தென்னையில் கருந்தலை புழுவைக் கட்டுப்படுத்தும் முறைகள்

தென்னையில் கருந்தலை புழுக்களால் பாதிப்பு ஏற்படுகிறது. கருந்தலை புழுக்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முறை குறித்து பார்ப்போம்.

தென்னையில் கருந்தலை புழுக்களால் பாதிப்பு ஏற்படுகிறது. கருந்தலை புழுக்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முறை குறித்து பார்ப்போம்.
பூச்சியின் குணாதிசயங்கள்: இந்த வகை புழு, பச்சை கலந்த பழுப்பு நிற உடல்களைக் கொண்டிருக்கும். தலை கருப்பாகவும், உடல் மீது பழுப்பு நிறக் கோடுகளும் இருக்கும். தென்னை இலைத் திசுக்களில் உள்ள பச்சையத்தைச் சாப்பிடுவதால்,  தென்னை மரம் காய்ந்ததுபோல் தோற்றமளிக்கும்.
தடுப்பு முறைகள்: கருந்தலைப் புழு தாக்குதலுக்கு உள்ளான ஓலைகள்,  மட்டைகளை அப்புறப்படுத்தி தீயிட்டு எரிக்க வேண்டும்.
ஒட்டுண்ணிகளான பேராசியரோலா 3,000 எண்கள் அல்லது பிரகான் பிரேவிகார்னிஸ் 4,500 எண்களில் ஹெக்டேர் பரப்பளவில் மரத்தின் குருத்துப் பகுதியில் இரண்டு முறை தாக்குதலின் அறிகுறிகள் குறையும் வரை இட்டுக் கட்டுப்படுத்தலாம்.
ஒட்டுண்ணியானது தென்னை ஆராய்ச்சி நிலையம்-ஆளியாறில் கிடைக்கிறது. வளரும் மரங்களில் கருந்தலைப் புழுக்களைக் கட்டுப்படுத்த டைகுளோரோவாஸ் 2 மில்லியை 2 லிட்டர் தண்ணீரில் கலந்து தாக்குதல் அதிகம் உள்ள மர ஓலைகளின் கீழ் பகுதியில் நனையும்படி தெளிக்க வேண்டும்.
 காய்ப்புக்கு வந்த மரங்களில் தாக்குதலைக் கட்டுப்படுத்த மரத்தின் அடிபாகத்திலிருந்து 1.5 மீட்டர் உயரத்தில் மரத்தின் தண்டு பாகத்தில் சாய்வாகத் துளையிட்டு துளையில் மோனோகுரோடோபாஸ்-36 டபிள்யூ எஸ் சி-5 மில்லி மருந்தை ஊற்றியபின் தாமிரக் கரைசல் கலந்து களிமண்ணால் மூடிவிட வேண்டும்.
வேர் மூலம் கட்டுப்படுத்துவதாக இருந்தால், நன்கு வளர்ந்த வேரை சாய்வாக வெட்டிய பின் இதை பாலிதீன் பையில் மோனோகுரோடோபாஸ் 36, டபிள்யூ எஸ் சி-10  மில்லி, 10 மில்லி தண்ணீர் கலந்த கலவையில் வேரை இட்டு இறுக்கமாகக் கட்ட வேண்டும்.
மருத்து இட்ட 40 நாள்கள் வரை காய்கள் அறுவடை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும், மருந்து இட்ட தோட்டத்தில் ஒட்டுண்ணிகளை விடக் கூடாது. இத்தகைய முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் தென்னையில் கருந்தலைப் புழுக்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com