவர் சிவபெருமான். அவர் தனது நீண்ட சடையில், அழகிய பிறைச் சந்திரனையும் கங்கையையும் சேர்த்து வைத்தவர்: அவர் தனது கையினில் சூலம் மழு ஆகிய ஆயுதங்களுடன், இளம் மான் கன்றினையும் ஏந்தியவர்: அவர் ஒளி வீசும் தனது தலையினை பால் நெய் முதலான ஐந்து பொருட்களையும் கொண்டு நீராடுபவர். இத்தகைய தன்மைகளை உடைய சிவபெருமான் பாலைத்துறை என்ற தலத்தில் உறைகின்றார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/nov/11/79-நீலமாமணி-கண்டத்தர்---பாடல்-1-2807035.html
2807034 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 78. குருகாம் வயிரமாம் - பாடல் 11 என். வெங்கடேஸ்வரன் DIN Friday, November 10, 2017 12:00 AM +0530  

பாடல்: 11

ஒறுத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்
          ஒள்ளழலை மாட்டி உடனே வைத்து
இறுத்தானாம் எண்ணான் முடிகள் பத்தும்
         இசைத்தானாம் இன்னிசைகள் கேட்டானாகும்
அறுத்தானாம் அஞ்சும் அடக்கி அங்கே
         ஆகாய மந்திரமும் ஆனானாகும்
கறுத்தானாம் காலனைக் காலால் வீழக்
        கண்ணாம் கருகாவூர் எந்தை தானே

விளக்கம்:

எண்ணான்=மதியாதவன், அரக்கன் இராவணன்; சிவபெருமான் வீற்றிருக்கும் இடம் என்பதைச் சற்றும் நினையாமல் தனது வலிமை மீது செருக்கு கொண்டு, கயிலை மலையினை பேர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட இராவணனின் செய்கை இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது.

ஒறுத்தான்=அழித்தான்: ஒன்னார்=பகைவர்கள்; இறுத்தான்=நசுக்கினான்: கறுத்தான்= கோபம் கொண்டான், வெகுண்டவன், ஆகாய மந்திரம்=ஆகாயமாகிய கோயில், வீட்டுலகம்; 

பொழிப்புரை:

பகைவர்களாகிய திரிபுரத்து அரக்கர்கள் கோட்டைகள் மூன்றினையும், தீ மூட்டி அழித்தவன்; தன்னை மதியாமல் கயிலை மலையை பேர்த்தெடுக்கத் துணிந்த இராவணனது தலைகள் பத்தினையும் நசுக்கியவன்; பின்னர் இராவணனது இன்னிசையைக் கேட்டு அவனைக் காப்பாற்ற இசைந்தவன்; ஐம்புலன்களையும் அடக்கிய சிவபெருமான் வீடுபேறாக இருப்பவன், சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க வந்த காலனின் மீது கோபம் கொண்டு உதைத்தவன். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த எம்பெருமான் கண் போன்று அடியார்களுக்கு வழிகாட்டியாக உள்ளான்.

முடிவுரை:
இறைவனின் எளிமையான தன்மையை, அடியார்கள் பால் அவன் கொண்டுள்ள எல்லையில்லாத கருணையை பாடல் தோறும் சொல்லிவந்த அப்பர் பிரானுக்கு பத்து பாடல்கள் போதவில்லை போலும். மேலும் ஒரு பாடல் அளித்தருளி, பதினோரு பாடல்கள் கொண்ட பதிகமாக படைத்துள்ளார். 
 
சர்வ வல்லமை படைத்த இறைவன் என்றும் உலகமும் உலகப் பொருட்களும் தோன்றுவதற்கு கருவாக இருந்து செயல்படும் இறைவன் என்று பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிடும் அப்பர் பிரான், அதே பாடலில் தனது சொல்லாக இருப்பவன் என்று கூறுகின்றார். அடுத்த பாடலில் தனது உள்ளத்தின் கருத்தாக உள்ளான் என்று கூறும் அப்பர் பிரான், மூன்றாவது பாடலில் தன்னை பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து காப்பாற்றியவன் என்று இறைவனைக் குறிப்பிடுகின்றார். நான்காவது பாடலில் அடியார்களுக்கு எளியவனாக இருக்கும் தன்மையும், மற்றைய பாடல்களில் அவனை அறியும் அன்பர்களின் நெஞ்சத்தில் கண்ணாக இருந்து வழிகாட்டும் தன்மையும், குறிப்பிடப்பட்டுள்ளது. அனாதியாக உள்ள பரம்பொருள் எவ்வாறு அடியார்களுக்கு எளியவனாக உள்ளான் என்று நமக்கு உணர்த்தி, நம்மை சிவநெறியின் பால் செல்லத் தூண்டும் பதிகமாகும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/nov/10/78-குருகாம்-வயிரமாம்---பாடல்-11-2807034.html
2807033 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 78. குருகாம் வயிரமாம் - பாடல் 10 என். வெங்கடேஸ்வரன் DIN Thursday, November 9, 2017 12:00 AM +0530  

பாடல்: 10

பொறுத்திருந்த புள்ளூர்வான் உள்ளானாகி உள்ளிருந்து
        அங்கு உள்நோய் களைவான் தானாய்
செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவச்
        சிலை குனியத் தீமூட்டும் திண்மையானாம்
அறுத்திருந்த கையானாம் அந்தாரம் அல்லி
       இருந்தானை ஒரு தலையைத் தெரிய நோக்கிக்
கறுத்திருந்த கண்டம் உடையான் போலும்
      கண்ணாம் கருகாவூர் எந்தை தானே

விளக்கம்:

புள்ளூர்வான்=கருடனாகிய பறவையை வாகனமாகக் கொண்ட திருமால். பொறுத்திருந்த= சுமையாகத் தாங்கிய திருமால். திருபுரத்து அரக்கர்களை எதிர்த்து போருக்குச் சென்ற சமயத்தில், சிவபெருமான் தேரின் மீது தனது காலை வைத்தபோது தேரின் அச்சு முறிந்தது. அப்போது சிறிதும் தயங்காமல், திருமால் இடப வடிவம் எடுத்து, சிவபெருமான் தன்னை வாகனமாகக் கொண்டு போருக்குச் செல்ல உதவி புரிந்தார். இந்த நிகழ்ச்சி தான் இங்கே பொறுத்திருந்த புள்ளூர்வான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல திருமுறைப் பாடல்களில் மால்விடை என்று இந்த நிகழ்ச்சி உணர்த்தப்படுகின்றது. திருவாசகத்தின் திருச்சாழல் பதிகத்தில் மணிவாசகர் இந்த செய்தியினைக் குறிப்பிடுகின்றார்.

கடகரியும் பரிமாவும் தேரும் உகந்து ஏறாதே
இடபம் உகந்து ஏறியவாறு எனக்கு அறிய இயம்பேடீ 
தட மதில்கள் அவை மூன்றும் தழல் எரித்த அந்நாளில்
இடபமாய்த் தாங்கினான் திருமால் காண் சாழலோ

திருமால் சிவபிரானை தனது உள்ளத்தில் வைத்து வழிபட்டார். திருமாலின் வழிபாட்டிற்கு ,மிகவும் மகிழ்ந்த சிவபெருமான், திருமால் விடும் மூச்சுக்காற்றுக்கு ஏற்ப நடனம் ஆடினார். அதனால் இந்த நடனத்திற்கு அஜபா நடனம் என்றே பெயர். இவ்வாறு திருமாலின் உள்ளத்தில் இருந்த தன்மை, பொறுத்திருந்த புள்ளூர்வான் உள்ளானாகி என்ற சொற்றொடர் மூலம் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. இதே நிகழ்ச்சி, அப்பர் பெருமானால், பாடிளம் பூதத்தினானும் என்று தொடங்கும் ஆரூர்ப்பதிகத்தின் கடைப் பாடலிலும் இடம் பெறுகின்றது. 

பையம் சுடர்விடு நாகப் பள்ளி கொள்வான் உள்ளத்தானும்
கை அஞ்சு நான்கு உடையானைக் கால் விரலால்   
                                                                           அடர்த்தானும்
பொய் அஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ் புரிந்தார்க்கு
                                                                           அருள் செய்யும்
ஐயஞ்சின் அப்புறத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே

இந்தப் பாடலின் கடைசி அடியில் ஆரூர்ப் பெருமான் ஐயஞ்சின் அப்புறத்தான் என்று சொல்லப் படுகின்றது. இருபத்தைத்து என்ற சொல் எதனைக் குறிக்கின்றது என்பது பற்றி உரை ஆசிரியர்கள் இரண்டு விதமாக விளக்கம் அளிக்கின்றனர். இருபத்து நான்கு ஆன்ம  தத்துவங்கள் (ஐம்பூதங்கள், ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கன்மேந்திரியங்கள், ஐந்து தன்மாத்திரைகள், நான்கு அந்தக்கரணங்கள்) மற்றும் ஆன்மாவைக் கடந்தவன் என்று ஒரு விளக்கம். மற்றொரு விளக்கம் சற்றே சுவையானது. ஆரூரில் இருக்கும் வீதி விடங்கர், சோமாஸ்கந்தரின் உருவம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. சோமாஸ்கந்த மூர்த்தம் இறைவனின் இருபத்தைந்து மாகேச்சர மூர்த்தங்களில் ஒன்று. ஆனால் ஆரூரில் இருக்கும் மூர்த்தம், தனது உள்ளத்தில் திருமால் வைத்து வழிபட்டது. இந்திரன் சிவபூஜை செய்வதற்கு மூர்த்தம் கேட்டபோது, திருமால் அதே உருவத்தை சிலையாக மாற்றி இந்திரனுக்கு அளித்தார். இந்த மூர்த்தம் தான், முசுகுந்தர் மூலம் திருவாரூருக்கு வந்தது.
 
இருபத்தைந்து மாகேச்சர மூர்த்தங்களும் சிவபெருமானின் ஐந்து முகங்களிலிருந்து தோன்றின. ஈசான முகத்திலிருந்து சோமாஸ்கந்தர், ரிஷபாரூடர், சந்திரசேகரர், கல்யாண சுந்தரர், மற்றும் நடராஜர் உருவங்கள் தோன்றின. தத்புருட முகத்திலிருந்து, பிக்ஷாடனர், காமாரி (மன்மதனை எரித்தவர்), காலாரி (காலனை உதைத்தவர்), சலந்தராரி (சலந்தரனை அழித்தவர்), மற்றும் திரிபுராரி(திரிபுரங்களை எரித்தவர்) உருவங்கள் தோன்றின. சத்யோஜாத முகத்திலிருந்து தோன்றிய உருவங்கள், இலிங்கோத்பவர். சுகாசனர், உமா மகேஸ்வரர், அரியர்த்தர் (சங்கர நாராயணர்), அர்த்த நாரீஸ்வரர் ஆகியவை. அகோர முகத்திலிருந்து தோன்றியவை, கஜசம்ஹாரர், வீரபத்திரர், தக்ஷிணாமூர்த்தி, கிராதர் (விஜயனுக்கு அருளியவர்) மற்றும் நீலகண்டர், வாமதேவ உருவத்திலிருந்து தோன்றிய உருவங்கள், கங்காளர், சக்ரதானர் (திருமாலுக்கு சக்கரம் அளித்தவர்), கஜமுகானுகிரகர் (ஐராவத யானைக்கு அருள் புரிந்தவர்), சண்டேச அனுகிரகர், மற்றும் ஏகபாதர் ஆகும். எனவே திருவாரூரில் உள்ள சோமாஸ்கந்த மூர்த்தம், இருபத்தைந்து மாகேச்சர மூர்த்தங்களுக்கு அப்பாற்பட்டது என்ற பொருளில் ஐயஞ்சின் அப்புறத்தான் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார் என்பது தான் இந்த சுவையான விளக்கம். 

குனிய=வளைத்து நிற்க. சிலை குனிய என்று, மேரு மலையை வில்லாக வளைத்துத் தனது கையில் சிவபெருமான் ஏந்திய நிலை இங்கே குறிப்பிடப்படுகின்றது. ஆனால் வல்லமை வாய்ந்த வில்லினை பயன்படுத்தாமல், தனது சிரிப்பு ஒன்றினால், மூன்று கோட்டைகளும் எரிந்து அழியுமாறு செய்த வீரம் இங்கே உணர்த்தப்படுகின்றது.      

பொழிப்புரை:

சிவபெருமான், இடபமாகத் தன்னைத் தாங்கிய, கருடனை வாகனமாகக் கொண்ட திருமாலின் உள்ளத்தில் இருந்து, அவரது உள்ளக் கவலையைப் போக்கியவர்; தன்னைப் பகைத்த திருபுரத்து அரக்கர்களின் கோட்டைகளை, கையில் வளைத்த நிலையில் வில் இருந்த போதிலும் அதனைப் பயன்படுத்தாமல், ஆயுதம் ஏதும் இன்றி தனது சிரிப்பு ஒன்றினால் எரிந்து அழியுமாறு வீரச்செயல் புரிந்தவர்; தாமரை மலரில் உறையும் பிரமனது ஒரு தலையினை, அவன் செருக்கு கொண்டு திரிந்தமை அறிந்து, நகத்தினால் கிள்ளி எறிந்த கையினை உடையவன்; தேவர்களைக் காப்பதற்காக பாற்கடலில் எழுந்த நஞ்சினை உண்டதால் கருநிறம் கொண்ட கழுத்தினை உடையவன். இத்தகைய சிறப்பு வாய்ந்த கருணையாளனாகிய சிவபெருமான் அடியார்களுக்கு கண் போன்று வழிகாட்டியாக உள்ளான்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/nov/09/78-குருகாம்-வயிரமாம்---பாடல்-10-2807033.html
2807031 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 78. குருகாம் வயிரமாம் - பாடல் 9 என். வெங்கடேஸ்வரன் Wednesday, November 8, 2017 12:00 AM +0530  

பாடல்: 9

விட்டுருவம் கிளர்கின்ற சோதியானாம்
          விண்ணவர்க்கும் அறியாத சூழலானாம்
பட்டுருவ மால் யானைத் தோல் கீண்டானாம்
         பலபலவும் பாணி பயின்றான் தானாம்  
எட்டுருவ மூர்த்தியாம் எண்தோளானாம்
        என் உச்சி மேலானாம் எம்பிரானாம்
கட்டுருவம் கடியானைக் காய்ந்தானாகும்
       கண்ணாம் கருகாவூர் எந்தை தானே

விளக்கம்:

உருவம்=நிறம்: சூழல்=நிலை; கட்டுருவம்=இளமையான அழகான உருவம் கொண்ட மன்மதன்  

பொழிப்புரை:

கருகாவூர் எந்தையாகிய சிவபெருமான், செந்நிற ஒளி வீசும் சோதியாக உள்ளான்; தேவர்கள் அறியமுடியாத நிலையினான்; தன்னை எதிர்த்து வந்த யானையைத் தனது கை நகத்தால் கீறி அதன் தோலை உரித்து ஆடையாக அணிந்து கொண்டவன்; பல விதமான தாளங்களுக்கு ஏற்ப கூத்தினை ஆடும் திறமை கொண்டவன்; அட்ட மூர்த்தியாக விளங்குபவன்; எட்டு தோள்களைக் கொண்டவன்; அழகிய இளைய வடிவம் கொண்ட மன்மதனை, நெற்றிக் கண்ணால் விழித்து பொசுக்கியவன். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சிவபெருமான், தனது திருவடியினை எனது தலை மேல் வைத்தவன், அவனே எனது தலைவன். அவன் பல அடியார்களுக்கும், கண் போன்று வழிகாட்டியாக உள்ளான்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/nov/08/78-குருகாம்-வயிரமாம்---பாடல்-9-2807031.html
2801663 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 78. குருகாம் வயிரமாம் - பாடல் 8 என். வெங்கடேஸ்வரன் DIN Tuesday, November 7, 2017 12:00 AM +0530  

பாடல்: 8

துடியாம் துடியின் முழக்கம் தானாம்
      சொல்லுவார் சொல் எல்லாம் சோதிப்பானாம்
படி தானாம் பாவம் அறுப்பானாகும் பால்
      நீற்றனாம் பரஞ்சோதி தானாம்
கொடியானாம் கூற்றை உதைத்தானாகும்
      கூறாத வஞ்சக் குயலர்க்கு என்றும்
கடியானாம் காட்சிக்கு அரியானாகும்
     கண்ணாம் கருகாவூர் எந்தை தானே

விளக்கம்:

குயலர்=தேர்ந்தவர்; கூறாத=உண்மை சொல்லாத; துடியின் முழக்கம் ஒலியாகும். ஒலியிலிருந்து தோன்றியது ஆகாயம். மற்ற நான்கு தன்மாத்திரைகளும், மற்ற நான்கு ஐம்பூதங்களும், ஒலியிலிருந்து தோன்றியவையே. எனவே தான் துடியின் முழக்கம் தோற்றத்தைக் குறிப்பதாக சொல்லப்படுகின்றது.. ஓசையிலிருந்து எழுந்தது சொல். இவ்வாறு ஓசையாகவும் ஒலியாகவும் சிவபெருமான் உள்ள தன்மை ஓசை ஒலி எலாம் ஆனாய் நீயே என்று தொடங்கும் திருவையாறு பதிகத்தின் மூலம் உணர்த்தப்படுகின்றது. 

ஓசை ஒலி எலாம் ஆனாய் நீயே உலகுக்கு
          ஒருவனாய் நின்றாய் நீயே
வாசமலர் எலாம் ஆனாய் நீயே மலையான்
          மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே பிரானாய் அடி
         என்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கு எலாம் ஆனாய் நீயே திருவையாறு
         அகலாத செம்பொன் சோதீ

நடராஜப் பெருமானின் நடனத் தோற்றம் எவ்வாறு ஐந்தொழில்களை உணர்த்துகின்றது என்பதை விளக்கும் உண்மை விளக்கம் நூலின் ஒரு பாடலில், அதன் ஆசிரியர் மனவாசகங்கடந்தார், சிவபெருமானின் கையில் துடி என்று அழைக்கப்படும் கருவி தோற்றத்தை உணர்த்துகின்றது என்று கூறுகின்றார். அவரது வலது கை, காக்கும் தன்மையையும், இடது  கையில் உள்ள நெருப்புச் சுடர் அழிக்கும் தொழிலையும், ஊன்றிய திருவடி மறைக்கும் தொழிலையும், தூக்கிய திருவடி அருள் புரிவதையும் குறிப்பதாக இங்கே கூறப்பட்டுள்ளது. திதி=காத்தல், ஸ்திதி என்ற வடமொழிச் சொல்லின் திரிபு. அங்கி=அக்னி

    தோற்றம் துடி அதனில் தோயும் திதி அமைப்பில்
    சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் ஊற்றமா 
    ஊன்று மலர்ப் பதத்தில் உற்ற திரோதம் முத்தி
    நான்ற மலர்ப் பதத்தே நாடு

பொழிப்புரை:

கருகாவூர் எந்தையாகிய சிவபெருமான், உலகத் தோற்றத்திற்கு காரணமான உடுக்கையாகவும், அந்த உடுக்கையிலிருந்து எழும் ஒலியாகவும். அந்த ஒலியிலிருந்து தோன்றும் சொற்களாகவும் உள்ளான். அவன் பேசுபவர்களின் சொற்களில் உள்ள உண்மையையும் பொய்மையையும் சோதித்து அறியும் வல்லமை படைத்தவன்; நல்ல நெறியாக விளங்கும் அவன், நமது பாவங்களைப் போக்குபவனாகவும் திகழ்கின்றான்; பால் போன்று வெண்மை நிறம் கொண்ட நீற்றினை அணிந்த பரஞ்சோதி; கொடிய கூற்றுவனை உதைத்த அவன், உண்மை கூறாமல் வஞ்சகத்தில் தேர்ந்தவர்களாக காணப்படுவோருக்கு மிகவும் அரியவன்; அத்தகைய கொடியோர்களை வெறுக்கும் அவன், அடியார்களுக்கு கண் போன்று வழிகாட்டுபவனாக விளங்குகின்றான்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/nov/07/78-குருகாம்-வயிரமாம்---பாடல்-8-2801663.html
2801662 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 78. குருகாம் வயிரமாம் - பாடல் 7 என். வெங்கடேஸ்வரன் DIN Monday, November 6, 2017 12:00 AM +0530  

பாடல்: 7

அரை சேர் அரவனாம் ஆலத்தானாம்
         ஆதிரை நாளானாம் அண்ட வானோர்
திரை சேர் திருமுடித் திங்களானாம்
        தீவினை நாசன் என் சிந்தையானாம்
உரை சேர் உலகத்தார் உள்ளானுமாம்
        உமையாளோர் பாகனாம் ஓத வேலிக்
கரை சேர் கடல் நஞ்சை உண்டானாகும்
       கண்ணாம் கருகாவூர் எந்தை தானே

விளக்கம்:

அரை=இடுப்பு; அரவம்=பாம்பு; திரை=அலைகள்; இங்கே அலைகள் வீசும் கங்கை நதியைக் குறிக்கும்; அண்ட வானோர்=வானோர்கள் வாழும் உலகம்; உரை சேர் உலகத்தார்=பல விதமான சொற்களைப் பேசும் உலகத்தவர்; சிவபெருமானின் புகழைத் தவிர்த்து மற்றைய சொற்களைப் பேசும் மாந்தர்கள்; இறைவன் அனைத்து உயிர்களின் உடனாகவும் இருந்து காக்கின்றான். நாத்தழும்பேற நாத்திகவாதம் பேசும் மனிதர்களின் உள்ளத்திலும் இறைவன் இருக்கின்றான். ஆனால் அவர்கள், இறைவனைப் பற்றி சிந்திக்காத காரணத்தால் அவர்களால் இறைவன் இருப்பதை உணரமுடியாது. இதனையே மணிவாசகர் ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியான் என்று திருவாசகத்தில் குறிப்பிடுகின்றார். 

இந்த பாடலில் சிவபெருமானை ஆதிரை நாளான் என்று குறிப்பிடுகின்றார். மார்கழி மாதத்து ஆதிரைத் திருநாளும், பங்குனி மாதத்து உத்திரத் திருநாளும் மிகவும் சிறப்பாக திருவாரூரில் கொண்டாடப்படும். ஆதிரை, சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரமாக கருதப் படுகின்றது. ஆதிரை நாளின் சிறப்பினை விளக்கும் ஒரு பதிகம், அப்பர் பெருமானால் அருளப்பட்டுள்ளது. (பதிக எண்: 4.21)

பொழிப்புரை:

கருகாவூர் எந்தையாகிய எம்பெருமான், பாம்பினை இடையில் அணிந்தவன்; விடத்தை உண்டவன்: ஆதிரை எனப்படும் நட்சத்திரத்திற்கு உரிமை பூண்டவன்; விண்ணுலகத்தில் இருந்து கீழே இறங்கி வந்த, அலைகள் நிறைந்த கங்கை நதியையும், சந்திரனையும் தனது அழகிய சடையில் சூடியவன்; எனது தீவினைகளைப் போக்கி எனது உள்ளத்தில் குடி கொண்டுள்ளவன்; அவனது புகழினைப் பாடாத மாந்தர்கள் உட்பட, உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களின் உள்ளத்திலும் நிறைந்து நிற்பவன்; உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டவன்; உலகுக்கு எல்லையாகவும், எப்போதும் ஆரவாரம் இடும் அலைகள் நிறைந்த கடலினில் தோன்றிய நஞ்சினை உண்டவன். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சிவபெருமான், அவனது அடியார்களுக்கு கண் போன்று வழிகாட்டுபவனாக உள்ளான்.   

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/nov/06/78-குருகாம்-வயிரமாம்---பாடல்-7-2801662.html
2801661 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 78. குருகாம் வயிரமாம் - பாடல் 6 என். வெங்கடேஸ்வரன் Sunday, November 5, 2017 12:00 AM +0530  

பாடல்: 6

மூலனாம் மூர்த்தியாம் முன்னே தானாம்
          மூவாத மேனி முக்கண்ணினானாம்
சீலனாம் சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வனாம்
          செஞ்சுடர்க்கோர் சோதி தானாம்
மாலனாம் மங்கையோர் பங்கனாகும்
          மன்றாடியாம் வானோர் தங்கட்கெல்லாம்
காலனாம் காலனைக் காய்ந்தானாகும்
         கண்ணாம் கருகாவூர் எந்தை தானே

விளக்கம்:

மூலன்=அனைத்துப் பொருட்களுக்கும் மூலமானவன். மூவாத மேனியான் என்று அழைப்பதன் மூலம், சிவபிரானின் மூப்படையாத தன்மையும், அனைத்துப் பொருட்களும், அனைத்து உயிர்களும் அழிந்த பின்னரும் சிவபிரான் இருக்கும் தன்மையும் உணர்த்தப் பட்டுள்ளன.  

மாலன்=திருமாலை தனது உடலில் ஒரு பாகமாக உடையவன். பல திருமுறைப் பாடல்களில் சிவபிரான், திருமாலைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்ற செய்தி குறிப்பிடப் படுகின்றது. இந்த பாடலில் திருமால் மற்றும் உமையம்மை இருவரையும், தனது உடலில் பாகமாகக் கொண்டவன் சிவபெருமான் என்று கூறப்படுகின்றது. இந்த குறிப்பு நமக்கு தில்லைத் தலத்தின் மீது அருளிய செஞ்சடைக் கற்றை என்று தொடங்கும் பதிகத்தின் ஒரு பாடலை நினைவூட்டும். திருமாலை பாகமாக உடைய மூர்த்தம் அரியர்த்தர், உமை அம்மையை பாகமாக உடைய மூர்த்தம் அர்த்தநாரீஸ்வரர் என்று அழைக்கப்படும்.

பையரவு அசைத்த அல்குல் பனி நிலா எறிக்கும் சென்னி
மையரிக் கண்ணியாளும் மாலும் ஓர் பாகமாகிச்
செய் எரித் தில்லை தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே
கை எரி வீசி நின்று கனல் எரி ஆடுமாறே 

மேலைக் காட்டுப்பள்ளி என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (பதிக எண்: 1.05) முதல் பாடலில் சம்பந்தர் திருமாலையும், உமை அம்மையையும் சிவபெருமான் தனது உடலில் பாகமாக ஏற்றுக்கொண்டதை குறிப்பிடுகின்றார். செய்=வயல்; நீர்வளம் நிறைந்த வயல்களில் துள்ளிக் குதித்து விளையாடும் மீன்கள் படுவதால் மலர்களில் இருந்து தேன் உதிர்வதாக சம்பந்தர் கூறுகின்றார். அவ்வாறு உதிரும் தேனின் மணமும், கைக்கெட்டும் தூரத்தில் பழுத்து முதிர்ந்த வாழைக் கனிகளின் மணமும் கலந்து வீசும் தலம், என்று தலத்தின் நீர்வளமும் நிலவளமும் குறிப்பிடப்படுகின்றது.  சுட்டெரிக்கும் தன்மை கொண்ட கொடிய விடம் என்பதால் அழல் வாய் என்று கூறுகின்றார், பணைத்தோளி=மூங்கில் போன்று அழகான தோள்களை உடைய உமையம்மை.

செய் அருகே புனல் பாய ஓங்கி
         செங்கயல் பாயச்சில மலர்த்தேன்
கை அருகே கனி வாழை ஈன்று
         கானல் எல்லாம் கமழ் காட்டுப்பள்ளி
பை அருகே அழல் வாய் ஐவாய்
         பாம்பணையான் பணைத்தோளி பாகம்
மெய் அருகே உடையானை உள்கி
        விண்டவர் ஏறுவர் மேல் உலகே

பொழிப்புரை:

அனைத்துப் பொருட்களுக்கும் மூலமாக விளங்குபவனும், எல்லாப் பொருட்களுக்கும் முன்னே தோன்றியவனாகவும் எல்லாப் பொருட்களையும் கடந்தவனாகவும் இருப்பவன் சிவபெருமான்; அவன் மூப்படையாத திருமேனியை உடையவன்; மூன்று கண்களைக் கொண்டவன்; நல்ல குணங்களுக்கு இருப்பிடமாக உள்ளவன்; தன்னை அடைந்தவர்களின் துயர் தீர்க்கும் செல்வனாக விளங்குபவன்; சூரியன் முதலான சுடர்களுக்கு ஒளி வழங்குபவன்; திருமாலுக்கும் உமை அம்மைக்கும் தனது உடலின் பாகத்தை வழங்கியவன்; மன்றங்களில் கூத்தாடுபவன்; வானோர்களுக்கு இறுதிக் காலத்தை வரையறுக்கும் கூற்றுவனையும் கோபித்து உதைத்தவன்; இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சிவபெருமான் தனது அடியார்களுக்கு கண்ணாக இருந்து வழிகாட்டுகின்றான்..

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/nov/05/78-குருகாம்-வயிரமாம்---பாடல்-6-2801661.html
2797540 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 78. குருகாம் வயிரமாம் - பாடல் 5 என். வெங்கடேஸ்வரன் DIN Saturday, November 4, 2017 12:00 AM +0530  

பாடல்: 5

    படைத்தானாம் பாரை இடந்தானாகும் பரிசு ஒன்று
                 அறியாமை நின்றான் தானாம்
    உடைத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள்ளழலால்
                 மூட்டி ஒருக்கி நின்று
    அடைத்தானாம் சூலம் மழு ஓர் நாகம் அசைத்தானாம்
                 ஆனேறு ஒன்று ஊர்ந்தானாகும்
    கடைத்தானாம் கள்ளம் அறிவார் நெஞ்சில் கண்ணாம்
                 கருகாவூர் எந்தை தானே

விளக்கம்:

படைத்தான்=உலகைப் படைத்த பிரமன்; இடத்தல்=பெயர்த்தல்; இரண்யாக்ஷன் என்ற அரக்கன், பூமியை கடலின் அடியில் ஒளித்து வைத்தபோது, அந்த உலகத்தை அந்த இடத்திலிருந்து பெயர்த்தெடுத்து மீட்ட திருமால்; பரிசு=தன்மை; ஒருக்கி=ஒருங்கே கூட்டி; கடைத்தான் என்றால் கலக்குபவன் என்று பொருள்.

திரிபுரத்து அரக்கர்கள், வேறு வேறு திசைகளில் பறந்து கொண்டிருந்த தங்களது மூன்று கோட்டைகள், ஒரே நேர்க்கோட்டில் வரும் தருணத்தில் மட்டுமே தங்களை எவரேனும் அழிக்கமுடியும் என்ற வரத்தினைப் பெற்று, அந்த மமதையால் உலகெங்கும் திரிந்து அனைவரையும் துன்புறுத்தி வந்தனர். அவர்களது மூன்று கோட்டைகளையும் ஒரே நேர்க்கோட்டில் வரவழைத்து, தனது சிரிப்பினால் ஒரு சேர அழித்து, அவர்களது ஆதிக்கத்தை உடைத்த வல்லமையாளன் சிவபெருமான். இந்த நிகழ்ச்சி தான் புரங்கள் மூன்றும் ஒள்ளழலால் மூட்டி ஒருக்கி நின்று அடைத்தான் என்று குறிப்பிடப்படுகின்றது.     

பொழிப்புரை:

கருகாவூரில் உறையும் எம்பெருமான், உலகத்தைப் படைத்த பிரமனும், அந்த உலகம் அரக்கன் இரண்யாக்ஷனால் கடலில் ஒளித்து வைக்கப்பட்ட போது மீட்டவனான  திருமாலும், தனது தன்மையை உணராவண்ணம் நெடிய சுடராக நின்றவன் சிவபெருமான்; பகைவர்களாகிய திரிபுரத்து அரக்கர்களது மூன்று கோட்டைகளையும் ஒரே நேர்க்கோட்டில் கூட்டி, அவற்றை எரியூட்டி ஒரு சேர அழித்த வல்லமையாளன்; சூலம் மழு ஆகிய படைகளை உடையவன்; பாம்பினை தனது இடுப்பில் இறுகக் கட்டி, இடப வாகனத்தின் மீதேறி உலகெங்கும் செல்பவன்; வஞ்சனை உடைய மனிதர்களின் மனத்தை கலக்கும் சிவபிரான், தன்னை உணர்ந்துத் தொழும் அடியார்களுக்கு வழிகாட்டியாக உள்ளான்.

]]>
http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/nov/04/78-குருகாம்-வயிரமாம்---பாடல்-5-2797540.html
2797539 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 78. குருகாம் வயிரமாம் - பாடல் 4 என். வெங்கடேஸ்வரன் DIN Friday, November 3, 2017 12:00 AM +0530  

பாடல்: 4

    இரவனாம் எல்லி நடமாடியாம் எண்திசைக்கும்
                                           தேவனாம் என்னுளானாம்
    அரவனாம் அல்லல் அறுப்பானுமாம் ஆகாச
                                          மூர்த்தியாம் ஆனேறு ஏறும்
    குரவனாம் கூற்றை உதைத்தான் தானாம் கூறாத
                                          வஞ்சக் குயலர்க்கு என்றும்
    கரவனாம் காட்சிக்கு எளியனுமாம் கண்ணாம்
                                          கருகாவூர் எந்தை தானே

விளக்கம்:

இரவன்=இரவுப் பொழுதாக இருப்பவன்; எல்லி=இருண்ட நேரம், ஊழிக் காலம் என்று இங்கே பொருள் கொள்ளவேண்டும். நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே என்று மணிவாசகர் சிவபுராணத்தில் குறிப்பிடுவது இங்கே நினைவு கூறத்தக்கது.; அரவன்=பாம்பினை அணிந்தவன். குயலர்=தேர்ந்தவர்; 

முதல் மூன்று பாடல்களில், தனது சொல்லாகவும், கருத்தாகவும், தன்னைக் காப்பவனகவும் இருக்கும் இறைவன் என்று குறிப்பிடும் அப்பர் பிரான், மற்ற அடியார்களுக்கும் சிவபிரான் எளியவனாக இருப்பன் என்று கூறி, நம்மையும் அவன் வழிப்படுத்தும் பாங்கு உணரத்தக்கது.
 
