Dinamani - பரிகாரத் தலங்கள் - http://www.dinamani.com/specials/Parigara-thalangal/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 2792886 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் சகல பாவங்களைப் போக்கும் துலா மாத சிறப்புபெற்ற மயிலாடுதுறை என்.எஸ். நாராயணசாமி Friday, October 20, 2017 04:35 PM +0530  

இறைவன் பெயர்: மயூரநாதர்

இறைவி பெயர்: அபயாம்பிகை

இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்று, திருஞானசம்பந்தர் பதிகம் இரண்டு என மொத்தம் மூன்று பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது?

மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் மயூரநாதர் கோவில் அமைந்துள்ளது. தமிழக டெல்டாவின் முக்கிய நகரங்களான திருவாரூர், கும்பகோணம், சிதம்பரம், மன்னார்குடி, நாகப்பட்டினம் ஆகிய நகரங்களின் பிரதான சந்திப்பாக மயிலாடுதுறை விளங்குகிறது. இந்த ஊரிலிருந்து மேற்குறிப்பிட்ட நகரங்கள் அனைத்தும் தலா ஒன்றரை மணி நேர பயணத்தொலைவில் அமைந்துள்ளன. அரசாங்க ஏடுகளில் சில பல ஆண்டுகளுக்கு முன்பு வரை மாயவரம் என்றே இருந்த இவ்வூர், திருமுறைகளில் “மயிலாடுதுறை” என காணப்படுவதை சுட்டிக்காட்டி “மயிலாடுதுறை” என்று எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தமிழக அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஆலய முகவரி

அருள்மிகு மயூரநாதர் திருக்கோயில்,

மயிலாடுதுறை, மயிலாடுதுறை அஞ்சல்,

மயிலாடுதுறை வட்டம்,

நாகப்பட்டினம் மாவட்டம் – 609 001.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

காவிரிக் கரையில் உள்ள ஆறு சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாகக் கருதப்படுகின்றன. அவற்றில் மயிலாடுதுறையும் ஒன்றாகும். மற்றவை, 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம், 5. திருசாய்க்காடு ஆகும். மயிலாடுதுறை, மாயவரம், மாயூரம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் இத்தலம், மிகவும் தொன்மையான சிவஸ்தலம் ஆகும்.

ஆயிரம் ஆனாலும் மாயூரமாகாது என்ற சொல் வழக்கே இதன் பெருமையைக் காட்டுகிறது. பிரம்ம தேவனால் உருவாக்கப்பட்ட இந்த ஊரில், பிரம்மா இத்தலத்து இறைவனாம் மாயூரநாதரை பூஜித்தார் என்று புராண வரலாறு கூறுகிறது. அம்பாள் பார்வதி மயில் உருவில் சிவபெருமானை பூஜை செய்ததாகக் கருதப்படும் இரண்டு சிவஸ்தலங்களில் மயிலாடுதுறை ஒன்றாகும். மற்றொன்று தொண்டை நாட்டு சிவஸ்தலமான திருமயிலை (சென்னை, மயிலாப்பூர்) ஆகும்.

சிவபெருமானை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தில், இறைவன் கட்டளையையும் மீறி அழையாத விருந்தாளியாக கலந்துகொண்டு அவமானப்பட்ட பார்வதியை சிவன் சபித்துவிடுகிறார். காவிரிக் கரையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் தவம் செய்து தன்னை மீண்டும் அடையுமாறு பார்வதிக்கு சிவன் சாப விமோசனமும் தந்துவிடுகிறார். மயில் ரூபம் பெற்று சிவபெருமானை மயிலாடுதுறை ஊரில் காவிரி நதியின் தென்புறத்தில் வெகுகாலம் தவம் இருக்கிறாள். தவத்தை மெச்சிய சிவன், ஆண் மயில் உருவெடுத்து பெண் மயிலான பார்வதியுடன் ஆடி, பார்வதிக்கு சாப விமோசனம் அருளினார். சிவனும், பார்வதியும் மயில் உருக்கொண்டு ஆடிய காரணத்தால் மயிலாடிய காவிரித் துறை என்று இத்தலம் பெயர் பெற்றது.

ஒருமுறை கன்வ முனிவர் கங்கையில் நீராடச் செல்லும்போது எதிரில் சண்டாளக் கன்னிகள் மூவர் வருகின்றனர். அவர்கள் கன்வ முனிவரை வணங்கி, தாங்கள் மூவரும் கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற நதிகள் என்றும், தங்களிடம் நீராடிய மக்களின் பாவக்கறை படிந்து தங்கள் உருவம் இவ்வாறு ஆகிவிட்டதென்றும் கூறினர். அவர்களுடைய பாவம் நீங்கி அவர்கள் சுய உருவம் பெற, தென்திசையில் உள்ள மாயூரத்தில் துலா மாதத்தில் காவிரியில் மூழ்கி நீராட முனிவர் ஆலோசனை கூற, மூவரும் அவ்வாறே செய்து பாவங்கள் நீங்கி சுய உருவம் பெற்றனர்.

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியோர் ஒவ்வொரு வருடமும் மயிலாடுதுறைக்கு வந்து காவிரியில் துலா கட்டத்தில் நீராடி தங்கள் மீது மக்கள் கரைத்த பாவங்களைப் போக்கிக்கொள்கிறார்கள் என்று புராணம் கூறுகிறது. துலா மாதத்தில் தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி, லக்ஷ்மி, கௌரி, சப்தமாதர்கள் ஆகியோரும் மாயூரத்தில் உள்ள காவிரியில் நீராட வருகின்றனர் என்று தல புராணம் கூறுகிறது.

இத்தகைய தலபுராண சிறப்பு பெற்ற மயிலாடுதுறை சென்று ஐப்பசி மாதத்தில் (துலா மாதம்) காவிரியில் நீராடி இறைவன் மயூரநாதரையும் அம்பிகை அபயாம்பிகையையும் வழிபட நாம் செய்த பாவங்கள் யாவும் சூரியனைக் கண்ட பனி போல் விலகிவிடும் என்று கூறப்படுகிறது.

ஆகையால், துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்) மயிலாடுதுறையில் காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. அதிலும் ஐப்பசி மாதத்தில் கடைசி நாளான கடைமுகம் அன்று நீராடுவது மிகமிகச் சிறப்பு. இம்மாதத்தில் முதல் 29 நாட்களில் நீராட முடியாவிட்டலும், கடைசி நாளான 30-ம் நாள் காவிரியில் நீராடி மாயூரநாதரையும் அன்னை அபயாம்பிகையும் அன்று வழிபட்டால் நமது பாவங்கள் யாவும் விலகும், மோட்சம் கிட்டும்.

மறுநாள், கார்த்திகை மாதத்தின் முதல் நாள் முடவன் முழுக்கு என்று கொண்டாடப்படுகிறது. துலா நீராடலின் சிறப்பைப் பற்றி கேள்விப்பட்டு, தன் பாவத்தினைப் போக்க முடவன் ஒருவன் மயிலாடுதுறைக்கு வந்தான். தன் இயலாமையால் தாமதமாக வந்து சேர்ந்தான். அதற்குள் ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை முதல் நாள் ஆகிவிட்டது. முடவனான தன்னால் மீண்டும் அடுத்த ஆண்டு வந்து மூழ்கிச் செல்வது இயலாது என இறைவனிடம் அவன் முறையிட்டதால், இறைவன் அவனுக்கு ஒருநாள் நீட்டிப்பு தந்தார். முடவனும் காவிரியில் மூழ்கி எழுந்தான். அவனது பாவமும் நீங்கியது. முடவனுக்காக சிவன் வழக்கமான நேரத்தை முடக்கிவைத்ததால் இந்நாளை, முடவன் முழுக்கு நாள் என்கின்றனர்.

துலா மாதத்தின் கடைமுக நாளான கடைசி நாளில் காவிரியில் நீராட நாதசர்மா, அனவித்யாம்பிகை எனும் தம்பதியர் மாயூரம் நோக்கி வந்தார்கள். அவர்கள் வருவதற்குள் 30-ம் நாள் நீராடல் முடிந்துவிட்டது. எனவே வருத்தத்துடன் இங்கு சிவனை வேண்டி தங்கினர். அன்றிரவில் நாதசர்மாவின் கனவில் தோன்றிய சிவன், மறுநாள் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு நீராடினாலும், பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்றார். அதன்படியே மறுநாள் அத்தம்பதியர் காவிரியில் மூழ்கி பாவம் நீங்கப்பெற்றனர். இதன் அடிப்படையில், கார்த்திகை முதல் நாளன்று அதிகாலையிலும் இங்கு நீராடும் வழக்கம் இருக்கிறது.

தை, ஆடி, புரட்டாசி மாத அமாவாசையைப்போல், இத்தலத்தில் ஐப்பசி (துலா) மாத அமாவாசை மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது. அன்று காவிரியில் புனித நீராடல், சிரார்த்தம், தர்ப்பணம் முதலிய நீர்க்கடன்களை அளித்து, நம் முன்னோர்களின் பாவங்களைப் போக்க சிறப்பு பூஜை செய்வது சிறந்ததாகக் கருதப்படுகிறது.

கோவில் அமைப்பு

இத்திருக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு உரியது. நான்கு பக்கமும் சுற்று மதில்களும், கிழக்கே பெரிய கோபுரமும், மற்ற மூன்று பக்கமும் மொட்டை கோபுரங்களுடனும் இவ்வாலயம் உள்ளது. வீதி உட்பட ஐந்து பிராகாரங்கள் உள்ளன. கிழக்கிலுள்ள ராஜகோபுரம் ஒன்பது நிலைகளுடனும், அழகான சிற்பங்களுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. உட்கோபுரம் மூன்று நிலைகளை உடையது. ராஜகோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன், இடதுபுறம் திருக்குளமும், வலதுபுறம் குமரக்கட்டளை அலுவலகமும் உள்ளன.

கருவறை கோஷ்டத்தில் உள்ள நடராஜரின் பாதத்துக்கு அருகில், ஜுரதேவர் இருப்பது வித்தியாசமான அமைப்பு. இவருக்கு அருகில் ஆலிங்கனமூர்த்தி இருக்கிறார். துர்க்கையம்மனின் காலுக்கு கீழே மகிஷனும், அருகில் இருபுறமும் இரண்டு அசுரர்கள் இருக்கின்றனர். துர்க்கையின் இந்த வடிவத்தைக் காண்பது அரிது. இங்கு சிவ சண்டிகேஸ்வர் மற்றும் தேஜஸ் சண்டிகேஸ்வரர் இருவரும் ஒரே சன்னதியில் இருக்கின்றனர். பிராகாரத்தில் அஷ்டலட்சுமியும், அதற்கு மேலே சட்டைநாதரும் இருக்கின்றனர். சிவலிங்கத்தை பூஜிக்கும் மகாவிஷ்ணு தனியே இருக்கிறார்.

நாதசர்மா, அனவித்யாம்பிகை தம்பதியருக்கு இறைவன் முக்தி கொடுத்ததின் பொருட்டு அவர்களுக்கு அம்பாள் சந்நிதியின் தெற்கே சன்னிதி உள்ளது. தம்பதியரை லிங்கத்தில் ஐக்கியமாக்கி முக்தி வழங்கிய இறைவன், அதுமட்டுமன்றி “அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு முடிந்த பின்பு உங்களையும் வழிபட்டால் மட்டுமே என்னை வழிபட்ட பலன் கிடைக்கும்” என்ற வரத்தையும் அவர்களுக்கு ஈசன் அருளினார்

இத்தலத்திலுள்ள முருகன் சந்நிதி (குமரக்கட்டளை) மட்டும் தருமை ஆதீனத்துக்குரியது. பிராகாரத்தில் இடதுபுறம் குமரக்கட்டளைக்குரிய ஆஸ்தான மண்டபம் உள்ளது. மயூரநாதர் சந்நிதியின் வடபுறம் குமரக்கட்டளை சுப்பிரமணிய சுவாமியின் திருக்கோவில் உள்ளது. இந்த முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது.

இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். குமரக்கட்டளை மண்டபத்தில் தென்புறம் பெரியவிநாயகரும், வடபுறத்தில் ஆறுமுகனும் எழுந்தருளியுள்ளனர். வெளிப் பிராகாரத்தில் வடக்கு மதிலை ஒட்டி கிழக்கு முகமாக உள்ள கோவிலில் ஆதி மாயூரநாதர் எழுந்தருளியுள்ளார். வடபுறம் உள்ள அம்மன் சந்நிதியில் அன்னை அபயாம்பிகை நின்ற திருக்கோலத்தில் நான்கு கைகளுடன், மேற்கரங்கள் இரண்டில் சங்கு சக்கரமும், இடது திருக்கரம் தொடை மேல் தொங்கவும், வலது திருக்கரத்தில் கிளியை ஏந்தி காட்சி தருகிறாள்.

மயூரநாதர் கோவிலில் ஐப்பசி முதல் தேதி தீர்த்தவாரியுடன் உற்சவம் ஆரம்பமாகும். அமாவாசை தீர்த்தவாரியும், ஐப்பசி முப்பதாம் தேதி துலா உற்சவமும், கடைமுகத் தீர்த்தவாரியும் மிகச்சிறப்பாக நடைபெறும். தீர்த்தவாரியை முன்னிட்டு அபயாம்பிகை சமேத மயூரநாதர், அறம்வளர்த்த நாயகி சமேத ஐயாறப்பர், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர், மாயூரம் பரிமள ரங்கநாதர் ஆகிய பஞ்சமூர்த்திகளும் காவிரி துலாக் கட்டத்தில் எழுந்தருளியதும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காவேரியில் நீராடி புனிதம் பெறுகிறார்கள்.

மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் முழுவதும் துலா ஸ்நானம் செய்வது மிகவும் விசேஷம். ஐப்பசி கடை முழுக்கு, கார்த்திகை முடவன் முழுக்கு ஆகிய நாட்களில் காவிரி நதியில் நீராடினால் அற்புதப் பலன்கள் கிட்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது. ஐப்பசியில் காவிரியில் ஒருமுறை நீராடினால் – கங்கையில் மூன்று முறை நீராடிய பலனும்; யமுனையில் ஐந்து முறை நீராடிய பலனும் கிட்டும்.

எனவே நீங்களும் இந்த ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறை சென்று காவிரியில் நீராடி மயூரநாதரை வழிபட்டு உங்களின் பாவங்கள் யாவும் நீங்கி எல்லா நலன்களும் பெறுங்கள்.

திருஞானசம்பந்தர் பதிகம், திருநாவுக்கரசர் பதிகம் தவிர அபயாம்பிகை சதகம் என்ற பாடலும் மிகவும் புகழ்பெற்றது. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள நல்லத்துக்குடி என்ற ஊரில் பிறந்த கிருஷ்ணசாமி அய்யர் என்பவர் அம்பிகையின் பூரண அருளைப் பெற்றவர். இவர் அம்பாள் அபயாம்பிகையைப் போற்றி அபயாம்பிகை அருள் வடிவை, மனக்கண் முன் நிறுத்தி மனக்கவலையை தீர்க்கும் பாடல்களைப் பாடியுள்ளார். அபயாம்பிகை பட்டர் என்று இவர் போற்றப்படுகிறார்.

***

காவிரி வடகரை தலம்

காவிரியின் வடகரையில், சிதம்பரம் சாலையில் இருந்து மயிலாடுதுறைக்கு உள்ளே நுழையும் இடத்தில் வதான்யேஸ்வரர் கோயில் உள்ளது.

இந்தத் தலத்துக்கு உத்திர மாயூரம் என்ற பெயரும் உண்டு. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஞானாம்பிகா சமேத அருள்மிகு வதான்யேஸ்வரர், ஞானத்தையும் தர்மநெறியையும் அளிப்பதில் பிரத்யேக சக்தி கொண்ட பெருமான். இங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி, கல்வி - முன்னேற்றம் அளிப்பதில் தன்னிகரற்ற பெருமானாவார். காசிக்குச் சமமாகப் பூஜிக்கப்படும் இத்திருத்தலத்தில் ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தியை வழிபட்டு ஞானஉபதேசம் பெற்ற மகரிஷிகளில் கன்வ மகரிஷி, அகத்தியர் ஆகியோரைக் கூறலாம். இக்கோயில், வள்ளலார் கோயில் என்று மக்களால் அழைக்கப்படுகிறது.

ஒரு சமயம், தர்ம தேவன் ரிஷப வாகனமாக இறைவனை சுமந்து செல்லும் பேறு பெற்றான். உலகை ஆளும் ஈசன்கூட நம்மால்தான் வேகமாகப் பல இடங்களுக்கும் செல்லமுடிகிறது என மனதில் நினைத்து கர்வமடைந்தது, அது சிவபெருமானுக்குத் தெரிந்து, தன்னுடைய சடைமுடி கற்றை ஒன்றினை ரிஷபத்தின் மேல் வைக்க, அது பாரம் தாங்காமல் மயங்கியது. பின் இறைவன் அதனை நோக்கி, உனக்கு தான் எனும் கர்வம் வந்துவிட்டது. அதனால் என்னை சுமக்கும் அருகதை உனக்கில்லை. உனது பாவம் நீங்க காவிரியில் நீராடி, வில்வ இலைகள் கொண்டு எம்மை பூஜித்தால் உனது பாவம் நீங்கப்பெற்று எம்மை வந்தடைவாய் எனக் கூறினார். நந்தியும் அவ்வாறே செய்து வர, இறைவன் அதற்கு குருவடிவாகக் காட்சி தந்து அருள் செய்தார்.

நந்தி தேவனும் அப்போது இறைவனை நோக்கி எட்டு பாடல்கள் பாடி வணங்கினார். பின்னர் நந்தி தேவன், “குருவடிவாகக் காட்சி தந்த இறைவா”, தாங்கள் இத்தலத்தில் என் மீது அமர்ந்து அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டும்; நான் எப்போதும் உங்கள் அருகிலேயே இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இறைவனும் அவ்வாறே தன் எதிரில் இருத்திக்கொண்டார். அதனால் குருபகவானின் முன் நந்தி இருப்பதை இத்தலத்தில் காணலாம்.

இத்தலத்துக்கான பதிகங்களைப் பாடியவர்கள் பாலச்சந்திரன், சிவகுமார், கரூர் சுவாமிநாதன், முருக. சுந்தரம்

 

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/20/w600X390/thenkarai1.jpg http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/oct/20/சகல-பாவங்களைப்-போக்கும்-துலா-மாத-சிறப்புபெற்ற-மயிலாடுதுறை-2792886.html
2787861 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் வேலை வாய்ப்பு பெற - திருமணத் தடை அகல ஆட்சீஸ்வரர் சுவாமி கோவில், அச்சிறுபாக்கம் என்.எஸ். நாராயணசாமி Friday, October 13, 2017 10:44 AM +0530  

பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்கள் வரிசையில் 28-வது தலமாக அச்சிறுபாக்கம் விளங்குகிறது.

இறைவன் பெயர்: ஆட்சீஸ்வரர், உமையாட்சீஸ்வரர்

இறைவி பெயர்: இளங்கிளி அம்மை, உமையாம்பிகை

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றுள்ளது.

எப்படிப் போவது

அச்சிறுபாக்கம் ரயில் நிலையம், சென்னை எழும்பூர் - விழுப்புரம் ரயில் மார்க்கத்தில் இருக்கிறது. அச்சிறுபாக்கம் சிறிய ரயில் நிலையம் என்பதால், அநேக ரயில்கள் இங்கு நிற்பதில்லை. அதனால், அச்சிறுபாக்கத்துக்கு முந்தைய ரயில் நிலையமான மேல்மருவத்தூரில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில் சுமார் 4 கி.மீ. பயணம் செய்தால் அச்சிறுபாக்கம் கோவிலை அடையலாம். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர் அடுத்து வரும் நிறுத்தம் அச்சிறுபாக்கம். அங்கு இறங்கி இடப்பக்கம் பிரியும் ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் அரை கி.மீ. சென்றால் கோவிலை அடையலாம். சென்னையில் இருந்து சுமார் 96 கி.மீ. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு ஆட்சீஸ்வரர் சுவாமி திருக்கோவில்,

அச்சிறுபாக்கம் அஞ்சல்,

மதுராந்தகம் வட்டம்,

காஞ்சிபுரம் மாவட்டம் – 603 301.

இவ்வாலயம் தினமும் காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரையிலும் மாலையில் 4.30 மணி முதல் 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

வித்யுந்மாலி, தாருகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள், முறையே பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர்.

இந்தக் கோட்டைகளுக்கு, விமானம் போல் நினைத்த இடங்களுக்குச் செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக்கொண்டு தேவர்களை இந்த அசுரர்கள் மிகவும் துன்புறுத்தி வந்தனர். அசுரர்களின் தொல்லை பொறுக்க முடியாமல் சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர்.

மூன்று அசுரர்களையும் அழிக்க, சிவபெருமான் பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி, மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாக்கி தேவர்களுடன் புறப்பட்டார். ஆனால், அவ்வாறு புறப்படுவதற்கு முன்பு முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்க தேவர்கள் மறந்தனர். அதனால் தேரின் அச்சை விநாயகர் முறித்துவிட்டார்.

தேர் அச்சு முறிந்ததற்குக் காரணத்தை அறிந்த சிவன், விநாயகரை வேண்ட, அவரும் தந்தை சொல் தட்டாமல் தேரின் அச்சை சரியாக்கினார். அதன்பின் சிவபெருமான் திரிபுர அசுரர்களை அழித்தார். தேர் அச்சு இற்று (முறிந்து) நின்ற இடமாதலால், இத்தலம் அச்சு இறு பாக்கம் என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் மருவி தற்போது அச்சிறுபாக்கம் என்று அழைக்கப்படுகிறது.

கோவில் அமைப்பு

இக்கோயில், ஐந்து நிலைகள் கொண்ட கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் நேரே உள் வாயில் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்தவுடன், கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை நேராக இல்லாமல் சற்று வடக்கே அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பம்சம் இங்குள்ள ஆட்சிபுரீஸ்வரர், உமையாட்சீஸ்வரர் என்ற இரண்டு மூலவர்கள் சந்நிதியாகும். இளங்கிளி அம்மை, உமையாம்பிகை என்று இரண்டு அம்பாள் சந்நிதிகளும் தனித்தனியே அமைந்துள்ளன.

கோபுர வாயிலுக்கு நேரே உள்ள உள் வாயில் வழியாகச் சென்றால் நேர் எதிரே உமையாட்சீஸ்வரர் சந்நிதி உள்ளது. உள் வாயிலில் நுழைந்தவுடன் சற்று வலதுபுறத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றுக்கு எதிரே ஆட்சீஸ்வரர் சந்நிதி உள்ளது. இந்த ஆட்சீஸ்வரர்தான் இவ்வாலயத்தின் பிரதான மூலவர். சுயம்பு மூர்த்தியான இவர் லிங்க வடிவில் குட்டையான பாணத்துடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவர் குடியிருக்கும் கருவறை வாயிலில் இருபுறமும் துவாரபாலகர்களாக சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன்மாலியும் காணப்படுகின்றனர். தாரகனுக்கு அருகில் விநாயகரும், வித்யுன்மாலிக்கு அருகில் வள்ளி தெய்வானையுன் முருகரும் உள்ளனர். கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். ஆட்சீஸ்வரர் சந்நிதியை சுற்றி வலம் வர வசதி உள்ளது

உள் வாயிலைக் கடந்தவுடன், வலதுபுறம் உள்ள ஆட்சீஸ்வரரை தரிசித்துவிட்டு நேரே சென்றால், உமையாட்சீஸ்வரர் சந்நிதியை அடையலாம். உமையாட்சீஸ்வரர் கருவறை வாயிலில் இருபுறமும் அலமேலுமங்கை, ஸ்ரீனிவாசப் பெருமாள், பழனி ஆண்டவர், உற்சவ மூர்த்திகள், லட்சுமி துர்க்கை சரஸ்வதி, ஆறுமுகசாமி ஆகியோரின் சந்நிதிகள் அழகுற அமைந்துள்ளன. கருவறைக்குள் உமையாட்சீஸ்வரர் கிழக்கு நோக்கி லிங்க உருவில் காட்சி தருகிறார். லிங்க உருவின் பின்புறம் பார்வதியுடன் சிவபெருமான் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். அகத்தியருக்கு தனது கயிலாய திருமணக் காட்சியை காட்டியருளிய தலங்களில் இத்தலமும் ஒன்று. ஆகையால், இத்தலம் ஒரு திருமண பிரார்த்தனைத் தலமாக கருதப்படுகிறது. அருகில் தெற்கு நோக்கிய உமையாம்பிகை திருஉருவச் சிலையும் உள்ளது.

ஆலயத்தின் வடக்கு வெளிப் பிராகாரத்தில் தலவிருட்சமான சரக்கொன்றை மரம் உள்ளது. சரக்கொன்றை மரத்தின் அடியில் கொன்றையடி ஈஸ்வரர் சந்நிதி உள்ளது. அருகில் நந்திகேஸ்வரரும், சிவனை வணங்கியபடி திரிநேத்ரதாரி முனிவரும் உள்ளனர். பாண்டிய மன்னன் ஒருவனுக்கு இத்தலத்தில் சரக்கோன்றை மரத்தடியில் காட்சியளித்த சிவபெருமான், தனக்கு இவ்விடத்தில் ஒரு ஆலயம் எழுப்பச் சொல்ல, மன்னன் அப்போது அங்கு வந்த திரிநேத்ரதாரி முனிவரிடம் ஆலயம் கட்டும் பொறுப்பை ஒப்படைத்தான். திரிநேத்ரதாரி முனிவரும், தன்னையும், மன்னனையும் ஆட்கொண்ட இறைவனுக்கு, இரு கருவறைகள் கொண்ட இக்கோயிலைக் கட்டினார்.

கோயிலைக் கண்ட மன்னன் இரு சந்நிதிகள் அமைந்திருப்பது கண்டு முனிவரை விவரம் கேட்டான். முனிவரும் அரசரை ஆட்கொண்ட இறைவனுக்காக உமையாட்சீஸ்வரர் சந்நிதியும், தன்னை ஆட்கொண்ட இறைவனுக்கு ஆட்சீஸ்வரர் சந்நிதியும் அமைத்தேன் என்று மறுமொழி தந்ததாக வரலாறு கூறுகின்றது.

வடக்கு வெளிப் பிராகாரத்தின் வடகிழக்கு மூலையில் இத்தலத்தின் பிரதான அம்பாள் இளங்கிளி அம்மை தனி சந்நிதியில் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறாள். ஆட்சிபுரீஸ்வரரை வழிபட்டால் நல்ல வேலை, வேலை உயர்வு, வேலையில் ஆட்சி செய்யக்கூடிய பதவி ஆகியவை கிட்டும், அமாவாசைதோறும் இவ்வாலயத்தில் நடைபெறும் சிறப்பு. பூஜைகளில் கலந்துகொண்டு இத்தல இறைவனை வழிபட தொழிலில் ஏற்படும் தடைகள், ஜென்ம வினைகள், தோஷங்கள் ஆகியவை நீங்கும்

அச்சுமுறி விநாயகர்

சிவபெருமானின் தேர் அச்சை முறித்த விநாயகர் அச்சுமுறி விநாயகர் என்ற பெயருடன் கோவிலுக்கு வெளியே தனி சந்நிதியில் மேற்கு நோக்கி அமர்ந்து காட்சி தருகிறார்.

புதிய செயல்கள் தொடங்குவதற்குமுன் இவ்விநாயகரிடம் வேண்டிக்கொண்டால், அச்செயல் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை. அருணகிரிநாதர், இவ்விநாயகரை தரிசித்துவிட்டு விநாயகர் துதி பாடி பிறகுதான் திருப்புகழ் பாடத் தொடங்கினார் என்பதிலிருந்தே இவ்விநாயகரின் பெருமையை உணரலாம். விநாயகர் துதியில் “முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சது பொடி செய்த” என்று தலவரலாற்றைக் குறிப்பிடுகிறார்.

இத்தலத்திற்கான  திருப்புகழ் – பாடியவர் பாலச்சந்திரன்

சம்பந்தர் அருளிய தேவாரம் – பாடியவர் மதுரை மு. முத்துக்குமரன்

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/11/w600X390/achirupakkam2.JPG http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/oct/13/வேலை-வாய்ப்பு-பெற---திருமணத்-தடை-அகல-ஆட்சீஸ்வரர்-சுவாமி-கோவில்-அச்சிறுபாக்கம்-2787861.html
2785513 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் திருமணத் தடை நீக்கும் சற்குணலிங்கேஸ்வரர் கோவில், திருகருக்குடி என்.எஸ். நாராயணசாமி Saturday, October 7, 2017 12:40 PM +0530  

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 69-வது தலமாக விளங்கும் திருக்கருக்குடி, இன்றைய நாளில் மருதாந்தநல்லூர் என்றும் மருதாநல்லூர் என்றும் வழங்கப்படுகிறது.

திருமணத் தடை நீக்கும் தலமாக மட்டுமன்றி, மேலும் பல இன்னல்களுக்குப் பரிகாரத் தலமாகவும் இத்தலம் சிறப்பு பெற்று விளங்குகிறது.

இறைவன் பெயர்: சற்குணலிங்கேஸ்வரர், கருக்குடிநாதர், பிரம்மபுரீசுவரர்

இறைவி பெயர்: சர்வலங்கார நாயகி, அத்வைத நாயகி, கல்யாணி

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றுள்ளது.

எப்படிப் போவது

கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில் சாக்கோட்டைக்கு தென்கிழக்கில் 1.5 கி.மீ. தூரத்தில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

ஆலய முகவரி

அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில்,

மருதாநல்லூர், மருதாநல்லூர் அஞ்சல்,

திப்பிராஜபுரம் S.O.,

கும்பகோணம் வட்டம்.

தஞ்சாவூர் மாவட்டம் – 612 402.

இவ்வாலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 10 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோவில் அமைப்பு

சிறிய பழைமையான கோயில். கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. சுவாமி, அம்பாள் ஆகிய இரு சந்நிதிகளும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இவ்வாலயத்தின் சிறப்பாகும்.

கருவறை விமானங்கள் மிகவும் உயர்ந்தவை. வாயிலில் விநாயகர், கார்த்திகேயர் சந்நிதிகள் உள்ளன. கருவறையில் உள்ள சிவலிங்கம் மிகவும் சிறியது. இத்தல இறைவன் மணலால் ஆன சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். மண்ணினை கையால் பிடித்துச் செய்த சுவடுகள் தெரிகிறது. அரையடி உயர சிறிய ஆவுடையார். பீடம் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது.

கோஷ்டங்களில் நர்த்தன விநாயகர், இருபுறம் பூதகணங்கள், தட்சிணாமூர்த்தி (மேலே வீணாதர தட்சிணாமூர்த்தி), லிங்கோத்பவர் ஆகியோரின் மூர்த்தங்கள் உள்ளன. பிராகாரத்தில் வலம்புரி விநாயகர், நவகிரகங்கள், சூரியன், சந்திரன், லிங்கோத்பவர், முருகன் உள்ளனர். இத்தல விநாயகர் வலம்புரி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

இத்தலத்து இறைவன் கருக்குடிநாதர் என்று தேவாரப் பாடலிலும், பிரம்மா முதலிய தேவர்கள் வழிபட்டதால், பிரம்மபுரீஸ்வரர் என்றும் சற்குணன் என்ற அரசன் இத்தலத்தில் இறைவனை வழிபட்டு பேறு பெற்றதால் சற்குணலிங்கேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

இலங்கைக்குச் செல்லும் முன், இராமர் இத்தலத்துக்கு வந்து வழிபட்டதாக ஐதீகம். வழிபாடு செய்ய லிங்கத் திருமேனி தேவைப்பட்டது. இராமேஸ்வரத்தில் நடந்ததுபோல, குறித்த நேரத்தில் வழிபாடு செய்ய அனுமன் சிவலிங்கம் கொண்டுவர தாமதமானதால், இத்தலத்தில் ராமர் மணலிலேயே இரண்டு கைகளாலும் லிங்கம் பிடித்து இத்தலத்தில் வழிபட்டார் என்றும், அதுவே தற்போதைய பிருதிவி லிங்கமாகும் என்றும் கூறப்படுகிறது. இன்றும் லிங்கத் திருமேனியில் கரங்களின் அடையாளம் தெரிவதைக் காணலாம். லிங்கத்துக்கு அபிஷேகம் செய்யும்போது கவசம் சார்த்தியே அபிஷேகம் நடைபெறுகிறது. அனுமன் கொண்டுவந்த லிங்கம் கோயிலின் இடப்புறம் அனுமந்த லிங்கம் என்ற பெயரில் தனி சந்நிதியில் உள்ளது.

இறைவன் சந்நிதிக்கு வலது புறத்தில் கல்யாண கோலத்தில் அம்பிகை கல்யாணி காட்சி தருகிறாள். இத்தகைய அமைப்பு உள்ள தலங்கள் திருமணத் தடை நீக்கும் தலங்கள் என்று போற்றப்படுகின்றன. இத்தலத்தில் 8 வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்கு பால் பாயசம் நைவேத்யம் செய்து அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணத் தடை நீங்கி ஆண், பெண் இரு பாலாருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்று பக்தர்களின் நீண்டகால நம்பிக்கை. என்வே இத்தலம் ஒரு திருமண பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது.

தனஞ்சயன் என்ற வணிகன் ஒருவன் தன் சிற்றன்னையை அறியாது புணர்ந்தமையால் தொழுநோய் ஏற்படுகிறது. மனம் வருந்திய அவன் இத்தல இறைவனை வேண்டி தொழுநோய் நீங்கப் பெற்றான். அம்மன் சந்நிதி எதிரே தனஞ்சய வணிகனின் வணங்கிய சிலை உள்ளது. ஆகையால், இத்தலம் மனிதர்களின் சாப தோஷ நோய்களை நீக்கும் ஒரு தலமாகவும் உள்ளது. இத்தலத்தின் தீர்த்தம் எமதீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் நீராடி கருக்குடிநாதரை வழிபட்டால் நமது கர்ம வினைகள் தீங்கும் என்று தலபுராணம் விவரிக்கிறது.

மேலும் இத்தலத்திலுள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், வாஸ்து தோஷம் போக்கும் முருகனாக அருள்பாலிக்கிறார். மேலும், இத்தலத்தில் சனி பகவான் அனுக்கிரக மூர்த்தியாக பாலசனீஸ்வரர் என்று பெயருடன் தனி சந்நிதியில் சிவபெருமானை நோக்கி உள்ளார். இவரை வழிபடுவதன் மூலம் சகலவித சனி தோஷங்களில் இருந்தும் விடுபடலாம்.

கல்யாணி அம்பாள் சமேத கருக்குடிநாதரை வணங்கி எல்லா நலங்களும் பெற இத்தலத்துக்குச் சென்று வாருங்கள்.

இத்தலத்து இறைவன் மேல் திருஞானசம்பந்தர் பாடியருளிய பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

நனவிலுங் கனவிலும் நாளுந் தன்னொளி

நினைவிலும் எனக்குவந் தெய்தும் நின்மலன்

கனைகடல் வையகந் தொழு கருக்குடி

அனலெரி யாடுமெம் மடிகள் காண்மினே.

 

வேதியன் விடையுடை விமலன் ஒன்னலர்

மூதெயில் எரியெழ முனிந்த முக்கணன்

காதியல் குழையினன் கருக்குடி அமர்

ஆதியை அடிதொழ அல்லல் இல்லையே.

 

மஞ்சுறு பொழில்வளம் மலி கருக்குடி

நஞ்சுறு திருமிட றுடைய நாதனார்

அஞ்சுரும் பார்குழல் அரிவை யஞ்சவே

வெஞ்சுரந் தனில்விளை யாட லென்கொலோ.

 

ஊனுடைப் பிறவியை அறுக்க வுன்னுவீர்

கானிடை யாடலான் பயில் கருக்குடிக்

கோனுயர் கோயிலை வணங்கி வைகலும்

வானவர் தொழுகழல் வாழ்த்தி வாழ்மினே.

 

சூடுவர் சடையிடைக் கங்கை நங்கையைக்

கூடுவ ருலகிடை யையங் கொண்டொலி

பாடுவர் இசைபறை கொட்ட நட்டிருள்

ஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே.

 

இன்புடை யாரிசை வீணை பூணரா

என்புடை யாரெழில் மேனி மேலெரி

முன்புடை யார்முத லேத்தும் அன்பருக்

கன்புடை யார்கருக் குடியெம் மண்ணலே.

 

காலமும் ஞாயிறுந் தீயு மாயவர்

கோலமும் முடியர வணிந்த கொள்கையர்

சீலமும் உடையவர் திருக் கருக்குடிச்

சாலவும் இனிதவ ருடைய தன்மையே.

 

எறிகடல் புடைதழு விலங்கை மன்னனை

முறிபட வரையிடை யடர்த்த மூர்த்தியார்

கறைபடு பொழில்மதி தவழ் கருக்குடி

அறிவொடு தொழுமவர் ஆள்வர் நன்மையே.

 

பூமனுந் திசைமுகன் தானும் பொற்பமர்

வாமனன் அறிகிலா வண்ண மோங்கெரி

ஆமென வுயர்ந்தவன் அணி கருக்குடி

நாமன னினில்வர நினைதல் நன்மையே.

 

சாக்கியர் சமண்படு கையர் பொய்ம்மொழி

ஆக்கிய வுரைகொளேல் அருந் திருந்நமக்

காக்கிய அரனுறை யணி கருக்குடிப்

பூக்கமழ் கோயிலே புடைபட் டுய்ம்மினே.

 

கானலில் விரைமலர் விம்மு காழியான்

வானவன் கருக்குடி மைந்தன் தன்னொளி

ஆனமெய்ஞ் ஞானசம்பந்தன் சொல்லிய

ஊனமில் மொழிவலார்க்கு உயரும் இன்பமே.

சம்பந்தர் அருளிய பதிகம் – பாடியவர் மயிலாடுதுறை சொ. சிவக்குமார்

 

]]>
திருகருக்குடி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/10/6/w600X390/karukkudi1.jpg http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/oct/06/திருமணத்-தடை-நீக்கும்-சற்குணலிங்கேஸ்வரர்-கோவில்-திருகருக்குடி-2785513.html
2781337 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் திருமணத்தடை நீக்கும் தலம் இடையாற்றுநாதர் கோவில், திருவிடையாறு என்.எஸ். நாராயணசாமி Thursday, September 28, 2017 03:11 PM +0530  

பாடல் பெற்ற நடுநாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 13-வது தலமாக விளங்கும் திருவிடையாறு, தற்போது டி.எடையார் என்று அறியப்படுகிறது. இறைவன் சந்நிதியும், இறைவி சந்நிதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கும் வகையில் இத்தலத்தில் வீற்றிருப்பதால், இத்தலம் ஒரு திருமணத் தலமாகப் போற்றப்படுகிறது. 

இறைவன்: இடையாற்றுநாதர், இடையாற்றீஸ்வரர், மருதீஸ்வரர் 
இறைவி : சிற்றிடைநாயகி
இத்தலத்துக்கு சுந்தரர் பதிகம் ஒன்று உள்ளது. 

எப்படிப் போவது?

திருக்கோவிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியாக அரசூர் செல்லும் பாதையில் (SH68) சித்தலிங்க மடத்தையடுத்து இடையாறு உள்ளது. சாலையோரத்திலேயே கோவில் உள்ளது. மற்றொரு சிவஸ்தலமான திருவெண்ணெய்நல்லூர், இங்கிருந்து தென்கிழக்கே 5 கி.மீ. தொலைவில். அரசூர் செல்லும் பாதையில் உள்ளது.

விழுப்பரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் (NH45) அரசூரை அடைந்து, அங்கிருந்து வலதுபுறம் மாநில நெடுஞ்சாலை SH68-ல் சென்றும் திருவெண்ணெய்நல்லூர் வழியாக திருவிடையாறு தலத்தை அடையலாம்.

ஆலய முகவரி

அருள்மிகு மருதீஸ்வரர் திருக்கோவில், 
மருதீஸ்வரர் தேவஸ்தானம்.
டி.எடையார் அஞ்சல்.
திருக்கோவிலூர் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம் -  607 203.

இவ்வாலயம், தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

மூன்று நிலைகளை உடைய கோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால், நேரே 2 பலிபீடம் மற்றும் நந்தி ஆகியவற்றைக் காணலாம். கொடிமரம் இல்லை. இறைவன் மேற்கு நோக்கிய சந்நிதியில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். 

ஆலயத்தின் உள்ளே இருக்கும் மண்டபத்தில் வள்ளி தெய்வயானை சமேத ஷண்முக சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. இங்குள்ள முருகனின் (சண்முகர்) பெயரை கலியுகராமப் பிள்ளையார் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. இத்தலத்தில் முருகர், ஷண்முக சுப்பிரமணியர் என்று பெயருடன் தன் தேவியர் இருவருடன் ஆறு முகங்களுடன் மயில் மீது அமர்ந்து காட்சி அளிக்கிறார்.


உள்சுற்றில் பெரிய மருத மரம் உள்ளது. நவக்கிரக சந்நிதி, அகத்தீஸ்வர லிங்கம், சண்டேஸ்வரர், சப்தமாதாக்கள், பாலாம்ருத விநாயகர் முதலிய சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும் துர்க்கையும் உள்ளனர். அம்மன் கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
 

சுவாமி சந்நிதி மேற்கு நோக்கியும், அம்மன் சந்நிதி கிழக்கு நோக்கியும் அமைந்துள்ள தலங்கள் திருமணத்தடை நீக்கும் தலம் என்ற சிறப்பைப் பெற்றவையாகும். அத்தகைய அமைப்பு அமைந்துள்ள இத்தலத்தில், நெடுநாளைய திருமணத் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து மாலை மாற்றி எடுத்துச் சென்றால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

இத்தலத்தில் சுக முனிவர், பிரமன், அகத்தியர், சுந்தரர், மறைஞான சம்பந்தர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். சுகப்பிரம்ம மகரிஷி வழிபட்டதால், இத்தலத்தில் எப்போதும் கிளிகள் பறந்துகொண்டே இருக்கும். அகத்தியர் இத்தலத்தில் லிங்கம் அமைத்து வழிபட்டார். இந்த லிங்கம் அகத்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறது. அகத்தியருக்கு தனி சிலையும் இங்குள்ளது. மாசி மாதம் 15, 16 தேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக் கதிர்கள் சுவாமியின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.

தல வரலாறு 

கயிலையில், உமாதேவியாருக்கு சிவ ரகசியத்தை சிவபெருமான் உபதேசிக்கும்போது, அதை கிளி முகம் கொண்ட சுகப்பிரம்ம முனிவர் ஒட்டுக் கேட்டார். இதையறிந்த சிவன், முனிவரை பூமியில் பிறக்கும்படி சபித்தார். தவறை உணர்ந்த முனிவர், ஈசனிடம் சாப விமோசனம் கேட்டார். பூவுலகில் வேதவியாசருக்கு மகனாகப் பிறந்து, பெண்ணை நதியின் தென்பகுதியில் அமைந்துள்ள இத்தலத்தில் இறைவனை பூஜித்து பூலோக வாழ்வு நீங்கப்பெற அவர் வரமளித்தார். சுகப்பிரம்ம முனிவரும் அவ்வாறே இத்தலம் வந்து மருத மரத்தின் கீழ் தவமிருந்து மருதீஸ்வரரை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார்.

சுந்தரர் பாடிய இத்தலத்துக்கான பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அநேக திருத்தலங்களை வைப்புத்தலமாக வைத்து, பதிகம் பெற்ற தலங்களையும் குறிப்பிட்டு, இத்தகைய தலங்களுக்கு இணையானது இடையாறு என்று பாடியுள்ளார்.

முந்தையூர் முதுகுன்றங் குரங்கணின் முட்டம்
சிந்தையூர் நன்றுசென் றடைவான் திருவாரூர்
பந்தையூர் பழையாறு பழனம் பைஞ்ஞீலி
எந்தையூர் எய்தமான் இடையா றிடைமருதே.

சுற்றுமூர் சுழியல் திருச்சோ புரந்தொண்டர்
ஒற்றுமூர் ஒற்றியூர் திருவூறல் ஒழியாப்
பெற்றமேறிப் பெண்பாதி யிடம்பெண்ணைத் தெண்ணீர்
எற்றுமூர் எய்தமான் இடையா றிடைமருதே. 

கடங்களூர் திருக்காரிக்கரை கயிலாயம்
விடங்களூர் திருவெண்ணி அண்ணாமலை வெய்ய
படங்கள் ஊர்கின்ற பாம்பரையான் பரஞ்சோதி
இடங்கொளூர் எய்தமான் இடையா றிடைமருதே. 

கச்சையூர் காவங் கழுக்குன்றம் காரோணம்
பிச்சையூர் திரிவான் கடவூர் வடபேறூர்
கச்சியூர் கச்சி சிக்கல் நெய்த்தானம் மிழலை
இச்சையூர் எய்தமான் இடையா றிடைமருதே.

நிறையனூர் நின்றியூர் கொடுங்குன்றம் அமர்ந்த
பிறையனூர் பெருமூர் பெரும்பற்றப்புலியூர்
மறையனூர் மறைக்காடு வலஞ்சுழி வாய்த்த
இறைவனூர் எய்தமான் இடையா றிடைமருதே.

திங்களூர் திருவாதிரையான் பட்டினம் ஊர்
நங்களூர் நறையூர் நனிநா லிசைநாலூர்
தங்களூர் தமிழான் என்றுபா விக்கவல்ல
எங்களூர் எய்தமான் இடையா றிடைமருதே. 

கருக்க நஞ்சமுது உண்ட கல்லாலன் கொல்லேற்றன்
தருக்கருக் கனைச்செற் றுகந்தான்றன் முடிமேல்
எருக்கநாண் மலர் இரண்டையும் மத்தமும் சூடி
இருக்கும் ஊர் எய்தமான் இடையா றிடைமருதே. 

தேசனூர் வினைதேய நின்றான் திருவாக்கூர்
பாசனூர் பரமேட்டி பவித்திர பாவ
நாசனூர் நனிபள்ளி நள்ளாற்றை அமர்ந்த
ஈசனூர் எய்தமான் இடையா றிடைமருதே. 

பேறனூர் பிறைச்சென் னியினான் பெருவேளூர்
தேறனூர் திருமா மகள்கோன் றிருமாலோர்
கூறனூர் குரங்காடுதுறை திருக்கோவல்
ஏறனூர் எய்தமான் இடையா றிடைமருதே. 

ஊறிவா யினநாடிய வன்றொண்டன் ஊரன்
தேறுவார் சிந்தைதேறு மிடஞ்செங்கண் வெள்ளே
றேறுவார் எய்தமான் இடையா றிடைமருதைக்
கூறுவார் வினையெவ் விடமெய் குளிர்வாரே.

சுந்தரர் அருளிய பதிகம் - பாடியவர் இரா. குமரகுருபரன்

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/28/w600X390/DSCN2457.JPG http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/sep/29/திருமணத்தடை-நீக்கும்-தலம்-இடையாற்றுநாதர்-கோவில்-திருவிடையாறு-2781337.html
2776541 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் புத்திரப்பேறு, திருமண பாக்கியம் வழங்கும் முக்கோண நாதேசுவரர் கோவில், திருபள்ளியின்முக்கூடல் என்.எஸ். நாராயணசாமி Friday, September 22, 2017 12:00 AM +0530  

காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 86-வது தலமாக விளங்கும் திருபள்ளியின்முக்கூடல் (குருவிராமேஸ்வரம்), திருவாரூருக்கு அருகில் உள்ளது.

இறைவன் பெயர்: திரிநேத்ரசுவாமி, முக்கூடல்நாதர், முக்கோணநாதர்

இறைவி பெயர்: அஞ்சனாட்சி, மைம்மேவு கண்ணி

இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது

திருவாரூரிலிருந்து கடைத் தெரு வழியாக, கேக்கரை செல்லும் சாலையில் வந்து, ரயில்வே லெவல்கிராசிங்கைத் தாண்டி கேக்கரையை அடைந்து, அங்கிருந்து அதே சாலையில் மேலும் 1 கி.மீ. சென்று சிறிய பாலத்தைத் தாண்டி சிறிது தூரம் சென்று, அங்கு இரண்டாகப் பிரியும் பாதையில் இடப்பக்கமாகச் செல்லும் பாதையில் 1 கி.மீ. சென்றால் ஊரை அடையலாம். ஊர் வரை பேருந்து செல்லும். திருவிற்குடி என்கிற சிவஸ்தலம் இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

ஆலய முகவரி

அருள்மிகு முக்கோண நாதேசுவரர் திருக்கோயில்,

திருப்பள்ளிமுக்கூடல்,

கேக்கரை அஞ்சல், வழி திருவாரூர்,

திருவாரூர் வட்டம்,

திருவாரூர் மாவட்டம் – 610 002.

இவ்வாலயம், தினமும் காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். குருக்கள் வீடு கோயிலுக்கு அருகில் இருப்பதால், தரிசனம் செய்வதில் சிரமம் இருக்காது.

தல வரலாறு

இத்தல வரலாறு, ராமாயண இதிகாசத்தில் வரும் ஜடாயுவுடன் தொடர்புடையது என்பதால், இத்தலத்தை இங்குள்ள மக்கள் குருவிராமேஸ்வரம் என்றும் கூறுகின்றனர்.

ஒருமுறை, காசி மற்றும் ராமேஸ்வரம் தீர்த்தத்தில் ஒரே சமயத்தில் நீராடி, இரண்டு தலங்களையும் ஒன்றாகத் தரிசித்து முக்தி அடைவதற்காக ஜடாயு இத்தலத்தில் தவம் செய்தது. இதன் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், ஜடாயுவுக்கு தரிசனம் தந்து, ‘‘சீதையை ராவணன் எடுத்துவரும் நேரத்தில் நீ தடுப்பாய். அப்போது அவன் உன் சிறகுகளை வெட்ட நீ வீழ்ந்து இறப்பாய்” என்றாராம். அது கேட்ட ஜடாயு, “பெருமானே, அப்படியானால் நான் காசி, கங்கை, ராமேஸ்வரம், சேது முதலிய தீர்த்தங்களில் மூழ்கித் தீர்த்தப் பலனை அடைய முடியாமல் போகுமே, அதற்கு என்ன செய்வது” என்று வேண்ட, இறைவன் முக்கூடல் தீர்த்தத்தை உண்டாக்கி அதில் மூழ்குமாறு பணிக்க, ஜடாயுவும் அவ்வாறே மூழ்கிப் பலனைப் பெற்றது.

இவ்வரலாற்றின் காரணமாகத்தான், மக்கள் பேச்சு வழக்கில் இப்பகுதியை குருவிராமேஸ்வரம் என்று கூறுகின்றனர். இதனால், கோவில் எதிரில் உள்ள முக்கூடல் தீர்த்தம் கங்கை, யமுனை, சரசுவதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்துக்கு நிகராகக் கருதப்படுகிறது. இதில் மூழ்குவோர்க்குப் பதினாறு மடங்கு (கங்கை, சேது) தீர்த்த விசேஷப் பலனைத் தருவதால், இத்தீர்த்தம் ஷோடசசேது என்றும் சொல்லப்படுகிறது.

தலச் சிறப்பு

தபோவதனி என்னும் அரசி, குழந்தை பாக்கியம் வேண்டி இத்தலத்து அஞ்சனாட்சி அம்மனை வழிபாடு செய்தாள். இவளது வேண்டுதலை ஏற்ற அம்மன், தாமரை மலரில் அழகிய குழந்தையாகத் தோன்றினாள். அப்பெண் மணப்பருவம் வந்தபோது, இறைவன் வேதியராக வந்து அவளை மணம் புரிந்தார் என கூறுப்படுகிறது.

இத்தலத்தில் உள்ள முக்கூடல் தீர்த்தக் குளத்தின் உள்ளே 16 கிணறுகள் உள்ளன. இதில் நீராடினால், மகாமக தீர்த்தத்தில் நீராடிய பலன் கிடைக்கும். 12 அமாவாசைகளுக்கு இக்குளத்தில் குளித்து இறைவனை வழிபாடு செய்தால், புத்திர தோஷம், திருமணத் தடை விலகும் என்பது நம்பிக்கை. தசரத சக்கரவர்த்திக்கு ராமர் தர்ப்பணம் செய்த தலங்களில் இதுவும் ஒன்று. முன்னோர்களுக்கு இங்கு தர்ப்பணம் செய்தால், கயா (காசி) கரையில் செய்த பலன் கிடைக்கும் என்பதால், இத்தலம் கேக்கரை என்றும் அழைக்கப்படுகிறது.

தீர்த்தக் குளத்தின் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தல புராணத்தில் மிகவும் சிறப்பாகக் கூறப்படும் இந்த தீர்த்தக் குளம், விரைவில் சீரமைக்கப்பட்டு பக்தர்கள் முக்கூடல் தீர்த்தத்தில் நீராடி வழிபாடு செய்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பலன் பெற வாய்ப்பு உண்டாக வேண்டும். அதற்கு இறைவன் முக்கண்நாதரை வேண்டி வழிபடுவோம்.

கோவில் அமைப்பு

இத்தலத்துக்கு ராஜகோபுரம் இல்லை. கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயில் மதிற்சுவர் மாடங்களில் இருபுறமும் விநாயகரும், முருகரும் உள்ளனர். முகப்பு வாயில் மேற்புறத்தில் இறைவன், ராமர், ஜடாயு, விநாயகர், சுப்பிரமணியர் ஆகியோரின் சுதை உருவங்கள் உள்ளன. உள்ளே நுழைந்ததும், வலதுபுறம் சூரியன், சந்திரன் ஆகியோரின் திருமேனிகள் காணப்படுகின்றன. உள் மண்டபத்தில் நுழைந்து சென்றால், நேரே மூலவர் அழகாக சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இங்குள்ள சிவலிங்கம் மிகவும் பளபளப்பாகக் காட்சி அளிக்கிறது. இத்தல இறைவனை மூர்க்க ரிஷி வழிபட்டுள்ளார். இவ்வாலயம் ஒரு சிறிய கோயில். மகா மண்டபத்தில் நின்றவாறே சுவாமியையும், அம்பாளையும் தரிசிக்க இயலும். மாசி மாதத்தில் சிவராத்திரி நாளில் சூரியக்கதிர்கள் சிவனின் திருமேனியில் விழுவது இத்தலத்தின் சிறப்பம்சம். சுற்றுப் பிராகாரத்தில் நாகர், பைரவர், சனீஸ்வரர், வள்ளி, சூரியன், சந்திரன் ஆகியோரின் திருமேனிகள் உள்ளன. திருநாவுக்கரசர் தனது பதிகத்தின் மூன்றாவது பாடலில் இத்தலத்தின் அம்பாளை மைம்மேவு கண்ணி என்று குறிப்பிட்டுள்ளார்.

வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகர் சந்நிதியும், தனியே சுப்பிரமணியர் சந்நிதியும், கஜலட்சுமி சந்நிதியும் சுற்றுப் பிராகாரத்தில் உள்ளன. வடமொழியில் திரிநேத்ர சுவாமி என்று கூறப்படும் இத்தல இறைவன் பெயர், அதற்கு இணையாக தமிழில் முக்கண்நாதர் என்றிருக்க வேண்டும். ஆனால், பேச்சு வழக்கில் சிதைவுற்று, தொடர்பே இல்லாமல் முக்கோணநாதர் என்று வழங்குகிறது.

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச் செய்த இத்தலத்துக்கான இப்பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் தான் தடுமாறித் திரிந்து உழன்ற செயல் இரங்கத்தக்கது என்று தனது பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் நெகிழ்ச்சியுடன் அப்பர் பெருமான் குறிப்பிடுகிறார்.

1. ஆராத இன்னமுதை அம்மான் றன்னை

அயனொடுமா லறியாத ஆதி யானைத்

தாராரும் மலர்க்கொன்றைச் சடையான் றன்னைச்

சங்கரனைத் தன்னொப்பா ரில்லா தானை

நீரானைக் காற்றானைத் தீயா னானை

நீள்விசும்பாய் ஆழ்கடல்க ளேழுஞ் சூழ்ந்த

பாரானைப் பள்ளியின்முக்கூடலானைப்

பயிலாதே பாழேநான் உழன்றவாறே.

 

2. விடையானை விண்ணவர்கள் எண்ணத் தானை

வேதியனை வெண்டிங்கள் சூடுஞ் சென்னிச்

சடையானைச் சாமம்போற் கண்டத் தானைத்

தத்துவனைத் தன்னொப்பா ரில்லா தானை

அடையாதார் மும்மதிலுந் தீயில் மூழ்க

அடுகணைகோத் தெய்தானை அயில்கொள் சூலப்

படையானைப் பள்ளியின்முக்கூடலானைப்

பயிலாதே பாழேநான் உழன்றவாறே.

 

3. பூதியனைப் பொன்வரையே போல்வான் றன்னைப்

புரிசடைமேற் புனல்கரந்த புனிதன் றன்னை

வேதியனை வெண்காடு மேயான் றன்னை

வெள்ளேற்றின் மேலானை விண்ணோர்க் கெல்லாம்

ஆதியனை ஆதிரைநன் னாளான் றன்னை

அம்மானை மைம்மேவு கண்ணி யாளோர்

பாதியனைப் பள்ளியின்முக்கூடலானைப்

பயிலாதே பாழேநான் உழன்றவாறே.

 

4. போர்த்தானை ஆனையின்றோல் புரங்கள் மூன்றும்

பொடியாக எய்தானைப் புனிதன் றன்னை

வார்த்தாங்கு வனமுலையாள் பாகன் றன்னை

மறிகடலுள் நஞ்சுண்டு வானோ ரச்சந்

தீர்த்தானைத் தென்றிசைக்கே காமன் செல்லச்

சிறிதளவில் அவனுடலம் பொடியா வங்கே

பார்த்தானைப் பள்ளியின்முக்கூடலானைப்

பயிலாதே பாழேநான் உழன்றவாறே.

 

5. அடைந்தார்தம் பாவங்கள் அல்லல் நோய்கள்

அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணங்

கடிந்தானைக் கார்முகில்போற் கண்டத் தானைக்

கடுஞ்சினத்தோன் றன்னுடலை நேமி யாலே

தடிந்தானைத் தன்னொப்பா ரில்லா தானைத்

தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சிற்

படிந்தானைப் பள்ளியின்முக்கூடலானைப்

பயிலாதே பாழேநான் உழன்றவாறே.

 

6. கரந்தானைச் செஞ்சடைமேற் கங்கை வெள்ளங்

கனலாடு திருமேனி கமலத் தோன்றன்

சிரந்தாங்கு கையானைத் தேவ தேவைத்

திகழொளியைத் தன்னடியே சிந்தை செய்வார்

வருந்தாமைக் காப்பானை மண்ணாய் விண்ணாய்

மறிகடலாய் மால்விசும்பாய் மற்று மாகிப்

பரந்தானைப் பள்ளியின்முக்கூடலானைப்

பயிலாதே பாழேநான் உழன்றவாறே.

 

7. நதியாருஞ் சடையானை நல்லூ ரானை

நள்ளாற்றின் மேயானை நல்லத் தானை

மதுவாரும் பொழிற்புடைசூழ் வாய்மூ ரானை

மறைக்காடு மேயானை ஆக்கூ ரானை

நிதியாளன் றோழனை நீடு ரானை

நெய்த்தான மேயானை ஆரூ ரென்னும்

பதியானைப் பள்ளியின்முக்கூடலானைப்

பயிலாதே பாழேநான் உழன்றவாறே.

 

8. நற்றவனை நான்மறைக ளாயி னானை

நல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றுஞ்

செற்றவனைச் செஞ்சடைமேற் றிங்கள் சூடுந்

திருவாரூர்த் திருமூலத் தான மேய

கொற்றவனைக் கூரரவம் பூண்டான் றன்னைக்

குறைந்தடைந்து தன்றிறமே கொண்டார்க் கென்றும்

பற்றவனைப் பள்ளியின்முக்கூடலானைப்

பயிலாதே பாழேநான் உழன்றவாறே.

 

9. ஊனவனை உடலவனை உயிரா னானை

உலகேழு மானானை உம்பர் கோவை

வானவனை மதிசூடும் வளவி யானை

மலைமகள்முன் வராகத்தின் பின்பே சென்ற

கானவனைக் கயிலாய மலையு ளானைக்

கலந்துருகி நைவார்தம் நெஞ்சி னுள்ளே

பானவனைப் பள்ளியின்முக்கூடலானைப்

பயிலாதே பாழேநான் உழன்றவாறே.

 

10. தடுத்தானைத் தான்முனிந்து தன்றோள் கொட்டித்

தடவரையை இருபதுதோள் தலையி னாலும்

எடுத்தானைத் தாள்விரலால் மாள வூன்றி

எழுநரம்பின் இசைபாடல் இனிது கேட்டுக்

கொடுத்தானைப் பேரோடுங் கூர்வாள் தன்னைக்

குரை கழலாற் கூற்றுவனை மாள வன்று

படுத்தானைப் பள்ளியின்முக்கூடலானைப்

பயிலாதே பாழேநான் உழன்றவாறே.

இத்தலத்தைப் பற்றி நாவுக்கரசர் அருளிய தேவாரம் - பாடியவர் சிவகாசி மு.இரமேஷ்குமார் ஓதுவார்

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/20/w600X390/DSCN7294.JPG http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/sep/22/புத்திரப்பேறு-திருமண-பாக்கியம்-வழங்கும்-முக்கோண-நாதேசுவரர்-கோவில்-திருபள்ளியின்முக்கூடல்-2776541.html
2769072 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் பித்ருதோஷ நிவர்த்தி தலம் பரிதியப்பர் கோவில், திருப்பரிதிநியமம் என்.எஸ். நாராயணசாமி Friday, September 8, 2017 11:25 AM +0530  

பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 101-வது தலமாக இருப்பது திருபரிதிநியமம். தற்போது பரிதியப்பர் கோவில் என்று வழங்கப்படுகிறது. தனது தோஷம் நீங்க சூரியன் வழிபட்ட தலங்களில் பரிதிநியமும் ஒன்று. ஜாதகத்தில் சூரியன் பித்ருகாரகன் என்று அறியப்படுகிறார். பித்ருகாரகனான சூரியன் இத்தல இறைவனை வழிபட்டு தனது தோஷம் நீங்கப்பெற்றதால், இத்தலம் ஒரு பித்ருதோஷ பரிகாரத் தலமாகப் போற்றப்படுகிறது.

இறைவன் பெயர்: பரிதியப்பர், பாஸ்கரேஸ்வரர்

இறைவி பெயர்: மங்களநாயகி, மங்களாம்பிகை

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றுள்ளது.

எப்படிப் போவது

தஞ்சாவூரில் இருந்து ஒரத்தநாடு செல்லும் வழியில் 15 கி.மீ. தொலைவில் உள்ள மேலஉளூர் சென்று, அங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ. சென்றால் இத்தலம் இருக்கிறது.

தஞ்சையிலிருந்து மாரியம்மன் கோயில் வழியாகவும், தஞ்சாவூர் - மன்னார்குடி சாலையில் சடையார்கோயில், பொன்னாப்பூர் வழியாக பரிதிநியமம் செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது. ஒரத்தநாடுக்கு நேர் வடக்கே 4 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு பரிதியப்பர் திருக்கோயில்,

மேலஉளூர் அஞ்சல்,

தஞ்சாவூர் RMS,

தஞ்சாவூர் மாவட்டம் – 614 904.

இவ்வாலயம் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

சூரியன் தனக்கு இருந்த குன்மநோய் தீர இத்தலம் வந்து சிவபெருமானை வழிபட்டு தனது நோய் நீங்கப்பெற்றான் என்று தலபுராணம் கூறுகிறது.

மண்ணில் புதையுண்டு இருந்த இந்த சிவலிங்கம், சிபிச் சக்கரவர்த்தியால் கண்டுபிடிக்கப்பட்டு அவரால் ஆலயம் கட்டப்பட்டது. சூரியனுக்கு பரிதி என்ற பெயரும் உண்டு. பரிதி வழிபட்டதால் இத்தல இறைவன் பரிதியப்பர், பாஸ்கரேஸ்வரர் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

கிழக்கு நோக்கியுள்ள இந்த ஆலயம் இரண்டு கோபுரங்களுடன் விளங்குகிறது. ராஜகோபுரம் ஐந்து நிலைகளையும், இரண்டாம் கோபுரம் மூன்று நிலைகளையும் கொண்டது. முதல் கோபுரம் வழியே உள்ளே நுழைந்ததும் நேரே கொடிமரம், விநாயகர், நந்தி, பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம்.

வெளிப் பிராகாரத்தில் வசந்த மண்டபத்துக்குப் பக்கத்தில் அம்பாள் கோயில் தெற்கு பார்த்து உள்ளது. இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உள் பிராகாரம் அடைந்தால், அங்கு விநாயகர், முருகன், கஜலட்சுமி சந்நிதிகளைத் தரிசிக்கலாம். நடராச சபை உள்ளது. அருகில் பைரவர், சூரியன், சந்திரன், நவக்கிரகங்கள் உள்ளன. இங்குள்ள முருகப் பெருமான் சிறந்த வரப்பிரசாத மூர்த்தியாக வழிபடப் பெறுகின்றார்.

துவாரபாலகர்களையும் விநாயகரையும் தொழுது உள்ளே சென்றால், மூலவர் பரிதியப்பர் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். மூலவருக்கு எதிரில் நந்தி, பலிபீடம், அதையடுத்து மூலவரை நோக்கியபடி சூரியன் இருப்பதைக் காணலாம். சண்டிகேசுவரர் சந்நிதியில் மூன்று திருமேனிகள் உள்ளன.

ஆலயத்துக்கு மூன்று தீர்த்தங்கள் உள்ளன. சூரிய தீர்த்தம் கோயிலின் முன்பும், சந்திரதீர்த்தம் மற்றும் வேததீர்த்தம் கோவிலின் பின்புறமும் உள்ளன. தலமரம் அரசமரம்.

தலச் சிறப்பு

பங்குனி மாதம் 17, 18, 19, 20 ஆகிய தேதிகளில் சூரியனின் கதிர்கள் சிவலிங்கத் திருமேனியில் படுகின்றன. மூலவர் பரிதியப்பர் சந்நிதிக்கு எதிரே உள்ள நந்தியின் பின்னால் சூரியன் பெரிய வடிவுடன் நின்ற நிலையில் சிவதரிசனம் செய்வதைக் காணலாம். இத்தகைய அமைப்பு வேறு எங்கும் காண முடியாதது ஆகும். அம்பாள் மங்களாம்பிகை மாங்கல்ய பாக்கியம் தருபவள் என்று போற்றப்படுகிறாள்.

எத்தகைய பிதுர் தோஷத்துக்கும் இத்தலம் ஒரு சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது. ஜாதக ரீதியாக எந்தக் கிரகத்தினாலும், பிதுர் தோஷம் ஏற்பட்டாலும் இத்தலத்தில் பரிகாரம் செய்யலாம். மேலும், இத்தலம் பஞ்ச பாஸ்கர தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. மார்க்கண்டேயர் அருவ வடிவில் இத்தலத்தில் தினமும் சிவபூஜை செய்வதாக ஐதீகம்.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

விண்கொண்ட தூமதி சூடிநீடு விரிபுன் சடைதாழப்

பெண்கொண்ட மார்பில் வெண்ணீறு பூசிப் பேணார் பலிதேர்ந்து

கண்கொண்ட சாயலோ டேர்கவர்ந்த கள்வர்க் கிடம்போலும்

பண்கொண்ட வண்டினம் பாடியாடும் பருதிநியமமே.

 

அரவொலி வில்லொலி அம்பினொலி அடங்கார் புரமூன்றும்

நிரவவல் லார்நிமிர் புன்சடைமேல் நிரம்பா மதிசூடி

இரவில் புகுந்தென் னெழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்

பரவவல் லார்வினை பாழ்படுக்கும் பருதிநியமமே.

