மேட்டூர் அணையின் திறப்பு தள்ளி போனது!

மேட்டூர் அணையின் 84ஆவது ஆண்டில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு தள்ளி போனது.
மேட்டூர் அணையின் திறப்பு தள்ளி போனது!

மேட்டூர் அணையின் 84ஆவது ஆண்டில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு தள்ளி போனது.
இந்த அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-இல் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும். அன்று ஜனவரி 28-ஆம் தேதி வரை 230 நாள்களுக்கு குறுவை, சம்பா, தாளடி பாசனத்துக்கு 330 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும்.
டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் மழையை பொருத்து பாசனத் தேவை குறையும். மேட்டூர் அணை கட்டப்பட்டு முதல் முதலாக 1934-ஆம் ஆண்டு பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டது.
கடந்த 83 ஆண்டுகளில் 16 முறை மட்டுமே குறித்த நாளான ஜூன் 12-ஆம் தேதியும், 10 முறை நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் அந்தத் தேதிக்கு முன்பாகவும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
2016-ஆம் ஆண்டில் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாத காரணத்தால், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. சம்பா சாகுபடிக்காக செப்டம்பர் 20-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
58-ஆவது முறையாக திறப்பு தள்ளி போனது: 2011-ஆம் ஆண்டுதான் கடைசியாக ஜூன் 6-இல் முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பிறகு, 6 ஆண்டுகள் உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
நடப்பு ஆண்டில் திங்கள்கிழமை தண்ணீர் திறக்கப்படாததால், 58-ஆவது ஆண்டாக தண்ணீர் திறப்பு தள்ளிப் போனது.
இதனால் கிணற்றுப் பாசனம் உள்ள விவசாயிகள் மட்டுமே குறைந்த அளவில் குறுவை சாகுபடியைத் தொடங்கி உள்ளனர். கடந்த 6 ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான விவசாயிகள் குறுவை சாகுபடியை கைவிட்டுள்ளனர்.
நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை கை கொடுத்தால் மட்டுமே மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரும் வாய்ப்பு உள்ளது. இல்லையானால் விவசாயம் பொய்த்து போகும் அபாயம் உள்ளது.
அணையின் நீர்மட்டம்: இந்த நிலையில், அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 23.44 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 118 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு விநாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 5.16 டி.எம்.சி.யாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com