பொழிப்புரை:

அடியார்களுக்கு மிகவும் எளியனாக காட்சி தரும் சிவபெருமான், இரவுமாகவும் பகலுமாகவும் உள்ளவன்: ஊழிக்காலத்து இருளிலும் தொடர்ந்து நடனம் ஆடுபவன்; எட்டு திசைகளுக்கும் தேவனாக விளங்குபவன்; எனது நெஞ்சத்தின் உள்ளே குடிகொண்டு இருப்பவன்; பாம்பினை அணிகலனாகக் கொண்டவன்; அடியார்களின் துயரங்களைத் துடைப்பவன்; ஆகாயத்தை வடிவமாகக் கொண்டு எங்கும் நிறைந்து இருப்பவன்; காளையை வாகனமாகக் கொண்டவன்; அனைவருக்கும் குருவாக விளங்குபவன்; கூற்றுவனை உதைத்தவன்; வஞ்சகத்தில் தேர்ந்தவர்க்கும், தன்னைப் புகழாதவர்க்கும் வெளிப்படாமல், மறைபொருளாக இருப்பவன்; இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சிவபெருமான் அவனது  அடியார்களுக்கு மிகவும் எளியவனாக இருந்து கண் போன்று அவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளான். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/nov/03/78-குருகாம்-வயிரமாம்---பாடல்-4-2797539.html
2797537 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 78. குருகாம் வயிரமாம் - பாடல் 3 என். வெங்கடேஸ்வரன் DIN Thursday, November 2, 2017 12:00 AM +0530  

பாடல் - 3

பூத்தானாம் பூவின் நிறத்தானுமாம் பூக்குளால்
                        வாசமாய் மன்னி நின்ற
கோத் தானாம் கோல்வளையாள் கூறனாகும் கொண்ட
                       சமயத்தார் தேவனாகி
ஏத்தாதார்க்கு என்றும் இடரே துன்பம் ஈவானாம் என்
                      நெஞ்சத்தின் உள்ளே நின்று
காத்தானாம் காலன் அடையா வண்ணம் கண்ணாம்
                      கருகாவூர் எந்தை தானே

விளக்கம்:

தனது சொல்லாகவும், கருத்தாகவும் இருந்து செயல்படும் பெருமான் என்று முந்தைய இரண்டு பாடல்களில் கூறிய அப்பர் பிரான் இங்கே, காலன் தன்னை அடையாத வண்ணம் இறைவன் காக்கின்றான் என்று கூறுகின்றார். பிறப்பெடுத்த எவரும் இறப்பது திண்ணம். அவ்வாறு இருக்கையில் காலன் அடையா வண்ணம் காத்தான் என்று அப்பர் பிரான் ஏன் குறிப்பிடுகின்றார். தன்னை பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து மீட்டதன் மூலம், தனக்கு அடுத்த பிறவி என்ற ஒன்று இல்லாமல் செய்த இறைவன், பிறப்பு இல்லாத காரணத்தால், காலனும் தன்னை அடையாமல் காக்கின்றான் என்று கூறுகின்றார்.  

பொதுவாக இந்து சமயத்தின் ஆறு பிரிவுகளாகக் கருதப்படுவன, சைவம் (சிவபிரான்), வைணவம் (திருமால்), காணாபத்தியம் (விநாயகர்), கௌமாரம் (முருகப்பெருமான்), சாத்தேயம் (சக்தி), சௌரம் (சூரியன்) ஆகியவை. இந்த பிரிவுகள் வேதங்களில் சொல்லப்பட்டுள்ளன. சைவ சித்தாந்தத்தில், சமயங்களை நான்கு வகையாகப் பிரித்து ஒவ்வொரு வகையிலும் ஆறு சமயங்களை குறிப்பிடுகின்றனர். கொண்ட சமயத்தார் தேவனாகி என்று கூறப்பட்டுள்ளதால், வேறு வேறு தேவர்களைக் கொண்ட ஆறு சமயங்கள் என்பது புலனாகின்றது. அனைத்து தேவர்களாக இருந்து, அவர்களை இயக்குபவன் சிவபிரான் தான் என்பது திருமுறையில் கூறப்படும் பொதுவான கருத்து என்பதால், இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுவது இந்து சமயத்தின் ஆறு பிரிவுகள் எனக் கொள்ளலாம்.     

பொழிப்புரை:
பூவாகவும், பூவின் வண்ணமாகவும், பூவின் உள்ளே உறையும் வாசனையாகவும் இருக்கும் இறைவனே அனைவர்க்கும் தலைவன். அத்தகைய இறைவன், கைகள் நிறையுமாறு வளையல்களை அணிந்த உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டுள்ளான்: அவரவர்கள் மேற்கொண்டுள்ள ஆறுவகை சமயங்களின் தலைவனும் அவனே. தன்னை வழிபடாதவர்களின் துன்பங்களையும் அவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளையும் போக்காதவனாக இருக்கும் எனது இறைவன், அடியேனது நெஞ்சத்தினுள்ளே இருந்து, என்னை பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து மீட்டு, காலன் எனை அணுகாத வண்ணம் அருள் புரிந்து என்னைக் காப்பாற்றி வழிகாட்டும் கண்ணாக உள்ளான்.    

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/nov/02/78-குருகாம்-வயிரமாம்---பாடல்-3-2797537.html
2797534 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 78. குருகாம் வயிரமாம் - பாடல் 2 என். வெங்கடேஸ்வரன் DIN Wednesday, November 1, 2017 12:00 AM +0530  

பாடல்: 2
    வித்தாம் முளையாகும் வேரே தானாம் வேண்டும்
                           உருவமாம் விரும்பி நின்ற
    பத்தாம் அடியார்க்கோர் பாங்கனுமாம் பால் நிறமுமாம்
                           பரஞ்சோதி தானாம்
    தொத்தாம் அமரர் கணம் சூழ்ந்து போற்றத்
                          தோன்றாது என் உள்ளத்தினுள்ளே நின்ற
    கத்தாம் அடியேற்கும் காணா காட்டும் கண்ணாம்
                          கருகாவூர் எந்தை தானே

விளக்கம்: 

கத்தாம்=கருத்தாம், கருத்தாம் என்பதன் இடைக்குறை திரிபு. பாங்கன்=தோழன் பத்தாம் அடியார் என்று பத்து குணங்களை உடைய அடியார்கள் குறிப்பிடப்படுகின்றார்கள். அடியார்களின் செய்கை பத்து வகைப் பட்டது என்று அப்பர் பெருமான், (பத்து கொலாம் அடியார் செய்கை தானே) என்று ஒன்று கொலாம் என்று தொடங்கும் பதிகத்தின் கடைப் பாடலில் குறிப்பிடுகின்றார், சிவபெருமானின் பழ அடியார்கள் பத்து குணங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று மணிவாசகப் பெருமானும் திருவெம்பாவைப் பதிகத்தின் மூன்றாவது பாடலில் குறிப்பிடுகின்றார். பத்து என்பதை பற்று என்பதன் திரிபாகக் கொண்டு, ஈசனின் மேல் பற்று கொண்ட பழ அடியார் என்று குறிப்பதாகவும் பொருள் கூறுவார்கள்.   

    முத்தன்ன வெண் நகையாய் முன் வந்து எதிர் எழுந்து என் 
    அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
    தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
    பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
    புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால்

                                                                                   பொல்லாதோ 
    எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
    சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
    இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்
 

சிவனடியார்களிடம் இருக்கவேண்டிய அக குணங்கள் பத்தும் புற குணங்கள் பத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புற குணங்கள், திருநீறும் உருத்திராக்கமும் பக்தியுடன் தரித்தல், சிவபெருமானை புகழ்ந்து பாடுதல், சிவபிரானின் திருநாமங்களை ஓதுதல், சிவபூசனை செய்தல், சிவபுண்ணியங்கள் செய்தல், சிவபுராணங்களைக் கேட்டல், சிவாலய வழிபாடு செய்தல், சிவனடியார்களை வணங்குதல், சிவனடியார்களுக்கு வேண்டுவன கொடுத்தல், சிவனடியார்கள் இல்லங்களில் அன்றி வேறிடத்தில் உணவு உட்கொள்ளாது இருத்தல் ஆகியவை. பத்து அக குணங்கள் கீழ்க்கண்டவை ஆகும். சிவபிரானின் புகழைக் கேட்கும்போது கண்டம் விம்முதல், நாக்கு தழுதழுத்தல், உதடுகள் துடித்தல், உடம்பு குலுங்குதல், மயிர்ப்புளகம் கொள்ளுதல், உடல் வியர்த்தல், சொல் எழாமல் இருத்தல், கசிந்துருகி கண்ணீர் பெருக்குதல், வாய் விட்டு அழுதல் மற்றும் மெய்ம்மறத்தல். 

சிவபிரான், அனைத்துப் பொருட்களும் தோன்றுவதற்கு காரணமாக இருக்கும் நிலை, அப்பர் பெருமானால், ஆவடுதுறை பதிகத்தின் (பதிக எண் 6.46) மூன்றாவது பாடலில் கூறப்படுகின்றது,  தொத்து=கூட்டம் தொகுப்பு; வித்திலிருந்து முதலில் முளை தோன்றும்; முளை தோன்றிய பின்னர் அந்தச் செடி நிலைத்து நிற்பதற்கு வேர் தோன்றும். வித்து, முளை, வேர் என்று வளர்ச்சியின் வரிசையில் இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். உலகில் உள்ள பொருட்கள் தோன்றுவதற்கு வித்தாக இருக்கும் இறைவன், அந்த வித்து முளையாக மாறி, வித்தின் பயனாக உள்ள தன்மையும், வேராக அந்த முளை நிலைத்து நிற்க உதவும் தன்மையும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
 
பத்தர்கள் சித்தத்தே பாவித்தானைப் பவளக்
            கொழுந்தினை மாணிக்கத்தின்
தொத்தினைத் தூநெறியாய் நின்றான் தன்னைச் சொல்லுவார்
           சொற்பொருளின் தோற்றமாகி
வித்தினை முளைக்கிளையை வேரைச் சீரை வினைவயத்தின்
           தன் சார்பை வெய்ய தீர்க்கும்
அத்தனை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே
           அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே

இந்த பதிகத்தின் முதல் பாடலில் தனது நாவிலிருந்து வெளிவரும் சொல்லாக இருக்கும் இறைவன் என்று கூறும் அப்பர் பிரான், இந்த இரண்டாவது பாடலில் தனது கருத்தாக இறைவன் மிளிர்கின்றான் என்று கூறுகின்றார். 

பொழிப்புரை:

சிவபெருமான், உலகம் மற்றும் உலகில் உள்ள அனைத்துப் பொருட்களும் தோன்றுவதற்கு விதையாக, முதல் காரணமாக இருப்பது மட்டுமல்லாமல், அந்த விதையின் பயனாகிய முளையாகவும், அவ்வாறு வெளியே வந்த முளை நிலத்தில் நிலைத்து நிற்பதற்கு உதவும் வேராகவும் உள்ளான். இவ்வாறு அனைத்துப் பொருட்களும் உயிர்களும் தோன்றுவதற்கும், வளர்வதற்கும் நிலைத்து நிற்பதற்கும் உடனிருந்து உதவும் இறைவன், தான் விரும்பிய உருவத்தை ஏற்க வல்லவன். அவன் மேன்மை வாய்ந்த பத்து புற குணங்களையும் அக குணங்களையும் கொண்ட அடியார்களுக்குத் தோழனாக விளங்குகின்றான். செம்மை நிறம்  கொண்ட அந்த இறைவன் மேனி முழுதும் திருநீறு பூசிய காரணத்தால், பால் போன்று வெண்மை நிறத்துடன் காட்சி அளிக்கின்றான். உலகில் உள்ள விளக்குகள் அனைத்தினும் உயர்ந்த விளக்காக விளங்கும் சோதி அவன். சூழ்ந்து நின்று அவனைப் போற்றும் அமரர்கள் காண்பதற்கு மிகவும் அரியவன்; ஆனால் எனது உள்ளத்தின் உள்ளே இருந்து எனது கருத்தாக மிளிர்கின்றான். அடியேன் இதுவரை அறியாதவற்றை, காணாதவற்றை காட்டும் கண்ணாகவும் இறைவன் சிவபெருமான் செயல்படுகின்றான்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/nov/01/78-குருகாம்-வயிரமாம்---பாடல்-2-2797534.html
2797532 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 78. குருகாம் வயிரமாம் - பாடல் 1 என். வெங்கடேஸ்வரன் Tuesday, October 31, 2017 12:00 AM +0530  

முன்னுரை:

கருகாவூர் என்றதும் அனைவருக்கும், கருவில் உள்ள உயிரினைக் காக்கும் கர்ப்ப ரக்ஷாம்பிகை அம்மன் நினைவு தோன்றும். ஆனால் அப்பர் பெருமானுக்கு, இந்த உலகம் தோன்றுவதற்கு கருவாக இருக்கும் இறைவனின் நினைவு வருகின்றது. எங்கும் எதையும் சிவமாக பார்க்கும் அப்பர் பிரான், மாயையில் ஒடுங்கிய உலகத்தையும் உலகப் பொருட்களையும் மீண்டும் தோற்றுவிக்கும் பெருமானின் குணத்தைக் குறிப்பிட்டு, இறைவனின் அனாதித் தன்மையை நமக்கு பதிகத்தின் முதல் பாடலில் உணர்த்துகின்றார். இந்த பதிகம் தம்பதிகள், தங்களிடையே ஒற்றுமை நிலவவும், தங்களுக்குள் இடையே உள்ளே பிணக்குகள் தீரவும் ஓதவேண்டிய பதிகமாக கருதப்படுகின்றது. 

பாடல்: 1

    குருகாம் வயிரமாம் கூறு நாளாம் கொள்ளும்
                       கிழமையாம் கோளே தானாம்
    பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்
                      பழத்தின் இரதமாம் பாட்டில் பண்ணாம்
    ஒருகால் உமையாளோர் பாகனுமாம்
                     உள் நின்ற நாவிற்கு உரையாடியாம்
    கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் கண்ணாம்
                     கருகாவூர் எந்தை தானே

விளக்கம்:

குருகு=மெல்லிய இளம் குருத்து; வயிரம்=முதிர்ந்ததால் ஏற்பட்ட திண்மை, வலிமை. வயிரம் பாய்ந்த மரம் என்று வலிமையான தண்டினை உடைய மரத்தினைக் கூறுவதுண்டு. குருகாம் வயிரமாம் என்று, மென்மையாக உள்ள இறைவன் வலிமையாகவும் இருப்பது இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. கூறு நாள்=சூரியனால் கூறுபடுத்தப்பட்ட பகல், இரவு ஆகிய இரண்டு வேளைகளும் சேர்ந்த நாள். கொள்ளும் கிழமையாம் கோளே தானாம்=ஞாயிறு முதல் சனி வரை, எந்த கோள்களின் பெயர் பற்றி இடப்பட்டதோ அந்த கோள்களின் குணங்களைக் கொண்டுள்ள வாரத்தின் ஏழு நாட்கள்; 

பருகா அமுதம்=பருகினால் மட்டுமே நீண்ட ஆயுள் தரக்கூடியது அமுதம். தன்னை நினைத்து தியானித்தாலே, மலங்களை நீக்குபவன் இறைவன் என்பதை உணர்த்த பருகா அமுதம் என்று கூறினார். இரதம்=சுவை; பழத்தினில் சுவையாகவும், பண்ணில் தமிழாகவும், கண்ணின் மணியாகவும், இருளில் பயன்படும் விளக்கு போலவும் சிவபிரான் உள்ளார் என்று சுந்தரர், குருகாவூர் வெள்ளடைப் பதிகத்தில் (7.29.6) கூறுகின்றார்

    பண்ணிடைத் தமிழ் ஒப்பாய் பழத்தினில் சுவை ஒப்பாய்
    கண்ணிடை மணி ஒப்பாய் கடுஇருள் சுடர் ஒப்பாய்
    மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே
    விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே

உலகுக்கு முன்னே தோன்றும் கரு என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். மகா சங்காரம் முடிந்த பின்னர், ஒடுங்கிய உலகத்தினை மறுபடியும் தோற்றுவிக்க சிவபிரான் எண்ணம் கொள்ளும் சமயத்தில் உலகம் என்று ஒன்று தனியாக இல்லை; ஒடுங்கிய உலகத்தை மறுபடியும் தோற்றுவிக்க நினைத்து அதனை செயல்படுத்துவதும் சிவபிரான் தான் என்பதால், அப்பர் பிரான் இங்கே கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் கண் என்று குறிப்பிடுகின்றார். 


பொழிப்புரை:

கருகாவூர் தலத்தில் எழுந்தருளியிருக்கும் எங்கள் கண் போன்ற இறைவன், இளங்குருத்து போன்ற பொருட்களில் மென்மையாகவும், பல பொருட்களின் வலிமையாகவும் விளங்குகின்றான். அவனே, சூரியனால் பாகுபாடு செய்யப்படும் வெவ்வேறு நாட்களாகவும், அந்தந்த நாட்களுக்குரிய கோள்களாகவும் இருக்கின்றான். அவன் தன்னை நினைப்பவர், மலங்களைப் போக்கும் அமுதமாகத் திகழ்கின்றான்; பாலில் நெய்யும், பழத்தில் சுவையும், பாட்டில் பண்ணும் இணைந்துள்ளது நமது புறக்கண்களுக்குத் தெரிவதில்லை; ஆனால் அவை இணைந்துள்ள தன்மையை நம்மால் உணரமுடிகின்றது. அவ்வாறே எல்லாப் பொருட்களிலும் இறைவன் இணைந்து இருக்கும் தன்மையை நமது கண்களால் நாம் காணமுடியாது. ஆனால் இறைவன் அவ்வாறு அனைத்துப் பொருட்களிலும் இணைந்து இருக்கின்றான். உமை அம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள இறைவன், நமது நாவினில் பொருந்தி நம்மைப் பேசுவிப்பனாகவும் உள்ளான். அவன் தான் இந்த உலகம் தோன்றுவதற்கு முன்னமே இருந்து, உலகத்தைத் தோற்றுவித்து, நம் எல்லோரையும் வழிநடத்திச் செல்கின்றான்.  

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/oct/31/78-குருகாம்-வயிரமாம்---பாடல்-1-2797532.html
2792922 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 77. அட்டுமின் இல்பலி - பாடல் 11 என். வெங்கடேஸ்வரன் DIN Monday, October 30, 2017 12:00 AM +0530  

பாடல் 11:

செல்லேர் கொடியன் சிவன் பெருங்கோயில் சிவபுரமும்
வல்லேன் புகவும் மதில் சூழ் இலங்கையர் காவலனைக்
கல்லார் முடியொடு தோள் இறச் செற்ற கழலடியான்
நல்லூர் இருந்த ;பிரான் அல்லனோ நம்மை ஆள்பவனே

விளக்கம்:

செல்லேர் கொடியன்=இடியைப் போன்று ஒலிக்கும் எருதினை கொடியில் கொண்டவன், சிவபிரான்: பொங்கிய அன்போடு திளைத்துப் போற்றி இசைத்த பாடல் என்று சேக்கிழார் பெருமான் கூறியபடி, சிவபிரான் பால் தனக்கு இருந்த எல்லையில்லாத அன்பினை வெளிப்படுத்திய இந்த பதிகத்திற்கு, பத்து பாடல்கள் என்ற எல்லை கூடாது என்று அப்பர் பிரான் நினைத்தார் போலும். பதினோரு பாடல்கள் கொண்ட பதிகமாக இதனை அருளியுள்ளார்.

இறைவனின் திருக்கோயில் அந்நாள் வரை செல்லாத கடையனாகத் தன்னை அப்பர் பிரான் இங்கே கூறிக்கொள்கின்றார். அப்பர் பிரான் இறைவன் பால் கொண்டிருந்த அன்பினை நாம் அனைவரும் அறிவோம். எனவே திருக்கோயில் செல்லாத கடையனாக, உண்மையில் அவர் தன்னை குறிப்பிடவில்லை என்பது நமக்கு புலனாகும். இதே பாடலில் தவறு செய்த இராவணனுக்குத் தண்டனை அளித்த சிவபிரான், நம் அனைவரையும் ஆட்கொள்பவன் என்று கூறி, இராவணனை ஆட்கொண்டதை குறிப்பால் உணர்த்தும் அப்பர் பிரான், அதே போல் நம்மையும் ஆட்கொள்வான் என்று நம்பிக்கை அளிக்கின்றார். இந்நாள் வரை திருக்கோயில் செல்லாத கடையனாக நாம் இருந்திருந்தாலும், இனிமேல் நாம் இறைவனை நினைத்தால், அவன் நமக்கு அருளுவான் என்று ஆறுதல் கூறி, நம்மை இறைவழிச் செலுத்தும் பாடல். இவ்வாறு நமக்கு வழிகாட்டுவதற்காகத் தான் ஒரு பாடல் அதிகமாக அளித்தாரோ என்றும் நமக்குத் தோன்றுகின்றது.  

பொழிப்புரை:

இடி போன்று முழங்கக்கூடிய எருதினைத் தனது கொடியில் கொண்ட சிவபிரான் உறையும் கோயில் சென்று அவனை வழிபடும் குணம் இல்லாத கடையேன் நான். இலங்கை நகரம் மற்றவர் புக முடியாதபடி மதில்கள் கொண்டது. இவ்வாறு பலம் வாய்ந்த இலங்கைக்கு மன்னனாகிய இராவணனின், கயிலை மலையை பேர்த்தெடுக்க முயற்சி செய்த போது, அந்த அரக்கனது உறுதி உடைய தோள்களும் தலைகளும் நெரியுமாறு, வெற்றி கொண்ட திருப்பாதங்களை உடைய சிவபிரான் நல்லூர் தலத்தில் உறைகின்றான். அவன் அல்லவா நம் அனைவரையும் ஆட்கொள்பவன்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/oct/30/77-அட்டுமின்-இல்பலி---பாடல்-11-2792922.html
2792921 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 77. அட்டுமின் இல்பலி - பாடல் 10 என். வெங்கடேஸ்வரன் DIN Sunday, October 29, 2017 12:00 AM +0530  

பாடல் 10:

திருவமர் தாமரை சீர்வளர் செங்கழுநீர் கோ நெய்தல்
குருவமர் கோங்கம் குரா மகிழ் சண்பகம் கொன்றை வன்னி
மருவமர் நீள்கொடி மாடமலி மறையோர்கள் நல்லூர் 
உருவமர் பாகத்து உமையவள் பாகனை உள்குதுமே

விளக்கம்:

குருவமர்=நிறங்கள் பொருந்திய: மருவமர்=சூழப்பட்ட:

பொழிப்புரை:

திருமகள் அமரும் தாமரை மலர், சீராக வளரும் செங்கழுநீர் மலர், தலையான நெய்தல் பூ, நிறங்களுடன் காணப்படும் கோங்கம், குரா மலர், காண்போரை மகிழ வைக்கும் சண்பக மலர், கொன்றை மலர், வன்னி மலர், ஆகிய மலர்கள் கொண்ட செடிகளும் கொடிகளும் நெருங்கி வளரும் நல்லூர் தலத்தில் மறையோர்கள் வாழும் மாட மாளிகைகள் நிறைந்து காணப்படுகின்றன. இவ்வாறு அழகாக காணப்படும் நல்லூரில் உறைபவனும், உருவத்தில் அழகுடைய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளவனும் ஆகிய  சிவபிரானை நாம் நமது மனதினில் நினைத்து தியானம் செய்வோம்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/oct/29/77-அட்டுமின்-இல்பலி---பாடல்-10-2792921.html
2792920 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 77. அட்டுமின் இல்பலி - பாடல் 9 என். வெங்கடேஸ்வரன் DIN Saturday, October 28, 2017 12:00 AM +0530  

பாடல் 9:
மன்னிய மாமறையோர் மகிழ்ந்து ஏத்த மருவி எங்கும்
துன்னிய தொண்டர்கள் இன்னிசை பாடித் தொழுது நல்லூர்க்
கன்னியர் தாமும் கனவிடை உன்னிய காதலரை
அன்னியர் அற்றவர் அங்கணனே அருள் நல்கென்பரே

விளக்கம்:

மன்னிய=நிலைத்த: அங்கணன்=அழகிய கண்களை உடையவர்; சிவபெருமானை அன்னியர் அற்றவர் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். அனைத்து உயிர்களிலும் கலந்து இருக்கும் சிவபெருமானுக்கு அன்னியர் எவரும் இல்லை; அனைவரும் அவருக்கு வேண்டியவரே:   

இந்த பாடலில் அப்பர் நாயகி நல்லூரில் உள்ள கன்னியர்கள் அனைவரும் சிவபிரானைத் தங்கள் காதலராகக் கருதுவதாகவும் அனைவரும் சிவபிரானை கனவில் கண்டதாகவும் கூறுகின்றாள். சீர்காழியில் இருந்த மகளிர்கள் சிவபெருமானைத் தங்களது காதலனாக கருதினார்கள் என்ற கருத்து சீர்காழி தலத்தில் மீது அப்பர் பிரான் அருளிய பாடல் ஒன்றிலும் சொல்லப் படுகின்றது. சிவபிரான் பால் காதல் வயப்பட்ட பெண்மணியின் தாயார், என்ன சிறப்பினைக் கண்டு தனது பெண் சிவபிரான் பேரில் காதல் கொண்டுள்ளாள் என்று வியக்கின்றாள். பேய்க் கூட்டங்களை உறவாகவும், உண்ணும் பாத்திரம் கபாலமாகவும், உறையும் இடம் சுடுகாடாகவும் கொண்டுள்ள சிவபிரான் தனது உடலில் ஒரு பெண்ணையும் வைத்திருக்கின்றான். இவ்வாறு இருக்கையில், மேலே கூறியவற்றுள் எதனைக் கண்டு எனது மகள் அன்பு கொண்டாள் என்று கூறும் பாடல் இங்கே (5.45.8) கொடுக்கப்பட்டுள்ளது. ஈமம்=சுடுகாடு:
 
    உறவு பேய்க்கணம் உண்பது வெண்தலை
    உறைவது ஈமம் உடலில் ஓர் பெண்கொடி
    துறைகள் ஆர் கடல் தோணிபுரத்து உறை 
    இறைவனார்க்கு இவள் என் கண்டு அன்பாவதே

தனது அன்னையின் கேள்விக்கு பதில் கூறுவதாக, இதே பதிகத்தின் அடுத்த பாடல் அமைந்துள்ளது. அந்த பாடலில், சீர்காழி தலத்தில் உள்ள பலர் சிவபிரான் பேரில் அன்பு கொண்டு அவர் பின்னே செல்ல, அவர்களைப் பின்தொடர்ந்த தானும் அவரது அழகில் ஈடுபட்டு சிவபிரானை காதலித்ததாக மகள், தனது அன்னையின் கேள்விக்கு விடை கூறுகின்றாள். மாகம்=மேகம் மாக யானை=மேகம் போன்று கறுத்த யானை; மருப்பு=தந்தம்; யானையின் தந்தங்களைப் போன்று மார்பகங்களைக் கொண்ட பெண்மணிகள் என்று சீர்காழி நகரின் பெண்களை அப்பர் குறிப்பிடுகின்றார், தலத்தில் உள்ள மற்ற பெண்கள் போன்று தானும் சிவபிரானுக்கு அடிமையானதாக கூறி, தாயின் கேள்விக்கு சுவையாக விடை அளிக்கும் அப்பர் பிரானின் கற்பனை ரசிக்கத்தக்கது. 

    மாக யானை மருப்பேர் முலையினர்   
    போக யானும் அவள் புக்கதே புகத்
    தோகை சேர்தரு தோணிபுரவர்க்கே
    ஆக யானும் அவர்க்கு இனி ஆனதே
 

பொழிப்புரை:

நிலை பெற்றதும் மேன்மையானதும் ஆன வேதங்களை மறையோர் மகிழ்ந்து துதிக்க, நல்லூர் தலத்தில் அதிகமாக காணப்படும் அடியார்கள் இன்னிசைப் பாடல்களால் இறைவனைத் தொழ, தலத்தில் வசிக்கும் கன்னியர்கள் தங்களது கனவிலே, தாங்கள் விரும்பிய அழகிய சிவபெருமானைக் கண்டு மகிழ்கின்றார்கள். திருநல்லூர் தலத்தில் இருக்கும் கன்னியர்கள், சிவபெருமானை, அழகிய கண்களை உடையவரே, அனைத்து உயிர்களையும் தனது உயிர் போல் கருதி, எவரையும் அன்னியவராக கொள்ளாதவரே, என்று அழைத்து தங்களுக்கு அருள் நல்கவேண்டும் என்று வேண்டுகின்றார்கள். நானும் அவர்களுடன் சேர்ந்து அவ்வாறே வேண்டுகின்றேன்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/oct/28/77-அட்டுமின்-இல்பலி---பாடல்-9-2792920.html
2792919 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 77. அட்டுமின் இல்பலி - பாடல் 8 என். வெங்கடேஸ்வரன் DIN Friday, October 27, 2017 12:00 AM +0530  

பாடல் 8:

அறை மல்கு பைங்கழல் ஆர்ப்ப நின்றான் அணியார் சடை மேல்
நறை மல்கு கொன்றை அம் தாருடையான் நல்லூர் அகத்தே
பறை மல்கு பாடலன் ஆடலனாகிப் பரிசு அழித்தான்
பிறை மல்கு செஞ்சடை தாழ நின்று ஆடிய பிஞ்ஞகனே

விளக்கம்:

அறை=ஓசை; மல்கு=மிக்க; பைங்கழல்=புதியதாகத் தோற்றம் அளிக்கும், புது மெருகு குலையாத; நறை=தேன்; நறை மல்கு கொன்றை=தேன் சிந்தும் கொன்றை மலர்கள்; தார்=மாலை: பறை=தோலால் செய்யப்பட்ட இசைக்கருவி; பரிசு=தன்மை

அடக்கமாக இருந்து ஆண்களை ஏறெடுத்துப் பார்க்காமல் இருப்பது பெண்களின் தன்மை. இந்த அடக்க குணத்தைத் தான் கைவிட்டு, தலைவன் பால் காதல் வயப்பட்டதை இங்கே தனது பரிசு அழிக்கப்பட்டதாக அப்பர் நாயகி கூறுகின்றாள். தான் தனது நிலையிலிருந்து மாறியதற்கும் தலைவனே காரணம் என்று பழிப்பதும் உண்டு. இவ்வாறு, தனது பரிசினை அழித்து தனது வளையலையும் கவர்ந்தார் சிவபெருமான் என்று கூறும் நயமான பாடல் திருவெண்காட்டுப் பதிகத்தில் (பாடல் எண்: 6.35.4) காணப்படுகின்றது. போகம் என்பது சிவபோகத்தை குறிக்கின்றது. பாகு=பாகம்; இங்கே இடும் பிச்சையின் ஒரு பாகம். இந்த பாடலில் அப்பர்நாயகி, பிச்சையிடச் சென்ற தன்னை உற்று நோக்கிய சிவபெருமான், தனது பரிசினை அழித்ததாக கூறுகின்றாள்.
  