 

வாண்முக வார்குழல் வாள்நெடுங்கண் வளைத்தோள் மாதஞ்ச

நீண்முக மாகிய பைங்களிற்றின் உரிமேல் நிகழ்வித்து

நாண்முகங் காட்டி நலங்கவர்ந்த நாதர்க் கிடம்போலும்

பாண்முக வண்டினம் பாடியாடும் பருதிநியமமே.

 

வெஞ்சுரஞ் சேர்விளை யாடல்பேணி விரிபுன் சடைதாழத்

துஞ்சிருள் மாலையும் நண்பகலுந் துணையார் பலிதேர்ந்து

அஞ்சுரும் பார்குழல் சோரவுள்ளங் கவர்ந்தார்க் கிடம்போலும்

பஞ்சுரம் பாடிவண் டியாழ்முரலும் பருதிநியமமே.

 

நீர்புல்கு புன்சடை நின்றிலங்க நெடுவெண் மதிசூடித்

தார்புல்கு மார்பில்வெண் ணீறணிந்து தலையார் பலிதேர்வார்

ஏர்புல்கு சாயல் எழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்

பார்புல்கு தொல் புகழால் விளங்கும் பருதிநியமமே.

 

வெங்கடுங் காட்டகத் தாடல்பேணி விரிபுன் சடைதாழத்

திங்கள் திருமுடி மேல்விளங்கத் திசையார் பலிதேர்வார்

சங்கொடு சாயல் எழில் கவர்ந்த சைவர்க் கிடம்போலும்

பைங்கொடி முல்லை படர்புறவிற் பருதிநியமமே.

 

பிறைவளர் செஞ்சடை பின்தயங்கப் பெரிய மழுவேந்தி

மறையொலி பாடி வெண்ணீறு பூசி மனைகள் பலிதேர்வார்

இறைவளை சோர எழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்

பறையொலி சங்கொலி யால்விளங்கும் பருதிநியமமே.

 

ஆசடை வானவர் தானவரோ டடியார் அமர்ந்தேத்த

மாசடையாத வெண்ணீறு பூசி மனைகள் பலிதேர்வார்

காசடை மேகலை சோரவுள்ளங் கவர்ந்தார்க் கிடம்போலும்

பாசடைத் தாமரை வைகுபொய்கைப் பருதிநியமமே.

 

நாடினர் காண்கிலர் நான்முகனுந் திருமால் நயந்தேத்தக்

கூடலர் ஆடலர் ஆகிநாளுங் குழகர் பலிதேர்வார்

ஏடலர் சோர எழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்

பாடலர் ஆடல ராய்வணங்கும் பருதிநியமமே.

 

கல்வளர் ஆடையர் கையிலுண்ணுங் கழுக்கள் இழுக்கான

சொல்வள மாக நினைக்கவேண்டா சுடுநீ றதுவாடி

நல்வளை சோர நலங்கவர்ந்த நாதர்க் கிடம்போலும்

பல்வளர் முல்லையங் கொல்லைவேலிப் பருதிநியமமே.

 

பையர வம்விரி காந்தள்விம்மு பருதிநியமத்துத்

தையலொர் பாகம் அமர்ந்தவனைத் தமிழ்ஞான சம்பந்தன்

பொய்யிலி மாலை புனைந்த பத்தும் பரவிப் புகழ்ந்தேத்த

ஐயுற வில்லை பிறப்பறுத்தல் அவலம் அடையாவே.

சம்பந்தர், திருப்பரிதிநியமம் தலத்தை பலவாறு சிறப்பித்து தன் பதிகத்தில் குறிப்பிடுகிறார். வண்டுகள் பண்ணிசையோடு பாடியாடும் திருப்பரிதிநியமம் என்றும், பசுமையான முல்லைக்கொடி படர்ந்துள்ள திருப்பரிதிநியமம் என்றும், பறையொலியும், சங்கொலியும் விளங்கத் திருவிழாக்கள் நிகழும் திருப்பரிதிநியமம் என்றும், பசுமையான இலைகளையுடைய தாமரைகள் விளங்கும் பொய்கையுடைய திருப்பரிதிநியமம் என்றும், உலகம் முழுவதும் பரவிய பழம் புகழையுடைய திருப்பரிதிநியமம் என்றும், தன்னை வணங்கிப் போற்றுவார்களின் வினையை அழிக்கும் திருப்பரிதிநியமம் என்றும் குறிப்பிடும் அவர், இப்பதிகத்தின் 10 பாடல்களையும் பாடி புகழ்ந்து வணங்குபவர்களின் பிறப்பு அறும் என்பதில் ஐயமில்லை; அவர்களுக்கு இம்மையில் துன்பம் எதுவும் இல்லை என்றும் கூறுகிறார்.

இத்தலத்தைப் பற்றி சம்பந்தர் அருளிய தேவாரம் - பாடியவர் திருமறைக்காடு சொ.சிவக்குமார்

 

]]>
தஞ்சாவூர், பரிதியப்பர், மங்களநாயகி, ஒரத்தநாடு, திருஞானசம்பந்தர் , பதிகம் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/9/7/w600X390/1.JPG http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/sep/08/பித்ருதோஷ-நிவர்த்தி-தலம்-பரிதியப்பர்-கோவில்-திருப்பரிதிநியமம்-2769072.html
2763766 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் திருமணத் தடை, தீராத கடன் பிரச்னை நீங்க சிவலோக தியாகேசர் கோவில், ஆச்சாள்புரம் என்.எஸ். நாராயணசாமி Tuesday, August 29, 2017 05:32 PM +0530  

காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 5-வது தலம். திருநல்லூர் பெருமணம் என்று தேவாரம் பாடப்பெற்ற காலத்தில் பெருமை பெற்ற இத்தலம், இன்றைய நாளில் ஆச்சாள்புரம் என்று வழங்கப்படுகிறது.

இறைவன் பெயர்: சிவலோக தியாகேசர்

இறைவி பெயர்: திருவெண்ணீற்று உமையம்மை

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றுள்ளது. தனது வாழ்நாளில் சம்பந்தர் பாடிய “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி” என்று தொடங்கும் கடைசிப் பதிகமும் இத்தலத்தில்தான் பாடப்பெற்றது.

எப்படிப் போவது

சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் கொள்ளிடம் பாலத்தைக் கடந்தால், கொள்ளிடம் ஊர் வரும். அங்கிருந்து ஆச்சாள்புரம் செல்லும் கிளைச் சாலையில் சுமார் 5 கி.மீ. சென்று இந்த சிவஸ்தலம் அடையலாம். இதே சாலையில் மேலும் 6 கி.மீ. செல்ல, மயேந்திரப்பள்ளி என்ற மற்றொரு பாடல் பெற்ற தலம் உள்ளது. சிதம்பரம், மற்றும் சீர்காழியில் இருந்து ஆச்சாள்புரம் செல்ல நகரப் பேருந்து வசதிகள் உள்ளன.

ஆலய முகவரி

அருள்மிகு சிவலோக தியாகேசர் திருக்கோவில்,

ஆச்சாள்புரம், ஆச்சாள்புரம் அஞ்சல்

சீர்காழி வட்டம்,

நாகப்பட்டினம் மாவட்டம் – 609 101.

இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோவில் அமைப்பு

சிவலோக தியாகேசர் ஆலயம் கிழக்கு நோக்கி ஐந்து நிலைகளை உடைய ராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. ஆலயத்தின் 11 தீர்த்தங்களில் ஒன்றான பஞ்சாட்சர தீர்த்தம், கோவிலுக்கு எதிரில் உள்ளது. ராஜகோபுரத்தின் வாயிலாக உள்ளே நுழைந்தவுடன், கவசமிட்ட கொடி மரம் மற்றும் நந்தி மண்டபமும் அடுத்து நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளன.

நூற்றுக்கால் மண்டபத்தில், திருஞானசம்பந்தர் அவர் மனைவி ஸ்தோத்திர பூரணாம்பிகையுடன் மணக்கோலத்தில் தனி சந்நிதியில் காட்சியளிக்கிறார். அதை அடுத்து கிழக்கு நோக்கிய சிவலோக தியாகேசர் சந்நிதி உள்ளது.

சுவாமி கருவறை கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், வேலைப்பாடு அமைந்த தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். சுவாமி சந்நிதி வாயிலில் மேற்புறம் வண்ணச் சுதையில் சம்பந்தர் ஐக்கியமான காட்சி உள்ளது.

ஸ்ரீரிணவிமோசனர் சந்நிதியும், அதையடுத்து ஸ்ரீமகாலட்சுமி சந்நிதியும், கருவறை மேற்கு சுற்றுப் பிராகாரத்தில் உள்ளன. இறைவி திருவெண்ணீற்று உமையம்மை சந்நிதி, தனிக்கோவிலாக மேற்கு வெளிப் பிராகாரத்தில் மதில் சூழ்ந்த தனி வாயிலுடன் ஒரு சுற்றுப் பிராகாரத்துடன் அமைந்துள்ளது.

திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தரின் திருமணத்துக்கு வந்தவர்களுக்கு உமையம்மையே நேரில் வந்து திருநீறு அளித்ததால், அம்பிகைக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற பெயர் ஏற்பட்டது. இறைவியின் சந்நிதியில் குங்குமத்துக்குப் பதிலாக திருநீறுதான் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இதைப் பூசிகொண்டால் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீடித்திருக்கும் என்பது நம்பிக்கை. வருடம்தோறும் வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் சம்பந்தர் இறைவனோடு ஐக்கியமான திருவிழா மிகச் சிறப்பாக இங்கு நடைபெறுகிறது.

நமசிவாய திருப்பதிகம்

திருஞானசம்பந்தர் தன் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் புரிந்து, தம் மனைவியுடன் சுற்றம் சூழ திருநல்லூர் பெருமணம் ஆலயம் வந்து இறைவனைத் துதித்தார். மனைவியுடன் இறைவன் திருவடி சேர்வதே ஏற்றதாகும் என்று கருதிய சம்பந்தர், பதிகம் பாடி இறைவனை துதிக்க, சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றி அதனுள் புகுவதற்கு ஒரு வாயிலையும் காட்டி அருளினார்.

சம்பந்தர் தன்னுடன் வந்த சுற்றத்தாரையும் அடியார்களையும் சிவசோதியில் கலந்து முக்தி அடையும்படி கூறினார். சிலர் நெருப்புச் சோதியைக் கண்டு தயக்கமும் அச்சமும் கொள்ள, சம்பந்தர் அவர்களுக்கு நமசிவாய மந்திரத்தின் மேன்மையைக் கூறி, நமசிவாய திருப்பதிகம் பாடி தம்முடன் வந்தோரை எல்லாம் அச்சோதியில் புகுமாறு சொல்லி, தாமும் தன் மனைவியுடன் சோதியுள் புகுந்து இறைவன் திருவடியைச் சேர்ந்தார்.

சம்பந்தருடன் சேர்த்து திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகிய நான்கு நாயன்மார்கள் ஒரே நாளில், ஒரே இடத்தில் முக்தி அடைந்த தலம் என்ற பெருமையும் இத்தலத்துக்கு உண்டு. இத்தகைய சிறப்புமிக்க சம்பவம் நடைபெற்ற பெருமை உடைய சிவஸ்தலம் திருநல்லூர் பெருமணம் சிவலோகத் தியாகேசர் ஆலயம்.

ரிணவிமோசன லிங்கேஸ்வரர்

இத்தலத்தில் இறைவன் சந்நிதி சுற்றுப் பிராகாரத்தில் காணப்படும் ரிணவிமோசன லிங்கேஸ்வரர் சந்நிதி ஒரு சிறப்பு வாய்ந்த சந்நிதியாகும்.

ரிணவிமோசன லிங்கேஸ்வரரை 11 திங்கள்கிழமை வழிபட்டு அபிஷேக ஆராதனை செய்தால், நம்முடைய அனைத்து கஷ்டங்களும் நீங்கி அருள் பெறலாம். நமது வாழ்க்கையில் படுகின்ற கடன்கள், நமது முன்னோர்களால் செய்ய முடியாமல் விடுபட்ட நிவர்த்திக் கடன்களில் இருந்தும் விடுதலை பெறலாம்.

திருஞானசம்பந்தர் திருமணம் நடைபெற்ற இத்தலம், ஒரு சிறப்புபெற்ற திருமணத் தடை நீக்கும் தலமாக இருக்கிறது. இத்தலம் வந்து இங்குள்ள இறைவனையும், இறைவியையும் வழிபட்டு வேண்டிக்கொண்டால், விரைவில் திருமணம் கைகூடி வரும் என்பது இங்கு வரும் பக்தர்களின் அசைக்க முடியாக நம்பிக்கை.

ஆச்சாள்புரத்தில் இருந்து மிக அருகில் உள்ளது நல்லூர் என்ற கிராமம். இந்த நல்லூர் கிராமத்திலிருந்துதான் சம்பந்தர் திருமணத்துக்குப் பெண் அழைப்பு நடைபெற்றது.

இந்த நல்லூர் கிராமத்திலுள்ள சுந்தர கோதண்டராமர் கோவிலும் பார்க்க வேண்டிய இடமாகும். இக்கோவில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. ஜாதக தோஷங்களால் திருமணத் தடை ஏற்படுவர்களுக்கு இந்த சுந்தர கோதண்டராமர் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி புனர்வசு நட்சத்திரத்தில் திருமஞ்சனம் செய்வித்தால், தடைகள் நீங்கி நல்லவரன் அமைந்து நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.

திருஞானசம்பந்தர் பாடியருளிய இத்தலத்துக்கான இப்பதிகம், 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது

1. கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்

பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில

சொல்லூர்ப் பெருமணஞ் சூடல ரேதொண்டர்

நல்லூர்ப் பெருமண மேயநம் பானே.

 

2. தருமண லோதஞ்சேர் தண்கடல் நித்திலம்

பருமண லாக்கொண்டு பாவைநல் லார்கள்

வருமணங் கூட்டி மணஞ்செயும் நல்லூர்ப்

பெருமணத் தான்பெண்ணோர் பாகங்கொண் டானே.

 

3. அன்புறு சிந்தைய ராகி அடியவர்

நன்புறு நல்லூர்ப் பெருமணம் மேவிநின்

றின்புறும் எந்தை இணையடி யேத்துவார்

துன்புறு வாரல்லர் தொண்டுசெய் வாரே.

 

4. வல்லியந் தோலுடை யார்ப்பது போர்ப்பது

கொல்லியல் வேழத் துரிவிரி கோவணம்

நல்லிய லார்தொழு நல்லூர்ப் பெருமணம்

புல்கிய வாழ்க்கையெம் புண்ணிய னார்க்கே.

 

5. ஏறுகந் தீரிடு காட்டெரி யாடிவெண்

ணீறுகந் தீர்நிரை யார்விரி தேன்கொன்றை

நாறுகந் தீர்திரு நல்லூர்ப் பெருமணம்

வேறுகந் தீருமை கூறுகந் தீரே.

 

6. சிட்டப்பட் டார்க்கெளி யான்செங்கண் வேட்டுவப்

பட்டங்கட் டுஞ்சென்னி யான்பதி யாவது

நட்டக்கொட் டாட்டறா நல்லூர்ப் பெருமணத்

திட்டப்பட் டாலொத்தீ ராலெம்பி ரானீரே.

 

7. மேகத்த கண்டன்எண் தோளன்வெண் ணீற்றுமை

பாகத்தன் பாய்புலித் தோலொடு பந்தித்த

நாகத்தன் நல்லூர்ப் பெருமணத் தான்நல்ல

போகத்தன் யோகத்தை யேபுரிந் தானே.

 

8. தக்கிருந் தீரன்று தாளால் அரக்கனை

உக்கிருந் தொல்க உயர்வரைக் கீழிட்டு

நக்கிருந் தீரின்று நல்லூர்ப் பெருமணம்

புக்கிருந் தீரெமைப் போக்கரு ளீரே.

 

9. ஏலுந்தண் டாமரை யானும் இயல்புடை

மாலுந்தம் மாண்பறி கின்றிலர் மாமறை

நாலுந்தம் பாட்டென்பர் நல்லூர்ப் பெருமணம்

போலுந்தங் கோயில் புரிசடை யார்க்கே.

 

10. ஆதர் அமணொடு சாக்கியர் தாஞ்சொல்லும்

பேதைமை கேட்டுப் பிணக்குறு வீர்வம்மின்

நாதனை நல்லூர்ப் பெருமணம் மேவிய

வேதன தாள்தொழ வீடெளி தாமே.

 

11. நறும்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்

பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானை

உறும்பொரு ளாற்சொன்ன வொண்டமிழ் வல்லார்க்

கறும்பழி பாவம் அவலம் இலரே.

திருநல்லூர் பெருமணத்தில், இறைவன் சந்நிதியில் சம்பந்தரும், அவர் மனைவியும் மற்ற சுற்றத்தாருடன் இறைவன் காட்டிய ஜோதியில்

இரண்டறக் கலப்பதற்கு முன் சம்பந்தர் பாடிய பதிகம், நமசிவாயத் திருப்பதிகம் என போற்றப்படுகிறது.

1. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது

வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது

நாதன் நாமம் நமச்சிவாயவே.

 

2. நம்பு வாரவர் நாவி னவிற்றினால்

வம்பு நாண்மலர் வார்மது வொப்பது

செம்பொ னார்தில கம்முல குக்கெலாம்

நம்பன் நாமம் நமச்சிவாயவே.

 

3. நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந்

தக்கு மாலைகொ டங்கையில் எண்ணுவார்

தக்க வானவ ராத்தகு விப்பது

நக்கன் நாமம் நமச்சியவே.

 

4. இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்

நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால்

நியமந் தான்நினை வார்க்கினி யான்நெற்றி

நயனன் நாமம் நமச்சி வாயவே.

 

5. கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள்

இல்லா ரேனும் இயம்புவ ராயிடின்

எல்லாத் தீங்கையும் நீங்குவ ரென்பரால்

நல்லார் நாமம் நமச்சிவாயவே.

 

6. மந்த ரம்மன பாவங்கள் மேவிய

பந்த னையவர் தாமும் பகர்வரேல்

சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்

நந்தி நாமம் நமச்சிவாயவே.

 

7. நரக மேழ்புக நாடின ராயினும்

உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர்

விரவி யேபுகு வித்திடு மென்பரால்

வரதன் நாமம் நமச்சிவாயவே.

 

8. இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல்

தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்

மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை

நலங்கொள் நாமம் நமச்சிவாயவே.

 

9. போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்

பாதந் தான்முடி நேடிய பண்பராய்

யாதுங் காண்பரி தாகி அலந்தவர்

ஓதும் நாமம் நமச்சிவாயவே.

 

10. கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள்

வெஞ்சொல் மிண்டர் விரவில ரென்பரால்

விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய்

நஞ்சுண் கண்டன் நமச்சிவாயவே.

 

11. நந்தி நாமம் நமச்சிவாய எனுஞ்

சந்தை யாற்றமிழ் ஞானசம்பந்தன் சொல்

சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம்

பந்த பாசம் அறுக்க வல்லார்களே.

இந்தப் பதிகம்தான், திருஞானசம்பந்தர் தன் வாழ்நாளில் பாடிய கடைசிப் பதிகமாகும்.

சம்பந்தர் அருளிய தேவாரம் - பாடியவர் முருக. சுந்தர் 

சம்பந்தர் அருளிய தேவாரம் - பாடியவர்கள் ஆலவாய் அண்ணல் தேவார பாடசாலை மாணவர்கள்

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/29/w600X390/achalpuram1.JPG http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/sep/01/திருமணத்-தடை-தீராத-கடன்-பிரச்னை-நீங்க-சிவலோக-தியாகேசர்-கோவில்-ஆச்சாள்புரம்-2763766.html
2761084 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் திருமண பிரார்த்தனைத் தலம் வலஞ்சுழிநாதர் கோவில், திருவலஞ்சுழி என்.எஸ். நாராயணசாமி Friday, August 25, 2017 12:00 AM +0530  

காவிரி தென்கரை பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் வரிசையில் 25-வது தலமாக திருவலஞ்சுழி விளங்குகிறது. அம்பாள் பெரியநாயகியின் சந்நிதி, இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் அமைந்துள்ளது. இத்தகைய அமைப்புள்ள தலங்கள் திருமணத் தலங்கள் என அழைக்கப்படுகின்றன. அவ்வகையில், இத்தலம் ஒரு திருமண பிரார்த்தனைத் தலமாகக் கருதப்படுகிறது. திருமணத் தலமாக இருந்தாலும், சிறப்புபெற்ற சுவேத விநாயகர் சந்நிதி இருப்பதால் இத்தலம் மேலும் சிறப்பு பெறுகிறது.

இறைவன் பெயர்: கற்பகநாதேஸ்வரர், வலஞ்சுழிநாதர், கபர்த்தீசர்

இறைவி பெயர்: பெரியநாயகி, பிருகந்நாயகி

இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்று, திருஞானசம்பந்தர் பதிகம் மூன்று என மொத்தம் நான்கு பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது

கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில், சுவாமிமலைக்கு அருகே இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர், பாபநாசம், சுந்தரப்பெருமாள் கோயில் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துச் சாலையில் சென்று கோயிலை அடையலாம். கோயில் சாலையோரத்தில் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு வலஞ்சுழிநாதர் திருக்கோயில்,

திருவலஞ்சுழி, சுவாமிமலை அருகில்,

கும்பகோணம் வட்டம்,

தஞ்சை மாவட்டம் – 612 302.

இவ்வாலயம், தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

காவிரி நதி வலமாக சுழித்துச் செல்லும் இடத்தில் அமைந்துள்ளதால், இத்தலம் திருவலஞ்சுழி என்று பெயர் பெற்றது. அவ்வாறு வலம் சுழித்துச் சென்ற காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால், ஒரு பெரிய பிலத்துவாரம் (பள்ளம்) ஏற்பட்டது.

பாய்ந்து வந்த காவிரியாறு, ஆதிசேஷன் வெளிப்பட்ட பள்ளத்தில் பாய்ந்து பாதாளத்தில் இறங்கிவிட்டது. அதுகண்ட சோழ மன்னன் கவலையுற்றுத் திகைத்தபோது, அசரீரியாக இறைவன் தோன்றி, மன்னனோ மகரிஷியோ இறங்கி அப்பாதாளத்தில் பலியிட்டுக்கொண்டால், அப்பிலத்துவாரம் மூடிக்கொள்ளும். அப்போது காவிரி வெளிப்படும் என்றருளினார்.

அதைக்கேட்ட மன்னன், கொட்டையூர் என்ற ஊரில் ஏரண்டம் என்னும் கொட்டைச் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ள இடத்தில் தவம் செய்த ஏரண்ட (ஹேரண்ட) முனிவரிடம் சென்று, அசரீரி சொன்ன செய்தியைச் சென்னான். இதைக் கேட்ட ஏரண்ட முனிவர், நாட்டுக்காகத் தியாகம் செய்ய முன்வந்தார். அவர் அந்தப் பிலத்துவாரத்தில் இறங்கி தன்னைப் பலி கொடுக்கவும், பள்ளம் மூடிக்கொள்ள காவிரி வெளிப்பட்டாள். ஏரண்ட முனிவருக்கு இக்கோவிலில் சிலை இருக்கிறது.

இன்றும் மஹாசிவராத்திரி நாளில் இரவில் நான்கு ஜாமங்களிலும் ஆதிசேஷன் வெளிப்பட்டு திருவலஞ்சுழி, திருநாகேச்சுரம், திருப்பாம்புரம், நாகைக்காரோணம் என்னும் தலங்களில் வந்து வழிபடுவதாகச் செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது.

சுவேத விநாயகர்

திருவலஞ்சுழியில் உள்ள தல விநாயகர், சுவேத விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். தேவர்கள் திருப்பாற்கடலை கடையத் தொடங்கும்முன், விநாயக பூஜை செய்ய மறந்தார்கள். அதனால்தான் ஆலகால விஷம் பாற்கடலில் இருந்து வெளிவந்தது. அதனால் அவதிகளுக்கு ஆளான தேவர்கள், தங்கள் தவறை உணர்ந்து, அந்த வேளையில் விநாயகரை ஆவாஹனம் செய்ய வேறு ஏதும் இல்லா நிலையில், பொங்கி வந்த கடல் நுரையைப் பிடித்து பிள்ளையாரை உருவாக்கி பூஜை செய்தனர். அதன்பின், விநாயகர் அருளால் எடுத்த காரியம் பூர்த்தி அடைந்து அமுதம் பெற்றார்கள்.

அந்த விநாயகர் மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்ய திருவலஞ்சுழியே ஏற்ற இடம் என இங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்ட இந்திரன், ஒரு கோயிலும் கட்டினான். இன்றும் அந்தக் கோயிலில் இந்திரன் பூஜித்த அந்த விநாயகர் மூர்த்தி அருள் பாலிக்கிறார்.

அத்துடன், ஒவ்வொரு விநாயக சதுர்த்தி அன்று தேவேந்திரன் வந்து விநாயகரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம். தேவர்களால் உருவாக்கப்பட்ட இந்த விநாயகர்தான் திருவலஞ்சுழியில் உள்ள ஸ்வேத விநாயகர்.

கடல் நுரையால் ஆனதால், மற்ற ஆலயங்களில் நடப்பது போன்ற அபிஷேகம் இவருக்கு இங்கே இல்லை. சுமார் 10 அங்குல உயரமே உள்ள இந்த வெள்ளைப் பிள்ளையாருக்கு புனுகு மட்டும் சாத்துவார்கள். மேலும் பச்சைக் கற்பூரத்தைக் குறிப்பிட்ட பக்குவத்தில் அரைத்து, அதை இந்த விநாகயரின் திருமேனியைத் தொடாமல், அவர் மேல் மெல்ல தூவி விடுவார் அர்ச்சகர். அதனால், இந்த விநாயகர் தீண்டாத் திருமேனி ஆவார். விநாயகர் துதிக்கை வலப்பக்கம் சுழித்துள்ளதால், திருவலஞ்சுழி என இத்தலம் பெயர் பெற்றதென்றும் கூறுவர்.

கோவில் அமைப்பு

திருவிடைமருதூருக்குரிய பரிவாரத் தலங்களுள் திருவலஞ்சுழி, விநாயகருக்கு உரிய தலமாகும். இத்தலத்திலுள்ள கற்பகநாதேஸ்வரர் கோவில் ஒரு பெரிய கோவில். கிழக்கு நோக்கி உள்ள ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. கோபுர வாயில் கடந்து நீண்ட வழியே சென்று மூன்று நிலை கோபுரத்தை அடையலாம். அம்பாள் பெரியநாயகியின் சந்நிதி, இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் அமைந்துள்ளது.

இத்தகைய அமைப்புள்ள தலங்கள் திருமணத் தலங்கள் என அழைக்கப்படுகின்றன. இறைவனுக்கும், இறைவிக்கும் உள்ள தனித்தனி சந்நிதிகள் போக, அஷ்டபுஜ மஹாகாளிக்கும், வெளிப் பிராகாரத்தில் பைரவருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள அஷ்டபுஜ காளி சிறப்பு வாய்ந்த மூர்த்தம். ராஜராஜ சோழன் இக்காளியை வழிபட்ட பிறகுதான், போருக்குப் புறப்பட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான்; வெற்றிகள் பல பெற்றான் என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள பைரவமூர்த்தி மிகவும் உக்கிரம் வாய்ந்தவராக விளங்கியமையால், அதைத் தணிப்பதற்காகச் சிறிது பின்னப்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. சனீஸ்வரனுக்கும் இவ்வாலயத்தில் தனி சந்நிதி உள்ளது.

இத்தலம் ஒரு திருப்புகழ் தலம். இங்கு உள் பிராகாரத்தில் உள்ள முருகப் பெருமான், ஆறு திருமுகங்களும், பன்னிரு கரங்களும் கொண்டு மயில் மீது அமர்ந்து கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் அருகில் நிற்கின்றனர். திருப்புகழில், இத்தல முருகர் மீது ஒரு பாடல் உள்ளது.

கடல் நுரையால் செய்யப்பட்டு இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தியே ஸ்வேத விநாயகர் என்ற வெள்ளைப் பிள்ளையார் ஆவார். இவரே இத்தலத்தின் சிறப்பு மூர்த்தியாவார். இப்பிள்ளையார் உள்ள மண்டபம் இந்திரனால் அமைக்கப்பட்டது என்று புராணங்கள் கூறுகின்றன.

சித்திரத் தூண்களும், கல் குத்துவிளக்கும் கொண்ட அழகான மண்டபமாக இது விளங்குகிறது. இச்சந்நிதியில் உள்ள கருங்கல் பலகணி நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுடன் திகழ்கிறது. இத்தலம் திருமுறைத் தலம் என்பதைவிட வெள்ளை விநாயகர் தலம் என்ற பெயரிலேயே மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது.

இதலத்தின் தீர்த்தங்களாக காவிரி, அரசலாறு, ஜடாதீர்த்தம் ஆகியவையும், தலமரமாக வில்வ மரமும் உள்ளது. ஏரண்ட முனிவர், ஆதிசேஷன், உமையம்மை, இந்திரன், திருமால், பிரம்மன் ஆகியோர் வழிபட்ட தலம் என்ற பெருமையும் திருவலஞ்சுழிக்கு உண்டு.

இத்தகைய சிறப்புபெற்ற விநாயகர் சந்நிதியைக் கொண்டுள்ள இத்தலத்துக்குச் சென்று விநாயகரை வழிபட்டு எல்லா நலமும் பெறுங்கள்.

சம்பந்தர் தேவாரம் – பாடியவர்கள் குமாரவயலூர் பாலசந்திரன், முருக சுந்தர்

 

]]>
திருவலஞ்சுழி http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/24/w600X390/1.jpg http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/aug/25/திருமண-பிரார்த்தனைத்-தலம்-வலஞ்சுழிநாதர்-கோவில்-திருவலஞ்சுழி-2761084.html
2756923 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் திருமணத்தடை, சனி கிரக தோஷம் நீக்கும் வடாரண்யேஸ்வரர் கோயில், திருவாலங்காடு என்.எஸ். நாராயணசாமி Friday, August 18, 2017 03:56 PM +0530  

பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்கள் வரிசையில் 15-வது தலமாக விளங்கும் திருவாலங்காடு, திருமணத்தடை, சனி கிரக தோஷம் நீக்கும் ஒரு தலமாக சிறப்புடன் விளங்குகிறது.

இறைவன் பெயர்: வடாரண்யேஸ்வரர், ஊர்த்துவதாண்டவர்
இறைவி பெயர்: வண்டார் குழலம்மை

இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் இரண்டு, திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று, சுந்தரர் பதிகம் ஒன்று என மொத்தம் 4 பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது

சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து 4 கி,மீ. தொலைவில் இந்த சிவஸ்தலம் கோவில் உள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ வசதிகள் உண்டு. திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்லும் பேருந்தில் சென்று திருவாலங்காடு நிறுத்தத்தில் இறங்கினால், கோவில் மிக அருகிலேயே இருக்கிறது. திருவள்ளூரில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும், அரக்கோணத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவிலும் திருவாலங்காடு தலம் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோவில்,
திருவாலங்காடு அஞ்சல்,
திருத்தணி வட்டம்,
திருவள்ளூர் மாவட்டம் – 631 203.

இவ்வாலயம், காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்காகத் திறந்திருக்கும்.

தலத்தின் சிறப்பு 

வடாரண்யேஸ்வரர் கோவில், நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் இரத்தின சபையாகத் திகழ்கிறது. காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி தந்த தலம் திருவாலங்காடு. இத்தலத்தில் இறைவனின் காலடியில் இன்றும் காரைக்கால் அம்மையார் வாழ்கிறார். திருவாலங்காட்டில் உள்ள நடராஜ தாண்டவம், ஊர்த்துவ தாணடவம் என்று சொல்லப்படுகிறது. வலது காலை உடம்புடன் ஒட்டி உச்சந்தலை வரை தூக்கி நின்றாடும் நாட்டியம் இதுவாகும். 

இத்தலத்து நடராஜர், மற்ற ஊர்த்துவ தாண்டவங்களைப்போல் தனது பாதத்தை செங்குத்தாக உடலை ஒட்டித் தூக்கி நின்று ஆடாமல், உடலின் முன்பக்கத்தில் முகத்துக்கு நேராக பாதத்தைத் தூக்கியிருக்கிறார். எட்டு கைகளுடன் சுமார் நான்கு அடி உயரமுள்ள இந்த திரு உருவத்தைக் காண நம் மெய் சிலிர்க்கும். யாருக்கும் அடங்காத காளியை, வெட்கித் தலை குனியவைத்த நடனமான இந்த ஊர்ர்த்துவ தாண்டவ நடனம் பார்த்துப் பரவசமடைய வேண்டியதாகும். 

ஒருமுறை காளிக்கும், சிவனுக்கும் நடனப் போட்டி நடந்தது. சிவபெருமானைவிட நன்றாக நடனமாடி வந்த காளி, கடைசியில் சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும் காலை மேலே நேராகத் தூக்கியவுடன், காளியான சக்தி வெட்கித் தலைகுனிந்து தோற்றுப்போனாள். நடராஜர் சந்நிதிக்கு எதிரே காளியின் சந்நிதி இருக்கிறது. சந்நிதிக்கு எதிரே மற்றும் பல விக்கிரகங்கள் இருக்கின்றன. வடாரண்யேஸ்வரரை ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் தரிசனம் செய்தால் எல்ல வகையான இன்பங்களும் கிடைக்கும் என்கிறது தல புராணம்.

கோவில் அமைப்பு 

கிழக்கில் உள்ள ஐந்து நிலை ராஜகோபுரம், அழகிய சுதை வேலைப்பாடுகளுடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. கோபுர நுழைவு வாயிலுக்கு இடதுபுறம் ஒரு சிறிய சந்நிதியில் அருள்மிகு வல்லப கணபதி காட்சி தருகிறார். வலதுபுறம் ஒரு சிறிய சந்நிதியில் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானையுடன் அருள்மிகு ஸ்ரீசண்முகர் காட்சி தருகிறார். உள்ளே நுழைந்தவுடன், வலதுபுறம் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இம் மண்டபத்தில்தான் நடராசர் அபிஷேகம் நடைபெறுகிறது. நுழைவு வாயிலைக் கடந்து சென்றவுடன் நாம் எதிரே காண்பது பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் மற்றும் மூன்று நிலைகளை உடைய இரண்டாவது கோபுரம். இந்த கோபுரத்திலும் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. 

இக்கோபுரத்தை ஒட்டிய மதிற்சுவரின் மேல் இடதுபுறம் காரைக்கால் அம்மையார் வரலாறும், வலதுபுறம் மீனாட்சி திருக்கல்யாண வரலாறும் அழகிய சுதை சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றதும் நாம் காண்பது இண்டாவது சுற்றுப் பிராகாரம். வலதுபுறத்தில் இறைவி வண்டார் குழலம்மை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. நேரே இறைவன் கருவறைக்குச் செல்லும் நுழைவு வாயிலின் மேற்புறம் சிவபெருமானின் ஐந்து சபைகளும், அழகிய சுதைச் சிற்பங்களாக காட்சி தருகின்றன. கருவறையில் இறைவன் வடாரண்யேஸ்வரர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார்.

மூலவரைத் தரிசிக்க உள் பிராகாரத்தில் செல்லும்போது சூரியன், அதிகாரநந்தி, விஜயராகவப் பெருமாள் தேவியருடன், சண்முகர், அகோர வீரபத்திரர், சப்த கன்னியர், நால்வர், காரைக்கால் அம்மையார், கார்க்கோடகன், முஞ்சிகேச முனிவர், பதஞ்சலி, அநந்தர், சண்டேச அநுக்ரஹர், எண்வகை விநாயகர் உருவங்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன.

கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். துர்க்கைக்குப் பக்கத்தில் துர்க்கா பரமேஸ்வரர் உருவம் ஒன்று கோஷ்ட மூர்த்தமாக உள்ளது. சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது. பஞ்சபூதத் தலத்துக்கு உரிய லிங்கங்கள் வரிசையாக உள்ளன. சஹஸ்ரலிங்கம் தரிசிக்கத்தக்கது. சுப்பிரமணியர், கஜலட்சுமி, பாபஹரீஸ்வர லிங்கம் முதலிய சந்நிதிகளும் உள் பிராகாரத்தில் இருக்கின்றன. பைரவர் தனது வாகனமின்றிக் காட்சி தருகின்றார். 

பிராகாரத்தில் வலமாக வரும்போது ஆருத்ரா அபிஷேக மண்டபம், இரத்தின சபை வாயில் உள்ளது. சபைக்கு எதிரில் நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்து தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. அம்பிகை நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். அம்பிகை கருவறையில் கோஷ்ட மூர்த்தங்கள் இல்லை. சந்நிதியில் சிற்பக் கலையழகு வாய்ந்த கல்தூண்கள் உள்ளன. இரத்தின சபையில் நடராசப் பெருமானின் ஊர்த்துவ தாண்டவ உற்சவத் திருமேனி தரிசிக்கத்தக்கது. சிவகாமி, காரைக்கால் அம்மையார் திருமேனிகள் அருகில் உள்ளன. இரத்தின சபையில் பெரிய ஸ்படிக லிங்கமும், சிறிய மரகத லிங்கமும் உள்ளன. இவற்றுக்கு நான்கு கால அபிஷேகம் நடைபெறுகிறது. இரத்தின சபையை வலம் வரும்போது, சாளரத்தில் சண்டேசுவரரின் உருவம் உள்ளது. இரத்தினச் சபையின் விமானம் செப்புத் தகடு வேயப்பட்டு ஐந்து கலசங்களுடன் விளங்குகிறது.

திருவாலங்காட்டுச் செப்பேடுகள் 

தமிழகத்தின் சரித்திரத்தின் முக்கியமான பகுதியை வெளிப்படுத்திய செப்பேடுகள் திருவாலங்காட்டில் கிடைத்தன. ஒரு பெரிய வளையத்தில் சேர்த்து சோழ முத்திரையுடன் தமிழிலும், வடமொழியிலும் பொறிக்கப்பட்ட சாசனங்களுடன் கிடைத்த அந்த 22 செப்பேடுகள், சோழ வம்ச சரித்திரத்தை நன்கு புலப்படச் செய்தன. இவை, சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கின்றன.

மாந்தீஸ்வரர்
 
இத்தலத்தின் வெளிப் பிராகாரத்தில் உள்ள மாந்தீஸ்வரர் சந்நிதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சனி பகவானின் இரண்டு மைந்தர்களில் ஒருவர் மாந்தி. ஒருமுறை, மாந்தி தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க திருவாலங்காடு திருத்தலம் வந்து ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, ஒரு மண்டலம் இறைவனை வழிபட்டு தனது தோஷம் நீங்கப்பெற்றார். மாந்தி வழிபட்ட சிவலிங்கம் மாந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது. 

ஆலயத்தில் மாந்தீஸ்வரருக்கு சிறப்புப் பரிகார பூஜைகள் நடைபெறுகின்றன. மாந்தீஸ்வரருக்கு பரிகார பூஜைகள் செய்வதன் மூலம், அஷ்டம சனி (8-ல் சனி), அர்த்தாஷ்டம சனி (4-ல் சனி) ஜன்ம சனி ஆகியவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். ஒருவரின் ஜாதகத்தில் 1, 2, 4, 8, 12 ஆகிய இடங்களில் மாந்தி இருந்தால் அது தோஷமாகக் கருதப்படுகிறது.

அத்தகைய தோஷம், இங்கு மாந்தீஸ்வரருக்கு பரிகார பூஜை செய்வதால் நீங்கும். மேலும், திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணமும் நடைபெறும். கடன் தொல்லை நீங்கி நிம்மதி ஏற்படும்.

ஆருத்ரா தரிசனம் மிக சிறப்பாக நடைபெறும் ஆலயங்களில் திருவாலங்காடு தலமும் ஒன்றாகும். சென்னைக்கு அருகிலுள்ள இத்தலத்தை நீங்களும் ஒருமுறை சென்று வழிபடுங்கள்.

திருவாலங்காடு - அப்பர் அருளிய தேவாரம் - பாடியவர் மதுரை பொன். முத்துக்குமரன்.

இத்தலத்தைப் பற்றிய திருப்புகழ் பாடல் பாடியவர் -  பாலசந்திரன். 

சுந்தரர் அருளிய தேவாரம் - பாடியவர்  கரூர் சாமிநாதன்.

 

]]>
சுந்தரர், திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர், வண்டார் குழலம்மை http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/17/w600X390/tiruvalangadu1.JPG http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/aug/18/திருமணத்தடை-சனி-கிரக-தோஷம்-நீக்கும்-வடாரண்யேஸ்வரர்-கோயில்-திருவாலங்காடு-2756923.html
2749128 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் புத்திரபாக்கியம் கிடைக்க, திருமணத் தடை நீங்க பதஞ்சலி மனோகரர் கோயில், திருவிளமர் என்.எஸ். நாராயணசாமி Friday, August 4, 2017 12:00 AM +0530  

இறைவன் பெயர்: பதஞ்சலி மனோகரர்
இறைவி பெயர்: யாழினும் மென்மொழியம்மை, மதுரபாஷினி

எப்படிப் போவது

திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில், திருவாரூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. விளமர் பேருந்து நிறுத்தத்துக்கு அருகிலேயே கோவில் உள்ளது. இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றுள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு பதஞ்சலி மனோகரர் திருக்கோயில்,
விளமர், விளமர் அஞ்சல்,
திருவாரூர் (வடக்கு),
திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610 002.

இவ்வாலயம் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

சிவபெருமானின் ஆடலை தினமும் கண்டு அவரது திருவடியிலேயே இருப்பவர் பதஞ்சலி முனிவர். அவர் தினமும் நடராஜப் பெருமானின் நடனத்தைக் கண்டபின்தான் உணவு உட்கொள்வார். இறைவனுக்கு தினமும் மரத்தில் ஏறிப் பூ பறிப்பதற்காக புலியின் கால்களை வேண்டி வரமாகப் பெற்றவர். வியாகர பாதர், இவரும் பதஞ்சலி முனிவரும் இறைவனின் அஜபா நடனத்தையும், ருத்ர தாண்டவத்தையும் என்றென்றும் காண வேண்டி வழிபட்டனர்.

மேலும், திருவடி தரிசனத்தை காண்பித்து அருள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இவர்கள் இருவருக்கும் இத்தலத்தில் சிவபெருமான் தனது திருப்பாதம் காட்டி நடனம் ஆடியருளினார். இந்த தரிசனத்தை விஷ்ணு, பிரம்மா, முசுகுந்த சக்கரவர்த்தி மற்றும் தேவாதி தேவர்கள் கண்டுகளித்தனர். சிவபெருமான் காட்டிய ருத்ரபாதத்துக்கு இன்றளவும் தினமும் பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனவே, இத்தலம் திருவடிக்ஷேத்திரம் என்றும், சிவபாதஸ்தலம் என்றும் போற்றப்படுகிறது.

ஒரு முகப்பு வாயிலுடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோயில் எதிரில் உள்ள தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. முகப்பு வாயிலின் இருபுறமும் விநாயகரும் முருகனும் வீற்றிருக்கின்றனர். உள்ளே நந்தி, பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். கோவில் முன் மண்டபத்தில் பதஞ்சலி முனிவரின் திருஉருவம் உள்ளது. வியாக்ரபாத முனிவர், சூரியன் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். அவர்களின் சந்நிதியும் இக்கோவிலில் உள்ளது.

இறைவன் கிழக்கு நோக்கி மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவரின் முன்பு தீப வழிபாடு நடக்கும்போது, அந்த ஒளி லிங்கத்தில் பிரதிபலித்து, லிங்கமானது தீபஜோதியாக தெரிவதைக் காணலாம். கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, துர்க்கை ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. இத்தலத்திலுள்ள ராஜதுர்க்கை, எட்டு கைகளுடன் சூலமும் கிளியும் தாங்கி சிம்ம வாகனத்துடன் காட்சி அளிக்கிறாள். ராகு, கேது, செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இவளை வழிபடுகின்றனர்.

பைரவருக்கு தனி சந்நிதி இருப்பது இக்கோவிலின் மற்றொரு சிறப்பம்சமாகும். பைரவரை தேய்பிறை, அஷ்டமி நாட்களில் வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும். பைரவர் இத்தலத்தில் நவகோள்களின் அதிபதியாக க்ஷேத்ரபாலகராக இருப்பதால், இங்கு நவகிரக சன்னதி கிடையாது. விநாயகர் கையில் மத்தக மணியுடன் அருள்பாலிக்கிறார். விஷ்ணுவின் தலையில் சிவனின் திருவடி இருப்பதும், எம சண்டிகேஸ்வரர் வித்தியாசமாக அமர்ந்திருப்பதும் இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.

புத்திரபாக்கியம் வேண்டுபவர்கள், திருமணத் தடை உள்ளவர்கள், கல்வியில் மேன்மையடைய விரும்புவர்கள், தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி, சிவனுக்கு அன்னம் சாத்தி வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தொழில் சிறக்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. சக்தி பீடங்களில் இத்தலம் வித்யாபீடமாக இருப்பதால், குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் முன்பு இங்குள்ள அம்பாளுக்கு அர்ச்சனை செய்து, பின்பு பள்ளிகளில் சேர்க்கும் நடைமுறை இங்கு உள்ளது.

வாய் பேச முடியாதவர்கள், திக்குவாய் உள்ளவர்கள், இறைவி மதுரபாஷினி அம்மனை வழிபாடு செய்தால் பலன் நிச்சயம். மேலும், புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை நாளில் முன்னோர்க்குத் தர்ப்பணம் செய்து, விளம்பல் பதஞ்சலி, மனோகரரை வழிபடுவது மிகச் சிறப்பாகக் கருதப்படுகிறது.

திருஞானசம்பந்தர், இத்தலத்து இறைவன் மேல் பாடியுள்ள இப்பதிகம்  3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

மத்தக மணிபெற மலர்வதோர் மதிபுரை நுதல்கரம்
ஒத்தக நகமணி மிளிர்வதோர் அரவினர் ஒளிகிளர்
அத்தக வடிதொழ அருள்பெறு கண்ணொடும் உமையவள்
வித்தகர் உறைவது விரிபொழில் வளநகர் விளமரே.  

பட்டில கியமுலை அரிவையர் உலகினில் இடுபலி
ஒட்டில கிணைமர வடியினர் உமையுறு வடிவினர்
சிட்டில கழகிய பொடியினர் விடைமிசை சேர்வதோர்
விட்டில கழகொளி பெயரவர் உறைவது விளமரே.  
 
அங்கதிர் ஒளியினர் அரையிடை மிளிர்வதோர் அரவொடு
செங்கதி ரெனநிற மனையதோர் செழுமணி மார்பினர்
சங்கதிர் பறைகுழல் முழவினொ டிசைதரு சரிதையர்
வெங்கதி ருறுமழு வுடையவ ரிடமெனில் விளமரே.  
 
மாடம தெனவளர் மதிலவை யெரிசெய்வர் விரவுசீர்ப்
பீடென வருமறை யுரைசெய்வர் பெரியபல் சரிதைகள்
பாடலர் ஆடிய சுடலையில் இடமுற நடம்நவில்
வேடம துடையவர் வியன்நக ரதுசொலில் விளமரே.
 
பண்டலை மழலைசெய் யாழென மொழியுமை பாகமாக்
கொண்டலை குரைகழ லடிதொழு மவர்வினை குறுகிலர்
விண்டலை யமரர்கள் துதிசெய அருள்புரி விறலினர்
வெண்டலை பலிகொளும் விமலர்தம் வளநகர் விளமரே.  

மனைகள்தோ றிடுபலி யதுகொள்வர் மதிபொதி சடையினர்
கனைகடல் அடுவிடம் அமுதுசெய் கறையணி மிடறினர்
முனைகெட வருமதில் எரிசெய்த அவர்கழல் பரவுவார்
வினைகெட அருள்புரி தொழிலினர் செழுநகர் விளமரே.  
 
நெறிகமழ் தருமுரை யுணர்வினர் புணர்வுறு மடவரல்
செறிகமழ் தருமுரு வுடையவர் படைபல பயில்பவர்
பொறிகமழ் தருபட அரவினர் விரவிய சடைமிசை
வெறிகமழ் தருமலர் அடைபவர் இடமெனில் விளமரே.

தெண்கடல் புடையணி நெடுமதில் இலங்கையர் தலைவனைப்
பண்பட வரைதனில் அடர்செய்த பைங்கழல் வடிவினர்
திண்கட லடைபுனல் திகழ்சடை புகுவதோர் சேர்வினார்
விண்கடல் விடமலி யடிகள்தம் வளநகர் விளமரே.

தொண்டசை யுறவரு துயருறு காலனை மாள்வுற
அண்டல்செய் திருவரை வெருவுற ஆரழ லாயினார்
கொண்டல்செய் தருதிரு மிடறின ரிடமெனில் அளியினம்
விண்டிசை யுறுமலர் நறுமது விரிபொழில் விளமரே.
 
ஒள்ளியர் தொழுதெழ வுலகினில் உரைசெயு மொழிபல
கொள்ளிய களவினர் குண்டிகை யவர்தவம் அறிகிலார்
பள்ளியை மெய்யெனக் கருதன்மின் பரிவொடு பேணுவீர்
வெள்ளிய பிறையணி சடையினர் வளநகர் விளமரே.  

வெந்தவெண் பொடியணி யடிகளை விளமருள் விகிர்தரைச்
சிந்தையுள் இடைபெற வுரைசெய்த தமிழிவை செழுவிய
அந்தணர் புகலியுள் அழகமர் அருமறை ஞானசம்
பந்தன மொழியிவை உரைசெயு மவர்வினை பறையுமே.  

இத்தலம் பற்றி சம்பந்தர் அருளிய தேவாரம் - பாடியவர்கள் சண்முக சிவவிஷ்ணு மற்றும் மோ.தமிழரசு

 

]]>
திருவிளமர், பதஞ்சலி , சிவபெருமான் http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/8/3/w600X390/DSCN7282.JPG http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/aug/04/புத்திரபாக்கியம்-கிடைக்க-திருமணத்-தடை-நீங்க-பதஞ்சலி-மனோகரர்-கோயில்-திருவிளமர்-2749128.html
2745632 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் ராகு தோஷம், திருமணத் தடை நீங்கும் தலம் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில், ஆற்றூர் மந்தாரம் என்.எஸ். நாராயணசாமி Friday, July 28, 2017 01:09 PM +0530  

இறைவன் பெயர்: சொர்ணபுரீஸ்வரர், மந்தாரவனேஸ்வரர்
இறைவி பெயர்: அவயாம்பிகை, கயற்கண்ணி (அஞ்சனாட்சி)

எப்படிப் போவது?

வைத்தீஸ்வரன்கோயில் - திருப்பனந்தாள் சாலையில் மணல்மேடு வந்து, அங்கிருந்து பந்தநல்லூர் சாலையில் திரும்பிச்சென்று கேசிங்கன் என்ற ஊரைத் தாண்டி வலதுபுறம் பிரியும் சாலையில் விசாரித்துச்சென்று ஆத்தூரை (ஆற்றூர்) அடையலாம். வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து வடமேற்கில் சுமார் 16 கி.மீ. தொலைவிலும், பந்தநல்லூரிலிருந்து வடக்கே சுமார் 7 கி.மீ. தொலைவிலும் ஆத்தூர் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில்,
ஆத்தூர்,
வழி மணல்மேடு,
மயிலாடுதுறை வட்டம்,
நாகப்பட்டிணம் மாவட்டம் – 609 204.

இவ்வாலயம் தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஆடி மாதம் 11-ம் தேதி ஜூலை 27-ம் தேதி, ராகு பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும், கேது பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சி ஆனார்கள். நலம் தரும் பரிகாரத் தலங்கள் தொடரில், நாம் ராகு - கேது தோஷங்களில் இருந்து விடுபட வழிபட வேண்டிய தலங்கள் என்று திருநாகேஸ்வரம், திருபாம்புரம், பாமணி போன்ற தலங்கள் பற்றி படித்துள்ளோம், இந்த வரிசையில், ராகு - கேது பெயர்ச்சியை அடுத்து, மற்றுமொரு ராகு தோஷ பரிகாரத் தலமான வக்கரை மந்தாரம் பற்றி தெரிந்துகொள்வோம்.

திருநாவுக்கரசர் அருளிய ஷேத்திரக்கோவை திருத்தாண்டகத்தில், வக்கரை மந்தாரம் என்று குறிப்பிடப்பட்டுள்ள இத்தலம், இன்றைய நாளில் ஆற்றூர், ஆத்தூர் என்று மக்கள் வழக்கில் கூறப்படுகிறது. மந்தாரம் ஒரு தேவார வைப்புத் தலம். தனிப்பதிகம் பெறாது, மற்றொரு தலப் பதிகத்தில் தலப்பெயர் இடம் பெற்றிருந்தால், அது வைப்புத் தலம் என்று போற்றப்படுகிறது.

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 6-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் அப்பர் திருப்புகலூரில் தங்கி இருந்தபோது அருளியதாகும்.

மண்ணிப் படிக்கரை வாழ்கொளிபுத்தூர்
வக்கரை மந்தாரம் வாரணாசி
வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி
விளமர் விராடபுரம் வேட்களத்தும்
பெண்ணை யருட்டுறைதண் பெண்ணாகடம்
பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூருங்
கண்ணை களர்காறை கழிப்பாலையுங்
கயிலாய நாதனையே காணலாமே.

பொழிப்புரை

மண்ணிப்படிக்கரை, வாழ்கொளிபுத்தூர், வக்கரை, மந்தாரம், வாரணாசி, வெண்ணி, விளத்தொட்டி, வேள்விக்குடி, விளமர், விராடபுரம், வேட்களம், பெண்ணையாற்றங் கரையில் உள்ள அருட்டுறை, பெண்ணாடகம், பிரம்பில், பெரும்புலியூர், பெருவேளூர், கண்ணை, களர், காறை, கழிப்பாலை, முதலிய இடங்களில் கயிலாயநாதனைக் காணலாம்.

சூரபத்மனை அழித்த பிறகு முருகப் பெருமான் பல சிவஸ்தலங்களுக்கு சென்று சிவ வழிபாடு செய்தார். ஆற்றூர் என்று இக்காலத்தில் அறியப்படும் இத்தலம் வந்தபோது, நீராட வேண்டி தன் வேலாயுதத்தை பூமியில் விடுத்தார். அது ஒரு நதியாக மாறிற்று. அந்த நதியில் நீராடி இத்தல இறைவனை வழிபாடு செய்தார். முருகப் பெருமானால் உண்டாக்கப்பட்ட சுப்பிரமணிய நதி, இக்காலத்தில் மண்ணியாறு என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்ணியாற்றின் கரையில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்துக்கு நந்திபுரம், நடனபுரம், மந்தாரவனம் என்ற பெயர்களும் அந்நாளில் இருந்துள்ளன.

கிழக்கு நோக்கிய இவ்வாலயம், இரண்டு பிராகாரங்களுடன் அமைந்துள்ளது. நந்தி மண்டபமும், பலிபீடமும் கோவிலுக்கு வெளியே உள்ளது. மூலவர் சொர்ணபுரீஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்புலிங்க உருவில் எழுந்தருளியுள்ளார். இங்கு அவயாம்பிகை, கயற்கண்ணி என்று இரண்டு அம்பாள் சந்நிதிகள் உள்ளன. இத்தலத்திலுள்ள அஷ்டபுஜ துர்க்கை சந்நிதியும், சொர்ணபைரவர் சந்நிதியும் தரிசிக்க வேண்டியவையாகும். ஆலயத்தின் தல விருட்சம் மந்தார மரம். தீர்த்தம் மண்டூக தீர்த்தம். இத்தலம் ஒரு காலத்தில் மந்தார வனமாக இருந்தது. மந்தார வனத்தில் எழுந்தருளியுள்ளதால் இத்தல இறைவனுக்கு மந்தாரவனேஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு.

இத்தலத்தில் அந்தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு கயற்கண்ணி என்ற பெயரில் ஒரு பெண் இருந்தாள். ஏழை அந்தணர் தன் பெண்ணுக்குத் திருமணம் செய்ய முடியாமல் தவித்து இத்தல இறைவனை வழிபாடு செய்தார். அப்போது இத்தல இறைவனே அந்தப் பெண்ணை ஆட்கொண்டார். இந்த தலம், இறைவன் கயற்கண்ணியை மணம் புரிந்த தலம் ஆதலால், கயற்கண்ணி அம்பிகையை வழிபட்டால் திருமணத் தடை, சுக்கிர தோஷம் ஆகியவை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.

மண்டூக தீர்த்தம்

கோவிலுக்கு வெளியே இவ்வாலயத்தின் சிறப்புமிக்க மண்டூக தீர்த்தம் உள்ளது. இத்தலத்திலுள்ள இக்குளத்தில் ஒரு தவளை வெகு நாட்களாக வசித்து வந்தது. ஒரு சமயம் பெருமழை பெய்ய, தவளை கரை ஓரத்தில் ஒதுங்கியது. பசியால் இரை தேடி வந்த பாம்பு ஒன்று இத்தவளையை விழுங்கியது. நெடுநாளாக இக்கோவில் குள தீர்த்தத்தில் வாசம் செய்து வந்ததற்கு இதுதான் பலனா என்று தவளை நினைத்து வருந்தியது. அம்பிகை அங்கு எழுந்தருளி தவளைக்கு பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசிக்க, பாம்பின் பிடியிலிருந்து தவளை விடுபட்டது. தீர்த்தமும் மண்டூக தீர்த்தம் என்று பெயர் பெற்றது. (மண்டூகம் என்றால் தவளை). இந்தத் தீர்த்தத்தில் நீராடி, இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்தால் மண்டூக தோஷம், காலசர்ப்ப தோஷம், ராகு தோஷம், ஜாதகத்தில் ராகு 1, 2, 5, 7, 8 மற்றும் 11-ம் இடங்களில் இருக்கும் தோஷம் ஆகியவை இத்தலத்தில் ராகு காலத்தில் வழிபட்டால் அந்த தோஷங்கள் நீங்கும்.

நந்தி வழிபட்டது

இத்தலத்தில் ஒரு முனிவர் புத்திர பாக்கியம் வேண்டி சிவபெருமானை வெகு நாட்களாக வழிபாடு செய்துவந்தார். சிவன் அருளால் நந்தியம்பெருமான் அந்த முனிவருக்கு மகனாக அவதரித்தார்.

முனிவர் தன் மகனுக்கு நந்தி என்று பெயர் சூட்டினார். நந்தி, சிவபெருமானை பூஜை செய்துவர, நந்திக்கு ஞானம், அறிவு ஆற்றல் ஆகிய வரங்களை இறைவன் அளித்து ஞானத்தை உபதேசித்தார். இந்த நந்தியை வழிபாடு செய்தால் அறிவு, ஞானம், புத்திர பாக்கியம், பதவி உயர்வு பெறலாம். இந்தப் புராண வரலாற்றை நினைவுபடுத்துவதுபோல, சிவபெருமானை நந்தி வழிபடும் கல் சிற்பம் இவ்வாலயத்தில் உள்ளது.

இக்கோவிலுள்ள அஷ்டபுஜ துர்க்கை கையில் பூவும், கிளியும் ஏந்தி வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறாள். இந்த துர்க்கையை வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் அபிஷேக அர்ச்சனை செய்தால் மனதில் நினைத்த காரியங்கள், திருமணம் ஆகாத ஆண், பெண் இருவருக்கும் விரைவில் திருமணம் கைகூடும்.

இத்தலத்திலுள்ள பைரவர் சொர்ணபைரவர் என்று அழைக்கப்படுகிறார். இந்த பைரவரை அஷ்டமி திதியன்று அபிஷேகம் செய்து, சிவப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால், கண் திருஷ்டி, பில்லி, சூனியம், நீதிமன்ற விவகாரங்கள் போன்றவை நீங்கும்.

சோழர் காலத்திய கலவெட்டுகள், இவ்வாலயத்தின் கருவறைச் சுற்றுச் சுவரில் காணப்படுகின்றன. தலபுராணத்தை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் பாடியுள்ளார்.

இத்தலம் பற்றி அப்பர் அருளிய பதிகம் - பாடியவர் மயிலாடுதுறை சிவகுமார்

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/28/w600X390/mantharam1.jpg http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/jul/28/ராகு-தோஷம்-திருமணத்-தடை-நீங்கும்-தலம்-சொர்ணபுரீஸ்வரர்-திருக்கோவில்-ஆற்றூர்-மந்தாரம்-2745632.html
2736782 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் திருமண பாக்கியம் - குழந்தைப்பேறு அருளும் கரவீரநாதர் கோவில், திருக்கரவீரம் என்.எஸ். நாராயணசாமி Monday, July 17, 2017 03:59 PM +0530  

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 91-வது தலமாக விளங்குவது திருக்கரவீரம். தேவாரம் பாடப்பெற்ற காலத்தில் கரவீரம் என்று பெயர் கொண்டிருந்த இத்தலம், தற்போது வடகண்டம் கரையபுரம் என்று வழங்கப்படுகிறது. இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.

இறைவன் பெயர்: கரவீரநாதர், பிரம்மபுரீஸ்வரர்

இறைவி பெயர்: பிரத்தியட்சமின்னம்மை

எப்படிப் போவது?

திருவாரூரில் இருந்து மேற்கே 10 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் வடகண்டம் என்ற ஊரின் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, கரையபுரம் செல்லும் வழி என்று கேட்டு அவ்வழியில் சென்றால் கோவிலை அடையலாம்.

கோவில் வரை வாகனங்கள் செல்லும். கோவில் வெட்டாற்றங்கரையில் அமைந்துள்ளது. அருகில் திருக்கண்ணமங்கையில் (திவ்யதேசம்) ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் கோவில் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு கரவீரநாதர் திருக்கோயில்,

கரையபுரம், மணக்கால் ஐயம்பேட்டை அஞ்சல்,

திருவாரூர் வட்டம்,

திருவாரூர் மாவட்டம் – 610 104.

இவ்வாலயம் தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலயத்தின் காப்பாளர் வீடு அருகில் இருப்பதால் எந்நேரமும் தரிசனம் செய்ய முடியும்.

கரவீரம் என்பது பொன்னிறப் பூக்களைத் தருகின்ற ஒருவகை மரத்தின் பெயர். பொன்னலரி என்றும் அதனைக் குறிப்பதுண்டு. ஒரு காலத்தில் பொன்னலரிக் காடாக இத்தலம் இருந்தது. பொன்னலரியைத் தலமரமாகக் கொண்டதால் இத்தலம் கரவீரம் என்று பெயர் பெற்றது.

இங்குள்ள இறைவன் கரவீரநாதர் என்றும் பெயர் பெற்றார். இத்தல இறைவன பிரம்ம தேவனால் பூஜிக்கப்பட்டவர் ஆதலால், இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற் பெயரும் உண்டு.

கௌதமர் பூசித்த இத்தலம், திருக்கண்ணமங்கை பெருமாள் கோயிலோடு இணைந்த கோயிலாகும். நான்கு புறமும் மதில்சுவருடன் ஒரு முகப்பு வாயிலுடன் ஆலயம் அமைந்துள்ளது. கோவிலுக்கு வெளியில் ஆலயத்தின் தீர்த்தமான அனவரததீர்த்தம் இருக்கிறது.

முகப்பு வாயில் கடந்தால் விசாலமான முற்றவெளியுடன் வெளிப் பிராகாரம் உள்ளது. நேரே பலிபீடம், அடுத்து நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. சுவாமி, அம்பாள் கோயில்களைச் சேர்த்த பெரிய வெளிப் பிராகாரத்தில் விநாயகர், முருகன், சூரியன், சந்திரன், சனீஸ்வரன், பைரவர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன.

நந்தி மண்டபத்தை அடுத்து ஒரு சிறிய கோபுரம். கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் நேரே கருவறையில் கிழக்கு நோக்கி இறைவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். மூலவர் கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அம்பாள் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் உள்ளது. இத்தகைய அமைப்புள்ள கோவில்கள் திருமணக் கோலம் என்று கூறுவார்கள்.

அம்பாள் சந்நிதிக்கு எதிரில் சூரிய பகவானின் சந்நிதியும் உள்ளது. இந்த ஆலயத்தில் அமாவாசை அன்று செய்யப்படும் ஹோமம் மிகவும் முக்கியமானதாகும். அமாவாசை சிறப்பு ஹோமத்தில் கலந்துகொண்டு இறைவனையும் இறைவியையும் வழிபட்டு வந்தால், திருமாங்கல்ய பலம் மற்றும் மழலைச் செல்வம் கிடைப்பது கண் கண்ட உண்மையாகும்

இக்கோவிலில் கெளதம முனிவருக்கு தனி சந்நிதி உள்ளது. அமாவாசை நாள்களில் கெளதம முனிவர் ஜீவசமாதியில் உள்ள தலவிருட்சத்துக்குப் பெண்கள் தண்ணீர் ஊற்றிவிட்டு, பின் பிரம்மபுரீஸ்வரரை வழிபாடு செய்கிறார்கள். இதனால், அடுத்த அமாவாசைக்குள் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை.

ஆலயத்தின் தலவிருட்சமான செவ்வரளி மரம், மேற்கு வெளிப் பிராகாரத்தில் இறைவன் சந்நிதி விமானத்துக்குப் பின்புறம் உள்ளது. இத்தலத்துக்கு வந்து தலவிருட்சமான செவ்வரளிக்கு 3 குடம் தண்ணீர் ஊற்றி, அம்பாளின் திருப்பாதத்தில் 3 மஞ்சள் கிழங்கு வைத்து வழிபட வேண்டும். பிறகு இந்த மஞ்சளை தண்ணீரில் கரைத்து, அந்த நீரில் நேய்வாய்ப்பட்ட குழந்தைகளை குளிப்பாட்டினால் நோய் குணமாகும்; குழந்தைகள் நோயின்றி வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

இத்தலத்தில் இறைவன் ஒரு கழுதைக்கும் காட்சி கொடுத்துள்ளார். இவ்வாலயத்தில் உள்ள சிவலிங்கத்தை ஒரு கழுதை பலகாலம் கடும் தவம் செய்து வந்தது. அது இறந்துவிடும் சமயம், அக்கழுதைக்கு இறைவன் காட்சி கொடுத்தார். இறைவனைக் கண்ட மகிழ்ச்சியில், கழுதை கிழக்கே பல காத தூரம் ஓடி கடற்கரையை அடைந்து அங்கிருந்து திரும்பி இறைவனை வணங்கியது.

இங்கிருந்து இறைவன் கழுதைக்கு காட்சி கொடுத்து அருள் செய்தார். ஆகையால், இன்றும் ஆலய வாயிலில் இருந்து கடற்கரை வரை நேர்க்கோட்டில் பல மைல் தூரத்துக்கு வீடுகளோ, கட்டடங்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலத்து இறைவன் மேல் சம்பந்தர் பாடியுள்ள இப்பதிகம் முதல் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. திருஞானசம்பந்தர் இத்தலம் வந்தபோது இருட்டிவிட்டதால், இரவு தங்கி மறுநாள் இறைவனை பாடியுள்ளார்.

சம்பந்தர் தான் பாடிய ஒவ்வொரு பாடலிலும் இப்பெருமானை வழிபட்டால் வினைகள் யாவும் நீங்கும் என பாடியுள்ளார். எனவே, பக்தர்கள் ஏதேனும் ஒரு இரவு இங்கு தங்கி மறுநாள் இறைவனை வழிபாடு செய்தால், எப்படிப்பட்ட கஷ்டமும் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

அரியும் நம்வினை யுள்ளன ஆசற

வரிகொள் மாமணி போல் கண்டம்

கரியவன் திகழும் கரவீரத்து எம்

பெரியவன் கழல் பேணவே.

 

தங்குமோ வினை தாழ்சடை மேலவன்

திங்களோடு உன் சூடிய

கங்கையாள் திகழும் கரவீரத்து எம்

சங்கரன் கழல் சாரவே.


ஏதம் வந்து அடையா இனி நல்லன

பூதம் பல்படை ஆக்கிய

காதலான் திகழும் கரவீரத்து எம்

நாதன் பாதம் நணுகவே.


