Dinamani - நாள்தோறும் நம்மாழ்வார் - http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2827641 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 7, 8 சொ. மணியன் Sunday, December 17, 2017 12:00 AM +0530  

பாடல் - 7

உலகில் திரியும் கரும கதியாய், உலகமாய்,
உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய், புற அண்டத்து
அலகுஇல் பொலிந்த திசை பத்து ஆய அருவேயோ,
அலகுஇல் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே.

எம்பெருமானே, நீ இந்த உலகிலே செய்யப்படுகிற கர்மங்கள் எனப்படும் சாதனங்களாக இருக்கிறாய், அவற்றைச் செய்கிற உலகத்தவராகவும் இருக்கிறாய், அவர்களுடைய உயிராகவும் இருக்கிறாய், அண்டத்துக்கு வெளியே பத்துத் திசைகளிலும் கணக்கற்றுத் திகழும் முக்தர்களுக்கும் நீயே ஆன்மாவாகத் திகழ்கிறாய், இப்படிப்பட்ட நீ, அளவற்ற அறியாமையைக்கொண்ட எனக்கும் அருள்செய்யவேண்டும்.

***

பாடல் - 8

அறிவிலேனுக்கு அருளாய், அறிவார் உயிர்ஆனாய்,
வெறிகொள் சோதி மூர்த்தி, அடியேன் நெடுமாலே,
கிறிசெய்து என்னைப் புறத்துஇட்டு இன்னம்
                                                                               கெடுப்பாயோ,
பிறிது ஒன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே.

அறிவுள்ளவர்களுக்கு உயிராகத் திகழ்பவனே, வாசனை நிறைந்த, ஒளிவடிவமான மூர்த்தியே, என்னுடைய நெடுமாலே, அறிவில்லாத எனக்கு அருள்செய்வாய், உன்னைத்தவிர வேறு ஏதும் அறியாதவன் நான், என்னுடைய உயிர் திகைக்கும்படி நீ வேறு உபாயங்களைச் செய்யலாமா? என்னை உன்னிலிருந்து தள்ளிவைத்து இன்னும் கெடுக்கலாமா? (இவ்வாறு துன்புறுத்தாமல் எனக்கு அருள்செய்ய வேண்டுகிறேன்.)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/dec/17/ஆறாம்-பத்து-ஒன்பதாம்-திருவாய்மொழி---பாடல்-7-8-2827641.html
2827615 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 5, 6 சொ. மணியன் Saturday, December 16, 2017 10:54 AM +0530  

பாடல் - 5

விண்மீது இருப்பாய், மலைமேல் நிற்பாய்,
                                                கடல் சேர்ப்பாய்,
மண்மீது உழல்வாய், இவற்றுள் எங்கும்
                                                மறைந்து உறைவாய்,
எண்மீது இயன்ற புற அண்டத்தாய், எனது ஆவி
உள்மீது ஆடி உருக்காட்டாதே ஒளிப்பாயோ.

பரமபதத்தில் வீற்றிருப்பவனே, திருமலையில் நிற்பவனே, பாற்கடலில் கிடந்த திருக்கோலத்தில் அருள்புரிபவனே, பூமியிலே பல அவதாரங்களைச் செய்தவனே, இப்பொருள்கள் அனைத்திலும் மறைந்து உறைபவனே, எண்ண இயலாத புற அண்டங்களிலும் இருப்பவனே, என் ஆவிக்குள் நடமாடுகிறவனே, உன்னுடைய திருவுருவத்தை எனக்குக் காட்டாமல் ஒளிக்கலாமா!

***

பாடல் - 6

பாய் ஓர் அடிவைத்து அதன்கீழ்ப் பரவை
                                                      நிலம் எல்லாம்
தாய் ஓர் அடியால் எல்லா உலகும் தடவந்த
மாயோன், உன்னைக் காண்பான் வருந்தி
                                                     எனைநாளும்
தீயோடு உடன்சேர் மெழுகாய் உலகில்
                                                    திரிவேனோ?

திருவடிகளால் உலகை அளந்த மாயோனே, ஓர் அடியைப் பரப்பிவைத்து, கடலால் சூழப்பட்ட உலகையெல்லாம் அதன்கீழே அளந்தவனே, இன்னொரு திருவடியைத் தாவி மேலே வைத்து, மற்ற உலகங்கள் அனைத்தையும் அளந்துகொண்டவனே/ஆக்கிரமித்தவனே, உன்னைக் காண விரும்பி வருந்துகிறேன், தீயிலே சேர்ந்த மெழுகைப்போல் உருகுகிறேன், இன்னும் எத்தனை நாள் நான் இப்படி உன்னைத்தேடி இந்த உலகில் திரிவேனோ!

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/dec/16/ஆறாம்-பத்து-ஒன்பதாம்-திருவாய்மொழி---பாடல்-5-6-2827615.html
2826984 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 3, 4 சொ. மணியன் Friday, December 15, 2017 10:35 AM +0530  

பாடல்  - 3

ஞாலத்துஊடே நடந்தும் நின்றும் கிடந்து, இருந்தும்
சாலப் பலநாள் உகந்தோறு உயிர்கள் காப்பானே,
கோலத் திருமாமகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பலநாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?

யுகங்கள்தோறும் பூவுலகில் நடந்தும், நின்றும், கிடந்தும், இருந்தும் பலநாள்களாக உயிர்களைக் காப்பவனே, அழகிய திருமகளோடு விளங்கும் உன் திருவடிகளை நான் சேரும் நாள் என்று? இன்னும் பலநாள் நான் இங்கிருந்து தளரவேண்டுமோ?

***

பாடல் - 4

தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாப்
பிளந்து வீயத் திருக்கால் ஆண்ட பெருமானே,
கிளர்ந்து பிரமன், சிவன், இந்திரன், விண்ணவர் சூழ
விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே.

எம்பெருமானே, உன்னைக் கொல்ல வந்த சகடாசுரன் ஒரு வண்டியில் மறைந்திருந்தான், அவனுடைய உடல் வேறாகிப் பிளந்து வீழும்படி திருக்கால்களால் அவனை வென்ற பெருமானே, பிரமன், சிவன், இந்திரன், விண்ணோரெல்லாம் மகிழ்வோடு உன்னைச் சூழ்ந்து வழிபட, அவர்கள்மத்தியில் நீ சிறப்போடு விண்மேலே தோன்றவேண்டும், ஒருநாள் நாங்கள் அதைக் காணவேண்டும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/dec/15/ஆறாம்-பத்து-ஒன்பதாம்-திருவாய்மொழி---பாடல்-3-4-2826984.html
2826404 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 1, 2 சொ. மணியன் DIN Thursday, December 14, 2017 09:24 AM +0530  

பாடல் - 1

நீராய், நிலனாய்த் தீயாய்க் காலாய், நெடுவானாய்,
சீர்ஆர் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய், அயன்ஆனாய்,
கூர்ஆர் ஆழி, வெண்சங்கு ஏந்திக் கொடியேன்பால்
வாராய் ஒருநாள், மண்ணும் விண்ணும் மகிழவே.

எம்பெருமானே, நீ நீர், நிலம், நெருப்பு, காற்று, நீண்ட வான் என்கிற ஐம்பூதங்களாகவும் ஆனாய், சிறப்பு நிறைந்த சூரியன், சந்திரன் என்கிற சுடர்கள் இரண்டுமாக ஆனாய், சிவனானாய், பிரம்மனானாய், இந்த மண்ணும் விண்ணும் மகிழும்படி, கூர்மையான சக்கரத்தையும், வெண்மையான சங்கையும் ஏந்திக்கொண்டு, கொடியேனாகிய என்னிடம் நீ ஒருநாள் வரவேண்டும்.

***

பாடல் - 2

மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலம் காட்டி
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே,
நண்ணி உனை நான் கண்டு உகந்து கூத்தாட
நண்ணி ஒருநாள் ஞாலத்து ஊடே நடவாயே.

மண்ணும் விண்ணும் மகிழும்படி வாமனனாக வந்து, உன்னுடைய வலிமையைக் காட்டி, இந்த மண்ணையும் விண்ணையும் அளந்துகொண்டவனே, மாயங்களைச் செய்யும் அம்மானே, நான் உன்னை அடைந்து, கண்டு, மகிழ்ந்து, கூத்தாடவேண்டும், அதற்காக, நீ ஒருநாள் இந்த உலகத்துக்கு வந்துசேரவேண்டும், இந்தப் பூமியினூடே நடந்துவரவேண்டும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/dec/14/ஆறாம்-பத்து-ஒன்பதாம்-திருவாய்மொழி---பாடல்-1-2-2826404.html
2826403 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 11 சொ. மணியன் Wednesday, December 13, 2017 12:00 AM +0530  

பாடல்  - 11

மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு
                                       மதுசூதபிரான் அடிமேல்
நாற்றம்கொள் பூம்பொழில்சூழ் குருகூர்ச்
                                      சடகோபன் சொன்ன
தோற்றங்கள் ஆயிரத்துள் இவையும் ஒரு
                                      பத்தும் வல்லார்
ஊற்றின்கண் நுண்மணல்போல் உருகா
                                      நிற்பர் நீராயே.

மணம் நிறைந்த பூஞ்சோலைகளால் சூழப்பட்ட குருகூர்ச் சடகோபர், மதுசூதனனாகிய பெருமான்மீது ஆயிரம் திருப்பாடல்களைப் பாடினார், அவர் பாடிய சொற்களின் தன்மையை உணர்ந்து, இந்தப் பத்துத் திருப்பாடல்களையும் பாடவல்லவர்கள், நீரூற்றுகளிலே உண்டாகும் நுண்ணிய மணலைப்போல, நீராக உருகுவார்கள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/dec/13/ஆறாம்-பத்து-எட்டாம்-திருவாய்மொழி---பாடல்-11-2826403.html
2825066 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 9, 10 சொ. மணியன் Tuesday, December 12, 2017 10:18 AM +0530  

பாடல் - 9

பேர்த்து மற்று ஓர் களைகண் வினையாட்டியேன்
                             நான் ஒன்று இலேன்,
நீர்த்திரைமேல் உலவி இரை தேடும் புதா இனங்காள்,
கார்த்திரள் மாமுகில்போல் கண்ணன், விண்ணவர்
                            கோனைக் கண்டு
வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர் வைகல்
                            வந்திருந்தே.

நீரலைகள்மேல் சென்று இரை தேடுகின்ற பெருநாரைக் கூட்டங்களே, கார்காலத்திலே திரள்கிற பெரிய மேகத்தைப்போன்ற கண்ணன், வானோர் தலைவன், அவனைக் கண்டு, அவனுடைய சொற்களைக் கேளுங்கள், பின்னர் இங்கே வந்து அந்தச் சொற்களைச் சொல்லிக்கொண்டே இருங்கள், தீவினை செய்தவளான எனக்கு, அந்தப் பெருமானைத்தவிர வேறு பற்றுக்கோடு இல்லை.

***

பாடல் - 10

வந்து இருந்து உம்முடைய மணிச்சேவலும்
                                            நீரும் எல்லாம்
அந்தரம் ஒன்றும் இன்றி அலர்மேல் அசையும்
                                            அன்னங்காள்,
என் திருமார்வற்கு என்னை, இன்னவாறு இவள்,
                                           காண்மின் என்று
மந்திரத்து ஒன்று உணர்த்தி உரையீர் மறுமாற்றங்களே.

பெண் அன்னங்களே, உங்கள் துணைகளான அழகிய ஆண் அன்னங்களுடன் நீங்கள் எல்லாரும் இடையூறு இல்லாமல் மலர்களின்மீது வாழ்கிறீர்கள், திருமகளை மார்பிலே கொண்ட எம்பெருமானைச் சென்று காணுங்கள், அவர் தனியே இருக்கும்போது ரகசியமாக, ‘இவள் உங்களை எண்ணி இவ்வாறு ஆனாள், இதைக் காணுங்கள்’ என்று என் நிலைமையைச் சொல்லுங்கள், அவர் சொல்லும் பதிலை இங்கே வந்து சொல்லுங்கள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/dec/12/ஆறாம்-பத்து-எட்டாம்-திருவாய்மொழி---பாடல்-9-10-2825066.html
2824374 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 7, 8 சொ. மணியன் DIN Monday, December 11, 2017 10:22 AM +0530  

பாடல் - 7

பூவைகள்போல் நிறத்தன், புண்டரீகங்கள்போலும்
                                                                  கண்ணன்,
யாவையும் யாவருமாய் நின்ற மாயன், என்
                                                                 ஆழிப்பிரான்,
மாவை வல்வாய் பிளந்த மதுசூதற்கு என் மாற்றம்
                                                                சொல்லிப்
பாவைகள், தீர்க்கிற்றிரே வினையாட்டியேன்
                                                                பாசு அறவே.

பாவைகளே, காயாம்பூவைப்போன்ற நிறம்கொண்டவன், தாமரைபோன்ற கண்களைக்கொண்டவன், அஃறிணைகள் அனைத்துமாக, உயர்திணைகள் அனைவருமாக நின்ற மாயன், சக்ராயுதம் ஏந்திநிற்கும் எம்பெருமான், குதிரைவடிவில் வந்த கேசியின் வலிமையான வாயைப் பிளந்த மதுசூதனன், இங்கே நான்சொல்லும் வார்த்தைகளை அவரிடம் சொல்லிவருவீர்களா? என்னுடைய துக்கத்தைத் தீர்ப்பீர்களா?

***

பாடல் - 8

பாசு அற எய்தி இன்னே வினையேன் எனை
                                                             ஊழி நைவேன்?
ஆசு அறு தூவி வெள்ளைக்குருகே, அருள்செய்து
                                                            ஒருநாள்
மாசு அறு நீலச்சுடர்முடி வானவர்கோனைக் கண்டு
ஏசு அறும் நும்மை அல்லால் மறுநோக்கு இலள்
                                                           பேர்த்து மற்றே.

குற்றமற்ற சிறகுகளையுடைய வெள்ளைக் குருகே, தீவினை செய்தவளான நான், எம்பெருமானை எண்ணி நிறமழிந்து வாடுகிறேன், இன்னும் எத்தனை ஊழிக்காலம் நான் இப்படி நைந்துகிடக்கவேண்டும்? எனக்கு அருள்செய்யுங்கள், எனக்காக எம்பெருமானிடம் செல்லுங்கள், குற்றமில்லாத நீலச்சுடர்த் திருமுடியைக்கொண்ட அந்த வானவர் தலைவனைக் காணுங்கள், ‘பெருமானே, குற்றமில்லாத நீங்கள்மட்டும்தான் இவளுக்கு ஒரே கதி, வேறு எதையும், யாரையும் இவள் பார்க்கக்கூட விரும்புவதில்லை’ என்று சொல்லுங்கள், எனக்கு அருள்புரியுமாறு அப்பெருமானிடம் கேளுங்கள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/dec/11/ஆறாம்-பத்து-எட்டாம்-திருவாய்மொழி---பாடல்-7-8-2824374.html
2824373 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 5, 6 சொ. மணியன் Sunday, December 10, 2017 12:00 AM +0530  

பாடல் - 5

நுங்கட்கு யான் உரைக்கேன், வம்மின், யான்
                                                       வளர்த்த கிளிகாள்,
வெம்கண் புள் ஊர்ந்து வந்து வினையேனை
                                                       நெஞ்சம் கவர்ந்த
செங்கண் கருமுகிலை, செய்யவாய்ச் செழும்
                                                       கற்பகத்தை,
எங்குசென்றாகிலும் கண்டு, இதுவோ தக்கவாறு
                                                      என்மினே.

நான் வளர்த்த கிளிகளே, வாருங்கள், நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன், வெம்மையான கண்களையுடைய பறவையான கருடன்மேல் ஊர்ந்துவந்தவர், தீவினை செய்தவளான என்னுடைய நெஞ்சத்தைக் கவர்ந்தவர், சிவந்த கண்களையுடைய கருமேக மேனியர், சிவந்த வாயைக்கொண்டு செழிப்பான கற்பகம்போன்றவர், அவரை எங்குசென்றாவது காணுங்கள், அவர் செய்வது சரியா, அவருக்குத் தகுதியானதுதானா என்று கேட்டுவாருங்கள்.

***

பாடல் - 6

என் மின்னுநூல் மார்வன், என் கரும்பெருமான்,
                                                                    என் கண்ணன்,
தன் மன்னு நீள்கழல்மேல் தண்துழாய் நமக்கு
                                                                   அன்றி நல்கான்,
கல்மின்கள் என்று உம்மை யான் கற்பியாவைத்த
                                                                  மாற்றம் சொல்லிச்
செல்மின்கள், தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே.

தீவினை செய்தவளான நான் வளர்த்த சிறிய பூவைகளே, ஒளிமின்னும் பூணூலை மார்பிலே அணிந்த எம்பெருமான், கரிய திருமேனிகொண்ட பெருமான், என் கண்ணன், தன்னுடைய சிறந்த, நீண்ட திருவடிகளிலேயிருக்கும் குளிர்ந்த துளசியை நமக்கன்றி வேறு யாருக்கும் தரமாட்டான், அதைத் தெரிந்துகொள்ளுங்கள், நான் உங்களுக்குச் சொல்லித்தந்திருக்கும் இந்த விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், அதைச் சொன்னபடி அவனிடம் சொல்லுங்கள், (பெருமானின் துளசியை வாங்கிவாருங்கள்.)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/dec/10/ஆறாம்-பத்து-எட்டாம்-திருவாய்மொழி---பாடல்-5-6-2824373.html
2823307 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 3, 4 சொ. மணியன் Saturday, December 9, 2017 10:13 AM +0530

பாடல் - 3

ஓடி வந்து என் குழல்மேல் ஒளி மாமலர் ஊதீரோ,
கூடிய வண்டு இனங்காள், குருநாடு உடை
                                                                                ஐவர்க்காய்
ஆடிய மா, நெடும்தேர்ப் படை நீறு எழச் செற்ற
                                                                                பிரான்
சூடிய தண் துளபம் உண்ட தூ மது வாய்கள்
                                                                                கொண்டே.

சேர்ந்திருக்கும் வண்டுக்கூட்டங்களே, குருநாட்டை உடைய பாண்டவர்கள் ஐவருக்காகப் பாரதப்போரை நிகழ்த்தியவர், ஆடுகின்ற குதிரைகள், நீண்ட தேர்களைக்கொண்ட எதிரிகளின் படைகள் சாம்பலாகும்படி செய்து வென்ற பிரான், அவர் சூடிய குளிர்ச்சியான துளசியை உண்கிறவர்கள் நீங்கள், தூய்மையான தேன் நிறைந்த அந்த வாயோடு ஓடிவாருங்கள், என்னுடைய கூந்தல்மேல் ஒளிவீசும் சிறந்த மலர்களை, எம்பெருமானின் மணம் வீசும் உங்கள் வாயால் ஊதுங்கள்.

***

பாடல் - 4

தூ மது வாய்கள் கொண்டுவந்து, என்
                    முல்லைகள்மேல் தும்பிகாள்,
பூ மது உண்ணச்செல்லில் வினையேனைப்
                   பொய் செய்து அகன்ற
மா மது வார் தண் துழாய் முடி வானவர்கோனைக்
                   கண்டு
நாம் இதுவோ தக்கவாறு என்னவேண்டும்
                   கண்டீர் நுங்கட்கே.

முல்லைகளின்மீது மொய்க்கும் தும்பிகளே, தூய்மையான தேன் நிறைந்த உங்கள் வாய்களைக்கொண்டு, பூக்களில் தேன் உண்ணச் செல்வீர்கள் அல்லவா? அப்போது எனக்கு ஓர் உதவி செய்யுங்கள், தீவினை செய்தவளாகிய என்னிடம் பொய்யான சொற்களைச் சொல்லி/நடித்துவிட்டு அகன்றவர், சிறந்த தேன் சொரியும் குளிர்ந்த துளசியைத் திருமுடியில் அணிந்தவர், வானவர்களின் தலைவர், அப்பெருமானைக் காணுங்கள், ‘இப்படி ஒரு பெண்ணை நீர் வதைப்பது நுமக்குத் தகுதியானதுதானா?’ என்று கேட்டுவாருங்கள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/dec/09/ஆறாம்-பத்து-எட்டாம்-திருவாய்மொழி---பாடல்-3-4-2823307.html
2822644 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 1, 2 சொ. மணியன் Friday, December 8, 2017 10:20 AM +0530  

பாடல் - 1

பொன் உலகு ஆளோரோ, புவனி முழுது
                                                        ஆளோரோ,
நல் நலப் புள் இனங்காள், வினையாட்டியேன்
                                                        நான் இரந்தேன்,
முன் உலகங்கள் எல்லாம் படைத்த முகில்வண்ணன்,
                                                        கண்ணன்,
என் நலம் கொண்ட பிரான்தனக்கு என் நிலைமை
                                                        உரைத்தே.

நல்ல குணங்களைக்கொண்ட பறவைக்கூட்டங்களே, தீவினை செய்தவளான நான் உங்களிடம் ஓர் உதவி கேட்கிறேன், செய்வீர்களா? முன்பு உலகங்கள் அனைத்தையும் படைத்தவன், மேகவண்ணன், கண்ணன், என்னுடைய நலனைக் கொண்டுசென்ற பிரான், அவனைச் சந்தித்து என் நிலைமையைச் சொல்லுங்கள், அப்படிச்செய்தால், நீங்கள் பரமபதத்தையும், மற்ற உலகங்களையும் ஆள்வீர்கள்.

***

பாட்ல் - 2

மை அமர் வாள் நெடும்கண் மங்கைமார்
                                      முன்புஎன் கை இருந்து
நெய் அமர் இன் அடிசில் நிச்சல் பாலொடு
                                     மேவீரோ,
கை அமர் சக்கரத்து என் கனிவாய்ப்
                                     பெருமானைக் கண்டு
மெய் அமர் காதல் சொல்லி, கிளிகாள்,
                                    விரைந்து ஓடி வந்தே.

கிளிகளே, கையிலே சக்ராயுதத்தை ஏந்திய எம்பெருமான், கனிபோன்ற திருவாயைக்கொண்டவன், அந்தப் பெருமானைக் கண்டு வாருங்கள், அவருடைய திருமேனியைத் தழுவ விரும்பும் என் காதலை அவரிடம் சொல்லிவிட்டு விரைந்தோடி வாருங்கள், அப்படிச் செய்தீர்களென்றால், நான் உங்களுக்கு என்ன பரிசு தருவேன் தெரியுமா? மையிட்ட, ஒளிபொருந்திய, நீண்ட கண்களையுடைய என் தோழிகளுக்கு நடுவே, உங்களை என் கையிலே அமரவைத்து, நெய்யுடன் கூடிய இனிய உணவையும் பாலையும் தினந்தோறும் தருவேன்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/dec/08/ஆறாம்-பத்து-எட்டாம்-திருவாய்மொழி---பாடல்-1-2-2822644.html
2821992 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 11 சொ. மணியன் Thursday, December 7, 2017 10:17 AM +0530  

பாடல் - 11

வைத்த மாநிதியாம் மதுசூதனனையே
                                                    அலற்றிக்
கொத்து அலர் பொழில் சூழ் குருகூர்ச்
                                                    சடகோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப்பத்து அவன்சேர்
                                                    திருக்கோளூர்க்கே,
சித்தம் வைத்து உரைப்பார் திகழ் பொன்
                                                    உலகு ஆள்வாரே.

சேர்த்துவைத்த சிறந்த நிதியைப்போன்றவன் மதுசூதனன், அத்தகைய பெருமானைப் பாராட்டி, கொத்தாக மலர்கள் மலர்கின்ற சோலைகளால் சூழப்பட்ட குருகூர்ச் சடகோபன் ஆயிரம் திருப்பாடல்களைப் பாடினார். அவற்றுள் இந்தப் பத்து பாடல்களும் அவன் எழுந்தருளியிருக்கும் திருக்கோளூரைப்பற்றியவை. இப்பாடல்களை மனத்தில் வைத்து உரைப்பவர்கள், திகழ்கின்ற பொன்னுலகான பரமபதத்தை ஆள்வார்கள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/dec/07/ஆறாம்-பத்து-ஏழாம்-திருவாய்மொழி---பாடல்-11-2821992.html
2820788 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 9, 10 சொ. மணியன் Thursday, December 7, 2017 10:14 AM +0530  

பாடல் - 9

காரியம் நல்லனகள் அவை காணில் என்
                                             கண்ணனுக்கு என்று
ஈரியாய் இருப்பாள், இதெல்லாம் கிடக்க
                                             இனிப் போய்ச்
சேரி பல்பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள், எம்மை ஒன்றும் நினைத்திலளே.

சிறந்த ஆபரணங்களை அணிந்த என் மகள், சிறந்த பொருட்கள் எவற்றைக்கண்டாலும், ‘இவையெல்லாம் என் கண்ணனுக்கே’ என்று எண்ணுகிறவள், அவன்மீது எப்போதும் அன்போடு இருப்பவள். இந்நிலையில், தெருவிலுள்ளோர் எல்லாரும் பலவிதமான பழிச்சொற்களைத் தூற்றி இரைக்கும்படி திருக்கோளூருக்கு நடந்து சென்றுவிட்டாள் அவள், எங்களைச் சிறிதும் நினைத்துப்பார்க்கவில்லை.

***

பாடல் - 10

நினைக்கிலேன் தெய்வங்காள், நெடும்கண்
                                                  இளமான் இனிப் போய்
அனைத்து உலகும் உடைய அரவிந்தலோசனனைத்
தினைத்தனையும் விடாள், அவன்சேர்
                                                 திருக்கோளூர்க்கே
மனைக்கு வான்பழியும் நினையாள் செல்ல
                                                 வைத்தனளே.

தெய்வங்களே, நீண்ட கண்களையுடைய இளமான் போன்ற என் மகளைப்பற்றி என்னால் நினைத்துப்பார்க்கவும் இயலவில்லை, அனைத்து உலகங்களையும் தனக்கே உரிமையாகக் கொண்ட தாமரைக்கண்ணன் எம்பெருமான், அப்பெருமானை இவள் தினையளவும் விடாமல் பற்றியிருக்கிறாள், அவன் எழுந்தருளியிருக்கும் திருக்கோளூர்க்குச் செல்கிறாள், அதனால் தன் குடும்பத்துக்கு வரக்கூடிய பெரிய பழியைப்பற்றியும் அவள் எண்ணிப்பார்க்கவில்லை.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/dec/06/ஆறாம்-பத்து-ஏழாம்-திருவாய்மொழி---பாடல்-9-10-2820788.html
2817310 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 7, 8 சொ. மணியன் DIN Tuesday, December 5, 2017 12:00 AM +0530  

பாடல் - 7

மல்குநீர்க் கண்ணொடு மையல்உற்ற
                                                        மனத்தினளாய்
அல்லும் நல்பகலும் நெடுமால் என்று அழைத்து
                                                        இனிப் போய்ச்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகும்கொல் ஒசிந்தே.

என்னுடைய மகள், கண்களில் நீர் மல்க, மயக்கம் கொண்ட மனத்தோடு வாடுகிறாள், இரவிலும் நல்ல பகலிலும் ‘நெடுமால்’ என்றே அழைக்கிறாள், இனி அவள், எம்பெருமான் செல்வம் மல்கிக் கிடந்த திருக்கோலத்தில் அருள்செய்கின்ற திருக்கோளூரை நோக்கி வருந்தித் தளர்ந்து நடப்பாளோ, அந்த
ஊரினுள் அவள் எப்படிப் புகுவாளோ!