ஆகத்து உமை அடக்கி ஆறு சூடி ஐவாய் அரவு
               அசைத்து அங்கு ஆனேறு ஏறிப்
போகம் பல உடைத்தாய்ப் பூதம் சூழப் புலித்
              தோலுடையாப் புகுந்து நின்றார்
பாகு இடுவான் சென்றேனைப் பற்றி நோக்கிப்
              பரிசு அழித்து என் வளை கவர்ந்தார்பா வியேனை    
மேகமுகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த வெண்காடு
             மேவிய விகிர்தனாரே 

 
பொழிப்புரை:

ஓசை மிக உடையதும், என்றும் புதியது போல் தோற்றமளிக்கும் கழல்கள் ஆரவாரித்து ஒலிக்க நடனம் ஆடுபவனும், அழகான சடை மேல், தேன் சிந்தும் கொன்றை மலர்களாலான மாலையை அணிந்தவனும் ஆகிய சிவபிரான்,, பிறைச் சந்திரனைத் தனது சடையில் அணிந்து, அழகாக பின்னப்பட்ட தனது சடை தாழுமாறு நடனம் ஆடுகின்றான். இத்தகைய சிறப்புகள் கொண்ட சிவபிரான், நல்லூர் தலத்தில், பறை எனப்படும் வாத்தியத்திற்கு ஏற்ப பாடியும், அந்த பாடலுக்கு ஏற்ப அழகாக ஆடியும் எனது உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, எனது அடக்க குணம் கொண்ட தன்மையை அழித்து விட்டான்.   
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/oct/27/77-அட்டுமின்-இல்பலி---பாடல்-8-2792919.html
2792918 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 77. அட்டுமின் இல்பலி - பாடல் 7 என். வெங்கடேஸ்வரன் DIN Thursday, October 26, 2017 12:00 AM +0530  

பாடல் 7:

நாள் கொண்ட தாமரைப் பூத்தடம் சூழ்ந்த நல்லூர் அகத்தே
கீள் கொண்ட கோவணம் கா என்று சொல்லிக் கிறிபடத்
                                                                                                 தான்
வாட்கொண்ட நோக்கி மனைவியொடும் அங்கோர்
                                                                                                 வாணிகனை
ஆட்கொண்ட வார்த்தை உரைக்கும் அன்றோ இவ்வகலிடமே

விளக்கம்:

கா=காப்பாற்று: கிறிபட=பல விதமாக வன்மொழிகள் பேசி; அகலிடம்=அகன்ற உலகம், உலகத்தில் உள்ள மக்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்

இந்த பாடலில் அமர்நீதி நாயனார் வரலாற்றில் நடந்த நிகழ்ச்சி சொல்லப்படுகின்றது. இந்த நிகழ்ச்சி பெரிய புராணத்தில் மிகவும் விரிவாக கூறப்படுகின்றது. பழையாறை நகரில் வாழ்ந்து வந்த வணிகர் அமர்நீதியார். அவர் பொன், முத்து, பட்டாடைகள் முதலிய பல விலையுயர்ந்த பொருட்களை வாணிபம் செய்து வந்தார்; சிவபெருமானின் அடியார்களுக்கு அமுது அளித்து, அவர்களுக்கு உயர்ந்த கோவண ஆடைகளை அளித்து வந்தார். ஒரு நாள் அமர்நீதியாரின் திருமடத்திற்கு, ஒரு பிரம்மச்சாரி வேடத்தில் வந்த சிவபெருமான், தனது கையில் இருந்த ஒரு கோவணத்தைக் கொடுத்து அதனைப் பாதுகாத்துத் தான் குளித்து வந்தவுடன் கொடுக்குமாறு, அமர்நீதியாரிடம் கூறினார். அமர்நீதியார் அந்த கோவணத்தை பாதுகாப்பாக வைத்திருந்த போதும் சிவபெருமானின் திருவிளையாட்டால், அமர்நீதியார் பாதுகாப்பாக வைத்திருந்த கோவணம் காணாமல் போகவே, அமர்நீதியார் தவித்தார். தொலைந்து போன கோவணத்திற்கு பதில் வேறு கோவணம் கொடுப்பதாக அமர்நீதியார் சொன்னபோது, தன்னிடமிருந்த மற்றொரு கோவணத்திற்கு ஈடாக, அமர்நீதியார் கொடுக்கும் கோவணம் இருக்கவேண்டும் என்று நிபந்தனை விதித்தார். தான் வைத்திருந்த கோவணத்தை தராசின் ஒரு தட்டில் பிரம்மச்சாரியாக வந்த சிவபிரான் வைக்க, அதற்கு ஈடாக தன்னிடம் இருந்த பல கோவணங்களை அமர் நீதியார் வைத்தார்; தராசுத் தட்டுகள் நேர்படாமல் இருக்கவே தன்னிடம் இருந்த பல விலை உயர்ந்த பொருட்களையும் அமர்நீதியார் வைக்கத் தொடங்கினார். தன்னிடம் இருந்த அனைத்துப் பொருட்களையும் வைத்த பின்னரும் ஒற்றைக் கோவணம் தாங்கிய தட்டு தாழ்ந்தே இருந்தது. இறுதியில் அமர்நீதியார், தானும், தனது மனைவியும், தனது மகனும் தராசுத் தட்டில் ஏறி அமர்ந்தபோது தட்டுகள் இரண்டும் சமமாக மாறின. பாதுகாப்பாக வைப்பதற்கு கொடுத்த கோவணத்தைத் தொலைத்த குற்றத்திற்காக, தன்னையும் தனது குடும்பத்தாரையும், அடியாருக்குத் அடிமையாக இருப்பதற்கு உடன்பட்டத் தொண்டரின் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டிய பின்னர், பிரம்மச்சாரியும் மறைந்தார், அவர் தராசுத் தட்டில் வைத்த கோவணமும் மறைந்தது. தேவர்கள் பூமாரி பொழிய, சிவபிரான் அமர்நீதியாருக்கு காட்சி கொடுத்து அருளினார். வணிகனான அமர்நீதியாரை, அவரது குடும்பத்தாரோடும் சிவபெருமான் ஆட்கொண்ட நிகழ்ச்சியை உலகத்தவர் அனைவரும் அறிவார்கள் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். பழையாறையும் நல்லூரும் அருகருகே உள்ள தலங்கள்.        

பொழிப்புரை:

தினமும் காலையில் மலர்கின்ற தாமரைப் பூக்களை உடைய குளங்கள் நிறைந்த நல்லூரில், கீளோடு கூடிய கோவணத்தை பாதுகாத்து பின்னர் எனக்கு அளிப்பாய் என்று வணிகர் அமர்நீதியாரிடம் கூறி, பின்னர் அந்த கோவணம் காணமல் போன பின்பு வன்மையான பல சொற்களைப் பேசி, தொலைந்து போன கோவணத்திற்கு ஈடாக அமர்நீதியார் தானும், தனது மனைவியும், தனது குழந்தையுமாக, தராசுத் தட்டில் ஏறி நிற்குமாறு செய்து, பின்னர் அவர்களை சிவபெருமான் ஆட்கொண்ட நிகழ்ச்சியினை உலகம் இன்றும் போற்றிப் புகழ்ந்து பேசுகின்றது.     

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/oct/26/77-அட்டுமின்-இல்பலி---பாடல்-7-2792918.html
2792917 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 77. அட்டுமின் இல்பலி - பாடல் 6 என். வெங்கடேஸ்வரன் DIN Wednesday, October 25, 2017 12:00 AM +0530  

பாடல் 6:
தேற்றப்பட திருநல்லூர் அகத்தே சிவன் இருந்தால்
தோற்றப்படச் சென்று கண்டுகொள்ளார் தொண்டர்
                                                                                       துன்மதியால்
ஆற்றில் கெடுத்துக் குளத்தில் தேடிய ஆதரைப் போல்
காற்றில் கடுத்து உலகெல்லாம் திரிதர்வர் காண்பதற்கே

விளக்கம்:

ஆதர்=கீழ்மகன், அறிவில் இழிந்தவர் காற்றில் கடுத்து=காற்றைவிட வேகமாக: தேற்றப்பட=உள்ளத்தில் தெளிவு ஏற்பட.

ஒரு பொருளை அந்த பொருள் எங்கே இருக்குமோ அங்கே தேடினால் தான் நமக்கு கிடைக்கும். சிவபெருமான் உறையும் திருக்கோயில்களை விட்டுவிட்டு, மற்ற இடங்களில் அவரைத் தேடும் மூடர்களை, ஆற்றில் தொலைத்த பொருளை குளத்தில் தேடும் அறிவிலிகள் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். ஆற்றில் கெடுத்துக் குளத்தில் தேடும் ஆதர் என்பது பழமொழி. அந்நாளில் வழங்கிய பழமொழிகள் பலவற்றை அப்பர் பிரான் ஒரு  பதிகத்தில் பயன்படுத்தியுள்ளார். பழமொழிப் பதிகம் என்று அழைக்கப்படும் அந்த பதிகம், மெய்யெலாம் வெண்ணீறு என்று தொடங்குகின்றது; திருவாரூர் தலத்தின் மீது அருளப்பட்டது. (பதிக எண்: 4.05)

அப்பர் பிரானுக்குப் பின்னர் வந்த சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்க்கையில், சிவபிரானின் அருளால் இந்த பழமொழியை பொய்யாக்கும் விதமாக ஒரு நிகழ்ச்சி நடைபெறுகின்றது. விருத்தாசலம் என்று இன்று அழைக்கப்படும் திருமுதுகுன்றம் என்ற தலத்தில் சிவபிரான் அருளால், சுந்தரர் பன்னிரண்டாயிரம் பொற்காசுகள் பெற்றார். பொற்காசுகளைப் பெற்ற சுந்தரர், பெருமானிடம், பெருமானே, இந்த பொற்காசுகள் அனைத்தும் திருவாரூரில் உள்ளார் வியக்குமாறு, அங்கு வரும்படியாக அருள் புரிய வேண்டும் என்று வேண்டினார். அப்போது சிவபெருமான், வானில் எழுந்த அசரீரி வாக்கின் மூலம். ஆரூரனே, பொற்காசுகளை மணிமுத்தாறு ஆற்றில் இட்டு, திருவாரூர் குளத்தில் பெற்றுக் கொள்வாய் என்று, தெரிவித்தார். சுந்தரரும் பெருமான் சொல்லியபடியே அந்த காசுகளை மணிமுத்தாறு ஆற்றில் இட்டுச் சென்றார். இந்த நிகழ்ச்சி பெரிய புராணத்தில் மிகவும் விரிவாக சொல்லப்படுகின்றது.
அருளும் இக்கனகம் எல்லாம் அடியனேற்கு ஆரூர்
                                                                               உள்ளோர்
மருளுற வியப்ப அங்கே வரப்பெற வேண்டும் என்னத்
தெருளுற எழுந்த வாக்கால் செழுமணி முத்தாற்றில்
                                                                              இட்டிப்
பொருளினை முழுதும் ஆரூர்க் குளத்தில் போய்க் கொள்க
                                                                              என்றார்.

திருவாரூர் சென்ற பின்னர், ஒருநாள் தனது மனைவி பரவையுடன், திருவாரூர் குளக்கரைக்குச் சென்ற சுந்தரர் பொன் செய்த மேனியினீர் என்ற பதிகம் பாடியபோது, பொற்காசுகள் குளத்தில் மிதந்து வந்தன. இவ்வாறு பழமொழி பொய்யான அதிசயம், சிவபிரான் பணித்ததற்கு ஏற்ப, சுந்தரர் மணிமுத்தாறு ஆற்றில் பொற்காசுகளை விட்டுச் சென்றதால் நிகழ்ந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சிவபிரானின் அருள் இருந்தால், பழமொழியும் பொய்யாகுமாறு அதிசயங்கள் நிகழும் என்பதையும் இந்த நிகழ்ச்சி உணர்த்துகின்றது. பொன் செய்த மேனியினீர் (பதிக எண்: 7.25) என்ற பதிகத்தின் ஒன்பதாவது பாடலை (ஏத்தாதே இருந்தறியேன்) சுந்தரர் பாடியபோது, குளத்தில் பொற்காசுகள் மிதந்து வந்தன என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். மேலும் இந்த நிகழ்ச்சி அப்பர் பெருமானின் திருவாக்கு என்றும் பொய்க்காமல் இருப்பதை எந்த விதத்திலும் மாற்றவில்லை நாம் உணரவேண்டும்
 
கொந்தவிழ் பூங்கொன்றை முடிக் கூத்தனார் திருவருளால்
வந்தெழு பொன் திரள் எடுத்து வரன்முறையால் கரையேற்ற
அந்தரத்து மலர்மாரி பொழிந்து இழிந்தது அவனியுளோர்
இந்த அதிசயம் என்னே யார் பெறுவார் எனத் தொழுதார் 

   
பொழிப்புரை:

உலகத்தவர் உள்ளங்களில் தெளிவு ஏற்படவேண்டும் என்பதற்காக சிவபெருமான் நல்லூரில் உறைகின்றார். ஆனால் சிலர் தங்களது அறிவின்மை காரணமாக, நல்லூர் திருக்கோயில் சென்று சிவபெருமானைக் கண்டு, தொழுது அருள் பெறாமல், வேறு வேறு இடங்களுக்கெல்லாம் காற்றினை விட வேகமாகச் சென்று இறைவனைத் தேடுகின்றார்கள். என்னே அவர்களது அறிவின்மை. ஆற்றில் தொலைத்த பொருளைக் குளத்தினில் தேடிய மூடர்களின் செய்கை போல் அவர்கள் செய்கை உள்ளது. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/oct/25/77-அட்டுமின்-இல்பலி---பாடல்-6-2792917.html
2792916 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 77. அட்டுமின் இல்பலி - பாடல் 5 என். வெங்கடேஸ்வரன் DIN Tuesday, October 24, 2017 12:00 AM +0530  

பாடல் 5:
வெண்மதி சூடி விளங்க நின்றானை விண்ணோர்கள்
                                                                                             தொழ
நண்ணிலயத்தோடு பாடல் அறாத நல்லூர் அகத்தே
திண் நிலயம் கொண்டு நின்றான் திரிபுரம் மூன்று
                                                                                             எரித்தான்
கண்ணுளும் நெஞ்சத்து அகத்தும் உள கழல் சேவடியே

விளக்கம்:

நிலையம்=திருக்கோயில்; ஆடலும் பாடலும் பிரியாத நல்லோர் என்று சொல்வதன் மூலம், மனம், மொழி, மெய்களால் இறைவனை வழிபடும் பாங்கு இங்கே உரைக்கப்படுகின்றது. 

பொழிப்புரை:

தலையில் வெண்பிறை சூடி உலகத்தவர்கள் காண நிற்பவனும், விண்ணோர்கள் தொழுமாறு கூத்து புரிபவனும், இலயத்தோடு இணைந்த ஆடலும் பாடலும் பிரியாத நல்லூர் தலத்தில் உள்ள சிறப்பான திருக்கோயில் உறைபவனும் ஆகிய சிவபெருமான், திரிபுரம் மூன்றையும் எரித்தவன். வீரக்கழல்கள் அணிந்த அவனது திருப்பாதங்கள் எனது கண்களிலும் நெஞ்சினிலும் உள்ளன. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/oct/24/77-அட்டுமின்-இல்பலி---பாடல்-5-2792916.html
2792914 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 77. அட்டுமின் இல்பலி - பாடல் 4 என். வெங்கடேஸ்வரன் DIN Monday, October 23, 2017 12:00 AM +0530  

பாடல் 4:

செஞ்சுடர் சோதிப் பவளத் திரள் திகழ் முத்தனைய
நஞ்சணி கண்டன் நல்லூர் உறை நம்பனை நான்
                                                                                      ஒரு கால்
துஞ்சிடைக் கண்டு கனவின் தலைத் தொழுதேற்கு
                                                                                      அவன் தான்
நெஞ்சிடை நின்று அகலான் பல காலமும் நின்றனனே

விளக்கம்:

துஞ்சிடை=தூக்கத்தின் இடையே, கனவில்

அல்லும் பகலும் சிவபிரானைப் பற்றிய நினைவுகளுடனும் கற்பனைகளுடனும் காலத்தைக் கழித்த அப்பர் நாயகியின் கனவிலும் சிவபிரான் தோன்றியதில் வியப்பு ஏதும் இல்லை. அத்தகைய கனவினைக் குறிக்கும் பாடல் இது. சிவபிரானின் மேனி நிறம் சிவப்பு என்பதால் பவளத் திரள் என்று பல திருமுறைப் பாடல்களில் கூறப்படுகின்றது. அவரது கழுத்தில் விளங்கும் நீல நிறம், பவளத் திரளில் முத்து பதித்தது போன்று காணப்படுகின்றது என்று இங்கே அழகாக அப்பர் பிரான் கூறுகின்றார். 

பொழிப்புரை:

சிவந்த சூரியன் போன்று ஒளியுடைவனாய், பவளத் திரளில் விளங்கும் முத்து போன்று கருநீல நிறம் அவனது கழுத்தில் இருக்கும் விடம் உண்டதால் ஏற்பட்ட கறை விளங்கத் தோன்றும் சிவபெருமான் அழகாக காணப்படுகின்றான். இவ்வாறு அழகுடன் நல்லூரில் உறையும் சிவபெருமானை, நான் எனது கனவில் கண்டேன். கண்ட அவனை நான் தொழுதேன்; எனது தொழுகையை ஏற்றுக் கொண்ட அவன் எனது நெஞ்சினில் புகுந்து விட்டான்; புகுந்த பின்னர் அவன் அங்கே அகலாது இடம் பெற்று நிற்கின்றான்.   

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/oct/23/77-அட்டுமின்-இல்பலி---பாடல்-4-2792914.html
2792912 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 77. அட்டுமின் இல்பலி - பாடல் 3 என். வெங்கடேஸ்வரன் DIN Sunday, October 22, 2017 12:00 AM +0530  

பாடல் 3:

    படவேர் அரவு அல்குல் பாவை நல்லீர் பகலே ஒருவர்
    இடுவார் இடைப் பலி கொள்பவர் போல வந்து இல் புகுந்து
    நடவார் அடிகள் நடம் பயின்று ஆடிய கூத்தர் கொலோ
    வடபால் கயிலையும் தென்பால் நல்லூரும் தம் வாழ்பதியே

விளக்கம்:

வாயு பகவானால் கொண்டு வரப்பட்ட கயிலை மலையின் இரு பகுதிகளில் ஒன்று இந்த தலத்திலும் மற்றொரு பகுதி அருகில் உள்ள ஆவூர் பசுபதீச்சரம் தலத்தில் வைக்கப் பட்டதாகவும் கூறப்படுகின்றது. அதனால் கயிலை மலைக்கு இணையாக இந்த தலம் கருதப் படுகின்றது. சிவபிரான் மீது தீராத காதல் கொண்ட அப்பர் நாயகி, சிவபிரான் தனது இல்லம் வந்ததாக கற்பனை செய்துகொண்டு, அவரின் வருகையை பெருமிதத்துடன் மற்ற பெண்மணிகளுக்கும் அறிவிக்கும் பாடல். 

பட+ஏர்=படவேர்; ஏர்=அழகு; நடவார்=நடவாமல் இருக்கின்றார், நீங்காமல் இருக்கும் நிலை.

பொழிப்புரை:

படம் எடுக்கின்ற பாம்பின் தோற்றத்தை ஒத்த அழகிய மார்பகங்களையும் நல்ல குணங்களையும் உடைய பெண்களே, பகல் நேரத்தில், பெண்களிடம் பிச்சை கொள்வார் போல், ஒருவர் எங்கள் இல்லம் புகுந்தார்; புகுந்த அவருக்கு பிச்சை இட்ட பின்னரும் அவர் வீட்டினை விட்டு நீங்காதவராக இங்கேயே நிற்கின்றார்; அவர் யாரென்று நீங்கள் கேட்பீராகில், அவர் தான், வடக்கே கயிலை மலையையும் தெற்கே நல்லூரையும் இடமாக கொண்டு உறைபவரும், தொடர்ந்து நடனம் பயின்று ஆடும் சிவபிரான் ஆவார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/oct/22/77-அட்டுமின்-இல்பலி---பாடல்-3-2792912.html
2792911 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 77. அட்டுமின் இல்பலி - பாடல் 2 என். வெங்கடேஸ்வரன் Saturday, October 21, 2017 12:00 AM +0530  

பாடல் 2:

    பெண்ணிட்டம் பண்டையது அன்று இவை பெய்பலிக்கு
                                                                               என்று உழல்வார்
    நண்ணிட்டு வந்து மனை புகுந்தார் நல்லூர் அகத்தே
    பண்ணிட்ட பாடலர் ஆடலராய்ப் பற்று நோக்கி நின்று
    கண்ணிட்டுப் போயிற்றுக் காரணம் உண்டு கறைக்
                                                                              கண்டரே

விளக்கம்:

தாருகாவனத்து மகளிர் இல்லங்களுக்குச் சென்றதன் காரணம் அறியேன் என்று கூறும் அப்பர் நாயகி, நல்லூரில் தனது இல்லத்திற்கு பிச்சை ஏற்க வந்த போது, கண்ணால் சாடை காட்டிச் சென்றதற்கு காரணம் இருப்பதாக கூறுகின்றாள். தாருகாவனம் சென்ற போது பிச்சைப் பெருமான் வேடம் தரித்து (இடுப்பில் கோவணமும், உடலில் பாம்புகளை அணிகளாகத் தரித்துச் சென்றதாக கூறப்படுகின்றது. அவ்வாறு பாம்புடன் சென்றால், பிச்சையிட வரும் பெண்மணிகள் பயம் கொள்வர் எனக் கருதி அத்தகைய வேடத்தில் நல்லூர் வரவில்லை என்று அப்பர் நாயகி கற்பனை செய்கின்றாள். சிவபெருமான் வந்ததாக கூறுவதே கற்பனை தான். தாருகாவனம் சென்ற போது சிவபிரான் யாரையும் தன்னைப் பின் தொடர்ந்து வருமாறு அழைக்கவில்லை. அவரது சுந்தர வேடத்தில் மயங்கி, தாருகாவனத்து பெண்மணிகள், தாங்கள் செய்து கொண்டிருந்த செயல்களை விட்டுவிட்டு அவரைப் பின் தொடர்ந்ததாக புராணம் கூறுகின்றது.  

கண்ணிட்டுப் போதல்=கண்ணால் சாடை காட்டிச் செல்லுதல்; கறைக்கண்டர்=நீல நிறத்தை கழுத்தினில் கொண்ட நீலகண்டர்;   

பொழிப்புரை:

நல்லூரில் தன்னைக் காணும் பெண்கள், தன் மீது ஆசை கொள்ளும்படி அழகிய வடிவத்துடன் வந்த சிவபிரான், தான் தற்போது கொண்டுள்ள வடிவம், பண்டைய நாளில் தாருகாவனம் சென்ற போது எடுத்த வடிவம் அல்ல, இன்று பிச்சைக்காக எடுத்தது என்று கூறிக் கொண்டு, பல இல்லங்கள் தோறும் திரியும் சிவபிரான், நல்லூரில் எனது இல்லத்திற்கு அருகில் வருகில் வந்தார்; பின்னர் எனது இல்லத்தில் புகுந்தார்; பண்ணோடு கூடிய பாடல்களைப் பாடியவாறு ஆடிக்கொண்டே வந்த சிவபெருமான், சிறிது நேரம் நின்று, எங்களை நோக்கி கண்ணால் சாடை காட்டிச் சென்றதற்கு காரணம் உள்ளது.   

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/oct/21/77-அட்டுமின்-இல்பலி---பாடல்-2-2792911.html
2792840 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 77. அட்டுமின் இல்பலி - பாடல் 1 என். வெங்கடேஸ்வரன் Friday, October 20, 2017 08:54 AM +0530  

முன்னுரை:
சிவபெருமான் தனக்குத் திருவடி தீட்சை தந்த நல்லூர் தலத்திற்கு இரண்டாவது முறையாக அப்பர் பிரான் சென்றார். தான் வேண்டியதற்கு ஏற்ப, தனது தலையின் மீது தனது திருவடிகளை வைத்த சிவபெருமான் பால் ஆராத காதல் கொண்டு பொங்கிய அன்போடு போற்றி இசைத்த பதிகம் என்று சேக்கிழார் பெரியபுராணத்தில் இந்த பதிகத்தினை போற்றிச் சொல்கின்றார். 

    அங்கு அணைந்து தம் பெருமான் அடி வணங்கி ஆராது
    பொங்கிய அன்பொடு திளைத்துப் போற்றி இசைத்துப்
                                                                                       பணி செயும் நாள்
    தங்கு பெரும் காதலினால் தாமரை மேல் விரிஞ்சனொடு 
    செங்கண் மால் அறிவரியார் திருவாரூர் தொழ நினைந்தார்
 

பல நாட்கள் தங்கியிருந்து பல பதிகங்கள் அப்பர் பிரான் பாடி அருளினார் என்று கூறினாலும், இரண்டாவது முறையாக இந்த தலம் வந்தபோது அருளிய பதிகங்களில் இந்த ஒரு பதிகம் தான் நமக்கு கிடைத்துள்ளது. தான் இறைவன் பால் கொண்டிருந்த அன்பினை வெளிப்படுத்தும் வண்ணம், தலைவனைப் பிரிந்து இருக்கும் காதலியாக தன்னை உருவகித்துக் கொண்டு அப்பர் பிரான், அகத்துறைப் பாடலாக இந்த பதிகத்தை வழங்கி உள்ளார். தலைவனை பல நாட்களாக பிரிந்திருந்த தலைவி, தலைவனைத் தான் கனவில் கண்டதையும், கனவு கண்ட பின்னர் தனது பிரிவுத் துயரம் அதிகமாகவே, தூக்கம் இழந்து அதன் மூலம் கனவினை இழந்த தன்மையைத் தனது தோழியிடம் கூறுவதாக அமைந்த பாடல்கள் கொண்ட பதிகம்.   

மேற்கண்ட பெரியபுராணப் பாடலில், தங்கு பெரும் காதலினால், திருவாரூர்ப் பெருமானை அப்பர் பிரான் தொழ நினைந்தார் என்று சேக்கிழார் கூறுகின்றார். திருவாரூர்ப் பெருமானைக் கண்டு வழிபடுவதே தனது கருத்தாக இருந்ததாக அப்பர் பிரான் ஒரு பதிகத்தின் முதல் பாடலில் கூறியுள்ளார். அப்பர் பிரான் அவ்வாறு வெளிப்படுத்திய ஆர்வத்தைத் தான் இங்கே சேக்கிழார் குறிப்பிடுகின்றார். சிவபிரானைக் கண்டு வணங்கி, அவர் மீது பதிகங்கள் புனைந்து வாழ்வதே தனது  வாழ்வின் நோக்கமாகக் கொண்டு அவரது திருப்பாதங்களை நினைக்கும் தனது மனத்தினுள் இருக்கும் இறைவன் வெளியே போக முடியாது என்று தனது அன்பினால் இறைவனைக் கட்டி வைத்திருக்கும் தன்மையை வெளிப்படுத்தும் பாடல் இது. (நான்காம் திருமுறை பதிகம் எண் 20  முதல் பாடல்.)  

    காண்டலே கருத்தாய் நினைந்து இருந்தேன் மனம்
                                                                             புகுந்தாய் கழலடி
    பூண்டு கொண்டு ஒழிந்தேன் புறம் போயினால் அறையோ    
    ஈண்டு மாடங்கள் நீண்ட மாளிகை மேல் எழு கொடி
                                                                            வான் இளம் மதி
    தீண்டி வந்து உலவும் திருவாரூர் அம்மானே

பாடல் 1:

அட்டுமின் இல்பலி என்று என் அகம் கடைதோறும் வந்து
மட்டு அவிழும் குழலார் வளை கொள்ளும் வகை என்
                                                                                              கொலோ
கொட்டிய பாணி எடுத்திட்ட பாதமும் கோளரவும்
நட்ட நின்று ஆடிய நாதர் நல்லூர் இடம் கொண்டவரே

விளக்கம்:

அட்டுமின்=இடுமின்; கடை=முற்றம், முன் வாயில்: வளை கொள்ளுதல்=சிவபிரானுக்கு பலியிட வந்த பெண்கள், அவர் மீது தாங்கள் கொண்ட காதல்  கூடாத காரணத்தால், உடல் இளைத்து கைகள் மெலிய, தங்களது கைகளிலிருந்து வளையல்கள் கழன்று விழும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்: அந்த நிலைக்கு சிவபெருமானே காரணம் என்பதால் அவர் வளையல்கள் கொண்டதாக கூறுதல், சங்க இலக்கியங்களின் மரபை பின்பற்றியது.  மட்டு=கள், தேன்; மட்டவிழும் குழலார்=தேன் சிந்தும் நறுமணம் மிக்க புதிய மலர்களை கூந்தலில் அணிந்துள்ள மகளிர்; கொட்டிய பாணி=ஒலிக்கப்பட்ட தாளங்கள்; கோளரவு=கொலைத் தொழிலை புரியும் பாம்பு;

கையில் பிச்சைப் பாத்திரம் ஏந்தி சிவபெருமான் தனது இல்லம் வந்ததாக, இந்த பதிகத்தின் பல பாடல்களில் கற்பனை செய்யும் அப்பர்நாயகி, முதல் பாடலில் தாருகாவனத்து மகளிர் இல்லங்களுக்கு சிவபெருமான் பிச்சை ஏற்றுச் சென்றதை நினைத்துப் பார்க்கின்றாள். தங்களது நிலையினை மறந்து, சிவபெருமானின் பின்னே தாருகவனத்து மகளிர் சென்ற காட்சி அவளது மனக்கண்ணில் விரிகின்றது. ஆனால், ஏன் அவ்வாறு நடந்தது என்று அவளுக்கு புலப்படவில்லை.    
 
பொழிப்புரை:
ஒலிக்கும் தாளங்களுக்கு ஏற்ப, நடனம் ஆடும் போது எடுத்த பாதங்களையும், கொலைத் தொழிலைச் செய்யும் பாம்பினை அணிகலனாகவும், உடையவராய், எப்போதும் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் பெருமான், நல்லூரில் உறைகின்றார். தேன் ஒழுகும் நறுமணம் மிகுந்த புதிய மலர்களைத் தங்களது கூந்தலில் சூடிய தாருகாவனத்து மகளிர்களின் இல்லங்கள் தோறும், பிச்சை கேட்டுச் சென்றதன் காரணம் யாதோ? நான் அறியேன். சிவபெருமானை நினைந்து, தாருகாவனத்து மகளிர் தங்களது கைகளில் இருந்த வளையல்கள் கழன்று விழுமாறு உடல் மெலிய வருத்தமுற்றது ஏனோ?     

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/oct/20/77-அட்டுமின்-இல்பலி---பாடல்-1-2792840.html
2792318 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 76. நினைந்துருகும் அடியாரை - பாடல் 11 என். வெங்கடேஸ்வரன் Thursday, October 19, 2017 12:20 PM +0530  

பாடல்  11

குலம் கிளரும் வருதிரைகள் ஏழும் வைத்தார்
         குருமணி சேர் மலை வைத்தார் மலையைக் கையால்
உலம் கிளர எடுத்தவன் தோள் முடியும் நோவ
        ஒரு விரலால் உற வைத்தார் இறைவா என்று
புலம்புதலும் அருளொடு போர் வாளும் வைத்தார்
        புகழ் வைத்தார் புரிந்து ஆளாக் கொள்ள வைத்தார்
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார்
       நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே

விளக்கம்:

குலம்=கூட்டங்கள்; கிளரும்=பொங்கி எழுகின்ற; குருமணி=சிறந்த மணிகள்; உலம்=திரண்ட கல்; 

பொழிப்புரை:

கூட்டம் கூட்டமாக, பொங்கி எழுந்து வரும் அலைகளைக் கொண்ட ஏழு கடலைகளை இந்த உலகினில் வைத்தவர் சிவபெருமான்; அவர் சிறந்த மணிகளை உயர்ந்த மலைகளில் வைத்துள்ளார்; அவர், மிகவும் பெரிய கல் போன்ற கயிலாய மலையினை, தனது கைகளால் பேர்த்து எடுக்கத் துணிந்த இராவணனின் தோள்களும் தலைகளும் வருந்துமாறு, தனது கால் விரல் ஒன்றினை ஊன்றியவர்; வருந்திய அரக்கன் இறைவா, காப்பாற்று என்று புலம்பியபோது அவனுக்கு இரங்கி, ஊன்றிய கால் விரலினை எடுத்து அருள் புரிந்தவர்; மேலும் அவன் பாடிய சாம கானத்திற்கு மகிழ்ந்து போர் வாள் கொடுத்து அவனுக்கு புகழ் ஏற்படும்படி செய்தவர்; தனது புகழினை விரும்பித் தொழும் அடியார்களை ஆட்கொள்ளும் சிவபெருமான், நலன்கள் விளைவிக்கும் திருவடியினை எனது தலையின் மீது வைத்தார்; அவர் மிகவும் நல்லவர்.  

முடிவுரை:

சிவபிரான் தனக்கு அருள் புரிந்த திறத்தை நினைந்து மனமகிழ்ந்த அப்பர் பிரான் இந்தப் பதிகம் பாடி முடித்து மறுபடியும் இறைவனை பணிந்து எழுந்தார். அப்போது அவரது மனநிலை, எடுக்க எடுக்கக் குறையாத செல்வம் பெற்று வந்த வறியவனின் மனம் போல் மகிழ்ந்து இருந்தது என்று சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறுகின்றார். இந்த பெரிய புராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

நனைந்தனைய திருவடி என் தலை மேல் வைத்தார் என்று
புனைந்த திருத்தாண்டகத்தால் போற்றி இசைத்துப் புனிதர் அருள்
நினைந்துருகி விழுந்து எழுந்து நிறைந்தும் மலர்ந்து ஒழியாத
தனம் பெரிதும் பெற்று வந்த வறியவன் போல் மனம் தழைந்தார் 

பின்னர் தான் பாடிய பல பதிகங்களில், சிவபிரான் தனது தலை மீது தனது திருப்பாதத்தை வைத்த கருணைச் செயலை, மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றார். மேலும் திருவடியின் சிறப்பினை பல பாடல்களிலும் பாடுகின்றார். மன்னும் மலைமகள் வருடின என்று தொடங்கும் பதிகத்தை (பதிக எண்: 4.100) சிவபிரானின் திருவடிகளின் பெருமையை சொல்லும் பதிகம் என்றே கூறலாம். காளியை நடனத்தில் வென்ற பாதங்கள் என்றும், மார்க்கண்டேயர்க்காக கூற்றுவனை உதைத்த பாதம் என்றும், மறைகள் தேடியும் காணாத பாதம் என்றும், உமை அம்மையால் மலர்கள் சூட்டப்படும் பாதம் என்றும், பேய்க் கணங்களோடு கூடி நின்று ஆடும் பாதம் என்றும், ஊழிக் காலத்தையும் கடந்து நிற்கும் பாதம் என்றும், பல ஊர்கள் சென்று பலி தேர்ந்து அலைந்த பாதம் என்றும், திருமால் பன்றி உருவம் கொண்டு மண்ணைக் குடைந்து தேடிய போதும் காணாத பாதம் என்றும், சீற்றத்துடன் வந்த முயலகனை அடக்கி நடம் ஆடிய பாதம் என்றும், இராவணின் பத்து தலைகளையும் நெருக்கின பாதம் என்றும், இருக்கு முதலிய மாமறைகளும் விண்ணவர்களும் புகழ்ந்து ஏத்திய பாதம் என்றும் இந்த பதிகத்தில் இறைவனின் திருவடிச் சிறப்பு கூறப்பட்டுள்ளது. இந்த பதிகத்தின் எல்லா பாடல்களும் இன்னம்பரான் தன் இணை அடியே என்று முடிகின்றன.