பறையும் நம்வினை உள்ளன பாழ்பட

மறையும் மாமணி போல் கண்டம்

கறையவன் திகழும் கரவீரத்து எம்

இறையவன் கழல் ஏத்தவே.


பண்ணினார் மறை பாடலன் ஆடலன்

விண்ணினார் மதில் எய்தமுக்

கண்ணினான் உறையும் கரவீரத்தை

நண்ணுவார் வினை நாசமே.


நிழலின் ஆர்மதி சூடிய நீள்சடை

அழலினார் அனல் ஏந்திய

கழலினார் உறையும் கரவீரத்தைத்

தொழவல்லார்க்கு இல்லை துக்கமே.


வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன்

அண்டன் ஆர் அழல் போல் ஒளிர்

கண்டனார் உறையுப் கரவீரத்துத்

தொண்டர் மேல் துயர் தூரமே.


புனல் இலங்கையர்கோன் முடி பத்து இறச்

சின வல் ஆண்மை செகுத்தவன்

கனலவன் உறைகின்ற கரவீரம்

எனவல்லார்க்கு இடர் இல்லையே.


வெள்ளத் தாமரை யானொடு மாலுமாய்த்

தெள்ளத் தீத்திரள் ஆகிய

கள்ளத்தான் உறையும் கரவீரத்தை

உள்ளத் தான் வினை ஓயுமே.


செடிய அமண்ணொடு சீவரத்தார் அவர்

கொடிய வெவ்வுரை கொள்ளன்மின்

கடியவன் உறைகின்ற கரவீரத்து

அடியவர்க்கு இல்லை அல்லலே.


வீடிலான் விளங்கும் கரவீரத்து எம்

சேடன் மேல் கசிவால் தமிழ்

நாடு ஞானசம்பந்தன சொல் இவை

பாடுவார்க்கு இல்லை பாவமே.

இத்தலம் பற்றி சம்பந்தர் அருளிய தேவாரம் - பாடியவர் மயிலாடுதுறை சிவகுமார்

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/13/w600X390/DSCN7499.JPG http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/jul/14/திருமண-பாக்கியம்--குழந்தைப்பேறு-அருளும்-கரவீரநாதர்-கோவில்-திருக்கரவீரம்-2736782.html
2732828 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் திருமணத் தடை நீக்கும் சற்குண நாதேஸ்வரர் கோவில், திருக்கருவிலி கொட்டிட்டை என்.எஸ். நாராயணசாமி Friday, July 7, 2017 12:00 AM +0530 பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 63-வது தலமாக இருப்பது கருவிலிக்கொட்டிட்டை. இன்றைய நாளில் சற்குணேஸ்வரபுரம் என்று அறியப்படும் இத்தலத்தில், அம்பாள் சரவாங்கசுந்தரியாக தோன்றி சிவபெருமானை திருமணம் செய்துகொண்டதால், இத்தலம் ஒரு திருமணத் தடை நீக்கும் தலமாக விளங்குகிறது. இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்று உள்ளது.

இறைவன் பெயர்: சற்குண நாதேஸ்வரர்
இறைவி பெயர்: சர்வாங்க சுந்தரி

எப்படிப் போவது?
கும்பகோணத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் - நாச்சியார்கோவில் - எரவாஞ்சேரி - பூந்தோட்டம் சாலை வழியில் கூந்தலூர் அடைந்து, அங்கிருந்து வடக்கே அரிசிலாற்றுப் புதுப் பாலம் கடந்து, வடக்கே சுமார் 1 கி.மீ. சென்றால் அரசலாற்றின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தை அடையலாம்.

கும்பகோணத்திலிருந்து வடமட்டம் என்ற ஊர் வந்து, அங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவிலுள்ள பரவாக்கரை என்ற ஊரை அடைந்து, அங்கிருந்து முட்டையாற்றுப் பாலத்தைக் கடந்து சுமார் 2 கி.மீ. வந்தும் கருவிலி தலத்தை அடையலாம். திருவீழிமிழலை என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம், இங்கிருந்து கிழக்கில் 6 கி.மீ. தொலைவிலும், திருநல்லம் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் வடக்கே சுமார் 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

ஆலய முகவரி
அருள்மிகு சற்குண நாதேஸ்வரர் திருக்கோவில்
கருவிலி (சற்குணேஸ்வரபுரம்)
கூந்தலூர் அஞ்சல்
எரவாஞ்சேரி S.O.
தஞ்சாவூர் மாவட்டம் – 605 501.

இவ்வாலயம், தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோவில் அமைப்பு

ஸ்ரீ சர்வாங்கசுந்தரி சமேத சற்குணேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள இடம், தற்காலத்தில் சற்குணேஸ்வரபுரம் என்று அழைக்கப்படுகிறது.

தேவாரம் பாடப்பெற்ற காலத்தில் இத்தலம் கருவிலி என்று அழைக்கப்பட்டது. கோவிலின் பெயர் கொட்டிட்டை. அரசலாற்றங்கரையில் (காவிரியின் கிளை நதி) இத்தலம் அமைந்துள்ளது. ஒரு அலங்கார நுழைவாயில் நம்மை வரவேற்கிறது. நுழைவாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் ஒரு விசாலமான நடைபாதை உள்ளது. நடைபாதையின் முடிவில் நந்தி மண்டபமும் அதைத் தாண்டி கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரமும் உள்ளது.

கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால், இறைவன் கருவறை ஒரு முன் மண்டபத்துடன் அமைந்துள்ளது. வெளிப் பிராகாரத்தில் கணபதி, பாலசுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. கருவறை வெளிப்பிராகாரச் சுவர் மாடங்களில் கோஷ்டமூர்த்தங்களாக அமைந்துள்ள நர்த்தன விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, பைரவர் உருவங்கள் பழைமையும் கலைச்சிறப்பும் வாய்ந்தவை. கருவறை முன்மண்டபத்தில் நடராஜர், ஆஞ்சநேயர் ஆகியோரை தரிசிக்கலாம். கருவறையில் இறைவன் சற்குண நாதேஸ்வரர் என்ற பெயருடன் பெரிய லிங்க வடிவில் அருட்காட்சி தருகிறார்.

அம்பாள் கோயில் தனிக்கோயிலாக வெளிப் பிராகாரத்தில் வலதுபுறம் அமைந்துள்ளது. அம்பாள் சர்வாங்க சுந்தரி, பெயருக்கு ஏற்றார்போல் மிகுந்த அழகுடன் கிழக்கு நோக்கி 4 திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். ஈசனுக்கு தட்சன் மரியாதை தராமல் யாகம் ஒன்றை நடத்தினான். சிவனுக்கு அழைப்பு விடுத்து அவிர்பாகம் அளிக்கும்படி தாட்சாயிணி பலவாறு எடுத்துக்கூறியும், தட்சன் மறுத்துவிட்டு, தன் இஷ்டப்படியே யாகத்தை நடத்திக்கொண்டு போனான். கோபம் கொண்ட தாட்சாயிணி, உனது யாகம் அழியட்டும் என்று சாபமிட்டுவிட்டு, கொழுந்துவிட்டு எரியும் யாக குண்டத்தில் விழுந்து தன்னை மாய்த்துக்கொண்டாள்.

தாட்சாயிணியின் பிரிவைத் தாங்காத பரமன், ஆவேசமாக அந்த யாகம் நடக்கும் இடத்தை அடைந்தார். குண்டத்தில் இருந்த சதியின் உடலை எடுத்துத் தோளில் சுமந்துகொண்டு, பித்துப் பிடித்தவர்போல ஆடத் தொடங்கினார். அகில உலகமே அதிர்ந்தது. எதிர்பாராத இந்த ஆட்டத்தால் எல்லாமே தடுமாறின. தேவர்கள் நடுக்கத்தோடு கலங்கி செய்வதறியாது, இறுதியில் மகாவிஷ்ணுவை அணுகி, தங்கள் இன்னல்களை எடுத்துரைத்தனர். அவர்களது வேண்டுகோளை கேட்ட மகாவிஷ்ணு, தனது சக்கரமான சுதர்சனத்தை ஏவி சதியின் உடலைச் சிறிது சிறிதாகத் துண்டித்தார்.

சுதர்சனத்தால் துண்டிக்கப்பட்ட சதியின் அங்கங்கள் நம் பாரத தேசத்தில் 51 இடங்களில் வீழ்ந்து மகாசக்தி பீடங்கள் என்று பிரபலமாயின. சதி மறைந்துவிட்டதால், சிவனின் கோரதாண்டவம் நின்று, உன்மத்தம் பிடித்தவர் போல் தனியாக இருந்துவந்தார்.

தாட்சாயிணி உடலை விட்ட சதியோ, பர்வதராஜனின் புத்திரியாகப் பிறந்து பார்வதி எனப் பெயர் கொண்டாள். ஈசனின் தனிமைக் கோலத்தை அறிந்த பார்வதி, சர்வாலங்கார நாயகியாக, சர்வாங்க சுந்தரியாக அவர் முன் நின்றாள். அவ்வழகில் மனத்தைப் பறிகொடுத்த இறைவன் சுயநிலை அடைந்து அவள் கைத்தலம் பற்றி மணந்துகொண்டார் எனப் புராணங்கள் கூறுகின்றன.

ஈசனுடன் அம்பிகை இணைந்த தலமாதலால், திருமணத்தடை நீக்கும் பரிகாரத்தலமாக கருவிலிக்கொட்டிட்டை விளங்குகிறது. இவளைத் தரிசித்த இளம்பெண்களின் கல்யாணம் உடனே ஆகிவிடுகிறது என்றும், குழந்தை இல்லாதவர்க்குக் குழந்தை பிறக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

இக்கோவிலில் நவக்கிரங்களுக்கு தனி சந்நிதி இல்லை. இவ்வாலயத்தின் தீர்த்தம் எமதீர்த்தம். இது கோவிலுக்கு வெளியே உள்ளது. கங்கையைச் சடையில் கொண்ட ஈசனின் சிற்பம், குளத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. சற்குணன் என்னும் அரசன் பூசித்துப் பிறவிக்கடலைக் கடந்த தலமாதலால் சற்குணேஸ்வரபுரம் என்றும் இத்தலத்துக்குப் பெயர் உண்டு. கருவிலி என்ற பெயரே, இனி ஒரு தாயின் கருவிலே உதிக்க வேண்டாம் என்னும் மோட்சத்தைக் கொடுக்கும்படியான நிலையைக் குறிக்கும். இந்தக் கோவில் சற்குணேஸ்வரரையும், சர்வாங்க சுந்தரியையும் தரிசித்தால் அந்தப் பேறு கிடைக்கும் என்பதையே உணர்த்துகிறது. இந்திரனும் தேவர்களும் இத்தல இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். கருவிலி இறைவனை தரிசிப்பதற்கு நமக்குப் பிராப்தம் இருந்தால்தான் அவரின் தரிசனம் நமக்குக் கிட்டும் என்று தலபுராணம் கூறுகிறது.

இத்தலத்துக்கான திருநாவுக்கரசர் பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

மட்டிட்ட குழலார் சுழலில் வலைப்
பட்டிட்டு மயங்கிப் பரியாது நீர்
கட்டிட்ட வினை போகக் கருவிலிக்
கொட்டிட்டை உறை வான்கழல் கூடுமே.

ஞாலம் மல்கு மனிதர்காள் நாடொறும்
ஏல மாமல ரோடிலை கொண்டுநீர்
காலனார் வரு தன்முன் கருவிலிக்
கோல வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.

பங்க மாயின பேசப் பறைந்துநீர்
மங்கு மாநினை யாதே மலர்கொடு
கங்கை சேர்சடை யான்றன் கருவிலிக்
கொங்கு வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.

வாடி நீர் வருந்தாதே மனிதர்காள்
வேடனாய் விசயற்கு அருள் செய்தவெண்
காடனார் உறைகின்ற கருவிலிக்
கோடு நீள்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.

உய்யு மாறிது கேண்மின் உலகத்தீர்
பைகொள் பாம்பரையான் படையார் மழுக்
கையினான் உறைகின்ற கருவிலிக்
கொய்கொள் பூம்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.

ஆற்றவும் அவலத்து அழுந்தாது நீர்
தோற்றுந் தீயொடு நீர்நிலந் தூவெளி
காற்றுமாகி நின்றான் தன் கருவிலிக்
கூற்றங் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்மினே.

நில்லா வாழ்வு நிலைபெறும் என்று எண்ணிப்
பொல்லா வாறு செயப்புரி யாதுநீர்
கல்லா ரும்மதில் சூழ்தண் கருவிலிக்
கொல்லே றூர்பவன் கொட்டிட்டை சேர்மினே.

பிணித்த நோய்ப்பிற விப்பிரி வெய்துமா
றுணர்த்த லாமிது கேண்மின் உருத்திர
கணத்தினார் தொழுது ஏத்தும் கருவிலிக்
குணத்தினான் உறை கொட்டிட்டை சேர்மினே.

நம்பு வீரிது கேண்மின்கள் நாடொறும்
எம்பிரான் என்று இமையவர் ஏத்துமே
கம்பனார் உறைகின்ற கருவிலிக்
கொம்ப னார்பயில் கொட்டிட்டை சேர்மினே.

பாரு ளீரிது கேண்மின் பருவரை
பேரு மாறெடுத் தானை யடர்த்தவன்
கார்கொள் நீர்வயல் சூழ்தண் கருவிலிக்
கூர்கொள் வேலினன் கொட்டிட்டை சேர்மினே.

இத்தலம் பற்றி அப்பர் அருளிய பதிகம் - பாடியவர் இரா.குமரகுருபரன் ஓதுவார்

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/7/6/w600X390/karuvili9.JPG http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/jul/07/திருமணத்-தடை-நீக்கும்-சற்குண-நாதேஸ்வரர்-கோவில்-திருக்கருவிலி-கொட்டிட்டை-2732828.html
2729015 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் திருமண பிரார்த்தனைத் தலம் மணவாளேஸ்வரர் கோவில், திருவேள்விக்குடி என்.எஸ். நாராயணசாமி Friday, June 30, 2017 10:39 AM +0530 பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 23-வது தலமாக இருப்பது திருவேள்விக்குடி. சிவன் - பார்வதி திருமணத்துக்கான வேள்வி வளர்த்து யாகம் முதலிய ஏற்பாடுகள் நடைபெற்ற தலமாதலால் திருவேள்விக்குடி என்ற பெயர் ஏற்பட்டது. திருமணத் தடை நீக்கும் ஒரு பிரார்த்தனைத் தலமாக திருவேள்விக்குடி விளங்குகிறது.

இறைவன் பெயர்: மணவாளேஸ்வரர், கல்யாணசுந்தரேஸ்வரர்
இறைவி பெயர்: பரிமளசுகந்த நாயகி

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும், சுந்தரர் பதிகம் ஒன்றும் உள்ளன. இந்த இரண்டு பதிகங்களும் திருத்துருத்தி, திருவேள்விக்குடி ஆகிய இரண்டு சிவஸ்தலத்துக்கும் பொதுவான பதிகங்களாக இருக்கின்றன.

எப்படிப் போவது?

மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள குத்தாலத்தில் இருந்து வடகிழக்கே 3 கி.மீ. தொலைவில் திருவேள்விக்குடி சிவஸ்தலம் இருக்கிறது. குத்தாலத்தில் இருந்து திருவேள்விக்குடி செல்ல ஆட்டோ, வாடகைக் கார் வசதிகள் உண்டு. மயிலாடுதுறையில் இருந்து மகாராஜபுரம் செல்லும் நகரப் பேருந்துகள் இத்தலம் வழியாகச் செல்கின்றன.

ஆலய முகவரி
அருள்மிகு மணவாளேஸ்வரர் திருக்கோவில்,
திருவேள்விக்குடி,
குத்தாலம் அஞ்சல், குத்தாலம்,
மயிலாடுதுறை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 609 801.

ஆலய தொடர்புக்கு - தொலைபேசி எண்: 04364 - 235462, கைபேசி: 9942239089.

இவ்வாலயம் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு 
ஒருமுறை சிவனிடம் உமாதேவி சற்று அலட்சியமாக நடக்க, அதனால் சிவபெருமான் சினங்கொண்டு உமாதேவியாரை பூவுலகில் பசுவாகி வாழ கட்டளையிட்டார். பசு உருக்கொண்ட உமாதேவி தன் செயலை நினைத்து வருந்தி சிவனிடம் சாப விமோசனம் கேட்க, தக்க சமயம் வரும்போது தோன்றி மணம் செய்துகொள்வேன் என்று வரமளித்தார். உமாதேவியுடன் திருமகள், கலைமகள், இந்திராணி ஆகியோரும் பசு உருக்கொண்டு பூவுலகில் உலவி வந்தனர். திருமால் பசு மேய்ப்பவராக உருவெடுத்து அப்பசுக்களை பராமரித்து வந்தார். அம்பிகை உமாதேவி பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்ற சிவபெருமான், அம்பிகைக்கு சுய உருவம் கொடுத்தருளினார்.

சுய உருவம் பெற்ற அம்பிகை, ஈசனை நினைத்து 16 திங்கள்கிழமை விரதம் இருந்து மணலால் லிங்கம் செய்து பூஜை செய்து வர, 17-வது திங்கள்கிழமை சிவபெருமான் தோன்றி உமாதேவியை திருமணம் செய்துகொண்டார் என்று தல புராணம் கூறுகிறது. பார்வதி - சிவன் கல்யாணம் நடப்பதற்கு முன் செய்ய வேண்டிய திருமண சடங்குகள், கங்கண தாரணம், யாகம் வளர்த்து செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள் முதலியவை இத்தலத்தில்தான் நடைபெற்றன. பிரம்மா தானே முன் நின்று திருமணத்துக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். 

அரசகுமாரன் ஒருவனுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட பின் பெண்ணின் பெற்றோர்கள் இறந்துவிட, அவளின் உறவினர்கள் அரசகுமாரனுக்கு பெண் தர மறுத்து இத்திருமணத்தை நிறுத்திவிட்டனர். அரசகுமாரன் எவ்வளவோ வேண்டியும் உறவினர்கள் சம்மதிக்கவில்லை. அரசகுமாரன் இத்தலம் வந்தான். நின்றுபோன தன் திருமணம் நடக்க வேண்டும் என்று இத்தல இறைவனை வேண்டினான். இறைவன் ஒரு பூதத்தை அனுப்பி அப்பெண்ணைக் கொண்டுவரச் செய்து அரசகுமாரனுக்கும் அப்பெண்ணுக்கும் திருமணம் செய்துவைத்தார் என்று தல வரலாறு கூறுகிறது.

நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் தடை ஏற்பட்டவர்கள் இத்தலம் வந்து இறைவன் மணவாளேஸ்வரரை வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும். இத்தலத்தில் சிவபெருமான் திருமணக் கோலத்தில் கல்யாணசுந்தரராக காட்சி அளிக்கிறார்.

கோவில் அமைப்பு 
இங்குள்ள கோவில் மூன்று நிலையுடன் கூடிய கிழக்கு நோக்கிய ராஜகோபுரமும், இரண்டு பிராகாரங்களும் உடையதாகத் திகழ்கிறது. கருவறைக்கு முன்னே அர்த்தமண்டம், மகாமண்டபம் உள்ளன. இறைவன் கருவறை கோஷ்டமூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர், சந்திரசேகரர் ஆகியோர் உள்ளனர். இத்தலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரர் சிலாஉருவில் அம்பாள் வலதுபுறமும், இறைவன் இடதுபுறமும் உள்ளதைக் காணலாம். அர்த்தமண்டபத்தில் நடராஜர் மற்றும் விநாயகர் திருஉருவங்கள் இருக்கின்றன. இத்தலத்து இறைவன் கல்யாண சுந்தரேஸ்வரர் என்றும் இறைவி பரிமள சுகந்தநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். அகத்தியர், வாதாபியைக் கொன்றதால் அவருக்கு ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்தான் நீங்கியது. அகத்தியருக்கும் இத்தலத்தில் அர்த்தமண்டபத்தில் தனி சந்நிதி இருக்கிறது. அம்பாள் பரிமளசுகந்த நாயகியின் சந்நிதி, முதல் பிராகாரத்தில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. செம்பியன் மாதேவி, ராஜராஜ சோழன், பராக்கிரம சோழன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுகள் இக்கோவிலில் உள்ளன. இத் திருக்கோயிலுக்கு கருங்கல் திருப்பணி செய்தவர் உத்தம சோழனது தாயாராகிய செம்பியன் மாதேவி ஆவார்.

ஆலயத்தின் தீர்த்தமான கெளதுகாபந்தன தீர்த்தம், ஆலய முகப்பு வாயிலுக்கு எதிரே உள்ளது. நீண்ட நாட்கள் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து கெளதுகாபந்தன தீர்த்தத்தில் நீராடி மணவாளேஸ்வரர் மற்றும் பரிமளசுகந்த நாயகியை வழிபட்டால் திருமணம் நடைபெறும் என்பது இத்தலத்தின் சிறப்பாகும்.

இத்தலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள திருமணஞ்சேரி என்ற தலத்தில்தான் சிவபெருமான் - உமாதேவி திருமணம் நடைபெற்றது.

இத்தல பதிகங்கள் இரண்டும், திருத்தருத்தி தலத்தோடு இணைந்து பாடப்பெற்றுள்ளன. இத்தல இறைவன் திருத்துருத்தியில் பகல் காலத்திலும், திருவேள்விக்குடியில் இரவிலும் வீற்றிருந்து அருள்பவர் என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார்.

இத்தலத்துக்கான சம்பந்தர் பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

1. ஓங்கிமே லுழிதரு மொலிபுனற் கங்கையை யொருசடைமேல்
தாங்கினா ரிடுபலி தலைகல னாக்கொண்ட தம்மடிகள்
பாங்கினா லுமையொடு பகலிடம் புகலிடம் பைம்பொழில்சூழ்
வீங்குநீர்த் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே.

2. தூறுசேர் சுடலையிற் சுடரெரி யாடுவர் துளங்கொளிசேர்
நீறுசாந் தெனவுகந் தணிவர்வெண் பிறைபுல்கு சடைமுடியார்
நாறுசாந் திளமுலை யரிவையோ டொருபக லமர்ந்தபிரான்
வீறுசேர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே.

3. மழைவள ரிளமதி மலரொடு தலைபுல்கு வார்சடைமேல்
கழைவளர் புனல்புகக் கண்டவெங் கண்ணுதற் கபாலியார்தாம்
இழைவளர் துகிலல்கு லரிவையோ டொருபக லமர்ந்தபிரான்
விழைவளர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே.

4. கரும்பன வரிசிலைப் பெருந்தகைக் காமனைக் கவினழித்த
சுரும்பொடு தேன்மல்கு தூமலர்க் கொன்றையஞ் சுடர்ச்சடையார்
அரும்பன வனமுலை யரிவையொ டொருபக லமர்ந்தபிரான்
விரும்பிடம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே

5. வளங்கிளர் மதியமும் பொன்மலர்க் கொன்றையும் வாளரவும்
களங்கொளச் சடையிடை வைத்தஎங் கண்ணுதற் கபாலியார்தாம்
துளங்குநூன் மார்பின ரரிவையொ டொருபக லமர்ந்தபிரான்
விளங்குநீர்த் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே

6. பொறியுலா மடுபுலி யுரிவையர் வரியராப் பூண்டிலங்கும்
நெறியுலாம் பலிகொளு நீர்மையர் சீர்மையை நினைப்பரியார்
மறியுலாங் கையினர் மங்கையொ டொருபக லமர்ந்தபிரான்
வெறியுலாந் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே.

7. புரிதரு சடையினர் புலியுரி யரையினர் பொடியணிந்து
திரிதரு மியல்பினர் திரிபுர மூன்றையுந் தீவளைத்தார்
வரிதரு வனமுலை மங்கையொ டொருபக லமர்ந்தபிரான்
விரிதரு துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே.

8. நீண்டிலங் கவிரொளி நெடுமுடி யரக்கனிந் நீள்வரையைக்
கீண்டிடந் திடுவனென் றெழுந்தவ னாள்வினை கீழ்ப்படுத்தார் 
பூண்டநூன் மார்பின ரரிவையொ டொருபக லமர்ந்தபிரான்
வேண்டிடந் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே.

9. கரைகட லரவணைக் கடவுளுந் தாமரை நான்முகனும்
குரைகழ லடிதொழக் கூரெரி யெனநிறங் கொண்டபிரான்
வரைகெழு மகளொடும் பகலிடம் புகலிடம் வண்பொழில்சூழ்
விரைகமழ் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே.

10. அயமுக வெயினிலை யமணருங் குண்டருஞ் சாக்கியரும்
நயமுக வுரையினர் நகுவன சரிதைகள் செய்துழல்வார்
கயலன வரிநெடுங் கண்ணியொ டொருபக லமர்ந்தபிரான்
வியனகர்த் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே.

11. விண் உலாம் விரிபொழில் விரைமணல் துருத்தி வேள்விக்குடியும்
ஒண் உலாம் மொலிகழ லாடுவா ரரிவையொ டுறைபதியை
நண் உலாம் புகலியு ளருமறை ஞானசம்பந்தன் சொன்ன
பண் உலாம் அருந்தமிழ் பாடுவார் ஆடுவார் பழியிலரே.

இத்தலம் பற்றி சம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் திருமதி வசந்தி

இத்தலம் பற்றி சுந்தரர் அருளிய பதிகம் - பாடியவர் மதுரை முத்துக்குமரன்


 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/29/w600X390/velvikkudi1.JPG http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/jun/30/திருமண-பிரார்த்தனைத்-தலம்-மணவாளேஸ்வரர்-கோவில்-திருவேள்விக்குடி-2729015.html
2721174 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் நோய்கள் தீர்த்து, ஆயுள் நீட்டிக்கும் மேகநாத சுவாமி கோவில், திருமீயச்சூர் என்.எஸ். நாராயணசாமி Wednesday, June 21, 2017 04:33 PM +0530
இறைவன் பெயர்: மேகநாதசுவாமி, முயற்சி நாதேஸ்வரர்
இறைவி பெயர்: லலிதாம்பிகை, சௌந்தரநாயகி

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றுள்ளது.

எப்படிப் போவது?

மயிலாடுதுறை - திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 2 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை - திருவாரூர் ரயில் மார்க்கத்தில் உள்ள பேரளம் ரயில் நிலயத்தில் இருந்து கோவில் 1 கி.மீ. தொலைவு. மேகநாதர் கோவிலின் உள்ளேயே திருமீயச்சூர் இளங்கோவில் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது.

ஆலய முகவரி

அருள்மிகு மேகநாதர் திருக்கோயில்,
திருமீயச்சூர், திருமீயச்சூர் அஞ்சல்,
வழி - பேரளம், நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 609 405.

இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.45 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தமிழகத்தில் கோச்செங்கட் சோழன், யானை ஏற முடியாத வகையில் 70 மாடக்கோயில்கள் கட்டி, சோழர் பரம்பரைக்குப் பெருமை சேர்த்தவன். காவிரிக் கரையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிலத்துக்கு அருகில் உள்ள பேரளத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள திருமீயச்சூர் கோயிலும் அவற்றில் ஒன்று. தொன்மை வாய்ந்த திருக்கோயில், திருமீயச்சூர் இளங்கோயில் என  இரண்டு கோயில்கள் இத்திருக்கோயிலுக்குள்ளேயே உள்ளது மற்றொரு சிறப்பு. 
 

சோழர் காலக் கற்கோயில்களில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகளின் அழகு இங்கு சிறப்பாக அமைந்திருக்கக் காணலாம். திருமீயச்சூர் கோயிலின் அழகுக்கு அழகு சேர்ப்பது இக்கோயிலின் விமான அமைப்பின் நூதன வடிவம். யானையின் பின்புறம் போன்ற தோற்றத்தில் அமைந்துள்ள கஜப்ரஷ்ட விமானம், மூன்று கலசங்களுடன் காணப்படுகிறது. கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடனும், இரண்டாவது கோபுரம் மூன்று நிலைகளுடனும் உள்ளது. இரண்டு பிராகாரங்கள் உள்ளன. கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கம் லலிதாம்பிகை சன்னதி உள்ளது. மகாமண்டபத்தில் ரத விநாயகர், உள்பிராகாரத்தில் நாகர், சேக்கிழார், நால்வர், சப்தமாதர்கள் பூஜித்த லிங்கங்கள், அக்னி, எமன், இந்திரன் பூஜித்த லிங்கங்கள் உள்ளன.
 

திருமீயச்சூர் கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் மேகநாதர், சுயம்பு லிங்க உருவில் காட்சி தருகிறார். இறைவன் வீற்றிருக்கும் கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி அமைந்துள்ள ஏகப்பட்ட மண்டபங்களும், துவார பாலகர்களாகச் செதுக்கப்பட்டுள்ள கணபதி சிலைகளும், கல் தூண்களும் சோழர் காலச் சிற்பக் கலை அழகுக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. கோயிலின் உள்பிராகாரத்தை விட்டு வெளியே வந்தால், வெளிப் பிராகாரத்தில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் லலிதாம்பிகை கோயிலைக் காணலாம். இவளுக்கு சௌந்தரநாயகி என்ற திருநாமமும் உள்ளது. இவள் ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அமர்ந்துள்ளார். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. உலகிலேயே இது போன்ற கலை அழகு மிக்க இறைவி உருவை வேறெந்த கோயிலிலும் காண முடியாது. அமர்ந்த கோலத்தில் சாந்தசொரூபியாகக் காட்சி அளிக்கும் அம்பாளின் முன் நின்றால், நமது கவலைகள் எல்லாம் பறந்து போகும்.
 

திருமீயச்சூர், ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் தோன்றிய திருத்தலம். இங்குதான் ஸ்ரீ ஹயக்ரீவர், அகத்திய முனிவருக்கு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்தார் என்று கூறப்படுகிறது.. அகத்தியரும் ஒரு பௌர்ணமி நாளன்று ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தினால் திருமீயச்சூர் லலிதாம்பிகையை வழிபட்டதுடன், ஸ்ரீலலிதா நவரத்தின மாலை என்ற பாடலையும் தமிழில் இயற்றி அம்பிகைக்கு அர்ப்பணித்தார். இத்தலத்துக்கு வந்து, லலிதா சகஸ்ரநாமத்தையும், லலிதா நவரத்னமாலையையும் படிப்பவர்களுக்கு, அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும். 

தலத்தின் சிறப்பு 

சிவபெருமான் சாபத்தால் மேனி கருகிப்போன சூரியன், சாப விமோசனம் பெற திருமீயச்சூரில் 7 மாத காலம் கடுந்தவம் புரிந்தும் மேனி நிறம் மாறாததால், வாய்விட்டு அலறி இறைவனை அழைக்க இறைவனோடு தனித்திருந்த பார்வதி, இக்கூக்குரலால் தம்முடைய ஏகாந்தத்துக்குப் பங்கம் விளைவித்த சூரியனுக்குச் சாபம் அளிக்க நினைத்தாள். முன்னரே சாபத்தால் வருந்திக்கொண்டிருக்கும் சூரியனை மேலும் வருத்த வேண்டாம் என்றும் அமைதி கொள்ளுமாறும் இறைவன் கூற, பார்வதி சாந்தநாயகி ஆனாள். இறைவன் வேண்டிக்கொண்டதற்கு இணங்க, சாந்தநாயகியான அன்னையின் வாயிலிருந்து வெளிப்பட்ட ‘வசினீ’ என்ற வாக்தேவதைகள் வாழ்த்திப் பாடிய வாழ்த்துரைகளான ஆயிரம் திருநாமங்கள்தாம் லலிதா சஹஸ்ரநாமம் என்ற பெயர் பெற்றன. 

இச்சம்பவத்தைச் சித்தரிக்கும்விதமாக, கோவில் விமானத்தின் கீழ் தெற்கில் ஷேத்திரபுராணேச்வரர், பார்வதியின் முகவாயைப் பிடித்துச் சாந்தநாயகியாக இருக்கச் சொல்லி வேண்டுவது போன்ற வடிவில் காணப்படும் சிற்ப அழகை வேறு எந்தக் கோயிலிலும் காண்பது அரிது. இந்தச் சிற்பத்தை ஒரு பக்கத்தில் இருந்து பார்த்தால் அம்பாள் கோபமுடன் இருப்பதுபோலத் தோன்றும். இதே சிற்பத்தை மறுபக்கம் சென்று பார்த்தால், அம்பாள் சாந்தசொரூபியாக நாணத்துடன் காணப்படுவாள். நேரில் சென்று பார்த்து ரசிக்க வேண்டிய சிற்பம் இதுவாகும். கருவறைச் சுற்றில் கோஷ்டத்தில் உள்ள துர்க்கை ஒரு சிறப்பு மூர்த்தம். சாந்தமான முகத்தில் புன்சிரிப்பு தவழ காட்சி அளிக்கும் துர்க்கை, தனது இடது கரத்தில் சுகப்பிரம்மமான கிளையை வைத்துள்ளார். இந்த துர்க்கையிடம் பக்தர்கள் தங்கள் குறைகளைக் கூறினால், அவர் தனது கிளியை அம்பாளிடம் தூது அனுப்பி நிறைவேற்றி வைப்பார் என்பது இங்கு வரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

ஒவ்வொரு வருஷமும் சித்திரை மாதம் 21 முதல் 27-ம் தேதி வரை, உதய காலத்தில் மூலவர் மேகநாதரை சூரியன் சிறப்பாகப் பூஜிக்கின்றான் என்று கூறப்படுகிறது. அந்த 7 நாட்களிலும் சூரியனது கிரணங்கள் கருவறையிலுள்ள லிங்கத்தின் மீது விழுவதை இன்றளவும் காணலாம். 

இங்குள்ள லிங்கத்தை எமன் 1008 சங்காபிஷேகம் செய்து வழிபட்டு பல நன்மைகள் அடைந்தான். எனவே, தீராப் பிணியால் துன்பப்படுபவர் இங்குள்ள இறைவனை 1008 சங்காபிஷேகம் செய்து வழிபட்டால், எமன் அருள் பெற்று, பிணி நீங்கி நலம் பெறுவர் என்று நம்பப்படுகிறது. 

கருத்து வேற்றுமையாலும், இதர பிரச்னைகளாலும் பிரிந்திருக்கும் தம்பதியினருக்கும், கொடிய நோய்கள், கிரக தோஷங்களால் ஆயுள் குறைவு ஆகியவற்றுக்கும் இந்தத் தலம் பரிகாரத் தலமாகக் கூறப்படுகிறது. இங்கு பிரண்டை சாதத்தை தாமரை இலையில் வைத்து சிவபெருமானுக்குப் படைத்த பின், நோய்க்குப் பரிகாரமாக உண்பர். ஆயுஷ்ய ஹோமமும், மிருத்யுஞ்சய ஹோமமும் இங்கு செய்வது சிறப்பு. பிரண்டை அன்னத்தை தாமரை இலையில் சுவாமிக்கு அர்ப்பணம் செய்து, அன்னதானம் செய்தால் நீண்ட ஆயுளும், சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.
 

இத்தலத்தில் கோஷ்டத்திலுள்ள கல்யாண சுந்தரேஸ்வரரை, மணமாகாத பெண்கள் பிரார்த்தனை செய்து, மாலை சாற்றி வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும்.

1999-ம் வருடம் ஒரு பக்தையின் கனவில் அம்பாள் தங்கக்கொலுசு கேட்டதால், அவர் திருமீயச்சூர் ஆலய அர்ச்சகர்களிடம் தொடர்புகொண்டு கேட்கையில், அம்பிகையின் சிலாரூபத்தில் கொலுசு அணிவிக்கும் அமைப்பு இல்லை எனத் தெரிவித்தனர். அந்த பக்தை மீண்டும் வலியுறுத்திக் கேட்கையில் கவனத்துடன் தேடிப் பார்த்தனர். ஆண்டுக்கணக்கில் அபிஷேகம் செய்ததால், கொலுசு அணிவிக்கக்கூடிய துவாரத்தை அபிஷேகப் பொருட்கள் அடைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் அம்பிகைக்கு தங்கக்கொலுசு அணிவிக்கப்பட்டது.
 

மேகநாத சுவாமி கருவறைக்கு வடக்கில் மீயச்சூர் இளங்கோயில் என்ற மற்றொரு கோவிலும் உள்ளது. இங்கு இறைவன் சகலபுவனேஸ்வரர்.என்று பெயரிலும், இறைவி மேகலாம்பிகை என்ற பெயரிலும் அருள்பாலிக்கின்றனர். காளி வழிபட்ட சிறப்பை இந்த இளங்கோவில் பெற்றுள்ளது. மீயச்சூர் இளங்கோயில் இறைவன் மேல் அப்பர் பதிகம் பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தர் பாடியருளியுள்ள மீயச்சூர் தலத்துக்கான இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

1. காயச் செவ்விக் காமற் காய்ந்து கங்கையைப் 
பாயப் படர்புன் சடையில் பதித்த பரமேட்டி 
மாயச் சூர் அன்று அறுத்த மைந்தன் தாதை தன் 
மீயச்சூரைத் தொழுது வினையை வீட்டுமே.

2. பூ ஆர் சடையின் முடிமேல் புனலர் அனல்கொள்வர் 
நா ஆர் மறையர் பிறையர் நறவெண் தலையேந்தி 
ஏ ஆர் மலையே சிலையாக் கழி அம்பு எரி வாங்கி 
மேவார் புரமூன்று எரித்தார் மீயச்சூராரே. 

3. பொன் நேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான் 
மின் நேர் சடைகள் உடையான் மீயச்சூரானைத் 
தன் நேர் பிறர் இல்லானைத் தலையால் வணங்குவார் 
அந் நேர் இமையோர் உலகம் எய்தல் அரிது அன்றே. 

4. வேக மத நல் யானை வெருவ உரிபோர்த்துப் 
பாகம் உமையோடு ஆகப் படிதம்பல பாட 
நாகம் அரைமேல் அசைத்து நடமாடிய நம்பன் 
மேகம் உரிஞ்சும் பொழில்சூழ் மீயச்சூரானே. 

5. விடையார் கொடியார் சடைமேல் விளங்கும் பிறைவேடம் 
படையார் பூதஞ் சூழப் பாடல் ஆடலார் 
பெடையார் வரிவண்டு அணையும் பிணைசேர் கொன்றையார் 
விடையார் நடையொன்று உடையார் மீயச்சூராரே. 

6. குளிரும் சடைகொள் முடிமேல் கோலம் ஆர் கொன்றை 
ஒளிரும் பிறையொன்று உடையான் ஒருவன் கைகோடி 
நளிரும் மணிசூழ் மாலை நட்டம் நவில் நம்பன் 
மிளிரும் மரவம் உடையான் மீயச்சூரானே. 

7. நீல வடிவர் மிடறு நெடியர் நிகர் இல்லார் 
கோல வடிவு தமது அம் கொள்கை அறிவு ஒண்ணார் 
காலர் கழலர் கரியின் உரியர் மழுவாளர் 
மேலர் மதியர் விதியர் மீயச்சூராரே. 

8. புலியின் உரி தோல் ஆடை பூசும் பொடி நீற்றர் 
ஒலிகொள் புனலோர் சடைமேல் கரந்தார் உமை அஞ்ச 
வலிய திரள்தோள் வன்கண் அரக்கர் கோன் தன்னை 
மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச்சூராரே. 

9. காதில் மிளிரும் குழையர் கரிய கண்டத்தார் 
போதிலவனும் மாலும் தொழப் பொங்கு எரி ஆனார் 
கோதி வரிவண்ட் அறை பூம் பொய்கைப் புனல் மூழ்கி 
மேதி படியும் வயல்சூழ் மீயச்சூராரே. 

10. கண்டார் நாணும் படியார் கலிங்கம் முடை பட்டைக் 
கொண்டார் சொல்லைக் குறுகார் உயர்ந்த கொள்கையார் 
பெண்டான் பாகம் உடையார் பெரிய வரை வில்லால் 
விண்டார் புரம் மூன்று எரித்தார் மீயச்சூராரே. 

11. வேடம் உடைய பெருமான் உயும் மீயச்சூர் 
நாடும் புகழார் புகலி ஞானசம்பந்தன் 
பாடல் ஆய தமிழ்ஊர் ஐந்தும் மொழிந்து உள்கி 
ஆடும் அடியார் அகல் வானுலகம் அடைவாரே. 

திருமீயச்சூர் இளம்கோயில் - அப்பர் தேவாரம் - பாடியவர் புதுச்சேரி சம்பந்த குருக்கள்

திருமீயச்சூர் கோயில் - சம்பந்தர் தேவாரம் - பாடியவர் கொடுமுடி லோக வசந்தகுமார்

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/15/w600X390/meeyachur2.JPG http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/jun/16/parikarathalangal--tirumeeyachur-temple-2721174.html
2716165 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் எமவாதனை நீக்கும் பிரம்மபுரீஸ்வரர் கோவில், திருக்கடையூர் மயானம் என்.எஸ். நாராயணசாமி Friday, June 9, 2017 02:24 PM +0530 காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 48-வது தலமாக இருக்கும் திருக்கடவூர் (திருக்கடையூர்) மயானம் என்ற இத்தலம், செய்த பாவங்களும் வினைகளும் நீங்கும் தலம் என்று தேவாரத்தில் போற்றப்பட்டுள்ளது. மேலும், எமவாதனையை நீக்கும் தலம் என்ற பெருமையும் இத்தலத்துக்கு உண்டு.

    இறைவன் பெயர்: பிரம்மபுரீஸ்வரர், பெரிய பெருமானடிகள்
    இறைவி பெயர்: நிமலகுசாம்பிகை, அமலக்குய மின்னம்மை

இத்தலத்துக்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று, அப்பர் பதிகம் ஒன்று, சுந்தரர் பதிகம் ஒன்று என மூன்று பதிகங்கள் இருக்கின்றன. 
 

எப்படிப் போவது?

மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தின் கிழக்கு கோபுர வாயிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. 

ஆலய முகவரி

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்,
திருமெய்ஞானம்,
திருக்கடையூர் அஞ்சல்,
தரங்கம்பாடி வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 609 311.

இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆலய தொடர்புக்கு
 
திரு சிவகுமார், செயல் அலுவலர், கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், கைபேசி: 8098274712
 

சைவ சமயத்தில் ஐந்து தலங்கள் மயானம் என்று அழைக்கப்படுகின்றன. அவை காசி மயானம், கச்சி மயானம் (காஞ்சிபுரம்), காழி மயானம் (சீர்காழி), நாலூர் மயானம் மற்றும் கடவூர்  மயானம். மயானம் என்பது பிரம்மதேவரை சிவபெருமான் எரித்து நீராக்கிவிட்ட இடமாகும். ஒரு பிரம்ம கர்ப்பத்தின் பலயுக முடிவில், பிரம்மாவை சிவபெருமான் எரித்து நீராக்கிவிட்டார். அவ்வாறு சிவபெருமானால் பிரம்மா எரிக்கப்பட்ட இடமே திருக்கடவூர் மயானம். தேவர்கள் யாவரும் ஒன்றுகூடி திருக்கடவூர் மயானம் வந்து பிரம்ம தேவருக்கு மீண்டும் உயிர் வழங்கவேண்டி தவம் செய்தனர். இறைவன் அதற்கிணங்கி, இத்தலத்தில் பிரம்மாவை உயிர்ப்பித்து அவருக்கு சிவஞானத்தை போதித்து, படைக்கும் ஆற்றலை மீண்டும் வழங்கினார். பிரம்மா, சிவஞானம் உணர்ந்த இடம் திருக்கடவூர் மயானம். ஆகவே, இத்தலம் திருமெய்ஞானம் என்றும் அழைக்கப்படுகிறது.


அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பாடப்பெற்ற 44 தலங்களில் திருக்கடையூர் மயானம் தலமும் ஒன்றாகும். மேற்கு பார்த்த 55 பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் இத்தலமும் ஒன்று. ஆலயத்தின் நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றவுடன், ஒரு பெரிய வெளிப் பிராகாரம் காணலாம். நேர் எதிரே உள்ள மூன்று நிலை கோபுரத்தின் முன் நந்தி மண்டபம், பலிபீடம் உள்ளன. மூன்று நிலை கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால், மூலவர் பிரம்மபுரீஸ்வரர் தனி கருவறையில் சுற்றுப் பிராகாரத்துடன் மேற்கு நோக்கி அருள்புரிகிறார். சிவன் சந்நிதியில் வடபுறம் சிங்காரவேலர் என்ற திருநாமத்துடன் முருகன் தென்திசை நோக்கி அருள் புரிகிறார். சிங்காரவேலர் கையில் வில்லும், அம்பும் கொண்டு பாதக்குறடு அணிந்தும்  காட்சியளிப்பது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பாகும். சிங்காரவேலரை வழிபட்டுவர அனைத்துவித சத்ரு தொல்லைகளும் நீங்கி, நம்முடைய அனைத்து காரியங்களும் நல்லபடியாக முடியும்.

ஆலயத்தின் மேற்குப் பிராகாரத்தில் தென்புறத்தில் சங்கு சக்கரத்துடன் நின்ற கோலத்தில் கிழக்கு முகமாக ஸ்ரீபிள்ளைபெருமாள் காட்சி தருகிறார்.  வெளிப் பிராகாரத்தின் தென்மேற்கு மூலையில், கிழக்குப் பார்த்த தனி கோவிலில் தனி சந்நிதியில் இறைவி நிமலகுசாம்பிகை கிழக்கு நோக்கி அருள் புரிகிறாள். ஆலயத்தின் வெளியே தென்புறம் பிரம்ம தீர்த்தம் உள்ளது. இந்தத் தீர்த்தத்துக்கு அருகில் உள்ள கிணறு காசி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கிணற்றில் இருந்து எடுக்கப்படும் நீரைக் கொண்டுதான் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.


என்றும் 16 வயதுடன் வாழ இறைவன் அருள்பெற்ற மார்க்கண்டேயர், சிவபூஜை செய்வதற்காக, கங்கையை இக்கிணற்றில் சிவபெருமான் வரவழைத்துக் கொடுத்தார் என்பது தல வரலாறு. காசியில் இருந்து கங்கா தீர்த்தம் எடுத்துவந்தாலும், அமிர்தகடேஸ்வருக்கு அபிஷேகம் கிடையாது. இந்தப் புனித நீரைக் கொண்டு மற்ற தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்தால் என்ன ஆகிவிடும் என்று கூறி பாகுலேயன் என்ற மன்னன், கடவூர் மயானம் இறைவன் பிரம்மபுரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்தபோது சிவலிங்கத்தின் உச்சியில் வெடிப்பு ஏற்பட்டது. அதற்கான தழும்பு இத்தல இறைவனின் திருமுடியில் காணப்படுகிறது. 

இத்தல காசி தீர்த்தத்தில் மார்க்கண்டேயருக்காக இறைவன் அருளால் கங்கை வந்த நாள் பங்குனி மாதம் அஸ்வினி நட்சத்திரம் ஆகும். வருடந்தோறும் வரும் இந்தப் புண்ணிய நாளில் அமிர்தகடேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் பிரம்ம தீர்த்தக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி  நடைபெறும். அச்சமயம் மட்டுமே பிரம்ம தீர்த்தத்தில் பக்தர்கள் அனைவரும் புனித நீராடுவர். இந்நாளில் இங்கு பிரம்ம தீர்த்தத்தில் நீராடுவது காசியில் கங்கை நதியில் நீராடுவதற்கு சமம் என்று தலபுராணம் குறிப்பிடுகிறது. 
 

இத்தலத்துக்குரிய அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரின் தேவார பதிகப் பாடல்களிலும், இத்தல ஆலய கலவெட்டுகளிலும், இத்தல இறைவன் பெரிய பெருமானடிகள் என்று குறிப்பிடப்படுகிறார். இவ்வாலயத்தின் தலவிருட்சமாக கொன்றை மரமும் வில்வ மரமும் விளங்குகின்றன.

சம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் சுந்தர் ஓதுவார்

 

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/7/w600X390/kmayanam5.JPG http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/jun/09/எமவாதனை-நீக்கும்-பிரம்மபுரீஸ்வரர்-கோவில்-திருக்கடையூர்-மயானம்-2716165.html
2712427 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் பித்ருக்கள் வழிபாடு செய்ய - சித்தப்பிரமை நீங்க ஒரு தலம் ஏடகநாதேஸ்வரர் கோவில், திருவேடகம் என்.எஸ். நாராயணசாமி Friday, June 2, 2017 10:28 AM +0530 பாண்டிய நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 4-வது தலமாக இருக்கும் திருவேடகம், காசிக்கு நிகராக கருதப்படும் தலங்களில் ஒன்று. சிவபெருமான், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்தின்போது வந்தவர்களின் தாகம் தீர்ப்பதற்காக தனது கையை தரையில் வைத்து வைகை நதியை உண்டாக்கினார். அத்தகைய சிறப்பு பெற்ற வைகை நதியின் கரையோரம் அமைந்த தலம் திருவேடகம்.

     இறைவன் பெயர்: ஏடகநாதேஸ்வரர்
     இறைவி பெயர்: ஏலவார்குழலி அம்மை
இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது
 


மதுரையில் இருந்து சோழவந்தான் செல்லும் சாலை வழியில் திருவேடகம் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து சோழவந்தான் செல்லும் நகரப் பேருந்துகள் திருவேடகம் வழியாகச் செல்கின்றன. கோவில் அருகிலேயே பேருந்து நிறுத்தம் உள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் சோழவந்தான் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

ஆலய முகவரி
அருள்மிகு ஏடகநாதேஸ்வரர் திருக்கோவில்,
திருவேடகம் அஞ்சல்,
வாடிப்பட்டி வட்டம்,
மதுரை மாவட்டம் – 625 234.

இவ்வாலயம், காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

மதுரையை அரசாண்டு வந்த கூன்பாண்டியன், சமண சமயத்தைச் சார்ந்தவன். அவன் மனைவி மங்கையர்க்கரசி ஒரு சிறந்த சிவ பக்தை. 63 நாயன்மார்களில் ஒருவராகத் திகழ்பவள். சைவத்தைக் காப்பாற்ற, மங்கையர்க்கரசி அழைப்பின் பேரில் திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்தபோது, திருநீறு பூசி அரசன் கூன்பாண்டியனின் வெப்ப நோய் நீங்க உதவினார். அங்கிருந்த சமணர்கள் ஆத்திரமுற்று, சம்பந்தருடன் அணல் வாதம் புணல் வாதம் புரிந்தனர். சமணர்கள் தங்கள் ஏட்டை தீயில் இட்டபோது அது எரிந்து சாம்பல் ஆயிற்று. ஆனால், சம்பந்தர் திருநள்ளாற்றுப் பதிகம் எழுதிய ஏட்டை தீயில் இட்டபோது அது எரிந்து சாம்பல் ஆகாமல் பச்சையாகவே இருந்தது. பின்பு புணல் வாதத்தின்போது, சமணர்கள் எழுதிய ஏட்டை ஆற்றில் விட்டபோது அது ஆற்றுடன் சென்றது. ஆனால் சம்பந்தர், வாழ்க அந்தணர் என்று தொடங்கும் பதிகம் எழுதிய ஏட்டை வைகை ஆற்றில் விட்டபோது, அது வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்துச் சென்றது. மதுரை பாண்டிய மன்னனின் மந்திரி குலச்சிறையார் என்பவர் குதிரையின் மீதேறி வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்துச் செல்லும் ஏட்டைப் பின் தொடர்ந்து செல்ல, சம்பந்தர் பின்பு "வன்னியும் மத்தமும்" என்னும் திருப்பதிகம் பாடியவுடன், அந்த ஏடு ஓரிடத்தில் வைகை ஆற்றின் கரையில் ஒதுங்கியது. பாண்டிய மன்னன் ஏடு ஒதுங்கிய இடத்தில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டு அங்கு ஒரு ஆலயம் எழுப்பினான். அதுவே திருவேடகம் என்ற இந்த பாடல் பெற்ற ஸ்தலம்.
 

சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதிகளுக்கு தனித் தனியாக கோபுரங்களுடன், இவ்வாலயம் வைகை நதியின் வடகரையில் அமைந்துள்ளது. சுவாமி சந்நிதி 5 நிலை ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் கம்பத்தடி மண்டபம் உள்ளது. இங்கு கொடிமரம், பலிபீடம் ஒரு உயர்ந்த மேடையில் நந்தி இருப்பதைக் காணலாம். உள் வாயில் வழியே இறைவன் கருவறையை அடையலாம். கருவறை சுற்றுப் பிராகாரத்தில் 63 மூவர், சப்தமாதர்கள், இரட்டை விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர் ஆகிய சந்நிதிகள் உள்ளன. மூலவர் ஏடகநாதர் கருவறையில் சுயம்புலிங்கத் திருமேனியாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கழுவறை சுற்றுச் சுவரில் கோஷ்டமூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, பிரம்மா ஆகியோர் உள்ளனர்.
 

அம்பாள் சந்நிதி தனியே உள்ளது. அம்பாள் கோவில் வாயிலில் உள்ள மணி மலேயாவிலிருந்து வரவழைக்கப்படதாக தல வரலாறு குறிப்பிடுகிறது. அம்பாள் கருவறை சுற்றுப் பிராகாரத்தில் சண்டிகேஸ்வரி சந்நிதி உள்ளது. அம்பாள் சந்நிதியிலுள்ள ஒரு கல் தூணில் திருஞானசம்பந்தர் சிற்பம் இருப்பதைக் காணலாம்.

மதுரையில் இருந்து வடக்கே வைகை நதியின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தில், வைகை நதி தெற்கு வடக்காக ஓடுவதால், காசிக்கு நிகரான சிறப்பு உடையதாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் ஒரு நாள் தங்கி இருந்து இறைவனை முழுமனதுடன் பூஜை, அர்ச்சனை முதலியன செய்து வழிபட்டால், காசியில் ஆயுள் முழுவதும் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.. பிரம்மா, திருமால், ஆதிசேஷன், கருடன், பராசரர், வியாசர் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். 


இக்கோவிலில் உள்ள காலபைரவர் சந்நிதியும் மிகவும் விசேஷமானது. வைகை நதிக்கரையில் பிதுர் காரியங்கள் அவர்கள் இறந்த திதி, அமாவாசை போன்ற நாட்களில் செய்வது மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. காசிக்கு நிகராக இத்தலம் கருதப்படுவதால், காசிக்கு சென்று முன்னோர்களுக்குச் செய்யப்படும் வழிபாடுகளை இத்தலத்திலேயே செய்யலாம் என்ற பெருமையை திருவேடகம் தலம் பெற்றுள்ளது. மேலும், இறந்த நம் முன்னோர்கள் முக்தி அடைய இத்தலத்தில் மோட்சதீபம் ஏற்றும் வழக்கமும் உள்ளது. மேலும், இத்தலத்தில் உள்ள பிரம்மதீர்த்தக் குளத்தில் நீராடி, இறைவனை வழிபட்டு வந்தால் 'சித்தப்பிரமை' நீங்குவது இத்தலத்தின் தனிப் பெருமையாகும்.


சம்பந்தர் இயற்றியுள்ள இத்தலப் பதிகம், 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

1. வன்னியு மத்தமு மதிபொதி சடையினன்
பொன்னிய றிருவடி புதுமல ரவைகொடு
மன்னிய மறையவர் வழிபட வடியவர்
இன்னிசை பாடல ரேடகத் தொருவனே. 

2. கொடிநெடு மாளிகை கோபுரங் குளிர்மதி
வடிவுற வமைதர மருவிய வேடகத்
தடிகளை யடிபணிந் தரற்றுமி னன்பினால்
இடிபடும் வினைகள்போ யில்லைய தாகுமே. 

3. குண்டலந் திகழ்தரு காதுடைக் குழகனை
வண்டலம் பும்மலர்க் கொன்றைவான் மதியணி
செண்டலம் பும்விடைச் சேடனூ ரேடகம்
கண்டுகை தொழுதலுங் கவலைநோய் கழலுமே. 

4. ஏலமார் தருகுழ லேழையோ டெழில்பெறும்
கோலமார் தருவிடைக் குழகனா ருறைவிடம்
சாலமா தவிகளுஞ் சந்தனஞ் சண்பகம்
சீலமா ரேடகஞ் சேர்தலாஞ் செல்வமே.

5. வரியணி நயனிநன் மலைமகண் மறுகிடக்
கரியினை யுரிசெய்த கறையணி மிடறினன்
பெரியவன் பெண்ணினோ டாணலி யாகிய
எரியவ னுறைவிட மேடகக் கோயிலே. 

6. பொய்கையின் பொழிலுறு புதுமலர்த் தென்றலார்
வைகையின் வடகரை மருவிய வேடகத்
தையனை யடிபணிந் தரற்றுமின் னடர்தரும்
வெய்யவன் பிணிகெட வீடெளி தாகுமே. 

இப்பதிகத்தின் 7-ம் பாடல் சிதைந்து போயிற்று.

8. தடவரை யெடுத்தவன் றருக்கிறத் தோளடர்
படவிர லூன்றியே பரிந்தவற் கருள்செய்தான்
மடவர லெருக்கொடு வன்னியு மத்தமும்
இடமுடைச் சடையினன் ஏடகத் திறைவனே. 

9. பொன்னுமா மணிகளும் பொருதிரைச் சந்தகில்
தன்னுளார் வைகையின் கரைதனிற் சமைவுற
அன்னமா மயனுமா லடிமுடி தேடியும்
இன்னவா றெனவொணான் ஏடகத் தொருவனே. 

10. குண்டிகைக் கையினர் குணமிலாத் தேரர்கள்
பண்டியைப் பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர்
வண்டிரைக் கும்மலர்க் கொன்றையும் வன்னியும்
இண்டைசேர்க் குஞ்சடை யேடகத் தெந்தையே.

11. கோடுசந் தனமகில் கொண்டிழி வைகைநீர்
ஏடுசென் றணைதரு மேடகத் தொருவனை
நாடுதென் புகலியுண் ஞானசம்பந்தன
பாடல் பத்து இவை வல்லார்க்கு இல்லையாம் பாவமே.

சம்பந்தரின் பதிகம் - பாடியவர் மதுரை முத்துக்குமரன்

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/1/w600X390/DSCN1889.JPG http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/jun/02/parikarathalangal--thiruvedagam-temple-2712427.html
2707965 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் ஏவல், பில்லி, சூனியம் செய்வினை போன்ற தொல்லைகள் போக்கும் தலம் - திருப்புத்தூர் என்.எஸ். நாராயணசாமி Friday, May 26, 2017 02:09 PM +0530 பாண்டிய நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 6-வது தலமாக விளங்குவது திருப்புத்தூர். இது, புகழ்பெற்ற பைரவர் தலமும் ஆகும். 

    இறைவன் பெயர்: திருத்தளிநாதர்
    இறைவி பெயர்: சிவகாமி, சௌந்தர்ய நாயகி
இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் இரண்டு, திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று என மொத்தம் மூன்று பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது?

இந்த சிவஸ்தலம், காரைக்குடியில் இருந்து கிழக்கே சுமார் 20 கி.மீ. தொலைவிலும், சிவகங்கையில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவிலும், மதுரையில் இருந்து சுமார் 65 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. மதுரை, காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களில் இருந்து திருப்புத்தூருக்குப் பேருந்து வசதிகள் உண்டு. அருகில் உள்ள ரயில் நிலையம் காரைக்குடி. 

ஆலய முகவரி
அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோவில்,
திருப்புத்தூர் அஞ்சல்,
சிவகங்கை மாவட்டம் – 623 211.

இந்த ஆலயம், காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு 
 

அருள் சுரக்கும் ஆலயங்களில் ஒன்றுதான் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள ஸ்ரீ திருத்தளிநாதர் ஆலயம். திருத்தளிநாதர் இங்கு எழுந்தருள முக்கியக் காரணம், ஸ்ரீ மகாலட்சுமி ஆவார். ஈசனாகிய இறைவன் பல்வேறு தாண்டவங்களை நிகழ்த்தினான். அவற்றில் கௌரி தாண்டவமும் ஒன்று. அதனைக் காண விரும்பிய ஸ்ரீ மகாலட்சுமி, இறைவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். அவருக்கு இறைவன் காட்சி தந்து, கௌரி தாண்டவம் ஆடிக்காட்டிய இடமே இத் தலம். அதனால்தான், திரு (மகாலட்சுமி) வழிபட்ட ஆலயம் என்னும் பொருள் தரும்படியாக இவ்வாலயம் 'திருத்தளிநாதர்' ஆலயம் என்று அழைக்கப்படுவதாகத் தலபுராணம் கூறுகின்றது. மேலும், வால்மீகி மகரிஷி இங்குவந்து புற்று வடிவில் தல விருட்சமான சரக்கொன்றை மரத்தின் அடியில் தவம் செய்து வழிபட்டதாகவும், அதனாலேயே இத்தலத்துக்கு திருப்புத்தூர் என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
 

சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் நான்கு பிராகாரங்களுடனும், கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் உள்ள இத்தலத்தில், இறைவன் சுயம்பு லிங்கமாக திருத்தளிநாதர் என்று பெயருடன் எழுந்தருளியுள்ளார், அம்பாள் தனி சந்நிதியில் சிவகாமியம்மை என்று பெயருடன் காட்சி தருகிறாள். இத்தலத்திலுள்ள பைரவர் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். திருப்புத்தூர் திருத்தளிநாதர் திருக்கோவில் ஆலய பைரவர் பெயரில், பைரவர் கோவில் என்றே இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தின் 2-வது பிராகாரத்தில் மேற்கு நோக்கிய தனி சந்நிதியில் ஸ்ரீ யோகபைரவர் தரிசனம் தருகிறார். குழந்தை வடிவில், வலக்கரத்தில் பழம், இடக்கரம் தொடையின் மீது வைத்துக்கொண்டு கோரைப் பற்களுடன் காட்சி தருகிறார். உலகில் தோன்றிய முதல் பைரவ மூர்த்தம் இதுதான் என இவ்வாலயக் குறிப்பு கூறுகிறது. 

இங்குள்ள பைரவர், ஆதி பைரவர் என்றே அழைக்கப்படுகின்றார். 

பொதுவாக, பைரவர் கையில் சூலத்துடனும், நாய் வாகனத்துடனும், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதே மரபு. ஆனால், இங்குள்ள பைரவர் அமர்ந்த நிலையில், யோக நிஷ்டையில் காணப்படுகிறார். அதனால், யோக பைரவர் என்றும் அழைக்கப்படுகின்றார். இந்திரன் மகன் ஜெயந்தனைக் காப்பதற்காக இவர் அவதாரம் செய்ததாகக் கோயில் குறிப்பு கூறுகிறது. இந்திரன் மகன் ஜெயந்தன் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுப் பேறடைந்தான். அதனால், அவன் உருவம் சந்நிதிக்கு வெளியில் வாயிலில் உள்ளது. சஷ்டி, அஷ்டமி நாட்களில் பைரவருக்கு சிறப்பு ஆராதனை, அபிஷேகம், வழிபாடு, யாகங்கள் செய்யப்படுகின்றன. பைரவருக்குப் புனுகு சார்த்தப்பட்டு, வடைமாலை அணிவிக்கப்பெற்று, அவருக்கு மிகவும் உகந்த சம்பா சாதம் தினம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. 


இவரது வழிபாட்டில் கலந்துகொண்டாலோ அல்லது இங்கு வந்து நியமத்தோடு வேண்டிக்கொண்டாலோ சத்ரு பயம், ஏவல், பில்லி, சூனியம் போன்ற தொல்லைகள், வியாபாரக் கஷ்ட நஷ்டங்கள், வேலை பற்றிய பிரச்னைகள் நீங்குவதாக நம்பிக்கை. அர்த்தசாம வழிபாட்டுக்காக பூஜை மணி அடித்து விட்டால் குருக்கள், பரிசாரகர், நைவேத்தியம் கொண்டு செல்வோர் ஆகிய மூவர் தவிர, அதன் பின் யாரும் பைரவர் இருக்கும் பகுதிக்குச் செல்லக் கூடாது என்பது தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்படும் ஐதீகம். பைரவர் அவ்வளவு உக்ரமானவராகக் கருதப்படுகிறார். உக்ரத்தைத் தணிக்க பைரவரைச் சங்கிலியால் பிணைத்துவைப்பதும் உண்டு.

யோக பைரவர் சந்நிதியை அடுத்து பிராகாரம் வலம் வரும்போது, நாகேஸ்வரர் சந்நிதியும் உள்ளது. பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இத் திருத்தலத்தில், சரஸ்வதியும், மகாலட்சுமியும் பூஜித்து அருள் பெற்றிருக்கிறார்கள். இங்குள்ள ஸ்ரீ மகாலட்சுமியை வணங்குபவர்களுக்கு வளமும், நலமும் கிட்டும் என்பது நம்பிக்கை. இத் திருத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம், ஸ்ரீ யோக நாராயணர் சந்நிதி. ஸ்ரீமன் நாராயணனே யோக நிலையில் வீற்றிருப்பது இத்திருத்தலத்தின் சிறப்பம்சமாகும். பிருகு முனிவரின் மனைவியைக் கொன்றதால் மகாவிஷ்ணு சாபம் பெற்று, அச்சாபம் நீங்க இத்தல இறைவனை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றதாக தல வரலாறு குறிப்பிடுகிறது. 


கோயிலுள் உள்ள நடராஐரின் உருவமும், சிவகாமி அம்மையின் அழகும் கண்டு இன்புறத்தக்கவை. இங்கு நடராஐர், கெளரி தாண்டவ மூர்த்தியாகக் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். அழகான சிற்ப வேலைப்பாடு அமைந்த ஐந்து இசைத் தூண்கள், இவ்வாலயத்தின் மற்றொரு சிறப்பம்சம். இங்குள்ளன. துர்க்கையும் தனிச் சன்னதியில் வீற்றிருக்கிறாள். ஸ்ரீ விநாயகரும், வன்னி மரத்து விநாயகராக எழுந்தருளியிருக்கிறார். இங்கு யோக பைரவர், யோக நாராயணர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளதால், யோகத்துக்கும் தவத்துக்கும் இது ஒரு அற்புதமான திருத்தலமாக விளங்குகிறது. நவகிரகங்கள் இத்தலத்தில் அமர்ந்த நிலையில் இருப்பதைப் பார்க்கலாம்.

திருப்புகழ் தலம்

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் 2-ம் பிராகாரத்தில், ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கோண்டு மயிலின் முன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்.

சிறப்புமிக்க இந்த பைரவர் ஆலயத்தை அவசியம் சென்று வழிபடுங்கள். வாழ்வில் எல்லா நலமும் பெறுவீர்கள்.

திருப்பத்தூர் - அப்பர் பதிகம் - திருவரங்கய்யாதி ஓதுவார்

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/24/w600X390/DSCN7814.JPG http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/may/26/parikara-thalangal--thirupputhur-2707965.html
2704502 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் முன்னோர்களுக்கு முக்தி அளிக்கும் மோட்ச தீபம் - திருப்பூவணம் என்.எஸ். நாராயணசாமி Thursday, May 18, 2017 06:15 PM +0530 பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்கள் வரிசையில் 11-வது தலமாக விளங்குவது திருப்பூவணம். மோட்ச தீபம் ஏற்றி பித்ருக்களுக்கு முக்தி அளிக்கும் தலமாகப் போற்றப்படும் இத்தலம், தேவார மூவராலும் பாடல் பெற்ற தலம் என்ற சிறப்பை கொண்டுள்ளது. 

இறைவன் பெயர்: புஷ்பவனேஸ்வரர், பூவணநாதர், பித்ரு முக்தீஸ்வரர்
இறைவி பெயர்: சௌந்தரநாயகி, மின்னனையாள், அழகியநாயகி

இத்தலத்துக்கு, திருநாவுக்கரசர் பதிகம் ஒன்று, திருஞானசம்பந்தர் பதிகம் இரண்டு, சுந்தரர் பதிகம் ஒன்று என மொத்தம் 4 பதிகங்கள் உள்ளன.
 

எப்படிப் போவது?

