காலநிலைக்கேற்ற நெல் ரகங்களைப் பயிரிட்டால் மகசூல் அதிகரிக்கும்

காலநிலைக்கேற்ற நெல் ரகங்களைப் பயிரிட்டால் மகசூல் அதிகரிக்கும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

காலநிலைக்கேற்ற நெல் ரகங்களைப் பயிரிட்டால் மகசூல் அதிகரிக்கும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், நீர்வள ஆதாரத் துறை, பாசன வேளாண் பயிற்சி நிலையம் ஆகிவை சார்பில் நடைபெற்ற காலநிலை மாற்றத்துக்கு உகந்த நெல் சாகுபடி முறைகள் குறித்த கருத்தரங்கில் வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் டாக்டர் லட்சுமணன், டாக்டர் ஜெயபிரகாஷ், டாக்டர் கீதாலட்சுமி ஆகியோர் பேசியதாவது:
காலநிலை மாற்றத்துக்கு ஏற்ற வகையிலான நெல் ரகங்களை சாகுபடி செய்ய நார்வே நாட்டின் நிதியுதவியுடன், கிளைமா அடாப்ட் என்ற திட்டம் காலிங்கராயன் பாசனப் பகுதியில் நெல் நடவுக்காக செயல்படுத்தப்படுகிறது. இதற்காக திருந்திய நெல் சாகுபடி முறையில் சாகுபடி செய்யும்போது, குறைந்த விதை நெல், செலவு குறைவு, நீர் தேவை குறைவு, ரசாயன உரம் மற்றும் பராமரிப்பு செலவு குறைவதுடன், மகசூல் அதிகரிக்கும். இதற்காக பல்வேறு விவசாய நிலங்களில் இதற்கான செயல்விளக்கம் அளிக்கிறோம்.
மேலும், வாட்டர் டியூட் எனப்படும் குழாய்களை விவசாய நிலங்களில் பதித்து வைப்பதன் மூலமாக நெல் பயிர்களின் வேர்ப் பகுதிக்கு வேர்களுக்கு கூடுதல் நாள்களுக்கு நீர் கிடைக்க செய்யும். நெல் சாகுபடியுடன் கூடுதல் வருவாய் பெற, மண்புழு உரம் தயாரித்தல், பட்டுப்பூச்சி வளர்த்தல், இயற்கை உரம் தயாரிப்பு போன்றவை குறித்த பயிற்சியை விவசாயிகளுக்கு வழங்குவோம். இத்திட்டத்தில் தரமான நெல் விதைகள், உயிர் உரங்களை இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றனர்.
கருத்தரங்கில் கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளர் ராஜு பேசியதாவது:
தென்மேற்குப் பருவமழை கை கொடுக்காததால் பவானிசாகரில் போதிய நீர் இருப்பு இல்லை. இருப்பினும், வடகிழக்குப் பருவமழை அதிக அளவில் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், 7 டி.எம்.சி., நீர் இருந்தபோது அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், அணையில் போதிய நீர் இல்லாததாலும், மாவட்ட நிர்வாகம் குடிநீர் இருப்புக்கு அணையில் உள்ள தற்போதைய நீரை ஈரோடு மாவட்டத்தில் உள்ள 35 குடிநீர்த் திட்டங்களுக்கு தினமும் 100 முதல், 150 கனஅடி வீதம் திறக்க வேண்டும் என தெரிவித்ததால் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும், அணையில் இருந்து டிசம்பர் 25-ஆம் தேதி வரை தண்ணீர் திறப்பதற்கான ஆணை பெறப்பட்டுள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகமானதும் மீண்டும் விவசாயிகளுக்காக தண்ணீர் திறக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com