சிவபிரானின் திருவடியின் வீரச் செயல்களைப் புகழும் இந்த பதிகத்தின் முதல் பாடல் நமக்கு ஒரு அரியதொரு காட்சியை கொடுக்கின்றது. பூமகளும் புவிமகளும் திருமாலின் பாதங்களை வருடுவதை சிற்பமாகவும் ஓவியமாகவும் பல இடங்களில் காண்கின்றோம். மேலும் பல பாசுரங்களும், வேறு பல அருளாளர்களின் பாடல்களும் இந்த காட்சியை விவரிக்கின்றன. ஆனால் இது போன்ற சேவையை பார்வதி தேவி இறைவனுக்கு அளித்தது பற்றிய குறிப்புகள் அதிகமாக எங்கும் காணப்படுவதில்லை. இத்தகைய அறிய காட்சி அப்பர் பிரானின் மனக்கண்ணால் காணப்பட்டு நமக்கு விருந்தாக, மேற்கண்ட பதிகத்தின் முதல் பாடலாக அமைந்துள்ளது. சிவபிரானின் திருவடிகளின் பெருமையை அவரது அருகில் இருந்த உமையம்மை தானே மற்ற எல்லோரையும் விட மிகவும் அதிகமாக உணர்ந்தவள். அதனால் தான் அவள் செய்த சேவையை குறிப்பிட்டு இந்த பதிகத்தை மிகவும் பொருத்தமாக அப்பர் பிரான் ஆரம்பிக்கின்றார். தாமரை மலர் போன்ற மென்மையான சிவபிரானின் பாத கமலங்கள் உமையம்மையால் வருடப் பெற்றன என்றும், அந்த திருப்பாதங்கள் மறைகள் சொல்லும் பொருளினை பற்றிக் கொள்வதற்கு பற்றுக்கோடாக விளங்குகின்றன என்றும் கூறும் அப்பர் பிரான், இந்த சேவடிகள் தொண்டர்களுக்கு வீடுபேறு அளித்து அவர்களின் இடரைக் களையும் தன்மை படைத்தது என்று இங்கே கூறுகின்றார். அமுதம் என்றால் வீடுபேறு என்று பொருள்.

மன்னும் மலைமகள் கையால் வருடின மா மறைகள்
சொன்ன துறை தொறும் தூப்பொருள் ஆயின தூக் கமலத்து
அன்ன வடிவின அன்புடைத் தொண்டர்க்கு அமுது அரும்பி
இன்னல் களைவன இன்னம்பரான் தன் இணை அடியே  
       

இன்னம்பர் தலத்தின் மீது அருளிய மற்றொரு திருத்தாண்டகப் பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் தான் கருவில் இருந்த போதே தன்னை ஆண்டு கொண்ட சிவபிரான், தனது மலரடிகளைத் தனக்கு தந்ததாகவும் இந்த பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கூடிப் பிரியாத மைந்தர் போலும் என்று, உயிர்கள் மெய்யுணர்வினை அறிந்த பின்னர் தன்னோடு  கூடும் உயிர்களை என்றும் பிரியாதவர் சிவபெருமான் என்று இந்த பாடலில் நமக்கு உணர்த்துகின்றார். திருமால் மற்றும் பிரமன் ஆகிய இருவரும் சிவபிரானின் திருவடிகளை நாடி வணங்கிய பின்னர், அவர்களுக்கு ஒப்பற்ற தலைவராய் விளங்கினார் என்றும் இங்கே கூறப்படுகின்றது.
    
கருவுற்ற காலத்தே என்னை ஆண்டு கழல் போது
         தந்தளித்த கள்வர் போலும்
செருவில் புரம் மூன்றும் அட்டார் போலும் தேவர்க்கும்
       தேவராம் செல்வர் போலும்
மருவிப் பிரியாத மைந்தர் போலும்
      மலரடிகள் நாடி வணங்கலுற்ற
இருவர்க்கு ஒருவராய் நின்றார் போலும்
     இன்னம்பர்த் தான்தோன்றி ஈசனாரே

சாதரணமாக பத்து பாடல்கள் கொண்ட பதிகங்களை பாடி அருளும் அப்பர் பெருமான், திருவையாறு தலத்தின் மீது அருளிய, சிந்திப்பரியன என்று தொடங்கும் பதிகத்தில் இருபது பாடல்களை பாடியுள்ளார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களும் ஐயாறன் அடித்தலமே என்று முடிகின்றன. இறைவனின் திருவடிபெருமையை கூறுவதற்கு பத்து பாடல்கள் போதாது என்று நினைத்தார் போலும். மலைமகள் சிவபெருமானின் பாதத்தை வருடும் காட்சியை கற்பனை செய்து பார்க்கும் அப்பர் பிரான், உமையம்மையின் கைகள் சிவபிரானின் பாதத்தில் பதிந்து இருக்கும் காட்சி காந்தள் மலர் தாமரை மலரை அழகு செய்வது போல் அமைந்துள்ளது என்று கூறுகின்றார். (காந்தள் மலர் நீல நிறம் கொண்டது). உமையம்மை வருடுவதால், சிவபிரானின் பாதங்கள் மேலும் சிவந்தன என்று மாற்பேறு பதிகத்தின் பாடல் ஒன்றில் கூறும் அப்பர் பிரான் நமக்கு ஈசனின் பாதங்கள் மென்மையானவை என்பதை உணர்த்துகின்றார்.

சுணங்கு முகத்துத் துணை முலைப் பாவை சுரும்போடு
                                                                                           வண்டு
அணங்கும் குழலி அணியார் வளைக்கரம் கூப்பி நின்று
வணங்கும் பொழுதும் வருடும் பொழுதும் வண் காந்தள்
                                                                                         ஒண்போது
அணங்கும் அரவிந்தம் ஒக்கும் ஐயாறன் அடித்தலமே  

இறைவனின் திருவடி தன்மேல் படவேண்டும் என்பதில் மிகுந்த ஆசை கொண்டவராக சுந்தரர் திகழ்வதை நாம் அவரது தம்மானை அறியாத சாதியார் உளரே என்று தொடங்கும் பதிகத்தின் (எண்: 7.38)  முதல் பாடலில் நாம் காணலாம். முதியவர் வேடத்தில் வந்த சிவபெருமான், அதிகை நகர் சித்தவட மடத்தில் படுத்திருந்த சுந்தரர் மீது தனது கால்கள் படுமாறு படுத்துக்கொண்டார். மிகுந்த அசதியுடன் தூங்கும் முதியவரின் கால் அவரை அறியாமல் தனது உடலின் மீது பட்டிருக்கலாம் என்று நினைத்து சுந்தரர் இடம் மாறி படுத்தபோதும், முதியவரின் கால் அவர் மீது பட்டது.  என்னை பலமுறையும் மிதித்த நீ யார் என்று சுந்தரர் கேட்டபோது, என்னை நீ அறியாயோ என்று கூறி முதியவர் மறைந்துவிடவே ஈசன் தான் முதியவராக வந்தவர் என்பதை சுந்தரர் உணர்ந்தார். தனது வாழ்நாளில் ஒருமுறையேனும் இறைவனது திருவடிகள் தன் மீது பட வேண்டும் என்ற ஆசையால் வாழும் தான், தனது தலைவனாகிய ஈசன் வந்தபோது அறியாமல் இருந்து விட்டேனே என்று வருந்தி பாடும் பாடும் பதிகம் இது.

தம்மானை அறியாத சாதியார் உளரே சடைமேல்
       கொள் பிறையானை விடை மேல் கொள் விகிர்தன்
கைம்மாவின் உரியானைக் கரி காட்டில் ஆடல் உடையானை
      விடையானைக் கறை கொண்ட கண்டத்து
அம்மான் தன் அடிக்கொண்டு என் முடி மேல் வைத்திடும்
      என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்
எம்மானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை
     இறை போதும் இகழ்வன் போலியானே
  

ஆதி சங்கரரும் தான் சிவபெருமானின் திருப்பாதங்களை காணமுடியாமல் உள்ள நிலைக்கு மிகவும் வருந்துவதை அவரது சிவானந்த லஹரி பாடல் ஒன்றில் நாம் உணரலாம். அவ்வாறு இறைவனின் பாதங்களை காண முடியாமைக்கு, அவர் சொல்லும் காரணம் சுவையானது. இந்த பாடலின் பொருள் இங்கே சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. சிவபெருமானே, நான் செய்த புண்ய பலம் மற்றும் உமது கருணை காரணமாக தாங்கள் மனமிரங்கி உங்களது திருவுருவக் காட்சியை அளித்தாலும், மாசற்ற உங்களது திருவடியைக் காண முடியாதபடி, காலில் விழுந்து வணங்கப் போட்டியிடும் தேவர் கூட்டம் தங்களது மணிமகுட வரிசைகள் உமது திருவடிகளை மறைத்து விடுகின்றன.
 
    பலாத் வா புண்யானாம் மயி கருணயா வா த்வயி விபோ
        பிரசன்னேபி ஸ்வாமின் பவதமல பாதாப்ஜ யுகலம்
    கதம் பச்யேயம் மாம் ச்தகயதி நாம சம்ப்ரமஜுஷாம்
        நிலிம்பானாம் ச்ரேணிர் நிஜகனக மாணிக்ய மகுடை

]]>
http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/oct/19/76-நினைந்துருகும்-அடியாரை---பாடல்-11-2792318.html
2791894 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 76. நினைந்துருகும் அடியாரை - பாடல் 10 என். வெங்கடேஸ்வரன் Wednesday, October 18, 2017 12:00 AM +0530  

பாடல்  10
பாம்பு உரிஞ்சி மதி கிடந்து திரைகள் ஏங்கப்
          பனிக் கொன்றை சடை வைத்தார் பணிசெய் வானோர்
ஆம் பரிசு தமக்கெல்லாம் அருளும் வைத்தார்
        அடு சுடலைப் பொடி வைத்தார் அழகும் வைத்தார்
ஓம்பரிய வல்வினை நோய் தீர வைத்தார் உமையை
       ஒரு பால் வைத்தார் உகந்து வானோர் 
தாம் பரவும் திருவடி என் தலை மேல் வைத்தார்
       நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே

விளக்கம்:
உரிஞ்சி=உராய்ந்து கொண்டு; பாம்பு சந்திரனின் மீது உராய்ந்து கொண்டு இருப்பதாக அப்பர் பிரான் கூறுகின்றார். பாம்பும் சந்திரனும் இயல்பிலே ஒன்றுகொன்று மாறுபட்ட குணங்களைக் கொண்டுள்ளவை. மேலும் பாம்புக்கும் சந்திரனுக்கும் இடையே பகையும் உண்டு. சந்திரன் வெண்ணிறம் கொண்டது; பாம்போ கருநிறம் உடையது. அனைவரும் காண வானில் உலா வருவது சந்திரன்; பாம்போ பிறர் தன்னைக் காணா வண்ணம் புற்றில் மறைந்து வாழ்வது; குளிர்ச்சி தருவதால் சந்திரனின் கதிர்களை அமுத கிரணங்கள் என்று கூறுவார்கள்; பாம்போ வெப்பம் மிகுந்த நஞ்சினைத் தருவது. தன்னுடைய தோற்றத்தால் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பது சந்திரன்; தன்னைக் கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப, காண்போரை நடுங்கச் செய்வது பாம்பு; ஒளி மயமானது சந்திரன்; இராகு கேது எனப்படும் இரண்டு கோள்களும், சாயா கிரகங்கள் என்று அழைக்கப் படுகின்றன. அதாவது நிழல் உருவங்கள் என்று கூறுவார்கள்; இவ்வாறு பல வகையிலும் மாறுபட்டு, தங்களுக்குள் பகையும் கொண்டுள்ள இருவரையும் பகை தீர்த்து இருக்கச் செய்வது வல்லமை படைத்த ஒருவரால் தான் முடியும். அத்தகைய வல்லமை கொண்டவர் சிவபிரான் என்று பாம்பும் மதியும் அருகில் இருக்கும் நிலை குறிப்பிடப்பட்டு நமக்கு உணர்த்தப் படுகின்றது. பரிசு=தன்மை

பாம்புக்கும் சந்திரனுக்கும் உள்ள பகையினைத் தீர்த்து இருவரையும் தனது சடையில் வைத்த திறம் பல தேவாரப் பாடல்களில் போற்றப்படுகின்றது. எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி என்று தொடங்கும் அதிகை வீரட்டானத்துத் திருத்தாண்டகத்தின் நான்காவது பாடலில் மேற்கண்ட நிலை குறிக்கப்பட்டுள்ளது. அகலம்=மார்பு. கூம்புதல்=மனம் ஒடுங்கி இருத்தல். இந்த பாடலில் நீரும் பகையாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. வெம்மையான நஞ்சினைக் உடைய பாம்பினுக்கு குளிர்ந்த நீர் அதன் தன்மையால் பகையாக உள்ளது. சடையில் உள்ள சந்திரனை, சடையில் அடைபட்டு இருக்கும் கங்கை தனது அலைகளால் மோதுவதால் சந்திரனுக்கு கங்கை பகையாக உள்ளது. ஆனால் இன்று வரை மூன்றும் ஒரே இடத்தில் இருப்பது, பகை தீர்த்து ஆளும் இறைவனின் வல்லமையால் தான்.  
    சாம்பர் அகலத்து அணிந்தாய் போற்றி தவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி 
    கூம்பித் தொழுவார்கள் தம் குற்றேவலைக் குறிக்கொண்டு இருக்கும் குழகா போற்றி
    பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து உடன் வைத்த பண்பா போற்றி
    ஆம்பல் மலர் கொண்டு அணிந்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய்         போற்றி    
திருஞான சம்பந்தர் சீர்காழியின் மீது அருளிய பதிகம் ஒன்றின் முதல் பாடலில் சடையில் பாம்பையும் சந்திரனையும் உடன் வைத்த திறம் என்னே என்று வியப்பு அடைகின்றார். நெல் வயல்களும் புன்னை மரங்களும் கொண்ட தலம் சீர்காழி என்று இங்கே கூறப்படுகின்றது. நெல்வயல்கள் மருத நிலத்திற்கு உரியவை; புன்னை மரங்கள் நெய்தல் நிலத்திற்கு உரியவை. இவ்வாறு இருவேறுபட்ட தன்மைகள் கொண்ட நிலங்கள் ஒரு சேர அமைந்திருக்கும் சீர்காழியைக் காணும் சம்பந்தப் பெருமானுக்கு, இருவேறுபட்ட இயல்புகள் கொண்ட சந்திரனையும், பாம்பினையும் ஒருங்கே வைத்துள்ள பெருமானின் திறம் நினைவுக்கு வருகின்றது. அயலே=அருகே; கிழி=துணி; புன்னைப் பூக்கள் மண் தரையில் விழுந்து கிடப்பது வெள்ளைத் துணியில் பவளம் சிந்தி இருக்கும் தோற்றத்தை ஒத்தது என்று சம்பந்தர் கூறுகின்றார்..
    செந்நெல் அம் கழனிப் பழனத்து அயலே செழும்
    புன்னை வெண் கிழியில் பவளம் புரை பூந்தராய்த்
    துன்னி நல் இமையோர் முடி தோய் கழலீர் சொலீர்
    பின்னு செஞ்சடையில் பிறை பாம்பு உடன் வைத்ததே

ஓம்பரிய வல்வினை=நீக்குதற்கு அரிய வலிமை கொண்ட வினை. பழைய வினைகளின் ஒரு பிரிவைத் தான் நாம் இந்தப் பிறவியில் அனுபவிக்கின்றோம். வினைகளின் தன்மைக்கு ஏற்றவாறு இன்பமும் துன்பமும் ஏற்படுகின்றன. இதனை மறந்த நாம் இன்பம் நுகர்க்கும்போது, தமது திறமையும் சாதுர்யமும் தான் இன்பத்திற்கு காரணம் என்று நினைத்துக் கொண்டு மமதையில் மிதந்து பல தவறுகளைச் செய்து வினையை பெருக்கிக் கொள்கின்றோம். அதே போல் துன்பத்திற்கும் காரணம் நமது பழைய வினைகள் என்பதையும் மறந்து, நமக்கு துன்பம் ஏற்பட கருவிகளாக இருக்கும் மற்றவர்கள் மீது கோபமும் வெறுப்பும் கொண்டு மேலும் பல தவறுகளைச் செய்து வினைகளை பெருக்கிக் கொள்கின்றோம். இவ்வாறு பழைய வினைகளை அனுபவிக்கும் நாம், மேலும் புதிய வினைகளைச் சேர்த்துக் கொண்டு, மறுபடியும் மறுபடியும் இவ்வாறு சேரும் வினைகளைக் கழிப்பதற்காக பிறவி எடுக்க நேரிடுகின்றது. எனவே தான் நீக்குதற்கு அறிய வல்வினை என்று இங்கே கூறப்பட்டுள்ளது.     
         
பொழிப்புரை:
பாம்பு சந்திரனுடன், தங்களுக்குள் உள்ளே பகையை மறந்து, உராய்ந்த நிலையில் உள்ள சடையில் அலை வீசும் கங்கையையும், பனி படர்ந்த கொன்றை மலர்களையும் சிவபிரான் வைத்துள்ளார்; அவர் தனக்குப் பணி செய்யும் வானவர்களுக்கு, அவர்கள் செய்யும் பணியின் தன்மைக்கு ஏற்றவாறு அருள்கள் செய்கின்றார்; சுடலைப் பொடி பூசியிருந்தாலும் அழகாக காணப்படுகின்றார்; உண்மையான மெய்ப்பொருள் சிவபிரான் தான் என்பதை உணர்ந்து, நான் என்ற எண்ணம் நீங்கி வினைகளை எதிர்கொள்ளும் அடியார்களுக்கு, கொடிய வினைகள் தீரும் வழியை வைத்துள்ளார்; உமை அம்மையை தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளார்; வானுலகில் உள்ளவர்களும் நிலவுலகில் உள்ளவர்களும் விரும்பித் தொழுகின்ற திருவடியினை எனது தலை மேல் வைத்த நல்லூர்ப் பிரான் மிகவும் நல்லவர்.  

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/oct/18/76-நினைந்துருகும்-அடியாரை---பாடல்-10-2791894.html
2791846 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 76. நினைந்துருகும் அடியாரை - பாடல் 9 என். வெங்கடேஸ்வரன் Tuesday, October 17, 2017 09:23 AM +0530
பாடல்  9


சென்று உருளும் கதிர் இரண்டும் விசும்பில் வைத்தார்
          திசை பத்தும் இருநிலத்தில் திருந்த வைத்தார்
நின்று அருளி அடி அமரர் வணங்க வைத்தார் நிறை
         தவமும் மறைபொருளும் நிலவ வைத்தார்
கொன்றருளிக் கொடுங்கூற்றம் நடுங்கி ஓடக் குரை
        கழல் சேவடி வைத்தார் விடையும் வைத்தார்
நன்று அருளும் திருவடி என் தலை மேல் வைத்தார்
        நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே

விளக்கம்:
கதிர் இரண்டும்=சூரிய சந்திரர்கள்; விசும்பு=ஆகாயம்; நின்று அருளி=உள்ளத்தில் இருந்து அருள் புரிந்து; நன்று=நல்ல தன்மை கொண்ட வீடுபேறு  மறை என்றால் வேதம் என்று பொருள். வடமொழி வேதங்களை எழுதாக் கிளவி என்று குறிப்பிடுவார்கள். எழுதிவைக்கப் படாமல் தலைமுறை தலைமுறையாக ஒருவருக்கு ஒருவர் வாய்மொழியாக சொல்லி நிலவி வந்தவை வேதங்கள். இவ்வாறு ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக, வேதங்கள் வழி வழியாக மறைந்து நின்று வந்ததால், மறை என்று மிகவும் பொருத்தமாக தமிழ்மொழியில் அழைக்கப்படுகின்றது என்று தெய்வத்தின் குரல் (முதல் பாகம்) புத்தகத்தில் காஞ்சி பெரியவர் குறிப்பிடுகின்றார். வேதங்களில் மறைந்து காணப்படும் பொருட்களை எளிதில் புரிந்து கொள்ள முடியாது. அவற்றை ஒரு குரு மூலம் தான் அறிந்து கொள்ள முடியும். இந்த செய்தியைத் தான் மறை பொருள் என்று இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.   

பொழிப்புரை:
வானில் உருண்டு உருண்டு செல்லும் சூரியனையும் சந்திரனையும் வைத்தவர் சிவபெருமான்; எட்டுத் திசைகள் மற்றும் கீழ்த்திசை மேல் திசை என்று பத்து திசைகளை உலகினில் வைத்தவர்; தேவர்களின் உள்ளத்தில் நின்று, அவர்கள் தன்னை வணங்குமாறு அருள் செய்தவர்; நிறைந்த தவமும், பொருள்கள் மறைந்து இருக்கும் நான்மறைகளையும் உலகினில் நிலைத்து நிற்க வைத்தவர்; உயிரினைப் பறிக்க வந்த கூற்றுவனை நடுங்கி ஓடுமாறு தனது கழலணிந்த திருவடியால் உதைத்து மார்க்கண்டேயருக்கு அருள் செய்தவர்; தனக்கு வாகனமாக இடபத்தை வைத்துக் கொண்டுள்ளவர்; எல்லையில்லாததும், அழிவற்றதும் ஆகிய, நன்மை பயக்கும் வீடுபேறு என்னும் பேற்றினை அடியார்களுக்கு அருளும் திருவடியினை எனது தலையின் மீது வைத்த நல்லூர் பெருமான் மிகவும் நல்லவர்.    

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/oct/17/76-நினைந்துருகும்-அடியாரை---பாடல்-9-2791846.html
2789722 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 76. நினைந்துருகும் அடியாரை - பாடல் 8 என். வெங்கடேஸ்வரன் Monday, October 16, 2017 12:00 AM +0530  

பாடல்  8
குலங்கள் மிகு மலை கடல்கள் ஞாலம் வைத்தார்
          குருமணி சேர் அரவு வைத்தார் கோலம் வைத்தார்
உலம் கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார்
          உண்டருளி விடம் வைத்தார் எண்தோள் வைத்தார்
நிலம் கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார்
         நிமிர் விசும்பின் மிசை வைத்தார் நினைந்தார் இந்நாள்  
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார்
         நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே


விளக்கம்:

குலங்கள்=கூட்டங்கள்; உலம் கிளரும்= திரண்ட கல் போல் உயர்கின்ற, பாற்கடல் கடையப்பட்ட போது கயிறாக பயன்பட்ட வாசுகிப் பாம்பின் உருவத்திற்கு உவமையாக கூறப்பட்டுள்ளது. அனிலம்=காற்று; மிசை=மேல்; 

பொழிப்புரை:
இந்த உலகத்தில் பல மலைகளையும் கடல்களையும் வைத்தவர் சிவபெருமான்; இரத்தினங்களை உடைய பாம்பினை தனது உடலில் வைத்தவர்; பிக்ஷாடனர், காபாலி, அர்த்தநாரி, தக்ஷிணாமூர்த்தி, பாசுபதர் போன்ற பல வேடங்களை கொண்டவர்; திரண்ட கல் போன்று வலிமை கொண்ட வாசுகிப் பாம்பின் உச்சியிலிருந்து வெளிப்பட்ட விடத்தை உண்டு, உலகினையும் அனைத்து உயிர்களையும் காத்து அருளியவர்; எட்டு தோள்களைக் கொண்டுள்ளவர்; நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களை அமைத்தவர், நான் சத்திமுற்றத்தில் விடுத்த வேண்டுகோளை நினைவில் வைத்துக் கொண்டு, நலங்கள் பல அருளும் தந்து திருவடியை எனது தலை மேல் வைத்த சிவபெருமான் மிகவும் நல்லவர் ஆவார்.  

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/oct/16/76-நினைந்துருகும்-அடியாரை---பாடல்-8-2789722.html
2789133 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 76. நினைந்துருகும் அடியாரை - பாடல் 7 என். வெங்கடேஸ்வரன் DIN Sunday, October 15, 2017 12:00 AM +0530
பாடல்  7:
மாறு மலைந்தார் அரணம் எரிய வைத்தார்
         மணிமுடி மேல் அரவு வைத்தார்அ ணிகொள் மேனி
நீறு மலிந்து எரியாடல் நிலவ வைத்தார் நெற்றி மேல்
         கண் வைத்தார் நிலையம்வை த்தார்
ஆறு மலைந்து அறுதிரைகள் எறிய வைத்தார் ஆர்வத்தால்
         அடி அமரர் பரவ வைத்தார்        
நாறு மலர்த் திருவடி என் தலை மேல் வைத்தார்
         நல்லூர் எம் பெருமானார்ந ல்லவாறே

விளக்கம்:
மாறு=மாறுபாடு கொண்ட, பகை உணர்வு கொண்ட; மலைந்தார்=போர் செய்தவர்; நிலையம்=திருக்கோயில்கள். நாறு மலர்=மணம் வீசும் மலர்கள்

பொழிப்புரை:
சிவநெறியிலிருந்து மாறுபாடு கொண்டு, பகை உணர்வுடன் அனைவருடன் போர் செய்த, திருபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகளை சிவபெருமான் எரிய வைத்தார்; தனது  அழகிய சடைமுடி மேல் பாம்பினை வைத்துள்ளார்; அவர் தனது அழகிய திருமேனியில் நீற்றினைப் பூசி, கையினில் தீயினை ஏந்தி நடனம் ஆடுபவர்; தனது நெற்றியில் கண்ணை உடையவர்; பல திருக்கோயில்களை உடையவர்; கரைகளில் மோதி கரையை உடைக்கும் வல்லமை கொண்ட அலைகளை உடைய கங்கை ஆற்றினை, தனது சடையில் அடக்கி வைத்தவர்; தேவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தனது திருவடிகளை வழிபட வைத்தார்; நறுமணம் வீசும் மலர்களைக் கொண்ட தனது திருவடியினை எனது தலையின் மீது வைத்த நல்லூர்ப் பெருமானார் மிகவும் நல்லவர். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/oct/15/76-நினைந்துருகும்-அடியாரை---பாடல்-7-2789133.html
2789132 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 76. நினைந்துருகும் அடியாரை - பாடல் 6 என். வெங்கடேஸ்வரன் DIN Saturday, October 14, 2017 12:00 AM +0530  

பாடல்  6:

உற்று உலவு பிணி உலகத்து எழுமை வைத்தார்
          உயிர் வைத்தார் உயிர் செல்லும்க திகள் வைத்தார்
மற்று அமரர் கணம் வைத்தார் அமரர் காணா
          மறை வைத்தார் குறை மதியம் வளர வைத்தார்
செற்ற மலி ஆர்வமோடு காம லோபம் சிறவாத
          நெறி வைத்தார் துறவி வைத்தார் 
நற்றவர் சேர் திருவடி என் தலை மேல் வைத்தார்
          நல்லூர் எம் பெருமானார்ந ல்லவாறே

விளக்கம்:
உற்று உலவுதல்=மிகுந்து பரவுதல்; உயிர் வைத்தார்=உயிரின் வினைகளுக்கு ஈடாக உடல் வைத்தல்; கதிகள்=சொர்க்கம் நரகம் என்ற அமைப்புகள்; எழுமை=ஏழு வகை பிறப்புக்கள், தாவரங்கள், ஊர்வன, நீந்துவன, நடப்பன, பறப்பன, மனிதர்கள், தேவர்கள் எனும் ஏழுவகைப் பிறவிகள். செற்றம்=கோபம்; ஆர்வம்=மோகம்; சிறவாத நெறி=தலை தூக்காத நெறி. ஆறு வகை பகைகளை அடக்கி வாழும் வாழ்க்கை நெறி. 

இந்த உலகில் உள்ள உயிர்வகைகள் (யோனி பேதம், பிறப்பு வேறுபாடுகள்) எண்பத்துநான்கு இலட்சம் என்று திருவீழிமிழலைப் பதிகத்தில் ஞானசம்பந்தப் பெருமான் கூறுகின்றார். எண்பத்து நான்கு இலட்சம் வகையான உயிர்களை படைத்து அந்த உயிர்களுடன் கலந்து இருப்பவன் சிவபிரான் என்று இங்கே கூறப்படுகின்றது. நீண்ட காந்தள் மலர் கொத்துக்களில் விழும் கொன்றை மலர்கள், மயில்களின் ஆட்டத்திற்கும், வண்டுகளின் பாட்டிற்கும், பொன் பரிசாக அளித்தது போல் உள்ளது என்று இயற்கையின் மீது தனது கற்பனையை சம்பந்தர் ஏத்திச் சொல்கின்றார். 

உரை சேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம்
                                               யோனி பேதம்
நிரை சேரப் படைத்து அவற்றின் உயிர்க்கு உயிராய்
                                              அங்கங்கே நின்றான் கோயில்
வரை சேரு முகில் முழவ மயில்கள் பல நடமாட
                                             வண்டு பாட
விரை சேர் பொன் இதழி தார் மென் காந்தள் கையேற்கும்
                                             மிழலையாமே . 

ஒவ்வொரு வகையிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் உள்ளன. இவ்வாறு உலகெங்கும் பரந்து மிகுந்து காணப்படும், எண்ணில் அடங்காத உயிர்களில், மிகவும் குறைந்த உயிர்களே, தங்களைப் பிணித்துள்ள மலங்களிலிருந்து விடுபட்டு இறைவனைச் சென்று அடைகின்றன. மற்ற பெரும்பாலான உயிர்கள், பிறவிப் பிணியில் அகப்பட்டு மறுபடியும் ஏதோ ஒரு பிறவி எடுக்கின்றன. இவ்வாறு இந்த உலகம் கணக்கற்ற உயிர்களால், பிறவிப் பிணியால் பீடிக்கப்பட்ட உயிர்களால் நிறைந்துள்ளது. இந்த செய்தியைத் தான் உற்று உலவு பிணி உலகு என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். இந்த உயிர்கள் கொண்டுள்ள வினைத்தொகைக்கு ஈடாக, எழுவகை உடல்களை (தேவர், மனிதர், நடப்பன, பறப்பன, ஊர்வன, நீர் வாழ்வன மற்றும் தாவரங்கள்) இறைவன் படைத்துள்ள செய்தியும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தங்களது வினைகளின் ஒரு பகுதியை, கழித்துக் கொள்வதற்காக, சொர்க்கம் நரகம் என்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எஞ்சிய வினைகளின் ஒரு பகுதியே அடுத்த பிறப்பினை நிர்ணயிக்கின்றன. மீதமுள்ள வினை. சஞ்சித வினையாக சேருகின்றன.   

உட்பகைகளாகிய காமம், குரோதம், உலோபம் (அடுத்தவர்களுக்கு எதுவும் கொடுக்காத தன்மை), மோகம்(பொருளின் மீது வைக்கும் அளவு கடந்த ஆசை), மதம், மாற்சரியம் (பொறாமை) ஒரு மனிதனின் மனத்தினைக் கெடுத்து தீய வழியில் செல்லத் தூண்டுகின்றன. இந்த உட்பகைகளை வென்றால் தான், நாம் நமது மனத்தினைக் கட்டுப்படுத்த முடியும். செற்றம் (கோபம்), ஆர்வம் (மோகம்), காமம், உலோபம் ஆகிய நான்கு பகைகளை மட்டும் குறிப்பிட்டு மற்று இரண்டு பகைகளை (மதம் மற்றும் மாற்சரியம்) குறிப்பிடாமலே நமக்கு உணர்த்துகின்றார். இந்த ஆறு பகைகளும் தலை தூக்காத வாழ்க்கை நெறியினை, ஆறு பகைகளை கட்டுப்படுத்தி வாழும் வாழ்க்கை நெறியினை, அடியார்கள் மேற்கொள்ள வைத்தார் சிவபிரான் என்று இங்கே கூறப்படுகின்றது. தென்குடித் திட்டை என்ற தலத்தின் மீது அருளிய பாடலில், ஞானசம்பந்தப் பெருமான், திட்டை நகரில் வாழும் அடியார்களை குறிப்பிடும் பாடலில் இந்த ஆறு பகைகளின் தன்மையை உணர்ந்து, அவற்றைக் களைந்து சிவபிரான் தான் உண்மையான் மெய்ப்பொருள் என்று உணர்ந்து வழிபடும் அடியார்கள் என்று கூறுகின்றார்.

    ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றி மால்
    கூறினார் அமர் தரும் குமரவேள் தாதையூர்
    ஆறினார் பொய்யகத்தை உணர்வு எய்தி மெய்
    தேறினார் வழிபடும் தென்குடித் திட்டையே
 

பொழிப்புரை:
நல்லூரில் உறையும் பெருமானாகிய சிவபிரான், பிறவிப்பிணியால் பீடிக்கப்பட்டுள்ள உயிர்கள் மிகவும் அதிகமாக உலவும் உலகினில், ஏழு வகையான உடல்களை (தேவர், மனிதர், நடக்கும் விலங்குகள், பறவைகள், ஊரும் உயிர்கள், நீரில் வாழ்வன, தாவரங்கள்) தத்தம் வினைகளுக்கு ஏற்றவாறு உயிர்களுடன் பொருந்தும் நிலையை வைத்துள்ளார்; அந்த உயிர்கள் தங்களது வினையின் ஒரு பகுதியை கழிப்பதற்காக சொர்க்கம் நரகம் என்ற அமைப்புகளை வைத்துள்ளார்; தான் இட்ட பணிகளைச் செய்வதற்காக தேவர் கணங்களை வைத்துள்ளார்; அந்த தேவர்கள், தன்னைக் காணாத நிலையினையும் வைத்துள்ளார்; காமம், குரோதம், லோபம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் ஆகிய தீயகுணங்கள் தலை தூக்காத சிறந்த வாழ்க்கையினையும், துறவு நிலையையும், தனது அடியார்கள் மேற்கொள்ள வைத்துள்ளார்; சிறந்த தவத்தினைச் செய்யும் அடியார்கள், சரணடையும் திருவடியினை எனது தலை மீது வைத்த நல்லூர் பெருமான் மிகவும் நல்லவர். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/oct/14/76-நினைந்துருகும்-அடியாரை---பாடல்-6-2789132.html
2789127 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 76. நினைந்துருகும் அடியாரை - பாடல் 5 என். வெங்கடேஸ்வரன் Friday, October 13, 2017 12:00 AM +0530  

பாடல்  5

விண்ணிரியும் திரிபுரங்கள் எரிய வைத்தார்
        வினை தொழுவார்க்கு அற வைத்தார் துறவி வைத்தார்
கண் எரியால் காமனையும் பொடியா வைத்தார்
        கடிக் கமல மலர் வைத்தார் கயிலை வைத்தார்
திண் எரியும் தண் புனலும் உடனே வைத்தார்
       திசை தொழுது மிசை அமரர் திகழ்ந்து வாழ்த்தி 
நண்ணரிய திருவடி என் தலை மேல் வைத்தார்
       நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே

விளக்கம்:

விண்=ஆகாயம், இங்கே ஆகாயத்தில் உள்ள தேவர்களைக் குறிக்கின்றது. இரிதல்=பயந்து  ஓடுதல்; கமலமலர்=தாமரை மலர். இதயத்தை தாமரை மலருக்கு ஒப்பிடுவது இலக்கிய மரபு. எனவே இங்கே அடியார்களின் இதயத் தாமரை குறிக்கப்படுகின்றது. கடி=மணம், இங்கே பக்திமணம் திண்ணெரி=வலிமையான நெருப்பு நண்ணுதல்=எட்டுதல், கிட்டே நெருங்குதல்; நண்ணரிய=நெருங்க முடியாத, எட்ட முடியாத. மிசை=(மிகை என்ற சொல்லின் திரிபு) மேல்

மூன்று பறக்கும் கோட்டைகளைக் கொண்டு திரிபுரத்து அரக்கர்கள் உலாவிய போது, தேவர்கள் அஞ்சி நடுங்கி, தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஓடிய நிலை இங்கே குறிக்கப்பட்டுள்ளது. உலகத்தில் உள்ளவர்களை வருத்தியும், தேவர்கள் பயம் எய்தவும் கொடிய போர் நிகழ்த்திய திருபுரத்து அரக்கர்களின் தன்மை கீழ்க்கண்ட ஞான சம்பந்தர் தேவாரப் பாடலில் கொடுக்கப்பட்டுள்ளது (முதல் திருமுறை பதிக எண்: 129 பாடல் எண் 4); பரிசு=தன்மை; வார்=மார்புக் கச்சு; இசை=பொருந்திய சூளிகை=உச்சி; கார் இசையும் =மேகங்கள் உலாவும்; விசும்பு இயங்கும் கணம்=வானில் உலவும் கணங்கள் இங்கே கந்தருவர்கள். கழுமலம் என்பது சீர்காழித் தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. இந்த பாடலின் கடை இரண்டு அடிகள் சீர்காழி தலத்தில் இருந்த மங்கையர்களின் இசை ஞானம் கூறப்பட்டுள்ளது.  தங்களது மென்மையான மார்பினில் கச்சை அணிந்த மகளிர், மாளிகையின் உச்சியில் நின்று தங்களது குழந்தைகளை தாலாட்டுப் பாட்டு பாடி பாராட்ட, அந்த பாடல்களை மேகங்கள் உலவும் வானவெளியில் திரியும் கந்தர்வர்கள் கேட்டு மகிழ்ந்தனர் என்று அவர்களின் இசைத் திறமை வெளிப்படுத்தப் படுகின்றது.

பார் இதனை நலிந்து அமரர் பயம் எய்த சயம் எய்தும்
                                      பரிசு வெம்மைப்
போரிசையும் புரம் மூன்றும் பொன்ற ஒரு சிலை
                                     வளைத்தோன் பொருந்தும் கோயில்
வாரிசை மென் முலை மடவார் மாளிகையின் சூளிகை
                                     மேல் மகப் பாராட்ட
காரிசையும் விசும்பு இயங்கும் கணம் கேட்டு மகிழ்வு
                                     எய்தும் கழுமலமே

    
பொழிப்புரை:

நல்லூரில் உறையும் எம்பெருமான், விண்ணோர்கள் பயந்து ஓடுவதற்கு காரணமாக இருந்த திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகளை எரித்தவர்; தன்னைத் தொழும் அடியார்களின் வினைகளை நீக்கி, அவர்களுக்கு பற்றற்ற நிலையை ஏற்படுத்தி, அவர்கள் துறவு நிலை மேற்கொள்ளுமாறு செய்பவர்; தனது நெற்றிக் கண்ணிலிருந்து எழுந்த தீயினால் காமனை எரித்து பொடியாக்கியவர்; பக்திமணம் கமழும் அடியார்களின் உள்ளத்தையும் கயிலை மலையையும் தனது இருப்பிடமாக வைத்தவர்; நெருப்பினையும், குளிர்ந்த நீரினையும் தன்னுடலில் வைத்திருப்பவர்; பல திசைகளில் உள்ள தேவர்கள் தொழுதும் வாழ்த்தியும் காண முடியாத, அணுக முடியாத திருவடியை எனது தலையின் மீது வைத்த நல்லூர் பெருமானார் மிகவும் நல்லவர். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/oct/13/76-நினைந்துருகும்-அடியாரை---பாடல்-5-2789127.html
2789084 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 76. நினைந்துருகும் அடியாரை - பாடல் 4 என். வெங்கடேஸ்வரன் Thursday, October 12, 2017 10:55 AM +0530  

பாடல்  4

வில்லருளி வரு புருவத்து ஒருத்தி பாகம் பொருத்தாகி
        விரிசடை மேல் அருவி வைத்தார்
கல்லருளி வரி சிலையா வைத்தார் ஊராக்
        கயிலாய மலையா வைத்தார் கடவூர் வைத்தார்
சொல் அருளி அறம் நால்வர்க்கு அறிய வைத்தார்
       சுடு சுடலைப் பொடி வைத்தார் துறவி வைத்தார் 
நல்லருளால் திருவடி என் தலை மேல் வைத்தார்
      நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே

விளக்கம்:

கல்=மலை, இங்கே மேருமலை குறிக்கப்படுகின்றது. அருவி=கங்கை நதி; பெண்களின் வளைந்த புருவத்தை வில்லினுக்கு ஒப்பிடுவது இலக்கிய மரபு. ஒருத்தி என்பது இங்கே பார்வதி தேவியைக் குறிக்கும். பார்வதி தேவியின் புருவத்திற்கு உவமையாக வில் கூறப்படுவதால் வில்லுக்கு பெருமை சேர்கின்றது என்ற கருத்தினை மனதில் கொண்டு, வில்லுக்கு அருளியதாக இங்கே குறிப்பிடப்படுகின்றது.  

பொழிப்புரை:

தனது புருவத்திற்கு உவமையாக சொல்லப்படுவதால், வில்லிற்கு அருள் புரிந்த பார்வதி தேவியை தனது உடலின் ஒரு பாகமாக வைத்துக் கொண்டவர் சிவபெருமான் ஆவார்; அவர் தனது விரிந்த சடையில் கங்கையைத் தாங்கியவர்; மேரு மலைக்கு அருள் புரிந்து அதனை வில்லாக வளைத்துக் கொண்டவர்; கயிலாய மலையை தனது இருப்பிடமாகவும், திருக்கடவூரினை தனது ஊராகவும் வைத்துக்கொண்டவர்; புனிதமான சொற்களைக் கொண்ட வேதத்தினை, சனகர் முதலான முனிவர்களுக்கு அருளி அவர்களுக்கு அறத்தினை உணர்த்தியவர்; சுடுகாட்டின் சாம்பலைப் பூசியவர்; பக்குவப்பட்ட உயிர்களை துறவு நிலை மேற்கொள்ள வைத்தவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த சிவபெருமான் பேரருள் கூர்ந்து தனது திருவடியினை எனது தலை மேல் வைத்தமையால், அவர் எனக்கு மிகவும் நல்லவராக உள்ளார்.     

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/oct/12/76-நினைந்துருகும்-அடியாரை---பாடல்-4-2789084.html
2789083 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 76. நினைந்துருகும் அடியாரை - பாடல் 3 என். வெங்கடேஸ்வரன் Wednesday, October 11, 2017 12:00 AM +0530  

பாடல்   3

தோடேறு மலர்க் கொன்றை சடை மேல் வைத்தார்
         துன்னெருக்கின் வடம் வைத்தார் துவலை சிந்தப்
பாடேறு படு திரைகள் எறிய வைத்தார்
         பனி மத்த மலர் வைத்தார் பாம்பும் வைத்தார்
சேடேறு திருநுதல் மேல் நாட்டம் வைத்தார்
        சிலை வைத்தார் மலை பெற்ற மகளை வைத்தார்
நாடேறு திருவடி என் தலை மேல் வைத்தார்
        நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே

விளக்கம்:

தோடு ஏறு=இதழ்கள் நிறைந்த; துன்னெருக்கு=நெருக்கமாக கட்டப்பட்ட எருக்கம்பூ  வடம்= மாலை; துவலை=நீர்த்துளிகள்; பாடு=பெருமை; திரைகள் எறிதல்=மிகுந்த ஒலியுடன் அலைகள் புரள வீசுதல்; சேடு=ஒளி; நாட்டம்=கண்; நாடு=நாட்டில் உள்ள அனைவரும்; 

பொழிப்புரை:

நல்லூரில் உள்ள எம்பெருமான், தனது சடையில் இதழ்கள் நிறைந்த கொன்றை மலரினை வைத்துள்ளார்; நெருக்கமாக கட்டப்பட்ட எருக்கு மலர்கள் கொண்ட மாலையினை அணிந்துள்ளார்; நீர்த் திவலைகள் சிந்துமாறும் பெருத்த ஒலிகள் எழுமாறும் அலைகள் புரண்டு கொண்டிருக்கும் பெருமை வாய்ந்த கங்கை நதியினை சடையில் வைத்துள்ளார்; பனித் துளிகள் படர்ந்துள்ள ஊமத்தை மலரினைச் சூடியுள்ளார்; அழகு மிகுந்த தனது நெற்றியில் மூன்றாவது கண்ணினை வைத்துள்ளார்; மேரு மலையை வில்லாக வளைத்து தனது கையில் கொண்டுள்ளார்; மலையான் பெற்ற மகளைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளார். நாட்டில் உள்ள அனைவரும் போற்றும் தனது திருவடியினை எனது தலை மீது வைத்த நல்லூர்ப் பெருமானார் மிகவும் நல்லவர். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/oct/11/76-நினைந்துருகும்-அடியாரை---பாடல்-3-2789083.html
2787805 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 76. நினைந்துருகும் அடியாரை - பாடல் 2 என். வெங்கடேஸ்வரன் Tuesday, October 10, 2017 10:10 AM +0530  

பாடல்   2

பொன் நலத்த நறும் கொன்றை சடை மேல் வைத்தார்
           புலியுரியின் அதள் வைத்தார் புனலும் வைத்தார்    
மன் நலத்த திரள்தோள் மேல் மழுவாள் வைத்தார் வார்
          காதில் குழை வைத்தார் மதியும் வைத்தார்
மின்நலத்த நுண்ணிடையாள் பாகம் வைத்தார் வேழத்தின்
           உரி வைத்தார் வெண்ணூல் வைத்தார்
நன்னலத்த திருவடி என் தலை மேல் வைத்தார்
           நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே

விளக்கம்:

பொன்னலத்த=பொன் போன்ற நிறம் கொண்ட; இன் அதள்=இனிமையான, மென்மையான தோல் , 

பொழிப்புரை:

சிவபெருமான் பொன்னைப் போன்ற நிறமுடையதும் அழகும் கொண்ட கொன்றை மலரை தனது சடையில் வைத்துள்ளார்; மென்மையாக உள்ள புலியின் தோலை தனது இடையில் உடுத்தியுள்ளார்; கங்கையையும் சந்திரனையும் தனது சடையில் வைத்துள்ளார்; நிலையான அழகு உடைய தோளின் மேல் மழு எனப்படும் ஆயுதத்தை வைத்துள்ளார்; மின்னல் போன்ற நுண்ணிய இடையினை உடைய உமையம்மையை தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளார்; அவர் யானையின் தோலைப் போர்வையாக கொண்டுள்ளவர், மார்பினில் வெண்ணூல் பூண்டுள்ளவர். இத்தகைய சிறப்புகள் பெற்ற நல்லூர் பெருமானாகிய சிவபெருமான் தன்னுடைய, நல்ல நலன்கள் அருளும், திருவடியை எனது தலை மேல் வைத்தார் அவர் மிகவும் நல்லவர். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/oct/10/76-நினைந்துருகும்-அடியாரை---பாடல்-2-2787805.html
2787153 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 76. நினைந்துருகும் அடியாரை - பாடல் 1 என். வெங்கடேஸ்வரன் Monday, October 9, 2017 09:24 AM +0530  

பின்னணி:
சமணர்கள் செய்த சூழ்ச்சியால் நீற்றறையில் தள்ளப்பட்ட அப்பர் பிரான், இறைவனின் திருவடி நீழல் எவ்வாறு தனக்கு குளிர்ச்சியையும், தனது ஐந்து புலன்களுக்கும் இனிமையையும் தந்தது என்பதை அப்போது அருளிய பதிகத்தில் குறிப்பிட்டார்.
    
    மாசில் வீணையும் மாலை மதியமும்    
    வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
    மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே 
    ஈசன் எந்தை இணையடி நீழலே

தன்னை ஆட்கொண்ட இறைவனின் திருவடி நீழலின் இனிமையை அனுபவித்த அப்பர் பிரான், சிவபிரானின் திருவடிகளின் பெருமையை விளக்கும் முகமாக ஒரு பதிகமும், அருளுகின்றார். இந்த பதிகம், திருப்பாதிரிப்புலியூருக்கு  அருகில் கரையேறிய பின்னர் திருவதிகை வந்து சேர்ந்தவுடன் பாடிய பதிகம் ஆகும். இந்த பாடலின் பெரும்பாலான அடிகளில், இறைவனின் திருவடி குறிப்பிடப்பட்டு அதன் பெருமை உணர்த்தப்படுகின்றது. இந்த பதிகம் திருவடித் தாண்டகம் என்றே அழைக்கப்படுகின்றது. இந்த பதிகத்தின் முதல் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பரவுவார்=புகழ்ந்து பாடும் அடியார்கள். பறைக்கும்=நீக்கும், போக்கும். 

    அரவணையான் சிந்தித்து அரற்றும் அடி
           அருமறையான் சென்னிக்கு அடியாம் அடி
    சரவணத்தான் கை தொழுது சாரும் அடி
           சார்ந்தார்கட்கு எல்லாம் சரணாம் அடி
    பரவுவார் பாவம் பறைக்கும் அடி
           பதினெண் கணங்களும் பாடும் அடி
    திரை விரவு தென்கெடில நாடன் அடி
          திருவீரட்டானத்து எம் செல்வன் அடி  
  

இறைவனின் திருவடியைப் பாடி மகிழ்ந்த அப்பர் பெருமானுக்கு அந்த திருவடிகளைக் காணவேண்டும், அந்த திருவடிகள் தனது தலையில் மீது பாதிக்கப்பட வேண்டும் என்ற ஆசை வெகு நாட்களாக இருந்தது போலும். தூங்கானைமாடத்தில் தனது விண்ணப்பங்களை இறைவன் முன்னர் வைத்த பதிகத்தில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டதா அல்லையா என்பதை நாம் அறியமுடியாதபடி பதிகத்தின் ஏழு பாடல்கள் சிதைந்துவிட்டன. ஆனாலும் தனது விருப்பத்தை அப்பர் பிரான் தெரிவித்திருந்தால் நிச்சயமாக சிவபிரான் அதனை நிறைவேற்றி இருப்பார் என்று நாம் நம்பலாம். எனவே இந்த விருப்பம் அப்போது தெரிவிக்கப்படவில்லை என்றே நாம் கொள்ளலாம். மேலும்  தனது உடல் தூய்மையற்றது என்று கருதியதால் அப்பர் பிரான் இந்த வேண்டுகோளை அப்போது விடுக்கவில்லை போலும். 
    
கோவாய் முடுகி என்று தொடங்கும் பதிகத்தினைப் பாடி, திருச்சத்திமுற்றத்தில் உறையும் சிவக்கொழுந்தினை அப்பர் பிரான் தொழுது எழுந்த பின்னர், வானிலிருந்து ஒரு குரல் அவரை நல்லூருக்கு வாவா என்று அழைத்தது. இறைவனின் திருவருளை எண்ணி மகிழ்ந்த அப்பர் பிரான், அவ்வாறே நல்லூர் சென்றணைந்தார். அங்கே இறைவனைத் தொழுது எழுந்தபோது, உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம் என்ற சொல்லுடன் சிவபிரான் அப்பர் பிரானின் தலை மீது தனது திருவடியினைப் பதிக்கின்றார். இந்த நிகழ்ச்சியைக் கூறும் பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.  
 
நன்மை பெருகு அருள் நெறியே வந்தணைந்து நல்லூரின்
மன்னு திருத்தொண்டனார் வணங்கி மகிழ்ந்து எழும்
                                                                                                      பொழுதில்
உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம் என்று
                                                                                                      அவர்க்கு
சென்னி மிசைப் பாத மலர் சூட்டினான் சிவபெருமான்

உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம் என்ற தொடரினை நாம் கவனமாக பார்த்தல், உன்னுடைய என்று அப்பர் பிரானை ஒருமையிலும், தன்னை முடிக்கின்றோம் என்று பன்மையிலும் சிவபிரான் கூறிக் கொண்டதை நாம் உணரலாம். ஆனால் சேக்கிழார் பெருமான் தனது பாடலில், திருநாவுக்கரசரை அவர் என்று பன்மையிலும், சிவபெருமானை சூட்டினான் என்று ஒருமையிலும் குறிப்பிடுவதை நாம் காணலாம். மேலும் மன்னு (புகழ் வாய்ந்த) திருத்தொண்டர் என்று குறிப்பிடுவதன் மூலம் நாயனாரின் பெருமையும் இங்கே உணர்த்தப்படுகின்றது. பெரிய புராணத்தின் மையக் கருத்தே, இறைவன் தொண்டருக்குள்  அடக்கம் என்பதால், சேக்கிழார் இறைவனை ஒருமையில் குறிப்பிட்டு நாயனாரை பன்மையில் குறிப்பிட்டது மிகவும் பொருத்தமாக உள்ளது.

இறைவனிடம் திருவடி தீக்கை பெற்ற அடியார்கள், மூவர்; அப்பர் பிரான், மணிவாசகர் மற்றும் சுந்தரர். சித்த வடமடத்தில் முதியவராக வந்த இறைவனின் திருப்பாதங்கள் தனது தலை மீது பட்டபோது, வந்த முதியவர் இறைவன் தான், என்பதை சுந்தரர் உணரவில்லை. மணிவாசகப் பெருமான், பெருந்துறையில் குருந்த மரத்தடியில் காட்சி அளித்த இறைவனை, இறைவனாக கருதவில்லை; குருவாகத் தான் உணர்ந்தார். எனவே அப்பர் பிரான் ஒருவர் தான், திருவடி தீக்கை பெற்றபோது இறைவனின் திருப்பாதங்கள் தனது தலை மீது பதிக்கப் படுகின்றது என்ற உணர்வுடன் இருந்தவராகத் திகழ்கின்றார். 

பதிகம் என்றால் பத்து பாடல்கள் கொண்ட தொகுப்பு என்று பொருள். பொதுவாக அப்பர் பிரான் பத்து பாடல்கள் கொண்ட பதிகங்களாகவே அதிகமாக பாடியுள்ளார். ஆனால் ஒரு சில பதிகங்கள், உணர்ச்சி மேலீட்டால் ஒரு பாடல் அதிகமாக கொடுக்கப்பட்டு பதினோரு பாடல்கள் கொண்ட பதிகங்களாகத் திகழ்வதை நாம் காணலாம். இந்தப் பதிகம் அத்தைகைய பதிகங்களில் ஒன்றாகும். இறைவனின் திருப்பாதங்கள் தலையில் பதிந்த நினைவில் பாடப்படும் போது மகிழ்வு தானே மேலோங்கி நிற்கும்; பாடல்களின் எண்ணிக்கை எவருக்கும் நினைவில் இருக்காது அல்லவா.             

இந்தப் பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் அப்பர் பிரான், தனது தலையின் மேல் இறைவனின் திருவடி படிந்ததாக கூறுகின்றார். இந்தப் பாடல் நமக்கு திருவாசகத்தின் சென்னிப்பத்து பதிகத்தினை நினைவூட்டும். இந்தப் பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் மணிவாசகர், சிவபெருமானின் திருவடி தனது தலையின் மீது திகழ்ந்ததாக குறிப்பிட்டாலும், பாடல்களின் பெரும்பகுதி திருவடியின் பெருமைகளைப் பேசுகின்றன. அப்பர் பெருமானும், இந்தப் பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் இறைவனின் திருவடிக்கு அடைமொழிகள் கொடுத்து சிறப்பிப்பதை நாம் உணரலாம். சென்னிப்பத்துப் பதிகத்தின் கடைப் பாடலில் சிவபிரானின் திருநாமத்தைப் பாடித் திரியும் பத்தர்களை அழைக்கும் மணிவாசகர், தங்கள் பாசங்களை அறவே அழித்து இறைவனைப் பணிந்தால் சிவபிரானின் திருவடிகள் அவர்களது தலை மீதும் திகழும் என்று பக்தர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதை நாம் உணரலாம்.

முத்தனை முதல் சோதியை முக்கண் அப்பனை முதல்
                                                                                   வித்தினை
சித்தனைச் சிவலோகனைத் திருநாமம் பாடித் திரிதரும்
பத்தர்காள் இங்கே வம்மின் நீர் உங்கள் பாசம் தீரப்
                                                                                   பணிமினோ
சித்தம் ஆர் தரும் சேவடிக்கண் நம் சென்னி மன்னித் திகழுமே
  


பாடல் 1:

நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார்
             நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
சினந்திருகு களிற்று உரிவைப் போர்வை வைத்தார்
            செழுமதியின் தளிர் வைத்தார் சிறந்து வானோர்
இனந்துருவி மணி மகுடத்து ஏறத் துற்ற
           இனமலர்கள் போது அவிழ்ந்து மதுவாய்ப் பில்கி
நனைந்தனைய திருவடி என் தலை மேல் வைத்தார்
           நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே

விளக்கம்:
நைய வைத்தார்=மேன்மேலும் அன்பு பெருகுதலால் மனம் நைந்து போதல்; மனம் மேலும் இளகுதல்;  உலகியல் பாசங்கள் சிறிது சிறிதாக கழிந்து அறவே அழிந்து போன நிலையை குறிப்பிடுவதாகவும் பொருள் கூறுவார்கள். மறுபடியும் மறுபடியும் நம்மை பிறவிப் பெருங்கடலில் ஆழ்த்துவதால், வினைகள் தீவினைகள் என்று குறிக்கப்பட்டுள்ளன. திருகு=முறுகிய, வலிமையான, அதிகமான; துருவி=தேடி; பில்கு=ஒழுகிய

தன்னையே நினைந்து உருகும் அடியார்களின் தீவினைகள், அவர்கள் பால் சாராமல் நீக்குபவர் சிவபெருமான் என்று முதல் அடியில் அப்பர் பிரான் கூறுகின்றார். தீவினைகள் நீக்கப்படுவதால் சிவபிரானை நினைந்து உருகும் அடியார்களின் பிறவிப்பிணி நீங்குகின்றது. பிறவிப்பிணி நீங்கி முக்திபேறு பெரும் ஆன்மாக்கள் இறைவனுடன் இணைந்து என்றும் அழியாத பேரானந்தம் பெரும் நிலை ஏற்படும் என்பதை உணர்ந்தால் யார் தான் இறைவனிடம் மேலும் அன்பு கொள்ளமாட்டார்கள். இந்த செய்தியைத் தான், நினைந்து உருகும் அடியார்களின் தீவினைகள் அவர்களைச் சார்ந்து நில்லாமல் விலகுமாறுச் செய்வதால் சிவபிரான் பால்  அடியார்கள் வைத்துள்ள அன்பு மேன்மேலும் பெருகுகின்றது என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.

மணிமகுடம் அணிந்த வானோர்கள் சிவபெருமானை வணங்கும்போது அவர்களின் மகுடங்களில் உள்ள மலர்களிலிருந்து வடியும் தேன் சிவபெருமானின் பாதத்தை நனைக்கின்றது என்று அப்பர் பெருமான் கூறுகின்றார். 

பொழிப்புரை:

நல்லூரில் உள்ள எம்பெருமான், தன்னையே நினைந்து உருகும் அடியார்களின் தீவினைகளை நீக்கி, அவர்களுக்கு பிறப்பு இறப்பு சுழற்சிகளில் இருந்து விடுதலை அளிவித்து அவர்களை மகிழ்வித்து அவர்கள் தன்மேல் அதிகமான அன்பு கொள்வதால் மேன்மேலும் அந்த அடியார்கள் உள்ளம் நைந்து உருகுமாறு செய்கின்றார், அவர் சினத்துடன் தன்னை வந்து எதிர்த்த யானையின் தோலை உரித்து அதனைப் போர்வையாகக் கொண்டவர்; பிறையினைச் சூடியவர். சிறந்த மலர்களைத் தேடித் தங்களது மணிமகுடத்தில் அணிந்துள்ள தேவர்கள், சிவபிரானை வணங்கும்போது அவர்கள் சூடியுள்ள மலர்களிலிருந்து வடியும் தேன் சிவபிரானின் பாதங்களை நனைக்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த திருவடியை எனது தலை மேல் வைத்த நல்லூர் பெருமானாகிய சிவபிரான் மிகவும் நல்லவர். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/oct/09/76-நினைந்துருகும்-அடியாரை---பாடல்-1-2787153.html
2782034 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 75. கோவாய் முடுகி அடுதிறல் - பாடல் 10 என். வெங்கடேஸ்வரன் DIN Sunday, October 8, 2017 12:00 AM +0530  

பாடல் 10

பொறித் தேர் அரக்கன் பொருப்பு எடுப்பு உற்றவன்
                                                                                 பொன்முடி தோள்
இறத் தாள் ஒரு விரல் ஊன்றி இட்டலற இரங்கி ஒள்வாள்
குறித்தே கொடுத்தாய் கொடியேன் செய் குற்றக்
                                                                                 கொடுவினை  நோய்
செறுத்தாய் திருச்சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே

விளக்கம்:

பொறித்தேர்=இயந்திரத் தேர். வானில் பறக்கும் வல்லமை பெற்ற தனித்தன்மை வாய்ந்த புஷ்பக விமானம். பொருப்பு=மலை, கயிலாய மலை. தாள்=பாதம்

பொழிப்புரை:

வானில் பறக்கும் வல்லமை பெற்ற இயந்திரங்களைக் கொண்ட புட்பகத் தேரினை உடைய அரக்கனாகிய இராவணன், தனது தேர் சென்ற வழியில் குறுக்கிட்டது எனக் கருதி கயிலாய மலையினை பேர்த்தெடுக்க முயற்சி செய்த போது, பொன்முடிகள் அணிந்த அவனது தலைகளும், தோள்களும் நொறுங்குமாறு, கால் விரல் ஒன்றினை அழுத்தி அவனை அலறச் செய்தவனே, தனது தவற்றினை உணர்ந்து சாமகானம் பாடி உன்னை துதித்த அரக்கன் மேல் இரக்கம் கொண்டு அவனை விடுவித்ததும் அன்றி, அவனது நலம் மேலும் பெருகுமாறு ஒளி பொருந்திய வாளினை அளித்தவனே,  கொடியவனாகிய அடியேன் செய்த குற்றங்களால் ஏற்பட்ட கொடிய வினையான நோயினை அழித்தாய். 

முடிவுரை:

இந்தப் பதிகம் பாடி முடிக்கப்பட்டவுடன் நல்லூருக்கு வா வா என்ற குரல் வானில் எழுந்தது. இறைவனின் கட்டளையை உணர்ந்த அப்பர் பிரான் அவ்வாறே திருநல்லூர் சென்று அங்கு இறைவனின் திருப்பாதங்கள் தனது தலை மீது வைக்கப்பெற்றார். நல்லூருக்கு இறைவன் அப்பர் பிரானை அழைத்ததை சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார்.  

கோவாய் முடுகி என்றெடுத்துக் கூற்றம் வந்து
                                                                            குமைப்பதன் முன்
பூவார் அடிகள் என் தலை மேல் பொறித்து வைப்பாய்
                                                                            எனப் புகன்று
நாவார் பதிகம் படுதலும் நாதன் தானும் நல்லூரில் 
வாவா என்றே அருள் செய்ய வணங்கி மகிழ்ந்து
                                                                            வாகீசர்

அப்பர் பிரானை நல்லூருக்கு வா வா என்றது போல், தில்லை நகரில் கூத்தபிரானைத் தொழுத சுந்தரரை, சிவபெருமான் ஆரூரில் வருக நம் பால் என்று வானில் எழுந்த குரல் மூலம் அழைக்க, சுந்தரரும் அவ்வாறே திருவாரூர் சென்று சிவபிரானை வணங்கி தம்பிரான் தோழர் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். வானில் எழுந்த குரல் மூலமாக சுந்தரரை சிவபெருமான் திருவாரூர் அழைத்த செய்தி கொண்ட பெரிய புராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நடராஜப் பெருமானின் தூக்கிய திருவடி, சிவபிரானது அருளாற்றலை குறிப்பதால், சிவபிரானது அருட்செயலைக் குறிப்பிடும் சேக்கிழார், அருள் புரியும் தன்மை கொண்டவர் என்ற பொருள் பட எடுத்த சேவடியார் என்று நயமாக குறிப்பிடுகின்றார். 

தடுத்து முன் ஆண்ட தொண்டனார் முன்பு
             தனிப் பெருந்தாண்டவம் புரிய
எடுத்த சேவடியார் அருளினால் தரளம்
            எறி புனல் மறி திரைப் பொன்னி
மடுத்த நீள் வண்ணப் பண்ணை ஆரூரில்
            வருக நம் பால் என வானில்
அடுத்த போதினில் வந்து எழுந்ததோர் நாதம்
            கேட்டலும் அது உணர்ந்து எழுந்தார்

மணிவாசகர், தில்லைக்குச் செல்ல வேண்டும் என்று சிவபிரான் பணித்ததை, அவரே தனது திருவாசகத்தில் (கீர்த்தித் திருவகவல்) பதிவு செய்துள்ளார்.
    
நாயினேனை நலமலி தில்லையுள்
கோலமார் தரு பொதுவினில் வருகென    

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/oct/08/75-கோவாய்-முடுகி-அடுதிறல்---பாடல்-10-2782034.html
2782032 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 75. கோவாய் முடுகி அடுதிறல் - பாடல் 9 என். வெங்கடேஸ்வரன் DIN Saturday, October 7, 2017 12:00 AM +0530  

பாடல் 9

தக்கார்வம் எய்திச் சமண் தவிர்ந்து சரண் புகுந்தேன்
எக்காதல் எப்பயன் உன் திறம் அல்லால் எனக்கு உளதே
மிக்கார் திலையுள் விருப்பா மிக வடமேரு என்னும்
திக்கா திருச்சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே

விளக்கம்:

மிக்கார்=சான்றோர். மற்றவர்களை விட ஒழுக்கத்தில் மிக்கவர். தக்கார்வம்=தகுந்த ஆர்வம். தான் வந்த மரபுக்குத் தகுந்த ஆர்வம். சூலை நோயினால் வருந்தி, மந்திர தந்திரங்கள் ஏதும் பயன் அளிக்காத நிலையில், தனது தமக்கையாரை அணுகியபோது, அவர் காட்டிய வழியில், அவர்களின் மரபுக்கு தகுந்தவாறு சிவபிரானின் வழிபாடு செய்தது இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. 

பொழிப்புரை:

சான்றோர்கள் வாழும் தில்லைப் பதியினில், மிகவும் விருப்புடன் அமர்ந்தவனே, வடமேரு என்று சிறப்பித்துச் சொல்லப்படும் வடதிசைக்கு உரியவனே, திருச்சத்திமுற்றத்தில் உறையும் சிவக்கொழுந்தே, சமண சமயத்தைச் சார்ந்து வெகுகாலம் இருந்த நான் சமண சமயத்தை விட்டொழிந்து, நான் வந்த மரபுக்கு உரிய சிவவழிபாட்டினை மேற்கொண்டு உன்னை அடைக்கலமாக அடைந்தேன். இனிமேல் உன்னைப் பற்றிய செய்திகள் அல்லாமல் எந்த சமயநெறியின் மீதும் எனக்கு விருப்பம் இல்லை; அவைகளால் நான் அடையக்கூடிய பயனும் ஏதும் இல்லை. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/oct/07/75-கோவாய்-முடுகி-அடுதிறல்---பாடல்-9-2782032.html
2739373 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 67.மாயிரு ஞாலம் எல்லாம் - பாடல் 10 என். வெங்கடேஸ்வரன் Friday, October 6, 2017 10:43 AM +0530
பார்த்தனுக்கு அருள்வர் போலும் படர்சடை முடியர் போலும்
ஏத்துவார் இடர்கள் தீர இன்பங்கள் கொடுப்பர் போலும்
கூத்தராய் பாடியாடிக் கொடுவலி அரக்கன் தன்னை
ஆர்த்தவாறு அலறுவிப்பார் ஆவடுதுறையனாரே

விளக்கம்

ஆர்த்தவாறு = ஒலித்தவாறு. அலறினான் என்று சொல்லாமல், தனது குரல் ஒலித்தவாறு அரக்கன் இராவணன் அலறினான் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். தசமுகன் என்பது தான் அவனது இயற்பெயர். இராவணன் என்ற வடமொழிச் சொல்லுக்கு, தனது குரலை உலகெங்கும் கேட்கச் செய்தவன் என்று பொருள். சிவபெருமான் தனது கால் விரலால் கயிலை மலையினை அழுத்தியபோது, அந்த அழுத்தத்தைத் தாங்கமுடியாமல் அலறிய அலறல் உலகெங்கும் கேட்டதால், சிவபெருமான் அவனுக்கு இராவணன் என்ற பெயரை அளித்தார். இராவணன் என்ற பெயரினை சிவபெருமான் அளித்தார் என்று சுந்தரர் குறிப்பிடும் பாடலை நாம் இங்கே காண்போம். இந்த பாடல் திருநள்ளாறு பதிகத்தின் பாடல் (7.68.9). அரக்கனின் இன்னிசை கேட்டு மகிழ்ந்த சிவபெருமான், அரக்கன் தனது வலது கையில் ஏந்தி சண்டை புரிவதற்காக சந்திரஹாசம் என்ற வாளினையும், இராவணன் என்ற நாமத்தையும் அளித்த கருணை வள்ளலாக திகழ்ந்த தன்மை கேட்டு, அமுதம் போன்று இனிக்கும் சிவபெருமானை மறந்து வேறு எதையும் நினைக்கமாட்டேன் என்று இங்கே கூறுகின்றார்.
    