***

பாடல் - 8

ஒசிந்த நுண்இடைமேல் கையை வைத்து
                                                        நொந்து நொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ணநீர் துளும்பச்
                                                        செல்லும்கொல்,
ஒசிந்த ஒண்மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே.

இன்பத்தாலே துவண்டவள், ஒளிநிறைந்த மலர்மேல் வீற்றிருப்பவள், அந்தத் திருமகளின் கணவன் எம்பெருமான், அவன் எழுந்தருளியிருக்கும் திருக்கோளூரை எண்ணி நெஞ்சம் கசிந்த எங்கள் மகள், எங்களை விட்டுச் சென்றுவிட்டாள், அவ்வூரை நோக்கி நடக்கையில் நுட்பமான இடை வருந்த, அதன்மேல் கையை வைத்து அவள் நோவாளோ, நெஞ்சம் கசிய, கண்களில் நீர் தளும்ப வருந்தி நடப்பாளோ!

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/dec/05/ஆறாம்-பத்து-ஏழாம்-திருவாய்மொழி---பாடல்-7-8-2817310.html
2817309 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 5, 6 சொ. மணியன் DIN Monday, December 4, 2017 12:00 AM +0530  

பாடல் - 5

மேவி நைந்து நைந்து விளையாடல் உறாள்
                                                                         என் சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக்கோளூரில்
பூ இயல் பொழிலும் தடமும் அவன் கோயிலும்
                                                                          கண்டு
ஆவி உள்குளிர எங்ஙனே உகக்கும்கொல் இன்றே?

என்னுடைய இளைய மகள் எம்பெருமானை மனத்தால் அடைந்துவிட்டாள், அதனால் மனமும் உடலும் நைந்துபோக, விளையாட்டில் ஆர்வமின்றி நிற்கிறாள், இனி அவள் தன்னுடைய திருமால் எழுந்தருளியிருக்கும் திருக்கோளூருக்குச் செல்வாளோ? அங்கே பூக்கள் நிறைந்த சோலைகளை, குளங்களை, அவனுடைய கோயிலைக் கண்டு, ஆவி உள்குளிர எப்படி மகிழ்வாளோ!

***

பாடல் - 6

இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான்
                                                               இனிப்போய்த்
தென்திசைத் திலதம் அனைய திருக்கோளூர்க்கே
சென்று தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும்
                                                                கண்டு
நின்று நின்று நையும் நெடும்கண்கள் பனிமல்கவே.

இளமான்போன்ற என் மகள் இன்றைக்கு எனக்கு உதவாமல் என்னைவிட்டு அகன்றுசென்றுவிட்டாள், இனி அவள், தென்திசைக்குத் திலகமாகத் திகழ்கிற திருக்கோளூர்க்குச் செல்வாளோ? தன்னுடைய திருமாலின் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு நைந்து நிற்பாளோ? நீண்ட கண்களில் நீர்மல்க நின்று உருகுவாளோ!

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/dec/04/ஆறாம்-பத்து-ஏழாம்-திருவாய்மொழி---பாடல்-5-6-2817309.html
2817307 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல்  3, 4 சொ. மணியன் DIN Sunday, December 3, 2017 12:00 AM +0530  

பாடல் - 3

பூவை, பைங்கிளிகள், பந்து, தூதை, பூம்புட்டில்கள்
யாவையும் திருமால் திருநாமங்களே கூவி எழும் என்
பாவை போய் இனித் தண்பழனத் திருக்கோளூர்க்கே
கோவை வாய் துடிப்ப மழைக்கண்ணொடு
                                                                    என்செய்யும்கொலோ?

என் மகள் முன்பு விளையாடுவதற்காகக் குயில், பைங்கிளிகள், பந்து, சிறிய மரப்பானை, பூக்கூடைகள் ஆகியவற்றை வைத்திருந்தாள், பின்னர், இவை அனைத்தையும் மறந்துவிட்டுத் திருமாலின் திருநாமங்களைமட்டுமே சொல்லத்தொடங்கினாள், அவள் குளிர்ச்சியான வயல்கள் நிறைந்த திருக்கோளூர்க்குப் புறப்பட்டுச் சென்றாளே, அங்கே சென்றுசேர்ந்திருப்பாளா? கோவைப்பழம்போன்ற வாய் துடிக்க, கண்களிலிருந்து மழையாக நீர் பொழிய அவள் அங்கே என்னசெய்கிறாளோ!

***

பாடல் - 4

கொல்லை என்பர்கொலோ? குணம் மிக்கனள்
                                                                 என்பர்கொலோ?
சில்லைவாய்ப் பெண்கள், அயல்சேரி உள்ளாரும்,
                                                                 எல்லே,
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
மெல் இடை நுடங்க இளமான் செல்ல மேவினளே.

எம்பெருமான், செல்வம் மல்கும்படியாகக் கிடந்த திருக்கோலத்தில் அருள்செய்யும் ஊர், திருக்கோளூர். இளமான் போன்ற என் மகள், தன்னுடைய மெல்லிய இடை அசையும்படி அங்கே சென்றாள், இதைப்பற்றி மற்ற பெண்கள் என்ன பேசுவார்களோ, இவர்கள் பழிச்சொல் பேசியே பழக்கப்பட்டவர்களாயிற்றே, இன்னும் அயலூரைச் சேர்ந்தவர்கள் என்னவெல்லாம் பேசுவார்களோ, ‘இவள் எல்லை மீறியவள்’ என்பார்களோ, ‘இவள் குணம் மிக்கவள்’ என்பார்களோ!

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/dec/03/ஆறாம்-பத்து-ஏழாம்-திருவாய்மொழி---பாடல்--3-4-2817307.html
2817306 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 1, 2 சொ. மணியன் DIN Saturday, December 2, 2017 12:00 AM +0530  

பாடல் - 1

உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும்
                               வெற்றிலையும் எல்லாம்
கண்ணன், எம்பெருமான் என்று என்றே
                              கண்கள் நீர் மல்கி
மண்ணினுள் அவன் சீர், வளம் மிக்கவன்
                              ஊர் வினவித்
திண்ணம் என் இளமான் புகும் ஊர்
                              திருக்கோளூரே.

இளமானைப்போன்ற என் மகள், தான் உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை என அனைத்தும் கண்ணனே என்கிறாள், எம்பெருமான் பேரைச்சொல்லிக் கண்களில் நீர் மல்க நிற்கிறாள், இம்மண்ணிலே மிகப்பெரிய சிறப்பு, வளத்தை உடைய அப்பெருமானின் ஊரை விசாரித்தபடி நடக்கிறாள், எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோளூருக்கு அவள் நிச்சயமாகச் சென்றுசேர்வாள்.

***

பாடல் - 2

ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல்
                                                               அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறிச்
சேரும் நல்வளம்சேர் பழனத் திருக்கோளூர்க்கே?
போரும்கொல்? உரையீர், கொடியேன் கொடி,
                                                               பூவைகளே.

நாகணவாய்ப்பறவைகளே, கொடியவளான என் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள், என்னுடைய மகள் எம்பெருமானின் புகழைச் சொல்லிச்சொல்லி, ஊரிலிருக்கும் எல்லாரும், நாட்டிலிருக்கும் எல்லாரும், உலகத்திலிருக்கும் எல்லாரும் அவனுடைய திருநாமங்களையும் அவன் அணிந்திருக்கும் திருமாலைகளின் புகழையும் பாடத்தொடங்கிவிட்டார்கள், இதனால், என் மகளின் மரியாதை கெட்டது, இனி அவள் நல்ல வளம் நிறைந்த வயல்களைக்கொண்ட திருக்கோளூர்க்குச் சென்றுவிடுவாளா? அல்லது, திரும்பிவந்துவிடுவாளா? சொல்லுங்கள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/dec/02/ஆறாம்-பத்து-ஏழாம்-திருவாய்மொழி---பாடல்-1-2-2817306.html
2817304 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 11 சொ. மணியன் DIN Friday, December 1, 2017 12:00 AM +0530  

பாடல் - 11

கட்டுஎழில் சோலை நல் வேங்கடவாணனை,
கட்டுஎழில் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
கட்டுஎழில் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
கட்டுஎழில் வானவர் போகம் உண்பாரே.

மணமுள்ள, அழகிய சோலைகள் நிறைந்த நல்ல வேங்கடமலையிலே எழுந்தருளியிருக்கும் பெருமானை, பாதுகாப்பான அரண்களையுடைய, அழகிய தென்குருகூர்ச் சடகோபன் தொடையழகோடு அமைந்த ஆயிரம் திருப்பாடல்களில் பாடினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் பாடவல்லவர்கள், முற்றிலும் அழகானவர்களான தேவர்களின் போகத்தை அனுபவிப்பார்கள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/dec/01/ஆறாம்-பத்து-ஆறாம்-திருவாய்மொழி---பாடல்-11-2817304.html
2817303 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 9, 10 சொ. மணியன் Thursday, November 30, 2017 12:00 AM +0530  

பாடல் - 9

மாண்பு அமை கோலத்து எம் மாயக்குறளற்கு,
சேண் சுடர்க் குன்று அன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு,
காண் பெரும் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு என்
பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே.

சிறப்பு நிறைந்த அழகையுடைய எங்கள் மாயன், வாமனன், உயர்ந்த சுடர்க்குன்றைப்போன்ற செஞ்சுடர் மூர்த்தி, காணத்தக்க பெரிய தோற்றத்தையுடைய எங்கள் காகுத்தன், ஆண்களில் சிறந்தவன், அத்தகைய பெருமானை எண்ணி, ஆபரணங்களை அணிந்த, மென்மையான மார்பகங்களைக்கொண்ட என் மகள் தன் அழகை இழந்துவிட்டாள்.

***

பாடல் - 10

பொற்பு அமை நீள்முடிப் பூந்தண் துழாயற்கு,
மல் பொரு தோள் உடை மாயப்பிரானுக்கு,
நிற்பன பல் உருவாய் நிற்கும் மாயற்கு என்
கற்புடையாட்டி இழந்தது கட்டே.

அழகிய, நீண்ட திருமுடியிலே, அழகான, குளிர்ந்த துழாய்மாலையை அணிந்தவன், மல்லர்களோடு போர்செய்யவல்ல தோள்களைக்கொண்ட மாயப்பிரான், நிற்கின்ற பலப்பல உருவங்களாகவும் தானே நிற்கிற மாயன், அத்தகைய பெருமானை எண்ணி, அறிவுடையவளான என் மகள் தன் மரியாதையை இழந்துவிட்டாள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/nov/30/ஆறாம்-பத்து-ஆறாம்-திருவாய்மொழி---பாடல்-9-10-2817303.html
2817240 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 7, 8 சொ. மணியன் Wednesday, November 29, 2017 09:50 AM +0530  

பாடல் - 7

மெய் அமர் பல்கலன் நன்கு அணிந்தானுக்கு,
பை அரவின் அணைப் பள்ளியினானுக்கு,
கையொடு கால் செய்ய கண்ணபிரானுக்கு என்
தையல் இழந்தது தன்னுடைச் சாயே.

திருமேனியிலே பல அணிகலன்களை நன்கு அணிந்தவன், படமெடுக்கும் பாம்பாகிய ஆதிசேஷனைப் படுக்கையாகக்கொண்டவன், கையும் காலும் சிவந்த கண்ணபிரான், அத்தகைய பெருமானை எண்ணி, என் மகள் தன்னுடைய அழகை இழந்துவிட்டாள்.

***

பாடல் - 8

சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு,
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு,
பேயைப் பிணம்பட பால் உண் பிரானுக்கு என்
வாசக் குழலி இழந்தது மாண்பே.

குருந்தமரமாக வந்த அசுரன் சாயும்படி அதனை முறித்த தனிவீரன், மாயமாக வந்த சக்கரத்தை உதைத்த மணாளன், பேயான பூதனை பிணமாகும்படி அவளிடம் பாலுண்ட பிரான், அத்தகைய பெருமானை எண்ணி, மணம்பொருந்திய கூந்தலையுடைய என் மகள் தன்னுடைய சிறப்பை இழந்துவிட்டாள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/nov/29/ஆறாம்-பத்து-ஆறாம்-திருவாய்மொழி---பாடல்-7-8-2817240.html
2814156 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 5, 6 சொ. மணியன் DIN Tuesday, November 28, 2017 12:00 AM +0530  

பாடல் - 5

பண்புஉடை வேதம் பயந்த பரனுக்கு,
மண்புரை வையம் இடந்த வராகற்கு,
தெள் புனல் பள்ளி எம் தேவபிரானுக்கு என்
கண்புனை கோதை இழந்தது கற்பே.

இறைவனின் தன்மைகளைச் சொல்லும் பண்பைக்கொண்ட வேதத்தை உபதேசித்த பெருமான், மண்ணுலகை(பூமியை) இடந்து மேலே கொண்டுவந்த வராகப்பெருமான், தெளிந்த நீரிலே பள்ளிகொள்ளும் எங்கள் தேவபிரான், அத்தகைய பெருமானை எண்ணி, காண்பவர்களுடைய கண்களைக் கவரவல்ல கூந்தலையுடைய என் மகள் தன்னுடைய கல்வியை இழந்துவிட்டாள்.

***

பாடல் - 6

கற்பகக் கா அன நல்பல தோளாற்கு,
பொன்சுடர் குன்று அன்ன பூந்தண் முடியற்கு,
நல்பல தாமரை நாள்மலர்க் கையற்கு என்
வில் புருவக்கொடி தோற்றது மெய்யே.

கற்பகச்சோலையைப்போன்ற நல்ல பல தோள்களைக்கொண்டவர், சுடர்வீசும் பொன்மலையைப்போன்ற அழகிய, குளிர்ச்சியான திருமுடியைக்கொண்டவர், அன்று பூத்த தாமரைமலர்களைப்போன்ற நல்ல பல திருக்கைகளைக் கொண்டவர், அத்தகைய பெருமானை எண்ணி, வில்போன்ற புருவத்தைக்கொண்ட கொடி போன்ற என் மகள் தன் உடலை இழந்துவிட்டாள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/nov/28/ஆறாம்-பத்து-ஆறாம்-திருவாய்மொழி---பாடல்-5-6-2814156.html
2814155 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 3, 4 சொ. மணியன் DIN Monday, November 27, 2017 12:00 AM +0530  

பாடல் - 3

நிறம் கரியானுக்கு, நீடு உலகு உண்ட
திறள்கிளர் வாய்ச் சிறு கள்வன் அவற்கு,
கறங்கிய சக்கரக் கையவனுக்கு என்
பிறங்கு இரும் கூந்தல் இழந்தது பீடே.

கருநிறத்தவன், பெரிய உலகையே உண்ணுமளவு திறன்கொண்ட, சிறந்த திருவாயைக்கொண்ட சிறு கள்வன், சுழலுகின்ற சக்கரத்தைக்கொண்ட திருக்கையையுடையவன், அத்தகைய பெருமானை எண்ணி, நீண்ட கூந்தலையுடைய என் மகள் தன் பெருமையை இழந்துவிட்டாள்.

***

பாடல் - 4

பீடுஉடை நான்முகனைப் படைத்தானுக்கு,
மாடுஉடை வையம் அளந்த மணாளற்கு,
நாடுஉடை மன்னர்க்குத் தூதுசெல் நம்பிக்கு என்
பாடுஉடை அல்குல் இழந்தது பண்பே.

பெருமை நிறைந்த பிரம்மனைப் படைத்தவன், செல்வம் நிறைந்த உலகத்தை அளந்த மணாளன், உலகை ஆளும் மன்னர்களான பாண்டவர்களுக்காகத் தூது சென்ற நம்பி, அத்தகைய பெருமானை எண்ணி, பரந்த அல்குலையுடைய என் மகள் தன்னுடைய இயல்புத்தன்மையை இழந்துவிட்டாள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/nov/27/ஆறாம்-பத்து-ஆறாம்-திருவாய்மொழி---பாடல்-3-4-2814155.html
2814153 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 1, 2 சொ. மணியன் DIN Sunday, November 26, 2017 12:00 AM +0530  

பாடல் - 1

மாலுக்கு, வையம் அளந்த மணாளற்கு,
நீலக் கருநிற மேக நியாயற்கு,
கோலச் செந்தாமரைக்கண்ணற்கு என் கொங்கு அலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே.

திருமால், வாமனனாக வந்து உலகத்தை அளந்த மணாளர், நீலக் கருமேகத்தைப்போன்ற நிறம்கொண்டவர், அழகிய, செந்தாமரைபோன்ற திருக்கண்களைக்கொண்டவர், அத்தகைய பெருமானை எண்ணி என் மகள் உருகுகிறாள், தேன் சிந்தும் மலர்களைச் சூடிய, வாசனை நிறைந்த கூந்தலையுடைய இவள், அவரை நினைத்து உடல் மெலிந்தாள், அதனால், அவள் கையிலிருந்த சங்கு வளையல்கள் கழன்றன.

***

பாடல் - 2

சங்கு, வில், வாள், தண்டு, சக்கரக் கையற்கு,
செங்கனி வாய், செய்ய தாமரைக் கண்ணற்கு,
கொங்கு அலர் தண் அம் துழாய்முடியானுக்கு என்
மங்கை இழந்தது மாமை நிறமே.

சங்கு, வில், வாள், தண்டு, சக்கரம் ஆகிய ஆயுதங்களைக் கையில் ஏந்தியவர், கோவைக்கனிபோன்ற திருவாய், சிவந்த தாமரைபோன்ற திருக்கண்களைக்கொண்டவர், தேன் சிந்தும் மலர்களைக்கொண்ட, குளிர்ந்த, அழகிய துழாய்மாலையைச் சூடிய திருமுடியைக்கொண்டவர், அத்தகைய பெருமானை எண்ணி என் மகள் தன்னுடைய மாந்தளிர் நிறத்தை இழந்துவிட்டாள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/nov/26/ஆறாம்-பத்து-ஆறாம்-திருவாய்மொழி---பாடல்-1-2-2814153.html
2814150 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 11 சொ. மணியன் Saturday, November 25, 2017 12:00 AM +0530  

பாடல் - 11

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும்
                                                            தேவபிரானையே
தந்தை, தாய் என்று அடைந்த வண் குருகூரவர்
                                                            சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலைவில்லி
                                                            மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார்
                                                            திருமாலுக்கே.

சிந்தையால், சொல்லால், செய்கையால் எம்பெருமானாகிய தேவபிரானையே தன் தந்தை, தாய் எனப் பெற்றவர், வளம் நிறைந்த திருக்குருகூர்ச் சடகோபன், அவர் பாடிய ஆயிரம் திருப்பாடல்களிலே இந்தப் பத்து பாடல்களும் தொலைவில்லிமங்கலத்தின் புகழைப் பாடுகின்றன. இந்தச் செந்தமிழ்ப்பாடல்களைப் பாட வல்லவர்கள், திருமாலுக்கு அடிமைசெய்வர்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/nov/25/ஆறாம்-பத்து-ஐந்தாம்-திருவாய்மொழி---பாடல்-11-2814150.html
2810504 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 9, 10 சொ. மணியன் DIN Friday, November 24, 2017 12:00 AM +0530  

பாடல் - 9

இரங்கி நாள்தொறும் வாய் வெரீஇ இவள்
                                  கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும்வகை மணிவண்ணவோ
                                என்று கூவுமால்,
துரங்கம் வாய் பிளந்தான் உறை தொலைவில்லி
                               மங்கலம் என்று தன்
கரங்கள் கூப்பித் தொழும் அவ் ஊர்த் திருநாமம்
                              கற்றதற்பின்னையே.

குதிரை வடிவில் வந்த கேசி என்ற அசுரனின் வாயைப் பிளந்தவன் எம்பெருமான், அத்தகைய பெருமான் எழுந்தருளியிருக்கிற தொலைவில்லிமங்கலம் என்ற திருத்தலத்தின் திருநாமத்தை இவள் கற்றுக்கொண்டுவிட்டாள், அதன்பிறகு, நாள்தோறும் அந்தப் பெருமானைதான் நினைத்துக்கொண்டிருக்கிறாள், கை கூப்பித் தொழுகிறாள், மனம் இரங்குகிறாள், வாய் அச்சத்தில் குழறுகிறது, கண்ணில் நீர் சுழல்கிறது, ‘மணிவண்ணா’ என்று கூவுகிறாள், இவளுடைய நிலையைப் பார்த்து உயிரில்லாத மரங்களும் இரங்குகின்றன.

***

பாடல் - 10

பின்னைகொல்? நிலமாமகள்கொல்? திருமகள்கொல்?
                                                          பிறந்திட்டாள்
என்ன மாயம்கொலோ? இவள் நெடுமால் என்றே
                                                           நின்று கூவுமால்,
முன்னி வந்தவன் நின்று இருந்து உறையும்
                                                           தொலைவில்லிமங்கலம்
சென்னியால் வணங்கும் அவ் ஊர்த் திருநாமம் கேட்பது
                                                          சிந்தையே.

இவள் நப்பின்னையோ? நிலமகளோ? திருமகளோ? இங்கே வந்து இவள் பிறந்தது என்ன மாயமோ! எந்நேரமும் ‘நெடுமால்’ என்றே கூவுகிறாள், முற்பட்டு வந்து அப்பெருமான் நின்று இருந்து உறைகிற தொலைவில்லிமங்கலத்தையே எண்ணித் தலைவணங்குகிறாள், எந்நேரமும் அவ்வூரின் திருநாமத்தைக் கேட்பதே தன்னுடைய சிந்தனை என்று வாழ்கிறாள்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/nov/24/ஆறாம்-பத்து-ஐந்தாம்-திருவாய்மொழி---பாடல்-9-10-2810504.html
2810502 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 7, 8 சொ. மணியன் DIN Thursday, November 23, 2017 12:00 AM +0530  

பாடல் - 7

அன்னைமீர், அணி மாமயில், சிறுமான்
              இவள் நம்மைக் கைவலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள்,
             தொலைவில்லிமங்கலம் என்றலால்,
முன்னம் நோற்ற விதிகொலோ? முகில்வண்ணன்
             மாயம்கொலோ? அவன்
சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே.

அன்னைமார்களே, அழகிய, சிறந்த மயிலைப்போன்ற, சிறு மானைப்போன்ற இந்தப்பெண் நம் பேச்சைக் கேட்பதில்லை, தொலைவில்லிமங்கலத்தை எண்ணினால், வேறு எந்த வார்த்தையும் இவள் காதில் சேர்வதில்லை, இது ஏன்? முற்பிறவியில் இவள் செய்த புண்ணியமோ? முகில்வண்ணனின் மாயமோ? அவனுடைய திருத்தமான திருச்சின்னங்களையும் திருநாமங்களையுமே இவள் எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறாளே.

***

பாடல் - 8

திருந்து வேதமும் வேள்வியும் திருமாமகளிரும்
                                                   தாம் மலிந்து
இருந்து வாழ் பொருநெல் வடகரை வண்
                                                   தொலைவில்லிமங்கலம்
கரும்தடம்கண்ணி கைதொழுத அந்நாள்
                                                  தொடங்கி இந்நாள்தொறும்
இருந்து இருந்து 'அரவிந்த லோசந' என்று என்றே
                                                 நைந்து இரங்குமே.

திருத்தமான வேதங்கள், வேள்விகள், அழகிய செல்வம் ஆகியவற்றைக்கொண்ட அந்தணர்கள் நிறைந்து வாழ்கிற திருத்தலம், தொலைவில்லிமங்கலம், தாமிரபரணிக்கு வடகரையிலே இருக்கும் வளமான ஊர், அத்தகைய தொலைவில்லிமங்கலத்திலே, இந்தக் கருமையான, பெரிய கண்களைக்கொண்ட பெண் கைகூப்பித் தொழுதாள், அன்றைக்குத் தொடங்கி இன்றுவரை இவள் எந்நேரமும் 'தாமரைக்கண்ணா' என்று எம்பெருமான் பெயரையே சொல்கிறாள், நைந்துபோகிறாள், மனம் உருகுகிறாள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/nov/23/ஆறாம்-பத்து-ஐந்தாம்-திருவாய்மொழி---பாடல்-7-8-2810502.html
2810501 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 5, 6 சொ. மணியன் DIN Wednesday, November 22, 2017 12:00 AM +0530  

பாடல் - 5

குழையும் வாள்முகத்து ஏழையைத்
          தொலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு
இழைகொள் சோதிச் செந்தாமரைக்கண்
          பிரான் இருந்தமை காட்டினீர்,
மழைபெய்தால் ஒக்கும் கண்ணநீரினொடு
         அன்று தொட்டு மையாந்து இவள்
நுழையும் சிந்தையள், அன்னைமீர், தொழும்
         அத்திசை உற்றுநோக்கியே.

அன்னைமார்களே, வருந்துகிற, ஒளிபொருந்திய முகத்தைக்கொண்ட இந்தப்பெண்ணைத் தொலைவில்லிமங்கலம் அழைத்துவந்தீர்கள், ஒளியையே ஆபரணமாகக்கொண்ட பெருமான், செந்தாமரைக்கண்களையுடைய பிரானை அவளுக்குக் காட்டினீர்கள், அன்றுதொடங்கி, இவளுடைய கண்களில் மழைபெய்தாற்போல் கண்ணீர் பொழிகிறது, மயங்கிநிற்கிறாள், பெருமானின் குணங்கள்மட்டுமே இவள் சிந்தனையில் நுழைகின்றன, அப்பெருமான் இருக்கும் திசையை உற்றுநோக்கித் தொழுகிறாள்.

***

பாடல் - 6

நோக்கும் பக்கம்எல்லாம் கரும்பொடு
             செந்நெல் ஓங்கு செந்தாமரை
வாய்க்கும் தண் பொருநல் வடகரை வண்
            தொலைவில்லிமங்கலம்
நோக்குமேல் அத்திசை அல்லால் மறுநோக்கு
           இலள், வைகல் நாள்தொறும்
வாய்க்கொள் வாசகமும் மணிவண்ணன்
           நாமமே இவள் அன்னைமீர்.

அன்னைமார்களே, தாமிரபரணியின் வடகரையில் உள்ள தொலைவில்லிமங்கலத்தில், பார்க்கும் திசையெல்லாம் கரும்பும் செந்நெல்லும் செந்தாமரைகளும் செழிப்பாக வளர்ந்துள்ளன, குளிர்ந்த அந்தத் திருத்தலத்தை இவள் பார்த்தாளானால், அதன்பிறகு, அந்தத் திசையைமட்டுமே பார்த்துக்கொண்டிருப்பாள், வேறு திசைகளையே பார்க்கமாட்டாள், ஒவ்வொருநாளும் இவளுடைய வாயில் மணிவண்ணனின் பெயர்மட்டுமே ஒலிக்கும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/nov/22/ஆறாம்-பத்து-ஐந்தாம்-திருவாய்மொழி---பாடல்-5-6-2810501.html
2810500 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 3, 4 சொ. மணியன் Tuesday, November 21, 2017 12:00 AM +0530  

பாடல் - 3

கரைகொள் பைம்பொழில், தண்பணைத்
           தொலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு
உரைகொள் இன்மொழியாளை நீர் உமக்கு
          ஆசைஇன்றி அகற்றினீர்,
திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும், திசை
         ஞாலம் தாவி அளந்ததும்,
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடும்கண்
         நீர் மல்க நிற்குமே.