மதுரை - மானாமதுரை சாலை வழித்தடத்தில், மதுரையில் இருந்து தென்கிழக்கே 20 கி.மீ. தொலைவில் திருப்பூவணம் உள்ளது. மதுரையில் இருந்து ரயில் மற்றும் சாலை வழியாக திருப்பூவணம் செல்லலாம். திருப்பூவணம் ரயில் நிலையம் மதுரை - மானாமதுரை ரயில் பாதையில் இருக்கிறது.

ஆலய முகவரி

அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில்,
திருப்பூவணம் அஞ்சல்,
இராமநாதபுரம் மாவட்டம் – 623 611.

பாண்டிய நாட்டில் உள்ள 14 பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பாடப் பெற்ற ஒரே தலம் என்ற பெருமையுடைய தலம் திருப்பூவணம். தமிழ்நாட்டு அரசர்கள் சேர, சோழ, பாண்டியர்கள் மூவராலும் வழிபட்டு போற்றப்பெற்றது என்பதும் இத்தலத்தின் சிறப்பாகும். மதுரை சோமசுந்தரக் கடவுள் செய்த 64 திருவிளையாடல்களுள், சித்தராக வந்து திருப்பூவணத்தில் வாழ்ந்துவந்த பொன்னையாளுக்குத் தங்கம் கொடுத்து இரசவாதம் செய்ததும் ஒரு திருவிளையாடல் என்பதால் இத்தலம் மேலும் சிறப்பு பெறுகிறது.
 

திருஞானசம்பந்தர் இத்தலத்துக்கு வருகை தந்தபோது, வைகை ஆற்றைக் கடந்துதான் அக்கரையிலுள்ள கோவிலுக்கு செல்லவேண்டி இருந்தது. வைகை ஆற்றில் கிடந்த மணல் யாவும் சிவலிங்கங்களாக அவருக்குத் தோற்றம் அளித்தன. ஆற்றைக் கடக்க வேண்டும் என்றால் சிவலிங்கங்களாகக் காட்சி அளிக்கும் மணலை மிதித்துச் செல்ல வேண்டும் என்பதால், வைகை ஆற்றின் மறுகரையில் இருந்தபடியே இத்தலத்து இறைவன் மீது பதிகம் பாடினார். ஆற்றின் இக்கரையில் இருந்து இறைவன் திருமேனியை தரிசிக்க நந்தி மறைத்தது. இறைவன் பூவணநாதர் தனது சந்நிதியை மறைத்த நந்தியை சற்று இடதுபுறமாகச் சாய்ந்துகொள்ளும்படி பணித்தார். நந்தியும் தனது தலை மற்றும் உடலை சாய்த்துக்கொண்டது. திருஞானசம்பந்தரும் பூவணநாதரை கண்குளிரக் கண்டு வணங்கினார். சம்பந்தர் தரிசிக்க சற்று சாய்ந்த நந்தி இன்றைக்கும் சாய்ந்தவாறே இருப்பதைக் காணலாம். வைகை ஆற்றின் மறுகரையிலிருந்து தேவாரம் பாடிய மூவரும் தொழுத இடம் மூவர் மண்டபம் என்று வழங்குகிறது. இக்காலத்தில் பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபடும் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு அருகில் இம்மண்டபம் உள்ளது.

கோவில் அமைப்பு 

ஆலயம் கிழக்கு நோக்கிய ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்துடன் மூன்று பிரகாரங்களுடன் வைகை ஆற்றின் தென்கரையில் காட்சி அளிக்கிறது. அம்மன் சௌந்தரநாயகி சந்நிதியும் தனிக்கோவிலாக ஒரு சிறிய மூன்று நிலை கோபுரத்துடன் உள்ளது. இறைவன் கோவில் ஐந்து நிலை கோபுரம் கடந்து உள்ளே சென்றவுடன் வரிசையாக கம்பத்தடி மண்டபம், நளமகராசன் மண்டபம், திருவாச்சி மண்டபம், ஆறுகால் மண்டபம் ஆகியவை உள்ளன. ஆறுகால் மண்டபத்தை அடுத்து மகாமண்டபமும் அதையடுத்து அர்த்தமண்டபத்துடன் கூடிய கருவறையும் உள்ளது. மூலவர் புஷ்பவனேஸ்வரர் சுயம்புலிங்கத் திருமேனி உருவில் காட்சி தருகிறார். லிங்கத் திருமேனியில் திரிசூலமும், சடைமுடியும் காணப்படுகின்றன. சூரியன், பிரம்மா, நாரதர், மகாவிஷ்ணு, திருமகள், நளமகராஜா மற்றும் சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களாலும் வழிபடப் பெற்ற சிறப்பை உடையது இத்தலம்.

மூலவர் பின்புறம், கருவறையில் லிங்கத் திருமேனிக்குப் பின்புறம் நட்சத்திர தீபமும், 27 விளக்குகள் கொண்ட திருவாச்சி தீபமும் இடம் பெற்றுள்ளன. இவை இறந்தவர் முக்தி பெற ஏற்றப்படும் மோட்ச தீபங்கள் எனப்படும். நமது முன்னோர்களுக்கு (பித்ருக்கள்) அமாவாசை நாட்களிலும், மஹாளய பட்சம் எனப்படும் 15 நாட்களிலும் திதி, தர்ப்பணம் ஆகியனவற்றை செய்து நீர்க்கடன் செய்வது மிகவும் முக்கியம். பித்ருக்கள் திருப்தி அடைந்தால்தான் நமது வாழ்வு வளமாக இருக்கும். முன்னோர் வழிபாடு, தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கவல்லது. தெரிந்தோ, தெரியாமலோ ஒவ்வொருவரும் தனது வாழ்நாளில் ஏதேனும் பாவங்கள் செய்யாமல் இருக்கமாட்டர்கள். அவ்வாறு நமது பித்ருக்கள் செய்த பாவ வினைகள் நீங்கி அவர்களுக்கு முக்தி கிடைக்க, திருப்பூவணம் தலத்தில் மோட்ச தீபம் ஏற்றி வழிபடுவது மிகவம் சிறந்தது. இதனால், நமது முன்னோர்களின் பரிபூரண ஆசி குடும்பத்தினர் அனைவருக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
 

இறைவி சௌந்தரநாயகியின் சந்நிதி ஆலயத்தினுள் ஒரு தனிக் கோவிலாக அமைந்துள்ளது. இரண்டு சந்நிதிகளும் ஆலயத்தின் ஒரே மதில் சுவற்றின் உள்ளே சுற்றுப் பிராகாரங்களுடன் அமையப்பெற்றுள்ளன. கோவிலின் தலவிருட்சமாக பலா மரம் விளங்குகிறது. மணிகர்ணிகை தீர்த்தம், வைகை நதி, வசிஷ்ட தீர்த்தம், இந்திர தீர்த்தம் ஆகியவை இக்கோயிலின் தீர்த்தங்களாக விளங்குகின்றன. உள்பிர    காரத்தில் பாஸ்கர விநாயகர், சுப்பிரமணியர், சூரியன், சயனப்பெருமாள், நால்வர், 63 மூவர், சப்தமாதர்கள், மகாலட்சுமி, தட்சிணாமூர்த்தி, சந்திரன், நவகிரகங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. இத்தலத்தில் நடராஜர் சபையிலுள்ள நடராசமூர்த்தம், கல்லில் வடிவமைக்கப்படுள்ளது. இந்த மூர்த்தம் பெரியதாகவும், அழகாகவும் காணப்படுகிறது. அருகே பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாத முனிவரும் காட்சியளிக்கன்றனர். உலோகத்தால் ஆன உற்சவ நடராஜரும், சிவகாமியும் இச்சபையில் இடம் பெற்றுள்ளனர்.

திருவிளையாடல் 
 

திருப்பூவணத்தில் பொன்னையாள் என்ற பெயருடைய பெண்ணொருத்தி வாழ்ந்துவந்தாள். அவள் இறைவன் பூவணநாதர் மேல் மிகுந்த பக்தி பூண்டவள். அவளுக்கு, பூவணநாதர் திருவுருவை பொன்னால் அமைத்து வழிபட வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால், அதற்குரிய நிதி வசதி அவளிடம் இல்லை. தனது ஆசையை நிறைவேற்றித்தருமாறு இறைவனை வேண்டிக்கொண்டே இருந்தாள். அவள் விருப்பத்தை நிறைவேற்றிவைக்க திருவுளம் கொண்ட இறைவன், ஒரு சித்தராக அவள் முன் வந்தார். பொன்னையாள் வீட்டில் இருந்த பழைய இரும்பு, செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை ரசவாதம் செய்து தூய பொன்னாக மாற்றிக்கொடுத்து அவளுக்கு அருள் செய்தார். கிடைத்த தங்கத்தால், பூவணநாதரின் திருவுருவை பொன்னையாள் வடிக்கச் செய்தாள். தங்கத்தால் உருவான சிலையின் அழகைக் கண்ட பொன்னையாள், அதைக் கிள்ளி முத்தமிட்டாள். கிள்ளிய இடம் சற்றே பள்ளமானது. இன்றும் பூவணநாதரின் அந்த உற்சவ திருவுருவ மூர்த்தத்தில் கன்னத்தில் முத்தக்குறி அடையாளம் இருப்பதைக் காணலாம். இறைவன் நடத்திய இந்தத் திருவிளையாடல் படலம், இத்தலத்துக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.
 

 

திருப்பூவணம் - சுந்தரர் எழுதிய தேவாரம் - பாடியவர் நெய்வேலி சிவ. இராஜபதி ஓதுவார்

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/18/w600X390/tirupuvanam2.jpg http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/may/19/முன்னோர்களுக்கு-முக்தி-அளிக்கும்-மோட்ச-தீபம்---திருப்பூவணம்-2704502.html
2683324 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலம் அரசலீஸ்வரர் கோவில், திருஅரசிலி என்.எஸ். நாராயணசாமி Monday, May 15, 2017 02:13 PM +0530 பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 31-வது தலமாக விளங்குவது திருஅரசிலி. தற்போது கோவில் இருக்குமிடம் மக்களால் ஒழிந்தியாப்பட்டு என்று வழங்கப்படுகிறது. பூச நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம் என்ற சிறப்பும், பிரதோஷ வேளை பூஜைக்கு சிறப்புபெற்ற தலமாகவும் இத்தலம் உள்ளது.

     இறைவன் பெயர்: அரசிலிநாதர்
     இறைவி பெயர்: பெரியநாயகி
     இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது?

1. பாண்டிச்சேரி - திண்டிவனம் (வழி - கிளியனூர்) பேருந்தில் ஒழிந்தியாப்பட்டு கைகாட்டி அருகில் இறங்கி, கிழக்கே ஒழிந்தியாப்பட்டு செல்லும் சாலையில் 2 கி.மீ. சென்றால் அரசிலி ஆலயத்தை அடையலாம். பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் ஒழிந்தியாப்பட்டு கைகாட்டி கிளைப் பாதை பிரிகிறது.
2. திருவக்கரை தலத்தை தரிசித்து விட்டு வருவோர், பிரதான சாலைக்கு வந்து வானூர் வழியாக பாண்டிச்சேரி செல்லும் சாலையில் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டை அடைந்து, அங்கிருந்து திண்டிவனம் செல்லும் மார்க்கத்தில் சென்று, மேற்சொல்லியவாறு ஒழிந்தியாப்பட்டு கைகாட்டி உள்ள இடத்தில் வலப்புறமாகப் பிரியும் கிளைப்பாதை வழியே சென்று அரசிலி ஆலயத்தை அடையலாம்.
 

மற்றொரு பாடல் பெற்ற தலமான இரும்பை மாகாளம் இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.

ஆலய முகவரி

அருள்மிகு அரசிலிநாதர் திருக்கோவில்,
ஒழிந்தியாப்பட்டு அஞ்சல்,
வானூர் வழி, வானூர் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம் – 605 109.

இந்த ஆலயம் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

வாமதேவர் எனும் முனிவர் தான் பெற்ற சாபத்துக்கு விமோசனம் பெறுவதற்காக, பல தலங்களுக்குச் சென்று சிவனை வணங்கி வந்தார். அவர் இங்கு வந்தபோது, ஒரு அரச மரத்துக்கு அருகில் சற்று நேரம் அமர்ந்து ஓய்வெடுத்தார். உடலுக்குக் குளிர்ச்சி தரும் அரச மரத்தின் அடியில் சற்று நேரம் இருக்கும் நமக்கே இவ்வளவு சுகமாக இருக்கிறதே என்று நினைத்த முனிவர், இங்கு சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்பினால் எப்படி இருக்கும் என மனதில் நினைத்துக்கொண்டார். அவரது எண்ணத்தை அறிந்த சிவன், அந்த அரச மரத்துக்கு அடியில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார். மகிழ்ந்த வாமதேவ முனிவர், அருகில் உள்ள தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கினார். சிவன் அவர் முன் காட்சி தந்து சாபத்துக்கு விமோசனம் தந்தார். மரங்களில் சிறந்த அரச மரத்தின் கீழ் சுவாமி சுயம்புவாக எழுந்தருளியதால், இத்தலத்துக்கு அரசிலி என்றும், இறைவனுக்கு அரசலீஸ்வரர் என்றும் பெயர் ஏற்பட்டது. வாமதேவ முனிவருக்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து இந்த லிங்கம் பூமியில் புதையுண்டுபோயிற்று.
 

சத்தியவிரதன் எனும் சாளுக்கிய மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆட்சி செய்துவந்தான். சிவன் மீது அளவிலாத பக்தி கொண்டிருந்த மன்னனுக்குப் பிள்ளைகள் இல்லை. ஒரு நந்தவனம் அமைத்து அருகில் உள்ள மற்றொரு சிவலிங்கத்துக்கு வழிபாடுகள் செய்துவந்தான். பணியாள் ஒருவன் தினமும் நந்தவனத்தில் இருந்து மலர்களை எடுத்துவரும் பணியை செய்துவந்தான். ஒரு சமயம், பணியாள் நந்தவனத்துக்குச் சென்றபோது அங்கு மலர்கள் இல்லை. அரண்மனைக்குத் திரும்பிய பணியாளன், மன்னனிடம் செடியில் மலர்கள் இல்லாத விவரத்தைக் கூறினான். மன்னரும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், மன்னனும் அன்று வேறு மலர்களால் சுவாமிக்கு பூஜை செய்தான். மறுநாளும் பணியாள் நந்தவனம் சென்றபோது அங்கு செடியில் மலர்கள் இல்லை. அவன் மீண்டும் மன்னரிடம் சென்று தகவலை கூறினான்.
 

மலர்களை அதிகாலையில் யாரோ பறித்துச் சென்றுவிடுவதாக சந்தேகம் கொண்ட மன்னன், அடுத்தநாள் காலையில் தன் படையினருடன் நந்தவனத்துக்குச் சென்று கண்காணித்தான். அப்போது நந்தவனத்துக்குள் புகுந்த மான் ஒன்று மலர்களை உண்டதைக் கண்டான். சிவபூஜைக்கு என்று ஒதுக்கப்பட்ட மலர்களை மான் சாப்பிட்டதைக் கண்ட மன்னன், கோபத்துடன் மான் மீது அம்பு எய்தான். மான் தப்பிவிட, காவலர்கள் அதனை விரட்டிச் சென்றனர். அந்த மான் ஒரு அரச மரத்தின் பொந்துக்குள் சென்று மறைந்துகொண்டது. மன்னன் மரத்துக்குள் அம்பு எய்ய, மரப்பொந்தில் இருந்து ரத்தம் வெளிப்பட்டது. மானை அம்பு தைத்திருக்கும் என நினைத்த மன்னன் உள்ளே பார்த்தபோது அங்கு மான் இல்லை. அதற்குப் பதில், பல்லாண்டுகளுக்கு முன் மறைந்த வாமதேவர் வழிபட்ட லிங்கம் இருந்தது. அந்த லிங்க பாணத்தில் ரத்தம் வழிந்தபடி இருந்தது. அதிர்ந்த மன்னன், சிவனை வேண்டினான். மன்னனுக்கு சிவன் காட்சி தந்து, மான் வடிவில் அருள்புரிந்தது தான்தான் என்று உணர்த்தியதோடு, மன்னனுக்குப் புத்திர பாக்கியமும் கொடுத்து அருளினார். அதன்பின் மன்னன் இத்தலத்தில் கோயில் கட்டினான்.
 

சத்தியவிரதனின் மகன் இந்திரசேனன் என்பவனும் இத்தல இறைவனிடம் அளவில்லாத பக்தியுடன் வழிபட்டான். இந்த இந்திரசேனன் மகள், அரசிலிநாதரை வழிபட்டு இத்தலத்திலேயே வாழ்ந்து இறையடி கூடிய தலம்.

கோவில் அமைப்பு

சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் மூன்று நிலை ராஜகோபுரமும், ஒரு பிராகாரமும் கொண்டு இவ்வாலயம் அமைந்துள்ளது. மூலவர் அரசிலிநாதர் சுயம்புலிங்க வடிவில் கிழக்கு நோக்கியும், அம்பாள் பெரியநாயகி தனி சந்நிதியில் தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர். கருவளை சுற்றுப் பிராகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுகர், நவக்கிரகம், சண்டேசுவரர் நால்வர் ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன. மூலவரை நோக்கியவாறு பைரவர், சூரியன், உருவங்கள் உள்ளன. கோஷ்டமூர்த்தி தட்சிணாமூர்த்தி தனி விமானத்துடன் அழகாக உள்ளார்.
 

பொதுவாக, வலது பக்கம் திரும்பியிருக்கும் முயலகன் இங்கு இடது பக்கம் திரும்பி, கையில் நாகத்தை பிடித்தபடி இருக்கிறான். இது வித்தியாசமான அமைப்பாகும். இவருக்கு மேலே நடராஜர் ஆனந்த தாண்டவ கோலத்தில் சிறிய மூர்த்தியாக இருக்கிறார். ஒரே இடத்தில் சிவனது ஞான உபதேச கோலத்தை கீழேயும், மேலே தாண்டவ கோலத்தையும் தரிசனம் செய்வது மிகவும் விசேஷமானதாகும். பிரம்மா, துர்க்கை, நாகதேவதை, சண்டி ஆகிய பிற கோஷ்ட மூர்த்திகளின் சந்நிதிகளும் உள்ளன. கருவறைக்குப் பின்புறத்தில் கோஷ்டத்தில் லிங்கோத்பவருக்கு பதிலாக அவ்விடத்தில் மகாவிஷ்ணு மேற்கு பார்த்தபடி இருக்கிறார். கருவறையில் இறைவன் அரசிலிநாதர் 108 ருத்ராட்ச மணிகள் சேர்ந்த ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்க விடிவில் சிறிய மூர்த்தியாகக் காட்சி தருகிறார். லிங்கத்தின் தலையில் அம்பு பட்ட காயம் இருக்கிறது. இந்தக் காயத்தை மறைப்பதற்காகவும், சிவனுக்கு மரியாதை செய்யும் விதமாகவும், லிங்கத்துக்கு மேலே தலைப்பாகை அணிவித்து பூஜைகள் செய்கின்றனர்.
 

பூசம் நட்சத்திரத்துக்குரிய மரம் அரச மரம். அது இத்தலத்தின் தல விருட்சமாக இருப்பதால், இத்தலம் பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்தலம் வந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டால், பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லா நலனையும் அடைவார்கள்.
 

வாமதேவருக்கும், சாளுக்கிய மன்னன் சத்தியவிரதனுக்கும் பிரதோஷ வேளை காலத்தில் அவர்களுக்கு சிவன் தரிசனம் அளித்ததால், இத்தலத்தில் பிரதோஷ பூஜை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

சம்பந்தர் இயற்றிய இத்தல திருப்பதிகம் 2-ம் திருமுறையில் உள்ளது.

1. பாடல் வண்டறை கொன்றை பான்மதி பாய்புனற் கங்கை
கோடல் கூவிள மாலை மத்தமுஞ் செஞ்சடைக் குலாவி
வாடல் வெண்டலை மாலை மருவிட வல்லியந் தோண்மேல்
ஆடன் மாசுணம் அசைத்த அடிகளுக்கு இடம் அரசிலியே.

2. ஏறு பேணிய தேறி யிளமதக் களிற்றினை யெற்றி
வேறு செய்தத னுரிவை வெண்புலால் கலக்கமெய் போர்த்த
ஊறு தேனவ னும்பர்க் கொருவன்நல் லொளிகொளொண் சுடராம்
ஆறு சேர்தரு சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே.

3. கங்கை நீர்சடை மேலே கதமிகக் கதிரிள வனமென்
கொங்கை யாளொரு பாகம் மருவிய கொல்லைவெள் ளேற்றன்
சங்கையாய்த் திரியாமே தன் அடியார்க்கு அருள் செய்து
அங்கையால் அனல் ஏந்தும் அடிகளுக்கு இடம் அரசிலியே..

4. மிக்க காலனை வீட்டி மெய்கெடக் காமனை விழித்துப்
புக்க வூரிடு பிச்சை யுண்பது பொன்றிகழ் கொன்றை
தக்க நூல்திகழ் மார்பில் தவள வெண்ணீற் அணிந்தாமை
அக்கின் ஆரமும் பூண்ட அடிகளுக்கு இடம் அரசிலியே..

5. மான் அஞ்சும் மட நோக்கி மலைமகள் பாகமும் மருவித்
தான் அஞ்சா அரண் மூன்றும் தழல் எழச் சரம் அது துரந்து
வான் அஞ்சும் பெரு விடத்தை உண்டவன் மாமறை யோதி
ஆன் அஞ்சு ஆடிய சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே..

6. பரிய மாசுணங் கயிறாப் பருப்பத மதற்குமத் தாகப்
பெரிய வேலையைக் கலங்கப் பேணிய வானவர் கடையக்
கரிய நஞ்சு அது தோன்றக் கலங்கிய அவர்தமைக் கண்டு
அரிய ஆர் அமுது ஆக்கும் அடிகளுக்கு இடம் அரசிலியே..

7. இப்பாடல் சிதைந்து போயிற்று.

8. வண்ண மால்வரை தன்னை மறித்திட லுற்றவல் லரக்கன்
கண்ணுந் தோளுநல் வாயும் நெரிதரக் கால்விர லூன்றிப்
பண்ணின் பாடல்கைந் நரம்பாற் பாடிய பாடலைக் கேட்டு
அண்ணலாய் அருள் செய்த அடிகளுக்கு இடம் அரசிலியே..

9. குறிய மாணுரு வாகிக் குவலய மளந்தவன் றானும்
வெறிகொள் தாமரை மேலே விரும்பிய மெய்த்தவத் தோனும்
செறிவு ஒணா வகை எங்கும் தேடியும் திருவடி காண
அறிவு ஒணா உருவத்து எம் அடிகளுக்கு இடம் அரசிலியே..

10. குருளை யெய்திய மடவார் நிற்பவே குஞ்சியைப் பறித்துத்
திரளை கையிலுண் பவருந் தேரருஞ் சொல்லிய தேறேல்
பொருளைப் பொய்யிலி மெய்யெம் நாதனைப் பொன்னடி வணங்கும்
அருளை யார்தர நல்கும் அடிகளுக்கு இடம் அரசிலியே..

11. அல்லி நீள்வயல் சூழ்ந்த அரசிலி அடிகளைக் காழி
நல்ல ஞானசம்பந்தன் நற்றமிழ் பத்து இவை நாளும்
சொல்ல வல்லவர் தம்மைச் சூழ்ந்து அமரர் தொழுது ஏத்த
வல்ல வானுலகு எய்தி வைகலு மகிழ்ந்து இருப்பாரே.

‘‘இத் திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் நாள்தோறும் சொல்லி வழிபடவல்லவர், வானுலகு எய்தி அமரர்கள் தொழுது ஏத்த வைகலும் மகிழ்ந்து வாழ்வர்’’ என்று தனது பதிகத்தின் 11-வது பாடலில் ஞானசம்பந்தர் குறிப்பிடுகிறார்.

திருஞானசம்பந்தரின் தேவாரம் - பாடியவர் குமரகுருபரன்

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/12/w600X390/arasili1.jpg http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/apr/14/parikaarath-thalangal--arasileeswarar-temple-2683324.html
2699040 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் எம பயம், செய்த பாவங்கள் நீங்கும் தலம் சக்ரவாகேஸ்வரர் கோவில், திருசக்கரப்பள்ளி என்.எஸ். நாராயணசாமி Thursday, May 11, 2017 04:18 PM +0530 பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 17-வது தலமாக இருப்பது திருசக்கரப்பள்ளி. தற்போது அய்யம்பேட்டை என்று வழங்கப்படுகிறது.

அய்யம்பேட்டை என்ற பெயரில் பல ஊர்கள் இருப்பதால், தஞ்சாவூருக்கு அருகிலுள்ள இத்தலத்தை தஞ்சாவூர் அய்யம்பேட்டை என்று அழைக்கிறார்கள்.

     இறைவன் பெயர்: சக்ரவாகேஸ்வரர்
     இறைவி பெயர்: தேவநாயகி
     இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது?

தஞ்சாவூரில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. தஞ்சாவூர் - கும்பகோணம் சாலை மார்க்கத்தில் உள்ள அய்யம்பேட்டை என்ற ஊரில் நெடுஞ்சாலையின் ஓரத்திலேயே சற்று உள்ளடங்கி கோயில் உள்ளது. சாலையில் திருக்கோயிலின் பெயர்ப் பலகை உள்ளது. ஊர்ப் பெயர் அய்யம்பேட்டை. கோயில் இருக்கும் பகுதி சக்கரப்பள்ளி என்று வழங்குகிறது. இத்தலம் சக்கரமங்கை என்றும் அழைக்கப்படுகிறது.

ஆலய முகவரி
அருள்மிகு சக்ரவாகேஸ்வரர் திருக்கோவில்
அய்யம்பேட்டை,
அய்யம்பேட்டை அஞ்சல்,
தஞ்சை மாவட்டம் – 614 201.

இவ்வாலயம் தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருச்சக்கரப்பள்ளி (சக்கரமங்கை) பாடல் பெற்ற தலம் என்பது மட்டுமின்றி, சப்தமங்கைத் தலங்கள் என்று போற்றப்படும் 7 தலங்களில் ஒரு தலம். சக்கரமங்கை, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை ஆகிய ஏழும் பிராமி, மகேஸ்சுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, மாகேந்திரி, சாமுண்டி முதலிய சப்தமாதர்களும், சப்த ரிஷிகளும் வழிபட்ட சப்தமங்கை தலங்கள் ஆகும். பிராமி வழிபட்ட தலம் சக்கரப்பள்ளி. மகாவிஷ்ணு இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டுச் சக்கராயுதம் பெற்றதால், இத்தலம் திருசக்கரப்பள்ளி என்று பெயர் பெற்றது. ஒருமுறை, சாபத்தின் விளைவாக சக்கரவாகப் பறவையாக மாறிய பிரம்மா இத்தலம் வந்தார். ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதன் நீரால் இறைவனை வழிபட்டு தன் சுய உருவை திரும்பப் பெற்றார். சக்கரவாகப் பறவை வழிபட்டதால், இறைவன் சக்ரவாகேஸ்வரர் எனப் பெயர் பெற்றார்.


கிழக்கு நோக்கியுள்ள இவ்வாலயத்துக்கு ராஜகோபுரம் இல்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலின் மேலே சுதைச் சிற்பங்களாக ரிஷப வாகனத்தின் மீது அமர்ந்தபடி சிவன், பார்வதி, மற்றும் விநாயகர், முருகன் ஆகியோர் உள்ளனர். ஆலயத்தில் கொடிமரம் இல்லை. முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்ததும், பிராகாரத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. மூலவர் சந்நிதி தனி கோவிலாக ஆலய வளாகத்தின் பின்புறம் அமைந்துள்ளது. மூலவர் கோவிலுக்குச் செல்லும் நுழைவாயிலிலும் மேலே சுதைச் சிற்பங்கள் உள்ளன. ரிஷப வாகனத்தின் மீது அமர்ந்துள்ள சிவன், பார்வதி, ஒருபுறம் மூஞ்சூறு வாகனத்தில் அமர்ந்துள்ள விநாயகர், மறுபுறம் மயில் வாகனத்தில் அமர்ந்துள்ள தண்டபாணி ஆகியோரைக் காணலாம்.


கருவறை மற்றும் விமானத்துடன் கூடிய மூலவர் சந்நிதி, தரைத்தளத்திலிருந்து சற்று தாழ்ந்த நிலையில் காணப்படுகிறது. கருவறை கீழ்ப்புறம் கருங்கல்லாலும் மேற்புறம், விமானம் சுதையாலும் ஆக்கப்பட்டவை. கருவறை வாயிலில் இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக உயர்ந்த பாணத்துடன் அருள்பாலிக்கிறர். கருவறைச் சுற்றில் கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை அகியோர் உள்ளனர். பிராகார வலம் வரும்போது விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. கருவறைக்கு முன் உள்ள மகாமண்டபத்தில் சூரியன், சந்திரன், அழகான பைரவர், நால்வர் ஆகியோர் காட்சி தருகின்றனர். தேவேந்திரன் குமாரனான ஜயந்தனும், தேவர்களும் இத்தல இறைவனை பூசித்துள்ளனர். சூரியன், சந்திரன் மற்றும் பைரவரின் சிலாரூபங்களும் காணப்படுகின்றன. மகா மண்டப வெளிச்சுவரில் புடைப்புச் சிற்பங்களாக சக்கரவாகப் பறவையும் பிராம்மியும் இறைவனைப் பூஜிக்கும் தல புராண நிகழ்ச்சி அழகுற வடிக்கப்பட்டுள்ளது.
 

இத்தலம் ஒரு திருப்புகழ் தலம். இத்தலத்திலுள்ள முருகப் பெருமான், அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றுள்ளார். முருகப் பெருமான் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானை சமேதராக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். முருகப்பெருமானின் முன்புறம் மயில் உள்ளது. திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது.
 


சண்டேஸ்வரருக்கு எதிரே காட்சி தரும் துர்க்கை, சிவ துர்க்கையாக காட்சி தருகிறாள். கையில் திரிசூலம் ஏந்தி அஷ்டபுஜங்கள் கொண்டு காட்சி அளிக்கும் இந்த துர்க்கையை வழிபடுவதன் மூலம், எமபயம் நீங்குவதோடு சகல ஐஸ்வர்யங்களையும் பெறலாம். அம்பாள் சன்னதி எதிரில் பெண்களுக்கு மாங்கல்ய பலன் தருவதும், எம பயம் நீக்கவல்லதுமான குங்குலியக் குண்டம் அமைந்துள்ளது. பக்தர்கள் இந்தக் குண்டத்தில் குங்கிலயப் பொடி தூவி வழிபடுகின்றனர்.


சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய இப்பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இத்தல பதிகத்தை நாள்தோறும் பக்தியுடன் பாடுபவர்களின் பாவம் நீங்கும் என்று திருஞானசம்பந்தர் தனது 11-வது பாடலில் குறிப்பிடுகிறார்.

1. படையினார் வெண்மழுப் பாய்புலித் தோலரை
உடையினார் உமையொரு கூறனார் ஊர்வதோர்
விடையினார் வெண்பொடிப் பூசியார் விரிபுனல்
சடையினார் உறைவிடஞ் சக்கரப்பள்ளியே.

2. பாடினார் அருமறை பனிமதி சடைமிசைச்
சூடினார் படுதலை துன்னெருக் கதனொடும்
நாடினார் இடுபலி நண்ணியோர் காலனைச்
சாடினார் வளநகர் சக்கரப்பள்ளியே.

3. மின்னினார் சடைமிசை விரிகதிர் மதியமும்
பொன்னினார் கொன்றையும் பொறிகிளர் அரவமுந்
துன்னினார் உலகெலாந் தொழுதெழ நான்மறை
தன்னினார் வளநகர் சக்கரப்பள்ளியே.

4. நலமலி கொள்கையார் நான்மறை பாடலார்
வலமலி மழுவினார் மகிழுமூர் வண்டறை
மலர்மலி சலமொடு வந்திழி காவிரி
சலசல மணிகொழி சக்கரப்பள்ளியே.

5. வெந்தவெண் பொடியணி வேதியர் விரிபுனல்
அந்தமில் அணிமலை மங்கையோ டமருமூர்
கந்தமார் மலரொடு காரகில் பன்மணி
சந்தினோ டணைபுனற் சக்கரப்பள்ளியே.

6. பாங்கினால் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை
வாங்கினார் வானவர் தானவர் வணங்கிட
ஓங்கினார் உமையொரு கூறொடும் ஒலிபுனல்
தாங்கினார் உறைவிடஞ் சக்கரப்பள்ளியே.

7. பாரினார் தொழுதெழு பரவுபல் லாயிரம்
பேரினார் பெண்ணொரு கூறனார் பேரொலி
நீரினார் சடைமுடி நிரைமலர்க் கொன்றையந்
தாரினார் வளநகர் சக்கரப்பள்ளியே.

8. முதிரிலா வெண்பிறை சூடினார் முன்னநாள்
எதிரிலா முப்புரம் எரிசெய்தார் வரைதனால்
அதிரிலா வல்லரக் கன்வலி வாட்டிய
சதிரினார் வளநகர் சக்கரப்பள்ளியே.

9. துணிபடு கோவணஞ் சுண்ணவெண் பொடியினர்
பணிபடு மார்பினர் பனிமதிச் சடையினர்
மணிவண னவனொடு மலர்மிசை யானையுந்
தணிவினர் வளநகர் சக்கரப்பள்ளியே.

10. உடம்புபோர் சீவரர் ஊண்தொழிற் சமணர்கள்
விடம்படும் உரையவை மெய்யல விரிபுனல்
வடம்படு மலர்கொடு வணங்குமின் வைகலுந்
தடம்புனல் சூழ்தரு சக்கரப்பள்ளியே.

11. தண்வயல் புடையணி சக்கரப்பள்ளி எம்
கண்ணுதல் அவன் அடி கழுமல வளநகர்
நண்ணிய செந்தமிழ் ஞானசம்பந்தன் சொல்
பண்ணிய இவைசொலப் பறையும் மெய்ப் பாவமே.

சக்கரப்பள்ளி - சம்பந்தர் பதிகம் - பாடியவர் மயிலாடுறை சிவகுமார்

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/9/w600X390/DSCN8072.JPG http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/may/12/parikaarathalam-chakravageswarar-temple-2699040.html
2695478 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் சகல நோய்களும் நீங்கும் ஞானபுரீஸ்வரர் கோவில், திருஇடைச்சுரம் என்.எஸ். நாராயணசாமி Wednesday, May 3, 2017 04:13 PM +0530  

பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 26-வது தலமாக விளங்குவது திருஇடைச்சுரம். இது தற்போது திருவடிசூலம் என்று மக்கள் வழக்கில் அறியப்படுகிறது.

    இறைவன் பெயர்: ஞானபுரீஸ்வரர், இடைச்சுரநாதர்
    இறைவி பெயர்: கோவர்த்தனாம்பிகை, இமயமடக்கொடி அம்மை
    இத்தலத்துக்கு திருஞானஞம்பந்தர் பாடிய பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது?
செங்கல்பட்டில் இருந்து திருப்போரூர் போகும் சாலை மார்க்கத்தில், செங்கல்பட்டில் இருந்து கிழக்கே சுமார் 9 கி.மீ. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. திருவடிசூலம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் ஆலயம் உள்ளது.

ஆலய முகவரி
அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோவில்,
திருவடிசூலம்,
செம்பாக்கம் – வழி,
காஞ்சிபுரம் மாவட்டம் – 603 108.

திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில், தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.


கோவில் அமைப்பு

தொண்டை நாட்டுத் தலங்கள் வரிசையில் 27-வது தலமான திருஇடைச்சுரம் (திருவடிசூலம்), பல குன்றுகளுக்கு நடுவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் திருவடிசூலம் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு ராஜகோபுரம் உள்ளது. கோவிலுக்கு வெளியே இடதுபுறம் வரசித்தி விநாயகர் சந்நிதி உள்ளது. நுழைவாயில் வழியாக உள்ளே சென்றால், விசாலமான தெற்கு வெளிப் பிராகாரத்தில் நேரே வலம்புரி விநாயகர் சந்நிதியைக் காணலாம். வெளிப் பிராகாரம் வலம் வரும்போது, கிழக்குப் பிராகாரத்தில் பலிபீடமும், நந்தியும் உள்ளன. இப்பிராகாரத்தில் பிரம்மாண்டேஸ்வரர் சந்நிதியும் உள்ளது. அருகில் வேப்பம், அரசு, வில்வம் ஆகிய மூன்று மரங்களும் இணைந்து வளர்ந்திருப்பதைக் காணலாம். மேலும் இந்தக் கிழக்குப் பிராகாரத்தில் தெற்கு நோக்கிய சுப்பிரமணியர், வள்ளி தெய்வானையுடன் உள்ள சந்நிதியும் உள்ளது. பிராகார வலம் முடிந்து மீண்டும் தெற்குப் பிராகாரம் வந்தால், தல விருட்சம் வில்வ மரம் உள்ளது. இந்த வில்வ மரத்துக்கு அருகில் ஒரு பாம்புப் புற்று உள்ளது. இது விநாயகர் வடிவில் காட்சி தருகிறது.
 

தெற்குப் பிராகாரத்திலுள்ள மற்றொரு நுழைவாயில் வழியே உள்ளே சென்றால், அநேக தூண்களுடன் ஒரு பெரிய மண்டபம் உள்ளது. மண்டபத்தை அடுத்து நேரே தெற்கு நோக்கிய இறைவி கோவர்த்தனாம்பிகை சந்நிதியைக் காணலாம். சந்நிதிக்குள் நுழைந்தால், இடதுபுறம் கிழக்கு நோக்கிய இறைவன் ஞானபுரீஸ்வரர் சந்நிதி உள்ளது. ஒரே இடத்தில் நின்றபடி இறைவன், இறைவி இருவரையும் தரிசிக்கலாம். மூலவர் சந்நிதிக்கு இருபுறமும் விநாயகரும் முருகப்பெருமானும் காட்சி அளிக்கின்றனர். கருவறை அகழி அமைப்புடன் காணப்படுகிறது. வலமாகச் சுற்றி வந்தால், முதலில் நால்வர் பிரதிஷ்டையும், அதையடுத்து விநாயகர், சந்நிதியும், வள்ளி தெய்வயானை உடனாகிய சுப்பிரமணியர் சந்நிதியும் உள்ளன. அதையடுத்து பைரவரும் காட்சி தருகிறார்..
 

இத்தலத்தின் சிறப்பு, மூலவர் லிங்கத் திருமேனி. இந்த சுயம்பு லிங்கம் ஒரு மரகதலிங்கம். சதுரபீட ஆவுடையார். சிவலிங்கத் திருமேனியில் தீபாராதனை செய்யும்போது தீப ஒளி பிரகாசமாக லிங்க பாணத்தில் தெரிகின்றது. கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அம்பாள், பசு வடிவில் வந்து பால் சொரிந்து இறைவனை வழிபட்ட தலம் ஆதலால், இறைவி கோவர்த்தனாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள். இத்தலத்தில் இறைவனுக்கு தேன் அபிஷேகம் செய்வது ஒரு சிறப்பம்சம்.

தேன் அபிஷேகம் செய்து அந்த தேனை பிரசாதமாக வாங்கி தினமும் உட்கொண்டு வந்தால், சகலவிதமான நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். இத்தலத்துக்கு வரும் பக்தர்களில் பலர் தேன் அபிஷேக பிரசாதம் வாங்கிச் செல்கின்றனர். திருஞானசம்பந்தரும் தனது பதிகத்தின் கடைசிப் பாடலில், இத்தல பதிகத்தைப் பாராயணம் செய்து இறைவனை வழிபடுவர்கள் பிணிகள் இன்றி வாழ்வர் என்று குறிப்பிடுகிறார்.
 

தல வரலாறு
திருஞானசம்பந்தர் தனது சிவஸ்தல யாத்திரையின்போது இவ்வழியே வந்துகொண்டிருந்தார். நீண்ட தூரம் நடந்து வந்ததாலும், வெயில் ஏறியதாலும் அவர் மிகவும் களைப்படைந்தார். அதோடு பசியும் அவரை வாட்ட, ஒரு மரத்தடியில் அமர்ந்தார். அப்போது ஒரு இடையன் அங்கு வந்தான். பசியோடு உள்ள சம்பந்தரைப் பார்த்த அவன் தன்னிடமிருந்த தயிரை பருகக் கொடுத்தான். தயிரைப் பருகி களைப்பு நீங்கிய சம்பந்தரை பார்த்து, இடையன் அவர் யார் என்று வினவினான். தனது சிவஸ்தல யாத்திரை பற்றிக் கூறிய சம்பந்தரிடம், இடையன் அருகிலுள்ள வனத்தில் ஒரு சிவன் இருப்பதைப் பற்றிக் கூறினான். இடையன் மூலமாக பசியாறிய சம்பந்தர், அவனது அழைப்பைத் தட்ட முடியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்றார். வழியில் ஒரு குளக்கரையில் நின்ற இடையன், சம்பந்தரைப் பார்த்து புன்னகைத்துவிட்டு மறைந்துவிட்டான். திகைப்படைந்த சம்பந்தர், சிவபெருமானை வேண்ட, சிவன் அவருக்கு காட்சியளித்து, தானே இடையன் வடிவில் வந்து அருள்புரிந்ததைக் கூறினார். இடையனாக வந்து, இடையிலேயே விட்டுவிட்டுச் சென்றதால், இறைவனை இடைச்சுரநாதர் என்று அழைத்து சம்பந்தர் பதிகம் பாடினார். சிவன் மறைந்த குளக்கரை, காட்சிகுளம் என்ற பெயரில் தற்போதும் இருக்கிறது.
 

இத்தலத்தில் சனத்குமார முனிவர் இறைவனை வழிபட்டு உபதேசம் பெற்றதால், சனத்குமாரபுரி என்றும், அம்பிகை பசு வடிவில் இறைவனை வழிபட்டதால் கோவர்த்தனபுரி என்றும் இத்தலம் பெயர் பெற்றிருந்தது. இடையனாக வந்து திருஞானசம்பந்தரை தடுத்து ஆட்கொண்டதால், சம்பந்தர் தனது பதிகத்தில் இடைச்சுரம் என்று பாடியுள்ளதால், அதன்பிறகு இத்தலம் திருஇடைச்சுரம் என்று பெயர் பெற்றது. இக்காலத்தில் இத்தலம் திருவடிசூலம் என்ற பெயரால் அறியப்படுகிறது.
 

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்துக்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இத்தல இறைவனின் மரகதலிங்கத் திருமேனி வண்ணம் கண்டு அதிசயித்து தனது பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் "இடைச்சுர மேவிய இவர்வண மென்னே" என்று பாடியுள்ளார்.

வரிவள ரவிரொளி யரவரை தாழ
வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக்
கரிவளர் தருகழல் கால்வல னேந்திக்
கனலெரி யாடுவர் காடரங் காக
விரிவளர் தருபொழில் இனமயி லால
வெண்ணிறத் தருவிகள் திண்ணென வீழும்
எரிவள ரினமணி புனமணி சாரல்
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே.

ஆற்றையு மேற்றதோர் அவிர்சடை யுடையர்
அழகினை யருளுவர் குழகல தறியார்
கூற்றுயிர் செகுப்பதோர் கொடுமையை யுடையர்
நடுவிரு ளாடுவர் கொன்றையந் தாரார்
சேற்றயல் மிளிர்வன கயலிள வாளை
செருச்செய வோர்ப்பன செம்முக மந்தி
ஏற்றையொ டுழிதரும் எழில்திகழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே.

கானமுஞ் சுடலையுங் கற்படு நிலனுங்
காதலர் தீதிலர் கனல்மழு வாளர்
வானமும் நிலமையும் இருமையு மானார்
வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார்
நானமும் புகையொளி விரையொடு கமழ
நளிர்பொழி லிளமஞ்ஞை மன்னிய பாங்கர்
ஏனமும் பிணையலும் எழில்திகழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே..

கடமணி மார்பினர் கடல்தனி லுறைவார்
காதலர் தீதிலர் கனல்மழு வாளர்
விடமணி மிடறினர் மிளிர்வதோ ரரவர்
வேறுமோர் சரிதையர் வேடமும் உடையர்
வடமுலை யயலன கருங்குருந் தேறி
வாழையின் தீங்கனி வார்ந்து தேனட்டும்
இடமுலை யரிவையர் எழில்திகழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே..

கார்கொண்ட கடிகமழ் விரிமலர்க் கொன்றைக்
கண்ணியர் வளர்மதி கதிர்விடக் கங்கை
நீர்கொண்ட சடையினர் விடையுயர் கொடியர்
நிழல்திகழ் மழுவினர் அழல்திகழ் நிறத்தர்
சீர்கொண்ட மென்சிறை வண்டுபண் செய்யுஞ்
செழும்புன லனையன செங்குலை வாழை
ஏர்கொண்ட பலவினொ டெழில்திகழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே..

தோடணி குழையினர் சுண்ணவெண் ணீற்றர்
சுடலையி னாடுவர் தோலுடை யாகப்
பீடுயர் செய்ததோர் பெருமையை யுடையர்
பேயுட னாடுவர் பெரியவர் பெருமான்
கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி
குரவமும் மரவமும் மன்னிய பாங்கர்
ஏடவிழ் புதுமலர் கடிகமழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே..

கழல்மல்கு காலினர் வேலினர் நூலர்
கவர்தலை யரவொடு கண்டியும் பூண்பர்
அழல்மல்கு மெரியொடும் அணிமழு வேந்தி
ஆடுவர் பாடுவர் ஆரணங் குடையர்
பொழில்மல்கு நீடிய அரவமு மரவம்
மன்னிய கவட்டிடைப் புணர்குயி லாலும்
எழில்மல்கு சோலையில் வண்டிசை பாடும்
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே..

தேங்கமழ் கொன்றையந் திருமலர் புனைவார்
திகழ்தரு சடைமிசைத் திங்களுஞ் சூடி
வீந்தவர் சுடலைவெண் ணீறுமெய் பூசி
வேறுமோர் சரிதையர் வேடமும் உடையர்
சாந்தமும் அகிலொடு முகில்பொதிந் தலம்பித்
தவழ்கன மணியொடு மிகுபளிங் கிடறி
ஏந்து வெள்ளருவிகள் எழில்திகழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே..

பலஇலம் இடுபலி கையிலொன்று ஏற்பர்
பலபுகழ் அல்லது பழியிலர் தாமுந்
தலையிலங் கவிரொளி நெடுமுடி யரக்கன்
தடக்கைகள் அடர்த்ததோர் தன்மையை யுடையர்
மலையிலங் கருவிகள் மணமுழ வதிர
மழைதவ ழிளமஞ்ஞை மல்கிய சாரல்
இலை இலவங்கமும் ஏலமும் கமழும்
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே..

பெருமைகள் தருக்கியோர் பேதுறு கின்ற
பெருங்கடல் வண்ணனும் பிரமனு மோரா
அருமையர் அடிநிழல் பரவிநின் றேத்தும்
அன்புடை யடியவர்க் கணியரு மாவர்
கருமைகொள் வடிவொடு சுனைவளர் குவளைக்
கயலினம் வயலிள வாளைகள் இரிய
எருமைகள் படிதர இளஅனம் ஆலும்
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே..

மடைச்சுர மறிவன வாளையுங் கயலும்
மருவிய வயல்தனில் வருபுனற் காழிச்
சடைச்சுரத் துறைவதோர் பிறையுடை யண்ணல்
சரிதைகள் பரவிநின் றுருகுசம் பந்தன்
புடைச்சுரத் தருவரைப் பூக்கமழ் சாரல்
புணர்மட நடையவர் புடையிடை யார்ந்த
இடைச்சுரம் ஏத்திய இசையொடு பாடல்
இவைசொல வல்லவர் பிணியிலர் தாமே.

திருஇடைச்சுரம் தலம் பற்றிய சம்பந்தரின் பதிகம் - பாடியவர் சுந்தர் ஓதுவார்

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/5/3/w600X390/P1020401.JPG http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/may/05/சகல-நோய்களும்-நீங்கும்-ஞானபுரீஸ்வரர்-கோவில்-திருஇடைச்சுரம்-2695478.html
2691996 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் இழந்த செல்வம் - பதவியை மீட்டுத் தரும் தேவபுரீசுவரர் கோவில், தேவூர் என்.எஸ். நாராயணசாமி Thursday, April 27, 2017 05:48 PM +0530  

பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 85-வது தலமாக இருப்பது திருதேவூர். குபேரனுக்கு அவனது செல்வத்தையும், இந்திரனுக்கு அவனது இந்திர பதவியையும் மீண்டும் அருளிய தலம் என்ற பெருமையைப் பெற்றது இத்தலம்.

     இறைவன் பெயர்: தேவபுரீசுவரர், கதலிவனேசர்
     இறைவி பெயர்: மதுரபாஷினி, தேன்மொழியம்மை
     இத்தலத்துக்கு திருஞானசம்பந்தரின் இரண்டு பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது?

திருவாரூரில் இருந்து நாகப்பட்டிணம் செல்லும் சாலை வழியில் கீவளூரை அடைந்து, அங்கிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் சென்றால் தேவூரை அடையலாம். திருவாரூர் - வலிவலம் நகரப் பேருந்து தேவூர் வழியாகச் செல்கிறது. தேவூரில் அக்ரஹாரம் நிறுத்தம் என்று கேட்டு இறங்கினால், கோயிலுக்கு எதிரிலேயே இறங்கலாம்.

ஆலய முகவரி
அருள்மிகு தேவபுரீஸ்வரர் திருக்கோயில்,
தேவூர், தேவூர் அஞ்சல்,
வழி கீவளூர், கீவளூர் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611 109.

இவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.இத்தலத்து இறைவனை தேவர்கள் வழிபட்டு அருள் பெற்றதால் தேவபுரீசுவரர் என்றும், குருபகவான் வழிபட்டு அருள் பெற்றதால் தேவகுருநாதர் என்றும் இங்குள்ள இறைவன் வணங்கப்படுகிறார். கோசெங்கட் சோழன் கட்டிய மாடக் கோவில்களில் இத்தலத்து ஆலயமும் ஒன்றாகும்.

மூன்று நிலைகளை உடைய கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்தவுடன் தென்புறம் தேவதீர்த்தம் இருக்கிறது. நேரே கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தியைக் காணலாம். கீழே உள்சுற்றில் அறுபத்துமூவர், வலம்புரி விநாயகர், சுப்பிரமணியர், அகல்யை வழிபட்ட லிங்கம், மகாலட்சுமி முதலிய சந்நிதிகள் உள்ளன. நடராச சபை தனியே அழகாக உள்ளது. கட்டுமலையின் அடிவாரத்தில் இந்திரன், முருகன், விநாயகர் சந்நிதிகள் அருகருகே உள்ளன. கட்டுமலை ஏறி மேலே சென்றால், கௌதமர் வழிபட்ட லிங்கம், சோமாஸ்கந்தர், நவக்கிரகம் ஆகியவற்றைக் காணலாம். மூலவர் தேவபுரீசுவரர், இறைவி மதுரபாஷினி ஆகிய இருவரும் கிழக்கு நோக்கி அருள் பாவிக்கின்றனர். தல விநாயகர், வலம்புரி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். கருவறையின் பின்புறச் சுவற்றில் எப்போதும் காணப்படும் லிங்கோத்பவருக்கு பதிலாக மகாவிஷ்ணு காட்சி கொடுக்கிறார்.

நவகிரகங்களில் வியாழ பகவான், தேவர்களின் குரு என்று போற்றப்படுகிறார். தேவர்களின் குருவான வியாழன் இத்தலத்தில் தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்றுள்ளார். ஆகையால், இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி தேவகுருநாதர் என்ற பெயருடன் காட்சி தருகிறார். இவரின் காலடியில் முயலகன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தலவிருட்சம்

இத்தலத்து தலவிருட்சம் கல்லிலேயே வளரும் அதிசய வாழை மரம் ஆகும். இது வெள்வாழை என்ற வகையைச் சார்ந்தது. தேவர்கள் இத்தலத்து இறைவனை வழிபட்டபோது, தேவலோகத்தில் உள்ள வெள்வாழையும் இறைவனை இங்கு வழிபட்டு தல விருட்சமாக மூலவர் அருகிலேயே அமைந்துவிட்டது. இந்த வாழை மரத்துக்கு இன்றும் நீர் ஊற்றுவதில்லை. கருங்கல்லால் ஆன கட்டுமலையில் வளர்வது இந்த தல விருட்சத்தின் தெய்வீகத் தன்மையைக் காட்டுகிறது. கல்லில் வளர்வதால் இவ்வாழை மரம் கல்வாழை என்று அழைக்கப்படுகிறது.

தலத்தின் சிறப்பு

குபேரனுடன் ராவணன் போரிட்டு குபேரனுடைய சங்கநிதி, பதுமநிதி என்ற செல்வக் கலசங்களை எடுத்துச் சென்றான். குபேர ஸ்தானத்தை இழந்த குபேரன், இந்தத் தேவூர் தலத்து இறைவனை செந்தாமரைப் புஷ்பங்களால் அர்ச்சித்து வழிபட்டான். இத்தலத்து இறைவன் அருளால் குபேர கலசங்களைத் திரும்பப் பெற்று மீண்டும் குபேர பட்டத்தையும் பெற்றான். குபேரனுக்கு பட்டம் வழங்கபட்ட தலம் இது. செல்வம் வளரவும், இழந்த செல்வத்தை மீண்டும் பெறவும் இத்தலத்து இறைவனை வழிபட்டால் குபேரனுக்குச் சமமான செல்வத்தைப் பெறலாம்.

இந்திரன், விருத்தாசுரனைக் கொன்ற பாவத்துக்கு இந்திர பட்டத்தை இழந்தபோது, இத்தலத்து இறைவனை வணங்கி சாபம் நீங்கப்பெற்று மீண்டும் இந்திர பட்டத்தைப் பெற்றான். ஆகையால், பதவி வேண்டுவோர், இழந்த பதவியை மீண்டும் பெற விழைவோர், வேலை வேண்டும் எனத் தவிப்போர் இத்தலத்து இறைவன் தேவபுரீசுவரரை வழிபட வேண்டும்.
 

இழந்த செல்வத்தையும், இழந்த பதவியையும் மட்டுமின்றி சூரிய தோஷம் உள்ளவர்களும் இத்தல இறைவனை வழிபடுகின்றனர். இங்கு இறைவனை சூரியன் வழிபட்டிருப்பதால், சூரியனால் இடர் வரும் என்று எண்ணுபவர்கள், ஜாதகத்தில் சூரிய தோஷம் உள்ளவர்கள் தேவபுரீசுவரரை வழிபட்டால் சூரியன் அருள் கிடைக்கும்.

கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமை சூரிய ஒளி இறைவன் மேல் பட்டு சூரிய பூஜை நடைபெறுகிறது. இதை தரிசிக்க பக்தர்கள் பெருமளவில் இங்கு வருகிறார்கள். மேலும் திருமணம் ஆகாதவர்கள், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், தேவூர் தலத்து இறைவனை திங்கள்கிழமைகளில் தொடர்ந்து வழிபட்டு வந்தால் பலன் பெறலாம்.

இத்தலம் குறித்த சம்பந்தரின் தேவாரம் - பாடியவர் இரா. குமரகுருபரன்

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/27/w600X390/DSCN7486.JPG http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/apr/28/parikaarath-thalangal-devabureeswarar-temple-thevur-2691996.html
2687870 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் திருமண பரிகாரத் தலம் வேதபுரீஸ்வரர் கோவில், திருவேற்காடு என்.எஸ். நாராயணசாமி Tuesday, April 25, 2017 05:33 PM +0530 பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 22-வது தலமாக திருவேற்காடு விளங்குகிறது. இத்தலத்தில் அகத்திய முனிவர் இறைவனை வழிபட்டு சிவபெருமானின் திருமண திருக்கோலத்தைக் கண்டதால், இத்தலம் ஒரு திருமண பிரார்த்தனைத் தலமாக கருதப்படுகிறது.

     இறைவன் பெயர்: வேதபுரீஸ்வரர், வேற்காட்டீசர்
     இறைவி பெயர்: பாலாம்பிகை, வேற்கண்ணி அம்மை
     இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது?

சென்னை - பூவிருந்தவல்லி பிரதான சாலையில் சுமார் 17 கி.மீ. பயணம் செய்து வேலப்பன்சாவடி என்ற இடம் அடைந்து, பிறகு வலது புறம் பிரியும் ஒரு கிளைச்சாலை வழியாக சுமார் 3 கி.மீ. சென்றால் இந்த சிவஸ்தலத்தை அடையலாம். சென்னை நகரின் பல பகுதிகளிலிருந்தும் திருவேற்காடு செல்வதற்கு மாநகரப் பேருந்து வசதிகள் உள்ளன. திருவேற்காடு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் ஆலயம் உள்ளது.
 

ஆலய முகவரி
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில்,
திருவேற்காடு அஞ்சல்,
திருவள்ளூர் மாவட்டம் – 600 077.

இவ்வாலயம் காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். இடையில், நடை சாத்தப்படுவதில்லை.

கோவில் விவரம்

திருவேற்காடு என்றதும், அநேகருக்கு அங்குள்ள தேவி கருமாரி அம்மன் ஆலயம்தான் நினைவுக்கு வரும். ஆனால் அதே திருவேற்காட்டில், பாடல் பெற்ற சிவஸ்தலமான வேதபுரீசுவரர் ஆலயம் இருப்பது பலருக்குத் தெரிந்திருக்காது. தேவி கருமாரி அம்மன் ஆலயத்திலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ள சிவாலயத்துக்குச் செல்ல நல்ல சாலை வசதி உள்ளது. ரிக், யஜுர், சாம, அதர்வண என்ற நான்கு வேதங்களும் வேல மரங்களாக நின்று இறைவனை இங்கு வழிபட்டதால் இத்தலம் வேற்காடு என்று பெயர் பெற்றது.
 

கிழக்கு நோக்கி உள்ள ஆலய முகப்பு கோபுரம் ஐந்து நிலைகளை உடையதாகும். கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் உள்ள விசாலமான வெளிப் பிராகாரத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம். அவற்றின் பின் உள்ள 2-வது வாயில் மூலமாக உள்ளே சென்றவுடன், நேர் எதிரே மூலவர் வேதபுரீஸ்வரர், சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். இறைவன் சந்நிதி விமானம் கஜபிரஷ்ட வடிவில் அமைந்துள்ளது. லிங்க உருவின் பின்புறம் சுவற்றில் சிவன் உமையம்மையோடு புடைப்புச் சிற்பமாக திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். ஆலய உட்பிராகாரத்தின் இடதுபுறம் அகத்தியர் மற்றும் சூரியன் திருமேனிகள் காட்சி தருகின்றன. தெற்கு உட்பிராகாரத்தில் நால்வர் சந்நிதி மற்றும் 63 நாயன்மார்களின் உருவச் சிலைகளைக் காணலாம்.
 

மேற்கு உட்பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அநபாயச் சோழன், சேக்கிழார் ஆகியோரின் உருவச் சிலைகளைக் காணலாம். வடக்குப் பிராகாரத்தில் தெற்கு நோக்கிய இறைவி பாலாம்பிகை சந்நிதி உள்ளது. மேலும் உட்பிராகாரத்தில் சண்டிகேஸ்வரர், கணபதி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் கோஷ்ட தெய்வங்களாக காட்சி அளிக்கின்றனர். ஆலய கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன், கிழக்கு வெளிப் பிராகாரத்தில் வலதுபுறத்தில் மேற்கு நோக்கிய சனீஸ்வரன் சந்நிதி உள்ளது. அதன் அருகில் மூர்க்க நாயனாரும் தனி சந்நிதியில் மேற்கு நோக்கிய நிலையில் காட்சி தருகிறார். இத்தலத்திலுள்ள முருகன் தன் கையில் வேல் இல்லாமல், வில்லும் அம்பும் ஏந்தியவாறு ஒரு காலை மயிலின் மீது வைத்துக்கொண்டு நின்றபடி பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். இந்த ஆலயத்தின் தல விருட்சம் வெள் வேல மரம். தீர்த்தம் வேலாயுத தீர்த்தம்.

புராணச் செய்தி

இத்தலம் முருகப் பெருமானின் வாழ்க்கையோடு சம்பந்தம் உடையதாகும். பிரணவத்துக்குப் பொருள் கூறமுடியாத பிரம்மாவை முருகப் பெருமான் கைது செய்துவிட்டார். அதனால் படைப்புத் தொழில் தடைபட்டது. இதையடுத்து, படைப்புத் தொழிலை முருகப் பெருமான் ஏற்றுக்கொண்டார். சிவபெருமான், நந்தியை முருகனிடம் அனுப்பி பிரம்மாவை விடுதலை செய்யும்படி கூறச் செய்தார். ஆனால், முருகன் அதற்கு சம்மதிக்கவில்லை. இதைத் தெரிந்துகொண்ட சிவபெருமான், தானே நேரில் வந்து முருகனிடம் பிரம்மாவின் படைப்புத் தொழில் தடைபடுவதால் ஏற்படும் சிக்கல்களை விளக்கி பிரம்மாவை சிறையிலிருந்து விடுதலை செய்தார்.

நந்தி மூலம் சொல்லி அனுப்பியும் தன் சொல்லுக்குக் கட்டுப்படாத முருகனை தண்டிக்கும் பொருட்டு, திருவேற்காட்டுக்குச் சென்று அங்கு தன்னை வழிபட்டு வரும்படி ஆணையிட்டார். அதன்படி முருகனும் திருவேற்காடு வந்து தனது வேலினால் ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி சிவனை வழிபட்டார். இறைவன் அம்பிகையோடு வந்து முருகனை திருக்கயிலைக்கு அழைத்துச் நென்றார். கருவறை மேற்குப் பிராகாரத்தில் உள்ள முருகன் சந்நிதியில், முருகனுக்கு முன்னால் ஒரு சிவலிங்கம் இருப்பதைக் காணலாம். இத்தகைய அமைப்பை வேறு எங்கும் காண முடியாது. முருகன் ஏற்படுத்திய தீர்த்தம் வேலாயுத தீர்த்தம் என்ற பெயரில் ஆலயத்தின் உள்ளே இருக்கிறது. இத்தலத்திலுள்ள முருகப்பெருமான், அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றுள்ளார்.
திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன.

இத்தலத்தில் உள்ள நவக்கிரக சந்நிதி பத்ம பீடத்தில் எண்கோண வடிவில் அமைந்துள்ளது சிறப்புக்குரியது. நவக்கிரகங்கள் தாங்கள் வழக்கமாக பார்க்கும் திசையில்லாமல் அனைத்தும் வட்ட வடிவமாக நம்மைப் பார்ப்பதுபோல் காட்சி அளிக்கின்றனர். ஆகையால், இவர்களை அனுக்கிரக நவக்கிரகம் என்பர். இத்தலம், நவக்கிரக தோஷங்கள் நீங்குவதற்குரிய ஒரு பரிகாரத் தலமாகும்.

மூர்க்க நாயானார்

63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயானார் பிறந்து, வாழ்ந்த தலம் திருவேற்காடு. திருவேற்காட்டில் வேளாண் குடியில் பிறந்த இவர், சிவனடியார்களுக்கு உணவு கொடுத்து வரும் சிவத்தொண்டைத் செய்து வந்தார். நாளடைவில் இவரின் செல்வம் யாவும் இவரின் இந்த சிவத்தொண்டில் கரைந்துவிட, வெளியூர் சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டு அதன்மூலம் வரும் செல்வத்தை சிவனடியார்களுக்கு உணவிட செலவு செய்து தனது திருத்தொண்டை தொடர்ந்து நடத்தினார். இவரது மூர்க்கச் செயலால் இவரை மூர்க்க நாயனார் என்றழைத்தார்கள். இறைவன் திருவருளால் இவரது குற்றங்கள் நீங்கின. பின் சிவபதவி அடைந்தார். இவர் அவதரித்த கார்த்திகை மூலம் நட்சத்திரத்தில் இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. இவருக்கு கோயிலின் வெளிச்சுற்று பிராகாரத்தில் தனி சன்னதி உள்ளது.
 

இத்தலத்தில் அகத்திய முனிவர் வழிபட்டு, சிவபெருமானின் திருமண திருக்கோலத்தைக் கண்டதால், இத்தலம் ஒரு திருமண தடை நீங்கும் தலமாக விளங்குகிறது. இத்தல இறைவனுக்கும், இறைவிக்கும் அபிஷேகம் செய்து மனமுருக வேண்டிக்கொண்டால், திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் தடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் இத்தலம் நவக்கிரக தோஷம் தீக்கும் தலமாகவும் உள்ளது. ஆதிசேஷனும் இத்தல இறைவனை வழிபட்டுள்ளதால், இத்தலத்தில் அரவம் தீண்டி யாரும் மரிப்பதில்லை என்று தல புராணம் விவரிக்கிறது. மேலும், இத்தல இறைவனுக்கு சாம்பிராணி, சந்தனம், நறுமலர்கள் கொடுத்து வழிபடுவர்களின் துன்பங்கள் யாவும் நீங்குவது உறுதி. இதை சம்பந்தப் பெருமான் தனது இத்தல பதிகத்தின் 3-வது பாடலில் "போதும் சாந்தும் புகையும் கொடுத்தவர்க்கு ஏதம் எய்துதல் இல்லையே" என்று தெளிவுபட குறிப்பிடுகிறார்.
 

சம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்துக்கான இப்பதிகம், முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

1. ஒள்ளிது உள்ளக் கதிக்கு ஆம் இவன் ஒளி
வெள்ளியான் உறை வேற்காடு
உள்ளியார் உயர்ந்தார் இவ்வுலகினில்
தெள்ளியார் அவர் தேவரே.
 
2. ஆடல் நாகம் அசைத்து அளவில்லாது ஓர்
வேடங் கொண்டவன் வேற்காடு
பாடியும் பணிந்தார் இவ்வுலகினில்
சேடர் ஆகிய செல்வரே.
 
3. பூதம் பாடப் புறங்காட்டு இடை ஆடி
வேத வித்தகன் வேற்காடு
போதும் சாந்தும் புகையும் கொடுத்தவர்க்கு
ஏதம் எய்துதல் இல்லையே.

4. ஆழ்கடல் எனக் கங்கை கரந்தவன்
வீழ்சடையினன் வேற்காடு
தாழ்வு உடை மனத்தால் பணிந்து ஏத்திட
பாழ்படும் அவர் பாவமே.

5. காட்டினாலும் அயர்த்திடக் காலனை
வீட்டினான் உறை வேற்காடு
பாட்டினாறல் பணிந்து ஏத்திட வல்லவர்
ஓட்டினார் வினை ஒல்லையே.

6. தோலினால் உடை மேவ வல்லான் சுடர்
வேலினான் உறை வேற்காடு
நூலினால் பணிந்து ஏத்திட வல்லவர்
மாலினார் வினை மாயுமே.

7. மல்லல் மும்மதில் மாய்தர எய்ததோர்
வில்லினான் உறை வேற்காடு
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
செல்ல வல்லவர் தீர்க்கமே.

8. மூரல் வெண்மதி சூடும் முடியுடை
வீரன் மேவிய வேற்காடு
வாரமாய் வழிபாடு நினைந்து அவர்
சேர்வர் செய் கழல் திண்ணமே.

9. பரக்கினார் படு வெண்தலையில் பலி
விரக்கினான் உறை வேற்காட்டூர்
அரக்கன் ஆண்மை அடரப்பட்டான் இறை
நெருக்கினானை நினைமினே.

10. மாறிலா மலரானொடு மாலவன்
வேறு அலான் உறை வேற்காடு
ஈறு இலா மொழியே மொழியா எழில்
கூறினார்க்கு இல்லை குற்றமே.
 
11. விண்ட மாம்பொழில் சூழ் திருவேற்காடு
கண்டு நம்பன் கழல்பேணிச்
சண்பை ஞானசம்பந்தன செந்தமிழ்
கொண்டு பாடக் குணமாமே.