    இலங்கை வேந்தன் எழில்திகழ் கயிலை எடுப்ப ஆங்கு
                                                                  இமவான் மகள் அஞ்சத்
    துலங்கு நீள்முடி ஒருபதும் தோள்கள் இருபதும் நெரித்து
                                                                 இன்னிசை கேட்டு
    வலம் கைவாளொடு நாமமும் கொடுத்த வள்ளலைப்
                                                                 பிள்ளை மாமதி சடை மேல் 
    நலம் கொள் சோதி நள்ளாறனை அமுதை நாயினேன்
                                                                 மறந்து என் நினைக்கேனே


இடும்பாவனம் என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றில் (1.17.8) சம்பந்தர் சிவபெருமான், வாளினையும் இராவணன் என்ற நாமத்தையும் அளித்ததாக கூறுகின்றார். அழுகை குணத்தினால் வந்த பெயர் என்பதால் குணநாமம் என்று சம்பந்தர் கூறுகின்றார். ஓராது என்றால் ஆராய்ந்து சிந்திக்காது என்று பொருள். இறைவன் உறையும் மலையினை பேர்த்து எடுக்கச் செய்த முயற்சி இங்கே உணர்த்தப்படுகின்றது. சண்டீசர், கண்ணப்பர், திருநாவுக்கரசர், வன்தொண்டர், என்ற அடியார்களின் வரிசையில், தனது சாமகான இன்னிசையால் மகிழ்வித்த இராவணனும் சேர்கின்றான். 

    தேரார் தரு திகழ் வாள் எயிற்று அரக்கன் சிவன் மலையை
    ஓராது எடுத்து ஆர்த்தான் முடி ஒருபஃது அவை நெரித்துக்
    கூரார் தரு கொலை வாளொடு குண நாமமும் கொடுத்த
    ஏரார் தரும் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே


அர்ஜுனனை கொல்ல வந்த பன்றியினைக் கொன்றதன் மூலம் தன்னை வழிபட்டவனுக்கு வந்த துன்பத்தினை தீர்த்தவர் என்று நமக்கு உணர்த்திய அப்பர் பிரான், சிவபிரான் தன்னை வழிபடும் அடியார்களின் துன்பங்களைத் தீர்ப்பார் என்று நமக்கு கூறுகின்றார். விரித்த சடையினை உடைய அவர், அடியார்களின் துன்பங்களைத் தீர்ப்பார் என்று கூறுவதன் மூலம், சிவபெருமான் மிகவும் வேகமாக பாய்ந்து கீழே இறங்கிய கங்கை நதியைத் தனது சடையில் தாங்கி பகீரதனுக்கு உதவி செய்ததை நமக்கு அப்பர் பிரான் உணர்த்துகின்றார். இந்த மூன்று அடியார்களும், அர்ஜுனன், பகீரதன், இராவணன் ஆகிய மூவரும் சிவபிரானை வழிபட்டுத் தங்களது துன்பங்களிலிருந்து மீண்டமை நமக்கு சொல்லப்பட்டு, நாம் அவரை வழிபட்டு பயன் பெற வேண்டும் என்று உணர்த்தப்படுகின்றது.

பொழிப்புரை

தன்னை நோக்கி தவம் செய்துகொண்டிருந்த அர்ஜுனனைக் கொல்ல வந்த பன்றியைக் கொன்றும், அர்ஜுனனுக்கு பாசுபத அத்திரம் வழங்கியும் அவனுக்கு அருள்கள் செய்தவர் சிவபெருமான். படர்ந்த சடையினை உடைய அவர், தன்னை வழிபடும் அடியார்களின் துன்பங்களை நீக்கி இன்பங்கள் கொடுப்பார். கூத்து ஆடுபவராய், ஆடியும் பாடியும் காணப்படும் அவர், கொடிய வலிமை கொண்ட இராவணன் மிகுந்த ஆர்பாட்டத்துடன் கயிலை மலையைப் பேர்த்து எடுக்க முயற்சி செய்தபோது, கயிலை மலையைத் தனது கால் விரலால் அழுத்தி, மலையின் கீழ் அமுக்குண்ட இராவணன், துயரம் தாங்காமல் பத்து வாய்களும் அலறுமாறு செய்தவர் சிவபெருமான் ஆவார். 
தொகுப்பு: என். வெங்கடேஸ்வரன்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/18/w600X390/252465.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/jul/18/67மாயிரு-ஞாலம்-எல்லாம்---பாடல்-10-2739373.html
2737995 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 67.மாயிரு ஞாலம் எல்லாம் - பாடல் 8 என். வெங்கடேஸ்வரன் Friday, October 6, 2017 10:42 AM +0530  

   முந்தி வானோர்கள் வந்து முறைமையால் வணங்கி எத்த
   நந்தி மாகாளர் என்பார் நடுவுடையர்கள் நிற்பச்
   சிந்தியாதே ஒழிந்தார் திரிபுரம் எரிப்பர் போலும்
   அந்திவான் மதியம் சூடும் ஆவடுதுறையனாரே

விளக்கம்

நடுவுடையார்கள் = நந்திக்கும், மாகாளருக்கும் இடையே உள்ள காவலர்கள். யமுனை, இலக்குமி, சரஸ்வதி, கணபதி, கங்கை. இந்த ஏழு காவலர்களும், கயிலாயத்தின் மேற்கு நுழைவாயில் உள்ள காவலர்கள் என்று கூறுவார்கள். திரிபுரத்து அரக்கர்களின் கொடுமை தாங்கமுடியாத தேவர்கள் கயிலாயம் சென்று முறையிட்ட நிகழ்ச்சியை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார் போலும். 

பொழிப்புரை 

கயிலாய மலையில் காவலர்களாக நின்றவர்களைத் தாண்டி, உள்ளே சென்ற வானவர்கள், சிவபெருமானை முறையாக வணங்கிய பின்னர் அவரிடம் திரிபுரத்து அரக்கர்கள் செய்த கொடுமைகளை எடுத்துரைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான், தன்னை வழிபடாமல் தவறான வழியில் சென்ற திரிபுரத்து அரக்கர்களை, அவர்கள் இருந்த கோட்டைகளுடன் சேர்த்து எரித்தார். மாலை நேரத்தில் வானத்தில் தோன்றும் அழகான பிறைச் சந்திரனைத் தனது சடையில் ஏற்ற சிவபெருமான், ஆவடுதுறை தலத்தில் உறைகின்றார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/15/w600X390/4574278.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/jul/16/67மாயிரு-ஞாலம்-எல்லாம்---பாடல்-8-2737995.html
2737996 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 67.மாயிரு ஞாலம் எல்லாம் - பாடல் 9 என். வெங்கடேஸ்வரன் Friday, October 6, 2017 10:42 AM +0530     பானமர் ஏனமாகிப் பார் இடந்திட்ட மாலும்
    தேன் அமர்ந்து ஏறும் அல்லித் திசைமுகம் உடைய கோவும்
    தீனரைத் தியக்கு அறுத்த திருவுரு உடையார் போலும்
    ஆனரை ஏற்றர் போலும் ஆவடுதுறையனாரே

விளக்கம்

தீனர் = இறைஞ்சி வழிபடுவோர். துயக்கு = துயரம். அல்லி = ஒன்றின் மேல் ஒன்றாக இதழ்கள் அடுக்கப்பட்ட மலர். இங்கே தாமரையை குறிக்கும். பான் = பத்து. பானமர் = பான்+அமர், பத்து அவதாரங்களில் ஒன்றாகிய. இரண்யாக்ஷன் என்ற அரக்கனால் கடலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பூமியை வெளிக்கொணர்ந்தவர் திருமால். அத்தகைய வல்லமை வாய்ந்த திருமால், பன்றியாக மாறி நிலத்தைத் தோண்டி கீழே சென்ற போதும் அவரால், சிவபெருமானின் திருவடியைக் காண முடியவில்லை என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. திருமால் மற்றும் பிரமனின் மயக்கத்தைத் தீர்த்ததாக இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தாங்கள் இருவரும் சிவபெருமானை விட பெரியவர் என்ற மயக்கத்தில் ஆழ்ந்து, தங்களில் யார் உயர்ந்தவர் என்று ஒருவருக்கொருவர் வாதம் செய்துகொண்டு இருந்தபோது அவர்களின் முன்னே தோன்றிய சோதியின் அடியையும் முடியையும் காண முடியாமல் தவித்த பின்னர் அவர்களது மயக்கமும் தீர்ந்தது. இந்த நிலை இங்கே அப்பர் பிரானால் குறிப்பிடப் படுகின்றது.

பொழிப்புரை

பத்து அவதாரங்களில் ஒன்றான வராக அவதாரம் எடுத்து, கடலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த பூமியை வெளிக்கொணர்ந்த திறமை வாய்ந்த திருமாலும், தேன் நிறைந்து காணப்படுவதும், ஒன்றின் மேல் ஒன்றாக இதழ்கள் அடுக்கப்பட்ட தாமரை மலரின் மேல் அமரும் திசைமுகன் என்று அழைக்கப்படும் பிரமனும், தங்களால் முடிந்த முயற்சிகள் செய்த போதிலும், சோதிப் பிழம்பாக எழுந்த சிவபிரானின் அடியையோ அல்லது முடியையோ காண முடியாமல் துயருற்று இருந்தார்கள். அப்போது சிவபெருமான் அவர்கள் முன்னே தோன்றி. அவர்களின் துயரத்தைத் தீர்த்ததும் அன்றி, அவர்களின் மயக்கத்தையும் போக்கினார். அவர் வெண்மை நிறம் கொண்ட காளையை வாகனமாக ஏற்றுள்ளார். அவர்தான் ஆவடுதுறை தலத்தில் உறையும் பெருமான் ஆவார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/15/w600X390/4574278.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/jul/17/67மாயிரு-ஞாலம்-எல்லாம்---பாடல்-9-2737996.html
2736176 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 67.மாயிரு ஞாலம் எல்லாம் - பாடல் 7 என். வெங்கடேஸ்வரன் Friday, October 6, 2017 10:41 AM +0530  

   விடைதரு கொடியர் போலும் வெண்புரி நூலர் போலும்
    படைதரு மழுவர் போலும் பாய்புலித் தோலர் போலும்
    உடைதரு கீளர் போலும் உலகமும் ஆவர் போலும்
    அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடுதுறையனாரே

விளக்கம்

சிவபெருமானின் கொடியில் நந்தி உருவம் இருக்கும். இந்த செய்தியும் பல தேவாரப் பாடல்களில் சொல்லப்படுகின்றது. கொடி மேல் ஏறு கொண்டவன் என்று சம்பந்தர் குறிப்பிடும் நெடுங்களப் பதிகத்தின் பாடல் (1.52.7) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பெருமான் அணிந்த திருநீற்றினை, சந்தனத்தைவிட நறுமணம் வாய்ந்தது என்று கருதி அடியார்கள் விரும்பி பூசிக்கொள்வதாக சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். 

கூறு கொண்டாய் மூன்றும் ஒன்றாக் கூட்டி ஓர்
                                                                             வெங்கணையால்
மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே கொடிமேல்
ஏறு கொண்டாய் சாந்தம் ஈது என்று எம் பெருமான் அணிந்த
நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

திருவாரூர் மீது அருளிய போற்றித் தாண்டகத்தின் பாடல் ஒன்றினில் (6.32.9) சேவார்ந்த வெல்கொடியாய் என்று குறிப்பிடுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம். புத்தேளிர் என்றால் தேவர்கள் என்று பொருள்.
    
பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி புத்தேளிர்
                                                  போற்றும் பொருளே போற்றி
தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி திருமாலுக்கு ஆழி
                                                 அளித்தாய் போற்றி
சாவாமே காத்து என்னை ஆண்டாய் போற்றி சங்கு ஒத்த
                                                நீற்று எம் சதுரா போற்றி
சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி                       
                                               திருமூலட்டானனே போற்றி போற்றி

சுந்தரர் தனது திருவொற்றியூர் பதிகத்தின் பாடலில் (7.91.6) விடையார் கொடியன் என்று சிவபெருமானை குறிப்பிடுகின்றார். அப்பர் பிரான், இந்த பதிகத்துப் பாடலில் கூறுவது போன்று, தன்னைச் சரண் அடைபவருக்கு உதவி புரியும் பெருமான் என்று சுந்தரரும் இங்கே கூறுகின்றார், 

    படையார் மழுவன் பால் வெண்ணீற்றன்
    விடையார் கொடியன் வேத நாவன்
    அடைவார் வினைகள் அறுப்பான் என்னை
    உடையான் உறையும் ஒற்றியூரே 

மணிவாசகர் பொற்சுண்ணம் பதிகத்தில், சிவபெருமானை சேவினை அகத்தில் ஏந்திய கொடி உடையவன் என்று கூறுகின்றார். சே = எருது. சேவகன் = வீரன்.
    

ஆவகை நாமும் வந்து அன்பர் தம்மோடு ஆட்செய்யும்                
                                வண்ணங்கள் பாடி விண்மேல்
தேவர் கனாவிலும் கண்டறியாச் செம்மலர் பாதங்கள் 
                                காட்டும் செல்வச்
சே அகம் ஏந்திய வெல்கொடியான் சிவபெருமான் புரம்
                                செற்ற  கொற்றச்
சேவகன் நாமங்கள் பாடிப் பாடிச் செம்பொன் செய் சுண்ணம்
                                இடித்தும் நாமே

கீள் என்றால் கிழித்த துணிக் கயிறு என்று பொருள். கீளார் கோவணம் உடுத்தவன் என்று பல திருமுறைப் பாடல்களில் கூறப்படுகின்றது. எனவே கீள் என்று குறிப்பிட்டால், கோவணத்தையும் சேர்த்து குறிப்பிடுவதாக நாம் கொள்ளவேண்டும். கோவணத்தை கீளில் அணியப்பட்ட உடை என்று சம்பந்தர் கோலக்கா பதிகத்தின் (1.23) முதல் பாடலில் கூறுகின்றார்.
    
    மடையில் வாளை பாய மாதரார்
    குடையும் பொய்கை கோலக்கா உளான்
    சடையும் பிறையும் சாம்பல் பூச்சும் கீள்
    உடையும் கொண்ட உருவம் என்கொலோ 


பொழிப்புரை

நந்தி வடிவம் எழுதப்பெற்ற கொடியை உடையவனாய், வெண்ணிற பூணூலை அணிந்தவனாய், மழுப்படையை கையில் ஏந்தியவராய், பாயும் இயல்பினைக் கொண்ட புலியின் தோலை உடுத்தவராய், கீளினையும் கோவணத்தையும் உடையாக அணிந்தவராய், எல்லா உலகங்களாக இருப்பவரும் ஆகிய சிவபெருமான், தன்னைச் சரண் அடையும் அடியார்களின் இடர்களைத் தீர்க்கின்றார். அவர்தான் ஆவடுதுறை தலத்தில் உறைகின்றார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/12/w600X390/.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/jul/15/67மாயிரு-ஞாலம்-எல்லாம்---பாடல்-7-2736176.html
2736172 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 67.மாயிரு ஞாலம் எல்லாம் -பாடல் 6 என். வெங்கடேஸ்வரன் Friday, October 6, 2017 10:40 AM +0530
    வக்கரன் உயிரை வவ்வக் கண்மலர் கொண்டு போற்றச்
    சக்கரம் கொடுப்பர் போலும் தானவர் தலைவர் போலும்
    துக்கமா மூடர் தம்மைத் துயரிலே வீழ்ப்பர் போலும்
    அக்கு அரை ஆர்ப்பர் போலும் ஆவடுதுறையனாரே

விளக்கம்

சிசுபாலனின் தோழன் தந்தவக்ரனை, வக்கரன் என்று ஆழ்வார்கள் திவ்ய பிரபந்தத்தில் குறிப்பிடுகின்றார்கள். சிசுபாலனை திருமணம் புரியவிருந்த ருக்மிணியை, கண்ணபிரான் கோயிலில் சந்தித்த பின்னர், அவளுடன் தேரில் சென்றபோது, கண்ணனைத் தடுக்க முயற்சி செய்தவர்களில் ஒருவனாக தந்தவக்ரன் கருதப்படுகின்றான். ருக்மணியின் தமையன் ருக்மியையும் அவனது தோழர்களையும் போரில் தோற்கடித்த கண்ணன், ருக்மிணியுடன் துவாரகை சென்று அங்கே அவளை திருமணம் செய்கின்றான். வைகுந்தத்தில் பணி புரிந்த காவலர்கள், முனிவர்களிடம் பெற்ற சாபத்தால், இரணியன் மற்றும் இரண்யாக்ஷனாகவும், அடுத்த பிறவியில் இராவணன் மற்றும் கும்பகர்ணனாகவும், மூன்றாவது பிறப்பில் சிசுபாலன், தந்தவக்ரனாக பிறக்கின்றார்கள். மூன்று பிறவிகளிலும் திருமாலால் கொல்லப்பட்டு, இறுதியில் வைகுந்தம் சென்று அடைகின்றார்கள். சிசுபாலனைக் கொன்ற சக்கரப்படை, வக்கரனைக் கொல்வதற்கும் பயன்பட்டது போலும். தன்னிடம் இருந்த சிறந்த படையாகிய சக்கராயுதத்தையே தானமாக அளித்ததால், தானம் அளிப்பவரின் தலைவர், என்று சிவபெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

கற்றவர்கள் சிவபெருமானை தொழுது போற்றுவதாக பல தேவாரப் பாடல்களில் குறிப்பிடப் படுகின்றது. எனவே கற்றவர்களுக்கு எதிரான மூடர்களுக்கு நாம் எதிர்மறைச் செயலை இணைக்க வேண்டும். சிவபெருமானைத் தொழாத காரணத்தால், மூடர்கள் தங்கள் வாழ்க்கையில் உய்யும் வாய்ப்பினை இழந்து மறுபடியும் மறுபடியும் இறந்தும் பின்னர் பிறந்தும் துயரிலே வாழ்கின்றார்கள் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். பிறவிக் கடலில் ஆழ்ந்து இருப்பது தான் பெரிய துயரமாகவும், பிறவிப்பிணிதான் பெரிய நோயாகவும் அருளாளர்களால் கருதப்படுகின்றன. 
கற்றவர்கள் சிவபெருமானை தொழுது ஏத்துகின்றார்கள் என்று குறிப்பிடும் சில தேவாரப் பதிகங்களை நாம் இங்கே காணலாம். நமச்சிவாயப் பதிகத்தின் முதல் பாடலில் (7.48.1) சுந்தரர் பாண்டிக்கொடுமுடிப் பெருமானை கற்றவர்கள் தொழுது ஏத்துவதாக கூறுகின்றார்.
    
    மற்றுப் பற்று எனக்கின்றி நின் திருப்பாதமே மனம்
                                                                          பாவித்தேன்
    பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து
                                                                          எய்தினேன்
    கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக்
                                                                          கொடுமுடி
    நற்றவா இனி நான் மறக்கினும் சொல்லும் நா
                                                                          நமச்சிவாயவே

 
கழுமலத்து இறைவனை கற்றவர்கள் பணிந்து ஏத்துவதாக சம்பந்தர் கூறும் பாடல் (1.129.11) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தேவாரப் பதிகங்கள், அவற்றினை ஓதுவாருக்கு துணையாக இருக்கும் என்பது சொற்றுணை என்ற தொடரால் இங்கே உணர்த்தப்பட்டுள்ளது. தூமலராள் = திருமகள். செல்வம் அளித்து திருமகள் துணையாக இருப்பாள் என்று சம்பந்தர் கூறுகின்றார்.

    கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்து ஈசன் தன்
                                                            தழல் மேல் நல்லோர்
    நற்றுணையாம் பெருந்தன்மை ஞான சம்பந்தன் தான்
                                                            நயந்து  சொன்ன
    சொற்றுணை ஓர் ஐந்தினொடு ஐந்து இவை வல்லார்
                                                           தூமலராள் துணைவராகி
    முற்றுலகம் அது ஆண்டு முக்கணான் அடி சேர                     
                                                           முயல்கின்றாரே     

காட்டுப்பள்ளி பெருமானை கற்றவர்கள் கருதுவதாக அப்பர் பிரான் கூறும் பாடல் (5.84.5) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. உலக வாழ்க்கையும் சுற்றங்களும் நிலையற்றவை மற்றும் ஈசன் ஒன்றே நிலையானவன் என்பதையும் உணர்ந்த கற்றவர்கள் என்று கூறி, நாம் கற்க வேண்டியது என்ன என்பதையும் அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். துணை = மனைவி. அணைதல் = பொருந்துதல். நாம் இறக்கும் சமயத்தில் நம்முடன் பொருந்தி நமக்குத் துணையாக இருப்பவர் சிவபெருமான் ஒருவர் தான். அற்றபோது = இறக்கும் சமயத்தில். 

    சுற்றமும் துணையும் மனை வாழ்க்கையும்
    அற்ற போது அணையார் அவர் என்றென்றே
     கற்றவர்கள் கருதும் காட்டுப்பள்ளிப்
    பெற்றம் ஏறும் பிரான் அடி சேர்மினே

சிவநெறியைச் சாராதவர்கள் பிறப்பிறப்புச் சுழலில் அகப்பட்டு, அதிலிருந்து விடுதலை பெற முடியாமல் தவிப்பார்கள் என்று சொல்வது நமக்கு அப்பர் பிரானின் திருத்தாண்டகப் பாடல் ஒன்றினை (6.95.6) நினைவூட்டும். அளியற்றார் = சிவபெருமானது திருவருளை இழந்தவர்கள்.

    திருநாமம் அஞ்செழுத்தும் செப்பாராகில் தீவண்ணர்
                 திறம்  ஒருகால் பேசாராகில்
    ஒருகாலும் திருக்கோயில் சூழாராகில் உண்பதன் முன்
                 மலர்  பறித்திட்டு உண்ணாராகில்   
    அருநோய்கள் கெட வெண்ணீறு அணியாராகில்
                அளியற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்   
    பெருநோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்தும்
                 பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே    

பொழிப்புரை

தனது கண்ணினை நோண்டி எடுத்து, ஆயிரம் என்ற எண்ணிக்கையில் குறைந்த மலருக்கு பதிலாக அர்ச்சனை செய்த திருமாலுக்கு, வக்கரன் என்ற அரக்கனைக் கொல்வதற்கு உதவியாக சிவபெருமான் சக்கரம் கொடுத்தார். இவ்வாறு கிடைத்தற்கு அரிய படையினை, அடுத்தவருக்கு கொடுத்த சிவபெருமான், வள்ளல்களில் தலையாய வள்ளல் ஆவார். அக்கு மணியினை தனது இடுப்பினில் அணியும் சிவபெருமான், கல்லாத மூடர்கள் என்றும் பிறவிப் பிணியால் பீடிக்கப்பட்டு துயரத்தில் அழுந்துமாறு செய்வார். எனவே நாம் கற்றவர்கள் வழியில் சென்று ஆவடுதுறையில் உள்ள பெருமானைத் தொழுது, நம்மை வருத்தும் பிறவிப் பிணியினைத் தீர்த்துக் கொள்வோம். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/12/w600X390/.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/jul/14/67மாயிரு-ஞாலம்-எல்லாம்--பாடல்-6-2736172.html
2736166 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 67.மாயிரு ஞாலம் எல்லாம் -பாடல் 5 என். வெங்கடேஸ்வரன் Friday, October 6, 2017 10:39 AM +0530
    பொடியணி மெய்யர் போலும் பொங்கு வெண்ணூலர் போலும்
    கடியதோர் விடையர் போலும் காமனைக் காய்வர் போலும்
    வெடிபடு தலையர் போலும் வேட்கையால் பரவும் தொண்டர்
    அடிமையை ஆள்வர் போலும் ஆவடுதுறையனாரே

விளக்கம்

கடியதோர் = விரைந்து செல்லும். விடை = பெருமானின் வாகனமாகிய நந்தி. தலையர் = தலை மாலையை உடையவர். வெடிபடு = சுடுகாட்டில் நெருப்பு மூட்டபோது, சூட்டினால் வெடித்த தலை. ஊழிக்காலத்தில் அழிந்து போன உடல்களின் தலையை, மாலையாக சிவபெருமான் அணியும் செயல் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

பொழிப்புரை
திருமேனி எங்கும் திருநீறு பூசியவராய், ஒளிவீசும் வெண்ணூல் அணிந்தவராய், விரைந்து செல்லக்கூடிய எருதினை வாகனமாக ஏற்றவராய் உள்ள இறைவன், தனது தவநிலையை கலைத்த மன்மதனை வெகுண்டு, நெற்றிக்கண்ணை விழித்து எரித்தார். தான் ஒருவனே என்றும் நிலைத்து நிற்பவன் என்பதை உணர்த்தும் வகையில், ஊழிக் காலத்தில் அழிந்துபோகும் உடல்களின் தலைகளை மாலையாக கோர்த்து அணிந்துகொள்ளும் சிவபெருமான், விருப்பமுடன் தன்னைத் தொழும் அடியார்களின் அடிமைத் திறத்தை பெரிதும் விரும்புகின்றார்; அத்தகைய அடியார்களை அவர் ஆட்கொள்கின்றார், அவர் தான் ஆவடுதுறையில் உறையும் பெருமான் ஆவார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/12/w600X390/.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/jul/13/67மாயிரு-ஞாலம்-எல்லாம்--பாடல்-5-2736166.html
2736102 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 67.மாயிரு ஞாலம் எல்லாம் பாடல் - 4 என். வெங்கடேஸ்வரன் Friday, October 6, 2017 10:39 AM +0530  

    மழுவமர் கையர் போலும் மாது அவள் பாகர்
                                                                                    போலும்
    எழுநுனை வேலர் போலும் என்பு கொண்டு
                                                                                    அணிவர் போலும்
    தொழுது எழுந்தாடிப் பாடி தோத்திரம் பலவும்
                                                                                    சொல்லி
    அழுமவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே

விளக்கம்

எழுநுனை = கூறிய நுனி. சிவபெருமானின் புகழினைக் கேட்கும்போதும், சொல்லும்போதும் வாய் விட்டு அழுதல் என்பது சிறந்த அடியார்களின் குணங்களில் ஒன்றாகும். நமச்சிவாயப் பதிகத்தின் முதல் பாடலில் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி சிவபெருமானின் திருநாமத்தை ஓதும் அடியார்கள் நன்னெறியை அடைவார்கள் என்று சம்பந்தர் கூறுகின்றார். இறைவனை நாம் அதிகமாக தொழத்தொழ, நமக்கு இறைவனிடத்தில் அன்பு அதிகமாகின்றது. அந்த இறையன்பு வலுப்பெறும்போது அது அழுகையாக வெளிப்படுகின்றது. இந்த நிலையினை தான் அடையவில்லையே என்று மணிவாசகர் ஏங்குவதை நாம் அவரது திருச்சதகத்தின் முதல் பாடலில் உணரலாம். அரும்புதல் = புளகாங்கிதம் கொள்ளுதல். விரை = நறுமணம். ததும்பி = இமைகளால் அடக்க முடியாத அளவுக்கு கண்ணீர் ததும்பி பெருகுதல்.
    
    மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன் விரை ஆர்
                                                                                          கழற்கு என்
    கை தான் தலை வைத்து கண்ணீர் ததும்பி
                                                                             வெதும்பி உள்ளம்
    பொய் தான் தவிர்ந்து உன்னப் போற்றி சயசய
                                                                                 போற்றி என்னும்
    கை தான் நெகிழவிடேன் உடையாய் என்னைக்
                                                                                கண்டு கொள்ளே

இறை உணர்வு வலுப்பெற்று அழுகையாக மாறும்போது, அடியார்களின் புலன்களும் பொறிகளும் அந்தக்கரணங்களும் செயலிழந்துவிடுகின்றன. இந்த நிலையையும் தாண்டும் அடியார்கள் நான், எனது என்ற எண்ணங்களை மறந்து தற்போதம் நீங்கியவர்களாய் துவண்டு விடும் நிலையை அடைகின்றார்கள். இதைத் தான், தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் என்று அப்பர் பிரான், முன்னம் அவனுடைய என்று தொடங்கும் பாடலில் கூறுகின்றார். இந்த மூன்று நிலைகளிலும் உள்ள அடியார்கள் (தொழுகையர், அழுகையர், துவள்கையர்), சிவபிரானின் அருள் வேண்டி வெளியே நிற்பதாக திருப்பள்ளியெழுச்சி பதிகத்தில் மணிவாசகர் கூறுகின்றார். இந்த மூன்று நிலைகளில் உள்ள அடியார்கள் தவிர, யாழ் வீணை ஆகிய இசைக்கருவிகள் வாசிக்கும் அடியார்கள், வேதங்கள் மற்றும் தோத்திரங்கள் சொல்லி இறைவனை வேண்டும் அடியார்கள், மலர் மாலைகளை கையில் ஏந்திய அடியார்கள், தலையின் மேல் கைகளை வைத்து கூப்பித் தொழும் அடியார்கள் என பலரும், விடியற்காலை நேரத்தில் இறைவனை தரிசிக்க காத்து நிற்கும் காட்சி இங்கே விவரிக்கப்படுகின்றது. 
    
    இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு 
                                    தோத்திரம் இயம்பினர் ஒருபால்
    
    துன்னிய பிணைமலர் கையினர் ஒருபால் தொழுகையர் 
                                    அழுகையர் துவள்கையர் ஒருபால்

    சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
                                     திருப்பெருந்துறை உறை சிவபெருமானே

    என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
                                    எம்பெருமான்  பள்ளி எழுந்தருளாயே

சிவபெருமானைத் தொழும் அiடியார்கள் நெஞ்சம் உருகி அழுவதால் அடையும் பயன் பல திருமுறைப் பாடல்களில் கூறப்படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காணலாம். சில பாடல்களில் சிவபெருமானை நாம் அழுது தொழ வேண்டும் என்றும் உணர்த்தப்படுகின்றது. குரங்காடுதுறை பதிகத்தின் (5,63) பாடலில், அப்பர் பிரான், சிவபிரானின் அடியார்களை தனது சுற்றம் என்று அழைக்கின்றார். தொண்டர்களே, நீங்கள் அனைவரும், சிவபெருமான் இருக்கும் இடமாகிய குரங்காடுதுறையினை அடைந்து, ஆங்கே அனைவரும் ஒன்று சேர்ந்து சிவபெருமானின் புகழைப் பாடிக்கொண்டே ஆடுமின், அழுமின், அவனது திருப்பாதங்களைத் தொழுமின் என்று கூறுகின்றார். எதற்காக, அழுதால் அவனைப் பெறலாம் என்பதற்காக.
    
     நாடி நம் தமர் ஆயின தொண்டர்கள்
    ஆடுமின் அழுமின் தொழுமின் அடி 
    பாடுமின் பரமன் பயிலும் இடம்
    கூடுமின் குரங்காடு துறையையே

மேற்கண்ட பாடலில் மண்ணுலகத்தவரை ஆடிப் பாடி, அழுது இறைவனின் திருவடிகளைத் தொழச் சொல்லும் அப்பர் பிரான், ஆரூர் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றில் (6.25.2) தேவர்கள் ஒன்று கூடி, தங்கள் தலைகளை சாய்த்து இறைவனை வணங்கி, அழுதவாறு சிவபெருமானின் திருவடிகளுக்கு பூஜை செய்கின்றார்கள் என்று கூறுகின்றார். தனது நெஞ்சத்தை நோக்கிச் சொல்லும் பாடலாக அமைந்திருந்தாலும், நமக்கு அறிவுரை கூறும் பாடலாக இதனை நாம் கருத வேண்டும். நெஞ்சமே, தேவர்களும் ஒன்று கூடி வணங்கும் ஆரூர் பெருமானை வணங்காமல் நான் கெடுகின்றேன். என் மீது உனக்கு பழைய பகை ஏதும் உள்ளதா, ஏன் இவ்வாறு பயன்படாது ஒழிந்து, இளைய மகளிர் என்னை இகழும் நிலைக்கு என்னைத் தள்ளுகின்றாய் என்று அப்பர் பிரான் நெஞ்சினை நோக்கி கேள்வி கேட்கின்றார்.