ஆற்றங்கரைமுழுக்கப் பசுமையான சோலைகள், குளிர்ந்த மருதநில வயல்கள் நிறைந்துள்ள திருநகரம் தொலைவில்லிமங்கலம், நீங்கள் அங்கே வந்து, இனிமையான சொற்களைப் பேசும் இந்தப் பெண்ணை உங்களுக்கு விருப்பமில்லாதபடி எம்பெருமானுக்கு விட்டுக்கொடுத்துவிட்டீர்கள், இதோ பாருங்கள், அலைகள் வீசும் பாற்கடலிலே அப்பெருமான் பள்ளிகொண்டதையும், திசைகளோடு கூடிய உலகம்முழுவதையும் தாவி அளந்ததையும், பசுக்கூட்டங்களை மேய்த்ததையும் பிதற்றிக்கொண்டு, நீண்ட கண்களிலே நீர் மல்க இவள் நிற்கிறாள்.

***

பாடல் - 4

நிற்கும் நால்மறைவாணர் வாழ்
             தொலைவில்லிமங்கலம் கண்டபின்
அற்கம் ஒன்றும் அற உறாள், மலிந்தாள்,
             கண்டீர் அன்னைமீர்,
கற்கும் கல்வி எல்லாம் கரும்கடல்வண்ணன்,
             கண்ணபிரான் என்றே
ஒற்கம் ஒன்றும் இலள், உகந்து உகந்து
            உள்மகிழ்ந்து குழையுமே.

தாய்மார்களே, நிலைத்துநிற்கும் நான்கு வேதங்களிலே வல்லவர்கள் வாழ்கின்ற திருநகரம் தொலைவில்லிமங்கலம், அந்நகரைக் கண்டபிறகு, இவளுடைய அடக்கம் என்கிற குணம் சென்றுவிட்டது, உங்களை மீறி ஏதேதோ
செய்கிறாள், பாருங்கள், கற்கும் கல்வியெல்லாம் கரும்கடல்வண்ணனாகிய அந்தப் பெருமான்தான், கண்ணபிரான்தான் என்று இவள் சொல்கிறாள், தளர்ச்சியில்லாமல் அப்பெருமானை வேண்டுகிறாள், மனத்துக்குள் மகிழ்ந்து, மகிழ்ந்து குழைகிறாள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/nov/21/ஆறாம்-பத்து-ஐந்தாம்-திருவாய்மொழி---பாடல்-3-4-2810500.html
2810480 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 1, 2 சொ. மணியன் DIN Monday, November 20, 2017 12:00 AM +0530  

பாடல் - 1

துவள்இல் மாமணிமாடம் ஓங்கு
                       தொலைவில்லிமங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர், உமக்கு ஆசை
                      இல்லை, விடுமினோ,
தவள ஒண் சங்கு, சக்கரம் என்றும், தாமரைத்
                      தடம்கண் என்றும்
குவளை ஒண்மலர்க்கண்கள் நீர் மல்க நின்று
                     நின்று குமுறுமே.

தாய்மார்களே, குற்றமற்ற, பெரிய மணிகள் பதிக்கப்பட்ட மாடங்கள் உயர்ந்து விளங்குகிற நகரம், தொலைவில்லிமங்கலம் எனும் திருத்தலம், அங்கே எழுந்தருளியுள்ள எம்பெருமானை இவள் தொழுகிறாள், இனி இவளுக்கு வேறு விஷயங்களில் விருப்பம் இருக்காது, அவளை மீட்கலாம் என்று நீங்கள் ஆசைப்படுவது நடக்காது, அவளை அவள் போக்கில் விட்டுவிடுங்கள்,  இதோ பாருங்கள், எம்பெருமானின் வெண்ணிறமான, ஒளிவீசும் சங்கு, சக்கரத்தைப்பற்றியும், தாமரைபோன்ற பெரிய திருக்கண்களைப்பற்றியும் அவள் வாய்விட்டுப் புலம்புகிறாள், குவளைமலர்போன்ற தன்னுடைய ஒளிவீசும் கண்களில் நீர் மல்க நின்று குமுறுகிறாள்.

***

பாடல் - 2

குமுறும் ஓசை, விழவு ஒலித்
                     தொலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு
அமுத மென்மொழியாளை நீர் உமக்கு
                     ஆசைஇன்றி அகற்றினீர்,
திமிர்கொண்டால் ஒத்துநிற்கும் மற்று இவள்,
                     தேவதேவபிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக்கு
                    ஒசிந்து கரையுமே.

ஊர்முழுக்கப் பலவிதமான ஓசைகள், விழாக்களின் ஒலிகள் கேட்கிற தொலைவில்லிமங்கலத்துக்கு உங்கள் மகளை அழைத்துச்சென்றீர்கள், அமுதம்போன்ற மென்மையான சொற்களைப் பேசும் இந்தப்பெண்ணை உங்களுக்கு விருப்பமில்லாதபடி.  எம்பெருமானுக்கு விட்டுக்கொடுத்துவிட்டீர்கள், இதோ பாருங்கள், பெருமான்முன்னே இவள் உறைந்து நிற்கிறாள், செய்வதறியாது திகைக்கிறாள், ‘தேவதேவபிரான்’ என்று இவளுடைய வாய் நெளிகிறது, கண்களில் நீர் மல்குகிறது, நெகிழ்ந்து, ஒசிந்து, கரைகிறாள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/nov/20/ஆறாம்-பத்து-ஐந்தாம்-திருவாய்மொழி---பாடல்-1-2-2810480.html
2810477 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 11 சொ. மணியன் Sunday, November 19, 2017 12:00 AM +0530  

பாடல் - 11

நாயகன் முழு ஏழ் உலகுக்குமாய், முழு ஏழ் உலகும் தன்
வாய் அகம் புக வைத்து, உமிழ்ந்து, அவையாய், அவை அல்லலும் ஆம்
கேசவன் அடி இணைமிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தூய ஆயிரத்து இப்பத்தால் பத்தர் ஆவர் துவள் இன்றியே.

ஏழு உலகங்களுக்கும் நாயகன், பிரளயத்தின்போது ஏழு உலகங்களையும் வாயில் புகவைத்து, (வயிற்றில்) பத்திரப்படுத்தி வைத்து, பின்னர் அவற்றை உமிழ்ந்தவன், அந்த உலகங்களில் உள்ள அனைத்துமாகவும், அவை அல்லாதவனாகவும் திகழ்கிறவன், எம்பெருமான், அத்தகைய கேசவனின் திருவடிகளை வணங்கி, குருகூர்ச் சடகோபன் தூய ஆயிரம் திருப்பாடல்களைப் பாடினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் பாடுகிறவர்கள் குற்றமில்லாத பக்தர்களாக ஆவார்கள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/nov/19/ஆறாம்-பத்து-நான்காம்-திருவாய்மொழி---பாடல்-11-2810477.html
2810427 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 9, 10 சொ. மணியன் Saturday, November 18, 2017 10:19 AM +0530  

பாடல் - 9

கலக்க ஏழ்கடல், ஏழ்மலை, உலகு ஏழும் கழியக் கடாய்
உலகத்தேர் கொடுசென்ற மாயமும் உட்பட மற்றும் பல
வலக்கை ஆழி, இடக்கைச் சங்கம் இவை உடை
                                                                      மால்வண்ணனை
மலக்கு நா உடையேற்கு மாறு உளதோ
                                                                     இம்மண்ணின்மிசையே?

ஏழு கடல்களும், ஏழு மலைகளும், ஏழு உலகங்களும் கலங்கும்படி உலகைக் கடந்து தேரோட்டியவன் எம்பெருமான், இவ்வாறு அவன் இன்னும் பல மாயச்செயல்களைப் புரிந்துள்ளான், வலக்கையில் சக்ராயுதம், இடக்கையில் திருச்சங்கு ஆகியவற்றைக்கொண்ட அந்த மால்வண்ணனைப் பாடும் பாக்கியம் என்னுடைய நாவுக்குக் கிடைத்துள்ளது, அந்த அற்பமான நாக்கு அதற்கு என்ன பேறு செய்ததோ! இந்த உலகில் அதற்கு இணையாக யாருண்டு? (யாருமில்லை.)

***

பாடல் - 10

மண்மிசைப் பெரும் பாரம் நீங்க ஓர் பாரத
                                                          மாபெரும் போர்
பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட
                                                         நூற்றிட்டுப் போய்
விண்மிசைத் தன தாமமே புக மேவிய
                                                        சோதிதன் தாள்
நண்ணி நான் வணங்கப்பெற்றேன், எனக்கு
                                                       ஆர் பிறர் நாயகரே?

மண்ணின் பெரிய பாரம் நீங்குவதற்காக, பாரதப்போர் என்னும் மிகப்பெரிய போரை உண்டாக்கி, அதிலே பல மாயங்கள் செய்து, கௌரவர்களின் சேனை பாழாகும்படி அவர்களைக் கொன்றான், பரமபதத்திலே எழுந்தருளினான், சோதிவடிவான அந்தப் பெருமானின் திருவடிகளை அடைந்து, வணங்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. என்னைவிடச் சிறந்தவர்கள் யார்? (யாருமில்லை.)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/nov/18/ஆறாம்-பத்து-நான்காம்-திருவாய்மொழி---பாடல்-9-10-2810427.html
2809727 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 7, 8 சொ. மணியன் Friday, November 17, 2017 09:51 AM +0530  

பாடல் - 7

மனப் பரிப்போடு அழுக்கு மானிட சாதியில்
                                                                தான் பிறந்து
தனக்கு வேண்டு உருக்கொண்டு தான் தன
                                                               சீற்றத்தினை முடிக்கும்
புனத்துழாய் முடிமாலை மார்பன், என்
                                                              அப்பன்தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சு உடையேன், எனக்கு இனி
                                                             யார் நிகர் நீள் நிலத்தே.

தன் பக்தர்கள் அடையும் துயரங்களைக்கண்டு மனம் வருந்திய எம்பெருமான், அவர்களுக்காக அழுக்கு மானிட சாதியில் வந்து பிறந்தான், தான் விரும்பும் உருவத்தைப் பெற்றான், பக்தர்களைத் துன்புறுத்துவோரை அழித்தான், அதன்மூலம் தன்னுடைய கோபத்தைத் தணித்துக்கொண்டான், அத்தகைய பெருமான், புனத்திலே விளைந்த திருத்துளசியைத் திருமுடியிலே, திருமார்பிலே
மாலையாக அணிந்தவன், என் அப்பன், அவனுடைய மாயங்களையே நான் நெஞ்சால் நினைக்கிறேன். இந்த நீண்ட உலகத்திலே இனி எனக்கு நிகர் யார்?

***

பாடல் - 8

நீள் நிலத்தொடு வான் வியப்ப நிறை பெரும்
                                                                    போர்கள் செய்து
வாணன் ஆயிரம் தோள் துணித்ததும் உட்பட
                                                                    மற்றும் பல
மாணியாய் நிலம் கொண்ட மாயன், என்
                                                                   அப்பன்தன் மாயங்களே
காணும் நெஞ்சு உடையேன், எனக்கு இனி என்ன
                                                                  கலக்கம் உண்டே?

எம்பெருமான் வாமனனாக அவதாரம் எடுத்து மாவலியிடம் நிலத்தைப் பெற்றான், அத்தகைய என் அப்பன், நீண்ட நிலத்தில் வாழ்கிறவர்களும், வானுலகில் வாழ்கிறவர்களும் வியக்கும்படி பெரிய போரைச் செய்து வாணாசுரனின் ஆயிரம் தோள்களைத் துண்டித்தான், இவ்வாறு அவன் செய்த மற்ற பல மாயங்களையே காணும் நெஞ்சு எனக்கு வாய்த்திருக்கிறது, இனி எனக்கு என்ன கலக்கம்? (ஏதுமில்லை.)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/nov/17/ஆறாம்-பத்து-நான்காம்-திருவாய்மொழி---பாடல்-7-8-2809727.html
2809043 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 5, 6 சொ. மணியன் Thursday, November 16, 2017 09:29 AM +0530  

பாடல் - 5

வேண்டித் தேவர் இரக்க வந்துபிறந்ததும், வீங்கு
                                                           இருள்வாய்ப்
பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கு ஓர்
                                                          ஆய்க்குலம் புக்கதும்,
காண்டல்இன்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்ச
                                                         வஞ்சம்செய்ததும்
ஈண்டு நான் அலற்றப்பெற்றேன், எனக்கு என்ன
                                                        இகல் உள்ளதே?

(எம்பெருமான் உலகைக் காக்க அவதாரம் எடுக்கவேண்டும் என்று) தேவர்கள் வேண்டி இரக்க, கண்ணன் இங்கே வந்து பிறந்தான், (அவனுக்குக் கம்சனால் என்ன கெடுதல் நேருமோ என்று) அவனுடைய அன்னை தேவகி அவனைக் கட்டிக்கொண்டு புலம்பினாள், மிகுந்த இருளிலே அவன் அங்கிருந்து ஆயர்பாடிக்குச் சென்றான், அங்கே கம்சனுக்குத் தெரியாதவண்ணம் வளர்ந்தான், கம்சன் இறக்கும்படி வஞ்சனைசெய்தான், இவற்றையெல்லாம் இன்று நான் சொல்லி அலற்றுகிறேன், எனக்கு யார் விரோதிகள்? (யாருமில்லை.)

***

பாடல் - 6

இகல்கொள் புள்ளைப் பிளந்ததும், இமில் ஏறுகள்
                                                                                செற்றதுவும்,
உயர்கொள் சோலைக் குருந்து ஒசித்ததும் உட்பட
                                                                               மற்றும் பல
அகல்கொள் வையம் அளந்த மாயன், என் அப்பன்தன்
                                                                              மாயங்களே
பகல், இராப் பரவப்பெற்றேன் எனக்கு என்ன மனப்
                                                                              பரிப்பே?

பகைமையோடு வந்த பகாசுரன் என்ற பறவையின் வாயைப் பிளந்தான் கண்ணன், திமில்களையுடைய ஏழு காளைகளை வென்றான், உயர்ந்த சோலையிலே வளர்ந்திருந்த குருந்தமரத்தை முறித்தான், அகன்ற உலகத்தை அளந்த மாயன், என் அப்பன் இவ்வாறு இன்னும் பல மாயங்களைச் செய்துள்ளான், அந்த மாயங்களையெல்லாம் நான் இரவும் பகலும் சொல்லித் துதிக்கிறேன், என் மனத்தில் என்ன துக்கம் இருக்கிறது? (ஏதுமில்லை.)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/nov/16/ஆறாம்-பத்து-நான்காம்-திருவாய்மொழி---பாடல்-5-6-2809043.html
2808356 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 3, 4 சொ. மணியன் DIN Wednesday, November 15, 2017 08:59 AM +0530 பாடல் - 3

நிகர் இல் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும்
                                                                         நீள் நெடும்கைச்
சிகர மா களிறு அட்டதும் இவைபோல்வனவும்
                                                                         பிறவும்
புகர்கொள் சோதிப்பிரான்தன் செய்கை நினைந்து
                                                                         புலம்பி என்றும்
நுகர வைகல் வைகப்பெற்றேன் எனக்கு என்
                                                                         இனி நோவதுவே?

எம்பெருமான் ஒப்பற்ற மல்லர்களை வென்றான், பசுக்கூட்டங்களை மேய்த்தான், நீண்ட கைகளைக்கொண்ட, சிகரம்போன்ற, பெரிய குவலயாபீடம் என்ற யானையை வென்றான், இன்னும் பல திருச்செயல்களைச் செய்தான், மிகுந்த ஒளிமயமான அந்தப் பெருமானின் திருச்செயல்களை நாள்தோறும் எண்ணுகிறேன், புலம்புகிறேன், பக்தியை அனுபவிக்கிறேன், எனக்கு இனி என்ன வருத்தம்? (ஏதுமில்லை.)

***

பாடல் - 4

நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க இரங்கிற்றும்,
                                                          வஞ்சப் பெண்ணைச்
சாவப் பால் உண்டதும், ஊர் சகடம் இறச் சாடியதும்,
தேவக் கோலப்பிரான்தன் செய்கை நினைந்து மனம்
                                                         குழைந்து
மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி
                                                         வேண்டுவதே?

யசோதைப்பிராட்டி கண்ணனை உரலோடு சேர்த்து இழுத்துக் கட்ட, அப்போது உடல் வருந்தி அழுதான் அவன், வஞ்சகமாக வந்த பூதனை என்கிற பெண் சாகும்படி அவளுடைய பாலை உண்டான், சக்கரமாக ஊர்ந்துவந்த சகடாசுரன் இறக்கும்படி உதைத்தான், அழகிய தேவர்பெருமானான அப்பிரானின் செயல்களை நினைத்து, மனம் குழைந்து வாழும் வாழ்க்கை எனக்கு அமைந்திருக்கிறது. இனி எனக்கு வேறென்ன வேண்டும்?

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/nov/15/ஆறாம்-பத்து-நான்காம்-திருவாய்மொழி---பாடல்-3-4-2808356.html
2808350 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 1, 2 சொ. மணியன் Tuesday, November 14, 2017 12:00 AM +0530  

பாடல் - 1

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும், குன்றம்
                                                           ஒன்று ஏந்தியதும்,
உரவுநீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும் உள்பட
                                                           மற்றும் பல
அரவில் பள்ளிப்பிரான்தன் மாய வினைகளையே
                                                           அலற்றி
இரவும் நல்பகலும் தவிர்கிலன், என்ன குறைவு
                                                           எனக்கே?

ஆதிசேஷனாகிய பாம்புப்படுக்கையிலே துயில்கொள்ளும் பெருமான், ஆய்ச்சியரோடு சேர்ந்து குரவைக்கூத்து ஆடினான், கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தான், வலிய தண்ணீரிலே இருந்த காளிங்கன் என்னும் பாம்பைக் கோபித்தான், இதுபோன்ற மற்ற பல மாயச்செயல்களைச் செய்தான், இரவிலும் நல்ல பகலிலும் நான் அப்பெருமானின் மாயச்செயல்களையே சொல்லி அலற்றுகிறேன். எனக்கு என்ன குறை? (ஏதுமில்லை.)

***

பாடல் - 2

கேயத் தீங்குழல் ஊதிற்றும், நிரை மேய்த்ததும்,
                                                           கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும்,
                                                           மற்றும் பல
மாயக் கோலப்பிரான்தன் செய்கை நினைந்து,
                                                           மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்தபோது எனக்கு எவ் உலகம் நிகரே.

இனிய புல்லாங்குழலிலே பாடல்களை ஊதினான் எம்பெருமான், பசுக்கூட்டங்களை மேய்த்தான், கெண்டைபோன்ற ஒளிவீசும் கண்களைக்கொண்ட, நறுமணம் வீசும் கூந்தலைக்கொண்ட நப்பின்னையின் தோள்களை அணைத்தான், மாயனாகிய அழகிய எம்பெருமான் இப்படி இன்னும் பல திருச்செயல்களைச் செய்கிறான், அவற்றை நினைத்து, மனம் குழைந்து, அன்போடு நான் வாழ்கிறேன், ஆகவே, எனக்கு எந்த உலகம் ஒப்பாகும்?

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/nov/14/ஆறாம்-பத்து-நான்காம்-திருவாய்மொழி---பாடல்-1-2-2808350.html
2807030 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 11 சொ. மணியன் DIN Monday, November 13, 2017 12:00 AM +0530  

பாடல் - 11

காண்மின்கள் உலகீர் என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாள் இணையன்தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க்கு என்றும் ஆவர் குரவர்களே

'உலகத்தவர்களே, பாருங்கள்' என்று கண்முன்னே நிமிர்ந்து உலகை அளந்த திருவடிகளைக்கொண்டவன் எம்பெருமான், அத்தகைய பெருமானைக் குருகூர்ச் சடகோபன் ஆயிரம் திருப்பாடல்களில் பாடினார், அவை பெருமானின் ஆணைகளே ஆகும், அவற்றுள் திருவிண்ணகரைப்பற்றிய இந்தப் பத்து பாடல்களையும் பாட வல்லவர்கள் குற்றமில்லாதபடி விண்ணோர்களால் மதிக்கப்படுவார்கள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/nov/13/ஆறாம்-பத்து-மூன்றாம்-திருவாய்மொழி---பாடல்-11-2807030.html
2807029 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 9, 10 சொ. மணியன் DIN Sunday, November 12, 2017 12:00 AM +0530  

பாடல் - 9

என் அப்பன் எனக்காய், இகுளாய், என்னைப் பெற்றவளாய்,
பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என் அப்பனுமாய்,
மின்னப் பொன்மதிள்சூழ் திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்,
தன் ஒப்பார் இல் அப்பன் தந்தனன் தன தாள் நிழலே.

என் தந்தை, தோழி, என்னைப் பெற்ற தாய், பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், அனைத்தும் எம்பெருமானே, ஒளிவீசும் அழகிய மதிள்சுவர்களால் சூழப்பட்ட திருவிண்ணகரிலே எழுந்தருளியிருக்கும் அப்பன், தனக்கு ஒப்பாக யாரும் இல்லாத அப்பன் எனக்குத் தன்னுடைய திருவடி நிழலைத் தந்தான்.

***

பாடல் - 10

நிழல், வெய்யில், சிறுமை, பெருமை, குறுமை,
                                                                   நெடுமையாய்ச்
சுழல்வன, நிற்பன, மற்றுமாய், அவை அல்லனுமாய்,
மழலைவாய் வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னுபிரான்
கழல்கள் அன்றி மற்று ஓர் களைகண் இலம், காண்மின்களே.

நிழல், வெய்யில், சிறுமை, பெருமை, குறுகுதல், நீள்தல், அசையும் பொருள்கள்,
அசையாப்பொருள்கள், மற்றவை, அவை அல்லாதவை என அனைத்தும் எம்பெருமானே, இளைய, இனிய பாடலைப் பாடும் வண்டுகள் வாழும் திருவிண்ணகரிலே எழுந்தருளியிருக்கும் பெருமானுடைய திருவடிகளையன்றி நமக்கு இன்னொரு பற்றுக்கோடு இல்லை, காணுங்கள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/nov/12/ஆறாம்-பத்து-மூன்றாம்-திருவாய்மொழி---பாடல்-9-10-2807029.html
2807028 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 7, 8 சொ. மணியன் DIN Saturday, November 11, 2017 12:00 AM +0530  

பாடல் - 7

பரம்சுடர் உடம்பாய், அழுக்குப் பதித்த உடம்பாய்,
கரந்தும், தோன்றியும், நின்றும், கைதவங்கள் செய்தும்,
                                                                              விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
வரம்கொள் பாதம்அல்லால் இல்லை யாவர்க்கும்
                                                                              வல்சரணே.

உயர்ந்த, சுடர்வடிவான உடம்பாகவும், அழுக்கான பிற உடம்புகளாகவும் இருப்பவன் அவனே, மறைந்தும், தோன்றியும், நின்றும், வஞ்சனைகள் செய்தும் பலவிதமாக இயங்குகிறவன், விண்ணோர் தலைவணங்குகிற திருவிண்ணகரிலே எழுந்தருளியிருக்கும் அப்பெருமானின் வரம் தரும் திருவடிகளையன்றி, நமக்கெல்லாம் சிறந்த புகலிடம் வேறேதும் இல்லை.

***

பாடல் - 8

வல் சரண் சுரர்க்காய், அசுரர்க்கு வெம்கூற்றமுமாய்த்
தன் சரண் நிழற்கீழ் உலகம் வைத்தும் வையாதும்
தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
என் சரண், என் கண்ணன், என்னை ஆளுடை என் அப்பனே.

தேவர்களுக்கு வலிமையான புகலிடமாக இருப்பவன் அவனே, அசுரர்களுக்கு வெம்மையான எமனாக இருப்பவனும் அவனே, தன்னுடைய திருவடி நிழலிலே உலகங்களை வைக்கிறான், பிழை செய்வோரை அவ்வாறு வைக்காமல் தண்டிக்கிறான், தெற்குத்திசைக்குப் புகலிடமான திருவிண்ணகரிலே எழுந்தருளியிருக்கும் அப்பெருமான்தான் என் புகலிடம், என் கண்ணன், என்னை ஆளும் என் அப்பன்.
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/nov/11/ஆறாம்-பத்து-மூன்றாம்-திருவாய்மொழி---பாடல்-7-8-2807028.html
2807026 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 5, 6 சொ. மணியன் DIN Friday, November 10, 2017 12:00 AM +0530  

பாடல் - 5

கைதவம், செம்மை, கருமை, வெளுமையுமாய்
மெய், பொய், இளமை, முதுமை, புதுமை, பழமையுமாய்ச்
செய்த திண்மதிள்சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
பெய்த காவு கண்டீர் பெரும் தே உடை மூ உலகே.

வலிமையான மதில் சுவரால் சூழப்பட்ட திருவிண்ணகரில் எழுந்தருளியிருக்கும் பெருமான், வஞ்சனை, நேர்மை, கருமை, வெளுமை, உண்மை, பொய், இளமை, முதுமை, புதுமை, பழமை ஆகியவற்றைச் சேர்த்துச் செய்த சோலைதான் இந்த மூன்று உலகங்களும். பெரிய தெய்வங்களைக்கொண்ட இந்த உலகங்கள், அவனுடைய படைப்பு.

***

பாடல் - 6

மூ உலகங்களுமாய், அல்லனாய், உகப்பாய், முனிவாய்,
பூவில் வாழ் மகளாய், தவ்வையாய், புகழாய், பழியாய்த்
தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரம்சுடரே.

மூன்று உலகங்களும் அவனே, அவை அல்லாத பரமபதமாக இருப்பவனும் அவனே, மகிழ்ச்சி, கோபம் இரண்டும் அவனே, பூவில் வாழும் திருமகள் (ஶ்ரீதேவி), மூதேவி இரண்டும் அவனே, புகழும் அவனே, பழியும் அவனே, தேவர்கள் வந்து தொழுகின்ற திருவிண்ணகரிலே எழுந்தருளியிருக்கும் அத்தகைய எம்பெருமான், பாவியாகிய என்னுடைய மனத்திலும் உறைகிற பரம்சுடராகத் திகழ்கிறான்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/nov/10/ஆறாம்-பத்து-மூன்றாம்-திருவாய்மொழி---பாடல்-5-6-2807026.html
2807025 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 3, 4 சொ. மணியன் DIN Thursday, November 9, 2017 12:00 AM +0530 பாடல் - 3

நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்,
நிகர்இல் சூழ்சுடராய், இருளாய், நிலனாய்,
                                                                   விசும்பாய்ச்
சிகர மாடங்கள்சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
புகர்கொள் கீர்த்திஅல்லால் இல்லை யாவர்க்கும்
                                                                  புண்ணியமே.

நகரங்களில் வாழ்பவர்கள், நாட்டுப்பகுதிகளில் வாழ்பவர்கள், அவர்களூடைய ஞானம், மூடத்தனம், சூழ்ந்திருக்கும் நிகரில்லாத சுடர், இருள், நிலம், வானம் என அனைத்தும் எம்பெருமானே, உயரமான மாடங்களால் சூழப்பட்ட திருவிண்ணகரிலே எழுந்தருளியிருக்கும் பெருமானுடைய ஒளிநிறைந்த புகழைப் பாடுவோம், நாம் பிழைப்பதற்கு ஏற்ற புண்ணியம் அதுவே, வேறு ஏதும்
இல்லை.

***

பாடல் - 4

புண்ணியம், பாவம், புணர்ச்சி, பிரிவு என்று
                                                                        இவையாய்,
எண்ணமாய், மறப்பாய், உண்மையாய், இன்மையாய்,
                                                                        அல்லனாய்,
திண்ணமாடங்கள்சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
கண்ணன் இன் அருளே கண்டுகொண்மின்கள் கைதவமே.

