இறவை ராகி சாகுபடி தொழில்நுட்பங்கள்!

இறவையில் ராகி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து, கிருஷ்ணகிரி அருகே எலுமிச்சங்கிரியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் டி.சுந்தராஜ் தெரிவித்தது:
இறவை ராகி சாகுபடி தொழில்நுட்பங்கள்!

இறவையில் ராகி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து, கிருஷ்ணகிரி அருகே எலுமிச்சங்கிரியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் டி.சுந்தராஜ் தெரிவித்தது:
மனித வாழ்வுக்கு முதன்மையானது உணவு. தற்போதைய காலத்தில் சிறு தானியங்களான ராகி, பனிவரகு, சாமை, வரகு, தினை ஆகியவற்றின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் பல்லாயிரக்கணக்காண ஹெக்டேர் பரப்பளவில் ராகி சாகுபடி செய்யப்படுகிறது. 
ராகியில் மாவுச் சத்து, புரதச் சத்து, தாதுக்கள், வைட்டமின்கள், செரிமானத்துக்கு உதவும் நார்ச்சத்துகள், அதிக அளவில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் பிற நுண்ணுட்ட சத்துகள் உள்ளன. 
பருவம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மானாவாரியில் ஆடிப் பட்டத்திலும், இறவையில் மார்கழி, தைப் பட்டத்திலும் ராகி சாகுபடி செய்யப்படுகிறது. 
ரகங்கள்: ஜிபியு ரகத்தின் வயது 110 நாள்கள், பையூர் } 2 ரகத்தின் வயது 115 நாள்கள், எம்.ஆர்.6 ரகத்தின் வயது 120 நாள்கள், எம்.எல். 365 ரகத்தின் வயது 100 நாள்கள் ஆகும்.
விதை அளவு: ஹெக்டேருக்கு 5 கிலோ விதை போதுமானது. 
இயற்கை முறையில் விதை நேர்த்தி: விதை மூலம் பரவும் குலை நோயைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை 10 கிராம் வீதம் சூடு தணிக்கப்பட்ட அரிசிக் கஞ்சியுடன் கலந்து, நிழலில் உலர்த்திய பின்னர் விதைக்க வேண்டும். அல்லது, அúஸாஸ்பைரில்லம் 600 கிராம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா 600 கிராம் நுண்ணுயிர் உரங்களை ஒரு ஹெக்டேருக்கு 5 கிலோ விதையுடன் கலந்து, உலர்த்திய பின் விதைக்க வேண்டும். 
ரசாயன முறையில் விதை நேர்த்தி: விதை மூலம் பரவும் குலை நோயைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ விதையுடன் 2 கிராம் கார்பன்டாசிம் கலந்து, பின் விதைக்க வேண்டும். 
நாற்றங்கால்: ஒரு ஹெக்டேர் பயிரிட 12.5 சென்ட் பரப்பளவில் நாற்றங்கால் தேவைப்படும். நாற்றங்கால் வயலுக்கு அடியுரமாக 500 கிலோ தொழு உரம் மற்றும் 37.5 கிலோ சூப்பர் பாஸ்பேட் இட வேண்டும். 
நாற்று நடவு: 17 முதல் 20 நாள்கள் வயது கொண்ட நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும். 
இடைவெளி: வரிசைக்கு வரிசை 30.செ.மீ., செடிக்கு செடி 15 செ.மீ. இடைவெளி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். 
உர நிர்வாகம்: ஒரு ஹெக்டேர் பரப்பளவு நிலத்தில் 12.5 டன் மக்கிய தொழு உரத்தை அடியுரமாக இட்டு, சமமாகப் பரப்பி, பின்னர் உழவு செய்ய வேண்டும். பொதுவாக மண் பரிசோதனையின் முடிவுக்கு ஏற்ப உரத்தைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது. 
மண் பரிசோதனை செய்யாவிட்டால், ஹெக்டேருக்கு பரிந்துரைக்கப்பட்ட, உர அளவான யூரியா 130 கிலோ, 187 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 50 கிலோ பொட்டாஷ் உரங்களை இட வேண்டும். விதைக்கும்போது அடியுரமாக 65 கிலோ யூரியா, 187 கிலோ சூப்பர் பாஸ்பேட்டை, 50 கிலோ பொட்டாஷ் உரங்களையும் பயன்படுத்த வேண்டும். மீதம் உள்ள 65 கிலோ யூரியாவை 45 } ஆவது நாளில் இட வேண்டும்.
நீர் நிர்வாகம்: வயலில் நடவு செய்தவுடன் நாற்றுகளுக்கு உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பூக்கும் பருவம், பால் பிடிக்கும் பருவம், பயிர் வளர்ச்சிப் பருவங்களில் அவசியமாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 
அறுவடை: கதிர்கள் நன்கு காய்ந்து முற்றிய பிறகு அறுவடை செய்ய வேண்டும். கதிர்களை களத்தில் காயவைத்து, அடித்து தானியங்களைப் பிரித்து எடுக்க வேண்டும். பின்னர், இவற்றை நன்கு காய வைத்து தூய்மை செய்து சேமித்து வைக்க வேண்டும்.
பூச்சிக் கட்டுப்பாடு: சாறு உறிஞ்சும் பூச்சிகளான தத்துப்பூச்சி, வெள்ளை மற்றும் அசுவினி போன்றவற்றை மஞ்சள் வண்ண ஒட்டு அட்டைகளை ஹெக்டேருக்கு 12 அட்டைகள் என்ற எண்ணிக்கையில் வைத்துக் கட்டுப்படுத்தலாம். 
நோய் மேலாண்மை: ராகிப் பயிரை குலை நோய் அதிக அளவில் தாக்கும். அவ்வாறு, நோயின் தாக்குதல் அதிகமாக இருப்பின், ரசாயன முறையில் டிரைசைக்குளோசோல் என்ற மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என அளவில் கலந்து தெளிப்பதன் மூலம் குலை நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். மேலும், விவரங்களுக்கு கிருஷ்ணகிரி அருகேயுள்ள எலுமிச்சங்கரி கிராமத்தில் செயல்படும் வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் டி.சுந்தராஜை 9443888644 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com