    எழுது கொடியிடையார் ஏழை மென் தோள்
                                     இளையார்கள் நம்மை இகழா முன்னம்
    
    பழுது பட நினையேல் பாவி நெஞ்சே பண்டு தான்
                                    என்னோடு  பகை தான் உண்டோ
    
    முழுதுலகில் வானவர்கள் முற்றும் கூடி முடியால்
                                     உற வணங்கி முற்றம் பற்றி
    
    அழுது திருவடிக்கே பூசை செய்ய இருக்கின்றான்
                                    ஊர் போலும்  ஆரூர் தானே

நான் பொய்யனாக இருந்தாலும், எனது நெஞ்சமும் நான் உன்மேல் வைத்துள்ள அன்பும் பொய்யாக இருந்தாலும், வினைகளால் பிணிக்கப்பட்டு வருந்தும் நான் உன்னை நினைத்து அழுகின்றேன், நீ எனக்கு அருளவேண்டும் என்று பாடி, நம்மையும் அந்த வழியில் அழைத்துச் செல்லும் மணிவாசகரின் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

    யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
    ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
    தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
    மானே அருளாய் அடியேன் உன்னை வந்து உறுமாறே 


பொழிப்புரை

கையில் மழுப்படை ஏந்தியவராயும், பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டவரும் ஆகிய சிவபெருமான், கூரிய நுனியை உடைய சூலத்தைக் கையில் கொண்டுள்ளார். எலும்பு மாலையை அணிந்துள்ள அவர், தன்னை கீழே விழுந்து தொழுது எழுந்து, ஆடியும் பாடியும், அழுதும் தோத்திரம் சொல்லியும் வணங்கும் அடியார்களுக்கு அன்பராக இருக்கின்றார். அவர்தான் ஆவடுதுறை தலத்தில் உறைகின்றார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/12/w600X390/24456.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/jul/12/67மாயிரு-ஞாலம்-எல்லாம்-பாடல்---4-2736102.html
2734320 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 67.மாயிரு ஞாலம் எல்லாம் பாடல் - 3 என். வெங்கடேஸ்வரன் Friday, October 6, 2017 10:38 AM +0530
பாடல் - 3
  
    உற்றநோய் தீர்ப்பர் போலும் உறுதுணை ஆவர் போலும்
    செற்றவர் புரங்கள் மூன்றும் தீயெழச் செறுவர் போலும்
    கற்றவர் பரவி ஏத்திக் கலந்து உலந்து அலந்து பாடும்
    அற்றவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே

விளக்கம்

உற்ற நோய் = உயிருக்கு உற்ற நோய், வினைத் தொகுதிகள் மற்றும் அவற்றால் விளையும் தொடர்ந்த பிறப்பு இறப்புகள். செற்றவர் = பகைவர். செறுதல் = வெல்லுதல். கலந்து = உள்ளமும் உயிரும் இறை உணர்வுடன் கலத்தல். உலத்தல் = பாசப் பற்றுகளை அறுத்தல். அலத்தல் = பாசப் பற்றுகளால் துயர் உறுதல். அற்றவர் = பாசப் பற்றுகளை அறவே ஒழித்து பக்குவம் அடைந்த அடியார்கள். அலத்தல் என்பதற்கு விரதம் முதலியவற்றால், உடலை வருத்திக்கொள்ளுதல் என்றும் பொருள் கொள்ளலாம். 

பொழிப்புரை

உயிரினை, அதனை பீடித்துள்ள வினைத் தொகுதிகளின் பிடியிலிருந்தும் மூன்று மலங்களின் பிடியிலிருந்தும் மீட்டு, பிறப்பு இறப்புச் சுழற்சியில், மறுபடியும் சிக்காத வண்ணம் உயிருக்கு உறுதுணையாக இருந்து காக்கும் வல்லமை படைத்தவர். சிவபெருமான். அவர் தேவர்களுக்கு பகைவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களை அவர்கள் வாழ்ந்து வந்த கோட்டைகளுடன் எரித்து வென்றவர். பாசப் பற்றுகளால் துயருற்று, படிப்பினையைப் கற்றுக்கொண்ட கற்றவர்கள், ஒன்று கூடி, தங்களது பாசப் பற்றுகளை முற்றிலும் அறுத்தும், தங்களது உள்ளமும் உயிரும் இறையுணர்வுடன் கலக்குமாறும், சிவபெருமானைத் தொழுது புகழ்ந்து பாடுகின்றார்கள். அவ்வாறு பாசப் பற்றுகளை விட்டொழித்த அடியார்களுக்கு அன்பராக, ஆவடுதுறையில் உறையும் இறைவன் திகழ்கின்றான்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/9/w600X390/.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/jul/12/67மாயிரு-ஞாலம்-எல்லாம்-பாட-2734320.html
2733901 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 67.மாயிரு ஞாலம் எல்லாம் பாடல் - 1 என். வெங்கடேஸ்வரன் Friday, October 6, 2017 10:37 AM +0530
முன்னுரை

அப்பர் பிரான் ஆவடுதுறை தலத்திற்கு இரண்டு முறை சென்றதாக நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். சீர்காழியில் ஞானசம்பந்தப் பெருமானை சந்தித்த பின்னர் அருகில் உள்ள பல தலங்கள் செல்ல அப்பர் பிரான் விரும்பினார். கருப்பறியலூர், புன்கூர், நீடூர் தொடங்கி, துருத்தி, மயிலாடுதுறை வழியாக ஆவடுதுறை சென்றார். அப்போது முதன் முறையாக ஆவடுதுறை சென்ற அப்பர் பிரான், அங்கே அருளிய பதிகங்களில் நமக்கு நான்கு பதிகங்கள் கிடைத்துள்ளன. அவை, இரண்டு திருத்தாண்டகங்கள் (6.46 - நம்பனை நால்வேதம்), (6.47 - திருவே என் செல்வமே) ஒரு குறுந்தொகைப் பாடல் (5.29 - நிறைக்க வாலியள் அல்லள்) மற்றும் ஒரு நேரிசைப் பதிகம் (4.57 - மஞ்சனே மணியும் ஆனாய்). 

திருமறைக்காட்டில் அப்பர் பிரானும் ஞானசம்பந்தப் பெருமானும் சேர்ந்து தங்கியிருந்த சமயத்தில் மதுரையிலிருந்து, அரசி மங்கையர்க்கரசியார் மற்றும் மந்திரி குலச்சிறையார் அனுப்பிய அடியார்கள் ஞான சம்பந்தரை சந்தித்து, மதுரையில் அப்போது நிலவிய சூழ்நிலையை விவரித்து, ஞானசம்பந்தப் பெருமான் அங்கே எழுந்தருளி சைவ சமயத்தை நிலைநாட்ட வேண்டும் என்று வேண்டினார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி ஞான சம்பந்தர் மதுரை செல்ல, அப்பர் பிரான் மேலும் சில நாட்கள் மறைக்காட்டில் தங்கி, திருப்பணிகள் பல புரிந்த பின்னர், வீழிமிழலை தலம் செல்ல விருப்பம் கொண்டார். வீழிமிழலை சென்று அங்கிருந்த பெருமானை தரிசித்து பதிகங்கள் பல அருளிய பின்னர் அப்பர் பிரான் பழையாறை செல்லும் வழியில் ஆவடுதுறை, கோழம்பம், நல்லம் ஆகிய தலங்கள் சென்றார். அவ்வாறு ஆவடுதுறை சென்றபோது அருளிய பதிகம்தான் இது. இந்த பதிகம் அருளியதைக் குறிப்பிடும் பெரிய புராணப் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பசு வடிவத்துடன் இறைவனை வழிபட்ட உமையம்மைக்கு சிவபெருமான் அருளியது இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. பதிகத்தின் முதல் பாடலில் அப்பர் பிரான், ஞானசம்பந்தருக்கு இறைவன் பொற்கிழி அளித்ததை குறிப்பிடுகின்றார் என்பதையும் சேக்கிழார் இந்த பாடல் மூலம் நமக்கு உணர்த்துகின்றார்.
    
    பூவில் பொலியும் புனல் பொன்னிக் கரை போய்ப்
                                                       பணிவார் பொற்பமைந்த
    ஆவுக்கருளும் ஆவடு தண்துறையார் பாதம்
                                                      அணைந்து இறைஞ்சி
    நாவுக்கரசர் ஞானபோனகர்க்குச் செம்பொன்
                                                      ஆயிரமும்
    பாவுக்கு அளித்த திறம் போற்றிப் போந்து
                                                      பிறவும் பணிகின்றார்

பாடல் - 1
    மாயிரு ஞாலம் எல்லாம் மலரடி வணங்கும் போலும்
    பாயிரும் கங்கையாளைப் படர்சடை வைப்பர் போலும்
    காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஊரர்க்கு அம்பொன்
    ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே

விளக்கம்

கழுமல ஊரர் = கழுமலம் என்று அழைக்கப்படும் சீர்காழியைச் சார்ந்த திருஞான சம்பந்தர், கழுமலம் என்பது சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. ஞாலம் = உலகம், இங்கே உலகத்தில் உள்ள மக்களைக் குறிக்கின்றது. 

பொழிப்புரை

மிகவும் பெரியதாக உள்ள உலகத்தில் உள்ளோர் அனைவரும் ஆவடுதுறை அண்ணலின் மலர் போன்ற திருவடிகளை வணங்குகின்றார்கள். அவர், பாய்ந்தும் பெருகியும் வந்த கங்கை நதியைத் தனது படர்ந்த சடையில் தாங்கியவர். அவர் அழகாகவும் பெரியதாகவும் உள்ள சோலைகள் சூழ்ந்த கழுமலம் என்று அழைக்கப்படும் நகரத்தைச் சார்ந்த ஞானசம்பந்தருக்கு, ஆயிரம் சிறந்த பொற்காசுகளை அளித்தார். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/8/w600X390/125674.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/jul/10/67மாயிரு-ஞாலம்-எல்லாம்-பாடல்---1-2733901.html
2734319 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 67.மாயிரு ஞாலம் எல்லாம் பாடல் - 2 என். வெங்கடேஸ்வரன் Friday, October 6, 2017 10:37 AM +0530 பாடல் 2

மடந்தை பாகத்தர் போலும் மான்மறிக் கையர் போலும்
குடந்தையில் குழகர் போலும் கொல்புலித் தோலர் போலும்
கடைந்த நஞ்சு உண்பர் போலும் காலனைக் காய்வர் போலும்
அடைந்தவர்க்கு அன்பர் போலும் போலும்
                                              ஆவடுதுறையனாரே

விளக்கம்

மடந்தை=உமையம்மை: சேக்கிழார் பெரிய புராணப் பாடலில் குறிப்பிட்டது போன்று, சிவபெருமான் பசுவுக்கு இங்கே அருள் புரிந்தார். அதனால் ஆவடுதுறை என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு சமயம் கயிலையில் சொக்கட்டான் ஆட்டம் ஆடிய போது ஏற்பட்ட பிணக்கால். உமை அம்மை பசுவாக இந்த தலம் வந்து சேர்ந்ததாகவும் கூறுவர். ஈசன் அம்பிகைக்கு காட்சி கொடுத்து அணைத்து எழுந்த கோலத்தில் இருந்ததால் அணைத்து எழுந்த நாயகர் என்றும் பசுவுக்கு முக்தி கொடுத்து உமை அம்மை சுயரூபம் பெற்றமையால் கோமுக்தீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பிகை பசுவாக இந்தத் தலம் வந்து வழிபட்டமையால் கோகழி என்றும் இந்த தலம் அழைக்கப்படுகின்றது. இந்த தலத்தில் அணைத்து எழுந்த நாயகராக அருள் புரிந்தவர், கச்சி ஏகம்பத்தில் தழுவக் குழைந்த நாதராக வெளிப்பட்டவர், அண்ணாமலையில் உமையம்மையைத் தனது உடலில் ஒரு பாகத்தில் ஏற்று அருள் புரிகின்றார். உடலில் சரி பாதியை அளித்து, தனக்குச் சமமாக அம்மையை உயர்த்தியதைவிட பெரிய பேறு ஏதும் இல்லை என்பதால், அம்மைக்கு அருள் புரிந்த தலத்துப் பாடலில், மடந்தை பாகத்தர் என்று இறைவனின் பேரருளை அப்பர் பிரான் குறிப்பிட்டார் போலும். குழகர் = அழகர்.

பொழிப்புரை

உமை அம்மையை, தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றுக் கொண்டவர் சிவபெருமான்; அவர் தன்னை நோக்கி பாய்ந்து வந்த மான் கன்றினைத் தனது கையில் ஏந்தினார்; அவர்தான் குடந்தையில் அழகராக காட்சி தருகின்றார்: அவர் தன்னைக் கொல்ல வந்த புலியினைக் கொன்று அதன் தோலை ஆடையாக அணிந்து கொண்டவர்; தேவர்களும் அசுரர்களும் ஒன்று சேர்ந்து பாற்கடலைக் கடைந்தபோது எழுந்த நஞ்சினை உண்டு உலகத்தை காப்பாற்றியவர்; சிறுவன் மார்க்கண்டேயனுக்காக காலனைக் காய்ந்தவர்; ஆவடுதுறையில் அமர்ந்துள்ள அவர், தன்னைச் சரண் அடையும் அடியார்களுக்கு அருள்கள் வழங்கும் அன்பராக உள்ளார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/9/w600X390/.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/jul/11/67மாயிரு-ஞாலம்-எல்லாம்-பாடல்---2-2734319.html
2746117 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 69. நிறைக்க வாலியள் அல்லள் பாடல் - 10 என். வெங்கடேஸ்வரன் Friday, October 6, 2017 10:35 AM +0530  

பாடல் 10:
    பக்கம் பூதங்கள் பாடப் பலி கொள்வான்
    மிக்க வாளரக்கன் வலி வீட்டினான்
    அக்கு அணிந்தவன் ஆவடு தண்டுறை
    நக்கன் என்னும் இந் நாணிலி காண்மினே

விளக்கம்:
நக்கன்=குறைந்த ஆடைகளை உடையவன். தனது மகளின் நெஞ்சத்தையும் கற்பையும் கவர்ந்து கொண்ட பெருமான் என்று முந்தைய பாடலில் குறிப்பிட்ட தாய், தனது பெண் நாணம் இழந்ததால் நாணம் ஏதுமின்றி இறைவனை நக்கன் என்று அழைப்பதாக கூறும் பாடல். நெருக்கம் ஏற்பட்டால் தான் நாணம் விலகும். இறைவனுடன் தான் மிகவும் நெருங்கி விட்டதாக உணரும் எனது மகள், நாணம் ஏதும் இல்லாதவளாக உள்ள நிலை, அவள் பெருமானை மிகவும் நெருங்கி விட்டாள் போலும் என்று எனக்குத் தோன்றுகின்றது. மனத் தூய்மை இல்லாமல் இருந்த ஆன்மா படிப்படியாக வளர்ந்து இறைவனை நெருங்கியதை உணர்த்துவதாக இந்த பாடல் அமைந்துள்ளது.   

பொழிப்புரை:
பூதங்கள் தன்னைச் சூழ்ந்து நிற்க, பாடல்கள் பாடியவாறு பலி ஏற்கச் சென்றவனே என்றும், உடல் வலிமை மிகுந்தவனாக விளங்கிய அரக்கன் இராவணனின் வலிமையைக் கெடுத்து அவனது செருக்கினை அழித்தவனே என்றும், எலும்பு மாலை அணிந்தவனே என்றும், குளிர்ந்த ஆவடுதுறை தலத்தில் உறையும் இறைவனே என்றும் அழைத்து வந்து எனது மகள், தான் இறைவனுடன் கொண்டுள்ள நெருக்கத்தினால் நாணம் இழந்தவளாக, இறைவனை நக்கன் என்று அழைக்கின்றாள். நீங்கள் எல்லோரும் இதனைக் காண்பீர்களாக.  

முடிவுரை: 
அகத்துறை பாடல்கள் கொண்ட பதிகமாக இருந்தாலும், படிபடிப்படியாக ஆன்மா, இறைவனுடன் ஒன்று சேரும் தனது நோக்கத்தில் வெற்றி காண்கின்றது என்பதை உணர்த்தும் பதிகமாக உள்ளது. முதல் பாடல் மூலம், நமது ஆன்மா தூய்மையாக இருக்க வேண்டும் என்று உணர்த்தப் படுகின்றது. தூய்மை அடைந்த ஆன்மா, இறைவனுடன் தான் இணைய வேண்டும் என்ற விருப்பத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று இரண்டாவது பாடல் மூலம் உணர்த்தப் படுகின்றது. மூன்றாவது பாடல் மூலம் இறைவனின் நாமங்களை மறுபடியும் மறுபடியும் சொல்லியவாறு இறைவனிடம் நமக்குள்ள பக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், நான்காவது பாடலில், இறைவனுடன் தொடர்பு கொண்டுள்ள பொருள் ஏதேனும் நம்முடன் எப்போதும் இருக்க வேண்டும் என்ற ஆசைப்படும் அளவுக்கு நாம் இறைவன் பால் கொண்டுள்ள காதல் தீவிரமாக இருக்க வேண்டும் என்றும், நமது ஆன்மாவுக்கு இறையுணர்வு ஊட்டி, அப்பர் பிரான் நம்மை வழிப்படுத்துகின்றார். அடுத்த ஆறு பாடல்களில் அப்பர் நாயகியின் காதலின் தீவிரம் உணர்த்தப்படுகின்றது. இதன் மூலம் ஆன்மாவும், இறைவன் மீது கொண்டுள்ள பக்தியில் தீவிரமாக இருக்க வேண்டும் என்பது உணர்த்தப்படுகின்றது.

இறைவனைப் பற்றி பேசுவதில் நாணம் ஏதும் கொள்ளாத அளவுக்கு, இறைவனுடன் நெருக்கமான நிலையை அடைந்துள்ள அப்பர் நாயகியின் நிலையினை உணர்த்துவதன் மூலம், மேலே குறிப்பிட்ட அடுத்தடுத்த நிலைகள் மூலம் ஆன்மாவும் இறைவனுடன் நெருங்கி அவனுடன் ஒன்றி இருந்து, நிலையான பேரானந்தத்தை அடையலாம் என்று அப்பர் பிரான் உணர்த்துகின்றார். அப்பர் பிரானின் வழியில் நாமும் சென்று இறைவனுடன் ஒன்றி இணைந்து, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு, நிலையான பேரானந்தம் அடைவோமாக.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/aug/07/69-நிறைக்க-வாலியள்-அல்லள்-பாடல்---10-2746117.html
2746114 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 69. நிறைக்க வாலியள் அல்லள் பாடல் - 8 என். வெங்கடேஸ்வரன் Friday, October 6, 2017 10:34 AM +0530  

பாடல் 8:
    பிறையும் சூடி நல் பெண்ணோடு ஆணாகிய
    நிறையும் நெஞ்சமும் நீர்மையும் கொண்டவன்
    அறையும் பூம்புனல் ஆவடு தண்டுறை
    இறைவன் என்னை உடையவன் என்னுமே

விளக்கம்:
நிறை=ஒழுக்கம்; கற்பு; நீர்மை=அழகு; முந்தைய பாடலில் இறைவன் மீது கொண்டுள்ள காதல் மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் மகள் என்று கூறிய தாய், அந்த மயக்கம் தந்த செருக்கு தன்னுடைய பெண்ணிடத்தில் ஏற்படுத்திய மாறுதலை இங்கே குறிப்பிடுகின்றாள். இறைவனை என்னை உடையவன் என்று உரிமையோடு அவள் அழிப்பதை நாம் உணரலாம்.  

பொழிப்புரை:
தன்னைச் சரணடைந்த பிறைச் சந்திரனை, காக்கும் பொருட்டுத் தனது தலையில் சூடியவனாகவும், அம்மையப்பனாகவும் உள்ள இறைவன், எனது கற்பினையும், அழகினையும் எனது உள்ளத்தினையும் கொள்ளை கொண்டவனாக உள்ளான். வண்டுகள் ஒலிக்கின்ற குளிர்ந்த சோலைகளை உடைய ஆவடுதுறை தலத்தில் உள்ள இறைவன், தன்னை உடையவன் என்றும் இந்த பெண் கூறுகின்றாள். இறைவனே நீ இவளை ஏற்றுக்கொண்டு, இவள் ஏமாற்றம் அடையாமல் காக்க வேண்டும்.   

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/aug/05/69-நிறைக்க-வாலியள்-அல்லள்-பாடல்---8-2746114.html
2746115 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 69. நிறைக்க வாலியள் அல்லள் பாடல் - 9 என். வெங்கடேஸ்வரன் Friday, October 6, 2017 10:34 AM +0530  

பாடல் 9:
    வையம் தான் அளந்தானும் அயனுமாய்
    மெய்யைக் காணலுற்றார்க்கு அழல் ஆயினான்
    ஐயன் ஆவடு தண்டுறையா எனக்
    கையில் வெள்வளையும் கழல்கின்றதே

விளக்கம்:
மெய்=உண்மையான பரம்பொருள்; தாமே உயர்ந்த பரம்பொருள் என்று பிரமனும் திருமாலும் ஒருவருக்கு ஒருவர் வாதம் செய்தவராக இருந்த போது, நீங்கள் இருவரும் பரம்பொருள் அல்ல, நான் தான் பரம்பொருள் என்பதை உணர்த்தும் வண்ணம் நீண்ட தழலாக பெருமான் வெளிப்பட்டதை உணர்த்தும் வண்ணம், மெய்ப்பொருளை காண முயற்சி செய்தவர் என்று திருமாலையும் பிரமனையும் அப்பர் இங்கே குறிப்பிடுகின்றார்.   

பொழிப்புரை:
மூன்று உலகங்களையும் தனது இரண்டு அடிகளால் அளந்த திருமாலும், பிரமனும் உண்மையான மெய்ப்பொருளினைத் தேடிய போது, அவர்கள் அடியினையும் முடியினையும் காணாத வண்ணம், நீண்ட அழலாக மாறிய இறைவனே, எனது தலைவனே, குளிர்ந்த ஆவடுதுறை தலத்தில் உறையும் இறைவனே என்று எப்போதும் வாய்விட்டு கூவி அழைக்கும் எனது மகளின் உடல், இறைவனுடன் இணையாத ஏக்கத்தில் இளைத்து வருந்துவதால், அவளது கைகளில் இருக்கும் வெண்சங்கு வளையல்கள் கழன்று விழுகின்றன. ஆவடுதுறை இறைவனே, நீ தான் அருள் கூர்ந்து எனது பெண்ணின் காதலை ஏற்று, அவளது உடல் தேறுமாறு செய்ய வேண்டும். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/aug/06/69-நிறைக்க-வாலியள்-அல்லள்-பாடல்---9-2746115.html
2746109 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 69. நிறைக்க வாலியள் அல்லள் பாடல் -  6 என். வெங்கடேஸ்வரன் Friday, October 6, 2017 10:33 AM +0530  

பாடல் 6:
    
    குழலும் கொன்றையும் கூவிள மத்தமும்
    தழலும் தையலோர் பாகமாத் தாங்கினான்
    அழகன் ஆவடு தண்டுறையா எனக்
    கழலும் கைவளை காரிகையாளுக்கே

விளக்கம்:
இறைவனுடன் சேராது ஏக்கத்தில் இருக்கும் தனது மகள், அந்த ஏக்கத்தினால் உடல் மெலிந்து தனது கை வளையல்கள் கழன்று வருந்தும் நிலை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. குழல்=சுருண்ட முடியினை உடைய சடை தையல்=பெண், இங்கே பார்வதி தேவி; 

பொழிப்புரை:
தனது சுருண்ட சடைமுடியில் கொன்றை மலரையும், வில்வ இலைகளையும், ஊமத்தை  மலர்களையும் தாங்கியவனே, உள்ளங்கையினில் தீப்பிழம்பை ஏந்தியவாறு நடனம் ஆடுபவனே, உமை அம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் தாங்கியவனே, ஆவடுதுறை என்று அழைக்கப்படும் குளிர்ந்த தலத்தில் உறையும் அழகனே என்று, எந்நேரத்திலும் இறைவனை குறிப்பிட்டவாறு இருக்கும் எனது மகள், அவனுடன் இணையாத ஏக்கத்தினால் உடல் இளைத்து கைகள் மெலிந்து கை வளையல்கள் கழலும் நிலையில் இருக்கின்றாள். ஆவடுதுறை இறைவனே, நீர் தான் அவளது ஏக்கத்தினை போக்கி, அவள் உடல் நலத்துடன் இருக்குமாறு அருள் புரிய வேண்டும்.   

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/aug/03/69-நிறைக்க-வாலியள்-அல்லள்-பாடல்----6-2746109.html
2746111 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 69. நிறைக்க வாலியள் அல்லள் பாடல் - 7 என். வெங்கடேஸ்வரன் Friday, October 6, 2017 10:33 AM +0530  

பாடல் 7:
    பஞ்சின் மெல்லடிப் பாவையோர் பங்கனைத்
    தஞ்சம் என்று இறுமாந்து இவள் ஆரையும்
    அஞ்சுவாள் அல்லள் ஆவடு தண்டுறை
    மஞ்சனோடு இவள் ஆடிய மையலே

விளக்கம்:
மையல்=மயக்கம், காமத்தினால் ஏற்படும் மயக்கம்; மஞ்சன்=மைந்தன் என்பதன் போலி, வல்லமை உள்ளவன் என்று பொருள். பெருமானை அடைக்கலமாக அடைந்த ஆன்மா, மற்ற சிறு தெய்வங்களை மதிக்காமல் செருக்குடன் நடந்து கொள்ளும் நிலை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. இதன் மூலம். சிவபெருமானைத் தஞ்சம் என்று நாம் அடைந்தால், மற்ற சிறு தெய்வங்களைத் தொழ வேண்டிய அவசியம் இல்லை என்று அப்பர் பிரான் நமக்கு அறிவுரை கூறுகின்றார்.

பொழிப்புரை:
பஞ்சு போன்று மெல்லிய பாதங்களை உடைய பார்வதி தேவியைத் தனது உடலில் ஒரு பாகமாகக் கொண்ட பெருமானைத் தஞ்சம் என்று அடைக்கலம் புகுந்த எனது மகள் வேறு எவரையும் மதிக்காமல் செருக்குடன் நடந்து கொள்கின்றாள். இந்த நிலைக்கு காரணம், இவள் சிவபெருமானுடன் கொண்டுள்ள காதலால், அவனுடன் நெருங்கி பழகுவதாக கற்பனை செய்து கொண்டு, அந்த நினைவுகள் தரும் மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் இவளது நிலையே ஆகும். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/aug/04/69-நிறைக்க-வாலியள்-அல்லள்-பாடல்---7-2746111.html
2746100 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 69. நிறைக்க வாலியள் அல்லள் பாடல் - 4  என். வெங்கடேஸ்வரன் Friday, October 6, 2017 10:32 AM +0530  

பாடல் 4:
    கார்க் கொள் மாமுகில் போல்வதோர் கண்டத்தான்
    வார்க் கொள் மென்முலை சேர்ந்து இறுமாந்து இவள்
    ஆர்க் கொள் கொன்றையன் ஆவடு தண்டுறைத்
    தார்க்கு நின்று இவள் தாழுமா காண்மினே

விளக்கம்:
தார்=மாலை; தாழும்=விரும்பும்; தாழும் என்ற சொல்லுக்கு நிலை தாழ்தல் என்ற பொருள் கொண்டு, ஆன்மா ஆணவ மலத்தால் தான் மயங்கியிருக்கும் நிலையிலிருந்து தாழ்தல் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. காதலனைப் பிரிந்துள்ள நிலையில் தனது  காதலனுடன் தொடர்பு கொண்ட பொருள் ஏதேனும் தனதருகில் இருந்தால், அந்த பொருள் தனது ஏக்கத்தைச் சிறிதேனும் குறைக்கும் என்று தலைவி நினைக்கின்றாள். பெருமானின் உருவத்தைத் தனது மனக் கண்ணினால் காணும் தலைவிக்கு, பெருமான் தேவியுடன் இணைந்து இருக்கும் கோலமும், இருவரது மார்பினையும் தழுவியவாறு இருக்கும் கொன்றை மாலையும் தெரிகின்றது. அந்த கொன்றை மாலைக்கு கிடைத்த பேறு தனக்கு கிடைக்கவில்லையே என்று ஏங்குகின்றாள். அவளது ஏக்கத்தினைப் புலப்படுத்தும் பாடல். இறுமாந்து என்ற வினைச்சொல்லை, பார்வதி தேவியுடன் பொருத்தி. இறைவனுடன் தொடர்பு கொண்ட கொன்றை மாலை தன்னுடனும் தொடர்பு கொண்டு இருப்பதால் உமை அம்மை இறுமாப்புடன் காணப்படுகின்றாள் என்று கூறுவதும் பொருத்தமே. இறைவனுடன் இணையும் எவரும் இறுமாந்து இருப்பது நியாயம் தானே. 

இறுமாந்து இருத்தல் என்றவுடன் நமக்கு அங்கமாலை பதிகத்தின் (4.09) பதிகத்தின் பாடல் நினைவுக்கு வருகின்றது. தாருகவனத்து முனிவர்கள் ஏவிய போர்க்குணம் கொண்ட மான் கன்றின், கோபத்தைத் தணிவித்து, அதனைத் தனது கையில் ஏந்திய சிவபிரானின், பெருமை வாய்ந்த திருவடியைச் சென்றடைந்து, சிவகணத்துள் ஒருவராக, கருதப்படும் நிலையினை அடைந்து, இறுமாப்புடன் இருப்பேன் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். 
    
    இறுமாந்து இருப்பன் கொலோ -- ஈசன்
    பல்கணத்து எண்ணப்பட்டுச்
    சிறுமான் ஏந்தி தன் சேவடிக் கீழ்ச் சென்றங்கு
    இறுமாந்து இருப்பன் கொலோ 


பொழிப்புரை:

நீர்த்திவலைகள் நிறைந்ததால் கரிய நிறத்துடன் காணப்படும் மேகத்தை போன்ற கழுத்தினை உடையவனே என்று இறைவனை அழைக்கும் எனது மகள், கச்சினால் இறுகக் கட்டப்பட்ட மெல்லிய மார்பினை உடையவளாக இருக்கும் பார்வதி தேவியுடன் இறைவன் இணைந்து இருப்பதையும், அந்த நிலையில் அவர்கள் இருவரது மார்பினைத் தழுவி இருக்கும் கொன்றை மாலை அவர்களுடன் தான் கொண்டிருந்த நெருக்கத்தினால் இறுமாந்து இருப்பதையும் காண்கின்றாள். அந்த காட்சி, அவளது தனிமைத் துன்பத்தை மேலும் அதிகரித்து அவளது நெஞ்சினை சுட்டெரிக்கின்றது. குளிர்ந்த ஆவடுதுறை தலத்தில் வீற்றிருக்கும் பெருமான் சூடி இருக்கும் கொன்றை மாலையாவாது தனக்கு கிடைக்காதா என்று ஏக்கத்துடன் அந்த மாலைக்காக காத்து நிற்பதை, எனது மகளின் கோலத்திலிருந்து நீங்கள் உணரலாம். ஆவடுதுறை இறைவனே, அந்த மாலையினை அவளுக்கு அளித்து அவளது ஏக்கத்தைத் தீர்ப்பீராக.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/aug/01/69-நிறைக்க-வாலியள்-அல்லள்-பாடல்---4-2746100.html
2746103 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 69. நிறைக்க வாலியள் அல்லள் பாடல் - 5 என். வெங்கடேஸ்வரன் Friday, October 6, 2017 10:32 AM +0530  

பாடல் 5:
    கருகு கண்டத்தன் காய் கதிர்ச் சோதியன்
    பருகு பால் அமுதே எனும் பண்பினன்
    அருகு சென்றிலள் ஆவடு தண்டுறை
    ஒருவன் என்னை உடைய கோ என்னுமே

விளக்கம்:    
கருகு=கருகிய: கூவிளம்=வில்வம்: அருகு=அருகே; பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் தான் குறிப்பிட்ட தலைவியின் தன்மையினை இந்த பாடலிலும் தாய் குறிப்பிடும் பாடல். காய் கதிர்=எரிக்கின்ற கதிர்களை உடைய சூரியன். பாலும் அமுதமும் பருகும் போது இனிமையாக இருப்பதுடன், அதனை உட்கொள்வார்க்கு வளமையினையும் அளிக்கின்றன. அது போன்று இறைவன், தன்னை அடியார்களுக்கு இனிமையான சிவானந்தப் பேரமுதினை அளிப்பதுடன், அவர்களது ஆன்மா முக்தி நெறி அடைவதற்கு வழிவகுத்து, பிறவிப் பிணியினைத் தீர்த்துக் கொள்வதற்கும் வழி வகுக்கின்றது. எனவே தான் பால், அமுதம் ஆகிய பொருட்கள் இறைவனுக்கு உவமையாக  சொல்லப்படுகின்றன. 
 
பொழிப்புரை:
கரிய நிறத்துக் கழுத்தினை உடையவனே என்றும், எரிக்கின்ற கதிர்களைக் கொண்ட சூரியனைப் போன்ற ஒளியினை உடையவனே என்றும், பருகுவதற்கு இனிய பால் மற்றும் அமுதம் போன்று தன்னை நினைக்கும் அடியார்களுக்கு இனியவனாக இருப்பவனே என்றும் இறைவனது பண்புகளை சொல்லியவாறு இருக்கும் எனது மகள், இந்நாள் வரை அவனது அருகில் சென்றவள் அல்லள். எனினும் அவன் மீது கொண்டுள்ள காதலின் மிகுதியால், ஆவடுதுறை தலத்தில் உறையும் ஒப்பற்ற இறைவன் தான், தன்னுடைய தலைவன், அதாவது தன்னைக் மனைவியாக அடையப் போகும் தலைவன் என்று கூறுகின்றாள்.  