புண்ணியம், பாவம், இணைதல், பிரிதல் போன்றவையாகவும், நினைப்பதாக, மறப்பதாக, உண்மையாக, இன்மையாகவும், கர்மங்களுக்குக் கட்டுப்படாதவனாகவும் திகழ்கிறவன் எம்பெருமான், வலுவான மாடங்களால் சூழப்பட்ட திருவிண்ணகரிலே எழுந்தருளியிருக்கும் பெருமான், அந்தக் கண்ணனின் இனிய திருவருளைக் கண்டுகொள்ளுங்கள், இது பொய்யல்ல, உண்மை.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/nov/09/ஆறாம்-பத்து-மூன்றாம்-திருவாய்மொழி---பாடல்-3-4-2807025.html
2807024 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 1, 2 சொ. மணியன் Wednesday, November 8, 2017 12:00 AM +0530  

பாடல் - 1

நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்,
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல்வகையும் பரந்தபெருமான், என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே.

வறுமையும் அவனே, செல்வமும் அவனே, நரகமும் அவனே, சுவர்க்கமும் அவனே, வெல்லவேண்டிய பகையும் அவனே, நட்பும் அவனே, விடமும் அவனே, அமுதமும் அவனே, இப்படிப் பலவகையாகப் பரந்திருக்கிற பெருமான், என்னை ஆள்கிறவன், அத்திருமாலைச் செல்வம் சிறந்துவிளங்கும் குடும்பங்கள் நிறைந்த திருவிண்ணகரிலே நான் கண்டேன்.

***

பாடல் - 2

கண்ட இன்பம், துன்பம், கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டுகோடற்கு அரிய பெருமான், என்னை ஆள்வான் ஊர்,
தெண்திரைப் புனல்சூழ் திருவிண்ணகர் நல் நகரே.

காணுகின்ற இன்பம், துன்பம், கலக்கங்கள், தெளிவு, கோபம், இரக்கம், நெருப்பு, நிழல் என அனைத்துமாகத் திகழும் பெருமான், காண அரியவன், என்னை ஆள்பவன், அத்திருமாலின் ஊர், தெளிவான அலைகளைக்கொண்ட நீரால் சூழப்பட்ட திருவிண்ணகர் என்னும் நல்ல நகரம்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/nov/08/ஆறாம்-பத்து-மூன்றாம்-திருவாய்மொழி---பாடல்-1-2-2807024.html
2801660 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 11 சொ. மணியன் DIN Tuesday, November 7, 2017 12:00 AM +0530  

பாடல் - 11

ஆய்ச்சி ஆகிய அன்னையால் அன்று வெண்ணெய்
                                 வார்த்தையுள் சீற்றம் உண்டு அழு
கூத்த அப்பன்தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏத்திய தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும்
                                ஓர் பத்து இசையொடும்
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே.

கண்ணன் அன்று வெண்ணெயைக் களவாடினான், அதனால், ஆய்ச்சியாகிய அவனுடைய அன்னை கோபம்கொள்ள, அவன் அழுதான், அத்தகைய கூத்தினை நிகழ்த்துகிற அப்பனை, குருகூர்ச் சடகோபன் ஆயிரம் தமிழ்ப்பாடல்களால் போற்றிப் பாமாலை சூட்டினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் இசையோடு நாவால் விருப்பத்துடன் உரைப்பவர்களுக்குக் கடவுள் அனுபவத்தில் வறுமை இல்லை.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/nov/07/ஆறாம்-பத்து-இரண்டாம்-திருவாய்மொழி---பாடல்-11-2801660.html
2801659 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 9, 10 சொ. மணியன் DIN Monday, November 6, 2017 12:00 AM +0530  

பாடல் - 9

உகவையால் நெஞ்சம் உள் உருக்கி உன்
                          தாமரைத் தடம்கண் விழிகளின்
அகவலைப்படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்,
தகவு செய்திலை, எங்கள் சிற்றிலும் யாம்
                         அடு சிறுசோறும் கண்டு, நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.

(ஒரு சிறுமி கண்ணனிடம் பேசுகிறாள்) பெருமானே, நாங்கள் மணலில் சிறு வீடுகட்டி விளையாடுகிறோம், அங்கே சிறுசோறு சமைத்து விளையாடுகிறோம், இவற்றைப்பார்த்து நீ உன்னுடைய திருமுகத்தில் ஒளி திகழும்படி புன்முறுவல் செய்யவில்லை, உன்னுடைய திருவடியாலே அவற்றைச் சிதைத்தாய், நாங்கள் மகிழ்ச்சியால் உள்ளே உருகி, உன்னுடைய தாமரைபோன்ற பெரிய கண்களின் உள்வலையிலே அகப்படும்படி செய்தாய், இது உனக்குத் தகுதியான செயலா?

***

பாடல் - 10

நின்று இலங்கு முடியாய், இருபத்துஓர்கால்
                                                             அரசுகளை கட்ட
வென்றி நீள் மழுவா, வியன் ஞாலம் முன் படைத்தாய்,
இன்று இவ் ஆயர் குலத்தை வீடு உய்யத் தோன்றிய
                                                            கருமாணிக்கச்சுடர்,
நின்தன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சி யாமே.

(ஒரு சிறுமி கண்ணனிடம் பேசுகிறாள்) நிலைபெற்றுத் திகழும் திருமுடியைக்கொண்டவனே, இருபத்தொரு தலைமுறை அரசர்களைக் குலத்தோடு அழித்த, வெற்றியுடைய, நீண்ட மழு என்னும் ஆயுதத்தைக் கொண்டவனே, பெரிய உலகத்தை முன்பு படைத்தவனே, இன்று இந்த ஆயர் குலம் வீடுபேறு பெறுவதற்காகத் தோன்றிய கருமாணிக்கச்சுடரே, ஆய்ச்சியராகிய நாங்கள் என்றைக்கும் உன்னாலே துன்பத்தையே அனுபவிக்கிறோம்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/nov/06/ஆறாம்-பத்து-இரண்டாம்-திருவாய்மொழி---பாடல்-9-10-2801659.html
2801658 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 7, 8 சொ. மணியன் Sunday, November 5, 2017 12:00 AM +0530  

பாடல் - 7

கன்மம் அன்று எங்கள் கையில் பாவை பறிப்பது,
                                                 கடல் ஞாலம் உண்டிட்ட
நின்மலா, நெடியாய், உனக்கு ஏலும் பிழை பிழையே,
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி,
                                                அதுகேட்கில் என் ஐமார்
தன்மம், பாவம் என்னார், ஒருநான்று தடிபிணக்கே.

(ஒரு சிறுமி கண்ணனிடம் பேசுகிறாள்) பெருமானே, எங்கள் கையில் இருக்கும் பொம்மையைப் பறித்துக்கொள்கிறாயே, இது சரிதானா? பிரளய வெள்ளத்திலே அழுந்துகிற உலகத்தை உண்டு காத்தவனே, குற்றமற்றவனே, நெடியவனே, நீயே செய்தாலும் அது குற்றம்தான், குற்றம்தான், எங்களிடம் நீ ஏதேதோ குறும்பான சொற்களைச் சொல்லி விளையாடுகிறாய். இது எங்கள் அண்ணன்மார் காதில் விழுந்தால் என்ன ஆகும்? தர்மம், பாவம் என்றெல்லாம் அவர்கள் பார்க்கமாட்டார்கள், என்றைக்காவது ஒருநாள் தடியைத் தூக்கிக்கொண்டு சண்டைக்கு வந்துவிடுவார்கள்.

***

பாடல் - 8

பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல்
                                    பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கு இல் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞானமூர்த்தியினாய்,
இணக்கி எம்மை எம் தோழிமார் விளையாடப்
                                   போதுமின் என்னப் போந்தோமை
உணக்கி நீ வளைத்தால் என்சொல்லார் உகவாதவரே?

(ஒரு சிறுமி கண்ணனிடம் பேசுகிறாள்) பெருமானே, உலகத்தை நீ வசப்படுத்தி மறைக்கும்போது, அறிவில்லாத பொருள்களையும், அறிவுள்ள பொருள்களையும் ஒன்றாகச் சேர்க்கிறாய், பின்னர் அவற்றை மீண்டும் படைக்கும்போது, அவற்றுக்கு உரிய பிறவிகளைக் கொடுக்கிறாய், இதன்மூலம் அளவில்லாத புகழ்வெள்ளத்தை நீ பெற்றுள்ளாய், அத்தகைய ஒளிமிகுந்த ஞானமூர்த்தியே, எங்களுடைய தோழிமார் எங்களை விளையாட அழைத்தார்கள், நாங்களும் வந்தோம், இங்கே நீ வந்து எங்களை வளைக்கிறாய், வருத்தமடையச்செய்கிறாய், இது சரியா? வேண்டாதவர்கள் இதைப்பார்த்தால் என்னவெல்லாம் சொல்வார்கள்!

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/nov/05/ஆறாம்-பத்து-இரண்டாம்-திருவாய்மொழி---பாடல்-7-8-2801658.html
2797531 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 5, 6 சொ. மணியன் DIN Saturday, November 4, 2017 12:00 AM +0530  

பாடல் - 5

கழறேல் நம்பி, உன் கைதவம் மண்ணும் விண்ணும்
                                                  நன்கு அறியும், திண்சக்கர
நிழறு தொல்படையாய், உனக்கு ஒன்று உணர்த்துவன்
                                                  நான்,
மழறு தேன்மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம்
                                                 வாடிநிற்க, எம்
குழறு பூவையொடும் கிளியொடும் குழகேலே.

(ஒரு சிறுமி கண்ணனிடம் சொல்கிறாள்) ஆண்களில் சிறந்தவனே, இனி எங்களிடம் ஏதும் பேசாதே, உன்னுடைய வஞ்சனையை இந்த மண்ணும் விண்ணும் நன்றாக அறியும், திடமான, ஒளிவீசும் சக்ராயுதத்தைப் பழமையான ஆயுதமாகக் கொண்டவனே, உனக்கு நான் ஒன்று சொல்கிறேன், நீ இங்கே நின்றுகொண்டு, குழறுகிற பேச்சைக்கொண்ட எங்களுடைய பூவையோடும் கிளியோடும் விளையாடிக்கொண்டிருந்தால், இளமையான, தேன்போன்ற சொற்களைப் பேசுகிற பெண்கள், உன்னுடைய அருளைப் பெறுகிறவர்கள் மனம் வாடி நிற்பார்கள். (ஆகவே, நீ அவர்களிடம் சென்றுவிடு.)

******

பாடல் - 6

குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை
                                           செய்து கன்மம் ஒன்றில்லை,
பழகி யாம் இருப்போம் பரமே இத்திருவருள்கள்?
அழகியார், இவ் உலகு மூன்றுக்கும் தேவிமை
                                           தகுவார் பலர் உளர்,
கழகம் ஏறேல், நம்பி, உனக்கும் இளைதே கன்மமே.

(ஒரு சிறுமி கண்ணனிடம் பேசுகிறாள்) ஆண்களில் சிறந்தவனே, எங்களுடைய மரப்பாவையை எடுத்துக்கொண்டு அதனிடம் பேசுகிறாய், ஏதேதோ குறும்புகளைச் செய்கிறாய், இதனால் உனக்கு என்ன பயன் கிடைத்துவிடும்? உன்னுடைய லீலைகளை நாங்கள் நன்கு அறிவோம். உன் நாடகத்தை நாங்கள் தாங்குவோமா? இந்த மூன்று உலகங்களிலும் சிறந்த அழகிகள், உன் தேவிகளாகக்கூடிய தகுதிகொண்டவர்கள் பலர் உள்ளார்கள், நீ அவர்களிடம் சென்று பழகு, எங்கள்மத்தியில் வராதே, உன்னுடைய பெருமைக்கு இது தகுதியான செயலா?

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/nov/04/ஆறாம்-பத்து-இரண்டாம்-திருவாய்மொழி---பாடல்-5-6-2797531.html
2797529 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 3, 4 சொ. மணியன் DIN Friday, November 3, 2017 12:00 AM +0530  

பாடல் - 3

போய் இருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு
                                                   உரை நம்பீ, நின் செய்ய
வாய் இரும் கனியும் கண்களும் விபரீதம் இந்நாள்,
வேய் இரும் தடம் தோளினார் இத்திருவருள்
                                                  பெறுவார் எவர்கொல்,
மா இரும் கடலைக் கடைந்த பெருமானாலே?

(ஒரு சிறுமி கண்ணனிடம் சொல்கிறாள்) ஆண்களில் சிறந்தவனே, எங்களிடம் பொய்யான காரணங்களைச் சொல்லிச் சமாளிக்காதே, உன் குறும்புத்தனத்தை/வஞ்சகத்தை அறியாதவர்களிடம் சென்று இதையெல்லாம் சொல், (அவர்கள் ஒருவேளை இதையெல்லாம் நம்பக்கூடும், நாங்கள் நம்பாமாட்டோம்.) உன்னுடைய கோவைக்கனி போன்ற சிவந்த திருவாயும் திருக்கண்களும் இன்றைக்கு எங்களுக்குத் துன்பமே தருகின்றன, பெரிய கடலைக் கடைந்த பெருமானே, உன்னுடைய திருத்தோள்களால் அணைக்கப்படுகிற திருவருள் யாருக்குக் கிடைக்கும்? மூங்கில் போன்ற பெரிய தோள்களைக்கொண்ட அந்தப் பெண்களுக்குதானே?

******

பாடல் - 4

ஆலின் நீள் இலை ஏழ் உலகும் உண்டு அன்று
                                       நீ கிடந்தாய், உன் மாயங்கள்
மேலை வானவரும் அறியார், இனி எம்பரமே?
வேலின் நேர் தடம்கண்ணினார் விளையாடு
                                      சூழலைச் சூழவே நின்று
காலிமேய்க்க வல்லாய், எம்மை நீ கழறேலே.

(ஒரு சிறுமி கண்ணனிடம் சொல்கிறாள்) பெருமானே, அன்று ஏழு உலகங்களையும் உண்டுவிட்டு, நீண்ட ஆலிலையிலே கிடந்தாய், உன்னுடைய மாயங்களை மேலுலகத்தில் வாழும் வானவரும் அறியமாட்டார்கள், எங்களால் அறியக்கூடுமோ? வேல்போன்ற பெரிய கண்களைக்கொண்ட பெண்கள் விளையாடும் இடங்களில் நின்று பசுக்களை மேய்க்கிறவனே, எங்களிடம் வஞ்சகமான சொற்களைப் பேசவேண்டாம்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/nov/03/ஆறாம்-பத்து-இரண்டாம்-திருவாய்மொழி---பாடல்-3-4-2797529.html
2797528 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 1, 2 சொ. மணியன் DIN Thursday, November 2, 2017 12:00 AM +0530  

பாடல் - 1

மின் இடை மடவார்கள் நின்னருள் சூடுவார்முன்பு
                                                              நான் அது அஞ்சுவன்
மன் உடை இலங்கை அரண் காய்ந்த மாயவனே,
உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் இனி அது
                                                  கொண்டு செய்குவது என்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ.

(ஒரு சிறுமி கண்ணனிடம் சொல்கிறாள்) ஆண்களில் சிறந்தவனே, இராவணன் ஆண்ட இலங்கையின் மதில் சுவர்களை அழித்த மாயவனே, உன்னுடைய விளையாட்டை நான் அறிவேன், நீ உன் வேலையில் கவனமாக இருப்பாய் என்பதை அறிவேன், மின்னல்போன்ற இடையைக்கொண்ட பெண்களுடன் நீ பழகி, அவர்களுக்கு அருள்செய்வாய், இப்போது நீ என்னுடன் பேசுவதைக் கண்டால், அவர்கள் விரும்பமாட்டார்கள், நீ சற்றே காலந்தாழ்த்தி அங்கே சென்றால் அவர்கள் உன்மேல் வருத்தப்படுவார்கள், அதனால் நீ வருந்துவாய், அதையெண்ணி நான் அஞ்சுகிறேன், பெருமானே, என்னுடைய பந்தையும் அம்மானைக்காயையும் தந்துவிடு, இங்கிருந்து சென்றுவிடு.

******

பாடல் - 2

போகு நம்பீ, உன் தாமரைபுரை கண் இணையும்
                                                      செவ்வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்,
தோகை மாமயிலார்கள் நின் அருள் சூடுவார்
                                               செவி ஓசை வைத்து எழ
ஆகள் போகவிட்டுக் குழல் ஊது போய் இருந்தே.

(ஒரு சிறுமி கண்ணனிடம் சொல்கிறாள்) ஆண்களில் சிறந்தவனே, இங்கே வராதே, போய்விடு, தாமரைபோன்ற உன்னுடைய திருக்கண்களும், சிவந்த வாயின் புன்னகையும் எங்களைத் துன்புறுத்துகின்றன, உன்னை எண்ணி அழிவதற்காகவே நாங்கள் நோன்பிருக்கிறோம், நீ எங்களிடம் வராதே, தோகைமயில்போன்ற அந்தப்பெண்களிடம் செல், அவர்கள் உன்னுடைய அருளைச் சூடிக்கொள்கிறவர்கள், நீ பசுக்களை மேய்க்கும்போது, ‘இந்தப் பசுக்களுக்காகதான் குழலூதுகிறேன்’ என்கிற பாவனையில் குழலை ஊது, அந்த இசையைக் கேட்டதும் அப்பெண்கள் அங்கே வருவார்கள். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/nov/02/ஆறாம்-பத்து-இரண்டாம்-திருவாய்மொழி---பாடல்-1-2-2797528.html
2797527 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 11 சொ. மணியன் DIN Wednesday, November 1, 2017 12:00 AM +0530 பாடல் - 11

மின்கொள்சேர் புரிநூல் குறளாய் அகல்ஞாலம் கொண்ட
வன்கள்வன் அடிமேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவண்வண்டூர்க்கு
இன்கொள் பாடல்வல்லார் மதனர் மின் இடையவர்க்கே.

ஒளியுடைய முப்புரிநூலை அணிந்த வாமனனாக வந்து, அகன்ற உலகத்தைத் தானமாகப் பெற்றவன், வலிமையான கள்ளன், அப்பெருமானின் திருவடிகளை வணங்கிக் குருகூர்ச் சடகோபன் ஆயிரம் பாடல்களை இசையோடு பாடினார், அவற்றில் இந்தப் பத்து இனிமையான பாடல்களும் திருவண்வண்டூரைப்பற்றியவை. இவற்றைச் சொல்லவல்லவர்கள், மின்னல்போன்ற இடையைக்கொண்ட பெண்களுக்கு மன்மதன்போல் ஆவார்கள்.

]]>
http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/nov/01/ஆறாம்-பத்து-முதல்-திருவாய்மொழி---பாடல்-11-2797527.html
2797525 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 9, 10 சொ. மணியன் DIN Tuesday, October 31, 2017 12:00 AM +0530  

பாடல் - 9

அடிகள் கைதொழுது அலர்மேல் அசையும் அன்னங்காள்,
விடிவை சங்குஒலிக்கும் திருவண்வண்டூர் உறையும்
கடிய மாயன்தனை, கண்ணனை, நெடுமாலைக் கண்டு
கொடிய வல்வினையேன் திறம் கூறுமின் வேறுகொண்டே.

(இறைவன்மீது காதல்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) தாமரையில் தங்கியிருக்கும் அன்னங்களே, விடியலைக் குறிக்கும் சங்குகள் ஒலிக்கின்ற திருவண்வண்டூரிலே எழுந்தருளியிருப்பவன், கடுமையான மாயச்செயல்களைப் புரிகிறவன், கண்ணன், நெடுமால், அப்பெருமானைக் காணுங்கள், கைகூப்பி வணங்குங்கள், அவர் தனியாக இருக்கும்போது, கொடிய, வலிமையான வினைகளைச் செய்தவளான என்னுடைய தன்மையை அவருக்குச் சொல்லுங்கள்.

******

பாடல் - 10

வேறுகொண்டு உம்மை யான் இரந்தேன்,
                                                                      வெறிவண்டினங்காள்,
தேறு நீர்ப்பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்
மாறு இல் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்று உகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளல் என்மின்களே.

(இறைவன்மீது காதல்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) வாசனைமிக்க வண்டுக்கூட்டங்களே, உங்களிடம் நான் தனியாகக் கெஞ்சிக் கேட்கிறேன், எனக்கு
ஓர் உதவி செய்யுங்கள், தெளிவான நீரைக்கொண்ட பம்பையின் வடகரையில் உள்ள திருவண்வண்டூரிலே எழுந்தருளியிருக்கும் பெருமான், போர் செய்வதில் தனக்கு எதிரிகள் யாரும் இல்லாத அரக்கனான ராவணனின் மதிள்களைப் பொடிப்பொடியாக்கி வென்று மகிழ்ந்தவன், பெரிய வீரனான திருமாலிடம் பேசுங்கள், ‘இப்படி ஒருத்தி உங்களை எண்ணிக்கொண்டிருக்கிறாள்’ என்று அவருக்குச் சொல்லுங்கள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/oct/31/ஆறாம்-பத்து-முதல்-திருவாய்மொழி---பாடல்-9-10-2797525.html
2797524 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 7, 8 சொ. மணியன் DIN Monday, October 30, 2017 12:00 AM +0530  

பாடல் - 7

ஒருவண்ணம் சென்றுபுக்கு எனக்கு ஒன்று உரை
                                                                       ஒண்கிளியே,
செரு ஒண் பூம்பொழில்சூழ் செக்கர் வேலைத்
                                                                       திருவண்வண்டூர்
கருவண்ணம், செய்யவாய், செய்யகண், செய்யகை,
                                                                       செய்யகால்,
செரு ஒண் சக்கரம், சங்கு அடையாளம் திருந்தக்கண்டே.

(இறைவன்மீது காதல்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) அழகிய கிளியே, பலவிதமான, ஒளிவீசும் மலர்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட, செவ்வண்ணம் நிறைந்த கடலைக்கொண்ட திருத்தலம் திருவண்வண்டூர், அங்கே சென்று நீ எம்பெருமானைக் காணவேண்டும், கரியமேனி, சிவந்த வாய், சிவந்த கண், சிவந்த கை, சிவந்த திருவடிகள், போர் செய்யும் ஒளிநிறைந்த சக்ராயுதம், சங்கு ஆகிய அவருடைய அடையாளங்களைச் சரியாகக் கண்டு உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும், பின்னர், அவரிடம் எனக்காக ஒரு வார்த்தை கேட்டுவரவேண்டும்.

******

பாடல் - 8

திருந்தக்கண்டு எனக்கு ஒன்று உரையாய், ஒண் சிறுபூவாய்,
செருந்தி, ஞாழல், மகிழ், புன்னை சூழ் தண்
                                                                                           திருவண்வண்டூர்
பெரும்தண் தாமரைக்கண், பெரு நீள்முடி, நால் தடம்தோள்,
கரும்திண் மாமுகில்போல் திருமேனி அடிகளையே.

(இறைவன்மீது காதல்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) அழகிய, சிறிய, நாகணவாய்ப்பறவையே, செருந்தி, ஞாழல், மகிழம், புன்னை மரங்கள் சூழ்ந்த, குளிர்ந்த திருவண்வண்டூரிலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைப் பார்த்துவா, பெரிய, குளிர்ந்த தாமரைபோன்ற கண்கள், பெரிய, நீண்ட திருமுடி, நான்கு பெரிய திருத்தோள்கள், கருமையான, வலிமையான, பெரிய மேகத்தைப்போன்ற திருமேனிகொண்ட அவரை நன்றாகப் பார், திரும்பிவந்து அவரைப்பற்றி எனக்கு ஒரு வார்த்தை சொல்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/oct/30/ஆறாம்-பத்து-முதல்-திருவாய்மொழி---பாடல்-7-8-2797524.html
2797521 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 5, 6 சொ. மணியன் Sunday, October 29, 2017 12:00 AM +0530  

பாடல் - 5

உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மட அன்னங்காள்,
திணர்த்த வண்டல்கள்மேல் சங்கு சேரும் திருவண்வண்டூர்
புணர்த்த பூந்தண் துழாய்முடி நம்பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே.

(இறைவன்மீது காதல்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) ஊடல்கொள்ளுதல், ஊடலைத்தீர்த்தல் ஆகியவற்றை உணர்ந்து, பிரியாமல் சேர்ந்தே மேய்கிற இளம் அன்னங்களே, கனமான வண்டல்மண்ணின்மேலே சங்குகள் சேர்கிற திருவண்வண்டூரிலே, பூக்கள் நிறைந்த, குளிர்ந்த துளசிமாலையை முடியில் சூடிய நம்பெருமானைக் காணுங்கள், கை கூப்புங்கள், எனக்காகவும் அவனைப் போற்றுங்கள்.

******

பாடல் - 6

போற்றி யான் இரந்தேன், புன்னைமேல் உறை
                                                                                      பூங்குயில்காள்,
சேற்றில் வாளை துள்ளும் திருவண்வண்டூர் உறையும்
ஆற்றல் ஆழி அம்கை அமரர் பெருமானைக் கண்டு
மாற்றம்கொண்டு அருளீர் மையல்தீர்வது ஒரு வண்ணமே.

(இறைவன்மீது காதல்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) புன்னைமரத்தின்மேல் தங்கியிருக்கும் பூங்குயில்களே, உங்களை வாழ்த்திக் கெஞ்சுகிறேன், சேற்றிலே வாளை துள்ளுகிற திருவண்வண்டூரிலே எழுந்தருளியிருக்கும் பெருமான், ஆற்றல் நிறைந்த சக்ராயுதத்தை அழகிய கையில் ஏந்திய அமரர் தலைவன், அவனைக் காணுங்கள், என்னுடைய மயக்கம் தீர்வதற்கான ஒரு வழியைக் கேட்டுவாருங்கள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/oct/29/ஆறாம்-பத்து-முதல்-திருவாய்மொழி---பாடல்-5-6-2797521.html
2797460 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 3, 4 சொ. மணியன் Saturday, October 28, 2017 09:44 AM +0530  

பாடல் - 3

திறங்கள் ஆகி எங்கும் செய்கள் ஊடு உழல் புள் இனங்காள்,
சிறந்த செல்வம் மல்கு திருவண்வண்டூர் உறையும்
கறங்கு சக்கரக் கைக் கனிவாய்ப் பெருமானைக் கண்டு
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே.

(இறைவன்மீது காதல்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) கூட்டமாக வயல்கள்மத்தியில் பறக்கிற பறவைகளே, சிறந்த செல்வம் நிறைந்த திருவண்வண்டூரிலே எழுந்தருளியிருக்கும் இறைவன், சுழன்றுவரும் சக்ராயுதத்தைக் கையில் ஏந்திய கனிவாய்ப் பெருமானைக் காணுங்கள், தரையில் இறங்கி அவனை வணங்குங்கள், என்னுடைய துன்பத்தை அவனுக்குச் சொல்லுங்கள்.

******

பாடல் - 4

இடர் இல் போகம் மூழ்கி இணைந்து ஆடும் மட
                                                                                            அன்னங்காள்,
விடல் இல் வேத ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர்
கடலின் மேனிப்பிரான் கண்ணனை, நெடுமாலைக் கண்டு
உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே.

