சம்பா நெற்பயிரில் பயிர் பாதுகாப்பு முறை

தற்போதுள்ள பருவத்தில் சம்பா நெற்பயிரில் நோய் தாக்குதலை தவிர்க்க பயிர் பாதுகாப்பு முறைகளை
சம்பா நெற்பயிரில் பயிர் பாதுகாப்பு முறை

திருவள்ளூர்: தற்போதுள்ள பருவத்தில் சம்பா நெற்பயிரில் நோய் தாக்குதலை தவிர்க்க பயிர் பாதுகாப்பு முறைகளை விவசாயிகள் கடைபிடித்தால் நஷ்டத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என மாவட்ட வேளாண் துறையினர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் முருகவேல் கூறியதாவது:
 திருவள்ளூர் மாவட்டத்தில், தற்போதுள்ள பருவநிலை மாற்றங்களினால் சம்பா பட்டத்தில் நடவு செய்வதற்கு, நெற்பயிரில் பரவலாக இலைமடக்குப் புழு, குருத்துப் பூச்சி, கருவண்டு, முள்வண்டு மற்றும் இலைப்புள்ளி நோய் ஆகியவற்றின் தாக்குதல் பரவலாகக் காணப்படுகிறது. இது மேலும் பரவ வாய்ப்புள்ளது. அப்படி பரவும்போது விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
 எனவே, அனைத்து விவசாயிகளும் ஒருங்கிணைந்து ஒரே நேரத்தில், இலை மடக்கு புழு, குறுத்துப் பூச்சி, இலைப்புள்ளி நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த காரிடாப் ஹைட்ரோ குளோரைடு 400 கிராம் அல்லது தயோமிதக்ஸம் 40 கிராம் அல்லது டிரையோஸோபாஸ் 500 மில்லி மற்றும் கார்பன்டைசிம், மான்கோசெப் 400 கிராம், ஒரு ஏக்கருக்கு 60 லிட்டர் தண்ணீர் கலந்து விசைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
 கருவண்டு மற்றும் முள்வண்டு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு அசிபேட் 500 கிராம் வாங்கி, 60 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.  
 மருந்து தெளிப்பதற்கு முன் வயலில் தேங்கியுள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com