மானாவாரி நிலக்கடலை பயிர் சாகுபடியில் அதிக மகசூல்

பெரியாறு-வைகை பாசனப்பகுதியில் கால்வாய்களில் தண்ணீர் வராதபகுதிகளிலும் புன்செய்நிலங்களிலும் மானாவாரியாக நிலக்கடலை சாகுபடிசெய்வதனால் அதிக அளவு மகசூல் பெறவாய்ப்புள்ளது. 
மானாவாரி நிலக்கடலை பயிர் சாகுபடியில் அதிக மகசூல்

பெரியாறு-வைகை பாசனப்பகுதியில் கால்வாய்களில் தண்ணீர் வராதபகுதிகளிலும் புன்செய்நிலங்களிலும் மானாவாரியாக நிலக்கடலை சாகுபடிசெய்வதனால் அதிக அளவு மகசூல் பெறவாய்ப்புள்ளது. 
உலகஅளவில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் இந்தியா 3-வது இடத்திலும், நிலக்கடலை உற்பத்தியில் முதலிடத்திலும் உள்ளது. இந்தியாவில் சாகுபடிப்பரப்பளவில் 40 சதவிகிதம் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. நிலக்கடலையில் 47 சதவிகிதம் முதல் 53 சதவிகிதம்வரையிலும் எண்ணெயும் 26 சதவிகிதம் புரதசத்தும் உள்ளது. நிலக்கடலை பயிர் 70 சதவிகிதம் மானாவாரியாகவும் 30 சதவிகிதம் இறவைப்பாசனத்திலும் சாகுபடியாகிறது. 
தமிழகத்தில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திலும் 56ஆயிரத்து 163 எக்டேரில் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. இதில் 84 சதவிகிதம் மானாவாரியாக உள்ளது. அதிலிருந்து 10.98 லட்சம் டன்கடலை உற்பத்தியாகிறது. மற்ற நாடுகளுடன் மகசூலை ஒப்பிட்டுப்பார்த்தால் நாம் குறைந்த அளவு மகசூலையே பெறுவது தெளிவாகும். சராசரிùக்டேருக்கு 1400 கிலோ நிலக்கடலை கிடைக்கிறது.
இலைவழிஉரம்-
நிலக்கடலை பயிரில் மகசூலை அதிகரிக்க தமிழ்நாடு வேளாண்.பல்கலைக்கழகம் பல்வேறு ஆராய்ச்சிகளைச்செய்து வருகிறது. நிலக்கடலையைப் பொருத்தவரை அதிக அளவில் பூக்கள் பூக்கும். அதில் பாதியளவு பூக்கள் காய்களாகும். மீதிப்பூக்கள் உதிர்ந்துவிடும். இதைக்கட்டுப்படுத்துவதன் மூலம் நிலக்கடலை மகசூலை 15 சதவிகிதம் அதிகரிக்கமுடியும்.
தமிழ்நாடு வேளாண். பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கிரவுநட்ரிச் ஊட்டச்சத்து பயிர்ஊக்கியை பயன்படுத்தவேண்டும். எக்டேருக்கு 2.250 லிட்டர் ஊட்டச்சத்தினை 200 லிட்டர் நீரில் கரைத்து, கைத்தெளிப்பான் மூலமாக நிலக்கடலை பயிர் முழுமையாக நனையுமாறு காலை அல்லது மாலைநேரத்தில் தெளிக்கவேண்டும். இதில்,தேûக்கேற்ப ஒட்டும் திரவத்தை கலக்கலாம். ஆனால், இக்கரைசலில்பூச்சி,பூஞ்சாள மருந்தை கலக்கக்கூடாது.
நிலக்கடலை செடி பூக்கும் தருணத்துக்கு முன்பும் அதிலிருந்து15 நாட்களுக்குப் பின்னரும் தெளிக்கவேண்டும். இதனால், நிலக்கடலை பயிர் வறட்சியைத்தாக்குப்பிடிக்கும் திறன் அதிகரிக்கும். மகசூலும் அதிகரிக்கும்.
தண்ணீர் பற்றையில் பயிர் தாக்குப்பிடிக்க நிலக்கடலை சாகுபடிக்கு தரிசில் எக்டேருக்கு 3 டன் நன்கு மக்கிய தென்னை நார்க்கழிவை தழைச்சத்தாக அடியுரமாக போடவேண்டும். இதனால், மண்ணில் ஈரப்பதம் பாதுகாக்கப்படும். மேலும், நிலக்கடலைசெடியில் பொட்டாசியம் குளோரைடு 5 சதம் ஒருலிட்டர் நீரில்கரைத்து வையான அளவு செடியில் தெளிக்கவேண்டும். இதனால், காய்கள் அதிகரிக்கும்.
தற்போது அதிகஇடைவெளியில் பெய்துவரும் பருவமழை நிலக்கடலை சாகுபடிக்கு பேருதவியாக அமையும் என அருப்புக்கோட்டை மானாவாரி பயிர் ஆராய்ச்சிநிலையத்தின் வேளாண்.அறிவியல்மைய ஆராய்ச்சியாளர்கள்ப.பாக்கியாத்துசாலிஹா, இரா.விஜயலட்சுமி ஆகியோர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com