(இறைவன்மீது காதல்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) பிரியாத போகத்திலே மூழ்கி இணைந்து ஆடுகின்ற இள அன்னங்களே, வேத ஒலி விடாமல் ஒலிக்கிற, குளிர்ந்த திருவண்வண்டூரிலே, கடலின் நிறம்கொண்ட பெருமான், கண்ணன், நெடுமால் எழுந்தருளியிருக்கிறான், அவனைக் காணுங்கள், இங்கே ஒருத்தி அவனையெண்ணி உடல் நொந்து உருகுகிறாள் என்று உணர்த்துங்கள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/oct/28/ஆறாம்-பத்து-முதல்-திருவாய்மொழி---பாடல்-3-4-2797460.html
2796280 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஆறாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 1, 2 சொ. மணியன் Thursday, October 26, 2017 03:09 PM +0530  

பாடல் - 1

வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகு இனங்காள்,
செய்கொள் செந்நெல் உயர் திருவண்வண்டூர் உறையும்
கைகொள் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.

(இறைவன்மீது காதல்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) தினந்தோறும் அழகிய உப்பங்கழிகளில் வந்து மேய்கிற குருகுகளே, வயல்களிலே செந்நெல் உயர்ந்து வளர்கிற திருவண்வண்டூரிலே எம்பெருமான் எழுந்தருளியிருக்கிறான், கையில் சக்ராயுதம் ஏந்திய அந்தக் கனிவாய்ப் பெருமானைக் காணுங்கள், கை கூப்புங்கள், பெரிய தீவினைகளைச் செய்தவளான என்னுடைய காதலை அவனுக்குச் சொல்லுங்கள்.

******

பாடல் - 2

காதல் மென்பெடையோடு உடன்மேயும் கருநாராய்,
வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர்
நாதன், ஞாலம்எல்லாம் உண்ட நம்பெருமானைக் கண்டு
பாதம் கை தொழுது பணிவீர் அடியேன் திறமே.

(இறைவன்மீது காதல்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) தன் துணையாகிய காதல் பேடையோடு சேர்ந்து மேய்கிற அழகிய நாரையே, வேத வேள்வி ஒலி எங்கும் கேட்கிற, குளிர்ந்த திருவண்வண்டூரின் தலைவன், அனைத்து உலகங்களையும் உண்ட நம்பெருமானைக் காணுங்கள், அவனது பாதத்தைத் தொழுங்கள், என்னுடைய நிலைமையை அவனுக்குச் சொல்லுங்கள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/oct/27/ஆறாம்-பத்து-முதல்-திருவாய்மொழி---பாடல்-1-2-2796280.html
2792910 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 11 சொ. மணியன் DIN Thursday, October 26, 2017 12:00 AM +0530  

பாடல் - 11

நாக அணைமிசை நம்பிரான் சரணே சரண்
                                                 நமக்கு என்று நாள்தொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையும்
                                                ஒர்பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ்வு எய்துவர் வைகலுமே.

ஆதிசேஷனாகிய பாம்புப் படுக்கையிலே பள்ளிகொண்டிருக்கும் நம்பிரானின் திருவடிகளே நமக்குச் சரண் என்று நாள்தோறும் ஒரே சிந்தனையோடு வணங்கும் குருகூர்ச் சடகோபன் மாறன், அப்பெருமானைப்பற்றி ஆயிரம் திருப்பாடல்களை அந்தாதியாகப் பாடியுள்ளார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் பாட வல்லவர்கள் விண்ணுக்கும் மேலான வைகுந்தத்தைச் சென்றடைந்து நித்தம் மகிழ்வார்கள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/oct/26/ஐந்தாம்-பத்து-பத்தாம்-திருவாய்மொழி---பாடல்-11-2792910.html
2792909 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 9, 10 சொ. மணியன் DIN Wednesday, October 25, 2017 12:00 AM +0530  

பாடல் - 9

அடியை மூன்றை இரந்தவாறும், அங்கே நின்று
                           ஆழ்கடலும் மண்ணும் விண்ணும்
முடிய ஈர்அடியால் முடித்துக்கொண்ட முக்கியமும்
நொடியுமாறு அவை கேட்குந்தோறும் என் நெஞ்சம்
                          நின்தனக்கே கரைந்து உருகும்,
கொடிய வல்வினையேன் உனை என்றுகொல் கூடுவதே.

எம்பெருமானே, நீ மாவலியிடம் மூன்றடி நிலத்தைப் பெற்ற தன்மையையும், அங்கே நின்று ஆழமான கடல், மண், விண் என அத்தனையையும் இரண்டே அடியால் அளந்துவிட்ட திறமையையும் சொல்லக்கேட்கும்போதெல்லாம், என் நெஞ்சம் உன்னை எண்ணிக் கரைந்து உருகும், கொடிய வல்வினைகளைச் செய்த நான் உன்னை என்று சேர்வேன்?

***

பாடல் - 10

கூடி நீரைக் கடைந்தவாறும், அமுதம் தேவர் உண்ண
                                                                           அசுரரை
வீடும் வண்ணங்களே செய்துபோன வித்தகமும்
ஊடு புக்கு எனது ஆவியை உருக்கி உண்டிடுகின்ற
                                                                          நின்தனை
நாடும்வண்ணம் சொல்லாய் நச்சு நாக அணையானே.

எம்பெருமானே, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தபோது, அதிலிருந்து வந்த அமுதத்தைத் தேவர்கள் உண்ணச்செய்தாய், அசுரர்கள் வீழும்படி செய்தாய், உன்னுடைய இந்த வியப்பான செய்கை எனக்குள் புகுந்து என்னுடைய ஆவியை உருக்கி உண்கிறது, நஞ்சுள்ள நாகத்தைப் படுக்கையாகக் கொண்டவனே, நான் உன்னை நாடுவது எப்படி? சொல்வாய்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/oct/25/ஐந்தாம்-பத்து-பத்தாம்-திருவாய்மொழி---பாடல்-9-10-2792909.html
2792908 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 7, 8 சொ. மணியன் DIN Tuesday, October 24, 2017 12:00 AM +0530  

பாடல் - 7

ஒண்சுடரோடு இருளுமாய் நின்றவாறும், உண்மையோடு
                                                         இன்மையாய் வந்து என்
கண்கொளாவகை நீ கரந்து என்னைச் செய்கின்றன
எண்கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய
                                                         மாணிக்கமே, என் கண்கட்குத்
திண்கொள ஒருநாள் அருளாய் உன் திரு உருவே.

எம்பெருமானே, நீயே ஒளிநிறைந்த சுடராகவும் இருளாகவும் நிற்கிறாய், உண்மையாகவும் இன்மையாகவும் இருக்கிறாய், இவ்வாறு நீ என்னுடைய கண்ணுக்குப் புலப்படாமல் வந்து, மறைந்துநின்று ஏதேதோ செய்கிறாய், அவற்றையெல்லாம் சிந்தையிலே எண்ணி நைந்துபோகின்றேன், என்னுடைய கரிய மாணிக்கமே, ஒருநாள் நான் என் கண்களால் காணும்படி உன்னுடைய திருவுருவைக் காண்பிக்கவேண்டும்.

***

பாடல் - 8

திரு உருவு கிடந்தவாறும், கொப்பூழ்ச் செந்தாமரைமேல்
                                                               திசைமுகன்
கரு உள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்
பொருவில் உன் தனி நாயகம் அவை கேட்குந்தோறும்
                                                              என் நெஞ்சம் நின்று நெக்கு
அருவிசோரும் கண்ணீர், என்செய்கேன் அடியேனே.

எம்பெருமானே, உன்னுடைய திருவுருவம் கிடந்த திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்செய்த தன்மையையும், உனது தொப்புளிலிருந்து எழுந்த செந்தாமரைமேலே தோன்றிய பிரம்மனுக்குள்ளிருந்து நீ இவ்வுலகைப் படைத்த தன்மையையும், இணையற்ற உன்னுடைய தனித்துவமான தலைமைக்குணத்தையும் கேட்கும்போதெல்லாம், என் நெஞ்சம் நெகிழ்கிறது, கண்களில் அருவிபோல் நீர் கொட்டுகிறது, அடியேன் என்னசெய்வேன்?

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/oct/24/ஐந்தாம்-பத்து-பத்தாம்-திருவாய்மொழி---பாடல்-7-8-2792908.html
2792907 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 5, 6 சொ. மணியன் DIN Monday, October 23, 2017 12:00 AM +0530  

பாடல் - 5

உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த
                                                             அடிசில் உண்டதும்
வண்ண மால்வரையை எடுத்து மழை காத்ததும்
மண்ணை முன்படைத்து, உண்டு, உமிழ்ந்து,
                             கிடந்து, இடந்து, மணந்த மாயங்கள்
எண்ணுந்தோறும் என் நெஞ்சு எரிவாய் மெழுகு
                                                            ஒக்கும் நின்றே.

எம்பெருமானே, தேவர்கள் தலைவனான இந்திரனுக்காக ஆயர்கள் உணவைச் செய்துவைத்தார்கள். அதை நீ உண்டாய், அதனால் மழை பெரிதாகப் பொழிய, அழகிய மலையை எடுத்து மழையிலிருந்து மக்களைக் காத்தாய். முன்பு நீ பூமியைப் படைத்தாய், (பிரளயத்தின்போது) உண்டாய், உமிழ்ந்தாய், (வாமனனாக) அளந்தாய், (வராகமாக) இடந்தாய், (பூமாதேவியை) மணந்தாய், இந்த மாயங்களையெல்லாம் எண்ணும்போது, என் நெஞ்சம் நெருப்பில் பட்ட மெழுகைப்போல் தவிக்கிறது.

***

பாடல் - 6

நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும்
                                            நினைப்பு அரியன
ஒன்று அலா உருவாய் அருவாய நின் மாயங்கள்
நின்று நின்று நினைக்கின்றேன், உனை எங்ஙனம்
                                            நினைகிற்பன்? பாவியேற்கு
ஒன்று நன்கு உரையாய், உலகம் உண்ட ஒண்சுடரே.

எம்பெருமானே, நீ நின்ற தன்மையும், இருந்த தன்மையும், கிடந்த தன்மையும் என்னால் நினைக்க அரியவை, நீயோ ஓர் உருவமாக அன்றிப் பல உருவங்களாகவும் அருவமாகவும் திகழ்கிறவன், உன்னுடைய மாயங்களை நான் நினைக்கிறேன், எனினும், உன்னை முழுமையாக என்னால் அறிய இயலுமா? (இயலாது.) உலகை உண்ட ஒளிநிறைந்த சுடரே, பாவியாகிய எனக்கு ஒரு வழிகாட்டுவாய், அருள்செய்வாய். 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/oct/23/ஐந்தாம்-பத்து-பத்தாம்-திருவாய்மொழி---பாடல்-5-6-2792907.html
2792904 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 3, 4 சொ. மணியன் DIN Sunday, October 22, 2017 12:00 AM +0530  

பாடல் - 3

பெய்யும் பூங்குழல் பேய்முலை உண்ட
           பிள்ளைத்தேற்றமும், பேர்ந்து ஒர் சாடு இறச்
செய்ய பாதம் ஒன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல்கொள
           நீ உன் தாமரைக் கண்கள் நீர் மல்கப்
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்கும்களே.

எம்பெருமானே, பூச்சூடிய கூந்தலுடன் ஒரு பேய் (பூதனை) தாய்வடிவில் வந்தது, அப்போது, அவளுடைய முலையில் பாலருந்தி நீ அவளை வீழ்த்தினாய், அந்தச் சிறுபிள்ளை வயதிலேயே உனக்கு என்னவொரு தெளிவு! பின்னர், ஓர் அரக்கன் (சகடாசுரன்) வண்டி வடிவில் வந்தான், அவன் அழிந்துபோகும்படி சிவந்த திருவடிகளால் உதைத்தாய், அந்த இளவீரம் எப்படிப்பட்டது! நீ வெண்ணெயைத் திருடியுண்டாய் என்று பிறர் சொன்னார்கள், உடனே, உன் அன்னை யசோதை கையில் கோலை எடுத்துக்கொண்டு அடிக்க முனைந்தாள். அப்போது, தாமரைபோன்ற கண்களில் நீர் மல்க நீ பயப்படுவதுபோல் நின்ற நிலைதான் எப்படிப்பட்டது! உன்னுடைய இந்தச் செயல்களெல்லாம் என் மனத்தை உருக்குகின்றன!

***

பாடல் - 4

கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம்
             புக்கவாறும் கலந்து அசுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிர் உண்ட உபாயங்களும்
வெள்ளநீர்ச் சடையானும் நின்னிடை வேறு
           அலாமை விளங்க நின்றதும்
உள்ளம் உள்குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.

எம்பெருமானே, முப்புரத்தில் அசுரர்கள் பலத்தோடு வாழ்ந்திருந்தபோது, நீ ஒரு கள்ளவேடமிட்டு அங்கே சென்றாய், அந்த அசுரர்களுடன் கலந்து, அவர்களுடைய உள்ளத்தைக் கெடுத்தாய், அவர்களுடைய உயிர் அழியச்செய்தாய், அத்தகைய உன்னுடைய தன்மையும், கங்கையைத் தலையில் தாங்கிய சிவன் உன்னோடு ஒருவனாக விளங்க நிற்பதும் என் உள்ளத்துள் நுழைகின்றன, என் உயிரை உருக்கி உண்ணுகின்றன.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/oct/22/ஐந்தாம்-பத்து-பத்தாம்-திருவாய்மொழி---பாடல்-34-2792904.html
2792903 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 1, 2 சொ. மணியன் Saturday, October 21, 2017 12:00 AM +0530  

பாடல் - 1

பிறந்தவாறும் வளர்ந்தவாறும் பெரிய பாரதம்
                                                              கைசெய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டியிட்டுச் செய்துபோன மாயங்களும்
நிறந்தன் ஊடுபுக்கு எனது ஆவியை நின்று நின்று
                                                            உருக்கி உண்கின்ற இச்
சிறந்த வான்சுடரே, உன்னை என்றுகொல் சேர்வதுவே.

எம்பெருமானே, பெருந்தெய்வமான நீ பக்தர்களுக்காக இங்கே வந்து பிறந்த தன்மையை, வளர்ந்த தன்மையை, பெரிய மகாபாரதத்தை நிகழ்த்திப் பாண்டவர்களாகிய ஐவருக்குப் பல திறமைகளைக் காட்டி, மாயங்கள் செய்ததையெல்லாம் எண்ணும்போது, நீ என் இதயத்துக்குள் நுழைகிறாய், என்னுடைய ஆவியை நின்று உருக்கி உண்கின்றாய், அத்தகைய சிறந்த வான் சுடரே, நான் உன்னை என்று சேர்வேன்?

***

பாடல் - 2

வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும், மாய
                                             மாவினை வாய்பிளந்ததும்
மதுவை வார்குழலார் குரவை பிணைந்த குழகும்
அது, இது, உது என்னலாவன அல்ல என்னை உன்
                                             செய்கை, நைவிக்கும்,
முது வைய முதல்வா, உன்னை என்று தலைப்பெய்வனே?

நப்பின்னையைத் திருமணம் செய்துகொள்வதற்காக, காளைகளின்மீது பாய்ந்து அவற்றை வீழ்த்தினாய், மாயமாகக் குதிரை வடிவத்தில் வந்த கேசியின் வாயைப் பிளந்தாய், தேன் சிந்தும் கூந்தலைக்கொண்ட பெண்களோடு சிறப்பாகக் குரவைக்கூத்து ஆடினாய், உன்னுடைய செய்கைகளை அது, இது, உது என்று பிரித்துச்சொல்ல இயலுமா? (இயலாது!) அவற்றை எண்ணினால் என் மனம் நைந்துபோகிறது, பழைமையான உலகத்தின் முதல்வனே, நான் உன்னை என்றைக்கு வந்தடைவேன்?

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/oct/21/ஐந்தாம்-பத்து-பத்தாம்-திருவாய்மொழி---பாடல்-1-2-2792903.html
2792836 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 11 சொ. மணியன் Friday, October 20, 2017 08:48 AM +0530  

பாடல் - 11

நாமங்கள் ஆயிரம் உடைய நம்பெருமான் அடிமேல்
சேமம்கொள் தென்குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த
நாமங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமம்கொள் தென் நகர்மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.

ஆயிரம் திருநாமங்களைக்கொண்ட நம்பெருமானின் திருவடிகளையே காப்பாகப் பற்றியவர் தென்குருகூர்ச் சடகோபன், அவர் ஆராய்ந்து உரைத்த ஆயிரம் திருப்பாடல்களும் அப்பெருமானின் ஆயிரம் திருநாமங்களைப்போன்றவை, அவற்றுள், பக்தர்களைக் காக்கும் திருவல்லவாழ் என்னும் திருநகரத்தின்மீது அமைந்த இந்தப் பத்துத் திருப்பாடல்களையும் சொல்கிறவர்கள் இந்தப்  பிறப்பிலேயே சிறந்தவர்களாவார்கள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/oct/20/ஐந்தாம்-பத்து-ஒன்பதாம்-திருவாய்மொழி---பாடல்-11-2792836.html
2792313 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 9, 10 சொ. மணியன் Thursday, October 19, 2017 12:11 PM +0530
பாடல் - 9

கழல்வளை பூரிப்ப நாம் கண்டு கைதொழக்கூடும்கொலோ, 
குழல் என யாழும் என்னக் குளிர்சோலையுள் தேன் அருந்தி
மழலை வரிவண்டுகள் இசைபாடும் திருவல்லவாழ்
சுழலின் மலி சக்கரப்பெருமானது தொல் அருளே. 

குளிர்ந்த சோலையிலே தேன் அருந்திய இளமையான, வரிகளைக்கொண்ட வண்டுகள் குழலைப்போலவும் யாழைப்போலவும் இசைபாடுகின்றன. அத்தகைய திருவல்லவாழ் என்னும் திருத்தலத்திலே எழுந்தருளியிருப்பவன் எம்பெருமான், சுழன்று பகைவர்களை விரைவாக அழிக்கும் சக்ராயுதத்தை ஏந்தியவன், அத்தகைய பெருமானின் பழைமையான அருளாலே, அவனை நாம் விரைவாகத் தரிசிப்போமா? இப்போது அவனைப் பிரிந்திருப்பதால் நம் கையிலிருந்து கழன்றுபோகும் வளையல்கள் அவ்வாறு கழலாதபடி அவனைக் கைகூப்பித் தொழுவோமா?

***
பாடல் - 10

தொல் அருள் நல் வினையால் சொலக்கூடும்கொல், தோழிமீர்காள்,
தொல் அருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம்,
நல் அருள் ஆயிரவர் நலன் ஏந்தும் திருவல்லவாழ்
நல் அருள் நம்பெருமான் நாராயணன் நாமங்களே.

தோழிகளே, திருவல்லவாழ் என்னும் திருநகரத்தின் பழைமையான அருளைப் பூமியில் உள்ளோரும் வானவரும் தொழுகிறார்கள், நல்ல கருணை நிறைந்த ஆயிரம் வைணவர்கள் இந்தத் திருத்தலத்தில் சிறப்பாக வாழ்ந்து எம்பெருமானை வழிபடுகிறார்கள், அவர்களுக்கெல்லாம் நல்ல அருளைப் பொழிகிறான் நம்பெருமான், நாராயணன், அத்தகைய பெருமானின் பழைமையான அருளாலே நாம் சில நல்வினைகளைச் செய்தோம், அந்த நல்வினைகளின் பலனாக, அவனுடைய திருநாமங்களைச் சொல்லும் பாக்கியம் நமக்குக் கிடைக்குமா?

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/oct/19/ஐந்தாம்-பத்து-ஒன்பதாம்-திருவாய்மொழி---பாடல்-9-10-2792313.html
2791893 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 7, 8 சொ. மணியன் Wednesday, October 18, 2017 12:00 AM +0530  

பாடல் - 7

பாதங்கள் மேல் அணி பூந்தொழக் கூடும்கொல்,
                                                     பாவைநல்லீர்,
ஓத நெடும் தடத்துள் உயர் தாமரை, செங்கழுநீர்
மாதர்கள் வாள்முகமும் கண்ணும் ஏந்தும்
                                                   திருவல்லவாழ்
நாதன், இஞ்ஞாலம் உண்ட நம்பிரான்தன்னை
                                                  நாள்தொறுமே
.

பாவைபோன்ற பெண்களே, திருவல்லவாழ் என்னும் திருத்தலத்தில் தண்ணீர் நிறைந்த பெரிய குளத்திலே, உயர்ந்த தாமரையும் செங்கழுநீரும் பெண்களின் ஒளிபொருந்திய முகம், கண்ணைப்போல் தோன்றுகின்றன, அத்தகைய திருவல்லவாழ் நகரில் எழுந்தருளியிருக்கும் நாதன், இந்த உலகை உண்ட நம்பிரான், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவனுடைய திருவடிகளைத் தினந்தோறும் தொழும் பாக்கியம் நமக்குக் கிடைக்குமா?

******

பாடல் - 8

நாள்தொறும் வீடு இன்றியே தொழக்கூடும்கொல்,
                                                                                         நல்நுதலீர்,
ஆடுறு தீங்கரும்பும் விளை செந்நெலும் ஆகி எங்கும்
மாடுறு பூந்தடம் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ்
நீடு உறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள்கழலே.

நல்ல நெற்றியைக்கொண்ட பெண்களே, திருவல்லவாழ் என்னும் திருத்தலத்திலே, ஆலையில் இட்டு ஆட்டப்படுகின்ற இனிய கரும்பும், விளைந்த செந்நெல்லும் எல்லாப் பக்கங்களிலும் நிறைந்திருக்கின்றன, பக்கங்களில் அழகிய குளங்கள் அமைந்திருக்கின்றன, அவ்வாறு வயல்களால் சூழப்பட்ட, குளிர்ந்த திருவல்லவாழ் நகரில் என்றென்றும் தங்கியிருக்கிறவன் எம்பெருமான், தாவி நிலத்தை அளந்த அவனுடைய திருவடிகளை நாள்தோறும் தடங்கலில்லாமல் தொழும் பாக்கியம் நமக்குக் கிடைக்குமா?

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/oct/18/ஐந்தாம்-பத்து-ஒன்பதாம்-திருவாய்மொழி---பாடல்-7-8-2791893.html
2791844 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 5, 6 சொ. மணியன் DIN Tuesday, October 17, 2017 09:19 AM +0530
பாடல் - 5

நல் நலத் தோழிமீர்காள், நல்ல அந்தணர் வேள்விப்புகை
மைந்நலம் கொண்டு உயர் விண் மறைக்கும் தண்
                                                                                            திருவல்லவாழ்
கன்னல் அம் கட்டிதன்னை, கனியை, இன் அமுதம்தன்னை,
என் நலம் கொள் சுடரை என்றுகொல் கண்கள் காண்பதுவே.

சிறந்த அன்பைக்கொண்ட தோழிகளே, நல்ல அந்தணர்கள் செய்யும் வேள்விகளிலிருந்து எழுகின்ற புகை, கருப்பாக மேலே சென்று உயர்ந்த வானத்தை மறைக்கின்ற, குளிர்ந்த திருவல்லவாழ் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான், வெல்லக்கட்டி, பழம், இனிய அமுதம், என்னுடைய நலத்தைக் கொள்ளைகொள்ளும் சுடர், அவரை என் கண்கள் என்றைக்குக் காணுமோ.

******

பாடல் - 6

காண்பது எஞ்ஞான்றுகொலோ, வினையேன், கனிவாய்
                                                                                                        மடவீர்,
பாண்குரல் வண்டினொடு பசும்தென்றலும்ஆகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழும் கானல் திருவல்லவாழ்
மாண் குறள் கோலப்பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.

கனிபோன்ற வாயைக்கொண்ட பெண்களே, எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருவல்லவாழ் என்னும் திருத்தலத்தில் செழுமையான கடற்கரைச்சோலைகள் உள்ளன, அங்கே வண்டுகள் பண் பாடுகின்றன, எங்கும் பசும்தென்றல் வீசுகிறது, உயரமான கிளைகளுடன் மரங்கள் ஓங்கி நிற்கின்றன, அத்தகைய திருவல்லவாழ் நகரில் எழுந்தருளியிருக்கும் வாமனன், அழகிய பெருமானின் தாமரைபோன்ற மலரடிகளை, பெரிய வினைகளைச் செய்தவளான நான் எப்போது காண்பேனோ.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/oct/17/ஐந்தாம்-பத்து-ஒன்பதாம்-திருவாய்மொழி---பாடல்-5-6-2791844.html
2791843 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 5, 6 சொ. மணியன் Tuesday, October 17, 2017 09:04 AM +0530  

பாடல் - 5

நல் நலத் தோழிமீர்காள், நல்ல அந்தணர் வேள்விப்புகை
மைந்நலம் கொண்டு உயர் விண் மறைக்கும் தண்
                                                                                           திருவல்லவாழ்
கன்னல் அம் கட்டிதன்னை, கனியை, இன் அமுதம்தன்னை,
என் நலம் கொள் சுடரை என்றுகொல் கண்கள் காண்பதுவே.

சிறந்த அன்பைக்கொண்ட தோழிகளே, நல்ல அந்தணர்கள் செய்யும் வேள்விகளிலிருந்து எழுகின்ற புகை, கருப்பாக மேலே சென்று உயர்ந்த வானத்தை மறைக்கின்ற, குளிர்ந்த திருவல்லவாழ் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான், வெல்லக்கட்டி, பழம், இனிய அமுதம், என்னுடைய நலத்தைக் கொள்ளைகொள்ளும் சுடர், அவரை என் கண்கள் என்றைக்குக் காணுமோ.

******

பாடல் - 6

காண்பது எஞ்ஞான்றுகொலோ, வினையேன், கனிவாய்
                                                                                                          மடவீர்,
பாண்குரல் வண்டினொடு பசும்தென்றலும்ஆகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழும் கானல் திருவல்லவாழ்
மாண் குறள் கோலப்பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.

கனிபோன்ற வாயைக்கொண்ட பெண்களே, எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருவல்லவாழ் என்னும் திருத்தலத்தில் செழுமையான கடற்கரைச்சோலைகள் உள்ளன, அங்கே வண்டுகள் பண் பாடுகின்றன, எங்கும் பசும்தென்றல் வீசுகிறது, உயரமான கிளைகளுடன் மரங்கள் ஓங்கி நிற்கின்றன, அத்தகைய திருவல்லவாழ் நகரில் எழுந்தருளியிருக்கும் வாமனன், அழகிய பெருமானின் தாமரைபோன்ற மலரடிகளை, பெரிய வினைகளைச் செய்தவளான நான் எப்போது காண்பேனோ.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/oct/17/ஐந்தாம்-பத்து-ஒன்பதாம்-திருவாய்மொழி---பாடல்-5-6-2791843.html
2789124 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 3, 4 சொ. மணியன் DIN Monday, October 16, 2017 12:00 AM +0530  

பாடல் - 3

சூடு மலர்க் குழலீர், துயராட்டியேனை மெலியப்
பாடு நல் வேத ஒலி பரவைத் திரைபோல் முழங்க
மாடு உயர்ந்து ஓமப்புகை கமழும் தண் திருவல்லவாழ்
நீடு உறைகின்ற பிரான் கழல் காண்டும்கொல் நிச்சலுமே.

மலர்களைச் சூடிய கூந்தலைக்கொண்ட தோழிகளே, எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் குளிர்ந்த திருவல்லவாழ் என்னும் திருத்தலத்திலே நல்ல வேத ஒலி கடலலைபோல் முழங்குகிறது, ஓமப்புகை பக்கங்களில் எழுந்து உயர்ந்து கமழ்கிறது, இதனால், துயரத்தில் இருக்கும் நான் மெலிந்து வாடுகிறேன், அப்பெருமானின் திருவடிகளை நாம் எப்போதும் காண்போமா?