இத்தலத்தைப் பற்றிய சம்பந்தரின் தேவாரம் - பாடியவர் பாலச்சந்திரன்

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/20/w600X390/DSCN0261.JPG http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/apr/21/parikarath-thalangal-vedhapureeswarar-temple-thiruverkadu-2687870.html
2678627 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் இழந்த பதவியை மீண்டும் பெற… யாழ்முறிநாதர் கோவில், திருதருமபுரம் என்.எஸ். நாராயணசாமி Saturday, April 8, 2017 12:38 PM +0530  

இழந்த பதவி, பெருமைகளை மீட்பதற்கான பரிகாரத் தலமாக இருப்பது திருதரும்புரத்தில் உள்ள யாழ்முறிநாதர் கோவில்.

      இறைவன் பெயர்: யாழ்முறிநாதர், தர்மபுரீஸ்வரர்
      இறைவி பெயர்: மதுர மின்னம்மை, தேனமிர்தவல்லி
      இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது?

இத்தலம், காரைக்கால் நகரில் இருந்து மேற்கே திருநள்ளாறு செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்றவுடன், இடதுபுறம் காணப்படும் மாதா கோவில் அருகில் திரும்பிச் சென்று (பாதையில் சாலை பிரியும் இடத்தில் பெயர்ப் பலகையும் உள்ளது), பின் வலதுபுறமாகச் சென்று இத்தலத்தை அடையலாம். காரைக்காலில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு யாழ்முறிநாதேஸ்வரர் திருக்கோவில்,
தருமபுரம்,
காரைக்கால் அஞ்சல்,
புதுச்சேரி – 609 602.

இவ்வாலயம், தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


தல வரலாறு
மார்க்கண்டேயர் உயிரைப் பறிக்க வந்த எமதர்மனை திருக்கடையூரில் சம்ஹாரம் செய்து அவரது பதவியை சிவன் பறித்தார். இதனால், பூமியில் பிறந்த உயிர்கள் அனைத்தும் இறப்பின்றி பெருகின. பாரம் தாங்காத பூமிதேவி, எமதர்மனை உயிர்ப்பிக்கும்படி வேண்டினாள். எமதர்மனும் தன் தவறை மன்னித்து மீண்டும் பணி வழங்கும்படி சிவனிடம் வேண்டிக்கொண்டார். பூலோகத்தில் தவமிருந்து தன்னை வழிபட்டுவந்தால் இழந்த பணி மீண்டும் கிடைக்கப்பெறும் என்று சிவபெருமான் எமனுக்கு அருள் செய்தார். அதன்படி, எமன் பூவுலகில் பல சிவஸ்தலங்களுக்கு யாத்திரை சென்றார். இத்தலம் வந்த எமதர்மன், இங்கு தீர்த்தம் உண்டாக்கி தவம் இருந்தார். அவருக்கு காட்சி தந்த சிவன், தகுந்த காலத்தில் பணி கிடைக்கப்பெறும் என்றார். தனக்கு அருள் செய்ததுபோலவே இங்கு வரும் மற்ற பக்தர்களுக்கும் பணி தந்து அருள வேண்டும் என எமன் கேட்டுக் கொண்டார். எமதர்மனின் வேண்டுகோளின்படி சிவன் இங்கே சுயம்பு மூர்த்தியாக இடம் கொண்டார். இங்கு தவம் செய்து சிவன் அருள் பெற்ற எமனுக்கு மீண்டும் அவரது பதவியைத் திருப்பிக் கொடுத்த தலம் திருபைஞ்சிலி ஆகும்.
 

பணி இடை நீக்கம் பெற்றவர்கள், பதவியை இழந்தவர்கள், வேலை கிடைக்காமல் வருந்துபவர்கள் இத்தலம் வந்து யாழ்முறிநாதரையும், அம்பாளையும் வழிபட தகுந்த வேலை கிடைத்தும், இழந்த வேலையை மீண்டும் பெற்றும் வாழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சிவனடியார்களுக்கு கேடு செய்தல், அவர்களை நிந்தித்தல், அவமதித்தல் போன்ற செயல்களும் தோஷமாகும். இவற்றிலிருந்து விடுபட யாழ்முறிநாதரை வழிபட்டு நிவாரணம் பெறலாம்.,  
 

மார்க்கண்டேயரின் உயிரைப் பறித்த பிழை நீங்க எமன் (தருமன்) வழிபட்ட பதியாதலின் தருமபுரம் என்று பெயர் பெற்றது. பாண்டவர்களில் தருமன் பூசித்துப் பேறு பெற்றமையினால் இப்பெயர் வந்தது என்றும் கூறுவர். திருஞானசம்பந்தரின் யாழ்முறிப் பதிகம் பெற்ற சிறப்புடையது இத்தலம். திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரத் தலமான இவ்விடத்துக்கு ஒருமுறை சம்பந்தர் வருகை தந்தார். அவருடன், சம்பந்தர் பதிகங்களை யாழில் பாடிவரும் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் வந்திருந்தார். திருநீலகண்ட யாழ்ப்பாணரது தாயார் பிறந்த இடமாதலின் திருஞானசம்பந்தர் இங்கு எழுந்தருளியபோது, பாணரது சுற்றத்தவர்கள் இவர் யாழ்கொண்டு வாசிப்பதனால்தான் திருஞானசம்பந்தர் பாடல்கள் சிறந்து விளங்குகின்றன என்று கூறினர். அதைக் கேட்ட பாணர் வருந்தி, திருஞானசம்பந்தரிடம் முறையிட்டார். திருஞானசம்பந்தரும் “மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்” என்று தொடங்கும் பதிகம் பாடினார். திருஞானசம்பந்தரின் இசை திருநீலகண்ட யாழ்ப்பாணரின் யாழிசையில் அடங்காமல் போக, பாணர் யாழை உடைக்கச் சென்றார். திருஞானசம்பந்தர் தடுத்து, பாணரை இயன்ற அளவில் வாசிக்கச் சொன்னார். இறைவனும் யாழ்முறிநாதர் என்று பெயர் பெற்றார்
 

சுவாமி சந்நிதி முகப்பு வாயில் மேலே நடுவில் ரிஷபாரூடரும், ஒருபுறம் சம்பந்தர் பாட, யாழ்ப்பாணர் யாழ் வாசிக்க அவர் மனைவி பக்கத்தில் நிற்பதுபோலவும், மறுபுறம் சம்பந்தர், யாழுடன் பாணர், அவர் மனைவி ஆகியோருடன் நிற்பதுபோலவும் சுதை வேலைப்பாடுகள் உள்ளன.

கோவில் அமைப்பு

தருமை ஆதீனத்தின் நிர்வாகத்தில் கிழக்கு நோக்கி உள்ள இக்கோவிலுக்கு ஐந்து நிலை ராஜகோபுரம் அமைக்கும் திருப்பணி வேலைகள் நடந்து வருகின்றன. அடுத்துள்ள மூன்று நிலை கோபுரத்துக்கு முன் நந்தி மண்டபம் மற்றும் பலிபீடம் இருக்கின்றன. இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால், வெளிப் பிராகாரத்தில் வலதுபுறம் அம்பாள் மதுரமின்னம்மை சந்நிதி உள்ளது. வெளிப் பிராகார மேற்குச் சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன. அம்பாள் சந்நிதி முன் மண்டபத் தூணில் துவார விநாயகரும் சுப்பிரமணியரும் காட்சி தருகின்றனர். வெளிப் பிராகாரத்தில் வடகிழக்கு மூலையில் நவக்கிரக சந்நிதி அமைந்துள்ளது.


இரண்டாம் கோபுர வாயிலுக்கு நேரே 16 கால் மண்டபத்தை அடுத்து, கருவறையில் இறைவன் யாழ்முறிநாதர் சிறிய பாணத்துடன் நாகாபரணம் சார்த்தப்பட்டு கிழக்கு நோக்கி அழகாக தரிசனம் தருகிறார். கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தணகணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை சந்நிதிகள் உள்ளன. சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது. தட்சிணாமூர்த்தி இருபுறமும் சனகாதி முனிவர்கள் அமர்ந்திருக்க, முயலகன் மீது காலை ஊன்றியபடி எழுந்தருளியுள்ளார். லிங்கோத்பவர், இருபுறமும் பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் இருக்க காட்சி தருகிறார். தெற்குப் பிராகாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மேதாதட்சிணாமூர்த்தி திருவுருவம் தரிசிக்க வேண்டிய ஒன்று. அதேபோல, உற்சவ மூர்த்திகளுள் ஸ்ரீயாழ்முறிநாதரின் திருவுருவமும் பார்த்து மகிழ வேண்டிய ஒன்றாகும்.
 

இத்தலத்தின் தீர்த்தமாக விஷ்ணு தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், தரும தீர்த்தம் ஆகியவை இக்கோவிலின் வடபுறமும் மற்றும் முன்புறம் அமைந்துள்ளன. தலமரமாக வாழை உள்ளது.
 

திருஞானசம்பந்தர் பாடியருளியுள்ள இத்தலத்துக்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இதுவே யாழிசையில் அடங்காமல் போன பதிகமாகும்.

மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்
நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்
அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை
இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே
தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை
எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.
 
பொங்கு நடைப்புக லில்விடை யாமவ ரூர்திவெண்
பொடி யணி தடங் கொள்மார் புபூண நூல்புரள
மங்குலி டைத்தவ ழும்மதி சூடுவ ராடுவர்
வளங் கிளர் புன லரவம் வைகிய சடையர்
சங்கு கடற்றிரை யாலுதை யுண்டுச ரிந்திரிந்
தொசிந் தசைந் திசைந்து சேரும் வெண்மணற் குவைமேல்
தங்கு கதிர்மணி நித்தில மெல்லிரு ளொல்கநின்
றிலங் கொளிந் நலங் கெழிற் றருமபு ரம்பதியே.
 
விண்ணுறு மால்வரை போல்விடை யேறுவர் ஆறுசூ
டுவர் விரி சுரி யொளிகொள் தோடுநின் றிலங்கக்
கண்ணுற நின்றொளி ருங்கதிர் வெண்மதிக் கண்ணியர்
கழிந் தவ ரிழிந் திடும் முடைதலை கலனாப்
பெண்ணுற நின்றவர் தம்முரு வம்மயன் மால்தொழவ்
வரி வையைப் பிணைந் திணைந் தணைந்ததும் பிரியார்
தண்ணிதழ் முல்லையொ டெண்ணிதழ் மௌவல் மருங்கலர்
கருங் கழிந் நெருங் குநற் றரும புரம்பதியே.

வாருறு மென்முலை நன்னுதல் ஏழையொ டாடுவர்
வளங் கிளர் விளங் குதிங் கள்வைகிய சடையர்
காருற நின்றல ரும்மலர்க் கொன்றை யங்கண்ணியர்
கடு விடை கொடி வெடிகொள் காடுறை பதியர்
பாருற விண்ணுல கம்பர வப்படு வோரவர்
படு தலைப் பலி கொளல் பரிபவந் நினையார்
தாருறு நல்லர வம்மலர் துன்னிய தாதுதிர்
தழை பொழின் மழைந் நுழை தருமபு ரம்பதியே.
 
நேரும வர்க்குண ரப்புகி லில்லைநெ டுஞ்சடைக்
கடும் புனல் படர்ந் திடம் படுவதொர் நிலையர்
பேரும வர்க்கெனை யாயிரம் முன்னைப்பி றப்பிறப்
பிலா தவ ருடற் றடர்த்த பெற்றி யாரறிவார்
ஆரம வர்க்கழல் வாயதொர் நாகம ழஃகுறவ்
வெழுஃ கொழும் மலர் கொள்பொன் னிதழிநல் லலங்கல்
தாரம வர்க்கிம வான்மகள் ஊர்வது போர்விடை
கடி படு செடி பொழிற் றருமபு ரம்பதியே.
 
கூழையங் கோதைகு லாயவள் தம்பிணை புல்கமல்
குமென் முலைப் பொறி கொள்பொற் கொடியிடைத் துவர்வாய்
மாழையொண் கண்மட வாளையொர் பாகம கிழ்ந்தவர்
வலம் மலி படை விடை கொடிகொ டும்மழுவாள்
யாழையும் மெள்கிட வேழிசை வண்டுமு ரன்றினந்
துவன் றிமென் சிறஃ கறை யுறந்நறவ் விரியும்நற்
தாழையும் ஞாழலும் நீடிய கானலி னள்ளிசைப்
புள் ளினந் துயில் பயில் தருமபு ரம்பதியே.
 
தேமரு வார்குழல் அன்ன நடைப்பெடை மான்விழித்
திருந் திழை பொருந்து மேனி செங்கதிர் விரிய
தூமரு செஞ்சடை யிற்றுதை வெண்மதி துன்றுகொன்றை
தொல் புனல் சிரங் கரந் துரித்த தோலுடையர்
காமரு தண்கழி நீடிய கானல கண்டகங்
கடல் அடை கழி யிழிய முண்ட கத்தயலே
தாமரை சேர்குவ ளைப்படு கிற்கழு நீர்மலர்
வெறி கமழ் செறி வயற் றருமபு ரம்பதியே.
 
தூவண நீறக லம்பொலி யவ்விரை புல்கமல்
குமென் மலர் வரை புரை திரள்பு யம்மணிவர்
கோவண மும்முழை யின்னத ளும்முடை யாடையர்
கொலை மலி படையொர் சூல மேந்திய குழகர்
பாவண மாவல றத்தலை பத்துடை யவ்வரக்
கனவ் வலியொர் கவ்வை செய் தருள்புரி தலைவர்
தாவண ஏறுடை யெம்மடி கட்கிடம் வன்றடங்
கடல் லிடுந் தடங் கரைத் தருமபு ரம்பதியே.
 
வார்மலி மென்முலை மாதொரு பாகம தாகுவர்
வளங் கிளர் மதி யரவம் வைகிய சடையர்
கூர்மலி சூலமும் வெண்மழு வும்மவர் வெல்படை
குனி சிலை தனிம் மலைய தேந்திய குழகர்
ஆர்மலி ஆழிகொள் செல்வனும் அல்லி கொள்தாமரைம்
மிசை யவன் அடிம் முடி யளவு தாமறியார்
தார்மலி கொன்றைய லங்கலு கந்தவர் தங்கிடந்
தடங் கடல் லிடுந் திரைத் தருமபு ரம்பதியே.
 
புத்தர் கடத்துவர் மொய்த்துறி புல்கிய கையர்பொய்ம்
மொழிந் தழிவில் பெற்றி யுற்ற நற்றவர் புலவோர்
பத்தர்கள் அத்தவ மெய்ப்பய னாகவு கந்தவர்
நிகழ்ந் தவர் சிவந் தவர் சுடலைப்பொடி யணிவர்
முத்தன வெண்ணகை யொண்மலை மாதுமை பொன்னணி
புணர் முலை யிணை துணை யணைவ தும்பிரியார்
தத்தரு வித்திர ளுந்திய மால்கட லோதம்வந்
தடர்ந் திடும் தடம் பொழிற் றருமபு ரம்பதியே.
 
பொன்னெடு நன்மணி மாளிகை சூழ்விழ வம்மலி
பொரு புனல் திரு வமர் புகலியென் றுலகிற்
தன்னொடு நேர்பிற வில்பதி ஞானசம் பந்தனஃ
துசெந் தமிழ்த் தடங் கடற் றருமபு ரம்பதியைப்
பின்னெடு வார்சடை யிற்பிறை யும்மர வும்முடை
யவன் பிணை துணை கழல்கள் பேணுத லுரியார்
இன்னெடு நன்னுல கெய்துவ ரெய்திய போகமும்
உறு வர்க ளிடர் பிணி துயரணை விலரே.

திருஞானசம்பந்தரின் தேவாரம் - பாடியவர் பாலச்சந்திரன் மற்றும் சுந்தர்

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/4/4/w600X390/dharmapuram1.jpg http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/apr/07/இழந்த-பதவியை-மீண்டும்-பெறhellip-யாழ்முறிநாதர்-கோவில்-திருதருமபுரம்-2678627.html
2674386 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் செவ்வாய் தோஷ பரிகாரத் தலம் - சூட்சுமபுரீஸ்வரர் கோவில், சிறுகுடி என்.எஸ். நாராயணசாமி Tuesday, March 28, 2017 06:15 PM +0530 தமிழ்நாட்டில் உள்ள நவகிரகத் தலங்களில் செவ்வாய்க்கு உரிய தலமாகப் போற்றப்படுவது வைத்தீஸ்வரன்கோவில். இதைத் தவிர வேறு சில சிவத்தலங்களும், வைணவத்தலங்களும்கூட செவ்வாய் தோஷத்துக்கான பரிகாரத் தலங்களாக பக்தர்களால் வழிபடப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான், பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 60-வது தலமாக இருக்கும் திருச்சிறுகுடி என்ற இத்தலம்.

    இறைவன் பெயர்: சூட்சுமபுரீஸ்வரர், மங்களநாதர்
    இறைவி பெயர்: மங்களநாயகி
    இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது?

கும்பகோணம் - நாச்சியார்கோவில் - கூந்தலூர் - பூந்தோட்டம் சாலையில், கூந்தலூர் கடந்து கடகம்பாடியை அடைந்து, அங்கிருந்து வடக்கே அரசலாற்றுப் பாலம் தாண்டி, சுமார் 3 கி.மீ. தொலைவில் சிறுகுடி தலம் இருக்கிறது. திருபாம்புரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற தலத்திலிருந்து மேற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரளத்தில் இருந்தும் திருபாம்புரம் வழியாக இத்தலத்துக்கு வர சாலை வசதி உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில்,
சிறுகுடி, சரபோஜிராஜபுரம் அஞ்சல்,
வழி பூந்தோட்டம், குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 609 503.

இக்கோயில், தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

தல வரலாறு

ஒருமுறை, கயிலாயத்தில் பரமசிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடினார்கள். அதில பார்வதி வெற்றிபெற்றாள். அதனால் வெட்கம் அடைந்த சிவபெருமான் எங்கோ மறைந்துவிட்டார். கலக்கமடைந்த பார்வதி, சிறுகுடி தலத்துக்கு வந்து மங்கள தீர்த்தத்தை உண்டாக்கி, தன் கையால் பிடி மணலை எடுத்து அதை சிவலிங்கமாகப் பிடித்துவைத்து வழிபட்டாள். அம்பாளுக்கு சிவபெருமான் காட்சி கொடுத்து அவளை மீண்டும் ஏற்றுக்கொண்டதாக தலபுராணம் கூறுகிறது. சிறுபிடி என்பது மருவி சிறுகுடி என்றாயிற்று.
 

திருக்கயிலையில் இருக்கும் இறைவன் சூட்சுமமாக மறைந்து இங்கு மீண்டும் தோன்றியதால், இத் தலத்துக்கு சூட்சுமபுரி என்றும், இறைவனுக்கு சூட்சுமபுரீஸ்வரர் என்றும் பெயர்கள் உண்டாயின. இறைவன் சிறுகுடியீசர், மங்களநாதர் என்ற மற்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.

கோவில் அமைப்பு

மூன்று நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கியவாறு உள்ளது. வாயிலின் உள்ளே சென்றால் பலிபீடம், நந்தி ஆகியன உள்ளன. இவ்வாலயத்தில் கொடிமரம் இல்லை. வெளிப்பிராகாரத்தில் மங்களவிநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சந்நிதிகள் ஆகியவை உள்ளன. முன் மண்டபத்தில் நவகிரக சந்நிதி உள்ளது. நவகிரகங்களில் சனீஸ்வரனுக்கு கீழே சனைச்சரன் என்று பெயர் எழுதப்பட்டுள்ளது. இதுவே சரியான பெயர் என்று ஆலய குருக்கள் கூறினார். இதற்கு, மெதுவாக ஊர்ந்து செல்பவன் என்று பொருள். இதுவே மருவி சனீச்வரன் என்றாயிற்று. நவகிரக சந்நிதிக்கு அருகில் ஞானசம்பந்தரின் பெரிய மூலத் திருமேனி, இடுப்பில் அரைஞாண் கயிறு, கழுத்து மாலை ஆகியவற்றுடன் அழகாகத் தோற்றமளிக்கிறார். முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அம்பாள் மங்களநாயகி சந்நிதி உள்ளது. அபயவரதத்துடன் நின்ற திருக்கோலத்தில் அம்பாள் காட்சி அளிக்கிறாள். இத்தலத்தில் அம்பாளுக்குத்தான் அபிஷேகம் நடைபெறுகிறது.
 

முன் மண்டபம் வழியே உள்ளே சென்றால் நேரே மூலவர் சூட்சுமபுரீஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. மூலவர் திருமேனி சிறியது. அம்பிகை கைப்பிடியளவு மணலால் பிடித்துவைத்து மங்கள தீர்த்தம் உண்டாக்கி வழிபட்ட தலம். சிறுகுடியீசர் என்ற பெயருக்கேற்றவாறு மிகச் சிறிய லிங்கம். ஒருபிடி அளவே உள்ள மண் லிங்கம் ஆதலால் இதற்கு அபிஷேகம் கிடையாது. அம்பாள் மங்களநாயகிக்குத்தான் அபிஷேகம் செய்யப்படுகிறது. சிவலிங்கத்தின் நெற்றியில் பள்ளமும் இருபுறமும் கைபிடித்த அடையாளமும் உள்ளது. இறைவனை அம்பிகை ஆலிங்கனம் செய்துகொண்டதால் இத்தழும்புகள் உண்டானது என்பர். லிங்கத் திருமேனி எப்போதும் கவசம் சாத்தியே வைக்கப்பட்டுள்ளது. கருவறை தெற்கு கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மேற்கு கோஷ்டத்தில் மகாவிஷ்ணு, வடக்கு கோஷ்டத்தில் பிரம்மா, வழக்கமாக துர்க்கை இருக்குமிடத்தில் அர்த்தநாரீஸ்வரரை காணலாம். சண்டிகேஸ்வரர் சந்நிதியும் உள்ளது.
 

உற்சவ மூர்த்திகளுள் சந்தோஷ ஆலிங்கன மூர்த்தி சிறப்பானது. அம்பிகையின் பூஜைக்கு மகிழ்ந்து ஆலிங்கனம் செய்யும் அமைப்பில் அவள் தோள் மீது கை போட்டுக்கொண்டு இறைவன் காட்சி அளிக்கிறார். பார்த்து ரசிக்க வேண்டிய திருஉருவம்.. இத்திருத்தலத்தில் செவ்வாய் பகவான் இறைவனை வழிபட்டுள்ளார். இத்தலத்தில் அங்காரகனுக்கு தனி சந்நிதி உள்ளது.

செவ்வாய்தோஷம் உடையவர்கள், திருமணமாகாதவர்கள் இங்குவந்து வழிபட்டால், அங்காரக தோஷம் நிவர்த்தியாகிறது என்பது இங்கு பிரசித்தம். செவ்வாய்க்கிழமை வழிபாடு செய்வது விசேஷமானது. ஆலயத்துக்கு வெளியே, நேர் எதிரே உள்ள மங்கள தீர்த்தத்தில் நீராடி கோயிலுக்குச் சென்று அங்காரகனை வழிபட்டு வந்தால், செவ்வாய் தோஷங்கள் நீங்கி நலம் பெறலாம். வேற்று மதத்தினர்கள்கூட இங்கு வந்து செவ்வாய் தோஷம் நீங்க வழிபடுவதைப் பார்க்கலாம்.
 

திருஞானசம்பந்தர் பாடியருளியுள்ள இத்தலத்துக்கான இப்பதிகம், 3-ம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. முதல் பாடலில் சிறுகுடி இறைவனை வழிபடுவர்கள் இவ்வுலகுக்கு அப்பால் உள்ள சிவலோகத்தை அடைவார்கள் என்று குறிப்பிடுகிறார். தனது பதிகத்தின் 11-வது பாடலில், தேன் வண்டுகள் விரும்பும் பொழில் சூழ்ந்த சிறுகுடி என்று பாடியுள்ளார். அந்தக் கூற்றை மெய்ப்பிப்பது போன்று இன்றும் இவ்வாலயத்தின் இறைவனுக்கு முன் உள்ள மண்டபத்தில் ஒரு தேன்கூடு இருப்பதைப் பார்க்கலாம். சாளரம் அமைத்து அதன் வழியே வெளியிலிருந்து தேனீக்கள் வந்துபோகுமாறு செய்துள்ளனர், மண்டபத்தின் உட்புறத்தில் இரும்பு வலை போட்டுப் பாதுகாக்கப்பட்டு உள்ளது.

திடமலி மதிலணி சிறுகுடி மேவிய
படமலி அரவு உடையீரே
படமலி அரவு உடையீர் உமைப் பணிபவர்
அடைவதும் அமருலகு அதுவே.

சிற்றிடையுடன் மகிழ் சிறுகுடி மேவிய
சுற்றிய சடைமுடியீரே
சுற்றிய சடைமுடிர் உம தொழுகழல்
உற்றவர் உறுபிணி இலரே.

தெள்ளிய புனலணி சிறுகுடி மேவிய
துள்ளிய மானுடையீரே
துள்ளிய மானுடையீர் உம் தொழுகழல்
உள்ளுதல் செயநலம் உறுமே.

செந்நெல வயலணி சிறுகுடி மேவிய
ஒன்னலர் புரம் எரித்தீரே
ஒன்னலர் புரம் எரித்தீர் உமை உள்குவார்
சொன்னலம் உடையவர் தொண்டே.

செற்றினின் மலிபுனல் சிறுகுடி மேவிய
பெற்றிகொள் பிறைமுடி யீரே
பெற்றிகொள் பிறைமுடியீர் உமைப் பேணி நஞ்சு
அற்றவர் அருவினை இலரே.

செங்கயல் புனலணி சிறுகுடி மேவிய
மங்கையை இடமுடையீரே
மங்கையை இடமுடையீர் உமை வாழ்த்துவார்
சங்கை அது இலர் நலர் தவமே.

செறிபொழில் தழுவிய சிறுகுடி மேவிய
வெறிகமழ் சடைமுடியீரே
வெறிகமழ் சடைமுடியீர் உமை விரும்பி மெய்ந்
நெறி உணர்வோர் உயர்ந்தோரே.

திசையவர் தொழுது எழு சிறுகுடி மேவிய
தசமுகன் உரநெரித்தீரே
தசமுகன் உரநெரித்தீர் உமைச் சார்பவர்
வசையறும் அதுவழி பாடே.

செருவரை வயல் அமர் சிறுகுடி மேவிய
இருவரை அசைவுசெய்தீரே
இருவரை அசைவு செய்தீர் உமை யேத்துவார்
அருவினை யொடு துயர் இலரே.

செய்த்தலை புனலணி சிறுகுடி மேவிய
புத்தரோடு அமண் புறத்தீரே
புத்தரோடு அமண் புறத்தீர் உமைப் போற்றுதல்
பத்தர்கள் தம்முடைப் பரிசே.

தேன் அமர் பொழில் அணி சிறுகுடி மேவிய
மான் அமர் கரம் உடையீரே
மான் அமர் கரம் உடையீர் உமை வாழ்த்திய
ஞானசம்பந்தன தமிழே.

திருஞானசம்பந்தரின் தேவாரம் - பாடியவர் சுந்தர் ஓதுவார்

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/28/w600X390/DSCN2838.JPG http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/mar/31/செவ்வாய்-தோஷ-பரிகாரத்-தலம்---சூட்சுமபுரீஸ்வரர்-கோவில்-சிறுகுடி-2674386.html
2671357 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் சந்திர தோஷம் - தீராத நோய்களில் இருந்து நிவாரணம் பெற கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி என்.எஸ். நாராயணசாமி Thursday, March 23, 2017 04:17 PM +0530 காவிரியின் வடகரை தலங்களுள் 42–வது தலமாகத் திகழ்கிறது திருந்துதேவன்குடி. திருந்துதேவன்குடி என்னும் ஊர் இப்போது இல்லை. கோவில் மட்டும் இருக்கிறது. ஊர் இருந்த இடம் நன்செய் நிலங்களாக இருக்கின்றன. கடக ராசிக்காரர்கள் (புனர்பூசம், பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) வழிபட வேண்டிய திருத்தலம் இதுவாகும்.

     இறைவன் பெயர்: கற்கடேஸ்வரர்
     இறைவி பெயர்: அருமருந்துநாயகி, அபூர்வநாயகி

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றுள்ளது.

எப்படிப் போவது?

கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருவியலூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் திருந்துதேவன்குடி சிவஸ்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து திருவிசநல்லூர் செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு. திருவிசநல்லூரில் இருந்து நடந்தோ அல்லது ஆட்டோ மூலமோ கற்கடேஸ்வரர் கோவில் சென்று வரலாம்.

ஆலய முகவரி

அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோவில்,
நண்டாங்கோவில், திருந்துதேவன்குடி,
திருவிசலூர் அஞ்சல்,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 612 105.

இக்கோயில், காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தற்போது நண்டாங்கோவில் என்று அறியப்படும் இத்தலம், தேவார காலத்தில் திருந்துதேவன்குடி என்று அழைக்கப்பட்டது. கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில் கற்கடேஸ்வரர் ஆலயம் ஆகும். தல புராணப்படி, இந்திரன் சாபத்திற்கு ஆளான கந்தர்வன் ஒருவன் நண்டாக இவ்வாலயம் வந்து பூசித்தான். நண்டு தினமும் நள்ளிரவில் தீர்த்த குளத்தில் தாமரை மலரை பறித்து கோமுகம் வழியே உள்ளே சென்று இறைவனுக்கு சாத்தி வழிபட்டு வந்தது. இந்திரன் அதிகாலையில் இந்த ஆலயம் வந்து தாமரை மலர்சூட்டி வழிபடுவது வழக்கம். தனக்கு முன் மலர் சூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதைக் கண்காணித்தபோது, நள்ளிரவில் தீர்த்த குளத்தில் இருந்து தாமரை மலர் ஒன்று கோமுகம் வழியே ஈசனிடம் செல்வது கண்டு வியந்தான். மேலும், அகழியில் தன்னால் பயிரிடப்பட்ட தாமரை மலர்கள் தினமும் குறைவது கண்டு ஒருநாள் மிக கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது ஒரு நண்டு வந்து தாமரை மலர்களைப் பறித்து இறைவனுக்கு சாத்தி வழிபடுவதைக் கண்டான். கோபம் கொண்ட இந்திரன், லிங்கத்தின் மீதேறி தாமரை மலர்களைச் சாத்த முயன்ற நண்டை கத்தியால் வெட்ட முயன்றான். முதல் வெட்டு தாடையில் விழுந்தது. அடுத்த வெட்டு சிவபெருமானின் நெற்றியில் விழுந்தது.
 

நண்டு உருவில் இருந்த கந்தர்வனைக் காப்பாற்ற நினைத்த சிவபெருமான், லிங்கத் திருமேனியில் உச்சியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி, நண்டு உருவில் இருந்தவனை தன்னுடன் ஐக்கியப்படுத்திக்கொண்டார். இந்திரனால் சபிக்கப்பட்ட கந்தரவனே நண்டு உருவில் தன்னை பூஜிப்பதை, இறைவன் அசரீரியாக இந்திரனுக்கு உணர்த்தினார். உண்மையை உணர்ந்த இந்திரன் தன் தவறுக்கு வருந்தி திருந்தினான். அதனால், இக்கோவிலுக்கு திருந்துதேவன்குடி என்ற பெயர் வந்ததாகத் தல புராணம் கூறுகிறது. கற்கடம் என்றால் நண்டு. நண்டின் பூஜைக்கு மகிழ்ந்து அதன் சாபத்தை நீக்கி விமோசனம் தந்ததால் கற்கடேஸ்வரர் என்று இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார். முற்காலத்தில் இத்தலம் மூலிகை வனமாக இருந்தது. ஆகையால் இறைவனுக்கு மூலிகைவனேஸ்வரர் என்று மற்றொரு பெயரும் உண்டு. சிவனை நண்டு வழிபடும் சிற்பம் ஒன்று கோவிலில் உள்ள ஒரு கற்தூணில் செதுக்கப்பட்டு உள்ளது.

கற்கடேஸ்வரர் லிங்கத் திருமேனியில் இன்றும் வெட்டுத் தழும்புகள் இருக்கின்றன. சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு துவாரம் உள்ளது. ஆடி அமாவாசையும் பூர நட்சத்திரமும் கூடிய நேரத்தில் 21 குடம் காராம் பசும் பாலைக் கொண்டு இரவில் சிவலிங்கத்தை அபிஷேகித்தால், நண்டு வெளிப்பட்டு காட்சி கொடுக்கும் என்று வசிஷ்ட மகாத்மியம் கூறுகிறது. டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர், ஒரு நிறப் பசுவின் பால் பத்து கலம் அபிஷேகம் செய்தால், லிங்கத்தின் உச்சியில் ஒரு பொன்னிற நண்டு ஊர்தல் தரிசனம் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்.

சோழ மன்னன் ஒருவன் இத்தலத்தில் ஆலய திருப்பணி செய்தபோது அம்மன் சிலை இல்லாததால், புதியதாக ஒரு சிலை செய்து பிரதிஷ்டை செய்து வழிபட்டான். தனக்கு ஏற்பட்டிருந்த பக்கவாத நோயை இத்தல இறைவனும் இறைவியும் மருத்துவராகவும், மருத்துவச்சியாகவும் வந்து தைலமும், தீர்த்தமும் கொடுத்து அவனது நோயை குணப்படுத்தியதால், அம்மனுக்கு அருமருந்தம்மை என்று பெயரிட்டு வழிபட்டான். பின்னாளில், பழைய அம்மன் சிலை கிடைத்தபோது அதையும் ஆலயத்தில் அபூர்வநாயகி என்று பெயரிட்டு பிரதிஷ்டை செய்தான்.

இத்தல இறைவி அருமருந்தம்மை, தீராத நோய்களை தீர்ப்பவள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு, அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய், வேண்டுவோர்க்கு பிரசாதமாகப் பின்னர் வழங்கப்படுகிறது. அம்மனுக்கு சாத்தி தரப்படும் எண்ணெய், சர்வ வியாதிகளுக்கும் நிவாரணமாகக் கருதப்படுகிறது. நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும்வண்ணம், வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப்போல் சித்திரிக்கப்பட்டுள்ளது.
 

சந்திரன் இத்தலத்தில் இறைவனை வழிபட்டு தனது சாபம் நீங்கப்பெற்றான். ஆகையால், சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய தலம் திருந்துதேவன்குடி தலமாகும். அநேகமாக எல்லா சிவாலயங்களிலும் சந்திரனுக்குத் தனி சந்நிதி இருக்கும். சந்திரன் நின்ற நிலையில் காணப்படுவார். இத்தலத்தில் மட்டும் சந்திரன் அமர்ந்த நிலையில், யோக நிலையில் இருக்கிறார். எல்லாவகையான யோகங்களும் கிடைக்க வழிபட வேண்டிய தோஷ பரிகார சந்திரன் இவர். குறிப்பாக, கடக ராசிக்காரர்கள் (புனர்பூசம், பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) இக்கோவிலுக்கு வந்து வழிபட்டால், அனைத்து தோஷங்களில் இருந்தும் நிவாரணம் பெறலாம். இத்தலத்தில் தேவர்களின் வைத்தியரான தன்வந்திரிக்கும் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கோவில் அமைப்பு
 

கோவில், நான்கு புறமும் நெல் வயல்கள் சூழ அமைந்துள்ளது. அருகில் ஊர் எதுவும் இல்லை. கோவில் மதில்சுவரைச் சுற்றி கிழக்கு திசை தவிர மற்ற மூன்று புறமும் நீர் நிறைந்த அகழி உள்ளது. திருவிசநல்லூரில் இருந்து கற்கடேஸ்வரர் கோவில் வரை செல்ல நல்ல சாலை வசதி உள்ளது. முதலில் செங்கல்லால் கட்டப்பட்டு பிறகு கற்கோவிலாக திருப்பணி செய்யப்பட்ட இக்கோவில், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முதல் கட்டமாக ஒரு நுழைவாயிலும், இரண்டாம் கட்டமாக ஒரு மண்டபமும் கொண்டு இக்கோவில் விளங்குகிறது. முதல் வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் விநாயகர், பலிபீடம் மற்றும் நந்தி ஆகியவற்றைக் காணலாம். முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அருமருந்துநாயகி, அபூர்வநாயகி ஆகிய இரண்டு அம்பாள் சந்நிதிகள் அமைந்துள்ளன. இத்தல விநாயகர் கற்கடக விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாளிக்கிறார்.
 

முன் மண்டபம் வழியே நுழைந்து உள்ளே சென்றவுடன், கருவறையில் இறைவன் கற்கடேஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறை மேற்கு உள் பிராகாரத்தில் கணபதி, முருகர் மற்றும் கஜலட்சுமிக்கு சந்நிதிகள் அமைந்துள்ளன. கருவறை கோஷ்டத்தில் தென்திசை நோக்கி தட்சிணாமூர்த்தியும் வடதிசை நோக்கி துர்க்கையும் உள்ளனர். நால்வர் சந்நிதியும் உள் பிராகாரத்தில் உள்ளது. தன்வந்தரி, அகஸ்தியர் ஆகியோரும் சுற்றுப் பிராகாரத்தில் உள்ளனர்.
 

இத்தலத்து இறைவன் மேல் சம்பந்தர் பாடிய பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

1. மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை
திருந்துதேவன்குடித் தேவர் தேவு எய்திய
அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே.

2. வீதிபோக்கு ஆவன வினையை வீட்டுவ்வன
ஓதியோர்க்கு அககப்படாப் பொருளையோ விப்பன
தீது இல் தேவன்குடித் தேவர் தேவு எய்திய
ஆதி அந்தம் இலா அடிகள் வேடங்களே.

3. மானம் ஆக்குவ்வன மாசு நீக்குவ்வன
வானை உள்கச்செலும் வழிகள் காட்டுவ்வன
தேனும் வண்டும் இசை பாடும் தேவன்குடி
ஆன் அஞ்சு ஆடும் முடி அடிகள் வேடங்களே.

4. செவிகள் ஆர்விப்பன சிந்தையுள் சேர்வன
கவிகள் பாடுவ்வன கண் குளிர்விப்பன
புவிகள் பொங்கப் புனல் பாயும் தேவன்குடி
அவிகள் உய்க்கப்படும் அடிகள் வேடங்களே.

5. விண்ணுலாவும் நெறி வீடுகாட்டும் நெறி
மண்ணுலாவும் நெறி மயக்கம் தீர்க்கும் நெறி
தெண்ணிலா வெண்மதி தீண்டு தேவன்குடி
அண்ணலான் ஏறுடை அடிகள் வேடங்களே.

6. பங்கம் என்னப்படர் பழிகள் என்னப்படா
புங்கம் என்னப்படர் புகழ்கள் என்னப்படும்
திங்கள் தோயும் பொழில் தீண்டு தேவன்குடி
அங்கம் ஆறும் சொன்ன அடிகள் வேடங்களே.

7. கரைதல் ஒன்றும் இலை கருத வல்லார் தமக்கு
உரையில் ஊனம் இலை உலகினின் மன்னுவர்
திரைகள் பொங்கப் புனல் பாயும் தேவன்குடி
அரையில் வெண் கோவணத்து அடிகள் வேடங்களே.

8. உலகம் உட்கும் திறல் உடை அரக்கன் வலி
விலகு பூதக்கணம் வெருட்டும் வேடத்தின
திலகம் ஆரும் பொழில் சூழ்ந்த தேவன்குடி
அலர் தயங்கும் முடி அடிகள் வேடங்களே.

9. துளக்கம் இல்லாதன தூய தோற்றத்தன
விளக்கம் ஆக்குவ்வன வெறி வண்டு ஆரும் பொழில்
திளைக்கும் தேவன்குடித் திசைமுகனோடு மால்
அளக்க ஒண்ணா வண்ணத்து அடிகள் வேடங்களே.

10. செரு மருதம் துவர்த்தேர் அமண் ஆதர்கள்
உரு மருவப்படாத் தொழும்பர் தம் உரை கொளேல்
திருமருவும் பொய்கை சூழ்ந்த தேவன்குடி
அருமருந்து ஆவன அடிகள் வேடங்களே.

11. சேடர் தேவன்குடித் தேவர் தேவன்தனை
மாடம் ஓங்கும் பொழில் மல்கு தண் காழியான்
நாடவல்ல தமிழ் ஞானசம்பந்தன
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லையாம் பாவமே.

திருஞானசம்பந்தர் இயற்றிய தேவாரம் - பாடியவர் மயலாடுதுறை சிவகுமார்

 

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/3/23/w600X390/dscn1294.jpg http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/mar/24/சந்திர-தோஷம்---தீராத-நோய்களில்-இருந்து-நிவாரணம்-பெற-கற்கடேஸ்வரர்-கோவில்-திருந்துதேவன்குடி-2671357.html
2667731 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் பசிப்பிணி போக்கி அருளும் தலம் - திருக்கச்சூர் ஆலக்கோயில் என்.எஸ். நாராயணசாமி Friday, March 17, 2017 10:37 AM +0530  

பாடல் பெற்ற தொண்டை தாட்டுத் தலங்கள் வரிசையில் 25-வது தலமாக திருக்கச்சூர் உள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அந்தணர் உருவில் வந்து உணவளித்து அவரின் பசியை போக்கி அருளிய தலம். பசி என்பதும் ஒருவகைப் பிணி (நோய்) என்பது முன்னோர்களின் வாக்கு. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்ற பழமொழியும் இந்தப் பசிப்பிணியைக் கருத்தில்கொண்டே வழக்கில் உள்ளது. நம் வாழ்நாளில் என்றும் நமக்கு உணவு கிடைத்து பசியில்லாமல் இருக்க வழிபட வேண்டிய தலம் திருக்கச்சூர்.

இறைவன் பெயர்: கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர், விருந்திட்ட ஈஸ்வரர்
இறைவி பெயர்: அஞ்சனாட்சி, இருள்நீக்கி அம்மை
இத்தலத்துக்கு சுந்தரர் பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது?

சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு ரயில் மார்க்கத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. சென்னை - செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில், சிங்கப்பெருமாள் கோயில் சென்று அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் திரும்பி ரயில்வே கேட் தாண்டி சுமார் 1 கி.மீ. தூரம் சென்றபின் வலதுபுறம் பிரியும் சாலையில் மேலும் 1 கி.மீ. தூரம் சென்றால் திருக்கச்சூர் ஆலயத்தை அடையலாம்.
 

ஊரின் நடுவே கோயில் உள்ளது. இவ்வாலயத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள மலையடிவாரத்தில் மருந்தீஸ்வரர் கோயில் என்ற மற்றொரு ஆலயமும் உள்ளது.  சிங்கப்பெருமாள் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆட்டோ மூலம் செல்வது நல்லது. இல்லாவிடில், சுமார் 2 கி.மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டும்.

ஆலய முகவரி
அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில்,
திருக்கச்சூர் அஞ்சல்,
வழி சிங்கப்பெருமாள் கோயில்,
செங்கல்பட்டு வட்டம்,
காஞ்சிபுரம் மாவட்டம் – 603 204.

இக்கோயில், காலை 8 மணி முதல் நண்பகல் 11.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல புராணம்

அமிர்தம் கிடைப்பதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தார்கள். மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறாக்கி பாற்கடலைக் கடையும் சமயத்தில், மந்தார மலை கனம் தாங்காமல் மூழ்கத் தொடங்கியது. அது கடலில் மூழ்காமல் இருக்க, திருமால் ஆமை (கச்சபம்) வடிவெடுத்து மந்தார மலையின் அடியில் சென்று மலையைத் தாங்கி நின்றார். திருமால் இவ்வாறு ஆமை உருவில் மலையின் கனத்தைத் தாங்கக்கூடிய ஆற்றலைப் பெற இத்தலத்துக்கு வந்து சிவபெருமானை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. ஆமை (கச்சபம்) வடிவத்தில் சிவபெருமானை மஹாவிஷ்ணு வழிபட்டதால், இத்தலம் திருக்கச்சூர் என்று பெயர் பெற்றது. இத்தலம், ஆதிகச்சபேஸம் என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள கூர்ம தீர்த்தத்தில் நீராடி பிரதோஷ நாட்களில் கச்சபேஸ்வரரை வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்கும். செல்வம், கல்வி, இன்பம் கிடைக்கும் என்று தல புராணம் கூறுகிறது.
 

சுந்தரருக்காக சிவபெருமான் தனது கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து சுந்தரரின் பசியைப் போக்கிய தலம் என்ற பெருமையும் திருக்கச்சூருக்கு உண்டு. தன் அடியார்களுடன் தலயாத்திரை சென்ற சுந்தரர், திருக்கழுக்குன்றத்தில் இருந்து இத்தலத்துக்கு உச்சிவேளையில் வந்து சேர்ந்தார். ஆலயத்தினுள் சென்று சிவபெருமானை பக்தியுடன் வழிபட்டு வெளியே வந்தார். வெகு தொலைவில் இருந்து திருக்கச்சூர் வந்த காரணத்தினால், களைப்பும் அதனுடன் பசியும் சேர்ந்து தள்ளாடியபடி கோயிலின் மதிற்புறத்தே உள்ள மண்டப தூணில் சாய்ந்து பசியுடன் அமர்ந்திருந்தார். சுந்தரரின் நிலையைக் கண்ட இறைவன், ஓர் அந்தணர் உருவில் சுந்தரரின் தோளைத் தட்டி எழுப்புகிறார். அவரை உட்காரச் சொல்லி, வாழை இலை விரித்து அன்னம் பரிமாறி, குடிக்க நீரும் கொடுக்கிறார். அன்னம் பலவித வண்ணங்களுடனும் பலவகை சுவையுடனும் இருப்பதைக் கண்ட சுந்தரர், காரணம் கேட்கிறார். சமைத்து உணவு கொண்டுவர நேரம் இல்லாததால், பல வீடுகளுக்குச் சென்று பிச்சை வாங்கிவந்து உணவு கொடுப்பதாக அந்தணர் சொல்கிறார். அந்தணர் செயலில் நெகிழ்ந்துபோன சுந்தரர், எதிரே உள்ள குளத்துக்குச் சென்று கைகளைக் கழுவிக்கொண்டு திரும்பி வந்து பார்த்தால், அந்தணர் மாயமாய் மறைந்துபோயிருக்கக் கண்டார். இறைவனே தனக்காக திருக்கச்சூர் வீதிகளில் தனது திருவடிகள் பதிய நடந்துசென்று பிச்சையெடுத்து அன்னமிட்டதை நினைத்து, இறைவனின் கருணையைக் கண்டு மனம் உருகினார் சுந்தரர்.

கோயில் அமைப்பு

திருக்கச்சூர் தலம் ஆலக்கோயில் என்ற பெயருடனும் அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தின் மூலவர் கச்சபேஸ்வரர். இருந்தாலும் இவ்வாலயம் தியாகராஜசுவாமி திருக்கோயில் என்றே அழைக்கப்படுகிறது. தொண்டை நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் தியாகராஜர் சந்நிதி உள்ள கோயில்களில் இத்தலக் கோயிலும் ஒன்றாகும். கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்துக்குக் கோபுரம் இல்லை. கோயிலுக்கு எதிரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. இது கூர்ம தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. திருமால் கூர்மாவதாரம் எடுத்தபோது இக்குளத்தை உண்டுபண்ணியதாகக் கருதப்படுகிறது. இக்குளத்துக்கு அருகில்தான் சுந்தரர் பசிக் களைப்பால் படுத்திருந்த 16 கால் மண்டபம் இருக்கிறது. மண்டபத் தூண்களில் அழகிய சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
 

கிழக்கிலுள்ள நுழைவாயில் வழியாக உள்ளே சென்றவுடன் கிழக்கு வெளிப் பிராகாரத்தில் கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவை அமைந்துள்ளன. தெற்கு வெளிப் பிராகாரத்தில் 27 தூண்களை உடைய நட்சத்திர மண்டபம் உள்ளது. நட்சத்திர மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் தியாகராஜர் சந்நிதி உள்ளது. இவர் உபயவிடங்கர் எனப்படுகிறார். மகாவிஷ்ணுவுக்கு இத்தலத்தில் இறைவன் தனது நடனத்தைக் காட்டி அருளியுள்ளார். நட்சத்திர மண்டபத்தில் உள்ள ஒரு தூணில், மகாவிஷ்ணு ஆமை உருவில் சிவலிங்கத்தை வழிபடும் சிற்பம் ஒன்று உள்ளது.
 

மண்டபத்தில் உள்ள தெற்கு வாயில் வழியே உள்ளே சென்றால், இறைவி அஞ்சனாட்சியின் சந்நிதி உள்ளது. நான்கு திருக்கரங்களுடன் நின்ற நிலையில் அம்பாள் அருள்பாலிக்கிறாள். வலம் வருவதற்கு வசதியாக அம்மன் சந்நிதி ஒரு தனிக் கோயிலாகவே உள்ளது. அம்பாள் சந்நிதி முன் உள்ள மண்டபத்திலிருந்து மற்றொரு கிழக்கு நோக்கிய வாயில் வழியாக உள்ளே சென்றால், கருவறையில் கிழக்கு நோக்கிய சந்நிதியில் இறைவன் கச்சபேஸ்வரர் காட்சி தருகிறார். திருமாலுக்கு அருளிய இவர் ஒரு சுயம்பு லிங்கமாவார். கருவறை அகழி போன்ற அமைப்பு கொண்டது.
 

கருவறை சுற்றில் தென்கிழக்கில் வடக்கு நோக்கிய நால்வர் சந்நிதியைக் காணலாம். கருவறை சுற்று வலம் வரும்போது, வடக்குச் சுற்றின் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. கருவறை கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். வடக்கு வெளிப் பிராகாரத்தில் கிழக்கு நோக்கிய முருகன் சந்நிதியும், விருந்திட்ட ஈஸ்வரர் சந்நிதியும் அமைந்திருக்கின்றன. விருந்திட்ட ஈஸ்வரர் சந்நிதிக்கு அருகே வடக்கு நோக்கிய சுந்தரர் சந்நிதியும் அமைந்துள்ளது. வடக்கு வெளிப் பிராகாரத்தில் தெற்கு நோக்கிய பைரவர் சந்நிதியும் இருக்கிறது. இத்தலத்திலுள்ள இந்த பைரவர் சந்நிதி மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இத்தலம் ஒரு திருப்புகழ் வைப்புத் தலம். இங்கு முருகப் பெருமான் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார்.
 

திருக்கச்சூர் கோயிலின் இணைக்கோயிலான மலைக்கோயில், ஆலக்கோயிலில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் குடிகொண்டிருக்கும் இறைவன் மருந்தீஸ்வரர் என்றும், இறைவி இருள்நீக்கியஅம்மை என்றும் அழைக்கப்படுகின்றனர். மலையடிவாரத்தில் உள்ள இந்த மருந்தீசர் கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை. தெற்கு நோக்கிய வாயில் வழியே உள்ளே சென்றால் சிறிய மண்டபம் உள்ளது. இம்மண்டபத் தூண்களில் துவாரபாலகர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை தவிர, லிங்கோத்பவர், மாவடிசேவை, பட்டினத்தார், வள்ளலார், விநாயகர், தண்டபாணி, அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் சுந்தரரை நோக்கியவாறு, கையில் அமுதுடன் காட்சி தரும் இறைவனின் சிற்பம் ஒன்று இருப்பதையும் நாம் காணலாம்.

மருந்தீஸ்வரர் சந்நிதி மேற்கு நோக்கி உள்ளது. எதிரில் சாளரம் உள்ளது. இதன் வெளியே கொடிமரம் நந்தி பலிபீடங்கள் உள்ளன. படிகளில் இறங்கி நீர் அருந்தும் அமைப்புடைய 'நடைபாதைக் கிணறு' உள்ளது. பக்கத்தில் நவக்கிரக சந்நிதி, அம்பாள் சந்நிதியும் மேற்கு நோக்கி உள்ளது. மூலவர் கருவறை சுற்றுப் பிராகாரத்தில் கோஷ்ட மூர்த்தங்களாக, விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, ஆகியோர் உள்ளனர். கோஷ்டத்திலுள்ள பிரம்மாவுக்கு எதிரே சண்டேசுவரர் நான்கு முகங்களுடன் சதுர்முக சண்டேசுவரராகக் காட்சி தருகின்றார். இந்த அமைப்பு இக்கோயிலில் உள்ள ஓர் அரிய உருவ அமைப்பாகும்.

மாசி மாதத்தில் மருந்தீஸ்வரர் கோயிலில் திருவிழா நடைபெறுகின்றது. இத் திருவிழாவின் 9-ஆம் நாளில், இறைவன் பிச்சையெடுத்துச் சுந்தரருக்கு அமுதிட்ட ஐதிகம் நடைபெறுகிறது.
 

இரந்திட்ட ஈஸ்வரர் வீற்றிருக்கும் சிறிய கோயில் மேற்கில் உள்ளது. சித்திரையில் பெருவிழா நடைபெறுகிறது. சுந்தரர் தனது பதிகத்தில் மலைமேல் மருந்தே என்று மருந்தீஸ்வரர் கோயில் இறைவனைப் பாடியுள்ளார். தேவாரப் பதிகம் பெற்ற கோயில் மலையடிவாரத்திலுள்ள இந்த மருந்தீஸ்வர் கோயிலே.
 

சுந்தரர் இயற்றிய இத்தலத்துக்கான இப்பதிகம், 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

1. முதுவாய் ஓரி கதற முதுகாட்டு
எரி கொண்டு ஆடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும்
மலையான் மகள்தன் மணவாளா
கதுவாய்த் தலையிற் பலி நீ கொள்ளக்
கண்டால் அடியார் கவலாரே
அதுவே ஆமாறு இதுவோ கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

2. கச்சு ஏர் அரவு ஒன்று அரையில் அசைத்துக்
கழலுஞ் சிலம்புங் கலிக்கப் பலிக்கு என்று
உச்சம் போதா ஊர்ஊர் திரியக்
கண்டால் அடியார் உருகாரே
இச்சை அறியோம் எங்கள் பெருமான்
ஏழேழ் பிறப்பும் எனையாள்வாய்
அச்சம் இல்லாக் கச்சூர் வடபால்
ஆலக் கோயில் அம்மானே.

3. சாலக் கோயில் உள நின் கோயில்
அவை என் தலைமேற் கொண்டாடி
மாலைத் தீர்ந்தேன் வினையும் துரந்தேன்
வானோர் அறியா நெறியானே
கோலக் கோயில் குறையாக் கோயில்
குளிர்பூங் கச்சூர் வடபாலை
ஆலக் கோயிற் கல்லால் நிழல்கீழ்
அறங்கள் உரைத்த அம்மானே.

4. விடையும் கொடியும் சடையும் உடையாய்
மின் நேர் உருவத்து ஒளியானே
கடையும் புடைசூழ் மணி மண்டபமும்
கன்னி மாடம் கலந்து எங்கும்
புடையும் பொழிலும் புனலும் தழுவிப்
பூமேல் திருமாமகள் புல்கி
அடையும் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

5. மேலை விதியே வினையின் பயனே
விரவார் புரம்மூன்று எரிசெய்தாய்
காலை எழுந்து தொழுவார் தங்கள்
கவலை களைவாய் கறைக்கண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தே
மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

6. பிறவாய் இறவாய் பேணாய் மூவாய்
பெற்றம் ஏறிப் பேய் சூழ்தல்
துறவாய் மறவாய் சுடுகாடு என்றும்
இடமாக் கொண்டு நடமாடி
ஒறுவாய்த் தலையில் பலி நீ கொள்ளக்
கண்டால் அடியார் உருகாரே
அறவே ஒழியாய் கச்சூர் வடபால்
ஆலக் கோயில் அம்மானே.

7. பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால்
அதுவும் பொருளாக் கொள்வானே
மெய்யே எங்கள் பெருமான் உன்னை
நினைவார் அவரை நினைகண்டாய்
மையார் தடங்கண் மங்கை பங்கா
கங்கார் மதியஞ் சடைவைத்த
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

8. ஊனைப் பெருக்கி உன்னை நினையாது
ஒழிந்தேன் செடியேன் உணர்வு இல்லேன்
கானக் கொன்றை கமழ மலரும்
கடிநாறு உடையாய் கச்சூராய்
மானைப் புரையும் மடமென்னோக்கி
மடவாள் அஞ்ச மறைத்திட்ட
ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய்
ஆலக் கோயில் அம்மானே.

9. காதல் செய்து களித்துப் பிதற்றிக்
கடிமாமலர் இட்டு உனை ஏத்தி
ஆதல் செய்யும் அடியார் இருக்க
ஐயம் கொள்வது அழகிதே
ஓதக் கண்டேன் உன்னை மறவேன்
உமையாள் கணவா எனை ஆள்வாய்
ஆதற் பழனக் கழனிக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.

10. அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர்
ஆலக்கோயில் அம்மானை
உன்ன முன்னும் மனத்து ஆரூரன்
ஆரூரன் பேர் முடிவைத்த
மன்னு புலவன் வயல் நாவலர்கோன்
செஞ்சொல் நாவன் வன்தொண்டன்
பன்னும தமிழ்நூல் மாலை வல்லார்
அவரெந் தலைமேல் பயில்வாரே.

சுந்தரர் இயற்றிய தேவாரம் - ஆலவாய் அண்ணல் தேவார பாடசாலை மாணவர்கள்

 

]]>
http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/mar/17/பசிப்பிணி-போக்கி-அருளும்-தலம்---திருக்கச்சூர்-ஆலக்கோயில்-2667731.html
2662452 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் பிரம்மஹத்தி தோஷம் தீக்கும் மஹாலிங்கேஸ்வரர் கோவில், திருவிடைமருதூர் என்.எஸ். நாராயணசாமி Friday, March 10, 2017 06:29 PM +0530  

பாடல் பெற்ற தென்கரை சிவஸ்தலங்கள் வரிசையில் 30-வது தலமாக இருப்பது திருவிடைமருதூர். இது ஒரு சிறந்த பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலம். முன் பிறவியில் ஆலயத்தை இடித்தல், சாமி சிலையை திருடுதல் பொன்ற பாவச் செயல்களை செய்தவர்கள், இப்பிறவியில் அந்தணர் ஒருவரை கொல்லுதல், பெண்ணிடம் ஆசை காட்டி அவளை மணம் செய்துகொள்கிறேன் என்ற பொய் சொல்லி அவளுடன் கூடி இருந்துவிட்டு பின்பு அப்பெண்ணை ஏமாற்றுதல், அல்லது இதற்கு சமமான பாவங்களை செய்தாலோ, ஜாதக ரீதியாக ஒருவர் ஜாதகத்தில், சனி, குரு இணைந்தோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்திருந்தாலோ ஒருவருக்கு இந்த பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது.இத்தகைய பிரம்மஹத்தி தோஷம் நீங்கி, நிவாரணம் பெறவும், உரிய பரிகாரம் செய்துகொள்ளவும் சிறந்த தலம் திருவிடைமருதூர்.

     இறைவன் பெயர்: மஹாலிங்கேஸ்வரர்
     இறைவி பெயர்: பிருஹத் சுந்தரகுசாம்பிகை, நன்முலைநாயகி

இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் 5, திருஞானசம்பந்தர் பதிகம் 5, சுந்தரர் பதிகம் 1 என, மொத்தம் 11 பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது

கும்பகோணத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

ஆலய முகவரி

அருள்மிகு மஹாலிங்கேஸ்வரர் திருக்கோயில்,
திருவிடைமருதூர்,
திருவிடைமருதூர் அஞ்சல்,
திருவிடைமருதூர் வட்டம்,
தஞ்சை மாவட்டம் – 612 104.

இவ்வாலயம், தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாகக் கருதப்படுகின்றன. அவற்றில் திருவிடைமருதூர் தலமும் ஒன்றாகும். மற்றவை - 1. திருவையாறு, 2. திருசாய்க்காடு (சாயாவனம்), 3. திருவெண்காடு, 4. திருவாஞ்சியம் மற்றும் 5. மயிலாடுதுறை ஆகும்.

தலத்தின் சிறப்பு

திருவிடைமருதூர் தலம் வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசனின் வாழ்க்கையுடன் சம்பந்தம் உடையதாகும். ஒருமுறை, வரகுண பாண்டியன் அருகிலுள்ள காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில், அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்துகொண்டிருக்கும்போது வழியில், உறங்கிக்கொண்டிருந்த ஒரு அந்தணன், குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டான். இச்சம்பவம் அவனறியாமல் நடந்திருந்தாலும், ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அத்துடன், அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது.

சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன், மதுரை சோமசுந்தரரை வணங்கி இவற்றில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மதுரை சோமசுந்தரரும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த அரசனுக்கு, தன் நாட்டின் மீது சோழ மன்னன் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன், சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான். அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்தொடர்ந்து கோவிலுக்குள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன.

ஆனால், திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள்புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பாண்டிய நாடு திரும்பினான். இதை நினைவுகூரும் வகையில், இன்றளவும் இவ்வாலயத்துக்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று, மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இன்றும் அக்கோயிலில் சிலையாக வீற்றிருக்கும் பிரம்மஹத்தியை, நாம் கிழக்கு கோபுர வாயில் உள்ளே நுழைந்தவுடன் முன் மண்டபத்தில் இடதுபுறம் ஒரு உயர்ந்த இடத்தில் இருப்பதைக் காணலாம். மன்னர் சென்ற வழியில் மீண்டும் திரும்பி வருவார். அவரை மீண்டும் பிடித்துக்கொள்ளலாம் என்று பிரம்மஹத்தி அமர்ந்துள்ளது என்பது ஐதீகம்.

திருவிடைமருதூரில் உள்ள சிவாலயம் சுமார் 1200 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு ஆலயமாகும். மருத மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட மூன்று கோயில்கள் உள்ளன. வடக்கே ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படும் தலம் வடமருதூர்; தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில் புடார்ச்சுனம் என்றழைக்கப்படும் திருப்புடை மருதூர். இவை இரண்டுக்கும் இடையே உள்ள இத்தலம் இடைமருதூர் என்று அழைக்கப்படுகிறது. கும்பகோணம் - மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தில் உள்ளது திருவிடைமருதூர்.

நெடிதுயர்ந்த கோபுரங்களும் நீண்ட பிரகாரங்களும் கொண்டு காட்சி அளிக்கும் இவ்வாலயம், மத்யார்ஜுனம் என்று வழங்கப்படுகிறது. மூர்த்தி, தலம் மற்றும் தீர்த்தம் ஆகிய மூன்றின் சிறப்புகளாலேயே ஒரு கோயில் பெருமை பெறுகின்றது. அந்தவகையில், இந்தத் திருவிடைமருதூர், இறைவன் அருள்மிகு மஹாலிங்க சுவாமியின் சிறப்புகள் கணக்கில் அடங்கா. தேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும், நடுவிலே மஹாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால், இத்தலம் பஞ்சலிங்கத் தலமென்றும் அழைக்கப்படுகிறது. மேலும் மேற்கே அமைந்துள்ள சொக்கநாதர் ஆலயத்துக்குத் தனிப் பெருமை ஒன்றுண்டு. மழையின்றி மக்கள் வறட்சியால் வருந்தும் காலங்களில் இப்பெருமானுக்கு சிறப்பாகப் பூசை வழிபாடுகளைச் செய்து, மேகராகக்குறிஞ்சிப் பண்களில் அமைந்த தேவாரப் பதிகங்களை பாராயணம் செய்வதால் மழை பொழிவது இன்றளவும் நடைபெற்று வரும் அதிசயமாகும்.

இக்கோவில் மூன்று பிராகாரங்களைக் கொண்டதாகும். இம்மூன்று பிராகாரங்களிலும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

1. அஸ்வமேதப் பிராகாரம்

இது வெளிப் பிராகாரமாகும். இந்தப் பிராகாரத்தில் கோவிலை வலம் வருதல், அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும் என்று புராண வரலாறுகள் கூறுகின்றன.

2.    கொடுமுடிப் பிராகாரம்

இது இரண்டாவதும், மத்தியில் உள்ள பிராகாரமாகும். இப்பிராகாரத்தை வலம் வருதல், சிவபெருமான் குடியிருக்கும் கைலாச பர்வதத்தை வலம் வந்ததற்குச் சமம் என்று கூறப்படுகிறது.

3.    ப்ரணவப் பிராகாரம்

இது மூன்றாவதாகவும், உள்ளே இருக்கக்கூடியதுமான பிராகாரமாகும். இப்பிராகாரத்தை வலம் வருவதால் மோட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

திருவிடைமருதூர் தலத்தைச் சுற்றியுள்ள சில ஆலயங்கள், திருவிடைமருதூரின் பரிவார தேவதைத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை –

திருவலஞ்சுழி - விநாயகர்
சுவாமிமலை - முருகர் (முருகனின ஆறுபடை வீடுகளில் ஒன்று)
திருவாரூர் - சோமஸ்கந்தர்
சிதம்பரம் - நடராஜர்
ஆலங்குடி - தட்சிணாமூர்த்தி
திருவாவடுதுறை - நந்திகேஸ்வரர்
திருசேய்நல்லூர் - சண்டிகேஸ்வரர்
சீர்காழி - பைரவர்
சூரியனார்கோவில் - நவக்கிரகம்

இத்தலத்தில் உள்ள இறைவன் சுயம்பு லிங்க மூர்த்தியாகும். இறைவன் மகாலிங்கேஸ்வரர், தன்னைத்தானே அர்ச்சித்துக்கொண்டு பூஜா விதிகளை சப்தரிஷிகள் மற்றுமுள்ள முனிவர்களுக்குப் போதித்து அருளிய தலம் திருவிடைமருதூர். மார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்துள்ளார். இவ்வாலயத்தில் உள்ள மூகாம்பிகை சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. அம்பாள் சந்நிதிக்கு தெற்குப் பக்கம் இந்த மூகாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. மூகாசுரனை கொன்ற பாவம் நீங்க மூகாம்பிகை இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டாள். மூகாம்பிகை சந்நிதி அருகில் உள்ள மகாமேரு சந்நிதியில், பெளர்ணமியன்று மேருவுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மூகாம்பிகைக்கு இந்தியாவில் திருவிடைமருதூரிலும், கர்நாடக மாநிலத்திலுள்ள கொல்லூரிலும் பட்டும் தனிச் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தீர்த்தச் சிறப்பு

கோயில்கள் பலவற்றுள்ளும், இந்தக் கோயிலில்தான் மிகப்பெரிய எண்ணிக்கையில், அதாவது 32 தீர்த்தங்கள் உள்ளன என்பது வியக்கவைக்கும் செய்தி. இவற்றில், ஒரு ஏக்கர் பரப்புள்ள காருண்யாம்ருத தீர்த்தம் மிகவும் புகழ் வாய்ந்தது. அதுபோலவே, கலியாணத் தீர்த்தம் எனப்படும் பூசத்தீர்த்தமும் சக்தி வாய்ந்தது. தைப்பூசத் திருநாளில் இத்தீர்த்தத்தில் நீராடுவோர் பாபவிமோசனம் பெறலாம் என்பர். இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி மகப்பேறு பெற்றவர் வரலாறும் உண்டு.

இப்புண்ணியத் தீர்த்தத்தில் நீராடி யுவனாசுவன் என்ற அயோத்தி மன்னன் மாந்தாதா என்ற மகவைப் பெற்ற செய்தியும், சித்திரகீர்த்தி என்ற பாண்டியன் ஒரு ஆண் மகவைப் பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது. பூசத்தீர்த்தம் பற்றிய ஒரு சுவையான செய்தி உண்டு. தேவவிரதன் என்ற கள்வன் ஒருவன் இறைவனது திருவாபரணங்களைக் திருட முயன்ற பாவத்துக்காக நோய் வந்து இறந்துபோனான். பிறகு அவன் ஒரு புழுவாய்ப் பிறந்து பூசத்தீர்த்தத்தில் நீராடிய ஒரு புண்ணியவான் கால் பட்டு புழு உருவம் நீங்கி முக்தி பெற்றான் என்று ஆலய வரலாறு கூறுகிறது.