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/aug/02/69-நிறைக்க-வாலியள்-அல்லள்-பாடல்---5-2746103.html
2746099 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 69. நிறைக்க வாலியள் அல்லள் பாடல் - 3 என். வெங்கடேஸ்வரன் Friday, October 6, 2017 10:31 AM +0530

பாடல் 3:    
    பாதி பெண் ஒரு பாகத்தன் பன்மறை
    ஓதி என் உளம் கொண்டவன் ஒண்பொருள்
    ஆதி ஆவடு தண்டுறை மேவிய
    சோதியே சுடரே என்று சொல்லுமே

விளக்கம்:
பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் தனது மகள் தேவையான பக்குவம் அடையாத நிலையில் இருப்பதையும், இறைவனின் முழுமையான அன்பின் ஆழத்தையும் உணராமல் இருப்பதாக குறிப்பிடும் தலைவியின் தாய், பதிகத்தின் எஞ்சியுள்ள பாடல்களில் தனது மகளின் செய்கைகளை உணர்த்துகின்றாள். ஒண்பொருள்=மேம்பட்ட பொருள்; தனது மகள் ஓயாமல் இறைவனின் திருநாமங்களைச் சொல்வதை உணர்த்தி அதன் மூலம் அவள் இறைவன் பால் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பினை தெரிவிக்கும் தாய், இறைவன் தனது மகளுக்கு அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகோளினை சொல்லாமலே உணர்த்தும் நயமான பாடல். 

பொழிப்புரை:
பெண்ணினைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டவனே என்றும், பல மறைகளை ஓதி எனது உள்ளம் கொள்ளை கொண்டவன் என்றும், மேம்பட்ட பொருளே என்றும், அனைத்துப் பொருட்களுக்கும் அனைத்து உயிர்களுக்கு ஆதியே என்றும், குளிர்ந்த ஆவடுதுறை தலத்தில் உறையும் சோதியே என்றும் ஒப்பற்ற சுடரே என்றும் இறைவனின் திருநாமங்களை இடைவிடாது சொல்பவளாக எனது மகள் இருக்கின்றாள். ஆவடுதுறை இறைவனே, அவளின் இந்த செய்கை அவள் உன்பால் கொண்டுள்ள தீவிர அன்பினை வெளிப்படுத்துகின்றது. எனவே இறைவா நீ அவளை ஆட்கொண்டு அருள வேண்டும்.  

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/jul/31/69-நிறைக்க-வாலியள்-அல்லள்-பாடல்---3-2746099.html
2746088 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 69. நிறைக்க வாலியள் அல்லள் பாடல் - 2 என். வெங்கடேஸ்வரன் Friday, October 6, 2017 10:30 AM +0530

பாடல் 2:
    தவள மாமதிச் சாயலோர் சந்திரன்
    பிளவு சூடிய பிஞ்ஞகன் எம் இறை
    அளவு கண்டிலள் ஆவடு தண்டுறை
    களவு கண்டனள் ஒத்தனள் கன்னியே

விளக்கம்:

தவளம்=வெண்மை: களவு=களவியல் ஒழுக்கம்; சங்க நூல்கள், காதலை களவியல் கற்பியல் என்று இரண்டு பிரிவுகளாக பிரிக்கின்றன. தலைவனும் தலைவியும் ஏனையோர் அறியாதவாறு சந்தித்துக் கொள்ளுதல் களவியல் ஒழுக்கமாக கருதப்படுகின்றது. அவ்வாறு சந்தித்த இனிமையான நிகழ்வுகளை மனதினில் நினைத்து மகிழும் தலைவியின் நிலை இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. எவரும் அறியாதவாறு சந்தித்தனர் என்பதால், அந்த இன்ப நினைவுகளை, தனக்கு நெருக்கமான தோழிகளிடம் கூட பகிர முடியாமல், தனக்குத் தானே அந்த நினைவுகளை அசை போட்டவாறு நினைத்து ரசிக்கும் இன்பம், அந்த இன்பத்தினால் முகத்தில் மலரும் உணர்ச்சிகள் போன்ற மாற்றங்களை கவனித்த தலைவியின் தாய் கூறும் முகமாக அமைந்த பாடல். சென்ற பாடலில், தனது தலைவனாகிய இறைவனுடன்  சேருவதற்கான பக்குவத்தை அடையாத பெண் என்று குறிப்பிட்ட தாய், இந்த பாடலிலும் இறைவனின் முழு அன்பின் அளவினைக் காணாத மகள் என்று கூறுகின்றாள். தனது மனம் கவர்ந்த தலைவனாகிய இறைவனுடன் இணையா விட்டாலும், அவனுடன் இணைந்தது போன்று இனிய கற்பனைகளை மனதினில் வளர்த்துக் கொண்டு அந்த கற்பனைகளை அசை போட்டபடி முக மலர்ச்சியுடன் இருந்த நிலையினை, அப்பர் நாயகியின் தாய் குறிப்பிடுகின்றாள். 

இறைவனின் பூரணமான அன்புக்கு பாத்திரமாகும் அளவுக்குத் தான் தூய்மையானவன் அல்லன் என்ற உணர்ச்சி (முதல் பாடலில் வெளிப்படுத்திய கருத்து), தனது அடி மனதினில் இருந்த போதிலும், இறைவனுடன் சேர வேண்டும் என்ற ஆர்வத்தின் மிகுதியால், தனது ஆன்மா இறைவனுடன் சேரும் நிலையை கற்பனை செய்வதாக அப்பர் பிரான் இந்த பாடல் மூலம் உணர்த்துகின்றார்.     

பொழிப்புரை:
வெண்மை நிறத்துடன் காணப்படும் சந்திரனின் ஒரு பகுதியான பிளவு பட்ட பிறையைத் தனது சடையில் சூடிய பெருமானை, பிஞ்ஞகத் தலைக் கோலம் அணிந்த பெருமானின் அன்பின் ஆழத்தை அறியும் பக்குவம் அற்றவள் எனது பெண். இருந்தாலும் பெருமான் மீது தான் வைத்துள்ள அளவு கடந்த அன்பின் காரணத்தினால், பெருமானுடன் இணைந்து இருந்ததாக கற்பனை செய்து முகம் மலர்ந்து மகிழ்கின்றாள். களவியலில் ஈடுபட்டு அந்த நினைவுகளால் மகிழும் தலைவியின் மகிழ்ச்சிக்கு காரணாம் எவரும் அறியார். அது போன்று எனது மகளும் மகிழ்ந்து இருப்பதன் காரணத்தை எவரும் அறிய இயலாது என்பதால் அவள் முகம் மலர்ந்து மகிழ்ந்து இருக்கும் நிலை களவியலில் ஈடுபட்டுள்ள தலைவியின் நிலை ஒத்து காணப்படுகின்றது.   

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/jul/30/69-நிறைக்க-வாலியள்-அல்லள்-பாடல்---2-2746088.html
2746086 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 69. நிறைக்க வாலியள் அல்லள்  பாடல் - 1 என். வெங்கடேஸ்வரன் Friday, October 6, 2017 10:29 AM +0530

முன்னுரை:

தலைவனாகிய சிவபெருமானை நினைத்து நினைத்து, அவன் மீது தீராத காதல் கொண்டு தன்வசமிழந்து பிதற்றும் தலைவியின் நிலையினைக் காணும் அவளது தாயின் கூற்றாக, அகத்துறை வகையில் அமைந்த பதிகம். தேவாரத்திலும் மற்ற திருமுறைகளிலும் அமைந்துள்ள அகத்துறை பாடல்கள், தலைவியின் கூற்றாகவும்,  தோழியின் கூற்றாகவும், தாயின் கூற்றாகவும், தூது விடும் பாடல்களாகவும், பாடல் ஆசிரியரின் கூற்றாகவும், பல விதங்களில் சுவையாக அமைந்துள்ளன. ஒரு பதிகத்தின் அனைத்துப் பாடல்களும் (பதிகத்தால் நாம் அடையவிருக்கும் பலன்களை விளக்கும் கடைக் காப்புப் பாடல்களைத் தவிர) அகத்துறை பாடல்களாக அமைந்துள்ள பதிகங்களின் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

பதிக        தொடக்கச்            தலம்

எண்
        சொற்கள்

1.60    வண்தரங்கப் புனல்        தோணிபுரம்
1.63    எரியார் மழுவொன்று        பிரமபுரம்
1.73    வானார் சோதி மன்னு    கானூர்
1.76    மலையினார் பருப்பதம்    இலம்பயங்கோட்டூர்
2.18    சடையாய் எனுமால்        மருகல்
2.33    ஏடுமலி கொன்றை        நள்ளாறு
3.65    வாரணவு முலைமங்கை    கச்சி நெறிக்காரைக்காடு
3.104    விண்கொண்ட தூமதி        பரிதி நியமம்
4.06    வனபவள வாய் திறந்து    கழிப்பாலை
4.12    சொன்மாலை பயில்கின்ற    பழனம்
4.97    அட்டுமின் இல்பலி        நல்லூர்
5.29    நிறைக்க வாலியள்        ஆவடுதுறை
5.40    வண்ணமும் வடிவும்        கழிப்பாலை
5.45    மாது இயன்று மனைக்கு    தோணிபுரம்
5.53    கோணல் மாமதி        அதிகை வீரட்டம்
6.09    வண்ணங்கள் தாம் பாடி    ஆமாத்தூர்    
6.13    கொடிமாட நீள் தெருவு    புறம்பயம்
7.37    குருகு பாய கொழும்        திருவாரூர்
8.17    அன்னை பத்து            தில்லை

மேற்குறிப்பிட்ட பதிகங்கள் அன்றி திருவிசைப்பாவில் ஏழு பாடல்கள் அகத்துறை வகையில் அமைந்துள்ளன. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பதிகங்களில், தாயின் கூற்றாக அமைந்த பதிகங்கள், நிறைக்க வாலியள் என்று தொடங்கும் (529) இந்த பதிகமும், வண்ணமும் வடிவும் என்று  (5.40) தொடங்கும் கழிப்பாலைப் பதிகமும், பொய்யாத வேதியர் என்று தொடங்கும் திருவிசைப்பா பதிகமும், மாலுலா மனமும் என்று தொடங்கும் திருவிசைப்பா பதிகமும், ஆகும். 
 
பாடல் 1:
    
    நிறைக்க வாலியள் அல்லள் இந்நேரிழை
    மறைக்க வாலியள் அல்லள் இம்மாதராள்
    பிறைக் கவாலப் பெரும் புனல் ஆவடு 
    துறைக் கவாலியோடு ஆடிய சுண்ணமே

விளக்கம்:
கவால=கபால என்பதன் விகாரம்: கபாலி என்ற சொல் கவாலி என்று திரிந்தது. நிறைக்க= உடலெங்கும் நிறைவிக்க; வாலியள்=வல்லவள், தகுதி படைத்தவள்; நேரிழை=அழகிய ஆபரணங்களை அணிந்த பெண்; இங்கே அப்பர் நாயகியை குறிக்கின்றது; சுண்ணம்= திருநீற்றுப் பூச்சு; பாடலின் முதல் இரண்டு அடிகளை, கடை இரண்டு அடிகளின் பின்னர் வைத்து பொருள் கொள்ள வேண்டும். 

அகத்துறைப் பாடல்களாக இருந்தாலும், இறைவனைத் தலைவனாக உருவகித்து, இறைவன் மீது காதல் கொண்ட தலைவியின் நிலையின் தன்னை உருவகம் செய்து, தனது உணர்ச்சிகளைக் கூறுதல் அருளாளர்களின் வழக்கம். இறைவனைச் சென்று அடைதலே ஆன்மாவின் நோக்கமாக இருப்பதால், ஆன்மாவினை பெண்ணாக பாவித்து, ஆன்மா இறைவனை அடைய முயற்சி செய்வதை, ஆன்மா இறைவன் மீது கொண்ட காதலாக சித்தரிப்பது பக்தி இலக்கியங்களில் காணப்படும் அன்பின் வெளிப்பாடு.

காதல் கைகூட வேண்டும் என்றால் காதலனின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப் படவேண்டும் அதாவது இறைவனைச் சென்று சேருவதற்கு வேண்டிய தகுதிகளை ஆன்மா அடைய வேண்டும் அல்லவா. மனத் தூய்மை தான் அடிப்படையான தகுதி. அந்த மனத் தூய்மை தனக்கு இல்லாததாக அப்பர் பிரான் இந்த பாடலில், தாயின் கூற்றாக உரைக்கின்றார். தனது தகுதியைத் தாழ்த்திக் கொண்டு தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முகமாக நமது குறைகளைச் சுட்டிக் காட்டுவது அப்பர் பிரானின் வழக்கம். இறைவனுடன் சேர்வதற்கு தகுந்த பக்குவத்தினை அடையாமல் இறைவனுடன் சேர முயற்சி செய்யும் தனது மகளின் விருப்பத்தைக் கண்டு வருந்தும் தாயின் மன உணர்ச்சிகளை வெளியிடும் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த பாடல் மூலம் அப்பர் பிரான் நமக்கு, இறைவனைச் சென்று அடைய வேண்டும் என்று விரும்பினால் முதலில், நமது மனதினை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று உணர்த்துகின்றார். 

நமது மனதினைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை நால்வர் பெருமானர்கள் பல பாடல்களில் உணர்த்தியுள்ளார்கள். வலிவலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.50.1), பரபரக்கும் மனத்தினை அடக்கி, ஒன்றிய நினைவுகளுடன், வஞ்சத்தைத் தவிர்த்து, கடுமையான சொற்களைத் தவிர்த்து, காமம் குரோதம் மோகம் உலோபம் மதம் மாற்சரியம் ஆகிய அறுவகைக் குற்றங்களைக் களைந்து, தூய்மையான மனத்துடன் இறைவனின் திருநாமத்தை ஓதி தான் வழிபடுவதாக சம்பந்தர் கூறுகின்றார். வல்லவாறு=தகுதிக்கு ஏற்றவாறு;
    
    ஒல்லையாறி உள்ளம் ஒன்றி கள்ளம் ஒழிந்து வெய்ய
    சொல்லையாறித் தூய்மை செய்து காம வினை அகற்றி
    நல்லவாறே உன்றன் நாமம் நாவில் நவின்றேத்த   
    வல்லவாறே வந்து நல்காய் வலிவலம் மேயவனே   

இந்த பதிகத்தின் பாடலில், அப்பர் நாயகியின் அன்னை, தனது மகள் தூய்மை அற்றவள் என்று குறிப்பிட்டு, அவளின் நெஞ்சத்தை தூய்மை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இறைவனிடம் விடுவதை நாம் உணர்கின்றோம். தில்லைக் கூத்தனின் திருநடனத்தைக் காணச் சென்ற அப்பர் பிரான், இறைவன் தனது நெஞ்சத்தினை தூய்மை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதை நாம் கீழ்க்கண்ட பாடலில் (1.23.9) காணலாம். தனது உள்ளம் எப்போதும் இறைவனைப் பற்றிய சிந்தனையுடன், இருக்குமாறு இறைவன் அருள் புரிய வேண்டும் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் வேண்டுகின்றார். அவ்வாறு இல்லாத நிலையினைத் தூய்மை அற்ற நெஞ்சம் என்று அப்பர் பிரான் கருதுவதை நாம் இந்த பாடலிலிருந்து உணரலாம். இந்த நிலைக்கு இறைவன் செய்த வஞ்சனை தான் காரணம் என்றும் இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். அழகிய சொற்களை உடைய உமையம்மை பெருமானின் நடனத்தைக் காண்பதாக இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார்.

நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா
                                                            நினைப்பியாதே
வஞ்சமே செய்தியாலோ வானவர் தலைவனே நீ
மஞ்சடை சோலைத் திங்கள் மல்கு சிற்றம்பலத்தே
அஞ்சொலாள் காண நின்று அழக நீ ஆடுமாறே

நமது மனதினில் உறையும் ஆன்மாவை இறைவனாக பாவித்து அகப்பூசை செய்யும் போது கூட, மலங்கள் நீங்கப் பெற்ற தூயமையான மனத்துடன் இருக்க வேண்டும் என்று அப்பர் பிரான் கூறும் பாடல் (4.76.4) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பாடலின் பொழிப்புரையும் இங்கே கூறப்பட்டுள்ளது. எனது உடலினை கோயிலாக பாவித்து, உலகப் பொருட்களின் மீது வைத்துள்ள பாசங்களை கடிந்து, அந்த பாசங்கள் நீக்கப்பட்ட மனதினை சிவபிரானுக்கு அடிமையாக மாற்றி, மலங்கள் நீக்கப் பெற்ற தூய்மையான மனத்துடன், எனது மனதின் மணியாக விளங்கும் ஆன்மாவையே இலிங்கமாக பாவித்து, எனது அன்பினையே நீராகவும் பாலாகவும் நினைத்து அந்த நீரினால் இறைவனை நன்றாக நீராட்டி, எனது வணக்கங்களை இறைவனுக்கு அளிக்கும் நிவேதனப் பொருளாக படைத்து, இறைவனுக்கு நான் பூசை செய்தேன்
    
    காயமே கோயிலாக கடிமனம் அடிமையாக
    வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக
    நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டிப்
    பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே  

பொழிப்புரை:
பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடியவனாக, கபாலத்தைத் தனது கையினில் ஏந்தியவனாக காட்சி அளிக்கும் ஆவடுதுறை இறைவனுடன் கலந்து, அவன் தனது உடலில் பூசிக்கொண்டுள்ள திருநீறு தனது உடல் முழுவதும் படர வேண்டும் என்று எனது மகள் விருப்பம் கொள்கின்றாள், ஆனால் அவ்வாறு இறைவனுடன் சேர்ந்து ஒன்றி இருப்பதற்கான தகுதியை, மனத் தூய்மையை அடையவில்லை என்பதை, அழகிய ஆபரணங்களை அணிந்துள்ள எனது பெண் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் தனது காதல் கைகூடாததால் ஏற்பட்ட வருத்தத்தையும் மறைத்துக் கொள்ளும் திறமை அற்றவளாகவும் இருப்பதால், என்னால் அவளது நிலையை புரிந்து கொள்ள முடிகின்றது. ஆவடுதுறை இறைவனே, நீ தான் எனது மகளினை தூய்மைப் படுத்தி, நீ ஏற்றுகொள்வதற்கு தகுதி உள்ளவளாக அவளை மாற்றி, அவளை ஏற்றுக் கொண்டு, அவளது காதல் நிறைவேருமாறு அருள் புரிய வேண்டும்.    

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/jul/29/69-நிறைக்க-வாலியள்-அல்லள்--பாடல்---1-2746086.html
2782030 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 75. கோவாய் முடுகி அடுதிறல் - பாடல் 8 என். வெங்கடேஸ்வரன் DIN Friday, October 6, 2017 12:00 AM +0530  

பாடல் 8

இகழ்ந்தவன் வேள்வி அழித்திட்டு இமையோர் பொறை
                                                                                                    இரப்ப
நிகழ்ந்திட அன்றே விசயமும் கொண்டது நீலகண்டா
புகழ்ந்த அடியேன் தன் புன்மைகள் தீரப் புரிந்து நல்காய் 
திகழ்ந்த திருச்சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே

விளக்கம்:

இகழ்ந்தவன்=தக்கன். பொறை இரத்தல்=பிழை பொறுக்குமாறு வேண்டுதல். முந்தைய பாடலில் சிவபிரானை மறந்தவர்களின் நிலையினை விளக்கிய அப்பர் பிரானுக்கு, சிவபிரானை இகழ்ந்த தக்கன் நினைவுக்கு வந்தான் போலும். சிவபிரானை இகழ்ந்து, அவரைத் தவிர்த்து மற்றைய தேவர்களை அழைத்துத் தவறாக யாகம் புரிந்தமையால் தக்கனது யாகம் அழிக்கப்பட்டது. யாகத்தில் பங்கெடுத்துக் கொண்ட பல தேவர்கள் தண்டனை பெற்றாலும் அவர்கள் மன்னிக்கப்பட்டு உயிருடன் இருந்தார்கள். தலை வெட்டப்பட்ட தக்கனும், ஆட்டுத் தலை பொருத்தப்பட்ட பின்னர் தனது தவற்றினை உணர்ந்து சிவபிரானை வேண்டினான். மற்றைய தேவர்கள் எல்லாம் தண்டனை பெற்றபோது, திருமாலும் நான்முகனும் இறைவனிடம் எங்களது குற்றத்தைப் பொறுத்து அருளவேண்டும் என்று இறைவனிடம் வேண்டியதால், அவர்கள் தப்பினார்கள் என்று அப்பர் பெருமான் தனது தசபுராணத் திருப்பதிகத்தில் (4.14.7) கூறுகின்றார். க்ஷமி என்ற வடமொழிச் சொல் கமி என்று மாற்றப்பட்டுள்ளது. க்ஷமி=மன்னிக்க வேண்டுதல்.
 
உயர்தவம் மிக்க தக்கன் உயர் வேள்வி தன்னில்
          அவி உண்ண வந்த இமையோர்
பயமுறும் எச்சன் அங்கி மதியோனும் உற்ற
         படி கண்டு நின்று பயமாய்
அயனொடு மாலும் எங்கள் அறியாமை
         ஆதி கமி என்று இறைஞ்சி அகலச் 
சயமுறு தன்மை கண்ட தழல்வண்ணன் எந்தை
         கழல் கண்டுகொள்கை கடனே

பெண்ணாகடத்தில், சிவபெருமான் அனுப்பிய பூதகணம் அப்பர் பிரானின் உடலில் இடபக் குறியினையும், மூவிலை சூலக்குறியினையும் இட்டு அப்பர் பிரானின் உடல் புனிதமானது என்று அனைவருக்கும் உணர்த்தினாலும், சிவபிரானின் திருவடி தீண்டப் பெற்றாலன்றி, தனது உடலின் குறைபாடு நீங்காது என்று அப்பர் பிரான் நினைத்தார் போலும். அதனால் தான், எனது உடல் குறைபாடுகள் நீங்க அருள் செய்வாய், என்று இந்தப் பதிகத்திலும் வேண்டுகின்றார்.

பொழிப்புரை:

சிறப்புடன் திகழும் சத்திமுற்றத்து தலத்தில் உறையும் சிவக்கொழுந்தே, உன்னை அந்நாளில் இகழ்ந்து, உன்னை அலட்சியம் செய்து வேள்வி செய்ய முற்பட்ட தக்கனது வேள்வி நிறைவேறாமல் அழித்த பின்னர், தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர்கள் செய்த தவற்றினை (சிவபிரானை ஒதுக்கிச் செய்யப்படும் வேள்வியில் பங்கேற்றமை) மன்னித்து வெற்றி கொண்டவனே, உன்னைப் புகழ்ந்து பாடும் அடியேனுடைய குறைபாடுகள் நீங்க அருள் புரிவாயாக. 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/oct/06/75-கோவாய்-முடுகி-அடுதிறல்---பாடல்-8-2782030.html
2782028 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 75. கோவாய் முடுகி அடுதிறல் - பாடல் 7 என். வெங்கடேஸ்வரன் DIN Thursday, October 5, 2017 12:00 AM +0530  

பாடல் 7

விட்டார் புரங்கள் ஒரு நொடி வேவ ஓர் வெங்கணையால்
சுட்டாய் என் பாசத் தொடர்பு அறுத்து ஆண்டு கொள் தும்பி
                                                                                                           பம்பும்
மட்டார் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்து அருளும்
சிட்டா திருச்சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே  
 

விளக்கம்:

சிட்டன்=சிறந்தவன்; ச்ரேஷ்டன் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். மட்டார்=தேன் பொருந்திய; விட்டார்=சிவநெறியை கைவிட்டவர்கள்.

விஷ்ணு புராணத்தில் கூறப்படும் தகவல்களின் படி, சிவபிரானை வழிபட்டு வந்த திரிபுரத்து அரக்கர்களின் மனத்தினை, பேதலிக்கச் செய்தவர் திருமால். திருமால் நாரதருடன் ஒரு அந்தணனாக அங்கே சென்று அவர்களுக்கு நாத்திகக் கொள்கைகளை போதிக்கவே மனம் மாறிய அரக்கர்கள் தாங்கள் அந்நாள் வரை செய்து வந்த சிவவழிப்பாட்டினை நிறுத்தியதும் அல்லாமல், சிவபிரானை நிந்தனை செய்யவும் தொடங்கினார்கள். இதனால் கோபம் கொண்ட சிவபிரான் திரிபுரத்து அரக்கர்களுடன் போர் செய்ய முடிவு செய்தார். இந்த தகவல், நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரத்திலும் (5.10.4)  கொடுக்கப்பட்டுள்ளது.

கள்ள வேடத்தைக் கொண்டு போய் புரம் புக்கவாரும்
                                                                       கலந்து அசுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிர் உண்ட உபாயங்களும்
வெள்ளநீர் சடையானும் நின்னுடை வேறு அலாமை
                                                                       விளங்க நின்றதும்
உள்ளம் உள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே
 

இதே செய்தி அப்பர் பிரான் அருளிய நீலக்குடி பதிகத்திலும் (5.72.5) கூறப்பட்டுள்ளது. எனவே திரிபுரத்து அரக்கர்களை, சிவநெறியை கைவிட்டவர் என்றும் சிவபிரானை எண்ணாதவர் என்று பல இடங்களிலும் திருமுறைப் பதிகங்களில் குறிப்பிடுகின்றன. 

    நேச நீலக்குடி அரனே எனா
    நீசராய் நெடுமால் செய்த மாயத்தால்
    ஈசன் ஓர் சரம் எய்ய எரிந்து போய்
    நாசமானார் திரிபுர நாதரே

வெங்கணை=சுடுகின்ற அம்பு. சுடுகின்ற அம்பு என்று சொல்லப்படுவதன் காரணம், அக்னி தேவன் அம்பின் கூரிய முனையாக பங்கேற்க, திருமால் அம்பின் தண்டாகவும் வாயுத்தேவன் அம்பின் இறகாகவும் பங்கேற்றனர். இந்த செய்தி பல தேவாரப் பாடல்களில் சொல்லப் பட்டுள்ளது. அத்தகைய பாடல்களில் ஒன்றாகிய ஞானசம்பந்தப் பெருமானின் பாடல் (முதல் திருமுறை, பதிக எண் 11 பாடல் 6)  இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

கல்லால் நிழல் கீழாய் இடர் காவாய் என வானோர்
எல்லாம் ஒரு தேராய் அயன் மறை பூட்டி நின்று உய்ப்ப
வல்வாய் எரி காற்று ஈர்க்கு அரி கோல் வாசுகி நாண் கல்
வில்லால் எய்தான் இடம் வீழிம்மிழலையே

எல்லாம் ஒரு தேராய் என்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லாம் என்ற சொல், சிவபிரான் திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்குச் சென்ற சமயத்தில் அவருக்கு உதவியாக வந்த தேவர்களையும் மற்றவர்களையும் குறிக்கின்றது. நான்கு வேதங்கள் தேரினை இழுக்கும் குதிரைகளாகவும், பிரமன் தேர்ப்பாகனாகவும், சூரிய சந்திரர்கள் தேரின் சக்கரங்களாகவும், பூமி தேர்த்தட்டாகவும், ஆகாயம் தேரின் மேற்பகுதியாகவும், இருந்த செய்தி இங்கே உணர்த்தப்பட்டுள்ளது. உமையம்மை இந்த தலத்தில் சிவபிரானை வழிபட்ட வரலாறு இங்கே கூறப்படுகின்றது. 

பொழிப்புரை:

தேன் நிறைந்து இருப்பதால் வண்டுகள் மொய்ப்பதும், நறுமணம் உடையதுமாகிய மலர்களைத் தனது கூந்தலில் அணிந்துள்ள உமையம்மை செய்த வழிபாட்டால் மகிழ்ந்து இருப்பவரும், அனைவரிலும் சிறந்தவராகியவரும், சத்திமுற்றம் எனும் தலத்தில் வசிப்பவரும் ஆகிய சிவக்கொழுந்தே, சிவநெறியை கைவிட்ட திரிபுரத்து அரக்கர்களின் மூன்று நகரங்களையும் சுடுகின்ற அம்பினால் ஒரு நொடியில் சுட்டெரித்தவரே, நீ எனது பாசத் தொடர்புகளை அறுத்து ஆட்கொள்ள வேண்டும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/oct/05/75-கோவாய்-முடுகி-அடுதிறல்---பாடல்-7-2782028.html
2782025 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 75. கோவாய் முடுகி அடுதிறல் - பாடல் 6 என். வெங்கடேஸ்வரன் DIN Wednesday, October 4, 2017 12:00 AM +0530  

பாடல் 6

வெம்மை நமன்தமர் மிக்கு விரவி விழுப்பதன் முன்
இம்மை உன் தாள் என் தன் நெஞ்சத்து எழுதி வை ஈங்கு
                                                                                                    இகழில்
அம்மை அடியேற்கு அருளுதி என்பது இங்கு யாரறிவார்
செம்மை தரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே

விளக்கம்:

விழுப்பதன் முன்=வீழ்த்துவதன் முன்னர்; இகழில்=அலட்சியம் செய்தல்; செம்மை=வீடுபேறு. விரவுதல்=சேர்ந்து இருத்தல், நிறைந்து இருத்தல்.

பொழிப்புரை:

தீயினைப் போன்று கொடிய இயமனின் தூதுவர்கள் ஒன்று சேர்ந்து என்னை வீழ்த்தி பல கொடுமைகளுக்கு ஆளாக்கும் முன்னர், இந்தப் பிறவியிலேயே உனது திருப்பாதங்களை எனது தலை மீது பதிப்பதன் மூலம், உனது பாதங்களின் நினைவினை உறுதியாக எனது  நெஞ்சினில் எழுதி வைப்பாயாக. சத்திமுற்றத்தில் உறையும் வீடுபேறு அருளவல்ல சிவபிரானே, நீ எனக்கு அடுத்த பிறவியில் புரியும் அருட்செயல்கள், இங்குள்ளவர் அறிய முடியாது. எனவே நீ எனது வேண்டுகோளை அலட்சியம் செய்யாது இப்போதே அருள் புரியவேண்டும். .

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/oct/04/75-கோவாய்-முடுகி-அடுதிறல்---பாடல்-6-2782025.html
2782024 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 75. கோவாய் முடுகி அடுதிறல் - பாடல் 5 என். வெங்கடேஸ்வரன் DIN Tuesday, October 3, 2017 12:00 AM +0530  

பாடல் 5:

கரு உற்று இருந்து உன் கழலே நினைந்தேன் கருப்புவியில்
தெருவில் புகுந்தேன் திகைத்த அடியேனைத் திகைப்பு
                                                                                                              ஒழிவி
உருவில் திகழும் உமையாள் கணவா விடில் கெடுவேன்
திருவில் பொலி சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே

விளக்கம்:

தெரு=வெளி உலகம். தான் தனது தாயின் கருவில் இருந்தபோது சிவபிரானை நினைத்து வழிபட்டதாக அப்பர் பிரான் இங்கே கூறுவது நமக்கு பாகவதத்தில் குறிப்பிடப்படும் பிரகலாதனின் சரித்திரத்தை நினைவூட்டும். நாரத முனிவர் தனது அன்னைக்குச் சொல்லிய நாராயண மந்திரத்தை செவியுற்ற கருவில் இருந்த குழந்தை பின்னாளில் திருமாலின் சிறந்த அடியாராகத் திகழ்ந்தது போல் அப்பர் பிரானும் சிவபிரானின் சிறந்த அடியாராகத் திகழ்ந்தார். கருவில் இருந்து வெளியே வந்த பின்னர் உலகியல் பொருட்களின் மயக்கத்தில் ஆழ்ந்து நிலையற்ற உலகப் பொருட்களை (சமண சமயம் உட்பட) பற்றிக் கொண்டதாக ஒப்புக்கொண்டு வருத்தப்படும் அப்பர் பிரான், தனது திகைப்பினை, மயக்கத்தை ஒழிக்க வல்லவர் சிவபிரான் ஒருவரே என்று தெளிந்த சிந்தனையுடன் இருப்பதை நாம் இங்கே காணலாம்.

தான் தனது தாயின் கருவில் இருந்தபோது இறைவனின் நினைவுடன் இருந்ததற்கு, இறைவன் தன்னை அப்போது ஆண்டுகொண்டது தான் காரணம் என்று அப்பர் பிரான் இன்னம்பர் திருத்தாண்டகத்தில் கூறுகின்றார் (ஆறாம் திருமுறை பதிக எண் 89 பாடல் 9). செரு=போர். அட்டுதல்=அழித்தல்.

கருவுற்ற காலத்தே என்னை ஆண்டு
          கழல் போது தந்தளித்த கள்வர் போலும்
செருவில் புரம் மூன்றும் அட்டார் போலும்
          தேவர்க்கும் தேவராம் செல்வர் போலும்
மருவிப் பிரியாத மைந்தர் போலும்
           மலரடிகள் நாடி வணங்கலுற்ற
இருவர்க்கு ஒருவராய் நின்றார் போலும்
          இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே   

பொழிப்புரை:

செல்வம் கொழிக்கும் சத்திமுற்றத்து தலத்தில் உறையும் சிவக்கொழுந்தே, அழகின் உருவாக விளங்கும் உமையம்மையின் கணவரே, தாயின் கருவில் இருந்த காலத்து, உலகப் பொருட்களுடன் தொடர்பு ஏதும் இல்லாததால் உனது நினைவுடன் இருந்த நான், இந்த உலகில் பிறந்தவுடன், உலகப் பொருட்களில் மயங்கி திகைத்து நிற்கின்றேன். உலகப் பற்றில் சிக்குண்டு நான் கெட்டுவிடாமல் நீ எனது திகைப்பினை நீக்கி சிந்தையை தெளிவிக்கவேண்டும். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/19/w600X390/16585.jpg http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2017/oct/03/75-கோவாய்-முடுகி-அடுதிறல்---பாடல்-5-2782024.html