******

பாடல் - 4

நிச்சலும் தோழிமீர்காள், எம்மை நீர் நலிந்து என்செய்தீரோ,
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சு அணி மாடங்கள்மீது அணவும் தண் திருவல்லவாழ்
நச்சு அரவின் அணைமேல் நம்பிரானது நல் நலமே.

தோழிகளே, எப்போதும் என்னை வருந்தச்செய்வதால் உங்களுக்கு என்ன பலன்? பசுமையான இலைகளைக்கொண்ட நீண்ட பாக்குமரமும் பலாவும் தென்னைமரமும் வாழைகளும் உயரமாக வளர்ந்து, மச்சினைக்கொண்ட மாடங்கள்மேல் தழுவியிருக்கிற குளிர்ந்த திருவல்லவாழ் என்னும் திருத்தலத்திலே, நஞ்சைக்கொண்ட பாம்பைப் படுக்கையாகக் கொண்ட எம்பெருமான் எழுந்தருளியிருக்கிறான், என்னுடைய நல்ல நலம் அவனிடம் உள்ளது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/oct/16/ஐந்தாம்-பத்து-ஒன்பதாம்-திருவாய்மொழி---பாடல்-3-4-2789124.html
2789122 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 1, 2 சொ. மணியன் DIN Sunday, October 15, 2017 12:00 AM +0530  

பாடல் - 1

மான் ஏய் நோக்குநல்லீர், வைகலும் வினையேன் மெலிய
வான் ஆர் வண்கமுகும் மது மல்லிகை கமழும்
தேன் ஆர் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடிகூடுவது என்றுகொலோ?

மான்போன்ற பார்வைகொண்ட பெண்களே, கொடிய வினைகளைச் செய்துவிட்ட நான் ஒவ்வொரு நாளும் மெலிந்துகொண்டிருக்கிறேன், வானத்தைத் தொடுகிற அழகிய பாக்குமரங்களும், தேன் பொருந்திய மல்லிகைகளும் கமழ்கிற தேன் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட திருவல்லவாழ் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனாகிய எம்பெருமானின் திருவடிகளை நான் எப்போது சேர்வேன்?

******

பாடல் - 2

என்றுகொல் தோழிமீர்காள், எம்மை நீர் நலிந்து என்
                                                                                              செய்தீரோ,
பொன் திகழ் புன்னை, மகிழ், புது மாதவிமீது அணவித்
தென்றல் மணம் கமழும் திருவல்லவாழ் நகருள்
நின்றபிரான் அடி நீறு அடியோம் கொண்டு சூடுவதே.

தோழிகளே, என்னை வருந்தச்செய்வதால் உங்களுக்கு என்ன பயன்? பொன்போன்ற மகரந்தங்களைக்கொண்ட புன்னை மரத்தின்மீதும், மகிழமரங்களின்மீதும், புதிய மாதவிக்கொடியின்மீதும் தென்றல் வீசுகிறது, அந்தத் தென்றலில் நறுமணம் கமழ்கிறது, அத்தகைய திருவல்லவாழ் நகரிலே நிற்கும் எம்பெருமானின் திருவடித் துகள்களை நான் என் தலையில் சூடிக்கொள்வது எப்போது?
 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/oct/15/ஐந்தாம்-பத்து-ஒன்பதாம்-திருவாய்மொழி---பாடல்-1-2-2789122.html
2789121 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 11 சொ. மணியன் DIN Saturday, October 14, 2017 12:00 AM +0530  

பாடல் - 11

உழலை என்பின் பேய்ச்சி முலை ஊடு அவளை உயிர்
                                                                                           உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச்
                                                                                          சடகோபன்
குழலின் மலியச்சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
மழலை தீரவல்லார் காமர் மான் ஏய் நோக்கியர்க்கே.

மரத்துண்டுகளைப்போன்ற எலும்புகளைக்கொண்ட பேயான பூதனையின் மார்பகத்தின்வழியே அவளுடைய உயிரை உண்டவன் எம்பெருமான், அத்தகைய பெருமானின் திருவடிகளையே சரணாகக் கொண்டவர் குருகூர்ச் சடகோபன், அவர் எம்பெருமானைப்பற்றிப் புல்லாங்குழல் இசையைவிட இனிமையாக ஆயிரம் திருப்பாடல்களைப் பாடினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் பாடுவோருடைய அறியாமை தீரும், அப்படிப் பாடுகிறவர்களை, மான் போன்ற கண்களையுடைய பெண்கள் விருப்பத்துடன் பார்ப்பார்கள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/oct/14/ஐந்தாம்-பத்து-எட்டாம்-திருவாய்மொழி---பாடல்-11-2789121.html
2789120 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 9, 10 சொ. மணியன் Friday, October 13, 2017 12:00 AM +0530  

பாடல் - 9

இசைவித்து என்னை உன் தாள் இணைக்கீழ் இருத்தும்
                                                                                                          அம்மானே,
அசைவு இல் அமரர் தலைவர் தலைவா, ஆதிப் பெருமூர்த்தி,
திசைவில் வீசும் செழு மாமணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவு இல் உலகம் பரவக் கிடந்தாய், காண வாராயே.

என்னை உடன்படச்செய்து உன்னுடைய திருவடிகளில் இருத்தும் அம்மானே, அழியாத அமரர்களின் தலைவருக்குத் தலைவா, அனைத்துக்கும் முதலான பெருமூர்த்தியே, எல்லாத் திசைகளிலும் ஒளி வீசும் செழுமையான, சிறந்த மணிகள் சேர்கிற திருக்குடந்தையிலே, உலகம் வருத்தமின்றிப் போற்றும்படி, கிடந்த திருக்கோலத்தில் அருள்செய்கிறவனே, நான் காணும்படி வரவேண்டும்.

******

பாடல் - 10

வாரா அருவாய் வரும் என் மாயா, மாயா மூர்த்தியாய்,
ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்,
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய், திருக்குடந்தை
ஊராய், உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம்
                                                                                      உழல்வேனோ?

வெளிக்கண்களால் காண இயலாதபடி அருவ வடிவில் தோன்றுகின்ற என் மாயனே, என்றைக்கும் அழியாத திருமேனியைக்கொண்டவனே, தெவிட்டாத அமுதமாக என்னுடைய உயிருக்குள்ளே தித்திப்பவனே, தீராத வினைகளெல்லாம் தீரும்படி என்னை ஆண்டவனே, திருக்குடந்தையை ஊராகக் கொண்டவனே, உனக்கு ஆட்பட்டபிறகும் நான் இன்னும் இங்கே உழன்று துன்புறுவேனா?

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/oct/13/ஐந்தாம்-பத்து-எட்டாம்-திருவாய்மொழி---பாடல்-9-10-2789120.html
2789082 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 7,8 சொ. மணியன் Thursday, October 12, 2017 10:23 AM +0530  

பாடல் - 7

அரி ஏறே, என் அம் பொன் சுடரே, செங்கண் கருமுகிலே,
எரி ஏய் பவளக்குன்றே, நால் தோள் எந்தாய், உனது அருளே
பிரியா அடிமை என்னைக் கொண்டாய், குடந்தைத்
                                                                                                         திருமாலே,
தரியேன் இனி, உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே.

ஆண் சிங்கமே, என்னுடைய அழகிய பொன் சுடரே, செங்கண்களைக்கொண்ட கரிய மேகமே, நெருப்புப் பொருந்திய பவளக்குன்றே, நான்கு தோள்களையுடைய எங்கள் தந்தையே, உன்னுடைய அருள் என்றும் பிரியாதபடி என்னை அடிமையாக்கிக்கொண்டவனே, திருக்குடந்தையிலே கிடந்த திருக்கோலத்தில் அருள்புரிபவனே, இனியும் என்னால் (இந்த உலகத்துயரங்களைத்) தாங்க இயலாது, உன்னுடைய திருவடிகளைத் தந்து என்னுடைய பிறப்பை நீக்குவாய்.

******

பாடல் - 8

களைவாய் துன்பம், களையாது ஒழிவாய், களைகண்
                                                                                              மற்றுஇலேன்,
வளை வாய் நேமிப் படையாய், குடந்தைக் கிடந்தாய்,
                                                                                              மாமாயா,
தளரா உடலம் எனது ஆவி சரிந்துபோம்போது
இளையாது உன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.

வளைந்த வாயைக்கொண்ட சக்ராயுதத்தை ஏந்தியவனே, திருக்குடந்தையிலே கிடந்த திருக்கோலத்தில் அருள்புரிபவனே, பெரிய மாயச்செயல்களைச் செய்பவனே, நீ என்னுடைய துன்பங்களைக் களைந்தாலும் சரி, களையாவிட்டாலும் சரி, உன்னையன்றி எனக்கு இன்னோர் ஆதரவு இல்லை, என்னுடைய உடல் தளர்ந்து, உயிர் சரிகிறபோதும், நான் தளராமல் உன்னுடைய திருவடிகளை ஒன்றாகப் பிடித்துக்கொண்டிருக்கவேண்டும், அதற்கு நீ சம்மதிக்கவேண்டும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/oct/12/ஐந்தாம்-பத்து-எட்டாம்-திருவாய்மொழி---பாடல்-78-2789082.html
2786213 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 5, 6 சொ. மணியன் DIN Wednesday, October 11, 2017 12:00 AM +0530  

பாடல் - 5

அழுவன், தொழுவன், ஆடிக்காண்பன், பாடி அலற்றுவன்,
தழு வல்வினையால் பக்கம் நோக்கி நாணிக்
                                                                                       கவிழ்ந்திருப்பன்,
செழு ஒண் பழனக் குடந்தைக் கிடந்தாய், செந்தாமரைக்
                                                                                       கண்ணா,
தொழுவனேனை உன தாள் சேரும் வகையே சூழ்கண்டாய்.

பெருமானே, உன்னை எண்ணி நான் அழுவேன், உன்னைத் தொழுவேன், நடனமாடுவேன், பாடுவேன், அலற்றுவேன், என்னைத் தழுவுகின்ற வலிய வினைகளாலே நொந்து, நீ வரும் பக்கத்தை நோக்கி நாணத்தோடு தலைகவிழ்ந்து காத்திருப்பேன், செழிப்பான, ஒளி நிறைந்த வயல்களைக்கொண்ட திருக்குடந்தையிலே, கிடந்த திருக்கோலத்தில் அருள்புரிகிறவனே, செந்தாமரைக் கண்ணனே, தொழுகின்ற என்னை உன்னுடைய திருவடிகளில் சேர்க்கவேண்டும், அதற்கான வழியையும் நீயேதான் எனக்குச் சொல்லவேண்டும்.

******

பாடல் - 6

சூழ்கண்டாய் என் தொல்லைவினையை அறுத்து உன்
                                                                                                   அடிசேரும்
ஊழ் கண்டிருந்தே தூராக் குழிதூர்த்து எனைநாள் அகன்று

                                                                                                   இருப்பன்,
வாழ் தொல்புகழார் குடந்தைக் கிடந்தாய், வானோர்
                                                                                                  கோமானே,
யாழின் இசையே, அமுதே, அறிவின் பயனே, அரி ஏறே.

தொன்மையான புகழை உடையவர்கள் வாழ்கிற திருக்குடந்தையிலே, கிடந்த திருக்கோலத்தில் அருள்புரிகிறவனே, வானோர் தலைவனே, யாழின் இசையே, அமுதே, அறிவின் பயனே, ஆண் சிங்கமே, என்னுடைய பழைய வினைகளை அறுத்து உன்னுடைய திருவடிகளைச் சேரும் முறையை அறிந்திருக்கிறேன், ஆனாலும், தூர்க்கமுடியாத (சுத்தம் செய்ய இயலாத) இந்திரியங்கள் என்கிற குழிகளைத் தூர்த்துக்கொண்டு இங்கேயே இருக்கிறேன், இப்படி இன்னும் எத்தனை நாள் நான் உன்னைப் பிரிந்திருப்பேன்? இதிலிருந்து நான் விடுபட ஒரு வழியைச் சொல்வாய்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/oct/11/ஐந்தாம்-பத்து-எட்டாம்-திருவாய்மொழி---பாடல்-5-6-2786213.html
2786212 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 3, 4 சொ. மணியன் DIN Tuesday, October 10, 2017 12:00 AM +0530  

பாடல் - 3

என் நான் செய்கேன், யாரே களைகண், என்னை என்
                                                                                              செய்கின்றாய்,
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்,
கன்ஆர் மதிள்சூழ் குடந்தைக் கிடந்தாய், அடியேன் அரு
                                                                                             வாழ் நாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக்காணே.

எம்பெருமானே, நான் என்ன செய்வேன்? எனக்கு உன்னையன்றி யார் துணை? (யாருமில்லை). நீ என்னை என்ன செய்கின்றாய்? உன்னையன்றி இன்னொருவரிடம் சென்று நான் என்னுடைய குறைகளைச் சொல்லமாட்டேன், வேலைப்பாடுகள் நிறைந்த மதிளால் சூழப்பட்ட திருக்குடந்தையிலே, கிடந்த திருக்கோலத்தில் அருள்புரிபவனே, என்னுடைய மீதமுள்ள வாழ்நாள் முழுவதும், உன்னுடைய திருவடிகளைப் பற்றிக்கொண்டே நான் செல்லவேண்டும், அதற்கு நீ அருள்புரியவேண்டும்.

*******

பாடல் - 4

செலக்காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய்,
உலப்பு இலானே, எல்லா உலகும் உடைய ஒரு மூர்த்தி,
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய், உன்னைக்
                                                                                                காண்பான் நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன், தொழுவனே.

மேலே மேலே காணவல்லவர்கள் எந்த அளவு காண்பார்களோ, அதைத்தாண்டியும் செல்லும் புகழைக்கொண்டவனே, நற்குணங்களுக்கு எல்லையில்லாதவனே, எல்லா உலகங்களையும் கொண்ட தனி மூர்த்தியே, பக்தி நலம் மிகுந்தவர்கள் வாழ்கிற திருக்குடந்தையிலே, கிடந்த திருக்கோலத்தில் அருள்புரிகிறவனே, உன்னைக் காண்பதற்காக நான் ஆகாயத்தை நோக்கி மயங்குகிறேன், அழுகிறேன்,
தொழுகிறேன்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/oct/10/ஐந்தாம்-பத்து-எட்டாம்-திருவாய்மொழி---பாடல்-3-4-2786212.html
2786209 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 1, 2 சொ. மணியன் DIN Monday, October 9, 2017 12:00 AM +0530  

பாடல் - 1

ஆரா அமுதே, அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே,
சீர் ஆர் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய், கண்டேன் எம்மானே.

தெவிட்டாத அமுதமாகத் திகழ்கிற எம்பெருமானே, என்னுடைய உடலானது உன்மேல் அன்புகொண்டு, நீராக அலைந்து கரையும்படி என்னை உருக்குகின்ற நெடுமாலே, சிறந்த செந்நெல் கவரி வீசுகிற, செழிப்பான நீர்வளம் கொண்ட திருக்குடந்தையிலே அழகிய திருமேனி திகழும்படி, கிடந்த திருக்கோலத்தில் அருள்செய்கிறவனே, உன்னை நான் கண்டேனே.

******

பாடல் - 2

எம்மானே, என் வெள்ளை மூர்த்தி, என்னை ஆள்வானே,
எம் மா உருவும் வேண்டுமாற்றால் ஆவாய், எழில் ஏறே,
செம் மா கமலம் செழுநீர்மிசைக் கண்மலரும் திருக்குடந்தை
அம் மா மலர்க்கண் வளர்கின்றானே, என் நான்
                                                                                                    செய்கேனோ.

என் தலைவனே, தூய்மையான பெருமானே, என்னை ஆள்பவனே, விரும்பும்படி எத்தகைய சிறந்த உருவங்களையும் எடுக்கவல்லவனே, அழகிய எருதே, திருக்குடந்தையிலே, செழிப்பான நீரின்மேலே சிவந்த, பெரிய தாமரை மலர்கள் கண்களைப்போல் மலர்கின்றன, அந்தத் திருத்தலத்திலே அழகிய, தாமரைபோன்ற கண்களை மூடிக்கொண்டு துயில்கிறவனே, (உன்னைக் கண்டபின்) நான் என்ன செய்வேன்!

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/oct/09/ஐந்தாம்-பத்து-எட்டாம்-திருவாய்மொழி---பாடல்-1-2-2786209.html
2786207 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 11 சொ. மணியன் Sunday, October 8, 2017 12:00 AM +0530  

பாடல் - 11

தெய்வநாயகன், நாரணன், திரிவிக்கிரமன் அடி
                                                                          இணைமிசைக்
கொய்கொள் பூம்பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள் இவை தண் சிரீவர மங்கை மேய
                                                                          பத்துடன்
வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆரா அமுதே.

தெய்வநாயகன், நாரணன், திரிவிக்கிரமனாகிய எம்பெருமானின் திருவடிகளிலே, கொய்யப்படுகின்ற பூக்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட திருக்குருகூர்ச் சடகோபன் ஆயிரம் திருப்பாடல்களைச் செய்தார், அவற்றுள், குளிர்ச்சியான ஶ்ரீவரமங்கை (நாங்குநேரி) என்னும் திருத்தலத்தைப்பற்றி எழுதப்பட்ட இந்தப் பத்து பாடல்களையும் எப்போதும் பாட வல்லவர்கள் வானோருக்குத் தெவிட்டாத அமுதமாகத் திகழ்வார்கள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/oct/08/ஐந்தாம்-பத்து-ஏழாம்-திருவாய்மொழி---பாடல்-11-2786207.html
2780727 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 11 சொ. மணியன் DIN Monday, October 2, 2017 12:00 AM +0530  

பாடல் - 11

கூந்தல் மலர் மங்கைக்கும் மண்மடந்தைக்கும்
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன்தன்னை
வாய்த்த வழுதி வளநாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெரும்செல்வத்தராய்த் திருமால்
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.

கூந்தலிலே மலர் சூடிய திருமகள், புவிமகள், ஆயர்குலக் கொழுந்தான நப்பின்னை ஆகியோரின் கணவனான எம்பெருமானுக்குக் குற்றேவல் செய்தார் சிறந்த, வளமுள்ள வழுதி நாட்டைச் சேர்ந்த, நிலைத்திருக்கும் திருக்குருகூர்ச் சடகோபன், அவர் அப்பெருமானின் குணங்களை ஆராய்ந்து அனுபவித்து ஆயிரம் தமிழ்ப்பாடல்களை மாலையாகப் பாடினார், இவற்றில் இந்தப் பத்து பாடல்களையும் சொல்ல வல்லவர்கள், உலகிலே எல்லாரும் போற்றும்படி மிகுந்த செல்வத்துடன் வாழ்வார்கள், திருமாலின் அடியவர்களை வணங்குவார்கள், அத்தகைய புண்ணியம் அவர்களுக்குக் கிடைக்கும்.

]]>
http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/oct/02/ஐந்தாம்-பத்து-ஆறாம்-திருவாய்மொழி---பாடல்-11-2780727.html
2780726 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 9, 10 சொ. மணியன் DIN Sunday, October 1, 2017 12:00 AM +0530  

பாடல் - 9

கொடிய வினை யாதும் இலனே என்னும்,
கொடிய வினை ஆவேனும் யானே என்னும்,
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்,
கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்,
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்,
கொடிய புள்ளுடையவன் ஏறக்கொலோ?
கொடிய உலகத்தீர்க்கு இவை என்சொல்லுகேன்?
கொடியேன் கொடி என் மகள் கோலங்களே.

(தாய் சொல்கிறார்) என் மகள், 'கொடிய வினைகள் எவையும் எனக்கில்லை' என்கிறாள், 'கொடிய வினைகளாக ஆவதும் நானே' என்கிறாள், 'கொடிய வினைகளைச் செய்பவனும் நானே' என்கிறாள், 'கொடிய வினைகளைத் தீர்ப்பவனும் நானே' என்கிறாள், 'கொடியவனான இராவணனின் இலங்கையை அழித்தேனே' என்கிறாள், இதையெல்லாம் கேட்டால், பகைவர்களுக்குக் கொடுமையைச் செய்கிற கருடனை வாகனமாகக் கொண்ட திருமாலின் ஆவேசம் இவளுக்குள் ஏற்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது, கொடிய உலகத்தவர்களாகிய உங்களுக்கு, கொடியவளான என்னுடைய கொடி போன்ற இந்தப் பெண்ணின் அழகிய செயல்களை நான் எப்படிச் சொல்வேன்?

******

பாடல் - 10

கோலம்கொள் சுவர்க்கமும் யானே என்னும்,
கோலம் இல் நரகமும் யானே என்னும்,
கோலம்திகழ் மோக்கமும் யானே என்னும்,
கோலம்கொள் உயிர்களும் யானே என்னும்,
கோலம்கொள் தனிமுதல் யானே என்னும்,
கோலம்கொள் முகில்வண்ணன் ஏறக்கொலோ,
கோலம்கொள் உலகத்தீர்க்கு என்சொல்லுகேன்?
கோலம்திகழ் கோதை என் கூந்தலுக்கே.

(தாய் சொல்கிறார்) என் மகள், 'அழகிய சுவர்க்கமும் நானே' என்கிறாள், 'அழகில்லாத நரகமும் நானே' என்கிறாள், 'அழகிய பரமபதமும் நானே' என்கிறாள், 'அழகிய உயிர்களும் நானே' என்கிறாள், 'அழகிய, ஒப்பில்லாத மூலப்பகுதியும் நானே' என்கிறாள், இதையெல்லாம் கேட்டால், அழகுநிறைந்த, மேகவண்ணம்கொண்ட திருமாலின் ஆவேசம் இவளுக்குள் ஏற்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது, அழகுள்ள உலகத்தவர்களே, அழகிய மாலையை அணிந்த கூந்தலையுடைய என் மகளைப்பற்றி நான் உங்களுக்கு எப்படிச் சொல்வேன்?

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/oct/01/ஐந்தாம்-பத்து-ஆறாம்-திருவாய்மொழி---பாடல்-9-10-2780726.html
2780725 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 7, 8 சொ. மணியன் DIN Saturday, September 30, 2017 12:00 AM +0530  

பாடல் - 7

உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்,
உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்,
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்,
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்,
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்,
உற்றார் இலி மாயன் வந்து ஏறக்கொலோ?
உற்றீர்கட்கு என்சொல்லிச் சொல்லுகேன் யான்?
உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றனவே.

(தாய் சொல்கிறார்) என் மகள், ‘எனக்கு உறவினர்கள் யாரும் இல்லை’ என்கிறாள், ‘இங்கே எல்லாரும் என் உறவினர்கள்’ என்கிறாள், ‘உறவினர்களை உண்டாக்குவது நானே’ என்கிறாள், ‘உறவினர்களை அழிப்பதும் நானே’ என்கிறாள், ‘உறவினர்களுடன் பொருந்தியவன் நானே’ என்கிறாள், இதையெல்லாம் கேட்டால், தனக்கு உறவினர் என யாரும் இல்லாத மாயனின் ஆவேசம் இவளுக்குள் ஏற்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது, பேதைப்பருவமுள்ள என்னுடைய மகள் உள்ளூரக் கண்டு சொல்கிறவற்றையெல்லாம், இங்கே வந்திருக்கிற உங்களுக்கு நான் எப்படிச் சொல்வேன்?

******

பாடல் - 8

உரைக்கின்ற முக்கண்பிரான் யானே என்னும்,
உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்,
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்,
உரைக்கின்ற அமரர்கோன் யானே என்னும்,
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்,
உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக்கொலோ?
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என்சொல்லுகேன்?
உரைக்கின்ற என் கோமள ஒண்கொடிக்கே.

(தாய் சொல்கிறார்) என் மகள், ‘தெய்வமாக உரைக்கப்படுகிற முக்கண்பிரான் (சிவபெருமான்) நானே’ என்கிறாள், ‘பிரம்மனும் நானே’ என்கிறாள், ‘அமரர்கள் அனைவரும் நானே’ என்கிறாள், ‘அமரர்களின் தலைவனான இந்திரன் நானே’ என்கிறாள், ‘முனிவர்களும் நானே’ என்கிறாள், இதையெல்லாம் கேட்டால், வேதங்களில் சிறப்பித்துச் சொல்லப்படுகிற முகில்வண்ணனின் ஆவேசம் இவளுக்குள் ஏற்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது, ‘இவளுக்கு என்ன ஆனது? சொல்வாய்’ என்று நீங்கள் கேட்கிறீர்கள், என்னுடைய அழகிய, ஒளி நிறைந்த கொடி போன்ற மகள் இப்படியெல்லாம் பேசுவதைப்பற்றி நான் எப்படிச் சொல்வேன்? 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/sep/30/ஐந்தாம்-பத்து-ஆறாம்-திருவாய்மொழி---பாடல்-7-8-2780725.html
2780724 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 5, 6 சொ. மணியன் DIN Friday, September 29, 2017 12:00 AM +0530  

பாடல் - 5

திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்,
திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்,
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்,
திறம்காட்டி அன்று ஐவரைக் காத்தேனே என்னும்,
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்,
திறம்பாத கடல்வண்ணன் ஏறக்கொலோ?
திறம்பாத உலகத்தீர்க்கு என்சொல்லுகேன்?
திறம்பாது என் திருமகள் எய்தினவே.

(தாய் சொல்கிறார்) என் மகள், ‘நல்ல வழியிலிருந்து யாரும் மாறாதபடி நான் உலகைக் காக்கின்றேன்’ என்கிறாள், ‘தளர்ச்சியின்றி கோவர்த்தனகிரி என்கிற மலையை நான் எடுத்தேன்’ என்கிறாள், ‘அசுரர்களைத் தவறாமல் கொன்றேன்’ என்கிறாள், ‘திறனைக் காட்டி அன்று ஐந்து பாண்டவர்களைக் காத்தேன்’ என்கிறாள், ‘எந்த ஆபத்தும் இல்லாதபடி கடலைக் கடைந்தேன்’ என்கிறாள், இதையெல்லாம் கேட்டால், பக்தர்களுக்கு அருள்புரிவதில் என்றும் சலிப்படையாத கடல்வண்ணனின் ஆவேசம் இவளுக்குள் ஏற்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது, இவளைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற உறுதியுடன் இருக்கிற உலகத்து மக்களே, மீட்க இயலாதபடி என் திருமகள் அடைந்திருக்கிற இந்த நிலையை நான் உங்களுக்கு எப்படிச் சொல்வேன்?

******

பாடல் - 6

இன வேய்மலை ஏந்தினேன் யானே என்னும்,
இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்,
இன ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும்,
இன ஆநிரை காத்தேனும் யானே என்னும்,
இன ஆயர் தலைவனும் யானே என்னும்,
இனத்தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?
இன வேல்கண் நல்லீர்க்கு இவை என்சொல்லுகேன்?
இன வேல் கண்ணி என் மகள் உற்றனவே.