பிரமஹத்தி தோஷம், மற்றும் பல தோஷங்களை தீர்க்கும் தலமாக விளங்கும் திருவிடைமருதூர் தலத்துக்குச் சென்று மஹாலிங்கேஸ்ரரை ஒருமுறை வழிபட்டு வாருங்கள். பிறப்பால் அந்தணனான ராவணனை வதம் செய்ததால் ஶ்ரீராமரும் பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு அதனின்று விடுபட, தேவிபட்டிணத்தில் கடலில் நவக்கிகரகங்களை ஸ்தாபித்து வழிபட்டார் என்றால், இந்த தோஷத்தின் பாதிப்பு பற்றி புரிந்துகொள்ளலாம். நாமும் பிரம்மஹத்தி தோஷம் விலக திருவிடைமருதூர் சென்று பரிகாரங்கள் செய்து வாழ்க்கையில் நன்மை அடைவோம்.

திருஞான சம்பந்தரின் தேவாரம் - மதுரை முத்துக்குமரன்

 

]]>
http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/mar/10/பிரம்மஹத்தி-தோஷம்-தீக்கும்-மஹாலிங்கேஸ்வரர்-கோவில்-திருவிடைமருதூர்-2662452.html
2658935 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் கற்ற வித்தைகள் மறக்காமல் இருக்க ஒரு தலம், நர்த்தன வல்லபேஸ்வரர் கோவில், திருக்கூடலையாற்றூர் என்.எஸ். நாராயணசாமி Friday, March 3, 2017 10:37 AM +0530 பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்கள் வரிசையில், மூன்றாவது தலமாக விளங்குவது கூடலையாற்றூர். கல்வித் தடை தீங்க, கல்வி தொடர்பான பிரார்த்தனை செய்துகொள்ள, மற்றும் இதர வித்தைகள் கற்கவும், கற்றவை மறக்காமல் இருக்கவும் வழிபட்டு பரிகாரம் செய்வதுகொள்ள வேண்டிய தலம் இதுவாகும்.

இறைவன் பெயர்: நர்த்தன வல்லபேஸ்வரர், நெறிகாட்டுநாயகர்
இறைவி பெயர்: புரிகுழல் நாயகி, ஞானசக்தி

இத்தலத்துக்கு சுந்தரர் பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது

விருத்தாசலத்தில் இருந்து ஶ்ரீமுஷ்ணம் என்ற வைணவத் தலம் வழியாகச் சென்றால், சுமார் 31 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

சிதம்பரத்திலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தை காவாலக்குடி செல்லும் பேருந்து மூலமாக இத்தலத்தை அடையலாம். சிதம்பரம் - காவாலகுடி நகரப் பேருந்தும் இத்தலம் வழியாகச் செல்கிறது.

கும்பகோணம் - சேத்தியாதோப்பு சாலையில் குமாரகுடி என்ற இடத்தை அடைந்து, அங்கிருந்து ஸ்ரீமுஷ்ணம் போகும் பாதையில் பிரிந்து 2 கி.மீ. சென்று, பின் காவாலகுடி செல்லும் சாலையில் 2 கி.மீ. சென்று காவாலகுடியை அடைந்து, அடுத்துள்ள கூடலையாற்றூரை அடையலாம். கோயில் வரை வாகனங்கள், பேருந்து செல்லும்.

ஆலய முகவரி
அருள்மிகு நர்த்தன வல்லபேஸ்வரர் திருக்கோவில்,
திருக்கூடலையாற்றூர்,
காவலாகுடி அஞ்சல்,
காட்டுமன்னார்கோவில் வட்டம்,
கடலூர் மாவட்டம் – 608 702.

இக்கோயில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
 

தலப்பெருமை

மகரிஷி அகத்தியர், தான் கற்ற வித்தைகள் மறக்காமல் இருக்க இத்தல இறைவனை பிரார்த்தித்தார். எனவே, இங்கு குழந்தைகளை அழைத்துவந்து, படித்த பாடங்கள், கற்ற கலைகள் மறக்காமல் இருக்க இறைவனை வேண்டிக்கொள்கின்றனர். மேலும், பிரம்மாவும் சரஸ்வதியும் விஜயம் செய்த தலம் இது. எனவே, கல்வி தொடர்பான பிரார்த்தனைகளைச் செய்ய ஏற்ற தலமாக இது கருதப்படுகிறது. மேலும், கற்ற வித்தைகள் மறக்காமல் இருக்கவும் இத்தல இறைவன் வழிபடுவது நல்ல பலனைக் கொடுக்கும்.
 

சிதம்பரத்தில் வியாக்ரபாத முனிவருக்கும், பதஞ்சலி முனிவருக்கும் தனது நடனக் காட்சியை காட்டி அருளினார் சிவபெருமான். அந்த நடனக் காட்சியைத் தானும் காண விரும்பி, இத்தலத்தில் இறைவனை பிரம்மா வழிபட்டு வேண்டினார். அவர் வேண்டுதலை ஏற்று பிரம்மாவுக்கும் சரஸ்வதிக்கும் நர்த்தனம் ஆடி அருள் செய்தார். எனவேதான், இத்தல இறைவன் நர்த்தன வல்லபேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

கோவில் அமைப்பு

வெள்ளாறு, மணிமுத்தாறு ஆகிய இரண்டு நதிகள் மற்றும் கண்ணுக்குப் புலப்படாத ஆகாயகங்கையும் கூடும் இடத்தில் அமைந்த தலம் ஆதலால், இது திருக்கூடலையாற்றூர் எனப் பெயர் பெற்றது. இத்தலத்தை தட்சிணப் பிரயாகை என்று கூறுவர். ஒரு சமயம், வெள்ளப்பெருக்கினால் கோயில் அழிந்தமையால், அக்கற்களைக் கொண்டுவந்து ஊரில் திருக்கோயில் கட்டி, அதில் இறைவர் இறைவியாரை எழுந்தருளப் பண்ணியுள்ளனர்.
 

இக்கோயிலின் பழமையான ராஜகோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நந்திதேவர் மட்டும் காணப்படுகிறார். கொடிமரம், பலிபீடம் இல்லை. வெளிச்சுற்றில் பக்கவாயில் உள்ளது. அமுத விநாயகர், காசி விஸ்வநாதர் லிங்கம், ஆறுமுகர், ஞானசக்தி, அம்பாள் முதலிய சந்நிதிகள் உள்ளன. அம்பாள் நின்ற திருக்கோலம். மூலவர் விமானம் இரு தள அமைப்புடையது. படிகள் ஏறி மேலே சென்றால் அழகிய மண்டபம் உள்ளது. துவார கணபதியை வணங்கி உட்சென்றால் மூலவரைத் தரிசிக்கலாம்.
 

கம்பீரமான சுயம்பு சிவலிங்கத் திருமேனி. கோஷ்டமூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, அஷ்டபுஜ துர்க்கை முதலியோர் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி எதிரில் உள்ளது. சுவாமிக்கு வலதுபுறம் தெற்கு நோக்கிய புரிகுழல்நாயகி அம்பாள் சந்நிதி உள்ளது. நடராச சபையில் நடராஜருடன் சிவகாமி மூர்த்தமும் உள்ளது. சித்திரை மாதம் முதல் மூன்று தேதிகளில் மூலவரின் மீது சூரிய ஒளிபட்டு சூரியபூஜை நடக்கிறது. வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது, அம்பாள் ஞானசக்தி சந்நிதியைக் காணலாம்.

எமதர்மராஜாவின் உதவியாளரான சித்ரகுப்தருக்கு சந்நிதி இருப்பது ஒரு சில கோயில்களில் மட்டுமே. அந்தச் சிறப்பையும் இக்கோயில் பெற்றுள்ளது. இங்குள்ள சித்ரகுப்தர், உற்சவ மூர்த்தியாக ஒரு கையில் எழுத்தாணியும், மறு கையில் ஏடும் கொண்டு காட்சி தருகிறார். இத்தலத்தில் நவக்கிரக சந்நிதி இல்லை. மூலவரைத் தரிசித்துவிட்டு வரும்போது, வலதுபுறம் சனிபகவான் சந்நிதி மட்டும் உள்ளது.
 

பொதுவாக, சிவன் கோயில்களில் சிவனுடன் ஒரு அம்மன் சந்நிதி இருப்பது வழக்கம். ஆனால் திருக்கூடலையாற்றூரில் உள்ள நர்த்தன வல்லபேஸ்வரர் கோயிலில் இரண்டு அம்மன் சந்நிதிகள் உள்ளன. புரிகுழல்நாயகி, ஞானசக்தி என்ற பெயர்களில் இரண்டு அம்மன் அருள்பாலிக்கிறாள். ஞானசக்தி சந்நிதியில் குங்குமமும், புரிகுழல்நாயகி சந்நிதியில் விபூதியும் பிரசாதமாக தரப்படுகிறது. இவர்களை வழிபடுவதன் மூலம் கல்வி அறிவு விருத்தியாகும்; ஆற்றல் பெருகும் என்பது நம்பிக்கை. புரிகுழல்நாயகி என்ற அம்பாளின் பெயரை சுந்தரர் தனது பதிகத்தின் முதல் பாடலில் கூறியுள்ளார்.

திருப்புகழ் தலம்

இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் ஒரு பாடல் உள்ளது. இங்கு முருகர் பன்னிரு திருக்கரங்களுடன் தனது இரு தேவியர் வள்ளி, தெய்வானையுடன் மயில் மீது கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
 

சுந்தரர் பாடிய இத்தலப் பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சுந்தரர் தனது அடியார்களுடன் திருமுதுகுன்றம் நோக்கிச் செல்லும் வழியில் கூடலையாற்றூரை அடைந்தார். ஆனால், அங்கு தங்காமல் தொடர்ந்து செல்லும்போது, இறைவன் ஒரு முதிய அந்தணராக சுந்தரரை எதிர்கொண்டார். சுந்தரர் அவரை நோக்கி திருமுதுகுன்றம் செல்லும் வழி எது என்று கேட்க, அந்தணரோ இவ்வழி கூடலையாற்றூர் செல்கிறது என்று கூறி, சற்று தூரம் சுந்தரருடன் வந்து பின்பு மறைந்துவிட்டார். தான் வணங்கும் இறைவனே அந்தணராக வந்து கூடலையாற்றூருக்கு வழி காட்டி அருளிய இறைவனின் கருணையைப் போற்றி, கூடரையாற்றூர் அடைந்து திருப்பதிகம் பாடி அருளினார்.
 

கூடலையாற்றூர் வழியே வந்த தன் முன் அந்தணர் உருவில் இறைவன் தோன்றிய வியத்தகு செயலை அடியேன் அறியாமல் போனேனே என்று தனது பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார்.

1. வடிவுடை மழுவேந்தி மதகரி உரிபோர்த்துப்
பொடியணி திருமேனிப் புரிகுழல் உமையோடும்
கொடியணி நெடுமாடக் கூடலையாற்றூரில்
அடிகளிள் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே.

2. வையகம் முழுதுண்ட மாலொடு நான்முகனும்
பையர விளவல்குற் பாவையொடும் உடனே
கொய் அணி மலர்ச்சோலைக் கூடலையாற்றூரில்
ஐயன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே.

3. ஊர்தொறும் வெண்டலைகொண்டு உண் பலி இடுமென்று
வார்தரு மென்முலையாள் மங்கையொடும் உடனே
கூர்நுனை மழுவேந்திக் கூடலையாற்றூரில்
ஆர்வன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே.
    
4. சந்து அணவும் புனலும் தாங்கிய தாழ்சடையன்
பந்து அணவும் விரலாள் பாவையொடும் உடனே
கொந்து அணவும் பொழில்சூழ் கூடலையாற்றூரில்
அந்தணன் வழிபோந்த அதிசயம் அறியேனே.     

5. வேதியர் விண்ணவரும் மண்ணவரும் தொழ நல்
சோதி அது உருவாகிச் பரிகுழல் உமையோடும்
கோதிய வண்டு அறையும் கூடலையாற்றூரில்
ஆதி இவ் வழி போந்த அதிசயம் அறியேனே.

6. வித்தக வீணையொடும் வெண்புரி நூல்பூண்டு
முத்தன வெண்முறுவல் மங்கையொடும் உடனே
கொத்து அலரும் பொழில் சூழ் கூடலையாற்றூரில்
அத்தன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே.

7. மழைநுழை மதியமொடு வாள் அரவம் சடைமேல்
இழை நுழை துகில் அல்குல் ஏந்திழையாளோடும்
குழையணி திகழ்சோலைக் கூடலையாற்றூரில்
அழகன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே.
    
8. மறைமுதல் வானவரும் மாலயன் இந்திரனும்
பிறைநுதல் மங்கையொடும் பேய்க்கணமும் சூழக்
குறள்படை அதனோடும் கூடலையாற்றூரில்
அறவன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே.
    
9. வேலையின் நஞ்சுண்டு விடையது தானேறிப்
பாலன மென்மொழியாள் பாவையொடும் உடனே
கோலம் அது உருவாகிக் கூடலையாற்றூரில்
ஆலன் இவ் வழி போந்த அதிசயம் அறியேனே.

10. கூடலையாற்றூரிற் கொடியிடை யவளோடும்
ஆடல் உகந்தானை அதிசயம் இதுவென்று
நாடிய இன் தமிழால் நாவலவூரன் சொல்
பாடல்கள் பத்தும் வல்லார் தம்வினை பற்று அறுமே.

சுந்தரர் அருளிய தேவாரம் - பாடியவர் கொடுமுடி லோக. வசந்தகுமார் ஓதுவார்.

 

 

]]>
http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/mar/03/கற்ற-வித்தைகள்-மறக்காமல்-இருக்க-ஒரு-தலம்-நர்த்தன-வல்லபேஸ்வரர்-கோவில்-திருக்கூடலையாற்றூர்-2658935.html
2654741 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் பங்காளிச் சண்டை - பிரச்னைகள் தீர அபிராமேஸ்வரர் கோவில், திருஆமாத்தூர் என்.எஸ். நாராயணசாமி Monday, February 27, 2017 10:29 AM +0530  

 

பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்கள் வரிசையில் 21-வது தலமாக இருப்பது திருஆமாத்தூர்.
 

    இறைவன் பெயர்: அபிராமேஸ்வரர், அழகிய நாதர்
    இறைவி பெயர்: முத்தாம்பிகை, அழகிய நாயகி

இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் இரண்டு, திருஞானசம்பந்தர் பதிகம் இரண்டு, சுந்தரர் பதிகம் ஒன்று என மொத்தம் 5 பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது?

விழுப்புரம் - திருவண்ணாமலை - செஞ்சி சாலையில் 2 கி.மீ. சென்றால் "திருவாமாத்தூர்" கைகாட்டி உள்ளது. அங்கு இடப்புறமாகப் பிரிந்து செல்லும் பாதையில் 6 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். விழுப்புரம் - சூரப்பட்டு நகரப் பேருந்து திருவாமாத்தூர் வழியாகச் செல்கிறது. விழுப்புரம், சென்னையில் இருந்து 160 கி.மீ. தொலைவில் உள்ளது.

ஆலய முகவரி
அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோவில்,
திருவாமாத்தூர் அஞ்சல்,
விழுப்புரம் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம் – 605 402.

இக்கோயில், தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

ஆதி காலத்தில் பசுக்கள் கொம்பு இல்லாமல் படைக்கப்பட்டிருந்தன. தெய்வப் பசுவாகிய காமதேனுவும் மற்ற ஆநிரைகளும் தங்களை அழிக்கவரும் சிங்கம், புலி போன்ற மிருகங்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள கொம்புகள் வேண்டும் என்று நந்திதேவரிடம் முறையிட்டன. நந்திதேவரும் அவை வேண்டுவது சரியே என்று கூறி, பம்பை நதிக்கரையில் உள்ள வன்னி வனத்தில் சுயம்பு மூர்த்தியாக இருக்கும் அபிராமேஸ்வரர் என்ற பெயருடன் விளங்கும் சிவபெருமானை வணங்கி வழிபடும்படி கூறினார். அவ்வாறே பசுக்களும் பல நாள் தவம் செய்து கொம்புகள் பெற்றன.ஆக்கள் (பசுக்கள்) பூஜித்த காரணத்தால் இத்தலம் ஆமாத்தூர் என்று பெயர் பெற்றது. இந்த திருஆமாத்தூர் தலத்தை யார் புகழ்ந்து பேசினாலும் அல்லது மற்றவர்கள் புகழக் கேட்டாலும் அவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று தல புராண வரலாறு கூறுகிறது. இத்தலத்தில் உள்ள சிவாலயம் தலம், மூர்த்தி, தீர்த்தம் ஆகிய மூன்றினாலும் சிறப்புடையது.

திருவட்டப்பாறை வரலாறு

முன்னொரு காலத்தில் இத்தலத்தில் சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். பெற்றோர் இறந்த பிறகு, குடும்ப சொத்தை அண்ணன் விற்று தங்கம் மற்றும் வைரமாக மாற்றிக்கொண்டான். தங்கம் மற்றும் வைரத்தை ஒரு கைத்தடியில் மறைத்துவைத்து அதை தன்னுடனேயே வைத்துக்கொண்டான். அப்பாவியான தம்பி, அண்ணனால் தான் ஏமாற்றப்பட்டதாக ஊர்ப் பெரியவர்களிடம் முறையிட்டான். அவர்கள் அண்ணனிடம் நியாயம் கேட்க, தம்பியின் சொத்து எதுவும் தன்னிடம் இல்லை என்று சாதிக்க, இறுதியில் சத்தியப்பாறையான திருவட்டப்பாறை முன் அண்ணன் சத்தியம் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. நயவஞ்சகம் கொண்ட அண்ணன், வட்டப்பாறை முன்பு சத்தியம் செய்வதற்கு முன், தங்கம் மற்றும் வைரத்தை மறைத்து வைந்திருந்த கைத்தடியை தம்பியிடம் கொடுத்து, "இதை நீ வைத்திரு. சத்தியம் செய்த பிறகு உன்னிடமிருந்து வாங்கிக்கொள்கிறேன்" என்று கூறினான். தம்பியும் கைத்தடியை வாங்கிக்கொள்ள, அண்ணன் வட்டப்பாறை முன் நின்று என்னிடம் தம்பியின் சொத்து எதுவும் இல்லை; எல்லாம் அவனிடம்தான் இருக்கிறது என்று சத்தியம் செய்தான். வட்டப்பாறை முன் அண்ணன் செய்த சத்தியத்தை நம்பி ஊரார் கலைந்துசென்றனர். தம்பியோ, இத்தல இறைவனிடம் என்னை இப்படி ஏமாற்றிவிட்டாயே என்று அழது புலம்பினான்.

 

அண்ணன் ஆலயத்தில் இருந்து சற்று தொலைவு சென்ற பின், வட்டப்பாறை முன் பொய் சத்தியம் செய்தால் இறைவன் தண்டிப்பார் என்று சொன்னார்களே, ஒன்றும் ஆகவில்லேயே என்று ஏளனம் செய்து சிரிக்க, கோபம் கொண்ட இறைவன் ஒரு கருநாகம் உருவெடுத்து அண்ணனைத் தீண்ட அவன் மறு நொடியில் இறந்தான். அப்படி அவனைத் தீண்டிய நாகத்தின் தலைபாகம் இன்றளவும் நாகத்தம்மன் என்ற பெயரோடு இத்தலத்துக்கு அருகிலுள்ள தும்பூர் என்னும் தலத்தில் அருள்பாலித்து வருகிறார். அந்த நாகத்தின் வால் பகுதி, இத்தல இறைவி முத்தாம்பிகையின் மார்புப் பகுதியை அலங்கரித்து வருகிறது. தரிசிக்க விரும்புவோர், சிவாச்சாரியாரிடம் கேட்டு நேரில் காணலாம். அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்ட வெள்ளிக் கவசத்திலும் சர்ப்பத்தின் வால் செதுக்கப்பட்டுள்ளது.
 

அப்படி புகழ்பெற்ற புராண வரலாறு கொண்ட இந்த திருவட்டப்பாறை லிங்கேஸ்வரரை தரிசித்து வழிபட்டால் தீராத சிக்கல்கள், பங்காளிகள் இடையே ஏற்படும் சொத்து சம்பந்தமான வழக்குகளுக்கு நியாயமான முறையில் தீர்வு கிட்டும். அம்பிகை சந்நிதியின் பிராகாரச் சுற்றில் தென்புறம் ஒரு வட்டப்பாறையும், அருகில் ஒரு சிவலிங்கமும் உள்ளது. ராமாயணத்தில் வாலியைக் கொல்வதற்கு முன் ராமபிரானும், சுக்ரீவனும் அனுமன் சான்றாக நட்புகொண்டபோது இந்த வட்டப்பாறை முன் உடன்பாடு செய்துகொண்டதாகப் புராண வரலாறு கூறுகிறது.

 

ஊரில் உள்ள எல்லோரும் வட்டப்பாறையின் மீது கைவைத்து சத்தியம் செய்து தங்கள் வழக்குகளை தீர்த்துக்கொள்ளும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இந்த வட்டப்பாறை ஒரு சிறிய சந்நிதி. இதன் முன் பொய் சொல்வோர் மீளாத துன்பத்துக்கு ஆளாவர் என்று ஐதீகம் உண்டு.

கோவில் அமைப்பு
இறைவன் கோவிலும், இறைவி கோவிலும் தனித்தனியே சாலையின் இருபுறமும் எதிரெதிரே கோபுரங்களுடன் அமைந்துள்ளன. இறைவன் கோவில் கோபுரம் 7 நிலைகளுடன் கிழக்கு நோக்கி நல்ல சுற்று மதிலுடன் விளங்குகின்றது. அம்பாள் கோவில் கோபுரம் 5 நிலைகளுடன் மேற்கு நோக்கி உள்ளது. சுவாமி கோவில் ராஜகோபுரம் வழியே உள்ளே நுழைந்தால், எதிரே பெரிய சுதை நந்தி நம்மை வரவேற்கிறது. இறைவன் குடியிருக்கும் ஆலயம் இரண்டு பிராகாரங்கள் கொண்டது. அச்சுதராயர் என்றவர் இந்த ஆலயத் திருப்பணி செய்தவர்களில் முதன்மையானவர். அவரின் சிலை வெளிப் பிராகாரத்தில் வடகிழக்கு மூலையில் அமைந்திருக்கிறது. மேலும் வெளிப் பிராகாரத்தில் உள்ள சித்தி விநாயகர் சந்நிதியும், தனிக் கோயிலாக உள்ள சண்முகர் சந்நிதியும், ஈசான்ய லிங்கேஸ்வரர் சந்நிதியும் தரிசிக்கத்தக்கது.

வெளிப் பிராகார வலம் முடித்து சித்தி விநாயகர் சந்நிதி அருகே படிகள் ஏறி உள்பிராகாரத்தை அடையலாம். நேரே, தெற்கு நோக்கிய நடராச சபை உள்ளது. உள்பிராகாரச் சுற்றில் 63 மூவர், காலபைரவர், தேவகோஷ்டத்தில் சனகாதி முனிவர்களுடன் தட்சிணாமூர்த்தி, சப்த மாதர்கள், சிவபூஜை விநாயகர் ஆகியோரைக் காணலாம். கருவறை, அகழி அமைப்புடன் உள்ளது. மூலவர் வாயிலில் இருபுறங்களிலும் துவாரபாலகர் வண்ணச் சுதையில் உள்ளனர். அபிராமேஸ்வரர் என்றும், அழகியநாதர் என்றும் வழங்கும் இத்தலத்து இறைவன், ஒரு சுயம்பு மூர்த்தியாவார். பசுக்கள் பூஜை செய்ததன் அடையாளமாக, சுயம்பு லிங்கத்தின் மேல் சந்திரனின் பிறைபோல் வளைந்து பசுவின் கால் குளம்பின் சுவடு தென்படுகிறது. இறைவன் சற்று இடப்புறம் சாய்ந்து காணப்படுகிறார். இரண்டாம் பிராகாரத்தில் ராமர், முருகன், திருமகள் ஆகியோர் சந்நிதிகள் இருக்கின்றன. மதங்க முனிவரால் உருவாக்கப்பெற்ற தீர்த்தம், ஆலயத்தின் உள்ளே அமைந்துள்ளது. இதில் நீராடாமல், நீரை எடுத்து தலையில் தெளித்துக்கொண்டாலே சிவபுண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம்.

 

சாலையில் எதிரே உள்ள அம்பாள் கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் கொடிமரம், பலிபீடம், சிம்மம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. உள் வாயிலின் இருபுறமும் வண்ணச்சுதையால் அமைந்த துவாரபாலகியர் உருவங்கள் உள்ளன. அம்பாள் முத்தாம்பிகை மேற்கு நோக்கி அருட்காட்சி தருகிறாள். இந்த அம்பாள் ஒரு தீராத வரப்பிரசாதி. அம்பாள் சந்நிதிக்குள் நுழையும்போதே வலதுபுறம் மூலையில் வட்டப்பாறை சந்நிதி (அம்பாளின் சாந்நித்யரூபம்) உள்ளது. தற்போது இந்த சந்நிதியில் சிவலிங்கமே உள்ளது.

உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் தீராத சிக்கல்களை தீர்த்துவைக்கும் இத்தல இறைவனை ஒருமுறை சென்று வழிபடுங்கள்.

சுந்தரரின் தேவாரப் பாடல் - பாடியவர் திருவரங்கயயாதி

 

]]>
http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/feb/24/பங்காளிச்-சண்டை---பிரச்னைகள்-தீர-அபிராமேஸ்வரர்-கோவில்-திருஆமாத்தூர்-2654741.html
2650689 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் அம்மை நோய்க்கு ஒரு பரிகாரத் தலம் சாட்சிநாதர் கோவில், திருஅவளிவநல்லூர் என்.எஸ். நாராயணசாமி Friday, February 17, 2017 03:16 PM +0530  

பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 100-வது தலமாக விளங்குவது அவளிவநல்லூர். தன்னை வழிபடும் ஒரு அர்ச்சகரின் மகளுக்கு ஏற்பட்ட அம்மை நோயின் பாதிப்பை நீக்கி அவளுக்கு நல்வாழ்வை அருளிய இறைவன் கோயில் கொண்டுள்ள தலம்.
 

      இறைவன் பெயர்: சாட்சிநாதர்
      இறைவி பெயர்: சௌந்தரநாயகி, செளந்தர்யவல்லி

இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும், திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும் என இரண்டு பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது?
கும்பகோணத்தில் இருந்து அம்மாபேட்டை செல்லும் நகரப் பேருந்துகளும், தஞ்சாவூரில் இருந்து அரித்துவாரமங்கலம் செல்லும் நகரப் பேருந்துகளும் அவளிவநல்லூர் வழியாகச் செல்கின்றன. கும்பகோணத்தில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது. திருஅரதைப்பெரும்பாழி என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இங்கிருந்து 3.5 கி.மீ. தொலைவில் இருக்கிறது. நீடாமங்கலத்தில் இருந்தும் அம்மாபேட்டை வழியாக அவளிவநல்லூர் செல்லலாம்.

ஆலய முகவரி
அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில்,
அவளிவநல்லூர்,
அரித்துவாரமங்கலம் அஞ்சல்,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 612 802.

இக்கோயில் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
 

தல வரலாறு
பண்டைய நாளில் ஆதி சைவ அந்தணர் ஒருவர் சிவதொண்டையே பிறவிப் பயனாகக் கருதி இத்தலத்தில் இறைவனை வழிபட்டு வந்தார். அவருக்கு இரு பெண்கள் இருந்தனர். இருவரும் ஒரே உருவ சாயலுடன் வாழ்ந்து வந்தனர். மூத்தவள் சுசீலை; இளையவள் விசாலாட்சி. தக்க வயது வந்ததும் மூத்த பெண் சுசீலையை விஷ்ணுசர்மா என்பவருக்கு மணம் முடித்தார். இருவரும் சில காலம் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். விஷ்ணுசர்மா காசி யாத்திரை செல்ல விருப்பம் கொண்டார். தனது மனைவி சுசீலையை அவளது தந்தை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு காசிக்கு கிளம்பிச் சென்றார். அவர் காசி சென்றிருந்த காலத்தில் சுசீலைக்கு அம்மை வார்க்கப்பெற்று, உருவம் மாறியதோடு கண்களையும் இழந்தாள். மேனி எங்கும் அம்மைத் தழும்புகள் உண்டாகி தனது அழகு குன்றி காணப்பட்டாள்.

சில ஆண்டுகள் கழித்து, காசி யாத்திரை சென்றிருந்த மூத்த விஷ்ணுசர்மா வீடு திரும்பினார். அவர் திரும்பி வரும் சமயம் திருமணம் ஆகியிருந்த அந்தணரின் இரண்டாவது மகளும் பெற்றோரைக் காண வந்திருந்தாள். தன் மனைவியின் உருவ வேறுபாட்டைக் கண்டு, இவள் என் மனைவியல்ல என்றும், உருவத்தில் ஒத்திருந்த இளையவளே என் மனைவி என்றும் வாதிட்டார். அந்தணர் எவ்வளவோ சொல்லியும், விஷ்ணுசர்மா அதைக் கேட்கவில்லை. இதனால் இரு பெண்களையும் பெற்ற அந்தணர் மனங்கலங்கி இத்தல இறைவனைப் பிரார்த்திக்க, இறைவன் அவரையும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் மறுதாள் கோவிலுக்கு வரச் சொல்லி அந்தணரின் கனவில் தோன்றிக் கூறிவிட்டு மறைந்தார்.

மறுநாள் இறைவனின் வாக்கை நிறைவேற்ற எண்ணிய அந்தணர், தனது மகள் சுசீலை மற்றும் மருமகனுடன் இந்தத் திருத்தலத்துக்கு வந்தார். அப்போது முனிவர் வேடத்தில் அங்கு வந்த சிவபெருமான், அனைவரையும் கோவிலின் எதிரே உள்ள சந்திரபுஷ்கரணி என்ற தீர்த்தக் குளத்தில் மூழ்கி எழும்படி கூறினார். அனைவரும் அவ்வாறே செய்தனர். மூழ்கி எழுந்தபோது, அனைவரும் வியக்கும் வகையில் அழகற்றுப் போயிருந்த சுசீலை, தன்னுடைய திருமணத்தின்போது இருந்த அதே அழகிய தோற்றத்துடன் மேலும் பொலிவாக கண் பார்வையும் திரும்பப் பெற்று காட்சியளித்தாள்.

இறைவனும், இறைவியும், விண்ணில் ரிஷப வாகனத்தில் அனைவருக்கும் காட்சிக் கொடுத்து விஷ்ணுசர்மாவை நோக்கி, நீங்கள் அக்னிசாட்சியாக மணம் முடித்த ‘அவள் இவள்தான்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து மறைந்தனர். தன் பொருட்டு சிவபெருமானே வந்து சாட்சி சொன்னதை அறிந்த அந்தணர் மிகவும் மகிழ்ந்தார். மனம் தடுமாறி இளைய பெண்ணே தனது மனைவி என்று வாதிட்ட மருமகனும் உண்மையை உணர்ந்தார். சுசீலையும் கணவனுடன் சேர்ந்து இன்புற்று வாழ்ந்தாள். அவள்தான் இவள் என்று சாட்சி கூறியதால், இத்தல இறைவன் சாட்சிநாதர் என்ற பெயர் பெற்றார். தலத்தின் பெயரும் நல்லூர் என்பது மாறி அவளிவநல்லூர் என்றாயிற்று.

அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலம் வந்து வேண்டிக்கொண்டால் மேனி அழகு, தோற்றப்பொலிவு இல்லாமல் அம்மைத் தழும்புகள் இருப்பவர்களும், கண் பார்வையில் குறைபாடு கொண்டவர்களும் இத்தலம் வந்து வேண்டிக்கொண்டால் நலம் பெறலாம் என்பது ஐதீகம். வேண்டுதல் உள்ளவர்கள் ஆலயத்தின் எதிரில் உள்ள சந்திரபுஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி, இறைவனுக்கு நெய் விளக்கேற்றி வைத்து அர்ச்சனை செய்து நம்பிக்கையுடன் வழிபட்டால் பலன் பெறலாம்..

தலச் சிறப்பு

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று ஐந்து தலங்கள் உண்டு. இந்த 5 தலங்களையும் ஒரே நாளில் தரிசிப்பது விசேஷம். இந்த ஐந்துமே காவிரியின் தென்கரையிலே அமைந்திருப்பதுடன், ஒரே நாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோயிலை அர்த்த ஜாம பூஜையின்போது வந்து வணங்கி முடித்துக்கொள்ளும்படியாக அருகருகே அமைந்தவையாகும். இந்த ஐந்து தலங்களை வரிசையாகச் சொல்வதானால்,
 

1. திருக்கருகாவூர் (முல்லைவனம்) - விடியற்கால வழிபாட்டுக்கு உரியது.
2. அவளிவநல்லூர் (பாதிரி வனம்) - காலை வழிபாட்டுக்கு உரியது.  
3. அரதைப் பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்) - வன்னிவனம் - உச்சிக்கால வழிபாட்டுக்கு உகந்தது.
4. ஆலங்குடி (திருஇரும்பூளை) - பூளை வனம் - மாலை நேரத்து வழிபாட்டுக்கு உகந்தது.
5. திருக்கொள்ளம்புதூர் (வில்வவனம்) - அர்த்தஜாம பூஜை வழிபாட்டுக்கு உரியது.
 

திருஞானசம்பந்தர் தம் தல யாத்திரையின்போது இதே வரிசையில் ஐந்து கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.
 

இக் கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை. நான்கு புறமும் ஓங்கி உயர்ந்த மதில் சுவர்களுடன் இவ்வாலயம் காட்சி அளிக்கிறது. ஒரு கிழக்கு நோக்கிய முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் விசாலமான கிழக்கு வெளிச்சுற்றில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். வழிபட்டுச் சென்றால் இரண்டாவது வாயில் முகப்பில் விநாயகர் காட்சி தருகிறார். உள்ளே நுழைந்தால் நேரே மூலவர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர்.
 

மூலவருக்குப் பின்னால் தலவரலாற்றின்படி சாட்சி சொன்ன நிலையில் சாட்சிநாதராக சிவன் - பார்வதி நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். உள்சுற்றில் விநாயகர், நால்வர் சந்நிதிகள், கண்வ முனிவர், வீரபத்திரர், சப்தகன்னியர், அறுபத்து மூவர் மூலத் திருமேனிகள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. சோமாஸ்கந்தர், விநாயகர், சிவகாமி, நால்வர், ஆறுமுகர், மகாலட்சுமி ஆகிய உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நடராசர் சந்நிதி உள்ளது. பக்கத்தில் குமாரலிங்கம், காசிவிசுவநாதர், விசாலாட்சி, தபஸ் அம்பாள் திருமேனிகள் உள்ளன. எதிரில் நவக்கிரக சந்நிதிகள் உள்ளது. காலபைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாக அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
 

பஞ்ச ஆரண்ய தலங்கள் வரிசையில் காலை வழிபாட்டுக்கு உரிய இத்தலத்துக்கு நீங்களும் ஒருமுறை சென்று காலை வழிபாட்டில் இறைவனையும், இறைவியையும் தரிசித்துப் பயன் பெறுங்கள்.

ஞானசம்பந்தர் தேவாரப்பாடல் - பாடியவர் சுந்தர் ஓதுவார்

அப்பர் தேவாரம் - பாடியவர்கள் ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள்

 

]]>
http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/feb/17/அம்மை-நோய்க்கு-ஒரு-பரிகாரத்-தலம்-சாட்சிநாதர்-கோவில்-திருஅவளிவநல்லூர்-2650689.html
2645407 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் பெண்கள் ருது பரிகாரத் தலம் சொர்ணபுரீசுவரர் கோவில், ஆண்டாங்கோயில் என்.எஸ். நாராயணசாமி Saturday, February 11, 2017 11:36 AM +0530 பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 97-வது தலமாக விளங்கும் திருக்கடுவாய்க்கரைப்புத்தூர், தற்போது ஆண்டாங்(ன்)கோவில் என்று வழங்கப்படுகிறது. இத்தலம் பெண்கள் ருது பரிகாரத் தலமாக சிறப்பு பெற்றுள்ளது.
 

     இறைவன் பெயர்: சொர்ணபுரீசுவரர்
     இறைவி பெயர்: சிவாம்பிகை, சொர்ணாம்பிகை

இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றுள்ளது.

எப்படிப் போவது?

கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழியாக குடவாசல் செல்லும் வழியில், வலங்கைமானில் இருந்து கிழக்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவு. கும்பகோணத்தில் இருந்து நரசிங்கமங்கலம் செல்லும் நகரப் பேருந்து எண் A20, இக்கோவில் வழியாகச் செல்கிறது. தஞ்சாவூரில் இருந்து வலங்கைமான் வழியாக திருவாரூர் செல்லும் பேருந்துகள் ஆண்டாங்கோவில் வழியாகச் செல்கின்றன. ஆண்டாங்கோவில் நிறுத்தத்தில் இறங்கி சுமார் அரை கி.மீ. தூரம் நடந்தால் சொர்ணபுரீசுவரர் ஆலயத்தை அடையலாம்.

ஆலய முகவரி

அருள்மிகு சொர்ணபுரீசுவரர் திருக்கோயில்,
ஆண்டாங்கோவில்,
ஆண்டாங்கோவில் அஞ்சல்,
வலங்கைமான் S.O.
திருவாரூர் மாவட்டம் -  612 804.

இக்கோயில், தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
 

குடமுருட்டி ஆற்றின் கரையில் உள்ளது இத்தலம். குடமுருட்டி ஆறு, தேவாரக் காலத்தில் கடுவாய் எனப் பெயர் பெற்றிருந்தது. ஊரின் பெயர் புத்தூர். கடுவாய் நதிக்கரையில் இருந்ததால் கடுவாய்க்கரைப்புத்தூர் என்ற பெயர் பெற்றது. இந்நாளில், இத்தலம் ஆண்டாங்கோவில் என்ற பெயருடன் அறியப்படுகிறது. அப்பர் தனது பதிகத்தில் இத்தலத்தை கடுவாய்க்கரைத் தென்புத்தூர் என்று குறிப்பிடுகிறார்.

ஆலயத்தின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சியளிக்கிறது. ஆலயத்துக்கு வெளியே கோவிலின் தீர்த்தமான திரிசூலகங்கை, கோயிலின் வலதுபுறம் உள்ளது. கோபுர வாயிலில் இடதுபுறம் சித்தி விநாயகர் உள்ளார். கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன், நேரே கொடிமரத்து விநாயகர், கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் உள்ளன. நந்தி மண்டப தூண்களில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக் காணலாம். அதையடுத்து, அநேக தூண்களுடைய கருங்கல்லால் ஆன முன் மண்டபம் உள்ளது. உள்ளே சென்று கருவறையை அடைந்தால் மூலவர் கிழக்கு நோக்கு எழுந்தருளியுள்ளார்.
 

சூரிய பூஜை

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் சித்திரை 11, 12, 23 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி மூலஸ்தானத்தில் விழுந்து சூரிய பூஜை நடக்கிறது. கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி, ஆலால மரத்தின் கீழ் சனகாதி முனிவர்கள் இருபுறமும் இருக்க, முயலகனை காலின் கீழ் மிதித்தவாறு காணப்படுகிறார். கருவறை சுற்றுப் பிராகாரத்தில் நால்வர் சந்நிதி, பைரவர், சூரியன், நவக்கிரகங்கள் ஆகியவற்றைக் காணலாம். காக்கை வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் சனி பகவானின் திருஉருவச்சிலை அழகாக உள்ளது. அம்பாள் சொர்ணாம்பிகை தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள். அம்பாள் சந்நிதி முன் மண்டபத்தின் மேல் விதானத்தில் 12 ராசிகளும் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன.
 

ருது பூஜை

இத்தல விநாயகர் கும்பகர்ண விநாயகர் என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கிறார். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தல இறைவனை வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும் எனபது ஐதீகம். சரியான வயதில் வயதுக்கு வராத பெண் குழந்தைகள் திங்கள் கிழமையில் இத்தலத்தில் நீராடி, இறைவனுக்கு விளக்கேற்றி அர்ச்சித்து, இறைவி சொர்ணாம்பிகையையும் வழிபட்டு வந்தால், விரைவில் ருது ஆகிவிடுவார்கள் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை.
 

ருது தோஷ பரிகாரம் செய்ய வருபவர்கள், இந்தத் திருத்தலத்தின் எதிரில் உள்ள திரிசூலகங்கை என்ற திருக்குளத்தில் நீராட வேண்டும். பிறகு 7 எலுமிச்சைப் பழம், 7 மஞ்சள் கிழங்கு கொண்டு வந்து ஆலயத்தில் கொடுத்து இறைவனுக்கும், இறைவிக்கும் சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பெண்ணின் மடியில் ஒரு மஞ்சள் கிழங்கும், ஒரு எலுமிச்சைப் பழமும் வைத்து பின்னர் இறைவனுக்கும், இறைவிக்கும் அர்ச்சனை செய்வார்கள். பின்பு அந்தப் பெண், 7 நெய் தீபம் ஏற்றி தொடர்ந்து 7 திங்கள்கிழமைகள் வழிபாடு செய்து வந்தால், ருது தோஷம் விலகும் என்பது ஐதீகம். மாதவிலக்குப் பிரச்னை உள்ள பெண்களும் இந்த ஆலயம் வந்து வழிபாடு செய்து பலன் பெறலாம்.திருநாவுக்கரசு சுவாமிகள் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அப்பர் தனது பதிகத்தில் இத்தலத்தை கடுவாய்க்கரைத்தென்புத்தூர் என்று குறிப்பிடுகிறார்.

ஒருத்தனை மூவுலகொடு தேவர்க்கும்
அருத்தனை அடியேன் மனத்துள் அமர்
கருத்தனைக் கடுவாய்ப் புனல் ஆடிய
திருத்தனைப் புத்தூர் சென்று கண்டு உய்ந்தேனே.

யாவரும் அறிதற்கு அரியான்தனை
மூவரின் முதலாகிய மூர்த்தியை
நாவின் நல்லுரை ஆகிய நாதனைத்
தேவனைப் புத்தூர் சென்று கண்டு உய்ந்தேனே.

அன்பனை அடியார் இடர் நீக்கியைச்
செம்பொனைத் திகழும் திருக்கச்சியே
கம்பனைக் கடுவாய்க்கரைத் தென்புத்தூர்
நம்பனைக் கண்டு நான் உய்யப் பெற்றேனே.
 
மா தனத்தை மா தேவனை மாறு இலாக்
கோ தனத்தில் ஐந்து ஆடியை வெண்குழைக்
காதனைக் கடுவாய்க்கரைத் தென்புத்தூர்
நாதனைக் கண்டு நான் உய்யப் பெற்றேனே.
 
குண்டு பட்ட குற்றம் தவிர்த்து என்னை ஆட்
கொண்டு நல் திறம் காட்டிய கூத்தனைக்
கண்டனைக் கடுவாய்க்கரைத் தென்புத்தூர்
அண்டனைக் கண்டு அருவினை யற்றேனே.

பந்த பாசம் அறுத்து எனை ஆட்கொண்ட
மைந்தனை மணவாளனை மாமலர்க்
கந்த நீர்க் கடுவாய்க்கரைத் தென்புத்தூர்
எந்தை ஈசனைக் கண்டு இனிது ஆயிற்றே.
 
உம்பரானை உருத்திர மூர்த்தியை
அம்பரானை அமலனை ஆதியைக்
கம்பு நீர்க் கடுவாய்க்கரைத் தென்புத்தூர்
எம்பிரானைக் கண்டு இன்பம தாயிற்றே.

மாசார் பாச மயக்கறு வித்தெனுள்
நேச மாகிய நித்த மணாளனைப்
பூச நீர்க்கடுவாய்க்கரைத் தென்புத்தூர்
ஈச னேயென இன்பம் அது ஆயிற்றே.

இடுவார் இட்ட கவளம் கவர்ந்திரு
கடுவாய் இட்டவர் கட்டுரை கொள்ளாதே
கடுவாய்த் தென்கரைப் புத்தூர் அடிகட்கு ஆட்
படவே பெற்று நான் பாக்கியஞ் செய்தேனே.

அரக்கன் ஆற்றல் அழித்தவன் பாடல் கேட்டு
இரக்கமாகி அருள்புரி யீசனைத்
திரைக்கொள் நீர்க் கடுவாய்க்கரைத் தென்புத்தூர்
இருக்கு நாதனைக் காணப்பெற்று உய்ந்தேனே.

 

கடுவாய்க்கரைத்தென்புத்தூரில் இருக்கும் நாதனைக் காணப்பெற்று உய்ந்தேன் என்று திருநாவுக்கரசர், இறைவன் தரிசனம் கிடைக்கப்பெற்றதை தனது பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார். நாமும் சென்று, திருநாவுக்கரசருக்குக் காட்சி கொடுத்த இறைவனை வணங்கி அருள் பெறுவோம்.

திருநாவுக்கரசரின் தேவாரம் - திருவாவடுதுறை ச. வடிவேல் ஓதுவார்

 

]]>
http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/feb/10/பெண்கள்-ருது-பரிகாரத்-தலம்-சொர்ணபுரீசுவரர்-கோவில்ஆண்டாங்கோயில்-2645407.html
2642130 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் ராகு - கேது தோஷம் போக்கும் நாகநாதசுவாமி கோவில், திருப்பாதாளீச்சரம் (பாமணி) என்.எஸ். நாராயணசாமி Friday, February 10, 2017 08:22 AM +0530  

பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 104-வது தலமாக இருக்கும் திருபாதாளீச்சரம், ஒரு சிறந்த பரிகாரத் தலம். தற்போது இது பாமணி என்று வழங்கப்படுகிறது.
 

     இறைவன் பெயர் : நாகநாதசுவாமி, சர்ப்பபுரீசுவரர்
     இறைவி பெயர் : அமிர்தநாயகி

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றுள்ளது.

எப்படிப் போவது?

மன்னார்குடிக்கு வடக்கே 3.5 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. மன்னார்குடியிலிருந்து பாமணிக்குச் செல்லும் சாலையில் சென்று, பாமணியை அடைந்து, அங்குள்ள உரத் தொழிற்சாலையை ஒட்டிய சாலையில் சென்றால் கோயிலை அடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும். மன்னார்குடியில் இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு

ஆலய முகவரி

அருள்மிகு சர்ப்பபுரீசுவரர் திருக்கோயில்,
பாமணி, பாமணி அஞ்சல்,
வழி மன்னார்குடி,
மன்னார்குடி வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 614 014.

இக்கோயில், தினமும் காலை 8.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

சுகல முனிவர் என்பவர் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு வந்தார். அவர் வளர்த்த காமதேனு தரும் பாலைக் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வந்தார். ஒரு சமயம், அவர் வளர்த்த காமதேனு பால் சொரிந்து சிவலிங்கத்தை வழிபடுவதைக் கண்டு, முனிவர் தமக்குப் பால் குறைந்துவிடுமே என்று கோபித்து காமதேனுவை அடித்தார். அதுகண்டு வருந்திய காமதேனு, ஓடிச்சென்று லிங்கத்தை வழிபட்டதால் தனக்கு நேர்ந்த நிலையை உணர்த்துவதுபோல சிவலிங்கத்தின் மீது முட்டி ஓடி, இத்தலத்திலுள்ள பசுபதி தீர்த்தத்தில் விழுந்து இறந்தது. அப்போது இறைவன் காட்சி தந்து பசுவை உயிர்ப்பித்தார். காமதேனு முட்டியபோது சுயம்பு லிங்க மூலத்திருமேனி மூன்று பிரிவாகப் பிளந்தது. சுயம்பு லிங்கமாதலால், மேற்புறம் சொர சொரப்பாக உள்ளது. முப்பிரிவாகப் பிளந்த லிங்கம், இப்போது செப்புத் தகட்டால் ஒன்றாகப் பொருத்தப்பட்டு விளங்குகிறது.

பாதாளத்திலிருந்து ஆதிசேஷன் வெளிப்பட்டு, சர்ப்ப உடலுடனும், மனித முகத்துடனும் தனஞ்சய முனிவராக இத்தல இறைவனை வழிபட்டு தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்கப் பெற்றார். ஆகவே, இத்தலம் பாதாளீச்சுரம் என்று பெயர் பெற்றது. பாம்பணி, சர்ப்பபுரம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள். பாம்பணி என்பதே மருவி பாமணி ஆயிற்று. இறைவன் கருவறையில் மூலவருக்கு இடதுபுறம் தனஞ்சய முனிவருக்கு தனி சந்நிதி உள்ளது. நாகலிங்கப் பிரதிஷ்டையும் காணப்படுகிறது.
 

கோவில் அமைப்பு

இக்கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்து உள் புகுந்தால், வலதுபுறம் அம்பாள் சந்நிதி உள்ளது. இரண்டாவது வாயிலில் 3 நிலை சிறிய கோபுரம் உள்ளது. கோபுரத்தின் முன்னே நந்தி மண்டபம், பலிபீடம், கொடிமரம் உள்ளன. கோபுர வாயிலின் இருபுறமும் துவார கணபதி, மற்றும் தண்டாயுதபாணி சிறிய சந்நிதியில் காட்சி தருகின்றனர். உட்கோபுர வாயிலைக் கடந்தால் நேரே புற்று மண்ணால் ஆன சுயம்பு லிங்கமாக மூலவர் நாகநாதர் தரிசனம் தருகிறார். கருவறை பிராகாரத்தில் சனகாதி முனிவர்களுடன் தட்சிணாமூர்த்தி, சூரியன், தலவிநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, துர்வாசர், சாஸ்தா, காலபைரவர், சனிபகவான், நவக்கிரகம், நால்வர், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. உள் மண்டபத்தில் வலதுபுறம் நடராஜ சபை உள்ளது.
 

மனித முகம், பாம்பு உடலுடன் ஆதிசேஷனுக்கு இக்கோவிலில் தனி சன்னதி உள்ளது. அனந்தன், வாசுகி, தக்ஷகன், கார்கோடகன், சங்கபாலன், குலிகன், பத்மன், மகாபத்மன் என்ற அஷ்ட நாகங்களுக்கும், ராகு கேதுவுக்கும் தலைவன் ஆதிசேஷன். வேறு எங்கும் காணமுடியாத இந்த ஆதிசேஷனை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், ஜாதக ரீதியாக நாகதோஷம், ராகு - கேது தோஷம், காலசர்ப்ப தோஷம் ஏற்பட்டவர்கள் நிவர்த்தி அடைவர் என்பது நம்பிக்கை. மேலும், திருமணத் தடை, புத்திர பாக்கியம், கணவன் - மனைவிக்குள் ஏற்பட்ட கருத்த வேறுபாடுகள் நீங்கவும் இத்தல இறைவனை வழிபட்டால் பலன் கிடைக்கும். மண்ணால் அமையப்பெற்ற லிங்கங்களுக்கு பிற கோயில்களில் அபிஷேகம் செய்யமாட்டார்கள். ஆனால், இங்கு ஆதிசேஷன் புற்றுமண்ணால் அமைத்த நாகநாதசுவாமிக்கு அபிஷேகம் உண்டு என்பது தனிச் சிறப்பாகும். இங்கு பைரவரும் சனிபகவானும் சேர்ந்து அருள்பாலிப்பதால், இது சனிதோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும் உள்ளது.
 

முசுகந்த சக்கரவர்த்தி இத்தல இறைவனை பச்சை திராட்சையால் வழிபட்டு பேறுபெற்றதாக தலபுராணம் விவரிக்கிறது. ஆகையால், இத்தலத்தில் இறைவனுக்கு பச்சை திராட்சை நிவேதனம் செய்வது ஒரு சிறப்பு அம்சமாகும். மேலும், பிப்பலாயணன் பூஜித்து தனது குஷ்டரோகம் நீங்கப்பெற்றதாகவும், பிரம்மதேவன் இங்கு பூஜித்து மாமரத்தை தல விருட்சமாக ஆக்கியதாகவும் தல வரலாறு குறிப்பிடுகிறது. மாம்பழச் சாறு கொண்டு இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
 

இத்தலத்தில் குருபகவான் சிம்ம தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிப்பதால், இவரை வழிபடுபவர்களுக்கு சிம்மகுருவின் அருள் கிடைக்கும். ஒருமுறை தட்சிணாமூர்த்தியின் சீடர்கள் நால்வரும் விஷ்ணுவை தரிசிக்க வைகுண்டம் சென்றார்கள். அப்போது இவர்களை துவார பாலகர்கள் தடுத்தனர். கோபம் கொண்ட முனிவர்கள் இவர்களுக்கு சாபம் கொடுத்தனர். இதனால் முனிவர்களுக்கு தோஷம் ஏற்பட்டது. இந்தத் தோஷம் நீங்க பாமணி நாகநாதரையும், சிம்ம தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு தங்கள் தோஷம் நீங்கப் பெற்றனர். சிம்மம், கும்பம், கடகம், தனுசு, மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்களும், லக்னத்துக்கு உரியவர்களும் சிம்ம தட்சிணாமூர்த்தியை வழிபட்டால், சிறப்பான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை. 1000 தலை கொண்ட ஆதிசேஷனே இங்கு வந்து வழிபாடு செய்துள்ளதால், இத்தலம் செவ்வாய் உட்பட சகல தோஷங்களுக்கும் நிவர்த்தி தலமாக விளங்குகிறது.
 

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம் 1-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி மத்தமொடு நல்ல
பொன்னியல் கொன்றையினான் புனல்சூடிப் பொற்பமரும்
அன்னம் அனநடையாள் ஒருபாகத்து அமர்ந்து அருளி நாளும்
பன்னிய பாடலினான் உறைகோயில் பாதாளே.    

நீடலர் கொன்றையொடு நிரம்பா மதிசூடி வெள்ளைத்
தோடமர் காதில்நல்ல குழையான் சுடுநீற்றான்
ஆடர வம்பெருக அனலேந்திக் கைவீசி வேதம்
பாடலினால் இனியான் உறைகோயில் பாதாளே.

நாகமும் வான்மதியும் நலம்மல்கு செஞ்சடையான் சாமம்
போகநல் வில்வரையாற் புரம்மூன்று எரித்து உகந்தான்
தோகைநல் மாமயில்போல் வளர்சாயல் தூமொழியைக் கூடப்
பாகமும் வைத்து உகந்தான் உறைகோயில் பாதாளே.

அங்கமும் நான்மறையு மருள்செய் தழகார்ந்த அஞ்சொல்
மங்கையோர் கூறுடையான் மறையோன் உறைகோயில்
செங்கயல் நின்றுகளுஞ் செறுவில் திகழ்கின்ற சோதிப்
பங்கயம் நின்றலரும் வயல்சூழ்ந்த பாதாளே.

பேய்பல வுந்நிலவப் பெருங்காடரங் காகவுன்னி நின்று
தீயொடு மான்மறியும் மழுவும் திகழ்வித்துத்
தேய்பிறை யும்மரவும் பொலிகொன்றைச் சடைதன்மேற் சேரப்
பாய்புனலும் உடையான் உறைகோயில் பாதாளே.

கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச் சடைதன்மே னின்றும்
விண்ணியல் மாமதியும் உடன் வைத்தவன் விரும்பும்
பெண்ணமர் மேனியினான் பெருங்காடு அரங்காக ஆடும்
பண்ணியல் பாடலினான் உறைகோயில் பாதாளே.

விண்டலர் மத்தமொடு மிளிரும்மிள நாகம்வன்னி திகழ்
வண்டலர் கொன்றைநகு மதிபுல்கு வார்சடையான்
விண்டவர் தம் புரம் மூன்று எரிசெய்து உரை வேதம் நான்கும் அவை
பண்டிசை பாடலினான் உறைகோயில் பாதாளே.

மல்கிய நுண்ணிடையாள் உமைநங்கை மறுகஅன்று கையால்
தொல்லை மலையெடுத்த அரக்கன் தலை தோள்நெரித்தான்
கொல்லை விடையுகந்தான் குளிர்திங்கள் சடைக்கமு அணிந்தோன்
பல்லிசை பாடலினான் உறைகோயில் பாதாளே.

தாமரை மேல் அயனும் அரியும் தமது ஆள்வினையால் தேடிக்
காமனை வீடுவித்தான் கழல் காண்பிலராய் அகன்றார்
பூ மருவும் குழலாள் உமைநங்கை பொருந்தியிட்ட நல்ல
பா மருவும் குணத்தான் உறைகோயில் பாதாளே.

காலையில் உண்பவரும் சமண்கையரும் கட்டுரை விட்டு அன்று
ஆலவிடம் நுகர்ந்தான் அவன் தன் அடியே பரவி
மாலையில் வண்டினங்கள் மதுவுண்டு இசைமுரல வாய்த்த
பாலையாழ்ப் பாட்டு உகந்தான் உறைகோயில் பாதாளே.

பன்மலர் வைகுபொழில் புடைசூழ்ந்த பாதாளைச் சேரப்
பொன் இயல் மாடம் மமல்கு புகலிந்நகர் மன்னன்
தன் ஒளி மிக்கு உயர்ந்த தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன
இன்னிசை பத்தும் வல்லார் எழில் வானத்து இருப்பாரே.

சம்பந்தரின் பதிகம் - பாடியவர் மதுரை முத்துக்குமரன்

சம்பந்தரின் பதிகம் - பாடியவர் மதுரை முத்துக்குமரன்

 

]]>
http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/feb/03/ராகு---கேது-தோஷம்-போக்கும்-நாகநாதசுவாமி-கோவில்-திருப்பாதாளீச்சரம்-பாமணி-2642130.html
2636917 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் ராகு - கேது தோஷம் நீக்கும் தலம் பாம்புபுரேஸ்வரர் கோவில், திருப்பாம்புரம் என்.எஸ். நாராயணசாமி Wednesday, January 25, 2017 05:29 PM +0530
பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 59-வது தலமாக விளங்கும் திருப்பாம்புரம், ஒரு மிகச் சிறந்த ராகு - கேது தோஷத்துக்கான பரிகாரத் தலம். ஆதிசேஷன், ராகு, கேது மற்றும் அஷ்டமா நாகங்கள், சிவராத்திரி மூன்றாம் ஜாமத்தில் இத்தல இறைவனை வழிபட்டு தங்கள் சாபம் நிவர்த்தியாகப் பெற்ற தலம். ஆதிசேஷனுடைய மூலவிக்கிரகமும், உற்சவ விக்கிரகமும் கோயிலில் உள்ள தலம்.

     இறைவன் பெயர்: சேஷபுரீஸ்வரர், பாம்புபுரேஸ்வரர்
     இறைவி பெயர்: வண்டமர் பூங்குழலியம்மை
இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது
மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 7 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் - காரைக்கால் வழிப்பாதையில் உள்ள கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி தெற்கே 2 கி.மீ. சென்றும் இத்தலத்தை அடையலாம். பேரளம் மற்றும் கற்கத்தியில் இருந்து திருபாம்புரம் செல்ல ஆட்டோ வசதி உள்ளது.

ஆலய முகவரி
அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில்,
திருபாம்புரம்,
சுரைக்காயூர் அஞ்சல்,
குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 612 203.

இக்கோயில், தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

திருப்பாம்பரம் ஒரு ராகு - கேது தோஷத்துக்கான நிவர்த்தி தலம். குடந்தை, நாகூர், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார ஸ்தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன், திருப்பாம்பரம் ஒன்றை மட்டும் தரிசித்தாலே போதும் என்பது தலமகாத்மியம். ராகுவும் கேதுவும் ஏக சரீரியாக, அதாவது ஓருடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதால் இத்தலம் ராகு - கேது பரிகாரத் தலமாக விளங்குகிறது. சிவராத்திரி அன்று இரவில், ஆதிசேஷன் வழிபடும் நான்கு தலங்களில் இத்தலம் மூன்றாவதாகும். மேலும் பிரம்மன், பார்வதிதேவி, அகத்தியர், தட்சன், சூரியன் போன்றோர் பூஜை செய்த தலம்; இந்திரன் சாபம் நீங்கிய தலம்; கங்கை பாவம் தொலைந்த தலம்; சந்திரன் பழி நீங்கிய தலம் என்று எண்ணற்ற பெருமைகளைக் கொண்டு திருபாம்புரம் ஒரு சிறந்த தலமாக இருக்கிறது.ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம் இருந்தால், 18 வருட ராகு தசை நடந்தால், 7 வருட கேது தசை நடந்தால், ஜாதகத்தில் லக்னத்துக்கு 2-ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ஜாதகத்தில் லக்னத்துக்கு 8-ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ராகு புக்தி கேது புக்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணம் தடைபடுதல், கனவில் அடிக்கடி பாம்பு வருதல் ஆகிய தோஷங்கள் நீங்க இத்தலத்துக்கு வந்து ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடி, கோவில் அர்ச்சகர் வழி பரிகாரங்கள் செய்து, தோஷ நிவர்த்தி செய்துகொள்ளலாம். ராகு - கேது தோஷங்கள் நீங்க, கல்லால் ஆன நாக வடிவங்களை இக் கோயிலில் உள்ள வன்னி மரத்தடியில் பிரதிஷ்டை செய்து வழிபடுகிறார்கள்.
 

தல வரலாறு

கைலாயத்தில் ஒருமுறை, சிவபெருமானை விநாயகர் வழிபடும்போது, இறைவன் கழுத்திலிருந்த பாம்பு, விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வமடைந்தது. அதனால் கோபமடைந்த சிவன், நாக இனம் முழுவதும் தன் சக்தி அனைத்தும் இழக்கும்படி சாபமிட்டார். அதனால் உலகைத் தாங்கும் ஆதிசேஷனும், ராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தி அனைத்தும் இழந்து அல்லல்பட்டன. சாப விமோசனம் வேண்டி ஈசனைத் துதிக்க, இறைவனும் மனமிரங்கி பூவுலகில் சேஷபுரி எனப்படும் திருப்பாம்புரம் தலத்தில் சிவராத்திரி நாளன்று தம்மை வழிபட்டால் சாப விமோசனம் கிட்டும் என அருளினார். அவ்வாறே, ஆதிசேஷன் தலைமையில் நாக இனங்கள் அனைத்தும் சிவராத்திரி முதல் சாமத்தில், கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் திருப்பாம்புரம் பாம்புநாதரையும், நான்காம் சாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர்.

இவ்வாலயத்தின் ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் எதிரே ஆதிசேஷ தீர்த்தம் இருக்கிறது. இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள பாம்புபுரேஸ்வரரை வழிபட்டால், எல்லா வகையான நாக தோஷங்கள் விலகிவிடுகின்றன. மூலவர் சேஷபுரீஸ்வரர், கிழக்கு நோக்கி நாக கவசம் சாற்றப்பட்டு காட்சி தருகிறார். அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் ஒரு கையில் தாமரை மலருடனும், மற்றொரு கையில் ருத்திராக்ஷ மாலையுடனும் அபய முத்திரையுடன் காட்சி தருகிறாள்.
 

இக்கோவிலில் உள்ள சட்டநாதர் சந்நிதியும், மலையீஸ்வரர் சந்நிதியும் மிகவும் விசேஷமானது. தலவிநாயகர் ராஜராஜ விநாயகர் சந்நிதி, தேவார மூவர் சந்நிதி, சனீஸ்வரன் சந்நிதி ஆகியவை இங்குள்ள மற்ற சந்நிதிகளாகும். திருவீழிமிழலை என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இத் தலத்துக்கு மிக அருகில் இருக்கிறது. இத்தலத்து கோவில் பிராகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து பார்த்தால், திருவீழிமிழலை கோவில் விமானம் தெரியும் என்று கூறப்படுகிறது.

ஆதிசேஷன் வழிபட்ட கோவில் ஆதலால், இன்றும் கோவிலின் உள்ளே பாம்புகள் நடமாட்டம் உள்ளதாகக் கூறுகிறார்கள். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திருப்பாம்புரம் கோவிலுக்குள் மல்லிகையின் மணமோ, தாழம்பூவின் மணமோ வீசுவதாகவும், அச்சமயம் கோவிலுக்குள் பாம்புகள் எங்கேனும் உலாவிக்கொண்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இத்தலத்தில் பாம்புகள் யாரையும் கடிப்பதில்லை என்கிறார்கள். விஷம் தீண்டாப் பதி என்ற சிறப்பு இத்தலத்துக்கு உள்ளது.
 

2002-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ம் தேதி காலையில், முதல் கால பூஜைக்காக சந்நிதி திறக்கப்படும்போது இறைவன் மேனியில் சுமார் 7 அடி நீளமுள்ள பாம்புச் சட்டை இருந்ததை ஆலய அர்ச்சகர்கள் கண்டனர். அது தற்போது இறைவன் சந்நிதிச் சுற்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்துக்கான இப்பதிகம், முதலாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர், புகழும் அழகும் மிகுந்தவராய், செல்வத்தால் சிறந்து வாழ்ந்து முடிவில் சிவனடியை அடைவர் என்று தனது பதிகத்தில் கடைசிப் பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.

1. சீர் அணி திகழ் திருமார்பில் வெண்ணூலர்
திரிபுரம் எ ரிசெய்த செல்வர்
வார் அணி வனமுலை மங்கை ஓர் பங்கர்
மான்மறி ஏந்திய மைந்தர்
கார் அணி மணிதிகழ் மிடறு உடை அண்ணல்
கண்ணுதல் விண்ணவர் ஏத்தும்
பார் அணி திகழ்தரு நான்மறை யாளர்
பாம்புர நன்னகராரே.

2. கொக்கிற கோடு கூவிள மத்தங்
கொன்றையொ டெருக்கணி சடையர்
அக்கினொ டாமை பூண்டழ காக
அனலது ஆடுமெம் மடிகள்
மிக்கநல் வேத வேள்வியு ளெங்கும்
விண்ணவர் விரைமலர் தூவப்
பக்கம்பல் பூதம் பாடிட வருவார்
பாம்புர நன்னகராரே.

3. துன்னலி னாடை யுடுத்ததன் மேலோர்
சூறைநல் லரவது சுற்றிப்
பின்னுவார் சடைகள் தாழவிட் டாடிப்
பித்தராய்த் திரியுமெம் பெருமான்
மன்னுமா மலர்கள் தூவிட நாளும்
மாமலை யாட்டியுந் தாமும்
பன்னுநான் மறைகள் பாடிட வருவார்
பாம்புர நன்னகராரே.

4. துஞ்சுநாள் துறந்து தோற்றமு மில்லாச்
சுடர்விடு சோதியெம் பெருமான்
நஞ்சுசேர் கண்ட முடையவென் நாதர்
நள்ளிருள் நடஞ்செயும் நம்பர்
மஞ்சுதோய் சோலை மாமயி லாட
மாடமா ளிகைதன்மே லேறி
பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும்
பாம்புர நன்னகராரே.

5. நதியத னயலே நகுதலை மாலை
நாண்மதி சடைமிசை யணிந்து
கதியது வாகக் காளிமுன் காணக்
கானிடை நடஞ்செய்த கருத்தர்
விதியது வழுவா வேதியர் வேள்வி
செய்தவர் ஓத்தொலி ஓவாப்
பதியது வாகப் பாவையுந் தாமும்
பாம்புர நன்னகராரே.

6. ஓதி நன்கு உணர்வார்க்கு உணர்வு உடை ஒருவர்
ஒளிதிகழ் உருவம் சேர் ஒருவர்
மாதினை இடமா வைத்த எம் வள்ளல்
மான்மறி ஏ ந்திய மைந்தர்
ஆதி நீ அருள் என்று அமரர்கள் பணிய
அலைகடல் கடைய அன்று எழுந்த
பாதி வெண்பிறை சடை வைத்த எம் பரமர்
பாம்புர நன்னகராரே.

7. மாலினுக்கு அன்று சக்கரம் ஈந்து
மலரவற்கு ஒருமுக ஒழித்து
ஆலின்கீழ் அறம் ஓர் நால்வருக்கு அருளி
அனலது ஆடும் எம் அடிகள்
காலனைக் காய்ந்து தம்கழல் அடியால்
காமனைப் பொடிபட நோக்கிப்
பாலனுக்கு அருள்கள் செய்த எம் அடிகள்
பாம்புர நன்னகராரே.

