பூச்செடிகளைப் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களில் பூச்செடிகளைப் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பூச்செடிகளைப் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களில் பூச்செடிகளைப் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கன்னிகைபேர், பெருமுடிவாக்கம், குருவாயல், பூரிவாக்கம் அத்தங்கி காவனூர், வெங்கல்குப்பம், வெங்கல், புன்னப்பாக்கம், பாகல்மேடு கிராமங்களில் நெல், கரும்பு, கேழ்வரகு, காய்கறி வகைகள் பயிரிடப்படுகின்றன.
மேலும், 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மல்லி, முல்லை, சாமந்தி, கனகாம்பரம், ரோஜா உள்ளிட்ட பூச்செடிகளும் வளர்க்கப்படுகின்றன. குறைந்த கால பயிரான சாமந்தி மட்டுமின்றி, நீண்ட கால பயிர்களான மல்லி, முல்லை ஆகியவை பயிரிடப்பட்டு 2 ஆண்டுகளுக்குப் பின் பூக்கத் தொடங்கும்.
பின்னர், 10 முதல் 15 ஆண்டுகள் வரை பூக்களின் விளைச்சல் இருக்கும். ஆண்டு முழுவதும் வருவாய் கிடைப்பதால், மேற்கண்ட பூச்செடிகளைப் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து, விவசாயி ஒருவர் கூறியதாவது:
மற்ற பயிர்களைக் காட்டிலும், பூச்செடி வளர்ப்பில் உழைப்பு அதிகம். இதில், உழைப்புக்கேற்ற வருவாய் கிடைக்கும். முகூர்த்த நாள்கள், திருவிழாக் காலங்களில் ஒரு சேர் 200 ரூபாய் வரை விலை போகும். செடிகளை வைத்த இரண்டு ஆண்டுகள் வரை களை எடுப்பது, மருந்து தெளிப்பது என முறையாக பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தால், அடுத்த 10 ஆண்டுகள் வரை தொடர்ந்து வருவாய் ஈட்டலாம்.
பூ பூக்கத் தொடங்கியது முதல், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் செடிகளின் கிளைகளை வெட்ட வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com