(தாய் சொல்கிறார்) என் மகள், ‘கூட்டமான மூங்கில்களையுடைய கோவர்த்தனகிரியைத் தூக்கியது நானே’ என்கிறாள், ‘கூட்டமான எருதுகளை (நப்பின்னைக்காக) அடக்கியதும் நானே’ என்கிறாள், ‘கூட்டமான பசுக்கன்றுகளை மேய்த்ததும் நானே’ என்கிறாள், ‘கூட்டமான பசுக்களைக் காத்ததும் நானே’ என்கிறாள், ‘கூட்டமான ஆயர்களின் தலைவனும் நானே’ என்கிறாள், இதையெல்லாம் கேட்டால், தேவர் கூட்டத்தின் தலைவனான திருமாலின் ஆவேசம் இவளுக்குள் ஏற்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது, வேல்களைப்போன்ற கண்களையுடைய நல்லவர்களே, வேல்களைப்போன்ற கண்களையுடைய என் மகள் அனுபவிக்கும் இந்த விஷயங்களைப்பற்றி நான் உங்களுக்கு எப்படிச் சொல்வேன்?

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/sep/29/ஐந்தாம்-பத்து-ஆறாம்-திருவாய்மொழி---பாடல்-5-6-2780724.html
2780721 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 3, 4 சொ. மணியன் Thursday, September 28, 2017 12:00 AM +0530  

பாடல் - 3

காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும்,
காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும்,
காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும்,
காண்கின்ற இக்காற்று எல்லாம் யானே என்னும்,
காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும்,
காண்கின்ற கடல்வண்ணன் ஏறக்கொல்லோ?
காண்கின்ற உலகத்தீர்க்கு என்சொல்லுகேன்?
காண்கின்ற என் காரிகை செய்கின்றவே.

(தாய் சொல்கிறார்) என் மகள், 'கண்ணில் தோன்றுகிற பூமி முழுவதும் நானே' என்கிறாள், அதேபோல், 'வானம் முழுவதும் நானே' என்கிறாள், 'கொடிய நெருப்பு முழுவதும் நானே' என்கிறாள், 'இந்தக் காற்று முழுவதும் நானே' என்கிறாள், 'கடல் முழுவதும் நானே' என்கிறாள், இதையெல்லாம் கேட்டால், காட்சிக்கு ஏற்ற கடல்போன்ற வண்ணத்தைக்கொண்டவனான திருமாலின் ஆவேசம் இவளுக்குள் ஏற்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது, இந்த உலகத்தைமட்டுமே காண்கிறவர்கள் நீங்கள், பெருமானின் காட்சியைக் காண்கின்ற என் மகள் செய்கிறவற்றை உங்களிடம் நான் எப்படிச் சொல்வேன்?

******

பாடல் - 4

செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்,
செய்வான் நின்றனகளும் யானே என்னும்,
செய்து முன் இறந்தவும் யானே என்னும்,
செய்கைப்பயன் உண்பேனும் யானே என்னும்,
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்,
செய்ய கமலக்கண்ணன் ஏறக்கொலோ?
செய்ய உலகத்தீர்க்கு இவை என்சொல்லுகேன்?
செய்ய கனிவாய் இளமான் திறத்தே.

(தாய் சொல்கிறார்) என் மகள், 'செய்துகொண்டிருக்கிற வேலைகள் அனைத்தும் நானே' என்கிறாள், 'இனி செய்யவேண்டிய வேலைகளும் நானே' என்கிறாள், 'முன்பு செய்த வேலைகளும் நானே' என்கிறாள், 'அந்தச் செய்கைகளின் பலன்களை அனுபவிப்பதும் நானே' என்கிறாள், 'இந்தச் செயல்களைச் செய்கிறவர்களைப் படைப்பதும் நானே' என்கிறாள், இதையெல்லாம் கேட்டால், சிவந்த தாமரைபோன்ற கண்களைக்கொண்ட திருமாலின் ஆவேசம் இவளுக்குள் ஏற்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது,  கபடம் அறியாத உலகத்து மக்களே, சிவந்த கனிபோன்ற வாயைக்கொண்ட என்னுடைய மகள், இந்த இளமானின் தன்மையை நான் உங்களுக்கு எப்படிச் சொல்வேன்?

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/sep/28/ஐந்தாம்-பத்து-ஆறாம்-திருவாய்மொழி---பாடல்-3-4-2780721.html
2778458 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 9, 10 சொ. மணியன் Wednesday, September 27, 2017 11:52 AM +0530  

பாடல் - 9

புள்ளின் வாய் பிளந்தாய், மருதுஇடை போயினாய்,
                                                           எருது ஏழ் அடர்த்த என்
கள்ள மாயவனே, கருமாணிக்கச் சுடரே,
தெள்ளியார் திருநான்மறைகள் வல்லார் மலி தண்
                                                           சீரீவரமங்கை
உள்ளிருந்த எந்தாய், அருளாய் உய்யும் ஆறு எனக்கே.

பறவை வடிவத்தில் வந்த பகாசுரனின் வாயைப் பிளந்தவனே, மருத மரங்களுக்கிடையே சென்றவனே, ஏழு எருதுகளை வென்ற என் கள்ள மாயவனே, கரிய மாணிக்கச் சுடரே, தெளிவானவர்கள், நான்கு திருமறைகளிலும் வல்லவர்கள் நிறைந்த, குளிர்ச்சியான ஶ்ரீவரமங்கை (நாங்குநேரி) என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருப்பவனே, எங்கள் தந்தையே, நான் உய்யும் வழியை எனக்கு அருளவேண்டும்.

******

பாடல் - 10

ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்,
                                                                            உனக்கு ஓர் கைம்
மாறு நான் ஒன்று இலேன், எனது ஆவியும் உனதே,
சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும் மலி தண்
                                                                           சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய், தெய்வ நாயகனே.

சேற்றில் விளைந்த கரும்பும், பெரிய செந்நெல்லும் நிறைந்த, குளிர்ச்சியான ஶ்ரீவரமங்கை (நாங்குநேரி) என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருப்பவனே, நறுமணம் நிறைந்த, குளிர்ச்சியான மலர்கள் நிறைந்த துளசியை அணிந்த திருமுடியைக் கொண்டவனே, தெய்வ நாயகனே, எனக்கு உய்வதற்கான வழியைக் கேட்டேன், உன்னுடைய திருவடிகளைச் சரணடையும் வழியைக் காட்டினாய், உனக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்? இனி என் உயிரும் உன்னுடையதே.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/oct/07/ஐந்தாம்-பத்து-ஏழாம்-திருவாய்மொழி---பாடல்-9-10-2778458.html
2778453 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 3, 4 சொ. மணியன் Wednesday, September 27, 2017 11:51 AM +0530  

பாடல் - 3

கருளப் புள் கொடி, சக்கரப்படை வான நாட, எம்
                                                               கார்முகில்வண்ணா,
பொருள் அல்லாத என்னைப் பொருள் ஆக்கி அடிமை
                                                               கொண்டாய்,
தெருள்கொள் நால் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர
                                                               மங்கல நகர்க்கு
அருள்செய் தங்கியிருந்தாய், அறியேன் ஒரு கைம்மாறே.

கருடக்கொடி, சக்ராயுதத்தை ஏந்திய வான நாடனே, எங்கள் கார்முகில்வண்ணனே, ஒரு பொருட்டாக மதிக்குமளவு தகுதியில்லாதவன் நான், ஆனாலும், நீ என்னை ஒரு பொருளாக எண்ணி அடிமையாக்கிக்கொண்டாய், நான்கு வேதங்களையும் நன்கு அறிந்து தெளிவுபெற்றவர்கள் பலர் வாழ்கிற ஶ்ரீவரமங்கைநகர் (நாங்குநேரி) என்னும் திருத்தலத்திற்கு அருள்செய்வதற்காக அங்கே எழுந்தருளியிருப்பவனே, நீ எங்களுக்குச் செய்கிறவற்றுக்கெல்லாம் நாங்கள் என்ன கைம்மாறு செய்வது! எங்களுக்குத் தெரியவில்லையே!

******

பாடல் - 4

மாறுசேர்படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் அன்று
                                                                         மாயப்போர் பண்ணி
நீறு செய்த எந்தாய், நிலம் கீண்ட அம்மானே,
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கலநகர்
ஏறி வீற்றிருந்தாய், உன்னை எங்கு எய்தக் கூவுவனே?

பாண்டவர்கள் ஐவருக்காக அன்று மாயப்போர் புரிந்தவனே, அவர்களுக்கு எதிரிகளாகப் படையோடு வந்த கௌரவர்கள் நூறு பேரும் மங்கும்படி செய்து விரோதிகளைப் பொடிப்பொடியாக்கியவனே, பூமியைப் பிரளயத்திலிருந்து கீண்டு எடுத்த அம்மானே, தெளிவான ஞானம் கொண்டவர்கள் நடத்தும் வேத வேள்விகள் இடைவிடாமல் தொடர்ந்து நடைபெறுகின்ற ஶ்ரீவரமங்கை (நாங்குநேரி) என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருப்பவனே, உன்னை நான் எப்படிப் பெறுவேன்? எங்கே வந்து அடைவதாக எண்ணிக் கூப்பிடுவேன்?

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/oct/04/ஐந்தாம்-பத்து-ஏழாம்-திருவாய்மொழி---பாடல்-3-4-2778453.html
2778455 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 5, 6 சொ. மணியன் Wednesday, September 27, 2017 11:51 AM +0530  

பாடல் - 5

எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ தெவ்வத்து
                                                            உள்ஆயுமாய் நின்று
கைதவங்கள் செய்யும் கருமேனி அம்மானே,
செய்த வேள்வியர் வையத்தேவர் அறாச் சிரீவர
                                                           மங்கலநகர்
கைதொழ இருந்தாய், அது நானும் கண்டேனே.

எப்படிப்பட்ட பகைவர்களின் கூட்டங்களிலும் சென்று, அவர்களுக்கு எதிராக வஞ்சகம் புரிகின்ற பெருமானே, கருத்த திருமேனி கொண்ட அம்மானே, உன்னை அழைத்துக் கூவும் தகுதி எனக்கு உண்டா? வேள்விகளைப் புரிகிறவர்கள், பூலோகத்துத் தேவர்களான வைணவர்கள் நிறைந்திருக்கும் ஸ்ரீவரமங்கை (நாங்குநேரி) என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருப்பவனே, அனைவரும் கை
கூப்பித் தொழும்படி திகழ்பவனே, உன் பெருமையை நான் கண்டேனே.


******

பாடல் - 6

ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே, கண்ணா, என்றும்
                                                                       என்னை ஆளுடை
வான நாயகனே, மணி மாணிக்கச் சுடரே,
தேன மாம்பொழில் தண் சிரீவர மங்கலத்தவர்
                                                                      கைதொழ உறை
வானமாமலையே, அடியேன் தொழ வந்தருளே.

வராக அவதாரமெடுத்து நிலத்தை எடுத்த என் அப்பனே, கண்ணா, என்றைக்கும் என்னை ஆளுகின்ற வான நாயகனே, அழகிய மாணிக்கச்சுடரே, தேன் நிரம்பிய மாமரச்சோலைகள் நிறைந்த, குளிர்ந்த, ஶ்ரீவரமங்கை (நாங்குநேரி) என்னும் திருத்தலத்திலே எழுந்தருளி, அங்குள்ள எல்லாரும் கை கூப்பித் தொழும்படி இருக்கும் வானமாமலையே, நான் தொழும்படி வந்தருள்வாய்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/oct/05/ஐந்தாம்-பத்து-ஏழாம்-திருவாய்மொழி---பாடல்-5-6-2778455.html
2778456 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 7, 8 சொ. மணியன் Wednesday, September 27, 2017 11:51 AM +0530  

பாடல் - 7

வந்தருளி என் நெஞ்சு இடம்கொண்ட வானவர்
                                                            கொழுந்தே, உலகுக்கு ஓர்
முந்தைத் தாய், தந்தையே, முழு ஏழ் உலகும் உண்டாய்,
செந்தொழிலவர் வேதவேள்வி அறாச் சிரீவர மங்கலநகர்
அந்தம்இல் புகழாய், அடியேனை அகற்றேலே.

எனக்காக வந்தருளி என்னுடைய நெஞ்சைத் தனக்கு இடமாகக் கொண்ட பெருமானே, வானவர்களின் கொழுந்தே, உலகுக்கு ஒப்பற்ற, பழைமையான தாய், தந்தையே, ஏழு உலகங்களையும் முழுமையாக உண்டவனே, சிறந்த பணிகளைச் செய்கிறவர்கள் வேத வேள்விகளை ஓய்வின்றிச் செய்துகொண்டிருக்கிற ஶ்ரீவரமங்கை (நாங்குநேரி) என்னும் திருத்தலத்திலே எழுந்தருளியிருப்பவனே, எல்லையில்லாத புகழைக்கொண்டவனே, என்னை உன்னிடமிருந்து அகற்றிவிடாதே.


******

பாடல் - 8

அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்களாம் அவை
                                                                                  நன்கு அறிந்தனன்,
அகற்றி என்னையும் நீ அரும்சேற்றில் வீழ்த்திகண்டாய்,
பகல் கதிர் மணிமாடம் நீடு சிரீவர மங்கைவாணனே,
                                                                                 என்றும்
புகற்கு அரிய எந்தாய், புள்ளின் வாய் பிளந்தானே.

மிகுந்த ஒளிவீசும் மணிகள் பதிக்கப்பட்ட, உயர்ந்த மாடங்களைக்கொண்ட ஶ்ரீவரமங்கை (நாங்குநேரி) என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருப்பவனே, என்றைக்கும் சொல்லில் விளக்கமுடியாத சிறப்புகளைக்கொண்ட எங்கள் தந்தையே, பகாசுரன் என்கிற பறவையின் வாயைப் பிளந்தவனே, உன்மேல் அன்பற்றவர்களை அகற்றுவதற்காக நீ மாயமான, வலிமையான ஐந்து புலன்களைப் படைத்திருக்கிறாய், இதனை நான் நன்கு அறிவேன், இப்போது, உன்னிடமிருந்து என்னை அகற்றி, மீளமுடியாத அந்தச் சேற்றில் என்னை வீழ்த்திவிடுவாயோ என்று நான் அஞ்சுகிறேன்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/oct/06/ஐந்தாம்-பத்து-ஏழாம்-திருவாய்மொழி---பாடல்-7-8-2778456.html
2778452 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 1, 2 சொ. மணியன் Wednesday, September 27, 2017 11:50 AM +0530  

பாடல் - 1

நோற்ற நோன்பு இலேன், நுண் அறிவு இலேன் ஆகிலும்,
                                                   இனி உன்னை விட்டு ஒன்று
ஆற்றகிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே,
சேற்றுத் தாமரை செந்நெல் ஊடு மலர் சிரீவர மங்கல நகர்
வீற்றிருந்த எந்தாய், உனக்கு மிகை அல்லேன் அங்கே.

ஆதிசேஷனைப் பாம்புப்படுக்கையாகக் கொண்ட அம்மானே, வயலில் செந்நெல்லுக்கு நடுவே சேற்றில் செந்தாமரை மலர்கிற ஶ்ரீவரமங்கைநகர் (நாங்குநேரி) எனும் திருத்தலத்திலே வீற்றிருக்கும் எங்கள் தந்தையே, நான் எந்த நோன்பும் நோற்கவில்லை, உன்னை அறியும் நுட்பமான அறிவும் எனக்கில்லை, அதேசமயம், உன்னைப்பிரிந்து ஒரு கணமும் என்னால் இருக்க இயலாது, பெருமானே, ஶ்ரீவரமங்கை நகரிலே நீ என்னை அந்நியமாக வைக்காமல் அருள்புரியவேண்டும்.


******

பாடல் - 2

அங்கு உற்றேன் அலேன், இங்கு உற்றேன் அலேன்,
உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்கு உற்றேனும் அலேன், இலங்கை செற்ற அம்மானே,
திங்கள்சேர் மணிமாட நீடு சிரீவர மங்கல நகர் உறை
சங்கு சக்கரத்தாய், தமியேனுக்கு அருளாயே.

இலங்கையை வென்ற அம்மானே, நிலவைத் தொடுமளவு உயர்ந்த மணிமாடங்கள் நிறைந்த ஶ்ரீவரமங்கைநகர் (நாங்குநேரி) என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருப்பவனே, சங்கு, சக்கரம் தாங்கியவனே, நான் பரமபதத்தை அடைந்து உனக்குச் சேவை புரியவில்லை, அதனை அடையும் முயற்சியில் இங்கே பூமியிலும் நற்செயல்களைச் செய்யவில்லை, உன்னைக் காணவேண்டும் என்கிற ஆசையிலே நான் எங்கும் இல்லாதவனாக இருக்கிறேன், பெருமானே, தனியாக இருக்கும் எனக்கு நீயே அருள்புரியவேண்டும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/oct/03/ஐந்தாம்-பத்து-ஏழாம்-திருவாய்மொழி---பாடல்-1-2-2778452.html
2780701 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 1, 2 சொ. மணியன் Wednesday, September 27, 2017 11:49 AM +0530  

பாடல் - 1

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்,
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்,
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்,
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்,
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்,
கடல் ஞாலத்து ஈசன் வந்து ஏறக்கொலோ,
கடல் ஞாலத்தீர்க்கு இவை என்சொல்லுகேன்?
கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே.

(தாய் சொல்கிறார்) என் மகள், ‘கடலுடன் கூடிய இந்த உலகத்தைப் படைத்தது நானே’ என்கிறாள், ‘உலகமாக இருப்பதும் நானே’ என்கிறாள், ‘மகாபலியிடம் உலகத்தைப் பெற்றதும் நானே’ என்கிறாள், ‘பிரளயத்தின்போது இந்த உலகத்தை மேலே எடுத்துவந்து காப்பாற்றியதும் நானே’ என்கிறாள், ‘இந்த உலகத்தைக் காப்பதற்காக அதனை உண்டதும் நானே’ என்கிறாள், இதையெல்லாம் கேட்டால், கடலுடன் கூடிய இந்த உலகத்தின் தலைவன், திருமாலின் ஆவேசம்
இவளுக்குள் ஏற்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது, உலகத்து மக்களே, கடல் சூழ்ந்த இந்த உலகத்திலே இருக்கிற என் மகள் சொல்லும் இந்தச் சொற்களையெல்லாம் நான் உங்களுக்கு எப்படிச் சொல்வேன்?

******

பாடல் - 2

கற்கும் கல்விக்கும் எல்லை இலனே என்னும்,
கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்,
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்,
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்,
கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்,
கற்கும் கல்விநாதன் வந்து ஏறக்கொலோ?
கற்கும் கல்வியீர்க்கு இவை என்சொல்லுகேன்?
கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே.

(தாய் சொல்கிறார்) என் மகள், ‘கற்கும் கல்வியின் எல்லைக்குள் நான் இல்லை’ என்கிறாள், ‘கற்கும் கல்வியும் நானே’ என்கிறாள், ‘கற்கும் கல்வியை ஏற்படுத்துவதும் நானே’ என்கிறாள், ‘கற்கும்போது ஏற்படும் ஐயங்களைத் தீர்ப்பதும் யானே’ என்கிறாள், ‘கற்கும் கல்வியின் சாரமும் நானே’ என்கிறாள், இதையெல்லாம் கேட்டால், கற்கும் கல்விகள் அனைத்தின் தலைவன், எம்பெருமானின் ஆவேசம் இவளுக்குள் ஏற்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது, நீங்கள் (உலகத்தவர்கள்) இதுபற்றி இனிமேல்தான் கற்கவேண்டும், இந்நிலையில், இவற்றைக் கற்றுக்கொண்ட என் மகள் காண்கிறவற்றை நான் உங்களுக்கு எப்படிச் சொல்வேன்? 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/sep/27/ஐந்தாம்-பத்து-ஆறாம்-திருவாய்மொழி---பாடல்-1-2-2780701.html
2778447 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 7, 8 சொ. மணியன் Wednesday, September 27, 2017 11:45 AM +0530  

பாடல் - 7

நிறைந்த வன்பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை
                                                                             காணக்கொடாள்,
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன்
                                                                            மேனியொடும்
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமிஅம் கை
                                                                            உளதே.

(இறைவன்மீது அன்புகொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) என்னுடைய தாய் என்மீது கோபமாக இருக்கிறார், ‘நம்முடைய குடும்பத்துக்கு இவள் மிகப் பெரிய, கொடுமையான பழியைக் கொண்டுவருகிறாள்’ என்கிறார், நான் நம்பியைக் காணச்செல்லாதபடி தடுக்கிறார், நான் என்ன செய்வேன்? சிறந்த புகழையுடைய திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபிறகு, அவருடைய நிறைவான சோதி வெள்ளம் சூழ்ந்த, நீண்ட, அழகிய திருமேனியும், அழகிய திருக்கைகளில் சக்ராயுதத்தைத் தாங்கியிருக்கிற திருக்காட்சியும் எனக்குள் நிறைந்துவிட்டதே, இந்தத் திருக்கோலத்தில் அவர் எனக்குள் நின்றுவிட்டாரே.

********

பாடல் - 8

கையுள் நல்முகம் வைக்கும், நையும் என்று அன்னையரும்
                                                                                                     முனிதிர்,
மைகொள் மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்,
செய்ய தாமரைக்கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள்குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன்
                                                                                                     முன்நிற்குமே.

(இறைவன்மீது அன்புகொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) தாய்மார்களே, நான் என்னுடைய நல்ல முகத்தைக் கைகளில் தாங்கிக்கொண்டு வருந்துகிறேன் என்று நீங்கள் கோபப்படுகிறீர்கள், நான் என்ன செய்வேன்? மேகங்கள் தவழும் மாடங்களைக்கொண்ட திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபிறகு, அவருடைய சிவந்த தாமரைக்கண்ணும் கீழிடுப்பும் சிற்றிடையும் கட்டமைப்பான வடிவமும் நன்கு செறிந்து, நீண்ட குழல் தாழ்ந்து விழுகிற திருத்தோள்களும்தான் பாவியான என்முன்னே நிற்கின்றன.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/sep/24/நாள்தோறும்-நம்மாழ்வார்---பாடல்-7-8-2778447.html
2778448 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 9, 10 சொ. மணியன் Wednesday, September 27, 2017 11:45 AM +0530

பாடல் - 9

முன் நின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும்
                                                                                            முனிதிர்,
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
சென்னி நீள்முடி ஆதிஆய உலப்பு இல் அணிகலத்தன்
கன்னல், பால், அமுதுஆகி வந்து என் நெஞ்சம் கழியானே.

(இறைவன்மீது அன்புகொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) தோழிமார்களே, தாய்மார்களே, பெண்களுக்குச் சொல்லப்படுகிற இலக்கணத்தின்படி நான் வீட்டுக்குள்ளேயே இருக்காமல் வெளியே வந்து எல்லார்முன்பும் நிற்கிறேன் என்று நீங்கள் என்மேல் கோபப்படுகிறீர்கள், நான் என்ன செய்வேன்? நிலைத்துநிற்கும் மாடங்களைக்கொண்ட திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபிறகு, அவன்மட்டுமே என் நினைவில் இருக்கிறான், தலையில் அணிந்திருக்கிற நீண்ட திருமுடியில் தொடங்கி எண்ணற்ற அணிகலன்களைக்கொண்ட எம்பெருமான், கரும்பாக, பாலாக, அமுதாக என் நெஞ்சில் வந்து நீங்காமல் தங்கிவிட்டானே.

*******

பாடல்  - 10

கழிய மிக்கதொர் காதலள் இவள் என்று அன்னை
                                                                                   காணக்கொடாள்,
வழுஇல் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
குழுமித் தேவர் குழாங்கள் கைதொழச் சோதி
                                                                                  வெள்ளத்தினுள்ளே
எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும், ஆர்க்கும் அறிவு
                                                                                  அரிதே.

(இறைவன்மீது அன்புகொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) என்னுடைய தாய் என்மீது கோபமாக இருக்கிறார், அளவுக்கதிகமான காதலைக் கொண்டவள் இவள் என்கிறார், நான் நம்பியைக் காணச் செல்லாதபடி தடுக்கிறார், நான் என்ன செய்வேன்? குற்றமில்லாத புகழைக்கொண்ட திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபிறகு, தேவர் கூட்டங்கள் கூடி வந்து கை தொழ, சோதி வெள்ளத்தின் நடுவே எழுகின்ற அவனுடைய திரு உருவம் என் நெஞ்சில் எழுகிறது, இதனை யாராலும் அறிய இயலாது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/sep/25/நாள்தோறும்-நம்மாழ்வார்---பாடல்-9-10-2778448.html
2778449 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 11 சொ. மணியன் Wednesday, September 27, 2017 11:45 AM +0530 பாடல் - 11

அறிவு அரிய பிரானை, ஆழிஅம் கையனையே அலற்றி
நறிய நல்மலர் நாடி நல்குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறிகொள் ஆயிரத்துள் இவைபத்தும் திருக்குறுங்குடி
                                                                                                     அதன்மேல்
அறியக் கற்றுவல்லார் வைட்ணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே.

மணம் மிகுந்த, நல்ல மலர்களைத் தேடுகிறவரான, நல்ல திருக்குருகூர்ச் சடகோபன், யாராலும் எளிதில் அறியப்பட இயலாத பெருமானை, சக்ராயுதத்தை ஏந்திய அழகிய கைகளைக்கொண்டவனை அழைத்துச் சொன்ன பாடல்கள் ஆயிரம், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களும் திருக்குறுங்குடிப் பெருமானின் அடையாளங்களை விவரிக்கிறவை, இவற்றை அறிந்து கற்க வல்லவர்கள், ஆழமான கடலால் சூழப்பட்ட இந்த உலகிலே வைஷ்ணவர்களாகத் திகழ்வார்கள்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/sep/26/நாள்தோறும்-நம்மாழ்வார்---பாடல்-11-2778449.html
2777656 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 3, 4 சொ. மணியன் Wednesday, September 27, 2017 11:44 AM +0530  

பாடல் - 3

நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும்
                                                                                          முனிதிர்,
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுளும் நீங்காவே.

(இறைவன்மீது அன்புகொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) தாய்மார்களே, நீங்கள் என்மீது கோபப்படுகிறீர்கள், ‘இவள் இங்கே செயலற்று நிற்கிறாள், திகைக்கிறாள், நோகிறாள்’ என்று சினம்கொள்கிறீர்கள், நான் என்ன செய்வேன்? மலைபோல் மாடங்கள் உயர்ந்துநிற்கிற திருக்குறுங்குடியில் எழுந்தருளியிருக்கும் நம்பியை நான் கண்டபிறகு, அவருடைய வெற்றி கொண்ட வில்லும், தண்டும், வாளும், சக்ராயுதமும், சங்கும்தான் எங்கும் தோன்றுகின்றன, என் கண்ணைவிட்டும் நெஞ்சைவிட்டும் அவை விலகுவதே இல்லை.

*******

பாடல் - 4

நீங்கநில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர்,
தேன்கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான்
                                                                                                         கண்டபின்
பூந்தண் மாலைத் தண்துழாயும் பொன்முடியும் வடிவும்
பாங்குதோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவ்வே.