8. விடைத்தவல் லரக்கன் வெற்பினை யெடுக்க
மெல்லிய திருவிரல் ஊன்றி
அடர்த்தவன் றனக்கன் றருள்செய்த வடிகள்
அனலது ஆடுமெம் மண்ணல்
மடக்கொடி யவர்கள் வருபுன லாட
வந்திழி அரிசிலின் கரைமேற்
படப்பையிற் கொணர்ந்து பருமணி சிதறும்
பாம்புர நன்னகராரே.

9. கடிபடு கமலத்மு அயனொடு மாலும்
காதலோடு அடிமுடி தேடச்
செடிபடு வினைகள் தீர்த்தருள் செய்யுந்
தீவணர் எம்முடைச் செல்வர்
முடியுடை அமரர் முனிகணத்தவர்கள்
முறைமுறை அடிபணிந்து ஏத்தப்
படியது வாகப் பாவையுந் தாமும்
பாம்புர நன்னகராரே.

10. குண்டர் சாக்கியரும் குணம் இலாதாரும்
குற்றுவிட்டு உக்கையர் தாமும்
கண்டவாறு உரைத்துக் கால் நிமிர்த்து உண்ணும்
கையர்தாம் உள்ளவாறு அறியார்
வண்டுசேர் குழலி மலைமகள் நடுங்க
வாரணம் உரிசெய்து போர்த்தார்
பண்டுநாம் செய்த பாவங்கள் தீர்ப்பார்
பாம்புர நன்னகராரே.

11. பார் மலிந்து ஓங்கிப் பருமதில் சூழ்ந்த
பாம்புர நன்னகராரைக்
கார் மலிந்து அழகார் கழனிசூழ் மாடக்
கழுமல முதுபதிக் கவுணி
நார் மலிந்து ஓங்கும் நால்மறை ஞான
சம்பந்தன் செந்தமிழ் வல்லார்
சீர்மலிந்து அழகார் செல்வம தோங்கிச்
சிவனடி நண்ணுவர் தாமே.

ஞானசம்பந்தர் தேவாரம் - பாடியவர் இரா. குமரகுருபரன்

 

]]>
http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/jan/27/ராகு---கேது-தோஷம்-நீக்கும்-தலம்-பாம்புபுரேஸ்வரர்-கோவில்-திருப்பாம்புரம்-2636917.html
2634453 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் வளமான வாழ்வைத் தரும் கேடிலியப்பர் கோவில், கீழ்வேளூர் என்.எஸ். நாராயணசாமி Friday, January 20, 2017 12:00 AM +0530 பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 84-வது தலமாக இருப்பது கீழ்வேளூர் திருத்தலம். மானிடர்களின் கேடுகளைப் போக்கி, வினைகளை நீக்கி, துன்பமில்லா வாழ்வு தருபவர் இத்தல இறைவன் கேடிலியப்பர்.

     இறைவன் பெயர் : கேடிலியப்பர், அக்ஷய லிங்கேஸ்வரர்
     இறைவி பெயர் : வனமுலை நாயகி, சுந்தர குசாம்பிகை

இத்தலத்துக்கு, திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும், திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும் உள்ளன.

எப்படிப் போவது

திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்து வழியில் கீழ்வேளூர் தலம் உள்ளது. திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்திலிருந்து கீழ்வேளூர் செல்ல நகரப் பேருந்துகளும் உள்ளன. நாகப்படினத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் சிக்கல் தலத்தை அடுத்து இத்தலம் உள்ளது.

ஆலய முகவரி
அருள்மிகு கேடிலியப்பர் திருக்கோவில்,
கீவளூர் அஞ்சல்,
நாகப்பட்டினம் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611 104.

இக்கோயில் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

முன்பு தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலைக் கடைந்தபோது உண்டான அமிர்தத் துளி ஒன்று இரண்டாகச் சிதறி விழுந்தது. அவற்றில் ஒன்று இந்தியாவின் வடக்கே விழுந்து வட பத்ரிகாரண்யம் ஆயிற்று. மற்றொரு துளி தென் இந்தியாவில் தமிழகத்தில் விழுந்து, இலந்தைவனமாகி தென் பத்ரிகாரண்யம் ஆயிற்று. பத்ரி என்றால் இலந்தை என்று பொருள். எனவேதான், இலந்தை மரங்கள் மிகுந்து காணப்பட்ட இத்தலம் தென் பத்ரிகாரண்யம் என்றும் அழைக்கப்பட்டது. இலந்தை மரமும் இத்தல விருட்சமாயிற்று.

ஸ்ரீ முருகப் பெருமான், தேவர்களைக் காக்க திருச்செந்தூரில் அசுரன் சூரபத்மனையும், அவனைச் சார்ந்தவர்களையும் அழித்தார். அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்க என்ன செய்வது என்று அவரது தந்தையான சிவபெருமானைக் கேட்டார். அதற்கு ஈசன், ‘பூவுலகில் தட்சிண பத்ரி ஆரண்யம் என்று போற்றப்படும் கீழ்வேளூர் திருத்தலத்தில், சுயம்புலிங்க வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் என்னை நவலிங்க பூஜை செய்து, தவமிருந்து வழிபட்டால் இந்த தோஷம் நீங்கும்’ என்று கூறி அருளினார்.

அவரது அருளாணைப்படியே இத்தலத்துக்கு வந்த முருகப்பெருமான், தன் வேலால் பூமியைப் பிளந்து தீர்த்தம் உண்டாக்கினார். பின்னர் இந்தக் கீழ்வேளூரின் எட்டுத் திசைகளிலும் உள்ள கோவில் கடம்பனூர், ஆழியூர், இளங்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பர வாழ்க்கை, வல்லமங்கலம், பட்டமங்கலம், சொட்டால்வண்ணம், ஒதியத்தூர் ஆகிய ஒன்பது ஊர்களில் நவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

பின்னர், சரவணப் பொய்கையில் நீராடி, கீழ்வேளூரில் எழுந்தருளியுள்ள சுயம்புமூர்த்தியாகிய கேடிலியப்பரை வழிபட்டு, வீரஹத்தி தோஷம் போக்க வேண்டினார். அப்போது வீரஹத்திகளான மாயைகள் முருகப் பெருமானின் தவத்திற்கு இடையூறு செய்தனர். உடனே சாந்த ஸ்வரூபியான ஸ்ரீ சுந்தரகுஜாம்பிகை, பத்ரகாளியாகத் திருஉருவம் கொண்டு வடதிசை நோக்கி பத்து திருக்கரங்களுடன், நான்கு திசைகள் மற்றும் ஐந்து புறங்களிலிருந்தும் குமரனுக்கு எந்தவிதமான கேடும் நேராமல் வராமல் காத்து நின்றார். எனவே ஸ்ரீஅஞ்சுவட்டத்தம்மன் என்ற திருநாமமும் இந்த அம்பிகைக்கு உண்டு. குமரன் தவக்கோலத்திலேயே இங்கு காட்சி தருகிறார்.

கோவில் அமைப்பு

சிலந்திச் சோழன் என்று பெயர் பெற்ற கோச்செங்கட் சோழன் கட்டிய அநேக மாடக்கோயில்களில் கீழ்வேளூர் ஆலயமும் ஒன்றாகும். ஊர் நடுவில் கிழக்கு நோக்கியுள்ள இவ்வாலயம் ஒரு பெரிய கோயில். கோவிலின் ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறது. கோபுரத்துக்கு எதிரில் முருகப்பெருமான் உண்டாக்கியதாகக் கூறப்படும் சரவண தீர்த்தம் உள்ளது. கோவிலின் உள்ளே வசந்த மண்டபம் காணப்படுகிறது. இத்தலத்தின் மூலவரான கேடிலியப்பர், சுயம்புத் திருமேனியுடன் பெரிய ஆவுடையார், மெல்லிய பாணத்துடன் லிங்க உருவில் மாடக் கோவிலில் காட்சி தருகிறார். ஆலயத்தின் கருவறை விமானத்தில் தென்புறம் இருப்பது சோமாஸ்கந்த விமானம், வடபுறமிருப்பது கேடிலியப்பர் விமானம். தலவிநாயகர் பத்ரி விநாயகர். அத்துடன் சுந்தர விநாயகரும் உள்ளார்.
 

கட்டுமலை மீதுள்ள சந்நிதியில் வலது பாத நடராஜர் தரிசனம் தருகிறார். அகத்தியருக்கு நடராஜப் பெருமான் தனது வலதுபாத தரிசனம் தந்த தலம் என்ற சிறப்புடையது இத்தலம். அடுத்து சோமஸ்கந்தர் சந்நிதி, தட்சிணாமூர்த்தி, பதரி விநாயகர், அறுபத்துமூவர், ஜுரதேவர், அகஸ்தீஸ்வரர், விஸ்வநாதர், நவக்கிரகங்கள் ஆகியோரையும் மேற்கு கோஷ்டத்தில் லிங்கோத்பவரும், மகாலட்சுமி, சிவ ஆஞ்சநேயர் ஆகியோரையும் தரிசிக்கலாம். அடுத்து அம்பிகை சுந்தரகுஜாம்பிகையின் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது.

குபேரனுக்கும் இத்தலத்தில் தனி சந்நிதி இருப்பது ஒரு சிறப்பம்சமாகும். முருகப்பெருமானின் பூசைக்கும் தவத்துக்கும் கெடுதி உண்டாகாதவாறு இறைவி சுந்தர குசாம்பிகை, துர்க்கையின் அம்சமாகக் காவல் புரிந்த அஞ்சுவட்டத்து அம்மையின் சந்நிதி முதல் பிராகாரத்தில் முருகன் சந்நிதிக்கு முன்னால், தனியே வட பக்கத்தில் இருக்கிறது.


இவற்றைத் தவிர பஞ்சபூத லிங்கங்களும் தனிச்சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள். இத்தல முக்குறுணி விநாயகப் பெருமான் (ஸ்ரீ சுந்தர விநாயகர்) மிகவும் சக்தி வாய்ந்தவர். தட்சிணாமூர்த்தி மிகப் பழமையான திருமேனி. இத்தலத்திலுள்ள ஏகபாதமூர்த்தி திருஉருவம் தனிச்சிறப்புடையது. காளி உருவம் சுதையாலானது. சுதையால் ஆன இத்திருமேனிக்குப் புனுகுசட்டம், சாம்பிராணித் தைலம் சார்த்தப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

இறைவனின் திருப்பெயர் கேடிலியப்பர். இப்பெயர் திருநாவுக்கரசரின் "ஆளான அடியவர்க்கு அன்பன் தன்னை" என்று தொடங்கும் இவ்வூர்த் திருத்தாண்டக பதிகத்துள் எடுத்தாளப்பட்டுள்ளது. பாடல்தோறும், கீழ்வேளூர் இறைவன் கேடிலியை நாடுபவர்கள் தன் வாழ்வில் கேடில்லாமல் இருப்பர் என்று அப்பர் சுவாமிகள் கூறுகிறார். வனமுலைநாயகி என்று இறைவியின் பெயரை திருஞானசம்பந்தர் தனது “மின் உலாவிய சடையினர்” என்று தொடங்கும் இவ்வூர்ப் பதிகம் இரண்டாம் திருப்பாட்டில், "வாருலாவிய வனமுலையவளொடு மணி சிலம்பு அவை ஆர்க்க" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இத்திருக்கோயிலைப் பெருந்திருக்கோயில் என்று இவ்வூர்ப் பதிகத்தில் பல பாடல்களில் ஞானசம்பந்தர் கூறியுள்ளார். எனவே இத்தலத்தின் இறைவன், இறைவி ஆகியோரின் திருப்பெயர்கள், கோவில் இவை எல்லாம் தேவாரத்தில் போற்றப்பட்ட சிறப்புடையவை.
 

கீழ்வேளூர் ஒரு திருப்புகழ் வைப்புத் தலம். இங்குள்ள முருகப்பெருமான், பாலசுப்பிரமணியராய் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வடக்கு நோக்கி தவக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். திருச்செந்தூர் முருகன், இத்தல முருகன் இருவரின் திருமேனிகளும் ஒரே சிற்பியால் செய்யப்பட்டதாகும்.
தன்னை நாடி வருபவர்களுக்கு சகல தோஷங்களையும் போக்கி கேடில்லா வளமான வாழ்வைத் தரும் கேடிலியப்பரும், வேண்டுவோருக்கு இல்லையெனாது அனைத்தையும் அள்ளி வழங்கும் அன்னை சுந்தரகுஜாம்பிகையும் அருளாட்சி புரியும் கீழ்வேளூர் தலத்துக்கு வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று தரிசித்து சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்

திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் "இத்தல இறைவனை வழிபடுவர்களின் பிணிகளும் வினைகளும் போகும், வழிபடுவோர் நிலைத்த பேரின்ப வாழ்வு மிகப் பெறுவர், ஈசனை அன்போடு நினைபவர் வினைகள் போகும், இத்தல இறைவனை வழிபட்டால் நம்மை துன்பங்கள் அடையாது, ஞானசம்பந்தன் அருளிய இத்தல பதிகப் பாடல்களை ஓதுபவர் சிவகதி பெறுதல் உறுதி" என்றெல்லாம் குறிப்பிடுகிறார். அப்பர் பெருமான் இத்தல இறைவனை வழிபடுவர்களின் கேடுகள் எல்லாம் அழிந்து விடும் என்று தனது பதிகப் பாடல்கள் ஒவ்வொன்றிலும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
 

கீழே இருப்பது திருநாவுக்கரசரின் கீழ்வேளூர் பதிகம்.
ஆளான அடியவர்கட்கு அன்பன் தன்னை
ஆனஞ்சும் ஆடியைநான் அபயம் புக்க
தாளானைத் தன் ஒப்பார் இல்லாதானைச்
சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த
தோளானைத் தோளாத முத்து ஒப்பானைத்
தூவெளுத்த கோவணத்தை அரையில் ஆர்த்த
கீளானைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடு இலாரே.

சொற்பாவும் பொருள்தெரிந்து தூய்மை நோக்கித்
தூங்காதார் மனத்திருளை வாங்கா தானை
நற்பான்மை அறியாத நாயினேனை
நன்னெறிக்கே செலும் வண்ணம் நல்கினானைப்
பற்பாவும் வாயாரப் பாடி யாடிப்
பணிந்தெழுந்து குறைந்தடைந்தார் பாவம் போக்க
கிற்பானைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடு இலாரே..

அளைவாயில் அரவசைத்த அழகன் தன்னை
ஆதரிக்கும் அடியவர்கட்கு அன்பே என்றும்
விளைவானை மெய்ஞ்ஞானப் பொருள் ஆனானை
வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்
குளைவானை அல்லாதார்க் குளையா தானை
உலப்பிலியை உள்புக்கென் மனத்து மாசு
கிளைவானைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடு இலாரே..

தாட்பாவு கமலமலர்த் தயங்குவானைத்
தலையறுத்து மாவிரதம் தரித்தான் தன்னைக்
கோள் பாவு நாள் எல்லாம் ஆனான் தன்னைக்
கொடுவினையேன் கொடுநரகக் குழியில் நின்றால்
மீட்பானை வித்துருவின் கொத்து ஒப்பானை
வேதியனை வேதத்தின் பொருள்கொள் வீணை
கேட்பானைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடு இலாரே..

நல்லானை நரைவிடை ஒன்றூ ஊர்தியானை
நால்வேதத் தாறங்கம் நணுக மாட்டாச்
சொல்லானைச் சுடர்மூன்றும் ஆனான் தன்னைத்
தொண்டாகிப் பணிவார்கட்கு அணியான் தன்னை
வில்லானை மெல்லியல் ஓர் பங்கன் தன்னை
மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்க
கில்லானைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடு இலாரே..

சுழித்தானைக் கங்கைமலர் வன்னி கொன்றை
தூமத்தம் வாளரவஞ் சூடினானை
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ
ஆலால நஞ்சதனை உண்டான் தன்னை
விழித்தானைக் காமனுடல் பொடியாய் வீழ
மெல்லியலோர் பங்கனைமுன் வேன லானை
கிழித்தானைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடு இலாரே..

உளரொளியை உள்ளத்தின் உனுள்ளே நின்ற
ஓங்காரத்துட் பொருள்தான் ஆயினானை
விளரொளியை விடுசுடர்கள் இரண்டும் ஒன்றும்
விண்ணொடு மண் ஆகாசம் ஆயினானை
வளர் ஒளியை மரகதத்தின் உருவினானை
வானவர்கள் எப்பொழுதும் வாழ்த்தி ஏத்தும்
கிளரொளியைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடு இலாரே..

தடுத்தானைக் காலனைக் காலாற் பொன்றத்
தன்னடைந்த மாணிக்கு அன்று அருள்செய்தானை
உடுத்தானைப் புலி அதளோடு அக்கும் பாம்பும்
உள்குவார் உள்ளத்தின் உள்ளான் தன்னை
மடுத்தானை அருநஞ்சம் மிடற்றுள் தங்க
வானவர்கள் கூடிய அத் தக்கன் வேள்வி
கெடுத்தானைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடு இலாரே..

மாண்டார் எலும்பு அணிந்த வாழ்க்கையானை
மயானத்தில் கூத்தனை வாள் அரவோடு என்பு
பூண்டானைப் புறங்காட்டில் ஆடலானைப்
போகாது என் உள் புகுந்து இடங்கொண்டான் என்னை
ஆண்டானை அறிவரிய சிந்தையானை
அசங்கையனை அமரர்கள் தம் சங்கை எல்லாம்
கீண்டானைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடு இலாரே..

முறிப்பான பேசிமலை யெடுத்தான் தானும்
முதுகிறமுன் கைந்நரம்பை யெடுத்துப் பாடப்
பறிப்பான்கைச் சிற்றரிவாள் நீட்டினானைப்
பாவியேன் நெஞ்சகத்தே பாதப் போது
பொறித்தானைப் புரமூன்றும் எரிசெய்தானைப்
பொய்யர்களைப் பொய்செய்து போது போக்கிக்
கிறிப்பானைக் கீழ்வேளூர் ஆளும் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடு இலாரே ...

சம்பந்தரின் பதிகம் - பாடியவர்கள் ஆலவாய் அண்ணல் பாடசாலை மாணவர்கள்

சம்பந்தரின் பதிகம் - பாடியவர் பாலச்சந்திரன்

 

]]>
http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/jan/20/வளமான-வாழ்வைத்-தரும்-கேடிலியப்பர்-கோவில்-கீழ்வேளூர்-2634453.html
2626558 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் திருமணத் தடை, ரத்தக்கொதிப்பு நீக்கும் தலம் திருஅன்னியூர் என்.எஸ். நாராயணசாமி Saturday, January 7, 2017 01:20 PM +0530  

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 42-வது தலமாக திருஅன்னியூர் தலம் உள்ளது.

    இறைவன் பெயர்: அக்னீசுவரர்
    இறைவி பெயர்: கௌரி பார்வதி

இத்தலத்துக்கு திருநாவுக்கரசரின் பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது?

1. கும்பகோணம் - காரைக்கால் சாலையில் எஸ்.புதூர் என்ற இடத்துக்கு வந்து, அங்கிருந்து தெற்கில் திரும்பி வடமட்டம் சென்று, அங்கிருந்து திருவீழிமிழலை செல்லும் சாலையில் சென்றால் திருஅன்னியூர் ஊரை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து அன்னியூருக்கு நகரப் பேருந்து செல்கிறது. சாலையோரத்திலேயே கோயில் உள்ளது.

2. கும்பகோணம் - நாச்சியார்கோவில் - பூந்தோட்டம் சாலை வழியில் திருவீழிமிழலை சென்று, அங்கிருந்து வடக்கே 3 கி.மீ. பயணம் செய்தும் இத்தலத்தை அடையலாம்.

3. திருக்கருவிலி கொட்டிட்டை என்ற மற்றொரு பாடல் பெற்ற தலத்திலிருந்து வடமட்டம் வழியாக 4 கி.மீ. பயணம் செய்தும் இத்தலத்தை அடையலாம்.

ஆலய முகவரி

அருள்மிகு அக்னீசுவரர் திருக்கோயில்,
அன்னியூர், அன்னியூர் அஞ்சல்,
வழி கோனேரிராஜபுரம்,
குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 612 201.

இக்கோயில், தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
திருஅன்னியூர் என்ற பெயரில் இரண்டு தேவாரத் தலங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று காவிரி வடகரைத் தலம், மற்றொன்று காவிரி தென்கரைத் தலம். காவிரி வடகரைத் தலமான திருஅன்னியூர், இன்றைய நாளில் பொன்னூர் என்று அழைக்கப்படுகிறது. காவிரி தென்கரைத் தலமான இந்த திருஅன்னியூர், கும்பகோணம் - காரைக்கால் சாலையில் எஸ்.புதூரில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது

தல வரலாறு

சிவபெருமானை புறக்கணித்துவிட்டு, மற்ற அனைவரையும் அழைத்து தட்சன் யாகம் நடத்தினான். யாகத்தில் கலந்து கொண்டவர்களில் அக்னி தேவனும் ஒருவன். சிவனை அவமதித்து நடத்தப்பட்ட யாகத்தில் கலந்துகொண்டதற்காக, இவன் பத்ரகாளியாலும், வீரபத்திரராலும் தண்டிக்கப்பட்டு சாபம் பெற்றான். அக்னிக்கு சாபம் ஏற்பட்டதால் எந்த யாகத்திலும் கலந்துகொள்ள முடியவில்லை. யாகம் நடத்தப்படாததால், மழைவளம் குன்றியது. உயிர்கள் வாடத் தொடங்கின. இதனால் வருந்திய அக்னி தேவன், பல தலங்களில் ஈசனை வழிபட்டு தனக்கு ஏற்பட்ட சாபத்திலிருந்து மீள வேண்டினான்.
 

அச்சமயம், இத்தலத்துக்கும் வந்து லிங்கம் அமைத்து, தீர்த்தம் உண்டாக்கி, வன்னி இலைகளால் இறைவனை அர்ச்சித்து சாபம் நீங்கப் பெற்றான். அக்னி தேவன் வழிபட்ட தலமாதலால், இறைவன் அக்னிபுரீஸ்வரர் ஆனார். அக்னி உண்டாக்கிய தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்று பெயர் பெற்றது. அக்னிதேவன் தனக்கு அருள்புரிந்த அக்னீஸ்வரரை வணங்கி, இத்தலத்துக்கு வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி வழிபடுவோருக்கு, தன் தொடர்புடைய உஷ்ண ரோகங்கள் நீங்கவும், நற்கதி பெறவும் அருள்புரியுமாறு இறைவனை வேண்டினான். எனவே, உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவனுக்கு கோதுமையால் செய்த பொருளை நிவேதனம் செய்து வழிபட்டால் விரைவில் குணமாகும்.

தலச் சிறப்பு

பார்வதி தேவி, காத்தியாயன முனிவரின் மகளாகப் பிறந்து இறைவனை அடைய இத்தலத்தில் தவமிருந்தாள். இறைவன் இவளுக்கு காட்சி தந்து இத்தலத்தின் அருகிலுள்ள திருவீழிமிழலையில் திருமணம் செய்துகொண்டார். எனவே, இது திருமணத்தடை நீக்கும் தலமாகும். திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களிடையே இன்றும் இருக்கும் நம்பிக்கை.

கோவில் அமைப்பு

ஒரு சிறிய 2 நிலை கோபுரத்துடன், அரிசிலாற்றின் வடகரையில் இக்கோயில் அமைந்துள்ளது. கோபுர வாயிலைக் கடந்தவுடன் நேரே விசாலமான முற்றவெளியில் பலிபீடம், நந்தி மண்டபம் உள்ளன. அதையடுத்து உள்ள முன்மண்டபத்தில் நால்வர் சந்நிதியும், வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியும் அமைந்துள்ளன. நேரே, இத்தல இறைவன் சுயம்புமூர்த்தியாக லிங்க உருவில் அருள்பாலிக்கிறார். கருவறை வாயில் இருபுறமும் துவாரபாலகர்கள் கல் சிற்பங்களாகவே வடிக்கப்பட்டுள்ளனர். உள்ளே நுழைந்து வலமாக வரும்போது, கருவறைச் சுவரில் அப்பர், அக்னி, கௌரி, சிவலிங்கம், காமதேனு பால்சொரிதல், ரிஷபாரூடர் சிற்பங்கள் வரிசையாக இருப்பதைக் காணலாம். பக்கத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார். விநாயகர், பாலசுப்பிரமணியர், கஜலட்சுமி சந்நிதிகளும், தலமரமான வன்னியும் உள்ளன. இங்குள்ள சோமாஸ்கந்தர், நடராசர் திருமேனிகள் மிக்க அழகுடையதாகக் காணப்படுகின்றன.
 

திருநாவுக்கரசர், இத்தலத்து இறைவன் மேல் பாடி அருளியுள்ள இப்பதிகம், 5-ம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது.

பாறலைத்த படுவெண் தலையினன்
நீறலைத்த செம்மேனியன் நேரிழை
கூறலைத்த மெய் கோள் அரவு ஆட்டிய
ஆறலைத்த சடை அன்னியூரரே.

பண்டு ஒத்த மொழியாளை ஓர் பாகமாய்
இண்டைச் செஞ்சடையன் இருள் சேர்ந்தது ஓர்
கண்டத்தன் கரியின் உரி போர்த்தவன்
அண்டத்து அப்புறத்தான் அன்னியூரரே.

பரவி நாளும் பணிந்தவர்தம் வினை
துரவை ஆகத் துடைப்பவர்தம் இடம்
குரவம் நாறும் குழல் உமை கூறராய்
அரவம் ஆட்டுவர்போல் அன்னியூரரே.

வேதகீதர் விண்ணோர்க்கும் உயர்ந்தவர்
சோதி வெண்பிறை துன்று சடைக் கு அணி
நாதர் நீதியினால் அடியார் தமக்கு
ஆதியாகி நின்றார் அன்னியூரரே.

எம்பிரான் இமையோர்கள் தமக்கு எலாம்
இன்பர் ஆகி இருந்த எம் ஈசனார்
துன்ப வல்வினை போகத் தொழுமவர்க்கு
அன்பர் ஆகி நின்றார் அன்னியூரரே.

வெந்தநீறு மெய் பூசும் நல் மேனியர்
கந்த மாமலர் சூடுங் கருத்தினர்
சிந்தையார் சிவனார் செய்ய தீவண்ணர்
அந்தணாளர் கண்டீர் அன்னியூரரே.

ஊனை ஆர் தலையில் பலி கொண்டு உழல்
வானை வானவர் தாங்கள் வணங்கவே
தேனை ஆர் குழலாளை ஓர் பாகமா
ஆனை ஈர் உரியார் அன்னியூரரே.

காலை போய்ப் பலி தேர்வர் கண்ணார் நெற்றி
மேலை வானவர் வந்து விரும்பிய
சோலை சூழ்புறங்காடு அரங்கு ஆகவே
ஆலின் கீழ அறத்தார் அன்னியூரரே.

எரி கொள் மேனியர் என்பு பபணிந்து இன்பராய்த்
திரியும் மூஎயில் தீ எழச் செற்றவர்
கரிய மாலொடு நான்முகன் காண்பதற்கு
அரியராகி நின்றார் அன்னியூரரே.

வஞ்சரக்கன் கரமுப் சிரத்தொடும்
அஞ்சும் அஞ்சும் ஓர் அறும் நான்கும் இறப்
பஞ்சின் மெல் விரலால் அடர்த்து ஆயிழை
அஞ்சல் அஞ்சல் என்றார் அன்னியூரரே.  

இத்தலத்தைப் பற்றிய திருநாவுக்கரசரின் தேவாரம் - பாடியவர்கள் ஆலவாய் அண்ணல் பாடசாலை மாணவர்கள்

 

]]>
http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/jan/06/திருமணத்-தடை-ரத்தக்கொதிப்பு-நீக்கும்-தலம்-திருஅன்னியூர்-2626558.html
2619378 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் இடர்கள் நீங்கி வாழ்வில் இன்பம் பெற, நித்யசுந்தரர் கோவில் - திருநெடுங்களம் என்.எஸ். நாராயணசாமி Friday, December 23, 2016 12:00 AM +0530 காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 8-வது தலமாக இருப்பது திருநெடுங்களம்.

     இறைவன் பெயர்: நித்யசுந்தரர், நெடுங்களநாதர்
     இறைவி பெயர்: ஒப்பிலா நாயகி

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது. இடர் களையும் திருப்பதிகம் என்று போற்றப்படும் இப்பதிகத்தை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால், நமக்கு வாழ்வில் ஏற்படும் இடர்கள் யாவும் நீங்கி நலமுடன் வாழலாம்.

எப்படிப் போவது

திருச்சி - தஞ்சாவூர் சாலையில் துவாக்குடி என்ற ஊர் வரை சென்று, அங்கிருந்து பிரியும் சாலையில் 5 கி.மீ. சென்றால் நெடுங்களம் அடையலாம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மாங்காவனம் செல்லும் நகரப் பேருந்து இத்தலம் வழியாகச் செல்கிறது. துவாக்குடியில் இருந்து ஆட்டோ மூலமும் இத்தலத்துக்குச் சென்று வரலாம்.

ஆலய முகவரி
அருள்மிகு நித்தியசுந்தரேஸ்வரர் திருக்கோயில்,
திருநெடுங்களம்,
திருநெடுங்களம் அஞ்சல்,
திருச்சி வட்டம்,
திருச்சி மாவட்டம் – 620 015.

இக் கோயில், தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோவில் அமைப்பு

கோயில் இரண்டு கோபுரங்களுடனும், இரண்டு பிராகாரங்களுடனும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன்னால் திருக்குளம் உள்ளது. 5 நிலை கோபுரத்தில் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் கொடிமரமும், பலிபீடமும் உள்ளன. வெளிப்பிராகாரத்தில் வடகிழக்கு மூலையில் திருக்கல்யாண மண்டபமும், அம்பாள் சந்நிதியும் உள்ளது. தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள். நின்ற திருக்கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள்.

வடக்கு வெளிப்பிராகாரத்தில் அகஸ்தியர் சந்நிதியும், இதன் எதிரே அகஸ்தியர் தீர்த்த கிணறும் உள்ளது. இதில் எக்காலத்திலும் நீர் வற்றவே வற்றாது. இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால், உள்பிராகாரத்தில் தென்கிழக்கில் சோமாஸ்கந்தர், சந்திரசேகர் சந்நிதிகள் உள்ளன. தென்பிராகாரத்தில் சப்தகன்னியர்களும், தட்சிணாமூர்த்தியும், ஐயனாரும் அருள்பாலிக்கிறார்கள். கன்னி மூலையில் வலம்புரி விநாயகருக்கு தனி சந்நிதியும், மேற்கு பிராகாரத்தில் தெய்வானையுடன் முருகருக்கு தனி சந்நிதியும் உள்ளன. தெற்குப் பக்கத்தில் உபய நாச்சியார்களுடன் வரதராஜப்பெருமாள் சந்நிதியும் உள்ளது.

உள்ளே கருவறையில் சக்திக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கிக் கொடுத்துவிட்டு, சிவபெருமான் லிங்கத் திருமேனியுடன் சற்றுத் தள்ளி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். சிவன் தனக்கு இடப்பாகத்தினை சக்திக்கு ஒதுக்கிக் கொடுத்தவர். இவருக்கு அர்த்தநாரீஸ்வரர் என்று பெயர். மற்ற கோயில்களில் நடுநாயகமாக விளங்கும் ஈசன், திருநெடுங்குளத்தில் மூலஸ்தானத்தில் சக்திக்காகத் தன் இடப்பாகத்தை ஒதுக்கிக் கொடுத்த நிலையில் உள்ளார். இங்கு சிவலிங்கம் மட்டுமே இருந்தாலும், சிவன்-சக்தி இருவருமே இருப்பதாக ஐதீகம். கோயில் கோயில் கருவறையில் பார்வதி அரூபமாக உள்ளதாக ஐதீகம். இதனால், மூலஸ்தானத்தின் மேல் இரண்டு விமானங்கள் உள்ளன. காசிக்கு அடுத்தபடியாக இங்கு மட்டும்தான் இப்படி உள்ளது. சிவனை நோக்கி அன்னை பார்வதி இத்தலத்தில் தவம் இருந்தாள். பார்வதியின் தவத்தை மெச்சிய இறைவன், அவள் அறியாது வேறு வடிவில் வந்து தேவியை கைப்பிடிக்கிறார்.

நெடுங்களம் ஒரு திருப்புகழ் தலம். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

ஆடி மாதம் 7 முதல் 12-ம் தேதி வரை காலையில், சுயம்பு மூர்த்தியாக உள்ள மூலவர் மீது சூரிய ஒளி விழுகிறது. இத்தலத்தின் தீர்த்தங்களாக அகத்திய தீர்த்தம் மற்றும் சுந்தர தீர்த்தம் உள்ளன. சுந்தர தீர்த்தக் கரையில் உள்ள கருப்பண்ண சுவாமிக்குப் பானக நைவேத்யம் செய்து வழங்கினால் நோய் தீரும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. இத்தலத்தில், மகாமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சோழர்காலக் கல்உரல் சிறந்த வேலைப்பாடு கொண்டது. இத்தலத்திலுள்ள தட்சிணாமூர்த்தி விந்தையான அமைப்புடையவராக விளங்குகிறார். யோக தட்சிணாமூர்த்தியாக சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க் கரங்களில் சின் முத்திரையும் திருநீற்றுப் பெட்டகமும் ஏந்தி, இடக்காலைச் சுற்றியவாறு யோக பட்டம் விளங்கக் காட்சி தருகிறார். அகத்தியர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளார்.

சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியுள்ள இப்பதிகம் ‘இடர் களையும் திருப்பதிகம்’ என்று போற்றப்படுகிறது. இப்பதிகத்தில் உள்ள 10 பாடல்களிலும் ‘இடர்களையாய்’ என்ற குறிப்பைக் காணலாம். இடர்கள் நீங்கி இன்பம் பெற இப்பதிகத்தைப் படித்து வந்தால் நலம் பெறுவது உறுதி என்று சம்பந்தர் தன் பதிகத்தில் குறிப்பிடுகிறார். இத்தல இறைவனையும் அம்பாளையும் வழிபட்டு இப்பதிகத்தை நாள் தோறும் ஓதி வாழ்வில் வளம் பெறுவோம்.

மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை
மனத்தகத்தோர் பாடலாடல் பேணி இராப்பகலும்
நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
என்னடியான் உயிரைவவ்வேல் என்றடல் கூற்று உதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

மலைபுரிந்த மன்னவன் தன் மகளை ஓர்ர் பால்மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடை ஆரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் றாள்நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிட மும்பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின் றாள்நிழற்கீழ்
நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேற்கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியிணையே பரவும்
நிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கணையால்
மாறுகொண்டார் புரம் எரித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமான் அணிந்த
நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

குன்றினுச்சி மேல்விளங்கும் கொடிமதிற் சூழ் இலங்கை
அன்றிநின்ற அரக்கர்கோனை அருவரைக் கீழடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியால் ஏத்தி இராப்பகலும்
நின்றுநைவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்முகனுஞ்
சூழவெங்கும் நேடவாங்கோர் சோதியு ளாகிநின்றாய்
கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப் பொன்னடியின்
நீழல் வாழ்வார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமி லாச்சமணுந்
தஞ்சமில்லாச் சாக்கியரும் தத்துவ மொன்றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே
நெஞ்சில் வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

நீடவல்ல வார்சடையான் மேய நெடுங்களத்தைச்
சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக் கோன்நலத்தால்
நாடவல்ல பனுவல்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே.

 

]]>
http://www.dinamani.com/specials/parigara-thalangal/2016/dec/23/இடர்கள்-நீங்கி-வாழ்வில்-இன்பம்-பெற-நித்யசுந்தரர்-கோவில்---திருநெடுங்களம்-2619378.html
2619379 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் இடர்கள் நீங்கி வாழ்வில் இன்பம் பெற, நித்யசுந்தரர் கோவில் - திருநெடுங்களம் என்.எஸ். நாராயணசாமி DIN Friday, December 23, 2016 12:00 AM +0530 காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 8-வது தலமாக இருப்பது திருநெடுங்களம்.

     இறைவன் பெயர்: நித்யசுந்தரர், நெடுங்களநாதர்
     இறைவி பெயர்: ஒப்பிலா நாயகி

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது. இடர் களையும் திருப்பதிகம் என்று போற்றப்படும் இப்பதிகத்தை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால், நமக்கு வாழ்வில் ஏற்படும் இடர்கள் யாவும் நீங்கி நலமுடன் வாழலாம்.

எப்படிப் போவது

திருச்சி - தஞ்சாவூர் சாலையில் துவாக்குடி என்ற ஊர் வரை சென்று, அங்கிருந்து பிரியும் சாலையில் 5 கி.மீ. சென்றால் நெடுங்களம் அடையலாம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மாங்காவனம் செல்லும் நகரப் பேருந்து இத்தலம் வழியாகச் செல்கிறது. துவாக்குடியில் இருந்து ஆட்டோ மூலமும் இத்தலத்துக்குச் சென்று வரலாம்.

ஆலய முகவரி
அருள்மிகு நித்தியசுந்தரேஸ்வரர் திருக்கோயில்,
திருநெடுங்களம்,
திருநெடுங்களம் அஞ்சல்,
திருச்சி வட்டம்,
திருச்சி மாவட்டம் – 620 015.

இக் கோயில், தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோவில் அமைப்பு

கோயில் இரண்டு கோபுரங்களுடனும், இரண்டு பிராகாரங்களுடனும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன்னால் திருக்குளம் உள்ளது. 5 நிலை கோபுரத்தில் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் கொடிமரமும், பலிபீடமும் உள்ளன. வெளிப்பிராகாரத்தில் வடகிழக்கு மூலையில் திருக்கல்யாண மண்டபமும், அம்பாள் சந்நிதியும் உள்ளது. தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள். நின்ற திருக்கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள்.

வடக்கு வெளிப்பிராகாரத்தில் அகஸ்தியர் சந்நிதியும், இதன் எதிரே அகஸ்தியர் தீர்த்த கிணறும் உள்ளது. இதில் எக்காலத்திலும் நீர் வற்றவே வற்றாது. இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால், உள்பிராகாரத்தில் தென்கிழக்கில் சோமாஸ்கந்தர், சந்திரசேகர் சந்நிதிகள் உள்ளன. தென்பிராகாரத்தில் சப்தகன்னியர்களும், தட்சிணாமூர்த்தியும், ஐயனாரும் அருள்பாலிக்கிறார்கள். கன்னி மூலையில் வலம்புரி விநாயகருக்கு தனி சந்நிதியும், மேற்கு பிராகாரத்தில் தெய்வானையுடன் முருகருக்கு தனி சந்நிதியும் உள்ளன. தெற்குப் பக்கத்தில் உபய நாச்சியார்களுடன் வரதராஜப்பெருமாள் சந்நிதியும் உள்ளது.

உள்ளே கருவறையில் சக்திக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கிக் கொடுத்துவிட்டு, சிவபெருமான் லிங்கத் திருமேனியுடன் சற்றுத் தள்ளி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். சிவன் தனக்கு இடப்பாகத்தினை சக்திக்கு ஒதுக்கிக் கொடுத்தவர். இவருக்கு அர்த்தநாரீஸ்வரர் என்று பெயர். மற்ற கோயில்களில் நடுநாயகமாக விளங்கும் ஈசன், திருநெடுங்குளத்தில் மூலஸ்தானத்தில் சக்திக்காகத் தன் இடப்பாகத்தை ஒதுக்கிக் கொடுத்த நிலையில் உள்ளார். இங்கு சிவலிங்கம் மட்டுமே இருந்தாலும், சிவன்-சக்தி இருவருமே இருப்பதாக ஐதீகம். கோயில் கோயில் கருவறையில் பார்வதி அரூபமாக உள்ளதாக ஐதீகம். இதனால், மூலஸ்தானத்தின் மேல் இரண்டு விமானங்கள் உள்ளன. காசிக்கு அடுத்தபடியாக இங்கு மட்டும்தான் இப்படி உள்ளது. சிவனை நோக்கி அன்னை பார்வதி இத்தலத்தில் தவம் இருந்தாள். பார்வதியின் தவத்தை மெச்சிய இறைவன், அவள் அறியாது வேறு வடிவில் வந்து தேவியை கைப்பிடிக்கிறார்.

நெடுங்களம் ஒரு திருப்புகழ் தலம். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

ஆடி மாதம் 7 முதல் 12-ம் தேதி வரை காலையில், சுயம்பு மூர்த்தியாக உள்ள மூலவர் மீது சூரிய ஒளி விழுகிறது. இத்தலத்தின் தீர்த்தங்களாக அகத்திய தீர்த்தம் மற்றும் சுந்தர தீர்த்தம் உள்ளன. சுந்தர தீர்த்தக் கரையில் உள்ள கருப்பண்ண சுவாமிக்குப் பானக நைவேத்யம் செய்து வழங்கினால் நோய் தீரும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. இத்தலத்தில், மகாமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சோழர்காலக் கல்உரல் சிறந்த வேலைப்பாடு கொண்டது. இத்தலத்திலுள்ள தட்சிணாமூர்த்தி விந்தையான அமைப்புடையவராக விளங்குகிறார். யோக தட்சிணாமூர்த்தியாக சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க் கரங்களில் சின் முத்திரையும் திருநீற்றுப் பெட்டகமும் ஏந்தி, இடக்காலைச் சுற்றியவாறு யோக பட்டம் விளங்கக் காட்சி தருகிறார். அகத்தியர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளார்.

சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியுள்ள இப்பதிகம் ‘இடர் களையும் திருப்பதிகம்’ என்று போற்றப்படுகிறது. இப்பதிகத்தில் உள்ள 10 பாடல்களிலும் ‘இடர்களையாய்’ என்ற குறிப்பைக் காணலாம். இடர்கள் நீங்கி இன்பம் பெற இப்பதிகத்தைப் படித்து வந்தால் நலம் பெறுவது உறுதி என்று சம்பந்தர் தன் பதிகத்தில் குறிப்பிடுகிறார். இத்தல இறைவனையும் அம்பாளையும் வழிபட்டு இப்பதிகத்தை நாள் தோறும் ஓதி வாழ்வில் வளம் பெறுவோம்.

மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை
மனத்தகத்தோர் பாடலாடல் பேணி இராப்பகலும்
நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
என்னடியான் உயிரைவவ்வேல் என்றடல் கூற்று உதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

மலைபுரிந்த மன்னவன் தன் மகளை ஓர்ர் பால்மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடை ஆரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் றாள்நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிட மும்பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின் றாள்நிழற்கீழ்
நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேற்கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியிணையே பரவும்
நிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கணையால்
மாறுகொண்டார் புரம் எரித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமான் அணிந்த
நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

குன்றினுச்சி மேல்விளங்கும் கொடிமதிற் சூழ் இலங்கை
அன்றிநின்ற அரக்கர்கோனை அருவரைக் கீழடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியால் ஏத்தி இராப்பகலும்
நின்றுநைவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்முகனுஞ்
சூழவெங்கும் நேடவாங்கோர் சோதியு ளாகிநின்றாய்
கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப் பொன்னடியின்
நீழல் வாழ்வார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமி லாச்சமணுந்
தஞ்சமில்லாச் சாக்கியரும் தத்துவ மொன்றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே
நெஞ்சில் வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

நீடவல்ல வார்சடையான் மேய நெடுங்களத்தைச்
சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக் கோன்நலத்தால்
நாடவல்ல பனுவல்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே.

பாடியவர்கள் - பாலச்சந்திரன் மற்றும் மயிலாடுதுறை சிவகுமார்

 

 

]]>
http://www.dinamani.com/specials/parigara-thalangal/2016/dec/23/இடர்கள்-நீங்கி-வாழ்வில்-இன்பம்-பெற-நித்யசுந்தரர்-கோவில்---திருநெடுங்களம்-2619379.html
2615856 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் வெண்குஷ்டம் நோய் தீர்க்கும் ஸ்ரீநர்த்தனபுரீஸ்வரர் கோவில், திருதலையாலங்காடு என்.எஸ். நாராயணசாமி Thursday, December 15, 2016 05:36 PM +0530 பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 93-வது தலமாக விளங்குவது தலையாலங்காடு.

    இறைவன் பெயர்: நர்த்தனபுரீஸ்வரர், ஆடல்வல்லநாதர்
    இறைவி பெயர்: ஸ்ரீபாலாம்பிகை, திருமடந்தை அம்மை

இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது?

கும்பகோணம் - திருவாரூர் சாலை வழியில் உள்ள குடவாசல் என்ற ஊரில் இருந்து கிழக்கே 8 கி.மீ. தொலைவிலும், திருப்பெருவேளூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவிலும் இத்தலம் இருக்கிறது.

ஆலய முகவரி

அருள்மிகு ஸ்ரீநர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில்,
தலையாலங்காடு,
செம்பங்குடி அஞ்சல்,
குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 612 603.

இக்கோயில் தினமும் காலை 8 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். அருகிலேயே அர்ச்சகர் இல்லம் உள்ளதால் எப்போதும் தரிசிக்கலாம்.

செருக்குற்றுத் திரிந்த தாருகாவன முனிவர்கள், இறைவனின் பெருமை உணராது, அவரை அழித்திடத் தீர்மானித்து ஆபிசார வேள்வி நடத்தினர். ஈசனோ அவற்றிலிருந்து புறப்பட்ட புலியைக் கிழித்து, அதன் தோலைப் போர்த்தி வீர நடனம் புரிந்தார். நாகங்களை ஆபரணமாகச் சூடினார். மானை ஏந்தினார். மழுவைத் தாங்கினார். தாருகாவன முனிவர்களின் ஆணவத்தை ஒடுக்கி, இறைவன் ஒருவனே என்பதையும், ஈசனால் மட்டுமே சகல செயல்களும் நடக்கின்றன என்பதையும் உணர்த்தி அருள்புரிந்தார். தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய முயலகனை அடக்கி அவன் முதுகின் மீது இறைவன் நடனம் புரிந்த தலம் இதுவாகும்.

தேவாரப் பாடல் பெற்ற தலையாலங்காடு, தென்னிந்திய வரலாற்றிலும் பெயர் பெற்ற ஊராகும். இவ்வூர் சங்க காலத்தில் "தலையாலங்கானம்" என்று போற்றப்பட்டுள்ளது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களிடையே ஏற்பட்ட கடும் போரில் பாண்டியன் நெடுஞ்செழியன் வெற்றிபெற்றான். இந்தப் போர் நடந்த இடம் தலையாலங்கானம். எனவே இவனுக்கு தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற சிறப்புப் பெயரும் ஏற்பட்டது. இதனைப் புறநானூறு விரிவாக எடுத்துரைக்கிறது. இவ்வளவு மகிமை மிக்க தலத்திலுள்ள இந்த ஆலயம் ஆரவாரமின்றி ஆனந்தச் சூழலில் அமைதியாக அமைந்துள்ளது.

உயர்ந்த ராஜகோபுரமோ ஓங்கிய மதில்களோ இல்லாமல் இவ்வாலயம் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய ஆலயத்தின் முன்பு, தலத்தின் திருக்குளமான சங்கு தீர்த்தம் உள்ளது. குளக்கரையின் மேல் நுழைவு வாயிலுக்குள் சென்றால் முதலில் அம்பாள் சந்நிதி தென்திசை நோக்கியுள்ளது. சிறிய முன் மண்டபத்தோடு கூடிய தனிச் சந்நிதிக்குள் ஸ்ரீபாலாம்பிகை கலையெழில் கொண்டு கருணை புரிகிறாள். திருமடந்தை என்றும் அழைக்கப்படுகின்றாள். சண்டேஸ்வரி சந்நிதியும் இங்கு உண்டு. சந்நிதிக்கு வெளியே சனீஸ்வரர் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். நந்தி தேவர் தனி மண்டபத்துள் அமர்ந்துள்ளார். பின் திறந்தவெளியில் நீண்ட பாதை. அது சுவாமி சந்நிதியைச் சென்றடைகிறது.

செங்கற்களால் ஆன ஸ்வாமி சந்நிதி சபா மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் அமைந்துள்ளது. நீண்ட பாணம் கொண்டு சதுர ஆவுடையார் மீது அற்புதமாகத் தரிசனம் தருகின்றார் ஸ்ரீநர்த்தனபுரீஸ்வரர். ஆடல்வல்லநாதர் என்பது இவரது தமிழ்ப் பெயராகும். இவரது தரிசனம் முடித்து, ஆலய வலம் வருகையில், வடக்கே தலவிருட்சமான பலா மரத்தைக் கண்டு வணங்கலாம். தனியே ஒரு லிங்கமும், அம்பாள் சந்நிதியும், விநாயகருக்கும் முருகனுக்கும் தனித்தனி சந்நிதியும் இங்கே உள்ளது. ஸ்வாமி சந்நிதி முன்பு ஓலைச்சுவடி ஏந்திய சரஸ்வதியின் சிலை உள்ளது. வீணையில்லா சரஸ்வதியை இங்கே காணலாம். சரஸ்வதி தேவி இங்கு பரமனை வழிபடும்போது, ஜோதிர்லிங்கத் தரிசனத்தைத் தந்து அருள்புரிந்துள்ளார். பங்குனி 30, 31 மற்றும் சித்திரை மாதம் 1, 2, 3 ஆகிய தேதிகளில் சூரியக் கதிர்கள் இறைவன் மீது விழுந்து சூரிய பூஜை நடைபெறுகிறது.

இத்தல தீர்த்தக்குளமான சங்கு தீர்த்தம் மிக சிறப்புடையது. இத்தீர்த்தத்தில் தொடர்ந்து 45 நாட்கள் நீராடி, இறைவன், இறைவி முன்பு நெய் தீபமேற்றி வழிபட, வெண்குஷ்டம் என்ற ஒருவகை தோல் நோய் நிவர்த்தி ஆகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. மேலும் சகல தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளும் தீரும். முன்னோர்களது சாபங்கள் அகலும். இத்தல பைரவருக்கு வடைமாலை சாற்றி வழிபட எதிரிகள் நாசமடைவர். இத்தல இறைவனுக்கும் அம்பிகைக்கும் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் வில்வ அர்ச்சனை செய்து வழிபட, தடைபட்ட காரியங்கள் விரைவில் நடைபெறும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாகும். பிள்ளைப்பேறு கிட்டும். இறைவன் நடனமாடிய அரிய தலங்களுள் இதுவும் ஒன்றென்பதால், நடனப் பயிற்சியாளர்கள் அவசியம் வழிபட வேண்டிய திருத்தலமாகும்.

திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியருளியுள்ள இத்தலத்துக்கான பதிகம் 6-ம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. திருநாவுக்கரசர் இந்த தலத்தை கால்களால் மிதிப்பதைப் பாவமாகக் கருதி, கரங்களால் ஊன்றிவந்து வழிபட்டு பதிகம் பாடித் துதித்துள்ளார். இறைவன் தை அமாவாசை தினத்தில், ஆலயத்தின் வடபிராகாரத்தில் உள்ள பலா மரத்தடியில் அப்பருக்குக் காட்சி கொடுத்து அருள்புரிந்துள்ளார். அப்பர் இத்தலம் மீது பத்து பாடல்களைப் பாடிச் சிறப்பித்துள்ளது மட்டுமின்றி, பிற திருத்தலப் பதிகங்களிலும் இத்தலத்தைக் குறிப்பிட்டுப் போற்றியுள்ளார்.

திருநாவுக்கரசர், இத்தலப் பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் தலையாலங்காடு இறைவனை அடையாமல் வீணாய் நாட்களைப் போக்கினேனே என்று மனம் உருகிப் பாடியுள்ளார்.

1. தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் தன்னைச்
சூழ் நரகில் வீழாமே காப்பான் தன்னை
அண்டத்துக்கு அப்பாலைக்கு அப்பாலானை
ஆதிரை நாள் ஆதரித்த அம்மான் தன்னை
முண்டத்தின் முளைதத்து எழுந்த தீ ஆனானை
மூவுருவத்து ஓர் உருவாய் முதலாய் நின்ற
தண்டத்தில் தலையாலங்காடன் தன்னைச்
சாராதே சால நாள் போக்கினேனே.

2. அங்கு இருந்த அரையானை அம்மான் தன்னை
அவுணர் புரம் ஒரு நொடியில் எரி செய்தானைக்
கொக்கு இருந்த மகுடத்து என் கூத்தன் தன்னைக்
குண்டலம் சேர் காதானைக் குழைவார் சிந்தை
புக்கு இருந்து போகாத புனிதன் தன்னைப்
புண்ணியனை எண்ணரும் சீர்ப் போகம் எல்லாம்
தக்கு இருந்த தலையாலங்காடன் தன்னைச்
சாராதே சால நாள் போக்கினேனே.

3. மெய்த்தவத்தை வேதத்தை வேத வித்தை
விளங்கிள மாமதி சூடும் விகிர்தன் தன்னை
எய்தத்து அவமே உழிதந்த ஏழையேனை
இடர்க்கடலில் வீழாமே ஏற வாங்கிப்
பொய்த்தவத்தார் அறியாத நெறி நின்றானைப்
புனல் கரந்திட்டு உமையொடொடு ஒரு பாகம் நின்ற
தத்துவனைத் தலையாலங்காடன் தன்னைச்
சாராதே சால நாள் போக்கினேனே.
 
4. சிவனாகித் திசைமுகனாய்த் திருமாலாகிச்
செழுஞ்சுடராய்த் தீயாகி நீருமாகிப்
புவனாகிப் புவனங்கள் அனைத்துமாகிப்
பொன்னாகி மணியாகி முத்துமாகிப்
பவனாகிப் பவனங்கள் அனைத்துமாகிப்
பசு ஏறித் திரிவான் ஓர் பவனாய் நின்ற
தவனாய தலையாலங்காடன் தன்னைச்
சாராதே சால நாள் போக்கினேனே.

5. கங்கை எனும் கடும்புனலைக் கரந்தான் தன்னைக்
காமரு பூம்பொழில் கச்சிக் கம்பன் தன்னை
அங்கையினில் மான்மறி ஓன்று ஏந்தினானை
ஐயாறு மேயானை ஆரூரானைப்
பங்கமிலா அடியார்க்குப் பரிந்தான் தன்னைப்
பரிதிநியமத்தானைப் பாசூரானைச்
சங்கரனைத் தலையாலங்காடன்த்தன்னைச்
சாராதே சால நாள் போக்கினேனே.
 
6. விடம் திகழும் அரவு அரைமேல் வீக்கினானை
விண்ணவர்க்கும் எண்ணரிய அளவினானை
அடைந்தவரை அமருலகம் ஆள்விப்பானை
அம்பொன்னைக் கம்ப மா களிறு அட்டானை
மடந்தை ஒரு பாகனை மகுடம் தன்மேல்
வார் புனலும் வாளரவும் மதியும் வைத்த
தடங்கடலைத் தலையாலங்காடன் தன்னைச்
சாராதே சால நாள் போக்கினேனே.

7. விடையேறிக் கடைதோறும் பலி கொள்வானை
வீரட்டம் மேயானை வெண்ணீற்றானை
முடைநாறும் முதுகாட்டில் ஆடலானை
முன்னானைப் பின்னானை அந்நாளானை
உடை ஆடை உரிதோலே உகந்தான் றன்னை
உமையிருந்த பாகத்துள் ஒருவன் தன்னைச்
சடையானைத் தலையாலங்காடன்த்தன்னை
சாராதே சால நாள் போக்கினேனே.
 
8. கரும்பு இருந்த கட்டிதனைக் கனியைத் தேனைக்
கன்றாப்பின் நடுதறியைக் காறையானை
இரும்பு அமர்ந்த மூவிலை வேல் ஏந்தினானை
என்னானைத் தென்னானைக் காவான் தன்னைச்
சுரும்பு அமரும் மலர்க்கொன்றை சூடினானைத்
தூயானைத் தாயாகி உலகுக்கு எல்லாம்
தரும்பொருளைத் தலையாலங்காடன் தன்னைச்
சாராதே சால நாள் போக்கினேனே.

9. பண்டு அளவு நரம்பு ஓசைப் பயனைப் பாலைப்
படுபயனைக் கடுவெளியைக் கனலைக் காற்றைக்
கண்டளவில் களிகூர்வார்க்கு எளியான் தன்னைக்
காரணனை நாரணனைக் கமலத்தோனை
எண்டளவில் என்னெஞ்சத்து உள்ளே நின்ற
எம்மானைக் கைம்மாவி னுரிவை பேணுந்
தண்டு அரனைத் தலையாலங்காடன் தன்னைச்
சாராதே சால நாள் போக்கினேனே.

10. கைத்தலங்கள் இருபது உ அரக்கர் கோமான்
கயிலைமலை அதுதன்னைக் கருதாது ஓடி
முத்து இலங்கு முடிதுளங்க வளைகள் எற்றி
முடுகுதலும் திருவிரலொன்று அவன்மேல் வைப்பப்
பத்து இலங்கு வாயாலும் பாடல் கேட்டுப்
பரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாம
தத்துவனைத் தலையாலங்காடன் தன்னைச்
சாராதே சால நாள் போக்கினேனே.

இத்தலத்தைப் பற்றிய அப்பர் தேவாரம் - பாடியவர் கொடுமுடி வசந்தகுமார் ஓதுவார்

 

]]>
http://www.dinamani.com/specials/parigara-thalangal/2016/dec/16/வெண்குஷ்டம்-நோய்-தீர்க்கும்-ஸ்ரீநர்த்தனபுரீஸ்வரர்-கோவில்-திருதலையாலங்காடு-2615856.html
2600309 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் கோபம் போக்கும் தலம் சற்குணநாதேசுவரர் கோவில், திருஇடும்பாவனம் என்.எஸ். நாராயணசாமி Friday, November 18, 2016 03:34 PM +0530  

பாடல்பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 108-வது தலமாக இருப்பது திருஇடும்பாவனம். கோபம் நீக்கும் தலமாக இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சம்.

     இறைவன் பெயர்: சற்குணநாதேசுவரர்
     இறைவி பெயர்: மங்களநாயகி

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றுள்ளது.

எப்படிப் போவது?

திருத்துறைப்பூண்டியில் இருந்து தென்மேற்கே 16 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை மற்றும் முத்துப்பேட்டை போன்ற இடங்களில் இருந்து இங்கு வர நேரடிப் பேருந்துகள் உள்ளன. திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டியக்காடு செல்லும் நகரப் பேருந்து இத்தலத்துக்குச் செல்கிறது. முத்துப்பேட்டை - வேதாரண்யம் பேருந்து சாலையில் பயணித்தும் இத்தலத்தை அடையலாம். திருக்கடிக்குளம் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இங்கிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு சற்குணநாதேசுவரர் திருக்கோயில்,
இடும்பாவனம்,
இடும்பாவனம் அஞ்சல்,
திருவாரூர் மாவட்டம் – 614 703.

இக்கோயில் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆலய தொடர்புக்கு : சசிசேகர சிவாச்சாரியார் - கைபேசி: 9843628109

இவ்வுலகில் பிறந்த எல்லா மனிதர்களுக்கும் கோபம் என்ற குணம் இருக்கும். அப்படி கோபப்படாத மனிதரை காண்பது அபூர்வம். கட்டுப்படுத்த முடியாத கோபம் ஒரு மனிதனிடம் இருந்தால் அது அம்மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கும். அவரை சுற்றி உள்ளவர்களையும் பாதிக்கும். சமூக நலனில் எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். கோபமடைந்தால் முதலில் மனமும் சிந்தனைகளும் பாதிக்கப்படும். இரண்டாவது, உடலில் பாதிப்புகள் உண்டாகும். இறுதியில் செயலிலும், குழப்பமான மற்றங்கள் உண்டாகும். கோபத்தில் எவன் தன்னை இழக்கிறானோ, அவன் நரகத்தில் இடம்பிடித்துவிடுகிறான் என்று ஒரு பழமையான நீதிநூல் கூறுகிறது. வள்ளுவரும் தனது குறளில் பல இடங்களில் கோபத்தைப் பற்றி குறிப்பிட்டு அதனால் விளையும் தீங்குகளைப் பற்றியும் கூறியுள்ளார்.

சாந்த குணத்தை அளிப்பதில் தன்னிரகற்ற தலமாக விளங்குவது திருஇடும்பாவனம். பிரம்மதேவனுக்கு அடிக்கடி கோபம் வந்தது. பிரம்மா, சிவபெருமானிடம் வந்து அடிக்கடி கோபப்படும் தனது குணத்தை மாற்றி அருளுமாறு வேண்டினார். இறைவனும் அசரீரி வாக்காக, இடும்பாவனம் சென்று தன்னையும், அம்பிகையையும் பூஜித்து பலன் அடையும்படி கட்டளையிட்டார். அதன்படி இடும்பாவனம் வந்த பிரம்மா, வில்வ மரத்தடியில் நீண்ட காலம் தவம் இருந்தார். பிரம்மாவின் தவவலிமை கண்ட சிவபெருமான், அம்பிகை, விநாயகர், முருகனுடன் பிரம்மாவுக்குத் தரிசனம் தந்து, சாத்வீக குணத்தை பிரம்மாவுக்கு தந்தருளிய சிறப்புடைய தலம் இடும்பாவனம்.

பிரம்மன் சாத்வீக குணங்கள் பெறவேண்டி தவம் புரிந்து, சிவபெருமானை இங்கு வழிபட்டு அருள் பெற்றதால், இத்தல இறைவன் சற்குணநாதேசுவரர் என்று அழைக்கப்படுகிறார். கோபமுற்று சிலபல செயல்களை செய்துவிட்டு அல்லது பேசிவிட்டு அதனால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளால் பாதிக்கப்பட்டு அவதிப்படுவர்கள் இத்தலம் வந்து சற்குணநாதேஸ்வரரை வழிபட்டால், கோப குணம் நீங்கி சாத்வீக குணத்தைப் பெற்று நலமுடன் வாழலாம்.

இயற்கை வளம் மிக்க சோழ வளநாட்டில், தேவாரப் பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களுள் ஒன்று இடும்பாவனமாகும். மகாபாரதக் காலத்தில் வாழ்ந்த இடும்பன் பூசித்துப் பேறு பெற்ற தலமாதலின், இத்தலம் இடும்பாவனம் எனப் பெயர் பெற்றது. பஞ்ச பாண்டவர்களுள் ஒருவனான பீமன், தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயம் வந்தபோது இடும்பாவனத்துக்கு வந்தார். அருகில் உள்ள இடும்பனின் தலைநகரமாகிய குன்றளூரில் இடும்பியைக் கண்டு மணம் புரிந்தார். பின்னர் பீமன், இடும்பியுடன் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி, சிவனாரை வணங்கி மகிழ்ந்தார். மிகப் பழமை வாய்ந்த இத்தலத்தில் பிரம்மதேவர், ராமபிரான், எமதர்மன் போன்றோர் வழிபட்டு அருள் பெற்றுள்ளனர்.


 
அகத்திய மாமுனிவர் இறைவனின் மணக்கோலம் கண்ட தலங்களுள் ஒன்றாக இடும்பாவனம் புகழப்படுகிறது. இறைவனுக்குப் பின்புறம் கருவறைச் சுவற்றில் இந்த மணவாளக்கோலம் உள்ளதைக் காணலாம். இத்தலம் பிதுர்முக்தித் தலங்களுள் ஒன்றாகும். ஆகவே பிதுர்க்கர்மாக்களைச் செய்வதற்கு இத்தலம் மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. சிவராத்திரியன்று உபவாசம் இருந்து இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சற்குணநாதரை வணங்கினால், முன்னோரது பாவங்கள் நீங்கி அவர்கள் மோட்சம் பெறுவர் என்பது நம்பிக்கை

கோவில் அமைப்பு

நந்தி, பலிபீடம், கொடிமரம் ஆகியவை ஆலயத்தின் வெளியே காணப்படுகின்றன. கோவில் மூன்று நிலை ராஜகோபுரத்துடனும், ஒரு பிராகாரத்துடனும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுர மாடத்தில் இருபுறமும் வள்ளி தெய்வானையுடன் முருகர் மற்றும் விநாயகர் உள்ளனர். நாற்புறமும் அகலமான மதில்கள் சூழ ஆலயம் அமைந்துள்ளது. உள்ளே சென்றவுடன் இருபுறமும் முன் வரிசையில் இடும்பன், அகத்தியர், சூரியன், சந்திரன், நால்வர், பைரவ மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

ஒரே பெரிய பிராகாரத்துடன் ஆலயம் விளங்குகிறது. முதலில் ராஜகோபுரத்துக்கு நேராக பிரம்மாண்டமான சபா மண்டபம், மூடுதளமாக உள்ள மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என இறைவன் சந்நிதி அமைந்துள்ளது. சுயம்பு லிங்கமான மூலவரின் கருவறை, உயர்ந்த அடித்தளத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் கருணையே வடிவாகக் காட்சி தருகின்றார் ஸ்ரீ சற்குணேஸ்வரர். சத்வ குணம் (நல்லியல்புகள்) கொண்ட இவரை வழிபட்டால் மன அமைதியும், அற்புத வரங்களையும் பெறலாம்.

வாழ்வில் ஏற்படக்கூடிய இடர்களை நீக்க வல்லவர் இந்த சற்குணேஸ்வரர். “இடுக்கண் பல களைவான் இடம் இடும்பாவனம்” என்று திருஞான சம்பந்தர் தனது பதிகத்தின் 10-வது பாடலில் இக்கருத்தினை உறுதிப்படுத்துகின்றார். லிங்க மூர்த்திக்கு பின்புறம் சுவரில் ஆதி தம்பதியான பார்வதியும் ஈசனும் எழில் வடிவோடு திருமணக் கோலத்தில் தரிசனம் தருகின்றனர். சுவாமி சந்நிதிக்கு வலப்புறம் தியாகராஜர் சந்நிதி, முக மண்டபத்துடன் விளங்குகின்றது.

மங்கள நாயகி அம்பாள் தெற்கு நோக்கி தனி சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் சர்வ மங்களங்களையும் அருளும் வல்லமை மிக்கவளாக அருள்பாலிக்கின்றாள். அழகிய தூண்களும், சிலைகளும் ஆலயத்தை அலங்கரிக்கின்றன. முறையான சிவாலய கோஷ்ட மூர்த்தங்களோடு, பின்புற வரிசையில் மகாகணபதி, கஜலட்சுமி, சனீஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகியோரின் திருவடிவங்கள் அருள் செய்கின்றன. இங்குள்ள வெண்மை நிறமுடைய சுவேத விநாயகர் மிகவும் பிரசித்தமானவர். கணபதி சந்நிதி, ஆலயத்தின் தென்புறத்திலும், வள்ளி-தெய்வானையுடன் கூடிய கந்தன் சந்நிதி வடபுறமும் அமைந்துள்ளன.

ஆலயத்தின் எதிரே உள்ள பிரம்ம தீர்த்தம், எமன் ஏற்படுத்திய எம தீர்த்தம் மற்றும் அகத்திய முனிவர் உண்டாக்கிய அகஸ்திய தீர்த்தம் ஆகியவை இத்தலத்தின் தீர்த்தங்களாக உள்ளன. தல விருட்சமாக வில்வம் விளங்குகிறது.

சம்பந்தர் இங்கு எழுந்தருளியபோது இவ்வூரின் மணலெல்லாம் லிங்கமாகத் தென்பட, கரங்களால் ஊன்றி வந்து ஆலயத்தை அடைந்து திருப்பதிகம் பாடியதாகக் கூறப்படுகிறது. அப்பரும் தனது ஷேத்திரக் கோவை திருத்தாண்டகத்தில் இத்தலத்தைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம் ஒன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

1. மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த்
தனம் ஆர்தரு சங்கக்கடல் வங்கத்திர ளுந்திச்
சினம் ஆர்தரு திறல்வாளெயிற் றரக்கன்மிகு குன்றில்
இன மா தவர் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

2. மலையார் தரு மடவாள் ஒரு பாகம் மகிழ்வு எய்தி
நிலையார் தரு நிமலன் வலி நிலவும் புகழ்ஒளி சேர்
கலையார் தரு புலவோர் அவர் காவல் மிகு குன்றில்
இலையார் தரு பொழில் சூழ்வரும் இடும்பாவனம் இதுவே.

