ஏர்செல்லில் இருந்து ஏர்டெல்லுக்கு மாற சுலபமான 4 ஸ்டெப்கள்

4 சுலபமான ஸ்டெப்களில் ஏர்டெல்லுக்கு மாறுங்கள்

தாங்கள் ஏர்செல் பயனாளியா? நெட்ஒர்க் பிரச்னையைச் சந்தித்து வருகிறீர்களா?

ஏர்செல்லில் இருந்து ஏர்டெல்லுக்கு மாறுவதை பரிசீலித்து வருகிறீர்கள். ஆனால் எப்படி என்று தெரியவில்லையா? நாங்கள் உங்களுக்கான சுலபமான ஸ்டெப்களைக் கொண்ட பட்டியலை வழங்குகிறோம்.

ஸ்டெப் 1

உங்களுடைய ஏர்செல் சிம்கார்டை கையில் வைத்துக்கொண்டு,

தாங்கள் சென்னையில் இருந்தால், 9841012345 என்ற எண்ணை ஏதேனும் எண்ணிலிருந்து அழைக்கவும்.

தாங்கள் தமிழகத்தின் வேறு எப்பகுதியிலாவது இருந்தால், 9842012345 என்ற எண்ணை அழைக்கவும்.

- மொழியை தேர்வு செய்ய கேட்டுக்கொள்ளப்படுவீர்கள்.

- தாங்கள் ஏர்செல் வாடிக்கையாளர் என்பதை உறுதிப்படுத்தவும். அடுத்து, தங்களது ஏர்செல் எண்ணை கொடுக்கவும்.

- ‘‘Get Unique Porting Code’’-யை தேர்வு செய்யவும்.

- தங்களது ஏர்செல் சிம் எண்ணின் கடைசி 5 இலக்க எண்ணை அழுத்தவும்.

- தங்களுக்கு வழங்கப்பட்ட Unique Porting Code (UPC)-யை குறித்துக்கொள்ளவும்.

- இந்த UPC, 15 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

- மாற்றம் 7-ல் இருந்து 10 நாட்களுக்குள் செயல்படுத்தப்படும்..

ஸ்டெப் 2

UPC மற்றும் KYC ஆவணங்களான புகைப்படத்துடன் கூடிய முகவரி மற்றும் அடையாள சான்று மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை தங்களுக்கு அருகில் உள்ள ஏர்டெல் ஸ்டோர் / கேலரி அல்லது ஏர்டெல் சில்லரை வணிகரிடம் சமர்ப்பிக்கவும்.

ஸ்டெப் 3

கேலரி / சில்லரை வணிகரிடம் ஒரு ஏர்டெல் சிம்கார்டை தாங்கள் பெறுவீர்கள்.

- தங்களது எண் ஏர்டெல்லுக்கு மாற, ஏர்டெல் கேலரி / சில்லரை வணிகரிடம் தங்களது MNP வேண்டுகோள் பதிவிடப்பட்ட நாளிலிருந்து குறைந்தபட்சம் 7 நாட்கள் எடுக்கும்.

- மாற்ற தேதி மற்றும் நேரம் தெளிவாக்கப்பட்ட பிறகு, தங்களுடைய ஏர்செல் எண்ணுக்குத் தாங்கள் ஒரு குறுஞ்செய்தி பெறுவீர்கள்.

- மாற்ற செயல்முறை, சாதாரணமாக இரவு 10 மணி முதல் காலை 5 மணிக்குள் நடைபெறும்.

- ஏர்செல் சிம் துண்டிக்கப்பட்டவுடன் (நெட்ஒர்க்-ஐ கையால் தேடும்போதும் கிடைக்கப்பெறவில்லை என்பதை பார்க்கும்போது), கேலரி / சில்லரை வணிகரிடமிருந்து பெறப்பட்ட ஏர்டெல் சிம்-ஐ தாங்கள் பொருத்திக்கொண்டு, அதே எண்ணை ஏர்டெல் நெட்வொர்க்கில் இருந்து பயன்படுத்தத் தொடங்கலாம்.

-  இந்த ஒரே ஏர்டெல் சிம் அனைத்து சிம்களையும் கொண்டுள்ளது - நேனோ, மைக்ரோ மற்றும் ஃபுல் சிம். தங்களது தொலைபேசி உபகரணத்துக்கு எந்த சிம் பொருந்துமோ அதனை எடுத்து பொருத்திக்கொள்ளவும்.

ஸ்டெப் 4

இணைப்பை செயல்படுத்த, தாங்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணை அழைக்க அறிவுறுத்தப்படுவீர்கள். தங்களது மாற்ற வேண்டுகோளில் தாங்கள் கொடுத்த விவரங்களான தங்களது முகவரி போன்றவற்றை செயல்பாட்டாளர் கேட்கலாம். அவ்விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, தாங்கள் செல்ல தயாராகலாம்.

தாங்கள் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளராக இருப்பின், ஏர்செல்லின் அனைத்து நிலுவைத்தொகைகளையும் செலுத்திய பிறகு, மேற்சொன்ன செயல்முறைகளை பின்பற்றவும்.

தங்களது எண் நிராகரிக்கப்பட்டாலோ அல்லது பொருந்தாத தகவல் பெறப்பட்டாலோ, ஏர்செல்லால் மாற்றம் நிராகரிக்கப்பட்டது என்று அர்த்தம்.

அவ்வாறான நிலையில், தங்களுக்கு அருகாமையில் உள்ள ஏர்செல் ஸ்டோரை தொடர்புகொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com