(இறைவன்மீது அன்புகொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) தாய்மார்களே, என்னுடைய கண்களிலிருந்து நீர் வழிந்துகொண்டே இருக்கிறது என்று நீங்கள் கோபப்படுகிறீர்கள், நான் என்ன செய்வேன்? தேன் நிறைந்த சோலைகளைக்கொண்ட திருக்குறுங்குடியில் எழுந்தருளியிருக்கும் நம்பியை நான் கண்டபிறகு, பூக்கள் நிறைந்த, குளிர்ச்சியான மாலையும், குளிர்ந்த துளசியும் பொன்முடியும் திருமேனி அழகும், பாங்காகத் தோன்றும் பட்டும் அரைநாணும்தான் பாவியாகிய என் பக்கத்தே இருக்கின்றன, (வேறெதும் எனக்குத் தெரிவதில்லை.)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/sep/22/நாள்தோறும்-நம்மாழ்வார்---பாடல்-3-4-2777656.html
2778268 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 5, 6 சொ. மணியன் Wednesday, September 27, 2017 11:44 AM +0530

பாடல் - 5

பக்கம் நோக்கி நிற்கும், நையும் என்று அன்னையரும்
                                                                                                    முனிதிர்,
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
தொக்கசோதித் தொண்டைவாயும் நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக்கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே.

(இறைவன்மீது அன்புகொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) தாய்மார்களே, இறைவன் வருகின்ற பக்கத்தையே பார்த்துக்கொண்டு நான் நிற்கிறேன், மனம் வருந்துகிறேன் என்று நீங்கள் கோபப்படுகிறீர்கள், நான் என்ன செய்வேன்? தகுதியுடைய புகழ் கொண்ட திருக்குறுங்குடி நம்பியை நான் பார்த்தபிறகு, ஒன்றாகச் சேர்ந்த சோதிவடிவமான அவரது கொவ்வைப்பழம் போன்ற வாயும், நீண்ட புருவங்களும், சிறந்த தாமரைக்கண்ணும் பாவியாகிய என்னுடைய உயிரில் தங்கிவிட்டன.

******

பாடல் - 6

மேலும் வன்பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை
                                                                                காணக்கொடாள்,
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான்
                                                                                கண்டபின்
கோல நீள்கொடி மூக்கும் தாமரைக்கண்ணும் கனிவாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே.

(இறைவன்மீது அன்புகொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) என்னுடைய தாய் என்மீது கோபமாக இருக்கிறார், 'இவளால் நம் குடும்பத்துக்கு மேலும் கொடுமையான பழி வருகிறது' என்கிறார், நான் நம்பியைக் காணச்செல்லாதபடி தடுக்கிறார், நான் என்ன செய்வேன்? சோலைகள் சூழ்ந்த, குளிர்ந்த திருக்குறுங்குடியிலே எழுந்தருளியிருக்கும் நம்பியை நான் பார்த்தபிறகு, அவருடைய அழகிய, நீண்ட, கற்பகக்கொடிபோன்ற மூக்கும், தாமரைபோன்ற கண்ணும், கனிபோன்ற வாயும், நீலத் திருமேனியும், நான்கு திருத்தோள்களும் என்னுடைய நெஞ்சில் நிறைந்துவிட்டன.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/sep/23/நாள்தோறும்-நம்மாழ்வார்---பாடல்-5-6-2778268.html
2777125 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 1, 2 சொ. மணியன் Thursday, September 21, 2017 09:44 AM +0530

பாடல் - 1

எங்ஙனேயோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர்,
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனிவாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே.

(இறைவன்மீது அன்புகொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) அன்னைமார்களே, நீங்கள் என்மீது கோபப்படுவது ஏனோ? நம் அழகிய திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபிறகு, அவன் கையிலிருக்கும் சங்கு, சக்ராயுதம், அவனுடைய தாமரைக்கண்கள், செங்கனிபோன்ற வாய்… இவற்றின்பின்னேதான் என் நெஞ்சம் செல்கிறது. (நான் என்ன செய்வேன்?)

******

பாடல் - 2

என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே,
தென்னன் சோலை திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும்
மன்னு பூணும் நான்குதோளும் வந்து எங்கும் நின்றிடுமே.

(இறைவன்மீது அன்புகொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) என் நெஞ்சினால் அவனைப் பாருங்கள், (என் நேசத்தைப் புரிந்துகொள்ளுங்கள்), அதன்பிறகு, என்னைக் கோபிக்காதீர்கள், தென் திசையிலுள்ள, சோலைகள் நிறைந்த திருக்குறுங்குடியிலே எழுந்தருளியிருக்கும் நம்பியை நான் கண்டபிறகு, (எனக்கு வேறு எதைப்பற்றியும் எண்ணமில்லை, வேறு எதுவும் எனக்குத் தெரியவே இல்லை,) எங்கு பார்த்தாலும் அவனுடைய மின்னும் பூணூலும், குண்டலமும், திருமார்பில் உள்ள ஶ்ரீவத்ஸம் என்கிற மறுவும், அணிந்திருக்கிற ஆபரணங்களும், நான்கு திருத்தோள்களும்தான் தெரிகின்றன.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/sep/21/ஐந்தாம்-பத்து-ஐந்தாம்-திருவாய்மொழி---பாடல்-1-2-2777125.html
2777084 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 1, 2 சொ. மணியன் Thursday, September 21, 2017 09:01 AM +0530  

பாடல் - 1

எங்ஙனேயோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர்,
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனிவாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே.

(இறைவன்மீது அன்புகொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) அன்னைமார்களே, நீங்கள் என்மீது கோபப்படுவது ஏனோ? நம் அழகிய திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபிறகு, அவன் கையிலிருக்கும் சங்கு, சக்ராயுதம், அவனுடைய தாமரைக்கண்கள், செங்கனிபோன்ற வாய்… இவற்றின்பின்னேதான் என் நெஞ்சம் செல்கிறது. (நான் என்ன செய்வேன்?)

******

பாடல் - 2

என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே,
தென்னன் சோலை திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும்
மன்னு பூணும் நான்குதோளும் வந்து எங்கும் நின்றிடுமே.

(இறைவன்மீது அன்புகொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) என் நெஞ்சினால் அவனைப் பாருங்கள், (என் நேசத்தைப் புரிந்துகொள்ளுங்கள்), அதன்பிறகு, என்னைக் கோபிக்காதீர்கள், தென் திசையிலுள்ள, சோலைகள் நிறைந்த திருக்குறுங்குடியிலே எழுந்தருளியிருக்கும் நம்பியை நான் கண்டபிறகு, (எனக்கு வேறு எதைப்பற்றியும் எண்ணமில்லை, வேறு எதுவும் எனக்குத் தெரியவே இல்லை,) எங்கு பார்த்தாலும் அவனுடைய மின்னும் பூணூலும், குண்டலமும், திருமார்பில் உள்ள ஶ்ரீவத்ஸம் என்கிற மறுவும், அணிந்திருக்கிற ஆபரணங்களும், நான்கு திருத்தோள்களும்தான் தெரிகின்றன.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/sep/21/ஐந்தாம்-பத்து-ஐந்தாம்-திருவாய்மொழி---பாடல்-1-2-2777084.html
2773770 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 11 சொ. மணியன் Wednesday, September 20, 2017 12:00 AM +0530
பாடல் - 11

உறங்குவான்போல் யோகுசெய்த பெருமானைச்
சிறந்த பொழில்சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறம் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தால்
இறந்துபோய் வைகுந்தம் சேரா ஆறு எங்ஙனேயோ?

பாற்கடலிலே உறங்குவதுபோல யோகத்துயில் கொள்கிறவன் எம்பெருமான், அப்பெருமானைப் பற்றி, சிறந்த சோலைகளால் சூழப்பட்ட திருக்குருகூர்ச் சடகோபன் பண் நிறைந்த அந்தாதிப் பாடல்கள் ஆயிரம் பாடினார், அவற்றுள் இந்தப் பத்தையும் யார் பாடுகிறார்களோ, அவர்களுடைய பூமி வாழ்க்கை முடியும்போது, அவர்கள் வைகுந்தம் சென்று சேராமலிருப்பார்களா? (நிச்சயம் அவர்கள் பரமபதத்தைச் சேர்வார்கள்.)

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/sep/20/ஐந்தாம்-பத்து-நான்காம்-திருவாய்மொழி---பாடல்-11-2773770.html
2772574 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 7, 8 சொ. மணியன் DIN Monday, September 18, 2017 12:00 AM +0530  

பாடல் - 7

காப்பார் ஆர் இவ்விடத்து? கங்கு இருளின் நுண் துளியாய்ச்
சேண்பாலது ஊழியாய்ச் செல்கின்ற கங்குல்வாய்த்
தூப்பால வெண் சங்கு, சக்கரத்தன் தோன்றானால்,
தீப்பால வல்வினையேன், தெய்வங்கள், என்செய்கேனோ?

(இறைவன்மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) செறிந்த இருளும், நுண்ணிய பனித்துளிகளும் கொண்ட இந்த இரவு, ஊழிக்காலம்போல் நீண்டுகொண்டே செல்கிறது, தூய்மையான, வெண்மையான சங்கு, சக்ராயுதத்தை ஏந்திய எம்பெருமானும் இங்கே தோன்றவில்லை, தெய்வங்களே, இந்த நிலைமையில் என்னை யார் காப்பார்கள்? தீயைப்போன்ற கொடிய வினைகளைச் செய்த நான் இனி என்ன செய்வேன்?

******

பாடல் - 8

தெய்வங்காள் என்செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்
மெய்வந்து நின்று எனது ஆவி மெலிவிக்கும்,
கைவந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்,
தைவந்த தண்தென்றல் வெம்சுடரில் தான் அடுமே.

(இறைவன் மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) தெய்வங்களே, இனி நான் என்ன செய்வேன்? ஒரே ஓர் இரவுதான், ஆனால் அது ஏழு ஊழிக்காலங்களைப்போல் நீள்கிறது, மிகைப்படுத்திச் சொல்லவில்லை, நிஜமாகவே அதுதான் நடக்கிறது, இந்த இரவு என்னுடைய உயிரை மெலியச்செய்கிறது, கையிலே சக்ராயுதத்தை ஏந்திய என் கண்ணனும் இங்கே வரவில்லை, அதனால், என்னைத் தழுவுகின்ற குளிர்ச்சியான தென்றல்கூட, எனக்கு வெப்பமாகவே தோன்றுகிறது, என்னை வருத்துகிறது.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/sep/18/ஐந்தாம்-பத்து-நான்காம்-திருவாய்மொழி---பாடல்-7-8-2772574.html
2772572 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 5, 6 சொ. மணியன் DIN Sunday, September 17, 2017 12:00 AM +0530  

பாடல் - 5

ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீள் இரவும் துஞ்சுவரால்,
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்,
பேர் என்னை மாயாதால், வல்வினையேன் பின் நின்றே.

(இறைவன்மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) என் தாய்மார்களும் தோழிமார்களும் என்னுடைய நிலைமையைச் சிந்திக்காமல் இந்த நீண்ட இரவில் நன்றாகத் தூங்குகிறார்கள், இப்போது என்னைப் பற்றி ஆராய்ந்து கவலைப்படுகிறவர்கள்/அக்கறை காட்டுபவர்கள் யார்? மேகம் போன்ற திருமேனியைக் கொண்டவனான நம் கண்ணனும் இங்கே வரவில்லை, வலிய வினைகளைச் செய்தவளான என்னுடைய பாவங்கள் என்றைக்கும் இங்கேயே நிற்கும், ஒருபோதும் தீராது.

******

பாடல் - 6

பின்நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிது அடுமால்,
முன்நின்று இரா ஊழி கண்புதைய மூடிற்றால்,
மன்நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்,
இந்நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ்விடத்தே?

(இறைவன் மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) விடாமல் எனக்குப் பின்னே வருகிற காதல் நோய் என்னுடைய நெஞ்சத்தைப் பெரிதும் வருத்துகிறது, எனக்குமுன்னே இரவுப்பொழுது என்கிற ஊழிக்காலம் கண்களின் ஒளியை மூடுகிறது, நிலைத்து நிற்கும் சக்கரத்தைக்கொண்ட என் மாயவனும் வரவில்லை, இப்படி நிற்கின்ற என்னுடைய நீண்ட உயிரைக் காப்பவர்கள் இங்கே யார்?

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/sep/17/ஐந்தாம்-பத்து-நான்காம்-திருவாய்மொழி---பாடல்-5-6-2772572.html
2772570 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 3, 4 சொ. மணியன் DIN Saturday, September 16, 2017 12:00 AM +0530  

பாடல் - 3

நீயும் பாங்கு அல்லை காண் நெஞ்சமே, நீள் இரவும்
ஓயும் பொழுது இன்றி ஊழியாய் நீண்டதால்,
காயும் கடும்சிலை என் காகுத்தன் வாரானால்,
மாயும் வகை அறியேன் வல்வினையேன் பெண் பிறந்தே.

(இறைவன்மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) நெஞ்சமே, நீயும் எனக்கு ஆதரவாக இல்லை, இந்த நீண்ட இரவும் ஓய்வதாகத் தெரியவில்லை, ஊழிக்காலம்போல் அது நீண்டுகொண்டே செல்கிறது, பகைவர்களை வருத்துகிற கடுமையான வில்லைக் கையில் ஏந்திய என் காகுத்தனும் வரவில்லை, வலிய வினைகளைச் செய்தவளான நான் என்ன செய்வேன்? இந்தப் பூமியில் பெண்ணாகப் பிறந்துவிட்டேன், இறக்கும் வழியும் தெரியவில்லை.

******

பாடல் - 4

பெண் பிறந்தார் எய்தும் பெரும்துயர் காண்கிலேன் என்று
ஒண் சுடரோன் வாராது ஒளித்தான், இம் மண் அளந்த,
கண் பெரிய, செவ்வாய் நம் கார் ஏறு வாரானால்,
என் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே?

(இறைவன் மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) (இந்த நீண்ட இரவு இன்னும் விடியவில்லையே, ஏன்?) ஒருவேளை, பெண்ணாகப் பிறந்தவர்கள் (தன் காதலனைப் பிரிந்து) அடைகிற பெரிய துயரத்தை நான் பார்க்கமாட்டேன் என்று ஒளி நிறைந்த சூரியன் வராமல் ஒளிந்துகொண்டானோ? மண்ணை அளந்த, பெரிய கண்களை உடைய, சிவந்த வாயைக்கொண்ட, மேகம் போன்ற நம் காளை, எம்பெருமானும் இன்னும் வரவில்லை, என்னுடைய மனத்தின் பெரிய துன்பத்தைத் தீர்ப்பவர்கள் யார்? என்னை ஆதரிப்பவர்கள் யார்?

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/sep/16/ஐந்தாம்-பத்து-நான்காம்-திருவாய்மொழி---பாடல்-3-4-2772570.html
2772569 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 1, 2 சொ. மணியன் Friday, September 15, 2017 12:00 AM +0530  

பாடல் - 1

ஊர் எல்லாம் துஞ்சி, உலகு எல்லாம் நள் இருளாய்
நீர் எல்லாம் தேறி ஓர் நீள் இரவாய் நீண்டதால்
பார் எல்லாம் உண்ட நம் பாம்பு அணையான் வரானால்
ஆர் எல்லே வல்வினையேன் ஆவி காப்பார் இனியே.

(இறைவன்மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) ஊரெல்லாம் தூங்கிவிட்டது, உலகம் முழுக்க நள்ளிருள், நீர்நிலைகளிலும் சத்தம் அடங்கிவிட்டது, இந்த நீண்ட இரவு இப்படி நீண்டுகொண்டே செல்கிறது. வலிய வினைகளைச் செய்தவளான நான், இந்த நீண்ட இரவில் வாடுகிறேன், உலகங்கள் அனைத்தையும் உண்ட எம்பெருமான், பாம்புப் படுக்கையிலே பள்ளிகொண்டவன், அவன் வர வேண்டும், அப்போதுதான் என் உயிர் பிழைக்கும். ஒருவேளை அவன் வராவிட்டால், என்னைக் காப்பவர்கள் யார்? (யாருமில்லை.)

******

பாடல் - 2

ஆவிகாப்பார் இனி யார்? ஆழ்கடல், மண், விண் மூடி
மாவிகாரமாய் ஓர் வல் இரவாய் நீண்டதால்
காவிசேர்வண்ணன், என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே, நீயும் பாங்கு அல்லையே.

(இறைவன் மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) ஆழமான கடல், பூமி, வானம் அனைத்தையும் மூடிக்கொண்டு மாபெரும் விகாரமாக எழுகிறது இந்த இரவு, மிகவும் கொடுமை செய்கிறது, முடியாமல் நீண்டுகொண்டே செல்கிறது, நெய்தல் மலர் போன்ற நிறம்கொண்ட என் கண்ணனோ இன்னும் வரவில்லை, பாவியாகிய என்னுடைய நெஞ்சமே, நீயும் எனக்கு ஆதரவாக இல்லை, இனி, என்னுடைய உயிரைக் காப்பவர்கள் யார்?

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/sep/15/ஐந்தாம்-பத்து-நான்காம்-திருவாய்மொழி---பாடல்-1-2-2772569.html
2769050 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 11 சொ. மணியன் DIN Thursday, September 14, 2017 12:00 AM +0530  

பாடல் - 11

இரைக்கும் கரும்கடல்வண்ணன் கண்ணபிரான்தன்னை
விரைக்கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக்கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
உரைக்கவல்லார்க்கு வைகுந்தம் ஆகும் தம் ஊரெல்லாம்.

சத்தமிடும் கரிய கடலின் வண்ணத்தைக்கொண்டவர் கண்ணபிரான், அவரைப் பற்றி, மணம் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட குருகூர்ச் சடகோபன் முறையாக அமைந்த ஆயிரம் அந்தாதிப் பாடல்களை எழுதினார். அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் சொல்லவல்லவர்களுக்கு, தாங்கள் இருக்கும் ஊரே வைகுந்தம் ஆகும்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/sep/14/ஐந்தாம்-பத்து-மூன்றாம்-திருவாய்மொழி---பாடல்-11-2769050.html
2772575 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 9, 10 சொ. மணியன் Wednesday, September 13, 2017 03:01 PM +0530
பாடல் - 9

வெம்சுடரில் தான் அடுமால் வீங்கு இருளின் நுண்துளியாய்
அம்சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால்,
செம்சுடர்த் தாமரைக்கண் செல்வனும் வாரானால்,
நெஞ்சு இடர் தீர்ப்பார் இனி யார்? நின்று உருகுகின்றேனே.

(இறைவன் மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்)  இரவு நீண்டுகொண்டே செல்கிறது, பனியின் நுட்பமான துளிகள் என்மீது வீசுகின்றன, கொடிய நெருப்பைப்போல் என்னைத் துன்புறுத்துகின்றன, அழகிய சுடரைக்கொண்ட சூரியனின் அழகிய, பெரிய தேர் இன்னும் தோன்றவில்லை, சிவந்த, ஒளிநிறைந்த தாமரை போன்ற கண்களைக்கொண்ட செல்வன், எம்பெருமானும் வரவில்லை, ஆகவே, நான் இங்கே நின்று உருகிக்கொண்டிருக்கிறேன். இனி, என் நெஞ்சின் துயரத்தைத் தீர்ப்பவர்கள் யார்?

******

பாடல் - 10

நின்று உருகுகின்றேனேபோல நெடுவானம்
சென்று உருகி நுண்துளியாய்ச் செல்கின்ற கங்குல்வாய்
அன்று ஒருகால் வையம் அளந்தபிரான் வாரான் என்று
ஒன்று ஒருகால் சொல்லாது உலகோ உறங்குமே.

(இறைவன் மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்) இங்கே நின்று உருகிக்கொண்டிருக்கிற என்னைப்போலவே, இந்த நீண்ட வானமும் இரவுப்பொழுதில் உருகுகிறது, நுட்பமான பனித்துளிகளைப் பெய்கிறது, முன்பு ஒருநாள் வாமன அவதாரத்தின்போது தன் திருவடியால் இந்த உலகத்தை அளந்த எம்பெருமான் இன்னும் வரவில்லை, அவன் வரமாட்டான் என்றேனும் யாராவது என்னிடம் சொல்லலாமே, இப்படி எதுவும் சொல்லாமல் இந்த உலகம் உறங்குகிறதே.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/sep/19/ஐந்தாம்-பத்து-நான்காம்-திருவாய்மொழி---பாடல்-9-10-2772575.html
2769033 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 9, 10 சொ. மணியன் DIN Wednesday, September 13, 2017 12:00 AM +0530  

பாடல் - 9

நாணும் நிறையும் கவர்ந்து என்னை நல்நெஞ்சம்
                                                                          கூவிக்கொண்டு
சேண் உயர் வானத்து இருக்கும் தேவபிரான்தன்னை
ஆணை என் தோழீ, உலகுதோறு அலர் தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.

(இறைவன்மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்.) தோழி, என்னுடைய வெட்கத்தையும் அடக்கத்தையும் கவர்ந்துகொண்டு, நல்ல நெஞ்சத்தையும் அழைத்துக்கொண்டு, உயரத்தில், நெடுந்தொலைவில், வானுலகமான பரமபதத்தில் தங்கியிருக்கிறான் எம்பெருமான், தேவர்களின் தலைவன், நான் ஒரு மடல் குதிரையில் ஏறிக்கொள்வேன், உலகுதோறும் சென்று, அவன் எனக்குச் செய்த குற்றங்களைச் சொல்லிச் சிரமப்படுத்துவேன், இது உறுதி.

******

பாடல் - 10

யாம் மடல் ஊர்ந்தும் எம் ஆழி அம்கைப்பிரானுடைத்
தூமடல் தண்ணம் துழாய்மலர் கொண்டு சூடுவோம்,
யா மடம் இன்றி தெருவுதோறு அயல் தையலார்
நா மடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.

(இறைவன் மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்.) நான் மடல் குதிரையில் ஏறப்போகிறேன், பெண்மைக்குரிய மடப்ப குணம் இல்லாதவளாகத் தெருத்தெருவாகச் செல்லப்போகிறேன், அதைக்கண்டு மற்ற பெண்கள் நாக்கு மடங்காமல் பழிச்சொல் சொன்னாலும் சொல்லட்டும், இந்த நாடுமுழுக்க என்னைத் தூற்றினாலும் தூற்றட்டும், அழகிய கையிலே சக்ராயுதத்தை ஏந்திய எம்பெருமானின் தூய இதழ்களையுடைய, குளிர்ச்சியான துளசிமலரைப் பெற்றுச் சூடிக்கொள்வேன்.

]]>
http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/sep/13/ஐந்தாம்-பத்து-மூன்றாம்-திருவாய்மொழி---பாடல்-9-10-2769033.html
2769049 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 9, 10 சொ. மணியன் DIN Wednesday, September 13, 2017 12:00 AM +0530  

பாடல் - 9

நாணும் நிறையும் கவர்ந்து என்னை நல்நெஞ்சம்
                                                                            கூவிக்கொண்டு
சேண் உயர் வானத்து இருக்கும் தேவபிரான்தன்னை
ஆணை என் தோழீ, உலகுதோறு அலர் தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.

(இறைவன்மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்.) தோழி, என்னுடைய வெட்கத்தையும் அடக்கத்தையும் கவர்ந்துகொண்டு, நல்ல நெஞ்சத்தையும் அழைத்துக்கொண்டு, உயரத்தில், நெடுந்தொலைவில், வானுலகமான பரமபதத்தில் தங்கியிருக்கிறான் எம்பெருமான், தேவர்களின் தலைவன், நான் ஒரு மடல் குதிரையில் ஏறிக்கொள்வேன், உலகுதோறும் சென்று, அவன் எனக்குச் செய்த குற்றங்களைச் சொல்லிச் சிரமப்படுத்துவேன், இது உறுதி.

******

பாடல் - 10

யாம் மடல் ஊர்ந்தும் எம் ஆழி அம்கைப்பிரானுடைத்
தூமடல் தண்ணம் துழாய்மலர் கொண்டு சூடுவோம்,
யா மடம் இன்றி தெருவுதோறு அயல் தையலார்
நா மடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.

(இறைவன் மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்.) நான் மடல் குதிரையில் ஏறப்போகிறேன், பெண்மைக்குரிய மடப்ப குணம் இல்லாதவளாகத் தெருத்தெருவாகச் செல்லப்போகிறேன், அதைக்கண்டு மற்ற பெண்கள் நாக்கு மடங்காமல் பழிச்சொல் சொன்னாலும் சொல்லட்டும், இந்த நாடுமுழுக்க என்னைத் தூற்றினாலும் தூற்றட்டும், அழகிய கையிலே சக்ராயுதத்தை ஏந்திய எம்பெருமானின் தூய இதழ்களையுடைய, குளிர்ச்சியான துளசிமலரைப் பெற்றுச் சூடிக்கொள்வேன்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/sep/13/ஐந்தாம்-பத்து-மூன்றாம்-திருவாய்மொழி---பாடல்-9-10-2769049.html
2769032 ஸ்பெஷல்ஸ் நாள்தோறும் நம்மாழ்வார் ஐந்தாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 7, 8 சொ. மணியன் DIN Tuesday, September 12, 2017 12:00 AM +0530  

பாடல் - 7

வலையுள் அகப்படுத்து என்னை நல்நெஞ்சம் கூவிக்கொண்டு
அலைகடல் பள்ளி அம்மானை ஆழிப்பிரான்தன்னைக்
கலைகொள் அகல் அல்குல் தோழி, தம் கண்களால் கண்டு
தலையில் வணங்கவுமாம்கொலோ? தையலார் முன்பே.

(இறைவன்மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்.) புடைவை அணிந்த, அகன்ற அல்குலையுடைய தோழியே, எம்பெருமான் என்னைத் தன் அன்பு வலையில் அகப்படுத்தினார், என்னுடைய நல்ல நெஞ்சத்தைக் கூவி அழைத்துக்கொண்டார், (என்னைப் பற்றிப் பழிச்சொல் பேசுகிற இந்தப்) பெண்கள் முன்னிலையில், அலைகடலிலே பள்ளிகொள்கிற அந்த அம்மானை, ஆழிப்பிரானை நான் கண்களால் காண வேண்டும், தலையால் வணங்க வேண்டும், அந்த பாக்கியம் எனக்குக் கிடைக்குமா!

******

பாடல் - 8

பேய்முலை உண்டு, சகடம் பாய்ந்து, மருது இடை
போய் முதல்சாய்த்து, புள்வாய் பிளந்து, களிறு அட்ட
தூமுறுவல் தொண்டைவாய்ப்பிரானை எந்நாள்கொலோ
நாம் உறுகின்றது, தோழீ, அன்னையர் நாணவே.

(இறைவன்மீது விருப்பம்கொண்ட ஒரு பெண் சொல்கிறாள்.) பேயாக வந்த பூதனையின் முலையைச் சுவைத்து அவளை வீழ்த்தியவன், சக்கரமாக வந்த சகடாசுரன் மீது பாய்ந்து அழித்தவன், மருதமரங்களுக்கு இடையே சென்று அவற்றை வேரோடு சாய்த்தவன், பறவை வடிவத்தில் வந்த பகாசுரனின் வாயைப் பிளந்தவன், குவலயாபீடம் என்கிற யானையை வென்றவன் அந்தக் கண்ணன், இத்தனையையும் செய்துவிட்டு, இயல்பாகத் தூய புன்முறுவல் செய்கிற கொவ்வைப்பழம் போன்ற வாயைக்கொண்ட பிரான், எம்பெருமான், தோழி, என்னைப் பற்றிக் குறைசொல்லும் தாய்மார்களெல்லாம் நாணமடையும்படி அந்தப் பெருமானோடு நான் சேர்வது எப்போது?

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/21/w600X390/.jpg http://www.dinamani.com/specials/naalthorum-nammalvaar/2017/sep/12/ஐந்தாம்-பத்து-மூன்றாம்-திருவாய்மொழி---பாடல்-7-8-2769032.html