3. சீலம் மிகு சித்தத்தவர் சிந்தித்து எழும் எந்தை
ஞாலம் மிகு கடல்சூழ்தரும் உலகத்தவர் நலமார்
கோலம் மிகு மலர்மென்முலை மடவார் மிகு குன்றில்
ஏலம் ங்கமழ் பொழில் சூழ்தரும் இடும்பாவனம் இதுவே.

4. பொழில் ஆர்தரு குலைவாழைகள் எழிலார் திகழ் போழ்தில்
தொழிலால் மிகு தொண்டர் அவர் தொழுது ஆடிய முன்றில்
குழல் ஆர்தரு மலர்மென்முலை மடவார் மிகு குன்றில்
எழில் ஆர்தரும் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

5. பந்து ஆர் விரல் உமையாள் ஒரு பங்கா கங்கை முடிமேல்
செந்தாமரை மலர் மல்கிய செழுநீர் வயல் கரைமேல்
கொந்து ஆர்மலர் புன்னைமகிழ் குரவம் கமழ் குன்றில்
எந்தாய் என இருந்தான் இடம் இடும்பாவனம் இதுவே.

6. நெறி நீர்மையர் நீள் வானவர் நினையும் நினைவாகி
அறி நீர்மையில் எய்தும் அவர்க்கு அறியும் அறிவுக்
குறி நீர்மையர் குணம் ஆர்தரு மணம் ஆர்தரு குன்றில்
எறி நீர்வயல் புடை சூழ்தரும் இடும்பாவனம் இதுவே.

7. நீர் ஏறிய திருமேனியர் நிலவும் உலகு எல்லாம்
பாரு ஏறிய படுவெண்தலை கையில் பலி வாங்காக்
கூறு ஏறிய மடவாள் ஒருபாகம் மகிழ்வு எய்தி
ஏர் ஏறிய இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

8. தேர் ஆர்தரு திகழ் வாள் எயிற்று அரக்கன் சிவன் மலையை
ஓராது எடுத்து ஆர்த்தான் முடி ஒருபஃது அவை நெரித்துக்
கூர் ஆர்தரு கொலைவாளொடு குணம் நாமமும் கொடுத்த
ஏர் ஆர்தரும் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

9. பொருள் ஆர்தரும் மறையோர் புகழ் விருத்தர்பொலி மலிசீர்த்
தெருள் ஆர்தரு சிந்தையொடு சந்தம் மலர்பல தூய்
மருள் ஆர்தரு மாயன் அயன் காணார் மயல் எய்த
இருள் ஆர்தரு கண்டர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

10. தடுக்கை உடன் இடுக்கித் தலைபறித்துச் சமன் நடப்பர்
உடுக்கைபல துவர்க்கூறைகள் உடம்பு இட்டு உழல்வாரும்
மடுக்கண் மலர் வயல்சேர் செந்நெல் மலிநீர் மலர்க்கரை மேல்
இடுக்கண்பல களைவான் இடம் இடும்பாவனம் இதுவே.

11. கொடி ஆர் நெடுமாடக் குன்றளூரின் கரைக் கோல
இடி ஆர் கடல் அடி வீழ்தரும் இடும்பாவனத்து இறையை
அடி ஆயும் அந்தணர் காழியுள் அணி ஞானசம்பந்தன்
படியால் சொன்ன பாடல்சொலப் பறையும் வினைதானே.

திருஞானசம்பந்தரின் தேவாரம் - பாடியவர் திருமறைக்காடு சொ. சிவக்குமார்

 

]]>
http://www.dinamani.com/specials/parigara-thalangal/2016/nov/18/கோபம்-போக்கும்-தலம்-சற்குணநாதேசுவரர்-கோவில்-திருஇடும்பாவனம்-2600309.html
2596051 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் களவு போன பொருள் திரும்பக் கிடைக்க அருளும் திருமுருகன்பூண்டி என்.எஸ். நாராயணசாமி Thursday, November 10, 2016 06:05 PM +0530  

     இறைவன் பெயர்: திருமுருகநாதஸ்வாமி
     இறைவி பெயர்: முயங்கு பூண்முலை மங்கை
இத்தலத்துக்கு சுந்தரரின் பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது?

கொங்கு நாட்டில் உள்ள மற்றொரு சிவஸ்தலமான அவிநாசியில் இருந்து 5 கி.மீ. தொலைவில், அவிநாசி - திருப்பூர் சாலை வழியில் திருமுருகன்பூண்டி உள்ளது.

ஆலய முகவரி
அருள்மிகு திருமுருகநாதஸ்வாமி திருக்கோவில்,
திருமுருகன்பூண்டி அஞ்சல்,
அவிநாசி வட்டம்,
திருப்பூர் மாவட்டம் – 637 211.

இக் கோயில், காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

சேர நாட்டை ஆண்டுவந்த சேரமான் பெருமாள்நாயனார், சுந்தரரின் பெருமையினைத் தில்லைக் கூத்தனுர் உணர்த்தக்கேட்டு, சுந்தரரைக் காண வேண்டும் என்ற ஆவலுடன் சிதம்பரம் வந்து இறைவனை தரிசித்து, திருவாரூரை அடைந்தார். சேர வேந்தர் வருவதை அறிந்த சுந்தரர், அடியார்கள் புடைசூழச் சென்று அவரை எதிர்கொண்டு அழைத்தார். இருவரும் நட்புபூண்டு திருக்கோயிலை அடைந்து வழிபட்டனர். பல சிவஸ்தலங்களை இருவரும் சேர்ந்து தரிசித்தனர். பிறகு சேரமான், தம் தோழராகிய சுந்தரரைத் தன்னுடைய நாட்டுக்கு எழுந்தருள வேண்டுமென வேண்டிக்கொண்டார்.

சேரமான் வேண்டுகோளின்படி, சேர நாட்டுக் கொடுங்கோளூரை அடைந்த சுந்தரரை, சேரமான் சிறந்த முறையில் வரவேற்றார். திருவஞ்சைக்களத்துத் திருக்கோயிலுக்கு அழைத்துச்சென்று தரிசிக்கச் செய்தார். சில நாட்கள் அங்கு தங்கி இருந்த சுந்தரர், திருவாரூர் இறைவனை காண வேண்டும் என்ற ஆவலுடன் சேரமானிடம் விடைபெற்றுக்கொண்டு திருவாரூர் புறப்பட்டார்.

சேரமான் கொடுத்த பரிசுப் பொருடகளுடன் சுந்தரர் திருவாரூர் செல்லும் வழியில், கொங்குநாட்டுத் தலமான திருமுருகன்பூண்டி அடைந்தார். சுந்தரர் தனக்கு பொருள் வேண்டும் காலங்களில் இறைவனிடம் முறையிட்டுப் பெறுவது வழக்கம். இப்போது தன்னிடம் முறையிடாமல், சேரமானிடம் பொருள் பெற்று சுந்தரன் செல்கிறானே என நினைத்து, பூதகணங்களை வேடர்கள் உருவில் சென்று வழிப்பறி செய்து வருமாறு சிவபெருமான் பணித்தருள, அவ்வண்ணமே பூதகணங்கள் வேடர்களாகச் சென்று சுந்தரரை அச்சுறுத்தி, பொருள்களைப் பறித்துக்கொண்டு வந்தன.

சுந்தரர், திருமுருகன்பூண்டித் திருக்கோயிலுக்குள் சென்று இறைவனைப் பார்த்து "எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே" என்று ஒவ்வொரு பாடல் முடிவிலும் நிந்திப்பதைப்போல பதிகம் பாடியவுடன், இறைவன் அத்தனை பொருள்களையும் பூதகணங்கள் மூலம் சுந்தரரிடம் திரும்ப சேரும்படி செய்தார். இதற்குச் சான்று கூறும் வகையில், இக்கோவிலில் உள்ள மண்டபத்தில் வில் கையில் ஏந்தியபடி வேட்டுவன் கோலத்தில் நிற்கும் சிவபெருமான் சிற்பமும், இதற்கு எதிரில் சுந்தரர் கவலையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கும் இரு சிற்பங்கள் காணப்படுகின்றன. பரிசுப் பொருள்களை பறிகொடுத்த நிலை ஒன்று, பறிகொடுத்த பொருள்களை மீண்டும் பெற்ற நிலை மற்றொன்று என இருநிலைகளைக் காட்டும் வகையில் இருப்பதே சுந்தரரின் இந்த இரண்டு சிற்பங்கள்.

இழந்த பொருளை மீண்டும் பெற்றிட, பரிகாரத் தலமாக திருமுருகன்பூண்டி விளங்குகிறது. களவுபோன பொருட்களை சுந்தரருக்கு மீண்டும் திருப்பித் தந்த இத்தல இறைவனை தரிசித்து வேண்டிக் கொண்டால், திருடுபோன நம் பொருட்களும் திரும்பக் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசையாத நம்பிக்கை.

கோவில் அமைப்பு

நொய்யல் ஆற்றின் வடபகுதியில் அமைந்த மேற்கு நோக்கிய தலம் திருமுருகன்பூண்டி. மேற்கு திசை நோக்கியவாறு அமைந்துள்ள இந்தக் கோவிலில் மற்ற கோவில்களைப் போல நுழைவு கோபுரம் இல்லை. கோயிலுக்கு வெளியே கொங்கு நாட்டுத் தலங்களுக்கே உரித்தான கருங்கல் தீபஸ்தம்பம் உள்ளது. சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் நான்கு புறமும் உயர்ந்த மதில் சுவர்களை உடையதாக 2 பிராகாரங்களுடன் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது.

கோவிலின் மூலவரான திருமுருகநாதர், சிவலிங்க ரூபத்தில் சுமார் இரண்டரை அடி உயரம் உள்ளபடி தரிசனம் தருகிறார். மேற்குப் பார்த்து மூலவர் சந்நிதி உள்ளது. கருவறையின் பின்புறச் சுவரில் யானை ஒன்று தும்பிக்கையால் சிவலிங்கத்தைத் தூக்கிப் பிடித்திருப்பதை அழகிய புடைப்புச் சிற்பமாக வடித்துள்ளனர். கருவறை விமானத்தில் அழகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன. உட்பிராகாரத்தில் நிருதி விநாயகர், 63 நாயன்மார்கள், சண்முகர், துர்க்கை, பைரவர், சனீஸ்வரர், நவகிரகங்கள் சந்நதிகள் உள்ளன.

மூலவர் சந்நிதியின் வலது பக்கம் தெற்குப் பார்த்த நிலையில் ஆறு முகங்களுடன் காணப்படும் சண்முகர் சந்நிதி உள்ளது. 5 அடி உயரம் உள்ள இந்த சிற்பம், முன்பக்கம் 5 முகங்களும், பின்பக்கம் ஒரு முகமும் உடையதாக அமைந்துள்ளது. மூலவர் சந்நிதியின் இடதுபுறம் மேற்குப் பார்த்த நிலையில் அம்பாள் முயங்கு பூண்முலை மங்கையின் சந்நிதி அமைந்துள்ளது. இறைவியின் இப்பெயரை சுந்தரர் தனது பதிகத்தின் 5 பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

புராணங்களின்படி, அரக்கன் சூரபத்மனைக் முருகப்பெருமான் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிகொள்ளும் பொருட்டு இந்த சிவஸ்தலத்துக்கு வந்து சிவலிங்கத்தை நிறுவி அதற்கு பூஜை செய்தார் என்பது ஐதீகம். கோவிலுக்கு உள்ளே பிராகாரத்தில் சுப்பிரமணிய தீர்த்தமும், கோவிலுக்கு வெளியே பிரம்ம தீர்த்தமும், ஞான தீர்த்தமும் இருக்கிறது. சித்தப்பிரமை பிடித்தவர்களை இந்த சிவஸ்தலத்துக்கு அழைத்துவந்து தங்கியிருக்கச் செய்து, தினமும் மூன்று தீர்த்தங்களிலும் நீராடச் செய்து சுவாமியை வழிபட்டுவர, அவர்களுடைய சித்தப்பிரமை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருமுருகநாதசுவாமி ஆலயத்தின் பின்புறம், இவ்வாலயத்தின் மிக அருகே மாதவனேஸ்வரர் கோவில் என்ற ஒரு கோவிலும் உள்ளது. இவ்வாலயத்தின் முகப்பு மண்டபத்தின் மேற்கூரையில் பெரிய நந்தியெம்பெருமான் சிற்பம் உள்ளது. இக்கோவிலின் வடமேற்கு மூலையில் கேது பகவானுக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. இத்தலத்தில் கேது பகவான் இறைவனை பூஜித்ததாக தல வரலாறு கூறுகிறது. எனவே, இவ்வாலயம் கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிய பரிகாரத்தலமாக விளங்குகிறது.


சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. திருடர்கள் கொள்ளையடித்த பொருள்களை திருப்பித் தரும்படி இறைவனிடம் பாடி முறையிட்ட பதிகம் இதுவாகும்.

1. கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்
விரவலாமை சொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்டு
ஆறலைக்கும் இடம்
முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன்
பூண்டி மாநகர் வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும்
எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.

2. வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர்
விரவலாமை சொல்லிக்
கல்லினால் எறிந்திட்டும் மோதியும்
கூறை கொள்ளும் இடம்
முல்லைத் தாது மணம் கமழ் முருகன்
பூண்டி மாநகர் வாய்
எல்லைக் காப்பது ஒன்று இல்லை யாகில் நீர்
எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.

3. பசுக்களே கொன்று தின்று பாவிகள்
பாவம் ஒன்று அறியார்
உசிர்க்கொலை பல நேர்ந்து நாடொறும்
கூறை கொள்ளு மிடம்
முசுக்கள் போல் பலவேடர் வாழ் முருகன்
பூண்டி மாநகர் வாய்
இசுக்க அழியப் பயிக்கம் கொண்டு நீர்
எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.

4. பீறர் கூறை உடுத்து ஓர் பத்திரம்
கட்டி வெட்டினராய்ச்
சூறைப் பங்கியராகி நாள் தொறும்
கூறை கொள்ளும் இடம்
மோறை வேடுவர் கூடிவாழ் முருகன்
பூண்டி மாநகர் வாய்
ஏறு காலல் இற்றது இல்லையாய்விடில்
எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.

5. தயங்கு தோலை உடுத்த சங்கரா
சாம வேதம் ஓதி
மயங்கி ஊர் இடு பிச்சை கொண்டு உணும்
மார்க்கம் ஒன்று அறியீர்
முயங்கு பூண்முலை மங்கையாளொடு
முருகன் பூண்டி மாநகர் வாய்
இயங்கவும் மிடுக்குடையராய் விடில்
எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.

6. விட்டு இசைப்பன கொக்கரை கொடு
கொட்டி தத்தளகம்
கொட்டிப் பாடுமித் துந்துமியொடு
குடமுழா நீர் மகிழ்வீர்
மொட்டு அலர்ந்து மணம் கமழ் முருகன்
பூண்டி மாநகர் வாய்
இட்ட பிச்சை கொண்டு உண்பமு ஆகில் நீர்
எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.

7. வேதம் ஓதி வெண்நீறு பூசிவெண்
கோவணம் தற்று அயலே
ஓதம் மேவிய ஒற்றியூரையும்
உத்திரம் நீர் மகிழ்வீர்
மோதி வேடுவர் கூறை கொள்ளும்
முருகன் பூண்டி மாநகர் வாய்
ஏது காரணம் எது காவல் கொண்டு
எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.

8. படஅரவு நுண் ஏர் இடைப்பணைத்
தோள் வரி நெடுங்கண்
மடவரல் உமை நங்கை தன்னை ஓர்
பாகம் வைத்து உகந்தீர்
முடவர் அல்லீர் இடர் இலீர் முருகன்
பூண்டி மாநகர் வாய்
இடவம் எறியும் போவது ஆகில் நீர்
எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.

9. சாந்தமாக வெண்நீறு பூசிவெண்
பல் தலை கலனா
வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னை ஓர்
பாகம் வைத்து உகந்தீர்
மோந்தை யோடு முழக்கு அறா முருகன்
பூண்டி மாநகர் வாய்
ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும்
எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.

10. முந்தி வானவர் தாம் தொழும் முருகன்
பூண்டி மாநகர் வாய்ப்
பந்து அணைவிரர் பாவை தன்னை ஓர்
பாகம் வைத்தவனைச்
சிந்தையில் சிவதொண்டன் ஊரன்
உரைத்தன பத்தும் கொண்டு
எம்தம் அடிகளை ஏத்துவார் இடர்
ஒன்றும் தாம் இலரே.

இத்தலம் பற்றிய பதிகத்தைப் பாடியவர்கள் - கரூர் சுவாமிநாதன் மற்றும் மதுரை பொன் முத்துக்குமரன்

 

]]>
http://www.dinamani.com/specials/parigara-thalangal/2016/nov/11/களவு-போன-பொருள்-திரும்பக்-கிடைக்க-அருளும்-திருமுருகன்பூண்டி-2596051.html
2591897 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் வழக்கு விவகாரங்களில் வெற்றி தேடித் தரும் திருநாவலூர் என்.எஸ். நாராயணசாமி Thursday, November 3, 2016 03:52 PM +0530 பாடல் பெற்ற நடுநாட்டு சிவஸ்தலங்கள் வரிசையில் 8-வது தலம் பக்தஜனேஸ்வரர் திருக்கோவில், திருநாவலூர். இன்றைய நாளில் இவ்வூர் திருநாமநல்லூர் என்று வழங்கப்படுகிறது.

   இறைவன் பெயர்: திருநாவலேஸ்வரர், பக்தஜனேஸ்வரர்
   இறைவி பெயர்: சுந்தரநாயகி, மனோன்மணி

இத்தலத்துக்கு சுந்தரர் பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் தாண்டி மடப்பட்டு என்ற ஊர் வரும். அதைத் தாண்டி, பிரதான சாலையில் உள்ள திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அருகே பிரிந்து, பண்ருட்டி செல்லும் சாலையில் 2 கி.மீ. சென்றால் ஊரை அடையலாம். சாலையோரத்தில் ஊரின் தொட்டக்கத்திலேயே கோயில் உள்ளது.

பேருந்தில் செல்வோர் விழுப்புரத்திலிருந்து அரசூர், மடப்பட்டு வழியாக உளுந்தூர்ப்பேட்டை செல்லும் பேருந்தில் ஏறி, கெடிலம் நிறுத்தத்தில் (திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ள இடமே கெடிலம் நிறுத்தம் என்று சொல்லப்படுகிறது) இறங்கினால், திருக்கோவிலூரில் இருந்து பண்ருட்டி செல்லும் பேருந்துகள் வரும். அவற்றில் ஏறி 2 கி.மீ. சென்று மேற்சொன்ன கோயிலை அடையலாம். கோயில் அருகிலேயே பேருந்துகள் நிற்கும்.

அருகிலுள்ள பெரிய ஊர் பண்ருட்டி. அங்கிருந்து திருநாவலூருக்குப் பேருந்து வசதி உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோவில்,
திருநாவலூர், திருநாவலூர் அஞ்சல்,
உளுந்தூர்பேட்டை வட்டம்,
விழுப்புரம் மாவட்டம் – 607 204.

இக் கோயில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆலய குருக்கள்

முத்துசாமி சிவம் (செல்பேசி 94433 82945)
செந்தில் குருக்கள் (செல்பேசி 94861 50809)

இறைவன் வழக்கு தொடுத்த தலம்

சுந்தரமூர்த்தி நாயனார், திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் என்ற ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். ஆதி சைவர் குலத்தைச் சேர்ந்த இவரது இயற்பெயர் நம்பியாரூரன். சுருக்கமாக ஆரூரன் என்று அழைக்கப்பட்டார். இவருடைய அழகைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்ததால், அப்பெயரிலேயே அறியப்படுகிறார். சுந்தரர், சிறுவயதில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தபோது, திருமுனைப்பாடி நாட்டு அரசர் நரசிங்கமுனையார், சிறுவன் சுந்தரனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனைப்போல் அனைத்து கலைகளையும் கற்றுத் தந்தார்.

திருமணப் பருவம் அடைந்தபோது, சுந்தரருக்கு திருநாவலூருக்கு அருகிலுள்ள புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த இறைவன், சுந்தரர் மேல் ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்தணர் நாவலூர் நம்பியை நோக்கி, ‘எனக்கும் உனக்கும் ஒரு பெருவழக்கு உள்ளது. அதனை முடித்தபின் திருமணத்தைச் செய்துகொள்க என்று கூற, சுந்தரர் அந்தணரைப் பார்த்து, ‘உமக்கும் எமக்கும் வழக்கு இருப்பது உண்மையானால், அதனை முடிக்காமல் நான் திருமணம் செய்துகொள்ளமாட்டேன்; உம் வழக்கினைக் கூறுக’ என்றார்.

முதிய அந்தணராக வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு ஓலையைக் காட்டி, சுந்தரரும், அவரது வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்று வாதிட்டார். சுந்தரர் அதை மறுத்து, ஒரு அந்தணருக்கு இன்னொரு அந்தணர் அடிமையாவது எப்படி முறையாகும். இந்த அந்தணர் பொய் வழக்காடுகிறார் என்று எதிர்வாதம் செய்து, அந்தணராக வந்த இறைவன் கையிலிருந்து ஓலையைப் பிடுங்கி அதைக் கிழித்து எறிந்தார். அந்த அந்தணர், சுந்தரரைப் பார்த்து நீ கிழித்து எறிந்த ஓலை படியெடுக்கப்பட்டது. மூல ஓலை எனது ஊரான திருவெண்ணெய்நல்லூரில் உள்ளது. அங்கு வந்தால்தான் எனது வழக்கு தீரும் என்று கூற, சுந்தரரும், மற்ற ஊர் மக்களும் அவரைப் பின்தொடர்ந்து திருவெண்ணெய்நல்லூர் சென்றனர். அங்கு மூல ஓலையைக் காட்டி, சுந்தரரின் பாட்டனார் கையெழுத்தை மற்ற பழைய ஆவணங்களுடன் பொருத்திப் பார்த்து, சுந்தரர் அடிமை என்று எழுதிக்கொடுத்த ஓலை சரியானது என்று ஊர் மக்கள் தீர்ப்பு கூற, தனது வழக்கில் வென்றார். சுந்தரர் மேல் வழக்கு தொடர்ந்து அவரை தடுத்தாட்கொண்ட இறைவன், இன்றும் தன்னை வழிபடும் பக்தர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று அவர்கள் சந்திக்கும் வழக்குகளில் இருந்து அவர்கள் வெற்றிபெற அருள் செய்கிறார்

ஆலய அமைப்பு

கெடில நதியின் வட கரையில் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சி தருகிறது. கோபுரத்தையடுத்து இடதுபுறம் உள்ளே சுந்தரர் சந்நிதி உள்ளது. திருநாவலூர் சுந்தரரின் அவதாரத் தலம். தனது இரு மனைவியர் பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் சூழ, எதிரில் வெள்ளை யானை நிற்க, சுந்தரர் கையில் தாளமேந்தி காட்சி தருகிறார். பூலோக வாழ்க்கையை நீத்து, சுந்தரர் கயிலாயம் சென்றபோது, யானை மீது சென்றதாக வரலாறு கூறுகிறது. எனவே, சுந்தரருக்கு எங்கே சந்நிதி அமைத்தாலும் யானை வாகனமே அமைப்பது வழக்கம். உள் இடம் மிகவும் விசாலமாக உள்ளது.

கோபுர வாயில் கடந்தவுடன் எதிரில் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தி முதலியவை உள்ளன. கொடிமர விநாயகர், சுந்தர விநாயகராகக் காட்சி தருகிறார். உள்வாயிலைக் கடந்ததும், உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நால்வர், இரு மனைவியருடன் சுந்தரர், நடராசர், சிவகாமி, முருகன், விநாயகர், வள்ளி, தெய்வயானை முதலிய உற்சவத் திருமேனிகள் உள்ளன. நேரே, மூலவர் பக்தஜனேஸ்வரர் சிறிய கருவறையில் கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார். பங்குனி மாதம் 23 முதல் 27-ம் நாள் வரை, சூரியனின் ஒளிக் கதிர்கள் கருவறையில் நுழைந்து மூலவர் மீது படுகின்றன. நடராச சபை உள்ளது. உள்பிராகாரத்தில் நரசிங்க முனையரையர் பூசித்த மிகப்பெரிய சிவலிங்க மூர்த்தம் உள்ளது.

பிராகாரத்தில் பொல்லாப் பிள்ளையார், சேக்கிழார், நால்வர், அறுபத்துமூவர், வலம்புரி விநாயகர், சோமாஸ்கந்தர், ஆறுமுகர் முதலிய சந்நிதிகளும், தொடர்ந்து நான்கு யுகலிங்கங்களும், கஜலட்சுமி சந்நிதிகளும் உள்ளன. கருவறைச் சுவரில் சண்டேசுரர் வரலாறு சிற்பங்கள் வடிவில் - பால் கறப்பது, தந்தையார் மரத்தின் மீதேறிப் பார்ப்பது, திருமஞ்சனம் செய்வது, தந்தையின் கால்களைத் துண்டிப்பது, இறைவன் கருணை செய்வது ஆகியவை காணப்படுகிறது. நவக்கிரக சந்நிதியில் சுக்கிரனுக்கு எதிராக அவர் வழிபட்ட சுக்கிரலிங்கம் உள்ளது. நவக்கிரகங்களின் நடுவில் உள்ள சூரியன் திசைமாறி மேற்கு நோக்கி மூலவரைப் பார்த்தவாறு உள்ளார். பக்கத்தில் பைரவரும் சூரியனும் உள்ளனர். இவ்வாலயத்தின் தீர்த்தங்கள் கெடில நதியும், கோமுகி தீர்த்தமும் ஆகும். கெடில நதி ஊருக்குத் தெற்கே ஒரு கி.மீ. தூரத்திலும், கோமுகி தீர்த்தம் கோயிலுக்கு மேற்கிலும் இருக்கின்றன.

அம்பாள் கோயில் தனியே அழகான முன் மண்டபத்துடன் அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பிகை நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். வடக்குச் சுற்றில் தல மரங்களான நாவல் மரங்களை அம்மன் சந்நிதிக்கு அருகில் காணலாம். இந்த ஊருக்கு நாவலூர் எனும் பெயர் ஏற்பட காரணம் இதுவே. இத்தலத்தின் விருட்சமான நாவல் மரம் ரோகிணி நட்சத்திரத்துக்கு உரிய மரமாகும். ஆகவே, ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தல இறைவனையும், அம்பாள் மனோன்மணியையும் மாதத்தில் ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில் வழிபடுவது நலனைத் தரும்.

மகாவிஷ்ணு வழிபட்ட தலம்

இரண்யன் என்ற அசுரன் (பிரகலாதனின் தந்தை) தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தி வந்தான். தேவர்களும், முனிவர்களும் மகாவிஷ்ணுவை சரணடைந்தனர். மகாவிஷ்ணுவும் இரண்யனை வதம் செய்ய முடிவுசெய்தார். ஆனாலும் வரங்கள் பல பெற்ற இரண்யன், தனக்கு மரணம் நிலத்திலும், நீரிலும், வானிலும், ஆயுதங்களாலும், மனிதர்களாலும், தேவர்களாலும், விலங்குகளாலும், பகலிலும், இரவிலும், அரண்மனை உள்ளேயும், வெளியிலும் ஏற்படக்கூடாது என்ற வரமும் பெற்றிருந்தான். இப்படிப்பட்ட இரண்யனை அழிக்க, மகாவிஷ்ணு திருநாவலூர் தலத்து இறைவனான பக்தஜனேஸ்வரரை வழிபட்டார்.

நரசிம்ம அவதாரம் எடுத்து, தூணில் இருந்து வெளிப்பட்டு இரண்யனை வதம் செய்ய வேண்டிய ஆற்றலை திருமாலுக்கு வழங்கிய தலம்தான் திருநாவலூர். இத்தலத்தில் மகாவிஷ்ணு தனிக்கோவில் கொண்டுள்ளார். ஆலய பிராகாரத்தின் வடக்குச் சுற்றில், ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜப் பெருமாள் என்ற பெயரில் தனி சந்நிதியில் காட்சி தருகிறார். உயரமாக அமைந்த இந்தச் சந்நிதிக்குப் படிகள் ஏறிப் போக வேண்டும். முகப்பு மண்டமும், மகா மண்டபமும் கூடிய இந்த சந்நிதியில் கிழக்கு நோக்கி ஆறடி உயரத்தில் வரதராஜப் பெருமாள் ஆஜானுபாகுவாக காட்சி தருகிறார். சந்நிதிக்கு எதிரில் கருடன் சிற்பம் உள்ளது.

கோஷ்ட மூர்த்தமாக உள்ள தட்சிணாமூர்த்தி, ரிஷபத்தின் முன்னால் நின்று வலக்கையை ரிஷபத்தின் மீது ஊன்றி, மறுகையில் சுவடி ஏந்தி நிற்கும் கோலத்தில் காட்சி தருகிறார். சுக்கிர பகவான் இத்தலத்தில் இறைவனை வணங்கி பூஜித்து வக்ர தோஷம் நிவர்த்தி பெற்றதாக தல வரலாறு குறிப்பிடுகிறது. சுக்கிரனால் நிறுவி வழிபடப்பட்ட லிங்கம், நவகிரகங்களுக்கு அருகே அமைந்துள்ளது. இந்த லிங்கத்துக்கு வெள்ளிக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள் நடக்கும்.

திருப்புகழ் தலம்

இத்தலத்து முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப் பெருமான் ஒரு திருமுகத்துடனும், நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி நின்றவாறு எழுந்தருளியுள்ளார்.

*

காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில்

காஞ்சிபுரம் நகரில் காந்தி சாலையில் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் உள்ளது. தேவர்கள் மற்றும் முனிவர்கள் இடையே சத்து, அசத்து என்ற இரண்டு சொற்களுக்கு உண்மை பொருள் அறிய வாக்குவாதம் நடந்தபோது, அந்த வார்த்தைகளின் உண்மைப் பொருளை விளக்கி வழக்கினை தீர்த்ததால், இங்கு கோவில் கொண்டுள்ள இறைவன் வழக்கறுத்தீஸ்வரர் என்று அறியப்படுகிறார். இறைவி மருகுவார்குழலி அம்மை என்ற திருநாமத்துடன் இக்கோவிலில் அருள் பாலிக்கின்றாள். நடுநிலையுடன் நின்று வழக்குகளை தீர்த்துவைக்கும் ஒரு தெய்வீகக் கல் இக்கோவிலில் இருந்துள்ளது என்றும், இறைவன் முன் வழக்குகள் தீர்ந்ததால், இறைவன் வழக்கறுத்தீஸ்வரர் என்றும் வணங்கப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது.

வழக்கறுத்தீஸ்வரர் தன்னிடம் வந்து வேண்டும் பக்தர்களின் வழக்குகளை தீர்ப்பதுடன், வழக்குக்கு மூல காரணமாக விளங்கும் காரணத்தைக் கண்டறிந்து வழக்குகளை தீர்த்துவைக்கிறார். இந்த ஆலயத்தில் திங்கள்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி இறைவனை வழிபட்டால், நீண்ட நாட்களாக தீராமல் இருக்கும் வழக்குகளும் தீர்ந்து வெற்றி கிடைப்பது நிச்சயம் என்பது இவ்வாலயத்தின் சிறப்பாகும்.

சுந்தரரின் தேவாரம் - பாடியவர்கள் பாலச்சந்திரன் மற்றும் சிவக்குமார்

 

]]>
http://www.dinamani.com/specials/parigara-thalangal/2016/nov/04/வழக்கு-விவகாரங்களில்-வெற்றி-தேடித்-தரும்-திருநாவலூர்-2591897.html
2572996 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் பித்ரு தோஷ நிவர்த்தி தலம் மதிமுக்தீஸ்வரர் கோவில், திருத்திலதைப்பதி என்.எஸ். நாராயணசாமி Saturday, October 1, 2016 04:34 PM +0530  

மஹாளய பட்சம் புரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டும், விசேஷமாக கருதப்படும் இன்றைய மஹாளய அமாவாசை தினத்தை முன்னிட்டும் இந்த வாரம் நாம் மற்றொரு பித்ரு தோஷ பரிகாரத் தலத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

பாடல் பெற்ற காவிரி தென்கரை சிவஸ்தலங்கள் வரிசையில் 58-வது தலமாக இருப்பது திருத்திலதைப்பதி. இதற்கு திலதர்ப்பணபுரி என்ற மற்றொரு பெயரும் உள்ளது. இன்றைய நாளில் இத்தலம் செதலபதி என்று அழைக்கப்படுகிறது.

இறைவன் பெயர்: மதிமுக்தீஸ்வரர்
இறைவி பெயர்: பொற்கொடிநாயகி, சுவர்ணவல்லி, மரகதவல்லி
இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது.

எப்படிப் போவது?

மயிலாடுதுறை - திருவாரூர் சாலை வழியில் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே இத்தலம் இருக்கிறது. பூந்தோட்டத்தில் இருந்து ஆட்டோ மூலம் கோயிலுக்கு செல்லலாம். பூந்தோட்டம் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஆதிவிநாயகர் கோயில் என்று இக்கோயிலை அழைக்கிறார்கள். இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் கூத்தனூர் சரஸ்வதி கோயில் இருக்கிறது.

ஆலய முகவரி

அருள்மிகு மதிமுக்தீஸ்வரர் திருக்கோயில்,
செதலபதி,
பூந்தோட்டம் அஞ்சல்,
நன்னிலம் வட்டம்.
திருவாரூர் மாவட்டம் – 609 503.

இக்கோயில், தினமும் காலை 7 மணி முதல் பகல் 12.45 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

ஒருமுறை கைலாயத்தில் சிவபெருமானின் நடனத்தைக் காண தேவர்கள், முனிவர்கள், ஞானிகள், இந்திரன், வருணன், வாயு ஆகியோர் தவிர ரம்பா, ஊர்வசி, மேனகா என்று எல்லோரும் கூடியிருந்தனர். ஈசனும், அற்புதமாய் நடனம் ஆடிவிட்டு, பார்வதியுடன் எல்லோருக்கும் திருவருள் புரிந்தார். அச்சமயம் வாயுதேவன் சந்தோஷ மிகுதியால் சுழற்காற்றாக வீசினான். அதில் ஊர்வசியின் ஆடை சற்றே விலக, அருகில் நின்றுகொண்டிருந்த பிரம்மா அதைப் பார்த்து காமமுற்றார். ஈசன் அதைக்கண்டு பிரம்மாவின் மேல் கோபமடைந்து பூலோகத்தில் பிறந்து உழலும்படி சாபமிட்டார். பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்கி, பிரம்மாவை திலதைப்பதியில் சிவவழிபாடு செய்துவரும்படி கட்டளையிட்டு, நேரம் வரும்போது காட்சியளித்து சாபம் நீக்குவேன் என்று வரம் அளித்தார்.

பிரம்மாவும் திலதைப்பதி வந்து, தன் பெயரால் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தார். சிவபெருமான் அவருக்குக் காட்சி கொடுத்தார். சிவன் தடுத்தும் கோளாமல் தனது தந்தை நடத்திய யாகத்துக்குச் சென்று அவமானப்பட்ட தாட்சாயணியான பார்வதி, அந்த அவமானம் நீங்க திலதைப்பதியில் ஒரு புற்றின் கீழ் தவம் செய்துகொண்டிருந்தாள். விஷயமறிந்த பிரம்மா புற்றை வெட்ட, அம்பிகை தரிசனம் தந்தாள். சிவன், பார்வதி இருவரையும் வழிபட்ட பிரம்மாவின் சாபத்தை நீக்கி ஆசி வழங்கினார்கள். இன்றும் திலதைப்பதி பாவங்களை நீக்கி சித்திகளை அளிக்கும் தலமாக விளங்கி வருகிறது.

*

நற்சோதி என்ற மன்னன் ஒருவன் தன் தந்தைக்கு பிதுர் காரியங்கள் செய்யவேண்டி வந்தது. எந்த ஊரில் பித்ருக்கள் நேரடியாக வந்து அன்னத்தைப் பெற்றுக்கொள்கிறார்களோ அதுவரை ஓயமாட்டேன் என்று ஊர் ஊராகச் சென்று பித்ரு காரியங்கள் செய்தான் மன்னன். கடைசியில் திலதைப்பதி வந்தபோது, பித்ருக்கள் பிண்டத்தை கைநீட்டி வாங்கிக்கொண்டார்களாம். அதனால் அந்தமாதிரியான பித்ரு காரியங்கள் இங்கு செய்ய ஏராளமானவர்கள் வருகிறார்கள்.

முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி (செதலபதி), கயா, அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் ஆகிய 7 தலங்கள் சிறந்த தலங்களாகக் கருதப்படுகின்றன. இதில் ஐந்தாம் இடத்தில் உள்ள தலம் இது. இக்கோயிலில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் என பார்க்கத் தேவையில்லை. எந்த நாளில் வேண்டுமானாலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்து கொள்ளலாம்.

*

தசரதனுக்கும், ஜடாயுவுக்கும் ராமன், லக்ஷ்மணன் இருவரும் தில தர்ப்பணம் செய்த இடம் என்ற புராணப் பெருமை உடையது இத்தலம். ராமன் இங்கு தர்ப்பணம் செய்து வழிபட்டதால் தசரதனுக்கு முக்தி அளித்தார் சிவபெருமான் என்று இவ்வாலயத்தின் தலபுராணம் கூறுகிறது. இத்தல இறைவனுக்கும் முக்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. ராமன் தர்ப்பணம் செய்தபோது மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய நால்வரையும் வணங்கி நான்கு பிண்டங்கள் பிடித்துவைத்து பூஜித்தார். இந்தப் பிண்டங்கள் லிங்கங்களாக மாறின.

கருவறைக்குப் பின்புறத்தில் இந்த லிங்கங்களையும், ராமர், லட்சுமணர் இவ்வாறு தர்ப்பணம் செய்யும் நிலையிலுள்ள சிற்பத்தையும் கோயில் பிராகாரத்தில் காணலாம். இவர் வலது காலை மண்டியிட்டு, வடக்கு நோக்கி திரும்பி வணங்கியபடி காட்சி தருகிறார். சூரியன், சந்திரன், யானை, சிங்கம், இராமர், இலக்குவன் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர்.

கோவில் அமைப்பு

கிழக்கு நோக்கிய இரும்புக் கம்பிகளாலான கதவையுடைய முகப்பு வாயிலுடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. உள்ளே சென்றால் கொடிமரம், நந்தி உள்ளன. உள்வாயிலைக் கடந்து முன் மண்டபம் அடைந்தால் நேரே மூலவர் தரிசனம். வலதுபுறம் அம்பாள் சந்நிதி உள்ளது. பிராகாரத்தில் விநாயகர், ராம லக்குமணர் திருமேனிகள். அவர்கள் பிரதிஷ்டை செய்த சிவலிங்கங்கள், ஆறுமுகர், கஜலட்சுமி, நவக்கிரகம், பைரவர், நால்வர், சூரிய சந்திரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை உள்ளனர். தட்சிணாமூர்த்தி இங்கு வித்தியாசமாகக் காணப்படுகிறார். காலால் அசுரனை மிதித்தபடி, தன் இரண்டு பக்கமும் அணில்கள் இருக்க, சனகாதி முனிவர்கள் நால்வரும் அருகில் தவம் செய்யக் காட்சி தருகிறார்.

இவ்வாலயத்தின் மற்றொரு சிறப்பு, கோயிலில் வீற்றிருக்கும் ஆதி விநாயகர் சந்நிதி. யானை முகத்துக்கு முந்தைய விநாயகர் என்பதால், இங்கு விநாயகர் தும்பிக்கையில்லாமல், வலக்கால் தொங்கவிட்டு, இடக்கால் மடித்து, இடக்கையை இடக்காலின் மீது வைத்து, வலக்கை சற்று சாய்ந்த அபயகரமாக விளங்க, மனித முகத்துடன் அழகான கோலத்தில் காட்சி தருகின்றார்.

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

இக்கோயிலில் மகாவிஷ்ணு தனது மூன்று கோலத்தை காட்டியபடி அருளுகிறார். ராமனாக சிவபூஜை செய்யும் உருவிலும், கருவறை கோஷ்டத்தில் வழக்கமாக லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணுவாக நின்ற கோலத்திலும், பிராகாரத்தில் நவகிரக சன்னதி அருகில் மற்றொரு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார். இவ்வாறு மகாவிஷ்ணுவின் மூன்றுவிதமான கோலங்களை இக்கோயிலில் தரிசிக்கலாம்.

இத்தலத்தின் தீர்த்தங்களில் ஒன்றான அரிசிலாறு, வடக்கிலிருந்து தெற்கு நோக்கி உத்தரவாஹினியாக செல்கிறது. இதுபோன்ற நதிகள் ஓடும் தலங்களில் உள்ள கோவில்களிலுள்ள இறைவனை வழிபட்டால் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை. இந்த அரிசிலாற்றில் நீராடி சிவபூஜை செய்து, தசரதருக்குப் பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்தார் ராமன். திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

இப்பதிகத்தை நாள்தோறும் சிரத்தையுடன் ஓதி வழிபடுவர்கள் சிவனடி சேர்வது திண்ணம் என்று சம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார். சம்பந்தர் இத்தலத்தை மதிமுத்தம் என்றே குறிப்பிடுகிறார். ஆகையால், ஊரின் பெயர் திலதைப்பதி என்றும் கோவிலின் பெயர் மதிமுத்தம் என்றும் அந்நாளில் வழங்கியிருக்க வேண்டும்.

திருஞானசம்பந்தர் பதிகம்

1. பொடிகள்பூசிப் பலதொண்டர் கூடிப்புலர் காலையே
அடிகளாரத் தொழுதேத்த நின்றவ்வழ கன்னிடங்
கொடிகளோங்கிக் குலவும் விழவார் திலதைப்பதி
வடிகொள்சோலைம் மலர்மணங் கமழும் மதிமுத்தமே.

2. தொண்டர்மிண்டிப் புகைவிம்மு சாந்துங்கமழ் துணையலுங்
கொண்டுகண்டார் குறிப்புணர நின்றகுழ கன்னிடந்
தெண்டிரைப்பூம் புனலரிசில் சூழ்ந்த திலதைப்பதி
வண்டுகெண்டுற் றிசைபயிலுஞ் சோலை மதிமுத்தமே.

3. அடலுளேறுய்த் துகந்தான் அடியார்அம ரர்தொழக்
கடலுள்நஞ்சம் அமுதாக வுண்டகட வுள்ளிடந்
திடலடங்கச் செழுங்கழனி சூழ்ந்த திலதைப்பதி
மடலுள்வாழைக் கனிதேன் பிலிற்றும் மதிமுத்தமே.

4. கங்கைதிங்கள் வன்னிதுன் னெருக்கின்னொடு கூவிளம்
வெங்கண்நாகம் விரிசடையில் வைத்தவிகிர்தன் இடம்
செங்கயல்பாய் புனலரிசில் சூழ்ந்த திலதைப்பதி
மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகார் மதிமுத்தமே.

5. புரவியேழும் மணிபூண் டியங்குங்கொடித் தேரினான்
பரவிநின்று வழிபாடு செய்யும்பர மேட்டியூர்
விரவிஞாழல் விரிகோங்கு வேங்கைசுர புன்னைகள்
மரவம்மவ்வன் மலருந் திலதை மதிமுத்தமே.

6. விண்ணர்வேதம் விரித்தோத வல்லார்ஒரு பாகமும்
பெண்ணர்எண்ணார் எயில்செற் றுகந்தபெரு மானிடந்
தெண்ணிலாவின் ஒளிதீண்டு சோலைத் திலதைப்பதி
மண்ணுளார் வந்தருள் பேணி நின்ற மதிமுத்தமே.

7. ஆறுசூடி யடையார்புரஞ் செற்றவர் பொற்றொடி
கூறுசேரும் உருவர்க் கிடமாவது கூறுங்கால்
தேறலாரும் பொழில்சூழ்ந் தழகார் திலதைப்பதி
மாறிலாவண் புனலரிசில் சூழ்ந்த மதிமுத்தமே.

8. கடுத்துவந்த கனன்மேனி யினான்கரு வரைதனை
எடுத்தவன்றன் முடிதோள் அடர்த்தார்க் கிடமாவது
புடைக்கொள்பூகத் திளம்பாளை புல்கும்மதுப் பாயவாய்
மடுத்துமந்தி யுகளுந் திலதை மதிமுத்தமே.

9. படங்கொள்நாகத் தணையானும் பைந்தாமரை யின்மிசை
இடங்கொள்நால் வேதனு மேத்தநின்ற இறைவன்னிடந்
திடங்கொள்நாவின் னிசைதொண்டர் பாடுந் திலைதைப்பதி
மடங்கல்வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே.

10. புத்தர்தேரர் பொறியில் சமணர்களும் வீறிலாப்
பித்தர்சொன்னம் மொழிகேட் கிலாதபெரு மானிடம்
பத்தர்சித்தர் பணிவுற் றிறைஞ்சுந் திலதைப்பதி
மத்தயானை வழிபாடு செய்யும் மதிமுத்தமே.

11. மந்தமாரும் பொழில்சூழ் திலதைமதி முத்தமேற்
கந்தமாருங் கடற்காழி யுள்ளான்தமிழ் ஞானசம்
பந்தன்மாலை பழிதீரநின் றேத்தவல் லார்கள்போய்ச்
சிந்தைசெய்வார் சிவன் சேவடி சேர்வது திண்ணமே.

இத்தலத்தைப் பற்றிய திருஞான சம்பந்தரின் பதிகம் - பாடியவர் மதுரை முத்துக்குமரன்

இந்த தலத்தைப் பற்றிய திருப்புகழ் - பாடியவர் மயிலாடுதுறை சிவக்குமார்

 

]]>
http://www.dinamani.com/specials/parigara-thalangal/2016/sep/30/பித்ரு-தோஷ-நிவர்த்தி-தலம்-மதிமுக்தீஸ்வரர்-கோவில்-திருத்திலதைப்பதி-2572996.html
2757 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் குரு தோஷ பரிகாரத் தலம் திருஇரும்பூளை (ஆலங்குடி) என்.எஸ். நாராயணசாமி Monday, September 5, 2016 05:19 PM +0530  

இந்த ஆண்டு, ஆகஸ்ட் 2-ம் தேதி, செவ்வாய்கிழமை அன்று குரு பெயர்ச்சி நடைபெற உள்ளது. குரு பகவான், சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அன்றைய தினத்துக்கு, ஆடி அமாவாசை மற்றும் ஆடி மாதம் 18-ம் நாள் (ஆடிப்பெருக்கு) ஆகிய சிறப்புகளும் உள்ளன. ஆக, இப்போது குரு பரிகாரத் தலமான ஆலங்குடியை பற்றி அறிந்துகொள்வோம்.

காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள பாடல்பெற்ற சிவஸ்தலங்கள் வரிசையில் 98-வது தலமாக ஆலங்குடி விளங்குகிறது.

இறைவன் பெயர்: ஆபத்சகாயேசுவரர்

இறைவி பெயர்: ஏலவார் குழலியம்மை

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றுள்ளது.

எப்படிப் போவது?

கும்பகோணம் - நீடாமங்கலம் - மன்னார்குடி சாலையில், கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. நவக்கிரக ஸ்தலங்களில் குரு ஸ்தலமாக ஆலங்குடி விளங்குகிறது.

ஆலய முகவரி
அருள்மிகு ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில்,
ஆலங்குடி,
வலங்கைமான் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 612 801.
தொலைபேசி: 04374 - 269407

இக்கோயில், தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

குரு பரிகாரத் தலமாக விளங்கும் ஆலங்குடி, மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் பெருமையுடையதாகும். மேலும், இத்தலம் பஞ்ச ஆரண்யத் தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் சாயரட்சை பூஜை காலத்தில் இறைவனை தரிசிப்பது விசேஷமாகக் கருதப்படுகிறது.

இக்கோவில், திருவாரூரில் இருந்து அரசாண்டு வந்த முசுகுந்த சக்கரவர்த்தியிடம் அமைச்சராக இருந்த அமுதோகர் என்பவரால் கட்டப்பட்டது. அமுதோகர் ஒரு சிறந்த சிவபக்தர். முசுகந்த சக்கரவர்த்தி தனது அமைச்சர் அமுதோகரிடம் அவரது புண்ணியத்தில் பாதியை தனக்கு தத்தம் செய்து தர வேண்டும் என்று கேட்டான். அமைச்சர் மறுக்க, அவரது தலையை வெட்டிவிடும்படி முசுகுந்தன் கூறினான். கொலையாளி, அமுதோகர் தலையை வெட்டியவுடன் அமுதோகர் என்ற சத்தம் தலம் முழுவதும் ரீங்காரமிட்டது. தனது தவறை உணர்ந்த முசுகுந்த சக்கரவர்த்தி, இத்தலத்து இறைவன் ஆபத்சகாயேஸ்வரரை வழிபட்டு பாவம் நீங்கப்பெற்றான் என்பது வரலாறு.

மற்றுமொரு புராணச் செய்தியின்படி, தேவர்கள் அமிர்தம் பெறவேண்டி பாற்கடலைக் கடையும்போது உண்டான ஆலகால விஷத்தை இறைவன் சிவபெருமான் உண்ட தலம் இதுவாகும். இங்கு ஈசன் ஆலகால விஷத்தை குடித்ததால், இத்தலம் ஆலங்குடி என்று பெயர் பெற்றது. இத்தலத்தில் பாம்பு தீண்டி யாரும் இறப்பதில்லை என்று இப்பகுதி மக்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்கப் பெருமானுக்கு 9 பரிவாரத் தலங்கள் உள்ளன. அவற்றில் ஆலங்குடி, தட்சிணாமூர்த்தி தலமாக விளங்குகிறது. மற்ற பரிவாரத் தலங்கள் முறையே, 1. திருவலஞ்சுழி (விநாயகர்), 2. சுவாமிமலை (முருகன்), 3. திருவாவடுதுறை (நந்திகேஸ்வரர்), 4. சூரியனார்கோவில் (நவக்கிரகம்). 5. திருவாப்பாடி (சண்டிகேஸ்வரர்), 6. சிதம்பரம் (நடராஜர்), 7. சீர்காழி மற்றும் 8. திருவாரூர் (சோமஸ்கந்தர்).

கோவில் அமைப்பு

கோயிலின் தெற்குக் கோபுரம் 5 நிலைகளை உடையது. கிழக்கிலுள்ள கோபுரம் சிறியது. இத்தல விநாயகர், கலங்காமல் காத்த விநாயகர் என்று பெயர் பெற்றவர். கோபுர வாயிலில் உள்ளார். ஆலகால விஷத்தால் கலங்கிய புறமும் நீண்ட மதில்களையுடைய இவ்வாலயம் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது தேவர்களைக் கலங்காமல் காத்து அருளியவர். உள்ளே முதல் பிராகாரத்தில், அம்பாள் ஏலவார் குழலியம்மை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இரண்டாவது வாயிலைக் கடந்து உள்ளே சென்றால், சூரிய பகவானின் சந்நிதி உள்ளது. சூரிய பகவானின் சந்நிதிக்கு தென்புறத்தில் சுந்தரர் சந்நிதி இருக்கிறது. அடுத்து வரும் உள்பிராகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சப்தலிங்கங்கள், நால்வர் சந்நிதி ஆகியவற்றைக் காணலாம். இத்தலத்தில் அமைந்துள்ள சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருமேனி மிக அற்புதமாக அமைந்துள்ளது ஒரு சிறப்பாகும். சோமஸ்கந்தர் சந்நிதியில் இருக்கும் இந்தத் திருஉருவம் சுமார் மூன்றரையடி உயரம் இருக்கும். ஆண்டுதோறும் ஆருத்ரா உற்சவத்தின்போது இவர் வெளியே உலா வருகிறார். அடுத்துள்ள மகாமண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால், கருவறையில் மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். விசுவாமித்திரர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளார்.

இத்தலத்தில் உள்ள அகத்தியரை வழிபட்ட பிறகே இங்குள்ள முருகப்பெருமானை வழிபட வேண்டும். இதனால் பேய், பிசாசு ஆகியவற்றின் அச்சம் நீங்கும். இங்குள்ள நாகர் சந்நிதியில் தோஷ நிவர்த்திப் பரிகாரம் செய்துகொண்டால் நாகதோஷம் விலகி நன்மைகள் உண்டாகும்.

இத்தலத்தில் குரு தட்சிணாமூர்த்திதான் பிரபலமானவர். குருவே தட்சிணாமூர்த்தியாகவும், தட்சிணாமூர்த்தியே குருவாகவும் எழுந்தருளியுள்ள ஒப்பற்ற குருபீடமாக இத்தலம் அமைந்துள்ளது. ஆலங்குடி தட்சிணாமூர்த்தியை சுந்தரமூர்த்தி சுவாமிகள் வழிபட்டு, பஞ்சாட்சர உபதேசம் பெற்று ஞானமுக்தி அடைந்தார். வியாழக்கிழமைகளில் குரு சந்நிதி மிகவும் விசேஷம். ஸ்ரீமகாலட்சுமி ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வழிபட்டு சந்தான பாக்கியம் பெற்றாள். ஆலங்குடி தட்சிணாமூர்த்திப் பெருமானின் புகழ்பாடிய மகாவிஷ்ணுவும், ஸ்ரீதேவி சமேதராக வரதராஜப் பெருமாளாக இங்கு கோயில் கொண்டார். வருடாவருடம் நடைபெறும் குருப்பெயர்ச்சி நாளில், திரளான பக்தர்கள் இத்தலத்துக்கு வந்து குருபகவானை வழிபட்டு சகலவித தோஷங்களிலிருந்து விடுபடுகின்றனர்.

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பஞ்ச ஆரண்ய தலங்கள் என்று ஐந்து தலங்கள் உண்டு. இந்த ஐந்துமே காவிரியின் கிழக்குக் கரையில் அமைந்திருப்பதுடன், ஒரே நாளில் விடியற்காலையில் புறப்பட்டு ஐந்தாவது கோயிலை அர்த்தஜாமப் பூஜையின்போது வந்து வணங்கி முடித்துக்கொள்ளும்படியாக அருகருகே அமைந்தவை. இந்த ஐந்து தலங்களை வரிசையாகச் சொல்வதானால்,

1. திருக்கருகாவூர் (முல்லை வனம்) - விடியற்கால வழிபாடு.

2. அவளிவநல்லூர் (பாதிரி வனம்) - காலை வழிபாடு.

3. அரதைப் பெரும்பாழி (ஹரித்துவாரமங்கலம்) - வன்னிவனம் - உச்சிக்கால வழிபாடு.

4. ஆலங்குடி (திரு இரும்பூளை) - பூளை வனம் - மாலை நேர வழிபாடு.

5. திருக்கொள்ளம்புதூர் (வில்வ வனம்) - அர்த்தஜாமப் பூஜை வழிபாடு.

சைவ சமயக் குரவர் நால்வரில் திருஞானசம்பந்தர், தன் தலயாத்திரையின்போது இதே வரிசையில் ஐந்து கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.

பிற குரு ஸ்தலங்கள்

திட்டை

தஞ்சாவூரில் இருந்து மெலட்டூர் வழியாக கும்பகோணம் செல்லும் சாலை மார்க்கத்தில், தஞ்சாவூரில் இருந்து சுமார் 12 கி.மீ. சென்றால் திட்டை என்ற தலத்தை அடையலாம். தஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள திட்டை என்ற ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. திட்டை தலமும் ஒரு சிறந்த குரு பரிகாரத் தலம். இத்தலத்தின் மூலவர் வசிஷ்டேஸ்வரர், அம்பாள் மங்களாம்பிகை.

திருவலிதாயம்

சென்னையின் ஒரு பகுதியான பாடி என்ற இடத்தில் அமைந்துள்ள வல்லீஸ்வரர் ஆலயம், தேவார காலத்தில் திருவலிதாயம் என்று வழங்கப்பட்டது. சென்னை - ஆவடி சாலையில், பாடி டிவிஸ் லூகாஸ் பேருந்து நிறத்தத்தில் இறங்கி எதிரே உள்ள கிளைப் பாதையில் சென்று இக்கோவிலை அடையலாம் குரு பகவானுக்கு இவ்வாலயத்தில் தனிச் சந்நிதி இருக்கிறது. குரு பரிகாரத் தலங்களாகச் சொல்லப்படும் தலங்களில் திருவலிதாயமும் ஒன்றாகும். குரு பகவான் தன்னைப் பற்றியிருந்த தோஷம் நீங்க இத்தலத்தில் தவமிருந்து சிவனருள் பெற்றார் என்பதால், இத்தலத்தில் குரு பகவானுக்கு தனிச் சிறப்புண்டு.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/7/29/w600X390/DSCN0278.jpg http://www.dinamani.com/specials/parigara-thalangal/2016/jul/29/குரு-தோஷ-பரிகாரத்-தலம்-திருஇரும்பூளை-ஆலங்குடி-2757.html
2558256 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் நவக்கிரகங்களின் தோஷத்தை நீக்கும் தலம் திருக்கோளிலி என்.எஸ். நாராயணசாமி Saturday, September 3, 2016 02:52 PM +0530 பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 123-வது தலமாக திருக்கோளிலி உள்ளது. தற்போது திருக்குவளை என்று வழங்கப்படுகிறது.


இறைவன் பெயர்: கோளிலிநாதர், பிரம்மபுரீஸ்வரர்
இறைவி பெயர்: வண்டமர் பூங்குழலி
 


இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் இரண்டும், திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும். சுந்தரர் பதிகம் ஒன்றும் என மொத்தம் 4 பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது?

திருவாரூரில் இருந்து தென்கிழக்கே எட்டுக்குடி செல்லும் சாலையில் 20 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. இத்தலத்துக்கு அருகில், திருகைச்சினம், திருநெல்லிக்கா, திருக்காறாயில் ஆகிய பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் அமைந்துள்ளன.

ஆலய முகவரி

அருள்மிகு கோளிலிநாதர் திருக்கோவில்,
திருக்குவளை, திருக்குவளை அஞ்சல்,
திருக்குவளை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 610 204.

இவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

சிவபெருமானின் திருமுடியைக் கண்டதாக பிரம்மா பொய் கூறியதால், பிரம்மாவின் படைப்புத் தொழிலை அவரிடம் இருந்து இறைவன் பறித்து சாபம் இடுகிறார். தனது சாபம் நீங்க, பிரம்மா இத்தல இறைவனை தனது பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டு தனது சாபம் நீங்கப் பெற்றார்.

பிரம்மாவுக்கு சாபம் ஏற்பட்டதால் அவரது படைப்புத் தொழில் பாதிக்கப்பட, அவரது கட்டுபாட்டில் இயங்கும் நவக்கிரகங்களாலும் தங்களது தொழிலை சரிவர செய்ய முடியவில்லை. நவக்கிரகங்கள் தங்களுக்கு ஏற்பட்ட தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபட்டு பலன் பெற்றனர்.

நவகோள்களின் குற்றங்களை நீக்கி அருள்புரிந்ததால் கோளிலி என்று தலப்பெயர் ஏற்பட்டது. இறைவனுக்கும் கோளிலிநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. கோளிலிநாதரை வழிபடுவதால், பக்தர்களுக்கு ஜாதகத்தில் எந்தவித நவக்கிரக தோஷம் இருந்தாலும் அவை நீங்கிவிடும் என்பது இத்தலத்தின் சிறப்பு.

பிரம்மா வழிபட்டதால், இத்தல இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.

கோவில் விவரம்

திருக்கோளிலி தலம், தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். திருவாரூரை அடுத்து விசேஷமான தியாகராஜர் ஆலயம் திருக்கோளிலி ஆகும். விடங்கருக்கு அவனிவிடங்கர் என்று பெயர். நடனம் பிருங்க நடனம். பிரம்மா, திருமால், பஞ்சபாண்டவர்கள், நவக்கிரகங்கள், அகத்தியர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். அகத்தியர் பூசித்த லிங்கம் பிராகாரத்தில் இருக்கிறது. மூலவர் கோளிலிநாதர் வெண்மணலால் ஆன சிவலிங்கமாகக் காட்சி தருகிறார். வெண்மணலால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த லிங்கத்துக்கு அமாவாசை தினங்களில் மட்டும் சாம்பிராணி தைலம் சாற்றப்படுகிறது. மற்ற நாட்களில் குவளை சாற்றி பூஜை செய்யப்படுகிறது. எனவே இத்தலம் திருக்குவளை என்றும் பெயர் பெற்றது. பகாசுரன் என்ற அரக்கனைக் கொன்றதால் பீமனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் இத்தல இறைவனை வழிபட்டதால் நீங்கியது. பகாசுரன் உருவம் முன் கோபுரத்தில் உள்ளது.

கிழக்கு நோக்கிய அழகான ராஜகோபுரத்துடன் ஊரின் மத்தியில் ஆலயம் அமைந்துள்ளது. உள்ளே நுழைந்தால் வடபுறம் வசந்த மண்டபம் உள்ளது. கொடிமரம் தாண்டி இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால், இறைவன் கருவறை உள்ளது. கருவறையில் மணலால் ஆன சுயம்புலிங்கமாக காட்சி தரும் சுவாமி சந்நிதியும், அதன் தென்புறம் தியாகேசர் சந்நிதியும் உள்ளன. எதிரே சுந்தரர் உற்சவமூர்த்தியாகப் பரவையாருடன் காட்சி தருகின்றார். பிராகார வலம் வரும்போது தென் மேற்கில் தியாகவிநாயகரும், அடுத்து விசுவநாதர் லிங்க மூர்த்தமும், வாகன மண்டபமும், விசாலாட்சி, இந்திரபுரீசர் முதலிய சந்நிதிகளும் உள்ளன. முருகப் பெருமானுக்கு அழகான சந்நிதி உள்ளது. அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி தனிக்கோவிலாக உள்ளது. இக்கோவிலில் உள்ள சண்டீசுவரருக்கு மூன்று உருவங்கள் உள்ளன. இறைவன் சந்நிதி, இறைவி சந்நிதி இரண்டும் கிழக்குப் பார்த்து அமைந்துள்ளன.

இத்தலத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள குண்டையூர் என்ற இடத்தில் பெற்ற நெல்லை, இத்தலத்து இறைவன் சுந்தரருக்கு திருவாரூரில் கிடைக்கும்படி செய்தருளிய அற்புதம் நடந்த தலம் திருக்கோளிலி ஆகும். குண்டையூர் கிழார் என்பவர் ஒரு சிறந்த சிவபக்தர். அவர், சுந்தரர் வரவையொட்டி மலைபோல் நெல் மூட்டைகளை அன்புடன் அளித்தார். இவற்றை எவ்வாறு திருவாரூர் எடுத்துச்சென்று தன் வீட்டில் சேர்ப்பது என்ற வழி தெரியாமல் சுந்தரர் விழித்தார். பிறகு இப்பிரச்னைக்கு தீர்வுகாண கோளிலிநாதரிடம் பதிகம் பாடி, நெல் மூட்டைகளை திருவாரூர் எடுத்துச்செல்ல வகை செய்யுமாறு வேண்டிக்கொண்டார். அந்தப் பதிகம் இதோ –

நீள நினைந்தடி யேனுமை நித்தலுங் கைதொழுவேன்

வாளன கண்மட வாளவள் வாடி வருந்தாமே

கோளிலி எம்பெரு மான்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்

ஆளிலை எம்பெரு மானவை அட்டித் தரப்பணியே.


வண்டம ருங்குழ லாளுமை நங்கையோர் பங்குடையாய்

விண்டவர் தம்புர மூன்றெரி செய்தவெம் வேதியனே

தெண்டிரை நீர்வயல் சூழ்திருக் கோளிலி எம்பெருமான்

அண்டம தாயவ னேயவை அட்டித் தரப்பணியே.


பாதியோர் பெண்ணைவைத் தாய்பட ருஞ்சடைக் கங்கைவைத்தாய்

மாதர்நல் லார்வருத் தம்மது நீயும் அறிதியன்றே

கோதில் பொழில்புடை சூழ்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்

ஆதியே அற்புத னேயவை அட்டித் தரப்பணியே.


சொல்லுவ தென்னுனை நான்தொண்டை வாயுமை நங்கையைநீ

புல்கி இடத்தில்வைத் தாய்க்கொரு பூசல்செய் தாருளரோ

கொல்லை வளம்புற விற்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்

அல்லல் களைந்தடி யேற்கவை அட்டித் தரப்பணியே.


முல்லை முறுவல் உமையொரு பங்குடை முக்கணனே

பல்லயர் வெண்டலை யிற்பலி கொண்டுழல் பாசுபதா

கொல்லை வளம்புற விற்றிருக் கோளிலி எம்பெருமான்

அல்லல் களைந்தடி யேற்கவை அட்டித் தரப்பணியே.


குரவம ருங்குழ லாளுமை நங்கையோர் பங்குடையாய்

பரவை பசிவருத் தம்மது நீயும் அறிதியன்றே

குரவம ரும்பொழில் சூழ்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்

அரவ மசைத்தவ னேயவை அட்டித் தரப்பணியே.


எம்பெரு மானுனை யேநினைந் தேத்துவன் எப்பொழுதும்

வம்பம ருங்குழ லாளொரு பாகம மர்ந்தவனே

செம்பொனின் மாளிகை சூழ்திருக் கோளிலி எம்பெருமான்

அன்பது வாயடி யேற்கவை அட்டித் தரப்பணியே.


அரக்கன் முடிகரங் கள்அடர்த் திட்டவெம் மாதிபிரான்

பரக்கும் அரவல்கு லாள்பர வையவள் வாடுகின்றாள்

குரக்கினங் கள்குதி கொள்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்

இரக்கம தாயடி யேற்கவை அட்டித் தரப்பணியே.


பண்டைய மால்பிர மன்பறந் தும்மிடந் தும்மயர்ந்துங்

கண்டில ராயவர் கள்கழல் காண்பரி தாயபிரான்

தெண்டிரை நீர்வயல் சூழ்திருக் கோளிலி எம்பெருமான்

அண்டம தாயவ னேயவை அட்டித் தரப்பணியே.


கொல்லை வளம்புற விற்றிருக் கோளிலி மேயவனை

நல்லவர் தாம்பர வுந்திரு நாவலவூரன் அவன்

நெல்லிட ஆட்கள் வேண்டி நினைந்து ஏத்திய பத்தும் வல்லார்

அல்லல் களைந்துல கின்அண்டர் வானுலகு ஆள்பவரே.


என்று சுந்தரர் பதிகம் பாடி கேட்டுக்கொண்டதின் பேரில், அந்த நெல் மூட்டைகளை திருவாரூரில் உள்ள சுந்தரர் வீட்டில் சேர்ப்பித்தார். இப்பதித்தை ஓதும் யாவரும் தங்களது இன்னல்கள் களைந்து வானுலகில் வாழ்வர் என்று சுந்தரர் தனது கடைசிப் பாடலில் குறிப்பிடுகிறார்.

]]>
http://images.dinamani.com/uploads/user/imagelibrary/2016/8/25/w600X390/DSCN0725a.jpg http://www.dinamani.com/specials/parigara-thalangal/2016/aug/26/நவக்கிரகங்களின்-தோஷத்தை-நீக்கும்-தலம்-திருக்கோளிலி-2558256.html
2594 ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள் செவ்வாய் தோஷ பரிகாரத் தலம் வைத்தீஸ்வரன் கோவில் என்.எஸ். நாராயணசாமி Monday, August 29, 2016 05:23 PM +0530 காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 16-வது தலமாக விளங்கும் வைத்தீஸ்வரன்கோவில், நவக்கிரகத் தலங்களில் செவ்வாய்க்கு உரிய தலமாக பக்தர்களால் போற்றப்படுகிறது.

இறைவன் பெயர்: வைத்தியநாதர்

இறைவி பெயர்: தையல்நாயகி

 

இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் எழுதிய இரண்டு பதிகங்கள், திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும் என மொத்தம் 3 பதிகங்கள் உள்ளன.

எப்படிப் போவது?

தேவாரப் பாடல்களில் த